1. isbn 979-8-88572-045-8
Page 1
விஜயா பதிப்பகம்
அமைதியின் முழக்கம்
பரமவரம்ச ஸ்ரீ நித்யானந்தரின் பதில்கள்
Page 2
நம்பிக்கைதான் வாழ்க்கை ! நம்பிக்கைதான் பிரச்சனை ! நம்பிக்கைதான் தீர்வு ! - பரமஹம்ஸ ஸ்ரீ நித்யானந்தர்
Page 3
அமைதியின் முழக்கம்
பரமஹம்ச ஸ்ரீ நித்யானந்தரின் பதிலளிக்கப்பட்ட கேள்விகள்
தொகுப்பு: தியானபீடம்
தப பபக 6
விஜயா பதிப்பகம் 20, ராஜ வீதி கோயம்புத்தூர் - 641 001.
Page 4
நூலின் பெயர் அமைதியின் முழக்கம் முதல் பதிப்பு ஜனவரி 2005 ..
வெளியீடு : விஜயா பதிப்பகம் 20, ராஜ வீதி கோயம்புத்தூர் - 641 001 தொலைபேசி: 0422 - 2394614 / 2382614
ஒளியச்சு ஐரிஸ் கிராபிக்ஸ், கோவை - 4. 00
அட்டை
வடிவமைப்பு தியானபீடம் 00
அச்சாக்கம் : ஹேமமாலா சிண்டிகேட், சிவகாசி.
பக்கம் 40
விலை ரூ. 13/- 00
Ebook ISBN: 979-8-88572-045-8
AMAITHIYIN MUZHAKKAM
First Edition : January 2005 Published By : VIJAYA PATHIPPAGAM, 20, Raja Street, Coimbatore - 641001 Composed By : Iris Graphics, Coimbatore - 4 Cover Design : Dhyanapeetam Printed At : Hemamala Syndicate, Sivakasi.
Pages 40 ..
Price Rs. 13/- ..
Page 5
முன்னுரை
கேள்விகளுக்கு பதிலளிப்பதில்லை கேட்பவருக்கு பதிலளிக்கிறேன்.
- பரமஹம்ஸ ஸ்ரீ நித்யானந்தர்.
பரமஹம்ஸரின் பதில் சொல்லும் விதம் தனித்துவம் வாய்ந்தது. கேட்ட கேள்விக்கு பதிலளிப்பது எளிதான விஷயம். அறிவாளியாக இருந்தால் போதும் பதில் சொல்லி விடலாம்.
கேள்விக்கும் கேட்பவருக்கும் சேர்த்து பதில் சொல்வதற்கு அளவு கடந்த கருணையும், மனம் தாண்டிய புரிந்து கொள்ளுதலும் அவசியம். இது ஒரு ஞானியால் மட்டுமே சாத்தியப்படும்.
மனக்குழப்பத்தின் ஒரு சிறு கீற்றுதான் கேள்வியாக வெளிப்படுகிறது. உள்ளிருக்கும் உணர்ச்சிக் கொந்தளிப்புகள், ஏக்கங்கள் மற்றும் தேடுதல்களை சில வார்த்தைகளே கொண்ட சில வரி கேள்வியால் முழுவதுமாக வெளிப் படுத்திவிட முடியாது. தனி மனிதனின் மனதின் ஆழத்தில் புதைந்திருக்கும் மனவேதனைகளுக்கே பதில் தேடுகிறான் மனிதன்.
Page 6
வேதனையை வெளிப்படுத்த கேள்விகளை துருப்புச் சீட்டாக மனிதன் பயன்படுத்துகிறான். எப்போதுமே பரமஹம்ஸர் கேள்வி என்னும் துருப்புச் சீட்டை பயன்படுத்தி - கேட்டவரின் வேதனையை குணப் படுத்த வழி கூறி கேட்டவருக்கும், கேள்விக்கும் சேர்ந்து பதிலளிப்பார்.
இதுவரை பரமஹம்ஸர் அளித்த பதில்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில கேள்விகளை மட்டும் தொகுத்து அமைதியின் முழக்கம் என்ற தலைப்பில் சிறிய புத்தகமாக வெளியிடுகிறோம்.
இப்படிக்கு
தியானபீடம்
Page 7
அமைதியின் முழக்கம்
- கண்டவர் விண்டதில்லை விண்டவர் கண்டதில்லை - என்று சித்தர் பாடலில் இருக்கிறதே! இதை உண்மை என்று ஏற்றுக் கொள்வதா? ஏற்றுக் கொண்டால், புத்தர், ராமகிருஷ்ணர் போன்ற ஞான குருமார்கள் தொடர்ந்து போதித்தது எப்படி?
ததம் சுப்பையா, மலேசியா. கண்டவர் விண்டதில்லை விண்டவர் கண்டதில்லை - கூற்று உண்மை தான். சித்தர்களின் வெளிப்பாடு அது. ஆனால் பொய்க்கும் உண்மைக்கும் அப்பாற்பட்டது சத்தியம்.
கண்டும் விண்டவர்கள்தான் கடவுள்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்கள்தான் ஞான குருமார்கள். இது சத்திய விளக்கம்.
- நான் மகாமந்திர தியானத்தை மற்றவர்களுக்கு கற்றுக் கொடுக்கலாமா?
ததய்தாஸ், சீர்காழி. கற்றுக்கொடுப்பதால் தவறு ஏதும் இல்லை.
Page 8
மகாமந்திர தியானத்தின் நான்கு முக்கியமான Instruction-ஐ தப்பில்லாமல், குழப்பமில்லாமல் கூறத் தெரிந்தால் கற்றுக் கொடுக்கலாம். Instruction-ஐ நன்கு தெரிந்து கொண்டு கற்றுக் கொடுக்கலாம்.
- ஞானிகள் தொட்டால் நோய்கள் குணமடையும் என்ற உண்மை எல்லோரும் அறிந்ததே. னால் நீங்கள் தீக்சை கொடுத்த சாதாரண மனிதர்களும் 'தியான சிகிச்சையாளராக' மாறியபின் நோய் களை குணப்படுத்துகிறார்களே! அதை நானே கண்கூடாக பார்த்திருக்கிறேன். இது எப்படி சாதாரண மனிதர்களுக்கு சாத்தியம் ?
ததபத்மாவதி, சேலம்.
ஒரு உண்மையை தெரிந்து கொள்ளுங்கள், திருமதி பத்மாவதி.
ஞானிகள் நோய்களை குணப்படுத்துவதில்லை. குணப்படுத்துவதற்காக தனி மாயாஜாலங்கள் எதுவும் செய்வதில்லை.
ஞானிகள் தொடும் போது நோய்கள் குணமாகிறது. இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. ஞானிகளின் ஆனந்த நிலையில் இருந்து வெளிப்படும் ஆனந்த சக்தி மனிதர்களுக்குள் பாயும் போது சக்திக் குறைபாடுகள் சரியாகி நோய்கள் குணமாகிறது.
அற்புதங்கள் நிகழ்த்தப்படக் கூடாது. அற்புதங்கள் நிகழ வேண்டும்.
அமைதியின் முழக்கம் * 6
Page 9
தானாக நிகழ்ந்தால் அது அற்புதம். நிகழ்த்தப்பட்டால் அது மாயாஜாலம்.
நோய்கள் ஞானிகளால் குணப்படுத்தப்படுகிறது என்பதை விட, குணமாகிறது என்பதுதான் உண்மை.
இரண்டு ASP தியான முகாம்களில் கலந்து கொண்ட பிறகு மக்களுக்கு ஆனந்த சேவை செய்யும் துடிப்பு கொண்டவர்களுக்கு - தியானபீடத்தில் 'ஆனந்த தியான சிகிச்சைக்கான தீட்சை' இலவசமாக அளிக்கப்படுகிறது.
தீட்சை பெற்றவர்களுக்கு, அவர்களுக்கு உள்ளே ஆனந்த சக்தியோடு நேரடியாக தொடர்பு கொள்வதற்கான சூட்சும சக்தி திறக்கப்படும். சக்தி நிரம்பியிருக்கும்.
ஆனந்த கந்த சக்கரத்திலிருந்து ஆனந்த சக்தியைப் பெற தியானம் ஒன்று கற்றுத் தரப்படுகிறது. ஞானத்திற்கு சுலபமாக அழைத்துச் செல்லும் தியானங் களில் இதுவும் ஒன்று. தீட்சை பெற்றவர்கள் ஆனந்த கந்த தியானத்தில் மட்டுமே ஈடுபடுவார்கள்.
சில நிமிட தியானத்திற்கு பிறகு அவர்களின் உள் இருந்து பொங்கும் ஆனந்த சக்தி, அதாவது தியான சக்தி, அவர்களை முழுவதுமாக நிரப்பிய பின் மிகுந்து வெளிப்பட ஆரம்பிக்கும். நீங்களே சுயமாக அனுபவித்து உணரும் வரை, இதை புரிந்து கொள்ள கொஞ்சம் கடினமாக இருக்கும்.
அவர்களை நிரப்பிய பின் தொடர்ந்து வெளிப்படும் தியான சக்தி - நோயாளியின் மீது சிகிச்சை அளிக்கப்படும்
7 *பரமஹம்ச ஸ்ரீ நித்யானந்தர்
Page 10
சக்கரங்கள் (Energy Centres) மூலம் நோயாளிக்குள் செல்கிறது.
காற்று கீழிருந்து மேலே செல்ல முயற்சிக்கும்,
தண்ணீர் தாழ்வான பகுதி நோக்கி பரவ முயற்சிக்கும்,
மின்சாரம் பாய்வதற்கு தோதான இடம் நோக்கி பாய முயற்சிக்கும்,
தியான சக்தி (ஆனந்த சக்தி) சக்தி குறைபாடு (Low A energy) இருக்கும் இடம் நோக்கி நிரம்ப முயற்சிக்கும்.
சக்திக்கென்று தனி ஞானம் உண்டு. தேவைப்படும் இடத்திற்கு தானே சென்று சேரும்.
காற்று, தண்ணீர், மின்சாரம் போல் சக்தி செயல் பாட்டையும், அறிவியல் பூர்வமாக விளக்கும் காலம் வெகு சமீபம்.
தியான சிகிச்சையாளர்கள் அவர்களின் ஞானப் பாதையில் முன்னேற செய்யும் தியானத்தின் ஒரு அருமையான பக்க விளைவு தான் நோய் குணமாகுதல்.
நோய்கள் குணப்படுத்தப்படுவதில்லை; குண மாகிறது. எனவே இது அற்புதம்.
இந்த அற்புதம் உங்கள் மூலமாக நிகழ்ந்து அனுபவப் படாத வரை உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கத்தான் செய்யும். ஆனால் இது ஆச்சரியப்படும் அளவுக்கு மாயா ஜாலம் அல்ல. இது ஒரு தியான வெளிப்பாடு. அவ்வளவே.
அமைதியின் முழக்கம் * 8
Page 11
- பெண்கள் அந்த மூன்று நாட்களில் சடகங்காசாரியங் களில் ஈடுபடப்படாதாம் ! தியானமெல்லாம் புனிதமான விஷயமாம்! நான் மண்டாக இருப்பதால் எனக்கு எத, எப்ப செய்யனும்னு தெரியலையாம் ! நான் தியானம் செய்வது தவறா? விளக்கம் வேணும் -
ந ததேவி, தென்காசி. தியானம் செய்வதற்கு நல்ல நாள், கெட்ட நாள் பார்க்க வேண்டிய அவசியமில்லை. நல்ல நேரம், கெட்ட நேரம், தீட்டு என்று எதுவுமே பார்க்க வேண்டிய அவசியமில்லை.
24 மணி நேரத்தில் எந்த நேரத்தில் தியானம் செய்தாலும் நல்லதே. எல்லா நேரத்திலும் தியானம் சக்தி ஓட்டத்தை உங்களுக்குள் அதிகரிக்கவே செய்யும்.
மாதத்தின் 30 நாட்களில் எந்த நாளில் தியானம் செய்தாலும் நல்லதே. எல்லா நாட்களிலும் தியானம், சக்தி ஓட்டத்தை நிச்சயம் அதிகரிக்கும்.
பெண்களுக்கு இயற்கையாக உடல் சுத்திகரிப்பு நடைபெறும் அந்த 3 நாட்களிலும் தியானம் செய்யலாம். சரியாக சொல்ல வேண்டுமானால் அந்த நாட்களில் தான் தியானம் மிக, மிக அவசியம்.
காரணம் மனமும், உடலும் சக்தியிழந்து சக்திக் குறைவால் கஷ்டப்படும் அந்த நேரத்தில் தியானம் தரும் சக்திஓட்டம் நிச்சயம் வரப்பிரசாதமே. தியானம் எந்த வகையிலும் புனிதமற்ற செயலாக முடியாது. 9 பரமஹம்ச ஸ்ரீ நித்யானந்தர்
Page 12
பழங்காலத்தில் பெண்கள் சில நாட்களாவது, ஓய்வாக இருக்கட்டும் என்று வீட்டார் கொடுமையிலிருந்து பெண்களை காப்பாற்றுவதற்காக பெரியவர்கள் வகுத்த திட்டம் தான் 'தீட்டு', 'வீட்டை விட்டு ஒதுங்கி இருக்க வேண்டும்' என்பது போன்ற பழக்கம். ஒரு நல்ல விஷயத்திற்காக அந்த காலத்தில் உருவாக்கிய சில பழக்கங் களுக்கு இந்த காலத்தில் முக்கியத்துவம் கொடுப்பது புத்தி சாலித்தனம் அல்ல. காலம் மாறிப்போச்சு.
நீங்கள் தியானம் செய்வது தவறல்ல. 5. சுவாமிஜி! உங்களின் ஞானம் அறிவியல் பூர்வமாக அமெரிக்காவில் நிரூபிக்கப்பட்டது என்று என் நண்பர் மூலமாக கேள்விப்பட்டேன் உண்மையா?
தற்த் ஆனந்த ஜோசப், ஸ்ரீபெரும்புதூர்.
அமெரிக்காவில் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் குழு என்னைப் பரிசோதித்தது உண்மை. ஞானமடைதல் என்பது அனுபவத்தை தாண்டிய அனுபூதி. அனுபவத்தை ஆராய முடியும். அனுபூதியை ஆராய முடியாது.
ஏன்? அனுபூதியை வார்த்தைகளால் விளக்கக் கூட முடியாது. வார்த்தைகளுக்கும் மனதுக்கும் அப்பாற்பட்ட ஒரு நிலைதான் அனுபூதி.
அனுபூதி(ஞானம்)யை சாதாரண இயந்திரங்களால் கண்டுபிடிக்கவோ, ஆராயவோ முடியாது. ஆனால், அனுபூதியின் வெளிப்பாடுகளை வார்த்தைகளால் விளக்க முடியும். ஆராய்ச்சி செய்ய முடியும்.
அமைதியின் முழக்கம் *10
Page 13
ஞான சக்தியின் வெளிப்பாடுகளையும், ஞானத்தின் மிக முக்கியமான நான்கு வெளிப்பாடுகளையும் ஒக்லஹாமா மருத்துவ ஆராய்ச்சி குழு பரிசோதித்து உறுதி செய்தது.
Dr. முரளிகிருஷ்ணா MD (USA)ஆய்வறிக்கையின் சுருக்கத்தை ஒரு கட்டுரையாக இப்போது அனுப்பி யிருக்கிறார். திரு. ஆனந்த் ஜோசப், அதை பிற்சேர்க்கையில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
(சுவாமிஜியின் மருத்துவ ஞான வெளிப்பாடு மீதான ஆராய்ச்சிகளும், மருத்துவர்களின் அதிர்ச்சிகளும், ஆச்சரியமான முடிவுகளும் ஒன்றாக சேர்த்து 'மனம் கடந்த நிலை' என்ற ஒரு புத்தகமாக தமிழில் வெளியிடப் பட்டிருக்கிறது. விரும்புவோர் வாங்கி படித்துப் பயன் அடையலாம்)
- 'கற்றது கை மண்ணளவு' என்று பெரியவர்களே சொல்லியிருக்காங்க. நீங்க என்னனா? அதைத் தெரிந்து கொள்! இதைப் புரிந்து கொள் என்று கூறிக்கொண்டே போகிறீர்கள் இதுக்கெல்லாம் எங்க சாமி நேரமிருக்கு? - ததவிவேக், மும்பை.
திரு. விவேக், 'கற்றது கை மண் அளவு' என்ற பழமொழியை 'கற்றது கை பொன் அளவு' என்று நீங்கள் ஏன் மாற்றக் கூடாது?
ஏன் நீங்களே உங்களை தாழ்த்திக் கொள்கிறீர்கள் ? வெறுமனே 'கற்றல்' என்ற பெயரில் அறிவை தெரிந்து கொள்வதை விட அதை புரிந்து கொள்ள முயற்சிப்பது எவ்வளவு பயனைத் தரும்? 11 * பரமஹம்ச ஸ்ரீ நித்யானந்தர்
Page 14
மூளையில் வெறுமனே அறிவை சேர்த்தால் கை மண் அளவு சேர்க்க முடியும்.
இதயத்தில் அனுபவங்களை சேர்த்தால், உணர்வு வடிவாக வாழ்ந்த பொன்னான நிமிடங்கள் அதிகமாகும். வாழ்க்கையின் ஆனந்தப் பகுதிகள் தெரிய வரும்!
உலகின் சொர்க்க அம்சங்கள் புரிய வரும்!
"என்ன வாழ்ந்து என்ன பயன்! கற்றது கை மண் அளவு தானே!" என்று வாழ்க்கையையும் உங்களையும் தாழ்த்தி நொந்து கொள்ள மாட்டீர்கள்.
"என்ன வாழ்க்கை! எவ்வளவு பலன்கள்! நான் கற்றது கை பொன் அளவு!" என்று சந்தோஷமடைவீர்கள்.
நான் - 'தெரிந்து கொள்ளுங்கள்' 'புரிந்து கொள்ளுங்கள்' 'சோதித்துப் பாருங்கள்' என்று ஆள்காட்டி விரல் மூலம் திரும்பத் திரும்ப சுட்டிக் காண்பிப்பது, ஆனந்தம் என்ற வைரங்கள் கொட்டிக் கிடக்கும் அற்புத மாளிகையை நீங்கள் சென்றடைவதற்கு.
முதலில் மண்ணைப் பொன்னாக்கலாம். பிறகு வைரங்களை கண்டெடுக்கலாம்.
- ஒரு குருவிடம் கொஞ்சம் நெருங்கிப் பழக ஆரம்பித்த பின் பலர் பக்தி என்ற பெயரில் பவ்யமாக செயல்பட ஆரம்பித்து விடுகிறார்கள். ஏன் இந்த பாசாங்கு? எதற்காக இந்த வேஷம்? இது அடிமைத்தனமில்லையா? ததயசார்லஸ், திருச்சி.
அமைதியின் முழக்கம் *12
Page 15
அது வேஷம் அல்ல. அகங்காரம் என்னும் விஷத்தை துவேஷம் செய்யும் ஒரு நடைமுறை தியானம்.
ஒரு குருவிடம் பவ்யமாக இருப்பது அன்பு கலந்த பக்தி தான். அது பயம் கலந்த அடிமைத்தனமாக எந்த ஒரு சூழ்நிலையிலும் இருக்க முடியாது.
குருவை நெருங்க ஆரம்பித்த பின், புரிந்து கொள்ளுதல் நடக்கின்ற காரணத்தால் குரு மீது அளவு கடந்த மரியாதை யும், அன்பும் பெருகுவது இயல்பு. இது தான் பக்தியாக மலருகிறது.
பக்தி மலர்ந்தால் மாத்திரமே குருவால் ஒரு மனிதனின் அகங்கார விஷத்தை எளிதில் துவேஷம் செய்ய முடியும். பக்தியால் திறந்த மனதைப் பெற்ற ஒரு பக்தனைத்தான் ஒரு குருவால் முக்தி நோக்கி சீக்கிரம் அழைத்துச் செல்ல முடியும். இதையெல்லாம் தாண்டி, பக்தி என்னும் அற்புத உணர்வு மலர்ந்தவர்களுக்கு மாத்திரம் தான் புரியும் - அந்த பக்தியாக இருக்கும் கணங்கள் எவ்வளவு சந்தோஷத்தையும், நிம்மதியையும் அவர்களுக்கு தருகிறது என்று ! பக்தி அடிமைத்தனம் அல்ல.
பக்தி போன்ற ஒரு அற்புத உணர்வு இல்லாத நிமிடங்களில், நீங்கள் உணர்ச்சிக் கொந்தளிப்புகளுக்கும், உடல் பலகீனத்திற்கும் அடிமையாத்தான் இருக்கிறீர்கள்.
சமுதாயத்தாலும், உறவுகளாலும் அலைக் கழிக்கப் படும் உணர்ச்சிக் கொந்தளிப்புக்கும், வரையரைக் குட்பட்ட உடல் பலகீனத்திற்கும் உலகமே அடிமையாக இருப்பது உங்கள் கண்ணை உறுத்தவில்லையா? 13* பரமஹம்ச ஸ்ரீ நித்யானந்தர்
Page 16
அடிமைத்தனத்தில் இருந்தாலும் அவ்வப்போது மக்களை சந்திக்கும் இடங்களில் சிரித்து தாங்கள் சரியாக இருப்பது போல பலர் காட்டிக் கொள்வது உங்களுக்கு பாசாங்காக தெரியவில்லையா? முழுமையாக அன்பு செலுத்த முடியாவிட்டாலும், முழுமையாக அன்பு செலுத்துவது போல வார்த்தைகளால் பேசிப் பேசி ஒருவரையொருவர் ஏமாற்றுவது வேஷம் போல் தோன்றவில்லையா?
திரு. சார்லஸ் ... யோசியுங்கள். உங்கள் கேள்வியின் ஆணி வேர் எங்கே இருக்கிறது என்பது புரிய வரும்.
- விக்கிரக வழிபாடு சரியா? தவறா? நீங்கள் எதை ஆதரிக்கிறீர்கள் ? நத்ம ராஜ்பதிஜா, சிவகாசி. மேலோட்டமாக கூறினால், விக்கிரக வழிபாடு சரியும் அல்ல. தவறும் அல்ல. இன்னும் சற்று ஆழமாக கூற வேண்டுமானால், வெறும் விக்கிரகத்தை வழிபடுவது சரியல்ல. விக்கிரகத்தின் மூலம் வழிபடுவதே சரி. ஆழ யோசித்தால் நான் கூறுவது புரிய வரும். விக்கிரக வழிபாடு புரிபவர்கள் யாரும் விக்கிரகத்திடம் சென்று, "ஏ கருங்கல்லே! ஏ இரும்பே! ஏ பஞ்சலோகமே!" என்று பேசி, இதைக் கொடு, அதைச் செய், என்னைக் காப்பாற்று என்று வேண்டுவதில்லை. அமைதியின் முழக்கம் *14
Page 17
விக்கிரகத்தின் மூலமாக தெய்வம் பற்றி அவர்கள் கொண்டிருக்கும் அபிப்பிராயம், பேர், உருவம் ஆகியவற்றை மனக்கண்முன் கொண்டுவருகிறாரக்ள். மனிதனுக்குள் இருக்கும் அற்புதமான உணர்வுகளில் ஒன்றான பக்தி அப்போது பொங்க ஆரம்பிக்கிறது.
நம் உள் இருக்கும் சக்திக் கிடங்கை திறக்கும் ஒரு மந்திரச் சாவிதான் பக்தி. அதனால்தான் பக்தியோடு வழிபாடு செய்பவர்கள் 'பக்திப்பரவசம்' என்ற ஒன்றை உடல் முழுவதும் உணர்வதாக கூறுகின்றார்கள்.
பஞ்ச பூதங்கள் மூலம் எங்கும் நிறைந்திருக்கும் இறைசக்தியை தொடர்பு கொள்ள முடியும். கை அடக்க முள்ள செல்போன் என்னும் கருவி மூலம் உலகின் எந்த மூலையில் இருந்து வேண்டுமானாலும், எந்த மூலைக்கு வேண்டுமானாலும் தொடர்பு கொள்ள முடியும் - இதை இந்த சந்ததியினர் அனுபவித்து விட்டனர். அதனால் ஏற்றுக் கொள்ள முடியும்.
ஒரு 100 வருடம் முன்பு இந்த உண்மையை கூறி யிருந்தால் கேலி செய்திருப்பார்கள். ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார்கள். காரணம் செல்போன் பற்றி அன்று யாருக்குமே எதுவுமே தெரியாது. விக்கிரக வழிபாட்டின் சூட்சுமம் எத்தனை பேருக்கு தெரியும் ? நாம் செல்போனில் பேசுவது மின்காந்த அலைகளாக மாறி மீண்டும் அதே தொனியில், அதே பாணியில் கேட்பது சாத்தியமாகும் போது - இதே போன்ற ஓர் உணர்வு ரீதியான மாற்றம் ஏன் சாத்தியமாகக் கூடாது?
15 * பரமஹம்ச ஸ்ரீ நித்யானந்தர்
Page 18
எங்கும், எதிலும், எல்லோருக்குள்ளும் நிறைந் திருக்கும் இறைசக்தியை உணரும் முறைகள் தான் விக்கிரக வழிபாட்டிலிருந்து, தியானம் வரை.
பஞ்ச பூதங்களில் (FIVE ELEMENTS) முதலாவதான மண், மூலமாக இறைசக்தியை உணரும் முறைக்குப் பெயர் தான் விக்கிரக வழிபாடு. விக்கிரக வழிபாடு இறைசக்தியை முழுமையாக உணர்வதின் ஆரம்பம், முடிவு அல்ல.
இரண்டாவதான, நீரை பயன்படுத்தும் முறைக்கு பெயர் தான் தீர்த்தயாத்திரைகள். மூன்றாவதான நெருப்பை, பயன்படுத்தும் முறைக்கு பெயர்தான் யாகங்கள், யக்ஞங்கள். நான்காவதான காற்றை, பயன்படுத்தும் முறைக்கு பெயர் தான் பிராணாயாமம், யோகாசனம். ஐந்தாவதான ஆகாச சக்தியை, பயன்படுத்தும் முறைக்கு பெயர்தான் தியானம்.
ஒவ்வொரு படியாக ஏறி வந்து இறைசக்தியை, இறைவனை முழுமையாக உணரலாம். ஒரே அடியாக ஐந்தாவது படியான தியானத்திற்கு எம்பி குதித்தும் இறை சக்தியை உணரலாம். அது அவரவர் விருப்பம்.
முதல் படியில் காலடி எடுத்து வைப்பது தவறல்ல. முதல்படியிலேயே நின்றுவிடுவதுதான் தவறு.
செல்போனில் காற்று மூலம் ஒருவரோடு ஒருவர் பேசுவதை விளக்குவது விஞ்ஞானம். ஐம்பூதங்கள் (FIVE ELEMENTS) மூலம் ஒருவர் இறைசக்தியோடு உணர்வு ரீதியாக உறவாடுவதை விளக்குவது மெய்ஞானம்.
விஞ்ஞானம் தெரியாதவனுக்கு செல்போன் செயல் பாடு புரியாது. மெய்ஞானம் தெரியாதவனுக்கு ஐம்பூதங்கள் அமைதியின் முழக்கம் *16
Page 19
மூலம் வழிபடுவது மற்றும் இறைசக்தியை உணரும் செயல்பாடு பற்றி புரியாது. கேள்வி கேட்க நீங்கள் எதை ஆதரிக்கிறீர்கள் என்பதை பொருத்துதான் என் பதில் உங்களுக்கு புரிய ஆரம்பிக்கும். 9. குமுதத்தில் நீங்கள் தொடர்ந்து லளகீக வாழ்க்கைக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்து எழுது கிறீர்கள். ஆன்மீகத்திற்கு ஏன் நீங்கள் முக்கியத்துவம் தரக்கூடாது?
ததய் ராஜராஜன், கன்னியாகுமரி. "கிளியைச் சொல்லி குற்றமில்லை. கிளியை கிளிப் பிள்ளையாக மாற்றியவனைத்தான் கிள்ள வேண்டும்" என்ற முதுமொழிதான் உங்கள் கேள்வியை படித்தவுடன் என் நினைவிற்கு வருகிறது. என்ன சொல்கிறோம் என்று தெளிவு கூட இல்லாமல் சொல்வது தான் கிளிப்பிள்ளை. கிளிப்பிள்ளையைப் பொருத்த அளவிற்கு அது பேசுவது சரிதான். கிளிப்பிள்ளை பேசுவது, அது முடிவு செய்த விஷய மல்ல. கிளியினுள் திணிக்கப்பட்டது. பழக்கப்படுத்தப் பட்டது.
ஆன்மீகம் என்றால் இது தான் என்று மற்றவர்களால் உங்களுக்குள் திணிக்கப்பட்ட கருத்து தான் உங்களை இப்படி பேச வைக்கிறது. உண்மையில்,
ஆன்மீக வாழ்க்கை என்றால் ஆனந்த மயமான வாழ்க்கை. ஆன்மீகம் என்றால் ஆனந்தமாக வாழும் கலை பற்றிய கல்வி. 17 * பரமஹம்ச ஸ்ரீ நித்யானந்தர்
Page 20
ஆனந்தமாக வாழ்வது என்பது சாதாரணமாக, இயல்பாக வாழ்வது.
- சாதாரணமாக வாழ்வது என்பதுதான் அசாதாரண மாகிப் போன ஒரு விஷயம்.
சாதாரணமாக வாழும் கலையை மனிதன் மறந்ததால் ஆனந்தம் பறிபோனது. அசாதாரணமான நிலைகளான துக்கம், கோபம், எரிச்சல், வேதனை ஆகியவை மனிதனைத் தொற்றிக் கொண்டன.
அசாதாரண நிலைகளில் மனிதன் மாறி மாறி வாழ ஆரம்பித்ததும் அசாதாரணமே சாதாரணம் என்று நம்ப ஆரம்பித்து விட்டான்.
ஆன்மீக வாழ்க்கை என்பது மிக உயர்ந்தது, அது புனிதம் என்று மனிதன் நம்ப ஆரம்பித்ததும், லெளகீக வாழ்க்கை சாதாரண வாழ்க்கை என்றும்; ஆன்மீக வாழ்க்கை வேறு, லெகீக வாழ்க்கை வேறு என்றும், நம்ப ஆரம்பித்ததின் விளைவுதான் எல்லா பிரச்சினை களுக்கும் மூல காரணம்.
மனிதன் அசாதாரணத்தை சாதாரணம் என்றும், சாதாரணமான இயல்பு நிலையை அசாதாரணம் என்றும் மாற்றி நம்பி குழம்ப ஆரம்பித்ததும் - சில காரியவாதிகள், ஆன்மீகம் என்ற பெயரில் பல கற்பனைகளைப் புகுத்தியதின் விளைவுதான், ஆன்மீக வாழ்க்கை வேறு, சாதாரண வாழ்க்கை வேறு என்ற எண்ணத்திற்குக் காரணம். உண்மையில் ஒரே ஒரு வாழ்க்கைத்தான் - அது உலக வாழ்க்கை.
அமைதியின் முழக்கம் * 18
Page 21
ஆன்மீகத்தின் அடிப்படை நோக்கமே இயல்பான, இயற்கை உணர்வான ஆனந்தம் நிறைந்த சாதாரண உலக வாழ்விற்கு மனிதனை மீண்டும் அழைத்து வருவதுதான்.
இப்போது நீங்கள் சாதாரண வாழ்க்கை என்று அழைக்கும் லௌகீக வாழ்க்கை முறையில் இருக்கும் தவறான அம்சங்களை சுட்டிக்காட்டி, குறையை மாற்றி, நிறையை உணர்த்தி, உண்மையான சாதாரண வாழ்க்கையான ஆனந்தமயமான வாழ்வை வாழ வைப்பதுதான் ஆன்மீகத்தின் நோக்கம்.
உலக வாழ்க்கையில் கஷ்டப்படும் நிலையிலிருந்து சுதந்திரமான ஆனந்த நிலைக்கு அனைவரும் சென்று சேர வேண்டும். அதில் தாண்ட வேண்டிய ஆசைகள், இன்ப, துன்பங்கள் நிறைய இருக்கின்றன. பந்த பாசக் கடலை அனைவரும் தாண்ட வேண்டும். அதை சுகமாக, வேதனை இல்லாமல் தாண்டத்தான் கதவைத் திற ... காற்று வரட்டும் தொடர்.
ஆன்மீகத்தை எல்லோரும் புரிந்து கொள்ளும் மொழியில் பேசினால் மட்டுமே எல்லோரும் பயன் பெறுவார்கள். கதவைத் திற ... காற்று வரட்டும்! தொடரில் கூறப்பட்டது ஆன்மீகம் இல்லை என்று உங்களுக்கு தோன்றினால், ஒரு விஷயத்தை தெரிந்து கொள்ளுங்கள். ஆன்மீகம் பற்றிய பல தவறான கற்பனைக் கருத்துக்கள் உங்கள் மனதில் நிரம்பியிருக்கிறது. மாறுபட்ட மனக் கண்ணோட்டம்தான் நிஜத்தை விட்டு நிழலை பார்க்க வைக்கும்.
19* பரமஹம்ச ஸ்ரீ நித்யானந்தர்
Page 22
ஆன்மீகம் பற்றிய தவறான அபிப்பிராயங்களை தூக்கி எறியுங்கள். வாழ்க்கையை ஆனந்தமாக வாழ உதவும் எல்லா வழிமுறைகளும் ஆன்மீகம்தான்.
குறை கண்டுபிடிக்கும் நோக்கோடு ஒரு விஷயத்தை அணுகினால் நமக்கு ஒரு சில ஆதாரங்கள் இருப்பது போல நிச்சயம் தோன்றும். இந்த மாயையால் நிஜத்தை விட்டு மாயையை பிடித்துக் கொள்ளும் அபாயம் இருக்கிறது.
கதவைத் திற ... காற்று வரட்டும் தொடரில் ஆன்மீகத்தை ஒருவரால் நுகர முடியவில்லை என்றால் வேறு எங்கு சென்றாலும் ஆன்மீகத்தை நுகர முடியாது. அப்படியே எங்காவது ஆன்மீகம் இருப்பதாக கூறினால் அது உங்களினுள் புகுத்தப்பட்ட கருத்துக்கள் சம்பந்தப்பட்ட ஒன்றாக இருக்கும். 'நிஜ ஆன்மீகம்' இப்படிப்பட்ட மன கண்ணோட்டத்தில் இருப்பவருக்கு தெரியாது.
எளிமையான விஷயங்களை அலட்சியமாக பார்ப்பது அகங்காரம் பிடித்த மனிதனின் இயல்பு.
கதவைத் திற ... காற்று வரட்டும் தொடரில் எளிமையை கடைப்பிடிக்க வேண்டும், எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்பதற்காகத்தான், சமஸ்கிருத வார்த்தைகளை அதிகம் உபயோகிக்கவில்லை.
முதன் முதலாக ஆன்மீகம் படிப்பவருக்கு ஆன்மீக சத்தியங்களை அப்படியே கூறினால் ஜீரணிக்க முடியாது. புரிந்து கொள்ள கடினமாக இருக்கும் விருப்பத்தை விட வெறுப்பு உருவாகத்தான் வாய்ப்பு அதிகம்.
அமைதியின் முழக்கம் *20
Page 23
எளிமையாக எழுதப்பட்டது என்பது உண்மை. ஆனால் ஏதோ கதை சொல்ல வேண்டுமென்பதற்காக எழுதப்பட்ட தொடர் அல்ல.
கதை என்ற சுவை சேர்த்தது ஆரம்பத்தில் சிலருக்கு கசப்பு போன்று தெரியும். ஆன்மீகத்தை சுவையான ஒன்றாக மாற்றும் முயற்சியே கதவைத் திற ... காற்று வரட்டும்!
திரு ராஜராஜன், 'இதுதான் ஆன்மீகம்' என்று தங்கள் மனதில் வைத்திருக்கும் கோட்பாடுகள் தான் உங்கள் வளர்ச்சிக்கு பெரிய தடை. ஆன்மீகம் பற்றிய முதல் படியை பூரணமாக தாண்ட, குறை கண்டுபிடிக்கும் கண்ணோட் டத்தை விட்டு, மீண்டும் ஒரு முறை கதவைத் திற ... காற்று வரட்டும்! புத்தகம் படியுங்கள். ஆனந்தமடைய முயற்சி யுங்கள். நீங்கள் ஆனந்தமாக வாழ என்னுடைய பூரணமான ஆசீர்வாதங்கள்.
- நீங்கள் தியான சத்சங்கங்கள் செல்லும் இடங்களில் எல்லாம் உங்கள் பக்தர்கள் உங்களுக்கு கட் அவுட் வைக்கிறார்கள். சில நேரங்களில் நகரில் எங்கு பார்த்தாலும் உங்கள் முகத்தை தெரியும்படி செய்கிறார்கள். ஏன் இப்படி செய்கிறார்கள்? இதனால் என்ன பயன்?
நயகேசவ், ராமேஸ்வரம்.
பயன் உண்டு - கேசவ்.
நீங்கள் பேருந்தில் பிரயாணம் செய்கிறீர்கள். ஒரு விளம்பரத்தைப் பார்க்கிறீர்கள். ஒரு நடிகன் அல்லது ஒரு நடிகையின் கவர்ச்சி சுவரொட்டியைப் பார்க்கிறீர்கள்.
21 * பரமஹம்ச ஸ்ரீ நித்யானந்தர்
Page 24
அடுத்தது என்ன நிகழும். அந்த நடிகன் அல்லது நடிகை, சம்மந்தப்பட்ட விஷயங்கள் அப்படி, இப்படி என்று மனம் அதன் போக்கில் ஓட ஆரம்பிக்கும். இதைத்தான் 'மனம் போன போக்கில்' என்று கூறுவார்கள்.
ஒரு அரசியல் வாதியைப் பார்க்கிறீர்கள்; ஒரு சண்டையை, விபத்தை பார்க்கிறீர்கள்;
ஒரு கல்யாண வைபோக விழாவை பார்க்கிறீர்கள்; சிறுவர்கள் ஓடி, ஆடி விளையாடுவதைப் பார்க்கிறீர்கள்;
என்ன நடக்கும்? மனம் கண்ணில் பட்ட விஷயங்களை நோக்கி நினைவுகளையும், கற்பனைகளையும் தூண்டும். எண்ணங்கள் வெளியிலிருந்து கிரகிக்கும் விஷயங்களையே சுற்றி சுற்றி வரும்.
ஒரு ஆன்மீகவாதியின் படத்தை நீங்கள் பார்க்கும் போது, உங்களையும் அறியாமல் உங்கள் எண்ணங்கள் ஆன்மீகம் சம்மந்தப்பட்ட எல்லா விஷயங்களையும் மனக் கண் முன் எடுத்து வரும். கடைசியாக படித்த ஞானக் கருத்து, கடைசியாகச் கேட்ட ஆன்மீக சத்யம் - என்று ஆன்மீகம் பற்றிய எல்லா விஷயங்களையும் மனம் அலசி ஆராயும். தியான முகாம்கள் மூலம் எல்லா ஆன்மீக வாதிகளும் செய்வது இதைத்தான். (உங்கள் மனதில் நீங்களே ஆன்மீகத்தை அலசுவது). மனிதர்கள் உட்கார்ந்த இடத்திலேயே உட்கார்ந்து, எந்தவித முயற்சியும் செய்யாமல் ஆன்மீகத்தை அலசுவது அமைதியின் முழக்கம் *22
Page 25
என்பது மிக நல்ல செயல். அப்படி அலச ஆரம்பித்தால் மட்டுமே வாழ்வில் தெளிவு பிறக்கும். நிம்மதி பிறக்கும். ஆனந்தம் பிறக்கும்.
மக்களின் மனதில் ஆன்மீக தாகம் தோன்ற வேண்டும், தாங்கள் பெற்ற சந்தோஷத்தை, ஆனந்த அனுபவத்தை மற்றவர்களும் பெறவேண்டும் என்ற ஒவ்வொரு பக்தரின் சீரிய நோக்கங்களில் ஒன்றுதான் நீங்கள் கேட்டது.
அது விளம்பரம் அல்ல. அது விலகும் மனத்தை பரம் நோக்கி, ஆன்மீகம் நோக்கி திருப்பும் ஆன்மீக சேவை முறைகளில் ஒன்று.
ஒரு நாளில் குறைந்தது சில நிமிடமாவது உங்களை ஆன்மீகம் நோக்கி, சிரமமில்லாமல் திருப்பும் ஒரு அரிய, எளியமுறை.
- சுவாமி, 'வாழும் ஞானிகளை' சுற்றி மக்கள் கூட்டம் கூட்டமாக செல்லக் காரணம் என்ன?
ததய நிஜாமுதீன், வாணியம் பாடி.
காரணம், மிக சூட்சுமமானது. திரு. நிஜாமுதீன் அதை வெறும் வார்த்தைகளால் விளக்குவது சற்று கடினம்.
ஒரு சிறிய உதாரணம் கூறினால், எல்லோருக்கும் எளிதாக புரிந்து கொள்ள உதவியாக இருக்கும். ஒரு சக்தி வாய்ந்த காந்தத்தை மண்தரை மீது சும்மா ஒரே ஒரு முறை மிக தாழ்வாக தேய்த்தெடுங்கள், என்ன நிகழ்கிறது? மண் தரையில் இருந்த எல்லா இரும்பு துணுக்குகளும் ஒட்டிக் கொள்ளும். அதுவும் அந்த துகள்கள் தலை முடி போன்று
23 * பரமஹம்ச ஸ்ரீ நித்யானந்தர்
Page 26
விரைப்பாக கொத்து கொத்தாக இருக்கும். சாதாரண காந்தத் தின் காந்த சக்திக்கு இரும்பு துகள்கள் இவ்வளவு கவரப்படுகின்றன ! ஆனால் அங்கிருக்கும் மண், புல் கவரப்படுவதில்லை.
இதே போன்றுதான், ஆத்ம அனுபூதி அடைந்த ஞானியின் அருகே செல்லும் போது அவரிடமிருந்து ஆத்ம சக்தி வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும். அந்த ஆத்ம சக்தி, மனிதரின் மனம், உடல், உயிர் ஏங்கி ஆகியவற்றை கொண்டிருக்கும் ஆனந்த சக்தியால் நிரப்பும். ஒருவர் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் ஒரு ஞானியின் ஆத்ம சக்தி செயல்படும் களத்திற்குள் (காந்தத்தின் காந்தபுலம் போல) ஒருவர் நுழைந்து விட்டால் ஞானியின் ஆத்ம சக்தி உடல், உயிர், மனதை நிரப்ப ஆரம்பிக்கும். ஆனந்தம் உங்களினுள் ஏற்படும்
இங்குதான் சூட்சுமம் ஒளிந்திருக்கிறது. நல்ல உணர்வு நிலையில் அல்லது முழு விழிப்புணர்வோடு இருப்பவர் களால் மட்டுமே இதை உணர முடியும் (இரும்பு துகள்போல்). மந்த தன்மையோடு, உணர்வற்று இருப்பவர் களால் உணர முடியாது. (மண், புல் போல). ஒரு ஞானியை ஆரத்தழுவினால் கூட இவ்வகை மனிதர்களால் ஆனந்த சக்தி தன்னுள் பாய்வதை புரிந்து கொள்ளவோ, உணர்ந்து கொள்ளவோ முடியாது. நல்ல உணர்வு நிலை பெற்றவன் ஞானியின் ஆத்ம சக்தி செயல்படும் எல்லைக்குள் புகும்போதே உணர முடியும்.
அமைதியின் முழக்கம் *24
Page 27
தனிப்பட்ட மனிதனின் உணர்வுத்திறன் அல்லது விழிப்புணர்வைப் பொருத்து அவன் ஆனந்தத்தை உணரும் அளவு அமையும். அதிக உணர்வுத்திறன் பெற்றவர்களால் ஒரு ஞானியை சந்தித்த பின் திரும்பிச் செல்ல இயலாது. காரணம் ஆனந்தத்தை சுவைத்து விட்டது தான். இப்படி சுவைத்து விட்டவன் பணக்காரனாக இருந்தாலும் சரி, ஏழையாக இருந்தாலும் சரி, மெத்தப் படித்தவனானாலும் சரி, படிக்காத வனானாலும் சரி, அவனுக்கு அந்த ஞானியுடனே இருந்துவிடத் தோன்றும். இவ்வளவு உணர்வுத் திறன் பெற்று ஆனந்தத்தை சுவைத்தவர்கள் தான் குருவின் நேரடி சீடர்களாக மாறுபவர்கள். (இது எல்லோருக்கும் சாத்தியமான ஒன்றல்ல. ஞானி பக்கத்தில் போனாலே ஏதோ ஒரு மயக்கத்தில் அங்கே இருந்து விடுவோம் என்று பயந்துவிடாதீர்கள்). தாங்கள் உணர்வதையும், மற்றவர்கள் உணராமல் தங்கள் குருவை புரிந்து கொள்ளாமல் இருப்பதையும் பார்த்து அவர்களுக்குள் பொங்கும் கருணைதான் அவர்களது வாழ்க்கையையே ஆன்மீகத்துக்கு அர்ப்பணிக்கும் துணிவை யும், உறுதியையும் தருகிறது. (உண்மையான சந்நியாசிகள், இதற்கென்றே பிறக்கிறார்கள், நடுவில் உருவாக்கப் பட்டவர்கள் அல்ல.) அடுத்து உணர்வுத்திறன் கொஞ்சம் குறைவாகப் பெற்றவர்களாலும், ஞானியிடமிருந்து வெளிப்படும் அந்த ஏதோ ஒன்றை உணர முடியும். ஞானியைப் பார்க்கும் 25 * பரமஹம்ச ஸ்ரீ நித்யானந்தர்
Page 28
போதும், ஞானியின் குரலைக் கேட்கும் போதும், ஞானி அருகில் இருக்கும் போதும் தங்களுக்குள் இனம்புரியாத ஏதோ ஒன்று நடப்பதும், அது விவரிக்க முடியாத சந்தோஷத்தை தங்களுக்குள் தருவதையும் உணர்வார்கள். இந்த உணர்வுதான் வாழும் ஞானிகளைச் சுற்றி கூட்டம் கூட்டமாக மக்கள் சுற்றி வரக் காரணம். இந்த விளக்கம் உணர்வுத்திறனோடு வாழ்பவர்களுக்கு உடனே புரியும். ஏற்றுக்கொள்ள முடியும். இதே விளக்கம் அறிவு பூர்வமாக வாழ்பவர்களுக்கு உடனே புரியாது. ஏற்றுக் கொள்வது கடினம். நிறைய படித்ததற்கும் புரிந்து கொள்ளு தலுக்கும் சம்பந்தமே ல்லை. எப்படி கணிதம், மருத்துவம், கலை ஆகியவை தனித்தனித் துறைகளோ - அதே போல்தான் அறிவுப் பூர்வமாக வாழ்வதும், உணர்வுப் பூர்வமாக வாழ்வதும். நிறை அறிவு - அறிவின் செறிவு கூட உணர்தலுக்கு தடையாக இருக்கும். ஆனால், அறிவுப் பூர்வமாக வாழ் பவனால், உணர்வு பூர்வமாக மாறவே முடியாது, முழுமை யாக அனுபவிக்க முடியாது என்று விதி எதுவும் இல்லை. முயன்றால் மாற்ற முடியும். உணர்வு பூர்வமானவர்களுக்கு மாத்திரம் ஆனந்தம் சொந்தமல்ல, எல்லோருக்கும் சொந்தம். அறிவுப்பூர்வ மானவர்களும் ஆனந்தத்தை ருசிக்க வேண்டும் என்பதற் காகத்தான் ஞானிகள் ஆன்மீக சேவைக்கே வருகிறார்கள். சூட்சுமங்களைப் புரிந்து கொள்ளுங்கள். ஞானிகளின் அருகில் செல்லும் வாய்ப்புகளை 100% பயன்படுத்துங்கள்.
அமைதியின் முழக்கம் *26
Page 29
- ஒருமுறை சேலத்திலும், ஒருமுறை கோயம் புத்தூரிலும் உங்களின் இலவச தியான சத்சங்கங்களில் பங்கு பெற்றிருக்கிறேன். எல்லோருக்கும் நீங்கள் கற்றுத் தரும் 'மகாமந்திர' தியானத்தை நான் தினமும் வீட்டில் செய்து வருகிறேன். சக்தியோட்டத்தை நன்றாக உணர்கிறேன். வீட்டில் செய்யும் போது எனக்குள் நிகழும் ஆனந்த உணர்வை விட சத்சங்கங்களில் செய்யும் தியானத்தில் அதிக ஆனந்த உணர்வு ஏற்படுகிறது. இது ஏன்? எதனால் இப்படி அதிகரிக்கிறது? நதமவாசன் - திருவண்ணாமலை. காரணம், கூட்டுதியானத்தின் மகிமை ! பத்துபேர் சேர்ந்து பத்து, பத்து ரூபாய் கொடுத்தால் நூறு ரூபாய் சேரும். அந்த நூறு ரூபாயை அதே பத்து பேர் சமமாகப் பிரித்துக் கொண்டால் ஒவ்வொருவருக்கும் வெறும் பத்து, பத்து ரூபாய் மாத்திரமே கிடைக்கும். ஆனால் பத்து, பத்து வோல்டேஜ் மின்சாரத்தை ஒன்றாக சேர்த்து வைத்து, பத்து பேரும் சேர்ந்து ஒரே நேரத்தில் அந்த பேட்டரியை தொட்டால் என்ன நிகழும்! பத்து பேருமே நூறு வோல்டேஜ் மின்சார அதிர்வை பெறுவார்கள். கொடுத்தது பத்து வோல்டேஜ் மின்சாரம். ஆனால், பெற்ற அதிர்வு நூறு வோல்டேஜ் மின்சாரம். இதேதான் கூட்டுத் தியானத்தின் போது நிகழ்கிறது, திரு. வாசன். பல நூறு மக்கள் ஒரே இடத்தில் தியானம் செய்யும் போது அவ்வளவு பேரின் தியான சக்தியும் ஒரே அறையில் 27 * பரமஹம்ச ஸ்ரீ நித்யானந்தர்
Page 30
குவிகிறது. மொத்த தியான சக்தி களத்தையும் நீங்கள் ஒரு சேர உணர்வது தான் 'அதிகமாக ஆனந்த உணர்வை பெறுகிறேன்' என்று நீங்கள் கூறுவது. இப்படி எல்லோரும் தியான சக்தியை முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்பதற்காகத்தான் முடிந்த அளவு ASP தியான முகாம் நடைபெற்ற எல்லா ஊர்களிலும் தியான பீடத்தின் கிளைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அங்கே எல்லோருக்கும் இலவசமாக தியானம் கற்றுத் தரப்படுகிறது. ஒவ்வொரு வாரமும் வியாழக் கிழமைகளில் கூட்டு தியானம் மூலம் பொது மக்களுக்கு தியானம் கற்றுத் தரப்படுகிறது. தினம் காலை, மாலை 6.30 முதல் 7.00 மணி அளவில் மகா மந்திர தியானம் கூட்டு தியானமாக நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. கூட்டு தியானத்தின் மகிமையை உங்கள் ஊரில் இருக்கும் தியானபீட கிளையில் சென்று இனி நீங்கள் தொடர்ந்து அனுபவிக்கலாம். 13. உங்கள் காவி, குங்குமம் எங்கள் கண்களை உருத்துகிறது. இந்த சம்பிரதாயங்கள் தேவையா? நதய் அபிராமி, கேரளா. மறைந்து போன பல புதையல்களை தோண்டத்தான். மக்களின் மனதில் காவிக்கான மரியாதை வேதகாலங்களில் இருந்தது போல் இப்போது இல்லை என்பது உண்மை. காவி நிறத்திற்கே தனி மகிமை உண்டு. இப்போது புதிதாக உருவான Colour theraphy வேத காலத்திலேயே
அமைதியின் முழக்கம் *28
Page 31
பயன்பாட்டில் இருந்திருக்கிறது. மனிதனின் மனதில் அமைதியையும், சாந்தத்தையும் இயல்பாகவே ஏற்படுத்தும் தன்மை கொண்டது இந்தக் காவி நிறம். அதனால் சாந்தி யையும், அமைதியையும் பரப்பும் ஆன்மீக வாதிகள் அந்த நிறத்தையே உடையாக்கினார்கள். மேலும், குங்குமம் ஆக்ஞா சக்கரத்தை தூண்டும் சக்தி பெற்றது. அறிவியல்படி கூற வேண்டுமென்றால் குங்குமம் வெளியிடும் வீச்சலைகள் ஆக்ஞா சக்கரத்தோடு சம்மந்தப் பட்ட பிட்யூட்டரி சுரப்பியை தூண்டும் சக்தி பெற்றது. குங்குமம் பிட்யூட்டரி சுரப்பியை தூண்டுவதால் விழிப் புணர்வும், புத்திசாலித்தனமும் எளிதில் அதிகரிக்கும். ரிஷிகள் கண்டுபிடித்த மந்திரங்கள் வெறும் வார்த்தைகள் அல்ல. அவை சக்திக் கோளங்கள். ஒவ்வொரு வகை மந்திரம் கூறும் போதும், மனதின் ஓட்டம் குறைந்து அமைதியாவதை, ஜெர்மனியில் - மனிதனை மந்திரங்கள் உச்சாடணம் செய்ய வைத்து EEG பரிசோதனை மூலம் நிரூபித்திருக்கிறார்கள். அமெரிக்காவில் Q-EEG பரிசோதனை மூலம் நிரூபித்திருக்கிறார்கள். காவி, குங்குமம், மந்திரங்கள் இவற்றின் அறிவியல் பூர்வமான விளக்கங்களை தாண்டி பல சூட்சுமமான விஷயங்கள் இந்த சந்நியாசத்தோடு சம்பந்தப்பட்டிருக்கின்றன. இதில் ஒன்று தான் குருகுலம். மனிதன் ஆனந்தமாக வாழும் கலை பற்றிய சிறந்த பாடத்திட்டம்தான் குருகுலம். வாழ்க்கையில் சௌகரி யத்தை அதிகப்படுத்துவதற்காக நேரம் செலவழிப்பதால் 29* பரமஹம்ச ஸ்ரீ நித்யானந்தர்
Page 32
ஆனந்தம் வந்து விடாது. வாழ்க்கையை கொண்டாடும் ஆனந்த சக்தியை எப்படி பெறுவது என்ற கல்வியும் மனிதன் தெரிந்து கொண்டே ஆக வேண்டிய கட்டாயம். குருகுலம் முறை மீண்டும் மனித குலத்திற்கு வழங்கப்படவேண்டும். மனிதனின் உடனடி தேவைக்காகவும், அழிந்து போய்க் கொண்டிருக்கும் பல ரகசியங்களை காப்பாற்றியே ஆக வேண்டிய கட்டாயம். அதனால் தான் இந்த காவி, குங்குமம், மந்திரம் எல்லாம், ஏன்! குருகுலம் கூட ஆஸ்ரமத்தில் துவங்கப் பட்டு இனிதே நிகழ்ந்து கொண்டிருக்கிறது. 'ஆனந்த அனுபவ்' என்ற வாழும் கலை பற்றிய ஒரு வருட இலவச குருகுலக், கல்வி வாழ்க்கையை எதிர்கொள்ள இருக்கும் இளம் வயதினற்கு, தியானபீடம் சார்பாக பெங்களூரில் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. மறைந்த உண்மைகளை மீண்டும் நிலை நிறுத்தும் பணிகளில் சில உங்கள் கண்ணை உருத்துவது நியாயமே. உங்களுக்கு எந்த அளவுக்கு உருத்துகிறது என்பதுதான், வாழ்க்கைக்கு தேவையான பல ஆன்மீக விஷயங்கள் எந்த அளவுக்கு சமுதாயத்தில் மறைந்து கொண்டிருக்கிறது என்பதற்கான அளவுகோல். சிறுபிள்ளைகளுக்கான குருகுலக் கல்வியும் வெகு சீக்கிரத்தில் துவங்க இருக்கிறோம். மனித குலத்துக்கு பயன்படும் பல மருத்துவ குணமுள்ள சம்பிரதாயங்களை பொதுமக்களுக்கு பயன்படும் அமைதியின் முழக்கம் *30
Page 33
வகையில் எளிமையாக சென்று சேர்ப்பதற்காக, தியான பீடம் முயற்சிகளை செய்து கொண்டிருக்கிறது. சம்பிரதாயங்களின் அறிவியல் பூர்வமான விளக்கங்கள் வெளியிடப்படும் வரை நீங்கள் கொஞ்சம் பொருத்துதான் ஆக வேண்டும். Sorry, உங்களுடைய கேள்வியின் இரண்டா வது பகுதிக்கு ஒரு புத்தகம் மூலம் தான் பதில் கூற முடியும். 14. உயிர்களை கொன்று அவற்றின் சதையையும், எலும்பையும் தின்னும் மாமிசம் உண்ணுபவர்கள் என்று திருந்துவார்கள் ? நான் மாமிசத்தால் வரும் கேடுகளை கூறினால் என்னை கேலி செய்கிறார்கள்? நதத் ராமமூர்த்தி. திண்டுக்கல். ஐயா ராமமூர்த்தி, உங்களுக்கு எதற்கு இந்த வேண்டாத வேலை. உங்களால் எப்படி அசைவம் சாப்பிடுவதை கனவில் கூட நினைக்க முடியதோ, அதே போல் தான் அவர்களும். அவர்களாலும் முழு சைவம் சாப்பிடுபவராக உடனே மாறுவதை கற்பனை கூட செய்ய முடியாது. நீங்கள் சைவம் சாப்பிடுவது சரி. அது மட்டும் ஆன்மீக வாழ்க்கை அல்ல. காரணம், விவேகானந்தர் அசைவம். ஹிட்லர் சைவம். அசைவத்திற்கும் ஆன்மீகத்திற்கும் சம்பந்தம் உண்டா? சைவத்திற்கும் சர்வாதிகாரத்துக்கும் சம்பந்தம் உண்டா? சைவம் சாப்பிடுபவர்கள் எல்லாம் ஆன்மீகவாதிகள் அல்ல. அசைவம் சாப்பிடுவதால் அவர்கள் ஆன்மீகத்திற்கு தகுதி அற்றவர்கள் என்றும் கூறி விட முடியாது. 31 * பரமஹம்ச ஸ்ரீ நித்யானந்தர்
Page 34
விவேகானந்தரின் சக்தி வெளிப்பாட்டிற்கும், அனுபவ தெளிவுக்கும் அசைவத்தை தாண்டியும் ஆன்மீக உணர்வோடு அவரால் இருக்க முடிந்தது. மந்த தன்மையை தாண்டிய சக்தி ஓட்டம் அவரிடம் இருந்தது.
சாதாரணமாக வளரும் சராசரி மனிதனால் அது போல் இருக்க முடியாது. அசைவ உணவுகள் அதற்கே உரிய மந்த தன்மையையும், சக்தி குறைபாட்டையும் உண்டு பண்ணத்தான் செய்யும். பலன்களை விட பாதகங்களைத் தான் அது மனிதனுக்கு அதிகம் செய்யும் என்பதும் உண்மை தான்.
மந்தத் தன்மையால் ஒருவர் பாதிக்கப்படக்கூடாது என்ற அடிப்படையில் கருணை பொங்க அவர்கள் மீது அனுதாபமும், பரிதாபமும் ஏற்படுவது நியாயமே.
அசைவத்தை விடுவதற்கு ஒருவர் தயாராகாத வரையில் அவரிடம் சைவத்தை பற்றி பேசுவதில் எந்தப் பலனும் இல்லை. உங்களுடைய பேச்சினால் முழு சைவத்தின் மீது இன்னும் கொஞ்சம் வெறுப்பு ஏற்படத்தான் வாய்ப்பு இருக்கிறது. இது நியாயமற்ற செயல்.
ராமமூர்த்தி ஐயா, உங்கள் கேள்வியில் கருணை உணர்வை விட அசைவத்தின் மீதான வெறுப்பு உணர்வுதான் அதிகம் இருக்கிறது.
நீங்கள் இது போன்ற வெறுப்பால், ஒவ்வொரு நிமிடமும் சைவத்தால் கிடைத்த சாத்வீக தன்மையை இழக்கிறீர்கள். இப்படியே தொடர்ந்து வெறுப்போடு இருப்பதால் சைவத்தின் பலனை இழக்கிறீர்கள்.
அமைதியின் முழக்கம் * 32
Page 35
வெறும் சைவம் ஒரு மனிதனை பண்படுத்தும் என்றால் ஹிட்லர் ஒரு புத்தனாக மாறியிருக்க வேண்டும். ஆனால் வரலாற்றில் நடந்தது என்ன ? யோசியுங்கள்? சைவம் ஆன்மீகத்தின் ஒரு நல்ல அடித்தளம் தான். ஆனால், 'போதும்!' என்ற திருப்தி அடையும் அளவு, அது பெரிய விஷயம் இல்லை. தொடர்ந்து ஆன்மீகத்தில் முன்னேறுங்கள். உங்களுக்கு நீங்களே உபதேசம் செய்வது எப்படி என்பதை முதலில் கற்றுக் கொள்ளுங்கள். வெறுப்பை எறிந்து விட்டு கருணையை அதிகப்படுத்துங்கள். அசைவம் சாப்பிடுபவர்கள் அவர்களே உணர்ந்து திருந்திக் கொள்வார்கள். கவலையை விடுங்கள். 15. பத்து வருடமாக தொடர்ந்து தியானம் செய்கிறேன். எனக்கு இன்னும் முக்தி சித்திக்கவில்லை. ஏன்? நதத பெரியசாமி, விழுப்புரம்.
பெரியசாமி ஐயா ... முதல் விஷயம், தியானம் என்ற பெயரில் நீங்கள் செய்தது தியானமா? இல்லை சாதாரண உடற்பயிற்சியா? என்பது கண்டுபிடிக்கப்பட வேண்டும். இரண்டாவது, வெறும் தியானம் மாத்திரம் முக்தி தராது. தியானம் சக்தி தரும். தியானமும், வாழ்க்கை ஞானமும் சேர சேரத்தான் முக்தி சித்திக்கும்.
33 * பரமஹம்ச ஸ்ரீ நித்யானந்தர்
Page 36
வாழ்க்கை பற்றிய ஞானம் என்பது வாழ்க்கையையும், உங்களையும் முழுமையாக புரிந்து கொள்வது. சக்தியும், புரிந்து கொள்வதும் சேர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்க வேண்டும்.
பத்து வருடமாக தியானம் மாத்திரமே செய்தால் உடலில் கொஞ்சம் சக்தி அதிகமாகும். தொடர்ந்து ஞானப் புத்தகங்கள் மாத்திரம் படித்தால் வெறும் அறிவு மாத்திரம் அதிகமாகும்.
ஞானக் கருத்துக்களும், தியான சக்தியும் சம விகிதத்தில் ஒன்று சேரும் போது மட்டுமே அறிவு அனுபவமாகி அனுபூதி நோக்கி அழைத்துச் செல்லப் படுவீர்கள். முக்தி சித்திக்கும்.
நீங்கள் செய்யும் தியானம் என்பது தியானம் தானா? இல்லை தியானம் என்ற பெயரில் ஏதாவது செய்து கொண்டு இருக்கிறீர்களா ? என்ற தெளிவுக்கு வாருங்கள். இரண்டாவது, வாழும் ஞானி ஒருவரிடம் நேரடி தீட்சையும், ஞான உபதேசமும் பெற்றுக் கொள்ளுங்கள். பலனடைய ஆரம்பிப்பீர்கள். 16. காரைக்குடியில் தங்களின் தியான சத்சங்கத்தில் கலந்து கொண்டேன், தங்களின் கரம் என் தலையின் மீது ஆசீர்வதிக்கும் போது தொட்ட நிமிடத்தில் ஒரு ஆனந்த உணர்வு என்னுள் மின்சாரம் போல் பாய்வதை உணர்ந்தேன். வீட்டிற்கு சென்று பல மணி நேரமாகியும் எனக்கு அந்த உணர்வு இருந்து கொண்டே இருந்தது.
அமைதியின் முழக்கம் * 34
Page 37
இதை மற்றவர்களிடம் கூறினால் சிலர் இதே போன்றே ஆன்மீக அனுபவங்கள் தங்களுக்கும் பல்வேறு விதமாக கிடைத்ததை கூறுகிறார்கள். சிலர் இதெல்லாம் வெறும் கற்பனை, மனப்பிராந்தி என்று கூறி, கேலி செய்கிறார்கள். என்ன செய்வது? ததத சரத் ராஜ், காரைக்குடி. ரொம்ப சிம்பிள். இது போன்று கேலி செய்பவர்களை மனதிலிருந்து காலி செய்துவிடுங்கள். அது போன்ற நபர்களிடம் இது போன்ற அதிசய அனுபவங்களை பகிர்ந்து கொள்ளாதீர்கள். 'பாத்திரம் அறிந்து பிச்சையிடு' என்று உணவை ஒருவரோடு நீங்கள் பகிர்வதற்கே பெரியவர்கள் யோசிக்க சொல்கிறார்கள். உங்கள் வாழ்க்கை ரகசியங்களை ஒருவரோடு பகிர்வதற்கு முன் நீங்கள் யோசிக்க வேண்டாமா? அவர்களின் தகுதி அறிய வேண்டாமா? சரத் ராஜ்! உங்களை கேலி செய்தவர்கள் வேண்டுமென்றே செய்தார்கள் என்று கூறிவிட முடியாது. உங்களுக்கு ஆனந்த உணர்வின் ஒரு Glimpse கிடைத்தது எப்படி 100% உண்மையோ அதே போல் தான், அவர்களுக்கும் நீங்கள் பொய்யாக கற்பனை செய்வதாக தோன்றும். காரணம், மக்கள் மூன்று வகையானவர்கள் இருக் கிறார்கள். ஒன்று, அறிவுப்பூர்வமாக வாழ்பவர்கள். மூளையை மட்டுமே வாழ்க்கை அச்சாணியாக பயன்படுத்தி வாழ்பவர்கள். 35 * பரமஹம்ச ஸ்ரீ நித்யானந்தர்
Page 38
இவர்களால் ஒரு விஷயத்தை அறிவாக தெரிந்து கொள்ள முடியும். அறிவைத் தாண்டிய அனுபவமாக உணர முடியாது. இரண்டாவது வகை, அனுபவப்பூர்வமாக வாழ் பவர்கள். இதயத்தை அச்சாணியாக வைத்து வாழ்பவர்கள். இவர்கள் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வையும் அனுபவிக்க முடியும். மனித அறிவிற்கு தாண்டிய பல சந்தோஷ, இன்ப அனுபவங்களை பெற முடியும். மூன்றாவது வகை, இயல்புபூர்வமாக வாழ்பவர்கள். உயிர் இருப்பை, உயிரோட்டத்தை அச்சாணியாக கொண்டு வாழ்பவர்கள். இவர்களால் வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் கொண்டாட முடியும். குதூகலத்தின் உச்சமாக இவர்கள் இருப்பார்கள். இவர்களின் குதூகலத்துக்கு காரணம் இவர்களுக்குள்ளேயே இருக்கும். நீங்கள் கூறும் போது ஏற்றுக் கொண்டவர்கள் அனுபவப்பூர்வமாக வாழ்பவர்கள். கேலி செய்தவர்கள் அறிவுப்பூர்வமாக வாழ்பவர்கள். கேலி செய்தவர்கள் மீது கோபப்படாதீர்கள். பரிதாபப் படுங்கள். ஏனென்றால் அவர்கள் சரி என்று நினைப்பதற்கும், நம்புவதற்கும் ஏதுவாகத்தான் இன்றைய நவீன உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. அறிவின் மலர்ச்சி அறிவியல். அனுபவத்தின் மலர்ச்சி ஆன்மீகம். ஆன்மீக அனுபவங்களை ஓரளவு புரிந்து கொள்ளும் அளவுக்கு இன்னும் சில வருடங்களில் அறிவியல் வளர்ந்து விடலாம். இன்றைய அறிவியல் அறிவிற்கு முக்கியத்துவம் அமைதியின் முழக்கம் *36
Page 39
அளிக்கிறது. ஆனால் அனுபவத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க முடியவில்லை. Science is the asending of humanity. Spirituality is the desending of divinity - என்று கூறும் பல மேலை நாட்டு அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் உருவாகி விட்டார்கள். அறிவியல் உலகம், அனுபவ உலகமான ஆன்மீகம் நோக்கி இப்போது தான் திரும்ப ஆரம்பித்திருக்கின்றது. அறிவுப் பூர்வமாக வாழும் மனிதர்களால் மிக நுண்ணிய அனுபவ உணர்வை உணர முடியாது.
இது போன்றவர்களுக்கு, 'அனுபவப் பூர்வமாக வாழ்வது எப்படி?' 'விஞ்ஞானம் மெய்ஞானத்தின் குட்டிக் குழந்தை!' 'அனுபவமும் ! ஆச்சரியமும்!' - என்ற விருவிருப்பான தலைப்புகளில் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் புத்தகம் எழுத ஆரம்பிக்கும் காலம் வெகு விரைவில் வரும். அதுவரை இவர்கள் சந்தோஷ உணர்வை, ஆனந்த உணர்வை புரிந்து கொள்வதும், அனுபவிப்பதும் அரிதான விஷயமே. அறிவுப்பூர்வமாக வாழ்பவர்கள் கூட ஒருவேளை இவர்கள் கூறுவது உண்மையாக இருக்குமோ? ஏன் இருக்கக் கூடாது? எதற்காக இவர்கள் இப்படி நடக்க வேண்டும்? எப்படி இவர்களுக்கு இது போல் நடக்கிறது ? - என்று தங்களின் பகுத்தறிவை தங்களையே பகுத்தறிய பயன்படுத்தினால் அறிவிலிருந்து, அனுபவத்திற்குள் நுழைய 100% வாய்ப்பு இருக்கிறது. 37 *பரமஹம்ச ஸ்ரீ நித்யானந்தர்
Page 40
அறிவுப்பூர்வமாக வாழ்பவர்களை பார்த்து உங்களின் ஆன்மீக வளர்ச்சியின் வேகத்தை குறைத்துக் கொள்ளாதீர்கள். காரைக்குடி சத்சங்கத்தில் வந்து ஆசீர்வாதம் பெற்றவர்களில் விரல் விட்டு எண்ணக் கூடியவர்களுக்கு மாத்திரமே ஆன்மீக அனுபவம் நிகழ்ந்ததை புரிந்து கொண்டார்கள்.
நீங்கள் உணர்ந்தது ஒவ்வொரு ஞானியிடமிருந்தும் வெளிப்படும் ஆனந்த சக்தியின் ஒரு சிறு தொடுதல். இது போன்ற சில அனுபவங்கள் வெவ்வேறு வகையில் பலருக்கு ஆன்மீக வாழ்க்கையில் ஆழ்ந்து செல்ல அடி எடுத்து வைக்கும் போது நிகழும் ஒரு சாதாரண விஷயம் தான்.
இந்த ஆனந்த அனுபவங்கள் உங்களை உற்சாகப் படுத்துவதற்காகத்தான். ஏதோ, பெரிய விஷயம் நிகழ்ந்து விட்டதாக நம்பி ஏமாந்து விட வேண்டாம். அது உங்கள் வளர்ச்சியின் வேகத்தை குறைத்து விடும். உங்களுக்குள் வார்த்தைகளால் விளக்கிக் கூற முடியாத ஆனந்தம் என்னும் கடல் அமைதியாக இருக்கிறது.
சாதாரணமாக ஒரு ஞானியின் சக்தி உங்கள் உடலுக்குள் பாயும் போது உங்களுக்குள் இருக்கும் ஆனந்தக் கடலில் இருந்து எழும்பிய ஒரு சிறு அலைதான். உங்கள் உடலில் பாய்ந்த மின்சாரம் போன்ற ஆனந்த உணர்வு.
அலையைப் பார்த்து 'ஆஹா !' என்று நின்று விடாதீர்கள் சரத். உங்களுக்குள் இருக்கும் ஆனந்தக் கடலுக்குள் குதியுங்கள்.
Page 41
கோபத்தை நாம் பயன்படுத்தினால் அது நிதானம் கோபம் நம்மைப் பயன்படுத்தினால் அது நிதானமின்மை - பரமஹம்ஸ ஸ்ரீ நித்யானந்தர்
Page 42
கேள்விகளுக்கு பதிலளிப்பதில்லை கேட்பவர்களுக்கு பதிலளிக்கிறேன் - பரமஹம்ஸ ஸ்ரீ நித்யானந்தர்
கண்டவர் விண்டதில்லை, விண்டவர்கள் கண்டதில்லை ஆனால் ... கண்டும் விண்டவர்களைத்தான் நாம் கடவுள்கள் என்று அறிந்துகொள்கிறோம் - பரமஹம்ஸ ஸ்ரீ நித்யானந்தர்
Ebook ISBN: 979-8-88572-045-8 Ahyanapeetam (Dhyana Peeta Charitable Trust)
Nithyanandapuri, Kallugopahalli, Off Mysore Road Bidadi - 562 109, Bangalore District, Karnataka, INDIA. Ashram : +91-80-7288033, 56691844, PRO / Secretary: 9448058598 [email protected] www.dhyanapeetam.org