1. isbn 979-8-88572-162-2
Page 1
Content: வாழும் அவதார புருஷர் பரமஹம்ஸ நித்யானந்தர் வழங்கும் கல்பதரு தரிசனம்
Content: உங்களின் ஆழமான எண்ணத்தை நிஜமாக்குங்கள்!
Page 3
Content: வாழும் அவதார புருஷர் பரமஹம்ஸ நித்யானந்தர் வழங்கும் கல்பதரு தரிசனம் (உங்களின் ஆழமான எண்ணத்தை நிறைவேற்றுங்கள்!)
Content: கல்பதரு சக்தி உங்களுக்குள் நிகழ்வதற்கான தியானங்களையும் நுட்பங்களையும் கற்றுக்கொள்ளுங்கள்.
Content: உடல் ஆரோக்கியம், மன நலம், உறவுகளில் நிம்மதி, செல்வம் என நீங்கள் விரும்பும் பரிமாணங்களில் எல்லாம் வெற்றி பெறுவதற்கான சாத்தியங்களை உங்கள் வாழ்வில் உருவாக்கிக் கொள்ளுமிடியும்.
Content: வாருங்கள், அதை அனுபவமாகப் பெற்றுச்செல்லுங்கள்!
Content: உங்களுக்காக வாழும் அவதார புருஷர் பரமஹம்ஸ நித்யானந்தர் வழங்கும்... 1. தியான சக்திப்பெருக்கம் 2. சக்தி வாய்ந்த தியானம் 3. பிரபஞ்சத்தின் அருளைப் பொழியும் ஞான குருவின் ஆசீர்வாதம் பெறும் பாக்கியம் பெறுங்கள்.
Content: வாழும் அவதார புருஷரிடம் நேரடியாகவே உங்களுடைய விருப்பங்களை, ஆழமான எண்ணங்களைத் தெரிவித்து ஆசீர்வாதங்களைப் பெறும் பாக்கியம் பெறுங்கள்.
Page 4
Content: கல்பதரு தரிசனம் தரிசனம்
Content: உடல் நலம், செல்வளம், இனிமையான உறவுகள், ஆனந்தம், ஜீவன் முக்தி, மற்றும் பூர்ணத்துவமான வாழ்வு - இவையனைத்தையும் உங்களால் உருவாக்க முடியும்!
Content: வாழ்க்கை என்பதே உங்கள் எண்ணத்தை நிஜமாக்க்கூடிய ஆற்றல்தான்.
Content: ஒவ்வொருவருமே உங்கள் உணர்வுக்குள், அதாவது ஹ்ருதய கர்பத்துக்குள் உங்கள் எண்ணத்தை நிஜமாக்கும் சக்தியைச் சுமந்துகொண்டுதான் இருக்கிறீர்கள்.
Content: உங்கள் உள் உணர்வு, ஒரு தாயின் கர்ப்பப்பை போன்றதே. எப்படி ஒரு தாயின் வயிற்றுக்குள் ஒரு குழந்தை வளர்கிறதோ, அதேபோல் உங்கள் எண்ணங்களும் உங்கள் உள் உணர்வுக்குள் வளர்ந்து உருபெற்று, உலகில் பிறக்கிறது.
Content: கல்பதரு தரிசனம் தரிசனத்தின்போது பரமஹம்சர், உங்கள் எண்ணத்தை நிஜமாக்கிடும் வரத்தை உங்களுக்கு தருவது மட்டுமல்லாமல், தம்முடைய சக்தியை உங்களுக்குள் ஆசீர்வாதமாக அளித்து உங்கள் எண்ணத்தை நிஜமாக்கவல்ல உங்களின் சொந்த சக்தியையும் விழிப்படையச் செய்கிறார்.
Content: அவருடைய ஞான சக்தி, உங்கள் குறிக்கோளை அடைவதற்கு உங்களுக்கு அருள்புரிகிறது. உங்கள் வாழ்க்கைக்கு நீங்களே தலைவராக விளங்கவும், உங்கள் எதிர்காலத்தை நீங்களே படைத்துகொள்ளும் ஒரு திறமைமிகு படைப்பாளராகத் திகழவும் பரமஹம்சர் கற்றுதருகிறார்.
Page 5
Content: நீங்கள் விரும்பும் விதத்தில் வாழ்க்கையை வடிவமைக்க...
Content: படைப்பும் உருவாக்கமும் பூர்ணத்துவத்திலிருந்தே தொடங்குகின்றன.
Content: பூர்ணத்துவம் அடைய முதலில், நாம் முழு|நுரிமை கொடுத்து செய்யவேண்டியது- SDHD யை நிறைவு செய்தலே.
Content: SDHD (Self-doubt, Self-hatred, Self-denial)-என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் வார்த்தையின் தமிழ் பொருள்: ‘சுயசந்தேகம், சுய வெறுப்பு, சுய மறுப்பு’ என்பதாகும்.)
Content: SDHD- இன்றைய மனிதகுலத்தைப் பீடித்திருக்கும் மிகப்பெரிய நோய் இதுவே!
Content: சுய சந்தேகம் (Self-doubt)-உங்களைப் பற்றிய உறுதியான கருத்தோ அல்லது தீர்மானமோ இல்லாததிருத்தல். சுய வெறுப்பு (Self-hatred)- உங்களை எதற்குமே லாயக்கற்றவராக உணர்தல். சுய மறுப்பு (Self-denial)-உங்கள் கனவுகள் ஒருபோதும் நிவேற்றப்படமுடியாதவை என்று உணர்வது மட்டுமல்லாமல், அவை எப்போதுமே நிறைவேறப்போவதில்லை என்று உணர்வது.
Content: SDHD ன் விளைவாக, இறுதியில் உங்களை நீங்களே கைவிட்டு விடுகிறீர்கள். இது சுய அழிவுக்கு (Self-destruction) வழிவகுக்கும். துரதிர்ஷ்டவசமாக, ‘நீங்கள்’ என்று எதை நீங்கள் நம்புகிறீர்களோ, அதை ‘சுயசந்தேகம், சுய வெறுப்பு, சுய மறுப்பு’ -இம்மூன்றும்தான் வடிவமைத்திருக்கின்றன. இம்மூன்றைக்கொண்டுதான் உங்களை நீங்கள் வடிவமைத்திருக்கிறீர்கள். ஆனால் ஒரு நல்ல செய்தி, இந்த நோய்க்கான மருந்து இருக்கிறது. அதுவே பூரணத்துவ கிரியா; அதனை தமிழில், ‘நிறைவு செய்தல் அல்லது நிறைவேற்றுதல் என்கிறோம்.
Page 6
Content: நிறைவுசெய்தல் (Completion)
Content: நிறைவுசெய்தல், இது உங்கள் ‘உள் உணர்வை’த் தூய்மைப்படுத்தி, உங்களுள் வாழ்க்கையை நிகழ வழிவகுக்கும் ஒரு செயல்முறை.
Content: உங்கள் ‘சுய சந்தேகம், சுய வெறுப்பு, சுய மறுப்பு’களை நிறைவு செய்யுங்கள்; பீனிக்ஸ் பறவை போல் எழுந்து பறக்க ஆரம்பியுங்கள். உங்கள் SDHD இ நீங்கள் நிறைவு செய்யும்போது, உங்கள் எதிர்காலத்தையே நீங்கள் மாற்றி எழுதிவிட முடியும்! - பரமஹம்ஸ நித்யானந்தர்
Page 7
Content: 'நிறைவுசெய்யும்' செயல்முறையை நைமுறைப்படுத்தி, பயன்படைந்த பக்தர்களின் அனுபவத் துளிகள்:
Content: டாக்டர். ஸ்ரீலோகா (மா நித்ய தேவரூபானந்தா) குழந்தைகள் நல மருத்துவர், பெங்களூரு
Content: என் தந்தையுடன் நடந்த இனிமையான நிறைவுசெய்தல் அனுபவத்தை நான் உங்கள் அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
Content: என் தந்தையின் இவ்விட தெய்வம் காசி விஸ்வநாதராவார் . அவர் வருடத்துக்கு ஒரு மூன்று முறையாவது காசிக்குப் போய்வந்துவிடுவார் .அவர், இயற்கை, குழந்தைகள், விலங்குகள், மரங்கள் என எல்லாவற்றுடனும் அழகாக ஒத்துப்போய்விடுவார். ஆனால் ஏனோ ஒரு குருவுடன் மட்டும் அவரால் மனதார ஒத்திசைந்து செல்லமுடியவில்லை-அதுவும் பல அவதூறுகளுக்கு இலக்கான ஒரு குருவிடம் ஒத்திசைந்து செல்லமுடியவில்லை!
Content: என்னுடைய குடும்பத்தினர் அனைவரும், எனக்கு எல்லா வகையிலும் உதவிகரமாக இருந்தாலும், இன்னும் சொல்லப்போனால் ஆசிரமம் சம்பந்தமாக நான் செய்யும் அனைத்து வேலைகளுக்கும் ஆதரவளிப்பவர்களாக இருந்தாலும், என்னுடைய தந்தை, என்னுடைய குருநாதரான பரமஹம்ஸா நித்யானந்தரை மற்றும் எற்றுக்கொள்ளமாட்டார்.
Content: நான், பிறவறி மாதம் நடைபெற்ற இன்னர்அவேக்கனின் தியான முகாமில் கலந்து கொண்டேன். அப்போது சுவாமிஜி கற்றுக்கொடுத்த 'நிறைவுசெய்தல்' என்னும் பூர்ணத்துவ கிரியை என் தந்தையுடன் ஆரம்பிக்க விரும்பி, அவரிடம் பேசினேன், அவர் நான் பேசியதை முழுமையாகக் கேட்கவே இல்லை. ஆனாலும் நான், கண்ணாடியின் முன் அமர்ந்து பூர்ணத்துவ கிரியைச் செய்தேன். அதிலேயே எனக்கு
Page 8
Content: நானே ஏற்படுத்திக்கொண்ட மனக்காயங்கள் பெருமளவில் குணமாகிவிட்டன.
Content: பூரணத்துவ கிரியை, என் தந்தையின் பெருந்தன்மையையும், பொறுமையையும், ஆழமான அன்பையும், குழந்தைகளாகிய எங்களிடம் அவர் காட்டிய அக்கறையையும் என் கண்முன் நிறுத்தியது. இது, என் தந்தையைப் பற்றி வெகுநாளாக நான் கொண்டிருந்த அபிப்பிராயத்தை முழுவதுமாக மாற்றிவிட்டது; என் மனத்திற்குள் இருந்த பாரத்தை கரைச்ச செய்துவிட்டது. அப்போது தான் ஒன்று எனக்குத் தெளிவாகப் புரிந்தது: என் தந்தை என்றுமே ஒரு அருமையான மனிதர்தான் என்பதே அது!
Content: இந்த முறை சிவராத்திரிக்கு காசிக்குச் சென்று திரும்பிய என் தந்தை என் தம்பியிடம் சொன்ன வார்த்தைகளை உன்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். என் தந்தை என் தம்பியிடம் சொன்னது: “என்னால் ஒன்றை நிச்சயமாகச் சொல்லமுடியும், காசியில் சிவனின் சாந்நித்தியத்தில் எனக்கு என்ன அனுபவம் கிடைத்ததோ அதே அனுபவத்தைத்தான் உன் அக்காவும் பிடதியில் பெற்றிருப்பாள். அவள் என் அடிக்கடி பிடதிக்கு செல்கிறாள் என்று இப்போது எனக்குப் புரிகிறது!” என்று ‘சிவ ஆனந்தத்தில்’ மூழ்கித் திளைத்து வந்த என் தந்தை சொன்ன இந்த ஒரு வாசகம் போதும், பூரணத்துவ கிரியையின் மூலம் எனக்கும் அவருக்கும் இடையே நிகழ்ந்த நிறைவுத் தன்மைக்கு அத்தாட்சி.
Content: எனக்கு நானே ஏற்படுத்திக்கொண்ட காயங்களிலிருந்து விடுபடவும், என் வாழ்க்கையில் என்னுடய பாகமாக விளங்கிய என் அருமை தந்தையின் மேன்மையைப் புரியவைக்கவும் உதவிய பூரணத்துவ கிரியை விளைநானத்தைத் தந்த சுவாமிக்கு என் மனமார்ந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன்.
Page 9
Content: உங்கள் சிந்தனையைப் புதுப்பியுங்கள்
Content: நல்ல செய்தி! நீங்கள் எதை விரும்புகிறீர்களோ அதை உங்களிடமிருந்து எவராலும் பறிக்கமுடியாது! பூர்ணத்துவ கிரியாவைச் செய்வதன் மூலம் நீங்கள் SDHD இலிருந்து விடுபட்டு விடலாம், இப்போதே!
Content: இந்த SDHD மனப்பாங்கின் காரணமாக உங்களை நீங்களே தாழ்வாக மதிப்பிட்டுக்கொள்கிறீர்கள்; உங்களை நீங்களே தாழ்வாக உணர்கிறீர்கள்.
Content: ஆனால் நீங்கள் நினைத்துக்கொண்டிருப்பதுபோல், நீங்கள் சாதாரண மனிதர் இல்லை என்பதுதான் சத்தியம். இந்த உலகத்தைப் பற்றியும் உங்களைப் பற்றியும் நீங்கள் கொண்டுள்ள தவறான கருத்துக்கள் மற்றும் எதிர்மறை மனப்பாங்குகளிடமிருந்து நீங்கள் முழுமையாக விடுபடுவதன் மூலம் , உங்கள் எதிர்காலத்தை மாற்றி எழுதக் கற்றுக்கொள்ளலாம்; இந்த உலகத்தைப் பற்றியும் உங்களைப் பற்றியும் புதிய கருத்துக்களை உருவாக்கிக்கொள்ளலாம்.
Content: சக்தியுள்ளவராகுங்கள்! SDHD க்கு ஒருபோதும் உங்கள் கதவுகளைத் திறந்துவிடாதீர்கள். அதை என்றென்றைக்குமாக மூடிவிடுங்கள். அவ்வாறு மூடிவிட்டீர்களென்றால் போதும், உங்கள் வாழ்க்கைப் பாதையை நீங்கள் ஜெயித்துவிடலாம். எனெனில் இந்த SDHD மனப்பாங்கே உங்களை பலஹீனர்களாக்குகிறது!
Content: பூர்ணத்துவ கிரியா வின்மூலம், நீங்கள் உங்கள் உள் உலகிலும் வெளி உலகிலும் உருவாக்கும் எந்த ஒன்றுமே நல்லதாக மட்டுமே இருக்கும்; ஆகவே நீங்கள் உங்களுடைய எண்ணங்களை மட்டுமல்ல, மற்றவர்களுடைய எண்ணங்கள் நிஜமாகவும் ஒரு காரணமாக இருப்பீர்கள்.
Page 10
Content: வாழ்க்கை - ஒரு மிகப்பெரிய சாத்தியக்கூறு
Content: உங்கள் வாழ்க்கையில் எது நிஜமாக வேண்டுமென விரும்புகிறீர்களோ, அதனை நிஜமாக்கும் சக்தியுடனும் ஆற்றலுடனும்தான் நீங்கள் பிறந்தீர்கள். ஆனால் விழிப்புணர்வற்ற இந்தச் சமுதாயம் உங்களுள் போட்ட தவறான நம்பிக்கைகளே, ‘வாழ்க்கையே சாத்தியமற்றவைகளின் தொகுப்புதான்’ என்று உங்களை நினைக்கச்செய்துவிட்டன.
Content: ஆனால் நீங்கள் சத்தியத்தைத் தெரிந்துகொண்டாக வேண்டியுள்ளது. நீங்கள் உயிரோடு இருக்கிறீர்கள், எனெனில் சுவாசித்தல் சாத்தியப்படுவதால்! அதேபோல், ஜீரணித்தல் சாத்தியப்படுவதால்தான், நீங்கள் உயிரோடு இருக்கிறீர்கள். உங்கள் உடலே ஒரு அதிசயம்தான். எல்லாமே சாத்தியப்படுவதால்தான் நீங்கள் இன்னமும் உயிரோடு இருக்கிறீர்கள்.
Content: மனநலம், செல்வவளம், இனிமையான உறவுகள், சொந்த வாழ்க்கை, ஜீவன்முக்கி- என எந்த ஒரு பரிமாணத்திலும் நீங்கள் நினைத்ததை நிஜமாக்கலாம். ஆம், அது சாத்தியமே!
Content: சாத்தியக்கூறுகளின் விழ்நூனம் - கல்பதரு தரிசனம்
Content: நான் இரண்டு விஷயங்களை உங்களுக்கு இங்கு தரப்போகிறேன். ஒன்று, உங்கள் எண்ணத்தை நிஜமாக்கிடும் கல்பதரு தரிசன விழ்நூனம்
Content: இரண்டாவது, உங்களின் ஒரு எண்ணத்தை நிஜமாக்கிடும் வரம். உங்கள் எண்ணத்தை நான் நிஜமாக்கிக் காட்டடுகிறேன். அப்போது மட்டுமே நீங்கள் இந்த கல்பதரு தரிசன விழ்நூனத்தின் சக்தியைப் புரிந்துகொள்வீர்கள்; அதனை உங்கள் வாழ்க்கை முறையாக்குவீர்கள்.
Content: -பரமஹம்ஸ நித்தியானந்தர்
Page 11
Content:
- முதலில் நீங்கள் நிஜமாக்க விரும்பும் ஒரு எண்ணத்தை எழுதுங்கள். இரண்டு, மூன்று எண்ணங்களை எழுதிக்கொண்டிருக்காதீர்கள். உங்களுடைய எத்தனை எண்ணங்களை வேண்டுமானாலும் நான் நிஜமாக்க முடியும். ஆனால் ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், உங்கள் ‘உள் உணர்வு’க்கு அதைப் பெற்றுக்கொள்ளக்கூடிய சக்தி இல்லை. ஒரு சமயத்தில் ஒரேயொரு எண்ணத்தை மட்டுமே பெற்றுக்கொள்ளக்கூடிய சக்திதான் உங்களுக்கு இருக்கிறது. ஆகவே ஒரேயொரு எண்ணத்தை மட்டுமே தேர்ந்தெடுத்து எழுதுங்கள்.
Content: 2. அந்த விருப்பத்தைப் பற்றி உங்களுக்குள் இருக்கும் சந்தேகங்களையும் குறைவுணர்வுகளையும், ‘இது சாத்தியமே இல்லை’ என்று உங்களை நினைக்க வைக்கும் காரணங்களையும் எழுதுங்கள். உதாரணத்திற்கு, ஆரோக்கியமானவராக இருக்கவேண்டுமென்பது உங்களுடைய விருப்பம் என்று வைத்துக்கொள்வோம். அதைப் பற்றிய குறைவுணர்வுகள் என்பது, ‘என்னால் ஆரோக்கியமானவராக ஆக முடியுமா?’ என்ற சுய சந்தேகமாகக்கூட இருக்கலாம். அல்லது ‘நான் ஆரோக்கியம் மிக்கவனாக மாறவே கூடாது’ என்ற சுய வெறுப்பாகக்கூட இருக்கலாம். அல்லது ‘ஆரோக்கியத்திற்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை’ என்று ஆரோக்கியத்தை உங்கள் வாழ்க்கையின் பாகமாகக் கருதாத சுய மறுப்பாகக்கூட இருக்கலாம்.
Content: 3. மேலே சொல்லப்பட்டுள்ள இரண்டு பகுதியையும் எழுதி முடித்துவிட்டு, கண்களை மூடி அமருங்கள். நீங்கள் எந்த எண்ணத்தை நிஜமாக்க விரும்புகிறீர்களோ, அது நிஜமாவதற்கான உணர்வை உருவாக்குங்கள். ‘உணர்வை உருவாக்குங்கள்’ என்று நான் சொல்லும்போது, நீங்கள் ஒரு கோடீஸ்வரராக
Page 12
Content: வேண்டுமென்று விரும்பினீர்களென்றால், நீங்கள் ஏற்கெனவே கோடீஸ்வரராகிவிட்டதாகவே உணர வேண்டுமென்பதையும், உங்களை ஒரு கோடீஸ்வரராகவே காண வேண்டுமென்பதையுமே குறிப்பிடுகிறேன். இதற்குத் தடையாக இருக்கும் உங்கள் சுய சந்தேகம், சுய வெறுப்பு, சுய மறுப்பு மனப்பாங்குகளை முழுமைசெய்து, அவற்றறைக் கைவிடுங்கள்.
Content: 4. உங்களுக்குள் தெளிவாகப் பிரகடனப்படுத்திக் கொள்ளுங்கள்: "நான் என்னுடைய சுய சந்தேகம், சுய வெறுப்பு, சுய மறுப்புகளையெல்லாம் நிறைவுசெய்து, அவற்றை முழுமையாகக் கைவிடுகிறேன்."
Content: இவ்வாறு சொல்லிவிட்டு, அடுத்த 21 நிமிடங்களுக்கு உங்கள் எண்ணத்தை நிஜமாக்கிடும் உணர்விலேயே நிலைகொள்ளுங்கள். அப்போது உங்கள் சுய சந்தேகம், சுய வெறுப்பு, சுய மறுப்பு போன்ற குறைவுணர்வுகள் அனைத்துமே வலுவிழந்துவிடும், உங்கள் மீது அவை கொண்டுள்ள பிடியும் தளர்ந்துபோகும். அதன்பின், நீங்கள் உருவாக்கி வைத்திருக்கும் 'உணர்வு', உங்கள் குண்டலினி சக்தியாலும் சக்தியூட்டப்பட்டு, நீங்கள் நினைத்ததை நிஜமாக்கும் சக்திகளமாகிவிடும்.
Content: 5. நீங்கள் சிரத்தையுடன் உங்களுக்குள் 'உணர்வை' உருவாக்கும்போது, ஞானகுருவின் குண்டலினி சக்தி உங்கள் விருப்பத்தை நிஜமாக்கிடும் சக்தியைத் தரும். ஞானகுருவின் சக்தி உங்கள் 'உள் உணர்வில்' பாய்ச்சப்படும்போது, உங்கள் 'உள் உணர்வு' பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டுவிடும். இந்தக் கல்பதரு தரிசன செயல்முறையை நீங்கள் முழுமையான சிரத்தையுடன் செய்யும்போது, உங்கள் 'உணர்வு' நிஜமாகிறது.
Content: இந்தப் பிரபஞ்ச பேரியக்கம் தொடர்ந்து உங்கள் மீது
Page 13
Content: ஆசீர்வாதத்தைப் பொழிவதைக் காண்பீர்கள். நீங்கள் உருவாக்கிய 'உள் உணர்வு' தானாகவே மலர்வதையும், மனம் பரப்புவதையும், நீங்கள் நினைப்பதையெல்லாம் நிஜமாக்குவதையும் காண்பீர்கள்.
Content: கல்பதரு தரிசனம் :
Content: சாத்தியங்களுக்கான தீச்சுடர்
Content: உங்கள் சாத்தியங்களை அடைவதற்காக உங்களுக்கு வழங்கப்படும் தீச்சுடையே கல்பதரு தரிசனம்.
Content: பரமஹம்ஸ நித்தியானந்தர், தம்முடைய பூரணத்துவ சக்தியை உங்களுக்குள் பாய்ச்சுவதன்மூலம் உங்கள் சுய சந்தேகம், சுய வெறுப்பு, சுய மறுப்புகளைக் கரையச்செய்கிறார். நீங்கள் நிஜமாக்க விரும்பும் எண்ணத்தை நிஜமாக்குகிறார்.
Content: அவர், தம் சக்தியையும் ஆசீர்வாதத்தையும் மட்டுமல்ல, கல்பதரு விஞ்ஞான தீச்சுடையையும் அளிக்கிறார். அப்படியானால் மட்டுமே, இந்த விஞ்ஞானத்தை உங்கள் வாழ்க்கையில் தொடர்ந்து பயன்படுத்தி, நீங்கள் நிஜமாக்க விரும்பும் எண்ணத்தை 'நீங்களாகவே' நிஜமாக்கிக்கொள்ள முடியும்.
Content: உங்களுக்குள் உணர்வை உருவாக்கி, அதில் 'சாத்தியம்' என்னும் விதையை விதைப்பதே தீச்சுடர்
Content: 'சாத்தியம்' என்பது சாத்தியமே, ஏனெனில் அதுவே உங்கள் வாழ்க்கை' - இந்த சத்தியத்தை, ஒரு வாழும் ஞானி கற்றுத்தருகிறார். அவர், சாத்தியம் என்னும் அக்னி ஜ்வாலையாகப் பிரகாசிக்கிறார். கல்பதரு தரிசனம் உங்களுக்குள்ளும் இந்தத் தீயைப் பற்றவைத்து, உங்களுக்குள் இருக்கும் 'சாத்தியமில்லை' என்ற எண்ணத்தை எரித்துவிடும். உங்களுக்குள் இருக்கும் சாத்தியங்களை உங்களுக்கு ஞாபகப்படுத்தும். அவருள் வரும்
Page 14
Content: எவருமே, ‘தங்களுக்குகூட எல்லாம் சாத்தியமே’ என்பதை உணர்ந்துகொள்கிறார்கள்; தங்கள் வாழ்க்கையிலும் எல்லாம் சாத்தியப்படும் என்பதை உணர்ந்துகொள்கிறார்கள்.
Content: அதன்பிறகு, நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் பற்றியும் தெளிவாகத் தெரிந்துவைத்திருப்பீர்கள், ஏனெனில் கல்பதருவின் வோ் உங்களுக்குள் ஆழமாக ஊடுருவிப் பரவியிருக்கிறது. கல்பதரு தரிசனத்தில் பங்குகொண்டு நீங்கள் விரும்பும் வர்த்தை பெற்றுச் செல்வது மட்டும் போதாது, நீங்களே கல்பதருவாக மாறி, உங்களை சுற்றியிருப்பவர்களின் எண்ணங்களும் நிஜமாவதற்குக் காரணமாக மாறுங்கள்!
Content: கல்பதரு தரிசனத்தால் பயனடைந்த பக்தர்களின் அனுபவத் துளிகள்:
Content: சுவாமிஜி, என்னுடைய கண்களைக் குணப்படுத்தினார். சுவாமிஜியின் கருணையும், மக்களுக்கு அவர் தரும் தியான சிகிச்சையும் என் கண்களைக் குணப்படுத்தின. கல்பதரு தரிசனம் பெற்ற அக்கணமே என்னுடைய பார்வையை நான் திரும்பப் பெற்றேன்-சில நிமிடங்களுக்குப் பிறகுகூட இல்லை, சில நொடிகளிலேயே என்னால் நன்றாகப் பார்க்க முடிந்தது. மேடையிலிருந்து நானாகவே கீழிறங்கி வர முடிந்தது. இன்றுவரை என்னுடைய இயல்பான வாழ்க்கையை மீண்டும் முகுக்ககண்ணாடியின் உதவியின்றியே வாழ்ந்துவருகிறேன்.
Content: -மஹந்த் ஸ்ரீ நித்ய அமிர்தானந்தா, சாஃப்ப்டுவேர், சார்லெட், நார்த் கரோலினா, யு.எஸ்.ஏ
Content: நான் மிகுந்த துக்கத்திலும், வெறுமையிலும் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தேன். கல்பதரு தரிசனத்தின்போது
Page 15
Content: என்னுடைய அந்த மனச்சோர்வைக் குணப்படுத்தினார்.இப்போது என் வாழ்வை நான் உற்சாகத்துடன் வாழ்ந்துவருகிறேன்.இப்போது எனக்குள் தேவையற்ற , காரணமற்ற ஒரு பதட்டம், கவலை என்று எதுவுமே இல்லை. என்னுடைய ஆஸ்துமா பிரச்சனையும் தீர்ந்தது. என்னுடைய சிறுநீரகப்பை பிரச்சனையும் சரியானது. கல்பதரு தரிசனத்தின்போது, நான் சுவாமிஜியிடம், “சுவாமிஜி, நீங்கள் எனக்கு உதவே முடியுமா?” என்று கேட்டற்போதெல்லாம், “முடியும்,” என்றுதான் சொல்லியிருக்கிறார்.அப்படி அவர் சொல்கின்ற மறுநொடியே நான் எதைக்குறித்து மிகவும் கவலை கொண்டிருந்தேனோ, அந்த நோய்கள் எல்லாம் குணமாகிவிடும். சுவாமிஜி, என்னுடைய வாழ்வை எனக்கு மீட்டுக் கொடுத்துவிட்டார்.
Content: -ஷீலா பித்திஷ் காம்பே, (Intensive Case Manager at AIDS Vancouver From Vancouver , British Coumbia)
Content: என்னுடைய தந்தை ஒரு ஓய்வுபெற்ற பேராசிரியர். அவருடைய பண உதவியுடன் நான் என்னுடைய முதுகலைப் பட்டத்தைப் படித்துக்கொண்டிருந்தேன்.அவருக்கு நான் ஒரு பாரமாக இருக்கக்கூடாது என்று நினைத்தேன். ஆதலால் வேலைக்குச் சென்றுகொண்டே என் படிப்பைத் தொடர முடிவு செய்தேன். அதற்கேற்ற வேலையைத் தொடங்கினேன். அப்போதுதான் அதனுடைய கடினம் தெரிந்தது.என்றால் இதுநாள்வரை நான் எந்த ஒரு வேலைக்கும் போகாததால், எனக்கு முன் அனுபவம் இல்லை. ஆகவே எனக்கு ஆரம்ப நிலை பணியாளனைப் போன்று, குறைந்த சம்பளம் கொண்ட வேலைகளே கிடைத்தன.நமக்குப் பிடித்தமான வேலை கிடைப்பதென்பது எவ்வளவு ஒரு கடினமான விஷயம் என்பது நம் எல்லோருக்குமே தெரிந்ததுதான்.
Page 16
Content: அதனால் இதைப் பற்றி சுவாமிஜிடம் கேட்க நினைத்தேன். 12.1.2014 அன்று நடைபெற்ற கல்பதரு தரிசனத்தின்போது, 'சுவாமிஜி, என் வாழ்க்கையில் இதுவரை நீங்கள் எதுவெல்லாம் தந்தருளியிருக்கிறீர்களோ, அவற்றைக்கொண்டு மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். எது எனக்கு நல்லது செய்யும் என்று நினைக்கிறீர்களோ, அதை எனக்குச் செய்யுங்கள்,' என்று கேட்டேன். உடனே சுவாமிஜியும், 'அப்படியே ஆகட்டும், நான் எப்போதும் உங்களுடனேயே இருப்பேன்,' என்று ஆசீர்வதித்தார்.
Content: இங்குதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது, சுவாமிஜியிடம் ஆசீர்வாதம் பெற்ற 30 நிமிடங்களுக்குள் (நான் ஹைதராபாத் ஆசிரமத்திலேயே மற்ற பக்தர்களுடன்தான் பேசிக்கொண்டிருந்தேன்) எனக்கு ஒரு நல்ல வேலைக்கான அழைப்பு வந்தது. நான் வீட்டிலிருந்தபடியே அந்த வேலையைப் பார்க்கலாம்; அலுவலகத்திற்குச் செல்லவேண்டியதில்லை; குறிப்பிட்ட வேலையைச் செய்தேயாக வேண்டுமென்ற இலக்கு நிர்ணயம் கிடையாது; சம்பளம், நான் நினைத்ததற்கும் மேல் - இப்படி அது நான் எதிர்பார்த்ததற்கும் மேலான பல நல்ல அம்சங்களுடன்கூடியதாகவே அந்த வேலை இருந்தது.
Content: பெற்றோர்கள், வேலை, பணம், நேரம் என்ற எந்தவித நிர்பந்தமும் இல்லாமல், இப்போது நான் என்னுடைய மேல் படிப்பைத் தொடர்கிறேன். பல வருடங்களாக எதற்கு நான் திட்டமிட்டுக்கொண்டிருந்தேனோ, அதை மிகச் சுலபமாக நிறைவேற்றிவிட்டார், சுவாமிஜி. அனைத்தையுமே நேர்த்தியுடன் கவனித்துக்கொண்டார். 'வாழ்வில் எல்லாம் சாத்தியமே என்ற உணர்வின் வலிமையை அனுபவ்பூர்வமாக உணர்ந்தேன். 'அவர் அனைத்தையுமே செய்கிறார், அதன்படி வெறுமனே நகர்ந்துகொண்டிருக்கும் ஒரு கருவி மட்டுமே நான்' என்பதைத் தெள்ளத் தெளிவாக உணர்கிறேன். ஒவ்வொருவருமே அனுபவிக்கவேண்டிய உணர்வு இது!
Page 17
Content: நம் எண்ணத்தை நிஜமாக்கும் ஓர் அரிய விஞ்ஞானமே கல்பதரு தரிசனம். அதனை எக்காரணத்திற்காகவும் தவறவிடாதீர்கள்.
Content:
- B.V. ரவிகாந்த்,
Content: சிவில் சர்வீஸ், ஹைதராபாத்
Page 18
Content: பெயர் (Name)
Content: தொடர்புகொள்ள வேண்டிய எண் (Contact Number)
Content: முகவரி (Address)
Content: இணையதள முகவரி (e Mail Id)
Content: படிப்பு (Education)
Content: வேலை(Profession / Job)
Content: நீங்கள் நிழமாக்க விரும்பும் ஒரு எண்ணம்:
Page 19
Content: உங்கள் விருப்பத்தைப் பற்றி உங்களுக்குள் இருக்கும் சந்தேகங்களையும் குறைவுணர்வுகளையும், 'இது சாத்தியமே இல்லை' என்று உங்களை நினைக்க வைக்கும் காரணங்களையும் எழுதுங்கள். உதாரணத்திற்கு, செல்வந்தராக வேண்டுமென்பது உங்களுடைய விருப்பம் என்று வைத்துக்கொள்வோம். 'நான் செல்வந்தனாக ஆக முடியுமா' என்ற சுய சந்தேகம். 'நான் செல்வந்தனாகிவிட்டால், ஒருவேளை அகங்காரம் பிடித்தவனாகிவிடுவேன்' என்ற சுய வெறுப்பு, 'என்னால் ஒருநாளும் செல்வந்தனாக முடியாது' என்று நினைப்பது சுய மறுப்பு வடிவில் இருக்கும் அனைத்து குறைவுணர்வுகளையும் பட்டியலிடுங்கள்.
Page 20
Content: Ebook ISBN: 979-8-88572-162-2 For Contact: www.nithyananda.org [email protected] 9500001867