1. isbn 979-8-88572-339-8
Page 1
உன் மனதே சமுதாயம்
பிரம்மஹம்ஸ் நித்யானந்தர்
எங்கெல்லாம் சமுதாயம் உங்களுக்குள் ஆசையைபத் தினிக்கிறதோ அங்கெல்லாம், விழிப்புணர்வோடு அந்த ஆசையை நிறுத்துங்கள்.
Page 2
நாமக்கல்லில்
உன் மனதே சமுதாயம்
எனும் தலைப்பில்
பரமஹம்ஸ நித்யானந்தர் ஆற்றிய சொற்பொழிவிலிருந்து தொகுத்து இப்புத்தகத்தை தருகின்றோம்.
Page 3
உன்மனதே சொல்கிறது
Page 4
[ERROR page 4 - NVIDIA client error]
Page 5
முன்னுரை
உண்மையிலேயே நம்முடைய மனம்தான் சமுதாயம்.
மனமே இல்லாத பொருளை இருப்பதாகக் காட்டி, நம்மை ஆசைகளிலும், அச்சத்திலும் அலைக்கழிக்கிறது.நம்முடைய வாழ்க்கையின் அடிப்படையான நிம்மதியின்மைக்கும், துக்கத்திற்கும் நம்முடைய ஆசைகளும், அச்சங்களும்தான் ஒரே காரணம்.ய
"அப்படியென்றால் ஆசைதான் இவ்வளது துக்கத்திற்கு காரணமா?"
நிஜமான ஆசைகளும், அச்சங்களும் எப்போதும் நம் வாழ்க்கையில் துக்கங்களை உருவாக்குவதில்லை.
நம்முடைய வாழ்க்கையில் இரண்டு விதமான ஆசைகளும், துக்கங்களும் இருக்கின்றன.
முதல் வகை... நிஜமான ஆசைகள் உங்கள் உடலை இயக்கும் உந்து சக்தியாகவும், நிஜமான அச்சங்கள் நீங்கள் உங்களைக் காத்துக்கொள்ளும் தற்காப்பு எண்ணங்களாகவும் இருக்கும்.
இரண்டாவது வகை... போலித்தனமான ஆசைகள் மற்றும் போலித்தனமான அச்சங்கள். சமுதாயம் நம்மீது திணித்துவைக்கும் எண்ண ஓட்டங்களேயின்றி வேறில்லை. துன்புறுத்தும் ஆசைகளிலிருந்தும் எண்ணவோட்டத்திலிருந்தும் வெளிவருவது எப்படி? அதற்கு பரமஹம்ஸர் அளிக்கும் வாழ்வியல் தீர்வுகளை இப்புத்தகத்தில் தொகுத்தளித்திருக்கின்றோம்.
இப்படிக்கு
நித்யானந்தத்தில்,
நித்யானந்தா சேரிடபுள் டிரஸ்ட்.
உன் மனதே சமுதாயம்
5
Page 6
நிஜ ஆசை..சமூக ஆசை...
நம்முடைய எல்லா ஆசைகளும் நம்முடைய சொந்த ஆசைகள் அல்ல. மற்றவர்களைப் பார்த்து அதனால் பெறப்படும் ஆசைகள். பக்கத்து வீட்டில் AC போட்டால் நம் வீட்டில் வெப்பம் தாஸ்தியாகிவிடும். பக்கத்து வீட்டுக்காரர் AC வைத்திருக்கிறார் என்ற தெரிந்த உடனே நம்மால் AC இல்லாமல் இருக்கமுடியாது.
நம் உஷ்ணம் அதிகமாகிவிடும். சமூகத்தினுடைய அழுத்தத்தினால் (Peer Pressure) ஒப்பட்டுப் பார்ப்பதனால் ஏற்படும் ஆசைகள். அது மட்டுமல்ல, சமூகம் நம் மீது இப்படி வாழ்ந்தால்தான் வாழ்க்கை என்ற கற்றுக் கொடுத்து நம் மீது திணிக்கின்ற ஆசைகள்.
நாம் எல்லோரும் இந்த பிறவி எடுக்கும் போது ஒரு குறிப்பிட்ட ஆசையோடுதான் உடலை எடுக்கிறோம். ஆசைகளே இல்லாதவன் உடல் எடுக்கத் தேவையில்லை பூரண ஞானியாக இறை சக்தியோடு ஒன்றியிருப்பான்.
ஒரு குறிப்பிட்ட ஆசையான் இந்த உடலை எடுக்க வைக்கின்றது. நாம் இந்த உடலை எடுப்பதற்குக் காரணமாக இருந்த ஆசைகள், நமக்குள் வேதனையையோ, எரிச்சலையோ, கொந்தளிப்பையோ, வெறுப்பையோ உண்டாக்காது.
ஆனால் இந்த சமூகத்திற்குள் வந்தபிறகு சமூகம் நமக்குள் திணித்த ஆசைகள் சமூகத்தினுடைய சுழலினால் நமக்குள் திணிக்கப்பட்ட ஆசைகள் என்றென்றும் நமக்குள் வேதனையையத் தந்து கொண்டிருக்கும். நாமாகவே நமக்குள் எடுத்துக் கொண்ட ஆசைகள் ஒருபுறம்; நம்மீது சமுதாயம் திணிக்கின்ற ஆசைகள் மறுபுறம்.
ஒரு குறிப்பிட்ட ஆசையான் ஒரு சில உதாரணம் சொன்னால் இந்த இரண்டு காருத்துக்குளும் புரியும். நாமாகவே நம் வாழ்க்கை ‘அப்படி அமைய வேண்டும்’. ‘இப்படி அமைய வேண்டும்’ என்ற தெளிவோடு ஏற்படுத்திக் கொள்கின்ற ஆசைகள் ஒரு விதம். இன்னொன்று, மற்றவர்கள் எல்லாம் இப்படி வாழ்கிறார்களே, நாம் சும்மா இருக்கலாமா? என்று மற்றவர்களைப் பார்த்து நமக்கு அது தேவையில்லை என்றால் கூட, “மற்றவர்கள் இப்படி இருக்கிறார்களே நாமும் இப்படி இருக்க வேண்டும்” என்று மற்றவர்களிடமிருந்து கடன் வாங்கிய ஆசைகள் இரண்டாவது வகை.
ஒரு குறிப்பிட்ட ஆசையான் இந்த உடலை எடுக்க வைக்கின்றது. நாம் இந்த உடலை எடுப்பதற்குக் காரணமாக இருந்த ஆசைகள், நமக்குள் வேதனையையோ, எரிச்சலையோ, கொந்தளிப்பையோ, வெறுப்பையோ உண்டாக்காது.
Page 7
[ERROR page 7 - NVIDIA client error]
Page 8
எல்லாப் பொருட்களுடனும் இறங்கி வருகிறீர்கள்.
உங்களுக்கு உங்கள் வாழ்க்கைக்குத் தேவையான எல்லா விஷயங்களையும், முழுமையாக நீங்கள் உடல் எடுத்துக் கொள்ளும் போதே உங்களுக்கு அளிக்கப்பட்டுவிடுகிறது.
நம் மனதில் வருகின்ற அடுத்த கேள்வி இது, “எனக்கு தேவையானது எல்லாம் கடவுள் கொடுத்து அனுப்பிவிட்டார் என்று சொல்கிறீர்களே சாமி! பின் ஏன் நான் வறுமையோடு இருக்கிறேன்?”
தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள், நம்மால் நம்பமுடியாவிட்டால்கூட வறுமையும் நாம் சுயமாக எடுக்கிற முடிவுதான்.
நம்மால் நம்ப முடியாவிட்டால் கூட வறுமையும் நாம் சுயமாக எடுக்கிற முடிவுதான். சில நேரங்களில் பணத்தோடு, செல்வத்தோடு வாழும் போது நாம் நிறைய அபாய முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கிறது. அப்படியே செல்வம் வந்தாலும், நிறையப் பொறுப்பு எடுக்க வேண்டியிருக்கும். அதைக் காப்பாற்றி வைப்பதற்கும் அதை முறையாகப் பாதுகாத்து வைப்பதற்கும் நிறையப் பொறுப்பு எடுக்க வேண்டியிருக்கும்.
சில நேரங்களில் பணத்தோடு, செல்வத்தோடு வாழும் போது நாம் நிறைய அபாய முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கிறது. அப்படியே செல்வம் வந்தாலும், நிறையப் பொறுப்பு எடுக்க வேண்டியிருக்கும். அதைக் காப்பாற்றி வைப்பதற்கும் அதை முறையாகப் பாதுகாத்து வைப்பதற்கும் நிறையப் பொறுப்பு எடுக்க வேண்டியிருக்கும். அந்தப் பொறுப்பை எடுக்க விரும்பாத மனிதர்கள், இயற்கையிலேயே தங்களுடைய வாழ்க்கை வறுமையாக இருக்க வேண்டும் என்று முடிவுசெய்து விட்டுவிடுகிறார்கள்.
பொறுப்பு எடுக்க விரும்பவில்லை என்றாலே தானாகவே வறுமைதான் இருக்கும். பொறுப்பு எடுக்க விரும்புவது என்றால் செல்வத்தை உருவாக்கவே முடியும்.
பழிசொல்வது பலனளிக்காது
நாம் எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய தெளிவான முக்கியமான விஷயம் இது நம்முடைய யோசனையில் வியாதியாகட்டும், வறுமையாகட்டும், உடல் அல்லது மன வேதனையாகட்டும் அவை வருவதற்கு நாம் பெரும்பங்கு வகிக்கின்றோம்.
Page 9
[ERROR page 9 - NVIDIA client error]
Page 10
பெற்றோர் தேர்ந்தெடுத்து அவனுக்குத் திருமணம் செய்த வாழ்க்கையும் நிம்மதியில்லை. இரண்டுமே தோல்விதான். ஆனால் அவனுக்கு ஒன்றில் மட்டும் ஒரு திருப்தி, எனக்கு அதுகூட இல்லை,” என்று சொன்னார்.
“என்ன திருப்தி!” என்று ஆச்சரியத்தோடு கேட்டேன்.
அவர் சொன்னார் “சாமி குறைந்தபட்சம் அவனாவது அவுடைய பிரச்சினைக்கு, அம்மா, அப்பா தான் காரணம் என்று அவர்களைப் பழி சொல்லிக்கொண்டு இருக்கலாம். ஆனால் அதுகூட எனக்கு இல்லை” என்றார்.
“அவன் அம்மா அப்பாவைப் பழித்துக் கொண்டிருக்கிறான். உங்களால்தான் என் வாழ்க்கை வீணாகப்போய்விட்டது என்று. என்னால் அதைக்கூட செய்ய முடியவில்லை. என்னை நானே பழித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது” என்றார்.
“தாய் தந்தையர் மீது பொறுப்பைப் போடுவதால், பிரச்சினை தீர்ந்துவிடுமா?” என்று நான் கேட்டேன்.
“முடியாது.”
பொறுப்பை மற்றவர்கள் மீது போடுவதனால் உங்களுக்கு நீங்களே ஒருவித போலித்தனமான ஒருவித தப்பித்துக் கொள்ளும் வாழ்க்கையை வாழலாம். வாழ்க்கையிலிருந்து தப்பித்துக் கொள்ளுதல் என்பதை செய்யலாமே தவிர வாழ்க்கைக்கு அது தீர்வாகாது. வாழ்க்கைக்கு அது முடிவாக மாறாது.
மற்றவர்கள் மீது பொறுப்புக்களைச் சுமத்துபவர்கள் தன்னுடைய வாழ்க்கையை வாழ்வதேயில்லை. நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் நமது வாழ்க்கை நமது பொறுப்புதான்.
உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்
மற்றவர்கள் மீது பொறுப்புக்களைச் சுமத்துபவர்கள் தன்னுடைய வாழ்க்கையை வாழ்வதேயில்லை. நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் நமது வாழ்க்கைக்கு நாம் தான் பொறுப்பு.
இன்னொரு நடந்த நிகழ்ச்சி.
அமெரிக்காவில், இந்த Autism (ஆட்டிஸம்) என்ற வியாதி குழந்தைகளுக்கு வரும் மனவியாதிகளில் ஒன்று. குழந்தைகளுக்கு, அந்த மன வியாதி வந்தால் சரளமாகப் பேசமாட்டார்கள். பள்ளிக்குச் செல்ல முடியாது. பெரியவர்களாலும் வேலைக்குச் செல்ல முடியாது.
Page 11
அமெரிக்காவில், ஒரு நல்ல குடும்பத்தில் பிறந்த குழந்தைக்கு இந்த மண வியாதி வந்துவிட்டது. அந்தக் குழந்தைக்கு தியான சிகிச்சை அளிக்க வேண்டும் என்று அந்த குழந்தையின் பெற்றோர் என்னிடம் அழைத்து வந்தார்கள்.
அந்தக் குழந்தையின் தந்தை “சுவாமி! இந்தக் குழந்தைக்கு ஆசீர்வாதம் செய்து தயவு செய்து தியான சிகிச்சை அளியுங்கள்” என்றார். நான் அந்தக் குழந்தையின் தலையில் கையை வைத்து, தியான சிகிச்சை அளிக்கத் துவங்கினேன். அந்தக் குழந்தையோ மேல் நாட்டில் பிறந்து வளர்ந்த குழந்தை. நான் அந்த குழந்தையின் தலையில் கைவைத்தவுடன், சரளமாகத் தமிழில் பேசத் துவங்கியது.
இது ஒரு நடந்த நிகழ்ச்சி, உண்மையிலேயே நடந்த நிகழ்ச்சி. இது கதையில்்லை. கிராமத்துத் தமிழில் மரியாதை இல்லாத தமிழில் “கையை எடுடா” என்றது. “எடுங்க” என்று கூடச் சொல்லவில்லை. “எடுடா” என்று சொல்லியது.
எனக்கு ஆச்சரியம் என்னவென்றால், குழந்தை அவமரியாதையாகப் பேசியதைத் தவறாக நான் நினைக்கவில்லை. 'பேசுகிறதே! அது போதும்!' என்று நினைத்தேன். ஏழு வருடங்களாகப் பேசாத ஊமைப் பிள்ளை வாயைத் திறந்து சரளமாகத் தமிழில் பேசியதே என்று மிகுந்த ஆச்சரியம். முதலில் ஆச்சர்யம், அப்புறம் அதிசயம்! எப்படி இந்தக் குழந்தையால் தமிழில் பேச முடிகிறது? என்று. “கையை முதலில் எடுடா” என்றது. நான் இந்த பேய், பிசாசு மாதிரி ஏதாவது இருக்குமோ? என்று நினைத்தேன்.
பொறுமையாக “என்ன சொல்றீங்க?” என்று குழந்தையிடம் தமிழிலேயே கேட்டேன். குழந்தையின் தாய், தந்தை எல்லோரும் சுற்றி நின்று கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இந்தக் குழந்தை என்ன பேசுகிறது? என்று புரியவில்லை.
ஏதோ வார்த்தை வருகிறது என்று மட்டும் தெரியும்! ஏனென்றால் அவர்கள் தமிழ்க் குடும்பத்தை சேர்ந்தவர்கள் அல்ல.
அப்போது அந்தக் குழந்தை சொன்னது, “நானே தான் இந்த வியாதியை எடுத்து வந்திருக்கிறேன். அதனால் என் வியாதியைக் குணப்படுத்த முயற்சி பண்ணாதே! சும்மா இரு.” என்றது.
அப்போது கேட்டேன், “ஏன் இந்த வியாதியை எடுத்து வந்தீர்கள்?” அதற்கு அந்த குழந்தை, “மற்றவர்களைப் போல் இந்த சமுதாயத்தில் பொறுப்பு எடுத்துக் கொண்டு வேலைக்குச் செல்வதற்கும் படிப்பதற்கும் எனக்குப் பிடிக்கவில்லை. நிம்மதியாக சாப்பிட்டுவிட்டு,சாப்பிட்டுவிட்டுத் தூங்கலாம் என்று முடிவு பண்ணினேன். அதனால்தான், எனக்கு நானே இந்தக் கார்மங்கள் வரும்படி
Page 12
அமைதுக்கு கொண்டேன்! நானேதான் இந்த வியாதியை எடுத்துவந்தேன். என்னுடைய எண்ண ஓட்டங்களையும், மன அமைத்ப்பையும் இப்பிறப்ப்போது எடுத்து வந்தேன். அதனால்தான் இந்த வியாதியைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்கிறேன். என்னை சரி செய்ய வேண்டாம்" என்று சொல்லியது.
குழந்தையிடம் “உனக்கு வேண்டும் என்று கேட்டது சரிப்பா, ஆனால் உன் தாய் தந்தையார் நல்லவர்கள் ஆச்சே! அவர்களுக்கு என் இந்த துக்கத்தைக் கொடுக்கிறாய்? இது போன்ற நல்ல பெற்றோர்களுக்கு என் மகனாகப் பிறந்தாய் ?” என்றதும்... அந்தக் குழந்தை தெளிவாக தமிழிலேயே பதில் சொல்லியது “இவர்கள் ரொம்ப நல்லவர்கள். மற்றவர்களுக்கு மகனாகப் பிறந்திருந்தால், என்னைக் கவலிக்காமல் விட்டு இருப்பார்கள். இவர்கள் ரொம்ப நல்லவர்களாக இருக்கிறார்கள். அதனால் கட்டாயமாகக் கவனித்துக் கொள்வார்கள். அதனால்தான் இவர்களுக்கு மகனாகப் பிறந்தேன்” என்று சொல்லியது.
அந்தக் குழந்தை, ஒரு பத்து நிமிடத்திற்கு மேலாக தெளிவான தமிழில் பேசியது. மிகவும் ஆச்சர்யமான விஷயம். கையை எடுத்துவிட்டேன் அந்தக் குழந்தை பழையபடி ஊமையாக ஆகிவிட்டது. பழையபடி பேசாத ஊமைக்கு தமிழ் தெரிந்திருந்தது.
எதற்காக இந்த நிகழ்ச்சியைச் சொல்கிறேன் என்றால், இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, இந்தக் குழந்தை பேசியதை வைத்து தெளிவாக எனக்குப் பிறந்தது, நம் உடல் ஊனம், நம் மன ஊனம், எல்லாவற்றையும் நாம்தான் முடிவு செய்கிறோம். நம் வாழ்க்கையை நாம் எவ்வாறு வாழ்வேண்டும்என்று நினைக்கிறோமோ, அதை அடிப்படையாக வைத்து நாம்தான் முடிவு செய்கிறோம்.
இது சற்று ஆழமான கருத்து, மிகவும் யோசிக்க வேண்டிய கருத்து, புரிந்து கொள்வதற்குக் கஷ்டமாக இருக்கும். எப்படி இது? நாம் தான் முடிவு செய்கிறோமோ? அப்படி நடக்குமா? எப்படி இருக்க முடியும்?...பி
விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் செய்தியில் 10 ஆண்டுகளுக்காவது, உங்களை நீங்களே வருத்திக் கொண்டு, வாழ்க்கையில் துக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு, வேதனையிலேயே வாடினால் மட்டும் தான் Cancer வியாதி வரும். அந்த அளவிற்கு நீங்கள் உங்கள் உடலை அழித்துக் கொள்கிறீர்கள்.
மார்பு புற்றுநோயும் மன அமைப்பும்
சமீபத்தில் ஒரு பெரிய ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றைப் படிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. மார்ப்புப் புற்றுநோய் பற்றிய ஆராய்ச்சி அறிக்கை. அந்த ஆராய்ச்சியில் பெண்களுக்கு வரக்கூடிய மார்புப் புற்று நோய் பற்றி ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள்.
Page 13
[ERROR page 13 - NVIDIA client error]
Page 14
[ERROR page 14 - NVIDIA client error]
Page 15
திருப்தியை நமக்கு அளிக்கும்.
பூர்த்தி செய்த பிறகு திருப்தியாகவும், பூர்த்தி செய்வதற்கு முன் சக்தியாகவும் நம் சொந்த ஆசைகள் இருக்கும். அவை நாம் வாழ்வில் இருப்பதில் தவறில்லை.
ஆனால் சமுதாயம் நம் மீது திணித்த ஆசைகள், பக்கத்து வீட்டுக்காரர், எதிர்வீட்டுக்காரர், அல்லது அண்ணனையோ, தம்பியையோ பார்த்துவிட்டு ‘நாம் மட்டும் சும்மா இருக்கலாமா?’ அவர்கள் அப்படி வாழ்கிறார்களே, என்று ஒப்படுவதாலும், பொறாமையினாலும் வரும் ஆசைகள் கடன் வாங்கிய ஆசைகள். அவற்றைப் பூர்த்தி செய்வதற்கு முன் நம்முள் ஒரு எரிச்சலை உருவாக்கும்.
உண்மையில் பார்த்தீர்கள் என்றால்... பக்கத்து வீட்டில் குளிர்சாதனபெட்டி A/c வாங்கிவிட்டால், உங்களுக்கு அது ஒவ்வாமையாக இருந்தாலும் கூட நாமும் வாங்கிவிட வேண்டும் என்று அவசரப்படுவீர்கள். அதை உபயோகிக்காவிட்டால் கூட பரவாயில்லை அந்த மிஷின் வைத்திருக்க வேண்டும் என்கிற ஸ்திரத்தோடு ஆசைகளைப் பூர்த்தி செய்யத் துவங்குவீர்கள்.
மனதை ஆராய்ப்ச்சி செய்யுங்கள்
நடந்த நிகழ்ச்சி ஒரு அன்பர் என்னிடம் வந்திருந்தார். “சுவாமி! நான் மனைவியை விவாகரத்து செய்ய வேண்டும். நீங்கள் ஆசீர்வாதம் செய்யுங்கள்” என்று கேட்டார்.
நான் சொன்னேன், “அப்பா, கல்யாணம் செய்துவைத்ததான் ஆசீர்வாதம் செய்யமுடியும், விவாகரத்து செய்வதற்கு ஆசீர்வாதம் செய்யமுடியாது” என்று சொன்னேன். உடனே அவர், “இல்லை சாமி! நீங்கள் விவாகரத்து செய்ய தான் தீர்வும்” என்றார்.
“அப்பா! விவாகரத்து செய்து விடுவது என்று முடிவு செய்து விட்டீர்கள்... குறைந்தபட்சம் என்ன தான் பிரச்சினை என்றாவது ஆராய்ச்சி செய்யலாம். என்னால் உதவ முடிந்தால் உதவுகிறேன். என்ன பிரச்சினை என்று சொல்லுங்கள்.” என்று கேட்டேன்.
“உங்களுக்குத் தெரியாது சாமி, அவள் என்னென்ன கொடுமைப்படுத்தியிருக்கா, என்னைப் படாதபாடு படுத்தியிருக்கா”, என்றார்.
“ஐயா! எடுத்தவுடனேயே பெரிய பெரிய வார்த்தையெல்லாம் உபயோகப்படுத்தாதீங்க. உணர்ச்சிரமான வசனங்களையெல்லாம் உபயோகப் படுத்தாதீங்க! பிரச்சினை என்ன என்பதை மட்டும் சொல்லுங்கள்” என்றேன்.
Page 16
அதற்கு அவர், “இன்று எழும்போதே பிரச்சினை (சண்டை) ஆரம்பித்துவிட்டது. சாமி! ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்திருக்கும்போதே நிம்மதியில்லை சாமி!” என்றார்.
“என்னங்கையா பிரச்சினை, இன்றைக்கு என்ன பிரச்சினை?” என்று கேட்டேன். “காலையில் படுக்கையில் காபி கொடுக்கும்போது அவள் வைத்த வேகத்தில் வேஷ்டி எல்லாம் காபியாகிப் போச்சு” என்றார்.
“காபி மேலே சிந்தவதெல்லாம் விவாகரத்திற்கு காரணமாக இருக்கலாமா? அந்தத் துணியையும் உங்கள் மனைவிதானே துவைக்கப் போறாங்க” என்றேன். அவர் “இன்றைக்கு காபியா ஊத்துவா? நாளைக்கு ஆசிடா ஊத்துவா? இதையெல்லாம் பொறுத்துக் கொள்ள முடியுமா? சாமி!” என்று சொன்னார்.
உண்மையில், அவர் சொன்னதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. நான் சொன்னேன், “என்னங்கையா, என்ன சொல்றீங்க? உங்கள் மனம் செய்கிற தவறை என்னிப்பாருங்க. காபியையும், ஆசிடையும் ஒப்பிட்டுப் பார்க்க முடியுமா?”
“உங்களுக்கு அதெல்லாம் தெரியாது சாமி! எவ்வளவு நடந்திருக்கிறது... எல்லா கதையையும் சொல்லிக்கொண்டிருக்க முடியாது... எனக்கு சீக்கிரம் ஆசீர்வாதம் செய்து அனுப்புங்க சாமி!” என்றார். “முழுதாகத் தெரிந்துகொள்ளாமல் நான் ஆசீர்வாதம் செய்யமாட்டேன்” என்றேன்.
உண்மையிலேயே, ஒரு காபி ஊற்றியது, ஒரு காபி தன் மேல் சிந்தியது விவாகரத்திற்கான காரணமாய் இருக்க முடியாது. அவர் சொன்னார், “நான் பத்து வருடமாய் என்னெவ்லாம் பாடுபட்டிருக்கிறேன் என்று உங்களுக்குத் தெரியாது”
“ஒவ்வொன்றாகச் சொல்லுங்கள், ஆராய்ப்ச்சி செய்வோம்” என்று நான் கேட்டேன்.
“திருமணத்தின் போது ஒரு சின்னப் பாணையில் மோதிரத்தைப் போட்டு, கணவன், மனைவியை எடுக்கச் சொல்வார்கள் சாமி! யார் எடுக்கிறார்களோ, அவர்களுக்கு அந்த மோதிரம் இது ஒரு சின்ன விளையாட்டு. யார் மிக வேகமாகச் செயல்படுகிறார்கள் என்று பார்ப்பதற்காக அதுமட்டுமல்லாமல், அந்தக் காலத்தில் திருமணத்தின்போதுதான் கணவனும், மனைவியும் சந்தித்துக் கொள்வார்கள்.
அவர்கள் இருவருக்கும் இருக்கும் இடைவெளியைக் குறைப்பதற்காக, ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்திக் கொள்வதற்கான சின்ன விளையாட்டு,
Page 17
"அப்பவே அந்த பாணைகுள் கைவிட்டபோது அவள் நகத்தால் என் கையைக் கிழித்தாள் சாமி!" என்று அவர் சொன்னார்.
மனதில் எல்லாவற்றையும் பதிவு செய்துவைத்திருக்கிறார்.
"அப்பவே என் கையைக் கிழித்தாள்"
அந்த அம்மாவைப் பற்றி ஒரு பெரிய பட்டியல் வைத்திருப்பதனால், அந்த காபி கொட்டியது என்ற அந்த நிகழ்ச்சியை, அவரால் நேரடியாகப் பார்க்கமுடியவில்லை.
இந்த சின்ன விஷயம் எல்லா இடத்திலும் நடக்கும், இது ஒரு சாதாரண நிகழ்ச்சி. அதை நேரடியாகப் பார்க்கமுடியவில்லை அவரால். அனாவசியமாகப் பல விஷயங்களைச் சேர்த்து வைத்துவிட்டதால் அந்த எளிமையான,சாதாரண நிகழ்ச்சியை நேரடியாகப் பார்க்கமுடியவில்லை. அவருடைய மனம் அவரையே ஏமாற்றுகிறது. "இன்னைக்கு காபி ஊற்றுவா, நாளைக்கு ஆசிட் ஊற்றுவா, இதையெல்லாம் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியுமா?" என்று சந்தேகப்படுகின்றது.
அனாவசியமான பயங்களை மனம் உருவாக்கி வைக்கிறது. "இதை இப்படியே விட்டால் எங்கேபோய் முடியும் சாமி? இதையெல்லாம் இப்படியே விடக்கூடாது. இப்பவே கண்டிச்சாகணும். இப்பவே இதற்கெல்லாம் பதில் சொல்லியாகணும்" என்றார்.
காபிக்கும், ஆசிட்க்கும் சம்பந்தம் இருக்கிறதா?
இருக்க முடியாது.
ஆனால் நம்முடைய மனம் எதை வேண்டுமானாலும், எதனுடனும் இணைத்துக் காட்டும். பயம் என்று ஒன்று வந்துவிட்டால், எதை வேண்டுமானாலும் எதனுடனும் இணைத்துக் காட்டும்.
இந்தக் கதையைக் கேட்டவுடன் நாம் சிரிக்கிறோம்.
அனாவசியமாகப் பல விஷயங்களைச் சேர்த்து வைத்துவிட்டதால் அந்த எளிமையான, சாதாரணமான நிகழ்ச்சியை நேரடியாக் பார்க்கமுடியவில்லை. உங்களுடைய மனம் உங்களையே ஏமாற்றுகிறது.
Page 18
[ERROR page 18 - NVIDIA client error]
Page 19
ஒரு ஜென் கதை...
இது ஜென் ஞானியின் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சி. பொதுவாக ஞானிகள் ஆசைகளுக்கு அப்பாற்பட்டவர்கள், அச்சத்திற்கும் அப்பாற்பட்டவர்கள் என்ற கருத்து உண்டு.
அந்த ஜென் ஞானி ஒரு நாள் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது பாம்பு ஒன்று குறுக்கே வந்தது சீடர்கள் பயந்து போய் எப்படி ஓடினார்களோ அதைப் போலவே இவரும் ஓடினார். சற்று தூரத்தில் சென்று எல்லோரும் நின்றார்கள்.
சீடர்கள் கேட்டார்கள், “குருவே! உங்களை இத்தனை நாள் ஞானி என்று நினைத்திருந்தோமே? நீங்களும் எங்களைப் போல் ஓடி வந்தீர்களே?” அப்போது அந்த ஞானி சொல்கிறார்… “அப்பா… உனக்கும் எனக்கும் இருக்கும் வித்தியாசம் என்னவென்றால் ஓடுவதும், ஓடாது இருப்பதும் இல்லை. இங்கு வந்து நின்ற பிறகு உன்னுடைய இதயம் ‘பட் பட்’ என்று அடித்துக்கொண்டு இருக்கிறதா எனக்கு அப்படியில்லை” என்றார்.
“உடலிலான பயம். அதாவது தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்கிற பயம் உனக்கும் உண்டு, எனக்கும் உண்டு. ஆனால் அந்த பயத்தினால் உருவான மனீதியான பாதிப்பு எனக்கு இல்லை. அது உனக்கு உண்டு” என்றார்.
அதாவது ஒரு பாம்பு வரும் போது நீங்கள் ஓடுவது போல் அவரும் ஓடினார் அவர் மிக அழகாகச் சொல்கிறார். “நீங்கள் ஓடியது போல் நானும் ஓடினேன். ஆனால் வருவதற்கு முன் பாம்பு வருமா? பாம்பு வருமா? என்ற பயம் எனக்கு இல்லை. வந்தபின் இப்படி ஆகிவிட்டதே? ஒருவேளை என்னைக் கடித்துவிட்டால்… என்ன ஆகியிருக்கும் என்ற பயமும் எனக்கு இல்லை” என்றார்.
“ஒருவேளை இப்படி நடந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? அப்படி நடந்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று கவலைப்படுவதும் என்னும் எனக்கு இல்லை” என்று சொல்கிறார். சாதாரண மனிதர்கள் கடந்த காலத்திலும் கவலைப்பட்டுக் கொண்டிருப்பார்கள். நிகழ்காலத்திலும் பயப்பட்டுக் கொண்டிருப்பார்கள். எதிர்காலத்திலும் ஏங்கிக் கொண்டிருப்பார்கள்.
ஞானிகள் அந்த வேளையில் எப்படி இயங்க வேண்டுமோ அவ்வாறு என்று இயங்குகிறார்களே தவிர எதிர்காலத்திலோ, கடந்த காலத்திலோ அவர்கள் தங்கள் சக்தியைச் செலவு செய்வதில்லை. அவர் மிக அழகாகச் சொன்னார். (real Fear) (நிஜமான பயம்), Pshycalogical Fear (மனீதியான பயம்) - என்ற இரண்டு இருக்கிறது.
Page 20
[ERROR page 20 - NVIDIA client error]
Page 21
மூடனே! உன்னைக் காப்பாற்றத்தான் மூன்று முறை அழுப்பினேன். நீ அதைப் புரிந்துகொள்ளவில்லை... நான் என்ன செய்வேன்?" என்றார்.
ஆபத்து அவசர காலத்தில் ஏற்படுகிற தற்பாதுகாப்புக் கலை தவறு இல்லை. (பயம்) அது வேறு விஷயம். இந்த மனிதயான பயம், இது நின்றுவிடுமோ, அது நடந்துவிடுமோ, என்ன ஆகுமோ? இது எப்படிப் போகுமோ? அது எப்படி ஆகுமோ?" என்ற பயங்கள் தான் தவறு.
வியாபாரத்திலே ஒரு நாள், ஒரு 10 ரூபாய் நஷ்டம் வந்துவிட்டது என்றால், உடனே, "இப்படியே போனால், 1 மாதத்தில் 3,000 ரூபாய் நஷ்டம் ஆகிவிடுமே. ஒரு வருஷத்தில் இவ்வளவு ரூபாய் நஷ்டம் வருமே. 10 வருஷத்தில் எவ்வளவு லட்சம் நஷ்டம் வரும்? அப்புறம் நான் என்ன ஆவேன்? நான் நடுத்தெருவில் நின்றுவிடுவேன! என்பது போன்ற பயங்கள்... ஒரு நொடிக்குள் உங்கள் எண்ணத்தினால் வாழ்க்கையயே ஓட்டிப் பார்த்துவீர்கள். ஒரு சிறு விஷயம் நடப்பதினால் வாழ்க்கை முழுவதும் அதைக் கணக்குப் போட்டு பார்த்து விடுகிறீர்கள். மொத்த வாழ்க்கை பற்றியும் ஒரு படம் பிடித்து விடுகிறீர்கள்.
அதனாலேயே சோர்ந்து போய், பயந்து போய் எதையும் செய்ய முடியாமல் திராணியில்லாமல் அமர்ந்துவிடுவீர்கள். எந்த இயக்கத்திலும் உங்களால் இயங்க முடியாது. அதேபோல் உங்கள் வாழ்க்கை முழுவதையும் மொத்தமாக உங்கள் மனதின் முன் வைத்துப் பார்த்தீர்கள் என்றால், "அய்யோ! எப்படி நான் இயங்குவேன்? எனக்கு சக்தியிருக்கா?" என்று பயந்துபோய் உட்கார்ந்து விடுவீர்கள்.
மனதை கட்டுவிடலாம்
அழகான ஒரு ஜென் ஞானியின் கதை.
ஒரு காட்டிலே ஜென் ஞானி ஒருவர் வசித்து வந்தார். அவரிடத்தில் ஒரு இளைஞன் ஒரு நாள் இரவு நேரத்தில் சென்றான். அந்த இளைஞன், "அய்யா! இந்தக் காட்டை நான் கடந்து செல்ல வேண்டும். தயவு செய்து இந்தக் காட்டைக் கடக்கும் வரை ஒளி கிடைக்க உதவி செய்யுங்கள்"
"நீங்கள் தான் ஒளியை ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் என்னால் காட்டைக் கடக்க முடியும்" என்றான். மனிதர்கள் ஒரு மகானைப் பார்த்துவிட்டால் அவரிடம் எதாவது அமானுஷ்யமாக கேட்பார்கள்.
Page 22
[ERROR page 22 - NVIDIA client error]
Page 23
[ERROR page 23 - NVIDIA client error]
Page 24
[ERROR page 24 - NVIDIA client error]
Page 25
அந்த இரண்டு விஷயங்களிலும் கூட நமக்குத் தேவையான விஷயத்தை மட்டும்தான் உள்வாங்குகிறோம். ஒருவரைப் பற்றித் தவறான முடிவு எடுத்துவிட்டீர்கள் என்றால்... அவர் என்ன நல்லது செய்தாலும், அவரைத் தவறான கண்ணோட்டத்திலேயே பார்ப்போம்.
வாதத்தை (Argument) கேட்டபின் தீர்ப்பு (Judgement) கொடுப்பது ஒருவகை. தீர்ப்பை முடிவு செய்துவிட்டு வாதங்களை சேகரிப்பது இன்னொரு வகை.
இரண்டு விஷயம் இருக்கிறது. எப்போது நீங்கள் ஒருவரைப் பற்றித் தவறான முடிவு எடுத்துவிட்டீர்களோ அவர் என்ன நல்லது செய்தாலும் நாம் அதில் குறைர்க்கம் மட்டும்தான் கண்டுபிடிக்க முயற்சிப்போம். அதனுடைய சத்தியம் நமக்குப் புரியாது. எதாவது ஒரு நோக்கத்தோடு தவறு கண்டுபிடிப்போமே தவிர, அவரிடம் இருக்கும் நல்ல விஷயத்தை எடுத்துக் கொள்ளமாட்டோம்.
அதே போல் ஒருவர் ‘நல்லவர்’ என்று முடிவு செய்துவிட்டோம் என்றால்... அவர் எவ்வளவு தவறு செய்தாலும் நமக்குத் தெரியாது. தீர்ப்பிடுதல் (Judgement) என்ற இதனைச் சொல்வதுண்டு.
ஏற்கனவே முடிவு செய்து அதன்படி நடப்பது.இந்த முடிவு மனரீதியாக எடுப்பது. நன்முடைய மன அமைப்பு நடக்கிற விஷயத்தை ஏற்றுக் கொள்வதில்லை. நாம் பார்க்கின்ற கோணத்தில் நாம் விஷயத்தை எடுத்துக் கொள்கிறோம்.
வேதாந்தத்தில் சொல்வார்கள் “திருஷ்டி - ஸ்ருஷ்டி” என்று. பார்ப்பதை வைத்து நிகழ்ச்சியை உருவாக்குதல். நாம் பார்க்கின்ற கோணத்திலே பாராதது அதனால் நாம் உருவாக்கும் என்னங்கள். பச்சைக்கண்ணாடி போட்டுக்கொண்டு பார்த்தால் எல்லாமே பச்சையாகத்தான் தெரியும். மாயக்கண்ணாடி போட்டுப் பார்த்தால் இந்த சமுதாயமே நம்மை வஞ்சிப்பது போல் தான் தெரியும். உங்கள் மனம் நேர்மையாக இருந்தால் இந்த உலகமே நேர்மையாகத் தெரியும்.
உங்கள் மனம் எதிர்மறையாக இருந்தால், இந்த உலகமே எதிர்மறையாகத் தோன்றும். கிருஷ்ணர் ஒருமுறை தர்மராஜாவைப் பார்த்து, “தர்மராஜாவே! உலகத்தில் இருக்கும் யாராவது ஒரு கெட்டவரைப் பார்த்து அழைத்து வா” என்றார். துரியோதனனைப் பார்த்து, “நீ யாராவது ஒரு நல்லவரைக் கண்டுபிடித்து அழைத்து வா” என்றார்.
Page 26
இரண்டு பேரும் வெறும் கையோடு திரும்ப வந்தார்கள்.
தர்மராஜா ஏற்கனவே அவர் மனதாலே நல்லவர் என்பதனால் பார்ப்பவர் எல்லாம் அவருக்கு நல்லவர்களாகவே தெரிந்தார்கள்.
"கிருஷ்ணா! நான் எப்பேர்ப்பட்ட கெட்டவர்களிடம் கூட ஒரு சில நல்ல குணத்தைப் பார்த்தேன். அதனால் யாரையும் கெட்டவர் என்று சொல்ல முடியவில்லை. அதனால் நான் வெறும் கையோடு வந்திருக்கிறேன்" என்று சொன்னார்.
துரியோதனன் சொன்னான், "கிருஷ்ணா! உலகம் எப்பேர்பட்ட நல்லவர் என்று சொல்கிறவர்களிடம் கூட ஒரு சில கெட்ட குணம் இருப்பதை நான் பார்த்தேன். அதனால்தான் நான் வெறும் கையோடு வந்திருக்கிறேன்" என்று சொன்னான்.
இரண்டு பேருமே வெறும் கையோடு வந்து சேர்ந்தார்கள். தர்மராஜாவால் ஒரு கெட்டவனைக் கூட கண்டுபிடிக்க முடியவில்லை. துரியோதனனால் எந்த ஒரு நல்லவனையும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஏனென்றால் அவர்களுடைய மனதை வைத்துத்தான் சமுதாயத்தை எடைபோடுகிறார்கள்.
ஏனென்றால் உங்கள் மனதே சமுதாயம். உங்கள் மனம்தான் சமுதாயத்தை உருவாக்குகிறது. உங்கள் மனதின் போக்கினால்தான் சமுதாயம் நீங்கள் நினைப்பது போல் தோற்றமளிக்கிறது.
பரிசோதித்து பாருங்கள்
எங்கெல்லாம் சமுதாயம் உங்களுக்குள் ஆசையைத் திணிக்கிறதோ அங்கெல்லாம் விழிப்புணர்வோடு அந்த ஆசையை நிறுத்துங்கள்.
எங்கெங்கெல்லாம் சமுதாயம் உங்களுக்குள் அச்சங்களை திணிக்கிறதோ, அங்கேயும் விழிப்புணர்வோடு அந்த அச்சங்கள் உள்ளே வராமல் தடுத்து நிறுத்துங்கள். மூன்றாவதாக இந்த சமுதாயமே உங்கள் மனக் கற்பனையால் நீங்கள் உருவாக்கிய மாயை என்று உணருங்கள்.
இந்த மூன்று கருத்துக்களை மட்டும் இன்றைய செய்தியாக உங்கள் வாழ்க்கையில் கடைப்பிடிப்பீர்களா? மற்றவர் உங்களைப் பார்த்து என்ன நினைக்கிறார் என்பதற்காக வாழாதீர்கள். ஏனென்றால் அவர் உங்களைப் பார்த்து 'நீங்கள் அவரைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்' என்ற கவலையில்தான் மூழ்கியிருப்பார்.
Page 27
மற்றவர்களுக்காக உங்கள் வாழ்க்கையில் ஆசைகளையும், அச்சங்களையும் பெருக்கிக் கொள்ளாதீர்கள்.
உங்கள் மனம்தான் இந்தச் சமுதாயத்தை உருவாக்கி, மாயையை உருவாக்கி, அதில் உங்களைச் சிக்கவைத்து, மயக்கி, துன்பத்திற்கு ஆளாக்கிறது. உங்கள் வாழ்க்கைக்கு நீங்கள் தான் பொறுப்பு.
இதனால் இந்த மூன்று கருத்துக்கள். உங்களால் இந்த சமுதாயம் மீண்டும் மீண்டும் உங்களுக்குள் செலுத்தும் ஆசைகளை அனுமதிக்காதீர்கள். உங்களுக்குள் சமுதாயம் மீண்டும் மீண்டும் செலுத்தும் அச்சங்களை அனுமதிக்காதீர்கள்.
இன்னொன்று, நாமெல்லாம் கேட்பது உண்டு, இந்த சமுதாயத்தைப் பார்த்து நாமெல்லாம் கற்றுகொள்ளவில்லையென்றால் நாமெல்லாம் எப்படி வளர்வது?.
நீங்கள் உங்களை உங்களோடு மட்டும் ஒப்பிட்டு வளருங்கள். இன்று 10 ரூபாய் அளவிற்கு சாதனை செய்திருந்தால் நாளை 11 ரூபாய் அளவிற்கு வளருங்கள். உங்களோடு உங்களை ஒப்பிட்டு உங்கள் வளர்ச்சியை உருவாக்குங்கள்.
இந்த மூன்றே மூன்று கருத்துக்களை மட்டும் உங்கள் வாழ்க்கையின் பாகமாக மாற்றிக்கொள்ளுங்கள். சமுதாயம் உங்கள் மீது திணிக்கும் ஆசைகளை அனுமதிக்காதீர்கள். உங்கள் மனம்... இல்லாத ஒரு சமுதாயத்தை உருவாக்கி காண்பிக்கும்.
உங்களை நீங்களே வருத்திக் கொள்வதிலிருந்து... இந்த மாயையின் பிடியினில் சிக்கிக் கொள்ளாமல் தடுத்து நிறுத்தி உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். உங்கள் மனம் இல்லாத சமுதாயத்தை உருவாக்கிக் காட்டி நீங்கள் வாழ்க்கையை துக்கமாக்குவதை தடுத்து நிறுத்துங்கள். இந்த மூன்று கருத்துக்களையும் உள்வாங்கி நீங்கள் வாழ்க்கையில் நடைமுறைப் படுத்துங்கள்.
நீங்கள் இந்த சமூகத்திற்கும், உங்கள் வாழ்க்கைக்கும் அப்பாற்பட்ட ஆன்ம சக்தி என்று உணருங்கள். இந்த ஞானக் கருத்துக்கள் உங்களுக்குள் சென்று உங்களுக்குள் தியானமாக மலர்ந்து, ஆனந்தம் உங்களுக்குள் நிறைய வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.
இந்த ஞானக்கருத்துக்களோடு தியானத்தை உங்கள் வாழ்க்கையில் சேர்த்தீர்களானால் ஆனந்தம் உங்கள் வாழ்க்கைத் தன்மையாக மாறிவிடும்.
Page 28
[ERROR page 28 - NVIDIA client error]
Page 30
எங்கெல்லாம் சமுதாயம் உங்களுக்குள் ஆசையைத் தினிக்கிறதோ அங்கெல்லாம், விழிப்புணர்வோடு அந்த ஆசையை நிறுத்துங்கள்.
எங்கெங்கெல்லாம் சமுதாயம் உங்களுக்குள் அச்சங்களை தினிக்கிறதோ, அங்கேயும் விழிப்புணர்வோடு அந்த அச்சங்கள் உள்ளே வராமல் தடுத்து நிறுத்துங்கள்.
மூன்றாவதாக இந்த சமுதாயமே உங்கள் மனக்கற்பனையால் நீங்கள் உருவாக்கிய மாயை என்று உணருங்கள்.
இந்த மூன்று கருத்துக்களை மட்டும் இன்றைய செய்தியாக உங்கள் வாழ்க்கையில் கடைப்பிடியுங்கள்.
ஒரு முறை உங்கள் வாழ்க்கையில் பரிசோதனை செய்து பாருங்கள். அது எந்த அளவுக்கு நடைமுறைக்கு சாத்தியமாக இருப்பதையும் உங்கள் வாழ்க்கையில் ஆனந்தத்தை உருவாக்குவதையும் நீங்களே நேரடியாக காண்பீர்கள்.
- பரமஹம்ச னித்யானந்தர்
Printed & Published by Nithyananda Dhyanapeetam (Dhyanaeeta Charitable Trust) Nithyanandapuri, Kallugopahalli, Off Mysore Road, Bidadi - 562 109, Bangalore District, Karnataka, INDIA. Ashram : +91-80-7202084, PRO/Secretary : 9448058598 [email protected] www.nithyananda.org Ebook ISBN 979-8-88572-339-8