1. isbn 979-8-88572-342-8
Page 1
[ERROR page 1 - NVIDIA client error]
Page 2
தியான சத்சங்கம்...
தியான சத்சங்கம் என்பதே நம்முடைய வாழ்க்கையை நாம் புதிய வடிவத்திற்கு, உருமாற்றத்திற்குக் கொண்டு வரும் உள்ளுலகத்தின் தொழில் நுட்பம். தியான சத்சங்கம் வெறுமனே வார்த்தைகள் பறிமாறப்படும் இடம் அல்ல.
வாழ்க்கைக்கான ஞானசக்தி, வாழ்வியல் தீர்வுகள் உங்களுக்கு வழங்கப்படும் இடம். இளைஞர்களின் பொறுப்பும் பொறுப்பன்மையும் எனும் தலைப்பில் பரமஹம்சர் ஆற்றிய சொற்பொழிவிலிருந்து இந்த புத்தகம் தொகுத்து வழங்கியுள்ளோம்.
~ நித்யானந்தத்தில் நித்யானந்த தியானபீடம்
Page 3
சாதிக்க விரும்பும் இளைஞர்களுக்கு...
Page 4
வெளியீடு
நித்யானந்த தியானபீடம்,
பெங்களூர், இந்தியா.
அட்டை வடிவமைப்பு : நித்யானந்த தியானபீடம்,
பக்கங்கள் : 38
தனிப்பிரசுர உரிமை : 2008
முதல் பதிப்பு : ஜூலை 2008.
Ebook ISBN: 979-8-88572-342-8
இந்தப் புத்தகத்தின் எந்த ஒரு தகவலும் எந்திரத் தட்டச்சு செய்வதன் மூலமாகவோ, படம் பிடிப்பதன் மூலமாகவோ, பிரதி எடுக்கப்படவோ அல்லது திரும்பப் பெறும் வகையில் ஒரு கணினியில் சேமித்து வைக்கவோ அல்லது அதனை வேறொரு கணினிக்கு அனுப்பவோ அல்லது தனிப்பட்ட மற்றும் பொதுவான பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்தவோ கூடாது. தியானபீடத்திலிருந்து எழுத்துப்பூர்வமான அனுமதியின்றி எந்தவிதத்திலும் இந்தப் புத்தகத்தின் பிரதியை உற்பத்தி செய்யக்கூடாது.
இந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் எந்த ஒரு தகவலையும் நீங்கள் உபயோகிக்க கூடிய நிகழ்வில் உங்களது செயல்களுக்கு இப்புத்தகத்தின் வெளியீட்டாளரோ அல்லது எழுத்தாளரோ பொறுப்பல்ல.
இந்தப் புத்தக விற்பனை மூலமாக எழுப்பப்படும் நிதி முழுவதும் நித்யானந்த தியானபீடத்தின் கருணை நோக்கச் செயல்களுக்கு சேவையாகச் சென்றடைகிறது.
- நித்யானந்த தியானபீடம்
அச்சுப்பதிப்பகம் : THE CHEPAS, Chennai, +91 94440 03552
சாதிக்க விரும்பும் அளவிற்கு முயற்சி...
Page 5
[ERROR page 5 - NVIDIA client error]
Page 6
உருவாக்கும் சக்தி
இளமையிலே நீங்கள் எதற்காக உங்கள் சக்தியைச் செலவிடுகின்றீர்களோ, எதை நோக்கி உங்கள் மனம் ஆழ்ந்து ஈர்க்கப்படுகின்றதோ அதே வழியில்தான் அதே முறையில்தான் உங்களுடைய வாழ்க்கை முழுமையாக அமையும். இளமையான உங்கள் வாழ்க்கையில் நீங்கள் நிர்ணயிக்கும் பாதை, உங்கள் வாழ்க்கையில் நீங்கள் உங்கள் வாழ்க்கையைப் பற்றி முடிவெடுக்கும் காலம். இதற்கெல்லாம் அப்போப்பார்ப்பட்டு, இளமைக்காலத்திற்குத்தான் உங்களுக்குள் ஒரு உயிரை உருவாக்கும் சக்தி மலர்கின்றது.
இக்காலத்தில்தான் மனிதனுடைய அடிப்படை சக்தியான காமம், இன்னொரு உயிரை உருவாக்கக்கூடிய சக்தியாக அவனுக்குள் மலருகின்றது. இன்னொரு உயிரையே இந்த சக்தியினால் உருவாக்க முடியும் என்றால், அந்த சக்தியை அவன் முறையாக உபயோகப்படுத்தினால்தான் தன்னையும் தானாகவே முழு மனிதனாக, புது மனிதனாக உருவாக்கிக் கொள்ள முடியும்.
ஆழ்ந்து நாம் புரிந்து கொள்ள வேண்டிய கருத்து என்னவென்றால்… இன்னொரு உயிரை உருவாக்கக்கூடிய சக்தி முறையாக உபயோகப்படுத்தப்படுவதுபோலது, அதை முறையாக நாம் நம்முடைய வாழ்க்கைக்குள் கொண்டு வரும்பொழுது, இன்னொரு உயிரை மட்டுமல்லாமல் நம்மையும் ஒரு புது மனிதனாக உருவாக்கிக் கொள்ள முடியும். அந்த சக்தி நம்மையும் ஒரு புது மனிதனாக உருவாக்கிவிடும்.
அடிப்படையாக நாம் உணர்ந்து கொள்ள வேண்டிய மூன்று விஷயங்கள் என்னவென்றால்…
ஒன்று: இளமைக்காலம் போற்றற்கத்தகது. “உடல் ரீதியாகத் தன் உடலை இயக்குவதற்குத் தேவையான சக்தி மட்டுமல்லாமல், இன்னொரு உயிரையே உருவாக்கக் கூடிய சக்தி நமக்குள் நிறைந்து பொங்கி வழகின்ற காலம்”.
இரண்டாவது; மனரீதியாகத் தான் நம்பும் கருத்துக்களைத் தன்னுடைய வாழ்க்கையில் கொளித்துப் பார்ப்பது மட்டுமல்ல, தன்னைச் சற்றி இருக்கும் சமூகத்திற்கும் எடுத்துச்சென்று சேர்க்கவேண்டும் என்கின்ற துடிப்பும், மனோசக்தியும் இருக்கும் காலம்.
மூன்றாவதாக; நாம் எந்தக் கொள்கையை நம்புகின்றோமோ எற்றுக் கொள்கின்றோமோ, எந்தக் கொள்கையை நாம் நம் மனதால் உணர்கிறோமோ, அந்தக் கொள்கைக்காகத் தன் வாழ்க்கையை முழுமையாகத் தியாகம் செய்யும் திறியமும், ஆன்ம பலமும் இருக்கின்ற காலம்.
இளமைப் பருவத்தில் மட்டும்தான் இந்த மூன்று விஷயங்களும் இருப்பதனால் இளமைக்காலமே ஆன்மீகத்திற்கான, முழுமையான ஆன்மீக வாழ்க்கையைத் துவங்குவதற்கான, தன்னுடைய வாழ்க்கையை இன்மையாகவும், ஆன்ந்தமயமாகவும் மாற்றுவதற்கான காலம்.
Page 7
ஏன் இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்?
மிக ஆழமான கருத்து, புத்ததேனே 40 ஆண்டுகளுக்குப் பிறகுதான் ஞானம் எய்தினாராம். ஆனால் அவருடைய சீடர்கள் அனைவரையும் இளைஞர்களாகவே தேர்ந்தெடுக்க முயற்சி செய்தார்.
புத்திடம் ஒருவர் கேட்கிறார், “ஜயா! நீங்கள் 40 ஆண்டுகளுக்குப் பிறகுதான் ஞானமடைந்தீர்கள்! ஆனால் நீங்கள் இளைஞர்களை மட்டும் உங்கள் சீடர்களாகத் தேர்ந்தெடுத்தீர்கள்! இளைஞர்களை மட்டுமே இந்த ஆன்மீக வாழ்க்கைக்குக் கொண்டு வருகின்றீர்களே, காரணம் என்ன?” என்று. அதற்கு அவர் “வயது முதிர்ந்தவர்களால் ஞானமடைவதற்குத் தேவையான முழு சக்தியையும் போடுவது கடினம்” என்று சொன்னார்.
அதுபோல் மனிதனின் மனமும், மனித மனத்தின் எண்ண ஓட்டங்களும் ஒரு முறை உடைந்து இறைந்துவிடுமானால், மனிதனின் மனோசக்தி ஒரு முறை உடைந்து, இறந்து விடுமானால், அதை மீண்டும் ஒரு கூட்டிற்குள் எடுத்து வருவதும், அதை மீண்டும் ஒரு மூட்டையாகக் கட்டுவதும் மிகவும் கடினமான விஷயம்.
எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும் அந்தத் துறைக்குள் தனது சக்தியை இளமைக் காலத்தில் செலுத்துகிற ஒரு மனிதன் மட்டும்தான் அந்தத் துறையின் உச்சத்தை எட்டிப் பிடிக்கமுடியும். அந்தத் துறையின் இறுதியைத் தொடமுடியும். ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் இளமைக்காலம் அற்புதமான காலம்.
இளைஞர்களின் ஆற்றல்...வாழ்க்கையின் சாரம் இளமைக்காலம் அந்தக் காலத்தில் மட்டும்தான் “உடல் நீதியான அபாரமான சக்தியும், உணர்வு நீதியான அற்புதமான பலமும்,
இன்னொரு உயிரை உருவாக்கக்கூடிய சக்தி முறையாக உபயோகப்படுத்தப்படும் பொழுது, அதை முறையாக நம் நம்முடைய வாழ்க்கைக்குள் கொண்டு வரும்பொழுது, இன்னொரு உயிரை மட்டுமல்லாமல் நம்மையும் சேர்த்து ஒரு புது மனிதனாக உருவாக்கிக் கொள்ள முடியும். அந்த சக்தி நம்மையும் ஒரு புது மனிதனாக உருவாக்கி விடும்.
ஆன்மீக நீதியாக இயங்கும் ஆத்ம சக்தி ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் முழுமையாக இருக்கின்றது.” மனிதர்கள் முதுமை அடைந்த பின்பு அவர்களுக்கு அனுபவம் வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் எத்தனை அனுபவம் அவர்கள் கையில் இருந்தாலும், தன்னுடைய வாழ்க்கையைத் திருத்திக்கொண்டு வாழ்வதற்கு வாழ்க்கை இருக்காது. அந்த வாழ்க்கை அவர்களுக்கு இருப்பதில்லை.
முக்கியமாக, அடிப்படையாக நாம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம். இளைஞர்கள் ஆயிரம் தவறுகளுடன் அனுபவம் இல்லாதவர்களாக இருந்தாலும், சாதிக்கத்
Page 8
[ERROR page 8 - NVIDIA client error]
Page 9
"ஒவ்வொரு மனிதனும் தான் யார் ? எந்தத் துறையில் சென்றோமானால் தன்னுடைய வாழ்க்கையை தன்னால் மலர வைத்துக்கொள்ள முடியும், எந்தத் துறையில் செல்வதின் மூலம் தன் சக்தியை மேலும், மேலும் தனக்குள் பெருக்கிக் கொள்ளுமிடியும் என்பதை உணர்வதுதான் அடிப்படையான பொறுப்பு".
நாம் எந்தத் துறையில் நுழைந்தால் நம்முடைய முழுமையான சக்தி மலருகின்றது. நாம் எந்தத் துறையில் காலடி எடுத்து வைத்தால் நம்மால் இனிமையாக இயங்க முடிகின்றது, நம்முடைய வாழ்க்கை எந்தத் துறையில் மலரும் என்பதைத் தெரிந்துகொள்வதுதான். இளைஞர்களின் முதல் பொறுப்பு. இளைஞர்களின் முதல் பொறுப்பபே தம்முடைய வாழ்க்கையில் தாம் சாதிக்கக்கூடிய, தம்முடைய வாழ்க்கை முறையைப் பற்றி அடிப்படையாகத் தெரிந்து கொள்வதுதான்.
விவேகானந்தர் வீரவாரிசுகளே...
விவேகானந்தர் மிக அழகாகச் சொல்கின்றார்... "குறிக்கோள் இல்லாத ஒரு மனிதன் 100 தவறுகள் செய்வானென்றால் குறிக்கோளோடு வாழுகின்ற ஒரு மனிதனால் 2 தவறுக்கு மேல் செய்யவே முடியாது" என்று.
ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள்! உங்களை அறியாமல் அனாவசியமாக சக்தியை வீணாக்க மாட்டீர்கள். உங்களுக்கு ஒரு குறிக்கோள் இருக்கும் பொழுது அதைத் தாண்டி, உங்களுடைய சக்தியை அனாவசியமாக சீரழிக்க மாட்டீர்கள்.
குறிக்கோள் இல்லாதவர்கள் கண்ணில் பார்க்கின்ற துறையில் எல்லாம் கால் வைத்து கன்னுடைய பொறுப்பை உணராமல் மீண்டும் மீண்டும் தன்னுடைய வாழ்க்கைக்கும் இந்த உலக வாழ்க்கைக்கும் மிகப்பெரிய இழிவை, இழிவுத் தன்மையைத் தந்து கொண்டே இருப்பார்கள்.
இளைஞர்களின் முதல் பொறுப்பே தம்முடைய வாழ்க்கையில் தாம் சாதிக்கக்கூடிய, தம்முடைய வாழ்க்கை முறையைப் பற்றி அடிப்படையாகத் தெரிந்து கொள்வதுதான்.
வாழ்க்கையை வாழா வாழ உங்களுக்குள் சக்தி பொங்குமானால் நீங்கள் இளைஞர்கள். வாழ்க்கையை வாழா வாழ நீங்கள் மந்தத் தன்மையை நோக்கிச் செல்வீர்களானால் நீங்கள் வயோதிகர்கள்.
"நீங்கள் இளைஞர்களா? வயோதிகர்களா? என்பதை இதை வைத்துத்தான் முடிவு செய்து கொள்ள வேண்டும். உங்களுடைய வயது உங்களுடைய கூழ்நிலையை விடவும், நீங்கள் இளைஞர்களா, வயோதிகர்களா? என்பதை உங்கள் மனநிலைதான் முடிவு செய்யும்."
Page 10
[ERROR page 10 - NVIDIA client error]
Page 11
அந்த வாய்ப்பு வழங்கப்படாவிட்டால் ஒரு வருடம் தனக்குள் மூழ்கிச் சோதனை செய்து கொள்ளும் தன்னைப் பற்றி ஆராய்ந்து ஆராய்ச்சி செய்யும் வாய்ப்பு கிடைக்காத ஒரு மனிதன் மற்ற 99 ஆண்டுகளையும் வீணடிக்கின்றான்.
“ஒரு ஆண்டை தனக்காக எடுத்துக் கொண்டு, தன்னைப்பற்றி ஒரு ஆழ்ந்த ஆராய்ச்சி செய்து, தன்னைப் பற்றித் தெளிந்த சுயசோதனை செய்து, தன்னை உணர்ந்து, தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள இளைஞர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் ஒரு அருமையான வகுப்புதான் ஆனந்தயோகம்.”
அந்த ஒரு வருட வாழ்க்கையை நிறைவிலும் கழிக்கின்றான். வேறொன்றுமில்லை. பெண்கள் நடுஞ்சாலையில் செல்வதா? அல்லது சென்னை நடுஞ்சாலையில் செல்வதா? என்று முடிவெடுப்பதைப்போல்... நீங்கள் அந்த வழியைத் திருப்புகின்ற ஒரு கணம்தான் எந்த இடத்திற்கு நீங்கள் போய்ச் சேரப்போகின்றீர்கள் என்கின்ற மிகப்பெரிய ஒரு விளைவை ஏற்படுத்தும்.
எந்த இடத்தில் போய்ச் சேரப் போகின்றீர்கள் என்பது விளைவு. அந்த விளைவை ஏற்படுத்துகிற அடிப்படையான காரணம் நீங்கள் எடுக்கின்ற இந்த ஒரு முடிவுதான். மற்றபடி பயணம் எந்தப்பக்கமாக இருந்தாலும் ஒன்றுதான். எடுக்கின்ற ஒரு சின்ன முடிவுதான் விளைவையே மாற்றுகின்றது. அதேபோல ஒவ்வொரு இளைஞர்களுக்கும் அடுத்த 50 ஆண்டுகாலம், 60 ஆண்டுகாலம் வாழ்க்கைப் பயணம் என்பது ஒன்றுதான். ஆனால் எடுக்கின்ற திசைதான் விளைவை முடிவு செய்யப்போகின்றது
என்னைப் பொறுத்தவரை “ஒவ்வொரு இளைஞனும் ஒராண்டு காலமாவது தன்னைப்பற்றி ஆழ்ந்த சுயசோதனை செய்து கொண்டு எந்தத் துறையில் படிப்பதன் மூலம், எந்தத் துறையில் வேலை செய்வதன் மூலம், எந்தத் துறையில் இயங்குவதன் மூலம் தான் முழுமையாக வாழ்க்கையில் மலர முடியும், எந்தத் துறையில் இயல்பாகவே நம்முடைய சக்தி முழுமையாகப் பொங்குகின்றது” என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பேன்.
இதைத் தெரிந்து கொள்ளுவதற்குதான் ‘ஆனந்தயோகம்’ எனும் ஒரு வருட வாழ்க்கை கல்வி.
நீங்களும் இளைஞர்தான்!
பொதுவாகவே ஒவ்வொரு நாளும் நம்முடைய வாழ்க்கை ஆசையினாலும் அச்சத்தினாலும் தான் அலைகழிக்கப்படுகின்றது.
பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் படிப்புச்சுமை! அதற்கப்பாற்பட்ட வாழ்க்கையைப் பற்றிய ஒரு பயம்! இதற்கெல்லாம் அப்பாற்பட்டு வாழ்க்கையையே ஒரு மிகப்பெரிய கனவாகக் காட்டும் கலை உலகம்.
ஒவ்வொரு இளைஞனும் ஒராண்டு காலமாவது தன்னைப்பற்றி ஆழ்ந்த சுயசோதனை செய்து கொண்டு எந்தத் துறையில் படிப்பதன் மூலம், எந்தத் துறையில் வேலை செய்வதன் மூலம், எந்தத் துறையில் இயங்குவதன் மூலம் தான் முழுமையாக வாழ்க்கையில் மலர முடியும், எந்தத் துறையில் இயல்பாகவே நம்முடைய சக்தி முழுமையாகப் பொங்குகின்றது.
Page 12
இந்தக் கனவுகளை உண்டு அந்தக் கனவுகளை நோக்கி வேக வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் ஆர்ப்பாட்டமான வாழ்க்கை. ஆரவாரமான வாழ்க்கை!
இதன் படியிலே சிக்கித் தன்னுடைய உண்மையான வாழ்க்கை எது? நான் எதன் மூலமாக மலர முடியும்? என்கிற தெளிவு இல்லாமல் நிறைவு இல்லாமல் இளைஞன் தன்னுடைய வாழ்க்கையை வீணடித்துக் கொண்டிருக்கின்றான்.
அந்தோ!
வீணடித்து முடித்தபிறகுதான் திடீரென விழித்துக் கொண்டு, “ஜெயஹோ! வாழ்க்கையை வீணடித்து விட்டோமே” என்று வேதனைப்படுகின்றான்.
தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்! ஒவ்வொரு இளைஞனும், நீங்கள் உடலால் 30 வயதுக்கு குறைந்தவராக இருந்தால், உள்ளத்தால் இன்னமும் வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற உற்சாகம் உடையவராக இருந்தால், நீங்கள் இளைஞர்.
உடலால் 30 வயதுக்கு குறைந்தவர்களும், உள்ளத்தால் வாழ்க்கையை வாழ வேண்டும் என்கிற ஸ்திரம், ஒருவேளை உடலால் 30 வயதுக்கு மேற்பட்டு உள்ளத்தில் அந்த வாழ்க்கையை வாழ வேண்டும், மாற்றிக் கொள்ள வேண்டும் என்கிற, வாழ்க்கையை ஆனந்தமயமாக நிறைக்க வேண்டும் வாழ்க்கையை ஆனந்தத்தை நோக்கி முன்னேற்ற வேண்டும் என்கிற உந்து சக்தி இருந்தால் நீங்களும் இளைஞர்கள்தான்!
நாம் நினைக்கலாம்! ஓராண்டு வீணாய்போகுமே. படிப்பு வீணாய்போகுமே, சமூகத்தில் பதவி வீணாய்ப்போகுமே அந்தஸ்து வீணாய்ப்போகுமே, என்று. ஆழ்ந்து தெரிந்து கொள்ளுங்கள் இந்த ஓராண்டில் தெளிந்த முடிவை எடுத்தீர்களானால் நீங்கள் இப்போது சாதிப்பதை விட 100 பங்கு அதிகம் சாதித்து விடுவீர்கள். காரணம் உங்களுடைய துறையாக இருந்தால் உங்களுக்குள் சாதிக்க சாதிக்க சக்தி பொங்கும்.
சுயபரிசோதனை செய்யும் காலம்
இளைஞர்கள் ஒவ்வொருவருக்குமான அடிப்படையான கடமை ஒரு ஆண்டுகாலம் தன்னைத் தானாக சுய பரிசோதனை செய்வது.
“நாம் நினைக்கலாம்! ஓராண்டு வீணாய்போகுமே. படிப்பு வீணாய்போகுமே, சமூகத்தில் பதவி வீணாய்ப்போகுமே அந்தஸ்து வீணாய்ப்போகுமே, என்று. ஆழ்ந்து தெரிந்து கொள்ளுங்கள் இந்த ஓராண்டில் தெளிந்த முடிவை எடுத்தீர்களானால் நீங்கள் இப்போது சாதிப்பதை விட 100 பங்கு அதிகம் சாதித்து விடுவீர்கள்.
Page 13
காரணம் உங்களுடைய துறையாக இருந்தால் உங்களுக்குள் சாதிக்க சாதிக்க சக்தி பொங்கும். மற்றவர்களால் உங்கள் மீது திணிக்கப்பட்ட துறையாக இருந்தால், ஒவ்வொரு நாளும் வேதனையும் “ஏன் இந்த வாழ்க்கையை எடுத்தோம்?” என்கின்ற ஒரு சலிப்பும்தான் தட்டும்.
சலிப்புடன் இயங்குகின்ற மனிதன் எதையும் சாதிப்பதில்லை! சலிப்புடன் இயங்குகின்ற மனிதன் எதையும் தன்னுடைய வாழ்க்கையில் அடைவதில்லை! சலிப்பின்மையோடு வாழும் மனிதன், சமுதாயம் சொல்கின்ற வெற்றியை அடைவாயிட்டாலும் கூட வாழ்ந்தோம் என்கின்ற மிகப்பெரிய திருப்தியோடு வாழ்கின்றான்.
இன்னொரு விஷயம். சலிப்பின்றி வாழ்கின்ற மனிதன் உண்மையிலேயே சமுதாயம் சொல்கின்ற வெற்றியைத் தாண்டிய நிலையை அடைகின்றான்! சமுதாயம் சொல்கின்ற வெற்றியையும் அடைகின்றான். அதைத் தாண்டிய நிலையையும் அடைகின்றான். ஆனால் சலிப்புணர்வோடு வாழ்கின்ற ஒரு மனிதன் சமுதாயம் சொல்கின்ற வெற்றியை அடைந்தாலும் கூட துக்கமயமாகத்தான் வாழ்கின்றான்.
உள்ளனலக ஆராய்ச்சிக் கூடம்
தலைமை என்பது பதவியை வைத்து வருவதல்ல. தன்னுடைய தன்மையை வைத்து வருவது. தலைவன் என்பவன் எவனும் ஒரு பதவியினால் தலைவனாக மாறுவதில்லை. தன்னுடைய தலைமைத் தன்மையினால் மாறுகின்றான்.
தன்னுடைய வாழ்க்கையில் அவனுக்கு ஏற்படும் ஸ்திரத்துவம், தன்னம்பிக்கை இவைகள்தான் ஒருவனைத் தலைவனாக்குகிறது.
ஒவ்வொரு இளைஞர்களுக்குமான அடிப்படையான உரிமை தன்னைத் தனக்குள் ஆராய்ந்து தன்னைத் தனக்குள் சோதித்துப் பார்த்து, தன்னுடைய வாழ்க்கை பற்றிய தன்னுடைய வாழ்க்கையின் நோக்கத்தைப் பற்றிய தெளிந்த முடிவுக்கு வருவதாகும்.
பள்ளிகளும், கல்லூரிகளும் இதை வழங்க முடியாது என்பதினால் தான் நாம் நம்முடைய தியானபீடத்தின் மூலமாக இதை ஒரு வருட இலவசக் கல்வி முறையாகவே ஏற்படுத்தியிருக்கின்றோம்.
ஓராண்டு தனக்குள் மூழ்கி தன்னுடைய வாழ்க்கையைப் பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக இளைஞர்கள் அத்தனைப் பேருக்கும் உணவும், உடையும், இருப்பிடமும், கல்வியும் தந்து ஒராண்டுக்காவது தங்களுக்குள் தங்களைத் தாங்களே பரிசோதனை செய்து கொள்வதற்கான வாய்ப்பை ஆனந்தயோகம் என்ற நிகழ்ச்சி மூலமாக ஏற்படுத்தி இருக்கின்றோம்.
என்னைப் பொறுத்தவரை நாங்கள் செய்கின்ற மிகப்பெரிய சமூக சேவையாக இதைத்தான் நினைக்கின்றேன். வேறு எதையும் நான் சமூக சேவை என்று நினைக்கவில்லை.
Page 14
இளைஞர்களே! கட்டுக்கடங்காத சக்தியை கட்டவிழுங்கள்!
யாரோ ஒரு 100 பேருக்கு மருந்து கொடுப்பதையோ, 1000 பேருக்கு அன்னதானம் கொடுப்பதையோ அல்லது ஏதோ சில மேலான பணிகளைச் செய்வதையோ மருத்துவப் பணி செய்வதையோ நான் மிகப்பெரிய சமூக சேவையாக நினைக்கவில்லை.
சீரழிவு வந்த பிறகு நிவாரணத்திற்கு உதவுவதைவிட, வறுமையை உருவாக்கிவிட்டு அவர்களுக்கு சேவை செய்வதைவிட, அடிப்படையான வறுமையின் ஆணிவேர் அறுப்போம்.
வறுமையின் ஆணிவேரை அறுக்க வேண்டுமென்றால், தனி மனிதனுடைய வாழ்க்கையை உயர்த்த வேண்டும். அற்றகாக அவர்களுக்கு வாழ்கின்ற வாழ்க்கைத் தன்மையை, வாழ்க்கைத் தெளிவை அளிக்க வேண்டிய பொறுப்பு நம்முடையது.
இங்கு இரண்டு விதமான மனிதர்கள் இருக்கின்றீர்கள். ஒன்று வாழ்க்கையை வாழ்ந்து முடித்த முதியவாகள்! அடுத்தது வாழப்போகின்ற இளைஞர்கள்!
வாழப்போகின்ற இளைஞர்களே! உங்களுக்கான அருமையான வாய்ப்பு, அற்புதமான வாய்ப்பு..
ஒராண்டு உங்களுக்குள் உங்களை ஆழ்ந்து பரிசோதித்து உங்களுக்குள் இருக்கும் கட்டுக்கடங்காத சக்தியைக் கட்டவிழுங்கள்.
உங்களுக்குள் இருக்கும் கட்டுக்கடங்காத சக்தியைக் கட்டவிழத்தீர்களானால் நீங்கள், இப்பொழுது வாழ்வதைவிட 100 மடங்கு உயர்ந்த வாழ்க்கைத் தரத்தோடு, வெளி உலகத்திலும் உள்உலகத்திலும் வாழ முடியும். இது இளைஞர்களுக்கு நான் கூறும் செய்தி.
பெரியவர்களே! இளைஞர்களுக்குத் தெளிவைத் தாருங்கள்
வாழ்ந்து முடித்த பெரியவர்களுக்கு, நீங்கள் செய்கின்ற மிகப்பெரிய சேவை, உண்மையான மிகப்பெரிய சேவை, உங்களைச் சுற்றியிருக்கும் இளைஞர்களுக்கெல்லாம் ‘தான் தனக்குள் மூழ்கி இந்த வாழ்க்கையின் இலட்சியத்தை உணர்ந்து கொள்வதற்கான தெளிவைக்’ கொடுங்கள்.
அந்தத் தெளிவை நோக்கி, உங்களைச் சுற்றி இருக்கும் இளைஞர்களை எல்லாம் உற்சாகப்படுத்துங்கள்.
Page 15
ஒவ்வொரு இளைஞர்களுக்குமான அடிப்படையான உரிமை தன்னைத் தனக்குள் ஆராய்ந்து தன்னைத் தனக்குள் சோதித்துப் பார்த்து, தன்னுடைய வாழ்க்கை பற்றிய தன்னுடைய வாழ்க்கையின் நோக்கத்தைப் பற்றிய தெளிந்த முடிவுக்கு வருவதாகும்.
ஒரு அடிப்படையான விஷயம். நாம் எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டியது! இன்றைய இளைஞர்களை முடிவெடுக்கும் வாழ்க்கை வாழ்வதற்கு நாம் பயிற்றுவிக்காவிட்டால் இயற்கையிலேயே அவர்கள் தீவிரவாத தன்மைக்குள் நுழைந்து விடுவார்கள். ஏனென்றால் சமூகம் இருக்கின்ற நிலையில், நல்ல முறையான வாழ்க்கை முறையைக் கொடுக்கத் தவறினாலே போதும், தானாகவே அவர்கள் முறை தவறிய வாழ்க்கைக்குச் சென்று விடுவார்கள். முறை தவறிய வாழ்க்கையால் தம்மை மட்டுமல்லாமல் தம்மைச் சுற்றியிருப்பவர்களையும் பாதிக்கச் செய்துவிடுவார்கள்.
இதே நிலையில் நாம் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோமானால், இதே நிலையில் சமுதாயம் இயங்கிக் கொண்டிருக்குமானால் தெளிவாகத் தெரிந்து கேளுங்கள், நான் உங்களைப் பயமுறுத்தவில்லை. 30 ஆண்டுகளுக்குப் பிறகு சத்தியமாக உங்களால் சாலையில் நிம்மதியாக நடக்க முடியாது.
உங்களுடைய வருங்கால சந்ததிகளுக்குச் சொத்தைச் சேர்த்துவிட்டுச் செல்லலாம், பணத்தை வைத்துவிட்டுச் செல்லலாம், புகழை வைத்துவிட்டுச் செல்லலாம், ஒருவேளை அந்தஸ்தை வைத்து விட்டுச் செல்லலாம். ஆனால் நிம்மதியாக நடப்பதற்குச் சாலையைகூட வைத்து விட்டுச் செல்ல மாட்டீர்கள்.
நிம்மதியாக நடப்பதற்கு, அமைதியாக வாழ்வதற்கான சமுதாயம் இருக்காது. இதே குழப்பில் சென்று கொண்டிருக்குமானால... நாம் எல்லோருமே என்ன செய்கிறோம் என்றால் சமூகம் என்றால் யாரோ பார்த்துக் கொள்வார்கள். நமக்கென்ன நம் வேலையைக் கவனிக்கலாம் என்று பார்த்தும் பார்க்காமல் நம்முடைய பணம், நம்முடைய தொழில், நம்முடைய வேலை இதை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
நீங்கள் அனைவரும் இதே நிலையில் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தீர்களானால் நீங்கள் அனைவரும் நினைக்கின்ற பணத்தையும், புகழையும் அடைவீர்கள். உங்கள் வீடு இருக்கும். அலுவலகம் இருக்கும்! ஆனால் வீட்டையும் அலுவலகத்தையும் இணைக்கின்ற சாலையில் நீங்கள் நிம்மதியாகப் பயணிக்க முடியாது என்பதை நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்.
நாமெல்லாம் நினைக்கிறோம்! நம் வீட்டை மட்டும் பார்த்தாலே போதும், நம்முடைய வாழ்க்கை முடிந்து விட்டது என்று. உங்கள் வீடு தனியாக ஒரு காட்டுக்குள்ளோ அல்லது ஒரு கடல் நடுவில் தீவுக்குள்ளோ இருந்தால் உங்கள் வீட்டை மட்டும் பார்த்துக் கொண்டால் போதும் எனலாம்.
Page 16
ஆனால் நீங்கள் சமூகத்திற்குள் இருக்கின்றீர்கள். உங்கள் வீட்டைப் பற்றி மட்டும் யோசித்தீர்களானால், சமூகப் பொறுப்பைப் பற்றிக் கவலைப்படாமல் இருப்பீர்களானால் தெரிந்து கொள்ளுங்கள்... உங்களுடைய மக்களுக்கும், பெரன்களுக்கும் ஒருவேளை நீங்கள் பெரிய வீட்டை விட்டுச் செல்வீர்கள், மிகப்பெரிய அலுவலகத்தை விட்டு செல்வீர்கள், ஏதாவது ஒரு வியாபாரத்தை விட்டு விட்டுச் செல்வீர்கள்! ஆனால் அந்த வீட்டையும் அலுவலகத்தையும் இணைக்கும் சாலையைக் கட்டி நிம்மதியாகப் பயணிக்கும் நிம்மதியான ஒரு சமூதாயத்தை விட்டுவிட்டுச் செல்ல மாட்டீர்கள்.
இது உங்களுக்கு அளிக்கப்படும் அபாய எச்சரிக்கை. தயவு செய்து இந்த வார்த்தைகளை சாதாரண வார்த்தை என்று எடுத்துக் கொள்ளாதீர்கள். உங்களுக்கு அளிக்கப்படும் எச்சரிக்கை!
சமுதாயத்தில் பெருகிவரும் குற்றங்களின் எண்ணிக்கையையும் பெருகிவரும் தீவிரவாத சம்பவங்களின் எண்ணிக்கையையும் ஆழ்ந்து பார்க்கும் போது, இளைஞர்கள் தம்முடைய வாழ்க்கையைப் பற்றியும், தன்னைச் சுற்றியிருக்கும் சமுதாயத்தைப் பற்றியும் எண்ணிப்பார்த்து ஒரு பொறுப்பை எடுத்து வரவில்லையென்றால், தெளிவையும் பொறுப்புணர்வையும் அவர்களுக்குள் மலரச் செய்யவில்லை என்றால் அவர்களுக்குள் இருக்கும் கட்டுக்கடங்காத சக்தியைக் கட்டவிழ்த்து நெறிப்படுத்த வில்லையென்றால், தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்... 30 ஆண்டுகளுக்குப் பிறகு நீங்கள் வீட்டையோ அலுவலகத்தையோ வைத்திருக்கலாம். ஆனால் வீட்டிற்கும் அலுவலகத்திற்கும் இடையே இருக்கும் பாதையில் நிம்மதியாக உங்களால் பயணிக்க முடியாது. இன்றைய அளவில் உயர்தரப்பட்ட மக்கள் மத்தியில் இந்த பயமும், பாதுகாப்பின்மையும் வந்துவிட்டது.
நாள் ஆக ஆக, காலம் செல்லச் செல்ல நாம் பொறுப்பெடுக்காமல் இருந்தோமானால் அந்த பயம், அந்த அச்சம் மேல்தர மக்களிடமிருந்து மெதுமெதுவாக ஊடுருவி நடுத்தர மக்களுக்கும் வந்து விடுமானால் உங்களால் நிம்மதியாக வீதியில் உலவக்கூட முடியாது. உங்களால் நிம்மதியாக வாழ்க்கையை வாழமுடியாது.
மிகத் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள் இளைஞர்களாக இருந்தாலும் சரி, நினைக்கின்ற பணத்தையும், புகழையும் அடையலாம். உங்கள் வீடு இருக்கும். அலுவலகம் இருக்கும்! ஆனால் வீட்டையும் அலுவலகத்தையும் இணைக்கின்ற சாலையில் நீங்கள் நிம்மதியாகப் பயணிக்க முடியாது என்பதை நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்.
முதியவர்களாக இருந்தாலும் சரி, எல்லோரும் இந்தக் கருத்தையும், இந்த வாழ்க்கை முறையும் அடுத்த சமுதாயத்திற்கும், தலைமுறைக்கும் கொண்டு செல்வதற்காக உழையுங்கள்!
உங்கள் வீடு இருக்கும். அலுவலகம் இருக்கும்! ஆனால் வீட்டையும், அலுவலகத்தையும் இணைக்கின்ற சாலையில் நீங்கள் நிம்மதியாகப் பயணிக்க முடியாது என்பதை நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்.
Page 17
[ERROR page 17 - NVIDIA client error]
Page 18
[ERROR page 18 - NVIDIA client error]
Page 19
வித்யாதானம் என்றால் கல்வி கொடுத்தல்.
30 ஆண்டுகளுக்கு அவன் தனக்குத் தானாகவே சம்பாதித்துக் கொண்டால் வெளியுலக வாழ்க்கைக்குத் தேவையானதையும் சம்பாதித்துக் கொள்வான்.
ஞானதானம் என்பது ஞானம் ஜென்மத்திற்கும் அவனுடைய வாழ்க்கையைப் பற்றிய தெளிவையும் உள்ளுலக வாழ்க்கைப் பற்றிய உள்ளுலக வாழ்க்கையின் சொத்துக்கையும், வெளியுலக வாழ்க்கையின் சொத்துக்கையும் குவிக்கும் கல்வி இரண்டையுமே ஆனந்தயோகம் வழுப்பில் பெறலாம்.
அன்னதானத்தை விடவும், வித்யாதானம் உயர்ந்தது. வித்யாதானத்தை விடவும் ஞானதானம் உயர்ந்தது.
ஞான தானமாக இதை ஒரு மிகப்பெரிய சேவையாக, இந்த நிகழ்ச்சியை உங்கள் முன் வைக்கிறேன். இந்த அற்புதமான வாய்ப்பை இளைஞர்கள் முன் வைப்பதன் மூலமாக இந்தச் சமூகத்திற்கு நன்மையால் ஆன மிகப்பெரிய ஒரு சேவையை செய்ய முடியும் என்ற நம்பிக்கையோடு நாங்கள் மனப்பூர்வமாக நம்புகின்றோம்.
உங்களுடைய வாழ்க்கையைப் பற்றிய பொறுப்பை, உங்கள் வாழ்க்கையின் நோக்கத்தை முழுமையாக உங்களுக்குள் உணர்ந்து கொண்டு உங்களுக்குள் ஆனந்தமாக மலருங்கள்.
உங்களை நீங்களே உணர்ந்து கொள்ளுங்கள் என்று கூறி நித்யானந்தத்தில் நிலைத்து, நித்யானந்தத்தில் மலர்ந்து, எல்லோருமே நித்யானந்தமாகிட ஆசீர்வதித்து முடிக்கின்றோம்.
ஆனந்தமாக இருங்கள்.
தனக்குத்தானே செய்து கொள்கின்ற குணத்தாலும், தான் செய்கின்ற செயலாலும் தான் முறையான குழக்க்கள் முன்னோர்களால் பிறக்கப்பட்டன.
Page 20
[ERROR page 20 - NVIDIA client error]
Page 21
Institute of Life Bliss Technology
நீங்கள் சாதிக்க விரும்பும் இளைஞர்களா?
இதைத் தவறவிடாதீர்கள்.
ஆனந்த யோகத்தை எல்லா இளைஞர்களும், இளைஞிகளும் பெறும் வகையில் வடிவமைக்கப் பெற்றிருக்ககூடிய வகுப்புதான் LBT
இளைஞர்கள் ஒவ்வொருவருக்குமான அடிப்படையான கடமை ஒரு ஆண்டுகாலம் தன்னைத் தாணாக சுய பரிசோதனை செய்வது. ஒராண்டு ஆனந்தயோகம். நூறாண்டு வாழ்வை ஆனந்த மயமாக்கும். ஆரோக்கியமயமாக்கும் எனவே தான் அது இலவசமாகவே எல்லோருக்கும் வழங்கப்படுகிறது.
“நாம் நினைக்கலாம்! ஒராண்டு வீணாய்போகுமே. படிப்பு வீணாய்போகுமே. சமூகத்தில் பதவி வீணாய்ப்போகுமே அந்தஸ்து வீணாப்போகுதே, என்று.
ஆழ்ந்து தெரிந்து கொள்ளுங்கள் இந்த ஒராண்டில் தெளிந்த முடிவை எடுத்தீர்களானால் நீங்கள் இப்போது சாதிப்பதை விட 100 பங்கு அதிகம் சாதித்து விடுவீர்கள். காரணம் உங்களுடைய துறையாக இருந்தால் உங்களுக்குள் சாதிக்க சக்தி பொங்கும்.
மற்றவர்களால் உங்கள் மீது திணிக்கப்பட்ட துறையாக இருந்தால் ஒவ்வொரு நாளும் வேதனையும் “ஏன் இந்த வாழ்க்கையை எடுத்தோம்?” என்கின்ற ஒரு சப்புந்தான் தட்டும்.
சப்பின்றி வாழ்கின்ற மனிதன் உண்மையிலேயே சமுதாயம் சொல்கின்ற வெற்றியைத் தாண்டிய நிலையை அடைகின்றான்! சமுதாயம் சொல்கின்ற வெற்றியையும் அடைகின்றான். அதைத் தாண்டிய நிலையையும் அடைகின்றான்.
- பரமஹம்ஸ நித்தியானந்தர்
Ebook ISBN: 979-8-88572-342-8
Nithyananda Dhyanapeetam
(Dhyanapeeta Charitable Trust)
Nithyanandapuri, Kallugopahalli, Off. Mysore Road, Bidadi - 562 109.
Bangalore District, Karnataka, INDIA.
Ashram : +91-80-27202801 / 27202084 Fax : +91-92430 48957