Books / isbn 979-8-88572-352-7

1. isbn 979-8-88572-352-7

Page 1

[ERROR page 1 - NVIDIA client error]

Page 2

குருதம் வார இதழின் 26-10-2005 தீபாவளி சிறப்பு மலரின் ‘மனதைத் திற... மகிழ்ச்சி பொங்கட்டும்!' தொடருக்காக கேட்கப்பட்ட சுவையான கேள்விகளும்... ஞான பதில்களும், இதோ உங்களுக்காக...

காதல் தோல்வியால் துறவியானீர்களா? இல்லை, காதலில் தோற்றதால்.

யாரைக் காதலித்தீர்கள்? என்னுள்ளிருக்கும் என்னை. உண்மைக் காதல் என்றால்? பாசம், காமம், காதல் அன்பு, நட்பு இவையெல்லாவற்றையும் கடந்ததுமான விழிப்புணர்வே ‘உண்மைக் காதல்’. அது உங்களுக்கும், உங்களுக்குமான ஊடுறுவல்! கடவுளை நிறுவிக்க என்ன ஆதாரம்? கடவுளை நிறுவிக்க முடியாது என்பதே, கடவுள் இருப்பதற்கான ஆதாரம். சிறு உபகரணங்களால் நிறுவிக்கப்படும் அளவுக்குச் சிறியவர் அல்ல கடவுள்.

பக்தி? அது ஒரு முக்கிய வழிச் சாலை. ஆத்திகவாதி என்பவர் பற்றி... ‘கடவுள் உண்டு’ என்ற வார்த்தையை உதிர்த்ததால் அவர் ஆத்திகவாதியாகிவிட முடியாது.

நாத்திகவாதி பற்றி... கடவுள் உண்டு என நம்புவது எளிது. கடவுள் இல்லை என நம்புவதற்கு இன்றும் கொஞ்சம் போராட வேண்டும். அவரது கொள்கை மேல் அளவுகடந்த பக்தி கொண்டவரே நாத்திகவாதி.

‘பக்தி!’ நாத்திகத்தில்... எப்படி ஒத்துவரும்? பக்தி முக்கியம். பக்தி செய்யப்படும் பொருளை விட ‘பக்தியுணர்வு’ முக்கியமானது. பக்தியுணர்வு ஒரு மாபெரும் தியானம்.

ஆன்மீகம்...? ஆத்திகத்தின் உச்சமும், நாத்திகத்தின் உச்சமும் மோதிக் கொள்ளும் நாற்சந்தியே ஆன்மீகம். கடவுள் உண்டு, இல்லை என்ற இரண்டுக்கும் அப்பாற்பட்டதே ஆன்மீகம்.

தியானம் ஆரோக்கியமான தூக்கத்தைத் தருமா? தரும். நீர்க்குழல் விரலை விட்டு எவ்வளவு சுலபமாய் வெளியே எடுக்க முடிகிறதோ; அவ்வளவு சுலபமாக தியானம் செய்பவரால் தன்னுள் நுழைந்து, தூங்கி எழுவர முடியும்.

எந்த குருவிடம் போகக் கூடாது? ‘மற்ற குருமார்களிடம் போகாதீர்கள்’ என்று சொல்லும் குருமார்களிடம்.

மற்ற ஆன்மீக சூட்டங்களுக்குச் செல்லலாமா? நிச்சயமாக!

தியானம்? ஞானத்தின் திறவுகோல்.

ஞானம்? தெய்வ மாளிகை.

தெய்வம்? சந்தேகமே வேண்டாம், நீங்களேதான்.

யார் தியானம் செய்யக் கூடாது? சிக்கும் குழந்தை. ஆனந்தமாயிருக்கும் ஞானி.

கடவுளைப் பற்றி... கடவுளைக் கற்பனை செய்ய முடியாது. அப்படி உங்களால் கற்பனை செய்ய முடிந்தால், அது கடவுளாய் இருக்க முடியாது.

Page 3

யார் தியானம் செய்ய வேண்டும்? மற்ற எல்லோரும்.

எப்போது தியானம் செய்யக் கூடாது? தியானம் என்பது அருமருந்து. நீங்கள் ஏற்கனவே முழு ஆரோக்கியமானவராகவும் ஆனந்தம் நிறைந்தவராகவும் இருந்தால்... மருந்து தேவையில்லை.

சரியான தியானம் எது? வாழ்வின் ஒவ்வொரு நிமிடமும் தியானம்.

அந்த 3 நாட்களில் பெண்கள் தியானம் போன்ற புனிதச் செயல்களில் ஈடுபடலாமா? உடலும், மனதும் சோர்ந்திருக்கும் அந்தக் காலவகளில்கூட - சக்தியூட்டும் தியானம் வேண்டும்.

சிரிப்பு, தியானம் மருந்தோமே? அது ஒரு ஞான வெளிப்பாடு.

தியானத்தின் அடிப்படை குணம்? அகங்காரத்தை அழிக்கும்.

எது சிறந்த தியானம்? நிதானம். இதை தானம் அளியுங்கள். இதைப் பெறுவோரும், கொடுப்போரும் புண்ணியவான்கள்.

இன்றைய ஆன்மீகத்தை நம்பலாமா? 'நம்பாதிர்கள்'. தியானத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். அது தான் போதும்.

எது ஆத்மா? இந்தக் கேள்வியைக் கேட்டுக் காரணமாயிருப்பது.

எது தர்மம்? உங்களுக்கும் மற்றவர்களுக்கும் ஆனந்தமளிக்கும் எல்லாச் செயல்களும் தர்மங்கள்.

எது அதர்மம்? உங்களுக்கும் மற்றவர்களுக்கும் துன்பமளிக்கும் எல்லாச் செயல்களும் அதர்மங்களே.

பதவியின் நோக்கம்? உதவி செய்வது.

சொர்க்கம் எங்கே இருக்கிறது? சொர்க்கமும், நரகமும் புவியியல் ரீதியானதல்ல. அவை மனோரீதியானவை. - இவ்வளவு அழகாகவும், சுவையாகவும், எளிமையாகவும், ஆனந்த வாழ்வு கலைப் பற்றிய தியானத்தை உலகெங்கும் எடுத்துச் செல்லும் பரமஹம்சரைப் பற்றிய சுருக்கத் தொகுப்பே 'தியானம்' எனும் இப்புத்தகம்.

ஞானமடையும்போது நிகழ்வதென்ன? மனிதன் இறக்கிறான். கடவுள் பிறக்கிறார். யார் ஞானி? யார் மனிதன்? செத்தும் பிழைத்தவர் - ஞானி. பிழைத்தும் சாபவர் - மனிதன்

வெளியீடு : நித்யானந்தா பதிப்பகம் நித்யானந்தபுரி, மைலூர் ரோடு, பிடதி - 562109. பெங்களூர், கர்நாடகா, இந்தியா. இப்பதிக்கு நித்யானந்தத்தில் ஆனந்த சேவக்.

அட்டை வடிவமைப்பு : தியானபீடம் முதல் பதிப்பு : 2005 பக்கம் : 18 விலை : ரூ. 5.00

Page 4

பரமஹம்ச நித்யானந்தர் பிரு சரிதம்

பரமஹம்ச நித்யானந்தர் தமிழ்நாட்டின் ஆன்மீக நகராம் திருவண்ணாமலையில் ஜனவரி 1, 1978ஆம் ஆண்டில் பிறந்தார். பாலவயதில் பக்திமார்க்கத்தையும், சிறுவயதில் யோகமார்க்கத்தையும், தந்த்ரமார்க்கத்தையும் நுணுக்கங்களோடு கற்றுத் தேர்ந்தார்.

பனிணெண்டு வயதில், பல்வளக் குன்றில் உடல் தாண்டி அனுபவம் எனும் பேரானந்த நிலையை முதல் ஆன்மீக அனுபவமாக அடைந்தார். தன்னுடைய பதினேழாம் வயதில் வீட்டை விட்டு வெளியேறி பரிவராஜக வாழ்க்கையைத் தொடர்ந்தார்.

இரண்டாயிரம் மைல்களுக்கு மேல் பாதயாத்திரையாகச் சென்று இந்தியாவின் எல்லா ஆன்மீக நிறுவனங்களைப் பற்றியும், அவற்றின் செயல்பாடுகள் பற்றியும் ஆராய்ந்து தேர்ந்தார்.

திபெத் வரை சென்ற பரமஹம்சர், பின் இமயமலையில் பல கடுமையான தவங்களில் ஈடுபட்டார். இவற்றைத் தாண்டி...

ஞான அழுப்பதி எனும் பேரானந்தநிலையை ஜனவரி 1, 2000ம் ஆண்டில் அடைந்தார் நம் பரமஹம்சர்.

தன்னுள் நிகழ்ந்துக் கொண்டேயிருக்கும் நித்திய ஆனந்தம் எல்லா மனிதர்களுக் குள்ளும் நிகழ வேண்டும்; மக்களின் வேதனைகள் மகிழ்ச்சியால் துடைக்கப்பட வேண்டும்; ஆனோக்கியம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற பரமஹம்சரின் சத்திய சங்கல்பங்களால் தியானபீடம் எனும் சேவை நிறுவனத்தை ஜனவரி 1, 2000ம் ஆண்டில் தோற்றுவித்தார்.

நடைமுறை வாழ்வியல் பிரச்சனைகளுக்கு பரமஹம்சர் தரும் நேரடி வாழ்வியல் தீர்வுகள்; நோய்களைக் குணமாக்கும் சக்தியை உடலுக்குள் பாய்ச்சும் எளிய தியானங்கள்; துக்கத்தைத் துடைக்கும் ஆன்மீக சூத்திரங்கள் ஆகியவற்றால் மனிதர்களுக்கு நிகழும் மாற்றங்கள் மகத்தானவை. மகிழ்ச்சியானவை. துரிதமானவை.

நிற்க நேரமில்லாமல் ஓடும் மனிதனுக்குக் கூட தியானங்களை அந்தந்த மனிதர்களின் மனப்பக்குவத்திற்கேற்படி வகுத்தலிக்கும் பரமஹம்சரின் அனுகுமுறையால் ஆறுதல் பெறுவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.

Page 5

ஆனந்தமடைந்தவர்களின் எண்ணிக்கைப் பெருக்கால், முன்னற் வருடத்திற்குள் 800 கிளைகளோடு 21 நாடுகளில் ஐந்து கண்டங்களிலும் தியானபீடம் பரந்து விரிந்து கிளை விட்டிருக்கிறது.

தியானபீடம் மூலமாக தியானத்தையும், ஆனந்தத்தையும் மக்களுக்கு எடுத்துச் செல்லும் மகத்தான சேவையை பரமஹம்சர் செய்து வருகிறார்.

லாஸ்ஏஞ்சல்ஸ் நகரின் தியான சொற்பொழிவு முடிவில் கல்லூரிப் பெண் ஒருவர் தியானபீடத்தின் அசாத்திய வளர்ச்சியைப் பார்த்து, பொறாமையோடு ஒரு துடுக்கான கேள்வியைக் கேட்டார், “நீங்கள் என்ன சுப்ரீம் ஆன்மீக வியாபாரியோ?!”

துடுக்கு கேள்விக்கு சட்டென பரமஹம்சர் சொன்ன பதில், “ஆம். நான் வியாபாரிதான். என் வியாபாரம் எல்லா வியாபாரத்தை விடவும் உயர்ந்ததுதான்.”

எந்த ஒரு காலத்திலும் உண்மையான குருவிற்கு பஞ்சம் இருந்ததே இல்லை. சீடர்களுக்குத்தான் எல்லாக் காலத்திலும் பஞ்சம்!!! இதுநீங்கள்?

காரணம், நான் விற்கும் பொருள் இந்த உலகில் கிடைக்காதது. அது ஆனந்தம்.

அதற்காக நான் உங்களிடமிருந்து பெறும் கூலியும் இந்த உலகில் யாராலும் வாங்கிக் கொள்ள முடியாது. அது உங்களின் வேதனைகள்”.

பரமஹம்சர் நாம் வாழும் காலத்தில் பிறப்பெடுத்தது நமக்கு கிடைத்த பெரும் பாக்கியம். ஆயிரம் வருடமாக பூட்டப்பட்ட அறையின் இருளைக் கூட அறை நோக்குள் திறந்ததொறிந்தவுடன்... அப்படியேதான் பதிாய் வந்த தீப ஒளி!

ஞானகுருவின் ஞானக்கருத்துக்களும், தியான முறைகளும் வழிதெரியாமல் தவிக்கும் மனிதனின் அறியாமை என்னும் இருளையும் சோம்பல் என்னும் இருளையும் போக்கிடும் சக்தி பெற்றவை.

புத்திசாலி மக்கள் வாழும் ஞானியைத் தவற விட மாட்டார்கள். அப்படித் தவற விடுபவர்கள் புத்திசாலியாக இருக்க முடியாது.

பரமஹம்சரால் உருவாக்கப்பட்ட தியானபீடம் ஒரு குணமலிக்கும் சக்தி சூழல்.

Page 6

குணமளிக்கும் சக்தி கூழல்

பலருக்கும் இந்த ஆன்மீக உண்மை தெரியாமல் இருப்பது சற்றே சங்கடதிற்கு உரியது.

இந்திய நாட்டு ரிஷிகள், ஞானிகளைச் சுற்றி எப்போதும் மக்கள் கூட்டம் இருந்து கொண்டே இருப்பதற்கு காரணம் - ரிஷிகள், ஞானிகள் மூலம் வெளியிடப்படும் ஆனந்த சக்திதான்.

ஆனந்த சக்திக்கு இதமளிக்கும் பக்குவம் உண்டு. அந்த சக்திக்கு குணமளிக்கும் பக்குவம் உண்டு.

எப்படி ஒரு காந்தத்தைச் சுற்றி காந்த சக்தி, காந்த புலமாக இருந்து கொண்டு அதைச் சுற்றி வரும் இரும்பில் காந்த சக்தியை பாய்ச்சி ஈர்க்கிறதோ - அதேபோல், ஞானிகளை சுற்றி இருக்கும் ஆனந்த சக்தியால் உருவாக்கப் படும் ஆனந்த சக்தி தான் மக்களை ஈர்க்கிறது. மக்களை சந்தோஷத்திற்குள்ளாக்குகிறது.

எப்படி மின்சாரத்தால் ஒரு தேனிரும்பு துண்டில் காந்த சக்தியை உருவாக்கி காப்பாற்றி வைக்க முடியுமோ - அதேபோல் ஒரு ஞானியால் ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியை, பொருளை சக்தியூட்டி முடியும். இதற்கு பிராண பிரதிஷ்டை செய்தல் என்று பெயர்! சாதாரண நிலபகுதியில் குறிப்பிட்ட தூரம் ஆனந்த சக்தியை தொடர்ந்து இருக்கச் செய்ய ஒரு ஞானியால் முடியும். இது மிகவும் கட்சுமமான உண்மை.

அப்படி சக்தியூட்டப்பட்ட ஒரு நிலப்பகுதி தான் தியானபீடம் இருக்கும் நிலப்பகுதியாகும். இந்த நிலம் ஆனந்த சக்தி நிறைந்தது.

இப்படி சக்தியூட்டப்பட்ட ஒரு நிலப்பரப்பில் ஒரு சில நாட்கள் தங்கியிருப்பது, ஒரு ஞானியின் அருகிலிருப்பதற்கு சமம். 24 மணி நேரமும் நாம் சக்தி ஓட்டத்தின் நடுவே தங்கியிருப்பது, நம் அறிவை தாண்டி நம் உடலுக்குள் ஆழ்ந்து வேலை செய்யும்.

பரமஹம்சரால் பயிற்றுவிக்கப்பட்ட தியான சிகிச்சையின் போது இதே சக்தியோட்டத்தை நீங்கள் பெற முடியும்.

சரணாகதி நிகழாதவரை மனிதன் கடவுளைத் தேடி அலைவான். சரணாகதி நிகழ்ந்தகணமே மனிதனைத் தேடி கடவுள் ஓடி வருவார்.

Page 7

தியான முகாம்கள் மற்றும் தியான சேலை நிகழ்ச்சிகள்

ஆனந்த ஸ்புரணா தியான முகாம் (ASP)

ASP என்பது இரண்டு நாள் தியான முகாம். நமது உடலில் உள்ள 7 சக்கரங்களுக்கு (சக்தி மையங்கள்) 7 வெவ்வேறு மதங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 7 தியான முறைகள் மற்றும் 7 சொற்பொழிவுகளோடு நடத்தப்படும் தியான முகாம் - இந்த ASP தியானமுகாம்.

இந்த தியான அனுபவ முகாமில்:

உடல் ஆரோக்கியம்

மனதெளிவும் சிந்தனைத் திறனும்

செய்யும் தொழிலில் உற்சாகம்

உறவுகளில் பண்பும் முதிர்ச்சியும்

வாழ்வில் ஆனந்தமும் அமைதியும்

-பெற அழைக்கின்றோம்.

சக்தி ஸ்புரணா தியான முகாம் (SSP)

மனிதனின் மூன்று உடல்களான ஸ்தூல, கூக்ஷும, காரண சரீரங்கள் பற்றிய விஞ்ஞான விளக்கமும், மெய்ஞ்ஞான தியான முறைகளும் இந்த ஒரு நாள் தியான முகாமில் ஆச்சாரியர்களால் கற்றுத்தரப்படும். இதன் மூலம் நமக்குள் மறைந்திருக்கும் சக்திகளையும், அமைதியையும் அனுபவப் பூர்வமாக கண்டுணர முடியும்.

மாணவர்களுக்கான ASP (Level I & II)

மாணவ, மாணவியருக்கான ஒரு நாள் தியான முகாம். இதில், மூளையின் ஆச்சாரியங்கள், ஞானபக சக்தியின் கூட்சுமம், படிப்பு திறன் வளர்த்தல், புரிந்து கொள்ளும் தரம் உயர்த்தல் மற்றும் உற்சாக ஊட்டும் செய்முறைகள், தியான முறைகள் பற்றி

வாழ்க்கைப் பிரச்சனைகளுக்கு நேரடி முறை தீர்வையும் உங்களின் உடல் மன பாதைகளுக்கு உடனடித் தீர்வான சக்தி ஊட்டும் தரும் 2 நாள் ASP தியானமுகாமில் கலந்து கொள்ள விரும்புவோர் தொடர்பு கொள்ள எண்கள்...

சேலம்

94433 64644

98940 53940

ஆத்தூர்

94433 40904

நாமக்கல்

94433 88437

94432 21377

இராசிபுரம்

94420 23021

இளூர்

04344 571218

பெங்களூர்

94483 59684

மேமூர்

94480 75735

Page 8

மாணவர்களுக்கான ASP தியான முகாம் I-ல் ஆச்சாரியர்களால் கற்றுத் தரப்படும்.

உடலில் உள்ள சுரப்பிகள் (Glands) மற்றும் உணர்ச்சிகள் (Emotions) பற்றிய ஞான விளக்கமும், ஒரு மாணவனின் எதிர்கால வாழ்க்கையை ஆன்ந்தமாக அமைத்துக் கொள்வது பற்றிய அடிப்படை வாழ்க்கைக் கல்வியும் மாணவர்களுக்கான ASP தியான முகாம் II-ல் ஆச்சாரியர்களால் கற்றுத் தரப்படும்.

நித்யானந்த ஸ்பரணா தியான முகாம் (NSP),

பரமஹம்ஸ நித்யானந்தர் நேரடியாக நடத்தும் நான்கு நாள் தியான முகாம்.

நமக்குள் இருக்கும் 7 உடல்களை பற்றிய மேத ரகசியங்களையும் பரமஹம்ஸர், தான் ஞானமடைந்ததற்க்கு பயன்படுத்திய தியான முறைகளையும் NSP-ல் கற்றுத் தருகிறார்கள்.

ஆத்ம ஸ்பரணா தியான முகாம் (ATSP)

ஞானி யார்? நான் எங்கிருக்கிறேன்? நான் எப்படி இருக்கிறேன்? என்ற மிகப் பெரிய ஆன்மீக தத்துவ விளக்கங்களை நமக்குள் இருக்கும் ஐந்து கோஷங்களை அடிப்படையாக கொண்டு பரமஹம்ஸரே நேரடியாக நடத்தும் நான்கு நாள் தியான முகாம்.

தியான சிகிச்சை தீக்ஷை (HEALER'S INITIATION)

இரண்டு ASP தியான முகாம்களில் பங்கு பெற்ற பின் உலக மக்களுக்கு ஆன்ந்த சேவை செய்ய மனப்பூர்வமாக விரும்புபவர்களுக்கு ‘தியான சிகிச்சை தீக்ஷை’ ஆசிரமத்தில் இலவசமாக வழங்கப்படுகிறது.

சென்னை

94440 83599

94440 19781

திருவண்ணாமலை

94432 33789

காஞ்சிபுரம்

94431 23852

94433 47466

பாண்டிச்சேரி

94432 87504

புதுக்கோட்டை

94433 14774

திருச்சி

93451 10076

வாணியம்பாடி

04174 226798

98424 92103

திருநெல்வேலி

98427 67668

மதுரை

98942 02536

கோயம்புத்தூர்

98422 53124

திருச்செங்கோடு

94435 15717

ஈரோடு

98431 73535

விழுப்புரம்

94432 85685

வேலூர்

94432 42833

மும்பை

98203 04431

Page 9

ஆன்மீக சொற்பொழிவுகள்

இலவச ஆன்மீக சொற்பொழிவு மற்றும் தியானமுகாம் ஆஸ்ரமத்திலிருந்து முன் அனுமதி பெறும் பள்ளி, கல்லூரி, சங்கங்களுக்கு ஆச்சாரியர்கள் நேரடியாக சென்ற வழங்கிக் கொண்டிடுக்கிறார்கள்.

ஆனந்த யோகம்

ஒரு வருட இலவச குருக்குல கல்வி.

பெற்றோரின் அனுமதி பெற்ற, ஆன்மீக விருப்பம் கொண்ட 18 முதல் 30 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் மற்றும் இளைஞர்களுக்கான ஆனந்த வாழ்வு பற்றிய 'வாழும் கலைக்கல்வியை' குருக்குல கல்வி முறையில் இலவச உணவு, உடை; இருப்பிடத்தோடு சேலம் தியானபீடத்தில் நடத்தப்பட இருக்கிறது.

வாழ்வின் ரகசியங்கள்

வெற்றியின் வழிமுறைகள்

ஆரோக்கியத்திற்கான தியான முறைகள்

ஆனந்தத்திற்கான ஞானக்கருத்துக்கள்

  • ஆகியவை ஆனந்த யோக கல்வியின் பாடத் திட்டத்திற்குள் அடக்கம்.

தானும் ஆனந்தமடைந்து, மற்றவரும் ஆனந்தமடைய உதவும் சேவை மனம் கொண்ட எல்லோரும் வரவேற்கப்படுகிறார்கள்.

ஆனந்த யோகம் என்ற கல்வியால் பயன் பெற விரும்புபவர்கள் உங்களின் ஒரு புகைப்படம் மற்றும் பயோடேட்டாவை தெளிவாக, ஒரு வெள்ளைத் தாளில் எழுதி உங்களின் விண்ணப்பத்தை சேலம் தியான பீடத்திற்கோ அல்லது பெங்களூர் தியானபீடத்திற்கோ அனுப்பி வையுங்கள். (முகவரிக்கு கடைசிப் பக்கம் பார்க்க).

Page 10

ASP என்று அழைக்கப்படும் ஆனந்த ஸ்புரணா தியான முகாம் உலகம் முழுவதிலும் 1000 முறைக்கு மேல் நடத்தப்பட்டுள்ளது.

இரண்டே நாளில் 15 தியானங்களை கற்றுத்தரும் ஆரோக்கிய ஸ்புரணா தியானமுகாம் நடத்தப்பட்டிருக்கிறது.

60 தியான சத்சங்கங்கள் இதுவரை பரமஹம்சரால் நேரடியாக நடத்தப்பட்டு இருக்கிறது. 2,00,000 வரை பொதுமக்கள் இலவச தியான முகாமில் பங்கேற்றிருக்கிறார்கள்.

1,00,000 மக்கள் தியான சிகிச்சை மூலம் நேரடியாக பரமஹம்சரால் தொடப்பட்டிருக்கிறார்கள்.

ATSP என்று அழைக்கப்படும் ஆத்ம ஸ்புரணா தியான முகாம் நடத்தப்பட்டிருக்கிறது.

NSP என்று அழைக்கப்படும் நித்யானந்த ஸ்புரணா தியானமுகாம் 80 முறை பரமஹம்சரால் நடத்தப்பட்டு, அவரவரின் ஆன்மீக பாதையை உணர்த்தும் புதுப்பெயர்கள் 10,000 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.

SSP என்று அழைக்கப்படும் சக்தி ஸ்புரணா தியானமுகாம் 10 இடங்களில் நடத்தப்பட்டிருக்கிறது.

இதுவரை 3,00,000 மாணவ, மாணவியர் ஞான தான சேவை திட்டத்தின் மூலம் நேரடி பயனைப் பெற்றுள்ளார்கள்.

Page 11

இதுவரை இரண்டு முறை இமயமலையிலே பிரம்மஹம்சர் தொடர்ந்து 10 நாட்கள் உபநிஷத்துக்குளின் சொற்பொழிவாற்றியிருக்கிறார். ✦ 2வது ஹிமாலய யாத்திரையின் மொத்த சொற்பொழிவுத் தொகுப்பும் ‘நித்யோ உபநிஷத்’ எனும் புத்தகமாக வர இருக்கிறது.

ஆஷ்ரமத்தில் பிரம்மச்சரிய பயிற்சி அளிக்கப்பட்டு, பிரம்மச்சாரிகள் உருவாக்கப்படுகிறார்கள்.

தியான முகாம்களைத் தொடர்ந்து நடத்த இடவியாக 1000க்கும் மேற்பட்ட ஆன்ந்த சேவையாளர்கள் தியான பீடத்தோடு இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.

தமிழிலும், ஆங்கிலத்திலும் 200க்கும் மேற்பட்ட ஒலி, ஒளிநாடாக்கள் தியான பீடம் மூலமாக வெளியிடப்பட்டிருக்கிறது.

100 ஆஸ்ரமவாசிகள் பொங்கலூர் தியானபீடத்தில் முழுநேர ஆன்மீக சேவை செய்து கொண்டிருக்கிறார்கள்.

தமிழிலும், ஆங்கிலத்திலும் 100க்கும் மேற்பட்ட புத்தகங்கள் தியான பீடம் மூலமாக வெளியிடப்பட்டிருக்கிறது. ஆங்கிலம், தமிழ், கன்னடம், குஜராத்தி, தெலுங்கு, போர்ச்சுகீஸ், பிரண் ஆகிய மொழிகளில் இந்த புத்தகங்கள் கிடைக்கிறது.

தியான பீடத்தின் ஆன்மீக புத்தகங்கள் மற்றும் ஒளி, ஒளி நாடாக்களைப் பொதுமக்குக்கு சென்று சேர்க்கும் ‘Divine Shop’ என்றழைக்கப்படும் நடமாடும் ஆன்மீக சேவை மையம் தமிழகத்தின் பொது விழாக்களுக்கும், ஆன்மீக நிகழ்ச்சிகளுக்கும் சென்று கொண்டிருக்கிறது.

சந்நியாசிகள் ஆஸ்ரமத்தில் தொடர்ந்து உருவாக்கப்படுகிறார்கள்.

Page 12

100க்கும் மேற்பட்ட ஆச்சாரியர்கள் பரமஹம்சரால் பயிற்றுவிக்கப் பட்டிருக்கிறார்கள். இவர்களின் மூலமாக 10,000க்கும் மேற்பட்ட மக்கள் தியானபயிற்சியை தியானமுகாம்களில் பெற்றிருக்கிறார்கள்.

1000க்கும் மேற்பட்ட தியான சிகிச்சை அளிக்கும் யோகிகள், தியான சிகிச்சை அளிக்கும் தீக்ஷை பெற்று 'இலவச ஆனந்த தியான சேவையை' செய்து வருகிறார்கள். இவர்கள் மூலமாக தினம் 10,000 பேர் தியான சிகிச்சையை உலகெங்கும் பெறுகிறார்கள்.

குமுதம் வார இதழில் 'மணதைத் திற... மகிழ்ச்சி பொங்கட்டும்!' உற்சாகத் தொடரும், மலேசியாவின் வானம்பாடி இதழில் 'உன்னைப் பார்... வாழ்வு வளமாகும்!' ஆன்மீகத் தொடரும் தொடர்ந்து வெளியிடப்பட்டுக் கொண்டிருக்கிறது.

'ஆனந்தம் ஆனந்தம்' எனப்படும் ஆன்மீக மத இதழ் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது. சநதா பதிப்பகத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: தியானீடம் - கோலை கிளை No. 36, டாடாபாத், 9வது வீதி, கோலை - 641 012.

இனவரி 1ஆம் தேதி தியானபீடத்தின் முப்பெரும் திருவிழா நாள். இது ஒவ்வொரு வருடமும் ஆஸ்ரமத்தில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

1978ஆம் ஆண்டு ஜனவரி-1ல் பரமஹம்சர் பிறந்தார்.

2000-ம் ஆண்டு ஜனவரி-1ல் பரமஹம்சர் ஞானமடைந்தார்.

2003ஆம் ஆண்டு தியானபீடம் என்னும் மாபெரும் தியான சேவை நிறுவனம் தொடங்கப்பட்டது.

Page 13

பரமஹம்சரின் ஜீவ விப்பாடுகள் மீது ஏற்படப்பட்ட வியத்தகு ஆராய்ச்சி 'மனம் கடந்த நிலை' புத்தகத்திலிருந்து உங்களுக்காக சில வரிகள்...

  1. சுவாமிகள் கூறியபடி அவர் மனம் தாண்டிய மனமில்லா பெரு நிலையில் இருப்பது ஆராய்ச்சியில் ஆதாரபூர்வமாக நிரூபணமாகி இருக்கிறது.

  2. எல்லையற்ற உணர்வு நிலைய சுவாமி உணர்வது சோதனை மூலம் நிரூபணமாகி இருக்கிறது.

  3. சுவாமிஜி கூறியபடி அவருக்குள் பேரானந்த நிலை இருந்துகொண்டே இருக்கிறது.

  4. எண்ணங்களும், உணர்ச்சிகளும் சுவாமிஜியின் முழுக் கட்டுப்பாட்டில் உள்ளன.

  5. சுவாமிஜியின் ஆற்றலை முழுமையாக கணக்கிட முடியவில்லை. எங்களுக்கு கிடைத்த ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு கூற வேண்டுமானால் - சாதாரண மனிதனை விட குறைந்தது 6 மடங்கு அதிக ஆற்றலையும் புத்தக சக்தியையும் சுவாமிஜி பெற்றிருக்கிறார்.

  6. சுவாமிஜியின் உடற்கூற்றின் உள்ளே இருந்து மருத்துவ அறிவியலின் கணக்கிற்கு எட்டாத சக்தி (Energy) வெளிப்படுகிறது.

  7. இதுவரை வெறும் கருத்துவடிவில் மாத்திரமே பிரச்சாரம் செய்யப்பட்ட (மூன்றாவது கண், சம்மந்தப்பட்ட ஒரு ஒளி வெளிப்பாடு சுவாமிகளிடம் ஒளிர்வதை ஆதாரப் பூர்வமாக என்னால் பார்க்க முடிகிறது.

  8. சுவாமிஜி தியான சக்தியை செய்யும் போது மருந்து மாத்திரைகள் வேலை செய்யும் வேகம் அதிகரிக்கிறது. உடல், மன வியாதிகளிலிருந்து மீள உதவும் நோய் எதிர்ப்பு சக்தியும், மன அமைதியும் தியானசக்தியால் நோயாளிக்கு கிடைக்கிறன.

இடம்: விஸ்கான்ஸின் பல்கலைக்கழகம் ஒக்கலஹறாமா.

Page 14

பரமஹம்சரின் மீதான வெளிப்பாடுகள் மீதான இறண்டாவது மருத்துவ ஆராய்ச்சி பற்றி www.dhyanapeetam.org இணையதளத்திலிருந்து...

மெய்சிலிர்க்க வைக்கும் மருத்துவ ஆராய்ச்சி முடிவுகள் உங்களுக்காக...

உலகம் இதை நம்பப் போவதில்லை! (The world is not going to belive this!) காரணம் பரமஹம்சரிடமிருந்து வெளிப்படும் தியானசக்தி அற்புதமானது. ஆச்சரியமானது. ஆனந்தமானது.

மெய்ஞானமும் விஞ்ஞானமும் கைகோர்த்தது.

பரமஹம்சரின் தியான சக்தியின் மீது டாக்டர் கோலின்ஸ் ஆராய்ச்சி செய்து நிறுபித்து உறுதிபடச் சொன்னவை:

  1. பரமஹம்சரிடமிருந்து தியான சக்தி கதிர் வீசுகிறது.

  2. நோயாளி டேவிட்டினுடைய மூளைக்குள், ஒரு நொடிக்குள் கோடிக்கணக்கான இணைப்புகளை தியானசக்தி உருவாக்குகிறது.

  3. தியானசிகிச்சை முடிந்த பின்பும்கூட டேவிட்டினுடைய மூளைக்குள் உருவான புதிய இணைப்புகள் அப்படியே இருந்தன.

  4. நோயாளியின் மூளையைப் போலவே சுறுசுறுப்பானது எப்படியென பரமஹம்சரிடமே கேட்டபோது, “சாதாரண நிலையில்... பிரபஞ்ச சக்தி, நோயாளி, நான் எல்லாம் தனித்தனியாக இருப்போம். தியான சிகிச்சையில் எல்லாம் ஒன்றாகின்றன. அதனால்தான்…” எனச் சொன்னார்.

இடம்: செயின்ட் லூயிஸ், U.S.A. நோயாளி: திரு. டேவிட். மருத்துவ விஞ்ஞானி: டாக்டர் கோலின்ஸ்

Page 15

மகாமந்திர தியானம் உங்களுக்காக,,

மகாமந்திர தியானம் மிகப் பழமையான திபெத்திய தியானம்.

ஆரம்ப காலத்தில் அதிகாலையில் இந்த தியானத்தை செய்வார்கள். இந்த தியானத்தின் தனிச்சிறப்பே எந்த நேரத்தில் வேண்டுமானாலும் செய்யலாம் என்பதே. இந்த தியானத்தைச் செய்யும்போது வயிறு காலியாக இருக்க வேண்டும்.

சாப்பிட்ட உடன் இந்த தியானத்தைச் செய்யகூடாது. தியானத்தைச் செய்துபின் சாப்பிடக்கூடாது. தினியராகவும், பலரோடு சேர்ந்து கூட்டுத் தியானமாகவும் இந்தத் தியானத்தைச் செய்யலாம்.

தியானம் முடிந்து குறைந்தது 15 நிமிடங்களுக்கு எந்த வேலையும் செய்ய வேண்டாம். ஓய்விலிருங்கள். 30 நிமிடங்கள் நீடிக்கும் இந்த தியானம் இரண்டு பாகங்களைக் கொண்டுள்ளது.

முதல் பாகம் : 21 நிமிடங்கள்

முதுகெலும்பு, கழுத்து, தலை மூன்றும் நேர்கோட்டிலிருக்குமாறு, உங்களுக்கு வசதியாக இருக்கும் நிலையில் அமர்ந்து கொள்ளுங்கள்.

கண்கள் கூசாங்கல் ஆனது போலபாவித்து பார்வை முழுவதையும் உள்முகமாகத் திருப்புங்கள்.

‘ம்ம்ம்…’ என்ற நாதத்தை அடிவயிற்றிலிருந்து உருவாக்குங்கள்.

‘ம்’ என்ற நாதத்தை எவ்வளவு நீளமாக முடியுமோ அவ்வளவு நீளமாக…

உடல் வழி மனக்குழப்பம் சோர்வு குணக்குறைகள் ஆகியவை அனைத்தும் மகாமந்திர தியானத்தைத் தொடர்ந்து செய்பவரிடமிருந்து பறந்தோடிவிடும்.

Page 16

  • 'ம்' என்ற நாதத்தை எவ்வளவு ஆழமாக முடியுமோ அவ்வளவு ஆழமாக...

  • 'ம்' என்ற நாதத்தை எவ்வளவு சப்தமாக முடியுமோ அவ்வளவு சப்தமாக...

நாதத்தில் நீளம், ஆழம், சப்தம் ஆகிய மூன்றையும் முடிந்த அளவு சேர்த்து வெளியிடுங்கள்.

நாதத்தை உருவாக்குவதை தொடர்ந்து 21 நிமிடங்களுக்கு செய்யுங்கள். மகாமந்திர ஒலி நாடாவை பயன்படுத்திச் செய்தால், 21 நிமிடங்கள் சரியாகச் செய்ய முடியும்.

இரண்டாம் பாகம் : 10 நிமிடங்கள்

21 நிமிட மகாமந்திர உச்சாடனத்திற்கு பிறகு 10 நிமிடங்கள் சாட்சியாக மாத்திரம் அமர்ந்திருக்கவும்.

வெறுமனே எண்ணங்களையும், சுற்றியுள்ள பொருட்களையும் கடவுளிடம் யாசிக்கிறீர்கள். தியானத்தில் நீங்களே கடவுளாகிறீர்கள்

இந்த தியானம் ஒரு சக்தி கற்பகரு. தொடர்ந்து இந்த தியானத்தைச் செய்ய, உடலில் சக்திப் பற்றாக்குறை என்பதே இருக்காது.

நமது உடலில் உள்ள ஏழு சக்கரங்களையும் தூண்டிப் புத்துணர்வூட்டும் தனித்தன்மை பெற்றது இந்த மகாமந்திர தியானம்.

இன்றைய மனிதனின் தினசரி அதிக சக்தி தேவைக்கு காண ஒரு 'சக்தி மருந்து' என்று இந்த தியானத்தை அழைக்கலாம்.

தியானத்தின் முழுப்பலன் பெற தொடர்ந்து ஒரு மண்டலம் செய்யுங்கள். (இடைவெளியில்லாமல் தொடர்ந்து 48 நாட்கள் செய்வதே ஒரு மண்டலம் என்று அழைக்கப்படுகிறது).

தியானத்தின் பலனை அறிந்து, என்றும் ஆனந்தமாக இருங்கள்!

Page 17

பரமஹம்சரின் ‘ஞானமொழிகள்’ என்ற புத்தகத்திலிருந்து உங்களுக்காக சில வரிகள்…

அவமானம் எழும் நாடகம்

‘அவமானம்’ என்பது நம் அந்தஸ்து, வயது, தகல், கோத்திரம் பொருத்து நம் மனதால் கண்டுபிடிக்கப்படும் ஒரு புதிய கண்டுபிடிப்பு.

பொதுவாக அந்தஸ்து, வயது, பதவி நம்பை விட அதிகமாக இருப்பவர்கள் சற்று மரியாதைக் குறைவாகப் பேசினாலோ, நடந்து கொண்டாலோ அதற்கு நாம் கொடுக்கும் பெயர் - ‘உரிமை’ (ஆஹா! எவ்வளவு உரிமை எடுத்துக்கிறாங்க! எல்லாம் பாசம்!)

மாறாக, அந்தஸ்து, வயது, பதவி நம்மைவிட குறைவாக இருப்பவர்கள் சற்றே மரியாதை குறைவாக பேசினாலோ, நடந்து கொண்டாலோ அதற்கு நாம் கொடுக்கும் பெயர் - ‘அவமானம்’ (கொஞ்சம் இடம் கொடுத்தா என்மேல எவ்வளவு உரிமை எடுத்துக்கறாங்க பார்! எல்லாம் ரொம்ப மோசம்!)

அவமானம் நிஜமா? கற்பனையா? பதில் - உங்களின் மனநிலையைப் பொருத்தது.

நிஜத்தில் அவமானம் - மனதின் ஒரு மாயத் தோற்றம்தான்.

பொதுவாக அவமானத்தை மனிதர்கள் மூன்று விதமாக அணுகுவார்கள்:

முதல்வகை : மனிதர்களால், உறவுகளால் எவ்வளவுதான் அவமதிக்கப்பட்டாலும் திரும்ப; திரும்ப அதே மனிதர்களிடம் சென்று மூக்கு உடைபடுவார்கள் முதல் வகை.

அதிலிருந்து வெளியே வருவதைப் பற்றி யோசிக்க கூட மாட்டார்கள்.

மந்த மனம் படைத்தவர்கள்.

இரண்டாவது வகை : இவர்கள் தொட்டதற்றெல்லாம் கோபித்துக் கொள்வார்கள். புதிது, புதிதாக கண்டுபிடித்து “நீ என்னை இங்கே, இப்படி அவமானப்படுத்தினாய்”, “என் மதிப்பென்ன…” என்று சதா மதிப்பு தேடி அலைபவர்கள்.

அவமானம் பற்றிய அதீத கற்பனையில் வாழ்பவர்கள் !

மூன்றாவது வகை : அற்புதப் பிறவிகள். பண்பட்டவர்கள். அவமானம் என்ற ஊற்றை இல்லையே என்பதே உணர்ந்தவர்கள்.

Page 18

நம் Egoவிற்கு விழும் அடியைய்த்தான் நாம் அவமானம் என்று கருதிக் கொண்டிருக்கிறோம் என்ற உண்மையை உணர்ந்து தாண்டியவர்கள். Egoவை தொலைத்தவர்கள்.

அப்படியே மனிதர்கள் அவமதித்தாலும் அது இவர்களைப் பாதிக்காது.

தான் வேறு, தன் உடல் வேறு என்ற அனுபூதி பெற்றவரை யாராலும் அவமதிக்க முடியாது. அப்படியே அவமதித்தாலும் அது அவர்கள் உடல் மாத்திரமே சம்பந்தப்பட்டது.

எதனாலும் பாதிக்கப்படாமலிருக்கும் உணர்வுப் பக்குவத்தை பெற்ற இவர்களுக்கு அவமானம் என்ற ஒன்று ஏற்படாது. ஆனந்த மனிதர்கள்.

அவமானத்தை மூன்று விதமாக அனுகலாம் :

  1. அவமானத்தை அலட்சியப்படுத்துவது.

  2. அவமானத்தை எதிர்கொள்வது.

  3. அவமானம் என்னும் மாயையை தாண்டிச் செல்வது.

மூன்றில் எதைச் செய்தாலும் நீங்கள் புத்தி சாலிதான். தொடர்ந்து வாழ்க்கையில் முன்னேறிக் கொண்டே இருங்கள்.

அவமானதால் பாதிக்கப்படுபவர்கள் அதை அலட்சியப்படுத்த கற்றுக் கொள்ளுங்கள்!

அவமானத்தை அலட்சியப்படுத்துபவர்கள் அதை தாங்கக் கற்றுக் கொள்ளுங்கள்!

அவமானத்தைத் தாங்கத் தெரிந்தவர்கள் அதைத் தாண்டக் கற்றுக் கொள்ளுங்கள்!

தியானீடத்தில் வெளிப்பட்ட புத்தகங்கள்

நித்யானந்தர் ஓர் அறிமுகம்

பாத பூஜையின் மகத்துவம்

யந்திர தியானம் கதவைத் திற... காற்று வரட்டும்! - (பாகம் 1)

பரமஹம்சரின் ஞானமொழிகள்

தியானம் உங்களுக்காக

மனம் கடந்த நிலை

தியானம் ஞானத்தின் திறவுகோல்

அமைதியின் முழக்கம்

தியானம் ஒரு மருந்தாக!

மகாமந்திரா தியானம் கதவைத் திற... காற்று வரட்டும்! - (பாகம் 2)

தியானம் 17

Page 19

ஒரு நாளின் எல்லா நேரங்களும் தியானத்திற்கு உகந்தவையே. காலை 7 மணியிலிருந்து 7.30 மணி வரை; மாலை 7 மணியிலிருந்து 7.30 மணி வரை.

-தியானத்தில் கவனம் பெற்றால் தியானத்தின் மூலம் ‘குருசக்தியோடு’ தொடர்பு கொண்டு அதிக பலனைப் பெறலாம்.

தியானம் செய்யும் போது வயிறு காலியாக இருக்க வேண்டும்.

தியானம் முடித்தபின் அடுத்த அரை மணி நேரம் வரை எதுவும் சாப்பிட வேண்டாம். தியானம் செய்வதற்கு முன் குறைந்தது மூன்று மணி நேரத்திற்கு முன் சாப்பிட்ட இடைவெளி இருக்க வேண்டும்.

என்றால் தியானமாக இருந்தாலும் அதில் முழுமையாக ஈடுபடுங்கள். உங்களின் முழு சக்தியையும், முழு உணர்வையும் பிரயோகித்து தியானத்தில் ஈடுபடுங்கள்.

எல்லாத் தியானங்களிலும் கடைசி 10 நிமிடங்கள் சாட்சியாகப் பார்ப்பபதைச் சிரத்தையோடு செய்யுங்கள்.30 நிமிட தியானத்தில் முதல் 20 நிமிடங்கள் நீ மிடங்கள் செய்வது, இந்த கடைசி 10 நிமிடங்களுக்காகத்தான்.

ஒரு மணி நேரம் அதாவது 48 நாட்கள் தொடர்ந்து செய்து பார்த்தால் ஒரு தியான முறையின் முழுப் பலனை உணர்ந்து கொள்ளலாம்.

அதிக காரம், அதிக புளிப்பு, அதிக மசாலா, அதிக எண்ணெய் ஆகியவற்றைத் தவிர்ப்பது நல்லது.

தியானத்தின் போது தளர்ந்த ஆடைகளை உடுத்திக் கொள்ளுங்கள். தொந்தரவு இல்லாத தனி அறையில் தியானம் செய்வது நல்லது.

புகை, புலால் தவிர்த்தல் நல்லது. முடியாவிட்டால் தப்பில்லை. தொடர்ந்து ஆழ்ந்த தியானத்தில் ஈடுபடுங்கள். உடல் தானாகவே தன்னை இது போன்ற அடிமைத்தனங்களில் இருந்து காப்பாற்றிக்கொள்ளும்.

மது கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும்.

முக்கிய எச்சரிக்கை:

கடந்த சில மாதங்களுக்குள் அறுவை சிகிச்சை பெற்றவர்கள்.

அவசர சிகிச்சை பெற்ற நோயாளிகள்.

தீவிர இதய நோயாளிகள்.

-உங்களுக்கு அருகேயுள்ள தியானபீடக்களையை கலந்து ஆலோசித்த பின் தியானத்தில் ஈடுபடலாம்.

தியானி என்றால் சம்சிருத்தில் தியானம் செய்பவர் என்று பொருள்.

Page 20

[ERROR page 20 - NVIDIA client error]