Books / isbn 979-8-88572-850-8

1. isbn 979-8-88572-850-8

Page 1

Content: அமய தீட்சை

Content: ஶ்ரீ நித்யானந்ததேஸ்வரி சமேத நித்யானந்ததேஸ்வர் மற்றும் பரமஹம்ஸ நித்யானந்தர்

Page 2

Content: சமய தீட்சை

Content: வாழும் அவதார புருஷர் பரமஹம்ஸ நித்யானந்தர் சமய தீட்சைப்பற்றி அருளிய சொற்பொழிவிலிருந்து தொகுக்கப்பட்டது.

Page 3

Content: புத்தக வெளியீடு

Content: நித்யானந்த பல்கலைக்கழக அச்சகம்

Content: ISBN:

Content: முதல் பதிப்பு: ஆகஸ்ட், 2015-ஜீவன் முத்த வருடம்

Content: பிரதிகள்:

Content: பக்கங்கள்:

Content: Ebook ISBN: 979-8-88572-850-8

Content: இந்தப் புத்தகத்தின் எந்த ஒரு தகவலையும் எந்திரத் தட்டச்சு செய்வதன் மூலமாகவோ, படம் பிடிப்பதன் மூலமாகவோ, பாகி எடுக்கப்படவோ அல்லது சிரும்பப்பெறும் வகையில் ஒரு கணினியில் சேமித்து வைக்கவோ அல்லது அதனை வேறொரு கணினிக்கு அனுப்பவோ அல்லது தனிப்பட்ட மற்றும் பொதுவான பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்தவோகூடாது. தியானபீடத்திலிருந்து எழுத்துப்பூர்வமான அனுமதியின்றி எந்தவிதத்திலும் இந்தப் புத்தகத்தின் பிரதியை உற்பத்தி செய்தல்கூடாது. இந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் எந்த ஒரு தகவலையும் நீங்கள் உபயோகிக்கக்கூடிய நிகழ்வில் உங்களது செயல்களுக்கு இப்புத்தகத்தின் வெளியீட்டாளரோ அல்லது எழுத்தாளரோ பொறுப்பல்ல. இந்தப் புத்தக விற்பனை மூலமாக பெறப்படும் நன்கொடை நிதி முழுவதும், நித்யானந்த தியானபீடத்தின் கருணை நோக்கச் செயல்களுக்குச் சேவையாகச் சென்றடைகிறது.

Content:

  • நித்யானந்த தியானபீடம்

Page 4

Content: பொருளடக்கம்

Content: சமய தீட்டைச் - ஓர் பின்னணி........................5

Content: நீங்கள் சிவபெருமானின் திருவடிவங்கள்................8

Content: மாற்ற முடியாத உண்மை........................10

Content: உண்மையை மறைக்கும் மாயத்திரை................12

Content: அனுபவ அனுபூதியாகும்........................13

Content: சமய தீட்டைச் தீர்ப்பியும்.......................16

Content: மனிதனை இறைவனாக மாற்றும் மெய்ஞ்ஞான விழ்ஞானி........................17

Content: டி.என்.ஏ-வை விழிப்பிக்க வைக்கும் மந்திரம்.......18

Content: குண்டலினி சக்தியை உயிர்த்து எழச்செய்யும் நேர்வழி........................22

Content: ஆலய வழிபாட்டின் முழுபலன் கிடைக்கும்........24

Content: அதிர்ஷ்டசாலியாகுங்கள்........................25

Content: விஷேச தீட்டசை........................26

Page 5

Content: 4

Page 6

Content: சமய தீட்சை - ஓர் பண்ணணி

Content: நாம் நம்பினாலும், நம்பாவிட்டாலும், ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாமல் விட்டாலும், புரிந்து கொண்டாலும், புரிந்து கொள்ளாமல் விட்டாலும் பிரபஞ்சத்தை இயக்கும் சக்தி என்று ஒன்று உள்ளது. பிரபஞ்ச சக்தி இருவக் கிருவக் கதிரவன் இருப்பது போல் எதிரும் புதிருமாக, அருவம் இருவும் இரணப்பும் கடந்தது. பக்தர்களின் பிரார்த்தனைக்கு இறங்கி, திருவுருவமும் தாங்குகிறது.

Content: பிரபஞ்ச சக்தியின் மூலப்பொருள், பரம்பொருள் சிவ பெருமானாய் திருவுருவம் தாங்கி வந்து சிவோஹம் என்னும் ஜீவன் முக்த நிலையை அனுபூதியாக அளித்து பக்தர்களின் பிரார்த்தனைகளை நிறைவேற்றியது.

Content: ஆகமம்

Content: சிவோஹம் என்னும் ஜீவன் முக்த நிலையை அடையவதற்கான வாழ்க்கை முறைகளையும், தீட்சை முறைகளையும் சிவபெருமான் உமாதேவியினுடைய வேண்டுகோளுக்கிணங்கி திருவாய் மலர்ந்தருளிய சாஸ்திரங்கள்தான் ஆகமங்கள். சிவபெருமானுடைய திருவாயிலிருந்து வெளிப்பட்டதாலும், தேவியினுடைய

Page 8

Content: திருவாய் வழி நமக்கு கிட்டியதாலும் சிவபக்தர்களுக்கு இது வாழ்க்கைமுறை என்பதாலும் இதற்கு ‘ஆகமம்’ என்று பெயர்.

Content: ஆன்மீக வாழ்க்கையின் முதல் படி

Content: தென்னாட்டில் உள்ள பல்லாயிரக்கணக்கான சிவாலயங்கள் உத்தர காமிக ஆகமத்தின் விதிப்படி பூஜைகளையும், ஹோமங்களையும், திருவிழாக்களையும் நடத்தி வருகின்றன. உத்தர காமிக ஆகமம் என்பது நேரடியாக சிவபெருமானே திருவாய் மலர்ந்தருளியது ஆகும். இதில் பெருமான் சதாசிவன் ஆன்மீக வாழ்க்கை வாழ்பவர்களுக்கென்று ஒருசில தீட்டசை முறைகளை விளக்குகிறார். சமய தீட்டசை, விசேஷ தீட்டசை, நிர்வாண தீட்டசை, ஆச்சார்ய அபிஷேகம் போன்ற மிகச் சக்தி வாய்ந்த தீட்டசைகளையும், தீட்டசை முறைகளையும் அருளியிருக்கிறார்.

Content: இதில் சமயதீட்டசை என்னும் இந்த சிவதீட்டசையை பற்றி உரைக்கும் பொழுது ஆன்மீக வாழ்க்கையின் முதல் படியாக இதைக்கிறார். இது சிவனடியார்கள், சிவ பக்தர்கள், இந்து மதத்தை, ஆன்மீக வாழ்க்கையை ஏற்று வாழ்பவர்களுக்கான, ஆன்மீக வாழ்க்கையை துவங்குவதற்கான முதற்படியாகும்.

Content: இந்த சிவதீட்டசையை எல்லா மதத்தவரும், எல்லா ஜாதியினரும், ஆண்கள், பெண்கள் மற்றும் எல்லா உயிரினங்களுக்கும் பொதுவாக உரைக்கிறார். இந்த தீட்டசை பெற்றுக்கொள்ளும் எல்லோருக்கும்

Page 9

Content: 2015 Sri Nithyananda Paramashivam. All Rights Reserved

Page 10

Content: ருத்ராக்ஷம், திருநீற்றுப்பபையும் இலவசமாக அளிக்கப்படும். இந்த ருத்ராக்ஷத்தை தெண்டைக் குழியில்படும்படி கட்டி மந்திர தீட்டசை வாங்கும்பொழுது இந்த ருத்ராக்ஷம் தொடர்ந்து மந்திரத்தை இயக்கும். மந்திரம் தன் சக்தியால் ருத்ராக்ஷத்தை அதிர வைக்கும். இந்த சுற்று தொடர்ந்து நடந்து கொண்டேபிருக்கும். இது சிவோஹம் என்ற அனுபூதி நிலையை - ஜீவன் முக்த நிலையை நாம் அடைவதற்கு துணை செய்யும்.

Content: இந்த சமய தீட்டசை பெறும் நீங்கள் எல்லோரும் சிவோஹ அனுபவத்தை பெற்று ஜீவன் முக்தர்களாக வாழ்ந்திட வாழ்த்துகிறோம்.

Content: -நித்யானந்தா பல்கலைக்கழக அச்சகம்

Page 11

Content: ஆழமான இந்த சில சத்தியங்களைப் புரிந்துக் கொள்ளுங்கள்.

Content: வாழ்க்கையில் நாம் புரிந்து கொண்டாலும், புரிந்துகொள்ளாமல் விட்டாலும் ஏற்றுக்கொண்டாலும், ஏற்றுக்கொள்ளாமல் விட்டாலும், விரும்பினாலும் விரும்பாமல்விட்டாலும் , நம்பினாலும், நம்பாதுபோனாலும் மாற்றவே முடியாத இறுதியான, அறுதியான உறுதியான சில சத்தியங்கள் இருக்கிறது.

Content: உங்கள் வீட்டின் ஜன்னலையோ வாசற்காலையோ எந்த திசை நோக்கி வேண்டுமானாலும் ஜைவத்துக் கொள்ளலாம். ஆனால் சூரியன் கிழக்கில்தான் உதிக்கும், மேற்கில்தான் மறையும். அதை ஒன்றும் செய்ய முடியாது. ‘இல்லையில்லை, எங்கள் ஊரில் உதிப்பதே இல்லை, மறைவதே இல்லை’ என்று சொன்னால், உங்கள் வீட்டின் ஜன்னல் - வாசல்காலின் திசை வேறாக இருக்குமே தவிர, சூரியன் உதிப்பதும் மறைவதில்லை. ஜன்னல் - வாசல்காலின் திசை கிழக்கு மேற்காக இருந்தால், சூரியன் உதிப்பதையும் மறைவதையும் பார்க்கலாம், மாறியிருந்தால் பார்க்காமல்

Page 13

Content: போகலாம். சூரியன் உதிப்பதையும் மறைவதையும் நீங்கள் பார்த்தாலும், பார்க்காமல் போனாலும், சூரியன் உதிக்கிறார் - மறைகிறார்.

Content: அதேபோன்று இந்த உடலிலும் மனதிலும் நீங்கள் வாழும்பொழுது, ஞானமடைவதற்கு முன்பும், ஞானமடைந்த பிறகும் நீங்கள் சிவபெருமானின் திருவடிவங்கள். சிவபெருமானின் சக்தியோடு ஒன்றானவர்கள். சிலபேருக்கு புரியும் சிலபேருக்கு புரியாது. ஆனால், இது சத்தியம்.

Content: சிலபேர் ஜன்னலையும் வாசற்காலையும் கிழக்கு மேற்காக வைத்து சூரியன் உதிக்கும்பொழுதும் பார்த்து ரசிக்கிறார்கள், மறையும்பொழுதும் பார்த்து ரசிக்கிறார்கள். சிலபேர் வடக்கு தெற்காக வைத்து

Page 14

Content: அதைப்பார்க்காமலேயே வாழ்ந்து முடிக்கிறார்கள். ஆனால் சூரியன் உதிப்பதும் மறைவதும் உண்மை.

Content: அதேபோன்று சிலபேர் வாழும்பொழுதே தியானத்தால், ‘சிவோஹம்’ எனும் அனுபூதியை வாழ்ந்து, சக்தியை வெளிப்படுத்தி, அதை மகிழ்ச்சியோடு ஆனந்தத்தோடு கொண்டாடுகிறார்கள். சிலபேர் கொண்டாடுவதில்லை. ஆனால் மாறாத உண்மை - நாம் எல்லோரும் ‘சிவம்’ எனும் சக்தியின் பாகமாகத்தான் இருக்கிறோம்.

Content: மாற்ற முடியாத உண்மை

Content: ஆகமத்தை சிவபெருமான் வாழ்வதற்கான வழியைச் சொல்லத் துவங்கிய உடனேயே, அவர் முதன் முதலாக சொல்லுகின்ற சத்தியம்... ‘உங்கள் எல்லோருக்குள்ளும் நானே வெளிப்பட்டு, என் மயமாகவே நீங்கள் எல்லோரும் இருக்கின்றீர்கள்.’

Content: ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள்... உங்கள் எல்லோருக்குள்ளும் ‘சிவோஹம்’ என்கிற அனுபூதியாக சிவபெருமான் இருக்கிறார்.

Content: சிவோஹம் என்றால் சிவ + அஹம். நான் என்று நீங்கள் எதை நினைக்கின்றீர்களோ, அது ‘சிவம்’. இந்த அனுபூதியாக உங்கள் எல்லோருக்குள்ளும் இருக்கின்றேன் என்று சிவபெருமான் சொல்கிறார்.

Content: சிவோஹத்தை தியானத்தில், சமாதி நிலையில்

Page 16

Content: உணர்ந்தவர்கள் அந்த சக்தியை வெளிப்படுத்துகிறார்கள். உணராதவர்கள் அதை வெளிப்படுத்தாமலேயே இறந்து போகிறார்கள். ஆனால் அவர் உள்ளே சிவோஹம் இருப்பது உண்மை. 'சிவோஹம்' எனும் அனுபூதியை வாழும்பொழுதே நீங்கள் அனுபவித்து வாழலாம், அனுபவிக்காமல்விட்டாலும் விடலாம், ஆனால் 'சிவோஹம்' உங்களுக்குள் இருப்பது உண்மை, இது மாற்ற முடியாத உண்மை.

Content: உண்மையை மறைக்கும் மாயத்திரை

Content: 'நீங்கள்தான் சிவன்' என்று சொன்ன உடனேயே பலருக்கும் வருகின்ற முதல் கேள்வி... 'என் மனைவியோ நான் சொல்வதை கேட்பதில்லை. நான் எப்படி சாமி சிவனாக முடியும்'

Content: நன்றாக தெரிந்துகொள்ளுங்கள்...நீங்கள் என்று உங்களைப்பற்றி நீங்கள் வைத்திருக்கின்றீர்களோ ஒரு கருத்து, அந்த கருத்துதான் நீங்கள் சிவம் என்பதை உணரவிடாமல் தடுக்கின்ற திரை. 'உடல்தான் நான், மனம்தான் நான்' என்று நீங்கள் உங்களைப்பற்றி வைத்திருக்கின்ற தவறான கருத்துதான் நீங்கள் சிவம் என்பதை உணரவிடாமல் தடுக்கின்ற திரை. 'உடல்தான் நான், மனம்தான் நான்' எனும் கருத்து நீங்கள் இல்லை என்பது மட்டுமல்லாமல், அந்த கருத்துதான் நிஜமான உங்களை நீங்கள் உணரமுடியாமல் தடுக்கின்ற இரும்புத்திரை.

Page 18

Content: நிஜமாகவே ‘நீங்கள்’ என்று நீங்கள் எதை கருதுகின்றீர்களோ, ‘நீங்கள்’ என்று நீங்கள் எதை உணர்கின்றீர்களோ, அது நீங்கள் இல்லை என்பது மட்டுமல்லாமல், ‘சிவோஹம்’ எனும் நிலையில் எப்பொழுதும் இருக்கின்ற உங்களை, அது உணரவிடாமல் தடுக்கின்ற மாயத்திரை அதுதான்.

Content: சிவோஹ அனுபவம் அனுபூதியாகும்

Content: இப்பொழுது பிரச்சினை என்னவென்றால், சிலருக்கு இந்த அளவிற்கு புரிந்துவிடும். ‘ஆமாம் சாமி. உண்மையில் பார்த்தீர்கள் என்றால் எங்களுக்கு இருக்கின்ற ஆத்மா, சிவம் வடிவானது. அது எல்லா சக்தியும், எல்லா ஞானமும், எல்லா அறிவும், எல்லா ஆற்றலும் உடையது. அது எனக்கு தெரிகிறது. ஆனால் அந்த அனுபூதியை அடைந்தால்தானே, அனுபவத்தை அடைந்தால்தானே சக்தியெல்லாம் வெளிப்படும். அதை அடையும்வரை நான் சாதாரண மனிதன், சவம்தானே. அதை அடைந்தால்தானே சிவம்.

Content: நீங்கள் என்ன சொல்கின்றீர்கள், ‘எனக்கு அந்த அனுபூதி வரட்டும், அதன்பிறகு சிவன் மாதிரி அந்த சக்திகளை வெளிப்படுத்தி உயர்ந்த வாழ்க்கையை வாழ்கிறேன். அந்த அனுபூதி என்ன சொல்கிறது என்றால், நீ சிவன்போன்று உயர்ந்த வாழ்க்கையை வாழ ஆரம்பி, அதன்பிறகு நானே உனக்குள்ளிருந்து வெளிப்பட்டு, சக்திகளை எல்லாம் பொங்கிப்பெருக வைக்கிறேன்.

Page 19

Content: 2015 Sri Nithyananda Paramashivam. All Rights Reserved

Page 20

Content: இது எவ்வாறு இருக்கிறது என்றால், மாமியாரும் மருமகளும் சண்டைப் போட்டு முடித்தபிறகு, அம்மா மகனிடம் என்ன சொல்கிறார் என்றால், ‘ஆமாம் சண்டைபோட்டோம்தான். என்னவாக இருந்தாலும், நான் வயதில் பெரியவள்தானே. உன் மனைவியை வந்து பேச்ச சொல்’ என்று. மனைவி என்ன சொல்கிறார், ‘என்னவாக இருந்தாலும் பெரிசுக்கு பொறுமை இருக்கவேண்டாமா?. முதிர்ச்சி இருக்க வேண்டாமா? அவர்கள்தானே சத்தம் போட்டார்கள். அவர்களையே வந்து என்னிடம் பேச்ச சொல்’.

Content: எல்லா மாமியார்-மருமகள் சண்டையிலும், மாமியார் என்ன சொல்கிறார், ‘என்ன இருந்தாலும் சின்னப் பொண்ணுக்கு பொறுமை இருக்கவேண்டாமா? பொறுப்பு இருக்க வேண்டாமா? மருமகளை வந்து முதலில் பேச்ச சொல், நான் பேசுகிறேன் என்கிறார். மருமகள் என்ன சொல்கிறார், மாமியாரை முதலில் வந்து பேச்ச சொல்லுங்கள். பிறகு நான் பேசுகிறேன் என்கிறார். இந்த இரண்டு பேருக்கும் நடுவில் நின்று மாட்டிக்கொண்டு முழிப்பது யார் என்றால்? ... மகன்-கணவன்.

Content: இவர் முதலில் பாரை பேச வைப்பது என்பது தெரியாமல், தான் பேசாமல் இருப்பார். அம்மா காலில் விழுந்து மனைவியிடம் பேச வைப்பதா? அல்லது மனைவி காலில் விழுந்து அம்மாவிடம் பேச வைப்பதா? என்று நடுவில் இருந்துகொண்டு விழிப்பார். இவர்கள் இருவருக்கும் நடுவில் மாட்டிக்கொள்ளும் இந்த மனுஷனின்நிலைதான் குருவின் நிலை.

Page 21

Content: 2015.Sri Nithyananda Paramashivam All Rights Reserved

Page 22

Content: நன்றாக தெரிந்துக்கொள்ளுங்கள், ஒருபக்கம் நீங்கள் என்ன சொல்கிறீர்கள், 'சிவோஹும் என்று நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான் சாமி. அந்த அனுபூதியை எனக்குள் வரச்சொல்லுங்கள். அதன்பிறகு சிவன்மாதிரி வாழ்கிறேன்' என்று. மறுபக்கம் அந்த அனுபூதி என்ன சொல்கிறது, 'பொறுப்பெடுத்து சிவன்போன்று வாழச்சொல். நான் அந்த அனுபூதியாக உள்ளிருந்து வெளிப்படுகிறேன்' என்று.

Content: தெரிந்துக்கொள்ளுங்கள்...மாமியார்-மருமகள் சண்டையில் நடுவில் மாட்டிக்கொண்டட மனுஷன் விழிப்பதுபோன்று நான் இருக்கப்போவதில்லை. நான் அவதார புருஷன்.

Content: எனக்குள் இருக்கும் அனுபூதியை பொங்கச் செய்து, உங்களுக்குள் இருக்கும் குண்டலினி சக்தியை விழிப்பிக்கச் செய்வேன். இந்த முதல் உத்வேகத்தினை

Content: என்னைப்போன்று உயர்ந்த வாழ்க்கையை வாழ ஆரம்பி, அதன்பிறகு நானே உனக்குள்ளிருந்து வெளிப்பட்டு, சக்திகளை எல்லாம் பொங்கிப்பெருக வைக்கிறேன். - சிவபெருமான்

Page 23

Content: 2015 Sri Nithyananda Paramashivam. All Rights Reserved

Page 24

Content: அளித்து சிவோஹம் எனும் அனுபூதியால் வருகின்ற உயர்ந்த தன்மையை உங்களுக்குள் உருவாக்கினேன் என்றால், இந்த உயர்ந்த தன்மையான சிவோஹத்தின் சக்தி வெளிப்பாடு உங்களுக்கு வரும். சக்தி வெளிப்பாடு வந்ததும், மேலும் தன்மை பொங்கும்.

Content: மேலும் தன்மை பொங்கியதும், மேலும் சக்தி வெளிப்படும். மேலும் தன்மை பொங்கும், மேலும் சக்தி வெளிப்படும். இது இவ்வாறாக நிகழ்ந்து சிவோஹத்தன்மை மலர்ந்துவிடும். இது மலர்வதற்காக நான் உங்களுக்குத் தரப்போகின்ற முதல் உத்வேகம்தான் குண்டலினி விழிப்பு. குண்டலினி விழிப்பு நிகழ்வுக்காக தரப்படுகின்ற தீட்சைய்தான் சமய தீட்சை.

Content: சமய தீட்சை என்பதன் தாத்பரியத்தை புரிந்துகொள்ளுங்கள்.

Content: சமயம்= ச+மயம்.

Content: மயம் என்பது ‘நான், எனது’ என்கின்ற அகங்காரம். ‘மயம்’ - இதை இறைமயமாக மாற்றுவதுதான் சமயம். ‘நான், எனது’ என்ற வலி வேதனைகளின் அடிச்சுவடான மமகாரத்தை இறைவடிவமாக மாற்றுவது, அகத்தை சிவோஹமாக மாற்றுவது சமயம். மனிதனை இறைவனாக மாற்றும் அறிவியல் சமயம்.

Page 25

Content: 2015 Sri Nithyananda Paramashivam. All Rights Reserved

Page 26

Content: மனிதனை இறைவனாக மாற்றும் மெய்ஞான வழ்நூல்

Content: ஆழ்ந்து கேளுங்கள்...

Content: அப்பா-மகன் உறவில்...

Content: அப்பா என்ன சொல்கிறார், ‘நீ ஏதாவது வியாபாரத்தை செய்து உன் திறமையை நிரூபி. என் சொத்து முழுவதையும் உனக்கு எழுதி வைக்கின்றேன். என் வியாபாரத்தை உன் கையில் தருகிறேன்.’

Content: மகன் என்ன சொல்கிறார், ‘நீ எதையாவது கொஞ்சமாவது கொடு. அதை வைத்துதான் நான்

Content: 17

Page 27

Content: 2015 Sri Nithyananda Paramashivam. All Rights Reserved

Page 28

Content: வியாபாரத்தை நடத்தி என் திறமையை நிரூபிப்பேன். இது முடிவிற்கு வராமல் தொடரும்போது, குருவாக இருப்பவர் நடுவில் வந்து, ‘சரிப்பா, உன் அப்பா கொடுக்கவில்லை என்றாலும் பரவாயில்லை...முதல் காசோலையை நான் என்னுடையதிலிருந்து தருகிறேன். இதை வைத்து நிரூபி. நீ நிரூபிக்கும்பொழுது உன் அப்பா தரத்துவார். அப்பொழுது நீ இன்னும் மேலும் நிரூபிப்பாய். இதுபோன்று வளர்ந்து வளர்ந்து இறுதியில் மொத்தமும் உனக்கே வந்து சேரும்.’

Content: இதில், நீங்கள்தான் மகன். சிவன்தான் அப்பா.

Content: அவர், ‘நீ நிரூபி’ என்கிறார். நீங்களோ, ‘தந்தால் நிரூபிக்கிறேன்’ என்கிறீர்கள். உங்கள் இருவருக்கும் நடுவில் இருக்கும் குரு, ‘சரிப்பா. அவர் தரும் போது தரட்டும். முதலில் நான் தருகிறேன். இந்த சக்தியை வைத்து உன்னை நிரூபி. நீ பொறுப்பெடுத்து எழுந்து நில். அதன்பின், தானாகவே அவர் அனைத்தையும் தந்துவிடுவார்’ என்று உங்களுக்கு சொல்லி சாத்தியங்கள் அளித்து உத்வேகம் அளிப்பார். குருவே, உங்களுக்கு இந்த முதல் உத்வேகத்தை தருகிறார். உங்களுக்கு முதல் உத்வேகத்தை அளிக்க வந்தவரே குருநாதர்.

Content: டி.என்.ஏ வை விழிப்பிக்க வைக்கும் மந்திரம்

Content: குரு, உங்களுக்கு முதல் உத்வேகத்தை அளித்து, குண்டலினி சக்தியை விழிப்பணையச் செய்வார்.

Page 29

Content: 2015 Sri Nithyananda Paramashivam. All Rights Reserved

Page 30

Content: செய்து, உங்களுடைய தெய்விக சக்திகளை வெளிப்படுத்துவதற்கான உரிமைகளை தருவார். தீட்சை அளித்து, உங்களுடைய உரிமைகளை பெறச் செய்வார். அந்த தீட்சையான சமய தீட்சை. இந்த சமய தீட்சையில், உங்களுக்கு ஒரு மந்திரம் அளிக்கப்படும்.

Content: எம்பெருமானே, சதாசிவனே, காமிக ஆகமத்தில்-சோமசம்பு பத்ததியில் எவ்வாறு முறைப்படி விளக்குகின்றாரோ, அதே முறைப்படி பூஜையும், ஹோமங்களும் செய்து, அதே முறைப்படி அவரே தந்திருக்கின்ற மூலமந்திரம் உங்களுக்கு அளிக்கப்படும்.

Page 31

Content: 2015 Sri Nithyananda Paramashivam All Rights Reserved

Page 33

Content: சமய தீட்சையின்போது பாரம்பரிய முறையாக உங்களுக்கு ஒரு ருத்ராக்ஷமும் திருநீற்றுப்பையும் வழங்கப்படும். ருத்ராக்ஷம் தொண்டைக்குழியின்மீது இருக்கும். தொண்டைக்குள் இந்த மந்திரம் ஜபிக்கப்பட வேண்டும். இதனால் ருத்ராக்ஷம் சக்தி பெறும்.

Content: மந்திரம் ஓதுவது நிற்கும்பொழுது ருத்ராக்ஷத்தின் சக்தியால் மீண்டும் மந்திரம் ஜபிக்க நினைவுப்படுத்தப்படும்.

Content: தூக்கத்தில், மயக்கத்தில் மந்திரத்தை ஜபிக்கவேண்டும் என்று உங்களுக்கு தெரியாத நேரங்களில்கூட, இந்த ருத்ராக்ஷம் தன் சக்தியால் மந்திரத்தை ஜபிக்க வைக்கும். 24 மணி நேரமும் மந்திரம் ஓடிக்கொண்டே இருக்கும். அதை அஜபாஜபம் என்று சொல்வோம். இவ்வாறு மந்திரம் ஓடிக்கொண்டே இருந்தால், சிவத்தன்மை - சிவனுடைய ஆனந்தமும், அறிவும், சக்தியும் ஞானமும் உங்கள் உயிர்நிலைவில் பொங்கிப் பெருகிக்கொண்டே இருக்கும்.

Content: இதன் சக்தி உங்கள் குலத்தின், கோத்திரத்தின் டி.என்.ஏ -வை விழிப்பிக்க வைக்கும். நீங்கள் எந்த குலத்தில் பிறந்தீர்களோ, அந்த குலத்தின் தனித்துவமான டி.என்.ஏ விழிப்படையும்.

Content: இதன் பலனாக அறிவும், ஞானமும், தெளிவும், முழுமைத்தன்மையும், பூரணத்துவமும் உங்களுக்குள் வெளிப்படத்துவங்கும்.

Page 34

Content: 2015 Sri Nithyananda Paramashivam. All Rights Reserved

Page 35

Content: குண்டலினி சக்தியை உயிர்த்து எழச் செய்யும் நேர்வழி

Content: உங்களை உடலில்...

Content: உங்கள் தாயின் தசை நினைவு (Muscle Memory), உங்களுடைய தசை நினைவாக இருக்கும்.

Content: உங்கள் தந்தையின் உயிர் நினைவு (Bio-Memory), உங்களுடைய உயிர் நினைவாக இருக்கும்.

Content: தீட்சையின் பலனாக...

Content: உங்கள் குருவின் ஜீவசக்தி (Bio-Energy), உங்களுடைய ஜீவ சக்தியாக-அனுபூதியாக பொங்கும்.

Content: உங்களுக்குள் சிவோஹம் எனும் அனுபூதி நிலையாகி, ஆனந்தம் வெளிப்பட்டு, அறிவும் ஆற்றலும் பெருகி, குண்டலினி சக்தி பொங்குவதற்காக அழிக்கப்படும் தீட்சையே சமய தீட்சை.

Content: ஞானமடையாதவரிடமிருந்து தீட்சை பெறும்பொழுது, தீட்சைக்குப்பிறகு, மந்திரம் ஜபிக்க உங்கள் முயற்சியைத் தொடர்ந்து செய்துகொண்டே இருக்கவேண்டும், மந்திரமே உங்கள் மயமாக மாறும்வரை நீங்கள் மந்திர ஜபம் செய்யவேண்டும்.

Content: ஆனால், வாழும் அவதார புருஷரிடம் தீட்சை பெறும்பொழுது, அவர் இம்மந்திரத்தை உங்கள் ஜீவ சக்தியில் பதிய வைக்கிறார். அதனால் நீங்கள் என்ன வேலை செய்துகொண்டிருந்தாலும், மந்திரம்

Page 36

Content: 2015 Sri Nithyananda Paramashivam. All Rights Reserved

Page 37

Content: தொண்டைக்குழியில் ஓடிக்கொண்டே இருக்கும், இயங்கிக்கொண்டே இருக்கும்.

Content: நீங்கள் சிவமாக மாறும் வரை இந்த ருத்ராக்ஷத்னை அணிந்திருங்கள். உங்களுக்கு தரப்படும் ருத்ராக்ஷத்தை அணிந்து, அதனோடு சக்தியூட்டி தரப்படும் திருநீற்றுப்பைையையும் எப்பொழுதும் உங்களோடு வைத்திருங்கள்.

Content: திருநீறு சிவபெருமானின் அஸ்திர தேவதை.

Content: நீங்கள் என்ன பிரார்த்தனை செய்து நீங்கள் திருநீற்றை அளித்தாலும், அது சென்று அவ்வேலையை செய்து முடித்துவிட்டு திரும்பி வரும்.

Content: இந்த தீட்சையை பொறுத்த வரை நீங்கள் தீட்சையின்படி வாழ ஆரம்பித்தால்போதும், மிகப்பெரிய சக்திகளை உங்களுக்குள்இருந்து வெளிப்படுத்த துவங்குவீர்கள். சமய தீட்சை குண்டலினி சக்தியை உங்களுக்குள் உயிர்த்து எழ வைக்கும்.

Content: உங்களுக்குள் சிவோஹம் என்னும் அனுபூதி நிலையாகி, ஆனந்தம் வெளிப்பட்டு, அறிவும் ஆற்றலும் பெருகி, குண்டலினி சக்தி பொங்குவதற்காக அளிக்கப்படும் தீட்சையே சமய தீட்சை.

Page 38

Content: 2015 Sri Nithyananda Paramashivam. All Rights Reserved

Page 39

Content: ஆலய வழிபாட்டின் மழப்பலன் கிடைக்கும்

Content: ஆகமத்தில், சிவபெருமான் சமய தீட்டையை அடிப்படை தீட்டையாக தருகிறார். எம்பெருமான் ஆகமத்தில் சொல்கிறார், சமய தீட்டை எடுத்தப்பிறகு ஆலயத்திற்கு சென்றால்தான் அதற்குரிய அரிய பலன் உண்டாகும்.

Content: எம்பெருமான் ஆலய வழிபாட்டிற்கான அடிப்படை தீட்டையாக சமய தீட்டையை சொல்கிறார். பிரதோஷ காலங்களில் நந்தியை சென்று வழிபடுவது எல்லாம்கூட சமய தீட்டை பெற்றபிறகுதான் பலன் தரும். உண்மையில் தீட்டை எடுத்தால்தான் ஆலய வழிபாட்டிற்குரிய பலன் உண்டு. இதை ஆகமத்தில் சிவபெருமான் மிகத்தெளிவாக சொல்கிறார். சமய தீட்டையால் ஆலய வழிப்பாட்டின் முழுப்பலனையும் பெறுங்கள்.

Page 40

Content: 2015 Sri Nithyananda Paramashivam. All Rights Reserved

Page 41

Content: பலமுறை பல்வேறு சத்சங்கங்களில் சொல்லியிருக்கிறேன்... சிலபேருக்கு சிவபெருமானிடமிருந்து சொத்து கிடைக்கும், நிலம் கிடைக்கும், பணம் கிடைக்கும், சுகம் கிடைக்கும், வாகனம் கிடைக்கும். சிவபெருமானின் வண்டி, வாகனம், வசதி கிடைத்தவர் எல்லோரும் அதிர்ஷ்ட சாலி கிடையாது. அவரையே குருவாய் பெற்றவர்தான் அதிர்ஷ்டசாலி.

Content: 'அவன் அருளால்தான் அவன் தாள் வணங்கி' என்று சொல்வோம். எம்பெருமான் சொன்னபடி, அவர் விதித்த விதிப்படி, அவர் கொடுத்த சத்தியங்கள் சார்ந்து, அளிக்கப்படும் சிவதீட்சை பெற்று வாழ்வகள், மயத்தை சிவோஹமாக்குங்கள்.

Content: எத்தனை பேருக்கு முடியுமோ, அத்தனை பேருக்கும் சொல்லி சமய தீட்சை பெற வையுங்கள். சிவோஹம் என்ற ஜீவன்முக்த விஞ்ஞானத்தை, ஜீவன்முக்த வாழ்க்கை முறையை மக்களெல்லாம் வாழ வையுங்கள். வேதநெறி தழைத்தோங்கும்.

Content: தத்துவத்தை தெரிந்து, சத்தியத்தை உணர்ந்து கோயிலை சுற்றி வந்தால்தான் ஞானம் கிடைக்கும். ஆண்டவன்

Page 42

Content: 2015 Sri Nithyananda Paramashivam. All Rights Reserved

Page 43

Content: இருப்பதை உணர்ந்து செய்தால்தான் அது ஆலய வழிபாடாகும். தத்துவம் தெரிந்து செய்தால்தான் எல்லா செயலும் இறைவனை நோக்கி நம்மை அழைத்துச் செல்லும். தத்துவம் புரியாமல் செய்வது, அறியாமல் செய்வது இறைவனிடம் சேர்ப்பதில்லை.

Content: சிவதீட்சை பெற்று, தத்துவத்தை அறிந்து சிவோஹதத்தை பெறும் அதிர்ஷ்டசாலியாகுங்கள்.

Content: விஷேச தீட்சை

Content: சமய தீட்சை எதுவோ அதுவே முழித்தவர்களுக்கோ அடுத்த நிலை தீட்சை - விஷேச தீட்சை. நான்கு நாள் தியான முகாமாக நடைபெற்ற இந்த தீட்சை வழங்கப்படும். இதில் நீங்கள் தினமும் பூஜை செய்வதற்கு ‘ஆத்மலிங்கம்’ பிரதிஷ்டை செய்து தரப்படும்.

Content: ஆத்மலிங்கம் ஸ்ரீபடிகத்தால் ஆனது. ஸ்ரீ சக்கரம் அதில் வரையப்பட்டிருக்கும். பெண்களும் இந்த தீட்சை பெற்று எல்லா நாட்களிலும் பூஜை செய்யலாம்.

Content: மாதவிலக்கு காலங்களில்கூட பெண்கள் ஆத்மலிங்கப் பூஜை செய்யலாம். சிவபெருமான் சொல்கிறார், ‘நான் அனைவரின் இடத்திலும் இருக்கிறேன். மாதவிலக்கு காலங்களில் மட்டும் நான் என்ன பெண்களின் இடத்திலிருந்து வெளியிலா வரமுடியும் ?’ என்று மிகத்தெளிவாக ஆகமத்தில் சொல்லியிருக்கிறார்.

Page 45

Content: தன்னை வழிபடுவதற்கு சிவபெருமான் யாருக்கும் எந்த தடைகளையும் தரவில்லை.

Content: ஆண், பெண், திருநங்கை, வாழும் எல்லா ஜீவராசிகள், உயிரினங்களுக்கும் தன்னை வழிபடும் உரிமையுண்டு என்று சிவபெருமான் சொல்லியிருக்கிறார்.

Content: எம்பெருமான் ஈசன் சொல்லியபடி வாழ்ந்திடுவோம். அனைவரையும் வாழச் செய்வோம்.

Page 46

Content: 2015 Sri Nithyananda Paramashivam All Rights Reserved

Content: eiham2018

Page 47

Content: வேத நெறி தழைத்தோங்குக மிகு சைவ துறை விளங்குக பூதப்பரம்பரை பொழியட்டும் சிவபூதங்களாக வாழ்கின்ற மக்கள் பரம்பரை பொங்கி பெருகிக்கொண்டே செல்லட்டும்...சிவமாகட்டும்.

Content: ஆனந்தமாக இருங்கள்.

Content:

  • பரமஹம்ஸ நித்யானந்தர்

Content: சமய தீட்சை

Content: ஒருநாள் தியான முகாம் அனுமதி இலவசம் அனைவரும் வருக

Content: இடம்: நித்யானந்த தியானபீடம், நித்யானந்தபுரி, பிடதி, மைசூர் ரோடு, பெங்களூரு, கர்நாடகா-562109

Content: 72 0000 3311 & 72 0000 3322

Content: www.nithyananda.org

Page 48

Content: 2015 Sri Nithyananda Paramashivam All Rights Reserved

Page 49

Content: சமய தீட்சை பெற்றவர்கள் செய்ய வேண்டியவை:

Content:

  1. எல்லா நேரமும் ருத்ராக்ஷமும் திருநீரும் அணிய வேண்டும்.

Content: 2. எல்லா நேரமும் தொண்டைக் குழியில் இருக்கும் ருத்ராக்ஷம் அசையும் வகையில் உள்ளுக்குள் தீட்சையான 'மூல மந்திரத்தை' அஜபாஜபமாக ஜபித்துக் கொண்டிருக்க வேண்டும்.

Content: சமய தீட்சை பெற்றவர்கள் செய்யக்கூடாதவை:

Content:

  1. உலகத்திற்கு கர்த்தரான சிவபெருமானை நிந்திக்க கூடாது.

Content: 2. அவரால் கூறப்பட்ட சாஸ்திரங்கள், வேதம் மற்றும் ஆகமங்களை நிந்திக்க கூடாது.

Content: 3. குரு மற்றும் இதர சாதகர்களை நிந்திக்க கூடாது.

Content: 4. சிவபெருமானுக்கு சாற்றப்பட்ட புஷ்பத்தை தாண்டக் கூடாது.

Content: 5. சண்டிகேஸ்வருக்கு சாற்றப்பட்ட புஷ்பத்தை தாண்டக் கூடாது.

Content: 6. சண்டிகேஸ்வருக்கு நைவேத்யம் செய்யப்பட்டவையை உண்ணக்கூடாது.

Page 50

Content: நான் அனைவரின் இதயத்திலும் இருக்கிறேன்.

Content:

  • சிவபெருமான் ஆகமத்தில் அருளியது

Content: சிவதீட்சை எல்லா மதத்தவருக்கும், எல்லா ஜாதியினருக்கும், ஆண்கள், பெண்கள், திருநங்கை மற்றும் எல்லா உயிரினங்களுக்கும் பொதுவானது.

Content: நித்யானந்தா பல்கலைக்கழக அச்சகம்

Content: ISBN: 979-8-88572-850-8