Books / isbn 979-8-88572-963-5

1. isbn 979-8-88572-963-5

Page 1

Content: ஆதி சைவம்

Content:

  • அறிமுகம்

Content: பகவான் நித்யானந்த பரமசிவம்

Content: இறையனார் தாம் அருளிய சுத்தாத்தவைத

Content: சத்தியங்களை இறைமொழியாம் தமிழில் மீண்டும்

Content: உரைக்கின்றார்.

Page 2

Content: இந்தப் புத்தகத்தில் விளக்கப்பட்டிருக்கும் அல்லது பரிந்துரைக்கப்பட்டிருக்கும் நூட்பங்களை பரமஹம்ஸ நித்யானந்தரால் பயிற்சியளிக்கப்பட்டு, தீட்சையளிக்கப்பட்ட தகுந்த ஆசிரியர்களின் நேரடியான மேற்பார்வையின் கீழ் மட்டுமே செய்ய வேண்டும். மேலும், இந்தக் நூட்பங்கள் உங்கள் உடல் நலத்திற்கு ஏற்றதுதானா என்பதை உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசித்த பிறகே பயிற்சி செய்யுங்கள். இந்த நூட்பங்கள், உங்கள் மருத்துவ கவனிப்பிற்கோ, மருத்துவ பரிசோதனைகளுக்கோ, மருத்துவ சிகிச்சைகளுக்கோ மாற்று அல்ல. இதில் விளக்கப்பட்டிருக்கும் நூட்பங்களை பயிற்சி செய்யும் ஒருவர், அவரது குடும்ப டாக்டராலோ அல்லது பரமஹம்ஸ நித்யானந்தரால் பயிற்சி அளிக்கப்பட்டு, தீட்சை பெற்ற ஆசிரியராலோ பரிந்துரைக்கப்பட்ட பிறகு மட்டுமே அவற்றை பயிற்சி செய்ய வேண்டும். இவ்வாறு பயிற்சியை பெறாது, நீங்களாகவே தீர்மானித்து செய்யும் பயிற்சிகளுக்கும், அதன் விளைவுகளுக்கும் நித்யானந்த பீடம் பொறுப்பாகாது.

Content: புத்தக வெளியீடு: நித்யானந்தா ஹிந்து பல்கலைகழகம்

Content: பக்கங்கள்: 31

Content: காப்புரிமை copy right © 2019. All copy right reserved.

Content: முதல் பதிப்பு: September 2019 -சுத்தாத்வைதத்தை வெளிப்படுத்தும் வருடம்

Content: Ebook ISBN : 979-8-88572-963-5

Content: இந்தப் புத்தகத்தின் எந்த ஒரு தகவலையும் எந்திர தட்டச்சு செய்வதன் மூலமாகவோ, படிம் பிடிப்பதன் மூலமாகவோ, பிரித எடுக்கப்படுவோ அல்லது தரவப்பெறும் முறையில் சேமித்து வைக்கப்படோ அல்லது அதனை வேறொரு கணினிக்கு அனுப்பப்போ அல்லது தனிப்பட்ட மற்றும் பொதுவான பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்தவோ கூடாது. தியானபீடத்திலிருந்து எழுத்துப்பூர்வமான அனுமதியின்றி எந்தவிதத்திலும் இந்தப் புத்தகத்தின் பிரதியை உற்பத்தி செய்தல் கூடாது. இந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் எந்த ஒரு தகவலையும் நீங்கள் உபயோகிக்கக்கூடிய நிகழ்வில் உங்களது செயல்களுக்கு இப்புத்தகத்தின் வெளியீட்டாளரோ அல்லது எழுத்தாளரோ பொறுப்பல்ல. இந்தப் புத்தக விற்பனை மூலமாகப் பெறப்படும் நன்கொடை, நிதி முழுவதும் நித்யானந்த தியான பீடத்தின் கருணை நோக்கச் செயல்களுக்குச் சேவையாகச் சென்றடை கிறது.

Page 3

Content: ஆதி சைவம் - அறிமுகம்

Content: பகவான் நித்யானந்த பரமசிவம்

Content: இறையனார் தாம் அருளிய சுத்தாத்வைத சத்தியங்களை இறைமொழியாம் தமிழில் மீண்டும் உரைக்கின்றார்.

Content: நித்யானந்த ஹ்ரிந்து பல்கலைகழகம்

Page 4

Content: All Rights Reserved

Page 5

Content: உங்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன்.

Content: ஆதி சைவம்...

Content: ஆதி சைவத்தை அறிமுகப்படுத்த முயற்சி செய்வது, ஆண்டவனையே, சிவனையே அறிமுகப்படுத்த முயற்சிப்பதற்கு சமம். சாத்தியம் இல்லாதது என்பது மட்டும் அல்லாது, வாழ்ந்து மட்டுமே பார்த்து, அனுபவித்து மட்டுமே பார்க்கூடியது என்கின்ற தகுதி உடையது ஆதி சைவம்.

Content: ஆண்டவனை அறிமுகப்படுத்த இயலாது, வாழ்ந்து மட்டும் தான் பார்க்க இயலும்.

Content: ஆதி சைவத்தையும் அறிமுகப்படுத்த இயலாது, வாழ்ந்துதான் பார்க்க இயலும். அறிமுகப்படுத்த இயலாது என்கின்ற அறிமுகத்தை வேண்டுமானால் அளிக்க இயலும்.

Content: ஆதி சைவம்... பிரபஞ்சத்தில், இந்த பேர் அருள் வடிவான ஞானப்பிரபஞ்சத்தில்... என்றென்றும் விரிவடந்து கொண்டே சென்று கொண்டிருக்கும்...

Page 6

Content: 'கடவுள் துகள்' என்கின்ற நிலையில் இருந்து, 'கடவுள்' நிலையை உணர்வது, கடவுள் தன்மையை தனக்குள்ளிருந்து வெளிப்படுத்துவது, கடவுள் நிலையிலேயே இருப்பு கொள்வது என்கின்ற மிகப்பெரிய வழியின் 'அறிவியல்', அதை அடைவதற்கான வாழ்வதற்கான அறிவியல் - ஆதி சைவம்.

Content: மரணம் இலாத சிரஞ்சீவியான, நிரந்தரமான இந்தப் பிரபஞ்சத்தில் 'உயிர்' தோன்றியபொழுது, அது எவ்வாறு தன் வாழ்க்கையை மேம்படுத்தி, பிரபஞ்சத்தின் எல்லா சக்திகளையும் தன் உள்ளிருந்து வெளிப்படுத்தி, 'கடவுள்துகள்' ஆனகின்ற நிலையில் இருந்து கடவுளாக மாறுவது எப்படி, தன்னுடைய இருப்பு நிலையான பிரபஞ்சத்தின் வடிவமாக அகண்ட சச்சிதானந்த பரிபூரண நித்யானந்த நிலையில் எப்படி தன்னுடைய இருப்பை நிலைநிறுத்திக் கொள்வது என்கின்ற அறிவியல், வாழ்வியல்-ஆதிசைவம்.

Content: இப்போது நான் கொடுத்த definition... பள்ளியிலே... ஒரு பக்க கட்டுரை வரைக என்று ஒரு கேள்வியைக் கேட்டு, பத்து மதிப்பெண்களுக்கு அந்தக் கேள்விக்கு நிர்ணயித்து, ஒரு பக்க கட்டுரையை வரையச் சொன்னால், ஒரே ஒரு வரியில் நீங்கள் விளக்கம் கொடுக்கின்ற மாதிரி, அறிமுகப்படுத்த முடியாத ஆதிசைவத்தை சில வரிகளில் சொல்ல நான் செய்த முயற்சி தான் இது.

Content: உயிர் பிரபஞ்சத்தில் மலர்ந்த உடன், 'கடவுள் துகள்' என்கின்ற நிலையில் இருந்து, 'கடவுள்' நிலையை உணர்வது, கடவுள் தன்மையை தனக்குள்ளிருந்து வெளிப்படுத்துவது, கடவுள் நிலையிலேயே இருப்பு கொள்வது என்கின்ற மிகப்பெரிய வழியின் 'அறிவியல்', அதை அடைவதற்கான

Page 7

Content: வாழ்வதற்கான அறிவியல் - ஆதி சைவம்.

Content: ஆதிசைவத்தின் வரலாற்றை வைத்தோ,

Content: ஆதிசைவத்தின் நிலைகொண்ட புவியியல் சூழல்கள் இவைகளைச் சார்ந்தோ...

Content: ஆதிசைவத்தை சுருக்குவது சாத்தியமே இல்லாதது.

Content: எனென்றால், வரலாறு...

Content: துவக்கும் முடிவும் இருக்கின்ற ஒன்றுக்குத்தான் இருக்க முடியும். ஓர் இடத்தில் இருந்து, இன்னோர் இடத்தில் இல்லாத ஒன்றைத்தான் புவியல் நீதியாக நாம் அடையாளம் காட்ட முடியும்.

Content: அந்தம் இல்லாத ஆதி, ஒன்றில் இருந்து இரண்டாக மாற முடியாத அளவுடையது.

Content: அந்தம் இல்லாத ஆதி உடையது, ஒன்று இரண்டாக மாற முடியாத அளவுடையது-ஆதி சைவம். அதனால், வரலாற்றாலோ, வரலாறு சார்ந்தோ, புவியியல் சார்ந்தோ ஆதி சைவத்தை விளக்குவது சாத்தியமில்லாதது.

Content: ஒரு காலத்தில் தோன்றி,

Content: ஒரு காலத்தில் இல்லாமல் போவது கிடையாது ஆதிசைவம்.

Content: ஒரு இடத்தில் இருந்து,

Content: ஓர் இடத்தில் கடைபிடிக்கப்படாமல் இல்லாமல் போவது கிடையாது ஆதிசைவம்.

Content: புவியுர்ப்பு விசை எப்படி புவி முழுக்க இருக்கின்றதோ,

Content: பிரபஞ்சம் முழுமையும் சில குணங்களால் சத்தியங்களால் நிறைந்து, அந்த சத்தியங்களை சார்ந்து

Page 9

Content: இயங்குகிறது. அந்த சத்தியங்கள்தான் ஆதிசைவம்.

Content: புவியார்ப்பு விசை ஓர் இடத்தில் இருக்கு - ஒரு இடத்தில் இல்லை என்று சொல்ல முடியுமா? முடியாது.

Content: எப்படி புவி முழுவதும் புவியார்ப்பு விசை நிறைந்திருக்கின்றதோ, அதுபோல பிரபஞ்சம் முழுவதும் சில விதிகள், சத்தியங்கள், சாத்தியங்கள், கருத்துக்கள், உண்மைகள் நிறைந்து இந்த புவியே இயங்குகிறது. இந்த பிரபஞ்சமே இயங்குகிறது. அந்த சத்தியங்கள், அந்த பிரபஞ்சமே குறையிலாது, முறை தவறாது வெளிப்படுத்திய ‘வாழ்வியல்முறை’தான் ஆதி சைவம்.

Content: பிரபஞ்சப் பேருள், பிரபஞ்சப் பரம்பொருள் ‘வடிவம்’ - ‘வடிவமின்மை’ என்னும் நிலைகளைக் கடந்து தன்னுடைய சாந்நித்ய இருப்பின் மாத்திரத் தாலேயே வெளிப்படுத்திய சத்தியங்களைத் தான் வேதங்கள் என்று சொல்கிறோம். அவைகளின் சாரங்கள், சாரம் ‘உபநிடதங்கள்’.

Content: பிரபஞ்சப் பேருள், அகண்ட பரிபூரண சச்சிதானந்த பரம்பொருள்... தன்னுடைய நித்யானந்த நிலையில் இருந்தவரே, தன் நிலையில் இருந்தவரே தானே தன் மயமாய் தனக்குள்ளேயே ரசித்துக்கொண்டிருக்கும், தனக்குள்ளேயே அதை வாழ்ந்துகொண்டிருக்கும், தனக்குள்ளேயே தன்னையே ருசித்துக்கொண்டிருக்கும் அந்த தன்மையானந்த நிலையில் வெளிப்படுத்தப்பட்ட, உணர்த்தப்பட்ட சத்தியங்கள்தான் வேதங்கள்.

Page 10

Content: அதன் சாரம் உபநிடதங்கள்.

Content: அதே பிரபஞ்சப் பேரருள், அகண்ட பரிபூரண சச்சிதானந்த பரம்பொருள்... தன்னுடைய நித்யானந்த நிலையிலேயேதான் இருப்பது மட்டுமல்லாது, உயிர்கள் எல்லாம் உய்வதைய உத்தம நிலை அடைய தன் நிலைதனை உயிர்கள் எல்லாம் உணர்ந்திட சதாசிவனாய் திருமேனி கொண்டு உலகத்திற்கு வெளிப்படுத்திய ஒவ்வொருவரும் பிரபஞ்ச பேரருள் நிலையில் இருந்து சுத்த சிவாத்வைத சத்தியத்தை வாழ்ந்திட, சுத்த சிவாத்வைத சத்தியத்தில் நிலைபெற்று பொங்கி மலர்ந்திட, பெருமானே சத்தியங்கலை வெளிப்படுத்தியதுதான் ‘ஆகமங்கள்’.

Content: தன் இருப்பினாலேயோ, சாந்நித்யத்தாலேயோ, தன்னுடைய இருப்பின் சாந்நித்யதாலேயோ, சாந்நித்ய இருப்பின் பலத்தினாலேயோ பொங்கிய சத்தியங்கள் - ‘வேதங்களும் உபநிஷதங்களும்’.

Content: திருமேனி தாங்கி சதாசிவனாய் உலகிற்காக அவர் வெளிப்படுத்திய சத்தியங்கள், உயிர்கள் எல்லாம் உய்வதற்காக அவரே வெளிப்படுத்திய சத்தியங்கள் ‘ஆகமங்கள்’.

Content: வேதங்களை சார்ந்து, உபநிடதங்களை சார்ந்து, பெருமானே வெளிப்படுத்திய ஆகமங்களைச் சார்ந்து, உலகமெல்லாம் உய்வதற்கான ஜீவன்முக்த விழுப்புணர்வமாக, வாழ்வியல் நெறியாக மலர்ந்ததுதான் ஆதிசைவம்.

Page 11

Content: ஆதிசைவம் - ஆதிமதம் மட்டும் அல்லாது, மதம் என்கின்ற கருத்து உருவாவதற்கு முன்பாகவே மலர்ந்த ஒரு ஆன்மீக வாழ்வியல் நெறி.

Content: வேறு வேறு நாடுகளில் இடங்களில் இருக்கின்ற மக்கள் கல்லாலே ஆயுதங்கள் செய்து ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டு காட்டு மிராண்டிகளாக வாழந்திருந்த காலத்தில், நாங்கள் கல்லாலயம் செய்து, ஜீவன்முக்த வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்த வாழ்வியல்நெறி ‘ஆதி சைவம்’.

Content: மொழி இல்லாத காலத்தில் மேலை நாட்டவர்கள் பல்வேறு கண்டங்களில் இருந்த மக்கள் ஹீன சப்தங்களால் உணர்ச்சிகளையும் உணர்வுகளையும் வெளிப்படுத்தி கொண்டிருந்த காலத்தில், முறையான செம்மொழியான ‘தமிழ்’ என்னும் அருமையான மொழியில் வாழ்வியல் சத்தியங்களை ஆகமங்களாக நாங்கள் வாழ்ந்து கொண்டு இருந்த வாழ்வியல்நெறி ஆதிசைவம்.

Content: ஆகமங்கள் சமஸ்க்ருதத்தில் எழுதப்பட்டதாக பலேபேர் கருதுவது பொய். அது மிகபெரிய தவறான கருத்து. உண்மையில் பல சம்ஸ்க்ருத வல்லுநர்கள், அறிஞர்களால் ஆகமத்தின் அரைப்பகுதி 50 சதவிகிதைக்கூட மொழிபெயர்க்க இயலவில்லை என்பதுதான் நான் நேரடியாக பல சம்ஸ்க்ருத அறிஞர்களோடு தொடர்புகொண்டு வேலை

Page 13

Content: செய்துபார்த்ததன் இறுதி உண்மையாக அறிந்த சத்தியம்.

Content: உண்மையில் ஆகமங்கள் சமஸ்கிருதத்திற்கும் தமிழுக்கும் மூலமொழியான ‘தமிழி’ என்னும் மொழியில் தான் அருளப்பட்டது.

Content: கிரந்த எழுத்துக்களால் பொறிக்கப்பட்டு, தமிழி என்னும் இலக்கணம் சார்ந்து வெளிப்படுத்தப்பட்டு எம்பெருமானே மொழியின் இலக்கணமும் தந்து, எம்பெருமானே வாழும் வழியையும் தந்து, எம்பெருமானே வாழ்வியல் நெறியும் தந்து, ஜீவன் முக்த விஞ்ஞானம் மாத்திரம் அல்லாது, உணவு சமைக்கும் அடிப்படை விதிகளில் இருந்து உடை நெய்தலில் இருந்து உடை உடுத்தும் முறையில் இருந்து எழுவது விதமான உடை உடுத்தும் முறையை முப்பத்தைந்து விதம் ஆண்களுக்கும் முப்பத்தைந்து விதம் பெண்களுக்குமாக, எழுவது விதமான உடை உடுத்தும் முறையைகூட மிகத்தெளிவாக ஆதி சைவர்கள் பலவேறு குழுக்களாக தங்களுடைய தொழில் திறமை சார்ந்து தங்களை பிரித்துக்கொண்டார்கள்.

Content: அந்த பிரிவின் வகையும் திறமும் உட்பட அவர்கள் வாழ்க்கைமுறை, யார் வியாபாரம் செய்ய வேண்டிய கடமையில் இருக்கிறார்கள், யார் ஆட்சி செய்து நாட்டின் முறைமையும் தகைமையும் காப்பாற்ற வேண்டிய நிலையில் இருக்கிறார்கள், யார் இந்த வாழ்வியல் முறையான ஆதிசைவத்தை உலகிற்கு உபதேசித்து உரைக்கவேண்டிய நிலையில் இருக்கிறார்கள் என்று ஒவ்வொருக்கும் தங்கள் தங்களுடைய விருப்பம் மற்றும் வேலைகள் சார்ந்து, தங்களுடைய வாழ்க்கைமுறை சார்ந்து தங்களைத் தாங்களே பிரித்துக் கொண்டார்கள்.

Page 14

Content: வேதமும் அகன்ற சாரமாக உபநிடதமும், அதை வாழும் முறையான ஆகமமும் ஒன்றாய் சேர்ந்து... இந்த மூன்றையும் சார்ந்த வாழ்வியல் முறையைத்தான் ஆதி சைவம்

Content: இந்த பிரிவு முன்றையும் அவர்கள் ஒவ்வொருவருக்குமான உணவுமுறை, உடைமுறை ஒரு நகரம் அமைக்கும் பொழுது ஒவ்வொருவருக்கும் எங்கு இருப்பிடம் இருக்க வேண்டும் என்கின்ற இடம்முறை, அவர்கள் ஒவ்வொருவரும் எப்படி வாழ்க்கையை அமைத்து கொள்ளேவண்டும் என்கின்ற வாழ்வியல்முறை... அனைத்தையும் எண்ணிக்கூட பார்க்க முடியாத அளவிற்கு மிகத் தெளிவாக, நுட்பமாக...

Content: ஒரு கோசாலை அமைக்க வேண்டும் என்றால் எந்த இடத்தில் பசு போன்ற மிருகங்கள் இருக்க வேண்டும், எந்த இடத்தில் குதிரை போன்ற மிருகங்கள் இருக்க வேண்டும், எந்த இடத்தில் சாவலுக்கான நாய்கள் போன்ற மிருகங்கள் இருக்க வேண்டும் என்கின்ற அளவிற்கு,

Content: திருநீறு பச்மத்தை உருவாக்க வேண்டும் என்றால் எந்த நிற எந்த முறையான பசுவின் சாணத்தை எப்படி எடுத்து எப்படி திருநீற்றை உருவாக்க வேண்டும் என்கின்ற ஆழமான தெளிவான், எறத்தாழ சில கோடி ஸ்லோகங்கள் மூலமாக.. சிலகோடி பாடல்கள் மூலமாக...

Content: ஆழ்ந்து தெரிந்து கொள்ளுங்கள் சிலகோடி ஏனென்றால் காமிக ஆகமத்தை எம்பெருமான் விவரிக்கும் பொழுது கோடி கோடி ஸ்லோகங்கள் அருளியதாக சொல்லுகின்றார்.

Content: இப்பொழுது நம்முடைய கையில் கிடைத்து இருப்பவை இருபது லக்ஷம்

Page 15

Content: மாத்திரமே.

Content: அது போக காரண ஆகமம் மற்ற காமிகம் முதல் இருபத்தெட்டு ஆகமங்களும் இது போக உப ஆகமங்களாக நூற்றியெட்டு ஆகமங்களும், அது போக இதன் பாகமாக அறுபத்திநான்கு தந்திரங்களையும் பெருமானே நேரடியாக அருளி உள்ளார்.

Content: வேதமும் அதன் சாரமாக உபநிடதமும், அதை வாழும் முறையான ஆகமமும் ஒன்றாய் சேர்ந்து... இந்த மூன்றையும் சார்ந்த வாழ்வியல் முறையைத்தான் ஆதி சைவம் என்று சொல்லுகின்றோம்.

Content: வேதங்கள் பொது நூலாக இருந்து ஆகமங்கள் சிறப்பு நூலாய் இருந்து வாழ்கின்ற வாழ்க்கைமுறை வாழ்வியல் விஞ்ஞானம் ஜீவன் முக்த வாழ்வியல் விஞ்ஞானம் தான் ஆதி சைவம்.

Content: பிரபஞ்சம் தோன்றிய பொழுதே உயிரணங்களை உருவாக்கும் பொழுதே எம்பெருமான் ஆகமத்தை உலகுக்கு அளித்துவிட்டார்.

Content: தன்னுடைய இருப்பின் சாந்நித்யத்தினாலேயே உயிர்கள் எல்லாம் உய்வடைந்து மேம்பட்ட வாழ்க்கை நிலையை அடைய... ஆகமங்களை பெருமான் சதாசிவன், மகாதேவன், ஆதிசிவன், எம்பெருமான் ஈசன், அண்ணாமலையான் உலகத்திற்கு அருளிய மிகப்பெரிய நன்கொடை, வாழ்வியல் சாத்திரம், வாழ்வியல் சூத்திரம்... வாழ்பவர்கள் அவனை நோக்கி பொழியும் தோத்திரம்... இது எல்லாம் ஒன்று அடக்கி மிகப்பெரிய வாழ்வியல் நெறியாக பெருமான் அருளியதுதான் ஆதி சைவம்.

Page 16

Content: தானே அந்த உண்மைகளை உலகத்திற்கு சொன்னது மட்டும் அல்லாது... எப்பொழுதெல்லாம் மக்கள் அதை மறந்து மாயையிலே சிக்குகிறார்களோ... எப்பொழுது எல்லாம் மூடர்கள் அரக்கர்கள் வாழ்கையின் அடிப்படை தெரியாதவர்கள் அசுர பலத்தாலே வாழ்வியல் நெறியை அழிக்க முயற்சித்து தனக்கும் மற்றவர்களுக்கும் தீங்கு செய்து கொள்ளுகின்ற ராக்ஷசர்களாக மாறி உலகத்திற்கு பெருங்கேடு விளைவிக்க முயற்சிக்கின்றார்களோ அப்பொழுது எல்லாம் தீமையை அழித்து நன்மையை மலரச்செய்து சைவத்தை புனரமைத்தது வேதநெறி தழைத்து ஓங்க மிகு சைவ துறை விளங்க மீண்டும் மீண்டும் பெருமானே அவதரிக்கின்றான்.

Content: வேத நெறி தழைத்து ஓங்க மிகு சைவ துறை விளங்க, பூத பரம்பரை பொலிய பெருமானே மீண்டும் மீண்டும் அவதரித்து, தன்னைத்தானே அடையாளம் காட்டி தன்மையானந்தத்தில் சின்மையானந்தத்தில் சிவானந்த போதத்தில் ஜீவன் எல்லாம் திளைத்து இருக்க வழியும் காட்டி, வாழ்வும் காட்டி

Page 17

Content: உய்யவும் காட்டி உணவாய் ஊட்டி உணர்விலும் காட்டி உயிரிலும் காட்டி மெய்யினைவும் உய்ரினைவும் உயிருணர்வும் மலர்த்தி ஆதி சைவத்தை நம் வாழ்வியல் நெறியாக மீண்டும் நிறுத்திடவே குருவாய் மீண்டும் மீண்டும் வருவாய் என கேட்கும் ஜீவ ராசிகளுக்காக குருவாய் வருவாய் என எங்கும் ஜீவர்களுக்காக தன் திருமேனி விட்டு குருமேனி தாங்கி உறும் உலகத்தில் உய்ய வாழி காட்டவே என்றென்றும் இருந்திருக்கும் அந்தம் இல்லாத ஆதி சைவத்தை உயிர் கொடுத்து புனரமைக்க மீண்டும் வாழ்வியல் நெறியாக மாற்றிட இறைவன் குருமேனி தாங்கி வரும் நிகழ்வுகளைத்தான் அவதாரங்கள் என்றும் விளையாடல்கள் என்றும் ஆதிசைவத்தின் பாரம்பரிய சாத்திரங்கள் தெளிவாய் வகுத்து உலகிற்கு வரைத்து உரைக்கின்றன.

Content: பாலில் நெய்போலே வேதங்களில் இருக்கும் சத்தியமான நெய்யை உபநிஷதம் மூலமாய் உயிர்க்குச் சொல்லி வெறும் நெய்யை உண்பது சாத்தியம்மில்லை என்பதனால் ஆகமம் என்னும் உணவாய் சமைத்து அதில் நெய்யையும் கலந்து நம் நெஞ்செல்லாம் இனிக்க

Page 18

Content: கல் நெஞ்சாய் இருக்கும் மனமெலாம் கரைந்து நெஞ்சு பஞ்சாக நெஞ்செலாம் இனிக்க உலகத்திற்கு சொன்ன வாழ்வியல் நெறிதான் ஆதி சைவம்.

Content: ஆதி சைவத்தின் முக்கியமான பாகங்கள் - நான்கு...

Content: 'சரியை' - வாழ்வியல் முறை எவ்வாறு துயில் எழ வேண்டும் என்பதில் இருந்து துயில் எழுந்ததும் செய்ய வேண்டிய செயல்களில் இருந்து நாள் முழுவதையும் உங்கள் உடலும் - மனமும் செய்ய வேண்டிய செயல்கள், செய்யக்கூடாத செயல்கள், எப்படி இருக்க வேண்டும், எப்படி இருக்ககூடாது என்பது துவங்கி, உங்கள் உணவுமுறை, உடைமுறை உறக்கமுறை, உறைவிடமுறை என்னும் எல்லா முறைமைகளையும் வாழ்வியல் சத்தியங்களையும் நெறியையும் சரியாக சரியாக வாழவேண்டிய இருக்க வேண்டிய முறையை சொல்வது 'சரியை'.

Content: இதைத்தாண்டி....

Page 20

Content: பிரபஞ்ச பேரருளான அகண்ட சச்சிதானந்தா பரம்பொருளான சதாசிவனோடு பக்தியில் சங்கமித்து, பக்தியால் பொங்கும் ஆனந்தத்தை அனுபவித்து, சிவஞானத்தால் பொங்கும் சிவபோதத்தை வாழ்ந்து, சிவஞானத்தால் பொங்கி பெருகும் சிவபோததில் சிந்தை கரைந்து, நிறைந்து, உறைந்து கிடந்து வாழும் வாழ்க்கை முறையதான் ‘க்ரியை’.

Content: வழிபடும் முறை... மலர்க் கொய்வதில் துவங்கி சந்தனம் அரைப்பதில் இருந்து மாலை சாற்றுவதில் இருந்து ஆத்மார்த்தமாக இறைவனை வழிபடுவதில் இருந்து பரார்த்தமாக ஆலய வழிபாட்டில் என்னென்ன செய்ய வேண்டும், செய்யக்கூடாது என்பதுவரை எல்லாவற்றையும் முறையாக தானே தன்னை வழிபடும் விதியை தவறு இல்லாது ஜீவன்களுக்கு எல்லாம் சொன்ன விதம் -‘க்ரியை’.

Content: சரியை - வாழ்வியல் முறை, க்ரியை -பக்தியால் பொங்கி பழுத்து இறைவனோடு இரண்டற கலந்து இருக்கும் இனிமையான நெறிமுறை.

Content: யோகம் - ஜீவன் சிவனாக மாற, ஜீவன் சிவத்துவத்தை உணர்ந்து சிவனுடைய அதே உணர்வு நிலையில்

Page 21

Content: சிவமயமாய் ஒளிர்ந்து மிளிர்ந்து சிவத்துவதிற்கு தன்னை யோக்கியனாக்கி கொள்ளும் முறை ‘யோகம்’.

Content: தாமே சிவமாய் தன்மயமாய் சிவோஹம் என்னும் ஜீவன் முக்க தன்மையில் நிலைத்து இருக்கும் நூட்பம் ‘ஞானம்’.

Content: சரியை - ஆதி சைவத்தின் வாழ்வியல்முறை. க்ரியை - ஆதி சைவத்தின் வழிபாட்டியல்முறை யோகம் - ஆதி சைவ நிலையில் உடலையும் மனதையும் வைத்து அடைகின்ற முறை. ஞானம் - ஆதி சைவ நிலையில் ‘சிவோஹோம்’ என்னும் ஜீவன்முக்க நிலையில் நிலை பெற்று இருப்பதற்கான சத்திய சிவபோத சுகபோத சிவஞான ரகசிய சத்தியங்கள். இதைதான் ஞானம், வித்தை என்கின்றோம்.

Content: ஆகமம் நான்கு முக்கிய பகுதிகளாக இருந்து ஆதிசைவத்தின் வாழ்வியல்களை நமக்கு காட்டுகிறது... சரியை க்ரியை யோகம் ஞானம்.

Content: அடுத்த பத்து நாட்களும் இந்த தொடர்ந்த சத்சங்கங்களின் மூலமாக... சரியை க்ரியை யோகம் ஞானம் என்று ஆதி சிவன் ஆதிப்பரம்பொருள் வேதங்களின் மூலம் ஆகவும்

Content: சரியை - ஆதி சைவத் தின் வாழ்வியல்முறை. க்ரியை - ஆதி சைவத்தின் வழிபாட்டியல்முறை

Content: யோகம் - ஆதி சைவ நிலையில் உடலையும் மனதையும் வைத்து அடைகின்ற முறை. ஞானம் - ஆதி சைவ நிலையில் ‘சிவோஹோம்’ என்னும் ஜீவன்முக்க நிலையில் நிலை பெற்று இருப்பதற்கான சத்திய சிவபோத சுகபோத சிவஞான ரகசிய சத்தியங்கள். இதைதான் ஞானம், வித்தை என்கின்றோம்.

Page 22

Content: உபநிஷதங்களின் சாரம் ஆகவும் ஆகமங்களின் மூலம் ஆகவும் வெளிப்படுத்தி அருளிய மிகப்பெரிய வாழ்வியல் முறையான ஆதி சைவத்தின் சாரத்தை இந்த நான்கு முக்கியமான சரியை க்ரியை யோகம் ஞானம் எனும் நான்கு முக்கியமான தலைப்புகளின் வழியாக உங்களோடு பகிர்ந்து கொள்ளுகின்றேன்.

Content: இதை உங்கள் வாழ்வியலாக மாற்றி கொள்வதற்கு உங்களுக்கு தேவையான சித்தியங்களையும், அதில் உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள் போன்றவற்றை நீக்கி, கேள்விகளுக்கான விடைகளை கொடுத்து, அடுத்த 10 நாட்களும் இந்த ஆதிசைவத்தின் சாரத்தை அனுபவமாக மாற்றி கொள்வதற்காக, இந்த வாழ்வியல் விழுஞானத்தை உங்கள் முன் திறந்து வைப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன்.

Content: நீங்கள் எல்லோரும் சிறத்தையுடனும் சீரிய பக்தியுடனும் இந்த ஆதி சைவத்தின் சாரத்தை உள்வாங்கி, உங்களுக்குள் இருக்கும் கடவுள் துகள் விழிப்ப்படைந்து கடவுள்நிலை அடைந்து சிவோஹம் எனும் அனுபூதியில் நிலைபெற்று சிவஞானத்தில் நிலைத்திருந்து சிவபோதத்தில் வாழ்வீர்களாக… நித்யானந்தத்தில் நிலைபெறுவீர்களாக.

Content: எத்துணையோ நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான சம்பிரதாயங்களையும், வாழ்வியல் முறைகளையும், மதங்களையும் தத்துவக் கோட்பாடுகளையும், சித்தாந்தங்களையும் கருத்துக்களையும்…

Page 24

Content: கம்யூனிசம், நாத்திகம் உட்பட எல்லாவிதமான வாழ்வியல் கருத்துக்களையும்... பல்வேறு கோணங்களிலும் ஆராய்ந்து அறிந்து படித்து சிந்தித்து... அவைகளின் உட்பொருளை உள்வாங்கி இருக்கின்ற தெளிவினாலும் தைரியத்தாலும்

Content: உங்களுக்கு சொல்லுகின்றேன்... ஆழ்ந்து கேளுங்கள்... மக்களே...

Content: தமிழ் எனும் பெருமெழி புரிகின்ற உடலும் மனமும் கொண்டதனாலேயே நீங்கள் புண்ணியவான்கள். எனென்றால் அந்த ஒரு மொழியில்தான் ஆதிசைவத்தின் சத்தியங்கள் எல்லாம் நேரடியாய் திறந்து வைக்கப்பட்டிருக்கின்றது.

Content: மற்றவர்கள் எல்லோருமே மொழி பெயர்ப்பைத்தான் படித்தாக வேண்டும். நீங்கள் ஒருவர் மட்டுமே நேரடியாய் படிக்கவும் அதன் துடிப்பை உங்கள் இதய துடிப்பாய் உணரவும் உங்களுக்குள் அதை உள்வாங்கவும் வாழவும்

Content: வாழ்வியல் அனுபவமாக மாற்றி கொள்ளவும் மிகப்பெரிய வாய்ப்பு உடையவர்களாக இருக்கின்றீர்கள். நீங்கள் மட்டும்தான் இந்த மிக பெரிய புண்ணியத்திற்கு ஆளானவர்களாக இருக்கின்றீர்கள்.

Content: தெரிந்து கொள்ளுங்கள் தமிழ் மொழி புரிந்து கொள்ளுங்கின்ற மனம் உங்களுக்கு இருந்திருக்குமானால் இருந்தோ அல்லது இப்போது இருக்குமானால் சைவத்தை இழக்காதீர்கள் சைவத்தை கண்டு கொள்ளுங்கள்

Page 25

Content: கண்டு அறியுங்கள் வாழுங்கள்.

Content: அது உங்களுடைய வாழ்வியல் நெறியாக மாறட்டும்.

Content: உங்கள் வாழ்வியல் சத்தியமாக மாறட்டும்.

Content: வேறு எந்த சித்தாந்ததிலும் இத்துனை தெளிவாக கடைநிலை மனிதனுக்கும் கடைதேறும் வழியை இட்டுச்செருகல் எதும் இல்லாது ஒரு இம்மி எடையும் சத்தியத்தில் குறையாது எடையும் குறையாது மாத்திரையும் குறையாது சத்தியத்தை சத்தியமாகவே சத்தியமாய் சதாசிவன் சொல்லி அருளிய வாழ்வியல் முறையான சைவம் பிடியுங்கள்.

Content: வாழ்ந்திட வாழ வைக்கும் பெருவழியான சைவம் வாழுங்கள்.

Content: மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்...

Content: மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்...

Content: மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்...

Content: ரமண மகரிஷி ரொம்ப அருமையாக அண்ணாமலையானை பார்த்து வாழ்த்துவார்...

Content: 'என்போலும் தீனரை இன்புற காத்து நீ எந்நாளும் வாழ்ந்து அருள்

Content: சைவத்தை இழக்காதீர்கள் சைவத்தை கண்டு கொள்ளுங்கள் கண்டு அறியுங்கள் வாழுங்கள்.

Content: அது உங்களுடைய வாழ்வியல் நெறியாக மாறட்டும்.

Content: உங்கள் வாழ்வியல் சத்தியமாக மாறட்டும்.

Page 27

Content: அருணாச்சலா...' என்னை போன்ற தீனர்களை எல்லாம் இன்புற காக்கின்ற நீ இதேபோல் எல்லா காலத்திலும் காத்து எந்நாளும் வாழ்ந்தருள் என்று இதே வார்த்தையைத்தான் ஆதிசைவத்தை நோக்கியும் நான் சொல்ல கடமைப்பட்டு இருக்கின்றேன்.

Content: என்போலும் தீனரை நித்யானந்தத்தில் நிலைபெற செய்த சைவ சத்தியமே... ஆதிசிவமே

Content: உலகமெலாம் நீ பொங்கி பெருக மேன்மைகொள் சைவநீதி மேன்மை தரும் சைவ நீதி விளங்குக உலகம் எல்லாம்.

Content: மேன்மையை தரும் இந்த சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்.

Content: ஆகமங்களாலும்... வழிவழியாய் வந்த சைவத்தை மீண்டும் உயிர்ப்பித்து ஸ்தாபனம் செய்த சர்வஞஞைடரூடரான ஞான சம்பந்த பெருந்தகையாலும், அப்பர் பெருமான் எனப்படும் திருநாவுக்கரசு சுவாமிகளாலும், சுந்தரராலும், மாணிக்கவாசகராலும், நாயன்மார்களாலும்... நெறிபடுதப்பட்டு, வாழ்வியல் முறையாக வாழ்ந்து காட்டப்பட்ட பெருமானோடு இரண்டற கலக்கும் ‘சிவோஹும்’ எனும் நிலையில்... நித்யானந்தமாய் நிலைபெற்று இருக்கும் இந்த மிகப்பெரிய வாழ்வியல் ஞானம் சொல்லவும்,

Page 28

Content: சமய தீட்சையும், விசேஷ தீட்சையும் பெற்று ஆதி சைவத்தை அனுபவமாக மாற்றிக்கொண்டு எம்பெருமானோடு இரண்டற கலந்து, இறைநிலை உணர்ந்து சிவஞானத்தை அனுபூதி ஆக்கிக்கொண்டு, சிவபோதத்தில் நிலைத்து வாழுமாறு, சிவபோதத்தில் நிலைபெற்று இருக்குமாறு, உங்கள் அனைவரையும் ஆசீர்வதிக்கின்றேன்.

Content: கேட்கவும் மிகுந்த புண்ணியத்தை தருவது. சொல்லவும், கேட்கவும் வாழ்க்கையை மேம்படுத்துவது. அதனால்தான்...

Content: மேன்மை கொள் என்னும் வார்த்தையை உபயோகிக்கிறார்கள். மேன்மை கொள் என்றால்... சொன்னவர்கள், கேட்டவர்கள், எதிர்காலத்தில் கேட்கப்போகிறவர்கள்... இவர்கள் எல்லோருக்கும் மேன்மையை கொடுப்பது, மேன்மையில் அவர்களை நிறுத்துவது மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்.

Content: சைவநீதி ஆதிசைவம் சார்ந்து உங்கள் எல்லோருக்கும் இருக்கும் கேள்விகள் சந்தேகங்கள் இவைகள் அனைத்தையும் நித்யானந்த தியானபீடம் பெங்களுரு ஆதீனத்திற்கு அனுப்பலாம். உங்கள் சந்தேகங்களை கேள்விகளை அனுப்பலாம்.

Content: அதுமட்டுமல்லாது... மிக முக்கியமான இந்த ஆதி சைவத்தை உங்கள் வாழ்வியல் நெறியாக, அனுபவமாக மாற்றி கொள்வதற்கு எம்பெருமான் அருளியிருக்கும் மிக முக்கியமான சமய தீட்சை, விசேஷ தீட்சை என்கின்ற இரண்டும் நடைபெறுகிறது. அன்பர்கள் அனைவரும் வந்து கலந்து கொண்டு சமய தீட்சையும், விசேஷ தீட்சையும் பெற்று, ஆதி சைவத்தை அனுபவமாக மாற்றிக்கொண்டு எம்பெருமானோடு இரண்டற கலந்து, இறைநிலை உணர்ந்து சிவஞானத்தை அனுபூதி ஆக்கிக்கொண்டு,

Page 29

Content: சிவபோதத்தில் நிலைத்து வாழுமாறு, சிவபோதத்தில் நிலைபெற்று இருக்குமாறு, உங்கள் அனைவரையும் ஆசீர்வதிக்கின்றோம்.

Content: எம்பெருமான் ஆகமத்திலே மிகத் தெளிவாக விளக்குகின்றார்… பத்து விதமான தீட்சை முறைகள், ஒன்பது விதமான தீட்சைகள்… சமய தீட்சை, விசேஷ தீட்சை, நிர்வாண தீட்சை, ஆச்சார்ய அபிஷேகம் என்று ஒன்பது விதமான தீட்சைகளையும் பத்து விதமான தீட்சை முறைகளையும் ஆகமத்தில் இறைவன் விளக்குகின்றார்.

Content: அதில் ஒரு முக்கியமான விதியாக சமய தீட்சையும் விசேஷ தீட்சையும்… ஜாதி இன, மதம் எதும் பாராது எல்லா மனிதர்களுக்கும் எல்லா ஜீவராசிகளுக்கும் பிரதிபலன் எதிர்பாராது கைமாறு கருதாது அளிக்கப்பட வேண்டும் என்று ஆணையிடுகின்றார். அவரின் உத்தரவை அவரின் ஆணையை சிரமேற்கொண்டு… எந்த கட்டணமும் இல்லாமல் விலை இல்லாது

Content: அனுமதி இலவசமாக சமய தீட்சையும், விசேஷ தீட்சையும் நவம்பர் 21, 22, 23, 24 ஆகிய நான்கு நாட்களும் பெங்களூரு ஆதீனத்தில் நடைபெறுகின்றது. நித்யானந்த தியானபீடத்தில் நடைபெற இருக்கின்றது. அன்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு இறையருள் பெற்று ‘சிவோஹம்’ எனும் அனுபூதியை உணர்ந்து, ஜீவன்முக்த நிலையில் வாழ்ந்து, சிவபோதத்தில் நிறைந்து நித்யானந்த நிலையில் இருக்குமாறு, நித்யானந்த நிலையில் மலருமாறு உங்களை வாழ்த்துகின்றேன்.

Content: எந்தவிதமான அனுமதி கட்டணமுமின்றி சமய தீட்சையும் விசேஷ தீட்சையும் அளிக்கப்படும். விசேஷ தீட்சை பெற்றவர்கள் தினந்தோறும் சிவபூஜை செய்வதற்கான பாத்திரங்களும், ஆத்மலிங்கமும், பூஜை செய்யும் முறையை பற்றிய விளக்க புத்தகமும், மற்ற பொருட்களும் உங்களுக்கு சிவசேவையாக இலவசமாக அளிக்கப்படும்.

Page 30

Content: ஆழ்ந்து இதை வாழ்ந்து பாருங்கள். ஆதி சைவம் - வாழ்ந்து பார்த்து அனுபவிக்க வேண்டிய ‘சத்தியம்’. வெறும் எண்ணத்தாலோ வாத்தையாலோ புரிந்துகொள்ள முடியாத, வாழ்ந்து பார்த்தே உணர்ந்து கொள்ளப்பட வேண்டிய வாழ்வியல் நெறி, வாழ்வியல் சத்தியம்.

Content: வாருங்கள்... சைவத்தை வாழுங்கள். மேன்மை கொள்வீர்கள்.

Content: மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்.

Content: நீங்கள் எல்லோரும் நித்யானந்தத்தில் நிறைந்து நித்யானந்தத்தில் மலர்ந்து நித்யானந்தத்தில் கரைந்து நித்யானந்தமாகிட ஆசீர்வதித்து முடிக்கின்றேன். நன்றி.

Content: ஆனந்தமாக இருங்கள்.

Page 31

Content: Nithyananda Paranishivam

Content: All Rights Reserved

Content: Nithyananda Paranishivam

Content: All Rights Reserved

Page 32

Content: Ebook ISBN : 979-8-88572-963-5

Content: nithyananda.tv

Content: kailaasa.org

Content: நித்யானந்த விருது

Content: பல்கலைகழகம்