1. அகத்தியர்_பஞ்சபட்சி_1907
Page 1
Title Page
தெய்வமேதுணை. பொதியமலையி லெழுந்தருளிய அகத்தியமுனிவர் திருவாய்மலர்ந்தருளிய பஞ்சபட்சி சாஸ்திரம் மூலம் சாந்தலிங்க சுவாமிகளால் அருளிச்செய்த நூதன உரையும் இதற்கியைந்த சக்கரங்களும் சகல உபயோகத்திற்கு வாகேரித்த ஞானசரநூல் சாஸ்திரம் மூலமும் உரையும் இவை, சிதம்பரவாஸீ ஜோதிட கலாநிதி ம--ள--ஸ்ரீ, தேவேந்திரநாத பண்டிதரால் சென்னை-சூளை, சி. அண்ணாமலை முதலியாரவர்களது ஆயுர்வேத அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பட்டது. 1907. இதன் விலை அணா 8. REGISTERED COPY RIGHT.
Page 2
குருவே துணை. பஞ்சபட்சி சாஸ்திரம் காப்பு.
வெண்பா
உன்னி யொருவன் உரைத்தமுத லெழுத்தைப் பன்னிப் பறவையாய் பாவித்து - வன்னி உதய திசைப்பட்சியுண்மை யுரைக்கக் கதை காவியப் பொருளேகாப்பு.
(பொ-ரை.) (தன்னைநோக்கி) ஒருவன்நினைத்து வருகின்ற ஒரு காரியத்தில் அவன்சொல்லும்வாக்கியத்தின்முதல் எழுத்தைநன்றாயா ராய்ந்து பறவைகளுக்குரிய ஐந்தட்சரங்களில் அதற்கு வருகின்றபற வையாகக்கணக்கிட்டு சூரியோதயதிசையிலிருந்து பட்சிகளின்பயனை எடுத்துச்சொல்லுதற்பொருட்டு ஞானசாஸ்திரங்களில் சொல்லப்பட் டபொருளாயுள்ள வஸ்துவேகாப்பாகும்-எ-று.
நாமகள் துதி.
வெண்பா
துய்யமலருறையுந் தோகா யுனதம்பொற் செய்யமலர்ப்பாதஞ் சேவித்தேன்-மையற் கைந்து வகைப்பட்சி யமையுங் குணமென்றன் சிந்தைதனி னிற்கவே செய்.
(பொ-ரை.) பரிசுத்தமான வெண்டாமரையில் எழுந்தருளியிருக்கின்ற இளம்பெண்ணாகிய சரஸ்வதாதேவியே! உன்னுடைய அழகிய பொன்போன்றசெவந்ததாமரைமலர்போலும்திருவடித்தாள் வணங்கினேன். ஆகையால் நீ இவ்வுலகத்தில் பஞ்சபட்சிகள் பொருந்துங்குணங்களை எம்முடையமனதில் இருக்கச்செய்யவேண்டும்-எ-று.
முனிவர் நூல்முறை.
வெண்பா
நின்று திசைக்குருவிபொன்றிவரு மோர்தூதன் நின்றநிலையாருடத்தில்நேரும்-நன்று வழுவா துரைத்தாயும் வல்லவர்கள் சொன்ன முழுவாகடத்தின்முறை.
Page 3
(பொ-ரை.) எவ்வித தப்பிதமுமில்லாமல்சொல்லி ஆராய்கின்ற வல்லமையுடையவர்கள் சொல்லின் முறைமையான வாசகத்தின் வரிசைக்கிரமானதுபொருந்தியதிக்குகளில் ஊடுருவிச்சேர்ந்து நெருங்கி வருகின்ற ஒருதூதுவன் இருந்ததன்மையைக்கண்டு சொல்லும் குறிகுணங்கள் ஆருடத்தில் ஆகும் என்பதாம்-எ-று.
முதலதிகாரம்
நூல்
மொழிக்கு முதலெழுத்தே முன்னுதிக்கு மாமதனைப் பழித்தவன றன்னிலையும் பார்த்து-வழிபெறவே பேரால்வ நவனயும் பேதமறிந்தணர்ந்து ஆராய்ந்துசொல்வதறி.
(பொ-ரை.) தூதுவன் (ஒருகாரியத்தைநோக்கிவருபவன்) ஏதாவதொன்றைக்குறித்து நன்மை தீமைகளில் எதையோ ஒன்றைக்கேட்கத்தொடங்கும்வசனத்தில் முதலாகவுள்ள எழுத்தே பட்சிக்கும்முதன்மையாகும், ஆகையால் அந்தப்பட்சி எழுத்தையும், அவ்வசனத்தைச்சொன்னான் நின்ற நிலைமையையும் நன்றாக நிதானித்துப்பார்த்து அவனுடைய நாமதேயத்தினால் பேதங்களையும் அபேதங்களையும் நன்றாயுணர்ந்து நன்மை தீமைகளைச் சொல்லவேண்டுமென்றுணர் வாய்-எ-று.
Page 4
பஞ்சபக்ஷிகளும் அதற்குரிய அட்சரங்களும்.
அகரமேவல்லூ றூந்தை யிகரமதாம் உகரங்கருநாக முன்னிப்-பகரில் எகரமதுகோழி யெஞ்ஞான்றுமஞ்ஞை ஒகரமுயிர்மெய்யாந் தரை.
(பொ-ரை.) டேகை அகரம் என்னும் அட்சரமாம் ஆந்தை இகரம் என்னும் அட்சரமாம், காகம் உகரம் என்னும் அட்சரமாம் நினைத்துச்சொன்னால் கோழி எகரம் என்னும் அட்சரமாம், மயில் எந்தக்காலங்களிலும் ஒகரமென்னும் அட்சரமாம், இவ்விதியையே உயிர்மெய்யெழுத்தாகவந்தாலுங் கொள்ளவேண்டும்-எ-று.
பக்ஷம் இரண்டிற்கும் பக்ஷிகளின் செய்கைக்குறிப்பு
அறுசீர்க்கழி நெடிலடி யாசிரியவிருத்தம்.
ஊணடையரசு நித்திரை மரணம் உயர்பகலினிலினூண்டு நீணிலத்தரசு செய்துயின் செத்துநெறியுடனடந்துமேயுறங்கும் பூணுறு மமரபக்க நற்பகலூண் பொன்றியுந்துயின் றரசாகிச் சேணுறு நடையுண்டூறங்கிபேசென்றுஞ்செத்தரசாளு நல்லிரவே
(பொ-ரை.) இந்தப்பட்சிகள் ஐந்தும்பூர்வபட்சம்பதினைந்துநாளும்பகலில் ஊண், நடை, அரசு, நித்திரை, மரணம், என்னும் வரிசையாகவும் இரவில் ஊண் அரசு, மரணம், நடை, நித்திரை என்னும்வரிசையாகவும் அமரபட்சம்பதினைந்துநாளும், பகலில் ஊண்,மரணம், நித்திரை, அரசு, நடையென்னும்வரிசையாகவும், இரவில் ஊண், நித்திரைமரணம், அரசு என்னும் வரிசையாகவும், நடைபெறும்-எ-று.
பூர்வபக்ஷம்-அமரபக்ஷங்களுக்கு-திதிபதினைந்தாகவும் திதி ஒன்றுக்குசாமம் பத்தாகவும் சாமம் ஒன்றுக்குநாழிகைப்பகுதி
ஒன்றேகா லொன்றையீ ரொன்றுமுக்காலரையும் நன்றாக விவ்வாறு நாழிகையுங்-குன்றா வளர்பிறைக்குந் தேய்பிறைக்கும் வாலாயமாஞ் சூட்ச வளமுரைத்தார் முன்னோர் வகுத்து.
(பொ-ரை.) ஐந்துபட்சிக்கும் தொழில் நாழிகைகளைவெளிப்படுத்துமிடத்தில் பூர்வபட்சம் அமரபட்சம் என்னும் இரண்டுபட்சங்களிலும் பொதுவாகவே ஒன்றேகால் நாழிகையும், ஒன்றரை நாழிகையும்...
Page 5
நாழிகையும், இரண்டுநாழிகையும், முக்கால்நாழிகையும், அரைநாழிகையுமாக ஆறுநாழிகையாம் இவ்விதமே சூட்சுமானவண்மைமார்க்கமென்று முன்னோர்களாகிய பெரியோர்கள் ஏற்படுத்திச்சொன்னார்கள்-எ-று. 4
நாழிகை ஆறு கூடிய சாமம் ஒன்றுக்கு செய்கைப்பகுதி.
வெண்பா
மறித்து மொருவகையால் வண்கடிகையாறுந் தெரித்ததொரு சூக்குமத்தைச் சேரக்-குறித்திடுங்கா லுண்டு நடந்தாண்டுறங்கியிறந்திடுமே வண்டனைய கண்ணாய்மதி.
(பொ-ரை.) வேறுவிதமாகயோசிக்குமிடத்தில் இந்த நாழிகை ஆறும் சூக்குமமார்க்கத்தையடையச்சொல்லுமிடத்தில் உண்டும், நடந்தும் அரசுசெய்தும், தூங்கியும், மரணமாயும் இருக்கும் வண்டுபோலும் கறுத்த கண்களையுடைய பெண்ணே! நீ கவனிப்பாயாக-எ-று. 5
வினைப்பகுதி.
வெண்பா
உண்பாணுக்கொன்றேகாலொன்றரையிற்றானடக்க கண்பார்த்தரசுரண்டிற் காண்போமோ-பண்பாகத் தூங்குவது முக்காலாய்த் துஞ்சுவது தானரையாப் பாங்குடைய பட்சிபலன்.
(பொ-ரை.) இவ்விதம் மேலே எடுத்துக்காட்டப்பட்ட பொதுநாழிகையை பட்சிகளின் தொழில்கிரமப்படி எடுத்துச்சொல்லுமிடத்தில் ஊணுக்கு ஒன்றேகால்நாழிகையும் நடைக்கு ஒன்றரைநாழிகையும் அரசுக்கு இரண்டுநாழிகையும் நித்திரைக்கு முக்கால்நாழிகையும் மரணத்திற்கு அரைநாழிகையும் தொழில்களாம் இந்தத்தொழிற்காலங்களிலேயே பட்சிகளின் பலாபலனை உணரவேண்டும். என்றவாறு. 6
Page 6
மூலமும் நூதன உரையும். இந்நூல்காப்புமுதல் 9 செய்யுள்களின்பயனறியச் சூக்குமச்சக்கரம்.
பூர்வபக்ஷம். பகல். | இரவு. அ - வல்லூறு உண்டி - க வ | உ - காகம். உண்டி - க வ இ - ஆந்தை நடை - க ற | இ - ஆந்தை. அரசு - உ. உ - காகம் அரசு - உ. | அ - வல்லூறு மரணம் - ற எ - கோழி தூக்கம் - ள | ஒ - மயில் நடை - க ற ஒ - மயில் மரணம் - ற | எ - கோழி தூக்கம் - ள
அமரபட்சம். பகல். | இரவு. ஒ - மயில் உண்டி - க வ | எ - கோழி உண்டி - க வ. உ - காகம் மரணம் - ற. | உ - காகம். தூக்கம் - ள. அ - வல்லூறு தூக்கம் - ள. | இ - ஆந்தை நடை - க ற. எ - கோழி. அரசு - உ. | அ - வல்லூறு மரணம் - ற. இ - ஆந்தை நடை - க ற. | ஒ - மயில் அரசு - உ.
நந்தைமுதலியதிதிப்பிரிவு.
வெண்பா
விளகின் முதற்றிகியா றாம் பதினொன்று நந்தை மேலிரண்டேழ் பன்னிரண்டும் விளங்கும் பத்திரை யினியதொருமூன் றெட்டும் பதின்மூன்றுஞ் சையையா மிருத்தை யொன்பானான்கும் பதினான்கு மாகும் பூரணமை யைந்து பத்துப் புகன்ற பூரணையுமாமே.
இவற்றிற்கிணங்க உள்ளமுடையசூடாமணிச் சோதிடத்திலிருந்தெடுத்தெழுதியது.
Page 7
அகஸ்தியர் பஞ்சபக்ஷி
வெண்பா
புனைகுழலாய் பஞ்சமியும்பத்து மூவா தாழும் பூரணை மென்மறி யலவன் கோன் மகரஞ் சரமாங் கனிவிடைதேள் குடஞ்சிங்கம் நிலைராசியாகுந் தனுமிதுனங் கன்னியுமீ னுபயமெனத்தகுமே.
(பொ-ரை.) திதிகளின் பிரிவுகளைக் கேட்குமிடத்தில், பிரதமை, சஷ்டி, ஏகாதசி இந்த மூன்று திதிகளும், நந்தை என்றும்; விதியை, சத்தமி, துவாதசி, இந்த மூன்று திதிகளும் பத்திரை என்றும்; திருதியை, அஷ்டமி, திரயோதசி இந்த மூன்று திதிகளும் சபை என்றும், நவமி, சதுர்த்தி, சதுர்த்தசி இந்த மூன்று திதிகளும் இருத்தையென்றும்; பஞ்சமி, தசமி, பௌர்ணமி இந்த மூன்று திதிகளும் பூரணையென்றும் சொல்லப்படும். இனி ராசிகளின் பிரிவுகளைச் சொன்னால் புஷ்பமாலையுடன் ஆபரணங்களையும் புனைந்த கூந்தலையுடைய பெண்ணே, மேஷம், கற்கடகம், துலா, மகரம், இந்த நான்கு ராசிகளும் சரராசிகளென்றும்; ரிஷபம், விருச்சிகம், கும்பம், சிங்கம் இந்த நான்கு ராசிகளும், ஸ்திரராசிகளென்றும், தனுசு, மிதுனம், கன்னி, மீன் இந்த நான்கு ராசிகளும் உபயராசிகளென்றுஞ் சொல்லப்படும். (எ-று)
இதனுள்
பிரதமை-சஷ்டி-ஏகாதசி-இம்மூன்றிற்கும் நந்தையென்றும் விதியை-சத்தமி-துவாதசி-இம்மூன்றிற்கும் பத்திரையென்றும் திரிதிகை-அஷ்டமி-திரயோதசி-இம்மூன்றிற்கும் சபையென்றும் சதுர்த்தி-நவமி-சதுர்த்தசி-இம்மூன்றிற்கும் இருத்தையென்றும் பஞ்சமி-தசமி-உவா-இம்மூன்றிற்கும் பூரணையென்றும் பெயராம் அன்றியும் மேடம், கற்கடகம், துலாமகரம், இவைநான்கும் சரராசிகள் இடபம்-விருச்சிகம்-கும்பம்-சிங்கம்-இவைநான்கும் ஸ்திரராசிகள் தனுசு மிதுனம்-கன்னி மீனம் இவைநான்கும் உபயவிராசிகளென்றறிக
Page 8
சந்திர நாட்கூறுபாடாகிய திதிப் புணர்ச்சிச்சக்கரம்
Diagram / Table
| சந்திரன் கூறு | முதற்பக்கம்-நந்தை | உ-ம்பக்கம் பத்திரை | ங-ம்பக்கம்-சயை | ச-ம்பக்கம்-இருத்தை | ரு-ம் பக்கம் பூரணை |
|---|---|---|---|---|---|
| முதல் வட்டம். | பிரதமை | விதியை | திரிதிகை | சதுர்த்தி | பஞ்சமி |
| உ-ம். வட்டம். | சஷ்டி | சத்தமி | அஷ்டமி | நவமி | தசமி |
| ங-ம். வட்டம். | ஏகாதசி | துவாதசி | திரயோதசி | சதுர்த்தசி | உவா |
சராசிகள், ஸ்திரராசிகள், உபயராசிகள் சக்கரம்
Diagram / Table
| சராசிகள் | ஸ்திரராசிகள் | உபயராசிகள் |
|---|---|---|
| மேடம் | இடபம் | மிதுனம் |
| கர்க்கடகம் | சிங்கம் | கன்னி |
| துலா | விருச்சிகம் | தனுசு |
| மகரம் | கும்பம் | மீனம் |
சந்திரன் பக்கம் 5-க்கும்-வாரம் 7-க்கும் அக்ஷரப்புணர்ச்சி
அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்
ஊர்கோணந்தைக்கதிர்செவ்வாய் உகரமோங்கும்பத்திரையாம் தேர்கோளருணன்மதி இகரஞ்சயையும் பொன்னும் உகரமதாம் வேர்கோளிருத்தைப்புகர் எகரம் வெய்ய சனிபூரணை ஒகரம் ஏர்கோலிடையாப்பகற்கடிகை யிவ்வாறறிவையுன்சொன்னோமே.
Page 9
அகஸ்த்தியர் பஞ்சபக்ஷி
Prose Commentary
(பொ-ரை.) சந்திரனுடைய வட்டங்களாகிய ஐந்தில் முதல் வட்டமாகிய நந்தையில் அகர எழுத்துக்குரிய பட்சியானது ஞாயிறு, செவ்வாய், என்னும் இரண்டுவாரங்களிலும், பத்திரையில் இகர எழுத்துக்குரிய பட்சியானது புதன், திங்கள் என்னும் இரண்டு வாரங்களிலும், சயையில் உகர எழுத்துக்குரிய பட்சியானது குருவாரத்திலும், இருத்தையில் எகர உகர எழுத்துக்குரிய பட்சியானது சுக்கிரவாரத்திலும், பூரணையில் ஓகர எழுத்துக்குரிய பட்சியானது சனிவாரத்திலும் உண்ணும் இவ்விதம் உண்ணுவது பகல் நாழிகை முப்பதிலுமாகும் என்று சொன்னேம்-(எ-று.) 7
Table
வாரம் | ஊண் | நடை | அரசு | நித்தி | மரணம் நந்தை ஞாயிறு செவ்வாய் | அ | இ | உ | எ | ஒ பத்திரை திங்கள் புதன் | இ | உ | எ | ஒ | அ சயை வியாழ | உ | எ | ஒ | அ | இ இருத்தை வெள்ளி | எ | ஒ | அ | இ | உ பூரணை சனி | ஒ | அ | இ | உ | எ
Page 10
மூலமும் நூதன உரையும். அட்சரம் ஐந்திற்கும் பக்ஷிபுணர்ச்சி.
வெண்பா
சொன்னவகரம் வல்லூறூண்டுய்ய இகரமாந்தையின்ஊண் முன்னை உகரங்கொடியூணா மொழியில் எகரங்கோழியின்ஊண் பன்னு ஒகரம்மயூரின்ஊண்பண்டையடைவேபறவைகளொன் றுண்ணு மிரண்டுநடைமுடி மூன்றுறக்கநான்குசாவையிந்தே.
(பொ-ரை.) சொல்லப்பட்ட அகரம் வல்லூறின்ஊணாகும் இகரம் ஆந்தையின்ஊணாகும், உகரம் காகத்தின் ஊணாகும், எகரம் கோழியின் ஊணாகும், ஒகரம் மயிலின் ஊணாகும், இவ்விதமே ஐந்து பட்சிகளிலும் முதல் ஒன்றே கால் நாழிகையில் ஊணும், இரண்டாவது ஒன்றரைநாழிகையில் நடையும் மூன்றாவது இரண்டுநாழிகையில் அரசும் நான்காவது முக்கால் நாழிகையில் தூக்கமும், ஐந்தாவது அரைநாழிகையில் சாவுமாகும்-(எ-று.) ஆயினும் அந்தந்த வாரங்களுக்கும், ஐந்து சாமங்களுக்கும் ஆறுநாழிகைகளுக்கும் மாறிக்கொள்ளவேண்டும். (8)
பக்ஷிப்புணர்ச்சிச்சக்கரம்
அட்டவணை
சாம விபரம் | ஞாயிறு செவ்வாய் நந்தா அ-வல்லூறு | திங்கள் புதன் பத்திரை இ-ஆந்தை | வியாழம் சயை உ-காகம் | வெள்ளி இருத்தை எ-கோழி | சனி பூரணை ஒ-மயில் முதல் சாமம் | உண்டி-கவ | உண்டி-கவ | உண்டி-கவ | உண்டி-கவ | உண்டி-கவ உ-ம் சாமம் | நடை-கந | நடை-கந | நடை-கந | நடை-கந | நடை-கந ௩-ம் சாமம் | அரசு-உ | அரசு-உ | அரசு-உ | அரசு-உ | அரசு-உ ச-ம் சாமம் | தூக்கம்-ஒக | தூக்கம்-ஒக | தூக்கம்-ஒக | தூக்கம்-ஒக | தூக்கம்-ஒக ௫-ம் சாமம் | சாவு-அ | சாவு-அ | சாவு-அ | சாவு-அ | சாவு-அ
Page 11
அகஸ்தியர் பஞ்சபக்ஷி இதுவுமது வேறுவகை.
Table
முதல் சாமம்: [அ] வல்லூறு உண்டி | [இ] ஆந்தை நடை | [உ] காகம் அரசு | [எ] கோழி நித்திரை | [ஒ] மயில் மரணம் உ-ம் சாமம்: [ஒ] மயில் உண்டி | [அ] வல்லூறு நடை | [இ] ஆந்தை அரசு | [உ] காகம் நித்திரை | [எ] கோழி மரணம் ங-ம் சாமம்: [எ] கோழி உண்டி | [ஒ] மயில் நடை | [அ] வல்லூறு அரசு | [இ] ஆந்தை நித்திரை | [உ] காகம் மரணம் ச-ம் சாமம்: [உ] காகம் உண்டி | [எ] கோழி நடை | [ஒ] மயில் அரசு | [அ] வல்லூறு நித்திரை | [இ] ஆந்தை மரணம் ரு-ம் சாமம்: [இ] ஆந்தை உண்டி | [உ] காகம் நடை | [எ] கோழி அரசு | [ஒ] மயில் நித்திரை | [அ] வல்லூறு மரணம்
வாக்கியாட்சரப் பொருத்தம் அஷ்டவிதயோனிப்பொருத்தமென்றுஞ் சொல்லப்படும்.
Venba
ஈாய்ந்தவகரங்ககரமுடன் சகரந்தகரந்தங்கரம் வாய்ந்தபகரமகரமுடன் வகரமிதையெட்டெழுத்தாகும் ஆய்ந்தபருந்துமுதல்யோனி யிருநான்கினுக்குமடைவாக வேய்ந்தபொருத்தம்வெற்றியுட னிதனாற்பறவையியம்பிடுமே.
(பொ-ரை.) ஏற்பட்ட அ, க, ச, த, ந, ப, ம, வ, என்னும் இந்நாட்டு எழுத்துக்களையும், கீழ்த்திசை முதலாக எட்டுத்திசைகளிலும் அடைத்து அவைகளில் கருடன் முதலிய எட்டுயோனிகளை ஏற்படுத்தி அந்த அட்சரங்களாலும், எட்டுயோனிகளாலும் ஐந்துபட்சிகளுடைய பலபலன்களையும் ஜெயத்தையும், தோல்வியையும், உறவையும்...
Page 12
பொருத்தச் சக்கரம்
பகையையும் விசாரித்து சொல்லுவதே கிரமமாகும்-(எ-று.) எட்டு யோனிகளாவன: - கருடன், பூனை, சிங்கம், நாய், பாம்பு, எலி, யானை முயல், என்பவைகளாம். (9)
Page 13
அகஸ்தியர் பஞ்சபக்ஷி அக்ஷராலங்காரப் பொருத்தம்.
வெண்பா
இயம்புமுன்னொழுக்கதேபால னிரண்டதுகுமாரன்மூன்றே வயம்புரப்போனான்கு விருத்தனேமரணனைந்தாம் பயன்கொடன்பெயரெழுத்தும் பரவியேபார்ப்பதாலே வியனுடன்றாக்கியெட்டிற் கழித்தெனும்வெற்றிபாரே.
(பொ-ரை.) பஞ்சபட்கிகளுக்குரிய அ, இ, உ, எ, ஒ, என்கிற ஐந்தெழுத்துக்களையும் சக்கரத்தில் பொருத்தி இவ்வெழுத்துக்களை முதலாவது இரண்டாவதாக அடைத்தமுறையில் தன்னுடைய பெய ரின்முதல் எழுத்தைச் சேர்க்கின் அதுமுதல் எழுத்தாகவேகாணில் அதுபாலப்பொருத்தமென்றும், அது இரண்டாவது எழுத்தானால் குமாரப்பொருத்தமென்றும், மூன்றாவது எழுத்தானால் அரசப்பொருத்தமென்றும், நான்காவது எழுத்தானால் விருத்தப்பொருத்தமென்றும், ஐந்தாவது எழுத்தானால் மரணப்பொருத்தமென்றுஞ் சொல்லப்படும் அன்றியிவேறு, விதமாகப்பார்த்தால் பாலப்பொருத்தம், குமாரப்பொருத்தம், அரசப்பொருத்தம், விருத்தப்பொருத்தம், மரணப்பொருத்தம், என்னும் இவைகளுக்குமுறையே பன்னிரண்டு உயிர் எழுத்துக்களுமாகும் இப்பன்னிரண்டு எழுத்துக்களோடு பாட்டுடைத் தலைவனுடைய பெயரெழுத்தை பாலஸ்தானமாகக்கொண்டு எண்ணினால் முதல்மூன்றும் நன்மையைத்தரும், பின்னையமூன்றும் தீமையைத் தரும் கடைசியிலுள்ள நான்கும் ஐந்தும் ஆகா ஆகையால்தன்னுடையபூர்வநாமத்தில் அந்தமரண எழுத்தை நீக்கிமிகுதிநின்ற எழுத்துக்களை எண்ணி ஏழில்பெருக்கி எட்டில்கழித்து நின்றசேடத்தை உணர்ந்தால் உயர்ந்தபெயர் பொருந்தும்-எ-று. (10)
நாமயோனிப் பொருத்தம்.
வெண்பா
பேரெழுத்தெண்ணியேழிற் பெருக்கியேயெட்டிற் கீந்து பாரமாய்நின்றசேடம் பருந்துமுன்னாகவெண்ணி கோதேயோனியென்றுநின்றது பகையதாகும் ஈரதாங்கரிமுன்னெண்ணி யியல்புடன்போனிகாணே.
(பொ-ரை.) நாமத்தின் பேரை எண்ணி அவ்வெழுத்துக்களை ஏழாற்பெருக்கி எட்டால்வகுத்து மிகுதியாய் நின்றசேடத்தைக்கருடன் முன்னாக எண்ணி அதனால் ஒன்று நின்றது பகையாகும் இப்படியே ஒவ்வொரு யோனிகளையும் சரியாய் நிதானிக்கவேண்டும்-எ-று.
Page 14
இருவருள் வெற்றிப் பொருத்தம்.
வெண்பா
ஒருவரையொருவர்வெல்ல வுபாயத்தையறியவேண்டி லிருவர்தம்பெயரிலுள்ளவியலெழுத்ததனையெண்ணிப் பெருக்கியபத்தினாலே பெருக்கியேயெட்டிற் கீயச் சிறியவர்பெரியவர்க்குத்தோற்பது திண்ணந்தானே.
(பொ-ரை.) ஒருவரை ஒருவர் ஜெயிக்கவேண்டுமென்று எண்ணினால் இரண்டுபேருடையபேரினது எழுத்துக்களைத் தனித்தனியே எண்ணி அவ்வெழுத்துத்தொகையைப்பத்தினால் பெருக்கி எட்டால் வகுத்துச்சிறியதொகையாகவரும் பேருடையவர் பெரியதொகையாகவரும் பேருடையவர்க்குத் தோற்றுவிடுவது உறுதியாகும்-எ-று.
அருக்கனிலை-வலிவிபரம்.
வெண்பா
அருக்கனிலையங்கருட னானதொடுபூனைச் செருக்கினருஞ்சிங்கமொரு செங்கதிரினோநாய் கருக்கும்விழிநாக மெலிகாரானை முயலும் இருக்குமிடமாய்ந்துபல னேயுரைசெய்வீரே.
(பொ-ரை.) கருடன், பூனை, சிங்கம், நாய், பாம்பு, எலி, யானை, முயல் என்னும் இந்த எட்டுயோனிகளும் இருக்கின்ற நிலைகளையுணர்ந்து பலாபலனை சொல்லுவீராக-எ-று. (13)
பக்ஷிவலிவு.
வெண்பா
சித்திரை மூன்றுமாதம் சிற்றெலிபூனையாகும் மற்றொரு மூன்றுமாதம் வருமுயல்நாயதாகும் ஐப்பசி மூன்றுமாதமரி யெதிரானையாகும் தையொரு மூன்றுமாதஞ் சர்ப்பமுங்கருடனாேமே.
(பொ-ரை.) எலி, பூனை இவ்விரண்டுயோனிகளுக்கும் சித்திரை, வைகாசி, ஆனி, என்னும் மூன்றுமாதங்களும் முயல் நாய் என்னும் இவ்விரண்டுயோனிகளுக்கும் ஆடி, ஆவணி, புரட்டாசி என்னும் மூன்றுமாதங்களும் சிங்கம், யானை என்னும் இவ்விரண்டுயோனிகளுக்கும் ஐப்பசி, கார்த்திகை, மார்கழி என்னும் மூன்றுமாதங்களும் பாம்பு, கருடன் என்னும் இவ்விரண்டுயோனிகளுக்கும், தை, மாசி, பங்குனி என்னும் மூன்றுமாதங்களும் வலிவுள்ளவைகளென்றுணரக்கடவர்-எ-று. (14)
இச்செய்யுள் ஒன்பதும் ஒருதொடர் உதாரணக் கவிகள்.
Page 15
அகஸ்தியர் பஞ்சபக்ஷி மண்டலபுருடன் சொன்ன நிகண்டில் 12-வது பலபெயர்க்கூட்டத்தொகுதியிலிருந் தெடுத்தெழுதியது. பூர்வபக்ஷம்
அறுசீர்க்கழி நெடிலடி யாசிரிய விருத்தம்.
அகரமேவாதியாகவைந்துகுற் றெழுத்த தாமே புகர்வல்லூறாந்தைகாக்கை பொற்கோழியொடுகலாபி தொகுமுண்டி போக்குவேந்து தூக்கவேநீக்குஞ்சாவாம் பகருமைந்தெழுத்திலியாது பற்றினுமதுவேமுன்னும்.
(பொ-ரை.) அ, இ, உ, எ, ஒ, என்னும் இவ்வைந்துகுற்றெழுத்துக்களும், எழுத்துநிற்கும் வரிசைப்படியே, வல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில், என்னும் ஐந்துபட்சிகளாகும் இப்படசிகள் பூர்வபட்சத்தில், ஊண், நடை, அரசு, தூக்கம், மரணம் என்னும் தொழில்களைப்பெறும், யாதுசெய்தாலும் இவ்வைந்தெழுத்தின், மார்க்கமேயாகும்-எ-று.
அமரபட்சம்.
விருத்தம்
பிற்பக்கமாகில்வேறு பேதிக்குமாதேவென்னில் அற்புகவூண்? சாவேயிர்திபிலரசுபோக்கு பொற்புறுமாணந்தூக்கமில்லாத பொழுதையோர்ந்து பற்பலசெய்புட்டானேயகர்ந்திடின் மிகுந்தநன்மை.
(பொ-ரை.) அமரபட்சமாயிருந்தால் வேறுவகையாக வித்தியா கப்படுமோவென்றால் ஆகும் அது ஊண், மரணம், தூக்கம், அரசு, நடை, என்றுமாறும் எப்படியிருந்தாலும் மரணம், தூக்கம் என்னும் இரண்டுதொழில்கள் இல்லாதபோது பலவகையான காரியங்களைச்செய்தால் மிகுந்தவன்மை உண்டாகும்-எ-று.
இச்செய்யுள் இரண்டும் ஒருதொடர் உதாரணக்கவிகள். பக்ஷமிரண்டிற்கும் பக்ஷிபாகநிலை.
அட்டவணை (Diagram/Table)
முற்பக்க மாகிய பூர்வபக்ஷம்: ஊண்டி | நடை | அரசு | தூக்கம் | சாவு அ வல்லூறு | இ ஆந்தை | உ காகம் | எ கோழி | ஒ மயில் பிற்பக்க மாகிய அமரபக்ஷம்: நடை | அரசு | தூக்கம் | சாவு | ஊண்டி இதற்குமேற்கோள் பன்னிரண்டாவது பலபெயர்க்கூட்டத்தொகுதி.
Page 16
காலச்சக்கரம்.
Prose
இதன்மத்தியில் சிறுவட்டத்திலுள்ள பக்ஷிகளில் எந்தெந்தவாரங்களுக்கு எந்தெந்தப்பக்ஷிகளுண்கின்றதோ அந்தப்பட்சிசாதியாகப்பெரும்வட்டத்திலுள்ள உண்டியாதிமாளமீறாகவலப்புறமே சுழற்றிவரில் பூர்வபக்ஷம் திதி-15-க்கு வாரம் எ-க்கும் பகல் கவிக்குச்சரியாகவும், உண்டியாதி நித்திரை ஈறாக ஒன்றுவிட்டு ஒன்றுமாறிச் சுழற்றிவரில், இராக்கவிக்குச்சரியாகவும்வரும். உண்டியாதிநடைஈறாக இடப்புறமே சுழற்றிவரில் அமரபட்சம்பகல்கவிக்குச்சரியாகவும் உண்டியாதி அரசு ஈறாகஒன்றுவிட்டு ஒன்றுமாறிசுழற்றிவரில் இராக்கவிக்குச்சரியாகவும்.
Prose
நாள் 1-க்கு நாழிகை 60-க்கு சாமம் 10-ஆகவும் சாமம் 1-க்கு நாழிகை 6-ஆகவுமாம், இவற்றுள் பகல்நாழிகை 30-க்கு சாமம் 5-என்றும் இராநாழிகை 30-க்கு சாமம் 5-என்றும் ருதுக்களின் அக்ஷப்பிரகாரம் பிரித்துணர்ந்து கொள்ளத்தகும்:— இந்நூல்முழுதும் பார்த்துப்பிரமைகொள்ளுவதிலும் இந்நூற்பயன் சூக்ஷமமாக இச்சக்கரத்தினால் கண்டுதெளிதலே நன்மைப்பக்கும். முதல் அதிகாரம் முற்றிற்று.
Page 17
குருவேதுணை. இரண்டாம் அதிகாரம். வளர்பிறையாகிய பூர்வபக்ஷத்திற்கு ப கல். வாரங்கள் எ க்கும் ஊண்பக்ஷிகள்
அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்.
செவ்வாயருக்கன்வல்லூறூன் சிறந்ததிங்கள் புதன்மூந்தை கவ்வார்வியாழம்காரூணங் கருதும்வெள்ளிகோழியதாம் மவ்வார்சனிபின்மயிலும்ணும் வளரும்பகலுக்காராய்ந்து மிவ்வாரிந்நூற்குறுமுனிபு மியம்புகடலாருலகுக்கே.
(பொ-ரை.) செவ்வாய்க்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் வல்லூறு ஊணாகும், திங்கட்கிழமை, புதன்கிழமைகளில், ஆந்தை ஊணாகும், வியாழக்கிழமையில் காகம் ஊணாகும், வெள்ளிக்கிழமையில் கோழி ஊணாகும், சனிக்கிழமையில் மயில் ஊணாகும், இவ்விதம் பூர்வபட்சத்திற்காகும் என்று நன்றாயாராய்ந்து இக்கடல்சூழலகினர்க்கு அகஸ்தியர் சொன் றார். எ-று.
வாரங்கள் எ-க்கும் படுபக்ஷிகள்.
அருக்கன்வெள்ளிமுனிமாண மணிசேர்செம்பொற்காரியுட னெருக்கும்வல்லூறேமரண நெறியாங்காசுமதிமரணஞ் செருக்குஞ்செவ்வாய்கோழியதாஞ் சேர்ந்தபுந்திமயின்மரணங் கருக்குங்குழலாய்முற்பகலக் கடிகையறுபான்சாவாமே.
(பொ-ரை.) பூர்வபட்சத்தில் நாளொன்றுக்கு அறுபது நாழிகையும் மரணமாயிருக்கிற படுபட்சிகளாவன கறுத்த கூந்தலையுடையவளே! ஞாயிறு, வெள்ளி இவ்விரண்டுகிழமைகளில் ஆந்தை மரணம், வியாழம், சனி இந்தக்கிழமைகளில் வல்லூறுமரணமாகும் திங்கட்கிழமையில் காகம் மரணமாகும் செவ்வாய்க்கிழமையில் கோழிமரண *மாகும், புதன்கிழமையில் மயில் மரணமாகும். எ-று.
Page 18
நேரிசைவெண்பா பக்ஷிகளின் செய்கை.
நேரிசைவெண்பா
உண்டு நடந்து முரசாண்டு நீத்திரையாய்த் தண்டமுறா முற்பகலிற் சாவாகும்-உண்டு மரசாயிறந்து மனேகவழிநடந்து மிரவாலுறங்கு மிடை.
(பொ-ரை.) பூர்வபட்சத்தில் பட்சிகள் உண்டும், நடந்தும், அரசாண்டும், தூங்கியும், மரணமாயுமிருக்கும், அமரபட்சத்தில், உண்டும், அரசாயிருந்தும், இறந்தும், நடந்தும், தூங்கியுமிருக்கும்-எ-று.
வாரங்கள் 7-க்கும் பகற்சாமங்கள் 5-க்கும் பகுத்தமைத்தல் அக்ஷரம் 5-பக்ஷி 5-சாமம் 5-க்கும் பயனிலை ஞாயிறு செவ்வாய்பகல்.
வெண்பா
வல்லூறுமுண்ணவாந்தை வழிநடக்க நல்லசிறுகாகமது நாடாளப்-பொல்லா வுறக்கமதுகோழியொன் றோடியிரீங்கே யிறக்குமயிலென்றே யியம்பு.
(பொ-ரை.) ஞாயிறு, செவ்வாய், இந்தக்கிழமைகளில் பகலில் வல்லூறானது, உண்ணவும், ஆந்தையானது, நடைபிலிருக்கவும், காகமானது அரசாகவும், கோழியானது தூக்கமாகவும், மயிலானதுசெத்திருக்குமென்று, பெண்கள் நீங்கள் உணர்ந்து கொள்ளுங்கள் என்றவாறு.
சனி பகல்.
வெண்பா
காந்தமயிலுண்ணக்கதித்த தூல் வல்லூறு தோந்தமுடனேநடக்கத் தூய்மொழியீ-ராந்தை யரசுபதியா மருங்காகந்தூங்கச் சீரசம்பொற்கோழிய துசாம்.
(பொ-ரை.) சனிக்கிழமைகளில் மயிலானது உண்ணவும் வல்லூறுநடக்கவும் ஆந்தை அரசாகவும், காகம் தூங்கவும் கோழிசாவவும் விதியாம்-எ-று.
வெள்ளி பகல்.
வெண்பா
கோழியமுதூண்ணக் குதித்துமயினடக்க வாழுமரசாள வல்லூறு-தோழிகே ளாந்தையுறங்கவருங் காகந்தாணிறக்க மாந்தர்க்கழகாய் மதி.
(பொ-ரை.) வெள்ளிக்கிழமைகளில் கோழி உண்ணவும், மயில் நடக்கவும், வல்லூறு அரசாளவும், ஆந்தைதூங்கவும், காகம்மரணமாகவும் விதியாம்-எ-று.
Page 19
வியாழம் பகல்.
வெண்பா
காரண்டமுண்ணக் கருங்கோழிதானடக்க வேருண்டமாமയിലും வேந்தாகுஞ் - சீரண்டும் வல்லூறுதூங்க வலுவாந்தைசானிறக்கச் சொல்லூறுகாட்டுந் தொகை.
(பொ-ரை.) வியாழக்கிழமைகளில் காகம் உண்ணவும், கோழி யானது நடக்கவும், மயிலானது அரசாகவும், வல்லூறானது தூங்கவும், ஆந்தை மரணமாகவும் விதியாம் இவ்வாறு விதிப்பதே தொகை பாம்-எ-று.
திங்கள் புதன்பகல்.
வெண்பா
ஆந்தையமுதுண்ணவருங்காக்கந்தானடக்கப் போயந்திருந்தகோழியதுபூபதியாஞ் - சாந்த மயிலூமுறங்க மடியுமேவல்லூறு பயிலப்புதுமையெனப் பார்.
(பொ-ரை.) திங்கட்கிழமை, புதன்கிழமைகளின் பகலில் ஆந்தை யானது உண்ணவும் காகமானது நடக்கவும் கோழி அரசாளவும் மயிலானது தூங்கவும், வல்லூறு மரணமாகவும் விதியாம்-எ-று.
பூர்வபட்சத்து பகல்.
அட்டவணை விளக்கம்
திதி 15-க்கும் வாரங்கள் 7-க்கும் வாரம் 1-க்குப்பகல் நாழிகை 30-க்கு சாமம் 5-ஆகவும் சாமம் 1-க்கு நாழிகை 6-ஆகவும் பகுத்தமைத்தல். வாக்கியசக்கரம். பூர்வபட்சம்பகல்.
Page 20
வாரங்கள் எ த்துக்கும் பகல்பக்ஷி.
முதல்சாமத்தில் உதிக்கின்றபட்சி உண்டி 2-ம்சாமத்தில்நடந்து 3-ம் சாமத்தில் அரசாகி 4-ம் சாமத்தில் தூங்கி 5-ம் சாமத்தில் சாகும் அன்றியும் இவற்றின் சாமம் 1-க்கு நாழிகை 6-க்கு அந்தரபுக்திபார்க்குமிடத்தில் உண்டி கவ-நடை கஉ-அரசு 2-தூக்கம் ருசாவ் உ-அ சாமந்தோறும் நிச்சயித்துக்கொள்ளவும்.
எழுத்து முறைச் சக்கரம்.
ஞாயிறு செவ்வாய். சனி. வெள்ளி. வியாழம்.
Page 21
அகஸ்தியர் பஞ்சபக்ஷி - திங்கள், புதன்.
சக்கரம்
திங்கள், புதன் சக்கரம்: சாமம் | உண் | நடை | அரசு | துயில் | சாவு க | இ | உ | ஊ | ஒ | அ உ | அ | இ | உ | ஊ | ஒ ங | ஒ | அ | இ | உ | ஊ ச | ஊ | ஒ | அ | இ | உ ரு | உ | ஊ | ஒ | அ | இ
பூர்வபட்சம் பகல் தொழில்முறைச்சக்கரம்.
சக்கரம்
ஞாயிறு - செவ்வாய். ச | அ வல் | இ ஆந்தை | உ காகம் | ஊ கோ | ஒ மயில் க | உண் | நடை | அரசு | துயில் | சாவு உ | நடை | அரசு | துயில் | சாவு | உண் ங | அரசு | துயில் | சாவு | உண் | நடை ச | துயில் | சாவு | உண் | நடை | அரசு ரு | சாவு | உண் | நடை | அரசு | துயில்
சனி. ச | ஒ மயில் | அ வல் | இ ஆந்தை | உ காகம் | ஊ கோ க | உண் | நடை | அரசு | துயில் | சாவு உ | நடை | அரசு | துயில் | சாவு | உண் ங | அரசு | துயில் | சாவு | உண் | நடை ச | துயில் | சாவு | உண் | நடை | அரசு ரு | சாவு | உண் | நடை | அரசு | துயில்
Page 22
மூலமும் நூதன உரையும் - வெள்ளி, வியாழம்
அட்டவணை (Table)
வெள்ளி சாமம் | எ-கோழி | ஒ-மயில் | அ-வல் | இ-ஆந்தை | உ-காகம் க | உண் | நடை | அரசு | துயில் | சாவு உ | நடை | அரசு | துயில் | சாவு | உண் ங | அரசு | துயில் | சாவு | உண் | நடை ச | துயில் | சாவு | உண் | நடை | அரசு ரு | சாவு | உண் | நடை | அரசு | துயில்
வியாழம் சாமம் | உ-காகம் | எ-கோழி | ஒ-மயில் | அ-வல் | இ-ஆந்தை க | உண் | நடை | அரசு | துயில் | சாவு உ | நடை | அரசு | துயில் | சாவு | உண் ங | அரசு | துயில் | சாவு | உண் | நடை ச | துயில் | சாவு | உண் | நடை | அரசு ரு | சாவு | உண் | நடை | அரசு | துயில்
திங்கள் - புதன்
அட்டவணை (Table)
திங்கள் - புதன். சாமம். | இ - ஆந்தை | உ - காகம் | எ - கோழி | ஒ - மயில் | அ - வல்லூறு க | உண் | நடை | அரசு | துயில் | சாவு உ | நடை | அரசு | துயில் | சாவு | உண் ங | அரசு | துயில் | சாவு | உண் | நடை ச | துயில் | சாவு | உண் | நடை | அரசு ரு | சாவு | உண் | நடை | அரசு | துயில்
இரண்டாமதிகாரம் முற்றிற்று.
முடிவுரை (Colophon / Summary)
முதலாவது செய்யுள் தொகை-20 இரண்டாவது செய்யுள் தொகை-8 } ஆ செய்யுள் தொகை-28 முதலாவது சக்கரத் தொகை 12 இரண்டாவது சக்கரத்தொகை-11 } ஆ சக்கரத் தொகை-23
Page 23
உ குருவேதுணை. மூன்றாம் அதிகாரம். பூர்வபட்சம் வாரங்கள் எ-க்கும் இராக்கலி கொச்சகக் கலிப்பா ஊண்பக்ஷிகள்.
கொச்சகக் கலிப்பா
ஞாயிறுசெவ்வாய்காரண் - நல்லபுந்திமதிகோழி மாயப்பொன்வேமயிலாகும் வளரும்வெள்ளிவல்லூறாம் ஓயாவாந்தைசனியுண்ணு முயருங்கங்குலுணர் கென்ன ஆயும்வேதக்குறமுனிவ னருளாலிசைத்தவரும்பொருளே.
(பொ-ரை.) பூர்வபட்சத்தின் ஞாயிறு, செவ்வாய் இந்தக்கிழமைகளில் இரவில் காகத்தின் ஊணும், புதன்கிழமை திங்கட்கிழமை இவைகளின் இரவில் கோழி ஊணாகும், வியாழக்கிழமையில் மயிலின் ஊணாகும், வெள்ளிக்கிழமையில் வல்லூறின் ஊணாகும், சனிக்கிழமையில் ஆந்தையின் ஊணாகும், என்று அகத்தியமுனிவர் கருணையினால் சொன்னார்-எ-று.
(நேரிசைவெண்பா கடைநிலைப் பட்சிகள்.)
நேரிசைவெண்பா
அந்தி தனிச்செவ்வா யருக்கனருங்காகம் புந்திமதிகோழிபொன் மயிலாம்-பைந்தொடியீர் சுக்கிரனாம்வல்லூறு தூயசனி யாமாந்தை பக்கிநின்ற திந்தப்படி.
(பொ-ரை.) காகமானது செவ்வாய்க்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளிலும், கோழியானது புதன்கிழமை, திங்கட்கிழமைகளிலும், மயில் வியாழக்கிழமையிலும் வல்லூறு வெள்ளிக்கிழமையிலும், ஆந்தை சனிக்கிழமையிலும், வரிசைக்கிரமமாயிருக்கும், இவ்விதியைப்பசிபவளைபலணிந்த பெண்ணே! நீ உணர்வாயாக-எ-று.
வாரங்கள் 7-க்கும் இராச்சாமங்கள் 5-க்கும் பகுத்தமைத்தல்.
Page 24
அக்ஷரம் 5 - பட்சி 5 - சுரமம் 5-க்கும் பயன் ஞாயிறு செவ்வாய் இரவு நேரிசை வெண்பா.
நேரிசை வெண்பா
காகமமுதுண்ணக் காராந்தைதானரசாய் வாகானவல்லூறு மாண்டுவிழத்-தோகாய்கேள் போகமயிலடக்கப் பொற்கோழிகண்டுயிலப் பாகமுடனாய்ந்தறிந்து பார்.
(பொ-ரை.) தோகையையுடைய மயிலன்னாளே! ஞாயிறு செவ்வாய் இரவுகளில் காகமானது உண்ணவும், ஆந்தை அரசாளவும், வல்லூறு மரணமாகவும், மயில் நடக்கவும், கோழி தூங்கவும் இருத்தல் விதியாம் இவ்விதியை நீ பக்குவமாக ஆராய்ந்துபார் - எ-று.
திங்கள் புதன்
வெண்பா
கோழியமுதுண்ணக்கூர்வாய்சமரரசமாய்ச்
- சேழியதாமாந்தையது செத்துவிழந்-தோழிகேள் வல்லூறுமேகுமே மாமயிறூங்குமே சல்லாபமிக்குமேதான்.
(பொ-ரை.) தோழீ! நான் சொல்லுவதைக்கேள்! திங்கட்கிழமை புதன்கிழமை, இவைகளின் இரவில் கோழியானது உண்ணவும், காகம் அரசாளவும், ஆந்தை மரணமாகவும், வல்லூறு நடையாகவும், மயில் தூக்கமாகவுமிருக்கும் இதுவே அப்பட்சிகளின் சல்லாபமாகும் என்றவாறு.
- நீட்டல் விகாரம்.
வியாழம் இரவு.
வெண்பா
தோகையமுதுண்ணச் சொற்கோழிதானரசாய்க் காகமதுசெத்துவிழக் கண்டோமே-யாகையினா லாந்தை யதுநடக்கும் வல்லூறுந்தூங்குமெனச் சாந்தமுலையாயறிந்து சார்.
(பொ-ரை.) மிருதுதன்மையான முலையையுடைய பெண்ணே! நீ நான் சொல்லுவதை ஆராய்ந்துபார் வியாழக்கிழமையின் இரவில் மயில் உண்ணவும், கோழி அரசாளவும் காகம் மரணமாகவும் ஆந்தை நடக்கவும் வல்லூறு தூங்கவும் இருத்தல் விதியாம்-எ-று.
Page 25
வெள்ளி இரவு
வெண்பா
வல்லூறுமுண்ண மாமயிலுந்தானரசாய்ப் பொல்லாதகோழிய துபோயிறக்க-நல்லாய்கேள் காரண்டங்காலடக்கக் கண்டுயிலுமேயாந்தை சீரண்டு மாலுண்டுசேர்.
(பொ-ரை.) நன்மையுள்ளபெண்ணே! கேள் வெள்ளிக்கிழமை இரவில் வல்லூறு உண்ணவும், மயில் அரசாளவும், கோழிமரணமாகவும், காகம் நடக்கவும், ஆந்தை தூங்கவும் விதியாம்-எ-று. 6
வெண்பா
ஆந்தையமுதண்ணும் வல்லூறரசுசெயுஞ் சேர்ந்தமயிலதுவுஞ் செத்துவிழும்-ஏந்திழையீர் கோழிய துநடக்குங் கொம்பார்ந்தகாகமது வீழும்விழிதுயின்று மேல்.
(பொ-ரை.) தாங்கிய ஆபரணங்களையுடையவர்களே! சனிக்கிழமை இரவில் ஆந்தை உண்ணவும், வல்லூறு அரசாளவும், மயில்மரணமாகவும், கோழிநடக்கவும், காகம் தூங்கவும் விதியாம்-எ-று. 7
பூர்வபக்ஷத்திரவுக்கு வாரப்பக்ஷிவகுப்பு.
உரை
முதல்சாமத்துதிக்கின்றபக்ஷி உண்டு 2-ம்சாமத்தில் அரசானாகி 3-ஞ்சாமத்தில்செத்து 4-ஞ்சாமத்தில்நடந்து 5-ஞ்சாம த்தில் தூங்குமெனக்காண்க.
வாக்கியச்சக்கரம்.
அட்டவணை
பூர்வபக்ஷத்திரவு | வாக்கியம். | வாரங்கள் | உண்டு | அரசு | சாவு | நடை | தூக்கம் கூ-ரி-யபோதோ | ஞாயி-செவ் | உ-காகம் | வ்-ஆந்தை | அ-வல்லூறு | ஒ-மயில் | எ-கோழி தேடுனி-மா-தோ | திங்கள்-புதன் | எ-கோழி | உ-காகம் | இ-ஆந்தை | அ-வல்லூறு | ஒ-மயில் போதேகூடி-வா | வியாழம் | ஒ-மயில் | எ-கோழி | உ-காகம் | இ-ஆந்தை | அ-வல்லூறு மா-தோ-தேடுனி | வெள்ளி | அ-வல்லூறு | ஒ-மயில் | எ-கோழி | உ-காகம் | இ-ஆந்தை வீற-னே-கே-ழூ | சனி | இ-ஆந்தை | அ-வல்லூறு | ஒ-மயில் | எ-கோழி | உ-காகம்
Page 26
வாரங்கள் எ-க்கும் இராப்பட்சி.
உரை
இவற்றுள் ஜாமாந்தரபுக்திபார்க்குமிடத்தில் பூர்வபட்சம் பகலைப்போலவே இரவுக்கும் ஜாமம் 1-க்கு நாழிகை 6-க்கும் உண்டி கவ, நடை கஉ, அரசு 2 தூக்கம் ருக, சாவு ௧அ தொழில் மாறாமல்வருமென்று நிச்சயித்தல்.
எழுத்து முறைச் சக்கரம். திங்கள்-புதன். | ஞாயிறு-செவ்வாய்.
அட்டவணை
திங்கள்-புதன்: சாம | ஊண் | அரசு | சாவு | நடை | தூ 1 | உ | இ | அ | ஒ | எ 2 | எ | உ | இ | அ | ஒ 3 | ஒ | எ | உ | இ | அ 4 | அ | ஒ | எ | உ | இ 5 | இ | அ | ஒ | எ | உ
ஞாயிறு-செவ்வாய்: சாம | ஊண் | அரசு | சாவு | நடை | தூ 1 | எ | உ | இ | அ | ஒ 2 | ஒ | எ | உ | இ | அ 3 | அ | ஒ | எ | உ | இ 4 | இ | அ | ஒ | எ | உ 5 | உ | இ | அ | ஒ | எ
வியாழம். | வெள்ளி.
அட்டவணை
வியாழம்: சாம | ஊண் | அரசு | சாவு | நடை | தூ 1 | ஒ | எ | உ | இ | அ 2 | அ | ஒ | எ | உ | இ 3 | இ | அ | ஒ | எ | உ 4 | உ | இ | அ | ஒ | எ 5 | எ | உ | இ | அ | ஒ
வெள்ளி: சாம | ஊண் | அரசு | சாவு | நடை | தூ 1 | அ | ஒ | எ | உ | இ 2 | இ | அ | ஒ | எ | உ 3 | உ | இ | அ | ஒ | எ 4 | எ | உ | இ | அ | ஒ 5 | ஒ | எ | உ | இ | அ
Page 27
அகஸ்தியர் பஞ்சபக்ஷி - சனி. வேற்றுமுறை.
அட்டவணை (Table / Chakra)
சனி. வேற்றுமுறை. [அட்டவணை விவரங்கள்: சா ஊண் அரசு சாவு நடை நித்தி / ஊண் அரசு சாவு நடை நித்தி]
- இ அ ஒ எ உ | ஊண் : உ இ அ ஒ எ
- உ இ அ ஒ எ | நடை : ஒ எ உ இ அ
- எ உ இ அ ஒ | அரசு : இ அ ஒ எ உ
- ஒ எ உ இ அ | துயில் : எ உ இ அ ஒ
- அ ஒ எ உ இ | சாவு : அ ஒ எ உ இ
பூர்வபட்சம் தொழில்முறைச்சக்கரம். ஞாயிறு-செவ்வாய். திங்கள்-புதன்.
அட்டவணை (Table / Chakra)
பூர்வபட்சம் தொழில்முறைச்சக்கரம். ஞாயிறு-செவ்வாய். திங்கள்-புதன். ஞாயிறு-செவ்வாய்: [பக்ஷிகள்: காகம், ஆந்தை, வல்லூறு, மயில், கோழி]
- ஊண், அரசு, சாவு, நடை, துயில்
- அரசு, சாவு, நடை, துயில், ஊண்
- சாவு, நடை, துயில், ஊண், அரசு
- நடை, துயில், ஊண், அரசு, சாவு
- துயில், ஊண், அரசு, சாவு, நடை
திங்கள்-புதன்: [பக்ஷிகள்: கோழி, காகம், ஆந்தை, வல்லூறு, மயில்]
- ஊண், அரசு, சாவு, நடை, துயில்
- அரசு, சாவு, நடை, துயில், ஊண்
- சாவு, நடை, துயில், ஊண், அரசு
- நடை, துயில், ஊண், அரசு, சாவு
- துயில், ஊண், அரசு, சாவு, நடை
Page 28
மூலமும் நூதன உரையும் - வியாழம், வெள்ளி
அட்டவணை (Table)
வியாழம். சா | மயில் | கோ | காகம் | ஆந் | வல் க | ஊண் | அரசு | சாவு | நடை | துயில் உ | அரசு | சாவு | நடை | துயில் | ஊண் ங | சாவு | நடை | துயில் | ஊண் | அரசு ச | நடை | துயில் | ஊண் | அரசு | சாவு ௫ | துயில் | ஊண் | அரசு | சாவு | நடை
வெள்ளி. சா | வல் | மயில் | கோ | காகம் | ஆந் க | ஊண் | அரசு | சாவு | நடை | துயில் உ | அரசு | சாவு | நடை | துயில் | ஊண் ங | சாவு | நடை | துயில் | ஊண் | அரசு ச | நடை | துயில் | ஊண் | அரசு | சாவு ௫ | துயில் | ஊண் | அரசு | சாவு | நடை
சனி
அட்டவணை (Table)
சனி. சாமம் | ஆந்தை | வல்லூ | மயில் | கோழி | காகம் க | ஊண் | அரசு | சாவு | நடை | துயில் உ | அரசு | சாவு | நடை | துயில் | ஊண் ங | சாவு | நடை | துயில் | ஊண் | அரசு ச | நடை | துயில் | ஊண் | அரசு | சாவு ௫ | துயில் | ஊண் | அரசு | சாவு | நடை
Page 29
குருவே துணை. நான்காம் அதிகாரம். தேய்பிறையாகிய அமரபக்ஷத்துக்கு பகல் வாரங்கள் எ-க்கும் உண்பக்ஷி
(நேரிசை வெண்பா.)
திங்கட்சனிமயிலாஞ் சேயருக்கன்கோழியதாம் பொங்குபுதன்காகம் பேராமை-மங்கையே அந்தணனாக்கந்தை யணிபுகர்க்கும்வல்லூறு சந்ததமும்பிற்பகற்கே சாற்று.
(பொ-ரை.) பெண்ணே! (அமரபட்சத்தின்) திங்கட்கிழமை சனிக்கிழமை, இவைகளின் பகலில் மயிலானது உண்ணும் செவ்வாய்க்கிழமை, ஞாயிற்றுக்கிழமை, இவைகளின் பகலில் கோழியானது உண்ணும், புதன்கிழமையின் பகலில் காகம் உண்ணும், வியாழக்கிழமையின் பகலில் ஆந்தை உண்ணும், வெள்ளிக்கிழமையின் பகலில் வல்லூறு உண்ணும், இவ்விதியை எக்காலமும், அமரபட்சத்துக்கே சொல்லக்கடவாய்-எ-று.
இராப்பகல் நாழிகை கூ0 க்கும் படுபக்ஷி
(அறுசீர்க்கழிநெடிலடி யாசிரிய விருத்தம்.)
கூறிடுந்திங்களாந்தை குலவுசேயவல்லூறாகு மீறியவருக்கன்காகம் வெள்ளியும்-புதனுமஞ்ஞை பேறிபசனிவியாழங் கோழியாமியம்புங்காலை யாறுபத்தாருங்கன்னலதிற்குமாகுமரபக்கம்.
(பொ-ரை.) அமரபட்சம் இராத்திரி அறுபது நாழிகைகளும், திங்கட்கிழமையில் ஆந்தையும், செவ்வாய்க்கிழமையில் வல்லூறும், ஞாயிற்றுக்கிழமையில் காகமும், வெள்ளிக்கிழமை, புதன்கிழமைகளில் மயிலும் சனிக்கிழமை, வியாழக்கிழமைகளில் கோழியும் படுபட்சிகளாம் எனக்கூறப்படும்-எ-று.
பக்ஷிகளின் செய்கை
நேரிசைவெண்பா.
உண்டுடனேசெத்து முறங்கியரசாண்டும் விண்டுநடக்கும் விழிமடவீ-ரன்றிரவில் உண்டுமுறங்கு முடனே நடந்திறக்குங் கண்டரசனாளு மெனக்காண்.
Page 30
மூலமும் நூதன உரையும்.
(பொ-ரை.) விழிகளையுடையமடமாதர்களே! பகலில் உண்டும் செத்தும், தூங்கியும், அரசாண்டும், நடந்துவரும், இராத்திரியில் உண்டும், தூங்கியும், நடந்தும், செத்தும், அரசாண்டும், வருமென்று காண்பீர்களாக-எ-று.
வாரங்கள் எ க்கும் பகல்சாமங்கள் ரு க்கும் பகுத்தமைத்தல். அக்ஷரம் 5-சாமம் 5-பக்ஷி 5-க்கும் பயனிலை திங்கள், சனிபகல்.
வெண்பா
வரியார்மயிலுண்ணமாலாகுமாந்தை திரியாதோதேசமெல்லாஞ்சென்று-பெரிய வாரணமேமண்ணாளவல்லூறுதூங்கக் காரணத்தாற்காக்கைசாங்கண்.
(பொ-ரை.) திங்கட்கிழமை, சனிக்கிழமைகளின் பகலில் சித்திரவரிகள்பொருந்தியமயில் உண்ணவும், ஆந்தை நடக்கவும், கோழி, அரசாளவும், வல்லூறு தூங்கவும் காக்கைசாவவும் ஆகும்-எ-று. 4
வியாழம் பகல்.
வெண்பா
கண்டாந்தையுண்ணக்கருங்கொழிதானடக்க வண்டாயுண்வல்லூறுமன்னவனாய்-விண்ட விழிமூடுமேகாகம் வீணாகமஞ்ஞை பழிதேடலேபிறக்கும்பார்
(பொ-ரை.) வியாழக்கிழமையில் ஆந்தை உண்ணவும், கோழிநடக்கவும், வல்லூறு அரசாளவும், காகம் தூங்கவும், மஞ்ஞை இறக்கவும் ஆகும் இதை நீ ஆராய்ந்துபார்-எ-று. 5
செவ்வாய், ஞாயிறுபகல்.
வெண்பா
சொற்கோழிபுண்ணத்தொடர்ந்தேகும்வல்லூறு நற்காகநன்றாக நாடாளப்-பொற்காவின் மண்ணின்மயிலுறங்க மாலாந்தைபேமரணம் எண்ணுமறிவாலெடு.
(பொ-ரை.) செவ்வாய்க்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளின் பகலில் கோழி உண்ணவும் வல்லூறுநடக்கவும், காகம் அரசாளவும்,மயில் உறங்கவும் ஆந்தைமரணமாகவும் ஆமென்று நினைக்கின்ற அறிவினால் ஆய்ந்தெடு-எ-று. 6
Page 31
வெள்ளி பகல்.
வெண்பா
வந்தபிற்பக்கத்தில் வல்லூ றுண்ணவே முந்துகருங் காக முடனேகும் அந்தமயி லானாளுமேபூமி யாது வாந்தையேகண்டுபிலு மானாமேகோழியதேவந்து.
(பொ-ரை.) அமரபக்கம் வெள்ளிக்கிழமை பகலில் வல்லூறு உண்ணவும் காகம் நடக்கவும் மயில் அரசாளவும், ஆந்தை தூங்கவும், கோழி மரணமும் ஆகும்-எ-று.
புதன் பகல்.
வெண்பா
தண்காகமுண்ணக் தனிமயிலூர்தானடக்க மண்காவலாந்தையது வந்தாள-பெண்கொடியே கோழிபுறங்கக் குலவலியாசேசாக வாழி மதனுக்கெனவேவை.
(பொ-ரை.) பெண்கொடியே! புதன்கிழமை பகலில் காகம் உண்ணவும் மயில் நடக்கவும், ஆந்தை அரசாளவும், கோழி தூங்கவும், வல்லூறு சாகவும்! நீ இதை உணர்வகையாக-எ-று.
அமரபட்சம் பகல். திதி 15 க்கும் வாரங்கள் 7-க்கும் வாரம் 1-க்கு பகல்நாழிகை 30-க்கு சாமம் 5-ஆகவும் சாமம் 1-க்கு நாழிகை 6-ஆகவும் பகுத்தமைத்தல். வாக்கியச் சக்கரம். அமரபட்சம்
அட்டவணை / சக்கரம்
வாக்கியம். | வாரம் | உண்டி | சாவு | தூக்கம் | அரசு | நடை ஒ-மி-தே-வா-யு | திங்க சனி | ஒ மயில் | இ ஆந்தை | கோழி | அ வல்லூ | உ காகம் ஊகோ-இதேவா | புதன் | உ காகம் | ஒ மயில் | இ ஆந்தை | கோழி | அ வல்லூ ஆ-றா-றே-ஈடே | வெள்ளி | அ வல்லூ | உ காகம் | ஒ மயில் | இ ஆந்தை | கோழி எ-த-வூ-மோ-தீ | ஞாயி செவ் | கோழி | அ வல்லூ | உ காகம் | ஒ மயில் | இ ஆந்தை ஈ-தே-வ-ரூ-போ | வியா ழம் | இ ஆந்தை | கோழி | அ வல்லூ | உ காகம் | ஒ மயில்
Page 32
வாரங்கள் 7-க்கும் பகல்பட்சி
உரை
முதல்சாமத்துதிக்கின்ற பக்ஷி-உண்டு, 2-ம்-சாமத்தில்-செத்து 3-ம்சாமத்தில்-தூங்கி, 4-ம்-சாமத்தில் அரசானாகி, 5ம்-சாமத்தில்-நடக்கும். அன்றியும் சாமாந்தரபுத்தியில் பூர்வபக்ஷம் பகலைப்போலவே ஊண்-கவ, நடை-கந அரசு2.தூக்கம் ருஅ, சாவு-ற. ஆ நாழிகை 6-க்கும் தொழில் மாறாமல் வருமெனக் காண்க.
எழுத்துமுறைச் சக்கரம்.
அட்டவணை / சக்கரம்
திங்கள் - சனி. வியாழம். ஞாயிறு - செவ்வாய். வெள்ளி.
எழுத்துமுறைச் சக்கரம்: திங்கள்-சனி, வியாழம், ஞாயிறு-செவ்வாய், வெள்ளி ஆகிய வார நாட்களுக்கான சாமங்கள் மற்றும் ஊண், நடை, அரசு, நித்திரை, சாவு தொழில்களுக்குரிய அட்சரங்களின் கட்டமைப்பு அட்டவணை.
Page 33
அகத்தியர் பஞ்சபக்ஷி - புதன் - வேற்றுமுறை
சக்கரம்
சா | உண் | நடை | அரசு | துயில் | சாவு 1 | உ | ஒ | இ | எ | அ 2 | ஒ | இ | எ | அ | உ 3 | இ | எ | அ | உ | ஒ 4 | எ | அ | உ | ஒ | இ 5 | அ | உ | ஒ | இ | எ
தொழில் | உண் | நடை | அரசு | துயில் | சாவு ஊண் | ஒ | இ | எ | அ | உ சாவு | எ | அ | உ | ஒ | இ துயில் | உ | ஒ | இ | எ | அ அரசு | இ | எ | அ | உ | ஒ நடை | அ | உ | ஒ | இ | எ
அமரபட்சம்பகல் தொழில்முறைச் சக்கரம்.
சக்கரம்
திங்கள்-சனி. சா ம | ஒ மயில் | இ ஆந்தை | எ காகம் | அ வல்லூறு | வ உ காகம் 1 | ஊண் | நடை | அரசு | துயில் | சாவு 2 | சாவு | ஊண் | நடை | அரசு | துயில் 3 | துயில் | சாவு | ஊண் | நடை | அரசு 4 | அரசு | துயில் | சாவு | ஊண் | நடை 5 | நடை | அரசு | துயில் | சாவு | ஊண்
வியாழம். சா ம | இ ஆந்தை | எ காகம் | அ வல்லூறு | வ உ காகம் | ஒ மயில் 1 | ஊண் | நடை | அரசு | துயில் | சாவு 2 | சாவு | ஊண் | நடை | அரசு | துயில் 3 | துயில் | சாவு | ஊண் | நடை | அரசு 4 | அரசு | துயில் | சாவு | ஊண் | நடை 5 | நடை | அரசு | துயில் | சாவு | ஊண்
Page 34
மூலமும் நூதன உரையும் - ஞாயிறு-செவ்வாய், வெள்ளி / புதன்
சக்கரம் (அட்டவணை)
ஞாயிறு-செவ்வாய். ரா / ம | அ-வ / ஆந்தை | உ / காகம் | ஊ-ஒ / மயில் | ஔ / கோழி 1 | ஊண் | நடை | அரசு | துயில் | சாவு 2 | சாவு | ஊண் | நடை | அரசு | துயில் 3 | துயில் | சாவு | ஊண் | நடை | அரசு 4 | அரசு | துயில் | சாவு | ஊண் | நடை 5 | நடை | அரசு | துயில் | சாவு | ஊண்
வெள்ளி. ரா / ம | அ-வ / ஆந்தை | உ / காகம் | ஊ-ஒ / மயில் | ஔ / கோழி 1 | ஊண் | நடை | அரசு | துயில் | சாவு 2 | சாவு | ஊண் | நடை | அரசு | துயில் 3 | துயில் | சாவு | ஊண் | நடை | அரசு 4 | அரசு | துயில் | சாவு | ஊண் | நடை 5 | நடை | அரசு | துயில் | சாவு | ஊண்
புதன். ராசம் | சாகசம் | படம் | ஆந்தை | கோழி | காகம் 1 | ஊண் | நடை | அரசு | துயில் | சாவு 2 | சாவு | ஊண் | நடை | அரசு | துயில் 3 | துயில் | சாவு | ஊண் | நடை | அரசு 4 | அரசு | துயில் | சாவு | ஊண் | நடை 5 | நடை | அரசு | துயில் | சாவு | ஊண்
நான்காம்காண்டமுற்றிற்று. மூன்றாவது செய்யுள் தொகை-35 நான்காவது செய்யுள் தொகை-8 } ஆக செய்யுள்தொகை-43 மூன்றாவதாக்கரத்தொகை 36 நான்காவது சக்கரத்தொகை-12 } ஆக சக்கரத்தொகை-48
Page 35
வியாழம் இரவு.
வெண்பா
செப்பக்கா காண்டீரா னிற்கநடக்கும்வலியான் றப்பில்லாகோழிசகாயாளும்-ஒப்பிலா மாலார்தூங்குநிலும் வாழ்மயிலுஞ்சாவாகுஞ் சேலார்விழிமடவீர் செப்பு.
(பொ-ரை.) வியாழக்கிழமை இராத்திரியில் காகம் உண்ணவும் வல்லூறுநடக்கவும், கோழி அரசாளவும், ஆந்தை தூங்கவும், மயில் சாவவுமாமென்று நீலோற்பலமென்னுங்கண்களையுடையபெண்ணே! நீ சொல்லுவாய்-எ-று.
செவ்வாய், ஞாயிறு இரவு.
வெண்பா
வல்லூறினீருண்ண வார்கோழிபோடக்க நல்லாந்தைவந்திருந்து நாடாளப்-பொல்லாத் தூக்கமுறமயிலாங் கொல்லவிழுங்காகங் காக்கமிலைபொற்பாற் றான்.
(பொ-ரை.) செவ்வாய்க்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளின் இராத்திரிகளில் வல்லூறு உண்ணவும், கோழிநடக்கவும், ஆந்தை அரசாளவும், மயில் தூங்கவும் காகம் சாவவும் விதியாம், அக்காலங்களில் எதிர்க்க மலையாம பொற்பாதாம்-எ-று.
அமர பக்ஷ இரவுக்கு வாரப்பட்சி வகுப்பு.
முதல்யாமத்திலுதித்தின்றபட்சி உண்டு 2-ம் சாமத்தில் தூங்கி 3-மாமத்தில் நடந்து 4-ம் சாமத்தில் செத்து 5-ம்சாமத்தில் அரசுசெய்யுமெனக்காண்க.
வாக்கியச் சக்கரம். அமரபட்சம இரவு.
Page 36
மூலமும் நூதன உரையும். வாரங்கள் எ க்கும் இராப்பட்சி
Prose
இதனுள் சாமாந்தரபுக்திபார்க்குமிடத்தில் பூர்வபக்ஷம் பகலைப் போலவே தொழில் சாமம் 1-க்கு உண் கவ, நடை கஉ, அரசு உ, தூக்கம் ௩, சாவு வ, ஆக நாழிகை 6-ஆகவும் கூடிய சாமம் 5-க்கும் கோழிற்செய்கைகெட்டு மாறிய நடுநிலைக் காண்க.
எழுத்துமுறைச் சக்கரம்.
எழுத்துமுறைச் சக்கரம்.
Table
திங்கள்-சனி.
சாம | ஊண் | நடை | அரசு | தூ | சாவு 1 | எ | இ | ஒ | உ | அ 2 | ஒ | உ | அ | எ | இ 3 | அ | எ | இ | ஒ | உ 4 | இ | ஒ | உ | அ | எ 5 | உ | அ | எ | இ | ஒ
வெள்ளி.
சாம | ஊண் | நடை | அரசு | தூ | சாவு 1 | ஒ | உ | அ | எ | இ 2 | அ | எ | இ | ஒ | உ 3 | இ | ஒ | உ | அ | எ 4 | உ | அ | எ | இ | ஒ 5 | எ | இ | ஒ | உ | அ
செவ்வாய்-ஞாயிறு
சாம | ஊண் | நடை | அரசு | தூ | சாவு 1 | அ | எ | இ | ஒ | உ 2 | இ | ஒ | உ | அ | எ 3 | உ | அ | எ | இ | ஒ 4 | எ | இ | ஒ | உ | அ 5 | ஒ | உ | அ | எ | இ
புதன்.
சாம | ஊண் | நடை | அரசு | தூ | சாவு 1 | இ | ஒ | உ | அ | எ 2 | உ | அ | எ | இ | ஒ 3 | எ | இ | ஒ | உ | அ 4 | ஒ | உ | அ | எ | இ 5 | அ | எ | இ | ஒ | உ
Page 37
அகத்தியர் பஞ்சபக்ஷி - விவரம்.
சக்கரம்
சாமம் | உண்டி. | நடை | அரசு | தூக்கம் | சாவு 1 | உ | அ | எ | இ | ஒ 2 | எ | இ | ஒ | உ | அ 3 | ஒ | உ | அ | எ | இ 4 | அ | எ | இ | ஒ | உ 5 | இ | ஒ | உ | அ | எ
தொழில்முறைச் சக்கரம்.
சக்கரம்
திங்கள் - சனி. சா | எ - கோழி | இ - ஆந்தை | ஒ - மயில் | உ, கா - காகம் | அ, வ - வல்லூ. 1 | ஊண் | நடை | அரசு | துயி | சாவு 2 | துயி | சாவு | ஊண் | நடை | அரசு 3 | நடை | அரசு | துயி | சாவு | ஊண் 4 | சாவு | ஊண் | நடை | அரசு | துயி 5 | அரசு | துயி | சாவு | ஊண் | நடை
வெள்ளி. சா | ஒ - மயில் | உ, கா - காகம் | அ, வ - வல்லூ | எ - கோழி | இ - ஆந்தை 1 | ஊண் | நடை | அரசு | துயி | சாவு 2 | துயி | சாவு | ஊண் | நடை | அரசு 3 | நடை | அரசு | துயி | சாவு | ஊண் 4 | சாவு | ஊண் | நடை | அரசு | துயி 5 | அரசு | துயி | சாவு | ஊண் | நடை
Page 38
மூலமும் நூதன உரையும். - உகூ
அட்டவணை
செவ்வாய்-ஞாயிறு
சா - மம் | அ-வல்லூ | எ-கோ | இ-ஆந்தை | ஒ-மயில் | உ-காகம் 1 | ஊண் | நடை | அரசு | துயில் | சாவு 2 | துயில் | சாவு | ஊண் | நடை | அரசு 3 | நடை | அரசு | துயில் | சாவு | ஊண் 4 | சாவு | ஊண் | நடை | அரசு | துயில் 5 | அரசு | துயில் | சாவு | ஊண் | நடை
புதன்.
அட்டவணை
சா-மம் | இ-ஆந்தை | ஒ-மயில் | உ-காகம் | அ-வல்லூ | எ-கோ 1 | ஊண் | நடை | அரசு | துயில் | சாவு 2 | துயில் | சாவு | ஊண் | நடை | அரசு 3 | நடை | அரசு | துயில் | சாவு | ஊண் 4 | சாவு | ஊண் | நடை | அரசு | துயில் 5 | அரசு | துயில் | சாவு | ஊண் | நடை
வியாழம்.
அட்டவணை
சாமம் | உ - காகம் | அ-வல்லூ | எ - கோழி | இ - ஆந்தை | ஒ - மயில் 1 | ஊண் | நடை | அரசு | துயில் | சாவு 2 | துயில் | சாவு | ஊண் | நடை | அரசு 3 | நடை | அரசு | துயில் | சாவு | ஊண் 4 | சாவு | ஊண் | நடை | அரசு | துயில் 5 | அரசு | துயில் | சாவு | ஊண் | நடை
Page 39
உ குருவேதுணை. ஆறாம் அதிகாரம். பூர்வபட்சம். பக்ஷிகளின் செய்கைப் பயன் அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம். ஊணடியின் பலன்.
அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்
போசனமாகிற் நிலவாழ்ம்போனார் மீள்வார்போங்கவலை காசினிவாழுமழைபொழியுங்களவு மில்லைக்கதிரினையும் பேசிற்கன்னியேறுகும்பி னியுந் தீரும் பெண்பெறுவாள் வாசிசொழும்பொன்வாணியமா மன்னரைவெல்வாய்மாங்குயிலே.
(பொ-ரை.) மாமரத்திலுள்ள குயிலன்னானே! பூர்வபட்சத்தில் பட்சிகளுக்கு உணவுகாலமானால் அரசுவாழ்வான், வெளியே போனவர்கள் திரும்பிவருவார்கள், துன்பங்களெல்லாம் நீங்கும் உலகத்தார் க்ஷேமமடைவார்கள், மழைபொழியும், திருட்டுநடவாது, பயிர் விளையும், கன்னிகள் நன்மையையடைவார்கள், நோய்நீங்கும், பெண் மக்களைப்பெறுவாள் பொன்சேரும், வர்த்தகலாபமுண்டாம், அரசர்களையும் ஜெயிப்பாய்-எ-று.
நடையின் பலன்.
அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்
யாத்திரையாகினிலைகுலையுமொன்னார் வெல்வர் நிதிபோ காத்திரமில்லாக்கதிர்விளையுங்கன்னியர் வாழ்க்கைநன்றாகா மாத்திரள்செல்லும்பொருள்கூடா வேட்கைதவிர்ந்துமணங்கூடா சூத்திரஞ்சொன்னபடியாலே சொன்னார் பெரியோர்சுரிகுழலே.
(பொ-ரை.) சுந்த கூந்தலையுடையாளே! பூர்வபட்சத்தில் பக்ஷிகளுக்கு நடைக்காலமானால் இருந்தவிடம் அழிந்துபோம், பகைவர் வெற்றியடைவார்கள், செல்வம்நாசமாம், சோற்றுப்பயிர்விளைவுண்டாம் பெண்கள் வாழ்வுநன்மையாயிராது பசுக்கூட்டங்கள் நஷ்டப்படும் செல்லுஞ்சேராது கலியாணம் தவிர்ந்துபோம் இவ்விஷயங்களை வேதசூத்திரம் சொன்னபடியே பெரியோர்கள் எடுத்துச்சொன்னார்கள் என்றவாறு.
Page 40
அரசின் பலன்.
வெண்பா
அரசேசெப்பிற்பூமிபேறு மாசராலேபலனெய்து முரசமதிரும்வரிசையுடன்முண்ட கருமந்தான்விலகும் பரிசும்பேரியோர்திறலிடுவர்பழைய பிணிபோம்பயமில்லை புரைபோங்களவுந்தான்காணும் போக்குமில்லைப்புரிகுழலே.
(பொ-ரை.) சுருண்ட கூந்தலையுடையாளே! பூர்வபட்சத்தில் பட்சிகளுக்கு அரசுகாலமானால் பூமிபலனுண்டாகும். இராஜாக்களால்பிரயோஜனமுண்டாம் சகலவாத்தியங்களுடன்எத்தகாரியமுங்கைகூடும், சன்மானமுண்டாம், பெரியோர்கள் வாழ்த்துவார்கள், பழமையாயிருந்தநோய்தீரும், பயம் இல்லை போக முண்டாம், களவுகண்டாம், ஆனால் போக்கில்லை-எ-று.
தூங்கும் பலன்.
வெண்பா
தூங்குமாகினோய்மாறா தும்போனார்தாமீளார் ஆங்கேகருமநன்றாகாவரிவைவாழ்க்கைத்தாழ்வாகுந் தீங்கேயல்லான்மழைபொழியார்செந்நெல்வினைவாச்செய்குறியீர் ஓங்கிமணமுந்தாராதே யுண்மையாகவுரைத்தோமே.
(பொ-ரை.) பூர்வபட்சத்தில் பட்சிகளுக்கு தூக்ககாலமானால் பிணிவிலகாது, வெளியேபோனவர்கள் திரும்பிவரமாட்டார்கள், எடுத்தகாரியங்களெல்லாம் தீமையையே விளைவிக்கும், பெண்வாழ்வு குறையும் கெடுதியேயல்லாமல் மழைபொழிவதில்லை, நெற்பயிர்விளையாது, விவாகமுநடைபெறாது, இவைகளை நாம் உண்மையாகச்சொன்னோம்-எ-று.
துஞ்சும்பலன்.
வெண்பா
துஞ்சுமாகிற்சாவசொலுந் தொலையாப்பிணியுந்தானெய்தும் நெஞ்சினினைந்தபொருள்கூடாதீதியங்காணார் நிலைகுலைவார் வஞ்சநோயுமிகவுண்டாமனையாள் வெறுக்கிலுறவாகாள் கஞ்சமலரார்குழலாலேகருத்தாயுரைத்தபடியறிவே.
(பொ-ரை.) தாமரைமலர் முடித்தகூந்தலையுடையாளே! பூர்வபட்சத்தில் பட்சிகளுக்கு மரணகாலமானால், சாவண்டாம், ஒழியாத நோய்வந்து சேரும், மனத்தில் நினைத்தபொருள் கைகூடாது, செல்வங்கேடாகும் ஸ்தானப்பிரஷ்டமடைவார், மிகவும் நோயுண்டாகும், பெண்சாதிகோபித்தால் மறுபடியும் சினேகிக்காள், இவ்விஷயங்கள் கவனத்துடன் சொல்லப்பட்டனவென்று அறிவாயாக-எ-று.
Page 41
அகஸ்தியர் பஞ்சபக்ஷி இதுவுமது அமரபக்ஷம். போசனத்தின் பலன்
வெண்பா
கெடுதியுடனேகாணார் கிளையுடன் வாழ்வுபேராம் கடுகிப்பிணியுந்தீருங்கலக்கமோ சற்றுமில்லை அடைமழைபெருகவுண்டா மகமேறநிற்குந்தன்மை முடுகியபயணமில்லை மொழிந்தபின்னுண்ணுங்காலை.
(பொ-ரை.) அமரபட்சத்தில் பட்சிகளின் உணவுபலமானால் உடனேகெடுதியுண்டாகமாட்டாது, சுற்றத்தாரும் வாழ்வும் லாபமாம் நோய்தீரும், துக்கம்சற்றேனுமில்லை பெருமழையுண்டாம், வீட்டில்சுபகாரியங்கள் நிறைவேறும், பயணமில்லை என்றறியவும்-எ-று. (6)
யாத்திரையின் பலன்.
வெண்பா
வெற்றியுஞ்சுகமு முண்டாம்வியாதியுமாற்றும் பின்பு பற்றியகருமந்தானும் பயரில்லையெழுந்தாடூர் உற்றோர்கேடுகதிகாணா ருறுமழையுண்டுதூரத் துற்றவர்வரவுகூடிச் சொல்லும்பின்னடக்கத்தோன்றில்.
(பொ-ரை.) அமரபட்சத்தில் பட்சிகளின் நடைகாலமானால் வெற்றி உண்டாம் சுகமுண்டாம். வியாதிகள் நீங்கும், நற்கருமமுண்டாம், பயமில்லை, வீடுவாசல் விருத்தியாகும், கெடுதி உண்டாகமாட்டாது மழைபெய்யும், வெளியே சென்றவர்கள் வந்துகேர்வார்கள் என்று சொல்லவும்-எ-று. (7)
இராச்சியத்தின்பலன்.
வெண்பா
ஜெயமொடுசுகமுமுண்டு சிறந்ததோர்பயணந்தன்னில் புயன்மழையுமற்பம் புவிதனில் கலக்கமில்லை இயல்பினாற்பெறலாம் வெற்றி யிலாபமுநீடுமாகும் பயன்விளையாது நாளு மரசதாம்பறவையாகில்.
(பொ-ரை.) அமரபட்சத்தில் பட்சிகளின் அரசகாலமானால் ஜெயம், சுகம், இவைகளுண்டாம், போகிறபயணத்தில்சொற்பமழையுண்டாம், உலகத்தில் கலகமிராது ஜெயம்பெறலாம் இல்லம் விர்த்தியாகும் பயமுண்டாகமாட்டாது என்றுணரவும்-எ-று. (8)
அனந்தலின் பலன்,
வெண்பா
உன்னிடிற்பிணியுமல்லா லொருபிணியதிகமாகும் மன்னினுமழையோவில்லை வைத்தனகெடுகிகாணும்
Page 42
துன்னியநெஞ்சிற்றோடர்ந் தோன்றிடுங்கருமஞ்செய்யும் பன்னியேயுதிக்கும்பக்ஷி பயீனுடனுறங்குமாகில்.
(பொ-ரை.) அமரபட்சத்தில் பட்சிகளின் தூக்ககாலமானால் சரீரநோய் முன்னிருந்ததைப்பார்க்கிலும் அதிகமாகும், மழைபெய்யாது எல்லாம் கெடுதியாகவேமுடியும், மனசில்தோஷமுண்டாகும், செய்யுங்காரியங்கள் தீமையாகவேமுடியும் என்றறியவும்-எ-று. (9)
மோட்சத்தின் பலன்.
காவினிற்பயமுமுண்டு கலகமாங்கருமமெல்லாந் தீவினைபடுமற்றல்லிற் செய்யநல்லிசைகளாகாச் சாவினில்விழுந்தபக்ஷி தனித்துவந்துதிப்பராலே பூவினிற்சிறந்தமாதே புகன்றனர்புள்ளினூலே.
(பொ-ரை.) அமரபட்சத்தில் பட்சிகளின் மரணகாலமானால் பயம் உண்டாகும் கலகமுண்டாம், நீங்குநன்மை மேன்மேலும் கீர்த்தியாகும், எதுவும் நன்மையாக மாட்டாதென்று பெரியோர்கள் சொன்னார்கள்-எ-று. (10)
சூக்குமப்பட்சி
நேரிசைவெண்பா
ஒதுபிலோமபக்ஷி யொன்றுண்ணுமொன்றுபோம் ஏதுமிலாவொன்றரையிலேகுமே - நீடியின் றன்றியுடனொன்றரையின் நடப்பத்தானுறங்கும் ஒன்றுழுதலாலவத்துலகு.
(பொ-ரை) சூக்குமப்பட்சிகளில் ஒருநாழிகை ஊணும், ஒருநாழிகை மரணமும், ஒன்றரைநாழிகை நடையும், ஒன்றரைநாழிகை தூக்கமும், ஒருநாழிகை அரசும் ஆகும்-எ-று. (11)
லயத்தின் பலன்.
போசனத்தின் மூத்தோனும் போயடக்கினிலையோனும் ஆசனத்தினெடியோனு மாயவனை - மாகூறக் தூங்குமவன்குள்ளன் றுஞ்சிடுமேயொக்கில் ஆங்கிருவரோராண்டறி.
[பொ-ரை] போஜனகாலத்தில் மூத்தவனும், நடைக்காலத்தில் இளையவனும், அரசுகாலத்தில் நீண்டவனும் தூங்குங்காலத்தில் குள்ளனும், சாவுங்காலத்தில் ஒரேவயதெனறறிந்து கொள்-எ-று. (12)
Page 43
அவஸ்தை பலன்.
உண்கின்றான்பால னுயார்நடையானேகுமரன் பண்பாமரசனே பாராள்வா-னெண்பெறு முற்றுந்துயில்கிழவன் மோனமுடிந்தோன்சாவோன் பற்றுந்தவத்தின்பலன்.
[பொ-ரை] உண்கிறவன்பாலனும், நடக்கிறவன்குமரனும் உலகாள்பவன் அரசனும், தூங்குகிறவன் கிழவனும், மௌனமுற்றோன் செத்தவனும்ஆகக்கொள்வதேஉயர்ந்ததவத்தின்பலனாம்-எ-று.
உருவநிதானப் பலன்.
அறுசீர்க்கழிநெடிலடி யாசிரியவிருத்தம்
ஊணினிலுயர்ந்தோன் வெல்வனுயார்நடைகுறளன்வெல்வன் காணுறுநெடுரோமத்தன் கடுகராச்சியத்தில்வெல்வன் தானுருந்தூக்கந்தன்னி லிருவருள்வலுத்தோன்வெல்வன். வேணுமோமரணந்தன்னிலிருவருள் வலுத்தோன்வெல்வன்.
(பொ-ரை) ஊணில் உயர்ந்தவனும், நடையில்குள்ளனும், அரசில்நெட்ட சரீரமுள்ளவனும், தூக்கத்தில் பலமுள்ளவனும், மரணத்தில் இருவரில்பலமுள்ளவனும் ஜெயிப்பார்கள் - எ-று.
வலுவின்பலன்.
நேரிசை வெண்பா
ஊணினடைவலிது நடையிலரசுறுதி நாணிலுறங்கிடவு நன்றாகாப்-பேணி விலகுகுழலாளே யிறப்பும் பொல்லாதென் றுலகுபுகழ வரை.
(பொ-ரை) உணவைப்பார்க்கிலும் நடையும், நன்மையைப்பார்க்கிலும் அரசும், வலிவுடையதாம், தூக்கம் நன்மையுடையதாகாது, மற்றவைகளொன்று சொல்லுவாய்.
வெற்றியின்பலன்.
உண்பானடப்பானை வெல்வனடப்பானுந் தன்பாலரசனைபுந்தானழிப்பன் - மன்புகழ்த் திருப்பான்துயில்வானை வெல்லத்துயில்வோன மரிப்பானை வெல்வன்மதி.
(பொ-ரை.) உண்பவன் நடப்பவனை வெல்வான், நடப்பவனும் அரசனை அழிப்பான், அரசன் தூங்குபவனை வெல்வான், தூங்குபவன் சாவானை வெல்வான் என்றுநினை-எ-று.
Page 44
இருவருள்வெல்லுஞ்செய்கைப்பலன்.
(அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்)
நல்லூணாகிற்கிழவன்வெல்வனடையேயாகிலிளவல்வெல்வன் செல்லத்தூக்கமமாகிற் சிறந்தோன்மிகவும்வென்றிடுவன் எல்லாமரசே யாமாகிலிளையோன்வெல்வானெந்நாளும் பொல்லாச்சாவேயாமாகிற் போனாரிருவர்மீளாதே.
(பொ-ரை.) ஊணானால் கிழவன்வெல்வன் நடையானால் பாலியன்வெல்வன், தூக்கமானால் சிறந்தவன் வெல்வன், அரசாகில் இளைஞன்வெல்வன், எந்நாளும்பொல்லாத சாவானால் இருவரும் மீளமாட்டார்கள்-எ-று.
பருவநிதானப்பலன்.
உரைத்திடுமிருவர்பேரு மொருபக்ஷியுண்ணுமாகில் நரைத்திடுமவனே வெல்வனடையினினெடியோனெல்வன் கருத்தரசிளையோன்வெல்வன் கடுங்குட்டன் றுயிலில்வெல்வன் மரித்திடச்சரியாமென்றே மாதவருரைத்தார்மாதே.
(பொ-ரை.) இரண்டுபேர்பயரும் ஒருபட்சியாய் உண்ணுமானால் அவர்களில் கிழவனே வெல்வன், நடையினில் நீண்டவன் வெல்வன், அரசினில் இளைஞன் வெல்வன் தூக்கத்தில் குள்ளன் வெல்வன், சாவில் சரியானவன் வெல்வன் என்று தவமுடையவர்கள் சொன்னார்கள்-எ-று.
ஒட்டுஞ்செய்கைப்பலன்
(நேரிசைவெண்பா.)
உண்பானடப்பானையோட்டுமிருவர்களும் பண்பாம்பதியைப்பரிந்தோட்டும் - பெண்பாவாய் துஞ்சினோர்க்கஞ்சுந்துயில்வோனையாவருமே யஞ்சலென்றழைத்திடுவராம்.
(பொ-ரை.) உண்பவன்நடப்பவனெ ஜெயய்ப்பான் இவ்விருவரும் தூங்குகிறவனுக்குப்பயப்படுவார்கள், தூங்குகிறவனையாவரும் பயப்படாதேயென்று சொல்லி யழைப்பார்கள்-எ-று.
Page 45
உ குருவேதுணை. ஏழாம் அதிகாரம். பூர்வபட்சம நிறப்பக்ஷி
நேரிசை வெண்பா.
வல்லூறு பொன்னிறமாம் வாழுாந்தை வெள்ளியதாம் செல்லாருங் காகஞ் சிவப்பாகு-நல்லாய்கேள் கோழிபருபச்சை குளிர்ந்தமயில்கறுப்பாம் நாழிமணக்க நவில்
(பொ-ரை.) பெண்ணே ! பூர்வபட்சத்தில் வல்லூறு பொன்னிறமாம், ஆந்தை வெள்ளிநிறமாம், காகம் சிவப்புநிறமாம், கோழி பச்சைநிறமாம், மயில் கறுப்பு நிறமாம், நாழிகையின கணக்குப்படி சொல்-எ-று. (1)
அமரபட்சம் நிறப்பக்ஷி
ஆந்தை சிவப்பாமணிகாகம் பொன்னிறமாம் வாய்ந்தபச்சைவண்ண மயிலாகும்-ஏந்திழையீர் வெள்ளையாங்கோழி விளங்குவளிகறுப்பு வல்லூறுக்காண்டுமதி.
(பொ-ரை) அமரபட்சத்தில் ஆந்தை சிவப்பாகும் காகம்பொன்னிறமாகும் மயில் பச்சையாம், கோழிவெண்மையாம், வல்லூறுகறுப்பாம்-எ-று. (2)
பூர்வபட்சம் சாதிபக்ஷி
வல்லூறு பார்ப்பான்வளராந்தைதான்வணிகன் செல்லாருங்காகஞ் செகத்தரசன்-நல்லாய்கேள் கோழியாம்வேளாளன் கூறுமயில்சண்டாளன் ஆழியாலூலாய்ந்தறி.
(பொ-ரை.) பூர்வபட்சத்தில் வல்லூறு பிராமணசாதியும் ஆந்தை வணிகஜாதியும், காகம்கூத்திரியசாதியும், கோழி வேளாளஜாதியும், மயில்சண்டாளஜாதியும் ஆமென்று நூலாய்ந்துணர்-எ-று. (3)
Page 46
அமரபட்சம் சாதிபக்ஷி
வெண்பா
பொன்மறையோனாம்வலியான்போந்தைவேந்தனாம் துன்னுமொழிகாகந் தலைவணிகன்-மன்னும் உழுகலத்தோன்கோழியே யோதுர்கான்மஞ்ஞை இழிகுலத்தோனென்றே யிசை.
(பொ-ரை.) அமரபட்சத்தில் வல்லூறு பிராமணனாம், ஆந்தை அரசனாம், காகம் வணிகனாம், கோழிவேளாளனாம், மயில் இழிந்தசாதியாம் என்று சொல்லுவாய்-எ-று.
பட்சம் 2-க்கும்-தாதுமூலசீவபக்ஷி
வெண்பா
வல்லூறுமூலம்வளராந்தைசீவனாம் சல்லாபமாங்காகந் தாதுவாம்-பொல்லாத கோழிமூலச்சீவன் கோலமயிறாதுவொடு வாழுமூலஞ்சொல்லிவை.
(பொ-ரை.) வல்லூறுமூலமாம் ஆந்தை சீவனாம், காகம் தாதுவாம் கோழிமூலசீவனாம், அழகுபொருந்திய மயில் தாதுமூலமாம் என்று சொல்லாய் என்றவாறு.
போகர்நிகண்டு-பாஷாணபக்ஷி
எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
பஞ்சபட்சிபாடாணம்பகரக்கேளு பாகியகோனாம் புலனும்பற்றாதாது செஞ்சிவப்பாஞ்சித்திரத்தின் பட்சியாகுஞ் சிறந்திட்டபஞ்சவண்ணத்தாதுவாகும் மஞ்சணிறமகமாயிபறங்கிப்பாவை மகத்தானகுப்பிக்குள் சமைந்தகன்னி கொஞ்சுகிறமிரவிக்குள் கூர்ந்தவேமங் குதரடியானாமெலாம் பட்சியாமே.
(பொ-ரை.) பஞ்சபட்சிகளின் பாஷாணங்களைச்சொல்லக் கேட்பாயாக சிவப்பானது சித்திரத்தின் பட்சியாகும் இதுவே பஞ்சவர்ணங்களுக்குந் தாதுவாகும். மகமாயிபறங்கிப்பாவை குப்பக்குள்ளிருந்த கன்னி இவைகளே நாயங்களாம்-எ-று.
Page 47
பூர்வபட்சம் பூதபக்ஷி
நேரிசை வெண்பா.
வல்லூறுதேயுவாம் வல்லாந்தை வாயுவாம் பொல்லாகா கங்கார்கிருதியதாம் - நல்லாய்கேள் நீரா தங்கோழி லோமயிலாகாயம் காரார் குழலாய்கணி.
(பொ-ரை.) பூர்வபட்சத்தில் ஐம்பூதங்களில் வல்லூறு தேயுபூதமாம் ஆந்தை வாயுபூதமாம் காகம் பிருதிவிபூதமாம் கோழி அப்புபூதம் மயில் ஆகாசபூதமாம் இவைகளைப் பெண்ணே! அறிவாயாக-எ-று.
அமரபட்சம் பூதப்பக்ஷி
அரியபுவிவல்லூறப்பாகுமாந்தை கரியதொருகாகங் கனலா தும்- பெரியகால் தேனேசரிந்தொழுகுஞ் செஞ்சூட்டுவாரணந்தான் வானேயகல மயில்.
(பொ-ரை.) அமரபட்சத்தில் வல்லூறு பிருதிவிபூதமாகும் ஆந்தை அப்பு பூதமாகும் காகம் தேயுபூதமாகும் கோழி ஆகாயபூதமாகும் மயில் வாயுபூதமாகும் எ-று. (8)
முழுகுபக்ஷி
காகமுழுமூழ்குவல்லூ றுமுக்காலாம் ஆகறுமாந்தையாமுழுகாம்-வேகமுறா கோழியதுகால முழுதுகோலமயிலரைக்கால் வாழுமுழுகறிந்தவை.
(பொ-ரை) காகமானது முழு மூழ்கும், வல்லூறானது முக்கால் மூழ்கும் ஆந்தை அரை மூழ்கும், கோழிகால் மூழ்கும் மயில் அரைக்கால் மூழகுமாம்-எ-று. (9)
மாய்க்கும்பக்ஷி
மயிலுக்குமாற்றான் வலிதாந்தைகோழியாம் இயல்வலிகாகங்கோழி யிரண்டும் - கயலாகும் முன்வலிதுவல்லூறு நான்கினுக்குங்காக்கை பின்வலிதாகுங்காண்பெயர்ந்து.
(பொ-ரை.) மயிலுக்குவல்லூ றுவலிமையுடையது ஆந்தைக்கு கோழிவலிமையுடையது கோழிமுதலிய இரண்டும் அப்படி வலிதாயினுமினல்லூறுமுதலிய நான்கும் வலிமையுடையதாம் காக்கைபின்வலிமையுடையதாம் -எ-று. (10)
Page 48
பகைப்பக்ஷி
அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்.
மயிற்பகைவல்லூ றாந்தை கோழிக்குமதுவேயாகுஞ் செயிர்ப்பகைவலியற்காந்தை யாங்கைக்குவலியன்றீபான் இயற்றியவலியனல்லா லெல்லா மூலலூறினுக்கே உயிர்ப்பகையாகுமற்ற தொழிந்தவையுறவாமன்னே.
(பொ-ரை.) மயிலுக்குப் பகை வல்லூறு, ஆந்தைக்குப் பகை கோழி, வல்லூறுக்கு ஆந்தையும் ஆந்தைக்கு வல்லூறும் கொடியதாம் ஆந்தைய வல்லூறுக்குப்பகை, மற்றவைகளெல்லாம் உறவாகும் என்றவாறு.
உறவுபக்ஷி
(நேரிசை வெண்பா.)
மயிலுறவல்லூறு வன்காக்கைக்கோழி செயலாகவல்லூறு நேர்காகா-வெல்விழியாய் கோழியுறவுமயில் கொள்ளுமெனவுரைத்தார் எழிலினால்வல்லோ ரிசைந்து.
(பொ-ரை) வேற்போன்ற கண்களையுடையாளே! மயிலுக்கு வல்லூறும், காக்கைக்குக்கோழியும், வல்லூறுக்கு காகமும், கோழிக்கு மயிலும் உறவாகுமென்று சாத்திரதேர்ச்சி யடைந்தவர்பொருத்தமாகச்சொன்னார்கள் - எ-று.
காலப்பக்ஷி
ஆந்தைமயிலிறந்தகால மானதொருவாடந்தான் சேர்ந்தநிகழ்காலஞ் செப்பிடுமே வாய்ந்ததொரு வல்லூறுகாகம் வருங்காலங்காட்டுமே வல்லோருரைத்த வகை.
(பொ-ரை) ஆந்தையும், மயிலும் இறந்தகாலமும், கோழி நிகழ்காலமும், வல்லூறும், காகமும் எதிர்காலமும் காட்டும் - எ-று.
கோணப்பக்ஷி
வல்லூறுநீள்வட்ட மாலாந்தையையங்கோணம் அல்லாருங்காகமறுகோணம்-மெல்லினல்லாய் கோழிய துநாற்கோணங் கோலமயிலின்முக்கோணம் ஊதியான்றொன்னூ லுரை.
Page 49
அகஸ்தியர் பஞ்சபக்ஷி
:(பொ-ரை.) வல்லூறு விண்டிலவட்டமும், ஆந்தை ஐங்கோணமும், காகம் அறுகோணமும், கோழி விற்கோணமும், மயில் முக்கோணமுமாகும் எ-று. (14)
வல்லூறு. ஆந்தை. காகம். கோழி. மயில்.
சுவைபக்ஷி.
வெண்பா
தித்திக்குமாந்தை சிறுபுளிப்புக்கோழியுகாம எத்துங்கருங்காக மினிதுவர்ப்பாம்-பத்திநக வல்லூறுகார மயிற்கைக் கும்மென்பரே யல்லார்குழலாயறி.
(பொ-ரை.) ஆந்தை தித்திக்கும கோழிசிறுபுளிப்பாகும், காகம் துவர்ப்பாகும், வல்லூறு காரமாம், மயில் கைக்கும் என்று பெண்ணே! முன்னோர்கள் சொல்லுவார்கள் எ-று. (15)
நிலபக்ஷி.
வெண்பா
வல்லூறுபாலை வளராந்தைவண்குறிஞ்சி நல்லாருங்காக நடுமருதம்-பொல்லியரே வாரணமேமுல்லை வளருமயில்கெய்தல் ஆரணத்தோர் சொல்லாலறி.
(பொ-ரை.) வல்லூறு பாலைநிலமும், ஆந்தை குறிஞ்சி நிலமும் காகம் மருதநிலமும், கோழி முல்லைநிலமும், மயில் நெய்தல் நிலமுமென்றறியவும் எ-று. (16)
இடப்பக்ஷி.
வெண்பா
வல்லூறுவண்மை வண்காசுரேக்காலாம் நல்லதிறலாந்தையது நாற்காலாம்-சொல்லக் குறுங்கோழிகொம்பாங் குலவுமயிற்பட்சி பெறுங்காணிவைபாய்ந்து பேசு.
Page 50
(பொ-ரை.) வல்லூறு வளப்பமானவிடமும், காகம் நீர்க்காலிலும், ஆந்தை நாற்காலிலும், கோழி கொம்பிலும், மயில் காணியிலுமிருக்கும்-எ-று.
பஞ்சலோகப்பட்சி
வெண்பா
வல்லூறுபொன்னாம் வளராந்தைவெள்ளியதாம் நல்லாருங்காக நிறஞ்செம்பாம்-பொல்லாத கோழிய துவெண்கலமாங் கோலமயிலிரும்பாம் வாழிமடவார் வகை.
(பொ-ரை.) பெண்களே! பஞ்சலோகப்பட்சிகளின் வகை எப்படியென்றால்: வல்லூறுபொன்னாதம், வளர்கின்ற ஆந்தையானது வெள்ளியாகும், காகமானது செம்பாகும், பொல்லாத கோழியானது வெண்கலமாகும் அழகிய மயிலானது இரும்பாகும்-எ-று.
வினையப்பட்சி.
வெண்பா
வல்லூறுவருன்றா மாமறையோன்றூவந்தான் நெல்லிசு ருங்காக நிற்கின்றான்-மெல்லியரே கோழியேமீண்டான் குலவுமயிலரைய நாழிகையிலேவருவானெ.
(பொ-ரை.) பஞ்சபட்சிகளின் தொழிலைச் சொல்லுமிடத்து வல்லூறானால் வருகின்றான் எனவும், ஆந்தையானால் தூவந்தான் எனவும், காகமானால் நிற்கின்றான் எனவும், கோழியானால் வந்துவிட்டானெனவும், மயிலானால் இன்னும் அரை நாழிகையில் வருவான் எனவும் சொல்லுக-எ-று.
கெடுதியறிகுறி
அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்
மன்னவன்வல்லூறான மனிதர்கைப்புகுந்ததென்க வெண்ணியவாந்தையாகி லொண்டொடியெடுத்தாளென்க நண்ணியிங்காகமாகி லொருவனே கொண்டானென்க வண்ணமார்கோழியாணாம் பூம்பின் மயில்தான்பெண்ணே.
(பொ-ரை.) கெடுதியறிகிற குறியைச்சொல்லுமிடத்து வல்லூறானால் மனிதர்களுடையகையில் அகப்பட்டுக்கொண்டதெனவும், ஆந்தையானால் ஒருபெண் எடுத்திருக்கிறாள் எனவும், காகமானால் ஒருவனே எடுத்தான் எனவும், கோழியானால் ஆண் எனவும், மயிலானால் பெண்ணெனவும் சொல்லுக-எ-று.
Page 51
இனப்பக்ஷி
நேரிசை வெண்பா.
வல்லூறுகாகமயில் மூன்று மாணாகும் நல்லதிரவுகோணாளஞ்சொன்னோம்-பொல்லாத ஆந்தைபொற்கோழி பெண்ணாகுமிஃதேதோழி சோந்தறிந்துசொல்லுந் திறம்.
(பொ-ரை.) சாதிப்பட்சி:- வல்லூறு, காகம், மயில் இந்தமூன்றும் ஆணாகும். ஆந்தை கோழி இந்த இரண்டும்பெண்ணாகும்.என்று தோழீ ! நீ அறிந்துசொல்லுவாய்-எ-று.
பூர்வபட்சம் திசைப்பக்ஷி.
வெண்பா
உரைகிழக்குவல்லூறுயாராந்தைதெற்காம் விரையுங்கருங்காக மேற்காம்-புரைதீரக் கொத்தியிரைவிழுங்குங்கோழிவடக்காகு மத்திபத்தினிற்கு மயில்.
(பொ-ரை.) பூர்வபட்சத்தில் திசைப்பட்சியாவது:- கிழக்குவல்லூறும், தெற்கு ஆந்தையும், மேற்கு காகமும், வடக்கு கோழியும், மத்தியிலுமாகும்-எ-று.
அமரபட்சம் திசைப்பக்ஷி.
வெண்பா
பச்சைமயில்மேற்காம் பாரில்வடக்காந்தையாம் மச்சுகிழக்காகும் வல்லூறு-மெச்சுநல்ல தெற்காகுங்காகமது தேனார்விழிமடவாய் பொற்கோழிமத்தியமாம் போற்று.
(பொ-ரை.) அமரபட்சத்தில் திசைப்பட்சியாவன:- மேற்கு மயிலும், வடக்கு ஆந்தையும், கிழக்கு வல்லூறும், தெற்கு காகமும், மத்தி கோழியுமாகும்-எ-று.
இதுவுமது-உவாக்காலதிசைபக்ஷி.
வெண்பா
மத்திபத்தில்வல்லூறு வாழுாந்தைதெற்காகும் உற்றநிதி கிழக்கே யொண்காகம்-சற்றிடமே தெற்காகுங்கோழி சிறந்தமயில்மேற்காகும் எக்காலஞ்சொல்லுதற்காமி.
Page 52
(பொ-ரை.) பௌரணைகாலதிசைப்பட்சியாவன-மத்தியத்தில்வல்லூறும் தெற்கு ஆந்தையும், கிழக்கு காகமும், தெற்கு கோழியும், மேற்கு மயிலுமென்றுசொல்லுதற்காகும்-எ-று. (24)
வேறு சித்தர்நூல்-ஐந்தெழுத்துச் சக்கரம்
வெண்பா
ஈசானியங்கன்னி யெதிர்வடக்கைக்கினிமேல் வாசாவாய்வொடெரியும் வார்கிழக்காம்-பேசரிய அக்கினியிற்கன்னியுளவாம் ஆ-இ-ஊ-ஏ-ஒ சக்கரமிதைந்தெழுத்துந்தான்.
(பொ-ரை.) ஐந்தெழுத்துச்சக்கரமாவது ஈசானியம், கன்னியும் வடக்கு அக்கினியும், வாய்வோடு எரியும் கிழக்காம் பெரிய அக்கினியில் கன்னி உண்டாம் ஆ, இ, ஊ, ஏ, ஒ, என்று சக்கரத்தில் ஐந்தெழுத்தும் போடவேண்டும்-எ-று. (25) இதன் பயன்மேலோர்க்கன்றி மற்றையோர்க்கு விளங்காமையால் விளம்பிலம். ஏழாம் அதிகாரம் முற்றிற்று.
ஆறாவது செய்யுள் தொகை-70 ஏழாவது செய்யுள் தொகை-25 } ஆ செய்யுள் தொகை-95 ஆறாவது சக்கரத்தொகை 56 ஏழாவது சக்கரத்தொகை 1 } ஆ சக்கரத்தொகை- 57
Page 53
உ குருவேதுணை. எட்டாம் அதிகாரம். நிமித்தங்கேட்போருடைய வாய்மொழியின் சப்தாக்ஷரத்தைப் பக்ஷியாக்கி அவர்கள் நிலையில் தொடுகறியும் ஆய்ந்து பலன் சொல்லுகைக்கு வகுத்துரைத்தல் அகாரச்சத்தம்
(நேரிசை வெண்பா.)
காணு மகாரப்பே ராளுடைய கண்டமுதல் காணுஞ்சிரசாந்தை கைகாகம்-பேணிக் கோழியுடம்புமயில் முன்பின்னை கும்வலியான் தாழமிருசரணந்தான் இ-உ-எ-ஒ-அ.
[பொ-ரை.] அகாரப்பேருடையவர்களுடைய கண்டமுதல்கணக்கிட்டுப் பார்க்கும்போது ஆந்தை சிரசும், காகம் கையும், கோழி உடம்பும், மயில் முன்னும்பின்னும், வல்லூறு இருகால்களும் ஆகும் என்றவாறு.
இகாரச் சத்தம்.
தானுமிகாரப்பே ராளுடைய கண்டமுதல் காணார்தலைக்காகங் கைக்கோழி-மானாய் உடலேமயில்முன்பின் வல்லூறுங்காலrecord மடபேபுரிவாய்வகு. உ-எ-ஒ-அ-இ.
[பொ-ரை.] இகாரப்பேருடையவர்களுக்குகாகம் தலையும், கோழிகையும், மயில் உடலும், வல்லூறுமுன்னும் பின்னும், ஆந்தைகாலும் ஆகும்-எ-று.
உகாரச் சத்தம்.
அண்டுமுகாரப்பேராகுநாள் சென்னிமுதல் கண்டமாங்கோழியு கைகயிலாம்-உண்ட வல்லூறுடன் முன்பின்வாழுமேயார்ந்தைபது நல்லகால்காகமரய்நாட்டூ. எ-ஒ-அ-இ-உ.
Page 54
[பொ-ரை.] உகாரப்பேருடையவர்களுக்கு தலைமுதல் கழுத்து வரைக்கும் கோழியும், கையிலும் உடம்புவல்லூறும்முன்னும் பின் னும் ஆந்தையும், கால்காகமுமா மென்று சொல்லுக-எ-று 3
எகாரச் சத்தம்.
நாட்டுமெகாரப்பேராளுடைய சென்னிமுதல் ஊட்டுங்கைவல்லூ றுடலாந்தை-காட்டுமுன் பின்னாகுங்காகம் பெருத்ததோர்கோழிக்கால் நன்னுவலரே நவில். ஒ-அ-இ-உ-எ.
[பொ-ரை.] எகாரப்பேருடையவர்களுக்கு தலையிலும், கைவ ல்லூறும், உடல் ஆந்தையும், முன்னும்பின்னுங்காகமும், கால்கோழி யூமாமென்று நாவலர்களே! நீங்கள்சொல்லுங்கள் -எ-று. 4
ஒகாரச் சத்தம்.
நவிலுமொகாரப்பேர் நாள்சேர்தலைவலியான் கவலுங்கையாந்தையூடல் காகமே-புவியிலே தேனேமுன்பின்கோழி தேவாக்கெலாமிருக்கு மானேமயில்கான் மறி. அ-இ-உ-எ-ஒ.
[பொ-ரை.] ஒகாரப்பேருடையவர்களுக்கு வல்லூறு தலையும், ஆந்தைகையும், காகம் உடம்பும், கோழிமுன்னும்பின்னும், மயில் காலுமாகும்-எ-று. 5
அமிர்தஸ்தான அலங்காரம் பூர்வபக்ஷம் அமரபக்ஷங்களுக்கு அமிர்தநிலை யேற்றமுமிறக்க மும் ஆகியதிதிகளினால் அறியத்தக்க பாதாheader பிரதமை - அடி
(நேரிசை வெண்பா.)
- காலடியாம்வல்லூறு கணைக்காலுமாந்தையாம் மேலெழுந்ததாளுமெவண் காகமாம்-மாலார் படிக்குறங்கு கோழியாம் பணவல்குன்மாதே முடிக்குமயிலென்றே மொழி.
[பொ-ரை.] பாம்பின்படம்போலும்நிதம் பஸ்தானத்தையுடை யபெண்ணே! பூர்வபட்ச அமரபட்சங்களுக்கு பிரதமையில் அமிர்த நிலையானது வல்லூறுக்கு காலடியிலும் ஆந்தைக்கு கணைக்காலி லும், காகத்திற்கு முழந்தாளிலும், கோழிக்கு தொடையிலும், மயிலு க்கு சிரசிலுமிருக்குமென்று அறிவாயாக-எ-று. 6 குற்றுக்கரந்தள்ளித்தனை பிரிக்கவும்.
Page 55
துதிகை - பரடு
Venba
அறியும்பரடுவல்லூ றுகுமாந்தேழி முறியாந்தைமேற்கெண்டை முன்னே-சரியா அணிமுழந்தாள்காக மதுதொடையேகோழி மணிகுப்பமஞ்ஞை யெனவை.
[பொ-ரை.] துதிகைத்திதியில் வல்லூறு பரடிலும், ஆந்தைக்குக் கெண்டைக்காலிலும், காகத்திற்கு முழந்தாளிலும், கோழிக்குத் தொடையிலும், மயிலுக்கு ஸ்தனத்திலுமென்றனர்-எ-று.
திரிதிகை - கணைக்கால்.
Venba
கணைக்காலம்வல்லூறுகால் கெண்டையாந்தை பணைக்குமுழந்தாள்பகர் காகம்-கணித்த தொடையாகுங்கோழி துய்யமயின்மெல்லி கடையுடைதுணையாங் காண்.
[பொ-ரை.] திரிதிகைதிதியில் வல்லூறுக்கு கணைக் காலிலும், ஆந்தைக்கு கெண்டைக்காலிலும், காகத்திற்கு முழங்காலிலும், கோழிக்குத்தொடையிலும், மயிலுக்கு கடைக்காலிலு மாமென்றுரைக்கக்கடவாய்-எ-று.
சதுர்த்தி - முழந்தாள் இடை.
Venba
வல்லூறிடுப்பு வளர்முதுகதாந்தை கல்லாதமேன்முதுகு காக்கையாம்-சொல்லிய சோழிபிடரிமயில் கைப்பட்டைக்கூறியதன் தோழிபிரியதெனச் சொல்.
[பொ-ரை.] சதுர்த்திதிதியில்வல்லூறுக்கு இடுப்பும், ஆந்தைக்குமுதுகும். காக்கைக்குமேல்முதுகும், கோழிக்குகழுத்தும், மயிலுக்கு கைப்பட்டையும்திண்ணியமாகச்சொல்--எ-று.
பஞ்சமி - துடை உந்தி.
Venba
வல்லூறேயுந்தி வயிற்றாந்தைமார்புகாகம் அல்லா தனமென்றமையா மற்கோழி-தொல்லுலகில் வண்ணமயில்கைக்கியோ மட்டவிழூங்கார்குழலாய் பண்ணவர்கள்சொன்னார் பரிந்து.
[பொ-ரை.] பஞ்சமித்திதியில் வல்லூறுக்கு உந்தியும் ஆந்தைக்குவயிறும், காகத்திற்குமார்பும், கோழிக்குஸ்தனமும்மயிலுக்கு கையும் ஆகுமென்று பெரியவர்கள்சொன்னார்கள்-எ-று.
Page 56
சஷ்டி - நிதம்பம் - கீழ்வயிறு.
வெண்பா
கீழ்வயிறுவல்லூறுகேள்வயிறு மாந்தையாம் வாழ்மார்புங்காகமெனும் வாணுதலாய்-தாழ்வில் வழுவிலாக்கோழி மயிலிருப்பிடமவல்லீர் தெழுவிலாவென்றே யியம்பு.
[பொ-ரை.] சஷ்டி திதியில் வல்லூறுக்கு கீழ்வயிறும், ஆந்தைக்கு வயிறும், காகத்திற்கு மார்பும், கோழிக்கு விலாவும், மயிலுக்கு இடதுபக்கமுமாமென்று சொல்லுவாய்-எ-று.
சப்தமி இடை கீழ்முதுகு.
வெண்பா
- கீழ்முதுகுவல்லூறுகிளர்மேன்முதுகாந்தை வாழ்பிடரிக்காகமாம் வாணுதலாய்-கோழி வலவிலாதோகை மயிலாநிடமவலத்தே யிலவிலாவென்றே யியம்பு.
[பொ-ரை.] சப்தமி திதியில் வல்லூறுக்குக் கீழ்முதுகும், ஆந்தைக்கு மேல்முதுகும், காகத்திற்குக் கழுத்தும், கோழிக்கு நெற்றியும், மயிலுக்குவிலாவுமாமென்று சொல்லுவாயாக-எ-று.
அஷ்டமி உந்தி வயிறு.
வெண்பா
வல்லூறுதான்வயிறம் வல்லாந்தைமார்பாகுந் சொல்லியகாக முதுவாகும்-புல்லியே கோழிபிடைவிலாக் கோலத்திருமயிலே தோழிலவலவிலார் சொல்.
[பொ-ரை.] அஷ்டமி திதியில் வல்லூறுக்கு வயிறும், ஆந்தைக்கு மார்பும், காகத்திற்கு முதுகும், கோழிக்கு இடதுவிலாவும், மயிலுக்கு வலதுவிலாவுமாமென்று சொல்லு-எ-று.
நவமி வயிறு-மார்பு.
வெண்பா
இழியாதமார்வலியான் சுவைதோளிரண்டாந்தை முழுதுடன்முன்காகம் பின்சோழி-பழுதாறவே காலாகுமஞ்ஞையெனக் காமுகர்க்குக்காசினியில் மேலான நூலிதென்றுமேவு.
[பொ-ரை.] நவமி திதியில் வல்லூறுக்கு மார்பும், ஆந்தைக்கு இரண்டுதோள்களும், காகத்திற்கு முன்சரீரமும், கோழிக்குப்பின்சரீரமும், மயிலுக்குக்காலும் ஆமென்று சொல்லுவாய்-எ-று.
Page 57
தசமி - கை.
வெண்பா
கையிரண்டும்வல்லூறு கழுத்துமேலாந்தை மெய்யுடையமுன்காகம் பின்கோழிப்-பையத் தொடையிரண்டுந்தோகைமயி றூயமொழியாராய்ந்து வடிவமென்றுமானிடர்க்கு வை.
[பொ-ரை.] தசமி திதியில் வல்லூறுக்கு இரண்டு கைகளும் ஆந்தைக்குமேலும், காகத்திற்குமுன் உடம்பும், கோழிக்குப்பின் உடம்பும், மயிலுக்கு இரண்டுதொடைகளுமாமென்று தூய்மையான சொல்லையுடைய பெண்ணே! மனிதர்களுக்குச்சொல்-எ-று. 15
ஏகாதசி-பாளிபக்கை.
வெண்பா
பாளியான்வல்லூறு பருமுன்கையாந்தை காளுமுழங்கைக் கருங்காகம்-காளைக்கே கெண்டையாம்கோழி கிளர்தோண்மயிலாகும் தண்டமிழ்வல்லாய்நீ சாற்று.
[பொ-ரை.] ஏகாதசி திதியில் வல்லூறுக்கு பாளிபானும், ஆந்தைக்கு முன்கையும், காகத்திற்குமுழங்கையும், கோழிக்குக் கெண்டைக்காலும், மயிலுக்குத்தோளுமாகுமென்றுசொல்-எ-று. 16
துவாதசி விரல்.
வெண்பா
மூட்டுவிரல்வல்லூறு முழுவிரலாமாந்தையது நீட்டவிரல்காகமா நேரிழையீர்-காட்டாணி மோதிராமாங்கோழி முன்கண்டுதோகையதாம் ஆதரவாய்ச்சொன்னே மறி.
[பொ-ரை.] துவாதசி திதியில் வல்லூறுக்கு மூட்டுவிரலும், ஆந்தைக்கு முழுவிரலும், காகத்திற்கு நீண்டவிரலும், கோழிக்கு மோதிரவிரலும், மயிலுக்குச் சுண்டுவிரலுமாமென்றுணர்வாய்-என்றவாறு. 17
திரயோதசி-கழுத்து.
வெண்பா
வல்லூறுவன்கழுத்து வல்லாந்தைவாயாகும் மெல்லியலுங்காகம் விழிபிரண்டாம்-சொல்லிய கோழிய நுநெற்றி குலவுமயில்கூந்தல் ஆழியுலகத்தா யறி.
Page 58
[பொ-ரை.] திரயோதசி திதியில் வல்லூறுக்குக்கழுத்தும், ஆந்தைக்குவாயும், காகத்திற்கு இரண்டுகண்களும், கோழிக்கு நெற்றியும், மயிலுக்கு கூந்தலுமாமென்று உணர்வாய்-எ-று. 18
சதுர்த்தசி தலை.
வெண்பா
செய்யதலைவல்லூறு சீரார்முதுகாந்தை கையிரண்டுக்காகமாங் கண்டாயே-மொய்குழலாய் நற்பியாங்கோழி நலமானதாளிரண்டுந் தோகைமயிலென்றே சொலு.
[பொ-ரை] சதுர்த்தி திதியில் வல்லூறுக்குத் தலையும், ஆந்தைக்கு முதுகும், காகத்திற்கு இரண்டு கைகளும், கோழிக்கு உந்தியும், மயிலுக்கு இரண்டு கால்களுமாகும்-எ-று. 19
பூரணை கூந்தல்
வெண்பா
கூந்தன்மயிலாகுங் கோழியேநெற்றியதாம் வாய்ந்தசெவிகண்மூக்கு வாழ்காகம்-ஏந்திழையீர் வாயாகுமாந்தை மணிக்கழுத்தேவல்லூறு மாயாதுரைக்கும் வகை.
[பொ-ரை.] பௌரணை திதியில் மயிலுக்கு கூந்தலும், கோழிக்குச்செவியும், காகத்திற்கு கண்களும், மூக்கும், ஆந்தைக்குவாயும், வல்லூறுக்கு கழுத்துமாகு மென்றுசொல்-எ-று. 20
இச்செய்யுள் 15-ம் அங்காமிர்தமன்றியும் தொடுகுறிக்குஞ் சொல்லப்படும் திதிப்பக்ஷி.
வெண்பா
கோழிக்குநாலுநாள் குவலயத்திலேமிக்க வாழுமடவல்லூறுக் கைந்தேநாள்-தோழிகேள் காகமிரண்டாங் காராந்தைமூன்றாகும் தோகைமயிலொன்றென்றே சொல்,
[பொ-ரை] கோழிக்கு நான்குதிதிகளும், வல்லூறுக்கு ஐந்துதிதிகளும், காகத்திற்கு இரண்டு திதிகளும், ஆந்தைக்கு மூன்று திதிகளும், மயிலுக்கு ஒருதிதியும் நாளளவாமென்று சொல்-எ-று. 21
நக்ஷத்திரப்பக்ஷி
வெண்பா
ஆதிபசவுமுட னைந்துநாள்வல்லூறு கோதிலாவாறுநாள் கொம்பாந்தை-நீதிலா உத்திரங்கொண்டைந்துநா ளொன்காகமாங்கோழி யத்தனுஷமோனமயில் பார்.
Page 59
[பொ-ரை] அஸ்வினிமுதல் ஐந்து நட்சத்திரங்கள் வல்லூறுக்கும், திருவாதிரைமுதல் ஆறுநட்சத்திரங்கள் ஆந்தைக்கும், உத்திரமுதல் ஐந்து நட்சத்திரங்கள் காகத்திற்கும், அனுஷமுதல் பத்து நட்சத்திரங்கள் கோழிக்கும், ஓணநட்சத்திரம் மயிலுக்குமாமென்று பார்ப்பாயாக-எ-று.
இதுவுமது ஆரூடக்கணிதப் பட்சி.
அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்
அஞ்சுடன்வல்லூ றுண்ணு மாறுடனாந்தையென்போர் துஞ்சிலாக்காகமைந்தாஞ் சுகம்பெறுமவையேகBranchகோழி நெஞ்சினின்மயிற்றானாறு நினைந்தநாண்முதலா யெண்ணிக் கொஞ்சிவையகத்திற்பேசக் குலவுமினிருபதேழே
[பொ-ரை] முதல் ஐந்தில் வல்லூறு உண்ணும், இரண்டாவது ஆறில் ஆந்தை உண்ணும், மூன்றாவது ஐந்தில் காகம் உண்ணும், நான்காவ துகோழி உண்ணும், ஐந்தாவது மயில் உண்ணும், இப்படியே நன்றாய் வாழ்ந்திருப்பார்கள்-எ-று.
இதுவுமது உள்ளமுடையான் சூடாமணிச்சோதிடம்
வாழ்பரிமுதலாவைந்தும் வல்லூறதிரைமுன்னாறும் சூழவளையாந்தையாகுந் துய்யவுத்திரமுனைந்தும் தாழ்விலாவாந்தையாகுந் ததம்பனைமுதலாமைந்தும் கோழியாமோனமோதி யாறுமேமயிலாங்கூற
[பொ-ரை] இருபத்தேழு நட்சத்திரங்களில் அஸ்வினி முதல் ஐந்தில் வல்லூரும், புனர்பூசம்மூதல் ஆறில் ஆந்தையும், உத்திரமுத ல ஐந்தில்காகமும், அனுஷம்மூதல் ஐந்தில் கோழியும், திருவோ ணம்மூதல் ஆறில் மயிலுமாமென்று உணர்வாய்-எ-று.
பூர்வபட்சம் இராசிப்பட்சி
(நேரிசை வெண்பா.)
ஆடரிதேள்வல்லூ றன்தனுமீன்காகம் கூடுதுலாமேறுங் கோழியதாந்-தேடரிய நண்டரிவைதண்டாந்தை நன்மகரங்கும்பமிவை கண்டமயிலென்றோதிக் காண்.
[பொ-ரை] பூர்வபட்சத்தில் பன்னிரண்டு ராசிகளில் மேஷம் சிங்கம் விருச்சிகம் இம்மூன்றும் வல்லூறுக்கும், தனுசுமீனம் இவ்விரண்டும் காகத்துக்கும், துலாவும் ரிஷபமும் கோழிக்கும், கர்க்கடகம் கன்னி மிதுனம் இம்மூன்றும் ஆந்தைக்கும், மகரம்கும்பம் இவ்விரண்டும் மயிலுக்குமென்று பெண்ணே! உணர்வாய்.
Page 60
அமரபட்சம் - இராசிப்பக்ஷி
வெண்பா
ஆனமயில்கடக மாடுதேளாகுங்கா னானதரிவையரி யாங்கோழி - மானேகேள் காகமதுகாதுகுடங் கைக்கிலைமீன்யாழாந்தை பாகவல்லூறேறுநிறை பார்
[பொ-ரை] அமரபட்சத்தில் பன்னிரண்டு ராசிகளில் கடகம் மேஷம் விருச்சிகம் இம்மூன்றும் மயிலுக்கும், கன்னி சிங்கம் இவ்விரண்டும் கோழிக்கும், மிதுனம் மகரம் கும்பம் தனுசு இந்நான்கும் காகத்திற்கும், மீனம் துலாம் இவ்விரண்டும், ஆந்தைக்கும், மேஷம் வல்லூறுக்குமாகும் - எ - று.
இதுவுமது உள்ளமுடைய சூடாமணிச்சோதிடம்
எண்சீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்
மேடமொடுதேனரியும் விரும்பிபவல்லூறாகும் மிகக்கடகம்கிதுன மெல்லியலுமாந்தை கூடுசிலைமீனமொடு கொண்டகருங்காகம் கோலும்விடைபும்பெரிய கோழியெனலாகும் நீடுகுடமாகர நீலமயிலாகும் நின்றிடுமிராசிதனி லிப்பறவைதாமும் பீடுடையமாதவ வகத்தியர் சொன்னூல் பேசிடுமிதாகமபி னாளரிசர்மாதே.
[பொ-ரை] மேஷம், விருச்சிகம், சிங்கம், இம்மூன்றும் வல்லூறுக்கும் கடகம் மிதுனம் கன்னி இவ்விரண்டும், ஆந்தையாகும், தனுசு, மீனம், இவ்விரண்டும் காகமாகும், துலாம், ரிஷபம் இவ்விரண்டும், கோழியாகும், கும்பம், மகரம், இவ்விரண்டும் மயிலாகும் இந்தராசிகளில் இவ்விதமாக அகஸ்தியர் சொன்ன நூல் முறையிலின்றது. இதன்படி அறிந்துரைக்கவேண்டும் - எ - று.
எட்டாம் அதிகாரம் முற்றிற்று.
குறிப்பு
ஏழாவதுசெய்யுள் தொகை - 95. எட்டாவதுசெய்யுள் தொகை - 27. சக்கரத்தொகை - 57.
ஆக செய்யுள் தொகை-122 ஆக சக்கரத்தொகை- 57
Page 61
உ குருவேதுணை. -(*)- ஒன்பதாம் அதிகாரம். பக்ஷிகளின் கணிதலிலக்கணம் வல்லூறு.
நேரிசை வெண்பா
பேதையாம்வல்லூறு பேசாதுமூன்றரையும் ஓதியவொன்றரையி லுண்டேகும் - மாதேகேள் அஞ்சுமரையினிலொன் றாமேயரசுநிலைச் செஞ்சொற்றுணிவாற் றெளி.
(பொ-ரை) வல்லூறென்னும் பட்சிக்கு நாழிகையளவினைச்சொன்னால் அதற்கென்று ஏற்பட்டிருக்கும் ஆறுநாழிகையில் முதல் ஒன்றரைநாழிகை நித்திரைசெய்யும், இரண்டாவது ஒன்றரைநாழிகை போஜனஞ்செய்யும், மூன்றாவது ஒன்றரைநாழிகை நடக்கும், நான்காவது அரைநாழிகை மரணமாயிருக்கும், ஐந்தாவது ஒருநாழிகை அரசுசெய்யும், இதுசாஸ்திரத்தின் துணிவால்தெரிந்துக்கொள்ளவேண்டும்-எ-று.
ஆந்தை.
துணைப்பிரிந்துதேடுந் துணைச்செயலொன்றரை உணவறிதொன்றரையி லுண்ணும்-பிணியாலே கூர்ந்துங்கலீரரந்தற் கோறனொய்தென்பரே ஆந்தைக்கரசரையிலாம்.
(பொ-ரை) ஆந்தையென்னும் பட்சியின் நாழிகை ஆறுக்கு முதல் ஒன்றரைநாழிகையில் நடையும், இரண்டாவது ஒன்றரை நாழிகையில் போஜனமும், மூன்றாவது இரண்டுநாழிகையில் நித்திரையும், நான்காவது அரைநாழிகையில்மரணமும், ஐந்தாவது அரைநாழிகையில் அரசும் ஆகும் என்றுசொல்லுவார்கள்-எ-று.
காகம்.
துஞ்சும்போதொன்றரையாந் துப்பநடையிரண்டு மிஞ்சிபராசாளு மேலொன்று-வஞ்சியரே சேக்கையேநீக்கச் சிறுபோசனமொன்றாங் காக்கைக்கேசொன்னார் கணி.
Page 62
மூலமும் நூதன உரையும்.
(பொ-ரை) காக்கை என்னும் பட்சியின் நாழிகை ஆறுக்கு முதல் ஒன்றரை நாழிகையில் மரணமும், இரண்டாவது, இரண்டு நாழிகையில் நடையும், மூன்றாவது ஒரு நாழிகையில் அரசும், நான்காவது ஒரு நாழிகையில் உணவும், ஐந்தாவது அரை நாழிகையில் தூக்கமுமா மென்று சொன்னார்கள். ஆராய்ந்துபார் - எ-று. 3
கோழி.
வெண்பா
குற்றமிலாவொன்றரையிற் கோழிதுணைகூடு மற்றுமோரொன்றரையில் வாய்புகும் - வெற்றி யரசாளுமுன்றி லழியுமேயொன்று நிரையாவதொன்றாய் நினை.
(பொ-ரை) கோழி என்னும்பட்சியின் நாழிகை ஆறுக்கு முதல் ஒன்றரை நாழிகையில் நடையும், இரண்டாவது ஒன்றரை நாழிகையில் உணவும், மூன்றாவது ஒரு நாழிகையில் அரசும், நான்காவது ஒரு நாழிகையில் மரணமும், ஐந்தாவது ஒரு நாழிகையில் தூக்கமுமாகுமென்று நீ நினைந்துக்கொள்-எ-று. 4
மயில்.
வெண்பா
எடுக்குங்கடிகை யிரண்டரையுமாக நடக்குமரையிரண்டின் வல்லூன்-அடுக்கும் அரசாளுமுன்றி லடர்த்திரையொன்றில் நரைசாவென்றென்றே நவில்.
(பொ-ரை) மயில் என்னும் பட்சியின் நாழிகை ஆறுக்கு முதல் இரண்டரை நாழிகையில் நடையும், இரண்டாவது அரை நாழிகையில் உணவும், மூன்றாவது ஒரு நாழிகையில் அரசும், நான்காவது ஒரு நாழிகையில் தூக்கமும் ஐந்தாவது ஒரு நாழிகையில் மரணமுமாகுமென்று சொல்லுவாய்-எ-று. 5
பக்ஷிநாழிகை மாற்று.
வெண்பா
அஞ்சுபறவையுமோ ராறுகடிகையினும் எஞ்சவுண்டுதுஞ்சிடுமென் றெண்ணாதே-வஞ்சியரே ஒன்றொன்றேநோலாது கடிகையினிலேயுண்ணும் என்றென்றேகொள்ளா ரெமக்கு.
(பொ-ரை.) ஐந்துபக்ஷிகளும் ஒன்றாக ஆறு நாழிகையிலும் உண்டும், செத்து மிருக்குமென் றெண்ணவேண்டாம் ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு பட்சியே உண்ணுதல் முதலிய செய்கைகளைச் செய்வனவாம்-எ-று. 6
Page 63
அகஸ்தியர் பஞ்சபக்ஷி பட்சிபாகம்
(அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்.)
சேனதிசைசன்கதிசை சீரதாகச் சிங்கத்திசையானைதிசை செப்பொணாத பூனைதிசையாயுதிசை யெலியினொடு பொருந்துமுயற்றிசையெட்டும் பொலியும்பட்சி மோனமென்றுஞ்சூக்ஷுமதிசை நாளதாக முன்றினமேபிராணதிசை யுண்மையாகப் பானன்மொழிமடமாதே பட்சிபாகம் பகர்ந்திடுவாரைந்தொழிலின் பலன்கடாமே.
(பொ-ரை) கருடதிசை, பாம்புதிசை, சிங்கதிசை, யானைதிசை பூனைதிசை, நாய்திசை, எலிதிசை, முயல்திசையென்னும் எட்டுத்திசைகளிலும் ஐந்து பட்சிகளும் விளங்குந் தன்மையைக்கண்டு மோனமென்றும், சூட்சமமென்றும், பிராணதிசையென்றும் பெண்ணே! பலன்சொல்லுவார்கள்-எ-று. 7
மகாதிகை யாண்டு.
உண்டிநடையைந்தாகி லிருபதைந்தா முறுதுக்கஞ்சாவானா லைந்ததாகும் கண்டவிருபதினைந்து மாகக்கூட்டி மகாதீசையாறண் டந்திரதிசையாந்திங்கள் விண்டநாள் சூக்ஷ்மதிசை பிராணதிசைநாள் விளங்கியபஞ்சாங்க முறையேவல்லார் அண்டருக்குமேலாகு மாயுள்காணா ரலைகடல்சூழவனியெல்லா மறிவர்தாமே.
(பொ-ரை) உண்டியும் நடையுமானால் இருபத்தைந்தாண்டும் தூக்கம் சாவுமானால் இருபதாண்டும், இரண்டையுஞ்சேர்த்து மகாதிகைமுதலியவைகளாகப்பிரித்து சொல்லுவோர் பஞ்சாங்கமுறைமையில் வல்லவர்களாவார்கள். அவர்களே சகలలోகமர்மங்களையுமுணர்பவராகையால் தேவர்களுக்கும் உயர்ந்தவர்களாவார்கள்-எ-று. 8
உறவு பட்சி.
மயிலுக்கு கோழியும் - காகமும் - உறவு. காகத்துக்கு மயிலுங் - கோழியும் - வல்லூறும் - உறவு. வல்லூறுக்கு காகமுறவு. கோழிக்கு மயிலுங் - காகமும் - உறவு. ஆந்தைக்கு கோழியும் - மயிலும் - வல்லூறும் - உறவு. மற்றவையெல்லாம்பகை - இவை ஆத்துமசிநேகம்.
Page 64
பகைபக்ஷி
Verse
மயிலுக்கும்-கோழிக்கும் வல்லூறும்-ஆந்தையும்பகை. காகத்துக்கு ஆந்தைபகை. ஆந்தைக்கு காகம்பகை. வல்லூறுக்கு காகமொழிய மற்றவையெல்லாம்பகை. சொல்லாதவைகளெல்லாம்-உறவு-இவை உயிர்ப்பகை.
இராசியடையாளம்.
Prose
மகரம்-கன்னி-மிதுனம்கருப்பு, விருச்சிகம்-கும்பம்-மீனம்பச்சை, இடபம்-துலாம்-கடகம்-வெள்ளை, மேஷம்-தனுசு-சிங்கம்*செம்மை.
இராசிக்கிரகநிறம்.
Prose
பாம்பு-சனி-மகரம்-மிதுனம்-கன்னி-இவை கறுப்பு புதன்-மீனம்-கும்பம்-விருச்சிகம்-இவை பச்சை திங்கள்-ஞாயிறு-வெள்ளி-இடபம்-துலாம்-கடகம்-இவை வெள்ளை செவ்வாய்-மேஷம்-தனுசு-சிங்கம்-இவை சிகப்பு வியாழம்-பொன்னிறமென்று சொல்லப்படும்.
இராசியாதிபதிக்கொருத்தம்.
Prose
சிங்கம்-சூரியனுக்கு தனுசு-பிராஸ்பதிக்கு. இடபம்-சந்திரனுக்கு துலாம்-சுக்கிரனுக்கு. மேஷம்-அங்காரகனுக்கு கும்பம்-சனிக்கு. கன்னி-புதனுக்கு மூலத்திரிகோணமெனப்படும்.
கிரகமாவது.
Prose
சூரியன்-சந்திரன்-செவ்வாய்-புதன்-குரு-சுக்கிரன்-சனி-இராகு-கேது இவை 9-ம் நவக்கிரகங்களாம்.
கிரகசத்துருத்துவம்.
Prose
சூரியனுக்குப்பகை சுக்கிரன்-சனி-இராகு-கேது. சந்திரனுக்குப்பகை இராகு-கேது. செவ்வாய்க்குப்பகை புதன்-இராகு-கேது. புதனுக்குப்பகை சனி. குருவுக்குப்பகை சுக்கிரன்-புதன். சுக்கிரனுக்குப்பகை சூரியன்-சந்திரன். சனி-இராகு-கேதுக்களுக்குப்பகை-சூரியன்-சந்திரன், செவ்வாய்-சத்துருத்துவமெனப்படும்.
Page 65
அகஸ்தியர் பஞ்சபக்ஷி - கிரகமித்துருவம்.
prose_table
சூரியனுக்குறவு செவ்வாய்-சந்திரன்-குரு. சந்திரனுக்குறவு சூரியன்-புதன். செவ்வாய்க்குறவு சூரியன்-சந்திரன்-குரு. புதனுக்குறவு சுக்கிரன்-சூரியன். குருவுக்குறவு சூரியன்-சந்திரன்-செவ்வாய். சுக்கிரனுக்குறவு புதன்-இராகு-கேது. சனிக்குறவு சுக்கிரன்-புதன், இராகு-கேது. இராகு-கேதுகளுக்குறவு சனி-சுக்கிரன். மித்துருவமெனப்படும்.
கிரகசமத்துவம்.
prose_table
சூரியனுக்குச்சமம் புதன். சந்திரனுக்குச்சமம் செவ்வாய்-சுக்கிரன்-குரு-சனி. செவ்வாய்க்குச்சமம் சுக்கிரன்-சனி. புதனுக்குச்சமம் செவ்வாய்-சனி-குரு-இராகு-கேது. குருவுக்குச்சமம் சனி-இராகு-கேது. சுக்கிரனுக்குச்சமம் செவ்வாய்-குரு. சனிக்குச்சமம் குரு. இராகுகேதுவுக்குச்சமம் புதனும்-குருவும். சமத்துவமெனப்படும்.
கிரக அடையாளம்.
prose
சனி, இராகுகருமை, புதன் பசுமை * குருபொன்மை * சுக்கிரன், சந்திரன் வெண்மை * செவ்வாய்-சூரியன, கேது * செம்மைநிறமெனப்படும்.
கிரகவலிமை.
prose_table
புதனுக்குவலிமை செவ்வாய். செவ்வாய்க்குவலிமை சனி. சனிக்குவலிமை குரு. குருவுக்குவலிமை சுக்கிரன். சுக்கிரனுக்குவலிமை சந்திரன். சந்திரனுக்குவலிமை சூரியன் சூரியனுக்குவலிமை இராகுகேது எனப்படும்.
Page 66
நட்டமுட்டிசிந்தனையிலிருந் தெடுத்தெழுதியவை நக்ஷத்திரவேதைப் பொருத்தம்.
பரணிக்கு - கேட்டையும், கார்த்திகைக்கு - அனுஷமும், உரோகணிக்கு - விசாகமும், மிருகசீரிடத்திற்கு - சுவாதியும், திருவாதிரைக்கு - அவிட்டமும், புனர்பூசத்திற்கு - திருவோணமும், பூசத்திற்கு உத்திராடமும், ஆயில்யத்திற்கு - பூராடமும், உத்திரத்திற்கு - உத்திரட்டாதியும், அத்தத்திற்கு - பூரட்டாதியும், சித்திரைக்கு - சதயமும், இரேவதிக்கு - பூரமும், வேதையாதையால் இவை நீங்கலாக மற்றைய நக்ஷத்திரங்களுக்கு உறவாமெனக் கொள்கவென்பதாம்.
யோனிப்பகை.
யானைக்குப்பகை - சிங்கம் பாம்புக்குப்பகை - குரங்கு பசுவுக்குப்பகை - புலி எலிக்குப்பகை - பூனை குதிரைக்குப்பகை - எருமை மானுக்குப்பகை - நாய் ஆட்டுக்குப்பகை - நாய் மற்றவையெல்லாமுறவெனப்படும்.
ஆண்பெண் விருக்ஷம்.
வைரமுள்ளவைகளெல்லாம் ஆண்விருக்ஷம் - பாலுள்ளவையெல்லாம் பெண்விருக்ஷம் ஆல் - அரசு - அத்தி - மாஞ்சா - மகிழ் - பலா மா - இலுப்பை சண்பகம் - எருக்கு - வஞ்சி நாவல் - இப்பன்னிரண்டும் - பால்பொருந்திய வாகையால் பெண்ணெனச் சொல்லப்படும், மற்றவைகள் வைரம்பொருந்திய விருக்ஷங்கள் ஆணெனச்சொல்லப்படும்.
இராசிவசியம்
மேஷத்துக்கு சிங்கம்வசியம் இடபத்துக்கு துலாமும் கடகமும்வசியம் மிதுனத்துக்கு கன்னிவசியம் கடகத்துக்கு தனுசும்-விருச்சிகமும்வசியம் சிங்கத்துக்கு துலாம்வசியம் கன்னிக்கு மிதுனமும்-மீனமும்வசியம் துலாத்துக்கு மகரம்வசியம் விருச்சிகத்துக்கு கடகமும்-கன்னியும்வசியம் தனுசுக்கு மீனம்வசியம் மகரத்துக்கு மேஷமும்-கும்பமும்வசியம்
Page 67
அகஸ்தியர் பஞ்சபக்ஷி
Prose
கும்பத்துக்கு மேஷவசியம் மீனத்துக்கு மகரம்வசியம் சொல்லாதவையெல்லாம்பகை யெனப்படும்.
இராசித்துக்கு.
Prose
மேஷம் - இடபம் - கிழக்கு மிதுனம் - தென்கிழக்கு கடகம் - சிங்கம் - தெற்கு கன்னி - தென்மேற்கு துலாம் - விருச்சிகம் - மேற்கு தனுசு - வடமேற்கு மகரம் - கும்பம் - வடக்கு மீனம் - வடகிழக்கு
தறிக்கால்.
Prose
மேஷம் முதற்கால் - மிதுனத்தில் கடைக்காலையுண்ணும் 2-ம் கால் 3-ம் காலையுண்ணும் 3-ம் கால் 2-ம் காலையுண்ணும் 4-ம் கால் முதற்காலையுண்ணும் இப்படியேமற்றவிராசிகளு முண்ணும்.
இராசிநோக்கு.
Prose
மேடம் - கடகம் - துலாம் - மகரம் - இவைசராசிகள் 11-வது இராசிகளைநோக்கும். இடபம் - விருச்சிகம்கும்பம் - சிங்கம் - இவை ஸ்திரராசிகள், 9-வது இராசிகளைநோக்கும் தனுசு மிதுனம் கன்னி மீனம் இவை உபயவிராசிகள் 7-வது இராசிகளை நோக்கும்.
மேடம் முதற்கால் கும்பம் 4 - ம் காலை நோக்கும், 2 - ம் கால் 3-ம்காலை 1/4-நோக்கு நோக்கும், 3-ம் கால் 2-ம்காலை - 1/2 நோக்கு நோக்கும் 4-ம் கால்முதற்காலை முழுநோக்கு நோக்கும் இப்படியே இராசிகளெல்லா நோக்குமென்றறிவது.
கவிப்புக் கொள்ளும்படி.
Prose
சிறுகால் யாதொருவிராசியுதிப்பது 2 1/2-நாழிகை தன்னைத்தானே கவிக்கும். இரண்டாமிராசிமற்ற இரண்டரை நாழிகையும் கவிக்கும். இப்படி 12-இராசிகளும் 30-நாழிகையும் இடமேவந்து கவிக்குமென ப்படும்.
வினவிநின்ற விராசி ஆருடமென்பது அப்பொழுது உதிக்கின்ற விராசியைபுதயமென்றறிக. பாம்பும் வெள்ளியும் வியாழமும் உச்சிக் கோளென்றறிக. புதனும் திங்களும் இவைநிலைக்கோள் ஆதித்தனும் செவ்வாயும் சனியும் இவைபூமிக்கோளெனப்படும் இவற்றால் உச்சத்தாற்கேட்டது இடைநிலத்திலேகேட்டது பூமியிற்கேட்ட தென்றும் மற்றுள்ளவைகளும் இவ்வகையாலறிக.
Page 68
திரிவிதகிரகங்கள்.
Prose
சந்திரன்-செவ்வாய்-இராகுகேது சரக்கிரகங்கள் சூரியன்சுக்கிரன் ஸ்திரக்கிரகங்கள் புதன் குரு சனி உபயக்கிரகங்கள்
கிரகநோக்கு.
Prose
கிரகங்களெல்லாம் தாநிற்குமிடத்து ந் 7-ம் இடத்தைப்பார் க்கும் விஷேசமாக சனி 3-10-செவ்வாய் 4-8-குரு 5-9 இராகுகேது 3-11-ம் இடத்தைப்பார்க்கும். 3-ம் இடம் 10-ம் இடம் கால் பார் வை, 4-8-ம் இடம் அரைப்பார்வை 5-9-ம் இடம் முக்கால்பார்வை 7-ம்-இடமும் தாநிற்குமிடமும் முழுப்பார்வை பார்க்கும். அன்றியு ம்சூரியன்-இராகு-கேது செவ்வாய் சனி-இவைகுரூரக்கிரகங்கள்-குரு சந்திரன்-சுக்கிரன் புதன்-இவைகுபக்கிரகங்கள் அமாவாசைச்சந்திர னும் சனிசம்பந்தகுருவும் பாபக்கிரகங்களெனப்படும்.
ஜாதி இராசிக்கிரகம்
Prose
மீனம்-விருச்சிகம்-கடகம் வியாழம் திங்கள் இவை பிராமணசாதி. சிங்கம்-மேஷம் தனுசு-செவ்வாய்-ஞாயிறு-இவை.. க்ஷத்திரியாதி. மிதுனம்-துலாம்-கும்பம்-புதன்-இவை.............வை சியாதி. இடபம்-கன்னி-மகரம்-வெள்ளி-இவை............சூத்திர சாதி. சனிபஞ்சமன் இராகுகேது பலசாதியெனப்படும்.
கிரகத்திற்கு அட்சரம்.
Prose
கிழக்கு-ஞாயிறு, தென்கிழக்கு-செவ்வாய், தெற்கு-வியாழம், தென் மேற்கு-புதன், மேற்கு-வெள்ளி, வடமேற்கு-சனி, வடக்கு-சந்திரன் வடகிழக்கு-இராகு-கேது, இவர்கள் இந்ததிசையில் அவரவர்கள், வார ங்களில்-எற-நாழிகை-உதித்திருப்பார்க ளெனப்படும், யோனியும் பதாகையும்-33-நாழிகைபெறும்- தெய்வம்-11- நாழிகைபெறும், அன்றியும் அக்ஷரங்களாவன-அ-ஆ-கிழக்கு,இ-ஈ,தென்கிழக்கு,உ-ஊ தெற்கு,இ-அ-எ-ஏ-தென்மேற்கு,அ-இ-ஐ-மேற்கு,உ-அ-ஒ-ஓ-வடமே ற்கு, அ-உ ஔ-வடக்கு, 0 ௐ-வடகிழக்கு,இப்படிநின்று2ற-நாழி கைபெறும்.கிரகங்களுக்கு அக்ஷரமாவன-க-ங-செவ்வாய்,ச-ஞ-வெள் ளி,ட-ண-புதன்,த ந வியாழம்,ப ம சனி ய ர சூரியன்,ல,வ,சந்திரன் ழ-ள இராகு, ற-ன கேது. இவ்வக்ஷரங்கள் கோட்களுக்கென்றும் இவர்கள் நின்றதிக்குகளுக்கென்றறிவது இவ்வக்ஷரங்களாற் கேட்ட உருக்கள் பெறும் காரியங்கொள்ளப்போவார் மற்றுள்ளவையும் பெறுவார்.
Page 69
கிரக நட்சத்திரம்.
சூரியன் சந்திரன் செவ்வாய் இராகு குரு சனி புதன் கேது - சுக்கிரன், இவ்வொன்பதுபேருக்கும், கார்த்திகைமுதல் பூரம்வரையிற் கொள்ளில் ஒவ்வொருவருக்கு ஒவ்வொருநக்ஷத்திரமாகும் மற்றவைகளுக்கு மிவ்வடைவேபார்த்துக்கொள்ளவும்.
மாதம். | முதற்பக்கத்துக்கு நாழிகை. | நடுவிற்பக்கத்துக்கு நாழிகை. | பிற்பக்கத்துக்கு நாழிகை. சித்திரை-ஆவணி, | 1 | 1/2 | 0 வைகாசி-புரட்டாசி | 0 | 1/2 | 1 ஆனி-ஐப்பசி, | 1 | 1 1/2 | 2 கார்த்திகை, | 2 | 2 1/2 | 3 மார்கழி, | 3 | 3 1/2 | 4 தை, | 4 | 3 1/2 | 3 மாசி, | 3 | 2 1/2 | 2 ஆடி-பங்குனி, | 2 | 1 1/2 | 1
விருத்தம்.
தையிருபத்தெட்டரை மேற்றனுசு கும்பம், தான்கால்மீன் விரு ச்சிகமே முக்காலாகும், வையுதையுமிருமுக்கால் ரிஷபங்கன்னி, வரு மிரண்டோடொருகாலு மிதுனஞ்சிங்கம், எய்யுமிரண்டேமுக்கால் கடகமூன்றாம், இயம்பினதுபகலகசு கடிகையாகும், ஐயமிலையறுபதி லே செல்லுபோக, அன்றிரவுக்குள்ளதை நீயறிந்துகொள்ளே.
(பொ-ரை.) இருபத்தெட்டரை நாழிகைக்குமேல் தனுசும், கும்பமுமாம், அதன்மேல் கால்சேர்ந்தால் மீனமாம், முக்கால்சேர்ந்தால் விருச்சிகமாகும், ஒன்றரைசேர்ந்தால் மேஷம், துலாம், ரிஷபம், கன்னிகளாம், இரண்டேகால் சேர்ந்தால் மிதுனமாம், இரண்டேமுக்கால் சிங்கமாம், மூன்று காகமாம். இப்படி சொன்னது பகலிரவுகளின்நாழிகைகளாம். அறுபதுநாழிகையில் செல்லுபோக இராத்திரிக்குள் உணர்ந்துகொள் - எ - று.
Page 70
இப்படியாக அவச்சாயையென்னும் பாதச்சாயை யெல்லாம் கூடுங் கூட்டல் கழித்தல் அரை அடிபெறும்
(நேரிசை வெண்பா.)
ஒன்றரையொன்றேகாலொன்று முக்காலரையாங் நின்றதொகையை நிலைநிறுத்தி - நன்றாக வட்டமொக்கவேகூட்டி மாளிகைக்குளேயிருந்து தொட்டவிரனாழிகையாய்ச் சொல். 10
(பொ-ரை.) ஐந்து வட்டமிட்டு அதில் ஒன்றரை ஒன்றேகால் ஒன்று, முக்கால், அரை, என்றுபோட்டு அதில் எதைத்தொடுகின்றார்களோ அதுவேநாழிகையென்றுசொல்லு-எ-று.
சுட்டுவிரன்மடக்கிச் சூரியனைத்தன்வலமாய் எட்டுவிரலையிரட்டித்து-முட்ட அடியளந்துபார்ப்பதன்முன் னாராய்ந்துசொல்லும் குடியறிந்தெந்நாளுங் கூறு. 11
(பொ-ரை) சுட்டுவிரலைமடக்கி சூரியனைவலமாக எண்ணி விரல்களை இரட்டித்து அடியையளந்து பார்ப்பதற்குமுன்னமே ஆராய்ந்து பார்த்து எப்போதும் சொல்லுவாயாக-எ-று.
ஒன்பதாவது அதிகாரம் முற்றிற்று.
எட்டாவது செய்யுள் தொகை 122 } ஆக செய்யுள் தொகை 133 ஒன்பதாவது செய்யுள் தொகை 11 } எட்டாவது சக்கரத் தொகை 57 } ஆக சக்கரத் தொகை 58 ஒன்பதாவது சக்கரத் தொகை 1 }
Page 71
குருவேதுணை. -(*)- பத்தாம் அதிகாரம். மச்சமுனி எண்ணூற்றிலிருந்தெடுத் தெழுதியவை அஷ்டகருமவிதி. இதுபூர்வபக்ஷத்துக்கு நிறப்பக்ஷி
வெண்பா
செம்பையபொன்னிறங்கறுப்புச் சிறுகறுப்புடனேவெள்ளை மெய்ம்மயிலாந்தைகாகங் கோழிவல்லூறுமைந்தே.
(பொ-ரை) பூர்வபட்சத்தில் மயிலுக்கு செம்மைநிறமும், ஆந்தைக்கு பொன்னிறமும், காகத்திற்கு கறுப்புநிறமும், கோழிக்கு கொஞ்சங்கறுப்பு நிறமும், வல்லூறுக்கு வெள்ளை நிறமுமுண்டாகும்-எ-று. 1
இது அமரப்பட்சத்துக்கு நிறப்பக்ஷி.
வெண்பா
வெள்ளிபொன்சிவப்புப்பச்சை மேவியகறுப்போடைந்து உள்ளதேவல்லூறாந்தை கொடிகோழிமயிலுமைந்தே.
(பொ-ரை) அமரபட்சத்தில் வல்லூறுக்கு வெள்ளிநிறமும், ஆந்தைக்கு பொன்னிறமும், காகத்திற்கு சிவப்புநிறமும், கோழிக்கு பச்சைநிறமும் மயிலுக்கு கறுப்புநிறமுமுண்டாகும் - எ-று. 2
செய்வினைப் பொருத்தம்.
வெண்பா
ஒதவேகிழத்திசைக்குவெள்ளியாகு முத்திரமுமஷ்டமியுங்கூடநன்று நீடவேயக்கினிக்கு மந்தவார மிரேவதியுமஷ்டமியுமெத்தநன்று சூடவேமறலிக்கு மாதிவாரந் துவாதசியும்பூசமடாமெத்தநன்று வாடவே நிருதிமதிசித்திரைகூட மகமாயிலியம்பூரணையுநன்றாமே.
(பொ-ரை.) கிழக்குத்திக்குக்கு வெள்ளிக்கிழமையும், உத்திரநட்சத்திரமும், அஷ்டமிதிதியும், அக்கினிதிக்குக்கு சனிக்கிழமையும், ரேவதிநட்சத்திரமும், அஷ்டமிதிதியும், எமதிக்குக் ஞாயிற்றுக்கிழமையும் துவாதசி திதியும், பூசநட்சத்திரமும், நிருதிதிக்குக்கு திங்கட்கிழமையும் சித்திரை, மகம், ஆயில்யம் என்னும் நட்சத்திரங்களும் பௌர்ணமிதிதியும் நன்மையுடையவைகளாம்-எ-று. 3
Page 72
மூலமும் நூதன உரையும். எங இதுவுமது.
வெண்பா
ஆனாலுமேற்றிசைக்கு மங்கலவாரம் அமரபட்சத் தட்டமியுன்வி சாகநன்று, போனாலும்வாயுவுக்குப்புந்திகூடும் புநர்பூசமாயிலியம் பஞ்சமியுநன்று, மேனாளுமட்டதிசைவியாழஞ்சோதி விளங்கியசதுர த்தசிமெத்தநன்று, கோனானமீசனிலெவெள்ளிகூட கூடிபேமுப்பூர தோஷநன்றே.
(பொ-ரை) மேற்குதிக்குக்கு செவ்வாய்க்கிழமையும் அமரபட்சத்து அஷ்டமிதிதியும், விசாகநட்சத்திரமும், அக்கினிதிக்குக்கு சனிக்கிழமையும் இரேவதிநட்சத்திரமும் அஷ்டமிதிதியும், எமன் திக்குக்கு ஞாயிற்றுக்கிழமையும் துவாதசிதிதியும் பூசநட்சத்திரமும், நிருதி திக்குக்கு திங்கட்கிழமையும் சித்திரை, மகம், ஆயில்யமென்னும் நட்சத்திரங்களும், பௌர்ணமிதிதியும் நன்மையுடையவைகளாம்-எ-று.
(பொ-ரை) மேற்குதிக்குக்கு செவ்வாய்க்கிழமையும் அமரபட்சத்து அஷ்டமிதிதியும் விசாகநட்சத்திரமும், வாயுதிக்குக்கு புதன்கிழமையும், புனர்பூசம், ஆயில்யம் என்னும் நட்சத்திரங்களும், பஞ்சமிதிதியும், மறலிதிசைக்கு வியாழக்கிழமையும் சோதி நட்சத்திரமும், சதுர்த்தசிதிதியும், ஈசான்யதிக்குக்கு வெள்ளிக்கிழமையும் முப்பூரமும் நன்மையுடையவைகளாம்-எ-று.
செய்கைநிலை.
நேரிசை வெண்பா
தோஷங்கள் கீழ்த்திசைக்கு மரணமாகும் சொன்னபடி யக்கினிக்கு மரணமாகும் பாசங்கடென்றிசைக்கு மூகாரமாகும் பகர்நிருதிதனி லூண்டி பண்பதாகும் தேசங்கள்மேற்றிசைக்கு நடையதாகும் செயமானவாயுவுக்குத் தூக்கமாகும் நாசங்கள் வடக்காகு மீசானுக்கு நன்றாகும் பொதுபக்ஷியைந்துமாமே.
(பொ-ரை) கீழ்த்திசைக்கும் அக்கினிக்கும் மரணமாகும் தெற்குக்கு அரசாகும், நிருதிக்கு ஊணாகும், மேற்குங்கு நடையாகும், வாயுவுக்கு தூக்கமாகும் ஈசான்யத்துக்கு வடக்கும் நன்மையைக் கொடுக்கின்ற பொதுப்பட்சிகள் ஐந்தின் செய்கைகள் இவைகளாம், என்றவாறு.
Page 73
அகஸ்தியர் பஞ்சபக்ஷி திக்குப்பூச்சி.
வெண்பா
ஐஞ்சாபங்கிழ்ச்சிவப் பெரிக்குக்கூடத் தந்தகனாகறுப்பாகு நிருதிகூடத் தஞ்சாமற் பச்சையது மேற்கோபத்தஞ் சொன்னகறுப்பதுவாயு மூலைக்காகும் மஞ்சாரும் பொன்மயமே வடக்குக்கப்பால் வளாவெள்ளிமலைரீசன் வரையதாகும் பஞ்சமாம்வண்ணமிந்தப் படியேபோட்டுப் பாரமெனும் பூசைபண்ணி பக்ஷிபாரே.
(பொ-ரை) நிறமாவன:- கிழக்குக்குசிவப்பும், எமனுக்கு கறுப்பும் நிருதிக்கு பச்சையும், மேற்குக்கு கறுப்பும் வாயுவுக்கு மஞ்சளும், வடக்குக்கு வெள்ளையும் ஆகும். ஆகையால் இவ்விதமேபோட்டுப்பூசைபண்ணி பட்சிகளை ஆராய்ந்துபார் - எ-று.
பக்ஷிப் பொருத்தம் வல்லூறுக்கும் ஆந்தைக்கும்.
வெண்பா
பட்சியிலே முதற்பட்சி யானானன்று பண்ணுறங்கி நடந்தாலுந் துஞ்சினாலும் உச்சியேயாகியே யுண்டிட்டாலும் உச்சமடாபட்சிமிச்சம் வல்லூறாகும் கட்சியிலேயாந்தையென்றா லாகாதப்பா கனமானவுணரசானானன்றே கொச்சியிலே நடையுரக்கஞ் சாவென்றாலே கூடாதேயாந்தைவலு வில்ஸைத்தானே.
(பொ-ரை) ஐந்துபட்சிகளில் முதல்பட்சியானால் மிகவும் நல்லது உறங்கினாலும், நடந்தாலும், மரணமானாலும், உண்டாலும் வல்லூறு உச்சமாகும். ஆந்தையென்றால் ஆகமாட்டாது. உண்டி, அரசு இவைகளிலிருந்தால், நன்மை, நடை, தூக்கம், மரணம் இவைகளில் ஆந்தைக்குவலில்லை-எ-று.
காகத்துக்கும் கோழிக்கும்.
வெண்பா
வலுவாகுங்காகமங்கே யுதித்ததானால் வல்லூறு போதாது காகமிச்சம் வலுவாக மரணமுட னரசாணாலு மாடமிசை நடந்தாது முறங்கினாலும்
Page 74
Venba
வலுவாகவுண்டாலே யதிகலாபம் மதிகோழிவிதியாக வுதிப்பதாலே வலுவாகுமற்றவெல்லா மிரண்டாம்பக்ஷம் வாரணத்தையாந்தையைப்போல் வைத்துப்போடே.
(பொ-ரை.) காகம் முதல் பட்சியானால் நிரம்பவும் வலிவாகும் வல்லூறுக்கு அவ்வளவாக வலிவுபோதாது காகமே மேம்பட்டதாகும் மரணம், அரசு, நடை, தூக்கம், ஊண் இவைகளில் எதுவானாலும் கோழி முதல் பட்சியானால் மிகவும் வலிவாகும் மற்றவைகளெல்லாம் இரண்டாம்பட்சமாகும் கோழியை ஆந்தையைப்போல் வைத்துப்போடவேண்டும்-எ-று.
மயிலுக்கு.
Venba
வைத்தமயில்செத்தாலு முறங்கினாலு மண்ணாண்குடந்தாலினு மஞ்சாதப்பா செத்தமயில்கிடந்தாலு மரவமஞ்சும் செகந்தனிலேயிதுமிச்சஞ் செப்பக்கேளு அத்தமதகைகூடு மரசர்தோற்பா ரணிபெறலாமிகுநலமா மவையும்ஞானம் மற்றவெல்லாம்போதாது மயிலுக்கப்பா மகத்தான பறவைசெய்யும் வகையைக்கேளே.
(பொ-ரை) மயிலானது மரணமானாலும், தூங்கினாலும், அரசருண்டாலும், நடந்தாலும் உண்டாலும் பயப்படாது. மயில் செத்துக் கிடந்தாலும், அழகு கைகூடும். அரசர் தோல்வியடைவார்கள், செல்வம்பெறலாம், மற்றவைகள் போதாது, இவை பட்சிகள் செய்யும் விதங்கராம். இவைகளை நன்றாய்க்கேட்பாய்-எ.று.
பூர்வபட்சம். வாரம் பக்ஷி செய்கை மூலிகைக் குறிப்பு.
Venba
வகையென்னவளர்பிறைக்குச் செவ்வாய்பானு வல்லூறினதிகாரம் புதனுந்திங்கள் தாகையாகு மாந்தை யதிகாரமாகும் சொல்லும்வியாழத்தினதிகாரங் காகம் நகையென்னவெள்ளிக்குக் கோழியாகும் நல்லசனியதிகார மயிலுக்குண்டு புகையென்னப்பச்சிலையைப் பகருவோமியாம் பட்சியெல்லாமுண்ணாது பிடுங்கிட்டாலே.
Page 75
அகஸ்தியர் பஞ்சபக்ஷி
(பொ-ரை) வளர்பிறையில் செவ்வாய்க்கிழமை ஞாயிற்றுக்கிழமைகளில்வல்லூறின் அதிகாரமாகும், புதன்கிழமை, திங்கட்கிழமைகளில் ஆந்தையின் அதிகாரமாகும் வியாழக்கிழமையில் காகத்தின் அதிகாரமாகும், வெள்ளிக்கிழமையில் கோழியின் அதிகாரமாகும் சனிக்கிழமையில் மயிலின் அதிகாரமாகும் இனி மூலிகையைச்சொல்லுவோம். பசிகினால் பட்சிகள் உண்ணமாட்டா - எ-று. 11
வெண்பா
பிடுங்குவது தினமதவே மூலிகைகேளு பேசாதேயரைக்கீரை முதலாம்பட்சி ஒடுங்குவதாற்சிறுகீரை யிரண்டாம்பட்சி யுரைத்திட்டோ மூக்கரை சாரணைவேர்காகம் நடுங்குவதக்கரையின்வேர் கோழிக்காகும் நங்கிலிவேர்மயிலுக்கா நாளுஞ்சேரப் பிடுங்கிவிட்டுச்சாமத்திற் போட்டுப்போனால் புண்ணியனே மரணமாங் கருமந்தானே.
(பொ-ரை) வல்லூறுக்கு அரைக்கீரையும், ஆந்தைக்கு சிறுகீரையும் காகத்திற்கு மூக்கிரண்டை சாரணைகளும் கோழிக்கு தகரையும் மயிலுக்கு சிலுசிலுப்பையும் பிடுங்கிவிட்டு சாமத்தில் போட்டுவிட்டுப் போனால் மரணமாகும் - எ-று. 12
வெண்பா
கருமமொன்றுணரசு நமக்குநன்று காரியங்கை கூடுமடா யலக்குமூலம் வருமளவும்பொசியாது நமக்குண்டான வழக்குவெல்லும்படைபோனால் வரலாம் வெற்றி நிருதர்கும் பொருதிளைப்பாராசாதோற்பார் நிதிசேரும்பிணிதீரு நேசமுற்றும் தருமமதுதலைக்கீட்டு மூலத்தாலே தனிமூலம்பொதுபட்சி கீரைவித்தே.
(பொ-ரை) ஊணும் அரசும் நல்லது காரியங்கள் கைகூடும் வழக்குவெல்லலாம் ஜெயமடையலாம் அரசர்தோற்பார் செல்வஞ்சேரும் நோய்தீரும், தருமமுண்டாம் என்றறியவும் - எ-று. 13
வெண்பா
வித்தானவெதிரிகளை வெல்லவேண்டில் வேறானேன்பேர்மாண நடையுறக்கம் இத்தானவேளையிலே பதன்பேர்சொல்லி யிசைத்திட்ட மூலத்தைச் சாபநீக்கிக்
Page 76
மூலமும் நூதன உரையும்
வெண்பா
கொத்தோடேபிடுங்கிவிட்டுக் கடக்கப்போடு கொடுஞ்சுடலை நீரிற்புதைத்து குறியைக்கூற அத்தோடே பிணிகொண்டு கிடப்பானூங்கை யதைவிட்டேயுறங்கினவேர் புதைக்கக்கேளே.
(பொ-ரை) எதிரிகளை ஜெயிக்கவிரும்பினால் அவன் பேரை மரணம், நடை, தூக்கம் இவ்வேளைகளில் வேர்ச்சாய நீக்கிகொத்தாகப் பிடுங்கிக்கடம்போட்டு சுடலையிற்புதைத்து குறியைச்சொல்ல அவன் நோய்கொண்டு ஊமையைப்போலிருப்பான் அதைவிட்டு உறங்கின வேரைப்புதைக்கக்கேள்-எ-று. 14
வெண்பா
கேளப்பா வுறங்கினவேர் புதைத்தப்போது கெட்டதடாவிருவிழியுங் குருடாம்பா மீளப்பாமாற்றுரையு மிலையிதற்கு விண்ணுளவுமண்ணுளவு மருந்துமில்லை ஆளப்பாமாரண மூலத்தைத்தாக்க யவனுயிரையதுதாக்க மாட்டாதோபார் கோளப்பாவாராலுந் தடுக்கப்போமோ குறைவில்பட்சிக் குறியதனைக் கூறுவேனே.
(பொ-ரை) உறங்கினவேர் புதைத்தால் இரண்டு கண்களும் குருடாம். இதற்கு மாற்றில்லை ஆகாயபூமிகளில் இதற்கு மருந்தும் கிடையாது மாரணமூலத்தைச் சொல்ல எவனாலும் தடுக்கமுடியாது. இப்படியே பட்சிகளின் வலிவாகும்-எ-று. 15
அமரபட்ச குறிப்பு.
வெண்பா
கூறியதோர்மரபட்சங் குறிப்பைக்கேளு கொடியுண்ணும்புந்தியிலே வியாழமாந்தை மீறியதோர்வெள்ளியிலே வல்லூறுண்ணும் வெறுங்கோழிஞாயிறுடன் செவ்வாயுண்ணும் மாறியதோர்சனியுடனே சோமவாசம் மயிலுண்ணும்மச்சமுனிவாக்கியத்தைத் தேறியதோர்முன்பாகஞ் செய்யக்கேளு செப்புலோம்பச்சிலையைக் சேர்ந்துகொள்ளே.
Page 77
அகஸ்தியர்பஞ்சபக்ஷி
(பொ-ரை) அமரபட்சத்தில் புதன்கிழமையில் காகம் உண்ணும், வியாழக்கிழமையில் ஆந்தை யுண்ணும், வெள்ளிக்கிழமையில் வல்லூறு உண்ணும், ஞாயிறு, செவ்வாய்க்கிழமைகளில் கோழி உண்ணும், சனிக்கிழமை, திங்கட்கிழமைகளில் மயில் உண்ணும், ஆயினும் இவைகளின் மூலிகைகளைச் சொல்லுகிறேன் தெரிந்துகொள்ளுங்கள் - என்றவாறு.
வெண்பா
கொள்ளவேதைவேளை மயிலுக்காகும் கோழிக்குத்தாங்குப்பை மேனியாகும் விள்ளுநாய்க்கடுகெருக்கு வல்லூறுக்காம் வெளுளந்தை காரையெனு மவுரிக்காகம் துள்ளிடிலென்முன்போல காரியங்கள் சூக்ஷமாய்ச்செய்துகொண்டு தொழிலைப்பாரு கள்ளமேயில்லையடாமுனி நூறன்னிற் கண்டுபார்பஞ்சபட்சி முறையைத்தானே.
(பொ-ரை) மயிலுக்கு தைவேளையும் கோழிக்கு குப்பைமேனியும், வல்லூறுக்கு நாய்க்கடுகும், எருக்கும், ஆந்தைக்கு காரையும் காகத்திற்கு அவிரியும் மூலிகைகளாம், இவைகளை முன்போல் செய்துகொள்வாய்-எ-று.
வெண்பா
முறையோடேநாற்கோண மூட்டும்போத முடியடாசிகாரத்தை தலைகீழாக அறையடாவிறைகோண மடிக்கும்போதே பதனுடனேநகாரத்தை நாட்டிப்பாரு உறைபோடேமுன்சொன்ன வகையையோத வுள்ளபடியின்சொன்ன வயணம்பாரு துறையோடேவெளியிட்டுச் சொல்லக்கேளு சுகமதுவே நசிமுசியென்றுரைக்கலாமே.
(பொ-ரை.) கிரமத்துடனே நாற்கோணம்போடும்போது சிகாரபீஜத்தைமுதல்தொட்டுத்தலைகீழாகப்போட்டு புத்துடன் நகாரத்தையும் போட்டுப்பார், பிறகுமுன்னே சொன்னவிதத்தை உருப்போடச்சொல்லுவது நமசிவென்று சொல்லுவதாகும்-எ-று.
Page 78
மூலமும் நூதன உரையும் அஷ்டகர்மப் பலகை.
Table
ஈசான்யம் | இந்திரன் | அக்கினி வெள்ளை | சிவப்பு | சிவப்பு வெள்ளி | சுக்கிரவாரம் | சனி பூராடம் | உத்திரநட்சத்திரம் | இரேவதி பூரதோஷம் | அஷ்டமி திதி | அஷ்டமி நன்மை | மரணம் | மரணம்
குபேரன் | கிழக்கு. [சக்கரம்: வடக்கு, தெற்கு, மேற்கு] | இயமன் பொன்மை | | கறுப்பு வியாழம் | | ஆதிவாரம் சோதி | | பூசம் சதுர்த்தசி | | துவாதசி நாசம் | | அரசு
வாயு | வருணன் | நிருதி கருமை | பசுமை | கறுப்பு புதன் | மங்களவாரம் | திங்கள் புநர்ப்பூசம், ஆயில்யம் | விசாகம் | சித்திரை - மகம், ஆயில்யம் பஞ்சமி | அமரபட்சத்துட்டமி | பூரணை துக்கம் | நடை | உண்டி
சோதிரிஷி 300 லிருந்தெடுத் தெழுதியது.
விருத்தம்
ஆதியாய்நின்றபராபரத்தைப்போற்றி அகண்டமறைத்தெக்ஷணா மூர்த்திபாதம்போற்றி சோதியாம்பதினெட்டுச் சித்தர்பாதம் தொழுதேத்தியமுதபக்ஷி யைந்தைச்சொல்ல வாதியாம்வயித்தியனா மாந்தரீகன் மகத்தானசோதிரிஷி மறையிலேற்றோர் காstileகேட்கவட்ட கருமமாகும் கணபதியின்பதம்போற்றிக் கருத்தைச்சொல்வேன்.
Page 79
அகஸ்தியர் பஞ்சபக்ஷி
தொடர்ச்சி
ச (பொ-ரை.) தலைமையாயிருந்த பராபவம், தட்சிணாமூர்த்தி பதினெண் சித்தர், இவர்களுடைய பாதங்களைத்துதித்து பஞ்சபட்சியைச்சொல்ல கணபதியின்பாதங்களையும் துதிசெய்வேன்-எ-று. 19
அகஸ்தியர் பஞ்சபக்ஷி
பாடல்
சொல்லுவேனிந்நூலை முந்நூற்றுள்ளே சொல்லாதசித்தெல்லாஞ் சொல்லிவிட்டேன் வெல்லுவாய்சித்தெட்டுக் காதிசொன்னேன் மேலானதாம்பட்சி நிலையைக்கேளே அல்லுவாமுதலெழுத்தோ விரைந்தைப்பா அதுவரையிலெஞ்செழுத் ததின்மேற்கேளு வில்ளுவாய்பதினெட்டா மெழுத்துக்கெல்லாம் விடுஞ்சாபநீக்கிடவுடும் விள்ளுந்தானே.
(பொ-ரை.) இந்நூல் முந்நூறுக்குள் இனியில்லாச்சுனையெல்லாஞ் சொல்லிவிட்டேன், அஷ்டசித்துக்களுக்கு ஆதியை சொன்னேன் இனிபட்சி நிலையைக்கேட்பாயாக முதலெழுத்து பத்து அதுவரைக்கும் அஞ்செழுத்தாகும் அதின்மேல் பதினெட்டாவது எழுத்துக்களுக்கெல்லாம் சாயநீக்கல் நஷ்டமாய் விளங்கும்-எ-று. 20
அகஸ்தியர் பஞ்சபக்ஷி
பாடல்
தானென்பார்பட்சியெல்லா மறிவோமென்பார் சத்தியமாயட்டசித்துஞ் சார்ந்தோமென்பார் ஊனென்றதாய்பட்சி யுண்மையெல்லாம் ஓரெழுத்திற்கண்டறிந்தோ முறுதியென்பார் வானென்றதத்துவத்தி லாய்ந்தோமென்பார் வழிதெரியாமூதேவி சண்டாளர்தாம் கோபென்றவாசானைக் குணமாய்ப்போற்றி குறிகிட்டாற்பலியாது குறிகொள்ளீரே.
(பொ-ரை.) சிலர் நானென்பார்கள் பட்சிகளையெல்லாம் அறிவோம் என்பார்கள், அஷ்டசித்துக்களும் ஆடுவோமென்பார்கள், பட்சியின் உண்மை நிலைகளையெல்லாம் ஒரு எழுத்தில் கண்டறிந்தோம் என்பார்கள், தத்துவத்தில் ஆராய்ந்தோமென்பார்கள், அவர்களெல்லாம் வழிதெரியாதமூதேவி சண்டாளர்களாவார்கள் ஆகையால் குருவைப்போற்றிப் பார்க்காவிட்டால் எவையும் பலிதமாகா-எ-று.
Page 80
பக்ஷிசாத்தை நீக்கிவைல்
நேரிசை வெண்பா
... நாதித் துரமலாந்தசொரூப தண்டம் ... ரமுக்கண்ட தறியிரோ வுட்சத்தை ... னறிய வொணாதீங்கா மது ... திருணீக்குங் கால்.
(பொ-ரை.) மூல ... பொருட்டாகிய துரகண்டாம் ... ண்டதை உபதேச ... மேலிருக்க வுடைவனறிய குபேரனத்தி ... றைந்து நூருனக்கிரி வாவையை ... தது.
பொன்மை வியாழும் மாந்தைக்கு மா மாகுதந்தா னியே சோதி மதகோழிக்குந் தானசைந்து- மேலாதிய சதுர் பொழுத்தோப பேசி துசிமூக்கைக்குங் நா பல வெழுத்தல்வே வைக.
(பொ-ரை.) வல்லூறுக்கும், ஆந்தைக்கும் ... நாகத்துக்குங், கோழி ... யிலுங்கு, வெகட் முன்னோரைய ... மூவேகளுக் வகை ... கோலமென்று உணரக் கடவீர்கள். 23
இகழுந்தாற் கூடா தொருவ னம் காழி வழிப்பொது பாழாகுங் கறக்கில்புனல் பூமிமிற்போந் தானுகீட்ட வான்.
(பொ-ரை.) கா ... லையுடைய ஒருதிசை வலிகாக ஆந்தை டாடலை யெதிரிலையிழையழிமதிப்புக... றைத்திகாட்டு ஆதிலி மயிலப்பூட... பனார்கள் இதற்குள்ளேவாங்கு பிழைப் அ... 24
உலக வாழ்த்து
சோதி வி நாமே யெல்லாங்களையுமெழுத்தறம் யீண்டாக்கையாள் விளக்குநிற்பண்டாகப் பகவத்தி யொளியும் போதசக்தியையமரையும் பகருந்தவத்தோர்வாய்வழியே வர்து.
Page 81
அகஸ்தியர் பஞ்சபக்ஷி
(பொ-ரை.) பூர்வத்தில் பூமியிலுள்ளாருடைய ஆயுதங்களையும், வேதப்பொருளையும், மாதவத்தினர்களுடைய வாயின் வழியாக ஐந் தெழுத்தையும் சரஸ்வதிதேவியின் திருவருளையும் முன்னிட்டு மனிதர்களெல்லாம் உணர்ந்துகொண்டார்கள் - எ-று. 25 பத்தாம் அதிகாரம் முற்றிற்று.
அகஸ்தியர் பஞ்சபக்ஷி சாஸ்திரம்
முற்றிற்று.
அகஸ்தியமாமுனிவர் திருவடிகளேசரணம்.
ஒன்பதாவது செய்யுள் தொகை - 133 பத்தாவது செய்யுள் தொகை - 24 } ஆக செய்யுள் தொகை - 157 ஒன்பதாவது சக்கரத்தொகை - 58 பத்தாவது சக்கரத்தொகை - 1 } ஆக சக்கரத் தொகை - 59