1. THFsilaraikovai
Page 1
Tamil Heritage Foundation
Tamil Heritage Foundation தமிழ் மரபு அறக்கட்டளை Electronic preservation of Tamil heritage materials e-Book series an international NGO initiative to digitize old Tamil books and palm leaf manuscripts visit http://www.tamilheritage.org தமிழ் ஓலைச்சுவடிகள், நூல் பாதுகாப்பு. பாதுகாப்பற்ற நிலையில், மறுபதிப்பு காணாத பழைய நூல்கள், ஓலைச்சுவடிகள் போன்ற தமிழ் முதுசொம்களை மின்பதிப்பாக்கி தமிழ் வளத்தை நிரந்தரமாக்கும் ஒரு சர்வதேச தன்னார்வ முயற்சி. மேலும் அறிய: http://www.tamilheritage.org முதுசொம் முத்திரை தமிழ்ப்பாதுகாப்பின் அக்கறை
Page 2
Title Page
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
ஜோதிட ஆசிரியர் : கந்தசாமி பிள்ளை அவர்களால் இயற்றிய உரையுடன்
வெளியிட்டோர் : B. இரத்தின நாயகர் அண்ட் சன்ஸ் நெ. 26, வெங்கட்ராம தெரு, கொண்டித்தோப்பு, மின்ட் போஸ்ட், சென்னை - 600 079.
Page 6
Title Page
பெரிய ஜோதிட சில்லரைக் கோவை (21-நூல்கள் அடங்கியது)
ஜோதிட ஆசிரியர் கந்தசாமி பிள்ளை அவர்களால் இயற்றிய உரையுடன்
பிரசுரித்தவர் : B. இரத்தின நாயகர் அன்ட் சன்ஸ், 26, வெங்கட்ராமய்யர் தெரு, கொண்டித்தோப்பு, சென்னை-79.
பதிப்புரிமை] 1997 [விலை ரூ. 80-00
JAYISWARIYAAM PUBLICATIONS PUBLISHERS & BOOK SELLERS NO. 3/1, BADRIAN STREET, CHENNAI - 600 001.
Page 7
பொருளடக்கம்
- ஜம்புமகாரிஷி வாக்கியம்
- ஜோதிட கணிதாமிர்தம்
- நவக்கிரகமாலை
- தாண்டவமாலை
- பலகறை ஆரூடம்
- தேங்காய்க்குறி ஆரூட பலன்
- நவக்கிரக திசாபுத்தி நிர்ணயம்
- நவக்கிரக ஆரூட பலன்
- காக்கேயர் நூல்
- காக்கேயர் வாக்கியம்
- நவக்கிரக கோட்சார பலன்
- சந்திர காவியம்
- துவாதச லக்கின கிரகபலன்
- ஆயுள் நிர்ணய பலன்
- போதக-வேதக-போசக-காரக கிரக நிலை
- சகதேவராரூடம்
- ஸ்திரீ ஜாதகம்
- ஸ்திரீகள் ருதுஜாதக நிர்ணயம்
- திருமணப் பொருத்த நிர்ணயம்
- ஜெயமுனி ஜோதிட சூத்திரம்
- கருட தரிசனபலன்
Page 8
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை - மூலமும் உரையும் / கணேசர் துதி
கணேசர் துதி எண்சீரடி விருத்தம்
ஆதிபிர ணவமூர்த்தி யானயெத்தன் ஐயனே விநாயகரின் னருளினாலே ஜோதிடசில் லரைக்கோவை மூலத்திற்கு சொல்லும் உரைசரியாக அமைந்திருக்க நீதியா யென்மனதில் கொலுவமர்ந்து நினதருளால் யானெழுத வரந்தாவென்று பாதிமதி சடையணிந்த பரமவீன்ற பாலகனே சாவென்று பணிந்திட்டேனே.
சரஸ்வதி துதி
சரஸ்வதி துதி எண்சீரடி விருத்தம்
அன்னையே சரஸ்வதி யுன் கிருபையாலே அவனி தனிலே பிறந்த ஜாதகற்கு சொன் மயமாய்ப் பலனுரைக்க முன்னோரோதும் ஜோதிட சில்லரைக் கோவை மூலத்திற்கு நன்மையா யுரையெழுத லானேனெந்தன் நாவில்நின்று ஞாபக சக்திதந்து அன்பாக அனுக்கிரகஞ் செய்வாயம்மா அருள்வாணி யுன்பாதம் பணிந்திட்டேனே.
நவக்கிரகங்கள் துதி
நவக்கிரகங்கள் துதி எண்சீரடி விருத்தம்
அன்பான ரவிசசிசேய் மால்வியாழன் அசுரகுரு சுக்ரசனி ராகுகேது ஒன்பதுபேர் சகாயத்தால் யானிப்போது ஓதுகிறேன் மனிதர்கட் காதாரமாக நன்மையாய் ஜோதிடசில் லரைக்கோவை மூலத்திற்கு நலமுடனே உரையெழுத நவக்கிரகங்கள் என்மனதி லிருந்தருள்வா ரென்றுநம்பி எத்ததியும் பக்தியுடன் பணிந்திட்டேனே.
Page 9
பராசக்தி துதி
எண்சீரடி விருத்தம்
ஆதிபராசக்தி ராஜேஸ்வரி வராகி அம்பிகா வாலைகெளரி நீலிகுலி நீதிசேர் திரிபுரசுந் தரிலுங்காரி நீணிலத்தின் மனிதர்கட்கா தாரமாக ஜோதிடசில் லரைக்கோவை மூலத்திற்கு சொல்வழுவா உரையெழுத சகாயஞ்செய்வாய் பாதிமதி சடையணிந்தோன் பாகத்துற்ற பராசக்தி பாதத்தை பணிந்திட்டேனே.
சபை வணக்கம்
எண்சீரடி விருத்தம்
நவகோடி சித்தர்களின் சகாயத்தாலும் நாதாக்கள் ரிஷிமுனிவர் கிருபையாலும் சிவசுப்ர மண்யர் திரு வருளினாலும் ஜோதிடசில் லரைக்கோவை மூலத்திற்கு தவறாமல் உரையெழுத லானேனிந்த தரணியில்சூழ் ஜோதிடசாஸ் திரவல்லோர்கள் கவனித்து வாசித்துக் குறைசொல்லாமல் கருணையுடன் மதிப்பீர்கள் கலைவல்லோரே. 1
நூன்முகம்
விருத்தம்
அன்புடன் சிஷ்யனுக்கு ஆசான் ஜோதிட சாஸ்திரத்தை இன்புட னுபதேசிக்க இனிதுட னருகிருத்தி தன்மையாய் ஜாதகற்கு நவக்கிரகங்கள் கொடுக்கும் தன்மையை யுரைக்கும்ஞான சாஸ்திரமாகும் பாரீர். 2
உரை:—ஜோதிட சாஸ்திர நூலுணர்ந்த குருவானவர் தமது சிஷ்யனுக்கு உலகில் பிறந்த ஜாதகர்களின் பலாபலனை விபரமாய் அநுக்கிரகஞ் செய்யும்படியான மார்க்கமனைத்தும் உணர்ந்து கொள்வதற்கிசைந்த விஷயமாய் அமைந்த இந்தப் பெரிய ஜோதிட சில்லரைக் கோவை முன்னோர்களால் பாடி வைத்த மூலபாடமாகும். இதில் குறிப்பிட்ட இருபத்தொரு புத்தகத்திற்கு சரியான உரை யெழுதலாயிற்று.
Page 10
ஜம்புமகாரிஷி வாக்கியம்
எண்சீரடி விருத்தம்
தினமொன்றுக்கறுபது நாழிகையென்றாலும் தினகரனார்க்காதியந்த மாகும்பாரே ஜனனாதிவேளைதனைக் கணக்கெடுத்து சாற்றுமந்த லக்கினத்தை முதலாய்வைத்தால் பனிரெண்டுஸ்தானபலன் விபரங்காணும் பருதிமதிசேயமால் பொன்னன்சுக்கிரனுமாக சனிராகுகேதுநின்று பலன்கொடுக்கும்மார்க்கம் சாற்றுகிறேன் கவனிப்பீர் குலகத்தோரே. 3
உரை:—தினந்தோறும் அறுபது நாழிகை நடப்பது ஆதித்தனுக்கு ஆதியந்தமாகும்; இதனையே மனித வகுப்பார் இரவு பகலாய் கணக்கிட்டு ஒருநாளெனக் குறிப்பித்துச் சொல்வர். இதில் எத்தனையாவது நாழிகையில் ஜாதகர் ஜனனமோ அதனையே பனிரெண்டு லக்கினங்களில் ஒன்றாகிய ஜனன லக்கினமாய் அமைத்து, மற்றவை அடியிற் குறிப்பிட்டவிதமாய் எடுத்துச் சொல்ல வேண்டும்.
ஜனனலக்கினம் குறிக்கும்போது
1-வது, ஜனனலக்கினம், உயிர்லக்கினம். 2-வது, குடும்பஸ்தானம், தனஸ்தானம், வாக்குஸ்தானம், வித்யாஸ்தானம். 3-வது, சகோதரஸ்தானம், தீரஸ்தானம். 4-வது, சுகஸ்தானம், வாகனஸ்தானம், மாதுருஸ்தானம். 5-வது, புத்திஸ்தானம். 6-வது, சத்துருஸ்தானம், ரோகஸ்தானம். 7-வது, களத்திரஸ்தானம், மாரகஸ்தானம். 8-வது, ஆயுஸ்தானம். 9-வது, பிதுர்ஸ்தானம், தர்மஸ்தானம், பாக்கியஸ்தானம். 10-வது, ஜீவனஸ்தானம், கர்மஸ்தானம். 11-வது, இலாபஸ்தானம், மூத்த சகோதரஸ்தானம். 12-வது, சயனஸ்தானம் மோக்ஷஸ்தானம்
Page 11
இதற்குரிய விபரம் / இலக்கினத்திற்குரிய நாழிகை விபரம்
மேஷம்-4½ துலாம்-5 ரிஷபம்-4¾ விருச்சிகம்-5½ மிதுனம்-5¼ தனுசு-5½ கடகம்-5½ மகரம்-5¼ சிங்கம்-5¼ கும்பம்-4¾ கன்னி-5 மீனம்-4½ ஆக மொத்தம் தினசரி நாழிகை-60.
இவ்விதமாய் ஜாதகர்கள் பிறக்கும்போது
இவ்விதமாய் ஜாதகர்கள் பிறக்கும்போது இலக்கினத்திற்கு குறிப்பிக்கும் நவக்கிரகங்கள் எவ்விதமாய் பலன்கொடுப்பா ரென்றாலோசித்து எதிரில்வந்த ஜாதகர்க்கு பலனுரைக்கும் அவ்விதத்தை ஒவ்வொன்றாய்க் குறிப்பித்தோதில் அவரவர்க் கெனுபவிப்ப துண்மையென்றே ஒவ்வியேகணிதநூ லாராய்ந்து நன்றாய் ஓதும்விதம் நவன்றிடுவோம் கவனிப்பீரே. 4
உரை:—இவ்விதமாய் ஜாதகர்கள் பூமியில் பிறக்கும்போது துவாதச லக்கினங்களிலிருந்த கிரகங்கள் கொடுக்கும் பலாபலனை விபரமாய் அடியிற் குறிப்பிட்டிருக்கும் விதமே பலன் நடக்கு மென்று கணித நூலாராய்ச்சி செய்து சொல்லிக்கொண்டு வரு வோம் கவனிப்பீர்களானால் சரியாயிருக்கும்.
இலக்கினத்திற்கேமூன்று மிடத்திற்குடையோனாகி
இலக்கினத்திற்கேமூன்று மிடத்திற்குடையோனாகி இசைந்தகிரகம்வந்தால் சாமான்யமாகும் கலக்கமிலாஅவன்திசை புத்தியுமப்படியேயாகும் காணுமெட்டாமிடத் துடையோன்ஜனனகாலம் நலமாயெக்காலிலிருந்தானோ அந்தராசிதன்னில் நாடிசனிவரும்போ தவன் புத்திமாதத்தில் பலவிதமாயமைந்தசேதி எதுவந்தாலும் பலனதிகமில்லையென்று பகருவீரே. 5
உரை:—உலகத்தில் பிறந்த எந்த ஜாதகனுக்கும் உதய லக் கினத்திற்கு மூன்றாமிடத்திற் குடையவனுடைய திசை வந்தால் சாமான்யமாயிருக்கும். அன்றியும், அவன் திசையிலும், அவன் புத்தியிலும் சாமான்யமாயிருக்குமென்று கவனிப்பீர்கள். ஆனால், எட்டாமிடத்திற்குடையவன் ஜனனகாலத்தில் எந்தநக்ஷத்தி ரத்தின் எத்தனையாவது காலிலிருந்தானோ அந்த ராசியில் சனி
Page 12
ஜம்புகாshift வாக்கியம்
வரும்போது அவன் புத்தி மாதத்தில் அவனுடைய ராசியாவது இலக்கினாதிபன் மாதமாவது வந்தால் அந்த மாதத்தில் அவ னுடைய ராசி நக்ஷத்திரத்தில் சந்திர லக்கினத்திற்குடையவ னிருக்கும் நக்ஷத்திரமாவது வந்தாலும் அந்த ராசிக்குடையவன் கிழமை அந்த மாதத்தில் எத்தனையாந்தேதி வருகிறதோ அந்த தேதியிலே மிகவும் சாமான்ய பலன் நடக்குமென்று ஜோதிட கணித சாஸ்திரத்தை ஆராய்ந்துணர்ந்து பலன் சொன்னால் சரியாய் அமைந்திருக்கும்.
இரட்டைப்பிள்ளை ஜனனம்
இலக்கணத்தின் மூன்றோனும் ராசியோனும் இராகுகேதுடன் சேர்ந்தோர் ராசியேறில் நலமுடனேபார்த்தாலும் இரட்டைப்பிள்ளை நவில்வாய் ஆண்கிரகமெனில் ஆண்பிள்ளையாகும் நிலையாய்பெண்கிரகமெனில் பெண்ணொன்றேது நிலைத்திடும்லக்கினத் தோனும்ராசியோனும் பலமுடனேராசியோன் பெண்கிரகமானால் பாரில்ரெண்டும் பெண்ணாகப்பிறக்கும்பாரே. 6
உரை:--இலக்கினத்திற்கு மூன்றுக்குடையவனும் இராசிக் குடையவனும் ஒரே ராசியில் சேர்ந்து அவர்களுடன் இராகு பகவானாவது கேது பகவானாவது சேர்ந்தாலும் பார்த்தாலும் ஒரு லக்கினத்திலேயே இரட்டைபிள்ளை பிறக்கும் ஆனால், அந்த இலக்கினத்திற்குடையவன் ஆண் கிரகமானால் பிறக்கும் குழந்தை ஆணென்றும், பெண்கிரகமானால் பெண்ணென்றும், ஆனால், இரண்டும் ஆண் கிரகமாயிருந்தால் இரண்டும் ஆண் குழந்தை என்றும், அவ்விதமின்றி இரண்டும் பெண் கிரக மானால் இரண்டும் பெண் குழந்தையாய் பிறக்குமென்றும் சொல்வாய். ஆனால், இலக்கினத்திற் குடையவனும் நாலா மிடத்திற் குடையவனும் சந்திரபகவானும் இல்லத்திலிருக்கும் போது பிறந்தால் இரட்டைபிள்ளையாகு மென்றுணர்வாய்.
தத்துப் புத்திரன்
பஞ்சமஸ்தானம் புதன்வீடாயிருக்க பகைகிரகங்கள் புதனைசேர்ந்திருக்க எஞ்சிலாசனியேனும் குளிகனேனும் இசைந்தவரோடேயிருந்தேனும் பார்த்திட்டாலும் நஞ்சமெனப்பிறந்த சிசுதத்துபுத்திரன் தனவந்தன் வீட்டிலிருந் தன்பாய்வாழ்வான் அஞ்சொன்பதிற் குடையோனார் ராசியேறில் அவன்தந்தைவர்க்கத்தில் தத்தாய்ப்போவான். 7
உரை:--ஜனன லக்கினத்திற்கு பஞ்சமஸ்தானம் புதன் வீடாவிருந்தால் அந்த ஸ்தானாதிபதியாகிய புதன் சத்ரு கிரகங்
Page 13
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
களுடனே சேர்த்தும் அவருடனே சனிபகவானாவது குளிகனாவது சேர்ந்திருக்க அன்றி, அந்த ராசியைப் பார்த்தாலும் அந்த சமயத்தில் பிறந்த பிள்ளை தத்துபுத்திரனாய்ப் போவான். இதன்றியும், விசேஷயோகமாவது: பஞ்சம ஸ்தானாதிபதியும், பிதுர் ஸ்தானாதிபதியும் ஒரே இராசியிலிருக்கப் பிறந்த பிள்ளை தகப்பன் வர்க்கத்திலே தத்துபுத்திரனாகப் போவான். இவர்களிரண்டு கிரகத்துடனும் மாதுர் ஸ்தானாதிபதியாவது சுக்கிரபகவானாவது சேர்ந்திருந்தால் தாய் வர்க்கத்திலாவது களத்திர வர்க்கத்திலாவது தத்துபுத்திரனாய்ப் போவானென் றறியவேண்டியது.
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
புகருடனேலக்கினத்தோன் இரண்டோனுங்கூடில் போகுமப்பாநேத்திரந்தான் ரவியும்சேர்ந்தால் ஜகத்தில்ஜனிக்கும்போதே குருடன்றோது சந்திரண்சேர்ந்தால் மாலைக்கண்ணானாவார் சகமில்ஜைந்தேழில் ரவிசேய்ராகு சூழ்ந்திருந்தால் பைத்தியரோகமாகும் மகிழுடன்செவ்வாய் திசையின் புத்தியிலேனும் மற்றெவர்சேர்ந்த புத்திவந்தால்சுகமென்றோதே. 8
உரை:—இலக்கினாதிபதியுடனே இரண்டாமிடத் ததிபதியும் சுக்கிரனும் சேர்ந்திருந்தால் நேத்திரப்பார்வை போகும். அம் மூன்று கிரகங்களுடனே சூரியன் சேர்ந்தால், ஜனன காலத்திலிருந்தே கண் குருடாகும். ஆனால், அவர்களுடனே சந்திரன் சேர்ந்திருந்தால் மாலைக்கண்ணாகும், பஞ்சம ஸ்தானத்திலேனும் சப்தம ஸ்தானத்திலேனும் சூரியன், செவ்வாய், இராகுஞ் சேர்ந்திருந்தால் சித்தப்பிரம்மையும் பைத்தியரோகமும் உண்டாகும். ஆனால், செவ்வாய் திசை சுயபுத்தியிலாகிலும் மற்ற கிரகங்களுடைய புத்தியிலாகிலும் சவுக்கியமாய் நேத்திரபார்வை தெரியும், பைத்திய ரோகமும் விலகி சுகமடைவார்கள்.
விருத்தம்
புதனுமாறாமிடத்தோன் பொருந்திலக்கனத்திருக்க இதமுடனிரண்டுபேரும் ஓரிராசியிலிருந்திட்டாலும் இதமுடனிவர்களோடு இராகுதான்சேர்ந்திட்டாலும் புதன்திசைபுத்திதன்னில் பொருந்துமேவியாதிதானே. 9
உரை:—புதனும் ஆறாமிடத்திற்குடையவனும் இலக்கினத்திலாவது அல்லது இரண்டுபேரும் துவாதச ராசியி லெந்த ராசியிலாவது சேர்ந்திருக்க அவர்களுடனே இராகு சேர்ந்தால் புதன் திசாபுத்தியில் வியாதி சம்பவிக்கும்.
Page 14
ஜம்புமகாரிஷி வாக்கியம் - சந்த விருத்தம்
தசமஸ்தானாதிபதியுடனே சார்ந்துகிரகம்மூன்றிருந்தால் விசனத்தாழ்ந்து இல்லறத்தை வெறுத்தோன்சன்யாசம்பெறுவான் இசையாவிரண்டுகிரகங்கூடில் இகத்தில்சீர்கேடாவானே அசையாதோர்கிரகம்கூடில் அன்பாய்ஞானியாவானே. 10
உரை :- இலக்கினத்திற்குப் பத்தாமிடத்திற் குடையவனுடனே ஒரு ராசியில் மூன்று கிரகங்கூடினால் சந்யாசி யோகமுண்டு, இரண்டு கிரகங்கூடினால் குணபேத ஜீரணமாயுஞ் சீர்கேடுனுமாகப் போவான், ஒரு கிரகம் கூடினால் ஞானியாவான்.
ஜம்புமகாரிஷி வாக்கியம் - எண்சீரடி விருத்தம்
ஜீவனத்தோன் கீரஸ்தோன் சசியும்சேர்ந்து திடமாயோர் இராசியிலிருந்தால் நீரடைப்புநோயாம் மேவியேகீரன்தோன் புதனிரண்டுபேரும் மேன்மையுடன் தனுசிலுறச்செவ்வாய் சேரபார்க்க தாவியே நீரடைப் பாகுமென்பாய் சந்திரன் நாலாமிடத்திருக்க ராசிநா தன்சேர ஆவலுடனவருடன் மூன்றுகிரகம்சேர அன்பாய்நாற்கால் ஜீவனால் பிறந்ததென்பாய். 11
உரை :- ஜீவனஸ்தானாதிபதியும் கீரஸ்தானாதிபதியும் சந்திரனுமாகிய மூன்றுபேரும் ஒருராசியில் சேர்ந்திருந்தால் நீரடைப்பு ரோகமும், மேகவியாதியும் வரும். இலக்கினத்திற்கு மூன்றாமிடத்திற் குடையவனும் புதனும் இவர்களிரண்டுபேரும் தனுசிலிருக்க இவர்களுடனே செவ்வாய் சேர்ந்திருந்தாலும் பார்த்தாலும் நீரடைப்பு வியாதி யுண்டாகும். நாலாமிடத்திற் சந்திரனிருக்க இராசிக்குரியவன் சேர்ந்து அவருடனே மூன்று கிரகமிருக்க நாலுகால் மிருகத்தினால் பிறந்த ஜீவனென்னப்படும்.
ஜம்புமகாரிஷி வாக்கியம் - சீஷன் - குரு உரையாடல்
சீஷன் :- குருநாதா ! மனிதவகுப்பார் சதாகாலமும் கஷ்ட நஷ்டங்களிற் சிக்கி கவலையடைவதும், சுகசவுக்கியத்தை யனுபவித்து மனமகிழ்வதும் நவக்கிரகங்களின் செயல்தானென்றெண்ணுகிறேன். குரு:-ஆம்! அதற்கென்ன சந்தேகமா? மனிதர்கள் செய்த பாப புண்ணியத்தின்படியே சுகதுக்கத்தைக் கொடுப்பதற்காகவே நவக்கிரகங்களாகிய அதிகாரிகள் துவாத ராசியிலுமிருந்து பலன் கொடுக்கும் விஷயத்தை விபரமாய்ச் சொல்வேன் கவனிப்பாய். ஜனன லக்கினத்திற்கு ஐந்தாமிடத்திலாவது ஒன்பதாமிடத்திலாவது நாலு கிரகங்கள் சேர்ந்திருந்தால் மோனத்தை யடைவான். அல்லது நாலாமிடம், ஏழாமிடம், பத்தாமிடமாகிய
Page 15
பெரிய ஜோதிட சில்லரைக் கோவை
ஸ்தானங்களிலாவது நாலுகிரகங்கள் சேர்ந்திருந்தால் மோக்ஷத்தை யடைவான். ஆனால், இலக்கினத்திற்கு மூன்றாமிடத்ததிபதி ஒன்றாமிடத்தில் இருக்க ஒன்பதிற்குடையவன் நட்பு, ஆட்சி, உச்சத்திலிருக்க, அவருடனே சுக்கிரனாவது வியாழனாவது சேர்ந்திருந்தாலும் பார்த்தாலும் ஜெபதபங்கள் செய்து பகவத்யானமாய் மடாதிபதியா யிருப்பார்கள்.
பெரிய ஜோதிட சில்லரைக் கோவை
இலக்கினத்திற்குடையவனும், புதனும் மிதுனராசியிலாவது கன்னியாராசியிலாவது இருக்கும்போது பிறந்தவனுக்கு சதாகாலமும் ஆசனத்தில் வியாதியுண்டாகும். இலக்கினத்திற்கு இரண்டுக்குடையவனும் சந்திரனும் சேர்ந்து ஒரு ராசியிலிருக்க அவர்களுடனே இராகு கேது சேர்ந்திருந்தால் வெள்ளைக்கூஷ்டம் வரும். அந்தக் கிரகங்களைச் செவ்வாய் பார்த்தால் பெருவியாதி வரும். இலக்கினத்திற்கு இரண்டாமிடத்திற் குடையவனும் ஆறாமிடத்திற்குடையவனும் சேர்ந்து மேஷத்திலாவது விருச்சிகத்திலாவ திருக்கும்போது பிறந்தவன் அடிக்கடி துக்கப்படுவான்.
பெரிய ஜோதிட சில்லரைக் கோவை
இலக்கினத்தில் சந்திரனிருக்க அவனுடனே மூன்றாமிடத்திற்குடையவனுமிருந்தால் பிள்ளைக்குத் தாய்ப்பாலில்லாமல் அந்நிய ஸ்திரீயின் பால் குடித்து வருவான்.
பெரிய ஜோதிட சில்லரைக் கோவை
இராசிநாதனும் இராஜாவும் ஜனனலக்கினத்திலிருக்க அவன் திசாபுத்தியானால், நாற்கால் மிருகத்தினால் மரணம் சம்பவிக்கும். இவர்களுடனே செவ்வாய் கூடினால் வயிரோகம் உண்டாகும்.
பெரிய ஜோதிட சில்லரைக் கோவை
இலக்கினத்திற்கு மூன்றாமிடத்திற் குடையோனாவது இராசிக்கு மூன்றாமிடத்திற் குடையோனாவது சனியுடன் சேர்ந்து ஒரு இராசியிலிருக்க அவர்களுடனே செவ்வாய் சேர்ந்திருந்தால் சண்டையிலே மரணமுண்டாகும்; இல்லாவிட்டால் ஆயுதத்தால் மரணமுண்டாகும். நாலாமிடத்திற்கு உடையவன் சனி, ராகு, கேது, செவ்வாய் பகவானுடனே சேர்ந்து அஷ்டமஸ்தானத்திலிருக்க அஜீரணத்தால் ஆறாம் வயதில் மரணமுண்டாகும்.
பெரிய ஜோதிட சில்லரைக் கோவை
இலக்கினத்திற் குடையோனுடன் ஆறுக் குடையவனாவது ராகு பகவானாவது, கேது பகவானாவது சேர்ந்திருந்தால் ஸ்திரீகளால் மருந்திடப்பட்டு மரணம் வரும். சனி சேர்ந்திருந்தால் சோரர்களாலே மரணமுண்டாகும்.
பெரிய ஜோதிட சில்லரைக் கோவை
சுகஸ்தானத்திலும், லக்கினத்திலும், இராசியிலும், சனி, செவ்வாய், ராகு, கேது இருக்க இந்த மூன்று ஸ்தானத்திலிருத்தவர்கள் பலவீனமாயிருந்தால் மூன்று மாதத்தில் மரணம், லக்கினத்தை பாபர் பார்த்தாலும் சேர்ந்தாலும் அல்லது ஆறாமிடம் அஷ்டம ஸ்தானத்தில் பபியிருக்க அவர்களுடனே சத்துரு
Page 16
ஜம்புமகாரிஷி வாக்கியம்
கிரகங்கள் சேர்ந்திருந்தால் பத்துநாளில் மரணம். இந்த இரண்டு யோகத்திலே பாலாரிஷ்டம் பார்த்து சொல்லவும்.
இலக்கினத்திற்கு மூன்றிலே செவ்வாய், சூரியன், குருபகவான் சேர்ந்திருக்கும்போது பிறந்தவன் திடகாத்திர தேகமுடையவனாயிருப்பான். இவர்களுடனே சனி சேர்ந்திருந்தால் குட்டையாயிருப்பான். செவ்வாய், ராகும் ஜனன ராசியிலிருக்க தொப்புள் பெருத்திருக்கும். புதனும், சனியும் ஒரே ராசியிலிருந்தாலும் சரீரமெல்லாம் மயிராயிருக்கும். இலக்கினத்தில் சூரியனும் ஆறாமிடத்திற் குடையவனும், இராசிக்குடையவனும் சேர்ந்திருந்தால் பூனைக்கண்ணாய்ப் பிறப்பான்.
இலக்கினத்திற்கு மூன்றாமிடத்திற் குடையவனும் செவ்வாயும் சூரியனும் சேர்ந்திருந்தால் தலைமொட்டையாகப் பிறப்பான். சுகபோகத்தில் அதிக விருப்பமுடையவனாயிருப்பான். உஷ்ண போஜனம் பண்ணுவான். இலக்கினத்திற்குப் பத்தாமிடத்தில் இராகுவும் சூரியனுமிருந்தால் அவனுக்கு கங்கா யாத்திரை கிடைக்கும், அல்லது பெரியோர்கள் கங்கா யாத்திரை செய்வார்கள். இலக்கினத்திற்கு தசமஸ்தானம் மீனமாயிருக்க அதில் புதனிருந்தால் அவசியம் கங்கா யாத்திரை கிடைக்கும்.
இலக்கினத்தில் இராகுவும், லக்கினாதிபதியும் கூடியிருந்தால் தாய் ஜனனகாலத்தில் முக்கிப் பெறுவாள். அஷ்டமத்திற் குடையவனும் லக்கினத்திலிருந்தால் கொடிசுற்றிப் பிறப்பான். அல்லது புதனும் லக்கினத்திலிருக்க அந்தப் புதன் ஆறாமிடத்திலிருக்க, இல்லாவிட்டால் ஆறாமிடத்திற் குடையவுடனே சேர்ந்திருக்க புருஷனானால் பேடியாய் பிறப்பான், பெண்ணானால் முகத்தில் மயிருண்டாயிருக்கும்.
இலக்கினத்திற்கு நாலு, ஏழு, பத்திலே சுக்கிரனாவது, சந்திரனாவதிருந்தால் அந்நிய ஸ்திரீகள் அவனுக்கு வலுவிலே வருவார்கள். அதில் சுக்கிரனேயிருந்தால் போக ஸ்திரீகள் ஆசையாய் வருவார்கள்.
சனியுஞ் செவ்வாயும், இராசிக்குடையவனும் நாலாமிடத்திலாவது இராசியிலாவதிருந்தால் அவனுக்கு இராத்திரிகாலத்தில் ஏவலினாலே கல்லு வந்துவிழும்.
Page 17
பெரிய ஜோதிட சில்லரைக் கோவை
சிநேகிதனாவான். ஏழாமிடத்திற் குடையவனோடே இராகு, கேது கூடவும் அந்த சப்தமஸ்தானம் தனுசு, மீனமாயிருந்தால் அவனுக்கு பிராமண ஸ்திரீகளின் நேச முண்டாகும்.
இராசிக்குடையவனுடன் சூரியனும் சுக்கிரனும் சேர்ந்திருந்தால் இராஜஸ்திரீகளுடனே நேசமுண்டாகும். இலக்கினத்திற்கு நாலாமிடத்திற் குடையவனும், ஒன்பதாமிடத்திற் குடையவனும் பகை கிரகத்துடனே சேர்ந்து ஒரு ராசியிலிருந்தால் அந்த ஜாதகன் பல வித்தாகும். இலக்கினத்திற்கு ஆறாமிடத்திற் குடையவனும் சந்திரனும் செவ்வாயும் நாலாமிடத்திலே யிருந்தால் அந்த ஜாதகனுடைய மாதாவுக்கு தோஷமுண்டு.
இலக்கினத்திற்கு ஆறாமிடத்திற் குடையவனும் சந்திரனும் செவ்வாயும் நாலாமிடத்திலே யிருந்தால் மாதாவுக்காகாதென்றாலும் குரு பார்வையியிருந்தால் சிலநாள் வரையிலும் சரீர அசௌக்கியமாயிருந்து, நவக்கிரக சாந்தியினால் சுகப்படுவார்கள்.
இலக்கினத்திற்கு ஒன்பதாமிடம், ஆறாமிடத்திற் குடையவனும் பாபக்கிரகங்களுடனேகூடி ஒரு ராசியிலிருக்க அந்த ஜாதகன் பெண்சாதிக்குத் தோஷமுண்டு. இலக்கினத்திற் குடையவனும் நாலுக்குடையவனும் ஆறெட்டுப் பனிரெண்டிலிருந்தும் அந்த ஸ்தானமும் பகைவீடா யிருந்தால் கனவிலும் சுகமில்லை.
இலக்கினத்திற்குடையவன் ஆணிபெற்றிருக்க களத்திரஸ்தானாதிபதியும் சேர்ந்து ஒரு ராசியிலிருந்த அந்த ஜாதகனுக்கு பெண்சாதிகூட அநுகூலமாவாள். இது சர்வயோகம்.
இலக்கினத்திற்குப் பத்துடையவனும், புதனும், குருவும், மூன்றுபேரும் இரண்டாமிடத்திலிருக்க, அந்த ஜாதகன் யாகம் பண்ணி தெய்வபக்தியிற் சிறந்தவனாய் தனதான்ய சம்பத்துடன் பாக்கியவானா யிருப்பான். தர்ம கர்மாதிபதியா யி ஒன்பது பத்துக்குடையவர்களிருவரும் பாபர்வீட்டிலிருந்து பலஹீன மாயிருந்தால் அவன் ஸ்ரீமந்த புத்திரனல்ல, இலக்கினத்திற்குப் பதினோராமிடத்திற்குடையவன் பாபர் வீட்டிலிருந்தால் நாலு மாதத்திலே பிள்ளை தரியாமற் போகும்.
இலக்கினத்திற்கு ஏழுக்குடையவன் நீசனாய் சூரியன் வீட்டிலாவது அவனுடைய அம்சத்திலாவதிருந்தால் அந்த ஜாதகனுக்குக் கனரோகம் உண்டாகும். அவன் உச்சாங்கிஷத்திலிருந்தால் கண்ணிலே பித்தகாசம் வரும். அவன் சத்துரு க்ஷேத்திரத்திலாவது, சத்ரு அம்சத்திலாவதிருந்தால் குஷ்டமும், குமாகண்ட வியாதியும் வரும். அந்தக் கிரகத்துடன் இராசிக்குடையவனும், இலக்கினத்திற் குடையவனுமிருந்தால் குன்ம வியாதி
Page 18
ஜம்புகாமரிஷி வாக்கியம்
யும், அன்னத் துவேஷமும் வரும். அவனோடு ஆறாமிடத்திற்குடையவனும் கூடினால் மனிதரைக் கொல்லுகிற பில்லி சூனிய வித்தையைக் கற்றுக் கொள்வான். அந்தக் கிரகத்துடனே அஷ்டமாதிபதியும் செவ்வாயும் இராசிக்குடையவருஞ் சேர்ந்தால் கைம்பெண்சாதி பிள்ளையாவான். இலக்கினத்திற்குப் பதினோறாமிடத்தில் செவ்வாயிருக்க இலக்கினத்திற்கு ஐந்தொன்பதில் சூரியனிருக்க அந்த ஜாதகனுக்கு ஆடு, மாடு, எருமை கூட்டங்கள் விசேஷமாயிருக்கும். அந்த கிரகங்களுடன் இராகு பகவானாவது குளிகனாவது சேர்ந்திருந்தால் நாய், பன்றி, பல விதமான மிருகங்கள், பணிகளும், பலவிதமான தானியங்களுமுண்டு.
இலக்கினத்திற்கு இரண்டு, நான்கு, பத்து, பனிரெண்டென்னும் இராசிகளில் எத்தனை கிரகங்களிருந்தார்களோ அத்தனைபேர் பிள்ளைபிறக்கும்போது அந்த வீட்டிலிருந்தபேரென்று சொல்லவும். அதிலே சனியிருந்தால் அன்னியஸ்திரீ ஒருத்தியுமிருந்தாளென்று சொல்லவும்; சுக்கிரனுஞ் சந்திரனுமானால் சுமங்கலியுமிருந்தாளென்று சொல்லப்படும்; இதுதான் பூர்வஜன்ம பலனாகும்.
பூமியில் புதையலிருக்கும் விபரம்
இலக்கினராசியை முப்பதாகப் பிரித்து அந்தந்த பாகத்தின் ஸ்தானங்களில் தற்காலத்தில் வந்த பாதத்திற்குடையவர் இலக்கினத்திற்கு எத்தனையாவது இராசியினிற்கின்றாரோ அந்த ராசிக்குடையவர் சுபக்கிரகமானால் அந்த வீட்டிற்கு எட்டு திக்கிலே பூர்வதனமாகிய புதையலுண்டு இதன் விபரமெவ்விதமெனில், அந்தக் கிரகம் சூரியனானால் கிழக்கு, சுக்கிரனானால் அக்கினிமூலை, குஜனானால் தெற்கு, இராகுவானால் நிருதிமூலை, சனியானால் மேற்கு, சந்திரனானால் வாயுமூலை, புதனானால் வடக்கு, குருவானால் ஈசான்யமூலை இந்த ஸ்தானங்களில் பூர்வதனமாகிய புதையலுண்டென்று சொல்லவும். இவ்விதமாகிய கிரகமானால் அந்த வீட்டின் சமீபத்திலே பில்லி சூனியங்கள் வைத்த பூமியாயிருக்கும். அந்தக் கிரகமும் நீசமூட அஸ்தமனமாயிருந்தாலும், சத்துரு சம்பந்தமானாலும் அந்தப் பூமி ஐய்யன், துர்க்கை, பிடாரி, ஆலயங்கள் இடித்து பாழடைந்த பூமியாயிருக்கும். சுபக்கிரகமானால் நல்ல தேவதா பூமியாயிருக்கும். இந்த ஆராய்ச்சி கணிதத்தை கவனித்து சொல்லவும்.
இலக்கினத்திற்கு நாலாமிடத்திலே யாதொரு கிரகமுமில்லாவிட்டால், அந்தக் கிரகத்திற்காவது நாலாமிடத்திற்கு முன்னே பாபக் கிரகமிருந்தால் மேற்கு திக்கு பாழென்றும், இலக்கினத்திற்கு மூன்றாமிடத்தில் பாபக் கிரகமிருந்தால் கிழக்கு திக்கு பாழென்றும் சொல்லவும். இலக்கினாதிபதியும் பாபக் கிரகங்களுடனே சேர்ந்து இராசியிலாவது அந்நிய ஸ்தானத்திலாவது
Page 19
திருந்தால் ஜாதகனுடைய சரீரத்தில் சொறி, சிரங்கு ரணமுண் டாகுமென்று ஜாதக கணிதத்தின்படியே சொல்லவும்.
ஜாதகன் புசிப்பதற்கினிய உணவு
எண்சீரடி விருத்தம்
இலக்கினத்தோன் குருவானால் தயிர்சிப் பான் இசைந்தபுதனானாலே புளிப்பிசிப்பான் நலமுடன்சுக்கிரனானால் சர்க்கரைதேனிஷ்டம் நவிலுவாம்சனிக்குக்கீரை விருப்பமாகும் தலத்தோனோடே ராகுகேதுகுளிகன் சேர்ந்தால் சத்திபூசைசெய்து மாங்கிஷம்புசிப்பார் நலமாய்வியாழமுனால் வைணவ அன்ன மென்றும் நவில்புதன்சந்திரன் குளிர்ந்தசோறுண்பாரே. 12
உரை:—இலக்கினாதிபதி இராஜாவாயிருந்தால் தயிர்சோ றுண்பதற்குப் பிரியப்படுவர். புதபகவான் லக்கினாதிபதியா யிருந்தால் புளிப்பு பதார்த்தத்தின்மீது பிரியமாயிருப்பார்கள். சுக்கிரபகவான் இலக்கினாதிபதியானால் சர்க்கரை சேர்த்த மிட் டாய் வகைகளின் மீதும், தேன் முதலாகிய இனிப்பு பண்டங் களையும் புசிப்பதற்குப் பிரியப்படுவார்கள். சனிபகவானே இலக் கினாதிபதியானால் காட்டிலிருக்கின்ற கீரை தினுசுகளைப் புசிக்கப் பிரியப்படுவர். இராகுவாவது கேதுவாவது இலக்கினத்தி லிருக்க அவர்களுடனே குளிகனும் சேர்ந்திருந்தால் ஜாதகர் சத்தி பூசை செய்து மது மாமிச பண்டங்களைப் புசிக்கப் பிரியப் படுவார்கள். இலக்கினாதிபதி குருவானால் சமமா யிருக்கும். சுடுகையான போஜனத்திலே பிரியப்படுவார்கள். புதனுஞ் சந்திரனும் இலக்கினாதிபதியா யிருந்தால் குளிர்ந்திருக்கிற சோற் றிலே பிரியப்படுவார்கள். சூரியனும், செவ்வாயும் இலக்கினாதி பதியானால் அன்னபதார்த்த மனைத்தும் சுடச்சுடச் சாப்பிடுவார் கள். சுக்கிரனுஞ் சனியுமானால் சமமான அன்ன பதார்த்தம் புழ்ப்பதற் கிச்சிப்பார்கள்.
வித்தை
எண்சீரடி விருத்தம்
இலக்கினத்திரண்டில் குருவிருந்தால் வேதாஸாஸ்திரங்கற்பா இதமுடனேபுதனிருந்தால் தமிழில்வல்லோனாம் [ன் தெலுங்குகன்னடங்கற்பான் சனிசெவ்வாய்திற்கில் தெளிவாகராகுகேது இரண்டோனும்சேர்ந்தால் பலவிதமாய்அன்னிய பாஷைமுதலா புள்ள பலபாஷை நீசபாஷை யெல்லாம்கற்று
Page 20
ஜம்புகரிஷி வாக்கியம்
நலமுடனேசமர்த்தராய் விளங்கியிந்த ஞாலமதில்கீர்த்தியுடனிருப்பதர்தானே. 18
உரை:—இலக்கினத்திற்கு இரண்டாமிடமாகிய வாக்கு ஸ்தானத்தில் குருபகவானிருந்தால் வேதசாஸ்திர புராணங்களைக் கற்றுணர்வார்கள். வாக்குஸ்தானத்தில் புதனிருந்தால் தமிழ்வித்தையில் தேர்ச்சியடைந்து கீர்த்தியாயிருப்பார். வாக்கு ஸ்தானத்தில் சனிபகவானாகிலும் செவ்வாயாகிலு மிருந்தால் தெலுங்கு கன்னட பாஷையும் கற்றுணர்வார்கள். வாக்குஸ்தானாதிபதியும் இராகு பகவானும், கேது பகவானும் சேர்ந்திருந்தால் அந்நியபாஷை நீசபாஷை முதலான பலவித பாஷைகளும் ஜாதகன் கற்றுணர்ந்து சமர்த்தனா யிருப்பதற்காகும்.
இலக்கினத்திற்கு சப்தமஸ்தானம், அஷ்டமஸ்தானத்தில் சூரியன் ஸ்தானத்தில் சந்திரனும் சந்திர ஸ்தானத்தில் சூரியனுமிருக்க தசமஸ்தானாதிபதியும் இந்த இரண்டுபேருடனே சேர்ந்திருந்தால் அந்த ஜாதகன் பதினோறாம் வயதில் ஏறின தண்டிகை தனது ஆயுள்வரையிலும் ஏறி மகா பிரசங்கியா யிருப்பான். ஆனால், நடு வயதில் தன் மதத்தைவிட்டு அந்நிய மதத்தைச் சேர்ந்திருப்பான். இது பூலோகத்தோர் சொல்லும் வாக்கியமாகும்.
இலக்கினத்திற் குடையவனும் சஷ்டமாதிபதியும் ஆறெட்டு பனிரெண்டிலிருக்க இவர்களுடனே பாபக்கிரகங்கள் சேர்ந்திருந்தால் ஜன்மபரியந்தம் வியாதியஸ்தனா யிருப்பான்.
இலக்கினஸ்தானாதிபதி நீசரானாலும் சூரியபகவானுடனே சேர்ந்திருந்தாலும் நாலிலொருபாகம் பலனாயிருப்பதற்காகும்.
உதயலக்கினத்தில் குருவிருக்க அவரைப்புதபகவான் பார்த்தாலும் சேர்ந்திருந்தாலும் அந்த ஜாதகனுடைய சீட்டை அரசர்கள் அன்பாக வாங்கிப் பார்த்துத் தமது சிரசிலே வைத்துக் கொள்வார்கள்.
மேஷவிருச்சிக ஜனன லக்கினமாக அந்த ஸ்தானத்தில் அங்காரக பகவா னிருந்தால் இராஜயோகமா யிருப்பதற்காகும். மிதுனங் கன்னி ஜனன லக்கினமாக அந்த ஸ்தானத்தில் புதபகவானிருந்தால் ஜாதகன் வித்யா சமர்த்தனாயிருப்பான். தனுசு, மீனம் ஜனன லக்கினமாக அந்த ஸ்தானத்தில் குருபகவானிருந்தால், வெகு பொருள் சேகரித்து யோகவானா யிருப்பான்.
யோக பலன்
யோக பலன்
சுகஸ்தானத்தில் இராஜாவிருந்தால் மாளவயோகம் அதற்கிசைந்தபலன் அஸ்வம், யானை, தண்டிகை, ஆடை, ஆபரண
Page 21
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
மும் சகலவிதமான இரதகஜதுரகபதாதிகளமைத்த யோகமும், வெகுஜன போஜனையும் வருவாரை ஆதரித்தலுமான நல்ல பல னுண்டு. அந்த ஜாதகம் எந்தக் காட்டிலிருந்தாலும் அந்த ஸ்தானத்திலும் சகல விதமான போக பாக்கியமும் கிடைக்கும். மகா கும்ப லக்கினமாயிருக்க அந்த ஸ்தானத்திலே சனிபலவா னிருந்தால் சகலவிதமான யோகமுண்டு. இலக்கினாதிபதியும், இராசிநாதனும் ஒரே கிரகமாயிருந்தால் முழு பலமென்றும், அதை புஷ்கலயோகமென்று சொல்லும் பூபாலகனெனும் பேர்க் வானாய் இருப்பான்.
எண்சீரடி விருத்தம்
எண்சீரடி விருத்தம்
மகிழுடனேமாதிரத்தில் ஜனித்தோருக்கு மன்னும்சுகடுக்கமென்னும் விபரத்திற்கு கண்சுகனத்தில் பருதிமதியம்ராகு செவ்வாயுமிருந்து சத்துருக்ஷேத்ரமானால் வெகுதுபரம் ஜனனவீடுமூவாண்டில் வெறும்வீடாய் பாம்புபெருச்சாளிகழ்ந்து தகனமாய்ஜீரணித்து பந்துமித்திரர் தளபேதமாய்வெவ்வே றாய்ப்போவாரே. 14
உரை:—சுகஸ்தானத்தில் பருதி, குஜன், ராகுபகவானும் இருந்தாலும், அது சத்ரு க்ஷேத்ரமாயிருந்தாலும், அந்த ஸ்தா னத்தில் ஜனித்த ஜாதகன்வீடு மூன்றாண்டில் ஜீரணித்திடிந்து பாழ் வீடாகி அதில் பாம்பு, பெருச்சாளி, எலி முதலானவை வாசஞ்செய்யும். அக்கினியா லெரிந்துபோகும். சேர்ந்த பந்து மித்திரர்களும் சாமானியமாய் இருப்பிடம்விட்டு பல தேசத்திற் குப் போய்விடுவார்கள்.
எண்சீரடி விருத்தம்
சூரியனும்புதன்சுக்கிரன் மூன்றுபேரும் சுகஸ்தானம் இரண்டேழாமிடத்திருக்க பாரில்வெகுதனதான்ய சம்பத்தோடு பராக்கிரமமந்திரியோகம் பெற்றுய்வார்கள் இராசிநாதனும்ஆறெட்டிற் குடையோனானால் எங்கெங்குமலைந்து தேசாந்திரியாய் போவான் வீரியமாய்லக்கினத்தோன் நட்பாட்சிஉச்சம் விளங்கினால்பலத்த ஜாதகமென்றோதே. 15
உரை:—சூரியன், புதன், சுக்கிர பகவானாகிய மூன்றுபேரும் சுகஸ்தானம், வாக்குஸ்தானம், சப்தமஸ்தானத்திலிருக்க உலகத் தோர் மெச்சந்தன்மையான தனதான்ய சம்பத்தோடு மகா சமர்த்தனாய் அறிவு, ஆலோசனையிற் சிறந்த மந்திரியோகம் பெற்று வாழ்ந்திருப்பான். ஆனால், இராசிநாதனும் ஆறெட்டிற்
Page 22
ஜம்புகமகரிஷி வாக்கியம்
குடையவனுமானால் தேசாந்திரியாய் அலைந்து திரிவான். இலக்கினஸ்தானாதிபதி நட்பு, ஆட்சி, உச்சஸ்தானத்திலிருந்தால் பலத்த ஜாதகமென்று சொல்லவும்.
இலக்கினத்தோன் ஆட்சிஉச்சமாயிருக்க இரண்டில்மால் பனிரெண்டில்புகரிருக்க பலத்தஜாதகம் கூர்மையோகமாகும் பருதிமால்புகரிரண்டில் நான்கிலிருக்கும்போது நலமுடனேஜனித்தோர்கள் மந்திரியாவார் நன்மதிபோதிக்கும் ராஜயோகவானாம் நிலையாகஒன்பதில் மால்புகரும்வியாழன் நின்றாட்சியுச்சமெய்தில் புதையல்வாய்க்கும். 16
உரை :- இலக்கினாதிபதி ஆட்சி உச்சமாயிருக்கவும், இரண்டாமிடத்திலும் பனிரெண்டாமிடத்திலும் புதனும் சுக்கிரனுமிருந்தால் அந்த ஜாதகன் கூர்மையான யோகத்தை யனுபவிக்கும் பலத்த ஜாதகனாகும். ஆனால், சூரியன், புதன், சுக்கிரனும் வாக்குஸ்தானம் சுக ஸ்தானத்திலாவது இருக்கும்போது பிறந்தவன் மந்திரி யோகத்தை யானுபவிக்கும்படியான இராஜயோகவானா யிருப்பதற்காகும். ஒன்பதாமிடத்தில் புதன், குரு, சுக்கிரனிருந்தாலும் அந்த ஸ்தானங்களில் ஆட்சி, உச்சமாயிருந்தாலும் பூமியில் பூர்வ தனமாகிய புதையல் கிடைக்கும்.
ஜம்புகமகரிஷி வாக்கியம்
சுகஸ்தானம் பாக்கியஸ்தானநாதன் சுகஸ்தானத்திலிருக்க சுபர்வீடாகில் ககனவாகன முடையோனாயிருப்பான் காணுமதில் நாலோனுமோர் ராசியேறில் மகிழ்ராசிக் குடையோனோடும்சேர்ந்திருக்க வாகனம் அஸ்வங்கிடைக்கும் புகரிருந்தால் புகழ்தண்டிகைவரும் குருவிருந்தால் திரவ்யலாபம் பொருந்தியேசுகமாக இருப்பர்தானே. 17
உரை :- சுகஸ்தானாதிபதி பாக்கியஸ்தானாதிபதியும் சுகஸ்தானத்திலிருக்க அது சுபர்வீடாகில் ஜாதகன் தேவவிமானமுடையவனாயிருப்பான். சந்திரனும் சுகஸ்தானாதிபதியும் சம்பந்தமாகி இராசிநாதனுடனே சேர்ந்திருந்தால் குதிரைவாகனம் கிடைக்கும். சுக்கிரனிருந்தால் பல்லக்கு கிடைக்கும். குருவிருந்தால் திரவிய லாபங் கிடைக்கும்.
ஜம்புகமகரிஷி வாக்கியம்
சித்தமகிழ் ஏழிடத்தோனுட னெத்தனை கோட்கள்தான் சேர்ந்திருக்குமானாலும் ஜாதகர்க்கு அத்தனைபேர்மனைவியருண் டாகுமென்று அறிவிப்பாய்பகைநீச அஸ்தமனமானாலும்
Page 23
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
எத்ததியில் திசாபுத்தி வருமோவப்போது ஏற்கெனவே முந்தினபெண் போகுந்தானே புத்திரனுண்டா மிரண்டாமனைவியர்க்கு பொருந்தியே சந்திரன் சனியு மிருந்திட்டாலே. 18
உரை:- சப்தம ஸ்தானாதிபதியுடனே எத்தனை கிரகங்கள் சேர்ந்திருக்கின்றார்களோ அத்தனை மனைவியர்கள் உண்டாகும். ஆனால் பகை, நீசம் அஸ்தமனமாயிருந்தால் அந்த கிரகங்களின் திசாபுத்தியில் கிடைக்கும் முந்தின மனைவி மரணமாவாள். சந்திரனும் சனியுமிருந்தால் இரண்டாவது மனைவியர்க்குப் புத்திர பாக்ய முண்டாகும்.
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
இலக்கினத்திற்கிரண்டேழுபத் தோனுந்தான் இனிதாயோரிராசியிலே சேர்ந்திருக்க பலதாரங்களைக்கொள்வான் திரேக்காணராசி பார்த்துபலன் புகன்றிடுவாய் ஜாதகர்க்கு நலமுடனே குடும்பத்தோன் ஐந்தில்மேவ நற்புத்ரபாக்கியமுண்டா மிந்தகிரகங்கள்தன் பலம்பார்த்து சொன்னாலே பொருந்துமென்று பாரோர்க்குவிபரமாய்ப் புகலுவாயே. 19
உரை:- குடும்ப ஸ்தானாதிபதியும், களத்திர ஸ்தானாதிபதியும் ஜீவன ஸ்தானாதிபதியும் ஓர் இராசியிலிருந்தால் பல மனைவியரைச் சேர்ந்திருப்பான். ஆனால் திரேக்காண ராசி பார்த்து பலன் சொல்ல வேண்டும். குடும்ப ஸ்தானாதிபதியும் பஞ்சம ஸ்தானாதிபதியும் சேர்ந்திருந்தால் புத்ரபாக்கிய முண்டாகும் ஆனால் அந்த கிரகங்களின் பலத்தைக் கண்டு பலன் சொல்ல வேண்டும்.
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
ஐந்திடத்தோன் சத்துருஸ்தானத்தோடேனும் ஆறாமிடத்தில மேவ சத்துருவுடனேசேர மைந்தனில்லை ஜாதகர்க்கு யென்றுரைப்பாய் மறைந்தேனுந் தவதிருக்க அற்பாயுசுடைய மைந்தன் அந்தமுடன் ஒன்பதோன் மூன்றோனோடு அமைந்தொருராசியிலிருக்க சற்புத்ரபாக்கியம் சுந்தரமாகப்பிறந்து தீர்க்காயுசாக சூழ்புவியில்தனவானாய் விளங்குவானே. 20
உரை:— பஞ்சம ஸ்தானாதிபதியும் சத்துரு ஸ்தானாதிபதியுடன் சேர்ந்திருந்தாலும் அல்லது ஆறாமிடத்திலிருந்தாலும் அந்த ஜாதகனுக்கு புத்திரபாக்கியங் கிடையாது. புத்திர ஸ்தானாதிபதி அஸ்தமனமாய் ஒன்பதாமிடத்திலிருந்தால் அற்பாயுசுடைய புத்திரருண்டாகும். பாக்கிய ஸ்தானாதிபதி மூன்றாமிடத்
Page 24
ஜம்புமகரிஷி வாக்கியம்
திற் குடையவனோடு சேர்ந்து ஒரு ராசியிலிருக்க சற்புத்திர பாக் கியம் பிறந்து தீர்க்காயுசாய் உலகத்தில் தனவந்தனாக வாழ்ந் திருப்பனென் றோதுவாய்.
ஜம்புமகரிஷி வாக்கியம்
இலக்கினத்தோனிருக்கின்ற ராசிநாதன் இசைத்தைந்துஒன்பரில் லக்கினகேந்திரத்தில்மேவ பலமாகமூலத்திரிகோண உச்சமாக பருவதயோகமுடை யோனாயிருந்து மலைகளிலும்ஷேத்திரதீர்த்தங் களிலும்சென்று மந்திரங்கற்றுணர்ந்து மூலிகைகள்காண்பான் நலமுடனேசித்துபுருஷ னாய்விளங்கி ஞாலத்தில்பாக்கியவானா யிருப்பான்தானே. 21
உரை:- இலக்கினத்தோ னிருக்கின்ற ராசிநாதன் ஐந்து ஒன்பது அல்லது கேந்திரங்களிலிருக்க அந்த ஸ்தானம் மூலத் திரிகோணமாகவும், உச்சஸ்தானமாகவு மிருந்தால் அந்த ஜாதகன் பருவத யோகத்தை யனுபவித்து வனங்களிலும் க்ஷேத் திரங்களிலும் திரிந்து தீர்த்தஸ்நானஞ்செய்து மகான்களைத் தரிசித்து மந்திரங்கற்றுணர்ந்து அருமையான மூலிகைகளைக் கண்டு காயசித்திபெற்று சித்தபுருஷனாய் விளங்கி பூலோகத்தில் பாக்கியவானா யிருப்பதற்காகும்.
ஜம்புமகரிஷி வாக்கியம்
சுகஸ்தானந்தனிலேனும் ஜனனராசி சூழ்ந்தகேந்திரஸ்தானங் களிலெங்கேனும் மகிழ்வாய் குருஇருந்தால் கெஜகேசரியோகமாகும் மாகிமையாய் ஆனைசேனை குதிரைபாக்கியம் மிகமகிழ்வாய் ஆதிபத்ய மனுபவித்து மேன்மையுடனிருப்பார்கள் லக்கினத்தோன் நகுத்தலக்கனத்திருக்க யோகவானாய் தாரணியோர்புகழ்ந்துரைக்க வாழ்வாரே. 22
உரை:- நான்காமிடத்திலாயினும் ஜனனராசியின் கேந்திர ஸ்தானங்களிலாயினும் குருபகவானிருந்தால் கெஜகேசரியோக மாகும். அதன் பலன் ஆனை, சேனை, குதிரை முதலான சம்பத்து கள் பெற்று சுகாதிபத்தியபலனை அனுபவிக்கும்படியாகச் செய் யும் மேன்மையா யிருப்பார்கள். இலக்கினத்தில் இலக்கினாதி பதி ஆக்ஷியாயிருக்க சகலருக்கும்யோக்கியவானாய் தரணியோர் புகழ்ந்துரைக்கும்படியாக வாழ்ந்திருப்பார்கள். ஆனால் திசா புத்தி கவனித்து ஆராய்ந்து பலன் சொல்லவும்.
ஜம்புமகரிஷி வாக்கியம்
அன்புடனே நாலோனும் சுகத்தில்மேவ அவன்வெகுசேனைக் கதிபனாயிருப்பான் மன்னும்சப்தமாதிபதி ஏழிலுய்ய மகாமத்தியோகமா யிருப்பானென்பாய்
Page 25
பெரிய ஜோதிட சில்லரைக் கோவை
நன்னயமாய் தசமஸ்தானத்தோன்பத்தில் நலமுடனேயிருந்தாலும் மந்திரியோகம் இன்னவிதம் ஜாதகரின்பலனாராய்ந்து இனிதாகவேபுகல்வீர் தரணியோரே. 28
உரை:--சுகஸ்தானாதிபதி சதுர்த்த கேந்திரத்தில் ஆட்சி பெற்றிருக்க அந்த ஜாதகன் வெகு சேனைக்கதிபதியாயிருப்பான். சப்தம ஸ்தானாதிபதி ஏழாமிடத்திலிருக்க மகா புத்திசாலியாய் விளங்கி மந்திரியோகம் பெற்று கீர்த்திவந்தனா யிருப்பதற்காகும். பத்தாமிடத்ததிபதி தசமகேந்திரத்திலிருந்தாலும், மந்திரி யோகத்தை யனுபவிப்பாரென்று அவரவர்கள் திசாபுத்தி பலனையுமாராய்ந்து பலன் சொல்லுவீர்கள்.
பெரிய ஜோதிட சில்லரைக் கோவை
ஒன்பதோன் சசிமந்தன் ஆறில்மேவ ஒருமித்து ஆரூனோடனேசேர தன்மையுடனவன்பிதா ராத்திரியிலிறப்பான் சந்த்ரனானால்பகலில் மரணமாவான் வன்மையா யாம்ராசி சரமாய்வயிருந்தால் மைந்தன்பிறக்கும்போது தந்தைமறைந்திருப்பான் நன்மையாய்த்திரத்தில்ரவி யிருந்தால்தந்தை நலமுடனே தன்தேசந்தனிலிருப்பான். 24
உரை:--பாக்கியஸ்தானாதிபதியும், சந்திரனும் சனிபகவானும் சத்துரு ஸ்தானத்திலிருந்தால் அந்த ஜாதகனுடைய பிதா இராத்திரியிலிறப்பான். சந்திரனே தனியாயிருந்தால் பகலில் மரணமாவான். ஆறுக்குடையோன் ராசி சரமாய் அந்த ஸ்தானத்தில் சூரியனிருந்தால் தகப்பன் தன் தேசத்திலேயே இருப்பான்.
நேத்ர ஸ்தானபலன்
ஜென்மலக்கினமேஷமாய் ரவியிருந்தால் ஜெனித்தவன் நேத்திரரோகியாயிருப்பான் அன்புடனேகடகலக்கினம் ரவியிருந்தால் ஆகுமப்பாநேத்திரபங்க மென்றேசொல்லு இன்படனேதுலா சிங்கந்தனிலேசூரியன் இருந்தாலும் இரவில்கண்தெரியாதப்பா பன்னிரண்டு இரண்டில் ரவிபாபர்சேர்ந்தால் பலநாளும் கண்நோயால் கலங்குவாரே. 25
உரை:--ஜன்ம லக்கினம் மேஷமாயிருந்து சூரியனிருந்தால் ஜாதகன் நேத்திர ரோகியாயிருப்பான், கடகலக்கினமாகி சூரியனிருந்தால் நேத்திர பங்கமா-ம், துலாலக்கினம் சிங்க லக்கினமூ-
Page 26
ஜம்புகாமரிஷி வாக்கியம்
யிருந்தால் இரவில் கண் தெரியாது. இரண்டாமிடம் பனிரெண்டாமிடத்தில் சூரியன் பாபக்கிரகங்களுடனே சேர்ந்திருந்தால் சதாகாலமும் கண் வியாதியாயிருக்கும்.
ஜம்புகாமரிஷி வாக்கியம்
இலக்கினாபதிநேந்திர ஸ்தானாதிபதியும்சுக்கிரன் இரண்டெட்டிலிருந்தாலே குருடனாவான் கலக்கமுடன்சுக்கிரனும் சந்திரனிருந்தால்ரெண்டு கண்களுக்குணமென்று மதித்துசொல்வாய் இலக்கினேசன்மதிசுக்கிரன் ஆறூஎட்டூபனிரெண்டில் இருந்தாலேபிறவி குருடாயிருப்பான் நலமிலாபிதுர்ஸ்தானத் திருந்தால்கந்தை நலிந்துகுருடாவானென் றோதுவாயே. 26
உரை:--இலக்கினாதிபதியும் கேந்திர ஸ்தானாதிபதியும் சுக்கிரனும் இரண்டு எட்டில் இருந்தால் அந்தகனாவான். அந்த ஸ்தானங்களில் சுக்கிரனும் சந்திரனுமிருந்தாலும் இவர்கள் விரய ஸ்தானமாகிய பனிரெண்டிலிருந்தாலும் பிறவிக் குருடாயிருப்பான். ஆனால் ஒன்பதாமிடமாகிய பிதுர்ஸ்தானத்தில் இலக்கினாதிபதி நேந்திர ஸ்தானாதிபதி சுக்கிரனும் சேர்ந்திருந்தால் ஜாதகனுடைய தகப்பன் அந்தகனா யிருப்பான்
வேறு விருத்தம்
வாக்கோனும் ஏழோனும் சுக்கிரனும் ஆறெட்டில் பனிரெண்டில்பாபர், சேர்க்கையூற்றிருந்திட்டாலே சேர்ந்த கிரகங்கள் போல, நோக்கியஸ்திரீகள்டவாய்க்கும் நேர்ந்தே மெட்டில்மதியுஞ் செவ்வாய், பார்க்கவன் சொந்தேத்திரம் பெற்றால் பணமாய்ஸ்திரீ சேர்க்கையாமே. 27
உரை:--வாக்கு ஸ்தானாதிபதியும் சப்தமாதிபதியும் ஆறெட்டு பன்னிரெண்டில் சேர்ந்திருந்தால் அந்த ஸ்தானத்தில் எத்தனை கிரகங்களிருக்கின்றதோ அத்தனை ஸ்திரீகள் வாய்க்கும், ஆனால், ஏழு, எட்டில் சந்திரனும், செவ்வாயும் சேர்ந்து சூரியனும் ஆட்சிபெற்றிருந்தால் அந்தந்த கிரகங்களுக்கிசைந்தபடியே ஸ்திரீகள் சேர்க்கையுண்டாகும். ஆனால், கிரகங்களின் பலமறிந்து திசாபுக்தி அந்தர நாதர்களின் கால நிலையை கவனித்து பலன் சொல்லவேண்டும்.
எண்சீரடி விருத்தம்
இலக்கினகேந் திரங்களிலே சுபரிருக்க இசைந்தி லக்கினத்தில் பாபரிருக்கநோக்க வலக்கமுடன் விபசாரி பெற்றபெண்ணை கலியாணஞ் செய்திடுவான் கலனிப்பாயே
Page 27
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
பலமுடன் லக்கினத்தில் குஜன்ரெண்டில்மந்தன் பன்னிரண்டு லேமதியும் ஒன்பதிலேராகு நலமுடனே சேர்ந்திருந்தால் பகலில்போகம் நடத்துவான் ஸ்திரீஇச்சை மிகுதியாலே. 28
உரை:—இலக்கின கேந்திரத்திலே சுபரிருக்க, ஜனன லக்கினத்தில் பாபக்கிரகமிருக்க பார்க்க அந்த ஜாதகன் விபசாரி பெற்ற பெண்ணைக் கலியாணஞ் செய்துகொள்வான். ஆனால், இலக்கினத்தில் செவ்வாயும் இரண்டில், சனி பனிரெண்டில் சந்திரனும், ஒன்பதில் இராகும் சேர்ந்திருந்தால் பகலில் போகம் செய்பவனாய் ஸ்திரீயிச்சை யுடையவனு யிருப்பதாகும்.
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
நன்மையாய் கேந்திரதிரிகோணந்தன்னில் நலமுடனே லக்கினாதி பதியிருக்க ஒன்பதோன் பரம உச்சனாயிருக்க ஒற்றுமையாய் லக்கினாதிபதி பலத்திருக்க இன்பமுடனே தனதான்ப சம்பத்தோடே இலக்ஷ்மி கடாக்ஷம்பெற்று மகிழுவாரே என்றினிதாய் ஜாதகநூல் பாத்தாராய்ந்து எடுத்துரைப்பீர் ஜோதிடரே தரணியோர்க்கே. 29
உரை:—இலக்கினகேந்திர திரிகோணங்களில் இலக்கினாதிபதி யிருக்க ஒன்பதிற்குடையோன் பரம உச்சனாயிருக்க இலக்கினாதிபதி பலத்திருக்க தனதான்ய சம்பத்துடனே லக்ஷ்மி கடாக்ஷம் பெற்று சுகஜீவியாய் மனமகிழ்ந்திருப்பார்கள்.
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
செவ்வாய்மூன்று மிடத்தில் பெலத்திருக்க செகமீதில் சகோதரபாக்கிய மென்மேலுண்டாம் ஒளவியமாய் மூன்றேனும் ஆறேனும்கூடி அவர்கள் பகையுடனே யோரிராசியேறில் எவ்விதமும் இந்திரஜால மயேந்திரஜாலம் எப்போதும் செய்துசூது வித்தைகற்று ஒவ்வியே பொருள்சேர்த்து செலவழித்து ஓதுகின்ற பூதலத்தோர்க் கஞ்சிடாரே. 30
உரை:—செவ்வாய் பகவான் ஆட்சி உச்சமாய் முன்றாமிடத்தில் பலத்திருக்க பலத்த சகோதர பாக்கிய முண்டாகும். மூன்றாமிடத்ததிபதியும் ஆறாமிடத் ததிபதியும் ஒருவர்க்கொருவர் பகை பெற்று ஓர் இராசியிலிருந்தால் ஜாதகன் கோபமும் குரோதமுமுடையவனாய் க்ஷாத்ரியமுடனே மாந்திரீகரை நேசித்து மந்திர தந்திரங்கற்று இந்திரஜால மயேந்திரஜாலமும், சூதுவித்தையும்
Page 28
ஜம்புமகாரிஷி வாக்கியம்
கற்று மோச தந்திரத்தினால் வெகுபொருள் சேகரஞ்செய்து பல விதமாய்ச் செலவுசெய்து தரணியோர்க்கஞ்சாத தைரியசாலியாயிருப்பான்.
ஜம்புமகாரிஷி வாக்கியம்
பத்தாவ திடத்துளோன் நாலோனுங்கூடி பணமாயோர் ராசியிலிருக்க மதியுஞ்சுக்கிரன் சுத்தமாய் நட்பாட்சி யாயிருக்க சூழ்புவியின் ஜாதகனும் வித்தைகற்று எத்தாக நெற்றியிலே திலகமிட்டு எவர்களுங் காணாதுலகி லுலாவுவானே சுத்தமாய்நாலோன் லக்கினனொன் பதிலிருந்தூ சூழ்ந்தபுதன் குருவானால் அஞ்சனக்காரனாமே. 31
உரை :- சுகாதிபதியும் ஜீவன ஸ்தானாதிபதியும் ஓர் ராசியிலிருக்க அவருடனே சந்திரனுஞ் சுக்கிரனுஞ் சேர்ந்து நட்பாட்சியாயிருக்க, ஜாதகன் அநேக வித்தைகற்று மாந்திரீகத்தில் தேர்ச்சி யடைந்தவனாய் நெற்றியில் திலகமிட்டுக்கொண்டு உலகத்தில் எவருங்காணாமல் உலாவிக்கொண்டிருப்பான். நாலாமிடத்ததிபதி இலக்கினத்திலாகிலும் ஒன்பதாமிடத்திலாகிலுமிருந்தாலும் அவர்களுடனே புதனும் குருவும் சேர்ந்திருந்தால் பாதாள அஞ்சனம் போட்டுப் பார்க்கும் சமர்த்தனா யிருப்பான்.
ஜம்புமகாரிஷி வாக்கியம்
சுகாதிபதிஇராசி யோன்பத்திலிருக்க சூழ்ந்துமதிசேர்ந்தாலும் பார்த்திட்டாலும் ஜெகமீது ஆகரண கோகரணவித்தைகற்பான் சுகமிரண்டுக்குடையோன் நட்பாட்சியாயிருக்க மகிழுடனேபுத னவரோடிருக்கபார்க்க மாந்திரீகமரசவாத வித்தைகற்பான் உகந்துரவிஅவர்களுடன் சேர்ந்திட்டாலே உத்தமதெய்வத்தை பூஜித்திருப்பான்தானே. 32
உரை :- நாலாமிடத்திற் குடையவனும் இராசிநாதனும் பத்தாமிடத்திலிருக்க அவர்களுடனே சந்திரன் சேர்ந்தாலும், பார்த்தாலும், பூலோகத்தில் மகா சமர்த்தனாய் விளங்கி ஆகரண கோகரண வித்தைகற்று மாந்திரீக வல்லவனாவான். இரண்டுக்குடையோன் நட்பு, ஆட்சியாயிருக்க அவருடனே புதன்கிவானும் சேர்ந்தாலும், அல்லது பார்த்திட்டாலும் மாந்திரீகமும் ரசவாத வித்தையும் கற்றுணர்ந்து, கீர்த்திவந்தனா யிருப்பான். ஆனால், சூரியனும் அவர்களுடன் சேர்ந்திருந்தால் உத்தமமான தேவதா பூஜைசெய்துக் கொண்டு பாவற்பக்தியானந்தனாயிருப்பான்.
ஜம்புமகாரிஷி வாக்கியம்
இலக்கினத்தோன் ராசியோன்பத்தோனுங்கூடி இனிதாயோர்ராசியிலே சேர்ந்திருந்தால்
Page 29
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
நலமாகசித்தர்களைப் போலேந்தானும் நரைதிரைமூப்பில்லாமல் காண்போர்மெச்ச உலகமதில்வெகுகால மிருந்துவாழ்ந்து உண்மையுள்ள மோக்ஷத்தையடைவானே நிலையறிந்தஜாதகத்தின் பலனாராய்ந்து நிதானமாய்ஜாதகர்க்குப் பலன்சொல்வீரே. 33
உரை:—இலக்கினாதிபதியும் இராசிநாதனும் ஜீவனஸ்தானாதிபதியும் ஓர் இராசியிலே சேர்ந்திருந்தால் அந்த ஜாதகன் சித்தர்களைப்போல சதாகாலமும் நரைதிரை மூப்பில்லாமல் காண்போர் மெச்சும் தன்மையாய் வெகுகாலம் வரையில் பூலோகத்தில் ஜீவித்திருந்து அந்தியகாலத்தில் மோக்ஷத்தை யடைவான். ஆனால் மற்ற கிரகங்களின் நிலையையும் ஆராய்ந்து பலன் சொல்ல வேண்டியது.
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
அஷ்டமத்தோன் லக்கினத்தோனிரண்டுபேரும் அன்பாயோர் ராசியிலேசேர்ந்திருக்க இஷ்டமுடன்குஜனவரை சேர்ந்திடவும்பார்க்க இவர்தின்ற ராசிபகையாயிருக்க துஷ்டதெய்வபூஜையினால் சூன்யவித்தைகற்று சூதாகமனிதரனைக் கொல்லுவானே கஷ்டமாய்மனிதர்களை வியாதியாலும் கலங்கிடவேசெய்வானென் றறிகுவீரே. 34
உரை:—அஷ்டமஸ்தானாதிபதியும் இலக்கினாதிபதியும் ஒரு இராசியிலே இருக்கும்போது, அவர்களுடன் செவ்வாய் பகவானும் சேர்ந்திருந்தாலும் அல்லது பார்த்தாலும் அவர்கள் நின்ற ராசிபகை வீடாயிருந்தால் அந்த ஜாதகன் துஷ்ட தெய்வங்களை பூஜித்து சூன்ய வித்தைகளைக் கற்றுக்கொண்டு மனிதர்களை சூது மார்க்கமாய் வியாதியால் கஷ்டப்படுத்துவதும் கொல்லுவதுமாயிருப்பான்.
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
ஜன்மத்தோன் நாலோனும் ஏழோனுந்தான் சார்ந்தோர்ராசியிலவர்கள் சுபரேயாகி அன்புடனேபார்த்தாலும் சேர்ந்திட்டாலும் அவன்தனதுநற்குணத்தால் பில்லிசூன்யம் நன்மையாயெடுத்திட வல்லவனேயாகும் நாடியேஇவன்சமர்த்தையே சொல்வதற்கு என்னவிதம்நினைத்தாலு மாகாதென்று எவர்களுமேபுகழ்ந்துரைப்பா ருலகமீதே. 35
உரை:—இராசிநாதனும் சுகாதிபதியும் சப்தமஸ்தானாதிபதியும் சுபக்கிரகமாயிருந்து, அவர்கள் ஓர்ராசியிலிருந்து இலக்கினத்
Page 30
ஜம்பூமகாரிஷி வாக்கியம்
ரைப் பார்த்திருந்தாலும், சேர்ந்திருந்தாலும், அந்த ஜாதகன் நற்குணத்திற் சிறந்த உத்தமனாய் விளங்கி மாந்திரீக வித்தை கற்று பில்லி சூனியங்களை யெடுத்துவிட்டு மனிதர்களுக்கு நன்மை செய்யும் பரோபகாரியென்று பல பேர் மெச்சத் நன்மையான கீர்த்தியும் புகழும் பெற்றிருப்பான்.
ஜம்பூமகாரிஷி வாக்கியம்
இலக்கினத்தோன் பனிரெண்டாமிடத்துளோனும் இனிதாயோர் ராசியிலேசேர்ந்திருக்க கலக்கமிலாதவனிரண்டாம் நட்சத்திரத்தோனும் கலந்திருந்தால் ஆகாசஅந்தரசக்ரமாகும் நலமுடனே இத்தகைய யோகத்தாலே நன்மையாய்ஆகாசத்தில் கோபுரத்தின்மீதும் பலமானகம்பங்கட்டி மாயஜாலவித்தை பாரோர்முன்விளையாடி மகிழுவாரே. 36
உரை:--இலக்கினாதிபதியும் பனிரெண்டா மிடத்ததிபதியும் சேர்ந்து ஓர் இராசியிலிருக்க, இவர்களுடனே அந்த ஜாதக னுடைய இரண்டாவது நட்சத்திரத்தோனும் சேர்ந்திருந்தால் ஆகாச அந்தர சக்ர யோகமாகும். இந்த யோகபலமானது காண்போர் மனமிரளும் தன்மையாக உயரமான கம்பத்தை பூமியில் நாட்டி கோபுரத்தின் மீதும், ஆகாசத்திலும் மாயஜால வித்தையாடி பார்ப்பவர் பயங்கரங் கொள்ளும் தன்மையாக சாமர்த்தியங் காண்பிப்பார்.
ஜம்பூமகாரிஷி வாக்கியம்
இலக்கனேசன்ராசியோன் ஏழிலேயிருக்க இனியபலவேஷவித்தை தனிற்சிறந்தோன் கலக்கமிலாஆறோனும் செவ்வாய்சேர்ந்திருக்க கடினப்பகைவீடாக இருக்குமானால் பலர்மீதுகோள்சொல்லி குடிகெடுப்பான் பகையின்றேல் சாமான்யமாயிருப்பான் நிலையாகக்கிரகநிலை ஆராய்ந்தன்பாய் நிதானமாய் பலனுரைப்பீர்ஜோதிடவல்லோரே. 37
உரை:--இலக்கினாதிபதியும் இராசிநாதனும் சப்தம ஸ்தா னத்திலிருந்தால் பலவித்தை கற்றுணர்ந்து பலவித வேஷங் களாய் ஆடிக்கொண்டிருப்பான். ஆறுக்குடையவனும் செவ்வா யும் பகையாய் சேர்ந்திருந்தால் அந்த ஜாதகன் பலர்மீதும் கோள்சொல்லிக் கொண்டு ஒரு குடியை ஒன்பது குடியாய்க் கலைத்து, காண்போர் இகழும் தன்மையாக கலகப்பிரியனா யிருப்பான். ஆனால் சத்ரு க்ஷேத்ரமில்லாமல் மித்துரு க்ஷேத்ரமா யிருந்தால் சாதாரணமா யிருப்பார்கள்.
Page 31
ஆயுர் ஸ்தான பலன்
எண்சீரடி விருத்தம் . இலக்கினத்தோன் அஷ்டமத்தோனுடனேகூடி இசைந்ததசமாதிபதி மூவர்சேர்ந்து பலமானகேந்திரதிரி கோணமுற்றால் பாரிலவர்தீர்க்காயுளாய் வாழ்வார்கள் நலமுடனேலக்கினேசன் அஷ்டமத்தோன் நாடியேசரத்திருந்தால் தீர்க்காயுளாகும் கலக்கமுடன் ஸ்திரஉபயராசியாகில் கழறுவாய்மத்திபஆயுளென்றே 38
உரை: - இலக்கினாதிபதி, அஷ்டம ஸ்தானாதிபதி, தசம ஸ்தானாதிபதியும் சேர்ந்து கேந்திர திரிகோணத்திலிருந்தால் ஜாதகன் தீர்க்காயுசாய் ஜீவித்திருப்பான். இலக்கினத்தோனும், அஷ்டமத்தோனும் சரத்திலிருந்தால் தீர்க்காயுசா யிருப்பார்கள். உபயராசியிலிருந்தால் மத்திப ஆயுசாய் ஜீவித்திருப்பார்கள்.
ஆயுர் ஸ்தான பலன்
ஜன்மலக்கினாதிபதி அஷ்டமத்தோன் தசமாதிபதி யிவர்கள் மூன்றுபேரும் நன்மையாய் மித்ருக்ஷேத்ரந்தனிலிருக்க நட்பினரும்பனிபார்க்க ஆயுள்விர்த்தி அன்புடனேலக்கினாதிபதி திரிகோணகேந்திரத்தில் அமைந்துமித்ரராசிகளி லிருந்திட்டாலும் நன்மையாய் சுபக்கோக்கள் சேரபார்க்க தரணியில்தீர்க்காயுசாய் ஜீவிப்பாரே. 39
உரை: - இலக்கினாதிபதியும் அஷ்டமாதிபதியும் தசம ஸ்தானாதிபதியுமாகிய இம்மூன்று கிரகங்களும் மித்ரு க்ஷேத்திரத்திலிருக்க அவர்களை மித்ரு கிரகங்களும் ஆயுள்காரகனாகிய சனிபகவானும் பார்த்தால் ஜாதகனுக்கு ஆயுள்விர்த்தியாகும். இலக்கினாதிபதி திரிகோண கேந்திரங்களில் சுபக்கிரகங்களிருந்தாலும் பார்த்தாலும், ஜாதகன் பூலோகத்தில் தீர்க்காயுசாய் ஜீவித்திருப்பான்.
ஆயுர் ஸ்தான பலன்
இலக்கினத்தோன் திரிகோணகேந்திரமேறி இனிதுடனே மித்ரராசியிலிருக்க பலமுடனே சுபக்கிரகம்பார்க்கசேர பாகிலவெகுநாளிருப்பான் ஆயுள்விர்த்தி கலக்கமுடன் பாபர்திரிகோணகேந்திரம் கலந்துசுபருடனிருக்க லக்கினநாதன் பலவானாயிருந்தாலே ஆயுள்விர்த்தி பார்தனில்தீர்க்காயுசாய் விளங்குவாரே, 40
Page 32
ஜம்புகாகரிஷி வாக்கியம்
உரை:-- இலக்கினாதிபதி திரிகோண கேந்திரத்தில் மித்து ராசியிலிருக்க சுபக்கிரகம் பார்த்தாலும், சேர்ந்தாலும் உலகத்தில் வெகுநாளிருந்து, ஆயுள் விர்த்தியடைந்து தீர்க்காயுசா யிருப்பார்கள். இலக்கினாதிபதி திரிகோண கேந்திரத்திலிருந்த சுபக் கிரகங்களுடனே சேர்ந்து பலவானாயிருந்தால் ஆயுள் விர்த்தியாகும்படியான தீர்க்காயுசாய் ஜீவித்திருப்பதற்காகும்.
ஜம்புகாகரிஷி வாக்கியம்
சஷ்டாஷ்டம வியத்தில்பாபர்சேர சார்ந்துகபர் திரிகோணகேந்திரமேற இஷ்டமுடன் லக்கினநாதன்பலத்திருக்க இனிதுடன்ஜாதகன் தீர்க்காயுசாகவாழ்வான் நஷ்டமிலாமதிக்கேழில் நாலில்பத்தில் நாடியே குருபுகருமிருந் திட்டாலே துஷ்டரின்சேர்க்கையின்றி காலமெல்லாம்யோகம் தொடர்ந்துதீர்க்காயுஸாய் ஜீவிப்பாரே. 41
உரை:-- இலக்கினத்திற்கு ஆறு, எட்டு, பனிரெண்டில் பாப கிரகங்களிருக்கவும், சுபக்கிரகங்கள் திரிகோண கேந்திர ஸ்தானத்திலிருக்கவும், இலக்கினாதிபதி பலத்திருக்க ஜனனமான ஜாதகன் தீர்க்காயுஸாக வாழ்வான். பூர்ணசந்திரனுக்கு ஏழில், நாலில், பத்தில் குரு, சுக்கிரன் சேர்ந்திருந்தால் ஜாதகன் சன் மார்க்கனாய் துன்மார்க்கமின்றியே உத்தமனாய் மரணபரியந்தம் நல்ல யோகபலனை யனுபவித்து தீர்க்காயுஸாய் ஜீவித்திருப்பதற்காகும்.
ஜம்புகாகரிஷி வாக்கியம்
தன்னுடையலக்கினத்தோன் அஷ்டமத்தோன் சரராசியாயிருந்தால் தீர்க்காயுஸாகும் பன்னிய உபயமென்றால் மத்திபாயுஸாகும் பார்தனிலேஜாதகர்க்கு சரத்திருந்தால் நன்மையில்லை அற்பாயு ளமைந்திருக்கும் நம்பாதேஜாதகனை யிருப்பானென்று தன்மையுடன் திசாபுத்தி யாராய்ந்தன்பாய் தரணியோர்க்குரைத்திடுவீர் ஜோதிடவல்லோரே. 42
உரை:-- இலக்கினாதிபதியும் ஆயுள் ஸ்தானாதிபதியும், சர ராசியிலிருந்தால், தீர்க்காயுஸாயிருப்பதற்காகும். ஆனால், உபய ராசியிலிருந்தால் மத்திப ஆயுஸாகும். ஸ்திர ராசியிலிருந்தால் அற்பாயுஸாகும். ஆகையால், இந்த ஜாதகனுடைய திசாபுத்தியையும் ஆராய்ந்துணர்ந்து, ஆயுள் பலன் சொல்லவேண்டும்.
தன போக சுக வாகன பலன்
இலக்கினத்தில்சுபக்கிரக மிருக்கபார்க்க இனிதுடனேசுகவானா யிருக்கலாகும்
Page 33
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
நலமாய்ரெண்டாம்ராசிக்கதிபன் கேந்திரகோணம் நாடியேஆட்சி உச்சமாயிருந்து பலமுடன்மித்திரர்சேர்க்கை பார்வைவானால் பலவித்தைகற்றுணர்ந்து கீர்த்திவானாய் கலக்கமிலாஉத்தியோக வர்த்தகமுஞ்செய்து காலமெல்லாம்தனவானா யிருப்பர்தானே. 43
உரை:--ஜனன லக்கினத்தில் சுபக்கிரகமிருந்தாலும், பார்த்தாலும் சுகஜீவியாயிருப்பதற்காகும். இரண்டாம் ராசிக்கதிபன் கேந்திரத்திலாகிலும் திரிகோணத்திலாகிலும் ஆட்சி உச்சமாயிருந்து நட்பு கிரகச் சேர்க்கையாயிருந்தாலும், பார்வையானாலும் பலவிதமாகிய சமர்த்துடன் கல்வியில் தேர்ச்சியடைந்து கீர்த்தி பிரகாசமாய் உத்தியோகஞ் செய்தும், வியாபாரஞ்செய்தும் பலவிதமாய் திரவிய சேகரஞ்செய்து மரணமாகும் வரையிலும் சுகஜீவியா யிருப்பதற்காகும்.
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
சுகபாக்கிய ஸ்தானாதிபதிகளானோரை சுபக்கிரகங்கள்சேர்ந்தும் பார்த்திட்டாலும் தகுதியாய்கேந்திர திரிகோணமானால் தக்கபடிமிக்கபலன் கிடைத்துநாளும் வெகுதனவானாகியே வாகனபலன்கள் வேணபடியே கிடைக்குமென்றுசொல்வாய் மகிழ்டனேஜாதக லக்ஷணத்தையோர்ந்து மதித்துரைப்பாய் ஜாதகர்க்குப்பலனைத்தானே. 44
உரை:--நான்காமிடத் ததிபதியும், ஒன்பதாமிடத் ததிபதியும் கேந்திர திரிகோண க்ஷேத்திரத்திலிருந்து சுபக்கிரகங்கள் சம்பந்தமானாலும் பார்வைபெற்றாலும், சமயோசிதமாய் வெகு லாபங்கிடைத்து சகலரும் புகழுந்தன்மையாக வாகனபலன் கிடைக்கும். ஆகையால், இலக்கின திசாபுத்தி பலனை ஆராய்ந்து பலன் சொல்லவேண்டும்.
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
ஒன்றிரண்டொன்பதுநான்கு பதினொன்றாக்கானோர் ஒதுங்கேந்திரங்களிலே சுபரோடுற்றால் பொன்பொருளும் சேகரிப்பான் தனவானாக பொருந்திலொன் பதுபத்தோர் சேர்ந்திருந்தால் அன்புடனே மேலான யோகமுண்டு ஆஸ்தியுள் நிதியுடனே சுகித்திருப்பார் தன்மையுடனிவர்களை தனவானென்று தரணியோர் புகழ்ந்துரைப்ப ரென்பர்தானே. 45
உரை:--இலக்கினஸ்தானம், தனஸ்தானம், சுகஸ்தானம், இலாபஸ்தானமாகிய இந்த நான்கு வீட்டுக்குடைய கிரகங்கள்
Page 34
ஜம்புகாshift வாக்கியம்
கேந்திர ஸ்தானங்களிலேயிருந்து சுபக்கிரகங்களுடன் சேர்ந்திருந்தால் பொன், பொருள் பூஸ்திதிகள் சேகரித்து தனவந்தனாயிருப்பதற்காகும். ஆனால், பாக்கியாதிபதியும், ஜீவஸ்தானாதிபதியும் சேர்ந்து தமது வீட்டிலே ஒருவர்க்கொருவர் பரிவர்த்தனமாய் மாறி யிருந்தாலும் மேலான யோகபலனை யனுபவித்து சுகானந்தமா யிருப்பார்கள்.
ஜம்புகாshift வாக்கியம்
குருசுக்கிரன் புதன்சந்திரன் திரிகோணகேந்த்ரம் குறிப்பான லாபத்தி லிருந்தாரானால் பெருமையாய் நல்லயோக பலனைக்கந்து பொன்பொருளும் தருவார்கள்ஜாதகர்க்கு தருணமேபாபர் மாரகாதிபரை சேர்ந்தும் தங்கள்மேல் பார்வையவர் செலுத்தினாலும் பொருளில்லா வறுமைபிணி யதிக்கரிக்க பூதலத்திலே துன்பம் செய்குவாரே. 46
உரை :-சுபக்கிரங்களாகிய குரு, சுக்கிரன், புதன் வளர் பிறைச்சந்திரன் இந்நால்வரும் கேந்திரதிரிகோண ஸ்தானத்திலிருந்தால் ஜாதகர்க்கு நல்ல யோகபலனைத்தந்து தனதான்ய சம்பத்துடனே சுகஜீவியாய் வாழ்ந்திருக்கும்படியாகச் செய்வார்கள். ஆனால், பாபக்கிரகங்கள் மாரகாதிபதிகளுடனே சேர்ந்தாலும் பார்வை பெற்றாலும் வறுமை, பிணி, துக்கமும் அதிகரிக்கும்படி செய்வார்கள்.
ஜம்புகாshift வாக்கியம்
புகர்குருவும் உபயகேந்த்ராதிபரேயாகில் பொருந்துமே ஜாதகர்க்கு பலத்ததோஷம் மகிமாக ஆட்சிஉச்ச மாயிருந்தால் மதிப்புண்டு வெகுயோகம் கிடைக்குமப்பா சுகமாக நட்புதிரி கோணத்திருந்தால் சொல்லுவாய் மத்திய பலனுண்டாமே திகழுமூன் றாறெட்டு வியத்திருந்தால் தீராத துன்பமுண் டென்றுசொல்வாய். 47
உரை:—சுக்கிரனும், குருவும், உபயராசி கேந்திர ஸ்தானங்களிலிருந்தால் ஜாதகர்க்கு பலமான தோஷமுண்டு. ஆனால், ஆட்சி உச்சமாயிருந்தால் மிகவும் பெருமையும் கீர்த்தியும் வாய்ந்த வெகு யோகபலனை யனுபவிக்கச் செய்வார்கள். அவர்கள் நட்புஸ்தானம், திரிகோண ஸ்தானங்களிலிருந்தால் மத்திம பலன் தருவார்கள். குரு, சுக்கிரன் மூன்று, ஆறு எட்டு, பனிரெண்டிலிருந்தால் தீராத துன்பமும் துயரமும் நேரிடும்.
Page 35
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
இன்பமாக சப்த கிரகங்கள் நீங்க இராகு கேதுக்களுக்கு சுகவீடில்லை என்னென்ன கிரகத்தோடே சேர்ந்தாலும் எந்தெந்த வீட்டிலிருந் தாலுமந்த தன்மையாய் க்ஷேத்திரபலன் கொடுப்பதோடு தன்னுடனே சேர்ந்த கிரகபலன்கொடுப்பார் இன்னிண விதமாக சுபாசுபங்கள் இனிதுடனே தருவாரென் றியம்புவீரே. 48
உரை:- சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்ரன், சனி இவர்களுக்கு மாத்திரம் மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிங்கம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனமென்னும் பனிரெண்டு இராசிவீட்டில் அவரவர்க் கிசைந்த க்ஷேத்ரமுண்டு. ஆனால், இராகு, கேதுக்களுக்கு மாத்திரம் சொந்த ராசி வீடில்லை. ஆகையால், அவ்விருவரும் தாங்களிருந்த ஸ்தானபலனும், தங்களுடனிருந்த கிரகங்களின் சேர்க்கை பலனும் என்னென்ன விதமா யிருக்கின்றதோ அந்த விதமாக சுப பலனையோ அசுப பலனையோ சமயோசிதமாய்த் தருவார்கள்.
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
பத்துநவத்தோ னொன்றா றெட்டுமூன்று பதினொன்றுக் கதிபருடன் சேராதிருந்தால் வித்தையுடன் ராஜயோக மீவார்கள் வியாழனுக்கா றெட்டுபனிரெண்டில் மதியிருக்க சித்தமாய் சகடயோக மாகுமப்பா சிலகாலம் சுகாFolderத்தை யனுபவிப்பார் இத்தரணிஜா தகரின் பலனுரைத்தால் இவ்விதமாங்கவனித்து புகலுவீரே. 49
உரை:- இலக்கினாதிபதி ஜீவனஸ்தானாதிபதி பாக்கியாதி பதிகளாகியவர்கள் மூன்றாமிடம், ஆறாமிடம், எட்டாமிடம், பனிரெண்டாம் இடத்ததிபருடன் சேராதிருந்தால் வித்யாலபமும் மேலான இராஜ யோகத்தையும் தருவார்கள். ஆனால், குருபகவானுக்கு ஆறெட்டு பனிரெண்டாம் இராசியில் சந்திரனிருந்தால் சகடையோகம், அதன் பலன் சிலகாலம் சுகத்தையும் சிலகாலம் கஷ்டத்தையும் அனுபவிக்கச் செய்யும். இந்த விபரத்தை சரியாய் கவனித்துப் பலனுரைத்தால் ஜாதகரின் பலன் சரியாய் அமைந்திருக்கும்.
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
இலக்கினத்தோன் சரத்திருந்தால் அந்நியதேசம் இசைந்தபடிஸ் திரத்திருந்தால் சொந்ததேசம் நலமுடனேவாசஞ் செய்வாரென்றேது நவிலுவாய்உபயத்தில் லக்கினத்தோனிருந்தால்
Page 36
ஜாம்பூமகாரிஷி வாக்கியம்
சிலகாலம்பரதேச வாசியாயிருந்து சிறிதுநாள்தன்னூரில் வாசஞ்செய்வான் பலதேசந்திரிந்து பொருள் சேகரித்து பார்தனிலேவெகுகீர்த்தி யடைகுவானே. 50
உரை:-- இலக்கினாதிபதி சரராசியிலிருந்து இலக்கின கேந்திர திரிகோண நட்பு, ஆட்சி, உச்சஸ்தானங்களிலும் இலாப ஸ்தானங்களிலாகிலு மிருந்தால் அந்நிய தேசத்தில் சென்று பல வித வியாபாரஞ் செய்தாகிலும், உத்தியோகஞ்செய்தாகிலும், தனவானா யிருப்பதற்காகும். ஸ்திரராசியிலிருந்தால் தன்னூரில் தானே திரவியஞ் சேகரித்து பிரபுவாயிருப்பதற்காகும். ஆனால், உபயராசியிலிருந்தால் சிலகாலம் அந்நியதேசத்திலும், சிலகாலம் சொந்த தேசத்திலுமிருந்து காண்போர் மனமகிழ பொருள் சேகரஞ்செய்து பெருமையுடன் வாழ்ந்திருப்பதற்காகும்.
ஜாம்பூமகாரிஷி வாக்கியம்
பனிரெண்டாம் ஸ்தானத்தில் வியாழன்சுக்ரன் பிறைமதியும் புதனிருந்தால் ஜாதகன்தான் முனிவறா உத்தமனாய் * சத் கர்மத்தில் முனைந்துசெல வழித்துசுக மாயிருப்பான் சவிராகுகேதுகுஜன் இரவியிபத்தில் சார்ந்தாலும்பார்த்தாலும் † துர்க்கர்மத்தில் இனிதாகசெலவுசெய்து பழிக்கஞ்சாமல் இறுமாப்பா யிருப்பானென் றோதுவாயே. 51
உரை:-- இலக்கினத்திற்குப் பனிரெண்டா மிடமாகிய விரய ஸ்தானத்தில், குரு, சுக்கிரன், வளர்பிறைச் சந்திரனிருந்தாலும் பார்த்தாலும் ஜாதகன் கோபசிந்தனை யில்லாமல் அடக்கம், பொறுமை, சாந்தம், தயாளம், ஜீவகாருண்யமென்னும் நற்குணங்களிற் சிறந்து உத்தம கைங்கரிய சத்விஷயத்தில் செலவு செய்து கொண்டிருப்பான். ஆனால், விரயஸ்தானத்தில் சனி, ராகு, கேது, குஜன், தேய்பிறைச் சந்திரனிருந்தாலும் பார்த்தாலும் கோபம், குரோதம், வஞ்சகம், லோபம், பொறாமை யென்னும் துர்க்குணத்திற் சிறந்தவனாய்ப் பழி பாவத்திற் கஞ்சாமல் துர்விஷயத்தில் பொருள் செலவு செய்து மனோகர்வமா யிருப்பதற்காகும்.
- சத்கருமம்: அன்னதானஞ் செய்தல், ஆலயம் கட்டல். † துர்க்கர்மம்: தன்னைப்போன்ற ஜீவர்களை இம்ஸித்தல், ஏழைகளை அநியாயமாய் கஷ்டப்படுத்தூதல்.
ஜாம்பூமகாரிஷி வாக்கியம்
அன்புடனேலக்கினத்தோன் நட்புஉச்சம் ஆட்சிபெற்றிடூந்திடவும் நான்குளோனும் இன்பாகப்பதினொன்றுக் குடையோனும்நட்பாய் இருந்தாலும்தமக்குரிய ராசிதன்னில்
Page 37
பெரிய ஜோதிட சில்லரைக் கோவை
நன்மையாய்மாறியே யிருந்திட்டாலும் நல்லபலந்தருவர்க ளாகையாலே பொன்பொருளும்பூமிபலம் கிடைத்தெந்நாளும் பூதலத்தில்கீர்த்தியாய் ஜீவிப்பாரே. 52
உரை:—இலக்கினாதிபதி நட்பு, ஆட்சி, உச்சமாயிருந்து 2-காதிபதியும், இலாபாதிபதியும் நட்பு ஸ்தானத்திலிருந்தாலும், தமது இராசிகளில் மாறியிருந்தாலும் நல்ல யோக பலனைத் தந்து, ஜாதகனை சகலரும் புகழ்ந்துரைக்கும்படியான கீர்த்திப் பிரகாச மாயிருக்கும்படிசெய்து, பொருள், காணி, பூமி முதலானவை பெருகும்படியான நன்மையை விளங்கச்செய்யும்.
பெரிய ஜோதிட சில்லரைக் கோவை
அன்புடனேலக்கினத்திற் கிரண்டுநான்கு ஐந்துபத்தாமிடத்திற் குடையோருந்தான் ஒன்பதினொன்றுக் குடையோரோடு ஒதுலக்கினாதிபனும் கேத்ரகோணம் நன்மையாய்ட்சநட்பிருந்தே நல்லோர்கள் நாடியேபார்த்தாலும் சேர்ந்திட்டாலும் இன்பசுகபோக பாக்கியங்களோடு இனிதானயோகபலன் தருவாரே. 53
உரை:—இலக்கினத்திற்கு இரண்டு, நான்கு, ஐந்து, பத்தாமிடத்திற் குரியவர்கள் பாக்கியஸ்தானாதிபதி இலாபஸ்தானாதிபதி இலக்கினாதிபதிகளுடன் சேர்ந்து கேந்திர, திரிகோணம், நட்பு, உச்சஸ்தானத்திலிருந்து சுபக்கிரகங்கள் சம்பந்தமானாலும் பார்வை பெற்றாலும் அந்த ஜாதகன் மகா தனவந்தனாயிருந்து சுபபோக பாக்கியங்களுடன் மிகவும் விசேஷமான யோகபலனை அநுபவிப்பதாகும்.
பெரிய ஜோதிட சில்லரைக் கோவை
சந்திரநட்பாயிருந்து வியாழனுக்கு சப்தமத்திலிருந்தாலும் யோகமுண்டு அந்தமுடன்ஜீவன ஸ்தானந்தன்னில் அமைந்திருந்தால் சுகவானென்பராமே இந்தவிதமாய்கிரக நிலையைக்கண்டு இத்தரணிஜாதகர்க்குப் பலனைச்சொன்னால் எந்தவிதமும்பொருந்து மென்றுநீயே எண்ணுவாயுன்மனதி லினிதாய்த்தானே. 54
உரை:—சந்திரபகவானானவர் நட்பு ஸ்தானத்திலிருந்து வியாழ பகவானாகிய குருவுக்கு ஏழாமிடத்திலிருந்தால் அநேக விதமாகிய நன்மைகளும், பொன், பொருள், ஆஸ்தி, பூஸ்திதிகளும் தனம் தான்யசம்பத்தும் நிறைந்து சுகவானாய் ஜீவித்
Page 38
ஜம்புகாகீஷி வாக்கியம்
திருப்பதற்காகும். ஆனால், இவ்விதமாய் கிரகநிலை அமைந்திருந்தாலும், மற்ற கிரகங்களிருக்கும் ஸ்தானபலனும் ஆராய்ச்சிசெய்து ஒழுங்காய் பலன் சொல்லவேண்டும்.
இலக்கினமுதல்நான்கு கேந்திரங்களில்தான் *இந்துவுடன்சுபக்கிரக மிருக்குமானால் கலக்கமிலாமனதமைந்து ஜாதகன்தான் கல்விகற்றுஞாபகசக்தியோடு பலவிதத்தைகானுணர்ந்து பெருமையாக பார்தனிலேஉத்தியோகஞ் செய்துவாழ்வான் நிலையானவர்த்தகமும் செய்தெந்நாளும் நீணிலத்தில்தனலாபத் துடன்ஜீவிப்பான். 55
உரை:--இலக்கினமுதல் நான்கு கேந்திரங்களிலும் சந்திரபகவானுடன் சுபக்கிரகமிருந்தால் பயங்கரமும் திகிலுமில்லாத சுத்த மனதமைந்தவனாய் ஜாதகன் ஞாபகசக்தியுடன் வித்யாசாதுர்யமாய்க் கல்வி கற்றுணர்ந்து சகலரும் புகழ்ந்துரைக்கும்படியான சிறந்த உத்தியோகஞ்செய்து கீர்த்திவந்தனாயிருந்தும், பெருமையான வியாபாரஞ்செய்தும் உலகத்தோர் மதிக்கும்படியாய் திரவிய சேகரஞ்செய்து வெகுபொருள் சேகரித்து சுகவானாயிருப்பதற்காகும்.
ஜம்புகாகீஷி வாக்கியம்
கன்னியிலே புதனுச்சமாயிருக்க கடகத்தில்குருஉச்ச மாயிருக்க இன்பமுடன்ரிஷபத்தில் சந்திரனுச்சம் இருந்திடவேகன்னியா லக்கினஞ்சனித்தோர் தன்மையுடன்வியாபாரம் மிகவேசெய்து தனதான்யபொன்பொருளு மிகவேசேர்த்து நன்மையாய் பாக்கியவானாய்விளங்கி நலமுடனே வாழ்ந்திருப்பார்கவனிப்பீரே. 56
உரை:--ஜனன இலக்கினம் கன்னியாய் அந்த ஸ்தானத்தில் புதன் உச்சமாகவும், கடகத்தில் குரு உச்சமாகவும், ரிஷபத்தில் சந்திரன் உச்சமாகவுமிருந்தால் ஜாதகன் வித்யா சாதுர்யமாய்க் கல்வி கற்று கணிதாராய்ச்சியிற் சிறந்தவனாய் வர்த்தகஞ்செய்து வெகு பொருள் சேகரித்து தனதான்ய சம்பத்துடனே பெருமையாய் வாழ்ந்திருப்பான். ஆனால், மேற்குறிப்பித்த மூன்று கிரகமும் உச்சமாயிருக்கும்போது சிம்மலக்கினமாயிருந்தால் சங்கீத சாகித்தியத்திற் சிறந்த வித்துவானாய் விளங்கி நாடகவாத்தியாரெனும் கீர்த்திபிரகாசமாய் வெகுபொருள் சேகரித்து யோகவானாயிருப்பதற்காகும்.
- இந்து - சந்திரன்
Page 39
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
தனுசுலக்கினந்தனிலே ஜனித்தோருக்குக் கருந்தபடியீனத்தில் குருவிருக்க கனமுடனேமிதுனத்தில் புதனிருக்க காணியுடன் சுக்கிரன் துலாத்திருக்க தனதான்யசம்பத்து மிகவேபெற்று தாரணியில்வெகுகீர்த்தி யாயிருந்து இனஜனத்தோடுஞ்சூழ்ந்து தனவானாக இன்பமுடன்சுகமாக வாழ்வார்தானே. 57
உரை: - ஜனன இலக்கினம் தனுசாகவும், மீனத்தில்குருவும் மிதுனத்தில் புதனும் துலாமில் சுக்கிரனுமிருந்தால் ஜாதகன் தன தான்ய சம்பத்துடன் வெகு கீர்த்திவானாய் தனது இனஜனத் தார் பத்துமித்திரர் புகழ்ந்துரைக்கும்படியான சமர்த்துடன் வெகு பொருள் சேகரஞ்செய்து சுகபோகபாக்கியவானா யிருப்பதற்கா கும். ஆனால், சனி செவ்வாய் இராகு கேது சம்பந்தமானாலும் பார்வைபெற்றாலும் மத்திப பலனாக விளங்கும்.
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
அன்புடனே சுபக்கிரகங்களெல்லாம் அமைந்திருந்த ராசிமித்ருக்ஷேத்ரமானால் பொன்பொருளும்பூஸ்திதியும் கிடைக்குமிந்த பூதலத்தில் தனவந்தராயிருப்பார் தன்மையாய்ச்சனிராகு கேதுசெவ்வாய் தங்களுடன் சேர்ந்தாலும் பார்த்திட்டாலும் நன்மையில்லைதுன்பமுண்டு வறுமையாலே நல்லோர்க்கும்பகையாக விளங்குவாரே. 58
உரை: - குரு, சுக்கிரன், புதன், வளர்பிறைச்சந்திரன் இந் நால்வரும் நட்புராசியிலிருந்தால் வித்யாபிவிருத்தியுடன் உத்தி யோகஞ் செய்தும், வர்த்தகஞ்செய்தும் பலவிதமாய் திரவிய சேகரஞ் செய்து சுகபாக்கியவானா யிருப்பதற்காகும். ஆனால், இந்த சுபக்கிரகங்களுடனே சனி, ராகு, கேது, செவ்வாய் சேர்ந் தாலும் பார்த்தாலும் யோகபலனைத் தராமல் துன்பமும், துயர மும் அனுபவித்து கஷ்ட நஷ்டமாய்க் கலங்கி வறுமையால் துக்கப்படச்செய்யும். அவர்களுடன் செவ்வாய் மாத்திரம் சேர்ந் தாலும் பார்த்தாலும் மத்திப பலனை அனுபவிக்கச் செய்யும்.
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
குருபகவான் நட்பு ராசியிலிருக்க குறித்தலக்னாதிபதி மித்ருவானால் பெருமையுடன் சந்திரனும் பார்த்திட்டாலும் பேதமில்லாசேர்ந்தாலும் யோகமாகும்
Page 40
ஜம்புமகாரிஷி வாக்கியம்
கருணையன்றி ஆறெட்டுபன்னிரண்டில் கலங்கும் மூன்றிலு மிருந்தால்கறுமையாலே பொருளிழந்துகாண்போர்கள் பழித்துரைக்க பெருமையின்றியேமயங்கி திகைப்பர்தானே. 59
உரை :- இலக்கினாதிப தியும், குருபகவானும் நட்புராசியி லிருக்க, சந்திரன் பார்த்தாலும் தனவானாக வெகு பொருள் சேக ரித்துக் கீர்த்திவந்தனா யிருப்பதற்காகும். ஆனால், சந்திரன் ஆறு, எட்டு, பனிரெண்டா மிடத்திலிருந்தால் கைப்பொரு ளிழந்து, கலங்கி துடித்து வறுமையினால் மதிமயங்கி சகலரும் பழிக்கும்படியான தாழ்ந்த நிலையாயிருந்து, உலகத்தில் கஷ்ட நஷ்டத்தை யனுபவிப்பார்கள்.
ஜம்புமகாரிஷி வாக்கியம்
புதன்குருவும்சுக்கிரனும் நட்பாட்சிஉச்சம் பொருந்தியிருக்கும்போது சந்திரன்றன்னை இதமுடனே செவ்வாயும் பார்த்திட்டாலே இனிதானதனசம்பத் துடனேவாழ்வான் பதமுடனே சுபக் கிரகங்கள்தன்னை பாபர்காணில்பலனே கிடையாதென்றும் அதமபலனுண்டாகு மென்றுமேலோர் அறிவித்தவாக்கியத்தைக் கவனிப்பாயே. 60
உரை :- புதபகவானும், குருபகவானும், சுக்கிரபகவானும் நட்பு, ஆட்சி, உச்சஸ்தானத்திலிருக்கும்போது சந்திரனை செவ்வாய் பகவான் பார்த்திட்டால் தனதான்யம், பொன், பொருள், சேகரஞ்செய்து கீர்த்திபிரகாசமாய் ஜீவித்திருப்பார்கள். ஆனால் சனி, ராகு, கேதுபகவான் குரு, புதன், சுக்கிரனை பார்த்தால் பலவிதமான கஷ்டமும், கவலையும், துக்கமும், துன்பமுமனுப விப்பதற்குரிய கலவரமான மனதமைந்து கஷ்டமடையச் செய்யும்.
ஜம்புமகாரிஷி வாக்கியம்
கர்க்கடகலக்கினமாய் மதியும்வியாழன் கலந்திருக்கும்போதுலகில் ஜனனமானோர் துர்க்குணமில்லாமலே நல்லோர்சேர்க்கை தொடர்ந்துவித்யா லாபத்தால்தனவானாக சற்குணமாய் வாழ்ந்திருப்பாரூலகமீது சார்ந்துசனிராகு கேதிவரோடுற்றால் அற்பபலனுண்டாகும் ஜாதகர்க்கு அளவுபோல் சுகதுக்கமெய்தும்பாரே. 61
உரை - கடகலக்கினத்தில் சந்திரன் ஆட்சியாகவும் குரு
Page 41
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
வெகு சமர்த்தனாக விளங்கி காண்போர் புகழுந்தன்மையாக உத்தியோகஞ் செய்தும் தனலாபத்துடன் சுகபாக்கியவானா யிருப்பதற்காகும். ஆனால், சனி, ராகு, கேது சம்பந்தமானாலும் பார்வையானாலும் மத்திப பலனாக ஜாதகர்க்கு அளவுபோல் பலன் கிடைக்கும்.
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
இலக்கினமும் இராசியுமொன் றாயிருந்து இருபுறமும் குருபுதனும் சுக்கிரனும் சந்திரன் கலக்கமிலா திருந்தாலே ராஜயோகம் கௌரவமும் வெகுகீர்த்தியா யிருக்கும் பலபேரால் புகழ்ந்துரைக்கும் தனவானாக பார்தனிலே ஜீவித்திருப்பான் சுகவானாக நிலையான கிரகநிலை கவனித்தன்பாய் நிதானமாய்ப் பகனுரைப்பீர் ஜாதகர்க்கே. 62
உரை:--ஜனனலக்கினமும் இராசியும் ஒன்றாயிருந்து இரண்டு பக்கமும் குருபகவானும், சுக்கிரபகவானும், வளர் பிறைச் சந்திரனுமிருந்தால் இராஜயோகத்திற் கிசைந்த கௌரவமும் கீர்த்தியும் பொருந்தி பலபேர் புகழ்ந்துரைக்கும்படியான தனவந்தனாக உலகத்தில் ஜீவித்து, சுகவானாயிருப்பதற்காகும். ஆனால், மற்ற கிரகங்கள் நின்ற நிலையையும் கவனித்து நிதான மாய்ப் பலன் சொல்லவேண்டும்.
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
திரிகோ ணாதிபதிகள் திரிகோணத்துற்று தீரமாக சுபக்கிரக மிருபால்நிற்க சரியான யோகபல னிதுவேயாகும் சற்றேனும் துயரமிலா சுகத்திருந்து துரிதமா யெந்தெந்த விஷயமெல்லாம் தொடர்ந்துசெய்து முடிப்பதற்கும் சமர்த்தராவார் திரியான காலம்வரை கீர்த்தியாக நீணிலத்தில் வாழ்ந்திருப்பா ரறிஞனீரே. 63
உரை:--திரிகோணாதிபதிகள் திரிகோணத்திலிருந்தும், சுபக்கிரகங்கள் இரண்டு பக்கத்திலுமிருந்தால் ஜாதகனுக்கு சரியான யோக பலனாகும். அதன் பலனெவ்விதமெனில் எச்சமய மும் துன்பமும் துயரமுமில்லாமல் நினைத்த காரியத்தை முடிக்கும் சமர்த்தனாயிருந்து எவ்விதமான கல்வியையும் ஞாபகசக்தியுடன் வாசித்து உத்தியோகஞ் செய்யும் சக்தியும், கைத்தொழிலில் முயற்சி செய்தலும் மகா சமர்த்துடன் செய்து முடித்து வெகு பொருள் சேகரித்தும், வியாபாரத்தினாலும் சாமர்த்தியமாய் திரவிய சேகரஞ்செய்து தனவந்தனாய் சுகஜீவியாக வாழ்ந்திருப் பதற்காகும்.
Page 42
ஜம்புமகாரிஷி வாக்கியம் - களத்திர ஸ்தான பலன்
ஜனனலக்கி னத்திற்கேழில் ரவியிருந்தால் சார்ந்திடுவான் மலடியுடன் ஜாதகன்தான் கனமுடனே சப்தமத்தில் மதியிருக்க காசினியில் சங்கீதப்பெண் ணோடுவாழ்வான் வினயமுடன் புதனோழி லிருந்திட்டாலே வேசியுடன் சுகமாக வாழ்ந்திருப்பான் கனமுடனே குருசப்த மத்திருந்தால் கன்னிபிரா மணப்பெண்ணோ டிணங்குவானே. 64
உரை:--ஜாதகனுடைய ஜனன லக்கினத்திற்கு ஏழாமிடத்தில் சூரிய பகவானிருந்தால் மலடியுடன் கூடி வாழ்வதற்காகும். சப்தம ஸ்தானத்தில் சந்திரனிருந்தால் உலகத்தோர் மெச்சத்தன்மையான சங்கீதமாய்ப் பாடும் இனிய நற்குணமான பெண்ணுடனே சேர்ந்து வாழ்ந்திருப்பதற்காகும். புதபகவான் இலக்கினத்திற்கு ஏழாமிடத்திலிருந்தால் விபசாரியுடன் சேர்ந்திருப்பான். குருபகவான் சப்தம ஸ்தானத்திலிருந்தால் பிராமணப் பெண்ணோடு சுகானந்தமாய் வாழ்ந்திருப்பதற்காகும்.
ஜம்புமகாரிஷி வாக்கியம் - களத்திர ஸ்தான பலன்
இலக்கினத்திற்கேழில் சுக்கிரனிருந்தால் இனிதுடனேகர்ப்பஸ்திரீ யுடன்சேர்வானே கலக்கமுடன்ராகுகே திவர்களந்த களத்திரஸ்தானத்திலிருந்தால் ஜாதகன்தான் நலமிலாதூரஸ்திரீ தன்னைச்சேர்ந்து நலமுடனேதனதுமன மகிழுவானே பலவிதமாய்ஜோதிடநூ லுணர்ந்தன்பாக பகுத்துணர்ந்துஜாதகர்க்குப் புகலுவீரே. 65
உரை:--இலக்கினத்திற் கேழாமிடத்தில் சுக்கிரபகவானிருந்தால் கர்ப்பஸ்திரீயைச் சேர்ந்து வாழ்ந்திருப்பான். இராகுகேது களத்திர ஸ்தானத்திலிருந்தால் ஜாதகன் தூரஸ்திரீயுடனே சேர்ந்து மனமகிழ்வா யிருப்பான். ஆனால், ஜோதிட சாஸ்திர ஆராய்ச்சி செய்து ஜாதகர்க்குப் பலன் சொல்ல வேண்டியது.
ஜம்புமகாரிஷி வாக்கியம் - களத்திர ஸ்தான பலன்
சுக்கிரனாகிய களத்திரகாரகன்தான் சூழ்ந்துவித்யாகாரகனா மென்றுரைக்கும் தக்கபுதனுட னினிதாய்சேர்ந்திருந்தால் தாசியுடன்சேர்ந்திருப்பான் சுகவானாக லக்கினத்திற்கேழில் புகர்நீசமானால் லக்ஷ்மீகடாஷமின்றி முத்தாளோடு
Page 43
பெரிய ஜோதிட சில்லரைக் கோவை
பக்குவமாய்வாழ்ந்திருப்பா ஞாலகந்தன்னில் பக்ஷமுடன் நூலுணர்ந்து பலன்சொல்வீரே. 66
உரை:- களத்திர ஸ்தானத்திலிருக்கும் சுக்கிரபகவானுடனே வித்யாகாரகனாகிய புதபகவானும் சேர்ந்தால் தனது மனத்திற்கினிய தாசியுடனே சேர்ந்து சுகவானா யிருப்பதற்காகும். ஆனால், களத்திர ஸ்தானத்தில் சுக்கிரபகவான் நீசமா யிருந்தால் இலக்ஷ்மி கடாக்ஷமில்லாமல் குரூரமனதமைந்தவனாய் தனது வயதிற்கு மூத்தவளுடனே சேர்ந்து சுகமில்லாமல் சதா கவலையாயிருப்பான். ஆனால், மற்ற கிரகங்களின் நிலையை ஆராய்ந்து பலனைச் சொல்ல வேண்டும்.
பெரிய ஜோதிட சில்லரைக் கோவை
அன்புடனேஜோதிடநூ லாராய்ந்துரைக்கும் அறிவுடையமூதறிஞர் வாக்கியத்தை இன்புடனேயனுசரித்து ஜாதகர்க்கு இனிதுடனேபலனுரைக்கும் விபரமெல்லாம் வன்மையாய்புகன்றாலும் சனியும்சுக்ரன் வந்தேழிலிருந்தாலே ஜாதகந்தான் வின்னமாய்பலராலும் பழிக்கப்பெற்று விதவையுடன் சேர்ந்திருப்பா னென்றுசொல்வாய். 67
உரை:- ஜோதிட சாஸ்திரத்தில் மிகவும் தேர்ச்சி யடைந்த பெரியோர்களுடைய வாக்கியத்தை யனுசரித்து ஜாதக பலனுரைத்தாலும் களத்திர ஸ்தானபலனை கவனிக்கும்போது ஜாதகனுடைய இலக்கனத்திற்கு சப்தம ஸ்தானத்தில் களத்திர காரகனாகிய சுக்கிரனும் சனியும் சம்பந்தமாயிருந்தால் சகலராலும் பழிக்கப்பெற்று விதவை ஸ்திரீயுடனே சேர்ந்து காலங் கழித்துக் கொண்டிருப்பதற்காகும்.
பெரிய ஜோதிட சில்லரைக் கோவை
இத்தகையதாகவே ஜாதகர்க்கு இசைந்தசப்தமஸ்தான மெனவேயோதும் சுத்தமெனும்களத்திர ஸ்தானந்தன்னை சுபக்கிரகங்கள்பார்த்தால் தோஷமில்லை எத்திதியும்சுபபாக்கிய மாகவாழ்ந்து எவர்களுமேபுகழ்ந்துரைக்க ஜீவிப்பார்கள் அத்தமருளால்விரத மனுஷ்டித்தன்பாய் அன்புடனே வாழ்ந்திருப்பாரூலகமீதே. 68
உரை:- ஜாதகனுடைய சப்தம ஸ்தானமாகிய களத்திர ஸ்தானத்தை சுபக்கிரகங்கள் பார்த்தால் எந்தகைய தோஷமும் அணுகாமல் விலகிப்போகும். அதனால் தனக்கு உத்தமமனைவாள்
Page 44
ஜம்புகாரீஷி வாக்கியம்
வந்து தனது மனதிற்கிசைந்தவிதமாய் இல்லறத்தை நடத்தி விரதானுஷ்டானம்புரிந்து பகவத் பக்தியானத்தமாய் தனது பந்துமித்திரர் புகழும் தன்மையாக வாழ்ந்திருப்பதற்காகும்.
அஷ்டமபாகத்தின் விபரம்
ஒன்றுமுதல்பனிரெண்டு வருஷமட்டும் ஒதும் பாலாரிஷ்ட மாகு மப்பா என்றுரைப்பாய்பதின்மூன்றே யிருபதாண்டும் எளவன அரிஷ்டமென் றினிதாய்ச்சொல்லு முன்பாக இருபத்தோ ராண்டிருந்து முப்பத்திரண்டுவரை கெளமாரரிஷ்டம் அன்பாய்முப்பத்திமூன்ற வருஷத்தோடு ஆகுமப்பா எழுபதாண்டு விருத்தாரிஷ்டம். 69
உரை:--ஜாதகன் பிறந்த ஒருவருஷ முதல் பனிரெண்டு வருஷம் வரைக்கும் பாலாரிஷ்டமுண்டாகும். பதின்மூன்று வயதிலிருந்து இருபது வயதுவரைக்கும் யெளவன அரிஷ்டமாகும். இருபத்தொரு வயதிலிருந்து முப்பத்திரண்டு வயது வரையிலும் கெளமார அரிஷ்டமாகும். முப்பத்துமூன்று வருஷ முதல் எழுபதுவருஷம் வரையிலும் விருத்தாரிஷ்டமாகும். இத்தன்மையான அரிஷ்டபலன்களுக்கு இலக்கின பலனையும் கிரகங்கள் இலக்கின பலனையும் கிரகங்கள் நின்ற பலனையும் ஆராய்ந்துணர்ந்து பலன் சொல்லவேண்டும்.
அஷ்டமபாகத்தின் விபரம்
இலக்கினஸ்தானத்திற்கு ஏழில்செவ்வாய் இருப்பதுடன் சரீரகாரகன் சூரியன்தான் கலக்கமுடன் அஷ்டமத்தி லிருக்கும்போது கனகுருமுதலான சுபக்கிரகங்கள் இலக்கினத்தைப்பாராம லிருப்பாராகில் இசைத்தபடி ஜாதகர்க்கு அரிஷ்டமாகும் பலமுடனே சுபக்கிரக நோக்கைகண்டு பண்புடன் பலாபலனை ஓதுவீரே. 70
உரை:--இலக்கின ஸ்தானத்திற்கு ஏழாமிடத்தில் அங்காரகனும் சரீரகாரகனாகிய சூரியன் அஷ்டம ஸ்தானத்திலுமிருந்தால் குரு, சுக்கிரன், புதன் முதலாகிய சுபக்கிரகங்கள் ஆயுள் ஸ்தானத்தையும் பாராமலிருந்தால் ஜாதகர்க்கு அரிஷ்டமாகும். ஆனால், சுபக்கிரகங்கள் நின்ற நிலையை ஆராய்ந்து வெளித்துப் பலன்சொல்ல வேண்டும். ஜாதகரின் திசாபுத்தியில் எந்தெந்த கிரகங்கள் எந்தெந்த ஸ்தானத்திலிருந்தார்களோ அதன்படியே அரிஷ்டமுண்டாகும்.
Page 45
பெரிய ஜோதிட சில்லரைக் கோவை
வீனசந்திரன் லக்கினகேந்திரத்தில் சேர்ந்துசனி இராகுகேதுடனேசெவ்வாய் வானவேஅஷ்டமத்தி லிருந்திட்டாலே கலக்கமுடன் அற்பாயுசாய்விளங்கி காணவே அரிஷ்டபலனாகுமென்று கழறுவாய்ஜோதிடத்தின் பலனாராய்ந்து பூணவேகிரகங்கள் ராசிதன்னில் பொருந்திநின்றபலன்விபரங் கவனித்துரைப்பாய். 71
உரை:--தேய்பிறைச் சந்திரன் இலக்கின கேந்திரத்தி லிருக்க சனி, ராகு, கேது அஷ்டமஸ்தானத்திலிருந்தால் ஜாதக னுக்கு அப்போதைக்கப்போது கஷ்டமும் கண்டங்களும் சூழ்ந்து சமயோசிதமாய் அரிஷ்டம் செய்யும். ஆனால் துவாதச லக்கினங் களின் கிரக நிலை ஆதிபத்தியமும் கிரகங்களின் நிலைமையும் கண்டு திசாபுத்தியை கணக்கெடுத்து அரிஷ்டபலனை விபர மாய்ச் சொல்லவும்.
பெரிய ஜோதிட சில்லரைக் கோவை
இலக்கினத்திற்கிருபுறமும் சனியும்செவ்வாய் இராகுகேதுக்க ளிருக்கின்றபோது கலக்கமுடன் சந்திரன் உதயத்திருக்க கனமுடனேநான்கேழு அஷ்டமத்தில் நலமிலாசனி ராகு கேதும்நிற்க நாடியேதாயுடனே சிசுவுக்கும் தோஷம் பலனாராய்ந்தினிதாய் ஜாதகர்க்குப் பலனுரைப்பீர் ஜோதிடத்தில் மிகவல்லோரே. 72
உரை:--இலக்கினத்திற்கு இரண்டு பக்கத்திலும் சனியும், செவ்வாயும், இராகு கேதுக்களு மிருக்கின்றபோது, சந்திரன் உதய லக்கினத்திலிருக்க, சுகஸ்தானம், சப்தமஸ்தானம், அஷ்டமஸ்தானத்தில் சனி ராகு, கேது இருந்தால் தாயும் குழந் தையும் வியாதியால் மெலிந்து அரிஷ்டமாகும். ஆனால், மற்ற கிரகநிலையை சரியாய் ஆராய்ந்துணர்ந்து பலனுரைத்தால் சரியா யமையுமென்பது ஜோதிஷ கணிதவல்லோரின் சம்மத மாகுமென்பது சித்தாந்தம்
பெரிய ஜோதிட சில்லரைக் கோவை
துன்பமாய் தேய்பிறைச்சந்திரன்தான் துலக்கமுடன் ஒன்றேழு பன்னிரண்டில் தன்மையாயிருந்தாலு மரிஷ்டமாகும் நலமுடனேஜாதகத்தின் பலனாராய்ந்து இன்னவிதமாகவே நடக்குமென்று இசைந்தபடிதிசாபுத்தி தனையாராய்ந்தே அன்புடனே சொல்வீர் ஜோதிடவல்லோரே அவனி தனிலேஜனித்த ஜாதகர்க்கே. 73
Page 46
ஜம்புகாரினி வாக்கியம்
உரை:—தேய்பிறைச்சந்திரன் உதய லக்கினம், ஏழு, பனிரெண்டாமிடத்திலிருந்தால் அரிஷ்டமாகும். அன்றியும் சப்தமஸ்தானத்திலும், ஆயுள் ஸ்தானத்திலும் சனிபகவானும், அங்காரகனுமிருந்தால் அரிஷ்டமுண்டாகும் ஆகையால், துவாதச பலனையும் சரியாய் ஆராய்ந்து கிரகங்களின் நிலையறிந்து பலனை விபரமாய்ச் சொல்லவேண்டும்.
ஜம்புகாரினி வாக்கியம்
இலக்கினத்திற்கெட் டொன்பான்பன்னிரண்டில் இரவிகுஜன்சனியுடன் தேய்மதியிருக்க கலக்கமுடன்ஜாதகர்க்கு அரிஷ்டமாகும் காணுமந்தரழிட்டில் சனிகுஜனிருக்க பலமில்லை அரிஷ்டமென் றோதுவாயீ புகர்குஜனும்சனி யிருந்தாலும்அரிஷ்டம் நலமில்லைஜாதகர்க் கற்பாயுளென்றே நவிலுவீர்ஜோதிடத்தில் மிகவல்லோரே. 74
உரை:—இலக்கினத்திற்கு அஷ்டமஸ்தானம், கர்மஸ்தானம், விரயஸ்தானத்தில் சூரியனும், செவ்வாயும் சனியும் தேய்பிறை சந்திரனுமிருந்தால் ஜாதகர்க்கு அரிஷ்டபலனுண்டாகும். ஆனால், சனி, குஜனும் சப்தமஸ்தானத்திலும் ஆயுள் ஸ்தானத்திலுமிருந்தாலும் ஜாதகர்க்கு துன்ப பலனும் அரிஷ்டமுமுண்டாகும். ஆகையால் அந்த ஜாதகனுக்கு அற்பாயு சென்பதாகவே சொல்லவேண்டுமென்று கணிதநூ லாராய்ந்தோர் புகல்வார்.
ஜம்புகாரினி வாக்கியம்
பஞ்சமஸ்தானந்தனிலே சனிகின்றாலும் பத்தாமிடமென்னும் ஜீவனஸ்தானத்தில் வஞ்சமுடன்சனியிருந்தால் துன்பமாகும் வையகத்தோர் பழித்திடவேசோம்பலாகி எஞ்சவிலாகஷ்டநஷ்ட மனுபவித்து எந்நாளும்வறுமை துயரால்மெலிந்து அஞ்சியேகலங்கிடவும் ஜாதகர்க்கு அரிஷ்டபலனுண்டாகும் கவனிப்பீரே. 75
உரை:—பஞ்சமஸ்தானத்திலாகிலும், ஜீவன ஸ்தானத்திலாகிலும் சனிபகவானிருந்தால் துன்பமும் துயரமுமுண்டாகி உலகத்தோர் பரிகசித்துப் பழிக்குந்தன்மையான மதியீனமாய்ச் சோம்பலும், கஷ்டநஷ்டமுமாகும். சதாகாலமும் வறுமை பிணியால் மெலிந்துருகும்படியாக ஜாதகனுக்கு அரிஷ்ட பலனுண்டாகும்.
ஜம்புகாரினி வாக்கியம்
இலக்கினத்தில் சனிபகவானிருக்கும்போது இனிதுடனேசெவ்வாய் ஏழிலுமிருக்க
Page 47
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
கலக்கமுடன்சூரியனும் குஜனுஞ்சேர்ந்து காணுமந்த சுகஸ்தானந்தனிலிருக்க பலவிதமாய் கஷ்டநஷ்டமனுபவித்து பராக்ரம மில்லாசரீரநோயுண்டாகி விலகிலத்தே அரிஷ்டமாவார்களென்று விளம்புவாய்ஜாதகர்க்கு பலனைத்தானே. 76
உரை:—இலக்கினத்தில் சனிபகவா னிருக்கும்போது சப்தம ஸ்தானத்தில் செவ்வாயிருந்தாலும் அல்லது நான்காமிடத்தில் சூரியனும் குஜனுமிருந்தாலும், ஜாதகர்க்குத் துன்பமும் துயரமும் நேர்ந்து, வறுமை பிணியால் மெலிந்து, கஷ்டநஷ்டமும் அரிஷ்டமு முண்டாகும்.
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
இலக்கினத்தில் ராகுபகவானிருக்க இசைந்தசுகஸ்தானத்தில் சப்தமத்தில் பலமிலாசூரியனு மொடுங்கிநின்றால் பகருவாய்ஜாதகர்க்கு அரிஷ்டமாகும் கலக்கமிலாசுபக்கிரக பார்வையானால் காணாதுதுன்பமொன்று மணுகிடாது நலமாகஜோதிடநூல் கணித்தாராய்ந்து நவிலுவீர்ஜாதகர்க்கு பலனைத்தானே. 77
உரை:—இலக்கினத்தில் ராகுகேதுக்களிருக்க சுகஸ்தானத்திலாகிலும் சப்தமஸ்தானத்திலாகிலும் சூரியனிருந்தால் பலவிதமாய்க் கஷ்டநஷ்டமும் கவலையும் நேர்ந்து அரிஷ்டமுண்டாகும். ஆனால் குரு, சுக்கிரன், புதன் முதலான சுபக்கிரகங்கள் பார்வையானால் சுகமாயிருப்பதற்காகும் அன்றியும், இலக்கினாதிபதி வலுத்து கேந்த்ர திரிகோண நட்பாட்சி உச்சஸ்தானத்திலிருந்தால் அரிஷ்டபங்கமாகி சவுக்கியமா யிருப்பதற்காகும்.
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
எந்தெந்தஜாதகர்க் காணாளுந்தான் ஏற்றபடிபலன்சொல்ல வேண்டுமானால் ஐந்துபத்தாமிடத்தில் குஜனிருக்க அம்மானுக்கரிஷ்டமாய் விளங்கும் பாரே சந்திரன்ஐந்துபத்தி லிருக்குமானால் சாற்றுவாய் மாதாவுக்கரிஷ்டமென்றே இந்தவிதமைந்துபத்தில் ரவியிருக்க இவன்பிதாவுக்கரிஷ்ட மாகுந்தானே. 78
உரை:—ஜாதகர்க்குப் பலன் சொல்லும்போது இலக்கினத்திற்கு ஐந்து பத்தாமிடத்தில் அங்காரகனிருந்தால் அம்மானுக்கு
Page 48
ஜம்புமகாரிஷி வாக்கியம்
அரிஷ்டமாகும். சந்திரன் பஞ்சமஸ்தானத்திலும் ஜீவன் ஸ்தானத்திலுமிருக்குமானால் தாய்க்கு அரிஷ்டமாகும். இவ்விதமாகவே சூரியபகவான் ஐந்தாமிடம் பத்தாமிடத்திலிருந்தால் பிதாவுக்கு அஷ்டமாகும். ஆனால், குருபகவான் பார்வையாயிருந்தால் கஷ்ட பலனை யெடுத்தாலும் சிறிதுநாள் பொறுத்து சுகமடையச் செய்யும்.
ஜம்புமகாரிஷி வாக்கியம்
சந்திரனுக்கேழில் சனிகுஜனிருக்க சாற்றுவாய்மாதாவுக் கரிஷ்டமென்றே மந்தன்குஜன்சூரியனுக் கேழில்நின்றால் மாநிலத்திலவனுக்கு காதாரமான தந்தைக்குஅரிஷ்டமென சாற்றினாலும தக்கபடிசுபக்கிரகம் பார்வையானால் எந்தவிதமானாலும் அரிஷ்டபங்கம் ஏற்படுமென்றுரைத்திடுவீர் ஜாதகர்க்கே. 79
உரை:—சந்திரபகவானுக்கு சப்தமஸ்தானத்தில் சனிபகவானும், செவ்வாய் பகவானுமிருந்தால் மாதாவுக்கு அரிஷ்டமாகும், செவ்வாயும், சனியும், ஏழாமிடத்திலிருந்தால் தகப்பனுக்கு அரிஷ்டமாகும். ஆனால், இவர்கள்மீது சுபக்கிரகங்கள் பார்வை செலுத்தினால் அரிஷ்ட பங்கமாகும்.
ஜம்புமகாரிஷி வாக்கியம்
இலக்கினத்திற்காறு மிடத்திற்பானை இரவிநிற்கஅதற்கேழில் சனியும்செவ்வாய் ஏலக்கமுடனே யிருக்குமானாலப்பா காணுமேகுழந்தைக்கும் தந்தைக்கரிஷ்டம் பலமில்லாசந்திரனும் ஆறில்நிற்க பார்த்துசனிசெவ்வாய் பாவர்க்குஏழில்நிற்க நலமில்லாகுழந்தைக்கும் தாய்க்கும்அரிஷ்டம் நாடுமென்றேபுகலுவீர் ஜோதிடவல்லோரே. 80
உரை :—இலக்கினத்திற்கு ஆறாவது ஸ்தானத்தில் சூரியனிருக்க அவருக்கு ஏழாமிடத்தில் சனியும், செவ்வாயுமிருக்குமானால் குழந்தைக்கும் தந்தைக்கும் அரிஷ்டமாகும். சந்திரனும் இலக்கினத்திற்கு ஆறிலிருக்க அவருக்கு சப்தமஸ்தானத்தில் சனி, செவ்வாயிருக்க பிறந்த குழந்தைக்கும் தாய்க்கும் அரிஷ்ட முண்டாகும்.
ஜம்புமகாரிஷி வாக்கியம்
இலக்கினத்திற்கொன்பது பதினோறாமிடத்தில் இனிதுடனேசனிசெவ்வா யிருக்கும்போது தலமில்லாராகு கேதுக்களானோர் நாடியேஒன்பதா மிடத்திருக்க
Page 49
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
பலதுன்ப துயரமும் கவலைசூழ்ந்து பாரிலுள்ளோர் பரிதாப மெய்துமாப்போல் நிலையான பிதாவுக்கு அரிஷ்டமென்று நீணிலத்தின் ஜாதகர்க்குப் புகலுவீரே. 81
உரை : - இலக்கினத்திற்கு பிதுர்ஸ்தானம் இலாபஸ்தானத்தில் சனி செவ்வாயிருக்க ஒன்பதாமிடத்தில் இராகு கேதுக்களிருந்தால் காண்போர் பரிதாபமடையும்படியாக துன்பமும், துயரமும், கவலையும் சூழ்ந்து பிதாவுக்கு அரிஷ்டமாகும். ஆனால் கடகலக்கினமாயிருந்து, அந்த ஸ்தானத்தில் சந்திரன் ஆஷியாகவும், குரு உச்சமாகவுமிருந்து, சுக்கிரனும், புதனும், சனி, ராகு, கேது இவர்களைப் பார்த்தால் பிதாவுக்கு அரிஷ்டமாகும்.
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
ஜென்மலக்கினத்திற்கு மூன்றாமிடத்தில் செவ்வாயிருக்க சகோதர அரிஷ்டமாகும் நன்மையில்லை ஆறேழெட்டுப்பன்னிரண்டில் நாடியே அமரபக்ஷ மதியிருந்து துன்பமாய்பாபருடன் சேர்ந்திட்டாலும் சூழ்ந்தெட்டாமிடத்தில் நான்கில்பார்த்திற்க வன்மையாய் அரிஷ்டம் செய்யுமென்றிப்போதே வழுத்துவாய் ஜாதகர்க்கு பலனைத்தானே. 82
உரை :- ஜனன லக்கினத்திற்கு மூன்றாமிடத்தில் செவ்வாயிருந்தால் சகோதரர்க்கு அரிஷ்டமாகும். அமரபக்ஷத்தின் சந்திரன் ஆறு, ஏழு, எட்டு பனிரெண்டா மிடத்திலிருந்தால் சுகஸ்தானத்தில் சனி, செவ்வாய், இராகு கேதுக்களிருந்தாலும் தப்பாமல் அரிஷ்டமாகும்.
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
சுகஸ்தானந்தன்னிலே நகுவிருக்க சூழ்ந்தரெண்டில் சனிநீருக்கயெட்டில்ராகு வெகுவாக பலத்திருந்தால் அரிஷ்டமாகும் மேற்கண்ட அரிஷ்ட தோஷங்களெல்லாம் மகிழுடனே சுபக்கிரக பார்வையானால் மாறியே அரிஷ்டபலன் விலகிப்போகும் ஜெகமீது ஜாதகத்தோர் பலனாராய்ந்து செப்புவீர் விபரமாய் விளங்கத்தானே. 83
உரை :- சுகஸ்தானத்தில் செவ்வாய் பகவானிருக்க, இரண்டாமிடத்தில் சனிபகவானிருக்க, எட்டாமிடத்தில் இராகு பகவான் பலத்திருந்தால் அரிஷ்டமுண்டாகும். ஆனால், சுபக்கிரகங்கள் பார்வையாயிருந்தால் அரிஷ்டபலன் விலகிப்போகும். ஆகையால், ஜாதகத்தில் கிரகங்கள் நின்ற ஸ்தானபலனறிந்து பலன் சொல்ல வேண்டும்.
Page 50
ஜம்புகமரிஷி வாக்கியம் - மாரகஸ்தான பலன்
சந்ததமும்சராசி இலக்கினத்தை சார்ந்திருந்த இரண்டேழுக்கதிப ரானோர் எந்தவிதமானாலும் மாரகத்தைசெய்வார் ஏற்றதோர்ஸ்திரராசி லக்கினத்திற்கு முத்தியமூன்றெட்டுக் கதிப ரானோர் மூர்க்கமுடன்மாரகமே செய்வாரென்று அந்தமாய்ஜாதகர்க்கு பலனைச்சொல்லீர் அவனியில்சூழ்ஜோதிட கலைவல்லோரே. 84
உரை: - ஜாதகரின் சராசி லக்கினத்திற்கு இரண்டு, ஏழா மிடமாகிய இந்த ஸ்தானாதிபதிகள் மாரகம் செய்வார்கள். ஸ்திர ராசி இலக்கினத்திற்கு மூன்றாமிடக்கதிபரும், எட்டாமிடத்ததிப ரும் மாரகஞ் செய்வார்கள். ஆனால், அந்த ஸ்தானாதிபதிகளின் பலத்தைக் கண்டு சுபக்கிரகங்களின் பார்வையையும் ஆராய்ந்து பலன் சொல்லவேண்டும்.
ஜம்புகமரிஷி வாக்கியம் - மாரகஸ்தான பலன்
இனிதுடனே உபய ராசிகளுக்கேதான் இலக்கினத்தின் மூன்றெட்டுக்கதிப ரானோர் முனிவுடனேமாரகத்தை செய்யா மாட்டார் முறையாக சப்தமத்தோன் லாபத்தோனும் கனவில்லாமார்கத்தை செய்வாரென்று கருதுவாய் சுபகிரகம் பார்வையானால் தனியாகசெய்வார்கள் திசாபுத்தியோர்ந்து தரணியோர்க்குரைத்திடுவீர் ஜோதிடவல்லோரே. 85
உரை: - உபயராசியாயிருந்தால் இலக்கினத்திற்கு மூன்று எட்டுக்கதிபர்கள் மாரகஞ் செய்யமாட்டார்கள். ஆனால், சப்தம ஸ்தானாதிபதியும் இலாபஸ்தானா திபதியும் மாரகத்தைச்செய்வார் கள். ஆனால் சுபக்கிரகங்கள் பார்வையானால் மாரகஞ்செய்யாமல் கண்டாதி கண்டங்களைத்தந்து மாரகத்தை விலக்குவார்கள். அந்த அதிபதிகளுடன் சேர்ந்த கிரகநிலையைக் கண்டு பலன் சொல்லவேண்டும்.
ஜம்புகமரிஷி வாக்கியம் - மாரகஸ்தான பலன்
ஜன்மலக்னத்திற்கேழு மிரண்டாம்ஸ்தானம் ஜாதகனுக்கே மாரகத்தைச்செய்யும் அன்னைக்கு நாலேழு ஸ்தானத்தோரும் ஐந்தோனும் மாரகத்தைச்செய்வார்கள் துன்பமாய் ஐந்துபதி னொன்றாம்ஸ்தானம் துணைவனெனும்சகோதரர்க்கு மாரகஞ்செய்வார்கள் பின்னுமே ஆறோன் சூரியனேயானால் பிதாவுக்குமாரகஞ் செய்வான்கண்டீரேதே.
Page 51
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
உரை:—ஜன்ம இலக்கினத்திற்கு சப்தம ஸ்தானாதிபதியும், இரண்டாமிடத்ததிபதியும் ஜாதகனுக்கு மாரகத்தைச் செய்வார்கள். சுகஸ்தானாதிபதி, சப்தமஸ்தானாதிபதி பஞ்சமஸ்தானாதிபதியும் தாய்க்கு மாரகஞ் செய்வார்கள். பதினோறாமிடத்ததிபதியும், ஐந்தாமிடத்ததிபதியும், சகோதரர்க்கு மாரகஞ் செய்வார்கள். இலக்கினத்திற்கு ஆறாமிடத்ததிபதி சூரியனா யிருந்தால் பிதாவுக்கு மாரகஞ் செய்வான்.
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
பனிரெண்டாமிடத் தாதிபத்யந்தான் பகர்ந்திடும் ஆயுள் காரகனென்றோதும் சனிபகவானுக்கமைந் திருந்துகானால் ஜாதகனுக்கே மாரகத்தைச்செய்யும் முனிவுடனேசெவ்வாய் பகவானுக்கு மூண்டதோராறாமிடத் தாதிபத்யம் தனியாகவந்தால் ஜாதகர்க்கு மாரகமாமென்று தாரணியிலுரைப்பீர் ஜோதிடவல்லோரே. 87
உரை:—ஆயுள்காரகனாகிய சனி பகவானுக்கு பனிரெண்டாம் இடத்தாதிபத்தியம் வந்தால் ஜாதகனுக்கு மாரகஞ் செய்யும், செவ்வாய் பகவானுக்கு மூன்றாமிடத்தாதிபத்தியம் வந்தாலும் ஜாதகனுக்கு மாரகமாகுமென்றும், சுபக்கிரகங்கள் பார்வையானால் விலகுமென்றும் திசாபுத்திபலனை ஆராய்ந்துரைக்க வேண்டும்.
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
இலக்கினத்திற்காநதொரு நான்கில்பத்தில் இருந்தாலேகுளிகனால் மாரகமேயாகும் கலக்கமுடன்சுக்கிரற்கு விரயஸ்தானம் காணுகின்ற ஆதிபத்தியமாயிருந்தால் நலமிலாஜாதகர்க்கு மாரகமாமென்று நவிலுவாய்திசாபுத்தி பார்த்துநன்றாய் நிலையுடன்ஜோதிடநூலை ஆராய்ந்தன்பாய் நிதானித்துபலன் சொல்ல வேண்டும்தானே. 88
உரை:—இலக்கினத்திற்கு நாலாமிடத்திலாகிலும், பத்தாமிடத்திலாகிலும் குளிகனிருந்தால் ஜாதகனுக்கு மாரக முண்டாகும். சுக்கிரபகவானுக்கு விரயஸ்தான ஆதிபத்யமானாலும் மாரகத்தைச் செய்வார். ஆனால், திசாபுத்திகளின் வலுவைப் பார்த்து இலக்கினாதிபதியின் குறிப்புணர்ந்தும் பலன் சொல்லவேண்டும்.
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
அன்புடனே இலக்கினத்தின் மூன்றேனேழும் அஷ்டமாதிபதியும் மாரகஞ்செய்வார்கள் தன்மையாய்இவர்கள் திசாபுத்திரன்னில் தருவார்கள்மாரகம்போல் கஷ்டநஷ்டம்
Page 52
ஜம்புகரிஷி வாக்கியம்
துன்பஞ்செய்கின்ற கண்டாதிகண்டம் துடருமேஜாதகற்கு இரண்டேழ் மூன்றில் பன்னிரண்டாமதிபர் மாரகஞ்செய்வார்கள் பக்ஷமாய்சுபர்சேர்ந்தால் மத்திபமேயாகும் 89
உரை: - இலக்கினத்திற்கு மூன்றாமதிபதி, அஷ்டமாதிபதி மாரகஞ்செய்வார்கள். ஆனால் சுபக்கிரகங்கள் பார்வையானால் இவர்களின் திசாபுத்தியில் மாரகத்திற்கு சமானமான கண்டநஷ்டங்களையும், கண்டாதிகண்டபலனையுந் தருவார்கள். ஆனால், இரண்டாமிடத்ததிபதியும், ஏழாமிடத்ததிபதியும், மூன்றாமிடத்ததிபதியும், பனிரெண்டாமிடத்ததிபதியும் மாரகஞ்செய்வார்கள். சுபக்கிரகங்களவர்களைப் பார்த்தால் மத்திப பலனுண்டாகும்.
ஜம்புகரிஷி வாக்கியம்
இலக்கினத்திற்கிரண்டேழோனும் மாரகஞ்செய்வார்கள் இவர்கள்கேந்திர கோணநட்புஆக்ஷி பலமானஉச்சரா சியிலிருந்தால் புதன்குருசுக்ரனிவ ரோடுசேர்ந்தும் நலமுடனேபார்த்தாலும் யோகமுண்டு [துற்றால் நவில்ரெண்டேழுன்றேழ் விரயமெட்டாம்ஸ்தானத் கலகமாம்பாபர் மாரகரும்சேர்ந்தால் கண்டத்திற்கிசைந்த கஷ்டப்படுத்துவாரே. 90
உரை:- இலக்கினத்திற்கு இரண்டாமிடத்ததிபரும், ஏழாமிடத்ததிபரும் மாரகஞ்செய்வார்கள். இவர்கள் கேந்திரம், திரிகோணம், நட்பு ஆட்சி, உச்சஸ்தானத்திலிருந்து புதன், குரு, சுக்ரனிவர்களோடு சம்பந்தமானாலும் பார்த்தாலும் யோகமுண்டு ஆனால், இவர்கள் மாரகாதிபதிகளுடனும், பாபர்களுடனும் சேர்ந்தால் கண்டத்திற்குச் சமானமான கஷ்டபலனைத் தருவார்கள்.
ஜம்புகரிஷி வாக்கியம்
துன்பஞ்செய்மாரகாதி பதிகளானோர் துடர்ந்துமாரகாதிப ருடனேசேரநோக்க வன்மைசேர்மாரகத்தைக் கொடார்கள் வலுத்தம்பாபக்கிரக மிவரோடுற்றால் கன்மங்கள்செய்யும் கண்டாதிகண்டம் கஷ்டபலன்மரண வேதனையும்செய்வார் நன்மையாய்க்கிரகநிலை ஆராய்ந்தன்பாய் நவிலுவாய்ஜாதகர்க்கு பலனைத்தானே. 91
உரை:- துன்பத்தைக்கொடுக்கின்ற மாரகாதிபதிகள் தங்களைப்போல் கொடுமை செய்யும்படியான மாரக ஸ்தானாதிபதிகளுடனே சேர்ந்த பாபக்கிரகங்கள் கண்டாதிகண்டமான கண்டபலனையும், மாரகத்தையும் செய்வார்கள். இலக்கினபலனையும் கிரகபார்வை சம்பந்த பலனையும் ஆராய்ந்துணர்ந்து பலன் சொல்லவேண்டும்.
Page 53
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
இனிதாகஜாதகரின் பலனாராய்ந்து இசைந்தபடி சொல்வதென்றால் உதயஸ்தானந் தனிலிரெண்டு நான்கேழு ஆயுஸ்தானந் தசமஸ்தானம்லாபஸ் தானத்தோடு பனிரெண்டாம்ஸ்தானம் மாரகஸ்தானங்கள் பகரும்தராசி திரிகோணத்திற் குளிகனின்ன்றால் சனிவருங்காலத்தில் கொல்வார்களென்று சாற்றுவாய் ஜாதகர்க்கு பலனைத்தானே. 92
உரை:-ஜாதகரின் காலநிலையை யனுசரித்துப் பலன் சொல்ல வேண்டுமானால், இலக்கனத்திற்கு இரண்டு, நான்கு, ஏழு, எட்டு, பத்து, பதினொன்று, பனிரெண்டாமிடங்கள் மாரகஸ்தானமாகும். ஆனால், குளிகனிருந்த ராசிக்கு திரிகோண ஸ்தானத்தில் சனியருங் காலத்தில் கொல்வார்களென்று ஜாதக கணித ஆராய்ச்சியோடு பலன்சொல்லவேண்டும்.
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
வாக்குஸ்தானந் தனிலேராகுநிற்க வன்மையுடன் கேது எட்டாமிடத்திருக்க தீர்க்கமுடன் ஜாதகனுக் கமையும்கண்டம் திறமுடனேசொல்வாய் ஜாதகமாராய்ந்து ஏற்கெனவேஇராகுபகவானுந்தான் எட்டாமிடத்திருக்க பாபர் சேர்ந்திட்டாலும் பார்த்தாலும் லக்கினத்தோன் குருவுங்கூடி பாபரோடோரிராசியுற்றால் விஷத்தாற்பீடை. 93
உரை:-இராகுபகவான் வாக்குஸ்தானத்திலும், ஆயுள் ஸ்தானத்தில் கேதுவுமிருந்தால் ஜாதகனுக்குக் கண்டாதிகண்டமும் மாரகமும் நேரிடும். ராகுபகவான் அஷ்டம ஸ்தானத்திலிருக்கும்போது பாபர் சேர்ந்திட்டாலும் பார்த்திட்டாலும், லக்கினாதிபதியும் குருவும் பாபருடன் சேர்ந்து ஒரே ராசியிலிருந்தால் விஷத்தினால் பீடையுண்டாம்.
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
சுந்தரஞ்சேர்ஜாதகர்க் கிவ்விதங்களாக சூழ்ந்ததொருமாரக மிவ்விதமானாலும் சந்திரனுமிருந்த விரயஸ்தானத்தில் சனிபகவான்வரும்போது ஏழரையாண்டென்னும் மந்தனுக்குரித்தான காலமென்று மதிலத்தில்ஜாதகர்க்கு பலன்சொன்னாலும் பிந்திவரும்மூன்றாம்ராசி தனிலேகாரி பிரவேசமானாலே நீங்குந்தானே. 94
உரை:-அழகமைந்த ஜாதகர்களுக்கு இவ்விதமாக மாரக பலனிருந்தாலும், சந்திரனிருக்கும் இராசிக்கு பனிரெண்டாம்
Page 54
ஜம்புகாversion வாக்கியம்
இராசியில் சனிபகவான் வரும்போது ஏழரைநாட்டுச் சனியாகும். அந்த ஏழரை வருஷமும் ஜாதகருக்கு பலவித துன்பமும் துயரமும் கஷ்டமும் கவலையும் வறுமையும் பிணியும் கண்டாதிகண்டமும் மாரக பலனுமுண்டாகி இராசிக்கு மூன்றாமிடத்தில் சனி வரும்போது நீங்கிவிடும்.
ஜம்புகாversion வாக்கியம்
அம்புவியிலேபிறந்த ஜாதகர்க்கு ஆராய்ந்துபலன் சொல்லவேண்டுமானால் சிம்மம்தேள்மீனமுடன் கடகம்மேஷம் சிறந்ததொரு சனிக்காட்சிவீடென்றோதும் கும்பமும்சந்திர ராசியாயிருந்தால் குறித்தஏழுரைநாட்டுச் சனிவந்தாலே வம்பாககண்டநஷ்ட பலதுன்பங்கள் வாய்க்குமென்று ஜாதகர்க்குபலன்சொல்வீரே. 95
உரை:— உலகில் பிறந்த ஜாதகர்கட்கு பலன் சொல்லும் போது சந்திரனின்ற ராசி சிம்மம், விருச்சிகம், மீனம், கடகம், மேஷம், கும்பமா யிருந்தால் ஏழரைநாட்டுச் சனிவரும்போது பலவிதமாகிய கஷ்டநஷ்டமும் துன்பமும் துயரமும் வரும்.
ஜம்புகாversion வாக்கியம்
பன்னியஏழுரைநாட்டுச் சனிவருங்காலத்தில் பகருவேன்ஜாதகர்க்குப் பலனைத்தானே முன்தடவைஜாதகர்க்கு கஷ்டமாகும் முயற்சிசெய்தாலுந் துன்பம்மாறாதப்பா தன்பிதாசுகபலனையனு பவிப்பான்ரெண்டாந் தடவையில்ஜாதகன் சுகமாயிருப்பான் வன்மையாய்மூன்றாந்தடவை மரணமென்று வழுத்துவீர்ஜாதகர்க்கு ஜோதிடவல்லோரே. 96
உரை:—உலகில் ஜனித்த ஜாதகர்களுக்கு ஏழரைநாட்டுச் சனி வருங்காலத்தில் ஜாதகனுக்கு கஷ்டபலனும், ஜாதகனுடைய தகப்பனுக்கு சுகபலனும் உண்டாகும். இரண்டாவது சுற்று வரும்போது ஜாதகன் சுகபலனை யனுபவிப்பதும் தகப்பன் கஷ்ட பலனை யனுபவிப்பதாயிருக்கும். மூன்றாவது சுற்றுவரும்போது ஜாதகனுக்கு மரணமாகும். ஆனால் கிரகங்களின் நிலையறிந்து திசாபுத்தியின் கால நிர்ணயமும் மாரகஸ்தானாதிபர்களுடைய பலனையும் ஆராய்ந்து பலன் சொல்லவேண்டும்.
ஜம்புகாversion வாக்கியம்
சனிபகவான்சரராசி தனிலிருந்தால் சார்ந்தமறுதேசத்தில் மரணமாகும் தனியாகஸ்திரராசி தனிலிருந்தால் தன்வீட்டில்மரண மெய்துவானென்றோது
Page 55
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
இனிதான உபயராசியிலிருந்தால் இன்பமாய்நூதன வீட்டில் மரணமாவான் கனிவுடையஜாதகத்தின் பலனாராய்ந்து கணித்துரைப்பீர்விபரமாய் ஜோதிடவல்லோரே. 97
உரை: - சனிபகவான் சரராசியிலிருந்தால் ஜாதகர் மறு தேசத்தில் மரணமாகும்படியா யமையும். ஸ்திரராசியிலிருந்தால் தன் வீட்டில் மரணமாவார்கள். உபயராசியாயிருந்தால் நூதன வீட்டில் மரணமாவார்கள். ஆனால் இதனுடனே ஜாதககணித ஆராய்ச்சியோடு பலன் சொல்லவேண்டும்.
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
பன்னுலக்னஞ்சரராசி யாயிருந்தால் பனிரெண்டுக்குடையவர்கள் பலன்தாரார்கள் ஒன்பதாமிடத்தோர்கள் ஸ்திரராசிக்கு ஒருநாளும் நல்லபலன் கொடுக்கமாட்டார் தன்மையாய் உபயரா சிக்கூறுகேள் தருந்ததற்பலன் ஜாதகர்க்கீயோர்கள் தன்மையாய் நட்பாயிருந்து மிthruசேர்க்கைபார்வை நாடினால்சுபபலனைத் தருவார்தானே. 98
உரை : - ஜனனலக்கினஞ் சரராசியாயிருந்தால் விரய ஸ்தானாதிபர் பலன் கொடுக்கமாட்டார்கள். ஸ்திரராசியாயிருந் தால் ஒன்பதாமிடத்ததிபதி நல்லபலனைக் கொடுக்கார். உபய ராசியா யிருந்தால் ஜாதனுக்கு உத்தம பலனை ஒருபோதும் கொடுக்கமாட்டார்கள். ஆனால் அந்த கிரகங்கள் நட்பாயிருந்து மிthruகிரகங்களின் சேர்க்கையானாலும் பார்வையானாலும் நல்ல பலனைக்கொடுத்து தனலாபமும் சகசவுக்கியத்தையும் அனுப விக்கச் செய்வார்கள்.
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
ஜனனலக்கினத்திற்கு மூன்றாறாபத்தில் சார்ந்தசூரியனிருந்தால் யோகமாகும் தினகரனார்திசையில் மதிகுருசேய்புத்தி திடமானநற்பலனை கொடுக்குமப்பா மனமகிழ்வாய்ஒன்றாறேழ் தசமஸ்தானம் மதியிருந்தாற்சுபபலனை தருவாரப்பா தினகரன்குருபுத்தியில்சந்திரன் திசையில்தானே திறமுடனே நற்பலன்தந் தருள்செய்வாரே. 99
உரை: - இலக்கினத்திற்கு மூன்று, ஆறு, பத்தில் சூரிய னிருந்தால் நல்ல யோகபலனைத் தருவார். ஆனால், சூரிய திசை யில் சந்திரன், குரு, செவ்வாய் நல்ல பலனைத் தமது புத்தியில் தருவார்கள். சந்திரன் ஒன்று, ஆறு, ஏழு, பத்தாவது ஸ்தானத்தி
Page 56
ஜம்புகாversion: 19
லக்கினத்திற்கு மூன்றா மிடத்திலுள்ள செவ்வாய் நல்ல பலனைத் தருவார்.
விருந்தால், நல்லபலனைக் கொடுப்பார். ஆனால், சந்திரதிசையில் சூரியபுத்தியிலும் குருபுத்தியிலும் நல்ல பலனைக் கொடுப்பார்.
ஜம்புகாversion: 19
இலக்கினத்திற்காறு மூன்றாம்ஸ்தானத்தில் இசைந்துசெவ்வாயிருந்தால் சுபமேயாகும் கலக்கமிலாகுருதிசையில் வியாழன்சந்திரன் கதிரவனார்புத்திகளில் சுபயோகங்கள் தலமுடனே தருவார்க ளினிதாய்த்தானே நவிலொணாசுகலாபம் வெகுவாய்கிடைக்கும் பலமறிந்துகிரகநிலை ஆராய்ந்தன்பாய் பலனுரைப்பீர் ஜோதிடத்தில் மிகவல்லோரே. 100
உரை:- இலக்கினத்திற்கு திரிதியஸ்தானத்திலும், ஆறாமிடத்திலும் செவ்வாய் பகவானிருந்தால் சுபயோகமாகும். செவ்வாய் திசையில் சூரியன், சந்திரன், குருபகவானும் நல்ல பலனைக் கொடுப்பார்கள். ஆனால் கிரகங்களின் நிலையை விவரமாய்க் கவனித்து மற்ற கிரகங்களின் சேர்க்கை நோக்கமறிந்து பலனுரைத்தால் ஜாதக சித்தாந்தத்திற்குப் பொருந்தி யிருக்கும்.
ஜம்புகாversion: 19
புதபகவானிரண்டெட்டு பத்தாமிடத்தும் பொருந்திடினும் லாபத்திலிருந்திட்டாலும் இதமுடனே சுபமாகு மானாலுந்தான் இலக்ஷ்மிகடாக்ஷமும் பெறுவாரின்னும் பதமாகவித்தை புத்தி மிகவுண்டாகும் பார்தனிலேமால்திசையில் சனியுஞ்சுக்கிரன் சதமானபுத்தியில் நல்லபலனைத்தந்து சந்தோஷிக்கச்செய்வா ரென்றுரைப்பாய். 101
உரை:- புதபகவான் இரண்டு, எட்டு, பத்தாமிடத்திலிருந்தாலும் பதினோறாமிடமாகிய லாபஸ்தானத்திலிருந்தாலும், நல்ல சுபபலனைக் கொடுத்து இலக்ஷ்மி கடாக்ஷம் பெருகும்படியாய்ச் செய்வார்கள். வித்தையும், புத்தியும் மென்மேலும் பெருகும்படியாய் அநுக்கிரகஞ் செய்வார்கள். ஆனால் சனி புத்தியிலும், சுக்கிரன் புத்தியிலும் நல்ல பலனையும் கொடுத்து மனோல்லாசமாயிருக்கும்படி செய்வார்கள்.
ஜம்புகாversion: 19
குருபகவான்லக்கினத்திற் கிரண்டேழைந்தில் குறித்தவொன்பதா மிடத்திருப்பாரானால் அருமையுடன்சுபபலனைத் தருவாரப்பா ஆதித்தன்தமதிசெவ்வாய் புத்திதன்னில்
Page 57
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
தருவார்கள் நற்பலனை யோகங்கண்டு தரணியில் ஜாதகற்கு விபரமாக பெருமையாயுரைக்கும்போ தாதிபத்தியம் பெற்றுணர்ந்தே பலனைபுகலுவாயே. 102
உரை:-- குருபகவான் இலக்கினத்திற்கு இரண்டு, ஏழு, ஐந்து ஒன்பதாகிய சுபஸ்தானத்திலிருந்தால் நல்ல பலனைத் தருவார். ஆனால், குருதிசையில் சூரியன், சந்திரன், செவ்வாய் புத்திகளில் விசேஷ யோகபலனைத் தருவார்கள். ஆனால் திசா புத்தி நாதர்களின் ஆதிபத்திய பலனை ஆராய்ந்து பலன் சொல்லவேண்டும்.
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
சுக்கிரனுமிலக்கினத்திற் கொன்றிரண்டு சுகஸ்தானம்மூன்றைந்தெட் டொன்பதோடு பக்குவமாய்பதினொன்று பன்னிரெண்டில் பண்பாயிருந்திடிலோ சுபயோகந்தான் சுக்கிரதிசைதனில் மந்தன்மாலின்புத்தி சுகமானநல்லபலன் கிடைக்கச்செய்வார் சிக்கிலாஜாதகநூல் கணித்தாராய்ந்து சீராகப்புகன்றிடுவீர் ஜாதகர்க்கே. 103
உரை:-- சுக்கிரபகவானானவர் இலக்கினத்திற்கு ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஏழு, எட்டு, ஒன்பது பதினொன்று, பன்னிரெண்டாவது ஸ்தானங்களிலிருந்தால் சுபபலனைத் தருவார். இந்த சுக்கிர திசையில், புதன்புத்தியிலும், சனிபுத்தியிலும் நல்ல பலனைக் கொடுப்பார்கள். ஆனால் திசாநாதன் ஸ்தானபலனறிந்து பலன் சொல்லவேண்டும்.
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
மந்தனுமேலக்கினத்திற் காறுமூன்றில் மனமகிழ்வாயிருந்திட்டால் சுபயோகந்தான் இந்ததிசையிலுமாலின் புத்தியோடும் இசைந்தசுக்கிரனும் புத்தியும் நற்பலனைத்தந்து சுந்தரமாங்குணமமைந்த பெண்களோடும் சூழ்புவியில்தனதான்ய சம்பத்தோடும் அந்தமாய்சுகித்திருக்க நல்லயோகம் அன்புடனே தந்திடுவா ரென்றுசொல்லே. 104
உரை:-- சனிபகவான் இலக்கினத்திற்கு ஆறாமிடத்திலும் மூன்றாமிடத்திலுமிருந்தால் சுபயோகபலனை அனுபவிக்கச் செய்வார். ஆனால் சனிதிசையில் புதன்புத்தியும், சுக்கிரபுத்தியும் நல்ல பலனைக் கொடுப்பார்கள். அதன்பல னெவ்விதமென்றால் ஜாதகர் அழகான பெண்களுடனே சுகானந்தமாய் வாழ்ந்திருந்து திரவிய சம்பத்துடனே பெருமையாய் ஜீவித்திருப்பார்கள்.
Page 58
ஜம்புகாஷி வாக்கியம்
இலக்கினத்திற்காறு மூன்றாமிடத்தில் இராகுபகவானிருந்தால் ஜாதகர்க்கு நலமுடனேயோகபலன் தருவாரே நாடியே யவர்திசையில் செவ்வாய்சுக்கிரன் பலமானபுத்தியிலே யோகபாக்கியம் பணமுடன்தருவார் ஜாதகர்க்கு கலவரமில்லாமலே ஜோதிடசாஸ்திரத்தை கவனித்துஜாதகர்க்குப் பலன்சொல்லீரே.. 105
உரை:-- இராகுபகவான் இலக்கினத்திற்கு மூன்று ஆறாமிடத்திலிருந்தால் நல்ல பலனைத் தருவார். ஆனால், இராகு திசையில் செவ்வாய்புத்தியிலும் சுக்கிரபுத்தியிலும் நல்ல யோக பலனைத் தருவார்கள் ஆனால் இந்த புத்திநாதர் நின்ற ஸ்தான பலனறிந்து ஜாதக கணிதாராய்ச்சி செய்து பலன் சொல்ல வேண்டும்.
ஜம்புகாஷி வாக்கியம்
கேதுபகவான் லக்கினத்திற்கு மூன்றாறில் கெம்பீரமாயிருந்தால் சுபயோகங்கள் ஓதியஞானமும் பெரியோர்சேர்க்கை ஒழுங்காகவேயமைந்து சுகமாய்வாழ்வார் நீதியாயிவர்திசையில் சனியின்புத்தி நிதானமாய்சுக்கிரபுத்தி தனிலும்நல்ல சாதுள்ளகன்னிசுகம் திரவ்யலாபம் கௌரவமாய்ஜாதகர்க்கு கிடைக்கும்பாரே. 106
உரை:-- கேதுபகவான் இலக்கினத்திற்கு மூன்று ஆறா மிடத்திலிருந்தால் நல்ல யோகபலனைத் தருவார். அன்றியும், பெரியோர் சேர்க்கை, ஞானமும் சங்கீதக்யானமும் நல்ல கீர்த்தியையும் தருவார். இந்த கேது திசையில் சுக்கிரபுத்தி சனிபுத்திகளில் நற்குணமுள்ள கன்னியர் சேர்க்கையும் திரவிய லாபமும் சுகபோக பாக்கியமும் ஜாதகர்க்கு உண்டாகும்.
நவக்கிரக திசாபுத்தி பலன்
சாற்றுமந்ததிசாநாதன் தனக்குவாய்த்த சகலபுத்திநாதர்களும் மித்ரராக ஊற்றியதிரிகோண கேந்த்ரஸ்தானம் சொக்ஷேத்ரம்உச்ச தனலாபத்திருந்தால் ஏற்றவாகனம்பூமி சம்பத்தோடு எந்நாளும் களத்ரபுத்ர லாபத்தோடும் வீற்றிருந்தேதசாதான்தா னியம்பெற்று விளங்குவார்கீர்த்தியா யெப்போதும் தானே. 107
Page 59
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
உரை:—ஜாதகரின் திசாநாதருக்கு புத்திநாதன் மித்திரனாய் அமைந்து, திரிகோண கேந்திரஸ்தானம் ஆட்சி உச்ச தன லாப ஸ்தானத்திலிருந்தால் வாகனம், பூமி, திரவிய சம்பத்துடன் மனைவி மைந்தர், தன தான்ய சம்பத்துடனே கீர்த்திப்ரகரசமாயிருந்து வாழ்ந்திருப்பார்கள்.
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
புத்திநாதன்துதிகை பதியானாலும் போருந்தியேசப்தமத் தோனானாலும் சுத்தராய்ரெண்டுமூன் றாறேழெட்டு துலங்கியபன்னிரண்டி லிருந்திட்டாலும் சித்தமாய்பாபுருடன் சேரபார்க்க சரீரபினிவறுமையுடன் துன்பத்தோடு எத்ததியும் கஷ்டநஷ்ட மனுபவித்து ஏங்கியேமனஞ்சலித்துக் கலங்குவாரே. 108
உரை:—புத்திநாதன் துதிகையாதிபதியானாலும் சப்தம ஸ்தானாதிபதியானாலும் திசாநாதருக்கு இரண்டு, மூன்று, ஆறு, ஏழு, எட்டு, பனிரெண்டாம் ஸ்தானத்திலிருந்தாலும், அன்றியும் பாபக் கிரகங்களுடன் சேர்ந்தாலும் பார்த்தாலும் ஜாதகனுக்கு வறுமையும், வியாதியும், துன்பமும், துயரமும், கஷ்ட நஷ்டங்களும், கண்டாதி கண்டங்களும் சேர்ந்து கஷ்டநஷ்டத்தினால் கலங்கும்படிச் செய்யும்.
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
இன்பானபுத்திநாத ரானோர்நல்ல இசைந்தயோககாரக ருடன்சேர்ந்தாலும் அன்பாகப்பார்த்தாலும் ஜாதகர்க்கு அதிகநற்பலன்தருவா ராகையாலே நன்மனதும்வித்தைபுத்தி விவேகத்தோடும் நானாவிதமானவர்த் தகங்கள்செய்து பொன்பொருளும் வெகுவாகசேகரித்து பூதலத்திலேமகிழ்வாய் ஜீவிப்பாரே. 109
உரை:—ஒவ்வொரு திசையிலும் வருகின்ற புத்திநாதர் யோககாரர்களுடனே சேர்ந்தாலும் பார்வைபெற்றாரானாலும் ஜாதகர்க்கு விசேஷ தைரியமும் வித்தையும், புத்தியும் ஞானமும் கல்வியும் விவேகமும் பொருந்தி பலவிதமான வியாபாரஞ்செய்து திரவிய லாபத்துடனே பொருள் புஸ்தியோடு மனைவிமைந்தர் பந்துவர்க்கத்தாருடனே மனமகிழ்ந்து வாழ்ந்திருப்பதுடன் காண்போர் சுகவானென்றுரைக்கும்படியான கீர்த்தியுடன் விளங்குவார்.
Page 60
ஜம்புமகாரிஷி வாக்கியம்
சனிகுஜனும் இராகுகேது முதலானோரும் சாற்றுந்தேய்பிறைசந்திர பகவானோடு தினகரனும் நட்பு ராசியிலிருந்து திகழினிசுபக்கிரகம் யோகரோடும் மனமகிழசேர்ந்தாலும் பார்வைதான்பெற்றாலும் மாரகாதிபகருடைய சேர்க்கைநோக்கம் கனமுடனே உண்டானால் கொடியதுன்பம் கஷ்டநஷ்டம் கண்டங்களெய்தும்பாரே. 110
உரை:— சனிபகவானும், செவ்வாய்பகவானும், இராகு கேதுக்களும், தேய்பிறைச் சந்திரனும், சூரியனும், நட்புராசியி லிருந்து சுபக்கிரகங்களுடன் சேர்ந்தாலும் யோககாரர்களுடன் சேர்த்தாலும் பார்வை பெற்றாலும், மாரகாதிபதிகளுடைய சேர்க்கை நோக்க முண்டானாலும் குரூரமாகிய கொடிய துன்ப மும், கஷ்ட நஷ்டங்களும் கண்டாதி கண்டங்களும் நேரிட்டு கவலை யடைந்து கலங்கும்படியாகச் செய்வார்கள்.
ஜம்புமகாரிஷி வாக்கியம்
தன்மகன்மாதிபதி திசைவந்துற்றால் தகுந்தபுத்திவந்தாலே யோகமாகும் ஒன்பதிற்குடையோன்திசையில் பத்தோன்புத்தி ஒங்கும்புகழ்சுப பலனைத்தருவார்கள் நன்மையுடன்பத்தொன்திசையில் ஒன்பான்புத்தி நாடியோகந்தாந்தருவர் ஜாதகர்க்கு பொன்பொருளும் பூஸ்திதியும் வாகனங்கள் பொருந்துகின்றனலாபம் கிடைக்கும்பாரே. 111
உரை:— தன்ம கன்மாதிபதியாகிய தர்மஸ்தானாதிபதியும் கர்ம ஸ்தானாதிபதியும் மித்துருகிரகங்களாயிருந்து மித்துருகேந்திரத்திலிருந்தாலும் யோகபலனைத் தருவார்கள் அன்றியும், பத்தாமிடத்தான் திசையில் ஒன்பதாமிடத்தான் புத்தியிலும், ஒன்பதாமிடத்தான் திசையில் பத்தாமிடத்தான் புத்தியும் நல்லயோக பலனைத் தருவார்கள். அதெவ்விதமென்றால், மகா சமார்த்துடன் வர்த்தகஞ் செய்து வெகு திரவியம் சேகரஞ்செய்து பொன் பொருள் சேகரித்து ஆஸ்தி பூஸ்திதியுடன் தனந் தான்ய லாபத்தை விசேஷமாய் சேகரித்து சகசவுக்கியமா யிருக்கும்படியான நிலையா யிருப்பார்கள்.
ஜம்புமகாரிஷி வாக்கியம்
பூதலத்தில் ஜாதகர்க்கு பலனாராய்ந்து புகலுகின்றவேளையில் கோச்சாரமாக தீதணுகாவியாழன் சனி இரண்டுபேரும் திகழுமநல்லஸ்தானத்தி லிருப்பாரானால்
Page 61
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
ஓதியநற்பலனைத் தருவார்நாளும் ஓங்குமே நாகரீகசவுக்கியங்கள் ஈதன்றிதுர்ஸ்தானத் திருப்பாராகில் இன்பமில்லை மத்திப்பலனீவாரே. 112
உரை:—உலகினில் பிறந்த ஜாதகர்க்கு பலாபலன் விபரமாய் ஆராய்ந்து திசாபுத்தி பிரித்துப் பலன்சொன்னாலும், அந்த சமயத்தில் குருபகவானும் சனிபகவானும் நல்ல ஸ்தானத்திலிருந்தால் வித்யா லாபமும், திரவியசம்பத்தும், பந்துமித்திரர் நல்லோர் சேர்க்கையும், சுபகாரிய முதலான நன்மை யனைத்தும் கிடைக்கும். ஆனால் மேற்குறிப்பித்த சனி குருவானவர்கள் கெட்ட ஸ்தானத்திலிருந்தால், திசாபுத்திநாதர்கள் வலுத்திருந்தாலும் தாங்களிருந்த ஸ்தானபலத்தினால் மத்திப பலன்கள் அனுபவிக்கும்படி செய்வார்கள்.
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
இஷ்டமுடன் ஜாதகர்வந் தெதிரில்நின்று இனியபலன்கேட்டாலே நவக்கிரகங்கள் அஷ்டமாதிபதிதிசையில் மாரகர்புத்தியானால் அனைவர்க்கும்பகையாகி வியாதிகண்டம் கஷ்டமுடன் துன்பங்கள் துயரத்தோடு கண்டாதிகண்டங்க ளால்திகைத்து நஷ்டத்தை யனுபவிப்பாரென்றுநீயே நவிலுவாய்ஜாதகர்க்கு பலனைத்தானே. 113
உரை:—ஜாதகர் தமது காலநிலையை கவனிக்க வேணுமென்பதாக வந்து விசாரித்தால் எந்தக் கிரகமாயிருந்தாலும் அவர்களுடைய அஷ்டமாதிபதி திசையில் மாரகானுடைய புத்தி வந்தால் சகலருக்கும் பகையாகி, துன்பமும், துயரமும் சூழ்ந்து, கஷ்டம், கவலையால் மனமயங்கி வியாதியால் திகைத்து கண்டாதி கண்டங்களை யனுபவித்து காண்போர் பழித்துப் பரிகாசிக்கும்படியான தன்மையா யிருப்பார்களென்று சொல்லவேண்டும்.
மாரக திசையறிய
தக்கரெண்டுக்குடையோன் திசையில்விரயத்தோன்புத்தி தகுந்தவிரயத்தோன் திசையில்ரெண்டோன்புத்தி லக்கினத்திரண்டிவிருந்தோன் திசையில்ரெண்டோன்புத்தி லக்னவிரயத்தோன்திசையி லிரண்டுற்றோன்புத்தி மிக்கவேமாரகஞ் செய்யுமென்று மேதினியின்ஜாதகர்கட் குரைத்தவாக்கியம் முக்கியமாய்கவனித்து ஜாதகர்க்கு முன்பிருந்துதெளி வாகப்புகலுவாயே. 114
Page 62
ஜம்புகாஷி வாக்கியம்
உரை :- இரண்டுக்குடையோன் திசையில் விரயஸ்தானாதி பதி புத்திமாரகம் செய்யும். பனிரெண்டாமிடத்தோன் திசை யில் இரண்டாமிடத்தோன் புத்திமாரகமுண்டாகும். இலக்கினத் திற்கு இரண்டிலிருந்த கிரகத்தின் திசையில் பனிரெண்டா மிடத்திலிருந்தவன் புத்திவந்தால் மாரகஞ்செய்யுமென்று ஜாதக கணித ஆராய்ச்சி செய்யும்போது கிரகநிலையைக் கண்டு விபர மாய் கவனித்து பலன் சொல்லவேண்டும்.
ஜம்புகாஷி வாக்கியம்
காண்பாய்நீ மூன்றோன் திசையிலாபத்தோன்புத்தி கருதுபதினொன்பான் திசையில் மூன்றோன்புத்தி பூண்பாய்மூன் றோனோடு சேர்ந்தோன்திசையிலேதான் பொருந்துபதினொன்று சம்பந்தமானோன்புத்தி காண்பாய்பதினொன்றோன்திசையில் மூன்றோன்புத்தி கருதுமூன்றுக்குடையோனோடு சேர்ந்தோன்திசையின் பான்மையுடன்பதினொன்றை சேர்ந்தோன்புத்தி [புத்தி பகருமூன்றோன்திசையில் மாரகமுண்டாகும். 115
உரை :- இலக்கினத்திற்கு மூன்றாவது ஸ்தானாதிபன் திசை யில் பதினொன்றாமிடத்ததிபதி புத்திவந்தால் மாரகமாகும். பதி னொன்றாமிடத்ததிபதியின் திசையில் மூன்றாமிடத்ததிபதி புத்தி மாரகத்தைச் செய்யும். பதினொன்றுக்குடையோவன் திசையில் மூன்றாமிடத்ததிபதி புத்திமாரகத்தைச் செய்யும். மூன்றுக்குடை யவனோடு சம்பந்தப்பட்டவன் திசையில் பதினொன்றுக்குடை யவன் புத்திமாரகஸ்தானமாகும். பதினொறாமிடத்தைச் சேர்ந் தவன் மூன்றாமிடத்தி லிருக்கின்றவன் புத்திவந்தால் மாரகஸ் தானமாகும். ஜாதகரின் திசாபுத்தி பலனை ஆராய்ந்து பல னறிந்து மாரகஸ்தானத்தின் பலனைச் சொல்லவேண்டும்.
ஜம்புகாஷி வாக்கியம்
சுகாதிபதிதிசையில் பத்துக்குடையோன்புத்தி சொல்லும்பத்தோன்திசையில் நாலோன்புத்தி சுகத்திலிருந்தோன்திசையில் பத்துற்றோன்புத்தி சூழ்ந்துபத்தோன்திசையில் சுகத்தோன்புத்தி மகிமாகஇருந்தாலும் ஜாதகர்க்கு மாரகத்தைச் செய்வார்உளதாகையால் ஜெகமீதுஜோதிடநூல் கணித்தாராய்ந்து சொல்லுவீர்சோதிடத்தில் மிகவல்லோரே. 116
உரை :- சுகாதிபதி திசையில் தசம ஸ்தானாதிபதியின் புத்தி வந்தால் மாரகமாகும். பத்தாமிடக்கதிபதிரி திசையில் நாலாமிடத்ததிபதி புத்திவந்தால் மாரகம். சுகஸ்தானத்தி லிருந்தவன் திசையில் ஜீவன ஸ்தானத்திலிருந்தவன் புத்தி
Page 63
பெரிய ஜோதிட சில்லரைக் கோவை
வந்தால் மாரகமாகும். பத்தாமிடத்திலிருந்தவன் திசையில் நாலாமிடத்திலிருந்தவன் புத்திவந்தால் மாரகமாகும். இவ்வித மாக ஒவ்வொரு ஜாதகத்திற்கும் பலன் சொல்லும்போது ஸ்தா னாதிபதியின் பலமும் ஸ்தானத்திலிருந்தவன் பலமும் பார்த்துத் தான் பலனை விபரம் சொல்லவேண்டும்.
இதற்கு உதாரணம்
ஜனன லக்கினத்திற்கு சதுர்த்த கேந்திராதிபதியோடு சம்பந்தமானவன் திசையில் ஜீவன சப்தம ஸ்தானாதிபதியோடு சம்பந்தப்பட்டவன் புத்திமாரகம். ஜீவனஸ்தானாதிபதியோடு சம்பந்தப்பட்டவன் திசையில் சுகாதிபதியோடு சம்பந்தப்பட்ட வன்புத்திகாரகத்தைக்கொடுக்கும். சுகாதிபதி திருஷ்டிசம்பந்தப் பட்டவன் திசையில் பத்துக்குடையவன் திருஷ்டி சம்பந்தப்பட் டவன் புத்திமாரக முண்டாம். நாலுக்குடையவன் பார்வையுற் றவன் திசையில் பத்துக்குடையவன் பார்வையுற்றோன் புத்தி யாரகமாகும்.
எண்சீரடி விருத்தம்
பஞ்சமஸ்தானாதிபதி திசையிலந்த பாக்கியஸ்தானாதிபதி புத்திதானே அஞ்சாமல்மாரகத்தை செய்யுமென்று அன்புடனேஜாதகர்க்கு பலனைச்சொல்வாய் மிஞ்சியேபஞ்சமத்தோன் திசையில்தானே மேன்மைசேரொன்பதோன் புத்தியுந்தான் வஞ்சமுடன்மாரகத்தைச் செய்யுமென்று வழுத்துவீர்ஜோதிடத்தில் மிகவல்லோரே. 117
உரை: - பஞ்சமஸ்தானாதிபதி திசையில் பாக்கிய ஸ்தானாதி பதி புத்தி மாரகமாகும். ஒன்பதிற்குடையவன் திசையில் ஐந்துக்குடையவன் புத்திமாரகம் ஒன்பதிலிருக்கிறவன் திசை யில் ஐந்திலிருக்கிறவன் புத்திமாரகஞ் செய்யும்.
இதற்கு உதாரணம்
பஞ்சமஸ்தானாதிபதியோடு சம்பந்தப்பட்டவன் திசையில் பாக்கிய ஸ்தானாதிபதியோடு சேர்ந்திருப்பவன் புத்தியில் மாரக முண்டாகும் ஒன்பதிற்குடையவனோடு சேர்ந்திருப்பவன் திசை யில் பஞ்சம ஸ்தானாதிபதியுடன் சம்பந்தப்பட்டவன் புத்திமாரக மாகும். அன்றியும் ஐந்துக்குடையவன் பார்வை சம்பந்தப்பட்ட வன் திசையில் ஒன்பதிற்குடையவன் பார்வை சம்பந்தப்பட்ட வன் புத்திமாரகமாகும்.
Page 64
ஜம்புகாஷி வாக்கியம்
ஆறாடையோன் திசையில் எட்டோன்புத்தி அஷ்டமத்தோன் திசையில் ஆறுக்குடையோன்புத்தி சீருடனே ஆறிலுற்றோன் திசையிலெட்டில் சிறப்புடனேயிருக்கிறவன் புத்திசொல்வான் பாருலகில் அஷ்டமத்தோன் திசையில் ஆறில் பகையாயிருப்போன்புத்தி மாரகத்தைச்செய்யும் காருண்பகிரகநிலை ஆராய்ந்தன்பாய் கவனித்து ஜாதகர்க்கு பலன்சொல்வீரே. 118
உரை:—ஆறுக்குடையவன் திசையில் அஷ்டமாதிபதி புத்தி மாரகஞ் செய்யும். ஆயுள் ஸ்தானாதிபதி திசையில் ஆறுக்குடையவன் புத்திமாரகஞ்செய்யும். ஆறாமிடத்திலிருப்பவன் திசையில் எட்டாமிடத்திலிருப்பவன் புத்தி மாரகஞ் செய்யும். ஆயுள் ஸ்தானாதிபதி திசையில் சத்துரு ஸ்தானாதிபதி புத்திமாரகஞ் செய்யும். இவையனைத்தும் சோதித்தாராய்ந்தும் ஜாதகத்தின் லக்னத்தையும் ஆராய்ந்துணர்ந்து பலன் சொல்ல வேண்டும்.
இதற்கு உதாரணம்
சத்துரு ஸ்தானாதிபதியோடு அஷ்டம ஸ்தானாதிபதியுடனே சம்பந்தப்பட்டவன் புத்தி மாரகமாகும். அஷ்டம ஸ்தானாதிபதியுடனே சம்பந்தப்பட்டவனோடு சத்துரு ஸ்தானாதிபதியுடன் சம்பந்தமாயிருந்தவன் புத்தி மாரகமாகும். சத்துருஸ்தானாதிபதி பார்வை பெற்றவன் திசையில் அஷ்டம ஸ்தானாதிபதி பார்வை பெற்றவன் புத்தி மாரகஞ் செய்யும்.
ஜம்புகாஷி வாக்கியம்
இலக்கினத்தின் ஒன்றோன் திசையின் ஏழோன்புத்தி இசைந்தஏழோன்திசையில் ஒன்றோன்புத்தி கலக்கமிலாலக்கினத்தோன் திசையில் ஏழிலுற்றோன்புத்தி கருதுலக்கினத்தோனுடன் சேர்ந்தோன்திசையிலே பலமுடனேசப்தமதி புத்திதானே [தான் பராக்கிரமமாய்மாரகஞ் செய்யலாமென்றோது நடமுடனே சப்தமத்தோ னுடனுற்றோன்திசையில் [வான். நாடியேலக்கினத்தோனுடன் சேர்ந்தோன்புத்திசொல்
உரை:—இலக்கினாதிபதி திசையில் சப்தமாதிபதி புத்திமாரகஞ் செய்யும் சப்தமாதிபதி திசையில் ஏழுக்குடையவன் புத்தி மாரகமாகும். இலக்கினாதிபதியுடனே சேர்ந்தவன் திசையில் சப்தமஸ்தானாதிபதி புத்தி மாரகமென்று ஜாதகர்க்கு ஆயுள் நிர்ணயங் கணித்துச் சொல்லும்போது, இலக்கின கணித ஆராய்ச்சி செய்து துவாதச இலக்கினத்திலிருக்கும் கிரகங்களின் பலனை ஆராய்ந்து பலன் சொல்லவேண்டும்.
Page 65
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை / இதற்கு உதாரணம்
இலக்கினாதிபதியுடனே சம்பந்தப்பட்டவன் திசையில் சப்தமஸ்தானாதிபதியுடனே சம்பந்தப்பட்டவன் புத்தியாக மாகும். சப்தம ஸ்தானாதிபதியுடனே சம்பந்தப்பட்டவன் திசையில் லக்கினாதிபதியுடனே சம்பந்தப்பட்டவன் புத்தியாக மாகும்.
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
இவ்விதமாய் ஜாதகர்க்குப் பலனாராய்ந்து இனிதுடனே சொல்வதென்றால் நவக்கிரகங்கள் ஒவ்வியே துவாதச லக்கினத்திருந்து ஓதுபலன் தருவதையே கவனித்தோர்ந்து எவ்விதமாயவரவர்கட் கிசைந்தயோகம் ஏற்றபடி தருவாரென் றெண்ணிப்பார்த்து அவ்விதமே யுரைத்தாலும் ஆயுள்பாகம் அறிந்துணர்ந்து புகல்வீர் ஜோதிடவல்லோரே. 120
உரை:-- உலகத்தில் பிறந்த ஜாதகர்கட்குப் பலன் சொல்வதென்றால் நவக்கிரக தேவர்கள் பனிரெண்டு ராசியிலிருக்கும் ஸ்தானபலனை ஆராய்ந்துணர்ந்து, அதன்படியே பலன் சொல்லும்போது ஆயுள் கணிதத்தையும் விபரமாய் கணித்து எந்த திசாநாதனுடைய எந்த புத்தியில் மாரக திசையுண்டாகுமோ அதை கவனித்துப் பார்த்து விபரமாய்ச் சொல்லவேண்டும். அவ்விதமாய் கணித்தாராய்ந்து சொல்லும்போது, ஜனனகாலத்தில் சந்திரனின்ற ராசியே ஜன்ம இராசியாகையால் அந்த இராசிகளுக்கு அஷ்டம ஸ்தானத்திலும் பனிரெண்டாமிடத்திலுமிருக்கின்ற கிரக நிலையையும் பார்த்து பலன் சொல்லவேண்டும்.
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
பன்னிரெண்டுராசியிலும் நவக்கிரகங்கள் பணமுடனிருக்கின்ற நிலையாராய்ந்து நன்மையுடன்கணித சாஸ்திரங்கணித்து நலமுடனே பலனுரைக்கும் போதுவாய்த்த இன்பதுன்பங்களையுணர்ந்து உலகத்தோர்க்கு இசைந்தபடி சகலுக்கம்வாய்க்கும்போது அன்பாகநவக்கிரக சாந்திசெய்து அன்புடன் ஜீவித்திருக்கப் புகலுவீரே. 121
உரை:-- மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிங்கம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் என்னும் பனிரெண்டு இராசிகளில் எந்தவீட்டில் நவக்கிரகங்களாகிய சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி,
Page 66
ஜம்புமகாரிஷி வாக்கியம்
இராகு, கேது என்னும் கிரகங்கள் எந்தெந்த இராசியில் என்னென்ன விதமா யிருக்கின்றார்களோ அதற்கிசைந்த விதமாய் பலன் கொடுப்பதோடு அந்தந்த கிரகங்கள்நின்ற ஆட்சி, நட்பு, உச்சம், பகை, நீசமென்னும் கிரகபலத்திற் கிசைந்த பலனையும் விவரித் துரைக்கும்போது ஆயுள் தானமும் மாரகாதிபர்கள் நிலையையும் அனுசரித்து பலன் சொல்ல வேண்டும் என்றாலும், கிரகங்களின் ஆதிபத்தியத்தை யனுசரித்து திசாபுத்தி பலனையும் கவனித்து எந்தெந்த திசாபுத்தி நாதர்களில் எந்தெந்த அந்தரநாதர்கள் வருகின்றார்களோ அவர்கள் நிலையையும் பலனையும் ஆராய்ந்து பலன் சொல்லவேண்டும். அப்போது நவக்கிரக சாந்திசெய்து ஜீவிக்கவேண்டும்.
ஜம்புமகாரிஷி வாக்கியம்
முற்றிற்று
Page 67
காலக்கிரம நிர்ணயம் என்னும் ஜோதிட கணிதாமிர்தம்
சுந்தரவிநாயகர் துதி
எண்சீரடி விருத்தம்
ஆதிக ஞானமூர்த்தி கணேசாயெந்தன் ஆதாரமாயிருந்தென்வாக்கி லமர்ந்திப்போது ஜோதிடகணிதாமிர்த மெழுதுமெந்தன் சொல்லிலிருந்துலகில் சூர்மனி தர்முன்னே ஓதுமெந்தன்வாக்கியம்மெய் யென்றெல்லோரும் உண்மையாய்தம்புவதற் கிசைந்தாற்போல நீதியாயுன்பதத்தை மனதிலெண்ணி நின்னருளாலெழுதுகிறேன் துணைசெய்வீரே.
சரஸ்வதி துதி
மலரயன்ராணி சரஸ்வதியேயுந்தன் மலரடியையான் துதித்து நூலாராய்ந்து கலக்கமிலாஜோதிட கணிதாமிர்தம் கணக்குடனேவாழ் நவின்சுசுடுக்கத்தை நலமுடனேயெழுதவெந்தன் மனதமர்ந்து ஞாபகசக்திதந்து வாக்யங்குன்றாமல் இலக்கியமாயெழுதவர மெனக்குத்தந்து இனிதுடனேதுணையிருப்பாய் கருணைவாழ்வே.
நவக்கிரகங்கள் ஸ்தோத்திரம்
பருதிமதிசேய்புதனே வியாழசுக்ரா பார்புகழும்சனிராகு கேதுஉங்கள் திருவருளால்ஜோதிடகணி தாமிர்தத்தை திறமையுடனேயெழுத ஞாபகார்த்தம் அருள்புரிவிரென்றுமது பாதந்தன்னை அனுதினமும்பூசித்து துதிக்கமெந்தன் குருவாகவத்தமர்ந்து ஜோதிடசாஸ்திரத்தை குற்றமிலாதெழுதுதற்குத் துணைசெய்வீரே.
Page 68
ஜோதிட கணிதாமிர்தம் - இராஜேஸ்வரி ஸ்தோத்திரம்
அம்பிகேராஜேஸ்வரி பார்வதியேகௌரி அவனியோர்முதலான முனிவர்சித்தர் உம்பரெல்லாந்துதிக்குமுந்தன் கிருபையாலே ஓதும்ஜோதிடகணிதாமிர்த மெழுதுதற்கு நம்பினேனருள்புரிவா யெந்தனுக்கு நாராயணிவாலை வராகிதுர்க்கா செம்பொன்பாதாரவிந்தம் பணிந்தேனெந்தன் செந்தமிழ்க்கனுதினமுந் துணைசெய்வாயே
நூற் பெருமை
அன்புடனேமானிடர்கள் முன்ஜன்மத்தில் அறிந்தறியாமற்செய்த பாபபுண்ய கன்மத்திற்கியைந்தவித மாய்ஜனித்து கஷ்டசுகமனுபவிக்கும் விபரந்தன்னை நன்மையாformattingக்கணித்துவருஷ மாதாதியோகங்கள் நக்ஷத்ரவாரகரண மிவையனைத்தும் இன்பமுடனேயுரைப்பேன் ஜோதிடவல்லோரே இனிதுடனேகேட்டுமன மகிழுவீரே.
ஜோதிட நூல் வரலாறு
ஆதிநாராயணுந்தி தனிற்பிறந்த அயனுலகைவேதங்க ளால்படைத்து பூதலத்தில்பலஜீவ ராசியோடும் புல்பூண்டுமலைவிருக்ஷங் களையுண்டாக்கி நீதியாய்மனிதர்களை சிருஷ்டித்தன்பாய் நீணிலத்திலவர்களைக்காப் பாற்றுந்தன்மை ஓதுகிறேன்பலநூலா ராய்ந்தோன்முன்னே ஒழுங்காகக்கவனித்து வாசிப்பீரே. 1
உரை:—ஆதியில் மஹாவிஷ்ணுவின் உந்திக்கமலத்தில் பிறந்த பிரம்மதேவன் வேதங்களால் உலகத்தைப் படைத்து, அதிற் பல ஜீவராசிகளையும், புல், பூண்டு, மலை, விருக்ஷங்களையும் உண்டாக்கி மனிதர்களையும் சிருஷ்டித்து அவரவர்களுக்கு வித்தையுங் புத்தியும் விளங்கும்படி செய்து, பஞ்ச அறிவடைந்து பகவானை துதிக்கும் பக்திமார்க்கத்தையும் போதித்து, இல்லற தர்ம நீதியையனுசரித்து, மனைவி மைந்தர் பந்துமித்திரருடன் வாழ்ந்து விரதானுஷ்டானம் புரிந்து பகவத்பக்தியாய் தான
Page 69
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
தர்மம் புரிந்து சுகஜீவியா யிருப்பதற் கிசைந்த நல்லறிவை புகட்டி ஆதரிக்கலாயினரென்பது கருத்தாகும். கல்வியிற் றேர்ச்சி யடைந்து பல சாஸ்திரமுணர்ந்த பெரியோர்கள் இதனை கவனமாய் வாசித்து விபரந் தெரிந்து கொள்வீர்.
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
இவ்விதமாய் மனிதர்களுற்பத்தியாகி இல்லறநீதியையிடுத்து மாய்கையாலே செவ்வியினார்கசபோகத் திற்சிச்சித்து செம்பொன்னும் பொருள்பூமிசேகரிக்க ஒவ்வியேபொய்சூது மோசஞ்செய்து ஒழுங்கீனமாய்நடந்த கர்மத்தால்ஜன்மம் எவ்வெவ்விதமாய்வருமோ அதற்கேற்றப்போல் எடுத்துமுன்செய்கர்மவினையை விலக்குவாரே. 2
உரை:—இவ்விதமாய் மனிதர்கள் பூமியில் பிறந்து வளர்ந்து மணம்புரிந்து மனைவி மைந்தர்களுடன் வாழ்ந்திருக்கும்போது இல்லற தர்மநீதியை விடுத்து, ஆசாபாச மாய்கைக்குட்பட்டு மனைவி மைந்தர் சுகபோகத்திற்சிக்கி பொன், பொருள், நில வளங்களை சேகரிப்பதற்கிசைந்து பொய், சூது, மோசம், வஞ்சக முதலான கொடுமை யெல்லாம்செய்து ஆயுள் முடிந்தபிறகு, அந்த ஜன்மத்தில் செய்த கர்மவினைக்காக எவ்வெவ்விதமாய் ஜன்ம மெடுத்து முன் ஜன்மத்திற் செய்த கர்மவினையை விலக்குகின்றார்களோ அந்த விபரத்தை சொல்லுகிறேன் கவனிப்பீர்கள் அறிவுடையோர்களே.
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
அவரவர்கள்செய்த புண்யபாபத்தாலே அடுத்தஜென்மத்தில்ககதுக்க மனுபவிக்க நவக்கிரகமொன்பதுபேர் அவ்வப்போது நவமுடனேஅதிகாரஞ் செய்யும்நேர்மை தவறாதென்றேமதிப்பீர் கலைவல்லோரே தாரணியிலினியேனும் பாபபுண்ணியத்தை கவனித்தொழுங்காய்நடந்தால் மறுஜென்மத்தில் கடவுளருளால்மேன்மை யடைவீரே. 3
உரை:—மனித வகுப்பினர் தமது மனதிற்கிசைந்தவிதமாய் செய்த புண்ணியத்தினாலும் பாபத்தினாலும் மறுஜன்மத்திற்கு சுக துக்கத்தை யனுபவிக்கச்செய்வதற்காக நவக்கிரகங்களாகிய சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது என்னும் ஒன்பதுபேரும், தமது அதிகாரத்திற் கிசைந்தவிதமாய் மனிதரின் பாபத்திற்கிசைந்த துக்கமும், புண்ணியத்திற்கிசைந்த சுகமும் கொடுத்துஆதரிப்பார்கள். பாபபுண்ணியம் விலகி ஆயுள் முடிவானால் மறுஜன்மத்திலு மிவ்விதமே
Page 70
ஜோதிட கணிதாமிர்தம்
அமையும். ஆகையால் இனிமேலாயினும் விரதானுஷ்டானம் புரிந்து தான தர்ம பரோபகாரம் புரிந்து பகவத் பக்தியானந்தமா யிருந்தால் மறுஜன்மத்தில் பகவானருள்பெற்று மேன்மை யடை வீர்கள்.
ஜோதிட கணிதாமிர்தம்
அன்பாக மனிதர்செய்த பாபபுண்ய அளவுபோல் சுகதுக்க மனுபவிக்கும் தன்மையைக்கண்டுணர பிறந்தநாளின் ஜாதகத்தைக்கணித்தெழுத விபரந்தோன்றும் இன்னவருஷமாதம் கிழமைதேதி இசைந்த திதி நக்ஷத்ரகரணயோகம் நன்மையாய்க்கண்டுணர விபரமாக நவிலுகிறேன் கவனிப்பீருலகத்துள்ளோரே. 4
உரை:- மனிதவகுப்பினர் தமது மனதிற் கிசைந்த விதமாய்ச் செய்த பாபபுண்யத்திற்கு தகுந்தவிகுபாய் சுகதுக்க மனுபவிக்கும் தன்மையைக் கவனிப்பதற்காகவே அவர்கள் பிறந்த நாளின் ஜாதகத்தை கணித்தெழுதிப் பார்த்தால் விபரந்தோணும். இதற்காகவே அவர்கள் பிறந்தது இன்னின்ன வருஷம், மாதம், தேதி, கிழமை, திதி, நக்ஷத்ரம், கரணம், யோக மென்பதை கவனித்துணர்வதற்காகவே இந்த ஜோதிட சாஸ்திரத்திற்கு ஆதாரமாக அடியிற் குறிப்பிட்டிருக்கின்றோம் கவனித்துக்கொள்வீர்கள்.
சதுர்யுகங்களின் விபரம்
சதுர்யுகங்களின் விபரம்
- கிரேதாயுகம் : 3. துவாபரயுகம்
- திரேதாயுகம் 4. கலியுகம் ஆக மொத்த யுகங்கள் 4. கிரேதாயுகத்திற்கு 17-லக்ஷத்து 28-ஆயிர வருஷம் திரேதாயுகத்திற்கு 12-லக்ஷத்து 76-ஆயிர வருஷம் துவாபரயுகத்திற்கு 8-லக்ஷத்து 64-ஆயிர வருஷம் கலியுகத்திற்கு 4-லக்ஷத்து 34-ஆயிர வருஷம்
Page 71
60-வருஷங்களின் பலன்
1-பிரபவ 2-விபவ 3-சுக்ல 4-பிரமோதூத 5-பிரசோற்பத்தி 6-ஆங்கீரச 7-ஸ்ரீமுக 8-பவ 9-யுவ 10-தாது 11-ஈஸ்வர 12-வெகுதான்ய 13-பிரமாதி 14-விக்கிரம 15-விஷு 16-சித்திரபானு 17-சுபானு 18-தாரண 19-பார்த்திப 20-விய 21-சர்வசித்து 22-சர்வதாரி 23-விரோதி 24-விக்ருதி 25-கர 26-நந்தன 27-விஜய 28-ஜய 29-மன்மத 30-துன்முகி 31-ஏவிளம்பி 32-விளம்பி 33-விகாரி 34-சார்வரி 35-பிலவ 36-சுபகிருது 37-சோபகிருது 38-குரோதி 39-விசுவாவசு 40-பராபவ 41-பிலவங்க 42-கீலக 43-சௌமிய 44-சாதாரண 45-விரோதிகிருது 46-பரிதாபி 47-பிரமாதீச 48-ஆனந்த 49-ராட்சச 50-நள 51-பிங்கள 52-காளயுக்தி 53-சித்தார்த்தி 54-ரௌத்திரி 55-துன்மதி 56-துந்துபி 57-ருத்ரோத்காரி 58-இரக்தாஷி 59-குரோதன 60-அக்ஷய ஆக மொத்தம் வருஷம்-60.
எண்சீspeech விருத்தம்
எண்சீரடி விருத்தம்
அன்பாகவேயுலகந்தனில் ஜனிப்போர் ஆயுள்நிர்ணயங்கணித்து வருஷமெண்ணி இன்பாகஜாதகத்தை பார்க்கும்போது இன்னின்னார்பிறந்த வருஷந்தெரிந்து நன்னயமாய்அந்தந்த சமயந்தன்னில் நடக்கின்றவயதறிந்துக்கொள்வதற்கு தன்மையாயவரவர்கள் பிறந்தஆண்டு தனிலிருந்துவயதெண்ணிப் புகலுவீரே. 5
உரை:— உலகிலுள்ள மனிதர்கள் பிரபவாதி முதல் அக்ஷய வருஷத்திற்குள் எந்த வருஷத்தில் பிறக்கின்றார்களோ அந்த வருஷத்திலிருந்து தற்காலத்தில் நடக்கும் வருஷம் வரையிலும் எண்ணிக்கொண்டு வருவதுதான் அவரவர்க்குரிய வயதெனவே சொல்லப்படும்.
Page 72
ஜோதிட கணிதாமிர்தம் - விருத்தம்
அன்புடன்மனிதருக்கு அமைந்தமுப்பதுநாளானால் மன்னியமாதமென்று மாநிலத்தோருரைப்பார் பன்னியபிறந்தமாதம் பார்த்தெண்ணிவரும்போது நன்மையாய்நடக்கும்மாதம் நாடியேபுகலுவீரே. 6
உரை:- மனித வகுப்பார் பிறந்த நாளிலிருந்து முப்பதுநாள் சேர்ந்தால் ஒரு மாதமாகும். ஆனால், தினந்தோறும் நாழிகையின் அளவில் மாதத்தின் நாட்களில் சிலசமயம் ஏறக்குறைய இருந்தாலும் மாதத்திற்கு நாள் முப்பது என்பதுதான் வழக்கமாய் விளங்கும். இவ்விதமான மாதங்களில் ஜாதகர் எந்த மாதத்தில் பிறக்கின்றார்களோ அதனையே முதலாகக்கொண்டு எண்ணிக்கையிட்டு பனிரெண்டு மாதமானால் ஒருவருஷமென்று சொல்லவேண்டும்.
மாதங்களின் பெயர்
1-சித்திரை | 5-ஆவணி | 9-மார்கழி 2-வைகாசி | 6-புரட்டாசி | 10-தை 3-ஆனி | 7-ஐப்பசி | 11-மாசி 4-ஆடி | 8-கார்த்திகை | 12-பங்குனி ஆக மொத்தம் மாதம்-12.
சங்கற்ப மாதங்களின் விபரம்
1-சைத்திரம் | 5-சிராவணம் | 9-மார்க்கசிரம் 2-வைசாகம் | 6-பாத்ரபதம் | 10-புஷ்யம் 3-ஜேஷ்டம் | 7-ஆஸ்விஜம் | 11-மாகம் 4-ஆஷாடம் | 8-கார்த்தீகம் | 12-பால்குணம் ஆக மொத்தம் மாதம்-12.
இங்கிலீஷ் மாதங்களின் விபரம்
1-ஜனவரி | 5-மே | 9-செப்டம்பர் 2-பிப்ரவரி | 6-ஜூன் | 10-அக்டோபர் 3-மார்ச் | 7-ஜூலை | 11-நவம்பர் 4-ஏப்ரல் | 8-ஆகஸ்டு | 12-டிசம்பர் ஆக மொத்தம் மாதம்-12.
மகம்மதியர் மாதங்களின் விபரம்
1-மொகரம் | 5-ஜமாதிலவல் | 9-ரம்ஜான் 2-ஸபர் | 6-ஜமாதினானி | 10-ஷவ்வால் 3-ரபியுலவல் | 7-ரஜப் | 11-ஜில்காத் 4-ரபியுசானி | 8-ஷாபான் | 12-ஜில்ஹேஜ் ஆக மொத்தம் மாதம்-12.
Page 73
வாரங்களின் விபரம் - எண்சீரடி விருத்தம்
கதிர்பானுமதி இந்துசேய்ப்பவ்மவாரம் கருதுவால்செளமியவாரம் குருவியாழன் மதிக்கும்வெள்ளிக்கிழமையே பிருகுவாரம் மந்தவாரமென்றால் சனிக்கிழமையாகும் விதித்திட்டஸ்திரவாரமும் சனீஸ்வரர்க்கே விளங்குமெனவேபுகன்றார் கலைவல்லோர்கள் அதிகநோக்கத்தோடே பார்த்துரைக்கும் அறிவுள்ளஜோதிடரே கவனிப்பீரே. 7
உரை:- ஞாயிற்றுக்கிழமையை பானுவாரமென்றும், திங்கள் கிழமையை இந்துவாரமென்றும், செவ்வாய்க்கிழமையை பவ்ம வாரமென்றும், புதன்கிழமையை சௌமியவாரமென்றும், வியா ழக்கிழமையை குருவாரமென்றும், வெள்ளிக்கிழமையை பிருகு வாரமென்றும், சனிக்கிழமையை மந்தவாரமென்றும் ஸ்திரவார மென்றும் ஜோதிட சாஸ்திர நூலாராய்ச்சியில் சிறந்த வித்வான்கள் சொல்வார்கள். இதற்கு உதாரணம் அடியிற்காண்க.
சப்த வாரங்களின் விபரம்
ஞாயிற்றுக்கிழமை - பானுவாரம் திங்கட்கிழமை - இந்துவாரம் செவ்வாய்க்கிழமை - பௌமியவாரம் புதன்கிழமை - சௌமியவாரம் வியாழக்கிழமை - குருவாரம் வெள்ளிக்கிழமை - பிருகுவாரம் சனிக்கிழமை - மந்தவாரம்-ஸ்திரவாரம் ஆக மொத்தம் வாரங்கள்-7.
திதிகளின் விபரம்
1-பிரதமை | 6-சஷ்டி | 11-ஏகாதசி 2-துதியை | 7-சப்தமி | 12-துவாதசி 3-திரிதியை | 8-அஷ்டமி | 13-திரயோதசி 4-சதுர்த்தி | 9-நவமி | 14-சதுர்த்தசி 5-பஞ்சமி | 10-தசமி | 15-அமாவாசை-பௌணாமி ஆக மொத்தம் திதிகள்-15.
Page 74
ஜோதிட கணிதாமிர்தம் - எண்சீரடி விருத்தம்
இவ்விதமாய்த்திதிகளெல்லாம் வரும்போது இத்திதியில்சந்திரனும் நடக்கும்காலம் ஒவ்வியேதேய்பிறைச் சந்திரனேயானால் ஒதுபதினைந்தில் அமாவாசையாகும் எவ்விதமாயம்தினகலைகளெல்லாம் எம்போதும் பூரணமாய் பிரகாசித்தால் அவ்விதமேசந்திரப்பிரகாசமாகும் அத்தினமேபௌர்ணமி யென்றோதுவாரே. 8
உரை:— மேற்குறிப்பித்த திதி நாட்களில் சந்திரன் நடக்கும் போது ஒவ்வொருநாளும் தனது கலை குறைந்துகொண்டே போய் கடைசி தினத்தில் சந்திரனைக் காண்பதற்கில்லாமல் மறைந்த நாளில் வருவதுதான் பதினைந்தாவது திதியாகிய அமாவாசை யென்று சொல்லப்படும். ஆனால் அந்த அமாவாசை தினத்திலிருந்து சந்திரன் ஒவ்வொரு திதியிலும் நடக்கும்போது, தனது கலை வளர்ந்து கொண்டே பூரணமாய்வரும் பதினைந்தாவது தினம் பூரணசந்திரனாய் பிரகாசிப்பதால் அதனையே பௌர்ணமி யென்றுரைப்பார்கள்.
இதற்கு உதாரணம் தேய்பிறைச்சந்திரன் — அமாவாசை திதி வளர்பிறைச்சந்திரன் — பௌர்ணமி திதி
கரணங்களின் விபரம்
முனிவான பவம்பாலவம் கௌலவம்தைதுலை கரசையோடு முதற்றிருவுலரக்குமிந்த கரணங்களோடும் வணிசை பத்திரா சகுனிசதுஷ்பாதமென்னும் வாய்ந்தநாகவகரயாம் கிம்ஸ்துக்னமென்னும் இனிதானகரணங்கள் பதினொன்றுக்கும் இசைந்தபடிநகர்வன ஊர்வனஜந்துக்கள் தனியாகபறப்பன நடப்பனவென் றுரைப்பதெல்லாம் தரணியோர்கவனிக்கச் சாற்றுவேனே. 9
உரை:— கோபத்தையுடைய சிங்கத்தைப்போன்ற பவம், பாலவம், கௌலவம், தைதுலை, கரசை, வணிசை, பத்திரா, சகுனி, சதுஷ்பாதம், நாகவம், கிமிஸ்துக்னமென்னும் இந்த பதினோறு கரணங்களும் நகர்வன, ஊர்வன, பறப்பன, நடப்பன வென்னும் ஜீவராசிகளைப் போன்றிருக்கும். இதன் விபரத்தை அடியிற் காண்க.
Page 75
கரணங்களின் ரூபம்
- பவம் - சிங்கம்
- பாலவம் - புலி
- கெளலவம் - பன்றி
- தைதுலை - கழுதை
- கரசை - யானை
- வணிசை - எருது
- பத்திர - கோழி
- சகுனி - கூகை
- சதுஷ்பாதம் - நாய்
- நாகவம் - பாம்பு
- கிமிஸ்துக்கினம் - புழு ஆக கரணங்கள் 11.
இந்த பதினோரு கரணங்களும் மேற்குறிப்பித்த ரூபமாகவே விளங்கும். இவைகளும் தினசரியாகவே நடக்கும்.
நக்ஷத்திர விபரம்
இனிதுடனே மாநிலத்தில் பகவானாலே இன்பமாகவேபிறந்து வாழ்ந்திருக்கும் மனிதர்களின்வாழ்நாளிற் கிசைந்தவாறே மதியென்னும்சந்திரன் சஞ்சரிக்கும்காலம் கனிவாகநக்ஷத்ர மிருபத்தேழும் காணியுடனேயமைத்த விபரமெல்லாம் தனித்தனியேமோதுகின்றேன் கவனித்தோர்த்து தாரணியின்ஜாதகர்க்குப் புகலுவீரே. [10]
உரை:- பகவானால் பூலோகத்தில் பிறந்து ஜீவித்திருக்கும் மனிதர்களின் வாழ்நாட்களில் சந்திரன் நடக்கும் நக்ஷத்திரங்களையே இருபத்தேழெனக் குறிப்பிட்டிருக்கும் விபரத்தை அடியிற் கவனிப்பதற்கிசைந்த விதமாய் குறிப்பிட்டிருக்கின்றோம். இதில் சமஸ்கிருத பாஷைக்கிசைந்த தமிழ்பாஷையில் குறிப்பிட்டிருப்பதையும் கவனித்துக் கொள்வீர்கள்.
நக்ஷத்திரங்களின் பெயர்
வடமொழி | தென்மொழி 1-அஸ்வனி | 1-அசுவனி 2-பரணி | 2-பரணி 3-கிருத்திகா | 3-கிருத்திகை 4-ரோஹிணி | 4-ரோகணி 5-மிருகசிரா | 5-மிருகசீரிடம் 6-ஆருத்ரா | 6-திருவாதிரை 7-புனர்வஸு | 7-புனர்பூசம் 8-புஷ்யா | 8-பூசம் 9-ஆசிலேஷா | 9-ஆயில்யம்
Page 76
ஜோதிட கணிதாமிர்தம்
10-மகா 10-மகம் 11-பூர்வபற்குனி 11-பூரம் 12-உத்தரபற்குனி 12-உத்திரம் 13-ஹஸ்தா 13-அஸ்தம் 14-சித்ரா 14-சித்திரை 15-ஸ்வாதி 15-சுவாதி 16-விசாகா 16-விசாகம் 17-அனுராதா 17-அனுஷம் 18-ஜேஷ்டா 18-கேட்டை 19-மூலா 19-மூலம் 20-பூர்வாஷாடா 20-பூராடம் 21-உத்திராஷாடா 21-உத்திராடம் 22-சிரவணா 22-திருவோணம் 23-சிரவிஷ்டா 23-அவிட்டம் 24-சதபிஷா 24-சதயம் 25-பூர்வாபாத்ரா 25-பூரட்டாதி 26-உத்ராபாத்ரா 26-உத்திரட்டாதி 27-ரேவதி 27-ரேவதி
தினந்தோறும் வருகின்ற இந்த நட்சத்திரங்களில் சந்திரன் சஞ்சரிப்பதையே இராசியென் றுரைக்கப்படும்.
யோகங்களின் விபரம்
உலகமதில் தினந்தோறும் பஞ்சாங்கத்தில் உரைத்தபடி நடக்கின்ற யோகமெல்லாம் நலமுடனே இருபத்தே ழாகுமென்று நவின்றிடும் வாக்கியம்போல ஜாதகர்க்கு பலன் தருவதையுணர்ந்து ஜாதகத்தோர் பணமுடனே கவனித்தெந்நாளும் நிலையாக வாழ்ந்திருக்கும் விபரந்தன்னை நீணிலத்தோர் கவனிக்கும்படி சொல்வேனே. 11
உரை-பூலோகத்திற் பிறந்த மனிதர்கட்கு ஆதாரமாக அமைத்துக் குறிப்பித்த வருஷம், மாதம், கிழமை, திதி, நக்ஷத் திரமென்பதுடனே தினந்தோறும் ஒவ்வொரு நாளைக் கொவ்வொரு யோகமாக இருபத்தேழு நாளைக்கு வரும் இருபத்தேழு யோகத்தின் விபரத்தை இதற்கடியில் குறிப்பிட்டிருப்பதைக் கவனிப்பீர்கள் ஜோதிட கணித வல்லோரே.
Page 77
யோகங்களின் பெயர்
1-விஷ்கம்பம் 2-பிரீதி 3-ஆயுஷ்மான் 4-சவுபாக்கியம் 5-சோபனம் 6-அதிகண்டம் 7-சுகர்மம் 8-திருதி 9-சூலம் 10-கண்டம் 11-விருத்தி 12-துருவம் 13-வியாகாதம் 14-அரிஷணம் 15-வச்சிரம் 16-சித்தி 17-வியதீபாதம் 18-வரியான் 19-பரீகம் 20-சிவம் 21-சித்தம் 22-சாத்தியம் 23-சுபம் 24-சுப்பிரம் 25-பிராமிபம் 26-மகேந்திரம் 27-வைதிருதி
இந்த இருபத்தேழு யோகமும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றாய் திதி நக்ஷத்திரங்கள் வருவதுபோல் வருவது வழக்கமாகையால் ஜாதகர் ஜனனமான யோகபலனையும் அனுசரித்துப் பார்க்கவேண்டும். பெண்கள் புஷ்பவதியான தினங்களிலும் இவ்விதமே மாதம் கிழமை திதி நக்ஷத்திரங்களைப் பார்க்கும் போது மேற்குறிப்பித்த யோகபலன்களையும் பார்த்து களத்திரஸ்தானம், சுகஸ்தானம், ஆயுள் ஸ்தானம் முதலானவையும் ஆராய்ந்து பலன் சொல்லவேண்டும்.
துவாதச இலக்கின திசைகள்
மீனமுடன் மேஷமும் ரிஷபராசி மிதுன ராசியும்கிழக் கென்றேஓது ஆனதொரு கடகம்சிங்கம் கன்னிராசி அமைந்ததெற்கென்றேதான் கவனித்தோது வானதுலாம்கவிருச்சிகம் மேற்கென்றோது வழுத்துவாய் தனுசுகரம் கும்பராசி தானுமேவடக்காகு மெனவாராய்ந்து தாரணியிற்குறிப்பித்த விபரங்கேட்டீர் 12
உரை:—மீனராசி, மேஷராசி, ரிஷபராசி, மிதுனராசியும் கிழக்கு புறமாகவும், கடகராசியும் சிங்கராசியும் கன்னியராசியும் தென்புறமாகவும், துலாம் விருச்சிகராசியும் மேற்புறமாகவும், தனுசு ராசியும் மகரம், கும்பராசியும் வடக்குபுறமாகவும் விளங்கும். இந்த ஸ்தான விபரத்தை அடியிற் குறிப்பிட்டிருப்பதைக் கவனித்துக் கொள்வீர்கள்.
Page 78
ஜோதிட கணிதாமிர்தம் - இராசிகளின் நிலையறியும் விபரம்
எண்சீரடி விருத்தம்
ஆனதொருமேஷம்கடகம் துலாம்மகரமோடே அமைத்தமகரம்சர ராசியாகும் மீனம்கன்னிதனுசு ராசியோடு மிதுனமும்உபயராசி யென்றேசொல்லு ஆனரிஷபம்சிங்கம் விருச்சிகந்தானுங்கள் அமைந்தகும்பம்ஸ்திரராசியாகுமென்று வானசாஸ்திரமுணர்ந்த கணிதவல்லோர் வழுத்தியதைகவனித்துப் பகலுவேனே. 13
உரை - மேஷம், கடகம், துலாம், மகரம் இந்த நான்கு இராசிகளும் உபயராசியாகும். மீனம், மிதுனம், கன்னி, தனுசு இந்த நான்கு ராசிகளும் உபயராசியாகும். ரிஷபம், சிங்கம், விருச்சிகம், கும்பம் என்னும் இந்த நான்கு ராசிகளும் ஸ்திர ராசி யாகும். இதன் விபரத்தை அடிமீற் குறிப்பிட்டிருக்கின்றோம் கவனிப்பீர்.
Page 79
சரம் ஸ்திரம் உபய ராசிகளின் விபரம்
மேஷம் | ரிஷபம் | மிதுனம் கடகம் | சிங்கம் | கன்னி துலாம் | விருச்சிகம் | தனுசு மகரம் | கும்பம் | மீனம் இந்நான்கு-சரராசி | இந்நான்கு-ஸ்திரராசி | இந்நான்கு-உபயராசி
இவ்விதமே ஒவ்வொரு இராசியிலும் கிரகங்கள் நிற்கும் போது அந்தந்த இராசி பலனைத் தருவார்கள்.
இராசிகளின் ரூபம்
ஆடுபோல்மேஷம்ரிஷப மெருதுபோலாம் ஆடவனும்ஸ்திரீபோல மிதுனமாகும் நாடுடகடநண்டுசிங்கம் கேசரியைப்போலும் நவிலும் கன்னிபெண்ரூபம் துலாம்திராசு ஓடுந்தேள் விருச்சிகமாம் மகரமும் முதலையோலும் ஒதுங்கும் பம்சோற்றுப்பானைப் போன்றரூபம் வாழும் மீனம்மச்ச ரூபம்போலும் வையகத்தோர்களுக்கு காணுந்தானே. 14
உரை-மேஷராசி ஆடுபோலிருக்கும். ரிஷபராசி எருதுபோ லிருக்கும். மிதுனராசி ஆண்பெண்ணாகிய சதிபதியை போலிருக் கும். கடகராசி நண்டுபோலிருக்கும். சிங்கராசியானது சிங்கத் தைப்போலவே இருக்கும். கன்னியாராசி பெண்போலவே இருக்கும். துலாராசி திராசுபோலிருக்கும். விருச்சிகராசி தேள் போலவே தோற்றும். தனுசுராசி வில்போலவே காணப்படும். மகரராசி முதலைபோலிருக்கும். கும்பராசி சோற்றுப்பானைபோ லிருக்கும். மீனராசி மச்சத்தைப்போலவே காணப்படும் இதன் விபரத்தை அடியிற்காண்க.
இராசிகளின் ரூபம் (விபரம்)
மேஷராசி - ஆடுபோலிருக்கும் ரிஷபராசி - எருதுபோ லிருக்கும் மிதுனராசி - சதிபதியோ லிருக்கும் கடகராசி - நண்டுபோ லிருக்கும் சிங்கராசி - சிங்கத்தைப்போ லிருக்கும் கன்னியாராசி - பெண்போலவே யிருக்கும் துலாம்ராசி - திராசுபோலவே யிருக்கும் விருச்சிகராசி - தேள்போலவே இருக்கும்
Page 80
ஜோதிட கணிதாமிர்தம்
தனுசுராசி வில்போலவே இருக்கும் மகரராசி முதலையைப்போலவே இருக்கும் கும்பராசி சோற்றுப்பானைபோ லிருக்கும் மீனராசி மச்சத்தைப்போ லிருக்கும்
இவ்விதமாய் இந்த இராசிகள் வடிவமைந்து வானத்தில் தோற்றுவதை வானசாஸ்திரிகள் கவனித்து, உலகத்திலிருப்பவர்கட்கு சொல்வதும் உண்மையாக விளங்கும். இந்த இராசிகளில் சூரியன் வரும்போது ஒவ்வொரு மாதமாகவும் குறிப்பிக்கப்படும் விபரம் :-
மேஷம் - சித்திரை | துலாம் - ஐப்பசி ரிஷபம் - வைகாசி | விருச்சிகம் - கார்த்திகை மிதுனம் - ஆனி | தனுசு - மார்கழி கடகம் - ஆடி | மகரம் - தை சிங்கம் - ஆவணி | கும்பம் - மாசி கன்னி - புரட்டாசி | மீனம் - பங்குனி
இவ்விதமே பனிரெண்டு இராசிகட்கும் பனிரெண்டு மாதம் அமைத்திருக்கும்.
அவயவ ராசிகள்
தலைமேஷம்முகமிரிஷபம் மிதுனங்கழுத்து தோள்கடகம்மார்புசிங்கம் பக்கங்கன்னி துலாம்முதுகுவிருச்சிகம்பீஜ மாகுமின்നം துடைதனுசுமகரம்முழங் காலென்றோது நிலையானகும்பங் காலென்றோது நீணிலத்தில்மீனமே பாதமாகும் உலகினிலேஇவ்விதமாய் ராசிகட்கு உற்றசரீரம்பலவாய் விளங்கும்பாரே. 16
உரை:- மேஷராசி தலை, ரிஷபராசி முகம், மிதுனராசி கழுத்து, கடகராசி தோள், சிங்கராசி மார்பு, கன்னியாராசி பக்கம், துலாம்ராசி முதுகு, விருச்சிகராசி பீஜம், தனுசுராசி தொடை, மகரராசி முழங்கால், கும்பராசி கணுக்கால், மீனராசி பாதமாகும். இவ்விதமே பனிரெண்டு ராசிகளிலும் அவயவபாகத் தோற்றுவித்ததைக் கவனித்துப் பார்த்தால் பனிரெண்டு ராசிகளும் சரீரத்தில் ஒவ்வொரு பாகமாக விளங்கும். இதற்கு திருஷ்டாந்தம் அடியிற் காண்க.
Page 81
இராசிகள் சரீர நிலைகள் ஜாதி
இராசிகள் | சரீர நிலைகள் | ஜாதி மேஷம் | சிரசு | வேளாளன் ரிஷபம் | முகம் | இடையன் மிதுனம் | கழுத்து | சக்கிலியன் கடகம் | தோள் | கன்னான் சிங்கம் | மார்பு | பிராமணன் கன்னி | பக்கம் | நாவிதன் துலாம் | முதுகு | செட்டி விருச்சிகம் | பீஜம் | வேடன் தனுசு | தொடை | தட்டான் மகரம் | முழங்கால் | வண்ணான் கும்பம் | கணுக்கால் | குயவன் மீனம் | பாதம் | பறையன்
இவ்விதமாகவே ஒவ்வொரு ராசிகளும் நமது சரீர அங்கங்களில் பொருந்தி யிருக்கும்.
எண்சீரடி விருத்தம்
எண்சீரடி விருத்தம்
இந்தவிதமாகவே பன்னிரண்டு இராசிகளில் வரிசையாய் சுற்றிக்கொண்டு சந்திரன்வரும்போது பலனைக்கண்டு சாற்றுநின்றபலபலனை யறிவதென்றால் அந்தமுடன்நேரிலுற்றால் லாபமாகும் அடுத்தபின்புறத்துற்றால் நஷ்டமாகும் இந்தவிதமாகவே பலனாராய்ந்து இன்பதுன்பமெய்துவதை கவனிப்பீரே. 16
உரை:—பின்புறம் குறிப்பிட்டிருக்கும் பனிரெண்டு ராசிகளிலும் சந்திரன் சுற்றிக்கொண்டு வரும்போது நேரிலிருந்தால் வித்யாகாபம், உத்தியோகமேன்மை, வியாபாரலாபம், பந்துமித்திரர் சேர்க்கை, தனதான்ய சம்பத்து முதலான பலவித நன்மையும் உண்டாகும். ஆனால், சந்திரன் பின்புறமாய் வரும்போது பலவிதமாகிய கஷ்டநஷ்டங்களும் பகையும் நேரிடும். ஆனால் மற்ற கிரகங்கள் நல்ல ஸ்தானத்திலிருந்தால் மத்திம பலனாயிருக்கும். சுபக்கிரகங்களின் பார்வை பெற்றிருந்தாலும், திசாபுத்தி நாதர்கள் வலுத்திருந்தாலும் நல்ல பலனையே கொடுத்து மனமகிழ்ந்திருக்கும்படியாய்ச் செய்யும்.
Page 82
ஜோதிட கணிதாமிர்தம் / நக்ஷத்திரங்களில் சந்திரன் நிற்கும் நிலையும் துவாதச ராசிகளின் விபரமும்
நக்ஷத்திரங்களில் சந்திரன் நிற்கும் நிலையும் துவாதச ராசிகளின் விபரமும்
அசுவனி 1 | மகம் 1 | மூலம் 1 பரணி 1 | பூரம் 1 | பூராடம் 1 கிருத்திகை 1/4 | உத்திரம் 1/4 | உத்திராடம் 1/4 மேஷராசி | சிம்மராசி | தனுசுராசி கிழக்குதிசை | கிழக்குதிசை | கிழக்குதிசை
கிருத்திகை 3/4 | உத்திரம் 3/4 | உத்திராடம் 3/4 ரோகணி 1 | அஸ்தம் 1 | திருவோணம் 1 மிருகசீரிடம் 1/2 | சித்திரை 1/2 | அவிட்டம் 1/2 ரிஷபராசி | கன்னியாராசி | மகரராசி தெற்குதிசை | தெற்குதிசை | தெற்குதிசை
மிருகசீரிடம் 1/2 | சித்திரை 1/2 | அவிட்டம் 1/2 திருவாதிரை 1 | சுவாதி 1 | சதையம் 1 புனர்பூசம் 3/4 | விசாகம் 3/4 | பூரட்டாதி 3/4 மிதுனராசி | துலாராசி | கும்பராசி மேற்குதிசை | மேற்குதிசை | மேற்குதிசை
புனர்பூசம் 1/4 | விசாகம் 1/4 | பூரட்டாதி 1/4 பூசம் 1 | அனுஷம் 1 | உத்திரட்டாதி 1 ஆயிலியம் 1 | கேட்டை 1 | ரேவதி 1 கடகராசி | விருச்சிகராசி | மீனராசி வடக்குதிசை | வடக்குதிசை | வடக்குதிசை
இவ்விதமாய் இருபத்தேழு நக்ஷத்திரங்களிலும் சந்திரன் பிரவேசிக்கும்போது 2 1/4-நாள் வரையிலும் ஒவ்வொரு ராசியிலும் சஞ்சரித்து வரும்போது மேற்குறிப்பித்த திசைகளையும் பார்த்து சந்திரன் இன்னின்ன திசையில் பிரவேசமாகின்ற வேளை யென்று குறிப்பிக்கப்படும்.
நவக்கிரகங்களும் இராசிகளும் நோக்கும் திசைகள்
சூரியன்மேஷம்கிழக்கில் பார்வையாகும் சுக்கிரன்வில்சிம்மம்தென்கிழக்கில் பார்வையாகும் வீரியசேயிரிஷபம்தெற்கில் பார்வையாகும் விளங்கியராகுகன்னிகரம் தென்மேற்காகும் காரியிதுனம்மேற்கு திசைநோக்காகும் கருதுசந்திரன்துவாகும்பம் வடமேற்காகும்
Page 83
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
பாரில்புதன்கடகமும் வடக்கில்நோக்கும் பார்வைகுரு விருச்சிகமீனத்திற்கே. 17
உரை: - சூரியன் மேஷம் கிழக்குத் திசையில் பார்வை யாகும். சுக்கிரன் தனுசு கும்பம் தென்கிழக்கை நோக்கும். செவ்வாய் ரிஷபம் தெற்கில் பார்வையுண்டாகும். இராகுபகவான் கன்னி, மகரம் தென்மேற்கு திசையில் நோக்கும், சனிபகவான் மிதுனம் மேற்கு திசையில் பார்வையுண்டாகும். சந்திரன் துலாம் ராசிகும்ப ராசி வடமேற்கில் நோக்கமாகும். புதபகவான் கடகராசி வடக்குபார்வை செலுத்தும். வியாழபகவான் விருச்சிகம் மீனராசி வடகிழக்கில் நோக்கமாயிருக்கும். இதன் விபரம் அடியிற் காண்க. குறிப்பு: - கேது பகவான் எப்போதும் ராகுவுக்கு நேராக பார்வை செலுத்துவார்.
விசேஷ விபரம்
மேஷராசி சூரியன் கிழக்கு பார்வையாகும். தனுசுராசி சிம்மராசி சுக்கிரன் தென்கிழக்கு பார்வையாகும் ரிஷபராசி செவ்வாய் தெற்கு பார்வையாகும். கன்னி மகரராசி இராகு தென்மேற்கு பார்வையாகும். மிதுனராசி சனிபகவான் மேற்குதிசை பார்வையாகும். துலாம் கும்பராசி சந்திரன் வடமேற்கு பார்வையாகும். கடகராசி புதபகவான். வடக்குதிசை பார்வையாகும். விருச்சிகம் மீனராசி வியாழன் வடகிழக்கு பார்வையாகும்.
கிரகங்களால் நடக்கும் பலன் விபரம்
அன்புடனே நவக்கிர கங்களானோர் அவரவர்க்கிலாபந்தவா றேயமைந்த பன்னிரண்டுராசிகளில்வந்தால் ஜாதகர்க்கு பலன்விபரமெவ்விதமா யமையுமென்றால் முன்னாலும்வடபுறமும் மிகவும்நன்று முடியாதகாரியமெல்லாம் முடியும்பாரே பின்புறமும்இடதுபுறமும் கொடியதீது பிசகாமல்கஷ்டநஷ்ட மாகுந்தானே. 18
உரை: - நவக்கிரகங்கள் ஒன்பதுபேரும் பனிரெண்டு ராசியிலும் அவரவர்கள் கால அளவின்படி சஞ்சரிக்கும்போது முன்புறமும் வடபுறமும் மிகவும் நன்மையாகும் ஜாதகர்கள் எவ்விதமான காரியத்தையும் நிறைவேற்றி சகலபல னனுபவிப்பதார்களாம்.
Page 84
ஜோதிட கணிதாமிர்தம்
ஆனால், பின்புறமும், இடபுறமும் கொடிய துன்பமும், துயரமும், கஷ்டநஷ்டங்களும் நேரிட்டு கவலை யடையச்செய்தும். ஆனால் சுபக்கிரகங்கள் பார்வையானால் மத்திப பலனாயிருக்கும்
மாதசூன்ய விபரம்
சித்திரைஏகாதசி அஷ்டமிரோகணியும்கும்பம் சீரானவைகாசிதுவாதசி சித்திரைசுவாதிஉத்திராடம் அத்ததியேஆனிதிரயோதசி புனர்பூசம்ரிஷபமாகும் (மீனம் ஆடியில்சஷ்டிஅவிட்டம் மிதுனமாகும் புத்தியாய்கேள் ஆவணி அமாவாசை பூரணைபூராடம்மேஷம் புரட்டாசிசப்தமிசதயம் பூரட்டாதிரேவதிதனுசுகன்னி இத்ததியே கார்த்திகைபஞ்சமிகிர்த்திகை பூசம் மகம்துலாம் இசைந்தஐப்பசிநவமி பூரட்டா திவிருச்சிகமேயாகும். 19
உரை-சித்திரை மாதத்தில் அஷ்டமி ஏகாதசி ரோகணி கும்பம் சூனியமாகும். வைகாசி மாதத்தில் துவாதசி, சித்திரை, சுவாதி, உத்திராடம், மீனமும், ஆனிமாதத்தில் திரயோதசி புனர்பூசம் ரிஷபமும், ஆடிமாதத்தில் சஷ்டி அவிட்டம் மிதுன ராசியும், ஆவணிமாதத்தில் அமாவாசை பௌணர்மி பூராடம் மேஷமும், புரட்டாசி மாதத்தில் சப்தமி, சதயம், பூரட்டாதி, ரேவதி, தனுசு, கன்னியுமாகும். ஐப்பசி மாதத்தில் நவமி, பூரட்டாதி, விருச்சிகராசியுமாகும். கார்த்திகை மாதத்தில் பஞ்சமி, கிருத்திகை, பூசம், மகம், துலாம் இவ்விதமமைத்தால் சூனிய மாதமாகும்.
மாதசூன்ய விபரம்
அன்பானமார்கழிதுதிகை நவமிவிசாகம் அனுஷம் உத்திராட்டாதி தனுசுமாகாது தன்ணயமாந்தைமாதம் பிரதமைஆயில்யம் நவிலுந்திருவாதிரை அஸ்தம்கடகமாகா பன்னரியமாசிசதுர்த்தசி தசமிமூலம் பருத்திருவோண மகரம் ஆகாது தன்மையாய்பங்குனி சவுத்திபரணிகேட்டை தக்கபடிசிங்க லக்னமும்ஆாகாதே. 20
உரை-மார்கழிமாதம் துதியை, நவமி, விசாகம், அனுஷம், உத்திராட்டாதி, தனுசும் ஆகாது. தைமாதத்தில் பிரதமை, ஆயில்யம், திருவாதிரை, அஸ்தம் கடகமுமாகாது. மாசிமாதத்தில் சதுர்த்தசி, தசமி, மூலம், திருவோணம், மகரமுமாகாது. பங்குனி மாதத்தில் சவுத்தி, பரணி, கேட்டை, சிங்கமுமாகாது.
Page 85
கிழமைகளின் விசேஷம்
பருதியிலுத்தியோகம் மதியிதைவிதைக்க பகருகுஜன்போர்செய்ய புதன்வித்யாரம்பம் குருவிவாகஞ்செய்ய புகர்மயிர்கழிக்க குற்றமிலாசனியில் தவஞ்செய்வதற்கும் கருதியநல்லுத்தமமென்றே அவனியோர்கள் கண்டுணர்ந்தபலநடக்கு மெனமுன்னோர்கள் கருதியினிதுரைத்தவிதங் கவனித்தோர்ந்து சொல்லுவீர்ஜாதகர்க்கு பலனைத்தானே. 21
உரை :- ஞாயிற்றுக்கிழமையில் உத்தியோகஞ் செய்வதற்கும் திங்கட்கிழமையில் விதைவிதைக்கவும் உத்தமமாகும். செவ்வாய்க்கிழமையில் போர்செய்ய நன்மையாகும். புதன்கிழமையில் வித்யாரம்பஞ்செய்ய உத்தமமாகும். வியாழக்கிழமையில் விவாகஞ்செய்ய உத்தமமாகும். வெள்ளிக்கிழமையில் மயிர்கழிக்க உத்தமமாகும். சனிக்கிழமையில் தவஞ்செய்ய உத்தமமாகும்.
இதற்கு விவரம் ஞாயிற்றுக்கிழமையில் உத்தியோகஞ் செய்யவும் திங்கட்கிழமையில் விதைவிதைக்கவும் செவ்வாய்க்கிழமையில் போர் செய்வதற்கும் புதன்கிழமையில் வித்யாரம்பம் செய்வதற்கும் வியாழக்கிழமையில் விவாகஞ் செய்வதற்கும் வெள்ளிக்கிழமையில் மயிர்கழிப்பதற்கும் சனிக்கிழமையில் தவஞ்செய்வதற்கும் உத்தமாகும்.
கிழமைகளின் விசேஷம்
இவ்விதமேஒவ்வொரு கிழமைகட்கும் இசைந்தபடியே சுபகாரியங்கள்செய்ய எவ்விதமுந்தலமாகும் மாநிலத்தோர் எடுத்தகாரியமெல்லாம் ஜெயமேயாகும் ஒவ்வியேஎந்தெந்த காரியஞ்செய்தாலும் ஒற்றுமையாய் சகலகாரியமுந்நன்றாய் அவ்வவ்விதமான வாரந்தன்னில் ஆகுமென்றுமுன்னோர்சொல் வாக்கியமாமே. 22
உரை :- இந்த ஏழுவாரத்திலும் குறிப்பிட்டுச் சொன்னவை செய்தால் முடியுமென்று கவனிக்கவேண்டும்.
Page 86
வாரசூலை விபரம்
திங்களோடுசனி இரண்டுங் கிழக்கேயாகா தெற்குமுகம்போகவென்றால் வியாழமாகா அங்ஙனமேவடக்குமுகம் பிரயாணந்தான் அப்பனேசெவ்வாயும் புதனுமாகா தங்கிநின்றவிடமிருந்து மேற்கேபோகத் தம்பீயடாவெள்ளிரவி யாகாதாகா இங்கிவைகள்சிவனூர்கை சூலமாகும் ஏற்கநாள்போகவென்றால் சூலையீங்ஙலே. 23
உரை:- மனித வகுப்பார்கள் தமது வாசஸ்தானத்திலிருந்து மற்றொரு இடத்திற்குப் பிரயாணஞ் செய்வதென்றால், திங்கள் சனிக்கிழமையதினத்தில் கிழக்கு திசையிலும், வியாழக்கிழமையில் தெற்கு திசையிலும், செவ்வாய், புதன்கிழமைகளில் வடக்கு திசையிலும், வெள்ளிக்கிழமையிலும் ஞாயிற்றுக்கிழமையிலும் மேற்கு திசையிலும் வாரசூலையாயிருப்பதனால் போகலாகாது. அப்படி அவசியமாய்ப் போகவேண்டுமானால் அதற்கு விபரம் அடியிற் குறிப்பிட்டிருக்கிறோம் கவனிப்பீர்கள்.
வெண்பா
வடக்குதயஞ்சென்றதுகால் வாழ்கிழக்கோடுச்சி அடுக்குநமன்றிசைக்கோ அந்தி - கொடுகீழ் நடுராவிற்சென்றதுகால் நாள்பார்க்கவேண்டாங்காண் வடிவில்லாதென்றே மகிழ். 24
உரை:- வடக்கு திசையில் உதயத்திலும், கிழக்கு திசையில் உச்சிவேளையிலும், தெற்கு திசையில் அந்திப்பொழுதிலும் மேற்கு திசையில் நடுராத்திரியிலும் போனால் குற்றமில்லை. அதற்கிசைந்த விபரத்தை அடியிற் குறிப்பிட்டிருக்கின்றோம் கவனிப்பீர்கள்.
வாரசூலையின் பரிகாரம்
வாரம் | வாரசூலை | நாழிகை | சூலைபரிகாரம் ஞாயிறு | மேற்கு, வடமேற்கு | 12 | வெல்லம் திங்கள் | கிழக்கு, தென்மேற்கு | 8 | தயிர் செவ்வாய் | வடக்கு, வடமேற்கு | 12 | பால் புதன் | வடக்கு, வடகிழக்கு | 16 | பால் வியாழன் | தெற்கு, தென்கிழக்கு | 20 | தைலம் வெள்ளி | மேற்கு, தென்மேற்கு | 12 | வெல்லம் சனி | கிழக்கு, தென்கிழக்கு | 9 | தயிர்
Page 87
விருந்தூண்பதற்கு உரியநாள்
குறிப்பு:—மேற்குறிப்பித்த நாழிகை வரையிலும் வாரசூலை தோஷமாம். அவசியமாய்ப் பிரயாணஞ் செய்யவேண்டுமானால் மேற்கண்ட நாழிகைக்குமேல் பிரயாணஞ் செய்யலாம்.
விருந்தூண்பதற்கு உரியநாள் வெண்பா
வெள்ளிசனிதிங்கள் விருந்துண்ணபுதனுமாம் கன்னவியாழங் கசப்பிக்கும்—கொள்ளுகதிர் தீராப்பகைகாட்டும் செவ்வாய்தனக்குமே வாராப்பகையும் வரும். 25
உரை:—பந்து ஜனங்களிடத்திலும், உற்றார், உறவின் முறையார், சுற்றத்தாரிடத்திலும் புதிதாய் விருந்துண்பதற்குப் போனால் வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, திங்கட்கிழமையாகிய சுபதினங்களில் விருந்து போஜனம் புசித்தால் சதாகாலம் உடலும் உயிரும்போல நேசவிஸ்வாசமாயிருப்பதற்காகும். வியாழக்கிழமையதினத்தில் விருந்து புசித்தால் ஒருவர்க்கொருவர் மனவெறுப்பாகி விரோதமாயிருப்பார்கள். ஞாயிற்றுக்கிழமையில் விருந்து புசித்தால் சதாகாலமும் தீராத பகையாயிருக்கும். செவ்வாய்க்கிழமையில் விருந்து புசித்தால் பலவிதமான பகையும், எப்போதுமில்லாத வீண் வம்பு வழக்குகளெல்லாம் நேரிட்டு கொடுமையும் துன்பமுமான குரூரபகை நேரிடும்.
ஆகாதநாள் ஆகும்நாளில் விசேஷம்
ஆகாதநாள் ஆகும்நாளில் விசேஷம் விருத்தம்
கற்பினாள் மூன்றிலெண்ணை கடிமணஞ்சிராத்தம்போக்கு வற்புறுபிணிமருந்து மயிர்வினைமறுவலாகா விற்பகலுழல்விற்றல் விருந்துண்ணல்வழங்கல்செய்தல் பொற்பணிகுடமாடை புனைதலும்புகலுமாதே. 26
உரை:—ஜாதகன் பிறந்த ஜன்மவாரம், ஜன்மதிதி, ஜன்ம நக்ஷத்திரங்களில் எண்ணெய் ஸ்நானஞ்செய்தலும், கலியாணஞ் செய்வதும், சிரார்த்தம் கொடுக்கவும் ஆகாது. வியாதி வந்தபோது மருந்து புசிக்கவுமாகாது. க்ஷவரம் செய்துக்கொள்ளவுமாகாது. மனையாளுடன் சேரவுமாகாது ஆனால் வியாபாரஞ் செய்வதற்கும், பூமியில் உழுது விதை விதைப்பதற்கும் விருந்து புசிப்பதற்கும் உத்தமமாகும். தானதர்மஞ் செய்வதற்கும், ஆடை ஆபரணம் அணிவதற்கும் மிகவும் உத்தமமாகும்.
Page 88
ஜோதிட கணிதாமிர்தம் - விருத்தம்
இத்தினமயனிலாடோர் இகத்தினில்துன்பமுற்று எத்ததியுங்கஷ்டத்தால் ஏங்கியேதுயரடைந்து சத்தமில்லாமல்தானும் சுகமின்றிகவலையாலே சித்தமுங்கலங்கிநாட்டில் திகைத்தலைந்திடுவர்தானே. 27
உரை - மனிதவருப்பார் ஆகாத தினத்தில் ஏதேனும் ஓர் காரியஞ்செய்தால், அதனால் பலவித துன்பமும் துயரமுமடைந்து கஷ்ட நஷ்டமடைவார்கள். ஆகையால், அவரவர்கள் பிறந்த ஜன்ம நக்ஷத்திரம், ஜன்மதிதி, ஜன்மவாரம் முதலானவைகளை ஞாபகமாய் மனதில் நினைத்துக் கொண்டு மறவாமலிருக்க வேண்டும்.
கோடிவஸ்திர முடுத்தும் நாள்
காரியிலழுக்கதாகும் கதிரவரிடைகாட்டும் மாரியில்நனையுந்திங்கள் வன்புதன்கந்தையாகும் வீசியில்லைசெவ்வாய் வெள்ளியில்மடந்தைசேர்வன் கூரியவியாழன்றன்னாம் குலவியஆடைசாத்த. 28
உரை - சனிக்கிழமையில் கோடிவஸ்திர முடுத்தினால் அழுக்காகும், ஞாயிற்றுக்கிழமையில் உடுத்தினால் துன்பம்நேரிடும். திங்கட்கிழமையில் அணிந்தால் சதாகாலமும் ஜலத்தில் நனைத்துக் கொண்டேயிருக்கும். புதன்கிழமையில் புதியவஸ்திரமுடுத்தினால் சீக்கிரத்தில் கிழிந்து கந்தையாகும். செவ்வாய்க்கிழமையில் அணிந்தால் மனவிசாரமாகவே திதியாயிருக்கும். வெள்ளிக்கிழமையில் புதிய வஸ்திரமணிந்தால் இலக்ஷ்மி கடாக்ஷமுண்டாகும். வியாழக்கிழமை தினத்தில் கோடி வஸ்திரமுடுத்தினால் சதாகாலமும் மனமகிழ்வா யிருப்பதற்காகும்படியான பலவித நன்மையுமுண்டாகும்.
புதிய வீட்டில் குடித்தனம் போவதற்கு ஆகாத மாதங்களின் விபரம்
ஆடித்தினனில்ராவணன் பட்டதும் ஆலமேய்பெறும் பாரதமார்கழி வீடிட்டான்புரட்டாசி இரணியன் மேவிசநந்நஞ்சுண்டது மாசியில் படிக்காமனெரிந்தது பங்குனி பார்க்குளேகினன்பாவலி ஆணியில் வீட்டில்லங்குடிபுக வேண்டினோர் ஓடிட்டேஇரந்துண்ப ருலகிலே. 29
உரை- இராவண சம்மாரமானது ஆடி மாதம், பாரதம் போர் நடந்தது மார்கழிமாதம், இரணியசம்மாரமானது புரட்டாசி
Page 89
மாதம், பரமசிவம் ஆலகாலவிஷம் புசித்தது மாசிமாதம், மன்மதனை சிவபெருமான் நெற்றிக்கண்ணா லெரித்தது பங்குனி மாதம், மகாபலிச் சக்கரவர்த்தி தனது இராஜாங்கத்தை இழந்து பாதாளத்தில் போனது ஆனிமாத மாகையால் இந்த ஆறுமாதங்களில் எந்த மாதத்திலாகிலும் இருக்கும் ஸ்தானத்தைவிட்டுத்து மற்றோரிடத்திலிருக்கும் வீட்டில் குடித்தனம் போவோர் துன்பமும் துயரமும், கஷ்டநஷ்டமும் கவலையுமனுபவித்து கலங்கித்துடித்து திருவோடேந்தி பிக்ஷை யெடுக்கும் யாசகராகிய வறுமையானரைப்போ லலைந்து திரிவார்கள்.
சுந்தரஞ்சேர் ரூபலாவண்யமாக சொர்ணபணிபூஷணாலங்காரம்விளங்கும் பந்துவென்றும்சாத்குணம் தாயளம்நிறைந்த பணக்காரபிரபுவெனும் தனவந்தரென்றும் எந்தவிதமானாலும் திருமணப்பொருத்தம் ஏற்றவிதமிருவருக்குஞ் சரியாயமைந்தால் மைந்தர்பாக்கியத்துடனே பிரபுக்களாக மாநிலத்தில்வாழ்ந்திருப்பா ரறிகுவீரே. 30
உரை:--உலகில் பிறந்த ஆண்களுக்கும் பெண்களுக்கும் கலியாணஞ் செய்வதாயிருந்தால் அழகாயிருந்தாலும் தனவந்தராயிருந்தாலும் நற்குணம் நற்செய்கை யோடிருந்தாலும் சொந்த பந்துக்களாயிருந்தாலும் அவ் விருதிறத்தாருடைய இராசி பொருத்தம் சரியா யமைந்திராமற்போனால் கஷ்டமும் கவலையும் பொருந்தி துன்பமனுபவித்து பிரிந்துபோவார்கள். ஆனால் அவ்விருதிறத்தாரின் திருமணப் பொருத்தம் சரியாய்ப் பார்த்து ஒருவர்க்கொருவர் சம்பந்தமான பொருத்தமாயிருந்தால் தான் தன தான்யம் பசுபுத்ர லாபத்துடன் பிரபுவாக பூர்ணாயுஸாக வாழ்ந்திருப்பார்கள். இதன் விபரம் அடியில் குறிப்பிட்டிருக்கின்றோம் கவனிப்பீர்கள்.
மணப்பொருத்தம் பார்ப்பதற்கு நாமநக்ஷத்திர பொருத்தங்கள் கவனிப்பது
சதிScrollகள்ஒற்றுமையாய் வாழ்வதற்கு சார்ந்தலக்ஷணப்பொருத்தம் பார்த்தன்பாக அதிகநலமாகவே கவனித்தோர்ந்து ஆண்பெண்ணாக்கினியுடனே மணஞ்செய்தாலே நிதியிருந்துதனதான்ய புத்ரலாபம் நினைத்தபடியேபெற்று சுகமாய்வாழ்வார் மதியுடனேகவனித்து ஜாதகர்க்கு மாணியுடன் புகழ்விர்ஜோ திடவல்லோரே. 31
Page 90
ஜோதிட கணிதாமிர்தம் - நாம நக்ஷத்திரங்கள்
உரை - உலகத்தில் பிறந்த மனிதவகுப்பார் தமது குல விருத்தியாவதற்கு தமது புத்திரர்களுக்கு மணஞ்செய்வதாயிருந்தால் உத்தம வம்சத்தினராகிய நற்குணமமைந்த பெற்றோர்களீன்ற பெண்ணைத் தேடிப்பார்த்து பிள்ளைக்கும் பெண்ணுக்கும் நாம நக்ஷத்திரம், கணம், மிருகம், விருக்ஷம், பக்ஷி முதலாகிய பொருத்தங்களெல்லாம் சரியாய்ப் பார்த்து சுபலக்கினத்தில் மணஞ் செய்தால் அவர்கள் தனதான்ய சத் புத்ரலாபத்துடனே வாழ்ந்திருப்பார்கள். இதன் விபரம் அடியிற் காண்க.
நாம நக்ஷத்திரங்கள் அட்டவணை
நக்ஷத்திரம் | நக்ஷத்திர நாம எழுத்து | கணம் | மிருகம் | விருக்ஷம் | பக்ஷி அசுவினி | சு-சே-சோ-ல | தேவம் | ஆண் குதிரை | * எட்டி | இராசாளி பரணி | லி-லு-லே-லோ | மானுஷம் | ஆண் யானை | * நெல்லி | காக்கை கிருத்திகை | அ-இ-உ-எ | ராக்ஷஸ | பெண் ஆடு | அத்தி | மயில் ரோகணி | ஒ-வ-வி-வு | மானுஷம் | ஆண் நாகம் | நாவல் | ஆந்தை மிருகசீரிடம் | வே-வோ-கா-கி | தேவம் | பெண் சாரை | * கருங்காலி | கோழி திருவாதிரை | கு-க-ங-ச | மானுஷம் | ஆண் நாய் | * செங்காலி | அன்றில் புனர்பூசம் | கெ-கோ-ஹ-ஹி | தேவம் | பெண் பூனை | * மூங்கில் | அன்னம் பூசம் | ஹு-ஹே-ஹோ-ட | தேவம் | ஆண் ஆடு | அரசு | நீர்க்காகம் ஆயில்யம் | டி-டு-டே-டொ | ராக்ஷஸ | ஆண் பூனை | புன்னை | சிச்சிலி மகம் | ம-மி-மு-மே | ராக்ஷஸ | ஆண் எலி | ஆல் | ஆண்கழுகு பூரம் | மோ-ட-டி-டு | மானுஷம் | பெண் புலி | பலா | பெண்கழுகு உத்திரம் | டே-டோ-ப-பி | மானுஷம் | ஆண் எருது | அலரி | கிளுவை அஸ்தம் | பூ-ஷ-ண-ட | தேவம் | பெண் எருமை | ஆத்தி | பருந்து சித்திரை | பெ-பொ-ரா-ரி | ராக்ஷஸ | ஆண் புலி | * வில்வம் | மரங்கொத்தி சுவாதி | ரு-ரே-ரோ-தா | தேவம் | ஆண் எருது | * மருத | தேனீ விசாகம் | தி-து-தே-தோ | ராக்ஷஸ | பெண் புலி | * விளா | செம்பூத்து அனுஷம் | ந-நி-நு-நே | தேவம் | பெண் மான் | * மகிழ் | வானம் கேட்டை | நொ-ய-யி-யு | ராக்ஷஸ | ஆண் மான் | பராய் | சக்கரவாகம் மூலம் | யே-யோ-பா-பி | ராக்ஷஸ | பெண் நாய் | மரா | செம்போத்து பூராடம் | பூ-த-ப-ட | மானுஷம் | ஆண் குரங்கு | வஞ்சி | பேரண்டம் உத்திராடம் | பே-போ-ஜ-ஜி | மானுஷம் | வட்டுப் பசு | பலா | வலியன் திருவோணம் | ஜூ-ஜே-ஜோ-கா | தேவம் | பெண் குரங்கு | எருக்கு | நாரை அவிட்டம் | க-கி-கு-கெ | ராக்ஷஸ | பெண் சிங்கம் | * வன்னி | பொன்வண்டு சதயம் | கோ-ஸ-ஸி-ஸு | ராக்ஷஸ | பெண் குதிரை | * கடம்பு | அண்டங்காக்கை பூரட்டாதி | ஸே-ஸோ-த-தி | மானுஷம் | ஆண் சிங்கம் | தேமா | உள்ளான் உத்திரட்டாதி | து-ஸ்ரீ-ச-ய | மானுஷம் | பெண் பசு | * வேம்பு | கோட்டான் ரேவதி | தே-தோ-ச-சி | தேவம் | பெண் யானை | இலுப்பை | வல்லூறு
- இக்குறியுள்ளவை பாலில்லாத விருக்ஷங்கள்.
Page 91
இராசிச்சக்கரம் போடும் விபரம்
எண்சீரடி விருத்தம்
நலமுடனே மானிடர்கள் பிறக்கும்போது நக்ஷத்ரமின்னதென கவனித்தோர்ந்து நிலையானபனிரெண்டு ராசிதன்னில் நிற்கின்ற சந்திரனை குறித்துணர்ந்து பலபலனை ஜாதகர்க்குச் சொல்லும்போது பகருமற்றராசிகளில் கிரகங்கள்நின்ற நிலையறிந்து பலனுரைக்கும் விபரந்தன்னை நீணிலத்தில் ஜாதகர்க்குப் புகலுவீரே. 32
உரை:- உலகத்தில் பிறந்த மனிதவகுப்பினர் பூமியில் பிறக்கும்போது பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டிருக்கும் நக்ஷத்திரங்களில் சந்திரன் நிற்கும் நிலையே இராசியாகும். இந்த இராசிகள் பனிரெண்டு இவைகளின் பெயர் மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிங்கம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனமென்பதுதான். இந்த ராசியில் அந்தந்த சமயத்தில் நடக்கும் கிரகங்களின் பலனை ஆராய்ந்துணர்ந்து சொல்வதற்கிசைந்த விபரத்தை அடியில் குறிப்பிட்டிருப்பதை கவனிப்பீர்கள்.
இராசிச் சக்கரம்
இவ்விதமாக 27-நட்சத்திரங்களையும் 12-ராசியாகப் பிரித்து இராசிச் சக்கரம் போட வேண்டியது.
Page 92
ஜோதிட கணிதாமிர்தம் - நவக்கிரங்களின் சுப அசுப பலன் விபரம்
ஐந்தாமிடத்ததிப ரானோருந்தான் ஆனஒன்பதா மிடத்ததிபரானோர் எந்தகிரகங்களானாலும் நல்ல இசைந்தபலன்தருவர்க ளென்றிட்டாலும் அந்தமாய்மூன்றாறெட் டுடையோரானோர் அசுப்பலன்தருவார்கள் புத்திநாதர் தந்திடுவார் நற்பலனை சுபர் சேர்க்கைபார்வை தான்பெற்றால்நலமெனவே சாற்றுவீரே. 33
உரை:-ஜனன லக்கினத்திற்கு ஐந்தாமிடத்ததிபர்கள் எந்த கிரகமாயிருந்தாலும் அவர்கள் திசையில் நல்ல சுப பலனையே தருவார்கள். ஆனால் மூன்றாமிடத்ததிபராகவும், ஆறுமிடம், எட்டாமிடத்ததிபராகவிருந்தால் பலவிதமாகிய துன்ப பலனைத் தந்து கஷ்டநஷ்டமடையச் செய்வார்கள். புத்திநாதர்கள் சுபசேர்க்கை பார்வைபெற்றிருந்தால் அவர்களிருக்குமவரையிலும் சுபபலனையே தந்து நன்மையடையச் செய்வார்கள்.
கிரகங்களின் கேந்திரகோண விபரம்
பருதிமதிஜுஜனணியும் ராகு கேது பகரும்லக்னநாலேழும் பத்தாம் கேந்திரம் இருந்தாலேசுப்பலனாய் வெகுலாபந்தான் இசைந்தபடிதருவார்கள் கோணமாகா குருபுதனும்மதிசுக்ரன் கோணத்துற்றால் கொடுப்பார் நற்பலனையே ஜாதகர்க்கு பொருள்மிகவேதந்திடுவர் கேந்திரமுற்றால் பொல்லாததுன்பபலன் தருவாரே. 34
உரை:-சூரியன், சந்திரன், செவ்வாய், சனி, இராகு, கேது இவர்களனைவரும் லக்கினம் நாலு, ஏழு, பத்து இந்த ஸ்தானங்களில் கேந்திரம் பெற்றிருந்தால் சுப பலனாக வெகு லாபங்களை தந்து சுக பாக்கியத்தை யனுபவிக்கும்படியான தனதான்ய சம்பத்து வெகுவாய்த் தருவார்கள். இவர்கள் கோண திரிகோணத்திலிருந்தால் கஷ்டபலனைத் தருவார்கள். குரு, புதன், சந்திரன், சுக்கிரன் இவர்கள் கோணம் திரிகோணத்திலிருந்தால் நல்ல சுப பலனைத்தந்து வித்யா விருத்தியுடன் உத்தியோக லாபமும், வியாபார லாபமும் தந்து சுகஜீவியா யிருக்கச் செய்வார்கள். ஆனால், இந்த சுபக்கிரகங்கள் நான்கு, ஏழு, பத்து ஸ்தானங்களிலிருந்தால் கேந்திர தோஷத்தால் நல்ல
Page 93
அதன் விபரம்
பலனைக் கொடுக்கமாட்டார்கள். மத்திய பலனையே தருவார்கள் ஆனால் நவக்கிரகங்க ளொன்பதுபேரும் ஒருவர்க்கொருவர் பிரபலமாவார்கள்.
அதன் விபரம் ஐந்தாமிடத்ததிபதிக்கு 9-மிடத்ததிபதி பிரபலன் இலக்கினாதிபதிக்கு 4-மிடத்ததிபதி பிரபலன். அவனுக்கு 7-மிடத்ததிபதி பிரபலன். அவனுக்கு 10-மிடத்ததிபதி பிரபலன். 8-மிடத்ததிபதிக்கு 9-மிடத்ததிபதி பிரபலன். அவனுக்கு 11-மிடத்ததிபதி பிரபலன். இவைகளை விவரமாய்க் கவனித்து பலன் சொன்னால் சரியாயமைந்திருக்கும்.
தன விரயஸ்தானாதிபதிகளின் விபரம்
தனவிரயஸ்தானாதி பதிகளானோர் தங்களுடன் சேர்ந்த கிரகங்கட்கேற்ற இனமான பலனை கொடுப்பார்பின்னும் இலக்கினத்தினிருபுறமும் சுபர்சேர்ந்தாலே தனதான்யசம்பத்து மிகவேதந்து தாரணியில் வெகுமேன்மை யடையச்செய்வார் கனமுடனே யிருபுறமும் சனிசேய்பருதியுற்றால் கஷ்டநஷ்டமடைந்திடவே செய்குவாரே. 35
உரை:- இலக்கினத்திற்கு தனவிரய ஸ்தானாதிபதிகள் தங்களுடன் சேர்ந்த கிரகங்கள் கொடுக்கும்படியான பலனைத் தருவார்கள். அன்றியும், இலக்கினத்திற்கு முன்னும் பின்னுமாகிய இரண்டு பக்கத்திலும் சுபக்கிரகங்களிருந்தால் நல்ல யோகபலனைத் தருவார்கள். சனி, சூரியன், செவ்வாய், ராகு, கேது இவர்கள் விரயஸ்தானத்திலிருந்தால் துன்ப பலனைத் தருவார்கள்.
அஷ்டம ஸ்தானாதிபதியின் விபரம்
இலக்கினத்திற்கஷ்டமத்தோன் ஒன்பதுற்றால் இனியில்லா துன்பபலன் வெகுவாய்தந்து கலக்கமுடன் மனக்கவலை யடையச்செய்து கஷ்டநஷ்டம்மய்திடயே செய்குவார்கள் பலமாகவுலக்கினத்தோன் உதயமுற்றால் பராக்ரமுடன் உத்யோகமும் வர்த்தகமும்செய்து நலமுடனே பொருள் சேர்த்து தனவானாக நாற்றிசையும் புகழ்ந்திடவே வாழ்வாரே. 36
உரை:- இலக்கினத்திற்கு அஷ்டமத்தோன் ஒன்பதாமிடத்திலிருந்தால், தானிருந்த பாக்கியஸ்தானத்திற்கு
Page 94
ஜோதிட கணிதாமிர்தம்
விரயஸ்தானாதிபதியான பாவத்தினால் பலவிதமாகிய துன்ப பலனையும் கஷ்டத்தையுங் கொடுத்து கலங்கும்படி செய்து பந்து மித்திரர்கட்கும் பகையாகி பலராலும் பரித்துப் பரிகசிக்கும்படியான துயரமெல்லாம் அனுபவிக்கச் செய்வர். அந்த அஷ்டமாதிபதியே இலக்கினத்திலிருந்தால் மாறுபட்டு இன்ப பலனைத் தந்து வித்தியாலாபம், உத்தியோக மேன்மை, வியாபார விருத்தியாலும் கனலாபங் கிடைக்கும்படி செய்து பந்துமித்திரர், உற்றார், உறவின்முறையாரனைவரும் புகழ்ந்துரைக்கும்படியான கீர்த்திப்பிரகாசமாய் ஜீவித்துக்கொண்டிருப்பார்கள்.
கிரகங்களின் கேந்திராதிபத்திய தோஷங்களின் விபரம்
குருசுக்கிரன்கேந்திராதி பதிகளானால் குருமாய்க்கொல்வதிலே சிரேஷ்டமர்தா தருணமிவர் ஆயுள் விரயஸ்தானமாகும் தகுந்த இரண்டேழிடத்தில் நிற்பாராகில் வருகுமப்பாபிணியுடனே மரணமென்று வழுத்துவா யஜாதகர்க்குப் பலனாராய்ந்து பொருள்தெரிந்துரைகக்குமுன் திசையம்புத்தி பொருந்தவேகணித்துரைப்பாய் விரிவாய்த்தானே. 37
உரை:—குருபகவானும், சுக்கிரபகவானும் கேந்திராதிபதிகளாயிருந்து இரண்டு, ஏழு ஆகிய இந்த மாரகஸ்தானங்களிலிருந்தால் அவர்கள் திசாபுத்தியில் வறுமை, பிணி, மாரகபலன் முதலான கொடிய பலனைத் தருவார்கள். ஆனால் மற்ற கிரகங்கள் நின்ற ஸ்தானங்களையும் திசாபுத்திநாதர் வலுவையும் பார்த்து பலன் சொல்லவேண்டும்.
நவக்கிரகங்களின் குண விசேஷம்
புகர்குருவுக்குப்பின்னர் பிரபலன்மாலாகும் புதன்பின்சந்திரன்பலவான் ஆயுள்தானம் புகலுகின்ற ஆதிபத்தியத்தால்உண்டான பெரியபாவம்ரவிமதிக்கு சேராதப்பா சகஜமாய்மற்ற கிரகங்கள்தன்னை சாருமென்பதாயிற்று கேந்திராதிபத்யம் நிகழுமிந்நால்வரையும் சேராததாகும் நீணிலத்திலிவர்விபரம் கவனிப்பீரே. 38
உரை:—குருபகவானுக்கும், சுக்கிரபகவானுக்கும் பிறகு அந்த கேந்திராதிபதி தோஷத்தில் புதன் பலவானாகும். புத
Page 95
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
னுக்குப் பிறகு அவர் தந்தையாகிய சந்திரன் பலவானாகும். ஆயுள் ஸ்தானாதிபத்தியத்தா லுண்டான பெரிதாகிய பாவம் சந்திர சூரியரைச்சேராது, மற்ற கிரகங்களைச்சாரும். கேந்திராதி பத்திய தோஷமுள்ள நால்வரையும் சேர்த்துச் சொல்லாதபடி யால் குருதோஷத்தில் சுக்கிரதோஷமும், சுக்கிரதோஷத்தில் புததோஷமும், புததோஷத்தில் சந்திரதோஷமும் குறையுமென் பது எண்றாலும், ஆயுள் ஸ்தானாதிபதிகளைப்போல சூரிய சந்திரர் கட்கு தோஷமில்லை யென்றுரைப்பாய்.
செவ்வாய் பகவான் குண விசேஷ விபரம்
அன்புடையகுஜபகவான் தனக்குவாய்ந்த ஆதிபத்யத்தால்தசம கேந்திராதிபத்யம் நன்மைதிரிகோணாதி பத்தியத்தாலான நலமிகுந்தசமகேந்திராதிபதி சுகந்தராது இன்னவிதமிர்தன்பலனை நன்காராய்ந்து இசைந்தபடி பலனுரைப்பீர் ஜாதகர்க்கே தன்மையுடனேபலநூ லாராய்ச்சிசெய்து தாரணியில்வாழ்கின்ற ஜோதிடவல்லோரே. 39
உரை:—அங்காரகபகவான் ஆதிபத்தியத்தால் தசமகேந்திராதிபத்தியத்தாலுண்டான நன்மையான சுபம் திரிகோணாதிபத்தியத்தி லுண்டானதால் மேன்மைபெறச் செய்யும். தசம கேந்திராதிபத்தியத்தினாலே சுகத்தைக் கொடுக்காது. ஆகையால், ஜோதிட நூலறிதவல்லோர்கள் பல நூலாராய்ச்சிசெய்து ஜாதகர்க்கு கிரகங்களின் நிலையறிந்து பலன் சொல்லவேண்டும்.
இராகு கேதுக்களின் இக்ஷண விபரம்
இனிதான ராகுகேதுக்களுக்கு இருப்பிடமாம்சூயக்ஷேத்ர மில்லாFrameலே கனிவுடனே எத்தானந் திருந்திட்டாலும் கலக்கமிலாதவ்வீட்டின் பலன்கொடுப்பார் மணம்போலெக்கிரகத்தோ டவர்சேர்ந்தாலும் மாஷிமையாய் தந்தக் கிரகங்கொடுக்கும் வினயமுள்ளசுபஅசுப பலன்கள்தன்னை விரும்பியேராகுகேது தருவார்தானே. 40
உரை:—இராகு கேதுக்களுக்கு பனிரெண்டு ராசியிலும் சொந்த ஸ்தானமில்லாதபடியால் அந்தந்த சமயத்தில் எந்த ஸ்தானத்திலிருக்கின்றாரோ அந்த ஸ்தானபலனும், எந்தக்
Page 96
ஜோதிட கணிதாமிர்தம்
கிரகங்களுடன் சேர்ந்தாரோ அந்த கிரகங்கள் கொடுக்கும்படியான பலனும் தாமே விருப்பமாய் சுப அசுப பலனுக்கிசைந்த கஷ்ட சுகத்தை ஜாதகரை அனுபவிக்கச் செய்வார்கள்.
நவக்கிரகங்களின் பொதுவான சுபயோக பலன்
கேந்திராதிபதித்ரி கோணாதிபதியானோர்கள் கெடுதிசெய்யுமூன்றெட்டாறுந் துடையோரைச்சேரா சாந்தமுடன்தங்கள் தங்களுக்குமிசைந்து [மல் சம்பந்தமுற்றோருடன் வேறோரிடத்தமர்ந்து ஏந்தியதோஷமில்லாமல் சேரப்பார்க்க ஏற்றபலந்தருவார்கள் சுபரேயானால் வேந்தனைப்போலிருந்திடவே சுபயோகத்தை விருப்பமுடன்தருவார்கள் ஜாதகர்க்கே. 41
உரை:--ஜனன லக்கினத்திற்கு கேந்திராதிபதியானவர் கொடுமை செய்யும் ஸ்தானாதிபதிகளாகிய மூன்று, ஆறு, எட்டா மிடத்ததிபதிகளுடன் சேராமல் அவரவர்க்கிசைந்த ஸ்தானத்தில் அன்புடன் சம்பந்தமா யிருப்பவருடன் சேர்ந்து வேறோரிடத்திலிருந்தாலும், கேந்திர தோஷமில்லாத கிரகங்களின் சம்பந்தமானாலும் பார்வையுற்றாலும் சுப பலனையே கொடுப்பார்கள். ஆனால், குரு, சுக்கிரன், புதனாயிருந்து ஆட்சி உச்சஸ்தானத்திலிருந்தால் இராஜயோகபலனை அனுபவிக்கச் செய்வார்கள்.
ஜாதகர்க்கமைந்த இராஜயோக பலன் விபரம்
தசமகேந்திராதிபதியுடன் திரிகோணாதிபதியுமாக தங்களுடன்சம்பந்த முற்றஅந்த குஜன்சனியுஞ்சூரியனும் சேர்ந்திட்டாலும் குற்றமில்லாமல் ராஜயோகங்கண்டு புஜபலமுங்கீர்த்தியும் பெருகச்செய்து பொன்பொருளுமிகத்தந்து பூலோகத்தில் விஜயமுடன் கீர்த்திவானாயிருக்க விருப்பமுடன்சுபபலனைத் தருவாரே. 42
உரை:--தசம கேந்திராதிபதியுடனே திரிகோணாதிபதியும் சேர்ந்தாலும், சனி, சூரியன், செவ்வாய் பகவானுடனே சேர்ந்தாலும் குற்றமில்லாத இராஜயோகபலனை அனுபவிக்கும்படியான சாமர்த்தியமும் கீர்த்தியும் பொருந்தியிருக்கும்படியான நன்மையும், பொன் பொருள் பூஸ்திதி யனைத்தும் பெருகும்படியான சமர்த்தும் வித்யாபிவிருத்தி உத்தியோக மேன்மையும் வியாபார லாபமும் விமரிசையாய் நடக்கும்படியான சுபபலனைத் தருவார்கள்.
Page 97
தரும கர்மாதிபதியின் விபரம்
ஒன்பதாமிடத் ததிபனுடனேயந்த ஓதம்பத்தாமிடத்ததிபன் சேர்ந்தாலும் அன்பாகமற்றோ ரிடத்துற்றாலும் அவரவர்க்கிசைந்த விதமாகத்தான் நன்மையெனும்சுப பலனும் ராஜயோகம் நாடியேதருவார்க ளினிதாய்தானும் இந்தபலன் தந்துதவி வியாபாரத்தால் இனியலாபந்தருவார் கவனிப்பீரே. 48
உரை:- ஒன்பதாமிடத்ததிபதியும் பத்தாமிடத்ததிபதியுமான தர்மகர்மாதிபதிகள் ஒருவர்க் கொருவருடன் சம்பந்தமானாலும் பார்வையெற்றாலும் நமக்கு அன்னியரான ஸ்தானத்திலிருந்தாலும் சதாகாலமும் சுகஜீவியாய் வாழ்ந்திருக்கச் செய்வார். தனதான்ய சம்பத்துடன் யோகபலனை அனுபவிக்கும்படியான இராஜயோகத்தையும் அனுபவிக்கும்படியாய் செய்வார்கள்.
திரிகோணாதிபதியின் இராஜயோக விபரம்
அன்புடனே நவக்கிரக மெவரானாலும் அவர்களுக்குத் திரிகோணாதிபத்யம் தன்மையுடன்வந்தாலே அவர்களோடு சார்ந்திருந்தகிரகங்கள் தசமகேந்த்ரம் இன்புடனேபெற்றினா லவராய்ச்சேர்ந்தால் இராஜயோகம்தந்து யெந்தநாளும் நன்மையேயடையச்செய் வார்களென்று நவின்றிடுவாய்ஜாதகர்க்கு விளங்கத்தானே. 44
உரை:- நவக்கிரக தேவர்கள் யாராயிருந்தாலும் சரியே, திரிகோணாதிபத்யம் வந்தால் அவர்களுடனே சம்பந்தமான தசமகேந்திராதிபதிகளுக்குண்டாகிய சுபபலனைத் தந்து தன தான்ய பசு புத்ரலாபர், காணி பூமி யனைத்தும் பொருந்திய இராஜயோகத்தை யனுபவிக்கும்படியான நன்மையான சுகத்தைத் தருவார்கள்.
நீசநாதர் கொடுக்கும் இராஜயோகம்
இனிதான நவக்கிரக மெவரானாலும் இசைந்தநட்பாஷிடச்சத் தனிலிருக்கும் கனிவுடனேதமதுதிசை தனில்கொடுக்கும் காணியிலும்நற்பலனே அடுத்துவந்த
Page 98
ஜோதிட கணிதாமிர்தம்
நலியானதிசையிலுமே இராஜயோகம் தருவர்களிப்படியே ஜாதகர்க்கு இனிதுடனேநடக்குமென் றெந்தநாளும் இயம்புவீர்ஜோதிடநூ லாராய்ந் தன்பாய். 45
உரை:—சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்ரன், சனி, இராகு, கேது வென்னும் ஒன்பது கிரகங்களில் எவர்களானாலும் சரியே துவாதச லக்கினத்தில் அவரவர்க் கிசைந்த ஆட்சி, நட்பு உச்சஸ்தானங்களிலிருந்து அவர்கள் திசையில் நல்ல பலனாகிய வித்யாபிலிருத்தி, உத்யோக மேன்மை, வியாபார லாபமும் தந்து இராஜயோகத்தை அனுபவிக்கும்படி செய்தால் அவர்களுக்கு பின்னால் வரும் திசையிலும் அந்த இராஜயோகத்திற்குச் சமானமான சுபபலனையே தந்து மேன்மையடையச் செய்வார்கள்.
நவக்கிரக திசையில் புத்திநாதர் கொடுக்கும் பலன்
அன்புடையநவக்கிரக மெவரானாலும் அவரவர்கள் சுபஸ்தானந்தனிலிருந்து இன்புடனேயோகபலந் தரும்போது இசைந்தபுத்திவரும்போதும் அவர்கட்கேற்ற நன்மையுள்ளசுபபலனைத் தருகுவார்கள் நற்பலனாய்வியாபார உத்யோகத்தால் பொன்பொருளும்பூஸ்திதியும் மிகவேபெற்று புகழ்விளங்கிகீர்த்தியுடன் ஜீவிப்பாரே. 46
உரை:—நவக்கிரக தேவர்களெவரானாலும் அவரவர்கள் தமது காருண்யத்திற் கிசைந்தபடியே நல்ல ஸ்தானங்களிலிருந்தால் ஒவ்வொரு திசையிலும் வரும் தமது புத்திகளிலும் நல்ல யோகபலனைத் தந்து இறங்க விடாமல் ஏற்றமாகவே மென் மேலும் கீர்த்தியாயிருந்து சுகலாபத்தை யனுபவிக்கும்படியாய்ச் செய்து, இராஜ யோகத்தை தருவார்கள்.
இராகு கேதுக்களாலுண்டாகும் இராஜயோகம்
சாந்தமுடன் இராகுகேதுக்களானோர் சம்பந்தமுற்றிருக்கும் கிரகங்கள்தான் கேந்திரத்திலாயினும் திரிகோணத்தேனும் கெம்பீரமாயிருந்தால் அவரோடுற்ற ஏந்தியநல்லயோகபலன் இராகுகேது இசைந்தபடியேதந் துதவிநாளும்
Page 99
வேந்தனைப்போல் ராஜாதிகாரத்தோடு விளங்கிடவேசெய்வார்கள் கவனிப்பீரே. 47
உரை:--இராகு கேதுக்களுக்கு சொந்த ஸ்தான மில்லாத படியால் அவாள் எந்த வீட்டில் எந்தக் கிரகங்களுடனே சம்பந்தமுற்றார்களோ அந்தக் கிரகங்கள் கேந்திரஸ்தானம், திரிகோணஸ்தானங்களிலிருந்தால் அந்தக் கிரகங்கள் கொடுக்கும் சுபயோகபலனைத் தாங்களே கொடுத்து, இராஜாதி காரத்துடனே ஜீவித்திருக்கும்படியான பலவிதமாகிய சாமர்த்தியமும் பெற்று ஆஸ்தி பூஸ்தியுடனே வாழ்ந்திருக்கச் செய்வார்கள்.
கேந்திர திரிகோணாதிபதிகளின் இராஜயோக பலன்
எந்தநவக்கிரகாதி பதியானாலும் இருக்குமிடங்கேந்திர ஸ்தானமானாலும் அந்தமுடன்திரிகோணஸ்தான மானாலுந்தான் அங்குற்றமநுதநற் பலத்திற்கேற்ற சொந்தமாம்பலனையே அனுபவிக்க சோர்விலாமற்கொடுத்து ஜாதகர்க்கு தந்திடுவார்ராஜயோ கத்தையென்று தரணியில்வாழ்ஜோதிடரே புகலுவீரே 48
உரை:--எந்த கிரகங்களாயிருந்தாலும் சரியே அவர்கள் கேந்திர ஸ்தானாதிபதியாயிருந்தாலும், திரிகோண ஸ்தானாதிபதியா யிருந்தாலும் தமக்குற்ற நல்ல பலனையே ஜாதகர்க்குக் கொடுத்து இராஜயோகத்தை அனுபவிக்கும்படி செய்வார்கள்.
இராஜயோக பங்கத்தின் விபரம்
ஒன்பதோன்பத்தோனும் ஆயுள்லாபம் ஒட்டியஸ்தானாதி பதியானாலும் இன்னலுடன் அஷ்டம லாபத்தாதிபத்யம் இசைந்திடவேவந்தாலும் சுபமில்லாமல் அன்பானராஜயோகம் மாறிப்போகும் அதிர்ஷ்டமில்லாவறுமையா என்போலாகி துன்பமுடன்கஷ்டநஷ்ட மனுபவித்து துயரத்தினாற்கலங்கி திகைப்பர்தானே. 49
உரை:--நல்ல ராஜயோகத்தைக் கொடுக்கும்படியான தர்ம கர்மாதிபதிகளென்னும் பாக்கிய ஜீவன ஸ்தானாதிபதிகளுக்கு ஆயுள் ஸ்தானாதிபத்தியமாகிய அஷ்டம இலாப ஸ்தானாதி
Page 100
பத்யம் வந்தால் சுபகரமாகிய இராஜயோகத்தைக் கொடாமல் மிகவும் ஏழ்மையான வறுமையோகத்தை யனுபவிக்கச்செய்து, துன்பமும் துயரமும் கஷ்ட நஷ்டமும் கவலையுமடையச் செய்து, கலங்கித் தவித்துத் தத்தளித்து அன்னவஸ்திரத்திற்குப் பஞ்சமா யலையச் செய்யும்படியான தரித்திர யோகத்தை அனுபவிக்கச் செய்வார்கள்.
மாரகஸ்தானங்களின் விபரம்
இலக்கினத்திற்கெட்டாமிடமும் அதற்குமூன்றாம்ஸ்தானம் இசைந்த ஆயுள்ஸ்தானமும் தீரஸ்தானம் கலக்கமுறுமிவைகளுக்கு சப்தமஸ்தானமென்று கழறுமேழாமிடமும் ரெண்டாம்ஸ்தானம் உலகத்தோர்க்கிசைந்த மாரகத்தைச்செய்யும் உற்றஸ்தானங்களென்று உறுதியாக நலமுடனே ஜாதகர்க்குப் பலனாராய்ந்து நவின்றிடுவீர் ஜோதிடத்தில் மிகவல்லோரே. 50
உரை:- இலக்கினத்திற்கு அஷ்டமஸ்தானமும், அதற்கு எட்டாமிடமாகிய மூன்றாம் ஸ்தானமென்றும் தீரஸ்தானமும், இவைகளுக்கு ஏழாமிடமும், இரண்டாமிடமும், பூலோகத்தோர்க் கிசைந்த மாரக ஸ்தானங்களென்று திடமாக ஜாதகர்க்குப் பலனறிந்து சொல்லும்போது அந்த கிரகங்களின் திசாபுத்தி பலனையும் மற்ற கிரகங்களிருந்த ஸ்தான பலனையும் ஆராய்ந்துணர்ந்து பலன் சொல்லவேண்டும்.
கிரக சேர்க்கை மாரகத்தின் விபரம்
முன்புகன்ற மாரகத்தைக் காட்டிலும்பின் மொழிந்த இரண்டாமிடமே பலமென்றோது என்னவிதமென்றாலும் முன்னுரைத்த ஏழைவிடரெண்டாமிடமே பலமென்றோது இன்னவாறிரண்டோவிலும் அந்தஸ்தானத்தில் இருந்தகிரகங்கள் பலத்த மாரகஞ்செய்வார்கள் நன்னயமாய்க்கணிதநூ லாராய்ந்தன்பாய் நலமுடனே ஜாதகர்க்குப் பலன்சொல்வீரே. 51
உரை:- முன்சொல்லிய மாரக ஸ்தானாதிபர்களிலும் இரண்டாமிடத்ததிபரே பலமான மாரகராகும். இதன் விபரமெப்படியென்றால் முன்னுரைத்த சப்தம ஸ்தானமாரகமோ பொல்லாததென்றாலும் இரண்டாமிடமாகிய மாரகஸ்தானம் பலமானதாகும். அன்றியும், அந்த ஸ்தானங்களில் இருக்கின்ற
Page 101
கிரகங்களோ பலமான மாரகஞ் செய்வார்கள். ஆனால் துவாதச லக்கினத்திலிருக்கும் கிரக பலன்களையும், ஆராய்ந்துணர்ந்து ஜாதகர்க்கு பலன் விபரம் சொல்லவேண்டும்.
சம்பந்த கிரகங்களின் மாரக விபரம்
மாரகஸ்தானந்தனிலே யிருப்போரோடு மகிழ்ந்துசேர்க்கையானோர் பாபரானால் நேராக அவரவர்கள் திசாபுத்திதன்னில் நேர்ந்திடுமே மரணமென்று ஜாதகர்க்கு தீரமுடனே புகல்வாய் இவர்கொல்லாவிட்டால் திகழ்விரயஸ்தானாதிபதி கொல்வாரென்று சீராக ஆயுள்பல னாராய்ந்தன்பாய் சிறப்பாகப்புகல்வீர் ஜோதிடவல்லோரே. 52
உரை:—மாரகஸ்தானத்தி லிருப்பவர்களோடு சேர்க்கையான கிரகங்கள் சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேதுபாவாளுயிருந்தால் அந்த கிரகங்களினுடைய திசாபுத்திகளில் அந்த கிரகங்கள் கொல்லாமலிருந்தால் பனிரெண்டாம் ஸ்தானாதிபதி கொன்றுவிடுவாரென்று கால கணித நூலாராய்ச்சிசெய்து மற்ற கிரகங்கள் நின்ற ஸ்தானபலனையும் ஆராய்ந்துணர்ந்து பலன் சொல்லவேண்டும்.
விரயஸ்தானாதிபதியின் விபரம்
பன்னிரண்டாமிடத்தோன் திசாபுத்திதன்னில் பலமானமாரகத்தைச் செய்யாவிட்டால் தன்னிடமாகும்விரய ஸ்தானமுற்றோர் சம்பந்தமானரவிசேய் சனிராகுகேது இன்னோர்கள் திசாபுத்திகளிலே கொல்வார் இவர்களும் கொல்லாவிடில் விரயஸ்தானாதியோடு இன்னலுடன்சார்ந்தசுபர் திசாபுத்திதன்னில் இசைந்தவிதம்மாரகத்தைச் செய்வார்தானே. 53
உரை:—இலக்கினத்திற்கு விரயஸ்தானமாகிய பன்னிரண்டாமிடத்தோன் திசாபுத்தியில் ஜாதகர்க்கு மாரகஞ் செய்யாவிட்டால் அந்த விரயத்தானத்தி லிருப்பவர்களாகிலும், அவர்களுடனே சம்பந்தப்பட்ட சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது பகவானாகிய இவர்கள் திசாபுத்திகளிலாகிலும் மாரகத்தைச் செய்வார்கள். அவ்விதமாய் அவர்கள் கொல்லாவிட்டாலும் பனிரெண்டாமிடத்ததிபதியுடனே சேர்ந்த குரு, சுக்கிரன், புதன், சந்திரன் இவர்களுடைய திசாபுத்திகளிலே மாரகத்தைச் செய்வார்கள். ஆனால் இலக்கினாதிபதி பலமறிந்து சொல்லவேண்டும்.
Page 102
இதற்கு உதாரணம்
ஆயுஸ்தானாதிபதியான எட்டாமதிபதிக்கு மூன்றாமிடத்ததிபதியாகிய கிரகங்களின் திசாபுத்திகளில் மாரகத்தைச் செய்வார்கள். எட்டாமிடத்திற்குடையவர்கள் ஆயுளைக் கொடுப்பவர்களாய் இருந்தாலும் வேறு விதத்தினால் மாரகஞ் செய்ய இடமில்லாததினால் அந்த சமயத்தில் மேற்சொன்ன நிலையையுடையிருந்து மாரகஞ் செய்வார்கள்.
சனிபகவான் செய்யும் மாரக விபரம்
சனிபகவான்மாரக கிரகங்களோடு சார்ந்துநின்றகுற்றத்தின் வலிமையாலே இனிதுடனேசகலரையும் தள்ளிவிட்டு இவரேஜாதகர்க்குமா ரகந்தைச் செய்வார் கனிவுடனே இவர்க்குமுன் வருவோர்தன்னை கருதாமல்சனீஸ்வரன் மாரகத்தைச்செய்வார் மனமகிழஜோதிடநூ லாராய்ந்தன்பாய் மாரகஸ்தானபலனைச் சொல்லுவிரே. 54
உரை:- சனிபகவான் மாரகாதிபதிகளாகிய கிரகங்களுடனே சேர்ந்திருந்தால், அந்தவல்லமையால் தன்னுடன்இருந்த கிரகங்களை மாரகஞ் செய்யவிடாமல் தடுத்து, தானே முதன்மையாயிருந்து ஜாதகர்க்கு மாரகத்தைச் செய்வார். ஆனால் இலக்கின ஸ்தானபலனையும், இலக்கினாதிபதிபிருந்த ஸ்தானபலனையும் ஆராய்ந்து பலன் சொல்ல வேண்டும்.
புத்திநாதர்களின் விபரம்
பருதிமதிகுஜபுதனும் குருவும்சுக்கிரன் பராக்ரமமுள்ளசனிராகு கேதுவென்று கருதுமிந்தநவக்கிர கங்களானோர் காணுமவர் சுயபுத்தி தன்னிலேதான் வருகின்றசுபபலனைக் கொடுக்கமாட்டார் வாய்த்தமுன்திசைபலனை தருவாரப்பா சுருதிகளில்சொன்னபடி ஜோதிஷமாராய்ந்து சொல்லுவீர்பலன்விபரம் ஜாதகர்க்கே. 55
உரை:- சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, இராகு, கேதுவென்னும் ஒன்பது கிரகங்களும் தமது திசைவரும்போது, சுயபுத்தியில் தாங்கள் கொடுப்பதற்குரிய சுபபலனைக் கொடுக்கமாட்டார்கள். அவர்களுக்கு முன் நடத்திய
Page 103
திசாநாதர்களின் பலனையே தருவார்கள். ஆனால் அந்த திசா நாதனுக்கு முன்னால்வந்து சுபாசுப பலனைக் கொடுத்த கிரகங் களின் பலத்தையும் இந்த திசாநாதன் பலத்தையும் லக்னாதிபதி, ஜீவனஸ்தானாதிபதிகளின் பலத்தையும் ஆராய்ந்து பலன் சொல்ல வேண்டும்.
திசாநாதரும் சேர்ந்த புத்திநாதர் விபரம்
தினகரன்சேய்மால் குருவும்சுக்ரன்மைந்தன் திங்களொடிராகு கேதிவர்களெல்லாம் தனதுசமானத்துவமும் சம்பந்தமில்லா தாங்கள்சுபரானால்துன் பஞ் செய்வார்கள் கனமாய்த்தக்கிறகம் அசுபரானால் காசியுடன்சுபபலனைக் கொடுப்பாரென்று மனமகிழ்வாய்க்கிரகநிலை தனைஆராய்ந்து மாட்சியுடன்ஜாதகர்க்குப் பலன்சொல்வீரே. 56
உரை:-ஜாதகர்களுக்கு பலரபலனைக் கொடுத்து சுக துக் கத்தை யனுபவிக்கச் செய்யும்படியான சூரியன், சந்திரன், செவ் வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, இராகு, கேது என்னும் ஒன் பது கிரகங்களும் தன்னுடன் சம்பந்தப்பட்ட கிரகங்களின் திசை யிலும், தமக்குச் சமானமாகிய கிரகங்களின் திசையிலும் சுபக்கிர கங்களாக வந்தால் துன்பத்தைச் செய்வார்கள். அசுபர்களானால் நல்ல பலனைக் கொடுத்து தன தான்ய சம்பத்துடன் மிகவும் மேன்மையாய் ஜீவித்திருக்கும்படி செய்து பந்து மித்திரரனை வரும் புகழ்ந்துரைக்கும்படியான பெருமையுடனே வாழ்ந்திருக் கச் செய்வார்கள். ஆனால் அந்தந்த கிரகநிலையைச் சரியாய் ஆராய்ந்துணர்ந்து பலன் சொல்லவேண்டும்.
திரிகோணாதிபதி திசாபுத்தி விபரம்
இலக்கினத்தின் திரிகோணாதிபதிகளானோர் இனிதுடனேதன் திசையிலேயமைந்த நலமானகேந்திராதிபதி புத்திகளில்தனக்கு நாடியதோர்சுபபலனை தருவாரந்த பலமானகேந்திராதிபதி திசையிலேதான் பராக்ரமமாய்த்ரிகோணாதிபதி புத்தியிலேதன்னால் கலக்கமிலாசுபபலனைத் தருவாரந்த கிரகநிலைதனையறிந்து புகலுவீரே. 57
உரை:-ஜனன இலக்கினத்தின் திரிகோணாதிபதிகள் தமது திசையில் வரும் கேந்திராதிபதிகளின் புத்தியில் தமக்குத் தகுந்த சுபபலனைக் கொடுப்பார்கள். ஆனால் கேந்திராதிபதி
Page 104
ஜோதிட கணிதாமிர்தம்
களால் அமைந்த கிரகங்களின் திசையில் திரிகோணாதிபதியின் புத்திகளில் நல்ல யோகபலனைக் கொடுப்பார்கள். அவர்கள் ஒருவர்க்கொருவர் சம்பந்தமில்லாமலும், ஆறெட்டு பனிரெண்டாம் ஸ்தானங்களிலும் பகை நீசஸ்தானங்களிலு மில்லாமலிருக்க வேண்டும். அன்றியும், வக்ரம் அஸ்தமனமு மில்லாமலிருக்க வேண்டும். இவ்விதமில்லாமல் சுபஸ்தானாதிபர்களுடனே சேர்ந்து நட்பு ஆட்சி உச்சஸ்தானங்களி லிருந்தால் கீர்த்திப் பிரகாசமான யோகபலனைத் தந்து பொன் பொருள் ஆஸ்தி பூஸ்திதியுடன் சுகசவுக்கியங்களை அனுபவிக்கும்படி செய்வார்கள். ஆனால் லக்கினாதிபதி பலனையும் கிரகங்களின் பலனையும் ஆராய்ந்துணர்ந்து பலபலன் சொல்லவேண்டும்.
பத்தாமிடத்ததிபதி திசையின் விபரம்
ஜீவனஸ்தானாதிபதி திசையில்தானே சீவர்கட்குசுகதுக்க பலனைக்கேட்பாய் ஆவலுடன் பாக்யாதிபதி புத்திதன்னில் அமைந்திடுமே சுபபலன்கள்தனவானாக பூவுலகில்தனதான்ய சம்பத்தெல்லாம் பொருந்தியேவாழ்வார்கள் ஆறெட்டுள்ளோர் நாவியேபுத்திநாத ராகவந்தால் நகுத்திரியோகத்தையே யடைகுவாரே. 58
உரை:—ஜீவனஸ்தானாதிபதியாகிய பத்தாமிடத்தோருடையதிசையில் ஜாதகர்க்கு சுகதுக்கபலன் எவ்விதமாயனுபவிக்கும்படியாய் நேரிடுமானால் விபரத்தை கவனிப்பீர்கள். அந்த பத்தாமிடத்ததிபதி திசையில் பாக்கியாதிபதி புத்திவந்தால் சொல்லுதற்கரிய யோகபலனைத்தந்து வித்தியாபிவிருத்தி உத்யோகமேன்மை வியாபாரலாபமும் பொருந்தி தனதான்ய சம்பத்துடன் தனவானாய் விளங்கி பிரபுத்தனமா யிருக்கச்செய்யும். ஆறெட்டு பனிரெண்டா மிடத்ததிபர் புத்திவந்தால் கஷ்டமும் கவலையும் துன்பமுமாகிய தரித்திரயோகத்தை யனுபவிக்கும்படியா யிருக்கும். மற்ற புத்திநாதர்கள் சமபலனையே கொடுப்பார்கள்.
மாரக திசாயோக பலன் விபரம்
வன்மையாய்மாரகாதிபதி திசாபுத்திதன்னில் வந்தி глубоராஜ யோகந்தானப்பா துன்பந்தரும்பாபிட புத்திகளில்தானே தொடர்ந்துமென்மேலாக ஜாதகர்க்கு இன்பத்தையனுபவிக்கச் செய்வதற்கு இசைந்தராஜயோகந்தான் மேன்மேலாக 19
Page 105
நன்மையேதரு மென்றுஜாதகர்க்கு நலமுடனேபுகல்வீர் ஜோதிடவல்லோரே. 59
உரை:- மாரகாதிபதியின் திசாபுத்தியால்வந்த இராஜயோகம் பாபருடைய புத்திகளிலும் மென்மேலாக வளர்ந்து, ஜாதகர்க்கு நல்ல சுபபலனை யனுபவிக்கச் செய்வதுடன் பொன் பொருள் பூஸ்திதிகளை சேகரித்து தனவானா யிருப்பதற்கிசைந்த தன்மையை ஜாதகர்க்குத் தந்து சுகசவுக்கியத்துட னிருக்கச் செய்யுமென் றுரைப்பீர்கள். ஆனால் கிரகநிலையையும் இலக்கினஸ்தான பலனையும் ஆராய்ந்துணர்ந்து பலன் சொல்லவேண்டும்.
யோககாரகதிசை விபரம்
நலமானயோககாரக திசையில்தானே நாடியபுத்திநாத ரெவர்வந்தாலும் கலகத்தாலுண்டான தோஷமில்லை கூறுபலனெவ்விதமா யமையுமென்றால் சிலகாலம்கஷ்டத்தால் துன்புற்றாலும் சீரானபலனெல்லா மனுபவித்து தலபொருளும்பூமிலாபம் பெற்றன்பாக பாக்கியவானாயிருப்பா ருலகமீதே. 60
உரை:- ஜாதகர்க்கு நடக்கின்ற யோககாரக திசையில் புத்திநாதர்கள் எவர்கள் வந்தாலும் கஷ்டத்தைக் கொடுக்க மாட்டார்கள். மாரகஸ்தானாதிபதி புத்திநாதராய் வந்தாலும் மாரகஞ் செய்யமாட்டார்கள். சுப ஸ்தானத்திலிருந்த சுபக்கிரகங்கள் புத்திவந்தால் பொன் பொருள் தனம் தான்ய சம்பத்து பூமி லாபத்தையும் அனுபவிக்கும்படியான நல்ல பலனைக்கொடுத்துதவுவார்கள்.
திசாயோக பலன் விபரம்
அன்பானயோக காரகர்களானோர் அவர்களுடன்சம்பந்த மில்லாதிருக்கும் பொன்னன்புகர்மால் சந்திரனென்றோதும் போற்றும்சுபர்திசையிலே தமதுபுத்தி இன்பாகவந்தாலே அவரவர்க்கு இசைந்தநல்லசுபயோக பலனுக்கேற்ற நன்மையாய்பொன்பொருள் தருவாரென்று நவில்வீர்ஜாதகர்க்கு ஜோதிடவல்லோரே. 61
உரை:- யோககாரக கிரகங்கள் தங்கள் தங்களுடனே சம்பந்தமில்லாத குரு, சுக்கிரன், புதன், சந்திரனாகிய சுபக்கிரகங்களின் புத்திவந்தால் அவரவர்க்கிசைந்தபடி சுபபலனைத்தந்து,
Page 106
ஜோதிட கணிதாமிர்தம்
ற்சாகம், புத்தி கூர்மை, வியாபார லாபம், திரவிய சேர்க்கை, பூமித்திரர் நன்மை முதலான சுப நன்மை யனைத்துமுண் ணும்படி செய்வார்கள். ஆனால் திசானாதர் வலுவறிந்து ானபலனாராய்ந்து சொல்லவேண்டும்.
யோககாரகர் பலன் விபரம்
பன்னிரெண்டெட்டாறூன் றாமிடத்தோர் பக்ஷமுறும் லக்ன யோக காரர்களோடு நன்மையாஞ்சேர்ந்தாலு மவர்திசையிலேதான் நாடுமிலர்புக்திவந்தால் பலனில்லாமல் இன்னலாய் மத்திப பலனைத்தந்து இசைந்தபடி சுகதுக்கம் சமானமாக தன்மையுடனேதந்து அற்பமாக தருவார் ஜாதகருக்கு பலனைத்தானே. 62
உரை:--யோககாரகர்களுடைய திசையில் மூன்று, ஆறு, டு, பனிரெண்டா மிடத்ததிபர் புக்திவந்தால் சுபபலனையும் டுக்காமல் நன்மை பெருக்கமில்லாத அற்பபலனை அளவு ல் தந்து சுகதுக்கத்தைச் சமமா யனுபவிக்கச் செய்வார்கள்.
இராகு கேதுக்களின் புக்தி விபரம்
குருசுக்ரன் புதன்சந்திரன் ஸ்தானந்தன்னில் கூடியே மற்றோ ருடன்சேராமல் வருகின்ற ராகு கேதுக்களானோர் வந்ததிசைதனில் தமதுபுத்திவந்தால் அருமையுடனே விளங்கும் ராஜயோகம் அவ்வப்போதேதந்து ஜாதகர்க்கு பெருமையும்கீர்த்தி விளங்கி சீமானாக பொருள்ஈகவே ஜாதகர்க்குத்தருவாரே. 63
உரை:--குரு, சுக்கிரன், புதன், சந்திரனுடைய ஸ்தானத்தி ங்கிற இராகு கேதுக்கள் எந்த கிரகங்களின் திசையிலும் தமது விவத்தால் அப்போதைக்கப்போது சுக சவுக்கியம் தன ராய சம்பத்து, கீர்த்தி, பெருமை, பொன், பொருள் வரவு, பூ மித்திரர்சேர்க்கை முதலான நன்மைப் பெருக்கமாகிய ஜயோக பலனைக் கொடுத்து ஜீவிக்கச் செய்வார்கள். ஆனால் கந்த திசா நாதர்களின் ஸ்தானபலனைக் கவனித்து பலன் ல்லவேண்டும்.
திசாபுக்திநாதர்களின் விபரம்
தினகரனும் மதிசேய் மந்தன் ராகுகேது திசாநாதரானாலவரோ டிணங்கிடாத
Page 107
பெரிய ஜோதிட சில்லரைக் கோவை
கனமானசுபக்கிரக புத்தியிலேநஷ்ட கஷ்டபலன்தருவார்க ளெவர்களோடு நின்பமாகசம்பந்த முற்றோரான இசைந்தசுபர்புத்தியிலே திசைக்கிசைந்த தனதுபலன்தருவார்கள் யோககாரர்களானோர் தாரித்ரபாபபலன் தருகுவாரே.
உரை:--சூரியன் தேய்பிறைச் சந்திரனும் செவ்வாய் ராகு, கேது இவர்களில் எவரெவர் திசானாதராய் வந்த அவர்களுடனே சேராது புத்திநாதர் சுபக்கிரகமானாலும் ப மாகிய கஷ்டநஷ்ட பலனை யனுபவிக்கச் செய்வார்கள். உ அந்த திசானாதருடனே சேர்ந்திருந்த கிரகங்கள் புத்திநாத வந்தால் அவரவர்க் கிசைந்தபடியே அற்பபலனைத் தருவா ஆனால் யோககாரர்களா யிருந்தால் கஷ்டநஷ்டத்தை விப்பதற்குக்கிசைந்த துன்பபலனைத் தருவார்கள்.
மாரகதிசா யோக பலன் விபரம்
மாரகஸ்தானாதி பதிகளானோர் மாட்சிமையாய்த்தன்னுடனே சேர்ந்திருத்த சீரான சுபக்கிரக புத்திதன்னில் சிறிதேனும்மாரகத்தை செய்யமாட்டார் நேராகசம்பந்தமில்லா பாபருக்கு நேரிட்டபுத்தியிலே கொல்வாரென்று தாரணியில் ஜாதகர்க்குப் பலனாராய்ந்து தகுந்தபடி புகல்வீர் ஜோதிடவல்லோரே.
உரை:--மாரக ஸ்தானாதிபதிகளானவர்கள் தன்னுட சம்பந்தமாயிருக்கின்ற சுபக்கிரகங்களின் புத்தியிலே ம செய்ய மாட்டார்கள். ஆனால், அவர்களுடனே சம்பந்தமி சூரியன், சனி, ராகு, கேது, செவ்வாய்பகவான் புத்திகளில போது சமயோசிதமாய் கண்டாதிகண்டங்களைத் தந்து வார்களென்று ஜாதகர்க்கு பலன் சொல்லவேண்டும். இலக்க பன் வலுத்திருந்தால் மாரகஞ்செய்யாமல் வியாதியினால் உ துருவச் செய்து சுகப்படுத்தும்.
சனி சுக்கிரன் திசை விபரம்
சுக்கிரனுக்கிசைந்ததிசை வந்ததானால் சூழ்ந்தோர்கள்தன்னிலே சனியன்புத்தி மிக்கயோகபலனைத் தந்துநாளும் மேன்மையுடன் தனலாபமெய்துவாரே
Page 108
ஜோதிட கணிதாமிர்தம்
அக்கரையாய்சனிதிசையில் சுக்ரபுத்தி அமைத்துவரும்போதவர்க்கு வெகுதுன்பங்கள் சிக்குடனேவPropertyத்தெய்தும் இலக்கினராசி சீராககணித்தெடுத்துப் பலன்சொல்வீரே. 66
உரை:- சுக்ரதிசையில் சனிபுத்தி வந்தால் நல்ல யோக யும், தனதான்ய சம்பத்தும், மனோற்சாகம், கீர்த்தி, தைரி ஸ்திரீ சேர்க்கை முதலான நன்மையும் இராஜயோக சுப றும் தந்து மேன்மையுடனே ஜீவித்திருக்கும்படியான நற் னத் தருவார்கள். ஆனால் சனிதிசையில் சுக்கிரபுத்தி வந் ) பலவிதமான கஷ்டநஷ்டங்களும் கவலையுமடையும்படி ா துன்பபலனை அனுபவிக்கும்படியாய் நேரிடும். இதன் ரஷ வைபவத்தை இலக்கினபலனை ஆராய்ந்து ஜாதகர்க் பலன் சொல்லவேண்டும்.
நவக்கிரகங்களின் குணவிரோத விபரம்
தினகரனும்சேய்மால் பொன்ராகுகேது திங்கள்புகர்சனியோ டொன்பதுபேரானோர் மனமகிழ்வுவாதஸ்தானங்களாகும் மாட்சிபெறும்மேடாதி மீனமென்னும் பனிரெண்டுராசியிலு மிருக்கும்நல்ல பலாபலனைவிபரமாய் கவனித்தோர்ந்து இனிதானஜாதகர்க்கு பலனைச்சொல்வீர் இப்புவியில்ஜோதிட சாந்திரவல்லோரே. 67
உரை:- சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கி , சனி, ராகு, கேது முதலான நவக்கிரகங்கள் ஒன்பதுபேரும், ஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிங்கம், கன்னி, ாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனமென் பனிரெண்டு ராசிகளில் எவ்வெவ்விதமாய் நட்பு, ஆட்சி, ரம், நீசம், மூலத்திரிகோணாதிபதிகளா யிருக்கின்றார்களோ தந்த ஸ்தானபலமறிந்து அவரவர்கள் திசாபுத்திகளில் சம் கரும் பார்வையுமான கிரகங்களின் தன்மையும், சத்ருமித்ரு ங்களின் தன்மையும் ஆராய்ந்து ஜாதகர்க்கு பலன் சொல்ல ண்டும். அப்போதுதான் சரியாயிருக்கும்.
மேஷராசியின் பலன்
அன்பானமேஷத்திற் புகார்மாய்மந்தன் ஆகாதோரென்றுரைப்பாய் ஆனாலுந்தான் பொன்னவனும்சூரியர்கள் நல்லோராகும் பொருந்திசனிசேர்ந்தால் துன்பஞ்செய்வார்
Page 109
மேஷராசி விபரம் (தொடர்ச்சி)
துன்பபலன் தந்துசனி கொல்வாரப்பா சுக்கிரன்கொல்லான் மேஷராசியோரை இன்னவிதமாகவே கணித்தாராய்ந்து இப்புவியோர்க்குரைப்பீர் ஜோதிடவல்லோரே. 68
உரை:-- மேஷராசியிற் பிறந்தோர்களுக்கு சனி, புதன், சுக்கிரன் பொல்லாதவர்கள். ஆனால் குரு, சூரியன் நல்லவர்கள். சனி சம்பந்தமானால் குரு அந்த சனி கொடுக்கும்படியான துன்பத்தையே எப்போதும் கொடுத்துக்கொண்டு கஷ்டநஷ்டமடையச் செய்வார்; சுக்கிரன் மாரகஞ் செய்யார்; சனி முதலான கிரகங்கள் மாரகஞ் செய்வார்கள்.
ரிஷபராசியின் விபரம்
குருவெள்ளிசந்திரனும் ரிஷபத்திற்கு குருரமெனுங்கொடுமையே செய்வாரப்பா பருதிசனிநல்லவர்கள் மத்தன்யோக பலன்தருவார்வியாழன்முத லானோர்கொல்வார் தருணமேகுருசுக்ரன் மதியோடுற்று சம்பந்தமானகிரகங் களையாராய்ந்து அருமையாய்ஜோதிட சாஸ்திரத்தைப்பார்த்து அறிவிப்பீர்ஜாதகர்க்கு பலனைத்தானே. 69
உரை:--ரிஷபராசியில் பிறந்தவர்கட்கு குரு, சுக்கிரன், சந்திரனாகிய மூவரும் குரூரமாகிய கொடுமை செய்யும்படியான தீய பலனைக் கொடுப்பார்கள். ஆனால் சூரியனும் சனியும் நல்லவர்கள்; சனி பகவான் ஒருவரே இராஜயோகபலனைத் தருவார். வியாழன் முதலான கிரகங்கள் சமயோசிதமாய் வறுமை, பிணி, கண்டாதி கண்டமெல்லாம் அனுபவிக்கச்செய்து கொல்வார். ஆகையால், குரு, சுக்கிரன் சந்திரனுடனே சம்பந்தமான கிரகங்களின் நிலையைக் கவனித்து ஆராய்ந்து பார்த்து பலன் சொல்லவேண்டும்.
மிதுனராசியின் பலன்
சூரியனும்செவ்வாயும் வியாழனுந்தான் சுபரல்லமிதுனராசிக் கென்றோது காரியுடன்குருசேர்ந்தால் துன்பஞ்செய்வார் கஷ்டநஷ்டமனுபவிக்கச் செய்வாரப்பா சீரெடன்புகர்சுபனாம் சந்திரன்தான் துதியாதிபதியானாலுங் கொல்லானே சூரியனும்குருசெவ்வாய் கொல்வாரென்று சொல்லுவாய்மிதுனத்தில் பிறந்தோருக்கே. 70
Page 110
ஜோதிட கணிதாமிர்தம் - 108
உரை:—சூரியனும் செவ்வாயும் வியாழனும் மிதுன ராசியிற் பிறந்தவர்களுக்கு குரூர கொடுமை செய்யும் பொல்லாதவர்கள். குரு சனியுடன் சேர்ந்தால் பல துன்பமும் துயரமு மனுபவிக்கச் செய்து கஷ்டப்படுத்துவார். சுக்கிரபகவான் ஒருவனே சுபனாகு ம். சந்திரன் துதியாதிபத்திய தோஷத்தை யடைந்தவனா யிருந்தாலும் கொல்லமாட்டான். சூரியன், குரு, செவ்வாய் இம் மூவரும் மாரகஞ் செய்வார்கள். சனியும் குருவும் மிதுனராசிக்கு தருமகருமாதிபதிகளாகையால் கிரகநிலை யறிந்து பலன் சொல்ல வேண்டும்.
கடகராசியின் விபரம்
சுக்கிரனும்புதன்பொல்லாச் கடகத்தோர்க்கு சுபர்குருவும்செவ்வாயும் விசேஷநல்லோர் மிக்கநல்யோகந்தருவோர் குஜனேநல்வோன் மேலுங்கடகத்தோரைரவி கொல்லமாட்டார் சுக்கிரனும்புகன்கொல்வா ரென்றுரைப்பாய் சூழ்புவியில்கடகத்தில் பிறந்தோர்க்கு சிக்கிலாகிரகநிலை தனையாராய்ந்து செப்புவீரேஜாதகர்க்கு பலனைத்தானே. 71
உரை:—கடகராசியில் பிறந்தவர்களுக்கு சுக்கிரனும் புதனும் பொல்லாதவர்கள்; குருவும் செவ்வாயும் விசேஷமாய் பலன் கொடுக்கும் நல்ல சுபர்கள்; செவ்வாய் பகவான் மிகவும் நல்ல யோகத்தைக் கொடுப்பவர். சூரியன் துதியாதிபதியா யிருந்தாலும் கொல்லமாட்டார். சுக்கிரனும் புதனும் கொல்வார்கள். ஆனால் மற்ற கிரக நிலையும் ஆராய்ந்துணர்ந்து பலாபலனை கவனித்துச் சொல்லவேண்டும்.
சிங்கராசியின் விபரம்
சிங்கராசியில்பிறந்த ஜாதகர்க்கு சுக்கிரனும்புதபகவான் பொல்லாதோர்கள் மங்களஞ்சேர்செவ்வாயே நல்லோனாகும் மகிழ்ந்துபுகர்சேய்சேர்ந்தால் கொடுமைசெய்வார் இங்கிதமாய்புதன்முதலா னோர்களெல்லாம் இசைந்தபடிசமயம்போற் கொல்வாரப்பா சங்கையுடன் குருபகவான் யோககாரகனானாலும் சதுர்த்தகேந்திராதிபத்தியத்தால் துன்பஞ்செய்வாரே.
உரை:—சிங்கராசியில் பிறந்தவர்கட்கு சுக்கிரனும் புதபகவானும் பொல்லாதவர்; செவ்வாய் பகவான் சுபயோகத்தைக் கொடுக்கும் நல்லவர். ஆனால் சிங்கராசிக்கு செவ்வாய் யோககாரகனாயிருந்தாலும் சுக்கிரனுடனே சேர்ந்தால் கொடுமை செய்
Page 111
வார். புதன் முதலான கிரகங்கள் சமயோசிதமாக் கொல்வார்கள். ஆகையால் மற்ற கிரகங்களின் பலமறிந்து ஜாதகர்க்குப் பலன் சொல்லவேண்டும்.
கன்னிராசியின் பலன் விபரம்
கன்னியாராசியிலே ஜனித்தோர்க்கு குஜன் குருவும் சந்திரனும் பொல்லாதோர்கள் இன்பமுடன் சுக்கிரனே சுபனேயோகம் இசைந்த புதன்புகர் போககாரகரேயாகும் நன்மை செய்யும் சுக்கிரனே கொல்லா மாட்டார் நலமிலா மற்த்கொல்வர் குஜன்முதலானோர்கள் தன்மையுடன் கிரகநிலை ஆராய்ந்தன்பாய் தகுந்தபடி ஜாதகர்க்கு பலன்சொல்வீரே. 73
உரை:—கன்னியாராசியிலே பிறந்தோர்க்கு செவ்வாய், குரு, சந்திரனும் பொல்லாதவர்; சுக்கிரன் நல்லவர். புதனும் சுக்கிரனும் யோககாரகர். சுக்கிரபகவான் மாரகஞ் செய்ய மாட்டார்; செவ்வாய் முதலானோர் கொல்வார். ஆனால் மற்ற கிரகங்களின் சேர்க்கை சம்பந்த பலமறிந்து ஜாதகர்க்குப் பலன் சொல்ல வேண்டும்.
துலாராசியின் பலன் விபரம்
குருசூரியன் செவ்வாயும் பொல்லாதோர்கள் குற்றமிலா புதன் சனியும் நல்லோராகும் அருமையாய்ச்சந்திரனும் புதபகவானானோர் அன்பான யோக காரர்களாகும் குருமுதலான கிரகம் கொல்லாரப்பா குஜபகவான்மாரகஞ் செய்யமாட்டார் பெருமையுடன் துலாராசிகனிற்பிறந்தோருக்கு பேசுபலனிதுவாகும் நூல்வல்லோரே. 74
உரை:—துலாராசியில் பிறந்தவர்களுக்கு குருவும் சூரியனும் செவ்வாயும் அசுபராவும்; புதனும் சனியும் சுபராகும். புதன் சந்திரனும் யோககாரகர். செவ்வாய் பகவான் மாரகஞ் செய்யார்; குரு முதலான கிரகங்கள் கொல்லார்கள். ஆனால் இலக்கினாதிபதி நிலையறிந்து ஜாதகர்க்கு பலன் சொல்லவேண்டும்.
விருச்சிகராசியின் பலன் விபரம்
மனமகிழவிருச்சிகத்தில் பிறந்தோருக்கு மால் குஜனும் சுக்கிரனும் அசுபராகும் தினகரனும் சந்திரனும் சுபரேயாகும் திங்கள் யோககாரக னென்றே சொல்வாய்
Page 112
ஜோதிட கணிதாமிர்தம்
இனமானகுருதுதியாதி பதியானாலும் இரக்கமின்றிமாரகத்தை செய்யமாட்டார் ஈனமுடனேபுதன்முதலோர்கொல்வாரென்று வழறுவாய்விருச்சிகத்திற் பிறந்தோருக்கே. 75
உரை: விருச்சிகராசியிற் பிறந்தோர்களுக்கு புதனும், செவ்வாயும், சுக்கிரனும் பொல்லாதவர்கள்; சூரியனும் சந்திரனும் யோககாரகனென்றாலும் சந்திரன் ஒருவனே யோகத்தைக் கொடுப்பான். குருபகவான் துதியாதிபதியாகிலும் மாரகத்தைச் செய்யமாட்டார். ஆனால் புதன் முதலான கிரகங்கள் கொல்வார்கள். ஆகையால் திசாநாதர் பலத்தையும் இலக்கினாதிபதி பலத்தையும் ஆராய்ந்துணர்ந்து பலன் சொல்லவேண்டும்.
தனுசுராசியின் பலன் விபரம்
சுந்தரமாய்தனுசிலே பிறந்தோர்க்கு சுக்கிரபகவானே அசுபராகும் அந்தமுடன்ரவிகுஜனும் சுபரேயாகும் ஆதித்தன்மால்யோக காரகரேயாகும் மந்தனொருவனேகொல்லான் புகர் முதலானோர்கள் மாரகஞ்செய்வாரென்று தனுசுராசியோர்க்கு இவ்விதமாகவே பலனுரைப்பீர் இப்புவியின்ஜாதகர்க்கு ஜோதிடவல்லோரே. 76
உரை: தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு சுக்கிரபகவான் பொல்லாதவர். சூரியனும் செவ்வாயும் சுபராவர். ஆதித்தனும் புதனும் யோககாரகர்; சனிபகவான் மாரகஞ் செய்யமாட்டார். சுக்கிரன் முதலான கிரகங்கள் கொல்வார்கள். ஆனால் மற்ற கிரகங்களின் சம்பந்தம் பார்வையறிந்து இலக்கினபலனையும் அனுசரித்து ஜாதகர்க்கு பலன் சொல்லவேண்டும்.
மகரராசியின் பலன் விபரம்
மகரராசியில்பிறந்த ஜாதகர்க்கு மதிகுஜனும்வியாழனும் அசுபராகும் புகழுடையபுதன்சுக்ரன்சுபராவார்கள் புகழ்யோககாரகனென் றேபுகல்வாய் ஜெகமீதுஜாதகரை மைந்தன்கொல்லான் செவ்வாய் முதலானோர் மாரகஞ்செய்வார்கள் சுகமாகஜோதிடநூ லாராய்ந்தன்பாய் சொல்லுவீர்ஜாதகர்க்கு பலனைத்தானே. 77
Page 113
மகரராசியின் பலன் விவரம் (தொடர்ச்சி)
உரை:--மகரராசியில் பிறந்த ஜாதகர்க்கு சந்திரனும் செவ்வாயும் குருவும் பொல்லாதவர்கள்; புதனும் சுக்கிரனும் நல்லவர்கள். ஆனால் சுக்கிரன் யோககாரகனாகும். சனிபகவான் மாரகஞ்செய்யமாட்டார். செவ்வாய் முதலான கிரகங்கள் மாரகஞ்செய்து கொல்வார்கள். ஆகையால் இலக்கின பலனறிந்து கிரகங்களின் சம்பந்த சேர்க்கை முதலானவை விபரமாய் கவனித்து பலன் சொல்லவேண்டும்.
கும்பராசியின் பலன் விவரம்
கும்பராசியில்பிறந்த ஜாதகர்க்கு குருசந்திரன்செவ்வாயும் அசுபராகும் நம்பியதோர்சுக்கிரனே நல்லோனாகும் நாடியதோர்புகர்யோக காரகனேயாகும் வம்பாகுகுஜன்முதலோர் கொல்வாரப்பா வானோரின் குருவியாழன் மாரகஞ்செய்யாரே அம்புவியின்ஜாதகரின் பலனாராய்ந்து அன்புடனேபுகல்வீர் ஜோதிடவல்லோரே. 78
உரை:--கும்பராசியில் பிறந்த ஜாதகர்க்கு குருவும், சந்திரனும், செவ்வாயும் பொல்லாதவர் சுக்கிரன் ஒருவனே நல்லவர்; அந்த சுக்கிரனே யோககாரகனாகும்; தேவகுருவாகிய வியாழபகவான் கொல்லமாட்டார். செவ்வாய் முதலான கிரகங்கள் மாரகஞ் செய்வார்கள். ஆனால் ஜாதகபலனை ஆராய்ந்து இலக்கினாதிபதியின் பலமும் சம்பந்த சேர்க்கையான கிரகங்களின் திசா புத்தியின் வலுவறிந்தும் பலன் சொல்வதுடன் மற்ற கிரகங்கள் நின்ற ஸ்தான பலனையும், ஆராய்ச்சிசெய்து கணிதசாஸ்திர விதிப்படியே பலன் சொல்லவேண்டும்.
மீனராசியின் பலன் விவரம்
மீனராசியிற்பிறந்த ஜாதகர்க்கு மந்தன்புகர்ரவிபுதனும் நல்லோரல்ல ஆனகுஜன்சந்திரானும் சுபரேயாகும் அந்தணனும்செவ்வாயும் இராஜயோகம் ஞானமுத்தந்தருள்வார்கள் சேய்கொல்லானே சனிமுதலானவர்மார கஞ்செய்வார்கள் தானேதான் துதியாதி பதியானாலும் நன்றாய்க்கொல்லான் செவ்வாய் கவனிப்பீரே. 79
உரை:--மீனராசியில் பிறந்த ஜாதகர்கட்கு சனியும், சுக்கிரனும், சூரியனும், புதனும் அசுபராகும். சந்திரனும் செவ்வாயும்
Page 114
கல்வி ஞானம் வித்யாவிவேக இராஜயோகம் முதலான நன்மையைச் செய்வார்கள். சனி முதலான கிரகங்கள் மாரகஞ் செய்வார்கள். செவ்வாய் துதியாதிபதியானாலும் தான் ஒருபோதும் மீனராசியில் பிறந்தோருக்கு மாரகஞ் செய்யமாட்டார். ஆகையால் இலக்கின பலனையும் இராசிநாதனுடைய ஸ்தான பலனையும் ஆராய்ந்துணர்ந்து சொல்லவேண்டும்.
ஸ்தான பலன் விபரம்
தினகரன்சந்திரன் சேய்மால் குருவுஞ்சுக்கிரன் திகழ்மந்தன்ராகு கேதுக்களென்னும் கணமானஒன்பதுபேர் பலனைச்சொல்வேன் கருத்துடனேஞாபகமாய் கேட்டுக்கொள்வீர் இனமாகத்தத்தம் ஸ்தானந்தன்னில் இருந்தாலே அவரவர்கட் கிசைந்தயோகம் தனதென்றுகொடுப்பார் ஜாதகர்க்கு தரணியில்சூழ்ஜோதிட சாஸ்திரவல்லோரே. 80
உரை:—சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, இராகு, கேது என்னும் ஒவ்வொரு கிரகமும் தமது ஸ்தானத்திலிருந்தால் தமக்குரிய பலனையே தருவார்கள். அவ்வித மில்லாமல் சுபர் வீட்டில் அசுபரிருந்தாலும் சுபபலனையே கொடுப்பார்கள். அசுபர் ஸ்தானத்தில் சுபரிருந்தால் சமபலனையே கொடுப்பார்கள்.
சுபாசுபர்களின் பலன் விபரம்
இலக்கினத்திற்கைந்தான ஸ்தானமென்னும் இசைந்தபுத்திரஸ்தானா திபனோடும் கலக்கமிலாசப்தம ஸ்தானமென்னும் களத்திரஸ்தானத்தோர் சுபக்கிரகங்களாக பலத்திருந்தாலவர்திசா புத்திதன்னில் பத்தினிபலன்புத்ரபலன் தருவாரென்று நலமுடனேகிரகநிலை பலமறிந்து நவிலுவீர்ஜாதகர்க்கு பலனைத்தானே. 81
உரை:—ஜனன லக்கினத்திற் கைந்தாவது ஸ்தானமென்னும் புத்திர ஸ்தானாதிபதியும் சப்தம ஸ்தானாதிபதியுமாகிய களத்திர ஸ்தானாதிபதியுமான சுபக்கிரகங்கள் பலத்திருந்தால் அந்த கிரகங்களின் திசாபுத்திகளில் களத்திர பாக்கியமும் புத்திர பாக்கியமும் தருவார்கள். ஆனால் அந்த கிரகங்களுடன் சம்பந்தமானோர் திருஷ்டிக்கப்பட்டவர்களுடைய பலமறிந்து ஜாதகர்க்குரிய பலனை சொல்ல வேண்டும்.
Page 115
கோச்சார பலன் விபரம்
மனிதர்கட் குநாள்பலனை விபரமாக வழுத்துதற்குச் சந்திரநின்ற ராசிவீட்டில் சனிசெவ்வாய் ரவிமதிமால் குருவும்சுக்ரன் சர்ப்பமெனும் ராகுகே திவர்களெல்லாம் தனித்தனி ராசியிலிருந்து தாமேகும்வீட்டில் தங்காலாகுகதுக்கம் ஜாதகர்க்கு இனிதாகவே தருவா ரிதையாராய்ந்து இப்புவியின் ஜாதகர்க்குப் பலன்சொல்வீரே. 82
உரை:--மனிதர்கட்கு அப்போதைக்கப்போது நடக்கும் பலனைச் சொல்வதாயிருந்தால் ஜாதகன் ஜனனமாகும்போது சந்திரன் இருந்த ஸ்தானமே ஜன்ம ராசியாகும். அந்த ஸ்தானத்திலிருந்து பனிரெண்டு ராசியிலும் அந்தந்த கிரகங்கள் சுற்றி வரும்போது அவரவர்க்கிசைந்த சுபாசுப பலனைக் கொடுப்பார்கள். ஆனால் அந்த கிரகங்களின் பார்வை, சேர்க்கை, நட்பாஷி, உச்சம், பகைநீச ஸ்தானமறிந்து பலாபலன் சொல்லவேண்டும்.
ஜாதகர்க்கு சுகதுக்கம் வருகிற விபரம்
முன்ஜனனத்திற்செய்த வினைக்கிசைந்து முதலிருவர் வாக்யம்போல் நவக்ரகங்கள் ஜன்மராசியிலிருந்து வரிசையாக சார்ந்தபனிரெண்டு ஸ்தானங்கள்தன்னில் அன்பாகவந்திருந்து விதிதைப்போல அவரவர்க்கு பலபலனை தத்தெப்போதும் இன்பதுன்பமவரவர்க்கு ஏற்றற்போல இசைந்தபலன் தருவார் கவனிப்பீரே. 83
உரை:--மனித வகுப்பார் முன் ஜனனத்திற் செய்த பாப புண்ணிய பலனுக்கிசைந்தவிதமாய் சுகதுக்கத்தைக் கொடுப்பதற்காக நவக்கிரகங்களாகிய சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, இராகு, கேது முதலான கிரகங்கள் மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிங்கம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனமென்னும் பனிரெண்டு ராசியிலும் வரும்போது அவர்களிருக்கும் ஸ்தானபலனுக்கிசைந்த சுகதுக்கத்தைக் கொடுப்பார்கள்.
இராகுகேதுகளின் பலத்தின் விபரம்
தினகரனும் சேய்மால் பொன்னவனும்சுக்ரன் திங்களொடு சனிராகு கேதுவென்னும்
Page 116
ஜோதிட கணிதாமிர்தம்
கனமானவொன்பது கிரகங்கள்தான் கண்டபலன்சேர்க்கைபலன் நட்பாட்சிஉச்சம் எனுமிந்தஸ்தானபல னுடனேநீசம் எய்தியஸ்தானபலனும் கவனித்தோர்ந்து மனமகிழ்வாய்ஜாதகர்க்குப் பலனாராய்ந்து மாட்சிமையாங்கோட்சாரப் பலன்சொல்வீரே. 84
உரை:—சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது வென்னும் ஒன்பது கிரகங்களும் தன்னுடன் சம்பந்தமான கிரகங்களின் தன்மையும் பார்வையான கிரகங்களின் தன்மையும் அனுசரித்து ஆட்சி, உச்சம், நட்பு, பகை, நீச முதலான ஸ்தானங்களிலிருக்கும் பலனையும், மூன்று ரெட்டு பன்னிரண்டு, கேந்திர, கோண இலாபஸ்தான பலன்களையும் ஆராய்ந்துணர்ந்து ஜாதகர்க்கு பலன் சொல்ல வேண்டும்.
விசேஷ பலன் விபரம்
இவ்விதமாய்ஜாதகர்க்கு பலனாராய்ந்து இசைந்தபடி சொல்வதென்றால் லக்கினத்தை ஒவ்வியேஇராசிகளில் கிரகம்நின்ற ஒற்றுமையாம்பலனெல்லாம் சோதித்தன்பாய் எவ்விதமாய்கிரகங்க ளிருந்திட்டாரோ எதிருற்றுப்பார்த்தும் சம்பந்தமானோர் அவ்வவ்விதமாகவே பலனைத்தந்து ஆதரிப்பார்ஜாதகர்க்கென் றுரைத்திடீரே. 85
உரை:—இவ்விதமாகவே ஒவ்வொரு ஜாதகர்க்குப் பூலாயபலனை சொல்வதெனின் அவர்கள் பூமியில் பிறந்த வேளையிலமைந்த இலக்கின பலனையும், அந்த லக்கினத்திற்கிசைந்தபடி நக்ஷத்திரங்களுக்குரிய திசாபுத்தி பிரித்துக் கணக்கெடுத்து அந்த திசாபுத்திகளின் ஆதாரத்திற் கிசைந்தபடியே சந்திரன் நின்ற இராசியாதி பலனையும் அனுசரித்து அந்தந்த ஸ்தானங்களின் கிரகங்கள் தங்களுடன் சேர்ந்த கிரகங்களின் பலத்தையும், பார்வையான பலத்தையும் கவனித்து விபரம் விபரமாய் பலன் சொல்லவேண்டும்.
கேந்திராதிபத்திய கிரக பலன் விபரம்
தினகரன்சேய்சனிராகு கேதுவென்னும் திகழுமிவ்வைந்துகிர கங்களெல்லாம் மனமகிழுகேந்திர ஸ்தானத்தன்வில் மாஷிமையாகவமர்ந் திருந்திட்டாலும்
Page 117
இனமானஆட்சிஉச்சம் நட்புஸ்தானத்தில் இருந்தாலேஜாதகர்க் கெந்தநாளும் கனமானநல்யோகந் தந்தெப்போதும் கனதனமும்பொன்பொருளும் கிடைக்குந்தானே. 86
உரை:- சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது இவர்கள் ஆட்சி உச்சம் நட்பு ஸ்தானத்தில் கேந்திரம் பெற்றிருப்பார்களானால் கல்வியும் ஞானமும் பெருமையும் கீர்த்தியும் தன தான்ய சம்பத்து, புத்திரமித்திராதி களத்திரலாபமும் பெருகும்படியாய் செய்து சுகசவுக்கியமாய் இருக்கும்படி செய்வார்கள்.
கோண திரிகோணாதிபதி ஸ்தான கிரக பலன் விபரம்
திங்கள்புதன்குருசுக்ரன் நால்வரான திருவமைந்தசுபக்கிர கங்களெல்லாம் இங்கிதமாய்திரிகோணந் தனிலிருந்து இசைந்தநட்பாட்சி உச்சஸ்தானத்துற்றால் மங்காததனதான்ய சம்பத்துற்று மாட்சிமையாயிருப்பார்கள் ஞாலகந்தன்னில் இங்கிதமாய்திசாபுத்தி பலனாராய்ந்து இசைந்தவிதம்ஜாதகர்க்கு பலன்சொல்வீரே. 87
உரை:- சந்திரன், புதன், குரு, சுக்கிரன் முதலான இந்த நான்கு கிரகங்களும் சுபராகையால் இவர்கள் கோண திரிகோண ஸ்தானத்தில் நட்பு ஆட்சி உச்சமாயிருந்தால் ஜாதகர்க்கு சதாகாலமும் தனதான்ய சம்பத்தும் கீர்த்தியும் பெருகும்படியான நன்மையும் தந்து, பந்துமித்திரச் சேர்க்கையும், மனைவி மைந்தர்களின் சுகவாழ்வும், மனோல்லாசமும், வியாபாரவிருத்தியும் உத்தியோக மேன்மையும் பெற்று ஜீவித்திருக்கச் செய்வதுடன் பகவத்பக்தி வானந்தமும் விரதானுஷ்டானமுஞ் செய்து கீர்த்தி பிரகாசமாயிருக்கும் நன்மையும், காண்பவர் பிரபுவென புகழ்ந்துரைக்குந் தன்மையாய் லக்ஷ்மீகரம் பொருந்திய சுகசவுக்கியத்துடனும் திரவியலாபமும் தந்து மேன்மையடையச்செய்வார்கள்.
ஜாதகம் பார்க்கும் விபரம்
இன்னவிதமாகவே ஜாதகத்தை இசைந்தவிடம் கணித்துலக்கினமறிந்து பன்னுநவக்கிரகங்க ளிருக்குந்தன்மை பார்த்தறிந்துதிசாபுத்தி அந்தரங்கள்
Page 118
ஜோதிட கணிதாமிர்தம்
என்னவிதமிருக்குதென்று பலனாராய்ந்து ஏற்றசோதிடசாஸ்திர முறையைப்போல நன்மைதுன்மைஜாதகர்கட் குண்மையாக நவின்றிடுவீர்சோதிட நூல்வல்லோரே. 88
உரை:—ஜாதகத்தை பார்ப்பதென்றால் ஜாதகன் பிறந்த வேளையில் எந்த இலக்கினம் வந்ததென்று கவனித்து, அந்த சமயத்தில் இருந்த நக்ஷத்திரத்தைக்கண்டு இராசியை தீர்மானத்து திசாபுத்தி அந்தரமும் கணக்கெடுத்து அந்த சமயத்தில் மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிங்கம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனமென்னும் பனிரெண்டு இராசியிலும் எந்தெந்த ராசியில் எந்தெந்த கிரகங்களிருக்கின்றார்களோ அவர்களிருக்கின்ற ஸ்தானபலனையும் கவனித்து பலன் சொல்லவேண்டும்.
ஜோதிட கணிதாமிர்தம்
இவ்விதமாய்கிரகநிலை யாராய்ந்தன்பாய் இராசிலக்கினங்கணித்து நவக்கிரகங்கள் எவ்வெவ்விதமாக நிற்கின்றாரோ எதிர்நோக்குகிரகங்கள் பலமும்பார்த்து ஒவ்வியேபலனுரைத்து ஜாதகர்க்கு ஓதுவீர்உண்மைநிலை விபரமெல்லாம் அவ்விதமேபலனமையும் சித்தாந்தத்தை அறிந்துரைப்பீர்ஜாதகர்க்கு ஜோதிடவல்லோரே. 89
உரை:—இவ்விதமாய் ஒவ்வொரு கிரகங்களின் நிலையையும் ஆராய்ந்துணர்ந்து இராசிலக்கினங்கணித்து அந்த இராசியிலிருக்கும் நவக்கிரக நாதர்களுடைய பலமும், அந்த கிரகங்களை மற்ற கிரகங்கள் பார்வை செலுத்தும் பலத்தையும் ஆராய்ந்துணர்ந்து பலன் சொல்லவேண்டும்.
ஜோதிட கணிதாமிர்தம் முற்றிற்று.
Page 119
நவக்கிரகமாலை - கணேசர் துதி
எண்சீரடி விருத்தம்
ஆதிகஜானனமூர்த்தி யானயெந்தன் அன்பானகுருஸ்வாமி கணேசாயுந்தன் பாதாரவிந்தத்தை தினந்துதித்து பாடுமிந்தநவக்கிரக மாலைக்கன்பாய் நீதியுடனிலக்கணந் தவறாமலிந்த நீணிலத்தோர் ஜாதகத்தைக்கவனிப்பதற்கு ஜோதிடநூலெழுதுவதற் குனைதுதித்தேன் சுந்தரவிநாயகனே துணைசெய்வாயே.
பராசக்தி துதி
அன்பாகஜோதிடநூ லெழுதுவதற்கு அம்பிகைபார்வதிகௌரி வராகிவாலை பொன்மயமாம்ராஜராஜேஸ் வரியேகாளி போற்றுந்திரிபுர சுந்தரியேஅம்பா உன்பாதம்துணையென்று நம்பியேயான் உறுதியுடனேயெழுதும் பாடலுக்கு நன்மையாய்அனுக்கிரகஞ் செய்வாயென்று நாரணியுன்பாதத்தை பணிந்திட்டேனே.
சித்தர்கள் துதி
சந்ததமும்லோகமெல்லாம் சுயம்புவாக சஞ்சரிக்குஞ்சித்தர்களே நீங்களெல்லாம் எந்தனுக்குத்துணையிருந்து ஜோதிடசாஸ்திரத்தை எழுதுதற்கு ஞாபகசக்திஞானம் தந்தருள்வீரென்றுமது பாதாரவிந்தந் தனைத்துதித்து எழுதுகிறே னெந்தன்முன்பு வந்துநல்வரமருள்வீரென் றேதுதித்தேன் வாய்மைதவறாஞான சித்தர்களேபோற்றி.
Page 120
சுப்பிரமணியர் துதி
விருத்தம்
அன்பர்கள் துதித்திறைஞ்சும் ஞானசுப்பிரமண்யா பொன்பூஞ்சூத்திவேற் பிரபுவேயெங்கநாதா உன்னருளாலேயாவரும் உலகுத்துமடங்குந்தானாளும் நன்மையாய்துணைசெய்பாய் நற்சீடனின்முகாபோற்றி.
சூரியபகவான் பலன் விபரம்
சூரியனும்மேஷத்தி லுச்சமானால் சொல்லொணாபோகத்தை மிகவேநல்கு காரியமும்ஜெயமாகி கீர்த்திநீடிக் கௌரவமுந் தங்குநல்வாழ்வுண்டாகும் சீருடனேஞானம் தருவார்பூமி தீயங்கிடாமற் சுகந்தந்துநல்வல்ல வீரமுடன்வித்யாலாயம் உத்தியோகலாபம் விசேஷமாய்ப்படைப்பகர் வாழ்வாரே. 1
உரை:—மேஷராசியில் சூரியபகவான் உச்சமாயிருந்தால் அதிக யோக பலனையும் வித்யா சம்பத்தும், கீர்த்தியும், பெருமையும் உத்தியோகபலனும் வியாபாரலாபமும் கீர்த்தியும், சம்பத்தும் மென்மேலும் பெருகி தனதான்ய சம்பத்துடனே ஜீவித்திருக்கச் செய்வார். ஆனால் சனிபகவான் சுக்கிரன் இராகு கேது சூரியனுடன் சேர்ந்திருந்தால் குரூரபலனையே செய்வார்.
சந்திரபகவான் பலன் விபரம்
சந்திரனும்ரிஷபத்தி லுச்சமானால் சகலவிதசம்பத்தும் பெருகிநாளும் சுந்தரமாய்தேஜஸாம் பொருந்தியயோ கசம்பத்தெய்தியே வித்யாஉத்யோகம் பந்துமித்ரச்சேர்க்கை வர்த்தகத்திலாபம் பாக்கியமெல்லாம் கிடைக்குமிராகு கேதுசேர்ந்தாலோ தொந்திரவால்துன்பமுற்று பரதவித்து தொல்லுலகோர்பழித்திடவே துடிப் பார்தானே. 2
உரை:—சந்திரபகவான் ரிஷபராசியில் உச்சமானால் சகல வித சம்பத்தும் பெருகி, சரீராரோக்யமும் தேஜஸும் சுகபோக யோக பாக்கியமும், வித்தையும், புத்தியும், உத்தியோக சம்பத்தும் வியாபார லாபமும் கீர்த்தியும் வெகுவாகத் தந்து வாழ்த்
Page 121
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
திருக்கச் செய்வார். ஆனால் சந்திரனோடு இராகுகேது சேர்ந்திருந்தால் மனஸ்தாபமும் கஷ்டமும் கவலையும் நேரிடச் செய்து சதாகாலமும் கவலையும் துன்பமுமுண்டாகச் செய்து, பரிதவித்திடச் செய்யும். ஆனால், மற்ற கிரகங்களின் பார்வை நோக்கமும் கவனித்துத்தான் பலன் ஆராய்ந்து சொல்லவேண்டும்.
செவ்வாய்ப்பகவான் பலன் விபரம்
மகரத்தில்செவ்வாய் பகவான்உச்சமானால் மண்பூமிநிலபலமும் காணியாகி மிகலாபமாய்க்கிடைக்கும் பந்துக்கூட்டம் மித்திரர்கள்சேர்க்கையுண்டாம் தைரியத்தோடு ஜெகமீதுவாழ்ந்திருப்பார் சுக்கிரன்சேர்ந்தாலோ செருக்களத்திலுற்றவர்போல் மனமிரண்டு திகிலடைவார்சுகமில்லை துன்பத்தாலே தியங்கியேபரதவிப்பா ரறிகுவீரே. 3
உரை-மகரராசியில் செவ்வாய் பகவான் உச்சம் பெற்றிருந்தால் பூமீலாபமும் காணி கழனி பெருக்கமும் கிடைத்து திரவியலாபத்துடன் கீர்த்திபிரகாசமா யிருக்கச்செய்யும். பந்துக்கூட்டங்களும் சிநேகிதர் சேர்க்கையும் பொருந்தி, சுகஜீவியாய் வாழ்ந்திருக்கச் செய்யும். ஆனால் சுக்கிரபகவான் செவ்வாயுடன் சேர்ந்திருந்தால் கொடிய இரணக்களத்தில் சண்டை சச்சரவு நேரிடும் போது எத்தகையதான சித்தப்பிரமையும் பயங்கரமும், சஞ்சலமும், திகிலு மேற்பட்டு கலங்கச்செய்யுமோ அவ்விதமா யிருக்கும்.
புதபகவான் பலன் விபரம்
புதபகவாங்'கன்னியா ராசிதன்னில் பொருந்தியேஉச்சமா யிருந்துதானால் சதபாக்யம்தராரதி லாபத்தோடு சொர்னபணிபூஷணமும் மிகஉண்டாகும் சதமானவித்தையும் உத்யோகலாபம் சம்பத்துண்டாகும்சனி ராகுகேதுசேர்ந்தாலோ பதமாகுதுன்பம்துயர் விஷேஷமாகி பலதுன்பமனுபவிப்பார் கவனிப்பீரே. 4
உரை-புதபகவான் கன்னியாராசியில் உச்சமாயிருந்தால் பொன் பொருள் சேர்க்கை வித்யాలాபம் உத்தியோகவிருத்தி வியாபாரலாபம் கீர்த்தி பெருமை புத்திர மித்திராதி களத்திர னாப மனைத்தும் உண்டாகும். ஆனால் புதபகவானுடனே சனி
Page 122
நவக்கிரகமாலை
ராகு கேது சேர்ந்தால் பல துன்பமும் துயரமும் நேரிடும் என்றும் சுபக்கிரகங்கள் பார்வையானால் மத்திய பலனாயிருக்கும்.
குருபகவான் பலன் விவரம்
குருபகவான்கடகத்தி லுச்சமானால் குற்றமிலாராஜயோ கத்தை தந்து பெருமையுடன் பொன்பொருளும் புத்ரபாக்கியம் பெற்றினிதாய்வித்யா விருத்தி உத்யோகமேன்மை அருமையாய்வர்த்தகத்தில் லாபம்பெற்று அவனியிலே சுகவானாய் ஜீவிப்பார்கள் பருதிசனிராகுகே திவர்களெல்லாம் பார்த்தாலும் சேர்ந்தாலும் கொடுமையாமே. 5
உரை :- குருபகவான் கடகராசியில் உச்சமாயிருந்தால் ராஜ யோகமாய் ஜீவித்திருக்கும்படியான நன்மையையும் பொன் பொருள் பூஸ்தி புத்திரலாபமும் வித்யாபிவிருத்தியும் உத்யோக விர்த்தியும் திரவியலாபமும் வியாபாரவிருத்தியும் பெற்று சுக ஜீவியாயிருப்பதற்காகும். ஆனால், சூரியன் சனி ராகு கேது இவர்கள் பார்த்தாலும் சேர்ந்தாலும் பலவிதமாகிய துன்பமும் மனஸ்தாபமும் கஷ்டமும் கவலையூமுண்டாகும்.
சுக்கிரபகவான் பலன் விவரம்
சுக்கிரனும் மீனத்தி லுச்சமானால் சுகமானபோகபலன் மிகஉண்டாகி சிக்கிலாவியாபார லாபத்தோடும் சீரான உத்யோக தனசம்பத்தும் பக்குவமாய்பெறுவர்க ளானாலுந்தன் பருதிசேயிராகுகேது இவரோடுற்றால் துக்கமிரும்கஷ்டமும் கவலையாலே துன்பமுற்றுக்கலங்குவார் கவனிப்பீரே. 6
உரை :- சுக்கிரபகவான் மீனராசியில் உச்சமடைந்திருப்பாரானால் சுகபோக சம்பத்தும் கீர்த்தியும் பெற்றிருப்பதுடன் உத்யோக சம்பத்தினாலும் வியாபார சம்பத்தினாலும் பொருள் சேகரஞ்செய்து மேன்மை யடைந்திருக்கும்படிச் செய்வார். ஆனால் அந்த சுக்கிரனுடன் சூரியன், செவ்வாய், இராகு, கேது சேர்ந்திருந்தால் கஷ்டமும் கவலையும் வறுமையும் வியாதியும் சத்துருக்களின் கலகமும், பயங்கரமும் பொருந்தி துன்புறச் செய்யும்.
Page 123
சனிபகவான் பலன் விபரம்
சனிபகவான்துலாராசி தன்னிலேதான் சார்ந்துச்சமாகவே யிருப்பாரானால் கனிவுடனேதனதான்ய சம்பத்தோடும் கௌரவமுங்கீர்த்தியும் பொருந்திநாளும் இனிதாகசுகபோக மனுபவிப்பார் இரவிசேயிராகுகே திவரோடுற்றால் முனிவுடனேசகலருக்கும் சத்ருவாகி மூர்க்கமுடன்வறுமையுற்று கலங்குவாரே. 7
உரை: - சனிபகவான் துலாராசியில் உச்சம் பெற்றிருந்தால் மகா சாமார்த்தியமும், மனதைரியமும் உற்சாகமும் பொருந்தி வித்யாபிவிருத்தியும் உத்தியோக மேன்மையும் கீர்த்தியும் தனதான்ய சம்பத்தும் பெருமையும் பொருள் சேர்க்கையும் புத்திரமித்திராதி களத்திரலாபமும் கிடைத்து ஆனந்தமா யிருக்கச் செய்யும். ஆனால் அந்த சனிபகவானுடனே சூரியன் செவ்வாய் இராகு கேது சேர்ந்தாலும் பார்த்தாலும் பலவிதமாகிய துன்பமும் நஷ்டமும் கவலையும் உண்டாவதுடன் வியாதியும் துயரமு முண்டாகும்.
இராகுபகவான் பலன் விபரம்
அன்பாகஇராகுபக வான்தனக்கு ஆனதோர்விருச்சிகத்தில் உச்சமானால் பொன்பொருளும்பூஸ்தம்பம் மிகசம்பத்தும் பொருந்தியேகீர்த்தியுடன் வாழ்ந்திருப்பர் இன்னலுடன்சூரியன்மதியம் சம்பந்தமானால் இனியில்லாமனக்கவலை சூழ்ந்தெப்போதும் துன்பமுடன் துயர்மிகந்து கஷ்டநஷ்டம் தொடர்ந்துமிகவறுமையினால் திகய்ப்பர்தானே. 8
உரை: - இராகுபகவான் விருச்சிகராசியில் உச்சமாயிருந் தால் வெகுவித சாமார்த்தியமும் வித்யாபிவிருத்தியும் மனோல்லாச மும் உத்யோகவிருத்தியும், வியாபார லாபமும் பெற்று, தன தான்யசம்பத்துடன கீர்த்திபிரகாசமாயிருப்பதற்காகும். ஆனால் அந்த ராகு பகவானுடனே சூரியனும் சந்திரனும் சம்பந்தமானால் பலவிதமான மனசஞ்சலமும் துக்கும் பயங்கரமும் கஷ்டநஷ்ட மும் கவலையும் வியாதியும் சூழ்ந்து கல்லையினால் திகிலடையச் செய்யும்.
கேதுபகவான் பலன் விபரம்
கேதுபகவான விருச்சிகரசிதன்னில் கெம்பீரமாகவே உச்சமானால்
Page 124
நவக்கிரகமாலை
ஒதுபுகழ்கல்வியும் ஞானமார்க்கம் ஒப்புவமையில்லாம லதிகரித்து ஏதுங்குறையில்லாமல் தனவானாகி எவர்களுமேபுகழ்ந்துரைக்க ஜீவிப்பார்கள் தீதுவரும்சூரியன்மதியும் கேதோடூற்றால் தியங்கியேமனங்கலங்கி துடிபார்தானே. 9
உரை:—கேதுபகவான் விருச்சிகராசியில் உச்சமாயிருந்தால் கல்வியும் ஞானமும் கீர்த்தியும் பெருமையும் பொருந்தி வித்யாபி விருத்தியும் உத்தியோக மேன்மையும் வியாபார லாபமும்பெற்று தனதான்ய சம்பத்துடன் பந்துமித்திர களத்திர புத்திரபாக்கியத்துடனே மேன்மையாய் ஜீவித்திருப்பதாகும். ஆனால் சூரியன் சந்திரன் கேதுபகவானுடனே சேர்ந்திருந்தால் மனக்கலக்கமும், கவலையும், சஞ்சலமும், சோர்பலும் மனச்சோர்வும் பொருந்தி மனைவி மைந்தர் சுற்றத்தார் பந்து மித்திரர்களும் மனவெறுப்பாகவே யிருப்பார்கள்.
இராகு கேதுக்களின் பொதுப் பலன் விபரம்
அன்பானமேஷம்கடகம் கன்யாராசி ஆனதோர்விருச்சிக மகரராசிதன்னில் இன்பாகராகுகே திருபாரானால் இராஜயோகத்தைப்போல் ஜீவித்திருப்பார்கள் பொன்பொருளும்ஆஸ்தி புள் நிதிகளெல்லாம் பொருந்தியே சுகஜீவியாகவாழ்வார் நன்மையாய்லக்கினபலன் ஆராய்ந்தன் றாய் நவிலுவீர்ஜோதிட சாஸ்திரவல்லோரே. 10
உரை:—மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம் மகர ராசிகளாகிய இந்த ஸ்தானங்களிலெங்கேனும் இராகு கேதிருப் பாரானால் இராஜயோகத்தை அனுபவிக்கும்படியான சக்தியும், தனதான்ய சம்பத்தும், தீரமும், மனோற்சாகமும், பெருமையும், கீர்த்தியும், ஞானமும், புத்திரமித்ராதி களத்திர லாபமும், உத்தியோக விர்த்தியும், வியாபார லாபமும் பொருந்தி மிகவும் கீர்த்தி பிரகாசமாய் ஜீவித்திருக்கும்படியாய்ச் செய்வார்கள்.
நவக்கிரகங்களின் ஸ்தாந பலன்
தினகரன்சேய்மால்பொன்னன் சுக்ரனோடும் திங்கள்சனிராகுகே தொன்பதுபேரானோர் மனமகிழகேந்திர ஸ்தாநம்போனால் மற்றுமுள்ளசுபக்ஷேத்ரம் அசுபக்ஷேத்ரம்
Page 125
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
தினமானஆட்சிஉச்சம் பகைநட்புநீச இடத்திலிருந்தாலவர்கள் கொடுக்கவல்ல கனமானபலாபலனை தெரிவிக்கின்றோம் கவனமாயிருகவீர் ஜோதிடவல்லோரே. 11
உரை:- சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன் முதலானவர்களும் சனி ராகு கேதுக்களும் கேந்திரஸ்தானம் கோண திரிகோண ஸ்தானம், நட்பு ஆட்சி உச்சம் பகை நீசஸ்தானம் ஆகிய ஸ்தானங்களிலிருந்தால் கொடுக்கும் பலாபலனை விபரமாய் கவனித்து இலக்கினபலன் இராசிபலனையும் ஆராய்ந்து திசாபுத்தி பலனையும் சோதித்து ஜாதகர்க்கு பலன் சொல்லவேண்டும்.
நவக்கிரக சேர்க்கைபலன் விபரம்
சூரியன்சந்திரானாம் குருவும்சேர்ந்து சுகமாக கடகத்தில் விருப்பாரானால் வீரியமாய் மனோற்சாக மதிகரித்து விரும்பியதோர் காரியங்கள் சித்தியாகும் காரியுடன்பருதியும்சேய் சிம்மத்துற்றால் கவலையுடன் பயங்கரமும் திகிலுண்டாகி பாரிலுள்ளோரெந்நாளும் பரிகசித்து பழித்திடவும் வறுமையால்கலங்குவாரே. 12
உரை:- சூரியபகவானும், சந்திரபகவானும், குருபகவானும் கடகராசியிலிருந்தால் மனோற்சாகமும், தைரியமும், கீர்த்தியும் பொருந்தி சமர்த்தராய், பொன் பொருள், பூஸ்திதியுடன் ஜீவித்திருப்பார்கள். ஆனால் ஆதித்தனும் சனியும் சிம்மராசியிலிருந்தால் சதாகாலமும் கவலையும், கஷ்டமும், மனப்பயங்கரமுமிகுந்து, துயரத்திலாழ்ந்து துடிப்பார்கள். ஆனால் இலக்கின பலனையும் ஆராய்ந்து பார்த்து விபரம் விபரமாய் கணிதநூல் கணக்கெடுத்துப் பார்த்து பலன் சொல்லவேண்டும்.
சூரியன் ஆட்சிஸ்தான பலன்
சிம்மத்தில்சூரியனும் ஆட்சிபெற்று சீராகமேஷத்தில் குருவிருந்தால் தம்முடையபலன் தருவாரெவ்வாறென்னில் தனதான்யசம்பத்தும் கீர்த்திலாபம் அம்புவியோர்அதிசயிக்கத் தருகுவார்கள் ஆடைஆபரணமெல்லாம் மிகவேதந்து செம்பொன்னும் மனைகாணிபூமிலாபம் சேகரித்துபெருமையுடன் ஜீவிப்பாரே. 13
Page 126
நவக்கிரகமாலை
உரை:--சிம்மராசியில் சூரியன் ஆட்சியா யிருக்கும்போது அவர்மீது மேஷத்திலிருந்து குருபகவான் பார்வை செலுத்துவால் அறிவு விருத்தி, வித்யாகாபம், கீர்த்தி, பெருமைகளனைத்தும் விளங்கி சுகானந்தமாய் அனந்தானந்த சம்பத்து, ஆடை ஆபரணம் பூமிலாபமும் கீர்த்தியும் பெற்று சுகஜீவியா யிருப்பதாகாகும்.
இராகு கேதுக்களுடன் சேர்ந்த சூரியன் பலன்
பருதியுடன் இராகுகே திவர்கள்சேர்ந்து பகையுடனேயிருந்தாலே கொடுமைசெய்து தருவார் வெகுதுன்பம் வறுமையோடு தரணியிலே காண்போர்க்கு பகையாமவர்கள் பொருளில்லாமனத்துயரால் கலகமுற்று புத்திதடுமாறியே உயிரிழக்க கருதியே சாகாலம் மனத்திகைத்து கலங்குவார் துயரத்தி லாழ்த்தெந்நாளும்.
உரை:--தினகரனெனும் சூரியனுடன் இராகு கேது சேர்ந்திருந்தால் சகலருக்கும் பகையாகி துன்பமும் துயரமும் வறுமையுமடைந்து பலவிதமாய்க் கலங்குவார்கள். ஆனால் தரணியில் வாழும் பலவிதமான மனிதர்கள்சள் சத்துருவாய் அமைந்து தனது வாயினாற் சொல்லும் வார்த்தையே பகையாய் விளைந்து, சண்டை சச்சரவும் கஷ்டநஷ்டமும் பொருந்தி ஒடிநடித்துக் கலங்கி மனச்சோர்வடைந்து சோம்பலும் மனத்திகிலுமுண்டாகி கலவரமாய் புத்தி தடுமாற்றத்தினால் தியங்கி கலங்கி திக்பிரமையடைந்து துடிதுடிப்பார்கள்.
சந்திரன் கடகத்தில் ஆட்சிபெற்ற பலன்
சந்திரன்கடகத்தில் ஆட்சியாயிருக்க ஜன்மநட்சத்திரம்பூச மாயிருந்தால் பந்தபாசங்களில்லா ஞானத்தோடும் பக்தியும்சாந்தமும் பொருந்தி நல்ல சுந்தரமாய்நற்குணமும் விவேகத்தோடும் சூழ்புவியில் ஞானவானென்றுரைக்கும் அந்தமிகும் கீர்த்திப்பிரகாசமாக அவனியிலேவாழ்ந்திருப்பார் சற்குலவீரே.
உரை:--சந்திரபகவான் கடகராசியில் ஆட்சி பெற்றிருக்கும்போது ஜன்ம நட்சத்திரம் பூசமானால் நற்பூஷணமும் வித்தையும் புத்தியும் ஞானமும் நல்லறிவும் வல்லமையுஞ் சீருந்தி, அடக்கம் பொறுமை தயாளம் ஜீவகாருண்ய மமைந்த நற்குணந்
Page 127
சந்திரனுடனே இராகு கேது சேர்ந்த பலன்
மதியுடனே இராகு கேதுக்களானோச் மன்னு துலாராசியில் இருந்திட்டாலும் எதிரியாய் விருச்சிகத்தி லிருந்திட்டாலும் எத்ததியும் கலவரமும் கஷ்டமாகும் நிதியிலா வறுமை பிணி துயரமெல்லாம் நேர்ந்து துன்பமும் சூழ்ந்து கொடுமை செய்யும் அதிக துன்பமும் மிகுந்து வியாதியாலே அலைச்சலுற்றலைவார்கள் கவனிப்பீரே. 16
உரை:—சந்திரன் இராகு கேதுக்களுடனே சேர்ந்து துலா ராசியிலிருந்தாலும் அல்லது சந்திரனுக்கு நீசஸ்தானமாகிய விருச்சிக ராசியிலிருந்தாலும் பலவிதமாகிய கஷ்டமும் கலவரமும் திகிலும் பயங்கரமும் வறுமையும் சஞ்சலமும் துன்பமும் துயரமும் அலைச்சலும் உண்டாகி, பலவிதமான கொடுமைகளும் நேரிட்டு துயரப்படச் செய்யும். ஆனால் இலக்கினாதிபன் கிரகங்கள் பார்வை சம்பந்தமும் சோதித்துணர்ந்து பலன் சொல்லவேண்டும்.
செவ்வாய்பகவான் மேஷ விருச்சிகத்திலிருந்த பலன்
சீக்கிலாமேஷவிருச் சிகத்தில்செவ்வாய் சிறப்பாக யிருந்தாலே யோகமாகும் பக்குவமாய் குருகடகந் தனிலிருந்து பார்த்தாலே பூமிபலன் கிடைத்தே தீரும் தக்கபடி ஆஸ்திபுஸ்தியோ டன்பாய் தாரணியில் சிறப்பாக வாழ்ந்திருப்பார் லக்கினத்தையும்கணித்து திசையாராய்ந்து லக்ஷணங்கண்டுரைப்பீர் ஜோதிடவல்லோரே. 17
உரை:—மேஷராசியிலாகிலும் விருச்சிகராசியிலாகிலும் செவ்வாய் பகவானிருந்தால் மிகவும் மேன்மையான தனலாப போகமாயிருக்கும் ஆனால் குருபகவான் கடகத்தில் உச்சம்பெற்று பஞ்சமஸ்தான பார்வையாக விருச்சிக செவ்வாயைப் பார்த்தால் பொன் பொருள் பூமி லாபம், கீர்த்தியும் தனதான்ய சம்பத்தும் விசேஷமாய் பெருகி பந்துமித்திர களத்திராதிர்கள் சம்பத்
Page 128
நவக்கிரகமாலை
துடனே சதா காலமும் ஜீவித்திருப்பார்கள். ஆனால் இலக்கின கணிதத்தைக் கணக்கெடுத்து இராசிகணிதமும் ஆராய்ந்து நக்ஷத்திர பாகத்தின்படியே திசாபுத்தி பிரித்து பலன் சொல்ல வேண்டும்.
கடகராசியிலிருந்த செவ்வாய் பலன்
கடகத்திலேசெவ்வாய் நீசமாக கதிர்இராகுசேர்ந்திருந்தால் கொடுமையப்பா திடமில்லைஜாதகர்க்கு மனதில்துக்கம் திறமையில்லாசோம்பலுடன் திகைத்திருப்பார் படபடத்தேஎவரேனும் பேசக்கேட்டால் பயங்கரமாய்கண்களில்நீர் சொரிந்துக்கொண்டு விடநாகந்தனைக்கண்ட தேரையைப்போல் விசனமாய்துயருற்று திகைப்பர்தானே 18
உரை - கடகராசியில் செவ்வாய்பகவான் நீசமாயிருக்கும்போது சூரியனும் இராகுபகவானும் அவருடன் சேர்ந்திருந்தால் மிகவும் குரூரமான கொடுமையும் துன்பமும் துயரமும் மனக்கவலையும் சூழ்ந்து துயரப்படச் செய்யும்படியான கஷ்டமும் கவலையுமடைந்து துயரப்படச் செய்யும். அன்றியும் எவர்களானாலும் அதட்டி மிரட்டிப் பேசினால் மன பயங்கரமடைந்து பாம்பைக் கண்ட தேரையைப்போல் திகிலடைந்து கண்ணீர் சொரிந்து கலக்கமடைந்து துயராற் கலங்கி துக்கிக்கும்படியான கவலையுண்டாகும்.
புதன் கன்னியாராசியில் சூரியனுடனிருந்த பலன்
கன்னியிலேபுத னுச்சமாயிருக்க கதிரவனும்சந்திரனும் சேர்ந்திருக்கும்போது நன்னயமாய்பிறந்தோர்க்கு வித்யாவாபம் நடனசாஸ்திரவித்தை வியாபாரத்தால் பொன்பொருளும்புஸ்தியும் சரீராரோக்யம் பொருந்தியேபெருமையாய் வாழ்ந்திருப்பார் அன்பாகமற்ற கிரகங்கள்நோக்கை ஆராய்ந்துபலனுரைப்பீர் ஜாதகர்க்கே. 19
உரை - கன்னியாராசியில் புதன் உச்சமாயிருக்கும்போது சந்திரனும் சூரியனும் வந்து புதனுடனே சேர்ந்திருந்தால் வித்யாபிருத்தியும், சங்கீதஞானமும் சாஸ்திர ஆராய்ச்சியிலும் சிறந்த வித்வானாக விளங்கி காண்போர் புகழ்ந்துரைக்கும் கீர்த்திவந்தனாகி சுகானந்தமாய் திரவியசம்பத்துடனே வாழ்ந்திருந்து பொன் பொருள் புத்தியுடன் நன்மையான பந்துமித்திர களத்திராதியுடனே சுகானந்தமா யிருப்பதற்காகும்.
Page 129
மீனராசியில் இராகுவிருந்த புதன் பலன்
புத்தியெனும்புதபகவான் மீனந்தன்னில் பொருந்தியேயிராகுவுடன் சேர்ந்திருக்க சிந்தைநொந்துருகியே விசனத்தாலே சிறிதேனும்சுகமில்லா களைத்துவீழ்ந்து அந்தகாரத்திற்சிக்கி யலைவதைப்போல் ஆருதயுரற்ற திகைப்பாரப்பா இந்தவிதகடக்கமுண்டு சிவனைபூஜித்தால் இன்பமுடன்வாழ்வார்கள் சுகமாய்த்தானே. 20
உரை:- மீனராசியில் புதன்பலமற்று நீசமாயிருக்க அவருடன் இராகுபகவான் சேர்ந்திருந்தால் பலவிதமான மனசஞ்சலமும் கஷ்டமும், கவலையும், துன்பமும், துயரமும்நேரிடும். ஆனால் சுபக்கிரகங்களின் பார்வையும், இலக்கினபலனும், மற்ற கிரகங்களின் ஸ்தானபலனும் ஆராய்ந்துணர்ந்து பலன் சொல்ல வேண்டும்.
மகரராசியிலிருக்கும் குரு பலன்
மகரராசியில்குருவும் நீசமாக மந்தனும்விருச்சிகத்தி லிருந்துபார்க்க வெகுதுன்பம்சாதகர்க்கு நேரிட்டேதான் வெந்தணல்போல்மனங்கலங்கி திகைத்துசோர்ந்நு சகமிலாகஷ்டாளி யாயிருந்து துன்பமெத்த அனுபவிப்பா னென்றிட்டாலும் புகழ்மேவும்லக்கனபலன் தனையாராய்ந்து பொருத்தமாய்ச்சாதகர்க்கு பலன்சொல்வீரே. 21
உரை:- மகரராசியில் குரு நீசமாயிருக்கும்போது சனிபகவான் விருச்சிகத்தில் பகைபெற்று மூன்றாம்வீட்டுப் பார்வையாக மகரத்தைப் பார்த்தால் அந்தஜாதகன் மனவருத்தமும் மந்தமதி வாய்த்தவனுமாய் மனக்கலக்கமுற்று கஷ்டாளியாக ஜீவித்துக் கொண்டிருப்பான். ஆகையால் இலக்கின பலனையும் மற்ற கிரகங்கள் நின்ற ஸ்தானபலனையும் ஆராய்ந்துணர்ந்து திசையின் குறிப்புணர்ந்து பலன் சொல்லவேண்டும்.
மீனராசியிலிருக்கும் சுக்கிரன் பலன்
மீனத்தில்சுக்கிரனு முச்சமாகி வியாழனும்ஆட்சியா யிருந்தாரானால் வானவர்கள்புகழ்ந்துரைக்கும் வேதசாஸ்திரம் வையகத்தோருக்குணர்த்தும் ஆசானாகி
Page 130
நவக்கிரகமாலை
ஞானமுடன்வெகுகீர்த்தி யாய்விளங்கி ஞாலத்தில்தனவானா யிருப்பதாகும் ஊனமுடன்சேயிரவியும் புகரோடுற்றால் உலுத்தகுணதரித்திரனா யிருப்பார்தானே. 22
உரை:—மீனராசியில் சுக்கிரன் உச்சம்பெற் றிருக்கும்போது குருபகவானும் ஆட்சிபாய் சேர்ந்திருந்தாரானால் பிறந்த ஜாதகன் வித்யாபிவிருத்தியடைந்தவனாய் சதுர்வேதமுணர்ந்த சாஸ்திரக்ஞானியாய் உலகத்திலுள்ள மாணாக்கர்களுக்கு ஞானோபதேசஞ் செய்யும் குருவாய் விளங்கி கீர்த்திப்பிரகாசமாய் வெகு பொருள்தேடி, திரவியவந்தனாய் ஆசார அநுஷ்டானத்துடன் கீர்த்திப்பிரகாசமாய் ஜீவித்திருப்பதற்காகும். ஆனால் சூரியனும் செவ்வாயும் சுக்கிரனுடனே சேர்ந்திருந்தால் மந்தபுத்தியும் துர்க்குணமும் பொருந்திய உலுத்தனாய் சகலருக்கும் பகையாகி வறுமையாளனா யிருப்பதற்காகும்.
துலாராசியிலிருந்த சனி பலன்
சனிபகவான் துலாமிலுச்சமாயிருக்க சார்ந்துசுக்ரர் ஆட்சியாயிருப்பாரானால் கனிமொழிமாதர்சேர்க்கை பந்துமித்ரர் கௌரவமாய்ப்புகழ்ந்துரைக்கும் தனவானாகி இனிதாகசகலருக்கும் நல்லோராக இப்புவியில்வாழ்ந்திருப்பா ரෙන්றிட்டாலும் தினகரனும்இராகுசேர்ந் திருபாரானால் திகைத்துமனச்சோர்வுற்று கலங்குவாரே. 23
உரை:—சனிபகவான் துலாராசியி லுச்சமாயிருக்கும்போது சுக்கிரனும் ஆட்சியாயிருந்தால், தனதான்ய சம்பத்துடன் கீர்த்திப் பிரகாசமாயிருப்பதுடன் அழகான பெண்களின் சேர்க்கையும் பந்துமித்திரர் கூட்டத்தாரும் தன்னைப் புகழ்ந்துரைக்கும்படியான கௌரவமும் பொருந்தி யிருப்பதற்காகும். சூரியனும் இராகும் சேர்ந்திருந்தால் துன்பமும் துயரமுமா யிருப்பதற்காகும்.
விருச்சிகராசியிலிருந்த இராகு கேது பலன்
விருச்சிகத்தில்ராகு கேதுக்களானோர் விருப்பமுடனுச்சமா யிருக்கும்போது அருமையுடன் குஜபகவான் விருச்சிகத்தில் ஆட்சிபெற்றிருந்தாலே பூமிலாபம் பொருளுடனேபொன்பணிகள் ஆடைபூண்டு போற்றுவார்பந்துமித்ர கூட்டமெல்லாம் பருதிசனிஇராகு கேதுடனேசேர்ந்தால் பலதுன்பம்வினையு மென்றுபகலுவீரே. 24
Page 131
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
உரை: விருச்சிகராசியில் இராகுபகவானாகிலும், கேது பகவானாகிலும் உச்சமா யிருக்கும்போது செவ்வாய் பகவான் ஆட்சியா யிருந்தால் தனதான்ய சம்பத்தும், பூமிலாபமும், பொன் பொருள் ஆஸ்தி புஸ்திதியும் பெற்று, மிகவும் கீர்த்தியாய் பந்துமித்திர கூட்டத்தாரெல்லோரும் புகழ்ந்துரைக்கும்படியாய் ஆனடிமையுடன் ஆனந்தமாய் வாழ்ந்திருப்பார்கள். ஆனால் சூரியபகவானும், சனிபகவானும் அவருடனே சேர்ந்திருந்தால் பந்துமித்திரர் பகையும், பலவிதமான வம்பும், சண்டைசச்சரவும், கோர்ட்வியாஜ்யத்தினாலும் துன்பமும், துயரமும், கண்டமும், கவலையும் நேரிட்டு கலகத்தினால் கலங்குந் தன்மையாயிருக்கும்.
நவக்கிரக ஆரூடம்
அன்புடனே ஆரூடங்கேட்கவந்தோர் அவர்கள்வாய் கிழமை சொல்லக்கேட்டு பொன்புகர்சேய்மால்மந்தன் பருதிதிங்கள் பொருந்தியவாரத்திலொன்றைச் சொல்வாராகில் தன்மையையவரவர்க ளிருந்தராசி தனையறிந்துபலாபலனை யாராய்ந்தன்பாய் நன்மைதின்மை இன்னதென கேட்போருக்கு நவிலுவீர்ஆரூட பலனைத்தானே. 25
உரை:—எவர்களாலும் ஆரூடங் கேட்கவந்தால் அவர்கள் வாயினால் ஓர் கிழமையை சொல்லக்கேட்டுத் தெரிந்துகொண்டு, அந்தந்த கிரகங்களின் பலமும் குணமும் செயலும் பொருந்திய ஆரூட பஸ்னுக்கசைந்த நன்மை தின்மையை கவனித்து பலன் சொல்லவேண்டும். அதன் காரணமும், விஷயங்களின் விபரமும் இதற்கடியில் விபரமாய்க் குறித்திருக்கின்றதை கவனித் துரைப்பீர் ஜோதிட கணிதவல்லோரே.
ஞாயிற்றுக்கிழமை பலன் விபரம்
ஆரூடங்கேட்கவந்தோர் ஞாயிறென்று அன்புடனேதானுரைத்த பலனைக்கேளு பாருலகிலுத்யோக வியாபாரத்தின் பலன்கேட்கவந்தாயென் றுரைப்பாய்நீயே சீருடனேநடக்கும்சில தினத்திற்குள்ளே சிந்திப்பாய்சூரியனை ஆதிவாரம் காருண்யமாகவே நினைத்ததெல்லாம் கைகூடும்படிசெய்வா ரென்றுசொல்லே. 26
Page 132
நவக்கிரகமாலை - ஞாயிற்றுக்கிழமை பலன் (தொடர்ச்சி)
உரை—ஆருடம் கேட்க வந்தவர்கள் ஞாயிற்றுக்கிழமை யென்று சொல்வாரானால், ஜீவிப்பதற்கிசைந்து உத்யோகஞ் செய்வதற்கோ அல்லது வர்த்தகஞ் செய்வதற்கோ நினைத்திருக்கின்றாய். ஆனால் அது தற்சமயம் நடக்காது இன்னும் சிறிது நாட்கள் சென்றால் நிறைவேறும். இந்தக் காரியம் ஜெயம் பெறுவதற்காக ஞாயிற்றுக்கிழமையில் சூரியபகவானுக்கு தேனுந் தினைமாவும் ஆராதனை செய்து பிரசாதம் புசித்து விரதமிருந்து, அன்றிரவு சூரியனுக்கு அர்ச்சனை செய்தால் காரியசித்தியாகும் படியாய் கருணைபுரிவார்.
திங்கட்கிழமை பலன் விபரம்
திங்களென்றால் சந்திரன் பேராகுமப்பா தியங்கிமயங்காம லாரூடந்தான் சங்கையிலாதுரைத்திடுவோர் வந்தகார்யம் சந்தோஷசுபகார்யம் விவாகந்தானும் மங்கலமாய்டுக்குமோ நடவாதோவென்று மனதினிலேநினைத்துவந்தா யுந்தனுக்கு கங்கணப்ராப்தமு மாச்சுதென்று கழறுவாய்சி தமாய் முடியுமென்றே. 27
உரை:—திங்கட்கிழமை யென்றுரைத்தால் சந்திரனாகும். அவர் சுபகாரியம் முடிப்பவராகையால், ஆருடங் கேட்க வந்தவர்கள் கலியாண காரியத்தைக் குறித்து கேட்கலானார்களென்றும், அது எவ்விதத்திலும் முடியுமென்றும் கங்கணபிராப்தியா யிருக்கிறதென்றும் விபரமாய்ச் சொல்லவேண்டும்.
செவ்வாய்க்கிழமை பலன் விபரம்
வந்தோர்செவ்வாயென்று சொல்வாரானால் வாதுவழக்குக்கோர்ட்டு வியாஜ்யமென்றும் பந்துக்கள்கலகமென்றும் பூமிபொன்னும் பகரும்உத்யோக வர்த்தகமென்றோது இந்தவிதம்கேட் டொன்றைச்சொல்வாராகில் இக்காரியம்முயற்சிசெய்தா லாகுமென்றும் செந்தில்வேலவனைபூசித் தாராதித்து செவ்வாய்க்கும் அர்ச்சித்தால்சித்தியாமே. 28
உரை:—ஆருடங் கேட்க வந்தவர்கள் செவ்வாய்க்கிழமை என்று சொன்னால் பூமி பொன் பொருள் வியாபாரத்தைக் குறித்துக் கேட்க வந்தீர்களென்றும், உத்தியோகம் தொழில் முதலானவைகளைக் குறித்துக் கேட்டீர்களென்று சொன்னால் இவைகளில்
Page 133
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
எது நினைத்து வந்தார்களோ அவைகள் கலக்கத்துடன் முடியுமென்றும் சிவசுப்பிரமணியரைப் பூசித்து செவ்வாய்க்கு அர்ச்சனை செய்தால் காரியசித்தி யாகுமென்றும் சொல்லவேண்டும்.
புதன்கிழமையின் பலன் விபரம்
ஆருடங்கேட்கவந்தோர் புதனென்றோதில் அவர்மனதில்மனைபெண் பொன்னினைத்தாரென்றும் ஊருக்குபிரயாண மிவைகள்தன்னை உன்மனதில்நினைத்துவந்தா யென்றுசொல்லு சீருடனே இவற்றிலொன்றை நினைத்தோமென்றால் சிறப்பாகநடக்குமென்றும் ஜெயமென்றோது காருண்யதிருமாலை பூசித்தாலே கைகூடுமென்றுரைத்து அனுப்புவாயே. 29
உரை:—ஆருடம் கேட்க வந்தவர்கள் புதன்கிழமையென்று சொன்னால் அவர்கள் மனை, பூமி, கன்னிகை, பொருள், ஊருக்குப் பிரயாணம் இவைகளிலொன்றை நினைத்து வந்தார்களென்றும், தாமதமாய் நடக்குமென்றும், விஷ்ணுபூஜை செய்து புதனுக்கு அர்ச்சனை செய்தால் காரியசித்தியாகுமென்று சொல்லுவாய்.
குருவாரத்தின் பலன் விபரம்
சொன்னவாரம்வியாழக் கிழமையானால் சொர்ணபணிஉத்யோகம் வியாபாரத்தை நன்னயமாய்கேட்கவந்தா யென்றுசொல்நீ நவின்றதிலொன்றுறுதியா யுரைப்பாரப்பா பண்ணுமிந்தகாரியம் பலிக்குமென்று பக்ஷமுடனேயுரைப்பா யோர்மாதத்தில் உன்னுடையசிநேகிதனால் நடக்குமென்று உரைத்திட்டாலுண்மையென நம்புவாரே. 30
உரை:—ஆருடம் கேட்க வந்தவர்கள் வியாழக்கிழமை என்று சொன்னால் அவர் நினைத்த காரியம் ஆபரணங்கள் செய்வதற்கென்றும், உத்தியோகம் தொழில் வியாபாரமென்றும் சொல்வாய். அவைகளில் எவைகளிலாவது ஒன்றை நினைத்து வந்தோம், அது நடக்குமோ நடக்காதோ, எத்தனைநாள் பொறுத்து நடக்குமென்று கேட்டால் நீ நினைத்த காரியம் பூணூல் தரித்தவனாலும் அழகான பருத்த சரீரமுடையவனாலும் நிறைவேறும். ஒருமாதஞ் சென்ற பிறகுதான் காரியசித்தி யாகுமென்றும், அதற்கு அடிக்கடி நீ முயற்சி செய்து கொண்டிருந்தால் கண்டமில்லாமலும் கவலையில்லாமலும் நிறைவேறுமென்றும் சொல்வாய்.
Page 134
நவக்கிரகமாலை / வெள்ளிக்கிழமையின் பலன் விபரம்
சொல்லுமென்று ஆரூடம் கேட்கவந்தோம் சுக்கிரவாரத்தின்பேர் சொல்வாராகில் நல்லபெண்தனைநினைத்தாய் வர்த்தகமுத்யோகம் நகைசெய்தலிவைகளிலொன்றுண்மையென்றால் பல்லாதொன்றெண்ணாதே பத்துநாட்கள் பலுக்குமப்பா நீநினைத்த காரியம்தான் இல்லாளும் நீயுமாய் பக்தியாக இலக்ஷியைபூஜித்தால் காரியசித்தியென்றோதே. 31
உரை:—ஆரூடம் கேட்கவந்தவர்கள் வெள்ளிக்கிழமை என்று சொன்னால் நீ அழகிய பெண்மீது வைத்த ஆசையாலும், வர்த்தகம் செய்வதற்கென்றும் மனதில் நினைத்துவந்தா யென்றுரைப்பாய். அவர்களிலொன்றை நினைந்து வந்தோம் காரியம் சித்தியாகுமாவென்று கேட்டால் நினைத்த காரியம் பத்து நாளைக்குள் முடியும். ஆனால் இலக்ஷ்மீவிரதம் அனுஷ்டிப்பாயென்று விபரமாய்ச் சொல்வாய்.
சனிக்கிழமையின் பலன் விபரம்
வந்தாரூடங்கேட்போர் சனிவாரத்தை வழுத்தினால்வர்மனதில் நினைந்தசேதி எந்தஸ்தானத்திலுத் யோகங்கிடைக்கும் என்னதொழிலிப்போது வாய்க்குமென்றும் சிந்தித்தாய்வர்த்தகத்தின் நினைவுகூன்றும் சீக்கிரத்தில் நீநினைத்த காரியமெல்லாம் பத்துக்கள் ஒருவனால் நடக்குமென்று பகருவாய்ஆரூடங்கேட்க வந்தோர்முன்னே. 32
உரை:—ஆரூடங் கேட்க வந்தோர் சனிக்கிழமையென்று சொன்னால் கைத்தொழிலேனும் உத்தியோகமாகிலும் வர்த்தகஞ் செய்வதற்காகிலும் நினைத்து வந்தீர்களென்று சொல்லி, அவைகளில் எதை நினைத்து வந்தோமென்று சொல்லுகின்றார்களோ அதை ஸ்திரப்படுத்திக்கொண்டு நீ நினைத்த காரியம் உமது பத்துக்களில் ஒருவனால் சித்தியாகுமென்றும், சனிக்கிழமை தினத்தில் விரதமிருந்து நவக்கிரக பூஜைசெய்து காரியசித்தி செய்துக்கொள்ள வேண்டுமென்றும் சொல்வாய்.
Page 135
ஆரூட லக்ஷணமும் பலன் சொல்லும் விபரமும்
இவ்விதமாய் ஆரூடங் கேட்கவந்தோர் இசைந்தவாரத்தின்பேர் சொல்வனறியீரே ஒவ்வியேகிரகநிலை தனையாராய்ந்து ஒதுகின்றபலனுடனே சமயம்போல எவ்விதமாயந்தந்தக் காரியங்கள் எந்தெந்தகாலத்தில் நடக்குமென்றுஞ் அவ்வவ்விதமாகவே ஆரூடசாஸ்திரம் ஆராய்ந்து நடக்கின்ற பலன்சொல்வீரே.
உரை:- ஜோதிடநூல் சாஸ்திரத்தில் சொல்லி ஆசையுடன் ஆரூடங் கேட்கவந்தவர்களின் வாயிலிருந்து பின் பேரைக்கேட்டு அந்தக் கிழமைக்கிசைந்த கிரக நில ான் நினைத்த காரியம் அமைந்திருந்தாலும் அன்னி வேறும் காலத்தையும் குறிப்பித்துச் சொல்வதுமன்றி சுவ மாய் அந்த நவக்கிரகங்களாகிய சூரியன், சந்திரன், செவ் ுதன், குரு, சுக்கிரன், சனி யென்னும் இந்த சப்த கிரக மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிங்கம், கன்னி, து விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன மென்னும் பன்னி ராசியி லெத்தராசி ஸ்தானத்தி லிருக்கின்றதோ அ வனித்துத்தான் ஆரூட பலன் சொல்லவேண்டும்.
நவக்கிரகமாலை முற்றிற்று.
Page 136
அப்பாவு ஐயரால் அருளிச்செய்யப்பட்ட தாண்டவமாலை - நூற்பெருமை
வெண்பா
ஓரைமுதலாவுரைக்குமவையாவும் ஓராயிரமுதலோர்ந்துரைக்க - பாரிவிந்தத் தாண்டவமாலைப்படியேதக்கவிசேடபலன் ஆண்டருள்வீராற்றறிவினீர். 1
உரை :- நிறைந்த வறிவினையுடைய புலவர்களே பூமியினிடத்தில் இலக்கினமுதலாகச் சொல்லப்பட்ட பாவங்கள் சகலத்தையும் ஓராசாரம் பராசாரிய முதலான நூற்களை ஆராய்ந்தறிந்து செய்த தாண்டவமாலை யென்னும் இந்நூற்படியே தகுந்த விசேடமாயிருக்கும் பலாபலன்களை அறிந்தருளீர்கள்.
கருத்து :- ஓராயிர முதலென்றது இலக்கின முதற் பன்னிரண்டு பாவங்கள் கேந்திர திரிகோணங்கள் திசாபுத்திகள் இவை முதலெனக் கொள்க.
நோக்குவிளக்கம்
பார்ப்பரேயெல்லாரும் பங்குகுருசேய்மூன்று [தான் பார்ப்பத்தைந்தொன்பாறான்பன்னியகோள்-சேர்ப்புமு கெட்டுமேபார்ப்பரெழிலாரிளங்கொங்கை மட்டவிழ்பூங்கோதாய் மதித்து 2
உரை : - அழகுநிறைந்த விளமைதங்கிய ஸ்தனங்களையும் தேன்விரிந்த மலர்கள் பொருந்திய கூந்தலையுமுடையவளே! எல்லாக் கோள்களும் தாந்தாம் இருக்குமிடத்துக்கு 7-ம் இடத்தைப் பார்ப்பார்கள். இவைகளில் விசேடமாய் சனி வியாழம் செவ்வாய் இம் மூவரும் நிரனிறைய 3-இடம் 10-ம் இடம் 5-ம் இடம் 9-ம் இடம் 4-ம் இடம் 8-ம் இடங்களைப் பார்ப்பார்கள்.
கருத்து :- சனி 3-10 - குருவுக்கு 5-9 - செவ்வாய்க்கு 4-8- விசேட பார்வை வென்றறிக.
Page 137
எல்லாக் கோள்களுடைய நன்மை துன்மை
ஐந்தொன்பானதிபராயாவர்விலினு மவர் அந்தமிலின்பப்பலனையற்றுவார்-அந்தமுறம் அறப்பலனுற்றுவாரம்மூன்றாம்பதினொன் றற்பதிகளில்வுலகினோர்க்கு. 3
உரை:- இவ்வுலகத்துள் பிறந்தோர்களுக்கு இலக்கினத்துக்கு 5-ம் இடத்துக்கும் 9-ம் இடத்திற்கும் அதிபராய் எந்தக் கிரகங்கள் வந்தாலும் மட்டில்லாத துன்பபலனைக் கொடுப்பார்கள். 3-ம் இடத்துக்கும் 6-ம் இடத்துக்கும் அதிபராய் எந்தக் கிரகங்கள் வந்தாலும் மட்டில்லாத துன்பபலனைக் கொடுப்பார்கள்.
கருத்து:- முன்சொன்ன 3-6-11-ம் இடங்களி லிருக்கிறவர்கள் பாபப்பலனைக் கொடார்கள் என்றறிக.
கோள்களுக்குரித்தாகுஞ் சுபகேந்திரமும் பாபகேந்திரமும்
கொடியோர்கள் கேந்திரத்தோராகிற்கொடார்கள் கொடியபலனல்லோர்கொடுப்பர்-கடல்புடைசூழ் வையகத்தோர்தங்கட்குவைவேண்மலர்விழிபாம் ஐயபாடின்றியறி. 4
உரை:- கூர்மை பொருந்திய வேல்போலு மலர்க் கண்களையுடைய பெண்ணே! சமுத்திரஞ்சூழ்ந்த பூமியிலுள்ளவர்களுக்குப் பாபக்கிரகங்களாகிய சூரியன், செவ்வாய், சனி இவர்கள் கேந்திரங்களாகிற 1-4-7-10-ம் இடங்களுக்கு அதிபரானால் சுபபலத்தைக் கொடுப்பார்கள். சுபக்கிரகங்களாகிற குரு, சுக்கிரன், புதன், சந்திரன் இவர்கள் கேந்திராதிபதிகளானால் பாபபலத்தைக் கொடுப்பார்கள். முன்சொன்ன எல்லாக் கோள்களும் ஒன்றுக்கொன்று விசேஷ பிரபலராவர். அஃதாவது, 5-ம் இடத்ததிபதிக்கு 9-ம் இடத்ததிபதி பிரபவன் இலக்கினாதிபதிக்கு 4-ம் இடத்ததிபதி பிரபலன் அவனுக்கு 7-ம் இடத்ததிபதி பிரபலன் அவனுக்கு 10-ம் இடத்ததிபதி பிரபலன் 3-ம் இடத்ததிபதிக்கு 6-ம் இடத்ததிபதி பிரபலன் அவனுக்கு 11-ம் இடத்ததிபதி பிரபலன் இவைகளைச் சந்தேகமில்லாமல் அறிவாயாக.
தானமொன்பதிற்கு பலன்
அறைந்ததானத்தலைவர்யாவருமென்மேலாய்ச் செறிந்தவவ்வப்பலனைச்சேர்ப்பார்-அறிந்தருள்வாய் வார்கலன் பொன் வம்பார்வனமுலைப்பூங்கோதைநல்லாய் ஆர்கலிசூழம்புவிபுலார்க்கு. 5
Page 138
உரை:- கச்சும் ஆபரணமும் தேமலும் வாசனையும் நிறைந்த அழகும் பொருந்திய கொங்கைகளையும், பூமாலை சொரியும் நீண்ட கூந்தலையுமுடைய பெண்ணே! கடல்சூழ்ந்த பூமியிலுள்ள வர்களுக்கு சொல்லப்பட்ட தானத்ததிபதிகளாகிய எல்லாருக் மென்மேலாய்த் தங்களுக்குப் பொருந்திய சுபாசுபபலன்களைக் கொடுப்பார்கள். அன்றியும், 5-ம் இடத் ததிபதியைப் பார்க்கிலும் 9-ம் இடத்ததிபதி அதிக பலனைக் கொடுப்பான். இலக்கின கேந்திராதிபதியைப் பார்க்கிலும் சதுர்த்த கேந்திராதிபதி அதிக பலனைக் கொடுப்பன் 3-ம் இடத்ததிபதியைப் பார்க்கிலும் 5-ம் இடத்ததிபதி அதிக பலனைக் கொடுப்பன். அவனைப் பார்க்கிலும் 11-ம் இடத் ததிபதி அதிக பலனைக் கொடுப்பன். ஒழிந்த தானாதிபதிகட்கும் இவ்வளவே கொள்க.
கருத்து:- குரு, சுக்கிரன், புதன், சந்திரன் சுபர்கள் இவர்கள் கேந்திராதிபதிகளானால் சுபபலனைக் கொடார்கள். சூரியன் செவ்வாய் சனி பாபிகள் இவர்கள் கேந்திராதிபதிகளானால் அசுப பலனைக் கொடார்கள். என்றறிக
இரண்டு பன்னிரண்டாங் கிரகவியல்பு
ஒரையுருபக்கத்தினதிபர்களொண்ணுதலாய் சேருமவர்தங்கடங்கள் சீரிடக்கு-நேராகும் அறப்பலனீவாரலைகடல்சூழ்வையகத்தில் எப்பிறவியோர்க்குமிருந்து. 6
உரை:- ஒளி பொருந்திய நெற்றியையுடையவளே! அலை பொருந்திய சமுத்திரஞ் சூழ்ந்த பூமியினிடத்தில் எந்த ஜாதகர்களுக்கும் இலக்கினத்திற்கு இரண்டு பக்கமாகிய தனவியர்த்தா னாதிபதிகள் தங்கள் தங்களுடனே சேர்ந்த கோள்களுக்கும் தங்கள் தங்களுக்கு வேறாமிடத்திற்கும் நேராகிய சுபபலன்களைக் கொடுப்பார்கள் என்பதாம்.
கருத்து:- கிரக சம்பந்தமும் இராசி சம்பந்தமும் இல்லாம லிருந்து உள்ளளவில் தங்கள் தங்கள் பொசிப்பிற்கு ஒத்த பலன் என விசாரித்து கூறுதலெனக் கொள்க.
எட்டுக் கிரகவியல்பு
பாக்கியநாசத்திரையாம்பவத்தாலெட்டதிபன் வீக்குவம்பார்முலையாய்மேதினியோர்-காக்கமிலாந் துன்பமீவன் னிவனே தூயரோதிராதிபனேல் இன்பமீவன்விகவியே. 7
Page 139
உரை:-கச்சுக்கட்டிய தனங்களை யுடையவளே! பூமியிலுள்ளவர்களுக்கு 8-ம் இடத் ததிபதி பாக்கியஸ்தானத்திற்கு விரயத்தானாதிபதியான பாவத்தினாலே நன்மை பெருக்கமில்லாத துன்பத்தைக் கொடுப்பன். அந்த 8-ம் இடத் ததிபதிதானே இலக்கினாதிபதியானால் மாறுபாட்டின்பத்தைக் கொடுப்பன். கருத்து:-8-ம் இடத் ததிபதியைப்போல மிகவுந் துன்ப பலத்தைக் கொடாரெனவுணர்க.
கேந்திராதிபத்திய தோஷம்
கண்டததிபரம்பபத்திற்காரிகையாய் கொண்டகுருவெள்ளிகொடியரிவர்-தாண்டாமல் ஆயுஷத்திருபாராமாநிலையமிலா தாயுவியஞ்செய்: திடுவாராங்கு. 8
உரை:- பெண்ணே! கேந்திராதிபத்திய தோஷத்தில் குருவும் வெள்ளியும் மிகவும் பலவான்கள் இவர்கள் நீங்காமல் ஆயுளுக்குள் வியஸ்தானமாகிய 27-ம் இடங்களில் நின்றாராகில் சந்தேகமில்லாமல் ஆயுவியஞ் செய்வார்கள். கருத்து:-மார்க்கத்தானாதிபதியைப் பார்க்கிலும் அந்த மார்க்கத்தானத்திலிருப்பவர்கள் பலவான்களெனக் கொள்க. இவர்கட்குக் கேந்திராதிபத்ய தோஷத்தார் கூறப்பட்டது மாரகத்தான் இலக்கினமேற் கூறுகின்றது.
புதன் சசி இரவிக்குண்டான குணம்
பின்னரப்பாவத்திற்பெரியன்மாலாகும் பின்னரவன்றந்தைபேசுங்கால்- இந்நிலத்தில் எட்டாமிடத்ததிபனெண்ணிபெரும்பாவம் கிட்டாதிரவிமதிக்கு. 9
உரை:-குரு வெள்ளிகளுக்குப் பின்னர் அந்தக் கேந்திராதிபத்திய தோஷத்தில் புதன் பலவான். புதன் பின்னரவன் தந்தையாகிய சந்திரன் பலவான். 8-மிடத்தாதிபத்தியாதியா லுண்டான மட்டில்லாத பெரியபாவம் சூரிய சந்திரர்கட்குச் சேராது என்பதாம்.
Page 140
தாண்டவமாலை / செவ்வாய் குணம்
ஆதற்கேரெந்தாங்கண்டாதிக்குன்கானசுபம் சீருற்றகோணத்தாற்சீர்பெறுமே - வாருற்ற கொங்கையாய்க்கச்சாலையூர்த்திகுமாரீந்தையான் சிங்காரமாங்கடச்சிர். 10
உரை: - கச்சணிந்த தனங்களை யுடையவளே! செவ்வாய்க்கு ஆதிக்கத்தினாலே தசமகேந்திராதிபத்தியத்திலுண்டான சுபத்வம் திரிகோணாதிபத்தியத்தி லுண்டானபடியினாலே சிறப்பைப்பெறும் தசமகேந்திராதிபத்தியத்தினாலே மாத்திரம் சிறப்பைப் பொறாது இஃதுகுமார்ந்தையானாகிய தாண்டவபூபன் புதல்வனாகிய கச்சாலை மூர்த்தியினுடைய சாதக இலக்கணமாகிய கடகத்திற்குண்டாகிய சிறப்பு.
இராகு கேதுக்களியல்பு
யாதொருபாவத்தோன்யாதொருபாவேசனுடன் தீதறச்சேர்ந்திட்டாற்றினபலன்கள் - காதுவேற் கண்ணாய்படுங்கோட்கா Cassiniயிலுள்ளவர்கட் கெண்ணாமலீவாரீருந்து. 11
உரை: - காதளவு பொருந்திய கண்களையுடையவளே! பூமியிலுள்ளவர்கட்கு இராகு கேதுக்கள் மற்றைக் கோள்கள் போல ஆதிபத்தியமில்லாதபடியினாலே அவர்கள் எந்த எந்த ஸ்தானத்திலிருந்தார்களோ எந்தெந்தபாவாதிபவர்களுடன்கூடினார்களோ அவ்வவர்கட்கேற்க சுபாசுப பலன்களைக் கொடுப்பார்கள்.
கருத்து: - கூடுமவர்கள் பலராயுள்ளளவில் அதிற் பலவானுக்கேற்ற பலனீவார்களெனவறிக.
பொதுச்சுபயோகம்
கோணக்கோள்கண்டக்கோள்கூடலுடனேபார்த்தால் பேணுற்றொருவரில்லிற்பெட்புடனே - காணாற் றொருவருற்றாராகிலொழிந்தோருளுமல் லிருதலத்தையீவாரியர்க்கு. 12
உரை: - திரிகோணாதிபதியும் கேந்திராதிபதியும் 3-6-8-10-ம்இடங்களுக்கு அதிபதிகளுடன் கூடாமல் தங்கள்தங்கள் சம்பந்தமான வேறோரிடத்தாதிபத்திய தோஷமில்லாமல் இருவரும் கூடல் ஒருவரையொருவர் பார்த்தால் ஒருவரிலோரொருவ ரிருத்தலான சம்பந்தமுற்றாராகில் இவ்வுலகத்தோருக்கு விசேஷ சுபபலனைக் கொடுப்பார்கள்.
Page 141
இராஜயோகம்
கருத்து:— தானவிசேஷத்தால் சுபபலனைக் கொடுப்பவரானாலும் ஒருவருக்கொருவர் சம்பந்தத்தால் விசேஷபலனைக் கொடுப்பார்களென்றறிக.
இராஜயோகம்
வலியாருங்கண்டக்கோள்வாய்ந்தகோணக்கோள் நலிபார்களாலினுமேலல்லர்—ரவியாமல் கூடினமாத்திரத்திற்கொம்பனையாய்தாண்டவன்றன் பீடூருவேட்சீரென்றுபேசு. 13
உரை:— பூங்கொம்புக்குச் சமானமானவளே! தசமகேந்திராதிபதியும் நவமதிரிகோணாதிபதியுங்கூடின் முதலான சம்பந்த மாத்திரத்தினாலே பாலக்கோளுடன்கூடி பாவராசியாதிபத்திய முற்றிருந்தாலும் சவியாமல் நல்ல இராஜயோக பலனைக் கொடுப்பார்கள். இஃது தாண்டவமூவன் ஜாதக விலக்கணமான விருச்சிகத்துக் குண்டான சிறப்பென்று சொல்வாயாக.
இராஜயோகம்
நன்மகன்மைப்பதிகட்களிற்றுமறியுமே அன்னியமாய்த்தங்கட்கறையுமிடத்—தின்பமுடன் உற்றிருவாராகிலொளிவளையாயிவ்வுலகோர் பெற்றிடுவார்யாவர்பெரிது. 14
உரை:— சந்திரப் பிரகாசம் பொருந்திய வளையல்களையுடையவளே! தருமதிபதியும் தங்களிடத்திற் றாங்களிருந்தாலும் தங்களுக்கு அன்னியமாய்ச் சொல்லுமிடத்திற் சேர்ந்திருந்தாலும் தருமத்தானத்தில் கருமாதிபதி கருமத்தானத்தில் தருமதிபதி தானிருந்தாலும் இவ்வுலகத்திலுள்ளவர்கள் யாவரும் பெரிதாகிய யோகபலனைப் பெறுவார்கள்.
கருத்து:— தரும கருமாதிபதிகள் தோஷத்துடனே கூடியிருந்தாலும் தோஷத்துடனே கூடாதிருந்தாலும் இராஜயோகத்தைக் கொடுப்பார்கள் எனக்கொள்க.
இராஜயோகம்
ஆய்ந்தகோணத்தலைவாராரேனுமசமவரே டேய்ந்தசம்பந்தமீரைந்தவர்க்கு—வாய்ந்திடுமேல் வையகிலமைதரும் வாணுதலாய் தாண்டவன்போல் செய்கமலைசிறந்து. 15
உரை :— ஒளி பொருந்திய நெற்றியையுடையவனே! ஆராய்ந்தெடுத்த திரிகோணாதிபதிகள் பாவராசியினுமக அவருடனே பொருந்திய சம்பந்தந் தசமகேந்திராதிபதிக்குண்டாகில் திருமகள் சிறந்த தாண்டவனைப்போல அரசுரிமைப்பெறுவாராகத்தோர்.
Page 142
தாண்டவமாலை
யோகதிசையிரண்டினுண்டு நின்றோன்றெசையும் யோகபலனளித்த லொள்ளியதன்—னாகப் படமனையவல்குலாய் பாரினிலக்கோள்கள் உடனுறைகளின்றே யுரை. 16
கருத்து:—சம்பந்த முத்தகிரகங்கள் கொடுப்பார்கள் என்ற போதிலும் தரும கருமாதிபதிகளைப்போலப் பலன்களைக் கொடார் களெனக் கொள்க.
உரை:—ஒளிபொருந்திய நல்லபாம்பின் படத்தை நிகர்த்த வல்குலையுடையவளே! இராஜயோகங் கொடுக்குமவர் திசை யிரண்டினுள் நடுவினின்றவன் திசையும் அவர்களுடன் சம்பந்தமில்லாமலிருந் துள்ளளவில் அவ்வரசயோக பலனைக் கொடுக்குமென்று சொல்வாயாக.
இராஜயோகம்
கோட்கடாம்பொல்லாக் கொடியவர்களானாலும் வாட்கண்ணாய்வல்லோ ருடன்வயங்கும்—காம்புருசம் பந்தமுண்டேற்றத்தம் வயங்குபொசிப்புக்கேற்பத் தந்திடுவர் பூபாலதாம். 17
உரை:—வாள்போலும் கண்களையுடையவளே! கிரகங்கள் தாங்கள் பொல்லாத கொடியவர்களானாலும் அரசயோக மளித்தற்கு வல்லோருடனே விளங்கு முறுதியமைந்த சம்பந்தமுண்டாகில் தாங்கள் தங்கடங்கள் புதிக்கேற்ப அரச யோகபலனைத் தந்திடுவார்கள்.
கருத்து:—புத்தியிலக்கண முன்னர்ப் புகல்கின்றது யோககாரக சம்பந்தத்தால் பாவக்கோள்களும் இப்படிப் பலன் கொடுப்பார்களாகில் சுபக்கோள் கொடுக்கும் நிறைந்த பலத்தில் என்ன சந்தேக மென்பதாயிற்று.
இராஜயோகம்
கண்டக்கோணத்திலிருந்த கடுங்கோட்கடேக்கு [ய் கெண்டைவிழிச்செவ்வாய் கிளிமொழியாய்—ஒண்டொடியா ஆதிபனோடல்லா விடத்துண்டேற்சம்பந்தங் கோதிலியோகங்கொடுப்பார் கூர்ந்து. 18
உரை:—சேல்போலுங் கண்களையுஞ் சிவந்தவாயினையுங் கிளிபோலுஞ் சொற்களையும் ஒளிபொருந்திய வளையல்களையு முடையவளே! கேந்திரத்திலாவது திரிகோணத்திலாவது இருந்த இராகு கேதுக்களுக்கு அல்லாவிடத் ததிபதியுடனே சம்பந்தமுண்டாகில் அந்த இராகு கேதுக்கள் குற்றமற்ற பெரிய யோக பலனைக் கொடுப்பார்கள்.
Page 143
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
கருத்து:—அல்லாதவிடத்ததிபதியுடனே சம்பந்தமுற வென்றால் கேந்திரத்திலிருந்தால் திரிகோணாதிபதியுடனும் திரிகோணத்திலிருந்தால் கேந்திராதிபதியுடனுஞ் சம்பந்தமுதல் பிரபலக்கான பிரபலக்கிரக அனுசாரியாய் விசேஷ சுப பலன்களைக் கொடுப்பாரென்றறிவது.
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
கேந்திரகோணத்தலைவர் கேட்கிலொருவரென் றாத்திரமாயோக மளிப்பாரன்றோ—கூந்தருவீர் அன்னிய திரிகோணத்தவனோ டாய்ந்திடும்பலன்கள் என்னாலறிவதா மீங்கு. 19
உரை:—கேந்திராதிபதியும் திரிகோணாதிபதியும் ஒருவராகில் நிறைந்திறமாயிருக்கப்பட்ட யோகபலனைக் கொடுப்பார். அவர் அந்நியத் திரிகோணாதிபதியுடனே சம்பந்தமுற்றாராகில் இவர் கொடுக்கும் பலன்களை என்னாலளவிட் டறியப்படாதென்று அறிவீர்.
கருத்து:—அவர்கள் பலத்திற்கு அனுசாரியாய்ப் பலத்தை விசாரித்துச் சொல்வது என்றறிக.
இராஜயோக பங்கம்
தன்மகனமதிப்பதிகடா மெட்டுடன்பதினொன் றின்றலைவராகில் பின்பமுற்ற—நன்னயஞ்சேர் சம்பந்தந்தாலே சகத்திலுள்ளோர்தமக்குத் தம்பலனீயாரென்று சாற்று. 20
உரை:—தரும கருமாதிபதிகள் அட்டம இலாபாதிபதிகளாயிருந்தாலும் அட்டம இலாபாதிபதியுடைய சம்பந்தம்வந்தாலும் பூமியிலுள்ளோர்க்குத் தங்கள் சுபபலனைக் கொடார்களென்று சொல்வாயாக.
கருத்து:—இவர்கள் சம்பந்தத்தால் இல்லை எனவே அன்னியோர் காரகசம்பந்த முண்டாயிருந்தால் யோகபலன் அடைவரெனக் கொள்க.
மாரக லக்கணம்
எட்டுமதற்கெட்ட மீரண்டனையுமாயுவென்று திட்டமுடனறிந்து சீரிலா—நட்டத்தை மாரகமென்று வகுத்தறிவாய்மாமயிலே ஆர்கலிசூ ழம்புவியுளார்க்கு. 21
உரை:—பெருமை பொருந்திய மயில்போலுஞ் சாயலையுடையவளே! இலக்கினத்திற்கு 8-ம் இடமும் அதற்கு 8-ம் இடமான 3-ம் இடமும் ஆயுஸ்தான மென்றுபேர் இவைகளுக்குச்
Page 144
தாண்டவமாலை - 137
சிறப்பில்லாத விரயத்தானங்களாகிய 2-ம் இடத்தையும் கடல் சூழ்ந்த பூமியிலுள்ளவர்களுக்கு மாரகத்தானமென்று பகுத்தறிவாயாக.
கருத்து:— பாவம் 12-க்கும் இப்படியே பகுத்தறிவது.
சம்பந்த மாரகம்
அம்மாரகமிரண்டி லாதிலினு மேற்பலமென் றெம்மானவர்க்குமுறை யேந்திழையாய் - அம்மா ரகத்ததிபருற்றா ரவருடனேகூடும் அகத்தவர்க்கு மப்படியேயாம். 22
உரை:— ஆபரணங்களை யுடையவளே! அந்த மாரகத்தானம் இரண்டிலே முந்தின மாரகத்தானமாகிய 7-மிடத்தைக் காட்டிலும் பிந்தின மாரகத்தானமாகிய 2-ம் இடம் பலமென்றுரைப்பாயென்க. அஃதெப்படியென்னில் முதற் பரியாயமாய்ச் சொல்லப்பட்ட மாரகத்தானமாகிய 7-மிடத்திற்கு இரண்டாம் பரியாயமாய்ச் சொல்லப்பட்ட 2-ம் இடம் பலமாயிற்று. உதாரணம்: அறைந்ததானத் தலைவர் யாவரு மென்மேலாய்ச் செறிந்த வவ்வப்பலனைச் சேர்ப்பரென்று முன்னங் கூறியவதனால் 2-ம் இடமே பலமுடையதெனக் கொள்க. அந்த மாரகத் தானாதிபதியைக் காட்டிலும் அந்த மாரகத்தானத்திலிருக்கிறவர்கள் பலமுடையவர்கள். இருக்கிறவர்களைக் காட்டிலும் அந்த மாரகத்தானாதிபதியுடனே கூடியிருக்கிற பாபிகள் பலமுடையவர்கள் 2-ம் இடத்ததிபதி 7-ம் இடத்ததிபதி யிவர்களுடைய பலா பலன்கட்கேற்ப இவர்களுடனே கூடுமவர்கட்கும் பலாபலன் யூகித்துக் கொள்வது.
சம்பந்த மாரகம் (தொடர்ச்சி)
அல்லவர்தங்கட்கமைத்த தெசைபொசிப்பில் செல்வதேயாமரணம் செப்புங்கால்—வல்லமையில் இல்லையாம் கிலையின்முலையீ ராசிடத்தோன் நல்லதெசையி னவில். 23
உரை:— அழகிய கொங்கைகளையுடையவளே! அந்த மாரகத்தானத்திலிருப்போர் அல்லது அந்த மாரகத் தானாதிபதியுடனே சம்பந்தமுற்றிருப்போர் பாபிகளானால் இவர்கட்கமைத்த தெசாபுத்திகளிலே மரணமுண்டாகும். இவைகளில் மாரகமில்லாவிடில் நன்மை பொருந்திய இலக்கினத்திற்கு 12-ம் இடத்ததிபதியினுடைய தெசாபுத்திகளிலே மரணமுண்டாகுமென்று சொல்வாயாக.
Page 145
பெரிய ஜோதிட சில்லரைக் கோவை
இவன்றெசையிலின்றே லிவனிடத்திலுற்ற அவன்றசையிதாமதுவு மன்றல் - சிவந்தவிழி தேமொழியேநல்லோர் தெசையிற்றுனெட்டிடத்தோன் நாம்திசையினவில். 24
உரை:- சிவப்பாகிய கண்களையுந் தேன்போலும் வார்த்தையையு முடையவளே! இந்த 12-ம் இடத்ததிபதியினுடைய திசாபுத்திகளிலே மரணமில்லையாகில் இவனிடமாகிய 12-ம் இடத்திலிருந்தவன் 12-ம் இடத்ததிபதியுடனே சம்பந்தமுற்றிருக்கிற பாபிகள் இவர்களுடைய திசாபுத்திகளிலே மரணமாம். அதிலும் இல்லையாகில் அந்த விரயாதிபதியுடன் சம்பந்தமுற்ற யோககாரகனல்லாத சுபர்களுடைய திசாபுத்திகளிலேயும் சில விசை மரணமாம் இதிலும் இல்லையாகில் 8-ம் இடத்ததிபதி 8-க்கு 8-ம் இடத்ததிபதியான 8-ம் இடத்ததிபதி இவர்களுடைய திசாபுத்திகளிலே மரணமாமென்று சொல்வாயாக. கருத்து:- 8-ம் இடத்துக் குடையவர்கள் ஆயுளைக் கொடுப்பவர்களாகவிருப்பாரும் மற்றவர் வேறுவகையில் மாரகம் உண்டாவதற்கு இடமில்லாததனால் இவர்கள் மாரகங் கொடுக்க வேண்டியதாயிற்று.
பெரிய ஜோதிட சில்லரைக் கோவை
ஆங்கவற்றினில்லையேலல்லாத கற்றவர்தம் ஓங்குதிசையிலுரைக்கவென்-றீங்குயர்ந்தோர் செப்பினார்காரகங்கள் செய்வதறியாவிடின் இப்புவியினோர்க் கென்றுமே. 25
உரை:- பூமியிலுள்ளோர்க்கு எந்நாளும் அந்த 8-ம் இட முதலியவைகளுக்கு அதிபதிகளுடைய திசாபுத்திகளிலேயும் மரணமில்லையாகில் மாரகங்கள் செவ்வையாய் வராத காலத்தில் மாரக சம்பந்தமில்லாமலிருக்கிற பாபக்கிரகங்களுடைய திசாபுத்திகளிலே சிலவிசை மாரகமுரைக்கவென்று சோதிடநூல் வல்லவர்கள் சொன்னார்கள்.
சனியன் மாரகம்
பாபபலனைக்கொடுக்கும் பங்குகொள்வோருடனே சேர்பலத்தரெல்லோரையுஞ் செறித்து - தீபரமாய்க் கொல்வனெனகோதாய் குவலயத்திலுள்ளவர்கட் கில்லிவற்றிலைய மியம்பு. 26
உரை:- மாலையையுடையவளே! பாபபலனைக் கொடுக்கிற சனிமாரகக் கிரகங்களுடனே கூடியிருக்கிற குற்றத்தின் வலிமையினாலே எல்லாரையும்தள்ளி தானே சடுதியில் கொல்வனென்று பூமியிலுள்ளபேர்க்குச் சொல்வாய் இவற்றில் சந்தேகமில்லை.
Page 146
தாண்டவமாலை
கருத்து:—எல்லோரையும் தள்ளி யென்பதனால் தனக்கு முன் தந்தபேர்களையுந் தள்ளிப் பின் வரப்போகிற மாரகர்களையுந் தள்ளி யெனப்படும்.
புத்திவிலக்கணம்
கோட்களெல்லாத்தங்குலவு திசைபொசிப்பில் சேட்படுமிவ்வையகத்திற் செப்பரிய—மாக்கடமக் கீயார்பலாபலன்க ளென்றுந்தமக்கேற்ற சேயரிக்கண்மாதே செப்பு. 27
உரை:—செவ்வரி பொருந்திய கண்களையுடைய பெண்ணே! விசாலம் பொருந்திய இப்பூமியிடத்தில் சொல்லுதற்கரிய மனிதர்களுக்கு எல்லாக் கோள்களும் தங்கள் தங்கள் தெசையில் தங்கள் தங்கள் சுயபுத்தியில் தமக்குத் தக்க சுபாசுப பலன்களை எப்போதும் கொடார்களென்று சொல்வாயாக. கருத்து:—என்னெனில் மேல்வருகிற புத்திகளில் சுபபலனைக் கொடுப்பதனால்தான் தங்கள் புத்தியிலெதைக் கொடுப்பாரெனில் முந்திசைக்கொத்த பலன்களைக் கொடுப்பார்கள்.
புத்திவிலக்கணம்
யாரொருவர்தம்முடனே யுற்றார்தமக்குநிகர் யாரவர்களயாரு மரும்பொசிப்பில்—வார்நெடுங்கண் மாதேகத்தந்திசையின்மாண்பா பலாபலன்கள் கோதாக் கொன்னக் கொடுப்பார்கொண்டு. 28
உரை:—நீண்ட கண்களையுடைய பெண்ணே ! எல்லாக் கோள்களும் யாதொரு கோள்கள் தங்களுடனே சம்பந்தமுற்றார்களோ யாதொரு கோள்கள் சுபாசுப பாவாதிபத்தியத்தினாலே தங்களுக்குச் சமமா யிருக்கின்றார்களோ அவர்களுடைய அரும்பொசிப்பில் தங்கள் தங்கள் திசைகளுடைய மாட்சிமை பொருந்திய சுபாசுப பலன்களை குற்றமற அடையும்படி கொடுப்பார்கள்.
புத்திவிலக்கணம்
அல்லாதவர்பொசிப்பி லன்னியமாம்பலன்கள் எல்லாருமீவரென்றே யின்பமுடன்—சொல்லிடுவீர் கோளின்வலியுங் குணமுமறிந்துநக்கி வாளிடைப்பவர்போல் வந்து. 29
உரை:—சம்பந்தமும் சமானத்துவமும் இல்லாதவர்களுடைய புத்திகளில் தாங்கள் சுபரானால் அசுபபலனையும் அசுபரானால் சுப பலனையும் எல்லாருங் கொடுப்பாரென்று கூறுவீராக. சொல்லும்போது கோட்களுடைய வலிமையாகிய நட்பு, ஆட்சி, உச்சம், பகை, நீச முதலாகியவைகளையும் காரகத்துவமுமறிந்து வாளின்மேல் நடப்பவர்போல சாவதானமாய்ப் பலன்களைச் சொல்வீர்.
Page 147
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
தன்றெசையிற்கோணத் தலைவன்கண்டத்தலைவன் றன்பொசிப்பிற்றானளிப்ப தக்கசுபம் - அன்னவனும் அப்படியேயாகு மவ ரகத்தான்றியூர செப்படனின்றளிப்பன் சீர். 30
உரை: - திரிகோணாதிபதி தன் திசையில் கேந்திராதிபதியின் புத்திகளில் தனக்குத்தக்க சுபபலனைக்கொடுப்பன். அத்தன்மையாகிய கேந்திராதிபதியின் வன்திசையில் திரிகோணாதிபதி தன் பொசிப்பில் தனக்குத்தக்க சுபபலனைக் கொடுப்பன். திசாநாதன் புத்திநாதன் இந்த இரண்டுபேர்களும் ஒருவர்க்கொருவர் சம்பந்த மில்லாமலிருந்தபோதிலும் இவர்களுக்கு நுட்டஸ்தானாதிபதி பத்திய தோஷம் வராமலிருக்க வேண்டுவது என்பதாம்.
கருத்து: - பத்தாமதிபதி தெசையில் நவமாதிபதி உத்தியில் விசேஷ சுபபலனைக் கொடுப்பன்.
மாரக திசாபோக பலன்
அரசயோகந்தனக் காரம்பமாக மரணமளிப்போரவர் பொசிப்பில் - வரிசையினால் மென்மேல்விளங்குமிது முதல்பாவத்தார் தன்மாபொசிப்பு களீற்றுன். 31
உரை: - பிரதானமாலிருக்கப்பட்ட மாரகருடைய தெசா புத்திகளில் இராஜயோகம் ஆரம்பித்தால் அதுமுதல் பாபக்கிரகங்களுடைய புத்திகளின் வரிசையினால் அந்த ராஜயோகம் மேன்மேலாக விளங்கும்.
கருத்து: - யோககாரக தெசையில் புத்திநாதருக்கு பாபத்துவத்தினாலுண்டான தோஷமில்லை யெனக்கொள்க.
திசாபோக பலன்
கூடுசுபர்யோகங் கொடுத்திடுவர்கூடாத நீடுசுபர்பொசிப்பி னேராக - நாடிடுவாய் காரகர்சேராச்சுபர்கள் காணரசயோகபலன் பாரிலுளோர்க் கீவர்பரிந்து. 32
உரை: - பூமியிலுள்ளோர்க்கு யோகசம்பந்தமுற்ற சுபக்கிரகங்கள் சுயபுத்திகளில் யோகபலனைக் கொடுப்பார்கள். அச்சம்பந்தமிராத சுபக்கிரகங்கள் சுயபுத்திகளில் சமபலனைக் கொடுப்பார்கள். அச்சம்பந்தப்படாத யோககாரகன் சுயபுத்திகளில் யாவருங் காண்கிற இராஜயோகபலத்தை பரிவுடன் நாடுப் பார்க்கென்று அறிந்து கொள்வாய்.
Page 148
தாண்டவமாலை (பக்கம் 141)
கருத்து:—முற்கூறப்பட்டோங்கள் சுயபுத்திகளில் வரிசையாகவும் சமமாகவும் பலனைக்கொடுப்பாரென்பதாயிற்று.
தாண்டவமாலை (பக்கம் 141)
யோகமளிப்பவர்க ளொன்றுஞ்சபர்தெசையில் பாகமுற்ற தங்கள் வரும்பொசிப்பில்—யோகபலன் கொஞ்சங்கொடுப்பரென்று கொண்டாற்குமுக்கனிவாய் நஞ்சமருவாள்விழியாய் நாடு. 33
உரை:—மேகம்போல் கூந்தலையும் கொவ்வைக்கனிபோல் வாயினையும் விஷம் பொருந்திய வாள்போல் கண்களையுமுடைய மானே! யோக காரககிரகங்கள் தங்களுடன் சம்பந்தமில்லாத சுபக்கிரகங்களுடைய தெசையில் தங்கள் தங்கள் புத்திகளிலே அற்ப யோக பலனைக் கொடுப்பாரென்று கூறுவாயாக.
தாண்டவமாலை (பக்கம் 141)
எழிலார்சுப வீட்டி லேந்திராசுகேது தழியாவாராக விருந்தும்—கழிவாந் பொசிப்பிற்கனுகூலம் பூண்ட நல்லயோக தெசைப்பலனீவர் தெளிந்து. 34
உரை:—அழகிய சுபக்கிரகங்களுடைய வீட்டில் மற்றைக் கோளுடனேயும் சம்பந்தமில்லாதிருக்கிற அழியாத இராகு கேதுகள் பெருமை பொருந்திய பொசிப்பில் இராஜயோக பலனைக் கொடுப்பார்கள்.
தாண்டவமாலை (பக்கம் 141)
அசுந்தோர்தெசைக்கிறைவ ராகிலவரோடு மிதற்செரியாநல்லோர் பொசிப்பில்—பகைப்பலனாம் சேருஞ்சுபர்பொசிப்பிற் செய்வரவர்க்கொத்தபலன் காரகிற்பாபபலன் காண். 35
உரை:—பாபக்கிரகங்கள் தெசாதிபதிகளானால் அவருடன் சம்பந்தமில்லாத சுபக்கிரகங்கள் புத்திகளிலே பாபபலனைக் கொடுப்பார்கள் சம்பந்த முற்றிருக்கிற சுபக்கிரகங்களுடைய புத்திகளிலே தெசாதாதனுக்கொத்த புத்திநாதனுக்கொத்த பலனுமுண்டாம். யோககாரக கிரகங்களுடைய புத்திகளிலே மிகவும் பாபபலன்களைக் கொடுப்பார்க ளென்றறிக.
கருத்து:—தெசாநாதன் பாபியானாலும் அவனிலை அறிந்து சொல்வாயாக.
மாரகதிசா யோக பலன்
மாரகன்றன்திசையின்மன்னுஞ் சுபர்பொசிப்பில் மாரகத்தைப்பண்ணானாம் மானவர்க்கு—மாரகத்தைப் பண்ணுவான்றன்திசையில் பற்றாவசத்தவர்கள் துண்ணும்பொசிப்பிற் றுணிந்து. 36
Page 149
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
உரை:—மனிதர்க்கு மாரகன் றன்தசையில் தன்னுடன் சம்பந்த முற்றிருக்கிற சுபக்ரகங்களுடைய புத்திகளில் மாரகத்தைக் கொடாமல் தன்னுடன் சம்பந்தமில்லாமலிருக்கிற பாபக் கிரகங்களுடைய புத்திகளில் துணிந்து கொல்வான். கருத்து:—மற்றை மாரகவிலக்கணமனைத்து முன் சொன்னபடியே கொள்கவென்க.
சனி சுக்கிரன் பலன்
பிருகுத்திசையிற்சனிதன் பேரொபொசிப்பில் பெருசுபாசுபங்கள் பேணித்—தருதுவன் அன்னவணுமப்படியே யாழ்ந்தறிவாம்நீர்கூழும் இந்நிலத்தோரியாவர்க்கு மென்று. 87
உரை:—கடல்சூழ்ந்த இப்பூமியிலுள்ளவர் யாவர்க்கும் சுக்கிரன் தன் திசையில் சனியின் பொசிப்பில் தனக்குண்டான பெரிதாகிய சுபாசுப பலன்களை விசேஷமாய்க் கொடுப்பன் அந்தச் சனியுந் தன் திசையின் சுக்கிரபுத்தியில் தனக்குண்டான சுபாசுப பலன்களைக் கொடுப்பனென்று ஆலோசித்தறிவாய்.
கோள்களின் குணங்களைப் பகுத்தறிதல்
ஓரைதொறுமுன்ன முரைத்தபடிகோட்குணங்கள் சேரவரிசையதாய் செப்பிடுவன்—நாரமாகுட் காம்புறுதோட்கண்டார்சொற் கார்கூந்தற்காசிகையாய்ப் பாம்புறுதல்வல் குலினாம்பார்த்து. 88
உரை:—கருமை பொருந்திய கண்களையும் மூங்கில் போன்ற தோள்களையும் கற்கண்டிற்கொப்பாகிய மொழிகளையும் மேகம் போன்ற கூந்தலையும் படம் போன்ற நிதம்பத்தையுமுடைய பெண்ணே! மேஷமுதல் பன்னிரண்டு பாவங்களும் முன்சொல்லியபடியே சூரியன் முதலான கிரகங்களுடைய சுபாசுப குணங்களை வரிசையாகத் தொகுத்துச் சொல்லுவரேன்.
மேஷராசி பலன்
மத்தனெடுமால்சுங்கன் மாபாவிநல்லவர்கள் கொந்தலர்பூங்கோதாய் குருவிரவி—சந்ததமும் நீயபலன்காரியொடு தேவபிரான்சேர்ந்தக்கால் நீயுமவனோ டொற்றதே. 89 மாரகத்தானப்பதியா மன்னுகின்றபார்க்கவனும் மாரகத்தைச்செய்யானெம் மானவர்க்கும்—மாரகத்தைச்
Page 150
தாண்டவமாலை
சேய்வார்சனிமுன்னோர் செவ்வியமேடம்பிறந்தோர்க் கிவ்வாறாராய்ந் திருந்து 40
உரை :- பூங்கொத்துகள் பொருந்திய அழகிய மாலையினை யுடையவளே! சனி-புதன் சுக்கிரன் இவர்கள் பாபிகள் குரு-சூரி யன் இவர்கள் நல்லவர்கள் சனி சம்பந்தமுற்றால்குரு எப்போதும் அவனுக்கொத்த பாபபலனைக் கொடுப்பான் இதற்குதாரணம் ரவி மகன் மதிக்கப்படாமெட்டுடன் பதினொன்றின் றலைவனாவது ரவி மாரகஸ்தானாதிபதியாகிய சுக்கிரன் கொல்லான். சனி முதலானவர்கள் கொல்வரென்று மேஷராசியிற் பிறந்தோர்க் குக் கூறுவாய்.
தாண்டவமாலை
குருவெள்ளி யிந்துகொண்டாடக்கொடியர் மருவுசுபக்கோன் மந்தனென்றும்-திருவமரு யோகங்கொடுப்பான் சனியொருவனா மெனவே ஆகுமெனப்பாவா யறி 41
குருமுதலாக்கூறுகின்ற கோட்களேகொல்லும் மருவினையரா ராயினென்றும் -வெரியும் படியிடபவோரையினிற் பார்மிசையிற்றோன்றும் முடியுடையோர்கட்கு மொழி. 42
உரை:- பிரதமை போன்றவளே! குருவும் வெள்ளியுஞ் சந்திரனும் பாபிகள். சனியும் இரவியும் நல்லவர்கள். சனி யொருவனே சிறப்புப் பொருந்தி மேலான இராஜயோகங் கொடுப்பான். குரு முதலானவர் கொல்வரென இப்பலனை ஆராய்ந்து பார்க்கும்போது பூமியின்கண் இடபவிராசியிற் பிறக் கின்ற கிரீடத்தையுடைய அரசர்க்குத் தெரியும்படி சொல்லுவாய்.
கருத்து:-குரு சுக்கிரன் சந்திரன் இவர்களுடன் சம்பந்தப் பட்ட கிரகங்களை யாராய்ந்து அவர்கள் நிலைகளறிந்து சொல்லத் தக்க தென்க.
மிதுனராசியின் பலன்
சேய்சிவனோடிரவி சேராகக்கடுங்கொடியர் ஆயுபுகரோனொருவ னானகோள்-சேயிழையாய் மந்தனொடுமந்திரியும் வன்மையுடன் கூடுமெனல் நத்துமேடப்படி நாடு. 43
அசமர்த்தனித்துகொல்லைக் நன்றமுதலாய் அசமர்த்தரல்ல நிதாராயில்-இசையும் நிலங்குமதிமுகத்தா யென்றறிமூன்றாகும் தலங்கொனிராசிக்கு நவில். 44
Page 151
மிதுனராசி பலன் (தொடர்ச்சி)
உரை:—செவ்வியாகிய வாபரணங்களையும் புகழ்பெற்றப் பிரகாசிக்கும் பூரணச்சந்திரன் போன்ற வதனத்தையுடையவளே! அங்காரகன் குரு சூரியன் கொடியபாவிகள்; சுக்கிரன் ஒருவனே சுபன். குரு சனியுடன் சேருவானாகில் மேடராசியில் பிறந்தோர்க்கொத்தபடி அவயோக காரகனாவான். சந்திரன் துதியாதிபத்திய தோஷத்தை அடைந்தவனா யிருந்தாலும் மாரகங்கொடான். சூரன் குரு சூரியன் இவர்கள் மாரகத்தைக் கொடுப்பார்களென்று மூன்றா மிராசியாகிய மிதுனராசியிற் பிறந்தோர்க்கு சொல்வாயாக. காரகன் வலியறிந்து சொல்கவெனக் கொள்க.
கடகவிராசி பலன்
சுங்கனிந்துமைந்தனிவர் குழாக்கொடுங்கோட்கள் மங்கலன்மாவேந்தனிவர் மன்னுபின் றாங்குமுள்ள நல்லோர்களல்ல யோகக்கிறைவனுகுமவன் சொல்லுரிற்பூசுசுனாய்ச் சொல். 45
ஆதித்தன்கொல்லான் மற்றாரென்னுங்கொல்லுமவர் சோதித்துரைக்கிற் சுங்கன்முதல் தீதுற்றோர் கண்டென்றுகண்டோறு வந்தனைசொற்காசிகையாய் நண்டுலுதித்தோர்க்கு நவில். 46
உரை:—கற்கண்டென்று கண்டோர்களுள்ளங் களிக்குஞ் சொற்களையுடைய பெண்ணே! ஆலோசிக்கும்போது சுக்கிரன் - புதன்-பாவிகள். செவ்வாயுங் குருவும் விசேஷசுபர், யோககாரகன் செவ்வாய் ஒருவனே, சூரியன் கொல்லான்; கொல்வாரெனினில், சுக்கிரன் முதலியோர் கொல்வார் கடகராசியிற் பிறந்தோர்க்கு இப்பலனைக் கூறுவாய்.
கருத்து:—சூரியன் துதியாதிபதி யானபோதிலுங் கொல்லான் என்க.
சிம்மராசி பலன்
பந்தியம்பார்க்கவேனும் போற்றக்கரும்பாவி செந்நிறத்தசெவ்வாயே—செம்மைக்கோன் யோகமுற்றாந்தீப்பலனை யோராதளித்திடுவார் ஆகமதியாரால் பகர். 47
புந்திமுதலாய்ப்புகலும் பொல்லாரேபூமிசையோ ரந்தமதாய்க்கொல்வரவர் வினையில்—பந்தமுற்றா ராகிலையமிழையாய்கேளிகழ்வையகத்தில் தாமான சிங்கத்தலர். 48
Page 152
தாண்டவமாலை
உரை:- சிங்க நிறத்தையும் ஆராய்ந்தெடுத்த வாபரணங் களையுமுடையவளே! கடல்சூழ்ந்த பூவுலகத்தில் புதன், சுக்கிரன், துதிக்கத்தகாத பாபிகள் செவ்வாயொருவனே நல்லவன்; யோககாரகன் செவ்வாயும், சுக்கிரனும் இவர்கள் சம்பந்த முற்றால் தீயபலனைக் கொடுப்பார். புதன் முதலானபேர் மாரகக் குறியுற்றாரானால் கொல்வாரென்று சிங்கவிராசியிற் பிறந்தோர்க்கு ஆலோசித்துச் சொல்லுவாயாக.
கருத்து:- செவ்வாயோக காரகனானபோதிலும் சதுர்கேந்திராதிபதி சம்பந்தத்தினால் தீயபலனைக் கொடுப்பா ரென்றதாயிற்று
கன்னிராசி பலன்
செவ்வாயும்செம்பொன்னுஞ் சேரமதியுமிவர் வெவ்வாயர் வெள்ளி விளம்புங்கால்-ஒவ்வுசுபன் பார்க்கவணும்பங்கயமா வைரிமைந்தன்றாணிவர்கள் ஆர்ப்பெறுமா யோகத்தாராங்கு. 49
கொல்லான்பெரிய பிருகுசனாதியர்கள் எல்லாருங்கொல்லு மியல்புடையார்-நல்லாயென் றெந்நாளுங்கூறுவாயோ ரிவைமீதுதித்து மண்ணுமவர்க்கு மகிழ்ந்து. 50
உரை:- செவ்வாய், குரு, சந்திரன், பாபிகள்; வெள்ளி யொருவனே சுபன். வெள்ளியும், புதனும் யோககாரகர் வெள்ளி கொல்லான். புதன் முதலான பேர்கள் எப்போதும் கொல்வாரென்று கன்னிராசியிற் பிறந்தோருக்குச் சொல்வாய்.
கருத்து:- சுக்கிரன் துதியாதிபதியா யிருந்தாலும் கொல்லா னென்றறிக.
துலாராசியின் பலன்
குருவிரவிசேய்கொடியர் கூறாரவிபுத்தி மருவுதலமுடையார் மண்ணில்-திருமருவும் யோகத்தாரிந்துவுமே யச்சுதனுமொண்ணுதன்மீ தாகுமனகத்தா யறி 51
சேய்கொல்லான்சீவன்முன் னானவர்களேகொல்வர் தேயுமதியனைய செந்துதலாய்-ஆயும் அறிவினோரெல்லா மளந்தறிகோலின் குறியாகுமென்றுங் கூறு. 52
உரை:- ஒளிபொருந்திய நெற்றியினையு மேலாகிய கூந்தலையு முடையவளே! பிரகஸ்பதி, சூரியன், செவ்வாய் - இவர்கள்
Page 153
துலாராசி பலன் (தொடர்ச்சி)
சனியும் புதனும் சுபன் ; சந்திரனும் புதனும் யோககாரகன் ; செவ்வாய் கொல்லான். குருமுதலானவர்கள் கொல்லுவாரென்று துலாராசியிற் பிறந்தோர்க்கு யூகித்துச் சொல்வாய்.
விருச்சிகராசி பலன்
புந்தியுஞ்சேயும்புகரும் பொல்லாக்கொடியர் இந்துவொருத்தனே யேந்திழையாய்-சந்ததமும் நல்லனிஞ்ஞாலநல னளிப்போன்ஞாயிறுடன் அல்லவனு மாகவறி. 53
குருவென்பலன்கொல்லான் கோதாய்கொல்வோர்கள் மருவுபுகர்முதலோர் மன்னும்-திருவதியர் என்றுமிரோகந்தீரத்தோ ரெல்லார்க்குமிப்படியே குன்றெனவே கூறுகளை. 54
உரை :-ஆபரணங்களையும் மலைபோன்ற கொங்கைகளையு முடையவளே ! புதன், செவ்வாய், சுக்கிரன், பாபிகள் ; சந்தி ரன் ஒருவனே சுபன், சூரியனும் சந்திரனும் யோககாரகன் ; குரு துதியாதிபதியா யிருந்தபோதிலும் மாரகத்தைச் செய்யா னென்றும் புதன் முதலானவர்கள் கொல்வார்களென்றும் விருச் சிக ராசியிற் பிறந்தோர்களுக்குச் சோதித்து அறிவாய்.
தனுசுராசி பலன்
ஒருவன்புகர்பொல்லாஞாணன் சேயிரவி மருவுதலாயோகரென மன்னு-திருவுடைபோர் பார்க்கவணும்பந்தியென்று பாம்பேரகலல்குல் சீர்க்கமலச்சேவிழையாய் செப்பு 55
கதிரவன்சேயாகியவர் காரிகொல்லான்கொல்வர் மதியுதலாய்வெள்ளிமுன்னோர் மன்னும்-திதியுடைய பாபிகளென்றோதிப் படிமிசையிலெந்நாளும் சாபமதிலுற்றவர்க்குச் சாற்று. 56
உரை :-அரவப்படம்போன்ற வல்குலையும் சிறப்புற்ற தாமரை மலரில் விளங்கிய இலக்குமிக்குச் சமானமும் பிறை போன்ற நெற்றியினையு முடையவளே ! சுக்கிரன் ஒருவனேபாபி செவ்வாயும் சூரியனும் சுபன். சூரியனும் புதனும் யோககார கன். சனி ஒருவனே கொல்லான், சுக்கிரன் முதலானவர்கள் எப்போதும் கொல்வார்களென்று பூமியின்கண் தனுசிற் பிறந் தோர்க்குச் சொல்வாய்.
கருத்து:-சனி துதியாதிபதியா யிருந்தபோதிலும் கொல்லா னென்றறிக.
Page 154
தாண்டவமாலை - மகரவிராசி பலன்
ஆரல்பொன்னிந்து பொல்லாரானவர்சுங்கன்புந்தி வீரமிகுயோகபரன் வெள்ளியே—காரனைய கூந்தன்மடமானே கும்பிகொல்லானென்றே ஆய்ந்துணர்ந்தோர் தாமுரைத்தாராம். 57
சேய முதலாய் முன்னமே செப்புமவரேகொல்வர் வாய்ந்தமகரத்தில் வந்துதித்து—காந்திலிபுற வாழுமவர்க்கென்றே வகுத்துரைத்தாரென்றுமிடிச் சூழ்ந்துமடமாய்லே சொல். 58
உரை:—மேகத்தை நிகர்த்த கூந்தலையும் மயிலைநிகர்த்த சாயலையுமுடைய பெண்ணே! செவ்வாய் குரு சந்திரன் பாபிகள் சுக்கிரனும் புதனும் சுபர்வெல்லி ஒருவனே இராஜயோக காரகன்; சனி கொல்லான்; செவ்வாய் முதலானபேர் கொல்லுரென்று தெரிந்தவர்கள் ஆலோசித்துச் சொன்னார்களென்று மகர ராசியிற் பிறந்தோர்க்குச் சொல்வாயாக.
கருத்து:—சனி துதியாதிபதியா யிருந்தாலும் மாரகத்தைக் கொடான்.
தாண்டவமாலை - கும்பவிராசி பலன்
பொன்மதியேபொல்லார் புகரொருவரேபுனிதன் நன்னயஞ்சேர்யோக நயந்தளிப்போன்—கன்னனிதர் ஆனமொழிமாதே யசுரர்தமக்கென்றும் ஞானதியையுரைப்போ னன்கு. 59
வேந்தனென்போன்கொல்லான் வெரிகமழ்பூங்கோகோல் ஆய்ந்துணரிலாரான்முன்னானவரே—தேய்ந்துரையாப் [ழோர் வேலையுடைகூழலகில் வெம்புகுடந்தன்னில் காலவுதித்தோர்க்கென்று சாற்று. 60
உரை:—சர்க்கரையை நிகரான சொற்களையும் வாசனை வீசு மாலையினையுமுடையவளே! குரு சந்திரன் செவ்வாய் இவர்கள் பாபிகள் ; சுக்கிரன் ஒருவனே சுபன். அந்தச் சுக்கிரனே யோக காரகன் குருகொல்லான் செவ்வாய் முதலான பேர்கள் கொல் வார்களென்று சமுத்திரஞ் சூழ்ந்த பூமியின்கண் கும்பவிருச்சியிற் பிறந்தோர்க்குக் கூறுவாயாக.
கருத்து:—குரு துதியாதிபதியா யிருந்தபோதிலும், மாரகத் தைக் கொடான் என்றறிக.
Page 155
மீனராசியின் பலன்
காசிபுகர்வெய்யோன் மால்காணாக்கெடுங்கொடியார் ஆரலோடிந் துவிரானவரே—சேர்ந்தக்கால் செய்யோன்குருவிவரே செல்வமளிக்கும்பெரியோர் ஐயமினிநூலிடையா யாய்ந்து. 61
பூசுதன்கொல்லான்கொல்வார் போதசனிமுதலாந் தேசுபெறும்பாவரென்று தேர்ந்துரைப்பாய்—காசினியில் கட்கரியமென்று கதித்துவளர்மீனத்தின் உட்பிறப்போர்க்கெண்ணுதலா யோர்ந்து. 62
உரை:—சந்தேகமற்று நூல்போன்ற யிடையினையும் ஒளி பொருந்திய நெற்றியினையு முடையவளே! சனி சுக்கிரன் சூரியன் புதன் பாவிகள். செவ்வாயும் சந்திரனும் சுபர் செவ்வாயும் குரு வும் ராஜயோககாரர்கள் செவ்வாய் கொல்லான் சனி முதலான வர் கொல்வாரென்று மீனராசியிற் பிறந்தோர்க்குக் கூறுவாய்.
கருத்து:—செவ்வாய் சூதியாதிபதியா யிருந்தபோதிலும் கொல்லான். கிரகங்களுடைய வலிமையை யூகித்துச் சொல்லுக வென்க.
சுபாசுபர்களைப் பொதுவிற் கூறுகின்றது
நல்லார்பொல்லார்களென்று நாடிநவிலாத எல்லாருமிலவுலகோர்க் கேந்திழையாய்—சொல்கின்ற தானமதற்குந்தம்மைச் சார்ந்தசுவாசத்திற் காணிருமையிவ ராய்ந்து. 63
உரை :—ஆபரணங்களை யணிந்தவளே ! பூமியிலுள்ளவர் கட்குச் சுபாசுபர்களென்று குறித்துச்சொல்லாத எல்லாக்கோட் களும் எல்லாரும் சொல்லுகின்ற தங்கள் தானத்துக்குஞ் சுபா ருடன் பிறர் சம்பந்த முற்றிருக்கிறதற்கும் அனுகூலமாய்ப் பலன்களை கொடுப்பார்களென்று ஆராய்ந்து சொல்வாயாக.
கருத்து:—சுபர்கள் பாபசம்பந்தப்பட்டுத் துர்ஸ்தானங்களிலாவது மாரகஸ்தானங்களிலாவது இருந்தால் பலாபலனைக் கொடுப்பார்கள். பாபிகள் சுபசம்பந்தப்பட்டுக் கேந்திர திரிகோணங்களிலிருந்தால் சுப பலனைக் கொடுப்பார்களென்க.
ஸ்தான பலன்
புத்திரகாராதியனைப் போற்றுகின்றபாவத்திற் கொத்தசுபர்கொட்டையிலொன்போசிப்பிற்—புத்திரர்தா ரம்முதலாய்ப்பேரளிப்பா ராயிழையாயார்களிரும் அம்புவிவாழு மவர்க்கு. 64
Page 156
தாண்டவமாலை
உரை:-ஆராய்ந்தெடுத்த ஆபரணங்களை யுடையவளே! கடல்சூழ்ந்த பூமியிலுள்ளவர்களுக்கு புத்திர களத்திரபாவ முதலான ஸ்தானத்துக்கொத்த சுபக்கிரகங்களுடைய தெசாபுக்திகளிற் புத்திர தாராதிப பலன்களைப் பெறும்படி கொடுப்பார்கள்.
கருத்து:-புத்திர தாராதி ஸ்தானங்களுக்கொத்த சுபரா வது அத்தானாதிபதிகளும் காரகாரும் தான்.
தாண்டவமாலை
கோட்சாரங்கொண்டு குறிப்பதல்லான்மானவர் தம் நாட்பலனன்றான்முகனை யன்றியே-வாட்கண்ணாய் ஆர்வல்லாற்கூறுவதற் கார்வல்லார்கேட்பதற்கே யார்வல்லாராய்வ தற்கு. 65
உரை:-வாள்போலும் கண்களையுடையவளே! மனிதர்களுக்குத் தினபலன் சொல்வதற்குச் சோதிடநூல் வல்லவர்கள் கிரகசாரங்களைக் கொண்டு யுத்தியாகச் சொல்லிக் காண்பிப்பார்களே யன்றித் தாரதன்மியங்களைப் பிரிவினையாய்ச் சொல்ல வேண்டுமென்றால் பிரமதேவனொருவனைத் தவிர சொல்வதற்கும் கேட்பதற்கும் ஆராய்வதற்கும் யார் வல்லவர்.
தாண்டவமாலை
யோகமதிலுற்பவித்து மோங்கும் பயனின்றிக் தாகமிகவுற்றிருப்பார் தாரணிக்குள்-வாகான காஸ்மீரக்கண்டக் கழுதைகளென் செய்யுமவர் தேசதெசை சேராவிடில். 66
உரை:-பூமிக்குள் மிகவும் வளமைபொருந்திய காசுமீரகண்டத்தில் கழுதைகளானவைகள் பிறந்திருந்தாலும் அவைகள் என்ன பலத்தை யடையும். அத்தன்மைபோல் யோகத்திற் பிறந்தாலும் உயர்ச்சி செய்யும்படியான யோககாரகதிசை வாராதாயின் அந்த யோகபலனனுபவமில்லாமல் ஆசையை மாத்திர மிகுதியா யடைந்திருப்பார்கள்.
தாண்டவமாலை
ஆதித்தன்முன்னாயறைந் தோரகத்தவரேல் மீதுற்றாலாயபயன் வேறேது-காகத்தில் கைவந்தார்மீதுற்றால் யாதளிப்பார்காசியினியில் மெய்வந்தார்க்காமதை நீ வேண்டு. 67
உரை:-பூமியின்கண் சூரியன் முதலாகச் சொல்லாநின்ற கிரகங்களெல்லாம் பாபிகளாய்விட்டால் அவர்கள் உச்சம் ஆட்சி நட்பு முதலாகிய பலன்களை யடைந்ததனால் வரும் பயனென்ன சொல்லுகையில் கைதேர்ந்தவர்கள் பலவான்களாயிருந்தால் எந்தப் பலத்தைக் கொடுப்பார்களோ அந்தப் பலன் சீரமுடையவர்களுக்குண்டாகும். அதை நீ சொல்வாயாக.
Page 157
தாண்டவமாலை
கோவிந்ததீக்ஷதர்தங் கொள்கையினாற்செப்புகின்ற மாவித்தநூலின் வழக்கறிந்து—தேவின் தருப்போற்றும் பிண்டியன் செல்வன்சீர்கூறி வருபலனப்பாவையன் வந்து. 68
உரை:—தெய்வீகமாயிருக்கிற கற்பகந்தரு தோன்றிச்சூழ் செய்யும் அசோக விருக்ஷத்தின்கீழ் வாசஞ்செய்கின்ற அருக தேவதையினுடைய பெருமையைச் சொல்லி வாராநின்ற அப்பாவையரென்பவர் கோவிந்த தீக்ஷதருடைய அதிகாரத்தினால் பெருமை பொருந்திய இந்தத் தாண்டவமாலையைச் சோதிட நடையை அறிந்து செப்பியதாகும்.
தாண்டவமாலை
ஆதியாஞ்செய்யுளோ ராகுமறைந்தின் மீதிரண்டாய்ச்செப்பினான் மேதினியில்—வேதியன்றன் ஆண்டகையானாண்டி மகிபனருள்வணிகன் தாண்டவன்பேரைத் தரித்து. 69
உரை:—இவ்வுலகத்தில் அருக அந்தணனாகிய அப்பாவையன் மனிதர்க்கொத்த நடையினையுடைய ஆண்டிமகிபன் குமாரன் வணிகனாகிய தாண்டவராயனுடைய பெயரைத் தரித்து ஆதிமுதல் அறுபத்தெட்டு பாடலாகச் செப்பினான்.
தாண்டவமாலை முற்றிற்று.
Page 158
பலகறை ஆரூடம் - கணேசர் தோத்திரம்
எண்சீரடி விருத்தம்
ஆதிகஜானனமூர்த்தி அம்பிகையின்புத்ரா அனுதினமுமுனைதுதிக்கும் அன்பர்மித்ரா ஜோதிடசாஸ்திரமெழுத உனைதுதித்து சொல்லுகின்றேன் ஆரூடபலனையாலும் நீதியாயானுரைக்கும் பலன்களெல்லாம் நீணிலத்தோர்க்குண்மையாய் விளங்கச்செய்வாய் பாதிமதியணிந்தசிவ னருளால்வந்த பக்தரக்ஷகாஎந்தன் குருவேபோற்றி. 1
உரை:--ஆதிபராப்பிரம்ம சொரூபமாய் விளங்கி பார்வதியின் புத்ரனாயமர்ந்து, சதாகாலமும் பக்தியுடனே துதித்து பணியும் அன்பர்கள் மனதிலமர்ந்த மித்திரனே! யான் ஜோதிட சாஸ்திர மெழுதுவதற்கு உன்னை தியானஞ்செய்து ஆரூடபலன் சொல்வதற்கு எனது மனதிலமர்ந்து ஞாபகசக்தியுடன் அவரவர் மனதிலிருப்பதையும், அவர்கள் நினைந்தவையும் யான் குறிப்பாய்சொல்வதற்காக சிவபுத்ரனாகிய உனையே குருவாய் மதித்து நம்பினேன். பக்தரக்ஷகா! எந்தன் குருவாகிய விநாயகமூர்த்தியே! உமது மலரடியை நமஸ்கரிக்கின்றேன்.
பலகறை ஆரூடம் - ஜோதிடன் தன்மை
எண்சீரடி விருத்தம்
மனிதவகுப்பில் பிறந்துவளர்ந்திட்டாலும் மனதிலேதுர்க்குணங்க ளணுகிடாமல் இனிதான ஜீவகாருண்யத்தோடும் ஈஸ்வரதியானத்தோ டிருக்கவேண்டும் முனிவில்லாசாந்தமன தாயிருந்து முகமலர்ச்சியாகவே ஜாதகர்க்கு கனிவுடனேபலாபலனை சொல்வோர்தன்னை காசினியில்ஜோதிடரென் றுரைக்கலாமே. 2
உரை:--மனித வகுப்பிலே பிறந்து குழந்தை பருவத்தில் தாய்ப்பாலருந்தி அன்னசாரத்தால் அவயவத்தை வளர்த்து, ஆண் பிள்ளையென்று உலகோர் புகழுந்தன்மையான ஜோதிடர்
Page 159
பெரிய ஜோதிட சில்லரைக் கோவை
நிலை எவ்விதமா யிருக்கவேண்டுமெனறால் கோபம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம், இடும்பை, வேட்கையென்னும் அஷ்டவித துர்க்குணங்களையும் அருகில் வரவொட்டாமல் தடுத்து கோபம் குரோதம், வஞ்சகம், லோபம், பொறாமை யென்பதை தூரத்திவிட்டு, அடக்கம், தயாளம், சாந்தம், பொறுமை ஜீவகாருண்யமெனும் நற்குணங்களை துணைவகித்து, உத்தம சற்குருவாகிய ஆசானை அடுத்து அவர் கற்பிக்கும் ஜோதிட கணித சாஸ்திரத்தை ஞாபக சக்தியுடனும் புத்தி கூர்மையுடனும் ஏற்றுணர்ந்து தன்னிடத்தில் வந்து ஜோதிடங் கேட்கும் ஜாதகரின் நிலையறிந்து சொல்பவனே உலகத்தோர் புகழ்ந்துரைக்கும்படி ஜோதிட கணித வல்லோனாகும்.
ஜோதிடன் ஆசார அனுஷ்டானம்
அருணோதயமெழுந்துகாலைக் கடன் முடித்து ஆற்றில் ஸ்நானஞ்செய்து சுத்தமாக மருவிலா பீதாம்பர மணிந்தே வெண்ணீறு மாக்ஷிமையாய்த் திருமேனிதனிலணிந்து குருவருளால் சிவஸ்துதி செய்துக்கொண்டு குற்றமிலாமான் தோலாசனத்திருந்து தருமநெறி தவறாமல் ஜாதகர்கட்கோதும் தாரணியில் ஜோதிடவல்லோர் நிலைமைதானே. 8
உரை:—ஜோதிடரெனில் அறிவிற்சிறந்தோர் அருணோதயத்திலெழுந்து காலைக்கடன்களை முடித்து ஆற்றில் ஸ்நானஞ் செய்து சுத்தமான பட்டுப்பீதாம்பர முடுத்திக்கொண்டு திருமேனியில் விபூதி சந்தன மணிந்துகொண்டு குரு உபதேசித்தவிதமே சிவத்தியானமாய் சிவபூஜை முதலான தேவபூஜை நவக்கிரக பூஜைசெய்து பிரசாதம் புசித்து மான்தோலாசனத்தமர்ந்து தாம்பூலந்தரித்து, குருவருளால் தனக்குபதேசித்த ஜோதிட சாஸ்திர புத்தகங்களை தனக்கு முன்பாக வைத்துக் கொண்டு தன்னிடத்தில் வந்து ஜோதிடங் கேட்பவர்களின் ஜாதகபலனை பொறுமையோடு கணித்துப் பார்த்து திசாபுத்தி அந்தரா முதலானவைகணித்தாராய்ந்து பலாபலன் சொல்வதும், அகஸ்மாத்தாய் ஆரூடங் கேட்க வந்தவர்களின் மனதிலிருப்பவை யுணர்த்து அவர்கள் நாடிவந்த காரியம் ஆகாதென்றும் ஆகுமென்றும் இத்தனை நாள் பொறுத்து ஆகுமென்றும், ஜாதகர்க்கு காரிய சித்தியாவதற்கு நவக்கிரக பூஜை செய்யும் தன்மையும் விபரமாய்புகல்வதுதான் ஜோதிடரின் தன்மையாகும்.
பலகரை எண்ணிக்கை விபரம்
அன்பான நல்ல பலகரைகளாக ஆராய்ந்துபார்த்தெடுத்து சொத்தையில்லா
Page 160
பலகறை ஆரூடம்
நன்மையுள்ளதீயெட்டு பார்த்தெடுத்து நலமுடனே பசுவின் பாலால் கழுவிவைத்து இன்பமாய்பூஜைசெய்யும் ஸ்தானந்தன்னில் இனிதுடனேவைத்து நவக்கிரகபூஜை உண்மையுடன்செய்து தூபதீபாராதனையும்செய்து தரைதனிலேபோட்டுபலன் சொல்லுவீரே. 4
உரை - சொத்தையில்லாமலும் அதிக பருமனியில்லாமலும், சரியான அழகமைந்த பலகறைகளில் எட்டு சரியாய்ப் பொறுக்கி எடுத்து வைத்துக்கொண்டு பசுவின் பாலில் கழுவி பூஜா இடத்தில் வைத்து நவக்கிரக பூஜைசெய்து பலகறைக்கு தூபதீபாராதனை செய்து வலதுகரத்திலெடுத்து பாச்சிகையாடுவதுபோல உருட்டிப் போட்டு எத்தனை நம்பர் வருகிறதோ அதனை ஓர் கற் பலகையிலாவது கடிதத்திலாவது எழுதிவைத்துக்கொண்டும் இப்படியே மூன்றுதரமும் பலகறையை உருட்டிப்போட்டு அந்தந்த சமயத்தில் வரும் நெம்பர்களையும் எழுதி மூன்றுமுறை விழுந்த நெம்பர்கட்குத் தகுந்தபடி பலன் சொல்லவேண்டியது.
சூரியன் - சந்திரன் - சூரியன் 1 - 2 - 1 - அதமம் சல்மலி தரிசனம்
சூரியனும்சந்திரனும் ஆதித்தன் தான் சூழ்ந்திருந்தால் யாத்திரை செல்லமனமுண்டாகும் காரியக்கேடலைச்சலுடன் கஷ்டநஷ்டம் காணுமேபகையாவா ரெவர்களுக்கும் வீசியமில்லாமரண கஷ்டம்போல விளங்கும் ஒன்றிரண்டொன்றானால் மத்திபமதாகும் தாரினித்தவாரூடம் கருதியல்ல தரணியில்வாழ்ஜோதிடரே கவனிப்பீரே. 5
உரை - சூரியன், சந்திரன், ஆதித்தனும் சூழ்ந்து பலகறை நெம்பரில் 1-2-1-ஆனால் சல்மலி தரிசனமாகும் அதன் பலன் பல் விதமான கஷ்ட நஷ்டமும் காரியக்கேடலைச்சலுமான துன்பமும் துயரமும், இனஜன விரோதமும் வறுமையும் வியாதியும் மரண கண்டம் முதலான வேதனையும் நேரிடுவதால் இந்த ஆரூடம் தகுதியானதல்ல. அதமமாய் விளங்குவதுடன் பொல்லாததாகையால் இது தகாது.
Page 161
சூரியன் - ஆதித்தன் - சந்திரன் 1 - 1 - 2 - உத்தமம் கற்பகந்தரு தரிசனம்
ஆதித்தன்சூரியன் சந்திரனுமாக அமைந்துஒன்றென் றிரண்டுமானால் ஜோதிடரே இதுஉத்தம மாமென்றோதி சொல்லுவீர்ஜாதகர்க்கு பலனைத்தானே பூதலத்திலிவன் நினைத்த தெல்லாங்கூடும் பொன்பொருளும்கைகூடும் பத்துமித்ரர் ஆதரவாயிருப்பார்கள் நன்மையான ஆருடபலனென்று புகலுவீரே. 6
உரை:—ஆதித்தன், சூரியன், சந்திரன் உதயமானால் கற்பகந்தரு தரிசன பலத்தின்படியே 1-1-2-ஆனால் உத்தமமாகும். இதன் பலன் ஆருடம் கேட்கவந்தவன் மனதில் நினைத்த காரியமெல்லாம் ஜெயமாகும். பொன், பொருள் கையில் வரத்துண்டாகும். பத்து மித்திரர் சகாயமாயிருப்பதுடன் அநேகவிதமான நன்மை செய்து ஆதரவாயிருப்பார்கள்.
சூரியன் - செவ்வாய் - இராகு 1 - 3 - 8 - உத்தமம் பூரணகும்ப தரிசனம்
தினகரனும்செவ்வாயும் இராகRoutineமாக திகழொன்றுமூன்றெட்டு நெம்பர்வந்தால் மனமகிழ்ப்பூரணகும்ப தரிசனந்தான் மாட்சியுடனே கிடைத்துத் தமமேயாகும் இனமானவுருட பலனோநன்று இசைந்தஉத்தமமாகி சரீராரோக்யம் தனதான்யசம்பத்துண் டாகுமென்று தரணியில்வாழ்ஜோதிடரே புகலுவீரே. 7
உரை:—பலகறைகளை உருட்டி நெம்பProcessரெடுக்கும்போது தினகரனும், ராகு செவ்வாயுமாக 1-3-8-ஆனால் பூரணகும்ப தரிசனம் உத்தமமாகும். இதன் பல னெவ்விதமென்றால் மனோற்சாகமும், நினைத்தகாரியம் ஜெயமும், சரீராரோக்யமும், உத்யோக விருத்தியும், வித்யாவாபமும் கிடைத்து வியாபார விருத்தியும் திரவிய சம்பத்து முண்டாகுமென்று ஆருடம் கேட்க வந்தவர்களுக்கு அன்புடன் சொல்லவேண்டும்.
Page 162
பலகறை ஆருடம் - சூரியன் - புதன் - சனி | 1-4-7 - மத்திபம் | பிரியஜன தரிசனம்
சூரியனும்புதன்சனியும் சேர்ந்துநிற்க சொல்லரியலொன்றுநான்கேழ் மத்திபமேயாகும் தாரிலும்பிரியஜன தரிசனத்தின் தக்கபலன்யானுரைப்பேன் கவனிப்பீர்கள் பாரிலுறும்பலதுன்பம் விலகிப்போகும் பணமுடன்சுகதுக்க மில்லாமற்றான் தாரணியில்சமபலனா யிருக்குமென்று சாற்றுவீராருடபலன் கேட்போருக்கே. 8
உரை:- சூரியனும், புதனும், சனியும், சேர்ந்து நிற்க 1-4-7-நெம்பரின்படி மத்திப பலனானாலும் பிரியஜன தரிசனமாகையால் இது வரையில் அனுபவித்த கஷ்டநஷ்டமெல்லாம் விலகினாலும் சுகதுக்கமில்லாமல் சமபலனாக உலகில் ஜீவித்திருப்பார்களென்று ஆருடங் கேட்க வந்தவர்களுக்கு அன்புடன் சொல்லவேண்டும். ஆனால், நவக்கிரகங்களின் பூஜைசெய்தால் சுகத்தை யனுபவிப்பதாககும்.
சூரியன் - குரு - சுக்கிரன் | 1-5-6 - உத்தமம் | இலக்ஷ்மி தரிசனம்
பருதியுடன் குருசுக்கிரன் உதயமாக பகரொன்றைந்தாறு உத்தமமேயாகும் திருவாரும்மகாலக்ஷ்மி தரிசனந்தான் தீரமுடன் ஆருடங் கேட்போருக்கு பொருளுடனேதனதான்ய வியாபாரலாபம் பொருந்தியேஉத்யோக கீர்த்தியோடும் பெருமைமிகவிளங்கும்பன்று ஆருடத்தில் பேசுதென்றுபுகல்வீர் ஜோதிடவல்லோரே. 9
உரை:- சூரியன், குரு, சுக்கிரன் உதயமாக 1-5-6-நெம்பர் வந்தால் உத்தமமாகும்படியான இலக்ஷ்மி தரிசனம் கிடைக்கும். அதன் பலனாகும் விபரமெல்லிகமா துமென்றால், ஆருடம் கேட்க வந்தவர்களுக்கு பொன்பொருளும் தனதான்ய சம்பத்தும் வியாபார லாபமும் உத்யோக மேன்மையும் கீர்த்தியும் விளங்கி சுகானந்தமா யிருப்பதற்காகும்.
Page 163
சூரியன் - சுக்கிரன் - குரு / 1-6-5 - மத்திபம் / மிருத்தேக தரிசனம்
சூரியனுஞ்சுக்கிரனும் வியாழன்றோன்ற சூழ்த்தொன்றாறைந்துவந்தால் மத்திபமேயாகும் நேரிலகுமிருத்தேக தரிசனந்தான் நேரிட்டாக்வயிற்றுவலி சிறையுமவாய்க்கும் பாரிலகுமாரூடங் கேட்போருக்கு பகருவாய்மரணகண்ட மென்றிப்போது சீரிஸகுநவக்கிரக பூஜைசெய்ய சித்தமகிழ்வாயுரைப்பீர் ஜோதிடவல்லோரே. 10
உரை:- சூரியனும், சுக்கிரனும், வியாழனுமாக தோன்றி 1-6-5-நெம்பர்-வந்தால் மத்திபமாகும் மிருத்தேக தரிசனமாவையாகும். அதன் பலன் ஆருடங்கேட்க வந்தவர்களுக்கு வயிற்று வலியினால் பலவித வியாதிகள் சூழ்ந்து கஷ்டப்படுவதன் சிறை துன்பம் கண்டநஷ்டமும் கவலையும் நேரிட்டு மரணகண்ட முண்டாகும். ஆகையால், நவக்கிரக பூஜைசெய்து நன்மையான மனத் பத்தியானந்தமாயிருக்கவேண்டும்.
சூரியன் - சனி - புதன் / 1-7-4 - உத்தமம் / தேவவிமான தரிசனம்
தினகரனும்சனிபகவான் புதனுமாக நிகழொன்றேழ்நான்கு உத்தமமேயாகும் கனமானதேவவிமான தரிசனமேயாகும் காசினியினினிமேலே சுகமுண்டாகி இனஜனமும்பந்து மித்திரர்கள்வாழ்த்த இஷ்டமுடன்ஜீவனமும் நடக்கும்நன்றாய் மனமகிழ்வாயிருந்தாலும் சிலநாள்கஷ்டம் மானிலத்தோர்திருக்கிடவந் தெய்தும்பாரே. 11
உரை:- ஆதித்தனும், சனியும், புதனும் தோற்றமாக 1-7-4 நெம்பர் வந்தால் உத்தமமாகும். தேவவிமான தரிசனமாகும். இதன் பலன் எவ்விதமென்றால் ஆருடம் கேட்க வந்தவர்களுக்கு இனிமேல் சுகமுண்டாகி இனஜன பந்துமித்திரர் புத்திக ளுத்தி, ரதியோர்கள் எல்லோரும் புகழ்ந்துரைக்கும்படியாக வியாபாரமும் உத்யோகஜீவனம் நடந்து சுகசவுக்கியமா யிருப்பதற்காகும். ஆனால் சிலநாள் பொறுத்து சகலரும் கண்டு மனமிரங்கும்படியான கண்ட நஷ்டத்தினால் கலங்கும்படியாயிருக்கும்.
Page 164
பலகறை ஆருடம் - சூரியன் - ராகு - செவ்வாய் | 1-8-3 - மத்திபம் | காராக்ரக தரிசனம்
சூரியனும் ராகு செவ்வாய் தோற்றமாக சூழ்ந்தொன்று எட்டுடனே மூன்றுவந்தால் காரியமும் மத்திபமே யாகும்தானே காராக்ரக தரிசனத்தின் பலனைக்கேட்பாய் வீரியமில்லாவித்தை புத்தியும் மழுங்கி வேதனைக்கும் வித்தாகி விளங்கும்வியாதி காரியபங்கமாகி திகைத்துநிற்பார் காசினியி லாரூடங் கேட்கவந்தோரே. 12
உரை:--சூரியபகவானும், இராகுபகவானும், செவ்வாய் பகவானும் தோற்றமாகி 1-8-3-நெம்பர்கள் வந்தால் மத்திம பலனாகும். காராக்ரக தரிசனபலன். இதன் காரண மெவ்விதமெனில் மனதுதிய மில்லாத வியாகூலமும், மனச்சோர்வும், வித்தை புத்தியில்லாமலும் சோம்பலும், துன்பமும் நேர்ந்து திகைத்திருப்பார்கள். ஆகையால் அவர்கள் சதாகாலமும் நவக்கிரக பூஜை செய்துகொண்டு சஷ்டி விரதமிருக்கவேண்டும்.
சந்திரன் - சூரியன் - ஆதித்தன் | 2-1-1 - உத்தமம் | பத்மவன தரிசனம்
சந்திரனும் சூரியன் ஆதித்தனோடு சார்ந்துரெண்டொன் றொமொன் றுதயமானால் பந்தமாமுத்தமமே யாகുമென்றும் பத்மவனதரிசனமு மாகுமென்பீர் சொந்ததேசத்தில்சுகமாய் ஜீவித்தன்பாய் சொர்ணம்வெள்ளிபூஸ்திதியு மிகக்கிடைத்து சந்தோஷவியாபார உத்தியோகலாபம் சார்ந்திடுமேநான்கு மாகத்தில்தானே. 13
உரை:--சந்திரனும் இரவியும் சூரியனும் உதயமாக 2-1-1 இலக்கங்கள் வந்தால் உத்தமமாகும். பத்மவன தரிசனமென்றுணர்வீர்கள். இதன் பலன் இன்னும் நான்கு மாதத்தில் தனது சுய தேசத்திலேயே நல்ல உத்தியோகங் கிடைத்தாவது, வியாபாரம் செய்தாவது பலவிதமாய் பொருள் சேர்த்து பொன்னகை, வெள்ளி ஆபரணாதிகளை யணிந்து ஆஸ்தி பூஸ்திதியுடன் கீர்த்திப்ரகரசமாய் ஜீவித்திருப்பார்கள்.
Page 165
சந்திரன் - இராகு - சந்திரன் 2-8-2-உத்தமம் விஜயலக்ஷ்மி தரிசனம்
திங்களுடன்றாகு சந்திரனுமாக திறமையுடனே தோற்றமாயிருக்க செங்கமலவிஜயலக்ஷ்மி தரிசனந்தான் சேர்ந்திருக்கும்பலன்விபரம் கவனிப்பீர்கள் மங்காதகீர்த்தியொடு நல்வார்த்தை மானிலத்தோர்பேசுவார் பிரபுக்களானோர் தங்கம் வெள்ளிநாணயங்கள் சகாயஞ்செய்து தரணியிலேஜீவிக்கச் செய்குவாரே. 14
உரை:—சந்திரன், இராகு, சந்திரானும் உதயமாக 2-8-2 உத்தமமானால் விஜயலக்ஷ்மி தரிசனமாகும் இதன் பலன் தன தான்ய சம்பத்துடன் பிரபுக்களின் சகாயமும் உத்தியோகவிருத்தி யாலும் வியாபார லாபத்தாலும் வெள்ளி பொன் ஆபரணாதிகள் சேகரித்து ஆஸ்தி புஸ்தியுடன் பெருமையாய் வாழ்ந்திருப் பார்கள்.
சந்திரன் - செவ்வாய் - சனி 2-3-7 - மத்திபம் மகமேரு தரிசனம்
சந்திரானும்செவ்வாயும் சனியுமாக சார்ந்திரண்டுமூன்றேழும் மத்திபமேயாகும் நொந்தரையுந்துன்பமும் பலகண்டங்கள் தோற்றுமேவறுமைபிணி கவலைநஷ்டம் எந்ததேசமுந்திரிந் தலைந்திட்டாலும் எவர்களுக்கும்பகையாகி கலங்குவார்கள் இந்தவிதமாயிருந்தேழ் மாதமானால் இலக்ஷமாய்பொருள்தேடி ஜீவிப்பாரே. 15
உரை:—சந்திரன், செவ்வாய், சனியும் உதயமாக 2-3-7 வது நெம்பர் வந்தால் மகமேரு தரிசனமாகும். அதன் பலன் உத்தியோகத்தில் பகையும், வியாபார நஷ்டமு முண்டாவதுடன், வறுமை பிணி கலகமும் நேரிட்டு துயரப்படச் செய்யும். ஆனால் ஏழு மாதம் பொறுத்து மனதைரியத்துடனும் உத்தியோகத்தினாலும் வியாபாரத்தினாலும் திரவிய சேகரஞ்செய்து இனஜன பந்துமித்திரர்கள் புகழ்ந்துரைக்கும்படியான பிரபுத்தன்மையாய் ஜீவித்திருப்பார்கள்.
Page 166
பலகறை ஆரூடம் / சந்திரன் - புதன் - சுக்கிரன் 2-4-6 - மத்திபம் / தனக்கினி தரிசனம்
மதியுடனேபுதன் சுக்கிரனுமாக மாட்சியாயிரண்டு நான்காறானால்மத்திபமேயாகும் விதிமுறைபோல்சுகமாக ஜீவித்தாலும் விசனாகரத்திலுற்ற கலக்கமுற்று நிதியற்றுநிஷ்டூரக் காலற்றுப்பின் நிந்தைசெய்துபரிகாசித் திகழ்வார்சொந்த பதிவிடுத்துமறுநகரிற் சென்றுத்யோகம் பணமுடனேசெய்து ஜீவிப்பாரே. 16
உரை-சந்திரன், புதன், சுக்கிரன் உதயமாக 2-4-6 நெம்பர் வந்தால் மத்திப பலனாகும். அதனால் தனது கைப்பொருளெல்லாமிழந்து பந்து மித்திரர்களின் பகைமேலிட்டு, துயரத்தினால் கலங்கி வறுமையும் துன்பமுமடைந்து கண்டநிஷ்டூரோத்தாற் கலங்கிப் பலபேர் பரிகாசஞ் செய்யும்படியான ஏழையாய் நஷ்டத்தை யனுபவித்து சகிக்க முடியாத மனவிசாரத்துடனே, மறுதேசத்திற் சென்று மேன்மையான உத்யோகஞ் செய்து ஜீவித்துக்கொண்டிருப்பதற்காகும்.
பலகறை ஆரூடம் / சந்திரன் - குரு - வியாழன் 2-5-5 - உத்தமம் / பத்மநிதி தரிசனம்
அன்பாககுருவுடனே மதியியாமூன் அமர்ந்திரண்டைந்தைந் துத்தமமேயாகும் நன்மையாயிருப்பதனால் உத்யோகவிர்த்தி நலமானவியாபார லாபமுண்டாம் பொன்பொருளும்சேர்ந்தினிதாய் பூமிலாபம் பொருந்தியேதனவந்த ராய்ஜீவிப்பார் இன்னவிதமான நற் பலனோடன்பாய் இராஜயோகம்போல வாழ்வாரே. 17
உரை-சந்திரன்-குரு-வியாழன் உதயமாக 2-5-5-நெம்பர் வந்தால் உத்தமமான பத்மநிதி தரிசனமாகும். இதன் பலன் உத்யோகவிர்த்தி வியாபாரலாபம், பொன் பொருள் சேர்க்கை பூமி லாபம் பொருந்திய தனவந்தராய் ஜீவிப்பதுடன் இனஜன பந்துமித்திரர்களனைவரும் புகழ்ந்துரைக்கும்படியான இராஜ யோகத்தை யனுபவிப்பார்கள்.
Page 167
சந்திரன் - சுக்கிரன் - புதன் 2-6-4 - மத்திபம் சர்ப்ப தரிசனம்
சந்திரனுஞ்சுக்கிரனும் புதனுமாக சார்ந்திருக்க இரண்டாறு நான்குமானால் அந்தமாம்சர்ப்பதரிசனம் மத்திபமேயாகும் அவனியிலேஒருவருஷ காலமட்டும் பந்துமித்திரர்க்குபகை யாய்விளங்கி பாக்கியமில்லாவறுமை யாகிப்பின்பு சொந்தமுள்ளமனிதனால் வியாபாரஞ்செய்து சொர்ணம்வெள்ளிசேகரித்து ஜீவிப்பாரே. 18
உரை: - சந்திரன் சுக்கிரன் புதன் உதயமாக 2-6-4-நெம்பர் வந்தால் மத்திப்பலன் சர்ப்பதரிசனமாகும். அதன் பலன் ஒரு வருஷகாலம் வரையில் வறுமையால் திகைத்து, மனமிரண்டு பந்துஜன மித்திரர்க்கெல்லாம் பகையாய் விளங்கி பிறகு, சொந்த மனிதன் சகாயத்திலே வர்த்தகஞ்செய்து, திரவிய சேகரஞ்செய்தும் பொன், வெள்ளி, ஆபரணம் சேகரித்து சுகசவுக்கியமாய் ஜீவித்திருப்பதாகும்.
சந்திரன் - சனி - செவ்வாய் 2-7-3 - உத்தமம் சுவேதக்குடை தரிசனம்
மதிசனியும் செவ்வாயும்உதயுமாக மாணியுடன் இரண்டேழு மூன்றுத்தமமேயாகும் நிதிசேரும் ஆண்மையுடன் வீரத்தன்மை நீணிலத்தில் தலைவந்த ராஜனொந்து அதிகசெல்வத்துடனே வாழ்ந்திருப்பார் அகிலமதிலேசிறந்த தனவானென்ன எதிரொருவரில்லாத சீமானாகி எந்தாளும்வறுமையில்லா ஜீவிப்பாரே. 19
உரை: - சந்திரனும், சனியும், செவ்வாயும் உதயமாக 2-7-3-நெம்பர் வந்தால் நாளுக்கு நாள் திரவியஞ் சேகரித்து ஆண்மையும் வீரியமும் தைரியமும் மிக்கோர்களுடம் பொருந்தி தனதான்ய சம்பத்துடனே வாழ்ந்திருப்பார்கள். தமது பந்துமித்திரர்களில் எவர்களும் தனக்கு நிகரில்லாத சீமானாக விளங்கி வரலும் நோயில்லாப் பெருமையாய் ஜீவித்திருப்பதாகும்.
Page 168
பலகறை ஆரூடம் - சந்திரன் - இராகு - சந்திரன் 2-8-2- மத்திபம் - தயிர், நெய் தரிசனம்
சந்திரனும்ராகுமதி உதயமாக சார்ந்தஇரண்டெட்டிரண்டு மத்திபமேயா கும் நிந்தைசெய்வார்சகலருமே பிரபுக்களாலே நீணிலத்தில்பயங்கர கஷ்டங்களாகும் பந்துஜனமித்திரரால் சிலநாட்பின்னால் பாக்கியசம்பத்துடனே வாழ்ந்திருந்து சந்ததமும்பெருமைமிகும் கீர்த்தியோடும் சவுக்கியமாய்குடும்பத்தில் ஜீவிப்பாரே. 20
உரை:—சந்திரன், ராகு, சந்திரன் உதயமாக 2-8-2-நெம்பர் வந்தால் மத்திபமாகும். தயிர் நெய் தரிசனம். இதன் பலன், மனச்சோர்வினால் திகிலுற்றுச் சகலரும் பரிகசித்து இகழ்ந்துரைக்கும்படியாய் கஷ்ட நஷ்டங்களையனுபவித்து பிரபுக்களால் பயங்கரமும் திகிலுண்டாகி சிலநாள் பொறுத்து உத்தியோகஞ் செய்தாவது வர்த்தகஞ் செய்தாவது திரவியசேகரஞ் செய்து கீர்த்திப்பிரகாசமாய் ஜீவித்து சரீராரோக்கியமாய் குடும்பத்தில் சுகமாய் வாழ்ந்திருப்பார்கள்.
பலகறை ஆரூடம் - செவ்வாய் - சூரியன் - இராகு 3-1-8 - உத்தமம் - மதகஜ தரிசனம்
செவ்வாயும்சூரியனும் இராகும்தோன்ற சேர்ந்தமூன்றொன்றெட்டு உத்தமமேயாகும் ஒவ்வியேமதகஜ தரிசனமேயாகும் ஓங்கியேகீர்த்தியுடன் வியாபாரலாபம் எவ்விதமும்பெற்று தனவந்தராக எவர்களுமேபுகழ்ந்துரைக்க ஜீவிப்பார்கள் அவ்வியமிலாப்பிரபு நேசமாகி அனைவர்க்கும்விருந்திட்டு ஜீவிப்பாரே. 21
உரை:—செவ்வாயும் சூரியனும் இராகுவும் உதயமாக 3-1-8-நெம்பர் வந்தால் உத்தமமாகும் மதகஜ தரிசனம் இதன் பலன் விபரம்: மனோற்சாகமும் கீர்த்தியும் பொருந்தி உத்தியோகவிருத்தியும் வியாபார லாபத்துடனும் திரவிய சேகரஞ்செய்து மஹோல்லாசத்துடன் பிரபுக்கள் நேசமாகி சகலருக்கும் விருந்து செய்து சீமானாய் விளங்கி பெருமையாய் ஜீவித்திருப்பதாகாகும்.
Page 169
செவ்வாய் - சந்திரன் - சனி 3 - 2 - 7 - மத்திபம் கேதகி தரிசனம்
குஜனுடனேசந்திரனும் சனியுமாக குறித்தமூன்றிரண்டேழும் மத்திபமேயாகும் இசையகேதகி தரிசனமுமாகும் இதன்பலனே பயங்கரமாய் நான்குமாதம் விசையாக கழித்துவிட்டால் தனவானாக விளங்கியேசுகமாக பொருளும்தேடி புஜபலபராக்ரமமுடன் பலரும்மெச்ச பூலோகந்தன்னில்ஜீவித் திருப்பர்தானே. 22
உரை:-செவ்வாயும் சந்திரனும் சனியுமாய் உதயமாக 3-2-7-நெம்பர் வந்தால் மத்திபமாகும். இதன் பலன் கேதகி தரிசனம். இதனால் மன பயங்கரமாயிருந்து சோம்பலும் வறுமையுமாயிருக்கும். நான்கு மாதம் கழித்துவிட்டால் உத்தியோக விருத்தியாலும் வியாபார லாபத்தினாலும் திரவிய சேகரஞ்செய்து புஜபல பராக்கிரமமுடனும் தைரியத்துடனும் தனவானாக ஜீவித்திருப்பதாகும்.
செவ்வாய் - குரு - சுக்கிரன் 3 - 3 - 6 - உத்தமம் மன்மத தரிசனம்
சேய்சுக்ரன்செவ்வாயும் உதயமாக சேர்ந்தமூன்றுடன் மூன்றாறாக வாய்த்தமன்மததரிசனம் முத்தமமேயாகும் வடிவழகிபெண்சேர்க்கை மனவுற்சாகம் ஆய்த்தவர்த்தகலாபம் உத்தியோகவிருத்தி ஆறுமாதத்திற்குள்ளே பூமிலாபம் வேய்த்துதற்பொருள்தேடி சீவிப்பார்கள் வேணசுகங்கீர்த்தியுண்டு கவனிப்பீரே. 23
உரை:-செவ்வாய், குரு, சுக்கிரனுதயமாய் 3-3-6-நெம்பர் வந்தால் உத்தமமாகும். மன்மத தரிசன பலனாயிருக்கும். இதன் பலன் வர்த்தகலாபம் உத்தியோக விருத்தியினாலும் ஆறு மாதத்திற்குள் பூமிலாபமும் கிடைத்து, திரவியசம்பத்துடனே ஜீவித்திருப்பார்கள். இதனால் பந்துமித்திரரெல்லாம் புகழும் கீர்த்தி பிரகாசமாயிருப்பார்கள்.
Page 170
பலகறை ஆரூடம் - செவ்வாய் - புதன் - வியாழன் - 3-4-5 - உத்தமம் - கேதகி தரிசனம்
செவ்வாயும்புதன் குருவுந் தோற்றமாக சேர்ந்தமூன்றுடன் நான்குந் ஐந்துமானால் ஒவ்வியேகேதகி தரிசனமேயாகும் ஒதுபுகழ்நீசர்களின் துணையினாலே எவ்விதத்தும்பொருள்தேடி விருதுகொண்டு எவர்களும்புகழ்ந்துரைக்க ஜீவிப்பார்கள் அவ்விதமாயமைந்தாலும் ஏற்றத்தாழ்வாய் அமைந்துமத்திப்பலனாய் விளங்குவாயே. 24
உரை:- செவ்வாயும் புதனும் குருவும் தோற்றமாக 3-4-5 நெம்பர் வந்தால் உத்தமமான கேதகி தரிசனமாகும். இதன் பலன் நீசர்களின் துணையினால் எவ்விதமானாலும் சரியே திரவிய சேகரஞ் செய்து விருதுகொடிபிடிக்குந் தன்மையான வீரப்ரதாப மான தனவானாயிருந்தாலும் சிலநாள் ஏழையாகவும் சிலநாள் பிரபுவாகவும் ஏற்றத்தாழ்வா யிருப்பதற்காகும்.
செவ்வாய் - புதன் - வியாழன் - 3-4-5 - உத்தமம் - மதகஜ தரிசனம்
அன்பாககுருபுதனும் குஜனுமாக அமர்ந்துமூன்றுநான்கைந்துத்தமமேயாகும் தன்மையுள்ளமதகஜ தரிசனமாகும் தகுந்தபொன்பொருள்சேருந் தனவானாக நன்மையுடன்வாழ்ந்திருப்பார் னுலகமீது நலமுடனேபந்து மித்திரர்களோடு இன்பமாகவல்லிமையும் பொருந்தி நன்றாய் இனிதுடனேஜீவிப்பார் கவனிப்பீரே. 25
உரை:- குருவின், புதன், குஜ உதயமாக 3-4-5- நெம்பர் வந்தால் உத்தமமான மதகஜ தரிசனம் இதன் பலன் விபர மெவ்விதமெனில், மனோதிடமும் உற்சாகமும் சத்ருஜெயமும் பெற்று உத்யோகவிருத்தியானவர்களாய் எக்காலத்தாலும் பொன், பொருள் தேடி சுகசீவியாய் மனைவி மக்களுடனே வாழ்ந்திருப்பார்கள்.
Page 171
குஜன் - சுக்கிரன் - செவ்வாய் 3-6-3 - உத்தமம் / பூமிதேவி தரிசனம்
செவ்வாயுஞ்சுக்கிரனும் குஜனுமாக சேர்ந்தாறு மூன்றுவந்தால் உத்தமந்தான் எவ்விதமும் வியாபார உத்தியோகத்தால் ஏற்றபொருள்தேடியே தனவானாக ஒவ்வியேபிரபுவென கீர்த்தியோங்கி உலகத்தில்வாழ்ந்திருப்பார் சீமானாக இவ்விதமாய் நல்லபலன் கிடைத்து நன்றாய் இப்புவியில்ஜீவிப்பார் கவனிப்பீரே. 26
உரை:—செவ்வாய், சுக்கிரனும், குஜனும் உதயமாக 3-6-3-நெம்பர் வந்தால் உத்தமம், பூமிதேவி தரிசனமாகும். இதன் பலன் விபரம், தகுந்தவிதமான உத்யோகஞ் செய்தும், வியாபாரஞ் செய்தும் பொருள் சேகரஞ் செய்து கீர்த்திப்பிரகாசமாய் சீவித்து மனைவி மைந்தர்களுடனே வாழ்ந்திருப்பதற்காகும்.
செவ்வாய் - சனி - சந்திரன் 3-7-2 - மத்திபம் / சல்மலி தரிசனம்
நிலமகனாஞ்சனியுடனே மதியுமாக நீடியமூன்றேழிரண்டும் மத்திபத்தான் பலபொருளுஞ்செலவழித்து திகைத்துநிற்பார் பத்துமாதம்போனால் கஷ்டந்தீர்த்து கலகமிலா பந்துமித்திரர்க ளோடு காசினியிலுபாயமாய் பொருளைத்தேடி தலமுடனே ஜீவிப்பா ருலகமீது நன்மதியால் பிழைத்திடுவார் கவனிப்பீரே. 27
உரை:—செவ்வாயும், சனியும், சந்திரனும் உதயமாக 3-7-2 நெம்பர் வந்தால் மத்திப பலனாகும். சல்மலி தரிசனம். இதன் பலன் கையிலுள்ள திரவியமெல்லாம் செலவழித்துவிட்டு, வறுமையாளரா யிருந்து பத்துமாதம் சென்றபிறகு, தமது பந்துமித்திரர் சகாயமும் உத்யோகவிருத்தி, வியாபாரலாபமும் மென்மேலும் பெருகி திரவியஞ் சேகரித்து, அன்னவஸ்திரத்திற்கும் குறைவில்லாமல் சீவித்திருப்பார்கள்.
Page 172
பலகறை ஆரூடம் - செவ்வாய் - ராகு - சூரியன் (3-8-1 - உத்தமம்) - சிந்தாமணி தரிசனம்
உக்ரசெவ்வாய்திராகு தினகரனுமாக வத்துமூன்றெட்டொன்றுத் தமமேயாகும் மிக்கவேபொருள்சேர்த்து களத்திரபுத்ர மேன்மையுண்டாவதுடன் பந்துமித்திரர் சிக்கில்லாநல்லுறவா யிருப்பதோடு சீருடனேவெகுலாபம் வாய்க்குமின்னு பக்குவமாய்கல்வியுடன் ஞானம்வாய்க்கும் பாரினிவர்தன்பெருமை மிகவுண்டாமே. 29
உரை:-செவ்வாயும், இராகுவும், சூரியனும் உதயமாக 3-8-1-நெம்பர் வந்தால் உத்தமமாகும், சிந்தாமணி தரிசனம், இதன் பலன் பற்பலவிதமாய்ப் பொருள் சேகரஞ்செய்து, மனைவி மைந்தர்களுடன் சுகசீவியாய் வாழ்ந்திருந்து, பந்துமித்திரர் உற்றார் உறவினர்களும் புகழ்ந்துரைக்கும்படியான கீர்த்தியும் கல்வியும் ஞானமும் பொருந்தி மிகவும் மேன்மையாக ஜீவித்திருப்பார்.
பலகறை ஆரூடம் - புதன் - சூரியன் - சனி (4-1-7 - உத்தமம்) - ஐராவத தரிசனம்
புதனுடனே சூரியனும் சனியுமாக பொருந்தியேநான்கொன்றேழ் உத்தமந்தான் விதவிதமாய்க்கல்விவரும் ஞானமுண்டாம் வியாபாரம்உத்யோகத் தாலேலாபம் சதமானஆஸ்தி பூஸ்திகளோடு சவுக்கியமாய்மனைவிமைந்த ருடன்சீவிப்பார் இதமாகப்பெரியோர்க ளாசீர்வாதம் இன்பமாகப்பெற்றினிதாய் வாழ்வாரே.
உரை:-புதன், சூரியன், சனியுமாய் உதயமாக 4-1-7 நெம்பர் வந்தால் உத்தம பலனாகும். இதன் விபரமென்னவெனில் கல்வியும் ஞானமும் பெற்று வியாபார லாபத்தாலும் உத்தியோக விர்த்தியாலும் பொருள் சேகரஞ்செய்து மனைவி மைந்தர் சுற்றத்தாருடனே சுகமாய் வாழ்ந்திருப்பதாகும்.
Page 173
புதன் - சந்திரன் - சுக்கிரன் 4-2-6 - மத்திபம் பாத்திர தரிசனம்
மாலுடனேமதிகுரு வுதயமாக மன்னுநான்கிரண்டாறு மத்திபமேயாகும் பாலருந்தும்பாத்திர தரிசனந்தான் பந்துமித்ரரனைவருமே பகையாவார்கள் ஞானமதிலேழுமாதம் சென்றபின்னர் ஞாயமிகவும்பேசும் சமார்த்தனாகி சாலதிரவியந்தேடி தனவானாக சவுக்கியமாய்ச்சீவிப்பார் கவனிப்பீரே. 80
உரை:-- புதனும், சந்திரனும், சுக்கிரனும் உதயமாக 4-2-6 நெம்பர் வந்தால் பாத்திர தரிசனமாகும். மத்திம பலன். இதன் விபரம் பலவிதமாய் திரவிய சேகரஞ்செய்து மனோகர்வத்தினால் பலபேரை பகைத்து பந்துமித்திரனைவருக்கும் பகையாகி கவலையாயிருந்து ஏழு மாதத்திற்குப் பிறகு, உத்தமனென்று பல பேர் புகழ்ந்துரைக்கும் கீர்த்திப் பிரகாசனாய் மதிமிகுந்து, சபையிற் சென்று ஞாயம்பேசி சகலருக்கும் நல்லவனெனும் பிரக்கியாதியா யிருப்பதற்காகும்.
புதன் - செவ்வாய் - வியாழன் 4-3-5 - உத்தமம் தேவாசுவ தரிசனம்
புதனுடனேசெவ்வாயும் வியாழனுந்தான் பொருந்தியேநான்குமூன்றைந் துத்தமந்தான் பதமுடனேதேவாசுவ தரிசனந்தான் பகைவராலித்தனைநாள் வருந்தினாலும் இதமுடனேபொருள்சேர்த்து பகைவரில்லா இன்பமுடன் துன்பமில்லா சுகவானாக சுதன்மனையாள்பந்துமித்ர ருடனேயன்பாய் சூழ்புவியில் தனவானாய் சீவிப்பாரே. 81
உரை:-- புதன், செவ்வாய், குருவும் உதயமாக 4-3-5 நெம்பர் வந்தால் உத்தமம். தேவாசுவ தரிசனமாகும். இதன் பலன் விபரமெவ்விதமெனில் இத்தனை நாளாய் பகைவர்களால் துன்பமனுபவித்து கஷ்டமுங் கவலையுமாயிருந்தாலும், இனி துன்பமும் துயரமுமில்லாமல் திரவியம் சேகரித்து சகலரும் தனக்கு மித்துருவாயிருந்து நன்மைசெய்வதுடன் தனது மனைவி மைந்தர் பந்துமித்திரர்களுடனே சுகமாய் சீவித்திருப்பதற்காகும்.
Page 174
பலகரை ஆரூடம் - புதன் - மால் - புந்தி (4-4-4 - உத்தமம்) ஆம்பீரவிருக்ஷ தரிசனம்
புந்தியுடன்மால்புதனு முதயமாக பொருந்தியேநான்குநான் குடனேநான்கு இந்தவிதமாயிருந்தா லுத்தமந்தான் இனிதாய்ஆம்பீர விருக்ஷதரிசனந்தான் செந்திருவாழ்வானந்த மாய்விளங்கி செல்வந்தராய்க்கீர்த்தி யாயிருந்து பந்துமித்திராதிபுத்ர பாக்யத்தோடு பக்ஷமுடனேயுலகில் சீவிப்பாரே. 32
உரை:-புதன், மால், புந்தி, உதயமாக 4-4-4-நெம்பர் வந்தால் உத்தமமாகும். ஆம்பீரவிருக்ஷதரிசனம். இதன் பலன் விபரம் இலக்ஷ்மி கடாக்ஷத்துடனே திரவிய சேகரஞ்செய்து மனைவி மைந்தர் சுற்றத்தாருடனே வெகு மேன்மையாய் வாழ்ந்திருந்து, சகலரும் தன்னை பிரபுவென்றழைக்குந் தன்மையான கீர்த்தி பிரகாசத்துடனே பந்துமித்திரர்களெல்லாம் புகழுந்தன்மையாய் சீவித்திருப்பார்கள். ஆனால் சங்கீத ஞானப்பிரியனாகவு மிருப்பதாகும.
புதன் - வியாழன் - செவ்வாய் (4-5-3 - உத்தமம்) இரத்தசுமல தரிசனம்
திருமாலும்வியாழனுடன் குரனுமாக சேர்ந்துநான்கைந்துமூன் றுத்தமமேயாகும் அருமைசேர்ரத்தசுமல தரிசனந்தான் அழகுபெண்சேர்க்கையுண்டு தனவானாக பொருள்சேர்ந்துகாணிபூமி கிடைத்துநன்றாய் பொன்வெள்ளிபூஷணமு மிகக்கிடைத்து பெருமையாயுலகோர்முன் சீவித்தன்பாய் பேசுபுகழ்கீர்த்தியுடன் விளங்குவாரே. 33
உரை:-புதனும் வியாழனும் செவ்வாயும் உதயமாக 4-5-3 நெம்பர் வந்தால் உத்தமமாகும். இரத்தசுமல தரிசனம். இதன் பலன் விபரம் அழகான பெண்களின் தரிசன சேர்க்கையும், சுகபோக சவுக்கியமும், திரவியசம்பத்துங் காணி பூமிலாபமும் பெற்று, பொன் வெள்ளி ஆபரணங்களும் சேகரித்து ஆனந்தமாய் சகலரும் தன்னைப் புகழ்ந்து பேசும் கீர்த்தியுடனே சீவித்திருப்பார்கள்.
Page 175
புதன் - சுக்கிரன் - சந்திரன் 4-6-2 - உத்தமம் கேதகி தரிசனம்
புதனுடனே சுக்கிரனும் சந்திரனாக பொருந்தினான்காறிரண் டுத்தமந்தான் சதமென்றே திரவிய லாபத்தோடு சரீராரோக்கியம்பெற்று மகிழ்ந்தன்பாக சுதன்களத்ராதிபந்து மித்ரரெல்லாம் சூழ்ந்திருக்கும்பெருமையுட னுலகில்நாளும் பதமாகசீவித்து வாழ்ந்திருக்கும் பாக்கியத்தைப்பெற்றினிதாய் மகிழுவாரே. 84
உரை:-புதனும் சுக்கிரனும் சந்திரானும் உதயமான 4-6-2. நெம்பர் வந்தால் உத்தமமான கேதகி தரிசனமாகும். இதன் பலன் விபரம், தனதான்ய சம்பத்துடன் சரீராரோக்யம்பெற்று, புத்திரமித்திரகளத்திராதியர் பந்துமித்திரர் கூட்டத்தாரெல்லாம் சூழ்ந்து ஆனந்தமாயிருக்கும் பெருமையுடன் பூலோகத்தில் சதாகாலமும் சுகானந்தமாகவே சீவித்து பாக்யவானா யிருப்பதற்காகும்.
புதன் - சனி - சூரியன் 4-7-1 - உத்தமம் துளசிவன தரிசனம்
கணக்கனுடன் ரிபரிதி உதயமாக காணுமந்நாலேழொன்று முத்தமமேயாகும் இணக்கமுள்ள துளசிவன தரிசனந்தான் இன்பசுகம் சரீராரோக்கியமாகும் வணக்கமுடன்பந்துமித்திரர் புகழ்ந்துபேச வல்லமையாய்தனவந்தர் போன்றிருப்பார் பணம்பாக்கியம்பொன்வெள்ளி ஆபரணங்களோடும் பாக்கியமும்பெற்றினிதாய் சீவிப்பாரே. 85
உரை:-புதனும் சனி சூரியன் உதயமாக 4-7-1-நெம்பர் வந்தால் உத்தமமாகும். துளசிவன தரிசனம். இதன் பலன். சரீராரோக்கியத்துடன் இன்பசுகா நந்தமாய் சீவித்து பந்துமித்திரர் புகழ்ந்து பேசுந்தன்மையுடன், தனவந்தனாக விளங்கி சகல சவுக்கியமாய் பொன் வெள்ளி ஆபரணாதிகளோடும் வாழ்ந்திருப்பதற்காகும்.
Page 176
பலகறை ஆரூடம் - புதன் - இராகு - இராகு 4-8-8 - உத்தமம் - ஐராவத தரிசனம்
புதனுடனே யிராகு பாம்பினங்கிசேர பொருந்திடாவெட்டெட்டு உத்தமந்தான் சதமானஐராவத தரிசனந்தான் சம்பத்துமிகமகிழ்வாய் பெருகும் நல்ல விதவிதமாய்வர்த்தகஞ்செய் தெந்தநாளும் விசனமில்லாமல்தனந் தான்யலாபம் இதமாகவேபெற்ற பாக்யவானாய் இருப்பார்களுலகினிலே கவனிப்பீரே. 36
உரை:—புதன் இராகு இராகுசேர 4-8-8 உத்தமமாகும். ஐராவத தரிசனம். இதன்பலன் எவ்விதமெனில் பலவிதமான வியாபாரத்தினால் பொருள் சேகரஞ்செய்து தனதான்ய சம்பத்துடனே கீர்த்திப்பிரகாசமாய் ஐஸ்வரியவந்தனாய் விளங்கி சுபாக்யாதிபதியாய் மனைவி மைந்தர் பந்துமித்திரர்களுடனே ஆனந்தமாய் வாழ்ந்திருப்பதற்காகும்.
வியாழன் - சூரியன் - சுக்கிரன் 5-1-6 - மத்திபம் - நிரோதக தடாக தரிசனம்
குருசூரியன்சுக்கிரனிவ ருதய மாக கூறுமைந்தொன்றாறு மத்திபமேயாகும் வருநிரோதகதடாக தரிசனந்தான் வந்ததினால்நட்பினர்கள் மதியில்லாமல் பெருமைகுறைந்திட பழித்துப்பேசுவார்கள் பேதமில்லாவுலகில் ஏழ்மையாக பொருளில்லாவறுமையால் திகைத்திட்டாலும் போஜனத்திற்குறைவில்லா ஜீ யிப்பாரே. 87
உரை:—வியாழன், சூரியன், சுக்ரன் உதயமாக 5-1-6-என்றி புர் வந்தால் மத்திப பலனாகும். நிரோதக தடாகதரிசனம். இதன் பலன் விபரம், அறிவில்லாத சிநேகிதருடனே சேர்ந்து பெருமை குறைந்து சகலரும் பழித்துப் பரிகசித்து பேசும்படியான ஏழ்மைத்தனமாக இருந்தாலும் அன்னவஸ்திரத்திற்குக் குறைவில்லாமல் ஜீவித்திருப்பார்கள்.
Page 177
வியாழன் - சந்திரன் - வியாழன் | 5-2-5 - மத்திபம் | நாசிகாசேத் தரிசனம்
குருமதியும்வியாழனு முதயமாக கூறுமைந்துரெண்டடைந்து மத்திபத்தான் வருகின்றநாசிகாசேத் தரிசனந்தான் வந்ததால்மனதுக்கம் கவலையாகும் பெருகுமேபந்துபகை யாகுமப்பா பேதமில்லா மூன்றுமாதத்தின் பின்னால் பொருள்சேர்ந்தும்வறுமைநோய் தணிந்துநாளும் போஜனத்திற்குறைவில்லா சீவிப்பாரே. 38
உரை :-வியாழன், சந்திரன், குரு உதயமாக 5-2-5 நெம்பர் வந்தால் மத்திப பலனாகும். இதன் பலன் விபரம் எவ்வித மென்றால், நாசிகாசேத் தரிசனம் இதனால் மனதுக்கம், பந்து மித்திரர் பகையினால் பலவித துயரடைந்து கலங்குவார். ஆனால் மூன்று மாதத்திற்குப் பிறகு உத்தியோக விர்த்தியினாலும், வியாபார லாபத்தாலும் பொருள் சேர்ந்தாலும் அன்னவஸ்திரத்திற்குச் சரியாயமைந்திருக்கும்.
வியாழன் - செவ்வாய் - புதன் | 5-3-4 - உத்தமம் | தர்ப்பண தரிசனம்
அந்தணனும்செவ்வாயும் புதனுமாக அமைந்தைந்து மூன்றுநான் குத்தமந்தான் அத்தமாந்தர்ப்பண தரிசனந்தான் அதன்பலன்விபரமாய் கவனிப்பீர்கள் செத்திருவாழ்வாகவே விளங்கும்நல்ல செம்பொன்னாபரணங்கள் வெள்ளிசெம்பும் சந்ததமும்கிடைத்திடுமென் றுலகோருக்கு சாற்றுவாய் ஆரூடபலனைத்தானே. 39
உரை :-வியாழன், செவ்வாய், புதனும் உதயமாக 5-3-4-நெம்பர் வந்தால் உத்தமமாகும். தர்ப்பண தரிசனம். இதன் பலன் விவரமெவ்வித மெனில் மகாலக்ஷமி கடாக்ஷத்துடனே மிகவும் மேன்மையாய் சீவித்திருப்பதுடன் தங்கநகை, வெள்ளி ஆபரணாதிகளும் வெள்ளி, செம்பு நாணயங்கள் குறையாத பெருக்கத்துடன் தனசம்பத்தாய் சீவித்திருப்பதற்காகும்.
Page 178
பலகறை ஆரூடம் - 171 குரு - புதன் - செவ்வாய் 5-4-3 - உத்தமம் நவரத்தின தரிசனம்
குருபுதனும்செவ்வாயும் உதயமாக கூறுமந்த ஐந்துநான்குடனேமூன்று வரும்போதுஉத்தமந்தான் நவரத்தினதரிசனந்தான் வாய்ந்தாலும்ஆரூடங் கேட்போருக்கு பொருளுடனேபூஷண லாபங்கள்பெற்று பூமிலாபம்பெறுவ ரென்றுசொல்லு அருமையாய்நூதன வியாபாரந்தன்னை அதிகநன்முயற்சியுடன் நடத்துவாரே. 40
உரை-குரு, புதன், செவ்வாய் உதயமாகி 5-4-3-நெம்பர் வந்தால் நவரத்ன தரிசனபலன். அதன் விபரம் பொன் பொருள் ஆஸ்தி பூஸ்திதியுடன் பூமி லாபமும் கிடைத்து, பெருமையாய் மனைவி, மைந்தர், பந்துமித்திரருடனே சுகசீவியாய் வாழ்ந்திருந்து வெகுலாபம் கிடைக்கும்படியான நூதன வியாபாரஞ் செய்வதற்குத் தகுந்த முயற்சி செய்வார்கள்.
வியாழன் - குரு - சந்திரன் 5-5-2 - மத்திபம் தக்கதேகப்பிர தரிசனம்
பொன்னவனும் குருசந்திரனுதயமாக பொருந்தியைந்தைந்திரண்டு மத்திபந்தான் இன்னவிதந்தக்கதேகப்பிர தரிசனந்தான் இருப்பதினாலுற்றபல னற்பமாகும் தன்மையுடன்திரவியலாபம் பெற்றாலும் தகுந்தபடிசுகதுக்கம் சுகமாய்வாய்க்கும் தன்மையுடன்லாப நஷ்டமில்லாதெந்நாளும் நலமுடனேசமமாக சீவிப்பாரே. 41
உரை-வியாழன், குரு, சந்திரன் உதயமாகி 5-5-2-நெம்பர் வந்தால் தக்கதேகப்பிர தரிசனம் மத்திப பலனாகும். இதன் விபரம் ஆரூடங் கேட்க வந்தவர்கள் தமக்கு எவ்வளவு திரவியமிருந்தாலும் வரவு செலவு சமமாக சுகதுக்கமும் சமமாக அனுபவிப்பார்கள். ஆனால், சதாகாலமும் லாப நஷ்டமில்லாமல் சமமாய் சீவிப்பார்கள்.
Page 179
வியாழன் - சுக்கிரன் - சந்திரன் | 5-6-1 - உத்தமம் | தேவேந்திர தரிசனம்
அந்தணனுஞ்சுக்கிரனும் ரவியுமாக ஐந்தாறொன்றாமுத் தமமேயாகுஞ் சந்திராஞ்சேர்தேவேந்திர தரிசனந்தான் சொர்ணபணிபூஷணமும் பெருகியன்பாய் எந்தகாலத்திலுமே கீர்த்தியோங்கி எதிரிகட்கஞ்சாமல் தைரியமாக மைந்தர்களும்மனைவிசுற்றத் தோரும்வாழ்த்த மாநிலத்தில்சுகமாக வாழ்வாரே. 42
உரை:-வியாழன், சுக்கிரன், சூரியனும் உதயமாக 5-6-1- நெம்பர் வந்தால் உத்தமமாகும். தேவேந்திர தரிசனம். இதன் பலன் விபரம்: சொர்ணபணிபூஷணாதிகளும் பெருக்கமாயணிந்து கீர்த்தி பிரகாசமாய் பகைவர்கட்கஞ்சாமல், மனதைரியமுடனே திரவியஞ் சேகரஞ்செய்து, மனைவி, மைந்தர், பந்துமித்திரர்களுடனே சுகசீவியாய் சீவிப்பார்கள்.
வியாழன் - சனி - ராகு | 5-7-8 - உத்தமம் | சுப்பிரமணியர் தரிசனம்
குருசனி ராகு உதய மாகிநிற்க குற்றமிலா ஐந்தேழெட் டுத்தமமேயாகும் முருகனெனும்சுப்பிரமணியர் தரிசனந்தான் முகமலர்ச்சியாக பிரபுக்கள்பிரபுக்கள்ப நட்பு அருமையுடனேபெற்று கனவானாகி ஆஸ்திபுஸ்தியுடனே பந்துமித்திரர் பெருமையுடனே புகழ்ந் தாசீர்வதித்து பேசிடவும்சுகமாக சீவிப்பாரே. 43
உரை:-வியாழன், சனி, ராகு உதயமாக 5-7-8- உத்தமமாகும். சுப்பிரமணியர் தரிசனம். இதன் விபரம்: சதாகாலமும் ஆனந்தமாக மனச்சோர்வில்லாமல் பிரபுக்கள் சிநேகிதமாக பல விதமான வியாபாரஞ்செய்து, திரவியசேகரஞ்செய்தும், ஆஸ்தி புஸ்தியுடனே பந்துமித்திரர் புகழ்ந்தாசீர்Actionவிக்கும்படியான பெருமையுடனே சீவித்திருப்பதற்காகும்.
Page 180
பலகறை ஆரூடம் - வியாழன் - ராகு - சனி (5-8-7 - உத்தமம்) / ஐராவத தரிசனம்
பொன்னவனும் இராகு சனி உதயமாக பொருந்தி ஐந்து எட்டே உத்தமமாகும் பன்னியதோர் சுற்றத்தார் பந்துமித்திரர் பகையுமில்லா தெந்நாளும் சுகித்திருப்பார் நன்னயமாய் வர்த்தகமும் உத்தியோகம் நலமுடனே செய்து பொன் பொருளும் சேர்த்து அன்புடனே மனைவிமைந்தர் சுற்றத்தோடு அவனியிலே சுகமாக ஜீவிப்பாரே. 44
உரை:- வியாழன், ராகு, சனி உதயமாக 5-8-7-நెంబர் வந்தால் உத்தமம். ஐராவத தரிசனம். இதன் பலன் : சுற்றத்தார், பந்துமித்திரர் ஆகியோர்களின் பகையில்லாமல் சதாகாலமும் சுகமாக சீவித்திருப்பதுடன், உத்தியோக விருத்தியும் வியாபார லாபமும் பெற்று, பொன்பொருள் நவரத்ன ஆபரணங்களும் பெற்று மனைவி மைந்தர்களும் பந்துமித்திரர்களும், புகழ்ந்துரைக்கும்படியாய் சீவித்திருப்பதாகும்.
பலகறை ஆரூடம் - சுக்கிரன் - சூரியன் - வியாழன் (6-1-5 - உத்தமம்) / தேவகன்னி தரிசனம்
சுக்கிரனும் சூரியனும் வியாழனோடு சூழ்ந்தாறொன்றைந்து உத்தமேயாகும் சிக்கிலா தேவகன்னி தரிசனந்தான் சிறப்புடனே தான் விளங்கும் விபரந்தானே மிக்கவே நற்பலனாய் திரவியலாபம் மேன்மையுடனே பெற்று பூமி லாபம் தக்க தாய்ப்பெற்றினிதாய் சுற்றத்தோடு தரணியிலே சுகமாய் சீவிப்பாரே. 45
உரை:- சுக்கிரனும், சூரியனும் வியாழனோடு சூழ்ந்து உதயமாக 6-1-5-உத்தமமாகும். தேவகன்னி தரிசனம். இதன்பலன்: பணதியமாய்ப் பொருள் சகாயஞ் செய்யும் பிரபுக்களை நேசித்து பணலாபம் பெற்று, திரவிய சம்பத்துடனே பூமி லாபத்துடனே, பந்துமித்திரருடனும் சுகானந்தமாய் சீவித்திருந்து, புத்ரமித்ர களத்திராதியருடனே சுகானந்தமாய் வாழ்ந்திருப்பார்கள்.
Page 181
சுக்கிரன் - சந்திரன் - புதன் | 6-2-4 - உத்தமம் | திக்கெஜ தரிசனம்
சுங்கனேசந்திரனும் புகலுமாக சூழ்ந்தாறிரண்டுநான் குத்தமந்தான் மங்களஞ்சேர்திக்கெஜ தரிசனந்தான் மாநிலத்திலெந்நாளும் பகையில்லாமல் பொங்குநல்சுகவாழ்வு பந்துமித்ரர் புகழ்ந்தோதமனை மைந்தருடனேவாழும் சிங்காரதேஜஸுடன் தனவானாக சிறப்பாகதாரணியில் சீவிப்பாரே. 46
உரை:—சுக்கிரன், சந்திரன், புதனும் உதயமாக 6-2-4 நெம்பர் வந்தால் உத்தமமாகும். திக்கெஜ தரிசனம். இதன் பலன்: உலகத்தில் எவர்கட்கும் பகையில்லாமல் சகலருக்கும் நல்லவனாய் நற்குணம் பொருந்தி, பந்துமித்திரர் புகழ்ந்துரைக்க மனைவி மைந்தருடனே சுகானந்தமாய் சரீராரோக்ய தேஜஸுடன் வாழ்ந்து தனதான்ய சம்பத்துடன் ஜீவித்திருப்பதற் மாகும்.
சுக்கிரன் - செவ்வாய் - குரு | 6-3-3 - உத்தமம் | புஷ்பபிரஷ்டிவி தரிசனம்
புகருடனேசெவ்வாயும் குருனுமாக பொருந்தியேஆறுமூன்று மூன்றுமானால் மகிழுடனேஉத்தமபுஷ்ப பிரஷ்டிவி மகாதரிசனமாகும் கீர்த்திவானாய் சுகமாகபொன்பொருளும் சேர்த்துநாளும் சுற்றத்தார்மனைவிமைந்தருடன் வாழ்வார்கள் ஜெகமீதுகுறையணுகா தெந்தநாளும் செழிப்புடனேவாழ்ந்திருப்பர் கவனிப்பீரே. 47
Page 182
பலகறை ஆரூடம் - சுக்கிரன் - புதன் - சந்திரன் (6-4-2 - உத்தமம்) - பூரணகும்ப தரிசனம்
சுக்கிரனும்புதனுடனே மதியுமாக சூழ்ந்தாறுநாலிரண் டுத்தமந்தான் சிக்கிலாபூரணகும்ப தரிசனமேயாகும் சிறப்புடனேஉத்தியோக வர்த்தகங்கள்செய்து பக்குவமாய்த்திரவியலா பத்தோடன்பாய் பத்தினிபுத்ரச்சுற்றத்தா ருடனேவாழ்ந்து இக்குவலயத்தி லினிதாகவேதான் இலக்ஷாதிகாரியைப்போல் சீவிப்பாரே. 48
உரை:--சுக்கிரனும், புதனும், சந்திரனும் உதயமாக 6-4-2- நெம்பர் வந்தால் உத்தமமாகும். பூரண கும்ப தரிசனம். இதன் பலன்: உத்தியோக விருத்தியாலும், வியாபார லாபத்தாலும் வெகு பொருள்சேகரித்து மனைவி, மைந்தர், பந்துமித்திரருடனே மிகவும் மேன்மையான இலக்ஷாதிகாரியைப்போல சதானந்தமாய் சீவித்திருப்பதற்காகும்.
பலகறை ஆரூடம் - சுக்கிரன் - வியாழன் - சூரியன் (6-5-1 - உத்தமம்) - சொர்ணகும்ப தரிசனம்
புகருடனேவியாழனும் பரிதியாக பொருந்தியே ஆறைந்தொன் றுத்தமந்தான் ஜெகமீதில்வெகுசமர்த்தாய் உத்யோகஞ்செய்தும் செம்பொன்னாபரண வியாபாரஞ்செய்தும் வெகுதனவானாகவே விளங்கிவாழ்ந்தும் வேந்தர்களும்பிரபுக்களும் புகழவாழ்ந்து சுகசீவியாகவே மனைவிமைந்தர் சுற்றத்தாருடனினிதாய் சீவிப்பாரே. 49
உரை:--சுக்கிரன், வியாழன், சூரியன் உதயமாக 6-5-1- நெம்பர் வந்தால் உத்தமம். சொர்ணகும்ப தரிசனமாகும். இதன் பலன் வெகு சாமர்த்தியமாய் உத்தியோகஞ்செய்தும், தங்கநகை வியாபாரஞ் செய்தும், வெகு தனவானாகி அரசர்களும் பிரபுக்களும் புகழுந்தன்மையான சுகசீவியாய் மனைவி மைந்தர்களுடன் மிகவும் மேன்மையாக வாழ்ந்திருந்து சதாகாலமுந் துயரமில்லாமல் சீவித்திருப்பதற்காகும்.
Page 183
சுக்கிரன் - சுக்கிரன் - ராகு | 6 - 6 - 8 - உத்தமம் | ஊஷ்ணபூமி தரிசனம்
சுக்கிரனும் புகருடனே ராகுவுமாக சூழ்ந்தாறு ஆறுஎட்டுத்தமந்தான் சிக்கிலா ஊஷ்ணபூமி தரிசனந்தான் சிறந்த பலன் கிடைத்தாலும் லாப நஷ்டம் பக்குவமாய்ச் சமமாக அனுபவித்து பாருலகோர் முன்சமமாய் வாழ்ந்தெப்போதும் துக்கமிலா சுகமில்லாப் பொருளுந்தேடி துணைவர்களோடன்பாக சீவிப்பாரே. 50
உரை:— சுக்கிரனும், புகரும், இராகுவும் உதயமாகி 6-6-8 நெம்பர் வந்தால் உத்தமமாகும். ஊஷ்ணபூமி தரிசனம் இதன் பலன் : தனக்கு எவ்வளவு லாபம் கிடைத்தாலும் சரியான பலனாக சுகதுக்கம் அளவுக்காய் பொருந்தி பந்துமித்திரருடனே சீவித்திருந்தாலும், தனது புத்திக்கியன்றபடி வியாபாரஞ் செய்து கொண்டு, பக்குவமாய் வாழ்ந்திருப்பார்கள்.
சுக்கிரன் - சனி - சனி | 6 - 7 - 7 - உத்தமம் | லதாமண்டப தரிசனம்
அசுரகுருவெனும் சுக்கிரன் சனி மந்தன்கோண ஆறேழுமேழு உத்தமமேயாகும் பசுபதியின் திருவருளால் நவரத்னம் பொன்னும் பாக்கியமும் நிலபுலனும் கிடைத்தெந்நாளும் புஜபவமாய்த் ஸ்திரீசேர்க்கை பந்துமித்திரர் புத்திரகளத்திராதியத்துடனேவாழ்ந்து விசுவாசத்துடனெவரும் நேசித்தன்பாய் விரும்பியே பொருட்சகாயஞ் செய்குவாரே. 51
உரை:— அசுரகுருவாகிய சுக்கிரனும், சனியும், மந்தனும் உதயமாக 6-7-7-நெம்பர் வந்தால் உத்தமமாகும். லதாமண்டப தரிசனம். அதன் பலன் விபரம், பகவான் கிருபையால் பலவிதமான வியாபாரஞ்செய்து நவரத்ன லாபம், பொன்மணி பூஷணாதிகளும், காணி, பூமி, நிலபுலன்களும் பெற்று சுகபோக பாக்கியமும் ஸ்திரீ சேர்க்கையும் பெற்று, பந்துமித்திரர் களத்திராதி
Page 184
பலகறை ஆரூடம்
ருடனே சுகானந்தமாய் வாழ்ந்திருந்து சகலரும் தன்மேல் அதிக விஸ்வாசமாய் நேசித்து பொருள் சகாயம் செய்யும்படியான பிரபுக்களின் திரவிய சகாயத்தினால் மிகவும் நேர்த்தியாய் ஜீவித்திருப்பார்கள்.
சுக்கிரன் - இராகு - சுக்கிரன் / 6-8-6 - மத்திபம் / சண்டிகாதரிசனம்
கவிராகு சுக்கிரனு முதயமாக காணுமாரெட்டாறு மத்திபத்தான் நவிலுமந்த சண்டிகாதரிசனந்தான் நற்பலனாய்விளங்கிடினும் மத்திபத்தான் எவ்விடத்திலேதிரிந்து அலைந்திட்டாலும் ஏற்றத்தாழ்வாயிரப் பருலகமீது புவியில்வெகுசாமர்த்தியஞ் செய்திட்டாலும் புசிப்பதற்கன்னமளவாய்க் கிடைக்கும்பாரே. 52
உரை:—சுக்கிரன், இராகு, சுக்கிரன், உதயமாக 6-8-6- நெம்பர் உதயமானால் மத்திபமாகும் சண்டிகா தரிசனம். இதன் பலன் விபரம்: எந்தெந்த தேசத்தில் திரிந்து, என்னென்னவித சாமர்த்தியஞ் செய்தாலும் தனது வயிற்றை வளர்ப்பதற்குச் சரியான அன்ன பதார்த்த பக்ஷணம் அளவுபோல் கிடைத்து ஏற்றத்தாழ்வில்லாமல் கையிற் பொருள் சேராமலும் கடனில்லாமலும் சமமாயிருக்கும்.
சனி - சூரியன் - புதன் / 7-1-4 - மத்திபம் / சம்பராசுர தரிசனம்
கதிர்மகனும் சூரியனும் புதனுமாக கண்டதோரேழொன்று நான்கு மத்திபமேயாகும் பதிகையும்கையிலுள்ள பணமும்காசுப் பாக்கியமும்நாசமாய் கைவரண்டு சதிசெய்யும்துன்மார்க்க நேயராலே சண்டைசச்சரவுற்றோ ராண்டுசென்றால் மதிவந்ததென்றேவர்த்தக முர்செய்து மத்திபலாபத்துடனே சீவிப்பாரே. 58
Page 185
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
உரை:-சனியும், சூரியனும், புதனும் உதயமாக 7-1-4 நெம்பர் வந்தால் மத்திமபலனாகும். சம்பராசுர தரிசனம். இதன் பலன் விபரம் : தன் கையிலுள்ள பணம் காசெல்லாம் செலவழித்து விட்டு துன்மார்க்க சிநேகிதரால் சண்டை சச்சரவும், கலகமும் செய்துக்கொண்டு விசனசாகரத்தி லாழ்ந்து துயரப்படச் செய்யும். ஆனால் இவ்விதமாய் ஒருவருஷம் வரையிலும் மதிமந்தனாய் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தாலும் பிறகு நல்ல புத்தி விளங்கி ஏதாயினும் ஓர் வர்த்தகஞ்செய்து அன்ன வஸ்திரத்திற்கு தகுந்தவிதமாய் திரவிய சேகரஞ்செய்து ஜீவித்திருப்பதற்காகும்.
சனி - சந்திரன் - செவ்வாய் / 7-2-3-உத்தமம் / சேஷ்டசாக தரிசனம்
மந்தனுடன்சந்திரனும் குஜனுமாக மதித்திடுமேழ்ரெண்டுமூன் றுத்தமமேயாகும் அந்தமாம்சேஷ்டசாக தரிசனந்தான் அவனியிலே தனவந்தனாயிருந்து சுந்தரஞ்சேர்மனைவிமைந்தர் பந்துமித்ரர் சூழ்ந்திருக்கவெகுசுகமாய் கீர்த்தியோடு எந்தகாலத்திலுந் தைரியமாக எதிரிகளில்லாமல் ஜீவிப்பாரே. 64
உரை:-சனி, சந்திரன், செவ்வாய் உதயமாக 7-2-8- நெம்பர் வந்தால் உத்தமமாகும், சேஷ்டசாக தரிசனம். இதன் பலன் விபரம் உத்தியோக விர்த்தியாலும், வியாபார லாபத்தாலும் பொருள் சேர்த்து மகா தனவந்தனாயிருந்து அழகான மனைவி, மைந்தர், பந்துமித்திரர் சூழ்ந்த பெருக்கத்துடன் சதானந்தமாய் வாழ்ந்திருந்து எதிரிகட்கஞ்சாமல் மனதைரியத்துடனே ஜீவித்துக்கொண்டிருப்பார்கள்.
சனி - சந்திரன் - செவ்வாய் / 7-3-2- உத்தமம் / மகாலக்ஷ்மி தரிசனம்
சனிசெவ்வாய்சந்திரனு முதயமாக சார்ந்தேழ்மூன்றிரண்டு உத்தமமேயாகும் கனிவானமகாலக்ஷ்மி தரிசனந்தான் கௌரவமுங்கீர்த்தியுடன் தனவானாக
Page 186
பலகறை ஆரூடம்
பனிமொழிமாதர்சேர்க்கை பூமிலாபம் பந்துமித்திரர்மகிழ வாழ்ந்திருந்து முனிவில்லாசாந்தகுண மாயிருந்தும் மூதறிஞனெனப்புகழ ஜீவிப்பாரே. 55
உரை:— சனி, செவ்வாய், சந்திரன் உதயமாக 7-8-2-நெம்பர் வந்தால் உத்தமமாகும். மகா லெக்ஷ்மி தரிசனமாகும். இதன் பலன் விபரம், கௌரவமும் கீர்த்தியும் பொருந்திய பிரபுவைப் போலிருந்து இனிமையான குரலொலி சப்தித்து மதுரமாய்ப் பேசும் பெண்களின் சேர்க்கையும், காணி, பூமி, நிலபுலத்துடனே சுகஜீவியாய் பந்து மித்திரர் மனமகிழ்ந்து புகழ்ந்துரைக்கும்படியான சாந்த மனதமைந்தவனாய் சீவித்திருப்பதற்காகும்.
பலகறை ஆரூடம் - சனி - புதன் - சூரியன் (7-4-1 - உத்தமம்) - நளின தரிசனம்
காரியுடன்புதன்பரிதி உதயமாக காணுமேழநாலொன்றுந் தமமேயாகும் பாரினிலநளினதரி சனமேயாகும் பாக்கியவானாய்வர்த்த கங்கள்செய்து வீரியமாய்ப்பேசுவதில் கீர்த்திவானாய் விளங்குவான் பிரபுவைப்போ லுலகந்தன்னில் பாரியான்புத்ரமித்ர சம்பத்தோடு பந்துக்களுந்திடவே ஜீவிப்பாரே. 56
உரை:— சனி, புதன், சூரியனும் உதயமாக 7-4-1-நெம்பர் வந்தால் உத்தமமாகும். நளினதரிசனம் இதன் பலன் பலவிதமான வியாபாரஞ்செய்து திரவியலாபத்துடனே கீர்த்திப்பிரகாசமாய் பந்துமித்திரர்கள் புகழ்ந்துரைக்கும் பிரபுவாக மனைவி மைந்தருடன் சுகஜீவியாய் வாழ்ந்திருப்பதற்காகும்.
பலகறை ஆரூடம் - சனி - வியாழன் - இராகு (7-5-8 - உத்தமம்) - க்ஷீரசாகர தரிசனம்
சனியுடனேவியாழன் ராகுடனேதோன்ற சார்ந்தஏழுமைந்தெட்டு உத்தமந்தான் இனிதான க்ஷீரசாகர தரிசனந்தான் இப்புவியில் பிரபுவைப் போலிருந்து
Page 187
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
தனதான்யசம்பத்து மிகவேபெற்று தரித்திரநோயில்லாமல் பந்துமித்ரர் மனைமைந்தருடனேசம் பத்துண்டாகி மாநிலத்தில் பெருமையுடன் ஜீவிப்பாரே. 57
உரை :- சனி, வியாழன், ராகு உதயமாறி 7-5-8-நெம்பர் வந்தால் உத்தமமாகும். க்ஷீரசாகர தரிசனம். இதன் பலன் உத்யோக விருத்தியாலும் வியாபார லாபத்தாலும் வெகு பொருள் சேகரஞ் செய்து காண்போர் பிரபுவென புகழ்ந்துரைக்குந் தன்மையாக தனதான்ய சம்பத்துடனே, தரித்திரமென்னும் வறுமை பிணியில்லாமல் கனவானென்றாலகோர் மதிக்கக்கூடிய சம்பத்துடனே, மனைவி மைந்தர் பந்துமித்ரர்களுடன் சுகஜீவியாய் வாழ்ந்திருப்பதற்காகும்.
சனி - சுக்கிரன் - சனி 7 - 6 - 7 - உத்தமம் சூசூதேவி தரிசனம்
பங்குபாதனோடுசுக்கிரன்மந்தன் பார்வையாயேழுமாறேழ் உத்தமமேயாகும் மங்களமாய்சூசூதேவி தரிசனந்தான் மாநிலத்தில் பலவிதமாய் பொருளுந்தேடி திங்கள் முகக்காந்தியுள்ள பெண்கள்சேர்க்கை தீரமுடன்வர்த்தகஞ்செய் தனேகலாபம் பங்கமிலாமற்நினைக்க மனைவிமைந்தர் பந்துகூட்டத்துடனே ஜீவிப்பாரே. 58
உரை :- சனி, சுக்கிரன், சனி உதயமாக 7-6-7-நெம்பர் வந்தால் உத்தமமாகும். சூசூதேவி தரிசனம். இதன் பலன் விபரம், அழகான ஸ்திரீகளின் சங்கமமும், வியாபார லாபத்தினால் திரவிய சேர்க்கையும் பிரபுத்தன்மையுடனும் மனைவி மைந்தர் பந்து மித்திரருடனே ஆனந்தமாய் ஜீவித்திருப்பதற்காகும்.
சனி - சனி - சுக்கிரன் 7 - 7 - 6 - மத்திபம் இராஜசர்ப்ப தரிசனம்
மத்தனுடன் சனிசுக்கிர னுதயமாக மகிழ்ந்தேழுமழாறு மத்திபமேயாகும் அந்தமாய்ராஜசர்ப்ப தரிசனந்தான் அலைச்சலுடன் பொருள்சேர்த்து தனவானாக
Page 188
பலகறை ஆரூடம்
சிந்தைமகிழ்ந்திருந்தாலும் சிலநாட்பின்னால் சிறிதுசிறிதாய்தனமெல் லாம்குறைந்து விந்தையாய்காண்போர்கள் திடுக்கிட்டேங்க விசனமுடன்சபலமுற் றீவிப்பாரே. 59
உரை:--சனி, மந்தன் சுக்கிரன் உதயமாக 7-7-6 நெம்பர் வந்தால் மத்திய பலனாகும். இராஜ சர்ப்ப பலன். இதன் விபரம், பலவித சமர்த்தாலும் மன அலைச்சலுடனே திரவிய சேகரஞ் செய்து தனவானாக மனமகிழ்ந்திருந்தாலும், சிலநாட் சென்ற பிறகு தன்னிடமிருக்கும் பொருளெல்லாம் சிறிது சிறிதாய்க் குறைந்து பார்ப்பவர்கள் மனமிரங்கி திடுக்கிட்டு பரிதாபமடையும்படியான ஏழ்மை நிலையுடன் விசனித்திருப்பார்.
பலகறை ஆரூடம் / சனி - ராகு - வியாழன் / 7 - 8 - 5 - உத்தமம் / ஸ்ரீ தரிசனம்
சனி- ராகு - வியாழன் 7 - 8 - 5 - உத்தமம் ஸ்ரீ தரிசனம் சனியிராகுவியாழனு முதயமாக சார்ந்தேழுஎட்டைந்துந் தமமேயாகும் இனிதானஸ்ரீதரி சனந்தானாகும் இதன்பலனேபிரபுவைப்போல் வாழ்ந்திருந்து கனிவுடனேமனைவிமைந்தர் சுற்றத்தோடு களிப்புடனேஜீவித்துத் துயரமின்றி பனிமொழிமாதர்சேர்க்கை மிகவுண்டாகி பணமுடனெந்நாளும் சீவிப்பாரே. 60
உரை:--சனி, ராகு, வியாழன் உதயமாக 7-8-5 நெம்பர் வந்தால் உத்தமமாகும். ஸ்ரீ தரிசன பலன். இதன் விபரம், வெகு சாமர்த்தியத்துடனே வியாபாரத்தினாலும் உத்தியோகத்தினாலும் பற்பலவிதமாய் திரவிய சேகரஞ்செய்து பிரபுவைப்போல வாழ்ந்திருந்து மனைவி மைந்தர் பந்துமித்திரர்களுடனே சீவித்து அழகான பெண்களின் சேர்க்கையும் பெற்று ஆனந்தமா யிருப்பதற்காகும்.
பலகறை ஆரூடம் / இராகு - சூரியன் - செவ்வாய் / 8-1-3 - உத்தமம் / ஐராவத தரிசனம்
இராகு - சூரியன் - செவ்வாய் 8-1-3 - உத்தமம் ஐராவத தரிசனம் ராகுடனேசூரியனும் செவ்வாயாக நலமானஎட்டொன்றமூன் றுத்தமந்தான் பாகுசேர்ஐராவத தரிசனந்தான் பாக்கியமும்வெகுவாக பெற்றன்பாக
Page 189
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
போகபாக்கியங்களுடன் சவுக்யம்மேன்மை பொருந்தியேபந்துமித் திரரோடன்பாய் சோகமிலாகீர்த்தி ப்ரகாசமாக சொர்னபணிபூஷணமும் பருகுந்தானே. 61
உரை:—இராகு, சூரியன், செவ்வாய் உதயமாக 8-1-3 நெம்பர் வந்தால் உத்தமமாகும். ஐராவத தரிசனம். இதன் பலன் தனதான்ய சம்பத்துடனும் பந்துமித்திரர் சேர்க்கையுடன் புத்திரகளத்ராதி சுகபாக்கியத்துடனே சொர்னபணி பூஷணாதிகள் ஆஸ்தி பூஸ்தியுடன் ஆனந்தமாயிருப்பதற்காகும்.
இராகு - சந்திரன் - சந்திரன் / 7-2-2 - உத்தமம் / சுதர்சன தரிசனம்
அரவினோடுசந்திரனும் மதியுந்தோன்ற ஆனஏழிரண்டிரண்டு முத்தமமேயாகும் பரவியசுதர்சன தரிசனந்தான் பாக்கியமென்மேலுமுண்டாம் நண்பரோடு தரணிதனில்ஷேத்ரயாத் திரைகள்செய்து தானதர்மஞ்செய்துவெகு கீர்த்தியாக சிரமமின்றிபந்துமித்ரர் கூட்டத்தோடு சிறப்புடனேவாழ்ந்திருப்பா ரவனிமீதே. 62
உரை:—இராகு, சந்திரன், மதியும் உதயமாக 7-2-2-நெம்பர் வந்தால் உத்தமமாகும். சுதர்சன தரிசனபலன். இதன் விபரம், பலவிதத்திலும் திரவியசேகரஞ்செய்து, தனதான்ய சம்பத்துடன் பிரபுவாகவிளங்கி சிநேகிதர்களோடு மகத்வம்பொருந்திய க்ஷேத்ர யாத்திரைசெய்து பகவத்பக்தியானந்தமாய் தானதர்ம பரோபகாரம் புரிந்து சுசீலியாய் பந்துமித்திரர் கூட்டத்துடனும் மனைவி மைந்தர்களுடனே பெருமையாய் ஜீவித்திருப்பதற்காகும்.
இராகு - செவ்வாய் - சூரியன் / 8-8-1 - உத்தமம் / தேவேந்திர தரிசனம்
பணியுடனேகுஜன்பரிதி உதயமாக பகரெட்டுமூன்றென்று முத்தமந்தான் துணிகரமாய்பலவிதத்தில் திரவியந்தேடி துன்பமிலாபேய்ப்பில்லி சூனியனதை
Page 190
பலகறை ஆரூடம்
பிணியுமிலாதெந்நாளும் பந்துமித்திரர் புத்திரகளத்திராதியுடன் வாழ்ந்திருந்து கணிகையர்கள்சேர்க்கையுட னேயெந்நாளும் கவலையின்றிகசுகமாக சீவிப்பாரே. 63
உரை-இராகு, செவ்வாய், சூரியன் உதயமாக 8-3-1- நெம்பர் வந்தால் உத்தமமாகும் தேவேந்திர தரிசனபலன். இதன் விபரம், பலவித முயற்சியுடன் திரவியசேகரஞ் செய்து பகைவரின் கொடுமையில்லாமலும் பேய், பில்லி, சூனியம், மந்திர வாதிகள் பகை முதலான துன்பமுமில்லாமல் சரீராரோக்கியத் துடனே வறுமை பிணியில்லாமல் பந்துமித்திரர்கள் புகழ்ந் துரைக்கும்படியான பிரக்யாதியுடனே மனைவி மைந்தர்களுடன் கவலையில்லாமல் வாழ்ந்திருப்பதற்காகும்.
பலகறை ஆரூடம் - இராகு - புதன் - இராகு (8-4-8 - உத்தமம்) - இராஜ தரிசனம்
இந்தரிபுதன்ராகு உதயமாக எட்டுநாலெட்டுஉத் தமமேயாகும் அந்தமாம்ராஜ தரிசனமேயாகும் அவனியோர்யோகவா னென்று கூற எந்தெந்தவியாபாரஞ் செய்திட்டாலும் எத்தொழிலைச்செய்தாலும் ஜெயமுண்டாகும் சுந்தரஞ்சேர்பெண்களுடன் போகபாக்யம் சுகமாகஅனுபவித்து மகிழுவாரே. 64
உரை-இராகு, புதன், இராகு உதயமாக 8-4-8-நெம்பர் வந்தால் உத்தமபலனாகும் இதன் விபரம், இராஜதரிசனம் இவ் விதமாயிருந்தால் சகலரும் யோகவானென்று ஆச்சரியம் எய்துந் தன்மையாக எந்தெந்தவிதமான வர்த்தகம் செய்தாலும், எந்தெந்தவிதமான கைத்தொழிலேனும், உத்தியோகமாயினும் வெகு சமர்த்தாய்ச்செய்து காண்போர் ஆச்சரியமெய்துந் தன்மையாய் ஜெயம்பெற்று அதிக லாபத்துடனே திரவியசேகரஞ் செய்து அழகான பெண்களுடனே ஆனந்தமாய் சீவித்துக் கொண்டிருந்து, சதாகாலமும் இன்பசுகத்தை யனுபவித்து மன மகிழ்வா யிருக்கும்படியான நற்பலனுண்டாகும்.
Page 191
இராகு - வியாழன் - சனி 8-5-7 - உத்தமம் மகாலக்ஷ்மி தரிசனம்
நாகனோடுவியாழன் சனியுதயமாக நாடியஎட்டைந்தேழ் உத்தமந்தான் சோகமிலாமகாலக்ஷ்மி தரிசனந்தான் சொர்னபணிபூஷணங்கள் மிகவுண்டாகும் பாகுசேர்மொழியார்கள் சேர்க்கையாவார் பாரிலுள்ளோர்தனவானென்றுரைக்கக்கீர்த்தி போகபாக்கியம்பெற்று மனைவிமைந்தர் பொன்பொருளோடுலகினில்வாழ்ந் திருப்பர்தானே. 65
உரை:-இராகு, வியாழன், சனி உதயமாக 8-5-7-நெம்பர் வந்தால் உத்தமமாகும். மகாலக்ஷ்மி தரிசனம். இதன் பலன், பொன் வெள்ளி பூஷணாதிகளும் பொருள் சேர்க்கையும் கிடைக்கப் பெற்று தாசிவேசிகளின் சேர்க்கையும் பொருந்தி பலபேர் பிரபுவென்று புகழ்ந்துரைக்கும் தன்மையான போகபாக்கியமும் பொன் பொருள் பூஸ்திதியுடன் மனைவி மைந்தர் சுற்றத்தாருடனே சீவித்திருப்பார்கள்.
இராகு - சுக்கிரன் - சுக்கிரன் 8-6-6 - மத்திபம் நஷ்டசந்திர தரிசனம்
பாம்புடனேசுக்கிரன்புக ருதயமாக பாருமெட்டாறாறு மத்திபமேயாகும் வேம்புபோல்நஷ்ட சந்திரதரிசனந்தான் வேதனையாய்பலதுயரால் மனங்கலங்கி சோம்பலுடன் கைப்பொருளும் நிதியுந்தோற்று சொர்னபணிபூஷணமும் விற்றுப்புசித்து வீம்புசெய்யும்பந்துமித்ர ரால்திகைத்து விதியை நினைந்தழுதுபின்னால் சுகமாவாரே. 66
உரை:-இராகு, சுக்கிரன், சுக்கிரன் உதயமாக 8-6-6-நெம்பர் வந்தால் மத்திபமாகும், நஷ்டசந்திர தரிசனம். இதன்பலன், சதாகாலமும் மனவேதனையாய் பலவிதமாகிய துன்பத்தாலும் துயரத்தாலும் மனந்திகைத்து சோம்பலுடன் சரீரமிளைத்து கைப்
Page 192
பலகறை ஆருடம்
பொருள் சம்பத்தெல்லாம் தோற்று ஆபரணாதிகளுடன் சீரான பணி பூணாதிகளும் விற்றுப்புசித்து வறுமைநோயாற் கலங்கி மனோசர்வ வஞ்சகபந்துமித்ரரால் கலகம் நேரிட்டு சகலரும் வெறுத்துப் போம்படியான கொடுமையை நினைந்து விதியின் பட்டிடங்கிநின்று விசனப்படுவார்கள்.
பலகறை ஆருடம் - இராகு - சனி - வியாழன் (8-7-5 - மத்திபம்) - சோகசாகர தரிசனம்
விடநாகன் சனிவியாழன் உதயமாக விரைந்தெட்டே ழைந்து மத்திபமேயாகும் திடமில்லா சோகசாகர தரிசனந்தான் திறமையில்லா சோம்பலுற்று பொருள்தேடாமல் கடன்வாங்கியே புசித்து சக்தியில்லா கலங்கியே ஒருவருஷங் கழிந்தபின்பு படபடத்து வீராவேசத்தோடன்பாய் பலதொழில் செய்தேசுகமாய் சீவிப்பாரே. 87
உரை:--இராகு, சனி, வியாழன் உதயமாக 8-7-5 நெம்பர் வந்தால் மத்திபபலன் சோகசாகரதரிசனம். இதன் விபரம், மதியீனத்தாலும் சோம்பலாலும் எந்த தொழிலிலும் பிரவேசியாமல் பொருள் சேகரஞ்செய்ய சக்தியில்லாமல் கலங்கித் துடித்து கடன் வாங்கி புசித்தும், கொடுக்க சக்தியில்லாமல் மனஞ்சோர்ந்து தத்தளித்து ஒரு வருஷமானபிறகு வீராவேசத்துடனே பற்பல விதமாய் கைத்தொழில் புரிந்து கஷ்டப்பட்டு திரவியஞ் சேகரித்து சுக சவுக்கியமாய் சீவித்துக்கொண்டிருப்பார்கள்.
பலகறை ஆருடம் - இராகு - இராகு - புதன் (8-8-4 - உத்தமம்) - சொர்ணகும்ப தரிசனம்
ராகுபாம்புடன்புதனு முதயமாக நலமுடனே யெட்டெட்டுநான்குத்தமமேயாகும் பாகுசேர்சொர்ணகும்ப தரிசனந்தான் பலவிதமாய்திரவிய லாபங்கிடைக்கும் தோகையர்கள் நேசமுடன் வந்துசேர்வார் தொல்புவியில்கனதன பாக்கியவானாக
Page 193
பலகறை ஆரூடம்
போஷாக்யம்பெற்று பந்துமித்ரச் புத்ரகளத்ராதிபரும் சீவிப்பாரே.
உரை:--இராகு, இராகு, புதன் உதயமாக 8-8-4 நெம்பர் வந்தால் உத்தமபலன். சொர்ணகும்ப தரிசனம். இதன் பலன் விபரம் வியாபாரத்தினால் வெகுபொருள் சேகரித்து நடனதாசி வேசிகளின் சேர்க்கையுடன் சுகபோகமாய் சீவித்திருந்து தன தான்ய சம்பத்துடனே மனைவி மைந்தர் பந்துமித்ரருடனே வெகு ஜனங்கள் சூழ கீர்த்திப் பிரகாசமாய் வாழ்ந்திருப்பார்கள்.
பலகறை ஆரூடம் முற்றிற்று.
Page 194
தேங்காய்குறி ஆரூடபலன் - விநாயகர் துதி
எண்சீரடி விருத்தம்
அம்பிகை பாலாகௌரி புத்ரானான ஆதிகஜானனமூர்த்தி அன்பர்மித்ரா உம்பர்கட்காதார ஜோதியேயான் உரைக்கும்தேங்காய்க்குறியின் ஆரூடத்தை அம்புவியோர்முன்னுண்மை யாய் விளங்க அனுக்கிரகஞ்செய்திடுவீர் குருவேயென்றும் நம்பினேன் அனுதினமும் கணேசாவென்று நான்குவேதந்துதிக்கும் தேவதேவே. 1
உரை:— ஆதி கஜானனமூர்த்தியின் தமது திருவருளால் உலகத்தோர் முன்பாக யான் சொல்லுகின்ற இந்த தேங்காய்க்குறி ஆரூடம் சகலருக்கும் சம்மதமாகும்படியான உண்மமையைத் தெரிவிக்கும்படியாய் அனுக்கிரகஞ் செய்வீர் கணேச குருநாதனாகிய தேவதேவே.
தேங்காய்குறி ஆரூடபலன்
அன்புடனேவிரதா னுஷ்டானஞ்செய்து ஆண்டவனுக்காரா தனையும்செய்ய இன்பமுடன்தேங்காயை உடைக்கும்போது இரண்டுபிளவாயுடைந்தா லுத்தமந்தான் துன்பமுண்டு அழுகலுற்றால் வறுமையாகும் துடிச்செதிலுடைந்தாலும் கலகமுண்டு நன்மையுடனிச்சகுனம் கவனமாக நாடியேகாண்பதுநற் கடமையாமே. 2
உரை:— மனிதவகுப்பார் தமது கோரிக்கை நிறைவேறும் தன்மையான விரதானுஷ்டானம் புரிந்து இஷ்டதேவதா தோத்திரஞ்செய்து, சாம்பிராணி தூபங்காட்டிய பிறகு தேங்காயை சுத்தமாய்க் கழுவி சாம்பிராணி தூபத்தில் காட்டி தமது மனக் கோரிக்கையின் விபர மெவ்விதமாகுமோவென்று மனதில் நினைத்துக்கொண்டு இஷ்ட தேவதா அர்ப்பணமென்று தேங்காயை உடைத்தால் அது இரண்டு பிளவு சரியாய் உடைந்தால் தான் நினைத்த காரியம் சித்தியாகும். அந்தத் தேங்காய் அழுகியதாயிருந்தால் தாம் நினைத்த காரியம் பங்கமாகும். சுக்கல் சுக்கலாயுடைந்தாலும் பலவித கஷ்டமும் கலையு
Page 195
தேங்காய்குறி ஆரூடபலன்
மாகும். தேங்காயை உடைக்கும்போது கைநழுவி சிதறிவிழுந்தாலும் பகையால் கலகமுண்டு. அச்சமயம் படையல் விலையா முன்னம் வேறு நல்ல தேங்காயொன்றை வாங்கிவந்து இஷ்ட தேவதையை பக்தியானந்தமாய்பூசித்து, பிரார்த்தனை செய்துக் கொண்டு தான் நாடியகாரியம் சித்தியாகும்படியாய் சகாயம் புரிவீரென்று தேங்காயுடைத்துக் கற்பூர தீபாராதனை செய்து பிரசாதம் புசித்து மனமகிழ வேண்டும்.
தேங்காய்குறி ஆரூடபலன்
இன்னவிதம்மனித வகுப்பார்களெல்லாம் இசைந்தஆரூடகுறி கவனித்தன்பாய் நன்னயமாய் அவரவர்கள் காரியத்தை நலமுடனே நடத்தினால் கீர்த்தியோங்கி பொன்பொருளும்சேகரித்து மனைவிமைந்தர் பெருமையுடன் வாழ்ந்திருக்கும் சுகத்தைநாளும் அன்பாகவேயடைந்து சீவிப்பார்கள் அரிகுவீரிதுவுண்மை மதியுள்ளோரே. 9
உரை:—மனிதவகுப்பார் அவரவர் முன் ஜன்மத்தில் செய்த பாபபுண்ணியத்திற்குத் தகுந்த விதமாக சுகதுக்கத்தை யனுபவிப்பதற்கிசைந்த விதமாய் நவக்கிரகங்கள் நடத்தும் பலா பலனை ஆரூடத்தாலுணர்ந்து காலபலனை கவனித்துக்கொண்டு தாங்கள் நினைத்த காரியத்தை நிறைவேற்றிக்கொண்டு பந்து மித்திரர் மனைவி மைந்தர் சுற்றத்தாருடனே சுகசீவியாய் வாழ்ந்திருக்க வேண்டும்.
Page 196
நவக்கிரக திசாபுக்தி நிர்ணயம் - கணேச துதி
எண்சீரடி விருத்தம்
பரப்ரம்மஜோதியிலுங் கணேசமூர்த்தி பாதாரவிந்தமதைத் தினமும்போற்றி தரணிதனில்பிறந்த ஜாதகர்களுக்கு அக்கபடிசுகதுக்கம் வாய்ப்பதற்கு நிர்ணயமாய்நவக்கிரக திசாபுத்திதன்னில் நிச்சயித்துசொல்லுமந்த பலாபலன்கள் அரணிதனிலுள்ளோர்க்குச் சொல்வதானோம் கருத்தவிதம்ஜாதகர்க்குப் புகலுவீரே. 1
உரை:—பரப்ரம்ம ஜோதிசொரூபமாய் விளங்கும் கணேச மூர்த்தியின் திருவருளால் உலகத்தில் பிறந்த ஜாதகர்களுக்குத் தகுந்தபடியே சுகதுக்கம் வாய்ப்பதற்கிசைந்தபடி நவக்கிரகங்கள் தமது திசாபுத்திகளில் கொடுக்கும் பலாபலனுக்கிசைந்த சுகதுக்கத்தின் காரணத்தின் விபரத்தைத் தெரிவிக்கின்றோம். ஜோதிட கணிதவல்லோர்கள் விபரமாய் கவனித்து ஜாதகர்கட்குப் பலன்களைப் புகல்வீர்கள்.
நவக்கிரக வருடம் 120-க்கு விபரம்
சூரியனுக்காறாண்டு மதிக்குப்பத்து செவ்வாய்க்கேழாண்டுராகுக்கு பதினெட்டாண்டு தரிவிப்படியமைந்தே வியாழனுக்குத் தகுந்தபடிபதினாறு வருஷமாகும் காரிக்குப்பத்தொன்பது திசைஆண்டாகும் கழறுபுதன்திசைவருஷம் பதினேழாகும் பாரில்கேதுக்குஏழுசுக்கிரற் கிருபதாண்டு பகருதிசைநூற்றிருப தாகுந்தானே. 2
உரை:—உலகத்தில் பிறந்த மனிதர்கட்குச் சகலதுக்கத்தைக் கொடுக்கின்ற நவக்கிரகங்களாகிய சூரியன், சுக்கிரன், செவ்வாய்,
Page 197
பெரிய ஜோதிட சில்லரைக்கோவை
190 பெரிய ஜோதிட சில்லரைக்கோவை
இராகு, குரு, சனி, புதன், கேது, சுக்கிரனென்னும் ஒன்பது கிரகங்களும் தமது திசாவருஷமாகிய நூற்றிருபது வருஷத்தின் விபரத்தையும் சரியாய் கவனித்துப் பலன் சொல்லவேண்டும்.
நவக்கிரக திசை வருஷத்தின் விபரம்
நவக்கிரக திசை வருஷத்தின் விபரம்
சூரியன் திசை 6 | இராகு திசை 18 | புதன் திசை 17 சந்திர திசை 10 | குரு திசை 16 | கேது திசை 7 செவ்வாய் திசை 7 | சனி திசை 19 | சுக்கிர திசை 20
நவக்கிரக திசை புக்தி அட்டவணை
[அட்டவணை: நட்சத்திரங்கள், திசைகள் மற்றும் புக்தி கால அளவுகள் பற்றிய விவரங்கள் - ரோகிணி, அஸ்தம், திருவோணம் / சந்திரன் திசை வு 10; மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் / செவ்வாய் திசை வு 7; திருவாதிரை, சுவாதி, சதயம் / இராகு திசை வு 18; புனர்பூசம், விசாகம், பூரட்டாதி / குரு திசை வு 16; பூசம், அனுஷம், உத்திரட்டாதி / சனி திசை வு 19; ஆயில்யம், கேட்டை, ரேவதி / புதன் திசை வு 17; அஸ்வினி, மகம், மூலம் / கேது திசை வு 7; பரணி, பூரம், பூராடம் / சுக்கிர திசை வு 20]
Page 198
நவக்கிரக திசாபுத்தி நிர்ணயம் / சூரியதிசை பலன்
அக்கினியாற்பீடைய பய மிருத்துமண்பொன் அதிகமாய்ச்சேதமுண்டு சத்துருக்கள் மிக்கவேபயமுறுத்து வார்கள் துன்பம் மிகவலைச்சல்கண்நோயுண்டு சிரசின்ரோகம் துக்கமுண்டுபிதுர்கண்ட மாகும் பொல்லா துயரமுந்தோற்றுமே யென்றுரைப்பீர் பக்குவஞ்சேர்பரிதிதிசை ஆறாண்டுக்கும் பலன்விபரம்பொதுவாக நடக்குந்தானே. 3
உரை:—சூரியதிசை 6-வருஷத்திற்கும் பொதுவான பலன் விபரமெவ்விதமெனில் அக்கினியாற்சேதம், மனபயங்கரம், மரணபயம், பூமி, பொன், வெள்ளி ஆபரணாதிகளின் சேதம், சத்துருக்களால் துன்பம், அலைச்சல், நேத்திரரோகம், தலைவலி, பிதுர்கண்டம், துக்கம் துயரம் கஷ்டநஷ்டமனைத்தும் தோற்றும். ஆனால், சுபக்ஷேத்திரத்திலிருந்து சுபர் சம்பந்தமானாலும் பார்வைபெற்றாலும் நற்பலன்களைத் தருவர்.
சூரியன் திசையில் சூரியபுத்தி பலன்
பிரபுக்கள்பகையுண்டாம் சரீரஉஷ்ண பிணியுண்டாம்தலைநோய் கண்நோயுண்டாகும் தரணியில்தான்செய்யும்வர்த்தகமும் நஷ்டம் தரித்திரமாயிருப்பார்கள் சுபர்கண்டாலோ சிரமின்றிகுகமாயுத் யோகஞ்செய்து சீரானவியாபாரஞ் செய்தன்பாக திரவியலாபம்தேடி பிரபுவைப்போல் திறமையுடன்வாழ்ந்திருப்பா ருலகமீதே. 4
உரை:—சூரியதிசையின் சூரியபுத்தியில் ஜாதகர்க்குப் பிரபுக்களின் பகையுண்டாகும். சரீர உஷ்ணம், தலைநோய், கண்நோய் முதலான வியாதிகளும் வெட்டைச்சூடும் பொருந்தி சரீர மிளைக்கச் செய்து தான் செய்யும் வர்த்தக நஷ்டம், உத்யோக கஷ்டமனைத்தும் நேரிடும். சுபக்ஷேத்திரத்திலிருந்து சுபர் பார்வை நோக்கமானால் சகலவிதமான நன்மையுமுண்டாகும்.
சந்திரன் புத்தி பலன்
பரிதிதிசையிற் சந்திரபுத்திவந்தால் பாக்கியமும்சம்பத்தும் மனமகிழ்ந்து பெருமையுடன் கீர்த்தியுமே மிகவுண்டாகி பொன்பொருளும்பந்துமித்ரர் கூட்டத்தோடு
Page 199
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
வருகின்றபோகமதும் பூரிலாபம் வாய்த்திடுமேசதாகாலம் திரவியலாபம் தருகுமேவறுமையில்லா வாழ்ந்திருக்க தாரணியிற்பிறந்திட்ட ஜாதகர்க்கே 5
உரை:--சூரியதிசையில் சந்திரபுத்திவந்தால் தனதான்ய சம்பத்தும், கீர்த்தியும், பெருமையும், மனோற்சாகமும், பூமிலாபமும், பந்துமித்திரர் சேர்க்கையும், திரவியலாபமும் கிடைத்து வறுமை நோயில்லாத தனவந்தனா யிருப்பதற்காகும்.
அங்காரகன் புத்தி பலன்
மார்த்தாண்டன் திசையதனிலே செவ்வாய்புத்தி மாக்ஷிமையாய் ஜாதகர்க்கு வந்ததானால் கீர்த்தியுண்டுபொன்பொருளும் வந்துசேரும் கெம்பீரஉத்யோக வியாபாரஞ்செய்து சீர்பெறவே வெகுலாபம் பெற்றன்பாக சிறப்புடனே பந்துமித்ரருடனே வாழ்வார் பார்த்தவர்களெல்லோரும் புகழ்ந்துரைக்கும் பாக்கியவானாயிருப்பா ருலகமீதே. 6
உரை:--சூரியதிசையில் செவ்வாய் புத்திவரும்போது சுபக்கிரக பார்வையாயிருந்தால் அந்த ஜாதகனுக்கு மாஷிமை பொருந்திய கீர்த்தியும், பெருமையும், கௌரவமும், வர்த்தக லாபமும், உத்தியோக மேன்மையும் பொருந்திய தனதான்ய சம்பத்தும், பந்துமித்திரர்களின் பெருமையும் சகலரும் தன்னை தனவந்தனென்றுரைக்கும் பிரபுத்தன்மையா யிருப்பதற்காகும்.
இராகு புத்தி பலன்
இருள்நீக்கும்சூரியனார் திசையிலேதான் இராகுபுத்திவந்தால் ஜாதகர்க்கு பொருள்நஷ்டம்வியாபார லாபமில்லை பொருந்தாது உத்யோகம் தொழிலனைத்தும் பெருமைநீங்கித்துன்ப மனுபவித்து பேருலகோர்பழித்திகழ கலங்கிநிற்பார் குருசுக்கிரபுதன்பார்வை யாயிருந்தால் குற்றமிலா சுகமுடனே சீவிப்பாரே. 7
உரை:--சூரிய திசையில் இராகுபுத்தி வந்தால் ஜாதகனுக்கு மனவிசாரமும், உத்யோகமின்மையும், வியாபாரநஷ்டமும் கஷ்டமும், கவலையும், துன்பமும் நேரிடும். ஆனால் குரு, சுக்கிரன்புதன்
Page 200
நவக்கிரக திசாபுத்தி நிர்ணயம்
பார்வையானால் கஷ்டநஷ்ட மில்லாமல் சுகமாய் ஜீவித்திருப்பார்கள்.
நவக்கிரக திசாபுத்தி நிர்ணயம் - குருபுத்தி பலன்
கதிரவன்திசையில் குரு புத்திவந்தால் கலகம்போம்பகையும்போம் பாவம்போகும் சதிசெய்யும்பகைவரெல்லாம் நேசமாவார் சத்துருபயமில்லாமல் சிறந்துவாழ்வார் மதிகுகுந்துபிரபுவைப்போ லுலகமீது மனைவிமைந்தர்பந்துமித்திரர் கூட்டத்தோடு நிதிமிகுந்துதனதான்ய சம்பத்தோடு நீனிலத்திலே சிறந்து வாழ்வாரே. 8
உரை:—சூரியன் திசையில் குருபுத்தி வந்தால் மன சஞ்சலம் கஷ்டநஷ்டம் கலகமெல்லாம் விலகி, சத்துருக்களெல்லாம் தனக்கு மித்திரர்களாயிருந்து, பலவித நன்மை செய்துக்கொண்டிருப்பார்கள். தனதான்ய சம்பத்துடனே மனைவி மைந்தர் பந்துமித்திரர்கள் சஹிதமாய் பிரபுவைப்போல கௌரவமும், பெருமையும் பொருந்திய கீர்த்திப் பிரகாசமாய் சீவித்து சுகசவுக்கியமா யிருப்பார்கள்.
நவக்கிரக திசாபுத்தி நிர்ணயம் - சனிபுத்தி பலன்
சவிதாயென்னும்பரிதி திசையிலேதான் சனிபுத்திவந்தாலே பந்துமித்திரர் புவியோரெல்லாம்பகையாய் விளங்குவார்கள் போஜனத்திற்கும் வறுமை யாகுமின்னும் எவ்விடத்திற்சென்றாலும் கொடுமையாகும் எவர்களும்பொல்லாதோனென் றிகழுவார்கள் அவிபாதவக்கினிபோற் கலங்குவார்கள் அந்தணன்பார்வையானால் சுகமுண்டாமே. 9
உரை:—சவிதாயென்னும் சூரியதிசையில் சனிபுத்தி வந்தால் அந்த ஜாதகனுக்கு பந்துமித்திரர் சுற்றத்தாரெல்லோரும் பகையாய் விளங்கிக் கஷ்டப்படுத்துவார்கள். அலைச்சலும், துக்கமும், துயரமுமுண்டாகி சீவிக்கச்சக்தியில்லாமலும் பொருள் தேடும் வழியில்லாமல் அன்னவஸ்திரத்திற்கே பஞ்சமாய், வறுமை பிணியால் கலங்குவார்கள். ஆனால், குருபகவான் பார்வையானால் இத்தனை விதமான பொருள்தேடி, சீவித்துக் கொண்டிருப்பார்கள்.
Page 201
புதன்புத்தி பலன்
ஆதித்தன்திசையில்புதன் புத்திவந்தால் அநேகவிதநோய்களால் கலங்குவார்கள் வாதித்துதுஷ்டர்களும் கொடுமைசெய்து வம்புசண்டைசெய்வார்கள் சுபர்பார்த்தாலே தீதில்லாசுகபோக பாக்யம்பெற்று தினந்தோறும்சாஸ்திர ஆராய்ச்சிசெய்து நீதியாய்பலபேர்க்கு மதியுரைக்கும் நிபுணனாயுலகோர்முன் விளங்குவாரே. 10
உரை :- சூரிய திசையில் புதன்புத்தி வந்தால் பலவித வியாதிகளாலும் வறுமை நோயாலும் துன்பப்படுவதுடன் பகைவர்களின் கொடுமையால் கலங்கி சத்துருக்களால் சண்டை, சச்சரவு, வாத வம்பு நேரிட்டுத் துடிதுடித்து மன விசாரப்படுவார்கள். ஆனால், சுபக்கிரகங்களாகிய குரு, சுக்கிரன், வளர்பிறைச்சந்திரன் பார்வையானால், பற்பல சாஸ்திர ஆராய்ச்சிசெய்து சகலருக்கும் மதியுரைக்கும் நீதிவானாய் அடக்கம், பொறுமை, சாந்தம், தயாளம், சீவகாருண்யத்துடன் சுகசீவியாயிருப்பார்கள்.
கேதுபுத்தி பலன்
பருதிதிசையிற்கேது புத்திவந்தால் பதியிழந்துபொருளிழந்து துன்பமுற்று வறுமையினால்கலங்குவார் சுகமில்லாமல் வையகத்தில்வெகுதுயர மனுபவிப்பார் மருவிலாபந்துமித்ரர் பகையாவார்கள் மரணகண்டமானபிணியால் துடிப்பார் குருசுக்ரன்மால்மதியன் பார்வையானால் குற்றமில்லைநற்பலனாய் விளங்கும் பாரே. 11
உரை :- சூரியதிசையில் கேதுபுத்திவந்தால் மனச்சஞ்சலமும் திகிலுமடைந்து சீவிக்கச் சக்தியில்லாமல் கைப்பொருளிழந்து, துன்பமும் கலகமும் கஷ்டநஷ்டமும் கவலையுமடைந்து, தனது வாசஸ்தானத்தை விடுத்து பரதேசியா யலைந்து, சகசவுக்கியமில்லாமல் பந்துமித்திரர்களெல்லாம் பகையாகும்படி, நிலையிலிருந்து கலங்குவார்கள்.
சுக்கிரபுத்தி பலன்
சூரியனார்திசையில் சுக்கிரபுத்திவந்தால் குலையதிசாரநோய் சுரரோகத்தால்
Page 202
நவக்கிரக திசாபுத்தி நிர்ணயம்
பாரிலுள்ளோர்தானிகழ்ந்து பரிகாசித்தும் பகையாகிநிந்திக்கக் கலங்குவார்கள் சீரிலகும்குருபுதனும் சந்திரன்காணில் சிறிதுதுன்பம்விலகியே சீவித்தன்பாய் காரியத்திற்கண்ணுண்டாய் கஷ்டப்பட்டு காசுபணம் சேர்த்துலகில் சீவிப்பாரே. 12
உரை:--சூரியதிசையில் சுக்கிரபுத்திவந்தால் சூலைரோக மும், கைகால்பிடிப்பு, காய்ச்சல், குளிர், சுரரோக முதலான பல வித வியாதிகளும் சூழ்ந்து, துயரப்படுத்துவதுடன் மனோரோக மாகிய பந்து மித்ரர்கள் பழித்துப் பரிகாசித்து இம்சிக்கும்படி யான மனவிசாரமா யிருப்பார்கள். ஆனால், குரு புதன் வளர் பிறைச்சந்திரன் பார்வையானால் கொஞ்சங்கொஞ்சமாய்த்துன்ப மெல்லாம் விலகி ரோஷத்தினால் காரியத்தின்மேல் பார்வையாய் வீராவேசத்துடன் கஷ்டப்பட்டுக் கைத்தொழிலாகிலும் புரிந்து திரவிய சேகரஞ்செய்து சீவித்திருக்கும்படியாய் நேரிடும்.
சந்திரமகாதிரை பலன்
சந்திரனார்திசையில்குக போகபாக்யம் சகலவிதநன்மைகளும் மிகவுண்டாமி பந்துமித்ரர்சேர்க்கையினால் அநேகநன்மை பாக்யமும்பெற்றினிதாய் மனமகிழ்ந்து சுந்தரஞ்சேர்மனைவிமைந்த ருடனே யன்பாய் சூழ்புவியிலேயினிதாய் வாழ்ந்திருந்து சந்ததமும்பொருள்சேர்த்து தனவானாக சவுக்கியமாய்ப்பூதலத்தில் சீவிப்பாரே. 13
உரை:--சந்திரன் திசைவந்தால் அவர் நல்ல ஸ்தானத்தி லிருந்து குரு புதன் பார்வை பெற்றிருந்தால், தனவானாக வியா பாரம் உத்தியோகம் முதலானவைகளால் பெருமையும் கீர்த்தி யும் வாய்ந்து திரவியசேகரஞ்செய்து சகலவித நன்மைகளும், சுகபோக பாக்கியமும் பெற்று, உத்தமபந்து மித்திரருடன், சுக சீவியாய் மனைவி மைந்தர்களுடனே வாழ்ந்திருப்பார்கள்.
சந்திரதிசையில் சந்திரபுத்தி பலன்
மதிதிசையின் சுயபுத்தி வந்திட்டாலே மாநிலத்தில் பெருமையுடன் பந்துமித்திரர் அதிகநன்மை செய்திடுவா ரெந்தநாளும் ஆபரணாதிகளுடனே விவாகங்கூடும்
Page 203
நிதிமிகுந்து வர்த்தகத் யோகத்தாலும் நீணிலத்தில் பலவிதமாய் பொருள்சேர்த்தன்பாய் பதியில் வெகுதனவந்த னென்றெல்லோரும் பக்ஷமுடன் புகழ்ந்திடவே சீவிப்பாரே. 14
உரை:— சந்திரன் திசையில் சுயபுத்தி வந்தால் மனமகிழ்வாய் தனக்கு மனோற்சாக அதிகரித்து பெருமையும், கீர்த்தியும் வாய்த்து பந்துமித்திரர்களின் சகாயத்தினால் பலவித நன்மை யடைந்து உத்தியோக விர்த்தியினாலும் வியாபார லாபத்தினாலும் பொருள் சேகரஞ் செய்து தனதான்ய சம்பத்துடனே சகலரும் பிரபுவென புகழ்ந்துரைக்கும்படியாய் சீவிப்பார்கள்.
செவ்வாய்புத்தி பலன்
சந்திரனார் திசையில் செவ்வாய் புத்திவந்தால் சகலவித நோயாலும் பகைவராலும் சிந்தைமெலிந்துருகியே திகைத்து நிற்பார் சீதசுரமும் நஷ்ணவெட்டை மேகரோகம் வந்துதுயரற்கலங்கி வாடுவார்கள் வறுமைநோயற்கலங்கி துடிதுடிப்பார் அந்தணனும் புதன்பார்வை யாயிருந்தால் அன்பாய் வர்த்தகஞ்செய்து சீவிப்பாரே. 15
உரை:— சந்திரன் திசையில் செவ்வாய் புத்திவந்தால் பலவிதமான வியாதிகளாலும் பகைவர்களின் கொடுமையாலும் மனங்கலங்கி திகைத்துத் திக்பிரமையடைந்து ஜுர வியாதிகளாலும், வெட்டைச்சூடு முதலிய வியாதிகளாலும் கஷ்டப்பட்டு வறுமை நோயால் துடித்துப் பரதவிப்பார்கள். ஆனால், குரு, புதன் பார்வையானால் வர்த்தகஞ் செய்தாகிலும் கைத்தொழிலாகிலும் புரிந்து பொருள் சேகரஞ்செய்து ஜீவித்துக்கொண்டிருப்பார்கள்.
இராகுபுத்தி பலன்
அம்புவியின் திசையில் ராகு புத்திவந்தால் அநேகதுயராகுமப்பா சத்துருக்கள் வம்புசெய்வார் பொருள்சேர்க்க வகையில்லாமல் வறுமையினாலே துடித்து வியாதியாலும் வெம்பியே கலங்குவார் மரணகண்டம் வேதனையாகுமந்து பரதவிக்கச்செய்யும் நம்புவாய் குருசுக்கிரன் புதன்பார்த்தாலே நலமாய் வர்த்தகஞ்செய்து ஜீவிப்பாரே. 16
Page 204
நவக்கிரக திசாபுத்தி நிர்ணயம்
உரை:--சந்திரன் திசையில் இராகுபுத்தி வந்தால் அநேக விதமான துன்பத்தாலும், சத்துருக்களின் கலகத்தினாலும் மனந் திகைத்து திரவியசேகரஞ் செய்வதற்குச் சக்தியில்லாமல் வறுமை நோயாற் கலங்கி, ஆகாரபக்ஷணமின்றி சரீர க்ஷீண மதிகரித்து பல விதமான வியாதிகளால் மரணகண்டத்திற் கிசைந்த வேதனையால் கலங்கித் துடிப்பார்கள். ஆனால், சுக்ரன், புதன், குரு பார்வையானால் வியாபாரஞ் செய்தாகிலும், உத்தி யோகஞ் செய்தாகிலும் திரவிய சேகரஞ்செய்து சீவிப்பார்கள்.
குருபுத்தி பலன்
இந்துதிசையிவ்வியாழன் புத்திவந்தால் இராஜாக்கள்பிரபுக்கள் சகாயத்தாலே சந்ததமும்வியாபார உத்தியோகத்தால் சகலவிதமாய்ப்பொருளை சேகரித்து பந்துமித்திரர்சேர்க்கையால் மகிழ்ந்துபுத்ர பாக்கியமும்பெற்றினிதாய் வாழ்ந்திருந்து மைந்தர்களும்மனைவிசுற்றத் தார்களோடு மாநிலத்திலே சிறந்து ஜீவிப்பாரே. 17
உரை:--சந்திரன் திசையில் குருபுத்தி வந்தால் ராஜாக்க ளாலும் பிரபுக்களின் சகாயத்தாலும் உத்தியோகஞ் செய்தும், வியாபாரஞ் செய்தும் திரவிய சேகரஞ்செய்து பலவிதமாய்ப் பொருள் சேகரஞ்செய்து பந்துமித்திரர்களுடன் சுகசீவியாய் வாழ்ந்திருந்து மனைவி மைந்தர்களுடன் சீவித்திருப்பற்காகும்.
சனிபுத்தி பலன்
இராக்கதிரானசனி திசையிலேதான் இரவிமகன்சனிபுத்தி வந்திட்டாலே பரவுகின்றவியாதியெல்லாம் வந்துசூழ்ந்து பலவிதமாய்த்துன்மரண கண்டந்தோன்ற நிராயுதனாய்யாதொன்றும் கவனியாமல் நீணிலத்தோர்பழித்திடவே கலங்குவார்கள் சுரர்குருவும்புதன்சுக்கிரன் பார்வையானால் சுகானந்தமாயுலகில் ஜீவிப்பாரே. 18
உரை:--சந்திரன் திசையில் சனிபுத்தி வந்தால் பித்தசீதள வியாதியாலும், மேகரோகத்தினாலும், மரண கண்டத்திற்குச் சரி யாய் கஷ்டநஷ்ட மனுபவித்து ஆதரவில்லாத பரதேசியைப் போல நிராகரவாய் கலங்கித் துடிப்பார்கள். ஆனால், குரு, புதன்,
Page 205
சுக்கிரன் பார்வையானால் வியாபாரத்தினாலும், உத்தியோகத்தினாலும் திரவிய சேகரஞ்செய்து மனைவி மைந்தர்களுடனே சுகசீவியாய் வாழ்ந்திருப்பதற்காகும்.
புதன்புத்தி பலன்
திங்கள்திசையிற்புதனார் புத்திவந்தால் திருமருவும்தனதான்ய சம்பத்துண்டாம் மங்களஞ்சேர்மன்னவர்கள் பிரபுக்கள்நேசம் மாக்ஷிமையாய்க்கிடைத்து பொருள்பொன்பூமி இங்கிதமாய்க்கிடைத்திடவே தனவானென்றும் இப்புவியோர்மனமகிழ புகழ்ந்துரைக்கும் சிங்காரமாகவே மனைவிமைந்தர் சுற்றத்தாருடனினிதாய் ஜீவிப்பாரே. 19
உரை:—சந்திரன் திசையில் புதன்புத்தி வந்தால் இலக்ஷ்மி கடாக்ஷம் பெற்று, தனதான்ய சம்பத்துடன் ராஜாக்கள், ஜமீன்தாரர்கள், பிரபுக்கள் நேசம் வகித்து உத்தியோகத்தினாலும், வியாபாரத்தினாலும் திரவிய சேகரஞ்செய்து பொன், பொருள், காணி, பூமி இலாபத்துடனே அழகான ரூபலாவண்யமும்தற்குண நற்செய்கையுடனிருக்கும் மனைவி மைந்தர்களுடன் சுகசீவியாய் தனது இனஜன பந்து மித்திரர்களெல்லாம் புகழ்ந்துரைக்கும்படியாய் வாழ்ந்திருப்பதற்காகும்.
கேதுபுத்தியின் பலன்
அலவன்திசையிற்கேது புத்திவந்தால் அல்லல்துயராற்கலங்கி யெருமைசூழ்ந்து பலவியாதியாற்றிகைத்து மார்புநோயால் பரதவிப்பார்மனத்துயர மதிகரித்து கலகமுண்டுகடன்கொடுத்தோர் வம்புசெய்வார் கைத்தொழில்வர்த்தகமில்லா திரிந்தலைந்து பலநாளும் துன்பமுற்று சிலநாட்சென்றால் படிப்படியாய்கஷ்டமெல்லாம் விலகும்பாரே. 20
உரை:—சந்திர திசையில் கேது புத்தி வந்தால் ஆரம்பத்திலிருந்தே ஜீவிக்குந் தொழிலுமின்றி, கையிற் காசில்லாமல் கடன்காரர் துன்பத்தால் கலங்கித் துடித்து, வறுமை நோயாற்றிகைத்து, மார்புநோய் முதலான பலவித பித்த சம்பந்தமான வியாதிகளாலும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்து, கடைசியில் கொஞ்சங் கொஞ்சமாக விலகி சரீர சவுக்கியமாய் வியாபாரஞ் செய்துக்கொண்டு ஜீவித்திருப்பதற்காகும்.
Page 206
நவக்கிரக திசாபுத்தி நிர்ணயம் - சுக்கிரபுத்தியின் பலன்
சந்திரனார்தன் திசையில் சுக்கிரபுத்தி சார்ந்தாவே தனதான்ய சம்பத்துண்டு சந்திரஞ்சேர்மங்கையர்கள் நேசமுண்டு சுகபாக்தனதான்ய சம்பத்துண்டு பந்துமித்திரர் சேர்க்கையுண்டு வர்த்தகத்தால் பலவிதமாய்ப்பொருள் சேர்த்து பிரபுவைப்போல் சிந்தைமகிழ்ந்தேமனைவி மைந்தரோடு சிறப்பாக வாழ்ந்திருப்பார் கவனிப்பீரே. 21
உரை:-- சந்திர திசையின் சுக்கிரபுத்தியில் ஜாதகர்க்கு மனோற்சாகமும், தைரியமும் பொருந்தி உத்தியோக விர்த்தியும், வியாபார லாபமும் பெற்று தனதான்ய சம்பத்துடனே அழகான பெண்கள் சேர்க்கையும், பந்துமித்திரர் பெருக்கமும், சுற்றத்தார்களால் புகழ்ந்துரைக்கும்படியான கீர்த்தியுடனும் மனைவி மைந்தர்களுடன் சுகஜீவியாய் வாழ்ந்திருப்பார்கள்.
சூரியபுத்தி பலன்
திங்கள் திசையிற்சூரியன் புத்திவந்தால் திகைத்து மனஞ்சோர்ந்திடவே வறுமைநோயால் எங்கெங்குந்திரிந்தலைந்து சத்துருக்கள் எந்நாளும்பகைவிளைத்துக் கலகஞ்செய்வார் அங்கமதில்பீண்சூழ்ந்து வருந்தச்செய்யும் அக்கினியினாலபய மதிகரிக்கும் பங்கமிலாகுருசுக்கிரன் புதன்பார்த்தாலே பாக்கியவந்தனாயுலகில் ஜீவிப்பாரே. 22
உரை:-- சந்திரன் திசையில் சூரியன் புக்திவந்தால் உத்தியோக மில்லாமலும் வியாபாரமில்லாமலும் கைப்பொருளில்லாமலும் கலங்கி துடித்து வறுமைநோயினால் திகைத்து, சத்துருக்கள் பகை விளைத்துக் கலகஞ் செய்வார்கள். சரீர வியாதியால் மெலிந்து உருகுவார்கள். அக்கினிபயம் சூழ்ந்து கஷ்டப்படுத்தும். ஆனால் குரு, சுக்ரன், புதன் பார்வையானால் தனலாபத்துடனே மனைவி மைந்தர் பந்துமித்திரர்களுடன் ஜீவித்திருப்பார்கள்.
Page 207
அங்காரக மகாதிசை பலன்
அங்காரகன்திசையில் ஜாதகர்க்கு அக்கினியாற்பீடைவரும் உஷ்ணரோகம் தங்கியேக்ஷயரோகம் பித்தகாசம் தலைநோயும்சொரிசிரங்குண் டாகுமின்னும் எங்கெங்குமுண்டானோர் பகைவராகி எந்நாளுந்துன்பமுந் துயருண்டாகும் பங்கமில்லைசுபஸ்தானந் தனிலிருந்தால் பாக்கியம்பெற்றினியுடனே சீவிப்பாரே. 28
உரை:—செவ்வாய் திசையில் ஜாதகர்களுக்கு அக்கினிபயமும் சரீர உஷ்ணமும் க்ஷயரோகமும் பித்தகாசரோகமும் தலைநோய், மண்டைக்காய்ச்சல், சொரி, சிரங்கும், பலபேரால் பகையும், சத்துரு விரோதமு முண்டாகும். சதா காலமும், மன விசாரம் திகிலுமா யிருக்கும். ஆனால் செவ்வாய் பகவான் கேந்திர ஸ்தானம், நட்பு ஆட்சி உச்சமாயிருந்தால் மனதைரியமும் பாக்கியசம்பத்து முண்டாயிருக்கும்.
அங்காரக திசையில் அங்காரகபுத்தி பலன்
நிலமகனார்திசையில்செவ் புத்திவந்தால் நிருபரால்பகைவரால் மித்ரராலும் கலகமுண்டுகைப்பொருள்கள் சேதமுண்டு கனலாற்பீடைநேர்ந்து துயருண்டாகும் நலமானசுபக்ஷேத்ர கேந்திரமுற்று நாடியேசுபக்கிரக பார்வையானால் பலவிதமாய்ப்பொருள்சேர்த்து மனைவிமைந்தர் பந்துக்கூட்டத்துடனே சீவிப்பாரே. 24
உரை:—அங்காரகதிசையில் செவ்வாய்புத்தி வந்தால் மன்னர்களாலும், பிரபுக்களாலும், சினேகிதர்களாலும் கலகமுண்டாகி பலவித கஷ்டநஷ்ட மடைந்து, கைப்பொருள் சேதமாகியும், அக்கினியால் அபாயமும் நேரிட்டுப் பலவித துன்புறச் செய்யும். ஆனால், செவ்வாய் பகவான் கேந்திர ஸ்தானங்களிலிருந்தும் நட்பு, ஆட்சி, உச்சஸ்தானங்களி லெங்கேனுமிருந்து, குரு, சுக்கிரன், புதன், வளர்பிறைச் சந்திரனால் பார்வை பெற்றால் மன தைரிய வைராக்கியத்துடனும், உத்யோக விர்த்தியாலும், வியாபார லாபத்தினாலும், திரவிய சேகரஞ்செய்து மனை விமைந்தர் பந்துமித்திரர்களுடனே சுஜீவியாய் வாழ்ந்திருப்பார்கள்.
Page 208
நவக்கிரக திசாபுத்தி நிர்ணயம் - இராகுபுத்தி பலன்
சேய்திசையில் இராகுபுத்தி வந்திட்டாலே சோரர்களால் பகைவரால் கலகமுண்டு நோய்சரீரத்திலுற்று திருடராலே நொந்துழல்வார் மாந்திரீகர் கொடுமையாலும் வாய்மதமாய்பேசும்வம்பர் தன்னால் துன்பம் வந்திடுமேஜாதகர்கட் கென்றுரைப்பாய் தூய்மையுள்ள குருசுக்கிரன்புதன் பார்வையானால் துன்பமில்லா நன்மையுடன் ஜீவிப்பாரே. 25
உரை:—செவ்வாய் திசையில் ராகுபுத்தி வந்தால் திருடர்களாலும், பகைவர்களாலும், மாந்திரிகராலும் செய்யும் குரூரகொடுமையினாலும், துன்பத்தாலும் கஷ்டநஷ்ட மனுபவிப்பார்களென்றுரைப்பாய். ஆனால், பரிசுத்தமான குரு, சுக்கிரன், புதன்பார்வையாயிருந்தால் யாதொரு துன்பமும், கஷ்ட நஷ்டமுமில்லாமல் திரவியசேகரஞ்செய்து சுகசவுக்கியமாய் சீவித்திருப்பார்கள்.
நவக்கிரக திசாபுத்தி நிர்ணயம் - குருபுத்தி பலன்
மங்கலனார்திசையில்குரு புத்திவந்தால் மதிசுத்தமாய்ஞாபக சக்தியுண்டு செங்கமலலக்ஷ்மிதுணை யுண்டுகல்வி செந்தமிழும்சங்கீத ஞானத்தோடு தங்கம்பொன்னுடன் பூமிலாபமுண்டு தையலார்கள் சேர்க்கையுண்டு பூலோகத்தில் மங்காதகீர்த்தியுடன் மனைவிமைந்தர் மகிழ்ந்துபசரித்திடவும் ஜீவிப்பாரே. 26
உரை:—செவ்வாய் திசையில் குருபுத்தி வந்தால் சுத்தமான நன்மதியமைந்து, ஞாபகசக்தியும், வித்யாவிலேகமும், மகாலக்ஷ்மி கிருபையும், தமிழாராய்ச்சியும், சங்கீத கியானமும் தனத்தானிய சம்பத்தும், பூமிலாபமும் பந்துஜனங்களின் சகாயமும் பொருந்திய பலவித சம்பத்துடனே மனைவி மைந்தர்கள் சுற்றத்தார்கள் சூழ சுகசீவியாய் வாழ்ந்திருப்பார்கள்.
நவக்கிரக திசாபுத்தி நிர்ணயம் - சனிபுத்தி பலன்
மங்கலனார்திசையில் சனிபுத்திவந்தால் மாற்றாரின்கொடுமையினால் துன்பமுண்டு அங்கத்தில்பலவியாதி சூழ்ந்துக்கொண்டு அலைச்சலுற்றயல்நாட்டி லோடச்செய்யும் 26
Page 209
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
பங்கமிலாகுருசுக்ரன் புதன்பார்த்தாலே பாக்கியசம்பத்துடனே காணிபூமி தங்கம்வெள்ளிஆபரணா திகளோடன்பாய் தாரணியிலேஜீவித் திருப்பதாமே. 27
உரை:—செவ்வாய் திசையில் சனிபுத்தி வந்தால் பகைவர்களின் கொடுமையினால் துன்பமும் துயரமுமதிகரித்து கைப்பொருளின்றிக் கலலையால் மெலிந்து, சரீர வியாதியாகி பலவித கஷ்டமும் கவலையுமதிகரித்து, சகிக்கமுடியாத கஷ்டத்தினால் துயருற்று, தாங்கமுடியாத வறுமைநோயை சகிக்கமுடியாமல் பற்பலவித தேசங்களில் அலையச்செய்து கஷ்டப்படச்செய்யும். ஆனால், குரு, சுக்கிரன், புதபகவான் முதலான சுபக்கிரகங்களின் பார்வை பெற்றால் வித்தியா விருத்தியுடன் உத்தியோக விருத்தியினாலும் வியாபார லாபத்தினாலும் பொருள் சேர்த்து பூமி லாபத்துடனும், பொன் வெள்ளி ஆபரணத்துடனும் பந்துமித்திரர் மனைவிமைந்தர்களுடனே சீவிப்பார்கள்.
புதன்புத்தி பலன்
பனிக்கதிரோனானகுசன் திசையிலேதான் பண்டிதனாம் புதன்புத்தி வந்திட்டாலே இனிதாகக்கல்விகற் றுத்யோகஞ்செய்தும் இசைந்தவர்த்தகஞ்செய்து திரவியந்தேடி மனைவிமைந்தர்பந்துமித்ரர் கூட்டத்தோடு மனதுடன்வாழ்ந்திருந்து சுற்றத்தார்மேல் சினமிலானந்தோ ரெல்லா ம்வாழ்த்த சீமானென்றேபுகழ ஜீவிப்பாரே. 28
உரை:—செவ்வாய் திசையில் புதன்புத்திவந்தால் வித்தையில் தேர்ச்சியடைந்து சோம்பலில்லாமல் சுறுசுறுப்புடன் உத்தியோகஞ்செய்தும் வியாபாரஞ்செய்தும் பலவித சமர்த்தனாய் திரவிய சேகரஞ்செய்து, பொன்பொருள் ஆஸ்தி பூஸ்திதியுடன் கீர்த்திப்பிரகாசமாய் மனைவி மைந்தர் பந்துமித்திரர்களுடன் குகிசியாய் வாழ்ந்திருந்து, இனஜனத்தின் விரோதமில்லாமல் சாந்தகுணவானென சகலரும் வாழ்த்தி சீமானென்று புகழ்ந்துரைக்கும்படியாய் சீவிப்பார்கள்.
கேதுபுத்தி பலன்
சேய்திசையிலே கேதுபுத்திவந்தால் செய்தொழிலும் வர்த்தகமுந்தண்டங்காட்டும் காய்ந்தசரகோளதேக வரட்சிபாகும் கைப்பொருளில்லாவறுமை யாலுடம்பில்
Page 210
நவக்கிரக திசாபுத்தி நிர்ணயம்
நோய்குமிருந்துபயங்கரமா யிருக்கும்தல்லோர் நோக்கினால் சுப்பலனே நடக்குமென்று ஆய்த்துணர்த்து திசாபுத்தி பலனாராய்ந்து அவனியில்சூழ்ஜாதகர்க்குப் பலன்சொல்வீரே. 29
உரை:-செவ்வாய் திசையில் கேதுபுத்தி வந்தால் மன வியாதியினால் கஷ்டமும் கவலையும் நேரிட்டு, சரீர வியாதியால் திகைத்துத் தான் செய்யும் தொழிலும் கெட்டு, வியாபாரமும் நஷ்டமடைந்து, திகைத்துத் திக்பிரமையடைந்து, திகிலடையச்செய்யும். ஆனால், சுபக்கிரகங்களாகிய குரு சுக்கிரன், பார்வை செலுத்தினால் வித்தையும். புத்தியும், ஞானமும் விருேவித்து, தனதான்ய சம்பத்துடனே மனைவி மைந்தர்களுடன் மனோல்லாசமாய் வாழ்ந்திருப்பார்கள்.
சுக்கிரபுத்தி பலன்
செவ்வாய்திசை தன்னிலே சுக்கிரபுத்தி சேரவேவந்திட்டால் கொடியதுன்பமும் ஒவ்வியேநேரிடும்மார்புநோய் கபமும்கோழை ஒண்ணார்சோரர்பயங் காலுந்துன்பம் செவ்விதியான்மாதரின்ப மணுகாமுண்டை சேர்ந்திடவேவறுமையினால் கலங்குவார்கள் எவ்விதமுங்குருபுதனும் பார்வையானால் எத்தகையதுன்பமில்லா சீவிப்பாரே. 30
உரை:-செவ்வாய் திசையில் சுக்ரபுத்தி வந்தால் பலவித மான கஷ்ட நஷ்டங்களும் மார்புநோய், கோழை, கபம், காசம் முதலான வியாதியால் கலங்குவார்கள். திருடர்களாலும் பகைவர்களாலும் மனபயங்கரம் நேரிட்டு துன்பப்படுவார்கள். உத்தம ஸ்திரீகளின் சேர்க்கை யில்லாமல் விதவா விருப்ப சுஅபோகப் பிரியனாய் வறுமை துயரால் கலங்கித் துடிதுடித்துக் கஷ்டப்படுவார்கள். ஆனால், குரு, புதன் பார்வைபெற்றால் எவ்விதமான கஷ்ட நஷ்டமும் வந்து சேராமல் அப்போதைக்கப்போது பலவித துன்பத்தையும் தடுத்து சீவித்திருக்கும்படியான நன்மை யடையச் செய்யும்.
சூரியபுத்தி பலன்
செந்தீவண்ணன்திசையில் சூரியபுத்தி சேர்ந்தகாலத்தில்சுக போகபாக்கியம் சந்ததமும்கிடைக்கும் வர்த்தகத்தில்லாபம் சகலபந்துமித்திரரால் நன்மையுண்டு
Page 211
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
மைந்தர்கள்பாக்கியமுண்டு பொருளும்சேரும் மாகிமையாயெந்நாளும் சிறந்துவாழ்வார் அந்தமுடன்பொன்பொருளும் காணிபூமி ஆஸ்திபுஸ்திகளுடன் சீவிப்பாரே. 81
உரை:—செவ்வாய் திசையில் சூரியபுத்தி வந்தால் மனோற்சாகமாய் வியாபாரஞ் செய்தும், திரவிய சேகரஞ்செய்து தனதான்ய சம்பத்துடனே பந்துமித்திரர், மனைவிமைந்தர்களுடனே சுகசீவியாய் வாழ்ந்திருந்து, சரீராரோக்யமுடனே காணி, பூமி, பொன், பொருள் புஸ்தியுடன் மகா தனவந்தர்களாய் சீவித்திருப்பதற்காகும்.
சந்திரபுத்தி பலன்
அங்காரகன்திசையில் சந்திரபுத்தி அமைந்தாலேஜாதகர்க்கு நன்மையுண்டு மங்காதகல்வியுடன் தைரியத்தால் மண்பொருளுஞ்சேகரிக்க ஆவலுற்று எங்கெங்குமலைந்து உத்யோகஞ்செய்தும் எத்தேசத்திலும வர்த்த கங்கள்செய்தும் தங்கம்வெள்ளிசேர்த்துதிரு மணம்புரிந்து தாரணியில்சீமானாய் விளங்குவாரே. 82
உரை:—செவ்வாய் திசையின் சந்திரபுத்தியில் ஜாதகர்க்கு மனோற்சாகமும் வித்யாபிவிருத்தியும், உத்தியோக மேன்மையும், வியாபார லாபமும் பெற்று, திரவியந்தேடி, பந்துமித்திரர் புகழ்ந்துரைக்கும்படியாய் காணி, பூமி, ஆஸ்தி புஸ்தியுடன், பொன் வெள்ளி, நவரத்தினாபரணங்களுடன் திருமண வைபவமுதலான நன்மையனைத்தும் பொருந்தி, பிரபுவைப்போல் மனைவி, மைந்தர், சுற்றத்தாருடன் சுகசீவியாய் வாழ்ந்திருப்பார்கள்.
இராகு மகாதசை பலன்
ராகுதிசைவந்தாலே ஜாதகர்க்கு ராவுபகலெப்போதும் கஷ்டப்பட்டுப் போகபாக்கியமிழந்து சுற்றத்தார்கள் பொல்லாத துர்க்குணனென் றிகழ்ந்துரைப்பார் சோகமுடனேதிகிலுற் றேகலங்கி சொர்ணபணிபூஷண மெல்லா மிழப்பார் நாகனையேகுருசுக்ரன் பார்த்திட்டாலே நல்லபலந்தருவார்கள் ஜாதகர்க்கே. 88
Page 212
நவக்கிரகதிசாபுத்தி நிர்ணயம்
உரை:—இராகு திசையில் ஜாதகர்க்கு இரவும் பகலும் மன வருத்தமான விசாரங்களும், சுகபோக பாக்கியமுமிழந்து, தனது பந்துமித்திரர் சுற்றத்தார்களெல்லாம் பொல்லாதவனென் றிகழ்ந்து பேசுவார்கள். கையிலுள்ள பொன் பொருளனைத்தும் செலவழித்து விட்டு வறுமையால் திகைத்துக் கலங்குவார்கள். ஆனால், குரு சுக்கிரன் புதன் பார்வையானால் யாதொரு கஷ்டங்களுமில்லாமல் சுக சீவியாயிருப்பார்கள்.
இராகு திசையில் இராகுபுத்தி பலன்
கரும்பாம்பின்திசையின் சுயபுத்திதன்னில் காசினியிலேயெவரும் பகையாவார்கள் அருமையாயிருந்தபந்து மித்ரரெல்லாம் அவரவர்கள்மனம்வெறுத்து தூஷிப்பார்கள் பொருளிழந்துசுகமிழந்து வறுமையாலே பொல்லாத கஷ்டநஷ்ட மனுபவிப்பார் குருசுக்கிரன்புதன் பார்வையாயிருந்தால் குற்றமில்லாசுகமாக ஜீவிப்பாரே. 34
உரை:—இராகு திசையின் சுயபுத்தியில் உலகிலிருக்கும் தனது பிரியமான சிநேகிதரெல்லாம் பகையாகி இகழ்ந்து தூஷிப்பார்கள். சதாகாலமும் மனவிசாரமும், விஷயங்கரமும், கஷ்ட நஷ்டமும், கையிற் பொருளில்லாத கலயரமும், வறுமையும், துன்பமும், துக்கமும் பொருந்தி கலயையால் மெலிவுறச் செய்யும். ஆனால், குரு சுக்கிரன், புதன் பார்வையாயிருந்தால் மேற்குறிப்பித்த கஷ்டநஷ்டமில்லாமல் தனதான்ய சம்பத்துடன் மனோல்லாசமாய், மனைவி மைந்தருடன் சீவித்திருப்பார்கள்.
இராகு திசையில் குருபுத்தி பலன்
இந்தரியின்திசையில்குரு புத்திவந்தால் இம்சையுடன் பலகஷ்ட மெல்லாம்சூழும் சிந்தைநொந்துருகியே நலிந்துவார்கள் சீருகின்றசர்ப்பபயத் தாலபாயம் பந்துமித்திரர்பகையாவார் கேந்திரகோணமுற்று புதசுக்கிரன்சந்திரன் பார்வையாயானால் எந்தவிததுன்பமும் அணுகிடாமல் எப்போதும்சுகமாக ஜீவிப்பாரே. 35
உரை:—இராகு திசையில் குருபுத்தி வந்தால் பலவித துன்பமும் துயரமும் நேரிட்டுப் பலவிதமான கஷ்டநஷ்ட மடையச்
Page 213
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
செய்து கலகத்தினால் துயரப்படச் செய்தும் வறுமையால் துன்புறச் செய்யும். பந்துமித்திரர் சுற்றத்தாரெல்லோரும் பகையாவார்கள். ஆனால் புதன், சுக்கிரன், சந்திரன் பார்வையானால் எவ்விதமான துன்பமும் துயரமும் நேரிடாமல் சுகசீவியா யிருக்கச் செய்யும்.
சனிபுத்தி பலன்
யோககாரகன்திசையில் மந்தன்புத்தி யோக்கியதையில்லா மலையச்செய்து சோகமுறச்சித்தபிரமை யாகவேதான் சேருமிடம்விடுத்தேகச் செய்யுமப்பா ஆகாதுபித்தரோகம் பிதுர்க்குபீடை அவனியிலேவெறியனைப்போ லலைவாரப்பா ஆகமம்புகழ்நல்லோர் பார்வையானால் ஐஸ்வரியவானாக விளங்குவாரே. 86
உரை:—இராகு திசையில் சனி புத்தி வந்தால் அந்த ஜாதகன் வெறியனைப்போல சித்தப்பிரமையாக எவர்களுக்கும் பகையாகி யோக்கியதா நடத்தையில்லாமல் தானிருக்குமிடத்திலும் பகையாகி பலதேச சஞ்சாரியா யலைந்து திரிந்து, அன்ன வஸ்திரத்திற்குப் பஞ்சமுற்றவனாயிருப்பான். ஆனால், குரு, சந்திரன், புதன், வளர்பிறைச்சந்திரன் பார்வையானால் மனோற்சாக மதிகரித்து வீரவேச ரோஷத்துடன் கைத்தொழில் முயற்சி உத்தியோகவிர்த்தி வியாபார லாபத்தினாலும் பலவிதமாகப் பொருள் சேகரஞ்செய்து மனைவி மைந்தர் சுற்றத்தாருடனே சுகசீவியாய் வாழ்ந்திருப்பதற்காகும்.
புதன் புத்தியின் பலன்
அரவுதிசைதன்னில் புதன்புத்திவந்தால் அன்புடனேகல்விகற் றுத்யோகஞ்செய்து திரவியந்தேடியேவியா பாரஞ்செய்தும் தீரமுடன்காணி பூமிலாபம்பெற்று சரசசல்லாபமங்கை சேர்க்கையாக சந்ததமும்பந்துமித்ரர் மகிழ்ந்துவாழ்த்த தரணியிலேமனைவி மைந்தர்சுற்றத்தோடும் தைரியமாய்ச்சீவித்து வாழ்வாரே. 87
உரை:—இராகு திசையில் புதன்புத்தி வந்தால் வித்தியாபிவிர்த்தியுடன் உத்யோகஞ்செய்தும் திரவியசேகரஞ்செய்து வர்த்தகத்தில் லாபம்பெற்று காணிபூமி லாபத்துடனே அழகானபெண்களின் சேர்க்கையினால் சதாகாலமும் ஆனந்தமாய் பந்து
Page 214
நவக்கிரக திசாபுத்தி நிர்ணயம்
ரெர் மனமகிழ்ந்து புகழ்ந்துரைக்குந் தன்மையான கீர்த்தி ராசமுடன் மனைவி மைந்தர் சுற்றத்தாருடனே மனோல்லாச வாழ்ந்திருப்பதற்காகும்.
கேதுபுத்தியின் பலன்
பாம்புதிசைதன்னிலே கேதுபுக்தி பலவிதமாய்க்கெடுதியுண்டு நெருப்பாற்பீடை சோம்பலொடுதுன்பமுண்டு மனையாள்கண்டம் சுரமரசராற்கலக மெய்தும்பின்னால் வேம்பாகசுற்றத்தா ரிகழ்வாரின்னும் வேதனைகள்தோற்றுமப்பா சுபர்பார்த்தாலே ஆம்புகழுநேகமுண்டு பொருள்நை கூடும் ஐஸ்வரியானென்றே ஜீவிப்பாரே. 38
உரை:-இராகு திசையில் கேது புத்தி வந்தால் பலவித கஷ்ட நஷ்டங்களும் கெடுதிகளும் அக்கினியாற் பீடையும் தியும் வந்து பலவித துன்பமும் சுரோகமும் அரசராற் கலக நேரிட்டு துயரப்படுவார்கள். ஆனால் குரு, சுக்கிரன், புதன், பிறைச் சந்திரன் பார்வையினால் பலவிதமாகிய சாமர்த்திய மும் வியாபார லாபத்துடனும் பொன், பொருள். பூமிலாப தியுடன் சகலரும் புகழும் பிரபுரிவதுறும் ஐஸ்வரியவானாய் தான்ய சம்பத்துடனே வாழ்ந்திருப்பதற்காகும்.
சுக்கிரன் புத்தி பலன்
ராகுதிசைதன்னிலே சுக்கிரன்புக்தி நலமுடனேவந்தாலே ஜாதகர்க்கு போகபாக்கியம்கிடைக்கும் பெண்கள்சேர்க்கை பொன்பொருளும் தனதான்யசம்பத்துண்டு யோகவாழ்வாகவே பூலோகத்தில் யோக்கியவானென்றே கீர்த்திபோங்கி வேகமாய் நாற்றிசையில் வர்த்தகங்கள் செய்து வேண்டுபொருள் சேகரித்து ஜீவிப்பாரே. 39
Page 215
சூரியபுத்தி பலன்
மதிப்பகைவன் திசையில்ரவி புத்திவந்தால் மன்னவர்கள் பிரபுக்கள் பயமுண்டாம் சதிசெய்யும் சத்துருவால் வியாதியாலும் சந்ததமுந் திகில்பட்டு கலங்குவார்கள் மதியில்லா விவசாயத் தாலே நஷ்டம் மாநிலத்திலே கலங்கி தாற்றிகைப்பார் அதிகதுன்பத்தாற்கலங்கி விதியைநொந்து அலைச்சலுற்று வறுமையால் துடிப்பதாமே. 40
உரை:-- இராகுதிசையில் சூரியபுத்தியில் அரசாங்கத்தாராலும் பிரபுக்களாலும் பயங்காரமும் கலகமு முண்டாகும். சத்துருக்களாலும் வஞ்சகராலும் பலவிதமான சண்டை சச்சரவும், துன்பமும், வம்பு வழக்கு நேரிடும். தனதான்ய நஷ்டமும் வியாபாரத்தினால் நஷ்டமும் கையில் பொருளில்லாத கவலையும் சரீரவியாதியால் துன்பமும் உண்டாகி சதாகாலமும் மனச்சஞ்சலமாயிருக்கும்.
சந்திரபுத்தியின் பலன்
எட்சணிகாரகன் திசையில் சந்திரபுத்தி எடுத்தகாரியமெல்லாம் கூடச்செய்யும் பட்சமுடன் சுபக்கிரக பார்வையானால் பந்துமித்திரர் சேர்க்கை யாலேநல்ல இஷ்டமுள்ள பெண்களெல்லாம் வந்துசேர்வார் இராஜாக்கள் பிரபுக்க ளாலே நன்மை கஷ்டமில்லா தெந்நாளும் வாழ்ந்திருந்து கவலையில்லா தெந்நாளும் ஜீவிப்பாரே. 41
உரை:-- இராகுதிசையின் சந்திரபுத்தியில் சுபக்கிரகங்களாகிய குரு, புதன் பார்வையானால் உத்தியோக மேன்மையும் வியாபாரலாபமும் பெற்று தனதான்ய சம்பத்துடன் கீர்த்தி பிரகாசமாய் விளங்கி மனைவி மைந்தர்களுடனே வாழ்ந்திருப்பதுடன் அரசராலும் பிரபுக்களாலும் கஷ்டநஷ்டமில்லாமல், தனவந்தனாக கவலையில்லாமல் சீவித்திருப்பதாகும்.
செவ்வாய் புத்தியின் பலன்
ராகுதிசையில்செவ்வாய் புத்திவந்தால் நலமில்லை பலதுன்பம் பொருளுஞ்சேதம் பாகுமொழிமின்னார்கள் பகையாவார்கள் பந்துமித்ரரெல்லோரும் சத்துருவாவார்
Page 216
நவக்கிரக திசாபுத்தி நிர்ணயம்
சோகமுடன் மனங்கலங்கி வறுமையாலே ரோசந்தலைவார்ஜாதகர்கள் துயரத்தாலே நாகனையும் குஜனுமே சுபர்பார்த்தாலே நல்லபலனாய் விளங்கி சீவிப்பாரே. 42
உரை:— இராகு திசையில் செவ்வாய்புத்தி வந்தால் பலவித மான கலகமும் கண்டமும் நேரிட்டு துயரப்படச் செய்யும். வறுமை நோயினால் அலைச்சலுற்று மனங்கலங்கி பந்துமித்திரர் லக்ஷத்தி னாலும், ஸ்திரீகளின் பகையாலும் துன்பமும், துயரமும் நேரிட்டு மனவிசாதமாயிருக்கும். ஆனால் குரு, சுக்கிரன், புதன் வளர்பிறைச் சந்திரனாகிய சுபக்கிரகங்கள் திசாதாதனாகிய இராகுபகவானை யும்,-புத்திநாதனாகிய செவ்வாய் பகவானையும் பார்த்தால் மனோற்சாகமும் தைரியமும், உத்யோகவிருத்தியும், வியாபார லாபமும் தனதான்ய சம்பத்தும் பெற்று பந்துமித்திரர் சினேக் கைபுடனும் மனைவி மைந்தர்களுடனே சுகசீவியாய் வாழ்ந் திருப்பதற்காகும்.
குரு மகாதிசையின் பலன்
உரர்குருவின் திசையிலேதான் ஜாதகர்க்கு சுந்தரகன்னியர்சேர்க்கை வித்யాలాபம் தரணிதனிலேபெருளும் ஆதிபத்யம் தருந்த ஆட்சிஉச்சமுடன் கோணமுற்றால் சரரநாயகிகனைவி மைந்தரோடு சார்ந்தபந்துமித்ரருடன் மனைவிமைந்தர் பாவியேவாழ்ந்திருப்பா ருலகமீது பிரபுவெனசகலருமே புகழுவாரே. 43
உரை:— தேவகுருவாகிய வியாழபகவான் திசையில் சாத கர்க்கு நடக்கும் பலன் விபரமெவ்விதமெனில்: அந்த திசா நாதனாகிய குருபகவான் தனுசு மீனத்தில் ஆட்சியா யிருந்தா லும் கோண திரிகோண ஸ்தானாதிபதியா யிருந்தாலும் வித்யாபி விருத்தி, வியாபார லாபம், உத்யோக மேன்மை யடைந்தும் வெகு பொருள் சேகரித்து, பந்துமித்திரர் பிரபுவென்று வாழ்த்தும்படியான கீர்த்திப்ரகασமாய் தனதான்ய சம்பத்துடன் மனைவி மைந்தர்களுடன் சுகசீவியாய் வாழ்ந்திருப்பார்கள்.
குருதிசையில் சுயபுத்தியின் பலன்
குருபகவான் ஆறெட்டு பன்னிரெண்டில் குருபகையாயிருந்தால் பலதுன்பங்கள் 27
Page 217
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
வருகுமப்பாதுன்பமுடன் துயரஞ்சேரும் வியாழனோகோணமுற்று உச்சத்திருந்தால் பொருளுடனே பூஷணங்கள் வாகனாதி பொருத்தியேதனதான்ய சம்பத்தோடும் பெருமையுடன்மனைவிமைந்த ருடனேவாழ்ந்து பேருலகில்கீர்த்தியாய் சீவிப்பாரே. 44
உரை:—குருபகவான் ஆறு, எட்டு, பனிரெண்டாமிடத்திலிருந்தாலும், அவ்விதமாகிய ஸ்தானாதிபத்தியம் பெற்றிருந்தாலும் பகை, நீசஸ்தானத்திலிருந்தாலும் பலவிதமான கஷ்டநஷ்டசஞ்சலமும் துயரமுமதிகரித்து வறுமை பிணியால் கலங்குவார்கள். ஆனால், குருபகவான் கோணதிரிகோணாதிபதியாய் ஆகிஉச்ச ஸ்தானத்திருந்தால் வியாபி விர்த்தியுடன் உத்தியோகமேன்மை, வியாபார லாபமும் பெற்று மனைவி மைந்தர்களுடன்சுகசீவியாய் வாழ்ந்திருப்பதாகும.
சனிபுத்தியின் பலன்
அந்தணனார்திசையில்சனி புத்திவந்தால் அநேகவிததுன்பங்கள் மிகஉண்டாகி மைந்தரொடுமனைவிசுற்றத் தார்க்குகஷ்டம் மானிலத்திலேவறுமை யாயிருப்பார் புத்திமதிசுக்கிரனுமே பார்வையானால் பொன்பொருளுஞ்சேர்த்தினிதாய் சீவிப்பார்கள் இந்தவிதமாய்கிரக நோக்கைப்பார்த்து இனிதுடனேபலனுரைப்பீர் ஜாதகர்க்கே. 45
உரை:—குருபகவான் திசையில் சனிபுத்தி வந்தால் பலவிதமான துன்பமும், மனைவி மைந்தர் பந்துமித்திரர்களுக்குக்கஷ்டமும்நேரிட்டு, கையிற் பொருளில்லாமல் கஷ்டப்படச்செய்து வறுமைபிணியால் பரிதவித்து கலங்கரசெய்யும். ஆனால் புதன், சுக்கிரன்,வளர்பிறைச் சந்திரன் பார்வையானால் யாதொரு கஷ்டநஷ்டமும், கவலையும் நேரிடாமல் சுகானந்தமாக திரவியசேகரஞ்செய்து மனைவி மைந்தர்களுடனே சுகசீவியாய் வாழ்ந்திருப்பார்கள்.
புதன்புத்தியின் பலன்
பொன்னவன்திசையில்புதன் புத்திவந்தால் பொருளுடனேபூமிலாபம் வந்துசேரும் இன்னவில்லாதெப்போதுஞ் சுகபோகங்கள் இன்பசுகம்தனதான்ய சம்பத்தோடும்
Page 218
நவக்கிரக திசாபுத்தி நிர்ணயம்
பொன்பொருளும்பூமி லாபத்தோடன்பாய் பொருந்தியேமனைமைந்த ருடன்வாழ்வார்கள் நன்னயமாய்பந்துமித்திரர் கூட்டத்தோடு நலமுடனேவாழ்ந்திருப்பா ரதிகுவீரே. 46
உரை:—குருபகவான் திசையில் புதன் புத்திவந்தால் திரவியலாபமும், சுகபோகபாக்கியமும் தனதான்ய சம்பத்தும், புத்தியும் மென்மேலுமுண்டாகும். மனைவி, மைந்தர், சுற்றத்தாருடனே சுகசீவியாயிருந்து உத்தியோக மேன்மையாலும், வியாபார லாபத்தாலும் விசேஷமாய் பொருள் சேர்த்து மனோன்மயமாகி யிருப்பதற்காகும்.
கேதுபுத்தியின் பலன்
குருதிசையில்கேதுபுத்தி வந்ததானால் குரூரகுணதுஷ்டர்களால் துன்பமுண்டு பெருமையெல்லாம் குறையும் மனைவிக்குக்கேடு பொல்லாதநோய்சூழ்ந்து மரணமாவாள் அருமையுடன் புதன் சுக்கிரன் பார்வையானால் அனேகவிதசமர்த்தினால் வியாபாரஞ்செய்து பொருள் சேர்த்துதனதான்ய சம்பத்துடனே பூஸ்திதியோடிவிதாக சீவிப்பாரே. 47
உரை:—குரு திசையில் கேதுபுத்தி வந்தால் குரூரகுணமுள்ள துஷ்டர்களால் கெடுதி உண்டாகும். மனைவிக்குத் துன்பமும் மரணமு முண்டாகும். ஆனால் சுக்கிரன், புதன் பார்வையானால் விசேஷ நன்மையுண்டாகும். திரவிய லாபமும் பூமி லாபமும் கிடைக்கும்.
சுக்கிரபுத்தியின் பலன்
குருதிசையில் சுக்கிரபுத்திவந்தால் குரூரகுணசத்துருக்கள் துன்பஞ்செய்வார் பொருளிழந்துவிவசாயம் நஷ்டமாகும் பொன்வெள்ளிதானிழந்து வியாதியாலே உருகியே சரீரபலந் தான்குறைந்து உறவினர்கள்பகையாகி மனைவிமைந்தர் பெருமையும் தானிழந்து பலதேசத்தில் போயலைவார் மால்காணில் சவுக்கியமாமே. 48
உரை:—குருதிசையில் சுக்கிரபுத்தி வந்தால், குரூரகுணமுள்ள சத்துருக்களால் துன்பமுண்டாகும், கைப்பொருள் நஷ்டம், விவசாய நஷ்டம், பொன், வெள்ளி, ஆபரணங்களை
Page 219
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
இழந்து சரீர வியாதியினால் மெலிந்து வல்லமையற்று, பந்துமித்ர ரனைவரும் பகையாகி மனைவி மைந்தர்களைப் பிரிந்து, பற்பல தேசத்திலும் திரிந்து, தனது பெருமையை இழந்து கவலையுறு தலிவார்கள். ஆனால் புதன் பார்வையானால் கண்டமின்றி சவுக்கியமா யிருப்பார்கள்.
சூரியபுத்தி பலன்
பிரகஸ்பதிதன்திசையில் சூரியபுத்தி பிரியமாய்வந்தாலே தெய்வபக்தி அன்புமைஆசார அனுஷ்டானத்தால் அனுதினமும்தற்குணமாய் விளங்குவார்கள் தரணியிலே அன்னவஸ்திர பஞ்சமில்லை தனதுற்றார்மித்திரரும் பகையாவார்கள் சுரரோகம்வந்தகன்று சவுக்கியமாகி சுகானந்தமாகவே ஜீவிப்பாரே. 49
உரை:—குருபகவான் திசையில் சூரியபுத்தி வந்தால் ஆசார அனுஷ்டானத்துடனே பகவத்பக்தியானந்தமாய் சிவபூஜா கைங்கரியத்திற் சிறந்தவராய் அன்ன வஸ்திராந்திரத்திற்குப் பஞ்சமில்லாமல் சுகசீவியாய் நற்குணம் நற்செய்கையுடனிருப்பார்கள். ஆனால் தனது பந்து மித்திரர்கள் விரோதிகளா யிருந்து கலகஞ்செய்வார்கள். சில சமயம் சரீர வுஷ்ணத்தினால் சுரரோகம் வந்து விலகி, சவுக்கியமா யிருப்பார்கள்.
சந்திரபுத்தியின் பலன்
பொன்னவனார்திசையில் சந்திர புத்திவந்தால் பொருள்சேரும்மன்னர்பிர புக்களாலும் நன்மையேவத்துணரும் வியாபாரலாபம் நாடியதோர்காரியமெல்லாம் சித்தியாகும் இன்னலில்லாசுகபோக பாக்யத்தோடும் இப்புவியில்வெகுமேன்மை யாகவாழ்ந்து தன்மையுடன்மனைவிமைந்தர் சுற்றத்தோடு தாரணியில்பெருமையாய் சீவிப்பாரே. 50
உரை:—குருபகவான் திசையில் சந்திர புத்திவந்தால் உத்தியோக விருத்தியாலும், வியாபார லாபத்தாலும் திரவிய சேகரஞ்செய்து, அரசர்கள் பிரபுக்களால் சன்மான மும் வாகனவரிசையும் பெற்று கீர்த்திப்ரகரசமாய் தான் நினைத்த காரியம் சித்தியாகி துன்பமில்லா சுகபோக சவுக்கியத்துடனே வெகு மேன்மையாக தனது மனைவி மைந்தர் சுற்றத்தாருடனே இனஜனத்தார் மெச்சத்தன்மையான கௌரவத்துடனும் பெருமையாய் சீவித்திருப்பார்கள்.
Page 220
நவக்கிரக திசாபுத்தி நிர்ணயம் - செவ்வாய்புத்தி பலன்
அந்தணனார் திசையில்செவ்வாய் புத்திவந்தால் அதிகஉஷ்ணத்தால்சுரநோய் இருமல்காசம் சிந்தைமெலிந்துருகும் நோயால்திகைத்து சிரநோயால்திகைத்தாலும் தைரியத்தால் எத்தொழிலும்செய்துவியாபாரம் உத்யோகத்தால் ஏற்கெனவேபொருள்சேர்த்து செலவழித்து சுந்தரஞ்சேர்தாசிகளின் போகபாக்யம் சூழ்ந்துமனைவிமைந்தருடன் சீவிப்பாரே. 51
உரை:—குருதிசையில் செவ்வாய்புத்தி வந்தால் சரீர உஷ்ணம் அதிகரித்து சு Davy வியாதி, இருமல், காச வியாதியினால் மன மெலிந்தும் பலவிதமான வியாதிகளால் களைத்திருந்தாலும் மன தைரியத்தை விடாமல் உத்தியோகஞ் செய்தும் வியாபாரஞ் செய்தும் பலவிதமாய்ப் பொருள்சேகரஞ்செய்து, அழகான நடன தாசிகட்கு புகழ்ந்துரைக்கும்படி செலவழித்து மனைவி மைந்தர்களுடன் சுகசீவியாய் வாழ்ந்திருப்பதற்காகும். ஆனால் செவ்வாய் ஆட்சி உச்சமாய் கேந்திர ஸ்தானங்களிலிருந்தால் காணி, பூமி, மனை, வீடு வாங்கிக் கொண்டு பிரபுவா யிருப்பதற்காகும்.
நவக்கிரக திசாபுத்தி நிர்ணயம் - இராகுபுத்தி பலன்
அந்தணன்திசையில்ராகு புத்திவந்தால் அக்கினியால்திருடரால் வியாதியாலும் தொந்திரவும்துன்பமும் மிகவுண்டாகி தொடர்வழக்கும் கடன்கொடுத்தோர் பகையூமுண்டாம் நிந்திப்பாரூலகத்தோர் துஷ்டனென்று நிதானித்துசுபக்கிரக பார்வையானால் பந்துமித்ரர்மனைவிமைந்த ருடனே யன்பாய் மருவுவில்சுகமாக சீவிப்பாரே. 52
உரை:—குருபகவான் திசையில் இராகுபுத்திவந்தால் அக்கினியாலும், திருடராலும், வியாதியாலும், பலவித கஷ்டமுந் துன்பமும் துயரமும் நேரிட்டு கடன் கொடுத்தோர் பகையுண்டாகி, குடர் வழக்கும் துன்பமுமுண்டாம். உலகத்தோர் துன்மார்க்கனென்று நிந்தித்துப் பழிக்குந் தன்மையாயிருக்கும். ஆனால் சுபக்கிரகங்களின் பார்வை பெற்றிருந்தால் எவ்விதமாயினும், உத்தியோக விர்த்தி, வியாபார லாபத்தினாலும் பொருள் சேகரஞ்செய்து தனது மனைவி மைந்தர் பந்துமித்திரர்களுடனே சுகசீவியாக வாழ்ந்திருப்பார்கள்.
Page 221
சனிமகாதீசை பலன்
சனிபகவான் பகைநீச மாயிருந்தால் சஞ்சலமும் வியாதியுடன் வறுமையாலும் முனிவான மனதமைந்து இரந்துண்பார்கள் மூர்க்கமுடனிருப்பார்கள் சுபர்கள்பார்த்து இனிதான கேந்த்ர ஸ்தானமுற்றால் இலக்ஷக்ஷ்மீகடாக்ஷம்பெற்று திரவியம் சேர்த்து மனைவி மைந்தர்பந்துமித்ர ருடன்பாக மானிலத்தில் சுகமாக சீவிப்பாரே. 53
உரை:--சனிபகவான் பகைநீச ஸ்தானத்திலிருந்தால் தன் திசைபுத்தியில் மனசஞ்சலமும், சரீர வியாதியும் வறுமையும் முன் கோபமும் சோம்பலுமுண்டாகி, பிக்ஷாந்தேகியென்று யாசித்து வயிறு வளர்த்தாலும் மூர்க்ககுணமாய்ச் சகலருக்கும் பகையாவார்கள். ஆனால், கேந்த்ர ஸ்தானத்திலிருந்து ஆட்சி உச்சம்பெற்று சுபக்கிரகங்கள் பார்வையானால் இலக்ஷ்மீகடாக்ஷம் பெற்று திரவிய சேகரம் செய்து மனைவி மைந்தர் பந்துமித்திரர்களுடனே சுகானந்தாய் வாழ்ந்திருப்பார்கள்.
புதன்புத்தி பலன்
மந்தனார்திசையில்புதன் புத்திவந்தால் மாணிமையாய்ப் பொன்பொருளும் சேகரித்து செந்தமிழ்வித்வானாவார் சங்கீதஞானம் செந்திருவின்கடாக்ஷத்தால் பெற்றன்பாக சுந்தரஞ்சேர்மனைவிமைந்தர் பந்துமித்ரர் சுற்றத்தார்மணமகிழ பிரபுவைப்போல் சிந்தைமகிழ்ந்தேபூமி லாபத்தோடே சிறப்புடனே தனவானாய் ஜீவிப்பாரே. 54
உரை:--சனி திசையில் புதன் புத்தி வந்தால் இலக்ஷ்மி கடாக்ஷம் பெற்று, செந்தமிழுணர்ந்த சங்கீத வித்வானாய்ப் பொன்பொருள் பூஸ்தி யனைத்தும் சேகரித்துத் தனது மனைவி மைந்தர், சுற்றத்தாருடனே வெகு மேன்மையாக பூமி லாபத்துடனும் வெகு மேன்மையாக சீவித்திருப்பதற்காகும்.
கேதுபுத்தி பலன்
காரிதிசையிற்கேது புத்திவந்தால் கஷ்ட நஷ்டத்தாற்கலங்கி மனந்திகைத்து சீரியபூதவேதாள சொற்பனங்கள் சிந்தையிரண்டிடவேதுர்க் கனவுகாண்பார்
Page 222
நவக்கிரக திசாபுக்தி நிர்ணயம்
பாசியால்பகையாவாள் ஆனாலுந்தான் புதன்சுக்ரன்குருசந்திரன் பார்வையானால் சீரிகுமலக்ஷ்மியின் கடாக்ஷம்பெற்று சிறப்புடனேமனைவிமைந் ருடன்வாழ்வாரே. 55
உரை:— சனி திசையில் கேது புத்தி வந்தால் மனசஞ்சலம் கஷ்ட நஷ்டம் கலகமனைத்துந் தோன்றி, பூதப்பிராசுகளின் தோற்றத்தைக் கனவிற்கண்டு மனமிரளல் உண்டாகும். தனது மனைவி பகையாவாள், வறுமையும் சஞ்சலமும் திகிலுமா யிருக்கும். ஆனால் புதன், சுக்ரன், குரு, வளர்பிறைச்சந்திரன் பார்வையானால், இலக்ஷமிகடாக்ஷம் பெற்று தனதான்ய சம்பத்துடனே வெகு மேன்மையாக மனைவி, மைந்தர், பந்துமித்ரருடன் சக சீவியாய் வாழ்ந்திருப்பதற்காகும்.
சுக்கிரபுத்தி பலன்
சனிதிசையில் சுக்ரபுத்திவந் திட்டாலே சுற்றத்தார்பந்துமித்ரர் புகழ்ந்துரைக்க பொன்பொருளும் தனதான்ய சம்பத்தோடு பொருந்தியசுகாவுவ்யம் பெறுகுமின்னும் மன்னர்கள் பிரபுக்களின் சகாயம்பெற்று மகாதானவானாய் மனைவி மைந்தரோடு அன்புடனேவாழ்ந்திருந்து பூமிலாபம் ஆஸ்திபூஸ்தியுடனே ஜீவித்திருப்பாரே. 56
உரை:— சனி திசையில் சுக்கிர புத்தி வந்தால் வித்யாபி விருந்தியுடன் உத்யோக மேன்மையும், வியாபார லாபத்துடன் பொன், பொருள், பூஸ்திதியும் சேகரித்து, பந்துமித்ரர் சுற்றத்தார் புகழ்ந்துரைக்க கீர்த்திப் பிரகாசமாய் பிரபுவைப்போல் சீவித்திருப்பார்கள். பிரபுக்களாலும், மன்னர்களாலும் புகழ்ந்துரைக்கும் கெளரவமும், மேன்மையும் பொருந்தி யிருப்பதற்காகும்.
சூரியபுத்தி பலன்
கதிர்மகனார்திசையிலே சூரியபுத்தி கஷ்டநஷ்டபொல்லாங்கு வறுமையோடு அதிகதுன்பம் வந்தெய்தும் பித்தசூடும் அனலாகசுரநோய்கள் வந்துசூழும் பிதுர்தேசந்திரம்போவான் மனைவிமைந்தர் பிரிந்தலையுமமனவருத்தத் தால் திகைப்பார் துதிரவும்குருசுக்ரன் புதன்பார்த்தாலே சுகமுடனேமனமகிழ்ந்து ஜீவிப்பாரே. 57
Page 223
பெரிய ஜோதிட சில்லரைக் கோவை
உரை:--சனிதசையில் சூரியபுக்தி வந்தால் பலவிதமான கஷ்ட நஷ்டமும், கவலையும் சூழ்ந்து துன்பஞ் செய்யும். சரீரத்தில் பித்த உஷ்ணம் அனல்வெட்டை அதிகரித்து ஜுரவியாதியும் வறுமையும் சூழ்ந்து மனவிசாரமா யிருப்பதுடன் தனது தந்தை தேசாந்திரமாய்ப் போவான். மனைவி மைந்தரைப் பிரிந்து துயரப்படச் செய்யும். ஆனால், குரு, சுக்கிரன், புதன் பார்வை பெற்றால் சுகானந்தமாய் பந்து, மித்திரர், மனைவிமைந்தர்களுடனே மனமகிழ தனதான்ய சம்பத்துடனும் பிரபுத்தன்மையாக வியாபார லாபத்துடனே வாழ்ந்திருப்பதற்காகும்.
சந்திரபுக்தி பலன்
காரிதிசையிற்சந்திரன் புத்திவந்தால் கலகமுடன்பந்துமித்திரர் பகையாவார்கள் வீரியமுங்குறைந்துபிணி யால்வருந்தி விதியையொந்துபலதுன்ப மனுபவிப்பார் நேரிலகும்சுபக்கிரக பார்வையானால் நினைத்தவையெல்லாமுடிந்து பொருள்சேர்த்தன்பாய் பாரியாள்புத்திரருடன் சுகமாய்வாழ்ந்து பிரபுவென்றுலகோர்புகழ ஜீவிப்பாரே. 58
உரை:--சனி திசையில் சந்திரன் புத்தி வந்தால் வறுமை சூழ்ந்து கடன்காரர் தொந்தரையும் கலகமும் பந்துமித்திரர் பகையும் சூழ்ந்து துன்பஞ் செய்யும். ஆனால், குரு, சுக்கிரன், புதன் பார்வையானால் தனதான்ய சம்பத்துடனே பிரபுவைப் போல சகலருங் கண்டு ஆனந்தமாய் புகழ்ந்துரைக்கும்படியான வியாபாரஞ் செய்து மேன்மையாய் மனைவி மைந்தர் சுற்றத்தாருடனே வாழ்ந்திருப்பதற்காகும்.
செவ்வாய்புக்தி பலன்
மந்தனிடதிசையில்செவ்வாய் புத்திவந்தால் மாதாபிதாமரணம் பிணியால்துன்பம் வந்தெய்திதேசத்தை விடுத்தெங்கும்போய் வறுமையினால்திகைத்தலையச் செய்யுமப்பா அந்தணனும்புகர்மதியால் பார்வையானால் அநேகவிதநன்மைகளும் வந்துசூழும் சந்ததமும்மனைவிமைந்தர் சுற்றத்தோடு சவுக்கியமாய்சுகமாக ஜீவிப்பாரே. 59
உரை:--சனிதிசையில் செவ்வாய் புத்திவந்தால் மாதாபிதா மரணமும், வறுமை பிணியால் துன்பமும், கஷ்ட நஷ்டமும், கலக
Page 224
நவக்கிரக திசாபுத்தி நிர்ணயம்
மும் வந்து சூழும் குரு, சுக்கிரன், புதன், சந்திரன் பார்வையானால் பலவித நன்மைகளும், உத்தியோக மேன்மையும், வியாபார லாபமும் பெற்று, தனதான்யசம்பத்துடன் கீர்த்திப்பிரகாசமாய் பிரபுவைப்போல மனைவி மைந்தர்களுடனே சுகஜீவியாய் வாழ்ந்திருப்பார்கள். செவ்வாய் பகவான் மகர ராசியிலே உச்சம் பெற்றும், தனுசு லக்கினமாயிருந்தால் மகாசமர்த்தனாய்த் திரவிய சேகரஞ் செய்து மனை காணி பூமி வாங்குவதும் விற்பனை செய்வதுமான வியாபாரத்தில் சிறந்தவனா யிருப்பதற்காகும்.
இராகுபுத்தியின் பலன்
கரியன்திசையிலிராகு புத்திவந்தால் கவலைநஷ்டந்துன்பமாகும் சத்ருபீடை சரீரத்தில்பலவிதரோ கங்கள்காட்டும் சந்ததமும்வறுமைபிணி துன்பஞ்செய்யும் சரியானகேந்த்ரமுற்று சுபர்பார்த்தாலே சகலவிதநன்மைகளும் பொருந்தியன்பாய் திரவியசம்பத்துடனே இல்லறத்தை திறமையாய்நடத்தி சுகமெய்துவாரே. 60
உரை:--சனிபகவான் திசையில் இராகு புத்தி வந்தால் கஷ்ட நஷ்டமும் கவலையும் சூழ்ந்து சத்துருக்களின் விரோதத்தினால் துக்கமும் துயரமும் நேரிட்டு பலவித துன்பஞ் செய்யும். சரீரத்தில் பலவிதமான பயங்கரவியாதிகளைக் காண்பித்து வறுமை பிணியால் கலங்கச் செய்யும். ஆனால், சனி கேந்திரமேறி குரு, சுக்கிரன், புதன், வளர்பிறைச்சந்திரன் பார்வையானால், அநேக வித சமர்த்தினால் வியாபாரஞ்செய்தும், பலவிதமாய் திரவிய சேகரஞ்செய்தும் மனைவி மைந்தர்களுடனே இல்லற தர்மத்தை நடத்திக் காண்போர் மன மகிழும்படியாய் ஜீவித்திருப்பார்கள்.
குருபுத்தியின் பலன்
கனமுடனே சனிதிசையில் குருபுத்திவந்தால் கல்வியுடன்வித்யாபி விர்த்தியாலும் மனமகிழும்உத்தியோக மேன்மையாலும் வர்த்தகத்தாலும்லாப திகம்பெற்று தனதான்யசம்பத்தோடும் மனைவிமைந்தர் சன்பத்துமித்திரருட னினிதாய்வாழ்ந்து கனதனமும்வாகனதி யுடனெப்போதும் காசினியில்பிரபுவென ஜீவிப்பாரே. 61
Page 225
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை - சனிபகவான் திசையில் குருபுத்தி பலன் (தொடர்ச்சி)
உரை :— சனிபகவான் திசையில் குருபுத்தி வந்தால் வித்தையும், புத்தியும், ஞாபகசக்தியும் விசேஷித்து, உத்தியோக மேன்மையாலும், வியாபார லாபத்தாலும் திரவியசேகரஞ்செய்து தனதான்ய சம்பத்துடன் மனைவி மைந்தருடனே சுகஜீவியாய் தனது பந்துமித்திரர் புகழுந் தன்மையாய் ஜீவித்திருப்பார்கள்.
புத மகாதிசை பலன்
நன்மையிரும் புதபகவான் திசைவந்தாலே நற்பலனைத்தான்கொடுப்பர் ஜாதகர்க்கு பொன்பொருளும் பசுக்கூட்டம் பொருந்திவாழ்வார் போஜனசவுக்கியமுண்டு ஸ்திரீகள்சேர்க்கை நன்மையிரும் உத்தியோக மேன்மையுண்டு நாற்றிசையும் வர்த்தகத்தாலே லாபமுண்டு அன்பாகமனைவிமைந்தர் சுற்றத்தோடு ஆஸ்திபுஸ்தியுடனே சீவிப்பாரே. 62
உரை :— சதாகாலமும் நன்மையை விளைவிக்கும் சுபக்கிரக மாகிய புதபகவான் திசையில் ஜாதகர்க்கு உத்தமமான சுபபலன்களும், தனதான்ய லாபமும் பசுக்கூட்ட வைபவங்களும் அன்ன வஸ்திர சுகசவுக்கியமும், கல்வியும், ஞானமும், உத்தியோக மேன்மையும், வியாபார லாபமும் பொருந்தி, திரவியவந்தனாகிய பிரபுவென்று உலகோர் மெச்சந் தன்மையாய் மனைவி மைந்தர்களுடனே பந்துமித்திரர்களுடன் ஆனந்தமாய் ஆஸ்தி புஸ்தியுடனே சுகமாய் ஜீவித்திருப்பார்கள்.
புதன்புத்தி பலன்
புதன்திசையின் சுயபுத்தி வந்தபோது பூஜைசெய்வதற்கிசைந்த பக்திமார்க்கம் விதவிதமாய் வர்த்தகங்கள் செய்வதற்கு விருப்பமும் பொன்பொருள் சேர்க்கும் ஆசையாலே இதமாக நல்லவார்த்தை தினமும்பேசி இனஜனத்தோர்க்கினியவனு யிருந்து கொண்டு பதமாகபொருள் சேர்த்து பிரபுவைப்போல் பாரியாள் புத்ரருடன் சீவிப்பாரே. 63
உரை :— புத மகாதிசையின் சுய புத்தியில் பகவத்பக்தி யானந்தமாக ஆசாரம் அனுஷ்டானத்துடன் விரதானுஷ்டானஞ்செய்து, தேவதா பூஜை செய்தும், பகவான் அருள் பெறும் பக்தி
Page 226
நவக்கிரக திசாபுத்தி நிர்ணயம்
மார்க்கமும் பலவிதமான வர்த்தகமுஞ்செய்து, திரவியசேகரஞ் செய்வதற்கிசைந்தகந்தீரமும், இனஜனத்துடனே இதமாகப் பேசும் நல்வினாக்களும் பொருந்தி, பந்துமித்திரர் புகழ்ந்துரைக் கும்படியான பிரபுத் தன்மையும் பொருந்தி, மனைவிமைந்தர்களுடனே சுகசீவியாய் வாழ்ந்திருக்கும் நற்குணமும் பொருந்தியிருக்கும்.
கேதுபுத்தி பலன்
புலவந்திசையிற்கேது புத்திவந்தால் பொல்லாததுன்பமெல்லா மனுபவிப்பார் கலகமுடன்பந்துமித்ரர் பகையாவார்கள் கனகாபரணங்களும் சேதமாகும் பலவிதத்தும்பந்துஜன உற்றாரெல்லாம் பகையாவார்வறுமைபிணி துன்பமாகும் தலமுடனேசுபக்கிரக பார்வையானால் நன்மையாய்மனைவிமைந்த ருடன்வாழ்வாரே. 64
உரை:—புததிசையில் கேதுபுத்திவந்தால் பொல்லாத துன்பமும் துயரமும், பந்துமித்திரர் கலகமும், வறுமைபிணியும் சூழ்ந்து கவலையடையச் செய்யும். பொன், வெள்ளி, ஆபரணாதிகளும் சேதமாகும். பகவானை சதாகாலமும் நினைந்துருகச் செய்யும். ஆனால் குரு, சுக்கிரன், வளர்பிறைச் சந்திரனும் பார்வையானாலும், புதன் நட்பாட்சி உச்சஸ்தானத்திலிருந்து பார்த்தாலும், சகலவித நன்மையும் பொருந்தி, திரவியசேகரஞ்செய்து மனைவி மைந்தர்களுடனே சுகஜீவியாய் வாழ்ந்திருப்பார்கள்.
சுக்கிரன்புத்தி பலன்
மாவின் திசையில் சுக்கிரன் புத்திவந்தால் மனோற்சாகமதிகரித்து பிரபுவைப்போல் சீலமுடன்வர்த்தகங்கள் செய்தெப்போதும் சிங்காரதாசிகளின் சேர்க்கையோடு பாலமுதந்தான்புசித்து மனங்களித்து பலவானாய்சகலரும் புகழ்ந்துபேச காலமெல்லாம்வறுமையின்றி மனைவிமைந்தரோடு காசினியிலேசுகமாய் ஜீவிப்பாரே. 65
உரை:—புதன் திசையில் சுக்கிரபுத்தி வந்தால் மனோற்சாகமதிகரித்து பிரபுவைப்போல மிகவும் ஒழுங்காய் வர்த்தகஞ்செய்தும் திரவிய சேகரஞ்செய்து அழகானந்த முகவசீகரமான தேஜஸமைந்த தாசிகளுடன் சுகபோகமாய் மனமகிழ்ந்து, பாலமிர்தம்புசித்து சரீர புஷ்டியாய் இனஜனத்தார் மனமகிழுந்தன்மையாய் மனைவி மைந்தர்களுடனே வாழ்ந்திருப்பதற்காகும்.
Page 227
குருபுத்தி பலன்
நலமுடனே புதன்திசையில் குருியபுத்தி நாடிவேலந்நாலே பூமீலாபம் க்கையிலாசகலருமே துணையாவார்கள் கல்வியுடன் உத்தியோக வர்த்தகத்தால் பலவிதமாய்ப்பொருள் சேர்த்து திரவியவானாய் பந்துக்கள்மனைவிமைந்தர் சுற்றத்தார்கள் நலமான உறவின் முறையா ருடன்ஜீவிக்கும் நன்மையெல்லாமனுபவித்து வாழ்வாரே. 66
உரை:—புதன் திசையில் குரிய புத்தி வந்தால் வித்தையும் புத்தியும் கல்வியும் ஞானமும் பெருகி, உத்யோக மேன்மையும் வியாபார லாபமும் பெற்று திரவியவந்தனாய் காணி பூமி லாபத்துடனே சகலருந் துணையாய் விளங்கும்படியான நன்மையனைத்தும் பெற்று பந்துமித்ரர் மனைவி மைந்தர்களுடனே சுகசீவியாய் வாழ்ந்திருப்பார்கள்.
சந்திரபுத்தி பலன்
புததிசையில் சந்திரன் புத்திவந்தால் சகோதரர்புகழ்பந்து மித்ரர்பெண்டீர்க்கீனம் வந்து துன்பங்கள் விளைந்துக் கொடியதுன்பம் வறுமையுடனேகஷ்ட மதிகரிக்கும் சுந்தரஞ்சேர்சுபக்கிர கங்கள்பார்த்தால் சுகமாகஉத்தியோகவர்த் தகங்கள்செய்து மைந்தர்களால்குகமடைந்து தனவானாகி மனிலத்தில் பெருமையுடன் ஜீவிப்பாரே. 67
உரை:—புததிசையில் சந்திரபுத்தி வந்தால் சகோதரர்கள் பந்துமித்திரர் பெண்சாதி முதலானோர்களுக்குத் துன்பமும் துயரமும் நேரிட்டு வறுமை பிணியால் பலவித கஷ்டமடையச் செய்யும் ஆனால் குரு, சுக்கிரன் பார்வையானால் உத்தியோக விர்த்தியாலும் வியாபார லாபத்தாலும் தனதான்ய சம்பத்துடனே புத்திரர்களால் திரவியசேகரஞ்செய்து கீர்த்திப்பிரகாசமாய்பந்து மித்திரர்களுடனே சுகவானாய் வாழ்ந்திருப்பதாகும். நற்குணம் அடக்கம், பொறுமை, சாந்தம், தயாளமும் சீவகாருண்ணியமும் பொருந்திய நற்குணமுள்ள சீமானாய் வாழ்ந்து ஞானவானாயிருப்பதற்காகும்.
அங்காரகபுத்தி பலன்
புததிசையில் செவ்வாயின் புத்திவந்தால் புசிப்பதற்கும் போசனமு மரிதானாற்போல்
Page 228
நவக்கிரக திசாபுத்தி நிர்ணயம்
விதவிதமாய்த்துன்பமுடன் கொடுமையெல்லாம் விளங்குமேபந்துமித்திரர் பகையாவார்கள் நிதியிழந்துவறுமையினால் கலங்குவார்கள் நிலமையுடன் சுபக்கிரக பார்வையானால் பதமுடனேசகலருமே துணையாவார்கள் பாக்யசம்பத்துமிகுந்து ஜீவிப்பாரே. 68
உரை :- புதன் திசையில் செவ்வாய் புத்தி வந்தால், கைப்பொருளிழந்து கலகத்திற்சிக்கி வறுமையால் திகைத்து அன்ன வஸ்திரத்திற்கே பஞ்சமாய் பந்துமித்திரர்களுக்குப் பகையாய்க் கலங்கித் துடிப்பார்கள். ஆனால் சுக்கிரன் சந்திரன் குரு பார்வையானால் சகலரும் துணையாயிருந்து திரவிய சம்பத்துடனே வாழ்ந்து சுகபோஜன சவுக்கியமா யிருப்பார்கள்.
இராகுபுத்தி பலன்
அருணன் திசையில் ராகுபுத்திவந்தால் அதிகதுன்பம்நேர்ந்து துயரனுபவிப்பார் மிருகத்தால்மன்னரால் பிரபுக்களாலும் மிருத்தபயமுண்டாகும் வறுமைசூழும் குருசுக்கிரன் சந்திரனும் பார்த்திட்டாலே குற்றமிலா நன்மையெல்லா மனுபவிப்பார் பெருமையுடன் பொருள் சேர்த்து பிரபுவைப்போல் பொன்பூமிலாபமுடன் ஜீவிப்பாரே. 69
உரை :- புதபகவான் திசையில் இராகுபுத்தி வந்தால் அதிக துன்பமும் துயரமும் நேரிட்டு, மிருகத்தாலும் அரசர்களாலும் பிரபுக்களாலும் பயங்கரமும் வறுமை பிணியும் சூழ்ந்து துன்புறச் செய்யும். ஆனால் குரு, சுக்கிரன், சந்திரன் பார்வையானால் சகல வித நன்மைகளும் பெற்று, சுகவானாய் திரவிய சேகரஞ் செய்து உத்தியோக மேன்மையாலும் வியாபார விருத்தியாலும் பொருள் சேர்த்து காணி பூமி லாபத்துடன் மனைவி மைந்தர்கள் சுற்றத்தாருடனும் தனதான்ய சம்பத்துடனே வாழ்ந்திருப்பதாகும்.
குருபுத்தி பலன்
மதிமகனார்திசையதனில் வியாழன்புத்தி மனவிசாரத்துடனே கலங்கச்செய்து நிதியிழந்துசகலருக்கும் பகையாய்தோன்றும் நிஷ்டூரமாகவே பேசுவார்கள்
Page 229
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
- விதிமதியின்தன் மைகட் கிசைந்தவாறு விளங்கியேகோண திரிகோணமுற்று அதிஉச்சம் ஆட்சிநட் பாயிருந்தால் ஐஸ்வரியத்துடனினிதாய் வாழ்வாரே. 70
உரை :- புதன்திசையில் குருபுத்தி வந்தால் மன விசாரமும் திகிலும் கஷ்டமும் கவலையும் நேரிட்டு, வறுமை, பிணியால் மன சஞ்சலமடைந்து திகிலுற்று சகலருக்கும் பகையாய் விளங்கி நிஷ்டூர வார்த்தையால் உலகத்திற்கிக்கி கஷ்டப்படுவார்கள்.
சனிபுத்தி பலன்
† கணக்கனிதிசையில்சனி புத்திவந்தால் கஷ்ட நஷ்டம்வறுமைபிணி வந்துகூழ்ந்து மனவிசாரத்தினால் துன்பமுற்று மானிலத்தில்யாசகரைப் போலிருப்பார் இணக்கமுடன்குருசுக்கிரன் சந்திரன்பார்வை இருந்தாலேமிகநன்மை யாயிருந்து தனதான்யசம்பத்து மிகவேபெற்று தரணியில்சுகமாக சீவிப்பாரே 71
உரை :- புதன் திசையில் சனிபுத்தி வந்தால், பலவிதமான கஷ்ட நஷ்டமும் வறுமை பிணியும் வந்து சூழ்ந்து மனவிசாரத்தினால் துன்பமும் துயரமுமடையச் செய்யும் ஆனால் குரு, சுக்கிரன் சந்திரன் பார்வையாவதிருந்தால் வித்யாபிவிருத்தியும், உத்தியோக மேன்மையும் பெற்று, வியாபார லாபத்துடனே பிரபுத்தன்மையாக சுகானந்தமாய் மனோல்லாசத்துடனே மனைவி மைந்தர்கள் பந்துமித்திரர்களுடனே சீவித்திருப்பார்கள்.
கேது மகாதிகை பலன்
கேதுமகாதிகையதனில் ஜாதகர்க்கு கெட்டபலன் நடக்குமென்று கவனிப்பாய்நீ தீதுற்றுசரீரத்தில் பித்தசோகை திகிலுடனேமனையாளும் மரணமாவாள் வாதுசெய்யும்பந்துக்க ளுக்குத்துன்பம் வந்தெய்தும்ஆகையினால் சுபர்பார்த்தாலே ஒதுபுகழ்ஞானக்கல்வி வித்தைகற்று ஓங்கும் புகழ்பிரபுவைப்போல் சீவிப்பாரே. 72
- விதி - இலக்கினம், மதி - இராசி. † கணக்கன் - புதன்.
Page 230
நவக்கிரக திசாபுத்தி நிர்ணயம்
உரை:--கேது மகாதிகையில் துர்ப்பலனாய்ப் பலவித கஷ்ட நஷ்டங்கள் சூழ்ந்து துயாப்படச்செய்து, சரீரத்தில் பித்தசோகை யும் மனையாளுக்கு திகில் பயங்கரமுண்டாகி மரணமாவாள். துர்க்குணமமைந்த பந்துக்களுக்குத் துன்பமும், துயரமும் நேரிட்டு கலங்கித் துடிப்பார்கள்: ஆகையால் குரு, சுக்கிரன், புதன் பார்வை பெற்றிருந்தால் கல்வியும், ஞானமும்பெற்று, வித்யாபிவிருத்தியுடன் உத்தியோக மேன்மையாலும், வியாபார லாபத்தாலும் பொருள் சேகரஞ்செய்து பிரபுவைப்போல ஜீவித் திருப்பார்கள்.
கேதுபுத்தி பலன்
கதிர்ப்பகையின் திசையின்சுய புத்திவந்தால் கலகமுடன் கலவரமும் திகிலுந்தோன்றி பதிவிட்டுமறுதேசமெல்லாஞ் சுற்றி பலவிததுன்பமுற்று பந்துக்கூட்டம் கதியிழந்துமனையாளும் மரணமாவாள் கனமுடனேகுருசுக்கிரன் புதன்பார்த்தாலே நிதிமிகுந்தபிரபுவைப்போல் விளங்கிநாளும் நீணிலத்தில்ஞானியாய் சீவிப்பானே. 73
உரை:--கேதுதிசையின் சுயபுத்தியில் கலகமும் கஷ்ட நஷ்ட கலவரமும் நேரிட்டு வறுமை துன்பத்தாற் கலங்கி, பந்துக் கூட்டங்களுக்கும் பலவித துன்பர்நேரிட்டு, மனையாள் மரணமும் பலவித துன்பமுமெல்லாம் நேரிடும். ஆனால் கேதுபகவான் கேந்திர ஸ்தானத்திலிருந்து குரு, சுக்கிரன், புதன் பார்வையானால் வித்யாபி விருத்தியுடன் திரவியசேகரஞ்செய்து பிரபுவைப்போல் ஞானியாய் ஜீவித்திருப்பதாகும்.
சுக்கிரபுத்தி பலன்
கதிருணியின்திசையிலே சுக்கிரபுத்திவந்தால் கஷ்டநஷ்டதுன்பமெல்லாம் வந்துசூழ்ந்து மதியற்றுகதியற்று துன்பமுற்று மனையாளும்மரணமாய்த் திகைத்தேநிற்பார் அதிஉச்சம் ஆளீபெற்று சுபர்பார்த்தாலே அன்புடனேமனைவிமைந்தர் சுற்றத்தோடு நிதிமிகுந்துதனதான்ய சம்பத்தோடும் நீணிலத்தில்பிரபுவைப்போல் சீவிப்பாரே. 74
உரை:--கேதுதிசையில் சுக்கிரபுத்தி வந்தால் மனதில் கோபமும் குரோதமும் அதிகரித்து பலவித துன்பமும் துயரமு முண்டாகி மனையாள் மரணமும் திகிலும் கலவரமும் நேரிடும்.
Page 231
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
ஆனால், சுக்கிரன் ஆட்சி ஸ்தானத்திலாகிலும் உச்சஸ்தானத்திலாகிலுமிருந்து சுபக்கிரகங்களின் பார்வைபெற்றால் பலவிதமாய்ப் பொருள் சேகரஞ் செய்து தனதான்ய சம்பத்துடனே பிரபுவைப்போல் கீர்த்திப் பிரகாசமாய் பந்துமித்திரர் மனைவி மைந்தர்களுடன் சுகசீவியாய் வாழ்ந்திருப்பார்கள்.
சூரியபுத்தியின் பலன்
ஞானிதிசையிற் சூரியன்புத்திவந்தால் ஞானமதிலேதுயர மனுபவித்து ஊனமுடன் சரீரத்தில் மேகரோகம் உஷ்ணமுடன் சுரோக மிருமலுண்டாம் கானகவாசியைப்போல சுகமில்லாமல் கலங்கியேதுடிதுடித்துக் கலங்குவார்கள் வானகுருசுக்கிரபுதன் பார்வையானால் வையகத்தில் பொருள்சேர்த்து சீவிப்பாரே. 75
உரை-கேதுபகவான் திசையில் சூரியபுத்தி வந்தால் பலவிதமான துன்பமும் துயரமும் நேரிட்டு, சரீர உஷ்ணத்தினால் வெட்டை அதிகரித்து மேகரோகங்களும் சுரவியாதியும் சூழ்ந்து ஜீவனசக்தியில்லாமல் வறுமை நோயினால் கலங்கித் துடிப்பார்கள். ஆனால் சூரியபகவான் ஆட்சி உச்சஸ்தானத்திலிருந்து குரு, சுக்கிரன், புதன் பார்வையேயாகின்றால் தனதான்ய சம்பத்துடனே சுகசீவியாய் வாழ்ந்திருப்பார்கள்.
சந்திரபுத்தி பலன்
இன்னலுடன் கேதுமகா திசையிலேதான் இந்துபுத்திவந்தாலே கொடியதுன்பம் பொன்பொருளும் மனையாளும் சேதமாகும் பொல்லாத விஷபீடை வந்துபோகும் பொன்னவனுடன்சுக்கிரபுதன் பார்வையானால் பொருள் சேர்த்து தனவானாய்ச் சீவித்தன்பாய் நன்மையுடன் உத்தியோக வியாபாரத்தால் நலமுடனே பிரபுவாய் வாழ்வாரே. 76
உரை-கேது மகாதிசையில் சந்திரபுத்தி வந்தால் பலவித துன்பமும் துயரமும் நேரிட்டு கைப்பொருள் சேதமும், பொன், வெள்ளி, ஆபரணாதிகளும் நஷ்டமாகி சகலருக்கும் பொல்லாத வனாயிருந்து, பாம்பு, தேள் விஷத்தினாலும் வியாதியாலும் பயங்கரமான துன்பமும் துயரமும் நேரிட்டு விஷ ஐந்துக்களின் துன்பத்தினால் கஷ்டமும் கவலையும் நேரிட்டு, கலங்கச்செய்து வறுமை
Page 232
நவக்கிரக திசாபுத்தி நிர்ணயம்
பிணியால் துன்புறச்செய்து, மனையாளை மரணமாகும்படி செய்யும். ஆனால், குரு, சுக்கிரன், புதன் பார்வையானால் வித்யாபி விர்த்தியுடன் உத்தியோக மேன்மையும், வியாபார லாபமும், பெற்று பிரபுவைப் போன்ற தனவந்தனாய் மனைவமைந்தர்களுடன் சீவித்திருப்பதற்காகும்.
செவ்வாய்புத்தி பலன்
கேதுதிசைதன்னிலே செவ்வாய்புத்தி கெடுதிமெத்தவினையுமப்பா துன்பத்தாலே தீதுசெய்யும்வஞ்சகரால் துன்பஞ்சூழும் திரவியமில்லாவறுமையால்திகைப்பார் ஓதுபுகழ்குருசுக்கிரன்மால் மதிபார்த்தாலே ஓங்குபுகழ்திரவிய சம்பத்துண்டாம் பூதலத்தில்கீர்த்தியுடன் புத்ரமித்ரோடு பிரபுவைப்போலன்பாக சீவிப்பாரே. 77
உரை-கேதுமகாதிசையில் செவ்வாய் புத்தி வந்தால் பல விதமான கெடுதியும் துன்பமும் துயரமுமுண்டாகி வஞ்சகராலும் துஷ்டராலும் பொருளிழந்து வறுமையாளராய்க் கலங்குவார்கள். ஆனால் குரு, சுக்கிரன், சந்திரன், புதன் பார்வையானால் சகல விதமான சாமர்த்தியமுடன் பலவிதமான தொழில்புரிந்து, சகலரும் சமர்த்தனென்று பேசும்படியான நற்குணம் பொருந்தி உத்தியோகத்தினாலும் வியாபாரத்தினாலும் திரவிய சேகரஞ் செய்து பிரபுவைப்போல் மனைவி மைந்தர் சுற்றத்தாருடனே சுக சீவியாய் வாழ்ந்திருப்பதற்காகும்.
இராகுபுத்தி பலன்
செம்பாம்புதிசையிலிராகு புத்திவந்தால் ஜெகமீதிலுள்ளவர்கள் பகையாவார்கள் அம்புவியின்மாந்தர்முன்னே வறுமைசூழ்ந்து அல்லல்துன்பத்தால்திகைப்பார் விஷத்தார்பீடை உம்பர்குருசுக்கிரன்மால் மதிபார்த்தாலே உறன்முறையார்மனைவி மைந்தருடன்ஜீவித்து செம்பொன்னும்வெள்ளி ஆபரணம்பூண்டு ஜெகமீதுபிரபுவாய் சீவிப்பாரே. 78
உரை-கேதுபகவான் திசையில் இராகுபுத்தி வந்தால் சகலருக்கும் பகையாயிருப்பதுடன் கைப்பொருளிழந்து நஷ்டத்துடன் கலங்கி வறுமையினால் திகைத்துக் கலவரத்துடனிருப்பார்கள். பாம்பு, தேள் முதலாகிய விஷஜந்துக்களின் சூத்திரத்தினாலும் கலங்கித் துடிப்பார்கள். ஆனால் குரு, சுக்கிரன்,
Page 233
கேதுதிசை - புதன் புக்தி (தொடர்ச்சி)
புதன், சந்திரன் பார்வையானால் பலவித சமர்த்தினால் திரவிய சேகரஞ் செய்து மனைவி மைந்தர், சுற்றத்தாருடனே சுகஜீவியாய் வாழ்ந்திருப்பதற்காகும்.
குருபுத்தி பலன்
அன்புடனேகேதுதிசை தன்னிலேதான் அந்தணனாம்புத்திவந்தால் மிகவும்மேன்மை பொன்பொருளும்புள்திதியும் ஆடுமாடும் பொருந்தியே தனவந்தராயிருந்து நன்மையுடன்மனைவிமைந்தர் சம்பத்தோடும் நலமுடனேபிரபுவைப்போல் மாநிலத்தில் இன்பசகானந்தமுடன் நடனமாதுர் இனியசுகபோகபாக்யத் துடன்வாழ்வாரே. 79
உரை:—கேதுதிசையில் குருபுத்திவந்தால் மிகவும் மேன்மையும் கீர்த்தியும் பொருந்தி தனதான்ய சம்பத்தும் ஆடுமாடு மந்தைக் கூட்டங்கள் விசேஷித்தும், வியாபாரத்தால் பொருள் சேர்த்தும் மனைவி மைந்தர் பந்துமித்திரர்களுடனே பிரபுத்தன்மையாக நடனமாதுர் சேர்க்கையுடன் சுகானந்தமாக ஜீவித்திருப்பதற்காகும். ஞானமும் கல்வியும் சிறந்து கௌரவமும் கீர்த்தியும் பொருந்தியிருப்பார்கள்.
சனிபுத்தி பலன்
கேதுமகாதிசைதனிலே சனியின்புத்தி கெம்பீரமாகவே வந்திட்டாலே ஓதுபலன்பலதுயர மெய்துமப்பா ஓங்காமல்வறுமையினால் திகைத்துநிற்பார் கோதிலாகுருசுக்கிர சசிமால்பார்வை கொடுப்பார்கள்தனதான்ய சம்பத்தெல்லாம் பூதலத்தில்சுகபோக வாழ்க்கைநன்மை பொருந்தியேசுகமாக ஜீவிப்பாரே. 80
உரை:—கேது மகாதிசையில் சனி பகவான் புத்தி வந்தால் பலவிதமான துன்பமும், துயரமும், வறுமையும், கஷ்டநஷ்டமுங் கவலையுந் தரித்திரமும் சூழ்ந்து பலவித சஞ்சலத்தினால் கஷ்டப்படுவார்கள். ஆனால் குரு, சுக்கிரன், சந்திரன் புதனாகிய இந் நான்கு கிரகங்களும், மேற்படி திசாநாதனையும் புத்திநாதனையும் பார்த்தால் மனோற்சாகமும், தைரியமும், உத்தியோகவிர்த்தியும், வியாபார லாபமும், தனதான்ய சம்பத்தும்பெருகி சுகபோக பாக்கியங்களும் பெற்று, சுகஜீவியாக வாழ்ந்திருப்பார்கள்.
Page 234
நவக்கிரக திசாபுத்தி நிர்ணயம் / புதன்புத்தி பலன்
செம்பாம்புதிசையிலே மாலின்புத்தி சேர்ந்துவந்தால்தனதான்ய சம்பத்துண்டு செம்பொன்னும் நவரத்தினபரணமெல்லாம் சேகரித்துதனவந்த ராயிருப்பார் வம்பணுகாதெந்நாளும் சுகானந்தமாக வாழ்ந்திருப்பார்மனைவிமைந்தர் பந்துசூழ அம்புவியில் கீர்த்திசேர் ஞானத்தோடு அனுதினமும்பெருமையாய் சீவிப்பாரே. 31
உரை :- கேதுமகாதிகையில் புதன்புத்திவந்தால், கல்வியும், வித்தையும், ஞானமும் அதிகரித்து, உத்தியோக மேன்மை யாலும், வியாபார லாபத்தாலும் திரவிய சேகரஞ்செய்து, நவரத்னமிழைத்த பொன்னாபரணங்களும் விசேஷமாய் சேகரித்து, மனைவி, மைந்தர், சுற்றத்தாருடனே வெகு மேன்மையாக வாழ்ந்திருப்பார்கள்.
சுக்கிர மகாதீசை பலன்
அன்புடனே சுக்கிரதிசை ஜாதகர்க்கு அணுகினால்உத்தியோக வியாபாரலாபம் இன்பமுடனெய்துமின்னம் மனைவிமைந்தர் இனஜனமெல்லாம்புகழ வாழ்ந்திருக்கும் நன்மையுடன் சுகவாழ்வும் நவரத்தினாதி நலமுடையவாகனபாக் கியமுண்டாகும் வன்மையுடன் ஆட்சி உச்சநட்புஸ்தானம் வந்தமர்ந்திருந்தாலே யோகந்தானே. 32
உரை :- சுக்கிரபகவான் தனலாப சுபபாக்ய ஸ்தானங்களில் நட்பு ஆட்சி உச்சமாயிருந்தால் வித்யாபிவிர்த்தி உத்தியோக மேன்மை வியாபார லாபமும் பொருந்திய திரவ்யவந்தனாய் பொன், பொருள், பூஸ்திதி உடையவனாய் மனைவி மைந்தர்களுடனே வாழ்ந்திருப்பார்கள் சரீராரோக்யமுடனும், தாசிவேசிகளின் சுகானந்தத்துடனும், வாகனாதி முதலான வைபவங்களுடனும் சுகசீவியாய் பிரபுத்தன்மையா யிருப்பார்கள்.
சுக்கிரபுத்தி பலன்
புகர்திசையில் சுEntityபுத்தி வந்திட்டாலே பொன்பொருளும் ஜாதகர்க்கு மிகவுண்டாகும் ஜெகத்திலுள்ளபிரபுக்கள் மன்னராலும் செம்பொன்னாபரணமுடன் பூமி லாபம்
Page 235
சுக்கிரதிசை சுயபுத்தி பலன் (தொடர்ச்சி)
அகமகிழவேபெற்று பந்துமித்ரர் அனைவருடன்மனைவிமைந்தர் சூழவாழ்ந்து மகிழ்ந்துலகில்வாகனாதிகளோடன்பாய் மாநிலத்திற்கீர்த்தியுடன் சீவிப்பாரே.
உரை :- சுக்கிரதிசையின் சுயபுத்தியில் ஜாதகர்க்குப் பலவிதமான நன்மைகளும், அரசர்கள் பிரபுக்கள் சகாயமும் பொன்பொருள் பூஸ்திதிகளும் கிடைப்பதுடன், வாகனாதிலாபமும் வியாபார லாபமும் விமரிசையாய்ப்பெற்று மிகவும் கீர்த்திப்பிரபையாய் மனைவி மைந்தர், பந்துமித்திரருடனே சுகசீவியாய் உல்லாசத்திருப்பதுடன் அழகானந்த முகவசீகர தாசிவேசிகளுடனே சகலபோக பாக்கியமனைத்தும் அனுபவித்து, ஆனந்தமாய் ஜீவித்திருப்பார்கள்.
சூரியபுத்தி பலன்
சுக்கிரபகவானுடைய திசையிலேதான் சூரியபுத்திவந்தால் சூரூரமாக அக்கினிபோல்சரீரவெப்ப மிகவுண்டாகி அனல்சுரமும்சீரத்தில் ஊஷ்ணமாகும் மிக்கபயம்வியாதியினு லுண்டாகுமப்பா மிகுதுயரமுண்டாகும் மதிபுகளும்வியாழன் லக்னந்திசாநாதன்புத்தி நாதனையும்பார்த்தால் வண்ணமாய்பொன்பொருளோடு சீவிப்பாரே.
உரை :- சுக்கிர பகவான் திசையிலே சூரிய பகவான் புத்தி வந்தால் ஜாதகர்க்கு சரீர வெப்பமும் அனல்சுரமும்முண்டாவதுடன் வஷ்ணவியாதியும், துன்பமும் துயரமு முண்டாவதுடன் பயமும் கஷ்டமும் வறுமையும் சூழ்ந்து துயரப்படச் செய்யும். ஆனால் இலக்கினத்தையும், மேற்படி திசாநாதனையும், புத்திநாதனையும் குரு, புதன், சந்திரனும் பார்த்தால் சரீராரோக்யமும் தைரியமும் அழகானந்த முகவசீகர தேஜசும் பொருந்தி தனந்தான்னிய சம்பத்துடனே கானந்தமாய் சீவித்திருப்பார்கள்.
சந்திரபுத்தி பலன்
அசுரகுருதிசையினிலே சந்திரபுத்தி அமைந்தாலேஜாதகர்க்கு சிரோரோகங்கள் கசிந்திடவேமுகஜன்னி வறுமைநோய்கள் கஷ்டநஷ்டங்களெல்லாம் வந்துசூழும்
Page 236
நவக்கிரக திசாபுத்தி நிர்ணயம்
பசுபதியினருளாலே இலக்கினத்தை புகன்குருவும்பார்த்தாலே பந்துமித்ரர் விசுவாசமாயிருப்பார் தனவானாக விளங்கியேசீரகக மெய்துவாரே. 85
உரை-சுக்கிர திசையில் சந்திர புத்தி வந்தால் ஜாதகர்க்கு சீதள சம்பந்தமான தலைநோய், முகஜன்னி முதலான வியாதிகளும் வறுமையும் சஞ்சலமும் நேரிட்டு கஷ்டநஷ்டத்தை யனுபவிக்கச் செய்யும். ஆனால், ஜனன இலக்கினத்தை குரு, புதன் பார்த்தால் பந்துமித்திரர்களெல்லாம் மிகவும் விசுவாசமுடனிருந்து பலவித நன்மை புரிவர். உத்தியோக மேன்மையாலும் வியாபாரவிருத்தியாலும் திரவிய சேகரஞ் செய்து வெகு மேன்மையுடன் ஜீவித்திருப்பதற்காகும்.
செவ்வாய்புத்தி பலன்
சுங்கன்திசையிற்செவ்வாய் புத்திவந்தால் சூழ்ந்திடுமேமனதினிலே விசாரதுன்பம் பங்கமுறுஞ்சஞ்சலங்க ளெய்துமப்பா பார்தனிலேவறுமையினால் துடிதுடிப்பார் இங்கிதமாய்குருபுதனும் திசாபுத்திநாதன் இலக்கினாதிபதியையும் பார்த்திட்டாலே மங்களமாய்பல நன்மையனுபவித்து மாநிலத்திற்பொருள்சேர்த்து சீவிப்பாரே. 86
உரை-சுக்கிர மகாதிசையில் செவ்வாய்ப்புத்திவந்தால் மன விசாரமும் திகிலும் சஞ்சலமுமுண்டாகி பலவிதமாகிய கஷ்டநஷ்டங்களும் கவலைகளும் சூழ்ந்து வறுமையினால் துடிதுடித்து மன திகிலடைந்து கஷ்டப்படுவார்கள். ஆனால் குருபுதனும் இலக்கினாதிபதியையும், திசாநாதனையும், புத்திநாதனையும் பார்த்தால் மங்களகரமாய் பலவித நன்மைகளும் பொருந்தி திரவிய சேகரஞ்செய்து சுசீலியாக மனைவி, மைந்தர், பந்து, மித்திரர், சுற்றத்தாருடனே மனசஞ்சலமில்லாமல் வாழ்ந்திருப்பதற்காகும்.
இராகுபுத்தி பலன்
பார்க்கவனார்திசையினிலே இராகுபுத்தி பக்ஷமுடன்வந்தாலே சரீரநோய்கள் தீர்ந்திடுமேமிகநன்மையுண் டாகுமின்னம் தீரமுடனேகுருபுதனும் லக்கினத்தைப்
Page 237
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
பார்த்தாலுங்கேந்திரத்தில் திசாபுத்திநாதன் பணமுடனிருந்தாலும் தனவானாக சீர்பெறவேமனைவிமைந்தர் சுற்றத்தோடு சிறப்புடனேமாநிலத்தில் சீவிப்பாரே. 87
உரை:--சுக்கிரதிசையில் இராகுபுத்தி வந்தால் சரீராரோக்கியமும் மனோற்சாகமுமாயிருக்கும். ஆனால் குரு புதனும் இலக்கினத்தையும் திசாபுத்தி நாதனையும் பார்த்தாலும் கேந்திரஸ்தானத்தில் இராகுபகவானிருந்தாலும் தனதான்ய சம்பத்துடனே மனைவி மைந்தர் சுற்றத்துடனே ஜீவித்திருப்பார்கள்.
குருபுத்தி பலன்
பார்க்கவனா நட்பாட்சி உச்சமேவி பகருந்திசையிலேயியாழன் தனுசுமீனம் தீர்க்கமுடன்கடகத்தி லிருந்தாலந்த திசையினில்புத்திவந்தால் தீரமுண்டு சீர்பெறவேதனதான்ய சம்பத்துண்டு செம்பொன்னாபரணங்கள் பூமியுண்டு ஆர்க்கிருவுலகமதில் மனைவிமைந்தர் அனுதினமும்மனமகிழசீவிப்பாரே. 88
உரை:--சுக்கிரபகவான் நட்பு, ஆட்சி, உச்சஸ்தானத்திலிருக்கும்போது, குருபகவானும் தனுசு, மீனம், கடகராசியிலிருந்தால் சுக்கிரதிசையில் குருபுத்தி வரும்போது ஜாதகர்க்கு பலவித சாமர்த்தியமும் உத்தியோககீர்த்தியும் வியாபாரலாபமும் பெருகி தனதான்ய சம்பத்துடன் கீர்த்திப்பிரகாசமான பிரபுத்தன்மையாய் ஆடையாபரண அலங்காரமுடன் பூமிலாபம் பெற்று, உலகிலுள்ளோரனைவரும் மெச்சுந்தன்மையாய் மனைவி, மைந்தர், பந்து, மித்திரருடனே மனமகிழ்ந்து சுகானந்தமாய் ஜீவித்திருப்பார்கள்.
சனிபுத்தி பலன்
வெள்ளிதனிலேசனியின் புத்திவந்தால் மேன்மையுடன்சுகமுண்டாம் ஜாதகர்க்கு தெள்ளுதமிழ்வித்தியா லாபமுண்டு தேடுவார்தனதான்ய லாபந்Resource
Page 238
நவக்கிரக திசாபுத்தி நிர்ணயம் - சுக்கிர திசையில் சனிபுத்தி பலன் (தொடர்ச்சி)
பின்னைபெண்ஜாதிபந்து மித்ரரோடு பிரியமாய்சுகமாக வாழ்ந்திருந்து உள்ளபொருள்பலவிதமாய் செலவழித்து ஊரார்கள்மதித்திடவும் சீவிப்பாரே. 89
உரை:—சுக்கிர திசையில் சனிபுத்தி வந்தால், மனோற்சாகமும் தைரியமும் வித்தியா லாபமும், உத்தியோகவிருத்தியும் அதிகரித்து தனதான்ய சம்பத்துடன் திரவியவந்தனென சகலரும் புகழ்ந்துரைக்குந் தன்மையாய் மனைவி மைந்தர்களுடன் சுகானந்தமாய் வாழ்ந்து பந்துமித்ரர்கள் உறவின்முறையாரனைவரும் புகழ்ந்துரைக்குந் தன்மையாய் பிரபுவைப்போல் சீவித்திருப்பார்கள்.
புதன்புத்தி பலன்
காமன்திசைதன்னில்புதன் புத்திவந்தால் கௌரவமும்பெருமையும் கீர்த்திலாபம் பூமனைப்போல்சுகமபத் துடனேந்நாளும் புகழ்பெற்றவியாபார லாபத்தோடும் நாமதியாவெகுமுயற்சியா லெல்லோரும் தனவந்தனென்றிடவே பொருளைத்தேடி நேமமுடன்பந்துமித்ரர் கூட்டத்தோடு நேர்மையாய்சுகமுடனே சீவிப்பாரே. 90
உரை:—சுக்கிரதிசையில் புதன்புத்திவந்தால் ஜாதகர்க்கு மனோற்சாகமும் கௌரவமும் பெருமையும் கீர்த்தியும் திரவிய லாபமும் கிடைப்பதுடன், வித்தியா லாபத்தினால் விவேகம் விளங்கி, வியாபாரஞ் செய்து பலவிதமாய்ப் பொருள் தேடி தானியோர் மதிக்குந் தன்மையான பிரபுத்தன்மையான பந்து, மித்திரர், மனைவி, மைந்தர்களுடன் சுகசீவியாய் வாழ்ந்திருப்பார்கள்.
கேதுபுத்தி பலன்
சுக்கிரனார்திசையிலே கேதுபுத்தி சூழ்ந்தாகேசத்துருக்கள் கொடுமையாலும் அக்கிரமமாய்துன்பஞ் செய்குவார்கள் அலைச்சலுடன்யரமைபிணி சூழ்ந்துவாட்டும் லக்கினத்தையும்திசாபுத்திநாதனையும் சுபர்பார்த்தாலே லக்ஷணமாய்பலவிதமாய் பொருளைத்தேடி தக்கபடிமனைவிமைந்த ருடனேவாழ்ந்து தனவந்தராகவே சீவிப்பாரே. 91
Page 239
சுக்கிரதிசையில் கேதுபுத்தி பலன் / நவக்கிரக திசாபுத்தி நிர்ணயம்
உரை :— சுக்கிரதிசையில் கேதுபுத்தி வந்தால் சத்துருக்கள் செய்யும் துன்பத்தால் கஷ்டமும் கவலையும் நேரிட்டு கலங்கச் செய்து வறுமையும் பிணியும் துன்பமு முண்டாகும். ஆனால் குரு, புதன், வளர்பிறைச் சந்திரனாகிய சுபக்கிரகங்கள் இலக்கினத்தையாகிலும், திசாபுத்தி நாதனையாகிலும் பார்த்தால் வியாபார விருத்தியினால் திரவிய சேகரஞ் செய்து, தனதான்ய சம்பத்துடனே மனைவி மைந்தர், பந்து கூட்டத்துடனே மனோல்லாசமாய் வாழ்ந்திருந்து ஞானானந்தமாய் ஜீவித்திருப்பதாகும்.
நவக்கிரக திசாபுத்தி நிர்ணயம்
முற்றிற்று.
Page 240
நக்ஷத்திர ஆரூட பலன் - கணேசர்துதி
எண்சீரடி விருத்தம் ஆதிபராசக்தியருள் பாலாபோற்றி அம்பிகையருண்மைந்தா கணேசாபோற்றி ஜோதிப்பிரகாச பிரணவமேபோற்றி செழுஞ்சுடரேதுய்யவிநாயகனேபோற்றி பாதிமதிசடையணிந்தோன் மைந்தாபோற்றி பக்தர்களெந்நாளுந்துதிக்குந் தேவேபோற்றி நீதியுடன்நக்ஷத்ர ஆரூடத்தை நினதருளால்புகல்வதற்கு அருள்செய்வீரே. 1
ஆரூட பலன்
அன்புடனே விநாயகரை பூஜைசெய்து ஆசனத்தில் ஜோதிட னுட்கார்ந்துகொண்டு சின்முத்திரையாகவே சிவத்தியானம் செய்தமர்ந்து ஓர் மனதாயிருக்கும்போது தன்முன்னேவந்தா ரூடங்கேட்போர்கள் தங்களைப்பார்த்தோர்நக்ஷத்திரம் புகலக்கேட்டு நன்மைதீன்மை இன்னின்னவிதங்களாக நடக்குமென்று பலாபலனை புகலுவீரே. 2
உரை:-- ஆரூடம் சொல்வதற்கிசைந்த ஜோதிடன் ஸ்நானபான தேமநிஷ்டை புரிந்து பகவத் பக்தியானந்தமாய் கணேசருக்குத் தேங்காயுடைத்து கர்ப்பூரமேற்றி தூபதீபாராதனை செய்து மான்தோலாசனத்தில் அமர்ந்து நவக்கிரகங்களை பூஜித்து தியானஞ் செய்துக் கொண்டி றக்கும்போது தன்னிடத்தில் ஆரூடங் கேட்கவந்தவர்களை இருபத்தேழு நக்ஷத்திரங்களில் ஒன்றைச் சொல்லச் சொல்லி, அவர்கள் சொன்ன நக்ஷத்திரத்தின் பலனுக்கிசைந்த விதமாய் நன்மை துன்பை இன்னின்ன விதமாய் நடக்குமென்று சொல்வீர்கள் ஜோதிட கணித வல்லோர்களே. 20
Page 241
உதாரணம்:-நக்ஷத்திர விபரம்
1 அசுபதி 2 பரணி 3 கிருத்திகை 4 ரோகணி 5 மிருகசீரிடம் 6 திருவாதிரை 7 புனர்பூசம் 8 பூசம் 9 ஆயில்யம் 10 மகம் 11 பூரம் 12 உத்திரம் 13 அஸ்தம் 14 சித்திரை 15 சுவாதி 16 விசாகம் 17 அனுஷம் 18 கேட்டை 19 மூலம் 20 பூராடம் 21 உத்திராடம் 22 திருவோணம் 23 அவிட்டம் 24 சதயம் 25 பூரட்டாதி 26 உத்திரட்டாதி 27 ரேவதி
பலன் சொல்லும் விபரம்
அவர்கள்மேற்கூறி நின்றிருக்கும் அந்தநக்ஷத்திரப்பேரைச்சொன்னால் தவறாமலவர்கள் மனதிலுற்ற தமதெண்ணத்தின் பலனை சொல்வாரானால் நவக்கிரககாயத்திரி னாலுரைப்பீர் நடக்கின்றபலனெல்லாம் சரியாய்த்தோற்றும் நலமுடனிவற்றையெல் லாமுணர்ந்து காசினியிலுள்ளோர்க்குப் பலன்சொல்வீரே. 3
உரை:-ஆருடங் கேட்க வந்தவர்கள் மேலே காட்டியிருக்கின்ற நக்ஷத்திரங்களொன்றின் பேரைச் சொல்லக் கேட்டு அந்தந்த நக்ஷத்திரங்களுக்குரிய பலன்களை விபரமாய்ச் சொன்னால் சரியாயிருக்கும்; இதனை ஜோதிடர்கள் கவனமாய்ப் பார்த்து, ஆருடங்கேட்க வந்தவர்கட்கு பலபலனை விபரமாய்ச் சொல்ல வேண்டும்.
அசுபதி நக்ஷத்திர பலன்
அசுபதியென்றேயுரைத்து கேட்டவர்க்கு ஆருடபலனுத் தமமேயாகும் பசுபதியினருளாலே நினைத்தகாரியம் பக்குவமாய்நலமுடனே நடந்தன்பாக விஜயமுடன்ஜெயம்பெற்று வருவாரின்னும் விருப்பியதோர் பொன்பொருளும் வந்துசேரும் விசுவாசமாகவே சகலருந்தான் விருப்பமுடனேயிருப்பார் கவனிப்பீரே.
உரை:-அசுபதி நக்ஷத்திரத்தைச் சொன்னால் அவர்கள் நினைத்த காரியம் உத்தமமாகும். அதன் பலன் விபரமெவ்வித
Page 242
நக்ஷத்திர ஆரூட பலன்
மெனில் பகவான் கிருபையால் நினைத்த காரியம் ஜெயமாவதுடன் தான் நாடிய மனிதர்கள் கண்டு விஸ்வாசமாக கேட்டதைத் தருவார்கள். ஆகையால் இந்தக்காரியம் ஜெயமென்றுரைக்கவேண்டும்.
பரணி நக்ஷத்திர பலன்
பரணியென்ற நக்ஷத்திரம் சொல்வாரானால் பலனில்லை அதமபல னாகுமப்பா தரணியில் நினைத்த காரியங்கூடாது தனக்கெதிராய்ப் பகை யாவர் பொருளுஞ்சேதம் சிரந்தாழ்த்தலாகும் சபைக் கேலாகா சீறிக்கிலும் பலிசொல்லோ சபைக்கேறாது திரவியமுஞ்சேதமாம் சண்டையுண்டு தீராகவலையுங்கைத்தொழிலு மகப்படாதே. 5
உரை:—ஆரூடங் கேட்க வந்தவர்கள் பரணியென்ற நக்ஷத்திரத்தை சொல்வாரானால் அதமபலனாகும். ஆகையினால், நீ நினைத்த காரியம் பலிக்காது. சகலரும் விரோதிகளாயிருப்பார்கள், கைப்பொருள் சேதமாகும். சபையிற் சென்று பேசினாலும் தனது வார்த்தையை எதிரிகள் அலக்ஷியஞ் செய்து அவமதிப்பார்களென்றும், ஜீவன காரியத்திலுங் கஷ்டமுங் கவலையுண்டாகுமென்றும், கைப்பொருள் சேதமாவதுடன் சண்டை, சச்சரவும் தீராத மனக்கவலையு முண்டாகுமென்றும். அதனால் நற்சமயம் நாடிய காரியத்தை நினைக்க வேண்டாமென்று சொல்லவேண்டும்.
கார்த்திகை நக்ஷத்திர பலன்
கார்த்திகையென்றே சொன்னால் ஆரூடந்தான் கைகண்டபலனாய்க் கதமேயாகும் மூர்த்திகளின சகாயத்தால் நினைத்தகாரியம் முதன்மையாய்க்கைகூடும் மரணமுமாகும் ஆர்த்தசபையிற்பேசி வெற்றிகொள்வார் ஆபரணம்பொன்பொருளும் வந்துசேரும் கீர்த்திசேருத்யோக வர்த்தகலாபங்கள் கிடைக்குமென்று சொல்வீர் ஜோதிடவல்லோரே. 6
உரை:—ஆரூடங் கேட்க வந்தவர்கள் கிருத்திகை நக்ஷத்திரத்தின் பேரைச் சொன்னால் நினைத்த காரியம் ஜெயமாகும்; உத்தமமென்று சொல்லவேண்டும். பகவத் சகாயத்தால் சகலமும் நன்மையாய் நடக்குமென்றும், சபையிற் பேசச் சென்றால் தன் வார்த்தையே மேன்மையாய் நடக்குமென்றும், உத்யோக
Page 243
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
மேன்மை, வியாபார லாபமும் பெருகுமென்றும், ஆபரணாதி களும், பொன் பொருள் விசேஷமாய் கிடைக்குமென்றும் சொல்வீர்.
உரோகணி நட்சத்திர பலன்
அன்புடனே ஆரூடங் கேட்கவந்தோர் அவர்வாயால் ரோகணிநக்ஷத் ரத்தைச்சொன்னால் நன்மையில்லை அதமபலனென்றுரைப்பாய் நாடியதோர்காரியங்க ளூடாதென்பாய் வீணமாய் உத்யோக பங்கமாகும் வியாபாரநஷ்டமென்றும் விபரமாய்ச்சொல் நன்மணமுமிவ்வருஷங் கூடாதென்பாய் நலமில்லை கேட்டஆரூட மென்பாயே. 7
உரை:--வந்தவர்கள் ரோகணி நக்ஷத்திர மென்றுரைத் தால் அதமபலனாகும். அவர்கள் நாடிவந்த காரியம் சித்தியா காது. அவர்கள் செய்யும் கைத்தொழில் உத்தியோகத்தில் பங்க மாகும், தொழி லகப்படாமல் மதிமயங்கி திகிலுற்றிருப்பார்கள். வர்த்தகம் செய்பவராயிருந்தால் பலவித நஷ்டமாகும், கலியாண காரியத்தை நினைத்து வந்தால் இந்த வருஷம் பலவித கலகத் தாலும் மனஸ்தாபத்தாலும் திருமண வைபவமும் நடவாதென் றுரைப்பாய்.
மிருகசீரிட நட்சத்திர பலன்
மிருகசீரிடநக்ஷத் திரத்தைச்சொன்னால் மிக்கநற்பலனில்லை மத்திபமேயாகும் தருணத்திலுற்றநோய் தீருமென்பாய் தனக்குப்பகைவர்கள்துன்பங் கொஞ்சங்காட்டும் முருகனைத்தோத்ரம்புரிந்து நவக்ரகங்கள் முதற்கடவுள் விநாயகனை பூஜைசெய்தால் திருமணமுங்கூடும் பொன்பொருளுஞ்சேரும் திரவியமும்சேகரித்து ஜீவிப்பாரே. 8
உரை:--மிருகசீரிடத்தின் பேரைச் சொன்னால் மத்திபபல னாகும். கோபத்தினால் சகலரும் விரோதமா யிருப்பார்கள். சரீரத் தில் வியாதி வருவதும் போவதுமா யிருக்கும். ஆகையால் சிவ சுப்ரமணியரையும் விநாயகரையும் பூஜித்து நவக்கிரக பூஜை செய்தால் வறுமை பிணியெல்லாம் விலகும். சகலரும் சிநேகமா யிருப்பார்கள். பத்து மித்திரர் சகாயமா யிருப்பார்கள். கலியா ணங்கூடும். பொன் பொருள் திரவியலாபமும் கிடைத்து பிரபு வைப்போல் பெருமையாய் ஜீவித்திருப்பார்கள்.
Page 244
நக்ஷத்திர ஆரூட பலன் - திருவாதிரை நக்ஷத்திர பலன்
திருவாதிரைநக்ஷத்ர மென்றுரைத்தால் தீங்கெய்துநினைத்த காரியமாகாது பருவப்பெண்ணொருத்தியால் கலகமாகும் பார்தனிலேமழைபொழியா வருந்துமென்பார் தருணத்தில்விதைத்தபயிர் விளைவதில்லை தற்பரனாம்கணேசரையே பூஜைசெய்தால் கருமவினையாலுற்ற கலகம்நீங்கி கவலைதுன்பமில்லாமல் சீவிப்பாரே. 9
உரை :—ஆரூடங்கேட்க வந்தோர் தமது வாயினால் திருவாதிரை நக்ஷத்ரமென்று சொன்னால் அவர்கள் நினைத்துவந்த காரியம் முடியாது. வாலிபப்பெண்ணால் வம்பு சண்டை கலகமனைத்தும் நேரிட்டுத் துன்பமும் துயரமுமாகும். காலமழை தவறி கஷ்டப்பட்டு விதைத்த தான்யாதிகள் விளையாது. ஆனால், சித்தசுத்தி, பக்தி வைராக்கியத்துடனே விநாயகப்பெருமானை பூஜித்தால் சகலவித கஷ்டமும் விலகி கருமவினையால் வந்த பலவித கலகமும் விலகி கவலையும் துன்பமுமில்லாமல் சுகசீவியாய் வாழ்ந்திருப்பீர்களென்று சொல்லுவீர்.
நக்ஷத்திர ஆரூட பலன் - புனர்பூச நக்ஷத்திர பலன்
புனர்பூசநக்ஷத்திர மென்றுரைத்தால் பூமியிலேமாடாடு நிலமும்வீடும் தனதான்யசம்பத்தும் கிடைத்தன்பாக தாரணியிலேகுபேரசம்பத் தாயிருப்பார் இனஜனங்கள் நட்பாவார் மணமுங்கூடும் இனிதுடனேசுகபோக மனுபவித்து தனதுமனையாள்புத்ர பாக்யம்பெற்று தன்மனதின்படிநடப்பாரெனச்சொல்வாயே. 10
உரை :—ஆரூடங் கேட்க வந்தவர்கள் புனர்பூச நக்ஷத்திரமென்று சொன்னால் அவர்களுக்கு நற்காலம் வருமென்றும், தன தான்ய சம்பத்துடன் ஆடுமாடுகள் முதலானவை விசேஷமாய்க் கிடைப்பதுடன் குபேரசம்பத்துடன் இருப்பார்களென்றும், பந்து மித்திரர்களனைவரும் ஆசாபாச நேச விஸ்வாசமாயிருப்பார்கள். கலியாணங் கூடும்; சுகபோகபாக்கியமனைத்தும் அனுபவித்து மனையாள் தன் மனதின்படி நடந்து சுகசீவியாய் வாழ்ந்திருப்பதுடன், புத்திர பாக்கியம் பெற்று ஆனந்தமாயிருப்பீர்களெனப் புகல்வீர்.
Page 245
பூச நக்ஷத்திர பலன்
பூசநக்ஷத்திரமென்று சொல்வாரானால் போனவர்மறுபடியும் திரும்பாசென்பாய் நாசமாய்தினைத்ததெல்லாங் கைகூடாது நாற்றிசையும்மழையில்லா துலர்ந்துபோகும் மோசஞ்செய்வார்பகையர் வறுமைசூழும் மொழிவதெல்லாம் பொய்யென்பா ரருகிருப்போர் வீசம்பொன்பொருள்கையில் கிடைத்திடாது விசனத்தால்கலங்குவீரென் றோதுவாயே. 11
உரை:--ஆருடங் கேட்போர் பூச நக்ஷத்திரமென் றுரைத்தால் பிரயாணத்திற்கு பங்கமுண்டாகுமென்றும், போனவர் மறுபடியுந் திரும்பாசென்றும், தினைத்தகாரியமெல்லாங் கைகூடாமல் நாசமாகுமென்றும், நாலாபக்கத்திலும் மழையில்லாமல் காய்ந்துலர்ந்து போகுமென்றுங், பகைவர் மித்ரபேதமாய் மோசஞ்செய்வார்களென்றும் சொல்வீர். வறுமையதிகரித்து உத்தியோகமில்லாமலும் வர்த்தகமில்லாமலும், கையில் காசும் பணமுமில்லாமல் கலங்குவார்களென்று சொல்வீர். ஆனால், நவக்கிரக பூசை செய்து கொண்டிருந்தால் கொஞ்சங் கொஞ்சமாய் சகலமும் பெறுவீர்களென்றும் தெரிவிப்பீர்.
ஆயில்ய நக்ஷத்திர பலன்
அன்புடனே ஆரூடங் கேட்கவந்தோர் ஆயில்யநக்ஷத்ர மென்றுரைத்தால் மன்னர்பிரபுக்களால் நலமுண்டாகும் மாநிலத்தில் தனவானாய் சீவிக்கலாகும் நன்வாயின் சொல்மதுர வார்த்தையாகும் நன்கு மனை யான் புத்ர மித்ரரோடு நன்மையுடன் சீவிப்பார் பகவானாலே யென்று நவிலுவீர் ஜோதிடசாஸ்திர வல்லோரே. 12
உரை:--ஆருடங் கேட்க வந்தவர்கள் ஆயில்ய நக்ஷத்ரமென்ற உரைத்தால் அரசர்களாலும், பிரபுக்களாலும் வெகு நன்மையுண்டாகுமென்றும், உத்தியோக விருத்தியாலும், வியாபாரலாபத்தாலும் பலவிதமாய் திரவிய சேகரஞ்செய்து, தனவந்தனாக சீவித்திருப்பதற்காகுமென்றும் சொல்வாய். அவர்கள் மனிதரிடத்தில் பேசுவதெல்லாம் அழகான உண்மை வாக்கியமாயிருக்குமென்றும், மனைவி, மைந்தர்கள், சுற்றத்தாருடன் சுகசீவியாய் வாழ்ந்திருப்பார்களென்றும் சொல்வீர்கள்.
Page 246
நக்ஷத்திர ஆரூட பலன் / மக நட்சத்திர பலன்
மகநக்ஷத்திரமென்று சொல்வாரானால் மனதினிலே நினைத்ததெல்லாம் முடியுமப்பா ஜெகமீது தனதான்ய சம்பத்தோடு செல்வவந்தராய் மனைவி மைந்தரோடும் புகழ்மேவும் வியாபாரம் செய் துத்யோகத்தால் பொருந்தேடி நற்றுமித்ர ருடன்பாக சுகபோகபாக்யமெல்லா மனுபவிப்பாரென்று சொல்லுவீர் ஜோதிடத்தில் மிகவல்லோரே. 13
உரை:--ஆரூடங் கேட்க வந்தவர்கள் மக நக்ஷத்திரமென்று சொல்வாரானால் அவர்கள் நினைத்த காரியமெல்லாம் நிறைவேறுவதுடன் உத்தியோகங் கிடைத்தும், வியாபாரத்தில் லாபமதிகரித்தும், தனதான்ய சம்பத்துடன் வெகு மேன்மையாக ஜீவித்து மனைவி, மைந்தர், மித்திரர், சகலரும் புகழுந் தன்மையான பெருமையுடன் சுகபோகமாய் ஜீவித்திருப்பதாகு மென்று சொல்வீர்கள்.
நக்ஷத்திர ஆரூட பலன் / பூர நட்சத்திர பலன்
பூரநக்ஷத்திரத்தைப் புகல்வாரானால் போனவர்கள் திரும்பார்கள் பொருளுஞ்சேதம் தாரமிழந்திடுவார்கள் வறுமை சூழ்ந்து தவிப்பார்கள் விரதபங்க மாகும் பொல்லா கோரமாய்ப் பலதுன்பம் வந்து சூழ்ந்து கொடுமையே சத்துருக்கள் செய்வாரென்பாய் தாரணியில் நவக்கிரக பூஜைசெய்து தப்பித்துக்கொள்வீரென் றோதுவீரே. 14
உரை:--ஆரூடங் கேட்க வந்தவர்கள் பூர நக்ஷத்திரத்தின் பேரைச் சொன்னால் சதாகாலமும் மனவிசாரமா யிருப்பாரென்றுரைப்பாய், தூரதேசத்திற் சென்றவர்கள் திரும்பமாட்டார்கள். பலவிதமாய் கைப்பொருள் சேதமாகுமென்றும், மனைவி மரணமாவாளென்றும், வறுமையினாலே தத்தளித்துக் கஷ்டப்பட்டு கலங்குவதுடன் தான் செய்யும் விரதம் பங்கமாகுமென்றும், விசேஷமான துன்பமும் துயரமும் பகைவர்கள் செய்யும் கொடுமையும் சூழ்ந்து, கஷ்டப்படுத்துமென்று சொல்வீர். ஆனால், நவக்கிரக பூஜை தவறாமல் செய்வீர்களானால் கொஞ்சங் கொஞ்சமாய் குரூரபயங்கர கஷ்டநஷ்டமெல்லாம் விலகி சுகமா யிருப்பீர்களென்றும் சொல்வீர்கள்.
Page 247
உத்திர நட்சத்திர பலன்
உத்திரநக்ஷத்திர மென்றுரைத்தால் உத்தமம்சகலவித நன்மையுண்டு புத்திரபாக்கியமுண்டு பொருளுஞ்சேரும் புஸ்த்தியும்மெத்தவே பெருகுமப்பா எத்தினமும்வியாபார உத்யோகங்கள் எடுத்தகாரியமெல்லாம் ஜெயமேஆகும் பத்திரங்களெழுதிபணம் கொடுப்பதற்கும் பாக்கியமுண்டாகுமென்று பகருவீரே. 15
உரை :- உத்திர நக்ஷத்திரத்தின் பேரைச் சொன்னால் நினைத்த காரியமெல்லாம் உத்தமமாகும். அதனால் சகலவித நன்மையும் புத்திர பாக்கியமுண்டாகும். உத்தியோக மேன்மையாலும், வியாபார இலாபத்தாலும் பலவிதமாய்ப் பொருள்சேகரஞ்செய்து கொடுக்கல் வாங்கல் முதலான பெருமையும், பத்திரமெழுதி வாங்கிக் கொண்டு பணங்கொடுக்கும் பிரபுத் தன்மையுமுண்டாகுமென்றும் சொல்வீர்
அஸ்த நட்சத்திர பலன்
அஸ்தமென்றுசொன்னாலே துன்பமப்பா அரசர்கள் பிரபுக்கள் பகையுண்டாகும் வித்தையில்லைபுத்தியில்லை சோம்பலுற்று விவேகமில்லாவறுமையால் திகைத்திருப்பார் சித்தமிகத்துயரடைந்தெப் போதும் பொல்லா திகிலடைந்துவறுமையினால் கலங்கிநிற்பார் இத்தகையதுன்பமெல்லாம் நடக்குமென்று இன்பமாகச்சொல்வீர் ஜோதிடவல்லீரே. 16
உரை :- ஆரூடங் கேட்க வந்தவர்கள் அஸ்த நக்ஷத்திரத்தின் பேரைச் சொன்னால் சித்தம் மயங்கி திகைத்து, ஞாபகசக்தியில்லாமல் கைத்தொழிலுமில்லாமல் வறுமையாளராய்க் கலங்கித்துடித்து திகிலடைந்து, துன்பமும் துயரமுமடைந்து, கவலையினால் விசனமாயிருப்பார்கள். ஆனால் தினந்தோறும் நவக்கிரக பூஜை செய்து கொண்டிருந்தால் சுகமாயிருப்பதற்காகும்.
சித்திரை நட்சத்திர பலன்
சித்திரைநக்ஷத்திரத்தின் பேரைச்சொன்னால் சிவனருளால பலநன்மை மிகவுண்டாகும் வித்தையுடன் புத்தியுண்டு உத்தியோகவிருத்தி வியாபாரலாபத்தால் பொருளுஞ்சேரும்
Page 248
நக்ஷத்திர ஆரூட பலன்
மெத்தநன்மைகளுண்டு மணமுங்கூடும் மேன்மையுடன் பந்து மித்ர கூட்டஞ்சேரும் உத்தமமென்றினிதுடனே வாழ்வீரென்று உரைத்திடுவீர்கேட்போர்க்கு ஜோதிடவல்லோரே. 17
உரை-ஆருடங்கேட்க வந்தவர்கள் வாயினால் சித்திரை நக்ஷத்திரமென்று சொன்னால் அவர் மனதில் நினைத்த காரியம் ஜெயமாகுமென்றும், சிவபெருமான் திருவருளால் பல நன்மை யுண்டாவதுடன் வித்தையும், புத்தியும் வெகுவாயுண்டாவதுடன் உத்தியோக விருத்தியும், வியாபாரலாபமும் பெருகி, தனத் தான்ய சம்பத்தும், பந்துமித்திரர் கூட்டமும் சேர்ந்து பலவித நன்மையும் பெற்று சுகானந்தமாய் ஜீவித்திருப்பார்களென்று சொல்லுவீர்கள்.
சுவாதி நட்சத்திர பலன்
சுவாதியெனும்நக்ஷத்திர பேரைச்சொன்னால் சொர்ணபணிபூஷணமும் நஷ்டமாகும் ஜாதியார்பகையாகி துன்பமுற்று சஞ்சலத்தினாற்கிகைத்து கலங்குவார்கள் தாதிகளும்அடிமைகளும் விலகிப்போவார் தனதான்யமில்லாமல் விசனமாகும் ஆதிகணேசர்பூஜை நவக்கிரகபூஜை அன்புடனேசெய்துலகில் ஜீவிப்பாரே. 18
உரை :-ஆருடங்கேட்க வந்தவர் சுவாதி நட்சத்திரத்தைச் சொன்னால் தனதான்ய நஷ்டமும், பொன், பொருள், பூஸ்திதியும் நஷ்டமாவதுடன் ஜாதியார்களும் பகையாகி பலவித கஷ்டப்படுத்துவதுடன், வறுமையினால் மனந்திகைத்து, அடிமையாட்களும் விலகிப் போவார்கள். ஆனால் ஆதிகணேசரை பூஜை செய்து நவக்கிரகங்களை சதாகாலமும் தியானஞ்செய்து பூஜித்துக் கொண்டிருந்தால், அந்தந்த சமயத்தில் வருகிற கண்ட நஷ்டமெல்லாம் விலகி அப்போதைக்கப்போது சமயம்போல் சுபபலனை யனுபவித்து ஜீவித்திருப்பார்கள்.
விசாக நட்சத்திர பலன்
அன்புடனேவிசாகநக்ஷத் திரத்தை நற்சொன்னால் அதேதில்தன்மை யுண்டாகுமென்றும் நன்மையுடன் வித்தை புத்தி உத்தியோகமேன்மை நாடியதோர் வியாபார லாபமாகும் பொன்பொருளும்பூஸ்திதியும் சேரும்பாக்கியம் பொருந்தியமேன்மைமைந்தர் பந்துமித்திரர்
Page 249
விசாக நட்சத்திர பலன் (தொடர்ச்சி)
இன்பமுடனேவாழ்ந்த மேன்மையாக இனிதுடனேஜீவிப்பாரெனச் சொல்வீரே. 19
உரை:--ஆருடங் கேட்க வந்தவர்கள் விசாக நட்சத்திரத்தின் பேரைச் சொன்னால், அநேகவித நன்மையுண்டாகுமென்றும் வித்தையும் வியாபார விர்த்தியும் பெற்று கிரைய லாபமும் பொன் பொருள், புஸ்த்தியும் பொருந்தி, மனைவி, மைந்தர், பந்து மித்திரர்களுடனே சுஜீவியாய் வாழ்ந்திருப்பதற்கிசைந்த நலமனைத்தும் உண்டாகும். நினைத்த காரியமும் ஜெயமாகும்.
அனுஷ நட்சத்திர பலன்
துன்பமுண்டு அனுஷ நக்ஷத்திரத்தைசொன்னால் தொலையாதவிசாரமப்பா பூவாடைக்காரி தன்குறையால்பலதுன்பம் வந்துசூழும் தாரித்திரபீடையுண்டு நலமாகாது நன்மையுடனிநாயகரை ஸ்துதிபுரிந்து நவக்கிரகபூஜைசெய்தால் வறுமைநீங்கி பொன்பொருளுஞ்சேர்ந்து திருமணமுண்டாகும் போஜனாதிகள்வெகுவாய் கிடைக்கும்பாரே. 20
உரை:--ஆருடம் கேட்க வந்தோர்கள் அனுஷ நட்சத்திரத்தின் பேரைச் சொன்னால் அவர்களுக்கு தீராத மன விசாரமும் கஷ்டமும் கவலையும் சூழ்ந்து தன் வீட்டுப் பூவாடைக்காரிகுற்றத்தால் பலவித துன்பமும் துயரமும் சூழ்ந்து, வறுமை துயருடன் கஷ்டப்படுத்தும். கலியாணமாகாமல், கஷ்டப்படுத்துவதுடன் மனச்சஞ்சலமும் பயங்கரமும் பொருந்தியிருக்கும். ஆகையால், விநாயகரை ஸ்துதி செய்து நவக்கிரக பூஜை செய்தால் சகலவித தோஷமும் விலகி, தனதான்ய சம்பத்தும் பொன் பொருள், புஸ்த்தி கிடைப்பதுடன் திருமண வைபவம் நடந்து சுபோஜனாதிகளுடன் சகலசவுக்கியமாய் ஜீவித்திருப்பார்கள்.
கேட்டை நட்சத்திர பலன்
கேட்டைநக்ஷத்திரத்தின் பேரைச்சொன்னால் கெம்பீரம்கௌரவமும் கீர்த்தியோங்கி வீட்டையான்மனைவியினால் சுபயோகத்தை விரும்பியேதிரவியசே கரங்கள்செய்து கோட்டைமிரும்மூதேவி வாசம்நீங்கி செழிப்புற்றுமகாலக்ஷ்மி யருளினாலே நாட்டிலேபிரபுவென வாழ்ந்திருக்கும் நால்வந்ததென்றன்பாய்ப் புகலுவீரே. 21
Page 250
நக்ஷத்திர ஆரூட பலன்
உரை: - ஆரூடங் கேட்க வந்தவர்கள் கேட்டை நக்ஷத்திர மென்று சொன்னால் அவர்களுக்கு இனிமேல் துக்கமும், துயரமும், துன்பமும் நீங்கி, மூதேவி வாசமில்லாமல் மகாலக்ஷ்மி கிருபையினால் சகலவித நன்மையும், கௌரவமும், கெம்பீரமும், கீர்த்தியும், தனதான்ய சம்பத்தும் அதிகரித்து, மனைவி மைந்தர் பந்துமித்திரர்களின் பெருக்கத்தினால் விசேஷ நன்மையும், சுகபோகபாக்கியமும் பெற்று, தரணியோர் பிரபுவென்று புகழுந்தன்மையான பொருள் சேகரஞ் செய்வற்கிசைந்த நந்நாள் வந்ததென்றன்புடன் புகலுவீர்.
மூல நக்ஷத்திர பலன்
ஆருடங்கேட்கவந்தோர் மூலமென்றால் அல்லல்துன்பமின்றோடே விலகிற்றென்றும் காருண்யதிருமாலின் சகாயத்தாலே கனகம்வெள்ளிதிரவியங்கள் சேகரித்து பாருக்குளிவன்போற்பிரபு கிடையாதென்றும் பகைஞரில்லாவரசகலர்க்கும் மித்ருவாகி சீருடனேகௌரவமும் கீர்த்தியோடே சீவிப்பாரென்றினிதாய்ப் புகலுவீரே. 22
உரை:- ஆரூடங்கேட்டு பலன் தெரிந்துகொள்ள வந்தவர்கள் மூல நக்ஷத்திரத்தின் பேரைச் சொன்னால், இனிமேல் யாதொரு கஷ்டநஷ்டமும் அல்லல் துன்பமுமில்லையென்று கருணாகரனாகிய ஸ்ரீமந் நாராயணர் கிருபையால் தனதான்ய சம்பத்துடன் பொன், பொருள், பூஸ்திதியும் பெறுவதற்கிசைந்த வியாபார விருத்தி, உத்தியோக மேன்மை வியாபார லாபமும் பெற்று, உலகத்தோர் பிரபுவென மெச்சுந் தன்மையான கீர்த்திப்பிரகாசமும், பெருமையும், கௌரவமும் பொருந்தி யிருப்பதற்காகும். உலகத்தில் தனக்கெவரும் பகையில்லாமல் ஆனந்தமாய் சீவிப்பதற்காகும்.
பூராடம் நக்ஷத்திர பலன்
பூராடநக்ஷத்ர மென்றுரைத்தால் போனவர்கள்வரமாட்டார் பொருளுஞ்சேதம் பாராடப்பதுன்பம் மழையுமில்லா பயிர்விலையாய்த்தான்ய சேதமாகும் போராடப்பகைவர்வந்து சூழ்வாரப்பா பொன்பணியும் பூமியுடன் போகுமப்பா நீராடப்போனமங்கை திரும்பாளென்று நிதானித்தாரூடபலன் புகலுவாயே. 28
Page 251
பூராட நட்சத்திர பலன் (தொடர்ச்சி)
உரை :- ஆருடங் கேட்க வந்தோர் பூராட நக்ஷத்திரத்தின் பேரைச் சொன்னால் பிரயாணஞ்செய்யப் போனவர் வரமாட்டார் என்றும், கைப்பொருள் சேதமாருமென்றும், உலகில் தனக்குப் பற்பலவித துன்பமும் துயரமும் நேரிடுமென்றும், மழையில்லாமல் தான்யாதிகள் விளையாதென்றும், சத்துருக்கள் அதிகரித்து சண்டை சச்சரவு செய்வார்களென்றும், பொன் பணி பூஷணாதிகள், காணி பூமிகளும் சிதறிப்போகுமென்றும், ஆற்றில் ஸ்நானஞ் செய்யப்போனவன் திரும்பானென்றும், ஆருடகணிதத்தை ஆராய்ந்துணர்ந்து பலன் சொல்வீர்கள்.
உத்திராட நட்சத்திர பலன்
உத்திராட நக்ஷத்திர மென்றுரைத்தால் உத்தமமாய் பல நன்மை வந்துசூழும் புத்திரபாக்கியமுண்டு பொருளும்சேரும் புத்தியிடும்வெகுலாபங் கிடைப்பதோடு உத்தியோகவிருத்தியும் வர்த்தகத்தின்மேன்மை உற்றாருள்பத்து மித்ருடளேயன்பாய் எத்தனியும்சுகசீவி யாகவாழ்ந்து எவர்களுக்கும்மேன்மையாய் சீவிப்பாரே. 24
உரை :- ஆருடங் கேட்க வந்தோர் உத்திராடமென்றுரைத்தால் அவர்கள் நாடிவந்த காரியம் ஜெயமென்றும், அதனால் பலவித காரியமும் நன்மை பெறும். புத்திர பாக்கியமும், பொன்பொருளும் உண்டாகுமென்றும், காணி பூமி லாபமும், உத்யோகவிருத்தியும். வியாபார மேன்மையும் அதிகரித்து, கௌரவமும், கீர்த்தியும், தனதான்ய சம்பத்தும் அதிகரித்து மனைவி மைந்தர், பந்துமித்ரருடனே சதாகாலமும் கானந்தமாய் சீவித்திருப்பார்கள்என்று சொல்வீர்கள்.
திருவோண நட்சத்திர பலன்
வந்தோர்கள் திருவோண நட்சத் திரமென்னாலே வயல்தனிலே ஜலமில்லை மழையுமின்றி சிந்தைநொந்துருகியே விளைவில்லாமல் சினமுடனே மன்னர்பகை யதிகரித்து பத்துமித்ரர்பகையாலும் வறுமையாலும் பதைபதைத்துசுகமில்லா கலகத்தாலே எந்தவிதம்பிழைப்பதென் றாலோசித்துநாளும் ஏங்கியேகவலையினால் கலங்குவாரே. 25
உரை :- ஆருடங் கேட்க வந்தவர்கள் திருவோண நட்சத்திரமென்றால், வயல்தனிலே தான்யாதிகளை விளைப்பதற்கு
Page 252
நக்ஷத்திர ஆரூட பலன்
இளைக்காமலும், மறைவில்லாத கவலையால் மனந்துடித்து அங்கத்தவர் பகை யதிகரித்து, வறுமையினால் திகைத்தும் மனங்கி, சரீராரோக்கியமில்லாமல் சுவற்று பந்துமித்திரர் பகைவினால் மனவிகாரத்துடனே எவ்விதமாய் பிழைப்பதென்று மனிதாரும் ஆலோசித்துக்கவலையினால் கலங்கி திகைத்திருப்பார்கள். ஆகையால், இந்த ஆரூடம் அதமபலனாய் நடக்குமென்று சொல்வீர்கள்.
அவிட்ட நட்சத்திர பலன்
இன்பமாக அவிட்டமென் றுரைத்தாரானால் இராஜயோகத்திற்கிசைந்த சுகமாய்வாழ்வார் நன்மணமுங்கூடும் உத்யோகமேன்மை நாடியவேர்த்தகத்தில் லாபமுண்டு பொன்பொருளும்புஸ்தியும் மிகவேபெற்று போனவர்கள்திரும்புவார் பூமிலாபம் வின்னமிலாவிதைத்திட்ட தான்யமெல்லாம் விளைந்துபயிரோங்கியே செழிக்குந்தானே. 26
உரை:—ஆரூடங் கேட்க வந்தவர்கள் அவிட்ட நட்சத்திர மென்று உரைத்தால் இராஜயோகத்தைப்போல் பலவித நன்மை யனுபவித்து வித்யாபிவிருத்தியுடன் உத்தியோக மேன்மையும் வியாபார லாபமும்பெற்று, சகலசீலா சீருப்பதுடன் விவாகமும் கூடும். மனைவி, மைந்தர் பந்துமித்திரர்களுடனே சதானந்தமாயிருப்பதுடன், தனதான்ய சம்பத்துடனே வாழ்ந்திருப்பதாகுமாகும்.
சதய நட்சத்திர பலன்
கவலையாய்ஆரூடம் வந்துகேட்போர் கலக்கமுடன் சதையநட்சத்திரமென்றால் நலமில்லைதுன்பமுண்டு திகிலுமாகும் நாடியதோர்காரியங்க கூடாதப்பா பலமில்லைவறுமையினால் கண்டமுண்டு பரிதியெனுஞ்சூரியனை பூஜைசெய்தால் சிலநாளைக்குள்ளாக வெகுலாபங்கள் சித்திக்கும்சுகமாக வாழ்வாரென்பீரே. 27
உரை:—மனதிகிலுடன் ஆரூடங் கேட்க வந்தவர்கள் சதைய நட்சத்திரமென்றுரைத்தால் அவர்கள் நினைத்த காரிய மாகாது, பலவிதமாகிய துன்பத்தாலும் துயரத்தாலும் மனதிகிலடைந்து யாதொரு காரியத்திலும் பிரவேசிக்க மனமில்லாமல் உத்தியோக ஸ்தானத்தில் கலகமும், வியாபாரத்தில் நஷ்டமுமடைந்து வறுமையால் கலங்குவார்கள். ஆகையால் அறிவீரே.
Page 253
பூரட்டாதி நட்சத்திர பலன்
பொறுமையுடன் ஆரூடங் கேட்கவந்தோர் பூரட்டாதி நட்சத் திரமென்றாலே சிறுமையில்லை பெருமையுண்டு நினைத்ததெல்லாம் சித்திக்கும் உத்தியோகம் வர்த்தகத்தால் பொருள்சேரும் தனதான்ய சம்பத்துண்டாம் புத்திரபாக்கியமுண்டு புகழ்ங்கீர்த்தி வருகுமப்பா பிரபுவென மனமுங்கூட்டும் வையகத்தில் பந்துமித்திரர் துணைசெய்வாரே. 28
உரை:—மிகவும் பொறுமையுடனே வந்து ஆரூடங் கேட்பவர்கள் பூரட்டாதி நக்ஷத்திரமென்றால் வெகு நன்மையான பலனாகிய உத்தமமாகும். உத்யோக மேன்மையாலும், வர்த்தக லாபத்தினாலும் வெகு பொருள் சேகரித்து தனதான்ய சம்பத்துடனே சிறுமையில்லாமல் பெருமையாக கீர்த்தியுடன் பிரபு வென்று சகலரும் புகழ்ந்துரைக்கும்படியான கெளரவமுண்டாகும். கலியாண சுபகாரியமும் புத்திர சம்பத்தும் பந்துமித்திரர் சகாயமு முண்டாகும். உலகத்தில் சதாகாலமும் மனோல்லாசமா யிருப்பதற் காகுமென்று சொல்வீர்கள்.
உத்திரட்டாதி நட்சத்திர பலன்
உத்திரட்டாதியென் றுரைத்தாரானால் உறவினரும் பந்துமித்திரர் பகையாவார்கள் உத்தியோகமில்லாமல் வர்த்தகஞ்செய்யாமல் உணவின்றி வறுமையினால் திகைப்பாரப்பா எத்ததியும் துன்பமுண்டு கஷ்டநஷ்டம் எடுத்தகாரியமெல்லாம் கைகூடாது சித்திவிநாயகர்பூஜை செய்திருந்தால் சிறுமையில்லா சுகமுடனே ஜீவிப்பாரே. 29
உரை:—ஆரூடங் கேட்கவந்தவர்கள் உத்திரட்டாதி நக்ஷத்திர மென்றுரைத்தால் அவர்கள் தமது பந்துமித்திரர் உறவினர்க்கும் பகையாயிருப்பதுடன் ஜீவிப்பதற்கிசைந்த உத்தியோகமில்லாமல், வர்த்தகஞ் செய்யாமலும் மனவிசார மடைந்தவர்களாய் புசிப்பதற்குணவில்லாமல் அன்னவஸ்திரத்திற்குப் பஞ்சமாய்சதா
Page 254
நக்ஷத்திர ஆரூட பலன்
காலமும் துன்பமும் துயரமு மனுபவிப்பதற்காகும். எடுத்த காரியம் சித்தியாகாது. ஆகையால் தினந்தோறும் விநாயகர் பூஜை செய்துக் கொண்டிருந்தால் நஷ்டநஷ்டமில்லாமல் சகலரும் துணைவாய் விளங்கி உத்தியோகங் கிடைத்தும், வியாபாரத்தில் லாபம் பெற்றும் வறுமை யில்லாமல் பெருமையாய் வாழ்ந்திருப்பீர்கள் என்றுரைப்பீர்கள்.
ரேவதி நட்சத்திர பலன்
அன்புடனே ரேவதியின் பேரைச்சொன்னால் அஷ்டலக்ஷ்மி கடாக்ஷங்களுண்டு நன்மையுடன் மணங்கூடும் உத்தியோகங்கிட்டும் நாடியதோர் வியாபார லாபமுண்டு பொன்பொருளும் மிகப்பெருகும்புத்திர பாக்கியம் பொறுமையுடன் பந்துமித்திரர் மனையாள் சுற்றம் இன்பமாய் பலநாளும் சகாயஞ்செய்ய இனிமையுடன் வாழ்ந்திருப்பா ரெனச்சொல்வீரே. 30
உரை:--ஆரூடங் கேட்கவந்தோர் ரேவதி யென்று சொல்வாரானால் அஷ்டலக்ஷ்மி கடாக்ஷமுண்டு. அநேகவித நன்மையும் பொருந்தி, உத்தியோக மேன்மையும் வியாபார லாபமும் பெருகி பொன் பொருள் புத்தி நிபுடன், கலியாணம் சுபகாரியம் முதலான நன்மையும் புத்திரபாக்கிய சம்பத்தும், பந்துமித்திரர் சகாயமும் பெற்று சுகசீவியா யிருப்பார்களெனச் சொல்வீர்கள்.
நட்சத்திர ஆரூட பலன் முற்றிற்று.
Page 255
நாலுநாலுபாகமாக பன்னிரண்டு ராசியை பிரித்து ஜெனித்த ஸ்தானம் முதலிய அடையாளங்களைக் குறிப்பிட்டுச் சொல்லும் காக்கயர் நூல் / மேஷம் முதற்பாகம்
மேடமுத லக்கினந்தா னுதயமாவில் விளம்புகிறேன் வடக்குவே வீதியாகும் ஆடமுகுளங்கிணறு மருகேநிற்கும் அந்தமனை யிருந்து கட்டினதேயாகும் நீடியதோ ராவயங்கள் தெற்கேயாகும் நேர்வடக்கு வாலயர மிடிந்துகாட்டும் பாருடன் வீதியிலோர் கணேசருண்டு பாடினே னடியொன்று பரிந்துபாரே.
மேஷம் இரண்டாம்பாதம்
மேடமென்ற லக்கினந்தான் இரண்டாம்பாதம் விளம்பியதோர் கீழ்மேற்கு வீதியாகும் பாடுத்தருளங்கிணறு மெதிராய்த்தோன்றும் பரிவானவாலயமே வாயிலின்றியில் நீடிபதோர்தேர்மேற்கிற் குண்டமொன்று நிறைந்தைந்த வProtocolடக்குமொரு வழியாகும் ஆடையுடனுத்தமனை ராயேயாகும் அதற்கேற்றமண் ணூதனை யறிவித்தோமே.
மேஷம் மூன்றாம்பாதம்
குறியிலிவன்ஜென்னமது மூன்றாம்பாதம் கூறவேன்வடக்குதெற்கு வீதியாகும் சரியாயிருபுறமுந் தடுத்தவீடு தானிருக்குந்தெருவாயிற் கிழக்கே சொல்லும் பெரியகண்ணிநகரமதி லீசன்கோஷ்டம் பேசினேன்மேற்குதிக்கிற் பிலோசன் கோயில் அருகாகவம்மனையிற் சாத்தான்ஏறவன் ஆறருகே தானுண்டா மறிந்துகொள்ளே.
Page 256
மேஷம் நான்காம்பாதம்
நகரதில்நாலாம்பாதந் தன்னிலேஜென்னமானால் புகல்வதுகிழக்குமேற்கு புகன்றிடுத்தெற்குவாசல் மகரசிங்கத்திற்குண்ட மங்கொருகோயில்தோப்பு நிகர்சூலைமேவுஞ்சாத்தா னிருக்குமேகுண்டமொன்றே. 4
ரிஷபம் முதற்பாதம்
குண்டையிவன்பிறந்துவந்த வீதிதனைக் கூறுகிறேன் தென்வடக்கு வீதியாகும் அண்டமெனுமிவன்வாசற் கிழக்கேயாகும் அதற்கருகில் மூன்றாம்வீ டதுவும்வின்னம் பண்டையெனும்தென்கிழக்கிற் றடமேயாகும் பகர்கன்னிபுத்திராத்தி லீரனாழி கொண்டையெனுங்கயல் விழியாய் ரிஷபந்கேளும் கிராமத்திற்குடியிருப்பு கணேசந்துர்க்கை 1
ரிஷபம் இரண்டாம்பாதம்
விடையிவன்பிறந்துவந்த ரண்டாம்பாதம் விளம்புகிறேன் கீழ்மேற்கு வீதியாகும் நடையுடவுவாசலது தெற்கேயாகும் நாட்டுவிறேன் கீழ்மேற்கு கணேசன்குண்டம் படையிவன்மிதுன குலாங்கம்பந்தன்னிற் பாடுகிறாமைம்பன்துர்க்கை மாரியென்று குடையிவன்கும்பத்தில் வாழுந்தெய்வம் கொல்லையிலேகுடியிருப்பா மென்றுகூரே. 2
ரிஷபம் மூன்றாம்பாதம்
புல்விடபமிவன்ஜென்ன மூன்றாம்பாதம் புகலுகிறேன் தென்வடக்கு வீதியாகும் கல்லியுடனவன்வாசல் மேற்கேயாகும் காட்டுவேயத்தெருவிற் கணேசன்கோயில் செல்லுமேமேடமது தனுசுதன்னில் சிவன்சத்திகுண்டமென்று செப்பலாகும் வல்லமையாலிவன்குடும்பந் தன்னில்வாழும் மாதவதுரைவிரினன்று வகுத்துச்சொல்லே. 3
Page 257
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை / ரிஷபம் நான்காம்பாதம்
ரிஷபமே நான்காம்பாதம் நேருடன்கிழக்குவீதி அழகியவடக்குவாசல் அதிலிருகும்பமுண்டு பழகியகிழக்கில் குண்டம் பதிந்திடுங்கோயிலுண்டு அழகியசாத்தான்கோயில் அம்மையாம்வடபுரத்தில்.
மிதுனம் முதற்பாதம்
மிதுனமுதற்பாதமதி லுதயமாகில் விளம்புகிறேன் றென்வடக்கு வீதியாகும் இதரமெனுமிவன்வாசல் கிழக்கேயாகும் இவனிடத்தண்டைசந்து பாழதாகும் மிதுனதில்மேற்கதிலே குண்டங்கோயில் மேவீசன்கீழ்சத்தி கால்வாயொன்று அதன்மேலுமிவனுடைய யாளாந்தெய்வம் அபஜாரமென்றுசொல்லி அறிவித்தோமே.
மிதுனம் இரண்டாம்பாதம்
தண்டிவிவன்ஜெனனமது விரண்டாம்பாதம் தானாதுவேகீழ்மேற்கு வீதியாகும் அண்டியிவன்வாசலது தெற்கேவந்து அதன்மேலேலூட்சியொன்று கோயிலுண்டு கண்டுமிவன் வடதிக்கின் றென்பால்கீழ்பால் காவியொன்றுகால்வாய்நீ ரோடையொன்று கொண்டோடியிவன்றனையே காக்குந்தெய்வம் கூறுமக்கினியாயுவே குறித்துச்சொல்லே.
மிதுனம் மூன்றாம்பாதம்
ஆழியிவன்ஜெனனமது மூன்றாம்பாதம் அதுதெற்கேவடக்குள்ள வீதியாகும் தாழியிவன்றலைவாசல் மேற்கேயாகும் சாற்றினோமக்கினியில் சாத்தான்மாசி வூழியிவன்றேரிர்ப ராசிதன்னி லூற்று கெங்கைசடையணிந்த வீசனில்லம் வாழியிவன்றென்புரத்திற் றேருங்கோயில் வகுத்துரைத்தபுஜண்டருட வாக்குத்தானே.
Page 258
காக்கயர் நூல் - மிதுனம் நான்காம்பாதம்
நல்வீணைராசிதன்னில் நான்காம்பாதம் நாடிவந்தசுதன்வீதி கிழக்குமேற்கு பல்வினையாளிவன்வாசல் வடக்காமில்லம் பாருமதுசொந்தமில்லை பிறர்தன்வீடு சொல்வினையாருசிகும்பம் ஆலையிற்குண்டம் சொல்லுமதிற்சிவன்சத்தி சாத்தான்கோஷ்டம் வெல்வினையாமிவன்குடும்பந் தன்னைக்காக்கும் வேல்மதுரைசொக்கலிங்க வீரன்றானே.
கடகம் முதற்பாதம்
கொண்டலெனவங்கடகமதி லுதயமாகிற் கூறுவேனவன்வீதி வடக்குதெற்கு விண்டவன்றன்வாசலது மேற்கேயாகும் மிவனில்லத்தன்னருகிற் குண்டமுண்டு பண்டலெனுந்துலாங்கும்ப மேடந்தன்னிற் பண்பானகோயில்சக்தி சாத்தான்மாரி விண்டவெனுமிவன்தெருவில் விளங்குந்தெய்வம் வேல்முருகக்கடவுளென விளம்பலாமே.
கடகம் இரண்டாம்பாதம்
நண்டிலுறுஜென்னமது விரண்டாம்பாதம் நாடிவந்தசுதன்வீதி கிழக்குமேற்கு அண்டியிவன்வாசலது தெற்கேயாகும் மனையெதிரிற்சந்துயெதிர் வீடுமில்லை கொண்டவிவன்குடியிருப்பு ரண்டாம்பாதம் கூறக்கினிமேடத்துவாங் கும்பங்குண்டம் வண்டியிவன் வாழுமிந்த வீதிதன்னில் வருஞ்சூழிமதன்கோஷ்டங் கடகந்தானே.
கடகம் மூன்றாம்பாதம்
சேர்க்கையெனுமிவன்ஜென்ன மூன்றாம்பாதம் ஜெனித்துவந்தசுதன்வீதி வடக்கேயாகும் வேர்க்கையிவன்றலைவாசல் கிழக்கேயாகும் மேவதுவாமிதுனத்திற் குண்டங்கோயில்
Page 259
கடகம்
ஆக்கையெனுந்தேம்பூர மைப்பனம்மை வாகைநடைவீதியொன்று கால்வாயென்று சேர்க்கையெனுமாதேவன் புண்டவர்வாக்கை செப்பினதேந்நூல்தனிலே தப்பிறாதே.
கடகம் நான்காம்பாதம்
நன்னிலையன்றாந்தண்டனி னான்காம்பாதம் நாடிவந்தசுரன்றீதி கிழக்குமேற்கு சென்னியெனுமிரண்டுவாசல் வடக்கேபோகும் திகழ்கன்னியரத்தமு மீசன்கோவில் கன்னிபெற்றுத்தர்மகுனம் ஊரிகோஷ்டம் காரரத்தியரசு துண்டங் காளிகோயில் வன்னியவன் குடியவனில் வாழுந்தெய்வம் மதுரையீசன்சதஸ்ஸென்று வகுத்துச்சொல்லே.
சிங்கம் முதற்பாதம்
சிங்கமெனுமிலக்கினந்தா னுதயமாகில் சிறப்பானகீழ்மேற்கு வீதியாகும் பங்கமெனுப்பிதிர்குடும்ப மூன்றுமாகும் பாண்டிலவாசலது தெற்கேபோகும் இங்கேயெனுமிருபுறமுஞ் சந்தேயாகும் இயல்பானமேற்புறத்திற் கோயிலாகும் தங்கவேசியரூகாலந் துணையெகவானாஞ் சற்றுகிழேக்குந்திசையிற் றடாகமுண்டே.
சிங்கம் இரண்டாம்பாதம்
சிங்கமெனுமிலக்கினந்தா னிரண்டாம்பாதஞ் சிறப்பானதென்வடக்கு வீதியாகும் அங்கமிலாதிற்பிறந்த மனையிற்றோட்டம் அம்மனையின்முன்புறமே கட்டியிற்கும் சங்கையறரிஷபகன்னி மகரராசி சாரிற்சிவలిங்கமொன்று வழியொன்று திங்கணிகடகமது லக்கினாதி சேர்ந்திருக்கின் விறல்வீடு தானுண்டாமே.
Page 260
காக்கையர் நூல் - சிங்கம் மூன்றாம்பாதம்
தானாம்புவியிலிவன் மூன்றாம்பாதம் தான்வந்தசுதன்வீதி கிழக்குமேற்கு ஆனவிவன் தலைவாசல் வடக்கேயாகும் அந்தவில்லத்தன்னருகிற் பாழுதாகும் மானகாமேடதனு மீனஞ்சாத்தான் மாகாளிகுலமதனை காக்குந்தெய்வ கானசத்திபாவாடை ராயனங்கே காத்திருப்பாரெக்காலுங் காவலாமே.
காக்கையர் நூல் - சிங்கம் நான்காம்பாதம்
அரிபதனிலிவன்செனனம் நான்காம்பாதம் ஆகிவந்தசுதன்வீதி வடக்குதெற்காய் நலையிலிவன்வாசலது மேற்கேயாகும் சாற்றுகிறோம்வன்வீட்டி லிருபானில்லம் எரிமேடத்துலாமகர ராசிதன்னில் இருக்குமதுசூரிகுண்டங் கோயிலொன்று சரியில்லையிவர்க்கவந்த பெரியதெய்வம் தானடிமையிவனெனவே சாற்றலாமே.
காக்கையர் நூல் - கன்னி முதற்பாதம்
கன்னியெனுமிலக்கினந்தா னுதயமாகில் கனமாககீழ்மேற்கு வீதியாகும் உன்னதமாய்தென்வாசல் மேற்கேகொண்டி யுபுகின்றவாலயமு மெதிரேதோன்றும் மன்னியவர்கீழ்புறத்தில் நீராடும்வாய்க்கால் வாழையுடன் தேங்கமுகு தோன்றும்பாரு மன்னவனாம்பூஜிண்டரவ சொன்னதாலே வளமறித்துதிடமுடனே வரையலாமே.
காக்கையர் நூல் - கன்னி இரண்டாம்பாதம்
தெரிவையெனுமிலக்கினந்தா னிரண்டாம்பாதம் செனித்துவந்தசுதன்வீதி வடக்குதெற்கு அரிவையெனுமிவன்வாசல் கிழக்கேயாகும் அவ்வில்லத்தருகிற்குண்டம் எதிரேவன்னி
Page 261
பெரிய ஜோதிட சில்லரைக் கோவை
ரிஷிவெனுந்தனுமீனம் வடக்கேசாத்தான் சாதுகன்னீசனிவ்வுங் கிழக்கேகுண்டம் கருதிவன் குலங்காக்குங் கருப்பன்மாரி கதித்தபஞ்சபாண்டவர்க்கே சகாயனென்னே.
கன்னி மூன்றாம்பாதம்
சேதிதனிற்ஜெனைமது மூன்றாம்பாதம் ஜெனித்துவந்தசுதன்வீதி கிழக்குமேற்கு பாடியிவன்சில்லமதுக் கருகிற்சந்து பகருவேன்றலைவாசல் வடக்கேயாகும் ஆடியதோரம்பலவன் கணேசன்கோயில் அதுமகரமேடசிங்க மறிந்துகொள்ளு கூடிவன் குடும்பத்தைக் காக்குந்தெய்வங் குணவீரனென்றுமிவை கூறலாமே.
கன்னி நான்காம்பாதம்
கையதனிற் கனலேந்துங் கன்னியென்றும் காணியிந்தசுதன்வந்த நான்காம்பாதம் வையமிவன்வீதிப்பது வடக்குத்தெற்கு வளமான தலைவாசல் மேற்கேயாகும் செய்யயிவன் மனைக்கருகிற் சந்துமுண்டு செப்புகிறேன் கீழ்மேற்கு குண்டங்கோட்டம் மெய்யிலிவன் குலங்காக்குந் தெய்வமல்லா மேல்வடக்குத் தெற்கிலொரு கோயிலுண்டே.
துலாம் முதற்பாதம்
சீரானதுலாமதிலே தோன்றுமாகில் சிறப்பானகீழ்மேற்கு வீதியாகும் பேரானவடவாசல் மேற்கேகோயில் பெரிதான கொல்லையிலே புளியனாத்தை ஆரானகுலைமெட்டில் குடும்பந்தன்னில் குண்டமாங்கோயிலென்று குறித்துச்சொல்லு ஆரானயிவன்குலத்தை யாளுந்தெய்வம் ஆடுபன்றிகோழிகொல்லும் மாண்டவன்றான்.
Page 262
நாடியார் நூல் - துலாம் இரண்டாம்பாதம்
கோலமிதிவிவன்றியையா மிரண்டாம்பாதம் குறித்துவந்தவுல்லீதி கிழக்குதெற்கு ஏலவிவன்றலையாரமுய்த்தாருயர் இருபுறமுமில்லையி ழ்ந்கேயுண்டாம் சாலதணர்கடகதம்பாஞ்சாத்தன்மாரி சாற்றுவேன்யே நீரிறைவேன் கோட்டம் வேலவனாங்குலமரவே யர்க்குத்தெய்வம் வெரித்தகள்சூரவுடைமின்புவோனே.
துலாம் மூன்றாம்பாதம்
செட்டியெனுமிவன்றோன்ற மூன்றாம்பாகம் ஜெனித்துவந்தவுல்லீதிகிழக்குமேற்கு திட்டியெனுமிவன்வாசற்றெற்கேயாகும் தேள்மீனமேவுமன்னனங்கள் கோட்டம் வட்டியெனும்வாசலிலே மரங்களுண்டு வளர்மேவும்தலோகமும் நண்டஞ்சுழி கட்டியிவன்குலமரவேயர்க்குத்தெய்வம் காளிசத்தியையுடையாளென்றே.
துலாம் நான்காம்பாதம்
வணிகனெனுமிரத்தளினான்காம்பாதம் வந்துதித்தவல்லீதிவடக்கேயாகும் அணிகலனுமோர்வாசற்றெற்கேநொப்பு அந்தமில்லாதவிறிசம் தடுத்துபாரு குணிகடகந்தனுர்மேவுங்கோயிற்குண்டம் கூறுமிவன்தெற்கிருந்துகாளி கணிகனெனுமேலதுவந்தேயர்க்குத்தெய்வம் காத்தவுனாமாரியென்றுங் கருதிச்சொல்லே.
விருச்சிக முதற்பாதம்
அறிவதென்னவிருச்சிகத்தானுதயமாகில் அப்பனே கீழ்மேற்கு வீதியாகும் தெரிவதென்னதென்வாசல் மேற்கேகேயில் செப்புகிறேன்மேற்புறத்திற் றடாகமென்று
Page 263
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
திரிவதென்னகீழ்புற நீரோடுவாய்க்கால் ஸ்திரமாகமரமுண்டு வறிந்துகொள்ளு பிரிவானவடபுறத்திற் பிடாரிகோயில் பேரானபாட்டையொன்று தோன்றும்பாரே.
விருச்சிகம் இரண்டாம்பாதம்
பத்துடையதேளில்வந்த விரண்டாம்பாதம் பாருமிவன்செருவீதி வடக்குத்தெற்கு கொத்துடனே யிவன்வாசற் குறியேமேற்கு கொல்லையினிற் குலதெய்வங் குடியிருப்பாம் கத்துடையகூக விருச்சிகமீனத்தில் காவிதண்டங்கால்வாய் நீரோடுங்கோயில் சத்துடைய இவன்வீட்டிற் நிருபாவில்லம் சாற்றுகிறேனேனுங்கண்ணி சாத்தான்மாரி.
விருச்சிகம் மூன்றாம்பாதம்
தேளதனிற்தெருக்காவிற் மூன்றாம்பாதம் செனித்துவந்தசுதன்வீதி கிழக்குமேற்கு ஆனவில்லமிவன்வாசல் வடக்கேயாகும் அதுசந்துக்கடுத்தவீ டதுவுமாகும் மீளனெனுமேடசிங்கங் கால்வாய்த்தோட்டம் மிகமகரங்கன்னிகுண்டங் கோயிலாகும் கோளனெனுங்குலதெய்வங் குடியன்வீரன் கொல்லையிலே குடியிருப்பா னென்றுகூரே.
விருச்சிகம் நான்காம்பாதம்
விட்டதொருதேளதனி னான்காம்பாதம் விளம்பிவந்தசுதன்வீதி வடக்குதெற்கு கிட்டியிவன் றலைவாசற் கிழக்கேயாகும் கேளிருவர் பாரமுமாய் குடியிருப்பு தொட்டடனூர்மேடகுண்டஞ் சத்தியோகம் சொல்லுமதி யீசன்பரி யீசானியத்தில் கட்டியிவன்குடியைநிதங் கார்க்குந்தெய்வம் கருப்புச்சச்சைகட்டுகிற வீரன்றானே.
Page 264
காக்கயர் நூல் - தனுசு முதற்பாதம்
தனுசு லக்கினமேயாகிற் றகமையாங்கிழக்குமேற்கு மனையுடன்மற்றவாசல் மருவியேகாட்டிரண்டாம் அனுதினம்பூசைசெய்பு மரன்கோயில்மேற்கேயுண்டு கனமதாய்தெற்கில்தோப்பு நாவிரும்பானுண்டாமே.
தனுசு இரண்டாம்பாதம்
விண்ணதிலில்லெனமது ரெண்டாம்பாதம் விளங்கிலத்தசுதன்வீதி வடக்குத்தெற்கு சொன்னதொருமேல்வாசல் மீதுனகுண்டம் குமுமதின்காவியொன்று கால்வாயொன்று அன்னதொருமேடதுலை யயினார்கோவில் ஆனதொருவீதினில் மதவேள்சாதி இன்னவன்றன்குலமதனைக் காக்குந்தெய்வம் இருவகுப்பாமென்றெடுத்து வியல்பாய்ச்சொல்லே.
தனுசு மூன்றாம்பாதம்
சாண்டிபம்வந்திவன்ஜெனன மூன்றாம்பாதம் காணவத்தசுதன்வீதி கிழக்குமேற்கு ஆண்டபிலன்றலைவாசல் வடக்கேயாகும் அதனருக்கிற்ஐயனார் சத்தியாகும் பூண்டதுவுமேனாதிற் குண்டங்கோஷ்டம் புகழானசிலதானிற் றருக்களுண்டு ஆண்டபிலன்குலதெய்வ மயன்காளி ஆகியவனுமெனவே யறியலாமே.
தனுசு நான்காம்பாதம்
கார்முகத்திலிவன்ஜெனனம் நான்காம்பாதம் காணவத்தசுதன்வீதி வடக்குத்தெற்கு ஏர்முகத்திலீவன்வாசற் கிழக்கேயாகும் எதிர்வீடுபொழுனவே யிருக்குஞ்சூழி பேர்முகத்தில்மேஷகன்னி துலையிற்குண்டம் பேசலாமரங்கோஷ்ட மீனங்கால்வாய் கார்முகத்திலிவனடியைக் காக்குந்தெய்வங் கெலுவீரனாமவனைத் தெரிந்துகொள்ளே.
Page 265
மகரம் முதற்பாதம்
மகரலக்கினமேயாரின் மருவியகிழக்குமேற்கு அகமதுதெற்குவாச லதற்கெதிர்சந்துமுண்டாம் ஜெகம்புகழ்கோயில்மேற்கு செப்புநீர்சூளமுமுண்டு வகையுடன்மரங்கள்சூழ்ந்த வரிசைகள்தானுண்டாமே.
மகரம் இரண்டாம்பாதம்
கேதுவெனும் லக்கினத்தாரிரண்டாம்பாதம் கேடுறாமைந்தன்வீதி வடக்குத்தெற்கு வாகுருத்தலைவாசல் கிழக்கேயாகும் வந்தவில்லம்மூன்றிலோர் பங்குமாகும் பாதுதலைமேலைதுண்டு மகரமீனம் பாரிதிலே கோயிலொன்று பகரலாகும் வேதியன்றன்குலங்காக்குந் தெய்வமாங்கே வேன்மதுரையீரனென்றே விளம்பலாமே.
மகரம் மூன்றாம்பாதம்
மான்கலையிலிவன்செனன மூன்றாம்பாதம் வந்துதித்தோன்வீதிபது கிழக்குமேற்கு வான்கலையிவீணடவாசல் வடக்கேயாகும் மானருண்டமேலைமூலை மகரமாகும் ஒன்கலையிலிரைபகன்னி மகரந்தன்னி கோதுகங்கைசடை யணிந்தோ ரீசனையன் என்கலையைக்குலங்காக்குந் தெய்வந்தேனா டென்ன பெரியாண்டவன்றன் பத்தியாமே.
மகரம் நான்காம்பாதம்
புல்வாயிலிவன்ஜெனம் நாலாம்பாதம் பொருந்திவந்த சுதன்வீதி வடக்குத்தெற்கு மெல்வாயின்கலைவாசல் மேற்கேயாகும் மேனாமாந்துலைமகரங் குண்டங்கோயில் பல்வாயிலிம்மனையோ விரண்டுபாகம் பாரதற்குமெதிரில்லம் பாழதாகும் சொல்விவன் குலதெய்வ மையன்சத்தி சூழ்பெரியாண்டவன்றன் பத்தியாமே.
Page 266
காக்யர் நூல் - கும்பம் முதற்பாதம்
கும்பலக்கினமேயாகிற் குலவியவடக்குத்தெற்கு சம்பிரமாம்கிழக்குவாசற் றடாகமுங்கீழ்மேலுண்டு கும்பலாயாகமேற் த கூறியகிணறுமுண்டு இன்பமாய்விஷ்ணுகோயி லிருந்திடுந்தப்பீரதே.
கும்பம் இரண்டாம்பாதம்
கொட்டுகும்பலக்கினந்தா னிரண்டாம்பாதம் கூறிவந்தசுதன்வீதி கிழக்குமேற்கு தெட்டலிவன்றலைவாசல் மேற்கேயாகும் தேன்கடகமாரகன்னி ருண்டங்கோயில் வட்டலிவன்சென்றிங்கில் வடபால்மேலே மனையிடிந்துகலைந்துநிற்குங் கண்டுகொள்வாய் தொட்டனிவனதற்கப்பால் மனையும்பழமாம் சொல்லுமிலங்குவதெய்வந் துர்க்கைவீரன்.
கும்பம் மூன்றாம்பாதம்
செடூதனில்ஜெணனமது மூன்றாம்பாதம் ஜெனித்துவந்தசுதன்வீதி வடக்குதெற்கு வெட்டினிற்தலைவாசல் மேற்கேயாகும் மேவுதுலைதேஸ்தானத்துக் குண்டங்கோயில் பொட்டிவிவன்பிறந்தமனை சொந்தமல்ல பேசுமனையலார்ரன் குடியிருப்பு குட்டிலிவன்குடிவிளக்குந் தெய்வங்கேளு கொடியபெரியாண்டவனுங் கூறுவாயே.
கும்பம் நான்காம்பாதம்
குடமதனில்வன்ஜெணனம் நாலாம்பாதம் கூடிவந்தசுதன்வீதி கிழக்குமேற்கு வடமதனிற்றலைவாசல் வடக்கேயாகும் ஆனதொருகொல்லையிலே சூழிபத்தும்
Page 267
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
இடமதனில் சூலைமர மிரண்டுசூழி பெதிர்த்ததொரு தேன்மிதுன மீசன்கோயில் வடமதனில் வாழுமிவன் குலதெய்வந்தான் வாழ்சத்திரீரன்முனி யென்றுசொல்லே.
மீனம் முதற்பாதம்
மீனத்திற்றோன்றியவன் முதலாம்பாதம் விளங்கவந்தசுதன்வீதி கிழக்குமேற்கு தானமதிலமர்ந்திருக்கும் வடக்குவாசல் தன்னிலோர்குண்டமென்று சார்த்திருக்கும் ஆனதொரு கன்னிகுண்டங் கோயிலொன்று அக்கினியில்வடகுண்டு சாத்தான்மாரி கானயிவன்கருவலத்தைக் காக்குந்தெய்வங் கண்டுசொல்லு பொம்மியம்மன் வாழுநாமே.
மீனம் இரண்டாம்பாதம்
சேலுடையமீனத்தி லிரண்டாம்பாதம் ஜெனித்துவந்தவிதிபது வடக்குத்தெற்கு பேலுடையயிவன்வாசற் கிழக்கேயாகும் யென்றசூலைமரக்கன்னி குண்டங்கோயில் மேலுமிவன்பிறந்தமனை சொந்தமல்ல மேற்றிக்குவடுத்தமனை காலிகுழி காலுமிவன்கருப்பத்திற் காத்தான்தெய்வம் கண்டுசொல்லுங் காக்கையர்தன்வாக்குந்தானே.
மீனம் மூன்றாம்பாதம்
செங்கையெனும்கெண்டையதின் மூன்றாம்பாதம் தேறுமந்தசுதன்வீதி கிழக்குமேற்கு அங்கையிவன்றலைவாசற் றெற்கேயாகும் ஆன சூலைமரக்கன்னி கோயிற்குண்டம்
Page 268
காக்கயர் நூல்
மங்கைதருமேடசிங்க மங்கேகோஷ்டம் வாசமின்னங்குடியிருப்பு சந்துவங்கே இங்கேயிவன்குலதெய்வ மென்னவென்றால் ஈதுபெரியாண்டவனென் றியம்பலாமே.
காக்கயர் நூல் - மீனம் நான்காம்பாதம்
மீனமெனுமிலக்கினந்தா னான்காம்பாதம் மீண்டுவந்தசுதன்வீதி வடக்குத்தெற்கு ஆனயிவன்றலைவாச லதுவுமேற்கு அந்தவில்லத்தனக்குக்கீழ் மேற்கிற்குண்டம் வானகன்னியிடமேற்கிற் கோயிலொன்று வரும்வழியில்வாவியொன்று மருந்துச்சொல்லு தீனமிவந்தெய்வமது தெற்கேயுண்டு செல்லக்காளென்றுமதை தெளிந்துசொல்லே.
காக்கயர் நூல் முற்றிற்று.
Page 269
காக்கயர் வாக்கியம்
கரிபவன்ஐந்தில் கனகரும்சேயும் காணவே மூன்றினிலமர பரிதியும்புதனும் பதிந்திடவாக்கில் பன்சசிரவமே வியமாய் வரிபுகர்மந்தி யுயிர்தனில் அமர வழங்கிய கேதுவாறில் குரிபெனவுயிரும் கயிலெனப் பகர்வோம் குறித்திடும் அம்சமும் தனுசே.
காக்கயர் வாக்கியம்
தனுசெனமந்தி வரவுமே வியத்தில் தன்சனிவாபத்தி லமர அனுமறைதேசத்தில் ரவிபுகர் நவமாய் அன்புடன் புதன்சசிமூன்றில் கனுயெனசேயும் ஐந்தினிலாகிக் கதித்திடும் சிசியவனாலாய் பனுவெனப்பிறந்த ஜாதகர்தனக்கு பற்றியபலனது பகரே.
காக்கயர் வாக்கியம்
பகரிரனிறமும் கருப்பினிக்சமணாம் பற்றியபகரமே யுள்ளான் நிகரெனகந்தன் நின்மனக்கலடி நிலமதில் யோகவானாகும் அகரெனப்புவியில் வாணிபசுகஸ்தன் வழங்கிய முகவாணிவரஞர் துகரெனத்துன்ப வினைகளுமில்லான் துற்பலங்கொடுத்திடச் செய்வோன் வகரெனவம்பு வழக்குரைப்பேன் வார்த்தையால் இஷ்டத்திற்குகனே.
காக்கயர் வாக்கியம்
கனெனப்பிறந்த ஜாதகர்தனக்கு சகமதாய் துணைகளுமில்லான் இலமதில்கன்னி துணைபதுவேகம் இருப்பெனப்பகர்ந்து இவர்க்கு அகமதிற்சுசுங்கள் மிகுதிரமுள்ளான் அன்புடன் பிதாபொருள் குறைவோன் ஜெகமதில்துணைபோல் இருந்தவன் நிதியும் செப்பிய இவர்க்குவதுவாமே.
Page 270
காக்கையர் வாக்கியம்
பெலமதால்யோகம் தீர்க்கமென்றுரைத்தோம் பிற்பலச்செயல்களு முடையான் குலமதால்சுகமும் ராகுவின் திசையில் குறித்தனர் பலவினையிலூர்ந்து அலமெனச்சுகமாம் மறைபவன் திசையில் அன்புடன் தனதுள்ளதனில் சலமெனத்தருக்க்குறைவென உரைத்தோம் சாத்தியசனி புதனூனே.
காக்கையர் வாக்கியம்
ஊனென அதனில்பலன் சமனுரைத்தோம் உகந்திடும் தனமிர்த்துகுறைவும் கானெனமனமும் ஏற்கையையணுகா காட்டிய சிவிபுகரிலீரூன் ஆனென இவர்க்கு தந்தையர்மரணம் அன்புடன் மனமதிலக் குறைவும் வானெனப்பொருளும் மற்றவராலே வந்துமே யணுகிடுமிவர்க்கே.
காக்கையர் வாக்கியம்
இவர்க்கென அதுவால்சுகங்களும்மேலாம் இன்பமா யோகமுமமையும் பவர்க்கெனபாக்கிய வழிதனில்சுகமும் பற்றிய வாணிபயோகம் நவர்க்கெனமேன்மை வரவரத்திரமாம் நம்பிய செயல்களுங்காட்டும் அவர்க்கெனசுகங்கள் சேயாயூணில் அன்புடன் பலமதுவுரையே.
காக்கையர் வாக்கியம்
உரைான இவர்க்கு யோகமும்சுகமாம் ஊரத்திடும் வரவதால்மேன்மை காரெனத்தருஉ சனிதிசையதனில் காட்டிடசுகமுடன் ஏற்கை திரையெனச்செல்வம் உண்டிடவுங்காண தீர்க்கமாய் புதன்சிவிபுகரூண் வரை எனமேன்மை விவாகமுமிவர்க்கு வழங்கிய இஷ்டங்கள்சுகமே.
காக்கையர் வாக்கியம்
சுகமதில்மேன்மை வரலினால்சிலவும் சொல்லிய இயற்கையர்மேலாம் அகமதில்சுகமும் அணுகிடுமிவர்க்கு அன்புடன்ரவி சசிசேயூன்
Page 271
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
வகரென அன்னை மரணமுங்காட்டும் வழங்கிய அலைச்சலுமிவர்க்கு வகமெனவம்பு பலமது அணுகா வந்திடும்லாபத்தில் சமுனே.
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
சமனெனில்சுகமாம் மறுமணமுரைத்தோம் சாற்றிய அரவினான்வரையாம் பமென இவனும் ஜென்மமுன்னதனில் பாக்கிய பலனிலாதவனாம் அமனெனசிவனின் அருளினாவிவர்க்கு அன்புடன்ஜென்னமும் இதுவாய் கமனெனப்பொருளும் கன்னியால்கிடைத்து காட்டிய இருமணமுறையே.
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
உரையென அதுவும் தீரமெனப்பகர்ந்தோம் உதவிடும் வாணிவாணிபமும் நிரையெனப்புதல்வர் மூன்றுடன்கன்னி நிற்குமென்றுரைத்தனர் இவர்க்கு தரைதனில்பலன்கள் மேன்மையையடைவன் தன்மையாய் மறைவவனுணில் குரையெனத்தருகா புதன் திசையதனில் குறித்திடும் தனகுரான்பகரே.
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
பகரென அதனில் பீடையும்விலகும் பற்றிய சிகிபுகரவியூன் லுகரெனத்துன்ப வினைகளுமணுகா துரினோடும் வாணிபலாபம் தகரெனபாக்கிய வழிச் சிலவுண்டாம் தங்கிய ரவிசசியாலூன் அகரெனமேன்மை அணுகிடுமிவர்க்கு அதில்மறைபூணினில் அழிவே.
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
கரியவன்சசியும் அரவுர ரண்டில் கனகனும் சேயுரயெட்டாய் பரிபவன்ஆரில் பண்டிதன்புகரும் பதிந்திட கோவினிற்பீடையாய் குறிசிதெசத்தில் மாந்தியும் கயலில் கூறியிளியென அமைத்தோம் வரியென அம்சம் ரெட்டையாம்அரவும் வாழ்ந்திட அரியெனபகரே.
Page 272
காக்கையர் வாக்கியம்
பகரிசையிந்தில் குருவுமேதேளாய் பானுவும் வியத்தினில்அமர நிகரிசனிமாநதி கயனினில்பென்றேம் நின்சுகி சேயவன்குடத்தில் துகர்புதன்பெட்டில் சுக்கிரன்தனுவாய் துலங்கிய சாதகன் தனக்கு சுகர்நிசமன்போல் ஆகுமென்றுரைத்தோம் அமைத்திடும் விவேகமுள்ளவனே.
காக்கையர் வாக்கியம்
உள்ளவன்சிலாக்கியன் மிகுமனதுபிரியன் உகந்திடும் செல்வநாமென்றேம் வள்ளலேசிலாக்கியன் வரவரயோகன் வார்த்தையில் வித்தாரனாகிவாவும் தெள்ளெனஅரசர் செயலுளதிரகான் செகத்தினில் கீர்த்திவானாவன் கள்ளமனத்தன் வாகனயோகன் கருவத்தில் சிறந்திடுமகனே.
காக்கையர் வாக்கியம்
சுகமெனக்கல்வி மூன்றெனஉரைத்தோம் சூட்டியஅரசர் நன்மதிப்பும் இகமதில்அதுவும் மிகதிரமாகும் இயற்கையாய் துணைகளும்பகர்வேம் தகமெனத்துணையும் ரெண்டுமேதீர்க்கம் தங்கிடும் கன்னிரெண்டுடனே வகமெனமறுதாய் வழதினில்துணையும் வழங்கிடுமிவற்றுமே உரையே.
காக்கையர் வாக்கியம்
உரையெனவிவனும் சனிதிசைதனனில் இன்பமாய் அரவுணூணுதிப்பன் நிரையெனபீடை காட்டியேவிலகும் நின்றிடும் மரையினூணதனில் துரையெனத்துன்பம் வந்துமேவிலகும் துலக்கிய புதன்திசைதனதில் கரையெனகுடும்ப பலன்மிகஅணுகா காட்டிய சிகியுகரூணில்.
காக்கையர் வாக்கியம்
ஊணினில்சிலாக்கியம் உயர்வுமேகாட்டும் உகந்திடாபிணிவர விலகும் காணணகாரிய குடும்பத்தில்வரவாம் காட்டிய கல்வியும்யேற்கும் 34
Page 273
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
பூணைபிரபல வாணிபமுயற்சி புகழ்ந்திடும் யிட்டங்கள் முதலாய் வேணையோகம் ரவிரவிசேபூண் வேண்டிய மணமதுபிலமே.
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
மணமதுபிலமாம் களத்திரத்தால்யோகம் மார்க்கமாய் பிதாஇனிடரைத்தோம் குணமுளசேர்க்கை பணிமரையூணில் கூறினோம் அரசரின்முயற்சி சணமதில்தாயும் மரணமும் அடைவன் சஞ்சலம் காட்டுமாமிவற்கு ரெணமதுகருகா மேலதாய் யோகம் வுரைத்திடும் விவாகமொன்றுரையே.
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
உரையெனமேன்மை சனியின்ரூனதனில் உகந்திடும் கேதுவின்திசையில் நிரையெனசெல்வம் மேலதாய்புரும் நின்றிடும்சென்ம முன்னிவனும் நிறையெனசேது நாட்டினில்மறையோன் நின்றிடும் குலத்தில்செனித்து வரையெனசெய்த கொடுமையினதுவால் வழங்கினன் யிரிகுலத்துதித்தே.
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
உதித்துமேசெய்த நன்மையின்பயனால் உகந்திடும் சோழநாட்டதனில் கதித்துமேகலையின் வாணிபமுடைய காட்டியபிதாவிடம் செனித்த நுதித்துமேயோகம் மிகுதியாய்அடைவன் துலங்கியகுடும்ப தோஷத்தால் விதித்துமேதந்தை தனக்கிருதாரம் விளங்கிடும் தனக்குமவ்வழியே.
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
வழியெனரெண்டு தாரங்கள்தனக்கு வழங்கிடும்புத்திரர் தாசுகாம் கவிபெறரன்னி சரண்டிநுதீர்க்கம் காட்டினர்சென்மத்தின் வினையாம் வழியுடன்பகன்ரேன் நிசைதனலூணில் வழங்கிடும்பிதாவுமே அழிவன் அழிவிலாயோகம் அரசசந்தோஷம் அவனியில்மேலதாய்ப் பகரே.
Page 274
காகபுசுடர் வாக்கியம்
பகரெனபாக்கியம் நிலம்பொருள்சேரும் பற்றியசேய்சசி அரவுமா நிகரெனசிம்மா சனமுதலுரைத்தோம் நின்மறுதாயுமே அழிவர் துகிலிலாசெல்வம் அடைவனாமிவனும் தூரிணோம் மரைசனியூணில் அகரனபுவியில் தாரமொன்றொழியும் அமைத்திடும் புதன்சிகியூனே. 28
காகபுசுடர் வாக்கியம்
ஊனினில்அரசர் பிட்டங்கள்யேற்கும் அவனியிக்வெல்வர் பகையும் காணனபொருளும் செலவுமேஉரைத்தோம் காட்டியாநிதிசை யதனில் பூணனபிரபலம் மேலதாஅணுகும் புகட்டியபணிமரை சனியூன் ஆணனபுகரேண் ணண்வரஆவி அந்தகன் பதிக்கொனப்பாரே. 24
காகபுசுடர் வாக்கியம்
கரியவன்மாந்தி வாக்கினிலமர கனகெனும் எட்டினில்மரைவாய் பரிபுதன்மரியில் பாச்க்கரவங்கயலாய் பாழ்சிகி ஐந்தினில்பிலமாய் சூரிசசிவிபத்தில் சேய்பணி எருதாய் சூரஉயர்கடகமாய் அமைத்தோம் வரினஅமுசம் கோலென அதனொன் வத்திட சாடியென்றுரையே. 25
காகபுசுடர் வாக்கியம்
உரையெனசனியும் கன்னியிலமர உகந்திடும் சேய்புதன் அரியில் நிரை என எல்லி மூன்றினிலமர நின்ரசி ஆறினில் மவரவாய் கரை எனபணியும் கனகெலும் எட்டில் கரிமகன் சிகியுரவாக்கில் துரைஎனக்கோட்கள் அமைந்த சாதகனுக்கு துலங்கிய திரம்சுகமிவர்க்கே. 26
காகபுசுடர் வாக்கியம்
இவர்க்கென ஏக்கை மிகுந்தயோக்கியனும் இன்பமும்ஞாணிக அமைத்தோன் தவர்க்கெனதுயிர ஸ்கிரீவழிகலனன் நம்பலாம் யோக்கியனென்றியவே
Page 275
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
துவர்க்கென துன்ப வினைகளுமில்லான் துர்மனகவடுகள் தருகா அவர்க்கென மேன்மை பரிபதல்லுறவால் அரசனின் இஷ்டனென்றுரையே.
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
உரை எனத்தந்தை பொருளது உள்ளான் உகந்திடும் துணைகளும் இவர்க்கு நிரைஎனரெண்டு தீர்க்கமொன்றுரைத்தோம் நிலைத்திடுங்கண்ணியும் அதுவாம் வரைபெனமற்றோர் தாய்தனிற்துணையும் வழங்கிடுமிதன் றன மிவர்க்கு அரைஎனுபுவியில் பிரபுவென் றுரைத்தோம் அன்புடன் திசைபலபகரே.
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
பகரென அரவோன் திசைபுக லுணில் பாரினில்ஜெனிப்பனாம் இவனும் நுகரெனசுகங்கள் சமனதாய்காட்டும் துலங்கிடும் ரவிசெய்சேயுன் திகரெனகுடும்ப வரவுகள்சமனாம் நின்றிடும் மறைதிசையதனில் அகரெனகண்டம் காட்டியேவிலகும் அதின் பலம் உயர்வெனச்சுகமே.
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
சுகமெனசவுரி புதசிகினணில் சூட்டினோம் உயர்ச்சியும்மேலாம் நிகரெனகாளு யோகத்திவிவர்க்கு நின்றிடும் புகரவிபூணில் வகரெனக்கெட்டி மனைவர உண்டாம் வழங்கிய சேய்சி அர வன் அகிரெனசேர்க்கை மேலதாங்கல்வி அமைந்திடும் மனமது பெலமே.
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
பிலமெனயோகம் பிதாபல்வரவாம் பிரியமாய் முயற்சியில் கவனம் அலமிலாபெற்ற அன்னையுமடிவள் அன்புடன் சனிதிசைநனதில் சமமிலாசுகமும் பெருத்தவாணிபமாம் வழங்கிடும் கட்கரையதனில் குலமெனசேர்க்கை மிகுபொருள் உயர்வாய் கூறினோம்புத்தி யணிவர்க்கே.
Page 276
காக்கயர் வாக்கியம்
இவர்க்கெனமேலாய் வாணிபமுயற்சி இயம்பினோம் சிகிபுகர்ரவியூண் நவர்க்கெனப்பொருளும் மேலதாய்லாபம் நாட்டினபிதாவுமே அழிவன் ஒவர்க்கெனபலமும் உயர்வெனபகர்ந்தோம் துலங்கிய ஜென்மமுன்னிவனும் அவர்க்கெனபாண்டி இழிகுலத்துதித்து அன்புடன் சிவந்தனைப்பணிந்தே.
காக்கயர் வாக்கியம்
பணிந்திடும்செயலால் சோழநாட்டினில் பக்குவ நற்குலமதனில் துணிவுடன்வாணி வாழியமைந்த துலங்கியபிதா முதல்மனைவிக்கு அணியெனத்துதியா புதல்வனாய்உதிப்பன் எழியெனஇவனும் முப்பிறப்பதனில் காட்டினோம் செய்ததைக் கேளே.
காக்கயர் வாக்கியம்
கேளெனமிகுந்த அரசதைசெலுத்தி கெட்டினன் சூலைமுனிவனும் நிரலெனஅந்ததோஷத்தால் இவர்க்கு நிச்சயம் புத்திரதோஷம் ஆணைஅதுவும் விலகிடநீயும் அன்புடன் சேதுவில்மூழ்கி சூலெனதினத்தால் ஓமமும்செய்தால் சுருக்கமாய் ஏகபுத்திரனே.
காக்கயர் வாக்கியம்
ஏகபுத்திரனாம் இச்சென்மத்திலிவர்க்கு இயம்பினோம் மறுபிறப்பிலவனும் பாகமாய்மேலோர் குலத்தினில்ஜெனித்து பரகதிஅடைவனாம் இவனும் தாகமாய் இச்சென்மத்திலிவர்க்கு தங்கியசேய்சி அரவோன் யோகமும்மேலாய் உரைத்தனர்தலமாய் உயர்த்திடும் நிலசுகமனையே.
காக்கயர் வாக்கியம்
மனைமுதல்கட்டி கடனுடன்வரவும் மார்க்கமாய் தூரத்தில்அலைச்சல் வினையதுஅணுகா நஷ்டமும்காட்டும் விளங்கிய புத்தியின்திசையில்
Page 277
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
அலைபெனத்தனது சிகியுரவிபூண் அதின்பலன் சமமெனபகர்ந்தோம் கலைஎனச்செல்வ வாணிபலாபம் காட்டியசேபா னனே.
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
ஊனினீர்க்கட்டு வாணிபநஷ்டம் உகர்ந்திடும் வழக்குகள்சிலவும் கானெனச்சுசுங்கள் ஏத்திடுமிவர்க்கு காட்டியமரை சனினணில் வானெனப்புவியில் ராஜயோகமுமாம் வழங்கிய சிகிதிசையதனில் பூனெனச்சனிபோன் ஊண்வரஆயி புகுத்திடும் எமபதிதனக்கே.
பாக்கியர் வாக்கியம் முற்றிற்று.
Page 278
நவக்கிரக கோட்சார பலன் - கொம்மைப் பாட்டு
சூரியன்
சூரியனொன்று நாலைந்தைழெட்டுச் சுகமிலொன்பது பன்- னிரண்டில், வீரியமாக நின்றால் விபரீதம் விளைக்குமே நிதம் மானிடரே. 1
நவக்கிரக கோட்சார பலன் - கொம்மைப் பாட்டு
சந்திரன்
சந்திரனிருநான்கா றெட்டுவியத்தில் நானேகதித்து நின் றாக்கால், மந்திரவாதி வாயடங்கினாற்போல மாறுமே பலன்கள் மானிடரே. 2
நவக்கிரக கோட்சார பலன் - கொம்மைப் பாட்டு
செவ்வாய்
செவ்வாயொன்றிரண்டு நாலெட்டிப்பத்தில் ஏழும் வியா யத்திலிருந்தால், எவ்வாறோபிள்ளை பெண்சாதி பெற்றோரிடத் திசையாதென்னாவு மானிடரே. 3
நவக்கிரக கோட்சார பலன் - கொம்மைப் பாட்டு
புதன்
புதனோர்மூன்று நான்காறெட்டு தசம்பியத்தில் பொல்லா ரோடுதானிருந்தால் இதமிலையெந் நேரமுந்துக்க மெழும்பு மென்றுணர் மானிடரே. 4
நவக்கிரக கோட்சார பலன் - கொம்மைப் பாட்டு
வியாழன்
குருவேயொன்றுநான் காறெட்டுமூன்றில் கூடிபபத்துப் பன் னிரண்டிலிருந்தால், உருவேயில்லையென் றோதினோர் முன்னோர் உற்றுக்கேள்நிசமே மானிடரே. 5
நவக்கிரக கோட்சார பலன் - கொம்மைப் பாட்டு
வெள்ளி
சுக்கிரன் மூவாறே ழொன்பதாறில் தொகையாயிருந்தா லிந்தபலன், அக்கிரமமு மழுகையு மவமான மாகுமென்றாரே மானிடரே. 6
Page 279
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை / ரவி
சனிபோரிருநான் கெட்டுதசம் வியத்தில் சவிப்புடனேதா னிருந்தால், இனிபிசாசு பூதப்பேய் கருப்பன் ஏவலாம் சத்துரு மானிடரே. 7
இராகு கேதுக்கள்
ராகுகேதுக்கொன் றிரண்டெட்டு நவமுடன் விரயத்திருந் தால், பாகுசேர் மொழியாள் பயித்தியத்தால் பாடியாடுவரே மானிடரே. 8
இராகு கேதுக்கள்
மற்றவிடத்திற் கிரகங்களிருந்தால் மாளாத செல்வமும் யோகம் வரும், முற்றந்துறந்த முனிவர் சொன்னாரிதை முறை மையாப்பார் மானிடரே. 9
இராகு கேதுக்கள்
நீசமென்றுநீ தள்ளாதே நிலையுச்ச மனங் கொள்ளாதே, நீசனிருந்த வீட்டா னுச்சமானால் நிலைக்குமே யோகம் மானி டரே. 10
இராகு கேதுக்கள்
கொம்மைப்பாட்டாக மொழிந்தவனூ ரெனில் கோதை திரு வடிதொழுது, நன்மையாரூர் தேவராச கவிராயன் நாடிச் சொன்னான் மானிடரே. 11
கோட்சாரப் பலாபலக் கொம்மைப் பாட்டு முற்றிற்று.
Page 280
சந்திர காவியம் - எண்சீரடி விருத்தம்
அவனியிலே பிறந்திட்ட மனிதர்கட்கு அன்புடனே நவக்கிரகமொன் பதுபேரானோர் தவறாமல் சுகதுக்கம் கொடுக்குமந்த தன்மையெல்லாம் விபரமாய்ச் சொல்வதற்கு சிவசக்தி பார்வதியாள் சொல்லுகின்றேன் சித்திவிநாயகரருளால் சொல்லுகின்றேன் கவனித்துக்கொண்டு சுக மாயிருப்பீர் கவலையில்லா தெந்நாளும் ஜீவிப்பாரே. 1
உரை : - உலகில் பிறந்த மனிதர்களுக்கு நவக்கிரகங்களாகிய சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு கேதுவென்னும் ஒன்பதுபேரும் கொடுக்கும் சுகதுக்கத்திற் கிசைந்த பலாபலன் விபரத்தை சிவசக்தியான பார்வதியின் பாலனாகிய சித்தி விநாயகரின் கிருபையால் சொல்லுகின்றேன், அந்த விபரத்தையெல்லாம் கவனித்துக்கொண்டு சுக ஜீவியாய் வாழ்ந்திருப்பீர்கள்.
இராசி சக்கரத்தின் பலன்
பருதிமதிசேய்புதனும் குருவும்சுக்கிரன் பகருசனிராகு கேதுக்களெல்லாம் வருகின்றபனிரண்டு ராசிதன்னை வருத்துணர்ந்து பலாபலனைச் சொல்வதென்றால் குருவருளும்ஞாபகத்தின் சக்திவேண்டும் குற்றமிலாமனதமைத்தா சனத்துட்கார்த்து கருணையுடன் ஜாதகத்தைக் கணித்தாராய்ந்து கழறுவீர்பலாபலனை மனிதருக்கே. 2
உரை : - மனிதவகுப்பார்கள் பூமியில் பிறந்து, வளர்ந்து ஜீவித்திருக்கும்போது, சுகதுக்கத்தைக் கவனிப்பதென்றால், அவரவர்கள் ஜனனலக்கினத்தின்படியே குறிப்பிட்டிருக்கும் இராசி சக்கரமாகிய மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிங்கம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனமாகிய பனிரெண்டு ராசியிலும் எந்தெந்தராசியில் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, இராகு, கேது என்னும் நவக்கிரகங்கள் ஒன்பதுபேரு மிருக்கின்றார்களோ அந்தந்த பலா
Page 281
பலனைப் பார்த்து பலன் சொல்ல வேண்டும். ஜாதகர் முன் ஜனனத்திற் செய்த பாப பலனுக்கிசைந்த கண்டபலன் நேரிடும் போது அவற்றிற்கிசைந்த சாந்தி செய்துக்கொண்டால் துன்ப பலன் நீங்கி இன்ப பலனுண்டாகும்.
ஐந்தொன்பதுக்கதிபர் பலன்
ஐந்தொன்பதாமிடத்திற் கதிபரானோர் அன்புடனே நற்பலந்தந் துதவுவார்கள் சிந்தைமகிழ்த்தே மூன்றாங் காரேனுந்தான் சித்தமகிழ்வாலாபஸ் தோனானாலும் அந்தமுடன் நல்லபலன் மிகவேதந்து அவரவர்கட்கிசைந்தசுக வாழ்வுதந்தும் மைந்தர்பாக்கியந்தருவார் மேன்மேலாக மாநிலத்தில் பிரபுவென ஜீவிப்பாரே. 3
உரை:--பஞ்சமஸ்தானாதிபதியாகிய ஐந்தாமிடத் ததிபதி யாரோர் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, இராகு கேது வென்னும் நவக்கிரகங்களில் எவர்களா யிருந்தாலும் நல்ல பலனையே தருவார்கள். மூன்று ஆறு லாபஸ்தானாதிபதியானாலும் மேற்குறிப்பித்த கிரகங்களைப்போல் அவர்கள் திசாபுத்தியில் நல்ல பலனையே தருவார்கள். அதன் விபரம் அடியிற் காண்க.
வெண்பா
அஞ்சொன்பதுக்கதிபர்பாபர் சுபரானாலும் மிஞ்சுபலனைத்தருவார் மென்மூன்றா - றெஞ்சுபதி னொன்றாக்குகதிபதியு மிப்படியேயொன்றிவரிற் போன்றசுபமே கொடுப்பார்புண்டு. 4
உரை:--ஐந்தாமிடத்ததிபதியும், ஒன்பதாமிடத்ததிபதியும் மூன்றாமிடத்ததிபதியும், ஆறாமிடத்ததிபதியும், இலாபஸ்தானாதிபதியும் அவரவர்கள் திசாபுக்தியில் நல்லபலனைத் தருவார்கள். ஆனால், அவரவர்களிருக்கும் ஸ்தானபலனறிந்து சொல்ல வேண்டும்.
திரகேந்திராதிபதி நீதிசுபரானாவே அசுபபலனைகொடுப்ப ரல்லாமல்-விரைவதேற் திரபதிகள்பாவிகளாய் சேரிலதிசுபங்கள் பரவிதற் பலன்கொடுப்பார். 5
உரை:--குரு, சுக்கிரன், புதன், சந்திரனாகிய இவர்கள் நால்வரும் கேந்திராதிபத்தியம் பெற்றிருந்தால் அவர்கள் திசாபுத்தினில் அசுபபலனாகிய கஷ்டநஷ்டத்தையே அனுபவிக்கச் செய்
Page 282
சந்திர காவியம்
வார்கள். ஆனால், சூரியன், செவ்வாய், சனி, இராகு, கேது என்னும் இவர்கள் கேந்திராதிபத்தியம் பெற்றால், அவர்கள் திசாபுத்தியில் சுகசவுக்கியமாகிய நல்ல பலனைத் தருவார்கள்.
சந்திர காவியம்
தேறுமந்தப்பாவிகளில் சேய்கேந்திராதிபனாய் ஆறிலவனேக னல்லாமற்-றீறான நல்லானதைவிட்டால் நன்ரிரவிதானுஞ்சேய் வல்லகோணேச னெனின்மாண்பு. 6
உரை :-சூரியன், சனி, ராகு, கேது யென்னும் இவர்களில் செவ்வாய் கேந்திராதிபத்துவம் பெற்று, ஆறாமிடத்தில் தனியாய் இருந்தாலும், சனியாலும், சூரியனாலும் சம்பந்தப்பட்டிருந்தாலும் இவர்களுடன் சேர்ந்த செவ்வாய் கோணத்திலிருந்தாலும் பெருமையே யாகும்.
சந்திர காவியம்
ஏறுமிரண்டுபனிரெண்டா மிடத்ததிபன் கூறஞ்சுபருடனே கூடிநிற்கில்-வீறநல்லன் பாவியுடனே கூடிப் பாவித்தான த்திருந்து மேவிடிற் பாவனுமின். 7
உரை :- இரண்டு பனிரெண்டா மிடத்ததிபதிகள் சுபக்கிரகங்களாகிய குரு, சுக்கிரன், புதன், சந்திரனுடனே சேர்ந்து நின்றால் மிகவும் நல்ல பலனைக் கொடுப்பர். ஆனால், சூரியன், செவ்வாய், சனி, இராகு, கேதுக்களுடனே சேர்ந்து அவர்கள் ஸ்தானத்திலேயே இருந்தால் மிகவும் கஷ்ட நஷ்டத்தை யனுபவிக்கச் செய்யும் துர்ப்பலனையே கொடுப்பார்கள்.
சந்திர காவியம்
எட்டுக்கதிபதியும் பாக்கியத்திற் கேவசையாய்த் தொட்டவியாதிபனாய்த் தோன்றுமந்த-வட்டமத்துக் காதிபதிபொள்ளா தவனிலக்கினாதிபனாய் போதிலவனேக் நல்லோனாகும். 8
உரை :- அஷ்டமாதிபதி பாக்கியத்தானத்தில் இருந்தால் தான் இருந்த ஸ்தானத்திற்கு அஷ்டமஸ்தானம் வியஸ்தானமாகையால் அந்த திசாபுத்தியில் ஜாதகனை வியாதியஸ்தனாய் வருந்தச் செய்யும். ஆனால், அஷ்டமாதிபதி பொல்லாதவனாயிருந்தாலும் அவனே இலக்கினாதிபதியானாலும், இலக்கினத்திலிருந்தாலும் நல்ல சுப பலனைத் தந்து வித்தியாலாபம், உத்தியோக விருத்தி, வியாபார லாபமுந் தந்து, சரீராரோக்கியமாயிருக்கச் செய்யும்.
சந்திர காவியம்
இலக்கினத்திற்காயிரண் டேழுமாரகாரென்று மலைக்குமிரண் டான்கொல் லானல்லா - விலக்கினத்துத் தோன்றுமந்தப் பாவிகள்தான் காமனையிற் சொல்லுகின்ற மூன்றெட்டு மாரகமாய் மூட்டு. 9
Page 283
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
உரை :— ஜனன இலக்கினத்திற்கு இரண்டாமிடமும், ஏழாமிடமும் மாரகஸ்தான மென்றாலும் இரண்டாமிடத் ததிபதியானவன் கொல்லமாட்டான். ஆனால், இலக்கினத்திற்கு சதுர்த்தகேந்திராதிபதியும், மூன்று, எட்டுக்கதிபதி மாரகஸ்தராய் அவர்கள் திசாபுத்திகளில் கொல்வார்கள். ஆனால் இலக்கினத்தையாகிலும் திசாபுத்தி நாதர்களையாகிலும் குரு, சுக்ரன், புதன், வளர்பிறைச் சந்திரனும் பார்த்தால், மாரகஞ் செய்யாமல் மரணத்திற்குச் சமானமாகிய கண்டங்களையும் கஷ்டநஷ்ட பலனையுங் கொடுத்து கடைசியில் சுகமாய் ஜீவித்திருக்கச் செய்வார்கள்.
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
மாரகஸ்தானந்தன்னில் வந்ததோர்சம்பந்தமுள்ள பேருந்தான்மாரகமாய்ப் பேசிடிற்—சீரரசந் தோவற்பிறந்தவருக் கோர்மாறாப் புத்திதிசை யாகவரும் யோகங்களாம். 10
உரை :— மாரக ஸ்தானந்தன்னி லிருப்பவர்களுடனே சம்பந்தமா யிருப்பவர்கள் மாரகஞ் செய்வார்களென்று சொன்னாலும், சிறப்புப் பொருந்திய இராஜயோக முடையவர்களின் திசா புத்திகள் வரும்போது மாரகத்திற்குப் பதிலாக நல்ல யோக பலனையே கொடுப்பார்களாம்.
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
மாரகத்தோ ஷத்தினுக்கு வன்குருவுஞ்சுக்கிரனும் மாரகனேயானால் வலுதோஷம்—பாரதனை விட்டால்புதனிந்து இரவிசனி மேற்செவ்வாய்க் கட்டாம் பலநிறையாய்க் காண். 11
உரை :— மாரகத்தோஷத்திற்கு வல்லமை பொருந்திய குருவுஞ் சுக்கிரனும் மாரகஸ்தரானால் வன்மையான தோஷமாகும். ஆனால், புதன், சந்திரன், சூரியன், சனி செவ்வாய் இவர்களுக்கு அதிக பலமான மாரகமென்றுணர்வீர்கள்.
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
உற்ற தவமுந்தானோர் மாரகத்தானத்தைப் பற்றியிருந்தாலும் பார்த்தாலும்—வெற்றியுற மாரகன் றன்னுடனே கூறாகினுமாரகர்போ லாரவதைந் திடுவா ரன்று. 12
உரை :— ஆயுள்காரகனாகிய சனி ஓர் மாரகஸ்தானாதிபதியாயிருந்தாலும், மாரக ஸ்தானாதிபதிகளைப் பார்த்தாலும், அவர்களுடனே சம்பந்தமானாலும், பலவிதமான கண்டநஷ்டத்தினால் கலங்கச்செய்து மாரகத்திற்குச் சமானமான துன்பஞ் செய்வார்.
Page 284
சந்திர காவியம்
பன்னொன்று மூன்றாறெட் டாதிபதியிசை தன்னுடைய சம்பந்தஞ் சார்ந்தவரும்—வன்பாவி சம்பந்தங் கூடுவதுங் பார்க்கிறதுந் தானாகூவா யிம்மகிமை கண்டே யியல்பு. 13
உரை:—ஜனன லக்கினத்திற்கு பதினோறாமிடம், ஆறாமிடம், எட்டாமிடத்ததிபதிகளின் அம்சையில் தங்களுடனே சம்பந்தமாயிருக்கும்படியானவர்களை கொடிய பாபக்கிரகங்கள் பார்த்தாலும், சம்பந்தமானாலும், கஷ்டநஷ்ட பலன்களை யனுபவிக்கச் செய்யும். ஆனால் சுபக்கிரகங்கள் பார்வை பெற்றாலும் ஜனனமூல லக்கினத்தை சுபக்கிரகங்கள் திருஷ்டித்து நோக்கினாலும், கஷ்ட நஷ்டம் விலகி, ஒருவிதமான சுபபலனாகவே விளங்கும். ஆனால், இலக்கின கணித ஆராய்ச்சியreduction திசாபுத்தி வலுவறிந்து பலன் சொல்லவேண்டும்.
சந்திர காவியம்
பிலகேந்திர கோணநாதருக்கு பேதஞ் சொலும்பாவி சம்பந்ததோஷ—மிலையையிலே பன்னியகண்டங்கோணத் தாதிபருக் குண்டாகும் வின்னதனை பார்த்தறி வாயே. 14
உரை:—பலம் பொருந்திய கேந்திர ஸ்தானாதிபதிகளுக்கும் கோணாதிபதிகளுக்கும் பேதாபேதஞ் சொல்வதாயிருந்தால் பாபக்கிரக சம்பந்தத்தின் தோஷமில்லை. ஆனால் கண்டமானது கோண ஸ்தானாதிபருக் குண்டாகும்படியான தன்மையை அந்தந்த கிரகங்கள் நின்ற ஸ்தானத்தை யறிந்து பலபலனை விபரமாய் ஆராய்ந்துணர்ந்து பலன் சொல்லவேண்டும்.
சந்திர காவியம்
சாடுந்திரிகோணத் ததிபதிகள் தன்னுடனே நாடுங்கண்டமதிபர்க ணற்கோளாய்க்—கூடின மெத்தப்பலன் தருவர் மேலவர்கள் தன் திசையில் வெற்றியோகங் கொடுப்பார் வின். 15
உரை:—வீசும் புகழமைந்த திரிகோணத் ததிபதிகளுடனே கண்ட ஸ்தானாதிபதிகள் சுபக்கிரகங்களாய் சேர்ந்திருந்தால் மிகவும் மேன்மையான பலன்களாகிய வியாபாரலாபம், உத்தியோக விர்த்தியினாலும் திரவிய சேகரஞ்செய்து தனதான்ய சம்பத்துடனே ஜீவித்திருப்பதாகும். ஆனால் அவர்கள் திசாபுக்தியில் மிகவும் மேன்மையான யோகபலனைத் தருவார்கள். ஆனால் மற்ற கிரகங்களிருக்கும் ஸ்தானபலனறிந்து பலன் சொல்லவேண்டும்.
சந்திர காவியம்
கேந்திரத்திற் பத்தாங் கிளர்திரிகோணத்தொன்பான் ஆய்ந்தபெலமாம்பெயர்க ளந்ததிபர்—சேர்ந்திருக்கப் பார்க்க ஒருவர்க்கொருவர் பார்யோகக்காரகரா மார்க்கு மறிதா மறி. 16
Page 285
உரை:--கேந்திர ஸ்தானத்திற்கு பத்தாமிடத்ததிபரும் திரிகோண ஸ்தானத்திற்கு ஒன்பதாமிடத்ததிபரும் மிகவும் மேன்மையான நற்பலன்களைத் தருவார்கள். ஆனால் அந்த ஸ்தானாதிபதிகளுடன் சேர்ந்திருந்தாலும் பார்வைபெற்றிருந்தாலும் ஒருவர்க்கொருவர் யோகபலனை விசேஷமாய்த் தந்து உத்தியோகவிருத்தி, வியாபாரலாபம், திரவிய சம்பத்து முதலான நற்பலன்களைக் கொடுப்பார்கள்.
ஒன்பதுபத் தல்லா லுறுதிரிகோணங்கண்ட மன்னியயோகப் பெயரா மத்ததிப-ரன்பாக வொன்றுக்கொன்றாய் மருவிச் சம்பந்தமுண்டாகில் நன்றரசர் யோகமாம் நட்பு. 17
உரை:--ஒன்பதாமிடத்ததிபதி பத்தாமிடத்ததிபதியில்லாமல் பெரிதாகிய திரிகோணத்திருந்தால் விசேஷமான யோகபலன் கொடுப்பார்கள். ஆனால் அந்த ஸ்தானாதிபர் ஒவ்வொருவரும் சம்பந்தமா யிருந்தால் மிகவும் நன்மையான இராஜயோகத்தைத் தருவார்கள். ஆனால் மற்ற கிரகங்களிருக்கும் ஸ்தானபலன்களை ஆராய்ந்து பலன் சொல்லவேண்டும்.
பத்துக் கதிபதிகன் பாக்கியத்தி லேயிருக்க வைத்தாமனீரெந்தில் வாய்ந்திருக்கச்-சத்தோ டவரவர்கள் வீட்டி லமர்ந் திருக்கயோக முமாக வேவருமா மோது. 18
உரை:--ஜீவனஸ்தானாதிபதி, பார்வை ஸ்தானத்திலே யிருக்க ஆயுள் ஸ்தானாதிபதியாகிய சனிபகவான் பத்தாமிடமாகிய ஜீவனஸ்தானத்திலிருந்தால், அன்றியும் அவரவர்கள் ஸ்தானத்தில் அவரவர்கள் பலத்திருந்தாலும் நல்ல சுலபமாக பலனை தருவார்களென்றுரைப்பாய்.
ஒன்பதுபத் துக்குடையோ ரெட்டுப்பன் னொன்றதிபர் இன்பயோகங்கிலை யென்றியினும்-பின்புதிரி கோணேசர்சம்பந்தங்கூடினும் யோகங்களுண்டா மானேறு யோகமுடை யார்க்கு. 19
உரை:--ஒன்பது பத்துக்குடைய ஸ்தானாதிபர்களும், ஆறு, எட்டு, பதினொன்றுக் கதிபர்களும் இன்பமான யோகத்தைக் கொடுக்கமாட்டார்களென்றாலும், அவர்கள் திரிகோணஸ்தானாதிபர் சம்பந்தம்பெற்றால் நல்லயோகத்தைக் கொடுப்பார்களென்றும் சொல்வாய். ஆனால் ஜனன லக்கினத்தைக் குரு பார்த்தாலும்,
Page 286
சந்திர காவியம்
திசாபுத்தி நாதர்கள் உச்சஸ்தானத்திலிருந்தாலும் விசேஷமான இராஜயோகத்தையே தருவார்கள்.
சந்திர காவியம்
மண்டபத்துக்கதிபர்க்கு விளங்கோணத்தோரிலொன்று தட்டியிருஞ்சம்பந்தந் தானிருந்தால்-வண்டமிழோர் சொன்னபத்துக்கதிபதி சொல்யோகக்காரனாய் மன்னரிகந் தான்கொடுப்பான் வந்து. 20
உரை :- ஜன்மலக்கினத்தின் பத்தாமிடத் ததிபர்க்கு கோண ஸ்தானத்திலிருப்பவர்கள் சம்பந்தமானால் பத்தாமிடத் ததிபதி யோககாரகனாய் விளங்கி நற்பலன் கொடுப்பதுடன் அந்த ஸ்தானாதிபதி தனது திசாபுக்தியில் நல்ல இராஜயோகத்தைத் தந்தும், வித்தை, புத்தி, உத்தியோகமேன்மை, வியாபாரலாபந் தந்து தனவந்தனாயிருக்கச் செய்வான். ஆனால் மற்ற கிரகங்களிருக்கும் பலனையும் ஆராய்ந்து பலன் சொல்ல வேண்டியது.
சந்திர காவியம்
நன்கேதுராகுவுந்தா னற்கோணைக்கூடினும் பன்சுபர்கள் நோக்குத்தான்பட்டாலும்-அன்புடையே நற்றானமேனுகினும் நல்லபலனை கொடுப்பார் சொற்றியகோன் தங்களுக்குச் சொல். 21
உரை :- ஞானகாரகனாகிய கேதுபகவானும் மோக்ஷகாரகனாகிய இராகுபகவானும் சுபக்கிரகங்களுடனே சேர்ந்தாலும் பார்வை பெற்றாலும், அல்லது நல்ல ஸ்தானத்திலிருந்தாலும், அவர்களுடைய திசாபுத்தியில் ஞானமும், கல்வியும், வித்யாபிலிர்த்தியும், உத்யோக மேன்மையும், வியாபார விருத்தியும், திரவிய லாபமும் தந்து வெகு மேன்மையான பலனைத் தருவார்கள்.
சந்திர காவியம்
கெடூராகு கேந்திரங்கள் கூறூதிரிகோணம் குடிநாதர் நற்கோணக் கூடித்திடனாகக் கேந்திரத்தினுசுபர்கள் நோக்குங்கின்போகம் சேர்ந்திருக்கச் செய்வார்சினம். 22
உரை :- மிகவும் வல்லமை பொருந்திய இராகு, கேது கேந்திர ஸ்தானத்திலாகிலும், திரிகோணாதிபதிகளுடன் சம்பந்தப்பட்டாலும், கேந்திர ஸ்தானாதிபர்களாகிய சுபக்கிரகங்களின் பார்வை பெற்றாலும், சம்பந்தமானாலும் விசேஷபலனைத் தருவார்கள்.
சந்திர காவியம்
செல்திரிகோணாதிபருஞ் சேர்ந்தகண்டத்தாதிபரும் சொல்கேதுராகுவுடன் சேர்ந்தாலும்-வல்லமையாய்க் கூடிவரும்பாம்புங் கொள்யோகக்காரகராம் நாடிஇதைச் சொல்வாய் நயந்து. 23
Page 287
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
உரை :- திரிகோணாதிபரும் கண்டஸ்தானாதிபரும் இராகு கேதுக்களுடன் சேர்ந்திருந்தால் நல்ல பலமான யோகத்தைக் கொடுத்து சுகப்படச்செய்வர். ஆனால், திசாபுத்திகளில் அவர்கள் கொடுக்கும் பலன்களுடனே மற்ற கிரகங்களிருக்கும் ஸ்தான பலனையும் ஆதிபத்ய பலனையும் ஆராய்ந்துணர்ந்து பலன் சொல்ல வேண்டும்.
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
மீறுமிருபாம்பிருந்த வீட்டுக்கதிபதிதா னேறுமிராசிக்குடையோன் நோக்கி—வூராய்க் கலந்தகோளின்பலனைக் கண்டளிப்பார்காரகர் சூலமரவு தம்மரவாங்கூறு. 24
உரை :- இராகு, கேதுக்களிலிருந்த வீட்டுக்கதிபதிகள் இருந்த ராசிக்குடையோன் பார்வையானாலும், சம்பந்தமானாலும் அவர்கள் கொடுக்கும் பலனை இராகு கேதுக்கள் கொடுப்பார்கள். ஆனால், குரு, சுக்கிரன், புதன், சந்திரன் இலக்கினத்தைப் பார்த்தாலும் குருபகவான் திசாநாதர்கள் மீது ஐந்தாமிடத்தில் பார்வை செலுத்தினாலும் விசேஷமான நல்லபலனைத் தந்து உத்தியோக மேன்மையும், வியாபார லாபமுந் தத்தும் ஆரோக்கிய சுகசவுக்கியமா யிருக்கும்.
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
கூறமரவுடனெத் தனைகோள்கள்கூடினு மீறுபலனில்லையே விண்டளிப்பார்—வேறுமற்ற பேர்பலனைத்தாரார்கள் பேதைநீயாராய்ந்து பாரிரைச்சொல்வாய் பகுத்து. 25
உரை :- சொல்லுதற்குரிய இராகுகேதுக்களுடனே எத்தனை கிரகங்கள் சேர்ந்தாலும் விசேஷமானபலவான் கொடுக்கும் நல்ல பலனை யனுபவிக்கும்படியான சுபபலனையே கொடுப்பார்கள். ஆனால் மற்ற கிரகங்கள் அத்தகைய நற்பலனைக் கொடுக்கமாட்டார்கள். ஆகையால், ஜனன இலக்கன பலனுக்கிசைந்த திசா புத்தி பலனுடனே மற்ற கிரகங்கள் நின்ற பலனையும் ஆராய்ந்துணர்ந்து பலன் சொல்லவேண்டியது.
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
கண்டத்திற்பாம்புமுதற் றீயோர்கலந்திருக்கிற் றண்டகோணத்ததிபர் சம்பந்த—முண்டெனினும் கோணத்திருக்கிற்கண் டத்ததிபர்சம்பந்தம் பூணயோகங்க ளுண்டாம்போற்பு. 26
உரை :- கண்டஸ்தானத்தில் இராகு கேதுமுதற் பாபக்கிரகங்கள் கலந்திருந்தாலும் கோணாதிபர் சம்பந்தமுண்டா யிருந்
Page 288
சந்திர காவியம்
கோணாதிபதிகள் கண்டஸ்தானாதிபர்களுடனே சம்பந்தமாயிருந்தாலும், விசேஷமான யோகபலன் கிடைக்கும்படியான தனதான்ய சம்பத்தும், உத்தியோக விருத்தியும், வியாபார லாபமும் பொருந்தி யிருக்கும்.
சந்திர காவியம்
கேந்திரகோணங்களிற் கேடில்லாக்கோள்கூடி சார்ந்திருக்கிலன்னியோ ணத்ததிபர்-போந்தமலர்க் கண்ணாலேபார்த்திடினும் கூடக்கலந்திடினும் நண்ணுமன்னோர் யோகநல்லநாடு. 27
உரை :- கேந்திரஸ்தானத்திலும், கோணஸ்தானத்திலும் சுபக்கிரகங்கள் சேர்ந்திருந்தால் மற்ற கோணத்ததிபர் பார்வை பெற்றிருந்தாலும் சம்பந்தமாயிருந்தாலும் அவர்களுடன் பொருந்திய சுபாசுப பலன்களை தருவார்கள். துவாதசராசியில் நிற்கும் கிரகங்களின் நட்பு, ஆட்சி, உச்சம், பகை நீசஸ்தானபலனறிந்து திசாபுத்தி நாதர்களின் வலுவறிந்து பலன் சொல்லவேண்டும்.
சந்திர காவியம்
தாங்கு கண்டங்கோணத் ததிபர்கள் சம்பந்தம் நீங்கிமூன்றாறெட்டு நேர்பதினொன்-றாங்கதிபர் காரகசம்பந்தந்தான் சாரில்யோகத்தினுக்கு காரகமாமென்றே கருத்து. 28
உரை :- ஜன்மலக்கினத்ததிபதி, கோணத்ததிபதி சம்பந்தமில்லாமல் மூன்று, ஆறு, எட்டு, பதினொன்றாந்த அதிபதிகள் காரக சம்பந்தத்தை சேர்ந்தால் விசேஷ யோகத்திற்கு, அதிபதிகளா யிருப்பாரென்று நினைக்க வேண்டும். ஆனால், உதய லக்கினத்தையாகிலும், மேற்குறிப்பித்த கிரகங்களையாகிலும் சுபக்கிரகங்களாகிய குரு, சுக்கிரன், புதன் வளர்பிறைச்சந்திரன் பார்த்தால் விசேஷ யோக பலன் கிடைக்கும்.
சந்திர காவியம்
நன்யோகக்காரர்க ளன்றிமற்றோர்தல்திசையின் மன்யோகமுண்டாய் வந்திடினும்-பன்யோகக் காரகரேயாகிற்கன பலனீவார்மற்றோ ராரதிரையக் கொடுப்பாராய்ந்து. 29
உரை :- நல்ல யோககாரர்க ளில்லாமல் மற்ற கிரகங்களின் உத்தமமான நல்ல திசையில் சொல்லுதற்குரிய சுபயோகங்கள் வந்தாலும், அவர்கள் யோககாரகரேயானால் அதிகமாய் விசேஷமான பலனைக் கொடுத்து அதனால் வித்தியா லாபம் உத்தியோக மேன்மை வியாபாரவிருத்தி திரவிய லாபமனைத்தும் தருவார்கள். இன்னும் மற்றக் கிரகங்கள் விசேஷமான பலனை அதிகமாய்த் தருவார்கள்.
Page 289
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
இரவிமுதலொன்பதுகோ ளோங்குந்திசையிற் சருவுமவர்புத்தியினிற் றாரார்-மருவுபலன் வேறொருவர்புத்தியனுசரித்து விப்பலன்கள் கூறுகுறுக்கொடுப்பார் கூறு. 80
உரை :-சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, இராகு, கேது என்னும் ஒன்பது கிரகங்களின் திசையிலும் வருகிற அவர்கள் சுயபுத்தியில் நல்ல யோக பலனை கொடுக்க மாட்டார்கள். ஆனால், அந்தந்த கிரகங்களின் திசையில் மற்ற கிரகங்களின் புத்தி வந்தால் விசேஷமான சுப பலனைத் தருவார்கள். குரு பகவான் அந்த திசாநாதரையாயிலும் புத்திநாதரையாயிலும் பார்த்தால், விசேஷ பலனுண்டா யிருப்பதுடன் பிரபுவென சகலரும் புகழ்ந்துரைக்கும்படியான தனவந்தரா யிருப்பதற்காகும்.
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
கேந்திரத்திற்காதிபதி கேட்கினுந்தந்திசையிற் சேர்ந்ததிரிகோணேசர் புத்தியினிற்-சேர்ந்தபலன் தந்திடுவர்கோணேசர் தந்திசையில்கேந்திரேசன் சொந்தபுத்தியிற் கொடுப்பார்சொல். 81
உரை :—கேந்திராதிபதியானவர்கள் தமது திசையால் திரிகோண ஸ்தானாதிபதிகளின் புத்தியினிற் சேர்ந்த பலன்களைத் தருவார். ஆனால் கோணாதிபதிகளின் திசையில் கேந்திராதிபதிகளின் சொந்த புத்தியில் விசேஷ பலன்களைத் தருவார்கள்.
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
சொல்லு மிருவோர்க்குந் தோஷமுண்டாய்க் கேந்திரேசன் புல்லியிடுஞ் சம்பந்தம் பொய்த்திடினும்-நல்லதுதான் பூண்டதிசை யதனில்கேந்தி ரேசன் புத்தியினில் நீண்டசுப மளிப்பார் நின்று. 82
உரை :—திசாநாதனுக்கும் புத்திநாதனுக்கும் ஸ்தான பலனால் தோஷமுண்டாயிருந்தாலும் கேந்திரேசன் சம்பந்த நன்மை பொய்த்துப் போனாலும் கேந்திரஸ்தானாதிபத்யத்தைக் கொண்டவர் திசையிற் சேர்ந்து வந்த கேந்திரஸ்தானாதிபதியின் புத்தியில் விசேஷமான சுப பலன் கொடுத்து உத்தியோக விருத்தி, வியாபார லாபம், திருமண வைபவ முதலான பெருமை யடையும்படி செய்வார்கள்.
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
ஏற்றதிசையிற் பலன்கள் எப்போதுதருவரெனின் ஆற்றலவர்க்கருளன் றாரேட்டு-தோற்றுபதி னொன்றுக் குடையாரில்லா நொந்தாமனக்கிரக நன்றபுத்தியிற் கொடுப்பார் நல்கு. 83
Page 290
சந்திர காவியம்
உரை: ஜாதகர்க்குத் தகுந்தபடியே அந்தந்த கிரகங்களின் திசையில் நற்பலன்களை எப்போது தருவார்களென்றால் அந்த திசநாதனின் மூன்று, ஆறு, எட்டு, பதினொன்றுக்குடைய ரல்லாமல் தனக்கு சமானமான கிரகங்களின் புத்தீயில் நல்ல போக பலன்களைக் கொடுத்து வறுமை நோயில்லா பெருமையுடன் திரவிய சம்பத்துடன் ஜீவித்திருக்கும்படி செய்வார்கள்.
சந்திர காவியம்
ஏற்றதிசைநாதனுக்கு மேத்துபுத்திநாதனுக்கும் தோற்றமூன்றாறெட்டு தொல்பதினொன்-றாற்றதிபர் சம்பந்தமில்லையெனிற் றாமிருவோரும்பலன்கள் செம்பலனளிப்பார் சிறந்து. 34
உரை: ஜாதகர்க்கு தகுதியான திசாநாதனுக்கும் அவர்க் கிசைந்த புத்திநாதனுக்கும் மூன்று, ஆறு, எட்டு பதினொன்றுக்கு அதிபர்களாகிய கிரகங்களுக்கு சம்பந்தமில்லையென்றால் திசாநாத னும் புத்திநாதனும் விசேஷமான பலன்களைத் தருவார்கள். ஆனால் யோகபலனங்கிசைந்த விதமாய்த் துவாதச லக்கினத்திலுமிருக்கின்ற கிரகநிலையை ஆராய்ந்து பலன் சொல்ல வேண்டும். ஆனால் குருபகவான் பார்வையானால் விசேஷ பலன் கிடைக்கும்.
சந்திர காவியம்
நானுவெணும்மாயோகக் காரகன்சம்பந்தத் தோணாமூன்றாறெட்டுத் தொல்பதினொன்-றானதிபர் வன்றிசையில்வெற்றியுள மாயோகக்காரகன் நன்புசிப்பில் யோகந்தரும். 35
உரை: காருண்யமாய் பெருமைதங்கிய யோககாரகனுடனே சம்பந்தமாயிருக்கும் மூன்று, ஆறு, எட்டு, பதினொன்றுக் கதிபரானவர்கள் வல்லமை பொருந்திய தன் திசையில் பெருமை பொருந்திய யோககாரகனின் புத்தியில் நல்ல யோகத்தைக் கொடுப்பார்கள். அந்த பலன் விவரமெவ்விதமெனில்: வித்யாபி விருத்தி, திருமண வைபவம், உத்யோகவிருத்தி, வியாபாரலாப மனைத்துந்தந்து, பிரபுத்தன்மையாக இருக்கும் நல்ல யோகத்தைக் கொடுப்பார்கள்.
சந்திர காவியம்
சிரராசயோகமநு சேர்த்துவருங் காலத்தின் மாரகன்றன் திசையில் வந்தெய்தும்-பாரதனால் பாவபுத்தியின்மிகுதி பாக்கியமுங் கீர்த்திகளும் மேவுமற்றப் புத்திசமன் மெய். 36
உரை: சிறப்புப் பொருந்திய இராஜயோகமானது வரும் போது, அந்த சமயத்தில் மாரகர்கள் திசாசரி வரினும், அத்தருணம் குரூரமாகிய கஷ்டத்தையும், கண்டங்களையும்
Page 291
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
கொடுப்பது அதிகமானாலும், அந்த இராஜயோகத்தின் விசேஷத்தினால் பாக்யம், தனதான்ய சம்பத்தும் பெருமையும் கீர்த்தியும் பொருந்தி, மற்றபுத்தி நாதர்களுக்குச் சமானமாய் பொருந்தி யிருக்கும்.
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
மன்யோககாரக னாந்திசையில்வந்திடுமேற் பன்புத்திகாரகர்க்குப் பாவமுறிற்-றன்றோட மில்லையந்தப்பாணியுத்தி யில்யோகமெத்தவுண்டாம் சொல்லும்பின் யோகங்களுண்டு. 37
உரை:- சொல்லுதற்கரிய யோககாரகன் திசையில் வருகின்ற பல புத்திநாதர்களுக்கும் பாபபலன் வந்தால் தன் தோஷமில்லை அந்த புத்திநாதர்களுடைய யோகம் அதிகமாகி பின்னால் விசேஷமாய் போகத்தைக் கொடுப்பார்கள். அதன் பலன் விபரம் எவ்விதமெனில் அந்த புத்திநாதர் முதலில் பலவித கஷ்டத்தைக் கொடுத்தாலும் கடைசியில் தனதான்ய சம்பத்துடன் சுகபோக பாக்யமுங் கொடுப்பார்கள்.
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
தூண்டுவார்சம்பந்தந் தோன்றுதற்கோலில்யோகம் பூண்டளிப்பான் சம்பத்தமீதுணர-நீண்டுதற்கோள் புத்திமந்தான்முற்போற் பொருந்துஞ்சமபலனை மெத்தத்தருவார் விரைந்து. 38
உரை:- அந்தந்த சமயத்தில் நேரிடுகின்ற சுபக்கிரகங்களில் யோகத்தைத் தருகின்ற கிரகங்களுடனே சம்மந்தமான சுபக்கிரகங்களின் புத்தியும் முன்போலவே பொருந்தி சமபலனை அதிகமாய்த் தருவார்கள். அதன் விவர மெவ்விதமெனில்: வித்யாபவிருத்தி, உத்யோகமேன்மை, திருமண வைபவம், வியாபார லாபம் முதலான நன்மையனைத்துந் தருவார்கள்.
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
விரைந்துவருமாயோகக் காரகன்வெற்றிப் பொருந்துஞ்சம்மந்தமில்லாப் போந்தே-இருந்துவரு மன்னியயோகங்களுட காரகானம்புசிப்பில் மன்னுயோகங்கள் வரும். 39
உரை:- அதிகரித்து வருகிற பெருமை பொருந்திய யோககாரகன் ஜெயமுடனே சம்பந்தமில்லாமல் வருகின்ற அந்நிய யோககாரகர் புத்தியில் சொல்லுதற்கரிதான யோகபலனைக் கொடுப்பார்கள். அதன் பலனெவ்விதமெனில்: வெற்றி வீரப்ரதாபம், தொழில் முயற்சி முதலான நல்ல யோகபலனைத் தருவார்கள். மனோற்சாகத்தினால் இன்னும் பலவிதமான யோக பலன்களெல்லாம் வரும்.
Page 292
சந்திர காவியம்
சார்யோககாரகா டங்களுடசம்மந்த மேனில்லாக் கோளினெதிர் திசையில்-ஆர்யோகக் காரரவர்புத்தியினிற் காணும்பலன்கொடுப்பார் வேலுமொருவிடத்தே தள். 40
உரை:-அதிகமான பலனைக் கொடுக்கும் யோககாரர்களுடனே சம்பந்தம் பெறாத கிரகங்கள் வருந்திசையில் யோகம் பொருந்திய காரகர்களின் புக்தியில் குறிப்பித்த பலன்களை யெல்லாம் மற்ற கிரகங்களின் புக்திகள் வரும்போது கொடுக்குமென்று சொல்வீர்கள்.
சந்திர காவியம்
விங்கேதுராகுவுக்கு மேன்யோகக்காரகர் ளென்மருவுசம்மந்த மில்லையெனும்-நந்திசையில் யோகமுளகாரகர்புத்தி யுற்றதேயோகம் வாகுபடக்கொடுப்பார் மாண்பு. 41
உரை:-இராகு கேதுக்களுக்கு மேல் யோககாரகளென்று சம்பந்தமில்லாம லிருந்தாலும், நல்ல திசையாகிய சுபர்களின் திசையில் யோககாரகர்களுடைய புத்தி வந்தபோதே ஜாதகர்களுக்கு அதிக லாபத்தைக் கொடுத்தம்படியான நல்ல யோகத்தை மேன்மையாகக் கொடுப்பார்கள். அதன் விபரம் எவ்விதமெனில்: சரீராரோக்யம், வித்யாகாபம், உத்தியோகவிருத்தி, வியாபார மேன்மை முதலான நல்ல யோக பலன்களைத் தருவார்கள்.
சந்திர காவியம் முற்றிற்று.
Page 293
துவாதச லக்கின கிரகபலன்
எண்சீரடி விருத்தம்
பருதிமதிசேய்புதன் அந்தணனும்சுக்கிரன் பகுர சனிஇராகுகேதுக்க ளொன்பார் வருகின்றதுவாதசலக் கினத்தின்தன்மை வகையறிந்துதிசாபுத்தி பலனாராய்ந்து கருணையுடன்ஜாதகர்க்கு பலாபலன்கள் கடாஷிக்குந்தன்மையெல்லாம் விபரமாக அருமையுறும்ஜோதிடநூ லுரைக்கும்மார்க்கம் அன்புடனேகவனித்து பலன்சொல்வீரே. 1
உரை :—சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, இராகு, கேது என்னும் ஒன்பது கிரகங்களும், துவாதச லக்கினமாகிய மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிங்கம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் என்னும் பனிரெண்டு இராசியிலும் எந்தெந்த இராசியில் எவ்வெவ்விதமாய் பலம் பெற்றிருக்கிறார்களோ அவ்வவ்விதமாய் அவர்கள் திசாபுத்தியில் பலன் தருவார்கள்.
மேஷலக்கின பலன்
மண்ணுபுகழ்மேஷத்திற் பிறந்தோர்க்குச்சந்திரன் மாக்சுக்கிரன்சனியும் கொடுமைசெய்வார் நன்மைதருவார்பருதி குருவும்செவ்வாய் நவில்பாக்கியகர்மாதிபதி குருவும்மைந்தன் நன்மையுடன்சேர்ந்திருந்தால் யோகமில்லை தாரணியின்ஜாதகர்க்கு பலனாராய்ந்து அன்பாக அவரவர்கள் அதிர்ஷ்டம்போல அவனியில்ஜாதகர்க்குரிய பலன்சொல்வீரே. 2
உரை :—மேஷராசியில் பிறந்தவர்களுக்குச் சந்திரனும், சுக்கிரனும், சனியும், புதனுந் துன்பஞ் செய்வார்கள். சூரியனும், குரு, செவ்வாயும் நன்மை செய்வார்கள். ஆனால், தர்மகர்மாதிபதியான சனியும், குருவும் சேர்ந்திருந்தால் யோகம் இல்லை. ஆகையால், இந்த உண்மை ரகசியத்தை ஒழுங்காய் கவனித்து ஜாதகர்க்கு பலன் சொல்லுவீர்.
Page 294
துவாதச லக்கின கிரகபலன்
மத்தன்குருவும்மேஷத் தோர்க்குப்பொல்லார் மன்னுபுகழ்சுக்ரன் கொல்லமாட்டார் மத்தனுடன் புதனும் மாரகஞ்செய்வார்கள் மற்றகிரகங்கள் மாரகஞ்செய்யார்கள் இந்தவிதமாகவே நவக்கிரகங்கள் இருக்குஸ்தானத்துடனே ஆதிபத்யம் சிந்தைமகிழ்வாயறிந்து பலனாராய்ந்து செப்புவீர்ஜாதகர்க்கு பலனைத்தானே. 8
உரை:—மேஷராசியில் பிறந்தவர்களுக்கு சனியும், குருவும் கஷ்டபலனைத் தருவார்கள். ஆனால் சுக்கிரன் துதிய சப்தமாதிபதியாகையால் மாரகஞ் செய்யார். சனியும், புதனும் மாரகஞ் செய்வார்கள். மற்ற கிரகங்கள் துன்பப்படுத்தினாலும் கொல்ல மாட்டார்கள். இந்த விசேஷத்தை கவனித்து கிரகநிலையும், பார்வை சம்பந்த ஆதிபத்யபலனையும் ஆராய்ந்துணர்ந்து பலன் சொல்லவேண்டும்.
ரிஷபலக்கின பலன்
மன்னுபுகழிடபலக்கினஞ் ஜனித்தோர்க்கு மதிகுருவும் சுக்கிரனும் துன்பஞ்செய்வார் அன்பானசூரியனும் சனியுநல்லோர் அதிகநல்லயோகபலன் சனிபேதந்து பொன்பொருளும் பூஸ்திதியும் தனலாபங்கள் பொருந்திஜீவித்திருக்கச் செய்தேத்தானாம் நன்மையாய்ராஜயோகந் தருவாரென்று நவிலுவாய்ஜாதகர்க்கு பலனைத்தானே. 4
உரை:—ரிஷபலக்கினத்தில் பிறந்தவர்களுக்கு, சந்திரனும், குருவும், சுக்கிரனுந் துன்பஞ் செய்வார்கள். சூரியனும், சனியும் நல்லவர்கள். ஆனால் ரிஷபலக்கினத்திற்கு சனிபகவான் அதிகமான நன்மையைச் செய்வதுடன் வித்யாபிவிருத்தி உத்தியோக மேன்மை, வியாபாரவிருத்தி, பொன், பொருள், பூஸ்திதிலாபமும், தனதான்ய சம்பத்தும் தருவதுடனே இராஜயோக பலனையும் விசேஷமாக தந்து மேன்மையா யிருக்கச் செய்வாரென்று ஜாதக பலனையும் விபரமாய்ச் சொல்வீர்கள்.
ரிஷபலக்கின பலன்
மாமதியும்செவ்வாயும் வியாழனுந்தான் மாரகஞ்செய்வாரிஷப லக்கினத்தோர்க்கு தாமதஞ்செய்யாதிவர்கள் திசாபுத்திதன்னில் தப்பாமற்கொன்றிடுவா ரென்றிட்டாலும்
Page 295
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
சோமன்மகன்புதன்கொல்லான் ரிஷப லக்கினத்தோர்க்கு சொல்லுவாய் நற்பலனைத் தருவாரென்று ஆமப்பா அவ்விடத்தில் மதியிருந்தால் அன்பாய்ராஜயோகபலன் தருவாரே. 5
உரை :- பெருமை பொருந்திய சந்திரனும் செவ்வாயும் குருவும் ரிஷப லக்கினத்திற்கு மாரகதிபதிகள். இவர்கள் தமது திசா புத்தியில் கொஞ்சமேனும் தாமதஞ்செய்யாமல் கொல்வார்கள். ஆனால், புதபகவான் மாரகஞ்செய்யாமல் பலவித நன்மையுந் தந்து, தனதான்ய சம்பத்துடன் உத்தியோக மேன்மை வியாபாரவிருத்தி திரவியலாபமனைத்தும் தருவார். தான் ரிஷப லக்கினத்திற்கு துதியோஸ்தானாதிபதியானாலும் மாரகஞ் செய்யாமல் தனது தனபஞ்சமாதிபதி ஆதிபத்தியத்தினால் இராஜ யோகத்தை தருவார்.
மிதுனலக்கின பலன்
அன்புடனே மிதுனத்தில் பிறந்தோர்க்கு அந்தணனும்ரவிகுஜனும் துன்பஞ்செய்வார் இன்பமான சுக்கிர வானேநல்ல இனியபலந்தந்திடுவா ரென்றுரைப்பாய் வன்மையுடன் குருசனியும் சேர்ந்திருந்தால் வையகத்தில் யோகமில்லை ஜாதகர்க்கு தன்மையுடன் வேறுகிரகங்கள் பார்வை தானறிந்து பலன் சொல்வீர் ஜாதகர்க்கே. 6
உரை :- மிதுனலக்கினத்தில் பிறந்தவர்களுக்கு குருபகவானும், சூரியனும், செவ்வாயும் கொடுமை செய்வார்கள். சுக்கிரபகவானொருவனே இனிமையான நல்ல பலன் தந்திடுவார். ஆனால், குருவும் சனியும் சேர்ந்திருந்தால் யோகமில்லை. மற்ற கிரகங்களின் பார்வையும், சம்பந்தத்தையும், ஸ்தானபலனையும் கவனித்து பலன் சொல்லவேண்டும்.
மிதுனலக்கின பலன்
சந்திரனுங்கொல்லான்மிதுன லக்கனத்தோரை சந்ததமும்தனலாபம் பெருகச்செய்வார் அந்தணனும்ரவிசேயுமா ரகஞ்செய்வார்கள் அனுதினமும்கஷ்டநஷ்டமடையச்செய்து சந்ததமும்பெருந்துன்ப மிகவேசெய்து சண்டைசச்சரவுடனே வறுமைகூழும் இந்தவிதமாய்ப்பலனும் நேர்ந்திட்டாலும் இசைந்தமற்றகிரகநிலை கவனிப்பீரே. 7
Page 296
துவாதச லக்கின கிரகபலன்
உரை:--மிதுன லக்கினத்தில் பிறந்தோருக்கு சந்திரன் துவி பாதிபதியாயிருந்தாலும் மாரகஞ் செய்யாமல் தனாதிபத்திய பலத்தினால் தனது திசாபுத்தியில் தனதான்ய சம்பத்து, உத் யோகவிருத்தி, வியாபாரலாபம் பந்துமித்திரர் சகாயம், திரவிய லாப முதலான நன்மையனைத்தும் பெறும்படி செய்வார். ஆனால் குரு சூரியன், செவ்வாய் முதலானோர் தனது திசாபுத்தி யில் பலவித துன்பமும், கஷ்ட நஷ்டமும், கவலையும், வறுமையும், பிணியும் சூழும்படியான துன்பஞ்செய்து மதிமயக்கமும் மறதி யும், சத்துரு கொடுமையும், சண்டை சச்சரவும், துன்மார்க்கர் நேசமும் கலகமும் நேரிடச்செய்து மாரகஞ்செய்வார்கள். ஆனால், மற்ற கிரகங்களின் ஸ்தானபலனும், நோக்கமும், சம்பந்தமும் கவனித்துப் பலன் சொல்லவும்.
கடகலக்கினத்தின் பலன்
ஜனனலக்கினங் கடகமாயிருக்க ஜனித்திட்டஜாதகர்க்கு புதனும்சுக்கிரன் கனமானமாரகத்தை செய்வாரப்பா ககனகுருசெவ்வாயும் நல்லோராவார் தனதான்யசம்பத்து மிகவேதந்து தாரணியில்பிரபுவென்று எவரும்போற்ற இனஜனமும்பந்துமித்திரர் மனைவிபுத்ரர் இனிதுடனேபுகழ்ந்திடவே ஜீவிப்பாரே. 8
உரை:--கடகலக்கினத்தில் ஜனனமானவர்களுக்கு புத னும், சுக்கிரனும் மாரகஞ் செய்வார்கள். ஆனால், குருவும், செவ்வாயும் நல்லவர்கள். தனதானிய சம்பத்தும் விசேஷ மாய்த் தருவதுடன் பிரபுக்களைப்போற் சகலரும் புகழ்ந்துரைக் கும்படியான தன்மையுடன் இனஜனபந்துமித்திரர்கள், மனைவி, மைந்தர்களுடனே சுகஜீவியாய் வாழ்ந்திருப்பார்கள். ஆனால், மற்றகிரகங்கள் நின்ற பலனும் கவனித்துப் பார்த்து பலன் சொல்லவும்.
கடகலக்கினத்தின் பலன்
இனிதுடனேகடகலக்னத் தில்ஜனித்தோர் இசைந்தபடிபலனுதவும் விதமேதென்றால் துணிகரமாய்சுக்கிரனும் புதனும் பொல்லார் சூடித்திடவேமாரகத்தை செய்வாரப்பா மனமகிழ்வாய்குருசெவ்வாய் நல்லோராவார் மாணியுடனேசேர்ந்ததால் ராஜயோகம் இனஜனமும்பந்துமித்திரர் மனைவிபுத்ரர் இனிதுடனேமனமகிழ வாழ்வாரே. 9
உரை:--கடகலக்கினத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரனும், புதனும் கொடிய துன்பஞ் செய்வார்கள். மாரகத்திற்குச் சமான
Page 297
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
மான கண்டத்தையும் கலகத்தையும் அனுபவிக்கச் செய்வார்கள். ஆனால், குருபகவானும் செவ்வாயும் நல்லவர்கள். இவ்விருவரும் சேர்ந்து சம்பந்தமாயிருந்தால், நல்ல ராஜயோக பலனைத் தருவார்கள். அதன் பலன் விபரம் என்னவெனில், மனைவி மைந்தர்களுடனே தனதான்ய சம்பத்துடனும் பிரபுவைப்போன் றிருப்பார்கள்.
சிம்மலக்கினத்தின் பலன்
மனமகிழ்வாஞ்சிம்ம லக்கினத்தில் மாணிமையாசுவே பிறந்தோருக்கு சனிகக்கிரன்புதன்பொல்லாச் கொடுமைசெய்வார் சார்ந்தஸ்தானமறிந்துபலன் சொல்வீர்கள் தினகரனும்சந்திரனும் சேயும் நல்லோர் செவ்வாயும்புதன்சேர்ந்தால் யோகமாகும் இனிதுடனே இவர் நிலையை ஆராய்ந்தன்பாய் இசைந்தபகன்புகன்றிடுவீர் ஜாதகர்க்கே. 10
உரை :- சிம்மலக்கினத்தில் பிறந்த ஜாதகர்க்கு சனிபகவானும் சுக்கிரபகவானும், புதபகவானும் குரூரமாகிய துர்ப்பலனைத் தந்தாலும், பிறகு நல்ல யோகபலனைத் தருவார்கள். ஆனால் சூரியனும் சந்திரனும் செவ்வாயும், வெகு மேன்மையான நல்ல பலனைத் தருவார்கள். இவர்கள் நின்ற ஸ்தான பலனறிந்து தமது திசாபுத்திகளில் தனதான்ய சம்பத்து, மனைவி, மைந்தர், பந்துமித்திரர்களின் சகாயமும் தந்து ஆதரிப்பார். ஆனால் செவ்வாயும் சுக்கிரனும் தர்ம கர்மஸ்தானத்தில் சேர்ந்திருந்தால் நல்ல யோகபலனைத் தருவார்கள்.
சிம்மலக்கினத்தின் பலன்
புதபகவான்மாரகஞ் செய்யமாட்டார் புகர்சனியுங்கொன்றிடுவா ரென்றுரைப்பாய் இதமாகமற்றகிர கங்களானோர் எப்போதும்மாரகஞ் செய்யமாட்டார் பதறாமல்ஜாதகங் கணித்தாராய்ந்து பலன்சொல்லும்போதுசுபர் பார்வைகண்டு சிதறாமல்கணிதமெடுத் தேயாராய்ந்து சீராகப்பலபலனை சொல்லுவீரே. 11
உரை :- சிம்மலக்கினத்தில் பிறந்த ஜாதகர்க்கு புதபகவான் மாரகஞ்செய்யமாட்டார். ஆனால் சுக்கிரனும் சனியும் கொல்வார்கள். மற்ற கிரகங்களாகிய சூரியன், சந்திரன், செவ்வாயும், புதன், வியாழன் முதலானோர் கொல்லமாட்டார்கள். ஆனால் ஜாதகபலனை பார்க்கும்போது இலக்கினத்தைப் பார்த்த கிரக நிலையைக் கண்டு பலன் சொல்வீர்கள்.
Page 298
துவாதச லக்கின கிரகபலன் - கன்னியாலக்கினத்தின் பலன்
கன்னியாலக்கினத்தில் ஜனித்தவர்க்கு கனகுருசேய்மதியும் கொடுமைசெய்வார் மன்னுசனிசுக்கிரனும் நல்லோராவார் மால்புகருஞ்சேர்ந்தாலே யோகமுண்டு நன்மையாய் வித்யாபவிருத்தியோடு நற்பலனாய் உத்தியோக வர்த்தகத்தால் பொன்பொருளும் பூஸ்திதியும் தேடியன்பாய் பெருமையுடன் ஜீவித்து வாழ்வாரே.
உரை :- கன்னியா லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு குரு பகவானும், செவ்வாய், சந்திரனும் பலவிதமாகிய கஷ்ட நிஷ்டூத்தைச் செய்வார்கள். சனி பகவானும், சுக்கிர பகவானும் நன்மை செய்வதுடன் வித்தியாபவிருத்தி, உத்தியோகமேன்மை வர்த்தகலாபத்துடன் பொன், பொருள், பூஸ்திதியுடன் மகாதனவந்தராய் பிரபுத்தன்மையாக ஜீவித்திருப்பதுடன் சுகஜீவியாய் வாழ்ந்திருக்கச் செய்வார்கள்.
துவாதச லக்கின கிரகபலன் - கன்னியாலக்கினத்தின் பலன்
சுக்கிரனும் புதபகவான் கொல்லமாட்டார் செவ்வாயும் சந்திரனும் வியாழன்மூவர் பக்குவமாய் அவர்கள்திசா புத்திதன்னில் பற்பல வியாதியினால் திகைக்கச்செய்து தக்கபடி மாரகஞ் செய்வாரென்று தாரணியில் ஜாதகர்க்கு பலனைச்சொல்வீர் சிக்கிலாகிரகநிலை தனையாராய்ந்து சிறப்புடனே ஜாதகத்தின்பலன் ஒதுவீரே. 19
உரை :- சுக்கிரபகவானும் புதபகவானும் மாரகஞ் செய்ய மாட்டார். ஆனால் செவ்வாயும் சந்திரனும் வியாழனும் அவர்கள் திசாபுத்தியினில் பலவித வியாதிகளினால் கஷ்டப்படச் செய்து மாரகஞ் செய்வார்கள். ஆனால் மற்ற கிரகநிலை ஆராய்ந்துணர்ந்து அந்தந்த ஸ்தான பலனைக் கவனித்து கிரகங்கள் நின்ற நட்பாட்சி உச்சபகை நீசஸ்தான பலனையும் ஆராய்ந்து பலன் சொல்ல வேண்டும்.
துவாதச லக்கின கிரகபலன் - துலாலக்கின பலன்
அன்புடனே துலாலக்கினம் பிறந்தோர்க்கு ஆதித்தன் சேய்குருவும் கொடுமைசெய்வார் நன்மையாய்புதன் சனியும் சுக்கிரன் நல்லோர் நற்பலனை விசேஷமாய் தருகுவார்கள்
Page 299
துலா லக்கின பலன் (தொடர்ச்சி)
இன்புடனேசந்திரனும் புதனும்சேர்ந்தால் இராஜயோகபலனனு பவிக்கச்செய்வார் தன்மையுடன் செவ்வாய் மாரகஞ்செய்வாரென்று தாரணியோர்க்கோதுவீர் ஜோதிடவல்லோரே. 14
உரை : - துலாலக்கினத்தில் பிறந்தவர்களுக்குச் சூரியனும், செவ்வாய், குருவும் ஒருரமான கஷ்டநஷ்டத்தை விளைவிப்பர். புதபகவானும், சனி, சுக்கிரனும் நல்ல பலனைக் கொடுப்பார்கள். ஆனால், சந்திரனும், புதனும் சேர்ந்தால், வித்தியாபிவிருத்தி, உத்தியோக மேன்மை, வர்த்தகலாபம் பொன் பொருள் பூஸ்திதி தனதான்ய சம்பத்துடன் கீர்த்திப்ரகாசமாய் ஜீவித்திருப்பார்கள். ஆகையால் செவ்வாய் பகவான் மாரகஞ் செய்வார்.
துலா லக்கின பலன் (தொடர்ச்சி)
இன்னவிதமாகவே துலாலக்கினத்தின் இசைந்தபலனிருந்தாலும் ஜாதகர்க்கு பொன்னவனாங்குருரவியும் கொடுமைதுன்பம் பொருந்திடவே மாரகத்தைசெய்வாரப்பா உன்னதமாகக்கிரகநிலை தனையாராய்ந்து நலமுடனே பலன் சொல்வீரினிதாய்தானும் அன்புமிகுங்கணிதநூல் ஆராய்ச்சிசெய்து அம்புவியின்மானிடர்க்கு புகலுவீரே. 15
உரை : - துலா லக்கினத்தில் ஜனனமானவர்களுக்கு கிரகங்கள் இன்னின்னவிதமாகப் பலன் கொடுத்தாலும், வியாழபகவானும் சூரியனும் பலவிதமான வியாதியால் கஷ்டப்படச் செய்து கொல்வார்கள். என்றாலும் மற்ற கிரகங்கள் நிற்கும் நிலையையும், அந்தந்த கிரகங்களின் ஆதிபத்திய பலனையும் ஸ்தான பலன்களையும் கேந்திரகோண பகை நீச ஆட்சி உச்சஸ்தான பலன்களையும் அனுசரித்துப் பார்த்து பலன் சொல்ல வேண்டும்.
விருச்சிக லக்கின பலன்
விருச்சிகலக்கினத்தில் பிறந்தோர்க்கு வெள்ளி புதன்செவ்வாயும் சனியும்பொல்லார். குருரவியும்சந்திரனும் நல்லோராகும் கொற்றவர்கள்போலரசர் யோகமுண்டாம் பெறுமையுண்டுதனலாப சம்பத்துண்டு பொன்பொருளும் பூஸ்திதியும் கிடைக்குமப்பா குருசனியு மாரகஞ் செய்யமாட்டார் கூறுவாய் ஜாதகத்தின் பலனாராய்ந்தே. 16
உரை : - விருச்சிக லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு வெள்ளி யும், புதனும், செவ்வாயும், சனியும் பொல்லாத கஷ்ட பலனை
Page 300
துவாதச லக்கின கிரகபலன்
கொடுப்பார்கள். வியாழனும், சூரியனும், சந்திரனும், நல்ல யோகபலனைக் கொடுப்பார்கள். அதன் பலன் விபரமெவ்வித மெனில் பெருமையும் தனலாபமும் தனதான்ய சம்பத்தும் பொன், பொருள் புஸ்தியும், பொருந்தி யிருக்கும்படியான இராஜயோகத்தை அனுபவிப்பார்கள். குருபகவானும் சனிபக வானும் மாரகஞ் செய்யமாட்டார்கள். ஜனனலக்கின கணிதத் தின் விபரத்தை சரியாய் ஆராய்ந்து பலன் சொல்வீர்கள்.
துவாதச லக்கின கிரகபலன்
சுக்கிரனாம் புதன் செவ்வாய் மாரகஞ்செய்வார்கள் சூழ்ந்து பலவியாதிகளாலெலியச்செய்து மிக்கவே துன்பமுடன் துயரமெல்லாம் மிகவேதனையாக தந்தேகொல்வார் சிக்கிலாகிரகநிலை தனையாராய்ந்து சிதறாமல் கணிதநூற் படிசோதித்து இலக்கின பலனின் னென்றென்றும் வகுத்துணர்ந்து லக்ஷணமாய்ப்பலனுரைப்பீர் ஜாதகர்க்கே 17
உரை: சுக்கிரனும், புதனும், செவ்வாயும், விருச்சிக லக்கினத்தில் பிறந்தவர்களுக்குப் பலவித குரூரபயங்கர கொடுமை செய்து வியாதியினால் மெலிவுறச் செய்து மாரகஞ் செய்வார்கள். துன்பமும், கஷ்டநஷ்டங்களும் அமையும்படி செய்தாலும் அவர்கள் ஜனனமான லக்கினபலன் விபரமும், மற்ற கிரகங்களின் சம்பந்தப்பார்வை முதலானவைகளும் சோதித்துணர்ந்து பலன் சொல்வீர்கள்.
தனுசுலக்கின பலன்
ஜனனலக்கினந்தனுசாகப் பிறந்தோர்க்கு சந்ததமும்புகர்குருவும் துன்பஞ்செய்வார் சனிசெவ்வாய்சூரியனும் நல்லோராகும் சம்பத்துச்சகலபலன் தருவாரப்பா சனிமதியும்மாரகஞ் செய்யமாட்டார் சாற்றுபுகர்புதன்கொல்லாரென்றுரைப்பீர் தினகரனும்மால்சேர்ந்தால் இராஜயோகம் திருமங்கையலக்ஷ்மிகர மிகவுண்டாமே. 18
உரை: ஜனன இலக்கினந் தனுசாகப் பிறந்தவர்களுக்கு சுக்கிரனும் குருவும், கொடுமையும் துன்பமுஞ் செய்வார்கள். சனியும், செவ்வாயும், சூரியனும், நல்லபலனைக் கொடுத்து நல்ல லாபமும் கிடைக்கும்படி செய்து ஆதரிப்பார்கள். ஆனால் சனி பகவானும், சந்திரனும் மாரகஞ் செய்யமாட்டார்கள். சுக்கிரனும் புதனும் பலவித வியாதியால் மெலியச்செய்து மாரகஞ் செய்
Page 301
மகரலக்கின பலன்
294 பெரிய ஜோதிட சில்லறைக் கோவை வார்கள். சூரியனும் புதனும் சேர்ந்திருந்தால், இராஜயோகத்திற்குச் சமானமான மோக்ஷங்களை அனுபவிக்கச் செய்வார்கள்.
மகரலக்கின பலன்
மகரலக்கின பலன்
மகரலக்கினந்தனிலே பிறந்தோருக்கு மதிகுருவுங்கஷ்டநஷ்ட பலனைத்தந்து மிகதுன்பஞ்செய்வார்கள் என்றுரைப்பாய் மிக்கசேய்புகர்நல்லோர் ரவிகாரிகொல்லார் சுகபலனைச்சந்திரனும் குருவுந்தந்து சொர்னபணிபூஷணமும் திரவ்யலாபமும் புகழ்மேவும்பந்துமித்திரர் மனைவிமைந்தர் பொன்வெள்ளிவிசேஷமாய் கிடைக்குந்தானே. 19
உரை:— மகர லக்கினத்தில் பிறந்தோருக்கு மதிகுருவும், சேர்ந்து விருச்சிகலக்கினத்திலிருந்தால் அது லாபஸ்தானமாயிருந்தாலும் கஷ்டநஷ்டபலனை அனுபவிக்கச் செய்வார். சுக்கிரனும், செவ்வாயும் நல்ல பலனைத் தருவார்கள். சூரியபகவான் மாரகஞ் செய்யமாட்டார். ஆனால் சந்திரனும், குருவும், கடகத்திலிருந்தால் குருச்சந்திர யோகபலனாக பலவிதமான மனோற்சாகமும், வித்யாபிரீர்த்தி, உத்தியோகமேன்மை, வியாபாரவிருத்தி தனதான்ய சம்பத்து பொன்பணி பூஷணாதிகளும், மனைவி, மைந்தர், பந்து மித்திரர் முதலான சகலரும் ஆசாபாச நேசவிஸ்வாசமாயிருப்பதுடன் பொன், பொருள், பூஸ்திதியுடன் பிரபுத்தன்மையாய் ஜீவித்திருப்பார்கள்.
மகரலக்கின பலன்
குருவுடனேசந்திரனும் மாரகஞ்செய்தாலும் கூடியே வெள்ளிபுதன் சேர்ந்திருந்தால் பெருமையுடன் பொன்வெள்ளி நாணயங்கள் பொருளுடனே தனதான்ய சம்பத்தெல்லாம் தருவார்கள் மனைவிமைந்தர் பந்துமித்திரர் தரணியிலே பெருகியே வாழ்ந்திருப்பார் அருமையுடன் ஜோதிடநூ லாராய்ந்தன்பாய் அன்புடனே ஜாதகர்க்கு பலன்சொல்வீர். 20
உரை:— குருவும், சந்திரனும் தமது திசாபுத்தியில் மாரகஞ் செய்தாலும், சுக்கிரனும் சேர்ந்திருந்தால் பெருமையுடன் பிரபுத்தன்மையாக உத்தியோகவிருத்தி வியாபாரலாபம் பொன் பொருள் பூஸ்திதி முதலான சம்பத்துடன் மனைவி, மைந்தர், பந்துமித்திரர்களுடனே வாழ்வு பெருகியே ஜீவித்திருப்பார். ஆனால், மற்ற கிரகங்கள் நின்ற நிலையும், ஸ்தான பலனையும் கணித்தாராய்ந்து பலன் விபரத்தை கவனித்துரைப்பீர்கள்.
Page 302
துவாதச லக்கின கிரகபலன் - கும்பலக்கின பலன்
கும்பலக்கினந்தனிலே பிறந்தோர்க்கு குருசெவ்வாய்தன்திசா புத்திதன்னில் வம்பானகண்டநஷ்ட மனுபவிக்கச்செய்யும் வருத்தமெல்லாம்புரிந்து துன்பஞ்செய்வார் நம்புவாய் புதன்ரவிமால் மந்தன்நல்லோர் நாடியேபுகர்செவ்வாய் சேர்ந்திருந்தால் அம்புவியில் யோகபலன் மிகவேதந்து அணிபணிகள்பொன்பொருளுந் தருவாரே. 21
உரை :- கும்ப லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு வியாழ பகவானும், செவ்வாயும் தமது திசாபுத்திகளில் பலவிதமாகிய கண்ட நஷ்ட பலனை அனுபவிக்கச் செய்வார்கள். ஆனால், சுக்கிரன், சூரியன், புதன், சனி நல்லவர்கள். சுக்கிரனும், செவ்வாயும் சேர்ந்திருந்தால், அணிபணிகள் ஆஸ்தி பூஸ்திதி பொன், பொருள், மனைவி, மைந்தர்களுடன் சுகஜீவியாய் வாழ்ந்திருப்பார்கள்.
துவாதச லக்கின கிரகபலன் - கும்பலக்கின பலன்
அந்தணனேயும்பலக்னத் தோனைக்கொல்லான் அன்பில்லாசந்திரனும் செவ்வாய்கொல்வார் இந்தவிதமாயிருந்தால் பலனாராய்ந்து இலக்கினத்திற்கேபொருந்தும் திசையுங்கண்டு சந்ததமும்பவனெல்லாம் வகுத்துணர்ந்து சாற்றுமந்தகிரகநிலை யோசித்தான்பாய் சிந்தைமகிழ்வாய்ஜாத கர்க்கிசைந்த சிறப்பானபலபலனை பகருவீரே. 22
உரை :- குருபகவான் கும்ப லக்கினத்தோனுக்கு துதியாதி பதியாயிருந்தாலும் கொல்லமாட்டார். ஆனால், சந்திரன், செவ்வாய் மாரகஞ் செய்வார்கள். ஆகையினால், இலக்கினாதிபதியையும், இலக்கினஸ்தானத்தையும் மற்ற கிரகங்களின் பலபலன்களையும் கவனித்து பலன் சொல்ல வேண்டும்.
துவாதச லக்கின கிரகபலன் - மீனலக்கின பலன்
கனமானமீனலக் கினத்தோருக்கு கதிரவனும்பொன்புகர்மால் கொடுமைசெய்வார் மனமகிழ்வாய்சேய்மதியும் நன்மைசெய்வார் மாஷிமையாய்குருசெவ்வாய் சேர்ந்திருந்தால் தனதான்யசம்பத்து மிகவேதந்து தாரணியில்வாழ்ந்திருக்கச் செய்குவார்கள் இனஜனத்தோர்மனைவிமைந்த ருடன் அன்பாக இனிதுடனே வாழ்ந்திருப்பாரூலகமீதே. 23
Page 303
துவாதச லக்கின கிரகபலன்
உரை :- மீன லக்கினத்தில் ஜனனமானவர்களுக்கு சூரியனும், குருவும், சுக்கிரனும், புதன் முதலானோர்கள் தமது திசா புத்திகளில் பலவிதமாகிய கஷ்டநஷ்டத்தை யனுபவிக்கச் செய்வார்கள். ஆனால், செவ்வாயும், சந்திரனும் நன்மை செய்வார்கள். குருபகவானும், செவ்வாயும் சேர்ந்திருந்தால் தனதான்ய சம்பத்து அதிகரித்து உத்தியோகவிருத்தி, வியாபார லாபமும் பெற்று திரவிய பெருக்குடனே பந்துமித்திரர், மனைவி, மைந்தர்களுடனே சுகஜீவியாய் வாழ்ந்திருப்பார்கள்.
துவாதச லக்கின கிரகபலன்
மனமகிழுமீனைலக்னத் தோனைசெவ்வாய் மாரகஞ்செய்யவேமாட்டார் புதருமந்தன் தினகரனும்புகன்கொல்லார் வியாதியாலே திகைத்திடவேமாரகஞ்செய் வாரென்றுலும் கனமுடனேலக்கனணிதா ராய்ச்சிசெய்து காணவேபலன்சொல்வீர் ஜாதகர்க்கு இனிதானபலரபலனை கவனமாக இசைந்தவிதமாவுரைப்பீர் மதியுள்ளோரே. 24
உரை :- மீன லக்கினத்திற் பிறந்த ஜாதகனை செவ்வாய் மாரகஞ் செய்யார். ஆனால், சூரியன், புதன், சுக்கிரன், சனியும் அவர்கள் திசாபுத்தியில் பலவிதமாகிய வியாதியினால் மெலிந்துருகச் செய்து மாரகத்தை யடையச் செய்வார்கள். ஆனால், இலக்கின கணிதாராட்சி செய்து பார்த்து, மற்ற கிரகங்களிருக்கிற ஸ்தான பலனும், திசாபுத்தியின் விசேஷத்தினால் நடக்கும் உண்மை ரகசியத்தையும் ஒழுங்காக கவனித்துப் பலன் சொல்ல வேண்டும்.
துவாதச லக்கின கிரகபலன் முற்றிற்று.
Page 304
ஆயுள் நிர்ணய பலன்
எண்சீரடி விருத்தம்
இலக்கினத்தோன் அஷ்டமத்தோ னிருவருந்தான் இசைந்தசரா ராசியுற்றால் ஜாதகர்க்கு பலமானதீர்க்காயுள் தருவாரப்பா பகருந்திரம் அற்பாயு ளென்றேசொல்லு நலமுடனே உபயந்தான் மத்திபமேயாகும் நாடியதோர்ஜாதகர்க்கு பலனாராய்ந்து கலக்கமிலாகிரகநிலை தனையாராய்ந்தும் கழறுவீர்ஜாதகர்க்கு விபரந்தானே. 1
உரை:— இலக்கினாதிபதியும் அஷ்டமாதிபதியும் சராசியிலிருந்தால் ஜாதகர்க்கு தீர்க்காயுசாயிருக்கும். ஸ்திரராசியிலிருந்தால் அற்பாயுசாயிருக்கும் உபயராசியிலிருந்தால் மத்தியபலனாகும். இவ்விதமே ஒவ்வொரு ஜாதகர்க்கும் மாரகதிசாபுத்திபலன் ஆராய்ந்துரைக்கும்போது கணிதவாராய்ச்சியுடன் பலன் சொல்ல வேண்டும்.
ஆயுள் நிர்ணய பலன்
பெருமைமிகும்லக்கினத்தோ ரானகோள்கள் பெலமாகஸ்திரராசி தனிலமர்ந்தால் தருணைமான்கோணும் உபயமேறில் தகுந்தஸ்திரஞ்சரமுபயம் கவனித்தோர்ந்து அருமையாய்ஜோதிடநூல் கணித்தாராய்ந்து அன்புடனேகிரகங்கள் நின்றஸ்தானம் பொருந்தியதோர்வலிகனபலன் தனையும்பார்த்து பொருத்தமாய் ஆயுள்பலன் புகலுவீரே. 2
உரை:— இலக்கினாதிபதியாகிய கிரகங்கள் ஸ்திரராசியிலிருந்தால், ஏகாதிபதியும் உபயராசியிலிருக்க தகுந்தவிதமாய் சராசி ஸ்திரராசி உபயராசியில் கிரகங்கள் நிற்கும் விபத்தைப் பார்த்து பலன் சொல்லும்போது ஆயுள் கணிதத்தைக் கணக்கெடுத்து, பார்த்து மாரக ஸ்தானாதிபத்தியத்தையும் பகுத்துணர்ந்து பலன் சொல்ல வேண்டும்.
ஆயுள் நிர்ணய பலன்
அன்புடனேலக்னாதி பதியுந்தானே அற்பமிலாமல்பலத்து உபயமேறி நன்மையுடன் அஷ்டமத்தோன் ஸ்திரத்தில்நிற்க நலமானவபது மத்திபமேயாகும்
Page 305
பெரிய ஜோதிட சில்லரைக் கோவை
இன்பமுடனிவர்கள் நின்ற ராசிநாதன் இருந்தஸ்தானத்தின்பலனை கவனித்தோர்த்து தன்மையுடன்மாரகஸ்தானத்திற்கேற்ற தகுந்தபலனாயுள் பொருத்தும் பாரே. 3
உரை:-- லக்கினாதிபதி பலமான ஸ்தானாதிபதியாகி உபய ராசியிலிருக்கும்போது, ஆயுள் ஸ்தானாதிபதியாகிய கிரகங்கள் ஸ்திர ராசியிலிருந்தால் மத்திப பலனாயிருக்கும். ஆனால் இந்த கிரகங்கள் நின்ற ராசிநாதர்களிருக்கும் ஸ்தானபலனைக் கவனித்து, அந்தந்த திசாநாதர்களின் மாரகஸ்தானாதிபத்திய பலனையும் அனுசரித்துப் பார்த்து ஆயுள் பலன் சொல்ல வேண்டும்.
பெரிய ஜோதிட சில்லரைக் கோவை
பன்னு மஷ்டமாதிபதி யிருந்தராசி பகரு மந்ததிரிகோண ராசிதனில் நன்னாளுஞ்சேர் மாதத்தில் மாரகத்தை நாடியே தருவார்க ளென்றுரைப்பாய் பன்னூ பிராசிக்கு நேரான பகரு திரிகோணமாம் நக்ஷத்திரத்தில் துன்பமாய் மாரகஞ் செய்வாரென்று துரிதமுடன் ஜாதகர்க்குப் புகலுவீரே. 4
உரை:-- அஷ்டம ஸ்தானாதிபதியாகிய கிரகங்கள் திரிகோண ஸ்தானத்திலிருந்த மாதத்தில் வரும்போது அந்த ஸ்தானத்திற்குரியவனுக்கு நட்புறாசியின் ஸ்தானாதிபதி திசை வரும்போது மாரகத்திற்குச் சமானமான கஷ்ட நஷ்டங்களைத் தருவதுடன் ரோகஸ்தானாதி திசையும் வந்தால் பலவிதமான வியாதிகள் சூழ்ந்து, அதனால் பலஹீனமாகி துயரப்படச்செய்து மாரகஞ் செய்வார்கள்.
புத்திரதோஷ பலன்
பஞ்சமஸ்தானத்திலும் ஜனனமான பகருலக்கினம் ஒன்பதாம் வீட்டிலுந்தான் எஞ்சிலா சனிகுளிகன் ராகுகேது இருந்தாலே ஜாதகர்க்கு சர்ப்பதோஷம் வஞ்சனை செய்தேகருவை யழித்ததோஷம் வந்துசந்ததிகேடாய் மைந்தரில்லா துஞ்சியே மிகவருந்தி லங்குவார்கள் துன்பமுடன் துபமுற்றுலைகுவாரே. 5
உரை:-- ஜனன லக்கினத்திலும், பஞ்சமஸ்தானத்திலும், ஒன்பதிலுஞ், சனி, குளிகன், இராகு, கேது இருந்தால் முன்ஜனனத்தில்
Page 306
ஆயுள் நிர்ணய பலன்
ந்த பழிபாபத்தினாலும், உருவமித்ததினாலும், சர்ப்பத்தைக் ன்ற பாபத்தினாலும் சந்ததியில்லாமல் கலங்குவார்கள். நால் அதற்குரிய கர்மசாந்தி செய்தால் கீர்த்தி பிரகாரம் ருத்திய பிள்ளைகள் பிறந்து சுகமாயிருப்பதற்காகும்.
நவக்கிரகங்களின் நட்பு ஆட்சி பகை நீசபலன் - சூரிய பலன்
சூரியனுக்காட்சிசிங்கம் தனுசுமீனம் சொல்லிய நட்பாகும் மேஷமுச்சம் சீரியநீசஸ்தானம் துலாமென்றோது சிக்கிலாசூரியர்க்கு மற்றையேழும் வீரியமில்லாபகையா யிருப்பதாலே விளங்குமேழ்வீட்டிலொன்றில் ரவியிருந்தால் காரியஸ்தானாதிபதி பாக்கியத்தோன் களிப்புடனே ஆணிபொருள் பலனுண்டாமே. 6
உரை:—சூரியபகவானுக்கு சிங்கராசி ஆட்சியாகும். மேஷம் உச்சமாகும். தனுசு மீனம் நட்பாகும். துலாராசி நீசமாம். மற்ற ஏழுஸ்தானங்களும் பகைவீடாகும். ஆனால் பாக்கிய ஸ்தானாதிபதியும், ஜீவனஸ்தானாதிபதியும் ஆட்சி பெற்றிருந் தால், அவரவர் பலனை அந்த சூரிய திசாபுத்திகளில் விசேஷ மாகத் தருவார்கள்.
நவக்கிரகங்களின் நட்பு ஆட்சி பகை நீசபலன் - குருபகவான் பலன்
அம்புவிக்குர்க்கர்க்கடகம் ஆட்சியாகும் ஆனதுலாம்தனுசுமீனம் மிதுனம்கன்னி வம்பணுகா நட்பாகும் ரிஷபமுச்சம் விருச்சிகமேநீசமென வழுத்துவாயே நம்புவாய்மற்றவைந்து ராசியெல்லாம் நவிலொணாப் பகையாகு மென்றேசொல்லு அம்புவியின்ஜாதகர்க்குப் பலனாராய்ந்து அறிவிப்பாய்திசாபுத்தி பலனைத்தானே. 7
Page 307
செவ்வாய் பலன்
சேய்க்குமோடுதேள்விருச் சிகமுமாட்சி சேர்ந்தரிடபம்துலாஞ் சிங்கம நட்பு வாய்ந்தமகரம்உச்சம் கடகம் நீசம் வையத்தின்னாதர்க்குப் பலனாராய்ந்து ஆய்ந்து பலன்சொல்லும்போது லக்கினந்தன்னில் அவர் உன்னியிர்ககால நிர்ணயத்தை சாய்ந்து விடம்கணக்கெடுத்து திசாபுத்தி வீரம் சரியாகப்பார்த்து பலன் சொல்லுவீரே. 8
உரை:—செவ்வாய் பகவானுக்கு மேஷம், விருச்சிகம், ஆட்சி, சிங்கம், ரிஷபம், துலாம் சமமாகும். தனுசு முதலான இராசிகள் நட்பாகும். மிதுனம், கன்னி, கும்பம் முதலான இராசிகள் பகையாகும். கடகம் நீசமாகும். இவையனைத்தும் கவனித்து ஜாதக பலனை ஆராய்ந்துணர்ந்து திசாபுத்திக்கிசைந்த விதமாய் பலன் சொல்ல வேண்டும்.
புதபகவான் பலன்
கன்னியுடன்மைதுனமும் புதனுக்காட்சி காணுமந்தகன்னியே உச்சமாகும் நன்னயமாய்துலாநட்பு மாகுமப்பா நவிலும்விருச்சிகராசி தனுசுராசி அன்பான கும்பம்மேஷம் சமமேயாகும் ஆனகடகம்பகையாம் கவனிப்பாயே இன்னவிதம்திசாபுத்தி பலனாராய்ந்து இனிதுடனே பலன்சொல்வீர் ஜாதகர்க்கே. 9
உரை:—புதபகவானுக்குக் கன்னியும், மிதுனமும் ஆட்சி யாகும். ஆனால் உன்னியராசியே புதபகவானுக்கு ஆட்சி உச்சமான ஸ்தானம். துலாம் நட்புஸ்தானமாகும். விருச்சிகம், தனுசு, கும்பம், மேஷம் சமமாகும். கடகராசி பகை. இவையனைத்தும் கவனித்துணர்ந்து இலக்கின கணிதத்திற் கிசைந்த விதமாய் திசாபுத்திபலனாராய்ந்து அந்தந்த ஜாதகர்கட்கிசைந்த பலாபலனை விபரமாய் ஆராய்ந்துணர்ந்து பலன் சொல்ல வேண்டும்.
குரு பலன்
குருபகவானுக்குமீனம் தனுசம்ஆட்சி குறித்ததேன்றிஷபமும் பகையேயாகும்
Page 308
ஆயுள் நிர்ணய பலன்
பெருமையுறும்மகரமே நீசமாகும் பேசும்புகழ் மற்றதெல்லா நட்பேயாகும் அருமையுடன்திசாபுத்தி பலனாராய்ந்து அன்புடனேமற்றவிரகங்கள் நோக்கம்பார்வை தருணமேநிற்குங்கோட் சாரங்கண்டு தகுந்தபலன்சொல்லுவீர் ஜாதகர்க்கே. 10
உரை :- குருபகவானுக்கு மீனமும் தனுசும் ஆணியாகும். விருச்சிகம் மேஷமும் பகையாகும். மகரராசி நீசமாகும். மற்ற ராசிகள் நட்பாய் விளங்கும். இவைபனைத்தும் கவனித்து இலக்கினத்திற்கிசைந்த விதமாய் திசாபுத்தி பலனையும் ஆராய்ந்து கணக்கெடுத்து அந்தச் சமயத்தில் சந்திரன் நின்ற இராசியின் படியே கோட்சாரத்திற்கு இசைந்த மற்ற கிரகங்கள் நிற்கும் ஸ்தான பலனறிந்து பலன் சொல்ல வேண்டும்.
சுக்கிரபகவான் பலன்
சுக்கிரற்குரிஷபதுலாம் ஆணியாகும் சுகமாகவேமீனம் உச்சமாகும் சிக்கிலாகும்பமும் கேந் ராசிதானும் சமமானதென்றுணர்வாய் மற்றராசி பக்குவமிலாதநட்பு ராசியென்று பகுத்துணர்ந்துகணிதநூல் தனைஆராய்ந்து இலக்கினத்திற்கிசைந்ததிசா புத்தியோடு இசைந்தராசிப்பலனும் விவரிப்பீரே. 11
உரை :- சுக்கிரபகவானுக்கு ரிஷபமும், துலாராசியும் ஆணியாகும். மற்ற ராசிகளெல்லாம் நட்பாகும். இதனை இலக்கின கணிதாராய்ச்சியுடன் பார்த்து திசாபுத்தி பலனை ஆராய்ந்து மற்ற கிரக நிலையையும் கவனித்துணர்ந்து பலன் சொல்ல வேண்டும்.
சனிபகவான் பலன்
மந்தனுக்குக்கும்பமும் மகரம்ஆணி மகிழாகதுலாம் உச்ச மாகுமப்பா முத்தியைமேஷமேநீச மாகுமென்றும் முன்னின்றகடகசிங்கம் பகையதாகும் பந்தமுடன் மற்றவைகள் நட்பே யாகுமென்று பக்குவமாய்ஜாதகருக்கு பலனாராய்ந்து
Page 309
ஆயுள் நிர்ணய பலன்
சிந்தாமற்பலனுரைக்கும் போதுராசி சேர்ந்தகோட்சாரம்போல் புகலுவீரே. 12
உரை:—சனிபகவானுக்கு கும்பராசியும் மகரராசியும் ஆக்ஷியாகும். துலாம் ராசி உச்சமாகும். மேஷம் நீசமாகும். கடகம், சிங்கம் பகை ராசியாகும். மற்ற ராசிகள் நட்பு ராசியாகும். ஆகையால், ஒவ்வொரு ஜாதகரின் பலனுக்கிசைந்த விதமாய் திசாபுத்தி பிரித்து பலனாராய்ந்து சொல்லும்போது மற்ற கிரகங்கள் நின்ற இராசிப் பலனும் கோட்சாரத்திற் கிசைந்தபடியே கணித்துப் பார்த்து பலன் சொல்ல வேண்டும்.
ஆயுள் நிர்ணய பலன் முற்றிற்று.
Page 310
போதக - வேதக - பாசக - காரக கிரக நிலை
வெண்பா
கூறுபலனைக்கொடுவென்பான் போதகனும் வேறுபண்ணித் தட்டுவிப்பான் வேதகனும்-தேறுபலன் கூட்டுவிப்போன் பாசகனும் கோலமகாதிசைக்கே ஈட்டு பொருள் காரகனீவான். 1
உரை:-- ஜாதகம் சொல்லும்போது நல்ல பலனைக் கொடுப்பவன் போதகன். அதைத் தவிர்த்து வேறாக்கித் தட்டுவிப்பவன் வேதகனாகும். உத்தமபலனை சேர்த்துக் கொடுப்பவன் பாசகன். அந்தந்த கிரகங்களின் மகாதிசையில் விசேஷமான லாபத்தைக் காரகன் தருவான்.
சூரியதிசையின் கிரகநிலை
பானுதிசைக்கு மந்தன் பாசகனாஞ் சுக்கிரனே மானேகேன்வேதகனாம் மன்னவனே--தேனனையாய் காரகனாஞ் செவ்வாயோ காசினியோர் தாமறிய தாரணியும் போதகனாமே. 2
உரை:-- சூரியதிசையில் சனிபகவான் பாசகன். சுக்கிர பகவான் வேதகன். குரு காரகனாதும் செவ்வாய் போதகனாகும். ஆகையால் சூரியமகாதிசையில் இன்னின்ன ஸ்தானத்தில் கிரகம் நின்ற நிலையென்ப துணர்ந்து பலன் சொல்லும்போது திசாபுத்தியின் பலாபலனையும் அனுபவமாக திசானாதர்கள் கொடுக்கும் பலனுடன் அந்த ராசியில் கிரகங்கள் நிற்கின்ற கிரகங்களின் பலனையும் அனுசரித்துப் பலன் சொல்லவேண்டும்.
சந்திரதிசையின் கிரகநிலை
இந்து திசைக்குவெள்ளி ஏற்றதோர் பாசகனாம் விந்தைமலர் நண்பனே வேதகனாம்--மந்தனே கங்கா நதியுடையும் காசினியிற் காரகனாம் அங்காரகன்போதகனாம்.
உரை:-- சந்திரதிசைக்கு சுக்கிரபகவான் பாசகன். புதன் வேதகன். சனிபகவான் காரகனாம். ஆனால் அங்காரகபகவான் போதகன் ஆகையால் சந்திரபகவான் கடகராசியிலிருக்கும் போது மிதுன லக்கினத்தில் பிறந்த ஜாதகர்க்கு, குருபகவான் உச்சம் பெற்றிருந்தால் சப்தம ஜீவன ஸ்தானாதிபதி பலனை
Page 311
செவ்வாய்திசையின் கிரகநிலை
மங்கலனார் தன்திசைக்கு மார்த்தாண்டன்பாசகனாம் திங்களுமே போதகனாம் சேயிழையீர்-பொங்குபுகழ் ஏயபுதன்வேதகனா மிந்தரணி யோரறிய ஆயசனி காரகனே யாம். 4
யனுபவிப்பதற்கிசைந்த விசேஷபலனைத்தருவார். ஆனால் மற்ற கிரகங்கள் நின்ற ஸ்தானபலனும் அனுசரித்துப் பலன் சொல்ல வேண்டும்.
உரை:-செவ்வாய் திசைக்கு சூரியபகவான் பாசகன். சந்திரபகவான் போதகன். புதபகவான் வேதகனாகும். ஆனால் சனிபகவானே காரகனாகும். செவ்வாய் பகவான் மகரத்திலிருக்கும்போது தனுசு லக்கினமாயிருந்தாலும், சந்திரன் ஆறாமிட மாகிய ரிஷபத்தி லிருந்தாலும், அஷ்டமஸ்தானமாகிய கடகத்திலிருந்தாலும் பலனை விமரிசையாய்க் கொடுப்பார். ஆனால் புத பகவான் மூன்று, ஆறு, எட்டு, பனிரெண்டாம் வீட்டிலிருந்தால் மாத்திரம் நற்பலனை யனுபவிக்கச் செய்யவொட்டாமல் தடுத்து கஷ்டத்தை யனுபவிக்கச் செய்வார். புதபகவான் வேதகனா யிருந்தாலும் கன்னியா ராசியில் தசம ஸ்தான கேந்திராதிபத்தியம் பெற்றாலும் அந்த ஸ்தானம் ஆட்சி உச்சஸ்தான மகிமையால் நற்பலன்களை யனுபவிக்கச் செய்வார்.
புதன்திசையின் கிரகநிலை
புத்தி திசைக்குப் புரவலனே போதகனாம் சந்திரனே பாசகனாய்த் தானாவ-னிந்துநுதல் மின்னனையீர் செவ்வாயோ வேதகனாம் வெள்ளியோ மன்னுபுகழ் காரகனா வான். 5
உரை:-புதபகவான் திசையில் குருபகவான் போதகன். சந்திரன் பாசகன். செவ்வாய் வேதகனாகும். சுக்கிரன் காரகனாவான். ஆகையால் குருபகவான் மீனலக்கினத்தில் ஆட்சி பெற்றிருக்கும்போது கன்னியாலக்கினமாயிருந்து புதனும் இலக்கினத்தில் ஆட்சி உச்சமாய் பலத்திருந்தால் குருபுத்தியில் விசேஷபலன் கிடைத்து அதனால் பிரபுத்தன்மையாயிருப்பதற்காகும். ஆனால் செவ்வாய் பகவான் விருச்சிகம், மேஷம் தனக்கு ஆட்சி ஸ்தானமாயிருந்தாலும், மூன்று எட்டாம் ஸ்தானமாதலால் பலவிதமான பொன் பொருள் சேதமாவதுடன் பலவித கஷ்டநஷ்டமும் கவலையும் உண்டாகும்படி செய்வர். ஆகையால் அவர் புததிசைக்கு வேதகனாயிருந்தாலும், ஜனன லக்கினத்திற்கும் பதினோறாமிடத்தி லிருந்தால் எத்தகைய கஷ்ட நஷ்டமும் நேரிடாமல் பிரபுத்தன்மையாக ஜீவித்திருக்கும்படியான நற்பலனைத் தந்து தனவந்தனாயிருக்கும்படி செய்வார்.
Page 312
போதக-வேதக-பாசக-காரக கிரகநிலை / குருவின் தசைக்கு
வேந்தன்மகாதிரைக்கு மெய்யானவேதகனாம் போந்தவருஞ்செவ்வாயோ போதகனாம்-காந்திகெறி சந்திரனே காரகனார் தேவதே தாரணியில் அந்தகனே பாசக னாவான். 6
உரை:--குருமகாதசையில் சூரியபகவான் வேதகனாகவும், செவ்வாய் போதகனாகிம், சந்திரன் காரகனாயுமிருந்து பலா பலனை அனுபவிக்கச் செய்வார்கள். சனிபகவான் பாசகனாயிருந்து பலன் கொடுப்பார். எவ்விதமென்றால், ஜனன லக்கினம் தனுசு அல்லது மீனமாயிருந்து குருபகவான் ஆட்சி பெற்றிருந்தால் தன் திசையிற் பலனைக் கொடுப்பார். சூரியன் வேதகனாயிருந்தாலும் சிம்மராசியில் ஆட்சி பெற்றிருந்தால் நஷ்டமணுகாமல் சகலபாத் தையேயனுபவிக்கச் செய்வார் ஆனால் மற்ற கிரகங்கள் நின்ற இராசிபலனையும் பார்த்து, ஜாதகபலனையனுசரித்து சொல்லவும்.
சுக்கிரபகவான் திசையிற் கிரகநிலை
புகர் திசைக்குவியாழனே போதகன்தான் புதபகவான்பாசகனா மென்றுசொல்லு மகிழுடனே சூரியன் காரகனேயாகும் மைந்தனேவேதகனா மென்றுரைப்பாய் சுகமானநற்பலனைக் கொடுத்தார் நல்ல சுத்த நவக்கிரகங்க ளொன்பதிற்கும் தகுந்தபலன்லக்கினத்தின் மனிதன்போலே தாரணியில்வாழ்ந்துவர்த்த நடக்கும்பாரே. 7
உரை:--சுக்கிரமகா திசையில் வியாழ பகவான் போதக னாகும். புத பகவான் பாசகனாகும் சூரிய பகவான் காரகனாகும். சனிபகவான் வேதகனாகும். ஆகையால், சுக்கிர பகவான் மீன லக்கினத்திலிருந்தும் சொந்தவூரில் ஆட்சியாகவும், சூரியன் சிம்மத்தில் ஆட்சியாக விருக்கும்போது, தனுசு லக்கினத்தில் பிறந்த ஜாதகனை சகலரும் பிரபுவென்று புகழ்ந்துரைப்பார்கள். அத்தகைய ஜாதகனுக்கு சுக்கிரதிசை வந்தால் மிகுந்த யோக பலனைக் கொடுப்பார்கள் ஆனால், மற்ற கிரகங்களின் தன்மை யையும் பார்த்து பலன் சொல்ல வேண்டும்.
சனிதிசைக்கு கிரகநிலை
சனியின் திசைக்குச் சந்திரனே போதகனாம் இனியசெவ்வாய் வேதகனென் றேத்துங்-கனிமொழியாய் வெள்ளியே பாசகனாம் வேந்தனே காரகனாம் தெள்ளுதமி ழோருரைத்த சீர். 8
Page 313
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
உரை :— சனிபகவான் திசையில் சந்திரன் போதகனாகவும், செவ்வாய் வேதகனாகவும், சுக்கிரன் பாசகனாகவும், குருபகவான் காரகனாகவும் வருவார்கள். ஆனால், கும்ப லக்கினத்தில் ஜனித்தவர்க்கு, சனி பகவான் துலா ராசியில் உச்சம் பெற்றிருந்தால், அந்த சனி திசையில் விசேஷ பலனைக் கொடுப்பார். ஆனால், செவ்வாய் அந்த சனி திசைக்குத் தான் வேதகனாயிருந்தாலும் கும்ப லக்கினத்தில் செவ்வாயும் மீனத்தில் குருவு மிருந்தால் ஜாதகனானவன் கல்வியில் தேர்ச்சியடைந்து இராஜாங்க உத்தியோகஞ் செய்துகொண்டிருப்பதற்காகும் அங்காரக புத்தியில் விசேஷ நற்பலனைத்தந்து பிரபுத்தன்மையாய் விளங்கச் செய்வார். ஆனால் மற்ற கிரகங்கள் நின்ற இராசிபலனையும் அனுசரித்து திசநாதன் பலனறிந்து சொல்லவும். சனிபகவான் மேஷம் விருச்சிகராசிகளிருந்தால் ஜாதகருக்கு நல்ல விசேஷ பலன் கொடுக்கமாட்டார்கள்.
பொதுப் பலன்
இவ்விதமே நவக்கிரக பலனாராய்ந்து தீலக்கினத்தையனுசரித்து திசையும புத்தி ஒவ்வேகணிதமெடுத் துற்றுப்பார்த்து ஒதுபலனுரைக்கும்போ தவர்களுக்கு எந்தவிதமாய் பலபலன்க ளமையுமென்று ஏற்றபடி பார்த்துரைக்க வேண்டுமென்று இவ்விதமாய்கிரகநிலை தனையாராய்ந்து இனிதுடனே பலனுரைக்க வேண்டுந்தானே. 9
உரை :— இவ்விதமாகவே ஜாதக லக்கின கணிதமெடுத்துப் பலனாராய்ந்து சொல்லும்போது திசாபுத்தி பலனும் சரியாயெடுத்துப் பார்த்து திசநாதனிருக்கும் ஸ்தான பலனும், புத்திநாதனிருக்கும் ஸ்தான பலனும் ஆராய்ந்துணர்ந்து மற்ற கிரகங்களிருக்கும் ஆட்சி, உச்ச, நட்பு, பகை, நீச ஸ்தானத்தின் பலனையும் ஆராய்ந்து பலன் சொல்ல வேண்டும். அந்த திசாபுத்தி காலத்தை யனுசரித்து பார்க்கும்போது, தற்சமயத்தில் நடக்கும் கோட்சார பலனையும் அனுசரித்து பலன் சொல்ல வேண்டும்.
போதக-வேதக-பாசக-காரக கிரகநிலை
போதக-வேதக-பாசக-காரக கிரகநிலை முற்றிற்று.
Page 314
சகாதேவாரூடம் - நூற்றெட்டு லக்நத்துள் ஒரு தொகையைச் சொல்லக்கேட்டு பலன் சொல்லும் விபரம்
எண்சீரடி விருத்தம்
அன்புடனே ஆரூடங் கேட்கவந்தோர் அவர்வாயால் நூற்றெட்டுத் தொகையிலொன்றை இன்பாகக்கேட்டுபலன் லக்கத்துற்ற இசைந்தபடி நடக்குமென்று விபரமாக நன்மையுண்மை இன்னின்ன விதங்களாக நடக்குமென்று பலபலனை சொல்லுவீர்கள் பன்முறையும் நடக்கின்ற பலன்களெல்லாம் பார்த்துச்சொல்லும்விபரமினி பகருவேனே.
உரை :- ஆரூடங்கேட்க வந்தவர்களின் வாயினால் நூற்றெட்டு லக்நத்தில் ஒன்றைச் சொல்லச்சொல்லி, அதன் விபரத்திற்கிசைந்தபடியே அவரவர்கட்கு நடக்கும் பலனை விபரமாய்ச் சொல்ல வேண்டும். அவ்வவ்விதமாய்ப் பலன் சொல்லும் போதும் அவர்களின் பெயருடனே நிற்கின்ற ஸ்தானத்தையும் குறிப்பையும் கவனித்துப் பலன் சொல்லவேண்டும்.
சகாதேவ ஆரூடச் சக்கரம்
Page 315
ஆரூட சக்கரத்தின் விபரம்
அன்பாகஜோதிடர்முன் வந்துநின்று ஆரூடஞ்சொல்வீரெனில் நூற்றெட்டிலொன்றை இன்பாகசொல்வீரென் றுரைத்திட்டாலே இசைந்தபடிஏதேனுமோர் லக்கம்பொன்னால் அன்பாகபலனைதனி லொழுக்கமொன்று அடியிற் குறித்திருக்கும் பாடடைச்சொல்லி தன்மையுன்மை இல்லையிந்தா ட..தமென்று நவிலுவீர்கேட்போர்க்கு ஜோதிடவல்லோரே.
உரை :- உலகத்தில் வாழ்ந்திருந்து மனிதவகுப்பார்களில் மனச்சஞ்சலமுடையவர்கள் எமது மனோராஜ சந்தேகத்தை நிவர்த்தி செய்துகொள்வதற்கு ஜீவிதவர்த்தமானத்தைக் கவனித்துத் தமது சந்தோஷம் தீர்த்துக்கொள்வோமென ஜோதிடர் முன்பாக வந்து தாங்கள் நினைத்த காரியத்தின் நிலையைச் சொல்கிறோமுதாம்பூல் உருளையை கொடுத்தாரானால் மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிங்கம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய 12-ராசி, சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்ரன், சனி, இராகு, கேது ஆக 9-கிரகங்கள், இவைகளை முறைப் பெருக்க 12 9 108 ஆக மேலே காட்டிய சக்கரத்தின் நெம்பர்களில் எந்த நெம்பர்கள் சொல்லுகின்றார்களோ? அதேபிரகாரமாக அடியிற் குறிப்பிலிருக்கும் நெம்பரில் காட்டிய படாவிற்படி அதன் விவரத்தின் படியே நடக்கும் பலபலனை சொல்லவேண்டும்.
ஆரூட சக்கரத்தின் விபரம்
ஒன்றென்று சொன்னாலே யவர்களுத்த ஒங்குபுகழ்காரியங்கள் சித்தையாகும் தன்மையாய் நினைத்தவ ரெய்தார்சித்தி தனதான்ய லாபமுண்டு நினைத்தகாரியம் அன்பாயிங்கு சீரும்வர்த் தக வியாகத்தில் அதிகலாபங்கி டக்குயர் பதவியுண்டாம் பொன்பொருளும் புஸ்தியுண்டாகுந்தீதென்று புகல்வீர்கேட்போர்க்கு ஜோதிடவல்லோரே.
உரை:—ஆரூடங் கேட்கவந்தவர்கள் ஒன்று என்று சொன்னால் அவர்கள் நினைத்த காரியமெல்லாஞ் சித்தியாகும். இத்தனை நாளாய் அனுபவித்த கஷ்டநஷ்டமும் வறுமை பிணியெல்லாம் விலகி, தனதான்ய லாபமுண்டு. வர்த்தகத்தில் விசேஷலாபமுண்டு. உத்தியோகத்தில் பெருமையும் கீர்த்தியும் திரவியலாபமுண்டு. பொன் பொருள் புஸ்தியுங் கிடைக்கும், கலியாணவைபவ சுபகாரியங்களனைத்தும் நடக்குமென்றும் சொல்வீர். ஆனால், அவர்கள் இலக்கினத்தை யனுசரித்து
Page 316
சகாதேவாரூடம்
கோட்சார பலனையும், திசாபுத்தி பலனையும் ஆராய்ந்துணர்ந்து சொல்ல வேண்டும்.
விருத்தம்
வந்தோரிரண்டென்றுசொன்னால் வகையில்பொருள்சேதம் சிந்தையிற்பயமில்லாமல் கிரணியமிலேதேடி சந்தோஷமிகவுண்டாகி சகலபாக்கியமும் பெற்று அந்தமாய்த்தொழில்கிடைத்து ஆருங்காசிபல்கள்தானே. 2
உரை :- ஆருடங்கேட்க வந்தவர்கள் இரண்டென்று சொன்னால் முதலில் கைப்பொருள் சேதமாகும். ஆனால், மனதில் பயமில்லாமற் பற்பலவித சமர்த்தினால் உத்தியோகத்தினாலும், வியாபாரத்தினாலும் பொருள் சேகரஞ் செய்து மனோ உல்லாசத்துடன் சகல பாக்கியமும்பெற்று, லக்ஷ்மிகடாக்ஷம் பெற்று ஜீவித்திருப்பதுடன், தான் நடத்துந் தொழில் தனக்கு வேண்டிய நன்மையும் பெருமையும் உண்டாகி சுகசவுக்கியமா யிருப்பதற்காகும்.
சகாதேவாரூடம்
எண்சீரடி விருத்தம்
அன்புடனேமூன்றென்று சொல்வாரானால் ஆருமேகலியாண சுபகாரியங்கள் பொன்பொருளும்தனதான்ய சம்பத்துண்டாம் போரூர்வாழ்முருகனுக்கு பூஜைசெய்து நன்மையுடனிருந்தாலே உத்தியோகலாபம் நடக்கும்பாவார்த்தகமும் விருத்தியாகும் துன்பமில்லாநன்மையெல்லா மனுபவித்து இனிதாகஜீவிப்பீ ரெனச்சொல்வீரே. 3
உரை :- ஆருடங் கேட்க வந்தோர் மூன்று என்று சொன்னால் கலியாண வைபவ சுபகாரியமனைத்தும் நடப்பதுடன் வியாபார விருத்தியினாலும், உத்தியோக மேன்மையினாலும் வெகு பொருள் சேகரித்துத் தனதான்யம் சுபுத்திர லாபத்துடன் வெகு மேன்மையாகத் துன்பமில்லாமல் இன்பசுகானந்தமாய் ஜீவித்திருப்பார்கள். ஆனால், திருப்போரூரில் வாழும் சிவசுப்பிரமணியராகிய முருகனை பூஜித்துக் கொண்டிருந்தால் நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமுமாய் ஜீவித்திருப்பதற்காகுமென்றுரைப்பீர்கள்.
சகாதேவாரூடம்
நான்கென்றுசொன்னாலே கலகங்காணும் நலமில்லைகைப்பொருளும் சேதமாகும் கான்போனமனிதாைரப்போல் பந்துமித்திரர் காணாமல்மனத்துயரா வலைத்தலைந்து
Page 317
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
தான்யசம்பத்தையிழந்து உத்தியோகமின்றி தத்தளிப்பார்வர்த்தகத்தில் நஷ்டங்காணும் வான்புவியேலாந்துதிக்கும் முருகனை பூசித்து வையகத்தில்சுகமாக ஜீவிப்பீரே. 4
உரை :—ஆருடங் கேட்க வந்தோர் நான்கு என்று சொன் னால் கலகமாகுமென்றும், எந்தக் காரியமும் நடக்காதென்றும், கைப்பொருள் சேதமாகுமென்றும், உத்தியோகமில்லாமலும், வர்த்தகம் நடவாமலும், மனந்திகைத்து கடன்காரருக்கு அஞ்சிப் பயந்து அவர்களுடைய பந்துமித்திரரைப் பிரிந்து, கானகவாசி பயனைந்து வெறிடாரைப்போல் வெங்குவார்கள். ஆகையால், தேவர் சேனாதிபதியாயிருந்து அமராதியர் சகாயமிருந்தும் பூலோகத்தில் ஜீவிக்கும் மனித வகுப்பார் வறுமைப் பிணியை விலக்கி வாழ்ந்திருக்கும்படியாய் திருப்போரூரில் அமர்ந்து தரிசனந்தந்து காப்பாற்றும் திருமுருகனே பூசித்துக்கொண்டு பகவத் பக்தியாய் ஜீவித்திருக்கும்படியாய் சொல்வீர்கள்.
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
ஐந்தென்றுசொன்னாலே உத்தமந்தான் ஆரம்பமாகியான சுபகாரியங்கள் பந்துக்கள்கூட்டமுண்டு வர்த்தகலாபங்கள் பலிக்குமேஉத்தியோக மேன்மையுண்டு சந்ததமும்தாய்தந்தை சுற்றத்தாரோடு சகோதரரொற்றுமையாய் சிறந்துவாழ்வார் இந்தவிதநற்பலன்பொன் பூமிலாபம் இனிதுடனேகிடைக்குமென்று சொல்லுவீரே. 5
உரை :—ஆருடங் கேட்க வந்தோர் ஐந்தென்று சொன்னால் உத்தம பலனாகும். கலியாண சுபகாரியமனைத்தும் நடக்குமென்றும் பந்துமித்திரர் சுற்றத்தார் கூட்டமா யிருக்குமென்றும், தான் செய்யும் வர்த்தகத்தில் திரவியலாபம் கிடைக்குமென்றும், உத்தியோக மேன்மையும், தாய், தந்தை, சகோதரர் முதலானோர் அன்புடன் குடும்பஸ்தனென்று புகழ்ந்து ஆசீர்வதிக்கும்படியான கீர்த்தியுடன் வெகு மேன்மையினால் தனவானென்று அநேகர் புகழ்ந்துரைக்கும்படியான நன்மை விளங்குமென்று சொல்வீர்கள்.
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
அன்புடனே ஆருடங் கேட்டவந்தோர் ஆறென்றவகத்தை வாக்காய்ச்சொன்னால் துன்பம்போம்துயரம்போம் பிணியும்போகும் தொல்லுலகில்வறுமையுற்று தனவானாக பொன்பொருளும்தான்தானிய சம்பத்துண்டாம் போற்றரிய அன்னதானங்கள்செய்து
Page 318
சகதேவராரூடம்
நன்மையாய்கீர்த்தியுடன் வித்வானா நலமுடனேஜீவிப்பீ ரெனச்சொல்வீரே. 6
உரை:—ஆருடங் கேட்கவந்தவர்கள் ஆறாவது லக்கத்தைச் சொன்னால், சிலநாளைக்குள்ளாக துன்பமும் துயரமும் விலகி சுகமாயிருப்பதுடன் வறுமை பிணி தீர்ந்து, பொன், பொருள், பூஸ்திதியுடன் மனைவி மைந்தர் சுற்றத்தாருடனே வெகுசுக மாய்க் கீர்த்திப்பிரகாசத்துடனே வாழ்ந்திருப்பதுடன், அன்ன தானஞ்செய்து புண்ணியாத்மாவாய் சாஸ்திர ஆராய்ச்சியில் தேர்ந்த வித்வானா யிருப்பதாகாகும்.
சகதேவராரூடம்
அன்புடனேஏழென்று சொல்வாரானால் அல்லல்துயரில்லாம லுலகில்வாழ்ந்து பொன்பொருளுமிகசேர்த்து பந்துமித்திரர் பெருக்கமுடன்தான்கிய சம்பத்தோடு நன்மனைவிமைந்தருடன் சுகானந்தமாக நலமுடனேவாழ்ந்திருப்பா ருலகமீது இன்னலில்லாவர்த்தகஉத்தியோக லாபத்தால் இனிதுடனேஜீவிப்பா ரெனச்சொல்வீரே. 7
உரை:—ஆருடங்கேட்கவந்தோர் ஏழுஎன்ற இலக்கத்தைச் சொன்னால் அவர்களுக்கு இனிமேல் யாதொரு துன்பமும் வறுமையுமில்லாமல் ஜீவித்திருப்பதுடன் மனைவி, மைந்தர்களுடன் சுற்றத்தார், பந்துமித்திரர்கள் பெருக்கத்துடன் வர்த்தக லாபத்தினாலும் உத்தியோக மேன்மையாலும் திரவியஞ் சேகரித்து பொன், பொருள், வெகுவாக சேகரித்துக் கீர்த்திப்பிரகாசமாய் அல்லல் துன்பமில்லாமல் மிகவும் மேன்மையான பிரபுத்தன்மையாக ஜீவித்திருப்பீரென்று சொல்லவும்.
சகதேவராரூடம்
வந்துன்னைஆருடங் கேட்போர்வாக்கால் வழுத்தியபாட்டென்ற லக்கந்தன்னால் சிந்தைநொந்திருக்கும் கிரகத்தில் தீது சிலநாளில்பலதுன்ப மெய்துந்தான்யம் எந்தவிதமானாலும் வினையாதப்பா எடுத்தகாரியமெல்லாம் வீணாய்ப்போகும் பத்தமுடன்காளிக்குப் பூஜைசெய்து பக்தியுடன்ஜீவிப்பீ ரெனச்சொல்வீரே. 8
உரை:—ஆருடங் கேட்கவந்தவர்கள் வாக்கினால் எட்டென்ற லக்கத்தைச்சொன்னால் சதாகாலமும் மனவிசாரத்துடன் திகைத்து, தானிருக்கு மிடத்துள்ளோரும் பகையாகி வீட்டிலுள்ளோர் கொடுமையால் பலவிதமாகிய துன்பமும் துயரமுமாகும்,
Page 319
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
வயல்களில் விதைத்த தான்யமும் சரியாய் விளையாமலும் எடுத்த காரியங்களெல்லாம் வீணாய்ப் போகும். அதனால் வறுமை சூழ்ந்து பலவித கஷ்டநஷ்ட மடையச்செய்து, கலங்கித் துடிப்பார்கள். ஆகையால், பத்திரகாளியம்மனுக்குப் பொங்கலிட்டுப் பூஜைசெய்து பக்தியானந்தமாயிருந்தால் பலவித துன்பமும் விலகி உத்தியோக பெருக்கத்தாலும், வியாபாரலாபத்தாலும் திரவியசேரஞ்செய்து, மனைவி, மைந்தர், பந்துமித்திரர்களுடன் தனவந்தராய்ச் சுகமாக ஜீவித்திருப்பீர்களென்று சொல்வீர்கள்.
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
ஒன்பதென்றலக்கத்தைச் சொல்வாரானால் ஓங்குபுகழ்பலநன்மை வித்யாபிவிருத்தி நன்மையாய்ப்பெருகுமப்பா உத்தியோகமேன்மை நாடியதோர்வியாபார லாபத்தாலும் பொன்பொருளும் மிகச்சேர்த்து பந்துமித்திரர் பேருக்குடனமனைவிமைந்த ருடன்வாழ்வார்கள் இன்னவிதநன்மையெல்லாம் அனுபவித்து இகபரலாபமடைவீ ரெனச்சொல்வீரே. 9
உரை:—ஆருடங்கேட்க வந்தோர் வாக்கினால் ஒன்பதென்று சொன்னால் பலவித நன்மையும்பேற்று, வித்யாபி விருத்தியுடன் உத்யோக மேன்மையாலும், வியாபாரவிருத்தியாலும் பலவிதமாய் திரவிய சேரஞ்செய்து, பந்து மித்திரர் கூட்டத்துடன் மனைவி, மைந்தர்கள் பெருக்கத்துடனே பொன், பணி, பூஷணாதிகளுடன் ஆடை ஆபரணாதிகளும் அணிந்து சகலஜீவியாயிருந்து, பலவித நன்மையெல்லா மனுபவித்து, உலக ஆசையை வெறுத்து, பகவத் பக்தி ஆனந்தமாய் இகபரசுகத்தை யனுபவிப்பீர்களென்று சொல்வீர்.
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
பத்தொன்றலக்கஞ்சொல் வார்களானால் பயணமுடியாதென் றன்பாய்சொல்லு உத்தியோகங்கிட்டா தப்பாஉனக்கு உறவினர்கள்பகையாவா ரென்றுரைப்பாய் சித்தமுங்கலங்கிபுத்தி மதியுங்கெட்டு சிதறியேவறுமையாலே திகைத்து பித்தர்போலிருப்பீரென் றுரைத்துசோர்ந்து பிழைத்தீடிரெனச்சொல்வீர் வந்தோருக்கே. 10
உரை:—ஆருடங் கேட்க வந்தவர் பத்தென்னும் இலக்கத்தைச் சொன்னால் அவர்கள் போகும் பிரயாணம் பங்கமாகுமென்றும், உத்தியோகங் கிட்டாதென்றும், பந்து, மித்திரர், உற்றார், உறவினரெல்லாம் பகையாவார்கள். மனமயங்கி திகிலடைந்து புத்தி சிதறி வறுமையா யிருப்பார்கள்.
Page 320
சகதேவாரூடம்
பதினொன்றுலக்கத்தைச் சொல்வாரானால் பலவிதமாய்த்தேக வர்த்தகத்தால் நிதிசேர்த்து பொன்பொருள் பூஷணத்தோடின்னும் நீனிலத்தில் நல்லநறும் வாகனங்களும்பெற்று அதிகசம்பத்துடனே வாழ்ந்திருந்து அன்பாமனைவிமைந்தர் பந்துமித்ரர் பதிலாபம்தனதான்ய சம்பத்தோடு பணமாய்வாழ்ந்திருப்பீரெனச்சொல்வீரே. 11
உரை:- ஆருடங் கேட்கவந்தவர்கள் வாக்கினால் பதினொன்றெனும் இலக்கத்தைச் சொன்னால் உத்தியோக மேன்மையாலும், வியாபார விருத்தியினாலும் பலவிதமாய்ப் பொருள் சேகரஞ்செய்து பொன், பொருள், பூஷணாபரணத்துடனும் அஸ்வ வாகனாதிகளுடனும் அதிக தனதான்ய சம்பத்துடன் மனைவி, மைந்தர்களுடனும், பந்துமித்திரர், சுற்றத்தாருடனும் வெகு மேன்மையாக தனதான்ய சம்பத்துடனே சுகஜீவியாக வாழ்ந்திருப்பீரெனச் சொல்வீர்கள்.
சகதேவாரூடம்
பன்னிரண்டென்றிலக்கம் சொல்வாரானால் பலவிதமாய்ப்பொருள்சேர்த்து உலகோர்மெச்ச பொன்பணியும் பூஸ்திதியும்மிகவேபெற்று புத்ரசம்பத்துடன்பந்து மித்ரர்சேர்க்கை கன்னிப்பெண்கள்சுபோக பாக்கியங்கள் கீர்த்திபெறும் வியாபார உத்தியோகத்தால் நன்னயமாய்விசேஷதன லாபத்தாலே நலமுடனேஜீவிப்பீ ரெனச்சொல்வீரே. 12
உரை:- ஆருடங் கேட்கவந்தவர்கள் பனிரெண்டு என்னும் இலக்கத்தைச் சொன்னால் உத்தியோக மேன்மையாலும், வியாபாரலாபத்தாலும், தனதான்ய பசுபுத்ரலாபத்துடனும் கீர்த்திப்ரகரசமாய் மனைவிமைந்தர் பந்துமித்திரர் ஆஸ்தி பூஸ்திதியுடனே மிகவும் பிரபுவென்றுலகோர் புகழுந்தன்மையான பெருமையுடன் ஸ்திரீபோக பாக்யத்துடனே விசேஷ லாபத்துடனும் திரவிய லாபத்துடனும் பிரபுவாய் ஜீவித்திருப்பீரெனச் சொல்வீர்கள்.
சகதேவாரூடம்
பதின்மூன்றுலக்கத்தைச் சொல்வாரானால் பகைரால்பலதுன்பம் நேர்ந்துபின்னால் நிதிமிகுந்தகழனிவீடு பணிகள்விற்று நிலமீதுவியாபாரஞ் செய்துபின்னால் அதிகபிரயாசையுடன் வியாபாரஞ்செய்து அளவுபோல் பொருள் சேர்த்து பகைவர்கட்கு 40
Page 321
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
எதிரிலேதைரியமாய் தனவானாக எப்போதும்வாழ்வீரென் றோதுவீரே. 18
உரை :- ஆரூடங் கேட்கவந்தோர் வாக்கால் பதின்மூன்று என்னும் இலக்கத்தைச் சொன்னால் சத்துருக்களால் பலவித துன்பமும் துயரமும் நேரிட்டு, அதனால் மனந்திகைத்துத் தனது வீடு, கழனி ஆபரணாதிகளை விக்கிரகஞ் செய்துவிட்டு, திரவிய சம்பத்தினால் வியாபாரஞ்செய்து வெகு லாபத்துடனே ஜீவித்துப்பின் யோகமாய் மனைவி, மைந்தர், பந்து மித்திரர், சுற்றத்தார்களுடனே வெகு மேன்மையாக ஜீவித்திருப்பீரெனச் சொல்வீர்கள்.
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
இன்பமுடன் ஆரூடங் கேட்கவந்தோர் விசைந்தபதினான்குலக்கஞ் சொல்வாரானால் அன்பானகுருவருளால் நன்மையுண்டு அநேகமாகவே ஜீவிப்பார்கள் உன்னுடையகுலதெய்வந் தனைபூசித்தா லே உத்தியோகவியாபார லாபத்தாலே பொன்பொருளும்மிகசேர்த்து வாழ்வீரென்று புகன்றிடுவீரினிதாய் ஜோதிடவல்லோரே. 14
உரை :- ஆரூடங் கேட்கவந்தோர்கள் வாக்கினால் பதினான்கென்னும் இலக்கத்தைச் சொன்னால், அவர்கள் குருசகாயத்தால் பலவிதமான நன்மையும் பெறுவார்கள். ஆனால் அவர்களுடைய குல தெய்வத்தைப் பூசித்தால் உத்யோக மேன்மையாலும் வியாபார நன்மையாலும் திரவியசேகரஞ்செய்து, சுகபாக்ய சம்பத்துடனே தனதான்ய சம்பத்துடனும் மனைவி, மைந்தர் பந்துமித்திரர்களுடனே [சுகானந்தமாய் ஜீவித்திருப்பீர்களென் றுரைப்பீர்கள்.
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
சிந்தைமகிழ்ந்தேபதினேந்தென்றாலே ஜெயமுண்டுவழக்குவெல்லும் வர்த்தகத்தால் சந்ததமும்வெகுலாபம் கிடைத்தன்பாக சகலவிதபொன்பணியும் பூஸ்திதியும்பெற்று பந்துமித்ரர்சுற்றத்தா ருடனேவாழ்ந்து பிரபுவெனசகலருமே புகழ்ந்துபோற்ற அந்தமுள்ளகலியாண சுபகாரியங்கள் ஆகுமென்றேசொல்வீர் ஜோதிடவல்லோரே. 15
உரை :- ஆரூடங் கேட்கவந்தோர்கள் பதினைந்தென்னும் இலக்கத்தைச்சொன்னால் ஜெயமுண்டு, வழக்குவெல்லும், வர்த்தகத்தில் வெகு லாபம்கிடைக்கும். சதாகாலமும் நஷ்டமில்லாமல் தனலாபங் கிடைக்கும். பொன், பணி, பூஷணாதிகளுடனே
Page 322
சகாதேவாரூடம்
பண்புடனே ஆருடங் கேட்கவந்தோர் பதினாறென்றினிதாக சொல்வாரானால் வன்மையுடன்றேகத்திற் பிணியுண்டாகும் வான்மேக இடியால் பெண் சதிசாவாள் தின்மையுடன் சிலகாலஞ் சென்ற பின்னர் திரவியசேகரஞ்செய்து தயாளசிந்தை கண்யமுடனிருப்பார்கள் போகபாக்யம் கனதனவானாகீரென்று புகலுளீரே. 16
புஸ்த்தியுடள் பந்துமித்திரர், சுற்றத்தாருடனே மிகவும் மேன்மையாய் ஜீவித்திருப்பீரெனப் புகலுவீர்.
உரை:— மிகவும் விஸ்வாசத்துடனே ஆரூடங் கேட்க வந்தோர் பதினாறு என்னும் இலக்கத்தைச் சொன்னால் சரீரத்தில் பலவித வியாதி சம்பவித்து, கஷ்டப்படுத்துவதுடன் மேக இடியால் மனையாள் மரணமாவாள். சிலநாள் பொறுத்து, உத்தியோக மேன்மையால் திரவிய சேகரஞ் செய்து வெகு மேன்மையாக வாழ்ந்திருப்பதுடன் மறுமணம்புரிந்து மனைவி, மைந்தர், சுற்றத்தாருடனே கீர்த்திப்பிரகாசமாய் வாழ்ந்திருப்பார்கள்.
சகாதேவாரூடம்
இஷ்டமுடன் ஆருடங் கேட்கவந்தோர் இசைந்தவிதம்பதினேழென் றுரைத்திட்டாலே கஷ்டமில்லை நலமிகுந்து பொருளுஞ்சேரும் கனதனவானாகவே வாழ்ந்திருப்பார் துஷ்டர்கள் நேசம் விடுத்தால் வறுமை நீங்கி துன்பமில்லா தெந்நாளும் வர்த்தகத்தால் நஷ்டமில்லா பொன்பொருள்சேர்த் துலகமீது நலமுடனே வாழ்ந்திருப்பீ ரெனச்சொல்வீரே. 17
உரை:— ஆருடங் கேட்க வந்தவர்கள் பதினேழென்னும் இலக்கத்தைச் சொன்னால் இனிமேல் நஷ்டம் நேரிடாது. உத்தியோகத்தினாலும், வர்த்தகத்தினாலும் பலவிதமாய் திரவிய சேகரஞ்செய்து தனதான்ய சம்பத்துடன் மனைவி, மைந்தர், பந்து மித்திரர், சுற்றத்தாருடனே பொன், பொருள், பூஸ்த்தியுடனே பிரபுத்தன்மையாய் ஜீவித்திருப்பார்கள். ஆனால், துர்க்குணமமைந்த துன்மார்க்கர்கள் சகவாசத்தை விடுத்து, நற்குணத்தினருடன் சேர்ந்தால் கஷ்ட நஷ்டமில்லாமல் பொன் பொருள் சேகரித்து மனைவி, மைந்தர்களுடனே வாழ்ந்திருப்பீர்களெனச் சொல்வீர்கள்.
சகாதேவாரூடம்
துன்பமுடன் வந்துநின்றோர் பதினெட்டென்றால் தூரத்திற்போனவர்கள் வருவாரென்பாய் தின்மனமேவியதே கவலையாலே நிதிதனிற்கொஞ்சம்பொருள்கள் விரயமாகும்
Page 323
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
உன்காதல்தணியசுக போகபாகம் உண்டாகுந்தனத்தான் மாமெல்லாம் சேரும் நன்மைஇன்னுஞ் சிலநாட்சென்றால் வருமென்று நலமுடனேசொல்வீர் சோதிடவல்லோரே. 18
உரை :- ஆருடங்கேட்க வந்தவர்கள் பதினெட்டு என்னும் இலக்கத்தைச் சொன்னால் தூரதேசத்திற் போனவர்கள் வருவார்களென்றும், தற்சமயமிருக்கும் மனவிசாரத்தை விலக்கிவிட்டு தைரியமாய் வர்த்தகஞ் செய்தும், உத்யோகஞ் செய்தும், திரவியசேகரஞ்செய்து உனவந்தரான அன்னபதார்த்தம் புசித்து ஆனந்தமாயிருந்து ஸ்திரீ சம்போகஞ்சிட்டு சுகபோக பாக்கியத்தை யனுபவித்துத் தன்மையானநின் சுகத்தை யனுபவிக்கச் செய்தும் சுகஜீவியா யிருப்பீர்களென்று சொல்வீர்கள்.
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
பத்தொன்பதென்றுவந்தோ ருரைப்பாரானால் பல்விதகாரியசித்தி யாகுமென்பாய் புத்திரபாக்கியமுண்டு பொருளஞ்சேரும் பூஸ்திதியுங்கிடைக்குமென்பாய் போனோர்மீள்வார் உத்தியோகவிர்த்தியினால் வியாபாரலாபம் உண்டென்றுசொல்வீரின் னமுமன்பாக சத்திசிவபூஜைசெய்து கரணிமீது சவுக்கியமாய் நப்பீர்கள் எனச்சொல்வீரே. 19
உரை :- ஆருடங் கேட்க வந்தவர்கள் பத்தொன்பதென்று சொல்வார்களானால், அவரவர்கள் நினைத்த காரியஞ் சித்தியாகும். புத்திர பாக்கிய முண்டாகும் பொன் பொருள் பூஸ்திதி கிடைக்கும். உத்தியோக விர்த்தியினாலும் வெகுலாபம் பெற்று சுகஜீவியா யிருப்பார்களாம். சிவபூஜை சத்திபூஜை செய்து கொண்டு பகவத் பக்தியானந்தமாய் சுகசீவியாய் சீவித்திருப்பீரென்றுந், ஆனால் தற்சமயத்தில் மனஞ்சர செலுத்தாமல் நன் மனதுடன் பந்துமித்திரர்களுடனே மனைவி மைந்தர்களுடனும் வாழ்ந்திருப்பீர்களெனப் புகல்வீர்.
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
இருபதென்றலக்கத்தை சொல்வாரானால் இசைந்தபடிநினைத்ததெல்லாம் பலிக்குமென்பாய் தருணமேஉத்தியோக வர்த்தகத்தால் தனதான்யசம்பத்து மிகவுண்டாகி பொருள் சேர்த்துமன்னர் பிரபுக்கள் சேவை பெறுவார்கள்பந்துமித்திரர் சுற்றத்தோடு அருமைசேர்மனைவிமைந்த ருடனேவாழ்வார் அணிபணிகள்பெறுகீரெனப் புகலுவீரே. 20
Page 324
சகதேவாரூடம்
உரை:- ஆரூடங்கேட்கவந்தவர்கள் இருபதென்னும் லக்கத்தைச் சொன்னால் நினைத்த காரியமெல்லாம் கைகூடுமென்றும், உத்தியோக மேன்மையாலும் வியாபார விருத்தியாலும் திரவிய சகாயஞ் செய்து, தனதான்ய சம்பத்துடனே பிரபுக்கள் மன்னர்கள் முதலானவர்களின் சகாயமும்பெற்று, பந்துமித்திரர் சுற்றத்தோடு மனைவி மைந்தர்களுடனே சுகசீவியாய் வாழ்ந்திருப்பீர்களென்றுரைப்பீர்கள்.
சகதேவாரூடம்
அன்புடனே யிருபத்தொன் றென்றுரைத்தால் அவரவர்கள் நினைத்ததெல்லாம் பின்னால் கூடும் உன்பொருளை வாங்கியவர் தருவாரென்பாய் உற்றபொருள்சேதமில்லை யென்றுரைப்பாய் கன்னியர்க்கு மணம்கூடும் நினைத்ததெல்லாம் கவுரவமாய்க் கிடைக்கு மென் றிட்டாலும் துன்பத்தால் வியாதிவந் தகன்றுபோகும் துயரமற்று வாழ்வீரெனப் புகலுவீரே. 21
உரை:- ஆரூடங்கேட்கவந்தவர்கள் இருபத்தொன்றென்றுரைத்தால் அவர்கள் நினைத்தகாரியம் சித்தியாகும் ஆனால் உன்கையில் மற்றவர் வாங்கிய பொருள் சேதமாகாமல் பிறகு தருவார்களென்றும், மனவிசாரத்தினால் கலக்கமுண்டாகி வியாதிவந்து விலகுமென்றும், சிலநாள் பொறுத்து பலவிதமாய் திரவியசேகரஞ் செய்து சுகமடைவார்களென்றும், கன்னியர்களுக்குக் கலியாணமாகுமென்றும், இனிமேல் சுகசீவியாய் சீவித்திருப்பார்களென்றும் சொல்வீர்.
சகதேவாரூடம்
இருபத்திரண்டென்று சொல்வாரானால் இனியபலன்கொண்டு சகோதரரோடன்பாய் பெருமையாய்வாழ்ந்திருப்பா ரென்றுரைப்பீர் பேசபுகழானந்த மாகவேதான் பொருளுடனே தனதான்ய சம்பத்தோடு பொருத்தமுடன் வாழ்ந்திருப்பா ரெனச்சொல்வீரே தீங்கொன்றுமில்லாமல் விரதானுஷ்டானம் தினந்தோறும் அனுஷ்டித்து சீவிப்பாரே. 22
உரை:- ஆரூடங் கேட்கவந்தவர்கள் இருபத்திரண்டென்று உரைத்தால் சகோதரருடனே நேகவிஸ்வாசமாக வாழ்ந்திருப்பார்கள். உத்தியோக சம்பத்துடனும், வியாபார லாபத்துடனும், தனதான்ய சம்பத்துடனே வாழ்ந்திருக்கும்படியான அனுகூலமுண்டாகும். ஆனால் பகவத்பக்தியானந்தமாய் விரதானுஷ்டானம் புரிந்து ஆனந்தமா யிருப்பீர்களென் றுரைப்பீர்.
Page 325
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
அன்பாக ஆரூடங் கேட்கவந்தோர் ஆனஇருபத்துமூன் றென்றுரைத்தால் தன்மையாயெடுத்த காரியங்கை கூடும் நாடியதோர் வியாஜ்யந் தாலனேக துன்பமெல்லாம்விலகி சுகமாயுத்தன் துணைவர்களாய்ச்சுகமுடனே யிருப்பீரென்று நன்மையாய்சுகதுக்க மிரண்டுமொன்றாய் நலமுடனேயனுபவிப்பீ ரெனச்சொல்வீரே. 28
உரை:--ஆரூடங் கேட்கவந்தவர்கள் வாயினால் இருபத்து மூன்றென்று சொன்னால் தான் நினைத்த காரியம் கைகூடுமென்றும், தன்மேல் எதிரிகள் தொடுத்த வியாஜ்யங்களால் தனக்கு நன்மையாய் ஜெயமாகுமென்றும், பந்துமித்திரர்களால் பலவித நன்மையனைத்தும் உண்டானாலும், சுகதுக்க மிரண்டும் சமமாய் அனுபவிப்பதற்காகுமென்றும் புகலுவீர்.
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
வந்தவர்களிருபத்து நான்கென்றோதில் வியாதியுடன் வழக்குகள் சூழ்ந்தலையச்செய்யும் நொந்தரைசெய்வார்பகைவ ரானோருன்மேல் தொடுத்தவியாஜ்யம்வெல்லும் கலங்கிடாதே இந்தவிதமாயிருந்திட் டாலும்ஜோதி ஈஸ்வரியைதினம்பூசித் திருப்பீரானால் சிந்தைகமகிழ்ந்தினிதாய் வாழ்வீரென்று சிந்தைமகிழ்வாகவே புகலுவீரே. 24
உரை:--ஆரூடங் கேட்கவந்தவர்கள் இருபத்து நான்கென்று சொன்னால் பலவிதமான வியாதியினாலும் வீண்வழக்கு வியாஜ்யத்தினாலும் துன்பமும் துயரமும் நேரிட்டு, பலவிதமாகிய கஷ்டநஷ்டம் நேர்ந்தாலும், பிறகு சகல வியாஜ்ஜியத்தையும் ஜெயித்து, வியாதியும் தீர்ந்து சுகமாயிருப்பதற்காகும். ஆனால், ஈஸ்வரியை தியானஞ் செய்து பூசித்துக் கொண்டிருந்தால் சகல நன்மையும் உண்டாகும்.
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
நன்மையாய் இருபத்தைந் தென்றுசொன்னால் நாடியதோர்காரியஞ் சித்தியாகும் உன்னிகைபெண்ணாலே பொருள்கைகூடும் காரியங்கைகூடுமினி பயப்படாதே மன்னவரால்பிரபுக்க ளாலேநல்ல மாநிதியும் பொருள்கிடைக்க சீவிப்பீர்கள் இன்னவிதமனுபவிக்கும் நன்மைக்கெல்லாம் ஈஸ்வரியைதுதிசெய்து மகிழுவீரே. 25
Page 326
சகதேவாரூடம்
உரை: ஆரூடங் கேட்க வந்தவர்கள் இருபத்தைந்தென்னும் இலக்கத்தைச் சொன்னால் நீ நினைத்த காரியம் சித்தியாகுமென்றும் கன்னிப்பெண் ஒருத்தியால் விசேஷ பொருள் சேர்க்கையுண்டாகுமென்றும், அரசர்களாலும், பிரபுக்களாலும் வெகு பொருள் புஸ்திதி முதலான பாக்கியமனைத்தும் கிடைத்து, இத்யாதி நன்மை யனைத்தும் அனுபவிப்பதா யிருந்தாலும், ஈஸ்வரியை சதாகாலமும் பூஜித்தால் காரிய பங்கமாகாமல் சகல நன்மையு முண்டாகும். திரவிய லாபமும் கிடைக்கும்.
சகதேவாரூடம்
இருபத்திஆறென்று சொல்வாரானால் இவர்களுக்குப்பகைவரால் வழக்குண்டென்றும் முருகனையேஸ்தோத்திரஞ் செய்தன்பாய்நாளும் மூத்தோர்கள்நேசம்வைத் திருப்பாரானால் பெருமையுடன் கனதன வாகனாதி பெற்றிருப்பார் வியாஜ்யமெல்லாம் விலகிப்போகும் பொருளுடனேபூஷணா திகாள்சம்பத்தும் பொருந்தியேசுகமாக சீவிப்பாரே. 26
உரை :-ஆரூடங் கேட்க வந்தவர்கள் இருபத்தியாறென்று சொன்னால், இவர்களுக்குள் வழக்குண்டென்றும் அதனால் பலவித துன்பம் சூழூமென்றும், அதற்காக முருகப் பெருமானை தியானஞ்செய்து பூசித்துக்கொண்டிருந்தால் சகலவித நன்மையும் பெருகி வியாஜ்யத்தில் ஜெயமாகி அதனால் தனக்குப் பலவித நன்மையும் கீர்த்தியும் உண்டாகும். வறுமை விலகி சரீர சவுக்கியமுடன் தனதான்ய சம்பத்தும் பலவித நன்மையுமுண்டாகும். பொன், பொருள், பூஷணாதிகள் திரவிய சம்பத்துடையவர்களா யிருப்பீர்களென்றுரைப்பீர்.
சகதேவாரூடம்
வையகத்திலிருபத் தேழென்று சொன்னால் வரவுகொஞ்சம் செலவதிக மென்றுரைப்பாய் தெய்வத்தினுதவியுண்டு திருடராலே சேதமாய்கைப்பொருளும் சிறிதுபோகும் ஐயமிலாதனவந்த னாகவாழ்ந்து ஆடுமாடுகளுடனே தான்யலாபம் பையவேமேவிவரும் சிலகாலத்தில் பணக்காரராவாரென் றோதுவீரே. 27
உரை :-ஆரூடங் கேட்க வந்தவர்கள் இருபத்தேழென்னும் இலக்கத்தைச் சொன்னால், தெய்வ சகாயத்தினால் பலவித நன்மை யுண்டாகும். ஆனால், திருடரால் சில திரவியங்களுடன் பொன் பணி பூஷணாதிகள் களவு போகும். வியா
Page 327
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
பாரத்தினாலும் சிறிது பொருள் சிதறி சேதமானாலும், தெய்வ சகாயத்தினால் மறுபடியும் சிலநாள் பொறுத்து வர்த்தகத்தன்மையால் விசேஷ லாபங்கிடைத்து பொன் பொருள் பூஸ்திதி ஆடு மாடு முதலானவைகளும் கொஞ்சங்கொஞ்சமாய் சேர்ந்து பணக்கார பிரபுவைப்போ லிருப்பீரெனப் பகருவீர்.
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
நன்மையுண்டெந்நாளும் இருபத்தெட்டு நாடியேசொன்னாலுத் தமமென்றோது இன்பமுடனேபொருளும் கிடைக்குமப்பா இசைந்தபடிவியாஜ்ஜியங்கள் நேரிட்டாலும் உன்னையொன்றுஞ்செய்யாது பயப்படாதே உந்தனுக்கேவெற்றியென் றறிந்துசொல்லு பொன்பொருளும்பூஸ்திதியும் மிகவேபெற்று பொறுத்தமுடன்சீவிப்பீரெனச் சொல்வீரே. 28
உரை :—ஆருடங் கேட்க வந்தவர்கள் இருபத்தெட்டென்று சொன்னால் மிகவும் உத்தமமாகும். ஆனால் பொன் பொருள் விசேஷமாய்க்கிடைத்தாலும், வழக்கு வியாஜ்ஜியங்கள் நேரிடும். ஆனால், உனக்கே ஜெயமாகும். அதனால் உனக்கு யாதொரு பயமு மில்லாமல் ஜெயமுண்டாகும். இன்னும் சிறிது நாள் பொறுத்து இலக்ஷ்மி கடாக்ஷம் பெற்று பொன், பொருள், பூஸ்திதியுடன் சகல சம்பத்தும் உண்டாகு மென்றுரைப்பீர்.
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
இருபத்தொன்பதுலக்கம் சொல்வாரானால் இசைந்தபடிதையலாள் சண்டையாகும் பொருள்சேதம்பொன்பணிநள் சேதமாகும் பூஸ்திதியும்போகும்மனை வாளும்சாவாள் திருமுருகனைப்பணிந்து பூஜைசெய்தால் தீர்ந்திடுமேவறுமைபிணி யானதெல்லாம் தருமதானஞ்செய்து வர்த்தகத்தால் தனவந்தனாயிருப்பீ ரறிகுவீரே. 29
உரை :—ஆருடங் கேட்க வந்தோர் இருபத்தொன்பதென்று வாக்கினால் சொல்வாரானால் ஆர்க்குண மனைவியால் சண்டை நேரிடும். மனைவியின் கொடுமையினால் பொன், பொருள், பூஸ்திதி யனைத்தும் செலவாகும். மனைவியும் மரணமாவாள். ஆனால், திருமுருகனாகிய சிவசுப்பிரமணியக்கடவுளை பூஜித்திருந்தால் வறுமை துயர் துன்பமெல்லாம் விலகும். வர்த்தகஞ்செய்து திரவிய சேகரஞ் செய்தும், அன்னதானம் பரோபகாரம் தானதர்மஞ் செய்து சுகமாக சீவித்திருப்பீர்கள்.
Page 328
சகாதேவாரூடம்
இன்னலுற்று ஆரூடங் கேட்கவந்தோர் இசைந்த முப்பதானலக்க மென்றுசொன்னால் துன்பமுடன் துயரமும் வறுமையாலே துடிதுடித்து மனங்கலங்கி விசனிற்பீர்கள் அன்பாக விரதானுஷ் டானஞ்செய்து அன்னதானஞ்செய்தால் வர்த்தகத்தால் பொன்பொருளும் புஸ்த்தியும் சேகரித்து பெருமையுடன் ஜீவிப்பீரெனச்சொல்வீரே. 30
உரை :—மிகவும் மனச்சஞ்சலத்துடன் கலங்கி இனி எவ்விதமாய் சீவிப்பதென்று ஆரூடங் கேட்க வந்தோர் முப்பதென்னும் இலக்கத்தைச் சொன்னால், துன்பமும் துயரமும் அதிகரித்து பலவித கலகமும் கஷ்ட நஷ்டமும் நேரிட்டு கவலையடையச் செய்யும். ஆகையால், விரதானுஷ்டானஞ் செய்து அன்னதானஞ் செய்தால் லக்ஷ்மி கடாக்ஷத்தினால் வர்த்தகத்தில் விசேஷ லாபமுண்டாகி பொன் பொருள் பூஸ்திதியும் விசேஷமாய் சேகரித்து சுகசீவியா யிருப்பதற்காகும்.
சகாதேவாரூடம்
பக்தியுடன் ஆரூடங் கேட்கவந்தோர் பணமாய் முப்பத்தொன் றென்றுரைத்தால் புத்திரர்விருத்தியுண்டு பிரபுக்கள் நேசம் பொன்பொருளும் தனதான்ய சம்பத்துண்டு சத்திரமொன்றுண்டாக்கி அன்னதானம் சந்ததமும் தந்துநீ மனங்களிப்பாய் எத்தினமும் வர்த்தகத்தில் லாபங்காணும் ஏழைகளுன்னால் பிழைப்பா ரென்றுசொல்லே. 31
உரை :—மனமகிழ்வுடனே வந்து ஆரூடங் கேட்க வந்தவர்கள் முப்பத்தியொன்றென்று சொன்னால், புத்திர பாக்கிய சம்பத்துடனும் பந்துமித்திரர்களுடனும் மனைவி மைந்தர் சுற்றத்தார் சூழ்ந்து தனக்கு உதவியா யிருக்கவும், வர்த்தகத்தினால் வெகு பொருள் சேகரஞ்செய்து, அன்னசத்திர மொன்றுண்டாக்கி ஏழைகளுக்காதாரமாக சதாகாலமும் அன்னதானஞ் செய்து சுகசீவியா யிருப்பீர்களெனப் புகலுவீர்.
சகாதேவாரூடம்
முப்பத்திரண்டென்று சொல்வாரானால் முந்தியபலன்மை யிருந்திட்டாலும் தப்பாமல் வர்த்தகத்தில் லாபமுண்டு தனதான்ய சம்பத்து மிகவுண்டாகும் 41
Page 329
பெரிய ஜோதிட சில்லரைக்கோவை
இப்புவியில் சத்துருக்க ளிருந்திட்டாலும் இரண்டுமாதத்துள்ளே மித்துருவாகி எப்போதும்போலவே வாழ்ந்திருப்பார் எந்தினிதாய்ப்புகல்வீர் ஜோதிடவல்லோரே. 32
உரை:--ஆருடங்கேட்கவந்தவர்கள் முப்பத்திரண்டென்று சொன்னால், முன்னே பற்பல விதமாகிய நன்மை யெல்லாம் அநுபவித்தாலும் இனிமேல் வெகு விதமான சுகபோக பாக்கிய மனைத்தும் பெறும்படியான வர்த்தகத்தினால் வெகு பொருள் சேகர மாகி பொன் பொருள் பூஸ்தியுடனே பிரபுவென்பதாய் காணப்படுவார்கள். அந்தச் சமயத்தில் சத்துருக்க ளிருந்திட்டாலும் இரண்டு மாதத்திற்குள் அவர்களனைவரும் மித்துருவாகி எப்போதும் போலவே தனவந்தராகி வாழ்ந்திருப்பீரெனப் புகல்வீர்.
பெரிய ஜோதிட சில்லரைக்கோவை
அன்புடனே முப்பத்தி மூன்றென்றன்பாய் ஆருடங்கேட்கவந்தோர் சொல்வாரானால் இன்புடனே நினைத்ததெல்லாம் ஜெயமேயாகும் இசைந்த உத்தியோகத்திற் கேகக்கூடும் நன்மையுண்டு புத்திர பாக்கியமுண்டாகும் நாடியதோர் வர்த்தகத்தில் லாபமாகும் தன்மையாப்பலபேரும் நேசமாவார் தாரணியில் நினைத்ததெல்லாம் கூடுந்தானே. 33
உரை :--ஆருடங் கேட்க வந்தோர் முப்பத்துமூன் றென்றுரைத்தால், அவர்கள் நினைத்த காரியமெல்லாம் சித்தியாகும். தனக்குத் தகுந்த உத்யோகம் கிடைக்கும். இன்னும் பலவிதமான நன்மையும், பந்துமித்திரர் சகாயமும் கிடைப்பதுடன் புத்திரபாக்கியமு முண்டாகும். வித்யாபிவிருத்தி வியாபார லாபமும், மனதில் நினைத்த காரியமெல்லாம் சித்தியாகும்.
பெரிய ஜோதிட சில்லரைக்கோவை
இனிதுடனே ஆருடங் கேட்கவந்தோர் இசைந்த முப்பத்தி நாலென்றுரைத்தால் கனியுடனே பல நன்மையாகுமின்னம் காரியசித்தியாய் லாபங்காட்டும் முனிவில்லா நல்லோர்கள் நேசமாகும் மூண்டவியாதிகளெல்லாம் பறந்தேபோகும் தணிகைமலைவேலவனை பூசித்தன்பாய் தாரணியில் மேன்மையுடன்சீவிப்பீரே. 34
உரை:--ஆருடங் கேட்க வந்தவர்கள் முப்பத்துநாலென்றுரைத்தால், பலவித நன்மையுண்டாகும். நினைத்த காரியங்
Page 330
சகதேவாரூடம்
சித்தியாகும். நல்லோர் சேர்க்கையும் வியாபார லாபமும் உத்தியோக பெருக்கமும் பொருந்தி நன்மையடையச் செய்து திரவிய லாபமுங் கிடைக்கும். ஆனால் சரீர வியாதி நேரிடும். திருத்தணிகை மலையிலிருக்கும் சிவசுப்பிரமணியக் கடவுளைப் பூஜித்துக் கொண்டிருந்தால் சரீர சவுக்கியம், சம்பத்து, உற்சாகமும் பெருகி, மேன்மை யடைந்திருப்பார்கள் என்று சொல்லவும்.
சகதேவாரூடம்
உன்னிடத்தில் ஆரூடம் கேட்கவந்தோர் உரைத்த முப்பத்தைந்தின் பலனைக்கேட்பாய் துன்பமாயோர் பெண்ணாலே வந்தமைந்த துயரமெல்லாம் விலகிசுக மடைவாரப்பா அநியாயமாகவே பகைவராலே அதிகரித்த துன்பமெல்லாம் விலகிப்போகும் நன்மையுடன் நவக்கிரக சாந்திசெய்து நலமுடனே சீவிப்பீ ருலகுள்ளோரே. 35
உரை :- ஆரூடங் கேட்க வந்தவர்கள் முப்பத்தைந்தென்று சொன்னால், ஓர் ஸ்திரீயினால் வந்த துயரமெல்லாம் விலகி சுகப்படுவார்கள். துர்க்குணமமைந்த பகைவர்களால் பலவித நஷ்டங்களும் சூழ்ந்து வருத்தப்படுத்திய துன்பத்தையும் விலகச் செய்யும். ஆகையால் நவக்கிரக பூஜை செய்துகொண்டு சுகசீவியாய் வாழ்ந்திருப்பீர்களென்றுரைப்பீர்கள்.
சகதேவாரூடம்
முன்னாலேவந்து ஆரூடங்கேட்போர் முப்பத்தி ஆறென்று சொல்வாரானால் நன்மையுள்ள ஞானவானொருதனாலே நதிதீர்த்தக்ஷேத்ரலா பத்தினாலே பன்முறையும் நற்பலன்கள் மிகவுண்டாகும் பார்தனிலே கீர்த்தியுடன் பிரகாசிப்பார் இன்னவிதமாய்சுகமும் புத்ரபாக்யம் இசைந்தவிதநடக்குமென்று புகலுவீரே. 36
உரை :- ஆரூடங் கேட்க வந்தவர்கள் முப்பத்தி ஆறென்று சொன்னால், ஞானமும் கல்வியும் நிறைந்தவராய் பலவித நன்மையும் பெற்று, கீர்த்திப்பிரகாசமாய் க்ஷேத்திரவாசியாய்ச் சென்று தீர்த்த ஸ்தானஞ் செய்து பகவத் பக்தியானந்தமா யிருந்து, பலவித நன்மையும் அடைவார்கள். இன்னமும், புத்திர பாக்கியம் குடும்பவிருத்தி முதலான மேன்மையும் கிடைத்து சகலவித நன்மையும் பெறுவீர்களென்றுரைப்பீர்.
Page 331
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
அன்புடனேமுப்பத்தி ஏழென்றோதும் ஆருடங்கேட் போர்க்குசுகமதாக நன்மையெல்லாம் வெகுவாகக்கிடைக்குமப்பா நாடியதோர்காரிய சித்தியாகும் இன்புடனேகப்பல்வியா பாரத்தில்லாபம் இசைந்தபடியேகிடைத்து சுகமுண்டாகும் தன்மையாய்வெகுபாக்ய தனமுண்டாகும் தரணியிலேசம்பிரவீ ரெனச்சொல்வீரே. 37
உரை :- ஆருடங் கேட்க வந்தவர்கள் முப்பத்தி ஏழென்று சொன்னால் பலவித நன்மையும் கிடைத்து, சுகசீவியா யிருப்பதுடன் கப்பல் வியாபாரத்தினாலும், வர்த்தகத்தினாலும், உத்தியோக மேன்மையாலும், பலவித தன்மையுமடைந்து, நனனப சம்பத்தும், கீர்த்தியும், புகழும், மேன்மையு முண்டாகுமென்று சொல்வீர்கள்.
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
முப்பத்தியெட்டென்றா ரூடங்கேட்போர் மூதறிஞர் பந்துமித்துரர் பகைவினாலே தப்பாமல்யுரடைந்து துன்பமுற்று தரணியிலேகலங்கியே திகைத்துநிற்பார் எப்போதுங்கவலையால் மதிமயங்கி ஏழ்மைதனத்தாலுமுல்வா ராகையாலே இப்போதேநவக்கிரக பூஜைசெய்தால் இனிதுடனேசுகமாக சீவிப்பாரே. 38
உரை :- ஆருடங் கேட்க வந்தவர்கள் முப்பத்தியெட்டென்றுரைத்தால், அவர்கள் தமது வார்த்தையினாலே பல பேருக்கும் பகையாவதுடன் பந்துமித்திரர்கட்கும் பகையாகி பலவிதமான துன்பமும் துயரமுமடைந்து, வறுமையினாலும் துன்பத்தினாலும் கவலை யடைந்து, பலவிதமாய்க் கஷ்டப்பட்டுக் கலங்குவார்கள். தான் செய்யுந் தொழிலிலும், வர்த்தகத்திலும் பலவிதமாகிய கஷ்டமும் கலகமும் நேர்ந்து, வறுமையினால் திகைத்து, எவ்விதமாய் பூலோகத்தில் சீவிப்பதென்று மனஞ்சோர்ந்து திகைத்து, கஷ்டப்படுவார்கள். ஆகையால், இச்சமயமே நவக்கிரக பூஜை செய்துகொண்டிருந்தால் கொஞ்சங் கொஞ்சமாய்க் கஷ்டம் விலகி சுகானந்தமா யிருப்பீர்களென வுரைப்பீர்கள்.
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
ஆருடங்கேட்கவந்தோர் எதிரில்நின்று அன்புடனேமுப்பத்தி யொன்பதென்றால் சீருடனேபலநன்மை மிகவுண்டாகும் சித்தமகிழ்வாய்பலன்கள் அதிகமாகும்
Page 332
சகதேவாரூடம்
பேருடனேகீர்த்தியும் பிரகாசிக்கும் பெண்பிள்ளைபத்துமித்திர ருடனேவாழ்ந்து காருண்ய இந்ததெய்வ சகாயத்தாலே காசினியில்சீவிப்பா ரெனச்சொல்வீரே. 39
உரை:—ஆரூடங் கேட்க வந்தவர்கள் முப்பத்தொன்ப தென்று சொன்னால் பலவிதமான நன்மையு மடைந்து, சுகசீவி யாக தனதான்ய சம்பத்துடனே சீவித்திருப்பார்கள். ஆனால், சகலரும் சமர்த்தனென்று புகழுந் தன்மையாகிய கீர்த்தியும் பெருமையும் பொருந்தி, சுகமாக பத்துமித்ரருடனே சவுக்கியமாக இந்த தெய்வத்தின் கிருபையால் வெகு லாபத்துடனே உலகத் திலே வாழ்ந்திருப்பார்கள்.
சகதேவாரூடம்
நலமுடனேஆரூடங் கேட்கவந்தோர் நாற்பதென்றுரைத்தாலே கஷ்ட நஷ்டம் கலகமுடன்பத்துமித் திரர்களாலே கவலையுடன்வெகுதுயர மடைகுவார்கள் பலவிதமாய்மனத்துயரம் சரீரநோயால் பரதவித்துப்பிறகுசுக மாகவாழ்வர் சிலகாலம்சென்றால்சுகமும் நன்மையுண்டாம் சீராகசீவிப்பிரெனச் சொல்வீரே. 40
உரை:—ஆரூடங் கேட்க வந்தவர்கள் நாற்பதென்றுசொன் னால் மனவிசாரமும் கஷ்டமும் கவலையுமுண்டாகும். பத்துமித் திரர்களால் கலகமும் பகையு முண்டாகும். ஆனால் சிலகாலஞ் சென்றால் பகவானுடைய செயலினால் கொஞ்சங் கொஞ்சமாக கஷ்டமும் கவலையும் விலகி, சுகசீவியாயிருப்பதுடன் நினைத்த காரியம் சித்தியாகி உத்தியோக மேன்மையுடன், வர்த்தகலாபத் தினாலும் சுகசீவியா யிருப்பார்களெனப் புகழ்வீர்.
சகதேவாரூடம்
அகமகிழ்ந்துஆரூடங் கேட்கவந்தோர் அன்புடனே நாற்பத்தொன் றென்றுரைத்தால் சுகமுண்டுகீர்த்தியுண்டு பெருமையுண்டு சுற்றத்தார்மனைவிமைந்தர் பெருக்கத்தாலே மகிழ்ந்துதனதான்யசம்பத் துடனேயன்பாய் மாநிலத்திலே சுகமாய் வாழ்ந்திருந்து ஜெகமெங்கும் பிரபவமாய் தனவானென்று தேசத்தோர்மெச்சிடவே சீவிப்பாரே. 41
உரை:—ஆரூடங்கேட்கவந்தோர்கள் நாற்பத்தொன்றென்று சொன்னால் தனதான்ய சம்பத்துடன் வெகுகீர்த்தி பிரகாசமாய் மனைவி, மைந்தர், சுற்றத்தாருடனே சுகசீவியாய் வாழ்ந்திருப்ப
Page 333
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
னுடன், நினைத்த காரியம் சித்தியாகி பலவிதமாய் மனோற்சாகமடைந்து வித்யா விருத்தியுடனும், உத்தியோக விருத்தியினாலும், பலவித வியாபார லாபத்தினாலும் திரவிய சேகரஞ் செய்து பிரபதமான கீர்த்தியுடன் சீவித்திருப்பார்கள்.
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
இனிதுடனே ஆரூடங் கேட்கவந்தோர் இசைத்தநாற்பத்தி யிரண்டென்றாலே கனிவுடனே நினைத்தகாரியமுமாகும் கஷ்டநஷ்டம் விலகியே களித்திருப்பார் மனிதரகுப்பார்தனக்கு நேசமாவார் மனைவிமைந்தர்பந்துமித்ர ருடனே யன்பாய் தனதான்ய சம்பத்தோ டன்பாய்வாழ்வார் தரணியிலே சுகமடைவா ரெனச்சொல்லீரே. 42
உரை:—ஆரூடங்கேட்க வந்தோர் நாற்பத்திரண்டென்று சொன்னால் அவர்கள் நினைத்த காரியம் சித்தியாகுமென்றும், இத்தனை நாளாய் அனுபவித்த கஷ்ட நஷ்டமெல்லாம் விலகி, சுகனந்தமாயிருப்பதுடன், சகல மனிதரும் தனக்கு நன்மை செய்வதுடன், தனதான்ய சம்பத்துடனே உலகத்தார் புகழ்ந்துரைக்கும் தன்மையாகிய பெருமையாய் சீவித்திருப்பீர்.
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
மனந்திகைத்து ஆரூடங் கேட்கவந்தோர் மனமெலிந்து நாற்பத்தி மூன்றென்றோதில் இனஜனங்கள் பந்துமித்ரர் பகையாவார்கள் இசைத்தபொருள் மாடுசேதமாகும் தனதுதேகமெலிந்து துயரத்தாலே தரணியிலே வறுமைபிணி யால்திகைத்து தனமிழந்து விதிவசமென் றேங்கிவேதான் தத்தளித்துத்திகைப்பா ரென்றோதுவாயே. 43
உரை :— ஆரூடங் கேட்க வந்தோர் நாற்பத்தி மூன்றென்று சொன்னால், இனஜனத்தார் பந்துமித்திரர்களெல்லாம் பகையாவார்கள். வறுமை சூழ்ந்து பலத்த கஷ்டநஷ்டமுண்டாகி ஆடுமாடு சேதமாகியும் பலவிதகவலையுமுண்டாகி தத்தளிப்பாரென்று சொல்லுவீர்.
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
அன்புடனே நாற்பத்தி நாலென்றோதி ஆரூடங்கேட்போர்க்கு காரியசித்தி பொன்மயமாம்பெண்ணொருத்தி யாலேமெத்த பொருளுடனே பூஷணமும் கிடைத்தெந்நாளும்
Page 334
சகதேவாரூடம்
நன்மையாந்தனவந்த ராயிருந்து நலம்பெறுவார்கீர்த்திசம்பத்தினாலே இன்பாகதிரவியசம் பத்தினாலே இனிமையாய்வாழ்வாரென் றோதுவீரே. 44
உரை:—ஆருடங் கேட்க வந்தவர்கள் நாற்பத்தி நாலென் றுரைத்தால், அழகான ஓர் பெண்ணால் பொருள் கிடைத்து ஆடை ஆபரண அலங்காரத்துடன் மிகவும் கீர்த்திப் பிரகாச மாய்த் தனதான்ய சம்பத்துடனே, பந்துமித்திரர்களுடன் சக ஜீவியாய் வாழ்ந்திருப்பார்களென் றுரைப்பீர்.
சகதேவாரூடம்
ஆருடங்கேட்கவந்தோர் நாற்பத்தைந்தை அன்புடனேபகன்றாலே காரியசித்தி சீருடனேபலநன்மை விளையும்நல்ல சொர்ணபணிபூஷணங்கள் கிடைக்கும்பாரே பாருக்குள்தனதான்ய சம்பத்தோடு பாக்யவானாயிருப்பா ரென்றேசொல்லு காருண்யமேவும்நவக்கிர கங்களாலே கவுரவமாய்ஜீவிப்பா ரெனச்சொல்வீரே. 45
உரை:—ஆருடங்கேட்க வந்தவர்கள் நாற்பத்தைந்தென்று சொன்னால், அவர்கள் நினைத்த காரியம் சித்தியாவதுடன் வெகு மேன்மையாக நன்மனதமைந்தவர்களாய் தனதான்ய சம்பத் துடனும், உத்யோகவிருத்தி, வியாபார லாபத்தால் திரவியஞ் சேர்த்து மனோற்சாகமாய் சதாகாலமும் நவக்கிரகங்களின் சகா யத்தினாலே வெகு மேன்மையாய் ஜீவித்திருப்பார்கள்.
சகதேவாரூடம்
வலையுடன் ஆருடம் கேட்கவந்தோர் கலக்கமுடன்நாற்பத்தி ஆறென்றோதில் தவறாமல்நேர்ந்தகஷ்டம் சிதறாமற்றூன் தன்னையேவெண்துயர மனுபவிக்கச்செய்யும் நவக்கிரகபூஜைசெய்தால் பக்தியாலே நலமுடனே ஆடுமாடு பொருளுஞ்சேர்த்து அவனியிலே தனவந்தராயிருந்து அன்புடனேவாழ்வாரென் றோதுவீரே. 46
உரை:—ஆருடங் கேட்க வந்தோர் நாற்பத்தாறென்றுரைத்தால் அச்சமயத்திலிருக்கின்ற கஷ்ட நஷ்டத்தினால் பலவித துன்பமும் துயரமு மனுபவிப்பார்களென்று சொல்ல வேண்டும். ஆனால், பகவத் பக்திபானந்தமாக நவக்கிரக பூஜை செய்து கொண்டிருந்தால் உத்யோகமேன்மை, வியாபாரலாபம், திரவிய சம்பத்து தனதான்ய லாபத்துடனே சுகமாய் சீவித்திருப்பார்கள்.
Page 335
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
அன்புடனே நாற்பத் தேழென்றுரைத்து ஆருடங்கேட்கவந்தோர் நினைத்தகாரியம் நன்மையுடனேஜெயமாய் விளங்குமிந்த ஞாலத்தில வெகுமேன்மை யாகவாழ்ந்து துன்பமற்றுதுயரமற்று கண்டமின்றி சுகசீலியாகவே வாழ்ந்திருந்து பொன்பொருளும்சேகரித்து சம்பத்தோடு பெருமையாய்வாழ்ந்திருப்பா ரெனச்சொல்வீரே. 47
உரை:—ஆருடங் கேட்க வந்தோர் நாற்பத்தேழென்று சொல்வாரானால் தாங்கள் நினைத்த காரியமெல்லாம் சித்தியாவதுடன் உத்யோகவிருத்தியினால் பொன் பொருள் பூஸ்திதியுடன் வெகு மேன்மையாக சீவித்திருப்பார்கள். ஆனால், சிலநாட் சென்றால் மிகவும் மேன்மையாய் பத்து மித்திரர்களுடனே சகலரும் தனவந்தனென்று புகழ்ந்துரைக்கும்படியாக நாளுக்கு நாள் குடும்ப விர்த்தியாகி நன்மையுடன் மனைவி மைந்தர்களுடனே வாழ்ந்திருப்பார்களென் றுரைப்பாய்.
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
நலமுடனேஆருடங் கேட்கவந்தோர் நாற்பத்தியெட்டென்று சொல்வாரானால் பலவிதமாய்தன்மைஉண்டு மித்ரனாலே பணமுடன்வியாபாரந் தனிலேலாபம் கலகமிலாசுகமாக வாழ்ந்திருப்பார் கனகமணிபூஷணமும் பூமிலாபம் சிலகாலத்திற்குள்ளே கிடைத்துநன்றாய் சித்தமகிழ்வாகவே சீவிப்பாரே. 48
உரை:—ஆருடங்கேட்க வந்தவர்கள் நாற்பத்தி யெட்டென்றுரைத்தால் சிநேகிதனாலே பலவிதமாகிய நன்மையும் கீர்த்தியும் பொருந்தி தனதான்ய சம்பத்துடன் திரவிய லாபமும், பூமி லாபமும் கிடைத்து, சில காலத்திற்குள்ளே தனதான்ய சம்பத்துடன் உத்தியோக விர்த்தியினாலும், வியாபார லாபத்தினாலும் திரவிய சேகரஞ் செய்து சுகசம்பத்துடனே சீவித்திருப்பார்கள்.
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
ஜோதிடர்முன் ஆருடங்கேட்கவந்தோர் சொன்னதோர்நாற்பத்தி யொன்பதுக்கு ஆதியிலுன்னூடனே நேசித்திருந்தோன் அவனுறவைநீக்கியுந்தன் மனதின்பேரில் முதலத்திலேயிருந்தால் வர்த்தகத்தால் பொன்பொருளுமிகச்சேர்த்து சுகவானாக நீதிதவறாமலே சம்பாதம் நீணிலத்திலேதுதித்து மகிழுவாயே. 49
Page 336
சகதேவராரூடம்
உரை :- ஆருடங்கேட்க வந்தவர்கள் நாற்பத்தி ஒன்பதென்றுரைத்தால், ஆதியில் நேசித்திருந்த சிநேகிதனை விடுத்து, தனிமையாக வியாபாரஞ் செய்துக்கொண்டிருந்தால் விசேஷமாய் திரவியஞ் சேகரித்து மிகவும் மேன்மையாக பிரபுத்தன்மையாய் பொன், பொருள் விசேஷமாய் சேர்ந்து மேன்மையுடன் மனைவி, மைந்தர் சுற்றத்தாருடன் வாழ்ந்து, சிவத்தியானமாய் பல தினமும் சதானந்தமா யிருப்பதற்காகும்.
சகதேவராரூடம்
ஆருடங்கேட்கவந்தோர் ஐம்பதென்றால் அன்புடனே சிலகாலம் சென்றதானால் சீருடனே பொன்பொருளும் மிகவேதேடி சிறப்புடனே தனவந்தராகவாழ்வார் பாருக்குள்பாக்கிய வானாயிருந்து பலநாளும்பிரபுத் தன்மையாகவாழ்ந்து காருண்யமாகவே தர்மஞ்செய்து கவலையின்றியெந்நாளும் சீவிப்பாரே. 50
உரை :- ஆருடங்கேட்க வந்தோர் ஐம்பதென்று சொன்னால் சிலகாலஞ் சென்றால் தனதான்ய சம்பத்துடன் திரவிய சேகரஞ்செய்து மகாதனவந்தராக பொன் பொருள் பூஸ்திதிகள் பெற்று திரவியவந்தனாய், பிரபுத்தன்மையாகக் கவலையில்லாம லிருப்பதற்காகும்.
சகதேவராரூடம்
கலகத்தால்பயமுமில்லை தூரஞ்சென்றோர் காணுவார் இரண்டொரு வருடஞ்சென்றால் நலமுடனே பிரபுக்கள் நேசமுண்டு நன்மைமிகஉண்டாகும் பொருளுஞ்சேரும் மலைதனிலேபோயிருக்க லாகுந்தல்ல மதிகுருந்தபுத்திரர்கள் பெற்றேவாழ்வார் தலைநோய்கண்டுதணிந் திடுமெப்போதும் தரணியிலே சுகமாக வாழ்வாரே. 51
உரை :- தற்சமயம் ஐம்பத்தொன்றுயென்றால் கலகத்தினால் பயங் கிடையாது, தூரதேசத்திற் போனவர் இரண்டொரு வருடஞ் சென்றால் வருவார்கள், பிரபுக்கள் நேசமுண்டு, விசேஷ தன்மையும் உண்டாவதுடன் திரவிய சேகரஞ்செய்து யாத்திரை வாசியாய் மலைகளில் போயிருக்கும்படியான நன்மையும் உண்டாகும். தமது மனைவி ஆண் குழந்தையைப் பெற்று சுகசீவியாயிருப்பதற்காகும். ஆனால், சீதள சம்பந்தமாக தலைநோய் வந்தாலும் உடனே விலகி சவுக்கியமா யிருப்பதற்காகும்.
Page 337
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
அன்புடனேதொலைதூரந் தனில்சேர்ந்தாலும் அநேகவிதகார்யங்க ளுஞ்செய்யவல்லோன் தன்பங்கை சகோதரனுக் கீந்துநல்ல தயாளகுணமாகவே யிருப்பானென்றும் தன்மையுடன்வணக்கத்தி லுயர்ந்தோனாகும் ஞாலமதிக்கவலனாய் விளங்குவானே பன்முறையும்பாரிலுள்ளோர் புகழ்ந்துபேச பணமுடனேயிருப்பார் கவனிப்பீரே. 52
உரை :- ஐம்பத்திரண்டு யென்று சொன்னால், வெகு தூரத்தில் சேருவதாயிருந்தாலும் அந்த காரியத்தை உடனே செய்வதற்கிசைந்த சமர்த்தனாய் விளங்குவதற்காகும். தனது பங்கு பாகத்தைத் தனது சகோதரனுக்குக் கொடுத்துவிட்டு, சதாகாலமும் தயாள குணமாகவே யிருப்பானென்றும் நன்மையுடன் சகலரிடத்திலும் வணக்க மிகுந்த மரியாதையுடனே விளங்கி, சகசீலியாய் பலநாளும் நன்மையுடன் பலபேரும் புகழ்ந்துரைக்கும் பணமும் விளங்கி சுகமாயிருப்பதற்காகும்.
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
எண்ணியதோர்காரியங்க ளாகாதப்பா எடுத்துசெய்யும்காரியத்தில் பலன்தராது தன்மைமிகும்நன்மனமும் வருத்தமாகி தரணியிலேவறுமையால் தியங்கும்போது வன்மையுள்ளபந்துமித்ர ருரைத்தவாக்கால் வளமைமிகும்காரியங்கள் பலிதமுண்டு கண்ணியமாய்ப்பொருள்சேரும் கவனிப்போர்க்கு காரியசித்தியுண்டு மயங்கிடாதே. 53
உரை :- ஐம்பத்துமூன்று யென்றால் நீ மனதில் நினைத்த காரியங்களொன்றும் நடவாது விடாமுயற்சியுடன் எடுத்து செய்யும் காரியத்திலும் பலன் கிடையாது. குளிர்ச்சி பொருந்திய சாந்தகுணமும் வருத்தமடைந்து சிலநாள் வரையிலும் வறுமையினால் தியங்கும்போது, தமது பந்துமித்திரர்கள் சொல்லும் நல்வாக்கியத்தால் செய்யும்படியான தொழிலால் பொருள் சேர்த்து திரவியவந்தனாய் யிருப்பதற்காகும். சகலவித காரியமும் சித்தியுண்டாகும்.
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
துன்பமுடன்றுயர்நீங்கி சிநேகராலே சுகமடைந்து பொருள்சேகரஞ்செய்தன்பாய் நன்மையுடனேநினைத்த காரியசித்தி நலமுடனேசகலவித நன்மையுண்டு
Page 338
சகாதேவாரூடம்
பின்னுமொருநற்செய்தி கலியாணங்கூடும் பிழையில்லாசுபகரும மெல்லாம்வாய்க்கும் அன்புடனேநீநினைத்த காரியங்கள் அனைத்துமேசுகமாக நடக்கும்பாரே. 54
உரை:— ஐம்பத்து நான்கென்றால் இத்தனைநாளா யிருந்த துன்பமும் துயரமும் விலகி, உன்னுடைய சிநேகிதர்களாலே சகலவித காரியமும் சித்தியாவதுடன், பொன் பொருள் யாவும் விசேஷமாய் சேர்த்து சுகமா யிருப்பதற்காகும் சகலவித நன்மையும் உண்டாகும். கலியாண காரியங்களுமுண்டு. இன்னும் விசேஷ சுபகாரிய மனைத்தும் நேரிட்டு சவுக்கியமா யிருப்பதற் காகும்.
சகாதேவாரூடம்
செல்லுகின்றமார்க்கத்தில் காரியசித்தி ஜெகம்புகழவாய்த்திடுமே அறிவுவிருத்தி கல்வியினும்விசேஷமாய் பவிதமுண்டு காதலியும் நன்மனதா யிருந்துவாழ்வார் நல்விவேகமுமுண்டு நன்மையான நற்சகோதரர்த்துணை யாவாரின்னும வல்லமையும் கீர்த்தியுண்டு பொருளுமுண்டு வையகத்தில்பிரபுவென வணங்குவாரே. 55
உரை:— ஐம்பத்தைந்தென்றால் வித்தியாபுத்தி விசேஷத்தினாலும் நற்கீர்த்தி யுண்டாகும். நற்சமயம் போகும் ஸ்தானத்தில் எடுத்த காரியம் சித்தியாகும். தனது மனையாளும் ஆரா பாசமாகவும் நற்குணசாலியாகவு மிருந்து பலவித நன்மையும் செய்வாள். நல்ல விவேகமும் பந்துமித்திரர் சேர்க்கையும் பொருந்தி யிருப்பதுடன் அவர்கள் சொல்லும் வாக்கியத்தின்படி நடந்தால் காரியசித்தி யுண்டாவதுடன் நல்ல விவேகம் பொருந்தி, சகோதரர் துணையாக விளங்குவார். வல்லமையும் கீர்த்தியும் பொன், பொருளுமுண்டாகும். உலகத்தில் பிரபு வென்று வணங்குந் தன்மையான பலவிதமாகிய நன்மையு முண்டாகும்.
சகாதேவாரூடம்
வீணான அலைச்சலும் பகையுமுண்டு வெகுஜனங்கள் சத்துருவாய் விளங்குவார்கள் காணிபூமியைவழக்கால் ஜெயித்துக்கொண்டு கைவசமாய்வைத்துக் கொண்டேபிழைக்க வேணுமெனில்சிவன்கோவில் தனிலேநெய்யால் விளக்கேற்றிபூஜித்து வருவாயாகில் தோணும்ஞான கல்வி பொருளுஞ்சேரும் தொல்லுலகில்சுகமாக வாழலாமே. 56
Page 339
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
உரை :— ஐம்பத்தாறென்றால் தற்சமயம் பிரயோசன மில்லாமல் வீணாக அலைச்சலுண்டு. வெகு ஜனங்களின் விரோதமும் நேரிட்டு அதனாலே பகையாகி, தனது பூர்வீக சுவாதீனமாயிருந்த காணிபூமியை வழக்கால் வென்று மீட்டுத் தனது கைவசமாக வைத்துக்கொண்டு பிழைப்பதற்காகும் ஆனால் தினந்தோறும் சிவன் கோயிலில் நெய் விளக்கேற்றி வைத்து பூஜித்தால், ஞானமும் கல்வியும் விசேஷித்து வியாபாரத்தினாலும், உத்யோக சம்பத்தினாலும் பொன், பொருள் விசேஷமாய்ச் சேர்ந்திருப்பதுடன் உலகத்தில் சதா சுகமாக இருப்பதற்காகும்.
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
துயர்வதுநீங்குமுதன் பந்துமித்திரர் துணைவர்கள்பகையாவா ரிச்சமயந்தன்னில் நயமில்லைநல்லோராலே நன்மையுண்டு நாடியசகாயமுண்டு கீர்த்தியுண்டு பயமில்லை இந்தமாதத்திருந்து பக்குவமாய்சகலருமே நேமாவார் சுபகாரியமெல்லாஞ்சித்தி யாகுமென்று சொல்லுவீர்சோதிட சாஸ்திரியல்லோரே. 57
உரை :— ஐம்பத்தேழென்றால் தற்சமயம் துன்பமும், துயரமும் நேரிட்டு பலவித கஷ்டமும விலகி பந்துமித்திரர்கள் பகையாவார்கள். ஆனால், இச்சமயத்தில் உத்தமர்களின் சகாயத்தினால் பலவித நன்மையுண்டு. அவர்களால் நாடிய சகாயமும் கீர்த்தியு முண்டாவதுடன் இந்த மாதத்திருந்து பலவித நன்மையும் கீர்த்தியும் பொருந்தி சகலரும் சிநேகிதமாவார்கள். இன்னும் தனது சுபகாரிய மனைத்தும் சித்தி யுண்டாகுமென்று சொல்வீர் ஜோதிட வல்லோர்களே.
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
கன்னிகையும் கிடைக்கும்இனி சுபங்களுண்டு கலியாணகாரியங்கள் நடக்கும்பாரே நன்மையாய்ப்பொருள்சேரும் ஆனால்சத்துரு நாட்டத்தினால்சிலக துன்பமுண்டு இன்னும்சிலநாட்பின்னூல் வறுமைதுன்பம் இன்னலெல்லாம்விலகி சவுக்கியமாகி பொன்பொருளும்மிக சேர்ந்துசவுக்கியமாகி பிரபுவெனவாழ்குவா ரென்றறிவீரே. 58
உரை :— ஐம்பத்தெட்டென்றால் இந்த சமயத்தில் நாடிய கன்னிகையும் கிடைக்கும். இன்னும் சுபகாரியமும் நடக்கும். கலியாண வைபவங்களும் நடந்து சுகசவுக்கிய மடைவதற்காகும். ஆனால், பகைவர்களின் பார்வையினால் பலவிதமான லேகமும்,
Page 340
சகாதேவாரூடம்
துன்பமும், துயரமும், கஷ்டநஷ்ட முண்டாகும். ஆனால், இன்னும் சிலநாட் சென்ற பிறகு வறுமையும், துன்பமும் விலகி சுகமடைவதுடன் சத்துருக்களின் விபரீத பகையும் விலகி சகலரும் நேசமாவார்கள். மனோற்சாகமதிகரித்து சுகசவுக்கியமா யிருப்பதுடன் பொன், பொருள் சேர்த்துக்கொண்டு பிரபுவென்று சகலரும் புகழ்ந்துரைக்கும்படியாக ஜீவித்திருப்பதாகும்
சகாதேவாரூடம்
காரியங்கள் ஜெயமுண்டு கவலையில்லா கைதனிலே பொன்பொருளும் வெகுவாய்சேரும் மாரிபெய்துன் வயல்தனிலே தானியங்கள் மாக்ஷிமையாய் விளையுமின்னம் உனதுமச்சான் நீரின்மேலேயிருந்துபொன் பொருளோடேவந்து நின்முகத்தைக்காணுவான் கவனிப்பாயே பாரிலுள்ளோரந்தனக்கு நேசமாவார் பலதினமும் சவுக்கிய முண்டுதானே. 59
உரை:— ஐம்பத்தொன்பதென்றால், நினைத்த காரியம் ஜெயமுண்டு. கஷ்டநஷ்டமுங் கவலையுமில்லாமலும் கையில் பொன், பொருளும், அதிகமாக சேர்த்து சவுக்கியமா யிருப்பதுடன் மழை பொழிந்து தானியங்கள் விசேஷமாய் விளையும். உனது மைத்துனன் கடல் யாத்திரையாக தீவாந்திரத்திற் சென்றவன் பொன் பொருளோடு வந்து சேர்வான். உலகிலுள்ள சகலரும் உனக்கு சிநேகிதராய் விளங்க சுகஜீவியா யிருப்பாய்.
சகாதேவாரூடம்
எடுத்தகாரியங்கள் சித்தி யாகும் உன்னால் இச்சமயம்தாமதமா யிருக்கும்நீயே தொடுத்ததொரு வியாஜ்ஜியத்தால் ஜெயமுண்டாகும் தோல்வியில்லை ஜெயம்பெறுவா யுன்கையாலே கொடுத்தபணமுங்கிடைக்கும் தடையிராது கோரியதோர் நன்மையெல்லாம் கிடைக்கும்பாரே விடுத்தமனு காகிதத்தால் நிதியும் பொன்னும் விசேஷமாய்க்கிடைக்குமினி கவனிப்பாயே. 60
Page 341
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
யாத்திரைபோக போகமிகவேபெற்று யானையைக்கனவிற் கண்டால்மிகவுநன்மை கோத்திரம்பிளங்கப்பாலன் பிறப்பான் றேவர் கோரியதோர்நன்மையெல்லாம் செய்வாரின்னும் கீர்த்தியுடன் பொன்பொருளும் ஆதியாக கிடைக்குமப்பா சிறிதுநாள் சென்றதானால் நேத்திரம்போல்பந்துமித்திரர் சுற்றமெல்லாம் நேர்மையாய் துணையிருந்து காப்பார்தானே. 61
உரை :- அறுபத்து ஒன்றென்றால் யாத்திரைபோக பாக்கியம் அதிகமாய் கிடைக்கப்பெற்று சுகமா யிருப்பதற்காகும். ஆனால், கனவில் யானையைக் கண்டால் வெகு நன்மையாயிருக்கும். வம்ச விருத்தியாக ஆண் குழந்தை பிறக்கும். பகவத் பக்தி பானந்தமாக பூஜா நைவேத்தியம் செய்வதால் தேவர்கள் சகல நன்மையும் தருவதற்கிசைந்தவை யனைத்தும் தருவர். செய்யும் முயற்சியனைத்தும் பெற்று கீர்த்திப்பிரகாசமாய் பொன் பொருள் பெருகும்படியாக வாழ்ந்து சிறிதுநாளானபிறகு பந்துமித்திரரனை வரும் தமது நேத்திரம்போல வெகு ஆசாபாசத்துடன் துணை யிருந்து காப்பாற்றுவார்கள்
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
சொற்பமாய்ப்பொருள் நஷ்டமாகுங்கண்டாய் தொடுத்ததுவிளங்காமல் மறையுமின்னும் அற்பர்களின்உறவுகிட்டும் ஆளுமின்னும் அரும்பொருள் நஷ்டந்தா னுண்டாகும்பின்பு துர்ப்பலமாயெக்காரியமும் செய்யொணாது தூரத்திலேகிடுவாய் சிறிதுநாளில் நற்பலனையனுபவித்து ஞானந்தன்னில் நலமுடனேஜீவிப்பீர் தரணிமீதே. 62
உரை :- அறுபத்திரண் டென்றால் கொஞ்சமாய் திரவிய நஷ்டமுண்டாகி செய்கின்ற வியாபாரமும் மறையும், துன்மார்க்கர்களின் உறவுகூடும், எந்தக்காரியமும் செய்யலாகாது. இன்னும் சிறிதுநாளில் தூரதேசத்தி லேகுகுவாய். ஆகையால் துர்ப்பலமாய் எந்தக் காரியத்திலும் பிரவேசியாமல் ஒவ்வொரு விஷயத்திலும் உறுதியான காரியத்தையே நடத்தி அதனால் நற்பலனை யனுபவித்து பூமியில் சுகஜீவியா யிருப்பீர்.
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
மன்னவரால் அச்சமுண்டு நஷ்டமாகும் வறுமையுஞ்சூழுமின்னும் வையகத்தில் உன்வீடுகனமாய் துர்ப்பலனைக்காட்டும் உடனேயுன்றன்பனால் சிறிதுலாபம்
Page 342
சகதேவாரூடம்
தன்மையில்லை அந்நியரால் வழக்குண்டாகும் நாடியதோர் காரியந்தான் ஜெயமேயாகும் உன்தகப்பன் பாட்டன் சொத்துந் தனக்க ணர்ஜிதமாய்க் கிடைக்குமினி கலங்கிடாதே. 63
உரை:-- அறுபத்து மூன்றென்றால் அரசராலும் பிரபுக்களாலும் அச்சமும் கஷ்டமு முண்டாகும். வறுமையும் சூழ்ந்து துயரப்படச் செய்யும். உனது வீடு தகனமாகி துன்பங்களை யனுபவிக்கச் செய்யும். உனது சிநேகிதரொருவரால் உனக்குக் கொஞ்சம் லாபபலனைக் காட்டும். அந்நியரால் வழக்கு வியாஜ்ஜியந் தொடுக்கப் பெற்று உனக்கு ஜெயமுண்டாவதுடன் உனது பிதுரார்ஜித சொத்துக்களும் உனக்கே வந்து சேரும்.
சகதேவாரூடம்
கன்னிகையாலேயுனக்கு பொருளுஞ்சேரும் கவலைகொஞ்சமுந்தனுக்கு வருகுமப்பா பொன்பொருளுமதனாலே செலவுசெய்வாய் போசனமுர் அற்பமாய் கிடைக்கும்பாரே தன்மையில்லை சிலகாலம் கஷ்டம்துக்கம் நாடினாலுந்தனுக்குக் கொஞ்சநாளில் வின்னமில்லா வியாபாரத்தாலேலாபம் விளங்கியேதனவந்த னாவாய்த்தானே. 64
உரை: - அறுபத்தினாலென்றால் கன்னிகையாலே உனக்கு வெகு லாபத்துடனே திரவியலாபம் கிடைத்து பொன் பொருள் ஆபரணங்களுண்டாகும்; ஆனால் கொஞ்ச மனஸ்தாபங்களுண்டாகி அற்பபோசனங் கிடைப்பதுடன் சிற்றில் சமயம் கஷ்ட நஷ்டமான துன்பமுந் துயரமு முண்டாகும். ஆனால் சிறிது நாள் பொறுத்து வியாபாரத்தில் வெகுலாபம் சேகரித்து தனந் தேடி திரவியவந்தனா யிருப்பதற்காகும்.
சகதேவாரூடம்
மனத்திலேவருத்தங்க ளாகும்மாசி மாதத்திலுன்குல தேவதைக்கு இனஜனத்தாரோடன்பாய் பூசைசெய்தால் இனிதுடனேவியாபார லாபத்தாலே தனந்தேடிபொன்பொருள்புத் திரியோடன்பாய் திரவியஞ்சேகரித்து மகிழ்ந்திருப்பாய் வனத்தினில்வாழுங்கந்த னருளினாலே வையகத்தில் கீர்த்தியுடன் சுகமாவாயே. 65
உரை :-- அறுபத்தைந்தென்றால் மனவிசாரத்தினால் சில காலம் வரையிலும் துன்பமும் துயரமுமுண்டாகும். ஆனால் மாசி
Page 343
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
மாதத்தில் உனது குலதேவதைக்கு பூஜை செய்தால் நீ செய்யும் வியாபாரத்தினாலே அதிக லாபம்பெற்று சுகசீவியாக திரவியந் தேடி மனமகிழ்ந்திருப்பதற்காகும் ஆனால் சிவசுப்பிரமணியர் கிருபையால் அவரை பூஜித்து விரதானுஷ்டானம் புரிந்தால் கீர்த்திப்பிரகாசமா யிருப்பதுடன் தனவந்தவனாகவு மிருப்ப தற்காகும்
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
துன்பமேசதாகாலம் பெருகுமப்பா துடாதாலேலகலம் வந்துசூழும் பொன்பொருளுஞ்சிறிதுநாட் சென்றுச்சேரும் போனபொருள்கிடைப்பதுதான் கஷ்டமாகும் நன்மையில்லைசினேகிதர் தாலேகஷ்டம் நாடுமேமேற்குதிசை தன்னிலேதான் இன்னலுடன் சாந்திசெய்ய கண்டம் நீங்கி இன்பமுடன்சுகமாக வாழ்வுயீரே. 66
உரை :- அறுபத்தாறாயென்றால் துன்பமும் துயரமும் சதாகாலமும் விளங்கி கலகம் சூழ்ந்து வறுமையாற் கலங்கி, தத்தளித்துத் தவிக்கச்செய்யும். ஆனால் சிறிதுநாட் சென்றபிறகு பொன் பொருள் விசேஷமாய்ச் சேருவதுடன் திரவியவந்தனானா யிருப்பதற்காகும். ஆனால் மேற்கு திசையில் சிநேகிதனொருவனாலே பலவித கஷ்டமுண்டாகும். அதற்குரிய சாந்தி செய்தால் சுகமாயிருப்பதற்காகும்.
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
இன்னலற்கனைத்தோமென் றஞ்சிடாதே இனியுடனே சிறிதுநாட் சென்றதானால் பொன்பொருளும்பூஷணமும் மிகவேபெற்று புஸ்த்தியொடனுதினமும் சுகமாய்வாழ்வாய் நன்மையுண்டு சிலகாலம் பொறுத்துனக்கு நன்மணமுஞ்சுகமுண்டு தனவானாக துன்பமில்லா வாழ்ந்திருப்பாய் கீர்த்தியாலே தொல்லுலகிலன்புடனே ஜீவிப்பாயே. 67
உரை : - அறுபத்தி ஏழென்றால், பலவித கஷ்டநஷ்டத்தால் கனைத்தோமென்று அஞ்சவேண்டாம். சிலநாட் சென்ற பிறகு பொன் ஆபரணங்களும், பூஷணமும், திரவிய லாபத்துடனே பொருளும் புஸ்த்தியும் பெற்று சுகமாய் வாழ்வதுடன் கலியாணமும் நடக்கும். அதன் பிறகு துன்பமில்லாமல் கீர்த்தியுடனே பூலோகத்தில் வாழ்ந்திருப்பாய்.
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
பொருளதுவுங்கைகூடும் நீயுமிப்போ போகுங்காரியமுங் கைகூடுமின்னுஞ் சீரானதுவுமுண்டாகும் அரனார்பூஜை அனுதினமும்செய்துசிவன் ஆலயத்தில்
Page 344
சகதேவராரூடம்
திருவிளக்கேற்றிவைத்து தினம்பூசித்து கேளிமைந்தர்சுற்றமுடன் வாழ்ந்திருந்தால் பெருமேதனதான்ய பசுபுத்ரலாபம் பேதமில்லாசுகமாக வாழ்வுவாயே. 68
உரை :— அறுபத்தி எட்டென்றால் நீ நினைத்த காரியமும் ஜெயமாவதுடன், பொருள் கைகூடும். நீ இப்போது போகுங் காரியம் ஜெயமாகும். பகவானுடைய அருளுண்டாகும். அனுக் கிரகமு முண்டாகும். ஆனால் சிவன்கோவிலில் திருவிளக்கேற்றி வைத்து தினந்தோறும் பூசித்துக்கொண்டிருந்தால் மனைவி மைந்தர் சுற்றத்தாருடன் சுஜீவியாய் வாழ்ந்து நன்மையா யிருப்பதற்காகும் இன்னும் வியாபாரத்தினாலும் உத்தியோகத் தினாலும் திரவிய சேகரஞ் செய்து கீர்த்திப்பிரகாசமாக தன தான்ய பசுபுத்ரலாபத்துடனே யாதொரு கஷ்ட நஷ்டமணுகா மல் சதா மனமகிழ்வுடனே வாழ்ந்திருப்பதற்காகும்.
சகதேவராரூடம்
கைவிட்டுப்போனபொருள் வந்துசேரும் கைப்பொருளுந்தனதான்ய மிகவுண்டாகும் பையவேவயலில்நெல் விளைவுண்டாகும் பந்துமித்ரசகாயத் தாலேநீயும் வையமிசைகீர்த்தியுடன் வாழ்ந்திருந்து மாதர்களின்சுகத்தாலே மாநிலத்தில் துய்யமனமுடையோனாய் சவுக்யமாக துன்பமில்லாதெந்நாளும் வாழ்வுவாயே. 69
உரை :— அறுபத்தி ஒன்பதென்றால் காணாமல் மறைந்து கைவிட்டுப்போன பொருள் வந்து சேரும் சதாகாலமும் தனத் தான்ய சம்பத்தும் கையிலிருக்குந் தன்மையாகவே லக்ஷ்மி கடாக்ஷமாயிருக்கும் வயலில் விதைத்த நெல் முதலாகிய தான் யாதிகள் நன்றாய் விளைந்து லாபத்தை உண்டாக்கும். பந்து மித்திரர் சகாயத்தினால் உலகத்தில் கீர்த்திப்பிரகாசமாய் ஸ்திரீ களின் நேசத்தினால் நல்ல மனதுடனே துன்பமும் துயரமும் விசனமுமில்லாமலே ஜீவித்திருப்பதற்காகும்.
சகதேவராரூடம்
இந்தநீர்மருந்துண்டால் வியாதிநீங்கும் இதமுடனுன்மருமகனும் வருதுவானே உத்தமர்கள் சேர்க்கையால் பொருளும்வாய்க்கும் உனதுநோய்தீர்ந்துதை இந்நாள்நீங்கும் எத்தமனாகவே ஏழைகட்கு ஈயமாகஅன்னதானஞ் செய்தான்பாய் சத்திரமும்சாவடியும் கட்டுதற்கு சம்பத்தும்தனதான்ய மிகவுண்டாமே. 70
Page 345
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
உரை :- எழுபதென்றால் இந்த சமயத்தில் நீ அவுஷதம் புசித்து சுகமாயிருப்பாய். உனது மருமகன் வருவான். நற்குணமுடையவர்களின் சேர்க்கையால் திரவிய சேகரமுண்டாகும். உனக்கு உஷ்ணத்தாலிருந்த இருமல் வியாதி விலகும். ஆகையால் சுத்த மனதாகவே ஏழைகளுக்கு அன்னதானம் செய்வதற்குஞ் சத்திரஞ்சாவடி கட்டுவதற்கும் ஏராளமான திரவிய லாபமும் தான்யலாபமும் அதிகரித்து சுகசவுக்கியமா யிருப்பதற்காகும்.
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
அதிகமாயிருக்கின்ற துன்பமெல்லாம் அகன்றுவிடுமுனதிஷ்ட தெய்வத்தின்மேல் பதிகமோர்பத்துசொல்லி பூஜித்தாலே பறக்குமப்பாதுன் மூடன்ப துயரமெல்லாம் நதியினில்வெள்ளமுண்டு தானியங்கள் நன்றாகவேவிளையு முந்தன்தேவி பதிவிரதாதன்மைமேற் கொண்டுன்மீது பக்ஷமுடனே இருப்பாள் கவனிப்பாயே. 71
உரை :— எழுபத்தி ஒன்றென்றால் உனக்கு இத்தனை நாளாக அதிகரித்திருந்த துன்பமும் துயரமும் விலகிவிடும். உனது இஷ்ட தேவதையை பூஜித்து பத்து பதிகம்பாடினால் எத்தகைய துன்பமும் காற்றுப்ப் பறந்தோடிப் போகும். உமது வயல்புரத்திலிருக்கும் நதியில் வெள்ளமதிகரித்து தான்யாதிகள் நன்றாய் விளையும். உனது மனையாள் புருஷ விஸ்வாசியாய் பதிவிரதாதன்மை அனுசரித்து உன்மீது ஆராபாசமா யிருப்பாள்.
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
அன்புடன்நீகாணிநிலம் வாங்கினாலே அதிகநன்மைபொன்பொருளு மிகவுண்டாகும் சன்மார்க்கபந்துமித்ரர் மனைவிமைந்தர் சம்பத்துற்சாகமும் வாய்க்கும்பாரே நன்மையுண்டு இஷ்டதெய்வ சகாயமுண்டு நலமாகபகவானை பூஜித்தன்பாய் இன்பமாயெந்நாளும் வாழ்ந்திருந்து இப்புவியில்கீர்த்தியாய் ஜீவிப்பாயே. 72
உரை:—எழுபத்திரண்டென்றால் நீ இந்த சமயத்தில் காணி பூமி வாங்கினால் அதனாலே அதிக நன்மையனைத்தும் தேடுவதுடன் பொன், பொருள், திரவிய சம்பத்து, மனோற்சாக மனைத்தும் மென்மேலும் பெருகி பலவிதமான நன்மை யனைத்துமுண்டாகும். உனது இஷ்டதெய்வ சகாயமுண்டு. ஆகையால், பகவானைப்பூஜித்து நன்மனதாய் சகலருக்கும் நல்லவனா யிருப்பாய்.
Page 346
சகாதேவாரூடம்
பந்துமித்திரர்களின் பகையுண்டாகும் பாரிலுள்ளோரவிரோத மாகுமின்னம் சிந்தைதனில் கலவரங்கள் மெத்தநேர்ந்து சிலகாலமானபின் விலகிப்போகும் நந்தனருளுனக்கு நன்மையுண்டு கிருத்திகையூர்சஷ்டி விரதஞ்செய்ய சந்ததமும்தனதான்ய சம்பத்தோடு சகலவிதநன்மையும் பெறும்பேறே. 73
உரை :- எழுபத்தி மூன்றென்றால் இந்த சமயத்தில் உனது பந்துமித்திரர்கள் பகையாவதுடன் ஊரிலுள்ளோரும் விரோதமாயிருப்பார்கள். மனதில் பலவிதமான சஞ்சலமுண்டாவதுடன் பயங்கரங்களுண்டாகி சிலகாலம் சென்றபின் விலகிப்போகும். ஆனால், கிருத்திகை சஷ்டி விரத தினங்களில் சுப்பிரமணியரை பூஜித்துக்கொண்டிருந்தால் உனக்கு துன்பமும் துயரமும் பறந்து இனிமேல் சுகஜீவியாயிருப்பதற்காகும் அன்றியும் தனதான்ய பசு புத்திரபாக்கியத்துடன் பொன், பொருளும் கிடைக்கப் பெற்று பெருமையாய் வாழ்ந்திருப்பதற்காகும்.
சகாதேவாரூடம்
கொஞ்சமுன்னால் பொருள்சேத மாச்சுதப்பா குருவருளாலினிமேல்பொன் பொருளுஞ்சேரும் தஞ்சமென்றாசான்பாதந் தன்னை நம்பி தாரணியிலே யிருப்பா யுனக்குமுன்னம் வஞ்சியால் பலபொருளு மிழந்தோமென்று வருத்தமுறாதே இனிமேல் தகுதியான எஞ்சிலாகீர்த்தியுடன் பந்துமித்திரர் எப்போதுந்துணையிருந்தா தார்ப்பாராமே. 74
உரை :- எழுபத்தினாலென்றால் சில காலத்திற்கு முன்னால் கொஞ்சம் பொருள் சேதமாச்சுது. அதனால் வருத்தப்படாதே. உனது குரு உனக்குச் செய்யும் சகாயத்தினால் தனதான்யம், பசு புத்ர லாபமும், கீர்த்தியும் உண்டாகும். முன்னம் ஸ்திரீகளால் பொருள் சேதமாச்சுதென்று வருத்தப்படாதே. இனி மேல் உனது பந்துமித்திரர் எப்போதும் சகாயமாயிருந்து உனக்கு பலவித நன்மையும் செய்து காப்பாற்றுவர். இனிமேல் அஞ்ச வேண்டாம்.
சகாதேவாரூடம்
வெற்றிமிகும்நீசெய்யும் வியாபாரத்தாலே விரோதிகளும்உனதிஷ்டம் போலிருந்து பற்பலரும்தட்பினரா யிருந்துனக்கு பலநன்மைசெய்வார்கள் பூதலத்தில்
Page 347
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
கற்றவரு பெரியோரும் பந்துமித்திரர் காசினியிலேயுனக்கு நன்மைசெய்வார் நற்றவஞ்செய்வதுபோல ஆலயத்தில் நலமுடனேபோய்பகவானை பூஜிய்யாயே. 75
உரை :- எழுபத்து ஐந்தென்றால் இப்போது நடத்தி வருகிற வியாஜ்ஜியத்தில் நீயே ஜெயம் பெறுவாய். உனது விரோதிகள் உனது மனம்போல் நடந்துகொள்வார்கள். அன்றியும் பகைவர்களே உனக்கு பலவித நன்மை செய்வார்கள். புராணிகர்களும், பெரியோர்களும், உனது பந்துமித்திரரும் தற்சமயம் உனக்கு சகாயமா யிருப்பார்கள். ஆகையால், நீ தவஞ் செய்வதுபோல பக்தியுடன் தினந்தோறும் ஆலயத்திற்குப் போய் பகவானை பூஜித்துக் கொண்டிருப்பாய்.
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
துணைவன் றன்சொல்மீறா நடப்பாயாகில் தொல்லுலகில் பலநன்மை யடைந்துநீயும் மணம்புரிந்தனேகசுக மடைந்தெந்நாளும் மனைவிமைந்தர்சுற்றமுடன் மகிழ்ந்தேவாழ்வாய் வணக்கமுடன் சகலருமே யுன்களுக்கு வாய்பேசினால் சகாயஞ் செய்வார்நல்ல குணமுடனே யிருந்துலகில் வாழ்ந்திருப்பாய் கூறுமென் சொல் தம்பியே ஜீவிப்பாயே. 76
உரை :- எழுபத் தாறென்றால் உன்னுடைய துணைவன் சொல் தவறாமல் நடந்து கொள்வாயானால் உலகத்தில் சகலவித நன்மையும் பொருந்தி கலியாண சுபகாரியமனைத்தும் நடந்து மனைவி, மைந்தர், சுற்றமுடன் மனமகிழ்ந்து வாழ்வாய். சகலரும் உனக்கு வணக்கமுடன் மரியாதை செய்வார்கள். உனது நற்குணத்தின் நல்ல வார்த்தையாலும் சகலரும் உனக்கு துணையாயிருப்பார்கள்.
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
உன்னுடையசகோதரனை விலக்கினாலே உயர் தரமாய்பந்துக்கள் ஞானமதிப்பார் அன்புடனே உனக்குநல்ல காலமாகும் அயலில்மணங்கூடும் வேதியனாலுனக்கு நன்மையுண்டுசிலகாலம் சென்றதானால் நாடியதோர்காரியங்கள் சித்தியாகும் இன்னுஞ்சில நாள் சென்றால் துன்பஞ்சூழ்ந்திட்டாலும் இருக்காமல் பறந்தோடும் பிரபுக்களாலே. 77
உரை :- எழுபத்தேழென்றால் உன்னுடைய சகோதரனிடமிருந்து தற்சமயம் விலகிக்கொள்வாயானால், உனக்கு கீர்த்தியும்
Page 348
சகதேவாரூடம்
மதிப்புமுண்டாவதுடன் பத்துக் கூட்டங்களுன்னை பெருமையாய் மதிப்பதுடன் உனக்கு நல்லகாலமுண்டாகும். உனக்கு அதனால் பலவித நன்மையும், நினைத்த காரிய சித்தியும் உண்டாகும். ஆனால் சில நாள் பெருந்துக்கமான கஷ்டமும் கவலையும் சூழ்ந்திட்டாலும் பிரபுக்கள் சகாயத்தினாலே பலவித துன்பமும் விலகி சுகமாய் ஜீவித்திருப்பதற்காகும்.
சகதேவாரூடம்
கலகம்வரும்பிறகு க்ஷேம மாகு முந்தன் கஷ்டநஷ்டகவலையெல்லாம் விலகிப்போகும் குலதெய்வத்தாற்றோயின் குறையுண்டப்பா குடும்பத்திலுந்தனுக்கு சுகமேயில்லை ஜலகண்டமுந்தனுக்குண் டானாலும்நீங்கி சாராமல்சுகமாக வாழ்ந்திருப்பாய் நிலையானதூரதேசவிருந் தொருவர்வந்து நின்சமுகம்துணையிருப்பார் கவனிப்பாயே. 78
உரை :— எழுபத்தெட்டென்றால் தற்சமயம் கலகம் நேரிட்டு பிறகு சவுக்கியமாகும். உனது குலதெய்வத்தின் குறையால் வியாதியுண்டாகும். குடும்பத்தில் உனக்கு ஒரு சுகமுங் கிடையாது. உனக்கு ஜலகண்ட முண்டானாலும் உடனே விலகிவிடுவதன் சுகமாக ஜீவித்திருப்பதற்காகும். தூரதேசத்திலிருந்து ஓர் விருந்தாளி வந்து உனக்கு துணையிருப்பான்.
சகதேவாரூடம்
வாந்திபேதி உன்வீட்டில் வந்துநிற்கும் வளர்மதிபோல்சுகமாக வாழ்ந்திருப்பார் சாந்திசெய்தால்நவக்கிரக சகாயத்தாலே சகலவிதநன்மையுண்டு தனலாபந்தான் காந்தியுடனே விளங்கி பொருளத்தேடி காணிபூமிபூஸ்திதியும் பெற்றுவாழ்ந்து வேந்தனைப்போலேகீர்த்தி மனோற்சாகந்தான் விளங்கிடேபெருமையாய் ஜீவிப்பாயே. 79
உரை :— எழுபத்தொன்பதென்றால் உமது வீட்டில் வாந்தி பேதி வந்து விலகிப் போகும். வளர்பிறைச் சந்திரனைப்போல் நாளுக்கு நாள் சுகஜீவியா யிருப்பதற்காகும். நவக்கிரக சாந்தி செய்தால் ஒன்பது கிரகங்களும் நன்மையையே செய்து சகாயமாயிருந்து தனதான்யம் பசு புத்ர லாபங் கிடைக்கும்படியான நன்மை புரிந்து சரீரம் பிரகாசமாய் விளங்கும் தன்மையான நன்மையனைத்தும் விளங்கி பொன் பொருள் சேகரித்து காணி, பூமி, பூஸ்திதியும் பெற்று பிரபுவைப்போல் பெருமையடைந்து
Page 349
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
கொஞ்சமாகிலுமனது எண்ணக்கூடாது குருபகையுமுனக்கு நேரிடுமப்போது நெஞ்சிலேநீநினைத்த படியேயலைந்து நெடுந்தூரமயலூரிற் சென்றுபின்பு வஞ்சகாரல்துன்பம்வாய்ந்து நலமாகாமல் வாடியேதிகைத்திடுவாய் மனமெலிந்து பஞ்சமாய்திகைத்துசில நாட்க்ஸென்றாலே பணம்சிறிதுசேகரித்து ஜீவிப்பாயே. 80
சுகஜீவியாய் வாழ்ந்திருப்பதற்காகும். இன்னும் பலவித நன்மை யுடனே கீர்த்திப்பிரகாசமாய் மனோற்சாகத்துடனே பெருமை யாய் ஜீவித்திருப்பதற்காகும்.
உரை :-எண்பது என்று சொன்னால் நீ நினைத்த எண் ணங்கூடாது. குரு பகையும் உனக்கு நேரிடும். மனதில் நீ நினைத்தபடியே அலைந்து திரிந்து, அந்நிய தேசத்திற் சென்று சில வஞ்சகராலே துன்பமும் துயரமும் நேரிட்டு, நன்மையாகா மல் திகிலடைந்து, வறுமையாற் கலங்கி சிறிதுநாட் சென்றபிறகு திரவிய சேகரஞ் செய்து ஜீவித்திருப்பாய்.
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
சித்தியாநினைத்ததெல்லாம் ஆனாலுனக்கு சேதமாகும் பொருள்தான் மற்றொன்றுமில்லை புத்திதனில்சிறந்தோனே மேற்குதிக்கில் போனாலேயுத்தனுக்கு ஆகாதப்பா கத்தியினாலுந்தனுக்கு அபாயமுண்டாம் கவனித்துஜாக்கிரதை யாயிருப்பாய் சுத்தமனதாயிருந்தா லுந்தனுக்கு சூழ்புவியில் சிலகாலம் நன்மையாமே. 81
உரை :-எண்பத்து ஒன்றுயென்றால் நீ எண்ணிய காரிய மெல்லாம் நிறைவேறும். ஆனால், கைப்பொருள் சேதமாகும். அறிவிற் சிறந்தவனே! நீ இந்த சமயம் மேற்கு திக்கில் பிரயாண மாய்ப் போனால் கத்தியினால் உனக்கு அபாயமுண்டு, அதற்காக அஞ்சாதே. சுத்த மனதாயிருந்தால் இந்த உலகத்தில் சிறிது காலம் சுகமாக ஜீவித்திருப்பாய்.
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
சஞ்சலமும்தானகலும் நீவிதைத்த தானியமும்விளைந்துசுக மாயெப்போதும் கொஞ்சுமொழிவண்மியின் கடாக்ஷமுண்டு குவலயத்தில் வெகுகீர்த்திதானுண்டாகும்
Page 350
சகாதேவாரூடம் (பக்கம் 849) / 82
அஞ்சாமல்பூமியிலே வாழ்ந்திருந்தால் ஆதரவாய்மனைவிமைந்தர் சுற்றத்தோடு எஞ்சலிலாவாழ்ந்திருப்பாய் சதானந்தமாக எப்போதும்கவலையிலா ஜீவிப்பாயே. 82
உரை :- எண்பத்திரண்டு யென்றால் இனிமேல் உனது மன சஞ்சலமுந் தீரும். நீ விதைத்த தானியங்கள் விளைந்து சக ஜீவியாய் லாபத்துடனே இருப்பாய். காணியோர் புகழ்ந்துரைக்கும்படியான லக்ஷ்மீ கடாக்ஷம் பொருந்தி கீர்த்திப்பிரகாசமா யிருப்பதற்காகும். மனைவி, மைந்தர், பந்துமித்திரர்களுடன் சதாகாலமும் கஷ்டநஷ்ட கவலை யில்லாமல் சுகமாய் ஜீவித்திருப்பதற்காகும்.
சகாதேவாரூடம் / 83
உனதில்லந்தனிலிருக்கும் ஒருஸ்திரீயாலே உனதெண்ணம்பாவுங்கை கூடுமின்னம் மனதினில்நினைத்ததெல்லாம் மாறாமல்கூடும் மாக்ஷியுடனே யுனக்கு நற்காலந்தான் கனமுடனேவந்தெய்தும் உத்தியோகத்தில் கௌரவமும்வியாபாரந் தனிலேலாபர் தனதான்யசம்பத்துந் தாகம்வாய்க்கும் தாரணியிற்பிரபுவாய் காணுவாயே. 83
உரை :- எண்பத்துமூன்று யென்றால் உனது வீட்டிலிருக்கும் ஒரு ஸ்திரீயினால் உனது மனதில் நினைத்தவையெல்லாம் யாதொன்றுந் தவறாமல் நடக்கும் உனது எண்ணமும் கைகூடும். இனிமேல் உனக்கு நற்காலமே வந்து சகலரும் உனக்கு சகாயமாயிருப்பதுடன் உத்தியோகத்தில் கௌரவமும் வியாபாரத்தில் லாபமும் உண்டாகும். பொன் பொருள், பூஸ்திதியுடன், தனதான்ய சம்பத்துடனே பிரபுவைப்போல உலகோர் மதிக்குந் தன்மையாயிருக்கும்.
சகாதேவாரூடம் / 84
ஆகாதுநினைத்த காரியமெல்லாம் அதிகபயமுண்டாகுந் திருடராலே ஏகாதிபத்தியங்கள் சிறிதுசேர்ந்து எவர்களுமேபுகழ்ந்துரைக்கும் படியாய்நீயும் போகபாக்கியத்துடனே வாழும்போது பொன்பொருளுஞ்சேகரித்து வைப்பாயானால் போகாதுசிறிதளவு முன்கைவிட்டு பூலோகத்தில்கீர்த்தி யாயிருப்பாய். 84
உரை :- எண்பத்துநான்கென்றால் நீ நினைத்த காரியமொன்றும் நடவாது. திருடர்களால் அதிக பயமுண்டாகும். சிலநாட்
Page 351
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
சென்ற பிறகு தனவந்தனாய் வாழ்ந்திருந்து, சகலரும் புகழ்ந் துரைக்கும்படியாக சீவித்திருந்தும் சுகசவுக்கியமாய் சீவித் திருக்கும்போது சேகரித்த பொன் பொருள், பூஸ்திதி யனைத்தும் உன்னை விட்டுப் போகாமல் பிரபுவைப்போல வாழ்ந்திருப்பதா காகும்.
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
உந்தனாலேகஷ்ட நஷ்டமுண்டாம் உளவாளிபாலுனக்கு பகைவர்துன்பம் வந்தாலும் சிறிதுநாள் பொறுத்துதானால் வையகத்திலுந்தனுக்கு நற்காலந்தான் எந்தவிதமாகவந்து சேர்ந்திட்டாலும் எடுத்தகாரியசித்தி பாரு மின்னும் பந்துமித்திரர்சுற்றமனைவி மைந்தர்களோடும் பக்ஷமுடன்சுகமாக வாழ்ருவாயே 85
உரை: - எண்பத்தைந்தென்றால் உந்தனாலே கஷ்டமுண் டாகும் சத்துருக்களின் தந்திர சாமர்த்திய உளவாளிபாலுனக்கு துன்பம் வந்தாலும் சிலநாள் சென்றால் யாதொரு துன்பமும் துயரமும் இல்லாமல் நல்லகாலம் வந்து சுகமாய் சீவித்திருப் பதற்காகும். நீ எடுத்த காரியம் எந்த விதமானாலும் சித்தி யாகும். உனது பந்துமித்திரர் மனைவி மைந்தர்கள் உன்மீது பக்ஷமாய் இருப்பதுடன் சுக சவுக்கியமாய் வாழ்ந்திருப்பாய்.
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
அன்புடனேயுத்தனுக்கு பொருளும்சேரும் ஆனாலும்உனதுமித்ரர் சேர்க்கையாலே நன்மையுண்டுமனைவிமைந்தர் வியாதியாலே நலிந்தாலும்பிறகுசுக மாயிருப்பார் உன்மாமன் தூரதேசத் திலிருந்துவந்து உந்தனுக்குபலநன்மை செய்வானின்னம் பொன்பொருளும்பூஸ்திதியும் பெற்றுவாழ்ந்து பூலோகத்தில்கீர்த்தி யடைவாயே. 86
உரை: - எண்பத்தாறென்றால் உனக்கு இனிமேல் பொன் பொருளும் அதிகமாய்ச்சேரும். உனது சிநேகிதரின் சேர்க்கை யால் பலவிதமான நன்மையுண்டு. ஆனால் உனது மனைவி மைந்தர்கள் வியாதியால் நலிந்தாலும் பிறகு சவுக்கியமா யிருப் பார்கள். தூர தேசத்திலிருந்து உனது மாமன் வருவான். அவனால் உனக்கு பலவித நன்மையுண்டாகும். அப்பால் உனக்கு பலவிதமாகிய நல்ல பலன் அமைந்து, பொன் பொருள் தனதான்ய சம்பத்தும் விசேஷமாய் அமைந்திருக்கும்.
Page 352
சகாதேவராரூடம்
இன்பாகஉந்தனுக்கு நற்காலந்தான் இசைந்தபடியேயமையும் பயப்படாதே உன்தங்கைபுத்திரியை மணந்துநீயும் உல்லாசமாகநீ வாழ்ந்திருந்தால் பொன்பொருளுந்தனுக்கு வாய்க்கும்நல்ல போஜனமும் சகசவுக்கியமாகும் அன்புடனேகவனித்து நல்லோர்சேர்க்கை அடைந்தினிதாய்ஜீவிப்பாய்தாணிமீதே. 87
உரை :- எண்பத்தேழென்றால் உந்தனுக்கு இனிமேல் நல்ல காலம் தகுந்தபடியாகவே வந்து சகலவுக்கியத்தை யடையச் செய்யும். ஆனால் உனது தங்கையின் புத்திரியை மணம்புரிந்து மனோல்லாசமாய் வாழ்ந்திருப்பாயானால், உனக்கு உத்தியோக சம்பத்தும் விசேஷித்து பொன் பொருள் பூஸ்திதியுடன் சகசவுக்கியமுடனே நாவிற்கினிய நல்லுணவாதிகளமைந்த சகபோஜனாதிகள் புசித்து சகசவுக்கியமா யிருப்பதற்காகும்.
சகாதேவராரூடம்
இந்தசமயத்திலுனக் கிருக்கும்நோய்கள் இசைந்தமருந்தால் விலகி சவுக்கியமாவாய் சுந்தரஞ்சேர்கன்னியரோ டன்பாய்வாழ்வாய் சுகுணமாய்மனோல்லாச மாயிருந்து பந்துமித்ரர்மனைவிமைந்த ருடனே யின்பாய் பார்தனிலேதன தான்ய சம்பத்தோடும் சந்ததமும்சுகஜீவி யாயிருந்து சீரரககமாயே யிருப்பாய்நீயே. 88
உரை :- எண்பத்தெட்டு என்றால் இந்த சமயத்தி லுனக்கிருக்கும் வியாதிகள் நீ உபயோகிக்கும் தகுந்த அவுஷதத்தால் விலகி சவுக்கியமாகும். அழகான பெண்களுடன் சுகமாயிருப்பாய். உனது பந்துமித்திரர் மனைவி மைந்தர்களுடனே தன தான்ய சம்பத்துடன் சரீராரோக்கியமாய் ஜீவித்திருப்பாய்.
சகாதேவராரூடம்
இதமுடனே உந்தனுக்கு சகசவுக்யம் இன்றுமுதல்ந்தனுக்கு கிடைக்குமப்பா பதமாகபிரபுக்க ளிடத்திற்சென்றால் பணமுடனுத்யோகங் கிட்டும்நல்ல சதனாலேவியாபார விருத்தியாகி சொர்ணமுடனேபூமி வாகனங்கள் அதிகாரமேன்மையும் பெற்றேயிந்த அவனி தனிலின்பாக வாழ்வாய்நீயே. 89
Page 353
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
உரை :- எண்பத்தொன்பது யென்றால் இனிமேல் உனக்கு சகலவித நன்மையும் சுகசௌக்யமு முண்டாகும். பிரபுக்களிடத்திற் பணிவாகப் பேசி மேன்மையான உத்தியோகமும் பெற்று, சவுக்கியமா யிருப்பாய். உனது புத்திரன் செய்யும் வியாபாரத்தினால் பொன், பொருள், பூஸ்திதியும் பெற்று சுகமாய், அதிகாரமும் மேன்மையும் பெற்று உலகத்தில் மேன்மையாய் வாழ்ந்திருப்பாய்.
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
உத்தமர்கள் சேர்க்கையினா லுலகமீது உத்தனுக்குப் பலநன்மை யுண்டாமென்று இத்ததியே மனதிலெண்ணி மகிழ்ந்திருப்பாய் இசைந்தபடி பொன்பொருளும் சேகரித்து புத்திரபாக்கியமுடனே வாழ்ந்திருப்பாய் பூலோகந்தனிலுனக்கு துன்பமில்லா எத்தரதியும் சகஜீவியாயிருந்து எல்லோருக்கும் நல்லவனாயிருப்பாய் நீயே. 90
உரை :- தொண்ணூறு யென்றால் உத்தமர்களின் சேர்க்கையினால் உலகத்தில் உனக்கு பலவித நன்மையும் சேருமென்று மனதில் மதித்துக் கொள்வாய், இன்னும் பலவிதமாகிய லாபமும் பொன், பொருள், பூஸ்திதிகளுனக் குண்டாகுமென்று மதித்துக்கொண்டு சுகமாயிருப்பாய் புத்திர பாக்கியமும் பெற்று வாழ்வாய். இனிமேல் பூலோகத்தில் சகலருக்கும் நல்லவனாய் விளங்கி சவுக்கியமா யிருப்பாய்.
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
பக்தியுடன் வித்தையுண்டு ஞானமுண்டு பாக்கியமிகவுண்டு பொருளுஞ்சேரும் சிக்கிலா மனதிலுற் சாகந்தோன்றும் சிறந்தவிதம் நற்பலனை யனுபவிப்பாய் பக்குவமாய்பலபேர்கள் நேசத்தாலே பாக்கியவானாயிருப்பாரென் றிட்டாலும் அக்கறையாய்தான்செய்த வழக்கைவென்று அந்நியதேசத்திற்சேர்ந்து வாழ்வாரே. 91
உரை :- தொண்ணூற்றொன்றென்று சொன்னால், தான் எடுத்த காரியம் ஜெயமாகியும் தொடுத்த வியாஜ்ஜியத்தில் ஜெயம் பெற்றுந் அந்நிய தேசத்தில் பிரயாணமாகியும் பெரியோர்கள் சேர்க்கையினாலும், வித்தை, புத்தியிற் சிறந்து பொருள் சேர்த்து ஜீவிக்கலாகும்.
Page 354
சகதேவாரூடம்
அன்புடனேபுத்திர பாக்கியம்பெற்று அனுதினமும் சுகஜீவியாயிருப்பாய் நன்மையுடனே வியாபாரஞ்செய்து நலமுடனேவாழ்ந்திருப்பா யெந்நாளும் இன்னலின்றி சுகசீவியாகவாழ்ந்து இப்புவியில்நற்பே ரெடுத்துவாழ்ந்து வன்மையுடன் பலபொருளும் தேடியன்பாய் வையகத்தில்பெருமையாய் சீவிப்பாயே. 92
உரை :-ஆரூடங் கேட்க வந்தோர் தொண்ணூற்று இரண்டென்று சொன்னால் சகசம்பத்துடனே புத்திரபாக்கியம் பெற்று சதாகாலமும் சுகசீவியா யிருப்பதற்காகும். தான்செய்யும் வியாபாரத்தில் விசேஷ லாபமும் உத்தியோகத்தில் கீர்த்தியும் பெற்று திரவிய வந்தராயிருப்பதற்காகும்.
சகதேவாரூடம்
நமதினியசுற்றத்தார் நண்பராலே தாரணியில்வெகுலாபம் கூடுமின்னம் சமானமாயுள்ளதொரு நேசனாலே சந்ததமும்தொழில் முயற்சிசெய்துகொண்டு அமரர்நாதன் துணையினாலேயிந்த அவனிதனில்கீர்த்தியாய் வாழ்ந்திருந்து நமதுமனையாள் புத்ரர்பத்துமூ தாரணியில்சுகமாக சீவிப்பாரே. 93
உரை :-ஆரூடங் கேட்க வந்தோர் தொண்ணூற்று மூன்றென்று சொன்னால், தமது சுற்றத்தார் பத்து, மித்ரர்கள் சகாயத்தாலே வெகு லாபங் கிடைத்து, அதனாலே பகவானருள்பெற விரதானுஷ்டானம் புரிந்து பெருமையாய் வாழ்ந்திருப்பீர்களெனப் புகலுவீர்.
சகதேவாரூடம்
வெஞ்சினம்விலகிப்போகும் வசனமற்றன்பாய்நாளும் அஞ்சிடாதெந்தநாளும் அவனியில்கீர்த்தியோங்கி வஞ்சககுறவையற்று வாழ்ந்திருப்பீர்களென்றும் பஞ்சமேயணுகிடாமல் பார்மீதில்வாழ்குவீரே. 94
உரை :-94-என்றால் மிகுந்த கோபமும் விசனமும் விலகி சதாகாலமும் யாதொருவருக்கும் அஞ்சாமல் தைரியத்துடனே வஞ்சகர் சேர்க்கை யில்லாமலும், வறுமை துயரில்லாமலும் வாழ்ந்திருப்பீர்கள். ஆனால், எடுத்த காரியமும் கைகூடும்.
Page 355
பெரிய ஜோதிட சில்லரைக் கோவை
கழனியில்விதைத்ததான்யம் கடவுளின்கிருபையாலே செழித்திடவிளைந்துநன்றாய் க்ஷேமமாயிருப்பாயின்னும் பழமைசேர்பந்துவாலே பகருமுன்கலியாணந்தான் பழுதிலாநடக்குமென்று பகரும்ஜோதிட வல்லோரே. 95
உரை :- 95-என்றால் கழனியில் நீ விதைத்த தான்யங்கள் கடவுளின் கிருபையால் செழிப்பாய் வளர்ந்து க்ஷேமமாய் ஜீவித்திருப்பாய், உனது பழமையான சிநேகிதன் உனக்கு சகாயமாயிருந்து பத்துக்களுடன் உனக்கு கலியாண காரியமும் கூடுமென்று சொல்வீர்கள்.
பெரிய ஜோதிட சில்லரைக் கோவை
கன்றுடன்பசுவும்வாங்க கருதினாயுன்மனத்தில் நன்றல்லஇந்தமாதம் நாடிநீசென்றிடாதே துன்பத்தால் கலகம் நேர்ந்து துடர்வழக்காகும் பின்னால் அன்றனக்குரைத்தவாக்யம் அணுவேணும்பேசிடாதே. 96
உரை:- தொண்ணூற்று ஆறென்று சொன்னால், நீ பசுவும் கன்றும் வாங்குவதற்கு மனதில் நினைத்தாய். இந்தக் காரியம் நலமல்ல. நீ இந்த மாதம் நினைத்த காரியம் முடியாது. கலகங்களு முண்டாகும் இதை நீ மனதில் நினைந்து ஜாக்கிரதையாயிருப்பாயெனச் சொல்வீர்.
பெரிய ஜோதிட சில்லரைக் கோவை
அன்புடன்றொடுத்தவியாஜ்யம் அவனியில்ஜெயமேயாகும் துன்பமுந்துயரம்போகும் தொல்புவியோர்கள்மெச்சும் நன்மையாய்மணமுங்கூடும் நாட்டினில்சுகமாய்நீயும் இன்பமாய்வாழ்ந்திருப்பாய் இணங்குடன்கவனிப்பாயே. 97
உரை: - ஆருடங் கேட்கவந்தோர் தொண்ணூற்று ஏழென்றுரைத்தால் நீ தொடுத்த வியாஜ்யம் ஜெயமா குமென்றும், துன்பமும் துயரமும் விலகி சவுக்கியமா யிருப்பாயென்றும், வெகு பொருள் சேகரித்து கலியாண சுபகாரியமும் நடக்குமென்றும் இனிமேல் சுகசீவியா யிருப்பாயென்றும் சொல்வீர்.
பெரிய ஜோதிட சில்லரைக் கோவை
இனியுனக்கெந்த நாளும் இன்னலுந்துயரிராது முனிவதைவிடுத்து நீயும் மூதறிவோர்கள்சூழ மனதினில்துயரிலாமல் மதிமிகுந்தினிதாய்நாளும் கனிவுள்ளமித்ரரோடு கவலையில்லாதிருப்பீர். 98
உரை: - ஆருடங் கேட்கவந்தோர் தொண்ணூற்றையெட்டு என்று சொன்னால் துன்பமும் துயரமுமில்லாமல் கோபத்தை விடுத்து பெரியோர்கள் நேசத்தை வகித்து சிநேகிதரோடு சுகமாய் ஜீவித்திருப்பீரெனப் புகலுவீர்.
Page 356
சகதேவாரூடம்
பிரபுக்களாலுனக்கு பொன்பொருள் மிகவுண்டாகும் தரணியில்சுகானந்தமாக தானிருப்பாயேநீயும் பரமனைபூஜைசெய்து பாரில்நற்பலனைநீயே தருணமே அனுபவித்து தரணியில்சீவிப்பீரே. 99
உரை :- ஆருடங்கேட்க வந்தோர் தொண்ணூற்று ஒன்பதென்றால், பிரபுக்களால் உனக்கு பல நன்மையும் உண்டாவதுடன் பொன், பொருள் கிடைத்து சுகஜீவியாக வாழ்ந்திருப்பதற்காகும். ஆனால், சதாகாலமும் சிவபூஜை செய்துகொண்டு உலகில் சீவித்திருப்பதே நலமாகும்.
சகதேவாரூடம்
பத்தினிவந்தகாலே பலவிதகலகமாகும் மெத்தவும்பயப்படாதே மேன்மையாய்பிறகுவாழ்வாய் சித்தத்தில்வருத்தமில்லா சிவபூஜைமறந்திடாமல் பத்தியாயிருந்தாயானால் பசுவினால்சீவிப்பாயே. 100
உரை :- ஆருடங்கேட்க வந்தோர் நூறு என்று சொன்னால் அவர்களுக்கு கொஞ்சம் மனஸ்தாபமென்றும் மனைவியினால் கலகமுண்டாகுமென்றும், ஆனால், சிறிது நாட்கென்றால் க்ஷேம முண்டென்றும், சிவபூஜை செய்துக்கொண்டிருந்தால், திரவிய லாபங்கிடைப்பதுடன் பசுவினால் பொருள் சேர்த்து பெருமையாய் சீவித்திருப்பீரெனச் சொல்லீர்.
சகதேவாரூடம்
அன்பானநண்பன்தன்னால் அவனியில்கீர்த்தியாக துன்பமொன்றணுகாவண்ணம்சுகமுடன் பொருளுஞ்சேர்த்து நன்மையாய்வாழ்ந்திருப்பாய் நாராயணனைபூஜித்து இன்பமாய்ச்சீவித்திருந்தால் இன்னலொன்றணுகிடாதே. 101
உரை :- ஆருடங்கேட்க வந்தோர் நூற்று ஒன்றென்றுரைத்தால், நீ உனது சிநேகிதனாலே பலவித நன்மையும் கீர்த்தியும் பெற்று துன்பமில்லாமல் சீவிப்பதுடன் திரவிய சேகரஞ்செய்து சுகசீவியா யிருப்பாய். ஆனால் தினந்தோறும் ஸ்ரீமந் நாராயணனை தியானஞ் செய்துக் கொண்டிருந்தால் எவ்விதமாகிய துன்பமும் துயரமுமில்லாமல் சீவித்துக்கொண்டிருப்பாயெனச் சொல்வீர்.
சகதேவாரூடம்
கைவிட்டபொருளுங்கிட்டும் காசினிதன்னில்மெத்த ஐயமில்லாமல்நாளும் அநேகமாய்ப்பொருளுஞ்சேரும் வையகத்தோர்களுன்னை வணங்கியேநல்லோரென்று ஒப்பரன்மனத்தோனென்ன துலங்குவாய்பயப்படாதே. 102
உரை :- நூற்றி ரண்டென்று சொன்னால் உனது கைவிட்டுப்போன பொருள் கிடைக்குமென்றும் யாதொரு சந்தேகமுமில்லா
Page 357
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
மல் திரவிய சேகரஞ் செய்து சீவிப்பதுடன் உலகத்தோர் சகலரும் உத்தமனென்று உன்னை பூஜிக்குந் தன்மையான நலமனைத்துமுண்டாவதுடன், சதாகாலமும் விசனமில்லாமலிருப்பீரெனச் சொல்வீர்.
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
உந்தன்கைவிட்டுப்போன உற்றதோர்பொருளும்சேரும் சித்தையில்பயப்படாதே சிறந்தநன்மார்க்கத்தாலே எந்தகாரியமும்வென்று எதிரிகளில்லாமற்குன் சந்தோஷமாவிருப்பாய் சற்றேனும்மயங்கிடாதே. 103
உரை:--ஆருடங் கேட்க வந்தோர் நூற்றுமூன்றென்றால் உத்தன் கைவிட்டுப் போன பொருள் மறுபடியும் எந்த விதத்திலேனும் உந்தனுக்குக் கிடைக்குமென்றும், எடுத்த காரியமெல்லாம் சித்தியாவதுடன் பகைவர் பயமில்லாம லிருப்பாயென்றும், சதாகாலமும் மனோல்லாசமா யிருப்பா யென்றும் சொல்வீர்.
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
வருகின்ற துன்பமெல்லாம் வந்தாலும்விலகிப்போகும் பொருண்மீதுகிடைத்துனக்கு பூஷணம்பெறுவாயின்னும் பெருநிதிபெற்றுவாழ்ந்து பொன்பொருள் பூமிலாபம் தருணமேபெற்றுவாழ்வாய் தைரியம்விடாதென்பீரே. 104
உரை:--ஆருடங் கேட்கவந்தோர் நூற்றுநாலென்றால் தற்சமய மிருக்கிற துன்பமும் இனிமேல் வருகிற துன்பமும் கொடியதாயிருந்தாலும் அஞ்ச வேண்டுவதில்லை. இனிமேல் பொருள் லாபம் கிடைத்து சதா சவுக்கியமா யிருப்பதுடன், திரவிய சேகரஞ்செய்து சுகசீவியாய் இருப்பதற்காகும்.
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
அன்பான லக்ஷ்மிவாசம் அணுகியே யெந்தநாளும் துன்பங்கள்வந்திடாமல் துயரிலாப்பொருள் சேர்த்தன்பாய் நன்மையே யனுபவித்து நலமுடன் சகலருக்கும் இன்னலொன்றணுகிடாமல் இனிதுடன்சீவிப்பீரே. 105
உரை:--ஆருடங் கேட்கவந்தோர் நூற்று ஐந்துயென்று சொன்னால், இனிமேல் லக்ஷ்மீகடாஷம் உண்டாகுமென்றும் எவ்விதமான துன்பமும் துயரமும் நேரிடா தென்றும், சதா காலமும் நன்மையா யிருப்பீர்களென்றுஞ் சொல்வீர்
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
ஆசையாய்நீயெடுத்த அன்புள்ளதொழில்களெல்லாம் மாசின்றிமுடியுமுந்தன் மனைவியும் சுற்றத்தாரும் பாசமாவிருப்பார் நீயும் பகைவரின்றி வாழுத்தியத்தாலே யோசனைபுரியவேண்டாம் ஒழுங்குடன் வெல்லுவாயே. 106
உரை:--ஆருடங் கேட்க வந்தவர்கள் நூற்று ஆறென்று சொன்னால் நீ எடுத்த காரியம் ஜெயமாகுமென்றும், அதனால்
Page 358
சகதேவாரூடம்
யாதொரு தடையில்லாமலும், குற்றங் குறையில்லாமலும் முடியுமென்றும், உனது மனைவியும் பந்துக்களும் அன்பாயிருப்பார களென்றும், எதிரியை ஜெயித்து வியாஜ்ஜியத்தில் ஜெயம் பெறுவாயென்றும் சொல்லுவாய்.
சகதேவாரூடம்
அன்பாயுன்புத்திரனாலே அநேகமாய்ப்பொருள்கிடைக்கும் தன்மையாயெவரும்வாழ்த்த தரித்திரமணுகிடாமல் நன்மையையனுபவித்து நலமுடன் வாழ்ந்திருப்பாய் பொன்பொருள் மிகவே சேர்த்து பூமியில்ஜீவிப்பாயே. 107
உரை :-ஆரூடங் கேட்க வந்தவர்கள் நூற்று ஏழென்று சொன்னால், உனது புத்திரனாலே வெகு பொருள் சேகரித்துக் கீர்த்தி வந்தனா யிருப்பாயென்றும் சதாகாலமும் நன்மையை யனுபவித்து பொன் பொருளுடன் பூமி காணி வாங்கி சீவித் திருப்பாயென்றும் சொல்லுவீர்.
சகதேவாரூடம்
பெருமலைபோலேவந்த பொல்லாங்குந்துன்பமெல்லாம் தருணமேவிலகிப்போகும் சஞ்சலமினிமேல்வேண்டாம் கருணையாய்மித்ரருன்னை காப்பாற்றுவதற்காத்தான் பொருளுபகாரஞ்செய்வார் பொறுமையாய்க்கவனிப்பாயே. 108
உரை :—ஆரூடங் கேட்க வந்தவர்கள் நூற்று யெட்டென்று சொன்னால் உனக்கு மலைபோலே வந்த துன்பமும் துயரமும் விலகிப் போகும். தற்சமயம் யாதொரு கவலையில்லாமல் சீவித்திருப்பதாகும். ஆனால் மிகவும் கருணை பொருந்திய உனது சிநேகிதரனால் வர்த்தகஞ்செய்தும் உத்தியோகஞ்செய்தும் திரவிய சேகரஞ்செய்து பொறுமையாய் சீவித்திருப்பீரென்று சொல்லுவீர்கள்.
சகதேவாரூடம் முற்றிற்று.
Page 359
ஸ்திரீ ஜாதகம் - கணேசர் துதி
விருத்தம் திருவளரமிர்தஞான தேவனே கணேசமூர்த்தி தருணம் ஸ்திரீஜாதகத்தை தரணியோர் பார்ப்பதற்கு அருமையாயெழுதுகின்றேன் ஆதிவிக்னேசாபெந்தன் குருவாகவந்தென்முன்னே கூறும் ஜோதிஷத்தைநீரே.
நூல் வரலாறு
உலகினிலுள்ளோர்முன்னே உரைக்கும ஸ்திரீஜாதகத்தை நலமுடன் கவனித்தோர்ந்து நவகிரககாயத்தாலே பலவிதலாபம்பெற்று பார்தனிலுள்ளோரெல்லாம் நிலவுநீள் சடையோன்பாதம் நினைத்தன்பாய்பூஜிப்பீரே.
அன்புடன் பூலோகத்தில் அன்னைகர்ப்பத்திருந்து இன்பமாய்ப்பிறந்தவேளை இலக்கினங்கணித்துக்கொண்டு பன்னிரண்டுராசிதன்னில் பகருங்காளிருப்பதோர்ந்து நன்மையாய்பலாபலத்தை நவில்கீரோஜோதிடவல்லோரே. 1
உரை :- உலகில் வசித்துலாவும் மாந்தர்களின் ஜாதக பலாபலனைக் கவனித்துப் பலன் சொல்வதென்றால், தாயின் வயிற்றிலிருந்து குழந்தை பிறந்தபோது கெடியாரத்தைப் பார்த்து அதில் குறிப்பிட்டிருக்கும் இங்கிலீஷ் மணிக்குச் சரியான தமிழ் நாழிகையைக் கணக்கெடுத்து இலக்கினம் பிரித்துப் பார்த்தால் குழந்தை பிறந்த வேளையில் எந்த லக்கினம் உதயமாயிருக்கிறதோ அதே ஜன்ம லக்கினமாகும். அந்தச் சமயத்திலிருக்கும் நக்ஷத்திரம் எந்த ராசியைக் குறிப்பிடுகின்றதோ அதே ஜன்மராசி யென்பதாய் தீர்மானஞ் செய்துக்கொண்டு அந்த நக்ஷத்திரத்தின் நான்கு பாகத்தில் எந்தப் பாகத்தில் குழந்தை பிறக்கிறதோ அதனையே கவனித்து அந்த நக்ஷத்திரத்தின் முதலெழுத்தைக் கொண்டு மற்றவெழுத்துக்களுடனே சேர்த்தபடியே பெயரிட்டால் அந்த பேர் ராசியைப் பார்த்து ஜோதிடர் பலன் சொல்லுவதற்காகும்.
ஓர் குழந்தை பிறந்தால் ஜாதகங் கணிக்கும் விபரம்
சுக்கில ஆடி மாதம் தோன்றிமுப்பதாம்தேதி சிக்கிலாகுழந்தைபெற்றால் சீருடன் ஜாதகத்தைப் பக்குவமாய்க்கணித்துப் பார்த்துநற்பலனைத்தானே தக்கதாய் ஜோதிடன் சொன்னாலே சரியாகையிருக்கும்பாரே. 2
Page 360
ஸ்திரீ ஜாதகம்
உரை:—சுக்கில வருஷம் ஆடி மாதம் பத்தாந் தேதியில் குழந்தை பிறந்தால் முன் தெரிவித்தபடியே இராசி லக்கினம் பிரித்து ஜாதக பலபலனை சொன்னால் சரியாய் நடக்கும். ஆனால் கஷ்டபலனிருக்கும்போது எந்த கிரகத்தினால் நடக்கிறதென்று கவனித்து அதற்கிசைந்தபடியே சாந்தி செய்துக் கொண்டால் சவுக்கியமா யிருப்பதற்காகும்
ஸ்திரீ ஜாதகம்
வருஷமுர்மாதந்தேதி வழங்கியதிதிநக்ஷத்திரம் பெருமைசேர்கரணயோகம் பேசரும்லக்னராசி அருமையாங்கணித்தாராய்ந்து அவரவபலனைச்சொல்லி வருவதேஜோதிடர்க்கு வல்லமையெனக்காண்பீரே. 8
உரை:—ஓர் குழந்தை பிறந்தால் முதலாவது நமது இராஜாங்கத்தாரால் நியமித்த வருஷம் மாதம் தேதியை அனுசரித்து தமிழ் வருஷம் மாதம் தேதியைக் கணக்கெடுத்து இராசி லக்கினம்பிரித்து பலன் சொல்லும்போது சரியாயிருக்கும். அஃதெவ்விதமெனில் இங்கிலீஷ் 1929-ம் வருஷம் ஆகஸ்டு மாதம் 9-ந் தேதி காலை 6-மணிக்கு குழந்தை பிறந்ததென்றால், அதை அனுசரித்து தமிழ் சுக்கில வருஷம் ஆடி மாதம் 25-ந்தேதி வெள்ளிக்கிழமை பஞ்சமி திதி 40-9 அஸ்த நக்ஷத்திரம் 37-43 சாந்தியோகம் 4-29 கௌலவ கரணம் . 8-9-ல் சூரிய உதயதி முதல் நாழிகையில் குழந்தை பிறந்தால் அன்றைய தினம் வெள்ளிக்கிழமையானதால் உதயாரம்பத்தில் பெண் குழந்தை பிறந்ததென தீர்மானஞ்செய்து அந்தப் பெண் குழந்தையின் ஜாதகத்தை கணிக்கும்போது இராசி சக்கரம் அமைத்து அவற்றில் கிரகங்களிருக்குந் தன்மையைப் பார்த்து பலன் சொல்ல வேண்டியது. இதற்கு உதாரணம்
Page 361
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
மேற்காட்டிய படத்தில் குறித்திருக்கும் விதமே அந்த வருஷத்தின் பஞ்சாங்க கணிதத்தின் படியே பனிரெண்டு இராசியிலும் அந்தந்த சமயத்தில் எந்தெந்த கிரகம் எந்தெந்த நக்ஷத்திரத்திலிருக்கின்றதோ அந்தந்த இராசியில் கிரகங்களையமைத்துப் பலன் சொல்லவேண்டும்.
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
பாரினிற்பிறந்தோர்க்குப் பனிரெண்டுராசிவீட்டில் சூரியன்சோமன்செவ்வாய் சொற்புதன் குருவுஞ்சுக்கிரன் காரியுமிராகுகேது கனிவாயுற்றபலனைத்தானே தாரினில்ஜாதகர்க்குத் தருவார்களவனிப்பீரே. 4
உரை:-- உலகத்தில் பிறந்தம்போது அமைந்திருக்கும் மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிங்கம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் என்னும் பனிரெண்டு இராசிகளில் எந்தெந்த ஸ்தானத்தில் கிரகங்களிருக்கின்றார்களோ அந்தந்த பலனையே ஜாதகர்க்குக் கொடுத்து கஷ்டத்தையோ சுகத்தையோ அனுபவிக்கச் செய்வார்கள்.
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
சனிசெவ்வாய்ராகுகேது ஜனனலக்னத்திருந்தால் சினமுடன்பித்தஉஷ்ணம் சிரரோகங்காணுமின்னும் முனிவுடன்மற்றோர்மீது மூர்க்கமாய்ப்பேசத்தோணும் கனிவுடன்சுபர்கண்டாலே களிப்புடன்சீவிப்பாரே. 5
உரை:-- சனிபகவானாகிலும் செவ்வாய்பகவானாகிலும், ராகுகேதுவாகிலும் ஜன்ம லக்கினத்திலிருந்தால் மனதிற் கோபமும், சரீரவெப்பமும் பித்தமும், தலைநோய் முதலான வியாதியும் வந்து, கஷ்டப்படுத்துவதுடன் எவர்கள்மீதும் மனவெறுப்பா யிருப்பதாகுமாகும். ஆனால் சுபக்கிரகங்களாகிய குருபகவானாகிலும் புதன், சுக்கிரன், வளர்பிறைச் சந்திரபகவானாகிலும் ஜனனலக்கினத்தைப் பார்த்தால் சுகசவுக்கியமா யிருப்பதாகுமாகும்.
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
குருசுக்ரன்புதனும் குறித்திடும்லக்னத்துற்றால் பொருளுடன் காணிபூமிபொன்வெள்ளி ஆபரணம்வாய்த்து பெருமபையெவருமெச்ச பேருலகில்ஜீவிக்க தருவார்நற்பலன்கள் தரணியில்ஜாதகர்க்கே. 6
உரை:-- ஜனன லக்னத்தில் குருவாகிலும், சுக்கிரனாகிலும், புதனாகிலும், வளர்பிறைச் சந்திரனாகிலுமிருந்தால் ஜாதகர் பிறந்த காலத்திலிருந்து தனது தாய் வீட்டில் தனலாபம் மென்மேலும் பெருகி, காணி பூமியும் கிடைக்கப்பெற்று பொன் வெள்ளி ஆபரணாதிகட்குறைவாமல் மிகவும் மேன்மையாயிருந்து ஜீவிக்கும்படியான நற்பலனைத் தருவார்கள்.
Page 362
ஸ்திரீ ஜாதகம்
ஒன்பதாமிடத்தில்மந்தன் ஒளிமிகுராகுகேது தன்மையாயமர்ந்திட்டாலே தந்தைதாய்வறுமையாலே துன்பமுற்றலைவாசல்பட்டு சுற்றத்தார்பகையாவார்கள் பன்முறைதுயரால்நொந்து பரதவித்தலைகுவாரே. 7
உரை:—இலக்கினத்திற்கு ஒன்பதாமிடமும் பிதுஸ்தானமு மாகிய பாக்கிய ஸ்தானத்தில், சனிபகவானாகிலும், இராகு கேதுக்களாகிலுமிருந்தால், தாய் தந்தை வறுமையினாற் கலங்கி கையிற் காசில்லாமல் இனஜனத்தோர் பழித்துப் பரிகாசஞ் செய் யும்படியான ஏழ்மை நிலையா யிருப்பதற்காகும்.
ஸ்திரீ ஜாதகம்
பகருடன்மதியுமாலும் பொன்னவன் நவத்திருந்தால் ஜெகத்துளோர்மகிழத்தந்தை செல்வந்தனாயிருந்து மகிழுடன்றிரவியம்பெற்று மனைபூ மிபொருளும்சேர்த்து புகழ்பெற்றகனவானாக பூமியிலிருப்பான்பாரே. 8
உரை :—சுக்கிரனும், குருவும், சந்திரனும், புதனும் ஒன் பதாம்இடமாகிய பிதுர் ஸ்தானத்திலிருந்தால், ஜாதகியின் தந்தை மகாசமர்த்துடன் திரவிய சேகரஞ்செய்து மனை, பூமி, நில பல முடையவனாய் பொன் பொருள், ஆஸ்திபுஸ்தியுடன் பெருமை யாய் வாழ்ந்திருப்பதற்காகும்.
ஸ்திரீ ஜாதகம்
தினகரன்செவ்வாய்மந்தன் சீரிடும்பாம்பும்காந்கில் இனிதுடனிருந்திட்டாலே இம்சையும்கவலைநேர்ந்து தனதான்யமில்லாமற்றான் தரித்திரமுற்றலைந்து இனஜனத்தோர்நிந்திக்க இருப்பார்ஜாதகரென்றோதே. 9
உரை :—சுகஸ்தானமாகிய நான்காமிடத்தில் சூரியனாகிலும் செவ்வாயாகிலும், சனி, ராகுவாகிலும் கேதுவாகிலு மிருந்தால் பலவித துன்பமும், துயரமும், வறுமையுமடைந்து சதாகாலமும் சுகமில்லாமல் கஷ்டத்தையே யனுபவித்துக்கொண்டு, தன தான்ய மில்லாமல் தரித்திர நோயினால் கலங்கி இனஜனத்தோர் பழித்துப் பரிகாசிக்குந் தன்மையான கவலையுற் றலையச்செய் வார்கள்.
ஸ்திரீ ஜாதகம்
சுகஸ்தானந்தனிலேசந்திரன் சுக்கிரனும்புகனும்வியாழன் மகிழடனிருந்திட்டாலே மாதிலத்தளிலெந்நாளும் புகழுடன்கீர்த்திவாய்ந்து பொன்பொருள்சேர்த்துக்கொண்டு ஜெகத்துளோர்புகழவாழ்ந்து ஜீவிக்கச்செய்துவாரே. 10
உரை :—நான்காமிடமாகிய சுகஸ்தானத்தில் சந்திரன், புதன், குரு, சுக்கிரனும் இருந்தால் சதாகாலமும் சுகஜீவியாய்
Page 363
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
பொன்னவன் புதனும்புகரும் சந்திரனமிர்திருக்க கன்னிகையினை மணப்போன் கல்வியும்பொருளும்வாய்ந்த மன்னவன்போலிருப்பான் மங்கையையமணம்புரிந்து [வாரே] பொன்பொருள் பூஸ்திதியோடன்பு பொருந்திவாழச்செய் [வார்]
உரை: குரு, புதன், சந்திரன், சுக்கிரனாகிய இந்நால்வரில் எவர்களாகிலும், ஜாதகியின் சப்தமஸ்தானமாகிய களத்திர ஸ்தானத்திலிருந்தால், ஏழை வீட்டுப் பெண்ணாயிருந்தாலும் அன்ன வஸ்திரத்திற்குப் பஞ்சமாய் வறுமை நோயால் கலங்கி யிருந்தாலும் மேற்குறிப்பித்த சுபக்கிரகங்கள் சப்தமஸ்தானத்திலிருந்த பலத்தினால் வித்தியா சமர்த்தியினாலும், வியாபாரத்தினாலும் உத்தியோகப் பெருக்கத்தினாலும் தனது மனமகிழ வெகு பொருள் சேகரித்து பூமி, காணி, வீடு முதலான பூஸ்திதி, சம்பத்துடனிருந்து ஜாதகி சதாகாலமும் மனமகிழ வாழ்ந்திருக்கும்படியானவனை மணம் புரிந்து வாழ்ந்திருக்கும்படியாக செய்வார்கள்.
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
மந்தனும் ராகு கேதும் மன்னிய ஏழிலுற்றால் சுந்தரிதனைமணப்போன் சோம்பனுந்துஷ்டனாகி பந்துமித்திரர் நிந்திக்க பலநாளுந்துன்பமுற்று சிந்தைநொந்துருகிவாடச் செய்குவர்கவணிப்பீரே. 12
உரை: சப்தம ஸ்தானமாகிய களத்திர ஸ்தானத்தில் சனி, இராகு, கேது இவர்களில் எவர்களாகிலுமிருந்தால், அந்த ஜாதகியை மணம் புரிபவன் சோம்பலும், துஷ்டனும் வாயாடி வம்பனுமாயிருந்து சதாகாலமும் வறுமையால் கலங்கும்படியாகச் செய்து பந்துமித்திரர் பரிகாசித்து நிந்திக்கும்படியாகவும் செய்வார்கள்.
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
சுக்கிரன்சனியும்செவ்வாய் சூழ்ந்தேழாமிடத்திருக்க மிக்கவேகவலையுற்று மணவாளன்தனையிழந்து துக்கமாய்விதவையாகி துயருற்று கலங்குவார்கள் எக்காலும்சஷ்டிபூசை எடுத்தன்பாய்ஜீவிப்பீரே. 18
உரை: சப்தமஸ்தானமாகிய களத்திரஸ்தானத்தில் சுக்கிரன், சனி, செவ்வாயிருந்தால் தனது மணாளனையிழந்து விதவையாகி பல நாளும் துன்பமும் துயரமுமடைந்து வறுமையாற் கலங்குவார்கள். ஆனால் சஷ்டி விரதத்தை யனுஷ்டித்து சிவசுப்பிரமணியரை பூஜித்திருந்தால் நன்மையாய் ஜீவித்திருப்பதாகும்.
Page 364
ஸ்திரீ ஜாதகம் - 357
ஜன்மத்தில் குருவிருக்க சனி ஆறில் சுக்கிரன் நாலில் ஒன்பதில் புதனிருக்க ஒளிர்மதி ஏழில் நிற்க பன்னிரண்டில் ராகு நிற்க பாக்கியவந்தராக பொன்பொருள் பூமி லாபம் பொருந்தியே ஜீவிப்பாரே. 14
உரை: ஜாதகியின் ஜன்ம லக்கினத்தில் குருவிருக்கவும் சனி ஆறாமிடத்திலும், சுக்கிரன் நான்காமிடத்திலும், ஒன்பதில் புதனும், ஏழில் சந்திரனும், பனிரெண்டில் இராகு பகவானுமிருந்தால், ஜாதகியின் மணாளன் மகா சமர்த்தனாக உத்தியோக சம்பத்தாலும் வியாபாரத்தாலும் வெகு பொருள் சேகரித்து, காணி பூமி லாபத்துடனே பொன், பொருள், ஆஸ்தி புஸ்தியுடன் வாழ்ந்திருக்கும்படியான நன்மை யனைத்தும் அனுபவிக்கச் செய்வார்கள்.
ஸ்திரீ ஜாதகம்
அஞ்சொன்பதொன்றில் மந்தன் அரவுடன் குளிகன் நின்றால் வஞ்சமாய்ப் புத்திரரில்லா வறுமையுற்றேகுவார்கள் எஞ்சலில்லாத நல்லோர் இருந்திடில் புத்திரருண்டு பஞ்சமேயணுகிடாமல் பாக்கியம்பெறுவாரே. 15
உரை: ஐந்தாமிடத்திலாகிலும் ஒன்பதாமிடத்திலாகிலும் ஜன்மலக்கினத்திலாகிலும், சனி, இராகு, கேது, குளிகனாகிய இவர்களில் எவர்களாகிலு மொருவரிருந்தால், புத்திர பாக்கியமில்லாத வறுமையாளரா யிருப்பார்கள். ஆனால், ஜன்மலக்கினத்தில் குருவும், பஞ்சமஸ்தானத்தில் சுக்கிரனும், ஏழாமிடத்தில் சந்திரனும், ஒன்பதாமிடத்தில் புதனுமிருந்தால், அழகும், அறிவும், ஆலோசனையும், அதிர்ஷ்டமு மிகுந்த புத்திர பாக்கியம் பெற்று திரவிய சம்பத்துடனே வாழ்ந்திருப்பதற்காகும். ஸ்திரீ ஜாதகம் முற்றிற்று.
Page 365
ஸ்திரீகள் ருதுஜாதக நிர்ணயம் - கணேசர்துதி
விருத்தம் ஆதிவிக்னேசாவுந்தன் ஆதரவாலேயானும் பூதலஸ்திரீருதுஜாதகத்தைப் புகல்வதைமாந்தர்கட்கு நீதியாயமைந்திருக்க நிதானமாய்ப்பலனைச்சொல்ல ஆதரமாயிருந்து அனுக்கிரகஞ்செய்வீரே. 1
உரை:--உலகில் பிறந்திருக்கும் பெண்களின் ருது காலத்தின் பலனை விபரமாய்ச் சொல்வதற்கு ஆதிகணேசமூர்த்தி அனுக்கிரகஞ் செய்வாரென்று தியானஞ் செய்துகொண்டு, ஜாதக பலனைக் கேட்க வந்தவர்களுக்கு விபரமாய்ச் சொல்ல வேண்டும்.
ஸ்திரீகள் ருதுஜாதக நிர்ணயம்
கன்னிகைருதுவானலக்ன காலத்தின்திதிநக்ஷத்திரம் பன்னியமாதவாரம் பகர்ந்திடுங்கரணயோகம் மன்னியகிரகம்நின்ற மார்க்கமும்விபரமாக நன்னயமாயுணர்ந்து நவில்கிரேஜோதிடவல்லோரே. 2
உரை:--பெண்கள் ருதுவான லக்ன பலனைப் புகல்வதெனில் அவர்கள் ருதுவான மாதம், வாரம், நக்ஷத்திரம், திதி, யோகம், கரணம் முதலானவைகளின் தன்மையும், அந்த சமயத்தில் உதயமான முதல் பனிரெண்டு இராசியிலும், நவக்கிரகங்களிருக்கும் தன்மையும் பார்த்து பலன் சொல்ல வேண்டும்.
பெண்களின் ருதுகாலத்தின் விபரம்
சித்திரைபுருஷர்க்காகா சுகமுண்டுவைகாசிமாதம் புத்திரபாக்கியமுண்டு பொருந்தியஆனிமாதம் சித்தினிஆடிமாதம்சீர்மைந்தருண் டாவணியிலானால் புத்தியும்விருத்தியுண்டுபுரட்டாசியில் ருதுவானாலே. 3
உரை :--பெண்கள் சித்திரை மாதத்தில் ருதுவானால் புருஷனுக்காகாது. வைகாசியில் சுகசம்பத்தாயிருப்பாள். ஆனி மாதத்தில் புத்திரபாக்கியத்துடனே சுகசம்பத்தா யிருப்பாள். ஆடி மாதத்தில் ருதுவானால் பல பேரை இச்சிக்கும் சித்தினியாயிருப்பாள். ஆவணி மாதத்திலானால் மேன்மையான அறிவிற் சிறந்த
Page 366
ஸ்திரீகள் ருதுஜாதக நிர்ணயம்
பிள்ளைகளைப் பெறுவாள். புரட்டாசி மாதமானால் அறிவும், ஆலோசனையும் அதிகரித்து புத்தி விர்த்தியாய் திரவிய சம்பத்துடன் விருப்பதாகும்.
ஸ்திரீகள் ருதுஜாதக நிர்ணயம்
ஐப்பசிபுத்திரீன் று அமங்கலையாவளென்பீர் செப்பியகார்த்திகையேயானால் சீறுவாளனைவர்மீதும் ஒப்பிலாமைந்தருண்டு உயர்ந்தமார்கழியே யானால் தப்பிலாபுண்யஞ்செய்யும் தனவதியாமென்றோதே. 4
உரை :- பெண்கள் ஐப்பசி மாதத்தில் ருதுவானால் விசேஷமாய்ப் பிள்ளைகளைப் பெற்று விதவையாவார்கள். கார்த்திகை மாதமானால் எவர்களைக் கண்டாலும் கோபமாய்க் உருகடுத்துப் பேசுவதுடன் சீறுவார்கள். மார்கழி மாதமானால் அறிவிற் சிறந்த உத்தம புத்திர பாக்கியங்களைப் பெறுவாள். தை மாதமானால் விரதானுஷ்டானம் புரிந்து தானதர்ம பரோபகாரஞ் செய்து புண்ணியவதியா யிருப்பாள்
ஸ்திரீகள் ருதுஜாதக நிர்ணயம்
மாசிமாதத்திலானால் மனைகாணிபூமிலாபம் காசுடன்பொன்னும்வெள்ளி கௌரவமாகச்சேர்ந்து வீசியபுகழோடன்பாய் விளங்குவள்பங்குனியே யானால் ஆசையாய்பலபுத்திரீன்று அவனியில்வாழ்குவாரே. 5
உரை :- மாசி மாதத்தில் ருதுவானால் மனை, காணி, பூமி லாபத்துடனே திரவியசேகரஞ்செய்த பொன், பொருள், வெள்ளி ஆபரணங்களுடன் சுகமாயிருப்பதற்காகும். பங்குனி மாதமானால் வெகு புத்ரபாக்கியங்களைப் பெற்று பந்துமித்திரர் பெருக்கத்துடன் உலகத்தில் வெகு பெருமையாய் வாழ்ந்திருப்பதற்காகும்.
ஸ்திரீகள் ருதுஜாதக நிர்ணயம்
ஆதிவாரத்தில்வியாதி ஆகுந்திங்கள்கற்பாகும் தீதுறும்செவ்வாயானால் செல்வமுண்டாகும்பந்தி ஆதாவானவியாழன் ஐஸ்வரியமாயிருப்பன் ஓதரும்புகரோடன்று ஒழுங்கின்மையணியானாலே. 6
உரை :- ஆதிவாரத்தில் ருதுவானால் வியாதியாயிருப்பான். திங்களில் பதிவிரதையாதும். செவ்வாயானால் பல துன்பம் நேரிடும். புதன்கிழமையானால் புத்ரபாக்யம் பொன், பொருள், பூஸ்திதியோடு வாழ்ந்திருப்பதற்காகும். வியாழனாகில் வெகு பாக்கியத்துடனே தனவதியா யிருப்பதற்காகும். சுக்கிரவாரமானால் பதிவிரதையா யிருப்பதற்காகும். சனிக்கிழமையானால் பலவித துன்பமும் துயரமும் மனச்சஞ்சலமுமா யிருக்கும்.
Page 367
பெரிய ஜோதிட சில்லரைக் கோவை
பிரதமைபாவியாவாள் துதியைத்திபாக்யமுண்டு திரிதிகைமகப்பேருண்டு சதுர்த்திவேசையாவாள் பிரியமும்நன்மையுண்டு பஞ்சமிதிதியிலானால் தருணம்சஷ்டி அஷ்டமிநவமி திதிகளாகாதானே. 7
உரை :- பெண்கள் ருதுவான திதி பிரதமையானால் துர்க் குணமுடைய பாவியாயிருப்பாள். துதியை திதியில் ஆனால் தனதான்ய சம்பத்துண்டு. திரிதிகையானால் புத்திரபாக்கியம் விசேஷமாயுண்டு. சதுர்த்தியானால் பலபேரை இரச்சிக்கும் வேசையாவாள். பஞ்சமி திதியிலானால் வெகுவித நன்மையும் குடும்ப ரக்ஷகியாகவும் மணாளன் மைந்தர் பாக்கியத்துடனே சுக ஜீவியாயிருப்பதற்காகும். சஷ்டியாகிலும் அஷ்டமி நவமியாகி லும் ருதுகாலத்தின் திதியானால் பலவித துன்பமும், துயரமும் மனஸ்தாபமுண்டாகி, வறுமையால் கலங்கும்படியா யிருக்கும்.
பெரிய ஜோதிட சில்லரைக் கோவை
அன்புடன்தசமிதிதி திரையோதசியானால்நன்று பொன்பொருள் பூஸ்திதியோடன்பாய் பூமி லாபங்களுண்டாம் துன்பமாம் அமாவாசை பௌர்ணமி துவாதசி தன்னிலானால் பொன்பொருளில்லா பூமியிற்றிகைப்பார்தானே. 8
உரை :- தசமி திரையோதசி திதியில் ருதுவானால் மிகவும் மேன்மையாகும். சகலரும் புகழ்ந்துரைக்குந் தன்மையான பொன், பொருள், காணி, பூஸ்திதி புத்ரலாபத்துடனே வாழ்ந் திருப்பதற்காகும். ஆனால் துவாதசி, பௌர்ணமி, அமாவாசை திதிகளானால் சகலரும் பழித்து பரிகசிக்குந் தன்மையான வறுமைநோயினால் கலங்கி பூர்வீகமாயிருந்த பூமி, மனை, காணி, நில பலமிழந்து கையிலுள்ள பொன், பொருளெல்லாமிழந்து, துயராற் கலங்கி திகைப்பார்கள்.
பெரிய ஜோதிட சில்லரைக் கோவை
கன்னிகைருதுலக்கினத்தின் களத்திரஸ்தானந்தன்னில் பன்னிய சனியுஞ்சூரியன் பாம்புகளிருந்திட்டாலே துன்பமுந்துயரமாகி துர்க்குணமணாளனாலே பொன்பொருளிழந்துதானும் புசிப்பின்றி கலங்குவாரே. 9
உரை :- பெண்கள் ருதுவான ஜன்மலக்கினத்திற்குச் சப்தம ஸ்தானமாகிய களத்திரஸ்தானத்தில் சனி, சூரியன், இராகு இருந்தால் துன்மார்க்கனாகிய துஷ்ட புருஷன் தன்னை மணம் புரிந்துக்கொண்டு பலவித துக்கமும் துயரமுமடைந்து அன்ன வஸ்திரத்திற்குப் பஞ்சமாய்த் துன்பமும், கஷ்டமுமனுபவித்துக் கையில் காசில்லாத கவலையால் கலங்கித் தத்தளிக்கச் செய்யும்.
Page 368
ஸ்திரீகள் ருதுஜாதக நிர்ணயம்
இலக்கினமிதுனமாகி இராசியுங்கடகமாக கலக்கமில்லாமலேவியாழன் களத்திரஸ்தானம்நிற்க பலவிதசமர்த்தினாலே பாக்கியவந்தனான நலமுள்ளமணவாளன்வந்து நங்கையைமணப்பான்பாரே. 10
உரை-ருதுவான இலக்கினம் மிதுனமாகவும், அதில் புதன் ஆக்ஷியாகவும், சந்திரன் கடகராசியில் ஆக்ஷியாகவும், குரு சப்தம ஸ்தானத்தில் ஆட்சிபெற்றிருந்தால், பலவித சமர்த்தினால் திரவிய சேகரஞ்செய்து தனவானாயிருக்கும் உத்தம புருஷனை மணம்புரிந்து சுகஜீவியா யிருப்பதற்காகும்.
ஸ்திரீகள் ருதுஜாதக நிர்ணயம்
எந்தலக்கினத்திலேனும் எழில்மிகும்குருவிருக்க சந்திரன்ஏழில்நின்று சுக்கிரன்நாலில்நிற்க மந்தனும் ஆறில்நின்றால் மாநிலத்தோர்கள்வாழ்த்த சுந்தரமணவாளன்வாய்த்து சொர்ணபூஷணமுண்டாமே. 11
உரை-ஜாதகி எந்த லக்கினத்தில் ருதுவானாலும் அந்த ஜன்ம லக்கனத்தில் குருபகவானிருக்க அந்த லக்கினஸ்தானத்திற்கு ஏழில் சந்திரனும், நாலில் சுக்கிரனும், சனி ஆறாமிடத்திலுமிருந்தால், அந்த ஜாதகிக்கு அழகான முகதேஜஸ் விளங்கி, சகலரும் புகழ்ந்து, ஆசீர்வதிக்கும்படியான நற்குணம் பொருந்தியிருப்பதுடன், மிகவும் ரூபசுந்தரமா யிருக்கும் தனவந்தனை மணபுரிந்து, சொர்ணபணி பூஷணாலங்காரத்துடன் ஜீவித்திருப்பதற்காகும்.
ஸ்திரீகள் ருதுஜாதக நிர்ணயம்
கன்னியாலக்னமாகில் கதிரவன்புதனும்சுக்ரன் நன்னயமாகவேதான் சந்திரன்ரிஷபத்துச்சம் மன்னியராகும்மந்தன் மாஷியாய்க்கும்பநிற்க பொன்பொருள்காணிபூமி பொருத்தியேஜீவிப்பாரே. 12
உரை-ருதுகால நிர்ணயத்தின்படியே உதய லக்னம் கன்னியாக அதில் புதனும், சூரியனு மிருகக்க பாக்கிய ஸ்தானமாகிய ரிஷபத்தில் இலாபாதிபதியாகிய சந்திரன் உச்சம் பெற்றிருக்க இராகு, சனி இவ்விருவரும் கும்பத்திலிருந்தால் அந்த ஜாதகி வெகு சமர்த்தாய் பந்துமித்திரர் ஆச்சரியப்படும்படியாக வெகு பொருள் தேடி வெள்ளி, பொன் ஆபரணாதிகளுடன் பிரபுத்தன்மையா யிருப்பதற்காகும்.
ஸ்திரீகள் ருதுஜாதக நிர்ணயம்
கும்பலக்கினமாக குருதனூரில் விளங்க அம்புலீரிஷபத்துச்சம் ஆதித்தன்மேஷத்துச்சம் சீப்ரமாய்சுக்கிரன்மீனந் தன்னிலே உச்சமானால் அம்புவிமீதில்ராஜயோகம் அடைந்தன்பாய்சீவிப்பாரே. 13
Page 369
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
உரை :— கும்பலக்னமாகவும் குருபகவான் இலாபஸ்தான மாகிய தனுசில் ஆக்ஷியாகவிருக்கவும் சந்திரன் சுகஸ்தானமாகிய ரிஷபத்தில் உச்சமா யிருக்க சூரியன் கீரஸ்தானமாகிய மேஷத் தில் உச்சமாகவும் சுபாக்கியாதிபதியாகிய சுக்கிரன் தனஸ் தானமாகிய மீனத்தில் உச்சமாகவு மிருந்கால் அந்த ஜாதகி மகா தனவதியாகவும் தனது பந்துச் கூட்டத்தாரில் சிறந்த திராஜ யோகத்தை அனுபவிக்கும்படியான தனவதியாக மிகவும் மேன்மை பெற்று, சுகஜீவியா யிருப்பதற்காகும்.
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
லக்கினம்மேஷமாகி ரவிமதிசுக்கிரன் கூடி பக்குவமாகவேழில் பணவியிருக்கும்போது மிக்கலோனியினையட்டி விளங்கியேயிருப்பானாகில் தக்கதோர்விவாகமில்லா தரித்திரியாவளென்றேதே. 14
உரை :— மேஷ லக்கினமாய் விளங்கி சூரியன், சந்திரன் சுக்கிரானும் ஏழிலிருக்க, சனிபகவான் எட்டிலிருந்தால், சதாகால மும் பலபேர் மீது மனமுற்று கவலை யடைந்திருப்பாள். விவாக மாகாமல் தனது காமத்தால் கலங்கித் தவித்து, வறுமையினால் மன விசாரமாகவு மிருப்பாள்.
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
பஞ்சமஸ்தானந்தன்னில் பரிதியும் ஆக்ஷியாகி மிஞ்சியசெவ்வாய்தானும் மேஷத்தில்ஆக்ஷியாக எஞ்சவில்லாதசுக்கிரன் இடபத்தில்ஆக்ஷியானால் செஞ்சொலால் புத்திராலே செல்வந்தியாவான்பாரே. 15
உரை :— மேஷ லக்கினத்தில் செவ்வாய் பகவான் ஆட்சி யாகவும் புத்திர ஸ்தானத்தில் சூரியன் ஆக்ஷியாகவும் தனஸ் தானமாகிய ரிஷபத்தில் சுக்கிரன் ஆக்ஷியாகவுமிருந்தால் அந்த ஜாதகிக்கு பிறக்கும் பிள்ளை மிகவும் சமர்த்தனாக திரவிய சேகரஞ் செய்து தனவந்தனாகவும் இருக்க தான் மனோல்லாசத்துடன் தன வதி யென்று உலகோர் புகழும்படியாக ஜாதகி கீர்த்திப் பிரகாசமா யிருப்பாள்.
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
தனுசுலக்கினமேயாக சமைந்திடும்வேளையன்னில் தினகரன்சூரவம்மாலும் திங்களும்சுக்ரன்மீனந் தனிலிருந்தாலேபுத்ரர் தனவந்தராயிருந்து கனிவுடன் தாயையன்பாய் காப்பாற்றி ரக்ஷிப்பாரே. 16
உரை :— ஜாதகியின் லக்னம் தனுசாகவும் அதற்கு நான்கா மிடமாகவும், சுகஸ்தானமாகியும் விளங்கிய மீனத்தில் சூரியனும் சந்திரனும், பகவரும், குருவுமிருந்தால் அந்த ஜாதகிக்கு பிறக்கும் புத்திரர்கள் மகா சமர்த்தராய்க் கல்வியில் தேர்ச்சி படைத்தவர் களாய் உத்தியோகத்தினாலும் வியாபாரத்தினாலும் வெகு பொருள்
Page 370
ஸ்திரீகள் ருதுஜாதக நிர்ணயம்
சேகரித்து தமது தாயை மிகவும் மேன்மையாய் மதிக்கும்படி யான கீர்த்தி பெறுவர். ஜாதகி சந்தோஷம் தனவதியா யிருக் கும்படியான புத்திரபாக்கியத்துடனிருப்பாள்.
ஒன்றைந்துஸ்தானமேனும் ஒன்பதாம்ஸ்தானமேனும் பன்னியாவியுந் நிற்க பாம்புகளிருந்திட்டாலும் மன்னியபுத்திரில்லா மலடியென்றுரைப்பார் ஆனால் நன்னயசாந்திரெய்தால் நற்புத்திரீயுண்டாமே. 17
உரை :-ஜாதகி லக்கனத்திலேனும் ஐந்தாமிடத்திலேனும் பாக்கிய ஸ்தானமாகிய ஒன்பதா மிடத்திலேனும் சனி, ராகு, கேதுக்களிருந்தால் புத்திரில்லாத மலடியாயிருப்பதற்காகும். ஆனால், சர்ப்பதோஷ பரிமோசனஞ் செய்து நவக்கிரக சாந்தி செய்தால் புத்திரபாக்கிய முண்டாகும்.
ஸ்திரீகள் ருதுஜாதக நிர்ணயம்
காசினியதிலிற்பிறந்த கன்னியர்ருதுலக்னத்தில் தேசுறுகுருவிருந்து திங்களுமைந்தில்நிற்க மாசிலாபெண்களீன்று மகாதனவானுக்கீந்து பேசரும்பாக்யத்தோடே பொருந்தியஜீவிப்பாரே. 18
உரை :-பெண்களின் ருது லக்கினத்தில் குரு உச்சம் பெற் றிருக்கவும், சந்திரன் பஞ்சமஸ்தானத்திலிருந்தால் அந்த ஜாதகி அழகானந்த முகவசீரமும், ஐஸ்வரிய அதிஷ்டானத்தமும் பொருந்திய பெண்களைப்பெற்று, தனவந்தர்களுக்குக் கலியாணஞ் செய்துக்கொடுத்து தனதான்யம் பல புத்திர பாக்கியத்துடனே வெகு மேன்மையாக சீவித்திருப்பதற்காகும்.
ஸ்திரீகள் ருதுஜாதக நிர்ணயம்
சுக்கிரன்ரிஷபத்துற்று துவங்கிபபஞ்சமத்தில் சிக்கிலாபுதனுமசந்திரன் சேர்ந்திருப்பார்களானால் மிக்கவேபெண்கள்பெற்று மேன்மையாய்குடும்பத்தோடே பக்குவமாகவாழ்வார் பார் தனிவினியார்த்தானே. 19
உரை :-பெண்களின் ருதுகால லக்கினமாகிய ரிஷபத்தில் சுக்கிரன் ஆட்சிபெற்றிருக்க, பஞ்சமஸ்தானமாகிய கன்னியாராசியில் புதனும் சந்திரனுமிருந்தால் அந்த ஜாதகிக்கு பெண் குழந்தைகள் விசேஷமாய்ப் பிறந்தாலும், மகா தனவந்தர்களுக்கு மணஞ்செய்துவைத்து, தனதான்யம் பொன் பொருள் பூமி லாபத்துடனே சீவாதருப்பதற்காகும்
ஸ்திரீகள் ருதுஜாதக நிர்ணயம்
சனிராகுகேதுமொன்றில் சாற்றுமைந்தொன்ப துற்றால் பனிமொழிமாதுமன்றால் பாம்பையேகொன்ற தோஷம் முனிவுடன்முண்டதாலும் முன்னோர்கள் சாபத்தாலும் கனிவானமைத்தரில்லா கலங்கியே தவிப்பர்தானே. 20
Page 371
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை - ஸ்திரீகள் ருதுஜாதக நிர்ணயம்
உரை:--உதய லக்கினத்தில் சனி, ராகு, கேது இருந்தாலும் அல்லது ஐந்து ஒன்பதாமிடத்திலிருந்தாலும் அந்த ஜாதகி முன் ஜன்மத்தில் சர்ப்பத்தைக் கொன்ற தோஷத்தினாலும் சு நவுயித்த தோஷத்தாலும் பெரியோர் மனமெலிந்து கொடுத்த சாபத்தினாலும், புத்திர பாக்கியமில்லாமல் பரிதவித்திடலாகும்.
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை - ஸ்திரீகள் ருதுஜாதக நிர்ணயம்
அவ்விதமாகத்தானே அருமையாய்ப்புத்திரில்லா ஒவ்வியேயிருக்குதானால் ஒழுங்குடன்கிரகசாந்தி செவ்வையாய்ச்செய்தாரானால் செல்வங்கள்பிறப்பாரென்று எவ்விதமானுந்தான் எடுத்துரைத்ததுபோற்செய்வீர். 21
உரை:--மேற்குறிப்பித்த பிரகாரம் புத்திரபாக்கிய மில்லாமல் பரிதவித்திடுவர் தங்கத்தினால் நாகஞ்செய்து நவகலசம் நிறுத்தி நவக்கிரக பூசைசெய்து கிராமப்படியே சாந்தி செய்தால் புத்ரபாக்ய முண்டாகும்.
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை - ஸ்திரீகள் ருதுஜாதக நிர்ணயம்
அருமைசேர்தனுசுலக்னத் தமர்ந்தவர்க்கைந்தாம்ராசி பெருமைசேர்மேஷமாகப் பிறங்குவர்பெருமையாக பொருளுடன் பூமி லாபம் பொருந்தியே வாழ்ந்திருப்பார் தருணமே நூல் ஆராய்ந்து சாற்றுவீருலகோருக்கே. 22
உரை:--தனுசு ஜன்ம லக்கினமாகவும் அதற்கைந்தாம் வீடாகிய மேஷத்திற்குரிய அங்காரகன் மகரத்தில் உச்சம்பெற்றிருந்தால் அந்த ஜாதகிக்குப் பிறக்கும் பிள்ளை வெகு கீர்த்திவந்தனாய் ஜீவித்து தனதான்ய லாபத்துடனே தனது குடும்பத்தாரில் பெருமையாயிருக்கும்படியான புத்திரனைப்பெற்று மேன்மையாய் ஜீவித்திருப்பதாகாகும்.
ஸ்திரீகள் ருதுஜாதக நிர்ணயம் முற்றிற்று.
Page 372
திருமணப் பொருத்த நிர்ணயம் - கணேச துதி
விருத்தம் மணமுகூர்த்தஞ்செய்வதற்கு மாநிலத்தோர்கட்கன்பாய் இணங்கியநக்ஷத்ரம்பேர் இசைந்தநற்பொருத்தமெல்லாம் வணக்கமாய்சொல்வதற்கு வளர்மதிஜோதியான கணபதியருளீரென்று கரங்குவித்துனாதுதித்தேன்.
முருகர் துதி
திதிவாரநக்ஷத்ரங்கள் தாராபலன்சந்த்ரன் நின்ற சதிரானபலனுமின்னும் சாற்றிடும்பலனையெல்லாம் மதியினால்வரைவதற்கு மயேஸ்வரிபாலனான அதிபதிகுகா உன்தன் அடிமலர்த்துதித்திட்டேனே.
நவக்ரக தேவதைகள் துதி
சூரியன்சோமன் செவ்வாய் சொற்புதன் வியாழன் வெள்ளி காரியுமிராகுகேது கருணைசேர்நவக்ரகங்கள் பாரினில்மனிதர்கட்குப் பலன்சொல்லும்விபரமெல்லாம் சீராவுரைக்கச்செய்வீருங்கள் திருவடிபணிந்திட்டேனே.
கணப் பொருத்தம்
கன்னிகைபுருஷனுக்கு கணப்பொருத்தமுமொன்றாக நன்மையாவமைந்ததானால் நலமெனப்புகலவேண்டும் மன்னியகணப்பொருத்தம் மாறுபட்டிருக்குமானால் விண்ணமாய்முடியுமென்று விளம்புவீர்ஜாதகர்க்கே. 1
உரை:—கன்னிகைக்கும் புருஷனுக்கும் கலியாணஞ் செய்வதானால் இருவருக்கும் ஒரே கணமானால் உத்தமமாகும். அவ்விதமின்றி ஸ்திரீ மனுஷ கணமும் புருஷன் தேவ கணமானாலும் உத்தமம். ஸ்திரீ தேவ கணமும் புருஷன் மனுஷ கணமும், ஸ்திரீ தேவ கணமும், புருஷன் இராட்சச கணமானாலும் மத்திபம். ஸ்திரீ ராட்சச கணமும் புருஷன் தேவ கணமானாலும், ஸ்திரீ ராட்சச கணமும் புருஷன் மனுஷ கணமானாலும் அதம பலனாகும்.
Page 373
உத்தம பலன்
உத்தமபலனென்றாலே யுயர்ந்தநற்குடும்பமாக புத்திரசம்பத்தோடும் பொன்பொருள் பூமி லாபம் எத்திசையும்விளங்கி எல்லோரும்புகழவாழ்ந்து மெத்தவும் அன்பாய்நாளும் மேன்மையாய்ஜீவிப்பாரே. 2
உரை:—உத்தம பலனா யிருந்தால் பெண்ணும் புருஷனும் மனமகிழ்ந்து, ஒருவர்க்கொருவர் இரதி மன்மதன்போல சுகஜீவியாய் வாழ்ந்து, புத்திர பாக்கியத்துடனும், பொன் பொருள் பூமி லாபத்துடனும், மிகுந்த கீர்த்திப் பிரகாசமாய் பத்துமித்திரர் புகழ்ந்துரைக்குந் தன்மையான தனவந்தராய் ஜீவித்திருப்பார்கள்.
மத்திப பலன்
மத்திபபலனென்றாலே மனைவியும் புருஷன்தானும் எக்கதியும் பொருந்தா எவர்களும்கழ்ந்துரைக்க சத்துருவென்றேசொல்லும் தன்மையாம்பகைத்திட்டாலும் புத்திரசம்பத்தோடே பொருந்தியேஜீவிப்பாரே. 3
உரை:—ஸ்திரீ புருஷனுடைய கணப் பொருத்தம் மத்திபமானால் எப்போதும் குடும்பத்தில் விரோதமாய் ஒருவர்க்கொருவர் சண்டை சச்சரவு செய்துகொண்டு, தன்னைப்போன்ற குடும்பஸ்தர் பழித்துப் பரிகாசஞ் செய்யும்படியான கலகஞ் செய்துகொண்டிருந்தாலும், ஸ்திரீ புருஷன் அடிக்கடி பகையாயிருந்தாலும், சிற்சில சமயம் சமாதானமாயிருந்து, வறுமையால் துயரமடைந்தாலும் சமயோசிதமாய் புத்திர பாக்கியத்துடனே வாழ்ந்திருப் பார்கள்.
அதம பலன்
அதமமாய்க்கணப்பொருத்தம் அமைந்திட்டாலிலுவாகாது பதமுடனுற்றார்பெற்றார் பணமாயிருந்திட்டாலும் சதிபதிவாழ்ந்திராமல் சிறிதுநாளைக்குள்மாய்வார் நதியில்ஜாதகத்தைப்பார்த்து சாற்றுவீர்பலனைத்தானே. 4
உரை: அதம பலனாய் கணப் பொருத்த மிருந்தால் ஸ்திரீ புருஷனுக்கும் மணஞ் செய்யலாகாது அவ்விதமா யிருக்கும்போது இருவருக்கு மணஞ் செய்தால் பொருந்தி சம்சாரம் செய்ய மாட்டார்கள். ஆனால், அவர்களுடைய தாய்தந்தை பத்துமித்திரர் எவ்வளவு சகாயம் செய்தாலும், சிறிது நாளில் பெண்சாதியாகிலும் புருஷனாகிலும் மரணமாய் விடுவதுடன் அவர்கள் குடும்பம் விர்த்தியாகாது. ஆகையால், மணஞ் செய்யும்போது அவர்கள் ஜாதக பலாபலனைப் பார்த்து பலன் சொல்லவேண்டும்.
Page 374
திருமணப் பொருத்த நிர்ணயம் / செவ்வாய்தோஷ பலன்
பன்னியரெண்டுநாலேழிட்டில் பனிரெண்டில்கூடினிருந்தா மன்னியசெவ்வாய்தோஷம் மரணமேயாதமென்றும் [ல் முன்னோர்களுரைத்தவாக்யம் யூகறிவதுவுணர்ந்து கன்னிகைபுருஷனுக்கும் கவனித்துமணஞ்செய்விரே. 5
உரை:--செவ்வாய் பகவான் பெண்களின் ஜாதகத்தில் இரண்டு, நான்கு, ஏழு, எட்டு, பனிரெண்டாமிடங்களிலிருந்தால் புருஷனை இழந்து விதவையாவாளென்றும், புருஷனுக்கிருந்தால் மனைவியை இழந்து மறுமணஞ் செய்துக்கொள்வா னென்றும், பெரியோர்கள் சொன்ன வாக்கியத்தை யனுசரித்துப் பார்த்து திருமணஞ் செய்வது உத்தமமாகும்.
திருமணப் பொருத்த நிர்ணயம் / செவ்வாய்தோஷ பலன்
அன்புடனிருவர்க்கும் அங்காரகனில்லாதாக நன்மையாயமைந்திருந்தால் நடத்தலாம்மணமுகூர்த்தம் பன்னியவுலகிலன்பால் பரிகாரஞ்செய்துகொண்டு பொன்பொருள்மைந்தரோடு பொருந்தியேவாழ்தலாரே. 6
உரை:--பெண்ணுக்கும் புருஷனுக்கும் மேற்குறிப்பித்த விதமே, அங்காரக தோஷமிருந்தால் அதற்குரிய நவக்கிரகசாந்தி செய்துகொண்டு சஷ்டிவிரதத்தை அனுஷ்டித்தும், சிவசுப்ரமண்யரைப் பூசித்துக் கொண்டிருந்தால் சதாகாலமும் மனமகிழ்வாய் பத்துமீந்தர் புகழ்ந்துரைக்கும் நன்மையால் பொன் பொருள் ஆஸ்தி பூஸ்தியுடனே வெகுமேன்மையான புத்திர பாக்கியங்களைப் பெற்று சுகசீவியாக வாழ்ந்திருப்பார்களாம்.
திருமணப் பொருத்த நிர்ணயம் / செவ்வாய்தோஷ பலன்
விருச்சிகமகரம்மேஷம் விளங்கியேபாரரன்னில் பெருமையாய்க் கூடினிருக்க புதன்வளர்பிறையும்பார்க்க குருபகவானூர்நோக்க குறைவொன்றுமணுகிடாமல் பொருள்புத்ரபாக்கியம்பெற்று பூமிபக்சீவிப்பாரே. 7
உரை:--செவ்வாய் பகவான் விருச்சிகம், மகரம் மேஷமாகிய இந்த மூன்று இராசிகளில் எங்கேனுமொரு ஸ்தானத்திலிருக்க, அவரை புதன் வளர்பிறைச் சந்திரன் குருபகவானும் பார்த்தால் யாதொரு தோஷமுமில்லாமல், மனைவியினாலும் வெகு பெருமையாக வாழ்ந்திருந்து பொன் பொருள் பூஸ்தியுடன் புத்ரபாக்யம் பெற்று, பத்துமீந்தீரர் புகழ்ந்துரைக்கும்படியாக குடும்பரக்ஷகராய் சீவித்திருப்பார்கள்.
Page 375
தாரா பலன்
ஜன்மநக்ஷத்திரத்திலிருந்து சாற்றுமந்நாள்நக்ஷத்திரம் தன்மையாய் எண்ணிப்பார்த்து தாராபலன்குபமேயாகில் நன்னய முகூர்த்தமிட்டு நன்மணஞ்செய்யும்போது வின்னமாயாகாநக்ஷத்திரம் விலக்குதல் மிகவும்நன்றே. 8
உரை:—ஜன்ம நக்ஷத்திரமுதல் மணமுகூர்த்தம் செய்யும் நக்ஷத்திரம் வரையில் எண்ணிப் பார்க்கும்போது வந்த தொகையை ஒன்பதில் வகுத்துக் கழித்தால் மீதியாய்நின்ற இரண்டு, நான்கு, ஆறு, எட்டு, ஒன்பது ஆனால் உத்தமமாகும். மற்றவை ஆகாது. இதனை சரியாய் கவனித்து திருமண முகூர்த்தம் செய்வதுதான் சிரேஷ்டமாகும்.
தாரா பலன்
ஜன்மமேகிலேச முண்டு சம்பத்துரெண்டேயாகும் துன்பமாம்விபத்து மூன்று சுகமாகும்நாவில் க்ஷேமம் வின்னமாய்காரியங்காணும் விளங்கியஐந்துவந்தால் பன்னியஆறாந்தாரை பகவான்தன்சகாயமுண்டாம். 9
உரை:—ஜன்ம நக்ஷத்திரம் கிலேசமும் திகிலுமா யிருக்கும். இரண்டு சம்பத்து, மூன்று விபத்து, நான்கில் க்ஷேமம், ஐந்தில் காரியநாசம், ஆறாந்தாரையானால் பகவான் சகாயமுண்டாகும்.
தாரா பலன்
இன்னலாம்வதையேழில் எட்டினில்சு பங்களுண்டு அன்புடன்ஒன்பதானால் அதிகலாபங்களுண்டு மன்னிஈசுபநக்ஷத்திரம் மைந்தர்பாக்கியமுண்டாகும் பன்னியவிதமே நன்றாய் பார்த்து நற்பலன்சொல்வீரே. 10
உரை:—ஏழாவதுதாரை வதையாகும். எட்டாந்தாரை சுபங்களுண்டு ஒன்பதாவது தாரையால் அதிக பாக்கிய முண்டாகும். ஆகையால், அவரவர்கள் ஜன்ம நக்ஷத்திரத்தி லிருந்து அன்றைய நக்ஷத்திரம் வரையிலும் எண்ணிப் பார்த்து மேற்குறிப்பித்த விதமே சுபதாரை மிகவும் நன்று. அசுபதாரை ஆகாது. ஆகையால் உத்தம தாரையில் எந்தக் காரியம் செய் தாலும் உத்தமமாகும்.
சுபயோக பலன்
சித்தயோகங்கள் நன்று சிறந்தது அமிர்தயோகம் அத்தகூடானயோகம் அதிர்ஷ்டமும்பொருள் பொன்சேரும் புத்திரபாக்கியமுண்டு பொன்பூமிலாபமாகும் எத்தனமும்நன்றாக எழிலுடன்சீவிப்பீரே. 11
Page 376
திருமணப் பொருத்த நிர்ணயம்
உரை :-மணமுகூர்த்தம் செய்வதற்கு சித்தியோகமாயிருந்தால் மிகவும் சிலாக்கியமாகும். அமிர்தயோகமாயிருந்தால் அதனிலும் நன்மையாகும். அந்த சுபயோகத்தில் மணஞ் செய்தால், இலக்ஷ்மிகடாக்ஷமாய் சதாவுக்யத்துடன் ஜீவித்திருந்து பூபான், பொருள், ஆஸ்தி, புஸ்த்தியுடன், புத்திரசம்பத்துடனும் ஜீவித்திருப்பார்கள்.
திருமணப் பொருத்த நிர்ணயம் - அசுபயோக பலன்
துன்பமாம்மரணயோகம் சொல்லுமற்பாதம்யோகம் பன்னியபிரபலாரிஷ்டயோகம் பலபலதுய விளைத்து பொன்பொருளற்றுகான்யம் பூமியில்விளைவுமற்று துன்பமேவிளையுமென்று சொல்லுவீர் பலனைத்தானே. 12
உரை: மரணயோகம், உற்பாதயோகம், பிரபலாரிஷ்ட யோகமாகிய நாட்களில் மணமுகூர்த்தம் செய்தால் மனைவியும் புருஷனும் பல துன்பமடைந்து, பொன் பொருள் பூஸ்த்தியு மிழந்து, அன்ன வஸ்திரத்திற்கே பஞ்சமுற்று பலவிதமாகிய துன்பத்தினால் சகலரும் பகையாகி, பந்துமித்திரர் பரிதாபமடையும்படியான ஏழ்மை ஸ்திதியிலிருப்பார்கள்.
திருமணப் பொருத்த நிர்ணயம் - கிரகப் பொருத்தம்
கன்னிகைபுருஷனுக்கும் கிரகங்கள்பொருத்தம்பார்க்க பொன்னவன்மாலும்சுக்ரன் பொருந்திபேஜன்மம்ஐந்தேழ் ஒன்பதிலிருந்திட்டாலே உத்தமம்மிகவுமன்று மன்னும்மூன்றாறெட்டும்விரயத்தில் மறைந்திடில்துன்பமே.
உரை :—பெண்ணுக்கும் பிள்ளைக்கும் மணமுகூர்த்த காலத்தில் உதயலக்னம் ஐந்து, ஏழு, ஒன்பதாமிடங்களில், குரு, சுக்ரன், புதனும் இருந்தால் மிகவும் உத்தமமாகும். அதன் பலன் புத்திரவிருத்தி திரவியலாபம் பந்துமித்திரர் பெருக்கம், தனதான்ய சம்பத்துடனிருப்பதற்காகும். ஆனால் குரு, சுக்ரன், புதனும் உதய லக்கினத்திற்கு மூன்று, ஆறு, பனிரெண்டாமிடத்திலிருந்தால் யாதொரு சுபபலனு மில்லாமல் சதாகாலமும் மனசஞ்சலமும், துன்பமும், துயரமும் அனுபவித்துக் கஷ்ட நஷ்ட மடையச்செய்து சதாகாலமும் மனவிசாரமாயிருப்பதற்காகும்.
திருமணப் பொருத்த நிர்ணயம் - கிரகப் பொருத்தம்
சூரியன்செவ்வாயிராகு சனிபேதுஜன்மம்ஐந்தில் கூறியஏழிலொன்பான் குறித்தஸ்தானத்திருந்தால் காரியபங்கமாகும் கஷ்டநஷ்டத்தோடன்றாம் பாரில்துன்பமுற்றெந்நாளும் பகைத்திடுயாரென்றோதே. 14
Page 377
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
உரை:—மணமுகூர்த்தஞ் செய்யும்போது உதய லக்னத்திலும் ஐந்து, ஏழு, ஒன்பது இந்த ஸ்தானங்களிலும் சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது வென்னும் கிரகங்களிருந்தால், சண்டை மச்சரவு நேரிட்டு சகலகாரிய பங்கமாய்ப் பலவித கஷ்ட நஷ்டங்களுண்டாவதுடன் சதாகாலமும் துன்பமும், துயரமும், துக்கமும் மேலிட்டு மனவிசாரமாய் வறுமையாற் கலங்கச் செய்து பந்து மித்திரர் பழித்துப் பரிகாசஞ் செய்யும்படியான ஏழ்மை நிலையா யிருப்பதற்காகும்.
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
இலக்கினங்கடகமாக இந்துவுங்குருவுநிற்க பலமுடன் மூன்றிலாறில் பருதியும்செவ்வாய்நிற்க நலமுடன்முகூர்த்தம்செய்தால் நன்மையாய்வாழ்ந்திருந்து தலமதில்புத்திரரையும்பெற்று தனவத்தராவர்தானே 15
உரை:—மணமுகூர்த்தம் செய்யும்போது உதயலக்னம் கடகமாய் அந்த ஸ்தானத்தில் சந்திரன் ஆக்ஷியாகவும், குரு உச்சமாகவும்யிருந்தும், சூரியனும், செவ்வாயும் மூன்று ஆறிலிருந்தால், மிகவும் நன்று. புருஷன் பெண்சாதியும் மனதைரியத்துடனும் சத்துருக்களில்லாமல் சதாகாலமும் தைரியமாக ஜீவித்திருப்பதுடன் பொன் பொருள், பூஸ்திதியுடன் புத்திரபாக்கியத்துடனே குடும்பஸ்தராய் சகலரும் புகழ்ந்துரைக்கும்படியான மேன்மையா யிருப்பதற்காகும்.
மகேந்திரப் பொருத்தம்
கன்னிகைநக்ஷத்திரத்திலிருந்து கணவன்நக்ஷத்திரம்வரைக்கும் நன்னயமாகவெண்ணி நாள்தன்னையெண்ணிப்பார்த்து அன்பானபதினத்தை ஆராய்ந்துபார்த்துசெய்தால் மன்னியநன்மையான மகேந்திரப்பொருத்தமாமே. 16
உரை:—பெண் பிறந்தநாளின் நக்ஷத்திரத்திலிருந்து புருஷன் பிறந்த நக்ஷத்திரம் வரைக்கும் எண்ணிய நக்ஷத்திரங்களின் கணக்கின்படியே நான்கு, ஏழு, பத்து, பதின்மூன்று, பதினாறு, பத்தொன்பது, இருபத்திரண்டு, இருபத்தைந்தாம் நாட்களின் நக்ஷத்திரங்களே மகேந்திரப் பொருத்த முண்டாகும்.
இராசிப் பொருத்தம்
கன்னியை புருஷன்ராசி கலந்தொன்றுப்விளங்குமானால் பொன்பொருளும்புத்ரபாக்யம் பொருத்தியேயிருக்கும்ஆனால் வின்னமாய்ஒன்றுக்கொன்று வேறுபட்டுச்சத்ருவானால் நன்மையைப்படையாமற்றான் ஞாலத்தில்கலங்குவாரே. 17
Page 378
திருமணப் பொருத்த நிர்ணயம்
உரை :- பெண்ணின் ராசியும் புருஷன் ராசியும் ஒரே ராசியானாலும் ஒன்றுக்கொன்று மித்துவா யிருந்தாலும், நற்பலனையனுபவிப்பதுடன் பொன் பொருள் பூஸ்திதியும் புத்திர பாக்கியமும் பெற்று சகலரும் புகழ்ந்துரைக்கும் குடும்ப ரக்ஷகரா யிருந்து மேன்மை யடைந்திருக்கச் செய்யும் ஒன்றுக்கொன்று பகை இராசியா யிருந்தால், சதாகாலமும் மனைவி மணாளன் ஒருவர்க்கொருவர் சத்துருத்தன்மையாக பகைத்துக்கொண்டும் சண்டை சச்சரவு செய்துக்கொண்டும் குடும்ப கலகஞ் செய்யும் வஞ்சகரின் வார்த்தையைக் கேட்டு வம்பும் வாதும் கலகமும் செய்துக்கொண்டிருப்பார்கள்.
திருமணப் பொருத்த நிர்ணயம்
இவ்விதமாகவேதான் இசைந்தநற்பொருத்தம்பார்த்து அவ்வியமில்லாமற்றான் அளவுபோற்கணித்தாராய்ந்து செவ்விழிகன்னிகைக்கும் செல்வனாம்புருஷனுக்கும் ஒவ்வியேமணஞ்செய்தாலே உத்தமமாகுந்தானே. 18
உரை :- இவ்விதமாய் ஒரு பெண்ணுக்கும் பிள்ளைக்கும் பொருத்தம் பார்த்து இராசிலக்கினத்தினாலுறக் கூடின அஷ்ட பொருத்தமனைத்தும் சரியாய்ப் பார்த்து மணஞ் செய்வதுதான் சிரேஷ்டமாகும். ஆகையால், இந்தப் பொருத்தங்கள் பார்த்து செய்வதுடன் அவர்கள் ஜாதகத்தையும் ஆராய்ந்து பலனுக்கிசைந்த விதமாய் மணமுகூர்த்த சுபதினத்தின்படியே மாங்கிலியஞ் சூட்டினால் சதிபதிகள் ஜீவியாய்ப் புத்ரசம்பத்துடன் வாழ்ந்திருப்பார்கள்.
திருமணப் பொருத்த நிர்ணயம்
பொருத்தங்கணமைந்திடாமல் பெண்ணின்ஜாதகம்பாராமல் புருஷன்ஜாதகமும்நல்ல பொருத்தமாயமைந்திடாமல் வருவதுவந்தே தீரும் மணஞ்செய்வோமென்றுரைத்தால் பொருளில்லாவறுமையாலே பூதலத்தலைவாரே. 19
உரை :— கன்னிகைக்கும் புருஷனுக்கும் பொருத்தமும் சரியாயமைந்திடாமலும், அவர்கள் ஜாதக பலனும் சரியாயமையாமலுமிருக்கும்போது, வருவது வந்தே தீருமென்று மணஞ்செய்தால் பலவித கஷ்ட நஷ்டமும் கவலையும் வறுமையும் சூழ்ந்து கவலையால் மெலிந்து மரணமாகியும் பலவித துன்பங்களெல்லாம் அனுபவிக்கச் செய்யும்.
திருமணப் பொருத்த நிர்ணயம்
கன்னிகை புருஷனுக்கும் கலியாணஞ்செய்யும்போது என்னமோரதோவென்று ஏற்றதோர்மணமுகூர்த்தம் நன்னயமாகச்செய்தால் நவின்றநன்மையாயிருந்தால் அன்புடன் வாழ்ந்திருப்பார் ஆண்டவன்சஹாயத்தாமே. 20
Page 379
திருமணப் பொருத்த நிர்ணயம்
உரை :--சிலசமயம் மணப்பொருத்தம் பாராமலும் காலபலன் ஜாதகபலன் பாராமலும் மணமுகூர்த்தஞ் செய்யும்போது புருஷன் தனது மனைவிக்கு மாங்கல்யம் சூட்டினால் அந்த வேளை பலனுக்கும் ஜாதகபலனுக்கும் சரியாய்ச் சீவித்திருக்கும்படியாக முன்ஜனனத்தின் புண்ணிய பலனிருந்தால் அவர்கள் மாங்கல்யம் சூட்டும்போது முகூர்த்தமெல்லாம் நன்மை தருவதற்கிசைந்த விதமானபடி சரியாய் அமைத்திருப்பதுடன் அவர்கள் ஜாதக பலனும் மேன்மையாயிருந்தால் மணஞ் செய்துக்கொண்ட கணவனும் மனைவியும் மனமகிழ்வாய் வாழ்ந்திருந்து புத்திரபாக்யம் பெற்று தனதான்ய சம்பத்துடனும் பந்துமித்திரர் கூட்டத்துடன் வெகு மேன்மையாக முன்ஜனனத்தின் புண்ணியத்தினால் பகவானுடைய அநுக்கிரகம்பெற்று ஆனந்தமாய் வாழ்ந்திருப்பதற்காகும்.
திருமணப் பொருத்த நிர்ணயம் முற்றிற்று.
Page 380
எள்ளேரி க. வ. அப்பாவு பிள்ளை இயற்றிய ஜெயமுனி சோதிட சூத்திரம்
விநாயகர் துதி - அகவல்
ஆனைமுகவ னடியினைதொழுது மானிடர்ஜெனித்த வையகந்தன்னில் நற்பலன்துற்பலன் நாளுமேயறிய சொற்பொருள்தன்னால் சொல்லுதற்கியைந்து பரிமுதலுடுக்கள் பாங்கானகாற்று அரிமுதலெழுத்தும் அவர்ராசிநாளும் பகையுடனட்பும் பார்வையும்சமமும் தொகையதாமிராசி தொகுத்தவர் குணக்கும் இடபல்முதலா மெல்லாவிபரமும் திட்டமுடனெடுத்து சீர்பெறவமைத்து சுப்பீன்பேட்டையூர் கருணீகர் குலத்தோன் தப்பிலாப் பெரியணன் தனக்குப்பவுத்திரன் அப்பாவுபிள்ளை அன்புடனிதனை செப்பேடுதன்னில் சீர்பெறாவெழுதி அச்சிற்பதிக்க அளித்தனன்தானே.
Page 381
நக்ஷத்திர எழுத்து இராசியின் நக்ஷத்திர நிலை
எண் | முதல் பாதம் | 2-ம் பாதம் | 3-ம் பாதம் | 4-ம் பாதம் | நட்சத் திரம் | இராசி 1 | சு | சே | சோ | ல | அசுவனி | மேடம் 2 | லீ | லூ | லே | லோ | பரணி | மேடம் 3 | ஆ | ஈ | ஊ | ஏ | கார்த்தி | 1-கால் மேடம் 2,3,4 கால் இடபம் 4 | ஒ | வா | வி | வு | ரோகணி | இடபம் 5 | வே | வோ | கா | கி | மிருகசீரி | 1, 2 கால் இடபம் 3, 4-கால் மிதுனம் 6 | கூ | க | ஞ | ச | திருவா | மிதுனம் 7 | கே | கோ | ஹ | ஹி | புனர்பூச | 1,2,3-கால் மிதுனம் 4-கால் கடகம் 8 | ஹூ | ஹே | ஹோ | ட | பூசம் | கடகம் 9 | டீ | டூ | டே | டோ | ஆயில்யம் | கடகம் 10 | மா | மீ | மூ | மே | மகம் | சிங்கம் 11 | மோ | டா | டி | டூ | பூரம் | சிங்கம் 12 | டே | டோ | பா | பி | உத்திரம் | 1-கால் சிங்கம் 2,3,4-கால் கன்னி 13 | பூ | ஷ | ணா | ட்ட | அஸ்தம் | கன்னி 14 | பே | போ | ரா | ரி | சித்திரை | 1,2-கால் கன்னி 3, 4-கால் துலாம் 15 | ரூ | ரே | ரோ | த | சோதி | துலாம் 16 | தீ | து | தே | தோ | விசாகம் | 1,2,3-கால் துலாம் 4-கால் விருச்சிகம் 17 | நா | நீ | நூ | நே | அனுஷம் | விருச்சிகம் 18 | நோ | யா | யீ | யு | கேட்டை | விருச்சிகம் 19 | யெ | யோ | பா | பீ | மூலம் | தனுசு 20 | பூ | தா | ப | டா | பூராடம் | தனுசு 21 | பே | போ | ஜ | ஜி | உத்ராடம் | 1-கால் தனுசு 2,3,4-கால் மகரம் 22 | ஜூ | ஜே | ஜோ | க | திருவோ | மகரம் 23 | கா | கி | கு | கே | அவிட்டம் | 1,2-கால் மகரம் 3, 4-கும்பம் 24 | சொ | சா | சீ | சூ | சதையம் | கும்பம் 25 | சே | சோ | தா | தி | பூரட்டாதி | 1,2,3-கால் கும்பம் 4-கால் மீனம் 26 | தூ | சை | த்தா | ஞி | உத்ரட் | மீனம் 27 | தே | தோ | சா | சி | ரேவதி | மீனம்
Page 382
இராசிகளின் கிரகங்களின் நட்பு
இராசிகளின் கிரகங்களின் நட்பு
ஆட்சி, உச்சம், பகை, நீசம்
இராசி சூரியன் சந்திரன் செவ்வாய் புதன் குரு சுக்கிரன் சனி இராகு கேது மேடம் ப ப ஆ ந ப ந நீ ப ப இடபம் ப உ ந ந ந ஆட்சி ந நீ ந மிதுன ப ந ந ஆட்சி ந ந ந ஆட்சி ந கடகம் ப ஆட்சி நீ ந உ ப ப ப ப சிங்கம் ஆட்சி ப ப ப ந ப ப ப நீ கன்னி ந ந ந ஆட்சி ந நீ ந ந ஆட்சி துலாம் நீ ப ந ந ந ஆட்சி ப ந ந விருச் ப நீ ஆட்சி ப ப ந ப உ ஆட்சி தனுசு ந ந ப ந ஆட்சி ந ந ந ஆட்சி மகரம் ப ப ப ந நீ ந ஆட்சி ந ஆட்சி கும்பம் ப ப ப ந ந ந ஆட்சி ந உ மீனம் ந ந ப நீ ஆட்சி உ ந ந ஆட்சி
கிரகங்களின் நட்பு பகை சமம்
கிரகங்களின் நட்பு பகை சமம்
சூரி ச ந ந ந ந ப ப ப ப சந் ந ந ந ந ந ந ந ப ப செவ் ந ந ந ப ந ந ந ப ப புதன் ந ப ந ப ச ந ச ப ப குரு ந ந ந ப ச ந ச ப ப சுக்கிர ச ப ந ந ச ந ச ப ப சனி ப ப ந ச ந ந ச ப ப இராகு ப ப ப ப ப ப ப ப ப கேது ப ப ப ப ப ப ப ப ப
ந - நட்பு, ப - பகை, ச - சமம்.
Page 383
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை / இராசியில் கிராட்சி, உச்சம், பகை, நீசம் / காப்பு
கயமுகனடியினை கரத்தினாற்றொழுது செயமுனிவாக்கியம் செப்பிடலாமே.
இராசியில் கிராட்சி, உச்சம், பகை, நீசம் / அறுசீர்க்கழி நெடில்
சூரிய னாட்சி சிங்கஞ் சோர்விலா மேட முச்சம் வீரிய துலாமே நீசம் மீன்தனு நட்ப தாகும் ஏரிய மற்ற ராசி யினமிலாப் பகையென் று பாரினில் பகர்ந்து நீயும் பலனதைப் பாருவாயே.
இராசியில் கிராட்சி, உச்சம், பகை, நீசம் / அறுசீர்க்கழி நெடில்
சந்திரன் கடக மாட்சி கார்விடை யுச்ச மாகும் சிந்திய தேனே நீசஞ் சிலைவன்னி மிதுன மீனம் வந்திடு நட்ப தாகும் மற்றவை பகையாகும் இந்திர னூதலாய் கேளே யிவை யெலாம் நிசாசர்க்கே.
இராசியில் கிராட்சி, உச்சம், பகை, நீசம் / எண்சீர்க்கழி நெடில்
செவ்வாய்க்கு மேடந்தே ளாட்சியாகுஞ் சீரியதோர் மகரமுச்சங் கடக நீசம் வெவ்வியதோர் விடைமிதுனங் கன்னி யோடு வேண்டுதுலா ராசி யிவை நட்ப தாகுங் கவ்வியிடு சிங்கமுடன் கும்பந்தானுங் கனமான தனுசுடனே மீனங்கூட சவ்வியதோர் பகையென்று கணிதமேலோர் தப்பாமல் சாற்றுவாரென் றறைவாய்நீயே.
இராசியில் கிராட்சி, உச்சம், பகை, நீசம் / எண்சீர்க்கழி நெடில்
புதனுக்கு மிதுனகன்னி யாட்சியாகும் பூவையுச்சம் நீசமது மீனமாகும் பதமுடையவிடையாடு தனுமகர கும்பம் பார்தனிலே துலைகடக நட்பதாகும் வீதனமுடன் சிங்கந்தேள் பகையாகும் மேதையுட சங்கதையின் விபரஞ்சொன்னேன் சிதையாம லிப்படியே புவியிற்பார்த்து சிறப்புடனே மானிடர்தஞ் சிறப்புசொல்லே.
இராசியில் கிராட்சி, உச்சம், பகை, நீசம் / எண்சீர்க்கழி நெடில்
குருவுக்கு விடைமிதுனஞ் சிங்கங்கன்னி கும்பமுடன் துலாமதுவு நட்பதாகும் பருகுமது கடகமுச்சம் மகரநீசம் பாவையேதனுமீன மாட்சியாகும்
Page 384
ஜெயமுனி சோதிட சூத்திரம்
திருகுதரு தேளோடு பகையதாகும் செகந்தனிலே யிவ்வகையைச் செப்பலாகும் அருமைதரும் குருவினுட வியற்கை தன்னை அவனி தனி விதையறிந்து அறையாய் நீயே. 5
ஜெயமுனி சோதிட சூத்திரம் - அறுசீர்க்கழி நெடில்
அறுசீர்க்கழி நெடில் பார்க்கவன் விடையங் கோலும் பார்தனி லாட்சியாகும் ஏர்க்கவே மீன முச்சம் ஏந்திழை நீசமாகும் மூர்க்கமா மகரங் கும்ப முந்தியே ஆடுந் தேளும் பார்த்தனு மிதுன நட்பு பகையரி கடகந் தானே. 6
ஜெயமுனி சோதிட சூத்திரம்
சனியது மகர கும்பந் தானுமே யாட்சி யாகும் வணியுளுந் துலாமு முச்சந் தகரது நீசமாகும் குனிர்சிலை மீன மேறு கொடியிடை மிதுன நட்பாம் வனிடையே கடகஞ் சிங்கம் வண்டேளு பகைதானாமே. 7
ஜெயமுனி சோதிட சூத்திரம்
பாம்பது கன்னி செட்டி பார்க்குனு மகர கும்பங் கோம்பிலா மீனம் நட்பு சோர்ரிலா மிதுன மாட்சி தேம்பிடுந் தேளு முச்சம் சீருங் விடை நீசமாகும் பாம்பது கடகஞ் சிங்கம் பகையது மேடந் தானே. 8
ஜெயமுனி சோதிட சூத்திரம்
கேதுவாம் விடையுங் கூட கெட்டியாஞ் செட்டி நட்பாம் வாதைசெய் கேளு மீனம் மகந்தனு கன்னி ஆட்சி கோதையே கும்ப முச்சம் கூறிய சிங்க நீசம் பாதகக் கடக மேடம் பகையெனப் பகர்வாயே
ஜெயமுனி சோதிட சூத்திரம் - இராசிகளிற் கிரகம் நிற்குங்காலம்
இராசிகளிற் கிரகம் நிற்குங்காலம் குறித்தகதி ரோன்புகர் புந்தி தலாம நிற்கி டொருமாதம் செறுத்தமதிநாளிரண்டேகால் செவ்வாய்மாத மொன்றரையாம் கறுத்தசனிரெண்டரையாண்டி ராகு கேதுவந் திரண்டும் திருத்தவாண்டொன்றரையாக விராசிபோன்றிற்கின்றீமே.
ஜெயமுனி சோதிட சூத்திரம் - கிரக பார்வை
கிரக பார்வை காரியுமூன் றேம்பத்து கனகனஞ் சேழொன்பானும் பாரினில் செவ்வாய்நாலே யெட்டெனப் பகரலாகும் சூரியன் மதிபும்புந்தி சுக்கிர விராகுகேது ஏரியவேழிற் பார்வை யெனவிதித் தனரமே லோரே. 11
Page 385
கோசார பலன் / எண்சீர்க்கழி நெடில்
இராசிபதி பலுச்சம்வரி லறிவுதொன்று மிருக்களிப்புந் தேசமிலகுந் திரவியமுஞ் சேருஞ்சதியாய்த் தானிருப்பன் நேசம்புவியில் ஜெயங்கொள்வ னினைத்தகருமங் கைகூடும் பேசுமிவரைத் தீக்கோட்கள் பிடித்துநோக்கிற் பிழையாமே. 1
கோசார பலன் / எண்சீர்க்கழி நெடில்
ஆமேராசி பதிநீச மமைிற்றுபா மடைந்துவரும் போமேபலது திரவியமும் பொருந்தா வினைமை வேறபடும் தாமேயிவரோடன் தீக்கோள் தானுங்கூடில்கார்த்திடிலே சாமேயலது தரித்திரனாய் சமைந்துநோயில் தான்படுமே. 2
கோசார பலன் / எண்சீர்க்கழி நெடில்
படுமேராசி சொக்ஷேத்தி ரத்திலிருக்கில் பயந்தீரும் விடுமேநோயுஞ் சுகமுண்டு விளங்குங்கீர்த்தி மிகவுண்டாம் கொடுமேநிதியு மளவில்வருங் குறித்தாகருமங் கைகூடும் அடுமே பாவக்கோன்பத்தில் அணிவில்நோக்கி லணுகாதே. 3
கோசார பலன் / எண்சீர்க்கழி நெடில்
ஆமேராசி பதியித்துரு ஆனவீட்டி லமர்ந்திருக்கில் மாதேகலியா ணங்கள்வரும் மனதுபீடை யகன்றுவிடும் மீதேதுரியா குறவாவார் விளங்குமரசர் மகிழ்ந்திடுவார் ஏதேதீக்கோ ளுடன்கூடில் எதிர்த்துநோக்கி லழிந்திடுமே. 4
கோசார பலன் / எண்சீர்க்கழி நெடில்
அழியாஇராசி பதிசத்துரு வானவீட்டி லமைந்திருக்கில் ஒழியாதுக்க நோயிளைவு மோந்தமுறவும் பகையாவர் செழியாதேசந் திரிந்திடுவார் செறியுநிதியுஞ் செலவாகும் பழியாம் பாவக கோள்நோக்கில் படியில்மரணம் பலித்திடுமே. 5
கோசார பலன் / எண்சீர்க்கழி நெடில்
பலிக்குமிராசி பதிசுபரோ டோங்கியிருக்கில் பதிபேரும் கெலிக்கும்படையுந் திரவியமும் கிடைக்குஞ் சினேகம் புத்திரரும் சவிப்புநீங்கு மடந்தையர்கள் தனதுபோக மிகுத்துவரும் வலிக்குந்தீக்கோள் பார்த்திடிலே சொன்னபலன்கள்வாராதே. 6
கோசார பலன் / எண்சீர்க்கழி நெடில்
வாராமிராசி யாதிபதி வந்துபாவ ருடன் கூடில் தீராநோயுந் தரித்திரமும் சேருநிதியும் பறிபோகும் பேராநெஞ்சங் கலங்கிவிடும் பிரியாத் திரிவும் பிரிந்துவிடும் சேராத்துணைவர்பயஞ்செனிக்கும் செய்யுங்கருமஞ்சிதைந்திடுமே.
கோசார பலன் / எண்சீர்க்கழி நெடில்
சிதையாவிராசி யாதிபதி சீரில்சத்துருவுடன் கூடில் மதியாதிருக்கில் மனப்பீடை மனதில் துக்கம் வருமலது பதிபோமெனல்:ஞர் பயஞ்செனிக்கும் பழியாங்கலக்கம் மிகவுண் நிதியும் பயிரும் பயியாது நேரும்திந்தை நெடியதாமே. [டாம்
Page 386
ஜெயமுனி சோதிட சூத்திரம்
நெடிதா மிராசியாதிபதி நீங்காதஸ்த மானாகில் மடிவார் மனது பிரமித்துர் மநதுநிதியும் நெறிமுடனே கொடியே யிடையாள் சுகமில்லை கொடுமைவந்து விளைந்துவிடும் படிமேலிலங்கும் நீரிழிந்தார் பலியா மாரா பகையாமே. 9
ஜெயமுனி சோதிட சூத்திரம்
பகையா மிராசியாதிபர்படியிலுதிக்கிற் பலநோக்கி, மிகவாங் கனகரத்தினமு மேன்மேல் வசமாம் விரைந்தே நற்பாகமாய் தேகம் வாகனமுந் தோற்று மிசைஞர் தமைச்சேர்வர், செகமேல் விளங்குந் தொழிலுண்டாம் சிரமும் நீங்குந் செருக்காமே. 10
ஜெயமுனி சோதிட சூத்திரம்
செருக்கு மிராசியாதிபதி சீறுமிராகு கேதுவந்தான் இருக்கும் வழியில் நடந்திட்டேல் இடருண்டினையாம்வாதத்தினால் பெருக்கும்விரணங் கடனோய்கள் பேராந்திருவும் பொருட்சேதம் உருக்குமனதில் வரும்பீடை யொண்ணாலிலவர் உறுதியிதே. 11
ஜெயமுனி சோதிட சூத்திரம்
உறுதிராசியாதிபதி யொன்றோடொன்பதிலொன்பரினில் அறுதியாக வமைந்துநிற்கில் அதிக நிதிகள்வரமுடனே பிரீதியான தொழில்களுறும் பிரங்குசுபக்கோள் நோக்கநலம் இறுதிகொடுக்குந் தீய்கோள்கள் இருந்துநோக்கி விளங்காதே. 12
ஜெயமுனி சோதிட சூத்திரம்
இணங்குராசியொன்பதஞ்சில் ஏற்குஞ் சுபக்கோ ளிருந்திடுமேல் கணங்கள் நிதியும் வருந்தொழில்கள் நலமனைத்தும் கைவசமாம் அணங்குபோக சவுக்கியங்கள் ஆதம் தாரமுறுவாவார் (தே. சுணங்கும் பாவக்கோள் நோக்கிற்றொன்ன பலன்கள் தோன்றா
ஜெயமுனி சோதிட சூத்திரம்
தோன்றும் ராசியொன்பதஞ்சில் அடர்ந்து பாவக்கோளிருக்கில் ஊன்றும் கரமும் பசிபிணியும் ஓங்குங் கிவிபந் தான்கெடுமே வீன்றகுடியா யுயிச்சேதம் வித்பாஞ்சிந்தும் பலியாது தோன்றுமனது சஞ்சலமாம் சோலப்படாதென்றிடுமே. 14
ஜெயமுனி சோதிட சூத்திரம்
தோற்று மிராசியாதிபனை சுபமாம் வியாழம் பார்த்திடிலே ஏற்றதொழிலுந் திரவியமும் இருந்தவிடத்தி லெய்திவிடும் ஆற்றபுகழும் புதன்சசியும் அடர்ந்து பார்க்கில் லெயமாம் கூற்றங் கதிர்சேய் பாம்புசனி பார்க்கில் பலன்கள் கூடாதே. 15
ஜெயமுனி சோதிட சூத்திரம்
கூறுமிராசிக் கிருபுறமுங் கூறுமதிபர்க் கிருபுறமும் தீருஞ் சுபக்கோள்கள் நின்றிடிலே நித்தஞ் சேரும் சுகமுண்டு மூடும்பாவக் கோளிருக்கில் முயலுங் கருமங்கூடாது தேடும் பொருள்க ளழிவாகும் தேகமதுநக் கண்டமதே. 16
ஜெயமுனி சோதிட சூத்திரம்
கண்டராசியாதிபதி கதிர்கண் நீங்கி வக்கிரிக்கில் கொண்ட பொருள்க ளழிவாகும் ஓடிவிட் டொட்டும் கலகமுறூம் அண்டும் பிணிகள் தீராது அதிகமாகுந் தொழில்மறக்கும் விண்டபலன்கள் வக்கிரந்தீர்ந்த உடனேவந்து விளைந்திடுமே. 17
Page 387
பெரிய ஜோதிட சில்லரைக் கோவை
வினையுமிராசியா திபதி விரைந்தே நிற்குமிராசியினுக் குலையுந்திரிகோ ணந்தனக்கே யுற்றசுபக்கோன் றானிருக்கில் வலையுஞ்சபமும் தானுண்டாம் வருந்தும் பாவக்கோளிருக்கில் கினையும் பகையாம் பலனில்லை கெலிப்பும் நீங்குமறிவீரே. 18
பெரிய ஜோதிட சில்லரைக் கோவை
அறியுமிராசியா திபதி ஆறோடாறே டெட்டதனில் நிறவியிருக்கி லபவாதம் நிதியுமிழக்கும் நிலைநீங்கும் உறுதிசுபக்கோள் கூடிடினே உண்ணும் பலன்கள் கைவசமாம் முறுதி பாபக்கோள் கூடில்முழு மரணங் கிட்டிடுமே. 19
பெரிய ஜோதிட சில்லரைக் கோவை
கிட்டுமிராசியாதிபன்முதற் கிளருஞ்சுபக்கோள் திரிகோணம் திட்டராசியுடனிருக்கிற் சேரும்பலமென்றுரைத்ததுமெய் ஒட்டமூன்றின் வீட்டோர்கள் இருக்குந்தானம் பலத்திருக்கில் தொட்டபலன்சம்பூரணமாய் தோணக்கிடைக்குந்தொலையாதே.
பெரிய ஜோதிட சில்லரைக் கோவை
தொலையாதொருவன் தான்பிறந்த தோன்றும் நாள்கள் மூன்றிலுந்தான், நிலையாஞ்சுபக்கோள் நின்றிருக்கில் நிதியுஞ் சேரும் நிறைகீக்கோள், உலையாதிருக்கப் பொருளுமிவாம் உடம்பு பீடையுறாங் கலகம், மலைவாம்பதியிட் டேகிலிலும் மற மாம்பலன்கண் டறிந்துரையே. 21
பெரிய ஜோதிட சில்லரைக் கோவை
உரையாம் பிறக்கும் நாளினுக்கே ஓங்குங்கிரக மொன்பதுந்தான் நிரையாமவத்தை வேதைபுரில் நிதியுமிழக்கும் நிலைநீங்கும் விரையாம் பலன்கள் வாராது விரணம்பிணிநோய் மனஸ்தாபம் புரைசே ரரசார்பய மிதன்பேரில் மரணம் புகழீரே. 22
பெரிய ஜோதிட சில்லரைக் கோவை
புகலுமிராசிக் கிரண்டடத்தில் பொருந்துஞ்சுபக்கோள் நின் றிருக்கில், இகலுமரசீர் முகவசியம் எவர்க்கும் பிரியமா யிருப்பர், அகலுமூன்றாந் திடத்தில் ஆகாக்கிரக மமைந்து நிற்கில், இகலும் பொருந்தா ரோடிகுந்தால் இளைப்போர் செய்யிபர் நிச் சயமே. 28
பெரிய ஜோதிட சில்லரைக் கோவை
சயமாமிராசிக் கைந்தனிலே சாரும் பாவக்கோளிருக்கில் நயமாந் தாரந்தினக்கதிகம் நாடும் பிணியாம் நான்கதனில் சுயமாஞ் சுபக்கோள் நின்றிடிலே சுகமாந் தேகம் பத்தினிலே வயமாம் பாவக்கிரகமுறில் வறுமை கீர்த்தி வரண்டிடுமே. 24
பெரிய ஜோதிட சில்லரைக் கோவை
இடுமா மிராசிக்கொன்பதனில் இசையாய் பாபக்கோளாதிக் கில், அடுமேதனத்தின் பிதுர்பீடை அணுகுநரலா மிடந்தனிலே, விடுமே பாவிருந்திட்டால் விடுவிட் டோட்டும் பதினொன்றில், நெடிதாஞ் சுபக்கோள் நின்றிட்டால் நிதியும் சேருமிதுநிசமே. 25
பெரிய ஜோதிட சில்லரைக் கோவை
நிசமா மிராசிக் கெட்டினிலே நெடியபாவ கிருந்திடிலே வசமாந் தேகபீடைகள்தான் வருமேலொன்ப தாமிடத்தில் விசையாய்ச் சுபக்கோள் வீற்றிருக்கிற் வினையுந் தரும தானகுரு நசையாய் தெய்வபக்தியுடன் நன்றாய் வருமே நங்கையரே. 26
Page 388
ஜெயமுனி சோதிட சூத்திரம்
நங்கையராசி கேந்திரத்தில் நற்கோள் நிற்கில் சுபமுறும் சங்கையுடைய மருவலரை சாடித்தூரத்தி வென்றிடுவன் மங்கைகசுமு மாடுமணி மைந்தரின்பம் பெற்றிடுவார் தங்கும்பாவர் சுபருமுறில் தருமே யசுப சுபபலனே. 27
ஜெயமுனி சோதிட சூத்திரம்
பலமா யிராசியாதிபதி புரிவாஞ் சொந்தத் திரமுச்சம் குலமாங் கோள்கள் தன்னுடனே கூடியிருக்கத் திருவுண்டாம் நலமாந் தேகதிரியுண்டாம் நடுக்கந்தீரும் அறிவுதரும் தலமாந்தொழிலு மிகவுண்டாம் சாரும்பிணியுந் தவிர்ந்திடுமே 28
ஜெயமுனி சோதிட சூத்திரம்
தவமா யிராசியாதிபதி தானே நவாங்கி சத்திருக்கில் உவமாஞ் சொந்தேத்திரமுச்சம் ஓங்குந் தானவாங்கி சத்தினிலே சிவமாமிருக்க சுபபலனாம் நீசமருவி சத்துருக்கள் பவமாமென்னு மங்கிசத்தில் பாரில் பலனும் அவமுரையே. 29
ஜெயமுனி சோதிட சூத்திரம்
உரையாயுள்ள சராசியோர்கள் திரராசியைப் பார்ப்பர் நிரையாந்திர ராசியிலுள்ளோர் நீங்கா சராசியைப் பார்ப்பர் விரைவா முபயராசியது மேன்மேலுபய ராசியினை புரையாஞ் சுற்றிப் பார்த்திடுவர் புகலக்கேளு மிருகனையே. 80
ஜெயமுனி சோதிட சூத்திரம்
இதுதானோக்கிற் சராசி யிருப்பிரண்டா மிராசிதனை அதுதானோக்கார் திரராசி யமர்ந்தோர் மன்னிரெண் டாகும் விதமா மிராசியினை நோக்கார் விளங்குமுபய ராசியுள்ளோர் கதுவா நான்காமிராசிதனை கண்ணால்நோக்கார் காணுமதே. 81
ஜெயமுனி சோதிட சூத்திரம்
காணுமிது நோக்கல்லாமல் காரிமுன்றாம்பத்துசூரன், தோணா நான் காமெட்டு பொன்னோன் றொடர்ந்து நோக்குமொன்பதஞ்சு, பூணும் புகர்மால் சசிபாம்பு பொருந்தி நோக்குமே மிடங்கள், வேணுமித னோக்குடன் கலந்தே விரைந்தே பலன்கள் விளம்பு வரே. 32
ஜெயமுனி சோதிட சூத்திரம்
விளம்பு மிராசியாதிபதி வினவாய்ப் பார்த்து விரைவாக வளங்கொள்பலன்கள் சொல்லுவதுபோல் வடிவாமங்கி சாதிபர்க்கு துளங்கும் பலமுந் தொகுத்திடுவாய் சுருதிநூலு மிவ்வாறே களங்கமறவே சொல்வதுநீ கண்டே யறியுங் காரிகையே. 38
ஜெயமுனி சோதிட சூத்திரம்
காரியென்மத் துறையுமதில் கலந்தே சனியுந்தா னிருக்க நேரிதான்காம் நாளதனில் நெடிய ராகுகேது குஜன் சீரியிருக்க ஒன்பதெட்டா நானிலிரவி சிறந்திருக்கில் பாரவிலங்கு மடிபிடியும் உடனே வந்து பலித்திடுமே. 34
ஜெயமுனி சோதிட சூத்திரம்
பலிக்குஞ் ஜென்மத்தியர்மதில் பதிவாய் வியாழம்பதிந் திருக்கில், பொலிங்குங் நான்காம் நாளதனில் புகரும் புதனும் புகழ்ந்திருக்க, சவிக்கும் நான்க ளொன்பதெட்டில் ரவியு மிருங்க மருவலரை கெலிக்கும் சுபயோகங்கள்நிதி கிடைக்கு மரசர் வணங்கிடவே. 35
Page 389
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
வணங்கும் பலன்கள் வகுத்துரைக்கில் வலங்கொள் ராசி யார்பதினொன், றிணங்கு மதமும் நான்மூன்றி லிருக்குங் கிரக வலிமைகளும், கணங்கொள் கிரகநோக்குகளும் டிடாமவஸ்தை வேதைகளும், மணங்குமிராசி யிருபுறங்கொள் வலியும் பார்த்து வகுத்துரையே. 36
துவாதச பலன்
செப்பியதோர் லக்னாதி பலவானாகில் சேர்ந்தசுப ருடன்கூடி ஆட்சியுச்சம் தப்பில்லாக் கருமாதி பாக்கியாதி தான்கூடி யிருந்திடவே தாழ்வில்லாமல் செப்பினோம் முலைமடவாய் தனமும்தானியம் திரமான அறங்கீர்த்தி யுடையோனாவான் அப்படியே பூரணமாய் வயதுமாகும் அறிந்தபடி யின்னங்கே எறிவாய்மானே. 37
துவாதச பலன்
மானேகீள் லக்கினாதி நீசனாகில் மன்னுமுடல் சவுக்கியமே யில்லானாகும் தானாகும் சரராசி கடகமேடம் தான்மகரம் துலாமோடு தவர்ந்துமற்ற நான்குமிராசிதனி லிருந்திட்டாலும் நாயகமாஞ் சடமில்லே சுகமுமில்லை தேனாகும்சுபருடனும் பத்தாமதி சேர்நோக்கம் பிரகாச தேகங்காணே. 38
துவாதச பலன்
காணவே சென்மதி யங்கிசத்திலேறில் கருதுசுக தேகியாய்த் தனமுடையனாவன் நீணவே நினைத்தகாரிய முடிப்பன்சபையில் நிர்வாகி யிதமறிந்து நேராய்ச்சொல்வன் பாணவே பூமிகள் விஸ்தாரமாகும் பார்த்திடவே பிரசித்த கீர்த்திமானாம் வாணவே நல்லசுப ருடனேகூடில் வாழ்த்தமற்றோ ருடன்கூடி வலஞ்செய்வானே. 39
துவாதச பலன்
சேர்ந்துநின்ற குடும்பதி பலவானாகில் சேருமதி தனவானாம் கேத்திரபுரியழகன் வாய்த்ததோர் குடும்பமுண்டாம் பாவரோடு மருவியே சேர்ந்துநின்றால் மற்றுங்கேளாய் ஆழ்த்தவிந்தை பொருள்செலவு குடும்பநாசம் அகன்றுவிடு மத்திய வயதுமாகும் ஏந்துமுலை மடமாதே பலனைப்பார்த்து இயம்புவா யிப்படியே யெழிலாய்நின்றூல். 40
Page 390
ஜெயமுனி சோதிட சூத்திரம்
நின்றமூன்று மிடத்திறைவன் பலவானாகில் நேர்பெரிய சகோதரங்கள் வலியுமுண்டாம் வென்றிடாச் சகோதரங்கள் மிகவுண்டாகும் விப்பிரர்நீச மூடமதில் மேவிநின்றால் வன்றணிதோள் மடமானே சகோதரஈனம் மருவியே சுபர்பார்க்க மற்றங்கேளாய் பொன்றணியாய் சத்துருவா யிருப்பரெல்லாம் பூவையே விதையறிந்து போற்றுவாயே.
41
ஜெயமுனி சோதிட சூத்திரம்
நாலிடத்ததிபன் நன்மையாய் பலமாய் நயந்துற பந்துக்க ளுண்டாம் காலிடன் காமி யாயிருப்பவனாம் கன்னிகை தன்னை நேசிப்பன் மாலியா மிகுதி விகிதமாயிருப்பன் மருவுநல் களத்திரம் வருமால் ஆலியாம் அம்மான் வமிசம்பேர் சொல்வன் அன்பர் தற்கப ருடன் கூடில்.
42
ஜெயமுனி சோதிட சூத்திரம்
கூடியே நாலா மாதிதானிருக்கில் குலவிய வாகன மிகவாம் ஊடியாந் தோளிவாகன முண்டாம் உண்மையாய் மனைகளு முண்டாம் வாடியே பாவி யாகிபேபலனு மற்றுமே பாவரைக் கூடில் சாடியே யிவைகள் காணுமேயில்லை சகத்தினில் தெளிந்திடச் சாற்றே.
43
ஜெயமுனி சோதிட சூத்திரம்
அஞ்சிடத் ததிபன் பலவந்தனானில் அருந்தவற் புதல்வரைப் பெறுவன் நெஞ்சினில் மனநிற் களங்கமாய் வாழ்வன் நேமியோர்புகழ் புத்தி நெறிமான் வஞ்சமில் ஞானி தர்க்கமே செய்வன் வண்பாவர் நீசரைக் கூடில் பஞ்சமெல் லடியார் சேம மூட நந்தி யாமெனப் பகர்ந்திடுமே.
44
ஜெயமுனி சோதிட சூத்திரம்
ஆறிடந் தன்னில் லக்கினத் ததிபன் அமர்ந்திட ரோகவான் கோபி வேறிய சூன்ய மந்திரந்தேவி பூஜையா மிவையெல்லாம் வெறுப்பாம்
Page 391
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
வேறிடந் தன்னில் பாரைச் சேரில் மணிபிணி சத்துரு விஜையாய் மாறிடப் பலமு மிலாமலே யிருக்கில் மருவிய யீன வானாமே. 48
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
ஏழிடத் ததிபன் பலவானேயாகில் எச்சத களத்திரப் பிரியன் வாழிய ணணத்து ஷணத்து மேகாமி வகையொடுல் வாழ்க்கையிற் சதிரான் ஆமியாஞ் சொற்ப பலன்களாயிருக்க அம்புவி தனிற் சதாகாமி பாழிவன் றோன்று மேழிடத்ததிபன் பயங்களைப் பார்த்து நீ பகரே. 41
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
எட்டிடத் ததிபன் லக்கினத்தாதி யிருவருங் கூடியே யிருந்தால் பட்டண வயதும் அற்பமதாகும் பதியோக தீர்க்க மென்பாரால் தட்டவே பலனில்லா திருந்தாலும் சன்மதி சார்ந்திருந் தாலும் வட்டமா முலையாய் நீசொல்லக் கேளாய் வருசாதகன் வருத்தந் தானே. 4
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
வருத்தமில்லா பாக்கியாதி பலவானாகி வந்துநிற்க பிதுர்தனமே புள்ளாணாகும் அருத்தியுறும் பிதுர்மூல சுகமேயுண்டு அன்னியரால் பாக்கியங்க ளென்பாய்ச்சேரும் செருத்தமிலாப் பிரகாச தேகங்கண்டாய் செப்பியதோர் பிதுர்மூல சுகமேயுண்டு உருத்திவிடும் பலவீன மானாலில்லை உண்மையா யிதையறிந்து யுரைப்பாய்மானே. 48
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
பத்திடத் ததிபன் பலவானேயாகில் பரிந்துநற் கர்மமே செய்வன் மெத்தவே பாவி யாகவேயிருந்தால் வேணலுற் கர்மமே செய்து சத்தியாய் சுகசீவ னாயிருப்பன் சகலநற் கருமமும் செய்வன் மத்தமாய் வருத்த மாகவேவாழ்ந்து மறலிபூர் தனிலடை வார்கள். 49
Page 392
ஜெயமுனி சோதிட சூத்திரம்
அடைவுடன் லாபத் தாதியேபலமாய் அடைந்திடச் சகோதர மூலம் இடைமுடை லாபம் பயிர்வழி பலம் இத்தகை யுடையவ னாவன் சடைமுடி பவும மீனமேயாகில் சாற்றிய சகோதர மூலம் படைநெடுங் கண்ணா யிலைசுபலாபம் பருத்திட மொழிந்திடு மானே. 50
ஜெயமுனி சோதிட சூத்திரம்
மானே பன்னிரண் டடத்ததிபன் மணிபல வானுமே யாகில் தானமாந் தர்ம மிகவுமேசெய்வன் தர்மவான் கீர்த்திமா னாவன் ஆனதோர் விரையத்தாதி துர்பலனாய் அமைந்திட ஒத்தனாய் வாழ்வன் தேனேர் மொழியாய் துவாதச பலனைச் செப்பினர் ஜெயமுனிதானே. 51
திசாபுத்தி பலன்
தேவமன் டலத்தி லிருந்திடுங் கோட்கள் திசைபுத்தி அந்தரம் நடக்கில் தேவதாபத்தி வாகனஞ் சுபங்கள் திரவியமி ராசாபிமானம் மேவலர் சமானம் பூமியாணடிமை விரும்பிய பலனெலாங் கூடும் தாவிய விவாக புத்திரர்லாபம் தைரியம் வெகுபலன் சாற்றே. 52
திசாபுத்தி பலன்
நரமண்டலத்தி லிருந்திடுங் கோட்கள் நடத்திடுந் திசைபுத்தி யந்தரம் பரவியபலன்கள் தடாகம் பிரதிஷ்டைபாக்கியம் வாகனம் பலிக்கும் திரவியலாபம் பயிர்பரிசெட்டுசெகத்தினில் நன்மனை கிடைத்தல் குறைவிலாபூமிதாய் தந்தையமைத்தர் குளிர்ச்சியா மிவையெலாங் கூடும். 53
திசாபுத்தி பலன்
அரக்கர்மண்டலத்தி லிருந்திடுங்கிரகம் அந்தரம் திசைபுத்தி வருமால் பெருக்கவேபுத்ரர் பெண்ணுடன்சேதம் பசாசினால் பயித்திய ரோகம்
Page 393
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை
வருக்கமாம்பித்தர் தாய்தந்தைநஷ்டம்மனதினில் பயத்துயர் காட்டும் இரக்கவேகஷ்டம் பாற்பசுசேத மிவையெலாஞ் ஜெயமுனி யிசைப்பே. 54
நவக்கிரக சமயம் 48-க்குப் பலன்
ஆடுமுதற் சன்மவக்னம்மட்டு மெண்ணிக்கொண்டு அயரவர்க ளிருந்தபதி யீறாகச்சரியாய் பீடுறவேயெண்ணியிரு தொகையுமொன்றாய் பேணி பெருக்கிபதோர் தொகையையிரு பானேழிற் கீந்த சேடமதை கிரகதிசை வருடமதிற் பெருக்கு சேயிழையே யாரெட்டீந் தீந்தமிச்சமதுதான் நீடுலகில்சமயபல னிதுவா மென்றே நிகழ்த்தினார் ஜெயமுனிவர் நிச்சயமாய்த் தானே.
1-வது சமயம்
சொல்வர்முதற் சமயமது நீர்த்தனமேயாகும் தொல்புவியிற் பாவமதற் கஞ்சுவன்சற்குணவான் நல்லபொருள் சேர்த்தெவர்க்கும் வள்ளலெனக்கொடுப்பான் நயந்தநூ லுணர்ந்தவித்வத் தன்மைமிகநில்வான் பல்வளஞ்சேர் நிலமும்வெகு மாளிகையுஞ்சேர்ப்பன் பலிபெண்கீர் மித்ரரோடு பாருலகில்நெடுநாள் அல்லலின்றி வாழ்ந்திடுவன் கன்னலைமுக்கனியை யமுதினையொத் திடுமொழிசேர் அன்னநடையானே.
2-வது சமயம்
ஆறமது வேள் நங்கை சமயமிரண்டுக்கே யறைவர்வஸ்திரோசிதமெனவேயரு ளுணர்ந்தபெரி [யோர் வாளசைக்கு மரசர்களால் தண்டனைக்குட்பட்டு மனைவிமைந்த னவனரசு மானமுங்கேடாகும் கோளர்களால் பகைநேரும் கள்வனெனப்படுவன் குற்றமெய்ச்சொல்லி லான்கூர்வன் மிகுபொய்கை வேளையுகிப்புணவு தவர்த்தலைவன் வெருகோபி விதியிவர்க்கு விதித்தனராய் விளம்புவர் நன்னூலே.
Page 394
ஜெயமுனி சோதிட சூத்திரம் - 3-வது சமயம்
விருத்திடுமூன்றாம் சமயந்தான மெனப்பகர்வர் மீகமனதிற் கடுமையுளான் விடமெனவேமுனிவன் கதித்திடுமா சாரமுளன் திரவியமுமற்பம் கைப்பொருளாற் சித்திபுண்யம் கருதுமிக்காலான் றுதிபெறும் திசாபுத்தி வருநாள்மத்தியிலே துன்பமடைவான் தனதான்யம் துலங்குமவனிடத்து பதியிலவ னேசர்களும் துணைவர்களும் விசனப்பட மனையிபு தல்வர் கண்டம் பருவப்பைந்தொடியே.
4-வது சமயம்
பைந்தொடியேரி ரண்டாஞ்சமயபலன் புகல்வேன் பகரருக்கிய பாத்திரத்தில் போசனமேயாகும் சுந்தரஞ்சேர் கரங்களையே தரிசிப்பரவரால் சுகமடைவன் நவமணியோ டுமிகுநிதானியமும் புத்திகளித்திடுநிலமும் பயிர்பலனும் பெறுவன் புகழ்பெறநற் செல்வனெனப் போகமடைந்திடுவன் சந்ததமு மறுசுவையோ டருந்துதுலங்கவருன் தருக்கிளமைதனமளித்து கருமனெனப் புகழ்வார்.
5-வது சமயம்
நலமிலைந்தாம் சமயமுரை தரிந்திரமேயாகும் நலிவுடல் சேர்ந்திடுமனைவி மைந்தர்மிகுநபீடை நிலையுளதன் பிதுர்க்குமூலம் அன்னையாலங்குறைவாம் நீணிலத்தோர் பித்தனென நிகழ்த்துவர்களவனை அலைவான் சத்தமிலான் புத்தியனுசாரன் அறிவிலனென்றேவர் சளுமேயவனை யிகழ்ந்திடுவர் கலைபுகழுமான்மகள்சேர் காங்கேயன் கைதொழுமோன் கதிர்வேலுக் கிணையெனசொல் களியளிகண்ணாளே.
6-வது சமயம்
எண்களிக்கும் சமயமிருமூன்றினுக்கே புகல்வர் கவித்த பூணூலின் கலியாணமாகும் மண்ணுலகிற் றனதானிய பணியினமுஞ்சேர்ப்பன் வாகனமு மாவினமு மாவணியிலிடுவன் எண்ணமுளான் சுகபோசிப்போன் குடும்பமதிற்றலைவன் ஏழ்த்தசுற்றந் தொழுவாழ்வான் இயல்பானகுணவான் புண்யபலந்திகளிற் போயாடுவன் மன்னவரைப் புரோசிதரைச் சேர்ந்துசுனம் புரிவனற்பொற்கொடியே.
Page 395
7-வது சமயம்
பொற்கொடியே யேழாஞ்சமயமா சனத்தின்மீது பொருந்தும்வெகு பழிபேசுவர் பொறுமையில்லான்கோபி நற்பலன்சேர் வித்தைபுந்தி தொழில்களுந் தர்ப்பணமாம் நானிலத்தி லற்பபலஞ் செலத்திகாயணுகும் செப்புவர்கள் திசையாதி பந்தமகில் நஷ்டம் செய்தொழிலின் பலன்பயிரிற் சிறந்திடுமத்தியிலே தர்க்கமிகு முத்தியோகந் தருடன் தன்னால் தனவிரயம் மனதின்மிகச் சஞ்சலஞ்சேர்கடனே.
8-வது சமயம்
கடற்கிகர்த்த கண்ணாளேள் தமிழஷ்டாஞ்சமயம் கழுத்தினிலுர்திராட்ச மதிமணிபூ மிதைக்கமுற நடமடவளிருநான்கி லிலக்குமியு மனையில் நானிலத்திலுயிர்க்குதவு நற்குடும்பத் தலைவன் திடமொடறுசுவையருந்துந் தனதான்யம் வெகுவாய் சேர்ந்திடுவன் சுருதிமொழிந் தினிய தலஞ்சூழ்வன் இடும்பையிலான் குருசுரர்கள் பூசுரர்கள் மகிழும் இன்பவான் வானத்தோர் திருநிலத்திலாசான்.
9-வது சமயம்
உளமகிழொன்பான்சமயம் புவித்தோலிற்பயனம் ஒண்புரிசுரபி எருதுரிசப வாகனமாம் கனங்கம்வாக் குல்விளங்க மாகாதிகருமம் கவித்துவஞ்செய் விவேகமுடன் பிறர்க்குபகாரனுமா வனஞ்சொல் களத்திரமகிழவும் பந்துமித்ராள்மகிழவும் வளர்பொருள் தானியலாப மறுசுவைபோசனமும் ஞானங்குபுராணக் கேள்விசோதிட வேதாந்தம் நூறியலந்தாம்பூவம் சோபனமே சொல்வர்.
10-வது சமயம்
சொல்லுவன்பத்தாஞ் சமயநீராடித்திடுதல் சொற்பயித்தேதெய்வபக்தி யற்பதனவருத்து பல்லவங்காரன் வெளிக்குக்கீர்த்தி யுண்டுபிறர்க்கு பண்புபெறுகயசாதி மித்ருதுரோகனுமாம் நல்லவர்கள் சாபமதால் திரேகமதிற்பீடை நவில்தெய்வ பிரார்த்தனை மந்த்ரமவிஞ்சைசித்தி அல்லதுசெய்துபிறர் பொருளை களங்கமாதற்கவர்ந்து மாவலா லுணர்வுசெய்வ னன்னடமயிலே.
Page 396
ஜெயமுனி சோதிட சூத்திரம் - 11-வது சமயம்
சோதிடநூலாருரைப்பர் பதினொன்றாம் சமயம் சூட்சமா மந்திரசித்தி பூதபாசுகளை மேதியேசிந்தைசெக மோகனமே செய்தல் முக்காலதேச வர்த்தமானதையறிதல் வாதமொடு வயித்தியஞ்செய்திடுவன் மிகபூமி வளமையுளான் தனதான்மனைவி மைந்தருளனாம் ஒதுவர்களுயிர்களின்மே லீகையுள்ளவனாம் ஒவ்வா தசத்ருவுக் கிடியேறிருப்பவனே.
ஜெயமுனி சோதிட சூத்திரம் - 12-வது சமயம்
உன்னியயோகன் சகப்பிரசித்தன் உறுதொழில் சித்திநற் குணவான், வூதிநல்வித்தை சாஸ்திரதர்க்கன் ஊண்சுகன் யோக் கியவானே, மன்னரும் பிரபலன் தானாசாரன் மானிஷ்டை யேவலால்மிகவாம், மாயையைஅகற்றும் விபூதிருத்திராட்ச மாலை காபரண நற்சசிமான், நன்னிலையுடைய இஷ்டர்கள்நேசன் நற்பசோபனகாமி, நன்னெரிமகிழ்ச்சி விருத்தியுபாசி நவிலுவர் வாகன முடையோன், பொன்னிலமதனில் அதிகவிர்த்தியதாம் புகல்வியாபார மேன்மேலாம், புகலுவர்வயது தீர்க்கமாமின்னாள் புகழ்சொன்ன வஸ்திரசமயம்.
ஜெயமுனி சோதிட சூத்திரம் - 13-வது சமயம்
பத்தின்மேல்மூன்று ரசவர்க்கசமயம் பகருவாருமறை தெரிந்தோர், பாரில்பற்பலவாந் தான்வியாபாரம் பலவிதமாய்ப் பூப்பயிரவிருத்தி, புத்திமானுலகிற் பற்பலவான புகழ்பெறு தரும சிந்தையினான், பூகவந்தனிலே போகபாக்யவான் புத்ரமித்ரர் கள் மனைவியினால், இந்திராணியென்றபூம் பெயரருளியல்பபெறு சலசமாதென்மர், ஏதமில்லாமலிருந்திடுங் குணவா னிருநிலத் தோர்களும் புகழும், வித்துவான் சகலபாஷைகளிடத்தும் விதி யறிந்துரைக்கும் வல்லவனாம், விருதுயர்யோகனா மெனவிளம்பும் வேலினை நிகர்த்திடுங்கண்ணாய்.
ஜெயமுனி சோதிட சூத்திரம் - 14-வது சமயம்
கண்மணிகேளீ ரேழாஞ்சமய மதைப்புகல்வேன் கற்பாணாசச் சமயமென்னவே சொல்வர் மண்ணில்வெகு குணமுளறு மாபூமிதனவான் மாதுவர்க்கம் பிதுர்வர்க்க மாகருமமுளனாம் அண்ணல்வெகு குட்சிசூலை மாட்சிரோணுமாம் ஆனபிரை யாசிதன வீனனெனவரைவார் குண்ணுவ்ழி நடைதனிலே மிகநினைப்புள்ளவனாம் கொடுவிசன முளனெனவே கூறுவர் சோதிடரே.
Page 397
15-வது சமயம்
வல்லிகேள் துர்க்காபாணமேதரித்தல் மன்னுமுவைந் தெனுஞ்சமயம், நல்வபுத்திரர் மித்திரர் களத்திரமும் நவிலன்னை தந்தையர்நாசம், சொல்லுவர் சிரேஷ்ட கனிஷ்டபங்காளி சினே கரு நாசமதாகும், அல்லது மடேவன் சாதகனென்றே அறை குவர்மறையுணர்ந்தவரே.
16-வது சமயம்
மறையுரைத்திடு மீரெட்டெனுஞ் சமயமென்னு பீதாம்பர மணிதல், மான்புளசிநேகர் தமரையுநித்தdomain வணக்கமா யுபசரித் திடுதல், குறைவிலாப்பூம்பூந் தனதான்யங் கோதிலாரத்தினா பரணம், கொற்றவர்தமக்கு மித்திரனாகும் கொடியசத்துரு ஜெய முடையோன், தரணியில்வெகுபேர் தேடியபொருளுந் தான்யமு மெளிதில் வந்தெய்தும், தானதர்மங்கள் வஸ்திரலாபம் ததியுடன் சீஷபோசனனாம், கறையிலாவஸ்திர மணிதலுந்திவ்விய கனப கஸ்தூரியில் விருப்பும், கானமார்த்தே நடனநாட்டியத்தில் கன விருப்புடைவனென்பார்.
17-வது சமயம்
என்பரிபத்தேழாஞ் சமயமாவுதத்தோடேய்த்த சிம்மாசன மிருத்து, எண்டிசைத்தொழிலு நடத்துவன் பூமியொடுதன தான்யமிகவாம், நன்மையோ டுகித்தெழும்போக நலனுறு வஸ்திரமணிதல், நாடியபுகழ்ச்சி வெற்றியோடன்ன நடையினார் தங்களைத்துதிக்கும், தன்மையாலுலகைவசியமே செய்தல் தாழ் வுள பூஜையையுடையோன், சங்கரானயன்மால் சேவைபுத் திரீர்த்த யாத்திரை தன்னிலுஞ்சான்றோர், பன்மறைகேள்வி யனுக்கிரகசித்தி பராகமிய வுணர்திறமும், பற்பலநலமுண் டென் றுரைசெய்வர் பாவலராகிய பழையோர்.
18-வது சமயம்
பாவலருரைப்பார் பதினெட்டாஞ்சமயம் பாரினில் பிராணியை வதைத்து, பலவுமுக்காடி ஜெயமடைந்திடுதல் பரிடத்திற்கடன்படுதல், கேவல தேகனவிழ்ந்தமேபொசித்தல் தேமதன தான்யம் தவக்கம், கீர்த்திமான் வெளிக்குக் குடும்ப னுமோம கிரகசாந்திகளிலே பிரீடன், நாவலர்முதலோர் தங்களை விகடம் நவிலுவன் தாலவிர்த்தியனாம், நாட்டுளார் சமய வாதி களுடனே நவிலுவான் சகலதர்க்கமுமே, தீவினைதேக விரணனா மென்பர் திசைகளெந்தந் தினிற்செப்பும், செய்திதொழில் மேன்மை தனதானியபூமி சொர்னவஸ்திரமுண்டென்பரே.
Page 398
ஜெயமுனி சோதிட சூத்திரம். 19-வது சமயம்
பத்தொன்பான் சமயமிது காலில் விலங்கிடு நல் பயமிலான் தெரியவான் துட்டந்நிறைந்துடுக்கள் மெத்தவேசேட்டையுள்ள ஞானமிலா வீணன் வேதனைசெய் உயிற்றுயிலி னுலைகுடில்யாதம் நத்துகளத்திர முதலாய் புத்திரவிலேசம் ராஜசிறை திருடன்பிதுர் தூஷணமே நவில்வர் சத்துமதி யாருமிலோர் வாருமிவன்தன்னை சண்டாளன் பொய்யனென தானறிவாய்மின்னே.
20-வது சமயம்
மின்னனேயாய் கேளிருப தாஞ்சமய மிருபிராணிகளை வெட்டு தலான், மீறியபவமிருந் தொடுபயம் நித்தியமிகுபிரை யாசைபே படுவன், மன்னியவறுமை அடிமையோனனுமாம் வளர்த்திடு மன்னை தந்தைக்கு, மாதுயர்செய்வன் நித்தியதிலோன் மனமற் பாவகீர்த்தியாளாம் நன்னிலையில்லா தூஷணகிருத்யம் நவின் றிடும்சுகமிலாண்டிமை, நவில்சிரரோகன் மேகவாய்வுடனே நாடியவிஷமூலரோகன் தன்னை, வந்தடுத்தோருக்குபகாரி தன மிலான் தயையிலானீனன், அத்தைதாய்தமரே தகைதுசெய்து தானுமேகடன் படுவானே.
21-வது சமயம்
மானே யிருப தொன்றதற்கு வழுத்தும் நமஸ்காரச்சமயம், வானோர்முத லந்தணர் தமையும் வணங்கித் துதிக்கும் பிறர் பொருள்மேல், தானே மிகவிச் சையுள்ளாம் தனமே குறைபு செல வதிகன், தேனார் சுவைபோ லனசவுக்கன் செகத்தோரிகழ நடை யான்.
22-வது சமயம்
நடக்கு மிருப விரண்டுபிரோட்சணயவன்னை பிதா, இடத்திற் பிரியன் கனத்ரயுக்த சீரழிஞ்சேர் போத போக்கியமாம், பிடித்த தொழிலும் சித்தியதாய் பெருகுஞ் சுபசோ பனமவன் தன், கடத்திற் சுகந்த பரிமளமும் கலைவெண் மதிபோற் கலை யணிவான்.
23-வது சமயம்
அணிசே ரிருபன் மூன்றினுக்கு மஸ்ய நடாத்து மதுசமயம் தணியா வமிர்த போசிப்பகனம் சாஸ்திரம் வழுவா நடையுள னாம், பணியார் கனகம் சுரபிவஸ்திரம பாரில் மிகவும் பயித் திடுமே, பிணியிலாமல் மேன்மேலும் பெருகு மாயுள் தீர்க்கமதாம்.
Page 399
24-வது சமயம்
இருபா னான்கில் மேற்றிசையி லெழில்சஞ்சார மெனவிசைப்பர் மருவுஞ்சடை னானளவும் வாழ்வன் கிராமா திக்கமுடன் தருமே வஸ்திர லாபமது தக்க கிரகந் தனம்பூமி பொருமே கொடுக்கல் வாங்கலுடன் புரைதீர் தருமம் நடத்துவனே.
25-வது சமயம்
மருவுமை யைந்தாம் சமயமேயெழுந்து மாசூட்சயோசனை புரிதல், வெகுநிலக் கடவளு சகடநெஞ்சன் வெளிக்குடீபன் வெகுதீரன், பரிகலம் பதினெட் டுடையவன் வெகுபேர் பயங் படும்படி யுறக்கிடுவன், அருளிலான் கோயிய னாசாரனென்றே அறைகுவர் அருமறை யறிந்தோர்.
26-வது சமயம்
அறிந்தவ ரிருபத் தாறெனுஞ்சமய மகவவா கனமனழுந் திருதல், சிறந்ததோர் தடாக நந்தனவனமூர் சிவாலய மன்னூ தாளிங்கள், அறம்பல புரிந்து குருதெய்வமறையோ ரடுத்திடும் போதூட்சணாய்ப் புரந்தா னென்ன கீர்த்திமான்சீதக புலிந்த: னெனப் புகன்றிடுவார்.
27-வது சமயம்
புகலிருபானேழ் சமயம்வாகனத்தி லிருத்தல் பூவிக்குடும்பத் தலைவன்பரவு பகாரனுமாம் அகலிடமுந் தனதான்ய மகிழ்ச்சிரத்நசுரபி அன்ன வஸ்திரமுமா னடிமையா்கள்மிகவாம் மிகத்தரும தானமுடன் பாகவதபாரதமும் மேலாந் ராமசரிதைமிக விருப்பமுடையோன் ஜெகமதில் வியாபாரமிகு பற்பலவாங்கீர்த்தி சேர்ந்தபந்துசதர்களுக்கு செங்கோல் மன்னவனாம்.
28-வது சமயம்
ஆறிருபத் தெட்டாரும் சமயமதைக்கேண்மோ ஆகாத பிரேதகஞ் சாரமெனவறைவர் நாமுரைப்போந் திசைபுத்தி மத்தியிலேகேக நலியும்வெகு வாதனையால் ஞானானமே நவில்வார் பூமீதனில் மிகவலைச்சல் காலமதிற்புரித்தல் பொல்லாங்கு நிஷ்டூரம் பிறர்வெகு தூஷித்தல் தீமைபுரிந் தேயுலகி லபகீர்த்திசுமந்தே திரிவரெனவே மொழிவர் தெய்வமறையோரே
Page 400
ஜெயமுனி சோதிட சூத்திரம் - 29-வது சமயம்
மறைபுகலு மிருபதொன் பான்சமயமதுகேள் மன்னுயிரைப் பிடித்தல் மாகுருவத்தெய்வம் புரையில்வந்தணரை நிந்தித்தல் சோதரரைப் பெற்றதாய் தந்தையரை சற்றுமதியாமை இறையளவுஞ் சீவர்கள்மேல் காருணியமிலனா மெழிலுலகில் நிந்தைபுரிந் திடுவன்செய்தர்மங் குறைசெய்பி சாசுகளாலும் நவக்கிரகத்தாலும் கொடுமைசெய்யும் பாவியெனக்கூறுவர் நூல்வல்லோர்.
30-வது சமயம்
முப்பான் திதி பூசையதாகும் மொழிவர் மணிமந்த் ரவிழ்க சித்தி, செப்பார்புத்திர களத்திரரொடும் சேர்ந்தோர் வணங்குஞ் சாந்தகுணன், இப்பார் தனிலே மிகவரிய னொழியார் ஸ்திரீகள் வசியனென்பர், தப்பா தைரிய லட்சுமியும் தழைந் தான்ய மிகவுளனாம்.
31-வது சமயம்
சொன்னேன்முப்பத்தொன்றதற்கு நற்போசனனென்றுரைத் திடுவர், பொன்னே யிவனைப் பிறர்து திக்கும் பூசிர் தவர்போல் சிந்தைசொல்வான், அன்னை பிதுர்வர்க் கங்கள்தனை அலைச்சல் படுத்து மாபாவி, என்னாளிலுமோ ரோகமிகும் ஈனத்தொழிலில் விருத்தியுளன்.
32-வது சமயம்
முப்பா லிரண்டிற் சலபான மொழிவ ரவிழ்ந மிகபோசிப்பான் அப்பா வியாதி பீடைமிகு மவன் புத்ர களத்திரமும் நப்பார் சுயசா திகள்பிறரும் நலிவர் விரோத மிகுகடினம் தப்பா ரிவர்க்குக் கடன்மீளாம் தன்கா ரியமுந் தாழ்வாமே.
33-வது சமயம்
மாதுகேள்முப்பான்மூன்றுதாம்புலம்பவழங்கல்சந்தணன்கவானா மன்னுசந்தனமும் நட்பகந்தங்கள் மாபூமியணியலங்காரம் [ம் ஏதமில்சுரபிமறி யொடுமகிட மெருதுமா அடிமைகள் மிகவாம் எழில்பெறுகலையில் தானியமதனி லேறலாம்பங்களுமிகவாம் நீதிலாதன்னிய பாஷைகள்தனிலே தீரனும் கீதவாத்தியத்தில் தெளிவுடன் தெய்வங் குருமறைவர்க்கு தொண்டுசெய் [தருள்பலபெறுவன் ஆதரவுடைய தந்தையின் தனமு மகன்றிடு சத்துருபொருளும் அவன்வசமாகு மிருசுவுந்தரிய னாமெனவுரை தவறிஞர்.
Page 401
34-வது சமயம்
அறைவார் முப்ப னான்கதற்கு அனிசந் தனம்பூ சுதலாகுந் மறைதேர்ந் திடுவன் பிரசங்கி மாலாந் தனதா னியமிகவாம் புறைதீர் புதல்வன் குருபுத்தி புண்ய மிகுதி பிறவிச் செல்வம் தரைமேல் கீர்த்தி மிகவுளனாம் தனத்தி லனைகைத் தலைவனுமாம்
35-வது சமயம்
மானே முப்பத் தைந்தில்தித்திரை மாகா மியனாம் ஸ்திரீ கல கன், தேனே தூர்த்தன் பிறர்பொருள்மேல் சிந்தையிகவுஞ் சகந் மனதில் கோனே யெனச்சில் லரைப்புகழ்ந்து கொடுமை சொல் வன் பின்பலர்மேல், ஆனபீதி யிதுர் அன்னை அடியான் தாசம் பற்றுகர்யம்.
36-வது சமயம்
கன்னல்மொழியாய் கேள்முப்பானா றாஞ்சமயம் கருதிடுமோ கனகமவிழ்ந்தமணி மந்த்ரசித்தி இன்னமுறை மனைவிபுத்ரர் மித்ரர் நட்பானாம் ஈதிலாப்புத்தி விவேகமு முண்டென்பார் மன்னுதன தானியங்கூட்டு வியாபாரமதனில் வந்திடுந் துரோகமதாற் சிந்தையிலே சமர்த்தன் நன்னிலையி லான்பாவி பரசந் நிஷ்டானுமாம் நாடிபிறர் பொருளிச்சை மாகும்வியா கூகனே.
37-வது சமயம்
கூறுவாய் முப்பானேழ் பிறர்தமை தூஷித்தால் கோபித்துட புத்தியுளான் பாவமனடிப்பான் வீரமே விலேசமது தனதானிய நஷ்டம் மேலான கரபிகன்று காவிநஷ்டமென்பர் ஆறுதலை பொழுதுணைவி யில்லாமலலைந்து அரசர்பகை யாலவநுந் சிறைபுகுந்து நொந்து ஈறுமுதலூப் நடிவி லாதபரனானால் எப்போதும் வறுமையுள னென்றுரைப்பர் நூலோர்.
38-வது சமயம்
முப்பானெட் டாஞ்சமயம் நித்திரையாகாவி மொழிவன்விரோதம் என்றுந் துன்மந்திரியாலே அப்பால்செய் தொழில்தவக்கம் வித்தையுடன்மறைவு ஆனகவி காவியம் சங்கீதமுடன்பாட்டு
Page 402
ஜெயமுனி சோதிட சூத்திரம்
தப்பாதாட்டிய தொழிலால் சஞ்சலயாசகியாம் தனருணவான் களவுகளால் தண்டனைக்குட்படுவான் இப்பாரில் சத்தியபுத்திரி சுநந்தாம்வயலைதல் இரவுபகல் கஷ்ட முளான் எருமைபோல்நடப்பான்.
39-வது சமயம்
முன்னவ ருரைப்பர முப்பத்தொன்பதற்கு மூனிலொரு காலமே புரிதல் அன்னே தந்தைமார்க ளிரோ திப்பொங்கேட்பன் அவரைத் தூஷித்துக் துஷ்டன் சொன்னதோர் பந்து சகோதரர்க்கிலேசங் தொழிலுறு கொடுக்கல் வாங்கலிலும் அன்னியவீடு தனமுதற் றானிய வண்மையு மற்பமா மயிலே.
40-வது சமயம்
மயில்திகர் மாதே நாற்பதாஞ்சமயம் மதிமுடி யியங்குதலென்பர், அயலுளோர் தூஷித் திடுதல்சுற்போகி அனூராரமிகவுளன் காமி, செயமிலா நண்பன் தந்தையர் நாசம் செப்புவர் புதன மிலாத, கயவனாநினை விருத்தியன் மரிமி கைப்பொருளுககுமே செலவாம்.
41-வது சமயம்
வானமடமானே நாற்பதொன் றாஞ்சமயம் வழுத்துவர் திரேக்காணம் மாவுசத்துருபீடை ஆனசுகந் தாழ்வுகனம் தீரர்புதல்யர்நாசம் அம்புவிகொஞ்ச முளனருள் தனமிலாதான் மேனிதனில் ரோகமுளன் மூலரோகமதுவே மிகுதியா மெனமொழிவர் தானப்பிரீஷ்டன் மானதுதந்தை யன்னைபொருளுந் தன்பொருளாம் வளரிடமு மிலனெனவே சாற்றுவர்நல்லோரே.
42-வது சமயம்
நல்லவருரைப்பர் நாற்பதுமிரண்டும் நாட்டில்சஞ் சாரமாமென்பர், நலமிலாங்காமக் குரோதலோபியனாம் நாடுநீச்சர்கள் சகவாசன், அல்லலேமிகுந்த நீசகீர்த்தியனா மன்னே தந்தையரோடு களத்ரம், யாரையும்தம்பா மனதுடையவனாம் அன்னியர் சொத்தபகரிப்போன், சொல்லுவர்மேக ரோகமோ டசீரணந்தோன்றிடு மூலரோகமுமே, தொந்தமா மலப்போர்தெந்தநானையினுஞ் சோர்விலாப்பகைமேபுரிவன், தொல்லுலகதனில் தந்தை யின்குலத்தில் குழ்த்தபந்து குலத்தோர்க்கும், துரோகனாமுறுகபயமுளோனரச ரீசியேயுலகு தூஷிக்கும்.
Page 403
43-வது சமயம்
மறைபுகல் நாற்பான் மூன்றில்சந்தோஷம் வஸ்திரந் தொடு தனதான்யம், மன்னுதேவதைகள் தன்னையேதுதித்தல் மாகங் கை தீர்த்தமேயாடல், பிறையணி சடையோன் ஆலயமுடனே பெரியமாலాలయமதனைப், பேறமிலாம லனுதினந்தொழுது பெற் றிடுமருட் பிரசாதம், நறைவிரிகமல மாதுதன்னருளால் நன் னடை செய்தொழில் விர்த்தி, நான்மறைப்புராண சாஸ்திரக் கேள்வி நற்கருமத்தொடு தானம், புரையறுநீதேக ராயுளுவிர்த்தி பூமியுமேவலான் சுரபிபொங்கிய செல்வர், தங்குமென்றுரைத்தார் போதமார் முனிவர்கள் தாமே.
44-வது சமயம்
நாற்பா னான்கிற் சலசையவன் நணுகுஞ் சமயம் பிறனூர் போய், சேர்ப்பான் மிகுந்த தனமதனை செய்யுந் தொழிலில் லாபமதாம், காப்பான் காத்ர புத்திரரை கரும்போக பாக்கிய வான், பார்ப்பார் முதலோர்க்குபகாரி பண்பாற் றெரிய லட்சுமி கரன்.
45-வது சமயம்
கருதும் நாற்பான் ஐந்ததற்கு கங்காஸ்நானம்சிவனருளால், பெருகுந்தேவர் பிரசன்னம் பேரூர் தலங்கள் பாத்திரையாம், மருவுஞ் சாந்த குணந்தருமன் வளர்நாற் றிசையுங் கீர்த்தி யுளன், உருகுமணி மந்த்ரவித்த சித்தி ஒளிர் தேவர்கள் பிரசாத முளான்.
46-வது சமயம்
உள்ளது நாற்பத் தாறுவிமான சமயமதாம் ஒளிருமஷ்ட லட்சுமியும் வாசமவனிடத்தில் எள்ளளவுங் குறையாமல் தயிர்பால்நெய்யுடனே இன்பசுக போசனமென் னாளுமவன்புசிப்பன் வள்ளலென வாகனமும் நித்தியகளத்திரமும் மாண்புள புத்திரர் மகிழ்வுமாதிதி தானியமும் கொள்ளுமுத்தியோக தட்புசுர பியிகவுளனாம் குடும்ப சவரட்சகனாய் கூறுவர்கள் பெரியோர்.
47-வது சமயம்
நாற்பத்தேழுக் களகைமானகரில் நற்குடியிருக்கை யீ மென்று, நவிலும் நற்புண்ய தவமதிர்வாசம் நற்றனதானியம் பூமி, சால்வும் நஷ்ட னற்பவிருத்தியனுந் தையல்மேற் காமியமதனால், தனதுதேகத்தில் துன்பமேவிளைத்து தவித்திடுவான் மயப்போன்
Page 404
ஜெயமுனி சோதிட சூத்திரம்
கால், கோலுமே யன்னத்துவேஷம் வக்கணாசம் கொடுத்திடு மவிமுகத்தின் பலத்தால், கொடும்பணியான இடும்பைகள் நீங்கி கூறனுகூலமேசொல்வர், மேலுநற்பூமி பயிரொடுதனமும் விருத்தியதாகிடுமென்றே, வேதியர்தானும் விளம்பினாரதனை விபரமாயறிந்துரை செய்வீர்.
48-வது சமயம்
உரைசெய்வா நாற்பானெட்டானஞ் சமயமுறும்புண்ணியகதாப்ரசங்கம், உற்றநெய்தயிர்பால் கனிரசவர்க்க முணதில்மிகவிருப்புளனாம், நிறையோடுமேதி கன்றுகாலிகளை நெருங்கு சுற்றத்தை ரட்சித்தல், நேமிபொன்னடிமை யாள்களுமிகவால் நிறைந்திடு தானியமலைபோல், மறைமுடிவறியும் குருபதந்தனிலும் வானவர்பதந்தொழு மனதோன், மாவியாபாரி தொழில்மிகவிருத்தி மாகங்கையாத்திரைபிரியன், கறையிலாமனிதர் இஷ்டர்கள்நேயன்களித்திடும் போகபாக்கியவான், காதலால் தர்க்க சாஸ்திரமதினில் கனதருமங்கள் செய்புகழோன்.
ஜெயமுனி சோதிட சூத்திரம்
ஜெயமுனி சோதிட சூத்திரம் முற்றிற்று.
Page 405
கருட தரிசன பலன்
தினகரனால் கலியாண பலமேயுண்டாம் திங்கள்தனில் நினைத்ததெல்லாந் திரளாய்க்கூடும் அன்புடனே அறுசுவையுஞ் சிக்கும் செவ்வாய் அபமிருத்து தோஷத்தை யகற்றும்புந்தி மனதிலுறு துபரம்போம் குருவாரத்தில் வளர்வெள்ளி தனக்கிடுக்கண் மாற்றிவைக்கும் கனசனிநாள் கெம்பீர பலமேயுண்டாம் கருடனைக் கண்டாலிதுவே கூறுவாயே.
நந்திதேவரை தரிசித்த பலன்
அருக்கன் தனலாபம் மதிக்கே ஆடைவரு மங்காரகற்கு மருக்கொள் பண்டம் புதிகளி மன்னர்க் கின்பம் மாவலியன் குருவுக் கிடர்போ குஞ்சனிக்கு குழந்தை பிறக்கு மீசன்நந்தி இருக்கு மிடஞ்சென் றிறைஞ்சுவர்க்கு எய்தும் பலன்களிதுவாமே.
வாய்ச்சொல்
திங்கள்சிவமறையோன் செவ்வாய்புலவரிடம் பொங்குபுதன்கம்மாளன் பொன்வணிகன்—நங்காய்கேள் ஆபன்சனிச்கிழமை அம்பட்டன்ஞாயிறு தூயவெள்ளிவண்ணான்ாய்ச்சொல்.
இவ் வாரங்களின் உதயத்தில் அந்தந்த சாதியார் வீட்டு எதிரில் போக முதல் அங்கிருந்து வரும் வாய்ச்சொல்லே, தான் நினைத்த காரியத்தின் முடிவாம்.
பெரிய ஜோதிட சில்லறைக் கோவை முற்றிற்று.
திருமகள் அச்சகம் சென்னை-79
Page 408
எங்களிடம் கிடைக்கக்கூடிய வைத்திய நூல்கள்
எங்களிடம் கிடைக்கக்கூடிய வைத்திய நூல்கள் ரூ. காசு
பதார்த்த குண விளக்கம் சி. கண்ணுசாமிப் பிள்ளை இயற்றியது; முதல் பாகம் (மூலவர்க்கம்) ... அச்சில் ஷை இரண்டாம் பாகம் (தாது, ஜீவ வர்க்கம்) சி. கண்ணுசாமிப் பிள்ளை இயற்றியது ... 30 00 பரம்பரை வைத்தியம் (சி. கண்ணுசாமிப் பிள்ளை இயற்றியது) ... 75 00 சிகிட்சா ரத்ன தீபம் (சி. கண்ணுசாமிப் பிள்ளை இயற்றியது) ... 75 00 மேற்படி இரண்டாம் பாகமாகிய வைத்திய சிந்தாமணி ... 50 00 'கண்ணுசாமியம்' என்னும் வைத்திய சேகரம் (சி. கண்ணுசாமிப் பிள்ளை இயற்றியது) ... 20 00 மூலிகை மர்மம் 4-பாகங்கள் அடங்கியது சிறு மணவூர் முனிசாமி முதலியார் இயற்றியது ... 50 00 வைத்திய மூலிகை அகராதி ... 60 00 வைத்திய மலை அகராதி ... 15 00 18-சித்தர் நாடி சாஸ்திரம் ... 20 00 'பார்வதி பரணியம்' என்னும் விஷ வைத்திய சிந்தாமணி ... 15 00 மாட்டு வாகடம் ... 20 00 போகமுனிவர் வைத்தியம்-700 ... 12 00 வைத்திய அரிச்சுவடி (2-பாகம் சேர்ந்தது) 10 00 மூலிகை ஜாலரத்தினம் (2-பாகம் சேர்ந்தது) 15 00 அனுபவ வைத்திய தேவ ரகசியம் ... அச்சில் அகஸ்தியர் வைத்திய ரத்தினச் சுருக்கம் மூலம் 12 00 மேற்படி மூலமும்-உரையும் அச்சில்
கிடைக்குமிடம்:- B. இரத்தின நாயகர் அண்ட் சன்ஸ், நெ. 26, வெங்கட்ராம தெரு, கொண்டித்தோப்பு, மின்ட் போஸ்ட், சென்னை-79
Page 409
Tamil Heritage Foundation
Tamil Heritage Foundation தமிழ் மரபு அறக்கட்டளை
Electronic preservation of Tamil heritage materials e-Book series an international NGO initiative to digitize old Tamil books and palm leaf manuscripts visit http://www.tamilheritage.org
தமிழ் ஓலைச்சுவடிகள், நூல் பாதுகாப்பு.
பாதுகாப்பற்ற நிலையில், மறுபதிப்பு காணாத பழைய நூல்கள், ஓலைச்சுவடிகள் போன்ற தமிழ் முதுசொம்களை மின்பதிப்பாக்கி தமிழ் வளத்தை நிரந்தரமாக்கும் ஒரு சர்வதேச தன்னார்வ முயற்சி.
மேலும் அறிய: http://www.tamilheritage.org
முதுசொம் முத்திரை தமிழ்ப்பாதுகாப்பின் அக்கறை