Books / santhana mani

1. santhana mani

Page 2

சிவமயம். சந்தானமணி. இஃது அச்சுவேலி தெற்கு: லோகநாதசோதிடரின் புத்திரன் சபாபதிசோதிடர் அவர்களால், பல சோதிட நூல்களிலிருந்து திரட்டி எவரும் இலகுவில் விளங்கக்கூடிய உரையுடன்

பருத்தித்துறை கலாநிதியந்திரசாலையிற் பதிப்பிக்கப்பட்டது. 135016 யுவளு சித்திரைமீ. 1935.

Page 3

நூன்முகம்

உ சிவமயம்.

நூன்முகம்.

கடல்புடைசூழ்ந்த புடவியில் பொலிந்த சீவர்களெல்லாந் துன்பத்துக்காற்றாது இன்பத்தையே விரும்புவரென்பது எவரு மொப்பமுடிவுசெய்வர்.

ஆனாலின்பதுன்பமானவை வினைக்கீடாகத் தொழிற்படுத் தலால் பிறப்பதென்பதனையுமெவரும்மறார்.

அங்ஙனந் தொழிற்படுத்துங்கால், குணாகுணம் நிவிர்த்தி பிரவிர்த்தி, பொறிவழிச்சேறாமை, காலஅகால மென்றற்றொடக்கமான இலக்கணம் அமையவேண்டுவதில்லையென்பதனையும் ஒத்துக்கொள்வார்.

இங்ஙனமாக, சீவனையும், வினையையும், செயலையும் பிரிவு காட்டிக் காலக்கிரமத்தோடு பண்படுமாறு செய்ய அறிவாகிய ஞானசத்தியை அதிகாரமுடையதாகத் தோற்றுவித்ததென்பதே முடிவு.

நூன்முகம்

"உணர்வுருவாகியவுயிரொன்றல்லது உடல்முதலனைத்துமுயிரல்பொருளே"

உயிருக்கு அறிவே ஸ்வரூபம்.

திருவாதவூரடிகள் புராணம் - மந்திரிச்சருக்கம்

4

திருவாதவூரடிகள்புராணம். மந்திரிச்சருக்கம் 4ம் பாட்டு.

அந்தகரின்மறையோரிலருள்புனைமாத்தியர்குலத்திற் றன்னிகரில்சைவநெறித்தலைவனவன்றனித்தேவி மின்னனையாடிருவயிற்றின்மென்கொடிபங்கினனருளாற் றென்னவன்செங்கோன்முதல்வர்திருவவதாரஞ்செய்தார்.

மெய்யறிவைத் தேடும்வழிநின்று தேடிப்பற்றினவர்க்குத் துன்பவழிசாராது எஞ்ஞான்றுமின்பவழி பொலிந்துமலிந்து விளங்கச் சிவாஞ்ஞை இடங்கொடுத்தபடியாம்.

என்னவே, தென்னவன்செங்கோன் முதல்வராகுந் திருவாதவூரடிகளைப் புத்திரராய்ப்பெற்றுக்கொள்வதற்குச் சம்புபாதாசிரியர் சில

Page 4

முன்னுரை

-2-

ஞானவதியாராகும் பெற்றார்க்கிருந்த சிறப்பு சைவநெறித்தாயென்பேயாமென்பது விளங்குதலானும், திருவவதாரத்திலேயே அரிமர்த்தனபாண்டிய அரசனின் செங்கோலைநடத்தும் முதன் மந்திரியாகும் பரிபக்குவம் நியதித்துள்ளவென்பது தெளிதலானும் பெற்றுக்கொள்பவரின் நன்னெறியாற்பிறப்பவரின் சிறப்புப்பிறத்தலானும், (சற்புத்திரர்) நற்பெற்றோர்மாட்டுரிமையாய்க் காலத்தையதிஷ்டித்துத்தோன்றுமென்பதைக் கடைப்பிடித்து அரிய கல்விச்செல்வமானது நிரம்பப்பெறாதவறியேனை,

குடும்பசஞ்சீவியாய்க்குலவத் தனிமொழியாக இந்நூலை இயற்றி வெளியிடவேண்டுமெனப் பலர் கேட்டுக்கொண்டபடி எனது தாதை மூதாதை யெழுதிவைத்த சாஸ்திர ஏட்டுப்பிரதிகளிலும், ஏனைய அச்சுப்பிரதிகளிலுந் துறைதுறையாயிருந்தவைகளை யொருங்கு சேர்த்துச் சந்தானமணியெனநாமமிட்டு, நல்லறமாகிய இல்லறச்செல்வச்செல்விகள் இல்லறவிதிவிலக்குகளையிலகுவிலறிந்து துன்பவழியைத்துரந்து இன்பத்தையும் தேகசௌக்கியத்தையும், தீர்க்காயுளையும், செல்வத்தையும், ஸாத்விகமயமான சற்புத்திரப்பேற்றையும் பெற்றுக்கொள்ளுதலாலேயே உலகங்கடைத்தேறுமென்னுஞ் சித்தாந்தத்தாலிதனை வெளியிடலானேன்.

ஆதலால் கல்விச்செல்வம்படைத்த வித்துவான்களீராய்த்து இந்நூலின்கணுள்ள வழுடக்களைத்திருத்தி இரண்டாம் பதிப்பிற்பதிக்குமாறுதந்து சிற்றறிவுடையேனின்எழுப்பு ஈடு பெறுமாறு உதவிசெய்தும், மக்களுக்கு இதன்கண் விளங்கிக்காட்டும் காலஅகாலசுபாசுபங்களை எடுத்தோதி விளக்கியும், சைவநெறியாளர்களனைவருமிந்நூற்பயனைத் தம்மனவேட்டிலெழுதியொழுகின், பூமியில் பரவசம்பந்தமானவைகளெல்லாம் நசிக்கப்பட்டுப்புண்ணியசம்பந்தமானவைபாவும் விகசித்து மண்ணுலகம் பொன்னுலகம்போலச்சிறக்குமென்பது போதருதலாலுமென்க.

செ. ச.

மதிப்புரை

உ- சிவமயம்.

மதிப்புரை.

அச்சுவேலி பிரமஸ்ரீ. ச. குமாரசுவாமிக்குருக்கள் அவர்கள்.

அநாதிமலமுத்தராகிய பரமசிவன் இப்பிரபஞ்சத்துட்பட்டுழலும் ஆன்மகோடிகளை அனுக்கிரகஞ்செய்யத் திருவுள்ளங்கொண்டு, பதினெட்டுவித்தைகளை வெளியிட்டருளினர். பதினெட்டு வித்தைகளாவன; இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் என்னும் வேதம் நான்கும், சிக்ஷை, கற்பம், வியாகரணம், நிருத்தம், சந்தோவிசிதி, சோதிடம் என்னும் அங்கம் ஆறும், புராணம், நியாயம், மீமாஞ்சை மிருதி என்னும் உபாங்கம் நான்கும், ஆயுள்வேதம், தனுர்வேதம், காந்தருவவேதம், அருத்தவேதம் என்னும் இவைகளும் ஆம். இவற்றுள் வேதநான்கும் பிரமகாண்டமும் கருமகாண்டமும் உணர்த்துவனவாம். சிவாகமங்களும் பிரமகாண்டமாய் அடங்கும் என்ப.

இப்பதினெண் வித்தைகளுக்கும் சிவபெருமானே கருத்தா என்பது,

"சகல வித்தைகளுக்கும் கர்த்தா ஈசானர்" எனச் சுருதியும்

"வேதநான்கும் பதினெட்டொடாதும் விரித்தார்க்கிடம் பங்கயில் பதினெட்டொடு நான்குங் குணர்வுமா யங்க மாதுஞ் சொன்னா னுமையாளுடை யையனே" எனத் தேவாரமும்,

"எக்கலைக்கும் பூதங்களெவற்றினுக்குப் பிரமனுக்குமீசானென்னத் தக்கமுதல்பரப்பிரமஞ்சதாசிவனே யெனவேதஞ்சாற்றும்..." எனப் புராணமும் கூறுவதனால் உணரப்படும்.

Page 5

— 2 — வேதமாகிய புருஷனுக்கு சிக்ஷை மூக்கும், வியாகரணம் முகமும், கற்பம் கையும், நிருத்தம் காதும், சந்தோவிசிதி பாதமும், சோதிடம் கண்ணும் என்று சொல்லப்படும். "வசையில்புகழ் வயங்குவெண்மீன் றிசைதிரிந்து தெற்கேகினும்" (பட்டினப்பாலை.) "விளங்கும் வெள்ளி சோதிக் கிறையாயுறு மெல்லையிற் சூல்கொண் மேக மூதக்க பாரிற் சொரிந்தென்ன" (கந்தபுராணம்.) "அருக்கன்முதற் கோளனைத்து மழகியவுச் சங்களில் பெருக்கவலி யுடனெிற்கப் பேணியநல் லோரையெழுந் திருக்கினரு மாதினராட் டிசைவிளங்கப் பரசமயத் தருக்கொழியச் சைவமுதல் வைதிகமுந் தழைத்தோங்க" (பெரியபுராணம்.)

என்பன முதலியனவாகச் சங்கஇலக்கியம் புராணம், திருமுறை முதலியனவற்றினெல்லாம் சோதிடப்பொருள்கள் வருகின்றன. இவற்றின் உண்மைப்பொருளை உணர்ந்துகோடற்குச் சோதிட ஞானம் இன்றியமையாது வேண்டப்படும். இவைமுதலிய சிறப்புக்களினாலே, சோதிடக்கலையின் மாட்சி தெற்றெனப் புலப்படுகின்றது.

அரும்பொருட்களையுணர்வும், நிரம்பெறு புத்தியும் நிரம்பப்பெற்ற பெரியோர் பலர் பற்பல சோதிடநூல்களை ஆரியத்தினின்று செந்தமிழில் மொழிபெயர்த்துத் தந்தார்கள். அந்தநூல்கள் சிலவற்றினின்றும் நூற்றின்மிக்க பாட்டுக்களை ஒருங்குதிரட்டி, சந்தானமணி எனப் பெயர்தந்து, ஓர் உரையோடு வெளியிட்டார் அச்சுவேலி ஸ்ரீமத். செ. சபாபதிச்சோதிடராவர். இந்நூலின்கண்ணே, பெண்கள் ருதுவாகுங்காலம், கருப்ப உற்பத்தி காலம், பிரசவகாலம் முதலிய விஷயங்கள் எல்லாம் தெளிவாகக் காணப்படுகின்றன.

இந்தச்சிறந்த சந்தானமணி என்றும் நின்று நிலவும்வண்ணம் சிவபெருமான் திருவருள்புரிக.

ஸ்ரீமத். வே. கணபதிப்பிள்ளை, பண்டிதர். (அல்வாய், தற்காலம் அச்சுவேலிதெற்கு.)

கண்ணகன் ஞாலத்துவைகும் மக்கள் தத்தம் வாழ்க்கைத் துணையாக மடவாரையமைந்து இல்லறம்பூண்டொழுகுவது நன்மக்களைப் பெற்றின்புறற்கேயாம். அங்ஙனம் நன்மக்களைப்பெறுதற்கு இல்லறநெறிநிற்குந் தலைமக்களது ஒழுக்காற்றின் சீரியவியல்பு இன்றியமையாததாகின்றது. அவ்வியல்புகளாவன: பூப்புக்காலத்துப் பெண்களைத்தீண்டாமை, விரதகாலத்திற் சேராமை, பகற்காலத்திற்சேராமை, நன்னாளு மோரையும் நோக்கிச் சேர்தல் முதலியனவாம்.

இவ்வியல்புகளையும் இவற்றிற்கின்றியமையாத பிறவியல்புகளையுஞ் செறித்துத் தான் இதுகாறும் நூல்களைக்கற்று, நுண்ணிதினாராய்ந்துணர்ந்து கொண்டதன்பயனாக சந்தானதர்ப்பணமெனத் தகுந்த இந்நூலைச் சந்தானமணியென்னும் பெயருடன் கைம்மாறுகருதாது உலகுக்குவந்தளித்த இந்நூலாக்கியோனாகிய ஸ்ரீமத். செகநாதன் சபாபதிச்சோதிடரின் உணர்ச்சி மிகவும் பாராட்டப்படத்தக்கது. இவரின்றாதை, மூதாதை முதலியோருஞ் சோதிடவுணர்ச்சியிற் கைவந்தாரென்பதனை இவர்செய்த இந்நூலே வெள்ளிதிற் புலப்படுத்துகின்றது. இது ஆண்பெண்ணாகிய இருபாலார்க்கும் அவசியம் வேண்டற்பாலதொன்றாதலால், ஒவ்வொருவரில்லங்கட்கும் இன்றியமையாததாகின்றது. ஆதலால் குற்றங்கள் விரவியிருப்பினும் அன்னம் நீரைப்பிரித்து விட்டுப் பாலையுட்கொண்டு களிக்குமாறுபோல, குற்றங்களை நீக்கிக் குணங்களைப்பாராட்டி ஏற்றுக்கொள்ளுதல் ஆன்றோர்கடனாம்.

Page 6

விஷய அட்டவணை

விஷயம். பக்கம். | விஷயம். பக்கம். காப்பு ... க | அலிசென்மம்... ... ஙச பெண்கள் ருதுவாகுங்காலம் ... எ | புத்திரதோஷம் ... சங கருப்பஉற்பத்திகாலம் ... எ | முகூர்த்தசுபாசுபவிளக்கம் ... ருச ஸ்திரீபுருஷசங்கமம் ... அ | வர்ஷசுபாசுபம் ... சுக கர்ப்பசம்பவகாலம் ... க | முக்குணவேளை ... எO கர்ப்போற்பத்திமுதற் சென்ன மனவுமுண்டாகுரங்கம் ... கஉ | சுவகுணவேளை ... எக திதிவிளக்கம் ... எங ஆண்பெண் கிரகநிலை ... கஉ | யோகநாமங்கள் ... எரு கர்ப்பச்சிதைவு ... கங | காரணசுபாசுபம் ... எரு கர்ப்பமுதல்மாதாதிபதி ... கச | நட்சத்திரசுபாசுபம் ... எசு இரண்டுமூன்றாம்மாதாதிபதி ... கச | நாசயோகம் ... எசு நாலைந்தாறாம்மாதாதிபதி... ... கஎ | கிழமை பிறந்தநட்சத்திரம் ... எசு ஏழாம்மாதாதிபதி ... கஅ | மாததினம் ... அ0 எட்டாம்மாதாதிபதி ... கஅ | கர்ப்பாதானத்துக்கு நாள் ... அக ஒன்பதாம்பத்தாம்மாதாதிபதி ... கக | அச்சுவினிமுதல் ஜனனநாளின் சுபாசுபநட்சத்திரங்கள் ... அச கர்ப்பாரிட்டமும், சுகமும் பிரசவகாலம் ... உ0 தம்பதிகளுக்கன்யோன்யமான நட்சத்திரங்கள் ... கரு மாதாப்பிணி ... உஉ | கர்ப்பாதானத்துக்கு அத்திபாவ பிதாப்பிணி ... உங அரிட்டங்கள் ... உச | சியகம் நீக்கவேண்டியன ... கரு சுகப்பிரசவம் ... ஙO | நிஷேகலக்கினமாதியன ... கஅ ஆண்பெண் ... ஙக | கர்ப்பாதானசுபராசிகள் ... கூஅ ஆண் உற்பவம் ... ஙஉ | சுபமுகூர்த்தகிரகநிலை ... கூங பெண் உற்பவம் ... ஙஉ | புட்கரபாதம் ... க00 இரட்டைச்சென்மம் ... ஙகூ | மிருத்துமுகூர்த்தம் ... க0உ பெண்சென்மம் ... ஙங | கர்ப்பம்நிறைந்து பிறத்தல் ... க0ங ஆண்சென்மம் ... ஙங

காப்பு

1

வேத சிகையும் விரிதலையும் மெய்யன்பர் போதமும்போய்த் தீண்டாத பூரணமே - பேதமற வந்தென்னைக் கூடுகொள் வாழுஞ்சந் தானமணி சந்தமுறச் செந்தமிழே தா.

திருநாவுக்கரசு நாயனார் தேவாரம்

2

குருகாம்வயிரமாங்கூறாங்கொள்ளுங்கிழமையாங்கோளேதாமாம், பருகாவமுதமாம்பாலினெய்யாம்பழத்தினிரதமாம்பாட்டிற் பண்ணாம், ஒருகாலுமையாளோர்பாகனுமாமுண்ணின்ற நாவிற்குரையாய்பாங், கருவாயுலகுக்கு முன்னேதோன்றுங்கண்ணாரூரகத்தெந்தையானே.

அகவற்பா

3

மலர்தலை யுலகினில் மக்க ளனைவரும் புலனெடுங் குணராப் போதம நீகமாய் பலதலை மாயா பாசமேய்ப் புணரிநீ ரலையென மொத்துண் டவல மெய்தி நிலவிடு சுகசை தன்னியங் குன்றி மலமக லறிவெனு மாணொளி மங்கிப் பலகலை யறிவுரை பசாச வுரையென அலகிலாத் துன்பவித் தான்செயன் றீரார் சிலபக னீங்கு சிரிப்ப துணரா மூலைமட மாதர்தம் மொய்ம்புகண் டுடைந்து பழுதி மாமறைமொழிப் பஞ்சாங்கம் பாரா

Page 7

2

சூலகதில் விதிவிலக் கொன்றையு முணரார் சிலைமத னாகமந் தழைத்தே யுழைத்த பாலர்கள் பிணியாய்ப் பஞ்சமாய் நெஞ்சிற் சீலம தின்றிச் சிறவாது கால காலமாம் மரபிற் கடுநஞ் சிட்டும் வாலை மங்கையர் மற்றுப் பிணியால் சால வாடிச் சந்ததி மாணாராய் மாலைவார் குழலி மடந்தைய ருலகிற் சாலவும் வரிதாய்த் தரணிவாய்ப் பிணியாய் நிலவுவ தென்னோ நேமி புடைசூ ழுலகினி லுழோ வூழுகற் குயிரேர் சலமெனச் சடமாந் தாழ்வினிற் பாயும் பலதொழிற் பண்பின் பலிப்பே வினைப்பயன் ஆகசெய் தக்க வல்ல செயக்கெடும் ஆக செய்தக்க செய்யாமை யுங்கெடும் ஆவ தழித லான்கால தத்துவன் கால சுபாசுபங் கரைவால் பதியருள் என்ப துறுத்த லிதுநூ லியாவர்க்கும் பொன்பொரு ளாகப் போற்றுதல் கடனே.

உ சிவமயம்.

ஆதார ஆதேய சங்கற்பமாய், தோன்றிமரையுஞ் சாப்கையாய், நிவிர்த்தி பிரவிர்த்தியென்னுங் கிராமமாய், கற்பிக்கப்படும் உலகில் மக்களுக்கு இம்மை மறுமை எழுமைக்கும் உறுதுணையாகிய அறிவே உருவமாகிய உயிரைச் சுவரூபமாய்ப் பரிணமிப்பித்துச் சுகசைதன்யமாய், முத்திக்குவித்தாய், முதற்காரணமான கருவியாய், தக்ஷிணாமூர்த்தியாற் சனகாதி முனீந்திரர் நால்வருக்கு உபதேசிக்கப்பட்டதாயுள்ளது கல்வியே.

கல்விஞானம்—பரோக்ஷம் அபரோக்ஷம் என இருவகையாய்க் கூறப்பட்டுள்ளது. பரோக்ஷம் பரருடைய அறிவால் அறியப்படுவது. சிரவணஞானம் என்றுகூறுவது. அபரோக்ஷம் சிரவணஞானத்துக்கு மேற்பட்ட ஸ்வானுபவஞானம். பரோக்ஷஞானத்தைப் பாஹியமென்றும் ஆப்யந்தரமென்றும் இருபாகமாக்கிக்கூறுவர். ஆப்யந்தரஞானமாவது பிரகிருதிபுருஷஞானம். பாஹியஞானம்: சிக்ஷா கல்பம் வியாகரணம் நிருத்தம் சந்தஸ் ஜ்யோதிஷம் என்ற ஆறு அங்கங்களோடுகூடின நான்கு வேதங்களும் புராணங்களும் நியாயமும் பூர்வமீமாஞ்சாவும் தர்மசாஸ்திரங்களும் ஏனையவுமாம்.

Page 8

சந்தானமணி

1

உலகினில் வாழ்வு பூண்டுளோன் சகல செல்வமுற் றினிதிருந் தாலும், இலகிய மகவை யினிதினீ னாதா னிருமையும் பயன்பெறா னதனால், பலதவம் செய்தும் மகப்பெறல் வேண்டும் பரவுகன் னியர்தமை வேட்டல், நிலவுசந் ததியின் பொருட்டன்றிக் காமப் பொருட்டல்ல வெனமறை நிகழ்த்தும்.

இதன்பொருள்: உலகினில் வாழ்வுபூண்டுளோன்—உலகத்தில் இல்லறத்திற் பிரவேசித்தவரும் பிரவேசிப்பவரும், சகலசெல்வமுற்றினி திருந்தாலும்—அறம்பொருளின்பமாகிய எல்லாச்செல்வங்களையும் பெற்று நல்வாழ்விலமைந்திருப்பினும், இலகிய மகவையினிதீனாதான்— "பெறுமவற்றுள் யாமறிவ தில்லை யறிவறிந்த மக்கட்பே றல்ல பிற" "தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலிற் றோன்றாமை நன்று" "கொச்சை மக்களைப் பெறுதலினக்குடி எச்சமற்றே மாந்திருக்கின்றே" இங்ஙனமாகத் தனக்கும் பிறருக்கும் ஒளியைக்கொடுக்கின்ற மக்கட்பேற்றைப்பெறாதவன், இருமையும் பயன்பெறான் - இம்மை மறுமையாகிய சரீரத்துவமுள்ள சிறந்தயோசனத்தையுடையான், அதனால் இன்றியமையாச் சிறப்புடைமையால், பலதவஞ்செய்தும் மகப்பெறல்வேண்டும்—பூர்வ புண்ணியபலன் இல்லாதகான்கினும் பலபடவேதங்களிலே விதிக்கப்பட்ட சிவ தருமங்களைச்செய்து புத்திரப்பேற்றையுடையவேவேண்டும். பரவுகன்னியர் தமைவேட்டல்—சற்கரும மதிப்பும் துர்க்கரும அவமதிப்பும் அறிந்த சீருடையாரால் துதிக்கப்படும் கற்பிற்சிறந்தபெண்ணை வரிந்து விவாகஞ்செய்தல், நிலவுசந்ததியின் பொருட்டன்றி—சோடசகலைகளைப் பொருந்தி—இருளைத்தாக்கு குளிர்ந்த ஒளியைக்கொடுக்கும் சந்திரனை நிகர்க்கும் பிள்ளைப்பேற்றிற்காகவேயல்லாமல், காமப்பொருட்டல்லவென மறைநிகழ்த்தும்— "போகந்தனக்கல்விபொன்றவருங்காலத்து மாதர்மேல்வைப்பர்மனம்". விதிவிலக்குகளையுணராது காமவசப்பட்டு அவ்விச்சையைத் தீர்த்தற்கல்லவென வேதங்கள்கூறும்.

Page 9

கர்மகாண்டம் ஞானகாண்டம் என இரண்டுபிரிவாய் எங்களுக்குப் போதிக்கும் வேதமாகலின் மறைநிகழ்த்துதலென்றும், திருவருள் பொருந்த வருவினையகலும், எனவே பலதவஞ்செய்தும் மகப்பெறல் வேண்டுமென்றும், காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றும் நாமங்கெடக்கெடுநோய் நிலவுசந்ததியின்பொருட்டன்றிக் காமப்பொருட்டல்ல வென்றுங் கூறினார்.

ஆதலால் அதினு மாண்பெற்று விம்மை மறுமையிற் பலனினி தளிக்கும், காதல்கூர் கின்ற பெண்மக வாயி னிம்மையிற் பலனில்லைக் கருதின், தீதிலா விவாகஞ் செய்தளித் திடுகில் மறுமையிற் திகழ்பலன் சேரும், பேதையர் தம்மைப் பெற்றனமென்று பேதுறல் மிகுபெரும் பிழையே.

இ-ள்: ஆதலால்-கூன் குருடு செவிடு முடம் பேதை பிணி அநுமரணம் ஆயுட்குறைவு மயக்கம் சோம்பல் பொய்மைசோராமையும் அழகு கல்வியறிவொழுக்கம் ஐம்பொறியடக்கம் ஈகை இன்சொல் சீவகாரூண்ணியம் தானம் தருமம் சிவபக்தி தீர்க்காயு சுகம் செல்வம் நிறைந்த மக்களைப்பெறுதல் வேண்டியதாதலாலே, அதினு மாண்பெற்று விம்மை மறுமையிற் பலனினி தளிக்கும்-அவற்றுள் ஆண் பெண் என்னுமிருபாயுள் ஆண்பிள்ளையைப்பெற்றுக்கொண்டால் இம்மையிற்புகழையும் மறுமையிற் பரமுத்தியையும் பெற்றவர்களுக்குத் தவறாதுகொடுக்கும், காதல் கூர்கின்ற பெண்மகவாயின் இம்மையிற் பலனில்லை-விருப்பத்தைப் பலதுறையினுங் கொள்கின்ற பெண்பிள்ளையைப்பெற்றால் இவ்வுலகத்திலே பெற்றவர்களுக்குப் பலனில்லையாம், விவாகஞ்செய்தளித்திடுகில் மறுமையிற் திகழ்பலன்சேரும்-மணஞ்செய்துவைத்தால் மறுமையிலின்பத்தையடையக்கூடிய புண்ணியம்வந்துபொருத்தும், பேதையர் தம்மைப்பெற்றனமென்று பேதுறல் மிகுபெரும் பிழையே-ஆண்மகவாற் பிரயோசனமும் பெண்மகவால் அஃதில்லாமையெனினும், அவன் அவள் அதுவாய்த் தோன்ற அநாதிசங்கற்பமிருத்தலால் பெண்மகவைப் பெற்றுக்கொண்டோமேயென்று பெற்றவர்கள் துன்பங்கொள்ளுவது மிகுதியுங்குற்றமாகும்.

துக்கமுற் றந்தப் பெண்சிறார் தமக்கும் குழுமக் கெற்பங்கள் தனக்கும், விக்கினஞ் செய்யி னளப்பிலாக் காலம் வெய்யபாழ் நரகிடை விழுவர், தொக்கவிக் கதையாற் சோடச மான பெண்சிறார் வந்துதோன் றுகினும், மிக்கநன் மனதிற் களிப்புறல் வேண்டு மென்னநால் வேதமும் விளம்பும்.

இ-ள்: தக்கமுற்று அந்தப் பெண்சிறார் தமக்கும்-காத்தன் முதலியவைகளினால் துன்பமெய்திப் பெண்குழந்தைகளுக்கும், குழுமக்கெற்பங்கள் தனக்கும்-அனுமானவவையால் இக்கர்ப்பம் பெண்சிசுவென்றறிந்து அந்தக்கர்ப்பத்துக்கும், விக்கினஞ்செய்யின் அளப்பிலாக்காலம் வெய்யபாழ் நரகிடைவீழ்வர்-அழியக்கூடிய காரியத்தைச் செய்தவர்கள் அளவில்லாதகாலம் கொடியதுக்கசாகரமான நரகத்திலேவீழ்ந்துவருந்துவார்கள், தொக்கவிக்கதையால்-இங்ஙனம்கூறியவிஷயத்தால், சோடசமான பெண்சிறார் வந்து தோன்றுகினும்-பதினாறு என்னும் கணக்கில் பெண்குழந்தைகள் வந்துபிறக்கினும், மிக்கநன் மனதிற் களிப்புறல் வேண்டும் என்னநால் வேதமும் விளம்பும்-அறிவுமிக்க நல்லமனதிலே களிப்புக்கொள்ளவேண்டுமென்று நாலுவேதங்களும் கூறும்.

இருதுவா மதற்கு முன்னமும் கெற்ப மெய்திய காலத்தும் சுதனைக், கருதியீன் றெடுத்து மாதரு தகந்தான் கலந்திடாதிருக்குமப் போதும், பெருவய தாகி மாதரு தகந்தான் பெட்புறாதிருக்குமப் போதும், ருதுவிடை மாதர் தமையணைந் திடுகி லலியுரு வெடுத்துநைத் துழல்வார்.

இ-ள்: இருதுவாமதற்குமுன்னமும்-மங்கைப்பருவமாகும் ருதுவாகாதபொழுதும், கெற்பமெய்தியகாலத்தும்-உதரத்தில்கெற்பம் நிறைந்தகாலத்தும், அதனைக்கருயீன்றெடுத்து மாதருதகந்தான் கலந்திடாதிருக்குமப்போதும்-பிள்ளையைப்பெற்றுப் பின்னரும் மாதவிடாயானது வருவதற்குமுன்னரும், பெருவயதாகி மாதருதகந்தான் பெட்புறாதிருக்குமப்போதும்-அதிகவயதாய்மாதவிடாய்வாராது விட்டகாலத்தும், ருதுவிடைமாதர்நமை-வீட்டுக்குவிலக்காய் இருக்குமகாலமும், அணைந்திடுகில் அலியுருவெடுத்துநைந்துழல்வார்-இங்ஙனம் விலக்கப்பட்டபருவங்களில் ஸ்திரீசங்கமம்செய்தவர்கள் மறுபிறப்பில், அலியாய்ப்பிறந்தும் இப்பிறப்பில் சுகம் செல்வம் லெட்சுமீகரம் இவைகளையிழந்து வருந்துவார்கள்.

  1. ஓராந்தன்மாதமதிலோங்காளமுண்டாகி
  2. ஈராந்தன்மாதமியாபவும்வருத்தமதாய்
  3. மூவாந்தன்மாதமதில்முன்மயக்கமுண்டாகி
  4. நாலாந்தன்மாதமதில்நாயகனைத்தான்வெறுத்து
  5. ஐந்தாந்தன்மாதமடிவயிறுகுலாவி
  6. ஆறாந்தன்மாதமடிவயி றுதான்கனத்து

Page 10

  1. ஏழாந்தன்மாதமிடைபருத்துத்தொந்தியுதாப்
  2. எட்டாந்தன்மாதமிருந்தெழும்பமாட்டாமல்
  3. ஒன்பதாம்மாதம் உடம்புழைந்துநோவாகி
  4. பத்தாந்தன்மாதமதில் பாலகனைப்பெற்றெடுத்து.

இங்ஙனமாகப் பிள்ளைத்தமிழிற் கூறியபடி நாலாந்தன்மாதமதில் நாயகனைத்தான்வெறுத்தேனவும், இந்நேகேற்பமெய்தியகாலத்தும் மாதர் தமையணைத்திடுகினெலியுருவெடுத்தலைந்துழல்வார் என்பதனாலும், மூன்றுமாதவளவையில் கர்ப்பம் சுரூபமாகுமென்பதனாலும், நாலாம்மாதமுதலாகக் கருப்பவதிடாகும் பெண்ணைச்சங்கமம்செய்தல் பீணி பாவம் கஷ்டம் நேரிடநியாயமாதல் அனுபவத்திலெயக்கிடந்த துணிபாம். (ச)

பாவையர் பூப்பி னிருபுன லாடு நாள் முதற் பன்னிரு நாளுந், தாவிலாக் கெற்ப உற்பத்தி யேகா தசதிர யோதசி தொடார்தினமிரைந்தும், மேவிய விரவில் நன்முகூர்த் தத்தில் வியன்கருப் புகுந்திடு மளவும், நாவலோர் சொன்ன நானதிற் கூடல் நார்புரி கடனென நவில்வர்.

இ-ள்: பாவையர்பூப்பின் இருபுனலாடும் நாள்முதற் பன்னிருநாளும்-பெண்கள்மாதவிடாயாகி ஸ்நானஞ்செய்யக் குறித்த ஐந்தாம்நாள் முதல் பன்னிரண்டுநாளெல்லையாக, தாவிலாக்கெற்ப உற்பத்தியாகும்-குற்றமில்லாத கர்ப்போதயகாலமாகும், பதினூறுதினத்தின்மேல் கர்ப்போற்பத்திக்குணமில்லையேயாகும். அதில்-ஐந்தாம்நாள்முதற் பதினாறாம்நாளெல்லையாகச்சொல்லிய பன்னிரண்டுதினத்துள், ஏகாதசி திரயோதசி தொடார் - மாதவிடாயானதினமுதல் பதினோராம்நாள் பதின்மூன்றாம்நாள் நிந்திதமென்று விளக்குவர். (தினமிரைந்தும்) எஞ்சிய பத்துநாட்களில், மேவியவிரவில் நன்முகூர்த்தத்தில்-பொருந்திய இராகாலத்து பிதாமாதாகులமிவர்கட்கும் உதிக்கும் புத்திரருக்கும் துன்பமகன்று இன்பம்பயப்பதான சுபசோபனமுகூர்த்தகாலத்து, வியன்கருப்புகுந்திடுமளவும்-பெருமைபொருந்திய சற்புத்திரர் உற்பவிப்பதைநினைந்து, நாவலோர்சொன்ன நானதிற்கூடல் நார்புரிகடனென நவில்வார்-காலபுருஷனுதயவிஸ்தாரால் வருஞ்சாபபங்கனையறிந்த வித்துவான்கள் நிச்சயித்த நாள்முகூர்த்தந்தனையோர்ந்தறிந்து தம்மனையானோடு விஷேகித்தல் மக்களின்கடமையாகும். (ரு)

பூத்தநாள் தன்னிற் புணர்ந்திடிற்புருடன் றன்னுடன் பூவையும் பொற்பும், வாய்த்தபுத் திரரும் மரணமாய் நரகத் தெய்துவர் வதியும் பூப் புகுமதி தன்னை, ஆய்தசேய் காணக் கூடிட நிகழு மன்றியே சுக்கிரன் றன்னைப், பார்த்திடக் கூட வருவது மாகும் பாரினில் நிகழ்த்தினர் பலனே.

இ-ள்: பூத்தநாள் நன்னிற்புணர்ந்திடில்-வீட்டுக்குவிலங்காய்க்குறித்ததினங்களில்ஸ்திரீபுருஷசங்கமஞ்சேரில், புருடன்தன்னுடன்மனைவியும் பொற்பும்வாய்த்த புத்திரரும் மரணமாய் நரகத்தெய்துவர்-அங்ஙனம்சேர்ந்துபதிசதியும் அக்காலத்துற்பவித்த குழந்தையும் சிறப்புகளையிழந்து மரணத்துக்காளாகி மறுமையிலும் நரகத்துன்பத்தையடைவர், வதியும் பூப்பு-உலகத்தில் பெண்கள் ருதுவாகவது அன்றிச் சூதகமாவது கருப்பாதானம் செய்வதால் உண்டாகும் சுகதுக்கங்களுக்கு ஆதாரமாயும் புத்திரராகிய ஆதேயத்தை அதிஷ்டித்த இவ்வுடலன்றித் தாகத்தைக்குறிக்கும் நிகழ்ச்சி, உறுமதிதனை-இரண்டேகால் நட்சத்திரத்துக்கொரு ராசியாய் இருந்துபெயரும்சந்திரனை, ஆய்தசெய்காணக்கூடிடநிகழும்-பிரவிடைகட்கும் உற்பத்திக்கும் அநாதிபந்தமுள்ள செவ்வாய் பன்னிரண்டு ராசிகளிலும் சஞ்சரிக்குந்தோறும் தனது நோக்காகிய 1-4-7-8-ல் மதிவரப்பார்க்க பெண்கள் பிரவிடையாவார்கள், அன்றி-அல்லாமல், சுக்கிரன்றன்னை பார்த்திடக்கூடவருவதுமாகும்-வெள்ளியைச் செவ்வாய் தன்பார்வையாகிய 4-7-8-ல் வைத்துநோக்கினும் கூடினும் பெண்கள் பிரவிடையாவார்களென்றுங்கூறும், பாரினில்நிகழ்த்தினர்பலனே-அங்ஙனம் நிகழும் ருது ஆதாரமாக உற்பத்தி கூட்டிடுங்காலமும் பிதாமாதாவும் முதற்காரணம் துணைக்காரண நிமித்தகாரணமாகப் பலபலனை நிச்சயித்துவிடுவர். (௬)

[விதானமாலையிற்கூறியபடி.] பூத்தவந் நாள் முத னான்கும் பொருந்தா புணரினிரை பார்த்த புமான்பெண் மகவு குளிசாம் பண்புடைத்தா மார்த்தப நான்முத லீராறு நன்றென்பர் ரங்கவற்றில் சேர்த்தகு நாட்கெய் புவன்செய்து தாமரைக் கட்டிருவே.

இ-ள்: இருதுவானநாள் முதல் நான்குநாளுங்கேற்பாதானம்பண்ணலாகாது, பண்ணினால் முதனாட்புருஷனுக்கும் இரண்டாம்நாள் பாரிக்கும் மூன்றாம்நாட் கர்ப்பத்திற்கும் நாலாம்நாட் பிறந்துகுழந்தைக்கும் அரிட்டமுண்டாம். ஆகையால் அந்நான்குநாளுங் கர்ப்பாதானம் பண்ணலாகாது. நீராடிச்சுத்தமான ஐந்தாம்நாள் முதல் பன்னிரண்டு நாளளவும் கர்ப்பாதானம்பண்ணப்படும். அதற்காகியநாள் மேற்கொல்லுவன். (எ)

Page 11

மன்னுசூ தகமா யெறிபுன லாடு நாடொதற் பன்னிரு நாளுங், முன்னிய கருப்ப மெய்திடு மளவும் கன்னியைக் கூடிடா திருப்பின், அன்னிய கருப்ப மதித்தலன் புகுத்தும் நரகறும் ஒற் றைநா ளணையிற், பெண்ணுறு மிரட்டை யானநா ளணையிற் பிறங் குறப் பிறக்குமாண் பிள்ளையே.

இ-ள்: மன்னுசூதகமாயெறிபுனலாடுநாண் முதற்பன்னிருநாளுந்- ஜேனித்தற்கேதுவாக நிலவுபெற்றபூப்புண்டாகி ஸ்நானஞ்செய்யக்குறித் த ஐந்தாம்நாண்முதல் பன்னிரண்டுநாட்களில், முன்னியகருப்பமெய்தி டும்- தமது கல்வியறிவு தெய்வபக்தி ஒழுக்கம் பொறுமை காரணகாரிய வேறுபாடுகளை உற்றுணருமுணர்வு, காலநிலை, பூர்வபுண்ணியம், இவைக் கேற்பற்காலம் உத்தேசித்தபிரகாரம் புத்திரோற்பத்திசம்பவிக்கும், அள வுங்கன்னியைக் கூடிடாதிருப்பின் - இல்வாழ்வான் சற்புத்திரோற்பத்தி காலத்தையுணர்ந்து தனதுமனைவாளைக்கூடாதொழியின் மறுமையில், அன்னிய கருப்பமதித்தலன் புகுத்தும் நரகறும் - நன்னெறியினின்றும் நீங்கி நிகழுங் கல்வியினோர்மாதாவுகரத்ததித்து இகழ்ச்சியைச்சுமந்து வருந்தியிறந்து நரகத்தில்விழும், ஒற்றைநாளணையிற்பெண்ணுறும் - மேற் கூறியபடி 5-6-7-8-9-10-11-12-13-14-15-16 -எனச் சொல்லப்பட்ட தினங்களில்-5-7-9-11-13-15 என்ற ஒற்றித்த நாட்களில் கர்ப்பதான மென்னில், பெண்குழந்தையே தோன்றும்- இரட்டையானானையிற்பிறங் குறப்பிறக்குமாண்பிள்ளையே - 6-8-10-12-14-16 - என்னுமிரட்டித்தநாட் களில் கர்ப்போதய மாகில் ஆண்குழந்தை உதிக்கும்.

மன்னுசூதகமாயெறிபுனலாடுநாண்முதற் பன்னிருநாள் என்பத ற்கு:--பூப்படைந்தமாதர் ஸ்நானஞ்செய்தல் நாலாநாளென்றும் நாலாம் நாளே முதன்நாளாக கொள்ளவேண்டுமென்றும் கூறுவாருமுளர். அங்ங னங்கூறுமிடத்து, பூத்ததினமுதல் 16 தினம் கர்ப்பமருந்தினமென் றும்விதித்தால், இடைநின்றநாட்கள் பதின்கூன்றாகும்; ஆகவே-பன்னி ருநாளென்னும்பாடம் கபாடபந்தனமாகின்றது; பின்னையென்னையெ னில் ஆசௌசவிதியில்,

சேயிழை நாபிச் சேசனம் பண்ணிச் செழும்புனல் ஆட்டென் முன்னும் மாய்தரு பிரோதந் தனைக்குளிப் பாட்டி வைத்தலல் கரிப்பதன் முன்னும் ஆயிழை மடவார் பூப்புறின் காலு தினமகன் றிரும்புன லதனில் தோய்த்ததன் பின்னு முதிரநீர் படினும் சூதக மில்லையென் றுரைப்பாம்.

குறிப்பு: ஆயிழைமடவார் பூப்புறின் நாலுதினமகன்று இரும் புனலதனிற்றோய-ஒன்றிரண்டுகூன்று நாலுதினங்கழிந்து ஐந்தாந்தி

னமே ஸ்நானம்பண்ண விதித்திருப்பதால், மன்னுசூதகமாயெறிபுனலா டுநாளென்பதற்கு, பூப்பார் தினமுதல் ஸ்நானம்செய்பவிதித்த ஐந்தாம் நாள்முதலெனப் பொருள்கோடலே நூற்றணிபாமென்ப.

ஒற்றைநாளணையிற் பெண்ணுறும் இரட்டையானாளையிற் பிறங் குறப் பிறக்குமாண் - என்றமையானே இவ்வொருவிதி மாத்திரந்தானே பெண், ஆண், என்றநிச்சயமமையாமைக்கு வேறேறுவிதியும் மேற் கூறப்படுமென்பதை யறியவேண்டியது. (அ)

பெண்களிருதுவாகுங்காலம்.

பாரதிற் கருப்பா தானம் பண்ணிடுங் காலிற் றோன்றும் நீரழுஞ் சுகத்துக் கங்கள் சேடியர் தங்க ளுக்குத் தூரமும் மாத மாதஞ் சுரோணிதந் தனக்கு நாதன் ஆரலும் மதியைக் காண வரிவையு மிருது வாவாள்.

இ-ள்: சேடியர்தங்களுக்குப்பாரதில்- உலகத்திலுள்ள ஸ்தி ரீகள் யாவர்க்கும், கருப்பாதானம் பண்ணிடுங்காலிற்றோன்றும் தூரமும் நீரழும் சுகதுக்கங்கள்- கருப்பாதானஞ்செய்வதினாலுண்டாகும் சுகதுக்க ங்களுக்கு ருதுவாவது ஆதாரமாசியதாம், மாதாமாதஞ் சுரோணிதந்த னக்குநாதன்மை- மாதாமாதம் தோன்றும் பிறவிடட்கு அதிபதி சந்தி ரன், ஆரலுங்காண அரிவையுமிருதுவாவாள் - செவ்வாயொன்று நான்கு ஏழு எட்டு என்னுந்தானத்தில் மதியைவைத்துப்பார்க்கப் பெண்கள் பூப் படைவார்கள். இஃது முன் ஆறாஞ்செய்யுளில் தெளிவாகக் காட்டியிருப் பதினாலுமுணர்க. (க)

கருப்ப உற்பத்திக்காலம்.

இருதிலாப் பெண்க ளுக்கு மியம்பிடு முதியோ ருக்கும் அரிவையில் மலடி நீக்கி யழகுறு மங்கைக் கீராறும் மறுசென்ம மிரண்டு நாலு மைக்குமே லெட்டொன் பானில் உறுமதி தனைச்சேய் நோக்க உற்பத்தி சூலின் காலம்.

இ-ள்: இருதிலாப்பெண்களுக்கு மியம்பிடு முதியோருக்கும் அரிவையில் மலடிநீக்கி- ருதுவாகாதவர்கள் வயது முதிர்ந்தவர்கள்பெண் மலடு இவர்களீநீங்கிய, அழகுறுமங்கைக்கு - மேற்கூறியசார்மில்லாத சிறந்த ஸ்திரீகளுக்கு, ஈராறும் சென்மம் இரண்டு நாலும் ஐந்துமேலும் எட்டு ஒன்பானில், உறுமதிதனை- அவ்வாறது பிறந்தநட்சத்திரஇரா சிக்குப் பன்னிரண்டு ஒன்ற இரண்டு நான்கு ஐந்து ஏழு எட்டு ஒன்பது

Page 12

சந்தானமணி

40

இத்தானமொன்றில் சந்திரன்வர, சேய்பார்க்க - செவ்வாய்பார்க்க, உற்பத்திகுலின் காலம் - கர்ப்பாதானம் நேரில் கருப்பஉற்பத்திக்கு ஏதுவான காலம் என்று பாதராயண சாராவளியிற் கூறப்பட்டுள்ளது. செவ்வாய் அவ்வப்போதுநிற்கும் இராசியிலிருந்து நாலு ஏழு எட்டைப் பார்ப்பர் எனக்காண்க. (40)

ஸ்திரீபுருஷசங்கமம்

காலத்திற் புருட னுக்கே கருதிடு முபஜெ யத்தில் பாலொத்த நிலவே நிற்கப் பசும்பொன்னன் மதியைக் காணச் சேலொத்த விழியாள் தானும் சேருவாள் புருடன் றன்னைத் தாலத்தில் மாறு பட்டால் சம்போக மிருபேர்க் கில்லை.

இ-ள்: காலத்திற் புருடனுக்கே கருதிடு முபசெயத்தில் பாலொத்த நிலவேநிற்க-ரிகழ்காலமொன்றிலே நாயகன் பிறந்த நட்சத்திர ராசிக்கு உபஜெயஸ்தானமென்னப்பட்ட மூன்று ஆறு பத்து பதினொன்றிற் சந்திரன்வர, மதியைப் பசும்பொன்னன் காண-சந்திரனை வியாழன் அவ்வப்போது நிற்கும் இராசியிலிருந்து தன்பார்வையாகிய ஐந்து ஒன்பதாமிடத்தேவைத்துப்பார்ப்பார், சேலொத்தவிழியாள் தானுஞ் சேருவாள் புருடன்றன்னை - இரண்டாஞ்செய்யுளுரையிற் கூறியபடியான குணசகிதமான பெண் பத்தாவோடு இன்புற்றுக் கூடுவொன், கூடுங்கால் புத்திரோற்பத்தி நிச்சயம், தாலத்தில் மாறுபட்டால் சம்போக மிருபேர்க்கில்லை - இங்ஙனம் கிரகரீதியில்லாதொழிந்தால் இஷ்டமான சங்கமமுமில்லை, புத்திரோற்பத்தியுமில்லையென்பதாம்.

ஆகவே, நெடுங்காலஞ் சந்தானச்சிறப்பில்லாது துக்கமுறும் இல்வாழ்வார், 2ம் 3ம் செய்யுள்விதியை அனுசரித்துகூடப்பின் மகப்பேற்றைத் தவறாது பெறுவர்.

கிரகபார்வை: சூரியன்-சந்திரன்-புதன்-வெள்ளி-இவர்கள் பஞ்சாங்கப்படி அவ்வப்போதுநிற்கின்ற இராசியிலிருந்து ஏழாமிடத்தைப் பார்ப்பார்கள் - செவ்வாய் அவ்வப்போது நிற்கின்ற இராசியிலிருந்து நாலு ஏழு எட்டாமிடத்தையும், 4-7-8லிருந்தவரையும் பார்ப்பர். வியாழன் அவ்வப்போது நிற்கின்ற இராசியிலிருந்து ஏழு ஒந்தொன்பதாமி ராசியையும், 5-7-9ல் இருப்பவரையும்பார்ப்பர். சனி அவ்வப்போது நிற்கின்ற இராசியிலிருந்து மூன்று ஏழு பத்தையும், 3-7-10 லிருந்தவரையும் பார்ப்பர். இராகுகேது அவ்வப்போது நிற்கின்ற இராசியிலிருந்து மூன்று ஏழு பதினொன்றாமிடந்தையும், 3-7-11லிருப்பவரையும் பார்ப்பர்.

கர்ப்பசம்பவகாலம்

பார்ப்பரே ரெல்லாரும் பங்கொருமூன் றாமிடம்பத் தார்ப்புறு சேய் நாலெட்டாசானைந்-தோர்கவழும் கேதுக் கிராகுவுக்கும் சேட்குமூன் றும்பன்னொன் றேதமிலான் றென்றேநீ யெண்.

(தாற்பரியம்) பங்கு-சனி, சேய்-செவ்வாய், ஆசான்-வியாழன்.

சேருமா தான காலந் திகழ்பிர சனகா லத்தில் கூருமா தவனுக் திங்கள் குசுனொடு புகரோன்றானும் தேருதன் சுயசு வாம்சம் சென்றிருப் பாரே யாகில் சீருடன் கர்ப்போற் பத்தி செய்யிய சாலந் தானே.

இ-ள்: சேருமாதான காலம்-கர்ப்பமானதுலயிக்கும் கலவியில், கூருமாதவனுந்திங்கள் குசுனொடு புகரோன்றானும்-சீவ அதிபதியாகிய சூரியனும் மனத்துக்கதிபதியாகிய சந்திரனும் சுக்கில சுரோணித நாதனாகிய செவ்வாய் வெள்ளியும், தேருதன் சுயசுவாம்சம் சென்றிருப்பாரேயாகில்-பஞ்சாங்கப்படி இராசிநிலையிலே ஆட்சிஉச்சம்பெற்றும் நட்சத்திரபாதரீதியாய்த் தத்தம் உச்சாட்சியம்சத்திலுமிருந்தால், சீருடன் கர்ப்போற்பத்தி செய்யியகாலந்தானே-சற்புத்திரர் உற்பவிக்கும் கர்ப்போற்பத்திகாலமாகும். பிரசனகாலத்தில் திகழ்-பிரசவகாலத்தில்லும் சூரியன் சந்திரன் செவ்வாய் வெள்ளி மேற்கூறியவிதம் நின்றாலும் சுகப்பிரஸவமும் சுசுபுத்திரருமாகும்.

ஆகவே சூரியன்: மேடம் சிங்கம் தனு மீனம் இவற்றொன்றில் நிற்பினும், அன்றி, மேட சிங்க தனு அம்சம்பெற்றாலும், எனவே சித்திரை ஆவணி மார்கழி பங்குனி உத்தராயண சூரியன் என்றபடி இரவிக்குச் சுபசங்கமம் கூறியபடியை நுனித்தறிந்தெரிந்தும், அச்சுவினி முதல் 27 நட்சத்திரத்திலும் சூரியன் சஞ்சரிக்குந்தோறும் ஒவ்வொரு நட்சத்திரத்தின் முதற்காலிலும், அச்சுவினி பரணி கார்த்திகை என்றபடி திருதியை காலாக 27 நட்சத்திரத்தில் ஒன்பதுகூறாகும் ஒவ்வொரு மூன்று நட்சத்திரத்திலும் மூன்றாவது நட்சத்திரக் கடைக்காலிலும் சூரியன் சுபராசி சுபாம்சம் உச்சம் ஆட்சி நட்பு மூலத்திரிகோணபெலம் பெறுவர். அங்ஙனந் திருதியை கூறாகிய ஒவ்வொருகூற்றிலும் 2ம் நட்சத்திரத்து 3ம் 4ம் பாதத்திலும் 3ம் நட்சத்திரத்து 2ம் 3ம் பாதத்திலும் சூரியன் நடக்காலம் மேற்கூறிய சுபநிலைக்குச் சமமான துன்பத்தை உண்டாக்க ஏதுவாவர். மற்றுள்ளவை சமம்.

Page 13

சந்தானமணி. சு0 சந்திரன்: இராசி ஒன்றுக்கு இரண்டேகால் நட்சத்திரமும், அதாவது அச்சுவினி பரணி கார்த்திகை முதற்கால் 9 பாதம் மேடத்திலும், மற்றொன்பதுகால் இடபத்திலும், இவ்விதமே 27 நட்சத்திரம் 108-க்கால் 12 இராசியிலும் நடப்பர். அச்சுவினிமுதலான 27 நட்சத்திரங்களையும் மும்மூன்றாய் வகுக்க ஒவ்வொருகூற்றிலும் முதல் நட்சத்திரத்து 2ம் 4ம் பாதத்தில் சந்திரன்வர உச்சாட்சியம்சம் பெறுவர் என்பதை தெரிந்தும்,

செவ்வாய்: அச்சுவினிமுதல் 27 நட்சத்திரத்தை மும்மூன்றாய் வகுக்க 9 பாகமாகும். இந்த ஒவ்வொரு மூன்று நட்சத்திரத்திலும் முதல் நட்சத்திரத்து முதற்காலும் இரண்டாம் நட்சத்திரத்து நாலாங்காலும் மூன்றாம் நட்சத்திரத்து இரண்டாங்காலும் ஆட்சியுச்சாம்சம் பெறுவரென்பதையறிக. அன்றி, மேடம் விருச்சிகம் மகரம் இம்மூன்றிராசியும் செவ்வாய்க்கு ஆட்சியுச்சஸ்தானநிலை மேற்கூறியபிரகாரம் பெலநிலை. சுபமென்ப.

வெள்ளி: அச்சுவினிமுதல் 27 நட்சத்திரத்தையும் மும்மூன்றாய் வகுக்க 9 கூறாகும். இவற்றிலொவ்வொரு கூற்றினும் முதல்நட்சத்திரத்து 2ம்பாதமும், இரண்டாம் நட்சத்திரத்து 2ம்பாதமும், மூன்றாம் நட்சத்திரத்து 4ம்பாதமும், ஆட்சியுச்ச அம்சம்பெறுவர். அன்றி, இடபந்துலாம் மீனம் இவற்றில் நிற்பினும் வெள்ளி ஆட்சியுச்சபராம். இவைகளைத் திட்பநுட்பமாய்ராய்ந்தறிந்தும். (கஉ)

12

செப்பிடு மிரவி திங்கள் சேய்புக ரிவர்க டாமும் ஒப்பிடு சுயந வாம்ச முற்றுனும் புருட னுக்குத் தப்பிலா உபசெ யத்தில் தரணியும் வெள்ளி நின்றால் இப்புவி மடவா ருக்கு எழில்கர்ப்போற் பத்தி தானே.

இ-ள்: செப்பிடு மிரவி திங்கள் சேய்புக ரிவர்க டாமும் ஒப்பிடு சுயநவாம்சமுற்றுனும்-மேலேகூறிய சூரியன் சந்திரன் செவ்வாய் வெள்ளி இவர்நால்வரும் சுயராசி சுவாம்சம் பெற்றிருப்பினும், அன்றி, புருஷனுக்குத் தப்பிலா உபசெயத்தில் தரணியும் வெள்ளி நின்றால்-நாயகனது சென்மஇராசிக்கு உபசெயமென்று சொல்லப்பட்ட மூன்று ஆறு பத்து பதினொன்றாமிடத்தில் சூரியன் வெள்ளிஇருக்க சங்கமம்கேழின்-இப்புவி மடவாருக்கு எழில் கர்ப்போற்பத்திதானே இப்புமியின்கண் பெண்களின்உதரத்தே கர்ப்பமமையும். உபசெயம ஜாதகத்திற்குரித்தரஇராசிக்கு 3-6-10-11, தரணி-சூரியன், உபஜெயம்-மேடஇராசியிற் சென்மமானவருக்கு மிதுனம் கன்னி மகரம் கும்பம் இவ்விதமே இடபத்துக்கு கடகம் துலாம் கும்பம் மீனமாகக்காண்க. (கஉ)

13

பத்தினி மடவா ருக்குப் பகருப செயத்திற் செவ்வாய் சுத்தநன் மதியோன் றானும் சுயநவாம் சையிலி ருக்க வித்தகிக் குறுங் கொள்வாள் வேந்தனைந் தொன்பா னேற அத்தினால் கற்ப மாவா னறிந்திடா யவனி மீதே.

இ-ள்: பத்தினி மடகாருக்கு-என்ற முதலிரண்டுவரியினுரை பெண்ணினது ஜாதகப்படியான சென்மராசிக்கு மூன்று ஆறு பத்து பதினொன்று என்ற உபசெயஸ்தானத்தில் செவ்வாய் சந்திரனிருந்து சுவாம்சநிலையில் செவ்வாய் சந்திரன் உச்சாட்சியம்சத்தே இருப்பாரானால், வித்தகிகுருங்கொள்வாள்-ஸ்திரீகர்ப்பமாவாள், வேந்தனைந்தொன்பானேற- அல்லாமலும் ஜாதகியின் சென்மராசிக்கு ஐந்தொன்பதில் வியாழன் சோசரத்தில் வந்திருக்க, அத்தினாங்கற்பமாவாள்-அக்காலங்காயினும் கருப்பவுற்பத்தியாகும், அறிந்திடாயவனிமீதே-சாஸ்திரப்பிரமாணத்தை அனுபவித்தல் நீ உலகில்கண்டறிகுதி.

இப்படியேசொல்லப்பட்ட கருப்பசம்பவயோகத்திற்கு வீரியவீனமான ஸ்திரீபுருஷர்களுக்கு தொழிற்படுத்தல் இல்பொருளானமையால் கருப்பம் உண்டாதல் கூடாதெனவறிக. புருஷரிடத்து ஐம்பத்தாறுநாளுக்குமேல் தங்கிப் பக்குவமடைந்த விந்தே வித்தார்தன்மையுடையதெனச் சிலர்கொள்கையாகும். (க௩)

14

வெய்யோன் மதிசேய்புகர் தத்தம் காலின் விளங்கிநிற்க வைய வுயிர்க்காந்தி னொன்பதிற் சீவ னமர்ந்து நிற்கப் பெய்த கருப்பம் வளருமன் றாண்பிள்ளை யாமடைற் பையர வல்குலால் வாய்பலி யாதெனப் பன்னினாரே.

இ-ள்: சூரியனும் சந்திரனும் செவ்வாயும் வெள்ளியும் தத்தம் மம்சம் அதாவது சிங்கமேடம் கர்க்கடக இடபம் மேட விருச்சிகமகரம் இடபதுலாமீனமென்ற இராசியம்சம்பெறக் கர்ப்பாதான இலக்கினத்திற்கு ஐந்தொன்பாமிடத்தே வியாழன்இருக்க, கர்ப்பாதானம்பண்ணினால் அக்கர்ப்பம் பூரணமாகவளர்ந்து ஆண்பிள்ளையாகத்தோன்றும். இந்த யோகம் மலடியாளன்தீரியிடத்துப் பயன்படாது. (கச)

Page 14

கர்ப்போற்பத்தி முதற் செனனமளவுமுண்டாகுமங்கம்.

கஅ

செறிவுறுநீ ராந்திரளு முளைபெறு மென்புசேருங் குறியுறு தோலா மயிரூதிக் குங்கூறு மார்வமுட னறிவுறுந் தாக மசையு மவனி பிடைப்பிறக்கும் நெறியுறு மாத நிறையறி நல்ல நிறைவனையே.

இ-ள்: கர்ப்பமானது - முதன்மாதம் தாமரையிற்பட்ட நீர்போலிருக்கும். இரண்டாம்மாதமொரு கட்டியாம். மூன்றாம்மாதம் அங்கங்கள் முளைக்கும். நாலாம்மாதம் அஸ்திபற்றும். ஐந்தாம்மாதந் தோல்பற்றும். ஆறாம்மாதம் ரோமம்முளைக்கும். ஏழாம்மாதமறிவண்டாம். எட்டாம்மாதம் பசிதாகமுண்டாம். ஒன்பதாம்மாதம் அசைந்து பெயர்ந்து கிலேசம் உண்டாம். பத்தாம்மாதம் பூமியிற்பிறக்கும் எ-று.

கர்ப்போற்பத்தி முதற் செனனமளவுமுண்டாகுமங்கம்.

கஎ

திங்கட் கொருவர் புகர்குசன் சீவன் செழுங்கதிரோ னங்கண் மதிசனி மாலுக னாதிப ரம்புலியும் வெங்கட் சுடரு முறையினிற் காப்பரென் மிக்கதீக்கோள் பங்கப் படுமுயி ரால்வருங் காலம் பயமென்பரே.

இ-ள்: முன்புசொன்னமாதங்களுக்கு வெள்ளி செவ்வாய்வியாழன் ஆதித்தியன் சந்திரன் சனி புதன் கர்ப்பாதானஇலக்கினாதிபதி சந்திரன் சூரியன் அடைவே மாதாதிபர்களாய் அந்தக்கர்ப்பத்தை யிரட்சிப்பார்கள். இவர்கள் யாராவது ஒருபாபக்கிரகத்தால் பீடைப்படும்போது கர்ப்பமும் பீடைப்படும்.

ஆண் பெண் கிரக நிலை.

கஅ

ஒற்றை யிராசியி லாணங் சகமுத யங்கதிர்பொன் பெற்ற மதியுறி லான்சம வோரையிற் பெண்ணங்கசந் துற்றிவர் நின்றிடில் பெண்சனி யெட்சியிற் கொற்றையிவ்லி னிற்புற லான்பெண் சமத்திற் புகர்மதி சேய்நிற்கிலே.

இ-ள்: புருஷராசியாகிய மேடம் மிதுனம் சிங்கம் துலாம் தனுசுகும்பமென்ற இராசியிலும் இவ்விராசி யம்சத்திலும் சூரியன் வியாழன் சந்திரன்முதலியோர் நிற்க கர்ப்பாதானமாயின் அக்கர்ப்பம் ஆண்பிள்ளையாம். இப்படிச்சொல்லிய கிரகங்கள்பெண்டிராசியான இடபம் கற்கடகம் கன்னி விருச்சிகம் மீனமென்ற இராசியிலும் இவ்விராசியம்சத்திலும் நின்றால், கர்ப்பாதானமாயினாக்கர்ப்பம் பெண்பிள்ளையாகும். உதயத்துக் கொற்றித்தவிராசியிற் சனிகின்றாலான்கார்ப்பம். இரட்டையிராசியிற் சனிநிற்கிற் பெண்ணாம். உதயத்துக்கு இரண்டு நாலு என்ற எண்ணின்படி இரட்டித்ததானங்களில் வெள்ளி சந்திரன் செவ்வாய் நிற்கிற் பெண்ணாம். ஒன்று மூன்றென்ற எண்ணின்படி ஒற்றித்தவிராசியில் இவர்கள்நிற்கிலாணாகும்.

கர்ப்பச்சிதைவு.

ககூ

சொல்லுயிர்க் கைந்தின் மதிசுட ரேழினிற் சங்கன்றூன்றி னல்கிற் கருப்ப மிலைமதி நட்புச்ச மெய்தினன்றாம் சிந்தினஞ் சென்று கெடும்பகை நீசஞ் சிதைந்துகெடும் வல்லுட னாட்சி வயிற்றி னெடுக்காலம் வாழ்வதுமே.

இ-ள்: கர்ப்பாதானலக்கினத்துக்கு ஐந்தாமிடஞ் சந்திரனும் ஏழாமிடம் சூரியனும் மூன்றாமிடஞ் சுக்கிரனும் நிற்பில் கர்ப்பந்தங்காது. சந்திரன் பெலவானாய் நட்புச்சம்பெற்றுநிற்கில் கர்ப்பமொரு குறைவின்றியேவளரும். சந்திரன் பெலவீனனாய்ச் சமகேந்திரத்துநின்றால் கர்ப்பமுருகுபாகிரித்து சிலநாளிலேகெடும். சந்திரன் நீசத்துநின்றால் கர்ப்பநாசம். சந்திரன் பெலமாயாட்சியில் நின்றால் உதரத்தில் நெடுங்காலமிருக்கும்.

கர்ப்பச்சிதைவு.

உ0

குறைமதி தன்காலிற் சேய்சனி கூடி யுதயமுறில் பொறைதரு பிள்ளை பிறக்குமுன் னைசாம் பொற்கதிரோ னுறைதரு காலி லவனுரை யுற்றிட வுன்னதிக்கோள் கறைகொண்டு நோக்கிடிற் றந்தைமுன் சாமென் கனங்குழையே.

இ-ள்: அபரபக்கத்துச்சந்திரனுடைய அங்கிசத்துச் செவ்வாய் சனியுடன்கூடியதுவே யிலக்கினமாகிற் பிள்ளைபிறப்பதன்முன் மாதா மரிக்கும். ஆதித்தியாங்கிசத்துச் சிங்கவிலக்கனம் கர்ப்பாதான இலக்கனமாகச் செவ்வாய் சனி ராகு கேது கூடினும் நோக்கினும் பிள்ளைபிறப்பதன்முன்னே பிதாமரிக்கும்.

கர்ப்பச்சிதைவு.

தற்காலத்து திருஷ்டிப்பிரமாணமாயறியக்கூடாத அதிரிசியமான காரியங்களை அநுமானப்பிரமாணத்தாலறிய வல்லுனராகிய மேல்நாட்டு வைத்தியநிபுணர்களின் சம்மதம் சம்யோகசமயத்திலிருந்து கர்ப்போற்பத்தியாவதற்கு ஒன்றுமுதல் ஐந்துதினங்கள்வரையிற் செல்லும். ஐந்துதினத்திற்குள்ஏதவோ ஒருகாலத்தில் கர்ப்பந்தரிக்கக்கூடும். மாதவிடாய்காலத்திற்குமுன் ஐந்துதினங்களும் மாதவிடாயாகி ஸ்நானஞ்...

Page 15

சந்தானமணி.

செய்து சுத்தமானதுமுதல் ஐந்துதினங்கள்வரையிலும் பெண்களுக்குக் கர்ப்பாதானமுண்டென்பதும் அவர்கள் கொள்கையாகும். கர்ப்ப ஆரம்ப முதல் ஜனனம்வரையில் (273) தினங்களாகும். சந்திரன் பன்னிருராசி மண்டலத்தை ஒருதரஞ் சுற்றிவருவதற்கு 27.32 தினங்களாகின்றது. ஆதலால் 27 32 X 10 = 273 20 நாட்களாகும். இதற்குச் சாதாரண கர்ப்பகாலமென்று பெயர்.

இதனைத் தாழிகபத்ம கோசார்தர்கதமநுஷ்யஜாதகம் ஐந்தாவது விஷேகாதிகாரம் இரண்டாவதுசுலோகத்தில் குணதாரகாணி என்றுகூறப் பட்டுள்ளது. தாரகை 27, குணம் மூன்று. ஆகவே 273 நாட்களென் பதபொருள். எல்லாஜனனங்களும் இருநூற்றெழுபத்துமூன்றுநாட்களில் உண்டாகின்றதென்று சொல்லமுடியாது. மேல்நாட்டு வைத்தியநிபுணர்கள் பலதரம் பரிசோதித்ததில் 252 தினங்களில் 100 க்கு 3 ஜனனங்களும், 273 தினங்களில் 100 க்கு 29 ஜனனங்களும், 280 தினங்களில் 100 க்கு 19 ஜனனங்களும், 301 தினங்களில் 100 க்கு 3 ஜனனங்களும் உலகத்திலுண்டாவதாக உறுதிப்படுத்திக் கூறுகிறார்கள். இது சாஸ்திரசம்மதமாகவேயிருக்கிறது. இதனை முன்சொன்ன மனுஷ்யஜாதகத்தில் ஜனனகால சந்திரஸ்புடமானது ஜனனகால இலக்னஸ்புடத்துக்குச்சரியாயிருந்தால் 273 தினங்களிலும், ஏழாம்பாவகஸ்புடத்துக்குச்சரியாயிருந்தால் 258 தினங்களிலும், எட்டு ஒன்பதாம்பாவஸ்புடத்துக்குச் சரியாயிருந்தால் 288 தினங்களிலும் பிரசவமாகுமென்று சொல்லப்பட்டிருப்பதால் ஜனனத்தின் பின்னும் நன்கறியலாம். 245 தினங்களுக்கு மேல் 301 தினங்கள்வரையில் மக்கள் தாயின்கர்ப்பத்தில் இருப்பார்களென்பது வைத்தியர்களின் தேர்ந்தகொள்கை. அஷ்டாங்கஹிருதயம் முதலாவதத்தியாயத்தில் எட்டாவதுமாதம் முடிந்து ஒருநாள்கழிந்தபோதிலும், அதன்பின் எந்தத்தினமும் பிரசவத்திற்கு ஏற்றதாகவே கருதப்படும். எட்டாவதுமாதங் கழிந்ததும் 9-10-11-12. இவற்றுள் எதுவும் பிரசவகாலமேயாம்.

பொழிப்புரை:- அஷ்டாங்கஹிருதயம் முதலாவதத்தியாயம் எட்டாஞ்சூத்திரம். சந்திரன் வளர்கலையுடன் பூமிக்கு அதாவது: கர்ப்பாதான ஜெனனலக்கினத்திற்கு மேற்புறத்தில் அதாவது, ஊர்த்துவகபாலமென்ற 12-11-10-9-8-7 லிருந்தாலும் அல்லது சந்திரன் குறைகலையுடன் பூமிக்கு அதாவது, கர்ப்பாதான ஜென்மலக்கினத்திற்கு கீழ்ப்புறம் அதஃகபாலமென்ற 1-2-3-4-5-6 லிருந்தாலும் கர்ப்பவாச தினங்கள் 273 க்குகுறைவாகும். இம்முறைக்குமாறாக அதாவது, சந்திரன் வளர்கலையுடன் பூமிக்கு கர்ப்பாதான ஜெனனலக்கினத்துக்குக் கீழ்ப்புறத்தில் அதஃகபாலமென்ற 1-2-3-4-5-6 லிருந்தாலும் அல்லது குறைகலையுடன் பூமிக்கு அதாவது, கர்ப்பாதான ஜென்மலக்கினத்திற்கு மேற்புறத்தில் ஊர்த்துவகபாலமென்ற 7-8-9-10-11-12 லிருந்தாலும் கர்ப்பவாசதினங்கள் 273 க்கு அதிகமாகும். மேற்படிசூத்திரம் விருத்தி பூமியல்லது இலக்கினத்துக்குமேற்புறம் ஊர்த்துவகபாலமென்றும் கீழ்ப்புறம் அதஃகபாலம் என்றும் சொல்லப்படும். ஊர்த்துவகபாலந்திருசியம் எனவும் அதஃகபாலம் அதிருசியமெனவும் வழங்கப்படும். திருசியம் அறியக்கூடியது அதிருசியம் அறியக்கூடாதது. திருசியா அதிருசியமாவது: இராசியுதயத்தினால் இதனை நிச்சயித்தல்வேண்டும். இராசியுதயமென்பது இராசியே உதயமாவதாகும். அதாவது, சித்திரைமாதம்முதல் தேதி எந்த ஊரிலும் மேடஇராசிமுதல் முதல் உதிக்கும் மேடத்துக்குரிய அவ்வத்தேச இராசிப்பிரமாண நாழிகை வினாடிகழிய இடபமுதிக்கும். இடபத்துக்குரிய அவ்வத்தேச இராசிநாழிகை விநாடிசெல்ல மிதுனமுதிக்கும். இம்முறையே மற்றைய இராசிகளுமுதயமாகும். ஆகவே மேடவிராசி யுதித்தபொழுது இடபராசி உதயாதபூர்வமாயிருக்கின்றதென்பதும் உதித்தாராய்ச்சி மீனமென்பதும் நன்குவிளங்கும். ஆதலால் மேடம் உதித்தபோது உதித்தான ராசிகளான மீனம் கும்பம் மகரம் தனு விருச்சிகம் துலாம் ஆகிய இந்ராசிகள் திருசியராசிகளெனப்படும். மேடம் உதித்தபோது இனி உதிக்கவேண்டிய ராசிகளான இடபம் மிதுனம் கர்க்கடகம் சிங்கம் கன்னியாகிய இந்ராசிகள் அதிருசியராசிகளெனப்படும். ஆகவே, உதித்தான இராசிகள் திருசியராசிகளெனவும் இனி உதிக்கவேண்டியராசிகள் அதிருசிய இராசிகளெனவும் அறிக. இலக்கினஸ்புட பாகைமுதல் இலக்னம் 12-11-10-9-8 ஏழாம்பாவஸ்புட பாகைவரையிலும் திருசியராசிகளென்றும் ஏழாம் பாவஸ்புடபாகைமுதல் ஏழாமிடம் 6-5-4-3-2 இலக்னஸ்புடபாகைவரையிலும் அதிருசியராசிகளென்றும் தெளிவாக அறிந்துகொள்ளலாம். ஊணவானசாஸ்திரிகள் இலக்கினத்தை அஸன்டென்டு என்றும் ஏழாம் பாவத்தை டிஸன்டெண்டு என்றுகூறுவர். கீழ்க்ஷிதிசம் இலக்கினமும் மேல் க்ஷிதிசம் சப்தமம். அதாவது, ஏழாவது பாவகமுமாம். (1) சந்திரன் விருத்திகலையுடன் பூமியின் மேற்புறமான ஊர்த்துவ கபாலத்தில் (திருசியத்தில்) இருந்தால், கர்ப்பகாலம் 273 நாட்களுக்குக் குறைவாகஇருக்கும். (2) சந்திரன் விருத்திகலையுடன் பூமியின்கீழ்ப்புறமான அதஃகபாலத்தில் (அதிருசியத்தில்) இருந்தால் கர்ப்பகாலம் 273 நாட்களுக்கு அதிகமாகஇருக்கும். (3) சந்திரன் க்ஷயகலையுடனதாவது குறைகற்கலையுடன் பூமியில் மேற்புறமான ஊர்த்துவகபாலத்தில் திருசியத்திலிருந்தால் கர்ப்பகாலம் 273 நாட்களுக்கு அதிகமாகஇருக்கும். (4) சந்திரன் குறைகற்கலையுடன்

Page 16

பூமியின் கீழ்ப்புறமான அதஃகபாலத்தில் அதிசூசியத்திருந்தால் கர்ப்ப காலம் 273 நாட்களுக்குக் குறைவாக இருக்கும். இவைகளால் இறந்தகாலத்தாலெதிர்காலத்தரையும் நிகழ்காலத்தாலிறந்தகாலத்தையுமறிவதாகும். ஆதானகாலத்தில் கிரகங்கள் இருந்த நிலையைகொண்டு ஸாதகபலன்கள் யாவையும் சொல்லவேண்டியதேயறிவுடையவர்களின் கடமையாகும். எனவே கர்ப்பாதான முகூர்த்தசுபமே சுபமென்பதை யாவருமறிந்துகொள்க.

கருப்ப முதல்மாதாதிபதி.

உக

என்னவே கர்ப்ப மானாளீரைந்து மாதத் திற்கும் மன்னிய வெழுகோள் தானும் மாசத்துக் கதிபனாவார் உன்னித நாத விந்து ஒருமித்தோர் மாதத் திற்கே துன்னிய புகரோன் றானுஞ் சுபவதி பதியே யாகும்.

இ-ள்: என்னவே கர்ப்பமானாள்-மேற்கூறியபடி கிரகசம்பவமும், பதிசதிசங்கமமும் ஒன்றுபட்டபொழுது மங்கையருதரத்தே கர்ப்பம்வந்துபொருந்தும். ஈரைந்துமாதத்திற்கும்-கருப்பத்தில்வளரும் சிசுவின்காலமாகிய பத்துமாதமும், மன்னியவெழுகோள்தானும்-முறை யேநிலைபெற்ற வெள்ளி செவ்வாய் வியாழன் சூரியன் சந்திரன் சனி புதன் கர்ப்பதான முகூர்த்தஇலக்ன அதிபதியெவரோ அவர் சந்திரன் சூரியன் என்றகிரமமாய் மாசத்துக்கதிபனாவர். ஒராம்மாதமுதல் பத்து மாதம்வரை அதிஷ்டித்து வளர்ப்பார்கள். ஆதலால், உன்னிதநாதவிந்து ஒருமித்த ஓர்மாதத்திற்கே-உருவமும் உயிருந்தோன்றுவதற்கு இன்றியமையாது உயர்ச்சிபொருந்திய சுக்கில சுரோணிதம் பனித்துளிபோல மாதாவுபண்டியில்வந்து கலந்ததான முதல்மாதத்தில், துன்னிய பகரோன்றானுஞ் சுபவபதியேயாகும்-கருப்பந்தங்கியிருப்பதற்கு சுக்கிரனே அதிபதியாவாரென்பதாம். ஆகவே. அந்நாட்களில் வெள்ளி பகைநீசமஸ்தமனம் இராகு கேது சனி சம்பந்ததிருஷ்டிபெறாது சுபகுணபலமாய் இருப்பின் உத்தமகருப்பமென்ப.

இரண்டு மூன்றும் மாதாதிபதி.

உஉ

ஆகிய விரண்டாந் திங்கள் அரிவையின் கர்ப்பத் துள்ளாய் வாகுடன் றடித்து மாமிசம் வளர்பிண்ட நாதன் செவ்வாய் ஏகிய மூன்றாந்திங்க ளிவைகளு முருவமாகும் ஆகிய வதற்கு நாத னந்தண னாவான் காணே.

இ-ள்: ஆகிய விரண்டாந் திங்கள் - மேற்கூறியவண்ணமே வெள்ளியதிபதியாயிருந்து ஓராம்மாதமுடிந்து இரண்டாவதுமாதத்தில், அரிவையின் கர்ப்பத்துள்ளாய் வாகுடன் தடித்து மாமிசம்-சுக்கிலசுரோணிதம் வளருமியல்பற்றி தடித்து மாமிசமாகி, வளர்பிண்ட நாதன் செவ்வாய்-வளர்வதற்கு அதிபதி செவ்வாயாகும், ஆகவே, அக்காலத்திற் செவ்வாய் பகை நீசம் மூடம் சனி ராகு கேது சம்பந்தந் திருஷ்டியில்லாதிருப்பின் கருப்பமும் மாதாவுஞ் சிறப்புறும், ஏகிய மூன்றாந் திங்களிவைகளு முருவமாகும்-மேற்கூறியவண்ணமே இரண்டாம்மாதம் முடிந்து மூன்றாவதுமாதத்திற்றடித்தமாம்சந் திரண்டு கைகால் சிரசுமுதலாகிய அவயவங்கள் முனைப்படையும், ஆகிய வதற்குநாத னந்தணனாவான் காணே-அவ்வகை வளர்ச்சிக்கும் அம்மாதத்துக்கதிபதிய வியாழனாகும். ஆகவே, அக்காலத்தில் வியாழன் பகை நீசம் அஸ்தமனம், சனி ராகு கேது சம்பந்தந் திருஷ்டியில்லாதிருப்பின் கருப்பமும் மாதாவுஞ்சிறந்துவிளங்கும்.

நாலைந்தாறாம்மாதாதிபதி.

காணவே நாலாந் திங்கள் கடினமா மெலும்பு தோன்றும் பூணவே யதற்கு நாதன் புகலும்பாஸ் கரனே யாவன் ஊணவே யைந்திந் றோலு முதிப்பதற் கதிபன் ஆலோன் தோணுமே யாறில் ரோமந் தோன்றிட வதிபன் நீலன்.

இ-ள்: காணவே நாலாந் திங்கள் கடினமா மெலும்பு தோன்றும்-அங்ஙனம் மூன்றாவதுமாதம் முடிந்து நான்காம்மாதத்தில் மாம்சம்தடித்து அவயவக்குறியானபின் எலும்புஉண்டாகும், பூணவே யதற்குநாதன் புகலும்பாஸ் கரனே யாவன்-அந்த நாலாவதுமாதத்துக் கதிபதி சூரியனாகும். அக்காலத்திற் சூரியன் உச்சாட்சிமூலத்திரிகோண பெலமுடையராய்ச் சுபராகிய சந்திரன் புதன் வியாழன் வெள்ளி சம்பந்தந்திருஷ்டியாய்ச் செவ்வாய் சனி ராகு கேது சம்பந்தந்திருஷ்டியில்லாதிருப்பின்கர்ப்பமும் மாதாவுஞ் சிறந்துவிளங்கும், ஊணவே யைந்திந் றோலு முதிப்பதற் கதிபன் ஆலோன்-அவ்வாறே நாலாம்மாதம் முடிந்து ஐந்தாம்மாதத்தில் தோலுண்டாகும், சந்திரன் அம்மாதத்துக்கதிபதியாகும். ஆகவே அக்காலம் சந்திரன் சனி ராகு கேது சம்பந்தந்திருஷ்டியின்றிப் பூரணமதியாயிருப்பின் கருப்பமானது ஒளிபொருந்தி மாதாவும் சிறந்து விளங்கும். தோணுமே யாறில்ரோமந் தோன்றிட வதிபன்நீலன்- அங்ஙனம் ஐந்தாம்மாதம் முடிந்து ஆறாம்மாதத்தில் மேற்படி தோல்உண்டாகிய

Page 17

உ௪

உருவத்தில் உரோமம் உற்பத்தியாகும் அந்த ஆறாம்மாதத்துக்கதிபதி சனியாகும். அக்காலத்தில் சனியானவன் உச்சாட்சிகட்பு பெலமுடையனாய் சுபர்நோக்சம்பெற்றிருப்பின் மகவும் மாதாவும்சிறக்கும். (உ௪)

ஏழாம்மாதாதிபதி.

உச

தோன்றிய வேழாம் மாதம் தோத்திரம் தொக்கு சட்சுத் தோன்றுசிங் குவையீ றோடு முகமுளன் வாக்கி ரானம் தோன்றிடு மிதனை முன்னோர் தொகுப்பது ஞானேந் திரியம் தோன்றிடச் செய்யு நாதன் தூதுவ னாவா னென்னே.

இ-ள்: அவ்வாறே உபாங்கம்பாவும்நிரம்பிய ஆரும் மாதம்முடிந்து தோன்றிய ஏழாம்மாதம்-வந்தஏழாம்மாதத்தில், தோத்திரம் தொக்கு சட்சு தோன்றுசிங்குவையீறோடு முகமுளன்வாக்கிரானம் தோன்றிடும்-மெய்வாய் கண் மூக்கு காது என்றுகூறப்படும் இவை உதிக்கும், இதனை முன்னோர்தொகுப்பது ஞானேந்திரியம்-இவைகளை ஆன்றோர்கள் ஞானேந்திரியம் என்று சொல்லுவார்கள், தோன்றிடச்செய்யுநாதன் தூதுவனாவானென்னே-இவைகளுக்கதிபதி புதன்ஆகும். ஆகவே அக்காலத்தில் புதன் பாவர்திருஷ்டிபாவர்சகிதம் பகை நீசம் மூடமின்றி சுபர்சம்பந்தம் சுபர்திருஷ்டி உச்சாட்சாட்புபெற நின்றால் கருப்பமும் மாதாவும் சிறந்துவிளங்கும். (உச)

எட்டாம்மாதாதிபதி.

உரு

எட்டெனுந் திங்க டன்ளில் எழிலுறு கருப்பந் தங்கும் சட்டமாஞ் சிசுவுங் கொண்ட தாயவ ளுண்ணு கின்ற மட்டிலாப் பலவாம் சத்தை மகவது சுகமா யுண்ணும் இட்டமாக் கர்ப்பா தான இலக்கின னதற்கு நாதன்.

இ-ள்: எட்டெனுந் திங்கடன்னில்-அவ்வாறே ஏழாம்மாதம் முடிந்து எட்டாம்மாதம் வந்தபொழுது, எழிலுறு கருப்பந்தங்கும் சட்டமாஞ்சிசு-உத்தமமான சுபமுகூர்த்தத்துற்பவித்தம் சுபகுண கிரகங்களால் காக்கப்பட்டு உங்கம் பிரத்தியங்கம் என்றுசொல்லப்பட்டவை குறைவின்றித்தோன்றுவதாலழகுபொருந்தியகருவின் கண்ணிருந்த உருவமாகிய பிள்ளை, கொண்டதாயவளுண்ணுகின்ற மட்டிலாப்பலவாம்சத்தை-புண்ணியமேலீட்டினாலே விதிவிலக்குகளையாராய்ந்தறிந்து விதித்தவைகளைச்செய்து சற்புத்திரோற்பத்தியைத்தாங்கிய மாதாவானவளுண்ணுவதாகிய உணவிலுறுமமுதசத்தை, மகவதுசகமாயுண்ணும்-அக்கர்ப்பச் சிசுவானது நாபிக்கொடிவழியாப்வர உண்டுதிருப்தியடையும். இட்டமாங்கர்ப்பாதான இலக்னன் அதற்குநாதன்-பிதா மாதாவின் அறிவின்சிரத்தைக்கும் பொறுமைக்கும் நம்பிக்கைக்கும் பக்தி ஒழுக்கத்துக்குமேற்றவாறு கர்ப்பாதானத்தமைந்த முகூர்த்தாதிபதி எந்தக்கிரகமோ அவரே எட்டாம்மாதத்திற்கதிபதியாகும். ஆகவே அக்காலத்தில் அந்தக்கிரகத்தின் சுபநிலை மிகவும் நன்மை. (உரு)

ஒன்பது பத்தாம்மாதாதிபதி.

ஒன்பதா மாதத் திற்கு வுடுபதி யதிப னாகும் இன்புறு பத்தா மாதி யெல்லவ னாம்பிர சூதி அன்பொடு சுபாசு பங்க ளாதவன் பத்தா மாதி தென்பொடு விருப்பானாகிற் சேய்சுக முடனு திக்கும்.

இ-ள்: ஒன்பதாமாதத்திற்கு உடுபதியதிபனாகும்-அங்ஙனமாக எட்டாவதூமாதம்முடிந்து ஒன்பதாம் மந்தத்துக்கு அதிபதிசந்திரன், இவ்வேழை சந்திரன் பாபக்கிரகசம்பந்தம் திருஷ்டியில்லாதிருப்பின் கர்ப்பச்சிசுவானது பூரணப்படவளரும், மாதாவும் சுகம்பெறுவர். செவ்வாய் சனி இராகு கேதுவோடு சம்பந்த மாயன்றித் திருஷ்டியாய்வரின், பிணி மெலிவுதோன்றம், அப்படியாகமதிப்பைப்பாவர்பார்ப்பினுங் கூடினும் அத்தினங்களில் எண்ணெய்முழுகு மருத்துவபீனபோசனம் இவைகளை நீக்க வேண்டியது, இன்புறுபத்தாமாதியெல்லோனாஞ் பிரசூதி-அதுபொழுது ஆட்சியுச்சம் நட்புமூலத்திரிகோணம் சுபர்சம்பந்தம் சுபர்திருஷ்டியடைந்து பெலகுணமடைந்த சூரியன் பத்தாம்மாதத்திற்கு அதிபதியாகச் சுகப்பிரசவத்தைக்குறிக்கும், அன்பொடு சுபாசுபங்களாதவன் பத்தாமாதிந்தென்பொடுவிருப்பானாகில் சேய்சுகமுடனுதிக்கும்-பிரசவித்தல் பிரசவமானகாலம் இன்பமும் சுகமும் பத்தாமாதவதிபதியாகிய சூரியனும் பத்தாமதிபதியும் சோதிடகுணகுணர்தியில் சுபகுணமாயிருப்பின் சுகப்பிரசவமாய் நிகழும். சூரியனும் பத்தாமதிபதியும் நீசம்பகையாயும் செவ்வாய்சனிராகுகேதுவாற் பீடிக்கப்பட்டிருப்பது சுபர்சம்பந்தந்திருஷ்டியிலலாதொழியின் கஷ்டப்பிரசவகாலம், இன்புறுபத்தாமாதியெல்லோனாம்பிரசூதி-அன்பொடு சுபாசுபல்கள் ஆதானன் பத்தாநாதன் தென்பொடும் இருப்பானாகிச்சேய்மகமுடனுதிக்கும். உலகில் சகலசிருஷ்டிகளுக்கும் இன்பத்தையும் விழிப்பையும் கொடுக்கின்ற சிவசூரியன்பத்தாம்மாதத்திற்கதிபதியாச்சூரியனாலே பிரசவம்கிகழும். கர்ப்பாதானலக்னத்துக்குப் பத்தாதிபதியும் பத்தாம்மாதாதிபதியுமாகிய சூரியனும் மேலேகூறியபடி

Page 18

கர்ப்பாரிஷ்டமும் சுகமும்

உசு

சுபநிலையில் உற்பத்தி பிரசவகாலத்தே நின்றால் குழந்தை சுகப்பிரசவம். மாறிநிற்கில் பிரசவம் கஷ்டமாய்த் தோன்றும். (உசு)

கர்ப்பாரிஷ்டமும் சுகமும்

உஎ

சகமுள வெழுகோ டானும் துயரர வதனைச் சேர்ந்து மிகவலி குறைந்திட் டாலே வீயுமா மம்மா தத்தில் பகலவ னாதி யோரும் பகரும்நிர் மலராய் நின்றால் சகமதில் புஷ்டி யோடு தாயிட மிருந்து திக்கும்.

இ-ள்: சகமுள வெழுகோ டானும் துயரர வதனைச் சேர்ந்தும் மிகவலி குறைந்திட் டாலே வீயுமா மம்மா தத்தில்—கருப்பாதானமாதமுதல் பிரசவமாதமான பத்தாம்மாதம்வரையிலுள்ள மாதாதிபதிகள் ஏழுபேருள் இராகு கேதுவினால் ஆர்ப்பீடிக்கப்பட்டார்களோ அவாதிபதியான மாதத்தில் கருப்பத்திற்குப் பின்னமுண்டாகும், பகலவனாதியோரும் பகரும்நிர்மலராய்நின்றால்— சூரியன்முதலாகச்சொல்லப்பட்ட மாதாதிபதிகளேழுபேரும் இராகுகேதுவால் பீடிக்கப்படாமலும் விகற்பசூரத்துக்குந்த பாவவிமோசனராய்த்தோன்றினால், சகமதில்புஷ்டியோடு தாயிடமிருந்துதிக்கும்—அந்தக்கருப்பச்சிசு உருவச்செழிப்போடு மாதாவின் உதரத்தினின்றும் பூமியிற்பிறக்கும். கர்ப்பாதானமான ஓராம்மாதம் வெள்ளியும், இரண்டாம்மாதம் செவ்வாயும், மூன்றாம்மாதம் வியாழனும் நான்காம்மாதம் சூரியனும், ஐந்தாம்மாதம் சந்திரனும், ஆறாம்மாதம் சனியும், ஏழாம்மாதம் புதனும், எட்டாம்மாதம் கர்ப்பாதான இலக்கின ஆட்சிநாதனியாரோ அவரும், ஒன்பதாம்மாதம் சந்திரனும், பத்தாம்மாதம் சூரியனுமாம். (உஎ)

கர்ப்பாரிஷ்டமும் சுகமும்

உஅ

தோன்றிய சென்மந்தன்னை சுதாகரன் றன்னைத் தானும் சான்றவ னென்னும் பானு சசிதனை யலசென் மத்தை ஊன்றியே நோக்குங் காலி லுயர்கருப் புஷ்டி யோடு தோன்றிடு மவனி மீதில் சகமுள மகவுக் தானே.

இ-ள். சான்றவ னென்னும்பானு தோன்றிய சென்மந்தன்னை சுதாகரன் றன்னைத்தானும் சசிதனையலசென் மத்தை ஊன்றியே நோக்குங்காலில்—பத்தாconsumer தைய்வ தபதியாகிய சுபகுணவீனைச்சூரியன் கர்ப்பாதான இலக்கினத்தை யன்றி கர்ப்பாதான இலக்கினாதிபதியை அல்லது சந்திரனை யன்றி சந்திரலக்கினாதிபதியை இராசிநிலை நவாம்சநிலையென்ற இரண்டுசக்கரநிலையில் ஒன்றில் தமதுபார்வையாகிய 7 வதுபார்வையாய்ப் பார்க்கும் காலம், உயர்கருப் புஷ்டி யோடு அவனிமீதில் தோன்றிடும்—உயர்ச்சிபொருந்திய கர்ப்பச்சிசுவானது செழிப்புள்ளதாய பூமியிற்பிறக்கும், சகமுள மகவுந்தானே—மிகுதியும் சுகங்களோடுகூடிய புத்திரகுமாரனாம். (உஅ)

கர்ப்பாரிஷ்டமும் சுகமும்

உகூ

மதிபவ னோடு நல்லோர் மருவிட வுதயந் தன்னில் துதிபெறுஞ் சுபர்கள் வந்த சகம்பத்தி ரண்டு மேழாம் பதிதனிற் கோணம் நிற்ப பகர்லாபம் மூன்றிற் றீயர் கதிரவ னுதய மிந்தைக் கண்டிடச் சுகமாய்த் தோன்றும்.

இ-ள்: மதிபவ னோடு நல்லோர் மருவிட—கர்ப்பவதி பிரசவிப்பதஞ் சிசுப்பிரசவமாவதமாகியகாலத்தில், சந்திரனோடு சுபர்களாகிய புதன் குரு வெள்ளி கூடியிருந்தாலும், வந்த சுகம் உதயந் தன்னில் பந்திரண்டு மேழாம் பதிதனில் கோணம் துதிபெறுஞ் சுபர்கள் நிற்ப—கர்ப்பாதான இலக்கினம் சென்மமாம் லக்கினம் பத்தாமிடம் இரண்டாமிடம் ஏழாமிடம் ஒன்றரைந்தொன்பதான திரிகோணம், இவ்விடங்களில் சுபகரமான கிரகங்கள் நிற்பினும் நோக்கினும், பகர்லாபம் மூன்றிற் றீயர் ஆறு பதினொன்று மூன்று என்ற உபசெயஸ்தானத்தில் பாபராகிய சூரியன் செவ்வாய் சனி ராகு கேது நிற்ப, கதிரவன் உதயமிந்தைக் கண்டிட சகமாய்த் தோன்றும்—சூரியன் இலக்கினத்தை அல்லது சந்திரனைப்பார்க்க மாதாவும் சுகமே பிரசவிப்பர். குழந்தையும் சுகமே பிறக்கும். (உகூ)

பிரசவகாலம்

ங0

பேசிய கருப்பா தானம் பிரசினை காலந் தன்னில் மாசிலா துவாத சாம்சம் மதிதனைக் கூடி நிற்க தேசரு மதிச மான சேருயி ராசி முந்நாள் நேசமாம் பத்தா மாத நேரிழை பிரச விப்பாள்.

இ-ள்: பேசியகருப்பாதானம் பிரசினைகாலந்தன்னில் மாசிலா துவாதசாம்சம்—கருப்பாதான முகூர்த்தத்திலே கர்ப்போற்பத்தியாகும் லக்கினபாகத்தினது துவாதசாம்சம், மதிதனைக்கூடிநிற்க தேசறுமதிசமான சேருயிராசிமுந்நாள்—சந்திரனைக்கூடியிருக்குமோ அந்தவிராசித சமராசியின்முதலில், நேசமாம் பத்தாம்மாதம் நேரிழை பிரசவிப்பாள்—பத்துமாதமாகும் கர்ப்பவதி அம்மாதத்திற் பிரசவிப்பாள். (ங0)

பிரசவகாலம்

விதமது கருப்பா தானம் வெண்மதி யுறைந்த வோரை பதியதின் துவாத சாம்சம் பற்றிட வமிசை யாதி

Page 19

௩௧

அதிலுறு மமிசை போல வம்புலி யடைந்தி ருக்கச் சுதனது பிரச வந்தான் சுகமுட னாமென் றோதே.

இ-ள்: விதமது கர்ப்பா தானம் வெண்மதி யுறைந்த வோரைப் பதிபதின் துவாதாம்சம் பற்றிட-கர்ப்பாதான பிரஸ்னகாலத்தில் சந்திரனின்ற இராசிவர்க்கத்தில் அடைந்ததுவாதசாம்சத்தில் சந்திரன் வருங்காலமும், நட்சத்திரபாத அம்சாதிபதி கர்ப்போற்பத்திகாலத்து உற்ற அம்சம்போலவும் சந்திரன் வருங்காலமும், சுதனது பிரசவந்தான் சுகமுட னாமென் றோதே-கர்ப்பக்குழந்தை பிரசவமாகும் சுகப்பிரசவமுமாகும்.

௩௨

ஓதிய பகலி ராவிலுறு கடிகைகளைப் போலும் மாதவள் பிரச விப்பாள் வருஞ்சிர வுதய ராசி நீதது பிரஸ்ன மானால் செப்பிய பகலே சென்மம் காதலாம் பிருட்ட மாகில் கங்குலில் பிரச வந்தான்.

இ-ள்: நீததுபிரஸ்னம் வருஞ் சிரவுதயராசியானால் செப்பியபகலேசென்மம்- குற்றமில்லாத கர்ப்பாதானலக்கினம் மிதுனம் சிங்கம் கன்னி துலாம் விருச்சிகம் கும்பம் ஆன சிரவுதயஇராசிகளிலொன்றானால் பகற்பொழுதில் பிரசவம், காதலாம்பிருட்டமாகில் கங்குலில் பிரசவந்தான்-மேடம் இடபம் கர்க்கடகம் தனு மகரமென்ற பிருட்டோதய இராசிகளிலொன்று கர்ப்போற்பத்தி லக்கினமானால் இரவில் பிரசவம், சிரபிருட்டோதய இராசியாகிய மீனம் கர்ப்பாதானலக்கினமானால் சந்திகாலங்களில் பிரசவம், ஓதியபகலிராவி லுறுகடிகைகளைப்போலும்மாதவள் பிரசவிப்பாள்-கர்ப்பாதானமாம் இராநாழிகையெத்தனையோ அந்தநாழிகை பகற்பிரவேசமென்னில் பகலிற்செல்லப்பிரசவம் இராப்பிரவேசமென்னில் இரவிற் செல்லப்பிரவேசம்.

மாதாப்பினி.

௩௩

சுகமுள வாதா னத்தின் தூயலக் னத்தை நல்லோர் இகமதிற் பார்வை யுற்றே யிருந்திட வாதா னத்தை அகமுள தீயர் காணி லழகுறுங் கர்ப்ப மாதா செகமதில் மரண மாவார் செப்பிய பலனி தாமே.

இ-ள்: சுகமுள வாதானத்தின் தூயலக் னத்தை நல்லோர் இகமதிற் பார்வை யுற்றே யிருந்திட-சுகசைதன்னியத்துக்கேதுவான கர்ப்போற்பத்திலக்கினத்தைச் சுபாவசுபராகிய வளர்சந்திரன் புதன் குரு புகர் உதயமார்காமையும் பாராமலும்விட, ஆதானத்தை அகமுள தீயர் காணில்-கர்ப்பாதானலக்கினத்தைச் சுபாவபாவராகிய சூரியன் செவ்வாய் சனி ராகு கேது பார்ப்பினும் இருப்பினும், அழகுறுங் கர்ப்ப மாதா செகமதில் மரண மாவார்-கர்ப்பம் பிறந்தற்கிடமாயழகுருசம்பூங் கர்ப்பஸ்திரீகளிட்டமடைய நேரிடும், செப்பிய பலனி தாமே-சுபகர்மத்தாற் சுகமும், துர்க்கர்மத்தாற் துன்பமும் நேரும் நியமத்தின்படி கூறத்தக்க பலனிதுவாம்.

பிதாப்பினி.

௩௪

அறியுமா தான காலம் அலரிக்கு சப்த மத்தில் வருதிங்க ளிரண்டா மாதி வக்கிர னிருக்க வல்லால் கரியவன் மாத மாறுக் கதிபனா மவரே நிற்கில் உறுபிணி மாத மாறி னுண்டாகும் புருஷ னுக்கே.

இ-ள்: அறியுமா தான காலம் அலரிக்கு சப்த மத்தில் வரு திங்க ளிரண்டா மாதி வக்கிர னிருக்க-நாயகன் நாயகியறியவேண்டிய கர்ப்பாதானமாம்பொழுது சூரியனுக்கு ஏழாமிடத்தில்கர்ப்பத்தின் இரண்டாம்மாதாதிபதியாகிய செவ்வாய் நிற்பினும், அல்லால் கரியவன் மாத மாறுக் கதிபனாம் அவரே நிற்கில்-கர்ப்பத்தின் ஆறாம்மாதத்துக்கதிபதி சனி சூரியனுக்கு ஏழில்நிற்பினும், புருஷ னுக்கே உறுபிணி மாத மாறினுண்டாகும்-நாயகனுக்கு மனையாள் கர்ப்பமான 2-ம் மாதம் 6-ம் மாதத்திற் பிணிதோன்றும்.

மாதாப்பினி.

புருடனுக் குரைத்த வண்ணம் பூவைக்கா தான காலம் வருமதி தனக்கே யேழில் வக்கிர னலது நீலன் மருவிட லிரண்டாம் மாத மல்லது வாறாம் மாதம் உருபிணி யடைவா ரென்று முரைத்தது கதியி தாமே.

இ-ள்: புருடனுക്കുரைத்த வண்ணம் பூவைக்கு-மேலே சூரியனைவிடத்த செவ்வாய் சனியால் பிதாவுக்குவருந்துன்பமும் காலமும் கூறினோம் பெண்ணுக்கு வரும் பிணிக்காலத்தைக் காரணத்தைக் கூறுவேம், ஆதானகாலம்-கர்ப்பாதானவேளையில், வருமதி தனக்கேயேழில் வக்கிரனலதுநீலன்மருவிட-சந்திரனின்ற இராசிக்கு ஏழாம்இராசியில் செவ்வாய்அன்றிச் சனிநிற்பாரேல், இரண்டாம்மாதமல்லது ஆறாம்மாதம்-கர்ப்போற்பத்தியான இரண்டாவது மாதத்திலும் ஆறாவதுமாதத்திலும், உருபிணியடைவாரென்று முரைத்தது-தேகத்தில் பிணிகொ

Page 20

உரு

ள்ளுவளென்று சோதிடசுருதிசொல்லியன, கதியதாமே - இவை கிரகங் களது வன்மை மென்மைபாலுங் குணகுணர்தியாலும் சீவர்களது அபத் திபுகுவமாய்ச் சேரவேண்டிய மாயாகதியாகும்.

மாதாப்பிணி.

உசு

கதிரவற் கிரண்டீ ராறில் காரியல் லதுசேய் நிற்க அதிவலியுள்ள கோட்கு அமைத்திடு மாதந் தன்னில் சதியெனும் நோய்தான் கண்டு தான்துய ரடைந்து சூலி விதியது முடிந்த தென்றே விண்ணுலகடைவாள் தானே.

இ-ள்: கதிரவற் கிரண்டீராறில் - கர்ப்பாதானகாலத்தின் போ துசூரியன் நின்றஇராசிக்கு முன்னும் பின்னுமாகிய இரண்டு பன்னிரண் டாPhaseயராசியில், காரியல்லது சேய்நிற்க - சனிசெவ்வாய் வந்திருந்தால், அதிவலியுள்ளகோட்கு அமைத்திடுமாதந்தன்னில் - அதுபொழுது அவ் விருவரில் மிகுதியும் வலிபெற்றது செவ்வாயெனில் இரண்டாம்மாதத்தி லும் சனியெனில் ஆறாம்மாதத்திலும், சதியெனும் நோய்தான்கண்டு தான்துயரடைந்துசூலி விதியது முடிந்ததென்றே விண்ணுலகடைவாள் தானே - கருப்ப ஸ்திரீ தப்புதல்கூடாத பிணிகோன்றித் துன்பத்தழுந் திக்கண்டோர்விதிமுடிந்ததென்றுகூற அரிட்டமுறுவர். காரியல்லதுசேய் நிற்க- என்னவேயொருவரிற்பினுமன்றி அதிவலியுள்ளகோட்கு இருவரும் நிற்பினുമென்பது பெறப்படும்.

மாதாவரிட்டம்.

உஎ

தானவற் கிரண்டு வீயம் தரைமகன் சனியோன் தங்க ஆனவிக் கிரகந் தன்னி லதிவலி யுற்றார் மாதம் மானிகர் விழியா ளுந்தான் வல்பினி யதனால் வாடி வானவ ருலகு செல்வாள் வரும்பல னிதுதா னென்னே.

இ-ள்: தானவற் கிரண்டு வீயம் தரைமகன் சனியோன் தங்க - கர்ப்பாதானகாலத்தின்போது சந்திரன் நின்றஇராசிக்கு முன் னும் பின்னுமாகிய இரண்டுபன்னிரண்டிலே செவ்வாய்சனியிருக்க் கர்ப் பசம்பவமாயின், ஆன விக்கிரகந் தன்னி லதிவலியுற்றார் மாதம் - இந்த இருவரிலதுபொழுது மிகுதியும் வலிபெற்றுநின்றவருக்குச் சொல்லப் பட்ட இரண்டாம் ஆறாம் மாதத்தில், மானிகர் விழியாளுந்தான் வல் பினி யதனால் வாடி வானவருலகு செல்வாள் - மானேநிகர்த்த கண்ணை யுடைய கர்ப்பஸ்திரீ அரிட்டமுறுவர், வரும்பல னிதுதானென்னே-சந்திரனைப் பாவரொருக்குவதால், சுளையின்கண் செருக்கமுற்று சாகி ன்ற சேற்பயிர்போல கர்ப்பம்தரித்தமாதாவுக்கு இது பலன்வரும்.

பிதாவரிட்டம்.

உஅ

என்னுமா மிரவி தானு மெழில்சனி யலசெவ் வாயை மன்னியே கூடும் போதில் மங்கல னலது நீலன் உன்னித கதிரை நோக்க உற்றிட வலிதன் னோர்க்கு சொன்னமா தத்தி லன்னோன் சோர்வுடன் சாவான் காணே.

இ-ள்: என்னுமா மிரவிதானும் - கர்ப்பகாரணனும் பிதாவும், ஆன்மாவுமென்று கூறத்தகுந்த சூரியன், எழில்சனி யலசெவ் வாயை மன்னியே கூடும் போதில் - கர்ப்பாதானகாலத்தின்போது சிறந்த சனி யையன்றி செவ்வாயைக் கூடியிருக்க, மங்கல னலது நீலன் உன்னித கதிரை நோக்க உற்றிட - சூரியனை சேய்கூடச்சனிபார்க்க அன்றி சனி கூட சேய்பார்க்க, வலிதன் னோர்க்கு சொன்னமா தத்தி லன்னோன் சோர்வுடன் சாவான் காணே - அந்தச்செவ்வாய் சனியிலதுபொழுது வன்மையெவருக்குக்கடிமுன்னதோ அவரின்மாதத்திலதாவது இரண் டாம்மாதம் ஆறாம் மாதம் கர்ப்பத்தின் தந்தைக்கு அரிட்டம் காணே - இன் தை யவைபவ அளவையினளந்தறிக. செவ்வாய்க்குப்பார்வை 7-4-8. சனிக்குப்பார்வை 3-7-10.

மாதாவரிட்டம்.

உகூ

காணவே மதியோன் றானுங் காரியை யலசெவ் வாயை ஆணவ முடனே சேர அல்லது சனிசேய் நோக்கத் தோணிடு மிவர்க டம்மில் தொடர்வலி பெற்ற பேர்க்கு ஊணுமா தங்கள் தன்னி லொண்டொடி சாவாள் நாட்டில்.

இ-ள்: காணவே மதியோன் றானும் - கர்ப்பகாரியமும் மாதா வும் மனதுமென்றுகூறத்தகுந்த சந்திரன், காரியையல செவ்வாயை ஆணவ முடனே சேர - சனியையன்றி செவ்வாயைக்கூட, அல்லது சனிசேய் நோக்க - அங்கணமன்றிச் சந்திரனைச் சனிகூட சேய்பார்க்க அல்லது செவ்வாய்கூட சனிபார்க்க அதுபொழுது கர்ப்பம் லபித்தால், தோணிடு மிவர்க டம்மில் தொடர்வலி பெற்ற பேர்க்கு ஊணு மாதங் கள் தன்னில் - கூடிப்பார்த்துந்தோன்றிய செவ்வாய் சனியில் எவர் வலி யேறியிருந்தாரோ அவராதிபதியாகிய 2ம் 6ம் மாதங்களில், ஒண்டொடி சாவாள் நாட்டில் - மாதாவுக்கு அரிட்டமாம்.

Page 21

சந்தானமணி - மாதாவரிட்டம்

ச0

சாற்றிய வாதானத்தைச் சவுமியர் நோக்க மற்றும் ஏற்றசு ராசிற்பாவ ரிருக்கக் கர்ப் பிணியும் சாவாள் மாற்றிடா திரண்டில் தீயர் மருவிடக் கர்ப்ப மாது கூற்றுவ னுலகு சேர்வன் குறிப்பது வுணர்ந்தி டாயே.

இ-ள்: சாற்றிய வாதானத்தைச் சவுமியர் நோக்க மற்றும்—கர்ப்பாதான இலக்கினத்தைச் சுபக்கிரகம் பார்க்காமல், ஏற்றசு ராசிற்பாவ ரிருக்க—கண்டலக்கினத்திற்குப் பன்னிரண்டிற் பாவக்கிரகம் நிற்க, கர்ப் பிணியும் சாவாள்—கர்ப்பஸ்திரீக்கரிட்டமாகும், மாற்றிடா திரண்டிற் றீயர் மருவிடக் கர்ப்ப மாது கூற்றுவ னுலகு சேர்வாள்—கர்ப்பாதான முகூர்த்தத்திற்கு 2 ம் இடத்தே பாபர்நிற்பினல் கர்ப்பமானமாதருக்கரிட்டம், குறிப்பது உணர்ந்தி டாயே—ஆனால் கொள்ளப்பட்ட லக்னத்திற் சுபரிருந்தாலும் பார்த்தாலும் பிணிதோன்றுமேயல்லாது அரிட்டமில்லை. சுபர் பூரணமதி புதன் குரு வெள்ளி (பாவர்) இரவி சேய் சனி ராகு கேது.

சந்தானமணி - மாதாவரிட்டம்

சக

ஆய்ந்தநல் லுதயந் தன்னி லைடந்திடு நீலன் றன்னைத் தேய்மதி நோக்கி னாலுஞ் சேயவன் கண்ணுற் றாலும் தூய்தரு புவியி லுள்ள சுகமுள்ள கருப்ப மாது சேய்யவயி றிருக்கும் போதே செல்லுவா ளேம நாடு.

இ-ள்: ஆய்ந்தநல் லுதயந் தன்னி லைடந்திடு நீலன் றன்னை—கர்ப்பாதான லக்கினத்திற் சனியிருந்தால் அச்சனியை, தேய்மதி நோக்கினாலும் சேயவன் கண்ணுற் றாலும்—கலைகுறைந்த மதி பார்த்தாலுஞ் செவ்வாய்பார்த்தாலும், தூய்தரு புவியி லுள்ள சுகமுள்ள கருப்ப மாது—பரிபக்குவத்தையாராய்ந்து பெறத்தகுதியாகிய பூமியின்கண் சுகத்தை விரும்பிய கர்ப்பஸ்திரீ, சேய்வயிற் றிருக்கும் போதே செல்லுவா ளேமநாடு—கர்ப்பமான சிசுப்பிறக்குமுன் அரிட்டமடைவர். தேய்மதி நோக்கி னாலும்-சந்திரன் சனியை 7 ம் பார்வையாய்ப்பார்த்தாலும், அன்றிச் சனி சந்திரனை 3-7-10 ல் வைத்துப் பார்த்தாலும், செவ்வாய் 4-7-8 ற் பார்ப்பினுமாம்.

சந்தானமணி - மாதாவரிட்டம்

நாடிய கருப்பா தான நல்லலக் னத்திற் றிங்கள் கூடியே யிருக்கும் போது குணமிலார் வியமிரண்டு வீடதி லிருக்க நல்லோர் மேவுதல் நோக்கு மற்றால் சேடியாக் கர்ப்ப மாதர் செல்லுவாள் வான லோகம்.

இ-ள்: நாடியகருப்பாதான நல்லலக்கினத்திற்றிங்கள் கூடியேயிருக்கும்போது—கருப்பாதானலக்கினத்திலே சந்திரனிருக்க, குணமிலார் வியமிரண்டு வீடதிலிருக்க—சுபாவபாவராகிய சூரியன் செவ்வாய் சனி ராகு கேது கர்ப்பஉதய லக்கினத்திற்கும் சந்திரனுக்கும் பன்னிரண்டிலும் இரண்டிலும்இருக்க, நல்லோர்மேவுதல் நோக்கமற்றால்—சுபாவசுபராகிய புதன் குரு வெள்ளி அந்தலக்கினத்தை மதியை இரண்டுபன்னிரண்டிலிருந்த பாவரைப் பாராலும் கூடாமலும் விட்டால், சேடியாக் கர்ப்பமாது செல்லுவாளேமநாடு—கர்ப்பமாகும் ஸ்திரீகளரிட்டமுறுவர்.

சந்தானமணி - மாதாவரிட்டம்

சஉ

செல்லுமா தான மொன்றாய்த் திங்களா ரிடமு மொன்றாய்ச் சொல்லுமிவ் விரண்டோ ரைக்கும் தோயுமீ ராறி ரண்டில் அல்லலுற் றிடுதீ யோர்க ளமர்ந்திடச் சுபர்நோக் கற்றால் நல்லவள் கர்ப்ப மாது நமனுல கத்திற் சேர்வாள்.

இ-ள்: செல்லுமா தான மொன்றாய்—மேற்கூறியபடி கர்ப்பாதான இலக்கினம் சந்திரலக்கினம் ஒன்றாய்இல்லாமல், கர்ப்பாதானஇலக்கினமொன்றாயும், திங்களா ரிடமு மொன்றாய்—சந்திரனிற்பதான சந்திரலக்கினம் வேறொன்றாக, சொல்லுமிவ் விரண்டோ ரைக்கும்—இலக்கினம் இராசியென்று சொல்லப்படும் இரண்டிடத்துக்கும், தோயுமீ ராரிரண்டில்—முன்னும்பின்னுமாய் 2-12ம் இடத்தில் அதாவது இராசியில், அல்லலுற் றிடுதீ யோர்க ளமர்ந்திட—துன்பத்துக்கேதுவாகிய பாவர் இரவி செவ்வாய் சனி ராகு கேது இவர்களிருக்க, சுபர்நோக் கற்றால்-சுபராகும் பூரணமதி புதன் குரு வெள்ளி கூடுதல் நோக்குதலில்லையாயின், நல்லவள் கர்ப்பமாது நமனுல கத்திற் சேர்வாள்—மக்களைப் பெற்றுவளர்ப்பதற்கு நல்லவராகியஸ்திரீ கர்ப்பமானால் அரிட்டத்துக்காளாவர்.

சந்தானமணி - மாதாவரிட்டம்

கதிபெறு முதயத் திற்குக் களங்கனும் மூன்றில் நிற்க நிதியுறு மிரண்டு நாலும் நிகழுமீ ராறு தன்னில் சதியுறு தீயர் நிற்க சௌமியர் கண்ப டாக்கால் மதியுள கருப்ப மங்கை மரணமு மாவ ளென்னே.

இ-ள்: கதிபெறுமுதயத்திற்கு களங்கனும்மூன்றில்நிற்க-கர்ப்பாதானநேயமுகூர்த்தத்துக்கு மூன்றாமிடத்தில் சந்திரனிருக்க, நிதியுறு

Page 22

44

மிரண்டொரு நிகழுமீராறதன்னில் சதியுறுசியிற்கிற்க-இரண்டு நான்கு பன்னிரண்டாமிடத்திலே பாபக்கிரகங்கள்நிற்ப, சௌமியர் காண் படாக்கால்-சுபக்கிரகம் இலக்கினத்தைச்சந்திரனைப் பாவாரைப்பாராதொழியின், மதியுனகர்ப்பமங்கை மரணமுமாவாளென்னே-கர்ப்பமாகும்காறு அரிட்டமுறுவர். செனனமானகுழவியின் இலக்கினத்துக்கு இவ்விதமிருக்கினும் மாதாவுக்கு மாரகமென்பர்.

மாதாவரிட்டம்.

45

என்னுமிவ் விதநீர் யானை மேற்றகோன் றனிலே மிக்க மன்னிய பலவா னுக்கு வகுத்திட்ட மாதந் தன்னில் நன்னய மொழியாள் கர்ப்ப நாரிக்கே யரிட்ட மென்று இன்னிலத் துறையும் பேரூக் கியம்பிடும் வழியி தாமே.

இ-ள்: என்னுமிவ்விதநீரியானை மேற்கோன்றனிலேமிக்கமன்னிய பலவானுக்கு வகுத்திட்டமாதந்தன்னில் - மேற்கூறியவிதிகளால் நிகழ அனுபவிக்கின்ற கர்ப்பஸ்திரீகளின் மாரகமானது, தீமையைச்செய்வதற்கு நிமித்தமாயிருக்கின்றகிரகங்களில் வலிமைகூடியவருக்கு உடன்பட்ட கர்ப்பமாதத்தில், நன்னயமொழியாள் கர்ப்பநாரிக்கேயரிட்டமென்ற-இன்பத்தைப்பயப்பதான நயவசனத்தைப்பேசும் கர்ப்பஸ்திரீக்கு அரிட்ட பயமுண்டாகும், இன்னிலத்துறைவும் பேரூக்கியம்பிடும்வழியிதாமே- இந்தநிலவுலகத்திலேவசிக்கும் மக்களுக்கு ஈஸ்வரனால் அனுக்கிரகித்து முன்னாக அறிவித்த கண்ணெனும் சோதிடரீதியாயிற்று. (45)

46

இயம்பிடு முதயத் திற்கு மெழில்மதி தனக்கி ரண்டின் வியமெனு மீராறு தன்னில் விளக்கமாய்ப் பாவர் தங்க நயந்தரு சுபக்கோ ளானார் நாளற சனைசென் மத்தை முயன்றுநன் னோக்க முற்றால் மொய்குழல் பிணியாவாரே.

இ-ள்: இயம்பிடு முதயத்துக்கு மெழில்மதி தனக்கிரண்டில் வியமெனு மீராறு தன்னில் விளக்கமாய்ப் பாவர் தங்க-கர்ப்பாதான (முகூர்த்தம்) லக்கினத்துக்கும் அதுபொழுது சந்திரனின்ற இராசிக்கும் இரண்டு பன்னிரண்டிற் பாவராகிய சூரியன் செவ்வாய் சனி ராகு கேது இவர்கள் இருக்க, நயந்தரு சுபக்கோள் தானும் நாளரசனைசென்மத்தை முயன்றுநன் னோக்க முற்றால்-இருளை நீக்குகின்ற வெளிச்சத்தைப்போலத் துன்பத்தை நீக்கி இன்பத்தைக் கொடுக்கின்ற சுபராகிய புதன் வியாழன் வெள்ளியாய்வர்கள் சந்திரனையும் கர்ப்பாதான இலக்கினத்தையும் பார்த்தால், மொய்குழல் பிணியாவாரே-கர்ப்பமான மாதவுக்குப் பிணிதோன்றித் தீரும். (46)

47

கூறிய மதிக்கு நாலில் குணமிலாத் தீக்கோள் நிற்க ஆறலும் எட்டில் நின்றால் அரிவைகற் பிணியும் சாவாள் தேறிய சென்மத்துக்குக் திகழ்சுகம் அதிலோர் தீக்கோள் நேருறச் செவ்வாய் எட்டில் நிற்கக்கர்ப் பிணியும் சாவாள்.

இ-ள்: கூறியமதிக்குநாலில் குணமிலாத்தீக்கோள் நிற்க-கர்ப்பாதானத்தின்போது சந்திராநின்றஇராசிக்கு நாலாமிடத்தில் பாபர்களிருக்க, ஆறலும் எட்டில்நின்றால் அரிவைகர்ப்பிணியும்சாவாள்-செவ்வாய் எட்டாமிடத்தில் இருக்க கற்பமானமாது அரிட்டமாகுவர். அல்லாமல், தேறியசென்மத்துக்குதிகழ்சுகமதிலோர்தீக்கோள் நேருற செவ்வாய்எட்டில்நிற்கக் கற்பிணியும்சாவாள்-கர்ப்பாதானலக்கினத்துக்கு நாலாமிடத்தில் பாபர்இருக்க செவ்வாய் எட்டில்இருக்கக் கற்பமான மாது அரிட்டமடைவர். அதாவது சந்திரன்இருந்தராசிக்கு நாலிற் பாபரும் எட்டில் செவ்வாயும் இருந்தாலும் ஆதானலக்கினத்துக்கு 4-ல் பாபரும் 8-ல் செவ்வாயும் இருப்பினும் அரிட்டமென்ப. (47)

48

தானமாங் கற்பம் தன்னில் தரைமகன் இருக்கும் போது வானுறை கதிரோன் ஏழில் வலிதுட னிருந்தா ராகில் கானமா னையைய னாள் கத்தியா யுதங்க ளாலே நீணில மதனிற் சாவாள் நிச்சயந் காண வென்னே.

இ-ள்: தானமாங் கற்பம் தன்னில் தரைமகன் இருக்கும் போது-கருப்பதான லக்கினத்தில் செவ்வாயிருக்க, வானுறைகதிரோன் ஏழில் வலிதுடனிருந்தாராகில்-சூரியன் ஏழாம் இடத்தில் வலிபெற்று இருக்க, கானமானனையகுலாள்-காட்டிலே வசிக்கின்ற மானை நிகர்த்தபெண் கருப்பமானால், அவர் கத்தியாயுதங்களாலே மீணிலமதனிற்சாவாள் நிச்சயங்காண்-கத்திமுதலிய ஆயுதவகைகளினால் அரிட்டமாகுவர் இது உண்மை அனுபவத்திற்காணுக. (48)

என்னவே பவும னாதி யிகலுற்று ஐயம்பெற் றாலும் பன்னக மதனைச் சேர்ந்தும் பகல்மதி தனையே பாம்பு நன்னிட வாதா னத்தின் நனின்றிடு மாதா திக்கே சொன்னநாள் தனிலே மாது துயருறும் பலன தாமே.

இ-ள்: என்னவே பவுமனாதியிகலுற்று ஐயம்பெற்றாலும்-செவ்வாய்முதலிய கிரகங்கள் ஒருராசி ஒருநட்சத்திரம் நட்சத்திரபாதத்

Page 23

இவைகளிற் சேருதலால் உண்டாகும் யுத்தமானாலும் யுத்தமாகி யிருவரை யொருவர் ஜெயித்தாலும், பன்னகமதனைச் சேர்ந்தால்—ராகுகேது உடனே கூடினாலும், பகல்மதிதனையே பாம்புநண்ணிட—சூரியனை அல்லது சந்திரனை ராகுகேது கூடியிருக்குங்காலும் கிரகணமானாலும், ஆதானத்தின் நவின்றிடு மாதாதிக்கே சொன்ன நாள்தனிலே மாது துயருறும்—கற்பாதான சம்பவத்தில் பத்து மாதங்களுக்கும் அதிபதிகளாய்க் கூறிய எழுபேருள் ராகு கேதுவைக்கூடி யுத்தத்தில் அபஜெயம் பெற்றவர் எவரோ அவருக்குச் சொல்லப்பட்ட மாதத்தில் கற்பவதி கஷ்டத்தோடு பிரசவிப்பள்.

சுகப்பிரசவம்

மதியவனோடு நல்லோர் மருவிட வுதயந் தன்னில் பதிபெறும் சுபக்கி ரகங்கள் சுகம்பத்து இரண்டு வேழாம் பதிதனிற் கோணம் நல்லோர் பகர்லாபம் மூன்றிற் றீயர் கதிரவ னுதய மித்தைக் கண்டிடச் சுகமாய்த் தோன்றும்.

இ-ள்: மதியவனோடு நல்லோர் மருவிட—சந்திரனுடனே சுபக்கிரகங்கள் கூடியிருக்க, உதயந்தன்னில் சுகம்பத்து இரண்டு ஏழாம்பதி தனிற்கோணம் துதிபெறும் சுபக்கிரகங்கள்—கற்பாதான லக்கினத்திலும் நாலிலும் பத்திலும் இரண்டிலும் ஏழிலும் ஐந்தொன்பதிலும் சுபாப சுபராகிய புதன் குரு வெள்ளி யிருக்க, பகர்லாபம் மூன்றில் தீயர்—ஆரபதினொன்று மூன்று என்ற உபஜயஸ்தானங்களில் பாபக்கிரகங்களிருக்க, கதிரவன் உதயம் இத்தைக்கண்டிட சுகமாய்த்தோன்றும்—சூரியன் கற்பாதான லக்கினத்தை சந்திரனைப்பார்க்கச் சுகப்பிரசவமாகும். இங்ஙனமாக எம்மனோர் எல்லோரும் இதனை உற்றுணர்ந்து வினை இடம் காலம் என்ற கர்Shiftம்ப லக்கினத்துக்கு அமையக் கற்பாதான முகூர்த்தத்தை நன்றாய் ஆராய்ந்து நடந்து சுகம்பெறுதல்கடனாம்.

தோன்றிய சென்மந் தன்னைச் சுதாகரன் றன்னைத் தானும் சான்றவ ரென்னும் பானு சசிதனை யலசென் மத்தை ஊன்றியே நோக்குங் காலி லுயர்கருப் பஷ்டி யோடு தோன்றிடு மவனி மீதில் சுகமுள மகவுந் தானே.

இ-ள்: (வெளிப்பொருள்) கற்பாதானலக்கினத்தை அல்லது சந்திரனைப் பிரசவகாலலக்கினத்தை அல்லது சந்திரனை சூரியன்பார்த்தால் கருப்பச்சிசுவானது செழிப்போடுபிறக்கும் சுசுபுத்திரருமாகும்.

ஆண்பெண்.

கஉ

சுகமுள மதிபொன் பானு சூழமர்ா சிகளுஞ் சன்மம் பகருமாண் ராசி யம்சம் பற்றிட வாண்பி றக்கும் மிகசம ராசி யம்சம் வெண்மதி ரவிபொன் சென்மம் தகுமதேல் மடவார் சென்மம் சாற்றுவ தோரை யாலே.

இ-ள்: பூரணசந்திரன் குரு சூரியன் புருஷராசியாகிய மேடம் மிதுனம் சிங்கம் துலாம் தனு கும்பம் இவைகளிலிருக்கக் கற்பாதான லக்கினமுமவ்வீராசிகளில் ஒன்றாக இருக்க மேற்கூறியபடி இரட்டித்தகானிற் சங்கமித்தால் ஆண்குழந்தையே செனிக்கும். இன்னும் நவாம்சத்தினாலும் லக்கினம் சந்திரன் சூரியன் குரு இவர்கள் மேற்கூறிய புருஷராசி அம்சம் அடைந்தாலும் ஆண்புத்திரனே செனிக்கும். மேற்கூறிய இவர்கள் ஸ்திரீராசியாகிய இடபம் கார்க்கடகம் கன்னி விருச்சிகம் மகரம் மீனம் இவ்வீராசிகளில் நிற்கினும், லக்கினமாகவும் இவ்வீராசி அம்சம்பெறுகினும் பெண்குழந்தையே செனிக்கும்.

சாற்றிடு கோள்கள் தாமும் சமவிய ராசி நிற்க ஏற்றிடு மதிக் மாக விருத்திடு ராசி தன்னில் தோற்றிடு மாண்பெண் ணென்று சொல்வது பிரண்டி ராசி மாற்றிடு மொன்ற தாகில் மருவுகோள் வலிபோ லாயே.

இ-ள்: சாற்றிடு கோள்கள்தாமும்—பூரணசந்திரன் குரு சூரியன், சமவியராசி நிற்க—ஆண்ராசியாகிய மேடம் மிதுனம் சிங்கம் துலாம் தனு கும்பம் இவைகளிலும் பெண்ராசியாகிய இடபம் கார்க்கடகம் கன்னி விருச்சிகம் மகரம் மீனம் இவைகளிலிலும் கலந்துநிற்கினும், ஏற்றமேதிகமாக விருத்திடுராசிதன்னில் தோற்றிடுமாண் பெண்ணென்று சொல்வதும்—பெண்ராசியிலிருப்பவரிலும் ஆண்ராசியிலிருப்பவர், வலிபெறில் ஆண் என்றும் ஆண்ராசியில் இருப்பவரினும் பெண்ராசியிலிருப்பவர் வலிபெறில் பெண்ணென்றும், இரண்டிராசிமாற்றிடு மொன்றதாகில் மருவுகோள் வலிபோலாமே—சகலகிரகங்களும் ஆண்ராசியில்நின்றாலும் அதுபொழுது உச்சாட்சி லக்கினசந்திரதிருஷ்டியாய்ப் பெண்கிரகமாகிய சுபாபக்கச் சந்திரன் புதன் வெள்ளி இருப்பின் பெண்சிசுவென்றும் சகலகிரகங்களும் பெண்ராசிகளில் நின்றாலும் அதுபொழுது உச்சாட்சிபெற்று லக்கினத்தையும் சந்திரனையும் பார்த்து ஆண்கிரகமாகிய செவ்வாய் சூரியன் வியாழன்நின்றால் ஆண்சிசுவேதோன்றுமென்ப. இன்னும் ஆதிராசி புருஷராசி ஆதிராசி ஸ்திரீராசிகளெனப் பொதுப்படக்கூறினும் இவ்வொவ்வொருராசியும் ஆண் பெண், பெண் ஆண்என்ற இருகூறு

Page 24

15

டையனவாய்ச் சூரியசெலவு சந்திரசெலவு என்னநிற்கும் இவற்றையும் தனித்தறிவதுகடன்.

ஆண் உற்பவம்

16

வலிவுறு மிரவி பொன்னன் மருவிட வொற்றை ராசி நலமுட னெந்த வோரை நவாங்கிச மெதிலுற் றாலும் பலனுறு புருஷ சென்மம் பாரினி லுதிக்கு மென்று தலமதி லுடைய பேர்க்குத் தானுரைத் திடுவதாகும்.

இ-ள்: கர்ப்பாதானகாலம் வலிவுறுமிரவிபொன்னன் மருவிடவொற்றைராசி-சிறந்தபெலத்தோடு சூரியன் வியாழன் புருஷராசியாகிய மேடம் மிதுனம் சிங்கம் துலாம் தனு கும்பமென்ற இராசிகளில் நின்றும், நலமுடனெந்தவோரை நவாம்சமுற்றுலும்-நவாம்சத்திலே இவர்கள் ஸ்திரிராசி யம்சம்பெற்றிருப்பினும், பலனுறு புருஷசென்மம்பாரினிலுதிக்கும்-தப்பாது ஆண்குழந்தையே உற்பவிக்கும். (16)

பெண் உற்பவம்

ஆகிய புகரோன் புந்தி யம்புலி இந்த மூவர் வாகுடன் வலியுள் ளோராய் மகிழ்சம ராசி நிற்க ஏகிய நவாம்சந் தானெதுவாக இருந்திட் டாலும் தோகையாள் கருப்பி னிக்குத் தோன்றிடும் புவியில் பெண்ணே.

இ-ள்: ஆகிய புகரோன்புந்தி யம்புலியிந்தமூவர் வாகுடன் வலியுள்ளோராய் மகிழ்சமராசிநிற்க-பெண்கிரகமாகிய வெள்ளி புதன் அபரபக்கசந்திரன் வலிமையுள்ளவராய் பெண்ராசியாகிய இடபம் கர்க்கடகம் கன்னி விருச்சிகம் மகரம் மீனம் இவைகளில் நின்று, ஏகிய நவாம்சந்தானெதுவாக இருந்திட்டாலும் தோகையாள் கற்பினிக்கு தோன்றிடும் புவியில்பெண்-மேற்கூறியஇவர்கள் நவாம்சத்தில் எவ்வித அம்சமடைந்திருந்தாலும் கர்ப்பமாதானமாயின் அம்மாதர் உதரத்தே பெண்குழந்தையே உற்பவிக்கும், ஆகியபுகரோன் செவ்வாயம்புலி யெனப்பாடமும் வெள்ளி செவ்வாய் சந்திரன் எனக்கூறுவாருமுளரானால் செவ்வாய் புருஷக்கிரகமானமையால் அதுபொருந்தா. சந்திரனைப் பூர்வசந்திரன் அபரசந்திரன் என அமாவாசைகழிந்த முதல் பூரணசந்திரனென்றும் பௌர்ணமைகழிந்தமுதல் குறைந்தசந்திரனென்றுங் கூறுவது உலகில் கற்றவர்களுக்கும் மற்றவர்களுக்கும் வழக்கமாகின்றது.

இரட்டைச்சென்மம்

17

புனிதனில் தகரும் வீணை புகன்றிடு மங்கி சத்தில் தவழுள பொன்மால் நிற்கச் சாமணவில் யாழை நோக்கக் குவலய மதிலான் பெண்ணும் கூடிய கருவி ருந்து அவனியிற் றோன்று மென்றே யறிந்திடாய் கோந்தன் னாலே.

காலாமிர்தத்திற்குப்பபடி: சந்திரனுடைய பூர்ணத்துவ க்ஷீணத்துவங்களும் இவற்றின்பலனும் சந்திரன் பூர்வபக்க அட்டமிமுதல் அபரபக்க அட்டமிவரையும் பூரணனும் அபரபக்க அட்டமிமுதல் பூர்வபக்க அட்டமிவரையும் க்ஷீணனும் பூரணசந்திரன் சுபகானும் க்ஷீணசந்திரன் அசுபகானுமாம். மேலும் பூர்வபக்ஷ ஏகாதசிமுதல் அபரபக்ஷ அதாவது கிருஷ்ணபக்ஷபஞ்சமிவரையில் பூரணசந்திரசுபகானென்றும் பூர்வபக்ஷ ஷஷ்டிமுதல் தசமியர்தம் வரையும் அபரபக்க ஷஷ்டிமுதல் தசமியந்தம்வரைக்கும் மத்திமசந்திரனாதலால் அல்பபலப்பிரசனென்றும் அபரபக்கஏகாதசிமுதல் பூர்வபக்ஷப் பஞ்சமிவரையில் மிகவும் க்ஷீணசந்திரனாகையால் அசுபகரனென்றும் தாற்பரியம். ஆகவே இங்கேகூறியபடி சந்திரன் உத்தமன் மத்திமன் அதமனென மூவ்விபாகப்பட்டு உத்தமசுபன் மத்திமசுபன் பாவியெனப்படும். கற்பாதானமாம்போது. இ-ள்: சூரியனும் குருவும் மிதுன நவாங்கிசம் அல்லது தனு நவாங்கிசத்திலிருக்க இவர்களைப் புதன்பார்க்க ஆணும் பெண்ணுமாகக்கூடியஇரட்டைப்பிள்ளை பிறக்குமென்பதாம். (17)

பெண்சென்மம்

அரிவையு மதிலே யோரை யதினவாங் கிசையி லொன்றில் குருதியு மலவன் சுங்கன் குணமுட னிருக்கும் போது அறிஞனு மிவரை நோக்க வழகுறு மடவா ராக விரிபுவி யதிலு திக்கும் விபாங்க னிதுதான் காணே.

கற்பாதானமாம்போது. இ-ள்: கன்னி மீனராசி நவாங்கிசத்தில் செவ்வாய் சந்திரன் சுக்கிரன் இவர்களிருக்க, புதன் இவர்களைப்பார்க்கப் பெண்குழந்தை பிறக்கும். உதாரணம் லகுசாதகம் சொல்லப்பட்டிருக்கிறதென்பதாம். ()

ஆண்சென்மம்

பரவிய சனிய வன்றான் பற்றுமா தானஞ் சென்மம் வருமது தன்னை விட்டே மன்னிடப் புருஷ ராசி

Page 25

கற்பாதானகாலம்

திரிதிய மைந்தே ழொன்பான் செப்பலா பங்க டன்னிற் கரியவ னிருக்க வாண்சேய் காசினி யதிலு திக்கும்.

இ-ள்: சனி கற்பாதானலக்கினத்தை விட்டுப் புருஷராசியிலிருத்தும் லக்கினத்துக்கு மூன்று ஐந்து ஏழு ஒன்பது பதினொன்று இத்தானங்களில் ஒன்றாக சனியிருக்க ஆண்குழந்தைபிறக்குமென்பதாம்.

அலிசென்மம்

ககூ

உற்றகன் மதியோன் றானு முயர்சம ராசி தன்னிற் பற்றிட லரித னான்றான் பகர்விய ராசி யேறி நிற்றலான் மதியைப் பானு நேர்பெற நோக்கும் போது பெற்றசே யலியா மென்று பேசுவா ருலகிற் றானே.

இ-ள்: சந்திரன் இரட்டைராசியாகிய இடபம் கடகம் கன்னி விருச்சிகம் மகரம் மீனம் இந்தராசிகளிலிருக்க சூரியன் மேடம் மிதுனம் சிங்கம் துலாம் தனு கும்பம் இந்தராசிகளில் எதிலாகிலுமிருந்து சந்திரனைப்பார்க்கப் பிறக்கிற சிசு அலியாகுமென்பதாம்.

கற்பாதானகாலம்

க0

உலகத்திற் புருஷ ராசி யுற்றிடு மாலோன் றன்னை நலமுறு மிரட்டை ராசி நண்ணிய சனியன நோக்கக் குலவுரிப் புவியு தித்த குழந்தையு மலியா தென்றே சலனம தற்றே கூறு தாரணி மானி டர்க்கே.

இ-ள்: மேடம் மிதுனம் சிங்கம் துலாம் தனு கும்பம் இந்தராசிகளிலிருக்கிற புதனை இடபம் கடகம் கன்னி விருச்சிகம் மகரம் மீனம் இவைகளிலிருந்து சனி புதனைப்பார்க்கத் தோன்றும் சிசு அலியாகுமென்பதாம்.

கற்பாதானகாலம்

கக

தாரணி சுதனுஞ் செவ்வாய் தங்கிடப் புருஷ ராசி ஞரனு மிரட்டை ராசி சுகமுட னிருக்க விக்கோள் நேரதா யொருவ ரைத்தான் நெறியுட னோக்கும் போது பாரதி லலிய தாகப் பாவைபெற் றெடுப்பாள் தானே.

இ-ள்: செவ்வாய் மேடம் மிதுனம் சிம்மம் துலாம் தனு கும்பம் இந்தப் புருஷராசிகளிலிருக்கச் சூரியன் இடபம் கடகம் கன்னி விருச்சிகம் மகரம் மீனம் இந்த ஸ்திரீராசிகளிலிருந்து செவ்வாயைப் பார்க்க அல்லது செவ்வாய் சூரியனைப்பார்க்க அலிசெனனமென்பதாம்.

கற்பாதானகாலம்

கஉ

தானவன் செனன மொற்றை தானறச் சேய் லக்ன வீனமி லிரட்டை ராசி யிருந்துமே மதிசேன் மத்தைத் தானுமே நோக்கும் போது சார்ந்திடு மலிய தாக ஞானில மதிலந் தோன்றும் நற்பலன் கூறு கான்கே.

இ-ள்: சந்திரனிருந்த இராசியும் சென்மலக்கினமும் புருஷ இராசியாகி செவ்வாய் ஸ்திரீ இராசியிலிருந்து சந்திரனையாவது சென்ம லக்கினத்தையாவது பார்க்க நாலாவது அலிசெனனம் பிறக்குமென்பதாம்.

கற்பாதானகாலம்

கங

கூறிய மதிபெண் ராசி குலவுமா லானி ராசி தேறியே இருக்கும் போது சிறப்புறு மிவர்க ளைத்தான் ஆரலே கண்ணுற் றீக்கா லவனியி லுதித்த பாலன் நேரதா மலிய தென் றே நிச்சய பலன்கூ றைந்தே.

இ-ள்: புதன் புருஷ இராசியிலும் சந்திரன் ஸ்திரீ இராசியிலுமிருக்க இவர்களைச் செவ்வாய் எந்நராசியிலிருந்தாவது பார்க்க ஐந்தாவது அலிசென்மம் பிறக்குமென்பதாம்.

கற்பாதானகாலம்

கச

பலனுறு மதிஜன் மங்கள் பகரிங்கவ னெங்குற் றாலும் நலமுறு புருஷ ராசி நவாங்கிசை தனிலி ருக்கத் தலமதில் மகவு தித்தால் தப்பாது அலிய தென் று பெலமுட னுலகோ ருக்குப் பேசுநன் முறையில் மாறே.

இ-ள்: சந்திரனும் லக்கினமும் சுக்கிரனும் இராசியில் எதிலிருந்தாலும் நவாம்சையில் புருஷராசியாயிருக்க இவர்கள் அதில் வலிவுடனிருக்க ஆறாவது அலிசென்மம் பிறக்குமென்பதாம்.

கற்பாதானகாலம்

முறையுட னிலவும் வெள்ளி மொய்குழ லிராசி நிற்கச் சுரகுரு மால்சேய் சென்மம் தூயவாண ராசி யாகில் பரவிய கோள்க டங்கும் பற்றது மிதுனம் போலத் திரமுடன் பெண்ணு மாணும் சேர்ந்துமே பிறக்கும் செப்பே.

இ-ள்: சந்திரன் சுக்கிரன் இருவரும் இரட்டை இராசியிலிருக்கக் குரு புதன் செவ்வாய் சென்மலக்கினம் இந்த நாலும் ஒற்றையிரா

Page 26

66

சியாயிருக்க இப்படிக் கிரகம் ஸ்திரீராசியிலும் புருஷராசியிலுமிருப்பதால் இந்த விதமாக மிதுனத்தைப்போல ஸ்திரீகுழந்தையும் புருஷக்குழந்தையும் ஜெனனமாகுமென்பதாம். (66)

கற்பாதானகாலம்.

67

செப்பிய சென்ம லக்னம் செழுமதி யிறையு மில்லம் ஒப்பிய சம்வே ரையா யுயர்புரு ஷக்கோள் தானும் துப்புறு மதியை யல்லால் தூயசென் மத்தைப் பார்க்க இப்புவி யதிலான் பெண்ணு மிரட்டையாய்ச் செனிக்கு மாமே.

இ-ள்: சென்மலக்கினமும் சந்திரனிருந்த வீடும் இரட்டையிராசியாயிருக்கப் புருஷகிரகங்களாகிய செவ்வாய் சூரியன் குரு இவர்களில் யாராவது சென்மலக்கினத்தையாவது மதியையாவது பார்க்க ஆண் குழந்தையும் பெண்குழந்தையுமாகக் கூடி இரட்டைப்பிள்ளையாகப் பிறக்குமென்பதாம். (67)

கற்பாதானகாலம்.

68

இரட்டையரா சியதே சென்ம மிரணியன் செவ்வாய் புந்தி இரட்டையரா சியிலே மிக்க வெழில்பெல வானாய் நிற்க இரட்டையாய்ப் பெண்ணு மாணு மேந்திழை பெறுவா ளென்று இரட்டைசென் மங்கள் தன்னை யியம்பின னவனி யோர்க்கே.

இ-ள்: சென்மலக்கினம் குரு செவ்வாய் புதன் இவர்கள் ஸ்திரீராசியாக அவர்களுமந்தராசியில் பலவானாயிருக்கக் கற்பிணி ஆணும் பெண்ணுமாக இரட்டைப்பிள்ளைகளைப் பெறுவாளென்று இந்தவிதமாக இரட்டைச்சென்மங்கள் சொல்லப்பட்டிருக்கிறதென்பதாம். (68)

கற்பாதானகாலம்.

69

இயம்பிடு யாழ்ந வாம்ச மிருந்திடு புலவன் றன்னை கயமுறு முபய ராசி நவாம்ச மிருந்த கோள்கள் சுயமொடு நோக்குங் காலிற் றோன்றிடு புருஷ சென்மம் மயிலெனப் பெண்ணி ரண்டை மங்கைபெற் றெடுப்பா ளாமே.

இ-ள்: மிதுன நவாங்கிசத்திலிருந்தபுதனை உபயராசியாகிய கன்னி தனு மீனத்திலிருந்தகிரகம் புதனைப்பார்க்க ஆண்குழந்தை ஒன்றும் பெண்குழந்தை இரண்டுமாக மூன்றுசிசுவைப் பெற்றெடுப்பாளென்பதாம். (69)

69

மங்கைந நவாம்சை யுற்ற மால்தனை யுபய ராசி தங்கிய கிரகம் நோக்கத் தையலி ரண்டா ணொன்றாக இங்கிதத் துடனே மூன்று விளவலை பெறுவா ளென்று சங்கய தளவு ரைத்தோம் தாரணி யுறுமார் தர்க்கே.

இ-ள்: கன்னிராசி நவாம்சையிலிருந்த புதனை மற்ற உபயராசிகளிலிருந்த கிரகங்கள் பார்க்கப் பெண்குழந்தை இரண்டும் ஆண்குழந்தை ஒன்றும் ஆக மூன்று சிசுக்களைப் பெறுவாளென்பதாம். (69)

70

உருமிவாழ் நவாங்கி சத்தி லுறைந்தபன் டிதனைத் தாலும் துரகம்மில் தெனி லுற்ற தூடகோ ளெவர்க ளேனும் மருவிட வலது நோக்க மங்கையுஞ் சிசுக்கள் மூன்றைப் பெருமையா யாண தாகப் பெறுவள்பே ருலகிற் றானே.

இ-ள்: மிதுன நவாங்கிசத்திலிருந்த புதனைத் தனு மீன மிலிருந்த கிரகம் நோக்கினாலும் அல்லது மிதுனராசியிற்தானே யாராவது கூடியிருந்தாலும் அப்போது மூன்று ஆண்சிசுக்களைப் பெறுவாளென்பதாம். (70)

71

பேர்பெருங் கன்னி ராசி பெருநவாங் கிசையி லுற்ற சீர்பெரும் மாலோன் றன்னைத் திகழ்கயல் சேடி யம்ச மார்கிர கங்கள் தாமும் மங்கையா மிராசி தன்னைப் பார்தனி னோக்கப் பெண்சேய் பகர்வது மூன்று திக்கும்.

இ-ள்: கன்னியாராசி நவாம்சையிலிருந்த புதனை யாராவது கூடிநின்றாலும் அல்லது மீனநவாங்கிசையிலிருந்த கிரகம் யாராவதோக்கினாலும் மூன்று பெண் சிசுக்களைப் பெறுவாள். (71)

72

உதயமு மைந்தொன் பானி லுயர்புல னெனுமே நிற்க மதியொடு மற்ற வைவர் மாலுக்கு வலிவு குன்றில் அதிகமும் வயிறு கைகா லங்கமும் விருத்தி யாகிப் பதியதி லுதிப்பா னென்று பகருவாய் பலனைத் தானே.

இ-ள்: சென்மலக்கினம் ஐந்தாமிடம் ஒன்பதாமிடங்களிற் புதன் நட்பு ஆட்சி உச்சமூலத்திரிகோணம் என்னுமிடத்தில் வலி துடனிருக்க மற்றக்கிரகங்கள் புதனைப்பார்க்கிலும் வலிகுறைந்திருக்க அதிக அங்கமாம். அதெப்படியென்றால் கால் கை வயிறு முதலானவிடங்களாகுங். காலில் விரலதிகமாயும், கையில் விரலதிகமாயும் அல்லது கட்டிச் சதைவளர்ச்சி முதலானதுமாகுமென்பதாம். (72)

Page 27

எஉ

தானவன் விடயபி னிற்கச் சலசர நண்டு தேளி லானவந் தியந வாங்கிச மடைந்திடு பாபக் கோளால் ஊனவாக் குடையோ னாக வுற்பவக் கற்பச் சேயன் மானிலந் தனிலு திப்பான் மகவிதன் பலனைக் கூறே.

இ-ள்: சந்திரன் இடபராசியிலிருக்கக் கடகம் மீனம் விருச்சிகத்தின் கடைசி நவாங்கிசத்திற் பாபர்களிருந் தாராகில் அவராமில ஊமையனாகப் பிறப்பன். (எஉ)

எச

கூறுமென் னிலவை நல்லோர் குறிப்புட னோக்கில் வாக்கும் தேறியே வசனிப் பானாம் தீயரும் சுபர்தன் னோக்கம் நேரிடில் சுபர்வ லுத்தால் நிலமதில் சின்னாள் வாக்கு சாருமாம் வலிதாய்த் தீயர் தானோக்க வூமை சொல்லே.

இ-ள்: முன்கவியில் சொல்லியபிரகாரம் கிரகமிருந்து அந்த இடபசந்திரனைச் சுபர்கணோக்க ஊமையல்ல நன்றாய்ப்பேசுவானாம் சுபரும்பாபரும்பார்க்கச் சிலநாட்சென்று பேசுவான். பாவர்கணோக்க ஊமையெனப்படும். (எச)

எரு

அரும்பிய மிதுனங் கன்னியிற் புந்தி யங்கிசந் தனிற்செவ் வாய் காரி, யிருந்துதா னதயஞ் செய்திடப் பிறந்தோ லக்கண மின்றியே யடுக்காய்த், திருந்திய வாயிற் பல்லுடன் பிறக்குஞ் சேய்சனி யுச்சமே யாகிற், பெரும்பல்ல தாக நிரம்பிய வாயாய்ப் பிறந்திடும் பேடின மயிலே.

இ-ள்: மிதுனகன்னியில் புதனிருக்க-மிதுனகன்னி நவாம்சத்தில், செவ்வாய் சனியிருக்க ஜெனித்த கருப்பச்சிசுவுக்குச் சிறப்பில்லாதபல்லுகள் தோன்றிப் பிறக்கும். செவ்வாய் சனி உச்சம்பெற்று மிதுனகன்னியிலிருந்த புதனைப்பார்க்கப் பெரியபல்லுகள் நிரம்பஉடையனவாய்ப் பிறக்கும். (எரு)

எசு

கலைமதி தன்னைச்சே யெதிர் பார்க்கக் கடகந்தா னிலக்கின மாகச், சுலவிடப் பிறந்தோன் கூனனே யாவன் குறித்திடு மதி செவ்வாய் சனியு, னலைவிலா மீனர்தன்னையே நோக்க வாங்கஃ துதயமாய்ப் பிறந்தோன், சிலைவர் நுதலாய் கூனனா மென் னச் செப்பினர் கணிதநூ லவரே.

இ-ள்: சந்திரனைச் செவ்வாய்பார்க்க, கற்பாதான லக்கினம் சென்மலக்கினம் கற்கடகமாக உற்பவமானசிசு கூன்உருவமாம். அல்லாமல் சந்திரன் செவ்வாய் சனி மீனராசியைப்பார்க்க அந்தமீனம் கற்பாதான லக்கினம் சென்மலக்கினமாய்வர, குழந்தை கூனனாய்ச்செனிக்கும். (எசு)

எஎ

மீனந்தேள் கடகம் வந்ததின் மதிதான் மிகுபரவர் தன்னு டன் நிற்க, தானஃ துதய மாகவே பிறந்தோன் றரணியிற் செவி டனே யாவன், வானுறு கதிரோன் மதிசனி பார்க்க மகரலக் னந் தனிற் பிறந்தால், நானில மீதிற் குரனாய்ப் பிறப்பன் நறை கமழ் கமலமின் னரசே.

இ-ள்: மீனகடகவிருச்சிகத்தில் சந்திரன் பாவராகிய இரவி சேய் சனி ராகு கேதுவுடன்இருக்க, மீனகடகவிருச்சிகம் ஆதான சென்மலக்கினமாய்வரத் தோன்றினும் பிறக்கினும் செவிடனாகும். சூரியனைச் சந்திரனைச் சனிபார்க்க மகரலக்கினம் ஆதானசென்மமாகத் தோன்றி யும் பிறக்கினும் குறள்ரூபமாகும். (எஎ)

எஅ

ஆமக ரத்திற் பிறந்திடச் சனிய னருக்கனும் நோக்கியிற் றுடைக்கீ, ழேமிசக் குறைவாம் மதிசனி கதிரு மெதிருற நோக் கிடிற்றானே, கோமள மான வவயவங் களிலே குறைவுண்டா மிவர்களே பெலக்கிற், றூமிவர் பெலமே யில்லையே யாயிற் சங்கம் வந் தெய்திடு மென்பார்.

இ-ள்: மகரம் ஆதானசென்மலக்கினமாக-மகரத்தைச்சூரியன் சனி பார்க்க, துடையின்கீழ்ப்பாதம் சோம்பச்செனித்துப்பிறக்கும். சந்திரன் சூரியன் சனி ஒருவரையொருவர் பார்த்திருந்தால் சிரசு நெஞ்சு முகம் பாதம் இன்னோரன்ன அவயவக்குறைவுடன் செனித்துப்பிறக்கும். சந்திரன் சூரியன் சனி இவர்கள் பெலவீனமாய் நின்றொருவரையொருவர்பார்த்தால் கர்ப்பச்சிசுவிற்குறையின்றியும் பின்வாழுங்காலத்திலவயவஊனம்உளதாகும். (எஅ)

சென்றவைந் தாமி ராசிந் திரிகோண மூன்றிற் பாவர் நின்றிடிற் கால்கை யூனம் நிகரொன்பான் மூன்றிற் பாவர் ஒன்றிநிற்கால் குறைக்தி ருக்கும் உதயந்தின் மூன்றிற் பாவர் ஒன்றியிற் தலைக்கு றுக்கு மொளிமதி முகத்தி னாளே.

இ-ள்: சென்றவைந்தாமிராசித் திரிகோணமூன்றிற் பாவர் நின்றிடில்- பன்னிரண்டுராசிகள் சரம் திரம் உபயமென மூவ்விபாகப்

Page 28

சந்தானமணி.

படும் மேடம் கர்க்கடகம் துலாம் மகரம் சரராசியும், இடபம் சிங்கம் விருச்சிகம் கும்பம் திரராசியும், மிதுனம் கன்னி தனு மீனம் உபயராசியும் எனப்படும். சரராசிகளை ஆதானசென்மலக்கினமாய்க்கொள்ளும் இடத்து அவ்விலக்கினபாகை முப்பதன் முதற்பத்துன் இலக்கினமே திரேக்காணம் இரண்டாம்பிருபதுள் ஐந்தாம்ராசியே திரேக்காணம் மூன்றாம்முப்பதுள் ஒன்பதாம்ராசியே திரேக்காணம். திரராசிகளை யாதானசென்மலக்கினமாய்க் கொள்ளுமிடத்து, அவ்விலக்கினபாகை முப்பதன் முதற்பத்துப்பாகைக்குள் ஒன்பதாவதுராசியே முதற்றிரேக்காணம். இரண்டாம்பிருபதன் உதயலக்கினராசியே இரண்டாந்திரேக்காணம். மூன்றாம்முப்பதுள் ஐந்தாவதான ராசியே மூன்றாந்திரேக்காணம். உபயராசிகளை ஆதானசென்மலக்கினமாய்க் கொள்ளுமிடத்து, அவ்விலக்கினபாகைமுப்பதன் முதற்பத்துப்பாகைக்குள் ஐந்தாவதான ராசியே முதற்றிரேக்காணம். இரண்டாம்பிருபதுள் ஒன்பதாவதான ராசியே இரண்டாந்திரேக்காணம். மூன்றாம்முப்பதுள் உதயலக்கின ராசியே மூன்றாந்திரேக்காணம். இம்முறைகண்ட லக்கினம் சரம் திரம் உபயமென்ற விகற்பங்களை உணர்ந்தும் நிகழ்காலம் கொள்ளும் இலக்கினத்தின் முற்பாகமோ நடுப்பாகமோ கடைப்பாகமோவென்பதை லக்கினப்புடத்தாலும் ராசிநாழிகைப்பாகத்தாலும் தெரிந்தும் பின்னர் ஆதானசென்மலக்கினம் ஐந்தாந்திரேக்காணமாயுதிக்க, ஐந்திற்குமூன்றிலும் கொள்ளும் லக்கினத்துக்கு ஏழிலும், பாவராகிய சூரியன் செவ்வாய் சனி இராகு கேது இருக்க, கால்கைஊனம்-கால்கைகளிலூனமும், நிகரொன்பான்மூன்றிற் பாவர் ஒன்றிற் கால்குறைந்திருக்கும் ஆதானசென்மலக்கினம் ஒன்பதாந்திரேக்காணமாயுதிக்க, ஒன்பதற்கு மூன்றிலும் கொள்ளும் லக்கினத்துக்குப் பதினொன்றாலும் மேற்கூறிய பாவர் இருக்க, கடன்காலாகச்செனிக்கும், உதயத்தின்மூன்றிற் பாவர்ஒன்றிடிற்ப தலைசிறுகும்- கர்ப்பாதானசென்மலக்கினம் உதயதிரேக்காணமாயுதிக்க உதயராசிக்கு மூன்றிலே மேற்கூறிய பாவர்இருக்கத் தலைசிறுததுச் செனிக்கும். திரேக்காணஉதிப்பைச் சரதிரஉபய பாகுபாடின்றி நேரே முதற்பத்துப்பாகைக்குள் உதயதிரேக்காணமென்றும், இருபதுபாகைக்குள் ஐந்தாந்திரேக்காணமென்றும், முப்பதுபாகைக்குள் ஒன்பதாந்திரேக்காணமென்றும், யாதும் ஆதாரமில்லாதமுறையில் கொள்பவர் சிலருளர். மேலேகூறப்பட்டுள்ளவிதி ஜாதகசிந்தாமணியி லுதாரணத்தோடு பரக்கக்காணலாம். அதாவது ஆளப்படும்லக்கினத்துக்குரிய நட்சத்திரபாதங்கள் ஒன்பதன் மும்மூன்றுபாதம் ஒவ்வொருதிரேக்காணம். கொள்ளப்பட்ட இராசிலக்கினத்துக்குரிய நட்சத்திரஆரம்பபாதம் எந்தஅம்சத்துக்குரியதாகுமோ அதுவே முதற்றிரேக்காணமாயுதிக்கும். ஆகவே சரராசிகள் ஒன்றைந்தொன்பது. திரராசி ஒன்பதொன்றைந்து. உபயராசி ஐந்தொன்பதொன்றாய் ஆரம்பித்து முடியுமென்க. சோதிடகிரகசிந்தாமணியில் திரேக்காணலக்கினமுறையைக் காண்க. மும்மூன்றானபாதத்துள் முதல்மூன்றின் முதற்பாதாம்சஆரம்பம். இரண்டாம் மூன்றின் இரண்டாம்பாதாம்சதிரேக்காணம். மூன்றாம் மூன்றின் மூன்றாம்பாதாம்சராசி திரேக்காணம். (எக)

சந்தானமணி.

70

என்னவே யொன்றைந் தொன்பா னிராசிகள் மூன்றி லுந்தான் உன்னுதி ரேக்காண மிரண்டி லுதிரனு மிருந்த போது சுன்மதி பகல வன்றான் றொடர்ந்துமே நோக்க முற்றில் தன்னது பாத வீனத் தனையனுற் பத்தி யாவான்.

இ-ள்: ஒன்றைந்தொன்பானாக ஒன்பதொன்றைந்தாக ஐந்தொன்பதொன்றாகக் கொள்ளுந்திரேக்காண இராசிகளுள் இரண்டாந்திரேக்காணத்திலிருந்த செவ்வாயைச் சூரியசந்திரன் சனி இவர்கணோக்கப் பாதவீனமானபிள்ளை செனிக்குமென்ப. (எ0)

சந்தானமணி.

71

உதயத்திற் காரி பாம்பு உற்றிடப் பெரிய நாபி சிதைவிலாச் சனியமால் கூடிச் சென்மத்தில் நிற்கிற் கூனாம் இதையராச் சேயுங் கூட விராகுவுஞ் சனியுங் கூடச் சதைபதி முகத்தா யோரைத் தோன்றுஞ்சேய் பிணிய தாமே.

இ-ள்: கர்ப்பாதான சென்மலக்கினத்தில் சனிராகு இருக்க நாபி பருத்தும், மேலேகூறிய லக்கினங்களில் சனி புதன் இருந்தால் கூனும், மேலேகூறிய லக்கினங்களில் செவ்வாய் இராகு கூடியிருந்தாலும் இராகு சனி கூடியிருந்தாலும் பிணியுமாகத்தோன்றும். (எக)

சந்தானமணி.

72

வாக்கினிற் செவ்வா யாறின் மதிநிற்கி லிடங்க ணூனம் வீக்கிய வெட்டிற் பானு வியந்தனிற் சனிதான் நிற்கப் போக்கிடும் வலக்கண் டன்னைப் புகழ்மதி யிரவி தானும் தாக்கிட விரவி நிற்கிற் றானிரு கண்போ மென்பார்.

இ-ள்: கர்ப்பாதான சென்மலக்கினத்துக்கு இரண்டாமிடஞ்செவ்வாயினிற்க ஆறாம் இடம் சந்திரனிருந்தால் இடக்கண்கேடு. மேற்படி லக்கி...

Page 29

அஉ

னங்களுக்கு எட்டில் சூரியன் பன்னிரண்டிற்சனி இருந்தால் வலக்கண் கேடு. சூரிய சந்திரர்சேர்ந்து ஆறெட்டிலிருக்கச் செவ்வாய்ச்சனிஇரண்டு பன்னிரண்டில் நின்றால் இருகண்ணும் போகும். (அஉ)

அங

பகருமா தான லக்னம் பற்றிடு மிரவி யாட்சி பகலவ னுடனே திங்கள் பரிவுடன் கூடிநிற்கப் பகலவன் சுதனும் சேயும் பாங்குட னுதயம் நோக்கப் பகரிகு விழியி னானாய்ப் பாரதி னுதிக்கும் சேயே.

இ-ள்: கற்பாதானலக்கினம் சிங்கமாக அதில் சூரிய சந்திரன் இருக்க சனி செவ்வாயுதயத்தைப்பார்க்க, கற்பமாம் சுபபார்வையின்றிப் பிறக்குமென்ப. (அங)

அச

உதயமா தான சிங்க மொளிகதி ராட்சி சென்மப் பதியதைச் சனிசேய் நோக்கப் பாலர்க்கு வலக்க ணூனம் மதியவன் சீயம் நிற்க மங்கலன் சனிநோக் காகில் விதிபெறு மிடக்க ணூனம் விளக்கமாய் வந்த சேயே.

இ-ள்: கர்ப்பாதானம் சென்மலக்கினம் சிங்கமாக சூரியன் ஆட்சியாய்ச் சிங்கத்துநிற்ப சனி செவ்வாய் சூரியனை உதயத்தைப்பார்க்கத் தோன்றுஞ் சேசுவலக்கண்ணூனம். அன்றி சந்திரன் சிங்கத்தேநிற்கச் சிங்கமாதானசென்மலக்கினமாகச்செவ்வாய் சனியுதயத்தைமதியைப்பர்க்க உதிக்கும் சேய்க்கு இடக்கண் ஊனம். (அச)

அரு

அற்புத லக்ன மைந்தி லொன்பதிற் பொற்புள புந்தி பொருந்துற் நிற்றணர் துர்ப்பல மாயிடிற் றோற்றுங்கை கால்களின் கற்பி லதிக விரல்களைக் காட்டுமே.

இ-ள்: கற்பாதான சென்மலக்கினத்துக்கு உதயம் ஐந்தொன்பதாயிடத்தில் புதன் பகைநீசம் அஸ்தமயனமாய்ப்பாவரால் நோக்குற்று சுபநோக்கற்று நின்றால், கைகாலிலொன்றுக்குமேற்பட்ட விரல்கள் உண்டாகும். இங்ஙனம் இவர்கள் நிற்றலாலும் நோக்கலாலும் மேற்கூறியபடி சுசுதுக்கங்கள் சம்பவிக்குமாகக் கூறியும் இதன்பின்னூலோர் சமாதானமும் சொல்லப்படும். (அரு)

அசு

நாளுந்தீக் கோள்கள் கூட நண்ணிய சுபர்நோக்காரேல் குழுமிப் படிப்ப லிக்குஞ் சொலுந்தியோர் பலமே குன்றி விழுற நற்கோள் பார்க்கின் விளங்கிய மகவங் கத்தில் கோளுறு வியாதி தன்னைக் குறிப்பறிந் துரைக்க லாமே.

இ-ள்: மேற்கூறியவிதிகளின்படி சூரிய சந்திரனையும் கற்பாதான சென்மலக்கினத்தையும் ராசியையும் சுபாசுபவராகிய செவ்வாய் சனி ராகு கேது இவர்கள் கூடியிருப்பினும் நோக்கினும் மேலேகூறிய சூரிய சந்திரனை இலக்கின ராசியை அப்பாவரைச் சுபாசுபராகிய புதன் வியாழன் வெள்ளி கூடாமலும் பாராமலுமிருந்தால் அவ்வப்பலன் நிராகரிக்கப்படாது சம்பவிக்கும். பிதாவாகாந் கற்பம்சுக இவர்களுக்கு மிருத்தியு முதலியதுன்பங்களை உண்டாக்கக் காரணராகும் செவ்வாய் சனி ராகு கேது பெலங்குறைந்துநிற்கச் சுபர்கள்பார்த்தால்அவ்வப்பலன் நிராகரிக்கப்பட்டுப் பிணியச்சந்தோன்றித்தீரும். (அசு)

அஎ

தூயசந்தான தீபிகை யதனிற் சொல்லிய தீப்பலன் யாவும் ஆயபொன் வெள்ளி வளர்பிறைத் திங்க ளனகுற நோக்கிடிற்றீரும், காய்சினக் களிற்றின் கோடுபோல் நிமிர்ந்து கற்புடைச் செப்பெனப் பணைத்து, மேய்தெள்ள முதக் கலசத்தை வென்று விளங்கிய கொங்கையின் னரசே.

இ-ள்: தூயசந்தான தீபிகையதனிற் சொல்லிய தீப்பலன்யாவும்-சோதிடாரூடத்தில் பலவற்றுள் கூறிய கூறியபடி தவறாது பலாவலன் நிகழும் விதிகளை அனுபவத்தர் அங்கீகரித்த சத்தம்பொருந்திய சந்தான தீபிகைப்பெயர் நூலில் சொல்லப்பட்ட, தீயனுகாம்பலன், ஆய பொன் வெள்ளி வளர்பிறைத் திங்களனகுற நோக்கிடிற்றீரும்-வியாழன் வெள்ளி பூரணசந்திரன் இவர்கள் தீமையாகிய பலனையும் நிவர்த்திகரா கிய பாவரையும் இலக்கின ராசியையும் நோக்கியும் கூடியும் பெலம் பெற்றிருந்தால் தோஷநிவாரணமென்பர். (அஎ)

புத்திரதோஷம்.

அஅ

கடலான கலைஞ்ஞான தேசிகனங் கயமுகனைக் குகனைக் கான்சூழ், மடலாரும் குவவுயுபூர் தாமரையிற் பதிந்தருளும் வாணிமானை, அடலாரு மொன்பதுகோ ளாகியவா னவர்தம்மை யடியார் நெஞ்சத், திடாரன தைத்துறுப்பீர் அருண்சாப்பீ ருரைப்பான் இறைஞ்சு வேனே.

செல்வ மைந்தரில் லாததுஞ் சேர்வதும் புல்லு நெத்துப் புதல்வர் கிடைப்பதும்

Page 30

சந்தானமணி

அகூ

மல்கு புத்திரர் சேதமும் மைந்தர்கள் நல்ல வாண்பெண் பருவ வாவையும்.

சந்தானமணி

கூ0

நீதி வித்தகர் சொற்றிடு நீள்பொருள் ஆத லாற்கற் றமைந்த புலமையோர் தீதி னைத்தள்ளி நன்கொளல் போலெனெசொற் கோதி னைத்தளிக் கொள்வர் பொருளுையே.

சந்தானமணி

கூ௧

அடையு மோரையொடடந்தினுக் கேழினுக் குடையர் பொன்வலி குன்ற வுதித்துளார் மடந டைப்புதல் வற்பெறு மாண்பிலார் தொடைதொ டுத்துச் சுருங்குங் குழவியே.

இ-ள்: பிதா மாதாவின் சாதகத்தில் ஒன்றரைந்தேழுக்கதிபதி களும் புத்திரகாரகன் வியாழனும் பெலவீனமான 6 8 12ல் பகை நீசமாய்ப்பாவருடன் கூடியும் அவர்களின் பார்வைபெற்றும் நிற்பின் சந்தானத்தைப் பெற்றுமழிவும் கதியில்லாதவர் தோன்றியழிந்துவிடும். ஆகமையால் கற்பாதான முகூர்த்தத்து மேற்கூறிய ரானாதிபதிகளும் வியாழனும் பெலம் பெறுதலிதன் சாந்தி.

சந்தானமணி

கூஉ

அஞ்சிற் றீய ருறவுதற் காதிபன் எஞ்சல் நீசத்தி லெய்த இவர்களை வஞ்சர் தீர்குபர் நோக்கற வந்துளார் கொஞ்சு மின்சொற் குமாரன்சி றற்பலர்.

இ-ள்: சாதகப்படி ஐந்தாமிடத்தே இரவிசேய் சனி ராகு கேது வென்றபாவியர் இருக்க ஐந்தாம்வீட்டுக்குடையவன் பகை நீசஅஸ்த மயனமாக அவரையும்மைந்தையும் சுபர்கள் பாராதொழியின் கொஞ்சுங்குழ வியினின் சொற்சிறப்பிலாதவராவார்.

சந்தானமணி

கூங

வில்லின் மீனின் வியன்மதி சோதரப் புல்லுமைந்தினிற் பாவர் பொலிவுற நல்லர் நோக்க நணுகற நண்ணினோற் கில்லை யில்லை யெழிற்கெழு மைந்தரே.

இ-ள்: ஜாதகத்தில் தனு மீனத்தில் சந்திரன்இருக்க ஐந்தாந் தானத்தில் பாவர்பொருந்தச் சுபக்கிரகங்கள் சந்திரனையும் ஐந்தையும் பாராமலும் கூடாமலுமிருப்பின் சந்ததியில்லையாகும்.

சந்தானமணி

கூச

எய்ந்த வைந்தி லிசைக்க அதிபதி நைந்து பாவர் நடுவினில் நண்ணியே உந்து மாறிரண் டாரெட் டிறைச்சுபர் வந்து பார்ப்ப தென்மல டாவினே.

இ-ள்: ஜாதகத்திலே ஐந்தாம்வீட்டுக்குடையன் பெண்களுக்கு ஏழாம்வீட்டுக்குடையவன் பகைநீசம்பெற்றுப் பாவரால் நெருக்க முற்றுப் பன்னிரண்டாரெட்டு என்ற பாவஸ்தானத்திலிற்ப சுபர் பார்ப்பினும் பாராதொழியினும் மகப்பேறில்லாதவராகும்.

சந்தானமணி

கூரு

வெய்யர் கூடவைந் தாதிபன் மேவிட ஐயந்திர ளிலையு மைந்தையும் நொய்ய தீயவர் நோக்கிடத் தோன்றிணோன் உய்யச் செய்யு முதலைப் ணுண்மையே.

இ-ள்: செனனஜாதகத்தில் புத்திரஸ்தானமாகிய ஐந்தாம் வீட்டுக்குடையன் சூரியன் செவ்வாய் சனி ராகு கேதுவென்ற பாவரோடு கூடவும் ஐந்தாமிடத்தையும் ஐந்தாம்வீட்டுக்குடையவனையும் மேற்கூறியபாவர்பார்க்கப்பிறந்த ஜாதகர்க்குப் புத்தி தோஷம் உள்ளள.

சந்தானமணி

கூகூ

அட்ட மாதிப னைந்துற வைந்துளோன் எட்டி லெய்த இவர்களை நல்லதோர் திட்டி யெய்ப்பறத் தோன்றிய செம்மலுக் கிட்ட மாய்மைந்தர் தோன்றி யிறப்பரே.

இ-ள்: சென்மஜாதகத்தில் உதயத்துக் கெட்டாம்வீட்டுக்கு உடையவன் ஐந்தாம்வீட்டிலும் ஐந்தாம்வீட்டுடையோன் எட்டிலும் மாறி நிற்க, இந்த இரண்டிடத்தையும் நிர்மலராகிய புதன் வியாழன் வெள்ளி பூரணசந்திரன் பாராதொழியின் அவருக்குப் புத்திரர்தோன்றிக் கற்பத்திலாவது, பிறந்து இளமையிலும் இறந்துவிடும். இத்தோஷத்தைக் கற்பாதான சுபமுகூர்த்தந் தீர்க்கும்.

சந்தானமணி

வேந்தன் றீயர் நடுவினில் மேவிட வாய்ந்த வைந்திற் கதிபன் வலிகெடச் சார்ந்த நோக்கமும் சார்தலு மின்றெனில் மாந்த ரீனும் மகவும் மரிக்குமே.

இ-ள்: செனனஜாதகத்தில் புத்திரகாரகனாகிய வியாழன் பாவரோடும் அன்றி முன்னிராசி பின்னிராசிகளிற் பாவர்இருப்ப நடுவேனும் இருக்க, உதயத்துக்கு ஐந்தாமதிபதியாகும் கிரகம் பகை நீசஅஸ்தமனம்

Page 31

97

ஆறெட்டுப் பன்னிரண்டாஞ்சானமுறுதல், பாவரோடுசேர்தல் ஆகியவற் றால் வலிமைகுன்றச் சுபபாக்ஷபாய்ப் பெலமடைந்த குரு மதி வெள்ளி புதன் இவர்களும் உதயலக்கினாதிபதியும் ஐந்தாம்வீட்டுக்குடையவனை ஐந்தாமிடத்தைப் பாராமலுங் கூடாமலுமிருப்பின் அங்கணமான பெற் றார் பெறுகின்ற குழந்தைகளரிட்டமடையும். (௯௭)

98

பகைநீச மைந்தா திபன்சேர்வ னேனும் பாடெய்தி னும்பன் னிரண்டாறி லெட்டுத், தகைபாக உடையோ ருடன் கூடி னாலும் நகுமைந்தா திபன்றன்னைன்கிலுன்னோர், வகையானவிழிவைத் திடாரேனும் ஐந்தாய மகரத்தின் மீனத்தின் வன்சீவன் மேவ, மிகையாராத ருந்துயர் பாராது வந்தோன் மிகமைந்த ருயிர்மாய மெலிவெய்து வாரே.

இ-ள்: ஐந்தாதிபன் பகைநீசம் சேர்வனேனும் பாடெய்தினும் பன்னிரண்டாறெட்டுத் தகையாவாடையோருடன் கூடினாலும்-சென்ம ஜாதகத்தில் புத்திரஸ்தானாதிபதியாகிய ஐந்தாம்இராசிக்கதிபதி எவரோ அவர் பகைநீசமஸ்தமனமாய்ப் பன்னிரண்டு ஆறெட்டாம் இராசிக்குரிய ர எவரோ அவர்களுடன் கூடியிருந்தாலும், நகுமைந்தாதிபன்றன்னை நன் கிலுன்னோர் வகையானவிழிவைத்திடாரேனும்- ஐந்தாம் வீட்டுக்குரிய வரை சுபர்கள்பாராது கூடாதும் விடினும், ஐந்தாயமகரத்தின் மீனத்தின் வன்சீவன்மேவ-ஜாதகர்கன்னி விருச்சிகமுதலிய லக்கினமாக வுத்தர் மிடம் மகரம் மீனமாகு மாவாறே மகரம் மீனம் புத்திரஸ்தானமாய் வர அதில் வியாழனிருக்க, மிகையாராதருந் துயர் பாராது வந்தோன் மிகமைந்தருயிர்மாய மெலிவெய்துவாரே- நீசாஸ்தமனம் பகைபரவர் சமாகமம் முதலிய குற்றமில்லாத சுபக்கிரகங்களால் அவ்வியாழன் பார்க் கப்படாமலுமிருந்தால் இங்ஙனமமைந்த ஜாதகசென்மிகளுக்குப் பாலரி களரிட்டமாவார்கள். (௯அ)

99

வருபுத்தி ரத்தானம் வரிவில்ல தாக மகிழ்பொன் புகுந்தந்த மனையுற் றிருக்க, திருவுற்ற தற்கால வோரைதனை வெய்யோர் திகழ்நோக்கச் செகத்தே யுதித்தோன், இருபுத்திரர் ஒருபுத்திரர் புவிபெற்று வாழ்வ னினமைந்தர் பலபேரை யீனத் தகாதான், ஒருசித்திர உருவத்தை நிகருற்ற குயிலே உணர்வுற்ற பெரியோரா லுரைத்திட்ட விதியே.

இ-ள்: வருபுத்திரஸ்தானம் வரிவில்லதாக மகிழ்பொன்புகுந் தந்த மனையுற்றிருக்க-ஜாதகர் சென்மலக்கினம் சிங்கமாக ஐந்தாமிடந் தனுவாகுமங்ஙனமாக தனுவில் வியாழனிருக்க, திருவுற்றதற்காலவோ ரைதனை வெய்யோர்நோக்க செகத்தேயுதித்தோன்-சென்மமாகிய சிங் கத்தைப் பாவக்கிரகங்கள்பார்க்க, இருபுத்திரரொருபுத்திரர் புவிபெற் றுவாழ்வன் இனமைந்தர்பலபேரை யீனத்தகாதான்-புத்திரன் என்னும் முற்றுச்சிறப்பினையுடைய ஆண்ஒன்றிரண்டேபெற்றெடுக்கும் இயல்பி னர் அதிகம்பிள்ளைப்பேற்றை யடையமாட்டார். இஃதிங்ஙனமாக மிகு தியும்கப்பேற்றிற்குரியதானலக்னாதிபதி சூரியன் சந்திரலக்கினாதிபதியெ வரோ அவர் ஏழாமொன்பதாமதிபதி இவர்களின்சுபநிலை திருஷ்டிசம்பந்த ங்களால் மிகுதியும் புத்திரப்பேற்றிற்குரியவிதி மலிந்திருக்குமாயின் ஆண் புத்திரர் மேற்கூறியபடியும் பெண்குழந்தைகளதிகமும் பிறக்கும். (௯௯)

100

ஐந்தான அதிபதி பதிகளை சாலம்புலி தனைச்சங் கணைக்கூடி யடைவே, வந்தான கேந்திர முறப்பொன் னவன்தான் வருபாவ ரைக்கூட வன்பாய ரஞ்சில், சிந்தா குலப்பார்வை செய்யுமை யத் தே செகமீ ததிக்க திறற்புருட னினும், சந்தான மதுவான தாண்மகவு குன்றித் தருகின்ற பெண்மகவு தன்பெய்தி யிடுமே.

இ-ள்: ஜாதகத்தில் ஐந்தாம்வீட்டுக்குரிய கிரகம் சந்திரனையல் லது வெள்ளியைகூடியும் கேந்திரஸ்தானமாகிய ஒன்று நான் கேழு பத் தில் வியாழன் பாவரோடு செறிந்தூற ஐந்தாம்வீட்டைப் பாவர்பார்க்க இங்ஙனமாகப் பிறந்தவர் பெறுகின்ற ஆண்குழந்தைகளரிட்டமாகும். பெண்பிள்ளைகள் சிறப்படையும். (௧00)

101

சாமனுட னேமகிப ரைந்திலதி பதியை தானணுகி நன்கேந் திரத்தினிடை வைக, சோமனுட னேபவ னிருஞ்சனி பிராகு துலங்கிவரு மைந்தில் விழிவைக்கவரு தோன்றல், நேமிபுடை சூழலகி லேபெறு மகாரில் நீதியுறு மாண்மகவு நீடியுயிர் வாழும், காமனடி பேணவருங் காமர்மட மாதே காதலுறு பெண்மகவு காசினி யிராதே.

இ-ள்: ஜாதகத்தில் புதன் வியாழன் இருவரும் ஐந்தாமிராசிய திபதியைக்கூடிக்கேந்திர ஸ்தானமென்ற ஒன்று நாலு ஏழு பத்தி லே இருக்க, சந்திரனுடன் சூரியன் சனி இராகு கூடி ஐந்தாமிடத்தைப் பார்க்க, பிறந்தவர்களுக்கு ஆண்குழந்தை தீர்க்கம், பெண்குழந்தையரிட் டம். (௧0௧)

102

இயலைந்து புதன்வீடு சனிவீட தாக இதின்மந்த னாளுலு மி வன்மைந்த னேனும், கயமேற நின்றாலும் நயனஞ்செய் தாலும் நவிலுஞ்சில் வலிதுன்றி நவில்நல்ல தங்கப், பயிலைந்தி லதிபன் ற னைத்தூய ரானோர் பாராமல் விடவும் படிக்கே பிறக்கும், செய லொன்று புருடன் சீராரைப்பெறானே திகழ்தெத்த புத்திரர் சிற ப்பெய்து வாரே.

Page 32

சந்தானமணி.

க0உ

இ-ள்: ஜாதகத்தில் ஐந்தாம்வீடு புதன்வீடு சனிவீடாக அதாவது மிதுனகன்னியாக மகரகும்பமாக இவ்விராசியில் சனி அல்லது குளிகன் இருக்கினுமன்றி பார்க்கினும் ஐந்தாமிடத்தில் ஆட்சிவலிமை யடைந்திருந்த ஐந்தாமதிபதியை மற்றையசுபர்கள் பாராதொழியினும் பிறந்தவர்கள் பிள்ளைப் பேற்றையடையமாட்டார் வேறுமாரும் பெற்ற பிள்ளையைத் தனதாகப்பெற்று வளப்பர். (க0உ)

சந்தானமணி.

க0ங

குளிர்பாலகத்தானமொன்பொன்றுறினும்குறையாமல்வளர் சந்திரன் வந்துபுகினும், ஒளிர்பாலகத்தானமதிற்பொன்வெள்ளி யுற்றுரிமை யுற்றினும்கோணேதுறினத், தெளிவார்கலைச்சந்திரன் கூடிநட்பாய்த்திகள்காணியாயுச்சமாய்ச் சேர்வனெனினும், நளி யார்கடற்பூவினிடமேபிறந்தோன்கவில்பெண்சிறார் தம்மனைநல்கி யிடுமே.

இ-ள்: ஜெனன ஜாதகத்தில் புத்திரஸ்தானமென்ற ஐந்தாமிடத்தே வியாழன் இருந்தாலும் ஐந்தாம் இடத்தே பூரணசந்திரன் இருந்தாலும் ஐந்தாம் இடத்தே வியாழனும்வெள்ளியுங்கூடிமித்திரமாயிருந்தாலும் ஐந்தாம் இடத்தே வெள்ளி சந்திரன் கூடியிருந்தாலும் அன்றி ஐந்திலொருவரிருக்க அதற்கேழில் மற்றவரிருப்பினும் ஆட்சிபுச்சம்பெற்றாலும் இங்ஙனம் பொருந்தப் பிறந்தவர் பூமியில் பெண்பிள்ளைகளையே மிகவும் பெறுவர். (க0ங)

சந்தானமணி.

க0ச

ஆடாதல்தேடாதலைத்தானதானமாகப் புதன்வெள்ளியமரே சுரராசன், வாடாமலதி லுற்றிருந்தாலும் நோக்காய்வைத்தாலுமீந் தாதிவல்லூன்றியெய்த, பிடாருமோரேசனுங்கூடிநிற்கபிறங்கை ந்தினைப்பாவர்பாராமல்விடவும், வீடார்புவியிற்பிறந்தோன்றைச் தேர்வெகுபுத்திரர்பெற்றுமிகவாழ் குவானே.

ஜெனனஜாதகத்தில், இ-ள்: மேடம் விருச்சிகம் ஐந்தாம் வீடாக அதில் புதன் வெள்ளி வியாழன் இலக்கினாதிபதி இருப்பினும் பார்ப்பினும் ஐந்தாமதிபதியெலமுடனிருக்க அவரோடு இலக்கினாதிபதி கூடியிருக்க, ஐந்தாம் இராசியைச் சுபாவபாவத்தானாதிபத்தியபாவர் கூடாமலும் பாராமலுமிருப்பினும் பூமியிலே பிறந்தவர்க்குப் பூர்வபுண்ணியவசத்தால் பிள்ளைப்பாக்கியம் சிறக்கவாழுவர். (க0ச)

சந்தானமணி.

மீனம் விருச்சிகம் விறற்சிங்க மேடம் வில்லும் சுதர்த்தா னம் விளக்கார லெய்த, வானந் தொழுந்தேசிகன்பார்வை செய்ய வருபுத்தி ரத்தாத மன்னயாத பன்றால், ஈனர் தராமற் கலோர்

சந்தானமணி.

கூடி னு மிவர்பார்வை பெற்றாலு மியல்கல் லோருக்கு, தானஞ் சொல் நடுவாக நற்பார்வையுறினும் தலத்தே பிறக்கோர் தமக்கு ண்டு மகவே.

இ-ள்: ஜெனனஜாதகத்தில் மீனம் விருச்சிகம் சிங்கம் மேடம் தனு ஐந்தாம்வீடாக அதில்செவ்வாய் இருக்க வியாழன்பார்ப்பினும் அன்றி புத்திரஸ்தானாதிபதியாகிய ஐந்தாம்வீட்டையான் பகைநீசஸ்தமயனமடையாமல் சுபாவசுபரோடுகூடியிருப்பினும், நல்லவர்பார்வைபெற்றாலும் நல்லவர்கள் முன்னிராசி பின்னிராசியிலிருக்கத் தாம் நடுவனாய் இருந்தாலும், இங்ஙனம் பொருந்தும்ஜாதகருக்குச் சற்புத்திரர்பிறக்கும்.

சந்தானமணி.

க0ரு

பேசுஞ் சுதத்தான முடையோ னவ்விடமே பெலமாக வுற் றாலு மலதேனி லெய்த, தேசொன்ற வருமோரை யிருபாவ ரிரு கண்செல் லாமலில் லாமல் விடினுஞ் செழும்பொன், ஏசின்றி யைந்தேழி லெய்தியிட வெய்யோ ரீகற்பார்வை யோரை கொள் ளாமற் பிறந்தான், கேசந் தரும்பால ரைப்பெற்று வாழ நெஞ்சு களி கூருமொழி கொஞ்சுமொரு கிளியே.

இ-ள்: ஜெனனஜாதகத்தில் புத்திரஸ்தானமாகிய ஐந்தாம் ராசிக்காட்சியானகிரகம் ஐந்திலாட்சிபெறினும், அன்றி ஐந்துக்குடையான் ஏழாமிடநிற்க உதயம்ஐந்தாகிய இடங்களைப் பாவர் பாராமலும் இராமையினாலும், புத்திரகாரகனாகியவியாழன் ஐந்திலல்லது ஏழிலிருக்க, பாவர் வியாழனையல்லது உதயமைந்தைப் பாராமலும் இராமலும் விடின் இங்ஙனமாகப்பிறந்தவர் அன்புடைய பிள்ளைப்பேற்றை யாசித்து நிற்பர். (க0ரு)

சந்தானமணி.

வைக்குஞ் சுதத்தான அதிபன் பெலத்தே மருவிச் சுபர்க்கு நடுமெய்க்க சுபத்தார், உய்க்கும் செழும்பார்வை வைத்தாலும் விற்றேழ் ஒண்மீனம் மறிசிங்கம் ஓரஞ்ச தாக, தொக்குந்த மனை யாளர் புருடோரை யம்சம் சொல்லார ராசி தனி லெய்தித் துலங்க, புக்குத்த வலகிற் பிறந்தோ னளிக்கும் புகழ்துன்ற வளர்கின்ற பல மைந்தர் தனையே.

இ-ள்: ஜாதகத்தில் ஐந்தாம் வீட்டுக்குடையவன் உச்சம் நட்பு மூலத்திரிகோணம் முதலிய பெலம்பெற்று சுபாவசுபக்கிரகங்களுக்கு நடுவிலிருப்ப அவனரைச்சுபக்கிரகங்கள் பார்ப்பினும் தனு விருச்சிகம் மீனம் மேடம் சிங்கம் இவற்றிலொன்று ஐந்தாந்தானமாக அவ்வைந்தாம் ராசிக் குடையவன் மேடம் மிதுனம் சிங்கம் துலாம் தனு கும்பம் என்ற புருஷ ராசியில் முதற் பதினைந்து பாகைக்குள்ளான சூரியசெலவில் நவாம்சத்திலும் மேற்படி புருஷராசி அம்சம்பெற உலகத்தில் பிறந்தவர் கீர்த்தி விளங்க மேன்மேலும் உயர்ச்சிபொருந்தும் பல ஆண்மக்களைப்பெறுவர்

Page 33

க0அ

நரையதி பதிப னைந்துக் குரியவ னுடனற் றாலும் நேர்தரத் தம்மிற் றானே நிலையுற நோக்கி னாலும் ஏர்கெழு மிராசி நாத னுடனைந்துக் கிறையுற் றாலும் பார்வைசெய் திடினும் செல்வப் பாலரைப் பயப்பர் தாமே.

இ-ள்: ஜாதகத்தில் உதய லக்கினத்துக்குடையவன் ஐந்தாம் ராசியாதிபதியுடன் கூடினாலும், ஒருவரையொருவர் பார்த்தாலும், அல்லாமல் சந்திரன் நின்ற ராசியாதிபதியும் ஐந்தாம் வீட்டுக்குடையவனும் கூடினாலும் ஒருவரையொருவர் பார்த்தாலும் சிறந்தமக்கட்பேற்றை யடையுங்கதியுடையராவர். (க0அ)

க0கூ

மருவுபுத் திரத்தா னத்து மனனவ னேரை மன்னி இருவரும் நோக்கத் தோன்று மேர்தருகு மகவுண் டாகும் அரியநட் பாட்சி யுச்சம் ராசியங் கிசமா யஞ்சிற் குரியர்நின் றாலும் நல்ல மைந்தரை யுயிர்ப்பர் மாதோ.

இ-ள்: ஜாதகத்தில் ஐந்தாம்வீட்டுக்குடையன் உதயத்திலிருந்து இலக்கினத்துக்குடையவனை அல்லது இலக்கினத்துக்குரியவனால் பார்க்கப்பட்டால் அந்ஙனமான ஜாதகருக்கு யோகமானமக்கள் சுகமாகப் பிறக்கும். அன்றியும் ஐந்தாம்இராசியாதிபதி நட்பாட்சியுச்சமாய்நின்று அம் சத்திலும் நட்பாட்சியுச்ச ராசியில் நின்றாலும் செல்வமான சிறப்புடைய மக்கட்பேறுளர். (க0கூ)

கக0

சத்துரு நீச மான விராசியங் கிசங்க டன்னில் ஒத்திடுஞ் சுதத்தா னத்துக் குரியவ னுற்று மேல இத்தலந் தோன்றி னான்றா னீனம்புத் திரர்கள் பொல்லாக் குத்திர முடையார் மித்திர குணமிலார் கொடியர் தாமே.

இ-ள்: ஜாதகத்தில் புத்திரஸ்தானமாகிய ஐந்தாம்வீட்டுக்குடையவன் பகைநீசராசிகளில் நின்று பகைநீச நவாம்சம்பெறப்பொழுதும் ஜாதகர் பெற்றுக்கொள்ளும் பிள்ளைகள் பொல்லாத குரூரமும் தயவின்மையும் கொடியவர்களுமாய் வந்துபிறக்குங் கதியையுடையவர். (கக0)

ககக

நள்ளியாய்க் கோலே றெய்தப் புத்திரர் தான நண்ண ஒள்ளிய தலைவர் பெண்பா லுற்றிடு ராசி யம்சம் கொள்ளவே புவியிற் றோன்றுங் குரிசில்பெண் மிகுதி யீனும் வள்ளிதட் கமலப் பூவை மருட்டிய வதனத் தாளே.

இ-ள்: ஜாதகத்தில் புத்திரஸ்தானமாகிய ஐந்தாமிடம் கற்கடகமாய்த் துலாமாய் இடபமாய்வர, வருமைந்தாதிபதி பெலங்குறைந்து சந்திரனேயாகிலும் ஸ்திரீராசிகளான இடபம் கடகம் கன்னி விருச்சிகம் மகரம் மீனம் ஆகிய இவ்விராசியொன்றில் முப்பதினைந்து பாகைக்குள்ளாக நின்றாலும் நவாம்சத்தே ஸ்திரியம்சமாய் நின்றாலும் பிறந்தவர் பெண்குழந்தையதிகமுடையர், ஆண்ராசி பெண்ராசி சூரியசெலவு சந்திரசெலவு ஆண்ராசியம்சம் பெண்ராசியம்சம் கலப்பாகஇருப்பாரேயானால் பெண் ஆண் இருவிக மகவும் பிறக்கும். (ககக)

ககஉ

ஆதவன் வியாழன் செவ்வாய் அஞ்சினுக் குடைப னாகும் ஏதமில் புருட ராசி யங்கிசம் பெற்று னென்றால் காதினை யளந்து காமக் கடல்கரை கடந்த கண்ணாய் ஓதுமான் புதல்வர் தன்'னை உகப்புட னுயிர்ப் கிற்பாரே.

இ-ள்: ஜாதகத்தில்- சூரியன் வியாழன் செவ்வாய் புத்திரஸ்தானத்துக்குரியவரெவரோ அவர், இந்நால்வரும் மேடம் மிதுனம் சிங்கம் துலாம் தனு கும்பம் இவ்விராசிகளில் முப்பதினைந்து பாகைக்குள்ளும் நின்று, நவாம்சத்திலும் இப்புருஷராசியம்சம் பெற்றிருப்பாரெனில், ஆண்மக்களையே பெற்றெடுக்கும் புண்ணியமுடையாராகும். (ககஉ)

ககங

வெப்பவ ரையந்தாந் தானம் விழித்திடா விடவு மைந்திற் றுப்பனத் துச்ச மேவிச் சுபர்புரு டாமி சத்தே எய்தினு மிவனை நோக்க இத்தல முதித்து ளோர்க்கு மையணி விழியி னாளே மைந்தர்கள் மிகுதி யாமே.

இ-ள்: ஜனனஜாதகத்தில் ஐந்தாம் ராசியைப்பாவர் பாராமலும் ஐந்தாம் வீட்டுடையான் அதிவுச்சம்பெற்றும் அவர் சுபாவசுபரில் ஒருவராய் நவாம்சத்திலும் புருஷவராசியம்சம்பெற ஏனையபுருஷக்கிரகமாகிய சுபரால் பார்க்கப்பட்டுமிருக்கப் பிறந்தவர்களுக்கு ஆண்மக்கள் சிறப்பாகும். (ககங)

ககச

எட்டிலீ ராறி லீபறிலீ யைந்தினுக் கிறைவன் மேவ மட்டிலா வலிமைசார்ந்த நல்லவர் நோக்கம் வைத்தால் முட்டிலா வாட்கை மைந்த ருண்டென மொழிவர் கண்டாய் பட்டினாற் புனைந்த சோதிப் பையர வல்கு லாளே.

இ-ள்: ஜாதகத்தில் புத்திரஸ்தானமாகிய ஐந்தாமிடத்துக்குரியவன் எட்டுப்பன்னிரண்டாறென்னுந்துர்த்தானங்களிலிருப்பினும்மிகுதியும் வலிமைப்பாட்டையுடைய உச்சாட்சி நட்பு மூலத்திரிகோணபெலம் அயனபக்ஷசுபம் அடைந்தசுபரால் பார்வைபெற்றாராகின் தோஷநிவாரணமாய்ப் புத்திரப்பேறுண்டாகும். (ககச)

ஆடல்சே ரிராகு வைந்தில் ஐந்தினுக் கதிப னோடு கூடிட நல்லர் பார்வை யெனுமிசை கூடி டாதேல்

Page 34

கக௫

பாடகப் பாதப் பாவாப் பன்னகத் தெய்வம் முன்னாள் நாடியே நவின்ற சாப மொழியினாற் புதல்வர் காசம்.

இ-ள்: ஜென்மஜாதகத்தில் ராகு வலிமைபெற்று ஐந்தாம்ராசியில் இருந்தாலும் ஐந்தாமதிபதியோடு கூடினாலும் அவ்விராகுவைச் சுபர்கள் நோக்கமாகிய நிர்மலமில்லாதொழியின் முன்னைப்பிறப்பில் நாகதேவதாபத்தினால் புத்திரஹானியென்றியதாகும். பெண்களுக்கு ஏழாமிடத்திலிருந் தாலிதுபலன். இதற்கு நாகப்பிரதிஷ்டை சர்ப்பதானம்செய்து புத்திரப்பேற்றைப்பெறுவது காட்சியாகவுள்ளன. (கக௫)

ககசு

ஓரையிற் திரிகோ ணத்தி லுயர் சனி போ ரன்றான் காரமில் குளிகன் சேரத் துப்பவர் பார்வை யின்றேல் கூர்கொடுங் குருநோ ஷத்தாற் புத்திரர் நாசம் சேரும் கார்முகில் லெழும்ப நீண்டு கறுத்திருங் கண்ணினானே.

இ-ள்: ஜென்மஜாதகத்தில் உதயலக்கினத்திலல்லது ஐந்தில் அல்லது ஒன்பதில் சனியனல்லது புத்திரன் குளிகன் அல்லது இருவருமிருக்க இவர்களைநீர்மைநோக்கும் சுபர்களது பார்வையில்லாதொழியின் முன்னைப்பிறப்பில் உண்மையாளகுருவுக்கு வஞ்சனைசெய்தபாவதோஷத்தால் சந்தானமால்வியடையும். இதற்குச்சியாசாதனைமுதலிய சிவதருமம் செய்து மக்கட்பேற்றையடையலாம (ககசு)

ககஎ

வீறுடைச் செவ்வா யைந்தின் மேவிட லதுவின் றாயின் ஆறுடை யானைக் கூட வைந்திட டணுக நல்லோர் பேறுடைப் பாவர் தீதில் பிறந்தவன் றனக்குப் பானாய் மாறுடைப் பகைவர் செய்த வஞ்சத்தால் மைந்த ரின்றே.

இ-ள்: ஜென்மஜாதகத்தில் செவ்வாய் ஐந்தாமிடம் இருப்பினும் ஐந்தாம்வீட்டதிபன் ஆறாம்வீட்டுக்குரியவனோடு சேர்ந்தாலும் அல்லது ஆறாம்ராசியாதிபதி ஐந்தாம்ராசியில் நின்றாலும் சுபாவசுபரோடு கூடாமலும் பார்வையடையாமலும் இருந்தபாவரால் பார்க்கப்பெற்றாலும் முன்னைப்பிறப்பில் சத்துருக்களை ஜெயம் பெறச்செய்த பாவக்கிரியையாலும் அன்றி அவர்களிட்டசாபத்தாலும் புத்திரதோஷம். இதற்குக் கந்தஷஷ்டிவிரதம் சுக்கிரவாரவிரதம் கார்த்திகைவிரத மனுஷ்டிப்பாராய்ப் புத்திரப்பேற்றைப் பெறுவாராயினர். (ககஎ)

ககஅ

ஐந்துக் குடையா னஞ்சி லெறுகச் சுபர்நோக்கச் சிந்தித் திலராய் நின்றிடத் தீயோர் பார்வைசெய்ய இந்தப் புவிமிசை யேவரு மைந்தர்க் கில்லைப் புதல்வர் முந்தச் சுரர் அந்நாளிடுஞ் சாபகன் முட்டிடவே.

இ-ள்: ஜென்மஜாதகத்தில் ஐந்தாம்வீட்டுக்குரியவர் மூர்த்தி லாட்சிப்பெற்றிருக்க, அவரைச் சுபக்கிரகங்கள் பார்க்காமல் பாவdatabaseர்க்க விருக்கில் முன்னைப்பிறப்பில் சம்பாதித்த தெய்வசாபம் வந்து சேர்தலினால் புத்திரதோஷம். இஃது ஈட்சத்திரதெய்வவழிபாட்டால் தீருமென்பதாம். (ககஅ)

கககூ

நாட்டுமொரு நாலிற் கொடியோர்தின் றிடவைந்தாம் வீட்டுக்குடை யான் மந்த னுடன்கூடி விளங்க காட்டுமிரண் டாறிற் கொடியோர்வந்து நலந்தா னீட்டுங் கொடுஞ்சாபம் மாதாவிலனால் மகவில்லை.

இ-ள்: ஜென்மஜாதகப்படி நாலாமிடத்தே சூரியன் செவ்வாய் இராகு கேது இருக்க, ஐந்தாம் இராசிக்குடையவன் சனியோடுகூடியிருக்க, அல்லது சனியால் பார்வைபெற இவர்களைப் பன்னிரெண்டாறெட்டுக்குரியவர்கள் கூடினாலும் பார்வைசெய்தாலும் முன்னைப்பிறப்பில் தாயால்வந்த சாபத்தால் புத்திரதோஷமென்பதாம். (கககூ)

கஉ0

ஒன்பாணிடந் தீயோர்புக வைந்தாமிட முடையோன் வன்பாகிய சனியோடுற வாய்க்குந்திரி கோணத் தின்பாகிய குளிகன்புகுந் திருக்கப்பிறந் தார்க்கு முன்பாம்பிதிர் சாபம்சதா ரின்றாம்பனி மொழிபே.

இ-ள்: ஜென்மஜாதகத்தில் ஒன்பதாம்இராசியில் சுபாவபாவர் இருக்க, ஐந்தாம் இராசியாதிபதி சனியோடுகூட, ஒன்றைக் தொன்பதான திரிகோணஇராசியில் தீயவராகிய குளிகன்இருக்கப் பிறந்த ஜாதகர்க்கு முன்னைப்பிறப்பில் பிதிர்த்தெய்வமிட்ட சாபத்தாலே புத்திரதோஷம். இதற்காகப் பிதிர்கடமைகளை நிறைவேற்றித்தீர்க்க. (கஉ0)

சென்மலக் னத்தினுனுந் திங்களா ரிராசியானும் நன்மையே ழைந்தாம்ராசி நாதனால் லதுகாதன்றான் உன்னிதப் பார்வை யாளு றுண்டாகுந் தாரம் மக்கள் தன்னுனுஞ் சம்பத் தோங்குந் தாரணி தனிலே தானே

இ-ள்: ஜென்மஜாதகத்தில் உதயலக்கினத்துக்குடையவனும், சந்திரனின் நின்ற இராசிக்குடையவனும், ஏழாம்வீட்டுக்குடையவனையெய்தாம் வீட்டுக்குடையவனைப்பார்ப்பினும், அன்றியேயேழாம் வீட்டுக் குடையவர் உதயபதியைச் சந்திரலக்கினாதிபதியைப் பார்ப்பினும் அவ் வித கிரகநிலையேற்பிறந்தவருக்குத்தாரம் புத்திரச்சிறப்பும் அவையால்சகல சம்பத்துக்களுமனையவாயுமிருப்பார். "இவ்விதமில்லாவிட்டாலேழிற்குராமம்மக்களில்லை— இங்கனமையாதிருப்பின்சற்றுகரம் நற்புத்திரர் இன்றாம்"

Page 35

சந்தானமணி.

மேலேகூறிய விதிகளுக்கியையத் தத்தம் ஜாதகக்கிரகசக்தியை சரியொத்து வருமாயின் அவ்வப்பலன் தவறாது சித்திக்கும். அன்றியும், புத்திரதோஷத்தை உண்டாக்கக் காரணனாயிருந்த கிரகங்களுக்குத் திசா புத்தியந்தரங்கள்வந்து நடக்குங்காலம் கர்ப்பாரிடம்பாத்திரரிட்டம் உள தாகுமெனவறிக. தோஷத்தை நிவாரணமாக்கும்விதிக்கியைவ இருந்த சுபாசுபருக்குத் திசைபுத்தியந்தரம் நடப்பானகாலம் மக்கட்பேறு மக்கட்சிறப்பு அநுகூலமாகுமென்ப. இவையாவற்றிற்கும் கர்ப்பசம்பவ கர்ப்பாதான சுபகாலமே அதாவது பரிசதியின் யோக்கியமே சாந்தி.

முகூர்த்தசுபாசுபவிளக்கம்.

ஒரு சிறிது தோஷங்கசானுலுங் கலவாதிருக்கும் நாளிலக்கினத்தை நிர்ணயிப்பது பிரமனுக்குஞ் சாத்தியமன்று. ஆதலால், ஸ்வல்ப தோஷங்களே ஸுகுணமென்னுஞ் சோதிஷசாஸ்திரத்தால் அளவைப்படுத்தி, எந்தநாளிலக்கினத்திற் தோஷங்களைக்காட்டிலும் குணங்கள் திகமாயிருக்குமோ குணாதிகாள்கோலக்கினத்தைச் சுபகாரியவிஷயமாய்க் கிரகிக்கவேண்டியதேயன்றி அதிகதோஷங்களையுடைய நாள்நேரலக்கினத்தைக் கிரகிக்கக்கூடாது. அதிகதோஷமென்பது இருபத்தொருகோஷங்கள் இன்னின்னவென்பதை எவரும் இலகுவிலறியுமாறு குறிப்பாக விளக்கியும் இந்நூலுற்பிற்கின்றியமையாதது இஃதிஃதென்பதையும் விரிவாகவுணர்த்துதுமேயாம்.

  1. பஞ்சாங்கசுத்திஹீனதோஷம். 12. வாரஜனிததுர்முகூர்த்த தோஷம்.
  2. பாபஷட்வர்க்கதோஷம். 13. கார்த்திரிஸ்தனாங்கிரிப தோஷம்.
  3. குணவாம்சதோஷம். 14. கிரகணதோஷம்.
  4. அஷ்டமகுசதோஷம். 15. உத்பாததோஷம்.
  5. பிருகுஷட்கமதோஷம். 16. குருயுக்திஷணியதோஷம்.
  6. கர்த்தரியோகதோஷம். 17. அசுபவித்ததோஷம்.
  7. லக்னாஷ்டமதோஷம். 18. விஷபுதலக்கினதோஷம்.
  8. அஷ்டமசந்திரதோஷம். 19. லக்கினாந்ததோஷம்.
  9. ஷட்டாந்திரதோஷம். 20. கண்டாந்ததோஷம்.
  10. சந்திரசங்கிரமதோஷம். 21. வியதிபாதவைதிருதிதோஷம்.
  11. சங்கிராந்தியகஸ்தோஷம்.

1

1-பஞ்சாங்கசுத்திஹீனதோஷமாவது. அசுபகலமாய் குணதிதிவாரநக்ஷத்திர யோககரணாநித்தீயயோக சாசுமிருத்து போகங்கள்கூடினால் அது பஞ்சாங்கசுத்திஹீனதோஷ மென்றும்,

2

சந்தானமணி.

  1. பாபஷட்வர்க்கதோஷம். மேடம் இடபம் மிதுனம் கர்க்கடகம் சிங்கம் கன்னி துலாம் விருச்சிகம் தனு மகர கும்ப மீனம் இப்பன்னிரண்டும் இராசிகள் மேட விருச்சிகத்துக்குச் செவ்வாயும் இடபதுலாத்துக்கு வெள்ளியும் மிதுன கன்னிக்குப் புதனும் கர்க்கடகத்துக்கு மதியும் சிங்கத்துக்குச் சூரியனும் தனுமீனத்திற்கு வியாழனும் மகரகும்பத்துக்குச் சனியும் இம்முறையாக இராசியதிபதிகளென்றும் இவர்களே ஷட்வர்க்காதிபதிகளிறப்படயவேண்டுதலும். ஷட்வர்க்கவிபாகக்கிரமமாவது.
  2. கொள்ளும் லக்கினம் எதுவோ அது முப்பதுபாகைகளுடையன.
  3. லக்கினராசியைப் பதினைந்து பதினைந்துபாகையாக்கிப் புருஷவிராசியாகிய மேடம் மிதுனம் சிங்கம் துலாம் தனு கும்பம் இவ்வாரிராசிகளிலும் முதற் பதினைந்துபாகைக்குள் சூரியவோரையென்றும் பிற் பதினைந்துபாகைக்குள் சந்திரவோரையென்றும் ஸ்திரிராசியாகிய இடபம் கர்க்கடகம் கன்னி விருச்சிகம் மகரம் மீனம் இவ்வாரிராசியிலும் முதற் பதினைந்துபாகை சந்திரன் கூறென்றும் பிற்பதினைந்துபாகை சூரியவோரையல்லது கூறென்றும் கணிப்பது ஹோரை.
  4. லக்கினதிரிபாகம் திரேக்காணம் - இது மேலே நாற்பத்தெட்டாம் செய்யுளில் விளக்கப்பட்டிருக்கிறது அறிக.
  5. லக்கினநவாம்சம் - கிரகித்தலக்கினத்துக்குரிய நட்சத்திரமிரண்டேகாலொன்பது பாதம். இவற்றில் முகூர்த்தநாழிகைவிகநாடியில் எந்த நட்சத்திரபாதத்திலிலக்கினபாகமிருக்குமோ அந்நட்சத்திரபாதமென்ன நவாம்சம்பெற்றதோ அதுவே லக்கினநவாம்சமென்றறியவேண்டியது.
  6. லக்கினதுவாதசாட்சம் - லக்கினபாகை முப்பதைப் பன்னிரு கூறாக்க, கூறொன்று இரண்டரைப்பாகையாகும். அனுசரித்த முகூர்த்த நாழிகை விநாடியில் எத்தனையோங்கூறாகுமென்பதையறிந்து லக்கினம் முதலெண்ணியுதித்த இராசியே லக்கினதுவாதசாம்சம்.
  7. லக்கினதிரிம்சாம்சம்-இது லக்கனபாகைமுப்பதையும் ஐந்துவிபாகமாய்ச் செவ்வாய்ஐந்து சனிஎட்டு வியாழன்எட்டு புதன்ஏழு வெள்ளி ஐந்து என்ற இம்முறைப்படி ஓசை அதாவது புருஷராசி ஆறுக்குரியதாயும் உக்குமம் அதாவது ஏனைய பெண்ணிராசிஆறற்கும் வெள்ளிஐந்து புதன்ஏழு வியாழன்எட்டு சனிஐந்து செவ்வாய்ஐந்து என்ற இம்முறைப்படி அநுசரித்த முகூர்த்தநாழிகை விநாடியிலவ்விலக்கினபாகம் செவ்வாய்முதலைந்துபேரிலும் அல்லது வெள்ளிமுதலைந்துபேரிலும் எவ

Page 36

ருசு சந்தானமணி. ருஎ சந்தானமணி.

ருடையபாகமெணக்காண்பதே திரிம்சாம்சம். ஆனால் குகுவழி ஆனப்படும். முகூர்த்தத்துக்குரிய லக்கினம் மேடமிதுனசிங்கந்துலாங்கும்பமானால் அவ்வவ்ராசிப்பிரமாண நாழிகை விகரடியை விகரடியாக்கி மூன்றுவிபாகப்படுத்தி முதற்பாகம் குறித்தலக்கினத்தில் செல்லும்வரை செவ்வாய் சனி திரிம்சாம்சம் என்றும் ஆனமையால் பத்துப்பாகைவரை புருஷராசியை முகூர்த்தத்துக்குவிலக்கவும் ஏனையபெண்ணிராசி இடபகடககன்னி விருச்சிகமகரமீன ராசிகள் ஆளப்படும் முகூர்த்தலக்கினமாய்வரில் மேற்படி முவ்விபாகத்தில் மூன்றாம்பாகம் அதாவது 20 பாகைக்குமேல் 30 பாகை வரையும் சனிசெவ்வாயின் திரிம்சாம்சமென்ற இலகுவிலறிந்து நீக்குக.

ஆதலாலாராய்ந்து நிர்ணயித்த லக்கின ஷட்வர்க்கபெலனுகுணமென்பது இவையேயாம். லக்கனசுபகரமாய் லக்னாதிப சுபகரமாய் ஒரேயாதிப சுபதமாய் திரேக்காணம் திரேக்காணாதிபதி சுபகரமாய் நவாம்சம் நவாம்ச அதிபதி சுபகரமாய் துவாதசாம்சம் துவாதசாம்சாதிபதி சுபகராய்த் திரிம்சாம்சம் திரிம்சாம்சாதிபதி சுபகரமாய் கொள்ளுவதே லக்னஷட்வர்க்க சுத்தமென்றறிக. இவைகள் தத்தஞ்ஞானமாயிருப்பின் சுபக்கிரக ஷட்வர்க்கசுபப்பிரதத்தைக் கண்டடையலாமேயன்றிப் பாஞ்ஞானத்தைக்கொண்டறிதல் எக்காலமும் எவராலும் எவருக்கும் முடியா.

  1. குணவாம்சதோஷமாவது: முகூர்த்தநாழிகைவிகரடியில் நிகழும் நவாம்சலக்கின சுபாசுபமென்ப. அதாவது மேடம் கர்க்கடகம் சிங்கம் விருச்சிகம் மகரம் கும்பம் மீனம் இவை நவாம்சலக்னமாகவரின் சுபகரமல்லவென்றும் ஏனைய இடபம் மிதுனம் கன்னி துலாம் தனு முற்பாகம் இவைகள் மிக்கசுபகரமாமென்றறிக.

  2. அஷ்டமகுசதோஷமாவது: சுபகாரியலக்கினத்துக்குச் செவ்வாய் எட்டிலிருந்தால் குசாஷ்டமதோஷமாகும். இதனால் காரியமிருத்யுப்பிரதமாமென்று விலக்கவேண்டியது.

  3. பிருகுஷ்டகமதோஷம். சுபகருமலக்கினத்துக்கு ஆறில் வெள்ளியிருந்தால் பிருகுஷ்டகமதோஷமென்பர். செவ்வாயட்டமதோஷத்தினும் அதிகதோஷமென்பதையுணர்ந்து விலக்கவேண்டியது.

  4. கர்த்தரியோகதோஷம். இரண்டு பாபக்கிரகங்களில் ஒருவர் அநுசரித்தலக்கினத்துக்குப் பன்னிரண்டில் வக்கிரிக்காமலிருந்தும் மற்றொரு பாவர் முகூர்த்தலக்கினத்திற்கு 2-ல் வக்கிரித்திருக்குமானால் இவ்விரண்டினிடேேயுள்ள லக்கினத்திற்குக் கர்த்தரிதோஷமென்று பெயர். இந்தத்தோஷம் மரணப்பிரதமென்று விலக்கவேண்டுமென்பர். லக்கினத்துக்கன்றிச் சந்திரனின்ற ராசிக்கும் இவ்விதநிற்பின் கர்த்தரிதோஷமென்று சிலரபிப்பிராயம். பன்னிரண்டிலிருந்த இருபாவரும் வக்கிரித்திருப்பினும் வக்கிரவர்ஜிதமாயிருந்தாலும் லக்கினத்துக்குப் பன்னிரண்டில்நின்றவர் வக்கிரித்தும் இரண்டில்நின்றவர் வக்கிரhippinறி இருப்பினும் இங்கேசொல்லப்பட்ட கர்த்தரிதோஷமில்லையாகும்.

  5. லக்னாஷ்டமதோஷம். ஜன்மலக்கினத்திற்கும் ஜனனகாலசந்திரராசிக்கும் எட்டாவதுலக்கினம் மிருத்யுப்ரதமாவதனால் அந்தலக்கினம் குணமிகுதியிருப்பினும் நீக்கவேண்டியது. அஷ்டமலக்கினாதிப சுபாகம் லக்கினத்திற் பொருந்துனால் தம்பதிகளுக்கு மிருத்யுப்ரதனென்றும் சந்திரராசிக்கு எட்டாவது இராசியைப்பொருந்தியிருந்தால் தம்பதிகளுக்கு நித்தியதாரித்திரமென்றும், ஜன்மலக்கினத்துக்குப் பன்னிரண்டாம் இராசியையும் சந்திரராசிக்குப் பன்னிரண்டாம் இராசியையும் சுபகர்ம இலக்கினமாகக் கொள்ளக்கூடாதென்றறிதல் லக்கினம் ஜேன்மராசியை முகூர்த்தலக்கினமாகக்கொள்ளின் அசுபகரமென்றும் அறியவேண்டியது.

  6. அஷ்டமசந்திரதோஷம். 9. ஷஷ்டசந்திரதோஷம். 10. சந்திரசக்கிரமதோஷம். சந்திரன் சுபகர்மலக்கினத்திற்கு ஆறிலெட்டில் பன்னிரண்டில் நின்றால் ரிப்பாவ்டாரிக சந்திராகமதோஷம். அத்தோஷம் தம்பதிகளுக்கு மிருத்துகரமாம். அன்றி, சந்திரன் பாபரோடுகூடியிருப்பதும் பாவர் முன்பின்னிருக்க நடுநிற்றலும் ஸக்ரஹாகம தோஷம். அது தம்பதிகளுக்குக் காரியநாசத்தையுண்டாக்குவதாம். ஆனால் சந்திரன் சுபர் பாவரெவரோடுஞ் சேராமலும் பார்வைபெறாமலும் நடுவே பொருந்தாமலும் உச்சாட்டாட்சிப்ராசிகளில் சுபசிராசியில் நிற்கக்காணும் முகூர்த்தம் மகாவுத்தமமென்றறியவேண்டும்.

  7. சங்கிராந்தியகஸ்தோஷம். சூரியன் நின்றராசியிலிருந்து அடுத்தராசிக்குப் பெயர்வதாகிய மாதாந்தம் மாதமுதல் சங்கிராந்தியென்று சொல்லப்படும். சுபகர்மங்களின் விஷயமாய்ச் சங்கிராந்திக்கு முன்னும் பின்னுமாய் 16 நாழிகை நீக்க வேண்டும். சூரியன் மேடகடகதுலாமகரராசிகளில் பிரவேசிக்கையில் சங்கிராந்தி நிகழும்நாழிகை விகரடியிலிருந்து முன்னுக்கு முப்பதுநாழிகையும் சங்கிராந்திக்குப்பின் முப்பதுநாழிகையிலும் சுபகருமம்நீக்கவேண்

Page 37

ருஅ சந்தானமணி.

டியதாம். மாதாந்தம் மூன்றுநாளும் வருடாந்தமொருபத்தைந்தும் மாதமுடிவில் மூன்றுநாட்களும் வருஷமுடிவில் பதினைந்துநாட்களும் சுபகருமமுகூர்த்தசந்ததியல்லவென்பர்.

வாரஜனித துர்முகூர்த்ததோஷம்

வாரஜனித துர்முகூர்த்ததோஷம்.

ஒருபகல் முப்பதுநாழிகையைப் பதினைந்துகூறாக்கக்கூறொன்றுக்கு மினிற் 48 (2நாழிகை)யாகும். முதல்துகுளிரமுகூர்த்தமென்றும் 2வது உரகமுகூர்த்தமென்றும் 3வது மித்திரமென்றும் 4வது பித்திரியமென்றும் 5வது வசுவென்றும் 6வது வாரமென்றும் 7வது விசுவதேவமென்றும் 8வது விதியென்றும் 9வது பிரம்மாவென்றும் 10வது இந்திரமுகூர்த்தமென்றும் 11வது இந்திராசர்தனமென்றும் 12வது தைத்தியமென்றும் 13வது வருணமென்றும் 14வது அரியமமென்றும் 15வது பகமுகூர்த்தமென்றும் பெயராகும். சொல்லிய இப்பத்தினாந்து முகூர்த்தகாலங்களுள் பக இந்திர சதாசன உரக ரௌத்திர தைத்திய பித்ரு முகூர்த்தகாலங்கள் உம் உக்கிர தைவத்யமாவதால் சுபகரும விஷயமாய்க் கொள்ளக்கூடாதனவென்றும் ஏனையமுகூர்த்தங்கள் உம் சுப்பீரதங்களென்றும் கொள்ளத்தகுந்ததாகும்.

இரவு முப்பதுநாழிகையைப் பதினைந்து கூறாக்கக் கூறொன்று 2 நாழிகை (48 மினிற்)றாம். முதலில் ஈசுவரமுகூர்த்தம். 2-வது அஜசரணம. 3-வது அஹிர்புத்ர்யம். 4-வது பூஷா. 5-வது நாசத்தியம். 6-வது அந்தகம். 7-வது அக்கினி 8-வது தாதா. 9-வது சசி. 10-வது ஆதித்தியம். 11-வது சிவம். 12-வது அச்சுதம் 13-வது அர்க்கம். 14-வது த்வஷ்டா. 15-வது சமீகரண முகூர்த்தமென்று பெயர்பெறும். இப்பதிடைந்து முகூர்த்தகாலங்களுள் ருத்திர அஜாங்கிரி யம அக்கினி என்ற நான்குமுகூர்த்தமும் சுபகர்மவிஷயமாய் உக்கிரங்களானபடியால் இக்காலங்களை முகூர்த்தகாலமாய்க்கொள்ளாது தள்ளவேண்டும். ஏனைய பதினொருமுகூர்த்தங்களும் கொள்ளற்பாலனவாகும். நீக்கும்முகூர்த்தம் ஒன்று மூன்று ஆறு ஏழு எனவறிக.

13

கார்ஜூரச்சக்கிரலக்ஷணமாவது

  1. கார்ஜூரச்சக்கிரலக்ஷணமாவது.

காஞ்சூரையிலைபோலொருபடமிட்டுப் பதின்மூன்று குறுக்குக்கீரிட்டால் இருபத்தேழுசோகங்களாகமும். அதற்கு கார்ஜூர சக்கிரமென்று பெயர். அவ்விலையடிக்காம்பின் அசுவினிகட்சத்திரத்தையும் விஷ்கம்பராம யோகத்தையுமெழுதி வலமாக இறக்கிக்கொண்டுவருகையில் சூரியசந்திரர்கள் ஒரு நக்ஷத்திரத்தின் முதலாம் நாலாம்பாதத்திலும் இரண்டாம் மூன்றாம் பாதத்திலும் இருந்தால் பரஸ்பரவீக்ஷணமுண்டாகுமாதலால் முகூர்த்தகாலசுபமல்லவாகும்.

14, 15

கிரகணோத்பாததோஷம், உத்பாததோஷமாவன

பற்றிப்பிடித்திடின்மூன்றுநாள்முன்பற்றியுதித்தெழுங்கால் உற்றபின்மூன்றலைபற்றிடின் மூன்றுபின்மூன்றுநாள் முற்றவிழுங்கிடின்முன்னேழும்பின்னேழுமெனமொழிந்தார் பெற்றகிரகணயிரண்டுக்குநீதியாட்பெய்யோயே.

சந்தானமணி. ருகூ

  1. கிரகணோத்பாததோஷம், 15. உத்பாததோஷமாவன.

உத்பாதங்களொன்றால் பூகம்பனம் தூமகேது முதலானவை நிகழினும் சூரியசந்திரகிரகணங்கள் உண்டாகுமாயின் அதன்பின் ஏழுநாட்கள்வரையில் நிஷேகம் விவாகம் முதலிய சுபகருமங்கள் செய்யக்கூடாது. எந்தநக்ஷத்திரத்தில் இங்கேசொல்லிய உத்பாதகிரகணங்களுண்டாகுமோ அந்தநக்ஷத்திரம் மிருத்யுப்ரதமாவதால் ஆறுமாசங்கள்வரையில் அந்நக்ஷத்திரத்தில் பிறந்தவர்களும் அந்நக்ஷத்திரமும் சுபகர்மங்களுக்கு அயோக்கியமென்று தள்ளவேண்டியது. கிரஸ்தாஸ்தமய அர்த்தக்கிரகணமான பக்ஷத்தில் முற்பட்டு மூன்றுநாள்களும் பின்னே மூன்றுநாளும் சுபகர்மவிலக்கு. சாயங்காலத்தே கிரஸ்தாஸ்தமயகிரகணமானால் சர்வக்கிரஸ்த கிரகணத்தில் முன்னேழு பின்னேழுநாட்கள் சுபகர்மவிலக்கு. மேலும் கிரகணவித்தநக்ஷத்திரம் பூரணகிரகணத்தில் ஆறுமாசமும் அர்த்தக்கிரகணத்தில் மூன்றுமாசமும் இந்தவகையாகச் சுபகர்மங்கள்விஷயமாய் யோக்கியமில்லையென்று காணவேண்டியது.

இ-ள்: ...

16

குநபுத்திஷ்ணியதோஷம்

தீயவர்தாநின்றவிற்கொடென்பரிசிதைதலாய் தீயவார்காளுஞ்சிறப்பிலவென்பரிகுடருங்குந் தீயவர்தாநின்றநாட்கடளுநிர்தென்பார்கல்வினைக்கு தீயவர்தாமிருத்தற்குடையோரையுந்தீதென்பரே.

போகநாள்காயியாநாள் பிரியாநாள்.

நற்கோள்விடுநாள் நிலேநாள்கடந்துபோய்ப்பற்றுமந்நாள் விற்போல்துதலாய்விளங்கியபோகநாள்மேதினிமேல் பொற்போர்பொலியுகாள்போகங்குறிக்குநாளென்னூல்வல்லோர் சொற்போலாங்குரைத்தார்சோமவாசிட்டசூரியரே.

  1. குநபுத்திஷ்ணியதோஷம்.

இ-ள்: சுபாவசுபக்கிரகம் நின்று விலகிய நட்சத்திரம் போகநாளென்று பெயர்பெறும். நிற்கும் நாள் நட்சத்திரம் பிரியாநாளென்று பெயர்பெறும். மேல் நிற்கப்போகுநட்சத்திரம் காயியாநாளென்று பெயர்பெறும். இந்தநட்சத்திரங்கள் மிகு சுபகுணநட்சத்திரம் சுபகரும சித்தி. பாபக்கிரகம் இருக்குநட்சத்திரம் ஜ்வலதலஸம்ஜ்ஞிகமென்றுந் பாபக்கிரகமிருந்தநட்சத்திரத்துக்குப் பின்னேயுள்ள நட்சத்திரம் பஸ்மஸம்ஜ்ஞிகமென்றும் பாபக்கிரகமிருந்த நட்சத்திரத்துக்கு முன்னேயுள்ள நட்சத்திரம் தூமிதஸம்ஜ்ஞிகமென்றும் இந்த 3 நட்சத்திரங்களும் மிருத்தியுகுணமாவதால் விவாகாதிகர்ப்பாதானங்களுக்கு விலக்கவேண்டியதும பாபக்கிரகமிருக்குந் ராசியும் ஜ்வலிதஸம்ஜ்ஞிகமேயாதலால் அவ்விராசிகளும் முகூர்த்தத்துக்கு விலக்கப்படும்.

Page 38

சந்தானமணி.

அசுபவித்ததோஷமாவன: நட்சத்திரம். வேதை. நட்சத்திரம். வேதை. அச்சுவினி பூரம் சோதி சதயம் பரணி அனுடம் விசாகம் கார்த்திகை கார்த்திகை விசாகம் அனுடம் பரணி ரோகிணி அPageபிசித் கேட்டை பூசம் மிருகசீரிடம் உத்திராடம் மூலம் புனர்பூசம் திருவாதிரை பூராடம் பூராடம் திருவாதிரை புனர்பூசம் மூலம் உத்திராடம் மிருகசீரிடம் பூசம் கேட்டை திருவோணம் மகம் ஆயிலியம் அவிட்டம் அவிட்டம் ஆயிலியம் மகம் திருவோணம் சதயம் சோதி பூரம் அச்சுவினி பூரட்டாதி சித்திரை உத்தரம் ரேவதி உத்திரட்டாதி அத்தம் அத்தம் உத்திரட்டாதி ரேவதி உத்தரம் சித்திரை பூரட்டாதி

அச்சுவினிமுதற் குறித்தநட்சத்திரங்களிற் பாபக்கிரகங்களிருந் தால் வேதையென்று குறித்த நட்சத்திரத்திற்கு கிரகப்பெயருடன் வே தையாம். வேதைகள் சுபகருமங்களுக்கு விலக்கப்படவேண்டுமென்பது விதியாம்.

18

சந்தானமணி.

18

  1. லக்கினாஸ்ததோஷமாவது.

விவாகநிஷேக லக்கினத்தால் நவாம்சலக்கினத்தையும் நிர்ணயித் தபிறகு லக்கினம் அந்தநவாம்சலக்கினாதிபதியாலாவது சுபக்கிரகங்களா லாவது அல்லது நவாம்சTransitionதிபதியின்மித்திரர்கள் சுபர்பாபராயினுமவர்க ளாலாவது பார்க்கப்பெற்றாலும் அல்லது கூடியிருந்தாலும் தம்பதிகளுக்கு மிகுந்த சுபகரமாம். அல்லது எந்தலக்கினத்தில் எந்தஅம்சம் நவாம்சமாகு மோ நவாம்சலக்கினத்திற்கு ஏழாம் லக்கினத்தில் அந்தநவாம்சம் அஸ் தாம்சமாகும். அந்தஅஸ்தாம்சாதிபதி ஏழாதிபதியாலாவது அல்லது வேறு சுபக்கிரகங்களாலாவது நவாம்சலக்கினத்திற்கு ஏழாவதான இராசியைப் பார்க்கப்படவேண்டும். அதுவுந்தம்பதிகளுக்குச்சுபகரமாம். இந்த இரண்டு விதிக்குமையாதிருந்தால் அந்தமுகூர்த்தம் நல்லதல்லவெனத்தெரிந்து கொள்ளவேண்டியது.

21

சந்தானமணி.

21

  1. வியதீபாதவைதிருதிதோஷமாவன.

விஷ்கம்பம் வியதீபாதம் சூலம் பரிகம் கண்டம் அதிகண்டம் வச் சிரம் வியாகாதம் வைதிருதி இந்த ஒன்பது யோகங்களும் நிஷேகம் விவா காதி சுபகருமங்களுக்குமரணப்பிரதமாம். இவ்வொன்பது யோகங்களோ டுங்கூடி கார்ச்சூரச்சக்கரத்தின் ரேகையிற் சந்திப்பதால் அச்சுவினி திரு வாதிரை மிருகசீரிடம் மகம் மூலம் அனுடம் பூசம் புனர்பூசம் சித்திரை இவ்வொன்பது நட்சத்திரங்களும் அதாவது விஷ் கம்பத்திற்கு அச்சுவினி, வியதீபாதத்திற்குத் திருவாதிரை, சூலத்திற்கு மிருகசீரிடம், பரிகத்திற்கு மகம், கண்டத்திற்கு மூலம், அதிகண்டத்திற்கு அனுடம், வச்சிரத்துக்கு பூசம், வியாகாதத்திற்குப் புனர்பூசம், வைதிருதிக்குச் சித்திரை இந்த யோகங்களோடு இங்கே சொல்லப்பட்ட நட்சத்திரங்கள் பஞ்சாங்கத்தில் கூடி நடக்கும் நாட்கள் நிந்திதமென்று தள்ளவேண்டும்.

சந்தானமணி.

கூறுங்குணமோர்நற்றபநலிற்குணதிகமாய் ஏறும்வலியுமறிந்திதையத்தளினிதுவன்ற நாறந்துழாய்முடியான்கருளன்வணங்கிகாணும் பேறொன்றிடவிதிக்கும்விதியேபெருநன்மையதே. ஒன்றாந்திதிகாரணமிரண்டாம்வாரமெட்டொருநாள் சென்றார்நித்தமங்கெழுபதுமுப்பதுமுகூர்த்தத்திக்கு நின்றாஞ்சுகித்தியோகத்தினொன்றீரைந்துதயங் குன்றாதபத்தாயிரமென்றுகூறுங்குணகுணமே.

இ-ள்: திதி ஒருபங்கு குணம். கரணம் இரண்டுபங்கு குணம் கிழமை எட்டுப்பங்கு குணம். நட்சத்திரம் நான்குபங்கு குணம். தின யோகம் மூன்றுபங்கு குணம். முகூர்த்தம் நூறுபங்கு குணம் ஆகத் திதி வாரம் யோகம் கரணம் நட்சத்திரம் தினயோகம் சுபலக்கினம் இவை யெல்லாம் விதித்தனவாய்ப் பொருந்தியும, கிரகங்கள் சுபகரமாயிற்கவுங் கர்மாகாரிகளுக்கும் சகுணமான நட்சத்திரம் லக்கினம் வந்து பொருக்கப்பெறின் அந்தமுகூர்த்தம் பதினாயிரம்பங்கு குணமுடையதென்றும் அதிற்செய்யப்படுஞ் சுபகருமங்களும் கற்பாந்தரனமும் தேவாம்சமான ஸாத்வீககுணம பொருந்துமேன்றுங் கூறுவது. மேலேகூறப்பட்டுள்ள யாவும் விதித்தனவல்லவாய் வந்துபொருந்தினால் பதினாயிரம்பங்கு குற்றமுடையதாய்ச் செய்யப்பட்டுள்ள கருமமுங் கர்மாகாரிகளும் இராஷதாம்சமாய்த் தாமசகுணங்களைப்பிற்பொருந்தும் என அறிந்துகொள்க.

வருஷசுபாசுபம்.

1

  1. வருஷம் 60. பிரபவ விபவ சுக்கில பிரமோதூத பிரசோற்பத்தி ஆங்கீரச ஸ்ரீமுக பவ யுவ தாதுவ ஈசுர வெகுதானிய பிரமாதீ

Page 39

விக்கிரம விசுவ சித்திரபானு சுபானு தாரண பார்த்திப விய சர்வ சித்து சர்வதாரி விரோதி விகிர்தி கர நந்தன விஜய ஜய மன்மத துன்முகி ஏவிளம்பி விளம்பி விகாரி சார்வரி பிலவ சுபகிருது சோப கிருது குரோதி விசுவாவசு பராபவ பிலவங்க கீலக சௌமிய சாதாரண விரோதிகிருது பரிதாபி பிரமாதீச ஆனந்த ராக்ஷஸ நள பிங்கள காலயுக்தி சித்தார்த்தி ரௌத்திரி துன்மதி துந்துபி ருதிரோற்காரி ரத்தாக்ஷி குரோதன அக்ஷய.

இந்த அறுபதுவருஷங்களுள் கற்போற்பத்தி பிரசவித்தல் இதற்குப் பிரபவ பவ விசுவா அக்ஷய இந்நான்கு வருஷமும் சுபமல்லவென்றையறிக.

  1. மாதம் 12. சித்திரை வைகாசி ஆனி ஆடி ஆவணி புரட்டாசி ஐப்பசி கார்த்திகை மார்கழி தை மாசி பங்குனி.

இந்தப் பன்னிரண்டுமாதங்களுள் ஆடி புரட்டாசி மார்கழி மாசி என்ற இந்நான்குமாதங்களும்; தாம் தாம் சென்மமானமாதமும், பிறந்த மாதத்திற்கு எட்டாம்மாதமும், இரண்டுமாவாசை உட்படச் சூரியசங்கிரமமுமுண்டானமாதமுஞ் சங்கற்பமாதம், அந்தமாதமும், இரண்டுசங்கிராந்திபானுகாலங்களில் அமாவாசை கூடிவரின் அசங்கற்பதிமாதம், அந்தமாதமும் சூரியனது இரண்டுசங்கிராந்திக்கும் நடுவாக இரண்டுசந்திரோதயமுண்டாகில், அதிகமாதம் அந்தமாதமுமாகச் சங்கற்பமாதம் அசங்கற்பமாதம் அதிகமாதமாகவருகின்ற மாதங்களுஞ்சுபகாரியவிலக்காம். என்னேகே கர்ப்பாதானத்துக்கும் இம்மாதங்களை யூகித்து விலக்குவது உத்தமம். தலையோ மூவாலிரண் டுட்படச் சங்கிர மித்தலன்றேல் தலையோ மூவாவினிற் சங்கிர மித்தல் பிறையிரண்டாங் குறையா வுதயம் பெறுந்திங்க ளூழன் வியகணிதக் கலைவாண் ராதிக மாதமென் றோதிக் களித்தனரே. விறிகுளிர் மீனின் மிகவொளி கூர்ந்து வியாழன்நிற்ப நற்கதி சோனுந் தரகெதி நாடி நயந்துநிற்பச் சற்பமங் கற்ப மதிக மெனுந்திங்கட் சாலநன்றாம் பொற்புறு மேக நல்வினைப் புண்டரீகப் புணர்முலையே.

இ-ள்: தனு மீனம் கர்க்கடகத்தில் வியாழன் இருக்க, உத்தராயணகாலமாகிய தைமாதம் முதல் ஆனிமாதம் முடியும்வரை சங்கற்பமாதம் அசங்கற்பதிமாதம் அதிகமாதம் என்னுந் தோஷம் இல்லையாகும். தனு மீனகடகத்தில் வியாழன் இருந்தாலும் தக்ஷிணாயனமான ஆடிபிறப்பு முதல் மார்கழிமுடியும்வரை சங்கற்ப அசங்கற்ப அதிகமாதம் என்ற தோஷம் பரிகரிக்கப்படாதென உணர்க.

வாரம் 7. ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி இவற்றள் ஞாயிறு செவ்வாய் சனியென்ற மூன்று கிழமைகளும் பாவர் வாரம் என்றும் இம்மூன்றள் ஞாயிற்றுக்கிழமை சுபவாரமென்றும், செவ்வாய் சனிக்கிழமையைச் சுபகருமத்துக்கு உபயோகிக்கக்கூடாதென்றும் வற்புறுத்தும். திங்கள் புதன் வியாழன் வெள்ளி இந்நான்கு கிழமையும் சுபவாரமென்றும், சுபகருமம் நிஷேகம் விவாகாதி முதலியன யாவக்கும் உத்தமம். வாரமானது சித்தயோகம் அமிர்தயோகம் சித்தாமிர்தயோகம் அமிர்தசித்தயோகத்தோடுகூடி வந்தபோழுதே சுபவாரம் சுபவாரமெனப் பெயர்பெறும். மரணயோகம் நாசயோகங்களோடுவரின் சுபவாரமென்ற குணமும்நீங்கி மிகவும் பாவவாரமாகும். சித்தயோகம் அமிர்தயோகம் சித்தாமிர்தயோகம் அமிர்தசித்தயோகம் மரணயோகங்களைப் பஞ்சாங்கத்திலறியக்கூடும்.

நாசயோகமாவது.

என்றுநீ ஒருளைச் சிறு மித்துவக் காறு வெள்ளிங் கொன்றிய நவமி மேதைக் கிரண்டொளி யவற்குப் பன்னான்கு பொன்றனக் கெட்டு நீலன் பூமணுக் கேழு பொல்லாக் கன்றிடு நாசயோக மென்றறி கதிர்வேற் கண்ணாய்.

ஞாயிற்றுக்கிழமையில் சதுர்த்தசியும், திங்கட்கிழமையில் ஷஷ்டியும், செவ்வாய்க்கிழமை சனிக்கிழமையில் ஸப்தமியும், புதன்கிழமையில் துதியையும், வியாழக்கிழமையில் அஷ்டமியும் வெள்ளிக்கிழமையில் நவமியும்வரின்நாசயோகம் சொல்லப்பட்டதிதியோடு கூடிவரின் அவ்வாரமும் சுபகாரியவிஷயமாய் நீக்கப்படவேண்டும்.

திதியமுதயோகம்.

  1. ஞாயிற்றுக்கிழமையில் - பிரதமையும் ஷஷ்டியும்
  2. திங்கட்கிழமையில் - துதியையும் ஸப்தமியும்
  3. செவ்வாய்க்கிழமையில் - சதுர்த்தசியும்
  4. புதன்கிழமையில் - அஷ்டமியும் திருதியை திரயோதசியும்
  5. வியாழக்கிழமையில் - நவமியும்
  6. வெள்ளிக்கிழமையில் - ஏகாதசியும்
  7. சனிக்கிழமையில் - சதுர்த்தசியும் வருவன.

செப்பிய குருவுக் கொன்பான் பன்னான்கு சன்கான்கு சேய்க்கு வெப்புறு கதிருக் கொன்றோ டாறுபன் னொன்று வெள்ளிந்

Page 40

கொப்புடை மதிக்கு மின்னே யேழிரண் டுயர்ந்த புத்திக் கப்பதின் மூன்று மெட்டு நல்லதா மமுத யோகம்.

ஸாத்வீகாதிமுக்குணவிளக்கம்.

ஈஸ்வரானுக்கிரகத்தால் அசுத்தமாயையின் காரியமாகிய கன்மமல ரூபமூலப்பிரக்ருதி ஸ்ருஷ்டிக்குமுதற்காரணமாகும். அதனாலேயே அந் தக்காணங்களும் ஐம்பொறிகளும் பிராணாதிவாயுக்களும் கன்மேந்திரியங் களும் புவனங்களும் அனுபவங்களாகிய சுகதுக்கங்களும் தோன்றியன. பிரகிருதி (பிரசவிக்குந்தன்மை) பிரசவிக்குந்தன்மையான அப்பிரகிருதி ஜடத்துவம் தோன்றுதல் மாறுதல் விரிதல் ஒடுங்குதல் ஆத்மபொரு ளைத் தன் மலசொரூபமாக்குதல் தன்சொழில் பிரர்நிலைகளையறியாதிரு த்தலாகிய அம்சங்களோடு கூடி ஸாத்விகம் ராஜதம் தாமதம் என்றமுக்கு ணமயமாக ஆன்மாவைப்பந்திக்கின்றது.

  1. ஸாத்வீகமானது. சுகசங்கத்தாலும் ஞானசங்கத்தாலும் பந்தனஞ்செய்கின்றது எனவே மலத்தில் அல்பத்வம் துக்கத்தில் அல்பத்வம் ஆத்மாவுக்கு மே லானபோதனைசெய்தல் கல்விகேள்விகளில் விருப்பத்தையூட்டல் தேக மானஸ சுகங்களில் விரும்புதல் நிவிர்த்தி பிரவிர்த்திக்கிரமங்களையறிந் தொழுகுதல் முதலிய உத்தமகுணம் பதினேந்து உடையனவாக இருக்கும். ஸாத்வீககுணம் சுகத்திற்கூட்டிவைக்கிறதாகையால் நிர்மலமா னது, அது சுகசங்கத்தினாலே ஞானத்தைப்பிறப்பிக்குங் குணமாகும்.

ஸாத்வீகாதிமுக்குணவிளக்கம்.

பரவுஸாத் விகவே ளைக்கே பளிங்கொளி நிறமு முள்ளான் விரவுநல் லறிவு புத்தி விதாரண ஞான முள்ளான் குரவர்மேற் பத்தி யுள்ளான் கொடுமைசேர் துன்ப மில்லான் வரவுறு மின்ப மெல்லாம் வருமவன் றனக்குத் தானே.

என்று ஸாத்வீககுணத்தில் பிறந்தவர் பலனெனச் சொல்லப்படு கிறது. ஸாத்வீககுணவேளையில் தேகம்விட்டால் நிர்மலமானலோகத்தை யடையுமென்று பகவத்கீதையில் கூறப்பட்டுள்ளது.

ஸாத்வீகாதிமுக்குணவிளக்கம்.

  1. ராகதகுணமானது கர்மசங்கத்தால் பந்திக்கின்றது. எனவே இந்திரியங்களை விஷயங்களிலேவுதலும் அவற்றைப் பெறுவதற்கு தொழில்களோடு கூட்டுவித்தலும் இவற்றால் ஆத்மாவின் ஸாக்ஷித்துவத் தையும் ஸாந்தியையும் குன்றச்செய்தல் ராகதகுணம். ராசாத்துமாவான ஆசையிலே கூட்டிவைக்கும் அதனாலே கட்டுப்பட்டுத் தேகிகர்மசங்களுவான் ராசதகுணத்தர் காமியகர்மபலராய் அந்தப்பலத்தினாலே போகங் களையனுபவித்தல் முதலிய எட்டுக்குணங்களுடையனவாய் இருக்கும்.

ஸாத்வீகாதிமுக்குணவிளக்கம்.

அன்பிரா சதவே ளைக்கே செனித்தவ னறிவு முள்ளான் இன்பத்தி லாசை பற்று மியலுநல் லுரைகற் பானங் பொன்புவி கலைகளிந்தப் புவிக்குப கார முள்ளான் துன்பமற் றரசாய் நீதி செலுத்துவான் சுகமுள் ளானே.

என்று இராசதகுணத்திற் பிறந்தவர் பலனெனச்சொல்லப்படு கிறது.

ஸாத்வீகாதிமுக்குணவிளக்கம்.

  1. தாமதகுணமானது அஞ்ஞான சொரூபமாகப்பிறந்து மோகத் தைச்செய்கின்றதாகவும் பிரமாதம் சோம்பல் நித்திரையென்ற இவைக ளால் பந்திக்கின்றது. எனவே அறிவின்மை மயங்கச்செய்தல் மறதி சோ ம்பல் தூக்கங்கானலதாவது விழிப்புற்சாகமில்லாமையால் ஆத்மாவின் ஸாக்ஷித்துவத்தையும் சாந்தியையுங் கெடுத்து ஆத்மாவுக்கு சம்சயத்தை யும் விபரீதத்தையும் உண்டுபண்ணி மயக்கும்.

தமோகுணம் ஞானத்தைமூடி எதார்த்தஞானந் தெரியாமற் பண்ணி ஒருவஸ்துவைப் பின்னையொருவஸ்துவாய்த் தெரிகிறதான அஞ் ஞானத்தையுமுண்டுபண்ணி பிரமாதத்தையுண்டாக்கும். பிரமாதம் - அவ தானமில்லாமை. நினைவுகளங்குவுதல் தவறுதல்.

கைவல்லியநவநீதம் 22 ம்செய்யுண்முதலாக தத்துவவிளக்கப்படலம்.

அதுதானெப் படியென்றக் காலநாதி யாஞ்சிவ ரெல்லாம் பொதுவான சுழுத்திபோலப் பொருந்துமவ் வியத்தந் தன்னில் இதுகால தத்துவப்பே ரீசனுட் பார்வை யாலே முதுமூல சுபாவம் விட்டு முக்குணம் வியத்தமாமே.

இ-ள்: அக்கற்பசிருஷ்டி எப்படியுண்டாயிற்றெனின் அநா தியாயுள்ள சித்துரூபமான சிவகோடிகள் யாவுஞ் சகலபேர்க்கும் சாதா ரண அதிபவமான சுழுமுனாடிபோலச் சூனியமாயிருக்கும் மூலப்ரகிரு தியாகிய மாயையின்கண்ணேயடையும். இம் மாயையானது காலதத்துவ மென்னும்நாமமுடைய ஈசுரனுடைய திருஷ்டியினாலே மாறுமலமாய் முன் னிருந்தகாரணத்தன்மையை யொழித்து மூன்று குணங்களாக வெளிப்படும், உத்தம வெளுப்பு நீல முபயமாஞ் சிவப்பு மாகும் சுத்தசத் துவந்தா மத்தோ டசுத்தசத் துவப்பேர் சொல்லும்

Page 41

சத்துவ மழுக்கி ருட்டாய்ச் சாற்றுமுக் குணமு மூன்றாய் ஒத்துள வெனிலுந் தம்மு ளொருகுண மதிக மாமே.

இ-ள்: முதலாவதான வெண்ணிறமும், இரண்டாவதான செம்மைநிறமும், மூன்றாவதான கருமைநிறமும் ஆகாநின்ற தூயதான சத்துவகுணமும், ராசதகுணமும், தாமதகுணமுமெனப் பெயர்பெறும். சத்துவமான சுத்தமும் அழுக்குமிருட்டுமெனச் சொல்லப்பட்ட இம் மூன்று குணங்களும் ஒன்றாகி ஒத்திருப்பவைகளாயினும் அவைகளுளிரண்டடங்கி ஒருகுணம் விசேடித்துநிற்கும். ஸாத்விகம் ராசத தாமதகுணங்களையவமதித்துநிற்கின்றது. அவ்விதமே தாமதம் ஸாத்விக ராசதகுணங்களை அவமதித்துநிற்கின்றது. முக்குணங்கள் ஒன்றோடொன்று இணங்காமலிருத்தல் அவற்றின் இயல்பு.

ஒருவழி யிதுவா மித்தை யொருவழி வேறாச் சொல்வார் மருவுமல் வியத்தந் தானே மகதத்துவ மாகு மென்றும் அருமக தத்து வந்தான கங்கார மாகு மென்றும் கருவகங் கார மூன்றாய்க் காட்டிய குணமா மென்றும்.

இ-ள்: மேற்சொன்ன ஒருமார்க்கமாம். இதையே மற்றொரு மார்க்கமாகச் சொல்லுவார்கள். அஃது எங்ஙனமெனின், பொருந்திய அவ்வியத்தமே மகதத்துவமாமெனவும் சொல்லிய மகதத்துவமே அகங்காரதத்துவமாமெனவும் கருவாகிய அகங்காரமே மூன்றாகத்தெரிவித்த குணங்களாம் எனவும் சொல்லப்படும். இ-ம்: சுத்தசைதன்னியமானதன்னை எதிரிட்டறிய உதயமான அறிவுக்கு முன்புண்டானமறதியே அவ்வியத்தமான பிரகிருதியெனவும் அவ்வறிவு பகிர்முக உள்முகமான இடமே மகதத்துவமெனவும், அஃது தன்னிடத்துப்பிரதிபிலனமாக ஆரோயத்தை நான் என்பதே அகங்காரத்துவமெனவும், அதனிர்ச்சலமேசத்துவமெனவும் அதன் சலனமேராசதமெனவும் அதன்மக்கினமே தாமதமெனவும் உண்டான உபரிசிருஷ்டியையத்தனனுபவத்திற்காண்க.

இக்கு ணங்களில் விண்போன் றிருக்குஞ்சிற் சாயை தோன்றும் முக்குணங் களினுந் தூய்தா முதற்குணம் மாயை யாகும் அக்குணம் பிரமச் சாயை யந்தரி யாமி மாயை எக்குணங் களும்பற் றாதோ னிமித்தகா ரணமா மீசன்.

ஈசனுக்கிதுசுழுத்தி யிதுவேகா ரணச ரீரங் கோசமா னந்த மாகுங் குணமிரா சதம வித்தைந் தேசறு மவித்தை தோறுஞ் சிற்சாயை சீவ கோடி நாமமர் முயிர்க்கப் போது நாமமும் பிராஞ்ஞ னாமே.

இ-ள்: இம் மூன்று குணங்களுள் ஆகாயம்போல நிர்வயவமாயிருக்கின்ற சிற்சாயை பிரதிபலிக்கும். இம்மூன்றுள் சுத்தமாகிய சாத்விகம் (மாயையாம்) அந்தச்சாத்வீகத்திற் பிரதிபலித்த பிரமப்பிரதிபிலனமே அந்தரியாமி யாம். மாயா சம்பந்தமான எந்தக்குணங்களும் பற்றாதவனே பஞ்சபூதபவுதிக முதலிய சிருஷ்டிக்கு நிமித்தகாரணமாகிய ஈசனாம். இ-ள்: இவ்வீச்வரனுக்கு இச்சாத்வீகமாயையே சுழுத்தியவஸ்தையாம். இஃதே காரணசரீரமாம். இதுவே அனந்தமயகோசமாம். ராசதகுணம் அவித்தையாம். விளக்கமில்லாத அவித்தைகள்தோறும் பிரதிபவித்த ஞானப்பிரதிபிலனமே சீவராசிகளாம். யாவையும் இறந்த சுழுத்தியையபிமானிக்கும் சீவர்களுக்கு அவ்வவஸரத்தில் பெயர் பிராஞ்ஞன்.

ஏமமா யாவி னோத வீசனா ரருளி னாலே பூமலி யுயிர்கட் கெல்லாம் போகசாதனமுண் டாகத் தாமத குணமி ரண்டு சத்தியாய்ப் பிரிந்து தோன்றும் வீமமா மூட லென்றும் விகிதமாந் தோற்ற மென்றும்.

இ-ள்: மோகமாகிய மாயையை விளையாட்டாகவுடைய ஈச்வரனுடைய கிருபையினால் பொலிவுமிகுந்த சீவர்களனைவர்க்கும் அனுபோக சாதனம் உண்டாகும்பொருட்டுத் தமோகுணமானது பயங்கரமான ஆவரணமெனவும், நானாவிதமாகும் விக்ஷேபமெனவும் இரண்டுசத்திகளாய்ப் பிரிந்து தோன்றும். இ-ம்: தமோகுணப்பிரதிபலிமான் சிற்சாயையின் அறிவின்மை ஆவரணம் அறிவு விக்ஷேபமும் என இரண்டுசத்திகளாயின என்பதாம்

தோற்றமாஞ் சத்தி தன்னிற் சொல்லிய விண்ணாம் விண்ணிற் காற்றதாங் காற்றிற் றீயாங் கனலினிர் நீரின் மண்ணாம் போற்றுமிவ் வைந்தும் நொய்ய பூதங்க ளென்று பேராம் சாற்றுமற் றவற்றிற் போக சாதன தனுவுண் டாகும்.

ஆதிமுக் குணமிப் பூத மடங்கலுந் தொடர்ந்து நிற்கும் கோதில் வெண் குணத்தி லைந்து கூறுமந் கருவியாகும் ஓதிய பின்னையையத்து மூலம்புந்தி பிராண்டா ஞான சாதன மாமிவ் வேழுஞ் சற்குணப் பிரிவி னாலே.

Page 42

இம்மூசத் குணத்தில் வேறிட் டெடுத்தகூ றென்று மைத்தும் பிராணவா யுக்க ளென்றும் பெருந்தொழிற் கன்ம மென்றும் பராகவிய பெயரா மிந்தப் பதினேழு மிலிங்க தேகம் சுராசுரர் நரர்கி னங்காformer தோற்றிய வுயிர்கட் கெல்லாம்.

சூக்கும சரீரம் மட்டுஞ் சொல்லினோ மிப்பார் னீலம் ஆக்குமா ரோபந் தானு மடைவினின் மொழியக் கேளாய் நாக்குமிவ் வுயிர்க்குத் தூல தனுவும்பேர் களுமுண் டாகக் காக்குமிவ் வீசன் பஞ்சீ கரணங்கள் செய்தான் றானே.

இ-ள்: சூக்குமஇயல்புயிர்யிருந்த இச்சீவர்களுக்குத் தூலதேகமும் அனுபவகமும் உண்டாகும்படி சீவர்களைப்பாதுகாக்கும் இவ்வீசுவரன் பஞ்சீகரித்தலைச்செய்தான். கர்ப்பாசயக்குழியில் சுக்கிலசுரோணிதமீது கலந்துறும்பொழுது காலத்துவகுணங்கள் விபாகப்பட்டு அவற்றின் கார் யங்களாகிய ஸகல ஸ்தூலசரீரங்களின் பிறப்புண்டாகின்றது.

கருதுமனே குணமூன்றூ மூன்றிலொன்று கதித்தெழுந் தால் மற்றிரண்டுங் கரந்து நிற்கும், நகுமமிகு சத்துவமே யான போது சன்மார்க்க மானதெய்வ சம்பத் துண்டாம், மருவுமிரா சதமாகி லுலக தேக வாதனையாம் சாத்திரவா தனையு மாகும், அருமகனே தாமதமே லான போதி லசுரசம்பத் துண்டா மறிந் து கொள்ளே.

இ-ள்: நினைக்கின்றமனதிற்கு திரிகுணமாவது மூன்று குண மாம். அம்மூன்றுகுணங்களுள் ஒன்றுமிகுந்தெழும்போது மற்றையஇரண் டுகூணங்களும் மறைந்திருக்கும். சற்கருமத்துக்கேதுவாகிய உயர்ந்த சத் துவகுணமானது மிகுந்தபேர்து சன்மார்க்கமாகிய தெய்வசம்பத்தோடு தோன்றும். பொருந்திய ராசசகுணமிகு மாயின் லோகவாதனை தேகவா தனை சாஸ்திரவாதனையுமுண்டாகும். தாமதகுணமிகுந்தபோதில் அசுரச் செல்வமுண்டாம்.

அ-கை: சித்தம் சமானசத்துவஞ் சேடிக்கின் மனஞ்சித்தில் அசைவின்றி நிற்கும் எனல்.-

எனவே விபாகப்பட்டகுணங்கள் தத்தம் பிரபலத்தாலடங்கா மல் தாம் பற்றிப்பிடித்த ஆத்மாவைத் தமக்கு அடிமைப்படுத்தியேவைக் கும். பரமேஸ்வரன்குணவிபாகசுந்தரத்தால் ஜீவாத்மாக்களைக் குணபந்த னத்தினின்றும் விடுவிக்கின்றார். இத,

  1. ஸாத்விகத்திற் ஸாத்விகம், ஸாத்விகத்தில் இராசதம், ஸாத் விகத்தில் தாமதம்.

  2. இராசசத்திற் சாத்வீகம், இராசசத்திலிராசதம், இராசதத்துத் தாமதம்.

  3. தாமதத்து சாத்வீகம், தாமத இராசதம், தாமதத்துத் தாமதம்.

இங்ஙனமொன்பதுவகையாகப் பிரித்து ஜீவாத்மதோற்றம் ஜன னத்தில் அவரவர் கர்மத்துக்கேற்படி அவ்வொன்றிலமைத்துச் சீவியகா லங்களில் மெல்லமெல்ல உயர்நிலையேற்றிக் குணாதீதஞானத்தைப் பெறச்செய்வர்.

கைவல்லியம் 129ம் பக்கம் சந்தேகந்தெளிதற்படலம் 76ம்செய்யுள்.

76

மதுவி றைச்சிக ளுண்னென்ற சுருதி மனத்துபா ரெனல் பாராய், மிதுன விச்சையும புத்திரோற் பத்தியால் விரும்பென்ற விதிபாராய், இதையும் விட்டொழி யதிகயிட் டிகவன்னிக் கீழ்ந் சியற்ற தும்பாராய், அதை நிந்துகன் பங்களா சைகளொழிந் தானந்த மடைவாயே.

இ-ள்: மதுமாமிசங்களைப் புசியென்றவேதமானது பின்பு ஆக் கிராணஞ் செய்தாற்போதுமென்பதைப் பார். மனைவிபோடு புணர்ச்சி யின்பமும், மகப்பேறுண்டாம் பொருட்டு இச்சிப்பாயென்ற விதியைப்பார். இவ்விதியையும் விட்டொழிந்தந்நியாசிக்கும் நைஷ்டிகப்பிரமசாரிக்கும் நிந்தையில்லாததும்பார். அக்குறைநயணர்த்துக்கள்மக்களின்மேல்வைத்த இச்சைகள்நீங்கி ஞானத்தினாற் ரமானந்தத்தை அடைவாய் எ-று.

ப-ம்: இல்லறதருமம் செய்யாமையால் துறவிக்கும், பிரமசா ரிக்கும் இழிவின்மையாரென்பர் அதிகாரியிட்க வன்னிக்கீழ்ச்சியற்ற தும்பாராய் எனக்கூறினார்.

மிதுனவிச்சையும் புதிரோற்பத்தியால் விரும்பென்றவிதிபரா ராய் என்றமையால் நேரிட்டஸ்திரீகளைப்புணரில் இம்மையில் பாவமும் பழியும் மறுமைக்கண் நரகதுக்கமுண்டாகுமாதலால் ஒருத்தியைமணஞ் செய்து அவளைப் புணர்ச்சியெனவேதம் பின்னே விதியாததினத்திற் கூதில் துர்ப்புத்திரனுண்டாய் ஆனால் இம்மையிற் பாவமும் பழியுமறு மையில் நரகதுக்கமும் வருமாதல சற்புத்திரனுண்டாய் உனக்கும்உன்

Page 43

சந்தானமணி.

குலத்துக்கும் இம்மையிற்புகழும் மறுமையிற் சுவர்க்கமுமுண்டாதற்பொருட்டு விதித்தகினத்தில் அவளைப்புணர்தி என்றுசொல்லும் விதியையும் நீ பார்ப்பாய் என்பதாயிற்று.

இ-ம்: வேதம் கன்மகாண்டத்தில் கூறும் வருணாச்சிரமகன்மங்கள் அதனாலுண்டாகும் போகவின்பங்கள் அனைத்தும் பின்பு துன்பங்களாக வருத்துதலைக்கண்டு அவற்றையெடுத்துப் பரமசுகத்தைத் தேடவேண்டுமென்பது அதனபிப்பிராயம் ஆதலால் தங்களுக்குந் தங்கள் வழித்தோன்றல்களுக்கும் இடுக்கணெய்தற் கேதுவானதும் இன்பமெய்தற்கேதுவானதும் விதியாத விதித்த காலயோக்கியமாமென்பதை உணர்தலே போதமாமென்பது தெளிவாகின்றது.

முக்குண வேளை.

முக்குண வேளை.

மணி மினிற். | ஞாயிறு புத சனி பகல். | திங்கள் வியாழ பகல். | வெள்ளி செவ்வா பகல். | மணி மினிற். | ஞாயிறு புத சனி இரவு. | திங்கள் வியாழ இரவு. | செவ்வா வெள்ளி இரவு. 7-30 | தாமதம் | சாத்விக | இராசத | 7-30 | இராசத | தாமதம் | சாத்விக 9-00 | சாத்விக | இராசத | தாமதம் | 9-00 | தாமதம் | சாத்விக | இராசத 10-30 | இராசத | தாமதம் | சாத்விக | 10-30 | சாத்விக | இராசத | தாமதம் 12-00 | தாமதம் | சாத்விக | இராசத | 12-00 | இராசத | தாமதம் | சாத்விக 1-30 | சாத்விக | இராசத | தாமதம் | 1-30 | தாமதம் | சாத்விக | இராசத 3-00 | இராசத | தாமதம் | சாத்விக | 3-00 | சாத்விக | இராசத | தாமதம் 4-30 | தாமதம் | சாத்விக | இராசத | 4-30 | இராசத | தாமதம் | சாத்விக 6-00 | சாத்விக | இராசத | தாமதம் | 6-00 | தாமதம் | சாத்விக | இராசத

இங்கேகுறித்த மணி மினிற் சூரியோதயம் ஆறுமணியென்பதந்நிலையோபம். அவ்வத்தேசங்களுக்கு அவ்வத்திதிகதியிற் சூரியோதயம் 6 மணிக்குமேலுதிக்குமாயின் அதிகமானமினிற்றை குறித்த மணி மினிற்றுடன் கூட்டிய மணி மினிற்றும் சூரியோதயம் 6 மணிக்குள்ளாகுமாயின் ஆறு மணிவரைக்குமுள்ள மினிற்றை குறித்த மணி மினிற்றில் கழித்துக் கண்ட மணி மினிற்வரை அவ்வவ்வாரங்களில் கிரமமாய் அவ்வக்குணகாலமாகும்.

நவகுண வேளை.

நவகுண வேளை. பகல்.

வாரம். | ம. மி. 6-30 | ம. மி. 7-00 | ம. மி. 7-30 | ம. மி. 8-00 | ம. மி. 8-30 | ம. மி. 9-00 | ம. மி. 9-30 | ம. மி. 10-00 | ம. மி. 10-30 | ம. மி. 11-00 | ம. மி. 11-30 | ம. மி. 12-00 ஞாயிறு செவ்வாய் சனி. | தாமத தாமத | தாமத சாத்விக | தாமத இராசத | சாத்து தாமதம் | சாத்விக சாத்து | சாத்விக இராசத | இராசத சாத்விக | இராசத தாமதம் | இராசத தாமதம் | தாமத சாத்விக | தாமத தாமத | தாமத இராசத திங்கள் வியாழன் | சாத்விக சாத்விக | சாத்விக இராசத | சாத்விக தாமதம் | இராசத சாத்விக | இராசத இராசத | இராசத தாமதம் | தாமத சாத்விக | தாமத இராசத | தாமத தாமதம் | சாத்விக சாத்விக | சாத்விக இராசத | சாத்விக தாமதம் செவ்வாய் வெள்ளி | இராசத சாத்விக | இராசத தாமதம் | இராசத சாத்விக | தாமத இராசத | தாமத தாமதம் | தாமத சாத்விக | சாத்விக தாமதம் | சாத்விக இராசத | சாத்விக தாமதம் | இராசத சாத்விக | இராசத தாமதம் | இராசத தாமதம்

வாரம். | ம. மி. 12-30 | ம. மி. 1-00 | ம. மி. 1-30 | ம. மி. 2-00 | ம. மி. 2-30 | ம. மி. 3-00 | ம. மி. 3-30 | ம. மி. 4-00 | ம. மி. 4-30 | ம. மி. 5-00 | ம. மி. 5-30 | ம. மி. 6-00 ஞாயிறு செவ்வாய் சனி | சாத்விக சாத்விக | சாத்விக இராசத | சாத்விக தாமதம் | இராசத சாத்விக | இராசத இராசத | இராசத தாமதம் | தாமத சாத்விக | தாமத இராசத | தாமத தாமதம் | சாத்விக சாத்விக | சாத்விக இராசத | சாத்விக தாமதம் திங்கள் வியாழன் | இராசத சாத்து | இராசத இராசத | தாமத தாமதம் | தாமத சாத்விக | காமத இராசத | தாமத தாமதம் | சாத்விக சாத்விக | சாத்விக இராசத | சாத்விக தாமதம் | இராசத சாத்விக | இராசத இராசத | இராசத தாமதம் செவ்வாய் வெள்ளி | தாமத சாத்விக | தாமத இராசத | தாமத தாமதம் | சாத்விக சாத்விக | சாத்விக இராசத | சாத்விக தாமதம் | இராசத சாத்விக | இராசத தாமதம் | இராசத தாமதம் | தாமத சாத்விக | தாமத இராசத | தாமத தாமதம்

Page 44

சந்தானமணி

நவகுணவேளை. இரவு.

வாரம். ஞாயிறு செவ்வாய் சனி திங்கள் வியாழன் செவ்வாய் வெள்ளி ஞாயிறு செவ்வாய் சனி திங்கள் வியாழன் செவ்வாய் வெள்ளி

சந்தானமணி

நீதிவிளக்கம்.

  1. பிரதமை
  2. துதியை
  3. திருதியை
  4. சதுர்த்தி
  5. பஞ்சமி
  6. ஷஷ்டி
  7. ஸப்தமி
  8. அஷ்டமி
  9. நவமி
  10. தசமி
  11. ஏகாதசி
  12. துவாதசி
  13. திரயோதசி
  14. சதுர்த்தசி
  15. பௌர்ணமி அல்லது அமாவாசியை ஆகத்திதி 15.

இவை சுக்கிலபக்ஷப்பிரதமைமுதல் ஐந்தாம் ஐந்தாம் ஐந்தாந்திதிகள் நந்தை பத்திரரை சயை இரித்தை பூரணை என்னுஞ் சம்ஞ்ஞையுடையன. நந்தையத் திரையினோடு நாட்டிய சயையிரித்தை முந்துபூரணையாம் பக்கம் முதற்றொட்டு மூன்றுவட்டம். இதில் நந்தைத்திதிகளான பிரதமை ஷஷ்டி ஏகாதசி. இவைகளின் ஆரம்பத்தில் இரண்டுகாழிகை கண்டாந்தம். பூரணைத்திதிகளான பஞ்சமி தசமி பூரணை அமாவாசை இவைகளினந்தத்தில் இரண்டுகாழிகை கண்டாந்தம். கண்டாந்தகாலம் கடியது. பத்திராத்திதிகளாவன: துதியை ஸப்தமி துவாதசி. சயைத்திதிகளாவன: திருதியை அஷ்டமி திரயோதசி இரித்தைத்திதிகளாவன: சதுர்த்தி நவமி சதுர்த்தசி.

சந்தானமணி

1

இத்திதி பதினைந்தில், தையலை முதலாந் திதியினிற் கூடிற் கண்பறஞ் சட்டியி னிரோதம், பொய்யிலட் சுமிநோய் நவமியிற் றுக்கம் பொருந்து மே காதசி பாவம், மையறு துவாத சிதனில் மருவிடிற் பூமகள் மருவாள், மெய்யினோர் புகழும் சதுர்த்தசி யதனில் மேவிடிற் றோயென விதிப்பர்.

சந்தானமணி

2

திங்களிற் றிங்கள் நாளும் சென்மநாள் மூன்று நாளும் மங்கையர் பூத்த காலம் வளர்பிறை நிறைந்த நாளும் துங்கமா வாசை நாளுந் தோகையைப் புணர்வீ ராகில் அங்கமும் வேறு பட்டு அலைகுவர் திண்ணந் தானே.

இவ்விதிப்படி பிரதமை ஷஷ்டி அஷ்டமி ஏகாதசி துவாதசி பூரணை அமாவாசையாகச் சொல்லப்பட்ட எட்டுத்திதிகளும் சுபகாரமானதனறென நீக்குக. சுபகாரமெனச் சொல்லப்பட்ட துதியை திருதியை சதுர்த்தி பஞ்சமி ஸப்தமி தசமி திரயோதசியாகச் சொல்லப்பட்டவைகளில் பஞ்சமி தசமியர்த்தத்தில் இரண்டுகாழிகை நீக்குக. அபரபக்கப் பிரதமையை என்றென விதிப்பாருமுளர்.

Page 45

திதித்திரயம்.

தினமொன்றில் மூன்றுதிதி வருநாளுந் தேவர்கடம் மனமொன் றிடுந்திரு நாட்க ளதனிலு மிசைந்தொரில்லில் வினவுங் கருமம் மிரண்டொரு நாளில் விதிக்கவிதி யுனமுயிற் சாயல்கண் ளாய்புக லாதெனப் போற்றினரே.

ஒருதிதிநின்ற வருதிதிகூடி வருதிதிமுடிந்து மறுதிதியும் ஒருநாளிற் கூடுமெனில் திதித்திரயமென அந்நாள் சுபகருமங்களுக்கு விலக்கெனவறிக.

மேலும் தாம் வசிக்கின்ற கிராமஆலயங்களில் உற்சவாதி சிறப்புகள் நடக்கும்பட்சமும் ஒருவீட்டில் இரண்டு சுபகர்மம் ஒருநாளிற் செய்தற்கும் விதியாமையாமென்பதை உணர்தல்.

வெள்ளிவெண் மழைகுருளு வளிபூமி விண்ணதிர்தல் கொள்ளி யெரிவிழல் கோட்பரி வேடிக்க லோரியிடல் வள்ளிய தாகு விளளெரி மாதிரத் துற்ற லுண்டல் ஒள்ளிய காரிய மேழ்தினத் துக்கு ளுரைப்பிலரே.

இ-ள்: கார்வானமன்றி வெண்மழைபெய்தாலும் மழையின்றி இடியடித்தாலும் சூறாவளிக்காற்று அடித்தாலும் பூமிநடுங்கினும் எரிகொள்ளிவிடினும் கிரகங்களைப்பரிவேடம்கிடினும் பலவிடத்திலோரிகூளறினும் காரணமின்றிப்பழையமரங்கள் விழுந்தாலும் திக்குகளெரிந்து புகையெழும்பினும் உற்பாதமென்று சொல்லுவர். இவைகளுள் ஏழுதினம் நிஷேகம் விவாகம் முதலிய சுபகர்மங்கள் செய்யாது விலக்கவேண்டியதாம்.

மன்ன ரமைச்சர் புரோகிதர் வண்ணமயர்வான் கணிதர் பன்னெறி நூலோர் பிடர்நூல் வேள்விப் பயன்முடிப்போர் தன்னக ராதிபர் தத்துவ ஞானிகள் தான்மரித்தால் பொன்னை னேழ்தினம் நல்வினை செய்யப் புகன்றிலரே.

இவைகளிலும் ஏழுதினம் சுபகருமவிலக்கு என்பதாம்.

இருதுவா மாதப் பிறப்பினினில் மகத்தி லெழுஞாயி றதனிற்றூகி, சார்தருநாளி லாதிரை யெனுங்காட் சந்திரன் பிறந்தரா சிகளுக்கு, ஒரையா ரொட்டிற் புகுதுநாள் வியாதி பாதநாள் விசுதமாகுவந்தி, போதரு பிதுருக் கூட்டுகாட் புணரின் வயதும் வறுமைகோர் பிடிக்கும்.

இ-ள்: இருதுப்பிறப்பு மாதப்பிறப்பாகிய சங்கிராந்திகளிலும் மகர்திருவாதிரையிற் சூரியன் நடக்குங்காலமும் தாம் தாம் பிறந்த சென்மராசி யதாவது சந்திரலக்கினத்துக்கு எட்டாமிநாசமில் சந்திரன் நடப்பதானகாலமும் சென்மநட்சத்திரத்துக்கு இருபத்தேழாம் நட்சத்திரநாளும் விரததினமும் பிதிர்த்திதிசெய்ததினமும் பெண்ணைக்கூடினால் பிணி தரித்திரம் மிருத்துவுமாகும் இவைதோன்றும்.

யோகநாமங்களாவன.

  1. விஷ்கம்பம்
  2. பிரீதி
  3. ஆயுஷ்மான்
  4. சௌபாக்கியம்
  5. சோபனம்
  6. அதிகண்டம்
  7. சுகர்மம்
  8. திருதி
  9. சூலம்
  10. கண்டம்
  11. விருத்தி
  12. துருவம்
  13. வியாகாதம்
  14. அர்ஷணம்
  15. வச்சிரம்
  16. சித்தி
  17. வியதிபாதம்
  18. வரியான்
  19. பரிகம்
  20. சிவம்
  21. சித்தம்
  22. சாத்தியம்
  23. சுபம்
  24. சுப்பிரம்
  25. பிராமம்
  26. ஐந்திரம்
  27. வைதிருதி.

இச் சொல்லப்பட்ட இருபத்தேழு யோகங்களுள் விஷ்கம்பம் அதிகண்டம் சூலம் கண்டம் வியாகாதம் வியதிபாதம் வச்சிரம் பரிகம் வைதிருதி என்றஒன்பதும் சுபகர்மல்லாத யோகமென்றும், ஏனைய பிரீதி ஆயுஷ்மான் சௌபாக்கியம் சோபனம் சுகர்மம் திருதி விருத்தி துருவம் அர்ஷிணம் சித்தி வரியான் சிவம் சித்தம் சாத்தியம் சுபம் சுப்பிரம் பிரமம் ஐந்திரருதியாகச் சொல்லப்பட்ட பதினெட்டும் சுபகரமான யோகமென்பதையுமறிக.

கரணசுபாவம்.

  1. பவம் - சிங்கம்.
  2. பாலவம் - புலி.
  3. கௌலவம் - பன்றி.
  4. தைதிலம் - கழுதை.
  5. கரசம் - யானை.
  6. வணிசம் - எருது.
  7. பத்திரை - கோழி.
  8. சகுனம் - காக்கை.
  9. சதுஷ்பாதம் - நாய்.
  10. நாகவம் - பாம்பு.
  11. கிம்ஸ்துக்கினம் - புழு. கரணம் பதினொன்றாம்.

இவை ஒருதிதிநிற்கும் முழுநாழிகையின் முற்பாதி ஒருகரணமாயும் பிற்பாதி ஒருகரணமாயும் பூர்வபக்ஷம் அபரபக்ஷமிரண்டிலும் விகற்பமாய் ஒரேதன்மையின்றி வரும்.

பூர்வபக்ஷத்து.

திதி.

  1. பிரதமை - கிம்ஸ்துக்கினம், பவம்
  2. துதியை - பாலவம், கௌலவம்
  3. திருதியை - தைதிலம், கரசம்
  4. சதுர்த்தி - வணிசம், பத்திரை
  5. பஞ்சமி - பவம், பாலவம்
  6. ஷஷ்டி - கௌலவம், தைதிலம்
  7. ஸப்தமி - கரசம், வணிசம்
  8. அஷ்டமி - பத்திரை, பவம்

Page 46

சந்தானமணி. எசு

அபரபக்ஷத்து.

பிரதமை - அஷ்டமி துதியை - நவமி திருதியை - தசமி சதுர்த்தி - ஏகாதசி பஞ்சமி - துவாதசி ஷஷ்டி - திரயோதசி ஸப்தமி - சதுர்த்தசி அமாவாசை

பல்லவம் - கௌலவம் தைதிலம் - கரசம் வணிசம் - பத்திரா பவம் - பாலவம். கௌலவம் - தைதிலம் கரசம் - வணிசம் பத்திரை - சகுனம் சதுஷ்பாதம் - நாகவம்

கர்ப்பாதானத்துக்குக் கூடாதென விலக்கிய திதியை ஒட்டியவருங் கரணங்களும் சுபகாரியமல்லவென்பதாம். ஆகமையால் அந்தத்திதிகளை விலக்கி ஏனைய திதியும் திதியோடுசம்பந்தமான கரணங்களும் சுபகரமான தெனவறிக.

கரிநாள். சித்திரை 6-ந் திகதி. | ஆவணி 2-9-28-ந் திகதி. | மார்கழி 6-9-11 வைகாசி 7-16-17 ,, | புரட்டாதி 16-29 ,, | தை 1-2-3-11-17 ஆனி 1-6 ,, | ஐப்பசி 6 ,, | மாசி 15-16-17 ஆடி 2-10-20 ,, | கார்த்திகை 1-10-17ம் முதற்சோமவாரம். | பங்குனி 6-15-19. வருஷமொன்றின் கரிநாள் 31.

இந்நாட்களில் சுபகாரியம் செய்தல் தகாது.

நட்சத்திரசுபாகபம்.

  1. அச்சுவினி
  2. பரணி
  3. கார்த்திகை
  4. ரோகிணி
  5. மிருகசீரிடம்
  6. திருவாதிரை
  7. புனர்பூசம்
  8. பூசம்
  9. ஆயில்யம்
  10. மகம்
  11. பூரம்
  12. உத்தரம்
  13. அத்தம்
  14. சித்திரை
  15. சோதி
  16. விசாகம்
  17. அனுஷம்
  18. கேட்டை
  19. மூலம்
  20. பூராடம்
  21. உத்தராடம்
  22. திருவோணம்
  23. அவிட்டம்
  24. சதயம்
  25. பூரட்டாதி
  26. உத்திரட்டாதி
  27. ரேவதி.

ஒருநட்சத்திரம் நான்குபாதம் இருபத்தேழுநட்சத்திரமும் 108 பாதமல்லது கால்களாகும். அச்சுவினி முதலாங்கால்முதல் ஒன்பதொன்பது கால்கள் மேடமுதவ் மீனீறாக லனமாய் ரேவதிமுடியப் பன்னிரண்டு ராசிக்குமடைந்த நட்சத்திரமும் பாதங்களுமாம். இந்நீதியாகவேயவ்வத் தினத்தில் என்னாட்சத்திரமெத்தனையாம் பாதமென்றதைப் பஞ்சாங்க மூலமாயறிந்து சந்திரன் நிற்கும் இராசியைக் குறிப்பிடலேயென்பது.

காலற்றா னுடலற்றான் றலையற்றான் றாட்காள் மாலைக்குறி மடவார்தமைக் கூடின் மகடாவார் மாலுக்கொரு மனைமாளிகை கோலீளது பாழாம் ஞாலத்தினில் வழிபோகினும் நலமெய்திடா ரவமே.

சந்தானமணி. எஎ

இந்த இருபத்தேழுநக்ஷத்திரங்களிலுங் கர்ப்பாதானத்துக்கு:-

  1. அச்சுவினி
  2. ரோகிணி
  3. மிருகசீரிடம்
  4. புனர்பூசம்
  5. பூசம்.
  6. உத்தரம்
  7. அத்தம்
  8. அனுடம்
  9. மூலம்
  10. உத்தராடம்
  11. திருவோணம் 12 அவிட்டம்
  12. சதயம்
  13. உத்திரட்டாதி
  14. ரேவதி.

ஆகச்சொல்லப்பட்ட பதினைந்து நட்சத்திரங்களும் விசேஷ சுப நட்சத்திரங்களெனவும், சித்திரை சோதியையும் விசேஷ சுபகாரியெனச் சில கிரந்தகர்த்தாக்களாலங்கீகரிக்கப்பட்டிருப்பதும், சித்திரை சோதி நட்சத்திரங்கள் விவாகமுகூர்த்த சுபானாகக்கொள்ளப்பட்டிருப்பதால் கர்ப்பாதானத்துக்கு விதித்த நட்சத்திரம் பதினேழென்பதாம்.

மேலே சொல்லப்படாத பரணி, கார்த்திகை, திருவாதிரை, ஆயில்யம், மகம், பூரம் பூராடம், பூரட்டாதி, விசாகம், கேட்டை இந்தப்பத்து நட்சத்திரங்களும் அசுபநட்சத்திரமென்று விலக்கற்பாலன. அன்றி,

காலற்ற நட்சத்திரங்கள் - கார்த்திகை, உத்தரம், உத்தராடம் உடலற்ற நாட்கள் - மிருகசீரிடம், சித்திரை அவிட்டம் தலையற்ற நட்சத்திரங்கள் - புனர்பூசம் விசாகம் பூரட்டாதி.

அதாவது: காலற்ற நாளென்பது கார்த்திகை, உத்தரம், உத்தராடங்கள். முதற்பாதத்தை மேடசிங்கதனுவுக்கும், பின்முப்பாதத்தை இடபகன்னிமகரத்துக்குரியதாகையாலும், உடலற்ற நாளென்பது, மிருகசீரிடம் சித்திரை அவிட்டம் முதலிருபாதங்களை இடபம் கன்னி மகரத்துக்கும் பின்னிருபாதங்களை மிதுனதுலாமும்பவிராசிகுரியதாகையாலும், தலையற்ற நாளென்பது. புனர்பூசம் விசாகம் பூரட்டாதிமுன்மூன்று பாதத்தை மிதுன துலாகும்பத்துக்கும் பின்கான்காம்பாதத்தை கர்க்கடக விருச்சிக மீனத்துக்குரியதாய சேர்நதைமயாலேயாம்.

இங்ஙனமாவதால் கார்த்திகை உத்தராம் உத்தராடத்து முதற்பாதமும் மிருசீரிடம் சித்திரை அவிட்டத்துப் பின்னிருபாதமும் புனர்பூசம் விசாகம் பூரட்டாதியில் நான்காம்பாதமும் நீக்கில் மேற்கூறிய தோஷம் நிவாரண மாகுவதாம்.

(இ-ம்): நட்சத்திரகண்டாந்தகாலம் விஷகடிகாகாலம் இவைகளையும் மேற்கூறியபடி யனித்தரியவேண்டியது. 12

Page 47

ஆடியும் பிரதமை தானு மனிலமுஞ் சிறந்த வைத்தும் பாடுரோ கிணியும் பத்தும் பன்னிரண் டத்த நாளும் நீடுமுத் திரம்பன் மூன்று நிகழ்கடைப் பூர மெட்டும் நாடிய நஞ்சு யோகம் நாகரே யெனினுந் தீதே.

உத்தராடமும் பிரதமையும் சோதியும் பஞ்சமியும் ரோகிணியுந் தசமியும் அத்தமும் துவாதசியும் உத்திரமும் திரயோதசியும் பூரட்டாதியும் அட்டமியும் சேர்ந்துவரின் நஞ்சு யோகம் ஈது சுபகர்மவிலக்காகும்.

நட்சத்திரங்கள். | கண்டாந்த பாதம். | விஷகடிகை ஆரம்பமுடிவு. நாழி. நாழி. | கண்டாந்த நாழிகை. | கண்டாந்த மத்தியம். அச்சுவினி | 1-ம் பாதம் | 50-54 | ஆரம்பம் 4 | மத். நாழி. 8 பரணி | | 24-28 | | கார்த்திகை | | 30-34 | | ரோகிணி | | 40-44 | | மிருகசீரிடம் | | 14-18 | | திருவாதிரை | | 21-25 | | மத். நாழி. 8 புனர்பூசம் | | 30-34 | | பூசம் | | 20-24 | | ஆயிலியம் | 4-ம் பாதம் | 32-36 | ஈற்றில் 4 | மகம் | 1-ம் பாதம் | 30-34 | ஆரம்பம் 4 | மத். நாழி. 8 பூரம் | | 20-24 | | உத்திரம் | | 18-22 | | அத்தம் | | 21-25 | | சித்திரை | | 20-24 | | சோதி | | 14-18 | | விசாகம் | | 14-18 | | அனுடம் | | 10-14 | | கேட்டை | 4-ம் பாதம் | 14-18 | ஈற்றில் 4 | மத். நாழி. 8 மூலம் | 1-ம் பாதம் | 56-60 | ஆரம்பம் 4 | மத். நாழி. 8 பூராடம் | | 24-28 | | உத்தராடம் | | 20-24 | | திருவோணம் | | 10-14 | | அவிட்டம் | | 10-14 | | சதயம் | | 18-22 | | பூரட்டாதி | | 16-20 | | உத்தரட்டாதி | | 24-28 | | ரேவதி | 4-ம் பாதம் | 30-34 | ஈற்றில் 4 | மத். நாழி. 8

நாசயோகம்.

இங்கே கண்டாந்தம் விஷகடிகாகாலம் சுபகரும விலக்காகும். அச்சுவினி திருவாதிரை மகம் கேட்டை மூலம் ரேவதி இவ்வாருகட்சத்திரங்கள் மத்தியகாலத்தில் எட்டெட்டுநாழிகை கண்டாந்தமாகும். சொல்லப்பட்ட நட்சத்திர ஆரம்பநாழிகை முதல் முடிவுபெறுநாழிகையையுங் கண்டபரமாநாழிகையை இருகூறாக்கி முற்கூற்றிற் பின் நாலுநாழிகை பிற்கூற்றில் முன் நாலுநாழிகை எட்டுநாழிகையெனக் கண்டுகொள்க.

நாசயோகம். வாரம். திதி. நட்சத்திரம். ஞாயிற்றுக்கிழமையில் பஞ்சமியும் கார்த்திகையும் திங்கட்கிழமையில் துதியையும் சித்திரையும் செவ்வாய்க்கிழமையில் பூரணையும் ரோகிணியும் புதன்கிழமையில் ஸப்தமியும் பரணியும் வியாழக்கிழமையில் திரயோதசியும் அனுஷமும் வெள்ளிக்கிழமையில் ஷஷ்டியும் திருவோணமும் சனிக்கிழமையில் அட்டமியும் ரேவதியும்

மேற்கூறியபிரகாரம் வாரந் திதி நட்சத்திரம் சேர்ந்துவரின் நாசயோகம். இந்நாட்கள் சுபகருமவிலக்கு.

ஞாயிற்றுக்கிழமையும் விசாகநட்சத்திரமும் திங்கட்கிழமையும் சதயநட்சத்திரமும் செவ்வாய்க்கிழமையும் அவிட்டமும் புதன்கிழமையும் ரேவதியும் வியாழக்கிழமையும் ரோகிணியும் வெள்ளிக்கிழமையும் பூசமும் சனிக்கிழமையும் உத்திரமும் வரின் நாசயோகம் சுபகருமவிலக்கு.

கிழமைபிறந்த நட்சத்திரம். ஞாயிற்றுக்கிழமையும் பரணியும் திங்கட்கிழமையும் சித்திரையும் செவ்வாய்க்கிழமையும் உத்தராடமும் புதன்கிழமையும் அவிட்டமும் வியாழக்கிழமையும் கேட்டையும் வெள்ளிக்கிழமையும் பூராடமும் சனிக்கிழமையும் ரேவதியும் வருவன.

Page 48

இவ்விதம் வாரநட்சத்திரம் பொருந்திவரின் அந்தநாளும் சுபகருமவிலக்கு. அவ்வாட்கிழமையிற் சொல்லப்பட்ட நட்சத்திரம்நின்று முடிந்து மற்றைய நட்சத்திரங்கூடின் அதன்மேற் சுபகருமஞ் செய்யப்பொருந்தினால் செய்யலாம்.

மாததினம்.

கார்த்திகைக் கார்த்திகை யாகி யிரண்டுங் கருத்தடைவே பார்த்திடில் மாத தினம்புரட் டாதி பகர்துலைசால் சேர்த்திடு மூன்று தினமிவற் றிற்செழு மங்கலங்கள் நீத்தன பூரண மாமதி தானும் நிகழ்ந்தினரே.

கார்த்திகைமாதத்தில் கார்த்திகை, ரோகிணி மார்கழிமாதத்தில் மிருகசீரிடம், திருவாதிரை தைமாதத்தில் புனர்பூசம், பூசம் மாசிமாதத்தில் ஆயில்யம், மகம், பூரம் பங்குனிமாதத்தில் உத்தரம், அத்தம் சித்திரைமாதத்தில் சித்திரை, சோதி வைகாசிமாதத்தில் விசாகம், அனுடம் ஆனிமாதத்தில் கேட்டை, மூலம் ஆடிமாதத்தில் பூராடம், உத்திராடம் ஆவணிமாதத்தில் திருவோணம், அவிட்டம் புரட்டாசிமாதத்தில் சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி ஐப்பசிமாதத்தில் ரேவதி, அச்சுவினி, பரணி வருவன மாததினமெனப்படும்.

கார்த்திகைமுதல் ஐப்பசியீரான பன்னிரண்டு மாதங்களில் அவ்வம்மாதங்களுக்குச் சொல்லப்பட்ட நட்சத்திரங்களைச் சுபகாரியவிஷயமாய் அந்தந்தமாதங்களில் கொள்ளக்கூடாதென்பதாம்.

வருநாளினந்தத்திற்கன்னலிரண்டுவருந்திதிக்குந் தருநாழிகைமூன்றுசாவணநட்சத்திரசெளரங் குருசாந்திரமென்றுமானமதிகூறுமவற்றிாட்டி யொருநாள்ளாண்டு மூன்றிரண்டாறுமுறுகென்பரே.

இ-ள்: நட்சத்திர ஆரம்பத்திலும் முடிவிலும் இரண்டுநாழிகை சுபகர்மவிலக்கு திதியாரம்பமுடிவில் மூன்றுநாழிகை சுபகர்மவிலக்கு. சாவண ஆண்டின்முடிவில் ஒருநாட் சுபகர்மவிலக்கு. சாந்திரஆண்டுமுடிவில் ஆறுநாட் சுபகர்மவிலக்குச் சௌரமான ஆண்டுமுடிவில் 12 நாட் சுபகர்ம விலக்கென்பதாம்.

கோழத்தமத்தினில் மூன்றுதிங்கட்கு குற்றமுண்டாம் வாளொத்த கண்ணாய்வலிந்துசெருச்செய்காள்வக்கிரநாள் ஆளப்படுமறுதிங்களவற்றிற்புகர்வரினும் மீளப்புகருடன்வெண்டிங்கள்சேரின்மிகவுநன்றே.

இ-ள்: கிரகங்கள்அஸ்தமயமாய் நிற்கும் நட்சத்திரம் மூன்று மாதத்துக்குச் சுபகர்மவிஷயமாய் விலக்கப்படவேண்டும். கிரகங்கள் வக்கிரித்தநட்சத்திரம் 6மாதத்துக்குச் சுபகர்மத்துக்குநீக்கவேண்டியது. மேலேகூறிய நட்சத்திரங்கள் சந்திரன் வெள்ளி இடபதுலாத்தில் இருக்குங்கால் தோஷநீக்கம், சுபகர்மம் செய்யலாமென்பதாம்.

குருவும்புகருங்கதிருடனத்தமக்கூடியநாட் கருதுங்கடியனம்பூல்வினைசௌளங்கலவியுடன் மருவும்விரதநல்வேள்வியேயாத்திரைவாத்துவிடல் சுரர்நம்பிரதிட்டைகூடிபுகலாகாதென்றாய்நகையே.

உத்தராயண பூர்வபக்ஷம் உத்தமம். தக்ஷிணாயன அபரபக்ஷம் மத்திமம்.

கர்ப்பாதானத்துக்கு நாள்.

திருவோணமத்தம்பனைதொழுச்சோதிசெக்குத்திரங்க ளூருண்மூலமுத்தமஞ்சித்திரைமான்றலைபாழ்கிட்டங் குருநாட்கிழமைத்திமங்குற்றமற்றதிகிளீர்யாழ் கருமீன் நுலைவிடைவில்லரிபெண்ணிற்கருப்பெய்கவே.

இ-ள்: திருவோணமத்தம் அனுடம் ரேவதி சோதி சதயம் உத்தராடமுத்தாரட்டாதி ரோகிணி மூலம் இவைஉத்தமம். சித்திரை மிருகசீரிடம் அச்சுவினி அவிட்டம் புனர்பூசம் பூசம் இவைமத்திமம். பக்கச்சித்திரையொழிந்த திதிகளுத்தமம். கர்க்கடகம் மிதுனம் மீனந் துலாம் இடபம் தனு சிங்கம் கன்னி இவைபதயமுகூர்த்தமாகக் கர்ப்பாதானம் பண்ணலாம்.

அல்லாதவோர்மைனத்தம்பகலுந்தவிரப்படும் சொல்லாருதயத்துமெட்டிலுங்கோணிற்பிற்றோகைகல்லாய் பொல்லாதவாரமுமூவர்வும்புகன்றிலாரதானத்திற் செல்லாவிதானமுமித்தாரணியிலிசைத்தவரே.

Page 49

சந்தானமணி

இ-ள்: மேற்கூறியவிராசிகளல்லாத ஏனையஇராசிகளும் பகலுந் தவிரப்படும். உதய்முகூட்டாயிடமும் சுத்தம். ஞாயிற்றுக்கிழமை செவ்வாய்க்கிழமை சனிக்கிழமைஇரவு தவிரப்படும். அமாவாசை பூரணையொழிந்தநாட்களிற் கர்ப்பதாரணம் பண்ணப்படும்.

அச்சுவினிமுதல் ரேவதியீறான இருபத்தேழு நட்சத்திரங்களுள் தனித்தனி ஜென்மநட்சத்திரத்துக்குத் தோஷநட்சத்திரமென விலக்கப்பட்ட நட்சத்திரங்களையும் சுபகரமெனக்கொள்ளப்பட்ட நட்சத்திரங்களையும் எவருமிலகுவிலறியுமாறிதன்பின் நூல்கூறுதும்.

சந்தானமணி

மயிர்வினைகல்விமணவினைபோக்குமருந்தருந்தல் உயர்வுறுநூல்வினையுண்டிசீமந்தம்சிராத்தமிலை இயல்புறத்தீதென்பர்சென்மங்களியம்பாதவையும் நியதியுங்கான்றெனவோதினர்கீர்த்திநிலீரணையே.

சந்தானமணி

மூன்றைந்தேழ்நான்முதலோன்பதிற்றீதாதிநான்குமூன்று மேன்றவிக்கானிடையொன்பதிற்றீதின்பமென்பதல்லா தான்றமதியட்டமத்தினென்பத்தெட்டாயகாலில் தோன்றியவைநாசிகங்கழித்தார்புகழாளென்பரே.

ஏழைந்துமூன்றுடன் சென்மங்களெட்டாயவோரையிற்குந் தாளுந்தினங்கள்செனனமுன்னாள் தகாவாசிகமும் சூழ்கின்றபன்னிரண்டோடுசுபமல்லமூன்றுஞ்சொல்லி ஆள்கின்றகாலீத்தமத்திடமத்தமல்லவையே.

இ-ள்: எந்தநட்சத்திரத்தில் பிறந்தவருக்கும் அந்தநட்சத்திரம் ஜென்மநட்சத்திரமென்றும் பத்தாம் நட்சத்திரம் கர்மநட்சத்திரமென்றும் பத்தொன்பதாம் நட்சத்திரம் சாங்காதிகமென்றும் பன்னிரண்டு பதினாண்காம் நட்சத்திரம் சாமுதாயகமென்றும் சென்மநட்சத்திரத்துக்கு எண்பத்தெட்டாயபாதத்தைக்கொண்ட இருபத்திரண்டாவது இருபத்து மூன்றாம் நட்சத்திரம் வைநாசிகம் என்றும் மூன்றைந்தேழொன்பதாம் நட்சத்திரம் நைதனமென்றும் பதினாறாம் நட்சத்திரம் 4-ம் பாதம் கிலஞானபாதமென்றும் இருபத்தைந்தாம் நட்சத்திரம் மானசமென்றும் சாதகசந்திரலக்கினத்துக்கு எட்டாம் இராசிக்குரிய நட்சத்திரமிரண்டேகாலும் அட்டமஇராசிகளென்றும் ஜென்மநட்சத்திரத்துக்கு 27 ம் நட்சத்திரம் பாதாளனென்றும் இந்தசமிஞ்ஞைகளுடைய நட்சத்திரங்கள் நிஷேகமுதலிய எவ்விதசுபகருமங்களுக்கும் விலக்கப்படுவனவாகும்.

சென்மநட்சத்திரத்துக்கு மூன்றாங்கட்சத்திரத்தின் முதற்பாகமும், ஐந்தாம்நட்சத்திரத்து நான்காம்பாதமும், ஏழாம்நட்சத்திரத்தின் மூன்றாம்பாதமும், பதினாறாம்நட்சத்திரத்தின் நான்காம்பாதமும் நீக்கி, மற்றையபாதங்களில் சுபநட்சத்திரமாயந்தது ஆதானத்துக்குரியவையாய்வரும் நட்சத்திரங்களை அவசியபக்ஷத்தனுசரிக்கலாமெனக் கூறும்.

சந்தானமணி

கற்பநாள் மூன்றிலெண்ணைக்கடிமணஞ்சிசாதம்போக்கு வற்புறுபிணிமருந்துமயிர்வினைமருவலாகா இற்புகவுழவிதைக்கஇனிதுண்ணஅறங்கள்செய்ய பொற்பணிமகுடமாடபுனைபலாம்புவீன்மாதே.

என்றபடி செய்யாதொழிவனவும் செய்வனவுமாகும்.

சந்தானமணி

மூன்றைந்துமேழும்முதற்சென்மர்த்தி திவைகல்லகோ ளுன்றியெழுமதிநற்கதிகேளீடிருந்தமமாம் தோன்றியவோரையும்பத்தாயவோரையும் தூயநட்பேல் சான்றவர்வைநாசிகங்களியாதென்சாற்றினரே.

இ-ள்: சென்மநட்சத்திரம் மூன்றாம்நட்சத்திர மைந்தாம்நட்சத்திரம் ஏழாம்நட்சத்திரமாக விதிக்கப்படாதநட்சத்திரங்கள் வந்தபொழுதும் சந்திரன் பூரணசந்திரனாய் சுபாவசுபரோடுகூடி யல்லது பார்வைபெற்று உச்சாட்சியோரை சுபாம்சனாய் நீரின் இத்தோஷம் நிவாரணம். மூன்றைந்தேழாம் நட்சத்திரமும் சுபகருத்துக்கு விதித்தன்வாகும். அன்றி எண்பத்தெட்டாம் பாதமான வைநாசிகங்கிடந்தவிராசி பத்தாமிராசியாய் ஜென்மராசிக்குடைய கிரகம் பத்தாம்வீட்டுக்கிரகமும் சுபாவமித்திரராயிருப்பின் வைநாசிகதோஷநிவாரணம். இவற்றைப் பார்த்தறிக.

சந்தானமணி

ஒத்தஉதயத்துக்கட்டமராசியுடையவர்கள் மித்திரராகில்மிகவுங்கூரும்வெம்மதிக்கியிவ்விதம் மித்திரமாகுமிசைந்தவாறெட்டுஞ்சிவ்வகையே வைத்துரைசெய்தனர்வண்டார்குழல்வரிவளையையே.

இ-ள்: எவரேனும் ஜென்மமாயிலக்கினத்துக்கு எட்டாம் ஆறும் வீட்டுக்குரிய கிரகமும் இலக்கினத்துக்குடையவனும் சுபாவமித்திரராய் அல்லது சாதகமித்திரராய் இருப்பினும் அன்றி சந்திரவிராசிக்கு ஆறெட்டாம் இராசிகளுடையவனும் சந்திரலக்கினத்துக்குரிய கிரகமும் சுபாவமித்திரராய் சாதகமயித்திரராயிருப்பினும் அட்டமசட்டமதோஷ பரிகாரமாகும். அந்த நட்சத்திரங்களும் விதித்தனவாம்.

Page 50

சந்தானமணி

கிரகநட்பு சமம் பகை.

ரட்பு. சமம். பகை. சூரியன் சந்-செவ்-வியா புதன் வெள்-சனி சந்திரன் சூரிய-புதன் செவ்-வியா-வெ-சனி - செவ்வாய் சூரி-சந்-வியா வெள்-சனி புதன் புதன் சூரி-வெள்ளி செவ்-வியா-சனி சந்திரன் வியாழன் சூரி-சந்-செவ் சனி புதன்-வெ வெள்ளி புதன்-சனி செவ்-வியா சூரி-சந் சனி புதன்-வெள்ளி வியாழன் சூரி-சந்-செ

சந்தானமணி

ஓதியசித்தம்சுபமமுதமவ்வாழ்முதமமாங் கேதில்நல்யோகம்வரில்முன்புகூறிகுற்றமெல்லாம் தீதில்பெரும்புகட்டேன்கிவைப்பதிசென்றடைந்த ஏதில்நல்குரவாமெணநீங்குமென்றேந்திழையே.

வளருமதியும்கற்பக்க மும்வாரத்துன்னாவையுங் களவில்கரணமுமாநல்காட்களிரங்கால்காலு முளநல்லயோகமுமொன்றியபஞ்சாங்கமொள்ளிமையாய் அளவின் நன்மைமிக்காயிரங்குற்றமகற்றிடுமே.

1

அச்சுவினிநட்சத்திரஜென்னம்

அச்சுவினி மகம் மூலம் கற்பநாள்.

மூன்றாங்காட் கார்த்திகை. 5-ந் தாள்நாள் மிருகசீரிடம். ஏழாம்நாள் புனர்பூசம். அச்சுவினி முதற்பாதத்திற் பிறந்தால் வைநாசிகம். திருவோணம் 2-ம் 3-ம் 4-ம் காலிற்பிறந்தால் வைநாசிகநட்சத்திரமவிட்டம். பன்னிரண்டாம்நாள் உத்தரம். பதினான்காம் நாள் சித்திரை. பதினாறாம் நாள் விசாகம். அட்டமஇராசிகாள் விசாகம் அனுடம் கேட்டை. 21-ம் நாள் உத்தராடம். 23-ம் நாள் அவிட்டம். 25-ம் நாள் பூரட்டாதி. பரதநாள் ரேவதி. சொல்லப்பட்ட 16 நட்சத்திரமும் சுபகரமல்லவெனவிலக்கி மிருகசீரிடத்துப் பின்னரையையும் புனர்பூசத்து மூன்றாம்பாதத்தையும் விலக்கி ரோகிணி மிருகசீரிடம் புனர்பூசம் பூசம் அத்தம் சோதி சதயம் உத்திரட்டாதி இந்தாட்சத்திரங்களால்மாதான அதாவது கர்ப்பாதான சுபநட்சத்திரமாகும். அன்றியே னைய சுபகருமங்களுக்கும் சிறந்ததென்ப. மேற்கூறிய அபவாதங்களுக்கியையின் நிஷேகத்துக்குக்கூறிய ஏனையநட்சத்திரங்களையும் யோசித்துக்கொள்ளலாம்.

2

பரணிநட்சத்திரஜென்னம்

பரணி பூரம் பூராடங் கற்பநாள்.

3-ம் நாள் ரோகிணி. 5-ம் நாள் திருவாதிரை. 7-ம் நாள் பூசம். 12-ம் நாள் அத்தம். 14-ம் நாள் சோதி. 16-ம் நாள் அனுடம். 21-ம் நாள் திருவோணம். பரணி முதலாம்பாகத்திற்பிறந்தால் வைநாசிகம் அவிட்டம் 2-ம் 3-ம் 4-ம் பாதத்தில் பிறந்தால் வைநாசிகம் சதயம். 25-ம் நாள் உத்திரட்டாதி. அட்டமராசிகாள் விசாகத்துக்காலும் அனுடமும் கேட்டையும். 27-ம்நாள் அச்சுவினி. ஆகச்சொல்லப்பட்ட 16 நட்சத்திரமும் விலக்காம். ஏனைய மிருகசீரிடம் புனர்பூசம் உத்தரம் சித்திரை மூலம் உத்தராடம் அவிட்டமன்றிச் சதயம் ரேவதி ஆக எட்டுகட்சத்திரமுங் கொள்ளற்பாலனவாகும்.

3

கார்த்திகை நட்சத்திர ஜென்னம்

கார்த்திகை உத்தராமுத்தராடங்கற்பநாள்.

3-ம்நாள் மிருகசீரிடம். 5-ம்நாள் புனர்பூசம். 7-ம்நாள் ஆயில்யம். 12-ம்நாள் சித்திரை. 14-ம்நாள் விசாகம். 16-ம்நாள் கேட்டை. 21-ம்நாள் அவிட்டம். கார்த்திகைமுதற்பாதத்தில் பிறந்தால் வைநாசிகம் சதயம். 2-ம் 3-ம் 4-ம் பாதத்திற்பிறந்தால் வைநாசிகம் பூரட்டாதி. முதலாம்பாதத்தில் பிறப்பின் அட்டமராசிகாள் விசாகத்துக்காலும் அனுடமும் கேட்டை யும். 2-ம் 3-ம் 4-ம் பாதமெனில் அட்டமராசிகாள் மூலமும் பூராடமும் உத்தராடத்துக்காலும். 27-ம்நாள் பரணி. 25-ம்நாள் ரேவதி. ஆகச்சொல்லப்பட்ட 16நட்சத்திரங்களும் விலக்காகும். ஏனைய ரோகிணி பூசம் அத்தம் சோதி அனுடம் (மூலம் உத்தராடமுதற்பாதமிவை) ஜென்மநட்சத்திரபாதத்தைக்கண்டுகொள்ளுக. திருவோணம் அவிட்டம் உத்திரட்டாதி என்ற நட்சத்திரங்கள் சுபகமானவையாமெனக் காண்க.

4

ரோகிணி நட்சத்திர ஜென்னம்

ரோகிணி அத்தம் திருவோணங்கற்பநாள்.

3-ம்நாள் திருவாதிரை. 5-ம்நாள் பூசம். 7-ம்நாள் மகம். 12-ம்நாள் சோதி. 14-ம்நாள் அனுடம். 16-ம்நாள் மூலம். 21-ம்நாள் சதயம். ரோகிணிமுதற்பாதத்தில் பிறந்தால் வைநாசிகம் பூரட்டாதி. 2-ம் 3-ம் 4-ம் பாதத்தில் ஜெனனமெனின் வைநாசிகம் உத்திரட்டாதி. 25-ம் நாள் அச்சுவினி. 27-ம்நாள் கார்த்திகை. அட்டமராசிகாள் மூலம் பூராடம் உத்தராடத்துக்கால் ஆகச்சொல்லப்பட்ட பதினாறுநட்சத்திரமும் விலக்காகும். ஏனைய மிருகசீரிடம் புனர்பூசம் உத்தரம் சித்திரை ரேவதி என்றநட்சத்திரங்கள் சுபகரமாம். நிஷேகத்துக்குச்சொல்லப்பட்ட ஏனையநட்சத்திரங்களை மேற்கூறியபடியபவாதமுண்டாயிற் கொள்ளலாம்.

Page 51

5

மிருகசீரிட நட்சத்திர ஜெனனம்

மிருகசீரிடம் சித்திரை அவிட்டங் கம்பநாள்.

3ம் நாள் புனர்பூசம். 5ம் நாள் ஆயில்யம். 7ம் நாள் பூரம். 12ம் நாள் விசாகம். 14ம் நாள் கேட்டை. 16ம் நாள் பூராடம். 21ம் நாள் பூரட்டாதி. மிருகசீரிடம் முதற்பாதத்தில் ஜெனனமெனின் வைநாசிகம் உத்திரட்டாதி. 2ம் 3ம் 4ம் பாதத்திற்பிறந்தால் வைநாசிகம் ரேவதி. 25ம் நாள் பரணி. 27ம் நாள் ரோகிணி. அட்டம ராசிகாள் மிருகசீரிடம் முன்னரையிற் ஜெனனம் மூலம் பூராடம் உத்தராடத்துக்கால், மிருகசீரிடத்துப் பின்னரையெனில் உத்தராடத்து முக்காலும் திருவோணமும் அவிட்டத்து முன்னரையும் அட்டமஇராசிகாளாகும். ஆகச்சொல்லப்பட்ட (16) நட்சத்திரமும் விலக்காம். ஏனைய பூசம் உத்தரம் அனுடம் சதயம் அச்சுவினி ரோகிணி சுபகரமான நட்சத்திரங்களாகும். அன்றி மூலம் உத்தராடம் திருவோணம் மூன்றையும் அட்டமராசியையறிந்து கொள்ளத்தள்ளத்தக்கதேயாம்.

6

திருவாதிரை நட்சத்திரஜென்னம்

திருவாதிரை ரோதி சதயம் கம்பநாள்.

3ம் நாள் பூசம். 5ம் நாள் மகம். 7ம் நாள் உத்தரம். 12ம் நாள் அனுடம். 14ம் நாள் மூலம். 16ம் நாள் உத்தராடம். 21ம் நாள் உத்திரட்டாதி. திருவாதிரை முதற்பாதமெனின் வைநாசிகம் ரேவதி. 2ம் 3ம் 4ம் பாதமெனில் அச்சுவினி. 25ம் நாள் கார்த்திகை. 27ம் நாள் மிருகசீரிடம் 8ம் ராசிகாள் உத்தராடத்து முக்காலும் திருவோணமும் அவிட்டத்து முன்னரையுமாகச் சொல்லப்பட்ட பதினாறுகட்சத்திரமும் விலக்காகும். ஏனைய புனர்பூசம் அத்தம் சித்திரை என்ற இவைகளும் ரேவதி அச்சுவினியில் பாதநிச்சயத்தால் காணுமொன்றையும் சுபநட்சத்திரமாகக் கொள்க. அன்றி முன்னோர்கூறியபடி விஷேகத்துக்குரியதான நட்சத்திரங்களை அபவாதமுண்டாயிற் கொள்க.

7

புனர்பூச நட்சத்திரஜெனனம்

புனர்பூசம் விசாகம் பூரட்டாதி கம்பநாள்.

3ம் நாள் ஆயில்யம். 5ம் நாள் பூரம். 7ம் நாள் அத்தம். 12ம் நாள் கேட்டை. 14ம் நாள் பூராடம். 16ம் நாள் திருவோணம். 21ம் நாள் ரேவதி. புனர்பூசமுதற்பாதஜென்னமெனின் வைநாசிகம் அச்சுவினி. 2ம் 3ம் 4ம் பாதமெனின் பரணி. 25ம் நாள் ரோகிணி. 27ம் நாள் திருவாதிரை. புனர்பூசம் முன்மூன்றுபாதத்துள் அட்டமராசிகாள் உத்தராடத்துப்பின்முக்கால் திருவோணம் அவிட்டத்துப்பின்னரை. நாலாம்பாதத்திற் பிறந்தால் அவிட்டத்துப்பின்னரை சதயம் பூரட்டாதிமுக்காலும் ஆகிய 16 நட்சத்திரமும் விதித்ததல்லனவாம். ஏனைய பூசம் உத்தரம் சித்திரை சோதி அனுடம் மூலம் உத்தராடம்முதற்கால் உத்தராட்டாதி என்றிவையும் பாதநிச்சயத்தால் உத்தராடப்பின்முக்கால் திருவோணம் அவிட்டம் சதயம் வைநாசிகம் அச்சுவினி இவைகளையுமறிந்து தள்ளக் கொள்ளத்தக்கதேயாம்.

8

பூச நட்சத்திரஜெனனம்

பூசம் அனுடம் உத்திரட்டாதி கம்பநாள்.

3ம் நாள் மகம். 5ம் நாள் உத்தரம். 7ம் நாள் சித்திரை. 12ம் நாள் மூலம். 14ம் நாள் உத்தராடம். 16ம் நாள் அவிட்டம். 21ம் நாள் அச்சுவினி. பூசம்முதற்பாதத்தில் பிறந்தால் வைநாசிகம் பரணி. 2ம் 3ம் 4ம் பாதமெனின் கார்த்திகை. 25ம் நாள் மிருகசீரிடம். 27ம் நாள் புனர்பூசம். அவிட்டம் சதயம் பூரட்டாதி அட்டமராசிகாள் ஆகிய 16 நட்சத்திரங்களும் விதியாதனவாம். ஏனைய அத்தம் சோதி திருவோணம் ரேவதி ரோகிணி என்ற இவைகள் விதித்த சுபகரகநட்சத்திரமாகும்.

9

ஆயிலிய நட்சத்திரஜெனனம்

ஆயில்யம் கேட்டை ரேவதி கம்பநாள்.

3ம் நாள் பூரம். 5ம் நாள் அத்தம். 7ம் நாள் சோதி. 12ம் நாள் பூராடம். 14ம் நாள் திருவோணம். 16ம் நாள் சதயம். 21ம் நாள் பரணி. ஆயில்யம் முதற்பாதத்தில் பிறந்தால் வைநாசிகம் கார்த்திகை. 2ம் 3ம் 4ம் பாதமெனின் ரோகிணி. 25ம் நாள் திருவாதிரை. 27ம் நாள் பூசம். அவிட்டத்துப் பின்னரை சதயம் பூரட்டாதி அட்டமராசிகாள் ஆகிய பதினாறு நட்சத்திரங்களும் சென்மநட்சத்திரதோஷமென விலக்கியும் ஏனைய உத்தரம் சித்திரை அனுடம் மூலம் உத்தராடம் அவிட்டத்து முன்னரை உத்தராட்டாதி அச்சுவினி மிருகசீரிடம் புனர்பூசம் பூசம் என்ற இவைகள் விஷேகசுபகரமாமெனவும் பாதநிச்சயத்தால் ரோகிணியைத் தள்ளக்கொள்ளத்தக்கதாம்.

10

மக நட்சத்திரஜெனனம்

மகம் மூலம் அச்சுவினி கம்பநாள்.

3ம் நாள் உத்தரம். 5ம் நாள் சித்திரை. 7ம் நாள் விசாகம் 12ம் நாள் உத்தராடம். 14ம் நாள் அவிட்டம். 16ம் நாள் பூரட்

Page 52

11

பூரநட்சத்திரஜென்னம்.

பூரம் பூராடம் பரணி கற்பநாள்.

டாதி. 21ம் நாள் கார்த்திகை. மகம் முதற்பாகத்தில் ஜென்னம் வைநாசிகம் ரோகிணி. 2ம் 3ம் 4ம் பாதத்துக்கு வைநாசிகம் மிருகசீரிடம். 25ம் நாள் புனர்பூசம். 27ம் நாள் ஆயில்யம். பூரட்டாதி காலாம்பாதமும் உத்திரட்டாதி ரேவதியும் அட்டமராசிநாள். ஆக 16 நட்சத்திரங்கள் விலக்காகும். அபவாதமிருப்பின் கொள்க விதிபாகு மிவையல்லாமலேயை அத்தம் சோதி அனுடம் திருவோணம் சதயம் பூசம் இந்நட்சத்திரங்கள் விதித்திருப்பன பாதநிச்சயத்தால் ரோகிணி மிருகசீரிடமிரண்டில் வருவனவொன்றைச் சேர்த்துக்கொள்ளவும்.

3ம் நாள் அத்தம். 5ம் நாள் சோதி. 7ம் நாள் அனுடம். 12ம் நாள் திருவோணம். 14ம் நாள் சதயம். 16ம் நாள் உத்திரட்டாதி. 21ம் நாள் ரோகிணி. பூரம் முதற்பாதத்தில் பிறந்தால் வைநாசிகம் மிருகசீரிடம். 2ம் 3ம் 4ம் பாதத்தில் பிறந்தால் திருவாதிரை. 25ம் நாள் பூசம். 27ம் நாள் மகம். பூரட்டாதி காலாம்பாகமும் உத்திராட்டாதியும் ரேவதியும் அட்டமராசி நாளாக 16 நட்சத்திரமும் விதியாதனவாமபவாதமுண்டாயிற் கொள்க. ஏனைய உத்தரம் சித்திரை உத்தராடம் அவிட்டம் அச்சுவினி புனர்பூசம் என்ற இவை சுபகாமாம். ஜென்ம நட்சத்திர பாதநிச்சயத்தில் மிருகசீரிடம் கொள்ளத்தள்ளவும் அத்தம் சோதி அனுடம் உத்திரட்டாதிக்கு குறித்த பாதங்களைநீக்கி அவசிய பக்ஷத்தில் கொள்ளலாம்.

12

உத்தர நட்சத்திரஜென்னம்.

உத்தரமுத்தராடங்கார்த்திகை கற்பநாள்.

3ம் நாள் சித்திரை. 5ம் நாள் விசாகம். 7ம் நாள் கேட்டை. 12ம் நாள் அவிட்டம். 14ம் நாள் பூரட்டாதி. 16ம் நாள் ரேவதி. 21ம் நாள் மிருகசீரிடம். உத்தரம் முதற்பாதத்திற் பிறந்தால், வைநாசிகம் திருவாதிரை. 2ம் 3ம் 4ம் பாதத்தில் பிறப்பின் வைநாசிகம் புனர்பூசம். 25ம் நாள் ஆயில்யம். 27ம் நாள் பூரம். உத்தரம் முதற்பாதஜென்னிகிற்கு பூரட்டாதி உத்திரட்டாதி ரேவதியும், 2ம் 3ம் 4ம் பாதமுடையவர்க்கு அச்சுவினி பரணி கார்த்திகைக்கால் அட்டமராசிநக்ஷத்திரமும் ஆகப் 16 நட்சத்திரமும் விலக்கவும். அபவாதமுண்டாயிற் கொள்ளவும் விதிப்பன. ஏனைய அத்தம் சோதி அனுடம் மூலம் திருவோணம் சதயம் ரோகிணி பூசம் என்ற இவையும், வைநாசிகஅட்டமதோஷத்தில் பாதநிச்சயத்தால் புனர்பூசம் உத்திரட்டாதி ரேவதி அச்சுவினி நட்சத்திரங்களைத் தெரிந்துகொள்ளவுந் தள்ளவுங் கடப்பாடாம். ஏனைய அபவாதங்களையுங் கவனிக்கற்பாலன.

13

அத்தநட்சத்திரஜென்னம்.

அத்தம் திருவோணம் ரோகிணி கற்பநாள்.

3ம் நாள் சோதி. 5ம் நாள் அனுடம். 7ம் நாள் மூலம். 12ம் நாள் சதயம். 14ம் நாள் உத்திரட்டாதி. 16ம் நாள் அச்சுவினி. 21ம் நாள் திருவாதிரை. அத்தம்முதற்காலில் ஜென்னம். வைநாசிகநாள் புனர்பூசம். 2ம் 3ம் 4ம் பாதத்தில் பிறந்தால் வைநாசிகநாள் பூசம். 25ம் நாள் மகம். 27ம் நாள் உத்தரம். அச்சுவினி பரணி கார்த்திகைக்கால் அட்டமராசி நட்சத்திரமாகப் 16 நட்சத்திரங்களும் விதியாதனவாகும். முன்னோர்கூறிய அபவாதங்களுக்கிசையின ஆராய்ந்துகொள்க. அன்றியனைய சித்திரை உத்தராடம் அவிட்டம் ரேவதி ரோகிணி மிருகசீரிடம் முன்னரை உத்தராப பின்முக்கால் என்ற இவை அத்தநட்சத்திர ஜெனனிக்குச் சுபகரமாகும். பாதநிச்சயத்தால் புனர்பூசம் பூசம் இவை இரண்டிலொன்று சுபநாளாய்த்தோன்றுவதைக் காண்க.

14

சித்திரை நட்சத்திரஜென்னம்.

சித்திரை அவிட்டம் மிருகசீரிடம் கற்பநாள்.

3ம் நாள் விசாகம். 5ம் நாள் கேட்டை. 7ம் நாள் பூராடம். 12ம் நாள் பூரட்டாதி. 14ம் நாள் ரேவதி. 16ம் நாள் பரணி. 21ம் நாள் புனர்பூசம். சித்திரை முதற்பாகத்திற்கபிறந்தால் வைநாசிகநாள் பூசம். 2ம் 3ம் 4ம் பாதத்திற் பிறந்தால் வைநாசிகம் ஆயில்யம். 25ம் நாள் பூரம். 27ம் நாள் அத்தம். சித்திரை முன்னிருபாதங்களுக்கும் அட்டமராசிகள் அச்சுவினி பரணி கார்த்திகையும், பின்னிருபாகங்களுக்குக் கார்த்திகைப் பின்முக்கால் ரோகிணி மிருகசீரிட முன்னரையும், ஆகப் 16 நட்சத்திரமும் விதியாதனவாகும் முன்னரோதியபடி அபவாதங்கட்கியையின ஆராய்ந்துகொள்க. சுபநட்சத்திரமென விதித்த சோதி அனுடம் மூலம் உத்தராடம் திருவோணம் சதயம் உத்திரட்டாதி ரேவதி என்ற இவை விதித்தனவாகும். வைநாசிக அட்டமராசிகாளாகிய பூசம் அச்சுவினி ரோகிணி மிருகசீரிடமான் இவைகளைச் சித்திரைநாட் பாதநிச்சயத்திற் கொள்ளத் தள்ளத்தக்கனவாம்.

Page 53

15

சோதி நட்சத்திர ஜெனனம்.

சோதி சதயந் திருவாதிரை கற்பநாள்.

3 ம் நாள் அனுடம். 5 ம் நாள் மூலம். 7 ம் நாள் உத்தராடம். 12 ம் நாள் உத்தராட்டாதி. 14 ம் நாள் அச்சுவினி. 16 ம் நாள் கார்த்திகை. 21 ம் நாள் பூசம். சோதி முதற்பாதத்தில் பிறந்தால் வைநாசிகம் ஆயில்யம். 2 ம் 3 ம் 4 ம் பாதமெனில் வைநாசிகம் மகம். 25 ம் நாள் உத்தரம். 27 ம் நாள் சித்திரை-கார்த்திகைப்பின்முக்கால் ரோகிணி மிருகசீரிடத்து முன்னரை அட்டமராசி நட்சத்திரம் ஆகப்பதினைந்தும் விலக்காகும். அபவாதமுண்டா யிற் கொள்ளவிதியாகும். ஏனைய திருவோணம் அவிட்டம் ரேவதி புனர் பூசம் அத்தம் என்ற இவைகள் சுபகாரட்சத்திரமாகும். மூன்றரைந்தேழாம் நாளான அனுடம் மூலம் உத்தராடத்துக்கு முதலாம் நாலாம் மூன்றும் பாதம் நீக்கி அவசியபட்சமாய்ச்சொள்ளலாமென்பதும் சுருதிநீதியாம்.

16

விசாக நட்சத்திர ஜெனனம்.

விசாகம் பூரட்டாதி புனர்பூசமும் கற்பநாள்.

3 ம் நாள் கேட்டை. 5 ம் நாள் பூராடம். 7 ம் நாள் திருவோணம். 12 ம் நாள் ரேவதி. 14 ம் நாள் பரணி. 16 ம் நாள் ரோகிணி. 21 ம் நாள் ஆயில்யம். விசாகம் முதற்பாதத்தில் பிறந்தால் வைநாசிக நாள் மகம். 2 ம் 3 ம் 4 ம் பாதமெனில் வைநாசிகநாள் பூரம். 25 ம் நாள் அத்தம். 27 ம் நாள் சோதி. விசாகம் முன் மூன்று பாதத்தாருக்கு அட்டம இராசிகள் கார்த்திகைப்பின்முக்கால் ரோகிணி மிருகசீரிடத்து முன்னரையும் விசாகம் நானாம்பாதத்தினர்க்கு அட்டம இராசிகாள் மிருக சீரிடத்துப்பின்னரை திருவாதிரை புனர்பூசத்துமுன்முக்காலாக 16 நட்சத்திரங்களும் தோஷநாள். ஏனைய அனுடம் மூலம் உத்தராடம் அவிட்டம் சதயம் உத்தராட்டாதி அச்சுவினி பூசம் உத்தரம் சித்திரை என்ற இவைகள் சுபகாரட்சத்திரமாகும்.

17

அனுட நட்சத்திர ஜெனனம்.

அனுடம் உத்தராட்டாதி பூசம் கற்பநாள்.

3 ம் நாள் மூலம். 5 ம் நாள் உத்தராடம். 7 ம் நாள் அவிட்டம். 12 ம் நாள் அச்சுவினி. 14 ம் நாள் கார்த்திகை. 16 ம் நாள் மிருகசீரிடம். 21 ம் நாள் பூரம். அனுடம் முதற்பாதத்தில் பிறந்தால் வைநாசிக நாள் பூரம். 2 ம் 3 ம் 4 ம் பாதமெனில் வைநாசிகமுத்தரமாகும். 25 ம் நாள் சித்திரை, 27 ம் நாள் விசாகம். மிருகசீரிடத்து பின்னரையுந் திருவாதிரையும் புனர்பூசத்து முன் முக்காலும் சந்திராட்டமராசியானாக 16 நட்சத்திரங்களுந் தோஷ நாள். ஏனைய திருவோணம் சதயம் ரேவதி ரோகிணி பூசம் அத்தம் சோதி யென்ற இவைகள் விதிக்கப்பட்டனவாம். அன்றி மூன்றாந்தைந்தேழாம் நட்சத்திரமான மூலம் உத்தராடமவிட்டம் மிருகசீரிட முன்னரை இவைகளை நிந்திதபாதங்களை நீக்கிக்கொள்ளக்கடவன. வைநாசிகம் உத்தரத்தையாராயந்து கொள்க.

18

கேட்டை நட்சத்திரஜெனனம்.

கேட்டை ரேவதியாயிலியம் கற்பநாள்.

3 ம் நாள் பூராடம். 5 ம் நாள் திருவோணம். 7 ம் நாள் சதயம். 12 ம் நாள் பரணி. 14 ம் நாள் ரோகிணி. 16 ம் நாள் திருவாதிரை. 21 ம் நாள் பூரம். கேட்டை முதற்பாதமெனின் வைநாசிக முத்தரம். 2 ம் 3 ம் 4 ம் பாதத்தில் பிறந்தால் வைநாசிக நாளத்தம். 25 ம் நாள் சோதி. 27 ம் நாள் அனுடம். மிருகசீரிடத்துப்பின்னரையுந் திருவாதிரையும் புனர்பூசத்து முன்முக்காலுஞ் சந்திராட்டமராசி நாளாக (16 ம்) விலக்கு. ஏனைய மூலமஉத்தராடம் அவிட்டம் உத்தராட்டாதி ரேவதி அச்சுவினி மிருகசீரிடம் முன்னரை பூசம் சித்திரை அனுடமென்ற இவைகள் சுபகரமானவை. அன்றி, பாதநிச்சயத்தால் வைநாசிகமெனக்கொண்ட உத்தராமத்தானை யூகித்தறிக. ஜேந்தேழாகிய திருவோணம் சதயத்தின் தோஷபாதங்களைநீக்கி அவசியபக்ஷத்தில் மத்தியமாய்க் கொள்ளலாம்.

19

மூல நட்சத்திர ஜெனனம்.

மூலம் அச்சுவினி மகம் கற்பநாள்.

3 ம்நாள் உத்தராடம். 5 ம்நாள் அவிட்டம். 7 ம்நாள் பூரட்டாதி. 12 ம்நாள் கார்த்திகை. 14 ம்நாள் மிருகசீரிடம். 16 ம் நாள் புனர்பூசம். 21 ம் நாள் உத்தரம். மூலம் முதற்பாதத்தில் பிறந்தால் வைநாசிகநாள் அத்தம். 2 ம் 3 ம் 4 ம் பாதமெனில் வைநாசிகநாள் சித்திரை. புனர்பூசம் நாலாங்காலும் பூசமும் ஆயில்ய முங்கொண்டது சந்திராட்டமராசிகாள். 25 ம் நாள் விசாகம். 27 ம் நாள் கேட்டை. ஆக (16) நட்சத்திரங்களும் விதியாதனவாம். ஏனைய திருவோணம் சதயம் உத்தராட்டாதி ரேவதி ரோகிணி உத்தரம் அத்தம் சித்திரை சோதி அனுடம் என்ற இவைகள் சுபம். அத்தம் சித்திரையில் வைநாசிகம் கிடந்த எண்பத்தெட்டாம் பாதம் நீக்கியும் மூன்றைந்தாம் நாளான உத்தராடமவிட்டத்தில் நிலையையே முதலாம் நாலாம் பாதமல்லாதமற்றையபாதங்களையும் அவசிய பக்ஷத்தில் மத்தியமெனக்கொள்க.

Page 54

20

பூராட நட்சத்திர ஜெனனம்

பூராடம் பரணி பூரம் கற்பநாள்.

3ம்நாள் திருவோணம். 5ம்நாள் சதயம். 7ம்நாள் உத்திரட்டாதி. 12ம்நாள் ரோகினி. 14ம்நாள் திருவாதிரை. 16ம் நாள் பூசம். 21ம்நாள் அத்தம். பூராடம் முதற்பாதத்தில் பிறந்தால் வைநாசிகநாள் சித்திரை. 2ம் 3ம் 4ம் பாதமெனின் வைநாசிகம் சோதி. புனர்பூசம் நாலாங்காலும் பூசமுமாயிலியமும் அட்டமராசிநாள். 25ம்நாள் அனுடம். 27ம்நாள் மூலம் ஆக (16) நட்சத்திரங்களும் தோஷமென விலக்கப்பட்டன. மேலேகூறியபடி யபவாத விதிக்கியைபிற் கொள்ளலாமின்றியேயே உத்தராடம் அவிட்டம் ரேவதி அச்சுவினி மிருகசீரிடம் புனர்பூசம் உத்தரம் மூலம் என்றஇவைகள் சுபநட்சத்திரம். பாதநிச்சயத்தால் வைநாசிகமாகச்சொல்லிய சித்திரை சோதியை ஆராய்ந்துகொள்க. இருபத்தேழாம் நட்சத்திரமான மூலமோரோசிக்குரியதாகையால் கொள்ளத்தக்கதாம்.

21

உத்தராட நட்சத்திர ஜெனனம்

உத்தராடம் கார்த்திகை உத்தரம் கற்பநாள்.

3ம்நாள் அவிட்டம். 5ம் நாள் பூரட்டாதி. 7ம் நாள் ரேவதி. 12ம் நாள் மிருகசீரிடம். 14ம் நாள் புனர்பூசம். 16ம் நாள் ஆயிலியம். 21ம் நாள் சித்திரை. உத்தராடம் முதலாங்காலிற்பிறந்தால், வைநாசிகம் சோதி. 2ம் 3ம் 4ம் காலிற்பிறந்தால், வைநாசிகம் விசாகம். உத்தராட முதற்பாதத்தினர்க்குப் புனர்பூசத்துக்கால் பூசம் ஆயிலியம் சந்திரஅட்டமராசிநாள். பின் இரண்டாம் மூன்றாம் நாலாம்பாதத்தினர்க்கு மகம் பூரம் உத்தராத்துக்கால் அட்டமராசிநாள். 25ம் நாள் கேட்டை 27ம் நாள் பூராடம். ஆகப் பதினாறும் ஜென்மதோஷமென விலக்கப்பட்டன. ஏனைய திருவோணம் சதயம் உத்தராட்டாதி அச்சுவினி ரோகிணி அத்தம் அனுடம் மூலம் என்ற இவைகள் விதிக்கப்பட்ட சுபநாளாம். ஏனையவைகளோ அபவாதவிதிபொருந்தில் கொள்ளற்பாலன. எனினும் மத்திமமாம்.

22

திருவோண நட்சத்திர ஜெனனம்

திருவோணம் ரோகிணி அத்தம் கற்பநாள்

3ம் நாள் சதயம். 5ம் நாள் உத்தராட்டாதி. 7ம் நாள் அச்சுவினி. 12ம் நாள் திருவாதிரை. 14ம் நாள் பூசம். 16ம் நாள் மகம். 21ம் நாள் சோதி. திருவோணம் முதற்காலிற் பிறந்தால் வைநாசிகம் விசாகம். 2ம் 3ம் 4ம் காலிற்பிறந்தால் வைநாசிகம் அனுடம். மகமும் பூரமும் உத்தராத்து முதற்காலும் சந்திராட்டமராசிநாள். 25ம் நாள் மூலம். 27ம் நாள் உத்தராடம். ஆகப்பதினாறு நட்சத்திரங்களும் திருவோணத்துக்குப் பகைநாட்களென விலக்கியும் ஏனைய அவிட்டம் ரேவதி மிருகசீரிடம் புனர்பூசம் உத்தராத்துப் பின் முப்பாதமும் அத்தம் சித்திரை உத்தராடத்துப் பின்முன் முப்பாதம் சுபகரமானவை; ஏனையவைகளையபவாதவிதியில் கொள்ளத்தக்கன.

23

அவிட்ட நட்சத்திரஜெனனம்

அவிட்டம் மிருகசீரிடம் சித்திரை கற்பநாள்.

3ம் நாள் பூரட்டாதி. 5ம் நாள் ரேவதி. 7ம் நாள் பரணி. 12ம் நாள் புனர்பூசம். 14ம் நாள் ஆயில்யம். 16ம் நாள் பூரம். 21ம் நாள் விசாகம். அவிட்டம் முதற்பாதத்திற் பிறந்தால் வைநாசிகநாள் அனுடம். 2ம் 3ம் 4ம் பாதத்திற்பிறந்தால் வைநாசிகநாள் கேட்டை. அவிட்டம் முதலாம் இரண்டாம் பாதத்தினர்க்கு மகம் பூரம் உத்தரம் முதற்கால் அட்டமராசிநாள். 3ம் 4ம் பாதத்தினர்க்கு உத்தராத்துப் பின்முக்காலும் அத்தமும் சித்திரைமுன்னரையும் அட்டமராசிநாளாகும். 25ம் நாள் பூராடம். 27ம் நாள் திருவோணம். ஆகப்பதினாறும் விலக்கியெனப சதயம் உத்தராட்டாதி அச்சுவினி ரோகிணி பூசம் சோதி அனுடம் மூலம் உத்தராடம் இவைசுபகரமாகும். அவிட்டம் முன்னரையிற் ஜென்னமானவர்க்குத் திருவோணம் சுபம். ஏனையவைகளைப் அபவாதமுறையில் கொள்ளத்தக்கனற்பாலின்.

24

சதய நட்சத்திரஜெனனம்

சதயம் திருவாதிரை சோதி கற்பநாள்.

3 ம் நாள் உத்தராட்டாதி. 5ம் நாள் அச்சுவினி. 7ம் நாள் கார்த்திகை. 12ம் நாள் பூசம். 14ம் நாள் மகம். 16ம் நாள் உத்தரம். 21ம் நாள் அனுடம். சதயம் முதற்பாதத்தில் ஜெனனமானவர்க்கு வைநாசிகநாள் கேட்டை 2ம் 3ம் 4ம் பாதத்தினர்க்கு வைநாசிகம் மூலமாகவும், உத்தராத்துப் பின்முக்காற்பாதம் சித்திரைமுன்னரை சந்திராட்டமராசிநாள். 25ம் நாள் உத்தராடம். 27ம் நாள் அவிட்டம். ஆகப்பதினாறும் சதயத்திற்பிறந்தவர்க்குத் தோஷநாளெனவிதிப்பது ஆவசியத்து அபவாத விதியையனுசரித்துப் பொருந்தித் கொள்வது. ஏனைய ரேவதி மிருகசீரிடம் புனர்பூசம் சோதி மூலம் திருவோணம் என்ற இவை விதித்த நட்சத்திரங்கள்.

Page 55

சந்தானமணி

25

பூரட்டாதி நட்சத்திரஜெனனம். பூரட்டாதி புனர்பூசம் விசாகம் கற்பநாள்.

3ம் நாள் ரேவதி. 5ம் நாள் பரணி. 7ம் நாள் ரோகிணி. 12ம்நாள் ஆயில்யம். 14ம் நாள் பூரம். 16ம் நாள் அத்தம். 21ம் நாள் கேட்டை. 25ம் நாள் திருவோணம். 27ம் நாள் சதயம். பூரட்டாதி முதலாம்பாதத்தில் பிறந்தால் வைநாசிகம் மூலம். 2ம் 3ம் 4ம் பாதத்தார்க்கு வைநாசிகம் பூராடம். பூரட்டாதி முன்மூன்று பாதத்தினர்க்கட்டமராசியான் உத்த ரப்பின்முக்கால் அத்தம் சித்திரை முன்னரையும் நான்காம் பாதத்தினர்க்கு சித்திரைப் பின்னரையும் சோதியும் விசாகத்து முன்முக்காலும் எட்டாம்ராசிகானாகப் பதினாறும் வியோதனவாம். ஏனைய உத்தரட்டாதி அச்சுவினி மிருகசீரிடம் பூசம் உத்தரம் முதற்பாதம் அனுடம் மூலம் என்ற இவை சுபகரமானவையாய் விதித்தனவாகும். பூரட்டாதி முன்முக்காலினார்க்குச் சதயம் சுபகரம். பாதநிச்சயத்தால் மூலத்தைப் பரிசோதித்துக் கொள்க. ஏனையவைநபவாதமிருப்பின் அங்கீகரிப்பது.

சந்தானமணி

26

உத்தரட்டாதி நட்சத்திர ஜெனனம். உத்தரட்டாதி பூசம் அனுடம் கற்பநாள்.

3ம் நாள் அச்சுவினி. 5ம் நாள் கார்த்திகை. 7ம்நாள் மிருகசீரிடம். 12ம் நாள் மகம். 14ம் நாள் உத்தரம். 16ம்நாள் சித்திரை. 21ம் நாள் மூலம். 25ம் நாள் அவிட்டம். 27ம் நாள் பூரட்டாதி. உத்தரட்டாதிமுதற் பாதத்தினர்க்கு வைநாசிகநாள் பூராடம். 2ம் 3ம் 4ம் பாதத்தார்க்கு வைநாசிகம் உத்தராடம். சித்திரையிற் பின்னரை சோதி விசாகத்து முன்முக்கால் சந்திராட்டமராசிகாளாக 16 நட்சத்திரங்களும் இவருக்குச் சுபகருமவிலக்காகும். ஏனைய ரேவதி ரோகிணி புனர்பூசம் அத்தம் திருவோணம் சதயம் என்ற இவை சுபகரம். பாதநிச்சயத்தால் உத்தராடத்தைப் பரிசோதித்துக்கொள்ளவும். மூன்றேழாம் நட்சத்திரம் அச்சுவினி மிருகசீரிடத்தையவசியநிமித்தம் பாதகாணஞ்செய்து மங்கீரிக்கத்தக்கதன்றி மற்ற நாட்களுக்கும் முன்னரே சொல்லிய அபவாதம் பொருந்தில் நன்று. சந்திராட்டம இராசி நாளாகக் கூறிப்பதினாறும் தோஷநாளெனவும் ஏனைய அச்சுவினி மிருகசீரிடம் புனர்பூசம் பூசம் உத்தரம் அனுடம் மூலம் உத்தரட்டாதி என்ற இவைகள் சுபநட்சத்திரங்களென விதிக்கப்பட்டன. ரேவதியின் பாதநிச்சயத்தால் வைநாசிகமெனவிலக்கப்பட்ட உத்தராடம் திருவோணத்தை ஆராய்ந்துகொள்க.

சந்தானமணி

தம்பதிகளுக்கன்யோன்யமான நட்சத்திரங்கள்.

ரேவதிமுதலாக ஆறுநட்சத்திரங்களில் நிஷேகம்செய்தால் பெண் தன் கணவனுக்குப்பீரிதியுடையவளாயிருப்பாளென்றும் திருவாதிரைமுதலாகப் பன்னிரண்டு நட்சத்திரங்களில் நிஷேகம் செய்தால் தம்பதிகளுக்கன்யோன்யப்பீரிதியுண்டாகுமென்றும் கேட்டைமுதலாக ஒன்பது நட்சத்திரங்களில் நிஷேகம் செய்தால் ஸ்திரிக்குப் புருஷன் அத்தியந்தபீரிதியுடையவனாவானென்றும் கூறப்படுவது. ஆனால் இஃது இருபத்தேழு நட்சத்திரங்களையும் முக்கூறாக்கிப்பொதுவான சுபாசுபம் சொல்லப்பட்டது எனினும் விதித்த நட்சத்திரங்களுக்கே இவ்விதியையுமொட்டிக் கொள்க.

சந்தானமணி

கற்பாதானத்திற்கு அத்தியாவசியகம் பொதுவிதியாக நீக்கவேண்டியன.

பார்யாபத்தாக்களின் ஜென்மராசிக்கு எட்டாம்வீட்டிற் சந்திரனிருக்கையிலும் சுபாவபாவராகிய சூரியன் செவ்வாய் சனி ராகு கேது இருந்த நட்சத்திரங்களிலும் பரணிமுதலாக மேலேவிலக்கப்பட்ட நட்சத்திரங்களிலும் பார்யாபத்தாக்களின்ஜென்மநட்சத்திரத்திற்கு3-5-7-10-12 14-16-19-21-25-27 ம் நட்சத்திரங்களிலும் வைநாசிகமெனச் சொல்லப்படும் நட்சத்திரமும், பிரதமை சதுர்த்தி ஷஷ்டி அட்டமி நவமி சதுர்த்தசி பூரணை அமாவாசை என்றதிதிகளிலும் பரிகாராமயோகம் வைதிருதி யோகம் வியதிபாதயோகம் மகாபாதவிஷ்டி நாமயோககாலங்களிலும் பகலிலும் சூரியோதய அஸ்தமனகாலங்களிலும் விரததினங்களிலும் சிரார்த்ததினங்களிலும் மிருத்துமுகூர்த்தம் முதலிய முகூர்த்ததோஷங்களிலும் கற்பாதானஞ் செய்யக்கூடாது.

நிரம்பவேயுண்டபோதும்நினைவறப்பசித்தபோதும் வரம்பறநடந்தபோதும்மனத்துயர்கொண்டபோதும் சிரந்தனிலெண்ணைவைத்துத்தீர்க்கநீராடும்போதும் அரம்பையர்மகளிர்தம்மையளைந்திடி லவலமாவான்.

சந்தானமணி

27

  1. ரேவதி நட்சத்திரத்தில் ஜெனனம். ரேவதி ஆயில்யம் கேட்டை கற்பநாள்.

3ம்நாள் பரணி. 5ம்நாள் ரோகிணி. 7ம் நாள் திருவாதிரை. 12ம் நாள் பூரம். 14ம் நாள் அத்தம். 16ம்நாள் சோதி. 21ம் நாள் பூராடம். 25மநாள் சதயம். 27ம் நாள் உத்தரட்டாதி. ரேவதி முதற்பாதத்தினர்க்கு வைநாசிகம் உத்தராடம். 2ம் 3ம் 4ம் பாதத்தினர்க்கு வைநாசிகம் திருவோணம். சித்திரைப் பின்னரை சோதி விசாகத்துமுக்காலும்

Page 56

சு கூ சந்தானமணி.

நிஷேகபலக்கினமாதியன.

  1. மேடம் பிரமாணவிகாடி 259 | 7. துலாம் பிரமாணவிகாடி 297
  2. இடபம் " 284 | 8. விருச்சிகம் " 314
  3. மிதுனம் " 317 | 9. தனு " 329
  4. கர்க்கடகம் " 329 | 10. மகரம் " 317
  5. சிங்கம் " 314 | 11. கும்பம் " 284
  6. கன்னி " 297 | 12. மீனம் " 259

நாளொன்றுக்கு 3600.

தேசசாந்தர சம்ஸ்காரவிதியால் விதேசங்களுக்கு ராசிமானசங்கியை மேற்கூறியபிரமாணத்துக்கு கூடியுங் குறைந்தும் வருவனவற்றைத்திருத்திக்கொள்க.

ம.மி.செ. | ம.மி.செ.

  1. மேடம் ... 1-43-36 | 7. துலாம் ... 1-58-48
  2. இடபம் ... 1-53-36 | 8. விருச்சிகம் ... 2- 5-36
  3. மிதுனம் ... 2- 6-48 | 9. தனு ... 2-11-36
  4. கர்க்கடகம் ... 2-11-36 | 10. மகரம் ... 2- 6-48
  5. சிங்கம் ... 2- 5-36 | 11. கும்பம் ... 1-53-36
  6. கன்னி ... 1-58-48 | 12. மீனம் ... 1-43-36 ஆக மணி 24-0-0.

மேடமாதம் சித்திரை. | துலாமாதம் ஐப்பசி. இடபமாதம் வைகாசி. | விருச்சிகமாதம் கார்த்திகை. மிதுனமாதம் ஆனி. | தனுமாதம் மார்கழி. கர்க்கடகமாதம் ஆடி. | மகரமாதம் தை. சிங்கமாதம் ஆவணி. | கும்பமாதம் மாசி. கன்னிமாதம் புரட்டாதி. | மீனமாதம் பங்குனி.

அதாவது: சித்திரைமாதம் முதற்தேதி மேடத்திற் சூரியோதயமாம். மேடம் இடபம் மிதுனம் கர்க்கடகம் சிங்கம் கன்னி துலாம் விருச்சிகம் தனு மகரம் கும்பம் மீனம் என்ற முறையே அவ்வவ்விராசிகளுக்கு ஏற்பட்ட மணி மினிற் செக்கன்வரையும் அந்தந்த இராசிகாலமாகவே அவ்வத்தேகத்துக்குச் செய்யப்பட்ட சூரியோதய மணியினிற்தேட ஒவ்வொருராசிக்குரிய மணி மினிற் செக்கனைக் கூட்டவரும் மணி மினிற் செக்கன்வரையும அந்தராசிலக்கினமாமென இலகுவில் நாழிகை விநாடி தற்பரைகணக்கறியாதார் கடிகாரத்திலேயே பார்த்தறிய விதியாம். ஆனால், உதிக்குமிராசிப்பிரமாண மணி மினிற் செக்கனை முதல் இரண்டு மூன்று என்றபடி திகதியதாவது பாகை செல்லச்செல்லச் சூரியோதயத்துக்கு முன்னும் பின்னுமாக ஏனலடவே அடுத்தமாதச் சங்கிராந்திவரையுஞ் செல்லவேண்டியன. அவற்றை உதயாற்பூர்வம் உதயாற்பரம் என்று கூறப்படும். அவை வருமாறு.

1உ 2உ 3உ 4உ 5உ 6உ 7உ 8உ 9உ 10உ ம.மி.செ. ம.மி.செ. ம.மி.செ. ம.மி.செ. ம.மி.செ. ம.மி.செ. ம.மி.செ. ம.மி.செ. ம.மி.செ. ம.மி.செ.

மேடம் சித்திரை ... 1-43-35 1-40- 8 1-36-40 1-33-12 1-29-44 1-26-16 1-22-48 1-19-20 1-15-52 1-12-24 3-27 இடபம் வைகாசி ... 1-53-36 1-49-48 1-46-00 1-42-12 1-38-24 1-34-36 1-30-48 1-27-00 1-23-12 1-19-24 3-48 மிதுனம் ஆனி ... 2- 6-48 2- 2-35 1-58-22 1-54- 9 1-49-56 1-45-43 1-41-30 1-37-17 1-33- 4 1-28-51 4-13 கர்க்கடகம் ஆடி ... 2-11-36 2- 7-13 2- 2-50 1-58-27 1-54- 4 1-49-41 1-45-18 1-40-55 1-36-32 1-32- 9 4-23 சிங்கம் ஆவணி ... 2- 5-36 2- 1-25 1-57-14 1-53- 3 1-48-52 1-44-41 1-40-30 1-36-19 1-32- 8 1-27-57 4-11 கன்னி புரட்டாதி ... 1-58-48 1-54-50 1-50-52 1-46-54 1-42-56 1-38-58 1-35-00 1-31- 2 1-27- 4 1-23- 6 3-58 துலாம் ஐப்பசி ... 1-58-48 1-54-50 1-50-52 1-46-54 1-42-56 1-38-58 1-35-00 1-31- 2 1-27- 4 1-23- 6 3-58 விருச்சிகம் கார்த்திகை 2- 5-36 2- 1-25 1-57-14 1-53- 3 1-48-52 1-44-41 1-40-30 1-36-19 1-32- 8 1-27-57 4-11 தனு மார்கழி ... 2-11-36 2- 7-13 2- 2-50 1-58-27 1-54- 4 1-49-41 1-45-18 1-40-55 1-36-32 1-32- 9 4-23 மகரம் தை ... 2- 6-48 2- 2-35 1-58-22 1-54- 9 1-49-56 1-45-43 1-41-30 1-37-17 1-33- 4 1-28-51 4-13 கும்பம் மாசி ... 1-53-36 1-49-48 1-46-00 1-42-12 1-38-24 1-34-36 1-30-48 1-27-00 1-23-12 1-19-24 3-47 மீனம் பங்குனி ... 1-43-36 1-40- 8 1-36-40 1-33-12 1-29-44 1-26-16 1-22-48 1-19-20 1-15-52 1-12-24 3-27

Page 57

சந்தானமணி.

ஏனைய திகதிகளுக்கும் அந்தந்த மாதவிராசிப்பிரமாண மணிமனிற் செக்கனில் திகதியொன்றுக்கு கழியபடவேண்டிய மினிற் செக்கனைக் கழித்தவரும் மணி மினிற் செக்கன் சூரியோதயமுதல் உதயார்ப்பரம் அதாவது: சூரியன் உதிக்கின்ற அவைவிராசிகாலமும் அப்பால் அடுத்தநிரைநிரையான இராசிகாலங்களுமாமென அறிந்து கொள்ளலாம். கழிக்கப்படும் மணி மினிற் செக்கன்றுகள் சூரிய உதயத்துக்கு முன்னரே செல்லப்படுவன உதயார்ப்பருவமென்று வழங்கும்.

சந்தானமணி.

மீனம் பங்குனி சூரியன் 30-20-21

மேடம் சித்திரை சூரியன் பா. க. வி. 30-55-00

இடபம் வைகாசி சூரியன் 31-24-12

மிதுனம் ஆனி சூரியன் 31-36-38

கும்பம் மாசி சூரியன் 29-48-24

ஒவ்வொருமாதார்தமும் மாதவாரம்பமுமாகும் சங்கிராந்தி நாழிகை விநாடியில் அவ்வம் மாத விராசியில் சூரியன் உதய மாமென்பதும் சூரியோதயம் முதல் வலமாக அவ்வவ்விரா சிக்குரிய காலம்வரையும் அவ் விராசிமுகூர்த்தம்.

ஈர்க்கடகம் ஆடி சூரியன் 31-28-12

மகரம் தை சூரியன் 29-27-15

சிங்கம் ஆவணி சூரியன் 31-20-00

தனு மார்கழி சூரியன் 29-20-56

விருச்சிகம் கார்த்திகை சூரியன் 29-30-24

துலாம் ஐப்பசி சூரியன் 29-54-7

கன்னி புரட்டாதி சூரியன் 31-27-22

சந்தானமணி.

கர்ப்பாதான சுபராசிகள். மேடவிருச்சிகம் இடபதுலாம் மிதுனகன்னி கர்க்கடகம் சிங்கம் தனு மீனம் மகர கும்பம் செவ்வாய் ஆட்சிவீடும் வெள்ளி ஆட்சிவீடும் புதன் ஆட்சிவீடும் சந்திரன் ஆட்சிவீடும் சூரியன் ஆட்சிவீடும் வியாழன் ஆட்சிவீடும் சனி ஆட்சிவீடுமாகும். இவற்றுள் மேடம் விருச்சிகம் சிங்கம் மகரம் கும்பம்என்ற இவ்வீராசிகள் பாவராசியெனநீக்கி ஏனைய

  1. இடபம். 2. மிதுனம். 3. கர்க்கடகம். 4. கன்னி. 5. துலாம். 6. தனு. 7. மீனம் என்ற இராசிகள் சுபராசி சுபகர் மமுகூர்த்தத்துக்கு யோக்கியதையுடையதாகவும் கூறப்பட்டுள்ளன. விலக்கப்பட்டதாகிய மேடம் சிங்கம் விருச்சிகம் மகரம்கும்பமென்ற இவ்வீராசியில் கும்பராசியைக் கொள்ளலாமென்று காளாமிர்தத்திற் சொல்லப்பட்டிருப்பதால், கர்ப்பாதானத்துக்கு,
  2. இடபம் 2. மிதுனம் 3. கர்க்கடகம் 4. கன்னி 5. துலாம் 6. தனு 7. கும்பம் 8. மீனம் ஆனாஇராசிகள் சுபகரமாமெனக் காண்க. என்னினும் சூரியன் செவ்வாய் சனி ராகு கேது நிற்கும் இராசிகளும் சுபகாமல்லவென்பதாம். ஆனால் இப்பாவிகள் அயனபஞ்சபாராய்ச் சுட்பாட்சியுச்சமாய் நிற்பின் பாவவிமோசனமாகுமெனச் சிலநூல் விதித்திருக்கின்றன.

சந்தானமணி.

சுபமுகூர்த்த கிரகநிலை. நல்லகோள்பன்னொன்றிரண்டைந்தொடொன்பதுநாற்கண்டத்து செல்லுமின் நன்மைசிறப்புடைத்தாம்மூர்த்தந்தீயகோள்கள் புல்லுறுமாறிற்றினொன்றின்மூன்றினில்நன்றுபகர் கொல்லிதட்கூர்மொழிபாய்குற்றமேழெனக்கூறினரே.

இ-ள்: நல்லகோள் பன்னொன்றிரண்டைந் தொடொன்பதுநாற்கண்டத்து செல்லுமின்=சுபபவசுபராகிய சந்திரன் புதன் வியாழன் வெள்ளி கொண்டலக்கினத்திற்கு 11-2-5-9-1-4-7-10 னிற்க, பாவராகிய சூரியன் செவ்வாய் சனி ராகு கேது 6-11-3ல் நின்றால், நன்மை சிறப்புடைத்தாம் மூர்த்தம்=நன்மையைப் மிகுதியுங் கொடுக்கும். சிறப்புடைய முகூர்த்தமாகுமென்று விதிக்கும். வெள்ளி ஏழாமிடம் பொல்லாள் முகூர்த்தலக்கினத்துக்கு 7ல் வெள்ளி நிற்கலாகாது.

சந்தானமணி.

மதிபுக னெட்சியி லைந்நூறு குற்றத்தை வர்ட்டும்புக ரதிபெறு மெட்சி யிலையா யிரங்குற்ற மகற்றுவிக்கும்

Page 58

பதியெறு மந்திரி தன்னெட்சி நிற்பத்துநூ றாயிரமாம் விதியெறு கண்டங்கள் நட்பாட்சி யுச்ச மிகநல்லரே

இ-ள்: புதன் உதயத்து நின்றாலெஞ்ஞூறு குற்றத்தைப்போக்கும். வெள்ளியுதயத்துநின்றால் ஐயாயிரங் குற்றத்தை நீக்கும். வியாழன் உதயத்துநின்றால் பத்துலெக்ஷம் குற்றங்கள் நீங்கும். செவ்வாய் சனி ராகு கேது பகைநீசம்பெற்ற சூரியக்ஷீணசந்திரர் உதயத்துநின்றால் மேலேகூறியகணக்கின்படி குற்றத்தை உண்டாக்குவர். மேலேகூறிய சுபர்கள் கேந்திரங்களில் நின்றாலும் தோஷத்தைநீக்கிச் சுபத்தைக்கொடுப்பார்கள்.

நல்லவுச்சத் துநற்கோளுடனொட்சியுநாளின்றக்கால் புல்லுமாதிரினைப்பொன்புகர்நோக்கினுங்கேந்திரத்து நல்லவர்திற்பினுங்கட்புச்சியாரியனுமாட்சியிற்பிற் சொல்லியகுற்றமெல்லாஞ்சபமாமெனச்சொல்லுவரே.

இ-ள்: சந்திரன் உச்சமாய்நின்று நோக்கினும் சுபக்கிரகங்களோடு கூடினும் இலக்கினத்துதிக்கினும் அன்றி சுபாங்கிசகேந்திரனாகி சந்திரனை வியாழன் வெள்ளி பார்த்தாலும் சந்திரனுக்குக் கேந்திரங்களில் சுபக்கிரகங்கள் நிற்பினும் சூரியன் மத்தியானத்து எட்டாம்முகூர்த்தமாகிய அபிசித்து முகூர்த்தமாயினும் மேலேகூறப்பட்டுள்ள குற்றங்கள் யாவுந்தீர்ந்து குணமாகும்.

இரவி தனுச்சசத்து மாட்சியி னிற்ப வெளிரில் மதியம் மருவும் வலிபெறின் வைதிருதி பாதம் மரபில் நன்றாம் பரமொன்று நீயவர் கால்கள்முன் மூன்றுன் னென்றதனில் திரமொன்றி நிற்பின்சன் றாமென்று சான்றவர் செப்பினரே.

இ-ள்: சூரியன் உச்சாட்சியில்நிற்ப, சந்திரன் பெலமுடையீராய் சுபாம்சத்து நிற்பின் வைதிருதி வியதீபாததோஷம் நீங்கிவிடும் அல்லாமல் சந்திரன் சுபாம்சமின்றி சூரியன் செவ்வாய் சனி யம்சமடைந்து நிற்பின் அவ்வம்சாதிபதி சூரியன் செவ்வாய் சனியிலேவரோ அவர் முகூர்த்தலக்கினத்துக்கு மூன்றாறு பதினொன்றான உபசெயபெலம் பெற்றால் சந்திரன்பெற்ற பாபாம்சதோஷம் நிவாரணமாகும்.

புட்கரபாதம்:

வள்ளல் மனுக்கள் சினவமர் மாமுனி யென்றபர்கை தெள்ளிய மேட மரிசிலை யாதிகாள் கோரையினின் ஒள்ளிய புட்கர பாகைக னென்றுரைக் தார்கள் பின்னும் வெள்ளம் பணிடைந்து தண்டளந்து தேட்சனல் வெண்டிகளே.

இ-ள்: வள்ளல் இருபத்தொன்று. மனுக்கள் பதினான்கு. சினவர் இருபத்து நான்கு மாமுனி ஏழு. மேடசிங்கதனுவில் இருபத்தோராம் பாகையும் இடபகன்னியாமகரத்தில் பதினாலம்பாகையும் மிதுனதுலா கும்பத்திலிருபத்து ரான்காம்பாகையும் கற்கடக விருச்சிகமீனத்தில் ஏழாம்பாகையும் புட்கரபாதமெனப்படும். இப்பாகைகளமையவந்த இலக்கினமுகூர்த்தத்தில் செய்யப்படும் சுபகர்மம் மிகுதியும் சுபகரபலனுடையதாகும்.

அஃதன்றி, வெள்ளமணியைந்தென்ற நான்காம்வரிக்கிரயை மேட சிங்க தனுவுக்கு இருபத்தோராம்பாகையோடு ஏழாம் ஒன்பதாம்பாகையையும், இடப கன்னியா மகரத்துக்குப் பதினாலாம்பாகையுடன் ஐந்து மூன்றாம் பாகையையும், மிதுன துலா கும்பத்துக்கு இருபத்து நாலாம்பாகையுடன் ஐந்து எட்டாம்பாகையையும், கர்க்கடகவிருச்சிகா மீனத்திற்கு ஏழாம்பாகையோடு மூன்றாம்பாகையையும், புட்கரபாதமாக கூறி அங்கீகரிப்பதும் உள்வழக்கு.

வளரு மதியும்கட் பெய்திநற் காலின் மகிழ்ந்துநிற்ப வளவினில் வாரத் திறைவலி யின்றி யமைந்துசாலத் தளர்வொன்றி நின்றடிற் சாற்றிய நாசயோ கத்திலக்காள் வளமுண்டு நல்வினைக் கென்றுநன் மந்திரி வைத்தனனே.

இ-ள்: சந்திரன் பூரணனாய் நட்பாட்சியுச்சத்துச் சுபாம்சத்து நிற்ப, வாராதிபதிவலியின்றியே பகைநீசத்தில் நிற்பிற் சொல்லப்பட்ட நாசயோகங்களெல்லாம் மிக்கசுபயோகாமென்று பிரகஸ்பதிசொல்லினான.

ஓதிய சித்தஞ் சுபவமிர் தம்வரா உத்தமமாங் கோதில்நல் யோகம் வரில்முன்பு கூறிய குற்றமெல்லாம் தீதில் பெரும்புகட் டென்கடு வைப்பதி சென்றடைந்த வேதியர் நற்குர வாமென நீங்குமென் வேள்விபியே.

இ-ள்: சித்தயோகம் அமிர்தயோகம் சித்தாமிர்தயோகம் அமிர்தசித்தயோகம் என்னும் யோககாலங்கள் அனேககுற்றங்களைப் போக்கி மிகு சுபத்தைக்கொடுக்குமென்பதாம்.

Page 59

சந்தானமணி

திருந்திய யோகத்து நல்வினை செய்திடிற் றென்கவைபப் பொருந்திய வேளாண் டலைவரைப் போலப் புகழுடனே விருந்துட னுண்டலு மெய்யுஞ் சிறப்பு மிகவிளங்கி நிரந்தரஞ் செல்வத்து நீடூழி வாழ்வரிந் நீணிலத்தே.

இ-ள்: விதிக்கப்பட்ட திதிவாராதி சேர்ந்து வரும்சுபயோகத் திலே கர்ப்பாதானம் முதலாகச் சொல்லப்படும் சுபகர்மங்களை மக்களா ராய்ந்து செய்யின் கடுவைக்கிறைவனைச்சேர்ந்துள்ளாரைப்போல தனதா னியபூர்த்தியுண்டாய் சகலமங்கலங்களோடுங்கூடிச் சற்கீர்த்தியும் பூரணா யுளும் பொருந்திக் கிருகத்தராய் வாழ்வார்.

மிருத்துமுகூர்த்தம்

மந்தனைந்தில் புகரேழில் மால்பத்திற் சேயொன்பதில் அந்தண னாறெட்டி லாதித்த னிராகுவி ரார்தனில் சந்திர னாறெட்டில் சாரும் முகூர்த்தம்சாமுகூர்த்தமென்று மந்திரி நூன்முறை வல்லவ ரோதினர் வானுதலே.

இ-ள்: முகூர்த்தமாகக் கொள்ளப்படும் இலக்கினத்திற்கு ஐந்தில் சனிகின்றாலும் ஏழில் வெள்ளிகின்றாலும் பத்தில் புதன்கின் றாலும் ஒன்பதிற் செவ்வாய் நின்றாலும் ஆறாட்டில் வியாழன்கின்றா லும் பன்னிரண்டிற் சூரியன் இராகு நின்றாலும் ஆறு எட்டில் சந்திரன் நின்றாலும் மிருத்துமுகூர்த்தமென உணர்ந்து மேற்படி தானங்களில் நின்று மிருத்துக்குணத்தைக் கொடுக்கின்ற கிரகங்கள் மாறிநிற்கப் பொருத்தும் முகூர்த்தத்தை நிச்சயிக்கவேண்டியது.

சந்தானமணி

உதயத்து நாலிரண் டேழொன்ப தைந்தெட் டூராறு பத்திற் சிதைவிப்பர் நன்மையைத் தீயவர் மூன்று பதினொன்றிலே வதிவுற் றிடில்நல் முகூர்த்தம தாகும் மதியெட்சியும் புதையப் படுங்கதி ரும்பொருந் தாதென்பர் பொற்றொடியே.

இ-ள்: இலக்கினம் நாலு இரண்டு ஏழு ஒன்பது ஐந்து எட்டுப் பன்னிரண்டு பத்து என்ற ஸ்தானங்களிற் சூரியன் செவ்வாய் சனி ராகு கேது இருந்தால் முகூர்த்த நன்மை குன்றும். சொல்லப்பட்ட இத்தீ யவர் மூன்று ஆறுபதினொன்றில் நிற்க சுபர் உதயம் இரண்டு நாலு ஐந்து ஏழு ஒன்பது பத்துப் பதினொன்றில் நின்றால் சுபமுகூர்த்தமென்றுஞ் சிறப்புமாம்.

சந்தானமணி

ஆழ்கின்ற மெய்யுயிர்க் காறுடன் மூன்றுபன் னொன்றிறீ யோ, ரேழைந்து நான்கிரண் டொன்பது பத்தி னிசையினல் லோர், வாழ்வொன் றிடுங்கர்ப்பம் வாணுத லாய்ச்சொல்லின் வல் லவெல்லாஞ், சூழ்கின்ற கோள்வலி மெய்யுயி ரின்வலி கொண்டு சொல்லே.

இ-ள்: கர்ப்பாதான இலக்கினத்துக்கும் சந்திரவிலக்கினத்துக் கும் ஆறு மூன்று பதினொன்று இவ்விடங்களிற் பாபக்கிரகங்கணிற்பினும் ஏழு ஐந்து நாலு இரண்டொன்பதுபத்து இவ்விடங்களிற்சுபக்கிரகங்கணிற் பினும் கர்ப்பம் நன்றாகவளர்ந்து யாதொருதோஷங்களுமின்றியே பிறக் கும். இப்படி உதயம் இராசியென்ற ஈரிடத்துக்கும் கிரகங்களின் பெலம றிந்து சொல்லுவது.

சந்தானமணி

கற்க கசடறக் கற்றவை கற்றபின் நிற்க வதற்குத் தக.

அறம்பொரு ளின்பம்வீ டடைதல் நூற்பயனே.

நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு தாளுஞ் சிலம்புங் கனகமுந் தண்டையுஞ் சண்முகமுந் தோளுங் கடம்புங் நமக்குமுன் னேவந்து தோன்றிடினே.

சந்தானமணி முற்றிற்று. சுபம்.