2. பரபக்கம்
2.1
காப்பு ஒருகோட்டன் இருசெவியன் மும்மதத்தன் நால்வாய் ஐங் கரத்தன் ஆறு தருகோட்டம் பிறையிதழித் தாழ்சடையான் தரும்ஒரு வாரணத்தின் தாள்கள், உருகோட்டன் பொடும் வணங்கி ஒவாதே இரவுபகல் உணர்வோர் சிந்தைத், திருகோட்டும் அயன்திருமால் செல்வமும்ஒன் றோஎன்னைச் செய்யும் தேவே.
2.2
மங்கல வாழ்த்து சிவபெருமான் ஆதிநடு அந்தமிலா அளவில் சோதி அருள்ஞான மூர்த்தியாய் அகிலம் ஈன்ற, மாதினையும் ஒருபாகத் தடக்கி வானோர் மகுடசூ ளாமணியாய் வையம் போற்றப், பாதிமதி யணிபவளச் சடைகள் தாழப் படரொளிஅம் பலத்தாடும் பரனார் பாதத், தாதுமலி தாமரைகள் சிரத்தே வைத்துத் தளராத பேரன்பு வளரா நிற்பாம்.
2.3
சத்தி ஈசனருள் இச்சைஅறி வியற்றல் இன்பம். இலயமொடு போகமதி கார மாகித், தேசருவம் அருவுருவம் உருவ மாகித் தேவியுமாய்த் தேசமொடு செல்வ மாகிப், பேசரிய உயிரையெலாம் பெற்று நோக்கிப் பெரும்போகம் அவைய ளித்துப் பிறப்பினையும் ஒழித்திட்(டு), ஆசகலும் அடிய ருளத் தப்பனுட னிருக்கும் அன்னையருட் பாதமலர் சென்னி வைப்பாம்.
2.4
விநாயகக் கடவுள் இயம்புநூல் இருந்தமிழின் செய்யு ளாற்றல் இடையூறு தீர்ந்தினிது முடிய வேண்டித், தயங்குபேர் ஔ¤யாகி எங்கு நின்ற தலைவனார் மலைமாது தன்னோ டாடிப், பயந்த ஐங் கரநாற்றோள் முக்கண்இரு பாதப் பரியதொரு நீள் கோட்டுப் பெரிய பண்டிக், கயந்தன்அடிக் கமலங்கள் நயந்து போற்றிக் கருத்திலுற விருத்திமிகக் காதல் செய்வாம்.
2.5
சுப்பிரமணியக் கடவுள் அருமறைஆ கமம்அங்கம் அருங்கலைநூல் தெரிந்த அகத்தியனுக் கோத்துரைக்கும் அருட்குருவாங் குருளை, திருமறைமா முனிவர்முனி தேவர்கள்தந் தேவன் சிவனருள் சேர் திருமதலை தவநிலையோர் தெய்வம், பொரும்அறையார் கழல்வீரர் வீரன் கையில் பூநீர்கொண் டோவாது போற்றும் அடி யார்கள், கருமறையா வகையருளிக் கதிவழங்குங் கந் தன் கழலிணைக ளெஞ்சிரத்திற் கருத்தில் வைப்பாம்.
2.6
மெய்கண்டதேவ நாயனார் பண்டைமறை வண்டாற்றப் பசுந்தேன் ஞானம் பரிந் தொழுகச் சிவகந்தம் பரந்து நாறக், கண்டஇரு தயகமல முகைக ளௌ¢ளலாங் கண்திறப்பக் காசினிமேல் வந்தஅருட் கதிரோன், விண்டமலர்ப் பொழில்புடைசூழ் வெண்ணெய் மேவு மெய்கண்ட தேவன்மிகு சைவ நாதன், புண்டரிக மலர் தாழச் சிரத்தே வாழும் பொற்பாதம் எப்போதும் போற்றல் செய்வாம்.
2.7
அவையடக்கம் மாலயன்மா மறைஅறியா ஆதி மார்க்கம் வையகத்தா கமம்வேத மற்று முள்ள, நூலையெலாம் உணர்ந்திறைவன் கழலே நோக்கு நோன்மைஅருந் தவர்முன்யான் நுவலு மாறு, வேலையுலா வுந்திரைகள் வீசி யேறி வேறேழு மொன் றாகி நின்ற போது, சாலவுமான் குளப்பிடியிற் றங்கி நின்ற சலமதுதா னேரென்னுற் தன்மைத் தாலோ.
2.8
நீடுபுகழ் உலகுதனில் மைந்தர் மாதர் நேயமொடு தாம் பயந்த புதல்வர் வாயில், கூடுமொழி மழலையொடு குழறி ஒன்றும் குறிப்பரிதா யிடினுமிகக் குலவிப் போற்றி, மாடு நமக் கிதுவென்று கொண்டு வாழ்வர் அதுபோல மன்னு தமிழ்ப் புலமை யோரென், பாடுகவிக் குற்றங்கள் பாரார் இந்நூல் பாராட்டா நிற்பர் அருட் பரிசி னாலே.
2.9
நூற்சிறப்பு சுத்தவடி வியல்பாக வுடைய சோதி சொல்லியஆ கமங் களெலாஞ் சூழப் போயும், ஒத்துமுடி யுங்கூட ஓரி டத்தே ஒருபதிக்குப் பலநெறிக ளுளவா னாற்அ£ற், பித்தர்குண மதுபோல ஒருகா லுண்டாய்ப் பின்னொருகால் அறிவின்றிப் பேதை யோராய்க், கத்திடுமான் மாக்களுரைக் கட்டிற் பட்டோர் கனகவரை குறித்துப்போய்க் கடற்கே வீழ்வார்.
2.10
நூற்கதிகாரியும் நூல்வழியும் நூற்பெயரும் போதமிகுத் தோர்தொகுத்த பேதை மைக்கே பொருந்தினோ ரிவர்க்கன்றிக் கதிப்பாற் செல்ல, ஏதுநெறி யெனுமவர்கட் கறிய முன்னா ளிறைவனரு ணந்திதனக் கியம்ப நந்தி, கோதிலருட் சனற்குமா ரற்குக் கூறக் குவல யத்தின் அவ்வழியெங் குருநாதன் கொண்டு, தீதகல எமக் களித்த ஞான நூலைத் தேர்ந்துரைப்பன் சிவஞான சித்தி யென்றே.
2.11
நூற்கருத்து இறைவனையும் இறைவனால் இயம்பு நூலும் ஈண்டளவும் பொருளியல்பும் வேண்டுஞ் செய்தி, முறைமைகளும் பெத்தமொடு முத்தி யெல்லா மூதுலகில் எமக்கியன்ற முயற்சி யாலே, சிறையுலவும் புனல்நிலவித் தோன்றும் பேய்த்தேர்ச் செய்கைபோ லுண்டாய பொய்கொள் மார்க்கத் துறைபலவுங் கடாவிடையாற் சொல்லிப் போக்கித் துகள்தீர இந்நூலிற் சொல்ல கிற்பாம்.