3. 5.3 திருவரத்துறை - திருக்குறுந்தொகை
5.3.1
கடவுளை, கடலுள்(ள்) எழு நஞ்சு உண்ட
உடலு ளானையொப் பாரியி லாதவெம்
அடலு ளானை அரத்துறை மேவிய
சுடரு ளானைக்கண் டீர்நாந் தொழுவதே.
5.3.1
5.3.2
23 . கரும்பொப் பானைக் கரும்பினிற் கட்டியை
விரும்பொப் பானைவிண் ணோரு மறிகிலா
அரும்பொப் பானை அரத்துறை மேவிய
சுரும்பொப் பானைக்கண் டீர்நாந் தொழுவதே.
5.3.2
5.3.3
- ஏறொப் பானையெல் லாவுயிர்க் கும்மிறை
வேறொப் பானைவிண் ணோரு மறிகிலா
ஆறொப் பானை அரத்துறை மேவிய
ஊறொப் பானைக்கண் டீர்நாந் தொழுவதே.
5.3.3
5.3.4
- பரப்பொப் பானைப் பகலிருள் நன்னிலா
இரப்பொப் பானை இளமதி சூடிய
அரப்பொப் பானை அரத்துறை மேவிய
சுரப்பொப் பானைக்கண் டீர்நாந் தொழுவதே.
5.3.4
5.3.5
- நெய்யொப் பானைநெய் யிற்சுடர் போல்வதோர்
மெய்யொப் பானைவிண் ணோரு மறிகிலார்
ஐயொப் பானை அரத்துறை மேவிய
கையொப் பானைக்கண் டீர்நாந் தொழுவதே.
5.3.5
5.3.6
- நிதியொப் பானை நிதியிற் கிழவனை
விதியொப் பானைவிண் ணோரு மறிகிலார்
அதியொப் பானை அரத்துறை மேவிய
கதியொப் பானைக்கண் டீர்நாந் தொழுவதே.
5.3.6
5.3.7
- புனலொப் பானைப் பொருந்தலர் தம்மையே
மினலொப் பானைவிண் ணோரு மறிகிலார்
அனலொப் பானை அரத்துறை மேவிய
கனலொப் பானைக்கண் டீர்நாந் தொழுவதே.
5.3.7
5.3.8
- பொன்னொப் பானைப்பொன் னிற்சுடர் போல்வதோர்
மின்னொப் பானைவிண் ணோரு மறிகிலார்
அன்னொப் பானை அரத்துறை மேவிய
தன்னொப் பானைக்கண் டீர்நாந் தொழுவதே.
5.3.8
5.3.9
- காழி யானைக் கனவிடை யூருமெய்
வாழி யானைவல் லோருமென் றின்னவர்
ஆழி யான்பிர மற்கும் அரத்துறை
ஊழி யானைக்கண் டீர்நாந் தொழுவதே.
5.3.9
5.3.10
- கலையொப் பானைக்கற் றார்க்கோ ரமுதினை
மலையொப் பானை மணிமுடி யூன்றிய
அலையொப் பானை அரத்துறை மேவிய
நிலையொப் பானைக்கண் டீர்நாந் தொழுவதே.
5.3.10