Books / Thirumurai 6

41. 6.41 திருநெய்த்தானம் - திருத்தாண்டகம்

6.41.1

வகையெலா முடையாயும் நீயே யென்றும்
வான்கயிலை மேவினாய் நீயே யென்றும்
மிகையெலாம் மிக்காயும் நீயே யென்றும்
வெண்காடு மேவினாய் நீயே யென்றும்
பகையெலாந் தீர்த்தாண்டாய் நீயே யென்றும்
பாசூர் அமர்ந்தாயும் நீயே யென்றும்
திகையெலாந் தொழச்செல்வாய் நீயே யென்றும்
நின்றநெய்த் தானாவென் னெஞ்சு ளாயே.

6.41.1

6.41 — note

ஆர்த்த எனக்கன்பன் நீயே யென்றும் ஆதிக் கயிலாயன் நீயே யென்றுங் கூர்த்த நடமாடி நீயே யென்றுங் கோடிகா மேய குழகா வென்றும் பார்த்தற் கருள்செய்தாய் நீயே யென்றும் பழையனூர் மேவிய பண்பா வென்றுந் தீர்த்தன் சிவலோகன் நீயே யென்றும்