Books / Tirumandiram of Tirumūlar — Tamil Text

1. Tirumandiram of Tirumūlar

திருமந்திரம்

1

பொருளடக்கம் * பாயிரம் * முதலாம் தந்திரம் * இரண்டாம் தந்திரம் * மூன்றாம் தந்திரம் * நான்காம் தந்திரம் *ஐந்தாம் தந்திரம் *ஆறாம் தந்திரம் *ஏழாம் தந்திரம் * எட்டாம் தந்திரம் *ஒன்பதாம் தந்திரம்


2

பகுப்பு:தமிழ்நாடு பகுப்பு:அகரமுதலான வரிசையில் படைப்புகள் பகுப்பு:சமய இலக்கியம் பகுப்பு:மூலநூல் அட்டவணை இல்லா மின்னூல்கள்

ஆறாம் தந்திரம்

1

==ஆறாம் தந்திரம்== ===1.சிவகுருதரிசனம்=== 1573. பத்திப் பணித்துப் பரவும் அடிநல்கிச் சுத்த வுரையால் துரிசறச் சோதித்துச் சத்தும் அசத்தும் சதசத்தும் காட்டலால் சித்தம் இறையே சிவகுரு வாமே.


2

  1. பாசத்தைக் கூட்டியே கட்டுப் பறித்திட்டு நேசித்த காயம் விடுவித்து நேர்நேரே கூசற்ற முத்தியில் கூட்டலா நாட்டத்த தாசற்ற சற்குரு அம்பல மாமே.

3

  1. சித்திகள் எட்டொடும் திண்சிவ மாக்கிய சுத்தியும் எண்சத்தித் தூய்மையும் யோகத்துச் சத்தியும் மந்திர சாதக போதமும் பத்தியும் நாதன் அருளிற் பயிலுமே.

4

  1. எல்லா உலகிற்கும் அப்பாலோன் இப்பாலாய் நல்லார் உள்ளத்து மிக்கருள் நல்கலால் எல்லாரும் உய்யக்கொண் டிங்கே அளித்தலால் சொல்லார்ந்த நற்குருச் சுத்த சிவமே.

5

  1. தேவனும் சுத்த குருவும் உபாயத்துள் யாவையும் மூன்றா யுனக்கண் டுரையாலே மூவாப் பசுபாச மாற்றியே முத்திப்பால் யாவையும் நல்கும் குருபரன் அன்புற்றே.

6

  1. சுத்த சிவன்குரு வாய்வந்து தூய்மைசெய் தத்தனை நல்கருள் காணா அதிமூடர் பொய்த்தகு கண்ணான் நமரென்பர் புண்ணியர் அத்தன் இவனென் றடிபணி வாரே.

7

  1. உண்மையிற் பொய்மை ஒழித்தலும் உண்மைப்பார் திண்மையும் ஒண்மைச் சிவமாய அவ்வரன் வண்மையும் எட்டெட்டுச் சித்தி மயக்கமும் அண்ணல் அருளன்றி யாரறி வாரே.

8

  1. சிவனே சிவஞானி ஆதலால் சுத்த சிவனே யென அடி சேரவல் லார்க்கு நவமான தத்துவ நன்முத்தி நண்ணும் பவமான தின்றிப் பரலோக மாமே

9

  1. குருவே சிவமெனக் கூறினன் நந்தி குருவே சிவமென் பதுகுறித் தோரார் குருவே சிவனுமாய்க் கோனுமாய் நிற்கும் குருவே உரையுணர் வற்றதோர் கோவே.

10

  1. சித்தம் யாவையும் சிந்தித் திருந்திடும் அத்தன் உணர்த்துவ தாகும் அருளாலே சித்தம் யாவையும் திண்சிவ மானக்கால் அத்தனும் அவ்விடத் தேயமர்ந் தானே.

11

  1. தானந்தி சீர்மையுட் சந்தித்த சீர்வைத்த கோனந்தி எந்தை குறிப்பறி வாரில்லை வானந்தி யென்று மகிழும் ஒருவற்குத் தானந்தி யங்கித் தனிச்சுட ராமே.

12

  1. திருவாய சித்தியும் முத்தியும் சீர்மை மருளா தருளும் மயக்கறும் வாய்மைப் பொருளாய வேதாந்த போதமும் நாதன் உருவாய் அருளா விடிலோர ஒண்ணாதே

13

  1. பத்தியும் ஞானவை ராக்கிய மும்பர சித்திக்கு வித்தாம் சிவோகமே சேர்தலால் முத்தியின் ஞான முளைத்தலால் அம்முளை சத்தி அருள்தரில் தானெளி தாமே.

14

  1. இன்னெய்த வைத்ததோர் இன்பப் பிறப்பினை முன்னெய்த வைத்த முதல்வனே எம்இறை தன்னெய்துங் காலத்துத் தானே வெளிப்படும் மன்னெய்த வைத்த மனமது தானே.

15

  1. சிவமான ஞானம் தெளியவொண் சித்தி சிவமான ஞானம் தெளியவொண் முத்தி சிவமான ஞானம் சிவபரத்தே ஏகச் சிவமான ஞானம் சிவானந்தம் நல்குமே.

16

  1. அறிந்துணர்ந் தேனிவ் வகலிட முற்றும் செறிந்துணர்ந் தோதித் திருவருள் பெற்றேன் மறந்தொழிந் தேன்மதி மாண்டவர் வாழ்க்கை பிறிந்தொழிந் தேன்இப் பிறவியை நானே.

17

  1. தரிக்கின்ற பல்லுயிர்க் கெல்லாந் தலைவன் இருக்கின்ற தன்மையை ஏதும் உணரார் பிரிக்கின்ற இந்தப் பிணக்கறுத் தெல்லாம் கருக்கொண்ட ஈசனைக் கண்டுகொண் டேனே.

18

===2.திருவடிப்பேறு=== 1590. இசைந்தெழும் அன்பில் எழுந்த படியே பசைத்தெழும் ஈசரைப் பாசத்துள் ஏகச் சிவந்த குருவந்து சென்னிகை வைக்க உவந்த குருபதம் உள்ளத்து வந்ததே.


19

  1. தாடந்த போதே தலைதந்த எம்இறை வாடந்த ஞான வலியையுந் தந்திட்டு வீடந்த மின்றியே யாள்கென விட்டருட் பாடின் முடிவைத்துப் பார்வந்து தந்ததே.

20

  1. தானவ னாகிச் சொரூபத் துவந்திட்டு ஆனசொரூபங்கள் நான்கும் அகற்றின ஏனைய முத்திரை யீந்தாண்ட னன்நந்தி தானடி முற்சூட்டித் தாபித்த துண்மையே.

21

  1. உரையற் றுணர்வற் றுயிர்பர மற்றுத் திரையற்ற நீர்போல் சிவமாதல் தீர்த்துக் கரையற்ற சத்தாதி நான்கும் கடந்த சொரூபத் திருத்தினன் சொல்லிறந் தோமே.

22

  1. குரவன் உயிர்மூச் சொரூபமுங் கைக்கொண் டரிய பொருமுத் திரையாகக் கொண்டு பெரிய பிரானடி நந்தி பேச்சற் றுருகிட என்னையங் குய்யக்கொண் டானே.

23

  1. பேச்சற்ற இன்பத்துப் பேரானந் தத்திலே மாச்சற்ற என்னைச் சிவமாக்கி மாள்வித்துக் காச்சற்ற சோதி கடன்மூன்றும் கைக்கொண்டு வாச்ச புகழ்மாளத் தாள்தந்து மன்னுமே.

24

  1. இதயத்தும் நாட்டத்தும் என்றன் சிரத்தும் பதிவித்த பாதப் பராபரன் நந்தி கதிவைத்த வாறும்மெய் காட்டிய வாறும் விதிவைத்த வாறும் விளம்பவொண் ணாதே.

25

  1. திருவடி வைத்தென் சிரத்தருள் நோக்கிப் பெருவடி வைத்தந்த பேர்நந்தி தன்னைக் குருவடி விற்கண்ட கோனையெங் கோவைக் கருவழி வற்றிடக் கண்டுகொண் டேனே

26

  1. திருவடி ஞானம் சிவமாக்கு விக்கும் திருவடி ஞானம் சிவலோகம் சேர்க்கும் திருவடி ஞானம் சிறைமலம் மீட்கும் திருவடி ஞானம் திண்சித்தி முத்தியே.

27

  1. மேல்வைத்த வாறுசெய் யாவிடின் மேல்வினை மால்வைத்த சிந்தையை மாயம தாக்கிடும் பால்வைத்த சென்னி படரொளி வானவன் தாள்வைத்த வாறு தரிப்பித்த வாறே.

28

  1. கழலார் கமலத் திருவடி என்னும் நிழல்சேரப் பெற்றேன் நெடுமால் அறியா அழல்சேரும் அங்கியுள் ஆதிப் பிரானும் குழல்சேரும் என்னுயிர்க் கூடுங் குலைத்ததே.

29

  1. முடிமன்ன ராகின்மூ வுலகம தாள்வர் அடிமன்னர் இன்பத் தளவில்லை கேட்கின் முடிமன்ன ராய்நின்ற தேவர்கள் ஈசன் குடிமன்ன ராய்க்குற்ற மற்றுநின் றாரே.

30

  1. வைத்தேன் அடிகள் மனத்தினுள் ளேநான் பொய்த்தே எரியும் புலன்வழி போகாமல் எய்த்தேன் உழலும் இருவினை மாற்றிட்டு மெய்த்தேன் அறிந்தேனவ் வேதத்தின் அந்தமே

31

  1. அடிசார லாம்அண்ணல் பாதம் இரண்டும் முடிசார வைத்தனர் முன்னை முனிவர் படிசார்ந்த இன்பம் பழவடி வெள்ளக் குடிசார் நெறிகூடி நிற்பவர் கொள்கையே.

32

  1. மந்திர மாவதும் மாமருந்த தாவதும் தந்திர மாவதும் தானங்க ளாவதும் சுந்தர மாவதும் தூய்நெறி யாவதும் எந்தை பிரான்றன் இணையடி தானே.

33

===3.ஞாதுரு ஞான ஞேயம்=== 1605. நீங்காச் சிவானந்த ஞேயத்தே நின்றிடப் பாங்கான பாசம் படரா படரினும் ஆங்கார நீங்கி யதனிலை நிற்கவே நீங்கா அமுத நிலைபெற லாமே.


34

  1. ஞேயத்தே நின்றோர்கு ஞானாதி நின்றிடும் ஞேயத்தின் ஞாதுரு ஞேயத்தில் வீடாகும் ஞேயத்தின் ஞேயத்தை ஞேயத்தை யுற்றவர் ஆயத்தில் நின்ற அறிவறி வாரே.

35

  1. தானென் றவனென் றிரண்டாகுந் தத்துவந் தானென் றவனென் றிரண்டுந் தனிற்கண்டு தானென்ற பூவை யவனடி சாத்தினால் நானென் றவனென்கை நல்லதொன் றன்றே.

36

  1. வைச்சன வாறாறு மாற்றி யெனைவைத்து மெச்சப் பரன்றன் வியாத்துவ மேலிட்டு நிச்சய மாக்கிச் சிவமாக்கி ஞேயத்தால் அச்சங் கெடுத்தென்னை யாண்டனன் நந்தியே.

37

  1. முன்னை யறிவறி யாதஅம் மூடர்போல் பின்னை யறிவறி யாமையைப் பேதித்தான் தன்னை யறியப் பரனாக்கித் தற்சிவத் தென்னை யறிவித் திருந்தனன் நந்தியே.

38

  1. காணாத கண்ணுடன் கேளாத கேள்வியும் கோணாத போகமுங் கூடாத கூட்டமும் நாணாத நாணமும் நாதாந்த போதமுங் காணா யெனவந்து காட்டினன் நந்தியே.

39

  1. மோனங்கை வந்தோர்க்கு முத்தியுங் கைகூடும் மோனங்கை வந்தோர்க்குச் சித்தியும் முன்நிற்கும் மோனங்கை வந்தூமை யாமொழி முற்றுங்காண் மோனங்கை வந்தைங் கருமமும் முன்னுமே.

40

  1. முத்திரை மூன்றின் முடிந்தது மூன்றின்பால் வைத்த கலைகால் நான்மடங் கால்மாற்றி உய்த்தவத் தானந்தத் தொண்குரு பாதத்தே பெத்த மறுத்தோர் பிறந்திற வாரே

41

  1. மேலைச் சொரூபங்கள் மூன்று மிகுசத்தி பாலித்த முத்திரை பற்றும் பரஞானி ஆலித்த நட்டமே ஞேயம் புகுந்தற்ற மூலச் சொருபன் மொழிஞா துருவனே.

42

===4.துறவு=== 1614. இறப்பும் பிறப்பும் இருமையும் நீங்கித் துறக்குந் தவங்கண்ட சோதிப் பிரானை மறப்பில ராய்நித்தம் வாய்மொழி வார்கட் கறப்பதி காட்டும் அமரர் பிரானே.


43

  1. பிறந்தும் இறந்தும்பல் பேதைமை யாலே மறந்து மலவிருள் நீங்க மறைந்து சிறந்த சிவனருள் சேர்பரு வத்துத் துறந்த வுயிர்க்குச் சுடரொளி யாமே.

44

  1. அறவன் பிறப்பிலி யாரும் இலாதான் உறைவது காட்டகம் உண்பது பிச்சை துறவனுங் கண்டீர் துறந்தவர் தம்மைப் பிறவி யறுத்திடும் பித்தன்கண் டீரே.

45

  1. நெறியைப் படைத்தான் நெருஞ்சில் படைத்தான் நெறியில் வழுவின் நெருஞ்சில் முட்பாயும் நெறியில் வழுவா தியங்க வல்லார்க்கு நெறியின் நெருஞ்சில்முட் பாயகி லாவே

46

  1. கேடுங் கடமையுங் கேட்டுவந் தைவரும் நாடி வளைந்தது நான்கட வேனலேன் ஆடல் விடையுடை அண்ணல் திருவடி கூடுந் தவஞ்செய்த கொள்கையன் றானே.

47

  1. உழவன் உழவுற வானம் வழங்க உழவன் உழவினிற் பூத்த குவளை உழவன் உழத்தியவர் கண்ணொக்கும் என்றிட் டுழவன் அதனை யுழவொழிந் தானே.

48

  1. மேல்துறந் தண்ணல் விளங்கொளி கூற்றுவன் நாள்துறந் தார்க்கவன் நண்ப னவாவிலி கார்துறந் தாக்கவன் கண்ணுத லாய்நிற்கும் பார்துறந் தார்க்கே பதஞ்செய லாமே.

49

  1. நாகமும் ஒன்று படம்ஐந்து நாலது போகமுட் புற்றிற் பொருந்தி நிறைந்தது ஆக மிரண்டும் படம்விரித் தாட்டொழிந் தேகப் படஞ்செய் துடம்பிட மாமே.

50

  1. அகன்றார் வழிமுதல் ஆதிப் பிரானும் இவன்றா னெனநின் றெளியனும் அல்லன் சிவன்றான் பலபல சீவனு மாகும் நயன்றான் வரும்வழி நாமறி யோமே.

51

  1. தூம்பு திறந்தன ஓன்பது வாய்தலும் ஆம்பற் குழலியின் அஞ்சுழிப் பட்டது வேம்பேறி நோக்கினன் மீகாமன் கூரையிற் கூம்பேறிக் கோயிலிற் பூக்கின்ற வாறே

52

===5.தவம்=== 1624. ஒடுங்கி நிலைபெற்ற வுத்தமர் உள்ளம் நடுங்குவ தில்லை நமனுமங் கில்லை இடும்பையும் இல்லை இராப்பகல் இல்லை படும்பயன் இல்லை பற்றுவிட் டோர்க்கே


53

  1. எம்மாருயிரும் இருநிலத் தோற்றமுஞ் செம்மா தவத்தின் செயலின் பெருமையும் அம்மான் திருவருட் பெற்றவர்க் கல்லால் இம்மா தவத்தின் இயல்பறி யாரே.

54

  1. பிறப்பறி யார்பல பிச்சைசெய் மாந்தர் சிறப்பொடு வேண்டிய செல்வம் பெறுவர் மறப்பில ராகிய மாதவஞ் செய்வார் பிறப்பினை நீக்கும் பெருமைபெற் றாரே.

55

  1. இருந்து வருந்தி எழற்றவஞ் செய்யும் பெருந்தன்மை யாளரைப் பேதிக்க வென்றே இருந்திந் திரனே யெவரே வரினுந் திருந்துந்தஞ் சிந்தை சிவனவன் பாலே.

56

  1. கரத்துங் கரத்திலன் கண்ணுக்குந் தோன்றான் பரந்த சடையன் பசும்பொன் நிறத்தன் அருந்தவர்க் கல்லால் அணுகலு மாகான் விரைந்து தொழப்படும் வெண்மதி யானே

57

  1. பின்னெய்த வைத்ததோர் இன்பப் பிறப்பினை முன்னெய்த வைத்த முதல்வனை எம்மிறை தன்னெய்துங் காலத்துத் தானே வெளிப்படும் மன்னெய்த வைத்த மனமது தானே.

58

  1. அமைச்சரும் ஆனைக் குழாமும் அரசும் பகைத்தெழும் பூசலுட் பட்டார் நடுவே அமைத்ததோர் ஞானமும் ஆத்தமும் நோக்கி இமைத்தழி யாதிருந் தார்தவத் தாரே.

59

  1. சாத்திரம் ஓதுஞ் சதுர்களை விட்டுநீர் மாத்திரைப் போது மறித்துள்ளே நோக்குமின் பார்த்தவப் பார்வை பசுதரத் தாணிபோல் ஆர்த்த பிறவி அகலவிட் டோடுமே

60

  1. தவம்வேண்டு ஞானத் தலைப்பட வேண்டில் தவம்வேண்டா ஞான சமாதிகை கூடில் தவம்வேண்டா மச்சகசன் மார்க்கத் தோர்க்குத் தவம்வேண்டா மாற்றத் தனையறி யாரே.

61

===6.தவ நிந்தை=== 1633. ஓதலும் வேண்டாம் உயிர்க்குயி ருள்ளுற்றாற் காதலும் வேண்டாமெய்க் காய மிடங்கண்டாற் சாதலும் வேண்டாஞ் சமாதிகை கூடினால் போதலும் வேண்டாம் புலன்வழி போகார்க்கே.


62

  1. கத்தவும் வேண்டாங் கருத்தறிந் தாறினாற் சத்தமும் வேண்டாஞ் சமாதிகை கூடினால் சுத்தமும் வேண்டாத் துடக்கற்று நிற்றலால் சித்தமும் வேண்டாஞ் செயலற் றிருக்கிலே.

63

  1. விளைவறி வார்பண்டை மெய்த்தவஞ் செய்வார் விளைவறி வார்பண்டை மெய்யுரை செய்வார் விளைவறி வார்பண்டை மெய்யறஞ் செய்வார் விளைவறி வார்விண்ணின் மண்ணின்மிக் காரே.

64

  1. கூடித் தவஞ்செய்து கண்டேன் குரைகழல் தேடித் தவஞ்செய்து கண்டேன் சிவகதி வாடித் தவஞ்செய்வ தேதவம் இவைகளைத் தூடிற் பலவுல கோரேத் தவரே.

65

  1. மனத்துறை மாகடல் ஏழுங் கைநீந்தித் தவத்திடை யாளர்தஞ் சார்வத்து வந்தார் பவத்திடை யாளர் அவர்பணி கேட்கின் முகத்திடை நந்தியை முந்தலு மாமே.

66

  1. மனத்திடை நின்ற மதிவாள் உருவி இனத்திடை நீக்கி இரண்டற வீர்த்துப் புனத்திடை அஞ்சும் போகாமல் மறித்தால் தவத்திடை யாறொளி தன்னொளி யாமே.

67

  1. ஒத்து மிகவு நிற்றானை யுரைப்பது பத்தி கொடுக்கும் பணிந்தடி யார்தொழ முத்தி கொடுக்கும் முனிவ னெனும்பதஞ் சத்தான செய்வது தான்தவந் தானே.

68

  1. இலைதொட்டுப் பூப்பறித் தெந்தைக்கென் றெண்ணி மலர்தொட்டுக் கொண்டேன் வரும்புனல் காணேன் தலைதொட்ட நூல்கண்டு தாழ்ந்ததென் உள்ளத் தலைதொட்டுக் கண்டேன் தவங்கண்ட வாறே.

69

  1. படர்சடை மாதவம் பற்றிய பத்தர்க் கிடரடை யாவண்ணம் ஈசன் அருளும் இடரடை செய்தவர் மெய்த்தவ நோக்கில் உடரடை செய்வ தொருமனத் தாமே.

70

  1. ஆற்றிற் கிடந்த முதலைகண் டஞ்சிப்போய் ஈற்றுக் கரடிக் கெதிர்ப்பட்ட தன்னொக்கும் நோற்றுத் தவஞ்செய்யார் நூலறி யாதவர் சோற்றுக்கு நின்று சுழல்கின்ற வாறே.

71

  1. பழுக்கின்ற வாறும் பழமுண்ணு மாறுங் குழக்கன்று துள்ளியக் கோணியைப் புல்காக் குழக்கன்று கொட்டிலில் கட்டவல் லார்க்குள் இழுக்காது நெஞ்சத் திடமொன்று மாமே.

72

  1. சித்தஞ் சிவமாகச் செய்தவம் வேண்டாவால் சித்தஞ் சிவானந்தஞ் சேர்ந்தோர் உறவுண்டால் சித்தஞ் சிவமாக வேசித்தி முத்தியாஞ் சித்தஞ் சிவமாதல் செய்தவப் பேறே.

73

===7.அருளுடைமையின் ஞானம் வருதல்=== 1645. பிரானருள் உண்டெனில் உண்டுநற் செல்வம் பிரானருள் உண்டெனில் உண்டுநன் ஞானம் பிரானரு ளிற்பெருந் தன்மையும் உண்டு பிரானருள் ளிற்பெருந் தெய்வமு மாமே.


74

  1. தமிழ்மண் டலம்ஐந்தும் தாவிய ஞானம் உமிழ்வது போல உலகந் திரிவார் அவிழு மனமும்எம் ஆதி யறிவும் தமிழ்மண் டலம்ஐந்துந் தத்துவ மாமே.

75

  1. புண்ணிய பாவம் இரண்டுள பூமியில் நண்ணும் பொழுதறி வார்சில ஞானிகள் எண்ணி இரண்டையும் வேரறுத் தப்புறத் தண்ணல் இருப்பிடம் ஆய்ந்துகொள் வீரே.

76

  1. முன்னின் றருளு முடிகின்ற காலத்து நன்னின் றுலகில் நடுவுயி ராய்நிற்கும் பின்னின் றருளும் பிறவியை நீக்கிடும் முன்னின் றெனக்கொரு முத்திதந் தானே.

77

  1. சிவனரு ளாற்சிலர் தேவரு மாவர் சிவனரு ளாற்சிலர் தெய்வத்தோ டொப்பர் சிவனருளால்வினை சேரகி லாமை சிவனருள் கூடின் அச் சிவலோக மாமே.

78

  1. புண்ணியன் எந்தை புனிதன் இணையடி நண்ணி விளக்கென ஞானம் விளைந்தது மண்ணவ ராவதும் வானவ ராவதும் அண்ணல் இறைவன் அருள்பெற்ற போதே.

79

  1. காயத்தே ரேறி மனப்பாகன் கைகூட்ட மாயத்தே ரேறி மயங்கு மவையுணர் நேயத்தே ரேறி நிமலன் அருள்பெற்றால் ஆயத்தே ரேறி யவனிவன் ஆமே.

80

  1. அவ்வுல கத்தே பிறக்கில் உடலொடும் அவ்வுல கத்தே யருந்தவர் நாடுவர் அவ்வுல கத்தே யரனடி கூடுவர் அவ்வுல கத்தே யருள்பெறு வாரே.

81

  1. கதிர்கண்ட காந்தவ் கனலின் வடிவாம் மதிகண்ட காந்தம் மணிநீர் வடிவாம் சதிகொண்ட சாக்கி யெரியின் வடிவாம் எரிகொண்ட ஈசன் எழிலிவடி வாமே.

82

  1. நாடும் உறவுங் கலந்தெங்கள் நந்தியைத் தேடுவன் தேடிச் சிவபெரு மான்என்று கூடுவன் கூடிக் குரைகழற் கேசெல்ல வீடு மளவும் விடுகின் றிலேனே.

83

===8.அவவேடம்=== 1655. ஆடம் பரங்கொண் டடிசிலுண் பான்பயன் வேடங்கள் கொண்டு வெருட்டிடும் பேதைகாள் ஆடியும் பாடியும் அழுதும் அரற்றியுந் தேடியுங் காணீர் சிவனவன் தாள்களே.


84

  1. ஞானமில் லார்வேடம் பூண்டிந்த நாட்டிடை ஈனம தேசெய் திரந்துண் டிருப்பினும் மான நலங்கெடும் அப்புவி யாதலால் ஈனவர் வேடங் கழிப்பித்தல் இன்பமே.

85

  1. இன்பமுந் துன்பமும் நாட்டா ரிடத்துள்ள நன்செயல் புஞ்செய லாலந்த நாட்டிற்காம் என்ப இறைநாடி நாடோறும் நாட்டினின் மன்பதை செப்பஞ் செயின்வையம் வாழுமே.

86

  1. இழிகுலத் தோர்வேடம் பூண்பர்மே லெய்த வழிகுலத் தோர்வேடம் பூண்பர்தே வாகப் பழிகுலத் தாகிய பாழ்சண்ட ரானார் கழிகுலத் தோர்கள் களையப்பட் டாரே.

87

  1. பொய்த்தவஞ் செய்வார் புகுவர் நரகத்துப் பொய்த்தவஞ் செய்தவர் புண்ணிய ராகார் பொய்த்தவம் மெய்த்தவம் போகத்துட் போக்கியஞ் சத்திய ஞானத்தால் தங்குந் தவங்களே.

88

  1. பொய்வேடம் பூண்பர் பொசித்தல் பயனாக மெய்வேடம் பூண்போர் மிகுபிச்சை கைக்கொள்வர் பொய்வேடம் மெய்வேடம் போலவே பூணினும் உய்வேட மாகும் உணர்ந்தறிந் தோர்க்கே.

89

===9.தவவேடம்=== 1661. தவமிக் கவரே தலையான வேடர் அவமிக் கவரே யதிகொலை வேடர் அவமிக் கவர்வேடத் தாகாரவ் வேடந் தவமிக் கவர்க்கன்றித் தாங்கவொண் ணாதே.


90

  1. பூதி யணிவது சாதன மாதியிற் காதணி தாமிர குண்டலங் கண்டிகை ஓதி யவர்க்கும் உருத்திர சாதனத் தீதில் சிவயோகி சாதனந் தேரிலே.

91

  1. யோகிக் கிடுமது வுட்கட்டுக் கஞ்சுளி தோகைக்குப் பாசத்துப் சுற்றுஞ் சடையதொன் றாகத்து நீறணி யங்கக் கபாலஞ் சீகத்த மாத்திரை திண்பிரம் பாகுமே.

92

  1. காதணி குண்டலங் கண்டிகை நாதமும் ஊதுநற் சங்கும் உயர்கட்டி கப்பரை ஏதமில் பாதுகம் யோகாந்த மாதனம் ஏதமில் யோகபட் டந்தண்டம் ஈரைந்தே.

93

===10.திருநீறு=== 1665. நூலுஞ் சிகையும் உணராநின் மூடர்கள் நூலது வேதாந்தம் நுண்சிகை ஞானமாம் பாலொன்றும் அந்தணர் பார்ப்பார் பரமுயிர் ஓரொன் றிரண்டெனில் ஓங்காரம் ஓதிலே.


94

  1. கங்காளன் பூசுங் கவசத் திருநீற்றை மங்காமற் பூசி மகிழ்வீரே யாமாகில் தங்கா வினைகளுஞ் சாருஞ் சிவகதி சிங்கார மான திருவடி சேர்விரே.

95

  1. அரசுட னாலத்தி யாகும் அக் காரம் விரவு கனலில் வியனுரு மாறி நிரவயன் நின்மலன் தான்பெற்ற நீதர் உருவம் பிரமம் உயர்குல மாகுமே

96

===11.ஞானவேடம்=== 1668. ஞானமி லார்வேடம் பூண்டும் நரகத்தார் ஞானமுள் ளார்வேடம் இன்றெனின் நன்முத்தர் ஞான முனதாக வேண்டுவோர் நக்கன்பால் ஞான முளவேட நண்ணிநிற் பாரே.


97

  1. புன்ஞானத் தோர்வேடம் பூண்டும் பயனில்லை நன்ஞானத் தோர்வேடம் பூணார் அருள்நண்ணித் துன்ஞானத் தோர்சம யத்துரி சுள்ளோர் பின்ஞானத் தோரொன்றும் பேசகில் லாரே.

98

  1. சிவஞானி கட்கும் சிவயோகி கட்கும் அவமான சாதனம் ஆகாது தேரின் நவமா மவர்க்கது சாதன நான்கும் உவமான மில்பொருள் உள்ளுற லாமே.

99

  1. கத்தித் திரிவர் கழுவடி நாய்போற் கொத்தித் திரிவர் குரக்களி ஞானிகள் ஒத்துப் பொறியும் உடலும் இருக்கவே செத்துத் திரிவர் சிவஞானி யோர்களே.

100

  1. அடியா ரவரே யடியா ரலாதார் அடியாரு மாகாரவ் வேடமு மாகா அடியார் சிவஞான மானது பெற்றோர் அடியா ரலாதார் அடியார்கள் அன்றே.

101

  1. ஞானிக்குச் சுந்தர வேடமும் நல்லவாந் தானுற்ற வேடமுந் தற்சிவ யோகமே ஆனவவ் வேடம் அருள்ஞான சாதனம் ஆனது மாமொன்றும் ஆகா தவனுக்கே.

102

  1. ஞானத்தி னாற்பத நண்ணுஞ் சிவஞானி தானத்தில் வைத்த தனியால யத்தனாம் மோனத்த னாதலின் முத்தனாஞ் சித்தனாம் ஏனைத் தவசி இவனென லாகுமே.

103

  1. தானற்ற தன்மையுந் தானவ னாதலும் ஏனைய வச்சிவ மான இயற்கையுந் தானுறு சாதக முத்திரை சாத்தலும் ஏனவும் நந்தி பதமுத்தி பெற்றதே.

104

===12.சிவவேடம்=== 1676. அருளால் அரனுக் கடிமைய தாகிப் பொருளாந் தனதுடற் பொற்பதி நாடி இருளான நின்றி யிருஞ்செய லற்றோர் தெருளாம் அடிமைச் சிவவேடத் தோரே.


105

  1. உடலில் துவக்கிய வேடம் உயிர்க்காகா உடல்கழன் றால்வேடம் உடனே கழலும் உடலுயிர் உண்மையென் றோர்ந்துகொள் ளாதார் கடலில் அகப்பட்ட கட்டையொத் தாரே.

106

  1. மயலற் றிருளற்று மாமன மற்றுக் கயலுற்ற கண்ணியர் கையிணக் கற்றுத் தயலற் றவரோடுந் தாமே தாமாகிச் செயலற் றிருப்பர் சிவவேடத் தாரே.

107

  1. ஓடுங் குதிரைக் குசைதிண்ணம் பற்றுமின் வேடங்கொண் டென்செய்வீர் வேண்டா மனிதரே நாடுமின் நந்தியை நம்பெரு மான்தன்னைத் தேடுமின் இப்பொருள் சென்றெய்த லாமே.

108

===13.அபக்குவன்=== 1680. குருட்டினை நீக்குங் குருவினைக் கொள்ளார் குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வார் குருடுங் குருடுங் குருட்டாட்டம் ஆடிக் குருடுங் குருடும் குழிவிழு மாறே


109

  1. மனத்தில் எழுந்ததோர் மாயக்கண் ணாடி நினைப்பின் அதனின் நிழலையுங் காணார் வினைப்பயன் போக விளக்கியுங் கொள்ளார் புறக்கடை இச்சித்துப் போகின்ற வாறே.

110

  1. ஏயெனில் என்னென மாட்டார் பிரசைகள் வாய்முலை பெய்ய மதுரநின் றூறிடுத் தாய்முலை யாவ தறியார் தமருளோர் ஊனிலை செய்யும் உருவிலி தானே

111

  1. வாயொன்று சொல்லி மனமொன்று சிந்தித்து நீயொன்று செய்யல் உறுதி நெடுந்தகாய் தீயென்றிங் குன்னைத் தெளிவன் தெளிந்தபின் பேயென்றிங் கென்னைப் பிறர்தெளி யாரே.

112

  1. பஞ்சத் துரோகத்துப் பாதகர் தம்மை அஞ்சச் சமயத்தோர் வேந்தன் அருந்தண்டம் விஞ்சச்செய் திப்புவி வேறே விடாவிடின் பஞ்சத்து ளாய்ப்புவி முற்றும்பா ழாகுமே.

113

  1. தவத்திடை நின்றவர் தாமுண்ணுங் கன்மஞ் சிவத்திடை நின்றது தேவர் அறியார் தவத்திடை நின்றறி யாதவர் எல்லாம் பவத்திடை நின்றதோர் பாடது வாமே.

114

  1. கன்றலுங் கருதலுங் கருமஞ் செய்தலும் தின்றலுஞ் சுவைத்தலுந் தீமை செய்தலும் பின்றலும் பிறங்கலும் பெருமை கூறலும் என்றிவை இறைபால் இயற்கை அல்லவே.

115

  1. விடிய தறியார் வெளிகாண மாட்டார் விடியில் வெளியில் விழிக்கவு மாட்டார் கடியதோ ருண்ணிமை கட்டுமின் காண்மின் விடியாமை காக்கும் விளக்கது வாமே.

116

  1. வைத்த பசுபாச மாற்று நெறிவைகிப் பெத்த மறமுத்த னாகிப் பிறழ்வுற்றுத் தத்துவ முன்னித் தலைப்படா தவ்வாறு பித்தான சீடனுக் கீயப் பெறாதானே.

117

  1. மன்னும் மலர்ஐந்தும் மாற்றும் வகையோரான் துன்னிய காமாதி தோயுந் தொழில்நீங்கான் பின்னிய பொய்யன் பிறப்பிறப் பஞ்சாதான் அன்னிய னாவன் அசற்சீட னாமே.

118

===14.பக்குவன்=== 1690. தொழிலறி வாளர் சுருதிகண் ணாகப் பழுதறி யாத பரம குருவை வழியறி வார்நல் வழியறி வாளர் அழிவறி வார்மற்றை யல்லா தவரே.


119

  1. பதைத்தொழிந் தேன்பர மாவுனை நாடி அகைத்தொழிந் தேன்இனி யாரொடும் கூடேன் சிதைக்குடி யேன்வினை சிந்தனை தீர உதைத்துடை யாயுகந் தாண்டரு ளாயே.

120

  1. பதைக்கின்ற போதே பரமென்னும் வித்தை விதைக்கின்ற வித்தினை மேல்நின்று நோக்கிச் சிதைக்கின்ற சிந்தையை செவ்வே நிறுத்தி இசைக்கின்ற அன்பருக் கீயலு மாமே.

121

  1. கொள்ளினும் நல்ல குருவினைக் கொள்ளுக உள்ள பொருளுடல் ஆவி யுடன்ஈக எள்ளத் தனையும் இடைவிடா தேநின்று தெள்ளி யறியச் சிவபதந் தானே.

122

  1. சோதி விசாகந் தொடர்ந்திரு தேள்நண்டு ஓதிய நாளே உணர்வது தானென்று நீதியுள் நேர்மை நினைந்தவர்க் கல்லது ஆதியும் ஏதும் அறியகில் லானே.

123

  1. தொழிலார மாமணித் தூய்தான சிந்தை எழிலால் இறைவன் இடங்கொண்ட போதே விழலார் விறலாம் வினையது போகக் கழலார் திருவடி கண்டரு ளாமே.

124

  1. சாத்திக னாய்ப்பர தத்துவந் தானுன்னி ஆத்திக பேத நெறிதோற்ற மாகிய ஆர்த்த பிறவியி னஞ்சி யறநெறி சாத்தவல் லானவன் சற்சீடனாமே.

125

  1. சத்தும் அசத்துமெவ் வாறெனத் தானுன்னிச் சித்தை யுருக்கிச் சிவனருள் கைகாட்டப் பத்தியின் ஞானம் பெறப்பணிந் தானந்தச் சத்தியின் இச்சை தகுவோன்சற் சீடனே.

126

  1. அடிவைத் தருளுதி யாசானின் றுன்னா வடிவைத்த மாமுடி மாயப் பிறவி அடிவைத்த காய அருட்சத்தி யாலே அடிபெற்று ஞானத்த னாசற்று ளோனே.

127

  1. சீராரு ஞானத்தின் இச்சை செலச்செல்ல வாராத காதல் குருபரன் பாலாகச் சாராத சாதக நான்குந்தன் பாலுற்றோன் ஆராயும் ஞானத்த னாமடி வைக்கவே.

128

  1. உணர்ந்து மதிபக் குவர்க்கே யுணர்த்தி இணக்கிற் பராபரத் தொல்லையுள் இட்டு குணக்கொடு தெற்குத் தாபச்சி மங்கொண் டுணர்த்துமி னாவுடை யான்தன்னை யுன்னியே.

129

  1. இறையடி தாழ்ந்தை வணக்கமும் எய்திக் குறையது கூறிக் குணங்கொண்டு போற்றச் சிறையுடல் நீயறக் காட்டிச் சிவத்தோ டறிவுக் கறிவிப்போன் சன்மார்க்கி யாமே.

130

  1. வேட்கை விடுநெறி வேதாந்த மாதலால் வாழ்க்கைப் புலன்வழி மாற்றிச்சித் தாந்தத்து வேட்கை விடுமிக்க வேதாந்தி பாதமே தாழ்க்குந் தலையினோன் சற்சீடானமே.

131

  1. சற்குணம் வாய்மை தயாவிவே கந்தண்மை சற்குரு பாதமே சாயைபோல் நீங்காமே சிற்பர ஞானந் தெளியத் தெளிவோர்தல் அற்புத மேதோன்ற லாகுஞ்சற் சீடனே.

இரண்டாந் தந்திரம்

1

#வழிமாற்று திருமந்திரம்/இரண்டாம் தந்திரம்

இரண்டாம் தந்திரம்

1

==இரண்டாம் தந்திரம்== ===1.அகத்தியம்=== 337. நடுவுநில் லாதிவ் வுலகஞ் சா஢ந்து கெடுகின்ற தெம்பெரு மானென்ன ஈசன் நடுவுள அங்கி அகத்திய நீபோய் முடுகிய வையத்து முன்னிரென் றானே.


2

  1. அங்கி உதயம் வளர்க்கும் அகத்தியன் அங்கி உதயஞ்செய் மேல்பா லவனொடு மங்கி உதயஞ்செய் வடபால் தவமுனி எங்கும் வளங்கொள் இலங்கொளி தானே.

3

===2.பதிவலியில் வீரட்டம்=== 339. கருத்துறை அந்தகன் தன்போல் அசுரன் வரத்தின் உலகத் துயிர்க்களை எல்லாம் வருத்தஞ்செய் தானென்று வானவர் வேண்டக் குருத்துயர் சூலங்கைக் கொண்டுகொன் றானே.


4

  1. கொலையிற் பிழைத்த பிரசா பதியைத் தலையைத் தடிந்திட்டுத் தானங்கி யிட்டு நிலையுல குக்கிவன் வேண்டுமென் றெண்ணித் தலையை யார்ந்திட்டுச் சந்திசெய் தானே.

5

  1. எங்கும் பரந்தும் இருநிலந் தாங்கியுந் தங்கும் படித்தவன் தாளுணர் தேவர்கள் பொங்கும் சினத்துள் அயன்தலை முன்னற அங்குஅச் சுதனை உதிரங்கொண் டானே.

6

  1. எங்குங் கலந்துமென் உள்ளத் தெழுகின்ற அங்க முதல்வன் அருமறை யோகிபாற் பொங்குன்ய் சலந்தரன் போர்ச்செய்ய நீர்மையின் அங்கு விரற்குறித் தாழிசெய் தானே.

7

  1. அப்பணி செஞ்சடை ஆதி புராதனன் முப்புரம் செற்றனன் என்பர்கள் மூடர்க்கள் முப்புர மாவது மும்மல காரியம் அப்புரம் எய்தமை யாரறி வாரே.

8

  1. முத்தீ கொளுவி முழங்கொ஢ வேள்வியுள் அத்தி யுரியர னாவ தறிகிலர் சத்தி கருதிய தாம்பல தேவரும் அத்தீயின் உள்ளெழுந் தன்று கொலையே.

9

  1. மூலத் துவாரத்து மூளும் ஒருவனை மேலைத் துவாரத்து மேலுற நோக்கிமுற் காலுற்றுக் காலனைக் காய்ந்தங்கி யோகமாய் ஞாலக் கடவூர் நலமாய் இருந்ததே.

10

  1. இருந்த மனத்தை இசைய இருத்திப் பொருந்தி இலிங்க வழியது போக்கித் திருந்திய காமன் செயலழித் தங்கண் அருந்தவ யோகங் கொறுக்கை அமர்ந்ததே.

11

===3.இலிங்க புராணம்=== 347. அடிசேர்வன் என்னஎம் ஆதியை நோக்கி முடிசேர் மலைமக னார்மக ளாகித் திடமார் தவஞ்செய்து தேவர் அறியப் படியார அர்ச்சித்துப் பத்திசெய் தாளே.


12

  1. திரிகின்ற முப்புரஞ் செற்ற பிரானை அரியனென் றெண்ணி அயர்வுற வேண்டா புரிவுடை யாளர்க்குப் பொய்யலன் ஈசன் பரிவொடு நின்று பரிசறி வானே.

13

  1. ஆழி வலங்கொண் டயன்மால் இருவரும் ஊழி வலஞ்செய்ய ஒண்சுட ராதியும் ஆழி கொடுத்தனன் அச்சுதற்க் கவ்வழி வாழி பிரமற்கும் வாள்கொடுத் தானே.

14

  1. தாங்கி இருபது தோளுந் தடவரை ஓங்க எடுத்தவன் ஒப்பில் பெருவலி ஆங்கு நொ஢த்தம ராவென் றழைத்தபின் நீங்கா அருள்செய்தான் நின்மலன் தானே.

15

  1. உறுவ தறிதண்டி ஒண்மணற் கூட்டி அறுவகை ஆன்ஐந்தும் ஆட்டத்தன் தாதை செறுவகை செய்து சிதைப்ப முனிந்து மறுமழு வால்வெட்டி மாலைபெற் றானே.

16

  1. ஓடிவந் தெல்லாம் ஒருங்கிய தேவர்கள் வாடி முகமும் வருத்தத்துத் தாஞ்சென்று நாடி இறைவா நமேன்று கும்பிட ஈடில் புகழோன் எழுகவென் றானே.

17

===4.தக்கன் வேள்வி=== 353. தந்தைபி ரான்வெகுண் டாந்தக்கன் வேள்வியை வெந்தழல் ஊடே புறப்பட விண்ணவர் முந்திய பூசை முடியார் முறைகெட்டுச் சிந்தினர் அண்ணல் சினஞ்செய்த போதே.


18

  1. சந்தி செயக்கண் டெழுகின் றா஢தானும் எந்தை யிவனல்ல யாமே உலகினிற் பந்தஞ்செய் பாசத்து வீழ்ந்து தவஞ்செய்ய அந்தமி லானும் அருள்புரிந் தானே.

19

  1. அப்பரி சேயய நார்ப்பதி வேள்வியுள் அப்பரி சேயங்கி அதிசய மாகிலும் அப்பரி சேயது நீர்மையை யுள்கலந் தப்பரி சேசிவன் ஆலிக்கின் றானே.

20

  1. அப்பரி சேஅயன் மால்முதல் தேவர்கள் அப்பரி சேயவ ராகிய காரணம் அப்பரி சங்கி யுளநாளும் உள்ளிட் டப்பரி சாகி அலர்ந்திருந் தானே.

21

  1. அலர்ந்திருந் தானென் றமரர் துதிப்பக் குலந்தரும் கீழங்கி கோளுற நோக்கிச் சிவந்த பரமிது சென்று கதுவ உவந்த பெருவழி யோடி வந்தானே.

22

  1. அரிபிர மந்தக்கன் அருக்க னுடனே வருமதி வாலை வன்னிநல் இந்திரன் சிரமுக நாசி சிறந்தகை தோள்தான் அரனருள் இன்றி அழிந்தநல் லோரே.

23

  1. செவிமந் திரஞ்சொல்லுஞ் செய்தவத் தேவர் அவிமந் திரத்தின் அடுக்களை கோலிச் செவிமந் திரஞ்செய்து தாமுற நோக்குங் குவிமந் திரங்கொல் கொடியது வாமே.

24

  1. நல்லார் நவகுண்டம் ஒன்பதும் இன்புறப் பல்லார் அமரர் பரிந்தருள் செய்கென வில்லாற் புரத்தை விளங்கொ஢ கோத்தவன் பொல்லா அசுரர்கள் பொன்றும் படிக்கே.

25

  1. தெளிந்தார் கலங்கினும் நீகலங் காதே அளித்தாங் கடைவதெம் ஆதிப் பிரானை விளிந்தா னது தக்கன் வேள்வியை வீயச் சுளிந்தாங் கருள்செய்த தூய்மொழி யானே.

26

===5.பிரளயம்=== 362. கருவரை மூடிக் கலந்தெழும் வெள்ளத் திருவருங் கோவென் றிகல இறைவன் ஒருவனும் நீருற ஓங்கொளி யாகி அருவரை யாய்நின் றருள் புரிந் தானே.


27

  1. அலைகடல் ஊடறுத் தண்டத்து வானோர் தலைவன் எனும்பெயர் தான்றலை மேற்கொண்டு உலகார் அழற்கண் டுள்விழா தோடி அலைவாயில் வீழாமல் அஞ்சலென் றானே.

28

  1. தண்டல் விட்ட தமரருந் தேவரும் எண்கடல் சூழெம் பிரானென் றிறைஞ்சுவர் விண்கடல் செய்தவர் மேலெழுந் தப்புறங் கண்கடல் செய்யுங் கருத்தறி யாரே.

29

  1. சமைக்கவல் லானைச் சயம்புவென் றேத்தி அமைக்கவல் லாரிவ் வுலகத்து ளாரே திகைத்தெண் ணீரிற் கடலொலி ஓசை மிகைக்கொள அங்கி மிகாமைவைத் தானே.

30

  1. பண்பழி செய்வழி பாடுசென் றப்புறங் கண்பழி யாத கமலத் திருக்கின்ற நண்பழி யாளனை நாடிச்சென் றச்சிரம் விண்பழி யாத விருத்திகொண் டானே.

31

===6.சக்கரப்பேறு=== 367. மால்போ தகனென்னும் வண்மைக்கிங் காங்காரங் கால்போதகங் கையினோ டந்தரச் சக்கர மேல்போக வெள்ளி மலைஅம ராபதி பார்ப்போக மேழும் படைத்துடை யானே.


32

  1. சக்கரம் பெற்றுநல் தாமோ தரந்தானும் சக்கரந் தன்னைத் தரிக்கவொண் ணாமையால் மிக்கரன் தன்னை விருப்புடன் அர்ச்சிக்கத் தக்கநற் சக்தியைத் தாங்கூறு செய்ததே.

33

  1. கூறது வாகக் குறித்துநற் சக்கரங் கூறது செய்து கொடுத்தனன் மாலுக்குக் கூறது செய்து கொடுத்தனன் சத்திக்குக் கூறது செய்து தரித்தனன் கோலமே.

34

  1. தக்கன்றன் வேள்வி தகர்த்தநல் வீரர்பால் தக்கன்றன் வேள்வியில் தாமோ தரந்தானுஞ் சக்கரந் தன்னைச் சசிமுடி மேல்விட அக்கி உமிழ்ந்தது வாயுக் கரத்திலே.

35

===7.எலும்பும் கபாலமும்=== 371. எலும்புங் கபாலமும் ஏந்தி எழுந்த வலம்பன் மணிமுடி வானவ ராதி எலும்புங் கபாலமும் ஏந்தில நாகில் எலும்புங் கபாலமும் இற்றுமண் ணாமே.


36

===8.அடிமுடி தேடல்=== 372. பிரமனும் மாலும் பிரானேநான் என்னப் பிரமன்மால் தங்கள்தம் பேதைமை யாலே பரமன் அனலாய்ப் பரந்துமுன் நிற்க அரனடி தேடி அரற்றுகின் றாரே.


37

  1. ஆமே ழுலகுற நின்றேம் அண்ணலுந் தாமே ழுலகில் தழற்பிழம் பாய்நிற்கும் வானே ழுலகுறும் மாமணி கண்டனை நானே அறிந்தேன் அவனாண்மை யாலே.

38

  1. ஊனாய் உயிராய் உணர்வங்கி யாய்முன்னஞ் சேணாய்வா னோரங்கித் திருவுரு வாய் அண்டத் தாணுவும் ஞாயிறுந் தண்மதி யுங்கடந் தாண்முழு தண்டமு மாகிநின் றானே.

39

  1. நின்றான் நிலமுழு தண்டத்துள் நீளியன் அன்றே யவன்வடி வஞ்சின ராய்ந்தது சென்றார் இருவர் திருமுடி மேற்செல நன்றாங் கழலடி நாடவொண் ணாதே.

40

  1. சேவடி ஏத்துஞ் செறிவுடை வானவர் மூவடி தாவென் றானும் முனிவரும் பாவடி யாலே பதஞ்செய் பிரமனுந் தாவடி யிட்டுத் தலைப்பெய்து மாறே.

41

  1. தானக் கமலத் திருந்த சதுமுகன் தானக் கருங்கடல் வாழித் தலைவனும் ஊனத்தின் உள்ளே உயிர்போல் உணர்கின்ற தானப் பெரும்பொருள் தன்மைய தாமே.

42

  1. ஆலிங் கனஞ்செய் தெழுந்த பரஞ்சுடர் மேலிங்ஙன் வைத்ததோர் மெய்ந்நெறி முங்கண் டாலிங் கனஞ்செய் துலகம் வலம்வருங் கோலிங் கமைஞ்சருள் கூடலு மாமே.

43

  1. வாள்கொடுத் தானை வழிபட்ட தேவர்கள் ஆள்கொடுத் தெம்போல் அரனை அறிகிலர் ஆள்கொடுத் தின்பங் கொடுத்துக் கோளாகத் தாள்கொடுத் தானடி சாரகி லாரே.

44

  1. ஊழி வலஞ்செய்தங் கோரும் ஒருவற்கு வாழி சதுமுகன் வந்து வெளிப்படும் வீழித் தலைநீர் விதித்தது தாவென ஊழிக் கதிரோன் ஒளியைவென் றானே.

45

===9.சர்வசிருஷ்டி=== 381. ஆதியோ டந்தம் இலாத பராபரம் போதம தாகப் புணரும் பராபரை சோதி யதனிற் பரந்தோன்றத் தோன்றுமாந் தீதில் பரையதன் பால்திகழ் நாதமே.


46

  1. நாதத்தில் விந்துவும் நாதவிந் துக்களில் தீதற் றகம்வந்த சிவன்சத்தி என்னவே பேதித்து ஞானங் கிரியை பிறத்தலால் வாதித்த விச்சையில் வந்தெழும் விந்துவே.

47

  1. இல்லது சத்தி இடந்தனில் உண்டாகிக் கல்லொளி போலக் கலந்துள் ளிருந்திடும் வல்லது ஆக வழிசெய்த அப்பொருள் சொல்லது சொல்லிடில் தூராதி தூரமே.

48

  1. தூரத்திற் சோதி தொடர்ந்தொரு சத்தியாய் ஆர்வத்து நாதம் அணைந்தொரு விந்துவாய்ப் பாரச் சதாசிவம் பார்முதல் ஐந்துக்கும் சார்வத்து சத்திஓர் சாத்துமா னாமே.

49

  1. மானின்கண் வானாகி வாயு வளர்ந்திடும் கானின்கண் நீருங் கலந்து கடினமாய்த் தேனின்கண் ஐந்துஞ் செறிந்தைந்து பூதமாய்ப் பூவின்கண் நின்று பொருந்தும் புவனமே.

50

  1. புவனம் படைப்பான் ஒருவன் ஒருத்தி புவனம் படைப்பார்க்குப் புத்திரர் ஐவர் புவனம் படைப்பானும் பூமிசை யானாய் புவனம் படைப்பானப் புண்ணியன் தானே.

51

  1. புண்ணியன் நந்தி பொருந்தி உலகெங்கும் தண்ணிய மானை வளர்த்திடுஞ் சத்தியுஞ் கண்ணியல் பாகக் கலவி முழுதுமாய் மண்ணியல் பாக மலர்ந்தெழு பூவிலே.

52

  1. நீரகத் தின்பம் பிறக்கும் நெருப்பிடை காயத்திற் சோதி பிறக்கும்அக் காற்றிடை ஓர்வுடை நல்லுயிர்ப் பாதம் ஒலிசத்தி நீரிடை மண்ணின் நிலைபிறப் பாமே.

53

  1. உண்டுல கேழும் உமிழ்ந்தான் உடனாகி அண்டத் தமரர் தலைவனும் ஆதியுங் கண்டச் சதுர்முகக் காரணன் தன்னொடும் பண்டிவ் வுலகம் படைக்கும் பொருளே.

54

  1. ஓங்கு பெருங்கடல் உள்ளுறு வானொடும் பாங்கார் கயிலைப் பராபரன் தானும் வீங்குங் கமல மலர்மிசை மேலயன் ஆங்குயிர் வைக்கும் அதுவுணர்ந் தானே.

55

  1. காரணன் அன்பிற் கலந்தெங்கும் நின்றவன் நாரணன் நின்ற நடுவுட லாய்நிற்கும் பாரணன் அன்பிற் பதஞ்செய்யும் நான்முகன் ஆரண மாஉல காயமர்ந் தானே.

56

  1. பயன்எளி தாம்பரு மாமணி செய்ய நயன்எளி தாகிய நம்பன்ஒன் றுண்டு அயஓளி யாயிருந் தங்கே படைக்கும் பயனெளி தாம்வய ணந்தெளிந் தேனே.

57

  1. போக்கும் வரவும் புனிதன் அருள்புரிந் தாக்கமுஞ் சிந்தைய தாகின்ற காலத்து மேக்கு மிகநின்ற எட்டுத் திசையொடுந் தாக்குங் கலக்குந் தயாபரன் தானே.

58

  1. நின்றுயி ராக்கு நிமலன்என் னாருயிர் ஒன்றுயி ராக்கும் அளவை உடலுற முன்துய ராக்கும் உடற்குந் துணையதா நன்றுயிர்ப் பானே நடுவுநின் றானே.

59

  1. ஆகின்ற தன்மையில் அக்கணி கொன்றையன் வேகின்ற செம்பொனின் மேலணி மேனியன் போகின்ற சீவன் புகுந்துட லாய்உளன் ஆகின்ற தன்மைசெய் ஆண்டகை யானே.

60

  1. ஒருவன் ஒருத்தி விளையாடல் உற்றார் இருவர் விளையாட்டும் எல்லாம் விளைக்கும் பருவங்கள் தோறும் பயன்பல வான திருவொன்றிற் செய்கை செகமுற்று மாமே.

61

  1. புகுந்தறி வான்புவ னாபதி அண்ணல் புகுந்தறி வான்புரி சக்கரத் தண்ணல் புகுந்தறி வான்மலர் மேலுறை புத்தேள் புகுந்தறி யும்முடிக் காகிநின் றாரே.

62

  1. ஆணவச் சத்தியும் ஆம்அதில் ஐவரும் காரிய காரண ஈசர் கடைமுறை பேணிய ஐந்தொழி லால்விந்து விற்பிறந்(து) ஆணவம் நீங்கா தவரென லாகுமே.

63

  1. உற்றமுப் பாலொன்று மாயாள் உதயமா மற்றைய மூன்று மாயோ தயம்விந்து பெற்றவன் நாதம் பரையிற் பிறத்தலால் துற்ற பரசிவன் தொல்விளை யாட்டிதே

64

  1. ஆகாய மாதி சதாசிவ ராதியென் போகாத சத்தியுட் போந்துடன் போந்தனர் மாகாய ஈசன் அரன்மால் பிரமனாம் ஆகாயம் பூமி காண அளித்தலே.

65

  1. அளியார் முக்கோணம் வயிந்தவந் தன்னில் அளியார் திரிபுரை யாமவள் தானே அளியார் சதாசிவ மாகி அமைவாள் அளியார் கருமங்கள் ஐந்துசெய் வாளே.

66

  1. வாரணி கொங்கை மனோன்மணி மங்கலி காரணி காரிய மாகக் கலந்தவள் வாரணி ஆரணி வானவர் மோகினி பூரணி போதாதி போதமு மாமே.

67

  1. நின்றது தானாய் நிறைந்த மகேசுரன் சென்றங் கியங்கும் அரந்திரு மாலவன் மன்றது செய்யும் மலர்மிசை மேலயன் என்றிவ ராக இசைந்திருந் தானே.

68

  1. ஒருவனு மேஉல கேழும் படைத்தான் ஒருவனு மேஉல கேழும் அளித்தான் ஒருவனு மேஉல கேழுந் துடைத்தான் ஒருவனு மேஉல கோடுயிர் தானே.

69

  1. செந்தா மரைவண்ணன் தீவண்ணன் எம் இறை மைந்தார் முகில்வண்ணன் மாயஞ்செய் பாசத்தும் கொந்தார் குழலியர் கூடிய கூட்டத்தும் அந்தார் பிறவி அறுத்துநின் றானே.

70

  1. தேடுந் திசைஎட்டுஞ் சீவன் உடல்உயிர் கூடும் பிறவிக் குணஞ்செய்த மாநந்தி ஊடும் அவர்தம் துள்ளத்துள் ளேநின்று நாடும் வழக்கமும் நான்அறிந் தேனே.

71

  1. ஓராய மேஉல கேழும் படைப்பதும் ஓராய மேஉல கேழும் அளிப்பதும் ஓராய மேஉல கேழுந் துடைப்பதும் ஓராய மேஉல கோடுயிர் தானே.

72

  1. நாதன் ஒருவனும் நல்ல இருவருங் கோது குலத்தொடுங் கூட்டிக் குழைத்தனர் ஏது பணியென் றிசையும் இருவருக் காதி இவனே அருளுகின் றானே.

73

  1. அப்பரி செண்பத்து நான்குநூ றாயிரம் மெய்ப்பரி செய்தி விரிந்துயி ராய்நிற்கும் பொய்ப்பரி செய்திப் புகலும் மனிதர்கட் கிப்பரி சேஇருள் மூடிநின் றானே.

74

  1. ஆதித்தன் சந்திரன் அங்கிஎண் பாலர்கள் போதித்த வானொலி பொங்கிய நீர்ப்புவி வாதித்த சத்தாதி வாக்கு மனாதிகள் ஓதுற்ற மாயையின் விந்துவின் உற்றதே.

75

  1. புகுந்துநின் றான்வெளி யாய்இரு ளாகிப் புகுந்துநின் றான்புகழ் வாய்இகழ் வாகிப் புகுந்துநின் றான்உட லாய்உயி ராகிப் புகுந்துநின் றான்புந்தி மன்னிநின் றானே.

76

  1. தானே திசையொடு தேவரு மாய்நிற்குந் தானே உடலுயிர் தத்துவ மாய்நிற்குந் தானே கடல்மலை யாதியு மாய்நிற்குந் தானே உலகில் தலைவனு மாமே.

77

  1. உடலாய் உயிராய் உலகம தாகிக் கடலாய் கார்முகில் நீர்ப்பொழி வானாய் இடையாய் உலப்பிலி எங்குந்தா னாகி அடையார் பெருவழி அண்ணல் நின்றானே.

78

  1. தேடுந் திசைஎட்டுஞ் சீவன் உடல்உயிர் கூடு மரபிற் குணஞ்செய்த மாநந்தி ஊடும் அவர்தம துள்ளத்து ளேநின்று நாடும் வழக்கமும் நான்அறிந் தேனே.

79

  1. தானொரு காலந் தனிச்சுட ராய்நிற்குந் தானொரு கால்சண்ட மாருத மாய்நிற்குந் தானொரு காலந் தண்மழை யாய்நிற்குந் தானொரு காலந்தண் மாயனு மாமே.

80

  1. அன்பும் அறிவும் அடக்கமு மாய்நிற்கும் இன்பமும் இன்பக் கலவியு மாய்நிற்கும் முன்புறு காலமும் ஊழியு மாய்நிற்கும் அன்புற ஐந்தில் அமர்ந்துநின் றானே.

81

  1. உற்று வனைவான் அவனே உலகினைப் பெற்று வனைவான் அவனே பிறவியைச் சுற்றிய சாலுங் குடமுஞ் சிறுதூதை மற்றும் அவனே வனையவல் லானே.

82

  1. உள்ளுயிர்ப் பாயுட லாகிநின் றான்நந்தி வெள்ளுயி ராகும் வெளியான் நிலங்கொளி உள்ளுயிர்க் கும்உணர் வேயுட லுட்பரந் தள்ளுயி ராவண்ணந் தாங்கிநின் றானே.

83

  1. தாங்கருந் தன்மையுந் தானவை பல்லுயிர் வாங்கிய காலத்து மற்றோர் பிறிதில்லை ஓங்கி எழுமைக்கும் யோகாந்த மவ்வழி தாங்கிநின் றானும்அத் தாரணி தானே.

84

  1. அணுகினுஞ் சேயவன் அங்கியிற் கூடி நணுகினும் ஞானக் கொழுந்தொன்று நல்கும் பணுகினும் பார்மிசைப் பல்லுயி ராகித் தணிகினும் மண்ணுடல் அண்ணல்செய் வானே.

85

  1. அங்கிசெய் தீசன் அகலிடஞ் சுட்டது அங்கிசெய் தீசன் அலைகடற் சுட்டது அங்கிசெய் தீசன் அசுரரைச் சுட்டது அங்கியவ் வீசற்குக் கைஅம்பு தானே.

86

  1. இலயங்கள் மூன்றினும் ஒன்றுகற் பாந்த நிலையன் றழிந்தமை நின்றுணர்ந் தேனால் உலைதந்த மெல்லா஢ போலும் உலகம் மலைதந்த மானிலந் தான்வெந் ததுவே.

87

  1. பதஞ்செய்யும் பாரும் பனிவரை எட்டும் உதஞ்செய்யும் ஏழ்கடல் ஓதம் முதலாங் குதஞ்செய்யும் அங்கி கொளுவியா காசம் விதஞ்செய்யும் நெஞ்சில் வியப்பில்லை தானே.

88

  1. கொண்டல் வரைநின் றிழிந்த குலக்கொடி அண்டத்துள் ஊறி யிருந்தெண் டிசையாதி ஒன்றின் பதந்செய்த ஓம்என்ற அப்புறக் குண்டத்தின் மேலங்கி கோலிக் கொண்டானே.

89

  1. நித்தசங் காரம் உறக்கத்து நீள்மூடம் வைத்தசங் காரமுஞ் சாக்கிரா தீதமாஞ் சுத்தசங் காரந் தொழிலற்ற கேவலம் உய்த்தசங் காரம் பரன் அருள் உண்மையே.

90

  1. நித்தசங் காரம் இரண்டுடல் நீவுதல் வைத்தசங் காரமும் மாயாசங் காரமாஞ் சுத்தசங் காரம் மனாதீதந் தோய்வுறல் உய்த்தசங் காரஞ் சிவன் அருள் உண்மையே.

91

  1. நித்தசங் காரம் கருவிடர் நீக்கினால் ஒத்தசங் காரமும் உடலுயிர் நீவுதல் சுத்தசங் காரம் அதீதத்துட் டோ ய்வுறல் உய்த்தசங் காரம் பரனருள் உண்மையே.

92

  1. நித்தசங் காரமும் நீடிளைப் பாற்றலின் வைத்தசங் காரமும் மன்னும் அனாதியிற் சுத்தசங் காரமுந் தோயாப் பரன்அருள் உய்த்தசங் காரமும் நாலா மதிக்கிலே.

93

  1. பாழே முதலா எழும்பயிர் அப்பயிர் பாழாய் அடங்கினும் பண்டைப்பாழ் பாழாகா வாழாச்சங் காரத்தின் மாலயன் செய்தியாம் பாழாம் பயிராய் அடங்கும்அப் பாழிலே.

94

  1. தீயவைத் தார்மிங்கள் சேரும் வினைதனை மாயவைத் தான்வைத்த வன்பதி ஒன்றுண்டு காயம்வைத் தாங்கலந் தெங்கும் நினைப்பதோர் ஆயம்வைத் தானுணர் வாரவைத் தானே.

95

===12.திரோபாவம்=== 431. உள்ளத் தொருவனை உள்ளுறு சோதியை உள்ளம்விட் டோ ரடி நீங்கா ஒருவனை உள்ளமுந் தானும் உடனே இருக்கினும் உள்ளம் அவனை உருவறி யாதே.


96

  1. இன்பப் பிறவி படைத்த இறைவனுந் துன்பஞ்செய் பாசத் துயருள் அடைத்தனன் என்பிற் கொளுவி இசைந்துறு தோற்றசை முன்பிற் கொளுவி முடிகுவ தாமே.

97

  1. இறையவன் மாதவன் இன்பம் படைத்த மறையவன் மூவரும் வந்துடன் கூடி இறையவன் செய்த இரும்பொறி யாக்கை மறையவன் வைத்த பரிசறி யாதே.

98

  1. காண்கின்ற கண்ணொளி காதல்செய் தீசனை ஆண்பெண் அலியுரு வாய்நின்ற ஆதியை ஊண்படு நாவுடை நெஞ்சம் உணர்ந்திட்டுச் சேண்படு பொய்கைச் செயலணை யாரே.

99

  1. தெருளும் உலகிற்குந் தேவர்க்கும் இன்பம் அருளும் வகைசெய்யும் ஆதிப் பிரானுஞ் சுருளுஞ் சுடருறு தூவெண் சுடரும் இருளும் அறநின் றிருட்டறை யாமே.

100

  1. அரைகின் றருள்தரும் அங்கங்கள் ஓசை உரைக்கின்ற ஆசையும் ஒன்றோடொன் றொவ்வாப் பரக்கும் உருவமும் பாரகந் தானாய்க் கரகின் றவைசெய்த காண்டகை யானே.

101

  1. ஒளித்துவைத் தேனுள் ளுறவுணர்ந் தீசனை வெளிப்பட்டு நின்றருள் செய்திடு மீண்டே களிப்பொடுங் காதன்மை என்னும் பெருமை வெளிப்பட் டிறைஞ்சினும் வேட்சியு மாமே.

102

  1. நின்றது தானாய் நிறைந்த மகேசுரன் சென்றங் கியங்கும் அரந்திரு மாலவன் மன்றது செய்யும் மலர்மிசை மேலயன் என்றிவ ராகி இசைந்திருந் தானே.

103

  1. ஒருங்கிய பாசத்துள் உத்தமச் சித்தன் இருங்கரை மேலிருந் தின்புற நாடி வருங்கரை ஓரா வகையினிற் கங்கை அருங்கரை பேணில் அழுக்கற லாமே.

104

  1. மண்ணொன்று தான்பல நற்கல மாயிடும் உண்ணின்ற யோனிகட் கெல்லாம் ஒருவனே கண்ணொன்று தான்பல காணுந் தனைக்காணா அண்ணலும் இவ்வண்ண மாகிநின் றானே.

105

===13.அநுக்கிரகம்=== 441. எட்டுத் திசையும் எறிகின்ற காற்றொடு வட்டத் திரையனல் மாநிலம் ஆகாயம் ஒட்டி உயிர்நிலை என்னுமிக் காயப்பை கட்டி அவிழ்ப்பான் கண்ணுதல் காணுமே.


106

  1. உச்சியில் ஓங்கி ஒளிதிகழ் நாதத்தை நச்சியே இன்பங்கொள் வார்க்கு நமன்இல்லை விச்சும் விரிசுடர் மூன்றும் உலகுக்குத் தச்சு மவனே சமைக்கவல் லானே.

107

  1. குசவன் திரிகையில் ஏற்றிய மண்ணைக் குசவன் மனத்துற்ற தெல்லாம் வனைவன் குசவனைப் போல்எங்கள் கோன்நந்தி வேண்டில் அசைவில் உலகம் அதுயிது வாமே.

108

  1. விரியுடை யான்விகிர் தன்மிகு பூதப் படையுடை யான்பரி சேஉல காக்குங் கொடையுடை யாங்குணம் எண்குண மாகுஞ் சடையுடை யாஞ்சிந்தை சார்ந்துநின் றானே.

109

  1. உகந்துநின் றேபடைத் தான்உல கேழும் உகந்துநின் றேபடைத் தான்பல ஊழி உகந்துநின் றேபடைத் தான்ஐந்து பூதம் உகந்துநின் றேஉயிர் ஊன்படைத் தானே.

110

  1. படைத்துடை யான்பண் டுலகங்கள் ஏழும் படைத்துடை யான்பல தேவரை முன்னே படைத்துடை யான்பல சீவரை முன்னே படைத்துடை யான்பர மாகிநின் றானே.

111

  1. ஆதி படைத்தனன் ஐம்பெரும் பூதம் ஆதி படைத்தனன் ஆசில்பல் ஊழி ஆதி படைத்தனன் எண்ணிலி தேவரை ஆதி படைத்தவை தாங்கிநின் றானே.

112

  1. அகன்றான் அகலிடம் ஏழுமொன் றாகி இவன்றா னெனநின் றெளியனும் அல்லன் சிவன்றான் பலபல சீவனும் ஆகி நவின்றான் உலகுறு நம்பனு மாமே.

113

  1. உண்ணின்ற சோதி உறநின்ற ஓருடல் விண்ணின் றமரர் விரும்பும் விழுப்பொருள் மண்ணின்ற வானோர் புகழ்திரு மேனியன் கண்ணின்ற மாமணி மாபோத மாமே.

114

  1. ஆரும் அறியாத அண்டத் திருவுருப் பார்முத லாகப் பயிலுங் கடத்திலே நீரினிற் பால்போல நிற்கின்ற நேர்மையைச் சோராமற் காணுஞ் சுகம்அறிந் தேனே.

115

  1. ஆக்குகின் றான்முன் பிரிந்த இருபத்தஞ் சாக்குகின் றானவ னாதிஎம் ஆருயிர் ஆக்குகின் றான்கர்ப்பக் கோளகை யுள்ளிருந் தாக்குகின் றான்அவன் ஆவ தறிந்தே.

116

  1. அறிகின்ற மூலத்தின் மேல்அங்கி அப்புச் செறிகின்ற ஞானத்துச் செந்தாள் கொளுவிப் பொறைநின்ற இன்னுயிர் போந்துற நாடிப் பறிகின்ற பத்தெனும் பாரஞ்செய் தானே.

117

  1. இன்புறு காலத் திருவர்முன் பூறிய துன்புறு பாசத் துயர்மனை வானுளன் பண்புறு காலமும் பார்மிசை வாழ்க்கையும் அன்புறு காலத் தமைத்தொழிந் தானே.

118

  1. கருவை ஒழிந்தவர் கண்டநால் மூவேழ் புருடன் உடலில் பொருந்துமற் றோரார் திருவின் கருக்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே

119

  1. விழுந்தது லிங்கம் விரிந்தது யோனி ஒழிந்த முதல்ஐந்தும் ஈரைந்தொ டேறிப் பொழிந்த புனல்பூதம் போற்றுங் கரணம் ஒழிந்த நுதல்உச்சி உள்ளே ஒளித்ததே.

120

  1. பூவின் மணத்தைப் பொருந்திய வாயுவுந் தாவி உலகில் தரிப்பித்த வாறுபோல் மேவிய சீவனில் மெல்லநீள் வாயுவுங் கூவி அவிழுங் குறிக்கொண்ட போதே.

121

  1. போகின்ற எட்டும் புகுகின்ற பத்தெட்டும் மூழ்கின்ற முத்தனும் ஒன்பது வாய்தலும் நாகமும் எட்டுடன் நாலு புரவியும் பாகன் விடானெனிற் பன்றியு மாமே.

122

  1. ஏற எதிர்க்கில் இறையவன் றானாகும் மாற எதிர்க்கில் அரியவன் றானாகும் நேரொக்க வைக்கின் நிகர்ப்போதத் தானாகும் பேரொத்த மைந்தனும் பேரர சாளுமே.

123

  1. ஏயங் கலந்த இருவர்தஞ் சாயத்துப் பாயுங் கருவும் உருவா மெனப்பல காயங் கலந்தது காணப் பதிந்தபின் மாயங் கலந்த மனோலய மானதே.

124

  1. கர்ப்பத்துக் கேவல மாயாள் கிளைகூட்ட நிற்குந் துரியமும் பேதித்து நினைவெழ வற்புறு காமியம் எட்டாதல் மாயேயஞ் சொற்புறு தூய்மறை வாக்கினாஞ் சொல்லே.

125

  1. என்பால் மிடைந்து நரம்பு வரிகட்டிச் செம்பால் இறைச்சி திருந்த மனைசெய்து இன்பால் உயிர்நிலை செய்த இறையோங்கும் நன்பால் ஒருவனை நாடுகின் றேனே.

126

  1. பதஞ்செய்யும் பால்வண்ணன் மேனிப் பகலோன் இதஞ்செய்யு மொத்துடல் எங்கும் புகுந்து குதஞ்செய்யும் அங்கியின் கோபந் தணிப்பான் விதஞ்செய்யு மாறே விதித்தொழிந் தானே.

127

  1. ஒழிபல செய்யும் வினையுற்ற நாளே வழிபல நீராடி வைத்தெழு வாங்கிப் பழிபல செய்கின்ற பாசக் கருவைச் சுழிபல வாங்கிச் சுடாமல்வைத் தானே.

128

  1. சுக்கில நாடியில் தோன்றிய வெள்ளியும் அக்கிர மத்தே தோன்றுமவ் வியோனியும் புக்கிடும் எண்விரல் புறப்பட்டு நால்விரல் அக்கரம் எட்டும்எண் சாணது வாகுமே.

129

  1. போகத்துள் ஆங்கே புகுந்த புனிதனுங் கோசத்துள் ஆகங்கொணர்ந்த கொடைத்தொழில் ஏகத்துள் ஆங்கே இரண்டெட்டு மூன்றைந்து மோகத்துள் ஆங்கொரு முட்டைசெய் தானே.

130

  1. பிண்டத்தில் உள்ளுறு பேதைப் புலன்ஐந்தும் பிண்டத்தி னூடே பிறந்து மா஢த்தது அண்டத்தின் உள்ளுறு சீவனும் அவ்வகை அண்டத்து நாதத் தமர்ந்திருந் தானே.

131

  1. இலைபொறி யேற்றி யெனதுடல் ஈசன் துலைப்பொறி யிற்கரு ஐந்துட னாட்டி நிலைபொறி முப்பது நீர்மை கொளுவி உலைப்பொறி ஒன்பதில் ஒன்றுசெய் தானே.

132

  1. இன்புற் றிருவர் இசைவித்து வைத்தமண் துன்பக் கலசம் அணைவான் ஒருவனே ஒன்பது நீர்ச்சால் கலசம் பதினெட்டு வெந்தது சூளை விளைந்தது தானே.

133

  1. அறியீ ருடம்பினி லாகிய வாறும் பிறியீ ரதனிற் பெருகுங் குணங்கள் செறியீ ரவற்றினுட் சித்திகள் இட்ட தறியவீ ரைந்தினு ளானது பிண்டமே.

134

  1. உடல்வைத்த வாறும் உயிர்வைத்த வாறும் மடைவைத்த ஒன்பது வாய்தலும் வைத்துத் திடம்வைத்த தாமரைச் சென்னியுள் அங்கிக் கடைவைத்த ஈசனைக் கைகலந் தேனே.

135

  1. கேட்டுநின் றேன்எங்குங் கேடில் பெருஞ்சுடர் மூட்டுகின் றான்முதல் யோனி மயனவன் கூட்டுகின் றான்குழம் பின்கரு வையுரு நீட்டுநின் றாகத்து நேர்ப்பட்ட வாறே.

136

  1. பூவுடன் மொட்டுப் பொருந்த அலர்ந்தபின் காவுடைத் தீபங் கலந்து பிறந்திடும் நீரிடை நின்ற குமிழி நிழலதாய்ப் பாருடல் எங்கும் பரந்தெட்டும் பற்றுமே.

137

  1. எட்டினுள் ஐந்தாகும் இந்திரி யங்களும் கட்டிய மூன்று கரணமு மாய்விடும் ஒட்டிய பாச உணர்வென்னுங் காயப்பை கட்டி அவிழ்த்திடுங் கண்ணுதல் காணுமே.

138

  1. கண்ணுதல் நாமங் கலந்துடம் பாயிடைப் பண்ணுதல் செய்து பசுபாசம் நீங்கிட எண்ணிய வேதம் இசைந்த பரப்பினை மண்முத லாக வகுத்துவைத் தானே.

139

  1. அருளல்ல தில்லை அரனவன் அன்றி அருளில்லை யாதலி னவ்வோர் உயிரைத் தருகின்ற போதிரு கைத்தாயர் தம்பால் வருகின்ற நண்பு வகுத்திடுந் தானே.

140

  1. வகுத்த பிறவியை மாதுநல் லாளுந் தொகுத்திருள் நீக்கிய சோதி யவனும் பகுத்துணர் வாக்கிய பல்லுயிர் எல்லாம் வகுத்துள்ளும் நின்றதோர் மாண்பது வாமே.

141

  1. மாண்பது வாக வளர்கின்ற வன்னியுங் காண்பது ஆண்பெண் அலியெனுங் கற்பனை பூண்பது மாதா பிதாவழி போலவே ஆம்பதி செய்தானச் சோதிதன் ஆண்மையே.

142

  1. ஆண்மிகில் ஆணாகும் பெண்மிகிற் பெண்ணாகும் பூணிரண் டொத்துப் பொருந்தில் அலியாகும் தாண்மிகு மாகில் தரணி முழுதாளும் பாணவ மிக்கிடில் பாய்ந்ததும் இல்லையே.

143

  1. பாய்ந்தபின் னஞ்சோடில் ஆயுளும் நூறாகும் பாய்ந்தபின் நாலோடில் பாரினில் எண்பதாம் பாய்ந்திடும் வாயுப் பகுத்தறிந் திவ்வகை பாய்ந்திடும் யோகிக்குப் பாய்ச்சலு மாமே.

144

  1. பாய்கின்ற வாயுக் குறையிற் குறளாகும் பாய்கின்ற வாயு விளைக்கின் முடமாகும் பாய்கின்ற வாயு நடுப்படிற் கூனாகும் பாய்கின்ற வாயுமா தர்க்கில்லை பார்க்கிலே.

145

  1. மாதா உதரம் மலமிகில் மந்தனாம் மாதா உதரம் சலமிகில் மூங்கையாம் மாதா உதரம் இரண்டொக்கில் கண்ணில்லை மாதா உதரத்தில் வந்த குழவிக்கே.

146

  1. குழவியும் ஆணாம் வலத்தது வாகில் குழவியும் பெண்ணாம் இடத்தது வாகில் குழவியும் இரண்டாம் அபான னெதிர்க்கில் குழவி அலியாகுங் கொண்டகால் ஒக்கிலே.

147

  1. கொண்டநல் வாயு இருவர்க்கும் ஒத்தெழில் கொண்ட குழவியுங் கோமள மாயிடுங் கொண்டநல் வாயு இருவர்க்குங் குழறிடில் கொண்டதும் இல்லையாங் கோள்வளை யாட்கே.

148

  1. கோல்வளை உந்தியிற் கொண்ட குழவியுந் தால்வளை யுள்ளே தயங்கிய சோதியாம் பால்வளர்ந் துள்ளே பகலவன் பொன்னுருப் போல்வளர்ந் துள்ளே பொருந்துரு வாமே.

149

  1. உருவம் வளர்ந்திடும் ஒண்டிங்கள் பத்திற் பருவம தாகவே பாரினில் வந்திடும் மருவி வளர்ந்திடு மாயையி னாலே அருவம தாவதிங் காரறி வாரே.

150

  1. இட்டார் அறிந்திலர் ஏற்றார் கண்டிலர் தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்திலன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன் கெட்டேன்எம் மாயையின் கீழ்மையெவ் வாறே.

151

  1. இன்புற நாடி இருவருஞ் சந்தித்துத் துன்புறு பாசத்தில் தோன்றி வளர்ந்தபின் முன்புற நாடி நிலத்தின்முன் தோன்றிய தொன்புற நாடிநின் றோதலு மாமே.

152

  1. குயிற்குஞ்சு முட்டையைக் காக்கைக் கூட்டிட்டால் அயிர்ப்பின்றிக் காக்கை வளர்க்கின் றதுபோல் இயக்கில்லை போக்கில்லை ஏனென்ப தில்லை மயக்கத்தால் காக்கை வளர்க்கின்ற வாறே.

153

  1. முதற்கிழங் காய்முளை யாயம் முளைப்பின் அதற்புத லாய்ப்பல மாய்நின் றளிக்கும் அதற்கது வாயின்ப மாவதுபோல அதற்கது வாய்நிற்கும் ஆதிப் பிரானே.

154

  1. ஏனோர் பெருமைய னாகிலும் எம்மிறை ஊனே சிறுமையுள் உட்கலந் தங்குளன் வானோர் அறியும் அளவல்லன் மாதேவன் தானே அறியுந் தவத்தினி னுள்ளே.

155

  1. பரத்திற் கரைந்து பதிந்தநற் காயம் உருத்தரித் திவ்வுடல் ஓங்கிட வேண்டித் திரைக்கடல் உப்புத் திரண்டது போலத் திரித்துப் பிறக்குந் திருவரு ளாலே.

156

===15.மூவகைச் சீவவர்க்கம்=== 492. சத்தி சிவன்விளை யாட்டால் உயிராக்கி ஒத்த இருமாயா கூட்டத் திடைப்பூட்டிச் சுத்தம தாகுந் துரியம் புரிவித்துச் சித்தம் புகுந்து சிவமய மாக்குமே.


157

  1. விஞ்ஞானர் நால்வரு மெய்ப்பிரள யாகலத் தஞ்ஞானர் மூவருந் தாங்கு சகலத்தின் அஞ்ஞானர் மூவரு மாகும் பதின்மராம் விஞ்ஞான ராதியர் வேற்றுமை தானே.

158

  1. விஞ்ஞானர் கேவலத் தாரது விட்டவர் தஞ்ஞானர் அட்டவித் தேசராஞ் சார்ந்துளோர் எஞ்ஞானர் ஏழ்கோடி மந்திர நாயகர் மெய்ஞானர் ஆணவம் விட்டுநின் றாரே.

159

  1. இரண்டா வதில்முத்தி எய்துவர் அத்தனை இரண்டாவ துள்ளே இருமல பெத்தர் இரண்டாகு நூற்றெட்டு ருத்திரர் என்பர் முரண்சேர் சகலத்தர் மும்மலத் தாரே.

160

  1. பெத்தத்தர் சித்தொடு பேண்முத்தச் சித்தது ஒத்திட் டிரண்டிடை யூடுற்றார் சித்துமாய் மத்தது மும்மலம் வாட்டுகை மாட்டாதார் சத்தத் தமிழ்ந்து சகலத்து ளாரே.

161

  1. சிவமாகி ஐவகைத் திண்மலஞ் செற்றோர் அவமாகார் சித்தர்முத் தாந்தத்து வாழ்வார் பவமான தீர்வோர் பசுபாசம் அற்றோர் நவமான தத்துவம் நாடிக்கண் டோ ரே.

162

  1. விஞ்ஞானர் ஆணவ கேவல மேவுவோர் விஞ்ஞானர் மாயையில் தங்கும் இருமலர் அஞ்ஞானர் அச்சக லத்தர் சகலராம் விஞ்ஞான ராதிகள் ஒன்பான்வே றுயிர்களே.

163

  1. விஞ்ஞான கன்மத்தால் மெய்யகங் கூடிய அனையான கன்மத்தி நால்சுவர் யோனிபுக் கெஞ்ஞான மெய்தீண்டி யேயிடை யிட்டுப்போய் மெய்ஞ்ஞான ராகிச் சிவமேவல் உண்மையே.

164

  1. ஆணவந் துற்ற வவித்தா நனவற்றோர் காணிய விந்துவா நாத சகலாதி ஆணவ மாதி யடைந்தோ ரவரன்றே சேணுயர் சத்தி சிவதத் துவமாமே.

165

  1. திலமத் தனைபொன் சிவஞானிக்கு ஈந்தால் பலமுத்தி சித்தி பரபோக மும் தரும்நிலமத் தனைபொன்னை நின்மூடர்க்கு ஈந்தால் பலமும்அற் றெபர போகமும் குன்றுமே.

166

  1. கண்டிருந் தாருயிர் உண்டிடுங் காலனைக் கொண்டிருந் தாருயிர் கொள்ளும் குணத்தனை நன்றுணர்ந் தார்க்கருள் செய்திடு நாதனைச் சென்றுணர்ந் தார்சிலர் தேவரு மாமே.

167

  1. கைவிட்டி லேன்கரு வாகிய காலத்து மெய்விட்டி லேன்விகிர் தன்அடி தேடுவன் பொய்விட்டு நானே புரிசடை யானடி நெய்விட் டிலாத விடிஞ்சிலு மாமே.

168

  1. ஆவன ஆவ அழிவ அழிவன போவன போவ புகுவ புகுவன காவலன் பேர்நந்தி காட்டித்துக் கண்டவன் ஏவன செய்யும் இளங்கிளை யோனே.

169

  1. கோல வறட்டைக் குனிந்து குளகிட்டுப் பாலைக் கறந்து பருகுவதே ஒக்கும் சீலமும் நோன்பும் இலாதவர்க்கு ஈந்தது காலங் கழிந்த பயிரது ஆகுமே.

170

  1. ஈவது யோகம் இயம நியமங்கள் சார்வ தறிந்தன்பு தங்கு மவர்க்கன்றி ஆவ தறிந்தன்பு தங்கா தவர்க்களுக்கு ஈவ பெரும்பிழை என்றுகொள் ளீரே.

171

  1. ஆமா றறியான் அதிபஞ்ச பாதகத் தோமாறும் ஈசற்குந் தூய குரவற்குங் காமாதி விட்டோ ர்க்குந் தரல்தந்து கற்பிப்போன் போமா நரகில் புகான்போதங் கற்கவே.

172

  1. மண்மலை யத்தனை மாதனம் ஈயினும் அண்ணல் இவனென்றே அஞ்சலி அத்தனாய் எண்ணி இறைஞ்சாதார்ககு ஈந்த இருவரும் நண்ணுவர் ஏழா நரகக் குழியிலே.

173

===18.தீர்த்தம்=== 509. உள்ளத்தின் உள்ளே உளபல தீர்த்தங்கள் மெள்ளக் குடைந்துநின் றாடார் வினைகெடப் பள்ளமும் மேடும் பரந்து திரிவரே கள்ள மனமுடைக் கல்வியி லோரே.


174

  1. தளியறி வாளர்க்குத் தண்ணிதாய்த் தோன்றும் குளியறி வாளர்க்குக் கூடவும் ஒண்ணான் வளியறி வாளர்க்கு வாய்க்கினும் வாய்க்கும் தெளியறி வாளர்தம் சிந்தையு ளானே.

175

  1. உள்ளத்தின் உள்ளே உணரும் ஒருவனைக் கள்ளத்தி னாரும் கலந்தறி வார்இல்லை வெள்ளத்தை நாடி விடும்அவர் தீவினைப் பள்ளத்தல் இட்டதோர் பத்துள் ளாமே.

176

  1. அறிவார் அமரர்கள் ஆதிப் பிரானைச் செறிவான் உறைபதம் சென்று வலங்கொள் மறியார் வளைக்கை வருபுனல் கங்கைப் பொறியார் புனல்மூழ்கப் புண்ணிய ராமே.

177

  1. கடலில் கெடுத்துக் குளத்தினில் காண்டல் உடலுற்றுத் தேடுவார் தம்மைஒப் பாரிலர் திடமுற்ற நந்தி திருவரு ளால்சென்று உடலிற் புகுந்தமை ஒன்றறி யாரே.

178

  1. கலந்தது நீர துடம்பில் கறுக்கும் கலந்தது நீரது உடம்பில் சிவக்கும் கலந்தது நீரது உடம்பில் வெளுக்கும் கலந்தது நீர்அனல் காற்றது வாமே.

179

===19.திருக்கோயிலிழிவு===


180

  1. தாவர லிங்கம் பறித்தொன்றில் தாபித்தால் ஆவதன் முன்னே அரசு நிலைகெடும் சாவதன் முன்னே பெருநோய் அடுத்திடும் காவலன் பேர்நந்தி கட்டுரைத் தானே.

181

  1. கட்டுவித் தார்மதிற் கல்லொன்று வாங்கிடில் வெட்டுவிக் கும்அபி டேகத்து அரசரை முட்டுவிக் கும்முனி வேதிய ராயினும் வெட்டுவித் தேவிடும் விண்ணவன் ஆணையே.

182

  1. ஆற்றரு நோய்மிக் கவனி மழையின்றிப் போற்றரு மன்னரும் போர்வலி குன்றுவர் கூற்றுதைத் தான்திருக் கோயில்கள் எல்லாம் சாற்றிய பூசைகள் தப்பிடில் தானே.

183

  1. முன்னவ னார்கோயில் பூசைகள் முட்டிடின் மன்னர்க்குத் தீங்குள வாரி வளம்குன்றும் கன்னம் களவு மிகுத்திடும் காசினி என்னரு நந்தி எடுத்துரைத் தானே.

184

  1. பேர்கொண்ட பார்ப்பான் பிரான்தன்னை அர்ச்சித்தால் போர்கொண்ட வேந்தர்க்குப் பொல்லா வியாதியாம் பார்கொண்ட நாட்டுக்குப் பஞ்சமு மாம்என்றே சீர்க்கொண்ட நந்தி தொரிந்துரைத் தானே.

185

===20.அதோமுக தெரிசனம்=== 520. எம்பெரு மான்இறை வாமுறை யோஎன்று வம்பவிழ் வானோர் அசுரன் வலிசொல்ல அம்பவள மேனி அறுமுகன் போயவர் தம்பகை கொல்லென்ற தற்பரன் தானே.


186

  1. அண்டமொ டெண்டிசை தாங்கும் அதோமுகம் கண்டங் கறுத்த கருத்தறி வாரில்லை உண்டது நஞ்சென்று உரைப்பர் உணர்விலோர் வெண்டலை மாலை விரிசடை யோற்கே.

187

  1. செய்தான் அறியுஞ் செழுங்கடல் வட்டத்துப் பொய்யே யுரைத்துப் புகழும் மனிதர்கள் மெய்யே உரைக்கில் விண்ணோர் தொழச்செய்வன் மைதாழ்ந்து இலங்கும் மிடறுடை யோனே.

188

  1. நந்தி எழுந்து நடுவுற ஓங்கிய செந்தீக் கலந்துள் சிவனென நிற்கும் முந்திக் கலந்தங்கு உலகம் வலம்வரும் அந்தி இறைவன் அதோமுகம் ஆமே.

189

  1. அதோமுகம் கீழண்ட மான புராணன் அதோமுகம் தன்னொடும் எங்கும் முயலும் சதோமுகத் து ஒண்மலர்க் கண்ணிப் பிரானும் அதோமுகன் ஊழித் தலைவனு மாமே.

190

  1. அதோமுகம் மாமல ராயது கேளும் அதோமுகத் தால் ஒரு நூறாய் விரிந்து அதோமுகம் ஆகிய அந்தமில் சத்தி அதோமுகம் ஆகி அமர்ந்திருந் தானே.

191

  1. தெளிவுறு ஞானத்துச் சிந்தையின் உள்ளே அளிவுறு வார்அம ராபதி நாடி எளியனென்று ஈசனை நீசர் இகழில் கிளியொன்று பூஞையால் கீழது வாகுமே.

192

  1. முளிந்தவர் வானவர் தானவர் எல்லாம் விளிந்தவர் மெய்ந்நின்ற ஞானம் உணரார் அளிந்தமுது ஊறிய ஆதிப் பிரானைத் தளிந்தவர்ககு அல்லது தாங்கஒண் ணாதே.

193

  1. அப்பகை யாலே அசுரரும் தேவரும் நற்பகை செய்து நடுவே முடிந்தனர் எப்பகை யாகிலும் எய்தார் இறைவனைப் பொய்ப்பகை செய்யினும் ஒன்றுபத் தாமே.

194

  1. போகமும் மாதர் புலவி அதுநினைந்து ஆகமும் உள்கலந்து அங்குஉள ராதலில் வேதிய ராயும் விகிர்தன்நாம் என்கின்ற நீதியுள் ஈசன் நினைப்பொழி வாரே.

195

  1. பெற்றிருந் தாரையும் பேணார் கயவர்கள் உற்றிருந் தாரை உளைவன சொல்லுவர் கற்றிருந் தார்வழி உற்றிருந் தாரவர் பெற்றிருந் தார்அன்றி யார்பெறும் பேறே.

196

  1. ஓரெழுத்து ஒருபொருள் உணரக் கூறிய சீரெழுத் தாளரைச் சிதையச் செப்பினோர் ஊரிடைச் சுணங்கனாய்ப் பிறந்தங் கு ஓர்உகம் வாரிடைக் கிருமியாய் மாய்வர் மண்ணிலே.

197

  1. பத்தினி பத்தர்கள் தத்துவ ஞானிகள் சித்தங் கலங்கச் சிதைவுகள் செய்தவர் அத்தமும் ஆவியும் ஆண்டொன்றில் மாண்டிடும் சத்தியம் ஈது சதாநந்தி ஆணையே.

198

  1. மந்திரம் ஓரெழுத்து உரைத்த மாதவர் சிந்தையில் நொந்திடத் தீமைகள் செய்தவர் நுந்திய சுணங்கனாய்ப் பிறந்து நூறுரு வந்திடும் புலையராய் மாய்வர் மண்ணிலே.

199

  1. ஈச னடியார் இதயங் கலங்கிடத் தேசமும் நாடும் சிறப்பும் அழிந்திடும் வாசவன் பீடமும் மாமன்னர் பீடமும் நாசமது ஆகுமே நம்நந்தி ஆணையே.

200

  1. சன்மார்க்க சற்குருச் சந்நிதி பொய்வா஢ன் நன்மார்க்க மும்குன்றி ஞானமும் தங்காது தொன்மார்க்க மாய துறையும் மறந்திட்டுப் பன்மார்க்க மும்கெட்டுப் பஞ்சமும் ஆமே.

201

  1. கைப்பட்ட மாமணி தானிடை கைவிட்டு மெய்ப்பட்ட கல்லைச் சுமப்போன் விதிபோன்றும் கைப்பட்ட நெய்பால் தயிர்நிற்கத் தானறக் கைப்பிட்டுண் பான்போன்றுங் கன்மிஞானிக் கொப்பே.

202

===23.மகேச்சுர நிந்தை=== 537. ஆண்டான் அடியவர் ஆர்க்கும் விரோதிகள் ஆண்டான் அடியவர் ஐயமேற் றுண்பவர் ஆண்டான் அடியரை வேண்டாது பேசினோர் தாம்தாம் விழுவது தாழ்நர காமே.


203

  1. ஞானியை நிந்திப் பவனும் நலன் என்றே ஞானியை வந்திப் பவனுமே நல்வினை யான கொடுவினை தீர்வார் அவன்வயம் போன பொழுதே புகுஞ்சிவ போகமே.

204

  1. பற்றிநின் றார்நெஞ்சில் பல்லிதான் ஒன்றுண்டு முற்றிக் கிடந்தது மூக்கையும் நாவையும் தெற்றிக் கிடந்து சிதைக்கின்ற சிந்தையுள் வற்றா தொழிவது மாகமை யாமே.

205

  1. ஓலக்கஞ் சூழ்ந்த உலப்பிலி தேவர்கள் பாலொத்த மேனியன் பாதம் பணிந்துய்ய மாலுக்கும் ஆதி பிரமற்கும் மன்னவன் ஞாலத் திவன்மிக நல்லன்என் றாரே.

206

  1. ஞானம் விளைந்தவர் நம்மிடம் மன்னவர் சேனை வளைந்து திசைதொரும் கைதொழ ஊனை விளைத்திடும் உம்பர்தம் ஆதியை ஏனை விளைந்தருள் எட்டலு மாமே.

207

  1. வல்வகை யாலும் மனையிலும் மன்றிலும் பல்வகை யானும் பயிற்றி பதஞ்செய்யும் கொல்லையி னின்று குதிகொள்ளும் கூத்தனுக்கு எல்லையி லாத இலயம்உண் டாமே.

208

===25.பெரியாரைத் துணைகோடல்===


209

  1. ஓடவல் லார்தம ரோடு நடாவுவன் பாடவல் லாரொளி பார்மிசை வாழ்குவன் தேடவல் லார்க்கருள் தேவர் பிரானொடும் கூடவல் லாரடி கூடுவன் யானே.

210

  1. தாமிடர்ப் பட்டுத் தளிர்போல் தயங்கினும் மாமனதது அங்குஅன்பு வைத்தது இலையாகும் நீஇடர்ப் பட்டிருநது என்செய்வாய் நெஞ்சமே போமிடத் து என்னொடும் போதுகண் டாயே.

211

  1. அறிவார் அமரர் தலைவனை நாடிச் செறிவார் பெறுவர் சிலர்தத் துவத்தை நெறிதான் மிகமிக நின்றருள் செய்யும் பெரியார் உடன்கூடல் போ஢ன்ப மாமே.

212

  1. தார்சடை யான்தன் தமராய் உலகினில் போர புகழா எந்தை பொன்னடி சேருவர் வாயடை யாவுள்ளம் தேர்வார்ககு அருள்செய்யும் கோவந்தடைந் து அந்நெறி கூடலு மாமே.

213

  1. உடையான் அடியார் அடியா ருடன்போய்ப் படையார் அழல்மேனிப் பதிசென்று புக்கேன் கடையார நின்றவர் கண்டறி விப்ப உடையான் வருகென ஓலம் என் றாரே.

214

  1. அருவைவல் லோன்கலை ஞானத்துள் தோன்றும் பெருமைவல் லோன்பிற விச்சுழி நீந்தும் உரிமைவல் லோன்உணர்ந்து ஊழி இருக்கும் திருமைவல் லாரொடு சேர்ந்தனன் யானே.

எட்டாம் தந்திரம்

1

==எட்டாம் தந்திரம்== ===1.உடலிற் பஞ்சபேதம்=== 2122. காயப்பை யொன்று சரக்குப் பலவுள மாயப்பை ஒன்றுண்டு மற்றுமோர் பையுண்டு காயப்பைக் குண்ணின்ற கள்வன் புறப்பட்டால் மாயப்பை மண்ணா மயங்கிய வாறே.


2

  1. அத்த னமைத்த வுடலிரு கூறினிற் சுத்தம தாகிய சூக்குமஞ் சொல்லுங்காற் சத்த பரிச ரூப ரசகந்தம் புத்திமா னாங்காரம் புரியட்ட காயமே.

3

  1. எட்டினி லைந்தாகு மிந்திரி யங்களுங் கட்டிய மூன்று கரணமு மாயிடும் ஒட்டிய பாசமுணர்வது வாகவே கட்டி யவிழ்த்திடுங் கண்ணுதல் காணுமே.

4

  1. இரத முதிர மிறைச்சிதோன் மேதை மருவிய வத்தி வழும்பொடு மச்சை பரவிய சுக்கிலம் பாழா முபாதி உருவ மலாலுட லொன்றென லாமே.

5

  1. ஆரே யறிவா ரடியின் பெருமையை யாரே யறிவா ரங்கவர் நின்றது யாரே யறிவா ரறுபத்தெட் டாக்கையை யாரே யறிவா ரடிக்காவ லானதே.

6

  1. எண்சா ணளவா லெடுத்த வுடம்புக்குட் கண்கா லுடலிற் கரக்கின்ற கைகளிற் பல புண்கா லறுபத்தெட் டாக்கை புணர்க்கின்ற நண்பா லுடம்புதன் னாலுடம் பாகுமே.

7

  1. உடம்புக்கு நாலுக்கு முயிராய சீவன் ஒடுங்கும் பரனோ பொழியாப் பிரமங் கடந்தொறு நின்ற கணக்கது காட்டி அடங்கியே யற்றது யாரறி வாரே.

8

  1. ஆறந்த மாகி நடுவுடன் கூடினாற் றேறிய மூவாறுஞ் சிக்கென் றிருந்திடுங் கூறுங் கலைகள் பதினெட்டுங் கூடியே ஊறு முடம்பை யுயிருடம் பெண்ணுமே.

9

  1. மெய்யினிற் றூல மிகுத்த முகத்தையும் பொய்யினிற் சூக்கம் பொருந்து முடலையுங் கையினிற் றுல்லியங் காட்டு முடலையும் ஐய னடிக்கு ளடக்கு முடம்பே.

10

  1. காயுங் கடும்பரி கால்வைத்து வாங்கல்போற் சேய விடமண்மை செல்லவும் வல்லது காயத் துகிற்போர்வை யொன்றுவிட் டாங்கொன்றிட் டேயு மவரென்ன வேய்ந்திடுங் காயமே.

11

  1. நாக முடலுரி போலுநல் லண்டச மாக நனாவிற் கனாமறந் தல்லது போகலு மாகு மரனரு ளாலேசென் றேகு மிடஞ்சென் றிருபய னுண்ணுமே.

12

  1. உண்டு நரக சுவர்க்கத்தி லுள்ளன கண்டு விடுஞ்சூக்கங் காரண மாச்செலப் பண்டு தொடரப் பரகாய யோகிபோற் பிண்ட மெடுக்கும் பிறப்பிறப் பெய்தியே.

13

  1. தானவ னாகிய தற்பரந் தாங்கினோன் ஆனவை மாற்றிப் பரமத் தடைந்திடும் ஏனை யுயிர்வினைக் கெய்து மிடஞ்சென்றும் வானும் நிலனும் புகுந்தும் வருந்துமே.

14

  1. ஞானிக்குக் காயஞ் சிவமே தனுவாகும் ஞானிக்குக் காய முடம்பே யதுவாகு மேனிற்கும் யோகிக்கு விந்துவு நரதமு மோனிக்குக் காயமுப் பாற்கெட்ட முத்தியே.

15

  1. விஞ்ஞானத் தோர்க்கா ணவமே மிகுதனு எஞ்ஞானத் தோர்க்குத் தனுமாயை தானென்ப அஞ்ஞானத் தோர்க்குக் கன்ம தனுவாகு மெய்ஞ்ஞானத் தோர்க்குச் சிவதனு மேவுமே.

16

  1. மலமென் றுடம்பை மதியாத வூமர் தலமென்று வேறு தரித்தமை கண்டீர் நலமென் றிதனையே நாடி யிருக்கிற் பலமுள்ள காயத்திற் பற்றுமிவ் வண்டத்தே.

17

  1. நல்ல வசனத்து வாக்கு மனாதிகள் மெல்ல விளையாடும் விமல னகத்திலே அல்ல செவிசத்த மாதி மனத்தையு மெல்லத் தரித்தார் முகத்தார் பசித்தே.

18

===2.உடல் விடல்=== 2139. பண்ணாகுங் காமம் பயிலும் வசனமும் விண்ணாம் பிராணன் விளங்கிய சத்தமும் புண்ணா முடலிற் பொருந்து மனத்தையும் அண்ணாந்து பார்க்க வழியு முடம்பே.


19

  1. அழிகின்ற ஓருடம் பாகுஞ் செவிகண் கழிகின்ற காலவ் விரதங்கள் தானம் மொழிகின்ற வாக்கு முடிகின்ற நாடி ஒழிகின்ற ஊனுக் குறுதுணை யில்லையே.

20

  1. இலையா மிடையி லெழுகின்ற காமம் உலைவாய நெஞ்சத்து மூழ்கு மூளத்துத் தலையாய மின்னுடற் றாங்கித் திரியுஞ் சிலையாய சித்தஞ் சிவமுன் னிடைக்கே.

21

===3.அவத்தை பேதம் - கீழலாவத்தை=== 2142. ஐயைந்து மத்திமை யானது சாக்கிரம் கைகண்ட பன்னான்கிற் கண்டங் கனாவென்பர் பொய்கண்டி லாத புருடனித யஞ்சுழுனை மெய்கண் டவனுந்தி யாகுந் துரியமே.


22

  1. முப்பதோ டாறின் முதல்நனா வைந்தாகச் செப்பதி னான்காய்த் திகழ்ந்திரண் டொன்றாகி அப்பகுதி யாகு நியதி முதலாகச் செப்புஞ் சிவமீறாய்த் தேர்ந்துகொள் வீரே.

23

  1. இந்திய மீரைந் தீரைந்து மாத்திரை மந்திர மாய்நின்ற மாருத மீரைந்தும் அந்தக் கரண மொருநான்கு மான்மாவும் பந்தவச் சக்கரப் பாலது வாகுமே.

24

  1. பாரது பொன்மை பசுமை யுடையது நீரது வெண்மை செம்மை நெருப்பது காரது மாருதங் கறுப்பை யுடையது வானகந் தூம மறைந்துநின் றாரே.

25

  1. பூதங்க ளைந்தும் பொறியவை யைந்துளும் ஏதம் படஞ்செய் திருந்த புறநிலை ஓது மலங்குண மாகுமா தாரமோ டாதி யவத்தைக் கருவிதொண் ணுற்றாறே.

26

  1. இடவகை சொல்லிரு பத்தஞ் சானை படுபர சேனையும் பாய்பரி யைந்தும் உடையவன் மத்திமை யுள்ளுற நால்வர் அடைய நெடுங்கடை யைந்தொடு நான்கே.

27

  1. உடம்பு முடம்பு முடம்பைத் தழுவி உடம்பிடை நின்ற வுயிரை யறியார் உடம்பொ டுயிரிடை நட்பறி யாதார் மடம்புகு நாய்போன் மயங்குகின் றாரே.

28

  1. இருக்கின்ற வாறொன் றறிகில ரேழைகண் முருக்கு மசபையை மாற்றி முகந்து கருக்கொண்டு காமாரி சார முகந்தேர்ந் துருக்கொண்டு தொக்க வுடலொழி யாதே.

29

  1. ஒளித்திட் டிருக்கு மொருபதி னாலை அளித்தன னென்னுள்ளே யாரியன் வந்து அலைக்குங் கலைகளி னாலறு பத்து ஒளித்திட்டு வைத்தா னொடுங்கிய சித்தே.

30

  1. மண்ணினி லொன்று மலர்நீரு மங்காகும் பொன்னினி லங்கி புகழ்வளி யாகாய மன்னு மனோபுத்தி யாங்கார மோரொன்றாய் உன்னி முடிந்தது பூத சமயமே.

31

  1. முன்னிக் கொருமகன் மூர்த்திக் கிருவர் வன்னிக்கு மூவர் வதுவைக்கு நால்வர் கன்னிக்குப் பிள்ளைக ளைவர்மு னாளில்லை கன்னியைக் கன்னியே காதலித் தாரே.

32

  1. கண்ட கனவைந்துங் கலந்தன தானைந்துஞ் சென்றுண்ட நான்கு மொருங்கே யுணர்ந்தபின் பண்டைய தாகிப் பரந்த வியாக்கிரத் தண்டமுந் தானா யமர்ந்துநின் றானே.

33

  1. நின்றவ னிற்பப் பதினாலிற் பத்துநீத் தொன்றிய வந்தக் கரணங்க ணான்குடன் மன்று கலந்த மனைவாழ்க்கை வாதனை கன்றிய கண்டத்திற் கண்டான் கனவதே.

34

  1. தான மிழந்து தனிபுக் கிதயத்து மான மழிந்து மதிகெட்டு மாலாகி ஆன விரிவறி யாவவ் வியத்ததின் மேனி யழிந்து சுழுத்திய தாமே.

35

  1. சுழுமுனையைச் சேர்ந்துள மூன்றுடன் காட்சி கெழுமிய சித்தம் பிராணன்றன் போதம் ஒழுகக் கமலத்தி னுள்ளே யிருந்து விழுமப் பொருளுடன் மேவிநின் றானே.

36

  1. தானத் தெழுந்து தருக்குந் துரியத்தின் வானத் தெழுந்துபோய் வையம் பிறகிட்டுக் கானத் தெழுந்த கருத்தின் றலையிலே ஊனத் தவித்தைவிட் டூமனின் றானே.

37

  1. ஊமை யெழுத்தொடு பேசுந் எழுத்துறில் ஆமை யகத்தினி லஞ்சு மடங்கிடும் ஓமய முற்றது உள்ளொளி பெற்றது நாமய மற்றது நாமறி யோமே.

38

  1. துரிய மிருப்பதுஞ் சாக்கிரத் துள்ளே நரிகள் பதினாலு நஞ்சுண்டு செத்தன பரிய புரவியும் பாரிற் பறந்தன துரிய மிறந்திடஞ் சொல்லவொண் ணாதே.

39

  1. மாறா மலமைந்தான் மன்னு மவத்தையின் வேறாய மாயா தனுகர ணாதிக்கிங் கீறாகா தேயெவ் வுயிரும் பிறந்திறந் தாறாத வல்வினை யாலடி யுண்ணுமே.

40

  1. உண்ணுந்தன் னூடாடா தூட்டிடு மாயையும் அண்ண லருள்பெற்ற முத்திய தாவது நண்ண லிலாவுயிர் ஞானத்தி னாற்பிறந் தெண்ணுறு ஞானத்தி னேர்முத்தி யெய்துமே.

41

  1. அதிமூட நித்திரை யாண வநந்த அதனா லுணர்வோ னருங்கன்ம முன்னால் இதமான கேவல மித்திறஞ் சென்று பரமாகா வையவத் தைப்படு வானே

42

  1. ஆசான்முன் னேதுயில் மாண வகரைத் தேசாய தண்டா லெழுப்புஞ் செயல்போல் நேசாய வீசனு நீடாண வத்தரை ஏசாத மாயாடன் னாலே யெழுப்புமே.

43

  1. மஞ்சொடு மந்தா கினிகுட மாமென விஞ்சறி வில்லோன் விளம்பு மிகுமதி எஞ்சலி லொன்றெனு மாறென இவ்வுடல் அஞ்சுணு மன்னனன் றேபோ மளவே.

44

  1. படியுடை மன்னவன் பாய்பரி யேறி வடிவுடை மாநகர் தான்வரும் போது அடியுடை யைவரு மங்குறை வோருந் துடியில்லம் பற்றித் துயின்றனர் தாமே.

45

  1. நேரா மலத்தை நீடைந் தவத்தையின் நேரான வாறுன்னி நீடு நனவினின் நேராம் மலமைந்து நேரே தெரிசித்து நேராம் பரத்துட னிற்பது நித்தமே.

46

===4.மத்திய சாக்கிராவத்தை=== 2167. சாக்கிர சாக்கிரந் தன்னிற் றிரோதாயி சாக்கிர சொப்பனந் தன்னிடை மாமாயை சாக்கிரந் தன்னிற் சுழுத்திதற் காமியஞ் சாக்கிரந் தன்னில் றுரியத்து மாயையே.


47

  1. மாயை யெழுப்புங் கலாதியை மற்றதி னேயவி ராகாதி யேய்ந்த துரியத்துத் தோயுஞ் சுழுனை கனாநனா வந்துன்னி ஆயின னந்தச் சகலத்து ளானே.

48

  1. மேவிய வந்தகன் விழிகட் குருடனா மாவையின் முன்னடிக் காணு மதுகண்டு மேவுந் தடிகொண்டு சொல்லும் விழிபெற மூவயி னான்மா முயலுங் கருமமே.

49

  1. மத்திம மொத்த சிலந்தி வலயத்துள் ஒத்தங் கிருந்து வுயிருண்ணு மாறுபோல் அத்தனு மைம்மபொறி யாடகத் துண்ணின்று சத்த முதலைந்துந் தானுண்ணு மாறே.

50

  1. வைச்சன வச்சு வகையிரு பத்தஞ்சு முச்சு முடனனை வானொரு வன்னுளன் பிச்சன் பெரியன் பிறப்பிலி யென்றென்று நச்சி யவனரு ணானுயந்த வாறே.

51

  1. நாலா றுடன்புருட னற்றத் துவமுடன் வேறான வையைந்து மெய்ப்புரு டன்பரங் கூறாவி யோமம் பரமெனக் கொண்டனன் வேறான நாலேழு வேதாந்த தத்துவமே.

52

  1. ஏலங்கொண் டாங்கே யிடையொடு பிங்கலை கோலங்கொண் டாங்கே குணத்தி னுடன்புக்கு மூலங்கொண் டாங்கே முறுக்கிமுக் கோணிலுங் காலங்கொண் டானடி காணலு மாமே.

53

  1. நாடிகள் பத்து நலந்திகழ் வாயுவும் ஓடிய காலி லொடுங்கி யிருந்திடுங் கூடிய காமங் குளிக்கு மிரதமு நாடிய நல்ல மனமு முடலிலே.

54

  1. ஆவன வாவ வழிவ வழிவன போவன போவ புகுவ புகுவன காவலன் பேர்நந்தி காட்டித்துக் கண்டவ ஏவன செய்யு மிளங்கிளை யோனே.

55

  1. பத்தொடு பத்து மோர்மூன்றும் பகுதியு முய்த்த துரியமு முள்ளுணர் காலமு மெய்த்த வியோமமு மேலைத் துரியமுந் தத்துவ நாலே ழெனவுன்னத் தக்கதே.

56

  1. விளங்கிடு முந்நூற்று முப்பதோ டொன்பான் தளங்கோ ளிரட்டிய தாறு நடந்தால் வணங்கிடு மைம்மலம் வாயு வெழுந்து விளங்கிடு மவ்வழி தத்துவ நின்றே.

57

  1. நாலொரு கோடியே நாற்பத்தெண் ணாயிரம் மேலுமோ ரைந்நூறு வேறா யடங்கிடும் பாலவை தொண்ணு றோடாறுட் படுமவை கோலிய வையைந்து ளாகுங் குறிக்கிலே.

58

  1. ஆகின்ற தொண்ணூறோ டாறும் பொதுவென்பர் ஆகின்ற வாறா றருஞ்சைவர் தத்துவம் ஆகின்ற நாலேழ் வேதாந்தி வயிணவர்க் காகின்ற நாலாறை யைந்துமாயா வாதிக்கே.

59

  1. தத்துவ மானது தன்வழி நின்றிடில் வித்தக னாகி விளங்கி யிருக்கலாம் பொய்த்தவ மாமவை போயிடு மவ்வழி தத்தவ மாவ தகார வெழுத்தே.

60

  1. அறிவொன்றி லாதன வையேழு மொன்றும் அறிகின்ற வென்னை யறியா திருந்தேன் அறிகின்றாய் நீயென் றருள்செய்தார் நந்தி அறிகின்ற நானென் றறிந்துகொண் டேனே.

61

  1. சாக்கிர சாக்கிர மாதி தனிலைந்தும் ஆக்கு மலாவத்தை யைந்து நனவாதி போக்கி யிவற்றொடும் பொய்யான வாறாறு நீக்கி நெறிநின் றொன்றாகி நிற்குமே.

62

  1. ஆணவ மாதி மலமைந் தலரோனுக் காணவ மாதி நான்காமாற் கரனுக்கு ஆணவ மாதி மூன்றீசர்க் கிரண்டென்ப ஆணவ மொன்றே சதாசிவற் காவதே.

63

===5.அத்துவாக்கள்=== 2184. தத்துவ மாறாறு தன்மனு வேழ்கோடி மெய்த்தகு வன்னமை பானொன்று மேதினி ஒத்திரு நூற்றிரு பானான்கெண் பானொன்று வைத்த பதங்கலை யோரைந்தும் வந்ததே.


64

  1. நாடிய மண்டல மூன்று நலந்தெரிந் தோடு மவரோ டுள்ளிரு பததைஞ்சுங் கூடுவர் கூடிக் குறிவழி யேசென்று தேடிய பின்னர்த் திகைத்திருந் தார்களே.

65

  1. சாக்கிர சாக்கிர மாதித் தலையாக்கி ஆக்கிய தூல மளவாக்கி யதீதத்துத் தாக்கிய வன்பான தாண்டவஞ் சார்ந்தது தேக்குஞ் சிவமாத லைந்துஞ் சிவாயமே.

66

===6.சுத்த நனவாதி பருவம்=== 2187. நனவாதி தூலமே சூக்கப் பகுதி அனதான வையைந்தும் விந்துவின் சத்தி தனதா முயிர்விந்து தானின்று போந்து கனவா நனவிற் கலந்ததிவ் வாறே.


67

  1. நனவி லதீதம் பிறந்தார் கிடந்தார் நனவிற் றூரிய நிகழ்ந்தார் தவழ்ந்தார் நனவிற் சுழுனை நடந்தார் வளர்ந்தார் நனவிற் கனவோட னன்செய்தி யானதே.

68

  1. செறியு கிரியை சிவதத் துவமாம் பிறிவிற் சுகயோகம் பேரருள் கல்வி குறிதற் றிருமேனி குணம்பல வாகும் அறிவில் சராசர மண்டத் தளவே.

69

  1. ஆதி பரஞ்சிவஞ் சத்தி சதாசிவம் ஏதமி லீசனல் வித்தியா தத்துவம் போதங் கலைகால நியதி மாமாயை நீதியீ றாக நிறுத்தின னென்னே.

70

  1. தேசு திகழ்சிவஞ் சத்தி சதாசிவம் ஈசன னல்வித்தை யிராகங் கலைகால மாசகல் வித்தை நியதி மகாமாயை ஆசில் புருடாதி யான்மாவீ ராறே.

71

  1. ஆணவ மாயையுங் கன்மமு மாமலங் காணு முளைக்குத் தவிடுமி யான்மாவுந் தாணுவை யொவ்வாமற் றண்டுல மாய்நிற்கும் பேணுவாய் மற்றுநின் பாசம் பிரித்தே.

72

  1. பசுக்கள் பலவண்ணம் பாலொரு வண்ணம் பசுக்களை மேய்க்கின்ற வாய னொருவண்ணம் பசுக்களை மேய்க்கின்ற வாயன்கோல் போடிற் பசுக்கட லைவனைப் பற்றி விடாவே.

73

  1. உடலிந் தியமன மொண்புத்தி சித்தம் அடலொன் றகந்தை யறியாமை மன்னிக் கெடுமவ் வுயிர்மயல் மேலுங் கிளைத்தால் அடைவது தானேழ் நரகத்து ளாயே.

74

  1. தற்றெரி யாதவ தீதந்தற் கணவஞ் சொற்றெரி கின்ற துரியஞ்சொற் காமியம் பெற்ற சுழுத்திப்பின் பேசுறுங் காதலா மற்றது வுண்டிக் கனநன வாதலே.

75

  1. நனவிற் கனவில்லை யைந்து நனவிற் கனவிலாச் சூக்குமங் காணுஞ் சுழுத்தி தனனுண் பகுதியே தற்கூட்டு மாயை நனவிற் றூரிய மதீதந் தலைவந்ததே.

76

  1. ஆறா றிலையைந் தகல நனாநனா வாறா மவைவிட வாகு நனாக்கனா வேறானா வைந்தும் விடவே நனாவினில் ஈறாஞ் சுழுனை யிதின்மாயை தானே.

77

  1. மாயையில் வந்த புருடன் றுரியத்தில் ஆய முறைவிட் டதுவுந்தா னன்றாகிச் சேய கேவல விந்துடன் சென்றக்கால் ஆய தனுவின் பயனில்லை யாகுமே.

78

  1. அதீதத் துரியத் தறிவனா மான்மா அதீதத் துரிய மதனாற் புரிந்தால் அதீதத் தெழுந்தறி வாகிய மானன் முதிய வனலிற்றுரியத்து முற்றுமே.

79

  1. ஐயைந்து பத்துட னானது சாக்கிரங் கைகண்ட வையஞ்சிற் கண்டங் கனாவென்பர் பொய்கண்ட மூவர் புருடன் சுழுனையின் மெய்கண்ட வனுந்தி மேவ லிருவரே.

80

  1. புரியட் டகமே பொருந்தல் நனவு புரியட் டகந்தனின் மூன்று கனவு புரியட் டகத்தி லிரண்டு சுழுத்தி புரியட் டகத்தொன்று புக்க துரியமே.

81

  1. நனவி னனவு புலனில் வழக்கம் நனவிற் கனவு நினைத்தன் மறத்தல் நனவிற் சுழுனையுண் ணாட லிலாமை நனவிற் றுரிய மதீதத்து நந்தியே.

82

  1. கனவி னனவுபோற் காண்ட னனவாங் கனவினிற் கண்டு மறத்தல் கனவாங் கனவிற் சுழுத்தியுங் காணாமை காணல் அனுமாதி செய்த லிலான துரியமே.

83

  1. சுழுத்தி நனவொன்றுந் தோன்றாமை தோன்றல் சுழுத்தி கனவத னுண்மை சுழுத்தியிற் சுழுத்தி யறிவறி வாலே யழிகை சுழுத்தித் துரியமாஞ் சொல்லறும் பாழே.

84

  1. துரிய நனவா மிதமுரை போதந் துரியக் கனவா மகமுணர் போதந் துரியச் சுழுத்தி வியோமந் துரியந் தூரியம் பரமெனத் தோன்றிடுந் தானே.

85

  1. அறிவறி கின்ற வறிவு நனவாம் அறிவறி யாமை யடையக் கனவாம் அறிவறி யவ்வறி யாமை சுழுத்தி அறிவறி வாகு மான துரியமே.

86

  1. தானெங்கு மாயவ னைம்மலத் தான்விட்டு ஞானத்த னதுரு வாகி நயந்தபின் தானெங்கு மாய்நெறி நின்றது தான்விட்டு மேனந்தச் சூக்க மவைவன்ன மேலிட்டே.

87

  1. ஐயைந்து மாறுமோ ரைந்து நனாவினில் எய்யு நனவு கனவு சுழுத்தியா மெய்யும்பின் சூக்கம மெய்ப்பகுதி மாயை ஐயமுந் தானவ னத்துரி யத்தனே.

88

  1. ஈதென் றறிந்தில னித்தனை காலமும் ஈதென் றறிந்தபி னேது மறிந்திலேன் ஈதென் றறியு மறிவை யறிந்தபின் ஈதென் றறியு மியல்புடை யோனே.

89

  1. உயிர்க்குயி ராகி யுருவா யருவாய் அயற்புணர் வாகி யறிவாய்ச் செறிவாய் நயப்புறு சத்தியு நாத னுலகாதி இயற்பின்றி யெல்லா மிருண்மூட மாமே.

90

  1. சத்தி யிராகத்திற் றானல் லுயிராகி ஒத்துறு பாச மலமைந்தோ டாறாறு தத்துவ பேதஞ் சமைத்துக் கருவியும் வைத்தன னீசன் மலமறு மாறே.

91

  1. சாக்கிரா தீதத்தி லாணவந் தன்னுண்மை சாக்கிரா தீதத் துரியத்திற் றானுறல் சாக்கிரா தீதத்தி லாணவந் தான்விடாச் சாக்கிரா தீதம் பரனுண்மை தங்குமே.

92

  1. மலக்கலப் பாலே மறைந்தது சத்தி மலக்கலப் பாலே மறைந்தது ஞானம் மலக்கலப் பாலே மறைந்தனன் றாணு மலக்கலப் பற்றால் மதியொளி யாமே.

93

  1. திகைக்கின்ற சிந்தையுட் சிங்கங்கண் மூன்று நகைக்கின்ற நெஞ்சு ணரிக்குட்டி நான்கு வகைக்கின்ற நெஞ்சினு ளானைக்கன் றைந்து பகைக்கின்ற நெஞ்சுக்குப் பாலிரண் டாமே.

94

  1. கதறு பதினெட்டுக் கண்களும் போகச் சிதறி யெழுந்திடுஞ் சிந்தையை நீரும் விதறு படாமுன்ன மெய்வழி நின்றால் அதிர வருவதோ ரானையு மாமே.

95

  1. நனவகத் தேயொரு நாலைந் தும்வீடக் கனவகத் தேயுட் கரணங்க ளோடு முனவகத் தேநின் றுதறியுள் புக்கு நினைவகத் தின்றிச் சுழுத்திநின் றானே.

96

  1. நின்றவ னாசா னிகள்துரி யத்தனாய் ஒன்றி யுலகி னியமா திகளுற்றுச் சென்று துரியாதீ தத்தே சிலகால நின்று பரனாய் நின்மல னாகுமே.

97

  1. ஆனவவ் வீச னதீதத்தில் வித்தையாய்த் தானுல குண்டு சதாசிவ மாசத்தி மேனிக ளைந்தும்போய் விட்டுச் சிவமாகி மோன மடைந்தொளி மூலத்த னாமே.

98

  1. மண்டல மூன்றினுள் மாயநன் னாடனைக் கண்டுகொண் டுள்ளே கருதிக் கழிக்கின்ற விண்டலர் தாமரை மேலொன்றுங் கீழாகத் தண்டமுந் தானா யகத்தினுள் ளாமே.

99

  1. போதறி யாது புலம்பின புள்ளின மாதறி யாவகை நின்று மயங்கின வேதறி யாவண நின்றன னெம்மிறை சூதறி வாருச்சி சூடிநின் றாரே.

100

  1. கருத்தறிந் தொன்பது கண்டமு மாங்கே பொருத்தறிந் தோம்புவ னாபதி நாடித் திருத்தறிந் தேன்மிகு தேவர் பிரானை வருத்தறிந் தேன்மன மன்னிநின் றானே.

101

  1. ஆன விளக்கொளி தூண்டு மவனென்னத் தான விளக்கொளி யாமூல சாதனத் தான விதிமூலத் தானத்தி லவ்விளக்கு ஏனை மதிமண் டலங்கொண் டெரியுமே.

102

  1. உண்ணாடு மைவர்க்கு மண்டை யொதுங்கிய விண்ணாட நின்ற வெளியை வினவுறில் அண்ணாந்து பார்த்தைவர் கூடிய சந்தியிற் கண்ணாடி காணுங் கருத்ததென் றானே.

103

  1. அறியாத வற்றை யறிவா னறிவான் அறிவா னறியாதான் றன்னறி வாகான் அறியா தவத்தை யறிவானைக் கூட்டி அறியா தறிவானை யாரறி வாரே.

104

  1. துரிய தரிசனஞ் சொற்றோம் வியோமம் அரியன தூடணம் அந்நன வாதி பெரியன கால பரம்பிற் றுரியம் அரிய வதீத மதீதத்த தாமே.

105

  1. மாயையிற் சேதனன் மன்னு பகுதியோன் மாயையின் மற்றது நீவுதன் மாயையாங் கேவல மாகுஞ் சகலமா யோனியுட் டோயு மனிதர் துரியத்துட் சீவனே.

106

===7.கேவல சகல சுத்தம்=== 2227. தன்னை யறிசுத்தன் றற்கே வலன்றானும் பின்ன முறநின்ற பேத சகலனு மன்னிய சத்தசத் துச்சத சத்துடன் தன்னுவர் தத்தந் தொழிற்கள வாகவே.


107

  1. தானே தனக்குப் பகைவனு நட்டானுந் தானே தனக்கு மறுமையு மிம்மையுந் தானே தான்செய்த வினைப்பயன் றுய்ப்பானுந் தானே தனக்குத் தலைவனு மாமே.

108

  1. ஆமுயிர் கேவல மாமாயை யின்னடந் தாமுயிர் மாயை யெறிப்ப வறிவுற்றுக் காமிய மாயேய முங்கல வாநிற்பத் தாமுறு பாசஞ் சகலத்த தாமே.

109

  1. சகல வவத்தையிற் சார்ந்தோர் சகலர் புகலு மலமூ வகையும் புணர்ந்தோர் நிகரின் மலரோன்மா னீடுபல் தேவர்கள் நிகழ்நரர் கீட மந்தமு மாமே.

110

  1. தாவிய மாயையிற் றங்கும் பிரளய மேவிய மற்ற துடம்பாய்மிக் குள்ளன ஓவ லிலக்கண ரொன்றிய சீகண்டர் ஆவயின் நூற்றெட்டு ருத்திர ராகுமே.

111

  1. ஆகின்ற கேவலத் தாணவத் தானவர் ஆகின்ற வித்தே சராமனந் தாதியர் ஆகின்ற வெண்ம ரெழுகோடி மந்திரர் ஆகின்ற வீச ரனேகரு மாமே.

112

  1. ஆமாறிற் சிவ னாரருள் பெற்றுளோர் போமலந் தன்னாற் புகழ்விந்து நாதம்விட் டோமய மாகி யொடுங்கலி னின்மலந் தோமறு சுத்தா வவத்தைத் தொழிலே.

113

  1. ஓரினு மூவகை நால்வகை யும்முள தேரி லிவைகே வலமாயை சேரிச்சை சாரிய லாயவை தாமே தணப்பவை வாரிவைத் தீசன் மலமறுத் தானே.

114

  1. பொய்யான போதாந்த மாறாறு விட்டகன்று எய்யாமை நீங்கவே யெய்தவன் றானாகி மெய்யாய் சராசர மாய்வெளி தன்னுட்புக்கு எய்தாம லெய்துஞ்சுத் தாவத்தை யென்பவே.

115

  1. அனாதி பசுவியாத்தி யாகு மிவனை அனாதியில் வந்த மலமைந்தா லாட்டி அனாதியிற் கேவல மச்சக லத்திட்டு அனாதி பிறப்பறச் சுத்தத்து ளாகுமே.

116

  1. அந்தரஞ் சுத்தாவத் தைகேவ லத்தாறு தந்தோர்தஞ் சுத்தகே வலத்தற்ற தற்பரத் தின்பாற் றுரியத் திடையே யறிவுறத் தன்பாற் றனையறி தத்துவந் தானே.

117

  1. ஐயைந் தொடுங்கு மான்மாவி லான்மாவு மெய்கண்டிடுஞ் சுத்த வித்தையில் வீடாகுந் துய்யவன் வித்தை முதன்மூன்றுந் தொல்சத்தி ஐயன் சிவஞ்சத்தி யாந்தோற்ற மவ்வாறே.

118

  1. ஐயைந்து மான்மாவி லாறோ டடங்கிடும் மெய்கண்ட மேன்மூன்று மேவுமெய் யோகத்தில் கைகண்ட சத்தி சிவபாகத் தேகாண எய்யும் படியடங் கும்நாலேழ் எய்தியே

119

  1. ஆணவத் தாரொன் றறியாத கேவலர் பேணிய மாயை பிரளயா கலராகுங் காண முருவினர் காணாமை காண்பவே பூணுஞ் சகலமும் பாசமும் புக்கோரே.

120

  1. ஆணவ மாகும் விஞ்ஞான கலருக்குப் பேணிய மாயை பிரளயா கலராகும் ஆணவ மாயையுங் கன்ம மூன்றுமே காணுஞ் சகலர்க்குக் காட்டு மலங்களே.

121

  1. கேவலந் தன்னிற் கிளர்ந்தவிஞ் ஞாகலர் கேவலந் தன்னிற் கிளர்விந்து சத்தியால் ஆவயிற் கேவலத் தச்சக லத்தையும் மேவிய மந்திர மாமாயை மெய்ம்மையே.

122

  1. மாயையின் மன்னும் பிரளயா கலர்வந்து மாயையுந் தோன்றா வகைநிற்க ஆணவ மாய சகலத்துக் காமிய மாமாயை ஏயமன் னூற்றெட் டுருத்திர ரென்பவே.

123

  1. மும்மலங் கூடி முயங்கி மயங்குவோர் அம்மெய்ச் சகலத்தர் தேவா சுரர்நரர் மெய்ம்மையில் வேதா விரிமால் கீடாந்தம் தம்முறை யோனிபுக் கார்க்குஞ் சகலரே.

124

  1. சுத்த வவத்தையிற் றோய்ந்தவர் மும்மலச் சத்தசத் தோடத் தனித்தளை பாசமு மத்த விருள்சிவ னான கதிராலே தொத்தற விட்டிடச் சுத்தரா வார்களே.

125

  1. தற்கே வலமுத்தி தானே தனிமையாம் பிற்பாற் சகலங் கலாதிப் பிறிவதாஞ் சொற்பாற் புரிசுத்த கேவலஞ் சாக்கிரந் தற்பாற் புரிவது தற்சுத்த மாமே.

126

  1. அறிவின்றி யமுத்த னராகாதி சேரான் குறியொன் றிலாநித்தன் கூடான் கலாதி செறியுஞ் செயலிலான் றினக்கற்ற லில்லோன் கிறியன் மலவியாபி கேவலத் தானே.

127

  1. விந்துவு மாயையு மேவுங் கிரியையுஞ் சந்தத ஞான பரையுந் தனுச்சத்தி விந்துவின் மெய்ஞ்ஞான மேவும் பிரளயர் வந்த சகலசுத் தான்மாக்கள் வையத்தே.

128

  1. கேவல மாதியிற் பேதங் கிளக்குறில் கேவல மூன்றுங் கிளருஞ் சகலத்துள் ஆவயின் மூன்றுமதி சுத்த மூடவே ஓவலில் லாவொன்பா னுற்றுணர் வோர்கட்கே.

129

  1. கேவலத்திற் கேவல மதீதா தீதங் கேவலத் திற்சக லங்கள் வைந்தவங் கேவலத் திற்சுத்தங் கேடில்விஞ் ஞாகலர்க் காவயி னாத னருண்மூர்த்தி தானே.

130

  1. சகலத்திற் கேவலஞ் சாக்கிரா தீதஞ் சகல சகலமே சாக்கிர சாக்கிரஞ் சகலத்திற் சுத்தமே தற்பரா வத்தை சகலத்தி லிம்மூன்று தன்மையு மாமே.

131

  1. சுத்தத்திற் சுத்தமே தொல்சிவ மாகுதல் சுத்தத்திற் கேவலந் தொல்லுப சாந்தமாஞ் சுத்த சகலந் துரிய விலாசமாஞ் சுத்தத்தி லிம்மூன்றுஞ் சொல்லலு மாமே.

132

  1. சாக்கிர சாக்கிரந் தன்னிற் கனவொடுஞ் சாக்கிரந் தன்னிற் சுழுத்தி துரியமே சாக்கிரா தீதந் தனிற்சுகா னந்தமே ஆக்கு மறையாதி யைம்மல பாசமே.

133

  1. சாக்கிரா தீதத்திற் றானது மாணவஞ் சாக்கிரா தீதம் பராவத்தை தங்காது ஆக்கு பரோபாதி யாமுப சாந்தத்தை நோக்கு மலங்குண நோக்குத லாகுமே.

134

  1. பெத்தமு முத்தியும் பேணுந் துரியமுஞ் சுத்த வதீதமுந் தோன்றாமற் றானுணும் அத்த னருளென் றருளா லறிந்தபின் சித்தமு மில்லை செயலில்லை தானே.

135

  1. எய்திய பெத்தமு முத்தமு மென்பன எய்து மரனரு ளேவிளை யாட்டோ டெய்தி டூயிர்சுத்தத திடுநெறி யென்னவே எய்து முயிரிறை பாலறி வாமே.

136

  1. ஐம்மலத் தாரு மதித்த சகலத்தர் ஐம்மலத் தாரு மருவினைப் பாசத்தார் ஐம்மலத் தார்சுவர்க் கந்நெறி யாள்பவர் ஐம்மலத் தாரர னார்ச்சறி வோரே.

137

  1. கருவி லதீதங் கலப்பிக்கு மாயை அரிய துரிய மதிலுண்ணு மாசையும் உரிய சுழுனை முதலெட்டுஞ் சூக்கத் தரிய கனாத்தூல மந்நன வாகுமே.

138

  1. ஆணவ மாகுமதீ தமேன் மாயையும் பூணுந் துரியஞ் சுழுத்திபொய்க் காமியம் பேணுங் கனவு மாமாயை திரோதாயி காணு நனவின் மலக்கலப் பாகுமே.

139

  1. அரன்முத லாக வறிவோ னதீதத்தன் அரன்முத லாமாயை தங்கிச் சுழுனை கரும முணர்ந்து மாமாயை கைக்கொண்டார் அருளு மறைவார் சகலத்துற் றாரே.

140

  1. உருவுற்றுப் போகமே போக்கியந் துற்று மருவுற்றுப் பூத மனாதியான் மன்னி வருமச் செயல்பற்றிச் சத்தாதி வைகிக் கருவுற் றிடுஞ்சீவன் காணுஞ் சகலத்தே.

141

  1. இருவினை யொத்திட வின்னருட் சத்தி மருவிட ஞானத்தி லாதன மன்னிக் குருவினைக் கொண்டருட் சத்திமுன் கூட்டிப் பெருமல நீங்கிப் பிறவாமை சுத்தமே.

142

  1. ஆறாறு மாறதி னையைந் தவத்தையோ டீறா மதீதத் துரியத் திவனெய்தப் பேறான வைவரும் போம்பிர காசத்து நீறார் பரஞ்சிவ மாதேய மாகுமே.

143

  1. தன்னை யறியா துடலைமுன் றானென்றான் தன்னைமுன் கண்டான் றுரியந் தனைக்கண்டான் உன்னுந் துரியமு மீசனோ டொன்றாக்காற் பின்னையும் வந்து பிறந்திடுந் தானே.

144

  1. சாக்கிரந் தன்னி லதீதந் தலைப்படில் ஆக்கிய வந்த வைந்தவ மானந்த நோக்கும் பிறப்பறு நோன்முத்தி சித்தியாம் வாக்கு மனமு மருவல்செய் யாவே.

145

  1. அப்பு மனலு மகலத்து ளேவரும் அப்பு மனலு மகலத்து ளேவரா அப்பு மனலு மகலத்து ளேதெனில் அப்பு மனலுங் கலந்தவவ் வாறே.

146

  1. அறுநான்கு சுத்த மதிசுத்தா சுத்தம் உறுமேழு மாயை யுடனைந்து சுத்தம் பெருமா றிவைமூன்றுங் கண்டத்தாற் பேதித் துறுமாயை மாமாயை யான்மாவி னோடே.

147

  1. மாயைகைத் தாயாக மாமாயை யீன்றிட வாய பரசிவன் றந்தையாய் நிற்கவே ஏயு முயிர்க்கே வலசக லத்தெய்தி ஆய்தரு சுத்தமுந் தான்வந் தடையுமே.

148

===8.பராவத்தை=== 2269. அஞ்சுங் கடந்தவ னாதி பரந்தெய்வ நெஞ்சம தாய நிமலன் பிறப்பிலி விஞ்சு முடலுயிர் வேறு படுத்திட வஞ்சத் திருந்த வகையறிந் தேனே.


149

  1. சத்தி பராபரம் சாந்தி தனிலான சத்தி பரானந்தந் தன்னிற் சுடர்விந்து சத்திய மாயை தனுச்சத்தி யைந்துடன் சத்தி பெறுமுயிர் தானங்கத் தாறுமே.

150

  1. ஆறாறுக் கப்பா லறிவா ரறிபவர் ஆறாறுக் கப்பா லருளார் பெறுபவர் ஆறாறுக் கப்பா லறிவா மவர்கட்கே ஆறாறுக் கப்பா லரனி னிதாமே.

151

  1. அஞ்சொடு நான்குங் கடந்தக மேபுக்குப் பஞ்சணி காலத்துப் பள்ளி துயில்கின்ற விஞ்சையர் வேந்தனு மெல்லிய லாளொடு நஞ்சற நாடி நயஞ்செய்யு மாறே.

152

  1. உரிய நனாத்துரி யத்தி லிவனாம் அரிய துரிய நனவாதி மூன்றிற் பரிய பரதுரி யத்திற் பரனாந் திரிய வருந்துரி யத்திற் சிவமே.

153

  1. பரமா மதீதமே பற்றறப் பற்றல் பரமா மத்தம் பயிலப் பயிலப் பரமா மதீதம் பயிலாத் தபோதனர் பரமாகார் பாசமும் பற்றொன் றறாதே.

154

  1. ஆயும்பொய்ம் மாயை யகம்புற மாய்நிற்கும் வாயு மனமுங் கடந்த மயக்கறின் தூய வறிவு சிவானந்த மாகிப்போய் வேயும் பொருளாய் விளைந்தது தானே.

155

  1. துரியப் பிரியி லிருந்தவச் சீவனைப் பெரிய வியாக்கிரத் துள்ளே புகவிட்டு நரிகளை யோடத் துரத்திய நாதர்க் கரிய வினைகணின் றோலமிட் டன்றே.

156

  1. நின்றவிச் சாக்கிர நீடுரி யத்தின் மன்றனு மங்கே மணஞ்செய்ய நின்றிடும் மன்றன் மணஞ்செய்ய மாயை மறைந்திடும் அன்றே யிவனு மவன்வடி வாமே.

157

  1. விரிந்திடிற் சாக்கிர மேவும் விளக்காய் இருந்த விடத்திடை யீடான மாயை பொருந்துந் துரியம் புரியிற்றா னாகுந் தெரிந்த துரியத்துத் தீதக லாதே.

158

  1. உன்னை யறியா துடலைமுன் னானென்றாய் உன்னை யறிந்து துரியத் துறநின்றாய் தன்னை யறிந்தும் பிறவி தணவாதால் அன்ன வியாத்த னமலனென் றறிதியே.

159

  1. கருவரம் பாகிய காயந் துரியம் இருவருங் கண்டீர் பிறப்பிறப் புற்றார் குரபரம் பெற்றவர் கூடிய பின்னை இருவரு மின்றியொன் றாகிநின் றாரே.

160

  1. அணுவின் றுரியத்தி லான நனவும் அணுவசை வின்கண் ணான கனவும் அணுவசை விற்பரா தீதஞ் சுழுத்தி பணியிற் பரதுரி யம்பர மாமே.

161

  1. பரதுரி யத்து நனவும் பரந்து விரிசக முண்ட கனவுமெய்ச் சாந்தி உருவுறு கின்ற சுழுத்தியு மோவத் தெரியுஞ் சிவதுரி யத்தனு மாமே.

162

  1. பரமா நனவின் பின்பார் சகமுண்ட திரமார்கனவுஞ் சிறந்த சுழுத்தி உரமா முபசாந்த முற்றல் துறவே தராஞ் சிவதுரி யத்தனு மாமே.

163

  1. சீவ தூரிய முதலாகச் சீரான ஆவ சிவதுரி யாந்த மவத்தைபத் தோவும் பராநந்தி யுண்மைக்குள் வைகியே மேவிய நாலேழ் விடுத்துநின் றானே.

164

  1. பரஞ்சிவன் மேலாம் பரமம் பரத்திற் பரம்பரன் மேலாம் பரநன வாக விரிந்த கனாவிடர் வீட்டுஞ் சுழுனை யுரந்தகு மாநந்தி யாமுண்மை தானே.

165

  1. சார்வாம் பரசிவஞ் சத்தி பரநாத மேலாய விந்து சதாசிவ மிக்கோங்கிப் பாலாய் பிரம னரியம ராபதி தேவா முருத்திர னீசனாங் காணிலே.

166

  1. கலப்பறி யார்கடல் சூழுல கேழும் உலப்பறி யாருட லோடுயிர் தன்னை அலப்பறிந் திங்கர சாளகி லாதார் குறிப்பது கோல மடலது வாமே.

167

  1. பின்னை யறியும் பெருந்தவத் துண்மைசெய் தன்னை யறியிற் றயாபர னெம்மிறை முன்னை யறிவு முடிகின்ற காலமும் என்னை யறியலுற் றின்புற்ற வாறே.

168

  1. பொன்னை மறைத்தது பொன்னணி பூடணம் பொன்னின் மறைந்தது பொன்னணி பூடணந் தன்னை மறைத்தது தன்கர ணங்களாந் தன்னின் மறைந்தது தன்கர ணங்களே.

169

  1. மரத்தை மறைத்தது மாமத யானை மரத்தின் மறைந்தது மாமத யானை பரத்தை மறைத்தது பார்முதற் பூதம் பரத்தின் மறைந்தது பார்முதற் பூதமே.

170

  1. ஆறா றகன்று நமவிட் டறிவாகி வேறான தானே யகாரமாய் மிக்கோங்கி ஈறார் பரையி னிருளற்ற தற்பரன் பேறார் சிவாய வடங்கும்பின் முத்தியே.

171

  1. துரியத்தி லோரைந்துஞ் சொல்லக ராதி விரியப் பரையின் மிகுநாத மந்தம் புரியப் பரையின் பராவத்தா போதந் திரியப் பரமந் துரியந் துரியமே.

172

  1. ஐந்துஞ் சகலத் தருளாற் புரிவுற்றுப் பந்திடுஞ் சுத்த வவத்தைப் பதைப்பினில் நந்தி பராவத்தை நாடச் சுடர்முனம் அந்தி யிருள்போலு மைம்மல மாறுமே.

173

  1. ஐயைந்து மட்டுப் பகுதியு மாயையும் பொய்கண்ட மாமாயை தானும் புருடன்கண் பெய்யும் படியா யெவற்றுமா யன்றாகி உய்யும் பராவத்தை யுள்ளுறல் சுத்தமே.

174

  1. நின்றா னருளும் பரமுமுன் னேயமும் ஒன்றாய் மருவு முருவு முபாதியுஞ் சென்றா னெனைவிடுத் தாங்கிற்செல் லாமையு நன்றான ஞானத்தி னாதப் பிரானே.

175

===9.முக்குணம் - நிர்க்குணம்=== 2296. சாத்திக மெய்து நனவெனச் சாற்றுங்கால் வாய்த்த விராசத மன்னுங் கனவென்ப ஓய்த்திடுந் தாமத முற்ற சுழுத்தியாம் மாய்த்திடு நிர்க்குண மாசி றுரியமே.


176

===10.அண்டாதி பேதம்=== 2297. பெறுபகி ரண்டம் பேதித்த வண்டம் எறிகட லேழின் மணலள வாகப் பொறியொளி பொன்னணி யென்ன விளங்கிச் செறியுமண் டாசனத் தேவர் பிரானே.


177

  1. ஆனந்த தத்துவ மண்டா சனத்தின்மேன் மேனியைந் தாக வியாத்தமுப் பத்தாறாய்த் தானந்த மில்லாத தத்துவ மானவை ஈன மிலாவண்டத் தெண்மடங் காமே.

178

===11.பதினோராந்தானமும் அவத்தை எனக்கானல்=== 2299. அஞ்சி லமுதுமோ ரேழின்க ணானந்த முஞ்சிலோங் காரமோ ரொன்பான் பதினொன்றில் வஞ்சக மேநின்று வைத்திடிற் காயமாங் கிஞ்சுகச் செவ்வாய்க் கிளிமொழி கேளே.


179

  1. புருட னுடனே பொருந்திய சித்தம் அருவமொ டாறு மதீதத் துரியம் விரியுஞ் சுழுத்தியின் மிக்குள்ள வெட்டும் அரிய பதினொன்று மாமவ் வவத்தையே.

180

  1. காட்டும் பதினொன்றுங் கைகலந் தாலுடல் நாட்டி யழுத்திடி னந்தியல் லாலில்லை ஆட்டஞ் செய்யாத வதுவிதி யேநினை ஈட்டு மதுதிட மெண்ணலு மாமே.

181

===12.கலவு - செலவு=== 2302. கேவலந் தன்னிற் கலவச் சகலத்தின் மேவுஞ் செலவு விடவரு நீக்கத்துப் பாவுந் தனைக்காண்டன் மூன்றும் படர்வற்ற தீதறு சாக்கிரா தீதத்திற் சுத்தமே.


182

  1. வெல்லு மளவில் விடுமின் வெகுளியைச் செல்லு மளவுஞ் செலுத்துமின் சிந்தையை அல்லும் பகலு மருளுடன் தூங்கினால் கல்லும் பிளந்து கடுவெளி யாமே.

183

===13.நின்மலாவத்தை=== 2304. ஊமைக் கிணற்றகத் துள்ளே யுறைவதோர் ஆமையி னுள்ளே யழுவைக ளைந்துள வாய்மையி னுள்ளே வழுவா தொடுங்குமேல் ஆமையின் மேலுமோ ராயிரத் தாண்டே.


184

  1. காலங்கி நீர்பூக் கலந்தவா காய மாலங்கி யீசன் பிரமன் சதாசிவன் மேலஞ்சு மோடி விரவவல் லார்கட்குக் காலனு மில்லை கருத்தில்லை தானே.

185

  1. ஆன்மாவே மைந்த னாயின னென்பது தான்மா மறையறை தன்மை யறிகிலர் ஆன்மாவே மைந்த னரனுக் கிவனென்றால் ஆன்மாவு மில்லையா லையைந்து மில்லையே.

186

  1. உதய மழுங்க லொடுங்கலிம் மூன்றின் கதிசாக் கிரங்கன வாதி சுழுத்தி பதிதரு சேதனன் பற்றாந் துரியத் ததிசுப னாயனந் தானந்தி யாகுமே.

187

  1. எல்லாந்தன் னுட்புக யாவுளுந் தானாகி நல்லாந் துரியம் புரிந்தக்கா னல்லுயிர் பொல்லாத வாறாறுட் போகாது போதமாய்ச் செல்லாச் சிவகதி சென்றெய்து மன்றே.

188

  1. காய்ந்த விரும்பு கனலை யகன்றாலும் வாய்ந்த கனலென வாதனை நின்றாற்போல் ஏய்ந்த கரண மிறந்த துரியத்தும் தோய்ந்த கருமத் துரிசக லாதே.

189

  1. ஆன மறையாதி யாமுரு நந்திவந் தேனை யருள்செய் தெரிநனா வத்தையில் ஆன வகையை விடுமடைத் தாய்விட ஆன மலாதீத மப்பரந் தானே.

190

  1. சுத்த வதீதஞ் சகலத்திற் றோய்வுறில் அத்த னருணீங்கா வாங்கணிற் றானாகச் சித்த சுகத்தைத் தீண்டா சமாதிசெய் தத்தனோ டொன்றற் கருண்முத லாமே.

191

  1. வேறுசெய் தானிரு பாதியின் மெய்த்தொகை வேறுசெய் தானென்னை யெங்கணும் விட்டுய்த்தான் வேறுசெய் யாவருட் கேவலத் தேவிட்டு வேறுசெய் யாவத்தன் மேவிநின் றானே.

192

  1. கறங்கோலை கொள்ளி வட்டங் கடலிற் றிரைநிறஞ் சேர்மத்தின் மலத்தினி னின்ற அறங்காண் சுவர்க்க நரகம் புவிசேர்ந் திறங்கா வுயிரரு ளாலிவை நீங்குமே.

193

  1. தானே சிவமான தன்னை தலைப்பட ஆன மலமு மப்பாச பேதமு மான குணமும் பரான்மா வுபாதியும் பானுவின் முன்மதி போற்பட ராவே.

194

  1. நெருப்புண்டு நீருண்டு வாயுவு முண்டங் கருக்கனுஞ் சோமனு மங்கே யமருந் திருத்தக்க மாலுந் திசைமுகன் றானும் உருத்திர சோதியு முள்ளத்து ளாரே.

195

  1. ஆனைக ளைந்து மடக்கி யறிவென்னு ஞானத் திரியைக் கொளுவி யதனுள்புக் கூனை யிருளற நோக்கு மொருவற்கு வானக மேற வழியெளி தாமே.

196

  1. ஆடிய காலி னசைகின்ற வாயுவுந் தாடித் தெழுந்த தமருக வோசையும் பாடி யெழுகின்ற வேதாக மங்களும் நாடியி னுள்ளாக நான்கண்ட வாறே.

197

  1. முன்னை யறிவினிற் செய்த முதுதவம் பின்னைப் பிறவியின் பெற்றா லறியலாந் தன்னை யறிவ தறிவாமஃ தன்றிப் பின்னை யறிவது பேயறி வாகுமே.

198

  1. செயலற் றிருக்கச் சிவானந்த மாகுஞ் செயலற் றிருப்பார் சிவயோகந் தேடார் செயலற் றிருப்பார் செகத்தொடுங் கூடார் செயலற் றிருப்பார்க்கே செய்தியுண் டாகுமே.

199

  1. தானவ னாகுஞ் சமாதிகை கூடினால் ஆன மலமறு மப்பசுத் தன்மைபோம் ஈனமில் காய மிருக்கு மிருநிலத் தூனங்க ளெட்டு மொழிந்தொன்று வோர்கட்கே.

200

  1. தொலையா வரனடி தோன்றுமச் சத்தி தொலையா விருளொளி தோற்ற வணுவுந் தொலையாத் தொழின்ஞானந் தொன்மையி னண்ணித் தொலையாத பெத்தமுத் திக்கிடை தோயுமே.

201

  1. தோன்றிய பெத்தமு முத்தியுஞ் சூழ்சத்தி மான்றுந் தெருண்டு முயிர்பெறு மற்றவை தான்றரு ஞானந்தன் சத்திக்குச் சாதனா மூன்றலில் லாவுள் ளொளிக்கொளி யாமே.

202

  1. அறிகின் றிலாதன வையேழு மொன்றும் அறிகின்ற வென்னை யறியா திருந்தேன் அறிகின்றாய் நீயென் றருள்செய்தா னந்தி அறிகின்ற நானென் றறிந்துகொண் டேனே.

203

  1. தானவ னாகிய ஞானத் தலைவனை வானவ ராதியை மாமணிச் சோதியை ஈனமின் ஞானத் தின்னருட் சத்தியை ஊனமி லாடன்னை யூனிடைக் கண்டதே.

204

  1. ஒளியு மிருளும் பரையும் பரையுள் அளிய தெனலாகு மான்மாவை யன்றி அளியு மருளுந் தெருளுங் கடந்து தெளிய வருளே சிவானந்த மாகுமே.

205

  1. ஆனந்த மாகு மரனருட் சத்தியிற் றானந்த மாமுயிர் தானே சமாதிசெய் தூனந்த மாயுணர் வாயுள் ளுணர்வுறிற் கோனந்த வாய்க்கு மகாவாக்கிய மாமே.

206

  1. அறிவிக்க வேண்டா மறிவற் றயர்வோர்க்கும் அறிவிக்க வேண்டா மறிவிற் செறிவோர்க்கும் அறிவுற் றறியாமை யெய்திநிற் போர்க்கே அறிவிக்கத் தம்மறி வாரறி வோரே.

207

  1. சத்த மசத்துஞ் சதசத்துந் தான்கூடிச் சித்து மசித்துஞ் சிவசித்த தாய்நிற்குஞ் சுத்த மசுத்தந் தொடங்காத் துரியத்துச் சுத்தரா மூன்றுடன் சொல்லற் றவர்களே.

208

  1. தானே யறியா னறிவிலோன் றானல்லன் தானே யறியா னறிவு சதசத்தென் றானா லிரண்டு மரனரு ளாய்நிற்கத் தானே யறிந்து சிவத்துடன் றங்குமே.

209

  1. தத்துவ ஞானந் தலைப்பட் டவர்க்கே தத்துவ ஞானந் தலைப்பட லாய்நிற்குந் தத்தவ ஞானத்துத் தானவ னாகவே தத்துவ ஞானானந் தந்தான் றொடங்குமே.

210

  1. தன்னை யறிந்து சிவனுடன் றானாக மன்னு பதங்குண மாளும் பிறப்பறும் பின்னது சன்முத்தி சன்மார்க்கப் பேரொளி நன்னது ஞானத்து முத்திரை நண்ணுமே.

211

  1. ஞானந்தன் மேனி கிரியை நடுவங்கந் தானுறு மிச்சை யுயிராகத் தற்பரன் மேனிகொண் டைங்கரு மத்துவித் தாதலான் மோனிகண் ஞானத்து முத்திரைபெற் றார்களே.

212

  1. உயிர்க்கறி வுண்மை யுயிரிச்சை மானம் உயிர்க்குக் கிரியை யுயிர்மாயை சூக்கம் உயிர்க்கிவை யூட்டுவோ னூட்டு மவனே உயிர்ச்செய லன்றியவ் வுள்ளத்து ளானே.

213

  1. தொழிலிச்சை ஞானங்க டொல்சிவ சீவர் கழிவற்ற மாமாயை மாயையி னாரும் பழியற்ற காரண காரியம் பாழ்விட்டு அழிவற்ற சாந்தாதீ தன்சிவனாமே.

214

  1. இல்லது முள்ளது மியாவையுந் தானாகி இல்லது முள்ளது மாயன்றா மண்ணலைச் சொல்லது சொல்லிடிற் றூராதி தூரமென் றொல்லை யுணர்ந்தா லுயிர்க்குயி ராகுமே.

215

  1. உயிரிச்சை யூட்டி யுழிதருஞ் சத்தி உயிரிச்சை வாட்டி யொழித்திடு ஞானம் உயிரிச்சை யூட்டி யுடனுற லாலே உயிரிச்சை வாட்டி யுயர்பதஞ் சேருமே.

216

  1. சேருஞ் சிவமானா ரைம்மலந் தீர்ந்தவர் ஓரொன்றி லாரைம் மலவிரு ளுற்றவர் பாரின்கண் விண்ணர கம்புகும் பான்மையோர் ஆருங்கண் டோரா ரவையரு ளன்றே.

217

  1. எய்தினர் செய்ய மிகுமாய சத்தியின் எய்தினர் செய்யு மிருஞான சத்தியின் எய்தினர் செய்யு மிருஞால சத்தியின் எய்தினர் செய்யு மிறையரு டானே.

218

  1. திருந்தனர் விட்டார் திருவி னரகந் திருந்தனர் விட்டார் திருவார் சுவர்க்கந் திருந்தனர் விட்டார் செறிமலக் கூட்டந் திருந்தனர் விட்டார் சிவமா யவமே.

219

  1. அவமுஞ் சிவமு மறியா ரறியார் அவமுஞ் சிவமு மறிவா ரறிவார் அவமுஞ் சிவமு மருளா லறிந்தால் அவமுஞ் சிவமு மவனரு ளாமே.

220

  1. அருளான சத்தி யனல்வெம்மை போலப் பொருளவ னாகத் தான்போதம் புணரும் இருளொளி யாய்மீண்டு மும்மல மாகுந் திருவரு ளானந்தி செம்பொரு ளாமே.

221

  1. ஆதித்தன் றோன்ற வரும்பது மாதிகள் பேதித்த தவ்வினை யாற்செயல் சேதிப்ப ஆதித்தன் தன்கதி ராலவை சேட்டிப்பப் பேதித்துப் பேதியா வாறருட் பேதமே.

222

  1. பேத மபேதம் பிறழ்பேதா பேதமும் போதம் புணர்போதம் போதமு நாதமு நாத முடனாத நாதாதி நாதமு மாத னருளி னருளிச்சை யாமே.

223

  1. மேவிய பொய்க்கரி யாட்டும் வினையெனப் பாவிய பூதங்கொண் டாட்டிப் படைப்பாதி பூவியல் கூட்டத்தற் போதம் புரிந்தருள் ஆவியை நாட்டு மரனரு ளாமே.

224

  1. ஆறா றகன்று தனையறிந் தானவன் நீறாகி யாவினு மியாவுந் தனிலெய்த வேறாய் வெளிபுக்கு வீடுற்றா னம்மரு டேறாத் தெளிவுற்றுத் தீண்டச் சிவமாமே.

225

  1. தீண்டற் கரிய திருவடி நேயத்தை மீண்டுற் றருளால் விதிவழி யேசென்று தூண்டிச் சிவஞான மாவினைத் தானேறித் தாண்டிச் சிவனுடன் சாரலு மாமே.

226

  1. சார்ந்தவர் சாரணர் சித்தர் சமாதியர் சார்ந்தவர் மெய்ஞ்ஞான தத்துவ சாத்தியர் சார்ந்தவர் நேயந் தலைப்பட்ட வானந்தர் சார்ந்தவர் சத்த வருட்டன்மை யாரே.

227

  1. தானென் றவனென் றிரண்டென்பர் தத்துவந் தானென் றவனென் றிரண்டற்ற தன்மையைத் தானென் றிரண்டுன்னார் கேவலத் தானவர் தானின்றித் தானாகத் தத்துவ சுத்தமே.

228

  1. தன்னினிற் றன்னை யறியுந் தலைமகன் தன்னினிற் றன்னை யறியத் தலைப்படும் தன்னினிற் றன்னைச் சார்கில னாகில் தன்னினிற் றன்னையுஞ் சார்தற் கரியவே.

229

  1. அறியகி லேனென் றரற்றாதே நீயு நெறிவழி யேசென்று நேர்பட்ட பின்னை இருசுட ராகி யியற்றவல் லானும் ஒருசுட ராவந்துன் னுள்ளத்துள் ளாமே.

230

  1. மண்ணொன்று தான்பல நற்கல னாயிடும் உண்ணின்ற யோனிகட் கெல்லா மொருவனே கண்ணொன்று தான்பல காணுந் தனைக்காணா அண்ணலு மவ்வண்ண மாகிநின் றானே.

231

  1. ஓம்புகின் றானுல கேழையு முண்ணின்று கூம்புகின் றார்குணத் தின்னொடுங் கூறுவர் தேம்புகின் றார்சிவஞ் சிந்தைசெய் யாதவர் கூம்பகில் லார்வந்து கொள்ளலு மாமே.

232

  1. குறியறி யார்கள் குறிகாண மாட்டார் குறியறி யார்கடங் கூடல் பெரிது குறியறி யாவகை கூடுமின் கூடி அறிவறி யாவிருந் தன்னமு மாமே.

233

  1. ஊனோ வுயிரோ வுறுகின்ற தேதின்பம் வானோர் தலைவி மயக்கத் துறநிற்க தானோ பெரிதறி வோமென்னு மானுடர் தானேய் பிறப்போ டிறப்பறி யாரே.

234

===14.அறிவுதயம்=== 2355. தன்னை யறியத் தனக்கொரு கேடில்லை தன்னை யறியாமற் றானே கெடுகின்றான் தன்னை யறியு மறிவை யறிந்தபின் தன்னையே யர்ச்சிக்கத் தானிருந் தானே.


235

  1. அங்கே யடற்பெருந் தேவரெல் லாந்தொழச் சிங்கா சனத்தே சிவனிருந் தானென்று சங்கார் வளையுஞ் சிலம்புஞ் சரேலெனப் பொங்கார் குழலியும் போற்றியென் றாளே.

236

  1. அறிவு வடிவென் றறியாத வென்னை அறிவு வடிவென் றருள்செய்தா னந்தி அறிவு வடிவென் றருளா லறிந்தே அறிவு வடிவென் றறிந்திருந் தேனே.

237

  1. அறிவுக் கழிவில்லை யாக்கமு மில்லை அறிவுக் கறிவல்ல தாதார முமில்லை அறிவே யறிவை யறிகின்ற தென்றிட்டு அறைகின் றனமறை யீறுக டாமே.

238

  1. மன்னிநின் றாரிடை வந்தருண் மாயத்து முன்னிநின் றானை மொழிந்தேன் முதல்வனும் பொன்னின்வந் தானோர் புகழ்திரு மேனியைப் பின்னிநின் றேனீ பெரியையென் றானே.

239

  1. அறிவறி வாக வறிந்தன்பு செய்ம்மின் அறிவறி வாக வறியுமிவ் வண்ணம் அறிவறி வாக வணிமாதி சித்தி அறிவறி வாக வறிந்தனன் நந்தியே.

240

  1. அறிவறி வென்றங் கரற்று முலகம் அறிவறி யாமை யாரு மறியார் அறிவறி யாமை கடந்தறி வானால் அறிவறி யாமை யழகிய வாறே.

241

  1. அறிவறி யாமையை நீவி யவனே பொறிவா யொழிந்தெங்குத் தானான போது அறிவா யவற்றினுட்டானா யறிவின் செறிவாகி நின்றவன் சீவனு மாமே.

242

  1. அறிவுடையார்நெஞ் சகலிட மாவது அறிவுடை யார்நெஞ் சருந்தவ மாவது அறிவுடையார்நெஞ்சொ டாதிப் பிரானும் அறிவுடை யார்நெஞ்சத் தங்குநின் றானே.

243

  1. மாயனு மாகி மலரோ னிறையுமாய்க் காயநன் னாட்டுக் கருமுத லானவன் சேய னணியன் தித்திக்குந் தீங்கரும் பாயமு தாகிநின் றண்ணிக்கின் றானே.

244

  1. என்னை யறிந்திலேன் இத்தனை காலமும் என்னை யறிந்தபின் ஏது மறிந்திலேன் என்னை யறிந்திட் டிருத்தலுங் கைவிடாது என்னையிட் டென்னை யுசாவுகின் றானே.

245

  1. மாய விளக்கது நின்று மறைந்திடுந் தூய விளக்கது நின்று சுடர்விடுங் காய விளக்கது நின்று கனன்றிடுஞ் சேய விளக்கினைத் தேடுகின் றேனே.

246

  1. தேடுகின் றேன்றிசை யெட்டோ ரிரண்டையும் நாடுகின் றேனல மேயுடை யானடி பாடுகின் றேன்பர மேதுணை யாமெனக் கூடுகின் றேன்குறை யாமனத் தாலே.

247

  1. முன்னை முதல்விளை யாட்டத்து முன்வந்தோர் பின்னைப் பெருமலம் வந்தவர் பேர்த்திட்டுத் தன்னைத் தெரிந்துதன் பண்டைத் தலைவன்றான் மன்னிச் சிவமாக வாரா பிறப்பே.

248

===15.ஆறந்தம்=== 2369. வேதத்தி னந்தமு மிக்கசித் தாந்தமும் நாதத்தி னந்தமு நற்போத வந்தமும் ஓதத் தகுமெட் டியோகாந்த வந்தமும் ஆதிக்க லாந்தமு மாறந்த மாமே.


249

  1. அந்தமோ ராறு மறிவா ரதிசுத்தர் அந்தமோ ராறு மறிவா ரமலத்தர் அந்தமோ ராறு மறியா ரவர்தமக் கந்தமோ டாதி யறியவொண் ணாதே.

250

  1. தானான வேதாந்தந் தானென்னுஞ் சித்தாந்த மானாத் துரியத் தணுவன் றனைக்கண்டு தேனார் பராபரஞ் சேர்சிவ யோகமாய் ஆனா மலமற் றருஞ்சித்தி யாதலே.

251

  1. நித்தம் பரனோ டுயிருற்று நீண்மனஞ் சுத்த முதலைந்துந் தத்துவத் தானீங்கிச் சுத்த மசுத்தந் தொடரா வகைநினைந் தத்தன் பரன்பா லடைதல்சித் தாந்தமே.

252

  1. மேவும் பிரமனே விண்டு வருத்திரன் மேவுமெய் யீசன் சதாசிவன் மிக்கப்பால் மேவும் பரவிந்து நாதம் விடாவாறா றோவும் பொழுதணு வொன்றுள தாகுமே.

253

  1. உள்ள வுயிராறாற தாகு முபாதியைத் தெள்ளி யகன்றுநா தாந்தத்தைச் செற்றுமேல் உள்ள விருணீங்க வோருணர் வாகுமேல் எள்ளலி னாதாந்தத் தெய்திடும் போதமே.

254

  1. தேடு மியம நியமாதி சென்றகன் றுடுஞ் சமரதியி லுற்றுப் படர்சிவன் பாடுறச் சீவன் பரமாகப் பற்றறக் கூடு முபசாந்தம் யோகாந்தக் கொள்கையே.

255

  1. கொள்கையி லான கலாந்தங் குறிக்கொள்ளில் விள்கையி லான நிவிர்த்தாதி மேதாதிக் குளளன வாமவிந்து வுள்ளே யொடுங்கலுந் தெள்ளி யதனைத் தெளிதலு மாமே.

256

  1. தெளியு மிவையன்றித் தேரைங் கலைவே றொளியு ளமைத்துள்ள தோரவல் லார்கட் களியவ னாகிய மந்திரந் தந்திரந் தெளிவுப தேசஞா னத்தொடைந் தாமே.

257

  1. ஆகு மனாதி கலையா கமவேதம் ஆகுமத் தந்திர மந்நூல் வழிநிற்றல் ஆகு மனாதி யுடலல்லா மந்திரம் ஆகுஞ் சிவபோ தகமுப தேசமே.

258

  1. தேசார் சிவமாகு தன்ஞானத் தின்கலை ஆசார நேய மறையுங் கலாந்தத்துப் பேசா வுரையுணர் வற்ற பெருந்தகை வாசா மகோசர மாநந்தி தானே.

259

  1. தானவ னாகுஞ் சமாதி தலைப்படில் ஆனக லாந்தநா தாந்தயோ காந்தமும் ஏனைய போதாந்தஞ் சித்தாந்த மானது ஞான மெனஞேய ஞாதுரு வாகுமே.

260

  1. ஆறந்த மும்சென் றடங்குமந் நேயத்தே ஆறந்த ஞேய மடங்கிடு ஞாதுரு கூறிய ஞானக் குறியுடன் வீடவே தேறிய மோனஞ் சிவானந்த வுண்மையே.

261

  1. உண்மைக் கலையாறோ ரைந்தா னடங்கிடும் உண்மைக் கலாந்த மிரண்டைந்தோ டேழந்தம் உண்மைக் கலையொன்றி லீறாய நாதாந்தத் துண்மைக் கலைசொல்ல வோரந்த மாமே.

எட்டாம் தந்திரம் (cont. 2)

262

  1. ஆவுடை யாளை யரன்வந்து கொண்டபின் தேவுடை யானெங்கள் சீர்நந்தி தாடந்து வீவற வேதாந்த சித்தாந்த மேன்மையைக் கூவி யருளிய கோனைக் கருதுமே.

263

  1. கருது மவர்தங் கருத்தினுக் கொப்ப அரனுரை செய்தரு ளாகமந் தன்னில் வருசம யப்புற மாயைமா மாயை உருவிய வேதாந்த சித்தாந்த வுண்மையே.

264

  1. வேதாந்தஞ் சித்தாந்தம் வேறிலா முத்திரை போதாந்த ஞானம் யோகாந்தம் பொதுஞேய நாதாந்த மானந்தஞ் சீரோ தயமாகு மூதாந்த முத்திரை மோனத்து மூழ்கவே.

265

  1. வேதாந்தந் தன்னி லுபாதிமே லேழ்விட நாதாந்த பாசம் விடுநல்ல தொம்பத மீதாந்த காரணோ பாதியேழ் மெய்ப்பரன் போதாந்த தற்பதம் போமசி யென்பவே.

266

  1. அண்டங்க ளேழுங் கடந்தகன் றப்பாலும் உண்டென்ற பேரொளிக் குள்ளா முளவொளி பண்டுறு நின்ற பராசத்தி யென்னவே கொண்டவ னன்றிநின் றானெங்கள் கோவே.

267

  1. கோவுணர்த் துஞ்சத்தி யாலே குறிவைத்துத் தேவுணர்த் துங்கரு மஞ்செய்தி செய்யவே பாவனைத் தும்படைத் தர்ச்சனை பாரிப்ப ஓவனைத் துண்டொழி யாத வொருவனே.

268

  1. ஒருவனை யுன்னா ருயிர்தனை யுன்னார் இருவினை யுன்னா ரிருமாயை யுன்னார் ஒருவனு மேயுள் ளுணர்த்திநின் றூட்டி அருவனு மாகிய வாதரத் தானே.

269

  1. அரனன்பர் தானம தாகிச் சிவத்து வருமவை சத்திகண் முன்னா வகுத்திட் டுரனுறு சந்நிதி சேட்டிப்ப வென்றுந் திரனுறு தோயாச் சிவாநந்தி யாகுமே.

270

  1. வேதாந்த தொம்பத மேவும் பசுவென்ப நாதாந்த பாசம் விடநின்ற நன்பதி போதாந்த தற்பதம் போயிரண் டயிக்கியஞ் சாதா ரணஞ்சிவ சாயுச்சிய மாமே.

271

  1. சிவமாதல் வேதாந்த சித்தாந்த மாகும் அவமவ மாகு மவ்வவ் விரண்டுஞ் சிவமாஞ் சதாசிவன் செய்தொன்றா னானா நவமான வேதாந்த ஞானசித் தாந்தமே.

272

  1. சித்தாந்தத் தேசீவன் முத்திசித் தித்தலாற் சித்தாந்தத் தேநிற்போர் முத்திசித் தித்தவர் சித்தாந்த வேதாந்தஞ் செம்பொரு ளாதலாற் சித்தாந்த வேதாந்தங் காட்டுஞ் சிவனையே.

273

  1. சிவனைப் பரமனுட் சீவனுட் காட்டும் அவமற்ற வேதாந்த சித்தாந்த மானான் நவமுற் றவத்தையின் ஞானஞ் சிவமாந் தவமிக் குணர்ந்தவர் தத்துவத் தாரே.

274

  1. தத்துவ மாகுஞ் சகள வகளங்கள் தத்துவ மாம்விந்து நாதஞ் சதாசிவஞ் தத்துவ மாகுஞ் சீவன்றன் றற்பரந் தத்துவ மாஞ்சிவ சாயுச்சிய மாமே.

275

  1. வேதமோ டாகம மெய்யா மிறைவனூல் ஓதுஞ் சிறப்பும் பொதுவுமென் றுள்ளன நாத னுரையவை நாடி லிரண்டந்தம் பேதம தென்பர் பெரியோர்க் கபேதமே.

276

  1. பரானந்தி மன்னுஞ் சிவானந்த மெல்லாம் பரானந்த மேன்மூன்றும் பாழுறா னந்தம் விராமுத்தி ரானந்த மெய்ந்நட னானந்தம் பொராநின்ற வுள்ளமே பூரிப்பி யாமே.

277

  1. ஆகுங் கலாந்த மிரண்டந்த நாதாந்தம் ஆகும் பொழுதிற் கலையைந்தா மாதலின் ஆகு மரனேபஞ் சாந்தக னாமென்ன ஆகு மறையா கமமொழிந் தானன்றே.

278

  1. அன்றாகு மென்னாதை வகையந்தந் தன்னை ஒன்றான வேதாந்த சித்தாந்த முள்ளிட்டு நின்றாலி யோகாந்த நேர்படு நேர்பட்டான் மன்றாடி பாத மருவலு மாமே.

279

  1. அனாதி சீவனைம் மலமற்றப் பாலாய் அனாதி யடக்கித் தனைக்கண் டரனாய்த் தனாதி மலங்கெடத் தத்துவா தீதம் வினாவுநீர் பாலாதல் வேதாந்த வுண்மையே.

280

  1. உயிரைப் பரனை யுயர்சிவன் றன்னை அயர்வற் றறிதொந் தத்தசி யதனாற் செயலற் றறிவாகி யுஞ்சென் றடங்கி அயர்வற்ற வேதாந்த சித்தாந்த மாமே.

281

  1. மன்னிய சோகமா மாமறை யாளர்தஞ் சென்னிய தான சிவோகமா மீதென்ன அன்னது சித்தாந்த மாமறை யாய்பொரு முன்னிய வாகம நூலெனத் தோன்றுமே.

282

  1. முதலாகும் வேத முழுதா கமமகப் பதியான வீசன் பகர்ந்த திரண்டு முதிதான வேத முறைமுறை யாலமர்ந் ததிகாதி வேதாந்த சித்தாந்த மாகவே.

283

===16.பதி பசு பாசம் வேறின்மை=== 2404. அறிவறி வென்ற வறிவு மனாதி அறிவுக் கறிவாம் பதியு மனாதி அறிவினைக் கட்டிய பாச மனாதி அறிவு பதியிற் பிறப்பறுந் தானே.


284

  1. பசுப்பல கோடி பிரமன் முதலாய்ப் பசுக்களைக் கட்டிய பாசமூன் றுண்டு பசுத்தன்மை நீக்கியப் பாசமறுத்தாற் பசுக்கள் தலைவனைப் பற்றி விடாவே.

285

  1. கிடக்கின்ற வாறே கிளர்பயன் மூன்று நடக்கின்ற ஞானத்தை நாடோறு நோக்கித் துடக்கொன்று மின்றித் தொழுமின் றொழுதாற் குடக்குன்றி லிட்ட விளக்கது வாமே.

286

  1. பாசஞ்செய் தானைப் படர்சடை நந்தியை நேசஞ்செய் தாங்கே நினைப்பர் நினைத்தலுங் கூசஞ்செய் துன்னிக் குறிக்கொள்வ தெவ்வண்ணம் வாசஞ்செய் பாசத்துள் வைக்கின்ற வாறே.

287

  1. விட்ட விடமேறா வாறுபோல் வேறாகி விட்ட பசுபாச மெய்கண்டோன் மேவுறான் கட்டிய கேவலங் காணுஞ் சகலத்தைச் சுட்டு நனவி லதீதத்துட் டோன்றுமே.

288

  1. நாடும் பதியுட னற்பசு பாசமு நீடுமா நித்த னிலையறி வாரில்லை நீடிய நித்தம் பசுபாச நீக்கமு நாடிய சைவர்க்கு நந்தி யளித்ததே.

289

  1. ஆய பதிதா னருட்சிவ லிங்கமாம் ஆய பசுவு மடலே றெனநிற்கும் ஆய பலிபீட மாகுநற் பாசமாம் ஆய வரனிலை வாய்ந்துகொள் வார்கட்கே.

290

  1. பதிபசு பாசம் பயில்வியா நித்தம் பதிபசு பாசம் பகர்வோர்க் காறாக்கிப் பதிபசு பாசத்தைப் பற்றற நீக்கும் பதிபசு பாசம் பயில நிலாவே.

291

  1. பதியும் பசுவொடு பாசமு மேலைக் கதியும் பசுபாச நீக்கமுங் காட்டி மதிதந்த வானந்த மாநந்தி காணுந் துதிதந்து வைத்தனன் சுத்தசை வத்திலே.

292

  1. அறிந்தணு மூன்றுமே யாங்கணு மாகும் அறிந்தணு மூன்றுமே யாங்கணு மாகி அறிந்த வனாதி வியாத்தனு மாகி அறிந்த பதிபடைப் பானங் கவற்றையே.

293

  1. படைப்பாதி யாவது பரஞ்சிவஞ் சத்தி இடைப்பா லுயிர்கட் கடைத்திவை தூங்கல் படைப்பாதி சூக்கத்தைத் தற்பரஞ் செய்யப் படைப்பாதி தூய மலமப் பரத்திலே.

294

  1. ஆகிய சூக்கத்தை யவ்விந்து நாதமும் ஆகிய சத்தி சிவபர மேலைந்தால் ஆகிய சூக்கத்தி லைங்கரு மஞ்செய்வோன் ஆகிய தூயவீ சானனு மாமே.

295

  1. மேவும் பரசிவ மேற்சத்தி நாதமு மேவும் பரவிந்து வைம்முகன் வேறீசன் மேவு முருத்திரன் மால்வேதா மேதினி ஆகும் படிபடைப் போனர னாமே..

296

  1. படைப்பு மளிப்பும் பயிலிளைப் பாற்றுந் துடைப்பு மறைப்புமுன் றோன்ற வருளுஞ் சடத்தை விடுத்த வருளுஞ் சகலத் தடைத்த வனாதியை யைந்தென லாமே.

297

  1. ஆறாறு குண்டலி தன்னி னகத்திட்டு வேறாகு மாயையின் முப்பான் மிகுத்திட்டங் கீறாங் கருவி. யிவற்றால் வகத்திட்டு வேறாம் பதிபசு பாசம்வீ டாகுமே.

298

  1. வீட்கும் பதிபசு பாசமு மீதுற வாட்கு மிருவினை யாங்கவற் றாலுணர்ந் தாட்கு நரக சுவர்க்கத்திற் றானிட்டு நாட்குற நான்றங்கு நற்பாச நண்ணுமே.

299

  1. நண்ணிய பாசத்தி னானென லாணவம் பண்ணிய மாயையி லூட்டற் பரிந்தனன் கண்ணிய சேதனன் கண்வந்த பேரருள் அண்ண லடிசே ரூபாயம் தாகுமே.

300

  1. ஆகு முபாயமே யன்றி யழுக்கற்று மோக மறச்சுத்த னாதற்கு மூலமே ஆகு மறுவை யழுக்கேற்றி யேற்றல்போல் ஆகுவ தெல்லா மருட்பாச மாகுமே.

301

  1. பாசம் பயிலுயிர் தானே பரமுதல் பாசம் பயிலுயிர் தானே பசுவென்ப பாசம் பயிலப் பதிபர மாதலாற் பாசம் பயிலப் பதிபதி யாகுமே.

302

  1. அத்தத்த லுத்தரங் கேட்ட அருந்தவர் அத்தத்தி லுத்தர மாகு மருண்மேனி அத்தத்தி னாலே யணையப் பிடித்தலும் அத்தத்திற் றம்மை யடைந்துநின் றாரே.

303

===17.அடி தலை அறியும் திறங்கூறல்=== 2424. காலுந் தலையும் அறியார் கலதிகள் காலந்தச் சத்தி யருளென்பர் காரணம் பாலொன்று ஞானமே பண்பார் தலையுயிர் காலந்த ஞானத்தைக் காட்டவீ டாகுமே.


304

  1. தலையடி யாவ தறியார்கா யத்தில் தலையடி யுச்சியி லுள்ளது மூலம் தலையடி யான வறிவை அறிந்தோர் தலையடி யாகவே தானிருந் தாரே.

305

  1. நின்றான் நிலமுழு தண்டமும் மேலுற வன்றா ளசுரர் அமரரு முய்ந்திடப் பின்றா னுலகம் படைத்தவன் பேர்நந்தி தன்றா ளிணையென் தலைமிசை யானதே.

306

  1. சிந்தையி னுள்ளே எந்தை திருவடி சிந்தையு மெந்தை திருவடிக் கீழது எந்தையு மென்னை யறிய கிலானாகில் எந்தையை யானும் அறியகி லேனே.

307

  1. பன்னாத பாரொளிக் கப்புறத் தப்பால் என்னா யகனார் இசைந்தங் கிருந்திடம் உன்னா ஒளியு முரைசெய்யா மந்திரம் சொன்னான் கழலிணை சூடிநின் றேனே.

308

  1. பதியது தோற்றும் பதமது வைம்மின் மதியது செய்து மலர்ப்பத மோதும் நதிபொதி யுஞ்சடை நாரியோர் பாகன் கதிசெயுங் காலங்கள் கண்டுகொ ளீரே.

309

  1. தரித்துநின் றானடி தன்னிட நெஞ்சில் தரித்துநின் றானம ராபதி நாதன் கரித்துநின் றான்கரு தாதவர் சிந்தை பரித்துநின் றானப் பரிபாகத் தானே.

310

  1. ஒன்றுண்டு தாமரை யொண்மலர் மூன்றுள தன்றாதை தாளும் இரண்டுள காயத்துள் நன்றாகக் காய்ச்சிப் பதஞ்செய வல்லார்கட் கின்றேசென் றீசனை யெய்தலு மாமே.

311

  1. கால்கொண்டேன் சென்னியிற் கட்டறக் கட்டற மால்கொண்ட நெஞ்சின் மயக்கிற் றுயக்கறப் பால்கொண்ட வென்னைப் பரன்கொள்ள நாடினான் மேல்கொண்டென் செம்மை விளம்பவொண் ணாதே.

312

  1. பெற்ற புதல்வர்போற் பேணிய நாற்றமுங் குற்றமுங் கண்டு குணங்குறை செய்யவோர் பற்றைய வீச னுயிரது பான்மைக்குச் செற்றமி லாச்செய்கைக் கெய்தின செய்யுமே.

313

===18.முக்குற்றம்=== 2434. மூன்றுள குற்ற முழுது நலிவன மான்றிருள் தூங்கி மயங்கிக் கிடந்தன மூன்றினை நீங்கினர் நீக்கினர் நீங்காதார் மூன்றினுட் பட்டு முடிகின்ற வாறே.


314

  1. காமம் வெகுளி மயக்க மிவைகடிந் தேமம் பிடித்திருந் தேனுக் கெறிமணி ஓமெனும் ஓசையி னுள்ளே யுறைவதோர் தாம மதனைத் தலைப்பட்ட வாறே.

315

===19.முப்பதம்=== 2436. தோன்றிய தொம்பதந் தற்பதஞ் சூழ்தர ஏன்ற அசிபதம் இம்மூன்றோ டெய்தினோன் ஆன்ற பராபர மாகும் பிறப்பற வேன்றனன் மாளச் சிவமா யிருக்குமே.


316

  1. போதந் தனையுன்னிப் பூதாதி பேதமும் ஓதுங் கருவிதொண் ணூறுடன் ஓராறு பேதமும் நாதாந்தப் பெற்றியிற் கைவிட்டு வேதஞ்சொல் தொம்பத மாகுதன் மெய்ம்மையே.

317

  1. தற்பதம் என்றுந் துவம்பதந் தானென்றும் நிற்ப தசியத்துள் நேரிழை யாள்பதஞ் சொற்பதத் தாலுந் தொடரவொண் ணாச்சிவன் கற்பனை யின்றிக் கலந்துநின் றானே.

318

  1. அணுவும் பரமும் அசிபதத் தேய்ந்து கணுவொன் றிலாத சிவமுங் கலந்தால் இணையறு பால்தேன் அமுதென இன்பத் துணையது வாயுரை யற்றிடத் தோன்றுமே.

319

  1. தொம்பதந் தற்பதந் தோன்றும் அசிபதம் நம்பிய சீவன் பரன்சிவ னாய்நிற்கும் அம்பத மேலைச் சொரூபமா வாக்கியஞ் செம்பொருள் ஆண்டருள் சீர்நந்தி தானே.

320

  1. ஐம்ப தறியா தவருமவர் சிலர் உம்பனை நாடி யுரைமுப்ப தத்திடப் செம்பர மாகிய வாசி செலுத்திடத் தம்பர யோகமாய்த் தானவ னாகுமே.

321

  1. நந்தி யறிவும் நழுவில் அதீதமாம் இந்தியம் சத்தாதி விடவிய னாகும் நந்திய மூன்றிரண் டொன்று நலமைந்து நந்தி னனவாதி மூட்டும் அனாதியே.

322

  1. பரதுரி யத்து நனவு படியுண்ட விரிவிற் கனவும் இதனுப சாந்தத் துரிய சுழுனையு மோவுஞ் சிவன்பால் அரிய துரியம் அசிபத மாமே.

323

===20.முப்பரம்=== 2444. தோன்றியென் னுள்ளே சுழன்றெழு கின்றதோர் மூன்று படிமண் டலத்து முதல்வனை ஏன்றெய்தி யின்புற் றிருந்தே யிளங்கொடி நான்று நலஞ்செய் நலந்தரு மாறே.


324

2445.மன்று நிறைந்தது மாபர மாயது நின்று நிறைந்தது நேர்தரு நந்தியுங் கன்று நினைந்தெழு தாயென வந்தபின் குன்று நிறைந்த குணவிளக் காமே.


325

2446.ஆறாறு தத்துவத் தப்புறத் தப்பரங் கூறா வுபதேசங் கூறிற் சிவபரம் வேறாய் வெளிப்பட்ட வேதப் பகவனார் பேறாக ஆனந்தம் பேணும் பெருகவே.


326

2447.பற்றறப் பற்றிற் பரம்பதி யாவது பற்றறப் பற்றிற் பரனறி வேபரம் பற்றறப் பற்றினிற் பற்றவல் லோர்கட்கே பற்றறப் பற்றிற் பரம்பர மாமே.


327

2448.பரம்பர மான பதிபாசம் பற்றாப் பரம்பர மாகும் பரஞ்சிவ மேவப் பரம்பர மான பரசிவா னந்தம் பரம்பர மாகப் படைப்ப தறிவே.


328

2449.நனவிற் கலாதியா நாலொன் றகன்று தனியுற்ற கேவலந் தன்னில் தானாகி நினைவுற் றகன்ற அதீதத்துள் நேயந் தனையுற் றிடத்தானே தற்பர மாமே.


329

2450.தற்கண்ட தூயமுந் தன்னில் விலாசமும் பிற்காணுந் தூடணந் தானும் பிறழ்வுற்றுத் தற்பரன் கால பரமுங் கலந்தற்ற நற்பரா தீதமு நாடக ராதியே.


330

===21.பரலட்சணம்=== 2451. அதீதத்து ளாகி யகன்றவன் நந்தி அதீதத்து ளாகி யறிவிலோன் ஆன்மா மதிபெற் றிருள்விட்ட மன்னுயிர் ஒன்றாம் பதியிற் பதியும் பரவுயிர் தானே.


331

  1. ஆதியும் அந்தமும் இல்லா வரும்பதி சோதிப் பரஞ்சுடர் தோன்றத்தோன் றாமையின் நீதிய தாய்நிற்கும் நீடிய வப்பர போதம் உணர்ந்தவர் புண்ணியத் தோரே.

332

  1. துரியங் கடந்து துரியாதீதத்தே அரிய வியோகங்கொண் டம்பலத் தாடும் பெரிய பிரானைப் பிரணவக் கூபத்தே துரியவல் லார்க்கு துரிசில்லை தானே.

333

  1. செம்மைமுன் னிற்பச் சுவேதந் திரிவபோல் அம்மெய்ப் பரத்தோ டணுவனுள் ளாயிடப் பொய்ம்மைச் சகமுண்ட போத வெறும்பாழிற் செம்மைச் சிவமேரு சேர்கொடி யாகுமே.

334

  1. வைச்ச கலாதி வருதத்து வங்கெட் வெச்ச இருமாயை வேறாக வேரறுத் துச்ச பரசிவ மாமுண்மை யொன்றவே அச்சம் அறுத்தென்னை யாண்டனன் நந்தியே.

335

  1. என்னை யறிய இசைவித்த என்னந்தி என்னை யறிந்தறி யாத விடத்துய்த்துப் பின்னை யொளியிற் சொரூபம் புறப்பட்டுத் தன்னை யளித்தனன் தற்பர மாகவே.

336

  1. பரந்துஞ் சுருங்கியும் பார்புனல் வாயு நிரந்த வளியொடு ஞாயிறு திங்கள் அரந்த அரனெறி யாயது வாகி தரந்த விசும்பொன்று தாங்கிநின் றானே.

337

  1. சத்தின் நிலையினில் தாளான சத்தியும் தற்பரை யாய்நிற்குந் தானாம் பரற்குடல் உய்த்தகு மிச்சையில் ஞானாதி பேதமாய் நித்த நடத்து நடிக்குமா நேயத்தே.

338

  1. மேலொடு கீழ்பக்க மெய்வாய்கண் ணாசிகள் பாலிய விந்து பரையுட் பரையாகக் கோலிய நான்கவை ஞானங் கொணர்விந்து சீலமி லாவணுச் செய்திய தாமே.

339

  1. வேறா மதன்தன்மை போலிமிக் காயத்தில் ஆறாம் உபாதி யனைத்தாகுந் தத்துவம் பேறாம் பரவொளி தூண்டும் பிரகாசமாய் ஊறா யுயிர்த்துண் டுறங்கிடு மாயையே.

340

  1. தற்பர மன்னுந் தனிமுதற் பேரொளி சிற்பரந் தானே செகமுண்ணும் போதமும் தொற்பதந் தீர்பாழிற் சுந்தரச் சோதிபுக் கப்புற மற்றதிங் கொப்பில்லை தானே.

341

  1. பண்டை மறைகள் பரவான் உடலென்னும் துண்ட மதியோன் துரியாதீ தந்தன்னைக் கண்டு பரனுமக் காரணோ பாதிக்க மிண்டி னவன்சுத்த னாகான் வினவிலே.

342

  1. வெளிகால் கனலப்பு மேவுமண் ணின்ற தளியா கியதற் பரங்கா ணவன்றான் வெளிகால் கனலப்பு மேவுமண் ணின்ற வெளியாய சத்தி யவனவடி வாமே.

343

  1. மேருவி னோடே விரிகதிர் மண்டலம் ஆர நினையும் அருந்தவ யோகிக்குச் சீரார் தவஞ்செய்யிற் சிவனருள் தானாகும் பேரவும் வேண்டாம் பிறிதில்லை தானே.

344

===22.முத்துரியம்=== 2465. நனவாதி மூன்றினிற் சீவ துரியந் தனதாதி மூன்றினிற் பரதுரி யந்தான் நனவாதி மூன்றி னிற்சிவ துரியமா மினதாகுந் தொந்தத் தசிபதத் தீடே.


345

  1. தானா நனவில் துரியந்தன் தொம்பதம் தானாந் துரிய நனவாதி தான்மூன்றில் ஆனாப் பரபத மற்ற தருநனாயே வானான மேன்மூன்றுந் துரியம் அணுகுமே.

346

  1. அணுவின் துரியத்து நான்கும தாகிப் பணியும் பரதுரி யம்பயி னான்குந் தணிவிற் பரமாகிச் சார்முத் துரியக் கணுவிலிந் நான்குங் கலந்தவீரைந்தே.

347

  1. ஈரைந் தவத்தை யிசைமுத் துரியத்துள் நேரந்த மாக நெறிவழி யேசென்று பாரந்த மான பராபரத் தயிக்கியத் தோரந்த மாமிரு பாதியைச் சேர்த்திடே.

348

  1. தொட்டே யிருமின் துரிய நிலத்தினை எட்டா தெனினின் றெட்டும் இறைவனைப் பட்டாங் கறிந்திடிற் பன்னா வுதடுகள் தட்டா தொழிவதோர் தத்துவந் தானே.

349

  1. அறிவா யசத்தென்னு மாறா றகன்று செறிவாய மாயை சிதைத்தரு ளாலே பிறியாத பேரரு ளாயிடும் பெற்றி நெறியான அன்பர் நிலையறிந் தாரே.

350

  1. நனவின் நனவாதி நாலாந் துரியந் தனதுயிர் தொம்பத மாமாறு போல வினையுறு சீவன் நனவாதி யாகத் தனைய பரதுரி யந்தற் பதமே.

351

  1. தொம்பதந் தற்பதஞ் சொன்முத் துரியம்போல் நம்பிய மூன்றாந் துரியத்து நற்றாமம் அம்புவி யுன்னா அதிசூக்க மப்பாலைச் செம்பொருள் ஆண்டருள் சீர்நந்தி தானே.

352

===23.மும்முத்தி=== 2473. சீவன்றன் முத்தி யதீதம் பரமுத்தி ஓயுப சாந்தஞ் சிவமுத்தி யானந்த மூவயின் முச்சொரூப முத்திமுப் பாலதாய் ஓவுறு தாரத்தில் உள்ளுநா தாந்தமே.


353

  1. ஆவ தறியார் உயிர்பிறப் பாலுறும் ஆவ தறியும் உயிரருட்பாறும் ஆவதொன் றில்லை யகம்புறத் தென்றகன் றோவு சிவனுடன் ஒன்றுதன் முத்தியே.

354

  1. சிவமாகி மும்மல முக்குணஞ் செற்று தவமான மும்முத்தி தத்துவத் தயிக்கியத் துவமா கியநெறி சோகமென் போர்க்குச் சிவமாம் அமலன் சிறந்தனன் தானே.

355

  1. சித்தியும் முத்தியுந் திண்சிவ மாகிய சுத்தியும் முத்தீ தொலைக்குஞ் சுகானந்த சத்தியும் மேலைச் சமாதியு மாயிடும் பெத்தம் அறுத்த பெரும்பெரு மானே.

356

===24.முச்சொரூபம்=== 2477. ஏறிய வாறே மலம்ஐந் திடைஅடைத் தாறிய ஞானச் சிவோக மடைந்திட்டு வேறு மெனமுச் சொரூபத்து வீடுற்றங் கீறதிற் பண்டைப் பரனுண்மை செய்யுமே.


357

  1. மூன்றுள மாளிகை மூவர் இருப்பிடம் மூன்றினின் முப்பத் தாறு முதிப்புள மூன்றினி னுள்ளே முளைத்தெழுஞ் சோதியைக் காண்டலுங் காயக் கணக்கற்ற வாறே.

358

  1. உலகம் புடைபெயர்ந் தூழியும் போன நிலவு சுடரொளி மூன்றுமொன் றாய பலவும் பரிசொடு பான்மையுள் ஈசன் அளவும் பெருமையு மாரறி வாரே.

359

  1. பெருவாய் முதலெண்ணும் பேதமே பேதித் தருவா யுருவாய் அருவுரு வாகிக் குருவாய் வருஞ்சத்தி கோனுயிர்ப் பன்மை உருவா யுடனிருந் தொன்றாயன் றாமே.

360

  1. மணியொளி சோபை யிலக்கணம் வாய்த்து மணியென லாய்நின்ற வாறது போலத் தணிமுச் சொரூபாதி சத்தியாதி சாரப் பணிவித்த பேர்நந்தி பாதம்பற் றாயே.

361

  1. கல்லொளி மாநிறஞ் சோபைக் கதிர்தட்ட நல்ல மணியொன்றி னாடியொண் முப்பதஞ் சொல்லறு முப்பாழிற் சொல்லறு பேருரைத் தல்லறு முத்திராந் தத்தனு பூதியே.

362

  1. உடந்தசெந் தாமரை யுள்ளுறு சோதி நடந்தசெந் தாமரை நாதந் தகைந்தால் அடைந்த பயோதரி யட்டி யடைத்தல் விடந்தரு வாசலை மேல்திற வீரே.

363

===25.முக்கரணம்=== 2484. இடனொரு மூன்றி லியைந்த வொருவன் கடனுறு மவ்வுரு வேறெனக் காணும் திடமது போலச் சிவபர சீவர் உடனுறை பேதமும் ஒன்றென லாமே.


364

  1. ஒளியை யொளிசெய்து வோமென் றெழுப்பி வளியை வளிசெய்து வாய்த்திட வாங்கி வெளியை வெளிசெய்து மேலெழ வைத்துத் தெளியத் தெளியுஞ் சிவபதத் தானே.

365

  1. முக்கர ணங்களின் மூர்ச்சைதீர்த் தாவதக் கைக்கா ரணமென்னத் தந்தனன் காணந்தி மிக்க மனோன்மணி வேறே தனித்தேக ஒக்கும துன்மனி யோதுட் சமாதியே.

366

===26.முச்சூனிய தொந்தத்தசி=== 2487. தற்பதந் தொம்பதந் தானாம் அசிபதந் தொற்பத மூன்றுந் துரியத்துத் தோற்றவே நிற்ப துயிர்பர நிகழ்சிவ மும்மூன்றின் சொற்பத மாகுந் தொந்தத் தசியே.


367

  1. தொந்தத் தச்மூன்றில் தொல்கா மியமாதி தொந்தத் தச்மூன்றில் தொல்தா மதமாதி வந்த மலங்குண மாளச் சிவந்தோன்றின் இந்துவின் முன்னிருள் ஏகுதல் ஒக்குமே.

368

  1. தொந்தத் தசியையவ் வாசியில் தோற்றியே அந்த முறையீ ரைந்தாக மதித்திட்டு அந்த மிலாத அவத்தையவ் வாக்கியத் துந்து முறையிற் சிவமுன்வைத் தோதிடே.

369

  1. வைத்துச் சிவத்தை மதிசொரூ பானந்தத் துய்த்துப் பிரணவ மாம்உப தேசத்தை மெய்த்த இதயத்து விட்டிடு மெய்யுணர்ந் தத்தற் கடிமை யடைந்துநின் றானே.

370

  1. தொம்பத மாயையுள் தோன்றிடுந் தற்பதம் அம்பரை தன்னில் உதிக்கும் அசிபதம் நம்புறு சாந்தியில் நண்ணுமவ் வாக்கியம் உம்பர் உரைதொந்தத் தசிவாசி யாமே.

371

  1. ஆகிய வச்சோயந் தேவதத் தன்னிடத் தாகிய வைவிட்டாலற் காயம் உபாதானம் ஏகிய தொந்தத் தசியென்ப மெய்யறி வாகிய சீவன் பரசிவ னாமே.

372

  1. தாமத காமிய மாகித் தகுகுண மாமல மூன்றும் அகார வுகாரத்தோ(டு) ஆமறு மவ்வுமவ் வாயுடன் மூன்றில் தாமாந் துரியமுந் தொந்தத் தசியதே.

373

===27.முப்பாழ்=== 2494. காரிய மேழ்கண் டறுமாயப் பாழ்விடக் காரண மேழ்கண் டறும்போதப் பாழ்விடக் காரிய காரண வாதனை கண்டறுஞ் சீருப சாந்தமுப் பாழ்விடத் தீருமே.


374

  1. மாயப்பாழ் சீவன் வியோமப்பாழ் மன்பரன் சேயமுப் பாழெனச் சிவசத்தி யிற்சீவன் ஆய வியாப்த மெனுமுப்பா ழாம்அந்தத் தூய சொரூபத்திற் சொல்முடி வாகுமே.

375

  1. எதிரற நாளும் எருதுவந் தேறும் பதியெனும் நந்தி பதமது கூடக் கதியெனப் பாழைக் கடந்தந்தக் கற்பனை உதறிய பாழில் ஒடுங்குகின் றேனே.

376

  1. துரியம் அடங்கிய சொல்லறும் பாழை அரிய பரம்பரம் என்பர்கள் ஆதர் அரிய பரம்பரம் என்றே துதிக்கும் அருநிலம் என்பதை யாரறி வாரே.

377

  1. ஆறாறு நீங்க நமவாதி யகன்றிட்டு வேறா கியபரை யாவென்று மெய்ப்பரன் ஈறான வாசியிற் கூட்டு மதுவன்றோ தேறாச் சிவாய நமவெனத் தேறிலே.

378

  1. உள்ளம் உருவென்றும் உருவம் உளமென்றும் உள்ள பரிசறிந் தோரு மவர்கட்குப் பள்ளமும் இல்லைத் திடரில்லைப் பாழில்லை உள்ளமும் இல்லை யுருவில்லை தானே.

379

===28.காரிய காரணவுபாதி=== 2500. செற்றிடுஞ் சீவ வுபாதித் திறனேழும் பற்றும் பரோபாதி ஏழும் பகருரை உற்றிடுங் காரிய காரணத் தோடற அற்றிட வச்சிவ மாகும் அணுவனே.


380

  1. ஆறாறு காரியோ பாதி யகன்றிட்டு வேறாய் நனவு மிகுந்த கனாநனா ஆறா றகன்ற சுழுத்தி யதில்எய்தாப் பேறா நிலத்துயிர் தொம்பதம் பேசிலே.

381

  1. அகாரம் உயிரே யுகாரம் பரமே மகாரம் சிவமாய் வருமுப் பதத்து சிகாரம் சிவமே வகாரம் பரமே யகாரம் உயிரென் றறையலு மாமே.

382

  1. உயிர்க்குயி ராகி யொழிவற் றழிவற் றயிர்ப்பறு காரணோ பாதி விதிரேகத் துயிர்ப்புறும் ஈசன் உபமிதத் தாலன்றி வியர்ப்புறும் ஆணவம் வீடல்செய் யாவே.

383

  1. காரியம் ஏழிற் கலக்கும் கடும்பசு காரணம் ஏழிற் கலக்கும் பரசிவன் காரிய காரணங் கற்பனை சொற்பதப் பாரறும் பாழில் பராபரத் தானே.

384

===29.உபசாந்தம்=== 2505. முத்திக்கு வித்து முதல்வன்தன் ஞானமே பத்திக்கு வித்துப் பணிந்துற்றுப் பற்றலே சித்திக்கு வித்துச் சிவபரந் தானாதல் சத்திக்கு வித்துத் தனதுப சாந்தமே.


385

  1. காரியம் ஏழும் கரந்திடு மாயையுள் காரணம் ஏழும் கரக்கும் கடுவெளி காரிய காரண வாதனைப் பற்றறப் பாரண வும்முப சாந்தப் பரிசிதே.

386

  1. அன்ன துரியமே யாத்தும சுத்தியும் முன்னிய சாக்கிரா தீதத் துறுபுரி மன்னு பரங்காட்சி யாவ துடனுற்றுத் தன்னின் வியாத்தி தனின்உப சாந்தமே.

387

  1. ஆறா றமைந்தாண வத்தையுள் நீக்குதற் பேறான தன்னை யறிதற்பின் றீர்சுத்தி கூறாத சாக்கிரா தீதங் குருபரன் பேறாம் வியாத்தம் பிறழுப சாந்தமே.

388

  1. வாய்ந்த உபசாந்த வாதனை யுள்ளப்போய் ஏய்ந்த சிவமாத லின்சிவா னந்தத்துத் தோய்ந்தறல் மோனச் சுகானுபவத் தோடே ஆய்ந்ததில் தீர்க்கை யானதீ ரைந்துமே.

389

  1. பரையின் பரவப ரத்துடன் ஏகமாய்த் திரையினின் றாகிய தெண்புனல் போலவுற் றுரையுணர்ந் தாரமு தொக்க வுணர்ந்துளோன் கரைகண் டானுரை யற்ற கணக்கிலே.

390

===30.புறங்கூறாமை=== 2511. பிறையுட் கிடந்த முயலை எறிவான் அறைமணி வாட்கொண் டவர்தமைப் போலக் கறைமணி கண்டனைக் காண்குற மாட்டார் நிறையறி வோமென்பர் நெஞ்சிலர் தாமே.


391

  1. கருந்தாட் கருடன் விசும்பூ டிறப்பக் கருந்தாட் கயத்திற் கரும்பாம்பு நீங்கப் பெருந்தன்மை பேசுதி நீயொழி நெஞ்சே அருந்தா அலைகடல் ஆறுசென் றாலே.

392

  1. கருதலர் மாளக் கருவாயில் நின்ற பொருதலைச் செய்வது புல்லறி வாண்மை மருவலர் செய்கின்ற மாதவம் ஒத்தால் தருவலர் கேட்ட தருவும்ப ராமே.

393

  1. பிணங்கவும் வேண்டாம் பெருநில முற்றும் இணங்கியெம் மீசனே யீசனென் றுன்னிற் கணம்பதி னெட்டுங் கழலடி காண வணங்கெழு நாடியங் கன்புற லாமே.

394

  1. என்னிலும் என்னுயி ராய இறைவனைப் பொன்னிலு மாமணி யாய புனிதனை மின்னிய வெவ்வுயி ராய விகிர்தனை உன்னிலும் உன்னும் உறும்வகை யாலே.

395

  1. நின்றும் இருந்தும் கிடந்தும் நிமலனை ஒன்றும் பொருள்கள் உரைப்பவ ராகிலும் வென்றைம் புலனும் விரைந்து பிணக்கறுத் தொன்றா யுணரும் ஒருவனு மாமே.

396

  1. நுண்ணறி வாயுல காயுல கேழுக்கும் எண்ணறி வாய்நின்ற எந்தை பிரான்தன்னைப் பண்ணறி வாளனைப் பாவித்த மாந்தரை விண்ணறி வாளர் விரும்புகின் றாரே.

397

  1. விண்ணவ ராலும் அறிவறி யான்றன்னைக் கண்ணற வுள்ளே கருதிடிற் காலையில் எண்ணுற வாகமுப் போது மியற்றிநீ பண்ணிடில் தன்மை பராபர னாமே.

398

  1. ஒன்றா யுலகுடன் ஏழும் பரந்தவன் பின்றா னருள்செய்த பேரரு ளாளவன் கன்றா மத்தார்தங் கல்வியுள் நல்லவன் பொன்றாத போது புனைபுக ழானே.

399

  1. போற்றியென் றேனெந்தை பொன்னான சேவடி ஏற்றியே சென்று மெறிமணி தானகக் காற்றின் விளக்கது காய மயக்குறும் ஆற்றலுங் கேட்டதும் அன்றுகண் டேனே.

400

2521.நேடிக்கொண் டென்னுள்ளே நேர்தரு நந்தியை ஊருபுக் காரு முணர்ந்தறி வாரில்லை கூடுபுக் கேறலுற் றேனவன் கோலங்கண் மூடிக்கண் டேனுல கேழுங்கண் டேனே.


401

  1. ஆன புகழும் அமைந்ததோர் ஞானமும் தேனு மிருக்குஞ் சிறுவரை யொன்றுகண் டூனமொன் றின்றி யுணர்வுசெய் வார்கட்கு வானகஞ் செய்யு மறவனு மாமே.

402

மாமதி யாமதி யாய்நின்ற மாதவர் தூய்மதி யாகுஞ் சுடர்பர மானந்தத் தாமதி யாகச் சகமுணச் சாந்திபுக் காமல மற்றார் அமைவுபெற் றாரே.


403

  1. பதமுத்தி மூன்றும் பழுதென்று கைவிட் டிதமுற்ற பாச விருளைத் துரந்து மதமற் றெனதியான் மாற்றிவிட் டாங்கே திதமுற் றவர்கள் சிவசித்தர் தாமே.

404

  1. சித்தர் சிவத்தைக் கண்டவர் சீருடன் சுத்தாசுத் தத்துடன் தோய்ந்துந்தோ யாதவர் முத்தரம் முத்திக்கு மூலத்தர் மூலத்து சத்தர் சதாசிவத் தன்மையர் தாமே.

405

===31.அஷ்டதள கமல முக்குண அவத்தை=== 2526. உதிக்கின்ற இந்திரன் அங்கி யமனுந் துதிக்கும் நிருதி வருணன்நல் வாயு மதிக்கும் குபேரன் வடதிசை யீசன் நிதித்தென் டிசையு நிறைந்துநின் றாரே.


406

  1. ஒருங்கிய பூவுமோ ரெட்டித ழாகும் மருங்கிய மாயா புரியத னுள்ளே சுருங்கிய தண்டின் சுழுனையி னூடே ஒருங்கிய சோதியை ஓர்ந்தெழும் உய்ந்தே.

407

  1. மொட்டலர் தாமரை மூன்றுள மூன்றினும் விட்டலர் கின்றனன் சோதி விரிசுடர் எட்டல ருள்ளே இரண்டலர் உள்ளுறிற் பட்டலர் கின்றதோர் பண்டங் கனாவே.

408

  1. ஆறே யருவி யகங்குளம் ஒன்றுண்டு நூறே சிவகதி நுண்ணிது வண்ணமும் கூறே குவிமுலைக் கொம்பனை யாளொடும் வேறே யிருக்கும் விழுப்பொருள் தானே.

409

  1. திகையெட்டுந் தேரெட்டும் தேவதை யெட்டும் வகையெட்டு மாய்நின்ற வாதிப் பிரானை வகையெட்டு நான்குமற் றாங்கே நிறைந்து முகையெட்டு முண்ணின் றுதிக்கின்ற வாறே.

410

  1. ஏழுஞ் சகள மியல்புங் கடந்தெட்டில் வாழும் பரமென் றதுகடந் தொன்பதில் ஊழி பராபர மோங்கிய பத்தினிற் றாழ்வது வான தனித்தன்மை தானே.

411

  1. பல்லூழி பண்பன் பகலோன் இறையவன் நல்லூழி யைந்தினுள் ளேநின்ற ஊழிகள் செல்லூழி யண்டத்துச் சென்றவவ் வூழியுள் அவ்வூழி யுச்சியு ளொன்றிற் பகவனே.

412

  1. புரியும் உலகினில் பூண்டவெ ட்டானை திரியுங் களிற்றொடு தேவர் குழாமும் எரியும் மழையும் இயங்கும் வெளியும் பரியுமா காசத்திற் பற்றது தானே.

413

  1. ஊறு மருவி யுயர்வரை யுச்சிமேல் ஆறின்றிப் பாயும் அருங்குளம் ஒன்றுண்டு சேறின்றிப் பூத்த செழுங்கொடித் தாமரைப் பூவின்றிச் சூடான் புரிசடை யோனே.

414

  1. ஒன்றும் இரண்டும் ஒருங்கிய காலத்து நின்றும் இருந்தும் நிலம்பல பேசினும் வென்று மிருந்து விகிர்தனை நாடுவர் சென்றும் இருந்தும் திருவுடை யோரே.

415

===32.நவாவத்தை - நவாபிமானி=== 2536. தொற்பத விசுவன் றைசதன் பிராஞ்ஞன் நற்பத விராட்டன்பொன் கெற்பனவ் யாகிர்தன் பிற்பதஞ் சொல்இதையன் பிரசா பத்தியன் பொற்புவி சாந்தன் பொருதபி மானியே.


416

  1. நவமா மவத்தை நனவாதி பற்றிற் பவமா மலங்குணம் பற்றற்றுப் பற்றாத் தவமான சத்திய ஞானப் பொதுவில் துவமார் துரியம் சொரூபம தாமே.

417

  1. சிவமான சிந்தையிற் சீவன் சிதைய பவமான மும்மலம் பாறிப் பறிய நவமான வந்தத்தின் நற்சிவ போதம் தவமா மவையாகித் தானல்ல வாமே.

418

  1. முன்சொன்ன வொன்பானின் முன்னுறு தத்துவம் தன்சொல்லில் எண்ணத் தகாவொன்பான் வேறுள பின்சொல்ல லாகுமிவ் வீரொன்பான் பேர்த்திட்டு தன்செய்த ஆண்டவன் றான்சிறந் தானே.

419

  1. உகந்தன வொன்பது மைந்தும் உலகம் பகர்ந்த பிரானென்னும் பண்பினை நாடி அகந்தெம்பி ரானென்ப னல்லும் பகலும் இகந்தன வல்வினை யோடறுத் தானே.

420

  1. நலம்பல காலந் தொகுத்தன நீளம் குலம்பல வண்ணங் குறிப்பொடுங் கூடும் பலம்பல பன்னிரு கால நினையும் நிலம்பல வாறின னீர்மையன் றானே.

421

  1. ஆதி பராபரம் ஆகும் பராபரை சோதி பரமுயிர் சொல்லுநற் றத்துவம் ஓதுங் கலைமாயை யோரிரண் டோர்முத்தி நீதியாம் பேதமொன் பானுட னாதியே.

422

  1. தேறாத சிந்தை தெளியத் தெளிவித்து வேறா நரக சுவர்க்கமு மேதினி ஆறாப் பிறப்பு முயிர்க்கரு ளால்வைத்தான் வேறாத் தெளியார் வினைவுயிர் பெற்றதே.

423

  1. ஒன்பா னவத்தையுள் ஒன்பா னபிமானி நன்பாற் பயிலும் நவதத் துவமாதி ஒன்பானில் நிற்பதோர் முத்துரி யத்துறச் செம்பாற் சிவமாதல் சித்தாந்த சித்தியே.

424

===33.சுத்தாசுத்தம்=== 2545. நாசி நுனியினி னான்மூ விரலிடை ஈச னிருப்பிட மியாரு மறிகிலர் பேசி யிருக்கும் பெருமறை யம்மறை கூசி யிருக்குங் குணமது வாமே.


425

  1. கருமங்க ளொன்று கருதுங் கருமத் துரிமையுங் கன்மமு முன்னும் பிறவிக் கருவினை யாவது கண்டகன் றன்பிற் புரிவன கன்மக் கயத்துட் புகுமே.

426

  1. மாயை மறைக்க மறைந்த மறைப்பொருள் மாயை மறைய வெளிப்படும் அப்பொருள் மாயை மறைய மறையவல் லார்கட்குக் காயமும் இல்லை கருத்தில்லை தானே.

427

  1. மோழை யடைந்து முழைதிறந் துள்புக்குக் கோழை யடைகின்ற தண்ணற் குறிப்பினில் ஆழ வடைத்தங் கனலிற் புறஞ்செய்து தாழ வடைப்பது தன்வலி யாமே.

428

  1. காயக் குழப்பனைக் காயநன் னாடனைக் காயத்தி னுள்ளே கமழ்கின்ற நந்தியைத் தேயத்து ளேயென்றும் தேடித் திரிபவர் காயத்து ணின்ற கருத்தறி யாரே.

429

  1. ஆசூச மாசூச மென்பா ரறிவிலார் ஆசூச மாமிட மாரு மறிகிலார் ஆசூச மாமிட மாரு மறிந்தபின் ஆசூச மானிட மாசூச மாமே.

430

  1. ஆசூச மில்லை யருநிய மத்தருக் காசூச மில்லை யரனையர்ச் சிப்பவர்க் காசூச மில்லையா மங்கி வளர்ப்போருக் காசூச மில்லை யருமறை ஞானிக்கே.

431

  1. வழிபட்டு நின்று வணங்கு மவர்க்குச் சுழிபட்டு நின்றதோர் தூய்மை தொடங்கும் குழிபட்டு நின்றவர் கூடார் குறிகள் கழிபட் டவர்க்கன்றிக் காணவொண் ணாதே.

432

  1. தூய்மணி தூயன றூய வொளிவிடுந் தூய்மணி தூயன றூரறி வாரில்லை தூய்மணி தூயன றூரறி வார்கட்குத் தூய்மணி தூயன றூயவு மாமே.

433

  1. தூயது வாளா வைத்தது தூநெறி தூயது வாளா நாதன் றிருநாமம் தூயது வாளா வட்டமா சித்தியுந் தூயது வாளாத் தூயடிச் சொல்லே.

434

  1. பொருளது வாய்நின்ற புண்ணிய னெந்தை அருளது போற்று மடியவ ரன்றிச் சுருளது வாய்நின்ற துன்பச் சுழியின் மருளது வாச்சிந்தை மயங்குகின் றாரே.

435

  1. வினையா மசத்து விளைவ துணரார் வினைஞானந் தன்னில் வீடலுந் தேரார் வினைவிட வீடென்னும் வேதமு மோதார் வினையாளர் மிக்க விளைவறி யாரே.

436

===34.முத்திநிந்தை=== 2557. பரகதி யுண்டென வில்லையென் போர்கள் நரகதி செல்வது ஞால மறியும் இரகதிசெய்திடு வார்கடை தோறும் துரகதி யுண்ணத் தொடங்குவர் தாமே.


437

  1. கூடகில் லார்குரு வைத்த குறிகண்டு நாடகில் லார்நயம் பேசித் திரிவர்கள் பாடகில் லாரவன் செய்த பரிசறிந் தாடவல் லாரவர் பேறிது வாமே.

438

  1. புறப்பட்டுப் போகும் புகுதுமென் னெஞ்சில் திறம்பட்ட சிந்தையைத் தெய்வமென் றெண்ணி அறப்பட்ட மற்றப் பதியென் றழைக்கில் இறப்பற்றி னேனிங் கிதென்னென் கின்றானே.

439

  1. திடரிடை நில்லாத நீர்போல வாங்கே உடலிடை நில்லா வுறுபொருள் காட்டிக் கடலிடை நில்லாக் கலஞ்சேரு மாபோல் அடலெரி வண்ணனு மங்குநின் றானே.

440

  1. தாமரை நூல்போற் றடுப்பார் பரத்தொடும் போம்வழி வேண்டிற் புறமே யுழிதர்வர் காணவழி காட்டக் கண்காணாக் கலதிகள் தீநெறி செல்வான் றிரிகின்ற வாறே.

441

  1. மூடுத வலின்றி முடியு மனிதர்கள் கூடுவர் நந்தி யவனைக் குறித்துடன் காடு மலையுங் கழனி கடந்தோறும் ஊடும் உருவினை யுன்னகி லீரே.

442

  1. ஆவது தெற்கும் வடக்கு மமரர்கள் போவர் குடக்கும் குணக்குங் குறிவழி நாவினின் மந்திர மொன்று நடுவங்கி வேவது செய்து விளங்கிடு நீரே.

443

  1. மயக்குற நோக்கினு மாதவஞ் செய்வார் தமக்குறப் பேசின தாரணை கொள்ளார் சினக்குறப் பேசின தீவினை யாளர் தமக்குற வல்வினை தாங்கிநின் றாரே.

444

===35.இலக்கணாத்திரயம்=== 2565. விட்ட இலக்கணை தான்போம் வியோமத்துத் தொட்டு விடாத துபசாந்தத் தேதொகும் விட்டு விடாதது மேவுஞ்சத் தாதியின் சுட்டு மிலக்கணா தீதஞ் சொரூபமே.


445

  1. வில்லின் விசைநாணின் கோத்திலக் கெய்தபின் கொல்லுங் களிறைந்துங் கோலொடு சாய்ந்தன இல்லு ளிருந்தெறி கூரு மொருவற்குக் கல்கல னென்னக் கதிரெதி ராமே.

446

===36.மகாவாக்கியம்=== 2567. சீவ துரியத்துத் தொம்பதஞ் சீவனார் தாவு பரதுரி பத்தினிற் றற்பதம் மேவு சிவதுரி யத்தசி மெய்ப்பதம் ஓவி விடுந்தத்துவமசி யுண்மையே.


447

  1. ஆறா றகன்ற வணுத்தொம் பதஞ்சுத்தம் ஈறான தற்பர மெய்துப சாந்தத்துப் பேறா கியசீவன் நீங்கிப்பிர சாதத்து வீறான தொந்தத் தசிதத்வ மசியே.

448

  1. ஆகிய வச்சோயந் தேவதத் தன்னிடத் தாகிய விட்டு விடாத விலக்கணைத் தாகுப சாந்தமே தொந்தத் தசியென்ப ஆகிய சீவன் பரன்சிவன் ஆமே.

449

  1. துவந்தத் தசியே தொந்தத் தசியும் அவைமன்னு மந்நுவயத் தேக மான தவமன்னு தத்துவ மசிவே தாந்த சிவமாகும் அதுஞ்சித் தாந்த வேதமே.

450

  1. துரியம் அடங்கிய சொல்லறும் பாழை அரிய பரமென்பர் ஆகார் இதன்றென்னார் உரிய பரம்பரம் ஆமொன்றுதிக்கும் அருநிலம் என்பதை ஆரறி வாரே.

451

  1. தொம்பதம் தற்பதம் சொல்லும் அசிபதம் நம்பிய முத்துரி யத்துமேல் நாடவே யும்பத முப்பத மாகும் உயிர்பரன் செம்பொரு ளான சிவமென லாமே.

452

  1. வைத்த துரிய மதிற்சொரூ பானந்தத் துய்த்த பிரணவ மாமுப தேசத்தை மெய்த்த விதயத்து விட்டிடு மெய்யுணர் வைத்த படியே யடைந்துநின் றானே.

453

  1. நனவாதி ஐந்தையும் நாதாதி யில்வைத்துப் பினமாம் மலத்தைப் பின்வைத்துப் பின்சுத்தத் தனதாஞ் சிவகதி சத்தாதி சாந்தி மனவா சகங்கெட்ட மன்னனை நாடே.

454

  1. பூரணி யாதது புறம்பொன் றிலாமையின் பேரணி யாதது பேச்சொன் றிலாமையின் ஓரணை யாதது ஒன்று மிலாமையின் காரணம் இன்றியே காட்டுந் தகைமைத்தே.

455

  1. நீயது வானாய் எனநின்ற பேருரை ஆயது நானானேன் என்னச் சமைந்தறச் சேய சிவமாக்கும் சீர்நந்தி பேரருள் ஆயது வாயனந் தானந்தி யாகுமே.

456

  1. உயிர்பர மகா உயர்பர சீவன் அரிய சிவமாக அச்சிவம் வேதத் திரியிலும் சீராம் பராபரன் என்ன உரிய உரையற்ற ஓமய மாமே.

457

  1. வாய்நாசி யேபுரு மத்தகம் உச்சியில் ஆய்நாசி உச்சி முதலவை யாய்நிற்கும் தாய்நாடி யாதிவாக் காதி கலாதி சேய்நா டொளியாச் சிவகதி ஐந்துமே.

458

  1. அறிவறி யாமை யிரண்டு மகற்றிச் செறிவறி வாயெங்கு நின்ற சிவனைப் பிறிவறி யாது பிரானென்று பேணும் குறியறி யாதவர் கொள்ளறி யாரே.

459

  1. அறிவார் அறிவன அப்பும் அனலும் அறிவார் அறிவன அப்பும் கலப்பும் அறிவா னிருந்தங் கறிவிக்கி னல்லால் அறிவா னறிந்த அறிவறி யோமே.

460

  1. அதீதத்துள் ளாகி அகன்றவன் நந்தி அதீதத்துள் ளாகி அறிவிலோன் ஆன்மா மதிபெற் றிருள்விட்ட மன்னுயிர் ஒன்றாம் பதியிற் பதியும் பரவுயிர் தானே.

461

  1. அடிதொழ முன்னின் றமரர்க ளத்தன் முடிதொழ ஈசனும் முன்னின் றருளிப் படிதொழ நீபண்டு பாவித்த தெல்லாம் கடிதொழக் காணென்னுங் கண்ணுத லானே.

462

  1. நின்மல மேனி நிமலன் பிறப்பிலி என்னுளம் வந்திவன் என்னடி யானென்று பொன்வளர் மேனி புகழ்கின்ற வானவன் நின்மல மாகென்று நீக்கவல் லானே.

463

  1. துறந்துபுக் கொள்ளொளிச் சோதியைக் கண்டு பறந்ததென் உள்ளம் பணிந்து கிடந்தே மறந்தறி யாவென்னை வானவர் கோனும் இறந்து பிறவாமல் ஈங்குவைத் தானே.

464

  1. மெய்வாய்கண் மூக்குச் செவியென்னும் மெய்த்தோற்றத் தவ்வாய அந்தக் கரணம் அகிலமும் எவ்வாய் உயிரும் இறையாட்ட ஆடலால் கைவா யிலாநிறை எங்குமெய் கண்டதே.

465

===37.விசுவக்கிராசம்=== 2586. அழிகின்ற சாயா புருடனைப் போலக் கழிகின்ற நீரிற் குமிழியைக் காணில் எழுகின்ற தீயிற்கர்ப் பூரத்தை யொக்கப் பொழிகின்ற இவ்வுடற் போமப் பரத்தே.


466

  1. உடலும் உயிரும் ஒழிவற ஒன்றிற் படரும் சிவசத்தி தாமே பரமாம் உடலைவிட் டிந்த உயிரெங்கு மாகிக் கடையும் தலையும் கரக்கும் சிவத்தே.

467

  1. செவிமெய்வாய் கண்மூக்குச் சேரிந் திரியம் அவியின் றியமன மாதிகள் ஐந்தும் குவிவொன் றிலாமல் விரிந்து குவிந்து தவிர்வொன் றிலாத சராசரந் தானே.

468

  1. பரனெங்கு மாரப் பரந்துற்று நிற்குந் தினெங்கு மாகிச் செறிவெங்கும் எய்தும் உரனெங்கு மாயுல குண்டுமிழ் செய்யும் வரமிங்கன் கண்டியான் வாழ்ந்துற்ற வாறே.

469

  1. அளந்து துரியத் தறிவினை வாங்கி உளங்கொள் பரஞ்சகம் உண்ட தொழித்துக் கிளர்ந்த பரஞ்சிவம் சேரக் கிடைத்தால் விளங்கிய வெட்ட வெளியனும் ஆமே.

470

  1. இரும்பிடை நீரென என்னையுள் வாங்கிப் பரம்பர மான பரமது விட்டே உரம்பெற முப்பாழ் ஒளியை விழுங்கி இருந்தனன் நந்தி இதயத்து ளானே.

471

  1. கரியுண் விளவின் கனிபோல் உயிரும் உரிய பரமுமுன் ஓதுஞ் சிவமும் அரிய துரியமேல் அகிலமும் எல்லாம் திரிய விழுங்கும் சிவபெரு மானே.

472

  1. அந்தமும் ஆதியும் ஆகும் பராபரன் தந்தம் பரம்பரன் தன்னிற் பரமுடன் நந்தமை உண்டுமெய்ஞ் ஞானநே யாந்தத்தே நந்தி யிருந்தனன் நாமறி யோமே.

473

===38.வாய்மை=== 2594. அற்ற துரைக்கில் அருளுப தேசங்கள் குற்ற மறுத்தபொன் போலுங் கனலிடை அற்றற வைத்திறை மாற்றற ஆற்றிடில் செற்றம் அறுத்த செழுஞ்சுடர் ஆகுமே.


474

  1. எல்லாம் அறியும் அறிவுதனை விட்டு எல்லாம் அறிந்தும் இலாபம் அங்கு இல்லை எல்லாம் அறிந்த அறிவினை நான் என்னில் எல்லாம் அறிந்த இறை எனலாமே.

475

  1. தலைநின்ற தாழ்வரை மீது தவஞ்செய்து முலைநின்ற மாதறி மூர்த்தியை யானும் புலைநின்ற பொல்லாப் பிறவி கடந்து கலைநின்ற கள்வனைக் கண்டுகொண் டேனே.

476

  1. தானே உலகில் தலைவன் எனத்தகும் தானே உலகுக்கோர் தத்துவ மாய்நிற்கும் வானே மழைபொழி மாமறை கூர்ந்திடும் ஊனே உருகிய உள்ளமொன் றாமே.

477

  1. அருள்பெற்ற காரணம் என்கொல் அமரில் இருளற்ற சிந்தை இறைவனை நாடி மருளுற்ற சிந்தையை மாற்றி அருமைப் பொருளுற்ற சேவடி போற்றுவர் தாமே.

478

  1. மெய்கலந் தாரொடு மெய்கலந் தான்தன்னைப் பொய்கலந் தார்முன் புகுதா ஒருவனை உய்கலந் தூழித் தலைவனு மாய்நிற்கும் மெய்கலந் தின்பம் விளைந்திடும் மெய்யர்க்கே.

479

  1. மெய்கலந் தாரொடு மெய்கலந் தான்மிகப் பொய்கலந் தாருட் புகுதாப் புனிதனைக் கைகலந் தாவி எழும்பொழு தண்ணலைக் கைகலந் தார்க்கே கருத்துறல் ஆமே.

480

  1. எய்திய காலத் திருபொழு துஞ்சிவன் மெய்செயின் மேலை விதியது வாய்நிற்கும் பொய்யும் புலனும் புகலொன்று நீத்திடில் ஐயனும் அவ்வழி ஆகிநின் றானே.

481

  1. எய்துவ தெய்தா தொழிவ திதுஅருள் உய்ய அருள்செய்தான் உத்தமன் சீர்நந்தி பொய்செய் புலனெறி ஒன்பதும் தாட்கொளின் மெய்யென் புரவியை மேற்கொள்ள லாமே.

482

  1. கைகலந் தானைக் கருத்தினுள் நந்தியை மெய்கலந் தான்றன்னை வேத முதல்வனைப் பொய்கலந் தார்முன் புகுதாப் புனிதனைப் பொய்யொழிந் தார்க்கே புகலிடம் ஆமே.

483

  1. மெய்த்தாள் அகம்படி மேவிய நந்தியைக் கைத்தாள் கொண்டாரும் திருந்தறி வாரில்லை பொய்த்தாள் இடும்பையைப் பொய்யற நீவிட்டங் கத்தாள் திறக்கில் அரும்பேற தாமே.

484

  1. உய்யும் வகையால் உணர்வினால் ஏத்துமின் மெய்யன் அரனெறி மேலுண்டு திண்ணெனப் பொய்யொன்று மின்றிப் புறம்பொலி வார்நடு ஐயனும் அங்கே அமர்ந்துநின் றானே.

485

  1. வம்பு பழுத்த மலர்ப்பழம் ஒன்றுண்டு தம்பால் பறவை புகுந்துணத் தானொட்டா(து) அம்புகொண் டெய்திட் டகலத் துரத்திடின் செம்பொற் சிவகதி சென்றெய்த லாமே.

486

  1. மயக்கிய ஐம்புலப் பாசம் அறுத்துத் துயக்கறுத் தானைத் தொடர்மின் தொடர்ந்தால் தியக்கஞ் செய்யாதே சிவனெம்பெருமான் உயப்போ எனமனம் ஒன்றுவித் தானே.

487

  1. மனமது தானே நினையவல் லாருக்(கு) இனமெனக் கூறும் இருங்காய மேவல் தனிவினில் நாதன்பால் தக்கன செய்யில் புனிதன் செயலாகும் போதப் புவிக்கே.

488

===39.ஞானி செயல்=== 2609. முன்னை வினைவரின் முன்உண்டே நீங்குவர் பின்னை வினைக்கணார் பேர்ந்தறப் பார்ப்பர்கள் தன்னை அறிந்திடும் தத்துவ ஞானிகள் நன்மையில் ஐம்புலன் நாடலி னாலே.


489

  1. தன்னை அறிந்திடும் தத்துவ ஞானிகள் முன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பர்கள் பின்னை வினையைப் பிடித்துப் பிசைவர்கள் சென்னியில் வைத்த சிவனரு ளாலே.

490

  1. மனவாக்கு காயத்தால் வல்வினை மூளும் மனவாக்கு நேர்நிற்கில் வல்வினை மன்னா மனவாக்கு கெட்டவர் வாதனை தன்னால் தனைமாற்றி யாற்றத் தகுஞானி தானே.

491

===40.அவாவறுத்தல்=== 2612. வாசியும் ஊசியும் பேசி வகையினால் பேசி யிருந்து பிதற்றிப் பயனில்லை ஆசையும் அன்பும் அறுமின் அறுத்தபின் ஈசன் இருந்த இடம்எளி தாமே.


492

  1. மாடத் துளானலன் மண்டபத் துளானலன் கூடத் துளானலன் கோயி லுளானலன் வேடத் துளானலன் வேட்கைவிட் டார்நெஞ்சில் மூடத் துளேநின்று முத்திதந் தானே.

493

  1. ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனொ டாயினும் ஆசை அறுமின்கள் ஆசை படப்பட ஆய்வருந் துன்பங்கள் ஆசை விடவிட ஆனந்த மாமே.

494

  1. அடுவன பூதங்கள் ஐந்தும் உடனே படுவழி செய்கின்ற பற்றற வீசி விடுவது வேட்கையை மெய்ந்நின்ற ஞானம் தொடுவது தம்மைத் தொடர்தலும் ஆமே.

495

  1. உவாக்கடல் ஒக்கின்ற ஊழியும் போன துவாக்கட லுட்பட்டுத் துஞ்சினர் வானோர் அவாக்கட லுட்பட் டழுந்தினர் மண்ணோர் தவாக்கடல் ஈசன் தரித்துநின் றானே.

496

  1. நின்ற வினையும் பிணியும் நெடுங்செயல் துன்தொழி லற்றுச் சுத்தம தாகலும் பின்றைங் கருமமும் பேர்த்தருள் நேர்பெற்றுத் துன்ற அழுத்தலும் ஞானிகள் தூய்மையே.

497

  1. உண்மை உணர்ந்துற ஒண்சித்தி முத்தியாம் பெண்மயல் கெட்டறப் பேறட்ட சித்தியாம் திண்மையின் ஞானி சிவகாயம் கைவிட்டால் வண்மை அருள்தான் அடைந்தன்பில் ஆறுமே.

498

  1. அவனிவன் ஈசனென் றன்பற நாடிச் சிவனிவன் ஈசன்என்றுண்மையை ஓரார் பவனிவன் பல்வகை யாமிப் பிறவி புவனிவன் போவது பொய்கண்ட போதே.

499

  1. கொதிக்கின்ற வாறும் குளிர்கின்ற வாறும் பதிக்கின்ற வாறிந்தப் பாரக முற்றும் விதிக்கின்ற ஐவரை வேண்டா துலகம் நொதிக்கின்ற காயத்து நூலொன்று மாமே.

500

  1. உய்ந்தனம் என்பீர் உறுபொருள் காண்கிலீர் கந்த மலரிற் கலக்கின்ற நந்தியைச் சிந்தையில் வைத்துத் தெளிவுறச் சேர்த்திட்டால் முந்தைப் பிறவிக்கு மூலவித் தாமே.

501

===41.பத்தியுடைமை=== 2622. முத்திசெய் ஞானமும் கேள்வியு மாய்நிற்கும் அத்தனை மாயா அமரர் பிரான்றன்னைச் சுத்தனைத் தூய்நெறி யாய்நின்ற சோதியை பத்தன் பரசும் பசுபதி தான்என்றே.


502

  1. அடியார் அடியார் அடியார் அடிமைக்கு அடியனாய் நல்கிட் டடிமையும் பூண்டேன் அடியார் அருளால் அவனடி கூட அடியான் இவனென் றடிமைகொண் டானே.

503

  1. நீரிற் குளிரும் நெருப்பினிற் சுட்டிடும் ஆரிக் கடனந்தி யாமா ரறிபவர் பாரிற் கயனாரைக் பார்க்கிலும் நேரியர் ஊரில் உமாபதி ஆகிநின் றானே.

504

  1. ஒத்துல கேழும் அறியா ஒருவனென் றத்தன் இருந்திடம் ஆரறி வார்சொல்லப் பத்தர்தம் பத்தியின் பாற்படி னல்லது முத்தினை யார்சொல்ல முந்துகின் றாரே.

505

  1. ஆன்கன்று தேடி அழைக்கு மதுபோல் நான்கன்றாய் நாடி அழைத்தேனென் நாதனை வான்கன்றுக் கப்பாலாய் நின்ற மறைப்பொருள் ஊன்கன்றால் நாடிவந் துள்புகுந் தானே.

506

  1. பெத்தத்துத் தன்பணி இல்லை பிறத்தலான் முத்தத்துந் தன்பணி இல்லை முறைமையால் அத்தற் கிரண்டும் அருளால் அளித்தலால் பத்திப் பட்டோர்க்குப் பணியொன்றும் இல்லையே.

507

  1. பறவையிற் கற்பமும் பாம்புமெய் யாகக் குறவஞ் சிலம்பக் குளிர்வரை ஏறி நறவார் மலர்கொண்டு நந்தியை யல்லால் இறைவனென் றென்மனம் ஏத்தகி லாவே.

508

  1. உறுதுணை நந்தியை உம்பர் பிரானை பெறுதுணை செய்து பிறப்பறுத் துய்மின் செறுதுணை செய்து சிவனடி சிந்தித்து உறுதுணை யாயங்கி யாகிநின் றானே.

509

  1. வானவர் தம்மை வலிசெய் திருக்கின்ற தானவர் முப்புரஞ் செற்ற தலைவனைக் கானவன் என்றும் கருவரை யான்என்றும் ஊனத னுள்நினைந் தொன்று பட்டாரே.

510

  1. நிலைபெறு கேடென்று முன்னே படைத்த தலைவனை நாடித் தயங்கும்என் உள்ளம் மலையுளும் வானகத் துள்ளும் புறத்தும் உலையுளும் உள்ளத்தும் மூழ்கிநின் றேனே.

511

===42.முத்தியுடைமை=== 2632. முத்தியில் அத்தன் முழுத்த அரள்பெற்றுத் தத்தவ சுத்தி தலைப்பட்டுத் தன்பணி மெய்த்தவம் செய்கை வினைவிட்ட மெய்யுண்மைப் பத்தியி லுற்றோர் பரானந்த போதரே.


512

  1. வளங்கனி தேடிய வன்றாட் பறவை உளங்கனி தேடி உழிதரும் போது களங்கனி அங்கியிற் கைவிளக் கேற்றி நலங்கொண்ட நால்வரும் நாடுகின் றாரே.

513

===43.சோதனை=== 2634. பெம்மான் பெருநந்தி பேச்சற்ற பேரின்பத் தம்மான் அடிதந் தருட்கடல் ஆடினோம் எம்மாய மும்விடுத் தெம்மைக் கரந்திட்டுச் சும்மா திருந்திடம் சோதனை ஆகுமே.


514

  1. அறிவுடை யானரு மாமறை யுள்ளே செறிவுடை யான்மிகு தேவர்க்குந் தேவன் பொறியுடை யான்புலன் ஐந்துங் கடந்த குறியுடை யானொடுங் கூடுவன் நானே.

515

  1. அறிவறி வென்றங் கரற்றும் உலகம் அறிவறி யாமையை யாரும் அறியார் அறிவறி யாமை கடந்தறி வானால் அறிவறி யாமை அழகிய வாறே.

516

  1. குறியாக் குறியினிற் கூடாத கூட்டத்(து) அறியா அறிவினி லவிழ்ந்தேக சித்தமாய் நெறியாம் பராநந்தி நீடருள் ஒன்றும் செறியாச் செறிவே சிவமென லாமே.

எட்டாம் தந்திரம் (cont. 3)

517

  1. காலினில் ஊறும் கருப்பினிற் கட்டியும் பாலினுள் நெய்யும் பழத்துள் இரதமும் பூவினுள் நாற்றமும் போன்றுளன் எம்மிறை காவலன் எங்கும் கலந்து நின்றானே.

518

  1. விருப்பொடு கூடி விகிர்தனை நாடிப் பொருப்பகஞ் சேர்தரு பொற்கொடி போல இருப்பர் மனத்திடை எங்கள் பிரானார் நெருப்புரு வாகி நிகழ்ந்துநின் றாரே.

519

  1. நந்தி பெருமான் நடுவுள் வியோமத்து வந்தென் அகம்படி கோயில்கொண் டான்கொள்ள எந்தைவந் தானென் றெழுந்தே னெழுதலும் சிந்தையி னுள்ளே சிவனிருந் தானே.

520

  1. தன்மைவல் லோனைத் தவத்துள் நலத்தினை நன்மைவல் லோனை நடுவுறை நந்தியைப் புன்மைபொய் யாதே புனிதனை நாடுமின் பன்மையில் உம்மைப் பரிசுசெய் வானே.

521

  1. தொடர்ந்துநின் றானென்னைச் சோதிக்கும் போது தொடர்ந்துநின் றானல்ல நாதனும் அங்கே படர்ந்துநின் றாதிப் பராபரன் எந்தை கடந்துநின் றவ்வழி காட்டுகின் றானே.

522

  1. அவ்வழி காட்டும் அமரர்க் கரும்பொருள் இவ்வழி தந்தைதாய் கேளியான் ஒக்கும் செவ்வழி சேர்சிவ லோகத் திருந்திடும் இவ்வழி நந்தி இயல்பது தானே.

523

  1. எறிவது ஞானத் துறைவாள் உருவி அறிவத னோடேயவ் வாண்டகை யானைச் செறிவது தேவர்க்குந் தேவர் பிரானைப் பறிவது பல்கணப் பற்றுவி டாரே.

524

  1. ஆதிப் பிரான்தந்த வாளங்கைக் கொண்டபின் வேதித் தென்னை விலக்கவல் லாரில்லை சோதிப்பன் அங்கே சுவடு படாவண்ணம் ஆதிக்கட் டெய்வம் அவனிவ னாமே.

525

  1. அந்தக் கருவை அருவை வினைசெய்தற் பந்தம் பணியச்சம் பல்பிறப்பும் வாட்டிச் சிந்தை திருத்தலுஞ் சேர்ந்தார் சோதனை சந்திக்கத் தற்பர மாகுஞ் சதுரர்க்கே.

526

  1. உரையற்ற தொன்றை உரைத்தான் எனக்குக் கரையற் றெழுந்த கலைவேட் டறுத்துத் திரையொத்த என்னுடல் நீங்கா திருத்திப் புரையற்ற என்னுட் புகுந்தற் பரனே.

ஏழாம் தந்திரம்

1

==ஏழாம் தந்திரம்== ===1.ஆறாதாரம்=== 1704. நாலும் இருமூன்றும் ஈரைந்தும் ஈராறுங் கோலிமேல் நின்ற குறிகள் பதினாறும் மூலங்கண் டாங்கே முடிந்து முதல் இரண்டும் காலங்கண் டானடி காணலு மாமே.


2

  1. ஈராறு நாதத்தில் ஈரெட்டாம் அந்தத்தின் மேதாத் நாதாந்த மீதாம் பராசத்தி போதா லயத்த விகாரந் தனிற்போத மேதாதி யாதார மீதான உண்மையே,

3

  1. மேலென்று கீழென் றிரண்டறக் காணுங்கால் தானென்னும் நானென்றுந் தன்மைகள் ஓராறும் பாரெங்கு மாகிப் பரந்த பராபரங் காரொன்று கற்பக மாகிநின் றானே.

4

  1. ஆதார சோதனை யானாடி சுத்திகள் மோததி யீரெண் கலர்ந்தத்து விண்ணொளி போதா லயத்துப் புலன்கர ணம்புந்தி சாதா ரணங்கெட்டான் றான்சக மார்க்கமே.

5

  1. மேதாதி யாலே விடாதோ மெனத்தூண்டி ஆதார சோதனை அத்துவ சோதனை தாதார மாகவே தானெழச் சாதித்தால் ஆதாரஞ் செய்போக மாவது காயமே.

6

  1. ஆறந்த முங்கூடி யாகும் உடம்பினிற் கூறிய வாதார மற்றுங் குறிக்கொண்மின் ஆறிய வக்கர மைப்பதின் மேலாக ஊறிய வாதாரத் தோரெழுத் தாமே.

7

  1. ஆகும் உடம்பும் அழிகின்ற அவ்வுடல் போகும் உடம்பும் பொருந்திய வாறுதான் ஆகிய வக்கரம் ஐம்பது தத்துவம் ஆகும் உடம்புக்கும் ஆறந்த மாமே.

8

  1. ஆயு மலரின் அணிமலர் மேலது வாய இதழும் பதினாறும் அங்குள தூய அறிவு சிவானந்த மாகிப்போய் மேய அறிவாய் விளைந்தது தானே.

9

===2.அண்டலிங்கம்=== 1712. இலிங்கம தாவ தியாரும் அறியார் இலிங்கம தாவ தெண்டிசை யெல்லாம் இலிங்கம தாவ தெண்ணெண் கலையும் இலிங்கம தாக எடுத்த துலகே.


10

  1. உலகில் எடுத்தது சத்தி முதலா உலகில் எடுத்தது சத்தி வடிவாய் உலகில் எடுத்தது சத்தி குணமாய் உலகம் எடுத்த சதாசிவன் தானே.

11

  1. போகமும் முத்தியும் புத்தியுஞ் சித்தியும் ஆகமும் ஆறாறு தத்துவத் தப்பாலாம் ஏகமும் நல்கி யிருக்குஞ் சதாசிவம் ஆகம வத்துவா வாறுஞ் சிவமே.

12

  1. ஏத்தினர் எண்ணிலி தேவரெம் ஈசனை வாழ்த்தினர் வாசப் பசுந்தென்றல் வள்ளலென் றார்த்தனர் அண்டங் கடந்தப் புறநின்று காத்தனன் என்னுங் கருத்தறி யாரே.

13

  1. ஒண்சுட ரோன் அயன் மால்பிர சாபதி ஒண்சுட ரான இரவியோ டிந்திரன் கண்சுட ராகிக் கலந்தெங்குந் தேவர்கள் தண்சுட ராயெங்கும் தற்பர மாமே.

14

  1. தாபரத் துண்ணின் றருளவல்லான் சிவன் மாபரத் துண்மை வழிபடு வாரிலை மாபரத் துண்மை வழிபடு வாளர்க்கு பூவகத் துள்நின்ற பொற்கொடி யாகுமே.

15

  1. தூய விமானமுந் தூலம தாகுமால் ஆய சதாசிவ மாகுநற் சூக்குமம் பாய பலிபீடம் பத்திர லிங்கமாம் ஆய அரனிலை ஆய்ந்துகொள் வார்கட்கே.

16

  1. முத்துடன் மாணிக்கம் மொய்த்த பவளமும் கொத்துமக் கொம்பு சிலைநீறு கோமதம் அத்தன்றன் னாகம மன்ன மரிசியாம் உய்த்ததின் சாதனம் பூமண லிங்கமே.

17

  1. துன்றுந் தயிர்நெய்பால் துய்ய மெழுகுடன் கன்றிய செம்பு கனலிர தஞ்சலம் வன்திறல் செங்கல் வடிவுடை வில்லம்பொன் றென்றியங் கொன்றை தெளிசிவ லிங்கமே.

18

  1. மறையவர் அர்ச்சனை வண்படி கந்தான் இறையவர் அர்ச்சனை யேயபொன் னாகுங் குறைவிலா வசியர்க்குக் கோமள மாகுந் துறையுடைச் சூத்திரர் தொல்வாண லிங்கமே.

19

  1. அதுவுணர்ந்த தோனொரு தன்மையை நாடி எதுவுண ராவகை நின்றனன் ஈசன் புதுவுணர் வான புவனங்கள் எட்டும் இதுவுணர்ந் தென்னுடல் கோயில் கொண்டானே.

20

  1. அகலிட மாயறி யாமல் அடங்கும் உகலிட மாய்நின்ற வூனத னுள்ளே பகலிட மாமுனம் பாவ விநாசன் புகலிட மாய்நின்ற புண்ணியன் றானே.

21

  1. போது புனைகழல் பூமிய தாவது மாது புனைமுடி வானக மாவது நீதியுள் ஈசன் உடல்விசும் பாய்நிற்கும் ஆதி யுறநின்ற தப்பரி சாமே.

22

  1. தரையுற்ற சத்தி தனிலிங்கம் விண்ணாந் திரைபொரு நீரது மஞ்சனச் சாலை வரைதவழ் மஞ்சுநீர் வானுடு மாலை கரையற்ற நந்திக் கலையுந்திக் காமே.

23

===3.பிண்டலிங்கம்=== 1726. மானுட ராக்கை வடிவு சிவலிங்கம் மானுட ராக்கை வடிவு சிதம்பரம் மானுட ராக்கை வடிவு சதாசிவம் மானுட ராக்கை வடிவு திருக்கூத்தே.


24

  1. உலந்திலர் பின்னும் உளரென நிற்பீர் நிலந்தரு நீர்தெளி யூனவை செய்யப் புலந்தரு பூதங்கள் ஐந்தும்ஒன் றாக வலந்தரு தேவரை வந்திசெய் யீரே.

25

  1. கோயில்கொண் டன்றே குடிகொண்ட ஐவரும் வாயில்கொண் டாங்கே வழிநின் றருளுவர் தாயில்கொண் டாற்போல் தலைவனென் னுட்புக வாயில்கொண் டீசனு மாளவந் தானே.

26

  1. கோயில்கொண் டானடி கொல்லைப் பெருமறை வாயில்கொண் டானடி நாடிகள் பத்துள பூசைகொண் டான்புல னைந்தும் பிறகிட்டு வாயில்கொண் டானெங்கள் மாநந்தி தானே.

27

===4.சதாசிவலிங்கம்=== 1730. கூடிய பாதம் இரண்டும் படிமிசை பாடிய கையிரண் டெட்டும் பரந்தெழும் தேடு முகம்ஐந்து செங்கணின் மூவைந்து நாடுஞ் சதாசிவ நல்லொளி முத்தே.


28

  1. வேதா நெடுமால் உருத்திரன் மேலீசன் மீதான ஐம்முகன் விந்துவும் நாதமும் ஆதார சத்தியு மந்தச் சிவனொடுஞ் சாதா ரணமாஞ் சதாசிவந் தானே.

29

  1. ஆகின்ற சத்தியின் உள்ளே கலைநிலை ஆகின்ற சத்தியின் உள்ளே கதிரெழ ஆகின்ற சத்தியின் உள்ளே அமர்ந்தபின் ஆகின்ற சத்தியுள் அத்திசை பத்தே.

30

  1. அத்திசைக் குள்ளே அமர்ந்தன ஆறங்கம் அத்திசைக் குள்ளே அமர்ந்தன நால்வேதம் அத்திசைக் குள்ளே அமர்ந்த சரியையோ(டு) அத்திசைக் குள்ளே அமர்ந்த சமயமே.

31

  1. சமயத் தெழுந்த அவத்தையீ ரைந்துள சமயத் தெழுந்த இராசியீ ராறுள சமயத் தெழுந்த சரீரமா றெட்டுள சமயத் தெழுந்த சதாசிவந் தானே.

32

  1. நடுவு கிழக்குத் தெற்குத் தரமேற்கு நடுவு படிகநற் குங்கும வன்னம் அடைவுள வஞ்சனஞ் செவ்வரத் தம்பால் அடியேற் கருளிய முகமிவை அஞ்சே.

33

  1. அஞ்சு முகமுள ஐம்மூன்று கண்ணுள அஞ்சினொ டஞ்சு கரதலந் தானுள அஞ்சுடன் அஞ்சா யுதமுள நம்பியென் நெஞ்சு புகுந்து நிறைந்துநின் றானே.

34

  1. சத்தி தராதல மண்டஞ் சதாசிவ சத்தி சிவமிக்க தாபர சங்கமஞ் சத்தி யுருவம் அருவஞ் சதாசிவஞ் சத்தி சிவதத் துவமுப்பத் தாறே.

35

  1. தத்துவ மாவ தருவஞ் சராசரந் தத்துவ மாவ துருவஞ் சுகோதயந் தத்துவம் எல்லாஞ் சகலமு மாய்நிற்குந் தத்துவ மாகுஞ் சதாசிவன் தானே.

36

  1. கூறுமி னூறு சதாசிவன் எம்மிறை வேறோர் உரைசெய்து மிகைப்பொரு ளாய்நிற்கும் ஏறுரை செய்தொழில் வானவர் தம்மொடு மாறுசெய் வானென் மனம்புகுந் தானே.

37

  1. இருளார்ந்த கண்டமும் ஏந்து மழுவுஞ் சுருளார்ந்த செஞ்சடைச் சோதிப் பிறையும் அருளார்ந்த சிந்தையெம் ஆதிப் பிரானைத் தெருளார்ந்தென் உள்ளே தெளிந்திருந்தேனே.

38

  1. சத்திதான் நிற்கின்ற ஐம்முகஞ் சாற்றிடில் உத்தரம் வாமம் உரைத்திடும் சத்தி பச்சிமம் பூருவம் தற்புரு டன்னுரை தெற்கி லகோரம் வடகிழக் கீசனே.

39

  1. நாணுநல் லீசான நடுவுச்சி தானாகுந் தாணுவின் றன்முகந் தற்புருட மாகுங் காணும் அகோரம் இருதயங் குய்யமாம் மாணுற வாமமாஞ் சத்திநற் பாதமே.

40

  1. நெஞ்சு சிரஞ்சிகை நீள்கவசங் கண்ணம்பு வஞ்சமில் விந்து வளர்நிறம் பச்சையாஞ் செஞ்சுறு செஞ்சுடர் சேகரி மின்னாகுஞ் செஞ்சுடர் போலுந் தெசாயுதந் தானே.

41

  1. எண்ணில் இதயம் இறைஞான சத்தியாம் விண்ணிற் பரைசிர மிக்க சிகையாதி வண்ணக் கவசம் வனப்புடை இச்சையாம் பண்ணுங் கிரியை பரநேத் திரத்திலே.

42

  1. சத்திநாற் கோணஞ் சலமுற்று நின்றிடுஞ் சத்தி அறுகோணஞ் சயனத்தை யுற்றிடுஞ் சத்திநல் வட்டஞ் சலமுற் றிருந்திடுஞ் சத்தி யுருவாஞ் சதாசிவன் தானே.

43

  1. மானந்தி எத்தனை காலம் அழைக்கினுந் தானந்தி யஞ்சின் தனிச்சுட ராய்நிற்குங் கானந்தி யுந்தி கடந்து கமலத்தின் மேனந்தி ஒன்பதின் மேவிநின் றானே.

44

  1. ஒன்றிய வாறும் உடலி னுடன்கிடந் தென்றுமெம் மீச னடக்கும் இயல்பது தென்றலைக் கேறத் திருந்து சிவனடி நின்று தொழுதேனென் னெஞ்சத்தி னுள்ளே.

45

  1. உணர்ந்தேன் உலகினில் ஒண்பொரு ளானைக் கொணர்ந்தேன் குவலயங் கோயிலென் நெஞ்சம் புணர்ந்தேன் புனிதனும் பொய்யல்ல மெய்யே பணிந்தேன் பகலவன் பாட்டு மொலியே.

46

  1. ஆங்கிவை மூன்றினும் ஆரழல் வீசிடத் தாங்கிடும் ஈரேழு தானடு வானதில் ஓங்கிய ஆதியும் அந்தமு மாமென ஈங்கிவை தம்முடல் இந்துவு மாமே.

47

  1. தன்மேனி தற்சிவ லிங்கமாய் நின்றிடுந் தன்மேனி தானுஞ் சதாசிவ மாய்நிற்குந் தன்மேனி தற்சிவன் தற்சிவா னந்தமாந் தன்மேனி தானாகுந் தற்பரந் தானே.

48

  1. ஆரும் அறியார் அகார மவனென்று பாரு முகாரம் பரந்திட்ட நாயகி தாரம் இரண்டுந் தரணி முழுதுமாய் மாறி யெழுந்திடும் ஓசைய தாமே.

49

  1. இலிங்கநற் பீடம் இசையும்ஓங் காரம் இலிங்கநற் கண்ட நிறையும் மகாரம் இலிங்கத்துள் வட்ட நிறையும் உகாரம் இலிங்க மகார நிறைவிந்து நாதமே.

50

===5.ஆத்மலிங்கம்=== 1753. அகார முதலா யனைத்துமாய் நிற்கும் உகார முதலா யுயிர்ப்பெய்து நிற்கும் அகார வுகாரம் இரண்டு மறியில் அகார வுகாரம் இலிங்கம தாமே.


51

  1. ஆதார மாதேய மாகின்ற விந்துவும் மேதாதி நாதமு மீதே விரிந்தன ஆதார விந்து அதிபீட நாதமே போதாவி லிங்கப் புணர்ச்சிய தாமே.

52

  1. சத்தி சிவமாம் இலிங்கமே தாபரஞ் சத்தி சிவமாம் இலிங்கமே சங்கமஞ் சத்தி சிவமாம் இலிங்கஞ் சதாசிவஞ் சத்தி சிவமாகுந் தாபரந் தானே.

53

  1. தானே ரெழுகின்ற சோதியைக் காணலாம் வானே ரெழுகின்ற ஐம்ப தமர்ந்திடம் பூதே ரெழுகின்ற பொற்கொடி தன்னுடன் தானே ரெழுகின்ற வதாரம தாமே.

54

  1. விந்துவும் நாதமும் மேவு மிலிங்கமாம் விந்துவ தேபீட நாத மிலிங்கமாம் அந்த இரண்டையும் ஆதார தெய்வமாய் வந்த கருவைந்துஞ் செய்யு மவையைந்தே.

55

  1. சத்திநற் பீடந் தகுநல்ல ஆன்மா சத்திநற் கண்டந் தகுவித்தை தானாகுஞ் சத்திநல் லிங்கந் தகும்சிவ தத்துவம் சத்திநல் லான்மாச் சதாசிவந் தானே.

56

  1. மனம்புகுந் தென்னுயிர் மன்னிய வாழ்க்கை மனம்புகுந் தின்பம் பொழிகின்ற போது நலம்புகுந் தென்னொடு நாதனை நாடும் இலம்புகுந் தாதியு மேற்கொண்ட வாறே.

57

  1. பராபரன் எந்தை பனிமதி சூடி தராபரன் றன்னடி யார்மனக் கோயிற் சிராபரன் தேவர்கள் சென்னியின் மன்னும் அராமரன் மன்னி மனத்துறைந் தானே.

58

  1. பிரானல்ல னாமெனிற் பேதை யுலகங் குராலென்னு மென்மனங் கோயில்கொள் ஈசன் அராநின்ற செஞ்சடை அங்கியும் நீரும் பொராநின் றவர்செய்யப் புண்ணியன் தானே.

59

  1. அன்றுநின் றான்கிடந் தானவன் என்று சென்றுநின் றெண்டிசை ஏத்துவர் தேவர்கள் என்றுநின் றேத்துவன் எம்பெரு மான்தன்னை ஒன்றியென் உள்ளத்தின் உள்ளிருந் தானே.

60

===6.ஞானலிங்கம்=== 1763. உருவும் அருவும் உருவோ டருவும் மருவு பரசிவன் மன்பல் லுயிர்க்குங் குருவு மெனநிற்குங் கொள்கைய னாகுந் தருவென நல்குஞ் சதாசிவன் தானே.


61

  1. நாலான கீழ துருவ நடுநிற்க மேலான நான்கு மருவு மிகநாப்பண் நாலான ஒன்று மருவரு நண்ணலால் பாலா மிவையாம் பரசிவன் தானே.

62

  1. தேவர் பிரானைத் திசைமுக நாதனை நால்வர் பிரானை நடுவுற்ற நந்தியை ஏவர் பிரானென் றிறைஞ்சுவ ரவ்வழி ஆவர் பிரானடி அண்ணலு மாமே.

63

  1. வேண்டிநின் றேதொழு தேன்வினை போன்ற ஆண்டொரு திங்களும் நாளும் அளக்கின்ற காண்டகை யானொடுங் கன்னி யுணரினும் மூண்டகை மாறினும் ஒன்றது வாமே.

64

  1. ஆதி பரந்தெய்வம் அண்டத்து நற்றெய்வம் சோதி யடியார் தொடரும் பெருந்தெய்வம் நீதியுள் மாதெய்வம் நின்மலன் எம்மிறை பாதியுள் மன்னும் பராசத்தி யாமே.

65

  1. சத்திக்கு மேலே பராசத்தி தன்னுள்ளே சுத்த சிவபதந் தோயாத தூவொளி அத்தன் திருவடிக் கப்பாலைக் கப்பாலாம் ஒத்தவு மாமீசன் தானான வுண்மையே.

66

  1. கொழுந்தினைக் காணிற் குவலயந் தோன்றும் எழுந்திடங் காணிற் இருக்கலு மாகும் பரந்திடங் காணிற் பார்ப்பதி மேலே திரண்டெழக் கண்டவன் சிந்தையுளானே.

67

  1. எந்தை பரமனும் என்னம்மை கூட்டமும் முந்த வுரைத்து முறைசொல்லின் ஞானமாம் சந்தித் திருந்த விடம்பெருங் கண்ணியை உந்தியின் மேல்வைத் துகந்திருந் தானே.

68

  1. சத்தி சிவன்விளை யாட்டாம் உயிராகி ஒத்த இருமாயா கூட்டத் திடையூட்டிச் சுத்தம தாகுந் துரியம் பிறிவித்துச் சித்தம் புகுந்து சிவமக மாக்குமே.

69

  1. சத்தி சிவன்றன் விளையாட்டுத் தாரணி சத்தி சிவமுமாஞ் சிவன்சத் தியுமாகுஞ் சத்தி சிவமன்றித் தாபரம் வேறில்லை சத்திதான் என்றுஞ் சமைந்துரு வாகுமே.

70

===7.சிவலிங்கம்=== 1773. குரைக்கின்ற வாரிக் குவலய நீரும் பரக்கின்ற காற்றுப் பயில்கின்ற தீயும் நிரைக்கின்ற வாறிவை நீண்டகன் றானை வரைத்து வலஞ்செயு மாறறி யேனே.


71

  1. வரைத்து வலஞ்செய்யு மாறிங்கொன் றுண்டு நிரைத்து வருகங்கை நீர்மல ரேந்தி உரைத்தவன் நாமம் உணரவல் லார்க்குப் புரைத்தெங்கும் போகான் புரிசடை யோனே.

72

  1. ஒன்றெனக் கண்டேனெம் ஈசன் ஒருவனை நன்றென் றடியிணை நானவ னைத்தொழ வென்றைம் புலனும் மிகக்கிடந் தின்புற அன்றென் றருள்செய்யும் ஆதிப் பிரானே.

73

  1. மலர்ந்த அயன்மால் உருத்திரன் மகேசன் பலந்தரும் ஐம்முகன் பரவிந்து நாதம் நலந்தரு சத்தி சிவன்வடி வாகிப் பலந்தரு லிங்கம் பராநந்தி யாமே.

74

  1. மேவி யெழுகின்ற செஞ்சுட ரூடுசென் றாவி எழுமள வன்றே உடலுற மேவப் படுவதும் விட்டு நிகழ்வதும் பாவித் தடக்கிற் பரகதி தானே.

75

===8.சம்பிரதாயம்=== 1778. உடல்பொருள் ஆவி உதகத்தால் கொண்டு படர்வினை பற்றறப் பார்த்துக்கை வைத்து நொடியின் அடிவைத்து நுண்ணுணர் வாக்கிக் கடியப் பிறப்பறக் காட்டினன் நந்தியே.


76

  1. உயிருஞ் சரீரமும் ஒண்பொரு ளான வியவார் பரமும்பின் மேவும் பிராணன் செயலார் சிவமுஞ் சிற்சத்தி யாதிக்கே. உயலார் குருபரன் உய்யக்கொண் டானே.

77

  1. பச்சிம திக்கிலே வைத்தஆ சாரியன் நிச்சலும் என்னை நினையென்ற வப்பொருள் உச்சிக்குங் கீழது வுண்ணாக்கு மேலது வைச்ச பதமிது வாய்திற வாதே.

78

  1. பெட்டடித் தெங்கும் பிதற்றித் திரிவேனை யொட்டடித் துள்ளமர் மாசெலாம் வாங்கித் தட்டொக்க மாறினன் தன்னையும் என்னையும் வட்டம் தொத்தது வாணிபம் வாய்த்ததே.

79

  1. தரிக்கின்ற பல்லுயிர்க் கெல்லாந் தலைவன் இருக்கின்ற தன்மையை யேதும் உணரார் பிரிக்கின்ற விந்து பிணக்கறுத் தெல்லாங் கருக்கொண்ட ஈசனைக் கண்டுகொண் டேனே.

80

  1. கூடும் உடல்பொருள் ஆவி குறிக்கொண்டு நாடி யடிவைத் தருண்ஞான சத்தியால் பாடல் உடலினிற் பற்றற நீக்கியே கூடிய தானவ னாங்குளிக் கொண்டே.

81

  1. கொண்டா னடியேன் அடிமை குறிக்கொள்ளக் கொண்டான் உயிர்பொருள் காயக் குழாத்தினைக் கொண்டான் பலமுற்றுந் தந்தவன் கோடலாற் கொண்டா னெனலொன்றுங் கூறுகி லேனே.

82

  1. குறிக்கின்ற தேகமுந் தேகியுங் கூடி நெறிக்கும் பிராணன் நிலைபெற்ற சீவன் பறிக்கின்ற காயத்தைப் பற்றிய நேர்மை பிறக்க அறியாதார் பேயுடன் ஒப்பரே.

83

  1. உணர்வுடை யார்கட் குலகமுந் தோன்றும் உணர்வுடை யார்கட் குறுதுய ரில்லை உணர்வுடை யார்கள் உணர்ந்தவக் காலம் உணர்வுடை யார்கள் உணர்ந்துகண் டாரே

84

  1. காயப் பரப்பில் அலைந்து துரியத்துச் சால விரிந்து குவிந்து சகலத்தில் ஆயவவ் வாறா றடைந்து திரிந்தோர்க்குத் தூய அருள்தந்த நந்திக்கென் சொல்வதே.

85

  1. நானென நீயென வேறில்லை நண்ணுதல் ஊனென வூனுயிர் என்ன வுடனின்று வானென வானவர் நின்று மனிதர்கள் தேனென இன்பந் திளைக்கின்ற வாறே.

86

  1. அவனும் அவனும் அவனை யறியார் அவனை யறியில் அறிவானும் இல்லை அவனும் அவனும் அவனை யறியில் அவனும் அவனும் அவனிவ னாமே.

87

  1. நானிது தானென நின்றவ னாடொறும் ஊனிது தானுயிர் போலுணர் வானுளன் வானிரு மாமுகில் போற்பொழி வானுளன் நானிது வம்பர நாதனு மாமே.

88

  1. பெருந்தன்மை தானென யானென வேறாய் இருந்தது மில்லைய தீசன் அறியும் பொருந்தும் உடலுயிர் போலுமை மெய்யே திருந்தமுன் செய்கின்ற தேவர் பிரானே.

89

===9.திருவருள்வைப்பு=== 1792. இருபது மாவ திரவும் பகலும் உருவது வாவ துயிரும் உடலும் அருளது வாவ தறமுந் தவமும் பொருளது வுள்நின்ற போகம தாமே.


90

  1. காண்டற் கரியன் கருத்திலன் நந்தியுந் தீண்டற்குஞ் சார்தற்குஞ் சேயனாத் தோன்றிடும் வேண்டிக் கிடந்து விளக்கொளி யானெஞ்சம் ஈண்டுக் கிடந்தங் கிருளறு மாமே.

91

  1. குறிப்பினின் உள்ளே குவலயந் தோன்றும் வெறுப்பிருள் நீங்கில் விகிர்தனும் நிற்குஞ் செறிப்புறு சிந்தையைச் சிக்கென நாடில் அறிப்புறு காட்சி அமரு மாமே.

92

  1. தேர்ந்தறி யாமையின் சென்றன காலங்கள் பேர்ந்தறி வானெங்கள் பிஞ்ஞகன் எம்மிறை ஆர்ந்தறி வாரறி வேதுணை யாமெனச் சார்ந்தறி வான்பெருந் தன்மைவல் லானே.

93

  1. தானே யறியும் வினைகள் அழிந்தபின் நானே யறிகிலன் நந்தி யறியுங்கொல் ஊனே யுருகி யுணர்வை யுணர்ந்தபின் தேனே யனையனந் தேவர் பிரானே.

94

  1. யானறிந் தன்றே யிருக்கின்ற தீசனை வானறிந் தாரறி யாது மயங்கினர் ஊனறிந் துள்ளே யுயிர்க்கின்ற ஒண்சுடர் தானறி யான்பின்னை யாரறி வாரே.

95

  1. அருளெங்கு மான அளவை யறியார் அருளை நுகரமு தானதுந் தேரார் அருளைங் கருமத் ததிசூக்க முன்னார் அருளெங்குங் கண்ணான தாரறி வாரே.

96

  1. அறிவில் அணுக அறிவது நல்கிப் பொறிவழி யாசை புகுத்திப் புணர்ந்திட் டறிவது வாக்கி அடியருள் நல்குஞ் செறிவொடு நின்றார் சிவமாயி னாரே.

97

  1. அருளிற் பிறந்திட் டருளில் வளர்ந்திட் டருளில் அழிந்திளைப் பாறி மறைந்திட் டருளான ஆனந்தத் தாரமு தூட்டி அருளால் என்நந்தி யகம்புகுந் தானே

98

  1. அருளால் அமுதப் பெருங்கடல் ஆட்டி அருளால் அடிபுனைந் தார்வமுந் தந்திட் டருளான ஆனந்தத் தாரமு தூட்டி அருளால் என்நந்தி யம்புகுந் தானே.

99

  1. பாசத்தி லிட்ட தருளந்தப் பாசத்தின் நேசத்தை விட்ட தருளந்த நேசத்திற் கூசற்ற முத்தி யருளந்தக் கூட்டத்தின் நேசத்துத் தோன்றா நிலையரு ளாமே.

100

  1. பிறவா நெறிதந்த பேரரு ளாளன் மறவா அருள்தந்த மாதவன் நந்தி அறவாழி அந்தணன் ஆதிப் பராபரன் உறவாகி வந்தென் உளம்புகுந் தானே.

101

  1. அகம்புகுந் தானடி யேற்கரு ளாலே அகம்புகுந் துந்தெரி யானரு ளில்லோர்க் ககம்புகுந் தானந்த மாக்கிச் சிவமாய் அகம்புகுந் தானந்தி யானந்தி யாமே.

102

  1. ஆயும் அறிவோ டறியாத மாமாயை ஆய கரணம் படைக்கும்ஐம் பூதமும் ஆய பலவிந் திரிய மவற்றுடன் ஆய வருளைந்து மாமருட் செய்கையே.

103

  1. அருளே சகலமு மாய பவுதிகம் அருளே சராசர மாய வகிலமே இருளே வெளியே யெனுமெங்கும் ஈசன் அருளே சகளத்த னன்றியின் றாமே.

104

  1. சிவமொடு சத்தி திகழ்நாதம் விந்து தவமான ஐம்முகன் ஈசன் அரனும் பவமுறு மாலும் பதுமத்தோன் ஈறா நவமவை யாகி நடிப்பவன் தானே.

105

  1. அருட்கண் ணிலாதார்க் கரும்பொருள் தோன்றா அருட்கண் ணுளோர்க்கெதிர் தோன்றும் அரனே இருட்கண்ணி னோனர்க்கங் கிரவியுந் தோன்றாத் தெருட்கண்ணி னோர்க்கெங்குஞ் சீரொளி யாமே.

106

  1. தானே படைத்திடுந் தானே அளித்திடுந் தானே துடைத்திடுந் தானே மறைத்திடுந் தானே யிவை செய்து தான்முத்தி தந்திடுந் தானே வியாபித் தலைவனு மாமே.

107

  1. தலையான நான்குந் தனதரு வாகும் மலையா வருவுரு வாகுஞ் சதாசிவம் நிலையான கீழ்நான்கு நீடுரு வாகுந் துலையா இவைமுற்று மாயல்ல தொன்றே.

108

  1. ஒன்றது வாலே உலப்பிலி தானாகி நின்றது தான்போல் உயிர்க்குயி ராய்நிலை துன்னி யவையல்ல வாகுந் துணையென்ன நின்றது தான்விளை யாட்டென்னுள் நேயமே.

109

  1. நேயத்தே நின்றிடும் நின்மலன் சத்தியோ டாய்க் குடிலையுள் நாம் அடைந்திட்டுப் போயக் கலைபல வாகப் புணர்ந்திட்டு வீயத் தகாவிந்து வாக விளையுமே.

110

  1. விளையும் பரவிந்து தானே வியாபி விளையுந் தனிமாயை மிக்கமாமாயை கிளையொன்று தேவர் கிளர்மனு வேதம் அளவொன் றிலாவண்ட கோடிக ளாமே.

111

===10.அருளொளி=== 1814. அருளிற் றலைநின் றறிந்தழுந் தாதார் அருளிற் றலைநில்லார் ஐம்பாச நீங்கார் அருளிற் பெருமை யறியார் செறியார் அருளிற் பிறந்திட் டறிந்தறி வாரே.


112

  1. வாரா வழிதந்த மாநந்தி பேர்நந்தி ஆரா அமுதளித் தானந்தி பேர்நந்தி பேரா யிரமுடைப் பெம்மான்பே ரொன்றினில் ஆரா அருட்கடல் ஆடுகென் றானே.

113

  1. ஆடியும் பாடியும் அழுதும் அரற்றியுந் தேடியுங் கண்டேன் சிவன்பெருந் தன்மையைக் கூடிய வாறே குறியாக் குறிதந்தென் ஊடுநின் றானவன் தன்னரு ளுற்றே.

114

  1. உற்ற பிறப்பும் உறுமல மானதும் பற்றிய மாயாப் படல மெனப் பண்ணி அத்தனை நீயென் றடிவைத்தான் பேர்நந்தி கற்றன விட்டேன் கழல்பணிந் தேனே.

115

  1. விளக்கினை யேற்றி வெளியை அறிமின் விளக்கினின் முன்னே வேதனை மாறும் விளக்கை விளக்கும் விளக்குடை யார்கள் விளக்கில் விளங்கும் விளக்கவர் தாமே.

116

  1. ஒளியும் இருளும் ஒருகாலந் தீர ஒளியுளோர்க் கன்றோ ஒழியா தொளியும் ஒளியிருள் கண்டகண் போலவே றாயுள் ஒளியிருள் நீங்க வுயிர்சிவ மாமே.

117

  1. புறமே திரிந்தேனைப் பொற்கழல் சூட்டி நிறமே புகுந்தென்னை நின்மல னாக்கி அறமே புகுந்தெனக் காரமு தீந்த திறமேதென் றெண்ணித் திகைத்திருந் தேனே.

118

  1. அருளது வென்ற அகலிடம் ஒன்றும் பொருளது வென்ற புகலிடம் ஒன்றும் மருளது வென்ற மனம்புகுந் தானைத் தெருளுறும் பின்னைச் சிவகதி யாமே.

119

  1. கூறுமின் னீர்முன் பிறந்திங் கிறந்தமை வேறொரு தெய்வத்தின் மெய்ப்பொருள் நீங்கிடும் பாறணி யும்முடல் வீழவிட் டாருயிர் தேறணி யோமிது செப்பவல் லீரே.

120

===11.சிவபூசை=== 1823. உள்ளம் பெருங்கோயில் ஊனுடம் பாலயம் வள்ளற் பிரானாற்கு வாயிகோ புரவாசல் தெள்ளத் தெளிவார்க்குச் சீவன் சிவலிங்கம் கள்ளப் புலனைந்துங் காளா மணிவிளக்கே.


121

  1. வேட்டவி யுண்ணும் விரிசடை நந்திக்குக் காட்டவும் நாமிலங் காலையும் மாலையும் ஊட்டவி யாவன வுள்ளங் குளிர்விக்கும் பாட்டவி காட்டுதும் பாலவி யாமே.

122

  1. பான்மொழி பாகன் பராபரன் தானாகு மான சதாசிவன் தன்னையா வாகித்து மேன்முகம் ஈசான மாகவே கைக்கொண்டு சீன்முகஞ் செய்யச் சிவனவ னாகுமே.

123

  1. நினைவதும் வாய்மை மொழிவது மல்லாற் கனைகழல் ஈசனைக் காண வரிதாங் கனைகழல் ஈசனைக் காண்குற வல்லார் புனைமலர் நீர்கொண்டு போற்றவல் லாரே.

124

  1. மஞ்சன மாலை நிலாவிய வானவர் நெஞ்சினுள் ஈசன் நிலைபெறு காரணம் அஞ்சமு தாம்உப சாரம்எட் டெட்டொடும் அஞ்சலி யோடுங் கலந்தர்ச்சித் தார்களே.

125

  1. புண்ணியஞ் செய்வார்க்குப் பூவுண்டு நீருண்டு அண்ணல் அதுகண் டருள்புரி யாநிற்கும் எண்ணிலி பாவிகள் எம்மிறை யீசனை நண்ணறி யாமல் நழுவுகின் றாரே.

126

  1. அத்த னவதீர்த்த மாடும் பரிசுகேள் ஒத்தமெய்ஞ் ஞானத் துயர்ந்தார் பதத்தைச் சுத்தம தாக விளக்கித் தெளிக்கவே முத்தியா மென்றுநம் மூலன் மொழிந்ததே.

127

  1. மறுப்புற்று விவ்வழி மன்னிநின் றாலுஞ் சிறப்பொடு பூநீர் திருந்தமுள் ஏந்தி மறப்பின்றி யுன்னை வழிபடும் வண்ணம் அறப்பெற வேண்டும் அமரர் பிரானே.

128

  1. ஆரா தனையும் அமரர் குழாங்களுந் தீராக் கடலும் நிலத்தும தாய்நிற்கும் பேரா யிரமும் பிரான்திரு நாமமும் ஆரா வழியெங்கள் ஆதிப் பிரானே.

129

  1. ஆனைந்தும் ஆட்டி அமரர் கணந்தொழத் தானந்த மில்லாத் தலைவன் அருளது தேனுந்து மாமலர் உள்ளே தெளிந்ததோர் பாரையுங் குணமும் படைத்துநின் றானே.

130

  1. உழைக்கொண்ட பூநீர் ஒருங்குடன் ஏந்தி மழைக்கொண்ட மாமுகின் மேற்சென்று வானோர் தழைக்கொண்ட பாசந் தயங்கிநின் றேத்தப் பிழைப்பின்றி எம்பெரு மானரு ளாமே.

131

  1. வெள்ளக் கடலுள் விரிசடை நந்திக்கு உள்ளக் கடற்புக்கு வார்சுமை பூக்கொண்டு கள்ளக் கடல்விட்டுக் கைதொழ மாட்டாதார் அள்ளற் கடலுள் அழுந்துகின் றாரே.

132

  1. கழிப்படுந் தண்கடற் கௌவை யுடைத்து வழிப்படு வார்மலர் மொட்டறி யார்கள் பழிப்படு வார்பல ரும்பழி வீழ வெளிப்படு வோருச்சி மேவிநின் றானே.

133

  1. பயனறி வொன்றுண்டு பன்மலர் தூவிப் பயனறி வார்க்கரன் தானே பயிலும் நயனங்கள் மூன்றுடை யானடி சேர வயனங்க ளாலென்றும் வந்துநின் றானே.

134

  1. ஏத்துவர் மாமலர் தூவித் தொழுதுநின் றார்த்தெம தீசன் அருட்சே வடியென்றன் மூர்த்தியை மூவா முதலுரு வாய்நின்ற தூர்த்தனை யாருந் துதித்துண ராரே.

135

  1. தேவர்க ளோடிசை வந்துமண் ணோடுறும் பூவொடு நீர்சுமந் தேத்திப் புனிதனை மூவரிற் பன்மை முதல்வனாய் நின்றருள் நீர்மையை யாவர் நினைக்கவல் லாரே.

136

  1. உழைக்கவல் லோர்நடு நீர்மல ரேந்திப் பிழைப்பின்றி யீசன் பெருந்தவம் பேணி இழைக்கொண்ட பாதத் தினமலர் தூவி மழைக்கொண்டல் போலவே மன்னிநில் லீரே.

137

  1. வென்று விரைந்து விரைப்பணி யென்றனர் நின்று பொருந்த இறைபணி நேர்படத் துன்று சலமலர் தூவித் தொழுதிடிற் கொண்டிடு நித்தலுங் கூறிய வன்றே.

138

  1. சாத்தியும் வைத்தும் சயம்புவென் றேத்தியும் ஏத்திய நாளும் இறையை யறிகிலார் ஆத்தி மலக்கிட் டகத்தழுக் கற்றக்கான் மாத்திக்கே செல்லும் வழியது வாமே.

139

  1. ஆவிக் கமலத்தின் அப்புறத் தின்புற மேவித் திரியும் விரிசடை நந்தியைக் கூவிக் கருதிக் கொடுபோய்ச் சிவத்திடைத் தாவிக்கு மந்திரந் தாமறி யாரே.

140

  1. சாணாகத் துள்ளே அழுந்திய மாணிக்கம் காணு மளவுங் கருத்தறி வாரில்லை பேணிப் பெருக்கிப் பெருக்கி நினைவோர்க்கு மாணிக்க மாலை மனம்புகுந் தானே.

141

  1. பெருந்தன்மை நந்தி பிணங்கிருள் நேமி இருந்தன்மை யாலுமென் நெஞ்சிடங் கொள்ள வருந்தன்மை யாளனை வானவர் தேவர் தருந்தன்மை யாளனைத் தாங்கிநின் றாரே.

142

  1. சமைய மலசுத்தி தன்செயல் அற்றிடும் அமையும் விசேடமு மானமந் திரசுத்தி சமையநிர் வாணங் கலாசுத்தி யாகும் அமைமன்னு ஞான மானார்க் கபிடேகமே.

143

  1. ஊழிதோ றூழி யுணர்ந்தவர்க் கல்லது ஊழில் உயிரை யுணரவுந் தானொட்டா ஆழி யமரும் அரியயன் என்றுளோர் ஊழி கடந்துமோ ருச்சியு ளானே.

144

===12.குருபூசை=== 1847. ஆகின்ற நந்தி யடித்தா மரைபற்றிப் போகின்ற வுபதேசம் பூசிக்கும் பூசையும் ஆகின்ற ஆதார மாறா றதன்மேற் போகின்ற பொற்பையும் போற்றுவன் யானே.


145

  1. கானுறு கோடி கடிகமழ் சந்தனம் வானுற மாமல ரிட்டு வணங்கினும் ஊனினை நீக்கி யுணர்பவர்க் கல்லது தேனமர் பூங்கழல் சேரவொண் ணாதே.

146

  1. மேவிய ஞானத்தின் மிக்கிடின் மெய்ப்பரன் ஆவியின் ஞான நெறிநிற்றல் அர்ச்சனை ஓவற வுட்பூ சனைசெய்யில் உத்தமஞ் சேவடி சேரல் செயலறல் தானே.

147

  1. உச்சியுங் காலையும் மாலையும் ஈசனை நச்சுமின் நச்சி நமவென்று நாமத்தை விச்சுமின் விச்சி விரிசுடர் மூன்றினும் நச்சுமின் பேர்நந்தி நாயக னாகுமே.

148

  1. புண்ணிய மண்டலம் பூசைநூ றாகுமாம் பண்ணிய மேனியும் பத்துநூ றாகுமாம் எண்ணிலிக் கைய மிடிற்கோடி யாகுமால் பண்ணிடில் ஞானியூண் பார்க்கில் விசேடமே.

149

  1. இந்துவும் பானுவும் இலங்குந் தலத்திடை வந்தித்த தெல்லாம் அசுரர்க்கு வாரியாம் இந்துவும் பானுவும் இலங்காத் தலத்திடை வந்தித்தல் நந்திக்கு மாபூசை யாமே.

150

  1. இந்துவும் பானுவு மென்றெழு கின்றதோர் விந்துவும் நாதமு மாகிமீ தானத்தே சிந்தனை சாக்கிரா தீதத்தே சென்றிட்டு நந்தியைப் பூசிக்க நற்பூசை யாமே.

151

  1. மனபவ னங்களை மூலத்தான் மாற்றி அனித வுடற்பூத மாக்கி யகற்றிப் புனிதன் அருள்தனிற் புக்கிருந் தின்பத் தனியுறு பூசை சதாசிவற் காமே.

152

  1. பகலும் இரவும் பயில்கின்ற பூசை இயல்புடை யீசர்க் கிணைமல ராகப் பகலும் இரவும் பயிலாத பூசை சகலமுந் தான் கொள்வன் தாழ்சடை யோனே.

153

  1. இராப்பகல் அற்ற இடத்தே யிருந்து பராக்கற ஆனந்தத் தேறல் பருகி இராப்பக லற்ற இறையடி யின்பத் திராப்பகல் மாயை இரண்டிடத் தேனே.

154

===13.மாகேசுரபூசை=== 1857. படமாடக் கோயிற் பகவற்கொன் றீயில் நடமாடக் கோயில் நம்பர்க்கங் காகா நடமாடக் கோயில் நம்பர்க்கொன் றீயில் படமாடக் கோயிற் பகவற்க தாமே.


155

  1. தண்டறு சிந்தை தபோதனர் தாமகிழ்ந் துண்டது மூன்று புவனமும் உண்டது கொண்டது மூன்று புவனமுங் கொண்டதென் றெண்டிசை நந்தி எடுத்துரைத் தானே.

156

  1. மாத்திரை யொன்றினின் மன்னி யமர்ந்துறை யாத்தனுக் கீந்த அரும்பொரு ளானது மூர்த்திகள் மூவர்க்கு மூவெழு குரவர்க்குந் தீர்த்தம தாமது தேர்ந்துகொள் வீரே.

157

  1. அகரம் ஆயிரம் அந்தணர்க் கீயிலென் சிகரம் ஆயிரஞ் செய்து முடிக்கிலென் பகரு ஞானி பகலூண் பலத்துக்கு நிகரிலை என்பது நிச்சயந் தானே.

158

  1. ஆறிகும் வேள்வி அருமறை நூலவர் கூறிடும் அந்தணர் கோடிபே ருண்பதில் நீறிடுந் தொண்டர் நினைவின் பயனிலை பேறெனில் ஓர்பிடி பேறது வாகுமே.

159

  1. ஏறுடை யாயிறை வாஎம்பி ரானென்று நீறிடு வாரடி யார்நிகழ் தேவர்கள் ஆறணி செஞ்சடை யண்ண லிவரென்று வேறணி வார்க்கு வினையில்லை தானே.

160

  1. சீர்நந்தி கொண்டு திருமுக மாய்விட்ட பேர்நந்தி யென்னும் பிறங்கு சடையனை நானொந்து நொந்து வருமள வுஞ்சொல்லப் பேர்நந்தி யென்னும் பிதற்றொழி யேனே.

161

  1. அழிதக வில்லா அரனடி யாரைத் தொழுதகை ஞாலத்துத் தூங்கிருள் நீங்கும் பழுது படாவணம் பண்பனை நாடித் தொழுதெழ வையகத் தோரின்ப மாமே.

162

  1. பகவற்கே தாகிலும் பண்பில ராகிப் புகுமத்த ராய்நின்று பூசனை செய்யும் முகமத்தோ டொத்துநின் றூழிதோ றூழி அகமத்த ராகிநின் றாய்ந்தொழிந் தாரே.

163

  1. வித்தக மாகிய வேடத்தர் உண்டவூண் அத்தன் அயன்மால் அருந்திய வண்ணமாஞ் சித்தந் தெளிந்தவர் சேடம் பருகிடின் முத்தியா மென்றுநம் மூலன் மொழிந்ததே.

164

  1. தாழ்விலர் பின்னும் முயல்வ ரருந்தவம் ஆழ்வினை யாழ் அவர்க்கே அறஞ்செய்யும் ஆழ்வினை நீக்கி அருவினை தன்னொடும் போழ்வினை தீர்க்கும்அப் பொன்னுல காமே.

165

===14.அடியார் பெருமை=== 1868. திகைக்குரி யானொரு தேவனை நாடும் வகைக்குரி யானொரு வாதி யிருக்கிற் பகைக்குரி யாரில்லைப் பார்மழை பெய்யும் அகக்குறை கேடில்லை யவ்வுல குக்கே.


166

  1. அவ்வுலக கத்தே பிறந்தவ் வுடலொடும் அவ்வுல கத்தே அருந்தவ நாடுவர் அவ்வுல கத்தே அரனடி கூடுவர் அவ்வுல கத்தே அருள்பெறு வாரே.

167

  1. கொண்ட குறியுங் குலவரை யுச்சியும் அண்டமும் அண்டத் தமரரும் ஆதியும் எண்டிசை யோரும்வந் தென்கைத் தலத்தினுள் உண்டெனில் நாமினி உய்ந்தொழிந் தோமே.

168

  1. அண்டங்கள் ஏழும் அகண்டமும் ஆவியுங் கொண்ட சராசர முற்றுங் குணங்களும் பண்டை மறையும் படைப்பளிப் பாதியுங் கண்ட சிவனுமென் கண்ணன்றி யில்லையே.

169

  1. பெண்ணல்ல ஆணல்ல பேடல்ல மூடத்துள் உள்நின்ற சோதி ஒருவர்க் கறியொணாக் கண்ணின்றிக் காணுஞ் செவியின்றிக் கேட்டிடும் அண்ணல் பெருமையை ஆய்ந்தது மூப்பே.

170

  1. இயங்கும் உலகினில் ஈசன் அடியார் மயங்கா வழிச்செல்வர் வானுல காள்வர் பயங்களு மெண்டிசை போதுபா தாள மயங்காப் பகிரண்ட மாமுடி தானே.

171

  1. அகம்படி கின்றதம் ஐயனை யோரும் அகம்படி கண்டவர் அல்லலிற் சேரார் அகம்படி யுட்புக் கறிகின்ற நெஞ்சம் அகம்படி கண்டாம் அழிக்கலும் எட்டே.

172

  1. கழிவு முதலுங் காதற் றுணையும் அழிவும் தாய்நின்ற ஆதிப் பிரானைப் பழியும் புகழும் படுபொருள் முற்றும் ஒழியுமென் னாவி யுழவுகொண் டானே.

173

  1. என்தாயோ டென்னப்பன் ஏழேழ் பிறவியும் அன்றே சிவனுக் கெழுதிய ஆவணம் ஒன்றா யுலகம் படைத்தான் எழுதினான் நின்றான் முகில்வண்ணன் நேரெழுத் தாயே.

174

  1. துணிந்தா ரகம்படி துன்னி உறையும் பணிந்தா ரகம்படி பாற்பட் டொழுகும் அணிந்தா ரகம்படி யாதிப் பிரானைக் கணிந்தா ரொருவர்க்குக் கைவிட லாமே.

175

  1. தலைமிசை வானவர் தாழ்சடை நந்தி மிலைமிசை வைத்தனன் மெய்ப்பணி செய்யப் புலைமிசை நீங்கிய பொன்னுல காளும் பலமிசை செய்யும் படர்சடை யோனே.

176

  1. அறியாப் பருவத் தரனடி யாரைக் குறியால் அறிந்தின்பங் கொண்ட தடிமை குறியார் சடைமுடி கட்டி நடப்பார் மறியார் புனல்மூழ்க மாதவ மாமே.

177

  1. அவன்பால் அணுகியே அன்புசெய் வார்கள் சிவன்பால் அணுகுதல் செய்யவும் வல்லர் அவன்பால் அணுகியே நாடு மடியார் இவன்பாற் பெருமை இலயம தாமே.

178

  1. முன்னிருந் தார்முழு தெண்கணத் தேவர்கள் எண்ணிறந் தன்பால் வருவர் இருநிலத் தெண்ணிரு நாலு திசையந் தரமொக்கப் பன்னிரு காதம் பதஞ்செய்யும் பாரே.

179

  1. சிவயோகி ஞானி செறிந்தஅத் தேசம் அவயோகம் இன்றி அறிவோருண் டாகும் நவயோகங் கைகூடு நல்லியல் காணும் பவயோகம் இன்றிப் பரலோக மாமே.

180

  1. மேலுணர் வான்மிகு ஞாலம் படைத்தவன் மேலுணர் வான்மிகு ஞாலம் கடந்தவன் மேலுணர் வார்மிகு ஞாலத் தமரர்கள் மேலுணர் வார்சிவன் மெய்யடி யார்களே.

181

===15.போசனவிதி=== 1884. எட்டுத் திசையும் இறைவ னடியவர்க் கட்ட அடிசில் அமுதென் றெதிர்கொள்வர் ஒட்டி யொருநிலம் ஆள்பவர் அந்நிலம் விட்டுக் கிடக்கில் விருப்பறி யாரே.


182

  1. அச்சிவன் உள்நின்ற அருளை அறிந்தவர் உச்சியம் போதாக வுள்ளமர் கோவிற்குப் பிச்சை பிடித்துண்டு பேத மறநினைந் தீச்சைவிட் டேகாந்தத் தேறி யிருப்பரே.

183

===16.பிட்சாவிதி=== 1886. விச்சுக் கலமுண்டு வேலிச்செய் ஒன்றுண்டு உச்சிக்கு முன்னே யுழவு சமைந்தது அச்சங்கெட் டச்செய் அறுத்துண்ண மாட்டாதார் இச்சைக்குப் பிச்சை இரக்கின்ற வாறே.


184

  1. பிச்சைய தேற்றான் பிரமன் தலைதன்னில் பிச்சைய தேற்றான் பிரியா ளறஞ்செய்யப் பிச்சைய தேற்றான் பிரமன் சிரங்காட்டிப் பிச்சைய தேற்றான் பிரமன் பரமாகவே.

185

  1. பரந்துல கேழும் படைத்த பிரானை இரந்துணி என்பர்கள் எற்றுக் கிரக்கும் நிரந்தர மாக நினையும் அடியார் இரந்துண்டு தன்கழல் எட்டச்செய் தானே.

186

  1. வரவிருந் தான்வழி நின்றிடும் ஈசன் தரவிருந் தான்தன்னை நல்லவர்க் கின்பம் பொரவிருந் தான்புக லேபுக லாக வரவிருந் தாலறி யானென்ப தாமே.

187

  1. அங்கார் பசியும் அவாவும் வெகுளியுந் தங்கார் சிவனடி யார்சரீ ரத்திடைப் பொங்கார் புவனத்த பொங்கார் புவனத்தும் புண்ணிய லோகத்துந் தங்கார் சிவனைத் தலைப்படு வாரே.

188

  1. மெய்யக ஞான மிகத்தெளிந் தார்களுங் கையக நீண்டார் கடைத்தலைக் கேசெல்வர் ஐயம் புகாமல் இருந்த தவசியார் வையகம் எல்லாம் வரவிருந் தாரே.

189

===17.முத்திரை பேதம்=== 1892. நாலேழு மாறவே நண்ணிய முத்திரை பாலான மோன மொழியிற் பதிவித்து மேலான நந்தி திருவடி மீதுய்யக் கோலா கலங்கெட்டுக் கூடுதன் முத்தியே.


190

  1. துரியங்கண் மூன்றுஞ் சொருகிட னாகி அரிய வுரைத்தார மங்கே யடக்கி மருவிய சாம்பவி கேசரி யுண்மை பெருகிய ஞானம் பிறழ்முத் திரையே.

191

  1. சாம்பவி நந்தி தன்னருட் பார்வையாம் ஆன்பவ மில்லா அருட்பாணி முத்திரை ஓம்பயில் ஓங்கிய வுண்மைய கேசரி நாம்பயில் நாதன் மெய்ஞ்ஞான முத்திரையே.

192

  1. தானத்தி னுள்ளே சதாசிவ னாயிடும் ஞானத்தி னுள்ளே நற்சிவ மாதலால் ஏனைச் சிவமாஞ் சொரூப மறைந்திட்ட மோனத்து முத்திரை முத்தாந்த முத்தியே.

193

  1. வாக்கு மனமும் இரண்டு மவுனமாம் வாக்கு மவுனத்து வந்தாலு மூங்கையாம் வாக்கு மனமும் மவுனமாஞ் சுத்தரே ஆக்குமச் சுத்தத்தை யாரறி வார்களே.

194

  1. யோகத்தின் முத்திரை யோரட்ட சித்தியாம் ஏகத்த ஞானத்து முத்திரை எண்ணுங்கால் ஆகத் தகுவேத கேசரி சாம்பவி யோகத்துக் கேசரி யோகமுத் திரையே.

195

  1. யோகியெண் சித்தி அருளொலி வாதனை போகிதண் புத்தி புருடார்த்த நன்னெறி யாகுநன் சத்தியும் ஆதார சோதனை ஏகமுங் கண்டொன்றில் எய்தநின் றானே.

196

  1. துவாதச மார்க்கமென் சோடச மார்க்கமாம் அவாவறு மீரை வகையங்க மாறுந் தவாவறு வேதாந்த சித்தாந்தத் தன்மை நவாவக மோடுன்ன னற்சுத்த சைவமே.

197

  1. மோனத்து முத்திரை முத்தர்க்கு முத்திரை ஞானத்து முத்திரை நாதர்க்கு முத்திரைை தேனிக்கு முத்திரை சித்தாந்த முத்திரை கானிக்கு முத்திரை கண்ட சமயமே.

198

  1. தூநெறி கண்ட சுவடு நடுவெழும் பூநெறி கண்டது பொன்னக மாய்நிற்கும் மேனெறி கண்டது வெண்மதி மேதினி நீனெறி கண்டுள நின்மல னாமே.

199

===18.பூர்ணகுகைநெறிச் சமாதி=== 1902.வளர்பிறை யிற்றேவர் தம்பாலின் மன்னி உளரொளி பானுவின் உள்ளே யொடுங்கித் தளர்விற் பிதிர்பதந் தங்கிச் சசியுள் உளதுறும் யோகி யுடல் விட்டாற் றானே.


200

1903.தானிவை யொக்குஞ் சமாதிகை கூடாது போன வியோகி புகலிடம் போந்துபின் ஆனவை தீர நிரந்தர மாயோகம் ஆனவை சேர்வார் அருளின்சார் வாகியே.


201

1904.தானிவ் வகையே புவியோர் நெறிதங்கி ஆன சிவயோகத் தாமாறா மவ்விந்து தானதி லந்தச் சிவயோகி யாகுமுன் ஊனத்தோர் சித்திவந் தோர்காய மாகுமே.


202

1905.சிவயோகி ஞானி சிதைந்துடல் விட்டால் தவலோகஞ் சேர்ந்துபின் றான்வந்து கூடிச் சிவயோக ஞானத்தாற் சேர்ந்தவர் நிற்பர் புவலோகம் போற்றுநற் புண்ணியத் தோரே.


203

1906.ஊனமின் ஞானிநல் யோகி யுடல்விட்டால் தானற மோனச் சமாதியுள் தங்கியே தானவ னாகும் பரகாயஞ் சாராதே ஊனமின் முத்தராய் மீளார் உணர்வுற்றே.


204

1907.செத்தார் பெறும்பய னாவது ஏதேனில் செத்துநீர் சேர்வது சித்தினைக் கூடிடில் செத்தா ரிருந்தார் செகத்தில் திரிமலஞ் செத்தார் சிவமாகி யேசித்தர் தாமே.


205

1908.உன்னக் கருவிட் டுரவோ னரனருள் பன்னப் பரனே யருட்குலம் பாலிப்பன் என்னப் புதல்வர்க்கும் வேண்டி யிடுஞானி தன்னிச்சைக் கீச னுருச்செய்யுந் தானே.


206

1909.எங்குஞ் சிவமா யருளா மிதயத்துத் தங்குஞ் சிவஞானிக் கெங்குமாந் தற்பரம் அங்காங் கெனநின்று சகமுண்ட வான்தோய்தல் இங்கே யிறந்தெங்கு மாய்நிற்கும் ஈசனே.


207

===19.சமாதிக் கிரியை=== 1910. அந்தமின் ஞானிதன் னாகந் தீயினில் வெந்திடி னாடெலாம் வெப்புத் தீயினில் நொந்தது நாய்நரி நிகரி லுண்செரு வந்துநாய் நரிக்குண வாகும்வை யகமே.


208

  1. எண்ணிலா ஞானி யுடலெரி தாவிடில் அண்ணல்தங் கோயில் அழலிட்ட தாங்கொக்கும் மண்ணின் மழைவிழா வையகம் பஞ்சமாம் எண்ணரு மன்னர் இழப்பார் அரசே.

209

  1. புண்ணிய மாமவர் தம்மைப் புதைப்பது நண்ணி யனல்கோக்கில் நாட்டில் அழிவாகும் மண்ணி வழியில் அலங்கார பங்கமாம் மண்ணுல கெல்லா மயங்குமனல் மண்டியே.

210

  1. அந்தமில் ஞானி அருளை அடைந்தக்கால் அந்த வுடல்தான் குகைசெய் திருத்திடில் சுந்தர மன்னரும் தொல்புவி யுள்ளோரும் அந்தமில் இன்ப அருள்பெறு வோரே.

211

  1. நவமிகு சாணாலே நல்லாழஞ் செய்து குவைமிகு சூழவைஞ் சாணாகக் கோட்டித் தவமிகு குகைமுக் கோணமுச் சாணாக்கிப் பவமறு நற்குகை பத்மா சனமே.

212

  1. தன்மனை சாலை குளங்கரை யாற்றிடை நன்மலர்ச் சோலை நகரினற் பூமி உன்னருங் கானம் உயர்ந்த மலைச்சாரல் இந்நிலந் தான்குகைக் கெய்தும் இடங்களே.

213

  1. நற்குகை நால்வட்டம் பஞ்சாங்க பாதமாய் நிற்கின்ற பாத நவபாத நேர்விழப் பொற்பம ரோசமும் மூன்றுக்கு மூன்றணி நிற்பவர் தாஞ்செய்யும் நேர்மைய தாமே.

214

  1. பஞ்ச லோகங்கள் நவமணி பாரித்து விஞ்சப் படுத்ததன் மேலா சனமிட்டு முஞ்சி படுத்துவெண் ணீறிட்டதன்மேலே பொன்செய்த நற்சுண்ணம் பொதிய லுமாமே.

215

  1. நள்குகை நால்வட்டம் படுத்ததன் மேற்சாரக் கள்ளவிழ் தாமங் களபங்கத் தூரியுந் தெள்ளிய சார்ந்து புழுகுபன் னீர்சேர்த்து ஒள்ளிய தூபம் உவந்திடு வீரே.

216

  1. ஓதிடும் வெண்ணீற்றால் உத்தூளங் குப்பாய மீதினி லிட்டா சனத்தினின் மேல்வைத்துப் போதறு சுண்ணமும் நீறும் பொலிவித்து மீதி லிருத்தி விரித்திடு வீரே.

217

  1. விரித்தபின் னாற்சாரு மேவுதல் செய்து பொரித்த கறிபோ னகமிள நீருங் குருத்தலம் வைத்தோர் குழைமுகம் பார்வை தரித்தபின் மேல்வட்டஞ் சாத்திடு வீரே.

218

  1. மீது சொரிந்திடும் வெண்ணீறுஞ் சுண்ணமும் போது பலகொண்டு தர்ப்பைப்புல் வில்வமும் பாத வதகத்தான் மஞ்சனஞ் செய்துபார் மீதுமூன் றுக்குமூன் றணிநிலஞ் செய்யுமே.

219

  1. ஆதன மீதில் அரசு சிவலிங்கம் போதும் இரண்டினில் ஒன்றைத்தா பித்து மேதகு சந்திதி மேவுத் தரம்பூர்வங் காதலிற் சோடசங் காணுப சாரமே.

220

===20.விந்துற்பனம்=== 1923. உதயத்தில் விந்துவில் ஓங்குகுண் டலியும் உதயக் குடிலில் வயிந்தவம் ஒன்பான் விதியிற் பிரமாதி கள்மிகு சத்தி கதியிற் கரணங் கலைவை கரியே.


221

  1. செய்திடும் விந்துபே தத்திறன் ஐயைந்துஞ் செய்திடு நாதபே ததிற னாவாறுஞ் செய்திடு மற்றவை யீரிரண் டிற்றிறஞ் செய்திடு மாறாறு சேர்தத் துவங்களே.

222

  1. வந்திடு பேத மெலாம்பர விந்து தந்திடு மாமாயை வாகேசி தற்பரை உந்து குடிலையோ டேமுறு குண்டலி விந்துவில் இந்நான்கு மேவா விளங்குமே.

223

  1. விளங்கு நிவிர்த்தாதி மேவக ராதி வளங்கொள் உகார மகாரத் துள்விந்து களங்கமில் நாதாந்தங் கண்ணினுன் நண்ணி உளங்கொள் மனாதியுள் அந்தமு மாமே.

224

  1. அந்தமும் ஆதியு மாகிப் பராபரன் வந்த வியாபி யெனலாயு வந்நெறி கந்தம தாகிய காரண காரியந் தந்தைங் கருமமுந் தான்செய்யும் வீயமே.

225

  1. வீயம தாகிய விந்துவின் சத்தியால் ஆய வகண்டமும் அண்டமும் பாரிப்பக் காயஜம் பூதமுங் / காரிய மாயையில் ஆயிட விந்து அகம்புற மாகுமே.

226

  1. புறமகம் எங்கும் புகுந்தொளிர் விந்து நிறமது வெண்மை நிகழ்நாதஞ் செம்மை உறமகிழ் சத்தி சிவபாத மாயுட் டிறனொடு வீடளிக் குஞ்செயற் கொண்டே.

227

  1. கொண்டஇவ் விந்து பரமம்போற் கோதற நின்ற படங்கட மாய்நிலை நிற்றலிற் கண்டக லாதியின் காரண காரியத் தண்டம் அனைத்துமாய் மாமாயை யாகுமே.

228

  1. அதுவித்தி லேநின்றங் கண்ணிக்கு நந்தி இதுவித்தி லேயுள வாற்றை யுணரார் மதுவித்தி லேமல ரன்னம தாகிப் பொதுவித்தி லேநின்ற புண்ணியன் தானே.

229

  1. வித்தினி லன்றி முளையில்லை அம்முளை வித்தினி லன்றி வெளிப்படு மாறில்லை வித்தும் முளையும் உடனன்றி வேறல்ல அத்தன்மை யாகும் அரனெறி காணுமே.

230

  1. அருந்திய வன்ன மவைமூன்று கூறாம் பொருந்து முடன்மனம் போமல மென்னத் திருந்து முடன்மன மாங்கூறு சேர்ந்திட் டிருந்தன முன்னாள் இரதம தாகுமே.

231

  1. இரத முதலான ஏழ்தாது மூன்றின் உரிய தினத்தின் ஒருபுற் பனிபோல் அரிய துளிவிந்து வாகுமேழ் மூன்றின் மருவிய விந்து வளருங்கா யத்திலே.

232

  1. காயத்தி லேமூன்று நாளிற் கலந்திட்டுக் காயத்துட் டன்மன மாகுங் கலாவிந்து நேயத்தே நின்றோர்க்கு நீங்கா விடாமையின் மாயத்தே செல்வோர் மனத்தோ டழியுமே.

233

  1. அழிகின்ற விந்து அளவை யறியார் கழிகின்ற தன்னையுட் காக்கலுந் தேரார் அழிகின்ற காயத் தழிந்தயர் வுற்றோர் அழிகின்ற தன்மை யறிந்தொழி யாரே.

234

===21.விந்துஜயம் - போகசர வோட்டம்=== 1937. பார்க்கின்ற மாதரைப் பாரா தகன்றுபோய் ஓர்க்கின்ற வுள்ளம் உருக அழல்மூட்டிப் பார்க்கின்ற கண்ணாசை பாழ்பட மூலத்தே சேர்க்கின்ற யோகி சிவயோகி தானே.


235

  1. தானே யருளாற் சிவயோகந் தங்காது தானேயக் காமாதி தங்குவோ னும்முட்குந் தானே யதிகாரந் தங்கிற் சடங்கெடும் ஊனே யவற்றுள் ளுயிரோம்பா மாயுமே.

236

  1. மாயாள் வசத்தே சென்றிவர் வேண்டில் ஓயா இருபக்கத் துள்வளர் பக்கத்துள் தீயாவெண் ணாளின்ப மேற்பணி மூன்றிரண் டாயா அபரத்து ளாதிநாள் ஆறாமே.

237

  1. ஆறைந்து பன்னொன்று மன்றிச் சகமார்க்கம் வேறன்பு வேண்டுவோர் பூவரிற் பின்னந்தோ டேறும் இருபத் தொருநா ளிடைத்தோங்கும் ஆறின் மிகுத்தோங்கும் அக்காலஞ் செய்யவே.

238

  1. செய்யும் அளவிற் றிருணன் முகூர்த்தமே எய்யுங் கலைகாலம் இந்து பருதிகால் நையுமிடத் தோடி னன்காம நூல்நெறி செய்க வலமிடந் தீர்ந்து விடுக்கவே.

239

  1. விடுங்காண் முனைந்திந் திரியங்க ளைப்போல் நடுங்கா திருப்பானும் ஐயைந்து நண்ணப் படுங்காதன் மாதின்பாற் பற்றற விட்டுக் கடுங்காற் கரணங் கருத்துறக் கொண்டே.

240

  1. கொண்ட குணனே நலனேநற் கோமளம் பண்டை யுருவே பகர்வாய் பவளமே மிண்டு தனமே மிடையே விடும்போதிற் கண்ட கரணமுட் செல்லக்கண் டேவிடே.

241

  1. விட்டபின் கர்ப்பவுற் பத்தி விதியிலே தொட்டுறுங் காலங்கள் தோன்றக் கருதிய கட்டிய வாணாள்சா நாள்குணங் கீழ்மைசீர்ப் பட்டநெறியிதென் றெண்ணியும் பார்க்கவே.

242

  1. பார்த்திட்டு வையத்துப் பரப்பற் றுருப்பெற்று வார்ச்செற்ற கொங்கை மடந்தையை நீக்கியே சேர்த்துற் றிருதிங்கள் சேரா தகலினும் மூப்புற்றே பின்னாளி லாமெல்லா முள்ளவே.

243

  1. வித்திடு வோர்க்கன்றி மேலோர் விளைவில்லை வித்திடு வோர்க்கன்றி மிக்கோ ரறிவில்லை வித்தினில் வித்தை விதற வுணர்வரேல் மத்தி லிருந்தோர் மாங்கனி யாமே.

244

  1. கருத்தினில் அக்கர மாயுவு மியாவுங் கருத்துளன் ஈசன் கருவுயி ரோடுங் கருத்தது வித்தாய்க் காரண காரியங் கருத்துறு மாறிவை கற்பனை தானே.

245

  1. ஒழியாத விந்து வுடன்நிற்க நிற்கும் அழியாப் பிராணன் அதிபலஞ் சத்தி ஒழியாத புத்தி தபஞ்செப மோனம் அழியாத சித்தியுண் டாம்விந்து வற்றிலே.

246

  1. வற்ற அனலைக் கொளுவி மறித்தேற்றித் துற்ற சுழியனல் சொருகிச் சுடருற்று முற்று மதியத் தமுதை முறைமுறை செற்றுண் பவரே சிவயோகி யாரே.

247

  1. யோகியும் ஞானியும் உத்தம சித்தனும் போகியும் ஞான புரந்தர னாவோனும் மோக முறினு முதையமிர் துண்போனும் ஆகிய விந்து அழியாத அண்ணலே.

248

  1. அண்ணல் உடலாகி யவ்வனல் விந்துவும் மண்ணிடை மாய்க்கும் பிராணனாம் விந்துவும் கண்ணுங் கனலிடைக் கட்டிக் கலந்தெரித் துண்ணில் அமிர்தாகி யோகிக் கறிவாமே.

249

  1. அறியா தழிகின்ற வாதலால் நாளும் பொறியால் அழிந்து புலம்புகின் றார்கள் அறிவாய் நனவி லதீதம் புரியச் செறிவா யிருந்து சேரவே மாயுமே.

250

  1. மாதரை மாய வருங்கூற்ற மென்றுன்னக் காதல தாகிய காமங் கழிந்திடுஞ் சாதலு மில்லை சதகோடி யாண்டினுஞ் சோதியி னுள்ளே துரிசறுங் காலமே.

251

  1. காலங் கடந்தவன் காண்விந்து செற்றவன் காலங் கடந்தழிந் தான்விந்து செற்றவன் காலங் களின்விந்து செற்றுற்ற காரிகை காலின்கண் வந்த கலப்பறி யாரே.

252

  1. கலக்குநாள் முன்னாள் தன்னிடைக் காதல் நலத்தக வேண்டிலந் நாரி யுதரக் கலத்தின் மலத்தைத்தண் சீதத்தைப் பித்தை விலக்கு வனசெய்து மேலணை வீரே.

253

  1. மேலா நிலத்தெழு விந்துவும் நாதமுங் கோலால் நடத்திக் குறிவழி யேசென்று பாலாம் அமிர்துண்டு பற்றறப் பற்றினால் மாலா னதுமாள மாளுமவ் விந்துவே.

254

  1. விந்து விளைவும் விளைவின் பயன்முற்றும் அந்த வழிவும் அடக்கத்தில் ஆக்கமும் நந்திய நாதமும் நாதத்தாற் பேதமுந் தந்துணர் வோர்க்குச் சயமாகும் விந்துவே.

ஏழாம் தந்திரம் (cont. 2)

255

  1. விந்துவெண் வீசத்தை மேவிய மூலத்து நந்திய அங்கியி னாலே நயந்தெரித் தந்தமில் பானு அதிகண்ட மேலேற்றிச் சந்திரன் சார்புறத் தண்ணமு தாமே.

256

  1. அமுதச் சசிவிந்து வாம்விந்து மாள அமுதப் புனலோடி அங்கியின் மாள அமுதச் சிவபோகம் ஆதலாற் சித்தி அமுதப் பிலாவன மாங்குறும் யோகிக்கே.

257

  1. யோகமவ் விந்து ஒழியா வகைபுணர்ந் தாகம் இரண்டுங் கலந்தாலு மாம்குறாப் போகஞ் சிவபோகம் போகிநற் போகமா மோகங் கெடமுயங் கார்மூடர் மாதர்க்கே.

258

  1. மாத ரிடத்தே செலுத்தினும் அவ்விந்து காதலி னால்விடார் யோகங் கலந்தவர் மாதர் உயிராசை கைக்கொண்டே வாடுவர் காதலர் போன்றங்ஙன் காலாஞ் சாற்றிலே.

259

  1. சாற்றிய விந்து சயமாகுஞ் சத்தியால் ஏற்றிய மூலத் தழலை யெழமூட்டி நாற்றிசை யோடா நடுநாடி நாதத்தோ டாற்றி யமுதம் அருந்தவிந் தாமே.

260

  1. விந்துவும் நாதமும் மேவக் கனல்மூல வந்த வனன்மயிர்க் கால்தோறும் மன்னிடச் சிந்தனை மாறச் சிவமக மாகவே விந்துவு மாளுமெய்க் காயத்தில் வித்திலே.

261

  1. வித்துக்குற் றுண்பான் விளைவறி யாதவன் வித்துக்குற் றுண்ணாமல் வித்துச்சுட் டுண்பவன் வித்துக்குற் றுண்பானில் வேறல னீற்றவன் வித்துக்குற் றுண்ணாமல் வித்துவித் தானன்றே.

262

  1. அன்னத்தில் விந்து அடங்கும் படிகண்டு மன்னப் பிராணனாம் விந்து மறித்திட்டு மின்னொத்த விந்துநா தாந்தத்து விட்டிட வன்னத் திருவிந்து மாயுங்கா யத்திலே.

263

  1. அன்னப் பிராணனென் றார்க்கு மிருவிந்து தன்னை யறிந்துண்டு சாதிக்க வல்லார்க்குச் சொன்ன மாமுருத் தோன்றும்எண் சித்தியாம் அன்னவ ரெல்லாம் அழிவற நின்றதே.

264

  1. நின்ற சிகாரம் நினைக்கும் பிராணனாய் ஒன்று மகாரம் ஒருமூன்றோ டொன்றவை சென்று பராசத்தி விந்து சயந்தன்னை ஒன்ற வுரைக்க வுவதேசந் தானே.

265

  1. தானே யுபதேசந் தானல்லா தொன்றில்லை வானே யுயர்விந்து வந்த பதினான்கு மானே ரடங்க அதன்பின்பு புத்தியுந் தானே சிவகதி தன்மையு மாமே.

266

  1. விந்துவும் நாதமும் விளைய விளைந்தது வந்தஇப் பல்லுயிர் மன்னுயி ருக்கெலாம் அந்தமும் ஆதியு மாமந் திரங்களும் விந்து அடங்க விளையுஞ் சிவோகமே.

267

  1. வறுக்கின்ற வாறு மனத்துலா வெற்றி நிறுக்கின்ற வாறுமந் நீள்வரை யொட்டிப் பொறிக்கின்ற வாறுமப் பொல்லா வினையை அறுக்கின்ற நாள்வரும் அத்திப் பழமே.

268

  1. விந்துவும் நாதமும் மேவி யுடன்கூடிச் சந்திர னோடே தலைப்படு மாயிடில் அந்தர வானத் தமுதம்வந் தூறிடும் அங்குதி மந்திரம் ஆகுதி யாகுமே.

269

  1. மனத்தொடு சத்து மனஞ்செவி யென்ன இனத்தெழு வார்கள் இசைந்தன நாடி மனத்தில் எழுகின்ற வாக்கு வசனங் கனத்த இரதமக் காமத்தை நாடிலே.

270

  1. சத்தமுஞ் சத்த மனமும் மனக்கருத் தொத்தறி கின்ற விடமும் அறிகிலர் மெய்த்தெறி கின்ற விடமறி வாளர்க்கு அத்தன் இருப்பிடம் அவ்விடந் தானே.

271

  1. உரமடி மேதினி யுந்தியி லப்பாம் விரவிய தன்முலை மேவியகீ ழங்கி கருமுலை மீமிசை கைக்கீழிற் காலாம் விரவிய கந்தர மேல்வெளி யாமே.

272

===22.ஆதித்த நிலை - அண்டாதித்தன்=== 1975. செஞ்சுட ரோன்முத லாகிய தேவர்கள் மஞ்சுடை மேரு வலம்வரு காரணம் எஞ்சுட ரீசன் இறைவன் இணையடி தஞ்சுட ராக வணங்குந் தவமே.


273

  1. பகலவன் மாலன் பல்லுயிர்க் கெல்லாம் புகலவ னாய்நின்ற புண்ணிய நாதன் இகலற ஏழுல கும்முற வோங்கும் பகலவன் பல்லுயிர்க் காதியு மாமே.

274

  1. ஆதித்தன் அன்பினோ/டாயிர நாமமுஞ் சோதியி னுள்ளே சுடரொளி யாய்நிற்கும் வேதியர் வேண்டினும் விண்ணவர் சொல்லினும் ஆதியில் அன்பு பழுக்கின்ற வாறே.

275

  1. தானே யுலகுக்குத் தத்துவ னாய்நிற்குந் தானே யுலகுக்குத் தையலு மாய்நிற்குந் தானே யுலகுக்குச் சம்புவு மாய்நிற்குந் தானே யுலகுக்குத் தண்சுட ராகுமே.

276

  1. வலையமுக் கோணம் வட்டம் அறுகோணந் துலையிரு வட்டந் துய்ய விதமெட்டில் அலையுற்ற வட்டத்தில் ஈரெட் டிதழா மலைவற் றுதித்தனன் ஆதித்த னாமே.

277

  1. ஆதித்த னுள்ளி லானமுக் கோணத்திற் சோதித் திலங்குநற் சூரிய னாலாங் கேத முறுங்கேணி சூரிய னெட்டிற் சோதிதன் னீட்டிற் சோடசந் தானே.

278

  1. ஆதித்த னோடே அவனி யிருண்டது பேதித்த நாலும் பிதற்றிக் கழிந்தது சோதிக்குள் நின்று துடியிடை செய்கின்ற வேதப் பொருளை விளங்குகி லீரே.

279

  1. பாருக்கும் கீழே பகலோன் வரும்வழி யாருக்குங் காணவொண் ணாத அரும்பொருள் நீருக்குந் தீக்கும் நடுவே யுதிப்பவன் ஆருக்கும் எட்டாத ஆதித்தன் தானே.

280

  1. மண்ணை யிடந்ததின் கீழோடும் ஆதித்தன் விண்ணை யிடந்து வெளிசெய்து நின்றிடுங் கண்ணை யிடந்து களிதந்த வானந்தம் எண்ணுங் கிழமைக் கிசைந்துநின் றானே.

281

  1. பாரை யிடந்து பகலோன் வரும்வழி யாரும் அறியார் அருங்கடை நூலவர் தீரன் இருந்த திருமலை சூழென்பர் ஊரை யுணர்ந்தார் உணர்ந்திருந் தாரே.

282

===23.பிண்டாதித்தன்=== 1985. நின்றும் இருந்துங் கிடந்தும் நடந்தும் கன்றாய நந்திக் கருத்துள் இருந்தனன் கொன்று மலங்கள் குழல்வழி யோடிட வென்று விளங்கும் விரிசுடர் காணுமே.


283

  1. ஆதித்தன் ஓடி யடங்கும் இடங்கண்டு சாதிக்க வல்லவர் தம்மை யுணர்ந்தவர் பேதித் துலகம் பிதற்றும் பிதற்றெல்லாம் ஆதித்த னோடே யடங்குகின் றாரே.

284

  1. உருவிப் புறப்பட் டுலகை வலம்வந்து சொருகிக் கிடக்குந் துறையறி வாரில்லை சொருகிக் கிடக்குந் துறையறி வாளர்க் குருகிக் கிடக்குமென் னுள்ளன்பு தானே.

285

===24.மனவாதித்தன்=== 1988. எறிகதிர் ஞாயிறு மின்பனி சோரும் எறிகதிர் சோமன் எதிர்நின் றெறிப்ப விரிகதி ருள்ளே வியங்குமென் ஆவி ஒருகதி ராகில் உவாவது வாமே.


286

  1. சந்திரன் சூரியன் தான்வரிற் பூசனை முந்திய பானுவில் இந்துவந் தேய்முறை அந்த இரண்டும் உபய நிலத்திற் சிந்தை தெளிந்தார் சிவமாயி னாரே.

287

  1. ஆகுங் கலையோ டருக்கன் அனல்மதி ஆகுங் கலையிடை நான்கென லாமென்பார் ஆகும் அருக்கன் அனல்மதி யோடொன்ற ஆகுமப் பூரணை யாமென் றறியுமே.

288

  1. ஈரண்டத் தப்பால் இயங்கிய வவ்வொளி ஓரண்டத் தார்க்கும் உணரா வுணர்வது பேரண்டத் தூடே பிறங்கொளி யாய்நின்ற தாரண்டத் தக்கா ரறியத்தக் காரே.

289

  1. ஒன்பதின் மேவி யுலகம் வலம்வரும் ஒன்பது மீசன் இயலறி வாரில்லை முன்பதின் மேவி முதல்வன் அருளிலார் இன்ப மிலாரிருள் சூழநின் றாரே. றாரே.

290

===25.ஞானாதித்தன்=== 1993. விந்து அபரம் பரமிரண் டாய்விரித் தந்த அபரம் பரநாத மாகியே வந்தன தம்மிற் பரங்கலை யாதிவைத் துந்தும் அருணோ தயமென்ன வுள்ளத்தே.


291

  1. உள்ள அருணோ தயத்தெழும் ஓசைதான் தெள்ளும் பரநாதத் தின்செய லென்பதால் வள்ளல் பரவிந்து வைகரி யாதிவாக் குள்ளன ஐங்கலைக் கொன்றாம் உதயமே.

292

  1. தேவர் பிரான்திசை பத்துத யஞ்செய்யும் மூவர் பிரானென முன்னொரு காலத்து நால்வர் பிரானடு வாயுரை யாநிற்கும் மேவு பிரான்என்பர் விண்ணவர் தாமே.

293

  1. பொய்யிலன் மெய்யன் புவனா பதியெந்தை மையிருள் நீக்கு மதியங்கி ஞாயிறு செய்யிருள் நீக்குந் திருவுடை நந்தியென் கையிருள் நீங்கக் கலந்தெழுந் தானே.

294

  1. தனிச்சுட ரெற்றித் தயங்கிருள் நீங்க அனித்திடு மேலை யருங்கனி யூறல் கனிச்சுட ராய்நின்ற கயிலையில் ஈசன் நனிச்சுடர் மேல்கொண்ட வண்ணமு மாமே.

295

  1. நேரறி வாக நிரம்பிய பேரொளி போரறி யாது புவனங்கள் போய்வருந் தேரறி யாத திசையொளி யாயிடும் ஆரறி வாரிது நாயக மாமே.

296

  1. மண்டலத் துள்ளே மலர்ந்தெழும் ஆதித்தன் கண்டிடத் துள்ளே கதிரொளி யாயிடுஞ் சென்றிடத் தெட்டுத் திசையெங்கும் போய்வரும் நின்றிடத் தேநிலை நேரறி வார்க்கே.

297

  1. நாபிக்கண் ணாசி நயன நடுவினுந் தூபியோ டைந்துஞ் சுடர்விடு சோதியைத் தேவர்கள் ஈசன் திருமால் பிரமனும் மூவரு மாக வுணர்ந்திருந் தாரே.

298

===26.சிவாதித்தன்=== 2001. அன்றிய பாச இருளுமஞ் ஞானமுஞ் சென்றிடு ஞானச் சிவப்பிர காசத்தால் ஒன்று மிருசுட ராம்அரு ணோதயந் துன்றிருள் நீங்குதல் போலத் தொலைந்ததே.


299

  1. கடங்கடந் தோறுங் கதிரவன் தோன்றில் அடங்கிட மூடில் அவற்றில் அடங்கான் விடங்கொண்ட கண்டனு மேவிய காயத் தடங்கிட நின்றது அப்பரி சாமே.

300

  1. தானே விரிசுடர் மூன்றுமொன் றாய்நிற்குந் தானே யயன்மா லெனநின்று தாபிக்குந் தானே யுடலுயிர் வேறன்றி நின்றுளன் தானே வெளியொளி தானிருட் டாமே.

301

  1. தெய்வச் சுடரங்கி ஞாயிறும் திங்களும் வையம் புனல்அனல் மாருதம் வானகஞ் சைவப் பெரும்பதி தாங்கிய பல்லுயிர் ஐவர்க் கிடமிடை யாறங்க மாமே.

302

===27.பசுவிலக்கணம் - பிராணன்=== 2005. உன்னும் அளவில் உணரும் ஒருவனைப் பன்னு மறைகள் பயிலும் பரமனை என்னுள் இருக்கும் இளையா விளக்கினை அன்மை யனென் றறிந்து கொண்டேனே.


303

  1. அன்ன மிரண்டுள ஆற்றங் கரையினில் துன்னி யிரண்டுந் துணைப்பிரி யாதன தன்னிலை யன்னந் தனியொன்ற தென்றக்கால் பின்ன மடவன்னம் பேறணு காதே.

304

===28.புருடன்=== 2007. வைகரி யாதியு மாயா மலாதியும் பொய்கரி யான புருடாதி பேதமும் மெய்கரி ஞானங் கிரியா விசேடத்துச் செய்கரி யீசன் அனாதியே செய்ததே.


305

  1. அணவில் அணுவினை ஆதிப் பிரானை அணுவில் அணுவினை ஆயிரங் கூறிட் டணுவில் அணுவை அணுகவல் லார்கட் கணுவில் அணுவை அணுகலு மாமே.

306

  1. படர்கொண்ட ஆலதின் வித்தது போலச் சுடர்கொண் டணுவினைத் தூவழி செய்ய இடர்கொண்ட பாச இருளற வோட்டி நடர்கொண்ட நல்வழி நாடலு மாமே.

307

  1. அணுவுள் அவனும் அவனுள் அணுவுங் கணுவுற நின்ற கலப்ப துணரார் இணையிலி யீச னவனெங்கு மாகித் தணிவற நின்றான் சராசரந் தானே

308

===29.சீவன்=== 2011. மேவிய சீவன் வடிவது சொல்லிடில் கோவின் மயிரொன்று நூறுடன் கூறிட்டு மேவிய கூறது ஆயிர மாயினால் ஆவியின் கூறுநூ றாயிரத் தொன்றே.


309

  1. ஏனோர் பெருமைய னாயினும் எம்மிறை ஊனே சிறுமையின் உட்கலந் தங்குளன் வானோர் அறியு மளவல்லன் மாதேவன் தானே யறியுந் தவத்தின் அளவே.

310

  1. உண்டு தெளிவன் உரைக்க வியோகமே கொண்டு பயிலுங் குணமில்லை யாயினும் பண்டு பயிலும் பயில்சீவ னார்பின்னைக் கண்டு சிவனுருக் கொள்வர் கருத்துளே.

311

  1. மாயா வுபாதி வசத்தாகுஞ் சேதனத் தாய குருவரு ளாலே யதில்தூண்ட ஓயும் உபாதியோ டொன்றினொன் றுதுயிர் ஆய துரியம் புகுந்தறி வாகவே.

312

===30.பசு=== 2015. கற்ற பசுக்கள் கதறித் திரியினுங் கொற்ற பசுக்கள் குறிகட்டி மேயினு முற்ற பசுக்கள் ஒருகுடம் பால்போது மற்றைப் பசுக்கள் வறள்பசு தானே.


313

  1. கொல்லையின் மேயும் பசுக்களைச் செய்வதென் எல்லை கடப்பித் திறைவ னடிகூட்டி வல்லசெய் தாற்ற மதித்தபின் அல்லது கொல்லைசெய் நெஞ்சங் குறிப்பறி யாதே.

314

===31.போதன்=== 2017. சீவ னெனச்சிவ னென்னவே றில்லை சீவ னார்சிவ னாரை யறிகிலர் சீவ னார்சிவ னாரை யறிந்தபின் சீவ னார்சிவ னாயிட் டிருப்பரே.


315

  1. குணவிளக் காகிய கூத்தப் பிரானும் மணவிளக் காகிய மன்னுயிர்க் கெல்லாம் பணவிளக் காகிய பல்தலை நாகங் கணவிளக் காகிய கண்காணி யாகுமே.

316

  1. அறிவாய் அறியாமை நீங்கி யவனே பொறிவாய் ஒழித்தெங்குந் தானான போதன் அறிவா யவற்றினுட் டானா யறிவன் செறிவாகி நின்றச் சீவனு மாமே.

317

  1. ஆறாறின் தன்மை அறியா திருந்தேனுக் காறாறின் தன்மை அறிவித்தான் பேர்நந்தி ஆறாறின் தன்மை அருளால் அறிந்தபின் ஆறாறுக் கப்புற மாகி நின்றானே.

318

  1. சிவமா கியஅருள் நின்றறிந் தோரார் அவமா மலமைந்து மாவ தறியார் தவமான செய்து தலைப்பறி கின்றார் நவமான தத்துவ நடகி லாரே.

319

  1. நாடோறும் ஈசன் நடத்துந் தொழில்உன்னார் நாடோறும் ஈசன் நயந்தூட்டல் நாடிடார் நாடோறும் ஈசன்நல் லோர்க்கருள் நல்கலால் நாடோறும் நாடார்கள் நாள்வினை யாளரே.

320

===32.ஐந்திந்திரியம் அடக்கும் அருமை=== 2023. ஆக மதத்தன ஐந்து களிறுள ஆக மதத்தறி யோடணை கின்றில பாகனு மெய்த்தவை தாமும் இளைத்தபின் யோகு திருந்துதல் ஒன்றறி யோமே.


321

  1. கருத்தினன் னூல்கற்றுக் கால்கொத்திப் பாகன் திருத்தலும் பாய்மாத் திகைத்தன்றிப் பாயா எருத்துற வேறி யிருக்கலு மாங்கே வருத்தினும் அம்மா வழிநட வாதே.

322

  1. புலமைந்து புள்ளைந்து புட்சென்று மேயும் நிலமைந்து நீரைந்து நீர்மையும் ஐந்து குலமொன்று கோல்கொண்டு மேய்ப்பான் ஒருவன் உலமந்து போம்வழி யொன்பது தானே.

323

  1. அஞ்சுள சிங்கம் அடவியில் வாழ்வன அஞ்சும்போய் மேய்ந்துதம் அஞ்சக மேபுகும் அஞ்சின் உகிரும் எயிறும் அறுத்திட்டால் எஞ்சா திறைவனை எய்தலு மாமே.

324

  1. டஐவர் அமைச்சருள் தொண்ணூற் றறுவர்கள் ஐவரு மைந்தரு மாளக் கருதுவர் ஐவரு மைந்து சினத்தோடே நின்றிடில் ஐவர்க் கிறையிறுத் தாற்றகி லோமே.

325

  1. சொல்லகில் லேன்சுடர்ச் சோதியை நாடொறுஞ் சொல்லகில் லேன்திரு மங்கையும் அங்குள வெல்லகில் லேன்புலன் ஐந்துடன் தன்னையுங் கொல்லநின் றோடுங் குதிரையொத் தேனே.

326

  1. எண்ணிலி யில்லி யுடைத்தவ் விருட்டறை எண்ணிலி யில்லியோ டேகிற் பிழைதரும் எண்ணிலி யில்லியோ டேகாமை காக்குமேல் கண்ணிலி யில்லதோர் இன்பம தாமே.

327

  1. விதியின் பெருவலி வேலைசூழ் வையந் துதியின் பெருவலி தொல்வான் உலகம் மதியின் பெருவலி மானுடர் வாழ்க்கை நிதியின் பெருவலி நீர்வலி தானே.

328

===33.ஐந்திரியம் அடக்கும் முறைமை=== 2031. குட்ட மொருமுழ முள்ள தரைமுழம் வட்டம் அமைந்ததோர் வாவியுள் வாழ்வன பட்டன மீன்பல பரவன் வலைகொணர்ந் திட்டனன் யாமினி யேதமி லோமே.


329

  1. கிடக்கும் உடலிற் கிளரிந் திரியம் அடக்க லுறுமவன் தானே யமரன் விடக்கிரண் டின்புற மேவுறு சிந்தை நடக்கின் நடக்கும் நடக்கு மளவே.

330

  1. அஞ்சு மடக்கடக் கென்பர் அறிவிலார் அஞ்சு மடக்கும் அமரரும் அங்கிலை அஞ்சு மடக்கில் அசேதன மாமென்றிட் டஞ்சு மடக்கா அறிவறிந் தேனே.

331

  1. முழக்கி எழுவன மும்மத வேழம் அடக்க அறிவென்னுந் தோட்டியை வைத்தேன் பிழைத்தன வோடிப் பெருங்கேடு மண்டிக் கொழுத்தன வேழங் குலைக்கின்ற வாறே.

332

  1. ஐந்தில் ஒடுங்கில் அகலிட மாவது ஐந்தில் ஒடுங்கில் அருந்தவ மாவது ஐந்தில் ஒடுங்கில் அரன்பத மாவது ஐந்தில் ஒடுங்கில் அருளுடை யாரே.

333

  1. பெருக்கப் பிதற்றிலென் பேய்த்தேர் நினைந்தென் விரித்த பொருட்கெல்லாம் வித்தாவ துள்ளம் பெருக்கிற் பெருக்குஞ் சுருக்கிற் சுருக்கும் அருத்தமும் அத்தனை ஆய்ந்துகொள் வார்க்கே.

334

  1. இளைக்கின்ற வாறறிந் தின்னுயிர் வைத்த கிளைக்கொன்று மீசனைக் கேடில் புகழோன் தளைக்கொன்ற் நாகமஞ் சாடல் ஒடுக்கத் துளைக்கொண்ட தவ்வழி தூங்கும் படைத்தே.

335

  1. பாய்ந்தன பூதங்கள் ஐந்தும் படரொளி சார்ந்திடு ஞானத் தறியினிற் பூட்டிட்டு வாய்ந்துகொள் ஆனந்த மென்னும் அருள்செய்யில் வேய்ந்துகொள் மேலை விதியது தானே.

336

  1. நடக்கின்ற நந்தியை நாடொறு முன்னில் படர்க்கின்ற சிந்தையைப் பைய வொடுக்கிக் குறிக்கொண்ட சிந்தை குறிவழி நோக்கில் வடக்கொடு தெற்கு மனக்கோயி லாமே.

337

  1. சென்றன நாழிகை நாள்கள் சிலபல நின்றது நீள்பொருள் நீர்மேல் எழுத்தொத்து வென்று புலன்கள் விரைந்து விடுமின்கள் குன்று விழவதில் தாங்கலு மாமே.

338

  1. போற்றிசைத் துப்புனி தன்திரு மேனியைப் போற்றிசெய் மீட்டே புலனைந்தும் புத்தியால் நாற்றிசைக் கும்பின்னை யாருக்கு நாதனை ஊற்றுகை யுள்ளத் தொருங்கலு மாமே.

339

  1. தரிக்கின்ற நெஞ்சஞ் சகளத்தி னுள்ளே அரிக்கின்ற ஐவரை யாரும் உணரார் சிரிக்கின்ற வாறு சிலபல பேசில் வரிக்கொண்ட மைசூழ் வரையது வாமே.

340

  1. கைவிட லாவதொன் றில்லை கருத்தினுள் எய்தி யவனை யிசையினால் ஏத்துமின் ஐவ ருடைய அவாவினில் தோன்றிய பொய்வ ருடைய புலன்களும் ஐந்தே.

341

===34.அசற்குரு நெறி=== 2044. உணர்வொன் றிலாமூடன் உண்மையோ ராதோன் கணுவின்றி வேதா கமநெறி காணான் பணிவொன் றிலாதோன் பரநிந்தை செய்வோன் அணுவின் குணத்தோன் அசற்குரு வாமே.


342

  1. மந்திர தந்திர மாயோக ஞானமும் பந்தமும் வீடுந் தரிசித்துப் பார்ப்பவர் பசு சிந்தனை செய்யாத் தெளிவியா தூண்பொருட் டந்தக ராவோர் அசற்குரு வாமே.

343

  1. ஆமா றறியாதோன் மூடன் அதிமூடன் காமாதி நீங்காக் கலதி கலதிகட் காமா றசத்தறி விப்போன் அறிவிலோன் கோமா னலனசத் தாகுங் குரவனே.

344

  1. கற்பாய கற்பங்கள் நீக்காமற் கற்பித்தால் தற்பாவங் குன்றுந் தனக்கே பகையாகும் நற்பால் அரசுக்கு நாட்டுக்கும் கேடென்றே முற்பாலே நந்தி மொழிந்துவைத் தானே.

345

  1. குருடர்க்குக் கோல்காட்டிச் செல்லுங் குருடர் முரணும் பழங்குழி வீழ்வர்கள் முன்பின் குருடனும் வீழ்வர்கள் முன்பின் னறவே குருடரும் வீழ்வார் குருடரோ டாகியே.

346

===35.சற்குரு நெறி=== 2049. தாடந் தளிக்குந் தலைவனே சற்குரு தாடந்து தன்னை யறியத் தரவல்லோன் தாடந்து தத்துவா தீதத்துச் சார்சீவன் தாடந்து பாசத் தணிக்குமவன் சத்தே.


347

  1. தவிரவைத் தான்வினை தன்னடி யார்கோள் தவிரவைத் தான்சிரத் தோடுதன் பாதந் தவிரவைத் தான்நமன் தூதுவர் கூட்டந் தவிரவைத் தான்பிற வித்துயர் தானே.

348

  1. கறுத்த இரும்பே கனகம தானான் மறித்திருடம் பாகா வகையது போலக் குறித்தஅப் போதே குருவருள் பெற்றான் மறித்துப் பிறவியில் வந்தணு கானே.

349

  1. பாசத்தை நீக்கிப் பரனோடு தன்னையும் நேசத்து நாடி மலமற நீக்குவோர் ஆசற்ற சற்குரு வாவோர் அறிவற்றுப் பூசற் கிரங்குவோர் போதக் குருவன்றே.

350

  1. நேயத்தே நிற்கும் நிமலன் மலமற்ற நேயத்தே நல்கவல் லோனித்தன் சுத்தனே ஆயத்த வர்தத் துவமுணந் தாங்கற்ற நேயர்க் களிப்பவன் நீடுங் குரவனே.

351

  1. பரிசன வேதி பரிசித்த தெல்லாம் வரிசை தரும்பொன் வகையாகு மாபோற் குருபரி சித்த குவலயம் எல்லாந் திரிமலந் தீர்ந்து சிவகதி யாமே.

352

  1. தானே யெனநின்ற சற்குரு சந்நிதி தானே யெனநின்ற தன்மை வெளிப்படில் தானே தனைப்பெற வேண்டுஞ் சதுர்பெற ஊனே யெனநினைந் தோர்ந்துகொள் உன்னிலே.

353

  1. வரும்வழி மாயா வழியைக் போம்வழி கருவழி கண்டவர் காணா வழியைப் பெரும்வழி யாநந்தி பேசும் வழியைக் குருவழி யேசென்று கூடலு மாமே.

354

  1. குரு வென் பவனே வேதாக மங்கூறும் பரவின்ப னாகிச் சிவயோகம் பாவித் தொரு சிந்தை யின்றி உயர்பாச நீக்கி வருநல் குரவன்பால் வைக்கலு மாமே.

355

  1. சத்தும் அசத்துஞ் சதசத்துந் தான்காட்டிச் சித்தும் அசித்துஞ் சிவபரத் தேசேர்த்துச் சுத்த மசுத்த மறச்சுக மானசொல் அத்தன் அருட்குரு வாமவன் கூறிலே.

356

  1. உற்றிடும் ஐம்மலம் பாச வுணர்வினாற் பற்றது நாதன் அடியிற் பணிதலாற் சுற்றிய பேதந் துரியமூன் றால்வாட்டித் தற்பர மேவுவேர் சாதக ராமே.

357

  1. எல்லாம் இறைவன் இறைவி யுடனின்பம் வல்லார் புலனும் வருங்கால் உயிர்தோன்றிச் சொல்லா மலமைந் தடங்கியிட் டோங்கியே சொல்லாச் சிவகதி சேர்தல் விளையாட்டே.

358

  1. ஈனப் பிறவியில் இட்டது மீட்டூட்டித் தானத்து ளிட்டுத் தனையூட்டித் தாழ்த்தலும் ஞானத்தின் மீட்டலும் நாட்டலும் வீடுற்று மோனத்துள் வைத்தலும் முத்தன்றன் செய்கையே.

359

  1. அத்த னருளின் விளையாட் டிடஞ்சடஞ் சித்தொ டசித்தறத் தெளிவித்துச் சீவனைச் சுத்தனு மாக்கித் துடைத்து மலத்தினைச் சத்துட னைங்கரு மத்திடுந் தன்மையே.

360

  1. ஈசத்து வங்கடந் தில்லையென் றப்புறம் பாசத்து ளேயென்றும் பாவியும் அண்ணலை நேசத்து ளேநின்ற நின்மலன் எம்மிறை தேசத்தை யெல்லாந் தெளியவைத் தானே.

361

  1. மாணிக்க மாலை மலர்ந்தெழு மண்டலம் ஆணிப்பொன் னின்றங் கமுதம் விளைந்தது பேணிக்கொண் டுண்டார் பிறப்பற் றிருந்தார் ஊணுக் கிருந்தார் உணராத மாக்களே.

362

  1. அசத்தொடு சத்தும் அசத்சத்து நீங்க இசைத்திடு பாசப்பற் றீங்கறு மாறே அசைத்திரு மாயை அணுத்தானு மாங்கே இசைத்தானு மொன்றறி விப்போன் இறையே.

363

  1. ஏறு நெறியே மலத்தை எரித்தலால் ஈறில் உரையால் இருளை யறுத்தலான் மாறில் பசுபாசம் வாட்டலால் வீடுக கூறு பரனே குருவாம் இயம்பிலே.

364

===36.கூடாவொழுக்கம்=== 2067. கண்காணி யில்லென்று கள்ளம் பலசெய்வார் கண்காணி யில்லா விடமில்லை காணுங்கால் கண்காணி யாகக் கலத்தெங்கு நின்றானைக் கண்காணி கண்டார் களவொழிந் தாரே.


365

  1. செய்தான் அறியுஞ் செழுங்கடல் வட்டத்துப் பொய்தான் மிகவும் புலம்பும் மனிதர்கள் மெய்தான் உரைக்கில்விண் ணோர்தொழச் செய்வன் மைதாழ்ந் திலங்கு மிடறுடை யோனே.

366

  1. பத்திவிற் றுண்டு பகலைக் கழிவிடு மத்தகர்க் கன்றோ மறுபிறப் புள்ளது வித்துக்குற் றுண்டு விளைபுலம் பாழ்செய்யும் பித்தர்கட் கென்றும் பிறப்பில்லை தானே.

367

  1. வடக்கு வடக்கென்பர் வைத்ததொன் றில்லை நடக்க வுறுவரே ஞானமி லாதார் வடக்கில் அடங்கிய வையகம் எல்லாம் அகத்தில் அடங்கும் அறிவுடை யோர்க்கே.

368

  1. காயக் குழப்பனைக் காயநன் னாடனைக் காயத்தி னுள்ளே கமழ்கின்ற நந்தியைத் தேயத்து ளேயெங்குந் தேடித் திரிவர்கள் காயத்துள் நின்ற கருத்தறி யாரே.

369

  1. கண்காணி யாகவே கையகத் தேயெழுங் கண்காணி யாகக் கருத்து ளிருந்திடுங் கண்காணி யாகக் கலந்து வழிசெய்யுங் கண்காணி யாகிய காதலன் தானே.

370

  1. கன்னி யொருசிறை கற்றோர் ஒருசிறை மன்னிய மாதவஞ் செய்வோர் ஒருசிறை தன்னியல் புன்னி யுணர்ந்தோர் ஒருசிறை என்னிது ஈசன் இயல்பறி யாரே.

371

  1. காணாத கண்ணிற் படலமே கண்ணொளி காணாத வர்கட்குங் காணாத வவ்வொளி காணாத வர்கட்குங் கண்ணும் பெருங்கண்ணைக் காணாது கண்டார் களவொழிந் தாரே.

372

  1. பித்தன் மருந்தால் தெளிந்து பிரகிருதி உய்த்தொன்று மாபோல் விழியுந்தன் கண்ணொளி அத்தன்மை யாதல்போல் அந்தி அருள்தரச் சித்தம் தெளிந்தேன் செயலொழிந் தேனே.

373

  1. பிரான்மய மாகப் பெயர்ந்தன எட்டும் பராமய மென்றெண்ணிப் பள்ளி யுணரார் சுராமய முன்னிய சூழ்வினை யாளர் நிராமய நினைப்பொழிந் தாரே.

374

  1. ஒன்றிரண் டாகிநின் றொன்றியொன் றாயினோர்க் கொன்றும் இரண்டும் ஒருகாலுங் கூடிடா ஒன்றிரண் டென்றே யுரைதரு வோர்க்கெலாம் ஒன்றிரண் டாய்நிற்கும் ஒன்றோடொன் றானதே.

375

  1. உயிரது நின்றால் உணர்வெங்கு நிற்கும் அயரறி வில்லையா லாருடல் வீழும் உயிரும் உடலும் ஒருங்கிக் கிடக்கும் பயிருங் கிடந்துள்ளப் பாங்கறி யாரே.

376

  1. உயிரது வேறா யுணர்வெங்கு மாகும் உயிரை யறியில் உணர்வறி வாகும் உயிரன் றுடலை விழுங்கு முணர்வை அயரும் பெரும்பொரு ளாங்கறி யாரே.

377

  1. உலகாணி யொண்சுடர் உத்தம சித்தன் நிலவாணி ஐந்தினுள் நேருற நிற்குஞ் சிலவாணி யாகிய தேவர் பிரானைத் தலைவாணி செய்வது தன்னை யறிவதே.

378

  1. தானந்த மாமென நின்ற தனிச்சுடர் ஊனந்த மாயுல காய்நின்ற வொண்சுடர் தேனந்த மாய்நின்ற சிற்றின்ப நீயொழி கோனந்த மில்லாக் குணத்தரு ளாமே.

379

  1. உன்முத லாகிய வூனுயிர் உண்டெனுங் கன்முத லீசன் கருத்தறி வாரில்லை நன்முத லேறிய நாம மறநின்றால் தன்முத லாகிய தத்துவ மாமே.

380

  1. இந்தியம் அந்தக் கரண மிவையுயிர் வந்தன சூக்க வுடலன்று மானன்று தந்திடும் மவ்வியத்தத் தால்தற் புருடனு முந்துள மன்னுமா றாறு முடிவிலே.

381

===37.கேடுகண்டு இரங்கல்=== 2084. வித்துப் பொதிவார் விதைவிட்டு நாற்றுவார் அற்றதம் வாணாள் அறிகிலாப் பாவிகள் உற்ற வினைத்துயர் ஒன்றும் அறிகிலார் முற்றொளி தீமுன் னீநின்ற வாறே.


382

  1. போது சடக்கெனப் போகின் றதுகண்டும் வாதுசெய் தென்னோ மனிதர் பெறுவது நீதியு ளேநின்று நின்மலன் தாள்பணிந் தாதியை அன்பில் அறியகில் லார்களே.

383

  1. கடன்கொண்டு நெற்குத்துக் கையரை யூட்டி உடம்பினை யோம்பி உயிராத் திரிவார் தடங்கொண்ட சாரல் தழல்முரு டேறி இடங்கொண் டுடலார் கிடக்கின்ற வாறே.

384

  1. விரைந்தன்று நால்வர்க்கு மெய்ப்பதி சூழ்ந்து புரந்தகல் லால்நிழற் புண்ணியன் சொன்ன பரந்தன்னை யோராப் பழிமொழி யாளர் உரந்தன்மை யாக வொருங்கிநின் றார்களே.

385

  1. நின்ற புகழும் நிறைதவத் துண்மையும் என்றுமெம் மீசன் அடியவர்க் கேநல்கும் அன்றி யுலக மதுவிது தேவென்று குன்றுகை யாலே குறைப்பட்ட வாறே.

386

  1. இன்பத்து ளேபிறந் தின்பத்து ளேவளர்ந் தின்பத்து ளேநினைக் கின்ற திதுமறந் துன்பத்து ளேசிலர் சோறொடு கூறையென்று துன்பத்து ளேநின்று தூங்குகின் றார்களே.

387

  1. பெறுதற் கரிய பிறவியைப் பெற்றும் பெறுதற் கரிய பிரானடி பேணார் பெறுதற் கரிய பிராணிகள் எல்லாம் பெறுதற் கரியதோர் பேறிழந் தாரே.

388

  1. ஆர்வ மனமும் அளவில் இளமையும் ஈரமும் நல்லவென் றின்புறு காலத்துத் தீர வருவதோர் காமத் தொழில்நின்று மாதவன் இன்ப மறந்தெழிந் தார்களே.

389

  1. இப்பரி சேயிள ஞாயிறு போலுரு அப்பரி சங்கியின் உள்ளுறை யம்மானை இப்பரி சேகம லத்துறை யீசனை மெய்ப்பரி சேவின வாதிருந் தோமே.

390

  1. கூடகில் லார்குரு வைத்த குறிகண்டு நாடகில் லார்நயம் பேசித் திரிவர்கள் பாடகில் லாரவன் செய்த பரிசறிந் தாடவல் லாரவர் பேறெது வாமே.

391

  1. நெஞ்சு நிறைந்தங் கிருந்த நெடுஞ்சுடர் நஞ்செம் பிரானென்று நாதனை நாடொறுந் துஞ்சு மளவுந் தொழுமின் தொழாவிடில் அஞ்சற்று விட்டதோர் ஆனையு மாமே.

392

  1. மிருக மனிதர் மிக்கோர் பறவை ஒருவர்செய் தன்புவைத் துன்னாத தில்லை பருகுவ ரோடுவர் பார்ப்பயன் கொள்வர் திருமரு மாதவஞ் சேர்ந்துணர்ந் தாரே.

393

  1. நீதியி லோர்பெற்ற பொன்போல் இறைவனைச் சோதியி லாருந் தொடர்ந்தறி வாரில்லை ஆதி பயனென் றமரர் பிரானென்று நாதியே வைத்தது நாடுகின் றேனே.

394

  1. இருந்தேன் மலரளைந் தின்புற வண்டு பெருந்தேன் இழைக்கின்ற பெற்றிமை யோரார் வருந்தேன் நுகராது வாய்புகு தேனை அருந்தேனை யாரும் அறியகி லாரே.

395

  1. கருத்தறி யாது கழிந்தன காலம் அருத்தியுள் ளான்அம ராபதி நாதன் ஒருத்தனுள் ளானுல கத்துயிர்க் கெல்லாம் வருத்திநில் லாது வழுக்குகின் றாரே.

396

  1. குதித்தோடிப் போகின்ற கூற்றமுஞ் சார்வாய் விதித்தன நாட்களும் வீழ்ந்து கழிந்த விதித்திருந் தென்செய்தீ ராறுதி ராகிற் கொதிக்கின்ற கூழில் துடுப்பிட லாமே.

397

  1. கரையரு காறாக் கழனி விளைந்த திரையரு காமுன்னம் சேர்ந்தின்பம் எய்தும் வரையரு கூறிய மாதவ நோக்கின் நரையுரு வாச்செல்லு நாளில வாமே.

398

  1. வரவறி வானை மயங்கிருண் ஞாலத் திரவறி வானை யெழுஞ்சுடர்ச் சோதியை அரவறி வார்முன் னொருதெய்வ மென்று விரவறி யாமலே மேல்வைத்த வாறே.

399

===38.இதோபதேசம்=== 2102. மறந்தொழி மண்மிசை மன்னாப் பிறவி இறந்தொழி காலத்தும் ஈசனை உள்கும் பறந்தல மந்து படுதுயர் தீர்ப்பான் சிறந்த சிவநெறி சிந்தைசெய் யீரே.


400

  1. செல்லு மளவுஞ் செலுத்துமின் சிந்தையை வல்ல பரிசால் உரைமின்கள் வாய்மையை இல்லை யெனினும் பெரிதுளன் எம்மிறை நல்ல வரனெறி நாடுமி னீரே.

401

  1. ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் நன்றே நினைமின் நமனில்லை நாணாமே சென்றே புகுங்கதி யில்லைநஞ் சித்தத்து நின்றே நிலைபெற நீர்நினைந் துய்மினே.

402

  1. போற்றிசெ யந்தண் கயிலைப் பொருப்பனை நாற்றிசைக் குந்நடு வாய்நின்ற நம்பனைக் காற்றிசைக் குங்கமழ் ஆக்கையைக் கைக்கொண்டு கூற்றுதைத் தான்றன்னைக் கூறிநின் றுய்மினே.

403

  1. இக்காய நீக்கி யினியொரு காயத்திற் புக்குப் பிறவாமற் போம்வழி நாடுமின் எக்காலத் திவ்வுடல் வந்தெமக் கானதென் றக்கால முன்ன அருள்பெற லாமே.

404

  1. போகின்ற வாறே புகுகின்ற அப்பொருள் ஆகின்ற போது மரனறி வானுளன் சாகின்ற போதுந் தலைவனை நாடுமின் ஆகின்ற அப்பொருள் அக்கரை யாகுமே.

405

  1. பறக்கின்ற வொன்று பயனுற வேண்டின் இறக்கின்ற காலத்தும் ஈசனை யுள்குஞ் சிறப்பொடு சேரும் சிவகதி பின்னைப் பிறப்பொன் றிலாமையும் பேருல காமே.

406

  1. கூடியும் நின்றுந் தொழுதெம் மிறைவனைப் பாடியு ளேநின்று பாதம் பணிமின்கள் ஆடியு ளேநின் றறிவுசெய் வார்கட்கு நீடிய வீற்றுப் பசுவது வாமே.

407

  1. விடுகின்ற சீவனார் மேலெழும் போது நடுநின்று நாடுமின் நாதன்தன் பாதங் கெடுகின்ற வல்வினை கேடில் புகழோன் இடுகின்றான் உம்மை இமயவ ரோடே.

408

  1. ஏறுடை யாயிறை வாஎம்பி ரானென்று நீறிடு வாரடி யார்நிகழ் தேவர்கள் ஆறணி செஞ்சடை யண்ணல் திருவடி வேறணி வார்க்கு வினையில்லை தானே.

409

  1. இன்புறு வீர்அறிந் தேஎம் இறைவனை அன்புறு வீர்தவஞ் செய்யுமெய்ஞ் ஞானத்துப் பண்புறு வீர்பிற வித்தொழி லேநின்று தல்குர துன்புறு பாசத் துழைத்தொழிந் தீரே. பு

410

  1. மேற்கொள்ள லாவதோர் மெய்த்தவம் ஒன்றுண்டு மேற்கொள்ள லாவதோர் மெய்த்தாளும் ஒன்றுண்டு மேற்கொள்ள லாவதோர் மெய்ந்நெறி ஒன்றுண்டு மேற்கொள்ள லாம்வண்ணம் வேண்டிநின் றோர்க்கே

411

  1. சார்ந்தவர்க் கின்பங் கொடுக்குந் தழல்வண்ணன் பேர்ந்தவர்க் கின்னாப் பிறவி கொடுத்திடுந் கூர்ந்தவர்க் கங்கே குரைகழல் காட்டிடுஞ் சேர்ந்தவர் தேவரைச் சென்றுணர் வாரே.

412

  1. முத்தியை ஞானத்து முத்தமிழ் ஓசையை எத்தனை காலமும் ஏத்துவர் ஈசனை நெய்த்தலைப் பால்போல் நிமலனும் அங்குளன் அத்தகு சோதி யதுவிரும் பீரே.

413

  1. நியமத்த னாகிய நின்மலன் வைத்த உகமெத் தனையென் றொருவருந் தேறார் பவமத்தி லேவந்து பாய்கின்ற தல்லாற் சிவமத்தை யொன்றுந் தெளியகில் லாரே.

414

  1. இங்கித்தை வாழ்வு மெனைத்தோ ரகிதமுந் துஞ்சொத்த காலத்துத் தூய்மணி வண்ணனை விஞ்சத் துறையும் விகிர்தா எனநின்னை நஞ்சற் றவர்க்கன்றி நாடவொண் ணாதே.

415

  1. பஞ்சமு மாம்புவி சற்குரு பால்முன்னி வஞ்சக ரானவர் வைகில் அவர்தம்மை அஞ்சுவன் நாதன் அருநர கத்திடுஞ் செஞ்சநிற் போரைத் தெரிசிக்கச் சித்தியே.

416

  1. சிவனை வழிபட்டார் எண்ணிலாத் தேவர் அவனை வழிபட்டங் காமாறொன் றில்லை அவனை வழிபட்டங் காமாறு காட்டுங் குருவை வழிபடிற் கூடலு மாமே.

417

  1. நரருஞ் சுரரும் பசுபாச நண்ணிக் கருமங்க ளாலே கழிதலிற் கண்டு குருவென் பவன்ஞானி கோதில னானாற் பரமென்றல் அன்றிப் பகர்வொன்று மின்றே.

418

  1. ஆட்கொண் டவர்தனி நாயகன் அன்புற மேற்கொண் டவர்வினை போயற நாடொறும் நீர்க்கின்ற செஞ்சடை நீளன் உருவத்தின் மேற்கொண்ட வாறலை வீவித்து ளானே.

ஐந்தாம் தந்திரம்

1

==ஐந்தாம் தந்திரம்== ===1.சுத்தசைவம்=== 1419. ஊரும் உலகமும் ஒக்கப் படைக்கின்ற பேரறி வாளன் பெருமை குறித்திடின் மேருவும் மூவுல காளி யிலங்கெழுந் தாரணி நால்வகைச் சைவமு மாமே.


2

  1. சத்தும் அசத்தும் சதசத்துந் தான்கண்டு சித்தும் அசித்துஞ் சேர்வுறா மேநீத்த சுத்தம் அசுத்தமுந் தோய்வுறா மேநின்ற நித்தம் பரஞ்சுத்த சைவர்க்கு நேயமே.

3

  1. கற்பனை கற்றுக் கலைமன்னு மெய்யோகம் முற்பத ஞான முறைமுறை நண்ணியே தொற்பத மேவித் துரிசற்று மேலான தற்பரங் கண்டுளோர் சைவசித் தாந்தரே.

4

  1. வேதாந்தஞ் சுத்தம் விளங்கிய சித்தாந்த நாதாந்தங் கண்டோர் நடுக்கற்ற காட்சியர் பூதாந்தம் போதாந்த மாகப் புனஞ்செய்ய நாதாந்த பூரணர் ஞானநே யத்தரே.

5

===2.அசுத்தசைவம்=== 1423. இணையார் திருவடி ஏத்துஞ் சீரங்கத் திணையார் இணைக்குழை யீரணை முத்திரை குணமார் இணைக்கண்ட மாலையுங் குன்றா தணைவாஞ் சரியை கிரியையி னார்க்கே


6

  1. காதுப்பொ னார்ந்த கடுக்கன் இரண்டுசேர்த் தோதுந் திருமேனி யுட்கட் டிரண்டுடன் சோதனை செய்து வுபதேச மார்க்கராய் ஓதி யிருப்பார் ஒருசைவ ராகுமே.

7

  1. கண்டங்கள் ஒன்பதுங் கண்டவர் கண்டனர் கண்டங்கள் ஒன்பதுங் கண்டா யரும்பொருள் கண்டங்கள் ஒன்பதுங் கண்டவர் கண்டமாங் கண்டங்கள் கண்டோர் கடுஞ்சுத்த சைவரே.

8

  1. ஞானி புவியெழு நன்னூ லனைத்துடன் மோன திசையும் முழுஎண்ணென் சித்தியும் ஏனை நிலமும் எழுதா மறையீறுங் கோனொடு தன்னையுங் காணுங் குணத்தரே.

9

===3.மார்க்கசைவம்=== 1427. பொன்னாற் சிவசாத னம்பூதி சாதனம் நன்மார்க்க சாதனம் மாஞான சாதனம் துன்மார்க்க சாதனம் தோன்றாத சாதனம் சன்மார்க்க சாதன மாஞ்சுத்த சைவர்க்கே.


10

  1. கேடறு ஞானி கிளர்ஞான பூபதி பாடறு வேதாந்த சித்தாந்த பாகத்தின் ஊடுறு ஞானோ தயனுண்மை முத்தியோன் பாடுறு சுத்தசை வப்பத்த நித்தனே.

11

  1. ஆகமம் ஒன்பான் அதிலான நாலேழு மோகமில் நாலேழு முப்பேத முற்றுடன் வேகமில் வேதாந்த சித்தாந்த மெய்ம்மையொன் றாக முடிந்த அருஞ்சுத்த சைவமே

12

  1. சுத்தம் அசுத்தந் துரியங்க ளோரேழும் சத்தும் அசத்துந் தணந்த பராபரை உத்த பராபரை யுள்ளாம் பராபரை அத்தன் அருட்சத்தி யாயெங்கு மாமே.

13

  1. சத்தும் அசத்துந் தணந்தவர் தானாகிச் சித்தும் அசித்துந் தெரியாச் சிவோகமாய் முத்தியுள் ஆனந்த சக்தியுள் மூழ்கினார் சித்தியும் அங்கே சிறந்துவர் தானே.

14

  1. தன்னைப் பரனைச் சதாசிவன் என்கின்ற மன்னைப் பதிபசு பாசத்தை மாசற்ற முன்னைப் பழமல முன்கட்டை வீட்டினை உன்னத் தகுஞ்சுத்த சைவர் உபாயமே.

15

  1. பூரணத் தன்னிலே வைத்தற்ற வப்போத மாரண மந்த மதித்தானந் தத்தோடு நேரென ஈராறு நீதி நெடும்போகம் காரண மாஞ்சுத்த சைவர்க்குக் காட்சியே

16

  1. மாறாத ஞான மதிப்பற மாயோகம் தேறாது சிந்தையைத் தேற்றிச் சிவமாக்கிப் பேறான பாவனை பேணி நெறிநிற்றல் கூறாகு ஞானி சரிதை குறிக்கிலே.

17

  1. வேதாந்தங் கண்டோர் பிரமவித் தியாதரர் நாதாந்தங் கண்டோர் நடுக்கற்ற யோகிகள் வேதாந்த மில்லாத சித்தாந்தங் கண்டுளோர் சாதா ரணமன்ன சைவர் உபாயமே.

18

  1. விண்ணினைச் சென்றணு காவியன் மேகங்கள் கண்ணினைச் சென்றணு காப்பல காட்சிகள் எண்ணினைச் சென்றணு காம னெனப்படும் அண்ணலைச் சென்றணு காப்பசு பாசமே.

19

  1. ஒன்றும் இரண்டும் இலதுமாய் ஒன்றாக நின்று சமய நிராகார நீங்கியே நின்று பராபரை நேயத்தைப் பாதத்தால் சென்று சிவமாதல் சித்தாந்த சித்தியே.

20

===4.கடுஞ்சுத்தசைவம்=== 1438. வேடங் கடந்து விகிர்தன்றன் பான்மேவி ஆடம் பரமின்றி ஆசாபா சஞ்செற்று பாடொன்று பாசம் பசுத்துவம் பாழ்படச் சாடுஞ் சிவபோ தகர்சுத்த சைவரே.


21

  1. உடலான ஐந்தையும் ஓராறும் ஐந்தும் மடலான மாமாயை மற்றுள்ள நீவப் படலான கேவல பாசந் துடைத்துத் திடமாய்த் தனையுறல் சித்தாந்த மார்க்கமே.

22

  1. சுத்தச் சிவனுரை தானதில் தோயாமல் முத்தர் பதப்பொருள் முத்திவித் தாமூலம் அத்தகை யான்மா அரனை அடைந்தத்தால் சுத்த சிவமாவ ரேசுத்த சைவரே.

23

  1. நானென்றுந் தானென்றும் நாடிநான் சாரவே தானென்று நானென் றிரண்டிலாத் தற்பதம் தானென்று நானென்ற தத்துவம் நல்கலால் தானென்று நானென்றுஞ் சாற்றகில் லேனே

24

  1. சாற்றரி தாகிய தத்துவஞ் சித்தித்தால் ஆற்றரி தாகிய ஐந்தும் அடங்கிடும் மேற்றிகழ் ஞானம் விளக்கொளி யாய்நிற்கும் பாற்பர சாயுச்சிய மாகும் பதியே.

25

===5.சரியை=== 1443. நேர்ந்திடு மூல சரியை நெறியிதென் றாய்ந்திடுங் காலங்கி கஞ்ச மலையமான் ஓர்ந்திடுங் கந்துரு கேண்மின்கள் பூதலத் தோர்ந்திடுஞ் சுத்த சைவத் துயிரதே.


26

  1. உயிர்க்குயி ராய்நிற்றல் ஒண்ஞான பூசை உயிர்க்கொளி நோக்கல் மகாயோக பூசை உயிர்ப்பெறு மாவா கனப்புறப் பூசை செயிற்கடை நேசஞ் சிவபூசை யாமே.

27

  1. நாடும் நகரமும் நற்றிருக் கோயிலும் தேடித் திரிந்து சிவபெரு மானென்று பாடுமின் பாடிப் பணிமின் பணிந்தபின் கூடிய நெஞ்சத்துக் கோயிலாக் கொள்வனே

28

  1. பத்தர் சரிதை படுவோர் கிரியையோர் அத்தகு தொண்டரருள்வேடத் தாகுவோர் சுத்த இயமாதி சாதகர் தூயோகர் சித்தர் சிவஞானத் சென்றெய்து வோர்களே

29

  1. சார்ந்தமெயஞ் ஞானத்தோர் தானவ னாயினோர் சேர்ந்தவெண் யோகத்தர் சித்தர் சமாதியோர் ஆய்ந்த கிரியையோர் அருச்சனை தப்பாதோர் நேர்ந்த சரியையோர் நீள்நிலத் தோரே.

30

  1. கிரியை யோகங்கள் கிளர்ஞான பூசை அரிய சிவனுரு அமரும் அரூபம் தெரியும் பருவத்துத் தேர்ந்திடும் பூசை உரியன நேயத் துயர்பூசை யாமே.

31

  1. சரியாதி நான்குந் தருஞானம் நான்கும் விரிவான வேதாந்த சித்தாந்தம் ஆறும் பொருளா னதுநந்தி பொன்னகர் போந்து மருளாகு மாந்தர் வணங்கவைத் தானே.

32

  1. சமையம் பலசுத்தித் தன்செயல் அற்றிடும் அமையும் விசேடமும் அரன்மந் திரசுத்தி சமைய நிருவாணங் கலாசுத்தி யாகும் அமைமன்னு ஞானமார்க் கம்அபி டேகமே.

33

===6.கிரியை=== 1451. பத்துத் திசையும் பரமொரு தெய்வமுண் டெத்திக்கி லவரில்லை என்ப தின்மலர்க் கொத்துத் திருவடி நீழல் சரணெனத் தத்தும் வினைக்கடல் சாராது காணு மே.


34

  1. கானுறு கோடி கடிகமழ் சந்தனம் வானூறு மாமல ரிட்டு வணங்கினும் ஊனினை நீக்கி உணர்பவர்க் கல்லது தேனமர் பூங்கழல் சேரவொண் ணாதே.

35

  1. கோனக்கன் றாயே குலைகழல் ஏத்துமின் ஞானககன் றாகிய நடுவே யுழிதரும் வானக்கன் றாகிய வானவர் கைதொழும் மானக்கன் றீசன் அருள்வள்ள மாமே.

36

  1. இதுபணித் தெண்டிசை மண்டல மெல்லாம் அதுபணி செய்கின் றவளொரு கூறன் இதுபணி மானுடர் செய்பணி யீசன் பதபணி செய்வது பத்திமை காணே

37

  1. பத்தன் கிரியை சரியை பயில்வுற்றுச் சுத்த அருளால் துரிசற்ற யோகத்தில் உய்த்த நெறியுற் றுணர்கின்ற ஞானத்தால் சித்தங் குருவரு ளாற்சிவ மாகுமே

38

  1. அன்பின் உருகுவன் நாளும் பணிசெய்வன் செம்பொன் செய்மேனி கமலத் திருவடி முன்புநின் றாங்கே மொழிவ தெனக்கருள் என்பினுட் சோதி இலங்குகின் றானே.

39

===7.யோகம்=== 1457. நெறிவழி யேசென்று நேர்மையுள் ஒன்றித் தறியிருந் தாற்போல் தம்மை யிருத்திச் சொறியினுந் தாக்கினுந் துண்ணென் றுணராக் குறியறி வாளர்க்குக் கூடலு மாமே.


40

  1. வழிதோ றூாழி உணர்ந்தவர்க் கல்லது ஊழிதோ றூழி உணரவுந் தானொட்டான் ஆழி அமரும் அரியயன் என்றுளார் ஊழி முயன்றும் ஒருச்சியு ளானே.

41

  1. பூவினிற் கந்தம் பொருந்திய வாறுபோல் சீவனுக் குள்ளே சிவமணம் பூத்தது ஓவியம் போல உணர்ந்தறி வாளர்க்கு நாவி யணைந்த நடுதறி யாமே.

42

  1. உய்ந்தனம் என்பீர் உறுபொருள் காண்கிலீர் கந்த மலரிற் கலக்கின்ற நந்தியைச் சிந்தை யுறவே தெளிந்திருள் நீங்கினால் முந்தைப் பிறவிக்கு மூலவித் தாமே.

43

  1. எழுத்தொடு பாடலும் எண்ணென் கலையும் பழித்தலைப் பாசப் பிறவியும் நீங்கா வழித்தலைச் சோமனோ டங்கி யருக்கன் வழித்தலைச் செய்யும் வகையுணர்ந் தேனே.

44

  1. விரும்பிநின் றேசெயின் மெய்த்தவ ராகும் விரும்பிநின் றேசெயின் மெய்யுரை யாகும் விரும்பிநின் றேசெயின் மெய்த்தவ மாகும் விரும்பிநின் றேசெயின் விண்ணவ னாகுமே.

45

  1. பேணிற் பிறவா உலகருள் செய்திடுங் காணில் தனது கலவியு ளேநிற்கும் நாணில் நரக நெறிக்கே வழிசெயும் ஊனில் சுடுமங்கி உத்தமன் தானே.

46

  1. ஒத்தசெங் கோலர் உலப்பிலி மாதவர் எத்தனை யாயிரம் வீழ்ந்தனர் எண்ணிலி சித்தர்கள் தேவர்கள் மூவர் பெருமையாம் அத்தன் இவனென்றே அன்புறு வார்களே.

47

  1. யோகிக்கு யோகாதி மூன்றுள கொண்டுற்றோர் ஆகத் தகுகிரி யாதி சரியையாம் தாகத்தை விட்ட சரியையொன் றாமொன்றுள் ஆதித்தன் பத்தியுன் அன்புவைத் தேனே.

48

  1. யோகச் சமயமே யோகம் பலவுன்னல் யோக விசேடமே அட்டாங்க யோகமாம் யோகநிர் வாணமே யுற்ற பரோதயம் யோக அபிடேகமே ஒண்சித்தி யுற்றலே.

49

===8.ஞானம்=== 1467. ஞானத்தின் மிக்க அறநெறி நாட்டில்லை ஞானத்தின் மிக்க சமயமும் நன்றன்று ஞானத்தின் மிக்கவை நன்முத்தி நல்காவாம் ஞானத்தின் மிக்கார் நரரின்மிக் காரே.


50

  1. சத்தமுஞ் சத்த மனனுந் தருமனம் உய்த்த வுணர்வும் உணர்த்தும் அகந்தையும் சித்தமென் றிம்மூன்றுஞ் சிந்திக்குஞ் செய்கையும் சத்தங் கடந்தவர் பெற்றசன் மார்க்கமே

51

  1. தன்பால் உலகுந் தனக்கரு காவதும் அன்பா லெனக்கரு ளாவது மாவன என்பார்கள் ஞானமும் எய்துஞ் சிவோகமும் பின்பாலின் நேயமும் பெற்றிடும் தானே

52

  1. இருக்குஞ் சேம இடம்பிரம மாகும் வருக்கஞ் சராசர மாகும் உலகம் தருக்கிய ஆசார மெல்லாந் தருமே திருக்கிலா ஞானத்தைத் தேர்ந்துணர்ந்த தோர்க்கே

53

  1. அறிவும் அடக்கமும் அன்பும் உடனே பிறியா நகர்மன்னும் பேரரு ளாளன் குறியுங் குணமுங் குரைகழல் நீங்கா நெறியறி வார்க்கிது நீர்த்தொனி யாமே.

54

  1. ஞானம் விளைந்தெழு கின்றதோர் சிந்தையுள் ஏனம் விளைந்தெதி ரேகாண் வலிதொறுங் கூனல் மதிமண்டலத்தெதிர் நீர்கண்டு ஊனம் அறுத்துநின் றொண்சுட ராகுமே.

55

  1. ஞானிக் குடன்குண ஞானத்தில் நான்குமாம் மோனிக் கிவையொன்றுங் கூடாமுன் மோகித்து மேனியற்ற லாஞ்சத்தி வித்தை விளைத்திடுத் தானிக் குலத்தோர் சரியை கிரியையே.

56

  1. ஞானத்தின் ஞானாதி நான்குமா ஞானிக்கு ஞானத்தின் ஞானமே நானென தென்னாமல் ஞானத்தில் யோகமே நாதாந்த நல்லொளி ஞானக் கிரியையே நன்முத்தி நாடலே.

57

  1. நண்ணிய ஞானத்தின் ஞானதி நண்ணுவோன் புண்ணிய பாவங் கடந்த பிணக்கற்றோன் கண்ணிய ஞானங் கரைஞானங் கண்டுளோன் திண்ணிய சுத்தன் சிவமுத்தன் சித்தனே.

58

  1. ஞானச் சமயமே நாடுந் தனைக்காண்டல் ஞான விசேடமே நாடு பரோதயம் ஞானநிர் வாணமே நன்றறி வானருள் ஞானாபி டேக்மே நற்குரு பாதமே.

59

===9.சன்மார்க்கம்=== 1477. சாற்றுஞ்சன் மார்க்கமாந் தற்சிவ தத்துவத் தோற்றங்க ளான சுருதிச் சுடர்கண்டு சீற்றம் ஒழிந்து சிவயோக சித்தராய்க் கூற்றத்தை வென்றார் குறிப்பறிந் தார்களே.


60

  1. சைவப் பெருமைத் தனிநா யகன்நந்தி உய்ய வகுத்த குருநெறி ஒன்றுண்டு தெய்வச் சிவநெறி சன்மார்க்கஞ் சேர்ந்துய்ய வையத்து ளார்க்கு வகுத்துரைத் தானே.

61

  1. தெரிசிக்கப் பூசிக்கச் சிந்தனை செய்யப் பரிசிக்கக் கீர்த்திக்கப் பாதுகஞ் சூடக் குருபத்தி செய்யுங் குவலயத் தோர்க்குத் தருமுத்திச் சார்பூட்டுஞ் சன்மார்க்கந் தானே.

62

  1. தெளிவறி யாதார் சிவனை யறியார் தெளிவறி யாதார் சிவனு மாகார் தெளிவறி யாதார் சிவமாக மாட்டார் தெளிவறி யாதார் தீரார் பிறப்பே.

63

  1. தானவ னாகித் தானைந்தா மலஞ்செற்று மோனம தாமொழிப் பான்முத்த ராவதும் ஈனமில் ஞானானு பூதியில் இன்பமுந் தானவ னாயுற லானசன் மார்க்கமே.

64

  1. சன்மார்க்கத் தார்க்கு முகத்தொடு பீடமுஞ் சன்மார்க்கத் தார்க்கும் இடத்தொடு தெய்வமுஞ் சன்மார்க்கத் தார்க்கு வருக்கந் தெரிசனம் எம்மார்க்கத் தார்க்கும் இயம்புவன் கேண்மினோ.

65

  1. சன்மார்க்க சாதனத் தான்ஞான ஞேயமாம் பின்மார்க்க சாதனம் பேதையர்க் காய்நிற்கும் துன்மார்க்கம் விட்ட துரியத் துரிசற்றார் சன்மார்க்கந் தானவ னாகுஞ்சன் மார்க்கமே.

66

  1. சன்மார்க்க மெய்த வருமருஞ் சீடர்க்குப் பின்மார்க்க மூன்றும் பெறவியல் பாமென்றால் நன்மார்க்கத் தானே சிவனொடு நாடலே சொன்மார்க்க மென்னச் சுருதிகைக் கொள்ளுமே.

67

  1. அன்னிய பாசமும் ஆகுங் கருமமும் முன்னும் அவத்தையும் மூலப் பகுதியும் பின்னிய ஞானமும் பேதாதி பேதமுந் தன்னொடுங் கண்டவர் சன்மார்க்கத் தோரே.

68

  1. பசுபாச நீக்கிப் பதியுடன் கூட்டிக் கசியாத நெஞ்சங் கசியக் கசிவித் தொசியாத வுண்மைச் சொருபோ துயத்துற் றசைவான தில்லாமை யானசன் மார்க்கமே.

69

  1. மார்க்கஞ்சன் மார்க்கிகள் கிட்ட வகுப்பது மார்க்கஞ்சன் மார்க்கமே யன்றிமற் றொன்றில்லை மார்க்கஞ்சன் மார்க்க மெனு நெறி வைகாதோர் மார்க்கங்சன் மார்க்க மாஞ்சித்த யோகமே.

70

===10.சகமார்க்கம்=== 1488. சன்மார்க்கந் தானே சகமார்க்க மானது மன்மார்க்க மாமுத்தி சித்திக்குள் வைப்பதாம் பின்மார்க்க மானது பேராப் பிறந்திறந் துன்மார்க்க ஞானத் துறுதியு மாமே.


71

  1. மருவுந் துவாதச மார்கமில் லாதார் குருவுஞ் சிவனுஞ் சமயமுங் கூடார் வெருவுந் திருமகள் வீட்டில்லை யாகும் உருவுங் கிளையும் ஒருங்கிழப் பாரே.

72

  1. யோகச் சமாதியின் உள்ளே யகலிடம் யோகச் சமாதியின் உள்ளே யுளரொளி யோகச் சமாதியின் உள்ளே யுளசக்தி யோகச் சமாதி யுகந்தவர் சித்தரே.

73

  1. யோகமும் போகமும் யோகியர்க் காகுமால் யோகஞ் சிவரூபம் உற்றிடும் உள்ளத்தோர் போகம் புவியிற் புருடாத்த சித்திய தாகும் இரண்டும் அழியாத யோகிக்கே.

74

  1. ஆதார சோதனை யானாடி சுத்திகள் மேதாதி யீரெண் கலந்தது விண்ணொளி போதா லயத்துப் புலன்கரணம்புந்தி சாதா ரணங்கெட லாஞ்சக மார்க்கமே.

75

  1. பிணங்கிநிற் கின்றவை ஐந்தையும் பின்னை அணங்கி யெறிவ னயிர்மன வாளால் கணம்பதி னெட்டுங் கருதும் ஒருவன் வணங்கவல் லான்சிந்தை வந்துநின் றானே.

76

  1. வளங்கனி யொக்கும் வளநிறத் தார்க்கும் வளங்கனி யொப்பதோர் வாய்மைய னாகும் உளங்கனிந் துள்ள முகந்திருப் பார்க்குப் பழங்கனிந் துள்ளே பகுந்துநின் றானே.

77

===11.சற்புத்திரமார்க்கம்=== 1495. மேவிய சற்புத்திர மார்க்க மெய்த்தொழில் தாவிப்ப தாஞ்சக மார்க்கஞ் சகத்தொழில் ஆவ திரண்டும் அகன்று சகமார்க்கத் தேவியோ டொன்றல் சன்மார்க்கத் தெளிவதே.


78

  1. பூசித்தல் வாசித்தல் போற்றல் செபித்திடல் ஆசற்ற நற்றவம் வாய்மை அழுக்கின்மை நேசித்திட்ட டன்னமும் நீசுத்தி செய்தன்மற் றாசற்ற சற்புத் திரமார்க்க மாகுமே.

79

  1. அறுகாற் பறவை அலர்தேர்ந் துழலும் மறுகா நரையன்னத் தாமரை நீலம் குறுகா நறுமலர் கொய்வன கண்டும் சிறுகால் அறநெறி சேரகி லாரே.

80

  1. அருங்கரை யாவது அவ்வடி நீழல் பெருங்கரை யாவது பிஞ்ஞக னாணை வருங்கரை யேகின்ற மன்னுயிர்க் கெல்லாம் ஒருங்கரை யாயுல கேழினொத் தானே.

81

  1. உயர்ந்தும் பணிந்தும் முகந்துந் தழுவி வியந்தும் அரனடிக் கேமுறை செய்மின் பயந்தும் பிறவிப் பயனது வாகும் பயந்து பரிக்கிலப் பான்மைய னாமே.

82

  1. நின்று தொழுவன் கிடந்தெம் பிரான்றன்னை என்றுந் தொழுவன் எழிற்பரஞ் சோதியைத் துன்று மலர்தூவித் தொழுமின் தொழுந்தொறும் சென்று வெளிப்படுந் தேவர் பிரானே.

83

  1. திருமன்னுஞ் சற்புத் திரமார்க்கச் சரியை உருமன்னி வாழும் உலகத்தீர் கேண்மின் கருமன்னு பாசங் கைகூம்பத் தொழுது இருமன்னு நாடோறும் இன்புற் றிருந்தே.

84

===12.தாசமார்க்கம்=== 1502. எளியனல் தீப மிடல்மலர் கொய்தல் அளிதின் மெழுகல் அதுதூர்த்தல் வாழ்த்தல் பளிமணி பற்றல் பன்மஞ் சனமாதி தளிதொழில் செய்வது தான்தாச மார்க்கமே.


85

  1. அதுவிது வாதிப் பரமென் றகல்வர் இதுவழி யென்றங் கிறைஞ்சின ரில்லை விதிவழி யேசென்று வேந்தனை நாடும் அதுவிது நெஞ்சில் தணிக்கின்ற வாறே.

86

  1. அந்திப்பன் திங்கள் அதன்பின்பு ஞாயிறு சிந்திப்பன் என்றும் ஒருவன் செறிகழல் வந்திப்பன் வானவர் தேவனை நாடோறும் வந்திப்ப தெல்லாம் வகையின் முடிந்ததே.

87

  1. அண்ணலை வானவர் ஆயிரம் பேர்சொல்லி உன்னுவர் உள்மகிழ்ந் துண்ணின் றடிதொழக் கண்ணவ னென்று கருது மவர்கட்குப் பண்ணவன் பேரன்பு பற்றிநின் றானே.

88

  1. வாசித்தும் பூசித்தும் மாமலர் கொய்திட்டும் பாசிக் குளத்தில்வீழ் கல்லா மனம்பார்க்கின் மாசற்ற சோதி மணிமிடற் றண்ணலை நேசத் திருந்த நினைவறி யாரே.

89

===13.சாலோகம்=== 1507. சாலோக மாதி சரியாதி யிற்பெறும் சாலோகஞ் சாமீபந் தங்குஞ் சரியையாம் மாலோகஞ் சேரில் வழியாகுஞ் சாரூபம் பாலோகம் இல்லாப் பரனுரு வாமே.


90

  1. சமயங் கிரியையிற் றன்மனங் கோயில் சமய மனுமுறை தானே விசேடஞ் சமயத்து மூலந் தனைத்தேறன் மூன்றாஞ் சமயாபி டேகந் தானாஞ் சமாதியே.

91

===14.சாமீபம்=== 1509. பாசம் பசுவான தாகும்இச் சாலோகம் பாச மருளான தாகும்இச் சாமீபம் பாசஞ் சிவமான தாகும்இச் சாரூபம் பாசங் கரைபதி சாயுச் சியமே.


92

===15.சாரூபம்=== 1510. தங்கிய சாரூபந் தானெட்டாம் யோகமாந் தங்குஞ் சன்மார்க்கந் தனிலன்றிக் கைகூடா அங்கத் துடல்சித்தி சாதன ராகுவர் இங்கிவ ராக விழிவற்ற யோகமே.


93

  1. சயிலலோ கத்தினைச் சார்ந்த பொழுதே சயிலம தாகுஞ் சராசரம் போலப் பயிலுங் குருவின் பதிபுக்க போதே கயிலை இறைவன் கதிர்வடி வாமே

94

===16.சாயுச்சியம்=== 1512. சைவஞ் சிவனுடன் சம்பந்த மாகுதல் சைவந் தனையறிந் தேசிவஞ் சாருதல் சைவஞ் சிவந்தன்னைச் சாராமல் நீங்குதல் சைவஞ் சிவானந்தஞ் சாயுச் சியமே.


95

  1. சாயுச் சியஞ்சாக் கிராதீதஞ் சாருதல் சாயுச் சியமுப சாந்தத்துத் தங்குதல் சாயுச் சியஞ்சிவ மாதல் முடிவிலாச் சாயுச் சியமனத் தானந்த சத்தியே.

96

===17.சத்திநிபாதம் மந்ததரம்=== 1514. இருட்டறை மூலை யிருந்த குமரி குருட்டுக் கிழவனைக் கூடல் குறித்துக் குருட்டினை நீக்கிக் குணம்பல காட்டி மருட்டி யவனை மணம்புரிந் தாளே.


97

  1. தீம்புல னான திசையது சிந்திக்கில் ஆம்புல னாயறி வார்க்கமு தாய்நிற்குந் தேம்புல னான தெளிவறி வார்கட்குக் கோம்புல னாடிய கொல்லையு மாமே.

98

  1. இருள்நீக்கி எண்ணில் பிறவி கடத்தி அருள்நீங்கா வண்ணமே யாதி யருளும் மருள்நீங்கா வானவர் கோனொடுங் கூடிப் பொருள் நீங்கா இன்பப் புலம்பயின் றானே.

99

  1. இருள்சூ ழறையில் இருந்தது நாடிற் பொருள்சூழ் விளக்கது புக்கெரிந் தாற்போல் மருள்சூழ் மயக்கத்து மாமலர் நந்தி அருள்சூழ் இறைவனும் அம்மையு மாமே.

100

====மந்தம்==== 1518. மருட்டிப் புணர்ந்து மயக்கமும் நீக்கி வெருட்டி வினையறுத் தின்பம் விளைத்துக் குருட்டினை நீக்கிக் குணம்பல காட்டி அருட்டிகழ் ஞான மதுபுரிந் தானே.


101

  1. கன்னித் துறைபடிந் தாடிய ஆடவர் கன்னித் துறைபடிந் தாடுங் கருத்திலர் கன்னித் துறைபடிந் தாடுங் கருத்துண்டேற் பின்னைப் பிறவி பிறிதில்லை தானே.

102

  1. செய்யன் கரியன் வெளியன்நற் பச்சையன் எய்த வுணந்தவர் எய்யலர் இறைவனை மைவென் றகன்ற பகடுரி போர்த்தவெங் கைய னிவனென்று காதல்செய் வீரே.

103

  1. எய்திய காலங்கள் எத்தனை யாயினுந் தையலுந் தானுந் தனிநா யகமென்பர் வைகலுந் தன்னை வணங்கு மவர்கட்குக் கையிற் கருமஞ்செய் காட்டது வாமே.

104

  1. கண்டுகொண் டோமிரண் டுந்தொடர்ந் தாங்கொளி பண்டுபன் டோயும் பரமன் பரஞ்சுடர் வண்டுகொண் டாடு மலர்வார் சடையண்ணல் நின்றுகண் டார்க்கிருள் நீக்கிநின் றானே.

105

====தீவிரம்==== 1523. அண்ணிக்கும் பெண்பிள்ளை அப்பனார் தோட்டத்தில் எண்ணிக்கும் ஏழேழ் பிறவி யுணர்விக்கும் உண்ணிற்ப தெல்லாம் ஒழிய முதல்வனைக் கண்ணுற்று நின்றக் கனியது வாகுமே,


106

  1. பிறப்பை யறுக்கும் பெருந்தவம் நல்கும் மறப்பை யறுக்கும் வழிபட வைக்கும் குறப்பெண் குவிமுலை கோமள வல்லி சிறப்பொடு பூசனை செய்யநின் றார்க்கே.

107

  1. தாங்குமின் எட்டுத் திசைக்குந் தலைமகன் பூங்கமழ் கோதைப் புரிகுழ லாளொடும் ஆங்கது சேரும் அறிவுடை யார்கட்குத் தூங்கொளி நீலந் தொடர்தலு மாமே.

108

  1. நணுகினு ஞானக் கொழுந்தொன்று நல்கும் பணிகினும் பன்மலர் தூவிப் பணிவன் அணுகிய தொன்றறி யாத வொருவன் அணுகும் உலகெங்கு மாவியு மாமே.

109

====தீவிரதரம்==== 1527. இருவினை நேரொப்பில் இன்னருட் சத்தி குருவென வந்து குணம்பல நீக்கித் தருமென ஞானத்தால் தன்செய லற்றால் திரிமலந் தீர்ந்து சிவனவ னாமே.


110

  1. இரவும் பகலும் இலாத இடத்தே குரவன் செய்கின்ற குழலியை உன்னி அரவஞ்செய் யாமல் அவளுடன் சேரப் பரிவொன்றி வாழும் பராபரை தானே.

111

  1. மாலை விளக்கும் மதியமும் ஞாயிறும் சால விளங்குந் தனிச்சுடர் அண்ணலுள் ஞானம் விளக்கிய நாதன்என் உள்புகுந் தூனை விளக்கி யுடனிருந் தானே.

112

===18.புறச்சமய தூஷணம்=== 1530. ஆயத்துள் நின்ற அறுசம யங்களுங் காயத்துள் நின்ற கடவுளைக் காண்கிலா மாயக் குழியில் விழுவர் மனைமக்கள் பாசத்தில் உற்றுப் பதைக்கின்ற வாறே.


113

  1. உள்ளத்து ளேதான் கரந்தெங்கும் நின்றவன் வள்ளல் தலைமகன் மலருறை மாதவன் பொள்ளற் குரம்பைப் புகுந்து புறப்படுங் கள்ளத் தலைவன் கருத்தறி யார்களே,

114

  1. உள்ளத்தும் உள்ளன் புறத்துள்ளன் என்பவர்க் குள்ளததும் உள்ளன் புறத்துள்ளன் எம்மிறை உள்ளத்தும் இல்லை புறத்தில்லை என்பவர்க் குள்ளத்தும் இல்லை புறத்தில்லை தானே.

115

  1. ஆறு சமயமுங் கண்டவர் கண்டிலர் ஆறு சமயப் பொருளும் அவனலன் தேறுமின் தேறித் தெளிமின் தெளிந்தபின் மாறுதல் இன்றி மனைபுக லாமே.

116

  1. சிவமல்ல தில்லை யறையே சிவமாந் தவமல்ல தில்லை தலைப்படு வார்க்கிங் கவமல்ல தில்லை அறுசமயங்கள் தவம்வல்ல நந்திதாள் சார்ந்துய்யு நீரே.

117

  1. அண்ணலை நாடிய ஆறு சமயமும் விண்ணவ ராக மிகவும் விரும்பியே முண்ணின் றழியு முயன்றில ராதலான் மண்ணின் றொழியும் வகையறி யார்களே.

118

  1. சிவகதி யேகதி மற்றுள்ள எல்லாம் பவகதி பாசப் பிறவியொன் றுண்டு தவகதி தன்னொடு நேரொன்று தோன்றில் அவகதி மூவரும் அவ்வகை யாமே.

119

  1. நூறு சமயம் உளவா நுவலுங்கால் ஆறு சமயமவ் வாறுட் படுவன கூறு சமயங்கள் கொண்ட நெறிநில்லா வீறு பரநெறி யில்லா நெறியன்றே.

120

  1. சுத்துங் கழுதைகள் போலுங் கலதிகள் சுத்த சிவனெங்குத் தோய்வுற்று நிற்கின்றான் குத்தந் தெரியார் குணங்கொண்டு கோதாட்டிப் பித்தேறி நாளும் பிறந்தறிப் பாரே.

121

  1. மயங்குகின் றாரு மதிதெளிந் தாரும் முயங்கி யிருவினை முழைமுகப் பாய்ச்சி இயங்கிப் பெறுவரே லீறது காட்டில் பயங் கெட்டவர்க்கோர் பரநெறி யாமே.

122

  1. சேயன் அணியன் பிணியிலன் பேர்நந்தி தூயன் துளக்கற நோக்கவல் லார்கட்கு மாயன் மயங்கிய மானுடராமவர் காயம் விளைக்குங் கருத்தறி யார்களே.

123

  1. வழியிரண் டுக்குமோர் வித்தது வான பழியது பார்மிசை வாழ்தல் உறுதல் கழியது வாளன்றன் சொல்வழி முன்னின் றழி வறி வார்நெறி நாடதில் லாரே.

124

  1. மாதவர் எல்லாம் மாதேவன் பிரான்என்பர் நாதம தாக அறியப் படுநந்தி பேதஞ்செய் யாதே பிரான் என்று கைதொழில் ஆதியும் அந்நெறி யாகிநின் றானே.

125

  1. அரனெறி யப்பனை யாதிப் பிரானை உரநெறி யாகி யுளம்புகுந் தானைப் பரநெறி தேடிய பத்தர்கள் சித்தம் பரநெறி யாவிடிற் பல்வகைத் தூரமே.

126

  1. பரிசற வானவன் பண்பன் பகலோன் பெரிசறி வானவர் பேற்றில் திகழுந் துரிசற நீதினை தூய்மணி வண்ணன் அரிதவன் வைத்த அறநெறி தானே.

127

  1. ஆன சமயம் அது இது நன்றெனும் மாய மனிதர் மயக்க மதுபொழி கானங் கடந்த கடவுளை நாடுமின் ஊனங் கடந்த வுருவது வாமே.

128

  1. அந்நெறி நாடி அமரர் முனிவருஞ் சென்னெறி கண்டார் சிவனெனப் பெற்றார்பின் முன்னெறி நாடி முதல்வன் அருளிலார் சென்னெறி செல்லார் திகைக்கின்ற வாறே.

129

  1. உறுமா றறிவதும் உள்நின்ற சோதி பெறுமா றறியிற் பிணக்கொன்றும் இல்லை அறுமா றதுவான வங்கியு ளாங்கே இறுமா றறிகிலர் ஏழைகள் தாமே.

130

  1. வழிநடக் கும்பரி சொன்றுண்டு வையங் கழிநடக் குண்டவர் கற்பனை கேட்பர் கழிநடக் குந்துய ரம்மது நீக்கிப் பழிநடப் பார்க்குப் பரவலு மாமே.

131

  1. வழி சென்ற மாதவம் வைகின்ற போது பழி செல்லும் வல்வினைப் பற்றறுத் தாங்கே வழிசெல்லும் வல்வினை யார்திறம் விட்டிட் டூழிசெல்லில் உம்பர் தலைவன்முன் னாமே.

132

===19.நிராகாரம்=== 1550. இமையங்க ளாய்நின்ற தேவர்கள் ஆறு சமையங்கள் பெற்றனர் சாத்திரம் ஓதி அமையறிந் தோமென்ப ராதிப் பிரானுங் கமையறிந் தாருட் கலந்துநின் றானே.


133

  1. பாங்கமர் கொன்றைப் படர்சடை யானடி தாங்கு மனிதர் தரணியில் நேரொப்பர் நீங்கிய வண்ணம் நினைவுசெய் யாதவர் ஏங்கி உலகில் இருந்தழு வாரே.

134

  1. இருந்தழு வாரும் இயல்புகெட் டாரும் அருந்தவ மேற்கொண்டங் கண்ணலை எண்ணில் வருந்தா வகைசெய்து வானவர் கோனும் பெருந்தன்மை நல்கும் பிறப்பில்லை தானே.

135

  1. தூரறி வாளர் துணைவர் நினைப்பிலர் பாரறி வாளர் படுபயன் றானுண்பர் காரறி வாளர் கலந்து பிறப்பார்கள் நீரறி வார்நெடு மாமுகி லாமே.

136

  1. அறிவுடன் கூடி அழைத்ததோர் தோணி பறியுடன் பாரம் பழம்பதி சிந்துங் குறியது கண்டுங் கொடுவினை யாளர் செறிய நினைக்கிலர் சேவடி தானே.

137

  1. மன்னும் ஒருவன். மருவு மனோமயன் என்னின் மனிதர் இகழ்வரிவ் வேழைகள் துன்னி மனமே தொழுமின் துணையிலி தன்னையும் அங்கே தலைப்பட லாமே.

138

  1. ஓங்காரத் துள்ளொளி உள்ளே உதயமுற் றாங்கார மற்ற அனுபவங் கைகூடார் சாங்கால முன்னார் பிறவாமை சார்வுறார் நீங்காச் சமயத்துள் நின்றொழித் தார்களே.

139

===20.உட்சமயம்=== 1557. இமையவர் தம்மையும் எம்மையும் முன்னம் அமைய வகுத்தவன் ஆதி புராணன் சமையங்க ளாறுந்தன் தாளிணை நாட அமையங் குழல்கின்ற ஆதிப் பிரானே.


140

  1. ஒன்றது பேரூர் வழியா றதற்குள என்றது போல இருமுச் சமயமும் நனறிது தீதிது என்றுரை யாளர்கள் குன்று குரைத்தெழு நாயையொத் தார்களே.

141

  1. சைவப் பெருமைத் தனிநா யகன் தன்னை உய்ய வுயிர்க்கின்ற ஒண்சுடர் நந்தியை மெய்ய பெருமையர்க் கன்பனை இன்பஞ்செய் வையத் தலைவனை வந்தடைந் துய்மினே.

142

  1. சிவனவன் வைத்ததோர் தெய்வ நெறியிற் பவனவன் வைத்த பழவழி நாடி இவனவன் என்ப தறியவல் லார்கட் கவனவ னங்குள தாங்கட னாமே.

143

  1. ஆமா றுரைக்கும் அறுசம யாதிக்குப் போமாறு தானில்லை புண்ணிய மல்லதங் காமாம் வழியாக்கும் அவ்வே றுயிர்கட்கும் போமாறவ் வாதாரப் பூங்கொடி யாளே.

144

  1. அரனெறி யாவ தறிந்தேனும் நானுஞ் சிரநெறி தேடித்திரிந்த அந் நாளும் உரநெறி யுள்ளக் கடல்கடந் தேறுந் தரநெறி நின்ற தனிச்சுடர் தானே.

145

  1. தேர்ந்த அரனை அடைந்த சிவநெறி பேர்ந்தவர் உன்னிப் பெயர்ந்த பெருவழி ஆர்ந்தவர் அண்டத்துப் புக்க அருள்நெறி போந்து புனைந்து புணர்நெறி யாமே.

146

  1. ஈரு மனத்தை யிரண்டற வீசுமின் ஊருஞ் சகாரத்தை ஓதுமின் ஓதியே வாரு மரனெறி மன்னியே முன்னியத் தூருஞ் சுடரொளி தோன்றலு மாமே.

147

  1. மினற்குறி யாளனை வேதியர் வேதத் தனற்குறி யாளனை ஆதிப் பிரான்தன்னை நினைக்குறி யாளனை ஞானக் கொழுந்தின் நயக்குறி காணில் அரனெறி யாமே.

148

  1. ஆய்ந்துண ரார்களின் ஆன்மாச் சதுர்பல வாய்ந்துண ராவகை நின்ற அரனெறி பாய்ந்துணர் வார்அரன் சேவடி கைதொழு தேர்ந்துணர் செய்யவோர் இன்பமு மாமே.

149

  1. சைவ சமயத் தனிநா யகன்நந்தி உய்ய வகுத்த குருநெறி ஒன்றுண்டு தெய்வச் சிவநெறி சன்மார்க்கஞ் சேர்ந்துய்ய வையத்து ளார்க்கு வகுத்துவைத் தானே.

150

  1. இத்தவம் அத்தவம் என்றிரு பேரிடும் பித்தரைக் காணின் நகுமெங்கள் பேர்நந்தி எத்தவ மாகிலென் எங்குப் பிறக்கிலென் ஒத்துணர் வார்க்கொல்லை யூர்புக லாமே.

151

  1. ஆமே பிரான்முகம் ஐந்தொடு மாயிருர் ஆமே பிரானுக் கதோமுக மாறுள தாமே பிரானுக்குந் தன்சிர மாலைக்கும் நாமே பிரானுக்கு நரரியல் பாமே.

152

  1. ஆதிப் பிரானுல கேழும் அளந்தவன் ஓதக் கடலும் உயிர்களு மாய் நிற்கும் பேதிப் பிலாமையின் நின்ற பராசத்தி ஆதிக்கட் டெய்வமும் அந்தமும் மாமே.

153

  1. ஆய்ந்தறி வார்கள் அமரர்வித் தியாதரர் ஆய்ந்தறி யாவண்ணம் நின்ற அரனெறி ஆய்ந்தறித் தேனவன் சேவடி கைதொழு ஆய்ந்தறிந் தேனிம்மை அம்மைகண் டேனே.

154

  1. அறியவொண் ணாதவ் வுடம்பின் பயனை அறியவொண் ணாத அறுவகை யாக்கி அறியவொண் ணாத அறுவகைக் கோசத் தறியவொண் ணாததோர் அண்டம் பதிந்ததே.

ஒன்பதாம் தந்திரம்

1

==ஒன்பதாம் தந்திரம்== ===1.குருமட தரிசனம்=== 2648. பலியும் அவியும் பரந்து புகையும் ஒலியும்எம் ஈசன் றனக்கென்றே உள்கிக் குவியுங் குருமடங் கண்டவர் தாம்போய்த் தளிரும் மலரடி சார்ந்துநின் றாரே.


2

  1. இவனில்ல மல்லது அவனுக்கங் கில்லை அவனுக்கும் வேறில்லம் உண்டா அறியில் அவனுக் கிவனில்லம் என்றென் றறிந்தும் அவனைப் புறம்பென் றரற்றுகின் றாரே.

3

  1. நாடும் பெருந்துறை நான்கண்டு கொண்டபின் கூடும் சிவனது கொய்மலர்ச் சேவடி தேட வரியன் சிறப்பிலி எம்மிறை ஓடம் உலகுயி ராகிநின் றானே.

4

  1. இயம்புவன் ஆசனத் தோடு மலையும் இயம்புவன் சித்தக் குகையும் மடமும் இயம்புவன் ஆதாரத் தோடு வனமும் இயம்புவன் ஈரா றிருநிலத் தோர்க்கே.

5

  1. முகம்பீடம் மாமடம் முன்னிய தேயம் அகம்பர வர்க்கமே ஆசில்செய் காட்சி அகம்பர மாதனம் எண்எண் கிரியை சிதம்பரம் தற்குகை ஆதாரந் தானே.

6

  1. அகமுக மாம்பீடம் ஆதாரம் ஆகும் சகமுக மாஞ்சத்தி ஆதனம் ஆகும் செகமுக மாந்தெய்வ மேசிவ மாகும் அகமுகம் ஆய்ந்த அறிவுடை யோர்க்கே.

7

  1. மாயை யிரண்டும் மறைக்க மறைவுறும் காயமோ ரைந்துங் கழியத்தா னாகியே தூய பரஞ்சுடர் தோன்றச் சொரூபத்துள் ஆய்பவர் ஞானாதி மோனத்தர் ஆமே.

8

===2.ஞான குரு தரிசனம்=== 2655. ஆறொடு முப்பதும் அங்கே அடங்கிடின் கூறக் குருபரன் கும்பிடு தந்திடும் வேறே சிவபதம் மேலாய் அளித்திடும் பேறாக ஆனந்தம் பேணும் பெருகவே.


9

  1. துரியங்கள் மூன்றும் கடந்தொளிர் சோதி அரிய பரசிவம் யாவையும் ஆகி விரிவு குவிவற விட்ட நிலத்தே பெரிய குருபதம் பேசவொண் ணாதே.

10

  1. ஆயன நந்தி அடிக்கென் தலைபெற்றேன் வாயன நந்தியை வாழ்த்தவென் வாய்பெற்றேன் நந்தியைக் காணவென் கண்பெற்றேன் சேயன நந்திக்கென் சிந்தைபெற் றேனே.

11

  1. கருடன் உருவம் கருதும் அளவில் பருவிடம் தீர்ந்து பயங்கெடு மாபோல் குருவின் உருவங் குறித்தவப் போதே திரிமலந் தீர்ந்து சிவனவன் ஆமே.

12

  1. அண்ணல் இருப்பிட மாரும் அறிகிலர் அண்ணல் இருப்பிட மாய்ந்துகொள் வார்களுக்(கு) அண்ணல் அழிவின்றி உள்ளே அமர்ந்திடும் அண்ணலைக் காணின் அவனிவ னாமே.

13

  1. தோன்ற அறிதலும் தோன்றல்தோன் றாமையும் மான்ற அறிவும் மறிநன வாதிகள் மூன்றவை நீங்கும் துரியங்கள் மூன்றற ஊன்றிய நந்தி உயர்மோனத் தானே.

14

  1. சந்திர பூமிக் குடன்புரு வத்திடைக் கந்த மலரில் இரண்டிதழ்க் கன்னியும் பந்த மிலாத பளிங்கின் உருவினள் பந்தம் அறுத்த பரங்குரு பற்றே.

15

  1. மனம்புகுந் தானுல கேழும் மகிழ நிலம்புகுந் தானெடு வானிலம் தாங்கிச் சினம்புகுந் தான்றிசை எட்டும் நடுங்க வனம்புகுந் தானூர் வடக்கென்ப தாமே.

16

  1. தானான வண்ணமும் கோசமும் சார்தரும் தானாம் பறவை வனமெனத் தக்கன தானான சோடச மார்க்கந்தான் நின்றிடில் தானம் தசாங்கமும் வேறுள்ள தானே.

17

  1. மருவிப் பிரிவறியா எங்கள் மாநந்தி உருவ நினைக்கநின் றுள்ளே உருக்கும் கருவிற் கரந்துள்ளங் காணவல் லார்க்கிங்(கு) அருவினை கண்சோரும் அழிவஈரகத்தே.

18

  1. தலைப்படலாம் எங்கள் தத்துவன் றன்னைப் பலப்படு பாசம் அறுத்தறுத் திட்டு நிலைப்பெற நாடி நினைப்பற உள்கில் தலைப்பட லாகும் திருமமுந் தானே.

19

  1. நினைக்கின் நினைக்கும் நினைப்பவர் தம்மைச் சுனைக்குள் விளைமலர் சோதியி னானைத் தினைப்பிளந் தன்ன சிறுமைய ரேனும் கனத்த மனத்தடைந் தாலுயர்ந் தாரே.

20

  1. தலைப்படுங் காலத்துத் தத்துவன் றன்னை விலக்குறின் மேலை விதியென்று கொள்க அனைத்துல காய்நின்ற ஆதிப் பிரானை நினைப்பறு வார்பத்தி நேடிக்கொள் வாரே.

21

  1. நகழ்வொழிந் தாரவர் நாதனை யுள்கி நிகழ்வொழிந் தாரெம் பிரானொடுங் கூடித் திகழ்வொழிந் தார்தங்கள் சிந்தையி னுள்ளே புகழ்வழி காட்டிப் புகுந்துநின் றானே.

22

  1. வந்த மரகத மாணிக்க ரேகைபோல் சந்திடு மாமொழிச் சற்குரு சன்மார்க்கம் இந்த இரேகை இலாடத்தின் மூலத்தே சுந்தரச் சோதியுட் சோதியு மாமே.

23

  1. உண்ணும் வாயும் உடலும் உயிருமாய்க் கண்ணு மாயோகக் கடவுள் இருப்பது மண்ணு நீரனல் காலொடு வானுமாய் விண்ணு மின்றி வெளியானோர் மேனியே.

24

  1. பரசு பதியென்று பார்முழு தெல்லாம் பரசிவன் ஆணை நடக்கும் பாதியால் பெரிய பதிசெய்து பின்னாம் அடியார்க்(கு) உரிய பதியும்பா ராக்கிநின் றானே.

25

  1. அம்பர நாதன் அகலிடம் பூம்பொழில் தம்பர மல்லது தாமறி யோமென்பர் உம்பருள் வானவர் தானவர் கண்டிலர் எம்பெரு மானருள் பெற்றிருந் தாரே.

26

  1. கோவணங் கும்படி கோவண மாகிப்பின் நாவணங் கும்படி நந்தி அருள்செய்தான் தேவணங் கோமினிச் சித்தந் தெளிந்தனம் போய்வணங் கும்பொரு ளாயிருந் தோமே.

27

===3.பிரணவ சமாதி=== 2674. தூலப் பிரணவம் சொரூபானந்தப் பேருரை பாலித்த சூக்குமம் மேலைச் சொரூபப்பெண் ஆலித்த முத்திரை ஆங்கதிற் சூக்குமம் மேலைப் பிரணவம் வேதாந்த வீதியே.


28

  1. ஓமெனும் ஓங்காரத் துள்ளே ஒருமொழி ஓமெனும் ஓங்காரத் துள்ளே உருவரு ஓமெனும் ஓங்காரத் துள்ளே பலபேதம் ஓம்எனும் ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே.

29

  1. ஓங்காரத் துள்ளே உதித்த ஐம்பூதமும் ஓங்காரத் துள்ளே உதித்த சராசரம் ஓங்கார தீதத் துயிர்மூன்றும் உற்றன ஓங்கார சீவன் பரசிவ ரூபமே.

30

  1. வருக்கம் சுகமாம் பிரமமும் ஆகும் அருக்கஞ் சராசரம் ஆகும் உலகில் தருக்கிய ஆதார மெல்லாந்தன் மேனி சுருக்கமில் ஞானம் தொகுத்துணர்ந் தோரே.

31

  1. மலையும் மனோபவம் மருள்வன ஆவன நிலையில் தரிசனம் தீப நெறியாம் தலமுங் குலமுந் தவஞ்சித்த மாகும் நலமுஞ்சன் மார்க்கத் துபதேசந் தானே.

32

  1. சோடச மார்க்கமுஞ் சொல்லும்சன் மார்க்கிகட் காடிய ஈராறின் அந்தமும் ஈரேழிற் கூடிய அந்தமும் கோதண்ட முங்கடந் தேறிய ஞானஞே யாந்தத் திருக்கவே.

33

===4.ஒளி=== 2680. ஒளியை யறியில் உருவம் ஒளியும் ஒளியும் உருவம் அறியில் உருவாம் ஒளியின் உருவம் அறியில் ஒளியே ஒளியும் உருக உடனிருந் தானே.


34

  1. புகலெளி தாகும் புவனங்கள் எட்டும் அகலொளி தாயிரு ளாசற வீசும் பகலொளி செய்தது மத்தா மரையிலே இகலொளி செய்தெம் பிரானிருந் தானே.

35

  1. விளங்கொளி அங்கி விரிகதிர் சோமன் துளங்கொளி பெற்றன சோதி யருள வளங்கொளி பெற்றதே பேரொளி வேறு களங்கொளி செய்து கலந்துநின் றானே.

36

  1. இளங்கொளி ஈசன் பிறப்பொன்று மில்லி துளங்கொளி ஞாயிறுந் திங்களுங் கண்கள் வளங்கொளி அங்கி மற்றைக்கண் நெற்றி விளங்கொளி செய்கின்ற மெய்காயம் ஆமே.

37

  1. மேலொளி கீழதன் மேவிய மாருதம் பாரொளி யங்கி பரந்தொளி ஆகாசம் நீரொளி செய்து நெடுவிசும் பொன்றினும் மேலொளி ஐந்தும் ஒருங்கொளி யாமே.

38

  1. மின்னிய தூவொளி மேதக்க செவ்வொளி பன்னிய ஞானம் பரந்த பரத்தொளி துன்னிய வாறொளி தூய்மொழி நாடொறும் உன்னிய வாறொளி ஒத்தது தானே.

39

  1. விளங்கொளி மின்னொளி யாகிக் கரந்து துளங்கொளி ஈசனைச் சொல்லுமெப் போதும் உளங்கொளி யூனிடை நின்றுயிர்க் கின்ற வளங்கொளி எங்கும் மருவிநின் றானே.

40

  1. விளங்கொளி அவ்வொளி அவ்விருள் மன்னும் துளங்கொளி யான்தொழு வார்க்கும் ஒளியான் அளங்கொளி ஆரமு தாகநஞ் சாரும் களங்கொளி ஈசன் கருத்தது தானே.

41

  1. இலங்கிய தெவ்வொளி யவ்வொளி ஈசன் துலங்கொளி போல்வது தூங்கருட் சத்தி விளங்கொளி மூன்றே விரிசுடர் தோன்றி உளங்கொளி யுள்ளே ஒருங்குகின் றானே.

42

  1. உளங்கொளி யாவதென் உண்ணின்ற சீவன் வளங்கொளி யாநின்ற மாமணிச் சோதி விளங்கொளி யாய்மின்னி விண்ணில் ஒடுங்கி வளங்கொளி யாயத்து ளாகிநின் றானே.

43

  1. விளங்கொளி யாய்நின்ற விகிர்தன் இருந்த துளங்கொளி பாசத்துள் தூங்கிருள் சோர கலங்கிருள் நட்டமே கண்ணுத லாட விளங்கொளி யுன்மனத் தொன்றிநின் றானே.

44

  1. போது கருங்குழற் போனவர் தூதிடை ஆதி பரத்தை அமரர் பிரானொடும் சோதியும் அண்டத்தப் பாலுற்ற தூவொளி நீதியி னல்லிருள் நீக்கிய வாறே.

45

  1. உண்டில்லை யென்னும் உலகத் தியற்கை பண்டில்லை யென்னும் பரங்கதி யுண்டுகொல் கண்டில்லை மானுடர் கண்ட கருத்துறில் விண்டில்லை யுள்ளே விளங்கொளி யாமே.

46

  1. சுடருற ஓங்கிய ஒள்ளொளி யாங்கே படருறு காட்சிப் பகலவன் ஈசன் அடருறு மாயையின் ஆரிருள் வீசில் உடலுறு ஞானத் துறவியின் ஆமே.

47

  1. ஒளிபவ ளத்திரு மேனிவெண் ணீற்றன் அளிபவ ளச்செம்பொன் ஆதிப் பிரானும் களிபவ ளத்தினன் காரிருள் நீங்கி ஒளிபவ ளத்தென்னோ டீசன்நின் றானே.

48

  1. ஈசன்நின் றானிமை யோர்கள்நின் றார்நின்ற தேசமொன் றின்றித் திகைத்திழைக் கின்றனர் பாசமொன் றாலப் பழவினை பற்றற வாசமொன் றாமலர் போன்றது தானே.

49

  1. தானே யிருக்கும் அவற்றிற் றலைவனும் தானே யிருக்கு மவனென நண்ணிடும் வானா யிருக்குமாம் மாயிரு ஞாலத்துப் பானா யிருக்கப் பரவலு மாமே.

50

===5.தூல பஞ்சாக்கரம்=== 2697. ஐம்ப தெழுத்தே அனைத்துவே தங்களும் ஐம்ப தெழுத்தே அனைத்தா கமங்களும் ஐம்ப தெழுத்தின் அடைவை அறிந்தபின் ஐம்ப தெழுத்தே அஞ்செழுத் தாமே.


51

  1. அகார முதலாக ஐம்பத்தொன் றாகி உகார முதுலாக ஓங்கி யுதித்து மகாரா இறுதியாய் மாய்ந்து மாய்ந்தேறி நகார முதலாகும் நந்திதன் நாமமே.

52

  1. அகராதி ஈரெண் கலந்த பரையும் உகராதி தன்சத்தி உள்ளொளி ஈசன் சிகராதி தான்சிவ வேதமே கோணம் நகராதி தான்மூல மந்திர நண்ணுமே.

53

  1. வாயொடு கண்டம் இருதய மருவுந்தி ஆய இலிங்கம் அவற்றின்மே லேயவ்வாய்த் தூயதோர் துண்டம் இருமத் தகஞ்செல்லல் ஆயதீ றாமைந்தோ டாமெழுத் தஞ்சுமே.

54

  1. கிரணங்கள் ஏழும் கிளர்ந்தெரி பொங்கிக் கரணங்கள் விட்டுயிர் தானெழும் போதும் மரணங்கை வைத்துயிர் மாற்றிடும் போதும் அரணங்கை கூட்டுவ தஞ்செழுத் தாமே.

55

  1. ஞாயிறு திங்கள் நவின்றெழு காலத்தில் ஆயுறு மந்திரம் ஆரும் அறிகிலர் சேயுறு கண்ணி திருவெழுத் தஞ்சையும் வாயுற வோதி வழுத்தலும் ஆமே.

56

  1. தெள்ளமு தூறச் சிவாய நமவென் றுள்ளமு தூற ஒருகால் உரைத்திடும் வெள்ளமு தூறல் விரும்பி யுண்ணாதவர் துள்ளிய நீர்போற் சுழல்கின்ற வாறே.

57

  1. குருவழி யாய குணங்களி னின்று கருவழி யாய கணக்கை அறுக்க வரும்வழி மாள மறுக்கவல் லார்கட் கருள்வழி காட்டுவ தஞ்செழுத் தாமே.

58

  1. வெறிக்க வினைத்துயர் வந்திடும் போது செறிக்கின்ற நந்தி திருவெழுத் தோதும் குறிப்பது வுன்னிற் குரைகழல் கூட்டும் குறிப்பறி வான்றவம் கோனுரு வாமே.

59

  1. நெஞ்சு நினைந்துதம் வாயாற் பிரானென்று துஞ்சும் பொழுதுன் துணைத்தாள் சரண்என்று மஞ்சு தவழும் வடவரை மீதுறை அஞ்சில் இறைவன் அருள்பெற லாமே.

60

  1. பிரான் வைத்த ஐந்தின் பெருமை உணரா திரா மாற்றஞ் செய்வார்கொல் ஏழை மனிதர் பரா முற்றும் கீழொடு பல்வகை யாலும் அரா முற்றுஞ் சூழ்ந்த அகலிடந் தானே.

61

===6.சூக்கும பஞ்சாக்கரம்=== 2708. எளிய வாதுசெய் வாரெங்கள் ஈசனை ஒளியை யுன்னி யுருகு மனத்தராய்த் தெளிய ஓதிச் சிவாய நமவென்னும் குளிகை யிட்டுப்பொன் ஆக்குவன் கூட்டையே.


62

  1. சிவன்சத்தி சீவன் செறுமல மாயை அவஞ்சேர்த்த பாச மலமைந் தகலச் சிவன்சத்தி தன்னுடள் சீவனார் சேர அவஞ்சேர்த்த பாசம் அணுக கிலாவே.

63

  1. சிவனரு ளாய சிவன்திரு நாமம் சிவனருள் ஆன்மாத் திரோத மலமாயை சிவமுத லாகச் சிறந்து நிரோதம் பவம தகன்று பரசிவன் ஆமே.

64

  1. ஓதிய நம்மலம் எல்லாம் ஒழித்திட்டவ் வாதி தனைவிட் டிறையருட் சத்தியால் தீதில் சிவஞான யோகமே சித்திக்கும் ஓதுஞ் சிவாய மலமற்ற உண்மையே.

65

  1. நமாதி நனாதி திரோதாயி யாகித் தமாதி யதாய்நிற்கத் தானந்தத் துற்றுச் சமாதித் துரியந் தமதாக மாகவே நமாதி சமாதி சிவவாதல் எண்ணவே.

66

  1. அருள்தரு மாயமும் அத்தனும் தம்மில் ஒருவனை ஈன்றவள் உள்ளுறு மாயை திரிமலம் நீங்கிச் சிவாயவென் றோதும் அருவினை தீர்ப்பதும் அவ்வெழுத் தாமே.

67

  1. சிவசிவ என்றே தெளிகிலர் ஊமர் சிவசிவ வாயுவுந் தேர்ந்துள் அடங்கச் சிவசிவ வாய தெளிவினுள் ளார்கள் சிவசிவ வாகும் திருவரு ளாமே.

68

  1. சிவசிவ என்கிலர் தீவினை யாளர் சிவசிவ என்றிடத் தீவினை மாளும் சிவசிவ என்றிடத் தேவரும் ஆவர் சிவசிவ என்னச் சிவகதி தானே.

69

  1. நமவென்னும் நாமத்தை நாவில் ஒடுக்கிச் சிவவென்னும் நாமத்தைச் சிந்தையுள் ஏற்றப் பவமது தீரும் பரிசும தற்றால் அவமதி தீரும் அறும்பிறப் பண்றோ.

70

===7.அதிசூக்கும பஞ்சாக்கரம்=== 2717. சிவாய நமஎனச் சித்தம் ஒருக்கி அவாயம் அறவே அடிமைய தாக்கிச் சிவாய சிவசிவ என்றென்றே சிந்தை அவாயங் கெடநிற்க ஆனந்தம் ஆமே.


71

  1. செஞ்சுடர் மண்டலத் தூடுசென் றப்புற மஞ்சண வும்முறை ஏறி வழிக்கொண்டு துஞ்சு மவன்சொன்ன காலத் திறைவனை நெஞ்சென நீங்கா நிலைபெறல் ஆகுமே.

72

  1. அங்கமும் ஆகம வேதம தோதினும் எங்கள் பிரான்எழுத் தொன்றில் இருப்பது சங்கைகெட் டவ்வெழுத் தொன்றையுஞ் சாதித்தால் அங்கரை சேர்ந்த அருங்கலம் ஆமே.

73

  1. பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே விழித்தங் குறங்கும் விளைவறி வாரில்லை எழுத்தறி வோமென் றுரைப்பர்கள் ஏதர் எழுத்தை அழுத்தும் எழுந்தறி யாரே.

74

===8.திருக்கூத்துத் தரிசனம்=== 2721. எங்குந் திருமேனி எங்குஞ் சிவசத்தி எங்குஞ் சிதம்பரம் எங்குந் திருநட்டம் எங்குஞ் சிவமா யிருத்தலாவ் எங்கெங்கும் எங்குஞ் சிவனரு டன்விளை யாட்டே.


75

  1. சிற்பரஞ் சோதி சிவானந்தக் கூத்தனைச் சொற்பத மாமந்தச் சுந்தரக் கூத்தனைப் பொற்பதிக் கூத்தனைப் பொற்றில்லைக் கூத்தனை அற்புதக் கூத்தனை ஆரறி வாரே. ====சிவானந்தக் கூத்து==== 2723. தானந்த மில்லாச் சதானந்த சத்திமேல் தேனுந்தும் ஆனந்த மாநடங் கண்டீர் ஞானங் கடந்து நடஞ்செய்யும் நம்பிக்கங் கானந்தக் கூத்தாட ஆடரங் கானதே.

76

  1. ஆனந்தம் ஆடரங் கானந்தம் பாடல்கள் ஆனந்தம் பல்லியம் ஆனந்தம் வாச்சியம் ஆனந்த மாக அகில சராசரம் ஆனந்தம் ஆனந்தக் கூத்துகந் தானுக்கே.

77

  1. ஒளியாம் பரமும் உளதாம் பரமும் அளியார் சிவகாமி யாகுஞ் சமயக் களியார் பரமும் கருத்துறை யந்தத் தெளிவாஞ் சிவானந்த நட்டத்தின் சித்தியே.

78

  1. ஆன நடமைந் தகள சகளத்தர் ஆன நடமாடி ஐங்கருமத் தாகம் ஆன தொழிலருளா லைந்தொழில் செய்தே தேன்மொழி பாகன் திருநட மாடுமே.

79

  1. பூதாண்ட பேதாண்ட போகாண்ட யோகாண்ட மூதாண்ட முத்தாண்ட மோகாண்ட தேகாண்ட தாகாண்ட மைங்கரு மத்தாண்ட தற்பரத் தேகாந்த மாம்பிர மாண்டத்த என்பவே.

80

  1. வேதங்கள் ஆட மிகுஆ கமமாடக் கீதங்கள் ஆடக் கிளர்அண்டம் ஏழாடப் பூதங்கள் ஆடப் புவன முழுதாட நாதங்கொண் டாடினான் ஞானானந்தக் கூத்தே.

81

  1. பூதங்க ளைந்திற் பொறியிற் புலனைந்தில் வேதங்க ளைந்தில் மிகுமா கமந்தன்னில் ஓதுங் கலைகாலம் ஊழி யுடன்அண்டம் போதங்கள் ஐந்தில் புணர்ந்தாடும் சித்தனே.

82

  1. தேவர் சுரர்நரர் சித்தர்வித் தியாதரர் மூவர்கள் ஆதியின் முப்பத்து மூவர்கள் தாபதர் சத்தர் சமயஞ் சராசரம் யாவையும் ஆடிடும் எம்மிறை யாடவே.

83

====சுந்தரக் கூத்து==== 2731. அண்டங்கள் ஏழினுக் கப்புறத் தப்பால் உண்டென்ற சத்தி சதாசிவத் துச்சிமேல் கண்டங் கரியான் கருணைத் திருவுருக் கொண்டங் குமைகாணக் கூத்துகந் தானே.


84

  1. கொடுகொட்டி பாண்டரங் கோடு சங்காரம் நடமெட்டோ டைந்தாறு நாடியின் நாடுந் திடமுற் றெழுந்தேவ தாருவாந் தில்லை வடமுற்ற மாவன மன்னவன் தானே.

85

  1. பரமாண்டத் தூடே பராசத்தி பாதம் பரமாண்டத் தூடே படரொளி ஈசன் பரமாண்டத் தூடே படர்தரு நாதம் பரமாண்டத் தூடே பரனடம் ஆடுமே.

86

  1. அங்குச மென்ன எழுமார்க்கம் போதத்தில் தங்கிய தொந்தி எனுந்தாள் ஒத்தினில் சங்கரன் மூலநா டிக்குள் தரித்தாடல் பொங்கிய காலம் புகும்போகல் இல்லையே.

87

  1. ஆனத்தி யாடிப் பின்னவக் கூத்தாடிக் கானத்தி யாடிக் கருத்தில் தரித்தாடி மூனச் சுழுனையுள் ஆடி முடிவில்லா ஞானத்துள் ஆடி முடித்தான்என் நாதனே.

88

  1. சத்திகள் ஐந்தும் சிவபேதந் தானைந்தும் முத்திகள் எட்டும் முதலாம் பதமெட்டும் சித்திகள் எட்டும் சிவபதம் தானெட்டும் சுத்திகள் எட்டீசன் தொல்நடம் ஆடுமே.

89

  1. மேகங்கள் ஏழும் விரிகடல் தீவேழும் தேகங்கள் ஏழும் சிவபாற் கரனேழும் தாகங்கள் ஏழும் சாந்திகள் ஏழும் ஆகின்ற நந்தி யடிக்கீழ் அடங்குமே.

90

====பொற்பதிக் கூத்து==== 2738. தெற்கு வடக்குக் கிழக்குமேற் குச்சியில் அற்புத மானதொ ரஞ்சு முகந்திலும் ஒப்பில்பே ரின்பத் துபய உபயத்துள் தற்பரன் நின்று தனிநடஞ் செய்யுமே.


91

  1. அடியார் அரனடி யானந்தங் கண்டோர் அடியா ரானவர் அத்தருள் உற்றோர் அடியார் பவரே அடியவ ராமால் அடியார்பொன் னம்பலத் தாடல்கண் டாரே.

92

  1. அடங்காத என்னை அடக்கி அடிவைத்(து) இடங்காண் பரானந்தத் தேயென்னை யிட்டு நடந்தான் செயும்நந்த நன்ஞானக் கூத்தன் படந்தான்செய் துள்ளுட் படிந்திருந் தானே.

93

  1. உம்பரிற் கூத்தனை உத்தமக் கூத்தனைச் செம்பொற் றிருமன்றுட் சேவகக் கூத்தனைச் சம்பந்தக் கூத்தனைத் தற்பரக் கூத்தனை இன்புற நாடியென் அன்பில்வைத் தேனே.

94

  1. மாணிக்கக் கூத்தனை வண்தில்லைக் கூத்தனைப் பூணுற்ற மன்றுட் புரிசடைக் கூத்தனை சேணுற்ற சோதிச் சிவானந்தக் கூத்தனை ஆணிப்பொற் கூத்தனை ஆருரைப் பாரே.

95

  1. விம்மும் வெருவும் விழுமெழும் மெய்சோரும் தம்மையுந் தாமறி யார்கள் சதுர்கெடும் செம்மை சிறந்த திருவம் பலக்கூத்துள் அம்மலர்ப் பொற்பாதத் தன்புவைப் பார்கட்கே.

96

  1. தேட்டறும் சிந்தை திகைப்பறும் பிண்டத்துள் வாட்டறும் கால்புந்தி யாகி வரும்புலன் ஓட்டறும் ஆசை யறும்உளத் தானந்த நாட்ட முறுக்குறு நாடகங் காணவே.

97

  1. காளியோ டாடிக் கனகா சலத்தாடிக் கூளியோ டாடிக் குவலயத் தேயாடி நீடிய நீர்தீகால் நீள்வா னிடையாடி நாளுற அம்பலத் தேயாடும் நாதனே.

98

  1. மேரு நடுநாடி மிக்கிடை பிங்கலை கூருமிவ் வானின் இலங்கைக் குறியுறும் சாருந் திலைவனத் தண்மா மலயத்தூ டேறுஞ் சுழுனை இவைசிவ பூமியே.

99

  1. பூதல மேருப் புறத்தான தெக்கணம் ஓதும் இடைபிங் கலைஒண் சுழுனையாம் பாதி மதியோன் பயில்திரு அம்பலம் ஏதமில் பூதாண்டத் தெல்லையின் ஈறே.

100

====பொற்றில்லைக் கூத்து==== 2748. அண்டங்கள் ஓரேழும் அம்பொற் பதியாகப் பண்டையா காசங்கள் ஐந்தும் பதியாகத் தெண்டினிற் சத்தி திருவம் பலமாகக் கொண்டு பரஞ்சோதி கூத்துகந் தானே.


101

  1. குரானந்த ரேகையாய்க் கூர்த்த குணமாம் சிரானந்தம் பூரித்துத் தென்றிசை சேர்ந்து புராணந்த போகனாய்ப் பூவையுந் தானும் நிரானந்த மாகி நிருத்தஞ்செய் தானே.

102

  1. ஆதி பரனாட அங்கைக் கனலாட ஓதுஞ் சடையாட உன்மத்த முற்றாடப் பாதி மதியாடப் பாரண்ட மீதாட நாதமோ டாடினான் நாதாந்த நட்டமே.

103

  1. கும்பிட அம்பலத் தாடிய கோனடம் அம்பர னாடும் அகிலாண்ட நட்டமாம் செம்பொரு ளாகுஞ் சிவலோகஞ் சேர்ந்துற்றால் உம்பர மோனஞா னாந்தத்தில் உண்மையே.

104

  1. மேதினி மூவேழ் மிகுமண்டம் ஒரேழு சாதக மாகுஞ் சமயங்கள் நூற்றெட்டு நாதமோ டந்த நடானந்த நாற்பதப் பாதியோ டாடிப் பரனிரு பாதமே.

105

  1. இடைபிங் கலையிம வானோ டிலங்கை நடுநின்ற மேரு நடுவாஞ் சுழுனை கடவுந் திலைவனங் கைகண்ட மூலம் படர்வொன்றி யென்ற பரமாம் பரமே.

106

  1. ஈறான கன்னி குமரியே காவிரி வேறா நவதீர்த்த மிக்குள்ள வெற்பேழும் பேறான வேதா கமமே பிறத்தலான் மாறாத தென்றிசை வையகஞ் சுத்தமே.

107

  1. நாதத் தினிலாடி நாற்பதத்தே யாடி வேதத்தில் ஆடித் தழலந்த மீதாடிப் போதத்தில் ஆடிப் புவன முழுதாடும் தீதற்ற தேவாதி தேவர் பிரானே.

108

  1. தேவரோ டாடித் திருவம் பலத்தாடி மூவரோ டாடி முனிசனத் தோடாடிப் பாவினு ளாடி பராசத் தியிலாடிக் கோவினுள் ஆடிடும் கூத்தப் பிரானே.

109

  1. ஆறு முகத்தில் அதிபதி நானென்றும் கூறு சமயக் குருபரன் நானென்றும் தேறினர் தெற்குத் திருவம் பலத்துளே வேறின்றி அண்ணல் விளங்கிநின் றானே.

110

  1. அம்பலம் ஆடரங் காக அதன்மீதே எம்பரன் ஆடும் இருதாளின் ஈரொளி உம்பர மாமைந்து நாதத்து ரேகையுள் தம்பர மாய்நின்று தான்வந் தருளுமே.

111

  1. ஆடிய காலும் அதிற்சிலம் பொலியும் பாடிய பாட்டும் பலவான நட்டமும் கூடிய கோலங் குருபரன் கொண்டாடத் தேடியு ளேகண்டு தீர்ந்தற்ற வாறே.

112

  1. இருதயந் தன்னில் எழுந்த பிராணன் கரசர ணாதி கலக்கும் படியே அரதன மன்றினில் மாணிக்கக் கூத்தன் குரவனாய் எங்கும் கூத்துகந் தானே.

113

  1. குருவுரு வன்றிக் குனிக்கும் உருவம் அருவுரு வாவதும் அந்த அருவே திரிபுரை யாகித் திகழ்தரு வாளும் உருவரு வாகும் உமையவள் தானே.

114

  1. திருவழி யாவது சிற்றம் பலத்தே குருவடி வுள்ளாக் குனிக்கும் உருவே உருவரு வாவதும் முற்றுணர்ந் தோர்க்கு அருள்வழி யாவதும் அவ்வழி தானே.

115

  1. நீடுஞ் சிரசிடைப் பன்னிரண் டங்குலம் ஓடும் உயிரெழுந் தோங்கி உதித்திட் நாடுமின் நாதாந்த நம்பெரு மானுகந்(து) ஆடு மிடந்திரு வம்பலத் தானே.

116

  1. வளிமேக மின்வில்லு வானக வோசை தெளிய விசும்பில் திகழ்தரு மாறுபோல் களியொறி யாறுங் கலந்துடன் வேறாய் ஒளியுரு வாகி ஒளித்துநின் றானே.

117

  1. தீமுத லைந்தும் திசையெட்டும் கீழ்மேலும் ஆயும் அறிவினும் அப்புறம் ஆனந்தம் மாயைமா மாயை கடந்துநின் றார்காண நாயகன் நின்று நடஞ்செயு மாறே.

118

  1. கூத்தன் கலந்திடும் கோல்வளை யாளொடும் கூத்தன் கலந்திடும் கோதிலா ஆனந்தம் கூத்தன் கலந்திடும் கோதிலா ஞானத்துக் கூத்தனுங் கூத்தியுங் கூத்தத்தின் மேலே.

119

  1. இடங்கொண்ட சத்தியும் எந்தை பிரானும் நடங்கொண்டு நின்றமை நானும் அறிந்தேன் படங்கொண்டு நின்றவிப் பல்லுயிர் எல்லாம் அடங்கலுந் தாமாய்நின் றாடுகின் றாரே.

120

  1. சத்தி வடிவு சகல ஆனந்தமும் ஒத்த ஆனந்தம் உமையவள் மேனியாம் சத்தி வடிவு சகளத் தெழுந்திரண்(டு) ஒத்த ஆனந்தம் ஒருநட மாமே.

121

  1. நெற்றிக்கு நேரே புருவத் திடைவெளி உற்றுற்றுப் பார்க்க ஒளிவிடு மந்திரம் பற்றுக்குப் பற்றாய்ப் பரமன் இருந்திடம் சிற்றம் பலமென்று சேர்ந்துகொண் டேனே.

122

  1. அண்டங்கள் தத்துவ மாகிச் சதாசிவம் தண்டினிற் சாத்தவி சாம்பவி யாதனம் தெண்டினில் ஏழுஞ் சிவாசன மாகவே கொண்டு பரஞ்சோதி கூத்துகந் தானே.

123

  1. மன்று நிறைந்த விளக்கொறி மாமலர் நன்றிது தானிதழ் நாலோடு நூறவை சென்றது தானொரு பத்திரு நூறுள நின்றது தானெடு மண்டல மாமே.

124

  1. அண்டம் எழுகோடி பிண்டம் எழுகோடி தெண்டிரை சூழ்ந்த திசைகள் எழுகோடி எண்டிசை சூழ்ந்த இலிங்கம் எழுகோடி அண்ட னடஞ்செயும் ஆலயந் தானே.

125

  1. ஆகாச மாமுடல் அங்கார் முயலகன் ஏகாச மாந்திசை எட்டுந் திருக்கைகள் மோகாய முக்கண்கள் மூன்றொளி தானாக மாகாய மன்றுள் நடஞ்செய்கின் றானே.

126

  1. அம்பல மான தகில சராசரம் அம்பல மாவது ஆதிப் பிரானடி அம்பல மாவ தப்புத்தீ மண்டலம் அம்பல மாவ தஞ்செழுத் தாமே.

127

  1. கூடிய திண்முழ வங்குழ லோமென்ன ஆடிய மானுடர் ஆதிப் பிரானென்ன நாடிய நற்கண மாரம்பல் பூதங்கள் பாடிய வாறொரு பாண்டரங் காமே.

128

  1. அண்டத்தில் தேவர்கள் அப்பாலைத் தேவர்கள் தெண்டிரை சூழ்புவிக் குள்ளுள்ள தேவர்கள் புண்டரி கப்பதப் பொன்னம் பலக்கூத்துக் கண்டு சேவித்துக் கதிபெறு வார்களே.

129

  1. புளிக்கண் டவர்க்குப் புனலூறு மாபோல் களிக்குந் திருக்கூத்துக் கண்டவர்க் கெல்லாம் துளிக்கும் அருட்கண்ணீர் சோர்நெஞ் சுருக்கும் ஒளிக்குளா னந்தத் தமுதூறும் உள்ளத்தே.

130

  1. திண்டாடி வீழ்கை சிவானந்த மாவது உண்டார்க் குணர்வுண்டால் உன்மத்தஞ் சித்திக்கும் கொண்டாடு மன்றுட் குளிக்குந் திருக்கூத்துக் கண்டார் வருங்குணங் கேட்டார்க்கும் ஒக்குமே.

131

  1. அங்கி தமருகம் அக்குமா லைப்பாசம் அங்குசஞ் சூலங் கபால முடன்ஞானம் தங்கு பயந்தரு நீல மும்முடன் மங்கையோர் பாகமாய் மாநட மாடுமே.

132

  1. ஆடல் பதினோ ருறுப்பும் அடைவாகக் கூடிய பாதஞ் சிலம்புகை கொள்துடி நீடிய நாதம் பராற்பர நேயத்தே ஆடிய நந்தி புறமாகத் தானே.

133

  1. ஒன்பது மாட ஒருபதி னாறாட அன்புறு மார்க்கங்கள் ஆறும் உடனாட இன்புறும் ஏழினும் ஏழைம்பத் தாறாட அன்பதும் ஆடினான் ஆனந்தக் கூத்தே.

134

  1. ஏழினில் ஏழாய் இகந்தெழுத் தேழதாய் ஏழினில் ஒன்றாய் இழிந்தமைந் தொன்றாய் ஏழினிற் சன்மார்க்கம் எங்கள் பரஞ்சோதி ஏழிசை நாடகத் தேஇசைந் தானே.

135

  1. மூன்றினில் அஞ்சாகி முந்நூற் றறுபதாய் மூன்றினில் ஆறாய் முதற்பன்னீர் மூலமாய் முன்றினில் அக்க முடிவாகி முந்தியே மூன்றினும் ஆடினான் மோகாந்தக் கூத்தே.

136

  1. தாமுடி வானவர் தம்முடி மேலுறை மாமணி ஈசன் மலரடித் தாளிணை வாமணி யன்புடை யார்மனத் துள்ளெழும் காமணி ஞாலங் கடந்துநின் றானே.

137

  1. புரிந்தவ னாடிற் புவனங்க ளாடும் தெரிந்தவ னாடும் அளவெங்கள் சிந்தை புரிந்தவ னாடிற்பல் பூதங்கள் ஆடும் எரிந்தவ னாடல்கண் டின்புற்ற வாறே.

138

  1. ஆதி நடஞ்செய்தான் என்பர்கள் ஆதர்கள் ஆதி நடஞ்செய்தல் ஆரும் அறிகிலர் ஆதி நடமாடல் ஆரும் அறிந்தபின் ஆதி நடமாட லாமருட் சத்தியே.

139

  1. ஒன்பதோ டொன்பதாம் உற்ற இருபதத் தன்புறு கோணம் அசிபதத் தாடிடத் துன்புறு சத்தியுள் தோன்றிநின் றாடவே அன்புறு மெந்தைநின் றாடலுற் றானே.

140

  1. தத்துவம் ஆடச் சதாசிவம் தானாடச் சித்தமும் ஆடச் சிவசத்தி தானாட வைத்த சராசரம் ஆட மறையாட அத்தனும் ஆடினான் ஆனந்தக் கூத்தே.

141

  1. இருவருங் காண எழிலன் பலத்தே உருவோ டருவோ டுருபர ரூபமாய்த் திருவருட் சத்திக்குள் சித்தனா னந்தனன் அருளுரு வாகநின் றாடலுற் றானே.

142

  1. சிவமாடச் சத்தியும் ஆடச் சகத்தில் அவமாட ஆடாத அம்பரம் ஆட நவமான தத்துவ நாதாந்த மாடச் சிவமாடும் வேதாந்த சித்தாந்தத் துள்ளே.

143

  1. நாதத்தின் அந்தமும் நற்போத அந்தமும் வேதத்தின் அந்தமும் மெய்ச்சிவா னந்தமும் தாதற்ற நல்ல சதாசிவா னந்தத்து நாதப் பிரமம் சிவநடம் ஆமே.

144

  1. சிவமாதி ஐவர்திண் டாட்டமுந் தீரத் தவமார் பசுபாசம் ஆங்கே தனித்துத் தவமாம் பரனெங்குந் தானாக ஆடுந் தவமாங் சிவானந்தத் தோர்ஞானக் கூத்தே.

145

  1. கூடிநின் றானொரு காலத்துத் தேவர்கள் வீடநின் றான்விகிர் தாவென்னும் நாமத்தைத் தேடநின் றான்திக ழுஞ்சுடர் மூன்றொளி ஆடநின் றானென்னை ஆட்கொண்ட வாறே.

146

  1. நாதந் துவங்கடந் தாதி மறைநம்பி பூதத் துவத்தே பொலிந்தின்பம் எய்தினர் நேதத துவமும் அவற்றொடு நேதியும் பேதப் படாவண்ணம் பின்னிநின் றானே.

147

  1. ஆனந்த மானந்த மென்பர் அறிவிலர் ஆனந்த மாநடம் ஆரும் அறிகிலர் ஆனந்த மாநடம் ஆரும் அறிந்தபின் தானந்த மற்றிடம் ஆனந்த மாமே.

148

  1. திருந்துநற் சீயென் றுதறிய கையும் அருந்தவர் வாவென் றணைத்த மணிக்கையும் பொருந்தில் இமைப்பிலி யவ்வென்ற பொற்கையும் திருந்நத்தீ யாகும் திருநிலை மவ்வே.

149

  1. மருவுந் துடியுடன் மன்னிய வீச்சும் அருவிய அப்பும் அனலுடன் கையும் கருவின் மித்த கமலப் பதமும் உருவில் சிவாய நமவென ஓதே.

150

  1. அரன்துடி தோற்றம் அமைத்தல் திதியாம் அரனங்கி தன்னில் அறையில் சங்காரம் அரனுற் றணைப்பி லணையுந் திரோதாயி அரனடி யென்று மனுக்கிரகம் என்னே.

151

  1. தீத்திரட் சோதி திகழொளி உள்ளொளி கூத்தனைக் கண்டவக் கோமளக் கண்ணினள் மூர்த்திகள் மூவர் முதல்வ னிடைசெல்லப் பார்த்தனள் வேதங்கள் பாடினள் தானே.

152

  1. நந்தியை எந்தையை ஞானத் தலைவனை மந்திரம் ஒன்றுள் மருவி யதுகடந் தந்தர வானத்தின் அப்புறத் தப்பர சுந்தரக் கூத்தனை என்சொல்லு மாறே.

153

  1. சீய குருநந்தி திருவம்ப லத்திலே ஆயறு மேனியை யாரு மறிகிலர் தீயறு செம்மை வெளுப்பொடு மத்தன்மை யாயறு மேனி யணைபுக லாமே.

154

  1. தானான சத்தியுந் தற்பரை யாய்நிற்குந் தானாம் பரற்கும் உயிர்க்குந் தகுமிச்சை ஞானாதி பேத நடத்து நடித்தருள் ஆனா லரனடி நேயத்த தாமே.

155

===9.ஆகாசப் பேறு=== 2803. உள்ளத்துள் ஓமென ஈசன் ஒருவனை உள்ளத்து ளேஅங்கி யாய ஒருவனை உள்ளத்து ளேநீதி யாய ஒருவனை உள்ளத்து ளேயுடல் ஆகாச மாமே.


156

  1. பெருநில மாயண்ட மாயண்டத் தப்பால் குருநில மாய்நின்ற கொள்கையன் ஈசன் பெருநில மாய்நின்று தாங்கிய தாளோன் அருநிலை யாய்நின்ற ஆதிப் பிரானே.

157

  1. அண்ட ஒளியும் அகண்ட ஒளியுடன் பிண்ட ஒளியாற் பிதற்றும் பெருமையை உண்ட வெளிக்குள் ஒளிக்குள் ஒளித்தது கொண்ட குறியைக் குலைத்தது தானே.

158

  1. பயனுறு கன்னியர் போகத்தி னுள்ளே பயனுறும் ஆதிப் பரஞ்சுடர்ச் சோதி அயனொடு மலாறி யாவகை நின்றிட்டு உயர்நெறி யாயொளி ஒன்றது வாமே.

159

  1. அறிவுக் கறிவாம் அகண்ட ஒளியும் பிறியா வலத்தினிற் பேரொளி மூன்றும் அறியா தடங்கிடில் அத்தன் அடிக்குள் பிறியா திருக்கிற் பெருங்காலம் ஆமே.

160

  1. ஆகாச வண்ணன் அமரர் குலக்கொழுந்(து) ஏகாச மாசுண மிட்டங் கிருந்தவன் ஆகாச வண்ணம் அமர்ந்துநின் றப்புறம் அகாச மாயங்கி வண்ணனும் ஆமே.

161

  1. உயிர்க்கின்ற வாறும் உலகமும் ஒக்க உயிர்க்கின்ற உள்ளொளி சேர்கின்ற போது குயிற்கொண்ட பேதை குலாவி யுலாவி வெயிற்கொண்டென் உள்ளம் வெளியது வாமே.

162

  1. நணுகில் அகல்கிலன் நாதன் உலகத் தணுகில் அகன்ற பெரும்பதி நந்தி நணுகிய மின்னொளி சோதி வெளியைப் பணியின் அமுதம் பருகலும் ஆமே.

163

  1. புறத்துளா காசம் புவனம் உலகம் அகத்துளா காசமெம் மாதி யறிவு சிவத்துளா காசம் செழுஞ்சுடர்ச் சோதி சகத்துளா காசம் தானஞ் சமாதியே.

164

===10.ஞானோதயம்=== 2812. மனசந் தியிற்கண்ட மன்னன வாகும் கனவுற வானந்தங் காண்ட லதனை வினவுற ஆனந்த மீதொழி வென்ப இனமுற்றா னந்தியா னந்தம் இரண்டே.


165

  1. கரியட்ட கையன் கபாலங்கை யேந்தி எரியும் இளம்பிறை சூடுமெம் மானை அரியன் பெரியனென் றாட்பட்ட தல்லால் கரியன்கொல் சேயன்கொல் காண்கின்றி லேனே.

166

  1. மிக்கார் அமுதுண்ண நஞ்சுண்ட மேலவன் தக்கார் உரைத்த தவநெறியே சென்று புக்கால் அருளும் பொன்னுரை ஞானத்தை நக்கார் கழல்வழி நாடுமின் நீவிரே.

167

  1. விளக்கைப் பிளந்து விளக்கினை ஏற்றி விளக்கினுக் குள்ளே விளக்கினைத் தூண்டி விளக்கீல் விளக்கை விளக்க வல்லார்க்கு விளக்குடை யான்கழல் மேவலும் ஆமே.

168

  1. தத்துவம் எங்குண்டு தத்துவன் அங்குண்டு தத்துவம் எங்கில்லை தத்துவன் அங்கில்லை தத்துவ ஞானத்தின் தன்மை யறிந்தபின் தத்துவ னங்கே தலைப்படுந் தானே.

169

  1. விசும்பொன்று தாங்கிய மெய்ஞ்ஞானத் துள்ளே அசும்பினின் றூறிய தாரமு தாகும் பசும்பொன் திகழும் படர்சடை மீதே குசும்ப மலர்க்கந்தம் கூடிநின் றானே.

170

  1. முத்தின் வயிரத்தின் முந்நீர்ப் பவளத்தின் கொத்தும் பசும்பொன்னின் தூவொளி மாணிக்கம் ஒத்துயர் அண்டத் துள்ளமர் சோதியை எத்தன்மை வேறென்று கூறுசெய் வீரே.

171

  1. நானென்றுந் தானென்றும் நாடினேன் நாடலும் நானென்று தானென் றிரண்டில்லை என்பது நானென்ற ஞான முதல்வனே நல்கினான் நானென்று நானும் நினைப்பொழிந் தேனே.

172

  1. ஞானத்தின் நன்னெற நாதாந்த நன்னெறி ஞானத்தின் நன்னெறி நானென் றறிவோர்தல் ஞானத்தின் நல்யோக நன்னிலை யேநிற்றல் ஞானத்தின் நன்மோன நாதாந்த வேதமே.

173

  1. உய்யவல் லார்கட் குயிர்சிவ ஞானமே உய்யவல் லார்கட் குயிர்சிவ தெய்வமே உய்யவல் லார்கட் கொடுக்கம் பிரணவம் உய்யவல் லாரறி வுள்ளறி வாமே.

174

  1. காணவல் லார்க்கவன் கண்ணின் மணியொக்கும் காணவல் லார்க்குக் கடலின் அமுதொக்கும் பேணவல் லார்க்குப் பிழைப்பிலன் பேர்நந்தி ஆணவல் லார்க்கே அவன்றுணை யாமே.

175

  1. ஓமெனும் ஓரெழுத் துள்நின்ற ஓசைபோல் மேனின்ற தேவர் விரும்பும் விழுப்பொருள் சேய்நின்ற செஞ்சுடர் எம்பெரு மானடி ஆய்நின்ற தேவர் அகம்படி யாமே.

176

===11.சத்திய ஞானானந்தம்=== 2824. எப்பாழும் பாழும் யாவுமாய் அன்றாகி முப்பாழும் கீழுள முப்பாழு முன்னியே இப்பாழும் இன்னவா றென்ப திலாவின்பத் தற்பரஞா னானந்தந் தானது வாகுமே.


177

  1. தொம்பதம் தற்பதம் சொன்ன துரியம்போல் நம்பிய மூன்றாந் துரியத்து நன்றாகும் அம்புவி யுண்ணா அதிசூக்க மப்பாலைச் செம்பொரு ளாண்டருள் சீர்நந்தி தானே.

178

  1. மன்னும்சத் தியாதி மணியொளி மாசோபை அன்னதோ டொப்பம் இடலொன்றா மாறது இன்னிய உற்பலம் ஒண்சீர் நிறமணம் பன்னிய சோபை பகர் ஆறு மானதே.

179

  1. சத்தி சிவன்பர ஞானமும் சாற்றுங்கால் உய்த்த அனந்தம் சிவமுயர் ஆனந்தம் வைத்த சொரூபத்த சத்தி வருகுரு உய்த்த உடலிவை உற்பலம் போலுமே.

180

  1. உருவுற் பலநிற மொண்மணஞ் சோபை தரநிற்ப போலுயிர் தற்பரந் தன்னின் மருவச் சிவமென்ற மாமுப் பதத்தின் சொரூபத்தின் சத்தியா தோன்றநின் றானே.

181

  1. நினையும் அளவின் நெகிழ வணங்கிப் புனையில் அவனைப் பொதியலு மாகும் எனையுமெங் கோனேந்தி தன்னருள் கூட்டி நினையும் அளவில் நினைப்பித் தனனே.

182

  1. பாலொடு தேனும் பழத்துள் இரதமும் வாலிய பேரமு தாகு மதுரமும் போலுந் துரியம் பொடிபட வுள்புக சீல மயிர்க்கால் தொறுந்தேக் கிடுமே.

183

  1. அமரத் துவங்கடந் தண்டங் கடந்து தமரத்து நின்ற தனிமையன் ஈசன் பவளத்து முத்தும் பனிமொழி மாதர் துவளற்ற சோதி தொடர்ந்துநின் றானே.

184

  1. மத்திமம் ஆறாறு மாற்றி மலநீக்கிச் சுத்தம தாகுந் துரியத் துரிசற்றுப் பெத்த மறச்சிவ மாகிப் பிறழ்வுற்றுச் சத்தியஞா னானந்தஞ் சார்ந்தனன் ஞானியே.

185

  1. சிவமாய் அவமான மும்மலந் தீர பவமான முப்பாழைப் பற்றறப் பற்றத் தவமான சத்திய ஞானானந் தத்தே துவமார் துரியஞ் சொரூபம தாமே.

186

===12.சொரூப உதயம்=== 2834. பரம குரவன் பரமெங்கு மாகித் திரமுற எங்கணுஞ் சேர்ந்தொழி வற்று நிரவு சொரூபத்துள் நீடுஞ் சொரூபம் அரிய துரியது தணைந்துநின் றானே.


187

  1. குலைக்கின்ற நீரிற் குவலய நீரும் அலைக்கின்ற காற்றும் அனலொடா காசம் நிலத்திடை வானிடை நீண்டகன் றானை வரைத்து வலஞ்செயு மாறறி யேனே.

188

  1. அங்குநின் றானயன் மால்முதல் தேவர்கள் எங்குநின் றாரும் இறைவனென் றேத்துவர் தங்கிநின் றான்றனி நாயகன் எம்மிறை பொங்கிநின் றான்புவ னாபதி தானே.

189

  1. சமையச் சுவடும் தனையறி யாமற் கமையற்ற காமாதி காரணம் எட்டும் திமிரச் செயலும் தெளிவுட னின்றோர் அமரர்க் கதிபதி யாகிநிற் பாரே.

190

  1. மூவகைத் தெய்வத் தொருவன் முதலுரு வாயது வேறா மதுபோல் அணுப்பரன் சேய சிவமுத் துரியத்துச் சீர்பெற ஏயும் நெறியென் றிறைநூ லியம்புமே.

191

  1. உருவன்றி யேநின் றுருவம் புணர்க்கும் கருவன்றி யேநின்று தான்கரு வாகும் மருவன்றி யேநின்ற மாயப் பிரானைக் குருவன்றி யாவர்க்குங் கூடவொண் ணாதே.

192

  1. உருவ நினைப்பவர்க் குள்ளுறுஞ் சோதி உருவ நினைப்பவர் ஊழியுங் காண்பர் உருவ நினைப்பவர் உம்பரும் ஆவர் உருவ நினைப்பார் உலகத்தில் யாரே.

193

  1. பரஞ்சோதி யாகும் பதியினைப் பற்றாப் பரஞ்சோதி என்னுட் படிந்ததற் பின்னைப் பரஞ்சோதி யுண்ணான் படியப் படியப் பரஞ்சோதி தன்னைப் பறையக்கண் டேனே.

194

  1. சொரூபம் உருவம் குணந்தொல் விழுங்கி அரியன உற்பலம் ஆமாறு போல மருவிய சத்தியாதி நான்கு மதித்த சொரூபக் குரவன் சுகோதயத் தானே.

195

  1. உரையற்ற ஆனந்த மோன சொரூபத்தன் கரையற்ற சத்தியாதி காணில் அகார மருவுற் றுகார மகாரம தாக உரையற்ற தாரத்தில் உள்ளொளி யாமே.

196

  1. தலைநின்ற தாழ்வரை மீது தவஞ்செய்து முலைநின்ற மாதறி மூர்த்தியை யானும் புலைநின்ற பொல்லாப் பிறவி கடந்து கலைநின்ற கள்வனிற் கண்டுகொண் டேனே.

197

  1. ஆமா றறிந்தேன் அகத்தின் அரும்பொருள் போமா றந்தேன் புகுமாறும் ஈதென்றே ஏமாப்ப தில்லை இனியோ ரிடமில்லை நாமா முதல்வனும் நனென லாமே.

198

===13.ஊழ்=== 2846. செற்றிலென் சீவிலென் செஞ்சாந் தணியிலென் மத்தகத் தேயுளி நாட்டி மறிக்கிலென் வித்தகன் நந்தி விதிவழி யல்லது தத்துவ ஞானிகள் தன்மைகுன் றாரே.


199

  1. தான்முன்னஞ் செய்த விதிவழி தானல்லால் வான்முன்னஞ் செய்தங்கு வைத்ததோர் மாட்டில்லை கோன்முன்னம் சென்னி குறிவழி யேசென்று நான்முன்னஞ் செய்ததே நன்னில மானரே.

200

  1. ஆறிட்ட நுண்மணல் ஆறே சுமவாதே கூறிட்டுக் கொண்டு சுமந்தறி வாரில்லை நீறிட்ட மேனி நிமிர்சடை நந்தியைப் பேறிட்டுஎன் உள்ளம் பிரியகில் லாவே.

201

  1. வானின் றிடிக்கிலென் மாகடல் பொங்கிலென் கானின்ற செந்தீக் கலந்துடன் வேகிலென் தானொன்றி மாருதஞ் சண்டம் அடிக்கிலென் நானொன்றி நாதனை நாடுவேண் நானே.

202

  1. ஆனை துரக்கிலென் அம்பூ டறுக்கிலென் கானத் துழுவை கலந்து வளைக்கிலென் ஏனைப் பதியினில் எம்பெரு மான்வைத்த ஞானத் துழவனை நானுழு வேனே.

203

  1. கூடி கெடின்மற்றோர் கூடுசெய் வானுளன் நாடு கெடினும் நமர்கெடு வாரில்லை வீடு கெடின்மற்றோர் வீடுபுக் காலொக்கும் பாடது நந்தி பரிசறி வார்க்கே.

204

===14.சிவதரிசனம்=== 2852. சிந்தைய தென்னச் சிவனென்ன வேறில்லை சிந்தையி னுள்ளே சிவனும் வெளிப்படும் சிந்தை தெளியத் தெளிவல் லார்கட்குச் சிந்தையி னுள்ளே சிவனிருந் தானே.


205

  1. வாக்கு மனமு மறைந்த மறைப்பொருள் நோக்குமின் நோக்கப் படும்பொருள் நுண்ணிது போக்கொன்றும் இல்லை வரவில்லை கேடில்லை ஆக்கமும் அத்தனை ஆய்ந்துகொள் வார்க்கே.

206

  1. பரனாய்ப் பராபர னாகியப் பாற்சென்(று) உரனாய் வழக்கற்ற வொண்சுடர் தானாய்த் தரனாய்த் தனாதென வாறறி வொண்ணா அரனா யுலகில் அருள்புரிந் தானே.

207

===15.சிவசொரூப தரிசனம்=== 2855. ஓதும் மயிர்க்கால் தொறும்அமு தூறிய பேதம் அபேதம் பிறழாத ஆனந்தம் ஆதி சொரூபங்கள் மூன்றகன் றப்பாலை வேதகம் ஓதும் சொரூபிதன் மேன்மையே.


208

  1. உணர்வும் அவனே உயிரும் அவனே புணரும் அவனே புலனு மவனே இணரும் அவன்தன்னை எண்ணலு மாகான் துணரின் மலர்க்கந்தம் துன்னிநின் றானே.

209

  1. துன்னிநின் றான்தன்னை உன்னிமுன் னாவிரு முன்னி யவர்தங் குறையை முடித்திடும் மன்னிய கேள்வி மறையவன் மாதவன் சென்னியுள் நின்றதோர் தேற்றத்த னாமே.

210

  1. மின்னுற்ற சிந்தை விழித்தேன் விழித்தலும் தன்னுற்ற சோதித் தலைவன் இணையிலி பொன்னுற்ற மேனிப் புரிசடை நந்தியை என்னுற் றறிவனான் என்விழித் தானே.

211

  1. சத்திய ஞானத் தனிப்பொருள் ஆனந்தன் சித்தத்தி னில்லாச் சிவானந்தப் பேரொளி சுத்தப் பிரம துரியந் துரியத்துள் உய்த்த துரியத் துறும்பே ரொளியே.

212

  1. பரனல்ல நீடும் பராபர னல்ல உரனல்ல மீதுணர் ஒண்சுட ரல்ல தரனல்ல தானவை யாயல்ல வாகும் அரனல்ல ஆன்நதத் தப்புறத் தானே.

213

  1. முத்தியுஞ் சித்தியும் முற்றிய ஞானத்தோன் பத்தியுள் நின்று பரந்தன்னுள் நின்றுமா சத்தியுள் நின்றோர்க்குத் தத்துவங் கூடலாற் சுத்தி யகன்றோர் சுகானந்த போதரே.

214

  1. துரிய அதீதஞ் சொல்லறும் பாழாம் அரிய துரியம் அதீதம் புரியில் விரியுங் குவியும் விள்ளா மிளிர்ந்தென் உருவந் திரியும் உரைப்பதெவ் வாறே.

215

===16.முத்தி பேதம் , கரும நிருவாணம்=== 2863. ஓதிய முத்தி யடைவே உயிர்பர பேதமி லச்சிவம் எய்துந் துரியமோ(டு) ஆதி சொரூபம் சொரூபத்த தாகவே ஏதமி லாநிரு வாணம் பிறந்ததே.


216

  1. பற்றற் றவர்பற்றி நின்ற பரம்பொருள் கற்றற் றவர்கற்றுக் கருதிய கண்ணுதல் சுற்றற் றவர்சுற்றி நின்றஎன் சோதியைப் பெற்றுற் றவர்கள் பிதற்றொழிந் தாரே.

217

===17.சூனிய சம்பாஷணை=== 2865. காயம் பலகை கவறைந்து கண்மூன்றா ஆயம் பொருவதோர் ஐம்பத்தோ ரக்கரம் ஏய பெருமா னிருந்து பொருகின்ற மாயக் கவற்றின் மறைப்பறி யேனே.


218

  1. தூறு படர்ந்து கிடந்தது தூநெறி மாறிக் கிடக்கும் வகையறி வாரில்லை மாறிக் கிடக்கும் வகையறி வாளர்க்கு ஊறிக் கிடந்ததென் உள்ளன்பு தானே.

219

  1. ஆறு தெருவில் அகப்பட்ட சந்தியில் சாறு படுவன நான்கு பனையுள ஏறற் கரியதோர் ஏணியிட் டப்பனை ஏறலுற் றேன்கடல் ஏழுங்கண் டேனே.

220

  1. வழுதலை வித்திடப் பாகல் முளைத்தது புழுதியைத் தோண்டினேன் பூசனி பூத்தது தொழுகொண் டோடினார் தோட்டக் குடிகள் முழுதும் பழுத்தது வாழைக் கனியே.

221

  1. ஐயென்னும் வித்தினில் ஆனை விளைப்பதோர் செய்யுண்டு செய்யின் தெளிவறி வாரில்லை மையணி கண்டன் மனம்பெறின் அந்நிலம் பொய்யொன்று மின்றிப் புகஎளி தாமே.

222

  1. பள்ளச்செய் யொன்றுண்டு பாடச்செய் இரண்டுள கள்ளச்செய் யங்கே கலந்து கிடந்தது உள்ளச்செய் யங்கே யுழவுசெய் வார்கட்கு வெள்ளச்செய் யாகி விளைந்தது தானே.

223

  1. மூவணை யேரு முழுவது முக்காணி தாமணி கோலத் தறியுறப் பாய்ந்திடும் நாவணை கோலி நடுவிற் செறுவுழார் காலணை கோலிக் களருழு வாரே.

224

  1. ஏற்றம் இரண்டுள் ஏழு துரவுள மூத்தான் இறைக்க இளையான் படுத்தநீர் பாத்தியிற் பாயாது பாழ்ப்பாய்ந்து போயிடில் கூத்தி வளர்த்ததோர் கோழிப்புள் ளாமே.

225

  1. பட்டிப் பசுக்கள் இருபத்து நாலுள குட்டிப் பசுக்களோ ரேழுள ஐந்துள குட்டிப் பசுக்கள் குடப்பால் சொரியினும் பட்டிப் பசுவே பனவற்கு வாய்த்ததே.

226

  1. ஈற்றுப் பசுக்கள் இருபத்து நாலுள ஊற்றுப் பசுக்கள் ஒருகுடம் பால்போதும் காற்றுப் பசுக்கள் கறந்துண்ணுங் காலத்து மாற்றுப் பசுக்கள் வரவறி யோமே.

227

  1. தட்டான் அகத்தில் தலையான மச்சின்மேல் மொட்டா யெழுந்தது செம்பால் மலர்ந்தது வட்டம் படவேண்டி வாய்மை மடித்திட்டுத் தட்டான் அதனைத் தகைந்து கொண்டானே.

228

  1. அரிக்கின்ற நாற்றங்கால் அல்லற் கழனி திரிக்கின்ற வொட்டஞ் சிக்கெனக் கட்டி விரிக்கின்ற நல்லான் கறவையைப் பூட்டில் விரிக்கின்ற வெள்ளரி வித்துவித் தாமே.

229

  1. இடாக்கொண்டு தூவி எருவிட்டு வித்திக் கிடாக்கொண்டு பூட்டிக் கிளறி முளையை மிடாக்கொண்டு சோறட்டு மெள்ள விழுங்கார் கிடாக்கொண்டு செந்நெல் அறுக்கின்ற வாறே.

230

  1. விளைந்து கிடந்தது மேலைக்கு வித்தது விளைந்து கிடந்தது மேலைக்குக் காதம் விளைந்து விளைந்து விளைந்துகொள் வார்க்கு விளைந்து கிடந்தது மேவுமுக் காதமே.

231

  1. களருழு வார்கள் கருத்தை யறியோம் களருழு வார்கள் கருதலு மில்லை களருழு வார்கள் களரின் முளைத்த வளரிள வஞ்சியின் மாய்தலு மாமே.

232

  1. கூப்பிடு கொள்ளாக் குறுநரிக் கொட்டகத்(து) ஆப்பிடு பாசத்தை யங்கியுள் வைத்திட்டு நாட்பட நின்று நலம்புகுந் தாயிழை ஏற்பட இல்லத் தினிதிருந் தானே.

233

  1. மலைமேல் மழைபெய்ய மான்கன்று துள்ளக் குலைமேல் இருந்த கொழுங்கனி வீழ உலைமேல் இருந்த உறுப்பெனக் கொல்லன் முலைமேல் அமிர்தம் பொழியவைத் தானே.

234

  1. பார்ப்பான் அகத்திலே பாற்பச ஐந்துண்டு மேய்ப்பாரும் இன்றி வெறித்துத் திரிவன மேய்ப்பாரும் உண்டாய் வெறியும் அடங்கினால் பார்ப்பான் பசுஐந்தும் பாலாச் சொரியுமே.

235

  1. ஆமாக்கள் ஐந்தும் அரியேறு முப்பதும் தேமா இரண்டொடு திப்பிலி யொன்பதும் தாமாக் குரங்கொளிற் றம்மனத் துள்ளன மூவாக் கடாவிடின் மூட்டுகின் றாரே.

236

  1. எழுதாத புத்தகத் தேட்டின் பொருளைத் தெருளாத கன்னி தெளிந்திருந் தோத மலராத பூவின் மணத்தின் மதுவைப் பிறவாத வண்டு மணமுண்ட வாறே.

237

  1. போகின்ற பொய்யும் புகுகின்ற பொய்வித்தும் கூகின்ற நாவலின் கூழைத் தருங்கனி ஆகின்ற பைங்கூழ் அவையுண்ணும் ஐவரும் வேகின்ற கூரை விருத்திபெற் றாரே.

238

  1. மூங்கில் முளையல் எழுந்ததோர் வேம்புண்டு வேம்பினிற் சார்ந்து கிடந்த பனையிலோர் பாம்புண்டு பாம்பைத் துரத்தித்தின் பாரின்றி வேம்பு கிடந்து வெடிக்கின்ற வாறே.

239

  1. பத்துப் பரும்புலி யானை பதினைந்து வித்தகர் ஐவர் வினோதகர் ஈரெண்மர் அத்தகு மூவர் அறுவர் மருத்துவர் அத்தலை ஐவர் அமர்ந்துநின் றாரே.

240

  1. இரண்டு கடாவுண்டு இவ்வூரி னுள்ளே இரண்டு கடாவுக்கும் ஒன்றே தொழும்பன் இரண்டு கடாவும் இருத்திப் பிடிக்கின் இரண்டு கடாவும் ஒருகடா ஆமே.

241

  1. ஒத்த மனக்கொல்லை யுள்ளே சமன்கட்டிப் பத்தி வலையிற் பருத்தி நிறுத்தலால் முத்தக் கயிறாக மூவர்கள் ஊரினுள் நித்தம் பொது நிரம்பநின் றாரே.

242

  1. கூகையும் பாம்பும் கிளியொடு பூஞையும் நாகையும் பூழும் நடுவில் உறைவன் நாகையைக் கூகை நணுக லுறுதலும் கூகையைக் கண்டெலி கூப்பிடு மாறே.

243

  1. குலைக்கின்ற நன்னகை யாங்கொங் குழக்கின் நிலைக்கின்ற வெள்ளெலி மூன்று கொணர்ந்தான் உலைக்குப் புறமெனில் ஓடு மிருக்கும் புலைக்குப் பிறந்தவை போகின்ற வாறே.

244

  1. காடுபுக் காரினிக் காணார் கடுவெளி கூடுபுக் கானது ஐந்து குதிரையும் ஓடுபுக் கானது ஆறுள ஒட்டகம் மூடு புகாவிடின் மூவணை யாமே.

245

  1. கூறையுஞ் சோறும் குழாயகத் தெண்ணெயும் காறையும் நாணும் வளையலுங் கண்டவர் பாறையி லுற்ற பறக்கின்ற சீலைபோல் ஆறைக் குழியில் அழுந்துகின் றாரே.

246

  1. துருத்தியுள் ளக்கரை தோன்று மலைமேல் விருத்திகண் காணிக்கப் போவார்முப் போதும் வருந்தியுள் நின்ற மலையைத் தவிர்ப்பாள் ஒருத்தியுள் ளாளவர் ஊரறி யோமே.

247

  1. பருந்துங் கிளியும் படுபறை கொட்டத் திருந்திய மாதர் திருமணப் பட்டார் பெருந்தவப் பூதம் பெறலுரு வாகும் இந்திய பேற்றினில் இன்புறு வாரே.

248

  1. கூடும் பறவை இரைகொத்தி மற்றதன் ஊடுபுக் குண்டி யறுக்குறில் என்னொக்கும் சூடெறி நெய்யுண்டு மைகான் றிடுகின்ற பாடறி வார்க்குப் பயனெனி தாமே.

249

  1. இலையில்லை பூவுண் டினவண்டிங் கில்லை தலையில்லை வேருண்டு தாளில்லை பூவின் குலையில்லை கொய்யும் மலருண்டு சூடும் தலையில்லை தாழ்ந்த கிளைபுல ராரே.

250

  1. அக்கரை நின்றதோர் ஆல மரங்கண்டு நக்கரை வாழ்த்தி நடுவே பயன்கொள்வர் மிக்கவ ரஞ்சு துயரமுங் கண்டுபோய்த் தக்கவர் தாழ்ந்து கிடக்கின்ற வாறே. ‎‫

251

  1. கூப்பிடு மாற்றிலே வன்கா டிருங்காதம் காப்பிடு கள்ளர் கலந்துநின் றாருளர் காப்பிடு கள்ளரை வெள்ளா தொடர்ந்திட்டுக் கூப்பிடு மீண்டதோர் கூரைகொண் டாரே.

252

  1. கொட்டியும் ஆம்பலும் பூத்த குளத்திடை எட்டியும் வேம்பும் இனியதோர் வாழையும் கட்டியுந் தேனுங் கலந்துண்ண மாட்டாதார் எட்டிப் பழத்துக் கிளைக்கின்ற வாறே.

253

  1. பெடைவண்டும் ஆண்வண்டும் பீடிகை வண்ணக் குடைகொண்ட பாசத்துக் கோலமுண் டானும் கடைவண்டு தானுண்ணுங் கண்கலந் திட்ட பெடைவண்டு தான்பெற்ற தின்பமு மாமே.

ஒன்பதாம் தந்திரம் (cont. 2)

254

  1. கொல்லையில் மேயும் பசுக்களைச் செய்தவன் எல்லை கடப்பித் திறையடிக் கூட்டியே வல்லசெய் தாற்றன் மதித்தபி னல்லது கொல்லைசெய் நெஞ்சங் குறியறி யாதே.

255

  1. தட்டத்து நீரிலே தாமரை பூத்தது குட்டத்து நீரிற் குவளை எழுந்தது விட்டத்தி னுள்ளே விளங்கவல் லார்கட்குக் குட்டத்தி லிட்டதோர் கொம்மட்டி யாமே.

256

  1. ஆறு பறவைகள் ஐந்தகத் துள்ளன நூறு பறவை நுகிக்கொம்பின் மேலன ஏறும் பெரும்பதி ஏழுங் கடந்தபின் மாறுத லின்றி மனைபுக லாமே.

257

  1. கொட்டனஞ் செய்து குளிக்கின்ற கூவலுள் வட்டனப் பூமி மருவிவந் தூறிடுங் கட்டனஞ் செய்து கயிற்றால் தொழுமியுள் ஒட்டனஞ் செய்தொளி யாவர்க்கு மாமே.

258

  1. ஏழு வளைகடல் எட்டுக் குலவரை ஆழும் விசும்பினில் அங்கி மழைவளி தாழும் மிருநிலந் தன்மை யதுகண்டு வாழ நினைக்கில தாலய மாமே.

259

  1. ஆலிங் கனஞ்செய் தகஞ்சுடர் சூலத்துச் சாலிங் கமைத்துத் தலைமை தவிர்த்தனர் கோலிங் கமைத்தபின் கூபப் பறவைகள் மாலிங்கன் வைத்தது முன்பின் வழியே.

260

  1. கொட்டுக்குந் தாலி இரண்டே இரண்டுக்கும் கொட்டுக்குந் தாலிக்கும் பாரை வலிதென்பர் கொட்டுக்குந் தாலிக்கும் பாரைக்கும் மூன்றுக்கும் இட்டம் வலிதென்பர் ஈசன் அருளே.

261

  1. கயலொன்று கண்டவர் கண்டே இருப்பர் முயலொன்று கண்டவர் மூவரும் உய்வர் பறையொன்று பூசல் பிடிப்பா னொருவன் மறையொன்று கண்ட துருவம்பொன் னாமே.

262

  1. கோரை எழுந்து கிடந்த குளத்தினில் ஆரை படர்ந்து தொடர்ந்து கிடந்தது நாரை படுகின்றாற் போலல்ல நாதனார் பாரை கிடக்கப் படிகின்ற வாறே.

263

  1. கொல்லைமுக் காதமுங் காடரைக் காதமும் எல்லை மயங்கிக் கிடந்த இருநெறி எல்லை மயங்கா தியங்கவல் லார்கட்(கு) ஒல்லை கடந்துசென் றூர்புக லாமே.

264

  1. உழவொன்று வித்து ஒருங்கின காலத் (து) எழுமழை பெய்யா திருநிலச் செவ்வி தழுவி வினைசென்று தான்பய வாது வழுவாது போவன் வளர்சடை யோனே.

265

  1. பதுங்கிலும் பாய்புலி பன்னிரு காதம் ஒதுங்கிய தண்கடல் ஓதம் உலவ மதுங்கிய வார்களி யாரமு தூறப் பொதுங்கிய ஐவரைப் போய்வளைத் தானே.

266

  1. தோணியொன் றேறித் தொடர்ந்து கடல்புக்கு வாணிபஞ் செய்து வழங்கி வளர்மகன் நீலிக் கிறையுமே நெஞ்சின் நிலைதளர்ந் (து) ஆலிப் பழம்போல் அளிக்கின்ற அப்பே.

267

  1. முக்காத ஆற்றிலே மூன்றுள வாழைகள் செக்குப் பழுத்த திரிமலங் காய்த்தன பக்கனார் மிக்கார் படங்கினார் கன்னியர் நக்கு மலருண்டு நடுவுநின் றாரே.

268

  1. அடியும் முடியும் அமைந்ததோர் ஆத்தி முடியும் நுனியின்கண் முத்தலை முங்கில் கொடியும் படையுங் கோட்சரன் ஐயைந்தும் மடியும் வலம்புரி வாய்த்ததவ் வாறே.

269

  1. பன்றியும் பாம்பும் பசுமுசு வானரம் தென்றிக் கிடந்த சிறுநரிக் கூட்டத்துக் குன்றாமை கூடித் தராசின் நிறுத்தபின் குன்றி நிறையைக் குறைக்கின்ற வாறே.

270

  1. மொட்டித் தெழுந்ததோர் மொட்டுண்டு மொட்டினைக் கட்டுவிட் டோடின் மலர்தலுங் காணலாம் பற்றுவிட் டம்மனை பாழ்பட நோக்கினால் கட்டுவிட் டார்க்கன்றிக் காணவொண் ணாதே.

271

  1. நீரின்றிப் பாயும் நிலத்தினிற் பச்சையாம் யாவரும் என்றும் அறியவல் லாரில்லை கூரு மழைபொழி யாது பொழிபுனல் தேரினிந் நீர்மை திடரினில் லாதே.

272

  1. கூகை குருந்தம தேறிக் குணம்பயில் மோகம் உலகுக் குணர்கின்ற காலத்து நாகமும் ஒன்று நடுவுரை செய்திடும் பாகனு மாகின்ற பண்பனு மாமே.

273

  1. வாழையுஞ் சூரையும் வந்திடங் கொண்டன வாழைக்குச் சூரை வலிது வலிதென்பார் வாழையுஞ் சூரையும் வன்துண்டஞ் செய்திட்டு வாழை யிடங்கொண்டு வாழ்கின்ற வாறே.

274

  1. நிலத்தைப் பிளந்து நெடுங்கடல் ஓட்டிப் புனத்துக் குறவன் புணர்ந்த கொழுமீன் விலக்குமின் யாவர்க்கும் வேண்டிற் குறையா தருத்தமு மின்றி யடுவது மாமே.

275

  1. தளிர்க்கும் ஒருபிள்ளை தட்டா னகத்தில் விளிப்பதோர் சங்குண்டு வேந்தனை நாடிக் களிக்குங் குசவர்க்குங் காவிதி யார்க்கும் அளிக்கும் பதத்தொன் றாய்ந்துகொள் வார்க்கே.

276

  1. குடைவிட்டுப் போந்தது கோயில் எருமை படைகண்டு மீண்டது பாதி வழியில் உடையவன் மந்திரி யுள்ளலும் ஊரார் அடையார் நெடுங்கடை ஐந்தொடு நான்கே.

277

  1. போகின்ற எட்டும் புகுகின்ற பத்தெட்டும் ஆகிப் படைத்தன ஒன்பது வாய்தலும் நாகமும் எட்டொடு நாலு புரவியும் பாகன் விடாவிடிற் பன்றியு மாமே.

278

  1. பாசி படர்ந்து கிடந்த குளத்திடைக் கூசி யிருக்குங் குருகிரை தேர்ந்துண்ணும் தூசி மறவன் துணைவழி எய்திடப் பாசங் கிடந்து பதைக்கின்ற வாறே.

279

  1. கும்ப மலைமேல் எழுந்ததோர் கொம்புண்டு கொம்புக்கும் அப்பால் அடிப்பதோர் காற்றுண்டு வம்பாய் மலர்ந்ததோர் பூவுண்டப் பூவுக்குள் வண்டாய்க் கிடந்து மணங்கொள்வன் ஈசனே.

280

  1. வீணையுந் தண்டும் விரவி யிசைமூரல் தாணுவும் மேவித் தகுதலைப் பெய்தது வாணிபஞ் சிக்கென் றதுவடை யாமுன்னம் காணியும் அங்கே கலக்கின்ற வாறே. ‎‫

281

  1. கொங்குபுக் காரொடு வாணிபஞ் செய்தது அங்குபுக் காலன்றி ஆய்ந்தறி வாரில்லை திங்கள்புக் கால்இரு ளாவ தறிந்திலர் தங்குபுக் கார்சிலர் தாபதர் தாமே.

282

  1. போதும் புலர்ந்தது பொன்னிறங் கொண்டது தாதவிழ் புன்னை தயங்கு மிருகரை ஏதில் ஈசன் இயங்கு நெறியிது மாத ரிருந்ததோர் மண்டலந் தானே.

283

  1. கோமுற் றமருங் குடிகளுந் தம்மிலே காமுற்ற கத்தி இடுவர் கடைதொறும் மீவற்ற வெல்லை விடாது வழிகாட்டி ஆமுற்ற தட்டினால் ஐந்துண்ண லாமே.

284

  1. தோட்டத்தில் மாம்பழந் தோண்டி விழுந்தக்கால் நாட்டின் புறத்தில் நரியிழைத் தென்செயும் மூட்டிக் கொடுத்த முதல்வனை முன்னிட்டுக் காட்டிக் கொடுத்தவர் கைவிட்ட வாறே.

285

  1. புலர்ந்தது போதென்று புட்கள் சிலம்பப் புலர்ந்தது போதென்று பூங்கொடி புல்லிப் புலம்பி னவளோடும் போகம் நுகரும் புலம்பனுக் கென்றும் புலர்ந்திலை போதே. ‎‫

286

  1. தோணியொன் றுண்டு துறையில் விடுவது வாணி மிதித்துநின் றைவர்கோ லூன்றலும் வாணிபஞ் செய்வார் வழியிடை யாற்றிடை ஆணி கலங்கில் அதுவது வாமே.

287

===18.மோன சமாதி=== 2935. நின்றார் இருந்தார் கிடந்தார் எனவில்லை சென்றார் தருஞ்சித்த மோன சமாதியாம் மன்றேயு மங்கே மறைப்பொரு ளொன்றுண்டு சென்றாங் கணைந்தவர் சேர்கின்ற வாறே.


288

  1. காட்டுங் குறியுங் கடந்தவர் காரணம் ஏட்டின் புறத்தில் எழுதிவைத் தென்பயன் கூட்டுங் குருநந்தி கூட்டிடி னல்லது ஆட்டின் கழுத்தில் அதர்கிடந் தற்றே.

289

  1. உணர்வுடை யார்கட் குலகமுந் தோன்றும் உணர்வுடை யார்கட் குறுதுயர் இல்லை உணர்வுடை யார்கள் உணர்ந்தஅக் காலம் உணர்வுடை யார்கள் உணர்ந்துகண் டாரே.

290

  1. மறப்பது வாய்நின்ற மாயநன் னாடன் பிறப்பினை நீங்கிய பேரரு ளாளன் சிறப்புடை யான்திரு மங்கையுந் தானும் உறக்கமில் போகத் துறங்கிடுந் தானே.

291

  1. துரியங்கள் மூன்றும் கடந்தொளிர் சோதி அரிய துரிய மதில்மீது மூன்றாய் விரிவு குவிவு விழுங்கி உமிழ்ந்தே உரையில் அநுபூதிகத்தினுள் ளானே.

292

  1. உருவிலி ஊனிலி ஊனமொன் றில்லி திருவிலி தீதிலி தேவர்க்குந் தேவன் பொருவிலி பூதப் படையுடை யாளி மருவிலி வந்தென் மனம்புகுந் தானே.

293

  1. கண்டறி யாரிந்தக் காயத்தில் நந்தியை எண்டிசை யோரும் இறைவனென் றேத்துவர் அண்டங் கடந்த அளவிலா ஆனந்தத் தொண்டர் முகந்த துறையறி யோமே.

294

  1. தற்பரம் அல்ல சதாசிவன் றானல்லன் நிட்கள மல்ல சகள நிலையல்ல அற்புத மாகி அநுகோக் காமம்போல் கற்பனை யின்றிக் கலந்துநின் றானே.

295

  1. முகத்திற் கண்கொண்டு காண்கின்ற மூடர்காள் அகத்திற் கண்கொண்டு காண்பதே ஆனந்தம் மகட்குத் தாய்தன் மணாளனோ டாடிய சுகத்தைச் சொல்லென்றாற் சொல்லுமா றெங்கனே.

296

  1. அப்பினில் உப்பென அத்தன் அணைந்திட்டுச் செப்பு பராபரம் சேர்பரமும் விட்டுக் கப்புறு சொற்பத மாளக் கலந்தமை எப்படி அப்படி என்னுமவ் வாறே.

297

  1. கண்டார்க் கழகிதாங் காஞ்சிரத் தின்பழம் தின்றார்க் கறியலாம் அப்பழத் தின்சுவை பெண்டா னிரம்பி மடவிய ளானால் கொண்டான் அறிவன் குணம்பல தானே.

298

  1. நந்தி இருந்தான் நடுவுத் தெருவிலே சந்தி சமாதிகள் தாமே ஒழிந்தன உந்தியி னுள்ளே உதித்தெழுஞ் சோதியை புந்தியி னாலே புணர்ந்துகொண் டேனே.

299

  1. விதறு படாவண்ணம் வேறிருந் தாய்ந்து பதறு படாதே பழமறை பார்த்துக் கதறிய பாழைக் கடந்தந்தக் கற்பனை உதறிய பாழில் ஒடுங்குகின் றேனே.

300

  1. வாடா மலர்புனை சேவடி வானவர் கூடார் அரனெறி நாடொறு மின்புறச் சேடார் கமலச் செழுஞ்சுட ருட்சென்று நாடார் அமுதுற நாடார் அமுதமே.

301

  1. அதுக்கென் றிருவர் அமர்ந்தசொற் கேட்டும் பொதுக்கெனக் காமம் புலப்படு மாபோல் சதுக்கென்று வேறே சமைந்தாரைக் காண மதுக்கொன்றைத் தாரான் வளந்தரு மன்றே.

302

  1. தானும் அழிந்து தனமும் அழிந்துநீடு ஊனும் அழிந்து உயிரும் அழிந்துடன் வானும் அழிந்து மனமும் அழிந்துபின் நானும் அழிந்தமை நானறி யேனே.

303

  1. இருளும் வெளியும் இரண்டையு மாற்றிப் பொருளிற் பொருளாய்ப் பொருந்த வுள்ளாகி அருளால் அழிந்திடும் அத்தன் அடிக்கே உருளாத கன்மன முற்றுநின் றானே.

304

  1. ஒன்றிநின் றுள்ளே உணர்ந்தேன் பராபரம் ஒன்றிநின் றுள்ளே உணர்ந்தேன் சிவகதி ஒன்றிநின் றுள்ளே உணர்ந்தேன் உணர்வினை ஒன்றிநின் றேபல ஊழிகண் டேனே.

305

===19.வரையுரை மாட்சி=== 2953. தான்வரை வற்றபின் ஆரை வரைவது தான்அவன் ஆனபின் ஆரை நினைவது காமனை வென்றகண் ஆரை உகப்பது தூமொழி வாசகம் சொல்லுமின் நீரே.


306

  1. உரையற்ற தொன்றை உரைசெய்யும் ஊமர்காள் கரையற்ற தொன்றைக் கரைகாண லாகுமோ திரையற்ற நீர்போற் சிந்தை தெளிவார்க்குப் புரையற் றிருந்தான் புரிசடை யோனே.

307

  1. மனமாயை மாயைஇம் மாயை மயக்க மனமாயை தான்மாயு மற்றொன்றும் இல்லை பினைமாய்வ தில்லை பிதற்றவும் வேண்டா தனையாய்த் திருப்பது தத்துவந் தானே.

308

===20.அணைந்தோர் தன்மை=== 2956. மலமில்லை மாசில்லை மானாபி மானம் குலமில்லை கொள்ளுங் குணங்களும் இல்லை நலமில்லை நந்தி ஞானத்தி னாலே பலமன்னி அன்பிற் பதித்துவைப் போர்க்கே.


309

  1. ஒழிந்தேன் பிறவி உறவென்னும் பாசம் கழிந்தேன் கடவுளும் நானும்ஒன் றானேன் அழிந்தாங் கினிவரும் மார்க்கமும் வேண்டேன் செழுஞ்சார் புடைய சிவனைக்கண் டேனே.

310

  1. ஆலைக் கரும்பும் அமுதும் அக்காரமும் சோலைத் தண்ணீரும் உடைத்தெங்கள் நாட்டிடைப் பீலிக்கண் அன்ன வடிவுசெய் வாளொரு கோலப்பெண் ணாட்குக் குறைவொன்றும் இல்லையே.

311

  1. ஆராலு மென்னை அமட்டவொண் ணாதினிச் சீரார் பிரான்வந்தென் சிந்தை புகுந்தனன் சீராடி யங்கே திரிவதல் லாலினி யார்பாடுஞ் சாரா அறிவறிந் தேனே.

312

  1. பிரிந்தேன் பிரமன் பிணித்ததோர் பாசம் தெரிந்தேன் சிவகதி செல்லு நிலையை அரிந்தேன் வினையை அயிலமன வாளால் முரிந்தேன் புரத்தினை முந்துகின் றேனே.

313

  1. ஒன்றுகண் டீர்உல குக்கொரு தெய்வமும் ஒன்றுகண்டீர்உல கக்குயி ராவதும் நன்றுகண் டீரினி நமச்சிவா யப்பழம் தின்றுகண் டேற்கிது தித்தித்த வாறே.

314

  1. சந்திரற் பாம்பொடுஞ் சூடும் சடாதரன் வந்தென்னை யாண்ட மணிவிளக் கானவன் அந்தமு மாதியும் இல்லா அரும்பொரள் சிந்தையின் மேவித் தியக்கறுத் தானே.

315

  1. பண்டெங்கள் ஈசன் நெடுமால் பிரமனைக் கண்டங் கிருக்குங் கருத்தறி வாரில்லை விண்டங்கே தோன்றி வெறுமன மாயிடில் துண்டங் கிருந்ததோர் தூறது வாமே.

316

  1. அன்னையும் அத்தனும் அன்புற்ற தல்லது அன்னையும் அத்தனும் ஆரறி வாரென்னை அன்னையும் அத்தனும் யானும் உடனிருந்து அன்னையும் அத்தனை யான்புரந் தேனே.

317

2965 கொண்ட சுழியும் குலவரை யுச்சியும் அண்டரும் அண்டத் தலைவரும் ஆதியும் எண்டிசை யோரும்வந் தென்கைத் தலத்துளே உண்டனர் நானினி உய்ந்தொழிந் தேனே.


318

  1. தானே திசையொடு தேவரு மாய்நிற்கும் தானே வடவரை யாதியு மாய்நிற்கும் தானே உடலுயிர் தத்துவமாய் நிற்கும் தானே உலகிற் றலைவனும் ஆமே.

319

  1. நமன்வரின் ஞானவாள் கொண்டே எறிவன் சிவன்வரின் நானுடன் போவது திண்ணம் பவம்வரும் வல்வினை பண்டே அறுத்தேன் தவம்வரும் சிந்தைக்குத் தான்எதிர் ஆமே.

320

  1. சித்தஞ் சிவமாய் மலமூன்றுஞ் செற்றவர் சுத்தச் சிவமாவர் தோயார் மலபந்தம் கத்தும் சிலுகும் கலகமும் கைகாணார் சத்தம் பரவிந்து தானாமென் றெண்ணியே.

321

  1. நினைப்பு மறப்பு மிலாதவர் நெஞ்சம் வினைப்பற் றறுக்கும் விமலன் இருக்கும் வினைப்பற் றறுக்கும் விமலனைத் தேடி நினைக்கப் பெறிலவன் நீளியன் ஆமே.

322

  1. சிவபெரு மானென்று நானழைத் தேத்தத் தவபெரு மானென்று தான்வந்து நின்றான் அவபெரு மானென்னை ஆளுடை நாதன் பவபெரு மானைப் பணிந்துநின் றேனே.

323

  1. பணிந்துநின் றேன்பர மாதி பதியைத் துணிந்துநின் றேனினி மற்றொன்றும் வேண்டேன் அணிந்துநின் றேன்உடல் ஆதிப் பிரானைத் தணிந்துநின் றேன்சிவன் தன்மைகண் டேனே.

324

  1. என்னெஞ்சம் ஈசன் இணையடி தாஞ்சேர்ந்து முன்னஞ்செய் தேத்த முழுதும் பிறப்பறும் தன்னெஞ்சம் இல்லாத் தலைவன் தலைவிதி பின்னஞ்செய் தென்னைப் பிணக்கறுத் தானே.

325

  1. பிணக்கறுத் தான்பிணி மூப்பறுத் தெண்ணும் கணக்கறுத் தாண்டனன் காணந்தி என்னைப் பிணக்கறுத் தென்னுடன் முன்வந்த துன்பம் வணக்கலுற் றேன்சிவம் வந்தது தானே.

326

  1. சிவன்வந்து தேவர் குழாமுடன் கூடப் பவம்வந் திடநின்ற பாசம் அறுத்திட் டவனெந்தை யாண்டருள் ஆதிப் பெருமான் அவன்வந்தென் னுள்ளே அகப்பட்ட வாறே.

327

  1. கரும்புந் தேனுங் கலந்ததோர் காயத்தில் அரும்புங் கந்தமும் ஆகிய ஆனந்தம் விரும்பியே உள்ளம் வெளியுறக் கண்டபின் கரும்புங் கைத்தது தேனும் புளித்ததே.

328

  1. உள்ள சரியாதி ஒட்டியே மீட்டென்பால் வள்ளல் அருத்தியே வைத்த வளம்பாடிச் செய்வன வெல்லாஞ் சிவமாகக் காண்டலான் கைவள மின்றிக் கருக்கடந் தேனே.

329

  1. மீண்டார் கமலத்துள் அங்கி மிகச்சென்று தூண்டா விளக்கின் றகளிநெய் சோர்தலும் பூண்டாள் ஒருத்தி புவனசூ டாமணி மாண்டான் ஒருவன்கை வந்தது தானே.

330

  1. ஆறே யருவி யகங்குளம் ஒன்றுண்டு நூறே சிவகதி நுண்ணிது வண்ணமும் கூறே குவிமுலைக் கொம்பனை யாளொடும் வேறே யிருக்கும் விழுப்பொருள் தானே.

331

  1. அன்புள் ளுருகி அழுவன் அரற்றுவன் என்பும் உருக இராப்பகல் ஏத்துவன் என்பொன் மணியை இறைவனை ஈசனைத் தின்பன் கடிப்பன் திருத்துவன் றானே.

332

  1. மனம்வி ரிந்து குவிந்தது மாதவம் மனம்வி ரிந்து குவிந்தது வாயுவும் மனம்விரிந்து குவிந்தது மன்னுயிர் மனம்வி ரிந்துரை மாண்டது முத்தியே.

333

===21.தோத்திரம்=== 2981. மாயனை நாடி மனநெடுந் தேரேறிப் போயின நாடறி யாதே புலம்புவர் தேயமும் நாடுந் திரிந்தெங்கள் செல்வனைக் காயமின் னாட்டிடைக் கண்டுகொண் டேனே.


334

  1. மன்னு மலைபோல் மதவா ரணத்தின்மேல் இன்னிசை பாட இருந்தவ ராரெனில் முன்னியல் கால முதல்வனார் நாமத்தைப் பன்னினர் என்றே பாடறி வீரே.

335

  1. முத்தனின் முத்தை முகிழிள ஞாயிற்றை எத்தனை வானோரும் ஏத்தும் இறைவனை அத்தனைக் காணா தரற்றுகின் றேனையோர் பித்தன் இவனென்று பேசுகின் றாரே.

336

  1. புகுந்துநின் றானெங்கள் புண்ணிய மூர்த்தி புகுந்துநின் றானெங்கள் போதறி வாளன் புகுந்துநின் றானடி யார்தங்கள் நெஞ்சம் புகுந்துநின் றானயே போற்றுகின் றேனே.

337

  1. பூதக்கண் ணாடியிற் புகுந்திலன் போதுளன் வேதக்கண் ணாடியில் வேறே வெளிப்படும் நீதிக்கண்ணாடி நினைவார் மனத்துளன் கீதக்கண் ணாடியிற் கேட்டுநின் றேனே.

338

  1. நாமமோ ராயிரம் ஓதுமின் நாதனை ஏமமோ ராயிரத் துள்ளே இசைவீர்கள் ஓமமோ ராயிரம் ஓதவல் லாரவர் காமமோ ராயிரங் கண்டொழிந் தாரே.

339

  1. போற்றுகின் றேன்புகழ்ந் தும்புகழ் ஞானத்தைத் தேற்றுகின் றேன்சிந்தை நாயகன் சேவடி சாற்றுகின் றேன்அறை யோசிவ யோகத்தைப் போற்றுகின் றேன்எம் பிரானென்று நானே.

340

  1. நானா விதஞ்செய்து நாடுமின் நந்தியை ஊனார் கமலத்தினூடுசென் றப்புறம் வானோ ருலகம் வழிப்பட மீண்டபின் தேனார வுண்டு தெவிட்டலும் ஆமே.

341

  1. வந்துநின் றானடி யார்கட் கரும்பொருள் இந்திர னாதி இமையவர் வேண்டினும் சுந்தர மாதர் துழனியொன் றல்லது அந்தர வானத்தின் அப்புற மாமே.

342

  1. மண்ணிற் கலங்கிய நீர்போல் மனிதர்கள் எண்ணிற் கலங்கி இறைவ னிவனெனார் உண்ணிற் குளத்தின் முகந்தொரு பால்வைத்துத் தெண்ணிற் படுத்த சிவனவன் ஆமே.

343

  1. மெய்த்தவத் தானை விரும்பும் ஒருவர்க்குக் கைத்தலஞ் சேர்தரு நெல்லிக் கனியொக்கும் சுத்தனைத் தூய்நெறி யாய்நின்ற தேவர்கள் அத்தனை நாடி அமைந்தொழிந் தேனே.

344

  1. அமைந்தொழிந் தேன்அள வில்புகழ் ஞானம் சமைந்தொழிந் தேன்தடு மாற்றமொன் றில்லை புகைத்தெழும் பூதலம் புண்ணிய னண்ணி வகைந்து கொடுக்கின்ற வள்ளலு மாமே.

345

  1. வள்ளற் றலைவனை வானநன் னாடனை வெள்ளப் புனற்சடை வேத முதல்வனைக் கள்ளப் பெருமக்கள் காண்பர்கொ லோவென்று உள்ளத்தி னுள்ளே ஒளித்திருந் தாறுமே.

346

  1. ஆளு மலர்ப்பதந் தந்த கடவுளை நாளும் வழிபட்டு நன்மையுள் நின்றவர் கோளும் வினையும் அறுக்குங் குரிசிலின் வாளு மனத்தொடும் வைத்தொழிந் தேனே.

347

  1. விரும்பில் அவனடி வீர சுவர்க்கம் பொருந்தில் அவனடி புண்ணிய லோகம் திருந்தில் அவனடி தீர்த்தமும் ஆகும் வருந்தி அவனடி வாழ்த்தவல் லார்க்கே.

348

  1. வானக மூடறுத் தானிவ் வுலகினில் தானக மில்லாத் தனியாகும் போதகன் கானக வாழைக் கனிநுகர்ந் துள்ளுறும் பானகச் சோதியைப் பற்றிநின் றேனே.

349

  1. விதியது மேலை அமரர் உறையும் பதியது பாய்புனற் கங்கையும் உண்டு துதியது தொல்வினைப் பற்றறு விக்கும் பதியது வவ்விட்ட தந்தமும் ஆமே.

350

  1. மேலது வானவர் கீழது மாதவர் தானிடர் மானுடர் கீழது மாதனம் கானது கூவிள மாலை கமழ்சடை ஆனது செய்யும்எம் ஆருயிர் தானே.

351

  1. சூழுங் கருங்கடல் நஞ்சுண்ட கண்டனை ஏழு மிரண்டிலும் ஈசன் பிறப்பிலி யாழுஞ் சுனையும் அடவியும் அங்குளன் வாழும் எழுத்தைந்து மன்னனு மாமே.

352

  1. உலகம தொத்துமண் ஒத்துயர் காற்றை உலர்கதிர் அங்கியொத் தாதிப் பிரானும் நிலவிய மாமுகில் நீரொத்து மீண்டச் செலவொத் தமர்திகைத் தேவர் பிரானே.

353

  1. பரிசறிந் தங்குளன் அங்கி அருக்கன் பரிசறிந் தங்குளன் மாருதத் தீசன் பரிசறிந் தங்குளன் மாமதி ஞானப் பரிசறிந் தன்னிலம் பாரிக்கு மாறே.

354

  1. அந்தங் கடந்தும் அதுவது வாய்நிற்கும் பந்த வுலகினிற் கீழோர் பெரும்பொருள் தந்த வுலகெங்குந் தானே பராபரன் வந்து படைக்கின்ற மாண்பது வாமே.

355

  1. முத்தண்ட வீரண்ட மேமுடி யாயினும் அத்தன் உருவம் உலகே ழெனப்படும் அத்தனின் பாதாளம் அளவுள்ள சேவடி மத்தர் அதனை மகிழ்ந்துண ராரே.

356

  1. ஆதிப் பிரானம் பிரானவ் வகலிடச் சோதிப் பிரான்சுடர் மூன்றொளி யாய்நிற்கும் ஆதிப் பிரான் அண்டத் தப்புறங் கீழவன் ஆதிப் பிரானடு வாகி நின்றானே.

357

  1. அண்டங் கடந்துயர்ந் தோங்கும் பெருமையன் பிண்டங் கடந்த பிறவிச் சிறுமையன் தொண்டர் நடந்த கனைகழல் காண்டொறும் தொண்டர்கள் தூய்நெறி தூங்கிநின் றாரே.

358

  1. உலவுசெய் நோக்கம் பெருங்கடல் சூழ நிலமுழு தெல்லாம் நிறைந்தன னீசன் பலமுழு தெல்லாம் படைத்தனன் முன்னே புலமுழு பொன்னிற மாகிநின் றானே.

359

  1. பராபர னாகிப்பல் லூழிகள் தோறும் பராபர னாயிவ் வகலிடந் தாங்கித் தராபர னாய்நின்ற தன்மை யுணரார் நிராபர னாகி நிறைந்துநின் றானே.

360

  1. போற்றும் பெருந்தெய்வந் தானே பிறரில்லை ஊற்றமும் ஓசையும் ஓசை யொடுக்கமும் வேற்றுடல் தானேன் றதுபெருந் தெய்வமாம் காற்றது வீசன் கலந்துநின் றானே.

361

  1. திகையனைத் துஞ்சிவ னேயவ னாகின் மிகையனைத் துஞ்சொல்ல வேண்டா மனிதரே புகையனைத் தும்புறம் அங்கியிற் கூடு முகையனைத் துமெங்க ஆதிப் பிரானே.

362

  1. அகன்றான் அகலிடம் ஏழுமொன் றாகி இவன்றா னெனநின் றெளியனு மல்லன் சிவன்றான் பலபல சீவன மாகி நவின்றான் உலகுறு நம்பனு மாமே.

363

  1. கலையொரு மூன்றுங் கடந்தப்பால் நின்ற தலைவனை நாடுமின் தத்துவ நாதன் விலையில்லை விண்ணவ ரோடும் உரைப்பன் நரையில்லை யுள்ளுறு முள்ளவன் றானே.

364

  1. படிகால் பிரமன் செய்பாசம் அறுத்து நெடியான் குறுமைசெய் நேசம் அறுத்துச் செடியார் தவத்தினிற் செய்தொழில் நீக்கி அடியேனை உய்யவைத் தன்புகொண் டானே.

365

  1. ஈசனென் றெட்டுத் திசையு மியங்கின ஓசையி னின்றெழு சத்த முலப்பிலி தேசமொன் றாங்கே செழுங்கண்ட மொன்பதும் வாச மலர்போல் மருவிநின் றானே.

366

  1. இல்லனும் அல்லன் உளனல்லன் எம்மிறை கல்லது நெஞ்சம் பிளந்திடுங் காட்சியன் தொல்லையன் தூயன் துளக்கிலன் தூய்மணி சொல்லருஞ் சோதி தொடர்ந்துநின் றானே.

367

  1. உள்ளத் தொடுங்கும் புறத்துளும் நானென்னும் கள்ளத் தலைவன் கமழ்சடை நந்தியும் வள்ளற் பெருமை வழக்கஞ்செய் வார்கள்தம் அள்ளற் கடலை அறுத்துநின் றானே.

368

  1. மாறெதிர் வானவர் தானவர் நாடொறும் கூறுதல் செய்து குரைகழல் நாடுவர் ஊறுவர் உள்ளத் தகத்தும் புறத்துளும் வேறுசெய் தாங்கே விளக்கொளி யாமே.

369

  1. விண்ணிலும் வந்த வெளியிலன் மேனியன் கண்ணிலும் வந்த புலனல்லன் காட்சியன் பண்ணினில் வந்த பயனல்லன் பான்மையன் எண்ணிலா னந்தமும் எங்கள் பிரானே.

370

  1. உத்தமன் எங்கு முகக்கும் பெருங்கடல் நித்திலச் சோதியன் நீலக் கருமையன் எத்தனை காலமும் எண்ணுவ ரீசனைச் சித்தர் அமரர்கள் தேர்ந்தறி யாரே.

371

  1. நிறம்பல எவ்வண்ணம் அவ்வண்ணம் ஈசன் அறம்பல எவ்வண்ணம் அவ்வண்ணம் இன்பம் மறம்பல எவ்வண்ணம் அவ்வண்ணம் பாவம் புறம்பல காணினும் போற்றகி லாரே.

372

  1. இங்குநின் றானங்கு நின்றன னெங்குளன் பொங்கிநின் றான்புவ னாபதி புண்ணியன் கங்குல்நின் றான்கதிர் மாமதி ஞாயிறு எங்குநின் றான்மழை போலிறை தானே.

373

  1. உணர்வது வாயுமே யுத்தம மாயும் உணர்வது நுண்ணறி வெம்பெரு மானைப் புணர்வது வாயும் புல்லிய தாயும் உணர்வுட லண்டமு மாகிநின் றானே.

374

  1. தன்வலி யாலுல கேழுந் தரித்தவன் தன்வலி யாலே அணுவினுந் தானொய்யன் தன்வலி யான்மலை எட்டினுந் தான்சாரான் தன்வலி யாலே தடங்கட லாமே.

375

  1. ஏனோர் பெருமைய னாகிலு மெம்மிறை ஊனே சிறுமையுள் கட்கலந் தங்குளன் வானோ ரறியும் அளவல்லன் மாதேவன் தானே அறியுந் தவத்தின் அளவே.

376

  1. பிண்டாலம் வித்தில் எழுந்த பெருமுளை குண்டாலங் காய்த்துக் குதிரை பழுத்தது உண்டனர் உண்டார் உணர்விலா மூடர்கள் பிண்டத்துட் பட்டுப் பிணங்குகின் றார்களே.

377

===22.சர்வ வியாபி=== 3025. ஏயுஞ் சிவபோகம் ஈதன்றி யோரொளி ஆயும் அறிவையும் ஆயா உபாதியால் ஏய பரிய புரியும் தனதெய்தும் சாயும் தனது வியாபகந் தானே.


378

  1. நானறிந் தப்பொருள் நாட இடமில்லை வானறிந் தங்கே வழியுற விம்மிடும் ஊனறிந் துள்ளே உயிர்க்கின்ற ஒண்சுடர் தானறிந் தெங்குந் தலைப்பட லாமே.

379

  1. கடலிடை வாழ்கின்ற கௌவை உலகத்(து) உடலிடை வாழ்வுகொண்டுள்ளொளி நாடி உடலிடை வைகின்ற உள்ளுறு தேனைக் கடலின் மலிதிரைக் காணலும் ஆமே.

380

  1. பெருஞ்சுடர் மூன்றினும் உள்ளொளி யாகித் தெரிந்துடலாய்நிற்கும் தேவர் பிரானும் இருஞ்சுடர் விட்டிட் டிகலிடம் எல்லாம் பரிந்துடன் போகின்ற பல்கோரை ஆமே.

381

  1. உறுதியி னுள்வந்த உள்வினைப் பட்டும் சிறுதியின் வீழ்ந்தார் இரணம் தாகும் இறுதியின் உள்ளொளி திப்பிய மூர்த்தி பெறுதியின் மேலோர் பெருஞ்சுடர் ஆமே.

382

  1. பற்றி னுள்ளே பரமாய பரஞ்சுடர் முற்றினும் முற்றி முளைக்கின்ற மூன்றொளி நெற்றியி னுள்ளே நினைவாய் நிலைதரும் மற்றவ னாய்நின்ற மாதவன் தானே.

383

  1. தேவனும் ஆகும் திசைதிசை பத்துளும் ஏவனும் ஆம்விரி நீருல கேழையும் ஆவனும் ஆம்அமர்ந் தெங்கும் உலகினும் நாவனும் ஆகி நவிற்றுகின் றானே.

384

  1. நோக்குங் கருடன் நொடிஏழ் உலகையும் காக்கும் அவனித் தலைவனும் அங்குள நீக்கும் வினையென் நிமலன் பிறப்பிலி போக்கும் வரவும் புணரவல் லானே.

385

  1. செழுஞ்சடை யன்செம் பொனேயொக்கும் மேனி ஒழிந்தன வாயும் ஒருங்குடன் கூடும் கழிந்திலன் எங்கும் பிறப்பிலன் ஈசன் ஒழிந்தில கேழுல கொத்துநின் றானே.

386

  1. உணர்வும் அவனே உயிரும் அவனே புணர்வும் அவனே புலனும் அவனே இணரும் அவன்றன்னை எண்ணலும் ஆகான் துணரின் மலர்க்கந்தம் துன்னிநின் றானே.

387

  1. புலமையின் நாற்றமில் புண்ணியன் எந்தை நலமையின் ஞான வழக்கமும் ஆகும் விலமையில் வைத்துள வேதியர் கூறும் பலமையில் எங்கும் பரந்துநின் றானே.

388

  1. விண்ணவ னாயுல கேழுக்கு மேலுளன் மண்ணவ னாய்வலஞ் சூழ்கடல் ஏழுக்கும் தண்ணவ னாயது தன்மையின் நிற்பதோர் கண்ணவ னாகிக் கலந்துநின் றானே.

389

  1. நின்றனன் மாலொடு நான்முகன் தானாகி நின்றனன் தான்நிலங் கீழொடு மேலென நின்றனன் தான்நெடு மால்வரை ஏழ்கடல் நின்றனன் தானே வளங்கனி யாயே.

390

  1. புவனா பதிமிகு புண்ணியன் எந்தை அவனே உலகில் அடர்பெரும் பாகன் அவனே அரும்பல சீவனும் ஆகும் அவனே இறையென மாலுற்ற வாறே.

391

  1. உண்ணின் றொளிரும் உலவாப் பிராணனும் விண்ணின் றியங்கும் விரிகதிர்ச் செல்வனும் மண்ணின் றியங்கும் வாயுவு மாய்நிற்கும் கண்ணின் றிலங்கும் கருத்தவன் தானே.

392

  1. எண்ணும் எழுத்தும் இனஞ்செயல் அவ்வழிப் பண்ணும் திறனும் படைத்த பரமனைக் கண்ணிற் கவரும் கருத்தில் அதுஇது உண்ணின் றுருக்கியோர் ஆயமும் ஆமே.

393

  1. இருக்கின்ற எண்டிசை அண்டம் பாதாளம் உருக்கொடு தன்னடு வோங்கவிவ் வண்ணம் கருக்கொண்டே எங்குங் கலந்திருந் தானே திருக்கொன்றை வைத்த செஞ்சடை யானே.

394

  1. பலவுடன் சென்றஅப் பார்முழு தீசன் செலவறி வாரில்லை சேயன் அணியன் அலைவிலன் சங்கரன் ஆதிஎம் மாதி பலவில தாய்நிற்கும் பான்மைவல் லானே.

395

  1. அதுவறி வானவன் ஆதிப் புராணன் எதுவறி யாவகை நின்றவன் ஈசன் பொதுவது வான புவனங்கள் எட்டும் இதுவறி வான்நந்தி எங்கள் பிரானே.

396

  1. நீரும் நிலனும் விசும்பங்கி மாருதம் தூரும் உடம்புறும் சோதியு மாய்உளன் பேரும் பராபரன் பிஞ்ஞகன் எம்மிறை ஊரும் சகலன் உலப்பிலி தானே.

397

  1. மூலன் உரைசெய்த மூவாயிரந் தமிழ் மூலன் உரைசெய்த முந்நூறு மந்திரம் மூலன் உரைசெய்த முப்ப துபதேசம் மூலன் உரைசெய்த மூன்றும் ஒன்றாமே.

398

===23.வாழ்த்து=== 3046. வாழ்கவே வாழ்கஎன் நந்தி திருவடி வாழ்கவே வாழ்க மலமறுத் தான்பதம் வாழ்கவே வாழ்கமெய்ஞ் ஞானத் தவன்தாள் வாழ்கவே வாழ்க மலமிலான் பாதமே.

நான்காம் தந்திரம்

1

==நான்காம் தந்திரம்== ===1.அசபை=== 884. போற்றுகின் றேன்புகழ்ந் தும்புகல் ஞானத்தைத் தேற்றுகின் றேன்சிந்தை நாயகன் சேவடி சாற்றுகின் றேன்அறை யோசிவ யோகத்தை ஏற்றுகின் றேன்எம் பிரான்ஓர் எழுத்தே.


2

  1. ஓரெழுத் தாலே உலகெங்கும் தானாகி ஈரெழுத் தாலே இசைந்தங் கிருவராய் மூவெழுத் தாலே முளைக்கின்ற சோதியை மாவெழுத் தாலே மயக்கம துற்றதே.

3

  1. தேவர் உறைகின்ற சிற்றம் பலமென்றுந் தேவர் உறைகின்ற சிதம்பர மேயென்றுந் தேவர் உறைகின்ற திருஅம் பலமென்றுந் தேவர் உறைகின்ற தென்பொது வாமே.

4

  1. ஆமேயொன் னம்பலம் அற்புதம் ஆனந்தம் ஆமே திருக்கூத் தனவரத தாண்டவம் ஆமே பிரளய மாகும்அத் தாண்டவம் ஆமேசங் காரத் தருந்தாண் டவங்களே.

5

  1. தாண்டவ மான தனியெழுத் தோரெழுத் தாண்டவ மான தனுக்கிர கத்தொழில் தாண்டவங் கூத்துத் தனிநின்ற தற்பரந் தாண்டவங் கூத்துத் தமனியந் தானே.

6

  1. தானே பரஞ்சுடர் தத்துவ மாய்நிற்குந் தானே அகார உகாரம தாய்நிற்குந் தானே பரஞ்சுடர் தத்துவக் கூத்துக்குத் தானே தனக்குத் தராதலந் தானே.

7

  1. தராதல மூலைக்குத் தற்பர மாபரன் தராதலம் வெப்பு நமவா சியவாம் தராதலஞ் சொல்லிற் றானவா சியவாகுந் தராதல யோகந் தயாவாசி யாமே.

8

  1. ஆமே சிவங்கள் அகார உகாரங்கள் ஆமே பரங்கள் அறியா விடம்என்ப ஆமே திருக்கூத் தடங்கிய சிற்பரம் ஆமே சிவகதி ஆனந்த மாமே.

9

  1. ஆனந்த மூன்றும் அறிவிரண் டொன்றாகும் ஆனந்தகுஞ் சிவாய அறிவார் பலரில்லை ஆனந்த மோடும் அறியவல் லார்கட்கு ஆனந்தக் கூத்தாய் அகப்படுந் தானே.

10

  1. படுவ திரண்டும் பலகலை வல்லார் படுவ தோங்கார பஞ்சாக் கரங்கள் படுவது சங்காரத் தாண்டவப் பத்தி படுவது கோணம் பரந்திடும் வாறே.

11

  1. வாறே சதாசிவ மாறிலா ஆகமம் வாறே சிவகதி வண்டுறை புன்னையும் வாறே திருக்கூத்து ஆகம வசனங்கள் வாறே பொதுவாகு மன்றின் அமலமே.

12

  1. அமலம் பதிபசு பாசங்கள் ஆகமம் அமலந் திரோதாயி யாகுமா னந்தமாம் அமலஞ்சொல் ஆணவ மாயை காமியம் அமலந் திருக்கூத்தங் காடு மிடந்தானே.

13

  1. தானே தனக்குத் தலைவனு மாய்நிற்கும் தானே தனக்குத் தனமலை யாய்நிற்கும் தானே தனக்குத் தன்மய மாய்நிற்கும் தானே தனக்குத் தலைவனு மாமே.

14

  1. தலைவனு மாய்நின்ற தற்பரக் கூத்தனைத் தலைவனு மாய்நின்ற சற்பாத் திரத்தைத் தலைவனு மாய்நின்ற தாதவிழ் ஞானத் தலைவனு மாய்நின்ற தாளிணை தானே.

15

  1. இணையார் திருவடி எட்டெழுத் தாகும் இணையார் கழலிணை யீரைஞ்ச தாகும் இணையார் கழலிணை ஐம்பத்தொன் றாகும் இணையார் கழலிணை ஏழா யிரமே.

16

  1. ஏழா யிரமாய் இருபதாய் முப்பதாய் ஏழா யிரத்தும் எழுகோடி தானாகி ஏழா யிரத்துயிர் எண்ணிலா மந்திரம் ஏழா யிரண்டாய் இருக்கின்ற வாறே.

17

  1. இருக்கின்ற மந்திரம் ஏழா யிரமாம் இருக்கின்ற மந்திரம் இத்திறம் இல்லை இருக்கின்ற மந்திரம் சிவன்திரு மேனி இருக்கின்ற மந்திரம் இவ்வண்ணந் தானே

18

  1. தானே தனக்குத் தகுநட்டந் தானாகுந் தானே அகார உகாரம தாய்நிற்குந் தானே ரீங்காரத் தத்துவக் கூத்துக்குத் தானே உலகில் தனிநடந் தானே.

19

  1. நடமிரண் டொன்றே நளினம தாகும் நடமிரண் டொன்றே நமன்செய்யுங் கூத்து நடமிரண் டொன்றே நகைசெயும் மந்திரம் நடஞ்சிவ லிங்க நலஞ்செம்பு பொன்னே.

20

  1. செம்புபொன் னாகுஞ் சிவாயநம வென்னிற் செம்புபொன் னாகத் திரண்டது சிற்பரஞ் செம்புபொன் னாகும் ஸ்ரீயுங் கிரீயுமெனச் செம்பொன் னான திருவம் பலமே.

21

  1. திருவம் பலமாகச் சீர்ச்சக் கரத்தைத் திருவம் பலமாக வீராறு கீறித் திருவம் பலமாக விருபத்தைஞ் சாக்கித் திருவம் பலமாகச் செபிக்கின்ற வாறே.

22

  1. வாறே சிவாய நமச்சி வாயநம வாறே செபிக்கில் வரும்பேர் பிறப்பில்லை வாறே யருளால் வளர்கூத்துக் காணலாம் வாறே செபிக்கல் வரும்செம்பு பொன்னே.

23

  1. பொன்னான மந்திரம் புகலவு மொண்ணாது பொன்னான மந்திரம் பொறிகிஞ்சு கத்தாகும் பொன்னான மந்திரம் புகையுண்டு பூரிக்கிற் பொன்னாகும் வல்லார்க் குடம்புபொற் பாதமே.

24

  1. பொற்பாதங் காணலாம் புத்திர ருண்டாகும் பொற்பாதத் தாணையே செம்புபொன் னாயிடும் பொற்பாதங் காணத் திருமேனி யாயிடும் பொற்பாத நன்னடஞ் சிந்தனை சொல்லுமே.

25

  1. சொல்லு மொருகூட்டிற் புக்குச் சுகிக்கலாம் நல்ல மடவார் நயந்துட னேவருஞ் சொல்லினும் பாசச் சுடர்ப்பாம்பு நீங்கிடுஞ் சொல்லுந் திருக்கூத்தின் சூக்குமந் தானே.

26

  1. சூக்கும மெண்ணா யிரஞ்செபித் தாலுமேற் சூக்கும மான வழியிடைக காணலாஞ் சூக்கும மான வினையைக் கெடுக்கலாஞ் சூக்கும மான சிவனதா னந்தமே.

27

  1. ஆனந்த மொன்றென் றறைந்திட வானந்தம் ஆனந்தம் ஆ-ஈ-ஊ-ஏ ஓமொன் றைந்திடம் ஆனந்த மானந்தம் மஞ்சும தாயிடும் ஆனந்தம் -அம்-ஹ்ரீம்-அம்-க்ஷம்-ஆம் ஆகுமே

28

  1. மேனி யிரண்டும் விளங்காமல் மேற்கொள்ள மேனி யிரண்டு மிக்கார விகாரியா மேனி யிரண்டும் -ஊ-ஆ-ஈ-ஏ-ஓ என்னும் மேனி யிரண்டும்-ஈ-ஓ-ஊ-ஆ-ஏ- கூத்துவே.

29

  1. கூத்தே சிவாய நமசி வாயிடுங் கூத்தே ஈ-ஊ-ஆ-ஏ-ஓம்-சிவாயநம வாயிடுங் கூத்தே ஈ-ஊ-ஆ-ஏ-ஓம்-சிவாயநம வாயிடுங் கூத்தே இ-ஊ-ஆ-ஏ-ஓம் நமசிவாய கோளொன்று மாறே

30

  1. ஒன்றிரண் டாடவோ ரொன்று முடனாட ஒன்றினின் மூன்றாட வோரேழு மொத்தாட ஒன்றினா லாடவோ ரொன்பது முடனாட மன்றினி லாடினான் மாணிக்கக் கூத்தே.

31

===2.திருவம்பலச்சக்கரம்=== 914. இருந்தவிவ் வட்டங்க ளீராறி ரேகை இருந்த விரேகைமே லீரா றிருத்தி இருந்த மனைகளு மீராறு பத்தொன் றிருந்த மனையொன்றி லெய்துவன் றானே.


32

  1. தானொன்றி வாழிடந் தன்னெழுத் தேயாகுந் தானொன்று மந்நான்குந் தன்பே ரெழுத்தாகுந் தானொன்று நாற்கோணந் தன்னைந் தெழுத்தாகுந் தானொன்றி லேயொன்று மவ்வரன் றானே.

33

  1. அரகர என்ன அரியதொன் றில்லை அரகர என்ன அறிகிலர் மாந்தர் அரகர என்ன அமரரும் ஆவர் அரகர என்ன அறும்பிறப் பன்றே.

34

  1. எட்டு நிலையுள எங்கோன் இருப்பிடம் எட்டினில் ஒன்றும் இருமூன்றும் ஈரேழும் ஒட்டிய விந்துவும் நாதமும் ஓங்கிடப் பட்டது மந்திரம் பான்மொழி பாலே.

35

  1. மட்டவிழ் தாமரை மாதுநல் லாளுடன் ஒட்டி இருந்த உபாயம் அறிகிலர் விட்ட எழுத்தை விடாத எழுத்துடன் கட்டவல் லாருயிர் காக்கவல் லாரே.

36

  1. ஆலய மாக அமர்ந்தபஞ் சாக்கரம் ஆலய மாக அமர்ந்தவித் தூலம்பேர் ஆலய மாக வருகின்ற சூக்குமம் ஆலய மாக அமர்ந்திருந் தானே.

37

  1. இருந்தவிவ் வட்ட மிருமூன்றி ரேகை இருந்த வதனு ளிரேகை யைந்தாக இருந்த வறைக ளிருபத்தைஞ் சாக இருந்த வறையொன்றி லெய்து மகாரமே.

38

  1. மகார நடுவே வளைந்திடுஞ் சத்தியை ஒகாரம் வளைந்திட் டும்பிளந் தேற்றி யகாரந் தலையா யிருகண் சிகாரமாய் நகார வகாரநற் காலது நாடுமே.

39

  1. நாடும் பிரணவ நடுவிரு பக்கமும் ஆடு மவர்வா யமர்ந்தங்கு நின்றது நாடு நடுவுண் முகநம சிவாய வாடுஞ் சிவாயநம புறவட்டத் தாயதே.

40

  1. ஆயுஞ் சிவாய நமமசி வாயந வாயு நமசிவா யயநம சிவாயந வாயுமே வாய நமசியெனு மந்திர மாயுஞ் சிகாரந் தொட்டந்தத் தடைவிலே.

41

  1. அடைவினில் ஐம்பதும் ஐயைந் தறையின் அடையும் அறையொன்றுக் கீரெழுத் தாக்கி அடையு மசுாரத்தில் அந்தமாம் க்ஷவ்வும் அடைவின் எழுத்தைம் பத்தொன்றும் அமர்ந்ததே

42

  1. அமர்ந்த அரகர வாம்புர வட்டம் அமர்ந்த அரிகரி யாமத னுள்வட்டம் அமர்ந்த அசபை யாமத னுள்வட்டம் அமர்ந்தவி ரேகையும் ஆகின்ற சூலமே.

43

  1. சூலத் தலையினில் தோற்றிடுஞ் சத்தியுஞ் சூலத் தலையினில் சூழும்ஓங் காரத்தால் சூலத் திடைவெளி தோற்றிடும் அஞ்செழுத் தாலப் பதிக்கும் அடைவது வாமே.

44

  1. அதுவாம் அகார இகார உகாரம் அதுவாம் எகாரம் ஒகார மதஞ்சாம் அதுவாகுஞ் சக்கர வட்டமேல் வட்டம் பொதுவாம் இடைவெளி பொங்குநம் பேரே.

45

  1. பேர்பெற் றதுமூல மந்திரம் பின்னது சோர்வுற்ற சக்கர வட்டத்துட் சந்தியின் நேர்பெற் றிருந்திட நின்றது சக்கரம் ஏர்பெற் றிருந்த இயல்பிது வாமே.

46

  1. இயலுமிம் மந்திரம் எய்தும் வழியின் செயலும் அறியத் தெளிவிக்கு நாதன் புயலும் புனலும் பொருந்தங்கி மண்விண் முயலும் எழுத்துக்கு முன்னா இருந்ததே.

47

  1. ஆரெட் டெழுத்தின்மே லாறும் பதினாலும் ஏறிட் டதன்மேலே விந்துவும் நாதமுஞ் சீரிட்டு நின்று சிவாய நமவென்னக் கூறிட்டு மும்மலங் கூப்பிட்டுப் போமே.

48

  1. அண்ணல் இருப்ப தவளங் கரத்துளே பெண்ணினல் லாளும் பிரானக் கரத்துளே எண்ணி இருவர் இசைந்தங் கிருந்திடப் புண்ணிய வாளர் பொருளறி வார்களே.

49

  1. அவ்விட்டு வைத்தங் கரவிட்டு மேல்வைத்து இவ்விட்டுப் பார்க்கில் இலிங்கம தாய்நிற்கும் அவ்விட்டு மேலே வளியுறக் கண்டபின் தொம்மிட்டு நின்ற சுடர்க்கொழுந் தாமே.

50

  1. அவ்வுண்டு சவ்வுண் டனைத்துமங் குள்ளது கவ்வுண்டு நிற்குங் கருத்தறி வாரில்லை கவ்வுண்டு நிற்குங் கருத்தறி வாளர்க்குச் சவ்வுண்டு சத்தி சதாசிவன் தானே.

51

  1. அஞ்செழுத் தாலே அமர்ந்தனன் நந்தியும் அஞ்செழுத் தாலே அமர்ந்தபஞ் சாக்கரம் அஞ்செழுத் தாகிய வக்கர சக்கரம் அஞ்செழுத் துள்ளே அமர்ந்திருந் தானே.

52

  1. கூத்தனைக் காணுங் குறிபல பேசிடிற் கூத்த னெழுத்தின் முதலெழுத் தோதினார் கூத்தனொ டொன்றிய கொள்கைய ராய்நிற்பர் கூத்தனைக் காணும் குறியது வாமே.

53

  1. அத்திசைக் குள்நின்ற அனலை எழுப்பியே அத்திசைக் குள்நின்ற நவ்வெழுத் தோதினால் அத்திசைக் குள்நின்ற அந்த மறையனை அத்திசைக் குள்ளுற வாக்கினன் தானே.

54

  1. தானே யளித்திடுந் தையலை நோக்கினால் தானே யளித்திட்டு மேலுற வைத்திடுந் தானே யளித்த மகாரத்தை ஓதிடத் தானே யளித்ததோர் கல்லொளி யாகுமே.

55

  1. கல்லொளி யேயென நின்ற வடதிசை கல்லொளி யேயென நின்றனன் இந்திரன் கல்லொளி யேயென நின்ற சிகாரத்தைக் கல்லொளி யேயெனக் காட்டிநின் றானே.

56

  1. தானே யெழுகுணத் தண்சுட ராய்நிற்குந் தானே யெழுகுணம் வேதமு மாய்நிற்கும் தானே யெழுகுண மாவதும் ஓதிடில் தானே யெழுந்த மறையவ னாமே.

57

  1. மறையவ னாக மதித்த பிறவி மறையவ னாக மதித்திடக் காண்பர் மறையவன் அஞ்செழுத் துண்ணிற்கப் பெற்ற மறையவன் அஞ்செழுத் தாமது வாகுமே.

58

  1. ஆகின்ற பாதமு மந்நவாய் நின்றிடும் ஆகின்ற நாபியுள் அங்கே மகாரமாம் ஆகின்ற சீயிரு தோள்வவ்வாய்க் கண்டபின் ஆகின்ற வச்சுட ரவ்வியல் பாமே.

59

  1. அவ்வியல் பாய இருமூன் றெழுத்தையுஞ் செவ்வியல் பாகச் சிறந்தனன் நந்தியும் ஒவ்வியல் பாக ஒளியுற நோக்கிடிற் பவ்வியல் பாகப் பரந்துநின் றானே.

60

  1. பரந்தது மந்திரம் பல்லுயிர்க் கெல்லாம் வரந்தரு மந்திரம் வாய்த்திட வாங்கித் துரந்திடு மந்திரஞ் சூழ்பகை போக உரந்தரு மந்திரம் ஓமென் றெழுப்பே.

61

  1. ஓமென் றெழுப்பித்தன் உத்தம நந்தியை நாமென் றெழுப்பி நடுவெழு தீபத்தை ஆமென் றெழுப்பியவ் வாற்றி வார்கள் மாமன்று கண்டு மகிழ்ந்திருந் தாரே.

62

  1. ஆகின்ற சக்கரத் துள்ளே எழுத்தைந்தும் பாகொன்றி நின்ற பதங்களில் வர்த்திக்கும் ஆகின்ற ஐம்பத் தோரெழுத் துள்நிற்கப் பாகொன்றி நிற்கும் பராபரன் தானே.

63

  1. பரமாய அஞ்செழுத் துள்நடு வாகப் பரமாய நவசிம் பார்க்கில் மவயநசி பரமாய சியநம வாமபரத் தோதிற் பரமாய வாசி மயநமாய் நின்றே.

64

  1. நின்ற எழுத்துக்கள் நேர்தரு பூதமும் நின்ற எழுத்துக்கள் நேர்தரு வண்ணமும் நின்ற எழுத்துக்கள் நேர்தர நின்றிடில் நின்ற எழுத்துள்ளும் நின்றனன் தானே.

65

  1. நின்றது சக்கரம் நீளும் புவியெல்லாம் மன்றது வாய்நின்ற மாயநன் னாடனைக் கன்றது வாகக் கறந்தனன் நந்தியுங் குன்றிடை நின்றிடுங் கொள்கைய னாமே.

66

  1. கொண்டஇச் சக்கரத் துள்ளே குணம்பல கொண்டஇச் சக்கரத் துள்ளே குறியைந்து கொண்டஇச் சக்கரங் கூத்தன் எழுத்தைந்துங் கொண்டஇச் சக்கரத் துள்நின்ற கூத்தே.

67

  1. வெளியி லிரேகை யிரேகையி லத்தலை சுளியில் உகாரமாஞ் சுற்றிய வன்னி நெளிதரு கால்கொம்பு நேர்விந்து நாதந் தெளியும் பிரகாரஞ் சிவமந் திரமே.

68

  1. அகார வுகார சிகார நடுவாய் வகாரமோ டாறும் வளியுடன் கூடிச் சிகார முடனே சிவன்சிந்தை செய்ய ஒகார முதல்வன் உவந்துநின் றானே.

69

  1. அற்ற விடத்தே அகாரம் தாவது உற்ற விடத்தே யுறுபொருள் கண்டிடச் செற்றம் மறுத்த செழுஞ்சுடர் மெய்ப்பொருள் குற்றம் அறுத்த பொன்போலுங் குளிகையே.

70

  1. அவ்வென்ற போதினில் உவ்வெழுத் தாலித்தால் உவ்வென்ற முத்தி யுருகிக் கலந்திடும் மவ்வென்றென் னுள்ளே வழிபட்ட நந்தியை எவ்வணஞ் சொல்லுகேன் எந்தை இயற்கையே.

71

  1. நீரில் எழுத்திவ் வுலகா ரறிவது வானில் எழுத்தொன்று கண்டறி வாரில்லை யாரிவ் வெழுத்தை அறிவா ரவர்கள் ஊனில் எழுத்தை உணர்கிலர் தாமே

72

  1. காலை நடுவுறக் காயத்தில் அக்கரம் மாலை நடுவுற ஐம்பது மாவன மேலை நடுவுற வேதம் விளம்பிய மூலம் நடுவுற முத்திதந் தானே.

73

  1. நாவியின் கீழது நல்ல எழுத்தொன்று பாவிக ளத்தின் பயனறி வாரில்லை ஓவிய ராலும் அறியவொண் ணாதது தேவியுந் தானுந் திகழ்ந்திருந் தானே.

74

  1. அவ்வொடு சவ்வென்ற தரனுற்ற மந்திரம் அவ்வொடு சவ்வென்ற தாரும் அறிகிலர் அவ்வொடு சவ்வென்ற தாரும் அறிந்தபின் அவ்வொடு சவ்வும் அனாதியு மாமே.

75

  1. மந்திரம் ஒன்றுள் மலரால் உதிப்பது உந்தியி னுள்ளே உதயம்பண் ணாநிற்குஞ் சந்திசெய் யாநிற்பர் தாம தறிகிலர் சந்தி தொழுதுபோ யார்த்தகன் றார்களே.

76

  1. சேவிக்கு மந்திரஞ் செல்லுந் திசைபெற ஆவிக்குள் மந்திரம் ஆதார மாவன பூவுக்குள் மந்திரம் போக்கற நோக்கிடில் ஆவிக்குள் மந்திரம் அங்குச மாமே

77

  1. அருவினில் அம்பரம் அங்கெழு நாதம் பெருகு துடியிடை பேணிய விந்து மருவி யகார சிகார நடுவாய் உருவிட வூறு முறுமந் திரமே

78

  1. விந்துவும் நாதமும் மேவி யுடன்கூடிச் சந்திர னோடே தலைப்படு மாயிடில் அந்தர வானத் தமுதம்வந் தூறிடும் அங்குதி மந்திரம் ஆகுதி யாமே

79

  1. ஆறெழுத் தோதும் அறிவார் அறிகிலார் ஆறெழுத் தொன்றாக ஓதி உணரார்கள் வேறெழுத் தின்றி விளம்பவல் லார்கட்கு ஓரெழுத் தாலே உயிர்பெற லாமே

80

  1. ஓதும் எழுத்தோ டுயிர்க்கலை மூவைஞ்சும் ஆதி எழுத்தவை ஐம்பதோ டொன்றென்பர் சோதி எழுத்தினில் ஐயிரு மூன்றுள நாத எழுத்திட்டு நாடிக்கொள் வீரே.

81

  1. விந்துவி லுஞ்சுழி நாதம் எழுந்திடப் பந்தத் தலைவி பதினாறு கலையதாய்க் சுந்தர வாகரங் காலுடம் பாயினாள் அந்தமும் இன்றியே ஐம்பத்தொன் றாயதே.

82

  1. ஐம்ப தெழுத்தே அனைத்தும்வே தங்களும் ஐம்ப தெழுத்தே அனைத்தாக மங்களும் ஐம்ப தெழுத்தேயு மாவ தறிந்தபின் ஐம்ப தெழுத்தும்போய் அஞ்செழுத் தாமே.

83

  1. அஞ்செழுத் தாலைந்து பூதம் படைத்தனன் அஞ்செழுத் தாற்பல யோனி படைத்தனன் அஞ்செழுத் தாலிவ் வகலிடந் தாங்கினன் அஞ்செழுத் தாலே அமர்ந்துநின் றானே.

84

  1. வீழ்ந்தெழ லாம்விகிர் தன்திரு நாமத்தைச் சேர்ந்தொழி யாமல் தொடங்கும் ஒருவற்குச் சார்ந்த வினைத்துயர் போகத் தலைவனும் போந்திடும் என்னும் புரிசடை யோனே.

85

  1. உண்ணு மருந்தும் உலப்பிலி காலமும் பண்ணுறு கேள்வியும் பாடலு மாய்நிற்கும் விண்ணின் றமரர் விரும்பி அடிதொழ எண்ணின் றெழுத்தஞ்சு மாகிநின் றானே.

86

  1. ஐந்தின் பெருமையே அகலிட மாவதும் ஐந்தின் பெருமையே ஆலய மாவதும் ஐந்தின் பெருமையே யறவோன் வழக்கமும் ஐந்தின் வகைசெயப் பாலனு மாமே.

87

  1. வேரெழுத் தாய்விண்ணாய் அப்புற மாய்நிற்கும் நீரெழுத் தாய்நிலந் தாங்கியும் அங்குள்ள சீரேழுத் தாயங்கி யாயுயி ராமெழுத் தோரெழுத் தீசனும் ஒண்சுட ராமே.

88

  1. நாலாம் எழுத்தோசை ஞாலம் உருவது நாலாம் எழுத்தினுள் ஞாலம் அடங்கிற்று நாலாம் எழுத்தே நவிலவல் லார்கட்கு நாலாம் எழுத்தது நன்னெறி தானே.

89

  1. இயைந்தனள் ஏந்திழை என்னுள மேவி நயந்தன ளங்கே நமசிவ என்னும் பயந்தனை யோரும் பதமது பற்றும் பெயர்ந்தனன் மற்றும் பிதற்றறுத் தேனே.

90

  1. ஆமத் தினிதிருந் தன்ன மயத்தினை ஓமத்தி லேயுதம் பண்ணும் ஒருத்திதன் நாம் நமசிவ என்றிருப் பாருக்கு நேமத் தலைவி நிலவிநின் றாளே.

91

  1. பட்டம் பரிசே பரமஞ் செழுத்ததின் இட்ட மறிந்திட் டிரவு பகல்வர நட்டம் தாடு நடுவே நிலயங்கொண் டட்டதே சப்பொரு ளாகிநின் றாளே.

92

  1. அகாரம் உயிரே உகாரம் பரமே மகார மலமாய் வருமுப்ப தாறிற் சிகாரஞ் சிவமாய் வகாரம் வடிவமாய் அகாரம் உயிரென் றறையலு மாமே.

93

  1. நகார மகார சிகார நடுவாய் வகாரம் இரண்டு வளியுடன் கூடி ஒகார முதற்கொண் டொருக்கால் உறைக்க மகார முதல்வன் மனத்தகத் தானே.

94

  1. அஞ்சுள வானை அடவியுள் வாழ்வன அஞ்சுக்கும் அஞ்செழுத் தங்குச மாவன அஞ்சையுங் கூடத் தடுக்கவல் லார்கட்கே அஞ்சாதி யாதி அகம்புக லாமே.

95

  1. ஐந்து கலையில் அகாராதி தன்னிலே வந்த நகாராதி மாற்றி மகாராதி நந்தியை மூலத்தே நாடிப் பரையொடுஞ் சந்திசெய் வார்க்குச் சடங்கில்லை தானே.

96

  1. மருவுஞ் சிவாயமே மன்னும் உயிரும் அருமந்த யோகமும் ஞானமு மாகுந் தெருள்வந்த சீவனார் சென்றிவற் றாலே அருள்தங்கி யச்சிவ மாவது வீடே.

97

  1. அஞ்சுக அஞ்செழுத் துண்மை அறிந்தபின் நெஞ்சகத் துள்ளே நிறையும் பராபரம் வஞ்சக மில்லை மனைக்கும் அழிவில்லை தஞ்ச மிதுவென்று சாற்றுகின் றேனே.

98

  1. சிவாயவொ டவ்வே தெளிந்துளத் தோதச் சிவாயவொ டவ்வே சிவனுரு வாகுஞ் சிவாயவொ டவ்வுந் தெளியவல் லார்கள் சிவாயவொ டவ்வே தெளிந்திருந் தாரே.

99

  1. சிகார வகார யகார முடனே நகார மகார நடுவுற நாடி ஒகார முடனே ஒருகா லுரைக்கு மகார முதல்வன் மதித்துநின் றானே.

100

  1. நம்முதல் ஓரைந்தின் நாடுங் கருமங்கள் அம்முதல் ஐந்தில் அடங்கிய வல்வினை சிம்முத லுள்ளே தெளியவல் லார்கட்குத் தம்முத லாகுஞ் சதாசிவந் தானே.

101

  1. நவமுஞ் சிவமும் உயிர்பர மாகுந் தவமொன் றிலாதன தத்துவ மாகுஞ் சிவமொன்றி யாய்பவ ராதர வாலச் வாலச் சிவமென்ப தானாம் எனுந்தெளி வுற்றதே.

102

  1. கூடிய எட்டும் இரண்டுங் குவிந்தறி நாடிய நந்தியை ஞானத்து ளேவைத்து ஆடிய ஐவரும் அங்குற வாவர்கள் தேடி அதனைத் தெளிந்தறி யீரே.

103

  1. எட்டும் இரண்டும் இனிதறி கின்றிலர் எட்டும் இரண்டும் அறியாத ஏழையர் எட்டும் இரண்டும் இருமூன்று நான்கெனப் பட்டது சித்தாந்த சன்மார்க்க பாதமே

104

  1. எட்டு வரையின் மேலெட்டு வரைகீறி இட்ட நடுவுள் இறைவன் எழுத்தொன்றில் வட்டத்தி லேயறை நாற்பத்தெட் டுமிட்டுச் சிட்டஞ் செழுத்துஞ் செபிசீக் கிரமே.

105

  1. தானவர் சட்டர் சதிரர் இருவர்கள் ஆனவிம் மூவரோ டாற்றவ ராதிகள் ஏனைப் பதினைந்தும் விந்துவும் நாதமுஞ் சேனையுஞ் செய்சிவ சக்கரந் தானே.

106

  1. பட்டன மாதவ மாற்றும் பராபரம் விட்டனர் தம்மை விகிர்தா நமவென்பர் எட்டனை யாயினும் ஈசன் திறத்திறம் ஒட்டுவன் பேசுவன் ஒன்றறி யேனே.

107

  1. சிவமுதல் மூவரோ டைவர் சிறந்து அவைமுதல் ஆறிரண் டொன்றொடொன் றான அவைமுதல் விந்துவும் நாதமும் ஓங்கச் சவைமுதல் சங்கரன் தன்பெயர் தானே.

108

  1. வித்தாஞ் செகமய மாக வரைகீறி நத்தார் கலைகள் பதினாறு நாட்டிப்பின் உத்தாரம் பன்னிரண் டாதி கலைதொகும் பத்தாம் பிரம சடங்குபார்த் தோதிடே.

109

  1. கண்டெழுந் தேன்கம லம்மல ருள்ளிடை கொண்டொழிந் தேனுடன் கூடிய காலத்துப் பண்பழி யாத பதிவழி யேசென்று நண்பழி யாமே நமவென லாமே

110

  1. புண்ணிய வானவர் பூமழை தூவிநின்(று) எண்ணுவர் அண்ணல் இணையடி மந்திரம் நண்ணுவர் நண்ணி நமஎன்னு நாமத்தைக் கண்ணென உன்னிக் கலந்துநின் றாரே.

111

  1. ஆறெழுத் தாலவ் வாறு சமயங்கள் ஆறுக்கு நாலே இருபத்து நாலென்பர் சாவித் திரியில் தலையெழுத் தொன்றுள பேதிக்க வல்லார் பிறவியற் றார்களே.

112

  1. எட்டினில் எட்டறை யிட்டோ ரறையிலே கட்டிய ஒன்றெட்டாய்க் காண நிறையிட்டுச் சுட்டி இவற்றைப் பிரணவஞ் சூழ்ந்திட்டு மட்டும் உயிர்கட் குமாபதி யானுண்டே.

113

  1. நம்முதல் அவ்வொடு நாவின ராகிய யம்முத லாகிய எட்டிடை யுற்றிட்டு உம்முத லாகவே உணர்பவர் உச்சிமேல் உம்முத லாயவன் உற்றுநின் றானே.

114

  1. நின்ற அரசம் பலகைமேல் நேராக ஒன்றிட மவ்விட்டு ஓலையிற் சாதகந் துன்று மெழுகையுள் பூசிச் சுடரிடைத் தன்ற வெதும்பிடத் தம்பனங் காணுமே.

115

  1. கரண விறளிப் பலகை யமன்றிசை மரணமிட் டேட்டின் மகார வெழுத்திட்டு வரணமி லைங்காயம் பூசி யடுப்பிடை முரணிற் புதைத்திட மோகன மாகுமே.

116

  1. ஆங்கு வடமேற்கில் ஐயனார் கோட்டத்திற் பாங்கு படவே பலாசப் பலகையில் காங்கரு மேட்டிற் கடுப்பூசி விந்துவிட்(டு) ஓங்காரம் வைத்திடு உச்சாட னத்துக்கே.

117

  1. உச்சியம் போதில் ஒளிவன்னி மூலையிற் பச்சோலை யிற்பஞ்ச காயத்தைப் பாரித்து முச்சது ரத்தின் முதுகாட்டில் வைத்திடு வைச்சபின் மேலோர் மாரணம் வேண்டிலே.

118

  1. ஏய்ந்த வரிதார மேட்டின்மேலே பூசி ஏய்ந்த வகாரம் உகாரம் எழுத்திட்டு வாய்ந்ததோர் வில்வப் பலகை வசியத்துக் கேய்ந்தவைத் தெண்பதி னாயிரம் வேண்டிலே

119

  1. எண்ணாக் கருடனை ஏட்டின் யகாரமிட்(டு) எண்ணாப் பொன்னாளில் எழுவெள்ளி பூசிடா வெண்ணாவற் பலகையிலிட்டுமேற் கேநோக்கி எண்ணா வெழுத்தொடெண் ணாயிரம் வேண்டிலே

120

=== 3.அருச்சனை=== 1003. அம்புய நீலங் கழுநீ ரணிநெய்தல் வம்பவிழ் பூகமும் மாதவி மந்தாரம் தும்பை வகுளஞ் சுரபுன்னை மல்லிகை செண்பகம் பாதிரி செவ்வந்தி சாத்திடே.


121

  1. சாங்கம் தாகவே சந்தொடு சந்தனந் தேங்கமழ் குங்குமங் கர்ப்பூரங் காரகில் பாங்கு படப்பனி நீராற் குழைத்துவைத்(து) ஆங்கே அணிந்துநீர் அர்ச்சியும் அன்பொடே

122

  1. அன்புட னேநின் றமுதமும் ஏற்றியே பொன்செய் விளக்கும் புகைதீபந் திசைதொறுந் துன்பம் அகற்றித் தொழுவோர் நினையுங்கால் இன்புட னேவந் தெய்திடும் முத்தியே.

123

  1. எய்தி வழிப்படில் எய்தா தனவில்லை எய்தி வழிப்படில் இந்திரன் செல்வமும் எய்தி வழிப்படில் எண்சித்தி உண்டாகும் எய்தி வழிப்படில் எய்திடும் முத்தியே.

124

  1. நண்ணும் பிறதார நீத்தார் அவித்தார் மண்ணிய நைவேத் தியமனு சந்தான நண்ணிய பஞ்சாங்க நண்ணுஞ் செபமென்னு மன்னு மனபவ னத்தொடு வைகுமே.

125

  1. வேண்டார்கள் கன்மம் விமலனுக் காட்பட்டோர் வேண்டார்கள் கன்ம மதிலிச்சை யற்றபேர் வேண்டார்கள் கன்மம் மிகுசிவ யோகிகள் வேண்டார்கள் கன்மம் மிகுதியோ ராய்ந்தன்பே

126

  1. அறிவரு ஞானத் தெவரும் அறியார் பொறிவழி தேடிப் புலம்புகின் றார்கள் நெறிமனை யுள்ளே நிலைபெற நோக்கில் எறிமணி யுள்ளே இருக்கலு மாமே

127

  1. இருளும் வெளியும்போல் இரண்டாம் இதயம் அருளறி யாமையும் மன்னு மறிவு மருளியவை விட்டெறி யாமை மயங்கு மருளுஞ் சிதைத்தோ ரவர்களா மன்றே.

128

  1. தானவ னாக அவனேதா னாயிட ஆன இரண்டில் அறிவன் சிவமாகப் போனவ னன்பிது நாலாம் மரபுறத் தாவை னாகுமோ ராதித்த தேவரே.

129

  1. ஓங்கார முந்திக்கீழ் உற்றிடும் எந்நாளும் நீங்கா வகாரமும் நீள்கண்டத் தாயிடும் பாங்கார் நகாரம் பயில்நெற்றி யுற்றிடும் வீங்காகும் விந்துவும் நாதமே லாகுமே.

130

  1. நமவது வாசன மான பசுவே சிவமது சித்திச் சிவமாம் பதியே நமலற வாதி நாடுவ தன்றாஞ் சிவமாகு மாமோனஞ் சேர்தல்மெய் வீடே.

131

  1. தெளிவரு நாளிற் சிவஅமு தூறும் ஒளிவரு நாளில் ஓரெட்டில் உகளுங் ஒளிவரு அப்பதத் தோரிரண் டாகில் வெளிதரு நாதன் வெளியாய் இருந்தே

132

=== 4.நவகுண்டம்=== 1015. நவகுண்ட மானவை நானுரை செய்யின் நவகுண்டத் துள்ளெழு நற்றீபந் தானும் நவகுண்டத் துள்ளெழு நன்மைகள் எல்லாம் நவகுண்ட மானவை நானுரைப் பேனே.


133

  1. உரைத்திடுங் குண்டத்தின் உள்ளேமுக் காலும் நகைத்தெழு நாற்கோண நன்மைகள் ஐந்தும் பகைத்திடு முப்புரம் பாரங்கி யோடே மிகைத்திடு குண்டங்கள் மேலறி யோமே.

134

  1. மேலறிந் துள்ளே வெளிசெய்த வப்பொருள் காலறிந் துள்ளே கருத்துற்ற செஞ்சுடர் பாரறிந் தண்டஞ் சிறகற நின்றது நானறிந் துள்ளே நாடிக்கொண் டேனே.

135

  1. கொண்டஇக் குண்டத்தின் உள்ளெழு சோதியால் அண்டங்கள் ஈரேழு மாக்கி அழிக்கலாம் பண்டையுள் வேதம் பரந்த பரப்பெலாம் இன்றுசொல் நூலாய் எடுத்துரைத் தேனே.

136

  1. எடுத்தவக் குண்டத் திடம்பதி னாறிற் பதித்த கலைகளும் பாலித்து நிற்கும் கதித்தனல் உள்ளெழக் கண்டுகொள் வார்க்கே கொதித்தெழு வல்வினை கூடகி லாவே.

137

  1. கூடமுக் கூடத்தின் உள்ளெழு குண்டத்துள் ஆடிய ஐந்தும் அகம்புறம் பாய்நிற்கும் பாடிய பன்னீ ரிராசியும் அங்கெழ நாடிக்கொள் வார்கட்கு நற்சுடர் தானே

138

  1. நற்சுட ராகுஞ் சிரமுக வட்டமாங் கைச்சுட ராகுங் கருத்துற்ற கைகளிற் பைச்சுடர் மேனி பதைப்புற் றிலிங்கமும் நற்சுட ராயெழு நல்லதென் றாளே.

139

  1. நல்லதென் றாளே நமக்குற்ற நாயகஞ் சொல்லதென் றாளே சடர்முடி பாதமா மெல்லநின் றாளை வினவகில் லாதவர் கல்லதன் றாளையுங் கற்றும்வின் னாளே.

140

  1. வின்னா விளம்பிறை மேவிய குண்டத்துச் சொன்னால் இரண்டுஞ் சுடர்நாகந் திக்கெங்கும் பன்னாலு நாகம் பரந்த பரஞ்சுடர் என்னாகத் துள்ளே இடங்கொண்ட வாறே.

141

  1. இடங்கொண்ட பாதம் எழிற்சுட ரேக நடங்கொண்ட பாதங்கள் நன்னீ ரதற்குச் சகங்கொண்ட கையிரண் டாறுந் தழைப்ப முகங்கொண்ட செஞ்சுடர் முக்கண னார்க்கே.

142

  1. முக்கணன் றானே முச்சுட ராயவன் அக்கணன் றானே அகிலமும் உண்டவன் திக்கணனாகித் திசையெட்டுங் கண்டவன் எட்கணன் றானுக்கும் எந்தை பிரானே.

143

  1. எந்தைபிரானுக் கிருமூன்று வட்டமாய்த் தந்தைதன் முன்னே சண்முகந் தோன்றலால் கந்தன் சுவாமி கலந்தங் கிருத்தலான் மைந்தன் இவனென்று மாட்டிக்கொள் ளீரே.

144

  1. மாட்டிய குண்டத்தின் உள்ளெழு வேதத்துள் ஆட்டிய காலொன்றும் இரண்டாய் அலர்ந்திடும் வாட்டிய கையிரண் டொன்று பதைத்தெழு நாட்டுஞ் சுரரிவர் நல்லொளி தானே

145

  1. நல்லொளி யாக நடந்த வுலகெங்குங் கல்லொளி யாகக் கலந்துள் இருந்திடும் சொல்லொளி யாகத் தொடர்ந்த உயிர்க்கெலாம் கல்லொளி கண்ணுள மாகிநின் றாளே.

146

  1. நின்றஇக் குண்டம் நிலையாறு கோணமாய்ப் பண்டையில் வட்டம் பதைத்தெழு மாறாறுங் கொண்டஇத் தத்துவம் உள்ளே கலந்தெழ விண்ணுளும் என்ன எடுக்கலு மாமே.

147

  1. எடுக்கின்ற பாதங்கண் மூன்ற தெழுகை கடுத்த முகம்இரண் டாறுகண் ணாகப் படித்தெண்ணு நாவெழு கொம்பொரு நாலும் அடுத்தெழு கண்ணான தந்தமி லாற்கே.

148

  1. அந்தமில் லானுக் ககடலிந் தானில்லை தந்தமில் லானை அளப்பவர் தாமில்லை தந்தமில் லானுக் கடுத்த சொற் றானில்லை அந்தமில் லானை அறிந்துகொள் பத்தே.

149

  1. பத்திட்டங் கெட்டிட் டாறிட்டு நாலிட்டு மட்டிட்ட குண்டம் மலர்ந்தெழு தாமரை கட்டிட்டு நின்று கலந்தமெய் யாகமும் பட்டிட்டு நின்றது பார்ப்பதி பாலே.

150

  1. பார்ப்ப பாகன் பரந்தகை நாலைஞ்சு காற்பதி பத்து முகம்பத்துக் கணகளும் பூப்பதி பாதம் இரண்டு சுடர்முடி நாற்பது சோத்திரம் நல்லிரு பத்தஞ்சே.

151

  1. அஞ்சிட்ட கோலம் அளப்பன ஐயைந்தும் அஞ்சிட்ட குண்டமலர்ந் தங்கிருத்தலால் பஞ்சிட்ட சோதி பரந்த பரஞ்சுடர் கொஞ்சிட்ட வன்னியைக் கூடுதன் முத்தியே.

152

  1. முத்தநற் சோதி முழுச்சுட ராயவன் கற்றற்று நின்றார் கருத்துள் இருந்திடும் பற்றற நாடிப் பரந்தொளி யூடுபோய் செற்றற் றிருந்தவர் சேர்ந்திருந் தாரே.

153

  1. சேர்ந்த கலையஞ்சுஞ் சேருமிக் குண்டமும் ஆர்ந்த திசைகளும் அங்கே அமர்ந்திடும் பாய்ந்தஜம் பூதமும் பார்க்கின்ற வன்னியைக் காய்ந்தவர் என்றுங் கலந்தவர் தாமே.

154

  1. மெய்கண்ட மாழ்விரி நீருல கேழையும் உய்கண்டஞ் செய்த ஒருவனைச் சேருமின் செய்கண்ட ஞானந் திருந்திய தேவர்கள் பொய்கண்டம் இல்லாப் பொருள்கலந் தாரே.

155

  1. கலந்திரு பாதம் இருகர மாகும் மலர்ந்திரு குண்ட மகாரத்தோர் மூக்கு மலர்ந்தெழு செம்முக மற்றைக்கண் நெற்றி உணர்ந்திரு குஞ்சியங் குத்தம னார்க்கே.

156

  1. உத்தமன் சோதி உளனொரு பாலனாய் மத்திம னாகி மலர்ந்தங் கிருந்திடும் பச்சிம திக்கும் பரந்து குழிந்தன சத்திமா னாகத் தழைத்த கொடியே.

157

  1. கொடியாறு சென்று குலாவிய குண்டம் அடியிரு கோணமாய் அந்தமும் ஒக்கும் படியே முலகும் பரந்த சுடரை மடியாது கண்டவர் மாதன மாமே

158

  1. மாதன மாக வளர்கின்ற வன்னியைச் சாதன மாகச் சமைந்த குருவென்றும் போதன மாகப் பொருந்த உலகாளும் பாதன மாகப் பரிந்தது பார்த்தே.

159

  1. பார்த்திடம் எங்கும் பரந்தெழு சோதியை ஆத்தம தாகவே யாய்ந்தறி வாரில்லை காத்துட லுள்ளே கருதி இருந்தவர் மூத்துடல் கோடி யுகங்கண்ட வாறே.

160

  1. உகங்கண்ட ஒன்பது குண்டமும் ஒக்க அகங்கண்ட யோகியுள் நாடி எழுப்பும் பயங்கண்டு கொண்டவிப் பாய்கரு வொப்பச் சகங்கண்டு கொண்டது சாதன மாமே

161

  1. சாதனை நாலு தழல்மூன்று வில்வயம் வேதனை வட்டம் விளையாறு பூநிலை போதனை போதைஞ்சு பொற்கய வாரண நாதனை நாடு நவகோடி தானே.

162

===5.சத்தி பேதம் - திரிபுரைச் சக்கரம்=== 1045. மாமாயை மாயை வயிந்தவம் வைகரி ஓமாயை உள்ளொளி ஓராறு கோடியில் தாமான மந்திரஞ் சத்திதன் மூர்த்திகள் ஆமா யலவாந் திரிபுரை யாங்கே.


163

  1. திரிபுரை சுந்தரி அந்தரி சுந்துரப் பரிபுரை நாரணி யாம்பல வண்ணத்தி இருள்புரை ஈசி மனோன்மணி என்ன வருபல வாய்நிற்கு மாமாது தானே.

164

  1. தானா அமைந்தவம் முப்புரந் தன்னிடைத் தானான மூவுரு வோருருத் தன்மையள் தானான பொன்செம்மை வெண்ணிறத் தாள்கல்வி தானான போகமும் முக்தியும் நல்குமே.

165

  1. நல்குந் திரிபுரை நாதநா தாந்தங்கள் பல்கும் பரவிந்து பாரண்ட மானவை நல்கும் பரையபி ராமி அகோசரி புல்கு மருளுமப் போதாந்தந் தாளுமே.

166

  1. தாளணி நூபுரஞ் செம்பட்டுத் தானுடை வாரணி கொங்கை மலர்க்கன்னல் வாளிவில் ஏரணி அங்குச பாசம் எழில்முடி காரணி மாமணிக் குண்டலக் காதிக்கே.

167

  1. குண்டலக் காதி கொலைவில் புருவத்தள் கொண்ட வரத்தினின் மன்னுகோ லத்தள் கண்டிகை யாரங் கதிர்முடி மாமதிச் சண்டிகை நாற்றிசை தாங்கிநின் றாளே.

168

  1. நின்ற திரிபுரை நீளும் புராதனி குன்றலில் மோகினி மாதிருக் குஞ்சிகை நன்றறி கண்டிகை நாற்காற் கரீடணி துன்றிய நற்சுத்த தாமரைச் சுத்தையே.

169

  1. சுத்தவம் பாரத் தனத்தி சுகோதயன் வத்துவ மாயா ளுமாசத்தி மாபரை அத்தகை யான மனோரணி தானுமாய் வைத்தவக் கோல மதியவ ளாகுமே.

170

  1. அவளை யறியா அமரரும் இல்லை அவளன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை அவளன்றி ஐவரால் ஆவதொன் றில்லை அவளன்றி யூர்புகு மாறறி யேனே.

171

  1. அறிவார் பராசத்தி ஆனந்தம் என்பார் அறிவார் அறிவுரு வாமவள் என்பார் அறிவார் கரும மவளிச்சை என்பார் அறிவார் பரனு மவளிடத் தானே.

172

  1. தானெங் குளதங் குளதையன் மாதேவி ஊனெங் குளஅங் குள்ளுயிர்க் காவலன் வானெங் குளஅங் குளேவந்து மப்பாலாம் கோனெங்கும் நின்ற குறிபல பாரே.

173

  1. பராசத்தி மாசத்தி பல்வகை யாலுந் தராசத்தி யாய்நின்ற தன்மை யுணரா உராசத்தி ஊழிகள் தோறும் உடனே புராசத்தி புண்ணிய மாகிய போகமே.

174

  1. போகஞ்செய் சத்தி புரிகுழ லாளொடும் பாகஞ்செய் தாங்கே பராசத்தி யாய்நிற்கும் ஆகஞ்செய் தாங்கே அடியவர் நாடொறும் பாகஞ்செய் ஞானம் படர்கின்ற கொம்பே.

175

  1. கொம்பனை யாளைக் குவிமுலை மங்கையை வம்பவிழ் கோதையை வானவர் நாடியைச் செம்பவ ளத்திரு மேனிச் சிறுமியை நம்பிஎன் உள்ளே நயந்துவைத் தேனே.

176

  1. வைத்த பொருளும் மருவுயிர்ப் பன்மையும் பத்து முகமும் பரையும் பராபரைச் சித்தக் கரணச் செயல்களுஞ் செய்திடுஞ் சத்தியும் வித்தைத் தலையவ ளாமே.

177

  1. தலைவி தடமுலை மேல்நின்ற தையல் தொலைவில் தவஞ்செயுஞ் தூய்நெறித் தோகை கலைபல வென்றிடுங் கன்னியென் னுள்ளம் நிலைபெற இங்கே நிறைந்துநின் றாளே.

178

  1. நின்றவள் நேரிழை நீள்கலை யோடுற என்றன் அகம்படிந் தேழுல குந்தொழ மன்றது வொன்றி மனோன்மணி மங்கலி ஒன்றென்ன வொன்றநின் றொத்தடைந் தாளே.

179

  1. ஒத்தடங் குங்கும லத்திடை யாயிழை அத்தகை செய்கின்ற வாய பெரும்பதி மத்தடை கின்ற மனோன்மணி மங்கலி சித்தடைக் கும்வழி தேர்ந்துண ரார்களே.

180

  1. உணர்ந்துட னேநிற்கும் உள்ளொளி யாகி மணங்கமழ் பூங்குழல் மங்கையுந் தானும் புணர்ந்துட னேநிற்கும் போதருங் காலைக் கணிந்தெழு வார்க்குக் கதியளிப் பானே.

181

  1. அளியொத்த பெண்பிள்ளை ஆனந்த சுந்தரி புளியுறு புன்பழம் போலுள்ள நோக்கித் தெளியுறு சித்துச் சிவகதி காட்டி ஒளியுற வைத்தென்னை உய்யவுண் டாளே.

182

  1. உண்டில்லை என்ற துருச்செய நின்றது வண்டில்லை மன்றினுள் மன்னி நிறைந்தது கண்டிலர் காரண காரணி தம்மொடு மண்டல மூன்றுற மன்னிநின் றாளே.

183

  1. நின்றா ளவன்றன் உடலும் உயிருமாய்ச் சென்றாள் சிவகதி சேரும் பராசத்தி ஒன்றாக என்னுட் புகுந்துணர் வாகியே நின்றாள் பரஞ்சுடர் ஏடங்கை யாளே.

184

  1. ஏடங்கை நங்கை இறைஎங்கள் முக்கண்ணி வேடம் படிகம் விரும்பும்வெண் டாமரை பாடுந் திருமுறை பார்ப்பனி பாதங்கள் சூடுமென் சென்னிவாய் தோத்திரஞ் சொல்லுமே.

185

  1. தோத்திரஞ் செய்து தொழுது துணையடி வாய்த்திட ஏத்தி வழிபடு மாறிரும் பரர்த்திடு மங்குச பாசம் பசுங்கரும் பார்த்திடும் பூம்பிள்ளை யாகுமாம் ஆதிக்கே.

186

  1. ஆதி விதமிகுத் தண்டந்த மால்தங்கை நீதி மலரின்மேல் நேரிழை நாமத்தைப் பாதியில் வைத்துப் பல்காற் பயில்விரேல் சோதி மிகுத்துமுக் காலமுந் தோன்றுமே.

187

  1. மேதாதி ஈரெட்டு மாகிய மெல்லியல் வேதாதி நூலின் விளங்கும் பராபரை ஆதார மாகியே ஆய்ந்து பரப்பினன் நாதாதி நாதத்து நல்லரு ளாளே.

188

  1. அருள்பெற் றவர்சொல்ல வாரீர் மனிதர் பொருள்பெற்ற சிந்தை புவனா பதியார் மருளுற்ற சிந்தையை மாற்றி யருமைப் பொருளுற்ற சேவடி போற்றுவன் நானே.

189

  1. ஆன வராக முகத்தி பதத்தினள் ஈன வராகம் இடிக்கும் முசலத்தோ(டு) ஏனை யுழுபடை ஏந்திய வெண்ணகை ஊன மறவுணர்ந் தாருளத் தோங்குமே.

190

  1. ஓங்காரி என்பா ளவளொரு பெண்பிள்ளை நீங்காத பச்சை நிறத்தை யுடையவள் ஆங்காரி யாகியே ஐவரைப் பெற்றிட்டு ரீங்காரத் துள்ளே யினிதிருந் தாளே.

191

  1. தானே தலைவி யெனநின்ற தற்பரை தானே யுயிர்வித்துத் தந்த பதினாறும் வானோர் தலமும் மனமும்நற் புத்தியுந் தானே சிவகதி தன்மையு மாமே.

192

===6.வயிரவி மந்திரம்=== 1075. பன்னிரண் டாங்கலை யாதி பயிரவி தன்னில் அகரரமு மாயையுங் கற்பித்துப் பன்னிரண் டாதியோ டந்தப் பதினாலுஞ் சொன்னிலை சோடச மந்தமென் றோதிடே.


193

  1. அந்தப் பதினாலும் அதுவே வயிரவி முந்து நடுவும் முடிவும் முதலாகச் சிந்தைக் கலசத் தெழுகின்ற மாசத்தி அந்தமும் ஆதியு மாகிநின் றாளே.

194

  1. ஆகின்ற மூவரும் அங்கே அடங்குவர் போகின்ற பூதம் பொருந்து புராதரர் சார்கின்ற சார்வுழிச் சாரார் சதிர்பெறம் போகுந் திரிபுரை புண்ணியத் தோரே.

195

  1. புண்ணிய நந்தி புன்தன் திருவாகும் எண்ணிய நாட்கள் இருபத்தேழ் சூழ்மதி பண்ணிய வன்னி பகலோன் மதியீறு திண்ணிய சிந்தையன் தென்னனு மாமே.

196

  1. தென்னன் திருநந்தி சேவகன் தன்னொடும் பொன்னங் கீரியிற் பூதலம் போற்றிடும் மன்னும் பரிபிடி யந்தம் பகவனோ(டு) உன்னுந் திரிபுரை ஓதிநின் றானுக்கே.

197

  1. ஓதிய நந்தி உணருந் திருவருள் நீதியில் வேத நெறிவந் துரைசெய்யும் போதம் இருபத் தெழுநாள் புணர்மதி சோதி வயிரவி சூலம்வந் தாளுமே.

198

  1. சூலங் கபாலங்கை ஏந்திய சூலிக்கு நாலாங் கரமுள நாகபா சாங்குச மாலங் கயனறி யாத வடிவுக்கு மேலங்க மாய்நின்ற மெல்லிய லாறே.

199

  1. மெல்லியல் வஞ்சி விடமி கலைஞானி சொல்லிய கிஞ்சுக நிறமன்னு சேயிழை கல்லியல் ஒப்பது காணுந் திருமேனி பல்லிய லாடையும் பன்மணி தானே.

200

  1. பன்மணி சந்திர கோடி திருமுடி சொன்மணி குண்டலக் காதி யுழைக்கண்ணி நன்மணி சூரிய சோம நயனத்தள் பொன்மணி வன்னியும் பூரிக்கின் றாளே.

201

  1. பூரித்த பூவிதழ் எட்டினுக் குள்ளேயோர் அரியத் தாளுண்டங் கெண்மர் கன்னியர் பாரித்த பெண்கள் அறுபத்து நால்வருஞ் சாரித்துச் சத்தியைத் தாங்கள்கண் டாரே.

202

  1. கண்ட சிலம்பு வளைசங்கு சக்கரம் எண்டிசை யோகி இறைவி பராசத்தி அண்டமோ டெண்டிசை தாங்கும் அருட்செல்வி புண்டரி கத்தினுட் பூசனை யாளே.

203

  1. பூசனை கந்தம் புனைமலர் மாகோடி யோசனை பஞ்சத் தொலிவந் துரைசெய்யும் வாசமி லாத மணிமந் திரயோகம் தேசந் திகழுந் திரிபுரை காணே.

204

  1. காணும் பலபல தெய்வங்கள் வெவ்வேறு பூணும் பலபல பொன்போலத் தோற்றிடும் பேணுஞ் சிவனும் பிரமனும் மாயனுங் காணுந் தலைவிநற் காரணி காணே.

205

  1. காரண மந்திரம் ஓதுங் கமலத்துப் பூரண கும்ப விரேசம் பொருந்திய நாரணி நந்தி நடுவங் குரைசெய்த ஆரண வேதநூல் அந்தமு மாமே.

206

  1. அந்த நடுவிரல் ஆதி சிறுவிரல் வந்த வழிமுறை மாறி யுரைசெய்யுஞ் செந்தமி ழாதி தெளிந்து வழிபடு நந்தி இதனை நவமுரைத் தானே.

207

  1. உரைத்த நவசத்தி ஒன்று முடிய நிரைத்த விராசி நெடுமுறை எண்ணிப் பிரைச்சதம் எட்டுமுன் பேசிய நந்தி நிரைத்து நியதி நியமஞ்செய் தானே.

208

  1. தாமக் குழலி தயைக்கண்ணி உள்நின்ற வேமத் திருளற வீசும் இளங்கொடி ஓமப் பெருஞ்சுடர் உள்ளெழு நுண்புகை மேவித் தமுதொடு மீண்டது காணே.

209

  1. காணும் இருதய மந்திர முங்கண்டு பேணு நமவென்று பேசுந் தலைமேலே வேணு நடுவு மிகநின்ற வாகுதி பூணு நடுவென்ற வந்தஞ் சிகையே.

210

  1. சிகைநின்ற வந்தக் கவசங்கொண் டாதிப் பகைநின்ற லங்கத்தைப் பாரென்று மாறித் தொகைநின்ற நேத்திர முத்திரை சூலம் வகைநின்ற யோனி வருத்தலு மாமே.

211

  1. வருத்த மிரண்டுஞ் சிறுவிரன் மாறிப் பொருத்தி அணிவிரற் சுட்டிப் பிடித்து நெறித்தொன்ற வைத்து நெடிது நடுவே பெருத்த விரலிரண் டுள்புக்குப் பேசே.

212

  1. பேசிய மந்திரம் இகாரம் பிரித்துரை கூசமி லாத சகாரத்தை முன்கொண்டு வாசிப் பிராணன் உபதேச மாகைக்குக் கூசிய விந்து வுடன்கொண்டு கூவே.

213

  1. கூவிய சீவன் பிராணன் முதலாகப் பாவிய சவ்வுடன் பண்ணும் யகாரத்தை மேவிய மாயை விரிசங்கு முத்திரை தேவி நடுவுள் திகழ்ந்துநின் றாளே.

214

  1. நின்ற வயிரவி நீலி நிசாசரி ஒன்றும் இரண்டும் ஒருங்கிய உள்ளத்துச் சென்றருள் நாயகி தேவர் பிரானுக்கே நன்றருள் ஞாலத்து நாடிடுஞ் சாற்றியே.

215

  1. சாற்றிய வேதஞ் சராசரம் ஐம்பூதம் நாற்றிசை முக்கண்ணி நாடும் இருள்வெளி தோற்றும் உயிர்ப்பன்மை சோதி பராபரை ஆற்றலொ டாய்நிற்கும் ஆதி முதல்வியே.

216

  1. ஆதி வயிரவி கன்னித் துறைமன்னி ஓதி யுணரில் உடலுயிர் ஈசனாம் பேதை உலகிற் பிறவிகள் நாசமாம் ஓத வுலவாத கோலமொன் றாகுமே.

217

  1. கோலக் குழலி குலாய புருவத்தள் நீலக் குவளை மலரன்ன கண்ணினாள் ஆலிக்கும் இன்னமு தானந்த சுந்தரி மேவிச் சிவத்தை வெளிப்படுத் தாளே.

218

  1. வெளிப்படு வித்து விளைவறி வித்துத் தெளிப்படு வித்தென் சிந்தையி னுள்ளே களிப்படு வித்துக் கதிர்ப்படு சோதியை ஒளிப்படு வித்தென்னை உய்யக்கொண் டாளே.

219

  1. கொண்டனள் கோலங் கோடி அநேகங்கள் கண்டனள் எண்ணெண் கலையின்கண் மாலைகள் விண்டனள் மேலை விரிகதிர் மூன்றையுந் தண்டலை மேல்நின்ற தையல்நல் லாளே.

220

  1. தையல்நல் லாளைத் தலத்தின் தலைவியை மையலை நோக்கும் மனோன்மணி மங்கையைப் பையநின் றேத்திப் பணிமின் பணிந்தபின் வெய்ய பவமினி மேவகி லாவே.

221

  1. வேயன தோளி விரையுறு மென்மலர் ஏய குழலி இளம்பிறை ஏந்திழை தூய சடைமுடிச் சூலினி சுந்தரி ஏயென துள்ளத் தினிதிருந் தாளே.

222

  1. இனியதென் மூலை இருக்குங் குமரி தனியொரு நாயகி தானே தலைவி தனிப்படு வித்தனள் சார்வு படுத்து நனிப்படு வித்துள்ளம் நாடிநின் றாளே.

223

  1. நாடிய கண்மூன்று நடுவெழு ஞானத்துக் கூடி இருந்த குமரி குலக்கன்னி ஆடகச் சீறடிப் பைம்பொற் சிலம்பொலி ஊடக மேவி உறங்குகின் றாளே.

224

  1. உறங்கு மளவின் மனோன்மணி வந்து கறங்கு வளைக்கைக் கழுத்தாரப் புல்லிப் பிறங்கொளித் தம்பலம் வாயில் உமிழ்ந்திட் டுறங்கலை யாவென் றுபாயஞ்செய் தாளே.

225

  1. உபாயம் அளிக்கும் ஒருத்தியென் உள்ளத் தபாயம் அறக்கெடுத் தன்பு விளைத்துச் சுவாவை விளக்குஞ் சுழியகத் துள்ளே அவாவை அடக்கிவைத் தஞ்சலென் றாளே.

226

  1. அஞ்சொல் மொழியாள் அருந்தவப் பெண்பிள்ளை செஞ்சொல் மடமொழி சீருடைச் சேயிழை தஞ்சமென் றெண்ணித்தன் சேவடி போற்றுவார்க் கிஞ்சொல் அளிக்கம் இறைவியென் றாரே.

227

  1. ஆருயி ராயும் அருந்தவப் பெண்பிள்ளை காரியல் கோதையள் காரணி நாரணி ஊரும் உயிரும் உலகும் ஒடுக்கிடுங் கோரியென் உள்ளங் குலாவிநின் றாளே.

228

  1. குலாவிய கோலக் குமரியென் னுள்ளம் நிலாவி இருந்து நெடுநாள் அணைந்தும் உலாவி யிருந்துணர்ந் துச்சியி னுள்ளே கலாவி யிருந்த கலைத்தலை யாளே.

229

  1. கலைத்தலை நெற்றியோர் கண்ணுடைக் கண்ணுள் முலைத்தலை மங்கை முயங்கி இருக்குஞ் சிலைத்தலை யாய தெரிவினை நோக்கி அலைத்தபூங் கொம்பினள் அங்கிருந் தாளே.

230

  1. இருந்தனள் ஏந்திழை என்னுள்ள மேவிப் பொருந்திரு நால்விரல் புக்கனள் புல்கித் திருந்திய தானுவிற் சேர்ந்துடன் ஒன்றி அருந்தவ மெய்தினள் ஆதியி னாளே.

231

  1. ஆதி யனாதி யகாரண காரணி சோதிய சோதி சுகபர சுந்தரி மாது சமாதி மனோன்மணி மங்கலி ஓதியென் னுள்ளத் துடனியைந் தாளே.

232

  1. இயைந்தனள் ஏந்திழை என்னுள்ள மேவி நயந்தனள் அங்கே நமசிவ என்னும் அயன்தனை யோரும் பதமது பற்றும் பெயர்ந்தனள் மற்றும் பிதற்றறுத் தாளே.

233

  1. பிதற்றிக் கழிந்தனர் பேதை மனிதர் முயற்றியின் முத்தி அருளும் முதல்வி கயற்றிகழ் முக்கண்ணுங் கம்பலைச் செவ்வாய் முகத்தருள் நோக்கமும் முன்னுள்ள தாமே.

234

  1. உள்ளத் திதயத்து நெஞ்சத் தொருமுன்றுள் பிள்ளைத் தடமுளே பேசப் பிறந்தது வள்ளற் றிருவனை வயிற்றினுள் மாமாயைக் கள்ள ஒளியின் கருத்தாகுங் கன்னியே.

235

  1. கன்னியுங் கன்னி அழிந்திலள் காதலி துன்னியங் கைவரைப் பெற்றனள் தூய்மொழி பன்னிய நன்னூற் பகைவரும் அங்குள என்னேஇம் மாயை இருளது தானே.

236

  1. இருளது சத்தி வெளியதெம் அண்ணல் பொருளது புண்ணியர் போகத்துள் இன்பம் தெருளது சிந்தையைத் தெய்வமென் றெண்ணி அருளது செய்யும்எம் ஆதிப் பிரானே.

237

  1. ஆதி அனாதியும் ஆய பராசத்தி பாதி பராபரை மேலுறை பைந்தொடி மாது சமாதி மனோன்மணி மங்கலி ஓதுமென் னுள்ளத் துடன்முகிழ்ந் தாளே.

238

  1. ஓதிய வெண்ணெண் கலையின் உயர்கலை ஆதியில் வேதமே யாமென் றறிகிலர் சாதியும் பேதமும் தத்துவ மாய்நிற்பள் ஆதியென் றோதினள் ஆவின் கிழத்தியே.

239

  1. ஆவின் கிழத்திநல் லாவடு தண்டுறை நாவின் கிழத்தி நலம்புகழ்ந் தேத்திடும் தேவின் கிழத்தி திருவாஞ் சிவமங்கை மேவுங் கிழத்தி வினைகடிந் தாளே.

240

  1. வினைகடிந் தாருள்ளத் துள்ளொளி மேவித் தனையடைந் தோர்க்கெல்லாந் தத்துவ மாய்நிற்பள் எனையடி மைகொண்ட ஏந்திழை ஈசன் கணவனைக் காண அனாதியு மாமே.

241

  1. ஆதி அனாதி அகாரண காரணி வேதம தாய்ந்தனள் வேதியர்க் காய்நின்ற சோதி தனிச்சுடர் சொரூப மாய்நிற்கும் பாதி பராபரை பன்னிரண் டாதியே.

242

===7.பூரணசத்தி=== 1125. அளந்தேன் அகலிடத் தந்தமும் ஈறும் அளந்தேன் அகலிடத் தாதிப் பிரானை அளந்தேன் அகலிடத் தாணொடு பெண்ணும் அளந்தேன் அவளருள் ஆய்ந்துணர்ந் தேனே.


243

  1. உணர்ந்திலர் ஈசனை ஊழிசெய் சத்தி புணர்ந்தது பூரணம் புண்ணியர் தங்கள் கணங்களைத் தன்னருள் செய்கின்ற கன்னி கொணர்ந்த வழிகொண்டு கும்பக மாமே.

244

  1. கும்பக் களிறைந்துங் கோலொடு பாகனும் வம்பில் திகழும் மணிமுடி யண்ணலும் இன்பக் கல்வி இனிதுறை தையலும் அன்பிற் கலவியு ளாயொழிந் தாரே.

245

  1. இன்பக் கலவியில் இட்டெழு கின்றதோர் அன்பிற் புகவல்ல னாம்எங்கள் அப்பனும் துன்பக் குழம்பில் துயருறும் பாசத்துள் என்பிற் பராசத்தி என்னம்மை தானே.

246

  1. என்னம்மை என்னப்பன் என்னுஞ் செருக்கற்று உன்னம்மை ஊழித் தலைவனும் அங்குளன் மன்னம்மை யாகி மருவி யுரைசெய்யும் பின்னம்மை யாய்நின்ற பேர்நந்தி தானே.

247

  1. தார்மேல் உறைகின்ற தண்மலர் நான்முகன் பார்மேல் இருப்ப தொறுநூறு தானுள பூமேல் உறைகின்ற போதகம் வந்தனள் நாமேல் உறைகின்ற நாயகி ஆணையே.

248

  1. ஆணைய மாய்வருந் தாது ளிருந்தவர் மாணைய மாய மனத்தை ஒருக்கிப்பின் பாணைய மாய பரத்தை அறிந்தபின் தாணைய மாய தனாதனன் தானே.

249

  1. தானே எழுந்தஇத் தத்துவ நாயகி வானோர் எழுந்து மதியை விளக்கினள் தேனோர் எழுகின்ற தீபத் தொளியுடன் மானே நடமுடை மன்றறி யீரே.

250

  1. அறிவான மாயையும் ஐம்புலக் கூட்டத் தறிவான மங்கை அருளது சேரிற் பிறியா அறிவறி வாருள்ளம் பேனும் நெறியாய சித்த நினைந்திருந் தாளே.

251

  1. இரவும் பகலும் இலாத விடத்தே குரவஞ்செய் கின்ற குழவியை நாடி அரவஞ்செய் யாமல் அருளுடன் தூங்கப் பருவஞ்செய் யாததோர் பாலனு மாமே.

252

  1. பாலனு மாகும் பராசத்தி தன்னொடு மேலணு காவிந்து நாதங்கள் விட்டிட மூலம தாமெனும் முத்திக்கு நேர்படச் சாலவு மாய்நின்ற தற்பரத் தாளே.

253

  1. நின்ற பராசத்தி நீள்பரன் தன்னொடு நின்றறி ஞானமும் இச்சையு மாய்நிற்கும் நின்றறி யுங்கிரி யாசத்தி நண்ணவே மன்றன வற்றுள் மருவிடுந் தானே.

254

  1. மருவொத்த மங்கையுந் தானும் உடனே உருவொத்து நின்றமை ஒன்றும் உணரார் கருவொத்து நின்று கலக்கின்ற போது திருவொத்த சிந்தைவைத் தெந்தைநின் றானே.

255

  1. சிந்தையி னுள்ளே திரியுஞ் சிவசத்தி விந்துவும் நாதமு மாயே விரிந்தனள் சந்திர பூமி சடாதரி சாத்தவி அந்தமொ டாதிய தாம்வண்ணத் தாளே.

256

  1. ஆறி யிருந்த அமுத பயோதரி மாறி யிருந்த வழியறி வாரில்லை தேறி யிருந்துநல் தீபத் தொளியுடன் ஊறி யிருந்தனள் உள்ளுடை யார்க்கே.

257

  1. உடையவன் அங்கி உருத்திர சோதி விடையவன் ஏறி விளங்கி யிருக்குங் கடையவர் போயிடுங் கண்டவர் நெஞ்சத் தடையது வாகிய சாதகர் தாமே.

258

  1. தாமேல் உறைவிடம் ஆறித ழானது பார்மேல் இதழ்பதி னெட்டிரு நூறுள பூமேல் உறைகின்ற புண்ணியம் வந்தனள் பார்மேல் உறைகின்ற பைந்தொடி யாளே.

259

  1. பைந்தொடி யாளும் பரம னிருந்திடத் திண்கொடி யாகத் திகழ்தரு சோதியாம் விண்கொடி யாகி விளங்கி வருதலாற் பெண்கொடி யாக நடந்த துலகே.

நான்காம் தந்திரம் (cont. 2)

260

  1. நடந்தது வம்மலர் நாலுடன் அஞ்சாய் இருந்தனர் கன்னிகள் எட்டுடன் ஒன்றாய்ப் படர்ந்தது தன்வழிப் பங்கயத் துள்ளே தொடர்ந்தது உள்வழி சோதி யடுத்தே.

261

  1. அடுக்குந் தாமரை ஆதி இருப்பிடம் எடுக்குந் தாமரை இலக்கத் துள்ளது மடுக்குந் தாமரை மத்தகத் தேசெல முடுக்குந் தாமரை முச்சது ரத்தே.

262

  1. முச்சது ரத்தே எழுந்த முளைச்சுடர் எச்சது ரத்தும் இடம்பெற ஓடிடக் கைச்சது ரத்துக் கடந்துள் ஒளிபெற எச்சது முத்தும் இருந்தனள் தானே.

263

  1. இருந்தனள் தன்முகம் ஆறொடு நாலாய்ப் பரந்தன வாயு திசை தோறுங் குவிந்தன முத்தின் முகவொளி நோக்கின் நடந்தது தேறல் அதோமுகம் அம்பே.

264

  1. அம்பன்ன கண்ணி அரிவை மனோன்மணி கொம்பன்ன நுண்ணிடைக் கோதை குலாவிய செம்பொன்செய் யாக்கை செறிகமழ் நாடொறும் நம்பனை நோக்கி நவிலுகின் றாளே.

265

  1. நவிலும் பெருந்தெய்வம் நான்மறைச் சத்தி துகிலுழை யாடை நிலம்பொதி பாதம் அகிலமும் அண்ட முழுதுஞ்செம் மாந்து புகலுமுச் சோதி புனையநிற் பாளே.

266

  1. புனையவல் லாள்புவ னத்திறை எங்கள் வனையவல் லாள்அண்ட கோடிகள் உள்ளே புனையவல் லாள்மண்ட லத்தொளி தன்னைப் புனையவல் லாளையும் போற்றி யென்பேனே.

267

  1. போற்றியென் பேன்புவ னாபதி அம்மையென் ஆற்றலுள் நிற்கும அருந்தவப் பெண்பிள்ளை சீற்றங் கடிந்த திருநுதற் சேயிழை கூற்றந் துரக்கின்ற கோள்பைந் தொடியே.

268

  1. தொடியார் தடக்கைச் சுகோதய சுந்தரி வடிவார் திரிபுரை யாமங்கை கங்கைச் செடியார் வினைகெடச் சேர்வரை என்றென் றடியார் வினைகெடுத் தாதியு மாமே.

269

  1. மெல்லிசைப் பாவை வியோமத்தின் மென்கொடி பல்லிசைப் பாவை பயன்தரு பைங்கொடி புல்லிசைப் பாவையைப் போகத் துரந்திட்டு வல்லிசைப் பாவை மனம்புகுந் தாளே.

270

  1. தாவித் தவப்பொருள் தானவன் எம்மிறை பாவித் துலகம் படைக்கின்ற காலத்து மேவிப் பராசத்தி மேலொடு கீழ்தொடர்ந் தாவிக்கு மப்பொருள் தானது தானே.

271

  1. அதுவிது என்பார் அவனை அறியார் கதிவர நின்றதோர் காரணங் காணார் மதுவிரி பூங்குழல் மாமங்கை நங்கை திதமது உன்னார்கள் தேர்ந்தறி யாரே.

272

===8.ஆதார ஆதேயம்=== 1155. நாலிதழ் ஆறில் அவிர்ந்தது தொண்ணூறு தானித ழானவை நாற்பத்து நாலுள பாலித ழானவள் பங்கய மூலமாய்த் தானித ழாகித் தரித்திருந் தாளே.


273

  1. தரித்திருந் தாளவள் தன்னொளி நோக்கி விரித்திருந் தாளவள் வேதப் பொருளைக் குறித்திருந் தாளவள் கூறிய ஐந்து மறித்திருந் தாளவள் மாதுநல் லாளே.

274

  1. மாதுநல் லாளும் மணாளன் இருந்திடப் பாதிநல் லாளும் பகவனு மானது சோதிநல் லாளைத் துணைப்பெய்ய வல்லிரேல் வேதனை தீர்தரும் வெள்ளடை யாமே.

275

  1. வெள்ளடை யானிரு மாமிகு மாமலர்க் கள்ளடை யாரக் கமழ்குழ லார்மனம் அள்ளடை யானாம் வகைத்திற மாய்நின்ற பெண்ணொரு பாகம் பிறவிபெண் ணாமே.

276

  1. பெண்ணொரு பெண்ணைப் புணர்ந்திடும் பேதமை பெண்ணிடை ஆணும் பிறந்து கிடந்தது பெண்ணிடை ஆணென் பிறப்பறிந் தீர்க்கின்ற பெண்ணுடை ஆணிடைப் பேச்சற்ற வாறே.

277

  1. பேச்சற்ற நற்பொருள் காணும் பெருந்தகை மாச்சற்ற சோதி மனோன்மணி மங்கையாங் காச்சற்ற சோதி கடவு ளுடன்புணர்ந் தாச்சென்ற னுட்புகுந் தாலிக்குந் தானே.

278

  1. ஆலிக்குங் கன்னி அரிவை மனோன்மணி பாலித் துலகிற் பரந்துபெண் ணாகும் வேலைத் தலைவியை வேத முதல்வியைப் பாலித் தொருவன் உகந்துநின் றானே.

279

  1. உகந்துநின் றான்நம்பி ஒண்ணுதற் கண்ணோ டுகந்துநின் றான்நம் முழைபுக நோக்கி உகந்துநின் றான்இவ் உலகங்கள் எல்லாம் உகந்துநின் றான்அவடன்றோ டொகுத்தே.

280

  1. குத்த முலைச்சி குழைந்த மருங்கினள் துத்தி விரிந்த சுணங்கினள் தூமொழி புத்தகச் சீறடிப் பாவை யுணர்வினைத் தொத்த கருத்துச் சொல்லகி லேனே.

281

  1. சொல்லவொண் ணாத அழற்பொதி மண்டலஞ் சொல்லவொண் ணாது திகைத்தங் கிருப்பர்கள் வெல்லவொண் ணாத வினைத்தனி நாயகி மல்லவொண் ணாத மனோன்மணி தானே.

282

  1. தானே இருநிலந் தாங்கிவிண் ணாய்நிற்குந் தானே சுடுமங்கி ஞாயிறுந் திங்களுந் தானே மழைபொழி தையலு மாய்நிற்குந் தானே வடவரைத் தண்கடற் கண்ணே.

283

  1. கண்ணுடை யாளைக் கலந்தங் கிருந்தவர் மண்ணுடை யாரை மனித்தரிற் கூட்டொணாப் பண்ணுடை யார்கள் பதைப்பற் றிருந்தவர் விண்ணுடை யார்களை மேலுறக் கண்டே.

284

  1. கண்டெண் டிசையுங் கலந்து வருங்கன்னி பண்டெண் டிசையும் பராசத்தி யாய்நிற்கும் விண்டெண் டிசையும் விரைமலர் கைக்கொண்டு தொண்டெண் டிசையுந் தொழநின்ற கன்னியே.

285

  1. கன்னி ஒளியென நின்றவிச் சந்திரன் மன்னி யிருக்கின்ற மாளிகை செந்நிறஞ் சேர்பதின சென்னி யிருப்பிடஞ் சேர்பதி னாறுடன் பன்னி யிருப்பப் பராசத்தி யாமே. னாறுடன் சத்தி யாமே.

286

  1. பராசத்தி யென்றென்றும் பல்வகை யாலுந் தராசத்தி யான தலைப்பிர மாணி இராசத்தி யாமள வாகமத் தாளாகுங் குராசத்தி கோலம் பலவுணர்ந் தேனே.

287

  1. உணர்ந்துல கேழையும் யோகினி சத்தி உணர்ந்துயி ராநிற்கு முன்னதன் ஈசன் புணர்ந்தொரு காலத்துப் போகம தாகி இணைந்து பரமென் றிசைந்தது தானே.

288

  1. இதுவப் பெருந்தகை எம்பெரு மானும் பொதுவக் கலவியும் போகமு மாகி மதுவக் குழலி மனோன்மணி மங்கை அதுவக் கலவியுள் ஆயுழி யோகமே.

289

  1. யோகநற் சத்தி ஒளிபீடந் தானாகும் யோகநற் சத்தி ஒளிமுகந் தெற்காகும் யோகநற் சத்தி உதர நடுவாகும் யோகநற் சத்திதாள் உத்தரந் தேரே.

290

1173 .தேர்ந்தெழு மேலாஞ் சிவனங்கி யோடுற வார்ந்தெழு மாயையு மந்தம தாய்நிற்கும் ஓர்ந்தெழு விந்துவும் நாதமும் ஓங்கிடக் கூர்ந்தெழு கின்றனள் கோல்வளை தானே.


291

  1. தானான வாறெட்ட தாம்பரைக் குண்மிசை தானான வாறுமீ ரேமுஞ் சமைகலை தானான விந்து சகமே பரமெனுந் தானாம் பரவா தனையெனத் தக்கதே.

292

  1. தக்க பராவித்தை தானிரு பானேழிற் றக்கெழு மோருத் திரஞ்சொல்லச் சொல்லவே மிக்கிடும் எண்சத்தி வெண்ணிற முக்கண்ணி தொக்க கதையோடு தொன்முத்திரை யாளே.

293

  1. முத்திரை மூன்றின் முடிந்தமெய்ஞ் ஞானத்தால் அத்துவ மாயல்ல வாய சகலத்தள் வைத்த பராபர னாய பராபரை சத்தியு மானந்த சத்தியுங் கொங்கே.

294

  1. கொங்கீன்ற கொம்பின் குரும்பைக் குலாங்கன்னி பொங்கிய குங்குமத் தொளிபொ ருந்தினள் அங்குச பாச மெனுமகி லங்கனி தங்கு மவள்மனை தானறி வாயே.

295

  1. வாயு மனமுங் கடந்த மனோன்மணி பேயுங் கணமும் பெரிதுடைப் பெண்பிள்ளை ஆயும் அறிவுங் கடந்த அரனுக்குத் தாயும் மகளுநல் தாரமு மாமே.

296

  1. தாரமு மாகுவள் தத்துவ மாய்நிற்பள் காரண காரிய மாகுங் கலப்பினள் பூரண விந்து பொதிந்த புராதனி பாரள வாந்திசை பத்துடை யாளே.

297

  1. பத்து முகமுடை யாள்நம் பராசத்தி வைத்தனள் ஆறங்க நாலுடன் றான்வேதம் ஒத்தனள் ஆதாரம் ஒன்றுடன் ஓங்கியே நித்தமாய் நின்றாளெம் நேரிழை கூரே.

298

  1. கூரிய கண்ணி குலாய புருவத்தள் சீரிய ளாயுல கேழுந் திகழ்ந்தவள் ஆரிய நங்கை யமுத பயோதரி பேருயி ராளி பிறிவறுத் தாளே.

299

  1. பிறிவின்றி நின்ற பெருந்தகை பேதை குறியொன்றி நின்றிடுங் கோமளக் கொம்பு பொறியொன்றி நின்று புணர்ச்சிசெய் தாங்கே அறிவொன்ற நின்றனள் ஆருயி ருள்ளே.

300

  1. உள்ளத்தி னுள்ளே யுடனிருந் தைவர்தங் கள்ளத்தை நீக்கிக் கலந்துட னேபுல்கிக் கொள்ளத் தவநெறி கூடிய இன்பத்து வள்ளற் றலைவி மருட்டிப் புரிந்தே.

301

  1. புரிந்தருள் செய்கின்ற போகமா சத்தி இருந்தருள் செய்கின்ற இன்பம் அறியார் பொருந்தி யிருந்த புதல்விபூ வண்ணத் திருந்த விலக்கில் இனிதிருந் தாளே.

302

  1. இருந்தனள் ஏந்திழை என்னுள மேவித் திருந்து புணர்ச்சியில் தேர்ந்துணர்ந் துன்னி நிரந்தர மாகிய நிரதி சயமொடு பொருந்த விலக்கிற் புணர்ச்சி அதுவே.

303

  1. அதுஇது என்னும் அவாவினை நீக்கித் துதியது செய்து சுழியுற நோக்கில் விதியது தன்னையும் வென்றிட லாகும் மதிபல ராள்சொன்ன மண்டல மூன்றே.

304

  1. மூன்றுள மண்டல மோகினி சேர்விடம் ஏன்றுள ஈரா றெழுகலை உச்சியில் தோன்று மிலக்குற வாகுதல் மாமாயை ஏன்றனள் ஏழிரண் டிந்துவொ டீறே.

305

  1. இந்துவி னின்றெழு நாதம் இரவிபோல் வந்துபின் நாக்கின் மதித்தெழுங் கண்டத்தில் உந்திய சோதி இதயத் தெழும்ஒலி இந்துவின் மேலுற்ற ஈறது தானே.

306

  1. ஈறது தான்முதல் எண்ணிரண் டாயிர மாறுதல் இன்றி மனோவச மாயெழில் தூறது செய்யுஞ் சுகந்தச் சுழியது பேறது செய்து பிறந்திருந் தாளே.

307

  1. இருந்தனள் ஏந்திழை ஈறதி லாகத் திருந்திய ஆனந்தஞ் செந்நெறி நண்ணிப் பொருந்து புவனங்கள் போற்றிசெய் தேத்தி வருந்த இருந்தனள் மங்கைநல் லரளே.

308

  1. மங்கையும் மாரனுந் தம்மொடு கூடிநின் றங்குலி கூடி அகம்புறம் பார்த்தனர் கொங்கைநல் லாளுங் குமரரர்கள் ஐவரும் தங்களின் மேவிச் சடங்குசெய் தாரே.

309

  1. சடங்கது செய்து தவம்புரி வார்கள் கடந்தனி னுள்ளே கருதுவ ராகில் தொடர்ந்தெழு சோதி துணைவழி ஏறி அடங்கிடும் அன்பின தாயிழை பாலே.

310

  1. பாலித் திருக்கும் பனிமல ராறினும் ஆலித் திருக்கும் அவற்றின் அகம்படி சீலத்தை நீக்கத் திகழ்ந்தெழு மந்திர மூலத்து மேலது முத்தது வாமே.

311

  1. முத்து வதனத்தி முகந்தொறு முக்கண்ணி சத்தி சதிரி சகளி சடாதரி பத்துக் காத்தி பராபரன் பைந்தொடி வித்தகி என்னுள்ள மேவிநின் றாளே.

312

  1. மேவிய மண்டலம் மூன்றுடன் கீழெரி தாவிய நற்பதத் தண்மதி யங்கதிர் மூவருங் கூடி முதல்வியா முன்னிற்பார் ஓவினு மேவிடும் உள்ளொளி யாமே.

313

  1. உள்ளொளி மூவிரண் டோங்கிய அங்கங்கள் வெள்ளொளி அங்கியின் மேவி அவரொடுங் கள்ளவிழ் கோனைக் கலந்துட னேநிற்குங் கொள்ள விசுத்திக் கொடியமு தாமே.

314

  1. கொடிய திரேகை குருவுள் இருப்பப் படியது வாருணைப் பைங்கழ லீசன் வடிவது வானந்தம் வந்து முறையே இடுமுதல் ஆறங்கம் ஏந்திழை யாளே.

315

  1. ஏந்திழை யாளும் இறைவர்கள் மூவருங் காந்தார மாறுங் கலைமுதல் ஈரெட்டும் ஆந்த குளத்திய மந்திர ராயுவுஞ் சார்ந்தனர் ஏத்த இருந்தனள் சத்தியே.

316

  1. சத்தியென் பாளொரு சாதகப் பெண்பிள்ளை முத்திக்கும் நாயகி என்ப தறிகிலர் பத்தியைப் பாழில் உகுத்தஅப் பாவிகள் கத்திய நாய்போற் கதறுகின் றாரே.

317

  1. ஆரே திருவின் திருவடி காண்பார்கள் நேரேநின் றோதி நினையவல் லார்க்குக் காரேய் குழலி கமல மலரன்ன சீரேயுஞ் சேவடி சிந்தைவைத் தாளே.

318

  1. சிந்தையில் வைத்துச் சிராதியி லேவைத்து முந்தையில் வைத்துத்தம் மூலத்தி லேவைத்து நிந்தையில் வையா நினைவதி லேவைத்துச் சந்தையில் வைத்துச் சமாதிசெய் வீரே.

319

  1. சமாதிசெய் வார்கட்குத் தான்முத லாகிச் சிவாதியி லாருஞ் சிலைநுத லாளை நவாதியி லாத நயந்தது ஓதில் உவாதி அவளுக் குறைவில தாமே.

320

  1. உறைபதி தோறும் முறைமுறை மேவி நறைகமழ் கோதையை நாடொறு நண்ணின் மறையுட னேநிற்கு மற்றுள்ள நான்கும் இறைதினைப் போதினில் எய்திட லாமே.

321

  1. எய்திட லாகும் இருவினை யின்பயன் கொய்தளிர் மேனிக் குமரி குலாங்கன்னி மைதவழ் கண்ணிநன் மாரிதுர்க் கையொடு கைதவம் இன்றிக் கருத்துறும் வாறே.

322

  1. கருத்துறுங் காலங் கருது மனமுந் திருத்தி யிருந்தவை சேரு நிலத்து ஒருத்தியை உன்னி உணர்ந்திடு மண்மேல் இருத்திடு எண்குணம் எய்தலும் ஆமே.

323

  1. ஆமையொன் றேறி அகம்படி யானென ஓம்என் றோதிஎம் உள்ளொளி யாய்நிற்கும் நாம நறுங்குழல் தையலைக் கண்டபின் சோம நறுமலர் சூடிநின் றாளே.

324

  1. சூடிடும் அங்குச பாசந் துணைவழி கூடும் இருவளைக் கோலக்கைக் குண்டிகை நாடும் இருபத நன்னொடு ருத்திரம் ஆடிடுஞ் சீர்புனை ஆடக மாமே.

325

  1. ஆமயன் மாலரன் ஈசன் சதாசிவன் தாமடி சூடிநின் றெய்தினர் தம்பதங் காமனுஞ் சாமன் இரவி கனலுடன் சோமனும் வந்தடி சூடநின் றாளே.

326

  1. சூடும் இளம்பிறை சூலி கபாலினி நீடும் இளங்கொடி நின்மலி நேரிழை நாடும் நடுவிடை ஞான முருவநின் றாடு மதன்வழி அண்ட முதல்வியே.

327

  1. அண்ட முதலாய் அவனி பரியந்தங் கண்டதொன் றில்லைக் கனங்குழை யல்லது கண்டனுங் கண்டியு மாகிய காரணங் குண்டிகை கோளிகை கண்டத னாலே.

328

  1. ஆலமுண் டானமு தாங்கவர் தம்பதஞ் சாலவந் தெய்துதந் தவத்தின்பந் தான்வருங் கோலிவந் தெய்துங் குவிந்த பதவையோ டேலவந் தீண்டி இருந்தனள் மேலே.

329

  1. மேலாம் அருந்தவம் மேன்மேலும் வந்தெய்தக் காலால் வருந்திக் கழிவர் கணத்திடை நாலா நளினநின் றேத்திநட் டுச்சிதன் மேலா மெழுத்தின ளாமத்தி னாளே.

330

  1. ஆமத் தினிதிருந் தன்ன மயத்தினள் ஓமத்தி லேயும் ஒருத்தி பொருந்தினள் நாம நமசிவ என்றிருப் பார்க்கு நேமத் துணைவி நிலாவிநின் றாளே.

331

  1. நிலாமய மாகிய நீள்படி கத்தின் சிலாமய மாகுஞ் செழுந்தர ளத்தின் சுலாமய மாகுஞ் சுரிகுழற் கோதை கலாமய மாகக் கலந்துநின் றாளே.

332

  1. கலந்துநின் றாள்கன்னி காதல னோடுங் கலந்துநின் றாளுயிர் கற்பனை எல்லாங் கலந்துநின் றாள்கலை ஞானங்கள் எல்லாங் கலந்துநின் றாள்கன்னி காலமு மாயே.

333

  1. காலவி எங்குங் கருத்தும் அருத்தியுங் கூலவி ஒன்றாகுங் கூடல் இழைத்தனள் மாலினி மாகுலி மந்திர சண்டிகை பாலினி பாலவன் பாகம தாமே.

334

  1. பாகம் பராசத்தி பைம்பொன் சடைமுடி ஏகம் இருதயம் ஈரைந்து திண்புயம் மோக முகமைந்து முக்கண் முகந்தொறும் நாகம் உரித்து நடஞ்செய்யும் நாதர்க்கே.

335

  1. நாதனு நாலொன் பதின்மருங் கூடிநின் றோதிடுங் கூட்டங்கள் ஓரைந் துளஅவை வேதனும் ஈரொன்ப தின்மரும் மேவிநின் றாதியும் அந்தமு மாகிநின் றாளே.

336

  1. ஆகின்ற நாள்கலை ஐம்பத் தொருவர்கள் ஆகிநின் றார்களில் ஆருயி ராமவள் ஆகிநின் றாளுட னாகிய சக்கரத் தாகிநின் றானவன் ஆயிழை பாடே.

337

  1. ஆயிழை யாளொடு மாதிப் பரமிடம் ஆயதொ ரண்டவை யாறும் இரண்டுள வாய மனந்தொ ற்றுமுக மவைதனில் ஏயவார் குழலி இனிதுநின் றாளே.

338

  1. நின்றனள் நேரிழை யோடுடல் நேர்பட இன்றெ னகம்படி ஏழும் உயிர்ப்பெய்தும் கட துன்றிய வோரொன் பதின்மருஞ் சூழலுள் ஒன்றுயர் வோதி யுணர்ந்துநின் றாளே.

339

  1. உணர்ந்தெழு மந்திரம் ஓமெனும் உள்ளே மணந்தெழு மாங்கதி யாகிய தாகுங் குணர்ந்தெழு சூதனுஞ் சூதியுஞ் வடிக் கணந்தெழுங் காணுமக் காமுகை யாமே.

340

  1. ஆமது வங்கியும் ஆதியும் ஈசனும் ஆமது மண்டல மாருத மாதியும் ஏமது சீவன் சிகைபங் கிருண்டிடக் கோமலர்க் கோதையுங் கோதண்ட மாகுமே

341

  1. ஆகிய கோதண்டத் தாகு மனோன்மணி ஆகிய ஐம்ப துடனே அடங்கிடும் ஆகும் பராபரை யோடப் பரையவள் ஆகு மவளைங் கருமத்தள் தானே.

342

  1. தானிகழ் மோகினி சார்வான யோகினி போன மயமுடை யாரடி போற்றுவர் ஆனவ ராவியி னாகிய வச்சிவந் தானாம் பரசிவ மேலது தானே.

343

  1. தானந்த மேலே தருஞ்சிகை தன்னுடன் ஆனந்த மோகினி யாம்பொற் றிருவொடு மற் மோனையில் வைத்து மொழிதரு கூறது வானவை யோமெனும் அவ்வுயிர் மார்க்கமே.

344

  1. மார்க்கங்கள் ஈன்ற மனோன்மணி மங்கலி யார்க்கும் அறிய வரியா ளவளாகும் வாக்கு மனமும் மருவியொன் றாய்விட்ட நோக்கும் பெருமைக்கு நுண்ணறி வாமே.

345

  1. நுண்ணறி வாகும் நுழைபுலன் மாந்தர்க்குப் பின்னறி வாகும் பிரானறி வத்தடஞ் சென்னெறி யாகுஞ் சிவகதி சேர்வார்க்குத் தன்னெறி யாவது சன்மார்க்க மாமே.

346

  1. சன்மார்க்க மாகச் சமைதரு மார்க்கமுந் துன்மார்க்க மானவை எல்லாம் துரந்திடும் நன்மார்க்கத் தேவரும் நன்னெறி யாவதுஞ் சன்மார்க்கத் தேவியுஞ் சத்தியென் பாளே.

347

  1. சத்தியும் நானுஞ் சயம்புவும் அல்லது முத்தியை யாரும் முதலறி வாரில்லை அத்திமேல் வித்திடில் அத்தி பழுத்தக்கால் மத்தியி லேற வழியது வாமே.

348

  1. அதுவிது வென்றவ மேகழி யாதே மதுவிரி பூங்குழல் மங்கைநல் லாளைப் பதிமது மேவிப் பணியவல் லார்க்கு விதிவழி தன்னையும் வென்றிட லாமே.

349

  1. வென்றிட லாகும் விதிவழி தன்னையும் வென்றிட லாகும் வினைப்பெரும் பாசத்தை வென்றிட லாகும் விழைபுலன் தன்னையும் வென்றிடு மங்கைதன் மெய்யுணர் வோர்க்கே.

350

  1. ஓரைம் பதின்மருள் ஒன்றியே நின்றது பாரம் பரியத்து வந்த பரமிது மாரங் குழலாளும் அப்பதி தானுமுன் சாரும் பதமிது சத்திய மாமே.

351

  1. சத்தியி னோடு சயம்புவும் நேர்படில் வித்தது வின்றியே எல்லாம் விளைந்தன அத்தகை யாகிய ஐம்பத் தொருவருஞ் சித்தது மேவித் திருந்திடு வாரே.

352

  1. திருந்து சிவனுஞ் சிலைநுத லாளும் பொருந்திய வானவர் போற்றிசெய் தேத்த அருந்திட அவ்விடம் ஆரமு தாக இருந்தனள் தானங் கிளம்பிறை என்றே.

353

  1. என்றும் எழுகின்ற வேரினை எய்தினார் அன்றது வாகுவர் தார்குழ லாளொடு மன்றரு கங்கை மதியொடு மாதவர் துன்றிய தாரகை சோதிநின் றாளே.

354

  1. நின்றனள் நேரிழை யாளொடு நேர்பட ஒன்றிய வுள்ளொளி யாலே யுணர்ந்தது சென்ற பிராணிகள் சிந்தையில் வேண்டிய துன்றிடு ஞானங்கள் தோன்றிடுந் தானே.

355

  1. தோன்றிடும் வேண்டுரு வாகிய தூய்நெறி ஈன்றிடு மாங்கவள் ஏய்திய பல்கலை மான்றரு கண்ணியும் மாரனும் வந்தெதிர் சான்றது வாகுவர் தாமவ ளாயுமே.

356

  1. ஆயும் அறிவுங் கடந்தணு வாரணி மாயம் தாகி மதோமதி யாயிடுஞ் சேய அரிவை சிவானந்த சுந்தரி நேயம் தாநெறி யாகிநின் றாளே.

357

  1. நெறியது வாய்நின்ற நேரிழை யாளைப் பிறிவது செய்யாது பிஞ்ஞக னோடுங் குறியது கூடிக் குறிக்கொண்டு நோக்கும் அறிவொடு ஆங்கே அடங்கிட லாமே.

358

  1. ஆமயன் மாலரன் ஈசன்மா லாங்கதி ஓமய மாகிய ஒன்பதும் ஒன்றிடத் தேமய னாளுந் தெனாதென என்றிடும் மாமய மானது வந்தெய்த லாமே.

359

  1. வந்தடி போற்றுவர் வானவர் தானவர் இந்து முதலாக எண்டிசை யோர்களுங் கொந்தணி யுங்குழ லாளொடு கோனையும் வந்தணை செய்யும் வழிநவில் வீரே

360

  1. நவிற்றுநன் மந்திரம் நன்மலர் தூபங் கவற்றிய கந்தங் கவர்ந்தெரி தீபம் பயிற்றும் உலகினில் பார்ப்பதி பூசை அவிக்கொண்ட சோதிக்கோர் அர்ச்சனை தானே.

361

  1. தாங்கி உலகில் தரித்த பராபரன் ஓங்கிய காலத் தொருவன் உலப்பிலி பூங்கிளி தங்கும் புரிகுழ லாளன்று பாங்குடன் ஏற்பப் பராசத்தி போற்றே.

362

  1. பொற்கொடி மாதர் புனைகழல் ஏத்துவர் அற்கொடி மாதுமை யார்வத் தலைமகள் நற்கொடி மாதை நயனங்கள் மூன்றுடை விற்கொடி மாதை விரும்பி விளங்கே.

363

  1. விளங்கொளி யாய விரிசுடர் மாலை துளங்கு பராசத்தி தூங்கிருள் நீங்கக் களங்கொள் மணியுடன் காம வினோதம் உளங்கொ ளிலம்பியம் ஒன்று தொடரே.

364

  1. தொடங்கி உலகினிற் சோதி மணாளன் அடங்கி இருப்பதென் அன்பின் பெருமை விடங்கொள் பெருஞ்சடை மேல்வரு கங்கை ஓரக்கி யுமையொடும் ஓருரு வாமே.

365

  1. உருவம் பலவுயி ராய்வல்ல நந்தி தெருவம் புகுந்தமை தேர்வுற நாடிற் புரிவளைக் கைச்சியெம் பொன்னணி மாதை மருவி இறைவன் மகிழ்வன மாயமே.

366

  1. மாயம் புணர்க்கும் வளர்சடை யானடி தாயம் புணர்க்குஞ் சலநதி அமலனைக் காயம் புணர்க்குங் கலவியுள் மாசத்தி ஆயம் யுணர்க்குமவ் வியோனியு மாமே.

367

  1. உணர்ந்தொழிந் தேனவ னாமெங்கள் ஈசனைப் புணர்ந்தொழிந் தேன்புவ னாபதி யாரை அணைந்தொழிந் தேனெங்கள் ஆதிதன் பாதம் பிணைந்தொழிந் தேன்றன் அருள்பெற்ற வாறே.

368

  1. பெற்றாள் பெருமை பெரிய மனோன்மணி நற்றாள் இறைவனே நற்பயன் என்பர் கற்றான் அறியுங் கருத்தறி வார்கட்குப் பொற்றாள் உலகம் புகல்தனி யாமே.

369

  1. தனிநா யகன்றனோ டென்னெஞ்சம் நாடி இனியார் இருப்பிடம் ஏழுல கென்பர் பனியான் மலர்ந்தபைம் போதுகை ஏந்திக் கனியாய் நினைவதென் காரணம் அம்மையே.

370

  1. அம்மனை அம்மை அரிவை மனோன்மணி செம்மனை செய்து திருமங்கை யாய்நிற்கும் இம்மனை செய்த இருநில மங்கையும் அம்மனை யாகி அமர்ந்து நின்றாளே.

371

  1. அம்மையும் அத்தனும் அன்புற்ற தல்லது அம்மையும் அத்தனு மாரறி வாரென்னை அம்மையொ டத்தனும் யானும் உடனிருந் தம்மையொ டத்தனை யான்புரிந் தேனே.

372

===9.ஏரோளிச் சக்கரம்=== 1255. ஏரொளி யுள்ளெழு தாமரை நாலிதழ் ஏரொளி விந்துவி னாலெழு நாதமாம் ஏரொளி யக்கலை எங்கும் நிறைந்தபின் ஏரொளிச் சக்கர மந்நடு வன்னியே.


373

  1. வன்னி யெழுத்தவை மாபலம் உள்ளன வன்னி யெழுத்தவை வானுற ஓங்கின வன்னி யெழுத்தவை மாபெருஞ் சக்கரம் வன்னி யெழுத்திடு வாறது சொல்லுமே.

374

  1. சொல்லிய விந்துவும் ஈராறு நாதமாஞ் சொல்லிடு மப்பதி யவ்வெழுத் தாவன சொல்லிடு நூறொடு நாற்பத்து நாலுரு சொல்லிடு சக்கர மாய்வரு மேலதே.

375

  1. மேல்வரும் விந்துவு மவ்வெழுத் தாய்விடும் மேல்வரு நாதமும் ஓங்கும் எழுத்துடன் மேல்வரு மப்பதி யவ்வெழுத் தேவரின் மேல்வரு சக்கர மாய்வரு ஞாலமே.

376

  1. ஞாலம் தாக விரிந்தது சக்கரம் ஞாலம தாயிடும் விந்துவும் நாதமும் ஞாலம தாயிடு மப்பதி யோசனை ஞாலம தாக விரிந்த தெழுத்தே.

377

  1. விரிந்த எழுத்தது விந்துவும் நாதமும் விரிந்த எழுத்தது சக்கர மாக விரிந்த எழுத்தது மேல்வரும் பூமி விரிந்த எழுத்தினில் அப்புறம் அப்பே.

378

  1. அப்பது வாக விரிந்தது சக்கரம் அப்பினில் அப்புறம் அவ்வன லாயிடும் அப்பினில் அப்புறம் மாருத மாயெழ அப்பினில் அப்புறம் ஆகாச மாமே.

379

  1. ஆகாச அக்கர மாவது சொல்லிடில் ஆகாச அக்கரத் துள்ளே எழுத்தவை ஆகாச அவ்வெழுத் தாகிச் சிவானந்தம் ஆகாச அக்கர மாவ தறிமினே.

380

  1. அறிந்திடுஞ் சக்கரம் ஐயஞ்சு விந்து அறிந்திடுஞ் சக்கர நாத முதலா அறிந்திடும் அவ்வெழுத் தப்பதி யோர்க்கும் அறிந்திடும் அப்பக லோனிலை யாமே.

381

  1. அம்முதல் ஆறுமவ் வாதி எழுத்தாகும் அம்முதல் ஆறுமவ் வம்மை எழுத்தாகும் அம்முதல் நாலும் இருநடு வன்னியே இம்முத லாகும் எழுத்தவை எல்லாம்.

382

  1. எழுத்தவை நூறொடு நாற்பத்து நாலும் எழுத்தவை யாறது வந்நடு வன்னி எழுத்தவை யந்நடு வச்சுட ராகி எழுத்தவை தான்முதல் அந்தமு மாமே.

383

  1. அந்தமும் ஈறு முதலா னவையற அந்தமும் அப்பதி னெட்டுடன் ஆதலால் அந்தமும் அப்பதின் மூன்றில் அமர்ந்தபின் அந்தமும் இந்துகை யாருட மானதே.

384

  1. ஆவின மானவை முந்நூற் றறுபது மாவின மப்பதி னைந்தின மாயுறு மாவின மப்பதி னெட்டுட னாயுரு மாவின மக்கதி ரோன்வர வந்ததே.

385

  1. வந்திடும் ஆகாசம் ஆறது நாழிகை வந்திடும் அக்கரம் முப்பதி ராசியும் வந்திடு நாளது முந்நூற் றறுபதும் வந்திடு ஆண்டு வகுத்துரை யவ்வியே.

386

  1. அவ்வின மூன்றுமவ் வாடது வாய்வரும் செவ்வின மூன்றுங் கிளர்தரு வேரதாம் எவ்வின மூன்றுந் தழைத்திடுந் தண்டதாம் இவ்வின மூன்றும் இராசிக ளெல்லாம்.

387

  1. இராசியுட் சக்கரம் எங்கும் நிறைந்தபின் இராசியுட் சக்கர மென்றறி விந்துவாம் இராசியுட் சக்கர நாதமும் ஒத்தபின் இராசியுட் சக்கரம் நின்றிடு மாறே.

388

  1. நின்றிடு விந்துவென் றுள்ள எழுத்தெலாம் நின்றிடு நாதம் ஓங்கும் எழுத்துடன் நின்றிடு மப்பதி யவ்வெழுத் தேவரில் நின்றிடு மப்புறந் தாரகை யானதே.

389

  1. தாரகை யாகச் சமைந்தது சக்கரந் தாரகை மேலோர் தழைத்தது பேரொளி தாரகை சந்திரன் நற்பக லோன்வரத் தாரகை தாரகை தாரகை கண்டதே.

390

  1. கண்டிடு சக்கரம் விந்து வளர்வதாம் கண்டிடு நாதமுந் தன்மேல் எழுந்திடக் கண்டிடு வன்னிக் கொழுத்தன வொத்தபின் கண்டிடு மப்புறங் காரொளி யானதே.

391

  1. காரொளி அண்டம் பொதிந்துல கெங்கும் பாரொளி நீரொளி சாரொளி காலொளி வானொளி ஒக்க வளர்ந்து கிடந்தபின் நேரொளி ஒன்றாய் நிறைந்தங்கு நின்றதே.

392

  1. நின்றது அண்டமும் நீளும் புவியெலாம் நின்றவிவ் வண்டம் நிலைபெறக் கண்டிட நின்றவிவ் வண்டமு மூல மலமொக்கும் நின்றவிவ் வண்டம் பலமது விந்துவே.

393

  1. விந்துவும் நாதமும் ஒக்க விழுந்திடில் விந்துவும் நாதமும் ஒக்க விரையதாம் விந்திற் குறைந்திடு நாதம் எழுந்திடில் விந்துவை எண்மடி கொண்டது வீசமே.

394

  1. வீசம் இரண்டுள நாதத் தெழுவன வீசமும் ஒன்று விரைந்திடு மேலுற வீசமும் நாதமும் எழுந்துடன் ஒத்தபின் வீசமும் விந்து விரிந்தது காணுமே.

395

  1. விரிந்தது விந்துவுங் கெட்டது வீசம் விரிந்தது விந்துவும் நாதத் தளவினில் விரிந்தது வட்கட்ட எட்டெட்டு மாகில் விரிந்தது விந்து விரையது வாமே.

396

  1. விரையது விந்து விளைந்தன எல்லாம் விரையது விந்து விளைந்த உயிரும் விரையது விந்து விளைந்தவிஞ் ஞானம் விரையது விந்து விளைந்தவன் தாளே.

397

  1. விளைந்த எழுத்தது விந்துவும் நாதமும் விளைந்த எழுத்தது சக்கர மாக விளைந்த எழுத்தவை மெய்யினுள் நிற்கும் விளைந்த எழுத்தவை மந்திர மாமே.

398

  1. மந்திரஞ் சக்கர மானவை சொல்லிடில் தந்திரத் துள்ளெழு தோன்றெறி வட்டமாங் கந்திரத் துள்ளுமி ரேகையில் ஒன்றில்லை பந்தம தாகும் பிரணவம் உன்னிடே.

399

  1. உன்னிட்ட வட்டத்தில் ஒத்தெழு மந்திரம் பின்னிட்ட ரேகை பிழைப்பது தானில்லை தன்னிட் டெழுந்த தகைப்பறப் பின்னிற்கப் பன்னிட்ட மந்திரம் பார்க்கலு மாமே.

400

  1. பார்க்கலு மாகும் பகையறு சக்கரங் காக்கலு மாகுங் கருத்தில் தடமெங்கும் நோக்கலு மாகும் நுணுக்கற்ற நுண்பொருள் ஆக்கலு மாகும் அறிந்துகொள் வார்க்கே.

401

  1. அறிந்திடுஞ் சக்கர மாதி யெழுத்து விரிந்திடுஞ் சக்கர மேலெழுத் தம்மை பரிந்திடுஞ் சக்கரம் பாரங்கி நாலும் குவிந்திடுஞ் சக்கரங் கூறலு மாமே.

402

  1. கூறிய சக்கரத் துள்ளெழு மந்திரம் மாறியல் பாக அமைந்து விரிந்திடுந் தேறிய அஞ்சுடன் சேர்ந்தெழு மாரண மாறியல் பாக மதித்துக்கொள் வார்க்கே.

403

  1. மதித்திடும் அம்மையும் மாமாது மாகும் மதித்திடும் அம்மையு மங்கனல் ஒக்கும் மதித்தங் கெழுந்தவை காரண மாகில் கொதித்தங் கெழுந்தவை கூடகி லாவே.

404

  1. கூடிய தம்பனம் மாரணம் வசியம் மாடியல் பாக அமைந்து செறிந்திடும் பாடியுள் ளாகப் பகைவரும் வந்துறார் தேடியுள் ளாகத் தெளிந்துகொள் வார்க்கே.

405

  1. தெளிந்திடுஞ் சக்கர மூலத்தி னுள்ளே அளிந்த வகாரத்தை யந்நடு வாக்கிக் குளிந்த வரவினைக் கூடியுள் வைத்து வளிந்தவை யங்கெழு நாடிய காலே.

406

  1. காலரை முக்கால் முழுதெனும் மந்திரம் ஆலித் தெழுந்தமைந் தூறி எழுந்ததாய்ப் பாலித் தெழுந்து பகையற நின்றபின் மாற்ற மந்திர மாறிக்கொள் வார்க்கே.

407

  1. கொண்டவிம் மந்திரங் கூத்தன் எழுத்ததாய்ப் பண்டையுள் நாவிற் பகையற விண்டபின் மன்றுள் நிறைந்த மணிவிளக் காயிடும் இன்றும் இதயத் தெழுந்து நமவெனே.

408

===10.வயிரவச் சக்கரம்=== 1291. அறிந்த பிரதமையோ டாறு மறிஞ்சு அறிந்தவச் சத்தமி மேலிவை குற்றம் அறிந்தவை யொன்றுவிட் டொன்றுபத் தாக அறிந்த வலமது வாக நடவே.


409

  1. நடந்த வயிரவன் சூல கபாலி கடந்து பகைவனைக் கண்ணது போக்கித் தொடர்ந்த வயிரது வண்ணும் பொழுது படர்ந்த உடல்கொடு பந்தாட லாமே.

410

  1. ஆமேவப் பூண்டரு ளாதி வயிரவன் ஆமே கபாலமுஞ் சூலமுங் கைக்கொண்டங் காமே தமருக பாசமுங் கையது வாமே சிரத்தொடு வாளது கையே.

411

  1. கையது வாறுங் கருத்துற நோக்கிடு மெய்யது செம்மை விளங்கு வயிரவன் துய்யரு ளத்தில் துளங்குமெய் யுற்றதாய்ப் பொய்வகை விட்டுநீ பூசனை செய்யே.

412

  1. பூசனை செய்யப் பொருந்தியோ ராயிரம் பூசனை செய்ய மதுவுட னாடுமால் பூசனை சாந்து சவாது புழுகுநெய் பூசனை செய்துநீர் பூசலை வேண்டுமே.

413

  1. வேண்டிய வாறு கலகமு மாயிடும் வேண்டிய வாறினுண் மெய்யது பெற்றபின் வேண்டிய வாறு வரும்வழி நீநட வேண்டிய வாறது வாகுங் கருத்தே.

414

===11.சாம்பவி மண்டல சக்கரம்=== 1297. சாம்பவி மண்டலச் சக்கரஞ் சொல்லிடில் ஆம்பதம் எட்டாக விட்டிடின் மேலதாம் காண்பதந் தத்துவ நாலுள் நயனமும் நாம்பதங் கண்டபின் நாடறிந் தோமே.


415

  1. நாடறி மண்டலம் நல்லவிக் குண்டத்துக் கோடற வீதியுங் கொணர்ந்துள் இரண்டழி பாடறி பத்துடன் ஆறு நடுவீதி ஏடற நாலைந் திடவகை யாமே.

416

  1. நாலைந் திடவகை யுள்ளதோர் மண்டலம் நாலுநல் வீதியுள் நல்ல இலிங்கமாய் நாலுநற் கோணமும் நந்நாலி லிங்கமாய் நாலுநற் பூநடு நண்ணலவ் வாறே.

417

  1. ஆறிரு பத்துநா லஞ்செழுத் தஞ்சையும் வேறுரு வாக விளைந்து கிடந்தது தேறு நிருமல சிவாய நமமென்று கூறுமின் கூறிற் குறைகளும் இல்லையே.

418

  1. குறைவதும் இல்லை குரைகழற் கூடும் அறைவது மாரண மவ்வெழுத் தாகித் திறமது வாகத் தெளியவல் லார்க்கு இறவில்லை என்றென் றியம்பினர் காணே.

419

  1. காணும் பொருளும் கருதிய தெய்வமும் பேணும் பதியும் பெருகிய தீர்த்தமும் ஊணும் உணர்வும் உறக்கமுந் தானாகக் காணும் கனகமும் காரிகை யாமே.

420

  1. ஆமே எழுத்தஞ்சு மாம்வழி யேயாகப் போமே யதுதானும் போம்வழி யேபோனால் நாமே நினைத்தன செய்யலு மாகும் பார்மேல் ஒருவர் பகையில்லை தானே.

421

  1. பகையில்லை என்றும் பணிந்தவர் தம்பால் நகையில்லை நாளும் நன்மைக ளாகும் வினையில்லை என்றும் விருத்தமும் இல்லை தகைவில்லை தானுஞ் சலமது வாமே.

422

  1. ஆரும் உரைசெய்ய லாமஞ் செழுத்தாலே யாரும் அறியாத ஆனந்த ரூபமாம் பாரும் விசும்பும் பகலும் மதியதி ஊனும் உயிரும் உணர்வது வாமே.

423

  1. உணர்ந்தெழு மந்திரம் ஓமெனும் உள்ளே அணைந்தெழு மாங்கத னாதிய தாகுங் குணர்ந்தெழு சூதனுஞ் சூதியுங் கூடிக் கணந்தெழுங் காணுமக் காமுகை யாலே.

424

===12.புவனாபதி சக்கரம்=== 1307. ககராதி யோரைந்துங் காணிய பொன்மை அகராதி யோரா றரத்தமே மேலும் சகராதி யோர்நான்குந் தான்சுத்த வெண்மை மகராதி மூவித்தை காமிய முத்தியே.


425

  1. ஒரில் இதுவே உரையும்இத் தெய்வத்தைத் தேரிற் பிறிதில்லை யானொன்று செப்பக்கோள் வாரித் திரிகோண மனமின்ப முத்தியுந் தேரில் அறியுஞ் சிவகாயந் தானே.

426

  1. ஏக பராசத்தி ஈசற்காம் அங்கமே ஆகம் பராவித்தை யாமுத்தி சித்தியே ஏகம் பராசத்தி யாகச் சிவகுரு யோகம் பராசத்தி உண்மை எட்டாமே.

427

  1. எட்டா கியசத்தி எட்டாகும் யோகத்துக் கட்டாகு நாதாந்தத் தெட்டுங் கலப்பித்த தொட்டாத விந்துவுந் தானற் றொழிந்தது கிட்டா தொழிந்தது கீழான மூடர்க்கே.

428

  1. ஏதும் பலமா மியந்திரா சன்னடி ஓதிக் குருவின் உபதேசம் உட்கொண்டு நீதங்கும் அங்க நியாசந் தனைப்பண்ணிச் சாதங்கெடச் செம்பிற் சட்கோணந் தானிடே.

429

  1. சட்கோணந் தன்னில் ஸ்ரீம்ஹிரீம் தானிட்டு அக்கோண மாறின் தலையில்ரீங் காரமிட்டு எக்கோண முஞ்சூழ எழில்வட்டம் இட்டுப்பின் மிக்கீரேட் டக்கர மம்முதன் மேலிடே.

430

  1. இட்ட இதழ்கள் இடையந் தரத்திலே அட்டஹவ் விட்டதின் மேலே உவ்விட்டுக் கிட்ட இதழ்களின் மேலே கிரோம்சிரோம் இட்டுவா மத்தாங் கிரோங்கென்று மேவிடே.

431

  1. மேவிய சக்கர மீது வலத்திலே கோவை யடைவே குரோங்சிரோங் கென்றிட்டுத் தாவில்ரீங் காரத்தாற் சக்கரஞ் சூழ்ந்து பூவை புவனா பதியைப்பின் பூசியே.

432

  1. பூசிக்கும் போது புவனா பதிதன்னை ஆசற் றகத்தினில் ஆவா கனம்பண்ணிப் பேசிய பிராணப் பிரதிட்டை யதுசெய்து தேசுற் றிடவே தியான மதுசெய்யே.

433

  1. செய்ய திருமேனி செம்பட் டுடைதானுங் கையில் படையங் குசபாசத் தோடபயம் மெய்யில் அணிகலம் இரத்தின மாமேனி துய்ய முடியும் அவயவத்தில் தோற்றமே.

434

  1. தோற்போர்வை நீக்கித் துதித்தடைவிற் பூசித்துப் பாற்போ னகமந் திரத்தாற் பயின்றேத்தி நாற்பால நாரதா யாகவா காஎன்று சீர்ப்பாகச் சேடத்தை மாற்றிப்பின் சீவியே.

435

  1. சீவிப் பதன்முன்னே தேவியையுத் வாகனத்தாற் பாவித் திதய கமலம் பதிவித்தங் கியாவர்க்கும் எட்டா இயந்திர ராசனை நீவைத்துச் சேமி நினைந்தது தருமே.

436

===13.நவாக்கரி சக்கரம்=== 1319. நவாக்கரி சக்கர நானுரை செய்யின் நவாக்கரி ஒன்று நவாக்கரி யாக நவாக்கரி எண்பத் தொருவகை யாக நவாக்கரி யக்கிலீ சௌமுத லீறே.


437

  1. சௌமுதல் அவ்வொடு ஹெளவுட னாங்கிரீம் கௌவு ளுமையுளுங் கலந்திரீம் சிரீமென்று ஒவ்வில் எழுங்கிலீ மந்திர பாதமாச் செவ்வுள் எழுந்து சிவாய நமவெனே.

438

  1. நவாக்கரி யாவது நானறி வித்தை நவாக்கரி யுள்ளெழும் நன்மைகள் எல்லாம் நவாக்கரி மந்திர நாவுளே ஓத நவாக்கரி சத்தி நலந்தருந் தானே.

439

  1. நலந்தரு ஞானமுங் கல்வியும் எல்லாம் உரந்தரு வல்வினை யும்மைவிட் டோடும் சிரந்தரு தீவினை செய்வ தகற்றி வரந்தரு சோதியும் வாய்த்திடுங் காணே.

440

  1. கண்டிடுஞ் சக்கரம் வெள்ளிபொன் செம்பிடை கொண்டிடும் உள்ளே குறித்த வினைகளை வென்றிடு மண்டலம் வெற்றி தருவிக்கும் நின்றிடுஞ் சக்கரம் நினைக்கு மளவே.

441

  1. நினைத்திடு மச்சிரீ மக்கிலீ மீறா நினைத்திடுஞ் சக்கர மாதியு மீறு நினைத்திடு நெல்லொடு புல்லினை யுள்ளே நினைத்திடும் அருச்சனை நேர்தரு வாளே.

442

  1. நேர்தரு மத்திரு நாயகி யானவள் யாதொரு வண்ணம் அறிந்திடும் பொற்பூவை கார்தரு வண்ணங் கருதின கைவரும் நார்தரு வண்ணம் நடந்திடு நீயே.

443

  1. நடந்திடும் பாரினில் நன்மைகள் எல்லாங் கடந்திடுங் காலனும் எண்ணிய நாளும் படர்ந்திடு நாமமும் பாய்கதிர் போல அடைந்திடு வண்ணம் அடைந்திடு நீயே.

444

  1. அடைந்திடும் பொன்வெள்ளி கல்லுடன் எல்லாம் அடைந்திடு மாதி யருளுந் திருவும் அடைந்திடும் அண்டத் தமரர்கள் வாழ்வும் அடைந்திடும் வண்ணம் அறிந்திடு நீயே.

445

  1. அறிந்திடு வார்கள் அமரர்க ளாகத் தெரிந்திடு வானோர் தேவர்கள் தேவன் பரிந்திடும் வானவன் பாய்புனல் சூடி முரிந்திடு வானை முயன்றிடு நீரே.

446

  1. நீர்பணி சக்கரம் நேர்தரு வண்ணங்கள் பாரணி யும்ஹிரீ முன்ஸ்ரீ மீறாந் தாரணியும்புகழ்த் தையல்நல் லாள்தனைக் காரணி யும்பொழிற் கண்டுகொள் ளீரே.

447

  1. கண்டுகொள் ளுந்தனி நாயகி தன்னையும் மொண்டுகொ ளும்முக வசியம தாயிடும் பண்டுகொ ளும்பர மாய பரஞ்சுடர் நின்றுகொ ளும்நிலை பேறடை யாளையே.

448

  1. பேறுடை யாள்தன் பெருமையை எண்ணிடில் நாடுடை யார்களும் நம்வச மாகுவர் மாறுடை யார்களும் வாழ்வது தானிலை கூறுடை யாளையுங் கூறுமின் நீரே.

449

  1. கூறுமின் எட்டுத் திசைக்குந் தலைவியை யாறுமின் அண்டத் தமரர்கள் வாழ்வென மாறுமின் வையம் வரும்வழி தன்னையுந் தேறுமின் நாயகி சேவடி சேர்ந்தே.

450

  1. சேவடி சேரச் செறிய இருந்தவர் நாவடி யுள்ளே நவின்றுநின் றேத்துவர் பூவடி யிட்டுப் பொலிய இருந்தவர் மாவடி காணும் வகையறி வாரே.

451

  1. ஐம்முத லாக வளர்ந்தெழு சக்கரம் ஜம்முத லாக அமர்ந்திரீ மீறாகும் அம்முத லாகி யவர்க்குடை யாடனை ஐம்முத லாக வழுத்திடு நீயே.

452

  1. வழுத்திடு நாவுக் கரசிவள் தன்னைப் பகுத்திடும் வேதமெய் யாகம மெல்லாந் தொகுத்தொரு நாவிடை சொல்லவல் லாளை முகத்துளும் முன்னெழக் கண்டுகொ ளீரே.

453

  1. கண்டஇச் சக்கரம் நாவில் எழுதிடில் கொண்டஇம் மந்திரங் கூத்தன் குறியதாம் மன்றினுள் வித்தையு மானுடர் கையதாய் வென்றிடும் வையக மெல்லியல் மேவியே.

454

  1. மெல்லிய லாகிய மெய்ப்பொரு ளாள்தனைச் சொல்லிய லாலே தொடர்ந்தங் கிருந்திடும் பல்லியல் பாகப் பரந்தெழு நாட்பல நல்லியல் பாலே நடந்திடுந் தானே.

455

  1. நடந்திடு நாவினுள் நன்மைகள் எல்லாந் தொடர்ந்திடுஞ் சொல்லொடு சொற்பொருள் தானும் கடந்திடுங் கல்விக் கரசிவ ளாகப் படர்ந்திடும் பாரிற் பகையில்லை தானே.

456

  1. பகையில்லை கெளமுத லையது வீறா நகையில்லை சக்கர நன்றறி வார்க்கு மிகையில்லை சொல்லிய பல்லுரு வெல்லாம் வகையில்லை யாக வணங்கிடுந் தானே.

457

  1. வணங்கிடுந் தத்துவ நாயகி தன்னை நலங்கிடு நல்லுயி ரானவை யெல்லாங் கலந்திடுங் காம வெகுளி மயக்கந் தொடங்கிடுஞ் சொல்லிய சூழ்வினை தானே.

458

  1. தானே கழறித் தணியவும் வல்லனாய் தானே நினைத்தவை சொல்லவும் வல்லனாய்த் தானே தனிநடங் கண்டவள் தன்னையுந் தானே வணங்கித் தலைவனு மாமே.

459

  1. ஆமே யனைத்துயி ராகிய அம்மையுந் தாமே சகலமும் ஈன்றஅத் தையலும் ஆமே யவளடி போற்றி வணங்கிடிற் போமே வினைகளும் புண்ணிய னாகுமே.

460

  1. புண்ணிய னாகிப் பொருந்தி உலகெங்கும் கண்ணிய னாகிக் கலந்தங் கிருந்திடுந் தண்ணிய னாகித் தரணி முழுதுக்கும் அண்ணிய னாகி அமர்ந்திருந் தானே.

461

  1. தானது கிரீம் கெளவது ஈறாம் நானது சக்கர நன்றறி வார்க்கெலாம் கானது கன்னி கலந்த பராசத்தி கேளது வையங் கிளரொளி யானதே.

462

  1. ஒளிக்கும் பராசத்தி உள்ளே அமரிற் களிக்கும்இச் சிந்தையிற் காரணங் காட்டித் தெளிக்கும் மழையுடன் செல்வமுண் டாக்கும் அளிக்கும் இவளை அறிந்துகொள் வார்க்கே.

463

  1. அறிந்திடுஞ் சக்கரம் அருச்சனை யோடே எறிந்திடும் வையத் திடரவை காணல் மறிந்திடு மன்னனும் வந்தனை செய்யும் பொறிந்திடுஞ் சிந்தை புகையில்லை தானே

464

  1. புகையில்லை சொல்லிய பொன்னொளி யுண்டாங் தகையில்லை கொல்வ திலாமையி னாலே வகையில்லை வாழ்கின்ற மன்னுயிர்க் கெல்லாஞ் சிகையில்லை சக்கரஞ் சேர்ந்தவர் தாமே.

465

  1. சேர்ந்தவர் என்றுந் திசையொளி யானவர் காய்ந்தெழு மேல்வினை காணகி லாதவர் பாய்ந்தெழும் உள்ளொளி பாரிற் பரந்தது மாய்ந்தது காரிருள் மாறொளி தானே.

466

  1. ஒளியது ஹௌமுன் கிரீமது ஈறாங் களியது சக்கரங் கண்டறி வார்க்குத் தெளிவது ஞானமுஞ் சிந்தையுந் தேறப் பணிவது பஞ்சாக் கரமது வாமே.

467

  1. ஆமே சதாசிவ நாயகி யானவள் ஆமே அதோமுகத் துள்ளறி வானவள் ஆமே சுவையொளி யூறோசை கண்டவள் ஆமே யனைத்துயிர் தன்னுளு மாமே.

468

  1. தன்னுளு மாகித் தரணி முழுதுங்கொண் டென்னுளு மாகி இடம்பெற நின்றவள் மண்ணுளும் நீரனல் காலுளும் வானுளுங் கண்ணுளும் மெய்யுளுங் காணலு மாமே.

469

  1. காணலு மாகுங் கலந்துயிர் செய்வன காணலு மாகுங் கருத்து ளிருந்திடிற் காணலு மாகுங் கலந்து வழிசெயக் காணலு மாகுங் கருத்துற நில்லே.

470

  1. நின்றிடும் ஏழு புவனமும் ஒன்றாகக் கண்டிடும் உள்ளங் கலந்தெங்குந் தானாகக் கொண்டிடும் வையங் குணம்பல தன்னையும் விண்டிடும் வல்வினை மெய்ப்பொரு ளாகுமே.

471

  1. மெய்ப்பொரு ளெளமுதல் ஹௌவது ஈறாக் கைப்பொரு ளாகக் கலந்தெழு சக்கரம் தற்பொரு ளாகச் சமைந்தமு தேஸ்வரி நற்பொரு ளாக நடுவிருந் தாளே.

472

  1. தாளதி னுள்ளே சமைந்தமு தேஸ்வரி காலது கொண்டு கலந்துற வீசிடில் நாளது நாளும் புதுமைகள் கண்டபின் கேளது காயமுங் கேடில்லை காணுமே.

473

  1. கேடில்லை காணுங் கிளரொளி கண்டபின் நாடில்லை காணும் நாண்முத லற்றபின் மாடில்லை காணும் வரும்வழி கண்டபின் காடில்லை காணுங் கருத்துற் றிடத்துக்கே.

474

  1. உற்றிட மெல்லாம் உலப்பில்பா ழாக்கிக் கற்றிட மெல்லாங் கடுவெளி யானது மற்றிட மில்லை வழியில்லை தானில்லை சற்றிட மில்லை சலிப்பற நின்றிடே.

475

  1. நின்றிடும் ஏழ்கடல் ஏழ்புவி எல்லாம் நின்றிடும் உள்ளம் நினைத்தவை தானொக்கும் நின்றிடுஞ் சத்தி நிலைபெறக் கண்டிட நின்றிடும் மேலை விளக்கொளி தானே.

476

  1. விளக்கொளி ஸௌமுத லெளவது ஈறா விளக்கொளி சக்கரம் மெய்ப்பொரு ளாகும் விளக்கொளி யாகிய மின்கொடி யாளை விளக்கொளி யாக விளங்கி நீயே.

477

  1. விளங்கிடு மேல்வரு மெய்ப்பொருள் சொல்லின் விளங்கிடு மெல்லிய லானது வாகும் விளங்கிடு மெய்ந்நின்ற ஞானப் பொருளை விளங்கிடு வார்கள் விளங்கினர் தானே.

478

  1. தானே வெளியென எங்கும் நிறைந்தவள் தானே பரம வெளியது வானவள் தானே சகலமு மாகி அழித்தவள் தானே யனைத்துள அண்ட சகலமே.

479

  1. அண்டத்தி னுள்ளே அளப்பரி தானவள் பிண்டத்தி னுள்ளே பெருவெளி கண்டவள் குண்டத்தி னுள்ளே குணம்பல காணினுங் கண்டத்தில் நின்ற கலப்பறி யார்களே.

480

  1. கலப்பறி யார்கடல் சூழுல கெல்லாம் உலப்பறி யாருட லோடுயிர் தன்னைச் சிறப்பறி யார்சில தேவரை நாடித் தலைப்பறி யாகச் சமைந்தவர் தானே.

481

  1. தானே எழுந்தஅச் சக்கரஞ் சொல்லிடின் மானே மதிவரை பத்திட்டு வைத்தபின் தேனே யிரேகை திகைப்பற ஒன்பதில் தானே கலந்தவரை யெண்பத் தொன்றுமே.

482

  1. ஒன்றிய சக்கரம் ஓதிடும் வேளையில் வென்றிகொள் மேனி மதிவட்டம் பொன்மையாம் கன்றிய ரேகை கலந்திடுஞ் செம்மையில் என்றிய லம்மை எழுத்தவை பச்சையே.

483

  1. ஏய்ந்த மரவுரி தன்னில் எழுதிய வாய்ந்தஇப் பெண்ணெண்பத் தொன்றில் நிரைத்தபின் காய்ந்தவி நெய்யுட் கலந்துடன் ஓமமும் ஆய்ந்தலத் தாமுயி ராகுதி பண்ணுமே.

484

  1. பண்ணிய பொன்னைப் பரப்பற நீபிடி எண்ணிய நாட்களில் இன்பமும் எய்திடும் நண்ணிய நாமமும் நான்முகன் ஒத்தபின் துண்ணென நேயநற் சேர்க்கலு மாமே.

485

  1. ஆகின்ற சந்தனங் குங்கமங் கத்தூரி போகின்ற சாந்து சவாது புழுகுநெய் ஆகின்ற கற்பூர மாகோ சனநீருஞ் சேர்கின்ற ஒன்பதுஞ் சேரநீ வைத்திடே.

486

  1. வைத்திடும் பொன்னுடன் மாதவ நோக்கிடிற் கைச்சிறு கொங்கை கலந்தெழு கன்னியைத் தச்சிது வாகச் சமைந்தஇம் மந்திரம் அர்ச்சனை யாயிரம் ஆயிரஞ் சிந்தியே.

487

  1. சிந்தையி னுள்ளே திகழ்தரு சோதியாய் எந்தை கரங்கள் இருமூன்றும் உள்ளது பந்தமா சூலம் படைபாசம் வில்லம்பு முந்த கிலீமெழ முன்னிருந் தாளே.

488

  1. இருந்தனர் சத்திகள் அறுபத்து நால்வர் இருந்தனர் கன்னிகள் எண்வகை எண்மர் இருந்தனர் சூழ எதிர்சக் கரத்தே இருந்த கரமிரு வில்லம்பு கொண்டே.

489

  1. கொண்ட கனகங் குழைமுடி யாடையாய்க் கண்டஇம் முத்தங் கனல்திரு மேனியாய்ப் பண்டமர் சோதிப் படரித ழானவள் உண்டங் கொருத்தி உணரவல் லாருக்கே.

490

  1. உணர்ந்திருந் துள்ளே ஒருத்தியை நோக்கிற கலந்திருந் தெங்குங் கருணை பொழியும் மணந்தெழும் ஓசை யொளியது காணுந் தணந்தெழு சக்கரத் தான்தரு வாளே.

491

  1. தருவழி யாகிய தத்துவ ஞானங் குருவழி யாகுங் குணங்களுள் நின்று கருவழி யாகுங் கணக்கை யறுத்துப் பெருவழி யார்க்கும் பேரொளி

492

  1. பேரொளி யாய பெரிய பெருஞ்சுடர் சீரொளி யாகித் திகழ்தரு நாயகி காரொளி யாகிய கன்னிகை பொன்னிறம் பாரொளி யாகிப் பரந்துநின் றாளே.

493

  1. பரந்த கரம்இரு பங்கயம் ஏந்திக் குவிந்த கரமிரு கொய்தளிர்ப் பாணி பரிந்தருள் கொங்கைகள் முத்தார் பவளம் இருந்தநல் லாடை மணிபொதிந் தன்றே.

494

  1. மணிமுடி பாதஞ் சிலம்பணி மங்கை அணிபவ ளன்றி யிருளில்லை யாகுந் தணிபவர் நெஞ்சினுள் தன்னரு ளாகிப் பணிபவர்க் கன்றோ பரகதி யாமே.

495

  1. பரந்திருந் துள்ளே அறுபது சத்தி கரந்தன கன்னிகள் அப்படி சூழ மலர்ந்திரு கையின் மலரவை ஏந்தச் சிறந்தவர் ஏத்துஞ் சிரீம்தன மாமே.

496

  1. தன்மது வாகிய தையலை நோக்கி மனமது வோடி மரிக்கிலோ ராண்டி கனமவை யற்றுக் கருதிய நெஞ்சந் தினகர னாரிட செய்திய தாமே.

497

  1. ஆகின்ற மூலத் தெழுந்த முழுமலர் போகின்ற பேரொளி யாய மலரதாய்ப் போகின்ற பூரண மாக நிறைந்தபின் சேர்கின்ற செந்தழல் மண்டல மானதே.

498

  1. ஆகின்ற மண்டலத் துள்ளே அமர்ந்தவள் ஆகின்ற ஐம்பத் தறுவகை யானவள் ஆகின்ற ஐம்பத் தறுசத்தி நேர்தரு ஆகின்ற ஐம்பத் தறுவகை சூழவே.

499

  1. சூழ்ந்தெழு சோதி சுடர்முடி பாதமாய் ஆங்கணி முத்தம் அழகிய மேனியா தாங்கிய கையவை தார்கிளி ஞானமாய் ஏந்து கரங்கள் எடுத்தமா பாசமே.

500

  1. பாசம தாகிய வேரை யறுத்திட்டு நேசம தாக நினைந்திரு மும்முளே நாசம தெல்லாம் நடந்திடும் ஐயாண்டிற் காசினி மேலமர் கண்ணுத லாகுமே.

501

  1. கண்ணுடை நாயகி தன்னரு ளாம்வழி பண்ணுறு நாதம் பகையற நின்றிடில் விண்ணமர் சோதி விளங்க ஹ்ரீங்கார மண்ணுடை நாயகி மண்டல மாகுமே.

502

  1. மண்டலத் துள்ளே மலர்ந்தெழு தீபத்தைக் கண்டகத் துள்ளே கருதி யிருந்திடும் விண்டகத் துள்ளே விளங்கி வருதலால் தண்டகத் துள்ளவை தாங்கலு மாமே.

503

  1. தாங்கிய நாபித் தடமலர் மண்டலத் தோங்கி எழுங்கலைக் குள்ளுணர் வானவள் ஏங்க வரும்பிறப் பெண்ணி யறுத்திட வாங்கிய நாதம் வலியுட னாகுமே.

504

  1. நாவுக்கு நாயகி நன்மணி பூணாரம் பூவுக்கு நாயகி பொன்முடி யாடையாம் பாவுக்கு நாயகி பாலொத்த வண்ணத்தாள் ஆவுக்கு நாயகி அங்கமர்ந் தாளே.

505

  1. அன்றிரு கையில் அளந்த பொருள்முறை இன்றிரு கையில் எடுத்தவெண் குண்டிகை மன்றது காணும் வழியது வாகவே கண்டங் கிருந்தவர் காரணி காணுமே.

506

  1. காரணி சத்திகள் ஐம்பத் திரண்டெனக் காரணி கன்னிகள் ஐம்பத் திருவராய்க் காரணி சக்கரத் துள்ளே கரந்தெங்குங் காரணி தன்னரு ளாகிநின் றாளே.

507

  1. நின்றஇச் சத்தி நிலைபெற நின்றிடிற் கண்டஇவ் வன்னி கலந்திடும் ஓராண்டிற் கொண்ட விரதநீர் குன்றாமல் நின்றிடின் மன்றினி லாடு மணியது காணுமே.

508

  1. கண்டஇச் சத்தி இருதய பங்கயங் கொண்டஇத் தத்துவ நாயகி யானவள் பண்டையவ் வாயுப் பகையை யறுத்திட இன்றென் மனத்துள் இனிதிருந் தாளே.

509

  1. இருந்தவிச் சத்தி இருநாலு கையிற் பரந்தஇப் பூங்கிளி பாச மழுவாள் கரந்திடு கேடகம் வில்லம்பு கொண்டங் குரத்தங் கிருந்தவள் கூத்துகந் தாளே.

510

  1. உகந்தனள் பொன்முடி முத்தார மாகப் பரந்த பவளமும் பட்டாடை சாத்தி மலர்ந்தெழு கொங்கை மணிக்கச் சணிந்து கழைந்தங் கிருந்தவள் தான்பச்சை யாமே.

511

  1. பச்சை இவளுக்குப் பாங்கிமார் ஆறெட்டு கொச்சையார் எண்மர்கள் கூடி வருதலாற் கச்சணி கொங்கைகள் கையிரு காப்பதாய் எச்ச விடைச்சி இனிதிருந் தாளே.

512

  1. தாளதி னுள்ளே தாங்கிய சோதியைக் காலது வாகக் கலந்துகொள் என்று மாலது வாக வழிபாடு செய்துநீ பாலது போலப் பரந்தெழு விண்ணிலே.

513

  1. விண்ணமர் நாபி இருதய மாங்கிடைக் கண்ணமர் கூபங் கலந்து வருதலாற் பண்ணமர்ந் தாதித்த மண்டல மானது தண்ணமர் கூபந் தழைத்தது காணுமே.

514

  1. கூபத்துச் சத்தி குளிர்முகம் பத்துள தாபத்துச் சத்தி தயங்கி வருதலால் ஆபத்துக் கைகள் அடைந்தன நாலைந்து பாசம் அறுக்கப் பரந்தன சூலமே.

515

  1. சூலந்தண் டொள்வாள் சுடர்பறை ஞானமாய் வேலம்பு தமருக மாகிளி விற்கொண்டு காலம்பூப் பாசம் மழுகத்தி கைக்கொண்டு கோலஞ்சேர் சங்கு குவிந்தகை எண்ணதே.

516

  1. எண்ணமர் சத்திகள் நாற்பத்து நாலுடன் எண்ணமர் சத்திகள் நாற்பத்து நால்வராம் எண்ணிய பூவித முள்ளே யிருந்தவள் எண்ணிய எண்ணங் கடந்துநின் றாளே.

517

  1. கடந்தவள் பொன்முடி மாணிக்கத் தோடு தொடர்ந்தணி முத்து பவளங்கச் சாகப் படர்ந்தல்குற் பட்டாடை பாதச் சிலம்பு மடந்தை சிறியவள் வந்துநின் றாளே.

518

  1. நின்றஇச் சத்தி நிரந்தர மாகவே கண்டிடு மேரு வணிமாதி தானாகிப் பண்டைய வானின் பகட்டை யறுத்திட ஒன்றிய தீபம் உணர்ந்தார்க் குண்டாமே.

நான்காம் தந்திரம் (cont. 3)

519

  1. உண்டோர் அதோமுகம் உத்தம மானது கண்டஇச் சத்தி சதாசிவ நாயகி கொண்ட முகமைந்து கூறுங் கரங்களும் ஒன்றிரண் டாகவே மூன்றுநா லானதே.

520

  1. நன்மணி சூலங் கபாலங் கிளியுடன் பன்மணி நாகம் மழுசத்தி பந்தாகுங் கண்மணி தாமரைக் கையில் தமருகம் பொன்மணி பூணாரம் பூசனை யானதே.

521

  1. பூசனைச் சத்திகள் எண்ணைவர் சூழவே நேசவள் கன்னிகள் நாற்பத்து நேரதாய்க் காசினிச் சக்கரத் துள்ளே கலந்தவள் மாசடை யாமல் மகிழ்ந்திருந் தார்களே.

522

  1. தாரத்தி னுள்ளே தங்கிய சோதியைப் பாரத்தி னுள்ளே பரந்துள் எழுந்திட வேரது வொன்றிநின் றெண்ணு மனோமயங் காரது போலக் கலந்தெழு மண்ணிலே.

523

  1. மண்ணில் எழுந்த அகார உகாரங்கள் விண்ணில் எழுந்து சிவாய நமவென்று கண்ணில் எழுந்தது காண்பரி தன்றுகொல் கண்ணில் எழுந்தது காட்சி தரஎன்றே.

524

  1. என்றங் கிருந்த அமுத கலையிடைச் சென்றங் கிருந்த அமுத பயோதரி கண்டங் கரமிரு வெள்ளிபொன் மண்ணடை கொண்டங் கிருந்தது வண்ணம் அமுதே.

525

  1. அமுதம தாக அழகிய மேனி படிகம தாகப் பரந்தெழு முள்ளே குமுதம தாகக் குளிர்ந்தெழு முத்துக் கெமுதம தாகிய கேடிலி தானே.

526

  1. கேடிலி சத்திகள் முப்பத் தறுவரும் நாடிலி கன்னிகள் நாலொன் பதின்மரும் பூவிலி பூவிதழ் உள்ளே யிருந்தவர் நாளிலி தன்னை நணுகிநின் றார்களே.

527

  1. நின்றது புந்தி நிறைந்திடும் வன்னியும் கண்டது சோதி கருத்தில் இருந்திடக் கொண்டது வோராண்டு கூடி வருகைக்கு விண்ட வௌகாரம் விளங்கின அன்றே.

528

  1. விளங்கிடு வானிடை நின்றவை யெல்லாம் வணங்கிடு மண்டலம் மன்னுயி ராக நலங்கிளர் நன்மைகள் நாரண னொத்துச் சுணங்கிடை நின்றிவை செல்லலு மாமே.

529

  1. ஆமே அதோமுக மேலே அமுதமாய்த் தாமே யுகாரந் தழைத்தெழுஞ் சோமனும் காமேல் வருகின்ற கற்பக மானது பூமேல் வருகின்ற பொற்கொடி யானதே.

530

  1. பொற்கொடி யாளுடைப் பூசனை செய்திட அக்களி யாகிய ஆங்காரம் போயிடும் மற்கட மாகிய மண்டலந் தன்னுள்ளே பிற்கொடி யாகிய பேதையைக் காணுமே.

531

  1. பேதை யவளுக்குப் பெண்மை அழகாகும் தாதை யிவளுக்குத் தாணுவு மாய்நிற்கும் மாதை யிவளுக்கு மண்ணுந் திலகமாய்க் கோதையர் சூழக் குவிந்திடம் காணுமே.

532

  1. 15 குவிந்தனர் சத்திகள் முப்பத் திருவர் நடந்தனர் கன்னிகள் நாலெண்மர் சூழப் பரந்தித ழாகிய பங்கயத் தள்ளே இருந்தனள் காணும் இடம்பல கொண்டே.

533

  1. கொண்டங் கிருந்தனர் கூத்தன் ஒளியினைக் கண்டங் கிருந்தனர் காரணத் துள்ளது பண்டை மறைகள் பரந்தெங்குந் தேடுமால் இன்றென் மனத்துளே இல்லடைந் தாளுமே.

534

  1. இல்லடைந் தானுக்கும் இல்லாத தொன்றில்லை இல்லடைந் தானுக் கிரப்பது தானில்லை இல்லடைந் தானுக் கிமையவர் தாமொவ்வார் இல்லடைந் தானுக்கு இல்லாதில் லானவே.

535

  1. ஆனை மயக்கும் அறுபத்து நாற்றறி ஆனை யிருக்கும் அறுபத்து நாலொளி ஆனை யிருக்கும் அறுபத்து நாலறை ஆனையுங் கோடும் அறுபத்து நாலிலே.

பாயிரம்

1

==திருமூலர் அருளிய திருமந்திரம்== திருமந்திர நூல் 9 தந்திரங்களும் 3046 பாடல்களையும் கொண்டுள்ளது. சைவ திருமுறைகள் பன்னிரண்டனுள் சாத்திர நூலாகவும் தோத்திர நூலாகவும் அமைந்த ஒரே நூல் திருமூலர் திருமந்திரம் ஆகும்.


2

==விநாயகர் காப்பு== ஐந்து கரத்தனை யானை முகத்தனை இந்து இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப் புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.


3

==சிறப்புப் பாயிரம்== ===1.கடவுள் வாழ்த்து=== ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள் நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந் தான்ஐந்து வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச் சென்றனன் தானிருந் தான்உணர்ந் தெட்டே.


4

  1. போற்றிசைத்து இன்னுயிர் மன்னும் புனிதனை நாற்றிசைக் கும்நல்ல மாதுக்கும் நாதனை மேற்றிசைக் குள்தென் திசைக்கொரு வேந்தனாம் கூற்றுதைத் தானையான் கூறுகின் றேனே.

5

  1. ஒக்கநின் றானை உலப்பிலி தேவர்கள் நக்கனென்று ஏத்திடும் நாதனை நாள்தொறும் பக்கநின் றார்அறி யாத பரமனைப் புக்குநின் றுன்னியான் போற்றிசெய் வேனே.

6

  1. அகலிடத் தார்மெய்யை அண்டத்து வித்தைப் புகலிடத் தென்றனைப் போதவிட் டானைப் பகலிடத் தும்இர வும்பணிந் தேத்தி இகலிடத் தேஇருள் நீங்கிநின் றேனே.

7

  1. சிவனொடுஒக் கும்தெய்வம் தேடினும் இல்லை அவனொடுடொப் பார்இங்கு யாவரும் இல்லை புவனம் கடந்தன்று பொன்னொளி மின்னும் தவனச் சடைமுடித் தாமரை யானே.

8

  1. அவனை ஒழிய அமரரும் இல்லை அவனன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை அவனன்றி மூவரால் ஆவதொன் றில்லை அவனன்றி ஊர்புகு மாறு அறியேனே.

9

முன்னையொப் பாயுள்ள மூவர்க்கும் மூத்தவன் தன்னையொப் பாயொன்றும் இல்லாத் தலைமகன் தன்னைஅப் பாயெனில் அப்பனு மாயுளன் பொன்னைஒப் பாகின்ற போதகத் தானே.


10

தீயினும் வெய்யன் புனலினும் தண்ணியன் ஆயினும் ஈசன் அருளறி வாரில்லை சேயினும் நல்லன் அணியன்நல் அன்பர்க்குத் தாயினும் நல்லன் தாழ்சடை யோனே.


11

பொன்னால் புரிந்திட்ட பொற்சடை யென்னப் பின்னாற் பிறங்க இருந்தவன் பேர்நந்தி என்னால் தொழப்படும் எம்இறை மற்றவன் தன்னால் தொழப்படு வாரில்லை தானே.


12

தானே இருநிலம் தாங்கிவிண் ணாய்நிற்கும் தானே சுடும்அங்கி ஞாயிறும் திங்களும் தானே மழைபொழி தையலு மாய்நிற்கும் தானே தடவரை தண்கட லாமே.


13

அயலும் புடையும்எம் ஆதியை நோக்கில் இயலும் பெருந்தெய்வம் யாதுமொன் றில்லை முயலும் முயலில் முடிவும் மற் றாங்கே பெயலும் மழைமுகிற் பேர்நந்தி தானே.


14

  1. கண்ணுத லான்ஒரு காதலின் நிற்கவும் எண்ணிலி தேவர் இறந்தார் எனப்பலர் மண்ணுறு வார்களும் வானுறு வார்களும் அண்ணல் இவன் என்றுஅறியகி லார்களே.

15

மண்ணளந் தான்மல ரோன்முதல் தேவர்கள் எண்ணளந் தின்னும் நினைக்கிலார் ஈசனை விண்ணளந் தாந்தன்னை மேலளந் தாரில்லை கண்ணளந் தெங்குங் கடந்துநின் றானே.


16

கடந்துநினின் றான்கம லம்மல ராதி கடந்துநின் றான்கடல் வண்ணம்எம் மாயன் கடந்துநின் றான்அவர்க்கு அப்புறம் ஈசன் கடந்துநின் றான்எங்கும் கண்டுநின் றானே.


17

ஆதியு மாய்அர னாய்உட லுள்நின்ற வேதியு மாய்விரிந்துஆர்ந்துஇருந் தான்அருள் சோதியு மாய்ச்சுருங் காததோர் தன்மையுள் நீதியு மாய்நித்த மாகிநின் றானே.


18

கோது குலாவிய கொன்றைக் குழற்சடை மாது குலாவிய வாள்நுதல் பாகனை யாது குலாவி அமரரும் தேவரும் கோது குலாவிக் குணம்பயில் வாரே.


19

காயம் இரண்டுங் கலந்து கொதிக்கினும் மாயங் கத்தூரி யதுமிகும் அவ்வழி தேசங் கலந்தொரு தேவனென் றெண்ணினும் ஈசன் உறவுக் கெதிரில்லை தானே.


20

அதிபதி செய்து அளகை வேந்தனை நிதிபதி செய்த நிறைதவம் நோக்கி அதுபதி ஆதரித்து ஆக்கமது ஆக்கின் இதுபதி கொள்என்ற எம்பெரு மானே.


21

இதுபதி ஏலங் கமழ்பொழில் ஏழும் முதுபதி செய்தவன் மூதறி வாளன் விதுபதி செய்தவன் மெய்த்தவம் நோக்கி அதுபதி யாக அமருகின் றானே.


22

முடிவும் பிறப்பையும் முன்னே படைத்த அடிகள் உறையும் அறனெறி நாடில் இடியும் முழக்கமும் ஈசர் உருவம் கடிமலர்க் குன்ற மலையது தானே.


23

வானப் பெருங்கொண்டல் மாலயன் வானவர் ஊனப் பிறவி ஒழிக்கும் ஒருவனைக் கானக் களிறு கதறப் பிளந்தனம் கோனைப் புகழுமின் கூடலு மாமே.


24

மனத்தில் எழுகின்ற மாயநன் நாடன் நினைத்தது அறிவன் என்னில்தான் நினைக்கிலர் எனக்குஇறை அன்பிலன் என்பர் இறைவன் பிழைக்கநின் றார்பக்கம் பேணிநின் றானே. வல்லவன் வன்னிககு இறையிடை வாரணம் நில்லென நிற்பித்த நீதியுள் ஈசனை இல்லென வேண்டா இறையவர் தம்முதல் அல்லும் பகலும் அருளுகின் றானே.


25

போற்றிசைத் தும்புகழ்ந் தும்புனி தன்அடி தேற்றுமின் என்றும் சிவனடிக் கேசெல்வம் ஆற்றிய தென்று மயலுற்ற சிந்தையை மாற்றிநின் றார்வழி மன்னிநின் றானே.


26

பிறப்பிலி பிஞ்ஞகன் பேரரு ளாளன் இறப்பிலி யாவர்க்கும் இன்பம் அருளும் துறப்பிலி தன்னைத் தொழுமின் தொழுதால் மறப்பிலி மாயா விருத்தமும் ஆமே.


27

தொடர்ந்துனின் றானைத் தொழுமின் தொழுதால் படர்ந்துநின் றான்பரி பாரக முற்றும் கடந்துநின் றாம்கம லம்மலர் மேலே உடந்திருந் தான்அடிப் புண்ணிய மாமே.


28

சந்தி எனத்தக்க தாமரை வாண்முகத்து அந்தமில் ஈசன் அருள்நமக் கேயென்று நந்தியை நாளும் வணங்கப் படும்அவர் புந்தியி னுள்ளே புகுந்துநின் றானே.


29

இணங்கிநின் றான் எங்கும் ஆகிநின் றானும் பிணங்கிநின் றான்பின்முன் னாகிநின் றானும் உணங்கிநின் றான்அம ராபதி நாதன் வணங்கிநின் றார்க்கே வழித்துணை யாமே.


30

காணநில் லாய்அடி யேற்குஉறவுஆருளர் நாணநில் லேன்உன்னை நான்தழு விக்கொளக் கோணநில் லாத குணத்தடி யார்மனத்து ஆணியன் ஆகி அமர்ந்துநின் றானே.


31

வான்நின்று அழைக்கும் மழைபோல் இறைவனும் தானினறு அழைக்கும்கொல் என்று தயங்குவார் ஆன்நின்று அழைக்கு மதுபோல்என் நந்தியை நான்நின்று அழைப்பது ஞானம் கருதியே.


32

மண்ணகத் தான்ஒக்கும் வானகத் தான்ஒக்கும் விண்ணகத் தான்ஒக்கும் வேதகத் தான்ஒக்கும் பண்ணகத்து இன்னிசை பாடலுற் றானுக்கே கண்ணகத் தேநின்று காதலித் தேனே.


33

தேவர் பிரான்நம் பிரான்திசை பத்தையும் மேவு பிரான்விரி நீருலகேழையும் தாவு பிரான்தன்மை தானறி வாரில்லை பாவு பிரான்அருட் பாடலு மாமே.


34

  1. பதிபல வாயது பண்டுஇவ் வுலகம் விதிபல செய்தொன்றும் மெய்ம்மை உணரார் துதிபல தோத்திரம் சொல்ல வல்லாரும் மதியிலர் நெஞ்சினுள் வாடுகின் றாரே.

35

  1. சாந்து கமழுங் கவாயின் கந்தம்போல் வேந்தன் அமரர்க்கு அருளிய மெய்ந்நெறி ஆர்ந்த சுடரன்ன ஆயிர நாமமும் போந்தும் இருந்தும் புகழுகின் றேனே.

36

  1. ஆற்றுகி லாவழி யாகும் இறைவனைப் போற்றுமின் போற்றிப் புகழ்மின் புகழ்ந்திடில் மேற்றிசைக் கும்கிழக் குத்திசை எட்டொடு மாற்றுவன் அப்படி ஆட்டவு மாமே.

37

  1. அப்பனை நந்தியை ஆரா அமுதினை ஒப்பிலி வள்ளலை ஊழி முதல்வனை எப்பரி சாயினும் ஏத்துமின் ஏத்தினால் அப்பரி சீசன் அருள்பெற லாமே.

38

  1. நானும்நின் றேத்துவன் நாள்தொறும் நந்தியைத் தானும்நின் றான்தழல் தான்ஒக்கும் மேனியன் வானில்நின் றார்மதி போல்உடல் உள்ளுவந்து ஊனில்நின் றாங்கே உயிர்க்கின்ற வாறே.

39

  1. பிதற்றொழி யேன்பெரி யான்அரி யானைப் பிதற்றொழி யேன்பிற வாஉரு வானைப் பிதற்றொழி யேன்எங்கள் பேர்நந்தி தன்னைப் பிதற்றொழி யேன்பெரு மைத்தவன் தானே.

40

  1. வாழ்த்தவல் லார்மனத் துள்ளுறு சோதியைத் தீர்த்தனை அங்கே திளைக்கின்ற தேவனை ஏத்தியும் எம்பெரு மான்என்றுஇறைஞ்சியும் ஆத்தம் செய் தீசன் அருள்பெற லாமே.

41

  1. குறைந்துஅடைந் தீசன் குரைகழல் நாடும் நிறைந்துஅடை செம்பொனின் நேர்ஒளி ஒக்கும் மறைஞ்சடம் செய்யாது வாழ்த்தவல் லார்க்குப் புறஞ்சடம் செய்வான் புகுந்துநின் றானே.

42

  1. சினஞ்செய்த நஞ்சுண்ட தேவர் பிரானைப் புனஞ்செய்த நெஞ்சிடை போற்றவல் லார்க்குக் கனஞ்செய்த வாள்நுதல் பாகனும் அங்கே இனஞ்செய்த மான்போல் இணங்கிநின் றானே.

43

  1. பேயரன் தன்னைப் புகழ்வார் பெறுவது நாயக னான்முடி செய்தது வேநல்கும் மாயகம் சூழ்ந்து வரவல்ல ராகிலும் வேயன தோளிக்கு வேந்தொன்றும் தானே.

44

  1. அரனடி சொல்லி அரற்றி அழுது பரனடி நாடியே பாவிப்ப நாளும் உரன்அடி செய்துஅங்கு ஓதுங்கவல் லார்க்கு நிரன்அடி செய்து நிறைந்துநின் றானே.

45

  1. போற்றிஎன் பார்அம ரர்புனி தன்அடி போற்றிஎன் பார்அசு ரர்புனி தன்அடி போற்றிஎன் பார்மனி தர்புனி தன்அடி போற்றிஎன் அன்புள் பொலியவைத் தேனே.

46

  1. விதிவழி அல்லதுஇவ் வேலை உலகம் விதிவழி இன்பம் விருத்தமும் இல்லை துதிவழி நித்தலும் சோதிப் பிரானும் பதிவழி காட்டும் பகலவ னாமே.

47

  1. அந்திவண் ணாஅர னேசிவ னேஎன்று சிந்தைசெய் வண்ணம் திருந்தடி யார்தொழ முந்திவண் ணாமுதல் வாபர னேஎன்று புந்தி வண்ணன்எம் மனம்புகுந் தானே.

48

  1. மனையுள் இருந்தவர் மாதவர் ஒப்பர் நினைவுள் இருந்தவர் நேசத்துள் நிற்பர் பனையுள் இருந்த பருந்தது போல நினையாத வர்க்கில்லை நின்இன்பந் தானே.

49

  1. அடியார் பரவும் அமரர் பிரானை முடியால் வணங்கி முதல்வனை முன்னிப் படியால் அருளும் பரம்பரன் எந்தை விடியா விளக்கென்று மேவிநின் றேனே.

50

  1. பரைபசு பாசத்து நாதனை உள்ளி உரைபசு பாசததுஒருங்கவல் லார்க்குத் திரைபசு பாவச் செழுங்கடல் நீந்திக் கரைபசு பாசம் கடநது எய்த லாமே.

51

  1. சூடுவன் நெஞ்சிடை வைப்பன் பிரான்என்று பாடுவன் பன்மலர் தூவிப் பணிந்துநின் றாடுவன் ஆடி அமரர்ப்பி ரான்என்று நாடுவன் நான்இன் றறிவது தானே.

52

===2.வேதச் சிறப்பு === 51. வேதத்தை விட்ட அறமில்லை வேதத்தின் ஓதத் தகும்அறம் எல்லாம் உளதர்க்க வாதத்தை விட்டு மதிஞர் வளமுற்ற வேதத்தை ஓதியே வீடுபெற் றார்க்களே.


53

  1. வேதம் உரைத்தானும் வேதியன் ஆகிலன் வேதம் உரைத்தானும் வேதா விளங்கிட வேதம் உரைத்தானும் வேதியர் வேள்விக்காய் வேதம் உரைத்தானும் மெய்ப்பொருள் காட்டவே.

54

  1. இருக்குரு வாம்எழில் வேதத்தின் உள்ளே உருக்குஉணர் வாயுணர் வேதத்துள் ஓங்கி வெருக்குஉரு வாகிய வேதியர் சொல்லும் கருக்குஉரு வாய்நின்ற கண்ணனும் ஆமே.

55

  1. திருநெறி யாவது சித்தசித் தன்றிப் பெருநெறி யாய பிரானை நினைந்து குருநெறி யாம்சிவ மாம்நெறி கூடும் ஒருநெறி ஒன்றாக வேதாந்தம் ஓதுமே.

56

  1. ஆறங்க மாய்வரும் மாமறை ஓதியைக் கூறங்க மாகக் குணம்பயில் வாரில்லை வேறங்க மாக விளைவுசெய்து அப்புறம் பேறங்க மாகப் பெருக்குகின் றாரே.

57

  1. பாட்டும் ஒலியும் பரக்கும் கணிகையர் ஆட்டும் அறாத அவனியில் மாட்டாதார் வேட்டு விருப்பார் விரதமில் லாதவர் ஈட்டும் இடஞ்சென்று இகலல்உற் றாரே.

58

===3.ஆகமச் சிறப்பு=== 57. அஞ்சன மேனி அரிவையோர் பாகத்தன் அஞ்சொ டிருபத்து மூன்றுள ஆகமம் அஞ்சலி கூப்பி அறுபத்து அறுவரும் அஞ்சா முகத்தில் அரும்பொருள் கேட்டதே.


59

  1. அண்ணல் அருளால் அருளும் சிவாகமம் எண்ணில் இருபத்தெண் கோடிநூ றாயிரம் விண்ணவர் ஈசன் விழுப்பம் உரைத்தனர் எண்ணிநின் றப்பொருள் ஏத்துவன் நானே.

60

  1. பண்டிதர் ஆவார் பதினெட்டும் பாடையும் கண்டவர் கூறும் கருத்தறி வார்என்க பண்டிதர் தங்கள் பதினெட்டுப் பாடையும் அண்ட முதலான் அறஞ்சொன்ன வாறே.

61

  1. அண்ணல் அருளால் அருளுந்திவ் யாகமம் விண்ணில் அமரர் தமக்கும் விளங்கரி தெண்ணில் எழுபது கோடிநூ றாயிரம் எண்ணிலும் நீர்மேல் எழுத்தது ஆகுமே.

62

  1. பரனாய் பராபரம் காட்டி உலகில் தரனாய்ச் சிவதன்மந் தானேசொல் காலத் தரனாய் அமரர்கள் அர்ச்சிக்கு நந்தி உரனாகி ஆகமம் ஓங்கிநின் றானே.

63

  1. சிவமாம் பரத்தினில் சத்தி சதாசிவம் உவமா மகேசர் உருத்திர தேவர் தவமால் பிரமீசர் தம்மில்தாம் பெற்ற நவஆ கமமெங்கள் நந்திபெற் றானே.

64

  1. பெற்றநல் ஆகமங் காரணம் காமிகம் உற்றநல் வீரம் உயர்சிந்தியம் வாதுளம் மற்றவ் வியாமளம் ஆகும்கா லோத்தரந் துற்றநற் சுப்பிரம் சொல்லு மகுடமே.

65

  1. அண்ணல் அருளால் அருளும் சிவாகமம் எண்ணிலி கோடி தொகுத்திடும் ஆயினும் அண்ணல் அறைந்த அறிவுஅறி யாவிடின் எண்ணிலி கோடியும் நீர்மேல் எழுத்தே.

66

65.மாரியும் கோடையும் வார்பனி தூங்கநின்று ஏரியும் நின்றங்கு இளைக்கின்ற காலத்து ஆரிய முந்தமி ழும்உட னேசொலிக் காரிகை யார்க்குக் கருணைசெய் தானே.


67

66.அவிழ்கின்ற வாறும் அதுகட்டு மாறும் சிமிட்டலைப் பட்டுயிர் போகின்ற வாறும் தமிழ்ச்சொல் வடசொல் எனும்இவ் விரண்டும் உணர்த்தும் அவனை உணரலு மாமே.


68

===4.குரு பாரம்பரியம்=== 67. நந்தி அருள்பெற்ற நாதரை நாடிடின் நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி மன்று தொழுத பதஞ்சலி வியாக்ரமர் என்றிவர் என்னோ டெண்மரு மாமே.


69

  1. நந்தி அருளாலே நாதனாம் பேர்பெற்றோம் நந்தி அருளாலே மூலனை நாடினோம் நந்தி அருளாவ தென்செயும் நாட்டினில் நந்தி வழிகாட்ட நானிருந் தேனே.

70

  1. மந்திரம் பெற்ற வழிமுறை மாலாங்கன் இந்திரன் சோமன் பிரமன் உருத்திரன் கந்துருக் காலாங்கி கஞ்ச மலையனோடு இந்த எழுவரும் என்வழி யாமே.

71

  1. நால்வரும் நாலு திசைக்கொன்று நாதர்கள் நால்வரும் நானா விதப்பொருள் கைக்கொண்டு நால்வரும் யான்பெற்ற தெல்லாம் பெறுகென நால்வரும் தேவராய் நாதர் ஆனார்களே.

72

  1. மொழிந்தது மூவர்க்கும் நால்வர்க்கும் ஈசன் ஒழிந்த பெருமை இறப்பும் பிறப்பும் செழுஞ்சுடர் மூன்றொளி யாகிய தேவன் கழிந்த பெருமையைக் காட்டகி லானே.

73

  1. எழுந்துநீர் பெய்யினும் எட்டுத் திசையுஞ் செழுந்தண் நியமங்கள் செய்யுமின் என்றண்ணல் கொழுந்தண் பவளக் குளிர்சடை யோடே அழுந்திய நால்வர்க்கு அருள்புரிந் தானே.

74

===5.திருமூலர் வரலாறு=== 73. நந்தி திருவடி நான்தலை மேற்கொண்டு புந்தியின் உள்ளே புகப்பெய்து போற்றிசெய் தந்தி மதிபுனை அரனடி நாள்தொறும் சிந்தைசெய் தாகமம் செப்பலுற் றேனே.


75

  1. செப்புஞ் சிவாகமம் என்னும்அப் பேர்பெற்றும் அப்படி நல்கும் அருள்நந்தி தாள்பெற்றுத் தப்பிலா மன்றில் தனிக்கூத்துக் கண்டபின் ஒப்பிலா எழுகோடி யுகமிருந் தேனே.

76

  1. இருந்தவக் காரணம் கேள்இந் திரனே பொருந்திய செல்வப் புவனா பதியாம் அருந்தவச் செல்வியைச் சேவித்து அடியேன் பரிந்துடன் வந்தனன் பத்தியி னாலே.

77

  1. சதாசிவந் தத்துவம் முத்தமிழ் வேதம் மிதாசனி யாதிருந் தேன்இன்ற காலம் இதாசனி யாதிருந் தேன்மனம் நீங்கி உதாசனி யாதுடனே உணர்ந் தோமால்.

78

  1. மாலாங்க னேஇங்கு யான்வந்த காரணம் நீலாங்க மேனியள் நோ஢ழை யாளொடு மூலாங்க மாக மொழிந்த திருக்கூத்தின் சீலாங்க வேதத்தைச் செப்பவந் தேனே.

79

  1. நேரிழை யாவாள் நிரதிச யானந்தப் பேருடை யாளென் பிறப்பறுத்து ஆண்டவள் சீருடை யாள்சிவன் ஆவடு தண்டுறை சீருடை யாள்பதம் சேர்ந்திருந் தேனே.

80

  1. சேர்ந்திருந் தேன்சிவ மங்கைதன் பங்கனைச் சேர்ந்திருந் தேன்சிவன் ஆவடு தண்டுறை சேர்ந்திருந் தேன்சிவ போதியின் நீழலில் சேர்ந்திருந் தேன்சிவன் நாமங்கள் ஓதியே.

81

  1. இருந்தேன் இக்காயத்தே எண்ணிலி கோடி இருந்தேன் இராப்பகல் அற்ற இடத்தே இருந்தேன் இமையவர் ஏத்தும் பதத்தே இருந்தேன் என்நந்தி இணையடிக் கீழே.

82

  1. பின்னைநின்று என்னே பிறவி பெறுவது முன்னைநன் றாக முயல்தவம் செய்கிலர் என்னைநன் றாக இறைவன் படைத்தனன் தன்னைநன் றாகத் தமிழ்செய்யு மாறே.

83

  1. ஞானத் தலைவிதன் நந்தி நகர்புக்கு ஊனமில் ஒன்பது கோடி யுகந்தனுள் ஞானப்பா லாட்டி நாதனை அர்ச்சித்து நானும் இருந்தேன்நற் போதியின் கீழே.

84

  1. செல்கின்ற வாறறி சிவமுனி சித்தசன் வெல்கின்ற ஞானத்து மிக்கேள் முனிவராய்ப் பல்கின்ற தேவர் அசுரர்நரர் தம்பால் ஒல்கின்ற வான்வழி யூடுவந் தானே.

85

  1. சித்தத்தின் உள்ளே சிறக்கின்ற நூல்களில் உத்தம மாகவே ஓதிய வேதத்தின் ஒத்த உடலையும் உள்நின்ற உற்பத்தி அத்தன் எனக்குஇங்கு அருளால் அளித்ததே.

86

  1. யான்பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின் ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம் தான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே.

87

  1. பிறப்பிலி நாதனைப் பேர்நந்தி தன்னைச் சிறப்பொடு வானவர் சென்றுகை கூப்பி மறப்பிலர் நெஞ்சினுள் மந்திர மாலை உறைப்பொடுங் கூடிநின்று ஓதலு மாமே.

88

  1. அங்கிமி காமைவைத் தானுடல் வைத்தான் எங்குமி காமைவைத் தான்உலகு ஏழையும் தங்குமி காமைவைத் தான் தமிழ்ச் சாத்திரம் பொங்கிமி காமைவைத் தான்பொருள் தானுமே.

89

  1. அடிமுடி காண்பார் அயன்மால் இருவர் படிகண் டிலர்மீண்டும் பார்மிசைக் கூடி அடிகண் டிலேன் என்று அச்சுதன் சொல்ல முடிகண்டேன் என்று அயன் பொய்மொழிந் தானே.

90

  1. பெற்றமும் மானும் மழுவும் பிரிவற்ற தற்பரன் கற்பனை யாகும் சராசரத்து அற்றமும் நல்கி அடியேன் சிரத்தினில் நற்பத முமளித் தானெங்கள் நந்தியே.

91

  1. ஞேயத்தை ஞானத்தை ஞாதுரு வத்தினை மாயத்தை மாமாயை தன்னில் வரும்பரை ஆயத்தை யச்சிவன் தன்னை யாகோசர வீயத்தை முற்றும் விளக்கியிட் டேனே.

92

  1. விளக்கிப் பரமாகும் மெய்ஞ்ஞானச் சோதி அளப்பில் பெருமையன் ஆனந்த நந்தி துளக்கறும் ஆனந்தக் கூத்தன்சொற் போந்து வளப்பில் கயிலை வழியில்வந் தேனே.

93

  1. நந்தி அருளாலே மூலனை நாடிப்பின் நந்தி அருளாலே சதாசிவன் ஆயினேன் நந்தி அருளால்மெய்ஞானத்துள் நண்ணினேன் நந்தி அருளாலே நானிருந் தேனே.

94

  1. இருக்கில் இருக்கும் எண்ணிலி கோடி அருக்கின்ற மூலத்துள் அங்கே இருக்கும் அருக்கனும் சோமனும் ஆரழல் வீச உருக்கிய ரோமம் ஒளிவிடுந் தானே.

95

  1. பிதற்றுகின் றேனென்றும் பேர்நந்தி தன்னை இயற்றுவன் நெஞ்சத்து இரவும் பகலும் முயற்றுவன் ஓங்கொளி வண்ணன்எம் மானை இயற்றிகழ் சோதி இறைவனு மாமே.

96

===6.அவையடக்கம்=== 95. ஆரறி வார் எங்கள் அண்ணல் பெருமையை யாரறி வார்இந்த அகலமும் நீளமும் பேரறி யாத பெருஞ்சுடர் ஒன்றதின் வேரறி யாமை விளம்புகின் றேனே.


97

  1. பாடவல் லார்நெறி பாட அறிகிலேன் ஆடவல் லார்நெறி ஆட அறிகிலேன் நாடவல் லார்நெறி நாட அறிகிலேன் தேடவல் லார்நெறி தேடகில் லேனே.

98

  1. மன்னிய வாய்மொழி யாலும் மதித்தவர் இன்னிசை உள்ளே எழுகின்ற ஈசனைப் பின்னை உலகம் படைத்த பிரமனும் உன்னும் அவனை உணரலு மாமே.

99

  1. தத்துவ ஞானம் உரைத்தது தாழ்வரை முத்திக்கு இருந்த முனிவரும் தேவரும் இத்துடன் வேறா இருந்து துதிசெயும் பத்திமை யால் இப் பயனறி யாரே.

100

===7.திருமந்திரத் தொகைச் சிறப்பு=== 99. மூலன் உரைசெய்த மூவா யிரந்தமிழ் ஞாலம் அறியவே நந்தி அருளது காலை எழுந்து கருத்தறிந் தோதிடின் ஞாலத் தலைவனை நண்ணுவர் அன்றே.


101

  1. வைத்த பரிசே வகைவகை நன்னூலின் முத்தி முடிவிது மூவா யிரத்திலே புத்திசெய் பூர்வத்து மூவா யிரம்பொது வைத்த சிறப்புத் தருமிவை தானே.

102

===8.குருமட வரலாறு=== 101. வந்த மடம்ஏழும் மன்னும்சன் மார்க்கத்தின் முந்தி உதிக்கின்ற மூலன் மடம்வரை தந்திரம் ஒன்பது சார்வுமூ வாயிரம் சுந்தர ஆகமச் சொல்மொழிந் தானே.


103

  1. கலந்தருள் காலாங்கர் தம்பால்அ கோரர் நலந்தரு மாளிகைத் தேவர்நா தாந்தர் புலங்கொள் பரமானந் தர்போக தேவர் நிலந்திகழ் மூவர் நிராமயத் தோரே.

104

===9.திருமும்மூர்த்திகளின் முறைமை=== 103. அளவில் இளமையும் அந்தமும் ஈறும் அளவியல் காலமும் நாலும் உணா஢ல் தளர்விலன் சங்கரன் தன்னடி யார்சொல் அளவில் பெருமை அரியயற் காமே.


105

  1. ஆதிப் பிரானும் அணிமணி வண்ணனும் ஆதிக் கமலத்து அலர்மிசை யானும் சோதிக்கில் மூன்றும் தொடர்ச்சியில் ஒன்றெனார் பேதித் துலகம் பிணங்குகின் றார்களே.

106

  1. ஈசன் இருக்கும் இருவினைககு அப்புறம் பீசம் உலகல் பெருந்தெய்வம் ஆனது ஈசன் அதுஇது என்பார் நினைப்பிலார் தூசு பிடித்தவர் தூரறிந் தார்களே.

107

  1. சிவன்முதல் மூவரோடு ஐவர் சிறந்த அவைமுதல் ஆறிரண்டு ஒன்றோடு ஒன் றாகும் அவைமுதல் விந்துவும் நாதமும் ஓங்கச் சவைமுதற் சங்கரன் தன்பெயர் தானே.

108

  1. பயன் அறிந்து அவ்வழி எண்ணும் அளவில் அயனொடு மால்நமககு அன்னியம் இல்லை நயனங்கள் மூன்றுடை நந்தி தமராம் வயனம் பெறுவீர் அவ் வானவ ராலே.

109

  1. ஓலக்கம் சூழ்ந்த உலப்பிலி தேவர்கள் பாலொத்த மேனி பணிந்தடி யேன் தொழ மாலுக்கும் ஆதிப் பிரமற்கும் ஒப்புநீ ஞாலத்து நம்மடி நல்கிடுஎன் றானே.

110

  1. வானவர் என்றும் மனிதர் இவர் என்றும் தேனமர் கொன்றைச் சிவனருள் அல்லது தானமர்ந்து ஓரும் தனித்தெய்வம் மற்றில்லை ஊனமர்ந் தோரை உணர்வது தானே.

111

  1. சோதித்த பேரொளி மூன்று ஐந்து எனநின்ற ஆதிக்கண் ஆவது அறிகிலர் ஆதர்கள் நீதிக்கண் ஈசன் நெடுமால் அயனென்று பேதித் தவரைப் பிதற்றுகின் றாரே.

112

  1. பரத்திலே ஒன்றாய் உள் ளாய்ப்புற மாகி வரத்தினுள் மாயவ னாய்அய னாகித் தரத்தினுள் தான்பல தன்மைய னாகிக் கரத்தினுள் நின்று கழிவுசெய் தானே.

113

  1. தானொரு கூறு சதாசிவன் எம்மிறை வானொரு கூறு மருவியும் அங்குளான் கோனொரு கூறுஉடல் உள்நின்று உயிர்க்கின்ற தானொரு கூறு சலமய னாமே.

முதலாந் தந்திரம்

1

#வழிமாற்று திருமந்திரம்/முதலாம் தந்திரம்

முதலாம் தந்திரம்

1

==முதலாம் தந்திரம்== ===1.உபதேசம்=== 113. விண்ணின்று இழிந்து வினைக்கீடாய் மெய்க்கொண்டு தண்ணின்ற தாளைத் தலைக்காவல் முன்வைத்து உண்ணின்று உருக்கியோர் ஒப்பிலா ஆனந்தக் கண்ணின்று காட்டிக் களிம்பறுத் தானே.


2

  1. களிம்பறுத் தான்எங்கள் கண்ணுதல் நந்தி களிம்பறுத் தான்அருள் கண்விழிப் பித்துக் களிம்பணு காத கதிரொளி காட்டிப் பளிங்கிற் பவளம் பதித்தான் பதியே.

3

  1. பதிபசு பாசம் எனப்பகர் மூன்றில் பதியினைப் போற்பசு பாசம் அனாதி பதியினைச் சென்றணு காப்பசு பாசம் பதியணு கிற்பசு பாசம் நில் லாவே.

4

  1. வேயின் எழுங்கனல் போலேஇம் மெய்யெனும் கோயி லிருந்து குடிகொண்ட கோன்நந்தி தாயினும் மும்மலம் மாற்றித் தயாஎன்னும் தோயம தாய் எழுஞ் சூரிய னாமே.

5

  1. சூரிய காந்தமும் சூழ்பஞ்சும் போலவே சூரிய காந்தம் சூழ்பஞ்சைச் சுட்டிடா சூரியன் சந்நிதி யிற்சுடு மாறுபோல் சூரியன் தோற்றமுன் அற்ற மலங்களே.

6

  1. மலங்கள்ஐந் தாமென மாற்றி அருளித் தலங்கள்ஐந் தானற் சதாசிவ மான புலங்களைந் தான்அப் பொதுவினுள் நந்தி நலங்களைந் தான்உள் நயந்தான் அறிந்தே.

7

  1. அறிவுஐம் புலனுட னேநான் றதாகி நெறியறி யாதுற்ற நீர்ஆழம் போல அறிவுஅறி வுள்ளே அழிந்தது போலக் குறியறி விப்பான் குருபர னாமே.

8

  1. ஆமேவு பால்நீர் பிரிக்கின்ற அன்னம்போல் தாமே தனிமன்றில் தன்னந் தனிநித்தம் தீமேவு பல்கர ணங்களுள் உற்றன தாமேழ் பிறப்பெரி சார்ந்தவித் தாமே.

9

  1. வித்தைக் கெடுத்து வியாக்கிரத் தேமிகச் சுத்தத் துரியம் பிறந்து துடக்கற ஒத்துப் புலனுயிர் ஒன்றாய் உடம்பொடு செத்திட் டிருப்பார் சிவயோகி யார்களே.

10

  1. சிவயோக மாவது சித்தசித் தென்று தவயோகத் துள்புக்குத் தன்னொளி தானாய் அவயோகஞ் சாராது அவன்பதி போக நவயோக நந்தி நமக்களித் தானே.

11

  1. அளித்தான் உலகெங்கும் தானான உண்மை அளித்தான் அமரர் அறியா உலகம் அளித்தான் திருமன்றுள் ஆடுந் திருத்தாள் அளித்தான் பேரின்பத்து அருள்வெளி தானே.

12

  1. வெளியில் வெளிபோய் விரவிய வாறும் அளியில் அளிபோய் அடங்கிய வாறும் ஒளியில் ஒளிபோய் ஒடுங்கிய வாறும் தெளியும் அவரே சிவ சித்தர் தாமே.

13

  1. சித்தர் சிவலோகம் இங்கே தரிசித்தோர் சத்தமும் சத்த முடிவுந்தம் முள்கொண்டோர் நித்தர் நிமலர் நிராமயர் நீள்பர முத்தர்தம் முத்தி முதல்முப்பத் தாறே.

14

  1. முப்பதும் ஆறும் படிமுத்தி ஏணியாய் ஒப்பிலா ஆனந்தத் துள்ளொளி புக்குச் செப்ப அரிய சிவங்கண்டு தான்தெளிந்து அப்பரி சாக அமர்ந்திருந் தாரே.

15

  1. இருந்தார் சிவமாகி எங்குந் தாமாகி இருந்தார் சிவன்செயல் யாவையும் நோக்கி இருந்தார் முக்காலத்து இயல்பைக் குறித்தங்கு இருந்தார் இழவுவந்து எய்திய சோம்பே.

16

  1. சோம்பர் இருப்பது சுத்த வெளியிலே சோம்பர் கிடப்பதும் சுத்த வெளியிலே சோம்பர் உணர்வு சுருதி முடிந்திடஞ் சோம்பர் கண் டார்அச் சுருதிக்கண் தூக்கமே.

17

  1. தூங்கிக்கண் டார்சிவ லோகமும் தம்முள்ளே தூங்கிக்கண் டார்சிவ யோகமும் தம்முள்ளே தூங்கிக்கண் டார்சிவ போகமும் தம்முள்ளே தூங்கிக்கண் டார்நிலை சொல்வதெவ் வாறே.

18

  1. எவ்வாறு காண்பான் அறிவு தனக்கெல்லை அவ்வாறு அருட்செய்வன் ஆதிஅரன் தானும் ஒவ்வாத மன்றுள் உமைகாண ஆடிடும் செவ்வானிற் செய்ய செழுஞ்சுடர் மாணிக்கமே.

19

  1. மாணிக்கத் துள்ளே மரகதச் சோதியாய் மாணிக்கத் துள்ளே மரகத மாடமாய் ஆணிப்பொன் மன்றில் ஆடுந் திருக்கூத்தைப் பேணித் தொழுதென்ன பேறுபெற் றாரே.

20

  1. பெற்றார் உலகிற் பிரியாப் பெருநெறி பெற்றார் உலகிற் பிறவாப் பெரும்பயன் பெற்றார் அம்மன்றில் பிரியாப் பெரும்பேறு பெற்றார் உலகுடன் பேசாப் பெருமையே.

21

  1. பெருமை சிறுமை அறிந்தெம் பிரான்போல் அருமை எளிமை அறிந்தறி வார்ஆர் ஒருமையுள் ஆமைபோல் உள்ஐந்து அடக்கி இருமையுங் கேட்டிருந் தார்புரை அற்றே.

22

  1. புரைஅற்ற பாலினுள் நெய்கலந் தாற்போல் திரைஅற்ற சிந்தைநல் ஆரியன் செப்பும் உரையற்று உணர்வோர் உடம்பிங்கு ஒழிந்தால் கரையற்ற சோதி கலந்தசத் தாமே.

23

  1. சத்த முதல் ஐந்துந் தன்வழித் தான்சாரில் சித்துக்குச் சித்தன்றி சேர்விடம் வேறுண்டோ சுத்த வெளியிற் சுடா஢ற் சுடர்சேரும் அத்தம் இதுகுறித் தாண்டுகொள் அப்பிலே.

24

  1. அப்பினில் கூர்மை ஆதித்தன் வெம்மையால் உப்பெனப் பேர்ப்பெற்று உருச்செய்த அவ்வுரு அப்பினிற் கூடிய தொன்றாகு மாறுபோல் செப்பினிற் சீவன் சிவத்துள் அடங்குமே.

25

  1. அடங்குபேர ண்டத்து அணுஅண்டம் சென்றங்கு இடங்கொண்டது இல்லை இதுவன்றி வேறுண்டோ கடந்தொறும் நின்ற உயிர்க்கரை காணில் திடம்பெற நின்றான் திருவடி தானே.

26

  1. திருவடி யேசிவ மாவது தேரில் திருவடி யேசிவ லோகஞ்சிந் திக்கில் திருவடி யேசெல் கதியது செப்பில் திருவடி யேதஞ்சம் உள்தெளி வார்க்கே.

27

  1. தெளிவு குருவின் திருமேனி காண்டல் தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல் தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல் தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே.

28

  1. தானே புலன்ஐந்துந் தன்வசம் ஆயிடும் தானே புலன்ஐந்துந் தன்வசம் போயிடும் தானே புலன்ஐந்துந் தன்னில் மடைமாறும் தானே தனித்துஎம் பிரான்தனைச் சந்தித்தே.

29

  1. சந்திப் பதுநந்தி தன்திருத் தாளிணை சிந்திப் பதுநந்தி செய்ய திருமேனி வந்திப் பதுநந்தி நாமம்இன் வாய்மையால் புந்திக்குள் நிற்பது நந்திபொற் பாதமே.

30

  1. போதந் தரும்எங்கள் புண்ணிய நந்தியைப் போதந் தனில்வைத்துப் புண்ணியர் ஆயினார் நாதன் நடத்தால் நயனங் களிகூர வேதந் துதித்திடப் போயடைந்தார் விண்ணே.

31

===2.யாக்கை நிலையாமை=== 143. மண்ணொன்று கண்டீர் இருவகைப் பாத்திரம் திண்ணென்று இருந்தது தீவினைச் சேர்ந்தது விண்ணின்று நீர்விழின் மீண்டுமண் ணானார்ப்போல் எண்ணின்றி மாந்தர் இறக்கின்ற வாறே.


32

  1. பண்டம்பெய் கூரை பழகி விழுந்தக்கால் உண்ட அப் பெண்டிரும் மக்களும் பின்செலார் கொண்ட விரதமும் ஞானமும் அல்லது மண்டி அவருடன் வழிநட வாதே.

33

  1. ஊரெலாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப் பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச் சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு நீரினில் மூழ்கி நினைப்பொழிந் தார்களே.

34

  1. காலும் இரண்டு முகட்டலகு ஒன்றுள பாலுள் பருங்கழி முப்பத் திரண்டுள மேலுள கூரை பிரியும் பிரிந்தால்முன் போலுயிர் மீளப் புக அறி யாதே.

35

  1. சீக்கை விளைந்தது செய்வினை மூட்டிற்ற ஆக்கை பிரிந்தது அலகு பழுத்தது மூக்கினிற் கைவைத்து மூடிட்டுக் கொண்டுபோய்க் காக்கைக் குப்பலி காட்டிய வாறே.

36

  1. அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார் மடக்கொடி யாரொடு மந்தணங் கொண்டார் இடப்பக்க மேஇறை நொந்தது என்றார் கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந் தாரே.

37

  1. மன்றத்தே நம்பி மாடம் எடுத்தது மன்றத்தே நம்பி சிவிகைபெற் றேறினான் மன்றத்தே நம்பி முக்கோடி வழங்கினான் சென்றத்தா என்னத் திரிந்திலன் தானே.

38

  1. வாசந்தி பேசி மணம்புணர்ந்து அப்பதி நேசந் தெவிட்டி நினைப்பொழி வார்பின்னை ஆசந்தி மேல்வைத்து அமைய அழுதிட்டுப் பாசந்தீச் சுட்டுப் பலியட்டி னார்களே.

39

  1. கைவிட்டு நாடிக் கருத்தழிந் தச்சற நெய்யட்டிச் சோறுண்ணும் ஐவரும் போயினார் மையிட்ட கண்ணாளும் மாடும் இருக்கவே மெய்விட்டுப் போக விடைகொள்ளு மாறே.

40

  1. பந்தல் பிரிந்தது பண்டாரங் கட்டற்ற ஒன்பது வாசலும் ஒக்க அடைத்தன துன்புறு காலந் துரிசுவர மேன்மேல் அன்புடை யார்கள் அழுதகன் றார்களே.

41

  1. நாட்டுக்கு நாயகன் நம்மூர்த் தலைமகன் காட்டுச் சிவிகையொன்று ஏறிக் கடைமுறை நாட்டார்கள் பின்செல்ல முன்னே பறைகொட்ட நாட்டுக்கு நம்பி நடக்கின்ற வாறே.

42

  1. முப்பதும் முப்பதும் முப்பத் தறுவரும் செப்ப மதிளுடைக் கோயிலுள் வாழ்பவர் செப்ப மதிலுடைக் கோயில் சிதைந்தபின் ஒப்ப அனைவரும் ஓட்டெடுத் தார்களே.

43

  1. மதுவூர் குழலியும் மாடும் மனையும் இதுவூர் ஒழிய இதணம் தேறிப் பொதுவூர் புறஞ்சுடு காடது நோக்கி மதுவூர வாங்கியே வைத்தகன் றார்களே.

44

  1. வைச்சகல் வுற்றது கண்டு மனிதர்கள் அச்சக லாதென நாடும் அரும்பொருள் பிச்சது வாய்ப்பின் தொடர்வுறு மற்றவர் எச்சக லாநின் றிளைக்கின்ற வாறே.

45

  1. ஆர்த்தெழு சுற்றமும் பெண்டிரும் மக்களும் ஊர்த்துறைக் காலே ஒழிவர் ஒழிந்தபின் வேர்த்தலை போக்கி விறகிட்கு எரிமூட்டி நீர்த்தலை மூழ்குவர் நீதியி லோரே.

46

  1. வளத்திடை முற்றத்தோர் மாநிலம் முற்றுங் குளத்தின் மண்கொண்டு குயவன் வனைந்தான் குடமுடைந் தால் அவை ஓடென்று வைப்பர் உடலுடைந் தால்இறைப் போதும் வையாரே.

47

  1. ஐந்து தலைப்பறி ஆறு சடையுள சந்தவை முப்பது சார்வு பதினெட்டுப் பந்தலும் ஒன்பது பந்தி பதினைந்து வெந்து கிடந்தது மேலறி யோமே.

48

  1. அத்திப் பழமும் அறைக்கீரை நல்வித்தும் கொத்தி உலைபெய்து கூழட்டு வைத்தனர் அத்திப் பழத்தை அறைக்கீரை வித்துண்ணக் கத்தி எடுத்தவர் காடுபுக் காரே.

49

  1. மேலும் முகடில்லை கீழும் வடிம்பில்லை காலும் இரண்டு முகட்டலக் கொன்றுண்டு ஓலையான் மேய்ந்தவர் ஊடு வரியாமை வேலையான் மேய்ந்ததோர் வெள்ளித் தளிகையே.

50

  1. கூடம் கிடந்தது கோலங்கள் இங்கில்லை ஆடும் இலையமும் அற்றது அறுதலும் பாடுகின் றார்சிலர் பண்ணில் அழுதிட்டுத் தேடிய தீயினில் தீயவைத் தார்க்களே.

51

  1. முட்டை பிறந்தது முந்_று நாளினில் இட்டது தானிலை ஏதேனும் ஏழைகாள் பட்டது பார்மணம் பன்னிரண்டி ஆண்டினில் கெட்டது எழுபதில் கேடறி யீரே.

52

  1. இடிஞ்சில் இருக்க விளக்கெரி கொண்டான் முடிஞ்ச தறியார் முழங்குவர் மூடர் விடிஞ்சுஇரு ளாவது அறியா உலகம் படிஞ்சு கிடந்து பதைக்கின்ற வாறே.

53

  1. மடல்விரி கொன்றையன் மாயன் படைத்த உடலும் உயிரும் உருவந் தொழாமல் இடர்ப்படந்து ஏழா நரகிற் கிடப்பர் குடர்ப்பட வெந்தமர் கூப்பிடு மாறே.

54

  1. குடையும் குதிரையும் கொற்றவா ளுங்கொண்டு இடையும்அக் காலம் இருந்தது நடுவே புடையு மனிதனார் போக்கும்அப் போதே அடையும் இடம்வலம் ஆருயி ராமே.

55

  1. காக்கை கவரிலென் கண்டார் பழிக்கிலென் பாற்றுளி பெய்யிலென் பல்லோர் பழிச்சிலென் தோற்பையுள் நின்று தொழிலறச் செய்தூட்டுங் கூத்தன் புறப்பட்டுப் போன இக்கூட்டையே.

56

===3.செல்வம் நிலையாமை=== 168. அருளும் அரசனும் ஆனையம் தேரும் பொருளும் பிறர்கொள்ளப் போவதன் முன்னம் தெருளும் உயிரொடும் செல்வனைச் சேரின் மருளும் பினையவன் மாதவ மன்றே.


57

  1. இயக்குறு திங்கள் இரும்பிழப்பு ஒக்கும் துயக்குறு செல்வத்தைச் சொல்லவும் வேண்டா மயக்கற நாடுமின் வானவர் கோனைப் பெயற்கொண்டல் போலப் பெருஞ்செல்வ மாமே.

58

  1. தன்னது சாயை தனக்குத வாதுகண்டு என்னது மாடென்று இருப்பர்கள் ஏழைகள் உன்னுயிர் போம்உடல் ஒக்கப் பிறந்தது கண்ணது காணொளி கண்டுகொ ளீரே.

59

  1. ஈட்டிய தேன்பூ மணங்கண் டிரதமும் கூட்டிக் கொணர்ந்தொரு கொம்பிடை வைத்திடும் ஓட்டித் துரந்திட்டு அதுவலி யார்கொளக் காட்டிக் கொடுத்தது கைவிட்ட வாறே.

60

  1. தேற்றத் தெளிமின் தெளிந்தீர் கலங்கன்மின் ஆற்றுப் பெருக்கிற் கலக்கி மலக்காதே மாற்றிக் களைவீர் மறுத்துங்கள் செல்வத்தைக் கூற்றன் வருங்கால் குதிக்கலு மாமே.

61

  1. மகிழ்கின்ற செல்வமும் மாடும் உடனே கவிழ்கின்ற நீர்மிசைச் செல்லும் கலம்போல் அவிழ்கின்ற ஆக்கைக்கோர் வீடுபே றாகச் சிமிழொன்று வைத்தமை தேர்ந்தறி யாரே.

62

  1. வாழ்வும் மனைவியும் மக்கள் உடன்பிறந் தாரும் அளவு ஏது எமக்கென்பர் ஒண்பொருள் மேவும் அதனை விரிவுசெய் வார்கட்குக் கூவும் துணையொன்று கூடலு மாமே.

63

  1. வேட்கை மிகுத்தது மெய்கொள்வார் இங்கிலை பூட்டுந் தறியொன்று போம்வழி ஒன்பது நாட்டிய தாய்தமர் வந்து வணங்கிப்பின் காட்டிக் கொடுத்தவர் கைவிட்ட வாறே.

64

  1. உடம்போடு உயிரிடை விட்டோ டும் போது அடும்பரிசு ஒன்றில்லை அண்ணலை எண்ணும் விடும்பரி சாய்நின்ற மெய்ந்நமன் தூதர் சுடும்பரி சத்தையுஞ் சூழகி லாரே.

65

===4.இளமை நிலையாமை=== 177. கிழக்கெழுந்த் தோடிய ஞாயிறு மேற்கே விழக்கண்டும் தேறார் விழியிலா மாந்தர் குழக்கன்று மூத்தெரு தாய்ச்சில நாளில் விழக்கண்டும் தேறார் வியனுல கோரே.


66

  1. ஆண்டு பலவுங் கழிந்தன அப்பனைப் பூண்டுகொண் டாரும் புகுந்தறி வாரில்லை நீண்டன காலங்கள் நீண்டு கொடுக்கினும் தூண்டு விளக்கின் சுடரறி யாரே.

67

  1. தேய்ந்தற் றொழிந்த இளமை கடைமுறை ஆய்ந்தற்ற பின்னை அரிய கருமங்கள் பாய்ந்தற்ற கங்கைப் படர்சடை நந்தியை ஓர்ந்துற்று கொள்ளும் உயிருள்ள போதே.

68

  1. விரும்புவர் முன்என்னை மெல்லியன் மாதர் கரும்பு தகர்த்துக் கடைக்கொண்ட நீர்போல் அரும்பொத்த மென்முலை ஆயிழை யார்க்கும் கரும்பொத்துக் காஞ்சிரங் காயுமொத் தேனே.

69

  1. பாலன் இளையன் விருத்தன் எனநின்ற காலங் கழிவன கண்டும் அறிகிலார் ஞாலம்கடந்து அண்டம் ஊடறுத் தான்அடி மேலுங் கிடந்து விரும்புவன் நானே.

70

  1. காலை ஏழுந்தவர் நித்தலும் நித்தலும் மாலை படுவதும் வாணாள் கழிவதும் சாலும்அவ் ஈசன் சலவிய னாகிலும் ஏல நினைப்பவர்ககு இன்பம்செய் தானே.

71

  1. பருவூசி ஐந்துமோர் பையினுள் வாழும் பருவூசி ஐந்தும் பறக்கும் விருகம் பருவூசி ஐந்தும் பனித்தலைப் பட்டால் பருவூசிப் பையும் பறக்கின்ற வாறே.

72

  1. கண்ணதும் காய்கதி ரோனும் உலகினை உண்ணின்று அளக்கின்றது ஒன்றும் அறிகிலார் விண்ணுறு வாரையும் வினையுறு வாரையும் எண்ணுறும் முப்பதில் ஈர்ந்தொழிந் தாரே.

73

  1. ஒன்றிய ஈரெண் கலையும் உடனுற நின்றது கண்டு நினைக்கிலர் நீசர்கள் கன்றிய காலன் கருக்குழி வைத்தபின் சென்றதில் வீழ்வர் திகைப்பொழி யாரே.

74

  1. எய்திய நாளில் இளமை கழியாமை எய்திய நாளில் இசையினால் ஏத்துமின் எய்திய நாளில் எறிவ து அறியாமல் எய்திய நாளில் இருந்துகண் டேனே.

75

===5.உயிர் நிலையாமை=== 187. தழைக்கின்ற செந்தளிர்த் தண்மலர்க் கொம்பில் இழைக்கின்றது எல்லாம் இறக்கின்ற கண்டும் பிழைப்பின்றி எம்பெரு மானடி ஏத்தார் அழைக்கின்ற போதுஅறி யாரவர் தாமே.


76

  1. ஐவர்க்கு ஒருசெய் விளைந்து கிடந்தது ஐவரும் அச்செய்யைக் காத்து வருவர்கள் ஐவர்க்கு நாயகன் ஓலை வருதலால் ஐவரும் அச்செய்யைக் காவல் விட்டாரே.

77

  1. மத்தளி ஒன்றுள தாளம் இரண்டுள அத்துள்ளே வாழும் அரசனும் அங்குளன் அத்துள்ளெ வாழும் அரசன் புறப்பட்டால் மத்தளி மண்ணாய் மயங்கிய வாறே.

78

  1. வேங்கட நாதனை வேதாந்தக் கூத்தனை வேங்கடத் துள்ளே விளையாடு நந்தியை வேங்கடம் என்றே விரகுஅறி யாதவர் தாங்கவல் லாருயிர் தாமறி யாரே.

79

  1. சென்றுணர் வாந்திசை பத்துந் திவாகரன் அன்றுணர் வால் அளக் கின்ற தறிகிலர் நின்றுண ரார்இந் நிலத்தின் மனிதர்கள் பொன்றுணர் வாரிற் புணர்க்கின்ற மாயமே.

80

  1. மாறு திருத்தி வரம்பிட்ட பட்டிகை பீறும் அதனைப் பெரிதுணர்ந் தாரிலை கூறும் கருமயிர் வெண்மயி ராவது ஈறும் பிறப்புமொ ராண்டெனும் நீரே.

81

  1. துடுப்பிடு பானைக்கும் ஒன்றே அரிசி அடுப்பிடு மூன்றிற்கும் அஞ்சொ஢ கொள்ளி அடுத்தொ஢ யாமற் கொடுமின் அரிசி விடுத்தன நாள்களும் மேற்சென் றனவே.

82

  1. இன்புறு வண்டிங்கு இனமலர் மேற்போய் உண்பது வாச மதுபோல் உயிர்நிலை இன்புற நாடி நினைக்கிலும் மூன்றொளி கண்புற நின்ற கருத்துள்நில் லானே.

83

  1. ஆம்விதி நாடி அறஞ்செய்மின் அந்நிலம் போம்விதி நாடிப் புனிதனைப் போற்றுமின் நாம்விதி வேண்டும் அதென்சொலின் மானிடர் ஆம்விதி பெற்ற அருமைவல் லார்க்கே.

84

  1. அவ்வியம் பேசி அறங்கெட நில்லன்மின் வெவ்விய னாகிப் பிறர்ப்பொருள் வவ்வன்மின் செவ்விய னாகிச் சிறந்துண்ணும் போதொரு தவ்விகொ டுண்மின் தலைப்பட்ட போதே.

85

===6.கொல்லாமை=== 197. பற்றாய நற்குரு பூசைக்கும் பன்மலர் மற்றோர் அணுக்களைக் கொல்லாமை ஒண்மலர் நற்றார் நடுக்கற்ற தீபமும் சித்தமும் உற்றாரும் ஆவி அமர்ந்திடம் உச்சியே.


86

  1. கொல்லிடு குத்தென்று கூறிய மாக்களை வல்லடிக் காரர் வலிக்கயிற் றாற்கட்டிச் செல்லிடு நில்லென்று தீவாய் நரகிடை நில்லிடும் என்று நிறுத்துவர் தாமே.

87

===7.புலால் மறுத்தல்=== 199. பொல்லாப் புலாலை நுகரும் புலையரை எல்லாரும் காண இயமன்றன் தூதுவர் செல்லாகப் பற்றித் தீவாய் நரகத்தில் மல்லாக்கத் தள்ளி மறித்துவைப் பாரே.


88

  1. கொலையே களவுகள் காமம் பொய்கூறல் மலைவான பாதகமாம் அவை நீக்கித் தலையாம் சிவனடி சார்ந்தின்பம் சார்ந்தோர்க்கு இலையாம் இவைஞானா னந்தத் திருத்தலே.

89

===8.பிறன்மனை நயவாமை=== 201. ஆத்த மனையாள் அகத்தில் இருக்கவே காத்த மனையாளைக் காமுறுங் காளையர் காய்ச்ச பலாவின் கனியுண்ண மாட்டாமல் ஈச்சம் பழத்துக்கு இடருற்ற வாறே.


90

  1. திருத்தி வளர்த்ததோர் தேமாங் கனியை அருத்தமென் றெண்ணி அறையில் புதைத்துப் பொருத்தம் இலாத புளிமாங் கொம்பேறிக் கருத்தறி யாதவர் காலற்ற வாறே.

91

  1. பொருள்கொண்ட கண்டனும் போதத்தை யாளும் இருள்கொண்ட மின்வெளி கொண்டுநின் றோரும் மருள்கொணட மாதர் மயலுறு வார்கள் மருள்கொண்ட சிந்தையை மாற்றகில் லாரே.

92

===9.மகளிர் இழிவு=== 204. இலைநல வாயினும் எட்டி பழுத்தால் குலைநல வாங்கனி கொண்டுண லாகா முலைநலங் கொண்டு முறுவல்செய் வார்மேல் விலகுறு நெஞ்சினை வெய்துகொள் ளீரே.


93

  1. மனைபுகு வார்கள் மனைவியை நாடில் சுனைபுகு நீர்போல் சுழித்துடன் வாங்கும் கனவது போலக் கசிந்தெழும் இன்பம் நனவது போலவும் நாடவொண் ணாதே.

94

  1. இயலுறும் வாழ்க்கை இளம்பிடி மாதர் புயலுறும் புல்லின் புணர்ந்தவ ரேயினும் மயலுறும் வானவர் சாரஇரும் என்பார் அயலுறப் பேசி அகன்றொழிந் தாரே.

95

  1. வையகத் தேமட வாரொடும் கூடியென் மெய்யகத் தோடும் வைத்த விதியது கையகத் தேகரும் பாலையின் சாறுகொள் மெய்யகத் தேபெரு வேம்பது வாமே.

96

  1. கோழை ஒழுக்கம் குளமூடு பாசியில் ஆழ நடுவர் அளப்புறு வார்களைத் தாழத் துடக்கித் தடுக்ககில் லாவிடில் பூழை நுழைந்தவர் போகின்ற வாறே.

97

===10.நல்குரவு=== 209. புடவை கிழிந்தது போயிற்று வாழ்க்கை அடையப்பட் டார்களும் அன்பில ராயினார் கொடையில்லை கோளில்லை கொண்டாட்ட மில்லை நடையில்லை நாட்டில் இயங்குகின் றார்கட்கே.


98

  1. பொய்க்குழி தூர்ப்பான் புலா஢ புலருதென்று அக்குழி தூர்க்கும் அரும்பண்டம் தேடுவீர் எக்குழி தூர்த்தும் இறைவனை ஏத்துமின் அக்குழி தூரும் அழுக்கற்ற போதே.

99

  1. கற்குழி தூரக் கனகமும் தேடுவர் அக்குழி தூர்க்கை யாவர்க்கும் அரியது அக்குழி தூர்க்கும் அறிவை அறிந்தபின் அக்குழி தூரும் அழுக்கற்ற வாறே.

100

  1. தொடர்ந்தெழு சுற்றம் வினையினுந் தீய கடந்தோர் ஆவி கழிவதன் முன்னே உடந்தொரு காலத்து உணர்விளக்கு ஏற்றித் தொடர்ந்துநின்று அவ்வழி தூர்க்கலு ம் ஆமே.

101

  1. அறுத்தன ஆறினும் ஆனினம் மேவி அறுத்தனர் ஐவரும் எண்ணிலி துன்பம் ஒறுத்தன வல்வினை ஒன்றல்ல வாழ்வை வெறுத்தனன் ஈசனை வேண்டிநின் றானே.

102

===11.அக்கினி காரியம்=== 214. வசையில் விழுப்பொருள் வானும் நிலனும் திசையும் திசைபெறு தேவர் குழாமும் விசையும் பெருகிய வேத முதலாம் அசைவிலா அந்தணர் ஆகுதி வேட்கிலே.


103

  1. ஆகுதி வேட்கும் அருமறை அந்தணர் போகதி நாடிப் புறங்கொடுத்து உண்ணுவர் தாம்விதி வேண்டித் தலைப்படு மெய்ந்நெறி தாமறி வாலே தலைப்பட்ட வாறே.

104

  1. அணைதுணை அந்தணர் அங்கியுள் அங்கி அணைதுணை வைத்ததின் உட்பொரு ளான இணைதுணை யாமத்து இயங்கும் பொழுது துணையணை யாயதோர் தூய்நெறி யாமே.

105

  1. போதிரண் டோ திப் புரிந்தருள் செய்திட்டு மாதிரண் டாகி மகிழ்ந்துட னேநிற்குந் தாதிரண் டாகிய தண்ணம் பறவைகள் வேதிரண் டாகி வெறிக்கின்ற வாறே.

106

  1. நெய்நின்று எரியும் நெடுஞ்சுட ரேசென்று மைநின்று எரியும் வகையறி வார்க்கட்கு மைநின்று அவிழ்தரும் அத்தின மாம் என்றும் செய்நின்ற செல்வம் தீயது வாமே.

107

  1. பாழி அகலும் எரியும் திரிபோலிட்டு ஊழி அகலும் உறுவினை நோய்பல வாழிசெய்து அங்கி உதிக்க அவைவிழும் வீழிசெய்து அங்கி வினைசுடு மாமே.

108

  1. பெருஞ்செல்வம் கேடென்று முன்னே படைத்த வருஞ்செல்வம் தந்த தலைவனை நாடும் வருஞ்செல்வதது இன்பம் வரஇருந் தெண்ணி அருஞ்செல்வத்து ஆகுதி வேட்கநின் றாரே.

109

  1. ஒண்சுட ரானை உலப்பிலி நாதனை ஒண்சுட ராகிஎன் உள்ளத்து இருக்கின்ற கண்சுட ரோன் உலகு ஏழும் கடந்த அத் தண்சுடர் ஓமத் தலைவனு மாமே.

110

  1. ஓமத்துள் அங்கியின் உள்ளுளன் எம்மிறை ஈமத்துள் அங்கி இரதங்கொள் வானுளன் வேமத்துள் அங்கி விளைவு வினைக்கடல் கோமத்துள் அங்கி குரைகடல் தானே.

111

  1. அங்கி நிறுத்தும் அருந்தவர் ஆரணத்து தங்கி இருக்கும் வகையருள்செய்தவர் எங்கும் நிறுத்தி இளைப்பப் பெரும்பதி பொங்கி நிறுத்தும் புகழது வாமே.

112

===12.அந்தணர் ஒழுக்கம்=== 224. அந்தணர் ஆவோர் அறுதொழில் பூண்டுளோர் செந்தழல் ஓம்பிமுப் போதும் நியமஞ்செய் தந்தவ நற்கரு மத்துநின்று ஆங்கிட்டுச் சந்தியும் ஓதிச் சடங்கறுப் போர்களே.


113

  1. வேதாந்தங் கேட்க விருப்பொடு முப்பதப் போதாந்த மான பிரணவத் துள்புக்கு நாதந்த வேதாந்த போதாந்த நாதனை ஈதாந்தம் எனாதுகண்டு இன்புறு வோர்க்களே.

114

  1. காயத் திரியே கருதுசா வித்திரி ஆய்தற்கு உவப்பர் மந்திரம் ஆங்கு உன்னி நேயத் தேரேறி நினைவுற்று நேயத்தாய் மாயத்துள் தோயா மறையோர்கள் தாமே.

115

  1. பெருநெறி யான பிரணவம் ஓர்ந்து குருநெறி யாலுரை கூடிநால் வேதத் திருநெறி யான கிரியை யிருந்து சொரூபமது ஆனோர் துகளில்பார்ப் பாரே.

116

  1. சத்திய மும்தவம் தானவன் ஆதலும் எய்த்தரும் இந்தியம் ஈட்டியே வாட்டலும் ஒத்த உயிர்கள் உண்டா யுணர்வுற்று பெத்தம் அறுத்தலும் ஆகும் பிரமமே.

117

  1. வேதாந்தங் கேட்க விரும்பிய வேதியர் வேதாந்தங் கேட்டுந்தம் வேட்கை ஒழிந்திலர் வேதாந்த மாவது வேட்கை ஒழிந்திடம் வேதாந்தங் கேட்டவர் வேட்கை விட்டாரே.

118

  1. நூலும் சிகையும் நுவலிற் பிரமமோ நூலது கார்ப்பாசம் நுண்சிகை கேசமாம் நூலது வேதாந்தம் நுண்சிகை ஞானமாம் நூலுடை அந்தணர் காணும் நுவலிலே.

119

  1. சத்தியம் இன்றித் தனிஞானம் தானின்றி ஒத்த விடயம்விட் டோ டும் உணர்வின்றிப் பத்தியும் இன்றிப் பரன் உண்மை யின்றிப் பித்தேறும் மூடர் பிராமணர் தாமன்றே.

120

  1. திருநெறி யாகிய சித்தசித் தின்றிக் குருநெறி யாலே குருபதம் சேர்ந்து கரும நியமாதி கைவிட்டுக் காணும் துரிய சமாதியாந் தூய்மறை யோர்க்கே.

121

  1. மறையோது வாரே மறையவ ரானால் மறையோர்தம் வேதாந்த வாய்மையினால் தூய்மை குறையோர்தல் மற்றுள்ள கோலா கலமென் றறிவோர் மறைதெரிந் தந்தண ராமே.

122

  1. அந்தண்மை பூண்ட அருமறை அந்தத்துச் சிந்தைசெய் அந்தணர் சேரும் செழும்புவி நந்துதல் இல்லை நரபதி நன்றாகும் அந்தியும் சந்தியும் ஆகுதி பண்ணுமே.

123

  1. வேதாந்த ஞானம் விளங்க விதியிலோர் நாதாந்த போதம் நணுகிய போக்கது போதாந்த மாம்பரன் பாற்புகப் புக்கதால் நாதாந்த முத்தியும் சித்தியும் நண்ணுமே.

124

  1. ஒன்றும் இரண்டும் ஒருங்கிய காலத்து நன்றும் இருந்தும் நலம்பல பேசினும் வென்று விளங்கும் விகிர்தனை நாடுவர் சென்று வணங்குந் திருவுடை யோரே.

125

  1. தானே விடும்பற்று இரண்டும் தரித்திட நானே விடப்படும் ஏதொன்றை நாடாது பூமேவு நான்முகன் புண்ணிய போகனாய் ஓமேவும் ஓமேவும் ஓரா குதிஅவி உண்ணவே.

126

===13.இராசதோடம்=== 238. கல்லா அரசனும் காலனும் நேரொப்பர் கல்லா அரசனிற் காலன் மிகநல்லன் கல்லா அரசன் அறம் ஓரான் கொல்லென்பான் நல்லாரைக் காலன் நணுகநில் லானே.


127

  1. நாடொறும் மன்னவன் நாட்டில் தவநெறி நாடொறும் நாடி அவன்நெறி நாடானேல் நாடொறும் நாடு கெடுமூட னண்ணுமால் நாடொறும் செல்வம் நரபதி குன்றுமே.

128

  1. வேடநெறி நில்லார் வேடம்பூண் டென்பயன் வேட நெறிநிற்பார் வேடம்மெய் வேடமே வேட நெறிநில்லார் தம்மை விறல்வேந்தன் வேடநெறி செய்தால் வீடது வாகுமே.

129

  1. மூடங் கெடாதோர் சிகைநூல் முதற்கொள்ளில் வாடும் புவியும் பெருவாழ்வு மன்னனும் பீடுஒன் றிலனாகும் ஆதலாற் பேர்த்துணர்ந்து ஆடம் பரநூல் சிகையறுத் தால்நன்றே.

130

  1. ஞானமி லாதார் சடைசிகை நூல்நண்ணி ஞானிகள் போல நடிக்கின் றவர் தம்மை ஞானிக ளாலே நரபதி சோதித்து ஞானமுண் டாக்குதல் நலமாகும் நாட்டிற்கே.

131

  1. ஆவையும் பாவையும் மற்றுஅற வோரையும் தேவர்கள் போற்றும் திருவேடத் தாரையும் காவலன் காப்பவன் காவாது ஒழிவனேல் மேவும் மறுமைக்கு மீளா நரகமே.

132

  1. திறந்தரு முத்தியும் செல்வமும் வேண்டின் மறந்தும் அறநெறி யேஆற்றல் வேண்டும் சிறந்தநீர் ஞாலம் செய்தொழில் யாவையும் அறைந்திடில் வேந்தனுககு ஆறில் ஒன் றாமே.

133

  1. வேந்தன் உலகை மிகநன்று காப்பது வாய்ந்த மனிதர்கள் அவ்வழி யாநிற்பர் போந்திவ் வுலகைப் பிறர்க்கொள்ளத் தாங்கொள்ளப் பாய்ந்த புலியன்ன பாவகத் தானே.

134

  1. கால்கொண்டு கட்டிக் கனல்கொண்டு மேலேற்றிப் பால்கொண்டு சோமன் முகம்பற்றி உண்ணாதோர் மால்கொண்டு தேறலை உண்ணும் மருளரை மேல்கொண்டு தண்டஞ்செய் வேந்தன் கடனே.

135

  1. தத்தம் சமயத் தகுதிநில் லாதாரை அத்தன் சிவன் சொன்ன ஆகம நூல்நெறி எத்தண் டமுஞ்செயும் அம்மையில் இம்மைக்கே மெய்த்தண்டம் செய்வதுஅவ் வேந்தன் கடனே.

136

===14.வானச் சிறப்பு=== 248. அமுதூறு மாமழை நீரத னாலே அமுதூறும் பன்மரம் பார்மிசை தோற்றும் கமுகூறு தெங்கு கரும்பொடு வாழை அமுதூறுங் காஞ்சிரை ஆங்கது வாமே.


137

  1. வரையிடை நின்றிழி வான்நீர் அருவி உரையில்லை உள்ளத் தகத்துநின் றூறும் நுரையில்லை மாசில்லை நுண்ணிய தெண்ணீர் கரையில்லை எந்தை கழுமணி யாறே.

138

===15.தானச் சிறப்பு=== 250. ஆர்க்கும் இடுமின் அவரிவர் என்னன்மின் பார்த்திருந்து உண்மின் பழம்பொருள் போற்றன்மின் வேட்கை உடையீர் விரைந்தொல்லை உண்ணன்மின் காக்கை கரைந்துண்ணும் காலம் அறிமினே.


139

===16.அறஞ்செய்வான் திறம்=== 251. தாமறி வார்அண்ணல் தாள்பணி வார்அவர் தாமறி வார்அறம் தாங்கிநின் றார்அவர் தாமறி வார்சில தத்துவர் ஆவர்கள் தாமறி வார்க்குத் தமர்பர னாமே.


140

  1. யாவர்க்கு மாம்இறை வற்குஒரு பச்சிலை யாவர்க்கு மாம்பசு வுக்கொரு வாயுறை யாவர்க்கு மாம் உண்ணும் போதொரு கைப்பிடி யாவர்க்கு மாம்பிறர்க்கு இன்னுரை தானே.

141

  1. அற்றுநின் றார்உண்ணும் ஊணே அறன்என்னும் கற்றன போதம் கமழ்பவர் மானிடர் உற்றுநின்று ஆங்கொரு கூவல் குளத்தினில் பற்றிவந் துண்ணும் பயனறி யாரே.

142

  1. அழுக்கினை ஓட்டி அறிவை நிறையீர் தழுக்கிய நாளில் தருமமும்செய்யீர் விழித்திருந்து என்செய்வீர் வெம்மை பரந்து விழிக்கஅன்று என்செய்வீர் ஏழைநெஞ்சீரே.

143

  1. தன்னை அறியாது தான்நலன் என்னாதுஇங்கு இன்மை அறியாது இளையர்என்று ஓராது வன்மையில் வந்திடும்கூற்றம் வருமுன்னம் தன்மையில் நல்ல தவஞ்செய்யும் நீரே.

144

  1. துறந்தான் வழிமுதல் சுற்றமும் இல்லை இறந்தான் வழிமுதல் இன்பமும் இல்லை மறந்தான் வழிமுதல் வந்திலன் ஈசன் அறந்தான் அறியும் அளவறி வாரே.

145

  1. தான்தவம் செய்வதாம் செய்தவத்து அவ்வழி மான்தெய்வ மாக மதிக்கும் மனிதர்கள் ஊன் தெய்வ மாக உயிர்க்கின்ற பல்லுயிர் நான்தெய்வம் என்று நமன்வரு வானே.

146

  1. திளைக்கும் வினைக்கடல் தீர்வுறு தோணி இளைப்பினை நீக்கும் இருவழி உண்டு கிளைக்கும் தனக்கும் அக் கேடில் புகழோன் விளைக்கும் தவமறம் மேற்றுணை யாமே.

147

  1. பற்றது வாய்நின்ற பற்றினைப் பார்மிசை அற்றம் உரையான் அறநெறிக் கல்லது உற்று உங்களால் ஒன்றும் ஈந்தது வேதுணை மற்றண்ணல் வைத்த வழிகொள்ளு மாறே. ===17.அறஞ்செய்யான் திறம்=== 260. எட்டி பழுத்த இருங்கனி வீழ்ந்தன ஒட்டிய நல்லறம் செய்யா தவர்செல்வம் வட்டிகொணடு ஈட்டியே மண்ணில் முகந்திடும் பட்டிப் பதகர் பயன்அறி யாரே.

148

  1. ஒழிந்தன காலங்கள் ஊழியும் போயின கழிந்தன கற்பனை நாளுங் குறுகிப் பிழிந்தன போலத்தம் போ஢டர் ஆக்கை அழிந்தன கண்டும் அறம்அறி யாரே.

149

  1. அறம்அறி யார்அண்ணல் பாதம் நினையுந் திறம்அறி யார்சிவ லோக நகர்க்குப் புறம்அறி யார்பலர் பொய்மொழி கேட்டு மறம்அறி வார்பகை மன்னிநின் றாரே.

150

  1. இருமலும் சோகையும் ஈளையும் வெப்பும் தருமஞ்செய் யாதவர் தம்பால தாகும் உருமிடி நாகம் உரோணி கழலை தருமம்செய் வார்பக்கல் தாழகி லாவே.

151

  1. பரவப் படுவான் பரமனை ஏத்தார் இரவலர்க்கு ஈதலை யாயினும் ஈயார் கரகத்தால் நீராட்டிக் காவை வளர்க்கார் நரகத்தில் நிற்றிரோ நல்நெஞ்சி னீரே.

152

  1. வழிநடப் பாரின்றி வானோர் உலகம் கழிநடப் பார்நடந் தார்கருப் பாரும் மழிநடக் கும்வினை மாசற ஓட்டிட்டு வழிநடப் பார்வினை ஓங்கிநின் றாரே.

153

  1. கனிந்தவர் ஈசன் கழலடி காண்பர் துணிந்தவர் ஈசன் துறக்கமது ஆள்வர் மலிந்தவர் மாளும் துணையும்ஒன் றின்றி மெலிந்த சினத்தினுள் வீழ்ந்தொழிந் தாரே.

154

  1. இன்பம் இடரென்று இரண்டுற வைத்தது முன்பவர் செய்கையி னாலே முடிந்தது இன்பம் அதுகண்டும் ஈகிலாப் பேதைகள் அன்பிலார் சிந்தை அறமறி யாரே.

155

  1. கெடுவதும் ஆவதும் கேடில் புகழோன் நடுவல்ல செய்து இன்பம் நாடவும் ஒட்டான் இடுவதும் ஈவதும் எண்ணுமின் இன்பம் படுவது செய்யின் பசுவது வாமே.

156

  1. செல்வம் கருதிச் சிலர்பலர் வாழ்வெனும் புல்லறி வாளரைப் போற்றிப் புலராமல் இல்லங் கருதி இறைவனை ஏத்துமின் வில்லி இலக்கெய்த விற்குறி யாமே.

157

===18.அன்புடைமை=== 270. அன்பு சிவம் இரண்டு என்பர் அறிவிலார் அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார் அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே.


158

  1. பொன்னைக் கடந்திலங் கும்புலித் தோலினன் மின்னிக் கிடந்து மிளிரும் இளம்பிறை துன்னிக் கிடந்த சுடுபொடி யாடிக்குப் பின்னிக் கிடந்ததென் பேரன்பு தானே.

159

  1. என்பே விறகா இறைச்சி அறுத்திட்டுப் பொன்போற் கனலிற் பெரிய வறுப்பினும் அன்போடு உருகி அகங்குழை வார்க்கன்றி என்போல் மணியினை எய்தஒண் ணாதே.

160

  1. ஆர்வம் உடையவர் காண்பார் அரன்தன்னை ஈரம் உடையவர் காண்பார் இணையடி பாரம் உடையவர் காண்பார் பவந்தன்னைக் கோர நெறிகொடு கொங்குபுக் காரே.

161

  1. என்னன் புருக்கி இறைவனை ஏத்துமின் முன்அன் புருக்கி முதல்வனை நாடுமின் பின்அன் புருக்கிப் பெருந்தகை நந்தியும் தன்அன் பெனக்கே தலைநின்ற வாறே.

162

  1. தானொரு காலம் சயம்பு என் றேத்தினும் வானொரு காலம் வழித்துணை யாய்நிற்கும் தேனொரு பால்திகழ் கொன்றை அணிசிவன் தானொரு வண்ணம்என் அன்பில்நின் றானே.

163

  1. முன்படைத்து இன்பம் படைத்த முதலிடை அன்புஅடைத்து எம்பெரு மானை அறிகிலார் வன்படைத்து இந்த அகலிடம் வாழ்வினில் அன்புஅடைத் தான்தன் அகலிடத் தானே.

164

  1. கருத்துறு செம்பொன்செய் காய்கதிர்ச் சோதி இருத்தியும் வைத்தும் இறைவன் என்று ஏத்தியும் அருத்தியுள் ஈசனை யாரருள் வேண்டில் விருத்தி கொடுத்திடும் விண்ணவர் கோனே.

165

  1. நித்தலும் துஞ்சும் பிறப்பையும் செய்தவன் வைத்த பரிசு அறிந் தேயும் மனிதர்கள் இச்சையு ளேவைப்பர் எந்தை பிரானென்று நச்சியே அண்ணலை நாடுகி லாரே.

166

  1. அன்பினுள் ளான்புறத் தானுட லாயுளான் முன்பினுள் ளான்முனி வர்க்கும் பிரானவன் அன்பினுள் ளாகி அமரும் அரும்பொருள் அன்பினுள் ளார்க்கே அணைதுணை யாமே.

167

===19.அன்பு செய்வாரை அறிவன் சிவன்=== 280. இகழ்ந்ததும் பெற்றதும் ஈசன் அறியும் உகந்தருள் செய்திடும் உத்தம நாதன் கொழுந்தன்பு செய்தருள் கூரவல் லார்க்கு மகிழ்ந்தன்பு செய்யும் அருளது வாமே.


168

  1. இன்பப் பிறவிக்கு இயல்வது செய்தவன் துன்பப் பிறவித் தொழில்பல என்னினும் அன்பிற் கலவிசெய்து ஆதிப் பிரான்வைத்த முன்பிப் பிறவி முடிவது தானே.

169

  1. அன்புறு சிந்தையின் மேலெழும் அவ்வொளி இன்புறு கண்ணியொடு ஏற்க இசைந்தன துன்புறு கண்ணி ஐந் தாடும் துடக்கற்று நண்புறு சிந்தையை நாடுமின் நீரே.

170

  1. புணர்ச்சியுள் ஆயிழை மேல்அன்பு போல உணர்ச்சியுள் ஆங்கே ஒடுங்கவல் லாருக்கு உணர்ச்சியில் லாது குலாவி உலாவி அணைத்தலும் இன்பம் அதுவிது வாமே.

171

  1. உற்றுநின் றாரொடும் அத்தகு சோதியைச் சித்தர்கள் என்றும் தொ஢ந்தறி வாரில்லை பத்திமை யாலே பணிந்தடி யார்தொழ முத்தி கொடுத்தவர் முன்புநின் றானே.

172

  1. கண்டேன் கமழ்தரு கொன்றையி னான்அடி கண்டேன் கரியுரி யான்தன் கழலிணை கண்டேன் கமல மலர்உறை வானடி கண்டேன் கழலதென் அன்பினுள் யானே.

173

  1. நம்பனை நானா விதப்பொரு ளாகுமென்று உம்பரில் வானவர் ஓதுந் தலைவனை இன்பனை இன்பத் திடைநின்று இரதிக்கும் அன்பனை யாரும் அறியகி லாரே.

174

  1. முன்பு பிறப்பும் இறப்பும் அறியாதார் அன்பில் இறைவனை யாம்அறி வோம்என்பர் இன்பப் பிறப்பும் இறப்பும் இலான்நந்தி அன்பில் அவனை அறியகி லாரே.

175

  1. ஈசன் அறியும் இராப்பக லுந்தன்னைப் பாசத்துள் வைத்துப் பரிவுசெய் வார்களைத் தேசுற்று இருந்து செயலற் றிருந்திடில் ஈசன்வந்து எம்மிடை ஈட்டிநின் றானே.

176

  1. விட்டுப் பிடிப்பதென் மேதகு சோதியைத் தொட்டுத் தொடர்வன் தொலையாப் பெருமையை எட்டும் என் ஆருயி ராய்நின்ற ஈசனை மட்டுக் கலப்பது மஞ்சனம் ஆமே.

177

===20.கல்வி=== 290. குறிப்பறிந் தேனுடல் உயிரது கூடிச் செறிப்பறிந் தேன்மிகு தேவர் பிரானை மறிப்பறி யாதுவந் துள்ளம் புகுந்தான் கறிப்பறி யாமிகுங் கல்விகற் றேனே.


178

  1. கற்றறி வாளர் கருதிய காலத்துக் கற்றறி வாளர் கருத்திலோர் கண்ணுண்டு கற்றறி வாளர் கருதி உரைசெய்யுங் கற்றறி காட்டக் கயல்உள வாக்குமே.

179

  1. நிற்கின்ற போதே நிலையுடை யான்கழல் கற்கின்ற செய்மின் கழிந்தறும் பாவங்கள் சொற்குன்றல் இன்றித் தொழுமின் தொழுதபின் மற்றொன்று இலாத மணிவிளக் காமே.

180

  1. கல்வி யுடையார் கழிந்தோடிப் போகின்றார் பல்லி யுடையார் பாம்பரிந்து உண்கின்றார் எல்லியுன் காலையும் ஏத்தும் இறைவனை வல்லியுள் வாதித்த காயமும் ஆமே.

181

  1. துணையது வாய்வரும் தூயநற் சோதி துணையது வாய்வரும் தூயநற் சொல்லாம் துணையது வாய்வரும் தூயநற் கந்தம் துணையது வாய்வரும் தூயநற் கல்வியே.

182

  1. நூலொன்று பற்றி நுனியேற மாட்டாதார் பாலொன்று பற்றினால் பண்பின் பயங்கெடும் கோலொன்று பற்றினால் கூடாப் பறவைகள் மாலொன்று பற்றி மயங்குகின் றார்க்களே.

183

  1. ஆய்ந்துகொள் வார்க்குஅரன் அங்கே வெளிப்படும் தோய்ந்த நெருப்பது தூய்மணி சிந்திடும் ஏய்ந்த இளமதி எட்டவல் லார்கட்கு வாய்ந்த மனமல்கு நூலேணி யாமே.

184

  1. வழித்துணை யாய்மருந் தாயிருந் தார்முன் கழித்துணை யாம்கற் றிலாதவர் சிந்தை ஒழித்துணை யாம்உம் பராய்உல கேழும் வழித்துணை யாம்பெருந் தன்மைவல் லானே.

185

  1. பற்றது பற்றில் பரமனைப் பற்றுமின் முற்றது எல்லா முதல்வன் அருள்பெறில் கிற்ற விரகிற் கிளரொளி வானவர் கற்றவர் போரின்பம் உற்றுநின் றாரே.

186

  1. கடலுடை யான்மலை யான்ஐந்து பூதத்து உடலுடை யான்பல ஊழிதொ றூழி அடல்விடை யேறும் அமரர்கள் நாதன் இடமுடை யார்நெஞ்சத் தில்லிருந் தானே.

187

===21.கேள்வி கேட்டமைதல்=== 300. அறங்கேட்டும் அந்தணர் வாய்மொழி கேட்டும் மறங்கேட்டும் வானவர் மந்திரங் கேட்டும் புறங்கேட்டும் பொன்னுரை மேனிஎம் ஈசன் திறங்கேட்டும் பெற்ற சிவகதி தானே.


188

  1. தேவர் பிரானைத் திவ்விய மூர்த்தியை யாவர் ஒருவர் அறிவார் அறிந்தபின் ஓதுமின் கேள்மின் உணர்மின் உணர்ந்தபின் ஓதி உணர்ந்தவர் ஓங்கி நின்றாரே.

189

  1. மயன்பணி கேட்பது மாநந்தி வேண்டின் அயன்பணி கேட்பது அரன்பணி யாலே சிவன்பணி கேட்பவர் தேவரும் ஆவர் பயன்பணி கேட்பது பற்றது வாமே.

190

  1. பெருமான் இவனென்று பேசி இருக்கும் திருமானிடர் பின்னைத் தேவரும் ஆவர் வருமா தவர்க்கு மகிழ்ந்தருள் செய்யும் அருமா தவத்தெங்கள் ஆதிப் பிரானே.

191

  1. ஈசன் அருளும் இறப்பும் பிறப்பையும் பேசி யிருந்து பிதற்றி மகிழ்வெய்தி நேசமு மாகும் நிகழொளி யாய்நின்று வாச மலர்க்கந்தம் மன்னிநின் றானே.

192

  1. விழுப்பமும் கேள்வியும் மெய்நின்ற ஞானத்து ஒழுக்கமும் சிந்தை உணர்கின்ற போது வழுக்கி விடாவிடில் வானவர் கோனும் இழுக்கின்றி எண்ணிலி காலம தாமே.

193

  1. சிறியார் மணற்சோற்றில் தேக்கிடு மாபோல் செறிவால் அனுபோகம் சித்திக்கும் என்னில் குறியாதது ஒன்றைக் குறியாதார் தம்மை அறியாது இருந்தார் அவராவார் அன்றே.

194

  1. உறுதுணை யாவது உயிரும் உடம்பும் உறுதுணை யாவது உலகுறு கேள்வி செறிதுணை யாவது சிவனடிச் சிந்தை பெறுதுணை கேட்கிற் பிறப்பில்லை தானே.

195

  1. புகழநின் றார்க்கும் புராணன்எம் ஈசன் இகழநின் றார்க்கும் இடும்பைக்கு இடமாம் மகிழநின் றாதியை ஓதி உணராக் கழியநின் றார்க்கொரு கற்பசு வாமே.

196

  1. வைத்துணர்ந் தான்மனத் தொடும்வாய் பேசி ஒத்துணர்ந் தான்உரு ஒன்றொடொன்று ஒவ்வாது அச்சுஉழன்று ஆணி கலங்கினும் ஆதியை நச்சு உணர்ந் தார்க்கே நணுகலு மாமே.

197

===22.கல்லாமை=== 310. கல்லா தவரும் கருத்தறி காட்சியை வல்லார் எனில்அருட் கண்ணான் மதித்துளோர் கல்லாதார் உண்மைபற் றாநிற்பர் கற்றோரும் கல்லாதார் இன்பம் காணுகி லாரே.


198

  1. வல்லார்கள் என்றும் வழியொன்றி வாழ்கின்றார் அல்லா தவர்கள் அறிவு பலஎன்பார் எல்லா இடத்தும் உளன்எங்கள் தம் இறை கல்லா தவர்கள் கலப்பறி யாரே.

199

  1. நில்லா நிலையை நிலையாக நெஞ்சத்து நில்லாக் குரம்பை நிலையென்று உணர்வீர்காள் எல்லா உயிர்க்கும் இறைவனே ஆயினும் கல்லாதார் நெஞ்சத்துக் காணஒண் ணாதே.

200

  1. கில்லேன் வினைத்துய ராக்கும் மயலானேன் கல்லேன் அரநெறி அறியாத் தகைமையின் வல்லேன் வழங்கும் பொருளே மனத்தினுள் கல்லேன் கழியநின்று ஆடவல் லேனே.

201

  1. நில்லாது சீவன் நிலையன்று எனஎண்ணி வல்லார் அறத்தும் தவத்துளும் ஆயினார் கல்லா மனித்தர் கயவர் உலகினில் பொல்லா வினைத்துயர் போகஞ்செய் வாரே.

202

  1. விண்ணினின் உள்ளே விளைந்த விளங்கனி கண்ணினின் உள்ளே கலந்துஅங் கிருந்தது மண்ணினின் உள்ளே மதித்து மதித்துநின் றெண்ணி எழுதி இளைத்துவிட் டாரே.

203

  1. கணக்கறிந் தார்க்கு அன்றிக் காணஒண் ணாதது கணக்கறிந் தார்க்கு அன்றிக் கைகூடாக் காட்சி கணக்கறிந்து உண்மையைக் கண்டுஅண்ட நிற்கும் கணக்கறிந் தார்கல்வி கற்றறிந் தாரே.

204

  1. கல்லாத மூடரைக் காணவும் ஆகாது கல்லாத மூடர்சொல் கேட்கக் கடன்அன்று கல்லாத மூடர்க்குக் கல்லாதார் நல்லராம் கல்லாத மூடர் கருத்தறி யாரே.

205

  1. கற்றும் சிவஞானம் இல்லாக் கலதிகள் சுற்றமும் வீடார் துரிசுஅறார் மூடர்கள் மற்றும் பலதிசை காணார் மதியிலோர் கற்றன்பில் நிற்போர் கணக்கறிந் தார்களே.

206

  1. ஆதிப் பிரான் அமரர்க்கும் பரஞ்சுடர் சோதி அடியார் தொடரும் பெருந்தெய்வம் ஓதி உணரவல் லோமென்பர் உள்நின்ற சோதி நடத்தும் தொடர்வறி யாரே.

207

===23.நடுவு நிலைமை=== 320. நடுவுநின் றார்க்கன்றி ஞானமும் இல்லை நடுவுநின் றார்க்கு நரகமும் இல்லை நடுவுநின் றார்நல்ல தேவரும் ஆவர் நடுவுநின் றார்வழி நானும்நின் றேனே.


208

  1. நடுவுநின் றான்நல்ல கார்முகில் வண்ணன் நடுவுநின் றான்நல்ல நான்மறை யோதி நடுவுநின் றார்ச்சிலர் ஞானிகள் ஆவோர் நடுவுநின் றார்நல்ல நம்பனு மாமே.

209

  1. நடுவுநின் றார்சிலர் ஞானிக ளாவார் நடுவுநின் றார்சிலர் தேவரு மாவார் நடுவுநின் றார்சிலர் நம்பனு மாவார் நடுவுநின் றாரொடு நானும்நின் றேனே.

210

  1. தோன்றிய எல்லாம் துடைப்பன் அவனன்றி ஏன்றுநின் றாரென்றும் ஈசன் இணையடி மூன்றுநின் றார்முதல் வன்திரு நாமத்தை நான்றுநின் றார்நடு வாகிநின் றாரே.

211

===24.கள்ளுண்ணாமை=== 324. கழுநீர்ப் பசுப்பெறிற் கயந்தொறும் தேரா கழுநீர் விடாய்த்துத்தம் காயம்சுருக்கும் முழுநீர்க் கள்ளுண்போர் முறைமை அகன்றோர் செழுநீர்ச் சிவன்தன் சிவானந்தத் தேறலே.


212

  1. சித்தம் உருக்கிச் சிவமாம் சமாதியில் ஒத்த சிவானந்தம் ஓவாத தேறலைச் சுத்த மதுவுண்ணச் சிவானந்தம் விட்டிடா நித்தல் இருத்தல் கிடத்தல் கீழ்க் காலே.

213

  1. காமமும் கள்ளும் கலதிகட் கேயாகும் மாமல மும்சம யத்துள் மயலுறும் போமதி யாகும் புனிதன் இணையடி ஓமய ஆனந்தத் தேறல் உணர்வுண்டே.

214

  1. வாமத்தோர் தாமும் மதுவுண்டு மாள்பவர் காமத்தோர் காமக்கள் ளுண்டே கலங்குவர் ஓமத்தோர் உள்ளொளிக் குள்ளே உணர்வர்கள் நாமத்தோர் அன்றே நணுகுவர் தாமே.

215

  1. உள்ளுண்மை ஓரார் உணரார் பசுபாசம் வள்ளன்மை நாதன் அருளினன் வாழ்வுறார் தெள்ளுண்மை ஞானச் சிவயோகம் சேர்வுறார் கள்ளுண்ணும் மாந்தர் கருத்தறி யாரே.

216

  1. மயக்குஞ் சமய மலமன்னு மூடர் மயக்கு மதுவுண்ணும் மாமூடர் தேரார் மயக்குறு மாமாயை மாயையின் வீடு மயக்கில் தெளியின் மயக்குறும் அன்றே.

217

  1. மயங்கும் தியங்குங்கள் வாய்மை அழிக்கும் இயங்கும் மடவார்தம் இன்பமே எய்தி முயங்கும் நயங்கொண்ட ஞானத்து முந்தார் இயங்கும் இடையறா ஆனந்தம் எய்துமே.

218

  1. இராப்பகல் அற்ற இடத்தே இருந்து பராக்கற ஆனந்தத் தேறல் பருகார் இராப்பகல் அற்ற இணையடி இன்பத்து இராப்பகல் மாயை இரண்டிடத் தேனே.

219

  1. சத்தியை வேண்டிச் சமயத்தோர் கள்ளுண்பர் சத்தி அழிந்தது தம்மை மறத்தலால் சத்தி சிவஞானம் தன்னில் தலைப்பட்டுச் சத்திய ஞானஆ னந்தத்திற் சார்தலே.

220

  1. சத்தன் அருள்தரின் சத்தி அருளுண்டாம் சத்தி அருள்தரின் சத்தன் அருளுண்டாம் சத்தி சிவமாம் இரண்டும் தன் உள்வைக்கச் சத்தியம் எண்சித்தித் தன்மையு மாமே.

221

  1. தத்துவம் நீக்கி மருள்நீக்கித் தானாகிப் பொய்த்தவம் நீக்கிமெய்ப் போகத்துட் போகியே மெய்த்த சகமுண்டு விட்டுப் பரானந்தச் சித்திய தாக்கும் சிவானந்தத் தேறலே.

222

  1. யோகிகள் கால்கட்டி ஒண்மதி ஆனந்தப் போத அமுதைப் பொசித்தவர் எண்சித்தி மோகியர் கள்ளுண்டு மூடராய் மோகமுற்று ஆகும் மதத்தால் அறிவழிந் தாரே.

223

  1. உண்ணீர் அமுத முறும் ஊறலைத்திறந்து எண்ணீர் குரவன் இணையடித் தாமரை நண்ணீர் சமாதியின் நாடிநீ ரால்நலம் கண்ணாற் றொடேசென்று கால்வழி காணுமே.

மூன்றாந் தந்திரம்

1

#வழிமாற்று திருமந்திரம்/மூன்றாம் தந்திரம்

மூன்றாம் தந்திரம்

1

==மூன்றாம் தந்திரம்==


2

உரைத்தன வற்கரி ஒன்று மூடிய நிரைத்த இராசி நிரைமுறை எண்ணிப் பிரச்சதம் எட்டும் பேசியே நந்தி நிரைத்த இயமம் நியமஞ்செய் தானே.


3

செய்த இயம நியமஞ் சமாதிசென் றுய்யப் பராசக்தி உத்தர பூருவ மெய்த கவச நியாசங்கள் முத்திரை எய்த வுரைசெய்வன் இந்நிலை தானே.


4

அந்நெறி இந்நெறி என்னாதட் டாங்கத் தன்னெறி சென்று சமாதியி லேநின்மின் நன்னெறி செல்வார்க்கு ஞானத்தி லேகலாம் புன்னெறி யாகத்திற் போக்கில்லை யாகுமே.


5

இயம நியமமே எண்ணிலா ஆதனம் நயமுறு பிராணாயா மம்பிரத்தி யாகாரஞ் சயமிகு தாரணை தியானஞ் சமாதி அயமுறும் அட்டாங்க மாவது மாமே.


6

எழுந்துநீர் பெய்யினும் எட்டுத் திசையுஞ் செழுந்த ணியமங்கள் செய்மினென் றண்ணல் கொழுந்தண் பவளக் குளிர்சடை யோடே அழுந்திய நால்வர்க் கருள்புரிந் தானே.


7

கொல்லான்பொய் கூறான் களவிலான் எண்குணன் நல்லான் அடக்க முடையான் நடுச்செய்ய வல்லான் பகுந்துண்பான் மாசிலான் கட்காமம் இல்லான் இயமத் திடையில்நின் றானே.


8

===3.நியமம்=== ஆதியை வேதத்தின் அப்பொரு ளானைச் சோதியை ஆங்கே சுடுகின்ற அங்கியைப் பாதியுள் மன்னும் பரசக்தி யோடுடன் நீதி யுணர்ந்து நியமத்த னாமே.


9

தூய்மை அருளூண் சுருக்கம் பொறைசெவ்வை வாய்மை நிலைமை வளர்த்தலே மற்றிவை காமங் களவு கொலையெனக் காண்பவை நேமியீ ரைந்து நியமத்த னாமே.


10

தவஞ்செபஞ் சந்தோடம் ஆத்திகந் தானஞ் சிவன்றன் விரதமே சித்தாந்தக் கேள்வி மகஞ்சிவ பூசையொண் மதிசொல்லீர் ஐந்து நிவம்பல செய்யின் நியமத்த னாமே.


11

பங்கய மாதி பரந்தபல் ஆதனம் அங்குள வாம்இரு நாலும் அவற்றினுள் சொங்கில்லை யாகச் சுவத்திக மெனமிகத் தங்க இருப்பத் தலைவனு மாமே.


12

ஓரணை யப்பத மூருவின் மேலேறிட் டார வலித்ததன் மேல்வைத் தழகுறச் சீர்திகழ் கைகள் அதனைத்தன் மேல்வைக்கப் பார்திகழ் பத்மா சனமென லாகுமே.


13

துரிசில் வலக்காலைத் தோன்றவே மேல்வைத்து அரிய முழந்தாளி லங்கையை நீட்டி உருசி யொடுமுடல் செவ்வே யிருத்திப் பரிசு பெறுமது பத்திரா சனமே.


14

ஒக்க அடியிணை யூருவில் ஏறிட்டு முக்கி யுடலை முழங்கை தனில்ஏற்றித் தொக்க அறிந்து துளங்கா திருந்திடிற் குக்குட ஆசனங் கொள்ளலு மாமே.


15

பாத முழந்தாளிற் பாணி களைநீட்டி ஆதர வோடும்வாய் அங்காந் தழகுறக் கோதில் நயனங் கொடிமூக்கி லேயுறச் சீர்திகழ் சிங்கா தனமெனச் செப்புமே.


16

பத்திரங் கோமுகம் பங்கயங் கேசரி சொத்திரம் வீரஞ் சுகாதனம் ஓரேழு முத்தம மாமுது ஆசனம் எட்டெட்டுப் பத்தொடு நூறு பலஆ சனமே.


17

===5.பிராணாயாமம்=== ஐவர்க்கு நாயகன் அவ்வூர்த் தலைமகன் உய்யக்கொண்டேறுங் குதிரைமற் றொன்றுண்டு மெய்யர்க்குப்பற்றுக்கொடுக்குங் கொடாதுபோய்ப் பொய்யரைத் துள்ளி விழுத்திடுந் தானே.


18

ஆரிய னல்லன் குதிரை இரண்டுள வீசிப் பிடிக்கும் விரகறி வாரில்லை கூரிய நாதன் குருவின் அருள்பெற்றால் வாரிப் பிடிக்க வசப்படுந் தானே.


19

புள்ளினும் மிக்க புரவியை மேற்கொண்டாற் கள்ளுண்ண வேண்டாந் தானே களிதருந் துள்ளி நடப்பிக்குஞ் சோம்பு தவிர்ப்பிக்கும் உள்ளது சொன்னோம் உணர்வுடை யோருக்கே.


20

பிராணன் மனத்தொடும் பேரா தடங்கிப் பிராண னிருக்கிற் பிறப்பிறப் பில்லை பிராணன் மடைமாறிப் பேச்சறி வித்துப் பிராண னடைபேறு பெற்றுண்டீர் நீரே.


21

ஏறுதல் பூரகம் ஈரெட்டு வாமத்தால் ஆறுதல் கும்பம் அறுபத்து நாலதில் ஊறுதல் முப்பத் திரண்டதி ரேசகம் மாறுதல் ஒன்றின் கண் வஞ்சக மாமே.


22

வளியினை வாங்கி வயத்தில் அடக்கில் பளிங்கொத்துக் காயம் பழுக்கினும் பிஞ்சாந் தெளியக் குருவின் திருவருள் பெற்றால் வளியினும் வேட்டு வளியனு மாமே.


23

எங்கே இருக்கினும் பூரி இடத்திலே தங்கே யதுசெய்ய ஆக்கைக் கழிவில்லை அங்கே பிடித்தது விட்டள வுஞ்செல்லச் சங்கே குறிக்கத் தலைவனு மாமே.


24

ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்குங் காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாரில்லை காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாளர்க்குக் கூற்றை யுதைக்குங் குறியது வாமே.


25

மேல்கீழ் நடுப்பக்க மிக்குறப் பூரித்துப் பாலாம் இரேசகத் தாலுட் பதிவித்து மாலாகி யுந்தியுட் கும்பித்து வாங்கவே ஆலாலம் உண்டான் அருள்பெற லாமே. 573. வாமத்தில் ஈரெட்டு மாத்திரை பூரித்தே ஏமுற்ற முப்பத் திரண்டும் இரேசித்துக் காமுற்ற பிங்கலைக் கண்ணாக இவ்விரண் டோமத்தால் எட்டெட்டுக் கும்பிக்க உண்மையே.


26

  1. இட்ட தவ்வீ டிளகா திரேசித்துப் புட்டிப் படத்தச நாடியும் பூரித்துக் கொட்டிப் பிராணன் அபானனுங் கும்பித்து நட்டம் இருக்க நமனில்லை தானே.

27

  1. புறப்பட்டுப் புக்குத் திரிகின்ற வாயுவை நெறிப்பட வுள்ளே நின்மல மாக்கில் உறுப்புச் சிவக்கும் உரோமங் கறுக்கும் புறப்பட்டுப் போகான் புரிசடை யோனே.

28

  1. கூடம் எடுத்துக் குடிபுக்க மங்கையர் ஓடுவர் மீளுவர் பன்னிரண் டங்குலம் நீடுவர் எண்விரல் கண்டிப்பர் நால்விரல் கூடிக் கொளிற்கோல அஞ்செழுத் தாமே.

29

577 பன்னிரண் டானைக்குப் பகலிர வுள்ளது பன்னிரண் டானையைப் பாகன் அறிகிலன் பன்னிரண் டானையைப் பாகன் அறிந்தபின் பன்னிரண் டானைக்குப் பகலிர வில்லையே.


30

===6.பிரத்தியாகாரம்=== கண்டுகண் டுள்ளே கருத்துற வாங்கிடிற் கொண்டுகொண் டுள்ளே குணம்பல காணலாம் பண்டுகந் தெங்கும் பழமறை தேடியை இன்றுகண் டிங்கே இருக்கலு மாமே.


31

நாபிக்குக் கீழே பன்னிரண் டங்குலந் தாபிக்கு மந்திரந் தன்னை அறிகிலர் தாபிக்கு மந்திரந் தன்னை அறிந்தபின் கூவிக்கொண் டீசன் குடிபுகுந் தானே.


32

580 மூலந் திருவிரல் மேலுக்கு முன்னின்ற பாலித்த யோனிக் கிருவிரற் கீழ்நின்ற கோலித்து குண்டலி யுள்ளே செழுஞ்சுடர் ஞாலத்து நாபிக்கு நாலிவிரற் கீழே.


33

  1. நாசிக் கதோமுகம் பன்னிரண் டங்குலம் நீசித்தம் வைத்து நினையவும் வல்லையேல் மாசித்தி மாயோகம் வந்து தலைப்பெய்தும் தேகத்துக் கென்றுஞ் சிதைவில்லை யாகுமே.

34

  1. சோதி இரேகைச் சுடரொளி தோன்றிடிற் கோதில் பரானந்தம் என்றே குறிக்கொண்மின் நேர்திகழ் கண்டத்தே நிலவொளி எய்தினால் ஓதுவ துன்னுடல் உன்மத்த மாமே.

35

  1. மூலத் துவாரத்தை முக்கார மிட்டிரு மேலைத் துவாரத்தின் மேல்மனம் வைத்திரு வேலொத்த கண்ணை வெளியில் விழித்திரு காலத்தை வெல்லுங் கருத்திது தானே.

36

  1. எருவிடும் வாசற் கிருவிரன் மேலே கருவிடும் வாசற் கிருவிரற் கீழே உருவிடுஞ் சோதியை உள்கவல் லார்க்குக் கருவிடுஞ் சோதி கலந்துநின் றானே.

37

  1. ஒருக்கால் உபாதியை ஒண்சோதி தன்னைப் பிரித்துணர் வந்த உபாதிப் பிரிவைக் கரைத்துணர் வுன்னல் கரைதல்உள் நோக்கல் பிரத்தியா காரப் பெருமைய தாமே.

38

  1. புறப்பட்ட வாயுப் புகவிடா வண்ணந் திறப்பட்ட நிச்சயஞ் சேர்ந்துடன் நின்றால் உறப்பட்டு நின்றது உள்ளமும் அங்கே புறப்பட்டுப் போகான் பெருந்தகை யானே.

39

  1. குறிப்பினின் உள்ளே குவலயந் தோன்றும் வெறுப்பிருள் நீங்கி விகிர்தனை நாடும் சிறப்புறு சிந்தையைச் சிக்கென் றுணரில் அறிப்புறு காட்சி அமரரு மாமே.

40

===7.தாரணை=== 588. கோணா மனத்தைக் குறிக்கொண்டு கீழ்க்கட்டி வீணத்தண் டூடே வெளியுறத் தானோக்கிக் காணக்கண் கேளாச் செவியென் றிருப்பார்க்கு வாணாள் அடைக்கும் வழியது வாமே.


41

  1. மலையார் சிரத்திடை வானீர் அருவி நிலையாரப் பாயும் நெடுநாடி யூடுபோய்ச் சிலையார் பொதுவில் திருநட மாடுந் தொலையாத ஆனந்தச் சோதிகண் டேனே.

42

  1. மேலை நிலத்தினாள் வேதகப் பெண்பிள்ளை மூல நிலத்தில் எழுகின்ற மூர்த்தியை ஏல எழுப்பி இவளுடன் சந்திக்கப் பாலனும் ஆவான் பார்நந்தி ஆணையே.

43

  1. கடைவாச லைக்கட்டிக் காலை எழுப்பி இடைவாசல் நோக்கி இனிதுள் இருத்தி மடைவாயிற் கொக்குப்போல் வந்தித் திருப்பார் உடையாமல் ஊழி இருக்கலு மாமே.

44

  1. கலந்த உயிருடன் காலம் அறியில் கலந்தலை யாது காலின் நெருக்கங் கலந்த உயிரது காலது கட்டிக் கலந்த உயிருடன் காலமும் நிற்குமே.

45

  1. வாய்திறவாதார் மனத்திலோர் மாடுண்டு வாய்திறப் பாரே வளியிட்டுப் பாய்ச்சுவர் வாய்திறவாதார் மதியிட்டு முட்டுவர் கோய்திற வாவிடிற் கோழையு மாமே.

46

  1. வாழலு மாம்பல காலும் மனத்திடைப் போழ்கின்ற வாயு புறம்படாப் பாயச்சுறின் ஏழுசா லேகம் இரண்டு பெருவாய்தல் பாழி பெரியதோர் பள்ளி அறையிலே.

47

  1. நிரம்பிய ஈரைந்தில் ஐந்திவை போனால் இரங்கி விழித்திருந் தென்செய்வை பேதாய் வரம்பினுட் கோலி வழிசெய்கு வார்க்குக் குரங்கினைக் கோட்டைப் பொதியலு மாமே.

48

  1. முன்னம் வந்தனர் எல்லாம் முடிந்தனர் பின்னை வந்தவர்க் கென்ன பிரமாணம் முன்னுறு கோடி உறுகதி பேசிடில் என்ன மாயம் இடிகரை நிற்குமே.

49

  1. அரித்த வுடலைஐம் பூதத்தில் வைத்துப் பொருத்தைஐம் பூதஞ்சித் தாதியிற் போந்து தெரித்த மனாதிசத் தாதியிற் செல்லத் தரித்தது தாரணை தற்பரத் தோடே.

50

===8.தியானம்=== 598. வருமாதி யீரெட்டுள் வந்த தியானம் பொருவாத புந்தி புலன்போக மேவல் உருவாய சத்தி பரத்தியான முன்னுங் குருவார் சிவத்தியானம் யோகத்தின் கூறே.


51

  1. கண்ணாக்கு மூக்குச் செவிஞானக் கூட்டத்துட் பண்ணாக்கி நின்ற பழம்பொருள் ஒன்றுண்டு அண்ணாக்கின் உள்ளே அகண்ட ஒளிகாட்டிப் புண்ணாக்கி நம்மைப் பிழைப்பித்த வாறே.

52

  1. ஒண்ணா நயனத்தில் உற்ற ஒளிதன்னைக் கண்ணாரப் பார்த்துக் கலந்தங் கிருந்திடில் விண்ணாறு வந்து வெளிகண் டிடவோடிப் பண்ணாமல் நின்றது பார்க்கலு மாமே.

53

  1. ஒருபொழு துன்னார் உடலோ டுயிரை ஒருபொழு துன்னார் உயிருட் சிவனை ஒருபொழு துன்னார் சிவனுறை சிந்தையை ஒருபொழு துன்னார் சந்திரப் பூவையே.

54

  1. மனத்து விளக்கினை மான்பட ஏற்றிச் சினத்து விளக்கினைச் செல்ல நெருக்கி அனைத்து விளக்குந் திரியொக்கத் தூண்ட மனத்து விளக்கது மாயா விளக்கே.

55

  1. எண்ணா யிரத்தாண்டு யோகம் இருக்கினும் கண்ணா ரமுதினைக் கண்டறி வாரில்லை உண்ணாடி யுள்ளே ஒளிபெற நோக்கில் கண்ணாடி போலக் கலந்திருந் தானே.

56

  1. நாட்டம் இரண்டும் நடுமூக்கில் வைத்திடில் வாட்டமும் இல்லை மனைக்கும் அழிவில்லை ஓட்டமும் இல்லை உணர்வில்லை தானில்லை தேட்டமும் இல்லை சிவனவ னாமே.

57

  1. நயனம் இரண்டு நாசிமேல் வைத்திட்டு) உயர்விழா வாயுவை உள்ளே அடக்கித் துயரறா நாடியே தூங்கவல் லார்க்குப் பயனிது காயப் பயமில்லை தானே.

58

  1. மணிகடல் யானை வார்குழல் மேகம் அணிவண்டு தும்பி வளைபேரி கையாழ் தணிந்தெழு நாதங்கள் தாமிவை பத்தும் பணிந்தவர்க் கல்லது பார்க்கஒண் ணாதே.

59

  1. கடலொடு வேகக் களிறொடும் ஓசை அடலொடு மவ்வினை அண்டரண் டத்து சுடர்மன்னு வேணு சுரிசங்கின் ஓசை திடமறி யோகிக்கல் லாற்றெரி யாதே.

60

  1. ஈசன் இயல்பும் இமையவர் ஈட்டமும் பாசம் இரங்கப் பரந்துயி ராய்நிற்கும் ஓசை யதன்மணம் போல விடுவதோர் ஓசையும் ஈசன் உணரவல் லார்க்கே.

61

  1. நாத முடிவிலே நல்லாள் இருப்பது நாத முடிவிலே நல்யோகம் இருப்பது நாத முடிவிலே நாட்டம் இருப்பது நாத முடிவிலே நஞ்சுண்ட கண்டனே.

62

  1. உதிக்கின்ற ஆறினும் உள்ளங்கி ஐந்துந் துதிக்கின்ற தேசுடைத் தூங்கிருள் நீங்கி அதிக்கின்ற ஐவருள் நாதம் ஒடுங்கக் கதிக்கொன்றை ஈசன் கழல்சேர லாமே.

63

  1. பள்ளி அறையிற் பகலே இருளில்லை கொள்ளி அறையிற் கொளுந்தாமற் காக்கலாம் ஒள்ளி தறியிலோ ரோசனை நீளிது வெள்ளி அறையில் விடிவில்லை தானே.

64

  1. கொண்ட விரதங் குறையாமற் றானொன்றித் தண்டுடன் ஓடித் தலைப்பட்ட யோகிக்கு மண்டலம் மூன்றினும் ஒக்க வளர்ந்தபின் பிண்டமும் ஊழி பிறியா திருக்குமே.

65

  1. அவ்வவர் மண்டல மாம்பரி சொன்றுண்டு அவ்வவர் மண்டலத் தவ்வவர் தேவராம் அவ்வவர் மண்டலம் அவ்வவர்க் கேவரில் அவ்வவர் மண்டல மாயமற் றோர்க்கே.

66

  1. இளைக்கின்ற நெஞ்சத் திருட்டறை உள்ளே முளைக்கின்ற மண்டலம் மூன்றினும் ஒன்றித் துளைப்பெரும் பாசத் துருவிடு மாகில் இளைப்பின்றி மார்கழி ஏற்றம தாமே.

67

  1. முக்குண மூடற வாயுவை மூலத்தே சிக்கென மூடித் திரித்துப் பிடித்திட்டுத் தக்க வலமிடம் நாழிகை சாதிக்க வைக்கும் உயிர்நிலை வானவர் கோனே.

68

  1. நடலித்த நாபிக்கு நால்விரல் மேலே மடலித்த வாணிக் கிருவிரல் மேலே கடலித் திருந்து கருதவல் லார்கள் சடலத் தலைவனைத் தாமறிந் தாரே.

69

  1. அறிவா யசத்தென்னு மாறா றகன்று செறிவான மாயை சிதைத்தரு ளாலே பிறியாத பேரரு ளாயிடும் பெற்றி நெறியான அன்பர் நிலையறிந் தாரே.

70

===9.சமாதி=== 618. சமாதி யமாதியிற் றான்செல்லக் கேட்கின் சமாதி யமாதியிற் றானெட்டுஞ் சித்தி சமாதி யமாதியில் தங்கினோர்க் கன்றோ சமாதி யமாதி தலைப்படுந் தானே.


71

  1. விந்துவும் நாதமும் மேருவில் ஓங்கிடின் சந்தியி லான சமாதியிற் கூடிடும் அந்த மிலாத அறிவின் அரும்பொருள் சுந்தரச் சோதியுந் தோன்றிருந் தானே.

72

  1. மன்மனம் எங்குண்டு வாயுவும் அங்குண்டு மன்மனம் எங்கில்லை வாயுவும் அங்கில்லை மன்மனத் துள்ளே மகிழ்ந்திருப் பார்க்கு மன்மனத் துள்ளே மனோலய மாமே.

73

  1. விண்டலர் கூபமும் விஞ்சத் தடவியுங் கண்டுணர் வாகக் கருதி யிருப்பார்கள் செண்டு வெளியிற் செழுங்கிரி யத்திடை கொண்டு குதிரை குசைசெறுத் தாரே.

74

  1. மூல நாடிமுக் கட்டல குச்சியுள் நாலு வாசல் நடுவுள் இருப்பர்காள் மேலை வாசல் வெளியுறக் கண்டபின் காலன் வார்த்தை கனாவிலும் இல்லையே.

75

  1. மண்டலம் ஐந்து வரைகளும் ஈராறு கொண்டிட நிற்குங் குடிகளும் ஆறெண்மர் கண்டிட நிற்குங் கருத்து நடுவாக உண்டு நிலாவிடும் ஓடும் பதத்தையே.

76

  1. பூட்டொத்து மெய்யிற் பொறிப்பட்ட வாயுவைத் தேட்டற்ற வந்நிலஞ் சேரும் படிவைத்து நாட்டத்தை மீட்டு நயனத் திருப்பார்க்குத் தோட்டத்து மாம்பழந் தூங்கலு மாமே.

77

  1. உருவறி யும்பரி சொன்றுண்டு வானோர் கருவரை பற்றிக் கடைந்தமு துண்டார் அருவரை யேறி அமுதுண்ண மாட்டார் திருவரை யாமனந் தீர்ந்தற்ற வாறே.

78

  1. நம்பனை யாதியை நான்மறை ஓதியைச் செம்பொனின் உள்ளே திகழ்கின்ற சோதியை அன்பினை யாக்கி யருத்தி ஒடுக்கிப்போய்க் கொம்பேறிக் கும்பிட்டுக் கூட்டமிட் டாரே.

79

  1. மூலத்து மேலது முச்சது ரத்தது காலத் திசையிற் கலக்கின்ற சந்தினில் மேலைப் பிறையினுள் நெற்றிநேர் நின்ற கோலத்தின் கோலங்கள் வெவ்வேறு கொண்டதே.

80

  1. கற்பனை யற்றுக் கனல்வழி யேசென்று சிற்பனை எல்லாஞ் சிருட்டித்த பேரொளிப் பொற்பினை நாடிப் புணர்மதி யோடுற்றுத் தற்பர மாகத் தகுந்தண் சமாதியே.

81

  1. தலைப்பட் டிருந்திடத் தத்துவங் கூடும் வலைப்பட் டிருந்திடும் மாதுநல் லாளும் குலைப்பட் டிருந்திடுங் கோபம் அகலுந் துலைப்பட் டிருந்திடுங் தூங்கவல் லார்க்கே.

82

  1. சோதித் தனிச்சுட ராய்கின்ற தேவனும் ஆதியும் உள்நின்ற சீவனு மாகுமால் ஆதிப் பிரமன் பெருங்கடல் வண்ணனும் ஆதி அடிபணிந் தன்புறு வாரே.

83

  1. சமாதிசெய் வார்க்குத் தகும்பல யோகஞ் சமாதிகள் வேண்டாம் இறையுட னேகின் சமாதிதா னில்லை தானவ னாகிற் சமாதியில் எட்டெட்டுச் சித்தியும் எய்துமே.

84

===10.அட்டாங்க யோகப்பேறு=== ====இயமம்==== 632. போதுகந் தோறும் புரிசடை யானடி யாதுகந் தாரம ராபதிக் கேசெல்வர் ஏதுகந் தானிவன் என்றருள் செய்திடு மாதுகந் தாடிடு மால்விடை யோனே. ====நியமம்==== 633. பற்றிப் பதத்தன்பு வைத்துப் பரன்புகழ் கற்றிருந் தாங்கே கருது மவர்கட்கு முற்றெழுந் தாங்கே முனிவர் எதிர்வரத் தெற்றுஞ் சிவபதஞ் சேர்தலு மாமே. ====ஆதனம்==== 634. வருந்தித் தவஞ்செய்து வானவர் கோவாய்த் திருந்தம ராபதிச் செல்வன் இவனெனத் தருந்தண் முழவங் குழலும் இயம்ப இருந்தின்பம் எய்துவர் ஈசன் அருளே. ====பிராணாயாமம்==== 635. செம்பொற் சிவகதி சென்றெய்துங் காலத்து கும்பத் தமரர் குழாம்வந் தெதிர்கொள்ள எம்பொற் றலைவன் இவனா மெனச்சொல்ல இன்பக் கலவி இருக்கலு மாமே. ====பிரத்தியாகாரம்==== 636. சேருறு காலந் திசைநின்ற தேவர்கள் ஆரிவன் என்ன அரனாம் இவனென்ன ஏருறு தேவர்கள் எல்லாம் எதிர்கொள்ளக் காருறு கண்டனை மெய்கண்ட வாறே. ====தாரணை==== 637. நல்வழி நாடி நமன்வழி மாற்றிடுஞ் சொல்வழி யாளர் சுருங்காப் பெருங்கொடை யில்வழி யாளர் இமையவர் எண்டிசைப் பல்வழி எய்தினும் பார்வழி யாகுமே. ====தியானம்==== 638. தூங்கவல் லார்க்குந் துணையேழ் புவனமும் வாங்கவல் லார்க்கும் வலிசெய்து நின்றிட்டுத் தேங்கவல் லார்க்குந் திளைக்கும் அமுதமுந் தாங்கவல் லார்க்குந் தானிட மாமே. ====சமாதி==== 639. காரிய மான உபாதியைத் தான்கடந் தாரிய காரணம் ஏழுந்தன் பாலுற வாரிய காரண மாய்த் தவத்திடைத் தாரியல் தற்பரஞ் சேர்தல் சமாதியே.


85

===11.அட்டமாசித்தி=== ====பரகாயப் பிரவேசம்==== 640. பணிந்தெண் டிசையும் பரமனை நாடித் துணிந்தெண் டிசையுந் தொழுதெம் பிரானை அணிந்தெண் டிசையினும் அட்டமா சித்தித் தணிந்தெண் டிசைசென்று தாபித்த வாறே.


86

  1. பரிசறி வானவர் பண்பன் அடியெனத் துரிசற நாடியே தூவெளி கண்டேன் அரிய தெனக்கில்லை அட்டமா சித்தி பெரிதருள் செய்து பிறப்பருத் தானே.

87

  1. குரவன் அருளிற் குறிவழி மூலம் பரையின் மணமிகு சங்கட்டம் பார்த்துத் தெரிதரு சாம்பவி கேசரி சேரப் பெரிய சிவகதி பேறெட்டாஞ் சித்தியே.

88

  1. காயாதி பூதங் கலைகால மாயையில் ஆயா தகல வறிவொன்ற னாதியே ஓயாப் பதியதன் உண்மையைக் கூடினால் வீயாப் பரகாயம் மேவலு மாமே.

89

  1. இருபதி னாயிரத் தொண்ணூறு பேதம் மருவிய கன்ம மாமந்த யோகந் தருமிவை காய உழைப்பாகுந் தானே அருமிரு நான்காய் அடங்குமா சித்திக்கே.

90

  1. மதிதனில் ஈராறாய் மன்னுங் கலையின் உதய மதுநா லொழியவோ ரெட்டுப் பதியுமீ ராறாண்டு பற்றறப் பார்க்கில் திதமான ஈராறு சித்திக ளாமே.

91

  1. நாடும் பிணியாம் நஞ்சனஞ் சூழ்ந்தக்கால் நீடுங் கலைகல்வி நீள்மேதை கூர்ஞானம் பீடொன்றி னால்வாயாச் சித்திபே தத்தின் நீடுந் துரங்கேட்டல் நீண்முடி வீராறே.

92

  1. ஏழா னதிற்சண்ட வாயுவின் வேகியாந் தாழா நடைபல யோசனை சார்ந்திடுஞ் சூழான ஓரெட்டில் தோன்றா நரைதிரை தாழான ஒன்பதிற் றான்பர காயமே.

93

  1. ஈரைந்திற் பூரித்துத் தியான உருத்திரன் நேரொன்று பன்னொன்றில் ஈராறாம் எண்சித்தி சீரொன்று மேலேழ் கீழேழ் புவிச்சென்று ஓரொன்று வியாபியாய் நிற்றலீ ராறே.

94

  1. தானே அணுவுஞ் சகத்துந்தன் நோன்மையும், மானாக் ககனமும் பரகாய்த் தேகமும் தானாவ தும்பர காயஞ்சேர் தன்மையும் ஆனாத வுண்மையும் வியாபியு மாம்எட்டே.

95

  1. தாங்கிய தன்மையுந் தானணுப் பல்லுயிர் வாங்கிய காலத்து மற்றோர் குறையில்லை யாங்கே எழுந்தோம் அவற்றுள் எழுந்துமிக் கோங்கி வர்முத்தி முந்திய வாரே.

96

  1. முந்திய முந்நூற் றறுபது காலமும் வந்தது நாழிகை வான்முத லாயிடச் சிந்தைசெய் மண்முதல் தேந்தறி வார்வலம் உந்தியுள் நின்று வதித்தெழு மாறே.

97

  1. சித்தத் திரிந்து சிவமய மாகியே முத்தந் தெரிந்துற்ற மோனர்சிவ முத்தர் சுத்தம் பெறலாக ஐந்தில் தொடக்கற்றோர் சித்தம் பரத்தில் திருநடத் தோரே;

98

  1. ஒத்தஇவ வொன்பது வாயுவும் ஒத்தன ஒத்தஇவ் வொன்பதின் மிக்க தனஞ்செயன் ஒத்தஇவ் வொன்பதில் ஒக்க இருந்திட ஒத்த வுடலும் உயிரும் இருந்ததே.

99

  1. இருக்குந் தனஞ்செயன் ஒன்பது காலின் இருக்கும் இருநூற் றிருபத்து நான்காய் இருக்கு முடலி லிருந்தில் வாகில் இருக்கும் உடலது வீங்கி வெடித்ததே.

100

  1. வீங்குங் கழலை சிரங்கொடு குட்டமும் வீங்கும் வியாதிகள் சோகை பலவதாய் வீங்கிய வாதமுங் கூனு முடமதாம் வீங்கு வியாதிகள் கண்ணின் மருவியே.

101

  1. கண்ணில் வியாதி யுரோகந் தனஞ்செயன் கண்ணிலிவ் வாணிகள் காச மவனல்லன் கண்ணினிற் கூர்மன் கலந்தில னாதலாற் கண்ணினிற் சோதி கலந்ததும் இல்லையே.

102

  1. நாடியின் ஓசை நயனம் இருதயந் தூடி யளவுஞ் சுடர்விடு சோதியைத் தேவருள் ஈசன் திருமால் பிரமனும் ஓவற நின்றங் குணர்த்திருந் தாரே.

103

  1. ஒன்பது வாசல் உடையதோர் பிண்டத்துள ஒன்பது நாடி யுடையதோ ரோரிடம் ஒன்பது நாடி ஒடுங்கவல் லார்கட்கு ஒன்பது வாசல் உலைநல வாமே.

104

  1. ஓங்கிய அங்கிக்கீழ் ஒண்சுழ னைச்செல்ல வாங்கி இரவி மதிவழி ஓடிடத் தாங்கி உலகங்கள் ஏழுந் தரித்திட ஆங்கது சொன்னோம் அறிவுடை யோர்க்கே.

105

  1. தலைப்பட்ட வாறண்ணல் தையலை நாடி வலைப்பட்ட பாசத்து வன்பிணை மான்போல் துலைப்பட்ட நாடியைத் தூவழி செய்தால் விலைக்குண்ண வைத்தோர் வித்தது வாமே.

106

  1. ஓடிச்சென் றங்கே ஒருபொருள் கண்டவா நாடியி னுள்ளாக நாதம் எழுப்புவர் தேடிச் சென் றங்கே தேனை முகத்துண்டு பாடியுள் நின்ற பகைவரைக் கட்டுமே.

107

  1. கட்டிட்ட தாமரை நாளத்தில் ஒன்பது மட்டிட்ட கன்னியர் மாதுடன் சேர்ந்தனர் தட்டிட்டு நின்று தளங்களி னூடுபோய்ப் பொட்டிட்டு நின்று பூரண மானதே.

108

  1. பூரண சத்தி எழுமுன் றறையாக ஏரணி கன்னிகள் எழுநூற்றஞ் சாயினர் நாரணன் நான்முக னாதிய ஐவர்க்குங் காரண னாகிக் கலந்து விரிந்ததே.

109

  1. விரிந்து குவிந்து விளைத்தஇம் மங்கை கரத்துள் எழுந்து கரத்தங் கிருக்கிற் பரந்து குவிந்தது பார்முதற் பூதம் இரைந்தெழு வாயு விடத்தில் ஒடுங்க.

110

  1. இடையொடு பிங்கலை என்னும் இரண்டு மடைபடு வாயுவு மாறியே நிற்குந் தடையவை யாறெழுந் தணகட ருள்ளே மிடைவளர் மின்கொடி தன்னில் ஒடுங்கே.

111

  1. ஒடுங்கி ஒருங்கி உணர்த்தங் கிருக்கின் மடங்கி மடங்கிடும் வாயு வதனுள் மடங்கி மடங்கிடு மன்னுயி ருள்ளே நடங்கொண்ட கூத்தனை நாடுகின் றேனே.

112

  1. நாடியின் உள்ளே நாதத் தொலியுடன் தேடி யுடன்சென்றத் திருவினைக் கைக்கொண்டு பாடியுள் நின்ற பகைவரைக் கட்டிட்டு மாடில் ஒருகை மணிவிளக் கானதே.

113

  1. அணிமாதி சித்திக ளானவை கூறில் அணுவில் அணுவின் பெருமையின் நேர்மை இணுகாத வேகார் பரகாய மேவல் அணுவத் தனையெங்குந் தானா லென்றெட்டே.

114

  1. எட்டா கியசித்தி யோரெட்டி யோகத்தாற் கிட்டாப் பிராணன் செய்தாற் கிடைத்திடும் ஒட்டா நடுநாடி மூலத்த னல்பானு விட்டான் மதியுண்ண வும்வரு மேலதே.

115

  1. சித்திக ளெட்டன்றிச் சேரெட்டி யோகத்தாற் புத்திக ளானவை எல்லாம் புலப்படுஞ் சித்திகள் எண்சித்தி தானாந் திரிபுரைச் சத்தி அருள்தரத் தானுள வாகுமே. ====அணிமா==== 671. எட்டிவை தன்னோ டேழிற்பரங் கைகூடப் பட்டவர் சித்தர் பரலோகஞ் சேர்தலால் இட்டம துள்ளே இருக்கல் பரகாட்சி எட்டு வரப்பு மிடந்தானின் றெட்டுமே.

116

  1. மந்தர மேறு மதிபானு வைமாற்றக் கந்தாய்க் குழியிற் கசடற வல்லார்க்குத் தந்தின்றி நற்கா மியலோகஞ் சார்வாகும் அந்த வுலகம் அணிமாதி யாமே

117

  1. முடிந்திட்டு வைத்து முயங்கிலோ ராண்டில் அணிந்த அணிமாகை தானாம் இவனுந் தணிந்தவப் பஞ்சினுந் தானொய்ய தாகி மெலிந்தங் கிருந்திடும் வெல்லவொண் ணாதே. ==== லகிமா==== 674. ஆகின்ற வத்தினி நாயகி தன்னுடன் போகின்ற தத்துவம் எங்கும் புகலதாய்ச் சாய்கின்ற காலங்கள் தன்வழி நின்றிடின் மாய்கின்ற வையாண்டின் மாலகு வாகுமே.

118

  1. மாலகு வாகிய மாயனைக் கண்டபின் தானொளி யாகித் தழைத்தங் கிருந்தடும் பாலொளி யாகிப் பரந்தெங்கு நின்றது மேலொளி யாகிய மெய்ப்பொருள் காணுமே. ==== மகிமா==== 676. மெய்பொருள் சொல்லிய மெல்லிய லாளுடன் தற்பொரு ளாகிய தத்துவங் கூடிடக் கைப்பொரு ளாகக் கலந்திடு மோராண்டின் மைப்பொரு ளாகு மகிமாவ தாகுமே.

119

  1. ஆகின்ற காலொளி யாவது கண்டபின் போகின்ற காலங்கள் போவது மில்லையாம் மேனின்ற காலம் வெளியுற நின்றபின் தானின்ற காலங்கள் தன்வழி யாகுமே.

120

  1. தன்வழி யாகத் தழைத்திடு ஞானமுந் தன்வழி யாகத் தழைத்திடும் வையகந் தன்வழி யாகத் தழைத்த பொருளெல்லாந் தன்வழி தன்னரு ளாகிநின் றாளே. ====பிராத்தி==== 679. நின்றன தத்துவ நாயகி தன்னுடன் கண்டன பூதப் படையா னவையெலாங் கொண்டவை யோராண்டு கூட இருந்திடில் விண்டது வேநல்ல பிராத்திய தாகுமே. ====கரிமா==== 680. ஆகின்ற மின்னொளி யாவது கண்டபின் பாகின்ற பூவிற் பரப்பவை காணலாம் மேகின்ற காலம் வெளியுற நின்றது போகின்ற காலங்கள் போவது மில்லையே.

121

  1. போவதொன் றில்லை வருவது தானில்லை சாவதொன் றில்லை தழைப்பது தானில்லை தாமத மில்லை தமரகத் தின்னொளி யாவது மில்லை யறிந்துகொள் வார்க்கே.

122

  1. அறிந்த பராசத்தி யுள்ளே அமரில் பறிந்தது பூதப் படையறை யெல்லாங் குறிந்தவை யோராண்டு கூட இருக்கில் விரிந்தது பரகாய மேவலு மாமே. ====பிரகாமியம்==== 683. ஆன விளக்கொளி யாவ தறிகிலர் மூல விளக்கொளி முன்னே யுடையவர் கான விளக்கொளி கண்டுகொள் வார்கட்கு மேலை விளக்கொளி வீடெளி தாநின்றே. ====ஈசத்துவம்==== 684. நின்ற சதாசிவ நாயகி தன்னுடன் கண்டன பூதப் படையவை எல்லாங் கொண்டவை யோராண்டு கூடி யிருந்திடிற் பண்டையவ் விசன தத்துவ மாகுமே.

123

  1. ஆகின்ற சந்திரன் தண்ணொளி யாயவன் ஆகின்ற சந்திரன் தடபமு மாயிடும் ஆகின்ற சந்திரன் தன்கலை கூடிடில் ஆகின்ற சந்திரன் தானவ னாமே.

124

  1. தானே படைத்திட வல்லவ னாயிடும் தானே யளித்திட வல்லவ னாயிடும் தானே சங்காரத் தலைவனு மாயிடும் தானே யிவனெனுந் தண்மைய னாமே.

125

  1. தண்மைய தாகத் தழைத்த கலையினுள் பண்மைய தாகப் பரந்தஐம் பூதத்தை வண்மைய தாக மறித்திடில் ஓராண்டின் மென்மைய தாகிய மெய்ப்பொருள் காணுமே. ====வசித்துவம்==== 688. மெய்ப்பொரு ளாக விளைந்தது வேதெனின் நற்பொரு ளாகிய நல்ல வசித்துவங் கைப்பொரு ளாகக் கலந்த உயிர்க்கெலாந் தற்பொரு ளாகிய தன்மைய னாகுமே.

126

  1. தன்மைய தாகத் தழைத்த பகலவன் மெய்மைய தாகிய மெய்ப்பொருள் கண்டிடின் பொன்மைய தாகப் புலன்களும் போயிட நன்மைய தாகிய நற்கொடி காணுமே.

127

  1. தன்மைய தாகத் தழைத்த பகலவன் மெய்மைய தாகிய மெய்ப்பொருள் கண்டிடின் பொன்மைய தாகப் புலன்களும் போயிட நன்மைய தாகிய நற்கொடி காணுமே.

128

  1. நற்கொடி யாகிய நாயகி தன்னுடன் அக்கொடி யாகம் அறிந்திடின் ஓராண்டு பொற்கொடி யாகிய புவனங்கள் போய்வருங் கற்கொடி யாகிய காமுக னாமே.

129

  1. காமரு தத்துவ மானது வந்தபின் பூமரு கந்தம் புவனம் தாயிடும் மாமரு வுன்னிட மெய்திடு மானனாய் நாமரு வும்மொளி நாயக மானதே.

130

  1. நாயக மாகிய நல்லொளி கண்டபின் தாயக மாகத் தழைத்தங் கிருந்திடும் போயக மான புவனங்கள் கண்டபின் பேயக மாகிய பேரொளி காணுமே.

131

  1. பேரொளி யாகிய பெரியவவ் வேட்டையும் பாரொளி யாகப் பதைப்பறக் கண்டவன் தாரொளி யாகத் தரணி முழுதுமாம் ஓரொளயி யாகிய காலொளி காணுமே.

132

  1. காலொ டுயிருங் கலக்கும் வகைசொல்லிற் காலது அக்கொடி நாயகி தன்னுடன் காலது ஐஞ் ற்றொருபத்து மூன்றையும் காலது பெண்மண்டிக் கொண்டுஇவ் வாறே.

133

  1. ஆறது வாகும் அமிர்தத் தலையினுள் ஆறது ஆயிர முந்நூற் றொடஞ்சுள ஆறது வாயிர மாகு மருவழி ஆறது வாக வளர்ப்பதி ரண்டே.

134

  1. இரண்டினின் மேலே சதாசிவ நாயகி இரண்டது கால்கொண் டெழுவகை சொல்லில் இரண்டது ஆயிரம் ஐம்பதோ டொன்றாய்த் திரண்டது காலம் எடுத்தும் அஞ்சே.

135

  1. அஞ்சுடன் அஞ்சு முகமுள நாயகி அஞ்சுடன் அஞ்சது வாயுத மாவது அஞசது வின்றி இரண்டது வாயிரம் அஞ்சது காலம் எடுத்துளும் ஒன்றே.

136

  1. ஒன்றது வாகிய தத்துவ நாயகி ஒன்றது கால்கொண் டூர்வகை சொல்லிடின் ஒன்றது வென்றிகொள் ஆயிரம் ஆயிரம் ஒன்றது காலம் எடுத்துளும் முன்னே.

137

  1. முன்னெழும் அக்கலை நாயகி தன்னுடன் முன்னுறு வாயு முடிவகை சொல்லிடின் முன்னுறும் ஐம்பத்தொ டொன்றுடன் அஞ்சுமாய் முன்னுறு வாயு முடிவகை யாமே.

138

  1. ஆய்வரும் அத்தனி நாயகி தன்னுடன் ஆய்வரு வாயு அளப்பது சொல்லிடில் ஆய்வரும் ஐஞ்நூற்று முப்பதொ டொன்பது ஆய்வரு வாயு வளப்புள் ளிருந்ததே.

139

  1. இருநிதி யாகிய எந்தை யிடத்து இருநிதி வாயு இயங்கு நெறியில் இருநூற்று முப்பத்து மூன்றுடன் அஞ்சாய் இருநிதி வாயு இயங்கும் எழுத்தே.

140

  1. எழுகின்ற சோதியுள் நாயகி தன்பால் எழுகின்ற வாயு இடமது சொல்லில் எழுநூற் றிருபத் தொன்பா னதுநாலாய் எழுத்துடன் அங்கி இருந்ததிவ் வாறே.

141

  1. ஆறது கால்கொண் டிரதம் விளைத்திடும் ஏழது கால்கொண் டிரட்டி இறக்கிட எட்டது கால்கொண் டிடவகை யேற்றபின் ஒன்பது மாநிலம் ஒத்தது வாயுவே.

142

  1. சந்திரன் சூரியன் தற்பரன் தாணுவிற் சந்திரன் தானுந் தலைப்படுந் தன்மையைச் சந்தியி லேகண்டு தானாஞ் சகமுகத் துந்திச் சமாதி யுடையொளி யோகியே.

143

  1. அணங்கற்ற மாதல் அருஞ்சன நீவல் வணங்குற்ற கல்விமா ஞான மிகுத்தல் சிணுங்குற்ற வாயர் சித்திதாங் கேட்டல் நுணுங்கற் றிருத்தல்கால் வேகத்து நுந்தலே.

144

  1. மரணங் சரைவிடல் வண்பர காயம் இரணஞ் சேர்பூமி இறந்தோர்க் களித்தல் அரணன் திருவுரு வாதன்மூ வேழாங் கரனுறு கேள்வி கணக்கறிந் தோனே.

145

  1. ஓதம் ஒலிக்கும் உலகை வலம்வந்து பாதம் நோவ நடந்தும பயனில்லை காதலில் அண்ணலைக் காண இனியவர் நாதன் இருந்த நகரறி வோரே.

146

  1. மூல முதல்வேதா மாலரன் முன்னிற்கக் கோலிய ஐம்முகன் கூறப் பரவிந்து சாலப் பரநாதம் விந்துத் தனிநாதம் பாலித்த சத்தி பரைபரன் பாதமே.

147

  1. ஆதார யோகத் ததிதே வொடுஞ்சென்று மீதான தற்பரை மேவும் பரனொடு மேதாதி யீரெண் கலைசெல்ல மீதொளி ஓதா அசிந்தமீ தானந்த யோகமே.

148

  1. மதியமும் ஞாயிறும் வந்துடன் கூடித் துதிசெய் பவரவர் தொல்வா னவர்கள் விதியது செய்கின்ற மெய்யடி யார்க்குப் பதியது காட்டும் பரமன்நின் றானே.

149

  1. கட்டவல் லார்கள் கரந்தேங்குந் தானாவர் மட்டவிழ் தாமரை யுள்ளே மணஞ்செய்து பொட்டெழக் குத்திப் பொறியெழத் தண்டிட்டு நட்டிடு வார்க்கு நமனில்லை தானே.

150

===12.கலை நிலை=== 712. காதல் வழிசெய்த கண்ணுதல் அண்ணலைக் காதல் வழிசெய்து கண்ணுற நோக்கிடிற் காதல் வழிசெய்து கங்கை வழிதருங் காதல் வழிசெய்து காக்கலு மாமே.


151

  1. காக்கலு மாருங் கரணங்கள் நான்கையும் காக்கலு மாருங் கலைபதி னாறையும் காக்கலு மாருங் கலந்தநல் வாயுவும் காக்கலு மாருங் கருத்துற நில்லே.

152

  1. நிலைபெற நின்றது நேர்தரு வாயு சிலைபெற நின்றது தீபமும் ஒத்துக் கலைவழி நின்ற கலப்பை அறியின் மலைவறி வாகும் வழியது வாமே.

153

  1. புடையொன்றி நின்றிடும் பூதப் பிரானை மடையொன்றி நின்றிட வாய்த்த வழியில் சடையொன்றி நின்றச் சஙகர நாதன் விடையொன்றி லேறியே வீற்றிருந் தானே.

154

  1. இருக்கின்ற காலங்கள் ஏதும் அறியார் பெருக்கின்ற காலப் பெருமையை நோக்கி ஒருக்கின்ற வாயு வெளிபெற நிற்கத் தருக்கொன்றி நின்றிடுஞ் சாதக னாமே.

155

  1. சாதக மானஅத் தன்மையை நோக்கியே மாதவ மான வழிபாடு செய்திடும் போதக மாகப் புகலுறப் பாய்ச்சினால் வேதாக மாக விளைந்து கிடக்குமே.

156

  1. கிடந்தது தானே கிளர்பயன் மூன்று நடந்தது தானேஉள் நாடியை நோக்கிப் படர்ந்தது தானே பங்கய மாகத் தொடர்ந்தது தானேஅச் சோதியுள் நின்றே.

157

  1. தானே எழுந்தஅத் தத்துவ நாயகி ஊனே வழிசெய்தெம் உள்ளே யிருந்திடும் வானோர் உலகீன்ற அம்மை மதித்திடத் தேனே பருகிச் சிவாலய மாகுமே.

158

  1. திகழும் படியே செறிதரு வாயு அழியும் படியை அறிகல் ராரும் அழியும் படியை அறிந்தபின் நந்தி திகழ்கின்ற வாயுவைச் சேர்தலு மாமே.

159

  1. சோதனை தன்னில் துரிசறக் காணலாம் நாதனும் நாயகி தன்னிற் பிரியுநாள் சாதக மாகுங் குருவழிப் பட்டு மாதன மாக மதித்துக்கொள் ளீரே.

160

  1. ஈராறு கால்கொண் டெழுந்த புரவியைப் பேராமற் கட்டிப் பெரிதுண்ண வல்லிரேல் நீரா யிரமும் நிலமாயி ரத்தாண்டும் பேராது காயம் பிரான்நந்தி ஆணையே.

161

  1. ஓசையில் ஏழும் ஒளியின்கண் ஐந்தும் நாசியின் மூன்றும் நாவில் இரண்டும் தேசியுந் தேசனுந் தன்னிற் பிரியுநாள் மாசறு சோதி வழுத்துவைத் தானே.

162

===13.சரீரசித்தியுபாயம்=== 724. உடம்பார் அழியில் உயிரார் அழிவார் திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார் உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தேன் உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே.


163

  1. உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன் உடம்பினுக் குள்ளே யுறுபொருள் கண்டேன் உடம்புளே உத்தமன் கோயில்கொண் டான்என்று உடம்பினை யானிருந் தோம்புகின் றேனே.

164

  1. சுழற்றிக் கொடுக்கவே சுத்திக் கழியுங் கழற்றி மலத்தைக் கமலத்தைப் பூரித்து உழற்றிக் கொடுக்கும் உபாயம் அறிவார்க்கு அழற்றித் தவிர்துடல் அஞ்சன மாமே.

165

  1. அஞ்சனம் போன்றுட லையறு மந்தியில் வஞ்சக வாத மறுமத்தி யானத்திற் செஞ்சிறு காலையிற் செய்திடிற் பித்தறும் நஞ்சறச் சொன்னோம் நரைதிரை நாசமே.

166

  1. மூன்று மடக்குடைப் பாம்பிரண் டெட்டுள ஏன்ற வியந்திரம் பன்னிரண் டங்குலம் நான்றவிழ் முட்டை யிரண்டையுங் கட்டியிட்டு ஊன்றி யிருக்க உடலழி யாதே.

167

  1. நூறும் அறுபதும் ஆறும் வலம்வர நூறும் அறுபதும் ஆறும் இடம்வர நூறும் அறுபதும் ஆறும் எதிரிட நூறும் அறுபது மாறும் புகுவரே.

168

  1. சத்தியார் கோயி லிடம்வலஞ் சாதித்தான் மத்தியா னத்திலே வாக்கியங் கேட்கலாந் தித்தித்த கூத்துஞ் சிவனும் வெளிப்படுஞ் சத்தியஞ் சொன்னோஞ் சதாநந்தி ஆணையே.

169

  1. திறத்திறம் விந்து திகழ மகாரம் உறப்பெற வேநினைந் தோதுஞ் சகாரம் மறப்பது மந்திர மன்னிய நாத மறப்பற யோகிக் கறநெறி யாமே.

170

  1. உந்திச் சுழியி னுடனேர் பிராணனைச் சிந்தித் தெழுப்பிச் சிவமந் திரத்தினால் முந்தி முகட்டின் நிறுத்திய பானனைச் சிந்தித தெழுப்பச் சிவனவ னாமே.

171

  1. மாறா மலக்குதந் தன்மே லிருவிரற் கூறா இலிங்கத்தின் கீழே குறிக்கொண்மின் ஆறா உடம்பிடை அண்ணலும் அங்குளன் கூறா உபதேசங் கொண்டது காணுமே.

172

  1. நீல நிறனுடை நேரிழை யாளொடுஞ் சாலவும் புல்லிச் சதமென் றிருப்பார்க்கு ஞாலம் அறிய நரைதிரை மாறிடும் பாலனு மாவர் பராநந்தி ஆணையே.

173

  1. அண்டஞ் சுருங்கில் அதற்கோ ரழிவில்லை பிண்டஞ் சுருங்கிற் பிராணன் நிலைபெறும் உண்டி சுருங்கில் உபாயம பலவுள கண்டங் கருத்த காபலியு மாமே.

174

  1. பிண்டத்துள் உற்ற பிழக்கடை வாசலை அணடத்துள் உற்று அடுத்தடுத் தேகிடின் வண்டிச் சிக்கு மலர்க்குழல் மாதரார் கண்டிச சிக்குநற் காயமு மாமே.

175

  1. கழலும் பெருங்கூற்றுத் தொல்லைமுன் சீறி அழலும் இரத்துள் அங்கியுள் ஈசன் கழல்கொள் திருவடிக் காண் குறிலாங்கே நிழலுளுந் தெற்றுளும் நித்தலு மாமே.

176

  1. நான்கண்ட வன்னியும் நாலு கலையேழுந் தான்கண்ட வாயுவுங் சரீர முழுதொடும் ஊன்கண்டு கொண்ட வுணர்வு மருந்தாக மான்கன்று நின்று வளர்கின்ற வாறே.

177

  1. ஆகுஞ் சனவேத சக்தியை அன்புற நீகொள்ளின் நெல்லின் வளர்கின்ற நேர்மையைப் பாகு படுத்திப் பல்கோடி களத்தினால் ஊழ்கொண்ட மந்திரந் தன்னால் ஒடுங்கே.

178

===14.காலசக்கரம்=== 740. மதிவட்ட மாக வரையைந்து நாடி இதுவிட்டிங் கீரா றமர்ந்த அதனாற் பதிவட்டத் துள்நின்று பாலிக்கு மாறு மதுவிட்டுப் போமாறு மாயலுற் றேனே.


179

  1. உற்றறி வைந்தும் உணர்ந்தறி வாறேழுங் கற்றறி வெட்டுங் கலந்தறி வொன்பதும் பற்றிய பத்தும் பலவகை நாழிகை அற்ற தறியா தழிகின்ற வாறே.

180

  1. அழிகின்ற ஆண்டவை ஐயைஞ்சு மூன்று மொழிகின்ற முப்பத்து மூன்றென்ப தாகுங் கழிகின்ற காலறு பத்திரண் டென்ப தெழுகின்ற ஈரைம்ப தெண்ணற் றிருந்தே.

181

743 .திருந்து தனமத் தினத்தினத் தோடுநின் றிருந்தறி நாளொன் றிரண்டெட்டு மூன்று பொருந்திய நாளொடு புக்கறிந் தோங்கி வருந்துத லின்றி மனைபுக லாமே.


182

  1. மனைபுகு வீரும் மனத்திடை நாடில் எனவிரு பத்தஞ்சும் ஈரா றதனால் தனையறிந்தோ ரட்டுத் தற்குறி யாறு வினையி யாது விளங்கிய நாலே.

183

  1. நாலுங் கடந்தது நால்வரும் நலைந்து பாலங் கடந்தது பத்துப் பதினைந்து கோலங் கடந்த குணத்தாண்டு மூவிரண் டாலங் கடந்ததொன் றாரறி வாரே.

184

  1. ஆறும் இருபதுக் கையஞசு மூன்றுக்குந் தேறு மிரண்டு மிருபததொ டாறிவை கூறு மதியொன் றினுக்கிரு பத்தேழு வேறு பதியங்க ணாள்விதித் தானே.

185

  1. விதித்த இருபத்தெட்டொடுமுன் றறையாகத் தொகுத்தறி முப்பத்து மூன்று தொகுமின் பதித்தறி பத்தெட்டும் பாரா திகணால் உதித்தறி மூன்றிரண் டொன்றின் முறையே.

186

  1. முறைமுறை யாய்ந்து முயன்றில ராகில் இறையிறை யார்க்கும் இருக்க அரிது மறையது காரண மற்றொன்று மில்லை பறையறை யாது பணிந்து முடியே.

187

  1. முடிந்த தறியார் முயல்கின்ற மூர்க்கச் இடிஞ்சில் இருக்க விளக்கெரி கொண்டு கடிந்தனல் மூளக் கதுவவல் லார்க்கு நடந்திடும் பாரினில் நண்ணலு மாமே.

188

  1. நண்ணுஞ் சிறுவிர னாணாக மூன்றுக்கும் பின்னிய மார்பிடைப் பேராமல் ஒத்திடும் சென்னியின் மூன்றுக்குஞ் சேரவே நின்றிடில் உன்னி யணைந்திடும் ஓவியந் தானே.

189

  1. ஓவிய மான வுணர்வை அறிமின்கள் பாவிக ளித்தின் பயனறி வாரில்லை தீவினை யாமுடல் மண்டல மூன்றுக்கும் பூவில் இருந்திடும் புண்ணியத் தண்டே.

190

  1. தண்டுடன் ஓடித் தலைப்பெய்த யோகிக்கு மண்டல மூன்று மகிழ்ந்துடல் ஒத்திடுங் கண்டவர் கண்டனர் காணார் வினைப்பயன் பிணடம் பிரியப் பிணங்குகின் றாரே.

191

  1. பிணங்கி அழிந்திடும் பேறது கேள்நீ அணங்குள னாதித்த னாறு விரியின் வணங்குட னேவந்த வாழ்வு குலைந்து கணங்கனுக் காகச் சுழல்கின்ற வாறே.

192

  1. சுழல்கின்ற வாறின் துணைமலர் காணான் தழலிடைப் புக்கிடுந் தன்னு ளிலாமற் கழல்கண்டு போம்வழி காணவல் லார்க்குக் குழல்வழி நின்றிடுங் கூத்தனு மாமே.

193

  1. கூத்தன் குறியிற் குணம்பல கண்டவர் சாத்திரந் தன்னைத் தலைப்பெய்து நிற்பர்கள் பார்த்திருந் துள்ளே அனுபோக நோக்கிடில் ஆத்தனு மாகி யலர்திரு மொன்றே.

194

  1. ஒன்றில் வளர்ச்சி உலப்பில் கேளினி நன்றென்று மூன்றுக்கு நாளது சென்றிடும் சென்றிடு முப்பதுஞ் சேர இருந்திடிற் குன்றிடைப் பொன்திகழ் கூத்தனு மாமே.

195

  1. கூத்தன் ஒன்றிடுங் கூர்மை அறிந்தங்கே ஏத்துவர் பத்தினில் எண்டிசை தோன்றிடப் பார்த்து மகிழ்ந்து பதுமரை நோக்கிடிற் சாத்திடு நூறு தலைப்பய்ய லாமே.

196

  1. சாந்திடு நூறு தலைப்பெய்து நின்றவர் காத்துடல் ஆயிரங் கட்டுறக் காண்பர்கள் சேர்த்துடல் ஆயிரஞ் சேர இருந்தவர் மூத்துடன் கோடி யுகமது வாமே.

197

  1. உகங்கோடி கண்டும் ஓசிவற நின்று அகங்கோடி கண்டு ளயலறக் காண்பர்கள் சிவங்கோடி விட்டுச் செறிய இருந்தங்கு உகங்கோடி கண்டங் குயருறு வாறே.

198

  1. உயருறு வாருல கத்தொடுங் கூடிப் பயனுறு வார்பலர் தாமறி யாமற் செயலுறு வார்சிலர் சிந்தையி லாமற் கயலுறு கண்ணியைக் காணகி லாரே.

199

  1. காணகி லாதார் கழிந்தோடிப் போவர்கள் நாணகி லாதார் நயம்பேசி விடுவர்க்ள காணகி லாதார் கழிந்த பொருளெலாங் காணகி லாமற் கழிகின்ற வாறே.

200

  1. கழிகின்ற அப்பொருள் காணகி லாதார் கழிகின்ற அப்பொருள் காணலு மாகுங் கழிகின்ற வுள்ளே கருத்துற நோக்கிற் கழியாத அப்பொருள் காணலு மாமே.

201

  1. கண்ணன் பிறப்பிலி காணந்தி யாயுள்ள எண்ணுந் திசையுடன் ஏகாந்த னாயிடுந் திண்ணென் றிருக்குஞ் சிவகதி யாநிற்கும் நண்ணும் பதமிது நாடவல் லார்கட்கே.

202

  1. நாடவல் லார்க்கு நமனில்லை கேடில்லை நாடவல் லார்கள் நரபதி யாய்நிற்பர் தேடவல் லார்கள் தெரிந்த பொருளிது கூடவல் லார்கட்குத் கூறுலு மாமே.

203

  1. கூறும் பொருளி தகார வுகாரங்கள் தேறும் பொருளிது சிந்தையுள் நின்றிடக் கூறு மகாரங் குழல்வழி யோடிட ஆறும் அமர்ந்திடும் அணணலு மாமே.

204

  1. அண்ணல் இருப்பிட மாரும் அறிகிலர் அண்ணல் இருப்பிடம் ஆய்ந்துகொள் வார்கட்கு அண்ணல் அழிவின்றி உள்ளே அமர்ந்திடும் அணணலைக் காணில் அவனவ னாகுமே.

205

  1. அவனிவ னாகும் பரிசறி வாரில்லை அவனிவ னாகும் பரிசது கேள்நீ அவனிவ னோசை ஒளியினுள் ஒன்றிடும் அவனிவன் வட்டம தாகிநின் றானே.

206

  1. வட்டங்க ளேழு மலர்ந்திடும் உம்முளே சிட்டன் இருப்பிடஞ் சேர அறிகிலீர் ஒட்டி யருந்துள் உபாயம் உணர்ந்திடக் கட்டி இருப்பிடங் காணலு மாகுமே.

207

  1. காணலு மாகும் பிரமன் அரியென்று காணலு மாகுங் கறைக்கண்டன் ஈசனைக் காணலு மாகுஞ் சதாசிவ சத்தியுங் காணலு மாகுங் கலந்துடன் வைத்தே.

208

===15.ஆயுட்பரீட்சை=== 770. வைத்தகை சென்னியில் நேரிதாய்த் தோன்றிடில் உத்தமம் மிக்கிடில் ஓராறு திங்களாம் அத்த மிகுத்திட் டிராட்டிய தாயிடில் நித்தல் உயிர்க்கொரு திங்களில் ஓசையே.


209

  1. ஓசையும் ஈசனும் ஒக்கும் உணர்வின்கண் ஓசை யிறந்தவர் ஈசனை உள்குவர் ஓசை யிறந்தவர் நெஞ்சினுள் ஈசனும் ஓசை யுணர்ந்த வுணர்விது வாமே.

210

  1. ஆமே அழிகின்ற வாயுவை நோக்கிடின் நாமேல் உறைகின்ற நன்மை யளித்திடும் பூமேல் உறைகின்ற போதகம் வந்திடும் தாமே யுலகில் தலைவனு மாமே.

211

  1. தலைவ னிடம்வலஞ் சாதிப்பார் இல்லை தலைவ னிடம்வல மாயிடில் தையல் தலைவ னிடம்வலந் தன்வழி யஞ்சில் தலைவ னிடம்வலந் தன்வழி நூறே.

212

  1. ஏறய வாறினில் எண்பது சென்றிடும் தேறிய ஏழிற் சிறக்கும் வகையெண்ணில் ஆறாரு பத்தாய் அமர்ந்த இரண்டையும் தேறியே நின்று தெளியில் வகையே.

213

  1. இவ்வகை எட்டும் இடம்பெற ஓடிடில் அவ்வகை ஐம்பதே யென்ன அறியலாம் செவ்வகை ஒன்பதுஞ் சேரவே நின்றிடின் முவ்வகை யாமது முப்பத்து மூன்றே.

214

  1. மும்மூன்றும் ஒன்றும் மடிவுற நின்றிடில் எண்மூன்றும் நாலும் இடவகை யாய்நிற்கும் ஐம்மூன்றும் ஓடி அகலவே நின்றிடிற் பன்மூன்றொ டீராறு பார்க்கலு மாமே.

215

  1. பார்க்கலு மாகும் பகல்முப் பதுமாகில் ஆக்கலு மாகுமவ் வாறிரண் டுள்ளிட்டுப் போக்கலு மாகும் புகலற ஒன்றினில் தேக்கலு மாகுந் திருந்திய பத்தே.

216

  1. எயிரு நாளும் இயல்புற ஓடிடிற் பாயுரு நாளும் பகையற நின்றிடும் தேய்வுற மூன்றுந் திகழ்வே நின்றிடில் ஆயிரு வாமென் றளக்கலு மாமே.

217

  1. அளக்கும் வகைநாலும் அவ்வழி ஓடில் விளக்கும் ஒருநாலு மெய்ப்பட நிற்கும் துளக்கும் வகையைந்து தூய்நெறி ஓடில் களக்க மறமுன்றிற் காணலு மாமே.

218

  1. காணலு மாகுங் கருதிய பத்தோடிற் காணலு மாகுங் கலந்த இரண்டையும் காணலு மாகுங் கலப்பற மூவைந்தேற் காணலு மாகுங் கருத்துற ஒன்றே.

219

  1. கருதும் இருபதிற் காணஆ றாகும் கருதிய ஐயைந்தி காண்பது மூன்றாம் கருதும் இருப துடனாறு காணிற் கருதும் இரண்டெனக் காட்டலு மாமே.

220

  1. காட்டலு மாகுங் கலந்திரு பத்தேழில் காட்டலு மாகுங் கலந்தெழும் ஒன்றினில் காட்டலு மாகுங் கலந்திரு பத்தெட்டிற் காட்டலு மாகுங் கலந்தஈ ரைந்தே.

221

  1. ஈரைந்தும் ஐந்தும் இருமூன்றும் எட்டுக்கும் பாரஞ்சி நின்ற பகைபத்து நாளாகும் வாரஞ்செய் கின்ற வகையாறஞ் சாமாகில் ஓரஞ்சொ டொன்றொன் றெனவொன்று நாளே.

222

  1. ஒன்றிய நாள்கள் ஒருமுப்பத் தொன்றாகிற் கன்றிய நாளுங் கருத்துற மூன்றாகுஞ் சென்றுயிர் நாலெட்டுஞ் சேரவே நின்றிடின் மன்றியல் பாகு மனையில் இரண்டே.

223

  1. மனையில்ஒன் றாகும் மாதமு மூன்றுஞ் சுனையில்ஒன் றரகத் தொனித்தனன் நந்தி வினையுற வோங்கி வெளிசெய்து நின்றால் தனையுற நின்ற தலைவனு மாமே.

224

  1. ஆரு மறியார் அளக்கின்ற வன்னியை ஆரு மறியார் அளகின்ற வாயுவை ஆரு மறியார் அழிகின்ற அப்பொருள் ஆரு மறியா அறிவறித் தேனே.

225

  1. அறிவது வாயுவொ டைந்தறி வாயது அறிவா யதுதான் உலகுயி ரத்தின் பிறிவுசெய் யாவை பேணியுள் நாடிற் செறிவது நின்று திகழ மதுவே.

226

  1. அதுவரு ளும்மரு ளான் துலகம் பொதுவரு ளும்புக ழாளர்க்கு நாளு மதுவரு ளும்மலர் மங்கையர் செல்வி இதுவருள் செய்யும் இறையவ னாமே.

227

  1. பிறப்பது சூழ்ந்த பெருந்தகை நந்தி குறிப்பது கூடிய கோலக் குரம்பை பழப்பதி யாவது பற்றறும் பாசம் அழப்படி செய்வார்க் ககலு மதியே.

228

===16.வாரசரம்=== 790. வெள்ளிவெண் திங்கள் விளங்கும் புதனிடம் ஒள்ளிய மந்தன் இரவிசெவ் வாய்வலம் வள்ளிய பொன்னே வளரும் பிறையிடந் தெள்ளிய தேய்பிறை தான்வல மாமே.


229

  1. வெள்ளி வெண்திங்கள் விளங்கும் புதன்மூன்றுந் தள்ளி இடத்தே தயங்குமே யாமாகில் ஒள்ளிய காயத்துக் கூன மிலையென்று வள்ளல் தமக்கு மகிழ்ந்துரைத் தானே.

230

  1. செவ்வாய் வியாழஞ் சனிஞாயி றேஎன்னும் இவ்வா ரறிகின்ற யோகி இறைவனே ஒவ்வாத வாயு வலத்துப் புரியவிட் டவ்வா றறி வார்க்கவ் வானந்தமாமே.

231

  1. மாறி வருமிரு பான்மதி வெய்யவன் ஏறி இழியும் இடைபிங் கலையிடை ஊறும் உயிர்நடு வேயுலி ருக்கிரந் தேறி அறிமின் தெரிந்து தெளித்தே.

232

  1. உதித்த வலத்திடம் போகின்ற போது அதிர்த்தஞ்சி யோடுத லாமகன் றாரும் உதித்தது வேமிக வோடிடு மாகில் உதித்த விராசி யுணர்த்துகொ ளுற்றே.

233

  1. நடுவுநில் லாமல் இடம்வலம் ஓடி அடுகின்ற வாயுவை அந்தணன் கூடி இடுகின்ற வாறுசென் றின்பணி சேர முடிகின்ற தீபத்தின் முன்னுண்டென் றானே.

234

  1. ஆயும் பொருளும் அணிமலர் மேலது வாயு விதமும் பதினா றுளவலி போயம் மனத்தைப் பொருகின்ற வாதாரம் ஆயுவு நாளு முகூர்த்தமு மாமே.

235

===17.வாரசூலம்=== 797 வாரத்திற் சூலம் வரும்வழி கூறங்கால் தேரொத்த திங்கள் சனிக்கிழக் கேயாகும் பாரொத்த சேய்புதன் உத்தரம் பானுநாள் நேரொத்த வெள்ளி குடக்காக நிற்குமே.


236

  1. தெக்கண மாகும் வியாழத்துச் சேர்திசை அக்கிணி சூலமு மாமிடம் பின்னாகில் துக்கமும் இல்லை வலமுன்னே தோன்றிடின் மிக்கது மேல்வினை மேன்மேல் விளையுமே.

237

===18.கேசரியோகம்=== 799. கட்டக் கழன்று கீழ்நான்று விழாமல் அட்டத்தைக் கட்டி அடுப்பை அணைகோலி விட்டத்தைப் பூட்டி மேற்பையைத் தாட்கோத்து நட்ட மிருக்க நமனில்லை தானே.


238

  1. வண்ணான் ஒலிக்குஞ் சதுரப் பலகைமேற் கண்ணாறு மோழை படாமற் கரைகட்டி விண்ணாறு பாய்ச்சிக குளத்தை நிரப்பிட்டு அண்ணாந்து பார்க்க அழுக்கற்ற வாறே.

239

  1. இடக்கை வலக்கை இரண்டையும் மாற்றித் துதிக்கையால் உண்பார்க்குச் சோர்வும் வேண்டாம் உறக்கத்தை நீக்கி உணரவல் லார்கட்கு இறக்கவும் வேண்டாம் இருக்கலு மாமே.

240

  1. ஆய்ந்துரை செய்யின் அமுதநின் றூறிடும் வாய்ந்துரை செய்யும் வருகின்ற காலத்து நீந்துரை செய்யு நலாமண் டலமதாய்ப் பாய்ந்துரை செய்தது பாலிக்கு மாறே.

241

  1. நாவின் நுனியை நடுவே சிவிறிடிற் சீவனும் அங்கே சிவனும் உறைவிடம் மூவரும் முப்பத்து மூவருந் தோன்றுவர் சாவதும் இல்லை சதகோடி யூனே.

242

  1. ஊனூறல் பாயும் உயர்வரை உச்சிமேல் வானூறல் பாயும் வகையறி வாரில்லை வானூறல் பாயும் வகையறி வாளர்க்குத் தேனூறல் உண்டு தெளிதலு மாமே.

243

  1. மேலை யணாவில் விரைந்திடு காலிடிற் காலனும் இல்லை கதவுந் திறந்திடும் ஞாலம் அறிய நரைதிரை மாறிடும் பாலனு மாவான் பராநந்தி ஆணையே.

மூன்றாம் தந்திரம் (cont. 2)

244

  1. நந்தி முதலாக நாமேலே யேறிட்டுச் சந்தித் திருக்கில் தரணி முழுதாளும் பந்தித் திருக்கும் பகலோன் வெளியாகச் சிந்தித் திருப்பவர் தீவினை யாளரே.

245

  1. தீவினை யாடத் திகைத்தங் கிருந்தவர் நாவினை நாடின் நமனுக் கிடமில்லை பாவினை நாடிப் பயனறக் கண்டவர் தேவினை யாடிய தீங்கும் பாமே.

246

  1. தீங்கரும் பாகவே செய்தொழி லுள்ளவர் ஆங்கரும் பாக அடையநா வேறிட்டுக் கோங்கரும் பாகிய கோணை நிமிர்த்திட உன்கரும் பாகியே ஊனீர் வருமே.

247

  1. ஊனீர் வழியாக வுண்ணாவை யேறிட்டுத் தேனீர் பருகிச் சிவாய நமவென்று கானீர் வரும்வழி கங்கை தருவிக்கும் வானீர் வரும்வழி வாய்ந்தறி வீரே.

248

  1. வாய்ந்தறிந் துள்ளே வழிபாடு செய்தவர் காய்தறி வாகக் கருணை பொழிந்திடும் பாய்ந்தறிந் துள்ளே படிக்கத வொன்றிட்டுக் கூய்ந்தறிந் துள்ளுறை கோயிலு மாமே.

249

  1. கோயிலின் உள்ளே குடிசெய்து வாழ்பவர் தாயினும் நல்லார் தரணி முழுதுக்குங் காயினும் நல்லவர் காய்த்தவர் தம்முளுந் தீயினுந் தீயரத் தீவினை யாளர்க்கே.

250

  1. தீவினை யாளர்தஞ் சென்னியி லுள்ளவன் பூவினை யாளர்தம் பொற்பதி யானவன் பாவினை யாளர்தம் பாவகத் துள்ளவன் மாவினை யாளர்தம் மதியினுள் ளானே.

251

  1. மதியி னெழுங்கதிர் போலப் பதினாறாய்ப் பதிமனை நூறுநூற்றிருபத்து நாலாய்க் கதிமனை யுள்ளே கணைகள் பரப்பி எதிர்மலை யாமல் இருந்தனன் தானே.

252

  1. இருந்தனள் சத்தியு மக்கலை சூழ இருந்தனள் கன்னியு மந்நடு வாக இருந்தனள் மானோர் முகநில வார இருந்தனள் தானும் அமுதம் பொழிந்தே.

253

  1. பொழிந்த இருவெள்ளி பொன்மண் ணடையில் வழித்துள் ளிருந்தது வான்முத லங்குக் கழிந்தது போகாமற் காக்கவல் லார்க்குக் கொழுந்தது வாகுங் குணமது தானே.

254

  1. குணமது வாகிய கோமள வல்லி மணமது வாக மகிழ்ந்தங் கிருக்கில் தனமது வாகிய தத்துவ ஞானம் இனமது வாக இருந்தனன் தானே.

255

  1. இருந்த பிராணனும் உள்ளே எழுமாம் பிரிந்தஇத் தண்டுடன் அண்டம் பரிய விரிந்தஅப் பூவுடன் மேலெழ வைக்கின் மலர்ந்தது மண்டலம் வாழலு மாமே.

256

  1. மண்டலத் துள்ளே மனவொட்டி யாணத்தைக் கண்டகத் தங்கே கருதியே கீழ்க்கட்டிற் பண்டகத் துள்ளே பகலே ஒளியாகக் குண்டலக் காதனுங் கூத்தோழிந் தானே.

257

  1. ஒழிகின்ற வாயுவும் உள்ளே அமருங் கழிகின்ற வாயுவும் காக்கலு மாகும் வழிகின்ற காலத்து வட்டக் கழலைப் பழிகின்ற காலத்துப் பையகற் றீரே.

258

  1. பையினி னுள்ளே படிக்கத வொன்றிடின் மெய்யினி னுள்ளே விளங்கும் ஒளியதாங் கையினுள் வாயுக கதித்தங் கெழுந்திடின் மையணி கோயில் மணிவிளக் காமே.

259

  1. விளங்கிடும் வாயுவை மேலெழ உன்னி நலங்கிடுங் கண்டத்து நாபியி னுள்ளே வணங்கிடு மண்டலம் வாய்த்திடக் கும்பிச் கணங்கிட நின்றவை சொல்லலு மாமே.

260

  1. சொல்லலு மாயிடு மாகத்து வாயுவுஞ் சொல்லலு மாகு மண்ணீர்க் கடினமுஞ் சொல்லலு மாகும் இவையஞ்சுங் கூறிடிற் சொல்லலு மாந்தூர தெரிசனந் தானே.

261

  1. தூர தரிசனஞ் சொல்லுவன் காணலாங் காராருங் கண்ணி கடைஞான முட்பெய்தி ஏராருந் தீபத் தெழிற்சிந்தை வைத்திடிற் பாரா ருலகம் பகன்முன்ன தாமே.

262

  1. முன்னெழு நாபிக்கு முந்நூல் விரற்கீழே பன்னெழு வேதப் பகலொளி யுண்டென்னும் நன்னெழு நாதத்து நற்றீபம் வைத்திடத் தன்னெழு கோயில் தலைவனு மாமே.

263

===19.பரியங்கியோகம்=== 825. பூசு வனவெல்லாம் பூசிப் புலர்த்திய வாச நறுங்குழல் மாலையுஞ் சாத்திய காயக் குழலி கலவி யொடுங்கலந் தூசித் துளையுறத் தூங்காது போகமே.


264

  1. போகத்தை யுன்னவே போகாது வாயுவும் மோகத்தை வெள்ளியு மீளும் வியாழத்தில் சூதொத்த மென்முலை யாளுநற் சூதனுந் தாதிற் குழைந்து தலைகண்ட வாறே.

265

  1. கண்டனுங் கண்டியுங் காதல்செய் யோகத்து கண்டலங் கொண்டிரு பாலும் வெளிநிற்கும் வண்டியை மேற்கொண்டு வானீர் உருட்டிடத் தண்டொரு காலுந் தளராது வங்கமே.

266

  1. அங்கப் புணர்ச்சியு மாகின்ற தத்துவம் அங்கத்தில் விந்து வருகின்ற போகத்துப் பங்கப் படாமற் பரிகரித்துத் தம்மைத் தங்கிக் கொடுக்கத் தலைவனு மாமே.

267

  1. தலைவனு மாயிடுந் தன்வழி ஞானந் தலைவனு மாயிடுந் தன்வழி போகந் தலைவனு மாயிடுந் தன்வழி யுள்ளே தலைவனு மாயிடுந் தன்வழி அஞ்சே.

268

  1. அஞ்சு சடிகைமேல் ஆறாங் கடிகையில் துஞ்சுவ தொன்றத் துணைவி துணைவன்பால் நெஞ்சு நிறைந்தது வாய்கொளா தென்றது பஞ்ச கடிகை பரியங்கி யோகமே.

269

  1. பரியங்கி யோகத்துப் பஞ்ச கடிகை அரியஇவ் வியோகம் அடைந்தவர்க் கல்லது சரிவளை மன்கைச்சி சந்தனக் கொங்கை உருவித் தழுவ ஒருவற்கொண் ணாதே.

270

  1. ஒண்ணாத யோகத்தை உற்றவ ராரென்னில் விண்ணார்ந்த கங்கை விரிசடை வைத்தவன் பண்ணார் அமுதினைப் பஞ்ச கடிகையில் எண்ணா மெனஎண்ணி இருந்தான் இருந்ததே

271

  1. ஏய்ந்த பிராயம் இருபது முப்பதும் வாய்ந்த குழலிக்கு மன்னர்க்கு மானந்தம் வாய்ந்த குழலியோ டைந்து மலர்ந்திடச் சேர்ந்தன சித்தமுஞ் சோர்வில்லை வெள்ளிக்கே

272

  1. வெள்ளி யுருகிப் பொன்வழி ஓடாமே கள்ளத்தட் டானார் கரியிட்டு மூடினார் கொள்ளி பறியக் குழல்வழி யேசென்று வள்ளிய னாவில் அடக்கிவைத் தாரே.

273

  1. வைத்த இருவருந் தம்மின் மகிழ்ந்துடன் சித்தங் கலங்காது செய்கின்ற ஆனந்தம் பத்து வகைக்கும் பதிணென் கணத்துக்கும் வித்தக னாய்நிற்கும் வெங்கதி ரோனே.

274

  1. வெங்கதி ருக்குஞ் சனிக்கும் இடைநின்ற நங்கையைப் புல்லிய நம்பிக்கோ ரானந்தந் தங்களிற் பொன்னிடை வெள்ளிதா ழாமுனந் திங்களிற் செவ்வாய் புதைந்திருந் தாதே.

275

  1. திருந்திப் புதனைத் திருத்தல்செய் வார்க்குக் கருத்தழ காலே கலந்தங் கிருக்கில் வருத்தமு மில்லையா மங்கை பங்கற்குந் துருத்தியுள் வெள்ளியுஞ் சோரா தெழுமே.

276

  1. எழுகின்ற தீயின்முன் னேகொண்டு சென்றிட்டால் மெழுகுரு கும்பரி செய்திடும் மெய்யை உழுகின்ற தில்லை ஒளியை அறிந்தபின் விழுகின்ற தில்லை வெளியறி வார்க்கே.

277

  1. வெளியை அறிந்து வெளியி னடுவே ஒளியை அறியி னுளிமுறி யாமே தெளிவை அறிந்து செழுநந்தி யாலே வெளியை அறிந்தனன் மேலறி யேனே.

278

  1. மேலாந் தலத்தில் விரிந்தவ ராரெனின் மாலாந் திசைமுகன் மாநந்தி யாயவர் நாலா நிலத்தி னடுவான வப்பொருள் மேலா யுரைத்தனர் மின்னிடை யாளுக்கே.

279

  1. மின்னிடை யாளுமின் னாளனுங் கூட்டத்துப் பொன்னிடை வட்டத்தின் உள்ளே புகப்பெய்து தன்னொடு தன்னைத் தலைப்பெய்ய வல்லிரேல் மண்ணிடை பல்லூழி வாழலு மாங்கே.

280

  1. வாங்க விறுதலை வாங்கலில் வாங்கிய வீங்க வலிக்கும் விரகறி வாரில்லை வீங்க வலிக்கும் விரகறி வாளரும் ஓங்கிய தன்னை உதம்பண்ணி னாரே.

281

  1. உதமறித் தங்கே ஒருகழிப் பட்டாற் கதமறிந் தங்கே கபாலங் கறுக்கும் இதமறிந் தென்றும் இருப்பாள் ஒருத்தி பதமறிந் தும்முளே பார்கடிந் தாளே.

282

  1. பாரில்லை நீரில்லை பங்கயம் ஒன்றுண்டு தாரில்லை வேரில்லை தாமரை பூத்தது ஊரில்லை காணும் ஒளியது ஒன்றுண்டு கீழில்லை மேலில்லை கேள்வியிற் பூவே.

283

===20.அமுரிதாரணை=== 845. உடலிற் கிடந்த வுறுதிக் குடிநீர்க் கடலிற் சிறுகிணற் றேற்றமிட் டாலொக்கும் உடலில் ஒருவழி ஒன்றுக் கிறைக்கில் நடலைப் படாதுயிர் நாடலு மாமே.


284

  1. தெளிதரும் இந்தச் சிவநீர் பருகில் ஒளிதரு மோராண்டில் ஊனமொன் றில்லை வளியுறும் எட்டின் மனமும் ஒடுங்கும் களிதருங் காயங் கனகம தாமே.

285

  1. நூறு மிளகு நுகருஞ் சிவத்தினர் மாறும் இதற்கு மருந்தில்லை மாந்தர்கள் தேறில் இதனைக் தெளியுச்சி கப்பிடின் மாறும் இதற்கு மறுமயி ராகுமே.

286

  1. கரையரு கேநின்ற கானல் உவரி வரைவரை என்பர் மதியிலா மாந்தர் நுரைதிரை நீக்கி நுகரவல் லார்க்கு நரைதிரை மாறும் நமனுமங் கில்லையே.

287

  1. அளக நன்னுத லாயோ ரதிசயங் களவு காயங் கலந்தஇந் நீரிலே மிளகு நெல்லியும் மஞ்சளும் வேம்பிடில் இளகும் மேனி இருளுங் கபாலமே.

288

  1. வீர மருந்தென்றும் விண்ணோர் மருந்தென்றும் நாரி மருந்தென்றும் நந்தி அருள்செய்தான் ஆதி மருந்தென் றறிவார் அகலிடஞ் சோதி மருந்திது சொல்லவொண் ணாதே.

289

===21.சந்திரயோகம்=== 852. ஆகின்ற சந்திரன் சூரியன் அங்கியுள் ஆகின்ற ஈரெட்டோ டாறிரண் டீரைத்துள் ஏகின்ற வக்கலை யெல்லா மிடைவழி ஆகின்ற யோகி அறிந்த அறிவே.


290

  1. ஆறாத தாங்கலை ஆதித்தன் சந்திரன் ஆறா நலங்கினார் ஞாலங் கவர்கொளப் பேறாங் கலைமுற்றும் பெருங்காலி லீரெட்டு மாறாக் கதிர்கொள்ளு மற்றங்கி கூடவே.

291

  1. பத்தும் இரண்டும் பகலோன் உயர்கலை பத்தினொ டாறும் உயர்கலை யான்மதி ஒத்தநல் அங்கிய தெட்டெட் டுயர்கலை அத்திற் னின்றமை ஆய்ந்துகொள் வீரே.

292

  1. எட்டெட் டனலின் கலையாகும் ஈராறுட் சுட்டப் படுங்கதி ரோனுக்குஞ் சூழ்கலை கட்டப் படுமீரெட் டாகு மதிக்கலை ஒட்டப் படாஇவை ஒன்றோடொன்றாகவே.

293

  1. எட்டெட்டும் ஈராறும் ஈரெட்டுந் தீக்கதிர் சுட்டிட்ட சோமனில் தோன்றுங் கலையெனக் கட்டப் படுந்தார கைகதிர் நாலுள கட்டிட்ட தொண்ணூற்றொ டாறுங் கலாதியே

294

  1. எல்லாக் கலையும் இடைபிங் கலைநடுச் சொல்லா நடுநாடி யூடே தொடர்மூலஞ் சொல்லா எழுப்பிச் சிரத்துடன் சேர்தலால் நல்லோர் திருவடி நண்ணிநிற் போரே.

295

  1. அங்கியிற் சின்னக் கதிரிரண் டாட்டத்துத் தங்கிய தாரகை யாகுஞ் சசிபானு வங்கியத் தாரகை யாகும் பரையொளி தங்கு நவசக்ர மாகுந் தரணிக்கே.

296

  1. தரணி சலங்கனல் கால்தக்க வானம் அரணிய பானு அருந்திங்கள் அங்கி முரணிய தாரகை முன்னிய ஒன்பான் பிரணவ மாகும் பெருநெறி தானே.

297

  1. தாரகை மின்னுஞ் சசிதேயும் பக்கத்துத் தாரகை மின்னா சசிவளர் பக்கத்துத் தாரகை பூவிற் சகலத்தி யோனிகள் தாரகைத் தாரகை தானாஞ் சொரூபமே.

298

  1. முற்பதி னைஞ்சின் முளைத்துப் பெருத்திடும் பிற்பதி னைஞ்சிற் பெருத்துச் சிறுத்திடும் அப்பதி னைஞ்சும் அறியவல் லார்கட்குச் செப்பரி யான்கழல் சேர்தலு மாமே.

299

  1. அங்கி எழுப்பி யருங்கதிர் ஊட்டத்துத் தங்குஞ் சசியால் தாமம்ஐந் தைந்தாகிப் பொங்கிய தாரகை யாம்புலன் போக்கறத் திங்கள் கதிரங்கி சேர்கின்ற யோகமே.

300

  1. ஒன்றிய ஈரெண் கலையும் உடலுற நின்றது கண்டு நினைக்கிலர் நீதர்கள் கன்றிய காலன் கருத்துழி வைத்தபின் சென்றதில் வீழ்வர் திகைப்பொழி யாரே.

301

  1. அங்கி மதிகூட வாகும் கதிரொளி அங்கி கதிர்கூட வாகும் மதியொளி அங்கி சிவத்தினிற் கூடவத் தாரகை தங்கி யதுவே சகலமு மாமே.

302

  1. ஈராறு பெண்கலை எண்ணிரண் டாண்கலை பேராமற் புக்குப் பிடித்துக் கொடுவந்து நேராகத் தோன்றும் நெருப்புற வேபெய்யில் ஆராத ஆனந்தம் ஆனந்த மானதே.

303

  1. காணும் பரிதியின் காலை இடத்திட்டு மாணும் மதியதன் காலை வலத்திட்டுப் பேணியில் வாறு பிழையாமற் செய்வீரேல் ஆணி கலங்காதவ் வாயிரத் தாண்டே.

304

  1. பாலிக்கும் நெஞ்சம் பறையோசை ஒன்பதில் ஆலிக்கும் அங்கே அமரர் பராபரன் மேலைக்கு முன்னே விளக்கொளி யாய்நிற்குங் காலைக்குச் சங்கு கதிரவன் தானே.

305

  1. கதிரவன் சந்திரன் காலம் அளக்கும் பொதிரவ னுள்ளே பொழிமழை நிற்கும் அதிரவ னண்டம் புறஞ்சென் றடர்ப்ப எதிரவ னீச னிடமது தானே.

306

  1. உந்திக கமலத் துதித்தெழுஞ் சோதியை அந்திக்கு மந்திர மாரும் அறிகிலார் அந்திக்கு மந்திர மாரும் அறிந்தபின் தந்தைக்கு முன்னே மகன்பிறந் தானே.

307

  1. ஊதியம் ஏதும் அறியார் உரைப்பினும் ஓதியும் ஏதும் அறியாத ஊமர்கள் ஆதியும் அந்தமும் அந்திக்க வல்லிரேல் வேதியன் அங்கே வெளிப்படுந் தானே.

308

  1. பாம்பு மதியைத் தினலுறும் பாம்பினைத் தீங்கு கதிரையுஞ் சோதித் தனலுறும் பாம்பு மதியுைம் பகைதீர்த் துடன்கொளீஇ நீங்கள் கொடானே நெடுந்தகை யானே.

309

  1. அயின்றது வீழ்வன வுந்துயில் இன்றிப் பயின்ற சசிவீழ் பொழுதில் துயின்று நயந்தரு பூரணை உள்ள நடத்தி வியந்தரு பூரணை மேவுஞ் சசியே.

310

  1. சசியுதிக் கும்அள வுந்தியி லின்றிச் சசியுதித் தானேல் தனதூண் அருந்திச் சசிசரிக் கின்றள வுந்துயி லின்றிச் சசிசரிப் பின்கட்டன் கண்டுயில் கொண்டதே.

311

  1. ஊழி தரியா திருக்கின்ற யோகிகள் நாழிகை யாக நமனை அளப்பர்கள் ஊழி முதலாய் உயர்வார் உலகினில் தாழவல் லார்இச் சசிவண்ண ராமே.

312

  1. தண்மதி பானுச்சிச் சரிபூமி யேசென்று மண்மதி காலங்கள் மூன்றும் வழிகண்டு வெண்மதி தோன்றிய நாளில் விளைந்தபின் தண்மதி வீழ்வள விற்கண மின்றே.

313

  1. வளர்கின்ற ஆதித்தன் தன்கலை யாறும் தளர்கின்ற சந்திரன் தன்கலை யாறும் மலர்ந்தெழு பன்னிரண் டங்குலம் ஓடி அலர்ந்து விழுந்தமை யாரறி வாரே.

314

  1. ஆமுயிர்த் தேய்மதி நாளே யெனல்விந்து போம்வழி எங்கணும் போகாது யோகிக்குக் காமுற இன்மையிற் கட்டுண்ணு மூலத்தில் ஓமதி யத்துள்விட் டுரையுணர் வாலே.

315

  1. வேறுறச் செங்கதிர் மெய்க்கலை யாறொடுஞ் சூறுற நான்குந் தொடர்ந்துற வேநிற்கும் ஈறிலி னன்கலை யீரைந்தொ டேமதித் தாறுட் கலையுள் அகலுவா வாமே.

316

  1. உணர்விந்து சோணி உறவினன் வீசும் புணர்விந்து வீசுங் கதிரிற் குறையில் உணர்வும உடம்பும் இவையொக்க நிற்கில் உணர்வும் உடம்பும் ஒருக்கால் விடாவே.

317

  1. விடாத மனபவ னத்தொடு மேவி நடாவு சிவசங்கின் நாதங் கொளுவின் கடாவிடா ஜம்புலன் கட்டுண்ணும் வீடு படாதன இன்பம் பருகார் அமுதமே.

318

  1. அமுதப் புனல்வரு மாற்றங் கரைமேற் குமிழக்கத் தற்சுட ரைந்தையுங் கூட்டிச் சமையத்தண் டோட்டித் தரிக்கவல் லார்க்கு நமன்இல்லை நற்கலை நாள்இல்லை தானே.

319

  1. உண்ணீ ரமுத முறுமூ றலைத்திறந் தெண்ணீர் இணையடித் தாமரைக் கேசெலத் தெண்ணீர்ச் சமாதி யமர்ந்துதீ ராநலக் கண்ணாற் றொடேசென்று கால்வழி மாறுமே.

320

  1. மாறு மதியு மாதித்தனு மாறின்றித் தாறு படாமல் தண்டோடே தலைப்படில் ஊறு படாதுடல் வேண்டும் உபாயமும் பாறு படாஇன்பம் பார்மிசைப் பொங்குமே.