1. Tiruvācakam of Māṇikkavācakar
திருவாசகம்
1
== பொருளடக்கம் == * /சிவ புராணம்/ * /கீர்த்தித் திரு அகவல்/ * /திருவண்டப் பகுதி/ * /போற்றித் திருவகவல்/ * /திருச்சதகம்/ * /நீத்தல் விண்ணப்பம்/ * /திருவெம்பாவை/ * /திருவம்மானை/ * /திருப்பொற் சுண்ணம்/ * /திருக்கோத்தும்பி/ * /திருத்தெள்ளேணம்/ * /திருச்சாழல்/ * /திருப்பூவல்லி/ * /திருவுந்தியார்/ * /திருத்தோள் நோக்கம்/ * /திருப்பொன்னூசல்/ * /அன்னைப்_பத்து/ * /குயிற்பத்து/ * /திருத்தசாங்கம்/ * /திருப்பள்ளியெழுச்சி/ * /கோயில் மூத்த திருப்பதிகம்/ * /கோயில் திருப்பதிகம்/ * /செத்திலாப் பத்து/ * /அடைக்கலப் பத்து/ * /ஆசைப்பத்து/ * /அதிசயப் பத்து/ * /புணர்ச்சிப் பத்து/ * /வாழாப் பத்து/ * /அருட்பத்து/ * /திருக்கழுக் குன்றப் பதிகம்/ * /கண்ட பத்து/ * /பிரார்த்தனைப் பத்து/ * /குழைத்த பத்து/ * /உயிருண்ணிப் பத்து/ * /அச்சப் பத்து/ * /திருப்பாண்டிப் பதிகம்/ * /பிடித்த பத்து/ * /திருவேசறவு/ * /திருப்புலம்பல்/ * /குலாப்பத்து/ * /அற்புதப் பத்து/ * /சென்னிப் பத்து/ * /திருவார்த்தை/ * /எண்ணப் பதிகம்/ * /யாத்திரைப் பத்து/ * /திருப்படை எழுச்சி/ * /திருவெண்பா/ * /பண்டாய நான்மறை/ * /திருப்படையாட்சி/ * /ஆனந்த மாலை/ * /அச்சோ பதிகம்/
2
பகுப்பு:சைவ இலக்கியங்கள் பகுப்பு:அகரமுதலான வரிசையில் படைப்புகள் பகுப்பு:மூலநூல் அட்டவணை இல்லா மின்னூல்கள்
திருவாசகம் சில சிந்தனைகள்-2
1
பகுப்பு:பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன் பகுப்பு:நாட்டுடைமை நூல்கள்
அச்சப் பத்து
1
புற்றில் வாள் அரவும் அஞ்சேன்; பொய்யர் தம் மெய்யும் அஞ்சேன்; கற்றை வார் சடை எம் அண்ணல், கண் நுதல், பாதம் நண்ணி, மற்றும் ஓர் தெய்வம் தன்னை உண்டு என நினைந்து, எம் பெம்மாற்கு அற்றிலாதவரைக் கண்டால், அம்ம! நாம் அஞ்சுமாறே!
2
வெருவரேன், வேட்கை வந்தால்; வினைக் கடல் கொளினும், அஞ்சேன்; இருவரால் மாறு காணா எம்பிரான், தம்பிரான், ஆம் திரு உரு அன்றி, மற்று ஓர் தேவர், எத் தேவர்? என்ன அருவராதவரைக் கண்டால், அம்ம! நாம் அஞ்சுமாறே!
3
வன் புலால் வேலும் அஞ்சேன்; வளைக் கையார் கடைக் கண் அஞ்சேன்; என்பு எலாம் உருக நோக்கி, அம்பலத்து ஆடுகின்ற என் பொலா மணியை ஏத்தி, இனிது அருள் பருக மாட்டா அன்பு இலாதவரைக் கண்டால், அம்ம! நாம் அஞ்சுமாறே!
4
கிளி அனார் கிளவி அஞ்சேன்; அவர் கிறி முறுவல் அஞ்சேன்; வெளிய நீறு ஆடும் மேனி வேதியன் பாதம் நண்ணி, துளி உலாம் கண்ணர் ஆகி, தொழுது, அழுது, உள்ளம் நெக்கு, இங்கு, அளி இலாதவரைக் கண்டால், அம்ம! நாம் அஞ்சுமாறே!
5
பிணி எலாம் வரினும், அஞ்சேன்; பிறப்பினோடு இறப்பும் அஞ்சேன்; துணி நிலா அணியினான் தன் தொழும்பரோடு அழுந்தி, அம் மால், திணி நிலம் பிளந்தும், காணாச் சேவடி பரவி, வெண் நீறு அணிகிலாதவரைக் கண்டால், அம்ம! நாம் அஞ்சுமாறே!
6
வாள் உலாம் எரியும் அஞ்சேன்; வரை புரண்டிடினும், அஞ்சேன்; தோள் உலாம் நீற்றன், ஏற்றன், சொல் பதம் கடந்த அப்பன், தாள் தாமரைகள் ஏத்தி, தட மலர் புனைந்து, நையும் ஆள் அலாதவரைக் கண்டால், அம்ம! நாம் அஞ்சுமாறே!
7
தகைவு இலாப் பழியும் அஞ்சேன்; சாதலை முன்னம் அஞ்சேன்; புகை முகந்து எரி கை வீசி, பொலிந்த அம்பலத்துள் ஆடும், முகை நகைக் கொன்றை மாலை, முன்னவன் பாதம் ஏத்தி, அகம் நெகாதவரைக் கண்டால், அம்ம! நாம் அஞ்சுமாறே!
8
தறி செறி களிறும் அஞ்சேன்; தழல் விழி உழுவை அஞ்சேன்; வெறி கமழ் சடையன், அப்பன், விண்ணவர் நண்ண மாட்டாச் செறிதரு கழல்கள் ஏத்தி, சிறந்து, இனிது இருக்க மாட்டா அறிவு இலாதவரைக் கண்டால், அம்ம! நாம் அஞ்சுமாறே!
9
மஞ்சு உலாம் உருமும் அஞ்சேன்; மன்னரோடு உறவும் அஞ்சேன்; நஞ்சமே அமுதம் ஆக்கும் நம் பிரான் எம்பிரான் ஆய், செஞ்செவே ஆண்டு கொண்டான் திருமுண்டம் தீண்ட மாட்டாது, அஞ்சுவார் அவரைக் கண்டால், அம்ம! நாம் அஞ்சுமாறே!
10
கோண் இலா வாழி அஞ்சேன்; கூற்றுவன் சீற்றம் அஞ்சேன்; நீள் நிலா அணியினானை நினைந்து, நைந்து, உருகி, நெக்கு, வாழ்
11
நிலாம் கண்கள் சோர, வாழ்த்திநின்று, ஏத்தமாட்டா ஆண் அலாதவரைக் கண்டால், அம்ம! நாம் அஞ்சுமாறே!
அச்சோ பதிகம்
1
(தில்லையில் அருளியது)
2
முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப்
3
பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணம்
4
சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனைஆண்ட
5
அத்தனெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே.
6
நெறியல்லா நெறிதன்னை நெறியாக நினைவேனைச்
7
சிறுநெறிகள் சேராமே திருவருளே சேரும்வண்ணம்
8
குறியொன்றும் இல்லாத கூத்தன்தன் கூத்தையெனக்கு
9
அறியும்வண்ணம் அருளியவா றார்பெறுவார் அச்சோவே.
10
பொய்யெல்லாம் மெய்யென்று புணர்முலையார் போகத்தே
11
மையலுறக் கடவேனை மாளாமே காத்தருளித்
12
தையலிடங் கொண்டபிரான் தன்கழலே சேரும்வண்ணம்
13
ஐயன்எனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே.
14
மண்ணதனிற் பிறந்தெய்த்து மாண்டுவிழக் கடவேனை
15
எண்ணமிலா அன்பருளி எனையாண்டிட் டென்னையுந்தன்
16
சுண்ணவெண்ணீ றணிவித்துத் தூய்நெறியே சேரும்வண்ணம்
17
அண்ணல்எனக் கருளியவா றார்வபெறுவார் அச்சோவே.
18
பஞ்சாய அடிமடவார் கடைக்கண்ணால் இடர்ப்பட்டு
19
நெஞ்சாய துயர்கூர நிற்பேன்உன் அருள்பெற்றேன்
20
உய்ஞ்சேன்நான் உடையானே அடியேனை வருகஎன்று
21
அஞ்சேல்என் றருளியவா றார்பெறுவார் அச்சோவே.
22
வெந்துவிழும் உடற்பிறவி மெய்யென்று வினைபெருக்கிக்
23
கொந்துகுழல் கோல்வளையார் குவிமுலைமேல் வீழ்வேனைப்
24
பந்தமறுத் தெனையாண்டு பரிசறஎன் துரிசுமறுத்து
25
அந்தமெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே.
26
தையலார் மையலிலே தாழ்ந்துவிழக் கடவேனைப்
27
பையவே கொடுபோந்து பாசமெனுந் தாழுருவி
28
உய்யும்நெறி காட்டுவித்திட் டோ ங்காரத் துட்பொருளை
29
ஐயன்எனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே.
30
சாதல்பிறப் பென்னுந் தடஞ்சுழியில் தடுமாறிக்
31
காதலின்மிக் கணியிழையார் கலவியிலே விழுவேனை
32
மாதொருகூ றுடையபிரான் தன்கழலே சேரும்வண்ணம்
33
ஆதியெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே.
34
செம்மைநலம் அறியாத சிதடரொடுந் திரிவேனை
35
மும்மைமலம் அறுவித்து முதலாய முதல்வன்தான்
36
நம்மையும்ஓர் பொருளாக்கி நாய்சிவிகை ஏற்றுவித்த
37
அம்மையெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே.
38
செத்திடமும் பிறந்திடமு மினிச்சாவா திருந்திடமும்
39
அத்தனையு மறியாதார் அறியுமறி வெவ்வறிவோ
40
ஒத்தநில மொத்தபொருள் ஒருபொருளாய் பெரும்பயனை
41
அத்ததெனக் கருளியவா றார்பெறுவா ரச்சோவே.
42
படியதினிற் கிடந்திந்தப் பசு பாசந் தவிர்ந்துவிடும்
43
குடிமையிலே திறிந் தடியேன் கும்பியிலே விழாவண்ணம்
44
நெடியவனும் நான்முகனும் நீர்கான்றுங் காணவொண்ணா
45
அடிகளெனக் கருளியவா றார்பெறுவா ரச்சோவே.
46
பாதியெனு மிரவுதங்கிப் பகலெமக்கெ யிரைதேடி
47
வேதனையி லகப்பட்டு வெந்துவிழக் கடவேனை
48
சாதிகுலம் பிறப்பறுத்துச் சகமறிய வெனையாண்ட
49
ஆதியெனுக் கருளியவா றார்பெறுவா ரச்சோவே.
50
திருச்சிற்றம்பலம்
ஆனந்த மாலை
1
(தில்லையில் அருளியது - சிவானுபவ விருத்தம் - அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
2
மின்னே ரனைய பூங்கழல்கள் அடைந்தார் கடந்தார் வியனுலகம்
3
பொன்னே ரனைய மலர்கொண்டு போற்றா நின்றார் அமரரெல்லாம்
4
கல் நேரனைய மனக்கடையாய்க் கழிப்புண் டவலக் கடல்வீழ்ந்த
5
என்னே ரனையேன் இனியுன்னைக் கூடும் வண்ணம் இயம்பாயே.
6
என்னால் அறியாப் பதம்தந்தாய் யான தறியா தேகெட்டேன்
7
உன்னால் ஒன்றுங் குறைவில்லை உடையாய் அடிமைக் காரென்பேன்
8
பன்னாள் உன்னைப் பணிந்தேத்தும் பழைய அடியா ரொடுங்கூடா
9
தென்நா யகமே பிற்பட்டிங் கிருந்தென் நோய்க்கு விருந்தாயே.
10
சீல மின்றி நோன்பின்றிச் செறிவே யின்றி அறிவின்றித்
11
தோலின் பாவைக் கூத்தாட்டாய்ச் சுழன்று விழுந்து கிடப்பேனை
12
மாலுங் காட்டி வழிகாட்டி வாரா உலக நெறியேறக்
13
கோலங் காட்டி ஆண்டானைக் கொடியேன் என்றோ கூடுவதே.
14
கெடுவென் கெடுமா கெடுகின்றேன் கேடி லாதாய் பழிகொண்டாய்
15
படுவேன் படுவ தெல்லாம்நான் பட்டாற் பின்னைப் பயனென்னே
16
கொடுமா நரகத் தழுந்தாமே காத்தாட் கொள்ளுங் குருமணியே
17
நடுவாய் நில்லா தொழிந்தக்கால் நன்றோ எங்கள் நாயகமே.
18
தாயாய் முலையைத் தருவானே தாரா தொழிந்தாற் சவலையாய்
19
நாயேன் கழிந்து போவேனோ நம்பி யினித்தான் நல்குதியே
20
தாயே யென்றுன் தாளடைந்தேன் தயாநீ என்பால் இல்லையே
21
நாயேன் அடிமை உடனாக ஆண்டாய் நான்தான் வேண்டாவோ.
22
கோவே யருள வேண்டாவோ கொடியேன் கெடவே அமையுமே
23
ஆவா வென்னா விடிலென்னை அஞ்சேல் என்பார் ஆரோதான்
24
சாவா ரெல்லாம் என்னளவோ தக்க வாறன் றென்னாரோ
25
தேவே தில்லை நடமாடீ திகைத்தேன் இனித்தான் தேற்றாயே.
26
நரியைக் குதிரைப் பரியாக்கி ஞால மெல்லாம் நிகழ்வித்துப்
27
பெரிய தென்னன் மதுரையெல்லாம் பிச்ச தேற்றும் பெருந்துறையாய்
28
அரிய பொருளே அவிநாசி அப்பா பாண்டி வெள்ளமே
29
தெரிய அரிய பரஞ்சோதி செய்வ தொன்றும் அறியேனே.
30
திருச்சிற்றம்பலம்
ஆத்துமவிரக்கம்
1
18.குயிற்பத்து - ஆத்தும இரக்கம்
2
(தில்லையில் அருளியது)
3
கீத மினிய குயிலே கேட்டியேல் எங்கள் பெருமான்
4
பாத மிரண்டும் வினவில் பாதாளம் ஏழினுக் கப்பால்
5
சோதி மணிமுடி சொல்லிற் சொல்லிறந்து நின்ற தொன்மை
6
ஆதிகுண மொன்று மில்லான் அந்தமி லான்வரக் கூவாய். 348
7
ஏர்தரும் ஏழுல கேத்த எவ்வுரு வுந்தன் னுருவாய்
8
ஆர்கலி சூழ்தென் னிலங்கை அழகமர் வண்டோ தரிக்குப்
9
பேரருளின்ப மளித்த பெருந்துறை மேய பிரானைச்
10
சீரிய வாயாற் குயிலே தென்பாண்டி நாடனைக் கூவாய். 349
11
நீல வுருவிற் குயிலே நீள்மணி மாடம் நிலாவுங்
12
கோல அழகில் திகழுங் கொடிமங்கை உள்ளுறை கோயில்
13
சீலம் பெரிதும் இனிய திருவுத் தரகோச மங்கை
14
ஞாலம் விளங்க இருந்த நாயக னைவரக் கூவாய்.சோதிடம் புத்தகம் 350
15
தேன்பழச் சோலை பயிலுஞ் சிறுகுயி லேயிது கேள்நீ
16
வான்பழித் திம்மண் புகுந்து மனிதரை ஆட்கொண்ட வள்ளல்
17
ஊன்பழித் துள்ளம் புகுந்தென் உணர்வது வாய வொருத்தன்
18
மான்பழித் தாண்டமெல் நோக்கி மணாளனை நீவரக் கூவாய். 351
19
சுந்தரத் தின்பக் குயிலே சூழ்சுடர் ஞாயிறு போல
20
அந்தரத் தேநின் றிழிந்திங் கடியவ ராசை அறுப்பான்
21
முந்தும் நடுவும் முடிவு மாகிய மூவ ரறியாச்
22
சிந்தூரச் சேவடி யானைச் சேவக னைவரக் கூவாய். 352
23
இன்பந் தருவன் குயிலே ஏழுல கும்முழு தாளி
24
அன்பன் அமுதளித் தூறும் ஆனந்தன் வான்வந்த தேவன்
25
நன்பொன் மணிச்சுவ டொத்த நற்பரி மேல்வரு வானைக்
26
கொம்பின் மிழற்றுங் குயிலே கோகழி நாதனைக் கூவாய். 353
27
உன்னை உகப்பன் குயிலே உன்துணைத் தோழியும் ஆவன்
28
பொன்னை அழிந்தநன் மேனிப் புகழில் திகழும் அழகன்
29
மன்னன் பரிமிசை வந்த வள்ளல் பெருந்துறை மேய
30
தென்னவன் சேரவன் சோழன் சீரப்புயங் கன்வரக் கூவாய். 354
31
வாயிங்கே நீகுயிற் பிள்ளாய் மாலொடு நான்முகன் தேடி
32
ஓவியவ ருன்னி நிற்ப ஒண்தழல் விண்பிளந் தோங்கி
33
மேவிஅன் றண்டங் கடந்து விரிசுட ராய்நின்ற மெய்யன்
34
தாவி வரும்பரிப் பாகன் தாழ்சடை யோன்வரக் கூவாய். 355
35
காருடைப் பொன்திகழ் மேனிக் கடிபொழில் வாழுங் குயிலே
36
சீருடைச் செங்கமலத்தில் திகழுரு வாகிய செல்வன்
37
பாரிடைப் பாதங்கள் காட்டிப் பாசம் அறுத்தெனை யாண்ட
38
ஆருடை அம்பொனின் மேனி அமுதினை நீவரக் கூவாய். 356
39
கொந்தண வும்பொழிற் சோலைக் கூங்குயி லேயிது கேள்நீ
40
அந்தண னாகிவந்திங்கே அழகிய சேவடி காட்டி
41
எந்தம ராம்இவ னென்றிங் கென்னையும் ஆட்கொண்டருளும்
42
செந்தழல் போல்திரு மேனித் தேவர்பி ரான்வரக் கூவாய். 357
43
திருச்சிற்றம்பலம்
திருக்கும் குன்றம் பதிகம்
1
(திருக்கழுக்குன்றத்தில் அருளியது -
2
ஏழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
3
பிணக்கிலாத பெருந்துறைப்பெரு மான் உன்நாமங்கள் பேசுவார்க்
4
கிணக்கிலாததோர் இன்ப மேவருந் துன்ப மேதுடைத் தெம்பிரான்
5
உணக்கிலாததோர் வித்துமேல்விளை யாமல் என்வினை ஒத்தபின்
6
கணக்கி லாத்திருக்கோலம் நீவந்து காட்டினாய் கழுக்குன்றிலே.
7
பிட்டுநேர்பட மண்சுமந்த பெருந் துறைப்பெரும் பித்தனே
8
சட்டநேர்பட வந்திலாத சழக்கனேன் உனைச் சார்ந்திலேன்
9
சிட்டனே சிவலோகனேசிறு நாயினுங்கடையாய வெங்
10
கட்டனேனையும் ஆட்கொள்வான்வந்து காட்டினாய் கழுக்குன்றிலே.
11
மலங்கினேன் கண்ணின்நீரை மாற்றி மலங்கெடுத்த பெருந்துறை
12
விலங்கினேன் வினைக்கேடனேன் இனி மேல் விளைவதறிந்திலேன்
13
இலங்குகின்றநின்சேவடிகள் இரண்டும் வைப்பிடமின்றியே
14
கலங்கினேன் கலங்காமலேவந்து காட்டினாய் கழுக்குன்றிலே.
15
பூணொணாததோரன்பு பூண்டு பொருந்திநாள்தொறும் போற்றவும்
16
நாணொணாததோர்நாணம் எய்தி நடுக்கடலுள் அழுந்திநான்
17
பேணொணாதபெருந்துறைப்பெருந் தோணிபற்றியுகைத்தலுங்
18
காணொணாத்திருக்கோலம் நீவந்து காட்டினாய் கழுக்குன்றிலே.
19
கோலமேனிவராக மேகுணமாம் பெருந்துறைக்கொண்டலே
20
சீலமேதும் அறிந்திலாத என் சிந்தை வைத்த சிகாமணி
21
ஞாலமேகரியாக நானுனை நச்சி நச்சிட வந்திடுங்
22
காலமேஉனை ஓதநீ வந்து காட்டினாய் கழுக்குன்றிலே.
23
பேதம் இல்லதோர் கற்பளித்த பெருந்துறைப் பெருவெள்ளமே
24
ஏதமேபல பேசநீஎனை ஏதிலார் முனம் என்செய்தாய்
25
சாதல் சாதல்பொல் லாமையற்ற தனிச்சரண் சரணாமெனக்
26
காதலால் உனைஓதநீ வந்து காட்டினாய் கழுக்குன்றிலே.
27
இயக்கி மாரறு பத்து நால்வரை எண்குணம்செய்த ஈசனே
28
மயக்க மாயதொர் மும்மலப்பழ வல்வினைக்குள் அழுந்தவும்
29
துயக்கறுத்தெனை ஆண்டுகொண்டு நின் தூய்மலர்க்கழல் தந்தெனைக்
30
கயக்க வைத்தடி யார்முனேவந்து காட்டினாய் கழுக்குன்றிலே.
31
திருச்சிற்றம்பலம்
திருக்கோத்தும்பி
1
(தில்லையில் அருளியது- நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)
2
பூவேறு கோனும் புரந்தரனும் பொற்பமைந்த
3
நாவேறு செல்வியும் நாரணணும் நான் மறையும்
4
மாவேறு சோதியும் வானவருந் தாமறியாச்
5
சேவேறு சேவடிக்கே சென்றூதாய் கோத்தும்பீ. 4
6
திருக்கோத்தும்பி/உரை 1-4
7
நானார் என் உள்ளமார் ஞானங்க ளார் என்னை யாரறிவார்
8
வானோர் பிரானென்னை ஆண்டிலனேல் மதிமயங்கி
9
ஊனா ருடைதலையில் உண்பலிதேர் அம்பலவன்
10
தேனார் கமலமே சென்றூதாய் கோத்தும்பீ. 8
11
திருக்கோத்தும்பி/உரை 5-8
12
தினைத்தனை உள்ளதோர் பூவினில் தேன்உண்ணாதே
13
நினைத்தொறும் காண்தொறும் பேசுந்தொறும் எப்போதும்
14
அனைத்தெலும் புள்நெக ஆனந்தத் தேன் சொரியும்
15
குனிப்புடையானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ. 12
16
திருக்கோத்தும்பி/உரை 9-12
17
கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்
18
என்னப்பன் என்னொப்பில் என்னையும் ஆட்கொண்டருளி
19
வண்ணப் பணித்தென்னை வாவென்ற வான் கருணைச்
20
சுண்ணப்பொன் நீற்றற்கே சென்றூதாய் கோத்தும்பீ. 16
21
திருக்கோத்தும்பி/உரை 13-16
22
அத்தேவர் தேவர் அவர்தேவ ரென்றிங்ஙன்
23
பொய்த்தேவு பேசிப் புலம்புகின்ற பூதலத்தே
24
பத்தேதும் இல்லாதென் பற்றறநான் பற்றிநின்ற
25
மெய்த்தேவர் தேவற்கே சென்றூதாய் கோத்தும்பீ. 20
26
திருக்கோத்தும்பி/உரை 17-20
27
வைத்த நிதிபெண்டிர் மக்கள்குலங் கல்வியென்னும்
28
பித்த உலகிற் பிறப்போ டிறப்பென்னுஞ்
29
சித்த விகாரக் கலக்கம் தெளிவித்த
30
வித்தகத் தேவற்கே சென்றூதாய் கோத்தும்பீ. 24
31
திருக்கோத்தும்பி/உரை 21-24
32
சட்டோ நினைக்க மனத்தமுதாஞ் சங்கரனைக்
33
கெட்டேன் மறப்பேனோ கேடுபடாத் திருவடியை
34
ஒட்டாத பாவித் தொழும்பரைநாம் உருவறியோம்
35
சிட்டாய சிட்டற்கே சென்றூதாய் கோத்தும்பீ. 28
36
திருக்கோத்தும்பி/உரை 25-28
37
ஒன்றாய் முளைத்தெழுந் தெத்தனையோ கவடுவிட்டு
38
நன்றாக வைத்தென்னை நாய்சிவிகை ஏற்றுவித்த
39
என்தாதை தாதைக்கும் எம்மனைக்குந் தம்பெருமான்
40
குன்றாத செல்வற்கே சென்றூதாய் கோத்தும்பீ. 32
41
திருக்கோத்தும்பி/உரை 29-32
42
கரணங்கள் எல்லாங் கடந்துநின்ற கறைமிடற்றன்
43
சரணங்க ளேசென்று சார்தலுமே தான்எனக்கு
44
மரணம் பிறப்பென் றிவையிரண்டின் மயக்கறுத்த
45
கருணைக் கடலுக்கே சென்றூதாய் கோத்தும்பீ. 36
46
திருக்கோத்தும்பி/உரை 33-36
47
நோயுற்று மூத்துநான் நுந்துகன்றா யிங்கிருந்து
48
நாயுற்ற செல்வம் நயந்தறியா வண்ணமெல்லாந்
49
தாயுற்று வந்தென்னை ஆண்டுகொண்டதன்கருணைத்
50
தேயுற்ற செல்வற்கே சென்றூதாய் கோத்தும்பீ. 40
51
திருக்கோத்தும்பி/உரை 37-40
52
வன்னெஞ்சக் கள்வன் மனவலியன் என்னாதே
53
கல்நெஞ் சுருக்கிக் கருணையினால் ஆண்டுகொண்ட
54
அன்னஞ் திளைக்கும் அணிதில்லை அம்பலவன்
55
பொன்னங் கழலுக்கே சென்றூதாய் கோத்தும்பீ. 44
56
திருக்கோத்தும்பி/உரை 41-44
57
நாயேனைத் தன்னடிகள் பாடுவித்த நாயகனைப்
58
பேயேன துள்ளப் பிழைபொறுக்கும் பெருமையனைச்
59
சீயேதும் இல்லாதென் செய்பணிகள் கொண்டருளுந்
60
தாயான ஈசற்கே சென்றூதாய் கோத்தும்பீ. 48
61
திருக்கோத்தும்பி/உரை 45-48
62
நான்தனக் கன்பின்னை நானுந்தா னும் அறிவோம்
63
தானென்னை ஆட்கொண்ட தெல்லாருந் தாமறிவார்
64
ஆன கருணையும் அங்குற்றே தானவனே
65
கோனென்னைக் கூடக் குளிர்ந்தூதாய் கோத்தும்பீ. 52
66
திருக்கோத்தும்பி/உரை 49-52
67
கருவாய் உலகினுக் கப்புறமாய் இப்புறத்தே
68
மருவார் மலர்க்குழல் மாதினொடும் வந்தருளி
69
அருவாய் மறைபயில் அந்தணனாய் ஆண்டுகொண்ட
70
திருவான தேவற்கே சென்றூதாய் கோத்தும்பீ. 56
71
திருக்கோத்தும்பி/உரை 53-56
72
நானும்என் சிந்தையும் நாயகனுக் கெவ்விடத்தோம்
73
தானுந்தன் தையலுந் தாழ்சடையோன் ஆண்டிலனேல்
74
வானுந் திசைகளும் மாகடலும் ஆயபிரான்
75
தேனுந்து சேவடிக்கே சென்றூதாய் கோத்தும்பீ. 60
76
திருக்கோத்தும்பி/உரை 57-60
77
உள்ளப் படாத திருஉருவை உள்ளுதலும்
78
கள்ளப் படாத களிவந்த வான்கருணை
79
வெள்ளப் பிரான்என் பிரான்என்னை வேறேஆட்
80
கொள்ளப் பிரானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ. 64
81
திருக்கோத்தும்பி/உரை 61-64
82
பொய்யாய செல்வத்தே புக்கழுந்தி நாள்தோறும்
83
மெய்யாக் கருதிக்கிடந்தேனை ஆட்கொண்ட
84
ஐயாவென் ஆரூயிரே அம்பலவா என்றவன்றன்
85
செய்யார் மலரடிக்கே சென்றூதாய் கோத்தும்பீ. 68
86
திருக்கோத்தும்பி/உரை 65-68
87
தோலுந் துகிலுங் குழையுஞ் சுருள்தோடும்
88
பால்வெள்ளை நீறும் பசுஞ்சாந்தும் பைங்கிளியுஞ்
89
சூலமுந் தொக்க வளையு முடைத்தொன்மைக்
90
கோலமே நோக்கிக் குளிர்ந்தூதாய் கோத்தும்பீ. 72
91
திருக்கோத்தும்பி/உரை 69-72
92
கள்வன் கடியன் கலதியிவன் என்னாதே
93
வள்ளல் வரவர வந்தொழிந்தான் என் மனத்தே
94
உள்ளத் துறுதுய ரொன்றொழியா வண்ணமெல்லாந்
95
தெள்ளுங் கழலுக்கே சென்றூதாய் கோத்தும்பீ. 76
96
திருக்கோத்தும்பி/உரை 73-76
97
பூமேல் அயனோடு மாலும் புகலரிதென்று
98
ஏமாறி நிற்க அடியேன் இறுமாக்க
99
நாய்மேல் தவிசிட்டு நன்றாய்ப் பொருட்படுத்த
100
தீமேனி யானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ. 80
101
திருக்கோத்தும்பி/உரை 77-80
102
திருச்சிற்றம்பலம்
திருச்சதகம்
1
(திருப்பெருந்துறையில் அருளியது)
2
- மெய் உணர்தல் (கட்டளைக் கலித்துறை)
3
மெய்தான் அரும்பி விதிர் விதிர்த்து உன் விரை ஆர் சுழற்கு என் கைதான் தலை வைத்துக் கண்ணீர் ததும்பி வெதும்பி உள்ளம் பொய்தான் தவிர்ந்து உன்னைப் போற்றி சய சய போற்றி என்னும் கைதான் நெகிழ விடேன் உடையாய் என்னைக் கண்டு கொள்ளே. 5
4
கொள்ளேன் புரந்தரன் மால் அயன் வாழ்வு குடிகெடினும் நள்ளேன் நினது அடியாரொடு அல்லால் நரகம் புகினும் எள்ளேன் திருஅருளாலே இருக்கப் பெறின் இறைவா உள்ளேன் பிற தெய்வம் உன்னை அல்லாது எங்கள் உத்தமனே. 6
5
உத்தமன் அத்தன் உடையான் அடியே நினைந்து உருகி மத்த மனத்தொடு மால் இவன் என்ன மனம் நினைவில் ஒத்தன ஒத்தன சொல்லிட ஊரூர் திரிந்து எவரும் தம் தம் மனத்தன பேச எஞ்ஞான்று கொல் சாவதுவே. 7
6
சாவ முன் நாள் தக்கன் வேள்வித் தகர் தின்று நஞ்சம் அஞ்சி ஆவ எந்தாய் என்று அவிதா இடும் நம்மவர் அவரே மூவர் என்றே எம்பிரானொடும் எண்ணி விண் ஆண்டு மண்மேல் தேவர் என்றே இறுமாந்து என்ன பாவம் திரதவரே. 8
7
தவமே புரிந்திலன் தண்மலர் இட்டுமுட்டாது இறைஞ்சேன் அவமே பிறந்த அருவினையேன் உனக்கு அன்பர் உள்ளாம் சிவமே பெறும் திரு எய்திற்றிலேன் நின் திருவடிக்கு ஆம் பவமே அருளு கண்டாய் அடியேற்கு எம்பரம்பரனே. 9
8
பரந்து பல் ஆய்மலர் இட்டு முட்டாது அடியே இறைஞ்சி இரந்த எல்லாம் எமக்கே பெறலாம் என்னும் அன்பர் உள்ளம் கரந்து நில்லாக் கள்வனே நின்தன் வார்சுழற்கு அன்பு எனக்கும் நிரந்தரமாய் அருளாய் நின்னை ஏத்த முழுவதுமே. 10
9
முழுவதும் கண்டவனைப் படைத்தான் முடிசாய்ந்து முன்னாள் செழு மலர் கொண்டு எங்கும் தேட அப்பாலன் இப்பால் எம்பிரான் கழுதொடு காட்டிடை நாடகம் ஆடிக் கதி இலியாய் உழுவையின் தோல் உடுத்து உன் மத்தம் மேல் கொண்டு உழிதருமே. 11
10
உழிதரு காலுங் கனலும் புனலொடு மண்ணுவிண்ணும் இழிதரு காலமெக் காலம் வருவது வந்ததற்பின் உழிதரு காலத்த உன்னடி யேன்செய்த வல்வினையக் கழிதரு காலமு மாயவை காத்தெம்மைக் காப்பேவனே. 12
11
பவனெம் பிரான்பனி மாமதிக் கண்ணிவிண் ணோர்பெருமான் சிவனெம் பிரான்என்னை ஆண்டுகொண்டான் என் சிறுமைகண்டும் அவனெம் பிரானென்ன நானடி யேனென்ன இப்பரிசே புவனெம் பிரான்தெரி யும்பரிசாவ தியம்புகவே. 13
12
புகவே தகேன்உனக் கன்பருள் யானென்பொல் லாமணியே தகவே யெனையுனக் காட்கொண்ட தன்மையெப் புன்மையரை மிகவே உயர்த்திவிண் ணோரைப் பணித்திஅண் ணாவமுதே நகவே தகும்எம் பிரானென்னை நீசெய்த நாடகமே. 14
13
- அறிவுறுத்தல் (தரவு கொச்சகக் கலிப்பா)
14
நாடகத்தால் உன் அடியார் போல் நடித்து நான் நடுவே வீடு அகத்தே புகுந்திடுவான் மிகப்பெரிதும் விரைகின்றேன் ஆடகம் சீர் மணிக்குன்றே இடை அறா அன்பு உனக்கு என் ஊடு அகத் தேநின்று உருகத் தந்தருள் எம் உடையானே. 15
15
யான் ஏதும் பிறப்பு அஞ்சேன் இறப்பு அதனுக்கு என கடவேன் வான் ஏயும் பெறல் வேண்டேன் மண் ஆள்வான் மதித்தும் இரேன் தேன்ஏயும் மலர்க்கொன்றைச் சிவனே எம்பெருமான்எம் மானே உன் அருள் பெறும் நாள் என்று என்றே வருந்துவனே. 16
16
வருந்துவன்நின் மலர்ப்பாதம் அவைகாண்பான் நாய்அடியேன் இருந்து நலம் மலர் புனையேன் ஏத்தேன் நாத்தழும்பு ஏறப் பொருந்திய பொன் சிலை குனித்தாய் அருள் அமுதம் புரியாயேல் வருந்துவன் அத்தமியேன் மற்று என்னேநான் ஆமாறே. 17
17
ஆம்ஆறுஉன் திருவடிக்கே அகம்குழையேன் அன்பு உருகேன் பூமாலை புனைந்து ஏத்தேன் புகழ்ந்து உரையேன் புத்தேளிர்க் கோமான் நின் திருக்கோயில் தூகேன் மெழுகேன் கூத்து ஆடேன் சாம் ஆறே விரைக்கின்றேன் சதுராலே சார்வோனே. 18
18
வானாகி மண்ணாகி வளிஆகி ஒளிஆகி ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய் கோனாகி யான் எனது என்று அவரவரைக் கூத்தாட்டு வானாகி நின்றாயை என் சொல்லி வாழ்த்துவனே. 19
19
வாழ்த்துவதும் வானவர்கள் தாம் வாழ்வான் மனம் நின்பால் தாழ்த்துவதும் தாம் உயர்ந்து தம்மை எல்லாம் தொழ வேண்டிக் சூழ்த்த மதுகரம் முரலும் தாரோயை நாய் அடியேன் பாழ்த்த பிறப்பு அறுத்திடுவான் யானும் உன்னைப் பரவுவனே. 20
20
பரவுவார் இமையோர்கள் பாடுவன நால்வேதம் குரவுவார் குழல் மடவாள் கூறு உடையாள் ஒரு பாகம் விரவுவார் மெய் அன்பின் அடியார்கள் மேன்மேல் உன் அரவுவார் கழல் இணைகள் காண்பாரோ அரியானே. 21
21
அரியானே யாவரக்கும் அம்பரவா அம்பலத்து எம் பெரியானே சிறியேனை ஆட்கொண்ட பெய்கழல் கீழ் விரைஆர்ந்த மலர்தூவேன் வியந்து அலறேன் நயந்துஉருகேன் தரியேன் நான் ஆம்ஆறுஎன் சாவேன் நான் சாவேனே. 22
22
வேனில் வேள் மலர்க்கணைக்கும் வெள் நகை செவ்வாய்க்கரிய பானல் ஆர் கண்ணியர்க்கும் பதைத்து உருகும் பாழ் நெஞ்சே ஊன் எலாம் நின்று உருகப் புகுந்து ஆண்டான் இன்றுபோய் வான் உளான் காணாய் நீ மாளா வாழ்கின்றாயே. 23
23
வாழ்கின்றாய் வாழாத நெஞ்சமே வல்வினைப்பட்டு ஆழ்கின்றாய் ஆழாமல் காப்பானை ஏத்தாதே சூழ்கின்றாய் கேடு உனக்குச் சொல்கின்றேன் பல்காலும் வீழ்கின்றாய் நீ அவலக் கடல் ஆய வெள்ளத்தே. 24
24
- சுட்டறுத்தல் (எண் சீர் ஆசிரிய விருத்தம்)
25
வெள்ளம் தாழ் விரிசடையாய் விடையாய் விண்ணோர் பெருமானே எனக்கேட்டு வெட்ட நெஞ்சாய் பள்ளம் தாழ் உறு புனலில் கீழ் மேல் ஆகப் பதைத்து உருகும் அவ நிற்க என்னை ஆண்டாய்க்கு உள்ளம்தான் நின்று உச்சி அளவும் நெஞ்சாய் உருகாதால் உடம்பு எல்லாம் கண்ணாய் அண்ணா வெள்ளம்தான் பாயாதால் நெஞ்சம் கல் ஆம் கண் இணையும் மரம் ஆம் தீ வினையினேற்கே. 25
26
வினையிலே கிடந்தேனைப் புகுந்து நின்று போதுநான் வினைக் கேடன் என்பாய் போல இனையன் நான் என்று உன்னை அறிவித்து என்னை ஆட்கொண்டு எம்பிரான் ஆனாய்க்கு இரும்பின் பாவை அனைய நான் பாடேன் நின்று ஆடேன் அந்தோ அலறிடேன் உலறிடேன் ஆவி சோரேன் முனைவனே முறையோ நான் ஆனவாறு முடிவு அறியேன் முதல் அந்தம் ஆயினானே? 26
27
ஆயநான் மறையனும் நீயே ஆதல் அறிந்து யான் யாவரினும் கடையேன் ஆய நாயினேன் ஆதலையும் நோக்கிக் கண்டும் நாதனே நான் உனக்கு ஓர் அன்பன் என்பேன் ஆயினேன் ஆதலால் ஆண்டு கொண்டாய் அடியார் தாம் இல்லையே அன்றி மற்று ஓர் பேயனேன் இதுதான் நின்பெருமை அன்றே எம்பெருமான் என் சொல்லிப் பேசுகேனே. 27
28
பேசின் தாம் ஈசனே எந்தாய் எந்தை பெருமானே என்று என்றே பேசிப் பேசிப் பூசின்தான் திருமேனி நிறைப் பூசி போற்றி எம்பெருமானே என்று பின்றா நேசத்தால் பிறப்பு இறப்பைக் கடந்தார் தம்மை ஆண்டானே அவா வெள்ளம் கள்வனேனை மாசு அற்ற மணிக்குன்றே எந்தாய் அந்தோ என்னை நீ ஆட்கொண்ட வண்ணம் தானே. 28
29
வண்ணம்தான் சேயது அன்று வெளிதே அன்று அநேகன் ஏகன் அணு அணுவில் இறந்தாய் என்று அங்கு எண்ணம்தான் தடுமாறி இமையோர் கூட்டம் எய்துமாறு அறியாத எந்தாய் உன் தன் வண்ணம்தான் அது காட்டி வடிவு காட்டி மலர்க்கிழல்கள் அவைகாட்டி வழி அற்றேனைத் திண்ணம்தான் பிறவாமல் காத்து ஆட்கொண்டாய் எம்பெருமான் என் சொல்லிச் சிந்துக்கேனே. 29
30
சிந்தனை நின்தனக்கு ஆக்கி நாயினேன் தன் கண் இனை நின் திருப்பாதப் போதுக்கு ஆக்கி வந்தனையும் அம்மலர்க்கே ஆக்கி வாக்கு உன் மணிவார்த்தைக்கு ஆக்கி ஐம்புலன்கள் ஆர வந்தனை ஆட்கொண்டு உள்ளே புகுந்து விச்சை மால் அமுதப் பெரும் கடலே மலையே உன்னைத் தந்தனை செந் தாமரைக்காடு அனைய மேனித் தனிச்சுடரே இரண்டுமிலி இத்தனிய னேற்கே. 30
31
தனியேனன் பெரும் பிறவிப் பௌவத்து எவ்வம் தடம் திரையால் எற்றுண்டு பற்று ஒன்று இன்றிக் கனியைநேர் துவர்வாயார் என்னும் காலால் கலக்குண்டு காம வான் சுறவின் வாய்ப்பட்டு இனி என்னே உய்யும் ஆற என்று என்று எண்ணி அஞ்சு எழுத்தின் பணை பிடித்துக் கிடக்கின்றேனை முனைவனே முதல் அந்தம் இல்லா மல்லற் கரைகாட்டி ஆட்கொண்டாய் மூர்க்கனேற்கே. 31
32
கேட்டு ஆரும் அறியாதான் கேடு ஒன்று இல்லான் கிளை இலான் கேளாதே எல்லாம் கேட்டான் நாட்டார்கன் விழித்திருப்ப ஞாலத்து உள்ளே நாயினுக்கு தவிசு இட்டு நாயினேற்கே காட்டாதன எல்லாம் காட்டிப் பின்னும் கேளாதான எல்லாம் கேட்பித்து என்னை மீட்டேயும் பிறவாமல் காத்து ஆட்கொண்டான் எம்பெருமான் செய்திட்ட விச்சைதானே. 32
33
விச்சைதான் இது ஒப்பது உண்டோ கேட்கின் மிகுகாதல் அடியார்தம் அடியன் ஆக்கி அச்சம் தீர்த்து ஆட்கொண்டான் அமுதம் ஊறி அகம் நெகவே புகுந்து ஆண்டான் அன்பு கூர அச்சன் ஆண் பெண் அலி ஆகாசம் ஆகி ஆர் அழல் ஆய் அந்தம் ஆய் அப்பால் நின்ற செச்சை மலர் புரையும் மேனி எங்கள் சிவபெருமான் எம்பெருமான் தேவா கோவே. 33
34
தேவர்க்கோ அறியாத தேவ தேவன் செழும் பொழில்கள் பயந்து காத்து அழிக்கும் மற்றை மூவர் கோனாய் நின்ற முதல்வன் மூர்த்தி மூதாதை மாது ஆளும் பாகத்து எந்தை யாவர் கோன் என்னையும் வந்து ஆண்டு கொண்டான் யாம் ஆர்க்கும் குடி அல்லோம் யாதும் அஞ்சோம் மேவினோம் அவன் அடியார் அடியரோடும் மேன்மேலும் குடைந்து ஆடி ஆடுவோமே. 34
35
- ஆத்ம சுத்தி (அறுசீர் ஆசிரிய விருத்தம்)
36
ஆடுகின்றிலை கூத்து உடையான் கழற்கு அன்பு இலை என்புஉருகிப் பாடுகின்றிலை பதைப்பதும் செய்கிலை பணிகிலை பாதமலர் சூடுகின்றிலை சூட்டுகின்றதும் இலை துணை இலி பிண நெஞ்சே தேடிகின்றிலை தெருவுதோறு அலறிலை செய்வதொன்று அறியேனே? 35
37
அறிவு இலாத எனைப்புகுந்து ஆண்டு கொண்டு அறிவதை அருளிமேல் நெறிஎலாம் புலம் ஆக்கிய எந்தையைப் பந்தனை அறுப் பானைப் பிறிவு இலாத இன் அருள் கண் பெற்றிருந்தும் மாறி ஆடுதி பிண நெஞ்சே கிறி எலாம் மிகக் கீழ்ப்படுத்தாய் கெடுத்தாய் என்னைக் கெடுமாறே. 36
38
மாறிநின்று எனைக் கெடக் கிடந்தனையை எம் மிதி இலிமட நெஞ்சே தேறுகின்றிலம் இனி உனைச் சிக்கனெக் சிவன் அவன் திரங் கோள் மேல் நீறு நின்றது கண்டனை ஆயினும் நெக்கிலை இக்காயம் கீறு நின்றிலை கெடுவது உன் பரிசு இது கேட்கவும் கில்லேனே. 37
39
கிற்றவா மனமே கெடுவாய் உடையான் அடி நாயேனை விற்று எலாம் மிக ஆள்வதற்கு உரியவன் விரைமலர் திருப் பாதம் முற்று இலா இளந்தளிர் பிரிந்திருந்து நீ உண்டன எல்லாம் அற்றவாறும் நின் அறிவும் நின்பெருமையும் அளவு அறுக் கில்லேனே. 38
40
அளவு அறுப்பதற்கு அரியவன் இமையவர்க்கு அடியவர்க்கு எளியான் நம் களவு அறுத்து நின்று ஆண்டமை கருத்தினுள் கசிந்து உணர்ந்து இருந்தேயும் உள கறுத்து உனை நினைந்து உளம் பெரும் களன் செய்ததும் இலை நெஞ்சே பளகு அறுத்து அடையான் கழல் பணிந்திலை பரகதி புகுவானே. 39
41
புகுவ தாவதும் போதர வில்லதும் பொன்னகர் புகப்போதற் குகுவ தாவதும் எந்தையெம் பிரானென்னை யாண்டவன் சுழற்கன்பு நெகுவ தாவதும் நித்தலும் அமுதொடு தேனொடு பால்கட்டி மிகுவ தாவதும் இன்றெனின் மற்றிதற் கென்செய்கேன் வினையேனே. 40
42
வினையென் போலுடை யார்பிற ராருடை யானடி நாயேனைத் திசையின் பாகமும் பிரிவது திருக்குறிப் பன்றுமற் றதணாலே முனைவன் பாதநன் மலர்பிரிந் திருந்தும்நான்முட்டிலேன் தலைகீறேன் இனையன் பாவனை யிரும்புகல் மனஞ்செவி யின்னதென் றறியேனே. 41
43
ஏனை யாவரும் எய்திட லுற்றமற் றின்ன தென் றறியாத தேனை ஆன்நெயைக் கரும்பின் இன் தேறலைச் சிவனையென் சிவலோகக் கோனை மான்அன நோக்கிதன் கூறனைக் குறுகிலேன் நெடுங்காலம் ஊனை யானிருந் தோம்புகின் றேன்கெடு வேனுயி ரோயாதே. 42
44
ஓய்வி லாதன உவமனில் இறந்தன ஒண்மலர்த் தாள்தந்து நாயி லாகிய குலத்தினுங் கடைப்படும் என்னைநன் னெறிகாட்டித் தாயி லாகிய இன்னருள் புரிந்தஎன் தலைவனை நனிகாணேன் தீயில் வீழ்கிலேன் திண்வரை உருள்கிலேன் செழுங்கடல் புகுவேனே. 43
45
வேனில் வேள்கணை கிழித்திட மதிகெடும் அதுதனை நினையாதே மான்நி லாவிய நோக்கியர் படிறிடை மத்திடு தயிராகித் தேன்நி லாவிய திருவருள் புரிந்தவென் சிவனகர் புகப்போகேன் ஊனில் ஆவியை ஓம்புதற் பொருட்டினும் உண்டுடுத் திருந்தேனே. 44
46
- கைம்மாறு கொடுத்தல் (கலிவிருத்தம்)
47
இருகை யானையை ஒத்திருந் தென்னுளக் கருவை யான்கண்டி லேன் கண்ட தெவ்வமே வருக வென்று பணித்தனை வானுளோர்க்கு ஒருவ னேகிற்றி லேன்கிற்பன் உண்ணவே. 45
48
உண்டோ ர் ஒண்பொரு ளென்றுணர் வார்க்கெலாம் பெண்டிர் ஆண்அலி யென்றறி யொண்கிலை தொண்ட னேற்குள்ள வாவந்து தோன்றினாய் கண்டுங் கண்டிலேன் என்னகண் மாயமே. 46
49
மேலை வானவ ரும்மறி யாததோர் கோல மேயெனை ஆட்கொண்ட கூத்தனே ஞால மேவிசும் பேயிவை வந்துபோம் கால மேயுளை யென்றுகொல் காண்பதே. 47
50
காண லாம்பர மேகட் கிறந்ததோர் வாணி லாப் பொரு ளேயிங்கொர் பார்ப்பெனப் பாண ளேன்படிற் றாக்கையை விட்டுனைப் பூணு மாற்றி யேன் புலன் போற்றியே. 48
51
போற்றி யென்றும் புரண்டும் புகழ்ந்தும்நின்று ஆற்றன் மிக்கஅன் பாலழைக் கின்றிலேன் ஏற்று வந்தெதிர் தாமரைத் தாளுறுங் கூற்ற மன்னதொர் கொள்கையென் கொள்கையே. 49
52
கொள்ளுங் கில்லெனை யன்பரிற் கூய்ப்பணி கள்ளும் வண்டும் அறாமலர்க் கொன்றையான் நள்ளுங் கீழளும் மேலுளும் யாவுளும் எள்ளும் எண்ணெயும் போல்நின்ற எந்தையே. 50
53
எந்தை யாயெம் பிரான்மற்றும் யாவர்க்குந் தந்தை தாய்தம் பிரான்தனக் கஃதிலான் முந்தி யென்னுள் புகுந்தனன் யாவருஞ் சிந்தை யாலும் அறிவருஞ் செல்வனே. 51
54
செல்வம் நல்குர வின்றிவிண் ணோர்புழுப் புல்வரம் பின்றி யார்க்கும் அரும்பொருள் எல்லை யில்கழல் கண்டும் பிரிந்தனன் கல்வ கைமனத் தேன்பட்ட கட்டமே. 52
55
கட்டறுத்தெனை யாண்டுகண் ணாரநீறு இட்ட அன்பரொ டியாவருங் காணவே பட்டி மண்டபம் ஏற்றினை ஏற்றினை எட்டி னோடிரண் டும் அறி யேனையே. 53
56
அறிவ னேயமு தேஅடி நாயினேன் அறிவ னாகக் கொண்டோ எனை ஆண்டது அறிவி லாமையன் றேகண்ட தாண்டநாள் அறிவ னோவல்ல னோஅரு ளீசனே. 54
57
- அநுபோகசுத்தி (அறுசீர் ஆசிரிய விருத்தம்)
58
ஈசனேயென் எம்மானே யெந்தை பெருமான் என்பிறவி நாசனே நான் யாதுமென் றல்லாப் பொல்லா நாயான நீசனேனை ஆண்டாய்க்கு நினைக்க மாட்டேன் கண்டாயே தேசனேஅம் பலவனே செய்வ தொன்றும் அறியேனே. 55
59
செய்வ தறியாச் சிறுநாயேன் செம்பொற் பாத மலர்காணாப் பொய்யார் பெறும்பே றத்தனையும் பெறுதற் குரியேன் பொய்யிலா மெய்யர் வெறியார் மலர்ப்பாதம் மேவக் கண்டுங் கேட்டிருந்தும் பொய்ய னேன்நான் உண்டுடுத்திங் கிருப்ப தானேன் போரேறே. 56
60
போரேறேநின் பொன்னகர்வாய் நீபோந்தருளி இருள்நீக்கி வாரே றிளமென் முலையாளே டுடன்வந் தருள அருள்பெற்ற சீரே றடியார் நின்பாதஞ் சேரக் கண்டுங் கண்கெட்ட ஊரே றாயிங் குழல்வேணே கொடியான் உயிர்தான் உளவாதே. 57
61
உலவாக் காலந் தவமெய்தி உறுப்பும் வெறுத்திங் குனைக்காண்பான் பலமா முனிவர் நனிவாடப் பாவி யேனைப் பணிக்கொண்டாய் மலமாக் குரம்பை யிதுமாய்க்க மாட்டேன் மணியே உனைக்காண்பான் அலவா நிற்கும் அன்பிலேன் என்கொண்டெழுகேன் எம்மானே. 58
62
மானேர் நோக்கி உமையாள் பங்கா வந்திங் காட்கொண்ட தேனே அமுதே கரும்பின் தெளிவே சிவனே தென்தில்லைக் கோனே உன்தன் திருக்குறிப்புக் கூடு வார்நின் கழல்கூட ஊனார் புழுக்கூ டிதுகாத்திங் கிருப்ப தானேன் உடையானே. 59
63
உடையா னேநின்றனையுள்கி உள்ளம் உருகும் பெருங்காதல் உடையா ருடையாய் நின்பாதஞ் சேரக் கண்டிங் கூர்நாயிற் கடையா னேன்நெஞ் சுருகாதேன் கல்லா மனந்தேன் கசியாதேன் முடையா புழுக்கூ டிதுகாத்திங் கிருப்ப தாக் முடித்தாயே. 60
64
முடித்த வாறும் என்றைக்கே தக்க தேமுன் னடியாரைப் பிடித்த வாறுஞ் சோராமற் சோர னேனிங் கொருத்திவாய் துடித்த வாறுங் துகிலிறையே சோர்ந்த வாறும் முகங்குறுவேர் பொடித்த வாறு மிவையுணர்ந்து கேடென்றனக்கே சூழ்ந்தேனே. 61
65
தேனைப் பாலைக் கன்னலின் தெளியை ஒளியைத் தெளிந்தார்தம் ஊனை உருக்கும் உடையானை உம்ப ரானை வம்பனேன் தானின் னடியேன் நீயென்னை ஆண்டா யென்றால் அடியேற்குத் தானுஞ் சிரித்தே யருளலாந் தன்மை யாமென் தன்மையே. 62
66
தன்மை பிறரா லறியாத தலைவா பொல்லா நாயன புன்மை யேனை ஆண்டையா புறமே போக விடுவாயோ என்மை நோக்கு வார்யாரே என்நான் செய்கேன் எம்பெருமான் பொன்னே திகழுந் திருமேனி எந்தா யெங்குப் புகுவேனே. 63
67
புகுவே னெனதே நின்பாதம் போற்றும் அடியா ருள்நின்று நகுவேன் பண்டு தோணோக்கி நாண மில்லா நாயினேன் நெடுமன் பில்லை நினைக்காண நீயாண்டருள் அடியேனுந் தகுவ னேயென் தன்மையே எந்தாய் அந்தோ தரியேனே. 64
68
- காருணியத்து இரங்கல் (அறுசீர் ஆசிரிய விருத்தம்)
69
தரிக்கிலேன் காய வாழ்க்கை சங்கரா போற்றி வான விருத்தனே போற்றி எங்கள் விடலையே போற்றி ஒப்பில் ஒருத்தனே போற்றி உம்பர் தம்பிரான் போற்றி தில்லை நிருத்தனே போற்றி எங்கள் நின்மலா போற்றி போற்றி. 65
70
போற்றியோ நமச்சி வாய புயங்களே மயங்கு கின்றேன் போற்றியோ நமச்சி சாய புகலிடம் பிறிதொன் றில்லை போற்றியோ நமச்சி வாய புறமெனப் போக்கில் கண்டாய் போற்றியோ நமச்சி வாய சயசய போற்றி போற்றி. 66
71
போற்றியென் போலும் பொய்யர் தம்மைஆட் கொள்ளும் வள்ளல் போற்றிநின் பாதம் போற்றி நாதனே போற்றி போற்றி போற்றி நின் கருணை வெள்ளம் புதுமதுப் புவனம் நீர்தீக் காற்றிய மானன் வானம் இருசுடர்க் கடவுளானே. 67
72
கடவுளே போற்றி யென்னைக் கண்டுகொண் டருளு போற்றி விடவுளே உருக்கி யென்னை ஆண்டிட வேண்டும் போற்றி உடலிது களைந்திட் டொல்லை உம்பர்தந் தருளு போற்றி சடையுளே கங்கை வைத்த சங்கரா போற்றி போற்றி. 68
73
சங்கரா போற்றி மற்றோர் சரணிலேன் போற்றி கோலப் பொங்கரா அல்குற் செவ்வாய் வெண்ணைக் கரிய வாட்கண் மங்கையோர் பங்க போற்றி மால்விடை யூர்தி போற்றி இங்கிவ்வாழ் வாற்ற கில்லேன் எம்பிரான் இழித்திட்டேனே. 69
74
இழித்தனன் என்னை யானே எம்பிரான் போற்றி போற்றி பழித்தனன் உன்னை என்னை ஆளுடைப் பாதம் போற்றி பிழைத்தவை பொறுக்கை எல்லாம் பெரியவர் கடமை போற்றி ஒழித்திடில் வாழ்வு போற்றி உம்பர்நாட டெம்பி ரானே. 70
75
எம்பிரான் போற்றி வானத் தவரவர் ஏறு போற்றி கொம்பரார் மருங்குல் மங்கை கூறவெண் ணீற போற்றி செம்பிரான் போற்றி தில்லைத் திருச்சிற்றம் பலவ போற்றி உம்பரா போற்றி என்னை ஆளுடை ஒருவ போற்றி. 71
76
ஒருவனே போற்றி ஒப்பில் அப்பனே போற்றி வானோர் குருவனே போற்றி எங்கள் கோமளக் கொழுந்து போற்றி வருவவென் றென்னை நின்பால் வாங்கிட வேண்டும் போற்றி தருகநின் பாதம் போற்றி தமியனேன் தீர்த்தே. 72
77
தீர்ந்தஅன் பாய அன்பர்க் கவரினும் அன்ப போற்றி பேர்ந்துமென் பொய்மை யாட்கொண்டருளும் பெருமை போற்றி வார்ந்தநஞ் சயின்று வானோர்க் கமுதமா வள்ளல் போற்றி ஆர்ந்தநின் பாதம் நாயேற் கருளிட வேண்டும் போற்றி. 73
78
போற்றிப் புவனம் நீர்தீர் காலொடு வான மானாய் போற்றியெவ் வுயிர்க்குந் தோற்றம் ஆகிநீ தோற்ற மில்லாய் போற்றியெல் லாவுயிரக்கும் ஈறாயீ றின்மை யானாய் போற்றியைம் புலன்கள் நின்னைப் புணர்கிலாப் புணர்க்கை யானே. 74
79
- ஆனந்தத்து அழுத்தல் (எழுசீர் ஆசிரிய விருத்தம்)
80
புணர்ப்பது ஒக்க எந்தை என்னை ஆண்டு பூண நோக்கினாய் புணர்ப்பது அன்று இது என்றபோது நின்னொடு என்னொடு என்இது ஆம் புணர்ப்பது ஆக அன்று இது ஆக அன்பு நின்கழல் கணே புணர்ப்பது அது ஆக அம் கனாள் புங்கம் ஆன போகமே. 75
81
போகம் வேண்டி வேண்டிலேன் புரந்தரஆதி இன்பமும் ஏகநின் கழல் இணை அலாது இலேன் எம்பிரான் ஆகம் விண்டு கம்பம் வந்து குஞ்சி அஞ்சலிக் கணே ஆக என் கை கண்கள் தாரை ஆறு அது ஆக ஐயனே. 76
82
ஐய நின்னது அல்லது இல்லை மற்று ஓர் பற்று வஞ்சனேன் பொய் கலந்தது அல்லது இல்லை பொய்மையேன் என்பிரான் மை கலந்த கண்ணி பங்க வந்து நின் கழல் கணே மெய் கலந்த அன்பர் அன்பு எனக்கும் ஆகவேண்டுமே. 77
83
வேண்டும் நின் கழல் கண் அன்பு பொய்மை தீர்த்து மெய்மையே ஆண்டு கொண்டு நாயினேனை ஆவ என்று அருளு நீ பூண்டு கொண்டு அடியனேனும் போற்றி போற்றி என்றும் என்றும் மாண்டு மாண்டு வந்து வந்து மன்ன நின் வணங்கவே. 78
84
வணங்கும் நின்னை மண்ணும் விண்ணும் வேதம் நான்கும் ஓலம் இட்டு உணங்கும் நின்னை எய்தல் உற்று மற்று ஓர் உண்மை இன்மையின் வணங்கியாம் விடேங்கள் என்ன வந்து நின்று அருளுதற்கு இணங்கு கொங்கை மங்கை பங்க என் கொலோ நினைப்பதே. 79
85
நினைப்பது ஆக சிந்தை செல்லும் எல்லை ஆய வாக்கினால் தினைத் தனையும் ஆவது இல்லை சொல்லல் ஆவ கேட்பவே அனைத்து உலகும் ஆய நின்னை ஐம்புலன்கள் காண்கிலா எனைத்து எனைத்து அது எப்புறத்து அது எந்தை பாதம் எய்தவே. 80
86
எய்தல் ஆவது என்று நின்னை எம்பிரான் இவ்வஞ்சனேற்கு உய்தல் ஆவது உன் கண் அன்றி மற்று ஓர் உண்மை இன்மையில் பைதல் ஆவது என்று பாதுகாத்து இரங்கு பாவியேற்கு ஈது அல்லாது நின்கண் ஒன்றும் வண்ணம் இல்லை ஈசனே. 81
87
ஈசனே நீ அல்லது இல்லை இங்கும் அங்கும் என்பதும் பேசினேன் ஓர் பேதம் இன்மை பேதையேன் என் எம்பிரான் நீசனேனை ஆண்டுகொண்ட நின்மலா ஓர் நின் அலால் தேசனே ஓர் தேவர் உண்மை சிந்தியாது சிந்தையே. 82
88
சிந்தை செய்கை கேள்வி வாக்குச் சீர் இல் ஐம்புலன்களால் முந்தை ஆன காலம் நின்னை எய்திடாத மூர்க்கனேன் வெந்து ஐயா விழுந்திலேன் என் உள்ளம் வெள்கி விண்டிலேன் எந்தை ஆய நின்னை இன்னம் எய்தல் உற்று இருப்பனே. 83
89
இருப்பு நெஞ்சம் வஞ்சனேனை ஆண்டு கொண்ட நின்னதாள் கருப்புமட்டு வாய் மடுத்து எனைக் கலந்து போகவும் நெருப்பும் உண்டு யானும் உண்டு இருந்தது உண்டது ஆயினும் விருப்பும் உண்டு நின்கண் என்கண் என்பது என்ன விச்சையே. 84
90
- ஆனந்த பரவரசம் (கலிநிலைத்துறை)
91
விச்சுக் கேடு பொய்க்கு ஆகாது என்று இங்கு இனை வைத்தாய் இச்சைக்கு ஆனார் எல்லாரும் வந்து உன்தாள் சேர்ந்தார் அச்சத்தாலே ஆழ்ந்திடுகின்றேன் ஆரூர் எம் மிச்சைத் தேவா என் நான் செய்தேன் பேசாயே. 85
92
பேசப்பட்டேன் நின் அடியாரில் திருநீறே பூசப்பட்டேன் பூதரால் உன் அடியான் என்று ஏசப்பட்டேன் இனிப்படுகின்றது அமையாதால் ஆசைப்பட்டேன் ஆட்பட்டேன் உன் அடியேனே. 86
93
அடியேன் அல்லேன் கொல்லோ தானெனை ஆட்கொண்டு இலை கொல்லோ அடியார் ஆனார் எல்லாரும் வந்து உன்தாள் சேர்ந்தார் செடிசேர் உடலம் இது நீக்கமாட்டேன் எங்கள் சிவலோகா கடியேன் உன்னைக் கண்ணாரக் காணுமாறு காணேனே. 87
94
காணுமாறு காணேன் உன்னை அந்நாள் கண்டேனும் பாணே பேசி என் தன்னைப் படுத்தது என்ன பரஞ்சோதி ஆணே பெண்ணே ஆர் அமுதே அத்தா செத்தே போயினேன் ஏண் நாண் இல்லா நாயினேன் என்கொண்டு எழுகேன் எம்மானே. 88
95
மான் நேர் நோக்கி உமையாள் பங்கா மறை ஈறு அறியா மறையானே தேனே அமுதே சிந்தைக்கு அரியாய் சிறியேன் பிழை பொறுக்கும் கோனே சிறிதே கொடுமை பறைந்தேன் சிவம் மாநகர் குறுகப் போனார் அடியார் யானும் பொய்யும் புறமே போந்தோமே. 89
96
புறமே போந்தோம் பொய்யும் யானும் மெய் அன்பு பெறவே வல்லேன் அல்லா வண்ணம் பெற்றேன் யான் அறவே நின்னைச் சேர்ந்த அடியார் மற்று ஒன்று அறியாதார் சிறவே செய்து வழிவந்து சிவனே நின்தான் சேர்ந்தாரே. 90
97
தாராய் உடையாய் அடியேற்கு உன்தான் இணை அன்பு போரா உலகம் புக்கார் அடியார் புறமே போந்தேன் யான் ஊர் ஆ மிலைக்கக் குருட்டு ஆமிலைத்து இங்கு உன்தான் இணை அன்புக்கு ஆராய் அடியேன் அயலே மயல் கொண்டு அழுகேனே. 91
98
அழுகேன் நின்பால் அன்பாம் மனம் ஆய் அழல் சேர்ந்த மெழுகே அன்னார் மின்ஆர் பொன் ஆர் கழல் கண்டு தொழுதே உன்னைத் தொடர்ந்தாரோடும் தொடராதே பழுதே பிறந்தேன் என் கொண்டு உன்னைப் பணிகேனே. 92
99
பணிவார் பிணி தீர்ந்து அருளிப் பழைய அடியார்க்கு உன் அணி ஆர் பாதம் கொடுக்கி அதுவும் அரிது என்றால் திணி ஆர் மூங்கில் அனையேன் வினையைப் பொடி ஆக்கித் தணி ஆர் பாதம் வந்து ஒல்லை தாராய் பொய்தீர் மெய்யானே. 93
100
யானே பொய் என்நெஞ்சும் பொய் என் அன்பும் பொய் ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே தேனே அமுதே கரும்பின் தெளிவே தித்திக்கும் மானே அருளாய் அடியேன் உனை வந்து உறுமாறே. 94
101
- ஆனந்த அதீதம் (எண்சீர் ஆசிரிய விருத்தம்)
102
மாறு இலாத மாக் கருணை வெள்ளமே வந்து முந்தி நின்மலர் கொள்தாள் இணை வேறு இலாப் பதம் பரிசு பெற்ற நின் மெய்ம்மை அன்பர் உன் மெய்ம்மை மேவினார் ஈறு இலாத நீ எளியை ஆகி வந்து ஒளி செய் மானுடம் ஆக நோக்கியும் கீறு இலாத நெஞ்சு உடையேன் ஆயினன் கடையன் நாயினன் பட்ட கீழ்மையே. 95
103
மை இலங்கு நல் கண்ணிப் பங்கனே வந்து என்னைப் பணிகொண்ட பின்மழக் கை இலங்கு பொன் கிண்ணம் என்று அலால் அரியை என்று உனைக் கருது கின்றேன் மெய் இலங்கு வெண் நீற்று மேனியாய் மெய்ம்மை அன்பர் உன் மெய்ம்மை மேவினார் பொய் இலங்கு எனைப் புகுதவிட்டு நீ போவதோ சொலாய் பொருத்தம் ஆவதே. 96
104
பொருத்தம் இன்மையேன் வஞ்சம் உண்மையேன் போதஎன்றுஎனைப் புரிந்து நோக்கவும் வருத்தம் இன்மையேன் வஞ்சம் உண்மையேன் மாண்டிலேன் மலர்க் கமல பாதனே அரத்த மேனியாய் அருள் செய் அன்பரும் நீயும் அங்கு எழுந்தருளி இங்கு எனை இருத்தினாய் முறையோ என் எம்பிரான் வம்பனேன் வினைக்கு இறுதி இல்லையே. 97
105
இல்லை நின் கழற்கு அன்பு அது என் கணே ஏலம் ஏலும் நல் குழலி பங்கனே கல்லை மென்கனி ஆக்கும் விச்சை கொண்டு என்னை நின் கழற்கு அன்பன் ஆக்கினாய் எல்லை இல்லை நின் கருணை எம்பிரான் ஏதுகொண்டு நான் ஏது செய்யினும் வல்லையே எனக்கு இன்னும் உன் கழல் காட்டி மீட்கவும் மறு இல் வானனே. 98
106
வான நாடரும் அறி ஒணாத நீ மறையில் ஈறும் முன் தொடர் ஒணாத நீ ஏனை நாடரும் தெரி ஒணாத நீ என்னை இன்னிதாய் ஆண்டு கொண்டவா ஊனை நாடகம் ஆடு வித்தவா உருகி நான் உனைப் பருக வைத்தவா ஞான நாடகம் ஆடு வித்தவா நைய வையகத்து உடைய விச்சையே. 99
107
விச்சு அது இன்றியே விளைவமு செய்குவாய் விண்ணும் மண்ணகம் முழுதும் யாவையும் வைச்சு வாங்குவாய் வஞ்சகப் பெரும் புலையனேனை உன்கோயில் வாயிலிற் பிச்சன்ஆக்கினாய் பெரிய அன்பருக்கு உரியன் ஆக்கினாய் தாம் வளர்த்தது ஓர் நச்சு மாமரம் ஆயினும் கொலார் நானும் அங்கனே உடைய நாதனே. 100
108
உடைய நாதனே போற்றி நின் அலால் பற்று மற்று எனக்கு ஆவது ஒன்று இனி உடையனே பணி போற்றி உம்பரார் தம் பராபரா போற்றி யாரினும் கடையன் ஆயினேன் போற்றி என் பெரும் கருணையாளனே போற்றி என்னை நின் அடியன் ஆக்கினாய் போற்றி ஆதியும் அந்தம் ஆயினாய் போற்றி அப்பனே. 101
109
அப்பனே எனக்கு அமுதனே ஆனந்தனே அகம்நெக அள் ஊறு தேன் ஒப்பனே உனக்கு அரிய அன்பரில் உரியனாய் உனைப் பருக நின்றது ஓர் துப்பனே சுடர் முடியனே துணை யாளனே தொழும்பாளர் எய்ப்பனில் வைப்பனே எனை வைப்பதோ சொலாய் நைய வையகத்து எங்கள் மன்னனே. 102
110
மன்ன எம்பிரான் வருக என் எனை மாலும் நான்முகத்து ஒருவன் யாரினும் முன்ன எம்பிரான் வருக என் எனை முழுதும் யாவையும் இறுதி உற்ற நான் பின்ன எம்பிரான் வருக என் எனைப் பெய் கழற் கண் அன்பாய் என் நாவினால் பன்ன எம்பிரான் வருக என் எனைப் பாவ நாச நின் சீர்கள் பாடவே. 103
111
பாடவேன்டும் நான் போற்றி நின்னையே பாடிநைந்துறைந்துறுகி நெக்குநெக்கு ஆடவேன்டும் நான் போற்றி அம்பலத் தாடுநின்கழற்போது நாயினேன் கூடவேண்டும் நான்போற்றி யிப்புழுக் கூடு நீக்கெனைப் போற்றி பொய்யெலாம் வீடவேண்டும் நான் போற்றி வீடுதந் தருளு போற்றிநின் மெய்யர் மெய்யனே. 104
112
திருச்சிற்றம்பலம்
திருச்சாழல்
1
(தில்லையில் அருளியது /நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)
2
பூசுவதும் வெண்ணீறு பூண்பதுவும் பொங்கரவம் பேசுவதும் திருவாயால் மறைபோலுங் காணேடீ? பூசுவதும் பேசுவதும் பூண்பதுவுங் கொண்டடென்னை ஈசனவன் எவ்வுயிர்க்கும் இயல்பானான் சாழலோ! 255
3
என்னப்பன் எம்பிரான் எல்லார்க்குந் தானீசன் துன்னம்பெய் கோவணமாக் கொள்ளுமது என்னேடீ? மன்னுகலை துன்னுபொருள் மறைநான்கே வான்சரடாத் தன்னையே கோவணமாச் சாத்தினன்காண் சாழலோ! 256
4
கோயில் சுடுகாடு கொல்புலித்தோல் நல்லாடை தாயுமிலி தந்தையிலி தான்தனியன் காணேடீ? தாயுமிலி தந்தையிலி தான்தனியன் ஆயிடினும் காயில் உலகனைத்துங் கற்பொடிகாண் சாழலோ! 257
5
அயனை, அனங்கனை, அந்தகனைச், சந்திரனை வயனங்கள் மாயா வடுச்செய்தான் காணேடீ? நயனங்கள் மூன்றுடைய நாயகனே தண்டித்தால் சயமன்றோ வானவர்க்குத் தாழ்குழலாய் சாழலோ! 258
6
தக்கனையும், எச்சையும் தலையறுத்துத் தேவர்கணம் தொக்கனவந்து அவர்தம்மைத் தொலைத்ததுதான் என்னேடீ? தொக்கனவந்து அவர்தம்மைத் தொலைத்தருளி அருள்கொடுத்தங்கு எச்சனுக்கு மிகைத்தலைமற்று அருளினன்காண் சாழலோ! 259
7
அலரவனும், மாலவனும் அறியாமே அழலுருவாய் நிலமுதற்கீழ் அண்டமுற நின்றதுதான் என்னேடீ? நிலமுதற்கீழ் அண்டமுற நின்றிலனேல் இருவருந்தம் சலமுகத்தால் ஆங்காரம் தவிரார்காண் சாழலோ! 260
8
மலைமகளை ஒருபாகம் வைத்தலுமே மற்றொருத்தி சலமுகத்தால் அவன்சடையிற் பாயுமது என்னேடீ? சலமுகத்தால் அவன்சடையிற் பாய்ந்திலளேல் தரணியெல்லாம் பிலமுகத்தே புகப்பாய்ந்து பெருங்கேடாஞ் சாழலோ! 261
9
கோலால மாகிக் குரைகடல்வாய் அன்றெழுந்த ஆலாலம் உண்டான் அவன்சதுர்தான் என்னேடீ? ஆலாலம் உண்டிலனேல் அன்றயன்மால் உள்ளிட்ட மேலாய தேவரெல்லாம் வீடுவர்காண் சாழலோ! 262
10
தென்பால் உகந்தாடுந் தில்லைச்சிற் றம்பலவன் பெண்பால் உகந்தான் பெரும்பித்தன் காணேடீ? பெண்பால் உகந்திலனேற் பேதாய் இருநிலத்தோர் விண்பாலி யோகெய்தி வீடுவர்காண் சாழலோ! 263
11
தானந்தம் இல்லான் தனையடைந்த நாயேனை ஆனந்த வெள்ளத்து அழுத்துவித்தான் காணேடீ? ஆனந்த வெள்ளத்து அழுத்துவித்த திருவடிகள் வானுந்து தேவர்கட்கோர் வான்பொருள்காண் சாழலோ! 264
12
நங்காய்! இதென்னதவம் நரம்போடு எலும்பணிந்து கங்காளந் தோள்மேலே காதலித்தான் காணேடீ? கங்காளம் ஆமாகேள் காலாந்த ரத்திருவர் தங்காலஞ் செய்யத் தரித்தனன்காண் சாழலோ! 265.
13
கானார் புலித்தோல் உடைதலைஊண் காடுபதி ஆனால் அவனுக்கிங்கு ஆட்படுவார் ஆரேடீ? ஆனாலும் கேளாய் அயனுந், திருமாலும், வானாடர் கோவும் வழியடியார் சாழலோ! 266
14
மலையரையன் பொற்பாவை வாள்நுதலாள் பெண்திருவை உலகறியத் தீவேட்டான் என்னுமது என்னேடீ? உலகறியத் தீவேளேது ஒழிந்தனனேல் உலகனைத்தும் கலைநவின்ற பொருள்களெல்லாம் கலங்கிடுங்காண் சாழலோ! 267
15
தேன்புக்க தண்பனைசூழ் தில்லைச்சிற் றம்பலவன் தான்புக்கு நட்டம் பயிலுமது என்னேடீ? தான்புக்கு நட்டம் பயின்றிலனேல் தரணியெல்லாம் ஊன்புக்க வேற்காளிக் கூட்டாங்காண் சாழலோ! 268
16
கடகரியும் பரிமாவும் தேரும்உகந்து ஏறாதே இடபம்உகந்து ஏறியவாறு எனக்கறிய இயம்பேடீ? தடமதில்கள் அவைமூன்றுந் தழலெரித்த அந்நாளில் இடபமதாய்த் தாங்கினான் திருமால்காண் சாழலோ! 269
17
நன்றாக நால்வர்க்கும் நான்மறையின் உட்பொருளை அன்றாலின் கீழிருந்தங்கு அறமுரைத்தான் காணேடீ? அன்றாலின் கீழிருந்தங்கு அறமுரைத்தான் ஆயிடினுங் கொன்றான்காண் புரமூன்றுங் கூட்டோடே சாழலோ! 270
18
அம்பலத்தே கூத்தாடி அமுதுசெயப் பலிதரியும் நம்பனையுந் தேவனென்று நண்ணுமது என்னேடீ? நம்பனையும் ஆமாகேள் நான்மறைகள் தாமறியா எம்பெருமான் ஈசாவென்று ஏத்தினகாண் சாழலோ! 271
19
சலமுடைய சலந்தரன்தன் உடல்தடிந்த நல்லாழி நலமுடைய நாரணற்கன்று அருளியவாறு என்னேடீ? நலமுடைய நாரணன்தன் நயனம்இடந்து அரனடிக்கீழ் அலராக இடஆழி அருளினன்காண் சாழலோ! 272
20
அம்பரமாம் புள்ளித்தோல் ஆலாலம் ஆரமுதம் எம்பெருமான் உண்டசதுர் எனக்கறிய இயம்பேடீ? எம்பெருமான் ஏதுடுத்தங்கு ஏதமுது செய்திடினும் தம்பெருமை தானறியாத் தன்மையன்காண் சாழலோ! 273
21
அருந்தவருக்கு ஆலின்கீழ் அறமுதலா நான்கினையும் இருந்தவருக்கு அருளுமது எனக்கறிய இயம்பேடீ?அருந்தவருக்கு அறமுதல்நான்கு அன்றருளிச் செய்திலனேல் திருந்தவருக்கு உலகியற்கை தெரியாகாண் சாழலோ! 274
22
திருச்சிற்றம்பலம்
திருத்தசாங்கம்
1
==திருத்தசாங்கம் விளக்கம்== திரு+தசம்+அங்கம் = திருத்தசாங்கம் ஆகும். அரசனுக்கு உரிய பெயர்,நாடு, ஊர்,ஆறு,மலை புரவி படை முரசு மாலை கொடி ஆகிய பத்து உறுப்புகளையும் போற்றிப் பாடுவது மரபாகும். அந்த மரபினைப் பின்பற்றி சிவனக்கு உரிய பத்து உறுப்புகளையும் மாணிக்கவாசகர் பாடுகின்றார். ==உசாத்துணை== புலவர் கருப்பூர் மு.அண்ணாமலை, திருவாசகம் தெளிவுரை, நான்காம் பதிப்பு ஏப்ரல் 2007- குமரன் பதிப்பகம் சென்னை.
திருத்தெள்ளேணம்
1
(தில்லையில் அருளியது- நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)
2
திருமாலும் பன்றியாய்ச் சென்றுணராத் திருவடியை
3
உருநாம் அறியவோர் அந்தணனாய் ஆண்டுகொண்டான்
4
ஒருநாமம் ஓருருவம் ஒன்றுமில்லாற் காயிரந்
5
திருநாமம் பாடிநாம் தெள்ளேணங் கொட்டாமோ.
6
திருவார் பெருந்துறை மேயபிரான் என்பிறவிக்
7
கருவேர் அறுத்தபின் யாவரையுங் கண்டதில்லை
8
அருவாய் உருவமும் ஆயபிரான் அவன்மருவும்
9
திருவாரூர் பாடிநாம் தெள்ளேணங் கொட்டாமோ.
10
அரிக்கும் பிரமற்கும் அல்லாத தேவர்கட்கும்
11
தெரிக்கும் படித்தன்றி நின்றசிவம் வந்துநம்மை
12
உருக்கும் பணிகொள்ளும் என்பதுகேட்டுலகமெல்லாம்
13
சிரிக்குந் திறம்பாடித் தெள்ளேணங் கொட்டாமோ.
14
அவமாய தேவர் அவகதியில் அழுந்தாமே
15
பவமாயங் காத்தென்னை ஆண்டுகொண்ட பரஞ்சோதி
16
நவமாய செஞ்சுடர் நல்குதலும் நாம்ஒழிந்து
17
சிவமான வாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ.
18
அருமந்த தேவர் அயன்திருமாற் கரியசிவம்
19
உருவந்து பூதலத்தோர் உகப்பெய்தக் கொண்டருளிக்
20
கருவெந்து வீழக் கடைக்கணித்தென் உளம்புகுந்த
21
திருவந்த வாபாடிக் தெள்ளேணங் கொட்டாமோ.
22
அரையாடு நாகம் அசைத்தபின் அவனியின்மேல்
23
வரையாடு மங்கைதன் பங்கொடும்வந் தாண்டதிறம்
24
உரையாட உள்ளொளியாட ஒண்மாமலர்க் கண்களில்நீர்த்
25
திரையாடு மாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ.
26
ஆவா அரிஅயன்இந்திரன் வானோர்க் கரியசிவன்
27
வாவாவென் றென்னையும் பூதலத்தேவலித்தாண்டுகொண்டான்
28
பூவார் அடிச்சுவ டென்தலைமேற் பொறித்தலுமே
29
தேவான வாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ.
30
கறங்கோலை போல்வதோர் காயப்பிறப்போ டிறப்பென்னும்
31
அறம்பாவ மென்றிரண்டச் சந்தவிர்த்தென்னை ஆண்டுகொண்டான்
32
மறந்தேயுந் தன்கழல்நான் மறவாவண்ணம் நல்கிய அத்
33
திறம்பாடல் பாடிநாம் தெள்ளேணங் கொட்டாமோ.
34
கல்நா ருரித்தென்ன என்னையுந்தன் கருணையினால்
35
பொன்னார் கழல்பணித் தாண்டபிரான் புகழ்பாடி
36
மின்னோர் நுடங்கிடைச் செந்துவர்வாய் வெண்ணகையீர்
37
தென்னா தென்னாவென்று தெள்ளேணங் கொட்டாமோ.
38
கனவேயுந் தேவர்கள் காண்பரிய கனைகழலோன்
39
புனவே யனவளைத் தோளியோடும் புகுந்தருளி
40
நனவே எனைப்பிடித்தாட் கொண்டவா நயந்துநெஞ்சம்
41
சினவேற்கண்நீர் மல்கத் தெள்ளேணங் கொட்டாமோ.
42
கயல்மாண்ட கண்ணிதன் பங்கன்எனைக்கலந் தாண்டலுமே
43
அயல்மாண்ட ருவினைச் சுற்றமுமாண்ட வனியினமேல்
44
மயல்மாண்டு மற்றுள்ள வாசகமாண் டென்னுடைய
45
செயல்மாண்ட வாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ.
46
முத்திக் குழன்று முனிவர்குழாம் நனிவாட
47
அத்திக் கருளி அடியேனை ஆண்டுகொண்டு
48
பத்திக் கடலுட் பதித்த பரஞ்சோதி
49
தித்திக்கு மாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ.
50
பார்பாடும் பாதாளர் பாடும்விண்ணோர் தம்பாடும்
51
ஆர்பாடுஞ் சாரா வகையருளி ஆண்டுகொண்ட
52
நேர்பாடல் பாடி நினைப்பரிய தனிப்பெரியோன்
53
சீர்பாடல் பாடிநாம் தெள்ளேணங் கொட்டாமோ.
54
மாலே பிரமனே மற்றொழிந்த தேவர்களே
55
நூலே நுழைவரியான் நுண்ணியனாய் வந்தடியேன்
56
பாலே புகுந்து பரிந்துருக்கும் பாவாகத்தால்
57
சேலேர்கண் நீர்மல்கத் தெள்ளேணங் கொட்டாமோ.
58
உருகிப் பெருகி உளங்குளிர முகந்துகொண்டு
59
பருகற் கினிய பரங்கருணைத் தடங்கடலை
60
மருவித் திகழ்தென்னன் வார்கழலே நினைந்தடியாம்
61
திருவைப் பரவிநாம் தெள்ளேணங் கொட்டாமோ.
62
புத்தன் பரந்தராதி யர்அயன்மேல் போற்றிசெயும்
63
பித்தன் பெருந்துறை மேயபிரான் பிறப்பறுத்த
64
அத்தன் அணிதில்லை அம்பலவண் அருட்கழல்கள்
65
சித்தம் புகுந்தவா தெள்ளேணங் கொட்டாமோ.
66
உவலைச் சமயங்கள் ஒவ்வாத சாத்திரமாம்
67
சவலைக் கடலுளனாய்க் கிடந்து தடுமாறும்
68
கவலைக் கெடுத்துக் கழலிணைகள் தந்தருளும்
69
செயலைப் பரவிநாம் தெள்ளேணங் கொட்டாமோ.
70
வான்கெட்டு மாருதம் மாய்ந்தழல்நீர் மண்கெடினும்
71
தான்கெட்ட லின்றிச் சலிப்பறியாத் தன்மையனுக்கு
72
ஊன்கெட் டுயிர்கெட்டுணவுகெட்டென் உள்ளமும்போய்
73
நான்கெட்ட வாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ.
74
விண்ணோர் முழுமுதல் பாதாளத் தார்வித்து
75
மண்ணோர் மருந்தயன் மாலுடைய வைப்படியோம்
76
கண்ணார வந்துநின்றான் கருணைக் கழல்பாடித்
77
தென்னாதென்னாவென்று தெள்ளேணங் கொட்டாமோ.
78
குலம்பாடிக் கொக்கிற கும்பாடிக் கோல் வளையாள்
79
நலம்பாடி நஞ்சுண்ட வாபாடி நாள்தோறும்
80
அலம்பார் புனல்தில்லை அம்பலத்தே ஆடுகின்ற
81
சிலம்பாடல் பாடிநாம் தெள்ளேணங் கொட்டாமோ.
82
திருச்சிற்றம்பலம்
திருத்தோள் நோக்கம்
1
(தில்லையில் அருளியது - நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)
திருப்படையாட்சி
1
(தில்லையில் அருளியது - பன்னிரு சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
2
கண்களிரண்டும் அவன்கழல் கண்டு களிப்பன ஆகாதே
3
காரிகை யார்கள்தம் வாழ்விலென் வாழ்வு கடைப்படும் ஆகாதே
4
மண்களில் வந்து பிறந்திடு மாறி மறந்திடும் ஆகாதே
5
மாலறி யாமலர்ப் பாதம் இரண்டும் வணங்குதும் ஆகாதே
6
பண்களி கூர்தரு பாடலொ டாடல் பயின்றிடும் ஆகாதே
7
பாண்டிநன்னாடுடை யான்படை யாட்சிகள் பாடுதும் ஆகாதே
8
விண்களி கூர்வதோர் வேதகம் வந்துவெளிப்படும் ஆகாதே
9
மீன்வலை வீசிய கானவன் வந்து வெளிப்படும் ஆயிடிலே.
10
ஒன்றினொ டொன்றுமோ ரைந்தினொ டைந்தும் உயிர்ப்பது மாகாதே
11
கன்றை நினைந்தெழு தாயென வந்த கணக்கது வாகாதே
12
காரணமாகும் அனாதி குணங்கள் கருத்தறு மாகாதே
13
நன்றிது தீதென வந்த நடுக்கம் நடந்தன வாகாதே
14
நாமுமெ லாமடி யாருட னேசெல நண்ணினு மாகாதே
15
என்றுமென் அன்பு நிறைந்த பராவமு தெய்துவ தாகாதே
16
ஏறுடை யான்எனை ஆளுடை நாயகன் என்னுள் புகுந்திடிலே.
17
பந்த விகார குணங்கள் பறிந்து மறிந்திடு மாகாதே
18
பாவனை யாய கருத்தினில் வந்த பராவமு தாகாதே
19
அந்த மிலாத அகண்டமும் நம்முள் அகப்படு மாகாதே
20
ஆதி முதற்பா மாய பரஞ்சுடர் அண்ணுவ தாகாதே
21
செந்துவர் வாய்மட வாரிட ரானவை சிந்திடு மாகாதே
22
சேலன கண்கள் அவன்திரு மேனி திளைப்பன வாகாதே
23
இந்திர ஞால இடர்ப்பிற வித்துய ரேகுவ தாகாதே
24
என்னுடைய நாயக னாகியஈசன் எதிர்ப்படு மாயிடிலே.
25
என்னணி யார்முலை ஆகம் அளைந்துடன் இன்புறு மாகாதே
26
எல்லையில் மாக்கரு ணைக்கடல் இன்றினி தாடுது மாகாதே
27
நன்மணி நாதம் முழங்கியென் உள்ளுற நண்ணுவ தாகாதே
28
நாதன் அணித்திரு நீற்றினை நித்தலும் நண்ணுவ தாகாதே
29
மன்னிய அன்பரில் என்பணி முந்துற வைகுவ தாகாதே
30
மாமறை யும் அறியாமலர்ப் பாதம் வணங்குது மாகாதே
31
இன்னியற் செங்கழு நீர்மலர் என்தலை எய்துவ தாகாதே
32
என்னை யுடைப்பெரு மான் அருள் ஈசன் எழுந்தரு ளப்பே றிலே.
33
மண்ணினில் மாயை மதித்து வகுத்த மயக்கறு மாகாதே
34
வானவ ரும்அறி யாமலர்ப் பாதம் வணங்குது மாகாதே
35
கண்ணிலி காலம் அனைத்தினும் வந்த கலக்கறு மாகாதே
36
காதல்செயும் அடியார்மனம் இன்று களித்திடு மாகாதே
37
பெண்ணலி ஆணென நாமென வந்த பிணக்கறு மாகாதே
38
பேரறி யாத அனேக பவங்கள் பிழைத்தன ஆகாதே
39
எண்ணிலி யாகிய சித்திகள் வந்தெனை எய்துவ தாகாதே
40
என்னையுடைப் பெருமான் அருள் ஈசன் எழுந்தருளப் பெறிலே.
41
பொன்னிய லுந்திரு மேனிவெண் ணீறு பொலிந்திடு மாகாதே
42
பூமழை மாதவர் கைகள் குவிந்து பொழிந்திடு மாகாதே
43
மின்னியல் நுண்ணிடை யார்கள் கருத்து வெளிப்படுமாகாதே
44
வீணை முரன்றெழும் ஓசையில் இன்பம் மிகுத்திடு மாகாதே
45
தன்னடி யாரடி என்தலை மீது தழைப்பன ஆகாதே
46
தானடி யோம் உடனேயுயவந் தலைப்படு மாகாதே
47
இன்னியம் எங்கும் நிறைந்தினி தாக இயம்பிடு மாகாதே
48
என்னைமுன் ஆளுடை ஈசன்என் அத்தன் எழுந்தரு ளப்பெறிலே.
49
சொல்லிய லாதெழு தூமணி யோசை சுவைதரு மாகாதே
50
துண்ணென என்னுளம் மன்னியசோதி தொடர்ந்தெழு மாகாதே
51
பல்லியல் பாயப் பரப்பற வந்த பராபர மாகாதே
52
பண்டறி யாதப ரானுப வங்கள் பரந்தெழு மாகாதே
53
வில்லியல் நன்னுத லார்மயல் இன்று விளைந்திடு மாகாதே
54
விண்ணவரும் அறியாத விழுப்பொருள் இப்பொரு ளாகாதே
55
எல்லையி லாதன எண்குண மானவை எய்திடு மாகாதே
56
இந்து சிகாமணி எங்களை ஆள எழுந்திரு ளப் பெறிலே.
57
சங்கு திரண்டு முரன்றெழும் ஓசை தழைப்பன ஆகாதே
58
சாதிவி டாதகுணங்கள் நம்மோடு சலித்திடு மாகாதே
59
அங்கிது நன்றிது நன்றெனு மாயை அடங்கிடு மாகாதே
60
ஆசைஎலாம் அடியாரடியோய் எனும் அத்தனை யாகாதே
61
செங்கயல் ஒண்கண்மடந்தையர் சிந்தை திளைப்பன ஆகாதே
62
சீரடியார்கள் சிவானுப வங்கள் தெரித்திடு மாகாதே
63
எங்கும் நிறைந்தமு தூறு பரஞ்சுடர் எய்துவ தாகாதே
64
ஈறறி யாமறை யோன் எனைஆள எழுந்தரு ளப் பெறிலே.
65
திருச்சிற்றம்பலம்
திருப்பள்ளியெழுச்சி
1
:மாணிக்கவாசக சுவாமிகள் திருப்பெருந்துறையில் (இன்றைய ஆவுடையார் கோவில்) எழுந்தருளியிருந்தபோது, விடியற்காலத்தில் இறைவனைத் துயில் எழுப்புவதாகத் திருப்பள்ளியெழுச்சி என்னும் இதனை அருளிச் செய்தார். திருப்பள்ளியெழுச்சி என்பது, 'சுப்ரபாதம்' என வடமொழியில் வழங்கும். வைகறையில்-அதிகாலைப் பொழுதில்- இருள்நீங்க ஒளி எழுவதுபோல, ஆன்மாக்களுடைய திரோதானமலம் அகல ஞானவொளி வெளிப்படுகின்ற முறைமையை இப்பாடல்கள் குறிக்கின்றன. மேலும், இது நம்முள் உறங்கும் இறைவனைத் துயில் எழுப்புவதுமாம்.
2
போற்றி ! என்வாழ் முதல் ஆகிய பொருளே! புலர்ந்தது ; பூங்கழற் கிணைதுணை மலர்கொண்டு
3
ஏற்றிநின் திருமுகத்து எமக்கருள் மலரும் எழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம்!
4
சேற்றிதழ்க் கமலங்கண் மலரும்தண் வயல்சூழ் திருப்பெருந் துறையுறை சிவபெருமானே!
5
ஏற்றுயர் கொடியுடையாய்! எனை உடையாய்! எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே !
6
அருணன் இந்திரன் திசை அணுகினன்! இருள்போய் அகன்றது; உதயம் நின் மலர்த் திரு முகத்தின்
7
கருணையின் சூரியன் எழ எழ, நயனக் கடிமலர் மலர மற்றண்ணல் அங்கண்ணாம்
8
திரள் நிரை அறுபதம் முரல்வன ;இவையோர் திருப்பெருந் துறையுறை சிவபெருமானே!
9
அருள் நிதி தரவரும் ஆனந்த மலையே! அலைகடலே பள்ளி எழுந்தருளாயே!
10
கூவின பூங்குயில்;கூவின கோழி; குருகுகள் இயம்பின; இயம்பின சங்கம்;
11
ஓவின தாரகை ஒளி; ஒளி உதயத்து ஒருப்படுகின்றது; விருப்பொடு நமக்குத்
12
தேவ! நற் செறிகழற் றாளிணை காட்டாய்; திருப்பெருந் துறையுறை சிவபெருமானே!
13
யாவரும் அறிவரியாய்; எமக்கெளியாய் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே !
14
இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்! இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்;
15
துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்; தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்;
16
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்; திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே!
17
என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும் எம்பெருமான் பள்ளி எழுந்தரு ளாயே !
18
"பூதங்கள் தோறும் நின்றாய்! "எனின் அல்லால் "போக்கிலன் வரவிலன்" என நினைப் புலவோர்
19
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால் கேட்டறியோம் உனைக் கண்டறிவாரைச்
20
சீத்ங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா! சிந்தனைக் கும் அரியாய்!எங்கண் முன்வந்து
21
ஏதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே !
22
பப்பற வீட்டிருந் துணரும் நின் அடியார் பந்தனை வந்தறுத்தார் அவர் பலரும்
23
மைப்புறு கண்ணியர் மானுடத்தியல்பின் வணங்குகின்றார் அணங்கின் மணவாளா!
24
செப்புறு கமலம் கண் மலருந்தண்வயல் சூழ் திருப்பெருந் துறையுறை சிவபெருமானே!
25
இப்பிறப் பறுத்தெமை ஆண்டருள் புரியும் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே !
26
அதுபழச் சுவையென அமுதென அறிதற்கு அரிதென எளிதென அமரரும் அறியார் ;
27
இதுஅவன் திருவுரு,இவன் அவன் எனவே எங்களை ஆண்டுகொண்டு இங்கெழுந்தருளும்
28
மதுவளர் பொழில்திரு உத்தரகோச மங்கையுள்ளாய்! திருப்பெருந்துறை மன்னா!
29
எது எமைப் பணிகொள்ளும் ஆறு?அது கேட்போம்; எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே !
30
முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய்! மூவரும் அறிகிலர் யாவர் மற்று அறிவார்?
31
பந்தணை விரலியும் நீயும் நின் அடியார் பழங்குடில் தொறும் எழுந்தருளிய பரனே!
32
செந்தழல் புரைதிரு மேனியும் காட்டித் திருப்பெருந்துறை யுறை கோயிலும் காட்டி
33
அந்தணன் ஆவதும் காட்டிவந்து ஆண்டாய்! ஆரமுதே! பள்ளி எழுந்தருளாயே!
34
விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா விழுப் பொருளே! உனதொழுப் படியோங்கள்
35
மண்ணகத்தே வந்து வாழச் செய்தானே வண்திருப் பெருந்துறையாய் வழி அடியோம்
36
கண்ணகதே நின்று களிதரு தேனே! கடலமுதே!கரும்பே!விரும்படியார்
37
எண்ணகத்தாய்! உலகுக்கு உயிரானாய்! எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே !
38
"புவனியிற் போய் பிறவாமையின் நாள் நாம் போக்குகின்றோம் அவமே இந்தப் பூமி
39
சிவன் உய்யக் கொள்கின்ற வாறென்று" நோக்கித் திருப்பெருந் துறையுறைவாய்!திருமாலாம்
40
அவன் விருப்பெய்தவும் மலரவன் ஆசைப் படவும் நின் அலர்ந்த மெய்க் கருணையும் நீயும்
41
அவனியிற் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்! ஆரமுதே பள்ளி எழுந்தருளாயே!
42
திருச்சிற்றம்பலம்
திருப்பாண்டிப் பதிகம்
1
திருப்பாண்டிப் பதிகம்
2
பரு வரை மங்கை தன் பங்கரை, பாண்டியற்கு ஆர் அமுது ஆம் ஒருவரை, ஒன்றும் இலாதவரை, கழல் போது இறைஞ்சி, தெரிவர நின்று, உருக்கி, பரி மேற்கொண்ட சேவகனார் ஒருவரை அன்றி, உருவு அறியாது என் தன் உள்ளம் அதே.
3
சதுரை மறந்து, அறி மால் கொள்வர் சார்ந்தவர்; சாற்றிச் சொன்னோம்; கதிரை மறைத்தன்ன சோதி, கழுக்கடை கைப் பிடித்து, குதிரையின் மேல் வந்து கூடிடுமேல், குடி கேடு கண்டீர்! மதுரையர் மன்னன் மறு பிறப்பு ஓட மறித்திடுமே.
4
நீர் இன்ப வெள்ளத்துள் நீந்திக் குளிக்கின்ற நெஞ்சம் கொண்டீர்; பார் இன்ப வெள்ளம் கொள, பரி மேற்கொண்ட பாண்டியனார், ஓர் இன்ப வெள்ளத்து உருக் கொண்டு, தொண்டரை உள்ளம் கொண்டார்; பேர் இன்ப வெள்ளத்துள், பெய் கழலே சென்று பேணுமினே.
5
செறியும் பிறவிக்கு நல்லவர் செல்லல்மின்; தென்னன், நல் நாட்டு இறைவன், கிளர்கின்ற காலம் இக் காலம், எக் காலத்துள்ளும்; அறிவு ஒண் கதிர் வாள் உறை கழித்து, ஆனந்த மாக் கடவி, எறியும் பிறப்பை, எதிர்ந்தார் புரள, இரு நிலத்தே.
6
காலம் உண்டாகவே, காதல் செய்து உய்ம்மின்; கருது அரிய ஞாலம் உண்டானொடு, நான்முகன், வானவர், நண் அரிய ஆலம் உண்டான்; எங்கள் பாண்டிப் பிரான்; தன் அடியவர்க்கு மூல பண்டாரம் வழங்குகின்றான்: வந்து, முந்துமினே.
7
ஈண்டிய மாயா இருள் கெட, எப் பொருளும் விளங்க, தூண்டிய சோதியை, மீனவனும் சொல்ல வல்லன் அல்லன்; வேண்டிய போதே விலக்கு இலை வாய்தல்; விரும்புமின் தாள்; பாண்டியனார் அருள்செய்கின்ற முத்திப் பரிசு இதுவே.
8
மாய வனப் பரி மேற்கொண்டு, மற்று அவர் கைக்கொளலும், போய் அறும், இப் பிறப்பு என்னும் பகைகள்: புகுந்தவருக்கு, ஆய, அரும் பெரும், சீர் உடைத் தன் அருளே அருளும்: சேய நெடும் கொடைத் தென்னவன் சேவடி சேர்மின்களே.
9
அழிவு இன்றி நின்றது ஒர் ஆனந்த வெள்ளத்திடை அழுத்தி, கழிவு இல் கருணையைக் காட்டி, கடிய வினை அகற்றி, பழ மலம் பற்று அறுத்து, ஆண்டவன், பாண்டிப் பெரும் பதமே, முழுது உலகும், தருவான், கொடையே; சென்று முந்துமினே.
10
விரவிய தீ வினை மேலைப் பிறப்பு முந்நீர் கடக்கப், பரவிய அன்பரை, என்பு உருக்கும் பரம் பாண்டியனார், புரவியின் மேல் வர, புந்தி கொளப்பட்ட பூம் கொடியார் மர இயல் மேற்கொண்டு, தம்மையும் தாம் அறியார், மறந்தே.
11
கூற்றை வென்று, ஆங்கு ஐவர் கோக்களையும் வென்று இருந்து, அழகால் வீற்றிருந்தான், பெரும் தேவியும், தானும் ஒர் மீனவன்பால் ஏற்று வந்து, ஆர் உயிர் உண்ட, திறல் ஒற்றைச் சேவகனே; தேற்றம் இலாதவர்! சேவடி சிக்கெனச் சேர்மின்களே.
திருப்பூவல்லி
1
மாயா விசயம் நீக்குதல்
2
(தில்லையில் அருளியது - நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)
3
இணையார் திருவடி என்தலைமேல் வைத்தலுமே துணையான சுற்றங்கள் அத்தனையும் துறந்தொழிந்தேன் அணையார் புனற்றில்லை அம்பலத்தே ஆடுகின்ற புணையாளன் சீர்பாடிப் பூவல்லி கொய்யாமோ. 275
4
எந்தையெந் தாய்சுற்றம் மற்றுமெல்லாம் என்னுடைய பந்தம் அறுந்தென்னை ஆண்டுகொண்ட பாண்டிப்பிரான் அந்த இடைமருதில் ஆனந்தத் தேனிருந்த பொந்தைப் பரவிநாம் பூவல்லி கொய்யாமோ. 276
5
நாயிற் கடைப்பட்ட நம்மையுமோர் பொருட்படுத்துத் தாயிற் பெரிதுங் தயாவுடைய தம்பொருமான் மாயப் பிறப்பறுந் தாண்டானென் வல்வினையின் வாயிற் பொடியட்டிப் பூவல்லி கொய்யாமோ. 277
6
பண்பட்ட தில்லைப் பதிக்கரசைப் பரவாதே எண்பட்ட தக்கன் அருக்கன் எச்சன் இந்துஅனல் விண்பட்ட பூதப் படைவீர பத்திரரால் புண்பட்ட வாபாடிப் பூவல்லி கொய்யாமோ. 278
7
தேனாடு கொன்றை சடைக்கணிந்த சிவபெருமான் ஊனாடி நாடிவந் துள்புகுந்தான் உலகர்முன்னே நானாடி ஆடிநின் றோலமிட நடம்பயிலும் வானாடர் கோவுக்கே பூவல்லி கொய்யாமோ. 279
8
எரிமூன்று தேவர்க் கிரங்கியருள் செய்தருளிச் சிரமூன் றறத்தன் திருப்புருவம் நெரித்தருளி உருமூன்று மாகி உணர்வரிதாம் ஒருவனுமே புரமூன் றெரித்தவா பூவல்லி கொய்யாமோ. 280
9
வணங்கத் தலை வைத்து வார்கழல்வாய் வாழ்த்தவைத்து இணங்தத்தன் சீரடியார் கூட்டமும்வைத் தெம்பெருமான் அணங்கொடணிதில்லை அம்பலத்தே ஆடுகின்ற குணங் கூரப் பாடிநாம் பூவல்லி கொய்யாமோ. 281
10
நெறிசெய் தருளித்தன் சீரடியார் பொன்னடிக்கே குறிசெய்து கொண்டென்னை ஆண்டபிரான் குணம்பரவி முறிசெய்து நம்மை முழுதுடற்றும் பழவினையைக் கிறிசெய்த வாபாடிப் பூவல்லி கொய்யாமோ. 282
11
பன்னாட் பரவிப் பணிசெய்யப் பாதமலர் என்ஆகம் துன்னவைத்த பெரியோன் எழிற்சுடராய்க் கல்நா ருரித்தென்னை யாண்டுகொண்டான் கழலிணைகள் பொன்னான வாபாடிப் பூவல்லி கொய்யாமோ. 283
12
பேராசை யாமிந்தப் பிண்டமறப் பெருந்துறையான் சீரார் திருவடி யென் தலைமேல் வைத்தபிரான் காரார் கடல்நஞ்சை உண்டுகந்த காபாலி போரார் புறம்பாடிப் பூவல்லி கொய்யாமோ. 284
13
பாலும் அமுதமுந் தேனுடனாம் பராபரமாய்க் கோலங் குளிர்ந்துள்ளங் கொண்டபிரான் குரைகழல்கள் ஞாலம் பரவுவார் நன்னெறியாம் அந்நெறியே போலும் புகழ்பாடிப் பூவல்லி கொய்யாமோ. 285
14
வானவன் மாலயன் மற்றுமுள்ள தேவர்கட்கும் கோனவ னாய் நின்று கூடலிலாக் குணங்குறியோன் ஆன நெடுங்கடல் ஆலாலம் அமுதுசெய்யப் போனகம் ஆனவா பூவல்லி கொய்யாமோ. 286
15
அன்றால நீழற்கீழ் அருமறைகள் தானருளி நன்றாக வானவர் மாமுனிவர் நாள்தோறும் நின்றார ஏத்தும் நிறைகழலோள் புனைகொன்றைப் பொன்தாது பாடிநாம் பூவல்லி கொய்யாமோ. 287
16
படமாக என்னுள்ளே தன்னிணைப்போ தவையளித்திங் கிடமாகக் கொண்டிருந் தேகம்பம் மேயபிரான் தடமார் மதில்தில்லை அம்பலமே தானிடமா நடமாடு மாபாடிப் பூவல்லி கொய்யாமோ. 288
17
அங்கி அருக்கன் இராவணன் அந்தகன் கூற்றன் செங்கண் அரிஅயன் இந்திரனுஞ் சந்திரனும் பங்கமில் தக்கனும் எச்சனுந்தம் பரிசழியப் பொங்கியசீர் பாடிநாம் பூவல்லி கொய்யாமோ. 289
18
திண்போர் விடையான் சிவபுரத்தார் போரேறு மண்பால் மதுரையிற் பிட்டமுது செய்தருளித் தண்டாலே பாண்டியன் தன்னைப் பணிகொண்ட புண்பாடல் பாடிநாம் பூவல்லி கொய்யாமோ. 290
19
முன்னாய மாலயனும் வானவரும் தானவரும் பொன்னார் திருவடி தாமறியார் போற்றுவதே என்னாகம் உள்புகுந் தாண்டு கொண்டான் இலங்கணியாம் பன்னாகம் பாடிநாம் பூவல்லி கொய்யாமோ. 291
20
சீரார் திருவடித் திண்சிலம்பு சிலம்பொலிக்கே ஆராத ஆசையதாய் அடியேன் அகமகிழத் தேராந்த வீதிப் பெருந்துறையான் திருநடஞ்செய் பேரானந் தம்பாடிப் பூவல்லி கொய்யாமோ. 292
21
அத்தி யுரித்தது போர்த்தருளும் பெருந்துறையான் பித்த வடிவுகொண் டிவ்வுலகிற் பிள்ளையுமாம் முத்தி முழுமுதலுத் தரகோச மங்கைவள்ளல் புத்தி புகுந்தவா பூவல்லி கொய்யாமோ. 293
22
மாவார வேறி மதுரைநகர் புகுந்தருளித் தேவார்ந்த கோலந் திகழப் பெருந்துறையான் கோவாகி வந்தெம்மைக் குற்றவேல் கொண்டருளும் பூவார் கழல்பரவிப் பூவல்லி கொய்யாமோ. 294
23
திருச்சிற்றம்பலம்
திருப்பொற் சுண்ணம்
1
== திருப்பொற் சுண்ணம் == ஆனந்த மனோலயம்
2
(தில்லையில் அருளியது - அறுசீர் ஆசிரிய விருத்தம்)
3
முத்துநல் தாழம்பூ மாலைதூக்கி
4
முளைக்குடந் தூபம்நல் தீபம்வைம்மின்
5
சத்தியும் சோமியும் பார்மகளும்
6
நாமகளோடுபல்லாண்டிசைமின்
7
சித்தியுங் கௌரியும் பார்ப்பதியும்
8
கங்கையும் வந்து கவரிகொண்மின்
9
அத்தன் ஐயாறன்அம்மானைபாடி
10
ஆடப்பொற் சுண்ணம் இடித்துநாமே. 8
11
திருப்பொற் சுண்ணம்/உரை 1-8
12
பூவியல் வார்சடை எம்பிராற்குப்
13
பொற்றிருச் சுண்ணம் இடிக்கவேண்டும்
14
மாவின் வடுவகி ரன்ன கண்ணீர்
15
வம்மின்கள் வந்துடன் பாடுமின்கள்
16
கூவுமின் தொண்டர் புறநிலாமே
17
குனிமின் தொழுமினெங் கோனெங்கூத்தன்
18
தேவியுந் தானும்வந்தெம்மையாளச்
19
செம்பொன்செய் சுண்ணம் இடித்துநாமே. 16
20
திருப்பொற் சுண்ணம்/உரை 9-16
21
சுந்தர நீறணிந் தும்மெழுகித்
22
தூயபொன்சிந்தி நிதிபரப்பி
23
இந்திரன் கற்பகம் நாட்டியெங்கும்
24
எழிற்சுடர் வைத்துக் கொடியெடுமின்
25
அந்தரர் கோன்அயன் தன்பெருமான்
26
ஆழியான் நாதன்நல் வேலன்தாதை
27
எந்தரம் ஆளுமை யாள்கொழுநற்
28
கேய்ந்த பொற்சுண்ணம் இடித்துநாமே. 24
29
திருப்பொற் சுண்ணம்/உரை 17-24
30
காசணி மின்கள் உலக்கையெல்லாம்
31
காம்பணி மின்கள் கறையுரலை
32
நேசமுடைய அடியவர்கள்
33
நின்று நிலாவுக என்றுவாழ்த்தித்
34
தேசமெல்லாம் புகழ்ந் தாடுங் கச்சித்
35
திருவேகம் பன்செம்பொற் கோயில்பாடிப்
36
பாசவினையைப் பறித்துநின்று
37
பாடிப் பொற்சுண்ணம் இடித்துநாமே. 32
38
திருப்பொற் சுண்ணம்/உரை 25-32
39
அறுகெடுப்பார் அயனும்அரியும்
40
அன்றிமற்றிந்திர னோடமரர்
41
நறுமுறு தேவர்கணங்கெளெல்லாம்
42
நம்மிற்பின் பல்லதெடுக்க வொட்டோம்
43
செறிவுடை மும்மதில் எய்தவில்லி
44
திருவேகம் பன்செம்பொற் கோயில்பாடி
45
முறுவற்செவ் வாயினீர் முக்கணப்பற்
46
காடப்பொற்சுண்ணம் இடித்துநாமே. 40
47
திருப்பொற் சுண்ணம்/உரை 33-40
48
உலக்கை பலவோச்சு வார்பெரியர்
49
உலகமெலாம்உரல் போதாதென்றே
50
கலக்க அடியவர் வந்துநின்றார்
51
காண உலகங்கள் போதாதென்றே
52
நலக்க அடியோமை ஆண்டுகொண்டு
53
நாண்மலர்ப் பாதங்கள் சூடந்தந்த
54
மலைக்கு மருகனைப் பாடிப்பாடி மகிழ்ந்து
55
பொற்சுண்ணம் இடிந்துநாமே. 48
56
திருப்பொற் சுண்ணம்/உரை 41-48
57
சூடகந் தோள்வரை ஆர்ப்ப ஆர்ப்பத்
58
தொண்டர் குழாமெழுந் தார்ப்ப ஆர்ப்ப
59
நாடவர் நந்தம்மை ஆர்ப்ப ஆர்ப்ப
60
நாமும் அவர்தம்மை ஆர்ப்ப ஆர்ப்பப்
61
பாடக மெல்லடி யார்க்கு மங்கை
62
பங்கினன் எங்கள் பராபரனுக்கு
63
ஆடக மாமலை அன்னகோவுக்
64
காடப் பொற்சுண்ணம் இடித்துநாமே. 56
65
திருப்பொற் சுண்ணம்/உரை 49-56
66
வாள்த்தடங்கண்மட மங்கைநல்லீர்
67
வரிவளை ஆர்ப்பவண் கொங்கைபொங்கத்
68
தோள்திரு முண்டந் துதைந்திலங்கச்
69
சோத்தெம்பி ரானென்று சொல்லிச்சொல்லி
70
நாட்கோண்ட நாண்மலர்ந் பாதங்காட்டி
71
நாயிற் கடைப்பட்ட நம்மையிம்மை
72
ஆட்கொண்ட வண்ணங்கள் பாடிப்பாடி
73
ஆடப் பொற்சுண்ணம் இடித்துநாமே. 64
74
திருப்பொற் சுண்ணம்/உரை 57-64
75
வையகம் எல்லாம் உரலதாக
76
மாமேரு என்னும் உலக்கை நாட்டி
77
மெய்யெனும் மஞ்சள் நிறைய அட்டி
78
மேதரு தென்னன் பெருந்துறையான்
79
செய்ய திருவடி பாடிப்பாடிச்
80
செம்பொன் உலக்கை வலக்கைபற்றி
81
ஐயன் அணிதில்லை வாணனுக்கே
82
ஆடப்பொற்சுண்ணம் இடித்துநாமே. 72
83
திருப்பொற் சுண்ணம்/உரை 65-72
84
முத்தணி கொங்கைகள் ஆடஆட
85
மொய்குழல் வண்டினம் ஆடஆடச்
86
சித்தஞ் சிவனொடும் ஆடஆடச்
87
செங்கயற் கண்பனி ஆடஆடப்
88
பித்தெம் பிரானொடும் ஆடஆடப்
89
பிறவி பிறரொடும் ஆடஆட
90
அத்தன் கருணையொ டாடஆட
91
ஆடப்பொற்சுண்ணம் இடித்துநாமே. 80
92
திருப்பொற் சுண்ணம்/உரை 73-80
93
மாடு நகைவாள் நிலாவெறிப்ப
94
வாய்திறந் தம்பவ ளந்துடிப்பப்
95
பாடுமின் நந்தம்மை ஆண்டவாறும்
96
பணிகொண்ட வண்ணமும் பாடிப்பாடித்
97
தேடுமின் எம்பெருமானைத்தேடி
98
சித்தங் களிப்பத் திகைத்துத்தேறி
99
ஆடுமின் அம்பலத் தாடினானுக்
100
காடப்பொற்சுண்ணம் இடித்துநாமே. 88
101
திருப்பொற் சுண்ணம்/உரை 81-88
102
மையமர் கண்டனை வானநாடர்
103
மருந்தினை மாணிக்கக் கூத்தன்தன்னை
104
ஐயனை ஐயர்பிரானைநம்மை
105
அகப்படுத் தாட்கொண் டருமைகாட்டும்
106
பொய்யர் தம் பொய்யனை மெய்யர் மெய்யைப்
107
போதரிக் கண்ணினைப் பொற்றொடித்தோள்
108
பையர வல்குல் மடந்தைநல்லீர்
109
பாடிப் பொற்சுண்ணம் இடித்துநாமே. 96
110
திருப்பொற் சுண்ணம்/உரை 89-96
111
மின்னிடைச் செந்துவர் வாய்க்கருங்கண்
112
வெண்ணகைப் பண்ணமர் மென்மொழியீர்
113
என்னுடை ஆரமுதெங்களப்பன்
114
எம்பெருமான் இம வான்மகட்குத்
115
தன்னுடைக் கேள்வன் மகன்தகப்பன்
116
தமையன்எம் ஐயன் தாள்கள் பாடிப்
117
பொன்னுடைப் பூண்முலை மங்கைநல்லீர்
118
பொற்றிருச்சுண்ணம் இடித்துநாமே. 104
119
திருப்பொற் சுண்ணம்/உரை 97-104
120
சங்கம் அரற்றச் சிலம்பொலிப்பத்
121
தாழ்குழல் சூழ்தரு மாலையாடச்
122
செங்கனி வாயிதழுந்துடிப்பச்
123
சேயிழை யீர் சிவலோகம் பாடிக்
124
கங்கை இரைப்ப அராஇரைக்குங்
125
கற்றைச் சடைமுடி யான்கழற்கே
126
பொங்கிய காதலிற் கொங்கை பொங்கப்
127
பொற்றிருச்சுண்ணம் இடித்துநாமே. 112
128
திருப்பொற் சுண்ணம்/உரை 105-112
129
ஞானக் கரும்பின் தெளியைப் பாகை
130
நாடற் கரிய நலத்தை நந்தாத்
131
தேனைப் பழச்சுவை ஆயினானைச்
132
சித்தம் புகுந்துதித் திக்கவல்ல
133
கோனைப் பிறப்பறுத் தாண்டுகொண்ட
134
கூத்தனை நாத்தழும் பேறவாழ்த்திப்
135
பானல் தடங்கண் மடந்தைநல்லீர்
136
பாடிப்பொற்சுண்ணம் இடித்துநாமே. 120
137
திருப்பொற் சுண்ணம்/உரை 113-120
138
ஆவகை நாமும் வந்தன்பர்தம்மோ
139
டாட்செய்யும் வண்ணங்கள் பாடிவிண்மேல்
140
தேவர் கனாவிலுங் கண்டறியாச்
141
செம்மலர்ப் பாதங்கள் காட்டுஞ் செல்வச்
142
சேவகம் ஏந்திய வெல்கொடியான்
143
சிவபெரு மான் புரஞ் செற்றகொற்றச்
144
சேவகன் நாமங்கள் பாடிப்பாடிச்
145
செம்பொன் செய்சுண்ணம் இடித்துநாமே. 128
146
திருப்பொற் சுண்ணம்/உரை 121-128
147
தேனக மாமலர்க் கொன்றைபாடிச்
148
சிவபுரம் பாடித் திருச்சடைமேல்
149
வானக மாமதிப் பிள்ளைபாடி
150
மால்விடை பாடி வலக்கையேந்தும்
151
ஊனக மாமழுச் சூலம்பாடி
152
உம்பரும் இம்பரும் உய்யஅன்று
153
போனக மாகநஞ் சுண்டல்பாடிப்
154
பொற்றிச்சுண்ணம் இடித்துநாமே. 136
155
திருப்பொற் சுண்ணம்/உரை 129-136
156
அயன்தலை கொண்டுசெண்டாடல்பாடி
157
அருக்கன் எயிறு பறித்தல்பாடி
158
கயந்தனைக் கொன்றுரி போர்த்தல் பாடிக்
159
காலனைக்காலால் உதைத்தல்பாடி
160
இயைந்தன முப்புரம் எய்தல் பாடி
161
ஏழை அடியோமை ஆண்டுகொண்ட
162
நயந்தனைப் பாடிநின் றாடியாடி
163
நாதற்குச் சுண்ணம் இடித்துநாமே. 144
164
திருப்பொற் சுண்ணம்/உரை 137-144
165
வட்டமலர்க்கொன்றை மாலைபாடி
166
மத்தமும்பாடி மதியம்பாடிச்
167
சிட்டர்கள் வாழுந்தென் தில்லைபாடிச்
168
சிற்றம் பலத்தெங்கள் செல்வம்பாடிக்
169
கட்டிய மாசுணக்கச்சைப் பாடிக்
170
கங்கணம் பாடிக் கவித்தகைம்மேல்
171
இட்டுநின் றாடும் அரவம்பாடி
172
ஈசற்குச்சுண்ணம் இடித்துநாமே. 152
173
திருப்பொற் சுண்ணம்/உரை 145-152
174
வேதமும் வேள்வியும் ஆயினார்க்கு
175
மெய்ம்மையும் பொய்ம்மையும் ஆயினார்க்குச்
176
சோதியு மாய் இருள் ஆயினார்க்குத்
177
துன்பமுமாய் இன்பம் ஆயினார்க்குப்
178
பாதியு மாய் முற்றும் ஆயினார்க்குப்
179
பந்தமு மாய் வீடும் ஆயினார்க்கு
180
ஆதியும் அந்தமும் ஆயினார்க்கு
181
ஆடப்பொற்சுண்ணம் இடித்துநாமே. 160
182
திருப்பொற் சுண்ணம்/உரை 153-160
திருவண்டப் பகுதி
1
(தில்லையில் அருளயது - இணைக் குறள் ஆசிரியப்பா)
2
அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்
3
அளப்பு அரும் தன்மை வளப் பெருங் காட்சி
4
ஒன்றனுக்கு ஒன்று நின்றெழில் பகரின்
5
நூற்று ஒரு கோடியின் மேல்பட விரிந்தன
6
இல்நுழை கதிரின் நுன் அணுப் புரையச் 5
7
சிறிய ஆகப் பெரியோன் தெரியின்
8
வேதியன் தொகையொடு மாலவன் மிகுதியும்
9
தோற்றமும் சிறப்பும் ஈற்றொடு புணரிய
10
மாப்பேர் ஊழியும் நீக்கமும் நிலையும்
11
சூக்கமொடு தூலத்துச் சூறை மாருதத்து 10
12
கொட்கப் பெயர்க்கும் குழகன் முழுவதும்
13
படைப்போன் படைக்கும் பழையோன் படைத்தவை
14
காப்போன் காக்கும் கடவுள், காப்பவை
15
காப்போன், கரப்பவை கருதாக் 15
16
கருத்துடைக் கடவுள், திருத்தகும்
17
அறுவகைச் சமயத்து அறுவகை யோர்க்கும்
18
வீடுபேறாய் நின்ற விண்ணோர் பகுதி
19
கீடம் புரையும் கிழவோன், நாள் தொறும்
20
அருக்கனின் சோதி அமைத்தோன், திருத்தகு 20
21
மதியில் தண்மை வைத் தோன், திண்திறல்
22
தீயில் வெம்மை செய்தோன், பொய்தீர்
23
வானில் கலப்பு வைத்தோன், மேதகு
24
காலின் ஊக்கம் கண்டோ ன், நிழல் திகழ்
25
நீரில் இன்சுவை நிகழ்ந்தோன், வெளிப்பட 25
26
மண்ணில் திண்மை வைத்தோன், என்று என்று
27
எனைப் பல கோடி எனைப் பல பிறவும்
28
அனைத்து அனைத்து அவ்வயின் அடைத்தோன். அஃதான்று
29
முன்னோன் காண்க, முழுதோன் காண்க
30
தன்நேர் இல்லோன் தானே காண்க 30
31
ஏனம் தொல் எயிறு அணிந்தோன் காண்க
32
கானம் புலியுரி அரையோன் காண்க
33
நீற்றோன் காண்க, நினைதொறும் நினைதொறும்
34
ஆற்றேன் காண்க, அந்தோ கெடுவேன்
35
இன்னிசை வீணையில் இசைத்தோன் காண்க 35
36
அன்னது ஒன்று அவ் வயின் அறிந்தோன் காண்க
37
பரமன் காண்க, பழையோன் காண்க
38
பிரமன்மால் காணாப் பெரியோன் காண்க
39
அற்புதன் காண்க, அநேகன் காண்க
40
சொற்பதங் கடந்த தொல்லோன் காண்க 40
41
சித்தமும் செல்லாச் சேட்சியன் காண்க
42
பத்தி வலையில் படுவோன் காண்க
43
ஒருவன் என்றும் ஒருவன் காண்க
44
விரிபொழில் முழுதாய் விரிந்தோன் காண்க
45
அணுத்தரும் தன்மையில் ஐயோன் காண்க 45
46
இணைப்பு அரும் பெருமையில் ஈசன் காண்க
47
அரிய அதில் அரிய அரியோன் காண்க
48
மருவி எப்பொருளும் வளர்ப்போன் காண்க
49
நூல் உணர்வு உணரா நுண்ணியன் காண்க
50
மேலோடு கீழாய் விரிந்தோன் காண்க 50
51
அந்தமும் ஆதியும் அகன்றோன் காண்க
52
பந்தமும் வீடும் படைப்போன் காண்க
53
நிற்பதுஞ் செல்வதும் ஆனோன் காண்க
54
கற்பதும் இறுதியும் கண்டோ ன் காண்க
55
யாவரும் பெற உறும் ஈசன் காண்க 55
56
தேவரும் அறியாச் சிவனே காண்க
57
பெண்ஆண் அலிஎனும் பெற்றியன் காண்க
58
கண்ணால் யானும் கண்டேன் காண்க
59
அருள்நனி சுரக்கும் அமுதே காண்க
60
கருணையின் பெருமை கண்டேன் காண்க 60
61
புவனியல் சேவடி தீண்டினன் காண்க
62
சிவன் என யானும் தேறினன் காண்க
63
அவன் எனை ஆட்கொண்டு அருளினன் காண்க
64
குவளைக் கண்ணி கூறன் காண்க
65
அவளுந் தானும் உடனே காண்க 65
66
பரமா னந்தம் பழம் கட லதுவே
67
கருமா முகிலில் தோன்றித்
68
திருவார் பெருந்துறை வரையில் ஏறித்
69
திருத்தகு மின்ஒளி திசைதிசை விரிய
70
ஐம்புலம் பந்தனை வாள்அரவு இரிய 70
71
வெம் துயர் கோடை மாத்தலை கரப்ப
72
நீடு எழில் தோன்றி வாள் ஒளி மிளிர
73
எம்தம் பிறவியில் கோபம் மிகுந்து
74
முரசு ஏறிந்து மாப்பெருங் கருணையில் முழங்கிப்
75
பூப்புரை அஞ்சலி காந்தள் காட்ட 75
76
எஞ்சா இன்னருள் நுண்துளி கொள்ளச்
77
செஞ்சுடர் வெள்ளம் திசைதிசை தெவிட்ட வரையுறக்
78
கேதக் குட்டம் கையற வோங்கி
79
இருமுச் சமயத்து ஒரு பேய்த் தேரினை
80
நீர்நசை தரவரும் நெடுங்கண் மான்கணம் 80
81
தவப்பெரு வாயிடைப் பருகித் தளர்வொடும்
82
அவப்பெருந் தாபம் நீங்காது அசைந்தன
83
ஆயிடை வானப் பேரியாற்று அகவயின்
84
பாய்ந்து எழுந்து இன்பம் பெருஞ்சுழி கொழித்துச்
85
சுழித்து எம்பந்தம் மாக் கரைபொருது அலைத்திடித்து 85
86
ஊழ் ஊழ் ஓங்கிய நங்கள்
87
இருவினை மாமரம் வேர் பறித்து எழுந்து
88
உருவ அருள்நீர் ஓட்டா அருவரைச்
89
சந்தின் வான்சிறை கட்டி மட்டவிழ்
90
வெறிமலர்க் குளவாய் கோலி நிறையகில் 90
91
மாப்புகைக் கரைசேர் வண்டுடைக் குளத்தின்
92
மீக்கொள மேல்மேல் மகிழ்தலின் நோக்கி
93
அருச்சனை வயல் உள் அன்புவித்து இட்டுத்
94
தொண்ட உழவர் ஆரத் தந்த
95
அண்டத்து அரும்பெறல் மேகன் வாழ்க 95
96
கரும்பணக் கச்சைக் கடவுள் வாழ்க
97
அரும்தவர்ககு அருளும் ஆதி வாழ்க
98
அச்சம் தவிர்த்த சேவகன் வாழ்க
99
நிச்சலும் ஈர்த்தாட் கொள்வோன் வாழ்க
100
சூழ்இருள் துன்பம் துடைப்போன் வாழ்க 100
101
எய்தினர்க்கு ஆர்அமுது அளிப்போன் வாழ்க
102
கூர்இருள் கூத்தொடு குனிப்போன் வாழ்க
103
பேர்அமைத் தோளி காதலன் வாழ்க
104
ஏதிலார்ககு ஏதில்எம் இறைவன் வாழ்க
105
காதலர்க்கு எய்ப்பினில் வைப்பு வாழ்க 105
106
நச்சு அரவு ஆட்டிய நம்பன் போற்றி
107
பிச்சு எமை ஏற்றிய பெரியோன் போற்றி
108
நீற்றொடு தோற்ற வல்லோன் போற்றி நாற்றிசை
109
நடப்பன நடாஅய்க் கிடப்பன கிடாஅய்
110
சொல்பதம் கடந்த தொல்லோன்
111
உள்ளத் துணர்ச்சியிற் கொள்ளவும் படாஅன்
112
கண்முதல் புலனாற் காட்சியும் இல்லோன்
113
விண்முதல் பூதம் வெளிப்பட வகுத்தோன்
114
பூவில் நாற்றம் போன்றுயர்ந் தெங்கும் 115
115
ஒழிவற நிறைந்து மேவிய பெருமை
116
இன்று எனக்கு எளிவந்து அருளி
117
அழிதரும் ஆக்கை ஒழியச்செய்த ஒண்பொருள்
118
இன்றெனக் கெளிவந்து இருந்தனன் போற்றி
119
அளிதரும் ஆக்கை செய்தோன் போற்றி 120
120
ஊற்றிருந்த துள்ளங் களிப்போன் போற்றி
121
ஆற்றா இன்பம் அலர்ந்தலை போற்றி
122
போற்றா ஆக்கையைப் பொறுத்தல் புகலேன்
123
மரகதக் குவாஅல் மாமணிப் பிறக்கம்
124
மின்ஒளி கொண்ட பொன்னொளி திகழத் 125
125
திசைமுகன் சென்று தேடினர்க்கு ஒளித்தும்
126
முறையுளி ஒற்றி முயன்றவர்க்கு ஒளித்தும்
127
ஒற்றுமை கொண்டு நோக்கும் உள்ளத்து
128
உற்றவர் வருந்த உறைப்பவர்க்கு ஒளித்தும்
129
மறைத்திறம் நோக்கி வருந்தினர்க்கு ஒளித்தும் 130
130
இத்தந் திரத்தில் காண்டும் என்று இருந்தோர்க்கு
131
அத்தந் திரத்தில் அவ்வயின் ஒளித்தும்
132
முனிவு அற நோக்கி நனிவரக் கௌவி
133
ஆணெனத் தோன்றி அலியெனப் பெயர்ந்து
134
வாள்நுதல் பெண்என ஒளித்தும் சேண்வயின் 135
135
ஐம்புலன் செலவிடுத்து அருவரை தொறும்போய்த்
136
துற்றவை துறந்த வெற்று உயிர் ஆக்கை
137
அருந்தவர் காட்சியுள் திருந்த ஒளித்தும்
138
ஒன்று உண்டில்லை யென்றறி வொளித்தும்
139
பண்டே பயில்தொறும் இன்றே பயில்தொறும் 140
140
ஒளிfக்கும் சோரனைக் கண்டனம்
141
ஆர்மின் ஆர்மின் நாண்மலர்ப் பிணையலில்
142
தாள்தனை இடுமின் சுற்றுமின் சூழ்மின்
143
தொடர்மின் விடேன்மின்
144
பற்றுமின் என்றவர் பற்றுமுற்று ஒளித்தும் 145
145
தன்நேர் இல்லோன் தானே ஆன தன்மை
146
என் நேர் அனையோர் கேட்கவந்து இயம்பி
147
அறைகூவி ஆட்கொண்டருளி
148
மறையோர் கோலம் காட்டி அருளலும்
149
உலையா அன்பு என்பு உருக ஓலமிட்டு 150
150
அலைகடல் திரையில் ஆர்த்து ஆர்த்து ஓங்கித்
151
தலை தடுமாறா வீழ்ந்துபுரண் டலறிப்
152
பித்தரின் மயங்கி மத்தரின் மதித்து
153
நாட்டவர் மருளவும் கேட்டவர் வியப்பவும்
154
கடைக்களிறு ஏற்றாத் தடம்பெரு மதத்தின் 155
155
ஆற்றேன் ஆக அவயவம் சுவைதரு
156
கோற்றேன் கொண்டு செய்தனன்
157
ஏற்றார் மூதூர் எழில்நகை எரியின்
158
வீழ்வித்து ஆங்கு அன்று அருட்பெருந் தீயின்
159
அடியோம் அடிக்குடில் 160
160
ஒருத்தரும் வழாமை யொடுக்கினன்
161
தடக்கையின் நெல்லிக் கனியெனக் காயினன்
162
சொல்லுவது அறியேன் வாழி முறையோ
163
தரியேன் நாயேன் தான் எனைச் செய்தது
164
தெரியேன் ஆஆ செத்தேன் அடியேற்கு 165
165
அருளியது அறியேன் பருகியும் ஆரேன்
166
விழுங்கியும் ஒல்ல கில்லேன்
167
செழுந்தண் பாற்கடல் திரைபுரை வித்து
168
உவர்க்கடல் நள்ளும்நீர் உள்அகம் ததும்ப
169
வாக்கு இறந்து அமுதம் மயிர்க்கால் தோறும் 170
170
தேக்கிடச் செய்தனன் கொடியேன் ஊன்தழை
171
குரம்பை தோறும் நாய் உடல் அகத்தே
172
குரம்பைகொண்டு இன்தேன் பாய்த்தி நிரம்பிய
173
அற்புதம் ஆன அமுத தாரைகள்
174
எற்புத் துளைதொறும் ஏற்றினன் உருகுவது 175
175
உள்ளம் கொண்டோ ர் உருச்செய் தாங்கு எனக்கு
176
அள் ஊறு ஆக்கை அமைத்தனன் ஒள்ளிய
177
கன்னற் கனிதேர் களிறு எனக் கடைமுறை
178
என்னையும் இருப்பது ஆக்கினன் என்னில்
179
கருணை வான்தேன் கலக்க 180
180
அருளொடு பரா அமுது ஆக்கினன்
181
பிரமன் மால் அறியாப் பெற்றி யோனே
182
திருச்சிற்றம்பலம்
திருவம்மானை
1
(திருவண்ணாமலையில் அருளியது - தரவு கொச்சகக் கலிப்பா / ஆனந்தக் களிப்பு )
2
செங்கண் நெடுமாலுஞ் சென்றிடந்துங் காண்பரிய பொங்கு மலர்ப்பாதம் பூதலத்தே போந்தருளி எங்கள் பிறப்பறுத்திட் டெந்தரமும் ஆட்கொண்டு தெங்கு திரள்சோலைத் தென்னன் பெருந்துறையான் அங்கணன் அந்தணனாய் அறைகூவி வீடருளும் அங்கருணை வார்கழலே பாடுதுங்காண் அம்மானாய். 175
3
பாரார் விசும்புள்ளார் பாதாளத் தார்புறத்தார் ஆராலுங் காண்டற் கரியாற் கரியான் எமக்கெளிய பேராளன் தென்னன் பெருந்துறையான் பிச்சேற்றி வாரா வழியருளி வந்தென் உளம்புகுந்த ஆரா அமுதாய் அலைகடல்வாய் மீன்விசிறும் பேராசை வாரியனைப் பாடுதுங்காண் அம்மானாய். 176
4
இந்திரனும் மாலயனும் ஏனோரும் வானோரும் அந்தரமே நிற்கச் சிவனவனி வந்தருளி எந்தரமும் ஆட்கொண்டு தோட்கொண்ட நீற்றனாய்ச் சிந்தனையை வந்தருக்குஞ் சீரார் பெருந்துறையான் பந்தம் பறியப் பரிமேற்கொண்டான்தந்த அந்தமிலா ஆனந்தம் பாடுதுங்காண் அம்மானாய். 177
5
வான்வந்த தேவர்களும் மாலயனோ டிந்திரனும் கான்நின்று வற்றியும் புற்றெழுந்துங் காண்பரிய தான்வந்து நாயேனைத் தாய்போல் தலையளித்திட்டு ஊன்வந்துரோமங்கள் உள்ளே உயிர்ப்பெய்து தேன்வந்த முதின் தெளிவின் ஒளிவந்த வான்வந்த வார்கழலே பாடுதுங்காண் அம்மானாய். 178
6
கல்லா மனத்துக் கடைப்பட்ட நாயேனை வல்லாளன் தென்னன் பெருந்துறையான் பிச்சேற்றிக் கல்லைப் பிசைந்து கனியாக்கித் தன்கருணை வெள்ளத் தழுத்தி வினைகடிந்த வேதியனைத் தில்லை நகர்புக்குச் சிற்றம் பலம்மன்னும் ஒல்லை விடையானைப் பாடுதுங்காண் அம்மானாய். 179
7
கேட்டாயோ தோழி கிறிசெய்த வாறொருவன் திIட்டார் மதில்புடைசூழ் தென்னன் பெருந்துறையான் காட்டா தனவெல்லாங் காட்டிச் சிவங்காட்டித் தாள்தா மரைகாட்டித் தன்கருணைத் தேன் காட்டி நாட்டார் நகைசெய்ய நாம்மேலை வீடெய்த ஆள்தான்கொண்டாண்டவா பாடுதுங்காண் அம்மானாய். 180
8
ஓயாதே உள்குவார் உள்ளிருக்கும் உள்ளானைச் சேயானைச் சேவகனைத் தென்னன் பெருந்துறையின் மேயானை வேதியனை மாதிருக்கும் பாதியனை நாயான நந்தம்மை ஆட்கொண்ட நாயகனைத் தாயான தத்துவனைத் தானே உலகேழும் ஆயானை ஆள்வானப் பாடுதுங்காண் அம்மானாய். 181
9
பண்சுமந்த பாடற் பரிசு படைத்தருளும் பெண்சுமந்த பாகத்தன் பெம்மான் பெருந்துறையான் விண்சுமந்த கீர்த்தி வியன்மண்ட லத்தீசன் கண்சுமந்த நெற்றிக் கடவுள் கலிமதுரை மண்சுமந்து கூலிகொண்டு அக்கோவால் மொத்துண்டு புண்சுமந்த பொன்மேனி பாடுதுங்காண் அம்மானாய். 182
10
துண்டப் பிறையான் மறையான் பெருந்துறையான் கொண்ட புரிநூலான் கோலமா ஊர்தியான் கண்டங் கரியான்செம் மேனியான் வெண்ணீற்றான் அண்டமுத லாயினான் அந்தமிலா ஆனந்தம் பண்டைப் பரிசே பழவடியார்க் கீந்தருளும் அண்டம் வியப்புறுமா பாடுதுங்காண் அம்மானாய். 183
11
விண்ணாளுந் தேவர்க்கு மேலாய வேதியனை மண்ணாளும் மன்னவர்க்கு மாண்பாகி நின்றானைத் தண்ணார் தமிழளிக்குந் தண்பாண்டி நாட்டானைப் பெண்ணாளும் பாகனைப் பேணு பெருந்துறையிற் கண்ணார் கழல்காட்டி நாயேனை ஆட்கொண்ட அண்ணா மலையானைப் பாடுதுங்காண் அம்மானாய். 184
12
செப்பார் முலைபங்கன் தென்னன் பெருந்துறையான் தப்பாமே தாளடைந்தார் நெஞ்சுருக்கும் தன்மையினான் அப்பாண்டி நாட்டைச் சிவலோகம் ஆக்குவித்த அப்பார் சடையப்பன் ஆனந்த வார்கழலே ஒப்பாக ஒப்புவித்த உள்ளத்தா ருள்ளிருக்கும் அப்பாலைக் கப்பாலைப் பாடுதுங்காண் அம்மானாய். 185
13
மைப்பொலியுங் கண்ணிகேள் மாலயனோ டிந்திரனும் எப்பிறவி யுந்தேட என்னையுந்தன் இன்னருளால் இப்பிறவி ஆட்கொண்டு இனிப்பிறவா மேகாத்து மெய்ப்பொருட்கண் தோற்றமாய் மெய்யே நிலைபேறாய் எப்பொருட்தந் தானேயாய் யாவைக்கும் வீடாகும் அப்பொருளாம் நஞ்சிவனைப் பாடுதுங்கான் அம்மானாய். 186
14
கையார் வளைசிலம்பக் காதர் குழையாட மையார் குழல்புரளத் தேன்பாய் வண்டொலிப்பச் செய்யானை வெண்ணீ றணிந்தானைச் சேர்ந்தறியாக் கையானை எங்குஞ் செறிந்தானை அன்பர்க்கு மெய்யானை அல்லாதார்க் கல்லாத வேதியனை ஐயா றமர்ந்தானைப் பாடுதுங்காண் அம்மானாய். 187
15
ஆனையாய்க் கீடமாய் மானுடராய்த் தேவராய் ஏனைப் பிறவாய்ப் பிறந்திறந் தெய்த் தேனை ஊனையும் நின்றுருக்கி என்வினையை ஒட்டுகந்து தேனையும் பாலையுங் கன்னலையும் ஒத்தினிய கோனவன்போல் வந்தென்னைத் தன்தொழும்பிற் கொண்டருளும் வானவன் பூங்கழலே பாடுதுங்காண் அம்மானாய். 188
16
சந்திரனைத் தேய்த்தருளித் தக்கன்தன் வேள்வியினில் இந்திரனைத் தோள்நெரித்திட் டெச்சன் தலையரிந்து அந்தரமே செல்லும் அலர்கதிரோன் பல்தகர்த்துச் சிந்தித் திசைதிசையே தேவர்களை ஓட்டுகந்து செந்தார்ப் பொழில்புடைசூழ் தென்னன் பெருந்துறையான் மந்தார மாலையே பாடுதுங்காண் அம்மானாய். 189
17
ஊனாய் உயிராய் உணர்வாய்என்னுட்கலந்து தேனாய் அமுதமுமாய்த் தீங்கரும்பின் கட்டியுமாய் வானோ ரறியா வழியெமக்குந் தந்தருளும் தேனார் மலர்க்கொன்றைச் சேவகனார் சீரொளிசேர் ஆனா அறிவாய் அளவிறந்த பல்லுயிர்க்கும் கோனாகி நின்றவா கூறுதுங்காண் அம்மானாய். 190
18
சூடுவேன் பூங்கொன்றை சூடிச் சிவன்திரள்தோள் கூடுவேன் கூடிமுயங்கி மயங்கிநின்று ஊடுவேன் செவ்வாய்க் குருகுவேன் உள்ளுருகித் தேடுவேன் தேடிச் சிவன்கழலே சிந்திப்பேன் வாடுவேன் பேர்த்தும் அலர்வேன் அனலேந்தி ஆடுவேன் சேவடியே பாடுதுங்காண் அம்மானாய். 191
19
கிளிவந்த மென்மொழியாள் கேழ்கிளரும் பாதியானை வெளிவந்த மாலயனும் காண்பரிய வித்தகனைத் தெளிவந்த தேறாலச் சீரார் பெருந்துறையில் எளிவந் திருந்திரங்கி எண்ணரிய இன்னருளால் ஒளிவந்தென் உள்ளத்தின் உள்ளே ஒளி திகழ அளிவந்த அந்தணனனைப் பாடுதுங்காண் அம்மானாய். 192
20
முன்னானை மூவர்க்கும் முற்றுமாய் முற்றுக்கும் பின்னானைப் பிஞ்ஞசுனைப் பேணு பெருந்துறையின் மன்னானை வானவனை மாதியலும் பாதியனைத் தென்னானைக் காவானைத் தெண்பாண்டி நாட்டானை என்னானை என்னப்பன் என்பார்க்கட் கின்னமுதை அன்னானை அம்மானைப் பாடுதுங்காண் அம்மானாய். 193
21
பெற்றி பிறர்க்கரிய பெம்மான் பெருந்துறையான் கொற்றக் குதிரையின்மேல் வந்தருளித் தன்னடியார் குற்றங்கள் நீக்கிக் குணங்கொண்டு கோதாட்டிச் சுற்றிய சுற்றத் தொடர் வறுப்பான் தொல்புகழே பற்றியிப் பாசத்தைப் பற்றறநாம் பற்றுவான் பற்றியபே ரானந்தம் பாடுதுங்காண் அம்மானாய். 194
22
திருச்சிற்றம்பலம்
திருவுந்தியார்
1
திருஉந்தியார் - ஞான வெற்றி
2
(தில்லையில் அருளியது- கலித்தாழிசை)
3
வளைந்தது வில்லு விளைந்தது பூசல் உளைந்தன முப்புரம் உந்தீபற ஒருங்குடன் வெந்தவா றுந்தீபற. 295
4
ஈரம்பு கண்டிலம் ஏகம்பர் தங்கையில் ஓரம்பே முப்புரம் உந்தீபற ஒன்றும் பெருமிகை உந்தீபற. 296
5
தச்சு விடுத்தலும் தாமடி யிட்டலும் அச்சு முறிந்ததென் றுந்தீபற அழந்தன முப்புரம் உந்தீபற. 297
6
உய்யவல் லாரெரு மூவரைக் காவல்கொண் டெய்யவல் லானுக்கே உந்தீபற இளமுலை பங்கனென் றுந்தீபற. 298
7
சாடிய வேள்வி சரிந்திடத் தேவர்கள் ஓடிய வாபாடி உந்தீபற உருந்திர நாதனுக் குந்தீபற. 299
8
ஆவா திருமால் அவிப்பாகங் கொண்டன்று சாவா திருந்தானென் று தீபற சதுர்முகன் தாதையென் றுந்தீபற. 300
9
வெய்யவன் அங்கி விழுங்கத்திரட்டிய கையைத் தறித்தானென் றுந்தீபற கலங்கிற்று வேள்வியென் றுந்தீபற. 301
10
பார்ப்பதி யைப்பகை சாற்றிய தக்கனைப் பார்ப்பதென் னேயேடி யந்தீபற பணைமுலை பாகனுக் குந்தீபற. 302
11
புரந்தர னாரொரு பூங்குயி லாகி மரந்தனி லேறினார் உந்தீபற வானவர் கோனென்றே உந்தீபற. 303
12
வெஞ்சின வேள்வி வியாத்திர னார்தலை துஞ்சிய வாபாடி உந்தீபற தொடர்ந்த பிறப்பற உந்தீபற. 304
13
ஆட்டின் தலையை விதிக்குத் தலையாகக் கூட்டிய வாபாடி உந்தீபற கொங்கை குலுங்கிநின் றுந்தீபற. 305
14
உண்ணப் புகுந்த பகனொளிந் தோடாமே கண்ணைப் பறித்தவா றுந்தீபற கருக்கெட நாமெல்லாம் உந்தீபற. 306
15
நாமகள் நாசி சிரம்மி மன்படச் சோமன் முகன் நெரித் துந்தீபற தொல்லை வினைகெட உந்தீபற. 307
16
நான்மறை யோனும் அகத்திய மான்படப் போம்வழி தேடுமா றுந்தீபற புரந்தரன் வேள்வியி லுந்தீபற. 308
17
சூரிய னார்தொண்டை வாயினிற் பற்களை வாரி நெரித்தவா றுந்தீபற மயங்கிற்று வேள்வியென் றுந்தீபற. 309
18
தக்கனா ரன்றே தலையிழந் தார்தக்கன் மக்களைச் சூழநின் றுந்தீபற மடிந்தது வேள்வியென் றுந்தீபற. 310
19
பாலக னார்க்கன்று பாற்கடல் ஈந்திட்ட கோலச் சடையற்கே யந்தீபற குமரன்தன் தாதைக்கே உந்தீபற. 311
20
நல்ல மலரின்மேல் நான்முக னார்தலை ஒல்லை யரிந்ததென் றுந்தீபற உகிரால் அரிந்ததென் றுந்தீபற. 312
21
தேரை நிறுத்தி மலையெடுத் தான்சிரம் ஈரைந்தும் இற்றவா றுந்தீபற இறுபதும் இற்றதென் றுந்தீபற. 313
22
ஏகாசமிட்ட இருடிகள் போகாமல் ஆகாசங்காவலென் றுந்தீபற அதற்கப்பாலுங் காவலென் றுந்தீபற. 314
23
திருச்சிற்றம்பலம்
திருவெம்பாவை
1
(திருவண்ணாமலையில் அருளியது - சக்தியை வியந்தது)
2
(வெண்டளையான் வந்த இயற்றவிணை கொச்சகக் கலிப்பா)
3
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் சோதியை யாம்பாடக்கேட்டேயும் வாள்தடங்கள் மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான் மாதேவன்வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய் வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்மறந்து போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டு இங்ஙன் ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே ஈதே எந்தோழி பரிசேலோர் எம்பாவாய். 155
4
பாசம் பரஞ்சோதிக்கு அன்பாய் இராப்பகல்நாம் பேசும்போ தெப்போ(து) இப் போதார் அமளிக்கே நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர் சீசி இவையுஞ் சிலவோ விளையாடி ஏசு மிடம்ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குத் கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும் தேசன் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்துள் ஈசனார்க் கன்பார்யாம் ஆரேலோர் எம்பாவாய். 156
5
முத்தன்ன வெண்நகையாய் முன்வந் தெதிரெழுந்தென் அத்தன் ஆனந்தன் அமுதன் என்று அள்ளூறித் தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய் பத்துடையீர் ஈசன் பழ அடியீர் பாங்குடையீர் புத்தடியோம் புன்மைதீர்த்து ஆட்கொண்டாற் பொல்லாதோ எத்தோநின் அன்புடைமை எல்லோம் அறியோமோ சித்தம் அழகியார் பாடாரோ நஞ்சிவனை இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய். 157
6
ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ வண்ணக் கிளிமொழியார் எல்லோரும் வந்தாரோ எண்ணிக்கொண்டுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும் கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே விண்ணுக் கொருமருந்தை வேத விருப்பொருளைக் கண்ணுக்கு இனியானைப் பாடிக் கசிந்துள்ளம் உண்ணெக்கு நின்றுருக யாம்மாட்டொம் நீயேவந்து எண்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய். 158
7
மாலறியா நான்முகனுங் காணா மலையினை நாம் போலறிவோம் என்றுள்ள பொக்கங்க ளேபேசும் பாலாறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய் ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான் கோலமும் நம்மைஆட் கொண்டருளிக் கோதாட்டுஞ் சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்(று) ஓலம் இடினும் உணராய் உணராய்காண் ஏலக் குழலி பரிசேலோர் எம்பாவாய். 159
8
மானே நீ நென்னலை நாளை வந்துங்களை நானே எழுப்புவன் என்றலும் நாணாமே போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ வானே நிலனே பிறவே அறிவரியான் தானேவந் தெம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும் வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய்திறவாய் ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும் ஏனோர்க்குந் தங்கோனைப் பாடேலோ ரெம்பாவாய். 160
9
அன்னே இவையுஞ் சிலவோ பலவமரர் உன்னற்கு அரியான் ஒருவன் இருஞ்சீரான் சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய்திறப்பாய் தென்னா என்னா முன்னம் தீசேர் மெழுகுஒப்பாய் என்னானை என்அரையன் இன்னமுதுஎன்று எல்லாமும் சொன்னோம்கேள் வெவ்வேறாய் இன்னம் துயிலுதியோ வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால் என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய். 161
10
கோழி சிலம்புச் சிலம்பும் குருகுஎங்கும் ஏழில் இயம்ப இயம்பும்வெண் சங்குஎங்கும் கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ வாழிஈ தென்ன உறக்கமோ வாய்திறவாய் ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை ஏழைபங் காளனையே பாடேலோர் எம்பாவாய். 162
11
முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே பின்னைப் புதுமைக்கும் போத்தும் அப் பெற்றியனே உன்னைப் பிரானாகப் பெற்றவுன் சீரடியோம் உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம் அன்னவரே எம்கணவர் ஆவர் அவர்உகந்து சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணி செய்தோம் இன்ன வகையே எமக்கு எம்கோன் நல்குதியேல் என்ன குறையும் இலோம்ஏலார் எம்பாவாய். 163
12
பாதாளம் ஏழினும்கீழ் சொற்கழிவு பாதமலர் போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே பேதை ஒருபால் திருமேனி ஒன்று அல்லன் வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும் ஓத உலவா ஒருதோழன் தொண்டர்உளன் கோதில் குலத்தான் றன் கோயில் பிணாப்பிள்ளைகாள் ஏதவன்ஊர் ஏதவன்பேர் ஆர்உற்றார் ஆர்அயலார் ஏதவரைப் பாடும் பரிசேலார் எம்பாவாய். 164
13
மொய்யார் தடம் பொய்கை புக்கு முகேர்என்னக் கையாற் குடைந்து குடைந்துஉன் கழல்பாடி ஐயா வழியடி யோம் வாழ்ந்தோம் காண் ஆர் அழல்போற் செய்யா வெண்ணீறாடி செல்வ சிறுமருங்குல் மையார் தடங்கண் மடந்தை மணவாளர் ஐயாநீ ஆட்கொண்டு அருளும் விளையாட்டின் உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உயர்ந்தொழிந் தோங் எய்யாமற் காப்பாய் எமையேலோர் எம்பாவாய். 165
14
ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்துஆடும் தீர்த்தன் நற் றில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும் கூத்தன்இவ்வானும் குவலயமும் எல்லாமும் காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள் ஆர்ப்பரவம் செய்ய அணி குழல்மேல் வண்டார்ப்பப் பூத்திகழும் பொய்கை குடைந்துஉடையான் பொற்பாதம் ஏத்தி இருஞ்சுனைநீர் ஆடேலோர் எம்பாவாய். 166
15
பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால் அங்கம் குருகினத்தால் பின்னும் அரவத்தால் தங்கள் மலம்கழுவு வார் வந்து சார்தலினால் எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்று இசைந்த பொங்கும் மடுவில் புகப்பாய்ந்து பாய்ந்துநம் சங்கம் சிலம்பச் சிலம்பு கலந்துஆர்ப்பப் கொங்கைகள் பொங்கப் குடையும் புனல்பொங்கப் பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோர் எம்பாவாய். 167
16
காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக் கோதை குழலாட வண்டின் குழாம் ஆடச் சீதப் புனல்ஆடிச் சிற்றம் பலம்பாடி வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடி சோதித்திறம்பாடி சூழ்கொன்றைத் தார்பாடி ஆதி திறம்பாடி அந்தமா மாபாடிப் பேதித்து நம்மை வளர்த்துஎடுத்த பெய்வதைதன் பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய். 168
17
ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான் சீரொருகால் வாய் ஓவாள் சித்தம் களிகூர நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்பப் பாரொருகால் வந்தனையான் விண்ணோரைத் தான் பணியாள் பேரரையற்கு இங்ஙனே பித்துஒருவர் ஆமாறும் ஆர்ஒருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள் வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி ஏருருவப் பூம்புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய். 169
18
முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்துஉடையான் என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையான் இட்டிடையின் மின்னப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல் பொன்னஞ் சிலம்பில் சிலம்பித் திருப்புருவம் என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள் தன்னிற் பரிவிலா எங்கோமான் அன்பர்க்கு முன்னி யவன்நமக்கு முன்சுரக்கும் இன்னருளே என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய். 170
19
செங்க ணவன்பால் திசைமுகன் பால் தேவர்கள் பால் எங்கும் இலாதோர் இன்பம்நம் பாலதாக் கொங்குஉண் சுருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச் செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை அங்கள் அரசை அடியோங்கட்கு ஆரமுதை நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப் பங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய். 171
20
அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும் விண்ணோர் முடியின் மணித்தொகை வீறற்றாற்போல் கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத் தண்ணார் ஒளிமயங்கித் தாரகைகள் தாம் அகலப் பெண்ணாகி ஆணாய் அலியாய்ப பிறங்கொளிசேர் விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகித் கண்ணார் அமுதமாய் நின்றான் கழல்பாடிப் பெண்ணே இப் பூம்புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய். 172
21
உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்என்று அங்கப் பழஞ்சொல் புதுக்கும் எம் அச்சத்தால் எங்கள் பெருமான் உனக்கென்று உரைப்போம் கேள் எங்கொங்கை நின்னன்பர் அல்லார்தோள் சேரற்க எங்கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க கங்குல் பகல்எங்கண் மற்றொன்றும் காணற்க இங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல் எங்கெழிலென் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய். 173
22
போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர் போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள் போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம் போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள் போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள் போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரிகம் போற்றியாம் உய்யஆட் கொண்டருளும் பொன்மலர்கள் போற்றியாம் மார்கழிநீர் ஆடேலோர் எம்பாவாய். 174
23
திருச்சிற்றம்பலம்
நீத்தல் விண்ணப்பம்
1
(திருஉத்தரகோசமங்கையில் அருளியது- கட்டளைக் கலித்துறை)
2
கடையவ னேனைக் கருணையி னாற்கலந் தாண்டுகொண்ட விடையவ னேவிட் டிடுதிகண் டாய்விறல் வேங்கையின்தோல் உடையவ னே மன்னும் உத்தரகோசமங்கைக்கரசே சடையவ னேதளர்ந் தேன்எம் பிரான்என்னைத் தாங்கிக்கொள்ளே. 105
3
கொள்ளேர் பிளவக லாத்தடங் கொங்கையர் கொவ்வைச் செவ்வாய் விள்ளேன் எனினும் விடுதிகண் டாய்நின் விழுத்தொழும்பின் உள்ளேன் புறமல்லேன் உத்தர கோசமங் கைக்கரசே கள்ளேன் ஒழியவும் கண்டுகொண் டாண்டதெக் காரணமே. 106
4
காருறு கண்ணியர் ஐம்புலன் ஆற்றங் கரைமரமாய் வேருறு வேனை விடுதிகண்டாய் விளங்குந்திருவார் ஊருறை வாய்மன்னும் உத்தரகோசமங்கைக் கரசே வாருறு பூண்முலை யாள்பங்க என்னை வளர்ப்பவனே. 107
5
வளர்கின்ற நின்கருணைக்கையில் வாங்கவும் நீங்கியிப்பால் மிளிர்கின்ற என்னை விடுதிகண்டாய் வெண்மதிக்கொழுந்தொன்று ஒளிர்கின்ற நீள்முடி உத்தரகோசமங்கைக்கரசே தெளிகின்ற பொன்னுமின் னும் அன்னதோற்றச் செழுஞ்சுடரே. 108
6
செழிகின்ற தீப்புகு விட்டிலின் சில் மொழியாரில் பல்நாள் விழுகின்ற என்னை விடுதி கண்டாய் வெறி வாய் அறுகால் உழுகின்ற பூமுடி உத்தரகோசமங்கைக்கு அரசே வழிநின்று நின் அருள் ஆர் அமுது ஊட்ட மறுத்தனனே. 109
7
மறுத்தனன் யான் உன் அருள் அறியாமையின் என் மணியே வெறுத்து எனை நீ விட்டிடுதி கண்டாய் வினையின் தொகுதி ஒறுத்து எனை ஆண்டுகொள் உத்தர கோச மங்கைக்கு அரசே பொறுப்பார் அன்றே பெரியோர் சிறுநாய்கள் தம் பொய்யினையே. 110
8
பொய்யவனேனைப் பொருள் என ஆண்டு ஒன்று பொத்திக் கொண்ட மெய்யவனே விட்டிடுதி கண்டாய் விடம் உண்மிடற்று மையவனே மன்னும் உத்தரகோச மங்கைக்கு அரசே செய்யவனே சிவனே சிறியேன் பவம் தீர்ப்பவனே. 111
9
தீர்க்கின்றவாறு என் பிழையை நின்சீர் அருள் என்கொல்என்று வேர்க்கின்ற என்னை விடுதி கண்டாய் விரவார் வெருவ ஆர்க்கின்ற தார்விடை உத்தரகோச மங்கைக்கு அரசே ஈர்க்கின்ற அஞ்சொடு அச்சம் வினையேனை இருதலையே. 112
10
இருதலைக்கொள்ளியன் உள்எறும்பு ஒத்து நினைப்பிரிந்த விரிதலையேனை விடுதி கண்டாய் வியன் மூவுலகுக்கு ஒருதலைவா மன்னும் உத்தரகோச மங்கைக்கு அரசே பொருதரு மூவிலைவேல் வலன் ஏந்திப் பொலிபவனே. 113
11
பொலிகின்ற நின்தாள் புகுதப் பெற்று ஆக்கையைப் போக்கப் பெற்று மெலிகின்ற என்னை விடுதி கண்டாய் அளிதேர் விளிரி ஒலிகின்ற பூம்பொழில் உத்தரகோச மங்கைக்கு அரசே வலி நின்ற திண்சிலையால் எரித்தாய் புரம் மாறுபட்டே. 114
12
மாறுபட்டு அஞ்சு என்னை வஞ்சிப்ப யான்உன்மணி மலர்த்தாள் வேறுபட்டேனை விடுதி கண்டாய் வினையேன் மனத்தே ஊறும் மட்டே மன்னும் உத்தரகோச மங்கைக்கு அரசே நீறுபட்டே ஒளி காட்டும் பொன்மேனி நெடுந்தகையே. 115
13
நெடுந்தகை நீ என்னை ஆட்கொள்ள யான் ஐம்புலன்கள் கொண்டு விடும் தகையேனை விடுதி கண்டாய் விரவார் வெருவ அடும்தகை வேல்வல்ல உத்தரகோச மங்கைக்கு அரசே கடும் தகையேன் உண்ணும் தெள்நீர் அமுதப் பெருங்கடலே. 116
14
கடலினுள் நாய் நக்கி அங்கு உன் கருணைக் கடலின் உள்ளம் விடல் அரியேனை விடுதி கண்டாய் விடல் இல் அடியார் உடல் இலமே மன்னும் உத்தரகோச மங்கைக்கு அரசே மடலின் மட்டே மணியே அமுதே என்மது வெள்ளமே. 117
15
வெள்ளத்துள் நாவற்றி ஆங்கு உன் அருள் பெற்றுத் துன்பத்து இன்றும் விள்ளக்கிலேனை விடுதி கண்டாய் விரும்பும் அடியார் உள்ளத்து உள்ளாய் மன்னும் உத்தரகோச மங்கைக்கு அரசே கள்ளத்து உளேற்கு அருளாய் களியாத களி எனக்கே. 118
16
களிவந்த சிந்தையோடு உன் கழல் கண்டும் கலந்தருள வெளிவந்திலேனை விடுதி கண்டாய் மெய்ச் சுடருக்கு எல்லாம் ஒளிவந்த பூம்கழல் உத்தரகோச மங்கைக்கு அரசே அளிவந்த எந்தைபிரான் என்னை ஆளுடை என் அப்பனே. 119
17
என்னை அப்பா அஞ்சல் என்பவர் இன்றி நின்று எய்த்து அலைந்தேன் மின்னை ஒப்பாய் விட்டிடுதி கண்டாய் உவமிக்கின் மெய்யே உன்னை ஒப்பாய் மன்னும் உத்தரகோச மங்கைக்கு அரசே அன்னை ஒப்பாய் எனக்கு அத்தன் ஒப்பாய் என் அரும் பொருளே. 120
18
பொருளே தமியேன் புகல் இடமே நின் புகழ் இகழ்வார் வெருளே எனை விட்டிடுதி கண்டாய் மெய்ம்மையார் விழுங்கும் அருளே அணி பொழில் உத்தரகோச மங்கைக்கு அரசே இருளே வெளியே இகம் பரம் ஆகி இருந்தவனே. 121
19
இருந்து என்னை ஆண்டுகொள் விற்றுக்கொள் ஒற்றிவை என்னின் அல்லால் விருந்தினனேனை விடுதி கண்டாய் மிக்க நஞ்சு அமுதாய் அருந்தினனே மன்னும் உத்திரகோச மங்கைக்கு அரசே மருந்தினனே பிறவிப் பிணிப்பட்டு மடங்கினர்க்கே. 122
20
மடங்கஎன் வல்வினைக் காட்டை நின்மன் அருள் தீக் கொளுவும் விடங்க என்தன்னை விடுதிகண்டாய் என் பிறவியை வேர் ஒடுங்களைந்து ஆண்டுகொள் உத்தரகோச மங்கைக்கு அரசே கொடும் கரிக்குன்று உரித்து அஞ்சுவித்தாய் வஞ்சிக் கொம்பினையே. 123
21
கொம்பர் இல்லாக் கொடிபோல அலமந்தனன் கோமளமே வெம்புகின்றேனை விடுதிகண்டாய் விண்ணர் நண்ணுகில்லா உம்பர் உள்ளாய் மன்னும் உத்தரகோச மங்கைக்கு அரசே அம்பரமே நிலனே அனல் காலொடு அப்பு ஆனவனே. 124
22
ஆனைவெம் போரில் குறும் தூறு எனப்புலனால் அலைப்புண் டேனை எந்தாய் விட்டிடுதி கண்டாய் வினையேன் மனத்துத் தேனையும் பாலையும் கன்னலையும் அமுத்தையும் ஒத்து ஊனையும் என்பினையும் உருக்காநின்ற ஒண்மையனே. 125
23
ஒண்மையனே திருநீற்றை உத்தூளித்து ஒளி மிளிரும் வெண்மையனே விட்டிடுதி கண்டாய் மெய் அடியவர்கட்கு அண்மையனே என்றும் சேயாய் பிறர்க்கு அறிதற்கு அரிதாம் பெண்மையனே தொன்மை ஆண்மையனே அலிப் பெற்றியனே. 126
24
பெற்றது கொண்டு பிழையே பெருக்கிச் சுருக்கும் அன்பின் வெற்று அடியேனை விடுதி கண்டாய் விடிலோ கெடுவேன் மற்று அடியேன் தன்னைத் தாங்குநர் இல்லை என்வாழ்முதலே உற்று அடியேன் மிகத் தேறி நின்றேன் எனக்கு உள்ளவனே. 127
25
உள்ளவே நிற்க இல்லன செய்யும் மையல் துழனி வெள்ளன் அலேனை விடுதி கண்டாய் வியன் மாத்தடக்கைப் பொள்ளல் நல் வேழத்து விரியாய் புலன் நின் கண் போதல் ஒட்டா மெள்ளனவே மொய்க்கும் நெய்க்குடம் தன்னை எறும்பு எனவே. 128
26
எறும்பிடை நாங்கூழ் எனப்புலனால் அரிப்புண்டு அலந்த வெறும் தமியேனை விடுதி கண்டாய் வெய்ய கூற்று ஒடுங்க உறும் கடிப்போது அவையே உணர்வு உற்றவர் உம்பர் உம்பர் பெறும் பதமே அடியார் பெயராத பெருமையனே. 129
27
பெருநீர் அறச் சிறுமீன் துவண்டு ஆங்கு நினைப் பிரிந்த வெருநீர் மையேனை விடுதி கண்டாய் வியன் கங்கை பொங்கி வரும்நீர் மடுவுள் மலைச்சிறு தோணி வடிவின் வெள்ளைக் குருநீர் மதிபொதியும் சடை வானக் கொழு மணியே. 130
28
கொழுமணியேர் நகை யார்கொங்கைக் குன்றிடைச் சென்றுகுன்றி விழுமடி யேனை விடுதிகண்டாய் மெய்ம் முழுதுங்கம்பித்து அழுமடி யாரிடை யார்த்துவைத் தாட்கொண் டருளியென்னைக் கழுமணி யேயினனுங் காட்டுகண்டாய் நின் புலன்கழலே. 131
29
புலன்கள் திகைப்பிக்க யானுந் திகைத்திங்கொர் பொய்ந்நெறிக்கே விலங்குகின் றேனை விடுதிகண்டாய் விண்ணும் மண்ணுமெல்லாய் கலங்குமுந் நீர்நஞ் சமுதுசெய் தாய்க்கு கருணாகரனே துலங்குகின்றேனடி யேனுடையாயென் தொழுகுலமே. 132
30
குலங்களைந் தாய்களைந் தாய்என்னைக் குற்றங்கொற் றச்சிலையாம் விலங்கலெந் தாய்விட் டிடுதிகண்டாய்பொன்னின் மின்னுகொன்றை அலங்கலந் தாமரை மேனியிப் பாவொப்பி லாதவனே மலங்களைத் தாற்கழல் வன்தயிரிற்பொரு மத்துறவே. 133
31
மத்தறு தண்தயி ரிற்புலன் தீக்கது வக்கலங்கி வித்தறு வேனை விடுதிகண்டாய் வெண்டலையிலைச்சிக் கொத்தறு போது மிலைந்து குடர்நெடு மாலைசுற்றித் தத்தறு நீறுட னாரச் செஞ்சாந்தணி சச்சையனே. 134
32
சச்சையனே மிக்க தண்புனல் விண்கால் நிலம்நெருப்பாம் விச்சையனே விட்டிடுதிகண்டாய் வெளியாய் கரியாய் பச்சையனே செய்ய மேனியனெ யொண்பட அரவக் கச்சையனே கடந்தாய்தடந்தாள அடற்கரியே. 135
33
அடற்கரி போல்ஐம்புலன்களுக்கஞ்சி அழிந்த என்னை விடற்கரியாய் விட்டிடுதி கண்டாய் விழுத்தொண்டர்கல்லால் தொடற்கரியாய் சுடர் மாமணியே கடு தீச்சுழலக் கடற்கரி தாயெழு நஞ்சமு தாக்குங் கறைக்கண்டனே. 136
34
கண்டது செய்து கருணைமட்டுப்பரு கிக்களித்து மிண்டுகின்றேனை விடுதிகண்டாய் நின் விரைமலர்த்தாள் பண்டுதந்தாற்போற் பணித்துப் பணிசெயக் கூவித்தென்னைக் கொண்டெனெந் தாய்களை யாய் களையாய குதுகுதுப்பே. 137
35
குதுகுதுப்பின்றி றென்குறிப்பேசெய்து நின்குறிப்பில் விதுவிதுப் பேனை விடுதிகண்டாய்விரை யார்ந்தினிய மதுமதுப் போன்றென்னை வாழைப்பழத்தின் மனங்கனிவித்து எதிர்வதெப் போது பயில்வி கயிலைப் பரம்பரனே. 138
36
பரம்பரனே நின்பழஅடி யாரொடும் என்படிறு விரும்பரனே விட்டிடுதி கண்டாய்மென் முயற்கறையின் அரும்பர நேர்வைத் தணிந்தாய் பிறவியை வாயரவம் பொரும்பெரு மான்வினை யேன்மனம் அஞ்சிப் பொதும்புறவே. 139
37
பொதும்புறு தீப்போற் புகைந்தெரியப்புலன் தீக்கதுவ வெதும்புறுவேனை விடுதி கண்டாய் விரை யார் நறவம் ததும்புமந் தாரத்தில் தாரம் பயின்றுமந் தம்முரல்வண்டு அதும்புங் கொழுந்தேன் அவிர்சடை வானத் தடலரைசே. 140
38
அரைசே அறியாச் சிறியேன் பிழைக்கஞ்ச லென்னினல்லால் விரைசேர் முடியாய் விடுதிகண்டாய் வெண் ணகைக்கருங்கண் திரைசேர் மடந்தை மணந்த திருப்பொற் பதப்புயங்கா வரைசேர்ந் தடர்ந்தென்ன வல்வினை தான் வந் தடர்வனவே. 141
39
அடர்புலனால் நிற் பிரிந்தஞ்சி அஞ்சொல் நல்லாரவர்தம் விடர்விட லேனை விடுதிகண்டாய் விரிந் தேயெரியுஞ் சுடரனை யாய் சுடு காட்டரசே தொழும் பர்க்கமுதே தொடர்வரி யாம் தமியேன் தனி நீக்குந் தனித்துணையே. 142
40
தனித்துணை நீநிற்க யான் தருக்கித்தலை யால் நடந்த வினைத்துணை யேனை விடுதிகண்டாய் வினை யேனுடைய மனத்துணை யேஎன்தன் வாழ்முதலே எனக் கெய்ப்பில்வைப்பே தினைத்துணை யேனும் பொறேன் துயராக்கையின் திண்வலையே. 143
41
வலைத்தலை மானன்ன நோக்கியர் நோக்கின் வலையிற்பட்டு மிலைத்தலைந் தேனை விடுதிகண்டாய் வெண்மதியின் ஒற்றைக் கலைத்தலை யாய் கருணாகரனே கயிலாய மென்னும் மலைத்தலை வாமலை யாம்மணவாள என் வாழ்முதலே. 144
42
முதலைச் செவ் வாய்ச்சியர் வேட்கைவெந்நீரிற் கடிப் பமூழ்கி விதலைச் செய்வேனை விடுதிகண்டாய் விடக் கூன்மிடைந்த சிதலைச் செய்காயம் பொறேன் சிவனே முறையோ முறையோ திதலைச் செய்பூண்முலை மங்கைபங்கா என்சிவகதியே. 145
43
கதியடி யேற்குன் கழல்தற்தருளவும் ஊன்கழியா விதியடி யேனை விடுதிகண்டாய் வெண்தலைமுழையிற் பதியுடை வாளரப் பார்த்திறை பைத்துச் சுருங்க அஞ்சி மதிநெடு நீரிற் குளித்தொளிக் குஞ்சடை மன்னவனே. 146
44
மன்னவனே யொன்று மாற்றியாச்சிறியேன் மகிழ்ச்சி மின்னவனே விட்டிடுதி கண்டாய் மிக்க வேதமெய்ந்நூல் சொன்னவனே சொற் கழிந்தவனே கழியாத் தொழும்பர் முன்னவனே பின்னும் ஆனவனேயிம் முழுதையுமே. 147
45
முழுதயில் வேற்கண்ணியரென்னும் மூரித் தழல்முழுதும் விழுதனை யேனை விடுதிகண்டாய் நின்வெறி மலர்த்தாள் தொழுதுசெல்வான்நல்தொழும்பரிற் கூட்டிடு சோத்தெம்பிரான் பழுதுசெய்வேனை விடேலுடையாய் உண்னைப் பாடுவனே. 148
46
பாடிற்றிலேன் பணியேன் மணிநீயொளித் தாய்க்குப்பச்சூன் வீடிற்றிலேனை விடுதிகண்டாய் வியற் தாங்கலறித் தேடிற்றிலேன் சிவனெவ்விடத்தான்எவர் கண்டனரென்று ஓடிற்றிலேன் கிடந்துள்ளுருகேன் நின்றுழைத்தனனே. 149
47
உழைதரு நோக்கியர் கொங்கைப் பலாப்பழத்து ஈயினொப்பாய் விழைதரு வேனை விடுதிகண்டாய் விடின் வேலைநஞ்சுண் மழைதரு கண்டன் குணமிலி மானிடன் தேய்மதியன் பழைதரு மாபரனேன்றென் றறைவன் பழிப்பினையே. 150
48
பழிப்பில்நின் பாதப் பழந்தொழும் பெய்தி விழப்பழித்து விழித்திருந் தேனை விடுதிகண்டாய் வெண்மணிப்பணிலம் கொழித்துமந்தார மந்தாகினி நுந்தும்பந் தப்பெருமை தழிச்சிறை நீரிற் பிறைக்கலஞ் சேர் தரு தாரவனே. 151
49
தாரகை போலும் தலைத்தலை மாலைத் தழலரப்பூண் வீரஎன் தன்னை விடுதிகண்டாய் விடிலென்னைமிக்கார் ஆரடி யானென்னின் உத்தரகோச மங்கைக்கரசின் சீரடி யாரடி யானென்று நின்னைச் சிரிப்பிப்பனே. 152
50
சிரிப்பிப்பின் சீறும் பிழைப்பைத் தொழும்பையும் ஈசற் கென்று விரப்பிப்ப னென்னை விடுதிகண்டாய் விடின் வெங்கரியின் உரிப்பிச்சன் தோலுடைப் பிச்சன்நஞ்சூண்பிச்சன் ஊர்ச்சுடுகாட்டு எரிப்பிச்சன் என்னையும்ஆளுடைப் பிச்சனென் றேசுவனே. 153
51
ஏசினும் யானுன்னை யேத்தினும் என்பிழைக்கே குழைந்து வேசறு வேனை விடுதிகண்டாய் செம்பவள வெற்பின் தேகடை யாயென்னை ஆளுடையாய் சிற் றுயிர்க் கிரங்கிக் காய்சின ஆலமுண்டாய் அமுதுண்ணக் கடையவனே. 154
52
திருச்சிற்றம்பலம்
பண்டாய நான்மறை
1
(திருப்பெருந்துறையில் அருளியது - நேரிசை வெண்பா )
2
பண்டாய நான்மறையும் பாலணுகா மாலயனுங்
3
கண்டாரு மில்லை கடையேனைத் தொண்டாகக்
4
கொண்டருளுங் கோகழிஎங் கோமாற்கு நெஞ்சமே
5
உண்டாமோ கைம்மா றுரை.
6
உள்ள மலமூன்றும்மாய உகுபெருந்தேன்
7
வெள்ளந் தரும்பரியின் மேல்வந்து வள்ளல்
8
மருவும் பெருந்துறையை வாழ்த்துமின்காள் வாழ்த்தக்
9
கருவுங் கெடும்பிறவிக் காடு.
10
காட்டகத்து வேடன் கடலில் வலைவாணன்
11
நாட்டிற் பரிப்பாகன் நம்வினையை வீட்டி
12
அருளும் பெருந்துறையான் அங்கமல பாதம்
13
மருளுங் கெடநெஞ்சே வாழ்த்து.
14
வாழ்ந்தார்கள் ஆவாரும் வல்வினையை மாய்ப்பாருந்
15
தாழ்ந்துலகம் ஏத்தத் தகுவாருஞ் சூழ்ந்தமரர்
16
சென்றிறைஞ்சி ஏத்தும் திருவார் பெருந்துறையை
17
நன்றிறைஞ்சி ஏத்தும் நமர்.
18
நண்ணிப் பெருந்துறையை நம்மிடர்கள் போயகல
19
எண்ணி எழுகோ கழிக்கரசைப்-பண்ணின்
20
மொழியாளோ டுத்தர கோசமங்கை மன்னிக்
21
கழியா திருந்தவனைக் காண்.
22
காணுங் கரணங்கள் எல்லாம்பே ரின்பமெனப்
23
பேணும் அடியார் பிறப்பகலக் காணும்
24
பெரியானை நெஞ்சே பெருந்துறையில் என்றும்
25
பிரியானை வாயாரப் பேசு.
26
பேசும் மொருளுக் கிலக்கிதமாய்ப் பேச்சிறந்த
27
மாசில் மணியின் மணிவார்த்தை பேசிப்
28
பெருந்துறையே என்று பிறப்பறுத்தேன் நல்ல
29
மருந்தினடி என்மனத்தே வைத்து.
30
திருச்சிற்றம்பலம்
பிடித்த பத்து
1
உம்பர்கட்கு அரசே! ஒழிவு அற நிறைந்த யோகமே! ஊத்தையேன் தனக்கு வம்பு எனப் பழுத்து, என் குடி முழுது ஆண்டு, வாழ்வு அற வாழ்வித்த மருந்தே! செம் பொருள் துணிவே! சீர் உடைக் கழலே! செல்வமே! சிவபெருமானே! எம்பொருட்டு, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?
2
விடை விடாது உகந்த விண்ணவர் கோவே! வினையனேனுடைய மெய்ப் பொருளே! முடை விடாது, அடியேன் மூத்து, அற மண் ஆய், முழுப் புழுக் குரம்பையில் கிடந்து, கடைபடாவண்ணம் காத்து, எனை ஆண்ட கடவுளே! கருணை மா கடலே! இடைவிடாது, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?
3
அம்மையே! அப்பா! ஒப்பு இலா மணியே! அன்பினில் விளைந்த ஆர் அமுதே! பொய்ம்மையே பெருக்கி, பொழுதினைச் சுருக்கும், புழுத் தலைப் புலையனேன் தனக்கு செம்மையே ஆய சிவபதம் அளித்த செல்வமே! சிவபெருமானே! இம்மையே, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?
4
அருள் உடைச் சுடரே! அளிந்தது ஓர் கனியே! பெரும் திறல் அரும் தவர்க்கு அரசே! பொருள் உடைக் கலையே! புகழ்ச்சியைக் கடந்த போகமே! யோகத்தின் பொலிவே! தெருள் இடத்து அடியார் சிந்தையுள் புகுந்த செல்வமே! சிவபெருமானே! இருள் இடத்து, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?
5
ஒப்பு உனக்கு இல்லா ஒருவனே! அடியேன் உள்ளத்துள் ஒளிர்கின்ற ஒளியே! மெய்ப் பதம் அறியா வீறு இலியேற்கு, விழுமியது அளித்தது ஓர் அன்பே! செப்புதற்கு அரிய செழும் சுடர் மூர்த்தீ! செல்வமே! சிவபெருமானே! எய்ப்பு இடத்து, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?
6
அறவையேன் மனமே கோயிலாக் கொண்டு, ஆண்டு, அளவு இலா ஆனந்தம் அருளி, பிறவி வேர் அறுத்து, என் குடி முழுது ஆண்ட பிஞ்ஞகா! பெரிய எம் பொருளே! திறவிலே கண்ட காட்சியே! அடியேன் செல்வமே! சிவபெருமானே இறவிலே, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?
7
பாச வேர் அறுக்கும் பரம் பொருள் தன்னைப் பற்றுமாறு, அடியனேற்கு அருளி, பூசனை உகந்து, என் சிந்தையுள் புகுந்து, பூங்கழல் காட்டிய பொருளே! தேசு உடை விளக்கே! செழும் சுடர் மூர்த்தீ! செல்வமே! சிவபெருமானே! ஈசனே! உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?
8
அத்தனே! அண்டர் அண்டம் ஆய் நின்ற ஆதியே! யாதும் ஈறு இல்லாச் சித்தனே! பத்தர் சிக்கெனப் பிடித்த செல்வமே! சிவபெருமானே! பித்தனே! எல்லா உயிரும் ஆய்த் தழைத்து, பிழைத்து, அவை அல்லை ஆய் நிற்கும் எத்தனே! உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?
9
பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து, நீ, பாவியேனுடைய ஊனினை உருக்கி, உள் ஒளி பெருக்கி, உலப்பு இலா ஆனந்தம் ஆய தேனினைச் சொரிந்து, புறம் புறம் திரிந்த செல்வமே! சிவபெருமானே! யான் உனைத் தொடர்ந்து, சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?
10
புன் புலால் யாக்கை புரை புரை கனிய பொன் நெடும் கோயிலாப் புகுந்து, என் என்பு எலாம் உருக்கி, எளியை ஆய்,ஆண்ட ஈசனே! மாசு இலா மணியே! துன்பமே, பிறப்பே, இறப்பொடு, மயக்கு, ஆம் தொடக்கு எலாம், அறுத்த நல் சோதீ! இன்பமே! உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?
போற்றித் திருவகவல்
1
(தில்லையில் அருளியது - நிலைமண்டில ஆசிரியப்பா)
2
நான்முகன் முதலா வானவர் தொழுது எழ
3
ஈர் அடியாலே மூவுலகு அளந்து
4
நால் திசை முனிவரும் ஐம்புலன் மலரப்
5
போற்றி செய் கதிர்முடித் திருநெடுமால் அன்று
6
அடிமுடி அறியும் ஆதரவு அதனில்
7
கடும் முரண் ஏனம் ஆகிமுன் கலந்து
8
ஏழ்தலம் உருவ இடந்து பின் எய்த்து
9
ஊழி முதல்வ சயசய என்று
10
வழுத்தியும் காணா மலர்அடி இணைகள்
11
வழுத்துதற்கு எளிதாய் வார் கடல் உலகினில் 10
12
யானை முதலா எறும்பு ஈறாய
13
ஊனம் இல் யோனியின் உள்வினை பிழைத்தும்
14
மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்து
15
ஈனம் இல் கிருமிச் செருவினில் பிழைத்தும்
16
ஒரு மதித் தான்றியின் இருமையில் பிழைத்தும்
17
இருமதி விளைவின் ஒருமையில் பிழைத்தும்
18
மும்மதி தன்னுள் அம்மதம் பிழைத்தும்
19
ஈர் இரு திங்களில் பேர் இருள் பிழைத்தும்
20
அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும்
21
ஆறு திங்களில் ஊறு அலர் பிழைத்தும் 20
22
ஏழு திங்களில் தாழ் புவி பிழைத்தும்
23
எட்டுத் திங்களில் கட்டமும் பிழைத்தும்
24
ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும்
25
தக்க தசமதி தாயொடு தான்படும்
26
துக்க சாகரம் துயர் இடைப்பிழைத்தும்
27
ஆண்டுகள் தோறும் அடைந்த அக்காலை
28
ஈண்டியும் இருத்தியும் எனைப்பல பிழைத்தும்
29
காலை மலமொடு கடும்பகல் பசி நிசி
30
வேலை நித்திரை யாத்திரை பிழைத்தும்
31
கரும்குழல் செவ்வாய் வெள்நகைக் கார்மயில் 30
32
ஒருங்கிய சாயல் நெருங்கி உள் மதர்த்துக்
33
கச்சு அற நிமிர்ந்து கதிர்ந்து முன் பணைத்து
34
எய்த்து இடைவருந்த எழுந்து புடைபரந்து
35
ஈர்க்கு இடைபோகா இளமுலை மாதர்தம்
36
கூர்த்த நயனக் கொள்ளையில் பிழைத்தும்
37
பித்த உலகர் பெரும் துறைப் பரப்பினுள்
38
மத்தம் களிறு எனும் அவாவிடைப் பிழைத்தும்
39
கல்வி என்னும் பல்கடல் பிழைத்தும்
40
செல்வம் என்னும் அல்லலில் பிழைத்தும்
41
நல்குரவு என்னும் தொல்விடம் பிழைத்தும் 40
42
புல்வரம்பு ஆய பலதுறை பிழைத்தும்
43
தெய்வம் என்பதோர் சித்தம் உண்டாகி
44
முனிவு இலாதது ஓர் பொருள் அது கருதலும்
45
ஆறு கோடி மாயா சக்திகள்
46
வேறு வேறு தம் மாயைகள் தொடங்கின
47
ஆத்தம் ஆனார் அயலவர் கூடி
48
நாத்திகம் பேசி நாத்தழும்பு ஏறினர்
49
சுற்றம் என்னும் தொல்பசுக் குழாங்கள்
50
பற்றி அழைத்துப் பதறினர் பெருகவும்
51
விரதமே பரம் ஆக வேதியரும் 50
52
சரதம் ஆகவே சாத்திரம் காட்டினர்
53
சமய வாதிகள் தம்தம் தங்களே
54
அமைவது ஆக அரற்றி மலைந்தனர்
55
மிண்டிய மாயா வாதம் என்னும்
56
சண்ட மாருதம் சுழித்தடித் தாஅர்த்து
57
உலோகா யதமெனும் ஒண்டிறப் பாம்பின்
58
கலா பேதத்த கடுவிடம் எய்தி
59
அதில் பெருமாயை எனைப்பல சூழவும்
60
தப்பாமே தாம் பிடித்தது சலியாத்
61
தழலது கண்ட மெழுகு அது போலத் 60
62
தொழுது உளம் உருகி அழுது உடல்கம்பித்து
63
ஆடியும் அலறியும் பாடியும் பரவியும்
64
கொடிறும் பேதையும் கொண்டது விடாதென
65
படியே ஆகி நல் இடைஅறா அன்பின்
66
பசுமரத்து ஆணி அறைந்தால் போலக்
67
கசிவது பெருகிக் கடல் என மறுகி
68
அகம் குழைந்து அனுகுலமாய் மெய் விதிர்த்துச்
69
சகம் பேய் என்று தம்மைச் சிரிப்ப
70
நாண் அது ஒழிந்து நாடவர் பழித்துரை
71
பூண் அது ஆகக் கோணுதல் இன்றிச் 70
72
சதுர் இழந்து அறிமால் கொண்டு சாரும்
73
கதியது பரமா அதிசயம் ஆகக்
74
கற்றா மனம் எனக் கதறியும் பதறியும்
75
மற்று ஓர் தெய்வம் கனவிலும் நினையாது
76
அருபரத்து ஒருவன் அவனியில் வந்து
77
குருபரன் ஆகி அருளிய பெருமையைச்
78
சிறுமை என்று இகழாதே திருவடி இணையைப்
79
பிறிவினை அறியா நிழல் அது போல
80
முன் பின்னாகி முனியாது அத்திசை
81
என்பு நைந்து உருகி நெக்கு நெக்கு ஏங்கி 80
82
அன்பு எனும் ஆறு கரை அது புரள
83
நன்புலன் ஒன்றி நாத என்று அரற்றி
84
உரை தடுமாறி உரோமம் சிலிர்ப்ப
85
கரமலர் மொட்டித்து இருதயம் மலரக்
86
கண்களி கூர நுண் துளி அரும்ப
87
சாயா அன்பினை நாள்தொரும் தழைப்பவர்
88
தாயே ஆகி வளர்த்தனை போற்றி
89
மெய் தரு வேதியன் ஆகி வினைகெடக்
90
கைதரவல்ல கடவுள் போற்றி
91
ஆடக மதுரை அரசே போற்றி 90
92
கூடல் இலங்கு குருமணி போற்றி
93
தென் தில்லை மன்றினுள் ஆடி போற்றி
94
இன்று எனக்கு ஆர் அமுது ஆனாய் போற்றி
95
மூவா நான்மறை முதல்வா போற்றி
96
சேவார் வெல்கொடிச் சிவனே போற்றி
97
மின் ஆர் உருவ விகிர்தா போற்றி
98
கல் நார் உரித்த கனியே போற்றி
99
காவாய் கனகக் குன்றே போற்றி
100
ஆ ஆ என்தனக்கு அருளாய் போற்றி
101
படைப்பாய் காப்பாய் துடைப்பாய் போற்றி 100
102
இடரைக் களையும் எந்தாய் போற்றி
103
ஈச போற்றி இறைவா போற்றி
104
தேசப் பளிங்கின் திரளே போற்றி
105
அரைசே போற்றி அமுதே போற்றி
106
விரை சேர் சரண விகிர்தா போற்றி
107
வேதி போற்றி விமலா போற்றி
108
ஆதி போற்றி அறிவே போற்றி
109
கதியே போற்றி கனியே போற்றி
110
நதி நேர் நெஞ்சடை நம்பா போற்றி
111
உடையாய் போற்றி உணர்வே போற்றி 110
112
கடையேன் அடிமை கண்டாய் போற்றி
113
ஐயா போற்றி அணுவே போற்றி
114
சைவா போற்றி தலைவா போற்றி
115
குறியே போற்றி குணமே போற்றி
116
நெறியே போற்றி நினைவே போற்றி
117
வானோர்க்கு அரிய மருந்தே போற்றி
118
ஏனோர்க்கு எளிய இறைவா போற்றி
119
மூவேழ் சுற்றமும் முரண் உறு நரகு இடை
120
ஆழாமே அருள் அரசே போற்றி
121
தோழா போற்றி துணைவா போற்றி 120
122
வாழ்வே போற்றி என் வைப்பே போற்றி
123
முத்தா போற்றி முதல்வா போற்றி
124
அத்தா போற்றி அரனே போற்றி
125
உரைஉணர்வு இறந்த ஒருவ போற்றி
126
விரிகடல் உலகின் விளைவே போற்றி
127
அருமையில் எளிய அழகே போற்றி
128
கருமுகி லாகிய கண்ணே போற்றி
129
மன்னிய திருவருள் மலையே போற்றி
130
என்னையும் ஒருவ னாக்கி இருங்கழல்
131
சென்னியில் வைத்த சேவக போற்றி 130
132
தொழுதகை துன்பந் துடைப்பாய் போற்றி
133
அழிவிலா ஆனந்த வாரி போற்றி
134
அழிவதும் ஆவதும் கடந்தாய் போற்றி
135
முழுவதும் இறந்த முதல்வா போற்றி
136
மான்நேர் நோக்கி மணாளா போற்றி
137
வான்அகத்து அமரர் தாயே போற்றி
138
பார்இடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி
139
நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி
140
தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி
141
வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி 140
142
வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி
143
அளிபவர் உள்ளதது அமுதே போற்றி
144
கனவிலும் தேவர்க்கு அரியாய் போற்றி
145
நனவிலும் நாயேற்கு அருளினை போற்றி
146
இடைமருது உறையும் எந்தாய் போற்றி
147
சடைஇடைக் கங்கை தரித்தாய் போற்றி
148
ஆரூர் அமர்ந்த அரசே போற்றி
149
சீர் ஆர் திருவையாறா போற்றி
150
அண்ணாமலை எம் அண்ணா போற்றி
151
கண் ஆர் அமுதக் கடலே போற்றி 150
152
ஏகம்பத்து உறை எந்தாய் போற்றி
153
பாகம் பெண் உரு ஆனாய் போற்றி
154
பராய்த் துறை மேவிய பரனே போற்றி
155
சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி
156
மற்று ஓர் பற்று இங்கு அறியோன் போற்றி
157
குற்றாலத்து எம் கூத்தா போற்றி
158
கோகழி மேவிய கோவே போற்றி
159
ஈங்கோய் மலை எந்தாய் போற்றி
160
பாங்கு ஆர் பழனத்து அழகா போற்றி
161
கடம்பூர் மேவிய விடங்கா போற்றி 160
162
அடைந்தவர்க்கு அருளும் அப்பா போற்றி
163
இத்தி தன்னின் கீழ் இருமூவர்க்கு
164
அத்திக்கு அருளிய அரசே போற்றி
165
தென்னாடுடைய சிவனே போற்றி
166
என் நாட்டவர்க்கும் இறைவா போற்றி
167
ஏனக் குருளைக்கு அருளினை போற்றி
168
மானக் கயிலை மலையாய் போற்றி
169
அருளிட வேண்டும் அம்மான் போற்றி
170
இருள் கெட அருளும் இறைவா போற்றி
171
தளர்ந்தேன் அடியேன் தமியேன் போற்றி 170
172
களம் கொளக் கருத அருளாய் போற்றி
173
அஞ்சேல் என்று இங்கு அருளாய் போற்றி
174
நஞ்சே அமுதா நயந்தாய் போற்றி
175
அத்தா போற்றி ஐயா போற்றி
176
நித்தா போற்றி நிமலா போற்றி
177
பத்தா போற்றி பவனே போற்றி
178
பெரியாய் போற்றி பிரானே போற்றி
179
அரியாய் போற்றி அமலா போற்றி
180
மறையோர் கோல நெறியே போற்றி
181
முறையோ தரியேன் முதல்வா போற்றி 180
182
உறவே போற்றி உயிரே போற்றி
183
சிறவே போற்றி சிவமே போற்றி
184
மஞ்சா போற்றி மணாளா போற்றி
185
பஞ்சு ஏர் அடியான் பங்கா போற்றி
186
அலந்தேன் நாயேன் அடியேன் போற்றி
187
இலங்கு சுடர் எம் ஈசா போற்றி
188
சுவைத்தலை மேவிய கண்ணே போற்றி
189
குவைப்பதி மலிந்த கோவே போற்றி
190
மலை நாடு உடைய மன்னே போற்றி
191
கலை ஆர் அரிகேசரியாய் போற்றி 190
192
திருக்கழுக் குன்றில் செல்வா போற்றி
193
பொருப்பு அமர் பூவணத்து அரனே போற்றி
194
அருவமும் உருவமும் ஆனாய் போற்றி
195
மருவிய கருணை மலையே போற்றி
196
துரியமும் இறந்த சுடரே போற்றி
197
தெரிவு அரிது ஆகிய தெளிவே போற்றி
198
தேளா முத்தச் சுடரே போற்றி
199
ஆள் ஆனவர்களுக்கு அன்பா போற்றி
200
ஆரா அமுதே அருளா போற்றி
201
பேர் ஆயிரம் உடைப் பெம்மான் போற்றி 200
202
தாளி அறுகின் தாராய் போற்றி
203
நீள் ஒளி ஆகிய நிருத்தா போற்றி
204
சந்தனச் சாந்தின் சுந்தர போற்றி
205
சிந்தனைக்கு அரிய சிவமே போற்றி
206
மந்திர மாமலை மேயாய் போற்றி
207
எந்தமை உய்யக் கொள்வாய் போற்றி
208
புலிமுலை புல் வாய்க்கு அருளினை போற்றி
209
அலைகடல் மீ மிசை நடந்தாய் போற்றி
210
கரும் குருவிக்கு அன்று அருளினை போற்றி
211
இரும் புலன் புலர இசைந்தனை போற்றி 210
212
படி உறப் பயின்ற பாவக போற்றி
213
அடியொடு நடு ஈறு ஆனாய் போற்றி
214
நரகொடு சுவர்க்க நானிலம் புகாமல்
215
பரகதி பாண்டியற்கு அருளினை போற்றி
216
ஒழவற நிறைந்த ஒருவ போற்றி
217
செழு மலர்ச் சிவபுரத்து அரசே போற்றி
218
கழு நீர் மாலைக் கடவுள் போற்றி
219
தொழுவார் மையல் துணிப்பாய் போற்றி
220
பிழைப்பு வாய்ப்பு ஒன்று அறியா நாயேன்
221
குழைத்த சொல்மாலை கொண்டருள் போற்றி 220
222
புரம்பல் எரித்த புராண போற்றி
223
பரம் பரம் சோதிப் பரனே போற்றி
224
போற்றி போற்றி புயங்கப் பெருமான்
225
போற்றி போற்றி புராண காரண
226
போற்றி போற்றி சய சய போற்றி 225