Books / Mupporul Vilakkam (முப்பொருள் விளக்கம்)

105. A devotee of Shiva

Passage 1

சிவனடியார்.

A devotee of Shiva.

Passage 2

விபூதி ருத்திராக்ஷம் முதலிய திருவேடமுடையாரும், பஞ் சப்பிரம ஒடங்க நியாசம் முதலிய நியாசங்கள் வாயிலாகச் சிவோகம்பாவனை செய்வோரும், அகப்பூசை புறப்பூசை செய்வோரும் தம்மின் இரண்டற இயைந்த சிவத்தோடு கலந்து நிற்போரும் சிவமேயாவர். வேடம் பாவனை செயல் தன்மை என்னும் இந்நான்கினுள் ஒன்று அமையப்பெற்ற வராயிருப்பினும் அவரைச் சிவமாகப் பாவித்து வழிபடல் வேண்டும்.

Those who bear the sacred marks such as vibhuti and rudraksha, those who contemplate themselves as Shiva through nyasas such as the Panchabrahma Nyasa, those who perform inner and outer worship, and those who stand united with Shiva, inseparably merged in Him, are themselves Shiva. Even if a person possesses only one of these four—sacred marks, contemplation, conduct, or nature—one must regard and worship that person as Shiva.

Passage 3

சிவனடியாரோடும் மெய்யன்பிற் கலந்து அவர்பணி வழு வாதொழுகி, அவர்முன் வாய்பொத்திப் பணிவுடன் நின்று அவர் கூற்றுக்கு எதிர்மொழி கூறாது பக்தி பண்ணுதல் வேண்டும்.

One must associate with Shiva’s devotees in true love, serve them without fail, stand before them respectfully with one’s mouth covered, refrain from contradicting their words, and practice devotion.

Passage 4

தாயுமான சுவாமிகள்

Tayumanavar

Passage 5

அன்பர்பணி செய்யவெனை யாளாக்கி விட்டால்

If only You would make me Yours so that I might serve Your devotees

Passage 6

இன்பநிலை தானேவந் தெய்தும் பராபரமே.

Bliss itself comes and is attained as the Supreme Transcendent.

Passage 7

இச் சரியை இந்திரியத் தொழிலாகிய புறத் தொழில் மாத்திரையானே சிவபெருமானது உருவத் திருமேனியை நோக்கிச் செய்யும் வழிபாடாம். இதனை அனுட்டித்தோர் சிவலோகத்தில் இருத்தலாகிய பதமுத்தியைப் பெறுவர்.

This Charya is worship performed toward the embodied form of Lord Shiva solely through external actions, which are activities of the senses. Those who practise it attain Padamukti, abiding in the world of Shiva.

Passage 8

சரியையாளர் திருக்கோயில்களில் சுயம்புவாக அமைந் துள்ள இலிங்கத்தையும் தேவர்கள், இருடிகள், குரவர்கள் முதலியோராற் சிவாகம முறைப்படி பிரதிட்டை செய்யப் பட்ட சிவலிங்க முதலிய திருமேனியையுமே சிவமெனக் கண்டு வழிபடுவார்கள்; சிவபெருமான் அவர்களுக்கு அத் திருவுருவங்களில் வெளிப்படாது நின்று திருவருள் செய்வர். *

Those who practise Charya worship the lingam that has manifested itself in the temples, as well as the sacred forms such as the Shiva lingam that have been consecrated according to the procedure prescribed in the Shaiva Agamas by devas, sages, spiritual teachers, and others, recognizing them as Shiva. Lord Shiva, without outwardly manifesting in those sacred forms, bestows His divine grace upon them. *

Passage 9

கிரியையின் இலக்கணமும் பயனும்.

The Definition and Benefits of Kriya.

Passage 10

கிரியையாவது புஷ்பம், + திருமஞ்சனம், தூபம், தீபம், சந்தனம், திரு அமுது முதலிய பூசைக்கு வேண்டிய உபகர ணங்களை அமைத்துக்கொண்டு, பஞ்சசுத்தி பண்ணி, அகப் பூசை செய்து, புறத்திலுள்ள சிவலிங்கத்தில் சிவபெருமா னப் பாவனை செய்து வெளிப்படுத்திப் பூசித்துத் துதித்து நமஸ்காரம் முதலிய வழிபாடியற்றி, நித்தியாக்கினிகாரியமுஞ் செய்து முடிப்பதாம்.

Kriya consists in arranging the materials required for worship—flowers, sacred ablution, incense, lamps, sandalwood paste, sacred food offerings, and the like—performing the five purifications, carrying out internal worship, visualizing Lord Shiva in the external Shiva Lingam, manifesting Him there and worshipping Him, offering praise, prostration, and other forms of worship, and completing the daily fire ritual.

Passage 11

பஞ்சசுத்திகள்: பூதசுத்தி, தானசுத்தி, திரவியசுத்தி, மந்திரசுத்தி, இலிங்கசுத்தி என்பன. இவை ஆணவம் முத லிய ஐவகைப் பாசநீக்கத்தின் பொருட்டும் சிவஞானப் பேற்றின் பொருட்டும் செய்யப்படுவன.

The five purifications are Bhuta-shuddhi, Sthana-shuddhi, Dravya-shuddhi, Mantra-shuddhi, and Linga-shuddhi. These are performed for the removal of the five kinds of bondage, beginning with anava, and for the attainment of knowledge of Shiva.