122. Explanation of the Three Fundamental Entities
Passage 1
முப்பொருள் விளக்கம்
Explanation of the Three Fundamental Entities
Passage 2
மலத்தினாலே மறைக்கப்பட்டுள்ள அறிவுந் தொழிலும் உடையவர்களாய்த் தம்வயத்த ரல்லாதவர்களாய் உள்ள பசுக்களாகிய நம்மோடு அநாதியே இரண்டறக் கலந்து நின்று, நமக்கெல்லாம் நித்தியானந்தப் பெருஞ் செல்வத் தைத் தந்தருள விரும்டி, தந்தொழில்களெல்லாம் தம்பயன் சிறிதுங் குறியாது நம்பயன் குறித்த தொழில்களாகவே கொண்டு, பெத்தநிலையில் தாம் நம்முள்ளே மறைந்து நமக் குப் பின்னாகியும், முத்தி நிலையிலே நம்மைத் தம்முள்ளே அடக்கித் தாம் நமக்கு முன்னாகியும், இப்படியே என்றும் உபகரிக்கும் இயல்புடைய பெருங்கருணைக் கடலாகிய * பசு பதி சிவபெருமான் ஒருவரே; ஆகலினால் அவரொருவரே நம்மோடு என்றுக் தொடர்புடையவராய் நமக்கு நம்மினும் இனியவராய் உள்ளவர்; அவருக்கே நாமெல்லாம் உடை மைப் பொருள்; அவருக்கே நாமெல்லாம் மீளா அடிமை; ஆத லினால், பரமேசுரனாரிடத்திற்றானே நாமெல்லாம் மேலான பகதி செய்தல் வேண்டும்.
As beings whose knowledge and actions are veiled by impurity, and who are not independent, we are the souls who have been inseparably united with Him from beginningless time. Desiring to bestow upon us all the great treasure of eternal bliss, He accepts all His actions as being directed toward our benefit, without diminishing their own purpose in the least. In the bound state, He remains hidden within us and stands behind us; in the liberated state, He contains us within Himself and stands before us. Thus, the one who is eternally disposed to help us is the great ocean of compassion, the Lord of souls, Sivaperuman, and He alone. Therefore, He alone is eternally related to us and is dearer to us than we are to ourselves. We are all His possessions; we are all His irrevocable servants. Therefore, we must all render the highest devotion to Parameswaran alone.
Passage 3
சிவபெருமானிடத்தில் வைக்கப்பட்ட மெய்யன்பே நித் தியமும் உண்மையுமாமென்பது உண்மைநூற்றுணிபு இந்த உறுதியான அன்பு இலக்கண இலக்கியங்களைக் கற்றறிக்க வித்துவ சாமர்த்தியத்துக்கும், வேகசிவாகமங்களிலே கூறிப் போந்த பதிபசுபாச இலக்கணங்கள் வாசித்து அறிந்து கொண்டோம் என்னும் அகங்காரத்துக்கும், மதிநுட்பத்துக் கும், அணுவளவேனும் எட்டாதது.
The true conclusion of the sacred scriptures is that sincere love placed in Lord Shiva is eternal and genuine. This steadfast love is beyond scholarly skill gained through learning grammar and literature, beyond the pride of thinking, “We have read and understood the definitions of Lord, soul, and bondage explained in the Vedic and Shaiva Agamas,” and beyond even the subtlest intellect.
Passage 4
அளவிறந்த கோடிக்கணக்காகிய முன் செனனங்களிலே செய்த தவத்தினாலும் அதனாற் சம்பாதித்துக்கொண்ட திரு வருளினுலும் கிட்டப்படுவதாம். †
It is attained through the austerities performed in countless previous births and through the divine grace thereby earned. †
Passage 5
உன்றிரு வடிக்கீ ழுறுதியா மன்பு
With steadfast love beneath your sacred feet
Passage 6
முன்றிரு வருளினற் கிடைப்ப
Attaining grace through your threefold presence
Passage 7
தன்றினூல் பலவு மாய்ந்ததா அரைசெ
Having examined the many meanings of your sacred text
Passage 8
யளப்பருந் திறமையான் மதியான்
By wisdom and incomparable skill, O Sovereign
Passage 9
மன்றவே கிடைப்ப தன்றுமற் றதனை
O Radiant One, Ocean of Compassion,
Passage 10
மாதவஞ் செய்திலாக் கயமை
How can those base people
Passage 11
துன்றிய புலையோர் யாங்ஙனம் பெறுவார்
Who have not performed austerities
Passage 12
சோதியே கருணைவா ரிதியே.
Attain what is not even found in the assembly?
Passage 13
நாமெல்லாம் சிவபெருமானுடைய திருவடியை நின்றாலும் இருந்தாலும், கிடந்தாலும், நடந்தாலும், உண்டாலும், துயின் றாலும், விழித்காலும், ஓர்போதம் மறவாது எக்காலமும் இடையறாது அன்பு செய்தல் வேண்டும். சிவபெருமானிடத் தில் வைக்கப்படுகிற அன்பானது அவருடைய திருவடியில் இரண்டறக் கலத்தலாகிய அத்துவித நிலையைக் கொடுக்கும். ஆதலால் அன்புஞ் சிவமும் இரண்டற அபேதமாய் நிற்கும். $
Whether we stand, sit, lie down, walk, eat, sleep, or wake, we must love the sacred feet of Lord Shiva at all times, continuously and without ever forgetting them. The love placed in Lord Shiva grants the non-dual state of merging completely with His sacred feet. Therefore, love and Shiva remain non-different and inseparable. $
Passage 14
பத்தாந்திருமுறை
Pattam Tirumurai
Passage 15
அன்புஞ் சிவமு மிரண்டென்ப ரறிவிலார்
The ignorant say that love and Shiva are two.
Passage 16
ரன்பே சிவமாய தாரு மறிகிலா
They do not know that love itself is Shiva.
Passage 17
ரன்பே சிவமாவ தாரு மறிந்தபி
Love itself becomes Shiva, as those who know this have realized.
Passage 18
னன்பே சிவமா யமர்ந்திருந் தாரே.
They abide, established in the knowledge that love itself is Shiva.
Passage 19
அத்துவித நிலையாவது ஆன்மபோதமும் கண்ணொளியும் போலச் சிவ மும் ஆன்மாவும் தம்முள் இரண்டற ஒற்றுமைப்பட்டு நிற்றல்.
The non-dual state is the condition in which Shiva and the soul are united inseparably, like the consciousness of the soul and the light of the eye.
Passage 20
$ திருவருட் பயன்
The Benefit of Divine Grace
Passage 21
இன்பி லினிதென்ற லின்புண்டே லின்றுண்டா
If there is bliss in saying “sweet,”
Passage 22
மன்பு நிலையே யது.
that is the state of love.
Passage 23
சிவபெருமானிடத்தே அன்புடைமைக்கு அடையாளங்கள்: கண்டம் விம்முதல், நாக்குத் தடித்தல், உதடு துடித்தல், சரிரம் நடுங்குதல், உரோ மஞ் சிலிர்த்தல், குறுவேர்வை கொள்ளல், நாக்குத் தழுதழுத்தல், ஆனந் தக் கண்ணீர் சொரிதல், வாய்விட்டழுதல், பரவசமாய்த் தன்னை அயர்த் தல் என்னும் பத்துமாம்.
The signs of possessing love for Lord Shiva are ten: the throat swelling, the tongue becoming stiff, the lips quivering, the body trembling, the hairs standing on end, breaking out in a slight sweat, the tongue faltering, shedding tears of bliss, weeping aloud, and becoming so overwhelmed with ecstasy that one loses awareness of oneself.
Passage 24
சுத்தாத்துவித பரமுத்திநிலை.
The state of supreme liberation through pure Advaita.
Passage 25
காந்தமானது இரும்பைத் தன்வசமாக்கி ஓர்காலும் விடாத தன்மைபோல, ஆன்மாவை விடாது தன்வசமாக்கி, உப்பானது நீரோடு கூடியவிடத்துத் கன்னிடத்துள்ள சுவை முழுதையும் அந்நீருக்காக்கி, அதனோடு மறைந்து நிற்கு மாறு போல, சிவபெருமான் தமது எண் குணங்களை ஆன்மா விடத்து விளங்கச் செய்து கலந்து நிற்பர். அணையினுள் ளாகக் கட்டுப்பட்டுத் தேங்கிநின்ற ஆற்றுநீர் அவ்வணையை முரித்து ஒரு தடையுமின்றி விரைந்து சென்று கடல் நீரு டன் கலந்து அடங்கி மீண்டு வராக தன்மைபோல, பாச ஞானத்தில் அடங்கித் தடைப்பட்ட ஆன்மா அத்தடையி னின்றும் நீங்கிச் சிவபெருமானுடைய திருவடியிற் கலந்து அருள்நிறைவா யடங்கிப் பின்பு மீளுகலின்றிக் கருப்பஞ் சாறு, தேன், பால், கனி, அமுகம், கற்கண்டு, சருக்கரை என்னும் சுவைப் பொருள்களை ஒன்றாகக் கலந்த விடத்து உண்டாகிய சுவை இத்கன்மைத் தெனப் பிரித்தறிய வரா தது போலப் பரமுத்தியில் இத்தன்மைத் தெனப் பிரித் தறிய முடியாக ஆனந்த சொரூபமாய் நிற்கும்.
Just as a magnet takes iron under its control and never lets it go, and just as salt, when mixed with water, imparts all its own taste to the water and disappears into it, Lord Shiva causes His eight qualities to shine forth in the soul, mingling with it and remaining within it. Just as river water, confined and accumulated behind a dam, breaks through that dam and rushes forth without obstruction, mingling with the waters of the sea and becoming absorbed, never to return, so the soul, restrained and obstructed by the knowledge of bondage, breaks free from that obstruction, mingles with the sacred feet of Lord Shiva, and becomes fully absorbed in His grace, never to return. Just as, when sugarcane juice, honey, milk, fruit, nectar, rock candy, and sugar are mixed together, the resulting taste cannot be distinguished as belonging to any one of them, so in supreme liberation it remains as a blissful essence whose nature cannot be distinguished as being of one kind or another.
Passage 26
திருவாசகம்
Tiruvacakam
Passage 27
தானந்த மில்லான் றனையடைந்த நாபேனை
He who had no bliss made me attain Him,
Passage 28
ஆனந்த வெள்ளத் தழுக்துவித்தான் காணேடி
and plunged me into the flood of bliss—behold!
Passage 29
ஆனந்த வெள்ளத் கழுத்தவிக்க திருவடிகள்
The sacred feet that cause one to be immersed in the flood of bliss
Passage 30
வானுந்து தேவர்கட்கோர் வான் பொருள்காண் சாழலோ
Behold the celestial treasure for the heavenly gods—sing, O maiden!