Books / Mupporul Vilakkam (முப்பொருள் விளக்கம்)

124. Vibhuti

Passage 1

விபூதி

Vibhuti

Passage 2

சிவனடியார்களால் தரித்தாக்கொள்ளப்படும் அடையா ளங்கள் விபூதி உருத்திராக்ஷம் என்னும் இரண்டுமாம். அவை சிவசின்னங்கள் எனப்படும்.

The two marks worn by the devotees of Shiva are vibhuti and rudraksha. They are called the insignia of Shiva.

Passage 3

திருநீறு, பஸ்மம், பசிதம், க்ஷாரம், இரக்ஷ என்பன விபூதியின் பெயர்களாம். தன்னத் தரித்தவர்களுக்கு அழி வில்லாத ஐசுவரியத்தைக் கொடுப்பதால் விபூதி எனப்படும். பாவங்களை நீக்குவதால் திருநீறு எனவும் பஸ்மம் எனவும் பெயர் பெறும். அறியாமை அழியும்படி சிவஞானத்தை விளக்கலால் பசிதம் எனப்படும். உயிர்களது மலத்தைக் கழுவுவதால் க்ஷாரம் எனப்படும். * ஆன்மாக்களைப் பிறவித் துன்பத்தினின்று நீக்குவதால் இரக்ஷை எனப்படும்.

Tiruniru, bhasma, pasitam, ksharam, and raksha are names for vibhuti. It is called vibhuti because it bestows imperishable prosperity upon those who wear it. It is called tiruniru and bhasma because it removes sins. It is called pasitam because it reveals the knowledge of Shiva, thereby destroying ignorance. It is called ksharam because it washes away the impurities of living beings. * It is called raksha because it frees souls from the suffering of birth.

Passage 4

சிவப்பிரியராய், சிவத்தைப் பற்றினவராய், சிவபாதார்ச் சனையில் விருப்புடையராய், திரிபுண்டர தாரிகளாய் எவர் கள் உளரோ, அவர்கள் உத்தம சிவனடியாராவர். உத்தூ ளனம் திரிபுண்டரம் என்பவற்றை மாயாபாச நிவிர்த்தி யின் பொருட்டு முனிசிரேஷ்டர்கள் அனுஷ்டிக்கின்றார்கள் எனப் புராணங்கள் பகருகின்றன.

Those who are devoted to Shiva, attached to Shiva, desirous of worshipping Shiva’s feet, and wear the tripundra are the finest devotees of Shiva. The Puranas state that the great sages practise uddhulanam and tripundram in order to remove the bonds of maya.

Passage 5

நல்வழி கூறவந்த தெய்வப்புலமை ஔவைப் பிராட்டி யார் “நீறில்லா நெற்றிபாழ்” என்றார். சமயாசாரிய மூர்த்தி களும் " திருவெண்ணீ றணியாக திருவிலூரும்… அவை யெல்லா மூரல்ல வடவிகாடே" எனத் திருவாய்மலர்ந்தருளி னார். இதனாலும் பிறவாற்றாலும் சைவசமயிகளுக்கு நல்வழி யாயுள்ளது திருநீறே என்பது தெளியப்படும். †

Avvaiyar, the divinely gifted poetess who came to teach the righteous path, said, “The forehead without sacred ash is wasted.” The incarnations of the religious preceptors also graciously declared in the Tiruvaymoli, “Adorn yourself with the sacred white ash; … all those places are not temples but desolate forests.” From this and other evidence, it becomes clear that sacred ash alone is the righteous path for followers of Shaivism. †

Passage 6

ஆன்மா எனப்படும் பசுவைப் பந்தித்த பாசமாகிய மலத் தைச் சிவஞானமாகிய அக்கினியினாலே தகித்தபோது சிவத் துவமாகிய சுத்தநிலை விளங்கும் என்பதற்கு அறிகுறியாகவே, தரும வடிவாயுள்ள பசுவினது சாணத்தைச் சிவமந்திரங் கொண்டு பஞ்சகவ்வியம் விட்டுப் பிசைந்து சிவாக்கினியினாலே தகித்தலால் உண்டாகிய திருநீற்றைத் தரிப்பதாம்.

When the impurity that binds the soul, known as the soul-as-cow, is burned by the fire of Śiva-knowledge, the pure state of Śivatva becomes manifest. As an indication of this, sacred ash is worn—ash produced by kneading the dung of the cow, which embodies dharma, with the pañcagavya while reciting the Śiva-mantra, and then burning it with the fire of Śiva.

Passage 7

"பூதப் பிரேத பிசாச … பவபீதிகளினின்று காத்தலால், இரசைக்க் — பிருகத்ஜாபாலோபடுடதம்.

“Because it protects from bhūtas, spirits, demons … and fears of worldly existence, it is called rasai— Bṛhajjābālopaniṣad.

Passage 8

† அருமருந்தாகிய திருநீற்றின் வகையும் பிறவும் சைவ சமய நெறி (பொது—163-206) யிலும் ஆகமங்களிலும் காண்க.

† For the varieties and other details of the sacred ash, which is a precious medicine, see Saiva Samaya Neri (General—163–206) and the Āgamas.

Passage 9

பெரியபுராணம்: திருக்கூட்டச் சிறப்பு,

Periyapurāṇam: The Glory of the Assembly of Devotees,

Passage 10

மாசி லாத *மணிதிகழ் மேனிமேற்

Upon His flawless, gem-like form,

Passage 11

பூசு நீறுபோ லுள்ளும் புனிதர்கள்

Like the sacred ash they wear, the saints within,

Passage 12

தேசி னலெத் திசையும் விளக்கினார்

They illumined every direction with the radiance of wisdom,

Passage 13

பேச வொண்ணாப் பெருடை பிறங்கினார்.

And shone forth with a greatness beyond words.

Passage 14

திருமந்திரம்

Tirumantiram

Passage 15

கங்காளன் பூசுங் கவசத் திருநீற்றை

The sacred ash worn as armor and smeared by the Kankalan

Passage 16

மங்காமற் பூசி மகிழ்வீரே யாமாயிற்

If we joyfully apply it without fail,

Passage 17

றங்கா வினைகளுஞ் சாருஞ் சிவகதி

Unfailing deeds will also draw near, along with the path to Shiva

Passage 18

சிங்கார மான திருவடி சேர்வரே.

Those who attain the beautiful, auspicious feet.