Books / Mupporul Vilakkam (முப்பொருள் விளக்கம்)

128. Notes (குறிப்புரை)

Passage 1

ஸ்ரீ மெய்கண்டதேவ நாயனுர் திருவடி வாழ்க.

May the holy feet of Sri Meykandadeva Nayanar flourish.

Passage 2

பதி - காக்கிறவன்.

Pati—the Protector.

Passage 3

† அநாதிமுத்த சித்துரு - அரகதியே அதாவது இயல்பாகவே பாசங்க ளினின்றும் விடுபட்ட ஞ।னவடிவினன்.

† Anādimukta Siddhar—the one whose form is knowledge, naturally free from the bonds.

Passage 4

‡அநாதிபெத்தசித்துரு - இயல்பாகவே பாசத்தோடுகூடிய ஞானவடி வினான்.

‡ Anādibaddha Siddhar—the one whose form is knowledge, naturally bound together with the bonds.

Passage 5

மோட்சம் - முத்தி, விடு

Moksha – liberation, release

Passage 6

நிஷ்களம் = வடிவில்ல து.

Nishkala = formless.

Passage 7

† சகளம் நிஷ்களம் என்னுமிவ்விரு தன்மையுங் கூடுதலால் சகள நிட்களம்; மகாலிங்கம்.

† Since the two natures known as Sakala and Nishkala are combined, it is Sakala-Nishkala, the Mahalinga.

Passage 8

களம் = வடிவம். சகளம் = வடிவத்துடன் கூடியது.

Kala = form. Sakala = possessing form.

Passage 9

$ சத்தர் - விந்துவின் காரியங்களை ஒடுக்கியிருப்பவர். உத்தியுத்தர் - விந்துவின் காரியங்களில் முயன்றவர். பிரவிருத்தர் - வீந்துவின் காரியங்களைத் தொடங்கினவர்.

$ Saththar—the one who has suppressed the activities of Vindu. Uthiyuththar—the one who has exerted himself in the activities of Vindu. Pravirththar—the one who has initiated the activities of Vindu.

Passage 10

வேண்டும் என்று நியமித்தல் சதாசிவம். செய்யுங்காலத்து, முறைபிறைழா திருக்கச்செய்தல் மகேசுவரம். முறைபிறம்ந்தாரைத் தண்டித்தலும் அவசி யமானபோது அப்புறப்படுத்தவேண்டியவர்களை அப்புறப்படுத்தலும் உருத் திரன். முறைபிறழாதாரைக் காத்தல் விட்டுணு. காப்பதற்காகக் கைத் தொழில் கிருஷி முதலியவற்றை உண்டுபண்ணுதல் பிரமன். இவ்வாறு உவமையில் வைத்து உணர்க. இது ஒரு புடையுவமையல்லது முற்றுவமை யன்று.

Appointing what ought to be done is Sadashivam. At the time of carrying it out, ensuring that it is done without deviation from the proper order is Mahesvaram. Punishing those who deviate from the proper order, and removing those who must be removed when necessary, is Rudran. Protecting those who do not deviate from the proper order is Vishnu. Creating occupations such as handicrafts and agriculture for the sake of protection is Brahma. Understand this by taking it as an analogy. This is only a partial analogy, not a complete one.

Passage 11

சிவஞானசித்தியார் 2-4-77 தமக்கென விருப்பின்றி ஆன்மாக்களின் பொருட்டு எல்லாம் செய்தலால் சிவன் பிரமசாரி எனவும், சத்தி கன்னிகை எனவும் கூறப்பட்டது.

Sivagnana Siddhiyar 2-4-77: Since He does everything for the sake of souls, without any desire for Himself, Shiva is said to be a celibate, and Shakti a maiden.

Passage 12

வாதுளாகமம்.

Vatulagama.

Passage 13

“கறைமிட றணியலு மணிந்தன் றக்கறை-மறைநவி லந்தணர் நுவ லவும் படுமே”—புறநானூறு “அக்கறுப்பு தான் மறுவாயும் வானோரை உய்யக்கொண்டமையின், வேதத்தைப் பயிலும் அந்தணராற்புகழவும்படும்.” ஷூ உரை.

“May he be adorned with the stain upon his throat”—Purananuru. “Because he consumed that poison for the sake of saving the celestial beings, that dark stain is praised by the Brahmins who study the Vedas.” — Commentary.

Passage 14

“பால்புரை பறைநுதற் பொலிந்த சென்னி

“His head shone with a forehead marked like the white crescent moon,

Passage 15

நீல மணிமிடற் றொருவன் போல

Like the One with the throat of a blue gem,

Passage 16

மன்னுக பெரும…” —புறநானூறு. “நீல மணிமிடற் ரெரு வன் போல என்ற கருத்து சாதற்குக் காரணமாகிய நஞ்சுண்டும் நிலைபெற் றிருந்தாற்போல நீயும் சாவாதிருத்தல் வேண்டும் என்பதாம்.” ஷே உரை

May you endure forever, O great one…” —Purananuru. “The meaning of ‘like the One with the throat of a blue gem’ is that, just as he remained immortal after drinking the poison that would have caused death, so you too should remain free from death.” —Commentary.

Passage 17

திருநாவுக்கரசுநாயனா திருத்தாண்டகம் 'ஏவணச்சிலையான்…"

The Tiruthandakam of Tirunavukkarasu Nayanar: “He who wields the bow of Meru…”

Passage 18

இச்சரித்திரத்தை “மண்மடங்தைவிளையாடி” என்னும் சுந்தரமுர்த்தி ராயனுர் தேவாரத்திலும், கந்தபுராணத்திலும் காண்க,

This account may be found in the Tevaram of Sundaramurti Nayanar, entitled “Playing in the Earthly Abode,” and in the Kandha Puranam.

Passage 19

இச்சரித்திரத்தைக் கந்தபுராணத்துட் காண்க.

This account may be found in the Kandha Puranam.

Passage 20

† ஆன்மாக்களுக்குப் பேரின்ப வீடளிக்க விரும்பும் விருப்பம் இச்சா சத்தி, அதற்கு வேண்டுவனவற்றை அறியும் அறிவு ஞானசத்தி, அறிந்து செய்யும் செயல் கிரியாசத்தி.

† The desire to grant the souls the abode of supreme bliss is Iccha Shakti; the knowledge of what is required for that is Jnana Shakti; and the action undertaken with that knowledge is Kriya Shakti.

Passage 21

வா துளாகமம் தத்துவபேதபடலம்.

Vā Ṯ ulākamam, Tattuvapēthapaṭalam.

Passage 22

“ஞானவாளேந்துமையர்” - திருவாசகம்.

“Bearers of the sword of wisdom” — Tiruvācakam.

Passage 23

↓ அபயகரமானது உலகங்களைக் காக்கிற சத்தி - காமிக ஆகமம்.

↓ The power that protects the worlds is Abhayakaram — Kāmika Āgama.

Passage 24

$ “போர்ப்பனையானை யுரித்த பிரான்” என்னும் தேவாரம் காண்க,

$ See the Tēvāram verse beginning, “The Lord who flayed the battle elephant.”

Passage 25

§ அங்குசம் - விரிவைக் குறிக்குமென்பதுமாம்,

§ Ankusha—it is also said to signify expansion, 2

Passage 26

“இடர் மூன்று மிழித்தருளு மிளமுறுவன் முகமலரிலங்க” என்பது சிவதருமோத்தரம்.

“His youthful, smiling face shines forth, graciously dispelling the three afflictions” is from Sivadharmottara.

Passage 27

† போற்றிப் பஃறொடை: - “வீட்டின்ப - வெள்ளத் தழுத்தி விடுந்தா ளினுமடியா - ருள்ளத்தி னும்பிரியா வொண்கிலம்பும் - கள்ளவினை - வென்று பிறப்பறுக்கச் சாத்தியவீ ரக்கழலும்”

† Praise in Paṟṟoṭai metre: “The heroic anklet that, having plunged [devotees] into the flood of the bliss of liberation, does not depart from the hearts of devotees, resounds brilliantly, conquers deceitful karma, and has the power to cut off birth.”

Passage 28

சிவஞானசித்தியார்.

Sivajñānasiddhiyār.

Passage 29

போகியா பிருந்து யிர்க்குப் போகத்தைப் புரித லோரார் யோகியா யோக முத்தி யுதவுத லதிவு மோரார் வேகியா னாற்போற் செய்த வினையினை வீட்ட லோரார் ஊகியா மூடனெல்லா மும்பரி னொருவ னென்பர்.

Those who do not understand that the Bhogi grants pleasure to living beings, that the Yogi bestows yoga and liberation, and that the Vēgi destroys the karma performed—as fire does—are all ignorant fools; they say that there is only one Supreme Being.

Passage 30

கந்தபுராணம்.

Kandha Purāṇam.

Passage 31

ஒன்றா யிருதிறமா போரைந்தா யையைந்தா யன்றா தியின்மீடடு மைந்தா யளபடில்லாய் நின்றுப் சிவனேயிக் நீர்கமிபவர் தீங்ககற்றி நன்று விகட்கு நலம்புரிதற் கேயன்றே.

One, yet possessing two natures; five, yet six; three, yet seven; beyond the beginning and the end; immeasurable and imperishable—you who stand as Śiva! Those who worship You remove their evils, and You bestow well-being upon the good; is this not Your very purpose?

Passage 32

தத்துவத்திரய நிர்ணயத்திற்காண்க.

See the section on the determination of the three categories of tattvas.

Passage 33

மந் - நினைப்பவன்; திர - காப்பது.

Man — one who thinks; Tira — that which protects.

Passage 34

பஞ்சபூதத் தலங்கள்:- (திருவாரூர்) காஞ்சி, திருவானைக்கா, திரு வண்ணாமலை, திருக்காளத்தி, சிதம்பரம் என்பன,

The five elemental sacred sites: Kanchi, Tiruvanaikka, Tiruvannamalai, Tirukkalatti, and Chidambaram (Tiruvarur),

Passage 35

† இயமானர் — ஆன்மா.

† Iyamanar — the soul.

Passage 36

மாயையிற்றேன்றி யொடுங்குமுலகம், அம்மாயைக்கு ஆதாரமாய் நின்ற பரமேசுரனுடைய திருவுருவிற்றேன்றி யொடுங்கும் எனக் கூறப் பட்டது; இது கிழங்கினின்றுந் தோன்றிய தாமரையை அக்கிழங்கிற்கு ஆதாரமாய் நின்ற சேற்றினின்றுந் தோன்றியதெனப் பொருள்படும்படி பங்கசம் எனக் கூறுவதனாலறியப்படும். பங்கம் - சேறு. ஐம் - தோன்று தல். இதுபற்றிச் சிவஞான பாடியம் க-ம் சூத்திரம் காண்க.

It has been stated that the world, which arises from and dissolves into Maya, arises from and dissolves into the sacred form of Parameshvara, who stands as the support of that Maya. This can be understood from the use of the word “Pankajam” for the lotus, implying that it arose from the mud that supports the tuber from which the lotus emerged. Pankam — mud. Aiam — arising. In this connection, see the “Sivajnana Patiyam,” Sutra 8.

Passage 37

† திருவாசகம்: “பிரமனரி யென்றிருவ ருந்தம் பேதைமையாற்—பரம மியாம்பரம மென்றவர்கள் பதைப்பொடுங்க-அரனா ரழலுருவா யங்கே யளவிறந்து—பரமாகி நின்றவா தோணோக்கமாடாமோ” இது விங்கோற் பவமூர்த்தம் எனப்படும்.

† Tiruvacakam: “Because of their ignorance, Brahma and Hari said, ‘We are the Supreme; we are the Supreme,’ and, overcome with agitation, stood bewildered. Then Hara assumed the form of fire, transcending all limits there, and stood as the Supreme.” This is called the Liṅgodbhava Mūrti.

Passage 38

‡ அர்த்தாரீசுர வடிவம் மகேசுரமூர்த்தம் இருபத்தைந்தனுள் ஒன்று.

‡ The Ardhanārīśvara form is one of the twenty-five Māheśvara Mūrtis.

Passage 39

பொதுவகையால் அறிதலாவது அனுக்கிரக மாத்திரம் குறித்து நிற் றல்.

In the general sense, knowing means remaining focused solely on grace.

Passage 40

† சிறப்புவகையால் வியாபரித்தலாவது விரும்புதலும் அறிதலும் செய் தலுமாம்.

† In the specific sense, functioning means desiring, knowing, and acting.

Passage 41

உபாயங்களாவன: படைத்தல் காத்தல் அழித்தல் மறைத்தல் அரு ளல் என்பன.

The means are: creation, preservation, destruction, concealment, and grace.

Passage 42

ஆன்மாக்களோடு சகசமாகிய மலத்தைப் பக்குவமறிந்து சங்கரித்த லால் உயிர்க்குயிராகிய சிவபெருமானுக்கு அரன் என்னுந் திருநாம முண்டு. சைவசமயநெறி - பொது. கக.

Since Lord Shiva, who is the life of all beings, destroys the impurity that has been coexistent with souls after discerning its maturity, He bears the sacred name Aran. Saiva religious path—General. 16.

Passage 43

“இன்பா யிருந்தான் யேத்துவார்க் கின்பமே” திருஞானசம்பந்தர்— திருநாவலூர் மயானம்.

“He abides as bliss and is bliss to those who praise Him.” — Tirujñānasambandar, Tirunāvalūr Mayānam.

Passage 44

முதற்காரணம் உபாதானகாரணம் எனவும் துணைக்காரணம் சககாரி காரணம் எனவும் கூறப்படும்.

The primary cause is called the material cause, while the auxiliary cause is called the instrumental cause. 3

Passage 45

தரு - உடம்பு. கரணம் - மனழிரலிய கருவி. புவனம் - உடம்புக்கு ஆதாரமாகிய உலகம், போகம்-அனுபவிக்கப்படும் பொருள்.

Taru – the body. Karana – the instrument called the mind. Bhuvana – the world that serves as the basis for the body. Bhoga – the object experienced.

Passage 46

அதிட்டித்தல் - நிலைக்களமாகக்கொண்டு செலுத்ததல்.

Adhishthithal – directing something by making it one’s fixed basis.

Passage 47

† அரக்தர், குக்குமர் முதலிய எண்மர் அட்டவித்தியேசுரர்.

† Arakthar, Kukkumar, and the other eight are the Ashtavidhyeshvaras.

Passage 48

சனன சாகரத்திற்பட்டோர்களுடைய கவலைகளை உருக்கி ஒழித்து அவர்களை உயர்த்தி விடலால் சிவபெருமானுக்கு உருத்திரர் என்னும் நாமம் எய்தியது,

Lord Shiva came to be known by the name Rudra because he melts away and dispels the troubles of those caught in the ocean of birth and death, thereby elevating them.

Passage 49

“பரமசிவன், நீண்டகாலமாகச் சம்சாரத்தில் வாழ்ந்து வருத்த மடைந்த ஆன்மாக்களுக்கு இளைப்பு நீக்கத்தின் பொருட்டும், கன்மமல பரி பாகத்தின் பொருட்டும், அளவுக்குட்படாத காரியத் தோற்றங்களால் சத்தி தேய்ந்திருக்கும் மாயைக்குச் சத்தியை விருத்தி செய்தற்பொருட்டும் மாயை யில் எல்லாவற்றையும் ஒடுக்குவர்” என்று சித்தாந்த பரிபாஷையிற்கூறப் பட்டுள்ளது.

“It is stated in Siddhanta terminology that ‘Parashiva withdraws everything into Maya in order to relieve the souls that have long lived in samsara and suffered, to bring about the maturation of their karmic impurities, and to restore the power of Maya, whose power has been depleted by the immeasurable manifestations of effects.’”

Passage 50

மிருகேந்திரம் பதிஸ்வரூபபிரகரணம்.

Mrigendra, Pati-svarupa-prakaranam.

Passage 51

† சேதனம் - அறிவுடைப் பொருள், அசேதனம் - அறி வில்லாத பொருள்.

† Chetana—an entity endowed with consciousness; achetana—an entity devoid of consciousness.

Passage 52

‡ இத்தேவாரம் சிவபிரானது முழுமுதற்றன்மையையும் அநாதித் தன் மையையும் குறிக்கின்றது: வருங்கடன்மீள - உலகம் புனருற்பவ மாகும்பொருட்டு. வீணை வாசிக்கும் - உலககாரணமாகிய மாயை எழுப்பும்பொருட்டு நாத முழக்குச் செய்வர். களேபரம் - உடம்பு.

‡ This Tevaram hymn indicates the absolute primacy and beginninglessness of Lord Shiva: “return from the ocean”—so that the world may be re-created. “Playing the veena”—He produces the resonance of nada in order to set Maya, which is the cause of the world, into motion. Kalebaram—the body.

Passage 53

பிரம விட்டுணுக்கள் புண்ணிய விசேடத்தால் உயர்ந்த அதிகார சக்தி யைப் பெற்றவர்களென்பது “நல்வினைக்கண் வாணாளின் மாலா யயனாகி” என்ற போற்றிப் பஃறொடையாற் றெளியப்படும். முத்தொழிற்கும் பரமே சுரனே சுதந்திரர் என்பது, வேதம் புராணம் இதிகாசம் முதலியவற்றிற்கும் கருத்தென்பது. சதுர்வேத தாற்பரிய சங்கிரகம் சிவதத்துவ விவேகம் முத லியவற்றுட் கண்டுகொள்க,

That Brahma and Vishnu are those who, through the special merit of their good deeds, have attained exalted authoritative powers is made clear by the praise-poem beginning, “Becoming Māl and Ayan through the power of good deeds.” That Parameśvara alone is independent with regard to the three cosmic functions is also the purport of the Vedas, Purāṇas, Itihāsas, and other scriptures. This may be understood from works such as the Caturveda Tāpariya Saṅkirakam and Śivatattva Vivekam.

Passage 54

கோளில் பொறியிற் குணமிலவே யெண்குணத்தான் ருளை வணங்காத் தலை. — உத்தரவேதம்.

“The head that does not worship the feet of Him who possesses the eight qualities is devoid of virtue, like a sense organ lacking its function.” — Uttara Veda.

Passage 55

சாத்துவிகம் சாந்தத்தையும் இன்பத்தையும் தரும். இராசதம் பிர விருத்தியையும் துன்பத்தையும் தரும். தாமதம் மோகத்தையும் மூடத்தையும் தரும்

Sāttvika qualities bestow peace and happiness. Rājasa qualities bring activity and suffering. Tāmasa qualities bring delusion and ignorance.

Passage 56

ஆமயம் - துன்பம் - மலம். நிராமயம் - மலமில்லாமை.

Āmayam — suffering — impurity. Nirāmayam — freedom from impurity.

Passage 57

† லுப்தம் = கொடாமை; அலுப்தசத்தி - கொடுக்குஞ்சத்தி,

† Luptam = the state of not giving; Alupta Shakti—the power that gives,

Passage 58

बीரதிசயகுணம் — மாறுதலடையாத குணம்; மிக மேலாகிய குணம்.

Bīratisaya Guṇam — an unchanging quality; a supremely excellent quality.

Passage 59

ர் சலமிலன் சங்கரன் சார்ந்தவர்க் கல்லா

He is not a deceiver; Śaṅkara is not for those who are not devoted to Him.

Passage 60

னலமில னாடொறு நல்கு வானலன்

He is not without goodness; every day He bestows goodness.

Passage 61

குலமில ராகினுங் குலத்துக் கேற்பதோர்

Even if one is without lineage, Namashivaya bestows abundant goodness appropriate to one’s lineage.

Passage 62

நலமிகக் கொடுப்பது நமச்சி வாயவே,

Namashivaya,

Passage 63

சங்கரன் — சுகத்தைச் செய்பவன். சம்—சுகம், கரன்—செய்பவன்,

Śaṅkara—the one who bestows happiness. “Śam” means happiness; “kara” means one who bestows it.

Passage 64

சிவப்பிரகாசம் இரண்டாம் சூத்திரம் செ. உ. தத்துவப் பிரகாசம் 37

Sivappirakāsam, Second Sūtra; C. U. Tattuvappirakāsam 37

Passage 65

† திரோதானம் - மறைப்பு.

† Tirodhanam – concealment.

Passage 66

சர்வஞ்ஞத்துவம் - எல்லாவற்றையும் அறியுந் தன்மை.

Sarvajñatva – the nature of knowing everything.

Passage 67

| சர்வகர் த்திருத்துவம் - எல்லாத் தொழிலுமுடைமை.

| Sarvakartṛtva – possessing all functions.

Passage 68

‡ பிரேரகம் - ஏவுதல். இவை அசுத்தமாயா தத்துவங்களைப் பிரேர கஞ் செய்தலாற் பிரேரக காண்டம் எனப்படும்.

‡ Preraka – impelling. Since these impel the impure Māyā tattvas, they are called the Preraka Kāṇḍam.

Passage 69

“அந்த எழுத்தோசை வைகரி மத்யமை, பைச்யந்தி, சூட்சுமம் என நான்குவிதப்படும்” என்பது பௌஷ்கரம். இவற்றின் இலக்கணம் பௌஷ்கரவிந்துப் படலத்து 19—29 சுலோகங்களாலும், இரத் தினத்திரயத்து 76 - 85 சுலோகங்களாலும், சித்தியாரிலும் (சூ-1, அதி.1, செ_20—29) அறியத்தக்கது.

“The sound of that letter is of four kinds: Vaikharī, Madhyamā, Paśyantī, and Sūkṣma,” says the Pauṣkara. Their characteristics may be learned from verses 19–29 of the Pauṣkaravindu chapter, verses 76–85 of the Ratnatraya, and the Cittiyār (Sūtra 1, Chapter 1, verses 20–29).

Passage 70

சுத்தவித்தியாதத்துவத்தில் சத்தகோடி மகா மந்திரர்களும் காமிக முதலிய இருபத்தெட்டாகமங்களும் நந்தி முதலிய கணநாதர் எண் மரும் இந்திரன் முதலிய உலக பாலகரும் வச்சிர முதலிய இவர்கள் ஆயுதமுமிருக்கும். ஈசுரதத்துவத்தில் அநந்தர் முதலிய வித்தியேசு ரர் எண்மரும் இருப்பர். (இவை சித்தாந்தப் பரகாசிகையிற் காணப் பட்டவை.) இங்கே கூறப்பட்ட இந்திராதியர் பாதிருதியின் கீழுள்ள திக்குப் பாலகரின் வேறாவர். பிரகிருதியின் கீழுள்ளவர் இவர்களாற் செலுத்தப்படுபவர்.

In the Śuddhavidyā tattva abide the crores of great mantras, the twenty-eight Āgamas beginning with the Kāmika, the eight Gaṇanāthas beginning with Nandi, the guardians of the worlds beginning with Indra, and their weapons beginning with the vajra. In the Īśvara tattva abide the eight Vidyeśvaras beginning with Ananta. (These are found in the Siddhānta Prakāśikā.) The Indra and others mentioned here are distinct from the guardians of the quarters under Pādhiruti. Those under Prakṛti are governed by these beings.

Passage 71

சிவப்பிரகாசம் - பொது - 22; தத்துவப்பிரகாசம் - பாசவிலக்கணம் - 31-33.

Śivaprakāśam—General—22; Tattvaprakāśam—The Characteristics of Pāśa—31–33.

Passage 72

† சிவப்பிரகாசம் - பொது 28.

† Śivaprakāśam—General—28.

Passage 73

‡ பிரவாகாநாதி - இடையறாதோடும் நீர்ப்பெருக்குப் போலத் தொன்று தொட்டு வருதல்,

‡ Pravākānādi—continuing from time immemorial like an uninterrupted flow of water,

Passage 74

சிவப்பிரகாசம் - பொது 25. மூளை - கன்மம். தவிடு - மாயை. உமி - ஆனாவம். அரிசி - ஆன்மா,

Sivappirakācam—General 25. Husk—karma. Bran—māyā. Chaff—āṇavam. Rice—the soul,

Passage 75

சிவஞானசித்தியார். (2—2—31—2—2—30.) அபுத்திபூருவமான வினையும் புத்திபுருவமான வினையும் என வினைகள் இரண்டு வகை யாம். அவை அபுத்திபூருவ T ல்வினையும் தீவினையும் புத்திபூருவகல் வினையும் தீவினையும் என ஒவ்வொன்று இவ்விரண்டாய் நான்கு வகைப்படும். (சிவப்பிரகாசம்—பாசஇலக்கணம்—30) “இந்த ராச தண்டம் பட்டவர்களுக்கு நரகயாதனையில்ல்; அதெவ்வாறெனில் ஆதியிலே கர்த்தாவானவர் பூமியின்கண் தான் அருளின வேதநீதி வழுவினோக்கு மூவகையாகப் பிராயச்சித்தங் கற்பித்தார். வர்ணாச் சிரம தர்மத்திலே நடக்கிறபேர்க்குப் பிரமாதாத் (அபுத்தியூர்வமாக) பாவம் வந்தால் குருவினாலே பிராயச்சித்தாதி யனுட்டானத்தினாலே சுத்தி. தர் ஆன்மாக்களாயிருக்கிற பேர்கள் பண்ணின பாபத்திற்கு ராசதண்டத்தினாலே சுத்தி. ராசாவினாலறியப்படாத பாபத்திற்கு யமதண்டத்தினாலே சுத்தி.” (சிவஞானசித்தியார் சிவாக்கிரயோகிகள் உரை.)

Sivajñānasittiyār. (2—2—31—2—2—30.) Actions are of two kinds: unintentionally performed actions and intentionally performed actions. Each of these is again divided into good and evil actions, making four kinds in all: unintentionally performed good and evil actions, and intentionally performed good and evil actions. (Sivappirakācam—Definition of Bondage—30) “Those who have received this royal punishment do not suffer the torments of hell. The reason is this: in the beginning, the Lord, who is the Creator, established three kinds of penance for those who deviated from the Vedic law He had graciously ordained on earth. If those who follow the duties of the four castes and stages of life incur sin through negligence (unintentionally), they are purified through penance and other observances performed under the guidance of a guru. The souls who have committed sins are purified by royal punishment. Sins unknown to the king are purified by the punishment of Yama.” (Commentary of Sivākkiyayōkiḷon Sivajñānasittiyār.)

Passage 76

போசசயித்திரு—புகிப்பிக்கிறது. காண்டம்—கொத்து.

Pōcacaittiru—causes one to enter. Kāṇṭam—a cluster.

Passage 77

† அவ்வியத்தம்—வெளிப்படாதது. வியத்தம்—வெளிப்பட்டது.

† Aviyattam—unmanifest. Viyattam—manifest.

Passage 78

பூதாதி—உருவம், வைகாரியம்—தொழில், தைசதம்—அறிவு.

Bhutadi—form, Vaikariyam—function, Taisatam—knowledge.

Passage 79

தன்மாத்திரை காரண தன்மாத்திரை எனவும் விடய தன்மாத்திரை எனவும் இருவகைப்படும். சுரோத்திராதிகளுக்கு விடயமாயிருப் பது விடய தன்மாத்திரை. தூலபூதங்கட்குக் காரணமாயிருப்பது காரண தன்மாத்திரை.

Tanmatra is of two kinds: causal tanmatra and object tanmatra. The tanmatra that serves as the object of the auditory organs and the like is object tanmatra. That which serves as the cause of the gross elements is causal tanmatra.

Passage 80

† மரத்தின் வடிவேல்லாம் சத்திரூபமாக வித்திலடங்கியிருப்பதுபோல, தங்குணங்களெல்லாம் சத்திரூபமாக வெளியலே தெரியாது அத னதன் அளவில் அடங்கியிருப்பதால் தன்மாத்திரை எனப்பட்டது. தத்—அது. மாத்திரை—அளவு.

† Just as the entire form of a tree is contained in the seed in subtle form, without being outwardly visible, so too, since all its qualities are contained in their respective measures in subtle form, it is called tanmatra. Tat—that. Matra—measure.

Passage 81

திருநாவுக்கரசு சுவாமிகள்.

Saint Tirunavukkarasu.

Passage 82

“மண்ணதனி லைந்தை மாரீரி னான்கை வயங்கெரியின் மூன்றை மாருதத்தி ரண்டை விண்ணதனி லொன்றை விரிகதிரை”

“On earth, you are present as the five; in the waters, as the four; in the radiant fire, as the three; in the air, as the two; and in the vast sky, as the one.”

Passage 83

திருவாசகம்.

Tiruvacakam.

Passage 84

“பாரிடை யைந்தாய்ப் பரந்தாய் போற்றி நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி வளியிடை யிரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி வெளியிடை யொன்றாய் விளைந்தாய் போற்றி.”

“Praise to You, who pervade the earth as the five; praise to You, who appear in the waters as the four; praise to You, who shine in the fire as the three; praise to You, who delight as the two in the air; praise to You, who manifest as the one in the vast expanse of space.”

Passage 85

ஏடணைகளை நீக்கி தைசதம் வைகாரிகம் பூதாதி என்னும் அகங்காரங் களைக் கொள்வதும் உண்டு. ஏடணை-விருப்பம்.

It is also said that, after removing the impurities, He assumes the egos called Taijasa, Vaikārika, and Bhūtādi. Ēṭaṇai means desire.

Passage 86

யோனி—சரீரம், சாதி.

Yoni—body, caste.

Passage 87

† அண்டம்—முட்டை, ஐம்—பிறப்பது.

† Aṇḍa—egg; Aim—being born.

Passage 88

‡ சுவேதம்—வேர்வை.

‡ Svēta—sweat.

Passage 89

ி உற்பித்—மேற்பிளத்தல், ஜம்—தோன்றியது. ி

Utpathi—emergence; Jam—arose.

Passage 90

§ சராயு—கருப்பாசயப்பை.

§ Sarayu—womb.

Passage 91

中சிவப்பிரகாசம் சூத்திரம் 2, பொது 29.

中 Sivaprakasham, Sutra 2, General 29.

Passage 92

சிவஞானசித்தியார் சூ. 4.—அதி. 2.

Sivagnana Siddhiyar, Sutra 4—Chapter 2.

Passage 93

ஆன்மா எதனை எதனைச் சார்ந்ததோ அதனதன் சுபாவமே தன் சாபாவமாய் அதுவதூவாய் வசிப்புண்டு நின்றறியும் * இயல்புடையது. வசித்தல் - வசியஞ் செட்தல்.

*The soul naturally abides in and comes to know itself as whatever it is associated with, assuming the very nature of that thing. “Abiding” means exercising control.

Passage 94

† ஆணவம் கன்மம் மாயையாகிய மும்மலங்களும் பந்தப்படுத்தும் முறைமையின் வேற்றுமைக்கேற்ப வேறுபடும். எவ்வாறெனில், ஆணவம் உயிரோடு கலந்து நின்று அறிவு இச்சை செயல்களைத் தடுத்தலாற் பிரதிபந்தம். கன்மமலம் உயிர் செல்லுமிடமெல்லாம் தொடர்ந்து சென்று சுகதுக்கங்களைக் கூட்டுதலால் அனுபந்தம். அனு - தொடர்ச்சி. மாயாமலம் உயிரோடுக்டித் தரு கரண முதலியனவாய் நிற்றலால் சம்பந்தம்.

† The three impurities—anava, karma, and maya—differ according to the manner in which they bind the soul. Thus, anava impurity is a hindrance because it mingles with the soul and obstructs knowledge, desire, and action. Karma impurity is an attachment because it follows the soul wherever it goes and brings about pleasure and pain. “Anu” means continuity. Maya impurity is a relation because it remains with the soul in the form of the organs and other such instruments it provides.

Passage 95

சிவஞானசித்தியார் 2—3—51, 52.

Sivagnana Siddhiyar 2—3—51, 52.

Passage 96

உணர்த்துதல் - அறிவித்தல்.

“Making known” means informing.

Passage 97

‡ சிவஞானசித்தியார் 5-2 - 4. அதிசூக்கும ஐந்தொழிலாவது :- ஆன்மாவிற்கு அறிவித்தல் சிருட்டி. அறிந்தவற்றுள் அழுந்துதல் திதி. முன்னறிந்தவற்றினின்றும் பிரித்தல் சங்காரம். ஒன்றனை யறியவேண்டுங்கால் பிறிதொன்றனை யறியவொட்டாது மறைத்தல் திரோபவம். அறிந்தவற்றை அநுபவிக்கச் செய்தல் அநுக்கிரகம்,

‡ Civajñāna Cittiyār 5-2 – 4. The supremely subtle fivefold activity is as follows: Creation is imparting knowledge to the soul. Preservation is immersing it in what it has known. Destruction is separating it from what it previously knew. Obscuration is concealing one thing, preventing it from knowing another when it needs to know that other thing. Grace is enabling it to experience what it has known.

Passage 98

இவ்வுண்மையைப் புராணங்களில் இறைவன் விசுவரூபங் காட்டிய தாகக் கூறப்படுவதோடு ஒட்டியறிக.

Understand this truth in connection with the statement in the Puranas that the Lord revealed His cosmic form.

Passage 99

† சிவஞானசித்தியார் 5-2 - 9.

† Civajñāna Cittiyār 5-2 – 9.

Passage 100

சிவபிரானுக்குத் தீயின் சூடு பேர்லச் சத்தியார் வேறுபடாதுள்ளார். சத்தியின்றத் சிவபிரான் இல்லை, சிவனையின்றிச் சத்தியில்லை என் பது சுப்பிரபேதாகமம்.

Shakti is inseparable from Lord Shiva, just as heat is inseparable from fire. “There is no Lord Shiva without Shakti, and no Shakti without Shiva,” says the Suprabhedāgama.

Passage 101

† கந்தபுராணம்.

† Kanda Puranam.

Passage 102

எவ்வெவர் தம்மை யேனும் யாவரே யெனினும் போற்றி னவ்வவ ரிடமாக் கொண்டே யவர்க்கரு டருவாய் போற்றி மெய்வரு தெளிவி லுன்னை வெளிப்பட வுணர்ந்து ளோர்க்குத் தெய்வத போக முத்தி சிறப்பொடு தருவாய் போற்றி. யாதொரு பொருளை யாவ ரிறைஞ்சினு மதுபோய் முக்க ணாதியை யடையு மம்மா வங்கது போதத் தொல்லை வேதமி துரைக்க நின்ற வியன்புக மனைத்து மேலா நா கனை யணுகு மெல்லா நதிகளுங் கடல்சென் றென்ன.

Hail to You, who, accepting each person as Your own, become graciously accessible to them in the form they worship; hail to You, who bestow divine enjoyment and liberation, together with excellence, upon those who clearly and truly perceive You and realize You as manifest. Whatever object anyone worships, it ultimately reaches the Three-Eyed One; just as all rivers, after flowing toward the ocean, reach it, so too all the ancient Vedas proclaim that the supreme object of all praise is the Great Lord.

Passage 103

இதனாலே வேதாகம முதலிய நூல்கள் பரமபதி சிவபெருமானே என்று கூறுவதை அறிக.

Thus understand that texts such as the Vedas and Agamas declare that Sivaperuman alone is the Supreme Being.

Passage 104

சிவஞானசித்தியார் சூ. 2. அதீ. 2, செ. 27, 28.

Sivagnana Siddhiyar, Sutra 2, Adhikarana 2, verses 27, 28.

Passage 105

சிவஞானசித்தியார் சூ 2. - அதி 2. செ 26. “இதற்கு வாயவிய சங் கிதையிலும், கந்தபுராணம் சதருத்திர சங்கிதையினும் பிரமாண் டத்துமறிக” என்றார் மறைஞானதேசிகர்.

Sivagnana Siddhiyar, Sutra 2, Adhikaranam 2, verse 26. “This may be learned from the Vayaviya Samhita, the Kandha Purana, the Satarudra Samhita, and the Brahmanda Purana,” said Maraignana Desikar.

Passage 106

சித்தியார் 2. 4. 89, 80-96. பிரமா சீகாழி முதலிய தலங்களிலும், விஷ்ணு திருமாற்பேறு முதலிய தலங்களிலும், இந்திரன் திருக்கண்ணார் கோயில் முதலிய தலங்களிலும் இவ்வாறே மற்றுமுள்ள தேவர்கள் வெவ்வேறு தலங்களிலும் வந்து அருச்சித்தமை புராணங்களாலும் திருமுறை களாலும் அறியப்படும்.

It is known from the Puranas and the Tirumurai that Brahma came and worshipped Him at places such as Sikali, Vishnu at places such as Tirumarperu, and Indra at places such as Tirukkannaar Koyil; likewise, the other gods came and worshipped Him at various other sacred places.

Passage 107

சித்தியார் 6-1-3.

Siddhiyar 6-1-3.

Passage 108

அத்துவிதம் - சொருள் இரண்டாயிருந்தும் வேற்றுக்கலந்து நிற்குந் தன்மை.

Advaita — the state in which two entities, though distinct, remain without separation.

Passage 109

சிவஞானசித்தியார், 7—3—2.

Sivajñāna Siddhiyār, 7—3—2.

Passage 110

சிவஞானசித்தியார் கு 8-1.

Sivajñāna Siddhiyār, Ku 8-1.

Passage 111

ர் விஞ்ஞான + அதலர் = விஞ்ஞானாகலர், விஞ்ஞானாகலர் என்பது விஞ்ஞானகலர் என மர் இ வழங்கும்.

Vijñāna + Atalar = Vijñānākalar; Vijñānākalar is also rendered as Vijñānakalar.

Passage 112

‡ 'காலமுதல் நிலமீறாகிய தத்துவங்கள் எல்லாம் அசுத்த மாயையிற் போலச் சுத்த மாயையினும் உள்ளன. அவை இவைபோலன்றிச் சுத்தமாயுள்னன" என்று பௌட்கராகமம் கூறும்.

‡ “All the tattvas beginning with Kāla and extending to Nila are present in pure māyā as they are in impure māyā. Unlike these, they exist in pure māyā,” says the Pāuskara Āgama.

Passage 113

இவ்வீடத்துக் கூறிய தேவர்கள் வேறு; சகலவர்க்கத்துத் தேவர் கள் வேறு.

The deities mentioned here are different; the deities belonging to the Sakala class are different.

Passage 114

† தீகைய என்னும் சொற்குப் பொருள்: மலத்தைக் கெடுத்து ஞானத் தைக் கொடுப்பது என்பதாம். தீ — கொடுத்தல். கூறா — கெடுத் தல். அத் திசை சாதாரம் நிராதாரம் என்று இருவகைப்படும். சாதாரதிக்கை என்பது. ஆகாரத்தோடு கூடிநின்று செய்யப்படும் தீக்கை எனப்படும். அதாவது பாமேசுரன் குருமூர்த்தியை ஆதார மாகக் கோண்டு நின்று செய்யும் தீக்கையாம். நிராதார தீக்கை என்பது ஆதாரமின்றி கின்று செய்யுந் தீக்கையாம்.

† The meaning of the word “Dīkṣā” is: that which destroys the impurities and bestows knowledge. Dī — giving; Kṣā — destroying. This Dīkṣā is of two kinds: Sādhāra and Nirādhāra. Sādhāra Dīkṣā is the Dīkṣā performed with a support. That is, it is the Dīkṣā performed by Parameśvara while taking the Guru form as its support. Nirādhāra Dīkṣā is the Dīkṣā performed without a support.

Passage 115

‡ பிரளய + அகலர் = பிரளயாகலர், 7

‡ Pralaya + Akalar = Pralayākalar, 7

Passage 116

† ஸ+கலர்=சகலர். ஸ-கூட, கலர்-கல்யுடையோர்.

† Sa + Kalar = Sakalar. Sa — together with; Kalar — those who possess kalā.

Passage 117

இவற்றினியல்பெல்லாம் சித்தியார் 8-ம் சூத்திரத்து, 1-ம் அதிகர ணத்து, 2-ம் திருவிருத்தத்தானும், அவற்றின் உரைப்பகுதிகளா லும், பௌஷ்கர முதலியவற்றாலும் அறிக.

Learn the nature of all these from the second Tiruv viruttam in the first adhikarana of the eighth sutra of the Cittiyār, from its explanatory sections, and from the Paushkara and other works.

Passage 118

சத்தி — திருவருட் சத்தி. நிபாதம் — பதிதல்.

Śakti — the divine grace-power. Nipātam — descent.

Passage 119

‡ தீவிர தரம் எனினும் அதி தீவிர மெனினும் ஒக்கும். மந்ததரம் வாழைத் தண்டினும், மந்தம் பச்சை விறகினும், தீவிரம் உலர்ந்த விறகினும், தீவிரதரம் கரியினும் நெருப்புப் பற்றுதல் போல்வன வாம். இவ்வாறு கூறப்படுதல் ஆகமங்களுட் காண்க.

‡ Whether termed intense or exceedingly intense, they are the same. The mildest is like fire catching on a banana stem; mild, like fire catching on green wood; intense, like fire catching on dry wood; and exceedingly intense, like fire catching on charcoal. Such an explanation is found in the Āgamas.

Passage 120

கந்தபுராணம் — அடிமுடி தேடு டலம். 98.

Kantapurāṇam — the section on searching for the top and bottom. 98.

Passage 121

மோக வல்வனை யாற்றியே பவத்திடை மூம்கும் பாக ரல்லவர்க் கெய்திடா தனனருள் பவமும் போக மாற்றிடு தருமமு நிகர்வரு புனிதர்க் காகு மற்றவ ஏருணிலை பாகரா மவரே.

Having dispelled the delusion of those who are immersed in worldly existence, this gracious state, which removes attachment to worldly pleasures and bestows the Dharma attained by the holy ones of equal merit, is not attained by others; only those who are fit for it attain it.

Passage 122

சிவஞானசித்தி - 8. 1. 6.

Śivajñānasiddhi – 8.1.6.

Passage 123

நயன தீசைகு முதலிய இவ்வறுவகைத் தீக்ஷையும் ஔத்திரி தீகையக்கு அருகரல்லாதவருக்குப் பண்ணப்படுவன எனவும், ஔத்திரிக்கு அங்கம் எனவும் அறிக.

Know that these six kinds of initiation, beginning with Nayana Dīkṣā, are performed for those who are unfit for Āutthiri Dīkṣā, and that they constitute the limbs of Āutthiri Dīkṣā.

Passage 124

† ஹோத்திரம் — ஓமம்.

† Hōttiram — Hōmam.

Passage 125

நிர்ப்பீசதிகையு பெற்றவர் தாம் சாதித்த சாதனையின் பயனால் இப்பிற வியலேனும் மறுபிறவியிலேனும் சபீசதீகைக் பெற்றுச் சரியை கிரியை யோகங்களை அநுட்டித்து ஞானத்தால் முத்தியடையும் பேற்றைப் பெறுவார்கள்.

Those who have received Nirbīja Dīkṣā will, through the merit of the spiritual practices they have accomplished, receive Sabīja Dīkṣā either in this birth or in a future birth, practice Charyā, Kriyā, and Yoga, and attain liberation through Jñāna.

Passage 126

புத்திரர் சாமானிய புத்திரர் வீசேட புத்திரர் என இருவகைப்படுவர். சமய தீசையும் வீசேஷ தீரைக்யும் மாத்திரம் பெற்றவர் சாமானிய புத் திரர். அவ்விரண்டனோடு நிருவாண தீசையும் பெற்றுச் சாதகாபி ஷேகம் இல்லாதிருப்பவர் விசேட புத்திரர்.

Sons are of two kinds: ordinary sons and distinguished sons. Those who have received only Samaya Dīkṣā and Viśeṣa Dīkṣā are ordinary sons. Those who, in addition to these two, have received Nirvāṇa Dīkṣā but have not undergone Sādhakābhiṣeka are distinguished sons.

Passage 127

† நிர்வாணம் - முத்தி, சத்ய - உடனே.

† Nirvāṇa – liberation; Satya – immediately.

Passage 128

‡ சபீசம் - பீசத்தோடு கூடியது. பீசம் - மூலம்.

‡ Sabīja – accompanied by the bīja. Bīja – source.

Passage 129

ஸ்நானம் பண்ணித் தர்ப்பணஞ் செய்து, சிவபூசை செய்து அக்கினி கார் யஞ் செய்தல் நித்தியம்; பிரதிட்டை தீகைக்ஷகமங்களை விரித்துரைத் தல் முதலியன நைமித்திகம்; சித்திபேதங்களை விரும்பி விசேஷமாகச் சிவபூசை செய்தலும், மந்திரங்களைச் செபம் பண்ணுதலும் காமிய கர்மங்களாம்.

Bathing, performing tarpaṇa, conducting Shiva worship, and performing the fire sacrifice are daily duties; explaining in detail the rituals of consecration, initiation, and related ceremonies is occasional duty; performing special Shiva worship with a desire for particular kinds of attainment and reciting mantras are desire-motivated rites.

Passage 130

மந்திரம் முதலிய ஆறும் ஆன்மாக்களுக்குக் கன்மம் ஏறுதற்கும் கன்மம் நீங்கித் திருவடி அடைதற்கும் வழியாயிருத்தலின் அத்துவா எனப்படும். அத்துவா-வழி. அத்துவாக்கள் சொற்பிரபஞ்சம் பொருட் பிரபஞ் சம் என இருவகைப்படும். அவற்றுள் மந்திரம் பதம் வன்னம் என் னும் மூன்றும் சொற்பிரபஞ்சம். புவனம் தத்துவம் கல் என்னும் மூன்றும் பொருட் பிரபஞ்சம்.

Since the mantra and the other five serve as the means by which karmas accrue to souls and by which, after the karmas have been removed, they attain the sacred feet, they are called adhvā. Adhvā means “the path.” The adhvās are of two kinds: the verbal universe and the material universe. Of these, mantra, pada, and varṇa constitute the verbal universe. Bhuvana, tattva, and kalā constitute the material universe.

Passage 131

சிவஞானசித்தியார் 8-2-11. சிவரெறிப்பிரகாசம் செய்யுள் 150-154.

Śivajñānasiddhiyār 8-2-11. Śivareṟipprakācam, verses 150–154.

Passage 132

சிவதருமோத்தரம் சிவஞானயோகவியல் 8-9.

Śivadharmottara, Śivajñānayogaviyal, 8-9.

Passage 133

† சமயம், மார்க்கம், மதம் என்பன பரியாயம்.

† Samayam, margam, and madam are synonyms.

Passage 134

‡ நால்வகைப் பௌத்தம் மாத்தியமிகம், யோகசாரம், சௌராந்திகம், வைபாடிகம் என்பன.

‡ The four types of Buddhism are Madhyamika, Yogacara, Sautrantika, and Vaibhashika.

Passage 135

§ ஆருகதம் - சமணம்.

§ Arugatham—Jainism.

Passage 136

இவையெல்லாம் அகம் புறம் என இரண்டாயும் அடங்கும். † சித்தாந்தம் - முடிந்த முடிபு.

All these are comprised under two categories, internal and external. † Siddhanta—the final conclusion.

Passage 137

வேதாகமங்களிலே அடங்காத பொருளொன்றனை எடுத்துச் சொல் லும் நூலொன்றுமில்லை; உண்டென்று பிணங்கும் பேதையர்க்கு உத்தரம் சொல்லி அறிவுறுத்த இயலாது என அருணந்த சிவாசா ரிய சுவாமிகளும் கூறுகின்றனர்.

There is no work that explains a subject not contained in the Vedas and Agamas; and Aruṇandi Śivācārya Svāmigal likewise states that it is impossible to answer and enlighten fools who obstinately insist that there is such a subject.

Passage 138

சிவஞானசித்தியார் 8-2-12.

Śivajñānasiddhiyār 8-2-12.

Passage 139

† அயன் அரி முதலியோர் இருபத்தைந்து தத்துவ எல்லையுள் அடங்கி னவர். சிவபெருமான் முப்பத்தாறு தத்துவ வரம்பைக் கடந்தவர். கந்தபுராணம்:- “அறுவகை யைந்துமாறு மாகிய வரைப்பின் மேலா - மிறைவனே போற்றி போற்றி.”

† Ayan, Ari, and others are confined within the limits of the twenty-five tattvas. Lord Śiva transcends the bounds of the thirty-six tattvas. Kandapurāṇam: “Praise, praise to the Lord who is above the boundary formed by the six times five.”

Passage 140

‡ திருவடி என்பது இறைவனுடைய சித்துத்தன்மை. அது, “அடியெனு மதுவும் அருளெனு மதுவும் அறைந்திடில் நிர்க்குண நிறைவு” எனத் தாயுமான சுவாமிகள் கூறியவாற்றால் உணரப்படும். அடைதல் என் பதனால் வேறாகப் பிரிந்திருந்து அடைந்த தென்பது பொருளன்று. தன்னுடைய பிள்ளையானவன் வியாதியினாலே மிகவும் பீடிக்கப்பட்டுக் குணமான பெரழுது இந்தப் பிள்ளையை இப்பொழுதே பெற்றேன் என்பது போல, யான் எனது என்னும் போதத்தினால் சிவனோடு பிரிப்பின்றி நிற்றல் விளங்காதிருந்து அப்போது அறுதியில் அச்சிவா நுபவம் விளங்கியதை அடைந்ததென்று சொல்லியவாறு.

‡ The holy feet signify the Lord’s conscious nature. This can be understood from the words of Tāyumāṉa Svāmikaḷ: “When the sweetness called the feet and the sweetness called grace are proclaimed, there is the fullness of the attributeless.” The term “attainment” does not mean that one, having been separate, reaches Him as something distinct. Just as, when one’s own child, having been severely afflicted by illness, recovers, one says, “I have received this child only now,” so, because of the awareness of “I” and “mine,” one’s inseparability from Śiva had remained unmanifest; when, at the end, that experience of Śiva became manifest, it is spoken of as having been attained.

Passage 141

“வேதமுத னூல்கள் பதிப்சுபா சம்விளங்க

“May the Primal One of the Vedas and other foundational texts, the Lord, manifest through grace,

Passage 142

வோதியுணர்த் துஞ்சிற் றுயிக்கு.” —சைவசமயஙெறி.

and impart understanding to the soul that is taught.” —Saiva Religious Path.

Passage 143

“அநாதியே யமலனாய வறிவனூ லாக மந்தான்.”

“From beginningless time, He has been the stainless Knower; He Himself is the scripture of knowledge.”

Passage 144

—சித்தியார் அளவை.

—Siddhiyar, Alavai.

Passage 145

↑ "வேதசிவாகமங்கள ல்லாமல், தேவர்களாலும் இருடிகளாலும் சொல் லப்பட்ட சாஸ்திரங்களெல்லாம் இந்த வேத சிவாகமங்களிலே ஏக தேசத்தை யெடுத்துக் கொண்டு தங்களுடைய பாசஞானத்தினாலே சொல்லப்பட்ட சாஸ்திரங்களாம்.

↑ “Apart from the Vedas and the Shaiva Agamas, all the scriptures spoken by the gods and sages are scriptures that have taken portions from these Vedas and Shaiva Agamas and expounded them through their limited knowledge.

Passage 146

அந்த ஈசுர வாக்கியமான து பிரமாணமாகும்; அந்தப் பரமேசுவரன் பஞ்சமந்திர தநுவையுடைய சதாசிவனாய்ச் சிவபேதமான பத்தும் உருத்திரபேதமான பதினெட்டும் ஆகிய இருபத்தெட்டு ஆக்மங்களை யும் அருளினர் என்று பௌஷ்கராகமம் பகரும். இதற்கு உமாபதி சிவாசாரியசுவாமிகள் விருத்தியுரையுங் காண்க.

That utterance of the Lord is authoritative. The Paushkaragama states that the Supreme Lord, having assumed the form of Sadashiva with the five-mantra body, graciously revealed the twenty-eight Agamas: the ten Shivabheda Agamas and the eighteen Rudrabheda Agamas. See also the commentary of Sri Umapati Sivacharya Swamigal on this.

Passage 147

சிவஞானசித்தியார் பரபக்கத்தில், “ஆரியமா யறம்பொருளோ டின் பம்வீ டெல்லா மறைந்துயிர்கட் கறிவுசெய லளிப்பது நூ லந்நூல்- கூரியரா யுள்ளவர்க ளோத வோதிக் கொண்டுவர லான்முன்னே குற்ற மின்றிச்-சீரியபே ரறிவுடையோன் செப்பவேண்டும்” எனச் சகலாகம பண்டிதர் கூறியருளினார். இதற்குத் தத்துவப் பிரகாச சுவாமிகள் செய்த உரை :- வடமொழியாய், அறம் பொருள் இன் பம் வீடு என்னும் நான்கு காரியமுஞ் சொல்லி, ஆன்மாவுக்கு அறி வையுஞ் செயலையுங் கொடுப்பது வேதாகமங்கள். அவ் வேதாகமங்கள் பிரமாதிகள் ஓதுவிக்க, இருடிகளாலே ஒதப்பட்டு, அவர்கள் வழியா கத் தொன்றுதொட்டு வருதலால், தவறின்றி மிக்க பெரிய அறிவு டையவராலே சொல்லவேண்டும்" என்பதாம்.

In the Parapaksha section of Sivagnana Siddhiyar, the scholar of all the Agamas graciously stated: “The scripture is that which reveals to souls all that is hidden—the fourfold goals of virtue, wealth, pleasure, and liberation—and bestows knowledge and action upon them. It must be recited and transmitted by those who are learned in its profound meaning; it must be expounded by one possessing supreme and flawless knowledge.” The commentary on this by Tattuvaprakasar Swamigal is as follows: “The Vedas and Agamas, which are in Sanskrit, explain the four goals—virtue, wealth, pleasure, and liberation—and bestow knowledge and action upon the soul. Since these Vedas and Agamas were taught by Brahma and others, recited by sages, and transmitted through them from generation to generation, they must be expounded by those possessing vast and flawless knowledge.”

Passage 148

“சைவசித்தார்தம் வேதசாரமாயிருத்தலின்” எனச் சுப்பிரபேதாகம மூம், “இந்தச் சித்தாந்தம் வேதசாரம்” என மகுடாகமமும், “வேதாந்தத் தெளிவாம் சைவசித்தாந்தத் திறன்” எனச் சிவப்பிர காசமும் கூறும். வேதமானது சிவபெருமானையே தனது இருதயத் துள் வைத்துக் காட்டுகின்றது என்பதும், சிவனை அர்ச்சிப்பதும் அவனடியவரைப் பணிவதும் வேதங்களின் உள்ளுறைப் பொருள் என்பதும், சிவபெருமானே முழுமுதற் கடவுளென அவ் வேதங்கள் துணிந்து வந்திக்குமென்பதும் அறிஞர்களால் நாட்டப்பட்ட உண்மை.

The Subrabhedagama states, “Since Saiva Siddhanta is the essence of the Vedas”; the Makutagama says, “This Siddhanta is the essence of the Vedas”; and the Sivaprakasham declares, “The nature of Saiva Siddhanta is the clarity of Vedanta.” It has been established by scholars as a fact that the Vedas present Lord Shiva as enshrined in their very heart; that worshipping Shiva and serving His devotees is the inner meaning of the Vedas; and that the Vedas confidently proclaim Lord Shiva alone to be the Supreme God.

Passage 149

அது,

That is,

Passage 150

வேத வுள்ளுறை யாவன விரிபுனல் வேணி

The inner meaning of the Vedas is to cherish the Lord

Passage 151

நாதர் தம்மையு மவரடி யாரையு நயந்து

Who bears the spreading waters in His matted locks, and His devotees.

Passage 152

பாத வர்ச்சனை புரிவதும் பணிவது மென்றே

“Worshipping His feet and bowing down—

Passage 153

காத லாலவை யிரண்டுமே செய்கருத் துடையார்.

these two alone are the acts performed by those filled with love.”

Passage 154

என அருண்மொழித் தேவர் அருள்வாக்கானும் பிறவாற்றானும் உண ரப்படும்.

Thus it is understood from the gracious words of Aruṇmoḻit Tēvar and through other means as well.

Passage 155

திருவாசகம் அச்சப்பத்து 1.

Tiruvācakam, Achchappattu 1.

Passage 156

† சி. சித்தியார் 8—2—16.

† Ci. Cittiyār 8—2—16.

Passage 157

அவனருள் பெறாது முத்தி யடைந்தன ரில்லை யல்லா

None have attained liberation without receiving His grace.

Passage 158

லவனரு ளின்றி வாழு மமரரும் யாரு மில்லை

Nor is there anyone, even among the immortals, who lives without His grace.

Passage 159

யவனரு ளெய்தி னெய்தா வரும்பொரு ளில்லை யாணை

There is no precious attainment that cannot be gained by attaining His grace; this is certain.

Passage 160

யவனல திறைவ னில்லை யவனைநீ அடைதி யென்றான்.

There is no other Lord; therefore, he said, “You must attain Him.”

Passage 161

— கந்தபுராணம்.

— Kanda Puranam.

Passage 162

† சரியை முதலிய நான்கு பாதங்களும் தனித்தனி உபாயம் உண்மை யென வேறுபாடுபற்றி இருதிறப்படும். புகம் முதலியவற்றை விரும்பி, உலகப்பயல் நோக்கிக் செய்யும் உபாயச் சரியை முதல் நான்கும், மெய்யன்போடு முத்திநோக்கமாகச் செய்யும் உண்மைச்சரியை முதல் நான்குமாகச் சிவபுண்ணியம் எட்டாம். உபாயச் சரியை முதலிய வற்றை அநுட்டிப்பவர் ஸ்ரீகண்ட்புவனம் வரையுமுள்ள புவனங்களை அடைந்து அங்குள்ள போகங்களை அனுபவித்து மீட்டும் பூமியில் வந்து சித்தாந்த உணர்ச்சியுடையவர்களாய், உண்மைச் சரியை முத லியவற்றை அனுட்டித்து அவற்றின் பயனாகிய பதமுத்தி பரமுத்தி களைப் பெறுவர்.

† The four paths beginning with Chariya are regarded as distinct methods, each possessing its own essential nature, and are therefore classified into two kinds. The first four, beginning with expedient Chariya, are performed with a desire for fame and other such things, with worldly benefits as their aim; the other four, beginning with true Chariya, are performed with genuine devotion and liberation as their goal. Thus, there are eight forms of merit dedicated to Shiva. Those who practise the expedient Chariya and the paths that follow it attain the worlds extending up to Srikantha Bhuvanam, enjoy the pleasures found there, and return once more to earth. Having then acquired an understanding of Siddhanta, they practise true Chariya and the paths that follow it, and obtain the liberation of Sthana and the supreme liberation, which are their fruits.

Passage 163

திருநந்தனவனம் வைத்தல் முதலியவற்றின் இலக்கணம் சிவாகம மொழிபெயர்ப்பாகிய சைவசமய நெறியுரை (மாணாக்கரிலக்கணத்து 7-ம், 8-ம் செய்யுள்) யிலும் ஆகமங்களிலும் விஸ்தாரமாகக் காண்க,

For a detailed account of the characteristics of establishing the sacred Nandana garden and related practices, see the Saiva religious exposition, a translation of the Saiva Agamas (the 7th and 8th verses in the section on the characteristics of disciples), as well as the Agamas.

Passage 164

சிவஞானசித்தியார சாதனவியல் 8-2-19. திருவாதவூரடிகள் புரா ணம் திருப்பெருந்துறைச் சருக்கம் செ. 69.

Sivagnana Siddhiyar, Sadhanaviyal 8-2-19. Tiruvathavuradigal Puranam, Tirupperunturai Section, verse 69.

Passage 165

திருமஞ்சனம் - அபிஷேகம். அது ஈண்டுச் சம்பிரதாயத்தான் அபி ஷேகதீர்த்தத்தின்மேற்று.

Thirumanjanam—Abhishekam. Here, according to tradition, it refers to the abhisheka water.

Passage 166

சிவஞானசித்தியார்: 8-2-20. திருவ தலுரடிகள் புராணம், திருப் பெருந்துறைச் சருக்கம். 70.

Sivagnana Siddhiyar: 8-2-20. Tiruvathavuradigal Puranam, Tirupperunturai Section, verse 70.

Passage 167

இது, தோழமார்க்கமெனவும் கூறப்படும்.

This is also called the path of friendship.

Passage 168

இதற்குப் பூர்வாங்கம் இயமம் நியமம் ஆசனம் என்னும் மூன்றுமாம்.

Its preliminary disciplines are the three known as yama, niyama, and asana.

Passage 169

† சிவஞானசித்தியார் சாதனவியல் (8-2-21).

† Śivajñānasiddhiyār, Sādhanaviyal (8-2-21).

Passage 170

திருவாவூரடிகள் புராணம் — திருப்பெருந்துறைச் சருக்கம்.

The Tiruvāvoor Adigal Purāṇam — Tirupperunthurai Section.

Passage 171

“முக்குணம் புலனைந் துடனடக்கி …”

“Having restrained the three guṇas together with the five senses …”

Passage 172

காஞ்சிப் புராணம் — தழுவக் குழைந்த படலம 57.

Kanchi Puranam — Tazhuvak Kuzhainda Padalam 57.

Passage 173

இவை முதலியவற்றின் இலக்ஷணங்கள் தத்துவப்பிரகாசவுரை (செ. 107. ) முதலியவற்றாலும், சித்தியாருரையிற் சிவாக்கிரயோகிகள் காட் டிய ஆகமவசனங்களாலும் அறிக.

The characteristics of these and others may be learned from the Tattuvaprakasa commentary (section 107) and from the Agamic passages cited by Sivakkiraya Yogis in the commentary on the Siddhiyar.

Passage 174

சன்மார்க்கம் - சத்தியநெறி யெனவும் கூறப்படும்.

Sanmargam—also called the path of truth.

Passage 175

† காட்சி - ஞானம்; திருவருள். காட்சிப் பொருள் - சிவன், காண் பான் - ஆன்மா. இவை முறையே ஞானம், ஞேயம், ஞாதிரு என் றும் கூறப்படும். ஞான நிட்டை அடைந்தோருக்குச் சங்கற்ப விகற்பமில்லை.

† Katchi—knowledge; divine grace. The object of perception is Siva, and the perceiver is the soul. These are respectively also called knowledge, the known, and the knower. Those who have attained steadfastness in knowledge are free from sankalpa and vikalpa.

Passage 176

‡ சித்தியார் 8-2-22. திருவாதவுரடிகள் புராணம் “புரந்த வான்கலை முழுவது… …”

‡ Cittiyār 8-2-22. Tiruvādavūr AṭikaḷPurāṇam, “The entirety of the celestial arts that have pervaded … …”

Passage 177

சி. சித்தியார் 12-3-4.

C. Cittiyār 12-3-4.

Passage 178

இத் தேவாரச் சுருதியின் விளக்கம் அன்பர் பொ. முத்தையபிள்ளை அவர்கள் சித்தியாருக்கு எழுதிய பொழிப்புரையிற் காண்க,

For an explanation of this Tēvāram scriptural passage, see the paraphrase written for the Cittiyār by the devotee Po. Muttaiyapiḷḷai.

Passage 179

வாசகமாவது பிறர்க்குக் கேட்கும்படி செபித்தல். இரகசியமாவது தன்செவிக்குக் கேட்கும்படி செபித்தல். மானதமாவது மனத்தாற் செபித்தல். முன்னைய இரு செபங்களிலும் எண்ணிக்கை கூடும். மானதத்தில் எண்ணிக்கை கூடாது.

Vācakam means reciting so that others can hear it. Rahasyam means reciting so that it can be heard only by oneself. Mānatham means reciting mentally. In the former two types of recitation, the count is increased; in mānatham, the count does not increase.

Passage 180

சிவப்பிரகாசம்

Sivaprakasham

Passage 181

முந்திய ஒருமை யாலே மொழிந்தவை கேட்டல் கேட்டல் சிந்தனை செய்தல் உண்மை தெளிந்திடல் அதுதா னாக வந்தவா றெய்தல் நிட்டை மருவுதல் என்று நான்காம் இந்தவா றடைந்தோர் முத்தி யெய்திய வியல்பி னோரே.

Through the unity attained before, one listens to what has been expounded; reflects upon it; gains true clarity; attains that state in the manner in which it has arisen; and abides steadfastly in it—these are the four stages. Those who have attained in this manner are the ones who have attained liberation.

Passage 182

† திருநாவுக்கரசுநாயனார் சூசனம். “சீவன் முத்திநிலை” காண்க.

† Reference to Tirunavukkarasar Nayanar. See “The State of Liberation While Alive.”

Passage 183

சிவப்பிரகாசம்: பதினொராம் சூத்திரம் 2. திருவருட்பயன்: இன் புறுநிலை 8. சங்கற்பரிராகரணம்: “ஞால நீதியு நான்மறை நீதி யும்…”

Sivaprakasham: Eleventh Sutra, 2. Thiruvarutpayam: Inburunilai, 8. Sankalpa Nirakaranam: “The justice of the world and the justice of the four Vedas…”

Passage 184

கருட தியானத்தால் விஷம் நீங்குமாறு போலச் சிவோகம்பாவனை செய்தலால் மலங்கள் நீங்கும் ஆதிபௌதிக கருடன் ஆதிதைவிக கருடன் ஆத்தியான்மிக கருடன் எனக் கருடன் மூவகைப்படும். அவற்றுள் உலகத்திற் காணப்படும் கருடன் ஆதிபௌதிக கருடன் என்றும், கருடமந்திரம் ஆதிதைவிக கருடன் எ ன் றும், கருட மந்திர மிடமாக நின்று பலன் கொடுக்கும் சிவசத்தி ஆத்தியான்மிக கருடன் என் றுஞ் சொல்லப்படும். ஆதிதைவிக கருட மந்திரத்தை நாடோறும் பயின்றுவந்த பயிற்சி விசேடத்தால் அம்மந்திரமே தானாக அந்நிய பாவனை செய்து தன் அறிவு அதன் வசமாகும்படி உறைத்து நின்று அம்மந்திரக் கண்கொண்டு பார்க்குங்கால், விஷவேகம் நீங்குமாறு போல, சிவோகம்பாவனை செய்து வருங்கால் எய்தும் சிவத்துவ விளக் கம் வாயிலாகப் பாசமாகிய விஷம் நீங்கும்.

Just as poison is removed through meditation on Garuda, impurities are removed by cultivating the awareness “I am Shiva.” Garuda is of three kinds: the physical Garuda, the divine Garuda, and the spiritual Garuda. Of these, the Garuda seen in the world is called the physical Garuda; the Garuda mantra is called the divine Garuda; and the Shiva-Shakti that abides as the basis of the Garuda mantra and bestows its result is called the spiritual Garuda. Through the special practice of repeatedly reciting the divine Garuda mantra every day, the mantra itself, by assuming the form of the practitioner’s meditation, becomes firmly established so that his consciousness comes under its control. When one looks through the eye of that mantra, just as the force of poison is removed, so too, through the illumination of Shiva-nature attained by cultivating the awareness “I am Shiva,” the poison of bondage is removed.

Passage 185

† அரு னூ லு மாரணமு மல்லாது மைந்தின் பொருணு றெரியப் புகின். — திருவருட்பயன்,

† If one enters into the meaning of the five, rather than merely into the scripture and its exposition, it becomes clear. — Tiruvārutpayaṉ,

Passage 186

“என்னி லாரு மெனக்கினி யாரில்லை

“None in me is mine; henceforth, I have no one.

Passage 187

யென்னி லும்மினி யானொரு வன்னுள

Within me too, I am now One alone.

Passage 188

னென்னு ளேயுபிர்ப் பாய்ப்புறம் போந்துபுக்

“He departed from within me as life and entered outward,

Passage 189

கென்னு ளேநிற்கு மில்னம்ப ரீசனே.”

Yet He remains within me, O Lord of Ambalam.”

Passage 190

என்னும் வாகீசர் திருக்குறுந்தொகையாலு முணரப்படும்.

This is also understood from Vākeesar’s Tirukkuruntokai. -

Passage 191

“கதிமலிக ளிறதுபிளி றிடவுரி செய்தவதிகுண னுயர்பசு

“Having flayed the elephant whose rut flowed abundantly and which trumpeted, the greatly virtuous One, exalted Lord of the souls…”

Passage 192

பதியதன் மீசைவரு பசுபதி…”

“Pasupati, who is united with the Lord…”

Passage 193

என்பது பிள்ளையார் தேவாரம்.

This is from Pillaiyar’s Tevaram.

Passage 194

† சிவதத்துவவிவேகம் சிவஞரனசுவாமிகள் மொழிபெயர்ப்பு 6, 7, 8-ம் செய்யுட்களாலறிக.

† See the translation by Sivagnana Swamigal of Sivathathuva Vivekam, verses 6, 7, and 8.

Passage 195

முன்புசெய் தவத்தி ன்ட்ட முடிவிலா வின்ப மான

The immeasurable bliss attained at the end of the austerities performed previously.

Passage 196

அன்பினை யெடுத்துக் காட்ட வளவிலா வார்வம் பொங்கி

To manifest his love, boundless affection surged forth,

Passage 197

மன்பெருங் காதல் கூர வள்ளலார் மலையை நோக்கி

As immense love grew ever stronger, he gazed upon the mountain of the Benevolent One,

Passage 198

யென்புரெக் குருகி யுள்ளத் தெழுபெரு வேட்கை யோடும்.

With his bones melting and a great longing arising in his heart.

Passage 199

என்னும் அருண்மொழித்தேவர் அருள்வாக்காலும் உணரப்படும். கண் ணப்பாரயனார் புராணம் திருவிருத்தம் 102.

This is also understood from the blessed words of Aruṇmoḻittēvar: Kaṇṇappar Nāyaṉār Purāṇam, Tiruviruttam 102.