127. Guru, Linga, and Sangama
Passage 1
குருலிங்கசங்கமம்.
Guru, Linga, and Sangama.
Passage 2
மலநீங்கிய மெய்ஞானிகளும் சிவானந்தம் மேன்மேலும் வளர்தற் பொருட்டும், மலவாசனை தாக்காமைப் பொருட்டும் அன்பரது திருவேடங்களையும் சிவாலயங்களையும் சிவனெ னவே தெளிந்து வழிபடுவர். ஆகையினாலே நாமெல்லாம் குருவும் இலிங்கமும் சங்கமமும் ஆகிய மூன்றிடத்தும் அன்பு வைத்து வழிபாடு செய்தல் வேண்டும்.
Even true jñānis who have been freed from the impurities worship devotees’ sacred forms and the temples of Siva, clearly recognizing them as Siva Himself, both so that Sivananda may continue to increase and so that they may not be affected by the traces of the impurities. Therefore, we must all worship with love in the three places: the Guru, the Linga, and the Sangama.
Passage 3
திருச்சிற்றம்பலம்
Tiruchitrambalam
Passage 4
மழைவ ழங்குக மன்னவ னோங்குக
May the rain fall; may the king prosper.
Passage 5
பிழையில் பல்வள மெங்கும் பெருகுக
May abundant prosperity, free from faults, increase everywhere.
Passage 6
தழைக வஞ்செழுத் தோசை தரையெலாம்
May the sound of the five-lettered mantra flourish throughout the earth,
Passage 7
பழைய வைதிக சைவம் பரக்கவே.
May the ancient Vedic Saivism spread everywhere.
Passage 8
திருச்சிற்றம்பலம்.
Tiruchitrambalam.
Passage 9
முற்றுப் பெ’ற்ற து.
It has been completed.