2. The Reality of the Lord
Passage 1
பதியுண்மை
The Reality of the Lord
Passage 2
அவனென்றும், அவளென்றும், அதுவென்றும் இவ் வாறு அவயவப் பகுப்புடையதாய்க் கூறப்படும் பிரபஞ்சம் தோன்றி நின்றழியும் இயல்புடைமையினலே அதனைத் தோற்றுவிப்பதற்கு ஒரு கருத்தா வேண்டப்படும். அக் கருத்தா முன் பிரபஞ்சம் ஒடுங்குகற்கு ஏதுவாய் நின்ற சங் கார காரணரேயாம். அக்காரணர் பிரபஞ்சம் ஒடுங்கிய பின் னரும் † அநாதிமுத்த சித்துருவாய் நிலைபெற்று நின்று + அநாதிபெத்த சித்துருவின் பொருட்டு மீளவும் அப்பிரபஞ் சத்தை முன்போலத் கோற்றுவித்தருளுவர். இவ்வாறு ஒடுக்கியும் தோற்றுவித்தும் செய்வதனால் சங்காரத் தொழி லைச் செய்யும் பரமசிவனே முதற்கடவுள் என்று கூறுவர் அறிஞர்.
Since the universe, described as possessing divisions such as “He,” “She,” and “That,” has the nature of arising, enduring, and perishing, an agent is required to bring it into existence. That agent is none other than the Cause of Dissolution who previously brought about the withdrawal of the universe. Even after the universe has been withdrawn, He remains established as the eternal, liberated Consciousness, and, for the sake of the eternal bound consciousness, graciously brings forth that universe once again as before. Because He thus performs both Dissolution and creation, the wise declare that Paramashiva, who performs the act of Dissolution, is the First Lord.