69. Asit — Asat
Passage 1
அசித்து — அசத்து
Asit — Asat
Passage 2
நிலையற்ற ஆன்மபோதத்தாற் சுட்டியறியப்படுவதாகிய காரியப் பிரபஞ்சங்கள், தனு கரண புவன போகங்களாய்ப் பலவகைப் படுதலாலும், சகல நிலையில் மாயாமலங்களாகி ஆன்மாவோடு கலந்து நிற்றலாலும், சுத்தநிலையில் ஆன்மா வைவிட்டு நீங்குதலாலும் அசித்தெனப்படும். அசித்து - சடப் பொருள்.
The effect-worlds indicated and known through the unstable awareness of the soul are called asit because they take various forms as body, instruments, worlds, and experiences; because, in the bound state, they become the impurities of maya and remain mingled with the soul; and because, in the pure state, they depart from the soul. Asit — an insentient substance.