15. பரபக்கம் — 13. நிரீச்சுரசாங்கியன் மதம்
15.1
மூலம் புரியட் டகம்விகிர்தி யாகி மூன்றாய்ப் பிரகிருதி தூட சூக்கம் பரமாயச் சுத்த புருடன் சந்நிதியில் பாலன் சேட்டை புரிந்துலகம் யோனி பலவாய்ப் பரந்தொடுங்கும் சால வென்று நிரீச்சுவர சாங்கி யன்றான் சாற்றிடுமே.
15.2
நிரீச்சுரசாங்கியன் மத மறுதலை சுத்தன் அறிவன் புருடனெனில் சூழா தாகும் பிரகிருதி பெத்தம் நீங்கி னாலும்பின் பெத்த னாவன் பேரறிவால் கத்த மேவும் பிரகிருதி கண்டு கழிக்க மாட்டானேல் முத்த னாகான் சுத்தனுக்கு மூலப் பிரகி ருதியிலையாம்.
15.3
புருடன் பிரகி ருதிபெற்றால் போம் சிறிதங் குண்டாகிக், குருடன் முதுகின் முதுகின் முடவனிருந் தூர்ந்தாற் போலப் பிரகிருதி, இருட னிடத்தே இருந்தியங்கும் கன்மால் இறையன் றிரண்டினையும், மருட னுருவாய்ச் சேட்டிப்பித் தறியும் அமலன் அரனேயாம்.
15.4
அறியான் புருடன் பிரகிருதி அசேத நம்கா ரியத்தி னுக்குக், குறியாய் நாதன் உளனென்று கூறு முத்தி விவேகமெனில், செறிவாம் தளைபோ காதறியில் சேர்த்தோன் வேண்டும் செயலிற்போம், நெறியால் பணிசெய் துடற்பாசம் நீக்கிக் கொள்நீ நின்மலனால்.