Books / Thirumurai 4

83. 4.83 திருக்கழுமலம் - திருவிருத்தம்

4.83.1

படையார் மழுவொன்று பற்றிய
கையன் பதிவினவிற்
கடையார் கொடிநெடு மாடங்க
ளோங்குங் கழுமலமாம்
மடைவாய்க் குருகினம் பாளை
விரிதொறும் வண்டினங்கள்
பெடைவாய் மதுவுண்டு பேரா
திருக்கும் பெரும்பதியே.

4.83.1