Books / Thirumurai 5

50. 5.50 திருவாய்மூர் - திருக்குறுந்தொகை

5.50.1

500 எங்கே என்னை இருந்து இடம் தேடிக்க்கொண்டு
அங்கே வந்துஅடை யாளம் அருளினார்
தெங்கே தோன்றும் திருவாய்மூர்ச் செல்வனார்
அங்கே வாஎன்று போனார் அதுஎன்கொலோ.

5.50.1

5.50.2

  1. மன்னு மாமறைக் காட்டு மணாளனார்
    உன்னி உன்னி உறங்குகின் றேனுக்குத்
    தன்னை வாய்மூர்த் தலைவன் ஆமா சொல்லி
    என்னஜ வாஎன்று போனார்அது என்கொலோ.

5.50.2

5.50.3

  1. தஞ்சே கண்டேன் தரிக்கிலா தார்என்றேன்
    அஞ்சேல் உன்னை அழைக்கவந் தேன்என்றார்
    உஞ்சேன் என்றுகந் தேஎழுந்து ஒட்டந்தேன்
    வஞ்சே வல்லரே வாய்மூர் அடிகளே.

5.50.3

5.50.4

  1. கழியக் கண்டிலேன் கண்ணெதி ரேகண்டேன்
    ஒழியப் போந்திலேன் ஒக்கவே ஒட்டந்தேன்
    வழியிற் கண்டிலேன் வாய்மூர் அடிகள்தம்
    கழியிற் பட்டுச் சுழல்கின்றது என்கொலோ.

5.50.4

5.50.5

  1. ஒள்ளி யார்இவர் அன்றிமற்று இல்லைஎன்று
    உள்கி உள்கி உகந்திருந் தேனுக்குத்
    தெள்ளி யார்இவர் போலத் தெருவாய்மூர்க்
    கள்ளி யாரவர் போலத் கரந்ததே.

5.50.5

5.50.6

  1. யாதே செய்துமி யாமலோம்நீ யென்னில்
    ஆதே யேயும் அளவில் பெருமையான்
    மாதே வாகிய வாய்மூர் மருவினார்
    போதே என்றும் புகுந்ததும் பொய்கொலோ.

5.50.6

5.50.7

  1. பாடிப் பெற்ற பரிசில் பழங்காசு
    வாடி வாட்டம் தவிர்ப்பார் அவரைப்போல்
    தேடிக் கொண்டு திருவாய்மூர்க் கேஎனா
    ஒடிச் போந்திங்கு ஒளித்தவாறு என்கொலோ.

5.50.7

5.50.8

507.திறக்கப் பாடிய என்னினும் செந்தமிழ்
உறைப்புப் பாடி அடைப்பித்தா ருந்நின்றார்
மறைக்க வல்லரோ தம்மைத் திருவாய்மூர்ப்
பிறைக்கொள் செஞ்சடையார் இவர் பித்தரே.

5.50.8

5.50.9

  1. தனக்கே றாமை தவிர்கென்று வேண்டினும்
    நினைத்தேன் பொய்க்குள் செய்திடு நின்மலன்
    எனக்கே வந்தெதிர் வாய்மூர்க் கேஎனாப்
    புனற்கே பொற்கோயில் புக்கதும் பொய்கொலோ.

5.50.9

5.50.10

  1. தீண்டற் கரிய திருவடி ஒன்றினால்
    மீண்டற் கும்மதித் தார்அரக் கன்தனை
    வேண்டிக் கொண் டேன்திரு வாய்மூர் விளக்கினைத்
    தூண்டிக் கொள்வன்நான் என்றலும் தோன்றுமே.

5.50.10

5.50 — note

திருநாவுக்கரசுசுவாமிகள் அருளிச்செய்த தேவாரப்பதிகங்கள் ஐந்தாம் திருமுறை முதற் பகுதி முற்றும்.