Books / Thirumurai 6

43. 6.51 திருவீழிமிழலை - திருத்தாண்டகம்௿ ௿

6.51.1

கயிலாய மலையுள்ளார் காரோ ணத்தார் ௿
கந்தமா தனத்துளார் காளத் தியார்௿
மயிலாடு துறையுளார் மாகா ளத்தார்௿
வக்கரையார் சக்கரமாற் கீந்தார் வாய்ந்த௿
அயில்வாய சூலமுங் காபா லமும்௿
அமருந் திருக்கரத்தார் ஆனே றேறி௿
வெயிலாய சோதி விளங்கு நீற்றார்௿
வீழி மிழலையே மேவி னாரே.

6.51.1

6.51.2

பூதியணி பொன்னிறத்தர் பூண நூலர்௿
பொங்கரவர் சங்கரர்வெண் குழையோர் காதர்௿
கேதிசர மேவினார் கேதா ரத்தார்௿
கெடில வடவதிகை வீரட் டத்தார்௿
மாதுயரந் தீர்த்தென்னை உய்யக் கொண்டார்௿
மழபாடி மேய மழுவா ளனார்௿
வேதி குடியுளார் மீயச் சூரார்௿
வீழி மிழலையே மேவி னாரே.

6.51.2

6.51.3

அண்ணா மலையமர்ந்தார் ஆரூ ருள்ளார்௿
அளப்பூரார் அந்தணர்கள் மாடக் கோயில்௿
உண்ணாழி கையார் உமையா ளோடும்௿
இமையோர் பெருமானார் ஒற்றி யூரார்௿
பெண்ணா கடத்துப் பெருந்தூங் கானை௿
மாடத்தார் கூடத்தார் பேரா வூரார்௿
விண்ணோர்க ளெல்லாம் விரும்பி யேத்த ௿
வீழி மிழலையே மேவி னாரே.

6.51.3

6.51.4

வெண்காட்டார் செங்காட்டங் குடியார் வெண்ணி ௿
நன்னகரார் வேட்களத்தார் வேத நாவார்௿
பண்காட்டும் வண்டார் பழனத் துள்ளார்௿
பராய்த்துறையார் சிராப்பள்ளி யுள்ளார் பண்டோ ர்௿
வெண்கோட்டுக் கருங்களிற்றைப் பிளிறப் பற்றி ௿
உரித்துரிவை போர்த்த விடலை வேடம்௿
விண்காட்டும் பிறைநுதலி யஞ்சக் காட்டி௿
வீழி மிழலையே மேவி னாரே.

6.51.4

6.51.5

புடைசூழ்ந்த பூதங்கள் வேதம் பாடப் ௿
புலியூர்ச்சிற் றம்பலத்தே நடமா டுவார்௿
உடைசூழ்ந்த புலித்தோலர் கலிக்கச் சிமேற் ௿
றளியுளார் குளிர்சோலை யேகம் பத்தார்௿
கடைசூழ்ந்து பலிதேருங் கங்கா ளனார்௿
கழுமலத்தார் செழுமலர்த்தார்க் குழலி யோடும்௿
விடைசூழ்ந்த வெல்கொடியர் மல்கு செல்வ ௿
வீழி மிழலையே மேவி னாரே.

6.51.5

6.51.6

பெரும்புலியூர் விரும்பினார் பெரும்பா ழியார்௿
பெரும்பற்றப் புலியூர்மூ லட்டா னத்தார்௿
இரும்புதலார் இரும்பூளை யுள்ளா ரேரார் ௿
இன்னம்ப ரார்ஈங்கோய் மலையார் இன்சொற்௿
கரும்பனையாள் உமையோடுங் கருகா வூரார்௿
கருப்பறிய லூரார் கரவீ ரத்தார்௿
விரும்பமரர் இரவுபகல் பரவி யேத்த ௿
வீழி மிழலையே மேவி னாரே.

6.51.6

6.51.7

மறைக்காட்டார் வலிவலத்தார் வாய்மூர் மேயார்௿
வாழ்கொளி புத்தூரார் மாகா ளத்தார்௿
கறைக்காட்டுங் கண்டனார் காபா லியார்௿
கற்குடியார் விற்குடியார் கானப் பேரார்௿
பறைக்காட்டுங் குழிவிழிகட் பல்பேய் சூழப் ௿
பழையனூர் ஆலங்காட் டடிகள் பண்டோ ர்௿
மிறைக்காட்டுங் கொடுங்காலன் வீடப் பாய்ந்தார்௿
வீழி மிழலையே மேவி னாரே.

6.51.7

6.51.8

அஞ்சைக் களத்துள்ளார் ஐயாற் றுள்ளார்௿
ஆரூரார் பேரூரார் அழுந்தூ ருள்ளார்௿
தஞ்சைத் தளிக்குளத்தார் தக்க ளூரார்௿
சாந்தை அயவந்தி தங்கி னார்தாம்௿
நஞ்சைத் தமக்கமுதா உண்ட நம்பர்௿
நாகேச் சரத்துள்ளார் நாரை யூரார்௿
வெஞ்சொdr சமண்சிறையி லென்னை மீட்டார்௿
வீழி மிழலையே மேவி னாரே.

6.51.8

6.51.9

கொண்டலுள்ளார் கொண்டீச் சரத்தி னுள்ளார்௿
கோவலூர் வீரட்டங் கோயில் கொண்டார்௿
தண்டலையார் தலையாலங் காட்டி னுள்ளார்௿
தலைச்சங்கைப் பெருங்கோயில் தங்கி னார்தாம்௿
வண்டலொடு மணற்கொணரும் பொன்னி நன்னீர் ௿
வலஞ்சுழியார் வைகலின்மேன் மாடத் துள்ளார்௿
வெண்டலைமான் கைக்கொண்ட விகிர்த வேடர்௿
வீழி மிழலையே மேவி னாரே.

6.51.9

6.51.10

அரிச்சந் திரத்துள்ளார் அம்ப ருள்ளார்௿
அரிபிரமர் இந்திரர்க்கு மரிய ரானார்௿
புரிச்சந் திரத்துள்ளார் போகத் துள்ளார்௿
பொருப்பரையன் மகளோடு விருப்ப ராகி௿
எரிச்சந்தி வேட்கு மிடத்தா ரேமக்௿
கூடத்தார் பாடத்தே னிசையார் கீதர்௿
விரிச்சங்கை யெரிக்கொண்டங் காடும் வேடர்௿
வீழி மிழலையே மேவி னாரே.

6.51.10

6.51.11

புன்கூரார் புறம்பயத்தார் புத்தூ ருள்ளார்௿
பூவணத்தார் புலிவலத்தார் வலியின் மிக்க௿
தன்கூர்மை கருதிவரை யெடுக்க லுற்றான் ௿
தலைகளொடு மலைகளன தாளுந் தோளும்௿
பொன்கூருங் கழலடியோர் விரலா லூன்றிப்௿
பொருப்பதன்கீழ் நெரித்தருள்செய் புவன நாதர்௿
மின்கூருஞ் சடைமுடியார் விடையின் பாகர்௿
வீழி மிழலையே மேவி னாரே.

6.51.11