Books / Thirumurai 6

44. 6.52 திருவீழிமிழலை - திருத்தாண்டகம்

6.52.1

கண்ணவன்காண் கண்ணொளிசேர் காட்சி யான்காண்௿
கந்திருவம் பாட்டிசையிற் காட்டு கின்ற௿
பண்ணவன்காண் பண்ணவற்றின் றிறலா னான்காண்௿
பழமாகிச் சுவையாகிப் பயக்கின் றான்காண்௿
மண்ணவன்காண் தீயவன்காண் நீரா னான்காண்௿
வந்தலைக்கும் மாருதன்காண் மழைமே கஞ்சேர்௿
விண்ணவன்காண் விண்ணவர்க்கு மேலா னான்காண்௿
விண்ணிழிதண் வீழி மிழலை யானே.

6.52.1

6.52.2

ஆலைப் படுகரும்பின் சாறு போல ௿
அண்ணிக்கும் அஞ்செழுத்தின் நாமத் தான்காண்௿
சீல முடையடியார் சிந்தை யான்காண்௿
திரிபுரமூன் றெரிபடுத்த சிலையி னான்காண்௿
பாலினொடு தயிர்நறுநெய் யாடி னான்காண்௿
பண்டரங்க வேடன்காண் பலிதேர் வான்காண்௿
வேலை விடமுண்ட மிடற்றி னான்காண்௿
விண்ணிழிதண் வீழி மிழலை யானே.

6.52.2

6.52.3

தண்மையொடு வெம்மைதா னாயி னான்காண்௿
சக்கரம் புட்பாகற் கருள்செய் தான்காண்௿
கண்ணுமொரு மூன்றுடைய காபா லிகாண்௿
காமனுடல் வேவித்த கண்ணி னான்காண்௿
எண்ணில்சமண் தீர்த்தென்னை யாட்கொண் டான்காண்௿
இருவர்க் கெரியா யருளி னான்காண்௿
விண்ணவர்கள் போற்ற இருக்கின் றான்காண்௿
விண்ணிழிதண் வீழி மிழலை யானே.

6.52.3

6.52.4

காதிசைந்த சங்கக் குழையி னான்காண்௿
கனக மலையனைய காட்சி யான்காண்௿
மாதிசைந்த மாதவமுஞ் சோதித் தான்காண்௿
வல்லேன வெள்ளெயிற்றா பரணத் தான்காண்௿
ஆதியன்காண் அண்டத்துக் கப்பா லான்காண்௿
ஐந்தலைமா நாகம்நா ணாக்கி னான்காண்௿
வேதியன்காண் வேதவிதி காட்டி னான்காண்௿
விண்ணிழிதண் வீழி மிழலை யானே.

6.52.4

6.52.5

நெய்யினொடு பாலிளநீ ராடி னான்காண்௿
நித்தமண வாளனென நிற்கின் றான்காண்௿
கையின்மழு வாளொடுமான் ஏந்தி னான்காண்௿
காலனுயிர் காலாற் கழிவித் தான்காண்௿
செய்யதிரு மேனிவெண் ணீற்றி னான்காண்௿
செஞ்சடைமேல் வெண்மதியஞ் சேர்த்தி னான்காண்௿
வெய்ய கனல்விளையாட் டாடி னான்காண்௿
விண்ணிழிதண் வீழி மிழலை யானே.

6.52.5

6.52.6

கண்டுஞ்சுங் கருநெடுமால் ஆழி வேண்டிக்௿
கண்ணிடந்து சூட்டக்கண் டருளு வான்காண்௿
வண்டுண்ணும் மதுக்கொன்றை வன்னி மத்தம்௿
வான்கங்கைச் சடைக்கரந்த மாதே வன்காண்௿
பண்டங்கு மொழிமடவாள் பாகத் தான்காண்௿
பரமன்காண் பரமேட்டி யாயி னான்காண்௿
வெண்டிங்கள் அரவொடுசெஞ் சடைவைத் தான்காண்௿
விண்ணிழிதண் வீழி மிழலை யானே.

6.52.6

6.52.7

கற்பொலிதோள் சலந்தரனைப் பிளந்த ஆழி௿
கருமாலுக் கருள்செய்த கருணை யான்காண்௿
விற்பொலிதோள் விசயன்வலி தேய்வித் தான்காண்௿
வேடுவனாய்ப் போர்பொருது காட்டி னான்காண்௿
தற்பரமாந் தற்பரமாய் நிற்கின் றான்காண்௿
சதாசிவன்காண் தன்னொப்பா ரில்லா தான்காண்௿
வெற்பரையன் பாவை விருப்பு ளான்காண்௿
விண்ணிழிதண் வீழி மிழலை யானே.

6.52.7

6.52.8

மெய்த்தவன்காண் மெய்த்தவத்தில் நிற்பார்க் கெல்லாம்௿
விருப்பிலா இருப்புமன வினையர்க் கென்றும்௿
பொய்த்தவன்காண் புத்தன் மறவா தோடி ௿
எறிசல்லி புதுமலர்க ளாக்கி னான்காண்௿
உய்த்தவன்காண் உயர்கதிக்கே உள்கி னாரை௿
உலகனைத்தும் ஒளித்தளித்திட் டுய்யச் செய்யும்௿
வித்தகன்காண் வித்தகர்தாம் விரும்பி யேத்தும் ௿
விண்ணிழிதண் வீழி மிழலை யானே.

6.52.8

6.52.9

சந்திரனைத் திருவடியாற் தளர்வித் தான்காண்௿
தக்கனையும் முனிந்தெச்சன் தலைகொண் டான்காண்௿
இந்திரனைத் தோள்முறிவித் தருள்செய் தான்காண்௿
ஈசன்காண் நேசன்காண் நினைவோர்க் கெல்லாம்௿
மந்திரமும் மறைப்பொருளு மாயி னான்காண்௿
மாலொடயன் மேலொடுகீழ் அறியா வண்ணம்௿
வெந்தழலின் விரிசுடரா யோங்கி னான்காண்௿
விண்ணிழிதண் வீழி மிழலை யானே.

6.52.9

6.52.10

ஈங்கைப்பேர் ஈமவனத் திருக்கின் றான்காண்௿
எம்மான்காண் கைம்மாவி னுரிபோர்த் தான்காண்௿
ஓங்குமலைக் கரையன்றன் பாவை யோடும் ௿
ஓருருவாய் நின்றான்காண் ஓங்கா ரன்காண்௿
கோங்குமலர்க் கொன்றையந்தார்க் கண்ணி யான்காண்௿
கொல்லேறு வெல்கொடிமேற் கூட்டி னான்காண்௿
வேங்கைவரிப் புலித்தோல்மே லாடை யான்காண்௿
விண்ணிழிதண்வீழி மிழலை யானே.

6.52.10

6.52 — note

௿