Books / Thirumurai 6

45. 6.53 திருவீழிமிழலை - திருத்தாண்டகம்

6.53.1

௿

6.53.1

6.53.1

மானேறு கரமுடைய வரதர் போலும்௿
மால்வரைகால் வளைவில்லா வளைத்தார் போலும்௿
கானேறு கரிகதற வுரித்தார் போலுங்௿
கட்டங்கங் கொடிதுடிகைக் கொண்டார் போலுந்௿
தேனேறு திருஇதழித் தாரார் போலுந்௿
திருவீழி மிழலையமர் செல்வர் போலும்௿
ஆனேற தேறும் அழகர் போலும்௿
அடியேனை ஆளுடைய அடிகள் தாமே.

6.53.1

6.53.2

சமரமிகு சலந்தரன்போர் வேண்டி னானைச் ௿
சக்கரத்தாற் பிளப்பித்த சதுரர் போலும்௿
நமனையொரு கால்குறைத்த நாதர் போலும்௿
நாரணனை இடப்பாகத் தடைத்தார் போலுங்௿
குமரனையும் மகனாக வுடையார் போலுங்௿
குளிர்வீழி மிழலையமர் குழகர் போலும்௿
அமரர்கள்பின் அமுதுணநஞ் சுண்டார் போலும்௿
அடியேனை ஆளுடைய அடிகள் தாமே.

6.53.2

6.53.3

நீறணிந்த திருமேனி நிமலர் போலும்௿
நேமிநெடு மாற்கருளிச் செய்தார் போலும்௿
ஏறணிந்த கொடியுடையெம் மிறைவர் போலும்௿
எயில்மூன்று மெரிசரத்தா லெய்தார் போலும்௿
வேறணிந்த கோலமுடை வேடர் போலும்௿
வியன்வீழி மிழலையுறை விகிர்தர் போலும்௿
ஆறணிந்த சடாமகுடத் தழகர் போலும்௿
அடியேனை ஆளுடைய அடிகள் தாமே.

6.53.3

6.53.4

கைவேழ முகத்தவனைப் படைத்தார் போலுங்௿
கயாசுரனை அவனாற்கொல் வித்தார் போலுஞ்௿
செய்வேள்வித் தக்கனைமுன் சிதைத்தார் போலுந்௿
திசைமுகன்றன் சிரமொன்று சிதைத்தார் போலும்௿
மெய்வேள்வி மூர்த்திதலை யறுத்தார் போலும்௿
வியன்வீழி மிழலையிடங் கொண்டார் போலும்௿
ஐவேள்வி ஆறங்க மானார் போலும்௿
அடியேனை ஆளுடைய அடிகள் தாமே.

6.53.4

6.53.5

துன்னத்தின் கோவணமொன் றுடையார் போலுஞ்௿
சுடர்மூன்றுஞ் சோதியுமாய்த் தூயார் போலும்௿
பொன்னொத்த திருமேனிப் புனிதர் போலும்௿
பூதகணம் புடைசூழ வருவார் போலும்௿
மின்னொத்த செஞ்சடைவெண் பிறையார் போலும்௿
வியன்வீழி மிழலைசேர் விமலர் போலும்௿
அன்னத்தேர் அயன்முடிசேர் அடிகள் போலும்௿
அடியேனை ஆளுடைய அடிகள் தாமே.

6.53.5

6.53.6

மாலாலும் அறிவரிய வரதர் போலும்௿
மறவாதார் பிறப்பறுக்க வல்லார் போலும்௿
நாலாய மறைக்கிறைவ ரானார் போலும்௿
நாமவெழுத் தஞ்சாய நம்பர் போலும்௿
வேலார்கை வீரியைமுன் படைத்தார் போலும்௿
வியன்வீழி மிழலையமர் விகிர்தர் போலும்௿
ஆலாலம் மிடற்றடக்கி அளித்தார் போலும்௿
அடியேனை ஆளுடைய அடிகள் தாமே.

6.53.6

6.53.7

பஞ்சடுத்த மெல்விரலாள் பங்கர் போலும்௿
பைந்நாகம் அரைக்கசைத்த பரமர் போலும்௿
மஞ்சடுத்த மணிநீல கண்டர் போலும்௿
வடகயிலை மலையுடைய மணாளர் போலுஞ்௿
செஞ்சடைக்கண் வெண்பிறைகொண் டணிந்தார் போலுந்௿
திருவீழி மிழலையமர் சிவனார் போலும்௿
அஞ்சடக்கும் அடியவர்கட் கணியார் போலும்௿
அடியேனை ஆளுடைய அடிகள் தாமே.

6.53.7

6.53.8

குண்டரொடு பிரித்தெனையாட் கொண்டார் போலுங்௿
குடமூக்கி லிடமாக்கிக் கொண்டார் போலும்௿
புண்டரிகப் புதுமலரா தனத்தார் போலும்௿
புள்ளரசைக் கொன்றுயிர்பின் கொடுத்தார் போலும்௿
வெண்டலையிற் பலிகொண்ட விகிர்தர் போலும்௿
வியன்வீழி மிழலைநக ருடையார் போலும்௿
அண்டத்துப் புறத்தப்பா லானார் போலும்௿
அடியேனை ஆளுடைய அடிகள் தாமே.

6.53.8

6.53.9

முத்தனைய முகிழ்முறுவ லுடையார் போலும்௿
மொய்பவளக் கொடியனைய சடையார் போலும்௿
எத்தனையும் பத்திசெய்வார்க் கினியார் போலும்௿
இருநான்கு மூர்த்திகளு மானார் போலும்௿
மித்திரவச் சிரவணற்கு விருப்பர் போலும்௿
வியன்வீழி மிழலையமர் விகிர்தர் போலும்௿
அத்தனொடும் அம்மையெனக் கானார் போலும்௿
அடியேனை ஆளுடைய அடிகள் தாமே.

6.53.9

6.53.10

கரியுரிசெய் துமைவெருவக் கண்டார் போலுங்௿
கங்கையையுஞ் செஞ்சடைமேற் கரந்தார் போலும்௿
எரியதொரு கைதரித்த இறைவர் போலும்௿
ஏனத்தின் கூனெயிறு பூண்டார் போலும்௿
விரிகதிரோ ரிருவரைமுன் வெகுண்டார் போலும்௿
வியன்வீழி மிழலையமர் விமலர் போலும்௿
அரிபிரமர் துதிசெயநின் றளித்தார் போலும்௿
அடியேனை ஆளுடைய அடிகள் தாமே.

6.53.10

6.53.11

கயிலாய மலையெடுத்தான் கதறி வீழக் ௿
கால்விரலால் அடர்த்தருளிச் செய்தார் போலுங்௿
குயிலாய மென்மொழியாள் குளிர்ந்து நோக்கக் ௿
கூத்தாட வல்ல குழகர் போலும்௿
வெயிலாய சோதிவிளக் கானார் போலும்௿
வியன்வீழி மிழலையமர் விகிர்தர் போலும்௿
அயிலாய மூவிலைவேற் படையார் போலும்௿
அடியேனை ஆளுடைய அடிகள் தாமே.

6.53.11

6.53 — note

௿