Books / Thirumurai 6

46. 6.54 திருப்புள்ளிருக்குவேளூர் - திருத்தாண்டகம்

6.54.1

ஆண்டானை அடியேனை ஆளாக் கொண்டு௿
அடியோடு முடியயன்மா லறியா வண்ணம்௿
நீண்டானை நெடுங்களமா நகரான் றன்னை௿
நேமிவான் படையால்நீ ளுரவோ னாகங்௿
கீண்டானைக் கேதாரம் மேவி னானைக்௿
கேடிலியைக் கிளர்பொறிவாள் அரவோ டென்பு௿
பூண்டானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்௿
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.

6.54.1

6.54.2

சீர்த்தானைச் சிறந்தடியேன் சிந்தை யுள்ளே ௿
திகழ்ந்தானைச் சிவன்றன்னைத் தேவ தேவைக்௿
கூர்த்தானைக் கொடுநெடுவேற் கூற்றந் தன்னைக் ௿
குரைகழலாற் குமைத்துமுனி கொண்ட அச்சம்௿
பேர்த்தானைப் பிறப்பிலியை இறப்பொன் றில்லாப் ௿
பெம்மானைக் கைம்மாவி னுரிவை பேணிப்௿
போர்த்தானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்௿
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.

6.54.2

6.54.3

பத்திமையாற் பணிந்தடியேன் றன்னைப் பன்னாட்௿
பாமாலை பாடப் பயில்வித் தானை௿
எத்தேவு மேத்தும் இறைவன் றன்னை௿
எம்மானை என்னுள்ளத் துள்ளே யூறும்௿
அத்தேனை அமுதத்தை ஆவின் பாலை௿
அண்ணிக்குந் தீங்கரும்பை அரனை ஆதிப்௿
புத்தேளைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்௿
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.

6.54.3

6.54.4

இருளாய உள்ளத்தி னிருளை நீக்கி௿
இடர்பாவங் கெடுத்தேழை யேனை யுய்யத்௿
தெருளாத சிந்தைதனைத் தெருட்டித் தன்போற்௿
சிவலோக நெறியறியச் சிந்தை தந்த௿
அருளானை ஆதிமா தவத்து ளானை௿
ஆறங்கம் நால்வேதத் தப்பால் நின்ற௿
பொருளானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்௿
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.

6.54.4

6.54.5

மின்னுருவை விண்ணகத்தி லொன்றாய் மிக்கு ௿
வீசுங்கால் தன்னகத்தில் இரண்டாய்ச் செந்தீத்௿
தன்னுருவின் மூன்றாய்த்தாழ் புனலின் நான்காய்த்௿
தரணிதலத் தஞ்சாகி யெஞ்சாத் தஞ்ச௿
மன்னுருவை வான்பவளக் கொழுந்தை முத்தை௿
வளரொளியை வயிரத்தை மாசொன் றில்லாப்௿
பொன்னுருவைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்௿
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.

6.54.5

6.54.6

அறையார்பொற் கழலார்ப்ப அணியார் தில்லை ௿
அம்பலத்துள் நடமாடும் அழகன் றன்னைக்௿
கறையார்மூ விலைநெடுவேற் கடவுள் தன்னைக்௿
கடல்நாகைக் காரோணங் கருதி னானை௿
இறையானை என்னுள்ளத் துள்ளே விள்ளா ௿
திருந்தானை ஏழ்பொழிலுந் தாங்கி நின்ற௿
பொறையானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்௿
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.

6.54.6

6.54.7

நெருப்பனைய திருமேனி வெண்ணீற் றானை௿
நீங்காதென் னுள்ளத்தி னுள்ளே நின்ற௿
விருப்பவனை வேதியனை வேத வித்தை௿
வெண்காடும் வியன்துருத்தி நகரும் மேவி௿
இருப்பவனை இடைமருதோ டீங்கோய் நீங்கா ௿
இறையவனை எனையாலுங் கயிலை யென்னும்௿
பொருப்பவனைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்௿
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.

6.54.7

6.54.8

பேரா யிரம்பரவி வானோ ரேத்தும் ௿
பெம்மானைப் பிரிவிலா அடியார்க் கென்றும்௿
வாராத செல்வம் வருவிப் பானை௿
மந்திரமுந் தந்திரமும் மருந்து மாகித்௿
தீராநோய் தீர்த்தருள வல்லான் றன்னைத்௿
திரிபுரங்கள் தீயெழத்திண் சிலைகைக் கொண்ட௿
போரானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்௿
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.

6.54.8

6.54.9

பண்ணியனைப் பைங்கொடியாள் பாகன் றன்னைப்௿
படர்சடைமேற் புனல்கரந்த படிறன் றன்னை௿
நண்ணியனை யென்னாக்கித் தன்னா னானை௿
நான்மறையின் நற்பொருளை நளிர்வெண் டிங்கள்௿
கண்ணியனைக் கடியநடை விடையொன் றேறுங்௿
காரணனை நாரணனைக் கமலத் தோங்கும்௿
புண்ணியனைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்௿
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.

6.54.9

6.54.10

இறுத்தானை இலங்கையர்கோன் சிரங்கள் பத்தும்௿
எழுநரம்பின் இன்னிசைகேட் டின்புற் றானை௿
அறுத்தானை அடியார்தம் அருநோய் பாவம்௿
அலைகடலில் ஆலால முண்டு கண்டங்௿
கறுத்தானைக் கண்ணழலாற் காம னாகங்௿
காய்ந்தானைக் கனன்மழுவுங் கலையு மங்கை௿
பொறுத்தானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்௿
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.

6.54.10

6.54 — note

௿