Books / Thirumurai 6

47. 6.55 திருக்கயிலாயம் - போற்றித்திருத்தாண்டகம்௿

6.55.1

வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி௿
மீளாமே ஆளென்னைக் கொண்டாய் போற்றி௿
ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி௿
ஓவாத சத்தத் தொலியே போற்றி௿
ஆற்றாகி யங்கே அமர்ந்தாய் போற்றி௿
ஆறங்கம் நால்வேத மானாய் போற்றி௿
காற்றாகி யெங்குங் கலந்தாய் போற்றி௿
கயிலை மலையானே போற்றி போற்றி.

6.55.1

6.55.2

பிச்சாடல் பேயோ டுகந்தாய் போற்றி௿
பிறவி யறுக்கும் பிரானே போற்றி௿
வைச்சாடல் நன்று மகிழ்ந்தாய் போற்றி௿
மருவியென் சிந்தை புகுந்தாய் போற்றி௿
பொய்ச்சார் புரமூன்று மெய்தாய் போற்றி௿
போகாதென் சிந்தை புகுந்தாய் போற்றி௿
கச்சாக நாக மசைத்தாய் போற்றி௿
கயிலை மலையானே போற்றி போற்றி.

6.55.2

6.55.3

மருவார் புரமூன்று மெய்தாய் போற்றி௿
மருவியென் சிந்தை புகுந்தாய் போற்றி௿
உருவாகி யென்னைப் படைத்தாய் போற்றி௿
உள்ளாவி வாங்கி யொளித்தாய் போற்றி௿
திருவாகி நின்ற திறமே போற்றி௿
தேசம் பரவப் படுவாய் போற்றி௿
கருவாகி யோடு முகிலே போற்றி௿
கயிலை மலையானே போற்றி போற்றி.

6.55.3

6.55.4

வானத்தார் போற்றும் மருந்தே போற்றி௿
வந்தென்றன் சிந்தை புகுந்தாய் போற்றி௿
ஊனத்தை நீக்கு முடலே போற்றி௿
ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி௿
தேனத்தை வார்த்த தெளிவே போற்றி௿
தேவர்க்குந் தேவனாய் நின்றாய் போற்றி௿
கானத்தீ யாட லுகந்தாய் போற்றி௿
கயிலை மலையானே போற்றி போற்றி.

6.55.4

6.55.5

ஊராகி நின்ற உலகே போற்றி௿
ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி௿
பேராகி யெங்கும் பரந்தாய் போற்றி௿
பெயராதென் சிந்தை புகுந்தாய் போற்றி௿
நீராவி யான நிழலே போற்றி௿
நேர்வா ரொருவரையு மில்லாய் போற்றி௿
காராகி நின்ற முகிலே போற்றி௿
கயிலை மலையானே போற்றி போற்றி.

6.55.5

6.55.6

சில்லுருவாய்ச் சென்று திரண்டாய் போற்றி௿
தேவ ரறியாத தேவே போற்றி௿
புல்லுயிர்க்கும் பூட்சி புணர்த்தாய் போற்றி௿
போகாதென் சிந்தை புகுந்தாய் போற்றி௿
பல்லுயிராய்ப் பார்தோறும் நின்றாய் போற்றி௿
பற்றி உலகை விடாதாய் போற்றி௿
கல்லுயிராய் நின்ற கனலே போற்றி௿
கயிலை மலையானே போற்றி போற்றி.

6.55.6

6.55.7

பண்ணின் இசையாகி நின்றாய் போற்றி௿
பாவிப்பார் பாவ மறுப்பாய் போற்றி௿
எண்ணு மெழுத்துஞ்சொல் லானாய் போற்றி௿
என்சிந்தை நீங்கா இறைவா போற்றி௿
விண்ணும் நிலனுந்தீ யானாய் போற்றி௿
மேலவர்க்கும் மேலாகி நின்றாய் போற்றி௿
கண்ணின் மணியாகி நின்றாய் போற்றி௿
கயிலை மலையானே போற்றி போற்றி.

6.55.7

6.55.8

இமையா துயிரா திருந்தாய் போற்றி௿
என்சிந்தை நீங்கா இறைவா போற்றி௿
உமைபாக மாகத் தணைத்தாய் போற்றி௿
ஊழியே ழான ஒருவா போற்றி௿
அமையா அருநஞ்ச மார்ந்தாய் போற்றி௿
ஆதி புராணனாய் நின்றாய் போற்றி௿
கமையாகி நின்ற கனலே போற்றி௿
கயிலை மலையானே போற்றி போற்றி.

6.55.8

6.55.9

மூவாய் பிறவாய் இறவாய் போற்றி௿
முன்னமே தோன்றி முளைத்தாய் போற்றி௿
தேவாதி தேவர்தொழுந் தேவே போற்றி௿
சென்றேறி யெங்கும் பரந்தாய் போற்றி௿
ஆவா அடியேனுக் கெல்லாம் போற்றி௿
அல்லல் நலிய அலந்தேன் போற்றி௿
காவாய் கனகத் திரளே போற்றி௿
கயிலை மலையானே போற்றி போற்றி.

6.55.9

6.55.10

நெடிய விசும்போடு கண்ணே போற்றி௿
நீள அகல முடையாய் போற்றி௿
அடியும் முடியும் இகலி போற்றி௿
அங்கொன் றறியாமை நின்றாய் போற்றி௿
கொடிய வன்கூற்ற முதைத்தாய் போற்றி௿
கோயிலா என்சிந்தை கொண்டாய் போற்றி௿
கடிய உருமொடு மின்னே போற்றி௿
கயிலை மலையானே போற்றி போற்றி.

6.55.10

6.55.11

உண்ணா துறங்கா திருந்தாய் போற்றி௿
ஓதாதே வேத முணர்ந்தாய் போற்றி௿
எண்ணா இலங்கைக்கோன் றன்னைப் போற்றி௿
இறைவிரலால் வைத்துகந்த ஈசா போற்றி௿
பண்ணா ரிசையின்சொற் கேட்டாய் போற்றி௿
பண்டேயென் சிந்தை புகுந்தாய் போற்றி௿
கண்ணா யுலகுக்கு நின்றாய் போற்றி௿
கயிலை மலையானே போற்றி போற்றி.

6.55.11

6.55 — note

௿ இத்தலம் வடநாட்டிலுள்ளது.௿ சுவாமிபெயர் - கைலாயநாதர்,௿ தேவியார் - பார்வதியம்மை.௿ ௿