Books / Thirumurai 6

48. 6.56 திருக்கயிலாயம் - போற்றித்திருத்தாண்டகம்

6.56.1

௿

6.56.1

6.56.1

பொறையுடைய பூமிநீ ரானாய் போற்றி௿
பூதப் படையாள் புனிதா போற்றி௿
நிறையுடைய நெஞ்சின் இடையாய் போற்றி௿
நீங்காதென் னுள்ளத் திருந்தாய் போற்றி௿
மறையுடைய வேதம் விரித்தாய் போற்றி௿
வானோர் வணங்கப் படுவாய் போற்றி௿
கறையுடைய கண்ட முடையாய் போற்றி௿
கயிலை மலையானே போற்றி போற்றி.

6.56.1

6.56.2

முன்பாகி நின்ற முதலே போற்றி௿
மூவாத மேனிமுக் கண்ணா போற்றி௿
அன்பாகி நின்றார்க் கணியாய் போற்றி௿
ஆறேறு சென்னிச் சடையாய் போற்றி௿
என்பாக வெங்கு மணிந்தாய் போற்றி௿
என்சிந்தை நீங்கா இறைவா போற்றி௿
கண்பாவி நின்ற கனலே போற்றி௿
கயிலை மலையானே போற்றி போற்றி.

6.56.2

6.56.3

மாலை யெழுந்த மதியே போற்றி௿
மன்னியென் சிந்தை யிருந்தாய் போற்றி௿
மேலை வினைக ளறுப்பாய் போற்றி௿
மேலாடு திங்கள் முடியாய் போற்றி௿
ஆலைக் கரும்பின் தெளிவே போற்றி௿
அடியார்கட் காரமுத மானாய் போற்றி௿
காலை முளைத்த கதிரே போற்றி௿
கயிலை மலையானே போற்றி போற்றி.

6.56.3

6.56.4

உடலின் வினைக ளறுப்பாய் போற்றி௿
ஒள்ளெரி வீசும் பிரானே போற்றி௿
படருஞ் சடைமேல் மதியாய் போற்றி௿
பல்கணக் கூத்தப் பிரானே போற்றி௿
சுடரிற் றிகழ்கின்ற சோதி போற்றி௿
தோன்றியென் னுள்ளத் திருந்தாய் போற்றி௿
கடலி லொளியாய முத்தே போற்றி௿
கயிலை மலையானே போற்றி போற்றி.

6.56.4

6.56.5

மைசேர்ந்த கண்ட முடையாய் போற்றி௿
மாலுக்கும் ஓராழி ஈந்தாய் போற்றி௿
பொய்சேர்ந்த சிந்தை புகாதாய் போற்றி௿
போகாதென் னுள்ளத் திருந்தாய் போற்றி௿
மெய்சேரப் பால்வெண்ணீ றாடி போற்றி௿
மிக்கார்க ளேத்தும் விளக்கே போற்றி௿
கைசேர் அனலேந்தி யாடீ போற்றி௿
கயிலை மலையானே போற்றி போற்றி.

6.56.5

6.56.6

ஆறேறு சென்னி முடியாய் போற்றி௿
அடியார்கட் காரமுதாய் நின்றாய் போற்றி௿
நீறேறு மேனி யுடையாய் போற்றி௿
நீங்காதென் னுள்ளத் திருந்தாய் போற்றி௿
கூறேறு மங்கை மழுவா போற்றி௿
கொள்ளுங் கிழமையே ழானாய் போற்றி௿
காறேறு கண்ட மிடற்றாய் போற்றி௿
கயிலை மலையானே போற்றி போற்றி.

6.56.6

6.56.7

அண்டமே ழன்று கடந்தாய் போற்றி௿
ஆதி புராணனாய் நின்றாய் போற்றி௿
பண்டை வினைக ளறுப்பாய் போற்றி௿
பாரோர்விண் ணேத்தப் படுவாய் போற்றி௿
தொண்டர் பரவு மிடத்தாய் போற்றி௿
தொழில்நோக்கி யாளுஞ் சுடரே போற்றி௿
கண்டங் கறுக்கவும் வல்லாய் போற்றி௿
கயிலை மலையானே போற்றி போற்றி.

6.56.7

6.56.8

பெருகி யலைக்கின்ற ஆறே போற்றி௿
பேராநோய் பேர விடுப்பாய் போற்றி௿
உருகி நினைவார்தம் முள்ளாய் போற்றி௿
ஊனந் தவிர்க்கும் பிரானே போற்றி௿
அருகி மிளிர்கின்ற பொன்னே போற்றி௿
ஆரு மிகழப் படாதாய் போற்றி௿
கருகிப் பொழிந்தோடு நீரே போற்றி௿
கயிலை மலையானே போற்றி போற்றி.

6.56.8

6.56.9

செய்ய மலர்மேலான் கண்ணன் போற்றி ௿
தேடி யுணராமை நின்றாய் போற்றி௿
பொய்யாநஞ் சுண்ட பொறையே போற்றி௿
பொருளாக என்னையாட் கொண்டாய் போற்றி௿
மெய்யாக ஆனஞ் சுகந்தாய் போற்றி௿
மிக்கார்க ளேத்துங் குணத்தாய் போற்றி௿
கையானை மெய்த்தோ லுரித்தாய் போற்றி௿
கயிலை மலையானே போற்றி போற்றி.

6.56.9

6.56.10

மேல்வைத்த வானோர் பெருமான் போற்றி௿
மேலாடு புரமூன்று மெய்தாய் போற்றி௿
சீலத்தான் தென்னிலங்கை மன்னன் போற்றி ௿
சிலையெடுக்க வாயலற வைத்தாய் போற்றி௿
கோலத்தாற் குறைவில்லான் றன்னை யன்று௿
கொடிதாகக் காய்ந்த குழகா போற்றி௿
காலத்தாற் காலனையுங் காய்ந்தாய் போற்றி௿
கயிலை மலையானே போற்றி போற்றி.

6.56.10

6.56 — note

௿