Books / Thirumurai 6

49. 6.57 திருக்கயிலாயத்திருமலை - போற்றித்திருத்தாண்டகம்

6.57.1

பாட்டான நல்ல தொடையாய் போற்றி௿
பரிசை யறியாமை நின்றாய் போற்றி௿
சூட்டான திங்கள் முடியாய் போற்றி௿
தூமாலை மத்த மணிந்தாய் போற்றி௿
ஆட்டான தஞ்சு மமர்ந்தாய் போற்றி௿
அடங்கார் புரமெரிய நக்காய் போற்றி௿
காட்டானை மெய்த்தோ லுரித்தாய் போற்றி௿
கயிலை மலையானே போற்றி போற்றி.

6.57.1

6.57.2

அதிரா வினைக ளறுப்பாய் போற்றி௿
ஆல நிழற்கீழ் அமர்ந்தாய் போற்றி௿
சதுரா சதுரக் குழையாய் போற்றி௿
சாம்பர் மெய்பூசுந் தலைவா போற்றி௿
எதிரா உலக மமைப்பாய் போற்றி௿
என்றுமீ ளாவருள் செய்வாய் போற்றி௿
கதிரார் கதிருக்கோர் கண்ணே போற்றி௿
கயிலை மலையானே போற்றி போற்றி.

6.57.2

6.57.3

செய்யாய் கரியாய் வெளியாய் போற்றி௿
செல்லாத செல்வ முடையாய் போற்றி௿
ஐயாய் பெரியாய் சிறியாய் போற்றி௿
ஆகாச வண்ண முடியாய் போற்றி௿
வெய்யாய் தணியா யணியாய் போற்றி௿
வேளாத வேள்வி யுடையாய் போற்றி௿
கையார் தழலார் விடங்கா போற்றி௿
கயிலை மலையானே போற்றி போற்றி.

6.57.3

6.57.4

ஆட்சி யுலகை யுடையாய் போற்றி௿
அடியார்க் கமுதெலாம் ஈவாய் போற்றி௿
சூட்சி சிறிது மிலாதாய் போற்றி௿
சூழ்ந்த கடல்நஞ்ச முண்டாய் போற்றி௿
மாட்சி பெரிது முடையாய் போற்றி௿
மன்னியென் சிந்தை மகிழ்ந்தாய் போற்றி௿
காட்சி பெரிது மரியாய் போற்றி௿
கயிலை மலையானே போற்றி போற்றி.

6.57.4

6.57.5

முன்னியா நின்ற முதல்வா போற்றி௿
மூவாத மேனி யுடையாய் போற்றி௿
என்னியா யெந்தை பிரானே போற்றி௿
ஏழி னிசையே யுகப்பாய் போற்றி௿
மன்னிய மங்கை மணாளா போற்றி௿
மந்திரமுந் தந்திரமு மானாய் போற்றி௿
கன்னியார் கங்கைத் தலைவா போற்றி௿
கயிலை மலையானே போற்றி போற்றி.

6.57.5

6.57.6

உரியாய் உலகினுக் கெல்லாம் போற்றி௿
உணர்வென்னு மூர்வ துடையாய் போற்றி௿
எரியாய தெய்வச் சுடரே போற்றி௿
ஏசுமா முண்டி யுடையாய் போற்றி௿
அரியாய் அமரர்கட் கெல்லாம் போற்றி௿
அறிவே அடக்க முடையாய் போற்றி௿
கரியானுக் காழியன் றீந்தாய் போற்றி௿
கயிலை மலையானே போற்றி போற்றி.

6.57.6

6.57.7

எண்மேலும் எண்ண முடையாய் போற்றி௿
ஏறரிய வேறுங் குணத்தாய் போற்றி௿
பண்மேலே பாவித் திருந்தாய் போற்றி௿
பண்ணொடுயாழ் வீணை பயின்றாய் போற்றி௿
விண்மேலு மேலும் நிமிர்ந்தாய் போற்றி௿
மேலார்கண் மேலார்கண் மேலாய் போற்றி௿
கண்மேலுங் கண்ணொன் றுடையாய் போற்றி௿
கயிலை மலையானே போற்றி போற்றி.

6.57.7

6.57.8

முடியார் சடையின் மதியாய் போற்றி௿
முழுநீறு சண்ணித்த மூர்த்தி போற்றி௿
துடியா ரிடையுமையாள் பங்கா போற்றி௿
சோதித்தார் காணாமை நின்றாய் போற்றி௿
அடியா ரடிமை அறிவாய் போற்றி௿
அமரர் பதியாள வைத்தாய் போற்றி௿
கடியார் புரமூன்று மெய்தாய் போற்றி௿
கயிலை மலையானே போற்றி போற்றி.

6.57.8

6.57.9

போற்றிசைத்துன் னடிபரவ நின்றாய் போற்றி௿
புண்ணியனே நண்ண லரியாய் போற்றி௿
ஏற்றிசைக்கும் வான்மே லிருந்தாய் போற்றி௿
எண்ணா யிரநூறு பேராய் போற்றி௿
நாற்றிசைக்கும் விளக்காய நாதா போற்றி௿
நான்முகற்கும் மாற்கு மரியாய் போற்றி௿
காற்றிசைக்குந் திசைக்கெல்லாம் வித்தே போற்றி௿
கயிலை மலையானே போற்றி போற்றி.

6.57.9

6.57 — note

இப்பதிகத்தில் 10-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. ௿