Books / Thirumurai 6

50. 6.58 திருவலம்புரம் - திருத்தாண்டகம்௿

6.58.1

மண்ணளந்த மணிவண்ணர் தாமும் மற்றை ௿
மறையவனும் வானவருஞ் சூழ நின்று௿
கண்மலிந்த திருநெற்றி யுடையா ரொற்றைக் ௿
கதநாகங் கையுடையார் காணீ ரன்றே௿
பண்மலிந்த மொழியவரு மியானு மெல்லாம் ௿
பணிந்திறைஞ்சித் தம்முடைய பின்பின் செல்ல௿
மண்மலிந்த வயல்புடைசூழ் மாட வீதி ௿
வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே.

6.58.1

6.58.2

சிலைநவின்ற தொருகணையாற் புரமூன் றெய்த ௿
தீவண்ணர் சிறந்திமையோர் இறைஞ்சி யேத்தக்௿
கொலைநவின்ற களியானை யுரிவை போர்த்துக்௿
கூத்தாடித் திரிதருமக் கூத்தர் நல்ல௿
கலைநவின்ற மறையவர்கள் காணக் காணக்௿
கடுவிடைமேற் பாரிடங்கள் சூழக் காதல்௿
மலைமகளுங் கங்கையுந் தாமு மெல்லாம் ௿
வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே.

6.58.2

6.58.3

தீக்கூருந் திருமேனி யொருபால் மற்றை ௿
யொருபாலும் அரியுருவந் திகழ்ந்த செல்வர்௿
ஆக்கூரில் தான்தோன்றி புகுவார் போல௿
அருவினையேன் செல்வதுமே யப்பா லெங்கும்௿
நோக்கா ரொருவிடத்து நூலுந் தோலுந்௿
துதைந்திலங்குந் திருமேனி வெண்ணீ றாடி௿
வாக்கால் மறைவிரித்து மாயம் பேசி௿
வலம்புரமே புக்கிங்கே மன்னி னாரே.

6.58.3

6.58.4

மூவாத மூக்கப்பாம் பரையிற் சாத்தி ௿
மூவர் உருவாய முதல்வ ரிந்நாள்௿
கோவாத எரிகணையைச் சிலைமேற் கோத்த ௿
குழகனார் குளிர்கொன்றை சூடி யிங்கே௿
போவாரைக் கண்டடியேன் பின்பின் செல்லப்௿
புறக்கணித்துத் தம்முடைய பூதஞ் சூழ௿
வாவா வெனவுரைத்து மாயம் பேசி௿
வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே.

6.58.4

6.58.5

அனலொருகை யதுவேந்தி அதளி னோடே ௿
ஐந்தலைய மாநாகம் அரையிற் சாத்திப்௿
புனல்பொதிந்த சடைக்கற்றைப் பொன்போல் மேனிப் ௿
புனிதனார் புரிந்தமரர் இறைஞ்சி யேத்தச்௿
சினவிடையை மேற்கொண்டு திருவா ரூருஞ்௿
சிரபுரமும் இடைமருதுஞ் சேர்வார் போல௿
மனமுருக வளைகழல மாயம் பேசி௿
வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே.

6.58.5

6.58.6

கறுத்ததொரு கண்டத்தர் காலன் வீழக் ௿
காலினாற் காய்ந்துகந்த காபா லியார்௿
முறித்ததொரு தோலுடுத்து முண்டஞ் சாத்தி௿
முனிகணங்கள் புடைசூழ முற்றந் தோறுந்௿
தெறித்ததொரு வீணையராய்ச் செல்வார் தம்வாய்ச் ௿
சிறுமுறுவல் வந்தெனது சிந்தை வௌவ௿
மறித்தொருகால் நோக்காதே மாயம் பேசி௿
வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே.

6.58.6

6.58.7

பட்டுடுத்துப் பவளம்போல் மேனி யெல்லாம் ௿
பசுஞ்சாந்தங் கொண்டணிந்து பாதம் நோவ௿
இட்டெடுத்து நடமாடி யிங்கே வந்தார்க் ௿
கெவ்வூரீர் எம்பெருமா னென்றேன் ஆவி௿
விட்டிடுமா றதுசெய்து விரைந்து நோக்கி௿
வேறோர் பதிபுகப் போவார் போல௿
வட்டணைகள் படநடந்து மாயம் பேசி௿
வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே.

6.58.7

6.58.8

பல்லார் பயில்பழனப் பாசூ ரென்றும்௿
பழனம் பதிபழமை சொல்லி நின்றார்௿
நல்லார் நனிபள்ளி யின்று வைகி௿
நாளைப்போய் நள்ளாறு சேர்து மென்றார்௿
சொல்லார் ஒருவிடமாத் தோள்கை வீசிச்௿
சுந்தரராய் வெந்தநீ றாடி யெங்கும்௿
மல்லார் வயல்புடைசூழ் மாடவீதி ௿
வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே.

6.58.8

6.58.9

பொங்கா டரவொன்று கையிற் கொண்டு௿
போர்வெண் மழுவேந்திப் போகா நிற்பர்௿
தங்கா ரொருவிடத்துந் தம்மேல் ஆர்வந் ௿
தவிர்த்தருளார் தத்துவத்தே நின்றே னென்பர்௿
எங்கே யிவர்செய்கை யொன்றொன் றொவ்வா௿
என்கண்ணில் நின்றகலா வேடங் காட்டி௿
மங்குல் மதிதவழும் மாட வீதி ௿
வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே.

6.58.9

6.58.10

செங்கண்மால் சிலைபிடித்துச் சேனை யோடுஞ் ௿
சேதுபந் தனஞ்செய்து சென்று புக்குப்௿
பொங்குபோர் பலசெய்து புகலால் வென்ற ௿
போரரக்கன் நெடுமுடிகள் பொடியாய் வீழ௿
அங்கொருதன் றிருவிரலால் இறையே யூன்றி௿
அடர்த்தவற்கே அருள்புரிந்த அடிக ளிந்நாள்௿
வங்கமலி கடல்புடைசூழ் மாட வீதி ௿
வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே.

6.58.10

6.58 — note

௿