Books / Thirumurai 6

51. 6.59 திருவெண்ணி - திருத்தாண்டகம்௿ ௿

6.59.1

தொண்டிலங்கும் அடியவர்க்கோர் நெறியி னாருந்௿
தூநீறு துதைந்திலங்கு மார்பி னாரும்௿
புண்டரிகத் தயனொடுமால் காணா வண்ணம் ௿
பொங்குதழற் பிழம்பாய புராண னாரும்௿
வண்டமரும் மலர்க்கொன்றை மாலை யாரும்௿
வானவர்க்காய் நஞ்சுண்ட மைந்த னாரும்௿
விண்டவர்தம் புரமூன்று மெரிசெய் தாரும்௿
வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.

6.59.1

6.59.2

நெருப்பனைய மேனிமேல் வெண்ணீற் றாரும்௿
நெற்றிமே லொற்றைக்கண் நிறைவித் தாரும்௿
பொருப்பரையன் மடப்பாவை இடப்பா லாரும்௿
பூந்துருத்தி நகர்மேய புராண னாரும்௿
மருப்பனைய வெண்மதியக் கண்ணி யாரும்௿
வளைகுளமும் மறைக்காடும் மன்னி னாரும்௿
விருப்புடைய அடியவர்தம் முள்ளத் தாரும்௿
வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.

6.59.2

6.59.3

கையுலாம் மூவிலைவே லேந்தி னாருங்௿
கரிகாட்டி லெரியாடுங் கடவு ளாரும்௿
பையுலாம் நாகங்கொண் டாட்டு வாரும்௿
பரவுவார் பாவங்கள் பாற்று வாருஞ்௿
செய்யுலாங் கயல்பாய வயல்கள் சூழ்ந்த ௿
திருப்புன்கூர் மேவிய செல்வ னாரும்௿
மெய்யுலாம் வெண்ணீறு சண்ணித் தாரும்௿
வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.

6.59.3

6.59.4

சடையேறு புனல்வைத்த சதுர னாருந்௿
தக்கன்றன் பெருவேள்வி தடைசெய் தாரும்௿
உடையேறு புலியதள்மேல் நாகங் கட்டி ௿
உண்பலிக்கென் றூரூரி னுழிதர் வாரும்௿
மடையேறிக் கயல்பாய வயல்கள் சூழ்ந்த ௿
மயிலாடு துறையுறையும் மணாள னாரும்௿
விடையேறு வெல்கொடியெம் விமல னாரும்௿
வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.

6.59.4

6.59.5

மண்ணிலங்கு நீரனல்கால் வானு மாகி ௿
மற்றவற்றின் குணமெலா மாய்நின் றாரும்௿
பண்ணிலங்கு பாடலோ டாட லாரும்௿
பருப்பதமும் பாசூரும் மன்னி னாருங்௿
கண்ணிலங்கு நுதலாருங் கபால மேந்திக் ௿
கடைதோறும் பலிகொள்ளுங் காட்சி யாரும்௿
விண்ணிலங்கு வெண்மதியக் கண்ணி யாரும்௿
வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.

6.59.5

6.59.6

வீடுதனை மெய்யடியார்க் கருள்செய் வாரும்௿
வேலைவிட முண்டிருண்ட கண்டத் தாருங்௿
கூடலர்தம் மூவெயிலு மெரிசெய் தாருங்௿
குரைகழலாற் கூற்றுவனைக் குமைசெய் தாரும்௿
ஆடுமர வரைக்கசைத்தங் காடு வாரும்௿
ஆலமர நீழலிருந் தறஞ்சொன் னாரும்௿
வேடுவனாய் மேல்விசயற் கருள்செய் தாரும்௿
வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.

6.59.6

6.59.7

மட்டிலங்கு கொன்றையந்தார் மாலை சூடி௿
மடவா ளவளோடு மானொன் றேந்திச்௿
சிட்டிலங்கு வேடத்தா ராகி நாளுஞ்௿
சில்பலிக்கென் றூரூர் திரிதர் வாருங்௿
கட்டிலங்கு பாசத்தால் வீச வந்த ௿
காலன்றன் கால மறுப்பார் தாமும்௿
விட்டிலங்கு வெண்குழைசேர் காதி னாரும்௿
வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.

6.59.7

6.59.8

செஞ்சடைக்கோர் வெண்டிங்கள் சூடி னாருந்௿
திருவால வாயுறையுஞ் செல்வ னாரும்௿
அஞ்சனக்கண் அரிவையொரு பாகத் தாரும்௿
ஆறங்கம் நால்வேத மாய்நின் றாரும்௿
மஞ்சடுத்த நீள்சோலை மாட வீதி ௿
மதிலாரூர் புக்கங்கே மன்னி னாரும்௿
வெஞ்சினத்த வேழமது வுரிசெய் தாரும்௿
வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.

6.59.8

6.59.9

வளங்கிளர்மா மதிசூடும் வேணி யாரும்௿
வானவர்க்கா நஞ்சுண்ட மைந்த னாருங்௿
களங்கொளவென் சிந்தையுள்ளே மன்னி னாருங்௿
கச்சியே கம்பத்தெங் கடவு ளாரும்௿
உளங்குளிர அமுதூறி அண்ணிப் பாரும்௿
உத்தமராய் எத்திசையும் மன்னி னாரும்௿
விளங்கிளரும் வெண்மழுவொன் றேந்தி னாரும்௿
வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.

6.59.9

6.59.10

பொன்னிலங்கு கொன்றையந்தார் மாலை சூடிப் ௿
புகலூரும் பூவணமும் பொருந்தி னாருங்௿
கொன்னிலங்கு மூவிலைவே லேந்தி னாருங்௿
குளிரார்ந்த செஞ்சடையெங் குழக னாருந்௿
தென்னிலங்கை மன்னவர்கோன் சிரங்கள் பத்துந்௿
திருவிரலா லடர்த்தவனுக் கருள்செய் தாரும்௿
மின்னிலங்கு நுண்ணிடையாள் பாகத் தாரும்௿
வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.

6.59.10

6.59 — note

௿ இத்தலம் சோழநாட்டிலுள்ளது.௿ சுவாமிபெயர் - வெண்ணிநாயகர்,௿ தேவியார் - அழகியநாயகியம்மை.௿ ௿