Books / Thirumurai 6

52. 6.60 திருக்கற்குடி - திருத்தாண்டகம்௿

6.60.1

௿

6.60.1

6.60.1

மூத்தவனை வானவர்க்கு மூவா மேனி ௿
முதலவனைத் திருவரையின் மூக்கப் பாம்பொன்௿
றார்த்தவனை அக்கரவம் ஆர மாக ௿
அணிந்தவனைப் பணிந்தடியா ரடைந்த வன்போ௿
டேத்தவனை இறுவரையிற் றேனை ஏனோர்க்௿
கின்னமுதம் அளித்தவனை யிடரை யெல்லாங்௿
காத்தவனைக் கற்குடியில் விழுமி யானைக் ௿
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.

6.60.1

6.60.2

செய்யானை வெளியானைக் கரியான் றன்னைத்௿
திசைமுகனைத் திசையெட்டுஞ் செறிந்தான் றன்னை௿
ஐயானை நொய்யானைச் சீரி யானை௿
அணியானைச் சேயானை ஆனஞ் சாடும்௿
மெய்யானைப் பொய்யாது மில்லான் றன்னை௿
விடையானைச் சடையானை வெறித்த மான்கொள்௿
கையானைக் கற்குடியில் விழுமி யானைக்௿
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.

6.60.2

6.60.3

மண்ணதனில் ஐந்தைமா நீரில் நான்கை௿
வயங்கெரியில் மூன்றைமா ருதத்தி ரண்டை௿
விண்ணதனி லொன்றை விரிக திரைத்௿
தண்மதியைத் தாரகைகள் தம்மின் மிக்க௿
எண்ணதனில் எழுத்தையே ழிசையைக் காமன் ௿
எழிலழிய எரியுமிழ்ந்த இமையா நெற்றிக்௿
கண்ணவனைக் கற்குடியில் விழுமி யானைக்௿
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.

6.60.3

6.60.4

நற்றவனைப் புற்றரவ நாணி னானை௿
நாணாது நகுதலையூண் நயந்தான் றன்னை௿
முற்றவனை மூவாத மேனி யானை௿
முந்நீரின் நஞ்சமுகந் துண்டான் றன்னைப்௿
பற்றவனைப் பற்றார்தம் பதிகள் செற்ற ௿
படையானை அடைவார்தம் பாவம் போக்கக்௿
கற்றவனைக் கற்குடியில் விழுமி யானைக்௿
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.

6.60.4

6.60.5

சங்கைதனைத் தவிர்த்தாண்ட தலைவன் றன்னைச்௿
சங்கரனைத் தழலுறுதாள் மழுவாள் தாங்கும்௿
அங்கையனை அங்கமணி ஆகத் தானை௿
ஆகத்தோர் பாகத்தே அமர வைத்த௿
மங்கையனை மதியொடுமா சுணமுந் தம்மின் ௿
மருவவிரி சடைமுடிமேல் வைத்த வானீர்க்௿
கங்கையனைக் கற்குடியில் விழுமி யானைக்௿
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.

6.60.5

6.60.6

பெண்ணவனை ஆணவனைப் பேடா னானைப்௿
பிறப்பிலியை இறப்பிலியைப் பேரா வாணி௿
விண்ணவனை விண்ணவர்க்கு மேலா னானை௿
வேதியனை வேதத்தின் கீதம் பாடும்௿
பண்ணவனைப் பண்ணில்வரு பயனா னானைப்௿
பாரவனைப் பாரில்வாழ் உயிர்கட் கெல்லாங்௿
கண்ணவனைக் கற்குடியில் விழுமி யானைக்௿
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.

6.60.6

6.60.7

பண்டானைப் பரந்தானைக் குவிந்தான் றன்னைப்௿
பாரானை விண்ணாயிவ் வுலக மெல்லாம்௿
உண்டானை உமிழ்ந்தானை உடையான் றன்னை௿
ஒருவருந்தன் பெருமைதனை அறிய வொண்ணா௿
விண்டானை விண்டார்தம் புரங்கள் மூன்றும் ௿
வெவ்வழலில் வெந்துபொடி யாகி வீழக்௿
கண்டானைக் கற்குடியில் விழுமி யானைக்௿
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.

6.60.7

6.60.8

வானவனை வானவர்க்கு மேலா னானை௿
வணங்குமடி யார்மனத்துள் மருவிப் புக்க௿
தேனவனைத் தேவர்தொழு கழலான் றன்னைச்௿
செய்குணங்கள் பலவாகி நின்ற வென்றிக்௿
கோனவனைக் கொல்லைவிடை யேற்றி னானைக்௿
குழல்முழவம் இயம்பக்கூத் தாட வல்ல௿
கானவனைக் கற்குடியில் விழுமி யானைக்௿
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.

6.60.8

6.60.9

கொலையானை யுரிபோர்த்த கொள்கை யானைக்௿
கோளரியைக் கூரம்பா வரைமேற் கோத்த௿
சிலையானைச் செம்மைதரு பொருளான் றன்னைத்௿
திரிபுரத்தோர் மூவர்க்குச் செம்மை செய்த௿
தலையானைத் தத்துவங்க ளானான் றன்னைத்௿
தையலோர் பங்கினனைத் தன்கை யேந்து௿
கலையானைக் கற்குடியில் விழுமி யானைக்௿
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.

6.60.9

6.60.10

பொழிலானைப் பொழிலாரும் புன்கூ ரானைப்௿
புறம்பயனை அறம்புரிந்த புகலூ ரானை௿
எழிலானை இடைமருதி னிடங்கொண் டானை௿
ஈங்கோய்நீங் காதுறையும் இறைவன் றன்னை௿
அழலாடு மேனியனை அன்று சென்றக் ௿
குன்றெடுத்த அரக்கன்றோள் நெரிய வூன்றுங்௿
கழலானைக் கற்குடியில் விழுமி யானைக்௿
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.

6.60.10

6.60 — note

௿ இத்தலம் சோழநாட்டிலுள்ளது.௿ சுவாமிபெயர் - முத்தீசர்,௿ தேவியார் - அஞ்சனாட்சியம்மை.௿ ௿