Books / Thirumurai 6

53. 6.61 திருக்கன்றாப்பூர் - திருத்தாண்டகம்௿

6.61.1

மாதினையோர் கூறுகந்தாய் மறைகொள் நாவா௿
மதிசூடி வானவர்கள் தங்கட் கெல்லாம்௿
நாதனே யென்றென்று பரவி நாளும் ௿
நைந்துருகி வஞ்சகமற் றன்பு கூர்ந்து௿
வாதனையால் முப்பொழுதும் பூநீர் கொண்டு௿
வைகல் மறவாது வாழ்த்தி யேத்திக்௿
காதன்மையாற் றொழுமடியார் நெஞ்சி னுள்ளே ௿
கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.

6.61.1

6.61.2

விடிவதுமே வெண்ணீற்றை மெய்யிற் பூசி௿
வெளுத்தமைந்த கீளொடுகோ வணமுந் தற்றுச்௿
செடியுடைய வல்வினைநோய் தீர்ப்பா யென்றுஞ்௿
செல்கதிக்கு வழிகாட்டுஞ் சிவனே யென்றுந்௿
துடியனைய இடைமடவாள் பங்கா வென்றுஞ்௿
சுடலைதனில் நடமாடுஞ் சோதி யென்றுங்௿
கடிமலர்தூய்த் தொழுமடியார் நெஞ்சி னுள்ளே ௿
கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.

6.61.2

6.61.3

எவரேனுந் தாமாக விலாடத் திட்ட ௿
திருநீறுஞ் சாதனமுங் கண்டா லுள்கி௿
உவராதே அவரவரைக் கண்ட போது ௿
உகந்தடிமைத் திறநினைந்தங் குவந்து நோக்கி௿
இவர்தேவ ரவர்தேவ ரென்று சொல்லி ௿
இரண்டாட்டா தொழிந்தீசன் றிறமே பேணிக்௿
கவராதே தொழுமடியார் நெஞ்சி னுள்ளே ௿
கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.

6.61.3

6.61.4

இலங்காலஞ் செல்லாநா ளென்று நெஞ்சத் ௿
திடையாதே யாவர்க்கும் பிச்சை யிட்டு௿
விலங்காதே நெறிநின்றங் கறிவே மிக்கு௿
மெய்யன்பு மிகப்பெய்து பொய்யை நீக்கித்௿
துலங்காமெய் வானவரைக் காத்து நஞ்சம் ௿
உண்டபிரா னடியிணைக்கே சித்தம் வைத்துக்௿
கலங்காதே தொழுமடியார் நெஞ்சி னுள்ளே ௿
கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.

6.61.4

6.61.5

விருத்தனே வேலைவிட முண்ட கண்டா௿
விரிசடைமேல் வெண்டிங்கள் விளங்கச் சூடும்௿
ஒருத்தனே உமைகணவா உலக மூர்த்தி௿
நுந்தாத வொண்சுடரே அடியார் தங்கள்௿
பொருத்தனே யென்றென்று புலம்பி நாளும் ௿
புலனைந்தும் அகத்தடக்கிப் புலம்பி நோக்கிக்௿
கருத்தினாற் றொழுமடியார் நெஞ்சி னுள்ளே ௿
கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.

6.61.5

6.61.6

பொசியினால் மிடைந்துபுழுப் பொதிந்த போர்வைப் ௿
பொல்லாத புலாலுடம்பை நிலாசு மென்று௿
பசியினால் மீதூரப் பட்டே யீட்டிப்௿
பலர்க்குதவ லதுவொழிந்து பவள வாயார்௿
வசியினா லகப்பட்டு வீழா முன்னம்௿
வானவர்கோன் திருநாமம் அஞ்சுஞ் சொல்லிக்௿
கசிவினாற் றொழுமடியார் நெஞ்சி னுள்ளே ௿
கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.

6.61.6

6.61.7

ஐயினால் மிடறடைப்புண் டாக்கை விட்டு ௿
ஆவியார் போவதுமே அகத்தார் கூடி௿
மையினாற் கண்ணெழுதி மாலை சூட்டி௿
மயானத்தி லிடுவதன்முன் மதியஞ் சூடும்௿
ஐயனார்க் காளாகி அன்பு மிக்கு௿
அகங்குழைந்து மெய்யரும்பி அடிகள் பாதங்௿
கையினாற் றொழுமடியார் நெஞ்சி னுள்ளே ௿
கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.

6.61.7

6.61.8

திருதிமையால் ஐவரையுங் காவ லேவித்௿
திகையாதே சிவாயநம என்னுஞ் சிந்தைச்௿
சுருதிதனைத் துயக்கறுத்துத் துன்ப வெள்ளக்௿
கடல்நீந்திக் கரையேறுங் கருத்தே மிக்குப்௿
பருதிதனைப் பற்பறித்த பாவ நாசா௿
பரஞ்சுடரே யென்றென்று பரவி நாளுங்௿
கருதிமிகத் தொழுமடியார் நெஞ்சி னுள்ளே ௿
கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.

6.61.8

6.61.10

குனிந்தசிலை யாற்புரமூன் றெரித்தா யென்றுங்௿
கூற்றுதைத்த குரைகழற்சே வடியா யென்றுந்௿
தனஞ்சயற்குப் பாசுபத மீந்தா யென்றுந்௿
தசக்கிரிவன் மலையெடுக்க விரலா லூன்றி௿
முனிந்தவன்றன் சிரம்பத்துந் தாளுந் தோளும் ௿
முரணழித்திட் டருள்கொடுத்த மூர்த்தி யென்றுங்௿
கனிந்துமிகத் தொழுமடியார் நெஞ்சி னுள்ளே ௿
கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.

6.61.10

6.61 — note

இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. ௿ இத்தலம் சோழநாட்டிலுள்ளது.௿ சுவாமிபெயர் - நடுதறிநன்னாயகர்,௿ தேவியார் - மாதுமைநாயகியம்மை.௿ ௿