Books / Thirumurai 6

54. 6.62 திருவானைக்கா - திருத்தாண்டகம்௿

6.62.1

எத்தாயர் எத்தந்தை எச்சுற் றத்தார்௿
எம்மாடு சும்மாடாம் ஏவர் நல்லார்௿
செத்தால்வந் துதவுவார் ஒருவ ரில்லை௿
சிறுவிறகால் தீமூட்டிச் செல்லா நிற்பர்௿
சித்தாய வேடத்தாய் நீடு பொன்னித் ௿
திருவானைக் காவுடைய செல்வா என்றன்௿
அத்தாவுன் பொற்பாத மடையப் பெற்றால்௿
அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே.

6.62.1

6.62.2

ஊனாகி உயிராகி யதனுள் நின்ற ௿
உணர்வாகிப் பிறவனைத்தும் நீயாய் நின்றாய்௿
நானேதும் அறியாமே யென்னுள் வந்து௿
நல்லனவுந் தீயனவுங் காட்டா நின்றாய்௿
தேனாருங் கொன்றையனே நின்றி யூராய்௿
திருவானைக் காவிலுறை சிவனே ஞானம்௿
ஆனாயுன் பொற்பாத மடையப் பெற்றால்௿
அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே.

6.62.2

6.62.3

ஒப்பாயிவ் வுலகத்தோ டொட்டி வாழ்வான்௿
ஒன்றலாத் தவத்தாரோ டுடனே நின்று௿
துப்பாருங் குறையடிசில் துற்றி நற்றுன் ௿
திறமறந்து திரிவேனைக் காத்து நீவந்௿
தெப்பாலும் நுண்ணுணர்வே யாக்கி யென்னை ௿
ஆண்டவனே எழிலானைக் காவா வானோர்௿
அப்பாவுன் பொற்பாத மடையப் பெற்றால்௿
அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே.

6.62.3

6.62.4

நினைத்தவர்கள் நெஞ்சுளாய் வஞ்சக் கள்வா௿
நிறைமதியஞ் சடைவைத்தாய் அடையா துன்பால்௿
முனைத்தவர்கள் புரமூன்று மெரியச் செற்றாய்௿
முன்னானைத் தோல்போர்த்த முதல்வா வென்றுங்௿
கனைத்துவரும் எருதேறுங் காள கண்டா௿
கயிலாய மலையாநின் கழலே சேர்ந்தேன்௿
அனைத்துலகும் ஆள்வானே ஆனைக் காவா௿
அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே.

6.62.4

6.62.5

இம்மாயப் பிறப்பென்னுங் கடலாந் துன்பத்௿
திடைச்சுழிப்பட் டிளைப்பேனை இளையா வண்ணங்௿
கைம்மான மனத்துதவிக் கருணை செய்து௿
காதலரு ளவைவைத்தாய் காண நில்லாய்௿
வெம்மான மதகரியி னுரிவை போர்த்த ௿
வேதியனே தென்னானைக் காவுள் மேய௿
அம்மான்நின் பொற்பாத மடையப் பெற்றால்௿
அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே.

6.62.5

6.62.6

உரையாரும் புகழானே ஒற்றி யூராய்௿
கச்சியே கம்பனே காரோ ணத்தாய்௿
விரையாரும் மலர்தூவி வணங்கு வார்பால்௿
மிக்கானே அக்கரவம் ஆரம் பூண்டாய்௿
திரையாரும் புனற்பொன்னித் தீர்த்த மல்கு ௿
திருவானைக் காவிலுறை தேனே வானோர்௿
அரையாவுன் பொற்பாத மடையப் பெற்றால்௿
அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே.

6.62.6

6.62.7

மையாரும் மணிமிடற்றாய் மாதோர் கூறாய்௿
மான்மறியு மாமழுவும் அனலு மேந்துங்௿
கையானே காலனுடல் மாளச் செற்ற ௿
கங்காளா முன்கோளும் விளைவு மானாய்௿
செய்யானே திருமேனி யரியாய் தேவர்௿
குலக்கொழுந்தே தென்னானைக் காவுள் மேய௿
ஐயாவுன் பொற்பாத மடையப் பெற்றால்௿
அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே.

6.62.7

6.62.8

இலையாருஞ் சூலத்தாய் எண்தோ ளானே௿
எவ்விடத்தும் நீயலா தில்லை யென்று௿
தலையாரக் கும்பிடுவார் தன்மை யானே௿
தழல்மடுத்த மாமேரு கையில் வைத்த௿
சிலையானே திருவானைக் காவுள் மேய ௿
தீயாடீ சிறுநோயால் நலிவுண் டுள்ளம்௿
அலையாதே நின்னடியே அடையப் பெற்றால்௿
அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே.

6.62.8

6.62.9

விண்ணாரும் புனல்பொதிசெஞ் சடையாய் வேத௿
நெறியானே எறிகடலின் நஞ்ச முண்டாய்௿
எண்ணாரும் புகழானே உன்னை யெம்மான்௿
என்றென்றே நாவினிலெப் பொழுதும் உன்னிக்௿
கண்ணாரக் கண்டிருக்கக் களித்தெப் போதுங்௿
கடிபொழில்சூழ் தென்னானைக் காவுள் மேய௿
அண்ணாநின் பொற்பாத மடையப் பெற்றால்௿
அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே.

6.62.9

6.62.10

கொடியேயும் வெள்ளேற்றாய் கூளி பாடக்௿
குறட்பூதங் கூத்தாட நீயு மாடி௿
வடிவேயும் மங்கைதனை வைத்த மைந்தா௿
மதிலானைக் காவுளாய் மாகா ளத்தாய்௿
படியேயுங் கடலிலங்கைக் கோமான் றன்னைப் ௿
பருமுடியுந் திரள்தோளு மடர்த்து கந்த௿
அடியேவந் தடைந்தடிமை யாகப் பெற்றால்௿
அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே.

6.62.10

6.62 — note

௿