Books / Thirumurai 6

55. 6.63 திருவானைக்கா - திருத்தாண்டகம்௿

6.63.1

முன்னானைத் தோல்போர்த்த மூர்த்தி தன்னை௿
மூவாத சிந்தையே மனமே வாக்கே௿
தன்னானை யாப்பண்ணி யேறி னானைச்௿
சார்தற் கரியானைத் தாதை தன்னை௿
என்னானைக் கன்றினையென் ஈசன் றன்னை௿
எறிநீர்த் திரையுகளுங் காவி ரிசூழ்௿
தென்னானைக் காவானைத் தேனைப் பாலைச்௿
செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.

6.63.1

6.63.2

மருந்தானை மந்திரிப்பார் மனத்து ளானை௿
வளர்மதியஞ் சடையானை மகிழ்ந்தென் னுள்ளத்௿
திருந்தானை இறப்பிலியைப் பிறப்பி லானை௿
இமையவர்தம் பெருமானை உமையா ளஞ்சக்௿
கருந்தான மதகளிற்றி னுரிபோர்த் தானைக்௿
கனமழுவாட் படையானைப் பலிகொண் டூரூர்௿
திரிந்தானைத் திருவானைக் காவு ளானைச்௿
செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.

6.63.2

6.63.3

முற்றாத வெண்டிங்கட் கண்ணி யானை௿
முந்நீர்நஞ் சுண்டிமையோர்க் கமுதம் நல்கும்௿
உற்றானைப் பல்லுயிர்க்குந் துணையா னானை௿
ஓங்காரத் துட்பொருளை உலக மெல்லாம்௿
பெற்றானைப் பின்னிறக்கஞ் செய்வான் றன்னைப்௿
பிரானென்று போற்றாதார் புரங்கள் மூன்றுஞ்௿
செற்றானைத் திருவானைக் காவு ளானைச்௿
செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.

6.63.3

6.63.4

காராரு மணிமிடற்றெம் பெருமான் றன்னைக்௿
காதில்வெண் குழையானைக் கமழ்பூங் கொன்றைத்௿
தாரானைப் புலியதளி னாடை யானைத்௿
தானன்றி வேறொன்று மில்லா ஞானப்௿
பேரானை மணியார மார்பி னானைப்௿
பிஞ்ஞகனைத் தெய்வநான் மறைகள் பூண்ட௿
தேரானைத் திருவானைக் காவு ளானைச்௿
செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.

6.63.4

6.63.5

பொய்யேது மில்லாத மெய்யன் றன்னைப்௿
புண்ணியனை நண்ணாதார் புரநீ றாக௿
எய்தானைச் செய்தவத்தின் மிக்கான் றன்னை௿
ஏறமரும் பெருமானை இடமா னேந்து௿
கையானைக் கங்காள வேடத் தானைக்௿
கட்டங்கக் கொடியானைக் கனல்போல் மேனிச்௿
செய்யானைத் திருவானைக் காவு ளானைச்௿
செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.

6.63.5

6.63.6

கலையானைப் பாசுபதப் பாணி யானைக்௿
கனவயிரத் திரளானை மணிமா ணிக்க௿
மலையானை யென்றலையி னுச்சி யானை௿
வார்தருபுன் சடையானை மயான மன்னும்௿
நிலையானை வரியரவு நாணாக் கோத்து ௿
நினையாதார் புரமெரிய வளைத்த மேருச்௿
சிலையானைத் திருவானைக் காவு ளானைச்௿
செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.

6.63.6

6.63.7

ஆதியனை எறிமணியின் ஓசை யானை௿
அண்டத்தார்க் கறிவொண்ணா தப்பால் மிக்க௿
சோதியனைத் தூமறையின் பொருளான் றன்னைச்௿
சுரும்பமரும் மலர்க்கொன்றைத் தொன்னூல் பூண்ட௿
வேதியனை அறமுரைத்த பட்டன் றன்னை௿
விளங்குமல ரயன்சிரங்கள் ஐந்தி லொன்றைச்௿
சேதியனைத் திருவானைக் காவு ளானைச்௿
செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.

6.63.7

6.63.8

மகிழ்ந்தானைக் கச்சியே கம்பன் றன்னை௿
மறவாது கழல்நினைந்து வாழ்த்தி யேத்திப்௿
புகழ்ந்தாரைப் பொன்னுலகம் ஆள்விப் பானைப்௿
பூதகணப் படையானைப் புறங்காட் டாடல்௿
உகந்தானைப் பிச்சையே யிச்சிப் பானை௿
ஒண்பவளத் திரளையென் னுள்ளத் துள்ளே௿
திகழ்ந்தானைத் திருவானைக் காவு ளானைச்௿
செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.

6.63.8

6.63.9

நசையானை நால்வேதத் தப்பா லானை௿
நல்குரவுந் தீப்பிணிநோய் காப்பான் றன்னை௿
இசையானை எண்ணிறந்த குணத்தான் றன்னை௿
இடைமருதும் ஈங்கோயும் நீங்கா தேற்றின்௿
மிசையானை விரிகடலும் மண்ணும் விண்ணும்௿
மிகுதீயும் புனலெறிகாற் றாகி யெட்டுத்௿
திசையானைத் திருவானைக் காவு ளானைச்௿
செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.

6.63.9

6.63.10

பார்த்தானைக் காமனுடல் பொடியாய் வீழப்௿
பண்டயன்மா லிருவர்க்கும் அறியா வண்ணஞ்௿
சீர்த்தானைச் செந்தழல்போ லுருவி னானைத்௿
தேவர்கள்தம் பெருமானைத் திறமுன் னாதே௿
ஆர்த்தோடி மலையெடுத்த இலங்கை வேந்தன் ௿
ஆண்மையெலாங் கெடுத்தவன்றன் இடரப் போதே௿
தீர்த்தானைத் திருவானைக் காவு ளானைச்௿
செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.

6.63.10

6.63 — note

௿