Books / Thirumurai 6

56. 6.64 திருவேகம்பம் - திருத்தாண்டகம்௿

6.64.1

கூற்றுவன்காண் கூற்றுவனைக் குமைத்த கோன்காண்௿
குவலயன்காண் குவலயத்தின் நீரா னான்காண்௿
காற்றவன்காண் கனலவன்காண் கலிக்கும் மின்காண்௿
கனபவளச் செம்மேனி கலந்த வெள்ளை௿
நீற்றவன்காண் நிலாவூருஞ் சென்னி யான்காண்௿
நிறையார்ந்த புனற்கங்கை நிமிர்ச டைமேல்௿
ஏற்றவன்காண் எழிலாறும் பொழிலார் கச்சி ௿
ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.

6.64.1

6.64.2

பரந்தவன்காண் பல்லுயிர்க ளாகி யெங்கும்௿
பணிந்தெழுவார் பாவமும் வினையும் போகத்௿
துரந்தவன்காண் தூமலரங் கண்ணி யான்காண்௿
தோற்ற நிலையிறுதிப் பொருளாய் வந்த௿
மருந்தவன்காண் வையங்கள் பொறைதீர்ப் பான்காண்௿
மலர்தூவி நினைந்தெழுவா ருள்ளம் நீங்கா௿
திருந்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி ௿
ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.

6.64.2

6.64.3

நீற்றவன்காண் நீராகித் தீயா னான்காண்௿
நிறைமழுவுந் தமருகமும் எரியுங் கையில்௿
தோற்றவன்காண் தோற்றக்கே டில்லா தான்காண்௿
துணையிலிகாண் துணையென்று தொழுவா ருள்ளம்௿
போற்றவன்காண் புகழ்கள்தமைப் படைத்தான் றான்காண்௿
பொறியரவும் விரிசடைமேற் புனலுங் கங்கை௿
ஏற்றவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி ௿
ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.

6.64.3

6.64.4

தாயவன்காண் உலகிற்குத் தன்னொப் பில்லாத் ௿
தத்துவன்காண் மலைமங்கை பங்கா வென்பார்௿
வாயவன்காண் வரும்பிறவி நோய்தீர்ப் பான்காண்௿
வானவர்க்குந் தானவர்க்கும் மண்ணு ளோர்க்குஞ்௿
சேயவன்காண் நினைவார்க்குச் சித்த மாரத் ௿
திருவடியே உள்கிநினைந் தெழுவா ருள்ளம்௿
ஏயவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி ௿
ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.

6.64.4

6.64.5

அடுத்தானை யுரித்தான் காண் ... ... ௿
... ... ... ...௿
௿
இச்செய்யுளில் எஞ்சிய பாகம் சிதைந்து போயிற்று.

6.64.5

6.64.6

அழித்தவன்காண் எயில்மூன்றும் அயில்வா யம்பால்௿
ஐயாறும் இடைமருதும் ஆள்வான் றான்காண்௿
பழித்தவன்காண் அடையாரை அடைவார் தங்கள் ௿
பற்றவன்காண் புற்றரவ நாணி னான்காண்௿
சுழித்தவன்காண் முடிக்கங்கை அடியே போற்றுந் ௿
தூயமா முனிவர்க்காப் பார்மேல் நிற்க௿
இழித்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி ௿
ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.

6.64.6

6.64.7

அசைந்தவன்காண் நடமாடிப் பாடல் பேணி௿
அழல்வண்ணத் தில்லடியும் முடியுந் தேடப்௿
பசைந்தவன்காண் பேய்க்கணங்கள் பரவி யேத்தும் ௿
பான்மையன்காண் பரவிநினைந் தெழுவார் தம்பால்௿
கசிந்தவன்காண் கரியினுரி போர்த்தான் றான்காண்௿
கடலில்விட முண்டமரர்க் கமுத மீய௿
இசைந்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி ௿
ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.

6.64.7

6.64.8

முடித்தவன்காண் வன்கூற்றைச் சீற்றத் தீயால் ௿
வலியார்தம் புரமூன்றும் வேவச் சாபம்௿
பிடித்தவன்காண் பிஞ்ஞகனாம் வேடத் தான்காண்௿
பிணையல்வெறி கமழ்கொன்றை அரவு சென்னி௿
முடித்தவன்காண் மூவிலைநல் வேலி னான்காண்௿
முழங்கியுரு மெனத்தோன்று மழையாய் மின்னி௿
இடித்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி ௿
ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.

6.64.8

6.64.9

வருந்தான்காண் மனமுருகி நினையா தார்க்கு ௿
வஞ்சகன்காண் அஞ்செழுத்து நினைவார்க் கென்றும்௿
மருந்தவன்காண் வான்பிணிகள் தீரும் வண்ணம்௿
வானகமும் மண்ணகமு மற்று மாகிப்௿
பரந்தவன்காண் படர்சடையெட் டுடையான் றான்காண்௿
பங்கயத்தோன் றன்சிரத்தை யேந்தி யூரூர்௿
இரந்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி ௿
ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.

6.64.9

6.64.10

வெம்மான உழுவையத ளுரிபோர்த் தான்காண்௿
வேதத்தின் பொருளான்காண் என்றி யம்பி௿
விம்மாநின் றழுவார்கட் களிப்பான் றான்காண்௿
விடையேறித் திரிவான்காண் நடஞ்செய் பூதத்௿
தம்மான்காண் அகலிடங்கள் தாங்கி னான்காண்௿
அற்புதன்காண் சொற்பதமுங் கடந்து நின்ற௿
எம்மான்காண் எழிலாரும் பொழிலார் கச்சி ௿
ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.

6.64.10

6.64.11

அறுத்தான்காண் அயன்சிரத்தை அமரர் வேண்ட௿
ஆழ்கடலின் நஞ்சுண்டங் கணிநீர்க் கங்கை௿
செறுத்தான்காண் தேவர்க்குந் தேவன் றான்காண்௿
திசையனைத்துந் தொழுதேத்தக் கலைமான் கையிற்௿
பொறுத்தான்காண் புகலிடத்தை நலிய வந்து ௿
பொருகயிலை யெடுத்தவன்றன் முடிதோள் நாலஞ்௿
சிறுத்தான்காண் எழிலாரும் பொழிலார் கச்சி ௿
ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.

6.64.11

6.64 — note

௿