Books / Thirumurai 6

57. 6.65 திருவேகம்பம் - திருத்தாண்டகம்

6.65.1

உரித்தவன்காண் உரக்களிற்றை உமையாள் ஒல்க௿
ஓங்காரத் தொருவன்காண் உணர்மெய்ஞ் ஞானம்௿
விரித்தவன்காண் விரித்தநால் வேதத் தான்காண்௿
வியனுலகிற் பல்லுயிரை விதியி னாலே௿
தெரித்தவன்காண் சில்லுருவாய்த் தோன்றி யெங்குந்௿
திரண்டவன்காண் திரிபுரத்தை வேவ வில்லால்௿
எரித்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி ௿
ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.

6.65.1

6.65.2

நேசன்காண் நேசர்க்கு நேசந் தன்பால் ௿
இல்லாத நெஞ்சத்து நீசர் தம்மைக்௿
கூசன்காண் கூசாதார் நெஞ்சு தஞ்சே ௿
குடிகொண்ட குழகன்காண் அழகார் கொன்றை௿
வாசன்காண் மலைமங்கை பங்கன் றான்காண்௿
வானவர்கள் எப்பொழுதும் வணங்கி யேத்தும்௿
ஈசன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி ௿
ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.

6.65.2

6.65.3

பொறையவன்காண் பூமியேழ் தாங்கி யோங்கும் ௿
புண்ணியன்காண் நண்ணியபுண் டரிகப் போதின்௿
மறையவன்காண் மறையவனைப் பயந்தோன் றான்காண்௿
வார்சடைமா சுணமணிந்து வளரும் பிள்ளைப்௿
பிறையவன்காண் பிறைதிகழும் எயிற்றுப் பேழ்வாய்ப் ௿
பேயோடங் கிடுகாட்டில் எல்லி யாடும்௿
இறையவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி ௿
ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.

6.65.3

6.65.4

பாரவன்காண் விசும்பவன்காண் பவ்வந் தான்காண்௿
பனிவரைகள் இரவினொடு பகலாய் நின்ற௿
சீரவன்காண் திசையவன்காண் திசைக ளெட்டுஞ்௿
செறிந்தவன்காண் சிறந்தடியார் சிந்தை செய்யும்௿
பேரவன்காண் பேராயி ரங்க ளேத்தும் ௿
பெரியவன்காண் அரியவன்காண் பெற்ற மூர்ந்த௿
ஏரவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி ௿
ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.

6.65.4

6.65.5

பெருந்தவத்தெம் பிஞ்ஞகன்காண் பிறைசூ டிகாண்௿
பேதையேன் வாதையுறு பிணியைத் தீர்க்கும்௿
மருந்தவன்காண் மந்திரங்க ளாயி னான்காண்௿
வானவர்கள் தாம்வணங்கும் மாதே வன்காண்௿
அருந்தவத்தான் ஆயிழையாள் உமையாள் பாகம் ௿
அமர்ந்தவன்காண் அமரர்கள்தாம் அர்ச்சித் தேத்த௿
இருந்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி ௿
ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.

6.65.5

6.65.6

ஆய்ந்தவன்காண் அருமறையோ டங்க மாறும்௿
அணிந்தவன்காண் ஆடரவோ டென்பு மாமை௿
காய்ந்தவன்காண் கண்ணழலாற் காம னாகங்௿
கனன்றெழுந்த காலனுடல் பொடியாய் வீழப்௿
பாய்ந்தவன்காண் பண்டுபல சருகாற் பந்தர் ௿
பயின்றநூற் சிலந்திக்குப் பாராள் செல்வம்௿
ஈந்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி ௿
ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.

6.65.6

6.65.7

உமையவளை யொருபாகஞ் சேர்த்தி னான்காண்௿
உகந்தொலிநீர்க் கங்கைசடை யொழுக்கி னான்காண்௿
இமய வடகயிலைச் செல்வன் றான்காண்௿
இல்பலிக்குச் சென்றுழலும் நல்கூர்ந் தான்காண்௿
சமயமவை ஆறினுக்குந் தலைவன் றான்காண்௿
தத்துவன்காண் உத்தமன்காண் தானே யாய௿
இமையவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி ௿
ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.

6.65.7

6.65.8

தொண்டுபடு தொண்டர்துயர் தீர்ப்பான் றான்காண்௿
தூமலர்ச்சே வடியிணையெஞ் சோதி யான்காண்௿
உண்டுபடு விடங்கண்டத் தொடுக்கி னான்காண்௿
ஒலிகடலி லமுதமரர்க் குதவி னான்காண்௿
வண்டுபடு மலர்க்கொன்றை மாலை யான்காண்௿
வாண்மதியாய் நாண்மீனு மாயி னான்காண்௿
எண்டிசையும் எழிலாரும் பொழிலார் கச்சி ௿
ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.

6.65.8

6.65.9

முந்தைகாண் மூவரினு முதலா னான்காண்௿
மூவிலைவேல் மூர்த்திகாண் முருக வேட்குத்௿
தந்தைகாண் தண்கடமா முகத்தி னாற்குத் ௿
தாதைகாண் தாழ்ந்தடியே வணங்கு வார்க்குச்௿
சிந்தைகாண் சிந்தாத சித்தத் தார்க்குச் ௿
சிவனவன்காண் செங்கண்மால் விடையொன் றேறும்௿
எந்தைகாண் எழிலாரும் பொழிலார் கச்சி ௿
ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.

6.65.9

6.65.10

பொன்னிசையும் புரிசடையெம் புனிதன் றான்காண்௿
பூதகண நாதன்காண் புலித்தோ லாடை௿
தன்னிசைய வைத்தவெழி லரவி னான்காண்௿
சங்கவெண் குழைக்காதிற் சதுரன் றான்காண்௿
மின்னிசையும் வெள்ளெயிற்றோன் வெகுண்டு வெற்பை ௿
எடுக்கவடி அடர்ப்பமீண் டவன்றன் வாயில்௿
இன்னிசைகேட் டிலங்கொளிவாள் ஈந்தோன் கச்சி ௿
ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.

6.65.10

6.65 — note

௿