Books / Thirumurai 6

58. 6.66 திருநாகேச்சரம் - திருத்தாண்டகம்௿

6.66.1

தாயவனை வானோர்க்கும் ஏனோ ருக்குந்௿
தலையவனை மலையவனை உலக மெல்லாம்௿
ஆயவனைச் சேயவனை அணியான் றன்னை௿
அழலவனை நிழலவனை அறிய வொண்ணா௿
மாயவனை மறையவனை மறையோர் தங்கள் ௿
மந்திரனைத் தந்திரனை வளரா நின்ற௿
தீயவனைத் திருநாகேச் சரத்து ளானைச்௿
சேராதார் நன்னெறிக்கட் சேரா தாரே.

6.66.1

6.66.2

உரித்தானை மதவேழந் தன்னை மின்னார் ௿
ஒளிமுடியெம் பெருமானை உமையோர் பாகந்௿
தரித்தானைத் தரியலர்தம் புரமெய் தானைத்௿
தன்னடைந்தார் தம்வினைநோய் பாவ மெல்லாம்௿
அரித்தானை ஆலதன்கீழ் இருந்து நால்வர்க் ௿
கறம்பொருள்வீ டின்பமா றங்கம் வேதந்௿
தெரித்தானைத் திருநாகேச் சரத்து ளானைச்௿
சேராதார் நன்னெறிக்கட் சேரா தாரே.

6.66.2

6.66.3

காரானை உரிபோர்த்த கடவுள் தன்னைக்௿
காதலித்து நினையாத கயவர் நெஞ்சில்௿
வாரானை மதிப்பவர்தம் மனத்து ளனை௿
மற்றொருவர் தன்னொப்பா ரொப்பி லாத௿
ஏரானை இமையவர்தம் பெருமான் றன்னை௿
இயல்பாகி உலகெலாம் நிறைந்து மிக்க௿
சீரானைத் திருநாகேச் சரத்து ளானைச்௿
சேராதார் நன்னெறிக்கட் சேரா தாரே.

6.66.3

6.66.4

தலையானை எவ்வுலகுந் தானா னானைத்௿
தன்னுருவம் யாவர்க்கு மறிய வொண்ணா௿
நிலையானை நேசர்க்கு நேசன் றன்னை௿
நீள்வான முகடதனைத் தாங்கி நின்ற௿
மலையானை வரியரவு நாணாக் கோத்து ௿
வல்லசுரர் புரமூன்று மடிய வெய்த௿
சிலையானைத் திருநாகேச் சரத்து ளானைச்௿
சேராதார் நன்னெறிக்கட் சேரா தாரே.

6.66.4

6.66.5

மெய்யானைத் தன்பக்கல் விரும்பு வார்க்கு௿
விரும்பாத அரும்பாவி யவர்கட் கென்றும்௿
பொய்யானைப் புறங்காட்டி லாட லானைப்௿
பொன்பொலிந்த சடையானைப் பொடிகொள் பூதிப்௿
பையானைப் பையரவ மசைத்தான் றன்னைப்௿
பரந்தானைப் பவளமால் வரைபோல் மேனிச்௿
செய்யானைத் திருநாகேச் சரத்து ளானைச்௿
சேராதார் நன்னெறிக்கட் சேரா தாரே.

6.66.5

6.66.6

துறந்தானை அறம்புரியாத் துரிசர் தம்மைத்௿
தோத்திரங்கள் பலசொல்லி வானோ ரேத்த௿
நிறைந்தானை நீர்நிலந்தீ வெளிகாற் றாகி௿
நிற்பனவும் நடப்பனவு மாயி னானை௿
மறந்தானைத் தன்னினையா வஞ்சர் தம்மை௿
அஞ்செழுத்தும் வாய்நவில வல்லோர்க் கென்றுஞ்௿
சிறந்தானைத் திருநாகேச் சரத்து ளானைச்௿
சேராதார் நன்னெறிக்கட் சேரா தாரே.

6.66.6

6.66.7

மறையானை மால்விடையொன் றூர்தி யானை௿
மால்கடல்நஞ் சுண்டானை வானோர் தங்கள்௿
இறையானை என்பிறவித் துயர்தீர்ப் பானை௿
இன்னமுதை மன்னியசீர் ஏகம் பத்தில்௿
உறைவானை ஒருவருமீங் கறியா வண்ணம் ௿
என்னுள்ளத் துள்ளே யொளித்து வைத்த௿
சிறையானைத் திருநாகேச் சரத்து ளானைச்௿
சேராதார் நன்னெறிக்கட் சேரா தாரே.

6.66.7

6.66.8

எய்தானைப் புரமூன்றும் இமைக்கும் போதில்௿
இருவிசும்பில் வருபுனலைத் திருவார் சென்னிப்௿
பெய்தானைப் பிறப்பிலியை அறத்தில் நில்லாப் ௿
பிரமன்றன் சிரமொன்றைக் கரமொன் றினாற்௿
கொய்தானைக் கூத்தாட வல்லான் றன்னைக்௿
குறியிலாக் கொடியேனை அடியே னாகச்௿
செய்தானைத் திருநாகேச் சரத்து ளானைச்௿
சேராதார் நன்னெறிக்கட் சேரா தாரே.

6.66.8

6.66.9

அளியானை அண்ணிக்கும் ஆன்பால் தன்னை௿
வான்பயிரை அப்பயிரின் வாட்டந் தீர்க்குந்௿
துளியானை அயன்மாலுந் தேடிக் காணாச் ௿
சுடரானைத் துரிசறத் தொண்டு பட்டார்க்௿
கெளியானை யாவர்க்கு மரியான் றன்னை௿
இன்கரும்பின் தன்னுள்ளா லிருந்த தேறற்௿
தெளியானைத் திருநாகேச் சரத்து ளானைச்௿
சேராதார் நன்னெறிக்கட் சேரா தாரே.

6.66.9

6.66.10

சீர்த்தானை உலகேழுஞ் சிறந்து போற்றச் ௿
சிறந்தானை நிறைந்தோங்கு செல்வன் றன்னைப்௿
பார்த்தானை மதனவேள் பொடியாய் வீழப்௿
பனிமதியஞ் சடையானைப் புனிதன் றன்னை௿
ஆர்த்தோடி மலையெடுத்த அரக்க னஞ்ச ௿
அருவிரலா லடர்த்தானை அடைந்தோர் பாவந்௿
தீர்த்தானைத் திருநாகேச் சரத்து ளானைச்௿
சேராதார் நன்னெறிக்கட் சேரா தாரே.

6.66.10

6.66 — note

௿