Books / Thirumurai 6

59. 6.67 திருக்கீழ்வேளூர் - திருத்தாண்டகம்

6.67.1

ஆளான அடியவர்கட் கன்பன் றன்னை௿
ஆனஞ்சு மாடியைநான் அபயம் புக்க௿
தாளானைத் தன்னொப்பா ரில்லா தானைச்௿
சந்தனமுங் குங்குமமுஞ் சாந்துந் தோய்ந்த௿
தோளானைத் தோளாத முத்தொப் பானைத்௿
தூவெளுத்த கோவணத்தை அரையி லார்த்த௿
கீளானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக்௿
கேடிலியை நாடுமவர் கேடி லாரே.

6.67.1

6.67.2

சொற்பாவும் பொருள்தெரிந்து தூய்மை நோக்கித்௿
தூங்காதார் மனத்திருளை வாங்கா தானை௿
நற்பான்மை அறியாத நாயி னேனை௿
நன்னெறிக்கே செலும்வண்ணம் நல்கி னானைப்௿
பற்பாவும் வாயாரப் பாடி யாடிப்௿
பணிந்தெழுந்து குறைந்தடைந்தார் பாவம் போக்கக்௿
கிற்பானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக்௿
கேடிலியை நாடுமவர் கேடி லாரே.

6.67.2

6.67.3

அளைவாயில் அரவசைத்த அழகன் றன்னை௿
ஆதரிக்கு மடியவர்கட் கன்பே யென்றும்௿
விளைவானை மெய்ஞ்ஞானப் பொருளா னானை௿
வித்தகனை எத்தனையும் பத்தர் பத்திக்௿
குளைவானை அல்லாதார்க் குளையா தானை௿
உலப்பிலியை உள்புக்கென் மனத்து மாசு௿
கிளைவானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக்௿
கேடிலியை நாடுமவர் கேடி லாரே.

6.67.3

6.67.4

தாட்பாவு கமலமலர் தயங்கு வானைத் ௿
தலையறுத்து மாவிரதந் தரித்தான் றன்னைக்௿
கோட்பாவு நாளெல்லா மானான் றன்னைக்௿
கொடுவினையேன் கொடுநரகக் குழியில் நின்றால்௿
மீட்பானை வித்துருவின் கொத்தொப் பானை௿
வேதியனை வேதத்தின் பொருள்கொள் வீணை௿
கேட்பானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக்௿
கேடிலியை நாடுமவர் கேடி லாரே.

6.67.4

6.67.5

நல்லானை நரைவிடையொன் றூர்தி யானை௿
நால்வேதத் தாறங்கம் நணுக மாட்டாச்௿
சொல்லானைச் சுடர்மூன்று மானான் றன்னைத்௿
தொண்டாகிப் பணிவார்கட் கணியான் றன்னை௿
வில்லானை மெல்லியலோர் பங்கன் றன்னை௿
மெய்யராய் நினையாதார் வினைகள் தீர்க்க௿
கில்லானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக்௿
கேடிலியை நாடுமவர் கேடி லாரே.

6.67.5

6.67.6

சுழித்தானைக் கங்கைமலர் வன்னி கொன்றை௿
தூமத்தம் வாளரவஞ் சூடி னானை௿
அழித்தானை அரணங்கள் மூன்றும் வேவ௿
ஆலால நஞ்சதனை யுண்டான் றன்னை௿
விழித்தானைக் காமனுடல் பொடியாய் வீழ௿
மெல்லியலோர் பங்கனைமுன் வேனி லானைக்௿
கிழித்தானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக்௿
கேடிலியை நாடுமவர் கேடி லாரே.

6.67.6

6.67.7

உளரொளியை உள்ளத்தி னுள்ளே நின்ற ௿
ஓங்காரத் துட்பொருள்தா னாயி னானை௿
விளரொளியை விடுசுடர்கள் இரண்டு மொன்றும் ௿
விண்ணொடுமண் ஆகாச மாயி னானை௿
வளரொளியை மரகதத்தி னுருவி னானை௿
வானவர்க ளெப்பொழுதும் வாழ்த்தி யேத்துங்௿
கிளரொளியைக் கீழ்வேளூ ராளுங் கோவைக்௿
கேடிலியை நாடுமவர் கேடி லாரே.

6.67.7

6.67.8

தடுத்தானைக் காலனைக் காலாற் பொன்றத்௿
தன்னடைந்த மாணிக்கன் றருள்செய் தானை௿
உடுத்தானைப் புலியதளோ டக்கும் பாம்பும்௿
உள்குவார் உள்ளத்தி னுள்ளான் றன்னை௿
மடுத்தானை அருநஞ்சம் மிடற்றுள் தங்க௿
வானவர்கள் கூடியஅத் தக்கன் வேள்வி௿
கெடுத்தானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக்௿
கேடிலியை நாடுமவர் கேடி லாரே.

6.67.8

6.67.9

மாண்டார் எலும்பணிந்த வாழ்க்கை யானை௿
மயானத்திற் கூத்தனைவா ளரவோ டென்பு௿
பூண்டானைப் புறங்காட்டி லாட லானைப்௿
போகாதென் னுட்புகுந் திடங்கொண் டென்னை௿
ஆண்டானை அறிவரிய சிந்தை யானை௿
அசங்கையனை அமரர்கள்தஞ் சங்கை யெல்லாங்௿
கீண்டானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக்௿
கேடிலியை நாடுமவர் கேடி லாரே.

6.67.9

6.67.10

முறிப்பான பேசிமலை யெடுத்தான் றானும் ௿
முதுகிறமுன் கைந்நரம்பை யெடுத்துப் பாடப்௿
பறிப்பான்கைச் சிற்றரிவாள் நீட்டி னானைப்௿
பாவியேன் நெஞ்சகத்தே பாதப் போது௿
பொறித்தானைப் புரமூன்று மெரிசெய் தானைப்௿
பொய்யர்களைப் பொய்செய்து போது போக்கிக்௿
கிறிப்பானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக்௿
கேடிலியை நாடுமவர் கேடி லாரே.

6.67.10

6.67 — note

௿ இத்தலம் சோழநாட்டிலுள்ளது.௿ சுவாமிபெயர் - கேடிலியப்பர்,௿ தேவியார் - வனமுலைநாயகியம்மை.௿ ௿