Books / Thirumurai 6

60. 6.68 திருமுதுகுன்றம் - திருத்தாண்டகம்௿

6.68.1

கருமணியைக் கனகத்தின் குன்றொப் பானைக்௿
கருதுவார்க் காற்ற எளியான் றன்னைக்௿
குருமணையைக் கோளரவ மாட்டு வானைக்௿
கொல்வேங்கை யதளனைக்கோ வணவன் றன்னை௿
அருமணியை அடைந்தவர்கட் கமுதொப் பானை௿
ஆனஞ்சு மாடியைநான் அபயம் புக்க௿
திருமணியைத் திருமுதுகுன் றுடையான் றன்னைத்௿
தீவினையேன் அறியாதே திகைத்த வாறே.

6.68.1

6.68.2

காரொளிய கண்டத்தெங் கடவுள் தன்னைக்௿
காபாலி கட்டங்க மேந்தி னானைப்௿
பாரொளியை விண்ணொளியைப் பாதாளத் தானைப்௿
பான்மதியஞ் சூடியோர் பண்பன் றன்னைப்௿
பேரொளியைப் பெண்பாகம் வைத்தான் றன்னைப்௿
பேணுவார் தம்வினையைப் பேணி வாங்குஞ்௿
சீரொளியைத் திருமுதுகுன் றுடையான் றன்னைத்௿
தீவினையேன் அறியாதே திகைத்த வாறே.

6.68.2

6.68.3

எத்திசையும் வானவர்கள் தொழ நின்றானை௿
ஏறூர்ந்த பெம்மானை யெம்மா னென்று௿
பத்தனாய்ப் பணிந்தடியேன் றன்னைப் பன்னாட்௿
பாமாலை பாடப் பயில்வித் தானை௿
முத்தினை யென்மணியை மாணிக் கத்தை௿
முளைத்தெழுந்த செம்பவளக் கொழுந்தொப் பானைச்௿
சித்தனையென் திருமுதுகுன் றுடையான் றன்னைத்௿
தீவினையேன் அறியாதே திகைத்த வாறே.

6.68.3

6.68.4

ஊன்கருவின் உள்நின்ற சோதி யானை௿
உத்தமனைப் பத்தர்மனம் குடிகொண் டானைக்௿
கான்றிரிந்து காண்டீப மேந்தி னானைக்௿
கார்மேக மிடற்றானைக் கனலைக் காற்றைத்௿
தான்றெரிந்தங் கடியேனை யாளாக் கொண்டு ௿
தன்னுடைய திருவடியென் றலைமேல் வைத்த௿
தீன்கரும்பைத் திருமுதுகுன் றுடையான் றன்னைத்௿
தீவினையேன் அறியாதே திகைத்த வாறே.

6.68.4

6.68.5

தக்கனது பெருவேள்வி தகர்த்தா னாகித்௿
தாமரையான் நான்முகனுந் தானே யாகி௿
மிக்கதொரு தீவளிநீர் ஆகா சமாய்௿
மேலுலகுக் கப்பாலாய் இப்பா லானை௿
அக்கினொடு முத்தினையு மணிந்து தொண்டர்க்௿
கங்கங்கே அறுசமய மாகி நின்ற௿
திக்கினையென் றிருமுதுகுன் றுடையான் றன்னைத்௿
தீவினையேன் அறியாதே திகைத்த வாறே.

6.68.5

6.68.6

புகழொளியைப் புரமெரித்த புனிதன் றன்னைப்௿
பொன்பொதிந்த மேனியனைப் புராணன் றன்னை௿
விழவொலியும் விண்ணொலியு மானான் றன்னை ௿
வெண்காடு மேவிய விகிர்தன் றன்னைக்௿
கழலொலியுங் கைவளையு மார்ப்ப வார்ப்பக்௿
கடைதோறு மிடுபிச்சைக் கென்று செல்லுந்௿
திகழொளியைத் திருமுதுகுன் றுடையான் றன்னைத்௿
தீவினையேன் அறியாதே திகைத்த வாறே.

6.68.6

6.68.7

போர்த்தானை யின்னுரிதோல் பொங்கப் பொங்கப்௿
புலியதளே உடையாகத் திரிவான் றன்னைக்௿
காத்தானை ஐம்புலனும் புரங்கள் மூன்றுங்௿
காலனையுங் குரைகழலாற் காய்ந்தான் றன்னை௿
மாத்தாடிப் பத்தராய் வணங்குந் தொண்டர்௿
வல்வினைவே ரறும்வண்ணம் மருந்து மாகித்௿
தீர்த்தானைத் திருமுதுகுன் றுடையான் றன்னைத்௿
தீவினையேன் அறியாதே திகைத்த வாறே.

6.68.7

6.68.8

துறவாதே யாக்கை துறந்தான் றன்னைச்௿
சோதி முழுமுதலாய் நின்றான் றன்னைப்௿
பிறவாதே எவ்வுயிர்க்குந் தானே யாகிப்௿
பெண்ணினோ டாணுருவாய் நின்றான் றன்னை௿
மறவாதே தன்றிறமே வாழ்த்துந் தொண்டர்௿
மனத்தகத்தே அனவரதம் மன்னி நின்ற௿
திறலானைத் திருமுதுகுன் றுடையான் றன்னைத்௿
தீவினையேன் அறியாதே திகைத்த வாறே.

6.68.8

6.68.9

பொற்றூணைப் புலால்நாறு கபால மேந்திப்௿
புவலோக மெல்லா முழிதந் தானை௿
முற்றாத வெண்டிங்கட் கண்ணி யானை௿
முழுமுதலாய் மூவுலகும் முடிவொன் றில்லாக்௿
கற்றூணைக் காளத்தி மலையான் றன்னைக்௿
கருதாதார் புரமூன்று மெரிய அம்பாற்௿
செற்றானைத் திருமுதுகுன் றுடையான் றன்னைத்௿
தீவினையேன் அறியாதே திகைத்த வாறே.

6.68.9

6.68.10

இகழ்ந்தானை இருபதுதோள் நெரிய வூன்றி௿
எழுநரம்பின் இசைபாட லினிது கேட்டுப்௿
புகழ்ந்தானைப் பூந்துருத்தி மேயான் றன்னைப்௿
புண்ணியனை விண்ணவர்கள் நிதியந் தன்னை௿
மகிழ்ந்தானை மலைமகளோர் பாகம் வைத்து௿
வளர்மதியஞ் சடைவைத்து மாலோர் பாகந்௿
திகழ்ந்தானைத் திருமுதுகுன் றுடையான் றன்னைத்௿
தீவினையேன் அறியாதே திகைத்த வாறே.

6.68.10

6.68 — note

௿ இத்தலம் நடுநாட்டிலுள்ளது. இதுவே விருத்தாசலம்.௿ சுவாமிபெயர் - பழமலைநாதர்,௿ தேவியார் - பெரியநாயகியம்மை.௿ ௿