Books / Thirumurai 6

61. 6.69 திருப்பள்ளியின்முக்கூடல் - திருத்தாண்டகம்௿

6.69.1

ஆராத இன்னமுதை அம்மான் றன்னை௿
அயனொடுமா லறியாத ஆதி யானைத்௿
தாராரும் மலர்க்கொன்றைச் சடையான் றன்னைச்௿
சங்கரனைத் தன்னொப்பா ரில்லா தானை௿
நீரானைக் காற்றானைத் தீயா னானை௿
நீள்விசும்பாய் ஆழ்கடல்க ளேழுஞ் சூழ்ந்த௿
பாரானைப் பள்ளியின்முக் கூட லானைப்௿
பயிலாதே பாழேநான் உழன்ற வாறே.

6.69.1

6.69.2

விடையானை விண்ணவர்கள் எண்ணத் தானை௿
வேதியனை வெண்டிங்கள் சூடுஞ் சென்னிச்௿
சடையானைச் சாமம்போற் கண்டத் தானைத்௿
தத்துவனைத் தன்னொப்பா ரில்லா தானை௿
அடையாதார் மும்மதிலுந் தீயில் மூழ்க௿
அடுகணைகோத் தெய்தானை அயில்கொள் சூலப்௿
படையானைப் பள்ளியின்முக் கூட லானைப்௿
பயிலாதே பாழேநான் உழன்ற வாறே.

6.69.2

6.69.3

பூதியனைப் பொன்வரையே போல்வான் றன்னைப்௿
புரிசடைமேற் புனல்கரந்த புனிதன் றன்னை௿
வேதியனை வெண்காடு மேயான் றன்னை௿
வெள்ளேற்றின் மேலானை விண்ணோர்க் கெல்லாம்௿
ஆதியனை ஆதிரைநன் னாளான் றன்னை௿
அம்மானை மைம்மேவு கண்ணி யாளோர்௿
பாதியனைப் பள்ளியின்முக் கூட லானைப்௿
பயிலாதே பாழேநான் உழன்ற வாறே.

6.69.3

6.69.4

போர்த்தானை ஆனையின்றோல் புரங்கள் மூன்றும்௿
பொடியாக எய்தானைப் புனிதன் றன்னை௿
வார்த்தாங்கு வனமுலையாள் பாகன் றன்னை௿
மறிகடலுள் நஞ்சுண்டு வானோ ரச்சந்௿
தீர்த்தானைத் தென்றிசைக்கே காமன் செல்லச்௿
சிறிதளவில் அவனுடலம் பொடியா வங்கே௿
பார்த்தானைப் பள்ளியின்முக் கூட லானைப்௿
பயிலாதே பாழேநான் உழன்ற வாறே.

6.69.4

6.69.5

அடைந்தார்தம் பாவங்கள் அல்லல் நோய்கள்௿
அருவினைகள் நல்குரவு செல்லா வண்ணங்௿
கடிந்தானைக் கார்முகில்போற் கண்டத் தானைக்௿
கடுஞ்சினத்தோன் றன்னுடலை நேமி யாலே௿
தடிந்தானைத் தன்னொப்பா ரில்லா தானைத்௿
தத்துவனை உத்தமனை நினைவார் நெஞ்சிற்௿
படிந்தானைப் பள்ளியின்முக் கூட லானைப்௿
பயிலாதே பாழேநான் உழன்ற வாறே.

6.69.5

6.69.6

கரந்தானைச் செஞ்சடைமேற் கங்கை வெள்ளங்௿
கனலாடு திருமேனி கமலத் தோன்றன்௿
சிரந்தாங்கு கையானைத் தேவ தேவைத்௿
திகழொளியைத் தன்னடியே சிந்தை செய்வார்௿
வருந்தாமைக் காப்பானை மண்ணாய் விண்ணாய்௿
மறிகடலாய் மால்விசும்பாய் மற்று மாகிப்௿
பரந்தானைப் பள்ளியின்முக் கூட லானைப்௿
பயிலாதே பாழேநான் உழன்ற வாறே.

6.69.6

6.69.7

நதியாருஞ் சடையானை நல்லூ ரானை௿
நள்ளாற்றின் மேயானை நல்லத் தானை௿
மதுவாரும் பொழிற்புடைசூழ் வாய்மூ ரானை௿
மறைக்காடு மேயானை ஆக்கூ ரானை௿
நிதியாளன் றோழனை நீடு ரானை௿
நெய்த்தான மேயானை ஆரூ ரென்னும்௿
பதியானைப் பள்ளியின்முக் கூட லானைப்௿
பயிலாதே பாழேநான் உழன்ற வாறே.

6.69.7

6.69.8

நற்றவனை நான்மறைக ளாயி னானை௿
நல்லானை நணுகாதார் புரங்கள் மூன்றுஞ்௿
செற்றவனைச் செஞ்சடைமேற் றிங்கள் சூடுந்௿
திருவாரூர்த் திருமூலத் தான மேய௿
கொற்றவனைக் கூரரவம் பூண்டான் றன்னைக்௿
குறைந்தடைந்து தன்றிறமே கொண்டார்க் கென்றும்௿
பற்றவனைப் பள்ளியின்முக் கூட லானைப்௿
பயிலாதே பாழேநான் உழன்ற வாறே.

6.69.8

6.69.9

ஊனவனை உடலவனை உயிரா னானை௿
உலகேழு மானானை உம்பர் கோவை௿
வானவனை மதிசூடும் வளவி யானை௿
மலைமகள்முன் வராகத்தின் பின்பே சென்ற௿
கானவனைக் கயிலாய மலையு ளானைக்௿
கலந்துருகி நைவார்தம் நெஞ்சி னுள்ளே௿
பானவனைப் பள்ளியின்முக் கூட லானைப்௿
பயிலாதே பாழேநான் உழன்ற வாறே.

6.69.9

6.69.10

தடுத்தானைத் தான்முனிந்து தன்றோள் கொட்டித்௿
தடவரையை இருபதுதோள் தலையி னாலும்௿
எடுத்தானைத் தாள்விரலால் மாள வூன்றி௿
எழுநரம்பின் இசைபாடல் இனிது கேட்டுக்௿
கொடுத்தானைப் பேரோடுங் கூர்வாள் தன்னைக்௿
குரை கழலாற் கூற்றுவனை மாள வன்று௿
படுத்தானைப் பள்ளியின்முக் கூட லானைப்௿
பயிலாதே பாழேநான் உழன்ற வாறே.

6.69.10

6.69 — note

௿ இத்தலம் சோழநாட்டிலுள்ளது.௿ சுவாமிபெயர் - முக்கோணவீசுவரர்,௿ தேவியார் - மைமேவுங்கண்ணியம்மை.௿ ௿