Books / Thirumurai 6

62. 6.70 க்ஷேத்திரக்கோவை - திருத்தாண்டகம்௿

6.70.1

தில்லைச் சிற்றம்பலமுஞ் செம்பொன் பள்ளி௿
தேவன் குடிசிராப் பள்ளி தெங்கூர்௿
கொல்லிக் குளிரறைப் பள்ளி கோவல்௿
வீரட்டங் கோகரணங் கோடி காவும்௿
முல்லைப் புறவம் முருகன் பூண்டி௿
முழையூர் பழையாறை சத்தி முற்றங்௿
கல்லிற் றிகழ்சீரார் காளத் தியுங்௿
கயிலாய நாதனையே காண லாமே.

6.70.1

6.70.2

ஆரூர்மூ லத்தானம் ஆனைக் காவும்௿
ஆக்கூரில் தான்தோன்றி மாடம் ஆவூர்௿
பேரூர் பிரமபுரம் பேரா வூரும்௿
பெருந்துறை காம்பீலி பிடவூர் பேணுங்௿
கூரார் குறுக்கைவீ ரட்டா னமுங்௿
கோட்டூர் குடமூக்கு கோழம் பமுங்௿
காரார் கழுக்குன்றுங் கானப் பேருங்௿
கயிலாய நாதனையே காண லாமே.

6.70.2

6.70.3

இடைமரு தீங்கோ யிராமேச் சுரம்௿
இன்னம்பர் ஏரிடவை ஏமப் பேறூர்௿
சடைமுடி சாலைக் குடிதக் களூர்௿
தலையாலங் காடு தலைச்சங் காடு௿
கொடுமுடி குற்றாலங் கொள்ளம் பூதூர்௿
கோத்திட்டை கோட்டாறு கோட்டுக் காடு௿
கடைமுடி கானூர் கடம்பந் துறை௿
கயிலாய நாதனையே காண லாமே.

6.70.3

6.70.4

எச்சில் இளமர் ஏம நல்லூர்௿
இலம்பையங் கோட்டூர் இறையான் சேரி௿
அச்சிறு பாக்க மளப்பூர் அம்பர்௿
ஆவடு தண்டுறை அழுந்தூர் ஆறைக்௿
கச்சினங் கற்குடி கச்சூர் ஆலக்௿
கோயில் கரவீரங் காட்டுப் பள்ளி௿
கச்சிப் பலதளியும் ஏகம் பத்துங்௿
கயிலாய நாதனையே காண லாமே.

6.70.4

6.70.5

கொடுங்கோளூர் அஞ்சைக் களஞ்செங் குன்றூர்௿
கொங்கணங் குன்றியூர் குரக்குக் காவும்௿
நெடுங்களம் நன்னிலம் நெல்லிக் காவும்௿
நின்றியூர் நீடூர் நியம நல்லூர்௿
இடும்பா வனமெழுமூர் ஏழூர் தோழூர்௿
எறும்பியூர் ஏராரும் ஏம கூடங்௿
கடம்பை யிளங்கோயில் தன்னி லுள்ளுங்௿
கயிலாய நாதனையே காண லாமே.

6.70.5

6.70.6

மண்ணிப் படிக்கரை வாழ்கொளி புத்தூர்௿
வக்கரை மந்தாரம் வார ணாசி௿
வெண்ணி விளத்தொட்டி வேள்விக் குடி௿
விளமர் விராடபுரம் வேட்க ளத்தும்௿
பெண்ணை யருட்டுறைதண் பெண்ணா கடம்௿
பிரம்பில் பெரும்புலியூர் பெருவே ளூருங்௿
கண்ணை களர்க்காறை கழிப்பா லையுங்௿
கயிலாய நாதனையே காண லாமே.

6.70.6

6.70.7

வீழி மிழலைவெண் காடு வேங்கூர்௿
வேதி குடிவிசய மங்கை வியலூர்௿
ஆழியகத் தியான்பள்ளி அண்ணா மலை௿
ஆலங் காடும் அரைதைப் பெரும்௿
பாழி பழனம்பனந் தாள்பா தாளம்௿
பராய்த்துறை பைஞ்ஞீலி பனங்காட் டூர்தண்௿
காழி கடல்நாகைக் காரோ ணத்துங்௿
கயிலாய நாதனையே காண லாமே.

6.70.7

6.70.8

உஞ்சேனை மாகாளம் ஊறல் ஓத்தூர்௿
உரித்திர கோடி மறைக்காட் டுள்ளும்௿
மஞ்சார் பொதியின்மலை தஞ்சை வழுவூர்௿
வீரட்டம் மாதானங் கேதா ரத்தும்௿
வெஞ்சமாக் கூடல்மீ யச்சூர் வைகா௿
வேதிச்சுரம் வீவிசுரம் வொற்றி யூருங்௿
கஞ்சனூர் கஞ்சாறு பஞ்சாக் கையுங்௿
கயிலாய நாதனையே காண லாமே.

6.70.8

6.70.9

திண்டீச்சரஞ் சேய்ஞலூர் செம்பொன் பள்ளி௿
தேவூர் சிரபுரஞ்சிற் றேமஞ் சேறை௿
கொண்டீச்சரங் கூந்தலூர் கூழையூர் கூடல்௿
குருகாவூர் வெள்ளடை குமரி கொங்கு௿
அண்டர் தொழுமதிகை வீரட் டானம்௿
ஐயா றசோகந்தி ஆமாத் தூருங்௿
கண்டியூர் வீரட்டங் கருகா வூருங்௿
கயிலாய நாதனையே காண லாமே.

6.70.9

6.70.10

நறையூரிற் சித்தீச் சரம்நள் ளாறு௿
நாரையூர் நாகேச்சரம் நல்லூர் நல்ல௿
துறையூர் சோற்றுத்துறை சூல மங்கை௿
தோணிபுரந் துருத்தி சோமீச் சரம்௿
உறையூர் கடலொற்றி யூரூற் றத்தூர்௿
ஓமாம் புலியூரோர் ஏட கத்துங்௿
கறையூர் கருப்பறியல் கன்றாப் பூருங்௿
கயிலாய நாதனையே காண லாமே.

6.70.10

6.70.11

புலிவலம் புத்தூர் புகலூர் புன்கூர்௿
புறம்பயம் பூவணம் பொய்கை நல்லூர்௿
வலிவலம் மாற்பேறு வாய்மூர் வைகல்௿
வலஞ்சுழி வாஞ்சியம் மருகல் வன்னி௿
நிலமலிநெய்த் தானத்தோ டெத்தா னத்தும்௿
நிலவுபெருங் கோயில்பல கண்டாற் றொண்டீர்௿
கலிவலிமிக் கோனைக்கால் விரலாற் செற்ற௿
கயிலாய நாதனையே காண லாமே.

6.70.11

6.70 — note

௿