Books / Thirumurai 6

63. 6.71 திருஅடைவு - திருத்தாண்டகம்௿

6.71.1

பொருப்பள்ளி வரைவில்லாப் புரமூன் றெய்து௿
புலந்தழிய சலந்தரனைப் பிளந்தான் பொற்சக்௿
கரப்பள்ளி திருக்காட்டுப் பள்ளி கள்ளார்௿
கமழ்கொல்லி யறைப்பள்ளி கலவஞ் சாரற்௿
சிரப்பள்ளி சிவப்பள்ளி செம்பொன் பள்ளி௿
செழுநனி பள்ளிதவப் பள்ளி சீரார்௿
பரப்பள்ளி யென்றென்று பகர்வோ ரெல்லாம்௿
பரலோகத் தினிதாகப் பாலிப் பாரே.

6.71.1

6.71.2

காவிரியின் கரைக்கண்டி வீரட் டானங்௿
கடவூர்வீ ரட்டானங் காமருசீ ரதிகை௿
மேவியவீ ரட்டானம் வழுவை வீரட்டம்௿
வியன்பறியல் வீரட்டம் விடையூர்திக் கிடமாங்௿
கோவல்நகர் வீரட்டங் குறுக்கை வீரட்டங்௿
கோத்திட்டைக் குடிவீரட் டானமிவை கூறி௿
நாவினவின் றுரைப்பார்க்கு நணுகச் சென்றால்௿
நமன்றமருஞ் சிவன்றமரென் றகல்வர் நன்கே.

6.71.2

6.71.3

நற்கொடிமேல் விடையுயர்த்த நம்பன் செம்பங்௿
குடிநல்லக் குடிநளிநாட் டியத்தான் குடி௿
கற்குடிதென் களக்குடிசெங் காட்டங் குடி௿
கருந்திட்டைக் குடிகடையக் குடிகா ணுங்கால்௿
விற்குடிவேள் விக்குடிநல் வேட்டக் குடி௿
வேதிகுடி மாணிகுடி விடைவாய்க் குடி௿
புற்குடி மாகுடி தேவன்குடி நீலக்குடி௿
புதுக்குடியும் போற்றவிடர் போகு மன்றே.

6.71.3

6.71.4

பிறையூருஞ் சடைமுடியெம் பெருமா னாரூர்௿
பெரும்பற்றப் புலியூரும் பேரா வூரும்௿
நறையூரும் நல்லூரும் நல்லாற் றூரும்௿
நாலூருஞ் சேற்றூரும் நாரை யூரும்௿
உறையூரும் ஓத்தூரும் ஊற்றத் தூரும்௿
அளப்பூரோ மாம்புலியூர் ஒற்றி யூருந்௿
துறையூருந் துவையூருந் தோழுர் தானுந்௿
துடையூருந் தொழவிடர்கள் தொடரா வன்றே.

6.71.4

6.71.5

பெருக்காறு சடைக்கணிந்த பெருமான் சேரும்௿
பெருங்கோயில் எழுபதினோ டெட்டும் மற்றுங்௿
கரக்கோயில் கடிபொழில்சூழ் ஞாழற் கோயில்௿
கருப்பறியல் பொருப்பனைய கொகுடிக் கோயில்௿
இருக்கோதி மறையவர்கள் வழிபட் டேத்தும்௿
இளங்கோயில் மணிக்கோயில் ஆலக் கோயில்௿
திருக்கோயில் சிவனுறையுங் கோயில் சூழ்ந்து௿
தாழ்ந்திறைஞ்சத் தீவினைகள் தீரு மன்றே.

6.71.5

6.71.6

மலையார்தம் மகளொடுமா தேவன் சேரும்௿
மறைக்காடு வண்பொழில்சூழ் தலைச்சங் காடு௿
தலையாலங் காடுதடங் கடல்சூ ழந்தண்௿
சாய்க்காடு தெள்ளுபுனற் கொள்ளிக் காடு௿
பலர்பாடும் பழையனூர் ஆலங் காடு௿
பனங்காடு பாவையர்கள் பாவம் நீங்க௿
விலையாடும் வளைதிளைக்கக் குடையும் பொய்கை௿
வெண்காடும் அடையவினை வேறா மன்றே.

6.71.6

6.71.7

கடுவாயர் தமைநீக்கி யென்னை யாட்கொள்௿
கண்ணுதலோன் நண்ணுமிடம் அண்ணல் வாயில்௿
நெடுவாயில் நிறைவயல்சூழ் நெய்தல் வாயில்௿
நிகழ்முல்லை வாயிலொடு ஞாழல் வாயில்௿
மடுவார்தென் மதுரைநகர் ஆல வாயில்௿
மறிகடல்சூழ் புனவாயில் மாடம் நீடு௿
குடவாயில் குணவாயி லான வெல்லாம்௿
புகுவாரைக் கொடுவினைகள் கூடா வன்றே.

6.71.7

6.71.8

நாடகமா டிடநந்தி கேச்சுரமா காளேச்௿
சுரநாகேச் சுரநாகளேச் சுரநன் கான௿
கோடீச்சுரங் கொண்டீச் சுரந்திண் டீச்சுரங்௿
குக்குடேச் சுரமக்கீச் சுரங்கூ றுங்கால்௿
ஆடகேச் சுரமகத்தீச் சுரமய னீச்சுரம்௿
அத்தீச்சுரஞ் சித்தீச்சுர மந்தண் கானல்௿
ஈடுதிரை இராமேச்சுர மென்றென் றேத்தி௿
இறைவனுறை சுரம்பலவும் இயம்பு வோமே.

6.71.8

6.71.9

கந்தமா தனங்கயிலை மலை கேதாரங்௿
காளத்தி கழுக்குன்றங் கண்ணார் அண்ணா௿
மந்தமாம் பொழிற்சாரல் வடபர்ப் பதம்௿
மகேந்திரமா மலைநீலம் ஏம கூடம்௿
விந்தமா மலைவேதஞ் சைய மிக்க௿
வியன் பொதியின் மலைமேரு வுதய மத்தம்௿
இந்துசே கரனுறையும் மலைகள் மற்றும்௿
ஏத்துவோம் இடர்கெடநின் றேத்து வோமே.

6.71.9

6.71.10

நள்ளாறும் பழையாறுங் கோட்டாற் றோடு௿
நலந்திகழும் நாலாறுந் திருவை யாறுந்௿
தெள்ளாறும் வளைகுளமுந் தளிக்கு ளமுநல்௿
இடைக்குளமுந் திருக்குளத்தோ டஞ்சைக் களம்௿
விள்ளாத நெடுங்களம்வேட் களம்நெல் லிக்கா௿
கோலக்கா ஆனைக்கா வியன்கோ டிகா௿
கள்ளார்ந்த கொன்றையான் நின்ற ஆறுங்௿
குளங்களங்கா எனவனைத்துங் கூறு வோமே.

6.71.10

6.71.11

கயிலாயமலை யெடுத்தான் கரங்க ளோடு௿
சிரங்களுரம் நெரியக்கால் விரலாற் செற்றோன்௿
பயில்வாய பராய்த்துறைதென் பாலைத் துறை௿
பண்டெழுவர் தவத்துறைவெண் டுறைபைம் பொழிற்௿
குயிலாலந் துறைசோற்றுத் துறைபூந் துறை௿
பெருந்துறையுங் குரங்காடு துறையி னோடு௿
மயிலாடு துறைகடம்பந் துறையா வடு௿
துறைமற்றுந் துறையனைத்தும் வணங்கு வோமே.

6.71.11

6.71 — note

௿