Books / Thirumurai 6

65. 6.73 திருவலஞ்சுழியும் - திருக்கொட்டையூர்க்கோடீச்சரமும்

6.73.1

கருமணிபோற் கண்டத் தழகன் கண்டாய்௿
கல்லால நிழற்கீ ழிருந்தான் கண்டாய்௿
பருமணி மாநாகம் பூண்டான் கண்டாய்௿
பவளக்குன் றன்ன பரமன் கண்டாய்௿
வருமணிநீர்ப் பொன்னிவலஞ் சுழியான் கண்டாய்௿
மாதேவன் கண்டாய் வரதன் கண்டாய்௿
குருமணிபோல் அழகமருங் கொட்டை யூரிற்௿
கோடீச் சரத்துறையுங் கோமான் றானே.

6.73.1

6.73.2

கலைக்கன்று தங்கு கரத்தான் கண்டாய்௿
கலைபயில்வோர் ஞானக்கண் ணானான் கண்டாய்௿
அலைக்கங்கை செஞ்சடைமே லேற்றான் கண்டாய்௿
அண்ட கபாலத்தப் பாலான் கண்டாய்௿
மலைப்பண்டங் கொண்டு வருநீர்ப் பொன்னி௿
வலஞ்சுழியின் மேவிய மைந்தன் கண்டாய்௿
குலைத்தெங்கஞ் சோலைசூழ் கொட்டை யூரிற்௿
கோடீச்சரத் துறையுங் கோமான் றானே.

6.73.2

6.73.3

செந்தா மரைப்போ தணிந்தான் கண்டாய்௿
சிவன்கண்டாய் தேவர் பெருமான் கண்டாய்௿
பந்தாடு மெல்விரலாள் பாகன் கண்டாய்௿
பாலோடு நெய் தயிர்தே னாடி கண்டாய்௿
மந்தார முந்தி வருநீர்ப் பொன்னி௿
வலஞ்சுழியின் மன்னு மணாளன் கண்டாய்௿
கொந்தார் பொழிற்புடைசூழ் கொட்டை யூரிற்௿
கோடீச் சரத்துறையுங் கோமான் றானே.

6.73.3

6.73.4

பொடியாடு மேனிப் புனிதன் கண்டாய்௿
புட்பாகற் காழி கொடுத்தான் கண்டாய்௿
இடியார் கடுமுழக்கே றூர்ந்தான் கண்டாய்௿
எண்டிசைக்கும் விளக்காகி நின்றான் கண்டாய்௿
மடலார் திரைபுரளுங் காவி ரிவாய்௿
வலஞ்சுழியின் மேவிய மைந்தன் கண்டாய்௿
கொடியாடு நெடுமாடக் கொட்டை யூரிற்௿
கோடீச்சரத் துறையுங் கோமான் றானே.

6.73.4

6.73.5

அக்கரவம் அரைக்கசைத்த அம்மான் கண்டாய்௿
அருமறைக ளாறங்க மானான் கண்டாய்௿
தக்கனது பெருவேள்வி தகர்த்தான் கண்டாய்௿
சதாசிவன்காண் சலந்தரனைப் பிளந்தான் கண்டாய்௿
மைக்கொண்மயிற் றழைகொண்டு வருநீர்ப் பொன்னி௿
வலஞ்சுழியான் கண்டாய் மழுவன் கண்டாய்௿
கொக்கமரும் வயற்புடைசூழ் கொட்டை யூரிற்௿
கோடீச் சரத்துறையுங் கோமான் றானே.

6.73.5

6.73.6

சண்டனைநல் லண்டர்தொழச் செய்தான் கண்டாய்௿
சதாசிவன் கண்டாய்சங் கரன்றான் கண்டாய்௿
தொண்டர்பலர் தொழுதேத்துங் கழலான் கண்டாய்௿
சுடரொளியாய்த் தொடர்வரிதாய் நின்றான் கண்டாய்௿
மண்டுபுனற் பொன்னிவலஞ் சுழியான் கண்டாய்௿
மாமுனிவர் தம்முடைய மருந்து கண்டாய்௿
கொண்டல்தவழ் கொடிமாடக் கொட்டை யூரிற்௿
கோடீச் சரத்துறையுங் கோமான் றானே.

6.73.6

6.73.7

அணவரியான் கண்டாய் அமலன் கண்டாய்௿
அவிநாசி கண்டாயண் டத்தான் கண்டாய்௿
பணமணிமா நாக முடையான் கண்டாய்௿
பண்டரங்கன் கண்டாய் பகவன் கண்டாய்௿
மணல்வருநீர்ப் பொன்னிவலஞ் சுழியான் கண்டாய்௿
மாதவற்கும் நான்முகற்கும் வரதன் கண்டாய்௿
குணமுடைநல் லடியார்வாழ் கொட்டை யூரிற்௿
கோடீச் சரத்துறையுங் கோமான் றானே.

6.73.7

6.73.8

விரைகமழு மலர்க்கொன்றைத் தாரான் கண்டாய்௿
வேதங்கள் தொழநின்ற நாதன் கண்டாய்௿
அரையதனிற் புள்ளியத ளுடையான் கண்டாய்௿
அழலாடி கண்டாய் அழகன் கண்டாய்௿
வருதிரைநீர்ப் பொன்னிவலஞ் சுழியான் கண்டாய்௿
வஞ்சமனத் தவர்க்கரிய மைந்தன் கண்டாய்௿
குரவமரும் பொழிற்புடைசூழ் கொட்டை யூரிற்௿
கோடீச் சரத்துறையுங் கோமான் றானே.

6.73.8

6.73.9

தளங்கிளருந் தாமரையா தனத்தான் கண்டாய்௿
தசரதன்றன் மகனசைவு தவிர்த்தான் கண்டாய்௿
இளம்பிறையும் முதிர்சடைமேல் வைத்தான் கண்டாய்௿
எட்டெட் டிருங்கலையு மானான் கண்டாய்௿
வளங்கிளர்நீர்ப் பொன்னிவலஞ் சுழியான் கண்டாய்௿
மாமுனிகள் தொழுதெழுபொற் கழலான் கண்டாய்௿
குளங்குளிர்செங் குவளைகிளர் கொட்டை யூரிற்௿
கோடீச் சரத்துறையுங் கோமான் றானே.

6.73.9

6.73.10

விண்டார் புரமூன் றெரித்தான் கண்டாய்௿
விலங்கலில்வல் லரக்கனுட லடர்த்தான் கண்டாய்௿
தண்டா மரையானும் மாலுந் தேடத்௿
தழற்பிழம்பாய் நீண்ட கழலான் கண்டாய்௿
வண்டார்பூஞ் சோலைவலஞ் சுழியான் கண்டாய்௿
மாதேவன் கண்டாய் மறையோ டங்கங்௿
கொண்டாடு வேதியர்வாழ் கொட்டை யூரிற்௿
கோடீச் சரத்துறையுங் கோமான் றானே.

6.73.10

6.73 — note

இத்தலங்கள் சோழநாட்டிலுள்ளன.௿ திருவலஞ்சுழியில்,௿ சுவாமிபெயர் - கபர்த்தீசுவரர்,௿ தேவியார் - பெரியநாயகியம்மை.௿ திருக்கொட்டையூரில்,௿ சுவாமிபெயர் - சுந்தரகோடீசுவரர்,௿ தேவியார் - பந்தாடுநாயகியம்மை.௿ ௿