Books / Thirumurai 6

66. 6.74 திருநாரையூர் - திருத்தாண்டகம்௿ ௿

6.74.1

சொல்லானைப் பொருளானைச் சுருதி யானைச்௿
சுடராழி நெடுமாலுக் கருள்செய் தானை௿
அல்லானைப் பகலானை அரியான் றன்னை௿
அடியார்கட் கெளியானை அரண்மூன் றெய்த௿
வில்லானைச் சரம்விசயற் கருள்செய் தானை௿
வெங்கதிரோன் மாமுனிவர் விரும்பி யேத்தும்௿
நல்லானைத் தீயாடு நம்பன் றன்னை௿
நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே.

6.74.1

6.74.2

பஞ்சுண்ட மெல்லடியாள் பங்கன் றன்னைப்௿
பாரொடுநீர் சுடர்படர்காற் றாயி னானை௿
மஞ்சுண்ட வானாகி வானந் தன்னில்௿
மதியாகி மதிசடைமேல் வைத்தான் றன்னை௿
நெஞ்சுண்டென் நினைவாகி நின்றான் றன்னை௿
நெடுங்கடலைக் கடைந்தவர்போய் நீங்க வோங்கும்௿
நஞ்சுண்டு தேவர்களுக் கமுதீந் தானை௿
நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே.

6.74.2

6.74.3

மூவாதி யாவர்க்கும் மூத்தான் றன்னை௿
முடியாதே முதல்நடுவு முடிவா னானைத்௿
தேவாதி தேவர்கட்குந் தேவன் றன்னைத்௿
திசைமுகன்றன் சிரமொன்று சிதைத்தான் றன்னை௿
ஆவாத அடலேறொன் றுடையான் றன்னை௿
அடியேற்கு நினைதோறும் அண்ணிக் கின்ற௿
நாவானை நாவினில்நல் லுரையா னானை௿
நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே.

6.74.3

6.74.4

செம்பொன்னை நன்பவளந் திகழு முத்தைச்௿
செழுமணியைத் தொழுமவர்தஞ் சித்தத் தானை௿
வம்பவிழும் மலர்க்கணைவேள் உலக்க நோக்கி௿
மகிழ்ந்தானை மதிற்கச்சி மன்னு கின்ற௿
கம்பனையெங் கயிலாய மலையான் றன்னைக்௿
கழுகினொடு காகுத்தன் கருதி யேத்தும்௿
நம்பனையெம் பெருமானை நாதன் றன்னை௿
நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே.

6.74.4

6.74.5

புரையுடைய கரியுரிவைப் போர்வை யானைப்௿
புரிசடைமேற் புனலடைத்த புனிதன் றன்னை௿
விரையுடைய வெள்ளெருக்கங் கண்ணி யானை௿
வெண்ணீறு செம்மேனி விரவி னானை௿
வரையுடைய மகள்தவஞ்செய் மணாளன் றன்னை௿
வருபிணிநோய் பிரிவிக்கும் மருந்து தன்னை௿
நரைவிடைநற் கொடியுடைய நாதன் றன்னை௿
நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே.

6.74.5

6.74.6

பிறவாதும் இறவாதும் பெருகி னானைப்௿
பேய்பாட நடமாடும் பித்தன் றன்னை௿
மறவாத மனத்தகத்து மன்னி னானை௿
மலையானைக் கடலானை வனத்து ளானை௿
உறவானைப் பகையானை உயிரா னானை௿
உள்ளானைப் புறத்தானை ஓசை யானை௿
நறவாரும் பூங்கொன்றை சூடி னானை௿
நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே.

6.74.6

6.74.7

தக்கனது வேள்விகெடச் சாடி னானைத்௿
தலைகலனாப் பலியேற்ற தலைவன் றன்னைக்௿
கொக்கரைசச் சரிவீணைப் பாணி யானைக்௿
கோணாகம் பூணாகக் கொண்டான் றன்னை௿
அக்கினொடும் என்பணிந்த அழகன் றன்னை௿
அறுமுகனோ டானைமுகற் கப்பன் றன்னை௿
நக்கனைவக் கரையானை நள்ளாற் றானை௿
நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே.

6.74.7

6.74.8

அரிபிரமர் தொழுதேத்தும் அத்தன் றன்னை௿
அந்தகனுக் கந்தகனை அளக்க லாகா௿
எரிபுரியும் இலிங்கபுரா ணத்து ளானை௿
எண்ணாகிப் பண்ணா ரெழுத்தா னானைத்௿
திரிபுரஞ்செற் றொருமூவர்க் கருள்செய் தானைச்௿
சிலந்திக்கும் அரசளித்த செல்வன் றன்னை௿
நரிவிரவு காட்டகத்தி லாட லானை௿
நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே.

6.74.8

6.74.9

ஆலால மிடற்றணியா அடக்கி னானை௿
ஆலதன்கீழ் அறம்நால்வர்க் கருள்செய் தானைப்௿
பாலாகித் தேனாகிப் பழமு மாகிப்௿
பைங்கரும்பா யங்கருந்துஞ் சுவையா னானை௿
மேலாய வேதியர்க்கு வேள்வி யாகி௿
வேள்வியினின் பயனாய விமலன் றன்னை௿
நாலாய மறைக்கிறைவ னாயி னானை௿
நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே.

6.74.9

6.74.10

மீளாத ஆளென்னை உடையான் றன்னை௿
வெளிசெய்த வழிபாடு மேவி னானை௿
மாளாமை மறையவனுக் குயிரும் வைத்து௿
வன்கூற்றின் உயிர்மாள உதைத்தான் றன்னைத்௿
தோளாண்மை கருதிவரை யெடுத்த தூர்த்தன்௿
தோள்வலியுந் தாள்வலியுந் தொலைவித் தாங்கே௿
நாளோடு வாள்கொடுத்த நம்பன் றன்னை௿
நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே.

6.74.10

6.74 — note

௿