Books / Thirumurai 6

72. 6.80 திருமாற்பேறு - திருத்தாண்டகம்௿

6.80.1

பாரானைப் பாரினது பயனா னானைப்௿
படைப்பாகிப் பல்லுயிர்க்கும் பரிவோன் றன்னை௿
ஆராத இன்னமுதை அடியார் தங்கட்௿
கனைத்துலகு மானானை அமரர் கோனைக்௿
காராருங் கண்டனைக் கயிலை வேந்தைக்௿
கருதுவார் மனத்தானைக் காலற் செற்ற௿
சீரானைச் செல்வனைத் திருமாற் பேற்றெஞ்௿
செம்பவளக் குன்றினைச்சென் றடைந்தேன் நானே.

6.80.1

6.80.2

விளைக்கின்ற நீராகி வித்து மாகி௿
விண்ணோடு மண்ணாகி விளங்கு செம்பொன்௿
துளைக்கின்ற துளையாகிச் சோதி யாகித்௿
தூண்டரிய சுடராகித் துளக்கில் வான்மேல்௿
முளைக்கின்ற கதிர்மதியு மரவு மொன்றி௿
முழங்கொலிநீர்க் கங்கையொடு மூவா தென்றுந்௿
திளைக்கின்ற சடையானைத் திருமாற் பேற்றெஞ்௿
செம்பவளக் குன்றினைச்சென் றடைந்தேன் நானே.

6.80.2

6.80.3

மலைமகள்தங் கோனவனை மாநீர் முத்தை௿
மரகதத்தை மாமணியை மல்கு செல்வக்௿
கலைநிலவு கையானைக் கம்பன் றன்னைக்௿
காண்பினிய செழுஞ்சுடரைக் கனகக் குன்றை௿
விலைபெரிய வெண்ணீற்று மேனி யானை௿
மெய்யடியார் வேண்டுவதே வேண்டு வானைச்௿
சிலைநிலவு கரத்தானைத் திருமாற் பேற்றெஞ்௿
செம்பவளக் குன்றினைச்சென் றடைந்தேன் நானே.

6.80.3

6.80.4

உற்றானை உடல்தனக்கோர் உயிரா னானை௿
ஓங்காரத் தொருவனையங் குமையோர் பாகம்௿
பெற்றானைப் பிஞ்ஞகனைப் பிறவா தானைப்௿
பெரியனவும் அரியனவு மெல்லாம் முன்னே௿
கற்றானைக் கற்பனவுந் தானே யாய௿
கச்சியே கம்பனைக் காலன் வீழச்௿
செற்றானைத் திகழொளியைத் திருமாற் பேற்றெஞ்௿
செம்பவளக் குன்றினைச்சென் றடைந்தேன் நானே.

6.80.4

6.80.5

நீறாகி நீறுமிழும் நெருப்பு மாகி௿
நினைவாகி நினைவினிய மலையான் மங்கை௿
கூறாகிக் கூற்றாகிக் கோளு மாகிக்௿
குணமாகிக் குறையாத உவகைக் கண்ணீர்௿
ஆறாத ஆனந்தத் தடியார் செய்த௿
அனாசாரம் பொறுத்தருளி அவர்மே லென்றுஞ்௿
சீறாத பெருமானைத் திருமாற் பேற்றெஞ்௿
செம்பவளக் குன்றினைச்சென் றடைந்தேன் நானே.

6.80.5

6.80.6

மருவினிய மறைப்பொருளை மறைக்காட் டானை௿
மறப்பிலியை மதியேந்து சடையான் றன்னை௿
உருநிலவு மொண்சுடரை உம்ப ரானை௿
உரைப்பினிய தவத்தானை உலகின் வித்தைக்௿
கருநிலவு கண்டனைக் காளத் தியைக்௿
கருதுவார் மனத்தானைக் கல்வி தன்னைச்௿
செருநிலவு படையானைத் திருமாற் பேற்றெஞ்௿
செம்பவளக் குன்றினைச்சென் றடைந்தேன் நானே.

6.80.6

6.80.7

பிறப்பானைப் பிறவாத பெருமை யானைப்௿
பெரியானை அரியானைப் பெண்ணா ணாய௿
நிறத்தானை நின்மலனை நினையா தாரை௿
நினையானை நினைவோரை நினைவோன் றன்னை௿
அறத்தானை அறவோனை ஐயன் றன்னை௿
அண்ணல்தனை நண்ணரிய அமர ரேத்துந்௿
திறத்தானைத் திகழொளியைத் திருமாற் பேற்றெஞ்௿
செம்பவளக் குன்றினைச்சென் றடைந்தேன் நானே.

6.80.7

6.80.8

வானகத்தில் வளர்முகிலை மதியந் தன்னை௿
வணங்குவார் மனத்தானை வடிவார் பொன்னை௿
ஊனகத்தில் உறுதுணையை உலவா தானை௿
ஒற்றியூர் உத்தமனை ஊழிக் கன்றைக்௿
கானகத்துக் கருங்களிற்றைக் காளத் தியைக்௿
கருதுவார் கருத்தானைக் கருவை மூலத்௿
தேனகத்தி லின்சுவையைத் திருமாற் பேற்றெஞ்௿
செம்பவளக் குன்றினைச்சென் றடைந்தேன் நானே.

6.80.8

6.80.9

முற்றாத முழுமுதலை முளையை மொட்டை௿
முழுமலரின் மூர்த்தியை முனியா தென்றும்௿
பற்றாகிப் பல்லுயிர்க்கும் பரிவோன் றன்னைப்௿
பராபரனைப் பரஞ்சுடரைப் பரிவோர் நெஞ்சில்௿
உற்றானை உயர்கருப்புச் சிலையோன் நீறாய்௿
ஒள்ளழல்வாய் வேவவுறு நோக்கத் தானைச்௿
செற்றானைத் திரிபுரங்கள் திருமாற் பேற்றெஞ் ௿
செம்பவளக் குன்றினைச்சென் றடைந்தேன் நானே.

6.80.9

6.80.10

விரித்தானை நான்மறையோ டங்க மாறும்௿
வெற்பெடுத்த இராவணனை விரலா லூன்றி௿
நெரித்தானை நின்மலனை அம்மான் றன்னை௿
நிலாநிலவு செஞ்சடைமேல் நிறைநீர்க் கங்கை௿
தரித்தானைச் சங்கரனைச் சம்பு தன்னைத்௿
தரியலர்கள் புரமூன்றுந் தழல்வாய் வேவச்௿
சிரித்தானைத் திகழொளியைத் திருமாற் பேற்றெஞ்௿
செம்பவளக் குன்றினைச்சென் றடைந்தேன் நானே.

6.80.10

6.80 — note

௿