Books / Thirumurai 6

71. 6.79 திருத்தலையாலங்காடு - திருத்தாண்டகம்௿

6.79.1

தொண்டர்க்குத் தூநெறியாய் நின்றான் றன்னைச்௿
சூழ்நரகில் வீழாமே காப்பான் றன்னை௿
அண்டத்துக் கப்பாலைக் கப்பா லானை௿
ஆதிரைநா ளாதரித்த அம்மான் றன்னை௿
முண்டத்தின் முளைத்தெழுந்த தீயா னானை௿
மூவுருவத் தோருருவாய் முதலாய் நின்ற௿
தண்டத்திற் றலையாலங் காடன் றன்னைச்௿
சாராதே சாலநாள் போக்கி னேனே.

6.79.1

6.79.2

அக்கிருந்த அரையானை அம்மான் றன்னை௿
அவுணர்புர மொருநொடியி லெரிசெய் தானைக்௿
கொக்கிருந்த மகுடத்தெங் கூத்தன் றன்னைக்௿
குண்டலஞ்சேர் காதானைக் குழைவார் சிந்தை௿
புக்கிருந்து போகாத புனிதன் றன்னைப்௿
புண்ணியனை எண்ணருஞ்சீர்ப் போக மெல்லாந்௿
தக்கிருந்த தலையாலங் காடன் றன்னைச்௿
சாராதே சாலநாள் போக்கி னேனே.

6.79.2

6.79.3

மெய்த்தவத்தை வேதத்தை வேத வித்தை௿
விளங்கிளமா மதிசூடும் விகிர்தன் றன்னை௿
எய்த்தவமே உழிதந்த ஏழை யேனை௿
இடர்க்கடலில் வீழாமே யேற வாங்கிப்௿
பொய்த்தவத்தா ரறியாத நெறிநின் றானைப்௿
புனல்கரந்திட் டுமையொடொரு பாகம் நின்ற௿
தத்துவனைத் தலையாலங் காடன் றன்னைச்௿
சாராதே சாலநாள் போக்கி னேனே.

6.79.3

6.79.4

சிவனாகித் திசைமுகனாய்த் திருமா லாகிச்௿
செழுஞ்சுடராய்த் தீயாகி நீரு மாகிப்௿
புவனாகிப் புவனங்க ளனைத்து மாகிப்௿
பொன்னாகி மணியாகி முத்து மாகிப்௿
பவனாகிப் பவனங்க ளனைத்து மாகிப்௿
பசுவேறித் திரிவானோர் பவனாய் நின்ற௿
தவனாய தலையாலங் காடன் றன்னைச்௿
சாராதே சாலநாள் போக்கி னேனே.

6.79.4

6.79.5

கங்கையெனுங் கடும்புனலைக் கரந்தான் றன்னைக்௿
காமருபூம் பொழிற்கச்சிக் கம்பன் றன்னை௿
அங்கையினில் மான்மறியொன் றேந்தி னானை௿
ஐயாறு மேயானை ஆரூ ரானைப்௿
பங்கமிலா அடியார்க்குப் பரிந்தான் றன்னைப்௿
பரிதிநிய மத்தானைப் பாசூ ரானைச்௿
சங்கரனைத் தலையாலங் காடன் றன்னைச்௿
சாராதே சாலநாள் போக்கி னேனே.

6.79.5

6.79.6

விடந்திகழும் அரவரைமேல் வீக்கி னானை௿
விண்ணவர்க்கு மெண்ணரிய அளவி னானை௿
அடைந்தவரை அமருலக மாள்விப் பானை௿
அம்பொன்னைக் கம்பமா களிறட் டானை௿
மடந்தையொரு பாகனை மகுடந் தன்மேல்௿
வார்புனலும் வாளரவும் மதியும் வைத்த௿
தடங்கடலைத் தலையாலங் காடன் றன்னைச்௿
சாராதே சாலநாள் போக்கி னேனே.

6.79.6

6.79.7

விடையேறிக் கடைதோறும் பலிகொள் வானை௿
வீரட்டம் மேயானை வெண்ணீற் றானை௿
முடைநாறு முதுகாட்டி லாட லானை௿
முன்னானைப் பின்னானை அந்நா ளானை௿
உடையாடை யுரிதோலே உகந்தான் றன்னை௿
உமையிருந்த பாகத்து ளொருவன் றன்னைச்௿
சடையானைத் தலையாலங் காடன் றன்னை௿
சாராதே சாலநாள் போக்கி னேனே.

6.79.7

6.79.8

கரும்பிருந்த கட்டிதனைக் கனியைத் தேனைக்௿
கன்றாப்பின் நடுதறியைக் காறை யானை௿
இரும்பமர்ந்த மூவிலைவே லேந்தி னானை௿
என்னானைத் தென்னானைக் காவான் றன்னைச்௿
சுரும்பமரும் மலர்க்கொன்றை சூடி னானைத்௿
தூயானைத் தாயாகி உலகுக் கெல்லாந்௿
தரும்பொருளைத் தலையாலங் காடன் றன்னைச்௿
சாராதே சாலநாள் போக்கி னேனே.

6.79.8

6.79.9

பண்டளவு நரம்போசைப் பயனைப் பாலைப்௿
படுபயனைக் கடுவெளியைக் கனலைக் காற்றைக்௿
கண்டளவிற் களிகூர்வார்க் கெளியான் றன்னைக்௿
காரணனை நாரணனைக் கமலத் தோனை௿
எண்டளவி லென்னெஞ்சத் துள்ளே நின்ற௿
எம்மானைக் கைம்மாவி னுரிவை பேணுந்௿
தண்டரனைத் தலையாலங் காடன் றன்னைச்௿
சாராதே சாலநாள் போக்கி னேனே.

6.79.9

6.79.10

கைத்தலங்கள் இருபதுடை அரக்கர் கோமான்௿
கயிலைமலை அதுதன்னைக் கருதா தோடி௿
முத்திலங்கு முடிதுளங்க வளைக ளெற்றி௿
முடுகுதலுந் திருவிரலொன் றவன்மேல் வைப்பப்௿
பத்திலங்கு வாயாலும் பாடல் கேட்டுப்௿
பரிந்தவனுக் கிராவணனென் றீந்த நாம௿
தத்துவனைத் தலையாலங் காடன் றன்னைச்௿
சாராதே சாலநாள் போக்கி னேனே.

6.79.10

6.79 — note

௿ இத்தலம் சோழநாட்டிலுள்ளது.௿ சுவாமிபெயர் - ஆடவல்லவீசுவரர்,௿ தேவியார் - திருமடந்தையம்மை.௿ ௿